ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 36

அவனோ அவளது கன்னம் தாங்கி அவளது இதழோடு முத்தம் கொடுத்தான் அழுத்தமாய் ஆழமாய் கடலுக்குள் மூழ்கி முத்து சிப்பி எடுப்பது போல அவளோ அவன் அணைத்தாலே எரிப்பில் உருகும் மெழுகாய் உருகிவிடுவாளே... இப்போதும் அவன் முத்தத்தில் பனியாக உருகினாள். அவனது கைகளை மெல்ல அவள் அங்கங்களில் உலாவ விட அவளோ அவனது சட்டைக்காலரை பிடித்துக்கொண்டாள். வெளியேச் சென்ற காரின் ஹாரன் சத்தத்தில் இருவரும் விலகினர். பொன்வண்ணனோ தலையை அழுந்தக்கோதிக்கொண்டவன் அவளது கன்னத்தை பற்றி "நீ என்கூட இல்லைனா நான் செத்து போயிடுவேன்டி" என்றான் கரகரத்த குரலில்.

"என்ன பேச்சு இது" என்று அவனது வாயை தன் கையால் பொத்தினாள் அவளுக்குமே கண்கள் கலங்கியது.

"நீ தான் என்னோட காதலை புரிஞ்சிக்கலை... எப்பவும் அண்ணா, அப்பா அம்மா, அம்மாச்சி, தாத்தா எல்லார் நினைப்புலயும் இருக்கடி... உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கும் புருசன் நான்... என்னைய பார்க்க அருவருப்பா இருக்குனு எப்படி சொல்லலாம் நீ" கழுத்து நரம்புகள் புடைக்க கோபப்பட்டவனோ எச்சிலை விழுங்கிக்கொண்டான்.

அவளோ "நீங்க ஒவ்வொரு காரியமும் என்னை பயமுறுத்தியேதான் எனக்கு செய்தீங்க” என்று அவள் பேச ஆரம்பிக்கும்முன் அவள் முன்னே கையெடுத்து கும்பிட்டு "அம்மா தாயே நீ பேச ஆரம்பிக்காதே உன்னை உங்க வீட்ல விட்டுட்டு வரேன் எத்தனை நாள் இருக்க பிரியமோ அத்தனை நாள் இருந்துட்டு வா... நானா வந்து கூப்பிடமாட்டேன்! நீயாத்தான் என்னை வந்து கூட்டிட்டு போங்கனு கூப்பிடணும்" என அழுத்தி சொன்னவன் காரை எடுத்தான்.

அவளோ அவன் முகத்தை பார்க்க அவனோ அவளது முகத்தை பார்க்கவில்லை. காரை வேகமாக ஓட்டினான்.

மதியத்துக்குமேல் ஆகியிருந்தது. கல்யாண வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர்.

சிங்கம் வீட்டு முன்னே நிறுத்தியவன் எதுவும் பேசவில்லை. கணவனுக்கு தான் சிங்கம் வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை என்று அவன் முகமே காட்டிக்கொடுத்தது தூரிகாவோ "நம்ம வீட்டுக்கே போகலாம். இப்படி முகத்தை உர்னு வைச்சு விட்டுட்டு போக வேண்டாம்" என்றாள் பெரும்மூச்சு விட்டு.

பொன்வண்ணனோ "உன் புருசனுக்கு மரியாதை கொடுக்காத வீட்டுல நீ எத்தனை நாள் வேணா தங்கிட்டு வா... எனக்கொண்ணும் கஷ்டம் இல்லை. நீ இறங்கு" என்று கார் கதவை திறந்து விட்டான்.

சிங்கமோ பொன்வண்ணனின் கார் வாசலில் நிற்பதை பார்த்து "மண்டபத்துல இப்பவே போகணும்னு காலுல சுடுத்தண்ணிய ஊத்தின போல பாப்பாவை கூட்டிட்டு பறந்து போனவன்... இப்போ திரும்ப கூட்டிட்டு வந்திருக்கான் என்ன பண்ணினான்னு தெரியலையே... தூரி கண்ணுல தண்ணியை மட்டும் பார்த்தேன் மவனே உனக்க இருக்கு தீபாவளி வெடி வெடிக்காம விடமாட்டேன" என்று வேஷ்டியை மடித்துக்கட்டி கார் பக்கம் வந்தான்.

சிங்கம் காருக்கு வருவதை பார்த்த தூரிகாவிறகு கை கால்கள் நடுங்கியது. அவளோ அவசரமாக காரிலிருந்து இறங்க பொன்வண்ணன் அவளது கையை பிடித்து இழுத்து அவளது இதழில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.

சிங்கமோ காருக்கு நெருக்கமாக வந்தவன் முத்தமிட்டுக்கொண்டிருப்பதை கண்டு ‘இப்படித்தான் கதவை திறந்து போட்டு முத்தம் கொடுப்பானா கூறு கெட்டவன்... இவன் வேணும்னு நான் பார்க்கணும்னு என் தங்கச்சிக்கு முத்தம் கொடுக்குறான் சரியான கொழுப்பு பிடிச்ச டாக்டரா இருக்கான். அண்ணன் தங்கச்சி எல்லாம் டிசைன் டிசைனா இருக்காங்க' என்று சிடுசிடுத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றான்.

அவளது இதழிலிருந்து பிரிந்ததும் "அண்ணா வரதை பார்த்து தானே முத்தம் கொடுக்குறீங்க! உங்களுக்கே இது அசிங்கமா இல்லையா?" என்று பொன்வண்ணனை முறைத்தவள் காய்ந்து விழுந்தாள்.

அவனோ "என் பொண்டாட்டிக்குத்தான் முத்தம் கொடுத்தேன்!" என்றான் தெனாவெட்டாக முகத்தை வைத்து "மறுபடியும் சொல்றேன் நீயா போன் பண்ணினாத்தான் நான் வந்து கூட்டிட்டு போவேன்டி" என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

"அப்படியா பார்ப்போமா! நான் உங்களை பார்க்காம இருந்துடுவேன்! உங்களால என்னை பார்க்காம இருக்க முடியாது. டாக்டர் மாமா" என்றாள் நக்கல் சிரிப்புடன் புருவம் உயர்த்தி.

"சரி பார்க்கலாம்... நீயா வரலைனா நான் இன்னொரு பொண்டாட்டி கட்டிப்பேன் பாருடி" என்றான் கடவாயில் நாக்கை சுழட்டியபடி

"கட்டிப்பேடா கட்டிப்ப... என் அண்ணா உன்னை உயிரோட விடாது பார்த்துக்கோ!" என கண்ணை உருட்டி காளியாக முறைத்தாள்.

"இதுக்காகவே நான் இன்னொரு கல்யாணம் பண்ணுறேன்" என்றவன் கண்ணைச்சிமிட்டி காரை எடுத்தான்.

வீரய்யனோ வாசலில் பொன்வண்ணன் கார் நிற்பதை கண்டு “என்னடா ராஜாத்தி பொன்வண்ணா வீட்டுக்குள்ள வராம போறான்! நீங்க வந்தது எனக்கு தெரியலையே! இல்லைனா வாசலுக்கு வந்து வீட்டுக்குள்ள பேரனை வரச்சொல்லியிருப்பேன். அவன் இன்னும் நம்ம வீட்டுக்கு ஒருமுறை சுட வரலையே கண்ணு!” என்றார் வருத்தப்பட்ட குரலில்.

"வருவாரு தாத்தா நீங்க கவலைப்படாதீங்க! நான் கோதை அத்தைகிட்ட இன்னிக்கு ஒருநாள் இருந்துட்டு வரேன்னு போன் பண்ணி சொல்லிடறேன்" என்றவளோ கோதைக்கு போன் போட்டாள்.

"சொல்லுடா கல்யாணம் முடிஞ்சிடுச்சா... பொண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களா... வீட்ல உள்ளவங்க எல்லாரும் வண்ணாகிட்ட பேசினாங்களா? எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று சிறு படபடப்புடன் கேட்டார் கோதை.

"அத்தை எந்த பிரச்சனையும் நடக்கல நீங்க கவலைப்படாதீங்க! உங்க மகன் என்னை அப்பா வீட்ல இருக்க சொல்லி விட்டுட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பியாச்சு" என்றாள் சந்தோசமாக.

கோதையோ "எப்படிமா உன்னை அம்மா வீட்ல இருக்க சம்மதிச்சான்?" என்றார் ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும்.

தூரிகாவோ மேலோட்டமாக விசயத்தை சொல்ல "ஏய் என் பையனை மிரட்டியிருக்கியா? அவன் எமோஷ்னல் ஆளுமா! உன் மேல ரொம்ப லவ் வச்சிருக்கான்... மென்மையாக காட்டத்தெரியலை ஹார்ஷா நடந்துக்குறான் அவனுக்கு நான் எடுத்துச்சொல்லுறேன்டா! நீ ஒருநாள் என்ன நாலுநாள் சேர்ந்தாப்பல அம்மா வீட்ல இருந்துட்டு வா" என்றார் சந்தோச சிரிப்புடன்.

"நாலு நாள் எல்லாம் உங்க பையன் என்னை இங்க இருக்க வைக்க மாட்டாரு! உடனே வந்து கூட்டிட்டு போயிடுவாரு பாருங்க" என்று பொன்வண்ணனை கேலி செய்து சிரித்தாள்.

கோதையோ "அதுவேணா உண்மைதான்டா என்னை விட்டு பல வருசம் லண்டன்ல இருந்தான். உன்னை விட்டு ஒருநாள் இருக்கறதே கஷ்டம்தான்" என சிலாகித்தபடியே சிரித்தார்.

"நீ எப்போ வந்த தூரிகா! யாரு போன்ல! பொன்வண்ணா எங்கே?" என்று அங்கே வந்த நாச்சியிடம் "அத்தை பேசுறாங்க பேசுங்க" என்றதும் "போனை கொடு" என்று போனை வாங்கியவர் மகளுடன் மனம் விட்டு பேசிவிட்டு "நான் வைக்குறேன்டி" என்று போனை வைத்திருந்தார்.

சமையல் கட்டில் இருந்த கோமதியை தேடிப்போய் "அம்மா நான் வந்துட்டேன் இன்னிக்கு முழுவதும் உன் கூடத்தான் இருப்பேன்" என்று கோமதியை அணைத்துக்கொண்டாள் தூரிகா.

பாயாசம் வைத்துக்கொண்டிருந்த ரதியோ 'அண்ணா இவளை எப்படி இங்க இருக்க சம்மதிச்சாரு! இது சரியில்லையே?' என்று யோசனையுடன் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சையை எடுத்து பாயாசத்தில் போட்டாள்.

“தூரிகா அண்ணாவும் வந்திருக்காரா காலையில ஹாஸ்பிட்டல் போகணும்னு சொன்னாரு இப்போ நீ எப்படி வந்த?” என அவளது கழுத்தில் புதிதாய் போட்டிருந்த நெக்லஸையும், ஆரத்தையும் கொள்ளிக்கண் கொண்டு பார்த்துக்கொண்டே கேட்டாள்.

“மதனி உங்க அண்ணா என்னை இங்கிருந்து கூட்டிட்டு போனதே நகைக்கடைக்குத்தான்! லண்டன்ல இவ்ளோ நகை போடமாட்டாங்களாம் அவருக்கு நம்ம ஊருல இவ்ளோ நகை போடுவாங்கனு தெரியலையாம்! இல்லைனா கல்யாணத்துக்கு வரதுக்கு முன்னமே நகை வாங்கிக்கொடுத்துருப்பாரு! கல்லு வச்ச ஒரு செட்டு... கல்லு வைக்காத ஒரு செட்டு நான் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வாங்கி கொடுத்துட்டாரு” என்று முகத்தில் மகிழ்ச்சி புன்னகை வழிய பேசினாள் தூரிகா.

கோமதிக்கும் நாச்சிக்கும் மனது நிறைந்து போனது. “இப்படியே முகத்துல சிரிப்போட இருக்கணும்டி. இந்த ஆரம் நல்லாயிருக்கு தூரிகா” என்று மகளின் நெற்றியில் முத்தம் கொடுத்தார்.

‘ம்க்கும் என்னமோ மகளுக்கு இவங்க நகை போட்ட போல... எங்கண்ணா அவன் சம்பாரிச்ச காசுல நகை வாங்கிப்போட்டிருக்காங்க' என்று முகத்தை வெட்டிக்கொண்டாள் ரதி.

8 மணி ஆனதும் அலர்விழிக்கு அலங்காரம் செய்துவிட்டாள் தூரிகா. அலர்விழியோ இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று மறுக்கவில்லை. தூரிகாவோ “ஏய் அலரு இந்த வெண்பட்டு சேரில செம அழகா இருக்கடி... அண்ணா சாப்பிடும்போது உன்னை செமயா சைட் அடிச்சிட்டிருந்தாரு... இப்போ சொல்லவே வேண்டாம் உன்னை பார்த்ததும் ப்ளாட் ஆகி உன் காலுல விழுந்துடுவாரு” என்று அவளது கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து கேலி சிரிப்புடன் பார்த்தாள்.

நாச்சியோ பேத்தியின் முகக் கலவரத்தை கண்டு பெரும்மூச்சு விட்டு பால் சொம்பை அலர்விழியின் கையில் கொடுத்து “இது எல்லாம் சம்பிரதாயம் தான் கண்ணு... நீ எதுவும் மனசை போட்டு குழப்பிக்காம இருடியம்மா” என்றார் பேத்தியின் கன்னத்தை வருடியபடி

அன்பரசி அங்கே வந்தவர் “அம்மாச்சி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போடி” என்றதும் பால் சொம்பை டேபிள் மேல் வைத்து நாச்சியின் காலில் விழுந்தாள் அலர்விழி.

“பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும் தங்கம்” என்று அலர்விழியின் தோளை பற்றி எழுப்பி அவளது நெற்றியில் முத்தமிட்டார் நாச்சி.

தூரிகாவோ அலர்விழியின் கையை பிடித்துக்கொண்டு கௌதம் அறையின் வாசலில் விட்டு "பயப்படாதடி கௌதம் அண்ணா ஜெம் பர்சன் உன்னை புரிஞ்சு நடந்துக்குவாரு” அவளது தோளில் அழுத்தாய் தட்டிச் சென்றாள்.

ரதியோ “அப்பத்தா என் கையில பால் சொம்பு கொடுத்து விடலை... எனக்கு பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு வாழ்த்து சொல்லலை.. ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு ஒரு கண்ணுக்கு வெண்ணையும் வைக்காதீங்க” என்றாள் பொங்கிய பொறாமையுடன்.

நாச்சியோ “நான் வாழ்த்து சொல்லலைனாலும் இந்த வீடு நிறைய வதவதனு புள்ளையை பெத்துப்போடத்தான் பாரு” என்று ரதியின் கன்னத்தில் இடித்து நகைத்தார்.

“ஹான் அதுக்கு நான் இந்த வீட்ல இருக்கணுமே” என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக்கொண்டவள் "கன்சீவ் ஆனா எங்க வீட்டுக்கு போயிடுவேன்னு சொன்னேன் அம்மாச்சி" என்று கண்ணை சுழட்டி சமாளித்தாள்.

“சரி நேரமாச்சு படுத்து தூங்கு சிங்கம் அறைக்குள்ள போய் அரைமணிநேரம் ஆச்சு” என்று அவளது தோளில் கையை வைத்து அறைக்குள் தள்ளினார் நாச்சி.

'ஆத்தி என்னை மாட்டி விட்டிருச்சி இந்த கிழவி' என்று புலம்பிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் ரதிதேவி.

“வாங்க மேடம்” என்று அவளது கையை பிடித்து கட்டிலில் உட்கார வைத்த சிங்கமோ”எதுக்குடி முகூர்த்தப்பட்டு புடவையில ஓட்டை போட்ட... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? நீயெல்லாம் பிரசவம் பார்க்குற டாக்டர்னு பெருமையா பீத்திக்குற... மனசு உடைஞ்சு போய் இருந்தவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நாங்க பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும் காத்திருந்தவனை நேத்து வந்த நீ தட்டிட்டு போய்ட்ட... நீ அலர்விழி இடத்துல இருந்து யோசிச்சு பார்த்திருந்தேனா உனக்கு அவளோட நிலை புரிஞ்சிருக்கும்... நீ தான் அகம்பாவம் புடிச்ச கழுதையாச்சே! உன்னையெல்லாம் அடிச்சாலும் நீயெல்லாம் திருந்த மாட்ட டி ச்சீ போடி உன்னை போல பொண்ணை நான் வாழ்நாளுல பார்க்கல” என்று அவளை அடிக்க கையை ஓங்கியவன் “அடிக்க கூட உன்னை தொடக்கூடாது” என்று கட்டிலில் படுத்துக்கொண்டான் சிங்கம்.

“மாமா நா.நான் பண்ணல” என்றாள் அழுகை குரலுடன்.

“ஏய் பொய் பேசி என்கிட்ட மிதி வாங்காதே படுத்து தொலைடி... உன் கூட மாறடிக்க என்னால முடியாது” என்று கண்ணை மூடினான் சிங்கம்.

“மாமா” என்று அவனது முதுகில் சாய்ந்தவளை “மேல வந்து விழுந்த கொன்னிருவேன் தள்ளி படுடி” என்று அவளை தள்ளிவிட்டு படுத்துவிட்டான். ரதியை முதன் முறை உதாசீனம் செய்கிறான் சிங்கம்.

அவளுக்கோ அவனது ஒதுக்கம் உயிர் வரை வலித்தது. ஏன் இவனை விட்டு போகத்தானே போகிறோம். இவன் திட்டினா எனக்கு நெஞ்சுக்குள்ள சுருக்குனு இருக்கே... ஒருவேளை கருவாயனை லவ் பண்ணுறோமா! இல்லை இல்லை லவ் இல்லை... ஆமா லவ்தான் டி என்று அவளது மனசாட்சி அடுக்கடுக்காக கேள்வி கேட்டது. மனசாட்சியை போ என்று துரத்திவிட்டு கண்ணை மூடினாள் ரதி.

பால் சொம்புடன் கைகள் நடுங்க கௌதம் முன்னால் நின்றாள் அலர்விழி. கட்டிலில் பூ அலங்காரமும் தட்டில் பலவகை பலகாரமும் இருந்தது. அவளுக்கோ இதெல்லாம் பார்த்ததும் குப்பென்று வியர்த்தது.

“ரிலாக்ஸ் விழி” என்று அவள் கையிலிருந்த பாலை வாங்கி டேபிள் மீது வைத்து விட்டு அவளது கையை பிடித்தான். அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் நின்றாள்.

“விழி இங்க எதுவும் நடக்கப்போறதில்லை... நீயும் நானும் ப்ரண்ட் ரூம்மேட் போல அவ்ளோதான்...” என்று தோளைக்குலுக்கியதும் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அலர்விழி.

“எனக்கு இந்த பூ அலங்காரம், ஸ்வீட் எல்லாம் பார்த்தா பயமா இருக்கு...” என்றாள் இதழ் பிதுக்கி அழுகையுடன்.

“அட இந்த பூவெல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் பெரியவங்க மனசு சங்கடப்படும்னு நான் எதுவும் சொல்லலை... இப்போ பாரு” என்று மெத்தையில் இருந்த பூக்களை எல்லாம் ஒன்று சேர்த்து குப்பை கூடையில் போட்டு “ஸ்வீட் எனக்கு ரொம்ப பிடிக்கும்! உனக்கும் பிடிச்சா சாப்பிடு” என்று ஒரு ஜிலேபியை எடுத்து வாயில் வைத்தவன் "உனக்கு ஜிலேபி பிடிக்குமா?" என்றான் கண்ணைச்சிமிட்டி.

“பிடிக்கும்” என்றாள் தலைகுனிந்துக் கொண்டே.

“ஹலோ நான் அப்படியே உன் மேல பாய்ஞ்சிட மாட்டேன்மா! நீ என்னை தாராளமா நம்பலாம்... இதோ பாரு” என்று பெட்சீட்டை எடுத்து அங்கிருந்த சோபாவில் விரித்து படுத்துக்கொண்டு “நீ தனியா கட்டிலில் படு... நாளைக்கு நம்ம வீட்டுக்கு போறதை பத்தி சிங்கம் அண்ணாகிட்ட பேசிடறேன். நீ போட்டிருக்க நகையெல்லாம் கழட்டி வச்சிட்டு படு குட்நைட்” என்று போர்வையை போர்த்திக்கொண்டான் கௌதம்.

'இப்படியொரு ஃபர்ஸ்ட் நைட் எங்கயும் நடக்காது' என்று புலம்பிக்கொண்டே கண்ணைமூடிக்கொண்டான் கௌதம்.

அலர்விழியோ 'சாரிங்க என் மனசு மாறும் வரை இப்படித்தான் தூங்கணும்' என்று கௌதமிடம் மனதில் மன்னிப்பு கேட்டு அவள் போட்டிருந்த நகைகளை கழட்டி வைத்து பட்டுப் புடவையோடு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

லண்டனிலிருந்து மீனாட்சியும் அவர் வளர்ப்பு மகள் மானசாவும் இந்தியா வந்திறங்கினர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 37

தூரிகாவை அணைத்துக்கொண்டு உறங்கும் பொன்வண்ணனுக்கு இன்று தூக்கமே வரவில்லை.. புரண்டு புரண்டு படுத்தான். ‘இம்சை இராட்சசி இல்லாம என் தூக்கமே கெட்டுப்போச்சு’ என்று கோபத்தில் தலயணையை தூக்கி சுவற்றில் அடித்துவிட்டு கண்ணை மூடிபடுத்தான்.

ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. மொபைலில் உள்ள தன்னவளின் போட்டோவை எடுத்து பார்த்துக்கொண்டு ‘என்னை நினைக்காம எப்படிடி இருக்க.. ஒரு போன் பண்ணி சாப்பிட்டீங்களானு கேட்டியாடி! உன்னை போய் துரத்தி துரத்தி லவ் பண்ணி எல்லாரையும் எதிர்த்து நின்னு அத்தனை பேர் கண்ணிலும் மண்ணைத்தூவி உன் கழுத்துல தாலி கட்டினேன் பாரு என்னை அடிக்கணும்' என்று பல்லைக்கடித்தவனோ தூக்கம் வராமல் முடிவாக தூரிகாவின் வாட்ரோப்பை திறந்து அவளது சுடிதார் ஷாலை எடுத்து வாசம் பிடித்தவன் அவள் தன்னுடன் இருப்பதாகவே நினைத்து முகத்தில் போர்த்திக்கொண்டு 'ஐ.லவ்யுடி துகா' என்று கண்ணைமூடினான்.

விடியற்காலையில் அவனது மொபைல் அடித்தது. கண்ணை மூடிக்கொண்டு ஹலோ "துகா எப்போடி வீட்டுக்கு வர... இல்ல இல்ல நான் வரேன்" என்றான் போனை பார்க்காமல் தூக்க கலக்கத்தில்.

"பொண்ணா நான் அத்தை பேசுறேன்டா" என்றதும்

"அத்தைமா" என்று எழுந்து உட்கார்ந்தான்.

“நானும் மானசாவும் இந்தியா வந்திருக்கோம் ஏர்போர்ட்ல லேண்ட் ஆகிட்டோம்... நீ எங்களை கூட்டிட்டு போறியா..? அண்ணாவை இந்த நேரம் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு தான் உன்னை கூப்பிடுறேன்" என்றார் மீனாட்சி கனிவான குரலில் தயக்கமாக

“அத்தைமா என்னை வாடானு உரிமையா கூப்பிடுங்க! என்ன இப்படியெல்லாம் என்னை தர்மசங்கட படவைக்குறீங்க!! நான் இன்னும் ஒன் ஹவர்ல ஏர்போர்ட்ல இருப்பேன்” என்றதும் "சரிப்பா வா வெயிட் பண்ணுறோம்" என்றார் மீனாட்சி.

பொன்வண்ணனோ அவசரமாக குளித்து கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனை பார்த்த கோதையோ “என்ன வண்ணா இவ்ளோ நேரமா கிளம்பிட்ட.. ஹாஸ்பிட்டல ஏதும் அவசர கேஸ்னு இருந்து போன் வந்துச்சா?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டார் கோதை.

அவனோ “ம்மா லண்டன்லயிருந்து அத்தைமா ஏர்போர்ட் வந்து வெயிட் பண்ணுறாங்களாம் நான் கூட்டிட்டு வந்துடறேன்" என்றவனோ வேக நடையுடன் காரில் ஏறினான்.

கோதையோ ‘இந்த மீனாட்சி மகராசி இத்தனை வருசம் கழிச்சு இந்தியாவுக்கு வந்திருக்காளே என் குடும்பத்துல என்ன பிரளயம் பண்ண காத்திருக்காளோ!! கருப்பா என் மகனையும் மகளையும் நீதான் காப்பாத்தணும்’ என்று மனம் சுணங்கி கடவுளை கூப்பிட்டார்.

மீனாவோ ஆதிபெருமாளுக்கு போன் போட்டார்.

“சொல்லுமா ஏர்போர்ட் ரீச் ஆகிட்டீங்களா பொன்வண்ணன் கிளம்பி வந்துட்டிருக்கான்.. உன்னோட வரவை இந்த ஆதிபெருமாள் எதிர்பார்த்திட்டிருக்கேன் மீனாட்சி” என்றார் சந்தோஷமாக

“இந்தியாவுக்கே வரக்கூடாதுனு இருந்தவளை ஏன் அண்ணா வரச்சொன்னீங்க..? அந்த ஐய்யனார் மகன் ரொம்ப குடைச்சல் கொடுக்குறானா! உங்கனால அவனை எதிர்க்க முடியலையா!” என்றார் ஆவேசக்குரலில்

“என்கிட்ட ஆள்பலம் மட்டும்தான் இருக்கு தங்கச்சி... உன்கிட்ட மூளை பலம் அதிகமாக இருக்கே... ஆள்பலத்தை கொண்டு ஐய்யனார் குடும்பத்தை வீழ்த்த முடியலை... உன்னோட அறிவு பலமும் எனக்கு தேவை அதான் உன்னை வரவைச்சேன்டா! உன்னை தினமும் அழவைச்ச அந்த ஐய்யனாரையும் அந்த வீரய்யன் நாச்சிக்கும் நீ உன் கையால தண்டனை கொடுக்கணும்” என்றார் ஆதிபெருமாள் ஆத்திரத்துடன்.

“ஆரம்பிச்ச கணக்கை பாதியில முடிக்காம போயிட்டேன் இப்ப கணக்கை முடிக்க வந்திருக்கேன்... முடிச்சிட்டுதான் லண்டன் போவேன் அண்ணா” என்றார் கோபம் பொங்கி வழிந்தது மீனாட்சியின் குரலில்.

ரதி எழுந்து பார்க்க சிங்கம் அவள் பக்கத்தில் இல்லை. ‘ஓ பண்ணைவீட்டுக்கு போயாச்சா! இவனை மட்டும் என்னால கவுக்க முடியலையே! நீ இல்லாம என்னால இருக்க முடியாது ரதினு என்னை பின்னாடியே என் முந்தானையை பிடிச்சு சுத்த வைக்கலாம்னு பார்த்தா இவன் கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கான்... போற போக்கை பார்த்தா நான் இந்த கருவாயன் பின்னால மாமா மாமா சுத்துவேன் போல’ என்று புலம்பிக்கொண்டிருந்தவளின் போன் அடித்தது.

“அத்தைமா இந்தியா வந்தாச்சா?” என பேசிக்கொண்டே பால்கனிப்பக்கம் போய் நின்றுக் கொண்டாள்.

“தேவிமா எப்படியிருக்க... ஐய்யனார் குடும்பம் நீ நடிக்கற நடிப்பை நம்பிட்டாங்களா..? என்னால முடியாததை நீ சாதிச்சு அந்த வீட்டு மருமகள் ஆகிட்ட... ஆனா இன்னும் சிங்கம் குடுமி உன் கைக்கு வரலையே..? சிங்கம் குடுமி மட்டும் உன் கையில வந்தா பத்தாது தங்கமே! அந்த வீட்டோட சாவிக்கொத்து நாச்சி அம்மாகிட்ட இருக்கு ஃபர்ஸ்ட் அந்த சாவிக்கொத்தை உன் இடுப்புக்கு கொண்டு வர பாரு! பாசத்தை காட்டி மயக்கு ஒவ்வொருத்தரையும்... நாம தடாலடியா அங்க இருக்க எல்லா முட்ட பயல்களும் சண்டைக்கு நின்னா நம்மளை செல்லாக் காசு ஆக்கிடுவாங்க... சென்டிமெண்ட் பெலோஸ்.. அவங்க கிட்ட சிம்பத்தி கிரியேட் பண்ணுடி! உன்புருசனை உன் காலுக்கடியில கிடக்க வை. நீ சொடக்கு போட்டா அவன் ஓடிவரணும்... உன் பார்வையில ஐய்யனார் குடும்பம் பொட்டி பம்பா அடங்கி கிடக்கணும் தேவிமா" என்றார் வஞ்சம் வளர்க்க வந்த மீனாட்சி.

“அத்தைமா நீங்க ஈசியா சொல்லிட்டீங்க.. இந்த வீட்ல நான் என்ன கோபமா பேசினாலும் சரி! மரியாதை குறைவா நடந்துக்கிட்டாலும் சரி! யாருமே என்னை ஒரு வார்த்தை அதட்டி கூட பேசமாட்டேன்குறாங்க... நீங்க சொன்னது போல பாசத்தை காட்டி மயக்கி பெரியவங்களை என் பக்கம் வலையில விழவச்சிட்டேன். ஆனா சிங்கம்தான் என்னோட வலையில சிக்காம தப்பிச்சு போறான். என்ன பண்ணினாலும் என் வழிக்கு கொண்டு வரமுடியல அத்தைமா!” என்றாள் சிணுங்கலுடன்.

“முந்தானை மந்திரம் போட்டுமா அவன் உன் கைக்குள்ள கொண்டு வர முடியலை!” என அங்கலாய்த்தார் மீனாட்சி.

‘க்கும் மயங்கிட்டாலும்... நான் தான் மயங்கிக்கிடக்குறேன்’ என்று மனதிற்குள் நினைத்தவள் “என்ன மந்திரம் போட்டாலும் அவரு மயங்கல அத்தை” என்றாள் சோர்வான குரலில்.

“ஒரு பொண்ணு நினைச்சா எதையும் செய்யமுடியும் ரதி” பழிவாங்கும் குரலோடு பேசியவரோ பொன்வண்ணன் காரை பார்த்தவர் “உன் அண்ணன் கார் கொண்டு வந்துட்டான்... அவன் நம்ம திட்டத்துக்கு வேலைக்கு ஆகமாட்டான்... உங்க அம்மா கோதை போல நீதி நேர்மைனு வேதாந்தம் பேசுவான். நாளைக்கு போன் போடறேன் தங்கம்” என்று போனை வைத்தார்.

ரதியோ போன் பேசி திரும்ப சிங்கம் நெஞ்சுக்கு குறுக்கே கையை கட்டி நின்றிருந்தான்.

ரதிக்கு மூச்சே நின்று விட்டது. நெஞ்சில் கையை வைத்துக்கொண்டவளோ “நீ. நீங்க எப்ப வந்தீங்க?” என தடுமாறி பேசிக்கொண்டே பால்கனி சுவரை பிடித்துக்கொண்டாள்

“போன்ல யாரு கிட்ட பேசின சொல்லுடி” என்றான் அவள் பக்கம் நெருக்கமாக வந்து கேட்க

அவளோ “எ.என் பிரண்ட்கிட்ட பேசினேன்.. உங்களுக்கு எப்பவும் என் மேல் சந்தேகம்தானா” என்று சலித்துக்கொண்டு போனை தூக்கி பிடித்தாள்.

“உன் போனை கொடுடி நான் செக் பண்ணனும் உன்னோட முழியே சரியில்ல... நீ ஏதோ தப்பு பண்ணுற” என்று அவளது போனை பிடுங்க போக அவளோ “நான் கொடுக்கமாட்டேன். அப்படி என்ன பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாம இருக்கறது... ச்சே நீங்க எல்லாம் ஒரு மனுசனா” என்று அவன்மீதே குற்றம் சாட்டி சண்டைக்குச் சென்றாள்.

“ஏய் தில்லாங்கடி உன் வேலையை காட்டாதே! செவல்மேலயே ரெண்டு அப்பு விழும்” என்றவனோ தலையை சாய்த்து விரலை நீட்டி எச்சரித்தவன் அவளது கையை பிடித்து மடக்க அவளோ பால்கனியிலிருந்து போனை தவறவிட்டிருந்தாள். தன் குட்டு வெளிபட்டு விடுமென்று... இல்ல வேணும்மென்றே கீழே போட்டிருந்தாள் போனை.

ரதியோ “இப்போ உங்களுக்கு சந்தோசமா..? என் போன் கீழ விழுந்துடுச்சு... என் அண்ணன் வாங்கிக்கொடுத்த ஆப்பிள் லேட்டஸ்ட் மாடல் போன்... நீங்க வாங்கித்தருவீங்களா.. ஆனானபட்ட ராமனே சீதையை சந்தேகப்பட்டாரு புராணத்துல சொல்லியிருக்காங்க. நீங்களும் விதிவிலக்கா என்ன? என்மேல எப்பவும் சந்தேகம்” என்று குய்யோ முறையோவென்று தேம்பி தேம்பி நடிப்பு அழுகாச்சி அழுக ஆரம்பித்தாள்.

ரதியின் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அறைந்தவன் “யாரு கிட்ட நடிப்பு நடிக்குற.. உன் கண்ணு சொல்லுது பொய் பேசறனு... அத்தைமானு யாரை சொன்ன! லண்டன்ல உங்களை வளர்த்தாங்களாமே மீனாட்சினு அவங்கிட்ட தானே பேசின... அந்த பொம்பளையும் உங்க அப்பனும்தான் எங்க குடும்பம் கௌரவம் கெடுவதற்கு காரணம்னு அப்பா சொல்லியிருக்காரு. இனிமே அத்தை சொத்தைனு யார்கிட்டயாவது பேசின தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவேன் பார்த்துக்கோ.. என்னை வளர்த்த அத்தை கிட்ட நான் பேசுவேனு சொன்னீனா அவங்ககூட போயிடு என் உசிரை எடுக்காதே! கூடவே இருந்து துரோகம் பண்ணினா உன்னை கொல்லக்கூட தயங்க மாட்டேன் ஜாக்கிரதை” என்று சிங்கம் போல சீறிவிட்டுச் சென்றான் சிங்கம்.

அப்படியே நிலத்தில் உறைந்துபோய் உட்கார்ந்து விட்டாள் ரதி. துரோகம் பண்ணிட்டா கொன்னே போடுவேன் என்று சொன்னது அவள் மனதில் உளி கொண்டு குத்த ஆரம்பித்தது.

யார் பக்கம் நிற்பது. யார் சொல்வதை கேட்பது! தாலி கட்டிய கணவனா? இல்லை... தன்னை வளர்த்து ஆளாக்கிய அத்தையா! உயிர் கொடுத்த தந்தையா என்று அவள் மனம் அனலிட்ட புழுவை போல துடித்துக்கொண்டிருந்தது. உன்மனசாட்சி படி நட என்று அவள் மூளை சொல்ல... அவளை வளர்த்த பாசம் முன் அவளது காதல் கொண்ட உள்ளம் தோற்றுப்போனது.

‘நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சு முடிக்குறேன் அத்தைமா’ என்று விரக்தியாக பேசிக் கொண்டவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்த வாஷ்பேசனில் முகத்தை கழுவிக்கொண்டு சென்றாள். அவள் செய்வது தவறா சரியா என்று அவள் உணராமல் அவள் வாழ்க்கைக்கு தானாக சூன்யம் வைத்துக்கொள்ளப்போகிறாள் ரதி தேவி.

அலர்விழியோ ரொம்ப நாள் கழித்து ஆழந்து உறங்கியிருந்தாள். கௌதம் தான் முதலில் எழுந்தது. போர்வையை மடித்து மெத்தையில் வைத்தவன் காலை குறுக்கி போர்வையை அவளது கழுத்து வரை போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த அலர்விழியை பார்க்க விழித்திருக்கும்போது அவளது கண்ணை பார்த்து ரசிக்க முடியாதே என்று தன்னவளை அழகை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.. மாநிறம்தான் அலர்விழி... அவள் மெலிதாய் சிரித்தாலே கன்னத்தில் குழி விழும். அடர்த்தியான புருவம்... குட்டி இதழ். அடுத்து கழுத்திற்கு கண்போக ‘போதும் கௌதம் இன்னும் நீ அலர்விழிக்கு ப்ரண்ட்தான்.. பார்டர் தாண்டாதே’ என்று அவனுக்குள் எல்லைக்கோடு போட்டு குளிக்கச் சென்றான்

குளித்துவிட்டு டவலோடு சென்றால் தன்னவள் சங்கடபடவேண்டியிருக்குமென்று குளியலறைக்குள்ளேயே ட்ரஸ் சேன்ஞ் செய்துக் கொண்டு வெளியே தலையை துவட்டிய படியே வந்தான்.

அலர்விழியோ அப்போது தான் புடவையை சரி செய்துக் கொண்டிருந்தாள். “சாரி” என்று திரும்பி நின்றான் நல்ல பையனாக

“சரி பண்ணிட்டேன் திரும்புங்க” என்றவளோ அவன் முகம் பார்க்காது டவலையும் அவள் கட்டிக்கொள்ள சேலையையும் எடுத்து குளியலறைக்குள் போக முற்பட “விழி நான் வெளியே போயிடுறேன் நீ குளிச்சிட்டு வந்து சேலையை அறைக்குள்ள மாத்திக்கோ” என்றான் கண்ணாடி முன்னே நின்று தலைவாரியபடியே.

“நான் குளிச்சிட்டு வந்து புடவை மாத்தும்வரை பால்கனியில இருங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்... வெளியே தனியா போறதுக்கு சங்கோஜமா இருக்கு” என்றாள் மெல்லிய குரலில்.

“ஓ.கே நீ சொல்றதும் சரிதான். யாரும் கேட்க மாட்டாங்க அப்படி கேட்டா நடந்திடுச்சுனு சொல்லிடு!! ஏனா உன்னை நம்ம வீட்டுல இருக்கவங்க கேட்கமாட்டாங்க... ரதி கண்டிப்பா கேட்பா அவகிட்ட நடந்துச்சுனு சொல்லிடு” என்றான் அழுத்தமாகத்தான்.

“எ.என்ன சொல்றீங்க” என்று அதிர்ந்தாள் அலர்விழி.

“எப்பவாவது நடக்கத்தானே போவுது... இப்ப சொன்னா தப்பில்லை ப்ரண்ட்” என்றவனோ அங்கே நிற்காமல் பால்கனிக்குச் சென்றுவிட்டான்.

அவளோ அவன் பேசியதில் விதிர்த்து போய் நின்றாலும் கௌதம் சொன்னது நிதர்சனம்தானே என்று பெரும்மூச்சுவிட்டுச் சென்றாள் குளியலறைக்குள்.

குளித்து விட்டு வந்தவள் பால்கனி கதவு மூடியிருந்ததை கண்டு சிறு சிரிப்புடன் புடவையை கட்டி முடித்து தலையை துவட்ட பால்கனி கதவை தட்டினாள். அவனும் கதவை திறந்து விட்டான்.

தலையை துவட்டி இருபக்கமும் முடியெடுத்து கிளிப் போட்டு அடக்கினாள். காற்றில் அவளது சேலை அசைய அவளது இடை மட்டும் லேசாய் தெரிய அவனோ கண்ணைத்திருப்பிக்கொண்டான்.

'டேய் கௌதம் உன் பார்வை போற இடம் சரியில்லை... முதலுக்கே மோசம் ஆகிடும் பார்த்துக்கோ' தன்னை கன்ட்ரோல் பண்ணிக்கொண்டான்.

“போலாமாங்க” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

“கௌதம்னு பேர் சொல்லி கூப்பிடு இந்த வாங்க போங்கனு பாகவதர் காலத்திலயா நம்ம இருக்கோம்” என்றான் சிறு கேலிச் சிரிப்புடன்.

“அச்சோ எங்க ஊருல புருசனை பேர் சொல்லி கூப்பிடமாட்டாங்க” என்றாள் கண்ணை அகல விரித்து.

“அப்படியா அப்போ வாங்க போங்கனு மாதிரி கூப்பிடாத எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்றான் புருவம் சுளித்து.

“மா.மாமானு” என்று அவள் இழுக்க

“ஏய்! ஏய்! சிங்கம் அண்ணாவை மாமானு கூப்பிடற... வேற எதாவது கூப்பிடுவாங்கல்ல அதுபோல” என்று அங்கிருந்த மரநாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.

“அ.அத்தான்னு கூப்பிடுவாங்க” என்றாள் தலையை குனிந்து சேலையை திருகியபடி

“அ.அது ரொம்ப செக்ஸியா இருக்கு... இப்ப நீ கூப்பிட வேணாம் நாம லவ்வர்ஸா மாறின பிறகு கூப்பிடு அத்தான்னு சொன்னா கிக்கா இருக்கு” என்றதும் அவள் நிமிரும் நேரம் கண்ணைச்சிமிட்டினான்.

“இது சரியில்ல பார்த்துக்கோங்க” என்று விரல் நீட்டி மிரட்டியவள் அங்கிருந்து வேகமாக கதவு வரை சென்றுவிட்டாள்.

“ப்ரண்ட் சும்மா ஃபன் பண்ணினேன்” என்று அவள் பின்னாலயே ஓடினான். அவளுக்கு முன்னே நின்றவன் “என்னை மன்னிச்சிக்கோ இனி மாதிரி பேச மாட்டேன்” என்று அவன் காதை பிடித்து தோப்புகரணம் போட்டான்.

அவனது செய்கையில் சிரித்துவிட்டாள். “அப்பாடா சிரிச்சிட்ட.. எப்பவும் இப்படி சிரிச்ச முகமா இரு... இப்போ அழகா இருக்க தெரியுமா” என்றான் கண்ணைச்சிமிட்டி குறும்பு குரலுடன்.

“மறுபடியும் 10 தோப்புக் கரணம் போடுங்க” என்று உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து கண்ணால் மிரட்டினாள்.

மீண்டும் அவளது சிரிப்பை பார்ப்பதற்காகவே தோப்புக் கரணம் போட்டான். அவளோ வாயை பொத்திக்கொண்டு சிரித்தவள் அடுத்த நொடி “போதும் தோப்புக் கரணம் போட்டது வாங்க போகலாம்” என்று கதவை திறந்துக் கொண்டுச் சென்றாள்.

பெரியவர்கள் அலர்விழியின் முகத்தை ஆராய்ந்தனர். அன்பரசியின் முகம் வாடியிருக்க நாச்சியோ “பேத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டதே பெரியவிசயம் அன்பு... கொஞ்ச நாளுல கௌதமோடு சேர்ந்து வாழுவா எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று நம்பிக்கை கொடுத்தார் அன்பரசிக்கு நாச்சி.

காலை சாப்பாடு சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க அலர்விழி நாச்சியின் பக்கம் நின்றுக் கொண்டாள்.

சிங்கம் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌதமோ “அண்ணே நா.நான் அலர்விழி வீட்ல தங்கலாம்னு இருக்கேன் நீ. நீங்க அ.அனுமதி கொடுக்குறீங்களா..? ஏன்னா என்னை தம்பியா தத்தெடுத்து அழைச்சிட்டு வந்தீங்க... உங்க அனுமதியோட விழி வீட்ல இருக்க ஆசைப்படறேன்” என்றான் சிங்கத்தின் கண்களை பார்த்தவாறே மெல்லிய சிரிப்புடன்

சிங்கமோ “தாராளமா போய்க்கோடா ரெண்டு வீடு தள்ளித்தான் கண்ணன் மாமாவீடு வாரத்துல ரெண்டு நாள் இங்க இருங்க. வாரத்து நாலுநாள் அங்க இருங்க." என்றவனோ "என்னங்கப்பா நான் சொல்றது சரிதானே” என்றான் ஐய்யனாரிடம்.

“சரிதான் சிங்கம்” என்று சிரித்தார்.

கண்ணனுக்கும் அன்பரசிக்கும் ஆனந்தம் தாங்கவில்லை. “அம்மா இன்னிக்கு மதியம் விருந்து சாப்பாடு எங்க வீட்ல எல்லாரும் வந்துவிடுங்க நான் போய் சமைக்க ரெடி பண்ணுறேன். கோமதி ரதி எங்கே காணோம்? அவளை உதவி அழைச்சிட்டு போலாம்னு கேட்டேன்” என்றார்.

“ரதி இன்னிக்கு ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டா அன்பு... சமையல் உதவிக்கு நான் வரேன்” என்று இருவரும் விருந்து சமைக்கச் சென்றனர். அலர்விழியும் அவர்களுடன் சென்றுவிட்டாள்.

கண்ணனோ கௌதமின் கையை பிடித்துக்கொண்டு “மாப்பிள்ளை உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை” என்று கௌதமின் கையை பிடித்து குலுங்கி அழுதார்.

“மாமா என்ன இது என்னை உங்க மாப்பிள்ளையா பார்க்காதீங்க உங்க மகனா பாருங்க” என்றான் பாசத்தோடு.

அனைவரும் அலர்விழியின் வீட்டில் சந்தோசமாக பேசி சிரித்து கலகலவென இருந்தனர்.

இவர்களது சந்தோசத்தில் கல் எறிய வில்லியாக வந்து சேர்ந்தார் மீனாட்சி.

ஏர்போர்ட்டில் மீனாட்சியை பார்த்ததும் “அத்தைமா எப்படியிருக்கீங்க?” என்று அணைத்துக்கொண்டான் பொன்வண்ணன்.

“நான் நல்லாயிருக்கேன் பொண்ணா நீதான் இந்த அத்தைக்கிட்ட சொல்லாம கூட கல்யாணம் பண்ணிக்கிட்டயே” என்றார் செல்லக்கோபத்தோடு.

“அத்தை வீட்டுக்கு வந்ததும் உங்ககிட்ட விலாவாரியா சொல்லுறேன் ஆமா உங்க கூட மானு வந்திருக்கானு சொன்னீங்க... அந்த அறுந்த வாலை காணோமே எங்கயாவது ஒளிஞ்சு இருக்காளா?” என்று அவளை தேடினான்.

“பொண்ணா அவ ப்ரண்ட் நம்ம ஊருக்கு பக்கம்தான் இருக்காளாம் அவளை பார்த்துட்டு உன்னை ஹாஸ்பிட்டலக்கு வந்து பார்க்குறேனு சொன்னாப்பா போகலாமா?” என்றதும் அவரது உடைமைகளை கார் டிக்கியில் ஏற்றியவனோ புன்னகையுடனே காரில் ஏறி “அத்தைமா நீங்க இந்தியா வந்தது நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்... உங்களுக்கு என் வொய்ப் தூரிகாவை அறிமுகப்படுத்தி வைக்குறேன். அவளை பார்த்ததும் உங்களுக்கு பிடிச்சிபோய்டும் அத்தைமா... அவ ரொம்ப சாஃப்ட் நேச்சர்.. ரொம்ப ஸ்வீட்” என்று நொடிக்கொருதரம் தூரிகாவை பற்றியே பேசிக்கொண்டு வந்த பொன்வண்ணனை ஆழந்து பார்த்தார் மீனாட்சி.

“உன் வொய்ப்பை ரொம்ப விரும்புறியாடா பொண்ணா! நம்ம மானசாவை விட ரொம்ப அழகியோ அந்த பொண்ணு!” என்று கழுத்தை வெட்டிக் கொண்டு கேட்டார்.

“ஆமா அத்தை என் வொய்ப்தான் அழகு” என்று கண்ணைச்சிமிட்டினான்.

“தூரிகா பேரை சொல்லும் போது உன் கண்ணு, காது, வாய் எல்லாம் சிரிக்குதுப்பா” என்று அவனை நகையாடினார் மீனாட்சி.

“போங்க அத்தை எனக்கு வெட்கமா இருக்கு” என்று நெளிந்துக் கொண்டே காரை ஓட்டினான்.

‘நீ மட்டும் என் வளர்ப்புக்குள்ள வராம போய்ட்டேடா’ என்று பெரும்மூச்சு விட்டவர் “டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் தூங்குறேன் பொண்ணா” என்று கண்ணைமூடினார். அவர் கண்ணை மூடியது தூங்குவத்றகு இல்லை. ஐய்யனாரின் குடும்பத்தை எப்படியெல்லாம் துடிக்க வைக்கலாம் என்று யோசனை செய்ய கண்ணை மூடினார்.

வீடு வந்ததும் “அத்தைமா” என்று மீனாட்சியின் கையை தொட்டான் பொன்வண்ணன்.




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“ம்ம்” என்று இப்போது தான் கண்விழிப்பது போல அவரும் நடிப்புடன் காரிலிருந்து இறங்கினார் மீனாட்சி. பல வருடங்கள் கழித்து இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தவருக்கு அன்று ஒரு “பொட்டப்புள்ளை எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குனு தெரிஞ்சு தைரியமா வந்து லவ் பண்ணுறேன் என்கிட்ட சொல்லுவ... அறிவு இல்ல... இனிமே என் வீட்டுக்குள்ள வராதே! உன்னை சொல்லி குத்தமில்ல... இப்படி அரையும் குறையுமா ட்ரஸ் போட்டு அலைய விட்டிருங்காங்க பாரு உன் அம்மாவை சொல்லணும்... அவங்க ஒழுங்கா இருந்தா உன்னை ஏன் இப்படி அலைய விடணும்?” என்று அவளிடம் முகத்தில் அடித்தாற் போல பேசிய வார்த்தைகள் இன்னும் மீனாட்சி மனதில் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போதைக்கு மீனாட்சியால் ஐய்யனாரை எதிர்த்து வாதாடமுடியவில்லை. “நா.நான் உங்களை உண்மையா விரும்புறேன் ஐய்யானர்" என்றாள் மீண்டும் அழுகையுடன்.

“நான் கோமதியைத்தான் விரும்புறேன்! விரும்பற பொண்ணை விட்டு உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்! இப்படி கேட்க உனக்கு வெட்கமா இல்லையா?” என்று அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தும் விட்டான் ஐய்யனார்.

அவளோ “நீங்க இல்லைனா நான் செத்து போயிடுவேன் ஐய்யனார் ஐ லவ் யு” என்று ஐய்யனாரை அணைத்துக்கொண்டாள் மீனாட்சி.

தீயை சுட்டாற் போல அவளை விலக்கிவிட்டவன் “கொன்னுடுவேன்டி என்னை தொட்டு தழுவறதுக்கு என் பொண்டாட்டிக்கு மட்டும் உரிமையிருக்கு போடி” என்று அவளது கையை பிடித்து இழுத்து வந்து வாசலுக்கு வெளியே விட்டார். அந்த நேரம் இருட்டாயிருக்க யாருக்கும் தெரியவில்லை. மீனாட்சியோ தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே வீட்டுக்குச் சென்றவர் ஆதிபெருமாளிடம் கண்ணீருடன் ஐய்யனாருடன் பேசியதை கூறினாள்.

“டேய் அவங்க வசதி உயரம்!! நாம வசதி குறைவுடா ஏணி வச்சாலும் எட்டாது. உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்று தங்கையை சமாதானப் படுத்தினான் ஆதிபெருமாள்.

ஆதிபெருமாளோ “என் தங்கச்சி உன்கிட்ட லவ் சொல்லியது தப்புதான் ஐய்யனார் எனக்காக அவளை மன்னிச்சிடு” என்று கையெடுத்து கும்பிட்டான். ஆதிபெருமாளின் அரிசி ஆலை, சர்க்கரை ஆலை என்று அனைத்து நிர்வாக கணக்குகளையும் ஆதிபெருமாள்தான் நிர்வாகம் செய்து வந்தான்.

“உன் தங்கச்சி இனிமே என் கண்ணுல படக்கூடாது ஆதி... உனக்காக உன் தங்கச்சியை மன்னிச்சு விடறேன்” என்று வார்னிங் கொடுத்திருந்தான் ஐய்யனார்.

ஐய்யனார் கோமதி திருமணம் நடந்து முடிந்தது..

ஆதிபெருமாள் அரிசி ஆலையிலும் சர்க்கரை ஆலையிலும் திருடி சம்பாரித்து பக்கத்து ஊரில் நிலம் புலம் வாங்கிப்போட்டுவிட்டான்.

கோமதி அடுத்த மாதமே மசக்கை ஆனார். ஒரு வருடத்தில் சிங்கம் பிறந்து விட்டான். ஐய்யனார் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்வதை கண்ட மீனாட்சிக்கு மனது பொறுக்கவில்லை.

ஐய்யனார் அரிசி ஆலைக்குள் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார். ஆதிபெருமாளுக்கு சாப்பாடு கொடுக்க வந்த மீனாட்சியோ முறுக்கு மீசையும் கட்டுமஸ்தான உடம்புமாய் கம்பீரத்தோடு இருந்த ஐய்யனாரை விழி அகலாது பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆதிபெருமாள் எத்தனையோ மாப்பிள்ளை பார்த்துவிட்டான். எனக்கு ஐய்யனாரை தவிர யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி விட்டாள். “முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல இருக்கு ஐய்யனாரை நீ விரும்பறது” என்று தங்கையை அடித்து பார்த்துவிட்டான் ஆதிபெருமாள்.

மீனாட்சியோ “எனக்கு ஆதிதான் வேணும்” என்று ஒற்றைகாலில் நின்றாள்.

ஆதிபெருமாளோ “அவன் கல்யாணம் ஆனவன்டா” என்றும்கூட சொல்லிப்பார்த்தான். “அதனால என்ன என்னையும் கல்யாணம் பண்ணிக்கட்டும் நான் விடமாட்டேன்” என்று மோகினியாக அவதாரம் எடுத்தாள் மீனாட்சி.

ஆதிபெருமாளுக்கு சாப்பாடு கொடுக்க வந்தவள் ஐய்யனார் தனியாக இருப்பதைக் கண்டு இன்னிக்கு உன்னை விடமாட்டேன் ஐய்யனார் வரேன் என்று மாராப்பை இறக்கிவிட்டு இடுப்பு சேலையையும் இறக்கி தொப்புள் தெரிய வளைந்து நெளிந்து ஐய்யனாரின் முன்னே வந்து "ஐய்யனார்" என்றாள் இதழ்க்கடித்துக்கொண்டு

ஐய்யனாரோ அவள் வந்த கோலத்தை கண்டு “ஏய் வெளியே போடி! யார் முன்னால வந்து இப்படி குலுக்கி மினுக்கி நிற்கற... என் முன்னாடி நீ நிர்வாணமா நின்னாலும் உன்னை என் கை தீண்டாதுடி! இப்படி என் முன்னால நிற்கறதுக்கு என்ன பேருனு தெரியுமா?” என்ற ஐய்யனாருக்கு கண்கள் செம்மை நிறம் கொண்டது.

“ஏன் ஐய்யனார் என்னை பிடிக்கலைனு சொல்ற..? என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ” என்று மராப்பை இறக்கி விட்டு ஐய்யனாரை கட்டிபிடிக்க போக “ஏய்” என்று மீனாட்சியை பிடித்து தள்ளி “உனக்கு ஆம்பிளை சுகம் தேவைப்பட்டுச்சுனா உன் அண்ணனை கல்யாணம் பண்ணி வைக்கச்சொல்லு நாங்க கௌரவமா இருக்க குடும்பம் உன்னை போல பொறுக்கி பொம்பள்ளை வீட்டு வாசலுக்கு கூட விடமாட்டோம் போடி” என்று அவளது கன்னத்தில் அறைந்து விட்டான்.

“ஸ்ஸ்” என்று சுயநினைவுக்கு வந்தார் மீனாட்சி.

“அத்தைமா வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என்று பொன்வண்ணன் மீனாட்சியின் கையை பிடித்து அழைத்துச் சென்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 38


பல நாட்கள் கழித்து தங்கையை பார்க்க ஆவலோடு ஹாலில் புன்சிரிப்புடன் நின்ற ஆதிபெருமாளை பார்த்த மீனாட்சியை "அண்ணா என்னாச்சு உங்க உடம்பு இளைச்சு போய் கிடக்கு... கோதை சமையல் சரியில்லையோ" என்று அண்ணனை தோளோடு அணைத்துக்கொண்டு அங்கே நின்ற கோதையை ஓரபார்வையில் பார்த்து கேட்டார் விதண்டாவிதமாய் பேச்சோடு

கோதையோ மனதிற்குள் 'வந்ததும் என்னை வம்புக்கு இழுக்குறா... போடி உங்கிட்ட எனக்கு பேசகூட விருப்பம் இல்லை... என் மகனையும் மகளையும் வளர்த்துவிட்டு இருக்க... அந்த நன்றிக்கடனுக்காக உன் முன்னாடி நிற்குறேன்' என மனம் வெதும்பிக் கொண்டு நின்றார் கோதை.

"அவளை விடுடா நீ எப்படியிருக்க.. டயட்ல இருக்குறேனு பேருல நீதான் உடம்பு மெலிச்சு போய் வந்திருக்க!" என்று தங்கையை பார்த்து விசனப்பட்டார் ஆதிபெருமாள்.

"எனக்கு 55 வயசுக்கு மேல ஆச்சு... சாப்பாட்டுல கன்ட்ரோல் இருக்கணும்னா இல்லனா சுகர் பிபி வந்துடும்" என்று சிரித்தவளோ அமைதியாய் மென்சிரிப்புடன் நின்றிருந்த கோதையிடம் "வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபி கொடுக்கணும்னு கூட உனக்கு தெரியாதா? இல்ல நான் இந்த வீட்டுக்கு வந்தது பிடிக்கலையா! நான் வந்து நின்று பத்து நிமிசம் ஆச்சு... என் முகத்தை கூட நீ பார்க்காம நிற்குற... பிடிக்கலைனா சொல்லிடுமா இப்பவே என்னோட பண்ணைவீட்டுக்கு போயிடறேன்" என முகத்தை கடுகடுவென வைத்து விசத்தை கக்குவது போல பேசினார் மீனாட்சி.

"இது உங்க அண்ணாவோட வீடு மீனாட்சி.. நீங்க இங்க இருக்கறது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! ரொம்ப நாள் கழிச்சு அண்ணாவும் தங்கச்சியும் பார்த்து பேசிட்டிருக்கிங்க உங்களை தொந்தரவு பண்ணவேணுமான்னு தான் மீனாட்சி நீங்க ப்ரஸ் ஆகிட்டு வாங்க டிபன் எடுத்து வைக்குறேன்" என்றவரோ சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார்.

பொன்வண்ணன் மீனாட்சியின் அறைக்குள் அவரது உடைமைகளை வைத்துவிட்டு வந்தவன் "அத்தைமா நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ஈவ்னிங் வந்து பார்க்குறேன்!” என்றவனோ கோதையை பார்க்க சமையல்கட்டுக்குச் சென்றான் பொன்வண்ணன்.

“ம்மா டைம் ஆச்சு ஹாஸ்பிட்டலக்கு கிளம்புறேன் பேசண்ட் வெயிட்டிங்” என்று சொல்லி கிளம்பியவனை “வண்ணா சாம்பார் வச்சிட்டேன் சாப்பிட்டு போப்பா” என்றார் சுரத்தை இல்லாத குரலில். எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் தாயின் முகம் கவலையில் சூழ்ந்திருப்பதை கண்டவனோ “ம்மா உங்க முகம் வாடி இருக்கு” என்று அவரு முகத்தை நிமிர்த்தினான்.

“உன்னோட அத்தைமா வந்துட்டாங்க இனி இந்த கோதையம்மாவை நினைப்பியா?” என்றவருக்கு கண்கள் கலங்கியது.

“ம்மா என்ன இது சின்னபிள்ளையாட்டம்... நீ என்னை பத்துமாசம் சுமந்து பால் கொடுத்த வளர்ந்தவங்க... அத்தையம்மா எனக்கு கைடன்ஸ் கொடுத்து வளர்த்திருக்காங்க அவ்ளோதான் ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்தான்... ஆனாலும் நீ என்னோட ஸ்பெஷல் அம்மா” என்று அவரை அணைத்துக்கொண்டவனோ “நீங்களே எனக்கு தோசையை ஊட்டிவிடுங்க” என்று வாயை திறந்து தாயின் மனதை சந்தோசப்படுத்தினான்.

அவரோ கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு தக்காளி சட்னியில் தோசையை தொட்டு மகனுக்கு ஊட்டினார். எங்கே மகனை தன்னிடமிருந்து பிரிந்து விடுவாரோ மீனாட்சி என்ற கவலை கோதையை பயப்பட வைத்தது. ஒரு தோசை சாப்பிட்டதும் “ம்மா போதும் கிளம்புறேன்” என் பரபரத்தவனை பார்த்து "டேய் நைட் வீட்டுக்கு தூரிகாவை அழைச்சிட்டு வர தானே" என்று அழுத்திக் கேட்டார் கோதை.

“ஹா.ஹான் கூட்டிட்டு வரேன் ம்மா” என்று நெற்றியை தேய்த்துக்கொண்டு சமையலறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் இன்னுமே மீனாட்சியும் ஆதிபெருமாளும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

பொன்வண்ணனை பார்த்த ஆதிபெருமாளோ “பொன்வண்ணன் வரான்” ஜாடை காட்டியதும் முகத்தை சிரித்தாற் போல வைத்து “பொன்னா ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டியாப்பா! மானசா ஹாஸ்பிட்டல உன்னை பார்க்க வரதா போன் பண்ணி இருந்தா ஈவ்னிங் வரும்போது நீ அவளை உன்கூட கூட்டிட்டு வந்துடுப்பா! ஆமா உன் பொண்டாட்டி எங்க கண்ணுல காட்டமாட்டேன்கிறேயே” என்று சிறு சிரிப்புடன் பொன்வண்ணனின் முகத்தையே பார்த்தார்.

“தூரிகா அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா அத்தைமா... ஈவ்னிங் வரும்போது கூட்டிட்டு வந்துடுவேன்” என்றான் மலர்ந்த சிரிப்புடன்.

“அப்படியா! ஹஸ்பண்ட்டும் வொய்ஃபும் சேர்ந்து வரும்போது மானசா இடைஞ்சலா எதுக்குப்பா.. அவளை கேப் புக் பண்ணி வரச்சொல்லிடறேன்" என்றவரை இடைமறித்து "மானசாவை கூட்டிட்டு வரதுல எங்களுக்கு பிரச்சனை இல்லை அத்தைமா" என்று சொல்லிக்கொண்டிருக்க அவனது போன் அடித்தது.

"இன்னும் அரைமணிநேரத்துல வந்துடுவேன்" என்றவனோ "பை அத்தைமா" என்று கையசைத்து ஆதிபெருமாளின் முகத்தை கூட பார்க்காதுச் சென்றான் பொன்வண்ணன்.

“என்ன அண்ணா உன் மகன் இன்னமும் உன்கூட சரியா முகம் கொடுத்து பேசமாட்டானா! ஏதோ எதிரியை பார்க்கறது போல பார்த்துட்டு போறான்” என்று குறைப்பட்டுக் கொண்டார் மீனாட்சி.

“கோதைக்கு நான் மரியாதை கொடுக்கலைனு கோபம்... அடுத்து பண்ணை ஆளுங்களை நான் விரட்டி வேலை வாங்குவது அவனுக்கு பிடிக்கலை... நம்ம தோட்டத்துல வேலை பார்க்கறவன் ஐய்யனார் தோட்டத்துக்கு வேலைக்கு போனது தெரிந்து அவனை கட்டி வைத்து அடிச்சதுல என் மேல தீராத கோபத்தோட இருக்கான்... அவன் அம்மா பையன்டா... எனக்கு என் மகள் ரதி இருக்கா அதுவே போதும்” என்றார் நொடித்துக்கொண்டு ஆதிபெருமாள்.

“அண்ணா அப்படிச் சொல்லாதே பொன்னாவை வைத்து பல திட்டங்களை வச்சிருக்கேன்... ஐய்யனார் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டப்போறேன்.. பொறுத்திருந்து பாருங்க” என்று சிரித்தவள் சமையல்கட்டின் முன்னே கோதையின் நிழல் தெரிய “உன் பொண்டாட்டி நாம பேசறது ஒட்டு கேட்குறா இவளை கையை காலை ஒடக்கி படுக்க வச்சிடணும் அண்ணா” என்றார் முகத்தை அஷ்டகோணலாக வைத்து.

“நீ வேற பொன்வண்ணா கோதைக்கு ஒண்ணுனா உயிரையே விட்டிருவான். டாக்டர்ல எப்படியும் நடக்க வைச்சிடுவான் அவன் அம்மாவை” என்றார் சலிப்புடன் ஆதிபெருமாள்.

கோதையோ அன்ணனும் தங்கையும் பேசுவதை கேட்டு “என் உயிர் போறதை பத்தி நான் கவலைப்படலை... ஆனா என் பொண்ணோட வாழ்க்கை... என் பையனோட வாழ்க்கை” என்று நெஞ்சில் கையை வைத்தவருக்கு இதயம் வேகமாக துடித்தது. படபடவென்று வந்தது. உடனே அவரது அறைக்குச் சென்றவர் கதவை மூடிவைத்து வியர்வை பூத்த முகத்தை முந்தானையால் துடைத்து சிங்கத்துக்கு போன் போட்டார்.

சிங்கமோ தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தான். போனை எடுத்து காதில் வைத்ததும் “சிங்கபையா” என்றார் படபடப்பு குரலுடன் கோதை.

கோதையின் குரலில் சிங்கத்தின் உடல் அதிர்ந்தாலும் பேசாமல் போனை காதில் வைத்திருந்தான்

“நீ.நீ என்கிட்ட பேசமாட்டேனு தெரியும்.. நான் சொல்றதை காது கொடுத்து கேளு. இந்த அத்தை உயிர் உன் மடியிலதான் போகும்டா” என்றார் கரகரத்து குரலுடன்

“வாயை கழுவுங்க” என்றான் உரத்த குரலில் ஆனால் அடுத்த வார்த்தை பேசவில்லை.

சிங்கம் தன்னுடன் பேசிவிட்டான் என்ற ஆனந்தத்தில் “என் பொண்ணை எந்த சூழ்நிலையிலும் நீ கைவிடக்கூடாதுனு சத்தியம் பண்ணு சிங்கப் பையா” என்றவருக்கு குரல் மங்கியது.

பக்கத்தில் உட்கார்ந்த முருகனிடம் “இப்போ உனக்கு என்ன பிரச்சனைடா! சும்மா அழுது புலம்புற! நான் இருக்கும்போது எந்த கொம்பனும் கொம்பியும் குடும்பத்து நிழலை கூட தொடவிடமாட்டேன் இந்த சிங்கம்” என்றான் முருகனிடம் பேசுவது போல கோதைக்கு நம்பிக்கை கொடுத்துக்கொடுத்தான் சிங்கம்.

முருகனோ “அண்ணே என்ன பேசுறீங்க எனக்கு புரியலை” என்றான் தலையை சொறிந்துக் கொண்டு விழித்தான்.

“புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.. சும்மா மனசை போட்டு அலட்டிக்காம கால் மேல கால் போட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுடா பஞ்சாயத்துக்கு வரச்சொல்லி போன் வந்துட்டே இருக்கு. நேரமாச்சு நான் கிளம்புறேன்" என்று போனை வைத்துவிட்டான் சிங்கம்.

போனை வைத்தாலும் தாடையை தேய்த்துக்கொண்டு ‘அப்போ மீனாட்சி இந்தியா வந்துட்டாங்க போல அதான் அத்தை புலம்பித் தள்ளுது.. ம்ப்ச் யார் வந்தாலும் நமக்கு கவலையில்லை நான் பார்க்காத சண்டையா... எல்லாரையும் ஒரு பார்த்துக்கலாம்' என்று கைகாப்பை ஏத்திவிட்டு காரை எடுத்தான்.

தூரிகாவோ ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் டியூட்டி பார்த்துக்கொண்டிருந்தாள். பொன்வண்ணனுக்கு பேஷண்ட் அதிகம் இருக்க அவனுக்கு தூரிகாவை பார்க்க நேரமும் கிடைக்கவில்லை. காலையில் ரவுண்ட்ஸ் போகும்போது தூரிகாவை தேடினான். அவள் ஐசியுவிறகு நுழைவது தெரிந்து மதியம் பார்த்துக்கலாம் என்று பேஷண்ட்டை கவனிக்கச் சென்றான்.

மதியம் மூணு வரை அவனால் நகர முடியாமல் போனது. தூரிகாவோ மதியம் லன்ச் டைமில் தன்னை பார்க்க வருவான் என்று ஏமாந்துதான் போனாள். நேற்று இரவு அவள் நிம்மதியாக உறங்கினாலும் கணவனின் நினைவுகள் அவளுக்கு வராமல் இல்லை.

‘மூச்சு முட்டுது தள்ளிப்படுங்க’ என்ற சொன்னாலும் ‘மாட்டேன்’ என்று அவளை இறுக்கி அணைத்தபடியே உறங்குவான். அவனது அணைப்பில் அவளுமே இணங்கித்தான் உறங்குவாள். அவனது குத்துபேச்சிலும் இதுவரை தன்னிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்காததும் அவளுக்கு அவன் மேல் அளவு கடந்த கோபத்தை கொடுத்திருந்தது.

‘எப்படியும் ஈவ்னிங் என்னை தேடி வரணும்’ என்று அவளது வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். பொன்வண்ணனுக்கு கேஸ் முடியவே நாலு மணி ஆனது. “சிஸ்டர் பேஷண்ட் இன்னும் இருக்காங்களா?” என்று கேட்டுக்கொண்டே எழுந்தான்.

“பேசண்ட் அவ்ளோதான் டாக்டர்” என்றததும் ரெஸ்ட் ரூம் போகாமல் கூட தூரிகாவை பார்க்க ஓடினான். அவளோ ஐ.சியுவிலிருந்து டீ குடிப்பதற்கு கேண்டீன் சென்றுக் கொண்டிருந்தாள்.

ஐ.சியுவில் இருந்த குழந்தையை பார்க்கச் சென்றவன் “தூரிகா சிஸ்டர் எங்கே?” என்று கேட்க அங்க இருந்த நர்ஸ் "இப்போதான் தூரிகா தலைவலிக்குது டீ குடிக்க போயிருக்காங்க டாக்டர்” என்றதும்.. குழந்தையை பரிசோதித்து விட்டு கேண்டீன் சென்றான்.

தூரிகாவோ டீ குடித்து நடந்துக் கொண்டு வந்திருந்தாள்.. பொன்வண்ணன் அவள் வருவதை தூரத்திலிருந்து பார்த்துவிட்டான். அவளை பார்த்ததும் அவனின் ஹார்மோன்கள் எக்குதப்பாய் வேலை செய்தது. கட்டிபிடித்து உதட்டில் ஆழமாய் புதைந்துக் கொள்ள வேண்டும் என்று தோண்றியது. ஹாஸ்பிட்டலாய் இருக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் தன் பக்கம் வருவதை மார்ப்புக்கு குறுக்கே கை கட்டி பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளோ பொன்வண்ணனை பார்த்துவிட்டாள்.‘இப்போ இவர்கிட்ட சிக்கினா என் லிப்ஸ் புண்ணாகிடும்... இங்க இருக்கவங்களுக்கு பதில் சொல்ல முடியாது’ என்று ஐ.சியு செல்வதற்கென இருக்கும் மற்றொரு வழியில் சென்றாள்..

அவனோ “ஏய் துகா நில்லுடி” என்று அவள் பின்னாடியே ஓடிவந்தான். அவளோ சிட்டாய் ஐ.சியுவிற்குள் ஓடி மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

“ஷிட் என்னைய அலைய விடுறியாடி இன்னிக்கு நைட் உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய் உன்னை கதற வைக்குறேன் வடை போச்சே” என்ற சோகத்தில் நிலத்தில் காலை உதைத்து கேண்டினில் ஜுஸ் குடித்து விட்டு அவனது கேபினுக்கு வந்ததும் குழந்தைக்கு காய்ச்சல் என்று வர குழந்தையை செக் பண்ணியவன் “ஃபீவர் அதிகம் இருக்கு அட்மிட் பண்ணனும்” என்றிருந்தான்.

அவனது ட்யூட்டி நேரம் முடியும் தருணம் குழந்தைக்கு என்ன என்ன மருந்துகள் கொடுக்கணும் என்று நைட் ட்யூட்டி பார்க்க சிஸ்டரிடம் கேஸ் ஷீட்டில் எழுதிக்கொடுத்தவன் “தூரிகா சிஸ்டரை என்னோட அறைக்கு வரச்சொல்லிட்டு வார்டுக்கு போங்க” என்றான் பொன்வண்ணன்.

“சரிங்க டாக்டர்” என்ற நர்ஸ் ஐ.சி.யுவிற்கு சென்று “தூரிகா பொன்வண்ணன் டாக்டர் உன்னை வரச்சொன்னாரு” என்ற விசயத்தை சொல்லிவிட்டு வார்டுக்குச் சென்றிருந்தார்.

‘போச்சு இந்த பத்து மணி டாக்டர் எதுக்கு வரச்சொல்லுறாரு! காய்ஞ்ச மாடு கம்புல புகுந்த போல என் மேல பாயத்தான்’ என்று சலித்து பேக்கை எடுத்து தோளில் மாட்டினாள்.

சரியாக சிங்கம் போன் போட்டான். “அண்ணா இப்போதான் ட்யூட்டி முடிஞ்சது அண்ணா” என்றாள் மெல்லிய குரலில்.

தங்கையின் பதில் தெரிந்துக் கொள்ள “நம்ம வீட்டுக்கு வரியயா டா?” என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

“அண்ணா அவர் கூட கிளம்புறேன்” என்றாள் தயங்கியபடியே.

“ம்ம் பார்த்து இருக்கணும் சரியா! எதும்னாலும் அண்ணாவுக்கு போன்போடு அழுது வடியக்கூடாது” என்று எச்சரிக்கை செய்து போனை வைத்தான்.

பஞ்சாயத்துக்குச் சென்றுவிட்டு ஹாஸ்பிட்டல் வளாகத்தின் வெளியே தான் நின்று போன் பேசிக்கொண்டிருந்தான்.

ரதியோ ட்யூட்டி முடிந்து கலைப்பாக தோளில் வொய்ட் கோட்டை மாட்டிக்கொண்டு நடந்து வந்தவள் சிங்கத்தின் காரை பார்த்து ‘அச்சோ மாமா சண்டையை மறந்து என்னை கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கு போல’ என்று அவளது சோர்வெல்லாம் மறந்து காரை நோக்கி வேக எட்டு வைத்துச் சென்றாள்

ஆனால் சிங்கமோ அவள் காருக்கு பக்கம் வந்ததும் காரை எடுத்துச் சென்றான்.. சைடு மிரரலில் அவளை பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டியவன் “துரோகி” என்று பல்லைக்கடித்தவன் காரை ஓட்டுவதில் கவனமானான்.

ரதிக்கோ கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவளுக்கே தெரியாமல் அவள் மனதில் சிங்கம் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டான். அவன் தன்னை ஒதுக்கிச் செல்வதை தாங்கமுடியவில்லை ஓவென்று கத்தி அழத்தோன்றியது அவளுக்கு. இருக்கும் இடம் சூழ்நிலை கருதி கேப் புக் செய்து வீட்டுக்குச் சென்றாள்.

போகும் வழியில் அவள் நெஞ்சை அழுத்துவது போல இருக்க கோதைக்கு போன் போட்டாள்.

கோதையோ இரவு சமையலுக்கு ரெடிபண்ணிக்கொண்டிருந்தார். “அலர் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்றார் வெங்காயத்தை வெட்டிக்கொண்டு

“ஏன்மா எப்படியிருக்கனு கேட்கமாட்டியா?” என்றாள் தழுதழுத்த குரலில்.

கோதையோ “எப்பேர்பட்ட குடும்பத்துல வாக்கப்பட்ட்ட போயிருக்கனு தெரியுமா! உன்னை எப்படியிருக்கனு நான் கேட்கணுமாடி. உனக்கென்ன மகாராணி போல வச்சிருக்க மாமியார் கிடைச்சிருக்கா... மகளை போல பாசம் காட்டுற மாமனார்... எங்க அம்மாவும் அப்பாவும் உன்னை மடியில போட்டு குழந்தை போல பார்த்துப்பாங்க... உனக்கு என்ன குறை வரப்போகுது நான் எப்படியிருக்கனு கேட்கறதுக்கு சொல்லுடி" என்றார் பூரிப்பு குரலில்.

“ஏன்மா எல்லாரையும் சொன்ன உன்னோட ஆசை மருமகன் என்னை எப்படி பார்த்துப்பாருனு சொல்லவே இல்லையே” என்றவளுக்கு குரல் பிசிறி தட்டியது.

“என்னடி சிங்கம் கிட்ட சண்டை போட்டியா? இல்ல உங்க மீனாட்சி அத்தை கிட்ட போன் பேசுனியா?” என்று சரியாக கணித்து கேட்டார் கோதை.

“ஏன் அத்தைகிட்ட பேசினா தப்பா..? அவங்க என்னை வளர்ந்தவங்க அம்மா... அவங்க கூட பேச வேணாம்னு சொல்ல இவரு யாரு..? தாலி கட்டினா அடிமையா இருக்கணுமா என்ன? எனக்குனு சுதந்திரம் இருக்க கூடாதா?” என்றவளுக்கு தன்னை உதாசீனம் செய்து விட்டு போன சிங்கத்தை எண்ணி கண்ணீர் சிந்தினாள் மௌனமாக

“ஏய் அழறியாடி?” என்ற கோதையோ! “உனக்கு உங்க அத்தையம்மா மீனாட்சியை பத்தி என்ன தெரியும்டி... அவங்க எங்க அப்பா குடும்பத்துக்கு பண்ணின கெடுதல் கொஞ்சமா நஞ்சமா?” என்று பேச்சை ஆரம்பித்தார் மகளிடம் ஒரளவு உண்மையை சொல்லிவிடலாமென்று ஆனால விதி யாரை விட்டது.

“கோதை காபி கொண்டு வா” என்ற ஆதிப்பெருமாளின் அதட்டலில் “நான் மறுபடியும் போன் பேசுறேன் நீ என்ன தப்பு பண்ணினனு எனக்கு தெரியலை. என்னவாயிருந்தாலும் சிங்கத்து கிட்ட மன்னிப்பு கேளு. அவன் மன்னிக்கலைனா காலுல விழுந்திடு உங்க அப்பா கூப்பிடுறாரு நான் போன் வைக்குறேன்” என்று போனை வைத்துவிட்டார் கோதை.

“ம்ம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்” என்று முறுக்கிக்கொண்டாள் ரதி.

தூரிகாவோ பொன்வண்ணன் அறைக் கதவை திறக்க மானசா பொன்வண்ணனை அணைத்துக்கொண்டு நின்றாள்.

தூரிகாவிற்கோ நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவளையறியாமல் கண்ணில் கண்ணீர் சொட்டு போட்டது. கால்கள் தடுமாற கதவை பிடித்துக்கொண்டாள்.

கதவு கீரிச் என்ற சத்ததில் பொன்வண்ணன் மானசாவை விட்டு விலகி “யாரு?” என்றான் சிறு அதட்டல் குரலில்.

‘இவனுக்கு நான் கரடியா வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?' என்ற சீற்றம் கொண்ட தூரிகாவிற்கு பொன்வண்ணன் மீது ஆத்திரமாய்.

மானசாவோ “ஏய் கதவை தட்டிட்டு உள்ளே வரத்தெரியாதா உனக்கு?” என்று தூரிகாவை அவள் விரல் நீட்டி மிரட்டியதும் தூரிகா பொன்வண்ணனை அழுத்தமாய் பார்த்தாள்.

அவனோ “அச்சோ காளியத்தா போல முறைக்குறாளே” என்று உள்ளுக்குள் பயந்தவள் “மானு இவதான் என் வொய் தூரிகா... இன்டன்சிப்ல இருக்கா!” என சிரிப்புடன கூறியவனோ “வா துகா உட்காரு. இவ அத்தையம்மா பொண்ணு மானசா. இவளும் பிடியாரிக் டாக்டர் தான்" என்றான் சிறுசிரிப்புடன்.

“ஹலோ டாக்டர்” என்றாள் சம்பிரதாயமாக சிரித்தாள் தூரிகா.

மானசாவோ “நீ கைனக்கா இல்ல என் பேபி போல பிடியாட்டிரிக்ஸா?” என்று பொன்வண்ணனை பார்த்து சிரிப்புடன் கேட்டாள்.

தூரிகாவோ “நான் பி.எஸ்.சி நர்சிங் இன்டர்சிப்ல இருக்கேன் டாக்டர்” என்றாள் பல்லைக்கடித்து பேசினாலும் டாக்டர் என்ற மரியாதையை கொடுத்தாள் மானசாவுக்கு.

“ஓ நர்ஸா” என்றாள் இழிவான குரலில் இதழை சுளித்து.

அவளுக்கோ மானசாவின் பேச்சும் அவள் அணிந்திருந்த உடையும் பிடிக்கவில்லை.

“சரி கொஞ்ச நேரம் கழிச்சு வரியா நான் பேபி தனியா கூட பேசணும்” என்றாளே பார்க்கலாம்.

“நீங்க வெளியே இருக்கீங்களா..நாங்க ஷாப்பிங் போறதை பேசணும் நீங்க வெளியே போங்க” என்றாள் அழுத்தமான குரலில் அதிகாரமாக.

“என்ன பேபி உன் வொய்ப் இப்படி பிகேவ் பண்ணுறா! நீ இப்ப என்னை வெளியே கூட்டிட்டு போறேன்னு தானே சொல்லியிருக்க.. இவ உன்கிட்ட பேசணும்னு சொல்லுறா” என்றாள் நுனிநாக்கில் இங்கிலிஷில்

பொன்வண்ணனோ தூரிகாவின் பொஷசிவ்வை தூண்டிவிட்டு பார்க்க “தூரிகா லண்டல ரெண்டுபேரும் ப்ரண்ட்ஸ் ரொம்ப நாள் கழிச்சு என்னை பார்க்க வந்திருக்கா நீ நம்ம வீட்டுக்கு கேப் புக் பண்ணி கிளம்பு. நான் நைட் வந்துடறேன்” என்றான் அவளது கண்ணில் பொங்கிய தன் மீதான காதலை இரசித்துக்கொண்டே.

மானசாவோ “பேபி நாம நைட் டின்னர் வெளியே முடிச்சு லேட் ஆகும்னு சொல்லிடுங்க” என்றாள் கொஞ்சல் குரலில்.

அவளுக்கோ ஆத்திரமாக வந்தது. மானசாவின் கையை பிடித்து அறைக்கு வெளியே நிற்க வைத்து கதவை மூடியவளை கண்டு ஜர்க்காகி நின்றான் பொன்வண்ணன்.

"என்னடா விளையாடுறியா! என்னை வானு கூப்பிட்டு இவகூத்து அடிச்சிட்டிருக்க... அதுவும் கட்டிபிடிச்சுட்டு இருக்க... என்னை பார்த்தா இழிச்சவாய்னு நினைச்சிட்டிருக்கியாடா! சிங்கத்தோட தங்கச்சிடா எனக்கு துரோகம் பண்ண பார்க்குறியா?" என சீரும் நாகமாய் மாறினாள் தூரிகா.

"விளையாடாத தூரிகா அவ என் பிரண்ட் லண்டன்ல இருந்து வந்திருக்கா அவகூட இப்போ வெளியே போகலைனா நல்லா இருக்காது வழி விடு" என்றவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள் கதவை வேகமாக திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் வேகமாக ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்த பொன்வண்ணனிடம் "ஹே உன் ஒய்ப் பட்டிக்காடு போல... நாகரிகம் தெரியாது போல அவளுக்கு" என்று தூரிகாவை துட்சமாய் பேசினாள்

"தூரிகா என்னோட ஸ்வீட் ஏஞ்சல்... ரெண்டு பேருக்கும் சின்ன சண்டை உன்னைய வைச்சு அவகூட சேரப்போறேன் நீ வா" என்று மானசாவின் கையை பிடித்து கார் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தவன் தூரிகா தூரிகா ஹாஸ்பிடல் கேட் அருகே நிற்பதை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.

'என் பொண்டாட்டிக்கு என் மேல லவ் அதிகம்... என்கிட்ட காட்டமாட்டேங்குறா... இப்ப உன் காதலை என் கிட்ட காட்டித்தான் ஆகணும் துகா பேபி' என்று மனைவியை செல்லம் கொஞ்சியவன் தூரிகாவை தாண்டிச் செல்கையில் "துகா வா வீட்டுல இறக்கி விட்டு போறேன்" என்றவனை ருத்ர காளியை போல முறைத்தவள் திரும்பி நின்றுக் கொண்டாள்.

அவனோ “பை பேபி” என்று சென்றிருந்தான்

தூரிகாவோ கலங்கிய கண்களுடன் நின்றிருந்தவள் கார் மறையும் வரை அங்கே பார்த்திருந்தாள்.

கேப் புக் பண்ணியவள் சென்றது சிங்கம் வீட்டுக்குத்தான்.
 
Status
Not open for further replies.
Top