ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 39


தூரிகாவோ பொன்வண்ணன் மீது கொலைவெறியில் இருந்தாள்.

'என்னை வரச்சொல்லிட்டு இந்த மேனா மினிக்கிய கூட்டிட்டு வெளியே போறாரு... இவ எதுக்கு இப்போ இங்கே வந்தா ..? என்னைய விட உங்களுக்கு இவ முக்கியமா போய்ட்டாளா..? நைட் துகா புகானு என்னை தேடி வரட்டும்... அப்புறம் இருக்குடா உனக்கு கச்சேரி... சிங்கத்தோட தங்கச்சியை சாதாரணமா எடைபோட்டுட்டே இல்ல... இப்ப வந்திருக்காளே மேனா மினுக்கி அவளை ஓட ஓட விரட்டுறேன்டா' என்று மனதிற்குள் பொங்கிய கோபத்தோடு சிங்கம் வீட்டுக்குச் சென்றாள்.

சிங்கமோ வாசலில்தான் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான். கேப் நின்றதும் தூரிகா காரிலிருந்து இறங்கியதை கண்டு புருவம் சுருக்கியவன் “முருகா போனை வை” என்றவனோ தூரிகாவின் முகத்தை ஆராய்ந்து பார்த்தான்.

அவள் அழுது கண்கள் வீங்கி இருந்தது. "என்னடா உங்க வீட்டுக்கு போறேன்னு சொன்ன! ஏன் நம்ம வீட்டுக்கு வந்திருக்க..? உன் வீட்டுக்காரன் கூட போகலையா..? டாக்டர் ஏதும் பிரச்சனை பண்ணுனானா? சொல்லுடா" என்றவனின் குரல் கடுமைகூடி வந்தது.

“அ.அது அம்மாகூட ஒருநாள் இருந்துட்டு போகலாம்னு வந்துட்டேன் அண்ணா! ஏன் அண்ணா நம்ம வீட்டுல நான் இருக்க கூடாதா?” என்று அவனது கடுமை பார்வையை பார்த்துக்கொண்டே பேசினாள்.

“நீ இப்படி பேசினா நான் நம்பிடுவேனா..? அண்ணன்கிட்ட பொய் சொல்லுறியா பாப்பா? என்கிட்ட எங்க வீட்டு போறேன்னு சொல்லிட்டு ஒருமணி நேரத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்க... கொஞ்ச நேரத்துல ரெண்டு பேருக்கும் என்ன நடந்துச்சு என்கிட்ட சொல்லியாகணும்” கண்டிப்புடன் கேட்டான் சிங்கம்.

“பிரச்சனைனா உங்ககிட்ட தான் வந்து நிற்பேன்... இப்போ என்னால சமாளிக்க கூடிய பிரச்சனைத்தான்... நான் உன்னோட தங்கச்சி ண்ணா... தப்பு பண்ணினா தாலி கட்டிய புருசனா இருந்தாலும் எதிர்த்து கேள்வி கேட்பேன்! ரெண்டு பேருக்கும் சண்டைதான். ஆனா நான் சரிபண்ணிப்பேன்... இப்போ நான் வீட்டுக்குள்ள போகட்டுமா அண்ணா?” என்ற தங்கையின் வீரமான பேச்சில் உச்சி குளிர்ந்தான் சிங்கம்.

சிங்கத்துக்கோ சந்தோசம் தாளவில்லை. “ம்ம் இப்படித்தான் வீரமா இருக்கணும்... அந்த வீட்ல இன்னிக்கு உன் புருசனை வளர்த்த அம்மா வந்திருக்காங்களாம் அவங்க கிட்ட நீ எச்சிரிக்கையா இருக்கணும். அதோடு அவங்க கூட ஒட்டிக்கிட்டு ஒரு பொண்ணும் வந்திருக்குனு என் காதுக்கு தகவல் வந்துச்சு. இனி நீ நம்ம வீட்டுல இருக்கறது சரிவராது. அந்த அம்மா பல திட்டம் போட்டுதான் நம்ம ஊருக்கு வந்திருக்கு... உனக்கு நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன். நாளைக்கு காலையில நீ கிளம்புற வழிய பாரு" என தங்கச்சியை எச்சரிக்கை படுத்தினான்.

“அண்ணா நீங்க சொல்றது எனக்கும் புரியுது. என் புருசன் தடம் மாறி போகமாட்டாருனு நம்பிக்கையிருக்கு” என்றாள் ஆணித்தரமான குரலில்.

“ம்ம் சரிடா வீட்டுக்குள்ள போ” என அவளது தலையை வாஞ்சையாக தடவினான்.

அவளோ என்ன நினைத்தாளோ தெரியவில்லை சிங்கத்தில் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு குலுங்கினாள்.

“என்னடா டாக்டர் உன் மனசை நோகடிச்சுட்டானா! இப்பவே அவனை இங்க பதறி அடிச்சு வரவைக்கட்டுமா?” தங்கையின் அழுகை அவனை உலுக்கியது.

நெஞ்சிலிருந்து விலகி சிங்கத்தை பார்த்து சிறு சிரிப்புடன் “இப்ப வேணாம் அண்ணா... அவரே இன்னும் கொஞ்ச நேரத்துல என்னை தேடி வருவாரு... என் வீட்டுக்காரன் கொஞ்சம் நல்லவன்தான்” என குறும்பு சிரிப்புடன் கண்ணைச்சிமிட்டினாள்.

“புருசனை விட்டுதரமாட்ட போல குறும்புக்காரி” என்று அவள் கன்னம் தட்டினான்.

“நல்லவனை விட்டுதர மனசில்லைண்ணா” என்றவளோ சிங்கம் பேசும்முன் வீட்டுக்குள் சென்று விட்டாள்.

கோமதியும் நாச்சியும் “உன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போன திரும்ப நம்ம வீட்டுக்கு வந்திருக்க” என்று சிறு பதட்டத்துடன் கேட்டனர்.

“அடடா உங்க ரெண்டு பேர் கூட ஒரு நைட் இருக்கலாம்னு தோணுச்சு வந்துட்டேன்ம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு ஊட்டுங்க” என்று நாச்சியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

நாச்சியோ “அம்மாடி பொன்வண்ணாகூட சண்டை ஏதும் போடலையே?” என்று மனது கேளாமல் கவலையுடன் கேட்டார்.

“ஒரு பிரச்சனையும் இல்ல அப்பத்தா எனக்கு இப்போ பசிக்குது” என்று சிணுங்கியதும் கோமதி சாப்பாத்தியை தட்டில் போட்டு ஊட்ட ஆரம்பித்தார் மகளுக்கு.

பொன்வண்ணனும் தூரிகாவும் வீட்டுக்கு வராமல் இருக்க மகனுக்கு போன் போட்டார் கோதை. அவனோ ஹோட்டலில் மானசாவுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். மானசாவும் பொன்வண்ணனும் உயிர் நண்பர்கள் என்றே சொல்லலாம். ஆனால் பொன்வண்ணன் தான் மானசாவை நண்பியாக நினைத்தான். மானசாவோ பொன்வண்ணனை காதலனாகத்தான் பார்த்தாள்.

பொன்வண்ணனிடம் தன் காதலை சொல்லாமல் இருந்தது அவளது தவறு... பொன்வண்ணனின் ஊருக்குச் சென்று தன் காதலை சொல்லி அவனை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்... ஆனால் பொன்வண்ணனோ மாமன் மகள் தூரிகாவை துரத்தி துரத்தி முத்தம் கொடுத்து அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்துக் கொள்வான் என்று மானசா கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

இப்போது மானசா இந்தியா வந்ததே தூரிகாவை பொன்வண்ணனிடமிருந்து பிரித்து அவனுடன் தான் வாழ ஆசைப்பட்டுதான் இந்தியா வந்திருக்கிறாள்.

“சொல்லுங்கம்மா தூரிகா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றான் சாப்பிட்டு கையை டிஸ்ஸுவால் துடைத்துக் கொண்டே.

“வண்ணா தூரிகா வீட்டுக்கு வரலையே!! தூரிகாவை அழைச்சிட்டு வரேனுதானே சொன்ன... நீ எங்க இருக்க? மணி பத்துக்கு மேல ஆச்சு" என்று சிறு பதட்டத்துடன் கேட்டார் கோதை.

பொன்வண்ணனுக்கு இதயத்துக்குள் சுருக்கென்று வலி வந்தது. “மானசாவை வெளியே கூட்டிட்டு வந்திருக்கேன்... அவளை நம்ம வீட்ல விட்டுட்டு உங்க மருமகளை அழைச்சிட்டு வரேன்” என்று கோதையிடம் திட்டு வாங்கும் முன் போனை வைத்துவிட்டான்.

“பேபி இந்த பார்க்ல கொஞ்ச நேரம் உட்காரலாமா?” என்று அவனது கையை பிடித்துக் கொண்டாள்.

“மானு இப்ப வீட்டுக்கு கிளம்பலாம் அவசரம் இன்னொரு நாள் வெளியே அழைச்சிட்டு வரேன்” என்றவனோ காரில் ஏறினான்.

அவன் மனம் முழுக்க தூரிகா வீட்டுக்கு வரவில்லையா என்ற சிறு கவலையோடு தான் வண்டியை ஓட்டினான்.

'இராட்சசி வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன்ல... வீட்டுக்கு போகாம அப்பாவீட்டுக்கு போயிருக்கா பாரு... சரியான ரோசக்காரியா இருக்கா... வரேன்டி உனக்கு அப்புறம் இருக்கு கச்சேரி' என்று ஸ்டேரிங்கில் குத்திக்கொண்டே வண்டி ஓட்டினான்.

“வாட் ஹேப்பண்ட் பேபி?” என்றாள் குழைந்த குரலில் மானசா.

“நத்திங் மானு” என்றவனோ அவனது வீட்டின் முன்னே காரை நிறுத்தினான். போர்ட்டிக்கோவில் ஆதிபெருமாளும் மீனாட்சியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“மானு இறங்கு நான் தூரிகாவை அழைச்சிட்டு வரணும்” என்றவனிடம் "பேபி" என்று மானசா பேச ஆரம்பிக்க அவள் பேசியதெல்லாம் காற்றில் கரைந்தது.

மானசாவோ 'தூரிகா மேல ரொம்ப லவ்வா இருக்கானே இவன் மனசுக்குள்ள எப்படி நுழையறது?' என்று குழம்பிக்கொண்டு மீனாட்சி உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றவள் மீனாட்சியின் அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தவள் “ஹாய் அங்கிள் ஹவ் ஆர் யூ?" என்றாள் ஆதிபெருமாளிடம்.

அதிபெருமாளோ “நான் நல்லாயிருக்கேன்மா... நீ எப்படி இருக்க..?” என்று நலம் விசாரித்தார்.

மானசாவோ “அங்கிள் உங்க பையனுக்கு ஏன் இவ்ளோ அவசரமா கல்யாணம் செய்து வைச்சீங்க நான் பொன்வண்ணனை லவ் பண்ணினேன்... என் லவ்வ சொல்றதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டான்” என்றாள் அங்கலாய்ப்புடன்.

மீனாட்சியோ “மானசா” என்று அவளை அடக்கினார்.

ஆதிபெருமாளோ “நீ என் மகனை விரும்புறேனு லண்டன்ல இருக்கும் போது சொல்லியிருக்கலாம்ல... இப்ப மட்டும் என்ன கொஞ்ச நாள் பொறு பொன்வண்ணன் உனக்குத்தான்" என்றார் சிரிப்புடன்.

"ஆமா அங்கிள் நான் ஊருக்கு வந்து லவ் சொல்லி உங்க ஆசிர்வாதத்தோடு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்... ஆனால் பொன்வண்ணன் தூரிகாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானே... என்னோட காதல் ஒருதலையா முடிஞ்சிருச்சு" என்றவள் கண்களில் கண்ணீர் வந்தது.

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு மானசா பொன்னா உனக்குத்தான்" என்றார் மீனாட்சி அழுத்தமான குரலுடன்.

கோதையோ இவர்கள் பேசுவதை சமையல்கட்டு ஜன்னல் பக்கமிருந்து கேட்டுக்கொண்டிருந்தவருக்கு மனதில் கிலியெடுத்தது.

‘இவ எல்லாம் பொம்பளை ஜென்மமா பிறப்பு எடுத்திருக்கவே கூடாது... கல்யாணம் ஆன ஜோடியை பிரிப்பேன்னு மனசாட்சியே இல்லாம பேசுறாளே’ என்று அவர் உள்ளம் கொதித்துப்போனார்.

‘என் மருமகன் சிங்கப் பையல் இருக்க வர உங்க திட்டம் நடக்காதுடி’ என்று ஏளனச் சிரிப்பு சிரித்துக்கொண்டார்.

அலர்விழி வீட்டில் மதிய விருந்தெல்லாம் தடபுடலாக நடந்து முடிந்திருந்தது. மதியம் அலர்விழியே கௌதமுக்கு சாப்பாடு பறிமாறினாள். இருவரும் சாப்பிடும் போது பெரியவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்திருந்தனர்.

“விழி கொஞ்சம் சிரிச்ச மாதிரி என்கிட்ட பேசு... வீட்ல இருக்கவங்க எல்லாரும் நம்ம ரெண்டு பேரைத்தான் பார்க்குறாங்க” என்றான் சாப்பிட்டபடியே மெதுவான குரலில்...

சாப்பிட்டு முடித்தவனோ சிங்கில் கை கழுவிவிட்டு அலர்விழி தட்டை எடுத்துக்கொண்டு சிங்கில் கழுவும் நேரம் அவளது இடுப்பிலிருந்த முந்தானையை உருவி வாயை துடைத்தான் கௌதம்.

“என்ன பண்ணுறீங்க?” என்று சட்டென்று திரும்ப நாச்சியோ தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு சின்ன சிரிப்புடன் சென்றார்.

“கத்தாதே விழி பாட்டி வந்தாங்க அதான்" என்று கண்ணைச்சுருக்கி "சாரி" என்றான் கௌதம்.

"ஹோ கொஞ்சம் பயந்துட்டேன்" என்றவளுக்கு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.

“சாரி” என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான் பசையற்ற முகத்தோடு கௌதம்.

அன்று இரவு அன்பரசியோ கையில் பால் டம்ளரை கொடுத்து அவளின் அறைக்கு அனுப்பினார்.

அவளோ ‘இன்னிக்கும் பால் கொண்டு போகணுமா?’ என்று சலித்துக்கொண்டுச் சென்றாள்.

கௌதமோ ட்ராக் பேண்டும் கையில்லா பனியனும் போட்டிருந்தான். கௌதமை பார்த்ததும் ‘என்ன இது இப்படி ட்ரஸ் போட்டிருக்காரு?' என்று சங்கடத்துடனே கதவை லாக் பண்ணினாள்.

அவனோ போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். கதவு லாக்போடும் சத்தத்தில் நிமிர்ந்தவன் ‘அட நம்ம ஆளு வந்தாச்சு’ என்று தோளைக்குலுக்கி போனை கீழே வைத்தவன் "விழி என்ன இன்னிக்கும் கையில பால் கொண்டு வந்திருக்க எனக்கு நைட் பால் குடிக்கற பழக்கம் இல்லையே" என்றான் குறுநகையுடன்.

“பால் பழம் கொடுக்கறப்ப பால் குடிச்சிங்கல்ல! அதான் அம்மா இப்பவும் கொடுத்திருக்காங்க!”

“அ.அது நீ குடிச்சுட்டு கொடுத்த பால் நான் வேண்டாம்னு சொல்லுவேனா! இப்பவும் நீ பாதி குடிச்சிட்டு கொடு குடிக்கறேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

“ம்ம் பாலை பூனைக்கு ஊத்திடறேன்” என்று ஜன்னல் வழியே பூனைக்கு வைத்திருக்கும் பவுலில் பாலை ஊற்றினாள் கெளதமை முறைத்து பார்த்தபடி.

“கொடுத்து வச்ச பூனை" என்று சலித்துக்கொண்டவனோ “நான் ஏர்லி மார்னிங் ட்யூட்டிக்கு போகணும் தூக்கம் வருது விழி உன் ரூம்ல சோபா இல்ல... பாயும் பெட்ஷீட்டும் கொடுக்குறீயா?" என்றான் பரிதாபமாக.

அவளோ இப்படி தர்மசங்கடமான நிலை வரும் என்று நினைக்கவேயில்லை. “நீ.நீங்க மெத்தையில படுத்துக்கோங்க நா.நான் பாய்ல படுத்துக்குறேன்” என்றாள் தடுமாறியபடியே.

“இல்ல நீ மெத்தையில படு... எனக்கு கீழ படுத்து பழக்கம் தான் !” என்றான்.

அவளோ பாயும் தலையணையும் எடுத்து விரித்து விட்டவள் “என்னங்க ப்ளீஸ் உங்களை கீழே படுக்க வைக்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு வே.வேணும்னா கட்டில ரெண்டு பேரும் தள்ளி தள்ளி படுத்துக்கலாம்” என்றதும்

கௌதம் மனதிற்குள் சிரித்துக்கொண்டவன் "இல்ல வேணாம் நான் பாய்ல படுத்துக்குறேன்... தூக்கத்துல உன் மேல கால் படும் ரெண்டு பேருக்கும் சங்கடம்" என்றான் நெற்றியை தேய்த்துக் கொண்டு.

"அதெல்லாம் நான் உருண்டு வரமாட்டேன் எனக்கு உங்களை பாய்ல படுக்க வைக்க இஷ்டம் இல்லை... என்னோட கட்டில் பெரிய சைஸ்தான் படுங்க” என்று கண்ணைக்காட்டினாள்.

அவனோ ‘கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா’ என்று சந்தோசப்பட்டவன் கட்டிலின் ஓரம் படுத்துக்கொண்டான். அவளோ அவளது அறையில் இருந்த தலையணைகளை எடுத்து இருவருக்கும் நடுவே அடுக்கி வைத்து முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

கௌதமோ மெல்லத் திரும்பி பார்த்தான். அவன் முன்னே பெரிய படிக்கட்டுகள் போல தலையணைகளை அடுக்கியிருந்ததை கண்டு பெரும்மூச்சு விட்டவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘கிணத்து தண்ணிய வெள்ளமா கொண்டு போகப்போகுது பொறுத்திரு கௌதம் உனக்கே உனக்குத்தான் அலர்விழி’ என்று எண்ணியபடியே கண்ணை மூடினான்.

பொன்வண்ணனோ ‘இராட்சசி நான் வீட்டுக்குத்தானே போகச் சொன்னேன்! இவளை யாரு அவ அம்மா வீட்டுக்கு போகச் சொன்னது திமிரு புடிச்சவ’ என்று புலம்பிக்கொண்டே காரை வேகமாக ஓட்டினான். அவனுக்கு இன்னொரு சந்தேகமும் மண்டையை குடைந்தது. ஒருவேளை அவ வீட்டுக்கு போகாம வேறு எங்காவது போயிருந்தா என்று அவன் மனதிற்குள் திகில் பரவியது.

'இருக்காது என்பொண்டாட்டி கோழை கிடையாது சிங்கம் தங்கச்சியாச்சே என்னை ஒருவழி பண்ணாம அவ ஓயமாட்டா’ என்று மனைவியை பாராட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டும் சிங்கம் வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்.

அவனது போதாத நேரம் சிங்கம் வாசலில் நின்று “முருகா நாளைக்கு ரைஸ் மில்லு ஆளுங்களுக்கு கூலி கொடுக்கணும் பேங்க்ல இருந்து பணம் எடுத்துட்டு வந்துடு” என்று பேசிக்கொண்டிருந்தவன் கார்சத்தம் கேட்டு கேட்டை எட்டிப்பார்த்தான். பொன்வண்ணனின் கார் என்று தெரிந்ததும் “என் புருசன் வருவான் அண்ணானு தூரிகா பாப்பா சொன்னது சரியாத்தான் இருக்கு... என் தங்கச்சி கெட்டிகாரிதான்” என்று புளங்காகிதம் அடைந்தவன் வீட்டுக்குள் சென்று ஐய்யனாரிடம் “உங்க மாப்பிள்ளை கேட்டுக்கு வெளியே நிற்குறாருங்கப்பா வீட்டுக்குள்ள வரச்சொல்லுங்க” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

“ஏன் டா தங்கச்சி வீட்டுக்காரனை உள்ளே வரச்சொல்லமாட்டியா... பல குடும்பத்துக்கு பஞ்சாயத்து பண்ணுறோம் வீட்டு மாப்பிள்ளையை வாசலில் நிறுத்தி வைக்கறது முறையா சிங்கம்! வா போய் மாப்பிள்ளையை அழைச்சிட்டு வரலாம்!" என்று மகனை கடிந்துக் கொண்டு வெளியேச் சென்றார்.

பொன்வண்ணனோ சிங்கம் வாசலில் போன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டான். ‘ச்சே இந்த மீசைக்காரன் வெளியே நிற்குறானே இவனை பார்க்கவா வந்தோம்’ என்று அலுத்துக்கொண்டு தூரிகாவிற்கு போன் போட்டான்.

அவளோ வந்துட்டாரு போல என்று போனை எடுத்தவள் “என்ன சொல்லுங்க” என்றாள் கொட்டாவி விட்டபடியே.

“ஏய் உன்னை நம்ம வீட்டுக்குதானே போகச்சொன்னேன்... உங்க அப்பா வீட்டல வந்து தூங்கிட்டிருக்க கொழுப்பாடி நான் சொன்னதுக்கு என்ன மரியாதை” என்று கோபத்தில் பல்லைக்கடித்தான் பொன்வண்ணன்.

“நீங்கதான் வந்து என்னை கூட்டிட்டு போகணும்னு சொல்லியிருந்தேன்ல. நாம பேசினது மறந்து போச்சோ டாக்டருக்கு” என்றாள் குத்தலாக.

தன் கோபத்தை புறம் தள்ளி விட்டு “சரி விடு சமாதானம் ஆகிடலாம்... இப்ப உன் வீட்டு முன்னாலத்தான் நின்னுட்டு இருக்கேன் கிளம்பி வா போகலாம்” என்றான் தன்மையாகத்தான்.

“வீட்டுக்குள்ள வந்து எங்கப்பாகிட்ட சொல்லிட்டு அழைச்சிட்டு போங்க” என்றாள் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபடியே.

பொன்வண்ணன் காரில் சாய்ந்து நின்று தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு தனக்காக வந்திருக்கிறான் என்று ஆனந்தம் தாங்கவில்லை.

“உன்னை விட்டு போகும்போது நான் உங்க வீட்டுக்குள் வந்தேனா! இல்லையே வாசல் வரை இறக்கிவிட்டுத்தானே போனேன். இப்போவும் வாசல நின்னு கூப்பிடறேன் வாடி!! என்னால நீ இல்லாம தூங்க முடியாது” என்று பிதற்ற ஆரம்பித்தான்.

அவளோ “நான் வரமாட்டேன்” என்று பிடிவாதமாக நின்றாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 40

அதற்குள் ஐய்யனார் மருமகனை அழைத்துக்கொண்டு வர கேட்டிற்கு வெளியேச் சென்றுவிட்டார்… சிங்கம் கேட்டை பிடித்துக்கொண்டு ‘இவனை வெத்தலை பாக்கு வெச்சு வரச்சொல்லணுமா? வீட்டுக்குள்ள வரத்தெரியாதா?’ என்று பொன்வண்ணனை கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தான்.

'அச்சோ அப்பாவும் அண்ணாவும் அவர்கிட்ட பேசப்போறாங்க போல இவர் ஒண்ணு பேச அண்ணா ஒண்ணு பேச சண்டை வந்துச்சுனா வம்பு' என்று பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் தூரிகா.

“வாங்க மாப்பிள்ளை ஏன் வெளியே நின்னுட்டீங்க..? வீட்டுக்குள்ள வாங்க” என்றார் சிரித்தமுகத்துடனே.

பொன்வண்ணனோ “நான் வீட்டுக்குள் வரல அங்கிள்... வந்தா பல பிரச்சனைகள் வரும் நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போக வந்தேன்” என்று அடக்கமாகவே பதில் கூறினான். சிங்கம் தன்னை அழைக்கவில்லையே என்று தன்மானம் அவனை அலைக்கழித்தது.

ஐய்யனாரோ சிங்கம் பக்கம் திரும்பியவர் “வீட்டுக்குள்ள வரச்சொல்லுப்பா” என்று சைகை செய்தார் சிங்கத்திடம்.

“க்கும்” என்று தொண்டையை செருமிய சிங்கமோ “வீட்டுக்குள்ள வாங்க” என்று சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டான்.

கையில் பேக்குடன் வெளியே வந்தவள் ஆ வென்று அதிர்ந்து நின்று விட்டாள். பொன்வண்ணன் ஐய்யனாருடன் நடந்து வீட்டுக்குள் வந்துக் கொண்டிருந்தான்.

ரதியோ அப்போதுதான் சமையல்கட்டை சுத்தம் செய்து வெளியே வந்தாள். பொன்வண்ணனை பார்த்ததும் “அண்ணா” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் பொன்வண்ணனை.

பொன்வண்ணனோ தன் வீட்டில் டீசர்ட் பேண்ட்டுடன் மாடலாக இருக்கும் தங்கை நேர்த்தியாக புடவையில் இருந்த தங்கையை கண்டு பிரமித்துப்போய் சந்தோஷமும் கொண்டான்.

நாச்சியும் வீரய்யனும் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தவர்கள் பொன்வண்ணனை கண்டதும் “வாய்யா ராசா என்ன இந்த நேரம் வந்திருக்க..? உட்காரு. ஏய் தூரிகா மாப்பிள்ளை வந்திருக்காரு குடிக்க ஏதாவது கொண்டு வா” என்று பேத்தியை அதட்ட அவளோ கனவு உலகத்திலிருந்து வந்தவள் போல “இதோ கொண்டு வரேன் அப்பத்தா” என்று சமையல்கட்டுக்குள் சென்றவள் காபியை போட்டுக் கொண்டு வந்தாள்.

சிங்கமோ ஹாலில் கையை கட்டிக்கொண்டு முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருந்தான்.

ரதிக்கோ சிங்கத்திற்கும் பொன்வண்ணனுக்கும் சண்டை வந்துவிடுமோவென்று சற்று பயம்தான். ஆனாலும் பொன்வண்ணனுக்கு வீட்டு மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார்கள் என்று மனதில் சந்தோசத்துடன் நின்றிருந்தாள்.

தூரிகா காபியை கொண்டு வந்து கொடுக்க அவனோ நின்றுக் கொண்டே காபியை வாங்கினான்.

“உட்காருங்க மாப்பிள்ளை” என்றார் கோமதி.

பொன்வண்ணனுக்கோ சிங்கம் முகத்தை இறுக்கி வைத்திருப்பதை கண்டவனுக்கு அங்கே இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. ஏதோ அவனுக்கு பிடிக்காத இடத்தில் நிற்பதை போல உணர்ந்தான். ஐய்யனாருக்காக காபியை குடித்தவன் அடுத்த நிமிடம் “நான் கிளம்புறேன்ங்க மாமா” என்றவன் தூரிகாவை பார்த்தான்.

அவளோ பேக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டு நின்றாள்.

“அத்தை வரேன்ங்க! அம்மாச்சி தாத்தா வரேன்!" என்றவனோ சிங்கத்தை பார்த்தான். அவனோ தூரிகாவை பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்மூச்சுவிட்டவன் அங்கிருந்து வெளியே வந்தான்.

சிங்கமும் பொன்வண்ணனும் ஏதோ பேச சண்டை வந்துவிடுமோ என்று பெரியவர்களும் ரதியும் தூரிகாவும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இருவரும் அமைதியாக இருந்து கொண்டதை கண்டு “அப்பாடா” என்று மூச்சை இழுத்து விட்டுக்கொண்டனர்.

தூரிகாவோ “வரேன் அப்பத்தா, வரேனுங்கப்பா” என்று ஒவ்வொருத்தரிடமும் சொன்னவள் சிங்கத்தை பார்க்க அவனோ கண்ணைமூடித்திறந்தான். அவளுக்கு அழுகை வந்தது.

கண்ணீரைத்துடைத்துக்கொண்டே தலையை அசைத்து காரில் ஏறினாள். கார் நகர்ந்ததும் விசும்பினாள் தூரிகா.

கொஞ்ச தூரம் சென்றதுமே காரை நிறுத்திய பொன்வண்ணன் “ஏய் இப்ப எதுக்கு அழற..? அதான் மதிக்காத வீட்டுக்குள்ள வந்து காபியும் குடிச்சிட்டு வந்திருக்கேனே... எதுக்கு சும்மா அழுது சீன் போடுற..?” என்று காய்ந்து விழுந்தான்.

அவளோ “எங்கவீட்டு ஆளுங்களை விட்டு வரதுக்கு எனக்கு மனசு வரலை அதான் அழுதேன்... நீங்க எல்லாம் பாசம்னா என்ன விலைனு கேட்பீங்க?” என்று எரிந்து விழுந்தவளை கன்னத்தை தாங்கி பிடித்து “ஏய் நானும் தான் உன் மேல பாசம் வச்சிருக்கேன்டி! உன்னை ஒரு நொடி கூட விட்டு என்னால இருக்க முடியலை தெரியுமா..? நேத்து ஒரு நைட் உன்னை விட்டு இருந்தது ஒரு யுகம் போல தெரிஞ்சுச்சு எனக்கு. துகா ஐ.லவ்யு டி உன்னை விட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியாது. கிஸ் பண்ணுறேன்டி" என்றவனோ அவளது இதழைக் கவ்விக்கொண்டான். நீண்ட நெடிய முத்தம்...

மேல் இதழ் கீழ் இதழ் என்று பாரபட்சம் பார்க்காமல் சுவைத்துக் கொண்டே இருந்தான். அவனது காதலை முத்தத்தில் காட்டிக்கொண்டிருந்தான். அவளுமே தனக்காக அவனது தன்மானத்தை விட்டு தன் வீட்டுக்குள் வந்ததை பெருமிதமாக எண்ணி அவன் செய்த தவறுகளை மறந்து அவன் மீது காதல் பொங்கியது. அவளுமே விரும்பி முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்.

அவள் மூச்சுக்காற்றுக்கு ஏங்க அவளை விட்டு பிரிந்தவன் காற்று புகாத அளவிற்கு இறுக்கமாக அணைத்துக்கொண்டு "என்னை விட்டு இனி போகாதடி என்னால உயிர் வாழ முடியாது" என்று அவளது முகம் முழுவதும் முத்த அர்ச்சனை செய்தான். அவன் முத்தத்தில் திக்குமுக்காடிப்போனாள் தூரிகா.

“வீட்டுக்கு போகலாம் மாமா” என்றாள் வெட்கத்தோடு அவளது கன்னம் சிவந்து விட்டது.

அவனோ “வீட்டுக்கு போயி” என்று அவளது காதுமடலில் முத்தம் கொடுத்தான்.

அவளோ “நீங்க நினைச்சது நடக்கும்” என்று அவனது தோளில் சாய்ந்தாள் வெட்கச் சிரிப்புடன்.

காரை என்ன வேகத்தில் ஓட்டினான் என்றே தெரியவில்லை. காரை விட்டு இறங்கியவன் தூரிகாவை தூக்கிக் கொள்ள அவர்களுக்காய் காத்திருந்த கோதையோ “டேய் மருமகளுக்கு என்னாச்சு ஏன் தூக்கிட்டு வர?” என்று அவர் பதறி வர லைட் அணைக்கப்பட்டு இருக்க யாரும் இல்லையென்று நினைத்து தூரிகாவை தூக்கிவிட்டான்.

தூரிகாவோ “மானத்தை வாங்காதீங்க! இறங்கி விடுங்க” என்று சிணுங்கினாள்.

கோதையின் பக்கம் வந்தவர்கள் “உங்க மருமகளுக்கு கால் வலிக்குதுனு சொன்னா அதான் தூக்கிட்டு வந்தேன்! இல்ல தூரிகா” என்று மனைவியை துணைக்கு அழைத்தான்.

அவளோ “ஆமாங்க அத்தை” என்று சங்கடமாக தலையை ஆட்டினாள்.

மகனும் மருமகளும் இணக்கமாக இருப்பதை கண்டு கோதையின் மனம் பூரிப்பில் ஆர்ப்பரித்தது. “சரி சரி நேரமாச்சு போய் தூங்குங்க” என்றதும் “நீங்களும் தூங்கப்போங்கம்மா” என்று அவரது அறைக்கு அனுப்பி வைத்து தங்கள் அறைக்குள் வந்து கதவை லாக் போட்டான் பொன்வண்ணன்.

தூரிகாவை தூக்கிக்கொண்டு அவனது அறைக்குள் போவதை வன்மத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் மீனாட்சி. "இன்னிக்கு மட்டும் சந்தோசமா இருந்துக்கோ தூரிகா" என்றார் பழிவாங்கும் எண்ணத்தோடு மீனாட்சி.

தூரிகாவை மெத்தையில் படுக்க வைத்தவன் சட்டையை கழட்டி தூர எறிந்தான்.தூரிகாவின் கழுத்தில் போட்டிருந்த ஷாலை உருவி தூர வீசி எறிந்தவன் “ஏய் இப்ப கேட்குறேன் உன்னை எடுத்துக்கவா பொண்டாட்டி?” என்று அவளது பக்கம் நெருங்கி படுத்து லைட்டை அணைத்தான்.

அவளோ கண்ணைமூடி சம்மதம் சொல்ல அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து இதழில் இளைப்பாறினான். இதழ் மட்டும் போதவில்லை அவனுக்கு... பெண்ணவளை முழுதாய் உணரவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவளது காதில் இரகசியம் பேச “சீ போடா நான் மாட்டேன்” என்று சிணுங்கியவளின் டாப்பிற்கு விடுதலை கொடுத்து அவள் சேர்த்து வைத்த பொக்கிஷங்களை களவாடினான். பெண்ணவளின் உடலை வீணையாக மீட்டினான். நாபிக்கமலத்தில் இதழால் நாட்டியம் ஆடினான்.

அவளது வாழைத்தண்டு கால்களுக்கு முத்தம் ஒத்தடம் கொடுத்தான். அவளோ முதன் முறை அவனது செய்கையில் மயங்கி அவனை இறுக்கிக்கட்டிக்கொண்டவள் அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அவனோ “ஏய் நான் என்ன சின்னப் பையனா இங்க முத்தம் கொடுடி" என்று கிறக்கத்தோடு பேசியவன் அவள் இதழோடு இதழ் பொறுத்திக்கொண்டான். இருவரும் கலவிப்பாடம் படிக்க ஆரம்பித்தனர். அவளுக்கு அவன் உடையாகவும் அவனுக்கு அவள் உடையாகவும் மாறியிருந்தனர். காதுமடலில் லேசாய் கடித்து... அவளது கழுத்து நரம்பில் லேசாய் காயம் செய்தான். பெண்ணவளின் வெட்கத்தை இரசித்தான். பெண்ணவளின் மென்மையை உணர்ந்து அவளை கொண்டாடி தீர்த்தான்...

கூடல் முடிந்து அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தவன் “இன்னிக்கு நான் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணேன். நீயும் ஹேப்பிதானே டி” என்றான் அவளது பிறைநுதலில் முத்தமிட்டு.

அவளோ “ம்ம் நானும் ஹேப்பிதான்” என்றவளோ அவன் மார்பில் படுத்துக்கொண்டாள்.

“தேங்க்ஸ் மாமா” என்று அவன் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்தாள்.

அவனோ “உங்க வீட்டுக்கு உனக்காகத்தான் வந்தேன் என் சுயமரியாதையை கழட்டி வச்சுட்டு“ என்றான் இறுக்கம் மிகுந்த குரலோடு.

அவளோ “இந்த நிமிசம் நான் ஹேப்பியா இருக்கேன். எதை எதையோ பேசி ரெண்டுபேருக்குள்ள சண்டை வரவேண்டாம் ப்ளீஸ்” என்று அவளாகவே அவன் இதழில் முத்தமிட்டாள். அவனோ சும்மா இருப்பானா! அவனது கைகளும் இதழ்களும் அவளது வெற்று மேனியில் ஊர்ந்துக் கொண்டே இருந்தது. விடியும்நேரம் அவளது இதழில் முத்தமிட்டு விலகி “ரொம்ப செக்ஸிடி நீ” என்று அவளது மார்பில் முகம் புதைத்தான்.

“போடா என்னால இதுக்குமேல தாங்க முடியாது” என்று அவனது முகத்தை தள்ளிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

“ஏய் என்னடி” என்று அவன் கெஞ்ச இவள் மிஞ்ச அவனுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக்கொண்டு உறங்கினான். நடக்க போகும் விபரீதங்கள் அறியாமல்.

பொன்வண்ணன் சென்றதும் ரதியோ அறைக்குள் வந்தவள் நைட்டியை மாத்திக்கொண்டு கட்டிலில் படுத்துவிட்டாள்.

'வலுக்கட்டாயமாக தாலிகட்டிய அண்ணனையும் ஏத்துக்கிட்டாங்க தூரிகாவுக்காக... என்ன பாசப்பிணைப்பு இங்க இருக்கவங்களுக்கு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தராங்க... இதே லண்டன்ல அத்தை சமைச்சு கொடுப்பாங்க... எனக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக்கொடுப்பாங்க... ஆனா இவங்களை போல சதா உட்கார்ந்து கண்ணு பொண்ணுனு கொஞ்சி பேசமாட்டாங்க... இவங்க இன்னிக்கு கிடைச்ச உறவு... அத்தைமா என்னை சின்ன வயசுல இருந்து வளர்த்தவங்க... அவங்களுக்கு நான் நன்றிக்கடன் காட்டணும்ல... அப்பாவை இந்த ஊரைவிட்டு துரத்தியிருக்காங்க... அத்தையும் ஏதோ பண்ணியிருக்காங்க போல எனக்கு முழு உண்மையும் தெரியலையே! அம்மாவை கேட்டா நேரம் வரும்போது சொல்லுறேன்னு மழுப்பிடறாங்க ஆக மொத்தம் என் வாழ்க்கை கேள்விக் குறியா இருக்கு' என்று புலம்பிக்கொண்டே கண்ணை மூடினாள்.

ஐய்யனாரோ “சிங்கம் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை கிட்ட முகம் கொடுத்து பேசணும்லப்பா அதானே மரியாதையும் கூட... நீ பண்ணியது எனக்கு சரியா படலைப்பா” என்றார் சங்கடப்பட்டு.

“ப்பா வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு கூப்பிட்டேன் அவன் தோளோடு கைபோட்டு பேசறது போல காரியம் செய்திருக்கானா என்ன சொல்லுங்க... எப்போ பாரு தூரிகாகிட்ட வம்பிழுக்கறதே வேலையா வச்சிருந்தான். பஞ்சாயத்துல பாப்பாவுக்கு அத்தனை பேர் முன்னாடி தாலிகட்டியதும் இல்லாம முத்தம் வேற கொடுக்குறான். இவன் லண்டல வளர்ந்திருக்கலாம் நான் நம்ம ஊரு காத்துலயும் மண்ணுலயும் புரண்டு வளர்ந்தவன் எனக்கு இவனோட குணம் சுத்தமா பிடிக்கலைங்கப்பா! வந்தவனை வானு கூப்பிட்டு மரியாதை கொடுப்பேன் அவ்ளோதான் என்னால பண்ண முடியும்” என்று சுவற்றில் ஆணி அடித்தாற்போல சொல்லி விட்டுச் சென்றான் சிங்கம்.

அறைக்குள் சென்ற சிங்கமோ நைட்டியில் படுத்திருக்கும் ரதியை பார்த்தவன் பெரும்மூச்சு விட்டு சட்டையை கழட்டி வைத்து கட்டிலின் மறுபுறம் படுத்துவிட்டான்.

ரதியோ உறங்காமல்தான் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் அவனது கால்மீது கால் போட்டாள் வேண்டுமென்றே.

அவனோ அவளது காலை எடுத்து விட்டு படுத்துக்கொண்டான். அவளோ தூக்கத்தில் புரண்டு படுப்பது போல அவன் பக்கம் நெருங்கி படுத்து அவனது இடுப்பில் கைப்போட்டாள்.

'ம்ப்ச் இவ தூங்காம என்னை உசுப்பி விடப்பார்க்குறா’ என்று அவனோ அவளது கையை எடுத்துவிட்டு “ஏய் ஆட்டக்காரி நீ தூங்கலைனு எனக்கு தெரியும் சும்மா கட்டிபிடிக்கறது... மேல காலை போடுறதும் இருந்தா உன்மேல ஆசை வந்து கட்டிபிடிச்சு சரசம் பண்ணுவேன்னு நினைக்கிறியா... சிங்கம் பசித்தாலும் புல்லை திங்காதுடி... நீ அந்த போன்ல யாருகிட்ட பேசினனு! என்ன பேசினனு எனக்கு நீ சொல்லணும்... சும்மா ரம்பை மேனகை போல மினுக்கி நின்னாலும் இந்த சிங்கம் உன்னை தொடமாட்டான்டி.” என்று பட்டென்று முகத்தில் அடித்தாற் போல பேசி திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவளுக்கோ அவன் பேச்சு செருப்பை கழட்டி அடித்தது போல இருந்தது. கண்ணீர் விடுவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை. ஆனால் கடவுள் இருவரையும் சேர்த்து வைக்க எண்ணிவிட்டார். இருவரும் அன்னியோன்ய தம்பதிகளாக வாழும் காலம் தூரம் இல்லை.
பொன்வண்ணன் தான் முதலில் எழுந்தது. தன் மார்பில் மீன் குஞ்சு போல இதழ் திறந்து உறங்கும் காதல் மனைவியின் பால் முகத்தை இரசித்து பார்த்திருந்தான்.

“மை ஸ்வீட் ஏஞ்சல்டி” என்று அவளது நெற்றியில் ஒதுங்கிய முடியை விலக்கி முத்தமிட மெதுவாய் கண் விழித்தாள் தூரிகா.

“டேய் மாமா சும்மா இருடா உடம்பெல்லாம் பெயினா இருக்கு” என்று அவனிமிடருந்து விலகி திரும்பி படுத்தாள்.

“நர்ஸ் மேடம் மணி என்னாச்சுனு தெரியுமா?” என்று அவளது வெற்று முதுகில் முத்தம் கொடுத்து அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“விடிய விடிய தூங்க விடல டாக்டர் நீங்க... கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்று சிணுங்கி கண்ணைமூடி உறக்கத்தை தொடர்ந்தாள்.

அவனோ ‘நேத்து காஞ்ச மாடு போல நடந்துக்கிட்டோம் கொஞ்ச நேரம் தூங்கட்டும்’ டவலை எடுத்துக்கொண்டு குளித்து விட்டு வந்தவன் மனைவி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க "துகா டியர் எழும்புடி மணி எட்டு ஆச்சு... ஒன்பது மணிக்கு ஹாஸ்பிட்டல்ல நீ இருக்கணும்ல" என்றான் அவள் கன்னத்தை வருடிக்கொண்டு.

“என்ன மணி எட்டாச்சா!” என்று அவசரமாக எழுந்தவள் போர்த்தியிருந்த போர்வையை நழுவ விட்டிருந்தாள்.

“ஏய் பப்பி ஷேம்டி” என்று அவன் வாய் விட்டு சிரித்தான்.

“டேய் இப்படி நான் இருக்க நீ காரணம்” என்று அவனை திட்டிவிட்டு போர்வையை போர்த்திக்கொண்டு குளிக்கச் சென்றாள். அவசர குளியலை போட்டு வர பொன்வண்ணன் யூனிபார்மை எடுத்து வைத்திருந்தான்.

“தேங்க்ஸ் மாமா” என்று யூனிபார்மை போட்டவளை பின்னிருந்து கட்டிக்கொண்டு “ஏய் மாமானு கூப்பிட்டா எனக்கு போதையா இருக்கு” என்று அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“டாக்டர்க்கு ஹாஸ்பிட்டல்க்கு போகணும் நினைப்பு இருக்கா?” என்று அவனை தள்ளி விட்டு ஷாலுக்கு பின் குத்தினாள்.

“ம்ம் போய்தான் ஆகணும். நைட் எப்போ வரும்னு இருக்குடி” என்றான் கொஞ்சல் குரலில்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 41

“யோவ் மாமா நான் மனுசியா இல்ல மெஷினா..? என்னை நேத்து நைட் படுத்தின பாட்டுல என்னால நடக்கவே முடியலை கால் எல்லாம் வலிக்குது மாமா இன்னிக்குமா!! எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க” என்றதும் “துகா டியர் என்னடி கால் வலிக்குதா..? ஃபோர்ஸா நடந்துக்கிட்டேனா? அப்போ சொல்லமாட்டியா?” என்று பதறினான்.

அவளோ “இல்லடா நாம ரெண்டு பேரும் மனசு ஒத்து சேரும் போது இந்த வலியெல்லாம் அப்போ தெரியலை... நீங்க அப்பா வீட்டுக்கு வருவீங்கனு நான் எதிர்பார்க்கல... ரொம்ப தேங்க்ஸ் நாம எல்லாரும் ஒரே பேமிலியா நல்லது கெட்டதுல கலந்துக்கத்தான் வேணும்... நமக்கு குழந்தை பிறந்தா அண்ணன் மடியிலதான் வச்சு மொட்டை போட்டு காதுகுத்தணும்... ரெண்டு பேரும் கிழக்கையும் மேற்கேயும் இருந்தா எப்படிங்க... இனிமே அப்பா வீட்டுக்கு ரெண்டு பேருமே வீக் எண்டு போவோம்” என்றாள் அவன் முகத்தை பார்த்தபடியே.

“நாம மட்டும்தான் போகணுமா! உங்க அண்ணா ரதியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வரமாட்டாரா! சொல்லு துகா! நான் மட்டும் தன்மானத்தை விட்டு உங்க அப்பா வீட்டுக்கு வரணுமா! என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்தா தாய்மாமன் என் மடியில வச்சு தான் காதுகுத்தணும்... இனி உன் அண்ணன் எங்க வீட்டுக்கு வந்தாத்தான் நானும் வருவேன்... ஏதோ நேத்து மாமா உள்ளே கூப்பிட்டதும் மறுக்க முடியாம வந்துட்டேன். உன் அண்ணன் சம்பிரதாயத்துக்கு என்னை வானு கூப்பிட்டாரு... உள்ளே வந்ததும் ரெண்டு வார்த்தை பேசியிருந்தா உன் அண்ணா வாயிலிருந்து முத்து உதிர்ந்துடுமா என்ன..! நீ எப்ப வேணாலும் உன் அப்பாவீட்டுக்கு போ நான் தடுக்க மாட்டேன். என்னை வானு கூப்பிடாதே” என்று காட்டமாக பேசி வெளியேச் சென்றுவிட்டான்.

“எங்க அண்ணா உங்க கூட சிரிச்சு பேசுற மாதிரியா ஒவ்வொரு காரியமும் பண்ணுனீங்க!” என்று பெரும்மூச்சு விட்டு கொண்டையை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

மீனாட்சியோ மானசாவுடன் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். “குட்மார்னிங் அத்தைமா குட்மார்னிங் மானு” என்று சாப்பிட உட்கார்ந்தான்.

“என்னப்பா இவ்ளோ நேரம் தூங்குனியா? லண்டன்ல இருந்து இந்தியா வந்ததும் டிஸிப்ளின் மறந்து போய்ட்ட போல... எட்டு மணிக்கு முன்னே சாப்பிடணும்னு சொல்லியிருக்கேன்ல. உன் வொய்ப் இன்னும் தூங்குறாளா?” என்று கேட்டுக்கொண்டே தட்டில் கை கழுவினார் மீனாட்சி.

“அத்தைமா நைட் பதினோரு மணிக்கு மேல தான் வீட்டுக்கு வந்தோம்... கொஞ்சநேரம் பேசிட்டிருந்தோம் அதான் எழும்ப லேட் ஆகியிருச்சு!! தூரிகா தினமும் ஐஞ்சு மணிக்கு எழுந்துப்பா” என்று சொல்லிக்கொண்டிருக்க அங்கே வந்த கோதையோ “தூரிகா நேரமே எழுந்து எனக்கு சமையல்கட்டுக்கு ஹெல்ப் பண்ணுவா மீனாட்சி... இன்னிக்குதான் அவ எழும்பி வரல” என்று மருமகளுக்கு வக்காலத்து வாங்கினார்.

மீனாட்சியோ “மருமகளுக்கு முட்டுக்கொடுக்குறியா கோதை?” என்றார் ஏளனச் சிரிப்புடன்.

அங்கே வந்த தூரிகாவோ “வாங்க சித்தி! நேத்து நைட் நான் வரும்போது நீங்க தூங்கியிருப்பீங்கனு உங்களை டிஸ்டர்ப் பண்ணலை... ரொம்ப யங்கா இருக்கீங்க சித்தி... வயசானது போலவே தெரியலை” என்று சிரித்தபடியே பொன்வண்ணனுக்கு தட்டில் இட்லி வைத்து சாம்பாரை ஊற்றினாள்.

“நான் நல்லாயிருக்கேன்... என் மகன் நல்ல அழகான பொண்ணைத்தான் செலக்ட் பண்ணியிருக்கான்... அப்படியே உங்க அப்பா போல இருக்க... பேச்சு நல்லா வீராப்பா உன் அப்பாவை போலவே பேசுற... உன்னை எனக்கு பிடிச்சிருக்குமா” என்றார் விஷமச் சிரிப்புடன்.

தூரிகாவோ “எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சித்தி! இப்ப அதிகம் பேச முடியலை... ஈவ்னிங் வந்து பேசுறேன்” என்றபடியே அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

பொன்வண்ணனோ ‘அத்தைமாக்கு துகாவை பிடிக்காம போயிருமோனு நினைச்சேன். ரெண்டு பேரும் ராசியா பேசிக்குறாங்க’ என்று சந்தோசப்பட்டான்.

கோதைக்கோ மீனாட்சி தூரிகாவிடம் சிரித்து பேசுவது சந்தேகத்தை கிளப்பியது. சிரித்து தன் வலையில் விழ வைத்து ஏதும் செய்துவிடுவாரோ என்ற அச்சம் வந்தது அவருக்கு.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் “அத்தை நான் கிளம்புறேன்" என்றான்.

“இன்னிக்கு சாம்பார் சூப்பர் அத்தை" என்று கோதையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் தூரிகா.

இருவரின் ஒற்றுமையை பொறாமையுடன் பார்த்துக் கொண்டுருந்தார் மீனாட்சி. ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கறது எனக்கு பிடிக்கலையே கூடிய சீக்கிரம் பிரிச்சு விடறேன் என்று முடிவுடன் “மானசா உனக்கு ஷாப்பிங் போகணும்னு சொன்னில ரெடியாகு போலாம்” என்றதும் அவளோ அறைக்குச் சென்றுவிட்டாள்.

பொன்வண்ணனோ கார் கீயை எடுக்க அறைக்குச் சென்ற நேரம் தூரிகா பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு நிமிர்ந்தாள்.

அவள் எதிரே வந்த மீனாட்சியோ “ஏய் உன் வீட்ல நேரமே எழுந்துக்க சொல்லி கொடுக்கலையா..? எட்டு மணிக்கு மேல எழுந்து வர. பொண்ணுங்கனா அடக்கம் ஒடுக்கம்னு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுவா உங்க அப்பத்தா... உனக்கு பண்பாடு சொல்லித்தரலையா?” என்றார் வெறுப்பு பேச்சாக.

அவளோ “எங்க வீட்டுல பண்பாடு சொல்லி வளர்த்திருக்காங்க சித்தி! உங்களுக்குத்தான் நாகரீகம் தெரியலை... புதுசா கல்யாணம் ஆனவங்க... நேரம் கழிச்சு எழுந்துருச்சு வந்தா என்ன காரணும்னு உங்களுக்கு தெரியாதா..? உங்களுக்கு எப்படித் தெரியும்! தப்பா நினைக்காதீங்க சித்தி... என் மாமியாரே என்னை ஏன் லேட்டா எழுந்து வந்தனு கேட்கல... என்னை கேள்வி கேட்க உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது... உங்ககிட்ட நானும் காரணம் சொல்லவும் மாட்டேன். உங்ககிட்ட மரியாதை கொடுத்து பேசறதுக்கு காரணம் எங்க வீட்டுக்காரரரை வளர்த்திருக்கீங்க அதுக்காகத்தான்” என நறுக்கென்று வார்த்தைகளில் மீனாட்சிக்கு பதிலடி கொடுத்தாள்.

அதற்குள் பொன்வண்ணன் வர “வரேன் சித்தி" என்று புன்னகை முகத்துடன் நின்றிருந்தாள்.

மானசாவோ “பொன்னா பேபி ஈவ்னிங் என்னை வெளியே கூட்டிட்டு போகணும். நேத்து போல என்னை ஏமாத்திட கூடாது” என்று கொஞ்சலாக பேசினாள்.

“ஸுயர் மானு” என்று கண்ணைச்சிமிட்டி “வரேன் அத்தைமா” என்று மீனாட்சியை அணைத்துவிட்டு அங்கே வந்து நின்ற கோதையை பார்த்தவன் “பை மா” என்று அவரையும் அணைத்துவிட்டு காரில் ஏறினான் பொன்வண்ணன்.

தூரிகாவோ “அந்த மானசா பார்வையே சரியில்லைங்க... உங்களை உரிச்சு திங்கறது போல பார்க்குறா எனக்கு அவளை கொஞ்சம் கூட பிடிக்கலை” என்றாள் முகச் சுழிப்போடு.

“ஏய் அவ நல்ல பொண்ணுதான் எனக்கு லண்டன்ல பெஸ்ட் ப்ரண்ட் மானுவும் கௌதமும்தான்... அடுத்தவாரத்துல இருந்து நம்ம ஹாஸ்பிட்டல்தான் வரப்போறா” என்றான் புன்னகையுடன்.

“எனக்கென்னமோ அவ பார்வை ப்ரண்ட்டை பார்க்கறது போல இல்ல ஏதோ லவ்வர்கிட்ட பேசறது போல பேபினு கொஞ்சி கொஞ்சி பேசும் போது அவ முகத்துல ரெண்டு குத்து விடணும்போல இருக்கு” என்று அங்கலாய்த்துக்கொண்டாள்.

“நீயா ஒண்ணு நினைச்சு கற்பனை பண்ணாதே... உன் புருசன் ராமன்டி துகாவை தவிர யாரையும் நினைக்க மாட்டான்” என்று கண்ணைச்சிமிட்டி இதழ் குவித்து முத்தம் கொடுத்தான்.

கௌதம் எழும்போது அலர்விழி மெத்தையில் இல்லை.ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல எழுந்தவன் குளித்துவிட்டு வந்து ஹாஸ்பிட்டல் கிளம்பிக்கொண்டிருந்தான்.

“என்னங்க சாப்பாடு ரெடி வாங்க சாப்பிடலாம்” என்று அறைக்குள் வந்தாள். குங்கும நிறத்தில் மைசூர் சில்க் சேலை அணிந்திருந்தாள். தலையில் சந்தனமல்லியை வைத்திருந்தாள். அவள் உள்ளே வரும்போது சந்தன மல்லியின் வாசம் அவன் நாசியில் ஏறியது. கௌதமோ அவளை கண்ணெடுக்காமல் பார்த்திருக்க “என்னங்க” என்று அவன் முன்னே வந்து கையை அசைத்தாள்.

“ஹான் சாப்பிட போலாம்” என்றவனோ “ப்ரண்ட் நான் ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க கூடாது” என்றான் பீடிகையோடு.

“நீங்க சொல்றதுல இருக்கு நான் கோபப் படறதும் படாம இருக்கறதும்” என்று அவன் பக்கம் திரும்பினாள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு.

“இந்த சேலையில ரொம்ப அழகா இருக்க! உன்னை பார்க்கும்போது அப்படியே” என்று அவன் பேசும் முன்.

“தாலிகட்டினதும் புருஷன்கிற உரிமை எடுக்க பார்க்குறீங்க எனக்கு ஸ்பேஸ் வேணும்னு கேட்டிருந்தேன்ல... நீங்களும் சராசரி மனுஷன்னு காட்டிட்டீங்க” என்றாள் கோபக்குரலுடன்.

கௌதமோ “நான் பேசறத முழுசா கேட்கமாட்டியா!! நீ ரொம்ப அழகா இருக்க. கையெடுத்து கும்பிடணும்போல இருக்குனு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீ கோபப்பட்டு பேசிட்ட! இனிமே நான் உன்கிட்ட அதிகம் பேசவே போறதில்லைமா” என்று கையெடுத்து கும்பிட்டவனை கண்டு சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.

“சாரிங்க உங்கள தப்பா நினைச்சிட்டேன்” என்று காதை பிடித்து தோப்புக்கரணம் போட்டாள் அலர்விழ.

“நான் உன்னை தோப்புக்கரணம் போடச் சொல்லலையே! வா பசிக்குது” என்று அவளது கையை பிடித்து ஹாலுக்குச் சென்றான்.

அன்பரசியோ அலர்விழியின் கையை பிடித்து வருவதை கண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்த கண்ணனிடம் கண்ணை காட்டினார்.

அவரோ சிரிப்புடன் “மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுமா” என்று பேப்பரை படிக்க ஆரம்பித்தார்.

இடியாப்பம், தேங்காய்பால், பூரியும் உருளைக்கிழங்கு மசாலும் இனிப்புக்கு கேசரியும் டேபிளில் அடுக்கி வைத்திருந்தார் அன்பரசி.

கௌதம் டைனிங் டேபிளில் உட்கார்ந்ததும் “நீயும் உட்காரு அலரு நான் பரிமாறுறேன்” என்றதும்

அவளோ “இல்ல நான் அப்புறம் சாப்பிடுறேன்மா” என்று மறுத்தாள்.

"இன்னிக்கு என்கூட சாப்பிடு பிரண்ட்" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி கண்ணால் கெஞ்சினான்.

“சரிங்க” என்று அவளும் சாப்பிட உட்கார்ந்தவள் அவன் காதோரம் சென்று “சாப்பிடுனு சொன்னா சாப்பிட உட்காருறேன் என்கிட்டே கெஞ்ச வேணாம் பிரண்ட் எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.

அன்பரசியோ பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று உள்ளம் பூரித்து போனார்.

கேசரியை பவுலில் வைத்து இருவர் தட்டிலும் இடியாப்பத்தை வைத்து தேங்காய் பாலை ஊற்றினார் அன்பரசி.

கேசரியை எடுத்து சாப்பிட்டவன் “வாவ் கேசரி செம டேஸ்ட் அத்தை” என்றவனோ அடுத்து இடியாப்பத்தை சாப்பிட "தேங்காய் பால் இடியாப்பம் டேஸ்ட் நல்லாயிருக்கு” என்று பாராட்டு பத்திரம் கொடுத்தான்.

“மாப்பிள்ளை நான் சமையல் செய்யல... அலர்விழி சமைச்சா” என்றதும் "சூப்பர் விழி... நாளைக்கு நான்வெஜ் செஞ்சு கொடு விழி நீ நான்வெஜ் சமைக்கிறதுல ஸ்பெஷல்னு தூரிகா ஹாஸ்பிடல்ல சொல்லிருக்கா" என்று கூச்சமே படாமல் கேட்டுவிட்டான்.

“ம்ம்” என்று தலையை ஆட்டினாள் மெல்லிய சிரிப்புடன்தான்.

இடியாப்பம் சாப்பிட்டு ரெண்டு பூரியை தட்டில் வைத்ததும் “நான் ஆயில் அதிகம் சேர்க்கமாட்டேன். நான்வெஜ் சமைக்கும்போது ஆயில் கொஞ்சமா ஊத்தி செய்துடு” என்று உரிமையாக அலர்விழியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அன்பரசியோ பொண்ணு மாப்பிள்ளைக்கு தனிமை கொடுத்து ஹாலுக்குச் சென்றுவிட்டார்.

“என்னங்க மாப்பிள்ளை தங்கமா இருக்காரு. நீங்க நாளைக்கு தோட்டத்துல மேயுற கோழியை அடிங்க குழம்பு வச்சிடலாம். மாப்பிள்ளை பிரியமா கேட்குறாருல்ல” என்றார் சிலாகித்து.

"கோழிக்கறியோட மீன் வறுவலும் செய்துடலாம்" என்றார் கண்ணன் புளங்காகிதம் அடைத்து.

கௌதம் சாப்பிட்டு முடித்து அலர்விழியின் இடுப்பை பார்த்தான். அவளோ “என்ன பார்வை” என்று முறைத்தவளை சட்டை செய்யாது அவளது முந்தானையில் வாய் துடைத்து “மாமாவும் அத்தையும் நம்மளை பார்க்குறாங்க!” என்று கண்ணைச் சிமிட்டி விட்டு ஹாலுக்குச் சென்றவன் “மாமா நீங்க சாப்பிடலையா?” என்று அக்கறையாக கேட்டான்.

கண்ணனோ “தோப்புல வேலை செய்துட்டு பத்து மணிக்குதான் சாப்பிடுவேன் மாப்பிள்ளை” என்றார் புன்னகையுடன்.

“என்னது பத்துமணிக்கா இனிமே தினமும் எட்டு மணிக்கு என்கூட சாப்பிடுறீங்க. நாளைக்கே உங்களுக்கும் அத்தைக்கும் ஹெல்த் செக்கப் பண்ணிடலாம்” என்று செல்லமாக ஆர்டர் போட்டான் கௌதம்.

“இருக்கட்டும் மாப்பிள்ளை நாங்க நல்லாத்தான் இருக்கோம்” என்றவரை இடைமறித்து “விழி நாளைக்கு நீதான் அத்தையும் மாமாவையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வரணும்” என்று அவளிடமும் கட்டளையிட்டுச் சென்றான் அந்த குடும்பத்து மகனை போல.

அலர்விழியோ வேகமாக வாசலுக்குச் சென்றவள் கௌதம் காரில் ஏறியதும் “மதிய சாப்பாடு ஹாஸ்பிட்டலுக்கு அப்பாகிட்ட கொடுத்துவிடவா?” என்று சேலை நுனியை திருகிக்கொண்டே கேட்டாள்.

அவனோ “அப்போ நான்வெஜ் சமைச்சு கொடுத்துவிடு... வரட்டுமா ப்ரண்ட்” என்று தலையை அசைத்துச் சென்றிருந்தான்.

'கடவுளே இப்படிபட்ட நல்ல மனுசனை எனக்கு புருசனா கொடுத்துக்கு நன்றி சொல்லுறேன்! உங்களை கூடிய சீக்கிரம் கணவனா ஏத்துக்குற மனப்பக்குவம் வரணும்னு கடவுளை வேண்டுறேன் புருசா' என்றாள் மனதிற்குள்.

ரதியோ “என்னங்க என்கூட பேசுங்க” என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் சட்டைக்கு பட்டன் போட்டுக்கொண்டிருந்த சிங்கத்திடம்.

அவனோ “உண்மையை சொல்லுடி நான் பேசுறேன்” என்று குரலில் கடுமையை காட்டி கை காப்பை ஏத்திவிட்டான்.

அவளோ சட்டென்று சிங்கத்தை அணைத்துக்கொண்டு அவனது இதழில் முத்தமிட்டாள். அவனோ முத்தமிடவில்லை... அவளை தடுக்கவும் இல்லை. அப்படியே நின்றிருந்தான் சிலைபோல.

அவளோ அவன் முத்தமிடுவான் என்று எதிர்பார்த்திருந்தாள். அவன் முத்தமிடாததும் மனதளவில் அடிப்பட்டு போனாள். அழுகை வந்துவிட்டது. அவன் இதழிலிருந்து விலகியவளோ “என்னை பிடிக்காம போச்சுல உங்களுக்கு” என்று விசும்பிக்கொண்டே கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள்.

சிங்கமோ “உன்னை எனக்கு பிடிக்கும்டி! நீ என்னோட ஆசை அத்தையோட பொண்ணு! உன்னை பிடிக்காம இல்ல... ஆனா என்னோட குடும்பத்துக்கு ஆபத்து உண்டாக்குற உன்னை எனக்கு பிடிக்கலை... என் குடும்பத்து உயிருக்கு ஆபத்து வந்தா உன்னை இல்லாம பண்ண தயங்கமாட்டான் சிங்கம்" என்றவனுக்கு அவள் அழுதது அவன் கண்முன்னே வர ‘ஏன் டி உங்க அப்பன் சொல்றதை கேட்குற கைபொம்மையா இருக்க’ சுவற்றில் ஓங்கி குத்திக்கொண்டான்.

ஹாஸ்பிட்டலில் பிரசவ வார்டில் இருந்தாள் ரதி. இன்று தூரிகாவும் டெலிவரி பார்க்க அங்கே நின்றிருந்தாள்.

டெலிவரி முடித்து “எப்படியிருக்க தூரிகா? உன் முகமே சொல்லுது சந்தோசமா இருக்கனு” என்று அவளது கன்னத்தை வருட

தூரிகாவோ “ஆமா அண்ணி” என்றவளோ அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

“ஏய்” என்று தூரிகாவை தாங்கி பிடித்து அவளது கையை பிடித்து நாடி பார்த்தாள்.

அங்கிருந்த நர்ஸ் தூரிகாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க. அவள் மெதுவாய் கண்ணை திறந்தாள்.

"தூரிகா நீ இந்த மன்த் பீரியட்ஸ் ஆகலைதானே! நீ கன்சிவ்வா இருக்க வா செக்பண்ணிடலாம்” என்றதும் தூரிகாவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஆனால் படிப்பு இன்னும் இருக்கே என்று கவலையும் வந்தது அவளுக்கு.

ரதியோ “அண்ணே என் ரும்க்கு வாயேன்” என்று இன்டர்காமில் அழைத்ததும் “பேஷண்ட் இருக்காங்கம்மா லன்ச்ல வரேன்” என்றான் பொன்வண்ணன்.

“ஒரு ஐஞ்சு நிமிசம் வாயேன் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்” என்றாள் சந்தோசமாக.

அறையில் இருந்த பேஷண்டை பார்த்து விட்டு “நர்ஸ் ஒரு ஐஞ்சு நிமிசத்துல வந்துடறேன்” என்று ரதியின் அறைக்குச் சென்றான்.

அதற்குள் தூரிகாவிற்கு யூரின் டெஸ்ட் எடுத்திருந்தாள். பொன்வண்ணன் அறைக்குள் வந்ததும் அங்கே வெட்கத்துடன் உட்கார்ந்திருந்த தூரிகாவை கண்டவன் “என்ன விசயம் ரதி?” என்றவனோ தூரிகாவை பார்த்தான்.

நர்ஸ் ரிப்போர்ட் கொண்டு வந்தார். ரிப்போர்ட்டை வாங்கி பொன்வண்ணனிடம் கொடுத்தாள் ரதி.

புருவம் சுருக்கி ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தவன் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது. “துகா லவ் யூ டி” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

“அ.அண்ணா நான் வெளியே போயிடுறேன் ஒரு செகண்ட்” என்று வெளியேச் சென்றுவிட்டாள் சிரிப்புடன்.

தூரிகாவோ கண்ணில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தாள். அவள் பயந்துவிட்டாள் என்று எண்ணிய பொன்வண்ணனோ “நர்ஸா இருந்துட்டு இப்படி அழலாமா கன்சீவ் ஆகிட்டா எல்லா பொண்ணுங்களும் சிரிப்பாங்கடி நீ என்ன அழற அசடு” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“இல்ல இன்னும் இன்டன்சிப் முடிச்சு எக்ஸாம் எல்லாம் இருக்கு... எனக்கு படிக்கறது சிரமமா இருக்கும்ல... அதுக்குள்ள கன்சீவ் ஆகிட்டேன்” என்று சிறுபிள்ளை போல இதழ் பிதுக்கி அழுதவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “அட லூசு பொண்ணு இன்டன்சிப் முடிச்சு எக்ஸாம்க்கு படிக்க நான் ஹெல்ப் பண்ணுறேன். அம்மா, அத்தையம்மா இருக்காங்க உன்னை பார்த்துக்க... கவலைப்படாதடி துகா” என்றவனோ அவள் முகத்தை கையில் ஏந்தி "இந்த குழந்தை வேண்டாம்னு நினைக்குறியா துகா?" என்றான் அவளது கண்களை பார்த்துக்கொண்டே கலக்கமான குரலுடன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 42

“இ.இல்ல எனக்கு பயமா இருக்கு... டெலிவரி ஆகும்போது ரொம்ப பெயினா இருக்கும்ல... கொஞ்ச நேரம் முன்னே கூட டெலிவரி ஆகும்போது அந்த பொண்ணு வலியில கத்துச்சே! அதே போல எனக்கும் வலிக்கும்ல.. அதான் பயம் வந்துச்சு” என இதழ் பிதுக்கினாள் லேசான அழுகையுடன். அவள் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"நீ நர்ஸிங் ஸ்டுடன்ட்னு வெளியே சொல்லாதடி சிரிச்சுடுவாங்க... நான் கூட நீ இந்த குழந்தை வேணாம்னு சொல்லுடுவியோனு பயந்துட்டேன் தெரியுமாடி... டெலிவரினா பெயின் இருக்கும்தான்... ஆனா குழந்தை வந்ததும் அவங்க முகத்தை பார்த்தா வலியெல்லலாம் பஞ்சா பறந்திரும்... அதுவுமில்லாம உனக்கு சின்ன வயசுதான்... இடுப்பெலும்பு ஈசியா வளைந்து கொடுக்கும்... பெயின் அதிகம் இருக்காது... டெலிவரி அப்ப நான் உன்கூடவே இருப்பேன்டி..." அவளின் கையை ஆதரவாய் பிடித்து பெண்ணவளின் நெற்றியில் முட்டினான் தந்தையான மகிழ்ச்சியில்.

"மக்க்கும் நீங்க வேற நா.நான் எதுக்கு பேபி வேணாம்னு சொல்லப்போறேன்! எனக்கும் பாய் பேபினா கொள்ளை பிரியம்... குழந்தையோட குட்டி கண்ணு, குட்டி வாய், குட்டி காலுனு இருக்கும் குழந்தையை பிடிக்காம போகுமா என்ன? ஆமா உங்களுக்கு என்ன பேபி பிடிக்கும்?” ஆவலாய் கேட்டாலும் அவள் கண்ணில் இன்னமும் குழந்தை பிறப்பது பற்றி அச்சம் இருக்கத்தான் செய்தது.

"எந்த பயமும் இருக்காதுடி துகா! எனக்கு பாய் பேபியா இருந்தாலும் ஓகே கேர்ள் பேபி யா இருந்தாலும் ஓகே தான் ஒரு பீடியாட்ரிக் டாக்டர் கிட்ட என்ன குழந்தை பிடிக்கும்னு கேட்கறதே தப்பு டி... குழந்தை பிறக்க இன்னும் மாசம் இருக்கு... அதுக்குள்ள உனக்குள்ள இருக்க பயம் போயிடும்... நான் பயத்தை போக்கிடுவேன்... ஆமா சிங்கம் தங்கச்சிக்கு பயம் வரலாமா” என்று அவளுக்கு தைரியத்தை வரவழைத்து புன்னகை புரிந்தான்.

"கன்சீவ் ஆனா சினிமா எல்லாம் முத்தம் கொடுப்பாரு ஹீரோ!! சும்மா சதா முத்தம் கொடுக்குற டாக்டா இப்ப ஒரு முத்தம் கூட கொடுக்கலையே!" என்று இதழை சுளித்து அவனை செல்லமாக முறைத்தாள்.

“அடிகள்ளி இது ஹாஸ்பிட்டலனு சொல்லுவனு தான் என் ஆசையை அடக்கி இருந்தேன். தெய்வம் வாக்கு கொடுத்த பிறகு பக்தன் சும்மா இருப்பானா” என்று தோளை குலுக்கியவன் தன்னவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து அடுத்து கண்ணிலும் கன்னத்திலும் இறுதியாக இதழில் இளைப்பாறினான். இருக்கும் இடத்தின் சூழ்நிலை அறிந்து அவளிமிடமிருந்து விலகி “இப்ப ஹாஸ்பிட்டல இருக்கோம் இந்த நேரம் மட்டும் வீட்ல இருந்தோம்னா மஜா பண்ணியிருப்பேன்” என்று அவளை அணைத்துக்கொண்டான்.

"என்னங்க அம்மா, அப்பா, அப்பத்தா, தாத்தா, ஸ்பெஷலா குழந்தைக்கு தாய்மாமன் எங்க அண்ணா சிங்கத்துக்கும் குமரன் அண்ணாவுக்கு சொல்லணும்” என்றாள் கண்ணை விரித்து சந்தோச பெருவெள்ளத்துடன்.

"ம்ம் சொல்லிடலாம் துகா... அம்மாகிட்ட சொல்லலாம் ஹேப்பியாகிடுவாங்க” என்று கண்ணை சிமிட்டியவனோ கோதைக்கு போன்போட்டான்

“அம்மா நீங்க பாட்டி ஆகிட்டீங்க” என்று சொல்வதற்குள் "டேய் வண்ணா ரொம்ப சந்தோசம்டா என் மருமகள் மாசமா இருக்கானு இப்போதான் ரதி போன் பண்ணினா... இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி வாங்கடா தூரிகாவுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சு வைக்குறேன்" என்று சிறு பிள்ளை போல ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார் கோதை.

“ஓ.கே மா சீக்கிரம் வந்துடுறோம்” என்று போனை வைத்திருந்தான் பொன்வண்ணன்

“ரதி இன்னேரம் உங்க அப்பாவீட்டுக்கும் நியூஸ் பரப்பியிருப்பா உங்க வீட்ல இருந்தும் போன் வரும் பாரு” என்றான் அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு.

“சும்மா முத்தம் கொடுத்துக்கிட்டு.. எனக்கு வெட்கமா இருக்கு மாமா” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள “எல்லாரும் போன் பண்ணறதுக்குள்ள ஒரு டீப் கிஸ் பண்ணலாம்டி என் மகன் வரவை கொண்டாடணும்ல” என்று அவளது முகத்தை கையால் தாங்கி மீண்டும் அவளது இதழில் ஆழந்து முத்தமிட்டான் மென்மையாக மிருதுவாக.

கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் விலகியவர்கள் சிரித்துக்கொண்டனர். “துகா டியர் நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்று அவளது இதழில் முத்தம் கொடுத்தவனோ “எஸ் கம்மின்” என்று தூரிகாவிடமிருந்து அடுத்த நாற்காலியில் அமர்ந்தான்

ரதி தான் வந்திருந்தாள். “தூரிகா கன்சீவ்னு அத்தை அம்மாச்சிக்கிட்ட சொல்லிட்டேன். என்ற பேத்தி கிட்ட பேசணும் அம்மாச்சி ஒரே அடம் போன்ல இருக்காங்க பேசு தூரிகா” என்று போனை கொடுத்ததும் கோமதிதான் முதலில் பேசினார்.

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்டி தங்கம்... என்னை பாட்டியாக்கிட்ட... ட்யூட்டி முடிச்சு இப்படியே வீட்டுக்கு வாடி உனக்கு பிடிச்ச பூசணி அல்வா செய்து வச்சிருக்கேன். நம்ம மாடு கண்ணு போட்டிருக்கு சீம்பால் எடுத்துவச்சிருக்கேன்” என்றதும் அடுத்து நாச்சியோ “கண்ணு நீ ஹாஸ்பிட்டல் போகவேணாம் குழந்தை பிறந்த பிறகு படிச்சுக்கலாம்... மூணுமாசம் பேரன்கிட்ட இருந்து தள்ளியே இருக்கணும்” என்றெல்லாம் அவளிடம் பேச திக்குமுக்காடினாள் தூரிகா.

தூரிகாவோ பொன்வண்ணனை பார்த்தாள். அவனோ “போகலாம்" என்று கண்ணால் சைகை காண்பித்தான்.

ரதியோ சிங்கத்துக்கு போன் போட்டாள் அவனோ ரதியின் எண்ணை பார்த்து போனை கட் பண்ணிவிட்டான். தாய்மாமனுக்கு மருமகன் வரப்போறானு சொல்லலாம்னு பார்த்தா சும்மா ஓவரா பிகு பண்ணுறான் என்று நொந்தாலும் மனது கேட்காமல் மாமா நீங்க தாய் மாமா ஆகிட்டீங்கனு மெசேஜ் போட்டுவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹாஸ்பிட்டலுக்குள் பை நிறைய பழங்களும் அவளுக்கு பிடித்த ஹல்வாவும் வாங்கிக்கொண்டு வேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

பேசண்டை பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்த ரதியோ சிங்கத்தை பார்த்துவிட்டாள். அவன் நடந்து வரும் கம்பீர அழகை இரசித்து பார்த்துக்கொண்டிருந்தவளோ 'தாய் மாமன் ஆகப்போறனு மெசேஜ் போட்டு ஐஞ்சு நிமிசத்துல வந்தாச்சு... தங்கச்சி மேல இருக்க பாசத்தை கொஞ்சம் பொண்டாட்டி மேலயும் வைச்சிருந்தா நல்லாயிருக்கும்’ என்று பெரும்மூச்சு விட்டவள் அவன் பக்கம் சென்றதும் அவனோ அவளை முறைத்துப்பார்த்துக்கொண்டே அவளை தாண்டி நர்ஸிங் ஸ்டேசன் சென்றான்.

அவளோ "ஹலோ மாம்ஸ் உங்க தங்கச்சி நர்ஸிஸ் ஸ்டேசன்ல இல்ல... அவ அண்ணா அறையில இருக்கா!” என்றாள் நக்கல் சிரிப்புடன்.

சிங்கமோ பழம் இருந்த பையை அங்கிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு தூரிகாவுக்கு போன் போட்டான். போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.

ரதியோ "மாம்ஸ் ட்யூட்டில இருக்கும்போது போன் பேச அலோவுட் பண்ண மாட்டாங்க இப்போ என்னோட உதவி உங்களுக்கு தேவை" என்றாள் தோளை குலுக்கி கண்ணைச்சிமிட்டினாள்

"ம்ப்ச் ஏய் தூரிகாவை பார்க்கணும்! அவளை வெளியே வரச்சொல்லுடி!" என கடுப்பாய் வார்த்தைகள் வந்தது அவனிடமிருந்து

'கொஞ்சம் சிரிச்சு பேசினா என்ன கடுவன்' என்று மனதிற்குள் திட்டியவளோ “வாங்க என் பின்னால” என்று அவள் முன்னே நடக்க அவள் பின்னால் சென்றான் சிங்கம் தாய்மாமன் ஆன சந்தோசத்தில்.

பொன்வண்ணன் தூரிகாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தான். வெளியே நின்றிருந்த நர்ஸோ "மேம் டாக்டர் கொஞ்ச நேரத்திற்கு யாரையும் அனுப்ப வேண்டாம்னு சொல்லியிருக்காரு" என்று அவர் தயங்கி கூறினார்.

சிங்கமோ பொறுமை இழந்து விட்டான். “என்னோட தங்கச்சியை பார்க்க நான் வெளியே காத்து நிற்கணுமா!” என்று ரதியை தள்ளிக் கொண்டு கதவை திறந்து விட்டான்.

“இந்த ஒரு வாய் சாப்பிடுடி பட்டு” என்று கையில் சாப்பாட்டை வைத்து கெஞ்சிக்கொண்டிருந்தான். அவளோ “போதும்பா வாமிட் வரது போல இருக்கு” என்று சிணுங்கிக்கொண்டிருந்தாள்.

சிங்கமோ சங்கடமாக திரும்பி நின்றான். ‘நல்லபடியா பார்த்துக்குறான் என் தங்கச்சியை’ என்று அவன் இதழில் லேசாய் சந்தோசப்புன்னகை அரும்பாக மலர்ந்து பூத்திருந்தது.

ரதியோ உள்ளே வந்தவள் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருப்பதை பார்த்தது “இதுபோல எனக்கு எப்போவது சாப்பாடு ஊட்டி இருக்கீங்களா” என்று சிங்கம் காதுக்கு பக்கம் போய் கிசுகிசுத்தாள்.

“நீ என்ன மசக்கையாவா இருக்க... மசக்கை ஆகு உனக்கும் ஊட்டிவிடறேன்” மீசையை முறுக்கினான்.

“ம்ம் சீக்கிரம் நானும் கன்சீவ் ஆகுறேன்டா உன் கையால எனக்கு சாப்பாடு ஊட்டிவிட வைக்குறேன்” என்று சிலுத்துக்கொண்டு நின்றாள் ரதி.

பொன்வண்ணன் சிங்கத்தை இங்கே எதிர்பார்க்கவில்லை. ரதியோ “அண்ணே” என்று எழுந்தவள் சிங்கம் தோளில் சாய்ந்து நின்றாள்.

“நீ மாசமா இருக்கனு உன் மதனி சொன்னதும் உன்னை பார்க்க வந்துட்டேன்டா... மசக்கையா இருந்தா வாந்தி எல்லாம் வருமே உனக்கும் வருதாடா..? உன் மதனி பிரசவ டாக்டர்தானே அவகிட்ட மாத்திரை வாங்கி போட்டுக்கோ... உன்வீட்டுக்கு போக வேண்டாம் ஒரு மாசம் நம்ம வீட்டுல வந்து ரெஸ்ட் எடு” என்றான் பொன்வண்ணனை பார்த்தபடியே.

பொன்வண்ணனுக்கோ அண்ணன் கூப்பிட்டதும் எங்கே தூரிகா போய்விடுவாளோ என்று திகில் பிடித்துவிட்டது. ‘டேய் ஏன் டா என் வாழ்க்கையில் வில்லங்கம் பண்ணிட்டேயிருக்க’ என்று மனதில் சிங்கத்தை காய்ச்சி எடுத்துக்கொண்டிருந்தான்.

“அண்ணா அத்தைக்கிட்ட சொல்லிட்டு வந்துடட்டுமா?” என்று முதிர்ச்சியாய் பேசிய தங்கைக்கு குடும்ப பக்குவம் வந்து விட்டது என்று சிங்கம் பூரித்து போனான்.

“சரிடா நீ அத்தைகிட்ட சொல்லிட்டே நம்ம வீட்ல வந்து தங்கிக்கோ” என்றவனோ "உனக்கு பிடிச்ச பழம் ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடு... ஒரு எட்டு அம்மாவையும் அப்பத்தாவையும் பார்த்துட்டு போயிடுங்க” என்றான் தங்கையிடம்.

“நம்ம வீட்டுக்கு வந்துட்டு தான் எங்க வீட்டுக்கு போறோம்ண்ணா” என்றவளை “இப்பவே உடம்பு சரியில்லைனு லீவு சொல்லிட்டு வீட்டுக்கு போகலாம் வா... சொல்றவங்க கிட்ட சொல்லிட்டு வா வெளியே வெயிட் பண்ணுறேன்” என்று பொன்வண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச்சென்றான்.

“ரதிமா உன் வீட்டுக்காரரு ஓவராத்தான் போறாரு... நான் அமைதியா இருக்கேனு என்னை சீண்டிப்பார்க்குறாரு... நான் திரும்பி தாக்கி பேசினா தாங்கமாட்டாரு சொல்லிவை உன் வீட்டுக்காரர்கிட்ட” என்று எகிறினான் தங்கையிடம்.

“அட போ அண்ணே! அவர்கிட்ட நாமெல்லாம் பேசி ஜெயிக்க முடியாது” என்று சலித்துக்கொண்டு வெளியேச் சென்றாள்.

தூரிகாவோ “இப்ப என்ன எங்கண்ணா சொல்லிடுச்சு... வீட்டுக்கு வானு சொன்னதும் ஒரு குத்தமா” என்று இதழை சுளித்தாள்.

“முக்கியமான அப்பாய்ண்ட் பேசன்ட் மட்டும் பார்த்திட்டு கூட்டிட்டு போறேன் ஆனா என்னை வீட்டுக்குள்ள வானு சொல்லாத” என்று சாப்பிட்ட ப்ளேட்டை வாஷ் பண்ண சென்றான்.

அவளோ “நீங்க வரலனா நானும் போகல” என்றாள் அடமாக.

“ஏன் டி பிடிவாதம் பண்ணுற... உங்க அண்ணாவை பார்த்தாவே எனக்கு கடுப்பாகுது... வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை வாங்கனு ஒப்புக்கு கூப்பிடறது போல இருக்கு. உனக்காக என்னை சலிச்சிட்டு கூப்பிடறாரு. என்னை கம்பல் பண்ணாத நான் வரமாட்டேன். என் ப்ரண்ட்டோட குழந்தைக்கு ஹெல்த் ஈஸ்ஸு வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கான் உங்க வீட்ல ஒரு மணிநேரம் இருந்துட்டு எனக்கு கால் பண்ணு வந்துடறேன்... அம்மா நமக்காக காத்திருப்பாங்க" என்றவன் இன்டர்காமில் நர்ஸிடம் “முக்கியமான அப்பாய்மெண்ட் இருந்தா வரச்சொல்லுங்க நான் கொஞ்சம் ஏர்லியா கிளம்புறேன்”என்றான் பொன்வண்ணன்.

சிங்கத்துக்கு போன் போட்டு "அண்ணா நானும் அவரும் வரோம் நீங்க கிளம்புங்க" என்றிருந்தாள் தூரிகா தயங்கியபடி.

"சரி பாப்பா பார்த்து வாங்க" என்று சிங்கமும் கிளம்பிவிட்டான்.

“சார் நாளைக்குத்தான் அப்பாய்ட்மெண்ட் இருக்கு இன்னிக்கு ஏதும் இல்லிங்க டாக்டர்” என்று அவர் பதிலிளிக்க “ஓ.கே அப்போ நான் கிளம்புறேன் சிஸ்டர்” என்றவனோ டீன்க்கு போனில் விடுப்பு சொல்லிவிட்டு தூரிகாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தனர்.

“கன்கிராட்ஸ்டா அப்பா ஆகிட்ட ட்ரீட் கொடுக்கணும்டா” என்று கௌதம் பொன்வண்ணனை அணைத்துக்கொண்டான்.

பொன்வண்ணனோ “ட்ரீட் கொடுத்துட்டா போச்சு மச்சி! எப்போ போலாம்னு சொல்லு அலர்விழியை அழைச்சிட்டு வா ஒருநாள் ஜாலியா டின்னர் போகலாம்” என்றான் சந்தோசத்துடன்.

கௌதமோ “உன் தங்கச்சி வெளியே வந்துட்டாலும் கோவிலுக்கு வேணா கூப்பிடு உடனே கிளம்பி வந்துடுவா ஆனா நீ கூப்பிட்டனு சொன்னா உடனே வந்துடுவானு நினைக்குறேன்டா” என்று தோளை குலுக்கியவன் வெட்கத்துடன் நின்றிருந்த தூரிகாவிடம் “அலர்விழி உன்னை பார்க்க சிங்கம் அண்ணா வீட்ல காத்திட்டிருக்கா சீக்கிரம் கிளம்புமா!” என்றான் சிறு சிரிப்புடன்.

பொன்வண்ணன் தூரிகாவை சிங்கம் வீட்டில் இறக்கிவிட்டான். "என்னங்க ப்ளீஸ் உள்ளே வந்துட்டு ஒரு டம்ளர் காபி குடிச்சிட்டு அவரசம்னு கிளம்பிடுங்களேன்... அப்பா மனசு சங்கடப்படுவாரு" என்று அவள் கெஞ்ச "நோ தூரிகா என்னோட தன்மானத்தை விட்டு உன்னோட வீட்டுக்குள்ள வரமுடியாது. உன் அண்ணன் என்னை வாங்க மாப்பிள்ளைனு சந்தோசமா எப்போ கூப்பிடுறாரோ அப்ப உள்ளே வந்து விருந்தே சாப்பிடுறேன். நான் கிளம்புறேன் சரியா ஒன் ஹவர்ல நீ கிளம்பி வந்திடணும்” என்று ஆர்டர் போட்டே காரை கிளப்பினான் பொன்வண்ணன்.

தூரிகாவோ ‘நீங்களும் அண்ணாவும் சேர்ந்து இருந்தா சந்தோசப்படற முதல் ஆளு நான்தாங்க’ என்று பெரும்மூச்சு விட்டு வீட்டுக்குள் சென்றவளை சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த கோமதி தூரிகாவை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்தார்.

வீரய்யனும் நாச்சியும் பேத்தியை அணைத்துக்கொண்டு இனிப்பை ஊட்டிவிட தூரிகாவோ “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி" காலில் விழுந்தவளை “மாசமா இருக்கவ காலுல விழுந்துக்கிட்டு தலைநாளுல பேரனா பிறக்கட்டும்” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் பேத்தியை வாழ்த்தினர் வீரய்யனும் நாச்சியும்.

வெளியேச் சென்றிருந்த ஐய்யனார் வந்ததும் “அப்பா” என்று ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள். கோமதியோ “ஏய் தூரி இனி இப்படி ஓடக்கூடாது வயித்துல பிள்ளை இருக்கு” என்று மகளை செல்லமாக கடிந்துக் கொண்டார்.

ஐய்யனாருக்கோ “என் பொண்ணு இன்னும் குழந்தையா என் கண்ணுக்கு தெரியுறா அவளுக்கு ஒரு குழந்தை வரப்போகுது" என்று வாய்விட்டே சொல்லி சத்தமாக சிரித்து மகளின் நெற்றியில் முத்தம் கொடுத்து "பாப்பா இப்ப ஏதாவது கேளு வாங்கித்தாரேன்" என்றார் அகம் மகிழ்ந்து.

“எனக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக்கொடுத்திருக்கீங்கப்பா எனக்கு உங்க பாசம் மட்டும் போதும் அண்ணா நிறைய ஆப்பிள் ஆரஞ்சுனு பை நிறைய வாங்கி கொடுத்திருக்குங்க அப்பா” என்று தந்தையின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் தூரிகா.

சிங்கமோ கையில் மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் வந்தவன் “பாப்பா கையை நீட்டு” என்றதும் அவளும் “ஐ அண்ணா என்னமோ வாங்கிட்டு வந்திருக்கு” என்று குதுகலமாக கையை நீட்டினாள்.

லேட்டஸ் மாடல் வளையலை போட்டு விட்டிருந்தான். சீர் கொண்டு வந்த போது பொன்வண்ணன் அவளுக்கான தங்க நகைகளையும் திருப்பி அனுப்பியிருந்தான். தாய் வீட்டு வளையலை அவள் தாய்மை அடைத்ததும் போடவேண்டுமென்று வாங்கி வந்திருந்தான் சிங்கம்.

“பிடிச்சிருக்கா பாப்பா இன்னிக்குதான் இந்த டிசைன் வந்திருக்குனு சொன்னாங்க வாங்கிட்டேன்” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா” கையை தூக்கி ஆட்டி முத்து பற்கள் தெரிய சிரித்தாள்.

கோமதியோ செய்து வைத்திருந்த பூசணிக்காய் ஹல்வாவை சிங்கத்திடம் கொடுத்து "நீயே ஊட்டிவிடு" என்று சொன்னார்.

சிங்கமும் “எனக்கு தாய்மாமாவா புரோமோசன் கொடுத்திட்ட பாப்பா” ஹல்வாவை ஊட்டிவிட்டான். குமரனோ வீட்டுக்குள் வந்தவன் “நானும்தான் நாய்மாமா ச்சே தாய்மாமா ஆகிட்டேன் நானும் உனக்கு ஸ்வீட் ஊட்டுவேன் தூரி” என்று சிங்கத்திடமிருந்து ஹல்வா பவுலை வாங்கி ஊட்டிவிட்டு “இந்த அண்ணா அடுத்த மாசம் நம்ம அரிசி ஆலைக்கு போயிடுவேன் முதல் சம்பளம் வாங்கியதும் உனக்கு கிப்ட் வாங்கித்தரேன்” என்றான் சிரித்தபடியே

“நீ அன்பா ஊட்டி விட்ட ஸ்வீட்டே போதும் அண்ணா” என்று குமரனின் கையை பிடித்துக்கொண்டாள்.

அலர்விழியோ “கங்கிராட்ஸ்டி” என்று தூரிகாவை அணைத்துக்கொண்டாள்.

அன்பரசியோ "ரெண்டு நாளு நம்ம வீட்ல தங்குடி அத்தை வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்” என்றார் ஆனந்தச் சிரிப்புடன்.

அவளோ தாய் வீட்டில் இருக்க தனக்கு ஒரு மணிநேரமே அவகாசம் கொடுத்திருக்கும் கணவனை எண்ணி கோபமே கொண்டாள்.

அவர்களிடம் சொல்லமுடியுமா நான் ஒரு மணிநேரம்தான் இருப்பேன் என்று தவித்துப்போனாள் பெண்ணவள்.

“கோதை அத்தை வரச்சொல்லியிருக்காங்க அத்தை அவர் பிரண்ட்டோட குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு பார்க்க போயிருக்காரு.
இப்போ வந்ததும் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாரு அத்தை. நான் அடுத்த வாரம் வந்து ரெண்டு நாள் தங்குறேன்” என்றாள் மெல்லிய சிரிப்புடனே!

அன்பரசியும் தூரிகாவின் சூழ்நிலையை புரிந்துக் கொண்டார். எப்போதும் எல்லாரும் ஒண்ணாசேர்ந்து ஆலமரம் போல வேராய் இருப்போமோ என்று பெரும்மூச்சுவிட்டார்.

ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை. பொன்வண்ணன் தூரிகாவிற்கு நான் வந்துட்டேன் என்று மெசேஜ் போட்டு விட்டான்.

மெசேஜை படித்து விட்டு “வரேன்” என்று மெசேஜ் போட்டு “நான் போயிட்டு வரேன்” என்று அங்கே நின்ற தன் குடும்பத்தை பார்த்து இதழ்கடித்தவளுக்கு கண்கள் கலங்கியது அவளுக்கு... குடும்பமே பதறிவிட்டனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 43

கோமதியும் நாச்சியும் தூரிகாவை அணைத்துக்கொண்டு “மாசமா இருக்கவ கண்ணுல தண்ணி வரக்கூடாது தங்கம்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்கள்.

ரதியோ கேபில் வந்து இறங்கியவள் பொன்வண்ணன் காரில் சாய்ந்து நின்றதை பார்த்து “அண்ணா ஏன் வெளியே நின்னுட்டீங்க? வீட்டுக்குள் வாங்க” என்று கூப்பிட “இல்லடா அம்மா தூரிகா அழைச்சிட்டு வரச்சொல்லியிருக்காங்க... அத்தைமாவும் மானசாவும் வெளியே கிளம்புறாங்களாம் பார்த்துட்டு கிளம்புறேன்னு சொன்னாங்க அதான்... இன்னொரு நாள் வரேன்டா” என்று அவள் கன்னத்தை தட்டினான்.

ரதியும் பொன்வண்ணன் ஏன் உள்ளே வராமல் நிற்கிறான் என்பது அவளுக்கும் தெரியும்தானே... மதிக்காத வீட்டுக்குள் எப்படி தன்மானத்தை விட்டு வரமுடியும் என்று விசனப்பட்டாள்.

“நீ டயர்டா இருக்க வீட்டுக்குள்ள போய் ப்ரஷ் ஆகு” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“ஓ.கே அண்ணா டேக் கேர்” என்று வீட்டுக்குள் சென்றாள்.

அங்கே பாசப்போராட்டதை கண்டு பெரும்மூச்சு விட்டு நம்மளும் நடிப்போம்.. இல்லைனா நம்ம வீட்டுக்காரர் என்னை கண்ணால எரிச்சுடுவாரு என்று கூறினாலும் இந்த குடும்பத்தின் பாச கூட்டில் நாமும் இல்லாது போய்விடுவோமா என்று பயம் அவளை கவ்விக்கொண்டது. கோட்டை டேபிள் மீது வைத்துவிட்டு "தூரிகா இப்போ எதுக்கு அழற..? நீ அழுதா பேபிக்குத்தான் கஷ்டம்!" என்று அவளை அணைத்துக்கொண்டாள்.

சிங்கமோ "அடடா இது என் பொண்டாட்டியா! இவளுக்கு இப்படி அன்பா பேசச் தெரியுமா" என்று ஆச்சயர்த்துடன் விழி விரித்து கையை கட்டிக்கொண்டு பார்த்திருந்தவனோ தூரிகாவின் பக்கம் சென்றவன் "உன் வீட்டுக்காரன் வெளியே ரொம்ப நேரமா கால் கடுக்க நிற்குறான்டா கிளம்பு... ரோஜாவை காக்கும் முள்ளு போல நான் உன்கூட இருப்பேன் அழாம கிளம்புடா தைரியமா இருக்கணும்" என்று தங்கையின் கையை பிடித்து வாசலுக்கு அழைத்து போனான். குடும்பமே தூரிகாவை வழியனுப்ப வந்தனர்.

பொன்வண்ணனுக்கு பெரியவர்களை பார்த்ததும் சங்கடம்தான் “முக்கியமானவங்களை பார்க்க போய்ட்டேன் இப்ப அத்தையம்மா தூரிகாவை பார்க்கணும்னு ஆசைப்படறாங்க நாங்க கிளம்புறோம்” என்று பெரியவர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டான்.

வீரய்யனும் ஐய்யனாரும் “உள்ளே வந்து ஒரு டம்ளர் டீ காபி குடிச்சிட்டு போகலாம்ல தம்பி” என்று மனம் கேளாமல் கேட்டுவிட்டனர்.

“இருக்கட்டும் மாமா அடுத்த முறை வரும்போது வரேன்” என்றவோ சின்ன சிரிப்புடன் காரில் ஏறினான்.

சிங்கமோ பொன்வண்ணன் கன்னத்தில் நாலு அறை விடணும் போல இருக்கு என்று மனதில் ஆத்திரப்பட்டாலும் தங்கைக்காக கை முஷ்டியை இறுக்கிக்கொண்டான்.

தூரிகாவோ கலங்கிய கண்களுடன் “போய்ட்டு வரேன்” என்று தலையை அசைத்தாள்.

குடும்பம் அனைவரும் ஆனந்த கண்ணீருடன்தான் தூரிகாவை அனுப்பிவைத்தனர்.

ரதியோ சிங்கத்தை பார்த்துக்கொண்டே உள்ளேச் சென்றாள். பெரியவர்களும் வீட்டுக்குள் வந்துவிட்டனர்.

ஐய்யனாரோ “தம்பி நாளக்கு எலக்சன் ரிசல்ட் வருதுபா நம்ம தொகுதியில நாம தான் வருவோம்... நம்ம கட்சி ஆளுங்களை அதிகமாக ஆட்டம் போடாம பார்த்துக்கோ... இப்போ ஆதிபெருமாளோட அவன் தங்கச்சி மீனாட்சியும் வந்திருக்கா அவ ஒரு குள்ளநரி தந்திரமா எல்லா வேலையும் பண்ணிடுவா... பார்த்து சூதானமா இருக்கணும்ப்பா... நீ தான் எந்த அசாம்பாவிதமும் நடக்காம பார்த்துக்கணும்” என்று மகனுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

“நான் பார்த்துக்குறேனுங்கப்பா” என்று தலையசைத்துவிட்டு அவனது அறைக்குள் சென்றான்.

ரதியோ குளித்துவிட்டு வந்து குர்தியை போட்டுக்கொண்டிருந்தவளுக்கு பின்னால் ஜிப் போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள்.

அறைக்குள் வரும்போது கதவை லேசாக ஒதுக்கி வைத்துவிட்டுதான் வந்திருந்தான் சிங்கம். சட்டென சிங்கத்தை திரும்பி பார்த்தவள் “ரொம்ப நேரமா ஜிப் போட முடியாம சிரமப்படறேன்... இதை போட்டு விடுங்க” என்று கணவன் முன்னே திறந்த புத்தகமாக நின்றாள் ரதிதேவி.

சிங்கத்து அவளை பார்த்ததும் மோகம் பீறிட்டு எல்லாம் எழவில்லை... அவள் மீது இன்னும் கோபம் இருக்கும் பட்சத்தில் அவளை தீண்டுவதற்கு அவன் கைகளை அணைப்போட்டு தான் வைத்திருந்தான். இப்போது அவள் அவனை திரி தூண்டி விட பார்த்தாள். சிங்கமும் உணர்ச்சி அடங்கிய ஆண்மகன்தானே... முற்றும் துறந்த முனிவன் இல்லையே. “இப்படி பின்னாடி ஜிப் இருக்கற ட்ரஸ் எதுக்கு போடுற?” என்று அவளை திட்டினாலும் ஜிப்பை போடும் நேரம் அவளை தொட்டு கொண்டாடியவனுக்கு அவளை கொண்டாட தோன்ற ஆண்மை பீறிட்டு கிளம்பியது.

சிங்கத்தின் கை அவளது முதுகில் பட்டதும் ஹக் என்று ஓசையுடன் இதழ் கடித்து நின்றாள். அவளது முதுகில் அவனின் மீசை பட்டதும் “மாம்ஸ்” என்று திரும்பினாள்...

இருவரது பார்வையும் காதலுடன் சேர்ந்து காமமாக மாறியது. அவனுக்கோ அவள் மீது கோபம் ஒருபக்கம் இருந்தாலும் அவளை இப்போது ஆள வேண்டும் அவனது நரம்புகள் எல்லாம் துடித்தது. அவனோ அவளை இறுக்கி அணைத்தான். உடையில் ஜிப் முழுவதும் போடாமல் இருக்க அவளது அழகுகள் அவன் கண்ணுக்கு விருந்தாக்கி அவனை பித்தாக்கியது. அவளது இதழை கவ்விக்கொண்டான். மேல் இதழ் கீழ் இதழ் என்று விடாமல் கவ்விச்சுவைத்தான். இருவரும் உமிழ்நீரை பரிமாறிக்கொண்டனர். இருவரும் சேர்ந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இருவரும் பஞ்சும் நெருப்பும் போல பக்கென்று பத்திக்கொண்டனர்.

அவளோ "மாமா கதவு திறந்து இருக்கு” என்று இதழ் கடித்து கண்ணை காட்டினாள் வேஷ்டியை மடித்துக்கொண்டு கதவை லாக் போட்டு வந்தவன் அவளது டாப்பிற்கு விடுதலை கொடுத்து மிச்ச சொச்ச ஆடைகளுக்கும் விடுப்பு கொடுத்து அவள் மீது பாய்ந்து விட்டான். அவளோ “மெதுவா” என்று முணக “நான் சிங்கம்டி இப்படிதான் பாய்வேன் தாங்கிக்கோ” என்று அவளது கழுத்தில் பற்தடம் பதிய வைத்தான்.

பெண்ணவளின் அங்கங்களை தன் இதழ்கொண்டு சிவக்க வைத்தான். இருவரும் வியர்வையில் குளித்தனர். அவனது வெற்று மார்பை அவள் இன்னுமும் தொட்டு பார்த்ததில்லை. ஏதும் சொல்லிவிடுவானோ என்ற பயம் அவளுக்கு. இப்போது தொட்டுபார்த்தால் என்ன என்று அவனது கேடயமார்பை தொட்டு தடவினாள். அவனோ அவளது தொடுதலை பார்த்து சிரித்தவன் “எப்படி இருக்கு” என்று புருவம் தூக்கி சிரித்தான்.

“கல்லு மாதிரி இருக்கு” என்றாள் அவனது நெஞ்சின் சுருள் முடியை தடவிக்கொண்டே “உன் கிட்ட எல்லாம் பஞ்சு மெத்தை போல இருக்கே!” என்று ரெட்டை அர்த்தத்தில் பேசியவனின் கைகள் அவளது நாபியில் கோலம் போட்டது. “போதுமே தூக்கம் வருது” என்றவளின் கால்களில் கிடுக்கு பிடி போட்டு விலக முடியாதபடி "இன்னும் வேணும்டி” என்றவன் அவளது இதழில் ஆழப்புதைந்திருந்தான்.

அவள் மேனியில் அவன் கைகள் செய்த மாயாஜாலத்தில் அவள் கண்மூடி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். பெண்மையை ஆண்மை வென்றதா இல்லை ஆண்மையை பெண்மை வென்றதா என்று வகுக்க முடியாத அளவு இருவருமே ஒருவரில் ஒருவர் இணைந்திருந்தனர்.

பெண்ணவளின் வாசத்தை உணர்ந்துக் கொண்டே இருந்தான். அவளது சிவந்த மேனியை இன்னும் சிவப்பாக்கினான். அவளின் இதழில் தேனியாக மாறி தேன் அருந்திக்கொண்டே இருந்தான். பொக்கிஷங்களை கொள்ளையடித்துக்கொண்டேயிருந்தான் கள்ளன்.

“பெயினிங் லயன் மாமா” என்றாள் மோகன குரலில் அவனோ “ம்ஹீம்” என்று தலையை அசைத்து சிறு பிள்ளையாய் மாறினான் சிங்கம்.

அவளோ அவனது கோபம் தீர்ந்துவிட்டது என்று அவனது குறும்பு தொல்லைகளை எல்லாம் தாங்கி ஆனந்தம் கொண்டு அவனை அணைத்தபடியே உறங்கினாள்.

தூரிகாவோ பொன்வண்ணனிடம் பேசாமலே இருந்தாள். “ஓய் பொண்டாட்டி என்னடி என்மேல கோபமா” என்று அவளைச் சீண்டினான்.

“உங்க மேல எனக்கு கோபம் இல்லை... எங்க வீட்டுல ஒரு மணிநேரம் இருக்க வச்சதுக்கு தேங்க்ஸ்” என்று ஒட்டுதல் இல்லாமல் பேசினாள்.

“இன்னிக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டி... இந்த மூடை ஸ்பாயில் பண்ணாதே” என்று காரை ஓட்டியபடியே அவளது கையை இறுக்கமாக பற்றினான். அவளோ அவனது தோளில் சாய்ந்து “ஒரு நிமிசம் அம்மா வீட்டுக்குள்ள வந்திருக்கலாம் நீங்க” என்று அங்கலாய்ப்பாய் சொல்லவும் “உன் அண்ணனும் என்கிட்ட ஒரு தடவை வாங்க மாப்பிள்ளைனு சிரிச்சாப்ல சொல்லியிருந்தா நல்லாயிருக்கும் பாப்பா” என்று இதழ் வளைப்பு சிரிப்புடன்.

“உன் கூட மல்லு கட்ட முடியாது போடா” என்று அவனது தோளில் செல்லமாக அடித்தாள்.

“என் கூட மல்லுக்கட்ட போய்தான் உன் வயித்துல நம்ம பாப்பா வளருது” என்று தூரிகாவை கிண்டல் செய்தான். வீடு வந்து விட கோதையோ ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார்.

காரிலிருந்து கொஞ்சம் வேகமாக இறங்கியவளை பார்த்து “மெதுவா இறங்கு தூரிகா” என்று அங்கே வந்து அவளது கையை பிடித்தார் மீனாட்சி.

கோதைக்கோ மனதிற்குள் நெருப்பு எரிவது போல இருந்தது. இவ எதுக்கு இந்த நாடகம் போடுறாளோ தெரியலையே என் மருமகளை என் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும் என்று பெரும்மூச்சு விட்டார்.

“கோதை ஆரத்தி எடு என் பொண்ணுக்கு” என்று உரிமையாக பேசினார். பொன்வண்ணனோ அத்தையம்மாவுக்கு தூரிகாவை பிடிச்சு இருக்கு என்று சந்தோசப்பட்டு பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து வைத்து சிரிப்புடன் நின்றிந்தான்.

மகனையும் மருமகளையும் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க இருவரும் உள்ளே வந்தனர். மானசாவோ தூரிகாவை உரித்து தின்பது போல எரிக்கும் பார்வையில் பார்த்தாள். இந்த குழந்தை உன் வயித்துல எப்படி வளருது பார்க்குறேன்டி என்று கெட்ட எண்ணத்தோடு புகைந்தாள் மானசா.

கோதையோ தூரிகாவிற்கு பிடித்த பனியாரமும் கார சட்னியும், ஆனியன் ரோஸ்ட், அடை தோசை, தேங்காய் சட்னி, ஹல்வாவும் செய்திருந்தார். "பனியாரம் வைச்சுக்கோ... ரோஸ்ட் போட்டுக்கோ" என்று மருமகளுக்கு பார்த்து பார்த்து கவனித்தார் கோதை. மானசாவோ தூரிகாவை முறைத்தபடியே மீனாட்சியை பார்த்தார்.

மீனாட்சியோ “சிரிச்சாப்புல இரு” என்று சைகை காண்பித்தார்.

கஷ்டப்பட்டு சிரித்தாற் போல இருந்தாள் மானசா.

தூரிகாவோ ஒரு வாய் பணியாரத்தை கொஞ்சமாய் சாப்பிட்டவளுக்கு குமட்டிக்கொண்டு வரவ வாஷ் பேஷனுக்கு ஓடினாள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பொன்வண்ணன் அவள் பின்னால் ஓடினான்.

மானசாவோ இங்கு நடப்பதை பார்த்து பிடிக்காமல் வேகமாய் சாப்பிட்டு எழுந்துச் சென்றுவிட்டாள்.

மீனாட்சியோ 'இல்லாத போகப்போற குழந்தைக்கு இத்தனை கவனிப்பா?' என்று ஏளனச்சிரிப்பு சிரித்தார்.

தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளிக்க சொல்லியவனோ பின்னால் வந்த கோதையிடம் “ம்மா மாதுளை ஜுஸ் போட்டு ரூமுக்கு கொண்டு வாங்க” என்று அவளை கைதாங்கலாக அறைக்கு கூட்டிச்சென்றான் பொன்வண்ணன்.

பொன்வண்ணன் அறைக் கதவை தட்டிச் சென்ற மீனாட்சியோ சோர்ந்து உட்கார்ந்திருக்கும் தூரிகாவின் பக்கம் நின்று “மூணுமாசம் இப்படித்தான் வாமிட் இருக்கும். நீ வேணா இன்டன்ஷிப் கட் பண்ணிடு... குழந்தை பிறந்ததும் படிச்சிக்கலாம்” என்று நாசுக்காய் பேசவும் “இல்ல சித்தி நான் மேனேஜ் பண்ணிப்பேன் இவரு ஹெல்ப பண்ணுவாரு” என்றாள் மெல்லிய குரலில்.

“அத்தைம்மா நாம எல்லாம் இருக்கும்போது அவ ஏன் படிப்பை நிறுத்தணும். எல்லாரும் சேர்ந்து பார்த்துப்போம் அவ படிக்கற வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்றிருந்தான் மென்மையாக.

மீனாட்சியோ பொண்டாட்டியை ஒண்ணு சொல்ல விடமாட்டேன்கிறானே! நான் வளர்த்த மகனா இவன்... அப்படியே கோதையோட குணம் இருக்கு இவனுக்கு என்று அங்கலாய்த்தவரோ “இல்லப்பா புள்ள சிரமப்படுவாளேனுதான் சொன்னேன்” என்று சமாளித்தார் மீனாட்சி.

கோதை ஜுஸ் கொண்டுவந்து கொடுக்க ஜுஸ் மட்டும் தூரிகா வயிற்றில் தங்கிக்கொண்டது. “டயர்டா இருக்கு அத்தை நான் படுக்குறேன்” என்று படுத்துவிட்டாள் தூரிகா.

கோதையோ “தூரிகா மறுபடியும் வாமிட் எடுத்தானா எனக்கு ஒரு போன் போடு வண்ணா நான் வந்திடறேன்” என்றார் அக்கறையோடு.

“ம்மா உங்க மகன் டாக்டர்னு அடிக்கடி மறந்துடறீங்க” என்று நகைத்தான் பொன்வண்ணன்.

“மருமகள் கஷ்டப்படும்போது நான் பக்கம் இருக்கணும்டா” என்று செல்லமாக மகனின் தோளில் அடித்தார்.

“ம்மா உங்க மருமக ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவுடன் “எங்களை மறைமுக போகச் சொல்லுற” என்று மீனாட்சியோ சிரித்தபடியே சென்றார். ஆனால் உள்ளுக்குள் அனலாக கொதித்தார் மீனாட்சி.

கோதையும் வெளியே வந்ததும் அறைக்கதவை லாக்பண்ணிவிட்டு தூரிகாவை மெதுவாய் அணைத்தபடி படுத்துக்கொண்டான்.

தூரிகாவோ “இப்படி படுக்க ஒரு மாதிரி தலை சுத்தலா இருக்குங்க உங்க மடியில படுத்துக்கவா?” என்று சோர்ந்து போய் பேசியவளை தாயாய் மாறி மடியில் படுக்க வைத்துக்கொண்டு தலையை வருடிக்கொடுத்து “வாமிட் வரும்னு நினைக்காதேடி” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“ம்ம்” என்றபடியே அவனது வருடலில் அப்படியே உறங்கிப்போனாள் தூரிகா.

ரதி காலையில் எழும்போது கைகளால் கணவனை தேடினாள். குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டு ‘ஓ சிங்கம் குளிக்கறாருப்பா’ என்று பெரும்மூச்சு விட்டவள் விரித்து கிடந்த கூந்தலை கொண்டை போட்டுக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு எழும்ப குளியலறைக் கதவு திறக்கும் சத்தத்தில் கட்டிலிலிருந்து இறங்கி “குட்மார்னிங்” என்றபடியே இதழ் முழுக்க சிரிப்புடன் அவனருகே போக அவனோ கஞ்சிக்கு சட்டை போட்டது போல முகத்தை இறுக்கி வைத்துக்கொண்டு அவளை பாராதுச் சென்றான்.

‘மறுபடியும் முருங்கை மரம் ஏறியாச்சா. நைட் மட்டும் கொஞ்சி கொஞ்சி முத்தம் கொடுத்து அவர் வேலைய பண்ணிடுறாரு இப்போ சண்டைக்காரன் போல போறது பாரு இருடா குளிச்சிட்டு வரேன்’ என்று குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

குளித்து வந்தவள் புடவையை கட்டிக்கொண்டு பால்கனிக்கு வந்தவள் ஈரமுடியை காயவைத்துக் கொண்டு தோட்டத்தை நோட்டமிட்டாள். ஐய்யனார் நாற்காலியில் உட்கார்ந்திருக்க சிங்கத்திடம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். கட்சி ஆட்கள் வெள்ளை சட்டையுடன் ஐய்யனார் பேசுவதை கையை கட்டிக்கேட்டுக்கொண்டிருந்தனர்.

என்னது இவ்ளோ ஆட்கள் நிற்குறாங்களே என்னவாயிருக்கும் என்று புருவம் சுளித்து யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு ஆதிபெருமாள் போன் செய்தார்.

“ப்பா என்ன காலையில போன் பண்ணியிருக்கீங்க முக்கியமான விசயமா?” என்று யாரும் வந்துவிடுவார்கலென பால்கனி கதவை லாக் செய்தாள்.

“இன்னிக்கு எலக்சன் ரிசல்ட்மா சாய்ந்திரம் யாரு ஜெயிச்சாங்கனு தெரிஞ்சுடும். உன் மாமனார்தான் இந்த தொகுதியில ஜெயிப்பான்... அதனால நான் அவனை போட்டுத்தள்ளலாம்னு இருக்கேன்” என்றதும் ஷாக் ஆகிவிட்டாள் ரதி.

“ப்பா என்ன சொல்றீங்க இதெல்லாம் வேணாம்பா... சிங்கம் கோபப்பட்டு உங்களை ஏதும் பண்ணிடுவாரு” என்று நாசுக்காக பேசினாள்.

“நீ சும்மா இருமா! நான் ஐய்யனார் இடத்திற்கு வரணும்னா அவனை போட்டுத்தள்ளணும் அவனுக்கு அடுத்த இடத்துல நான் இருக்கேன் அவன் இல்லாம போனா அடுத்த போஸ்ட் எனக்குத்தான்” என்றார் கொந்தளிப்பாக.

“அப்பா இது தப்புங்கப்பா” என்றாள் மனது கேட்காமல்.

ஆதிபெருமாளிடம் போனை வாங்கிய மீனாட்சியோ “ஏது புது சொந்தம் பக்கம் சாய்ந்துட்ட போல... ஐய்யனார் எனக்கு செய்த கொடுமையை பத்தி உனக்கு தெரியுமா..? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ” ஆதிபெருமாளிடமிருந்து தள்ளி நின்று "ஐய்யனார் என்னை காதலிச்சு ஏமாத்திட்டு அவனோட அத்தை மகள் கோமதியை சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஐய்யனார்... இன்னும் நிறைய கதை இருக்கு. ஐய்யனார் புலித்தோல் போர்த்திய பசு... அவனை நம்பிவிடாதே...நான் கல்யாணம் பண்ணாம இருக்க காரணமே அந்த ஐய்யனார்தான்!! இப்ப சொல்லு அந்த ஐய்யனார் சாகணும் தானே சொல்லுடி" என்றார் பொய் அழுகாச்சியுடன்.

அவளோ “என்னமோ பண்ணுங்க அத்தை எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என்ன இருந்தாலும் உயிரை கொல்லக்கூடாது” என்றாள் தவிப்பாக ரதி.

“அப்போ என்னோட வாழ்க்கையை கெடுத்த பாவிக்கு தண்டனை கொடுக்கக்கூடாதுனு சொல்றியா தேவிமா” என்றார் தழுதழுத்த குரலுடன்.

“உங்களுக்கு என்ன நியாயமா படுதோ அதை செய்ங்க அத்தை” என்றுபோனை வைக்கப்போனவளை “இரு தேவிமா நீ கட்சி ஆபிஸ் பக்கம் போகக்கூடாது சரியா அங்க என்னவேணாலும் நடக்கலாம்” என்று எச்சரிக்கை செய்து போனை வைத்திருந்தார் மீனாட்சி.

என் வீட்டுக்காரர் சிங்கத்தை மீறி உங்களால ஐய்யனார் மாமா மெல்ல கை வைக்க முடியாது என்று விரத்தியாக சிரித்த ரதிக்கோ ரதிக்கோ மனதே கேட்கவில்லை. ஒரு வேளை ஐய்யனார் மாமா அத்தைக்கு துரோகம் பண்ணியிருப்பாரா... பொண்ணுங்களை தெய்வமா பார்ப்பவர் எப்படி அத்தையம்மா பொய் சொல்லமாட்டாங்க... யாரை நம்புவது என்று குழம்பியவளுக்கு மயக்கம் வருவது போல இருக்க தலையை பிடித்துக் கொண்டு அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்துவிட்டாள். அவள் மனது கடல் அலை போல ஆர்ப்பரித்தது. மெல்ல எழுந்தவளோ கதவை திறந்து போக கோமதி காபியுடன் நின்றிருந்தார்

“என்ன கண்ணு அசதியா தூங்கிட்டியா..? காணோம்னு காபி எடுத்துட்டு வந்தேன்.. உன் முகமே சரியில்லையே கண்ணு என்னாச்சு சிங்கம் உன்கிட்ட சண்டை போட்டானா?" என்று அவளை பார்த்து ஆதுரமாய் கேட்டார்.

“இல்ல அத்தை காலையிலிருந்து தலை சுத்தலா இருக்கு” என்று சோபாவில் அமர்ந்தார். நாச்சியோ ரதியின் அறைக்குள் வந்தவர் ‘தலைசுத்தலா இருக்கு’ என்று ரதியின் பேச்சை கேட்டு “என்னது தலைசுத்தலா இருக்கா... பிரசவம் பார்க்குற டாக்டர் நீ உன் உடம்பை பார்த்துக்கறது இல்லையா” என்று அவளது கையை பிடித்து நாடி பார்த்தவர் “வீட்டுக்கு தூரம் இந்த மாசம் ஆகலைதானே.. தூரம் ஆனா என்னோட அறைக்கு வந்து படுத்துப்ப இந்த வாரம் நீ வரலையே கண்ணு.. ஆண்பேத்தியும் பொண்ணு பேத்தி ரெண்டு பேரும் ஒரே நேரத்துல மசக்கையானது சந்தோசம்” என்று ரதிக்கு நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தார் நாச்சி.
 
Status
Not open for further replies.
Top