ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25


அழுகையுடன் அப்படியே உட்கார்ந்திருந்தாள் ரதி.

சிங்கமோ “பசிக்குதுனு சொன்னியே ட்ரஸை மாத்திட்டு சாப்பிட வாடி... எங்க வீட்ல வேலை செய்யுற வேலைக்காரவங்களை கூட நாங்க பட்டினியா போட்டதில்லை... நீ என்னோட பொண்டாட்டில உன்னை எப்படி சாப்பிடாம இருக்க வைக்க முடியும். மறுபடியும் இதே போல நைட்டியே போடுவேன்னு போட்டுக்கிட்டு வெளியே வந்தினா அங்கேயே தூக்கி போட்டு மிதிப்பேன்! அடி வாங்க உடம்புல தெம்பு இருந்தா உன் இஷ்டபடி இருந்துக்கோ” என்று அசால்ட்டாக சொல்லியவன் சாப்பிடச் சென்றுவிட்டான்.

கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்த ரதியோ ‘என்னையே அழவச்சிட்டீல்ல... உன் கண்ணுல ரத்தக்கண்ணீர் வரவைக்குறேன்டா சிங்கம்... இந்த ரதி’ என்று அகங்காரத்தோட பேசியவளோ சிங்கம் எடுத்து வைத்த சேலையை விருப்பம் இல்லாமல் கட்டிக்கொண்டவள் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

"நான் இன்னிக்கு வெறும் தரையில படுக்க மாட்டேன். கருவாயன் இன்னிக்கு தரையில படுக்கட்டும்" என்றவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது. நாம ஏன் பசியோட கிடக்கணும்? என்று சாப்பிட வெளியே வந்தாள்.

வீரய்யனும், நாச்சியும் உறங்கச் சென்றிருந்தனர். ஐய்யனாரோ வாசலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வெத்தலை மடித்துக்கொடுத்துக் கொண்டிருந்தார் கோமதி.

“ம்மா சாப்பாடு போடுங்க” என்று டைனிங் டேபிளிலிருந்து சிங்கம் சத்தம் கொடுத்ததும் “உன் பொண்டாட்டி வந்தாச்சுப்பா அவ கையால போடச் சொல்லி சாப்பிடு கண்ணா” என்று கோமதி பதில் கொடுத்ததும்.

‘அவ கையால நான் சாப்பாடு சாப்பிடறதுக்கு விஷம் சாப்பிட்டுக்கலாம்’ என்று கடுப்புடனே பேசியவன் தோசையை தட்டில் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ரதியோ சிங்கத்துக்கு முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து தோசையை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். சிங்கத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. சிங்கமோ சாப்பிட்டு முடித்தவன் “ஏய்” என்றதும் “என்னோட பேர் ரதி தேவி” என்றாள் அவனை பார்க்காமலேயே.

“உன் பெயரை சொல்லிக்கூப்பிடணுமா உனக்கு நான் ஒரு செல்லப்பேரு வச்சிருக்கேன் அடங்காபிடாரினு... இனிமே அப்படியே கூப்பிடட்டுமா?” என்றான் புருவம் உயர்த்தி ஏளனச் சிரிப்போடு.

“உனக்கு சாரி உங்களுக்கு என்ன கூப்பிட வசதியோ அப்படியே கூப்பிடுங்க” என்றாள் வெறுப்பாக.

“ம்ம் ஹான் நான் சாப்பிட்ட தட்டை நீதான் தினமும் கழுவி வைக்கணும்" என்றவுடன்

“வாட் நானா!” என்று கண்ணை சாசர் போல விரித்தாள்.

“புருசன் சாப்பிட்ட தட்டை பொண்டாட்டிதான் கழுவி வைக்கணும்! முட்டக்கண்ணி கண்ணை விரிக்காதடி!” என்று குரூர சிரிப்பில் விசில் அடித்துக்கொண்டேச் சென்றான்.

‘இவன் சாப்பிட்ட எச்சில் தட்டை நான் கழுவி வைக்கணுமா!’ என்று புலம்பிக்கொண்டாலும் சிங்கம் சாப்பிட்ட தட்டையும் கழுவ எடுத்துச் சென்றாள். தட்டை கழுவி வைத்துவிட்டு சோப்பு போட்டு கை கழுவிக் கொண்டிருந்தாள்.

தண்ணீர் குடிக்க வந்த சிங்கமோ அவள் கையை கழுவுவதை பார்த்துவிட்டு அவள் மீது கோபம் வந்துவிட்டது அவனுக்கு. ‘என்னோட எச்சில் பட்ட தட்டை கழுவினதுக்கே மேடம் கையை கழுவுறியாடி மவளே நான் யாருனு இன்னிக்கு காட்டுறேன்’ என்றவனோ வாசலில் எட்டிப்பார்த்தான்.

ஐய்யனாரும் கோமதியும் பேசிக்கொண்டிருந்தனர். குமரன் எலக்சன் வேலையில் இருந்தவன் அசதியில் உறங்கச் சென்றிருந்தான்.

கையை கழுவிவிட்டு திரும்பியவளின் முன்னே கைகட்டி அவளை முறைத்தபடி நின்றிருந்தான் சிங்கம்.

“அதான் நீங்க சாப்பிட்ட தட்டை கழுவியாச்சே இப்போ எதுக்கு இந்த முறைப்பு! எனக்கு தூக்கம் வருது வழிய விடுங்க” என்றாள் ரதி.

அவனோ “இப்ப ஏதோ தொடக்கூடாததை தொட்டது போல என் எச்சில் தட்டை கழுவினதும் கையை பத்து முறை போல சோப்பு போட்டு கழுவுற” என்று தோரணையாக கேட்டான் எரிக்கும் பார்வையுடன்.

“அது. அது. நான் எப்பவும் பாத்திரம் கழுவினா சோப்பு போட்டு கைகழுவுவேன் பேட் பாக்ட்ரீயா வரக்கூடாது! உங்களை போல உள்ளவங்களுக்கு தெரியாது! நான் டாக்டர்!" என்று பெருமையாக பேசி முகத்தை வெட்டியவளை இடுப்பை பிடித்து சமையல் கட்டு திண்டில் டப்பென்று உட்கார வைத்தவன் எதையும் யோசிக்காமல் அவளது மென் இதழோடு தன் வன் இதழை பொருத்திவிட்டான்.

பத்து ஆளை அடித்தும் போடும் சிங்கத்துக்கு ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது என்பதோ சவாலாகத்தான் இருந்தது. ஒரு நொடி தயங்கியிருந்தாலும் அவளின் திமிரை அடக்கி விடவே இந்த முத்தம் என்று அவளின் இதழில் இரத்தம் வரும் அளவிற்கு முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.

அவளோ அவனது திடீர் முத்தத்தை எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியாகி அவனது முதுகில் அடிபோட அவனோ முத்தமிட்டுக்கொண்டே அவள் கையை எடுத்து விட்டு அவளது இதழை விடாது விழுங்கிக்கொண்டிருந்தான் மலைபாம்பு போல. இருவருமே அந்த நொடி தங்களை மறந்து விட்டனர். முத்தம் தானே தாம்பத்தியத்தின் தார்பரியம்.

“அம்மாடி ரதி” என்று ஹாலில் கோமதியின் குரல் கேட்டு அவளை விட்டு விலகியவனோ

“ச்சே” என்று இவளுக்கு முத்தம் கொடுக்க வேண்டியதாய் போனதே! கையால் தொடையில் அழுந்த தட்டிக் கொண்டான்.

அவளோ அவளது உதட்டில் இரத்தம் வழிவதை கையால் துடைத்துக்கொண்டு “இராட்சஷன் போல நடந்துக்குற” என்று அவனிடம் காய்ந்து விழுந்தவள் சிங் பைப்பில் தண்ணீர் பிடித்து வாயில் வழிந்த இரத்தத்தை தண்ணீர் அடித்து கழுவினாள்.

அவளுக்கோ அவன் முத்தமிட்டது அருவருப்பாய் தோன்றியது. கழுவிக்கொண்டேயிருந்தாள்.

ஹாலை எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் பெண்ணவளின் இதழை ஆழமாய் கவ்வி சுவைத்து விட்டு “இன்னும் பத்து முறை சோப்பு போட்டு கழுவுடி விடிய விடிய முத்தம் கொடுத்துட்டே இருப்பேன் என் அல்லி ராணி பொண்டாட்டி” என்றவனோ அவளை சீண்டும் விதமாக அவளது இடையில் அழுத்தி கிள்ளி வைத்துச் சென்றான். அவளால் வாய்விட்டு கத்த கூட முடியவில்லை.

ஐய்யனாரோ சுமையல்கட்டுக்குச் சென்ற கோமதியை “ஏய் கோமு மகனும் மருமகளும் சமையல்கட்டுல ஒண்ணா இருக்காங்க வா போகலாம்” என்று இங்கிதம் தெரிந்த தம்பதிகளாக அவர்களது அறைக்குச் சென்றனர்.

சிங்கமோ ஹாலில் வந்த பார்த்தவன் ஐய்யனாரும் கோமதியும் அறைக்குள் போவதை பார்த்தவன் தலையை அழுந்தக் கோதிக்கொண்டான். ஒருவேளை அம்மா சமையல்கட்டுக்கு வந்திருப்பாங்களோ என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க என்று சங்கப்பட்டுக்கொண்டே அவனது அறைக்குள் சென்றவனோ கட்டிலில் படுத்துக்கொண்டான் இன்றும் நேற்றைப்போலவே காலைப்பரப்பிக்கொண்டே.

ரதியோ இன்னமும் அவன் கொடுத்த முத்தத்தை ஜீரணிக்கமுடியாமல் உதட்டைக் கழுவிக்கொண்டேயிருந்தாள்.

வெகு நேரம் கழித்தே அறைக்குள் வந்தவள் சிங்கம் உறங்கிக்கொண்டிருப்பது பார்த்து ‘இவன் ரவுடினு தான் நினைச்சேன் சரியான காய்ஞ்ச மாடு கம்புல நுழைஞ்சது போல என்னோட லிப்ஸை கடிச்சு வைச்சிட்டான் கருவாயன்’ என்று திட்டிக்கொண்டே ‘தரையில படுக்கணுமா என்னால முடியாது’ என்று கட்டிலை பார்த்தாள். நான்கு பேர் தாராளமாக படுத்து உறங்கும் மெத்தைதான் இவனை நம்பி எப்படி படுக்கறது என்று யோசித்தாலும் நேற்று தரையில் படுத்து உறக்கம் வராமல் தவித்தது போல இன்றும் கஷ்டப்பட முடியாது என்று கட்டிலின் ஓரத்தில் போய் படுத்துக்கொண்டாள் ரதி.

துரைசிங்கமோ அவள் உள்ளே வரும்போது தான் கண்ணை மூடினான். ‘இப்பதான் என் வழிக்கு வந்திருக்கடி நீ, உங்கப்பன் உனக்கு என்ன ப்ளான் போட்டு கொடுத்தாலும் இந்த சிங்கத்துக்கிட்ட மட்டும் பழிக்காதுடியோ’ என்று சிரித்துக்கொண்டே கண்ணை மூடினான்.

விடியற்காலையில் சிங்கத்தின் நெஞ்சில் தலைவைத்து அவனது வயிற்றில் கை போட்டு அணைத்தாற் போல படுத்திருந்தாள் ரதி.

சிங்கமோ “ஏய்...” என்று அவளது காதில் கத்தினான். அவளோ "ப்ச் தூக்கத்துல கூட இந்த கருவாயன் கத்துறான்" என்று முணகியவள் இன்னும் அவனை நெருங்கிப்படுத்து இருந்தாள்.

“ஏய்... அல்லிராணி” என்று அவள் காதில் வேகமாய் கத்தி விட்டான்.

அவளோ கண்ணை திறந்தவள் கட்டிலில் படுத்ததற்குத்தான் திட்டுகிறான் என்று நினைத்தவளோ “கட்டில தானே படுத்தேன். என்னால தரையில படுக்க முடியாது... என்ன வேணா பண்ணிக்கோ” என்று மீண்டும் கண்ணை மூடி தூங்க போக "அப்படியா அப்ப சரி” என்று அவள் இதழ் நோக்கி குனிய அவளோ இதழை மூடிக்கொண்டு தான் இருக்கும் கோலம் பார்த்தாள்.

சிங்கத்தை அணைத்து அவனது உரமேறிய நெஞ்சில் தலைவைத்து படுத்திருப்பதை கண்டு அடித்து பிடித்து எழுந்தவளின் தாலிக்கயிறு அவன் போட்டிருந்த புலிநகச் செயினுடன் மாட்டி மீண்டும் பஞ்சு மேனியவள் அவன் மீதே சரிந்தாள்.

அவனோ “என் மேல உனக்கு ரொம்ப ஆசை போலடி மேல மேல வந்து விழற” என்று தலைக்கு கைகொடுத்து அவளை ஏளனமாக பார்த்து சிரித்தான்.

இப்படி அவனோட இணைந்து படுத்திருந்தோமா என்று அவளுக்கு அவள் மீதே கோபம் வர “ஏய் தாலிகயிறு உன் செயின்ல மாட்டிக்கிச்சு எடுத்து விடுடா” என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவனிடம் வீணாக வாய் கொடுத்து மாட்டிக்கொண்டாள் வலையில் விழுந்த மீனாக.

அவனோ “ஏன் டி வாடா போடானு சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல” என்று அவள் கொடி இடை இடுப்பை பிடித்து அழுத்தினான் அவளுக்குகோ கூச்சம் போட்டி போட்டுக்கொண்டு வர. நெளிந்துக் கொண்டே “அச்சோ சாரிங்க ப்ளீஸ் உங்க செயின்ல தாலிக் கயிறு மாட்டியிருக்கு என்னோட இடுப்பில இருந்து கையை எடுங்க” என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டாள்.

“அப்படி மரியாதையா பேசு” என்று தாலிக்கயிறை தன் செயினிலிருந்து எடுத்து விட்டவன் அவளது இதழை பார்த்தான்.

அவளோ எங்கே முத்தம் கொடுத்து விடுவானோ என்ற பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள் குளியலறைக்குள் சென்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். குளியலறைக்குள் தன்னை குனிந்து பார்க்க அவளது சேலையெல்லாம் கலைந்து போய் கிடந்தது.

அய்யோ இப்படியே வா அவன் மீது ஒட்டிக்கிடந்தோமென்று சலித்துக்கொண்டு ஹாட் வாட்டரில் குளித்துக்கொண்டாள். அவளை ஓட ஓட விரட்டினான் சிங்கம்.

"ஓடு ரதி! ஓடு! எதுக்குடா இந்த வீட்டுக்குள்ள வந்தோம்னு நீ துயரப்படணும்... நீ ஆட்டம் போடலாம்னு வந்திருக்க... என்னோட ஆட்டத்தை இனிமேதான் ஆடப்போறேன் டி அல்லி ராணியே” என்று இதழ் வளைத்துச் சிரித்துக்கொண்டான்.

'காலையில 5 மணிக்கு என்னை எழுப்பிவிட்டானே' என்று புலம்பிக்கொண்டே குளித்து குர்தியை போட்டு மறக்காமல் ஷாலை போட்டுக்கொண்டு துண்டால் தலையை துவட்டிக்கொண்டு வந்தாள் ரதி.

சிங்கமோ பால்கனியில் தண்டால் எடுத்துக்கொண்டு இருந்தான் ஆம்கட் பனியனுடன். அவனது மஸில்கள் புடைத்து இருந்ததை கண்டு எச்சில் விழுங்கினாள். நம்மளை மெதுவாதான் அறைஞ்சிருக்கான். ஓங்கி அறைஞ்சிருந்தா நம்ம காலி ஆகியிருப்போமே! என்று கன்னத்தை பற்றிக்கொண்டு நின்றாள்.

“ஏய் கனவு காணாம தலை துவட்டிட்டு போய் சமையலை கவனி... நேத்து நைட்தான் புது பொண்ணுனு சமைக்கலை விட்டிரலாம் இன்னிக்கு நீ சமைச்சதைதான் நான் சாப்பிடுவேன் போடி” என்று அதிகாரமாகவும் அதட்டலும் போட்டுச் சென்றான் சிங்கம்.

உடனே ஆதிபெருமாளுக்கு போன் போட்டாள் ரதி. அவரோ போன் அடித்ததில் கண்ணைக்கசக்கி எழும்பியவர் போனை பார்க்க செல்லம் என்றிருப்பதை பார்த்து “சொல்லுடா கண்ணு என்ன நேரமே எழுந்திட்டியா... இந்த நேரம் நீ தூங்கிட்டுதானே இருப்ப” என்று மணியை பார்த்தார். ஐந்தரையாக ஆகி இருந்தது.

“அப்பா என்னை இந்த சிங்கம் சமையல் வேலையெல்லாம் செய்ய சொல்றான்... 7 மணி வரை தூங்க கூடாதுனு சொல்றான்... இவன் சாப்பிட்ட தட்டை நான்தான் கழுவணுமாம்! என்னால இவன் டார்ச்சர் தாங்க முடியலைங்கப்பா!” என்றாள் அழுகையுடனே.

“என்னது நேரமே எழும்ப சொல்றானா... அதுவும் உன்னை சமைக்க எப்படி சொல்லலாம்... அந்த வீட்டுல வேலைக்காரவங்க போடமாட்டாங்க... நீ டாக்டர் உன் மாமியார் வீட்ல சும்மாதானே இருக்கா சமைத்து தரவேண்டியதுதானே... உனக்கு பிடிக்கலைனா கிளம்பி வந்துருடாமா” என்றார் மகள் அங்கே கஷ்டப்படுவது பிடிக்காமல்.

“இல்லிங்கப்பா நீங்க சொன்னதை செய்துட்டுதான் நம்ம வீட்டுக்கு வருவேன்” என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டு.

“இல்லடா ராஜாத்தி என்னோட சுயநலத்துக்கு நீ வேலைக்காரி போல அந்த வீட்ல வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லடா தங்கம்” என்றார் கவலையுடனே.

“இருக்கட்டும்பா என்னை கஷ்டப்படுத்தி பார்க்கறவங்களை இன்னும் கொஞ்ச நாளுல நான் கஷ்டப்படுத்துறேன் பாருங்க” என்று அப்பனுக்கு தவறாமல் மகள் என்பதை போல பேசினாள்.

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு “ப்பா நான் அப்புறம் கூப்பிடறேன்” போனை வைத்தவள் முடியை கிளிப்போட்டு அடக்கி அறைக்குள் போனவள் எதிரே வந்த சிங்கத்தின் மீது மோதாமல் விலகியே சென்றவளை வேண்டுமென்ற அவள் மீது மோதி நின்றான் சிங்கம்.

“இப்ப என்ன வேணும்! எதுக்கு இப்படி வேணும்னு காலங்காத்தால வம்பு பண்ணுறீங்க தள்ளுங்க” நேற்றிரவிலிருந்து அவன் அவளிடம் நெருங்கி நிற்பதும் முத்தம் கொடுப்பதுமாக இருக்க அவளுக்கு பயம் வருவதோடு கூச்சமும் வந்து விட்டது.

“ஏன் நீ லண்டலன்லதானே படிச்ச பசங்க கூட வெளியே போய் சுத்தியிருப்பல்ல... இப்படி நெருக்கமா யாரும் நின்னதில்லையா?” என்றான் அவளுக்கு வலிக்க வேண்டுமென்று பேசினான்.

“ஹலோ என்ன ஓவரா பேசுறீங்க! நான் கோதை பொண்ணு! மீனாட்சி அத்தை வளர்ப்பு... லண்டன்ல படிச்சிருந்தாலும்... நம்ம நாட்டு கலாச்சாரத்தை மறக்கல... என் ப்ரண்ட்ஸ்கூட எந்த எல்லையோட இருக்கணும்னு எனக்கு தெரியும்... இன்னொருவாட்டி என்னோ பிஹேவியர் பத்தி பேசாதீங்க! நல்லாயிருக்காது” என்று திமிறிக்கொண்டு நின்றாள் பெண் சிங்கமாக.

“மக்கும்” என்று தொண்டையை செருமியவன் “சாரிங்க மேடம்... அப்படியிருக்கவங்கதான் நேத்து நைட் கையில்லா நைட்டி அரையும் குறையுமா உடம்பு தெரியறது போல ட்ரஸ் போட்டு நின்னியாடி! என்கிட்ட பொய் சொன்னா தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டிருவேன் பார்த்துக்கோ... போய் சமையலை கவனிடி ஆளும் அவளும்” என அசால்ட்டாய் சொல்லிவிட்டு பால்கனிக்குச் சென்றான்.

அச்சோ இவன் எல்லாம் என்ன மேக்னு தெரியலையே! என்று அவனது தலையில் நங்கென்று நான்கு கொட்டு வைக்க தோன்றியது.

“என்னடி அங்கே முணுமுணுப்பு முத்தம் கொடுக்கணுமா” என்று அதட்டல் சத்தம் வர அவளோ "ஆத்தாடி" என வாயை பொத்திக் கொண்டு அடித்து பிடித்து ஓடிவிட்டாள்.

சமையல்கட்டில் டீ போட்டுக்கொண்டிருந்த கோமதியோ “என்ன கண்ணு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம்ல! நீ பிரசவ டாக்டர் உனக்கு ரெஸ்டே இருக்காதுல... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்” என்றவரோ டீயை போட்டு அவள் கையில் கொடுத்தார் கோமதி.

கோமதியிடம் சண்டை வளர்க்கலாம் என்று வந்தவளுக்கு பாசமாக பேசும் மாமியாரிடம் என்ன சண்டைபோடுவது என்று தெரியவில்லை... அம்பு எய்தலாம் என்று வந்தவளின் முன்பு நீ அம்பு எய்து நாங்க தாங்குவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களை இப்போதுதான் பார்க்கிறாள் ரதி.

“எனக்கு டீ பிடிக்காது காபிதான் வேணும்” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு

கோமதியோ “சரி காபி போட்டுத் வைச்சு இருக்கேன்” என்று போட்டு வைத்திருந்த காபியை எடுத்து அவளிடம் நீட்ட அவளோ காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

மருமகளின் கடு கடு முகத்தை பார்த்து “என்னடா சிங்கம் ஏதாவது திட்டிட்டானா! அதான் கோபமா இருக்கியா! என் பையன் முரட்டு கோபக்காரன்தான்! அதே சமயம் முரட்டு பாசக்காரனும்கூட அவன் சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்டா” என்றவரின் அன்பில் தோற்றுப்போனாள் ரதி. அவளால் அவரிடம் முகத்தில் அடித்து பேச முடியாது போலையே என்று பரிதவித்தாள்.

“ஆமா உங்க மகன் திட்டாம இருந்தா அதிசயம்... நேத்து வீட்டுக்கு வந்தவங்க முன்னால என்னை அவமானப்படுத்துற போல பேசுறாங்க நீங்கெல்லாம் வேடிக்கைதானே பார்த்து நின்னீங்க... இனிமே எனக்கு சாதகமாக நீங்க பேசணும்!" என்றாள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு

“வாய் நிறைய அத்தைனு கூப்பிடுடா” என்ற கோமதியோ “நீ பண்ணறது நியாயமா இருந்தா நான் என் மகனை எதிர்த்து உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் கண்ணு” என்று அவள் குடித்த காபி கப்பை வாங்கினார் கோமதி.

சிங்கம் கிளம்பி வந்தவன் “ஏய் ரதி காபி கொண்டு வா” என அதிகாரமாக சொன்னாலும் தன்னை முதன்முறை ரதி என்று பெயர் சொன்னதும் அவளுக்குள் பொண்டாட்டி என்ற உணர்வு வந்ததோ என்னவோ! இல்லை காபி கொண்டு போகவில்லையென்று குடும்ப மக்கள் முன்னால் தன்னை திட்டுவான் என்று நினைத்தோ காபியை கப்பில் ஊற்றிக்கொண்டு “இந்தாங்க காபி” என்று பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் சிங்கத்திடம் நீட்டினாள் ரதி.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26


காபியை வாங்கிய சிங்கமோ அவளது கழுத்தில் மஞ்சள் சரடுடன் தொங்கிய தாலியை பார்த்தவாறே குடித்தான்.

ரதியோ அவன் பார்வை போன இடத்தை குனிந்து பார்த்து ‘நடுஹாலுல வச்சு என்னை குறுகுறுனு பார்க்குறான் பாரு அலைஞ்சான் கேஸ் போல’ என்று முணுமுணுத்துக் கொண்டு ஷாலை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

சிங்கமோ அவள் முக பாவனையை வைத்து என்ன நினைக்கிறாள் என்பதை அனுமானித்தவன் “அடுத்தவன் பொண்டாட்டிய குறுகுறுனு பார்த்தா தான் தப்புடி... என் பொண்டாட்டியை குறுகுறுனு பார்க்கறது தப்பு இல்ல" என்று காற்றில் ஆடிய டாப்பின் நடுவே தெரிந்த அவளது இடை சிறிது காட்டிக்கொடுக்க சுற்றி ஒரு முறை பார்த்து எழுந்தவன் அவளது இடுப்பில் கைபோட்டு வளைத்து அவளது இதழில் முத்தமிட்டு விலகினான். அவளோ ஃப்ரீஸாகி நின்றாள். அவனோ "இனி அடிக்கடி இப்படித்தான் நிற்க வேண்டியிருக்கும்" சிரித்துக்கொண்டுச் சென்றான்.

"அம்மா கோமதி எனக்கு கொஞ்சம் கடுங்காப்பி கொண்டு வாத்தா" என்ற நாச்சியோ சிலை போல் நின்ற ரதியின் தோளை தொட்டார்.

“ஹான்” என்று சுயம் வந்தவள் அங்கே நின்ற நாச்சியை பார்த்து ‘எங்கே போனான் காய்ஞ்ச மாடு என்னை பைத்தியம் பிடிச்சு அலைய வைப்பான் போலையே’ என்று பெரும்மூச்சு விட்டு "உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நான் இந்த வீட்டு வேலைக்காரி போல வேலை செய்யணும் போல" என்று எரிந்து விழுந்தாள் ரதி நாச்சியிடம்.

“நான் எதுவுமே கேட்கலையே கண்ணு... நீ ஹாஸ்பிட்டல் போய் புறப்படுற வேலையை பாரு தங்கம்" என்றார் அவளின் கன்னம் தொட்டு.

ரதியோ "அடப்போங்கடா நான் எப்படி பால் போட்டாலும் என்னை அவுட் பண்ணுறாங்க!" என்று சலித்துக்கொண்டாலும் விடாமல் அவரிடம் சண்டை போட எண்ணி "ம்ம் உங்க மனசுக்குள்ள இவ டாக்டரா இருந்தா காபி போட்டுக் கொண்டு வரமாட்டாளானு என்னை தப்பாதானே நினைச்சு பேசுவீங்க. எதுக்கு வம்பு எங்கப்பா ஆதிபெருமாள் பேருக்கு கெட்ட பெயர் வரவிடமாட்டேன் " என்று முகத்தை வெட்டிக்கொண்டுச் சென்றாள்.

"அடி ஆத்தி இவள எந்த கணக்குல சேர்க்கறதுனு தெரியலை" என்று பெரும்மூச்சு விட்டார் நாச்சி.

சமையல் செய்துக் கொண்டிருக்கும் கோமதிக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தாள். "அத்தை இன்னிக்கு மட்டும் மசால் அரைச்சுடுங்க. நாளைக்கு நான் அரைச்சு தந்துடறேன். இப்போ நான் வெங்காயம் வெட்டுறேன்" என்று பாலீசாக பேசி அவரிடம் வேலை வாங்கினாள் ரதி. வெள்ளந்தி கோமதியோ மருமகள் கேட்பதை சரிமா கொடு என்று எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்தார்.

பெரியவர்களுடன் சிங்கமும் சாப்பிட உட்கார்ந்தான்.

“ஐய்யனாரு ரதி கழுத்துல தாலிக் கயிறு போட்டு இருக்குறதை பார்க்க என்னவோ மனசு எனக்கு பிசையுது. நம்மளுக்கு பரம்பரையாக நகை செய்து தர ஆசாரிக்கிட்ட தாலிக் கொடி பண்ண சொல்லியிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருவாங்க. நாளைக்கு முகூர்த்தநாளாவும் இருக்கு நம்ம குலதெய்வக் கோவிலுக்கு போய் தாலிக்கயிறு பிரிச்சு கட்டிட்டு வந்துடலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்க "பண்ணிடலாம்ங்கம்மா" என்றவரோ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சிங்கத்தை பார்த்தார்.

அவனோ நீங்க என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் என்ற விதத்தில் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்தவர் "சிங்கம் கட்சி ஆபிஸ் கிளம்பலாமா?" என்று ஈரமான கையை துண்டால் துடைத்துக்கொண்டே வேகமாக நடந்து வரும் ரதியை பார்த்தார் ஐய்யனார்.

அவனோ “ம்ம் போலாம்ங்கப்பா” என்று தட்டில் கையை கழுவி எழும்பினான்.

ரதியோ வேகமாக சாப்பிட வந்தவள் "அங்கிள் என்னை ஹாஸ்பிட்டல ட்ராப் பண்ணிட்டு நீங்க கட்சி ஆபிஸ் போங்களேன்" என்றவளோ யாரையும் பார்க்காமல் தட்டு வைத்து இடியாப்பத்தை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

"நேத்து கேப்ல தானே வீட்டுக்கு வந்த... இப்பவும் கேப் பிடிச்சு ஹாஸ்பிட்டல் போ! எங்களுக்கு கட்சி ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு வாங்கப்பா” என்று தோரணையுடன் பேசி அங்கிருந்து நகர்ந்தான் சிங்கம்.

"கட்சி ஆபிஸ் போய் என்ன பண்ணப்போறீங்க. மக்கள் போடுற ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுக்கலாம்னு வெட்டிப்பேச்சுதானே!" என்று ஐய்யனாரின் அரசியல் வாழ்க்கையை பற்றி தெரியாமல் பேசினாள் ரதி.

ஐய்யனார் பேசும் முன் "நீங்க இருங்கப்பா” என்று கை நீட்டி தடுத்தவனோ ரதியின் முன்னே வந்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு திமிர் பார்வையுடன் “எங்களுக்கு உங்கப்பன் ஆதிபெருமாள் போல கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லடி. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருக்குறோம். தன்னால ஓட்டு வந்து விழும். உன் அப்பன் தான் இன்னேரம் கட்சி ஆபிஸ்ல உட்கார்ந்து நாங்க என்ன பண்ணுறோம்னு நாய் போல மோப்பம் பிடிச்சிட்டு இருப்பான். ஏன் உன்னை அனுப்பி வச்சது எங்க வீட்டுக்குள்ள உளவு பார்க்கத்தானேடி.” என்றதும் அவளுக்கு புரை ஏறியது.

“குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். இன்னொரு முறை அப்பாவை மரியாதைக்குறைவா பேசினா பேசறதுக்கு வாய் இருக்காதுடி. அப்பாகிட்ட பேசினது தப்புதான்னு மன்னிப்பு கேளு” என்று தண்ணீரை டம்ளரை அவளிடம் நீட்டினான்.

அவளோ தண்ணீரை வாங்கிக்குடித்துவிட்டு இப்போதைக்கு சாரி கேட்டிட வேண்டியதுதான் என்று எண்ணியவளோ "சாரிங்க மாமா!" என்றவளோ “மன்னிப்பு கேட்டாச்சு போதுமா” என்று விறுவிறுவென அறைக்குள் சென்றவளோ 'ஏதோ தெரியாம ஒருவார்த்தை விட்டேன் அதுக்கென்னமோ வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறான்! இந்த வீட்டு மருமகளுக்கு பேசறதுக்கு உரிமையில்லை போல' என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல சலித்துக்கொண்டு ஒய்ட் கோட்டை எடுத்து கையில வைத்து ஹாலுக்கு வந்தாள்.

நாச்சியோ “கண்ணு ஐய்யனாரை எதிர்த்து பேசிட்டனு கொஞ்சம் ஓவரா திட்டிபுட்டான். நீ மனசுல வைச்சுக்காதே” என்று பேத்தியின் தோளை தொட்டார்.

“அட போ கிழவி சும்மா தமாசு பண்ணிக்கிட்டு! உங்க பேரன் முன்னால எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டியதுதானே... இல்லாத போது கண்ணே மணியேனு கொஞ்சிக்கிட்டு எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாச்சு” என்று வெடுக்கென நாச்சியின் கையை தட்டிவிட்டுச் சென்றாள்.

“நாச்சி என்னை எதிர்க்க இந்த ஜில்லாவுலயே யாரும் இல்லைனு பாட்டு பாடி திரிஞ்ச... இன்னிக்கு உன்ற பேத்தி உன்னை தண்ணி குடிக்க வைக்குறாளே பேச்சாலே” என்று வீரய்யன் மனைவியின் கையை பிடித்து சோபாவில் உட்கார வைத்தார்.

“அடபோங்கங்க என்ற பேத்தி தானே பேசினா பேசிட்டு போகட்டும். வேற யாராவது இந்த நாச்சி முன்னால நாக்கு மேல பல்லை போட்டு பேச முடியுமா” என்று முந்தானை உதறினார்.

“மண்ணுல விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைனு பெருமை வேற” என்று நாச்சியை கிண்டல் செய்தார் வீரய்யன்.

“கிழவருக்கு குதும்பு ஆகாது” என்று வீரய்யன் கன்னத்தில் இடித்தார்.

பர்சை எடுக்க மறந்து வீட்டுக்குள் வந்தவள் நாச்சியும் வீரய்யனும் விளையாட்டு பேசுவதை கண்டு “ம்ம் இந்த வீட்டுல பெரிசு பண்ணுற அலப்பறை தாங்க முடியலை” என்று சிலுத்துக்கொண்டு பர்சை எடுத்துச் சென்றாள்.

தூரிகா எழும்போதே அடிவயிற்றில் சுர்ரென்று வலி “ஸ்ஸ்” வயிற்றை பிடித்துக்கொண்டு எழுந்து குளியலறைக்குள் சென்றதும் பீரியட்ஸ் ஆகியிருக்க தலைகுளித்து வந்து பார்க்க கட்டிலில் பொன்வண்ணன் இல்லை. சோர்வாக இருக்க சோபாவில் தலைசாய்த்து உட்கார்ந்துவிட்டாள்.

உடற்பயிற்சி முடித்து வந்த பொன்வண்ணனோ சோபாவில் கண்ணைமூடி அமர்ந்திருந்த தூரிகாவை பார்த்தவன் அவள் பக்கம் உட்கார்ந்து "என்னாச்சு?" என்றான் இயந்திரக்குரலில்.

அவளோ “ம்ப்ச்” என்று அவனிடம் பேச பிடிக்காமல் எழுந்துச் செல்லப்போனவளின் கையை பிடித்தவன்

“கேட்குறேன்ல பதில் சொல்லமாட்டியாடி” என்று கையை பிடித்து இழுத்து மடியில் விழ வைத்து அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அவளோ “இப்போ பீரியட்ஸ் இப்போவும் பண்ணனுமா?” என்றாள் எரிச்சலாக அவன் கண்களை உறுத்து பார்த்தபடி கேட்டாள்.

“ஏய் நான் டாக்டர்டி! எனக்கு தெரியாதா எந்த நேரம் கான்டாக்ட் இருக்கணும்னு! நான் ஒண்ணும் பொம்பளை பொறுக்கி இல்ல. உங்க வீட்டு காட்டான் குடும்பம் போல இல்ல நான்” என்று வாயை விட்டுவிட்டான்.

“எங்க குடும்பத்தை பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. உங்க அக்கா செய்ததை விட... நீங்க நேத்து என்கிட்ட நடந்துக்கிட்டீங்களே காட்டு பயல் போல அதுதான் நாலு நாள் முன்னாடியே பீரியட்ஸ் வந்துடுச்சு. பெரிய டாக்டராம் டாக்டர் பத்துமணி டாக்டர்” என்று இதழை சுளித்து எழுந்துச் சென்றாள்.

“ச்ச பெரிய வாயாடியா இருக்கா! அண்ணன் அருவாளால பேசுறான்னா! இவ வாயால பேசி கொல்லுறா! நேத்து ஏதோ ஒரு வேகத்துல அவளை எடுத்துக்கிட்டேன். இப்போ என்னை காமுகன் ரேன்ஞ்சுக்கு பேசிட்டு போறா! எல்லாம் என் தலையெழுத்து” என்று பெரும்மூச்சுவிட்டு குளிக்கச் சென்றான்.

சமையல்கட்டின் முன்னே நின்ற தூரிகாவோ “அத்தை நான் பீரியட்ஸ் அம்மாவீட்ல மூணு நாள் எதையும் தொட விடமாட்டாங்க. தலைக்கு குளிச்ச பிறகுதான் சமையல்கட்டுக்குள்ள விடுவாங்க” என்றாள் சோர்வாக.

கோதையோ “அதெல்லாம் நான் பார்க்கறது இல்லை வாடா! உனக்கு சத்துமாவு கஞ்சி போட்டு வச்சிருக்கேன்” என்று போட்டு வந்த கஞ்சியை கொடுத்தார் தூரிகாவிடம்.

அவளோ “அம்மாவும் பீரியட்ஸ் டைம் சத்துமாவு கஞ்சி தான் கொடுப்பாங்க” என்றாள் மெல்லிய சிரிப்புடனே.

“நான் அந்த வீட்ல பொறந்த பொண்ணுடா! அம்மா எனக்கு சத்துமாவு கஞ்சிதான் கொடுப்பாங்க” என்றார் கண்ணைச் சிமிட்டி.

குளித்து வந்த பொன்வண்ணனோ ‘மாமியாரும் மருமகளும் ஒரு கட்சியா சேர்ந்துட்டு என்னை கழட்டிவிட்டாங்க பாருங்களேன்’ என்று முணகியவனோ

“ம்மா எனக்கு க்ரீன் டீ வேணும்” என்று தூரிகாவை இடித்து தள்ளிவிட்டு உள்ளே வந்தான்.

“டேய் நம்ம வீட்டு சமையல்கட்டை பெரிசா தானே கட்டியிருக்கோம்! தூரிகாவை ஏன் இடிச்சு தள்ளிட்டு வர?” என்று மகனை முறைத்து வைத்தார்.

“உங்க மருமகள் நான் இடிச்சதுக்கு தேய்ஞ்சு போயிருவாளா என்ன?” என்று கோதை போட்டு வைத்திருந்த க்ரீன் டீயை எடுத்துக்குடித்தான்.

தூரிகாவோ பொன்வண்ணன் தன்னை கிண்டல் செய்து பேசியதற்கு பதில் சொல்லாமல் முகத்தை மட்டும் கடுகடுவென வைத்து “அத்தை சமையல ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றவளிடம் “நான் சமையல் முடிச்சிட்டேன்டா நீ போய் ஹாஸ்பிட்டல் கிளம்பு” என்றார் வாஞ்சையாக.

தூரிகா சென்றதும் “கண்ணா தூரிகா கழுத்துல வெறும் கயிறுதான் போட்டிருக்கா! நாளைக்கு நல்ல நாள் தங்கத்துல தாலி போட்டிரலாம்டா” என்றவுடன் “நானும் செயின் பத்தி பேசலாம்னுதான் வந்தேன்! நீங்களே பேசிட்டீங்க... சொத்து சொத்துனு பேயா அலையுற உங்க வீட்டுக்காரருக்கு மருமகளுக்கு தாலிக்கொடி போடணும்னு தோணாதா என்ன?” என்று ஆதிபெருமாளை திட்டினான்.

“ம்க்கும்” என்று தொண்டையை செருமிய ஆதிபெருமாளோ “என்ன என் பேரு அடிபடுது! கோதை காபி கொடு” என்று ஹாலுக்குச் சென்றுவிட்டார்.

“சும்மா அதிகாரம் பண்ணினா போதுமா அப்படியே வாயில குத்தணும்னு இருக்கு” என்று கை முஷ்டியை இறுக்கினான் பொன்வண்ணன்.

“டேய் அடங்கு!” என்று மகனை அடக்கிய கோதையோ காபியை போட்டுக் கொண்டு போனார் ஆதிபெருமாளுக்கு.

தங்கம் செய்யும் ஆசாரி கையில் மஞ்சப் பையுடன் வந்தார். பொன்வண்ணனும் ஹாலுக்கு வந்தவன் ஆசாரியை புருவம் சுருக்கி பார்த்தான்.

“வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தங்கத்துல கொடி செஞ்சு போடலைனு நாளைக்கு ஊருக்காரனுங்க வாயில நான் அவலாக விழக்கூடாது. 9 பவுனுல கொடி செஞ்சு ஆசாரி கொண்டு வந்துருக்காரு கோதை!! தாலிக் கொடியை வாங்கி பூஜை ரும்ல வச்சிடு. நாளைக்கு மூகூர்த்த நாளா இருக்கு கோவிலுக்கு போய் தாலி பிரிச்சு கட்டிட்டு வந்துடலாம்” என்றவரை நம்ப முடியாமல் பார்த்தார் கோதை.

“ஏன் டி உன் புருசன் கெட்டவனாவே இருப்பானா! நானும் கொஞ்சம் நல்லவன்தான் டி தாலிக்கொடியை வாங்கு ஆசாரி ரொம்ப நேரமா நிற்குறாரு” என்று ஆதிபெருமாளின் அதட்டலில் கோதை ஆசாரியின் கையிலிருந்த தாலிக்கொடியை வாங்கிக்கொண்டு பூஜை ரூமில் வைத்து விட்டார்.

“இப்பவாவது மனசு மாறினீங்களே சந்தோசம்ங்க” என்று நிம்மதியாக சமையல்கட்டுக்குள் சென்றார்.

ஆதிபெருமாளோ கையில் இருந்த பணக்கட்டை தங்க ஆசாரிக்கு கொடுக்க போக “ஒரு நிமிசம்பா இருங்க வரேன்” என்றவனோ அவனது அறைக்கு போக ஷாலுக்கு பின் குத்திக்கொண்டிருந்தாள் தூரிகா.

பொன்வண்ணனை பார்த்ததும் “ட்ரஸ் சேன்ஞ் பண்ணுறேன்ல! இப்படித்தான் திடுதிப்புன்னு அறைக்குள்ள வருவீங்களா?” என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பொரிந்து தள்ளினாள்.

“அதான் நேத்து நைட் எல்லாம் பார்த்தாச்சே! இன்னும் என்கிட்ட மறைக்க என்ன இருக்கு?" என்று ஓரப்பார்வை பார்த்தபடியே அவன் சம்பளத்தில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றுவிட்டான்.

பணத்துடன் வெளியே வந்தவன் “என் பொண்டாட்டிக்கு என் பணத்துல தாலிக்கொடி வாங்கணும்னு ஆசை! ஊரை அடிச்சு உலையில போட்ட காசுல என் பொண்டாட்டிக்கு எதுவும் செய்ய வேண்டாம்ப்பா” என்று வெடுக்கென பேசியவன் “இந்தாங்க அண்ணா! செயின் செய்துக் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி!" என்று கையெடுத்துக் கும்பிட்டான்.

“இருக்கட்டும் தம்பி! நீங்க குடும்பம் குட்டியோட சந்தோசமா இருப்பீங்க” என்று வாழ்த்திச் சென்றார் ஆசாரி.

ஆசாரி சென்றதும் “வண்ணா உனக்கு அறிவிருக்கா ஆசாரி கையை பிடிக்குற” என்று மகனிடம் எரிந்து விழுந்தார்.

“ஆசாரி என்னை விட வயசுல மூத்தவர் அவர் காலுல கூட விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்பா இப்படி மனுசங்களை உயர்ந்தவன் தாழ்ந்தவங்கனு பிரிச்சு பார்க்காதீங்க” என்று தீக்கங்காய் தெறித்து பேசிச் சென்றான் பொன்வண்ணன்.

பொன்வண்ணனும் தூரிகாவும் சாப்பிட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பிச் சென்றனர்.

குமரன் தாரகையை காலேஜிற்கு கூட்டிச்சென்றான். தாரகையோ அலர்விழியை நினைத்துக்கொண்டு குமரனிடம் பேசாமல் அமர்ந்திருந்தாள். குமரனோ காலேஜ் வந்ததும் “தாரா காலேஜ் வந்திருச்சு இறங்குடி” என்று பைக்கை நிறுத்தினான்.

அவளோ வண்டியிலிருந்து இறங்கியதும் “நீயாவது என்னை ஏமாத்தாம கல்யாணம் பண்ணிப்பியா?” என்றவளுக்கு கண்கள் கலங்கி குரல் கம்மியது.

“ஏய் அண்ணா விஷயம் வேறடி... நம்ம விசயம் வேற... நாம ரெண்டு பேரும் விரும்பறது ரெண்டு வீட்டுக்கும் தெரியும். அப்படியே பெரியவங்க நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைனா... உன்னை கூட்டிட்டு போய் கோவிலில் வச்சு தாலி கட்டிருவேன் போதுமா அசடு போல அழுகாதே” என்று கண்ணைச் சிமிட்டிய குமரனோ தாரகையின் கண்ணீரை துடைத்து விட்டான்.

“நிஜமா!” என்றாள் இதழ் பிதுக்கி.

“சத்தியமாடி” என்று அவளது கையை பிடித்தான்.

“ம்ம் விடுங்க” என்று அவனது கையை உதறி காலேஜிற்குள் ஓடிவிட்டாள்.

அலர்விழிக்கு இன்று லிவிக்ட் உணவு கொடுக்க சொல்லியிருந்தான் கௌதம். காலையில் கஞ்சியும், ஜுஸும் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றிருந்தான் துரைசிங்கம்.

அன்று மாலை வரை அலர்விழிக்கு வாமிட் வருகிறதா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் தூரிகா.

தூரிகாவை அலர்விழியை கவனிக்க ஐ.சியு ட்யூட்டி போட்டிருந்தான் பொன்வண்ணன்.

மாலையில் அலர்விழியை பார்க்க வந்த கௌதமோ “இப்போ தொண்டையில பெயின் இருக்கா... வயிறு வலி ஏதும் இருக்கா?” என்று அவளது வயிற்றை தொட்டுப்பார்த்தான்.

தூரிகா அலர்விழியின் பக்கம்தான் நின்றிருந்தாள். இருந்த போதும் அலர்விழிக்கு தன் உடம்பை டாக்டராக இருந்தாலும் ஒரு ஆண் தொடுவது அவளுக்கு பிடிக்கவில்லை.

“லே.லேசா வலி இருக்குங்க டா.டாக்டர்” என்றாள் கௌதமின் முகம் பார்க்காமல் தயங்கியபடியே.

“ஸ்டொமெக் வாஷ் பண்ணியிருக்கு வயிறு வலியிருக்கும். இரண்டு நாளுல சரியாகிடும்மா” என்றவனோ “அடிவயித்துலயும் பெயின் இருக்கா?” என்று அவன் அடி வயிறை தொட்டு பார்க்க கையை கொண்டு போனான்.

“எ. எனக்கு வயிறு வலிக்கல. நல்லாயிருக்கு” என்று அவசரமாக அவனது கையை விலக்கியும் விட்டாள். அலர்விழியின் செயலில் கோபம் வந்தாலும் வெளியே கோபம் காட்டாமல் மாத்திரை எடுத்துக்கொண்டிருந்த தூரிகாவிடம் “சிஸ்டர் கைனகாலஜிஸ்ட் ரதி டாக்டரை நான் வரச் சொன்னேன்னு சொல்லுங்க” என்றவனோ அவனது கேபினுக்குள் சென்றுவிட்டான்.

ரதியோ ஸ்கேன் ரூமிலிருந்து அப்போதுதான் வெளியே வந்திருந்தாள்.

கல்யாணம் ஆனபிறகு இப்போது தான் ரதியும் தூரிகாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். கதவு தட்டிவிட்டு உள்ளேச் சென்ற தூரிகாவோ “மேம் கௌதம் டாக்டர் உங்களை ஐ.சியுக்கு வரச்சொன்னாங்க!” என்று மட்டுமே சொல்லி விட்டு கதவுவரை சென்றுவிட்டாள்.

“ஒரு நிமிசம்” என்ற ரதியின் அதிகார குரலில் தூரிகாவின் கால்கள் நின்றது. வெளிஇடமாக இருந்திருந்தால் அவள் தனக்கு செய்த காரியத்திற்கு போடியென்று பேசாமல் போயிருப்பாள்.

இப்போது ரதி டாக்டர் தான் ஒரு நர்ஸ் ரதிக்கு மரியாதை கொடுத்துதான் ஆக வேண்டும். கண்ணை மூடித்திறந்தவள் “சொல்லுங்க டாக்டர்” என்றாள் தன்மையாகவே.

“எப்படியிருக்க?” என கேட்டாள் எகத்தாளமாக

“நான் நல்லாயிருக்கேன் டாக்டர்” என்று அவளிடம் வாதம் செய்ய விரும்பாமல் வெளியேச் சென்றுவிட்டாள் தூரிகா.

‘என்னடா இவகிட்டயும் சண்டை போடலாம்னு பார்த்தா இவளும் கழுவுற மீனுல நழுவுற மீனாட்டம் தப்பி ஓடுறா’ என்று புலம்பிக்கொண்டு கையில் ஸ்டெதஸ்கோப்புடன் ஐ.சியுவிற்குச் சென்றாள்.

‘இப்போ இந்த அழுகாச்சி குடும்பத்தை பார்க்கணுமா’ என்று ஐ.சியுவின் வெளியே நின்ற கோமதியை பார்த்தவள் தலையை மட்டும் அசைத்து அன்பரசியை பார்த்தாள்.

அன்பரசியோ “என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு இப்போ எதுக்குடி என் பொண்ணை பார்க்க போற!” என்று அன்பரசி ஆயாசமாக அவளை திட்ட ஆரம்பித்தார்.

கண்ணனோ “அன்பு சும்மா அமைதியாயிரு அவங்க டாக்டர் நம்ம பொண்ணை செக் பண்ண வந்திருப்பாங்க” என்று கூறியதும் அன்பரசி ரதியை முறைத்துக்கொண்டு நின்றார்.

ரதியும் “நான் உங்க பொண்ணை பார்க்க வரலை... ஐசியு பேஷண்ட்க்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வரச்சொல்லியிருக்காங்க” என்றவளோ அன்பரசியை முறைத்து விட்டு அங்கே நிற்காமல் ஐ.சியுவிற்குள் நுழைந்தாள்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அலர்விழிக்கோ ரதியை பார்த்ததும் அவளுக்கு கோபம் வந்தது. ‘இவ எதுக்கு இங்க வந்தா’ என்று ரதியை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“உங்களை செக் பண்ண வந்திருக்காங்க கோப்ஆப்ரேட் பண்ணுங்க” என்றவனோ அங்கிருந்து தள்ளி நின்றான் கௌதம்.

ரதியோ அலர்விழியின் அடிவயிற்றில் அழுத்தி “இங்க பெயின் இருக்கா?” என்றாள் இப்போது தன்மையாகத்தான் பேசினாள்.

“கொஞ்சமா இருக்கு” என்றாள் தயங்கியபடி.

“பீரியட்ஸ் டைம்ல வலி இருக்குமா! ஃப்ளோ அதிகம் இருக்குமா! ஒருநாளைக்கு எவ்ளோ பேட்?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள். அவளோ ரதி கேட்கும் கேள்விகளுக்கு கௌதமை பார்த்துக்கொண்டே மெதுவாய் பேசினாள்.

கௌதமோ ‘நான் டாக்டர் இந்த பொண்ணு ஏன் சையிங்கா இருக்கா’ என்று தலையை குலுக்கிக்கொண்டு அவனது கேபின் சென்றுவிட்டான். அலர்விழியை முழுதாய் செக் பண்ணிய பிறகே அங்கே வந்தான் கௌதம்.

“நீங்க கிளம்பும் போது மேல் வயிறு ஒரு ஸ்கேன் பார்த்துடலாம் இப்போ டேப்லட் எழுதிக்கொடுக்குறேன் சாப்பிடுங்க!” என்று மாத்திரையை எழுதிக்கொடுத்துவிட்டு நிமிர்ந்தவள் “ஏன்மா பாய்சன் சாப்பிடற அளவு என்ன பிரச்சனை?” என்று வேண்டுமென்றே நக்கலாக கேட்டாள் அலர்விழியிடம்.

அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது. இதுவே பழைய அலர்விழியாக இருந்தால் ரதி கேட்ட கேள்விக்கு இன்னேரம் அவளின் முடியை ஆய்ந்திருப்பாள். கண்ணீரோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“ரதி பேஷண்ட் கிட்ட இப்படியா பேசுவ” என்று சிறு அதட்டலோடு கேபினிலிருந்து வேகமாய் வந்தான் கௌதம்.

“பேஷண்டை கண்ணே மணியேனு கொஞ்சுவியா... நினைச்ச வாழ்க்கை கிடைக்கலைனா கிடைச்ச வாழ்க்கைய வாழ பழகிக்கணும்... இப்படியெல்லாம் முட்டாள் தனமா பண்ணக்கூடாதுனு சொல்ல நினைச்சேன்! நீயேன் இவளுக்காக துடிச்சு போற?” என்றாள் எரிச்சலாக.

“நான் ஹாஸ்பிட்டல் வந்து முதல் கேஸ் இந்த பொண்ணு... என்னோட பேஷண்ட்கிட்ட நான் இதுபோல கேள்வி கேட்கமாட்டேன். அவங்களே மனம் புண்பட்டு பாய்சன் சாப்பிட்டு வந்திருக்காங்க.! அவங்க கிட்ட போய் ஏன் விஷம் சாப்பிட்டனு ஹார்ஷா பேசினா அவங்க இன்னும் ஹர்ட் ஆவாங்க ரதி. நீ கிளம்பு நான் டாக்டர் ராஜி கிட்ட என் பேஷண்டை பார்த்துக்க சொல்லிடறேன்” என்று சண்டைக்கே வந்துவிட்டான் கௌதம்.

“என்னை ஏன் டா கூப்பிட்ட நான் இப்படித்தான் பேசுவேன்” என்று அவளும் கோபமாய் பேசிச் சென்றுவிட்டாள்.

கௌதமோ “சாரிமா” என்றான் அலர்விழியிடம்.

கௌதம் நல்ல டாக்டர் போல என்று அவன்மீது நம்பிக்கை வந்தது அலர்விழிக்கு.

அன்றிரவு பொன்வண்ணன் அலர்விழியை பார்க்க வந்தவன் “இப்போ எப்படிடா இருக்கு. வாமிட் வரலைனா நாளைக்கு இட்லி கொடுப்பாங்கடா” என்று அவள் பக்கம் உட்கார்ந்து அவளது கையை ஆதரவாய் பிடித்து கேட்டான்.

“இப்போ பரவாயில்லை அண்ணா” என்றாள் மெல்லிய சிரிப்புடனே.

அலர்விழியிடம் கொஞ்சம் பேசிவிட்டு தூரிகாவை பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்தாள்.

கௌதமோ “ரெண்டு பேரும் கிளம்புங்க நேரமாச்சு!” என்றதும் இருவரும் கிளம்பிவிட்டனர்.

அன்றிரவு ரதியும் பீரியட்ஸ் ஆகியிருக்க நாச்சியோ என்ன இது நாளைக்கு தாலி பிரிச்சு கோர்க்கலாம்னு இருந்தோமே இந்த பொண்ணு தூரம் ஆகிட்டாளே! இது அபசகுனமா என்று அவருக்கு மனதே சரியில்லை.

மூன்று நாள் கழித்து தாலி மாற்றிக்கொள்ளலாம் என்று பேசி முடித்தனர்.

சிங்கம் ரதியை பார்க்க கூட இல்லை நாச்சிதான் “கண்ணு மூணு நாளைக்கு சிங்கம் கூட கட்டிலில் படுக்க கூடாது! நீ என்னோட அறைக்கு வந்துடு அவனுக்கு கருப்பண்ண சாமி இருக்கு. அவனை பார்க்க கூடாதுனு இல்லை. சிங்கத்துக்கு கண்ணு எரிச்சல் வரும்... மூணுநாள் அவன் பக்கம் போக வேண்டாம்” தன்மையாகத்தான் சொல்லியிருந்தார்.

“இந்த காலத்துல என்ன கிழிவி இப்படியெல்லாம் பேசுற..?" என்ன நினைத்தாளோ தெரியவில்லை.

"சரி உன்னோட தூங்கறதுக்கு ஆசையாத்தான் இருக்கு” என்று நாச்சியின் அறைக்குள் சென்றாள்.

அங்கே அவளுக்கென்று குட்டி கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருந்தது. கட்டிலில் உட்கார்ந்தவள் அட இந்த கட்டிலும் நல்லாத்தான் இருக்கு என்று படுத்துவிட்டாள்.

மூன்று நாள் கழித்து கோவிலுக்குச் சென்றனர் வீரய்யன் குடும்பத்தினர்.

துரைசிங்கம் பட்டு வேஷ்டியுடன் கம்பீரமாக கை காப்பை ஏத்திவிட்டு நின்றிருந்தான்.

ரதியோ குங்கும நிறத்தில் காஞ்சிபுர பட்டில் தேவதையாக துரைசிங்கத்தின் பக்கம் வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தாலும் துரைசிங்கத்தின் ஆண்மையில் சொக்கி மயங்கிபோய்தான் நின்றாள்.

துரைசிங்கமோ ரதியை பார்த்தும் பார்க்காததுபோல கோவிலுக்கு வந்த நெருங்கிய சொந்தங்களை பார்த்து தலையசைத்துக்கொண்டிருந்தான்.

அம்மன் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்ட தாலியை பூசாரி எடுத்துக்கொடுக்க வீரய்யனும் நாச்சியும் தாலியை வாங்கி சிங்கத்திடம் கொடுத்தனர்.

சிங்கமோ ரதியின் கழுத்தில் தங்க மங்கள நாணைபோட்டு விட்டான் அவளது கண்களை பார்த்தவாறே... அவளும் அவனது கண்களைத்தான் பார்த்திருந்தாள். அடுத்த நொடி சிங்கம் தன் பார்வையை திருப்பிக்கொண்டான்.

ஆதிபெருமாள் குடும்பத்துடன் அம்மன் முன்பு வந்ததும் “அப்பா கிளம்பலாம்” என்று ரதியின் கையை பிடித்து “வா போகலாம்” என கண்களால் கூப்பிட்டான்.

அவளோ “எங்க அண்ணா தாலிச் செயின் போடுறதை நான் பார்க்கணும்” என்று சிங்கத்தின் கையை விலக்கிவிட

ஆதிபெருமாளோ “எப்படிடா என் பொண்ணு” என்று சிங்கத்தை தலைக் கனத்தோடு பார்த்தார்.

ஐய்யனாரோ “சிங்கம் கொஞ்ச நேரம் நில்லுபா தங்கச்சிக்கு தாலி போடும்போது நாம நிற்கறது முறை” என்றதும் “நீங்க வேணா நில்லுங்கப்பா நான் கிளம்புறேன” என்று கோபமாக பேசி விட்டு “ஏய் ரதி இப்ப நீ வரலைனா உன் அப்பன் கூடவே போயிடு" என்று ரதியிடம் பல்லைக்கடித்தான் சிங்கம்.

ரதியோ ஆதிபெருமாளை பார்க்க அவரோ “போடா” என்று கண்ணைக்காட்டினார்.

தூரிகாவோ “அண்ணா நீ நிற்க மாட்டியா” என்று கண்கள் கலங்க சிங்கத்தை பார்த்தாள்.

அவனோ “நல்லாயிரு” என்று உதடசைத்து ரதியின் கையை பிடித்து கோவிலை விட்டு வெளியேச் சென்றான்.

“உன் அண்ணாவுக்கு பெரிய ஹீரோனு நினைப்பு சும்மா வேஷ்டியை வரிஞ்சு கட்டி சண்டைக்காரன் போல என் தங்கச்சி கையை பிடிச்சு கூட்டிட்டு போறான் பாரு” என்று சிங்கத்தை கறுவினான் பொன்வண்ணன்.

“ஏன்? நீங்க என் கையை பிடிச்சு இழுக்கலையா! இப்போ உங்க தங்கச்சி கையை பிடிச்சு இழுக்கும்போது வலிக்குதா? உங்களுக்கு வந்தா இரத்தம்! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என கோபத்தில் வெடித்தாள் தூரிகா.

“போடி” என்றவனோ பூசாரி தாலியை கொண்டு வந்து கொடுக்க.

“எனக்கு தாலியை எடுத்து தரமாட்டீங்களா அம்மாச்சி?” என்று அழுத்திக்கேட்டான் பொன்வண்ணன்.


நாச்சியோ “எங்களுக்கு எல்லா பேரனுங்களும் ஒண்ணுதான்பா” என்று சிரித்தவர் தாலியை எடுத்து பொன்வண்ணன் கையில் கொடுக்க கோபத்தை மறந்து காதலுடன் தூரிகாவின் கழுத்தில் தாலியை போட்டுவிட்டான் பொன்வண்ணன்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27


ரதியை வீட்டுக்குள் கூட்டி வந்த சிங்கமோ அவளை வாசலில் இறக்கி விட்டு வெளியேச் சென்றுவிட்டான்.

அறைக்குள் வந்த ரதியோ கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலிச்செயினை கையிலெடுத்துப்பார்த்தாள். நல்ல கனமான தாலிச் செயின் லஷ்மியின் முகப்பு பதித்து அதில் சிவப்பு கல் பதித்து அவளது கழுத்துக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.

‘மாட்டுக்கு கட்டியிருக்கும் கயிறு மாதிரி பெரிசா இருக்கு! இன்னும் கொஞ்சம் மெலிசா இருந்திருந்தா நல்லா இருக்கும்!' என்று சலித்துக்கொண்டே கட்டியிருந்த பட்டுப்புடவையின் பின்னை கழட்டினாள்.

ப்ளவுஸுன் ஊக்கில் கையை வைக்கும் சமயம் சடாரென்று கதவு திறந்து உள்ளே வந்தான் சிங்கம்.

இந்த அறைக்குள் சிங்கத்தை தவிர யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியம் இருந்தாலும் பெண்களுக்கே உரிய நாணத்தால் தரையில் கிடந்த புடவையை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டவளின் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் ஏறி இறங்கியது.

'இவனை இப்போ ஏன் வந்தனு திட்டவும் வெளியே போனும் சொல்ல முடியாது! திருமணம் ஆன நாளாக அவன் தன்னிடம் குறை கண்டுபிடித்து திட்டவும் முத்தம் கொடுக்கவும் தன்னை இம்சை செய்துக் கொண்டிருக்கிறானே இப்போ அமைதியா நின்னுப்போம்..!' என்று கண்ணைமூடிக்கொண்டு நின்றாள்.

சிங்கமோ அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் சரசரத்த பட்டு வேட்டியை மடித்து கட்டி அவளருகே சென்றான். தன் முன்னே அவன் வந்து நிற்பதை அவள் உணர்ந்துதான் நின்றாள்.

'பாவி பய எதுக்கு இப்படி வந்து பூதம் போல நின்னு பயப்படுத்துறான். வீட்டுல வேற யாராவது இருந்தா நானும் தைரியமான வாயாடலாம். என்னை அடிச்சு போட்டா கேட்க நாதி இல்லை! தாலிகட்டியாச்சு பொண்டாட்டினு உரிமை எடுத்துப்பானோ' என்றெல்லாம் அவள் மனது தறிகெட்டு ஓடும் ஆறு போல சலசலத்துக் கொண்டிருந்தது.

அவனோ அவள் மீது மோதும் அளவிற்கு அவன் மூச்சுக் காற்று அவளது பால் நிலா முகத்தில் படும்படி நெருக்கமாய் நின்றிருந்தவன் அவள் கண்களையே கூர்மையான விழிகளுடன் பார்த்திருந்தான்.

அவளோ கண்களை பட்டாம்பூச்சி சிறகு விரிப்பது போல படபடப்புடன் மெல்ல கண்திறந்து பார்க்க அவனோ "நாலு நாள் முன்னாடி காபி கொடுத்த போது என்ன வாய்க்குள்ள முனகின சொல்லுடி” என்றான் மிரட்டலாக.

“அது வந்து நா நான் சும்மா விளையாட்டுக்கு வாய் தவறி” என்று பேச தடுமாறினாள்.

“சிங்கம் குடும்பத்துக்கு காசு பணம் இல்லையா வீட்டு மருமக கழுத்துல தாலிக் கயிறு மட்டும் இருக்கேனு என்னை எவனும் ஒரு வார்த்தை சொல்லக்கூடாது! நான் உன் கழுத்துல இருக்க தாலிக்கயிறைத்தான் மாத்தி தங்கத்துல தாலி போடணும்னு யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா நீயோ ஷாலை இழுத்து விடற... ஹாலா இருக்க போய் சும்மா கிஸ் மட்டும்தான் பண்ணேன்!" என்று தலையை ஆட்டியவன் அவள் கையில் பிடித்து வைத்திருந்து மாராப்பை பிடித்து இழுத்து விட்டு “இந்த ப்ரோபெர்டி எல்லாம் நான் பார்க்கதான் உன் கழுத்துல தாலி கட்டியிருக்கேன். சும்மா மூடி மூடி வைச்சா திறந்து பார்க்கதான் ஆசை வரும்" என்றவனோ அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அவளோ அவனை தள்ளிவிட்டு திரும்பி நின்று மார்பில் கைவைத்து பெரும்பெரும் மூச்சுக்களாக விட்டுக்கொண்டாள். லண்டனில் படித்திருந்தாலும் அவள் இந்திய கலாச்சாரத்தில்தானே வாழ்ந்திருக்கிறாள். படிக்கும் போது நண்பர்களுடன் வெளியேச் சென்றாலும் ஆண் நண்பர்களின் கை கூட தன்மேல் படவிடமாட்டாள். பொத்தி வைத்திருக்கும் பொக்கிஷத்தை இன்று சிங்கத்துக்கு கொடுத்துவிட்டு கண்ணை மூடிநின்றாள்.

"ஏய் அடக்காத காளையை கூட இந்த சிங்கம் அடக்கிடுவான்டி! இப்போ தனியா என்கிட்ட வகை தொகையா மாட்டிக்கிட்டியே" என்று அவளை வேகமாய் தன்புறம் திருப்பினான்.

"ப்ளீஸ்! ப்ளீஸ்! விட்டிரேன்! நான் இனி உன்கிட்ட சண்டையே போட மாட்டேன்... உன்கிட்ட நான் இன்னும் பேசி கூட பழகலை... கொஞ்ச நாள் எனக்கு டைம் கொடேன்" என்று கண்களால் இறைஞ்சினாள் பெண்ணவள்.

"என்னை விட்டிருனு சொல்லும்போதுதான் உன்னை அடையணும்னு தோணுதே" என்று சட்டையின் பட்டன்கள் ஒவ்வொன்றாக திறந்து விட்டு அவளருகே போனான் இதழ் வளைப்பு சிரிப்புடன்.

அவளோ அவனை விட்டு விலகி அங்கிருந்த சோபாவின் மேல் மோதி தடுமாறி சோபாவில் விழுந்துவிட்டாள்.

"வசதி பண்ணிக்கொடுக்குறியேடி மாமனுக்கு" என்று இதழ் கடித்து சட்டையை கழட்டி சோபாவில் போட்டு அவள் மீது மெதுவாக படர்ந்துவிட்டான். அவளுக்கு மேனியெல்லாம் நடுங்கியது.

முகமெல்லாம் வியர்த்து கொட்டியது. அவள் படும் அவஸ்தைகளை இரசித்துக்கொண்டிருந்த சிங்கமோ அவளது இதழில் முத்தமிடக்குனிய அவளோ அங்கிருந்த டவலை எடுத்து மார்பு மேலே போட்டுக்கொண்டாள்.

அவளின் கெட்ட நேரமோ என்னவோ பல்லி மேலிருந்து அவள் மேல் விழ "அச்சோ பல்லி" என்று தன் மேல் இருந்த துண்டை எடுத்து விசிறி விட்டு அவளாகவே சிங்கத்தை தாவி அவனை அணைத்துக்கொண்டாள்.

‘சிங்கம் உன்னை என்பக்கம் இழுக்க இந்த ஃபார்முலா சரியா வரும் போலயே’ என்று எண்ணியவளோ அவன் முன்னே பயந்தது போலவே நடித்துக் கொண்டிருந்தாள்.

அவனோ உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு "எப்படி என்பக்கம் வரவைச்சேன் பார்த்தியா! இனிமே தான் டி உனக்கு கச்சேரியை காட்ட போறேன்..." என்று சிரித்துவிட்டு அவனுமே அவளை இறுக்கிக்கட்டிக்கொண்டான்.

“உனக்குள்ள நான் மாட்டிட்டேன்னு நீ நினைச்சிருப்ப ஆனா உன்னை பொறி வைச்சு பிடிக்க போறேன் இந்த சிங்கம்” என்று அவளது தேன் சிந்தும் இதழை கவ்விக்கொண்டான்.

இருவருமே நடிப்பது போல தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவளின் மென் பஞ்சு மேனியும் அவனின் கற்பாறை மார்பும் உரசி தீயாய் பற்றிக்கொண்டது. அவனோ தாறுமாறுமாக அவளது முகத்தில் முத்தம் பதித்தான். "ஏய் விடு" என்று சிணுங்கியவளின் உதடுகள் மார்கழி பனி குளிரில் நனைந்ததை போல நடுங்கியது.

“ம்ஹும் விடமாட்டேன்” என்று விடாக்கண்டனாய் நடுங்கிய உதடுகளை தன் வசம் ஆக்கினான். அவளும் பெண்தானே அவளுக்கும் உணர்வுகள் இருக்கும்தானே! அவனோ அவள் உதடுகளை உறிஞ்சி உமிழ்நீரை அமிர்தமாய் அருந்திக்கொண்டிருந்தான். அவளுமே அவனுக்கு ஏதுவாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான். அவனது கால்களும் அவளது கால்களும் பின்னிக்கிடந்தன.

அவனது இதழ்கள் கழுத்துக்கு கீழ் இறங்கும் நேரம் “அம்மாடி ரதி” என்று கோமதியின் குரலில் “கோவில இருந்து வந்துட்டாங்க போல" என்று அவள் இரகசிய குரலில் பேசி அவன் முகம் பார்க்க அவனோ கண்ணை முடித்திறந்து பெரும் உஷ்ண மூச்சு விட்டு எழும்பியவன் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

‘அப்பா சாமி உடம்பெல்லாம் வலிக்குது. இரும்பு குண்டு மேல போட்டது போல இருந்துச்சுப்பா! மூச்சே விட முடியல’ என்று எழுந்தவளுக்கு சற்று முன் அவன் கொடுத்த முத்தம் நினைவு வர 'நான் எப்படி இப்படி மாறினேன். ஒரு வாரத்துல இந்த கருவாயனை எப்படி எனக்கு முத்தம் கொடுக்க அலோவ் பண்ணினேன்.’ என்று அவளுக்கே அவள் மீதே கோவம் வந்தாலும் ஆம்பளைகளை மடக்க பலகாலமா பெண்கள் இந்த காதல் யுத்தியை தான் ஆயுதமா பயன்படுத்துறாங்க. நாமளும் அவங்க வழியில போவோம் சிங்கத்தை சாய்த்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டாள் ரதி.

சிங்கத்தை ஏமாற்றலாம் எண்ணி தானே ஏமாந்து நிற்க காலம் வெகுவிரைவில் வரபோகிறது என்று பூஞ்சை பெண்ணுக்கு தெரியவில்லை. அவன் இந்த ஊரை காக்கும் கருப்பன்! அவனுக்கு தெரியாமல் ஊருக்குள்ளே எதையும் நடக்க விடமாட்டான். வீட்டுக்குள் நெருப்பு வைக்க வந்த பெண் தன் மனைவியாக இருந்தாலும் சும்மா விடுவானா! சிங்கம் ரதி இருவரும் காதல் என்ற நாடகத்தை கட்டிலில் அரங்கேற்றியிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்வார்கள் யார் தோற்பார்களென்று...

குளித்து விட்டு வந்ததும் அவள் வெட்கப்பட்டபடியே டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.

ஷவரை திறந்து நின்றவள் ‘ஸ்ப்பா வெட்கமெல்லாம் பட வேண்டியிருக்கு இவன்கிட்ட’ என்று தண்ணீரில் அப்படியே நின்றாள். அவள் இதழில் அவன் பல்பட்டு காயத்தில் தண்ணீர் பட காய்ந்தது. ‘கருவாயன் கடிச்சு வச்சிருக்கான் எரியுது’ என்று புலம்பிக்கொண்டே குளித்து முடித்து மார்பில் துண்டோடு வெளியே வந்தவள் வொய்ட் சர்ட் ப்ளு ஜீன்ஸுக்கு மாறி கண்ணாடி முன்னே நின்று தலை வாரிக்கொண்டிருந்தவனை கண்டு அவளது கால்கள் அப்படியே நின்று விட்டது.

“ரொம்ப பண்ணாதடி இப்போ எனக்கு மூடு இல்லை" என்று கழட்டி வைத்த தங்க கை காப்பை கையில் போட்டு கிளம்பிவிட்டான்.

அச்சோ வெட்கப்பட்டது வீணாப்போச்சு என்று பெரும்மூச்சு விட்டு குர்த்தியை போட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள் அங்கே ஐய்யனாரும் கோமதியும் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“அத்தை நேரமே எழுந்தது ஒரு மாதிரி இருக்கு. எனக்கு ஒரு காபி மட்டும் போட்டுக்கொடுங்களேன்” என்று நெற்றியை பிடித்தபடியே ஐய்யனார் உட்காரும் ஊஞ்சலில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள்.

கோமதி ஐய்யனாரை சங்கடமாக பார்க்க “தூரிகாபோலத்தான் டி ரதியும் அந்த பொண்ணு ஏதோ தெரியாம பண்ணுறா நீ போய் காபி போட்டு எடுத்துட்டு வா எனக்கும் கடுங்காப்பி போட்டு எடுத்துட்டு வாம்மா” என்றவரோ அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

கோமதியோ ரதியின் மீது கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு சமையல்கட்டுக்குச் சென்றவர் 'இந்த கோதை புள்ளைய இப்படி அடக்கமே இல்லாம வளர்த்திருக்காளே!' என்று நொந்தடிபடியே கடுங்காபியும் காபியும் போட்டு எடுத்து வந்தார் கோமதி.

ஐய்யனாருக்கு கடுங்காபியை கொடுத்துவிட்டு “ரதி காபி எடுத்துக்கோமா” என்றவரிடம் “தேங்க்ஸ் அத்தை” என்று காபியை எடுத்த சமயம் சிங்கம் போன் பேசிக்கொண்டே வரும் சத்தம் கேட்க சட்டென்று ஊஞ்சலில் இருந்து எழுந்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டாள்.

கோமதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தும் விட்டார். ஐய்யனாரோ
“கோமு மதிய சமையல் பண்ணு போ” என்று மருமகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று மனைவியை அனுப்பிவிட்டார்.

ரதியோ காபியை குடித்து விட்டு எழும்பி நின்றாள். சிங்கமோ “உட்காரு” என்று சைகை காண்பித்து ஐய்யனார் பக்கம் உட்கார்ந்தவன் “அந்த மாணிக்கம் நம்ம வார்டு பக்கம் வந்தா எனக்கு போன் போடு முருகா” என்று கோபத்தோடு பேசியவன் போனை வைத்திருந்தான்.

ஐய்யனாரோ “மாணிக்கம் வெளிய வந்துட்டானா! நாளைக்கு எலக்ஷன்ல அவன் கலாட்டா பண்ணாம நீதான் பார்த்துக்கணும் சிங்கம்! அந்த நாயை யாரு வெளியே எடுத்தது?” என்று ஐய்யனார் ஆத்திரமாக முகம் சுளிக்க கேட்டார்.

“ஆதிபெருமாள்தான்ப்பா” காபி குடித்துக்கொண்டிருந்த ரதியை முறைத்தபடியே பல்லைக்கடித்தான் சிங்கம்.

ரதிக்கு போன் வர “இதோ கிளம்பிட்டேன்” என்றவளோ “என்னங்க எனக்கு டெலிவரி கேஸ் வந்திருக்கு ஹாஸ்பிட்டல் வரை ட்ராப் பண்ணுறீங்களா?” என்று அவன் பேசியது காதில் கேட்காதது போல நடந்துக் கொண்டாள்.

“ப்பா நீங்க வெளியே போக வேணாம் நான் வந்த பிறகு நான் கூட்டிட்டு போறேன்” என்றவனோ கார் சாவியை எடுத்து வெளியேச் சென்றான்.

ரதிக்கு ஆதிபெருமாள் போன் பண்ணினார். போனை கட்செய்து விட்டு காரில் ஏறினாள் ரதி.

ஆதிபெருமாளோ மீண்டும் ரதிக்கு போன் போட்டார் சிங்கத்தை பார்த்தபடியே போனை கட் செய்துவிட்டாள்.

“உங்கப்பன்தானே போன்ல இப்ப போனை ஆன் பண்ணி பேசுடி” என்றான் சிங்கம் பல்லிடுக்கில்.

அவளுக்கோ ஏசி காரிலும் வியர்த்துக்கொட்டியது. நேரம் காலம் தெரியாமல் மகள் ஹாஸ்பிட்டல் கிளம்பியிருப்பாள் என மீண்டும் போன் பண்ணினார் ஆதிபெருமாள்.

ரதியின் கையிலிருந்த போனை பிடுங்கி ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான் துரைசிங்கம்.

“அம்மாடி ரதி நீ இப்ப ஹாஸ்பிட்டல் கிளம்பி வந்துட்டியா. அந்த ஐய்யனார் கட்சி ஆபிஸ் எப்போ கிளம்பினான் கூடவே உன் புருசன் சிங்கமும் புறப்பட்டானா?” என்று அவர் அடுக்கு கேள்விகளாக கேட்க.

ரதியோ “ப்பா நான் அப்புறம் போன் பண்ணுறேன்” என்று போனை அணைக்க போக “மூச்” என்று வாயில் விரலை வைத்து கண்களை உருட்டினான் கருப்பசாமி வந்தது போல.

ரதிக்கோ தன் குட்டு வெளிப்படுமே என்று கவலை அவளை சூழ்ந்துக் கொண்டது.

‘நானே இப்பதான் இவனை என் வழிக்கு கொண்டு வந்திருக்கேன் அதுக்குள்ள அப்பா போன் பண்ணி சொதப்பிட்டாரு’ என்று தலையில் கை வைத்தாள்.

"அம்மாடி நம்ம திட்டப்படி அந்த ஐய்யனாரை போட்டுத்தள்ளணும்" என்று அடுத்த வார்த்தை ஆதிபெருமாள் பேசும் முன் “டேய்இஇ இந்த துரைசிங்கம் இருக்க வரை எங்கப்பா முடியை கூட தொட முடியாதுனு உனக்கு எத்தனை முறை சொல்றது!" என்ற சிங்கத்தின் கர்ஜனை கேட்டு வாயடைத்து போனாள் ரதிதேவி.

மறுபுறம் சிங்கத்திடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்த ஆதிபெருமாளும் “உன்னை போட்டுத்தள்ளதான் டா உனக்கு சரிசமமான மாணிக்கத்தை ஜெயிலிருந்து வெளியே எடுத்து கூட்டிவந்திருக்கேன்” என்று நாராசமாய் சிரித்தார் ஆதிபெருமாள்.

“யாரு அந்த மாணிக்கம்? அவனை என் கையால அடி அடின்னு அடிச்சு உடம்பு புண்ணாக்கி ஜெயிலுக்கு அனுப்பி வச்சிருக்கேன்! அவனெல்லாம் எனக்கு சரி சமமான ஆளுனு நீ பேசற போடா வெண்ணை ! அந்த மாணிக்கத்தை வைச்சு இன்னும் எங்க குடும்பத்தை ஒழிச்சுகட்டலாம்னு ப்ளான் போடு ! ஆனா நீ உன்னோட பொண்ணை என்கிட்ட விட்டு வச்சிருக்க பார்த்துக்கோ! நான் என்ன வேணா பண்ணுவேன்னு உனக்கு தெரியும்" என்றான் ரதியை பார்த்துக்கொண்டே இதழ் வளைப்பு சிரிப்புடன்.

அவளோ சிங்கத்தின் மற்றொரு அவதாரத்தை மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உன் தங்கச்சியும் என் வீட்லதான் இருக்கா நீ நினைவுல வச்சிக்கோ!” என்றார் ஆதிபெருமாள் அடங்காமல்.

“ம்ஹீம் உன் மகன் இருக்க வரை என் தங்கச்சியை உன்னால ஒண்ணும் பண்ணமுடியாதுடா பன்னாடை பரதேசி! ஆனா உன் பொண்ணோட வண்டவாளம் எனக்கு தெரிஞ்சு ரொம்ப நேரமாச்சு. இனிமே உன் பொண்ணை அந்த கருப்பன் நேர்ல வந்தா கூட என்கிட்ட இருந்து காப்பாத்த முடியாது அவளை வச்சு செய்யப்போறேன். தப்பு செய்தவனை கூட மன்னிச்சுடுவேன் கூடவே இருந்து துரோகம் பண்றவங்களை நான் மன்னிக்க மாட்டேன்டா” என்றவனோ ரதியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் ஆதிபெருமாளுக்கு கேட்கும் படி.

“டேய்! டேய்! என் பொண்ணை அடிக்காதே அவளுக்கு ஒன்னும் தெரியாது! நான் செய்ய சொன்னதை செய்யுறா" என்று ஆதிபெருமாள் கத்துவது காற்றில் கரைந்து போனது.

போனை வைத்த சிங்கமோ “ஏய் கொஞ்ச நேரம் முன்னாடி என்கூட இளைஞ்சு படுத்து கிடந்தியேடி! எப்படிடி என்கூட துரோகத்தோடு படுத்த இதுக்கு பேரு என்ன தெரியுமா?” என்று பல்லை நறநறவென கடித்தான்.

ரதியோ காதை பொத்திக்கொண்டு “நோ! நோ! சிங்கம் அப்படி சொல்லாதீங்க உங்க மேல் எனக்கு லவ் இருக்கு சிங்கம் ஐ.லவ்.யு” என்று அவனை தாவி அணைத்துக்கொண்டாள் ரதி.

அவனோ அவளை அணைக்காமல்தான் இருந்தான். “ஏய் கையை எடுடி” என்று அவன் அவளை தன் அணைப்பிலிருந்து விடுவிக்க பார்க்க...

அவளோ “ப்ளீஸ்ங்க நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுங்களேன்” என்று அவனை அணைத்தபடியே அவன் முகத்தை கண்ணீரோடு பார்த்தாள்.

“ஏய் சும்மா அழுது சீன் போடாத எரிச்சலா வருது” என்று பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டான்.

“அப்பா என்கிட்ட நம்ம குடும்பத்துல குழப்பம் வரவைக்க சொன்னாரு. ஆனா என்னால முடியலை... ஏன் தெரியுமா? நான் கோபமா பேசினாலும் பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காம நடந்துக்கிட்டாலும், நம்ம வீட்டுல இருக்கவங்க என்னை ஒரு வார்த்தை கூட அதட்டி பேசல. அதுவே எனக்கு கில்டியா இருந்துச்சு... இப்போ அப்பா போன் பேசினா இனிமே போன் பேசவேண்டாம்னுதான் சொல்லத்தான் இருந்தேன்... நான் உங்க மேல மஞ்ச தண்ணி ஊத்தினேனே அப்போவே லவ் வந்துச்சு... உங்க கட்டுமஸ்தான உடம்பு பார்த்தும்... இதோ அப்படியே என்னை கட்டியிழுக்கிற காந்தம் போல இருக்க இந்த கண்ணும். உரமேறிய நெஞ்சும்... நீங்க கோபப்படும் போது துடிக்கும் இந்த மீசையும்! நீங்க அம்மாச்சிகிட்ட மெலிசா சிரிக்கும்போது உங்க கன்னத்துல குழி விழும்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எப்போயிருந்துனு எல்லாம் கேட்கக் கூடாது ப்ளீஸ் இந்த ராங்கிகாரி காதலை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்” என்று தலையை சாய்த்து அவள் கேட்ட விதத்தில் அவள் கண்களை பார்த்தான்.

எப்போதும் வாய் பொய் பேசினாலும் கண்கள் பொய் பேசாதே அவள் கண்களில் டன் கணக்கில் காதல் வழிந்து ஆறாய் ஓடியது.

அவனோ “நம்பலாமா உன்னை?” என்றான் புருவம் சுருக்கி.

“100 சதவீதம் என்னை நம்பலாம்!” என்று அவனது கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து அவன் கண்களை பார்த்தாள்.

“அப்போ! உங்க அப்பன் கூட இனிமேல் பேசக்கூடாது. எனக்கு சத்தியம் பண்ணுடி! சத்தியத்தை மீறி நடந்தா நான் மனுசனா இருக்கமாட்டேன் என்னை பத்தி தெரியும்ல” என்றான் அதட்டலாக.

“ம்ம் தெரியும் மாமா! உங்களுக்கு பிடிக்காதவங்களோட நானும் பேசமாட்டேன். அப்பா நம்ம வீட்டு ஆளுங்களை எல்லாம் தப்பு தப்பா சொல்லியிருக்காரு என்கிட்ட... ஆனா இங்க வந்து நேர்ல பார்க்கத்தான் எல்லாரும் சொக்கத்தங்கம்னு புரிஞ்சுது” என்றாள் தவிப்பான குரலில்.

“நான் உன்னை நம்பணும்னா இன்னிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வச்சிக்கலாமா? நான் வைக்கப்போற டெஸ்ட்ல நீ பாஸாகணும் அப்போதான் என் மனசுல இடம் பிடிக்க முடியும்” என்றான் மீசையை முறுக்கிக்கொண்டே.

“இ.இன்னிக்கே எல்லாம் நடக்கணுமா? ஒரு ஒருமாசம் ரெண்டு மாசம் லவ் பண்ணிட்டு அப்புறம் ஃபர்ஸ்ட்நைட் வைச்சுக்கலாமே" என்றாள் தலையை சாய்த்து இதழ் கடித்தபடி.

“நாம ரெண்டு பேரும் லவ் பண்ணற வயது தாண்டியாச்சு! இனி ஃபர்ஸ்ட் புருசன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிப்போம். தானா லவ் வந்துடும்” என்று அவளை விட்டு விலக “நெத்தியில முத்தம் கொடுக்க மாட்டீங்களா மாமா?” என்றாள் குழைவான குரலில்.

“ம்ம் நான் முத்தம் கொடுத்தா லிப்ஸ்லதான் கொடுப்பேன் கொடுக்கட்டுமா?” என்று நாவால் இதழை ஈரம் செய்தான்.

அவளோ “எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை! சீக்கிரம் முத்தம் கொடுங்க ஹாஸ்பிட்டலில் டெலிவரி கேஸ் வெயிட்டிங்” என்று கண்ணைச் சிமிட்டி அவரசப்படுத்தினாள்.

அவனோ அவளது முகத்தை கையால் தாங்கி அவளது பிறைநுதலில் மெதுவாய் முத்தமிட்டான். அவளோ கண்களை மூடிக்கொண்டாள். கண் இமைகளுக்கும் முத்தம் கொடுத்தான். அவளது குண்டு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான் அவள் கண்திறக்கும் நேரம் அவளது இதழை ஆக்கிரமிப்பு செய்தான்.

இருவரும் முத்த சண்டையிட்டனர். உயிரும் உயிரும் கூடு விட்டு கூடுபாயும் மந்திரம் கற்றுக்கொண்டுக்கொண்டிருந்தான் ரதிக்கு

கள்ளுண்ட வண்டாக மாறி அவள் இதழுக்குள் தேன் அருந்தி போதையேற்றிக்கொண்டிருந்தான். இருவரின் திடீர் காதல் எதுவரையோ!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 28

கோவிலை சுற்றி வந்து தூரிகாவின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பொன்வண்ணனுக்கு ஹாஸ்பிட்டலிலிருந்து “எமர்ஜன்சி உடனே வரமுடியுமா டாக்டர்” என்று போன் வந்தது.

“அரைமணி நேரத்துல வந்துடறேன்” என்றவன் தூரிகாவுடன் வீட்டுக்கு வந்துவிட்டான்.

போட்டிருந்த பட்டு வேட்டி சட்டையை அவசரமாக கலைந்துக் கொண்டே ஹாஸ்பிஸ்டலுக்கு போடும் ட்ரஸை போட்டுக்கொண்டிருந்தான்.

கோவிலில் கொடுத்த பிரசாத பாயாசத்தை வாங்கிக் கொண்டு கோதையும் ஆதிபெருமாளும் தனிகாரில் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

தூரிகாவுமே பொன்வண்ணன் படபடப்பாக கிளம்பிக்கொண்டிருப்பதை பார்த்து அவளுமே பட்டுச்சேலையை கலைந்து யூனிபார்ம்க்கு மாறியிருந்தாள்.

“சீக்கிரம் கிளம்பலாம்டி எமெர்ஜென்சி” என்றவனோ தூரிகாவை பார்த்தான்.

அவளும் "என்ன" என்று புருவம் சுருக்கினாள்.

"இன்னிக்கு பட்டுச் சேலையில ரொம்ப அழகாயிருந்தே!" என்று கண்ணைச் சிமிட்டி அவள் பக்கம் வந்து அவசரமாக அவளை இறுக்கி அணைத்து இதழில் முத்தம் கொடுத்தான். அவள் நெற்றியில் இருந்த குங்குமம் அவனது சட்டையில் பதிந்துவிட்டது.

இந்த நேரம் பார்த்து கோதையோ பொன்வண்ணன் அறையின் கதவை தட்டி உள்ளே வந்தவர் இருவரும் புறப்பட்டு நின்றதை கண்டு “வண்ணா கோவில் பிரசாத பாயாசம் கொண்டு வந்தேன். குடிச்சிட்டு போங்க” என்றார் புன்சிரிப்புடன்.

பொன்வண்ணனின் வொய்ட் கலர் புளு செக்குடு சட்டையில் ஒட்டியிருந்த குங்குமம் பளிச்சென்று தெரிய கோதையோ மனம் நிறைந்து புன்னகையுடன் "தாலி பிரிச்சு கோர்த்திருக்கு. இன்னிக்கு முழுக்க ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க" என்று பாயாசத்தை ஸ்பூனில் ஊட்டிவிட்டார் மகனுக்கும் மருமகளுக்கும்.

தூரிகாவிற்குத்தான் சங்கடம் சட்டையை பாருங்க என்று பொன்வண்ணனுக்கு கண்ஜாடை காட்டினாள்.

அவனோ அவள் சொல்வதை கவனிக்காமல் "ம்மா கோவில் பிரசாதமா இருந்தாலும் உங்க கையால ஊட்டி விடற பாயாசத்துக்கு நான் அடிமை... அடுத்த ஜென்மத்துலயும் உங்க மகனாவே பிறக்கணும்." என பாசப் பிணைப்புடன் கோதையை அணைத்துக்கொண்டான் பொன்வண்ணன்.

கோதையோ மகனது பேச்சில் உச்சி குளிர்ந்து உருகியவர் “எனக்கும் நீயே மகனா பிறக்கணும்டா... அடுத்த ஜென்மத்துலயும் எல்லாருக்கும் உதவி செய்யுற மனப்பான்மையோட நீ இருக்கணும்” என்று முந்தானையால் மகன் வாயை துடைத்துவிட்டு தங்களை விடாமல்
பார்த்துக்கொண்டிருந்த தூரிகாவை பார்த்தவர் “அடுத்த ஜென்மத்துல நீயே மருமகளா வரணும்டியம்மா” என்றார் சிரிப்புடன்.

“அத்தை நான் பிறப்பெடுக்குற ஜென்மம் முழுவதும் எனக்கு உங்களை போல மாமியார் கிடைக்கணும்” என்று சந்தோச சிரிப்புடன் கோதையை அணைத்துக்கொண்டாள்.

பொன்வண்ணனோ நம்ம இடத்தை இவ பிடிச்சுடுவா போல என்று பொசசிவ்வில் "நேரமாச்சு கிளம்பலாம் வா" என்று தூரிகாவின் கையை பிடித்தான்.

"இப்படியேவா ஹாஸ்பிட்டல் போற" என்றார் கோதை கன்னத்தில் கைவைத்து.

"ஏங்கம்மா இந்த ட்ரஸ்க்கு என்ன?” என்று சட்டையை குனிந்து பார்த்தான்.

சட்டையில் குங்குமம் இருக்க "இப்போ என்ன என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்தேன் அவ நெத்தியில இருந்த குங்குமம் ஒட்டிக்கிச்சு" என்று அசால்ட்டாய் சொன்னாலும் அவனுக்குமே வெட்கம் வந்துவிட்டது. ஆணின் வெட்கமே தனிஅழகுதான்.

"அச்சோ ரொம்பத்தான்" என்று சலித்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள் தூரிகா.

கோதையோ "வண்ணா சட்டையை மாத்திட்டு போடா" என்று மகனின் கன்னத்தில் தட்டிச் சென்றார் நமட்டுச் சிரிப்புடன்.

சட்டையை மாற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினர் இருவரும்.

ஹாஸ்பிட்டலிருந்து அலர்விழியை டிஸ்சார்ஜ் செய்யும் முன் "அலர்விழி நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே மாத்திரைகளை எழுதிக்கொண்டிருந்தான் கௌதம்.

அலர்விழி பக்கத்தில் கண்ணனும் அன்பரசியும் நின்றிருந்தனர்.

அலர்விழியோ "நா.நான் ப.பன்னிரெண்டாவது தான் படிச்சிருக்கேன்!" என்றாள் தயக்கத்தோடு கண்ணனை பார்த்துக்கொண்டு.

"ஏன் டிகிரி படிக்காம விட்டீங்க?" எழுதிய மாத்திரை சீட்டை கண்ணனிடம் நீட்டினான்.

அலர்விழியோ இதுவரை கௌதமை மெல்லிய சிரிப்புடன் பார்த்திருந்தவள் படிப்பை பத்தி கேட்டதும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.

“நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா அங்கிள்! உங்க பொண்ணு முகத்துல இன்னிக்குதான் கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு நான் படிப்பை பத்தி கேட்டதும் முகம் சுண்டிப்போச்சு" என்றான் புருவம் நெறித்து கண்ணனிடம்.

கண்ணனோ சிறு சிரிப்புடன் "அவளுக்கு படிப்பு சரி" என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே "டாக்டர் எனக்கு படிக்க பிடிக்கலை போதுமா!" என்றாள் வெடுக்கென பேச்சில்.

அவனோ "யாரு அலர்விழி வாய்சா இது... இந்த ஒருவாரமா உங்களோட கண்ணு மட்டும்தான் பேசுச்சு! உங்க வாய் பேசி இன்னிக்குதான் பார்க்குறேன்" என வாய்திறந்து சிரித்தான்.

அவளுக்கோ "இந்த டாக்டர் எதுக்கு படிக்கலைனு கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்துறாரு" என்று இதழை சுளித்துக்கொண்டாள்.

"நான் சும்மா ஜோக் பண்ணேன்மா தப்பா எடுத்துக்காதீங்க! நீங்க இருக்க மனநிலையில ஹையர் ஸ்டடீஸ் படிக்கலாம்னுதான் கேட்டேன்... உங்களுக்கு என்ன வேலை செய்ய பிரியம் அதிகமோ அதில நேரத்தை செலவழிங்க. உங்க மைண்ட் கொஞ்சம் சேன்ஞ் ஆகும். காரம் புளிப்பு அதிகம் சேர்க்க வேணாம்" என்றான் கட்டளையாக.

தூரிகாவோ "டாக்டர் எங்க அலருக்கு சாப்பாடுதான் உயிர்... அதுவும் காரமான நாட்டுக்கோழி வறுவல்தான் அவளுக்கு பிடிக்குமே! நீங்க அவளுக்கு என்ன விருப்பம் கேட்டீங்கல்ல... எங்க அம்மா, அத்தையை விட சமையல் அற்புதமா பண்ணுவா... நாள் முழுக்க சமையல்கட்டுல நிற்க சொன்னாலும் நின்னு சமைப்பா! சைவம், அசைவம் ரெண்டுலயும் புகுந்து விளையாடுவா... அன்னபூரணினு பேர் வச்சிருக்கலாம் எங்க அலருக்கு" என்று சொல்லி அலர்விழியை பார்த்து கண்ணைச்சிமிட்டி சிரித்தாள் தூரிகா.

கெளதமோ "அப்போ உங்க கையால எனக்கு கோழிக்குழம்பு கிடைக்குமா அலர்விழி?" என்றான் கடவாயில் நாக்கை சுழட்டிக்கொண்டு.

"ம்ம்" என்றாள் சுரத்தை இல்லாத குரலில் அலர்விழி.

"நான் சும்மாதான் கேட்டேன்ங்க! நீங்க இன்னிக்கு வீட்டுக்கு கிளம்பலாம்" என்றான் மெல்லிய சிரிப்புடன்.

அன்பரசியோ "ரொம்ப நன்றிங்க டாக்டர் எங்க பொண்ணை எங்ககிட்ட திருப்பி கொடுத்ததுக்கு" என்றார் கண்ணீர் துளியுடன்.

"கடவுளுக்கு நன்றி சொல்லுங்கம்மா! அடுத்த பேஷண்ட்டை பார்க்க போகணும் வரேன். தூரிகா சிஸ்டர் அலர்விழிக்கு ஸ்கேன் பார்க்க ராஜி டாக்டர்கிட்ட சொல்லியிருக்கேன் அழைச்சிட்டு போய்டுங்க. அடுத்த முடிறை செக்கப் வரும் போது நான் ரிப்போர்ட் பார்க்குறேன்" என்றவனோ கண்ணனிடம் தலையசைததுவிட்டு அலர்விழியை ஒரு முறை பார்த்துச் சென்றான்.

அலர்விழியை டாக்டர் ராஜியிடம் அழைத்துச் சென்றாள் தூரிகா. தூரிகாவை ஸ்கேன் செய்த ராஜியோ "நீர்கட்டி இருக்கு டேப்லட் கொடுக்குறேன்! கரைஞ்சுடும் பெருசா ப்ராப்ளம் இல்லை. மேரேஜ் ஆனதும் வாங்க" என்று மாத்திரையை எழுதிக்கொடுத்தார்.

பொன்வண்ணனும் அலர்விழியை பார்க்க வந்தவன் ரிப்போர்ட் வாங்கி பார்த்துவிட்டு "நத்திங் ரிப்போர்ட் நார்மல் தான்! ஹாட்டா எதுவும் சாப்பிடவேணாம்! உனக்கு பிடிச்ச புக்ஸ் படி..." தன் போன் நம்பரையும் அவளது போனில் சேவ் செய்து "என்கிட்ட எப்போ பேச தோணுதோ அப்போ பேசுமா" என்று அவளது தோளில் தட்டினான்.

"தேங்க்ஸ் அண்ணா" என்றவள் "என் ப்ரண்ட் தூரியை நல்லா பார்த்துக்கோங்க" என்று பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டாள் மெல்லிய சிரிப்புடன். அலர்விழிக்கு அண்ணன் இல்லையென்ற வருத்தத்தை பொன்வண்ணன் போக்கியிருந்தான்.

"பார்த்துக்குறேன்மா உன் ப்ரண்டை" என்று தூரிகாவை ஓரப்பார்வை பார்த்தபடியே அழுத்திச்சொன்னவன் “அலர்விழியை பார்த்துக்கோங்க சித்தப்பா” என்று கண்ணனை பார்த்து சொன்னவன் அன்பரசியை பார்க்க "அவரோ உன் குடும்பத்தை திட்டி பேசினாலும் மனசுல வச்சிக்காம என் பொண்ணை வந்து பொறுப்பா அக்கறையாவும் பார்த்துக்கிட்டேயேப்பா சித்தியை மன்னிச்சிடு" என்றார் கண்ணீருடன்.

"எனக்கு ரதியும் அலரும் ஒண்ணுதான் சித்தி...நான் அம்மாவோட வீட்டுக்கு வரேன்! கேஸ் இருக்கு வரேன" என்று கிளம்பிவிட்டான்.

அடுத்த நாள் எலக்ஷன் மாணிக்கம் ஆதிபெருமாளின் பக்கம் உட்கார்ந்திருந்தான் ஒரு நகைகடையே அள்ளி அவனது கழுத்தில், கையில் தங்கத்தை போட்டிருந்தான். ஆதிபெருமாள் பக்கம் உட்கார்ந்திருந்தவன் ஓட்டு போட வருபவர்களிடம் "ஹேய் எங்க மாமா ஆதிபெருமாளுக்கு ஓட்டு போடணும்" என்று விரலை நீட்டி மிரட்டினான்.

அவர்களோ எதற்கு வம்பு என்று "சரிங்க தம்பி" என்று தலையை ஆட்டிச்சென்றனர்.

சிங்கத்தின் ஆடிகார் வந்து நின்றதும் முதலில் ஐய்யனார் இறங்கினார். பைக்கில் சாய்ந்து நின்ற மாணிக்கமோ ஐய்யனாரை பார்த்ததும் தானாக மடித்து கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டான். அவருக்கு பின்னே காவலன் போல மீசையை முறுக்கிக் கொண்டு இறங்கினான் சிங்கம்.

சிங்கத்தை பார்த்த மாணிக்கத்திற்கு அவன் ஜெயிலுக்கு போகும் முந்தின நாளன்று அடித்த அடி இப்போதும் வலித்ததை போல உணர்வு இருக்க கன்னத்தை பிடித்துக்கொண்டான். அவனது செயலில் சிங்கமோ இதழ் வளைப்பு சிரிப்புடன் ‘என்கிட்ட வச்சிகிட்ட தலையை சீவிடுவேன்’ என்று நாக்கை மடித்து அவனுக்கு பயம் காட்டினான்.

தன்னை முறைத்துக்கொண்டிருந்த ஆதிபெருமாளை பார்த்து கழுத்தில் கையை வைத்து வெட்டி சாய்ச்சுடுவேன் என்று கண்களால் மிரட்டினான்.

ஆதிபெருமாளோ “மாணிக்கம் அவனை என்னனு கேளுடா” என்றார் துண்டை உதறி தோளில் போட்டு கோபத்துடன்.

மாணிக்கமோ "பொறுங்க மாமா பார்த்துக்கலாம்... சமயம் வரும்போது அவனை வச்சு செய்வேன" என்று வெட்டி ஜம்பம் பேசினான்.

சிங்கமோ கைகாப்பை ஏத்திவிட்டு கழுத்தை நீவிக்கொண்டு ஐய்யனார் பின்னே ஆதிபெருமாளை பார்த்து ஏளனச்சிரிப்பும் திமிர் நடையுடன் அவர்களை கடந்துச் சென்றான்.

"சிங்கம் அமைதியா வாப்பா" என்று ஐய்யனாரின் குரலில் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.

ஒவ்வொருவரும் ஐய்யனாருக்கே ஓட்டு போட்டு விட்டனர். ஆதிபெருமாளுக்கு ஓட்டு போட சில பேர்கூட நிற்கவில்லை. மாணிக்கத்தின் கையாளோ “அண்ணே! உங்க மாமா ஆதிபெருமாளுக்கு ஒரு ஓட்டு கூட விழுகாது போல” என்று அவன் கிசுகிசுக்க “வாயை உடைச்சிடுவேன் சும்மா இருடா கடுப்ப கிளப்பாம. நேத்து நைட் வீடு வீடா போய் பணம் பட்டுவாடா செய்திருக்கேன் அதெல்லாம் ஓட்டு போடுவாங்க மக்கள்” என்றான் நம்பிக்கையாக.

ஓட்டு போடுவதற்கு பொன்வண்ணனும் தூரிகாவும் கோதையும் வந்தனர்.

மாணிக்கமோ "ஹலோ டாக்டர் என்னடா எப்படியிருக்க?" என்று காரைப்பற்களை காட்டி சிரித்து கையை நீட்டி அணைத்துக் கொள்ள போனான்.

பொன்வண்ணனோ "டேய் பல் டாக்டரை பார்த்து உன் காரை பல்லை சரி பண்ணுடா பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு" என்று முகத்தை சுளித்து அவனது முதுகில் தட்டிவிட்டுச் சென்றான்.

"டாக்டருக்கு கொழுப்பை பாரு" என்று திட்டிக்கொண்டான் மாணிக்கம்.

காரில் சாய்ந்து நின்ற சிங்கமோ பொன்வண்ணனுக்கு பின்னால் வரும் தூரிகாவை பார்த்தான். அவளோ சிங்கம் பக்கம் ஓடி வந்து "அண்ணா எப்படியிருக்கீங்க?" என்று அவனது கையை பிடித்துக்கொண்டாள்.

"நல்லாயிருக்கேன்டா! நீ எப்படியிருக்க! உன்னை டாக்டர் நல்லா வைச்சிருப்பான்னு தெரியும். இருந்தாலும் என் மேல இருக்க கோவத்துல உன்னை ஏதும் சொன்னானா!" என்று அவன் அவள் முகத்தை பார்த்தான் கூர்பார்வையுடன்.

“என்னை திட்டல... நல்லா வச்சிருக்காங்க அண்ணா" என்றாள் மெலிதாய் சிரித்த முகத்துடனே... கணவன் மனைவிக்குள் ஆயிரம் ஊடல் இருந்தாலும் அண்ணனிடம் அவள் கூறவில்லை.

கோதையோ "சிங்கப்பயலே அத்தை கூட பேசமாட்டியா?" என்று அவனது தோளில் கையை வைத்தார்.

கோதையின் கையை எடுத்து விட்டு அங்கிருந்து ரெண்டு அடி தள்ளி நகர்ந்து விட்டான்.

கோதையோ சிங்கத்தின் முன்பு வந்து கையை கட்டி நின்றார்.

அவனோ நிமிர்ந்து ஒரு பார்வைதான் பார்த்தான் தலையை கீழே குனிந்துக் கொண்டான்.

ஐய்யனாரோ இவனுக்கு அத்தை மேல உள்ள கோபம் இன்னும் போகலை போல என்று சிரித்துக்கொண்டு சிங்கம் பக்கம் வந்தவர் "ஒரு வார்த்தை கோதைகிட்ட பேசலாம்லப்பா... அவ உன்னையே பார்த்திட்டிருக்கா பாரு பேசுடா" என்று கண்ணை மூடித்திறந்தார்.

அவனோ "அன்னிக்கு நான் கெஞ்சினேன்ல என்னை விட்டு போகாதீங்கனு... இப்போ இவங்க பேச சொல்லி கெஞ்சட்டும் தப்பில்லை... அவங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க என்கிட்ட கேட்டாங்க! பண்ணிக்கிட்டேன்! அவ்ளோதான்..." சிறுபிள்ளைத்தனமாக பேசியவனோ வேறு பக்கம் போய் கையை கட்டி நின்றான்.

கோதைக்கு கண்கள் கலங்கியது. "அழாதமா சரியாகிடுவான் நாளைக்கு அப்பாவும் அம்மாவும் உன் வீட்டுக்கு சீர் கொண்டு வராங்க அவங்களை மனக்குறை இல்லாம அனுப்பி வைக்க பாருங்க!" என்றார் கரகரத்த குரலில்.

"நீங்க வர வேணாம் அண்ணா அவரு உங்களை அவமானப்படுத்திடுவாரு" என்று கோதையே முந்திக்கொண்டு பேசியதும் சிங்கம் காதில் விழித்தான் செய்தது.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்துட்டாங்க எனக்குத்தான் மனசு தவிக்குது. என்னை தவிக்க விட்டு போனது என் கண்ணுக்குள்ள நிற்குது" என்று பாறையில் நீர்சுரக்கும் என்பது போல அவன் கண்களிலும் நீர் துளி கசிந்தது.

குமரன் பைக்கில் வந்து இறங்கினாள் ரதி தேவி.

கொஞ்ச நேரம் முன்பு "நான் ஓட்டு போட வரணும் என்னை வந்து கூட்டிட்டு போங்க" என்றிருந்தவளிடம் "நான் அப்பா கூட நிற்கணும்... தாத்தா கூட வந்துடு" என்று ஒற்றை பேச்சோடு போனை வைக்க போக "ஒரு நிமிசம் நான் ஹாஸ்பிட்டல் போகணும் அவசரம்" என்றதும் "குமரன் வீட்ல இருப்பான் அவன் கூட வந்துடு..." என்று போனை வைத்திருந்தான்.

ரதி பைக்கிலிருந்து இறங்கியதும் ஆதிபெருமாள் நின்றிருந்தார்.

ஆதிபெருமாளை பார்த்துக்கொண்டே சிங்கம் நிற்கும் இடத்திற்குச் சென்றாள் ரதி.

"என்ன மாமா ரதி உங்களை பார்க்காம போறா! அப்பானு ஓடிவந்துருக்கணும்ல என்ன ஒருவாரத்துல அவங்க பக்கம் சாய்ஞ்சுட்டாளா?" என்று அவன் புகைந்தான்.

"வருவாடா என் பொண்ணு என்பக்கம்தான்... கொஞ்சம் பிரச்சனை சொல்லுறேன்" என்றார் தாடையை தடவிக்கொண்டு.

“எனக்குத்தான் ரதினு சொல்லிட்டு... நான் ஜெயில் இருந்த நேரம் அந்த சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க மாமா" என்று குறைப்பட்டு ஆதங்கத்தோடு பேசினான் மாணிக்கம்.

"அதெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைடா கல்யாணம் பண்ண வேண்டியதாய் போச்சு! ஒரு ஆறுமாசம் பொறு உனக்குத்தான் ரதி" என்று அவனுக்கு வாக்கு கொடுத்தார். எந்த தகப்பனும் பேசாத வார்த்தையை விட்டார்.

“சிங்கத்துக்கிட்டயிருந்து ரதியை பிரிச்சு நான் கூட்டிட்டு போயிடுவேன் ஐய்யனார் குடும்பம் கூண்டோட சாகட்டும்" என்றான் வன்மச் சிரிப்புடன் மாணிக்கம்.

கோதையோ "ரதி எப்படியிருக்கடி?" என்று மகளின் கையை ஆதுரமாக பிடித்தார்.

"கையை விடுமா என் வீட்டுக்காரருக்கு உன்னை பிடிக்காது! என்கிட்ட பேசாதே... பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு... அவ என்ன ஆனானு ஒரு போன் பண்ணி பேசுனியா நீ! இப்போ வந்து வக்கணையா பேசு” என்று எரிந்து விழுந்தாள்.

"ஏய் அத்தைகிட்ட பாசமா பேசத்தெரியாதா டி உனக்கு! அத்தைகிட்ட மன்னிப்பு கேளு! நான் மட்டும்தான் அத்தை கூட சண்டை உனக்கு அவங்க அம்மா ஒழுங்கா மரியாதையா பேசுடி" என்று அவளுக்கு மட்டும் கேட்டும்படி காதை தேய்த்துக்கொண்டே பேசினான் சிங்கம்.

"இவன் எந்த நேரம் யாருக்கு பாசம் காட்டி பேசச் சொல்றான்னு தெரியலை" என்று ரதி சலித்துக்கொண்டாலும் "சாரி மா" என சிங்கம் மன்னிப்பு கேட்கச்சொன்னதால் ஒப்புக்கு கேட்டுவிட்டு பொன்வண்ணனை பார்த்தாள் ரதி .

அவனோ "வாடா ஓட்டு போட்டு கிளம்பலாம். இவங்களெல்லாம் பாசம் மழையில நனைஞ்சு சளிபிடிக்கற வரை இப்படியேதான் நிற்பாங்க" என்றான் கிண்டலாக தூரிகாவை பார்த்துக் கொண்டே.

அவளும் பொன்வண்ணனை முறைத்து பார்க்க அவனோ "சும்மா முறைக்காத டி இன்னிக்கு நைட் இருக்கு உனக்கு” என்று உதடசைத்தவனோ ரதியுடன் ஓட்டு போடச் சென்றான்.

ரதியுடன் ஓட்டு போட்டு வர தூரிகாவின் கையில் எதோ கொடுத்துக்கொண்டிருந்தான் சிங்கம்.

"தூரிகா" என்று பொன்வண்ணனின் சத்தம் கேட்டதும் "போய்ட்டு வரேன் அண்ணா" என்று தலையசைத்துச் சென்றாள். கோதையை வீட்டில் விட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினர்.

மாலை ஆறு மணிக்கு வாக்கு பதிவு முடிய வாக்கு பதிவு இயந்திரங்கள் பாக்ஸிற்கு சீல் வைத்து வாகனத்தில் ஏற்றி விட்டு ஐய்யனாரும் சிங்கமும் வெளியே வந்தனர்.

ஐய்யனாரை சுற்றி பெரிய கூட்டமே நின்றிருந்தது. ”இந்த முறையும் இந்த தொகுதியில நம்ம ஐய்யனார் தான் வருவாரு” என்று ஐய்யனாருக்கு வாழ்த்தினார்கள்.

எதிரே ஆதிபெருமாளின் பக்கம் பத்துபேர் கூட இல்லை. ஆதிபெருமாளோ ஐய்யனாருக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு மனம் வெந்து கிடந்தார். பதவி வெறி அவரை மிருகமாக்கிக்கொண்டிருந்தது வன்ம புகைச்சலுடன்.

ஐய்யனாரையும் சிங்கத்தையும் பார்த்துக்கொணடிருந்தவர் “மாணிக்கம் இந்த ஐய்யனார் உயிரோடு இருந்தா தானே ரிசல்ட் வந்ததும் எம்.எல்.ஏ ஆக முடியும் அவனை போட்டுத்தள்ளிட்டா இடைத்தேர்தல் வரும்ல... அப்போ நம்ம வேலையை காட்டுவோம்” என்று பொறாமையில் பொசுங்கி திட்டம் போட்டார் ஆதிபெருமாள்.
 
Status
Not open for further replies.
Top