ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 32

கௌதம் அலர்விழி திருமணத்தை திருவிழாவாகவே கொண்டாடினார்கள். சிங்கம் முன்னே நின்று கல்யாண ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தான்.

இரவு சாப்பிட்டு முடித்த சிங்கத்திடம் நாச்சியோ “சிங்கம் நம்ம தூரிகாவையும் பொண்வண்ணனையும் கூப்பிடணும்ல... உனக்கு அந்த குடும்பத்தை பிடிக்காதுதான் இருந்தாலும் ஒத்தை தங்கச்சியை வச்சிருக்க அவ வந்து நின்னாத்தான் சபை நிறையும்பா!” என்றார் தயங்கியபடியே.

சிங்கத்திடமிருந்து என்ன பதில் வருமென்று குடும்பமே காத்திருந்தது. ஐய்யனார் உட்பட... கோதையை மன்னிச்சு தங்கையிடம் பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் ஜென்மத்துக்கும் ஆதிபெருமாளிடம் உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் ஐய்யனார். தங்கை ஏதோ மறைக்கிறாள் என்ற உண்மை அவருக்கு அப்போதே தெரிந்திருந்தாலும் அன்று அவளும் ஆதிபெருமாளை விரும்புகிறேன் என்று சொன்னதும் ஐய்யனாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இன்றுமே தனக்கு என்ன நடந்தது ஏன் ஆதிபெருமாளுடன் சென்றாள் என்பதை இதுவரை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார் கோதை.

“கூப்பிடுங்க! ஆனா அந்த ஆதிபெருமாள் வரக்கூடாது!" என காட்டமாய் பேசிய சிங்கமோ காலியான குழம்பு பாத்திரத்தை கையில் வைத்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ரதியை முறைத்து பார்த்தான் சிங்கம்.

ரதியோ ‘ஆடு பகை குட்டி உறவோ இவனுக்கு! என்னை சக்கரையா சாப்பிட நான் இவனுக்கு வேணும்... என் வீட்டு ஆளுங்களை கூப்பிட மாட்டாங்களா’ என்று சிங்கத்தை மனதிற்குள் திட்டியவள் பாத்திரத்தை வேகமாக கொண்டு போய் சிங்கில் போட்டாள்.

“என்னம்மா சத்தம்?” என்று கோதை கேட்க “கை நழுவி விட்டுட்டேன் அத்தை” என்று ரதி சமாளித்தாள்.

ரதியின் பின்னால் வந்த சிங்கமோ அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து வாயை துடைத்து “ஏன் உங்கப்பனை கூப்பிடலைனு வருத்தமா இருக்கியாடி?” என்றான் தாடையை வருடிக்கொண்டே.

“எ.எனக்கு அப்பாவை கூப்பிடலைனு வருத்தம் இல்லை ! அவர் மேல நானே கோபமா இருக்கேன். சும்மா இருங்க. அலர்விழிக்கு நாம மூகூர்த்த புடவை எடுக்க காஞ்சிபுரம் போகலாமா?" என பேச்சை மாற்றினாள் ரதி.

'அப்படியே பேச்சை மாத்துற நீ!! என்கிட்ட உன் நடிப்பு செல்லுபடியாகாது டி பொண்டாட்டி' என்று உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து “நாம புடவை எடுக்க காஞ்சிபுரம் போக போறதில்லை.. காஞ்சிபுரத்துல இருந்து புடவை கடையே இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும் வா போகலாம்” என்று அவளது கையை பிடித்து வெளியே வந்தான்.

புடவை கடைக்காரரும் வண்டியிலிருந்து புடவை பேலை இறக்கிக்கொண்டிருந்தார். கௌதமும் நைட் ட்யூட்டி பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் முன்னேதான் வந்திருந்தான்.

நாச்சியோ “கோமதி அலர்விழியை கூட்டிட்டு வா” என்றதும்

ரதியோ “நானே அலரையும் தாரகையும் கூட்டிட்டு வரேன் அம்மாச்சி” என்று சென்றாள் அலர்விழி வீட்டுக்கு.

அலர்விழியோ “நான் வரல அக்கா! பெரியவங்க செலக்ட் பண்ணட்டும்” என்று மறுத்துவிட்டாள்.

அன்பரசியோ “ஏய் அலரு ரதி ஆசையா உன்னை கூப்பிடுறா! நீ போகாம நிற்குற...” மகளை கடிந்துக் கொண்டார்.

“இந்த காலத்து பொண்ணுங்களெல்லாம் முகூர்த்தப் புடவை எடுக்க போறதுனா... எல்லாருக்கும் முன்னால புறப்பட்டு நிற்பாங்க... நீ என்ன இப்படி தயங்கி நிற்க... நீ வந்து தான் ஆகணும்” என்று அலர்விழியின் கை பிடித்து கூட்டிக்கொண்டுச் சென்றாள் ரதி.

தாரகையோ “அக்காதான் வரலைனு சொல்றாங்கல்ல ஏன்மா இந்த ரதி அக்கா அலர் அக்காவை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போறாங்க” என்று ரதியின் மீது வெறுப்பு கொண்டு பேசினாள்.

“நீ சின்னப் பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாதுடி வா போகலாம்... உனக்கு புடவை எடுத்துத்தரேன்” என்று தாரகையை அழைத்துச் சென்றார் அன்பரசி.

புடவை கடைக்காரரை சுற்றி பெண்கள் அமர்ந்திருந்தனர். அலர்விழி கௌதம் இருப்பான் என்று நினைக்கவில்லை.

அவனோ “ஹாய் பிரண்ட்” என்று கண்ணைச்சிமிட்டினான். அவளோ “ஹாய்” என்று மெல்லிய சிரிப்புடன் அமர்ந்துக் கொண்டாள்.

அலர்விழியின் மேல் ஒவ்வொரு புடவையாக வைத்து காட்டி “இந்த கலர் நல்லாயிருக்கு அலர் எடுத்துக்கோ” என்று அலப்பறை செய்துக் கொண்டிருந்தாள் ரதி.

அலர்விழிக்கு எந்த கலர் புடவை எடுப்பது என்றே குழப்பமாக இருக்க கௌதமோ ரதியின் கையில் வைத்திருந்த மெருன் கலரில் புடவை முழுவதும் தங்க சரிகை பார்டரில் அன்னபட்சி இருக்கும் புடவையை கையில் எடுத்தவன் “இந்த விழிக்கு எடுப்பா இருக்கும் இதையே எடுத்துக்கோ” என்று அலர்விழியின் கையில் கொடுத்தவன் “பிடிச்சிருக்கா ப்ரண்ட்?” என்றான் அவளுக்கும் மட்டும் கேட்கும் படி.

அலர்விழிக்கோ இத்தனை பேர் முன்னால் வைத்து கௌதம் தன்னிடம் பேசுவது அவளுக்கு சங்கடமாக இருந்தது. கௌதமை காயப்படுத்த விரும்பாமல் “ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.

ரதியோ ‘நான் இந்த புடவை எடுக்கலாம்னு பார்த்து வச்சிருந்தேன் அதுக்குள்ள அவளுக்கு எடுத்துக்கொடுத்துட்டானே இந்த கௌதம்’ என்று பொருமிக்கொண்டாலும் “வாவ் இந்த புடவை உனக்கு பொருத்தமா இருக்கு அலர்” என்றாள் வெளியே சிரித்து மனதிற்குள் குமறலாக.

மனைவியின் நடிப்பை இரசித்துப்பார்த்திருந்த சிங்கமோ “அலர் இன்னும் புடவை எடுத்துக்கோமா” என்றவனோ “புடவைகார அண்ணே! இன்னும் புடவை கலெக்சன் எடுத்து போடுங்க” என்றதும் புடவைக்காரரும் எடுத்து காட்டினார்.

அலர்விழியோ ரெண்டு புடவைகளை மட்டும் எடுத்து “போதும்” என்று விட்டாள்.

ரதியோ டஜன் கணக்கில் எடுத்து “இதெல்லாம் எனக்கு” என்று தனியாக எடுத்து வைத்துக்கொண்டாள்.

சிங்கமோ “ரதி நீ எடுத்து வச்சிருக்க புடவையெல்லாம் யார் யாருக்குனு சொல்லிடு” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து.

“ஹான் இந்த புடவையெல்லாம் எனக்கு ஒருத்திக்குதான்! அத்தை சித்திக்கு அம்மாச்சிக்கு எல்லாம் தனியா எடுத்து வச்சிருக்கேன்” என்று இன்னும் பல புடவைகளை காண்பித்தாள். புடவை எடுக்கும் பொறுப்பை ரதியிடம் கொடுத்து இருந்தனர்.

“இவ்ளோ புடவைக்கு என்னால பணம் தர முடியாது ரெண்டு புடவை எடுத்துக்கோ” என மனைவியிடம் ஒரண்டை இழுத்தான் சிங்கம்.

அவளோ கோபம் கொள்ளாதது போல “சரிங்க!” என்று ரெண்டு புடவையை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மீதி புடவையை எடுத்து புடவைக்காரரிடம் கொடுத்து முகத்தை அப்பாவியை போல வைத்துக்கொண்டாள்.

ஐய்யனாரோ “இந்தா ரதி கண்ணு பத்து புடவை என்ன இன்னும் பத்து கூட சேர்த்து எடுத்துக்கோ சிங்கம் கிடக்குறான் எல்லா புடவைக்கும் நான் காசு தரேன்! புடவைக்காரரே எங்க வீட்டு மருமக எடுத்த புடவையெல்லாம் கொடுத்துடுங்க” என்றார்.

ரதியோ “எப்படி” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.

சிங்கமோ ரதி எடுத்த புடவைகளுக்கெல்லாம் சேர்த்தே பணத்தை கொடுத்தான்.

கௌதமோ சிங்கம் பக்கம் வந்தவன் “அண்ணே கோவிக்காதீங்க முகூர்த்த புடவைக்கு மட்டும் நான் பணம் கொடுக்கறேனே” என்று கண்ணைச்சுருக்கினான்.

சிங்கமோ கௌதமின் ஆசையை புரிந்துக் கொண்டவன் “சரிடா மத்த புடவைக்கு பணம் கொடுக்குறேன்” என்று மீதி புடவைக்கெல்லாம் பணம் கொடுத்தான்.

பத்திரிக்கை கொடுக்க கௌதமுடன் வீரய்யனும் நாச்சியும் கிளம்பியிருக்க ரதியோ “நானும் பத்திரிக்கை கொடுக்க வரட்டுமா அம்மாச்சி...? எனக்கு எங்க வீட்டுக்கு போகணும் போல இருக்கு” என நாச்சியின் தோளை சுரண்டினாள்.

“சிங்கத்து கிட்ட சொல்லிட்டு வா தங்கம்” என்றார் நாச்சி.

“ஆமா உங்க பேரன் போய்ட்டு வாடினு என்னை அனுப்பி வச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு. உங்க பேரன் வரதுக்கு சாய்ந்தரம் ஆகிடும் நாம அதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம்” என்று அடம் பிடித்தவளை என்ன சொல்லி தடுப்பது என்று பெரியவர்களுக்கு தெரியவில்லை.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த ஐய்யனாரிடம் சென்ற ரதியோ “மாமா ப்ளீஸ் நீங்களாவது சொல்லுங்க எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்னு ஆசையா இருக்கு” என்று கெஞ்சலாக அவரது கையை பிடித்து கேட்ட மருமகளிடம் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லை அவருக்கு.

“சரி போய்ட்டு வாடா” என மருமகளின் தலையை வாஞ்சையாக தடவிவிட்டார்.

கோமதியோ “என்னங்க சிங்கத்துக்கு பதில் சொல்ல முடியாதே! அந்த வீட்டுக்கு ஏன் போனானு கோபத்துல கத்துவானுங்க!” என்று விசனப்பட்டார்.

“நான் பேசிக்குறேன் விடு கோமு ஆசையா போறேன்னு சொல்ற பொண்ணை என்னால தடுக்க முடியாது” என்று மனைவியை அடக்கிவிட்டார்.

கோமதியோ “அத்தை தூரிகாவை வரும்போது கூட்டிட்டு வந்துடுங்க அவளும் ஒரு நாலு நாள் நம்ம கூட இருந்துட்டு போகட்டும்” என்றார் மகளை தன்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டு.

"சரி கோமதி" என்ற நாச்சிக்கோ தூரிகாவை தங்களது வீட்டுக்கு விடுவாங்களா நெஞ்சிற்குள் அச்சம் வந்தது.

குமரனிடம் ரதி பத்திரிக்கை கொடுக்க ஆதிபெருமாள் வீட்டுக்கு போறதை சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கியிருந்தார்.

கௌதமோ “சிங்கம் அண்ணாவுக்கு தெரியாம நீ வரது எனக்கு மனசுக்கு சரியாபடல ரதி” என்றான் நாசுக்காக.

“ப்ளீஸ் கௌதம் எனக்கு அம்மாவை பார்க்கணும் போல ஆசையா இருக்கு! என்னை கூட்டிட்டு போடா ப்ளீஸ்” என்று கௌதமிடமும் கெஞ்சினாள்.

வேறு வழியில்லாமல் ரதியை கூட்டிக்கொண்டுச் சென்றனர் நடக்க போகும் விபரீதம் அறியாமல்.

ஞாயிற்றுகிழமையாக இருக்க பொன்வண்ணனும் தூரிகாவும் வீட்டில்தான் இருந்தனர்.

கோதையும் தூரிகாவும் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். ஆதிபெருமாளோ மாடியில் நின்று மாணிக்கத்திடம் “உன் ஆளுங்க எல்லாம் காரியத்தை கச்சிதமா முடிச்சுடுவாங்களா?” போன் பேசிக்கொண்டிருந்தார்.

பொன்வண்ணனோ புதிதாய் வாங்கி வந்த செடிகளை நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தான்.

கோதையோ “இந்த ரதி கண்ணுக்குள்ளயே இருக்கா... ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னாலும் நீ வேண்டாம்னு சொல்ற வண்ணா” என்று வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்க...

“அம்மா” என்று பின்னால் வந்து கட்டிக்கொண்டாள் ரதி.

ரதியின் குரலை கேட்டு ஆனந்தப்பட்டு திரும்பிய கோதையோ “யாரு கூட வந்தடி! சிங்கம் வந்திருக்கானா?” என்று நப்பாசையுடன் வாசலை எட்டிப்பார்த்தார்.

கௌதம் வீரய்யன் நாச்சியுடன் வருவதை கண்டவரோ முகம் மலர்ந்தாலும் உள்ளம் வாடியது தன் சிங்கப்பயல் வரவில்லையென்று.

“அம்மா உங்க மருமகன் வருவாருனு கனவுல கூட நினைக்காதே! இந்த வானம் கீழே வந்தாலும் நம்ம வீட்டுக்கு உங்க ஆசை மருமகன் வரமாட்டாரு” என்றாள் சலிப்புடனே ரதி.

“வாயை மூடுடி காலம் இப்படியே போகாது என் மருமகன் என்னை பார்க்க வருவான் இது நடக்கும் பாரு” என்றார் உறுதியாக.

பொன்வண்ணனோ “நடக்காததை பேசி டென்சன் ஆகாதீங்கம்மா கூட பொறந்த தங்கச்சியை கூட வந்து பார்க்காம இருக்காரு” என கடுப்பாக பேசினான்.

அதற்குள் “டேய் மச்சான்” என்று பொன்வண்ணனை கட்டிக்கொண்டான் கௌதம்.

தூரிகாவோ அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தவள் “எப்படியிருக்க தாத்தா?” என்று வீரய்யனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“நாங்க நல்லாயிருக்கோம் கண்ணு நீ எப்படியிருக்க?” என்றார் அவளின் கன்னம் தொட்டு.

“நல்லாயிருக்கேன் தாத்தா கல்யாண வீடு கலகலனு இருக்கும்ல” என்றாள் தான் இல்லை என்ற வருத்தத்தை மறைத்து புன்னகைத்தாள்.

“உன்னை கூட்டிட்டு போறதுக்கு தான் நாங்க வந்திருக்கோம் கண்ணு நீ இல்லாம நம்ம வீட்ல விஷேசம் நடக்குமா! உங்கப்பன் உன்னை கையோடு கூட்டி வரச்சொல்லிருக்கான்” என்று சந்தோசமாக சொன்னவரோ கோதையை பார்க்க அவரோ “அழைச்சிட்டு போங்கம்மா” என்றிருந்தார் புன்னகையோடு.

“ம்க்கும்” தொண்டையை செருமிய பொன்வண்ணனோ “முகூர்த்தத்துக்கு வந்துடுவோம் அம்மாச்சி அவளுக்கு எக்ஸாம் வருது... ஃபங்ஷன்ல கொட்டம் அடிச்சி படிக்காம இருந்திடுவா” என்றான் இறுக்கமான குரலில்தான்.

தூரிகாவோ “நா.நான் படிச்சிப்பேன் அப்பா வீட்டுக்கு போகணும்... எல்லாம் எனக்காக காத்திருப்பாங்க” என்றாள் அழுகை குரலில்.

“வண்ணா தூரிகா முன்ன நின்னு செய்ய வேண்டிய சடங்கு இருக்கு... அவளை அனுப்பி வை” என்றார் கோதை அதட்டலாக.

“தூரிகா நீ இப்பவே உங்க வீட்டுக்கு போனா நீ அங்கயே இருந்துக்கோ” என பட்டென்று பேசிவிட்டு “சாரிடா கௌதம்” என்று உள்ளே அறைக்குச் சென்றுவிட்டான்.

பொன்வண்ணன் தூரிகாவை தாய் வீட்டிற்கு போகவேண்டாம் என்று சொன்னதும் ரதிக்கு கொண்டாட்டம் தாங்கமுடியவில்லை. வீரய்யனும் நாச்சிக்கும் முகமே வாடிப்போனது. ரதிக்கோ இங்க நடப்பதை கண்டு இப்படி உங்க குடும்பம் அவமானப்பட்டு நிற்கறதை நான் பார்த்து இரசிக்க தானே வந்திருக்கேன் என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டாள்.

ஆதிபெருமாளோ அங்கே வந்தவர் “சம்மந்தி வீட்டுக்கு அழைப்பு சொல்ல உங்க மகன் வரமாட்டாரோ... இதுதான் மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு அழைக்கும் முறையா?” என்று அவர்களிடம் சண்டைக்குச் செல்வது போல பேசினார்.

கோதையோ “என்னங்க சிங்கத்துக்கு பதிலா ரதி வந்திருக்கால்ல இது போதாதா..? எங்க வீட்ல எல்லாரும் வந்து பத்திரிக்கை கொடுக்கற நிலமையிலா அப்பனும் மகனும் பண்ணிவச்சிருக்கீங்க... நீங்க என்னை” என்று பேச்சை வாய்க்குள் விழுங்கிக்கொண்டவரோ “என்னை பேச வைக்காதீங்க நான் பொங்கினா நீங்க தாங்க மாட்டீங்க பார்த்துக்கோங்க” என்று காளியாய் அவதாரம் எடுத்து கத்தி விட்டார்.

கௌதமோ “ஆன்ட்டி பொறுமையா இருங்க நான் பொன்வண்ணாகிட்ட பேசுறேன்” என்று எழுந்தவனை “அண்ணாக்கு தூரிகாவை அனுப்ப விருப்பம் இல்லைனா நாம ஃபோர்ஸ் பண்ண வேணாம் கௌதம்... அவங்களுக்குள்ள வீணா சண்டை வரவைக்க நாம காரணம் ஆக வேண்டாம் பத்திரிக்கை வைக்கறது நம்ம கடமை நாம வச்சிட்டு கிளம்பிடலாம்... இங்க இருந்தா அம்மாச்சியும் தாத்தாவும் அவமானப்பட்டு நிற்கணும். என்னால பெரியவங்க கூனி குறுகி நிற்கறதை பார்க்க முடியலை” என்று நீலிக்கண்ணிர் வடித்தாள் கோதை கூட மகள் மாறிவிட்டாளே என்று நிம்மதி கொண்டார்.

தூரிகாவோ அழுதுக் கொண்டே இருந்தாள். அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர் வீரய்யனும் நாச்சியும்.

“பொண்வண்ணா நீயும் சராசரி பெர்சனா நடந்துப்பேன்னு சத்தியமா நான் நினைக்கலைடா! பாரு தூரிகா அழறா... உண்மைய சொல்றேன் சிங்கம் அண்ணா வீடு சொர்க்கம்டா! பாசமா பேசுற ஐய்யனார் அப்பா, தாத்தா, பாட்டி, இன்னும் கொஞ்சம் சாப்பிடுப்பானு சொல்ற கோமதி அம்மா, பிரண்ட் போல மனம் விட்டு பேசுற குமரன் எல்லாரும் என்கிட்ட வேற்று ஆள் போல என்னை ஒதுக்கி வைக்காம பாசமா நடந்துக்குறாங்க.

நேத்து தாத்தா மைனர் செயின் போடுறாரு! பாட்டி எனக்கு மோதிரம் போடுறாங்க... சிங்கம் அண்ணா என் கல்யாணத்தை முன்ன நின்னு நடந்துறாரு! அந்த பாசக் கூட்டுல இருந்து நீ பிரிச்சு கூட்டிட்டு வந்தியே தூரிகாவை ஒரு நாலுநாள் அந்த பாசக்கூட்டுக்கு மீண்டும் வந்து தங்குறேன் சொல்ற பிள்ளையை ஏன் டா விடமாட்டேன்னு சொல்ற எனக்கு மனசு உறுத்துது நீ ஹார்ஷா பேசறது! நாமெல்லாம் உயிரை காப்பாத்துற டாக்டர்ஸ்டா! உயிரை காயப்படுத்தக்கூடாது" என்று பொன்வண்ணனிடம் கோபம் கொண்டு பேசினான்.

"டேய் தாத்தா அம்மாச்சியும் என்னையும் இப்பவே வானு கூப்பிடலை. அவங்க பேத்தியை மட்டும் கூப்பிட்டா போதுமா! நீ சொல்ற அந்த பாசக் கூட்டுக்குள்ள ஏன் டா என்னை சேர்க்கமாட்டேன்கிறாங்க" என்றான் ஆதங்கத்துடன்.

பொன்வண்ணன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.

“டேய் மச்சி என்னடா அழற... உன்னை அவங்க கூப்பிடாததுக்கு காரணம் சிங்கம் அண்ணாவுக்கும் உனக்கு ஆகாது அங்கே வந்து உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்துருச்சுனா என்ன பண்ணறதுனு கவலை பெரியவங்களுக்கு... உனக்கு இது கூட புரியாதா! கொஞ்சம் பிராக்ட்டிக்கலா திங்க் பண்ணுடா” என்றான் பொன்வண்ணனிடம்.

“சரிடா உன் தங்கச்சியை கூட்டிட்டு போ” என்று முகத்தை தூக்கி வைத்து சொல்லிய தருணம் “அண்ணா நான் எங்க அம்மாவீட்டுக்கு வரலை... தூரத்து விருந்தாளி போல முகூர்த்தம் நடக்குற நேரம் வந்துடுறேன். மூணாவது முடிச்சு போடும் உரிமையை எனக்கு கொடுங்க அதுபோதும்” என்றவளோ அழுதுக் கொண்டே பால்கனியில் போய் நின்று விட்டாள்.

“போய் சமாதானப் படுத்துடா” என்று பொன்வண்ணனின் முதுகை பிடித்துத் தள்ளினான்.

அவனோ “உன் தங்கச்சியை சாதாரணமா எடை போடாதே அவள் அமைதியான பெரிய புயல்” என்று அலட்டிக்கொண்டுச் சென்றவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு நின்றவளின் முதுகோடு உரசி நின்றான்.

“ம்ப்ச்” என்று சலித்துக் கொண்டு அவனை விட்டு தள்ளி நின்றாள்.

“சாரி நான் போக வேணாம்னு சொன்னதுக்கு... உங்க வீட்டுக்கு போய்ட்டு வாடி!” என்றான் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளது கையை பிடிக்க...

“தொடாதீங்க கத்தியில குத்துறது போல பேசிட்டு இப்ப மருந்துக்கு காயம் போடற வேலை வேண்டாம்... நான் போகலை” என்றாள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு.

“நான்தான் சாரி சொல்லிட்டேனே போய்ட்டு வா துகா” என்றான் குரலை குழைத்து அவள் முன்னால் சென்று அணைத்துக்கொண்டான்.

“நான் போகலைங்க நான் போய்ட்டு வந்தாலும் என்னை மதிக்காத வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்கனு குத்தி காட்டி பேசுவீங்க வேணாம் சாமி ஆளைவிடுங்க! நான் உங்களோட அடிமை நீங்க சொல்றதை நான் கேட்டுத்தான் ஆகணும்” என்று அவன் அணைப்பிலிருந்து விலகிக்கொண்டாள்.

“இதுக்கு மேல உன்கிட்ட என்னால கெஞ்சமுடியாது.. போறதும் போகாததும் உன் விருப்பம்டி” என்று தோளைக்குலுக்கி வெளியே வந்தவனோ “அவ வரலைனு சொல்லிட்டா அம்மாச்சி நான் பேசினதுக்கு மன்னிச்சிடுங்க” என்றான் கையை கூப்பி.

வீரய்யனும் நாச்சியும் பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டு “மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் பேத்திக்கிட்ட முரடா நடந்துக்காதே. அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம வளர்த்தோம்... இப்ப அவ தேம்பி தேம்பி அழறதை எங்களால பார்க்க முடியலை... நல்ல நேரம் சிங்கமோ ஐய்யனாரோ இந்த இடத்துல இல்ல... அவங்க மனசு உடைஞ்சு போயிருக்கும்... சண்டைதான் வந்திருக்கும்... இப்படி எதுவும் நடக்க கூடாதுனுதான் ஐய்யனாரோ சிங்கமோ உங்க வீட்டுக்கு வரதில்லைப்பா” என்றார் விரக்தி பேச்சுடன்.

ரதியோ ஆதிபெருமாளை பார்த்து “எப்படிப்பா” என்று புன்னகைத்தாள். அவரோ "சந்தோசம்மா இன்னும் பண்ணனும்" என்றார் கீழ்த் தரமான எண்ணத்தில்.

அவளோ “நான் பண்ணுவேன்பா” என அவரது கையை அழுத்தம் கொடுத்துவிட்டு நாச்சியின் பக்கம் நின்றுக் கொண்டவளோ “அண்ணா அம்மாச்சி கிட்ட மன்னிப்பு கேளு” என்றாள் நல்லகுடி நாச்சிபோல நடித்தாள்.

கோதையோ ஆதிபெருமாளிடம் பேசிவிட்டு வரும் மகளை ‘நீ இன்னும் இந்த பாவி மனுசனை பத்தி தெரியாம அவன் சொல்றதை கேட்குறீயாடி’ மனக் கவலையுடன் பார்த்தார் ரதியை.


“நீங்க என்னையும் பேரனா நினைக்கலையே தாத்தா” என்று அவரை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டான் பொன்வண்ணன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“ஐயா ராசா நாங்க எல்லா பேரனுங்களையும் ஒரேபோலத்தான் பார்க்குறோம்... ரெண்டு பேரனும் சண்டைகட்டி மல்லுக்கட்டுறதை பார்க்க இந்த கிழவனுக்கும் கிழவிக்கும் உடம்புல தெம்பு இல்ல” என்றார் மனம் நொந்த குரலில்.

கோதையோ “அப்பா, அம்மா நீங்க கிளம்புங்க... கௌதம் மன்னிச்சிடுப்பா கல்யாணத்துக்கு பொன்வண்ணாவும் தூரிகாவும் வருவாங்க! இங்க நடந்தது அண்ணாவுக்கும் சிங்கத்துக்கும் தெரியவேண்டாம்” என்று கையெடுத்து கும்பிட்டிருந்தார் கோதை.

“ஆன்ட்டி நான் பார்த்துக்குறேன்” என்றான் கௌதம். மனம் அடிப்பட்ட நிலையில் நின்றிருந்த பெரியவர்களை "வாங்க அம்மாச்சி" அழைத்துக்கொண்டு காரில் ஏறினாள் ரதி.

வீட்டுக்குச் சென்றதும் கோமதியோ “தூரிகாவை காணோமே !” என்று ஆவலாக வாசலை எட்டி பார்த்து கேட்டவரிடம். ரதியோ "அவளை அண்ணா விட" என்று பேசும் முன் "தூரிகாவுக்கு எக்ஸாம் இருக்கு. கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னமே வரேனு சொல்லியிருக்காங்கம்மா" என்று சொல்லிய கௌதமோ உண்மையை சொல்ல வாயெடுத்த ரதியை முறைத்தான்.

“ஆமா தூரிகா இங்க வந்தா குமரன், தாரகை கூட சேர்ந்துக்கிட்டு படிக்க மாட்டா... கல்யாணத்து ஒரு நாள் முன்ன வந்தாபோதும் கௌதம்... காபி போட்டு எடுத்துட்டு வரேன்பா” என சென்றுவிட்டார்.

வீரய்யனோ “ரொம்ப நன்றிப்பா கௌதம்” என்றார் மெச்சுதலாக.

ரதியோ “தூரிகா கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னமே வரலைனா அத்தை மனசு கஷ்டப்படும்... அதான் உண்மையை அத்தைக்கிட்ட சொல்லிடலாம்னு இருந்தேன் கௌதம்” என்றாள் ஆயாசமாக.

அதற்குள் காபியுடன் கோமதி வர பேச்சை நிறுத்திக்கொண்டனர்.

காபி குடித்துவிட்டு பெரியவர்கள் “பயண அலுப்பா இருக்கு” என்று படுக்கையில் முடங்கிவிட்டனர்.

ரதியோ “அப்பா பெரிசு ரெண்டும் குஜாலா சந்தோசமா இருந்துச்சு. ரெண்டுக்கும் பெரும் கவலையை கொடுத்தாச்சு” என்று பேரானந்தப்பட்டுக்கொண்டிருந்தாள்.

வெளியூர் சென்றிருந்த சிங்கத்தின் கார் முன்னே நாலைந்து பேர் கத்தி கம்போடு முகத்தில் முகமூடியோடு நின்றனர்.

சிங்கமோ அலட்டிக்கொள்ளாமல் கைகாப்பை முழங்கை வரை ஏத்திவிட்டு காரிலிருந்து இறங்கியவனோ “யாருங்கடா நீங்க வழிய விடுங்கடா” என்றான் கர்ஜிக்கும் குரலில்.

“என்ன சிங்கம் இத்தனை பேர் அரிவாளோட நிற்குறோம் எங்களை யாருனு கேட்குறே. உன்னை போடத்தான் வந்திருக்கோம்” என்று
அந்த கூட்டத்தின் முன்னே நின்றவன் நாராசமாக சிரித்தான்.

“என்னடா ஜோக் பண்ணுறீங்களா? இந்த சிங்கத்தை பத்தி தெரிஞ்சுத்தான் மோத வந்தீங்களா?” என்று ஒரு கையை இடுப்பில் வைத்து மீசையை முறுக்கினான் சிங்கம்.

“சிங்கம் எங்க மேல பாய்ஞ்சிருவியா! உன் உசிருக்கு ஒரு கோடி விலை பேசியிருக்காங்கடா... ஒருநாளுல ஒரு கோடி கிடைக்குது உன்னை போட வந்திருக்கோம்” என்று அரிவாளை எடுத்து சிங்கத்தின் கழுத்தில் வைக்க போனவன் பறந்து வந்து விழுந்தான் அந்த கூட்டத்தின் தலைவனிடம்.

“ஒருத்தனை அடிச்சிட்டா பெரிய ஆளாடா நீ டேய் மொத்தமா சேர்ந்து அவனை போடுங்கடா” என்றதும் அத்தனை பேரும் சிங்கத்தை தாக்க வர முதுகில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து அனைவரையும் வீழ்த்த தொடங்கினான் சிங்கம். எந்த இடத்தில் வெட்டுப்பட்டது என்று கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த கூட்டத்தின் தலைவன் மட்டும் மாட்டிக்கொள்ள அனைவரும் கையை காலை நொண்டிக்கொண்டு உயிர் பிழைத்தால் போதுமென்று அங்கிருந்து தெறித்து ஓடினர்.

எஞ்சியிருப்பது நடுங்கிக்கொண்டு நிற்கும் கூட்டத்தலைவன் மட்டுமே “என்னை போடச்சொல்லி ஆள் அனுப்பியது யாருடா?” என தலைவனின் கழுத்தில் அரிவாளை வைத்து அழுத்தினான்.

“சிங்கம் என்னை விடு நான் அம்பு மட்டும்தான்... யாரு அனுப்பியிருப்பாங்கனு உனக்கே தெரியும்! வெளியே இருக்க என்னை போல ஆட்களை நீ போட்டுத்தள்ளிடுவ ஆனா உன் வீட்டுக்குள்ளயே ஒரு ஆளை வச்சிருக்கான் உன் எதிரி... நான் சொல்லமாட்டேன் நீயே கண்டுபிடிச்சிக்கோ!! என்னை உயிரோடு விட்டிரு... உனக்கு சாதகமா எப்போதும் இருப்பேன்” என்று சிங்கத்தின் காலைப்பிடித்தான் அந்த தலைவன்.

அவனது முகமூடியை கிழிக்க அவன் பக்கத்து ஊரில் இருக்கும் ரௌடி ராக்கி. அவனை கண்டு கடகடவென சிரித்தான் சிங்கம்.

“போயும் போயும் உன்னை அனுப்பியிருக்கான் ஆதிபெருமாள்... நீ எத்தனை முறை என்கிட்ட அடிவாங்கியிருக்க... உனக்கு என் பலம் தெரியாதாடா” என்று அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான்.

"அச்சோ அண்ணே! என்னை விட்டிருங்க... ஆதிபெருமாள் ஒரு கோடி தரேன்னு சொன்னாரு அதான்” என்று அவன் எச்சில் விழுங்கினான்.

“போய் தொலைடா” என்று அவன் கழுத்திலிருந்த அரிவாளை எடுத்து விட்டதும் அவனோ ஓட்டமாய் ஓடிவிட்டான்.


சிங்கத்தின் சட்டை முழுவதும் புழுதியாக இருக்க காரில் எப்போதும் ஒரு வெள்ளை சட்டை தனியாக எடுத்து வைத்திருப்பான். சட்டையை மாற்றிக்கொண்டு காரில் ஏறியவனோ ராக்கி உங்க வீட்டுல ஒரு ஆள் வச்சிருக்கான் என்று சொன்னது அவன் மனதில் ஓட... ரதியின் மீது கொலைவெறி வந்தது. ரதி ஆதிபெருமாள் வீட்டுக்கு போனது சிங்கத்துக்கு தெரிந்தால் அவளின் நிலை என்னவாகுமோ..!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 33

ஐய்யனாரும் கோமதியும் வெளியூர் சென்ற மகனை காணவில்லையென்று படபடப்புடன் போர்ட்டிகோவில் உட்கார்ந்து கார் சத்தம் கேட்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஐய்யனாருக்கு எலக்சன் ரிசல்ட் வர இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் மகன் வர தாமதம் ஆனதும் ஆதிபெருமாள் மாணிக்கத்தோட சேர்ந்து புள்ளையை ஏதாவது பண்ணியிருப்பானா.. மகன் 10 பத்து பேர் சேர்ந்து வந்து எதிர்த்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு அவனுக்கு உடலிலும் மனதிலும் வலிமை இருக்கு என்று நம்பிக்கை இருந்தாலும் வல்லவனுக்கு வலுக்குபாறை இருக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்க சிங்கத்துக்கு ஏதும் ஆகிட்டா என்ற கவலை ஐய்யனாரை ஆட்டிப்படைத்தது.

ஐய்யனாரின் மனதில் பாலை வார்ப்பது போல சிங்கத்தின் கார் வீட்டுக்குள் நுழைந்தது. கோமதியோ “அப்பாடா” என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டார்.

சிங்கம் இறங்கி வந்ததும் ஐய்யனாரோ “என்னப்பா மணி பதினொன்னு ஆச்சு! ஏன் இவ்ளோ நேரம்?” என்றார் பதட்டமாகவே.

“தேர்தல் ரிசல்ட் பத்தி தலைவர் என்கிட்ட பேசிகிட்டேயிருந்தாருங்கப்பா. நானும் நம்ம ஊருக்கு செய்ய வேண்டிய வசதிகளை பத்தி பல திட்டங்கள் போட்டு வச்சிருக்கோம்ல அதை விளக்கி சொல்லிக்கிட்டு இருந்தேன். நேரம் போனதே தெரியலைங்கப்பா!” என்றான் சோர்வான குரலில் கொட்டாவி விட்டபடியே.

“என்னங்க வீட்டுக்கு வந்த பிள்ளையை வாசல நிக்க வைச்சு கேள்வி கேட்டுக்கிட்டு நீ வாய்யா குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்குறேன்” என்று வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

கோமதி சென்றதும் “என்னப்பா வழியில யாரும் பிரச்சனை ஏதும் பண்ணினாங்களா?” என்று சந்தேகப்பட்டு கேட்டார். அவன் போட்டிருந்த சட்டையை மடிப்பு கலையாமல் இருந்தது.

காலையிலிருந்து போட்ட சட்டை இரவு வரை கொஞ்சமாவது கசங்காமல் இருக்குமா என்ன? சரியாக கணித்து கேட்டுவிட்டார்.

சிங்கமோ இதற்குமேல் மறைக்காமல் நடந்த உண்மையை சொல்லியவனோ “ஆதிபெருமாளுக்கு என்ன கொழுப்பு இருக்கணும்ப்பா என்னை அடிக்க ஆள் அனுப்பியிருக்கான். நம்ம தூரிகா அவன் வீட்டு மருமகளா போய் இருக்கா... அவனை தட்டி வைக்கவும் முடியல... தங்கச்சி வாழ்க்கை கேள்விக்குறியா வந்துடுமோனுதான் பல்லைக்கடிச்சிட்டு இருக்கேனுங்கப்பா” என கை முஷ்டியை இறுக்கினான்.

“பொறுப்பா ரிசல்ட் வரட்டும் அவன் கொட்டத்தை அடக்கி வைப்போம். வீட்டுக்குள்ள வாப்பா” என்று மகனோடு உள்ளேச் சென்றார்.

ரதியோ தண்ணீர் குடிக்க வந்தவள் வாசலில் பேச்சு சத்தம் கேட்டு போர்ட்டிகோவை எட்டி பார்த்தாள். ஐய்யனாரும் சிங்கமும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ‘ஓ வந்துட்டானா’ என்று சமையல்கட்டுக்குள் சென்று பார்க்க கோமதி மகனுக்கு தோசை வார்க்க மாவை கரைத்துக்கொண்டிருந்தார்.

“அத்தை நான் தோசை வார்க்குறேன்” என்று கோமதியிடமிருந்து மாவை வாங்கிக்கொண்டாள்.

“நீ காலையில ஹாஸ்பிட்டல் போகணும்லமா நீ தூங்க வேண்டியதுதானே” என்றார் கோமதி.

“அவரு இல்லாம எனக்கு தூக்கமே வரலைங்க அத்தை அதான் உங்களுக்கு ஏதும் போன் பண்ணினாருனு கேட்க வந்தேன் வெளியே மாமா கூட அவரு பேசிக்கிட்டிருக்கறது கேட்டு தோசை வார்க்க வந்தேன்” என்று பொய்யை அசால்ட்டாக பேசினாள்.

கோமதியோ “நீ எனக்கு மருமகளா கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்கணும் கண்ணு” என்று ரதியின் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தார். அவள் இன்னேரம் வரை தூங்கியது கோமதிக்கு தெரியாமல் போனது அவரின் அறியாமைதான்.

சிங்கம் அறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு டைனிங் டேபிள் வந்தான். தோசையை சூடாக தட்டில் போட்டு வைத்தவள் “ஏங்க இவ்ளோ நேரம் ஆச்சு! கட்சி விசயமா போயிருக்கீங்கனு அத்தை சொன்னாங்க! தலைவர் என்ன பேசுனாரு?” என்று விளாவரியாக கேட்டுக்கொண்டே சாம்பாரை ஊற்றினாள்

“இப்போ கட்சி விசயம் தெரிஞ்சு உனக்கு என்ன வரப்போகுது வாயை மூடிக்கிட்டு அப்படி உட்காரு!” என்று காய்ந்து விழுந்தான்.

ரதி நிலமை சரியில்ல போல உன் வாயை வச்சிக்கிட்டு சும்மா இரு என்று வாய் பேசாமல் அமைதியாக நின்றாள்.

கையில் தோசையுடன் வந்தகோமதியை பார்த்து “அம்மா தூரிகா வந்திருக்கா தானே தூங்கிட்டாளா!” என்று கேட்க, அவரோ “தூரிகாவுக்கு எக்ஸாம் வருதாம் கல்யாணத்து ஒரு நாள் முன்னே வரேனு சொல்லிட்டாளாம் கண்ணு” என்று கையில் வைத்திருந்த தோசை சிங்கத்தின் தட்டில் போட்டார்.

“க்கும் தூரிகாவை அண்ணா அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாரு” என்று அவளையும் அறியாமல் உண்மையை கொட்டிவிட்டாள் ரதி.

பேச்சு சத்தம் கேட்டு வந்த கௌதமோ “போச்சு ஓட்டைவாய் உளறிவிட்டாளே” என்று நெற்றியில் கையை வைத்தவன் சிங்கம் அவளை திட்டிவிடுவானே என்று தோழியின் பக்கம் வந்து நின்றுகொண்டான்.

“ஏன் அனுப்பலைனு சொன்னாரு உங்க நொண்ணன்?” என்று சாப்பிட்ட கையை தட்டில் கழுவிய சிங்கமோ கை காப்பை ஏத்திவிட்டுக்கொண்டான்.

அவளோ “அ.அது நீங்களும் மாமாவும் போய் அண்ணாவை கல்யாணத்துக்கு முறையா அழைக்கலனு அண்ணாவுக்கு வருத்தம் அதான் தூரிகாவை போக வேண்டாம்னு சொல்லிட்டாரு” என்று கூறிவிட்டு சிங்கத்தை பார்த்து அவன் முகம் இருந்த கோணத்தை கண்டு அப்போதுதான் உண்மையை உளறிவிட்டோம் என்று தெரிந்தது ரதிக்கு.

“அங்க நடந்தது உனக்கு யாரு சொன்னாங்க... நீ பேசறதை பார்த்தா பக்கத்துல நின்னு பார்த்தது போல சொல்லுற... ஏன் உங்க நொண்ணனுக்கு தாத்தாவும் அப்பத்தாவும் போய் கல்யாணத்துக்கு அழைச்சா வரமாட்டானா! நானே போய் வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கணுமா..? நீயும் உன் நொண்ணனும் செய்த காரியத்துக்கு உன்னையெல்லாம் நடுரோடுல விட்டுட்டு வந்திருக்கணும்டி... அப்போதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் புத்தி வந்திருக்கும்... நீ உங்க வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க போனியா?" என்றான் குரலை அழுத்தியும் உயர்த்தியும்.

“அ.அது நான்” என்று பயத்தில் எச்சில் விழுங்கினாள்.

கௌதமோ “அண்ணே நான்தான்” என்று பேச வாயெடுக்க “நீ இதுல தலையிடாத” என்றதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அமைதியாகிவிட்டான்.

ஐய்யனாரோ “நான்தான் ரதியை கோதை வீட்டுக்கு போகச் சொன்னேன் சிங்கம் அவளை திட்டாதே” என்று மகன் மருமகள் அடித்துவிடுவானோவென்று அச்சத்தில் ரதியின் முன்னே நின்றுக் கொண்டார்.

“அப்பா நீங்க தள்ளிப்போங்க இது புருசன் பொண்டாட்டிக்குள்ள நடக்கற விசயம்... நீங்க தலையிடாதீங்க” என்று ஐய்யனாரின் பின்னால் ஒளிந்துக் கொண்டிருந்த ரதியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் போனவன் பின்னால் “டேய் தம்பி நில்லுடா மருமகளை அடிச்சிராதே” என்று ஐய்யனாரும் கோமதியும் கெஞ்சிக்கொண்டு பின்னால் சென்றார்கள்.

“அப்பா அம்மா தாலி கட்டச் சொன்னீங்க கட்டினேன்... இவகிட்ட நான் சொன்னதை கேட்கலை கட்டின பொண்டாட்டியா இருந்தாலும் தப்பு செய்தா பனிஷ்மென்ட் கொடுப்பான் இந்த சிங்கம்” என்று அதீத கோபத்தில் பேசி அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு "நீங்க என்ன தட்டினாலும் கதவை திறக்கமாட்டேன் போய் படுத்து தூங்குங்க. உங்க மருமகளை கடிச்சு சாப்பிடமாட்டேன் " என்று கத்தி விட்டு அறையின் லைட்டை அணைத்துவிட்டான்.

கௌதமோ ‘ஐய்யனாரு அப்பா சொல்லியே கேட்கலை... நாம சொல்லியா கேட்கப்போறாங்க சிங்கம் அண்ணா! அண்ணாகிட்ட சொல்லிட்டு வாடினு சொன்னேன் கேட்டாளா. ரதிக்கு நல்லா வேணும்...' என்று நண்பியை திட்டினாலும் 'அண்ணா ரதியை பிடித்து இழுத்துட்டு போறாரு பாவமா தான் இருக்கு' என்று புலம்பிக்கொண்டே படுத்தவன் அலர்விழியின் வாட்சப்பிற்கு ஹாய் என்று மேசேஜ் போட்டான் ப்ளு டிக் வந்தது.

“என்ன ப்ரண்ட் இந்த நேரம் தூங்காம ஆன் ஆன்லைன்ல இருக்கீங்க?” என்று மெசேஜ் தட்டினான். அவளோ “தூக்கம் வரலைங்க ப்ரண்ட்” என்று மெசேஜ் போட்டாள்.

“சரி கொஞ்ச நேரம் என்கிட்ட பேசறீங்களா?” என்றதும் அவளோ கொட்டாவி விடுவது போல சிம்பிள் அனுப்பி விட்டு ஆன்லைனிலிருந்து வெளியே வந்துவிட்டாள்.

“அடிப்பாவி கொஞ்ச நேரம் பேசி அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தேன். உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான் கௌதம்... இன்னும் கொஞ்சநாள்தானே பொறுத்திருப்போம்” என்று போர்வையை போர்த்தி படுத்துவிட்டான்.

அலர்விழிக்கோ நாம தூக்கம் வருதுனு எமோஜி போட்டோமோ கோவிச்சிக்கிட்டிருப்பாரோ என்று மொபைலை எடுத்து பார்த்தாள். அவனும் ஆன்லைனில் இல்லையென்றதும் நிம்மதியாக உறங்கினாள்.

இங்கோ ரதியோ கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கொண்டிருந்தாள் தவளை தன் வாயால் கெடும் என்பது போல ரதி அவள் வாயால் உண்மையை உளறிக்கொட்டி சிங்கத்திடம் அடிவாங்கியிருந்தாள்.

“தாலி கட்டி கூட்டிட்டு வரும்போது நான் என்ன சொல்லியிருக்கேன்... உன் அப்பன் வீட்டுக்கு போகக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல நான் சொன்னதை மீறி போயிருக்கனே! என் பேச்சுக்கு என்ன மரியாதை சொல்லுடி” என்று அவளது கன்னத்தில் பளீரென அடி விழுந்தது.

“அச்சோ அடிக்காதீங்க மாமா அம்மாவை பார்க்க ஆசையா இருந்துச்சு அதான் போனேன்” என்று அவனது காலை பிடித்துக் கொண்டாள்.

“ஏய்! ஏய் நடிக்காதடி! நீ உங்கம்மாவை பார்க்க போனனு சொன்னா நான் நம்பிருவேனா..? என்னை கொல்ல உங்கப்பன் ஆள் அனுப்பியிருக்கான்டி... உனக்கு தெரியும்தானே சொல்லுடி உங்கப்பன் கூட கூட்டு களவாணியா சேர்ந்து என்னை கொல்லத் திட்டம் போட்டு இருக்க" என்று ஆத்திரப்பட்டவன் சுவற்றில் மாட்டியிருந்த பெல்ட்டை கையில் எடுத்தான்.

“அச்சோ மாமா என்ன சொல்றீங்க உங்க மேல நான் உசிரையே வச்சிருக்கேன். வீட்டுக்கு போனது உண்மை... அப்பாகிட்ட பேசினதும் உண்மை... ஆனா உங்களை கொல்ற அளவுக்கு நான் கெட்டவ கிடையாது மாமா... ப்ளீஸ் என்னை நம்புங்க மாமா” என்று கண்ணீருடன் அவனது காலை பிடித்துக்கொண்டு கதறினாள். அவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.

“போடி உன்மேல நம்பிக்கையே எனக்கு வராது. உன் அப்பன் போல உனக்கும் சாக்கடை புத்திதான் இருக்கும். இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு உன்னால ஏதாவது நடந்துச்சு உன்னை வெட்டிபோடக்கூட தயங்கமாட்டேன் பார்த்துக்கோ” என்று கண்ணை உருட்டி அவளை அடிக்க கையை ஓங்கியிருந்தான்.

“மாமா என்னை நம்புங்க! என்னால நம்ம குடும்பத்து ஆளுங்க உயிருக்கு ஆபத்து வராது. அப்பாவையும் பண்ண விடமாட்டேன். உலகத்துக்கு உயிரை கொண்டு வர பிரசவ டாக்டர் நான்... எப்படி மாமா உயிரை எடுக்க எனக்கு மனசு வரும்?” என்றாள் கண்ணீருடன்.

அவனோ “போய் படுத்து தூங்குடி...” கையில் வைத்திருந்த பெல்ட்டை தூக்கி விசிறி விட்டான்.

‘ராங்கி சொன்னது உண்மையாக இருக்க கூடாது’ என்றுதான் தெய்வத்தை வேண்டினான் சிங்கம். ரதியை முழுதாக அவன் நம்பவில்லையென்றாலும் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு அவளை தனக்குள் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொடங்கியிருக்கிறானே! இப்போது சிங்கத்திற்கு மதில் மேல் பூனை நிலமைதான்.
ரதியின் இரண்டு கன்னத்திலும் அவனது கை அச்சாக சிவந்து விட்டது. அதுவும் தேம்பி தேம்பி அழுது அவள் கண்களும் சிவந்திருக்க கதவை திறந்துக் கொண்டுச் சென்றவன் பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டியை எடுத்து வந்தான்.

ரதியோ சுவற்றின் மூலையில் முழங்காலில் கையை வைத்து வலியில் அழுதுக் கொண்டிருந்தாள். சிங்கத்தையும் அவன் குடும்பத்தையும் பழி வாங்க வேண்டும் என்று நினைத்தாளே தவிர சிங்கத்தின் உயிரை பறிக்க அவள் ஒரு போதும் நினைக்கவில்லை. அவளுக்கோ தந்தை மேல் கோபம் வந்தது. சிங்கத்துடன் உயிராக கலந்தவள் சிங்கத்தின் உயிரை எப்படி எடுக்க துணிவாள் பெண்ணவள்.

சிங்கமோ அவளது கையை தொட அவளோ “அடிக்காதீங்க மாமா வலிக்குது” என்று திக்கென்று நிமிர்ந்து சுவற்றில் சாய்ந்தாள்.

“ஏன் டி என்னை இப்படி இம்சிக்கிற?” என்று அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவளோ அவனது மார்பில் முகத்தை புதைத்து “என் மேல சத்தியமா நான் உங்களை கொல்ல நினைக்கமாட்டேன் மாமா” என்று கண்ணீர் சொரிந்தாள். அவளது கண்ணீர் அவனது நெஞ்சில் பட்டதும் அவனது கற்பாறை மனதும் இளகியது.

“அழாதேடி” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவன் அடித்த கன்னத்திற்கு முத்த மருந்து கொடுத்தான்.

“ஸ்ஸ் வலிக்குது” என்றாள் உதடு கடித்து.

“அம்மாவை பார்க்க போறேனு என்கிட்ட போன் போட்டு ஒரு வார்த்தை கேட்கமாட்டியாடி?” என்று அவளை திட்டிக்கொண்டே ஐஸ்கட்டியை அவளது கன்னத்தில் வைத்தான்.

“ஸ்ஸ் ஆஆ எரியுது” என்றாள் இதழ் பிதுக்கி.

“பொறுத்துக்கோ” என்றவனோ ரெண்டு கன்னத்திலும் வைத்துவிட்டு எழும்ப “இதோ இங்கயேயும் அடிச்சிருக்கீங்க இரத்தம் கட்டியிருக்கு” என்று தோள்பட்டையை காண்பித்தாள்.

“எங்கே டி?” என்று படபடத்தான். அறைக்குள் வந்ததும் கோபத்தில் முதுகிலும் நாலு அடி மெதுவாகத்தான் அடித்தான். “அம்மா அப்பா அடிக்காதீங்க” என்று கத்தியதில் அவனது கையை எடுத்துவிட்டான்.

“முதுகுலயும் வலிக்குது” என்றாள் மூக்கை உறிஞ்சினாள்.

“இனிமே எங்க போறதா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போ இப்படி அடி விழாது” என்றான் இறுக்கமான குரலில்தான்.

“சத்தியமா நான் உங்கள கொல்ல நினைக்கல மாமா” என்றாள் மீண்டும் அழுகையுடனே.

“சரி! சரி! இந்த பேச்சை விடு” என்றவனோ "ப்ளவுஸை ரிமூவ் பண்ணுடி" என்றவுடன்

அவளோ "வெட்கமா இருக்கு" உடம்பை நெளித்தாள்.

“இன்னும் என்ன என்கிட்ட மறைச்சு வச்சிருக்க... சும்மா கழட்டுடி” என்று அவளது முந்தானையில் கை வைக்க அவளோ முதுகுகாட்டி உட்கார்ந்தாள்.

அவனும் முந்தானையை சரித்து விட்டு “நான் உன்னை ப்ளவுஸ் ரிமூவ் பண்ணச் சொன்னேன்டி” என்றான் அதட்டலாக.

அவளோ ப்ளவுசை ரிமோவ் செய்து கண்ணைமூடிக்கொண்டாள். அவள் முதுகில் அவனது முரட்டு கைப்பட்டு லேசாய் சிவந்திருந்தது.

“ச்சே இப்படி அடிச்சிட்டேனே” என்று வருத்தப்பட்டவன் அவளது சிவந்திருந்த காயத்திற்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து அதில் மெல்ல முத்த ஒத்தடமும் கொடுத்து “சாரி தேவி” என அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.

“பரவாயில்ல விடுங்க மாமா நானும் உங்க கிட்ட சொல்லிட்டு போயிருக்கணும் இனிமே நான் சொல்லாம எங்கயும் போகமாட்டேன் சாரி” என்று திரும்பியவள் அவனை அணைத்துக்கொண்டாள்.

அவனுக்கோ கோபம் போய் மோகம் வந்துவிட்டது. அப்படியே அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்.

ஊடலுக்கு பின் வரும் கூடல் பெரும் சுகமானது என்று சும்மாவா சொன்னார்கள் மூதாதையர் அனுபவசாலிகள்.

“சாரி தேவி” என்று அவனும் “சாரிங்க மாமா” என்று அவளும் கட்டில் பாடம் படித்தனர். கட்டில் பாடம் திகட்டாத பாடம்தானே.
அவளது காதுமடலில் முத்தம் கொடுத்து அவளை சிலிர்க்க வைத்தான்.

அவளின் குண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்து அவளை கூடலுக்கு அழைப்பு விடுத்தான்.

அடுத்து மோகம் போதை தரும் இதழை தேன் அருந்தினான்.

கழுத்தில் பற்தடம் பதியவைத்தான். பெண்ணவளின் மென்மைகளில் மெய்மறந்து குடித்தனம் நடத்தினான். நாபியில் முத்தமிட்டு அவளை கண்சொருக வைத்தான்.

அவளை தனக்குள் ஆழிபேரலையாக சுழட்டிக்கொண்டான் ஆண்மகன். சிப்பிக்குள் முத்து எடுத்தான் சிங்கம். இருவருமே அணைப்பிலிருந்து பிரியவே இல்லை. சிங்கத்தை விட இன்று அவனை அதிகம் நாடியது ரதிதேவிதான். அவனுமே அவள் செய்த செயலில் மோகம் கொண்டு அதிர்ந்து விட்டான்.

விடியும் நேரம் அவளை தன்மேல் போர்த்திக்கொண்டு உறங்கினான்.

பொன்வண்ணனோ தூரிகாவை சமாதானப்படுத்தி ஓய்ந்து விட்டான். தூரிகாவோ சாப்பிடகூட வரவில்லை. கோதையோ தூரிகாவிடம் “கோபம் ஒருபக்கம் இருந்தாலும் வயித்தை காயப்போடக்கூடாது கண்ணு” என்று அவரும் கெஞ்சி பார்த்து விட்டார்.

“எனக்கு பசிக்கல அத்தை” என்று சொல்லி படுத்துவிட்டாள்.

பொன்வண்ணனோ “எனக்கு பசிக்கலைமமா நீங்க சாப்பிட்டு படுங்க” என்று அவனும் கட்டிலில் படுத்துவிட்டதும் தூரிகாவின் மனது இளகியது. எழுந்து அவிழ்ந்து கிடந்த முடியை கொண்டை போட்டுக்கொண்டு “சாப்பிட எழுந்து வாங்க” என்றாள் சுரத்தை இல்லாத குரலில்.

“என் கூட யாரும் பேசவேண்டாம்” என்று போர்வையை போத்திக்கொண்டான்.

அவளோ “ரொம்ப பண்ணாதீங்க... என்னால யாரும் பட்டினி கிடக்க வேணாம் வாங்க” என்று போர்வையை இழுத்தாள்.

போர்வையை நீக்கிய பொன்வண்ணனோ “நான் சாப்பிட உன்னை கூப்பிட்டேன்ல அப்போ வந்தியா நீ வரலைதானே... இப்போ நீ கூப்பிடும்போது நான் வரணுமா என்ன போடி” என்று மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு சிரித்தான்.

'இப்பத்தான் என் பொண்டாட்டி மலையிறங்கி வந்திருக்கா' சந்தோசப்பட்டான்.

அவளோ “எனக்கு பசிக்குது” என்று சிணுங்கினாள்.

தன்னை கட்டாயப்படுத்தி கூட்டிக்கொண்டு போவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு புஸ் என்று ஆனது. இப்போதான் சண்டையை மறந்து பேசியிருக்கா. நாம முறுக்கி நிற்ககூடாதென போர்வையை விட்டு எழுந்து அவளது கையை பிடித்து அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடு துகா” என்றான்.

“கையை விடுங்க சாப்பிட போகலாம்” என்று எழுந்தாள்.

“என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு அப்போதான் நான் சாப்பிட வருவேன்” என முகத்தை தூக்கி வைத்து திரும்பிக்கொண்டான்.

“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை மறந்துட்டேன் போதுமா வாங்க பசிக்குது” என்று அவனது கையை பிடித்துக்கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்தாள்.

“எனக்கு நீ ஊட்டி விடு உனக்கு நான் ஊட்டிவிடறேன்” என்றான் அடம்பிடித்து.

அவளோ “உங்களுக்கு வேணா ஊட்டிவிடறேன்... எனக்கு நீங்க ஊட்ட வேணாம் நான் சாப்பிட்டுக்குவேன்” என்று சாப்பாத்தியை பிய்த்து ஊட்டிவிட்டாள்.

அவனோ “இதுதான் சாக்கு” என்று சாப்பாத்தியோட அவளது விரலையும் சேர்த்து சுவைத்தான்.

“சும்மாயிருங்க இது டைனிங் டேபிள் யாராவது வந்திரபோறாங்க” என்று இதழை சுளித்தாள்.

“இந்த நேரம் யாரும் வரமாட்டாங்க துகா நீ ஊட்டுடி” என்று கொஞ்சி பேசியவனை முறைத்தபடியே சப்பாத்தியை ஊட்டி முடித்தாள். அவள் சாப்பிட ஆரம்பிக்க “நான் ஊட்டுறேன்டி உனக்கு” என்று அவள் மறுக்க மறுக்க அவளுக்கும் ஊட்டியே விட்டான்.

இருவரும் சமாதானம் ஆகி சாப்பிடுவதை மறைந்திருந்து பார்த்த கோதை "அப்பாடா" என்று நெஞ்சில் கைவைத்து மன நிம்மதியுடன் சென்றார்.

கோமதியோ நாச்சியிடம் நேற்றிரவு கோதை வீட்டில் நடந்ததை ரதி சிங்கத்திடம் உளறிக்கொட்டி அவனிடம் அடிவாங்கியதை வருத்தப்பட்டு சொல்ல “என்னை எழுப்பியிருக்கலாம்ல கோமதி நான் சொல்லியிருந்தா சிங்கம் என் பேச்சுக்கு கட்டுப்பட்டிருப்பான். ரொம்ப அடிச்சிட்டானோ” என வருத்தப்பட்டு கேட்டார்.

“நாங்க தடுக்க தடுக்க அவனோட அறைக்குள்ள இழுத்துட்டு போய்ட்டான்!! அத்தை கொஞ்ச நேரம் அவ அழுகற சத்தம் கேட்டுச்சு அப்புறம் சத்தம் இல்லை” என்றார் கவலையாக.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 34

“அடி மக்கு மருமகளே! என்ற மகன் உன்கிட்ட ஒருநாள் கூட சண்டை போட்டு கைநீட்டியதில்ல... அதான் உனக்கு ஒரு மண்ணும் தெரியலை. சண்டை நடந்தா சங்கதி நடக்கும்டி” என்று அவரோ கோமதியின் காதில் கிசுகிசுத்தார்.

“போங்க அத்தை உங்களுக்கு விவஸ்தையே இல்லை” என்று முகத்தை வெட்டிக்கொண்டு சமையல் வேலையை கவனித்தார்.

நாச்சியோ சிங்கத்தின் அறையை கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தார். ரதியோ குளித்து முடித்த அவள் சிவந்த நிறத்தை எடுத்துக்காட்டும் மிளகாய் கலர் சில்க் காட்டன் புடவையுடன் வெளியே வந்தவளின் கன்னத்தை பார்த்தார்.

இன்னும் லேசாக சிவப்பு இருக்க “ரொம்ப அடிச்சிட்டானா என் பேரன் அவன் வரட்டும் இன்னிக்கு நாலுபோடுறேன் ஆஊனா கையை நீட்டிடுறான் முரட்டு பையன்” என்று பேரனை வசைபாடினார் நாச்சி.

“என் மேலயும் தப்பு இருக்குல்ல அம்மாச்சி... நாங்க சமாதானம் ஆகிட்டோம்” என்று வெட்கச் சிரிப்பு சிரித்தாள் ரதி.

“சந்தோசமா இருந்தா சரி ராசாத்தி... என்ற பேரன் சந்தோசம் உன் கையிலதான் இருக்கு” என்று பேத்திக்கு மறைமுகமாக அறிவுரை கூறினார்.

கல்யாணநாளும் வந்தது. விடிந்தால் கல்யாணம். சிங்கமும் ரதியும் சொந்தங்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். பட்டு ரோஸ் நிறத்தில் காஞ்சிபு பட்டுப் புடவையில் தேவதை போல இருந்தவளை “சிங்கத்துக்கு ஏத்த பொண்டாட்டி ஜோடி பொருத்தம் அமோகம்” என்று பேசிக்கொண்டுச் சென்றனர்.

நாச்சியோ “ஊர் கண்ணு முழுக்க சிங்கம் மேலயும் ரதி மேலயும்தான் இருக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு சுத்திபோடும் நேரம் இவங்க ரெண்டு பேரையும் உட்கார வைச்சு சுத்திப்போடணும் கோமதி" என்றார் சிலாகித்து.

“சரிங்கத்தை” என்ற கோமதி ஐய்யர் "தாம்பூலத்தட்டு எடுத்துட்டு வாங்க" என்று கேட்க் தாம்பூலத்தை எடுத்து கொடுக்கச் சென்றார்.

குமரன் கௌதமின் அறையில் நின்று “அண்ணே எனக்கு ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டினு சொல்லிக்கொடுத்து ஏமாத்திட்டான் கடைக்காரன்... இதை எப்படி கட்டுறது நிற்கவே மாட்டேன்ங்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

“டேய் நீ மாப்பிள்ளையா இல்லை நான் மாப்பிள்ளையாடா... நானே இந்த வேஷ்டியை எப்படி கட்டுறதுனு கடுப்பாகியிருக்கேன். பேண்ட் போட்டு தாலி கட்டக்கூடாதா! லண்டன்ல அழகா மோதிரம் மாத்தினாவே கல்யாணம் முடிச்சிரும். இங்கதான் ஓவர் பார்மாலிட்டீஸ்” என்று வேஷ்டியை கட்ட முடியாமல் இதழ் குவித்து ஊதினான் கௌதம்.
பொன்வண்ணன் கார் மண்டபத்தின் முன்னே நின்றதும் தூரிகா காரிலிருந்து இறங்கி பொன்வண்ணனுக்காக காத்திருந்தாள்.
பொன்வண்ணன் பாக்கெட்டில் வைத்திருந்த கூலரை எடுத்து கண்ணில் மாட்டிக்கொண்டான்.

தூரிகாவோ பச்சை நிறத்தில் பட்டுப்புடவை கட்டியிருந்தாள். பொன்வண்ணனும் பச்சை சில்க் சட்டையும் பட்டு வேஷ்டியும் கட்டியிருந்தான்.

சிங்கம் எப்போதும் சாதாரணமாக பேசும்போது மீசையை தடவுவது போல தடவிக்கொண்டே தூரிகாவின் கையை பிடித்துக்கொண்டுச் சென்றான்.

“ஹலோ டாக்டர் என்னோட அண்ணா போல ட்ரஸ் பண்ணினா சிங்கம் ஆகிடமுடியாது. முதல் வேஷ்டியை இறக்கி விடுங்க... அசிங்கமா இருக்கு. பெரியவங்க சொன்ன ஒரே காரணத்துக்காக உங்க தங்கச்சி கழுத்துல தாலி கட்டி அவங்களோட வாழவும் ஆரம்பிச்சிட்டாரு. அவரோடு தங்க குணம் முன்னால நீங்க நிற்க முடியாது. நீங்க என் கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்டி கூட்டிட்டு போய் இன்னும் டார்ச்சர் கொடுக்குறீங்க... சங்கு சுட்டாலும் வெண்மை தரும். பாலை காய்ச்சினாலும் வெண்மை நிறம் மாறாதுனு பெரியவங்க சொல்லுவாங்க. எங்க அண்ணா குணம் என்னிக்கும் மாறாது. யார் தவறு செய்தாலும் அவங்களுக்கு தண்டனை உண்டு. நீங்க தவறு செய்துருக்க போய்த்தான் தங்கச்சி புருசனாக இருந்தாலும் உங்க கூட பேச விருப்பம் இல்லாம தள்ளியே இருக்காரு” என்றாள் என ஒவ்வொரு வார்த்தையும் பொன்வண்ணன் மரமண்டையில் ஆணி அடித்தாற் போல சொல்லிவிட்டாள்.

பொன்வண்ணனுக்கோ அவள் பேசுவதில் கோபம் வந்தாலும் தான் தவறு செய்திருக்க போய்தானே பேசுகிறாள் என்று கோவத்தை தணித்துக்கொண்டாலும் அப்போதைக்கு முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்.
பொன்வண்ணன் வருவதை பார்த்த துரைசிங்கமோ அங்கிருந்து நகர்ந்தால் முறையாகாது. வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை அவமதிப்பது போல இருக்கும் தங்கையின் மனதும் கஷ்டப்படுமென்று பல்லைக்கடித்துக்கொண்டு பொன்வண்ணன் சிங்கம் பக்கம் வந்ததும் "வாங்க" என்றான் மெலிதாய் இதழ் விரித்து.

ரதியோ "அண்ணா வா வா" என்று பொன்வண்ணனை அணைத்துக்கொண்டாள்.

“ம்ம்க்கும்” என்று தொண்டையை கனைத்த சிங்கமோ புன்சிரிப்புடன் வந்த நின்ற தங்கையை "பாப்பா எப்படி இருக்க!" என்றவனோ தங்கையின் கழுத்தில் ஒற்றைத்தாலி கொடியுடன் வந்து நின்றதை பார்த்தவனுக்கு நெஞ்சுக்கு அழுத்தமாக இருந்தது சிங்கத்துக்கு.

பொங்கல் திருவிழா காலங்களில் கூட அவள் கழுத்தில் வைரத்திலும் தங்கத்திலும் நெக்லஸ் ஆரம் போட்டு அழகு பார்ப்பான். இப்போது அவர்கள் வீட்டு திருமணத்தில் கழுத்தில் ஒற்றை நகையுடன் வந்த நின்ற தங்கையை பார்த்தவனுக்கு உயிர் துடித்துப்போனது.

அவனது பாகெட்டில் வைத்திருந்த செயினை எடுத்து அவளது கையில் கொடுத்து “போட்டுக்கோடா பாப்பா” என மன வருத்தத்தை மறைத்து கண்ணைச்சிமிட்டியவனுக்கு கண்கள் கலங்கியது. யாரும் பார்க்கவண்ணம் முகத்தை திருப்பி கண்களை துடைத்துக்கொண்டான்.

காலையில் கோதை தன் நகைளை கொடுத்து “போட்டுட்டு போடா எல்லாரும் கழுத்து நிறைய நகைப்போட்டிருப்பாங்க! நீ மட்டும் ஒரு செயினை போட்டிருந்தா நல்லாயிருக்காது” என்று எவ்வளோ சொல்லியும் தூரிகாவோ “எங்கப்பா கொடுத்த நகையைத்தான் உங்க பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டாங்க! அப்போ உங்க பிள்ளை வாங்கிக்கொடுத்த நகையைத்தான் போட்டுக்கிட்டு போகமுடியும். உங்க பிள்ளைக்கா எப்போ நகை வாங்கித்தரதோணுதோ வாங்கித்தரட்டும் கழுத்து நிறைய போட்டுக்குறேன். நீங்க உங்க பையனையும் பொண்ணையும் வளர்த்த விதம் சரியில்லை அத்தை” என்று அவரை குற்றவாளியாகவே பேசிவிட்டாள் சென்றாள். கோதையோ பேச்சற்றுத்தான் நின்றிருந்தார்.

பொன்வண்ணனோ “என்ன ரதி லண்டன்ல இருக்கும் போது சிம்பிளா ஒரு செயின் மட்டும்தானே போடுவ இப்போ கழுத்துல இவ்ளோ நகை போட்டிருக்க. ஏதோ நகைக்கடை விளம்பரத்துல நிற்கறது போல” என அவள் கழுத்தில் போட்டிருந்த வைர நெக்லஸ் வைர ஆரத்தை கண்டு வியப்பாகவே கேட்டான்.

“இந்த வீட்டுல நகை போடாம இருந்தா நம்மை மதிக்க மாட்டாங்க அண்ணா... அதுவும் இந்த நகையெல்லாம் இன்னிக்கு காலையில சர்பிரைஸா என்கிட்ட கொடுத்து போட்டுக்க சொன்னாரு என் வீட்டுக்காரர்... இதெல்லாம் அவங்க பரம்பரை நகையாம். ஓசில வரும் போது வேணாம்னு சொல்லக்கூடாது வாங்கி கழுத்துல போட்டுக்கிட்டேன் பாரு” என்று பெருமைப்பட்டுக்கொண்டாள் ரதிதேவி.

சிங்கத்திடம் பேசி விட்டு பொன்வண்ணன் பக்கம் வந்து நின்றாள் தூரிகா. “நீ நேத்து வருவனு அத்தை உனக்காக காத்திருந்தாங்க! தூரி! ஆமா என்ன கழுத்துல ஒத்த தாலி செயினோட வந்திருக்க... " என்றாள் ரதி அவளது காதில் போட்டிருந்த வைர ஜிமிக்கியை விரலால் தொட்டு ஆட்டியபடி

“ம்ம் எங்க அண்ணாபோல உங்க அண்ணா எனக்கு எந்த நகையும் வாங்கித்தரலை அண்ணி” என்று நெத்தியில் அடித்தாற் போல பேசிவிட்டு கணவனை பார்த்தாள்.

பொன்வண்ணனுக்கோ அப்போது இவளுக்கு நாம இன்னும் ஒரு நகைகூட வாங்கித்தரவில்லையென்று உரைத்தது. கன்னத்தில் அடித்த உணர்வு. “ஏய் துகா இப்பவே வா போய் ஜுவல் வாங்கிட்டு வந்துடலாம்” என்று தூரிகாவின் கையை பிடித்தான் பொன்வண்ணன்.

“அடுத்தவங்க சொல்லி நகை வாங்கி தர தோணக்கூடாதுங்க. கட்டின பொண்டாட்டிக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்யணும். என்னை இப்ப ரொம்ப பேச வைக்காதீங்க” என்று ஆற்றாமையோடு பேசியவளை கண்டு பொன்வண்ணன் தன் தவறை எண்ணி வருத்தப்பட்டான்.

அங்கே வந்த ஐய்யனாரும் கோமதியும் “வாங்க மாப்பிள்ளை” என்றார் வாய் நிறைய புன்னகையுடன்தான்.

“வரேன்ங்க மாமா” என்றான் லேசான சிரிப்புடன்.

தூரிகாவோ “அம்மா” என்று அணைத்துக்கொண்டாள் கோமதியை

“ஐய்யனார் வீட்டு பொண்ணு கழுத்துல ஒத்த சங்கிலி போட்டுகிட்டு கூட்டிட்டு வர உன் புருசனுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று பொன்வண்ணன் மீது ஆத்திரமாக வந்தது கோமதிக்கு. வெளியே வீட்டு மாப்பிள்ளை திட்ட முடியாமல் மருகி நின்றனர் ஐய்யனாரும் கோமதியும்.

பொன்வண்ணன் இப்போது கல்யாண மண்டபத்துல இருக்கும் பெண்களை பார்த்தான். கழுத்தில் ஆரமாவது போட்டிருந்தனர்.

‘ச்சே நான் எப்படி துகாக்கு நகை வாங்கி கொடுக்க யோசிக்காம போனேன்’ என்று அவனையே திட்டிக்கொண்டான். அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

சரியாக கௌதம் போன் செய்து “எங்கடா இன்னும் கல்யாணத்துக்கு வராம இருக்க நீதான் துணை மாப்பிள்ளை தெரியும்ல” என்றான் கோபத்துடன்.

“இதோ வந்துட்டேன்டா” என்று மாப்பிள்ளை அறைக்குள் சென்றான். குமரன் வெளியேச் சென்றிருந்தான். “டேய் இந்த வேஷ்டி இடுப்பிலயே நிற்கலை மாப்பிள்ளை ரெடியானு வந்து வந்து கேட்டுட்டு போறாங்க.. எனக்கு ஷையா இருக்கு. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா” என்றான் கெஞ்சலாகவே.

“நான் இருக்கும்போது நீ கவலைப்படாமலா மாப்பிள்ளை” என கௌதமிற்கு வேஷ்டியை கட்டிவிட்டான் பொண்வண்ணன்.

“நடுவுல கழண்டு விடாதே வண்ணா” என்று இறைஞ்சுதலாய் பார்த்தான்.

“அதான் பெல்ட் போட்டு இருக்கேன்டா கழண்டு விழாது” என்றான் சிரிப்புடன்.

“மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க” என்று ஐயர் கூப்பிட்டதும்
பொன்வண்ணன் கௌதமின் கையை பிடித்து மணமேடைக்கு கூட்டிச்சென்றான்

நாச்சியோ வரவேற்பில் நின்றிருந்த தூரிகாவை பார்த்ததும் “ராசாத்தி இப்போதான் வந்தியா கண்ணு” என்று பேத்தியின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவர் பேத்தியின் கழுத்தை பார்த்தவருக்கு கண்ணில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது. அவர் கழுத்திலிருந்த நகையை கழட்டி தூரிகாவின் கழுத்தில் போட போக “வேணாம் பாட்டி அண்ணா முதன் முதல் வாங்கிக் கொடுத்த டாலர் செயின் இருக்கு.. இதோ போட்டுக்குறேன் இந்த செயின் என் ஆயுசு இருக்கும் வரை நான் போட்டிருப்பேன்.. இதை யார் கழட்ட சொன்னாலும் நான் கழட்டமாட்டேன்” என்றவளுக்கு அழுகை வந்தாலும் அடக்கி சிரிப்புடனே நின்றாள்..

வீரய்யனும் ஐய்யனாரும் மனம் வெதும்பி நின்றனர். எலக்சன் அன்று அவள் கழுத்திலிருந்த செயினை கட் ஆகி கழண்டு விழுந்தது. செயினை எடுத்து அவளது கையில்தான் கொடுத்தான். “அண்ணா இது நீங்க வாங்கி கொடுத்த செயின் நீங்களே சரி பண்ணிக்கொடுங்க” என்று சிங்கம் கையில் கொடுத்திருந்தாள்.

பொன்வண்ணன் கண்ணுக்கோ ஏதோ வாங்குவது போலத்தான் தெரிந்தது. அதான் சண்டையில் உன் அண்ணாகிட்ட எனக்கு தெரியாம என்ன வாங்கின என்று சண்டைபோட்டிருந்தான் பொன்வண்ணன்.

நாச்சியோ “அலர்விழிக்கு பொண்ணு தோழியா நீதான் நிற்கணும் வா தங்கம்” என்று தூரிகாவை அலர்விழியின் அறைக்குச் கூட்டிச்சென்றார்.

ரதியோ “பெரிசா பாச மழை பொழியுறாங்க... இந்த வீட்ல இல்லாத நகையா எங்க அண்ணா வேண்டாம்னுதான் சொல்லுவான் அதுக்காக சீர் கொடுக்காம வந்துடுவாங்களா என்ன? அம்மாச்சியும் தாத்தாவும் ஒருதலைபட்சமாதானே நடந்துக்குறாங்க” என்று பெரியவர்கள் மேல் தவறை போட்டு விட்டு அலர்விழியின் அறைக்குச் சென்றாள்.

தூரிகாவோ அலர்விழியை அணைத்துக்கொண்டு "எப்படியிருக்க அலரு?" என்றாள் பாசத்துடன்.

“நல்லாயிருக்கேன்டி நீதான் எனக்கு புடவை கட்டிவிடணும் உனக்காகத்தான் காத்திருந்தேன் தூரி” என செல்ல கோபம் கொண்டாள் அலர்விழி தூரிகா மேல்.
“நான் உன் கல்யாணத்துக்கு வராம இருப்பேனா?” என்று பேசிக்கொண்டே பட்டுப்புடவையை கையில் எடுத்தவள் “என்னடி புடவையில ஓட்டை இருக்கு யாரும் பார்க்கலையா?” என்றதும் பதட்டத்துடன் சொன்னதும் தாரகையோ காலையில நான் பார்க்கும்போது கூடசேலையில ஓட்டை இல்லையே" என்றாள் படபடப்புடன்.

நாச்சியோ புடவையை வாங்கி பார்த்தவர் 'அபசகுனமா இருக்கே' என்று மனதில் நினைத்தவரோ வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் "தாரகை சிங்கத்தை வரச்சொல்லு" என்றார் அவசரமாக.

முகூர்த்ததுக்கு இன்னும் அரைமணிநேரம் இருக்கு வேறு புடவை வாங்கி வந்திடலாம் என்று நினைத்தார் நாச்சி.

அலர்விழிக்கு அழுகை வந்துவிட்டது. “அம்மாச்சி எனக்கு கல்யாண ராசியே கிடையாது போல” என்று அழுக ஆரம்பித்தாள்.

“ஏய் அழாதடி” என்று அலர்விழியை சமாதானப்படுத்தினாள்.

ரதியோ பூனை போல பதுங்கி அறைக்குள் வந்தவள் “என்னாச்சு அலர்விழி அழற! யாரும் பார்த்தா கல்யாணத்துல விருப்பம் இல்லைனு நினைக்கப்போறாங்க” என்று அவள் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவள் மனதை காயப்படுத்தினாள்.

சிங்கமோ கையில் புடவை பெட்டியுடன் வந்தான்.”எப்படி புடவையில ஓட்டை விழுந்துச்சு அப்புறமா ஆராய்ச்சி பண்ணுங்க.. அலர்விழி புடவை போலவே தூரிகா பாப்பாவுக்கு வாங்கி வச்சிருந்த புடவை இது” என்று புடவை பாக்ஸை தூரிகாவிடம் கொடுத்து “சீக்கிரம் கட்டி அலர்விழியை மணமேடைக்கு கூட்டிட்டு வாமா” என்றவனோ ரதியை ஒரு பார்வை பார்த்து “வெளியே வாடி” என்று கண்ணைக்காட்டிச்சென்றான்
ரதிக்கோ அல்லுவிட்டது.

‘இப்போ போகலைனாலும் அடிப்பான்’ என்று பம்பிக்கொண்டு வெளியே வந்தவளின் கையை பிடித்து இழுத்துச் சென்று ஆள் வராத இடத்தில் நிற்க வைத்து அவளது கன்னத்தை அழுத்தி பிடித்து “சீப்பை ஒழித்துவைத்தால் கல்யாணம் நிற்கும் என்ற நினைப்பு உனக்கு. நீ ஏன் டி இப்படி சில்லரைத் தனமா நடந்துக்குற... அகம்பாவம் பிடிச்சி திரியாதடி! நீயும் உன் அண்ணாவும் படிச்ச முட்டாள்கள்” என்று அவளை அசிங்கமாக திட்டிவிட்டுச் சென்றான் சிங்கம்.

அவளோ எப்படியும் இந்த சிபிஐ கண்டுபிடிச்சிடறான் என்று நொந்துக் கொண்டுச் சென்றாள்.

அழகு தேவதைபோல கௌதம் பக்கத்தில் உட்கார்ந்தாள் அலர்விழி.

கௌதமோ அலர்விழியை விடாது பார்த்துக்கொண்டிருந்தான்.

அலர்விழிக்கு கௌதம் பார்க்கிறான் என்று தெரிந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தான் உட்கார்ந்திருந்தாள்.

“ப்ரண்ட் உங்க முகத்தை நான் பார்க்கணும் எனக்கு காட்டமாட்டீங்களா?” என்றான் கெஞ்சலாக.

அவளோ மெல்ல நிமிர்ந்தாள். “அப்பா என்ன அழகு ப்ரண்ட் நீங்க” என்று கண்ணடித்தான்.

அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

கௌதமோ “அதிகமா பேசிட்டோமோ அடக்கி வாசிடா கல்யாணம் வேணாம்னு எழுந்து போயிற போறாங்க” என்று தன்னையே திட்டிக்கொண்டான்.

ஐய்யர் தாலியை எடுத்து வீரய்யன் நாச்சியின் கையில் கொடுக்க அவர்கள் இருவரும் குலதெய்வத்தை கும்பிட்டு கௌதம் கையில் கொடுத்து "கட்டுப்பா" என்றார்கள் முகம் மலர்ந்த புன்னகையுடன்.

கௌதமோ தாலியை வாங்கியவன் “ப்ரண்ட் என்னை பாருங்களேன் ப்ளீஸ்” என்றதும் அவளோ மெதுவாய் நிமிர்ந்தாள். அவளது கண்ணை பார்த்துக்கொண்டு அவளது கழுத்தில் இரண்டு முடிச்சி போட “அண்ணா மூணாவது முடிச்சு நான் தான் போடுவேன்” என்றதும் “தாராளமா தூரிகா பாப்பா” என்றான் வாய் கொள்ளா சிரிப்புடன்.

தூரிகா மூன்றாவது முடிச்சு போட்டவுடன் அலர்விழியின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டான் கௌதம். கௌதமின் கையை பிடிததுக்கொண்டு ஹோமத்தை மூன்று முறை சுற்றி வந்தனர். அனைவர் முன்பும் அவளது பாதத்தை பற்றி மெட்டியை போட்டு விட்டான் கௌதம். அலர்விழியின் கண்களில் கண்ணீர் துளி கௌதமின் கையை நனைக்க “இனிமே நீ அழக்கூடாது விழி” என அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டான.

கண்ணனும் அன்பரசியும் ஆனந்த கண்ணீர் மல்க மகளை பார்த்திருந்தனர்.

சிங்கமோ “அத்தை மாமா இனி உங்க கண்ணுல கண்ணீர் வரக்கூடாது பொண்ணையும் மாப்பிள்ளை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றான் அவனுக்குமே இப்போது நிம்மதியாக இருந்தது.

பொண்ணும் மாப்பிள்ளையும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு வர குடும்ப போட்டோ எடுக்க போட்டோகிராபர் கூப்பிட அனைவரும் வந்து நின்றனர். தூரிகா சிங்கம் பக்கம் போய் நின்றுக் கொண்டாள் 'என் பக்கம் வாடி' என்று பொன்வண்ணன் கண்அசைக்க அவளோ வரமாட்டேன் என்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

'நானே வரேன்டி' என்றவனோ சிங்கம் பக்கம் போய் நிற்க வேண்டியதாய் போயிற்று. போட்டோ கிராபரோ “டாக்டர் சார் சிங்கம் அண்ணா பக்கம் சேர்ந்து நில்லுங்க” என்றதும் அவனோ கிழிஞ்சுது என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டான்.

பொன்வண்ணன் சிங்கம் பக்கத்தில் ஒட்டிநின்றான் சிங்கமோ பொன்வண்ணனை முறைத்தான். அவனோ “இதுக்குதான் நான் ஒட்டியே நிற்கலை” என்று தள்ளி நிற்க “டாக்டர் ஒட்டி நில்லுங்க” என்றதும் பொன்வண்ணன் சிங்கம் பக்கத்தில் ஒட்டிநின்றான்.

தூரிகாவிற்கோ சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றாள்.

போட்டோ எடுத்ததும் “தூரிகா கிளம்பலாமா?” என்றான் அழுத்தமான குரலில் பொன்வண்ணன்.

“கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்றவளை “எனக்கு இங்க இருக்க பிடிக்கலை வா போகலாம் கல்யாணம்தான் முடிஞ்சிருச்சே” என்றவனோ தூரிகாவின் கையை பிடித்துக்கொண்டு ஐய்யனாரின் முன்னே நின்றவன் “நாங்க கிளம்புறோம் மாமா” என்றதும் "இருங்க மாப்பிள்ளை போகலாம்" என்றார் தன்மையாக.

அவனோ “எனக்கு ஹாஸ்பிட்டல் சர்ஜரி இருக்கு. தூரிகாவும் லீவு போட முடியாது நாங்க கிளம்புறோம்” என்று தூரிகாவின் கையை பிடித்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.


தூரிகாவோ தன் குடும்பத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே கண்ணில் கண்ணீருடன் பொன்வண்ணனுடன் காரில் ஏறினாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 35

மாப்பிள்ளையும் பொண்ணையும் சிங்கம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .ஆரத்தி எடுக்க தூரிகா அங்கே இல்லையென்று கோமதியின் மனம் அலைப்புற்று மனத்தாங்கலுடன் நின்றிருந்தார்.

"நான் ஆரத்தி எடுக்குறேன் அத்தை" என்று ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வந்தாள் ரதி.

சிங்கமோ ரதியின் பக்கம் சென்று "நல்ல மனசா இருக்கவங்க எடுக்கணும்டி நீ எடுக்காதே" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி பேசினான்.

"என்னைய நீங்க இன்னும் நம்பலைல" என்றாள் கலங்கிய கண்களுடன்.

"ஏய் நீலிக்கண்ணீர் விடாதடி... நைட் உனக்கு தனியா ஸ்பெஷல் பூஜை இருக்கு" என்று கண்ணால் மிரட்டியவன் அங்கே நின்ற தாரகையிடம் "நீ ஆரத்தி எடு தாருமா" என்றான் மெல்லிய இதழ் புன்னகையுடன்.

தாரகையோ "சரிங்க மாமா" என்றவள் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து சுற்றி முடித்து "மாமா எனக்கு ஆரத்தி தட்டுல பணம் போட்டா... நான் ஏத்துக்கமாட்டேன்! தங்கத்துல மோதிரமோ செயினோ போடுங்க அப்போதான் வீட்டுக்குள்ள போக விடுவேன்" என்று ஆரத்தி பாட்டு பாடி டான்ஸும் ஆடினாள்.

கௌதமோ "இப்போ செயின் என்கிட்ட இல்லம்மா... பணமா போடுறேன் வாங்கிக்கோ கண்டிப்பா உனக்கு செயின் வாங்கி கொடுக்குறேன்" என குறுநகையுடன் சொன்னவன் வாலட்டிலிருந்த பணத்தை எடுத்து ஆரத்தி தட்டில் போட்டான்.

"பொழைச்சு போங்கனு விடறேன். தலை தீபாவளிக்கு எங்கப்பா உங்களுக்கு செயின் போடுவாங்க. அந்த செயின் எனக்குதான் வரணும் பார்த்துக்கோங்க" என்று கண்ணை உருட்டி செல்லமாக கட்டளை போட்டாள் தாரகை.

குமரனோ "ரொம்ப ஆசைப்படாதடி" என்று நமட்டு சிரிப்புடன் அவளை முறைத்தான்.

"போடா" என்று இதழ் சுளித்துச் சென்றாள் தாரகை.

ஆரத்தி எடுத்து மணமக்கள் உள்ளேச் சென்றதும் அலர்விழியை விளக்கேற்ற சொல்லி பால் பழம் கொடுத்தார் கோமதி.

அலர்விழிக்கு சிங்கம் வீடு அவள் ஓடியாடி பார்த்து புலங்கிய வீடுதான்... ஆனாலும் இப்போது இங்கே இருக்க அவள் மனம் அல்லாடியது.

அவளின் மனதை புரிந்துக் கொண்ட கௌதமோ "ப்ரண்ட் நீ பாலை குடிச்சிட்டு குடு நாம நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிடலாம்" என்று மெல்லிய குரலில் பேசியவன் அவள் குடித்து கொடுத்த பாலையும் பழத்தையும் விரும்பியே சாப்பிட்டான். முதல்நாளே தன் மனம் புரிந்து நடந்துக் கொள்கிறான் என்று அலர்விழிக்கு கௌதமின் குணம் பிடித்து போனது அவளின் மனதில் ஒரு அடி எடுத்து வைத்து உள்ளேச் சென்றான் கௌதம்.

கௌதம் அறையில் அவனை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டனர். ரதியோ சிங்கத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க அலர்விழியை அவளது அறைக்குச் கூட்டிச்சென்றுவிட்டாள்.

அலர்விழி சிங்கம் அறைக்கு இதுவரை வந்ததே கிடையாது. அவளுக்கு இந்த அறையில் இருப்பது பிடிக்கவில்லை எப்போதடா இந்த அறையிலிருந்து வெளியே போவோம் என்றிருந்தது. ரதியோ சிங்கத்தின் கண்ணுக்கு சிக்காமல் சமையல்கட்டிலேயே இருந்துகொண்டாள்.

கோமதியோ “ரதி மூகூர்த்தத்துக்கு வர முடியாதவங்க வந்திருக்காங்க அவங்களுக்கு காபி கொடுமா" என்று காபியை அவளிடம் கொடுத்துவிட்டார்.

அவளோ சிங்கம் இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றாள் காபி ட்ரேயுடன்.

ஆனால் சிங்கம் வீரய்யன் பக்கத்தில் உட்கார்ந்து வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். 'போச்சு கருவாயன் இருக்கானே' என்று புலம்பிக்கொண்டே அங்கிருந்தவர்களுக்கு காபியை கொடுத்து விட்டு சிங்கத்தின் முன்னே காபியை நீட்டினாள்.

காபியை எடுத்த சிங்கமோ எப்படியும் 'நைட் என்கிட்ட தனியா மாட்டித்தான் ஆகணும்டி' என்று சைகை செய்து நாக்கை கடித்தான்.

தூரிகாவோ கண்ணீரை துடைத்துக்கொண்டேயிருந்தாள். அவளது கண்ணீர் அவன் மனதை உலுக்கத்தான் செய்தது. அவன் முகத்தை பார்க்காமல் ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்துக் கொண்டாள். அவனோ இப்போ பேசினா ரெண்டு பேருக்கும் சண்டை பெரிசா வளரும் என்று பெரும்மூச்சுவிட்டவன் காரை நிறுத்தியது நகைக்கடைக்கு முன்னேதான்.

தூரிகாவோ 'இப்ப யார் நகை வாங்கி தரலனு அழுதாங்க!' என்று மனதில் பொருமியவளோ அவனிடம் பேசப்பிடிக்காமல் கண்ணை மூடி அமர்ந்துக் கொண்டாள்.

'ரொம்பத்தான் அழுத்தம்டி உனக்கு' என்று அவன் பொருமினாலும் அவளை சமாதானப்படுத்தியாக வேண்டுமென்று "துகா" என்று அவளின் கையை பிடித்தான்.

"ம்ப்ச்" என்று கையை தட்டி விட்டு மீண்டும் கண்ணை மூடினாள்.

"ஏய் இங்க பாருடி" என்று அவள் கன்னத்தை அழுத்தப்பற்றினான் மென்மையான குரலில்.

கண்ணைத்திறந்து பார்த்து பொன்வண்ணனை முறைத்துப்பார்த்தாள் தூரிகா.

"எதுக்குடி இப்போ முறைக்குற..? நான் நகை வாங்கி கொடுக்காதது என் தப்புதான் சாரி.. எனக்கு தோணலை நம்ம ஊர்ல ஃபங்ஷனா பொண்ணுங்க இவ்ளோ நகை போடுவாங்கனு எனக்கும் தெரியலைடி துகா... வெரி சாரிடி இப்ப ஆசையா நகை வாங்க நகைக்கடைக்கு கூட்டிட்டு வந்திருக்கேன் வாடி" என்று குரலை குழைத்து பேசினான்.

"ஏன் அத்தை நகை போட்டு பார்த்திருக்கமாட்டீங்களா!! இல்ல உங்கள வளர்த்த அத்தை சொத்தைனு யாரையோ சொல்வீங்களே ஒரு ஃபங்ஷனா நகைபோட்டு பார்த்திருக்கமாட்டீங்களா! அட இந்த நகையெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லிங்க.. நீங்க வாங்கி தர பத்து பவுனு ஆரத்து மேல எனக்கு துளி விருப்பம் கிடையாது! எனக்கு எங்க அப்பாவும் அண்ணாவும் தங்கத்திலயும் வைரத்திலயும் வாங்கி போட்டு அழகு பார்த்திருக்காங்க. நான் போடாத டிசைன் நகையே கிடையாது. மார்க்கெட்ல புது டிசைன் நகை வந்துச்சுனா! அந்த நாளே எங்க அண்ணா உடனே வாங்கிட்டு வந்து கொடுத்துடுவாரு... இப்ப என்னோட அழுகைக்கு காரணமே எங்க வீட்டு விஷேசத்துல ஒரு மணிநேரம் இருந்துட்டு வந்திருந்தா நான் எவ்ளோ சந்தோசப்பட்டிருப்பேன்... உங்க தங்கச்சியை எங்க வீட்டு ஆளுங்க எப்படி வச்சிருந்தாங்கனு பார்த்தீங்கல்ல! உங்க தங்கச்சி கழுத்துல அடுக்கடுக்கா நகைப்போட்டிருந்ததையும் பார்த்தீங்கல்ல உங்க தங்கச்சியை மகாராணி போல நடத்துறாங்க கண்ணு குளிர பார்த்து சந்தோசப்பட்டீங்கல்ல. ஆனா நான் இங்க உங்க கிட்ட தினமும் டார்ச்சர் அனுபவிக்குறேன் தெரியுமா... இப்ப கூட இந்த நகைக்கடைக்கு வந்தது எனக்கு பிடிக்கவே இல்ல... ஏன்னா அடுத்தவங்க சொல்லி நீங்க எனக்கு வாங்கி தரது எனக்கு சுத்தமா பிடித்தமில்லை.. லவ் பண்ணுறேனு சொல்லி அவரசப்பட்டு தாலி கட்டி கூட்டிட்டு வந்து என்னோட சந்தோசத்தை எல்லாம் பறிச்சிட்டீங்க! நீங்க என்னை லவ் பண்ணவே இல்ல உங்களுக்கு என்மேல லஸ்ட் தான் போல" என ஆத்திரத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பேசினாள் தூரிகா.

"நிறுத்து துகா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா என்ன பண்ணுவேன்னு தெரியாது" என்று பல்லைக்கடித்தவனோ அவளை அடிக்க கையை ஓங்கிவிட்டான். அவளின் கண்ணில் கண்ணீரை கண்டவனோ கையை இறங்கிக்கொண்டு ஸ்டேரிங்கில் ஓங்கி குத்திக்கொண்டான்.

"என்ன டாக்டர் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ!" என கடுப்பாய் வார்த்தைகளை விட்டாள்.

அவனோ கோபத்தை தள்ளி வைத்து "என்னோட காதலை நீ இன்னும் புரிஞ்சுக்கல துகா பேபி... என்னோட லவ்க்கு பெயர் லஸ்ட் கிடையாது... நா.நான் உன்னை இங்க வச்சிருக்கேன்... நீ என்னோட லவ்வை கொச்சைப் படுத்தி பேசும் போது இதயத்துல இரத்தம் வருதுடி" என்று அவனது இதயத்தை தொட்டுக்காட்டி எச்சிலை விழுங்கிக்கொண்டான் கலங்கிய கண்களுடன்.

"எப்படிங்க ஒரு பொண்ணை வலுக்கட்டாயமா தாலி கட்டி கூட்டி வந்து ஃபர்ஸ்ட் நைட்டும் என் விருப்பம் இல்லாம நடத்துவீங்க... எந்த நாளாவது எனக்கு விருப்பமானு கேட்டு தொட்டு இருக்கீங்களா... என் உணர்வுகளோட விளையாட என்னை உங்க பக்கம் கொண்டு வருவீங்க இதுக்கு பேரு காதல் கிடையாது பொன்வண்ணன்... உங்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு! ஒரு பொண்ணை தாலி கட்டி கூட்டிட்டு வந்தா மட்டும் பத்தாது! சாப்பாடு ஊட்டி விட்டு கொஞ்சினா மட்டும் போதுமா..? ஆஆஊனா போதும் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டியது... நான் விரும்பினதை என்னிக்காவது பண்ணியிருக்கீங்களா..? எனக்கும் ஒரு மனசு இருக்கும்னு யோசித்து பார்த்திருக்கீங்களா? சொல்லுங்க... உங்க தங்கச்சி உங்க வீட்டுக்கு வந்தப்ப நீங்களும் மாமாவும் அத்தையும் அவ்வளவு சந்தோசப்பட்டீங்கதானே... அதுபோல எனக்கும் என் அம்மாவை பார்க்கணும்னு தோணும்ல... வீட்டுக்குத்தான் அனுப்பலை... கல்யாண மண்டபத்துல ஒரு மணிநேரம் இருந்துட்டு வானு என்கிட்ட சொல்லியிருந்தா... கொஞ்ச நேரம் இருந்துட்டு நான் உங்க பின்னால நாய்க்குட்டி போல சுத்தி வந்திருப்பேன். உங்க நகையும் வேணாம்! ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் வீட்டுக்கு காரை விடுங்க" என்று அவள் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல கொட்டிவிட்டாள்.

"இப்ப என்னடி உன் வீட்டுக்கு கொண்டு போய் விடணும் அவ்ளோதானே! ஆனா அதுக்குமுன்ன நான் வாங்கித்தர நகையை போட்டுட்டு போ உங்க வீட்டுக்கு" என்று அவளது கையை பிடித்து இறங்கி நகைக்கடைக்குள் கூட்டிச்சென்றான்.

"விடுங்க! விடுங்க!" என்று அவனது கையை விலக்கி விட அங்கே இருப்பவர்கள் இருவரையும் பார்த்தனர்.

"இப்ப என்னை எல்லார் முன்னாடியும் கொடுமைக்காரனா காட்டணும் அதுதானே உன் விருப்பம் நான் கொடுமைக்காரனாவே இருந்துட்டு போறேன்! என்னோட பொண்டாட்டிக்கு நகை வாங்கிக்கொடுத்தே ஆகணும் இப்போ நீ வரமுடியுமா வரமுடியாதா? அதை மட்டும் சொல்லு" என்று அழுத்தமாக சொன்னவன் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான். நகை கடைக்கு வருபவர்கள் அவர்களை பார்த்து கிசுகிசுத்துச் சென்றனர்.

"என்னங்க எல்லாரும் ஒரு மாதிரி நம்மளை பார்த்துட்டு போறாங்க அண்ணாவுக்கு தெரிஞ்சவங்க நாம ரெண்டு பேரும் சண்டைபோறதை பார்த்து அண்ணா கிட்ட சொல்லிட்டா வம்பா போயிடும்! இப்போ எனக்கு நகை வேணாம்... ஹாஸ்பிட்டல்க்கு நேரமாச்சு" என்று வெளியேச் சென்று காரில் ஏறப்போக அவளது கையை பிடித்து "ஏய் உன் அண்ணனை கண்டு நான் பயப்படணுமா..? உன் அண்ணன் வாங்கிக்கொடுத்த செயினை போட்டிருக்கல்ல நான் வாங்கிக் கொடுக்கறதையும் போட்டுத்தான் ஆகணும் வா" என்று அவளை கையை பிடித்து நகைக்கடைக்குள் கூட்டிச்சென்றான்.

அவளுக்கோ அவனது வன் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆரம், நெக்லஸ், கல் வைத்தது ஒன்று கல் வைக்காத செட் என்று இரண்டு வகையிலும் எடுத்து காட்டினார்கள். அவளோ பிடித்தமின்மையுடன் நகைகளை பார்த்திருக்க அவள் காதோரம் சென்று "உனக்கு பிடிச்சிருக்க டிசைன் செலக்ட் பண்ணு துகா" என்றான் மெதுவான குரலில்.

அவளோ "நீங்களே செலக்ட் பண்ணுங்க" என்றவளோ அமைதியாக உட்கார்ந்தாள். குழந்தைக்கு பிடிக்காத சாப்பாட்டை தாய் ஊட்டுவது போல காதலை அவளுக்குள் திணித்துக்கொண்டிருந்தான் பொன்வண்ணன்.

அவனாகவே ஒரு டிசைன் நெக்லஸ் ஆரத்தையும் அவளது கழுத்தில் போட்டு பார்த்து "இந்த டிசைன் நகை செட் நல்லாயிருக்கு எடுத்து வைங்க" என்று சேல்ஸ் உமனிடம் நகை செட்டை கொடுத்தான்... தூரிகாவோ பொம்மை போல உட்கார்ந்திருந்தாள்.

சேல்ஸ் உமனோ "என்ன மேடம் சார் உங்களுக்கு பார்த்து பார்த்து நகை வாங்கித்தராரு! இப்படி ஹஸ்பன்ட் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்! நீங்க என்ன எதுவும் பேசாம இருக்கீங்க" என்று அவளை பார்த்து சிரிக்க... பொன்வண்ணனோ "திடீர் சர்பிரைஸா கூட்டிட்டு வந்துட்டேன் அதான் ஸ்டன் ஆகி இருக்கா என் வொய்ப் இல்ல துகா" என்றான் அவளது கண்களை உற்று பார்த்து சிரித்தபடியே.

தூரிகாவோ "ஆமா ரொம்ப ரொம்ப சர்பிரைஸ்" என்று தலையை அசைத்தாள் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்.

வாங்கிய நகையெல்லாம் பெட்டியில் அடுக்கி காருக்குள் இருவரும் வந்த பிறகு "இந்த லோட்டஸ் செயின் கழட்டு நான் வாங்கி கொடுத்த ஆரத்தை போட்டுவிடணும்" என்றான் மென்மையாகத்தான்.

"இது எங்கண்ணா போட்ட செயின்னுதானே கழட்டச் சொல்லுறீங்க! நீங்க போட்ட தாலிச் செயின் எப்படி என் கழுத்துல இருக்கோ இந்த செயினும் என் கழுத்துலதான் இருக்கும்... இதை மட்டும் கழட்டச்சொன்னீங்க நான் எங்கம்மா வீட்டுக்கு போய்டுவேன் பார்த்துக்கோங்க" என்று மிரட்டும் விதமாகவே பேசினாள் தூரிகா சிங்கத்தின் தங்கச்சி என்று காட்டிக்கொண்டிருந்தாள்.

"துகா என்னை விட்டு போயிடாதடி! இது போல என்னை விட்டு போயிடுவேன்னு சொல்லாதடி!" என்று அவளை அணைத்துக்கொண்டான் பொன்வண்ணன் சிறுபிள்ளையை போல.

அவன் கோபப்படுவான் என்று நினைத்தாள் தூரிகா. அவனோ அவளை அணைத்துக்கொண்டு எமோஷ்னல் ஆவான் என்று அவள் நினைக்கவில்லை. அவனது முதுகை வருடி அவனை ஆசுவாசப்படுத்த "நான் போகமாட்டேன்" என்றாள்.

கொஞ்ச நேரத்தில் அவளை விட்டுப் பிரிந்தவன் அவளுக்கு நெக்லசையும், ஆரத்தையும் போட்டு விட்டு "உங்க அண்ணன் போட்ட செயினை கழட்டமாட்டேன்னு சொன்னது போல நான் போட்ட செயினையும் கழட்டாதே” ஹார்ட் வடிவில் டாலர் வைத்த மெல்லிய செயினையும் போட்டு விட்டான் என்ன டிசைன் என்று பார்த்தவளோ திகைத்துப்பார்த்தாள் பொன்வண்ணனை.


செயினை போட்டுவிட்டவனோ "உனக்கு கிஸ் கொடுக்கணும்போல இருக்கு. கிஸ் பண்ணட்டுமா?" என்று அவன் பார்வையோ தாபத்தில் மின்னியது. அவளோ திருதிருவென விழித்தாள். எப்போதும் அவனாக முத்தம் கொடுத்து அழிச்சாட்டியம் செய்பவன் இன்று முத்தம் கொடுக்கவே அனுமதி கேட்டு நிற்கிறானே என்று அவள் சற்று தடுமாறினாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top