ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவனுக்கோ அவள் மடிவேண்டும் மாத்திரை வேண்டாம் என்பது போல தோன்றியது. “என்னங்க எழும்புங்க” என்றாள். அவனோ எழவே பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தான்.

மெடிக்கல் கிட் பாக்ஸை எடுத்தவள் காய்ச்சல் மாத்திரையை தேடினாள். "இங்க கொண்டு வா" என்று தலையை அசைத்தான்.

அவளும் அவன் கையில் கொடுக்க காய்ச்ச்ல் மாத்திரையை எடுத்தான். அவளோ சுடு தண்ணீரை கொடுக்க அவனோ மாத்திரையை முகம் சுளித்து பார்த்தவன் மாத்திரை போட்டு அடுத்த நிமிடம் வாந்தி எடுத்திருந்தான்.

"அத்தான்" என்று பதறியவள் அவன் எடுத்த வாந்தியை கையில் ஏந்திக்கொண்டாள். "ஏய் வாஷ் பண்ணிட்டு வா இன்பெக்ஷன் ஆகிடும்" என்றான் முடியாமல் இருந்த நிலையிலும்.

“நீங்க வாந்தி எடுக்கறதை நான் வேடிக்கை பார்த்திட்டிருக்கணுமா... நீங்க என்னோட புருசன்ங்க... நான் பார்க்காம யாரு பார்ப்பாங்க” என்றாள் உரிமையாகவும் ஆற்றாமையாக அவளது கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது.

தனக்கு உடம்பு முடியவில்லையென்றது தனக்காக துடிக்கின்ற மனைவியை கண்டவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை அவளை அப்படியே அணைத்துக்கொண்டான் காமத்துடன் அல்ல பாசத்திற்கு ஏங்கியவனாக.

அவளுமே அவனை அணைத்துக்கொண்டாள் தாரமாகத்தான். அவனது உடல் சூடு அவளுக்கு தாங்க முடியவில்லை. "அத்தான்" என்றாள் மெல்லிய குரலில்.

அப்போதுதான் நினைவு வந்தவனாக "சா.சாரி விழி இதுபோல என்னை யாரும் கவனிச்சதில்லை... அதான் உணர்ச்சி வசப்பட்டு ஹக் பண்ணிட்டேன்" என்றான் அவளது விழிகளை பார்க்காமலேயே!

“நான் உங்க பொண்டாட்டிதானே தொட்டா தப்பில்ல” என்றவளோ அவன் முகம் பார்க்காமல் குளியலறைக்குள் நுழைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு பக்கெட்டில் சுடுதண்ணீரை எடுத்துக்கொண்டு கௌதமின் பக்கம் வந்தவள் "பனியனை கழட்டுங்க சுத்தம் பண்ணிவிடறேன்" துணியை தண்ணீரில் நனைத்தாள். அவனோ “நான் வாஷ்ரும் போய் க்ளீன் பண்ணிட்டு வரேன்” என்று எழுந்தவன் தடுமாறினான்.

“இதுக்குத்தான் சொன்னேன் நானே க்ளீன் பண்ணுறேன்னு... ஏன் நான் உங்க உடம்பை தொடக்கூடாதா?” என்றாள் சற்று கோபக்குரலுடன்.

அவனுக்கு உடம்பு முடியவில்லை... இல்லைனா தொட்டுப்பார்னு பனியனை கழட்டி காட்டியிருப்பான். “இல்ல வேண்டாம் விழி" என்றான் தயங்கிய படி.

“ம்ப்ச்” என்று சலித்தவள் தானாகவே கௌதம் மேனியை தொட்டு அவன் போட்டிருந்த பனியனை கழட்டிவிட்டாள். அவனுக்கோ வெற்று மேனியாக இருக்க ஒரு மாதிரி இருந்தது. அவளோ எதையும் அலட்டிக்கொள்ளாமல் ஈரத்துணியால் அவனது மேனியை துடைத்துவிட்டு கபோர்டிலிருந்த பனியனை எடுத்து போட்டு விட்டாள்.

குளியலறைக்குள் சென்று பக்கெட்டை வைத்துவிட்டு வந்தவள் அவனுக்கு குடிக்க சுடுதண்ணீரை கொடுத்து விட்டு பொன்வண்ணனுக்கு போன் பண்ணினாள்.

“இன்னும் ஹாப்னவர்ல வந்துருவேன்டா” என்றிருந்தான்.

கௌதமோ தாய்மடியே கண்டிராத குழந்தைக்கு ஊஞ்சல் கிடைத்தது போல கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாது உறங்கிக்கொண்டிருந்தான்.

உறங்கும் கணவனை உற்று நோக்கினாள்... அவனது சிகை காற்றில் அசைய தலை முடியை கோதிவிட்டவளுக்கு மெல்லிய சிலிர்ப்பு... தாரமாக உணரத்தொடங்கினாள். அலர்விழியை விட கௌதம் நிறம் கூடவே! அவனது முகத்தில் பாசத்துக்கு ஏங்குவது அப்பட்டமாகவே தெரியும்... அவளும் மனைவியாக நடக்கவில்லையே தவிர... மற்ற கணவன் மனைவிக்கு செய்யவேண்டியதெல்லாம் செய்துக் கொண்டுதான் இருந்தாள். இருவரும் கட்டியணைக்கவில்லை.

முத்தம்கொடுத்துக்கொள்ளவில்லைதான்... ஆனால் கௌதமிற்கு சாதாரண காய்ச்சல் வந்தால் கூட தன்னால் தாங்க முடியவில்லையே! அப்போ என் கணவன்மேல் காதல் வந்துவிட்டதா! இல்லை மஞ்சள் கயிறு மேஜிக்கா என்று தனக்குள் பலமுறை கேட்டுக்கொண்டாள்.

பொன்வண்ணனோ வீட்டுக்குள் வந்தவன் “கௌதம்” என்று கதவை தட்டினான். இப்போது தான் எழுந்தால் கௌதமின் தூக்கம கலைந்துவிடுமே என்று கவலைப்பட்ட அலர்விழியோ அறையிலிருந்தவாறே “அண்ணா உள்ளே வாங்க” என்றிருந்தாள். ஆனால் அண்ணன் முன்னே கௌதமை தன் மடியில் படுக்க வைத்திருப்பது சங்கடம்தான் என்ன செய்வது கணவனின் தூக்கம் கெடவும் கூடாது என்று எண்ணிவிட்டாள்.

கௌதமோ அலர்விழியின் அறைக்கதவை நாக் செய்து விட்டுதான் உள்ளே நுழைந்தான். “என்னம்மா உன்புருசனுக்கு உடம்பு சரியில்லைனு போன் பண்ணின... அவன் ஜாலியா உன் மடியில படுத்துத் தூங்கிட்டு இருக்கான்" என்று கிண்டல் செய்தவாறே அங்கிருந்த நாற்காலியை எடுத்து
அலர்விழியின் பக்கம் போட்டு அமர்ந்தான்.

கௌதமோ காய்ச்சலின் பிடியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். “அண்ணா நீங்க வேற இவரு உடம்பு அனலா கொதிக்குது தொட்டு பாருங்க” என்றாள் வருத்தமாக லேசாக கண்களும் கலங்கியது.

“அட உன்புருசனுக்கு சாதாரண காய்ச்சல்தான்மா இதுக்குபோய் கண் கலங்கிகிட்டு” என்று தங்கையின் தோளை தொட்டு ஆறுதல் கூறியவன் கௌதம்க்கு ஃபீவர் செக் பண்ணியவன் "ஃபீவர் 101° இருக்கு இன்ஜக்சன் போட்டு விடறேன்மா... ஈவ்னிங் சரியாகிடுவான் மதியமும் கஞ்சி போட்டு கொடுத்துட்டு நான் கொடுக்கற மாத்திரையை கொடுத்துடு” என்றவனோ அலர்விழியின் மடியில் படுத்திருந்தவனுக்கு இடுப்பில் இன்ஜக்சனை போட “ஆஆ” என்று வலியில் அலறி கண்விழித்து எழுந்தவன் இன்ஜக்சன் போட்டு முடித்திருந்த பொன்வண்ணனை பார்த்து “ஏன் டா இன்ஜக்சன் போட்ட?” என்ற விதத்தில் முறைத்தான்.

“உன் புருசன் டாக்டர்க்கு எதுக்கு படிச்சான்னு தெரியல அலர்விழி... ஊசி மாத்திரைனா எட்டு ஊரு தாண்டி ஓடுவான்... நல்ல வேளை தூங்கும்போது போட்டு விட்டேன்... படிக்கும் காலத்திலேயே ஊசி மாத்திரை போடுடானா ஒருவாரம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லனு படுத்திருப்பான் உன் புருசன்” என்று வாய்விட்டு சத்தமாக சிரித்தான்.

“டேய் எனக்கு உடம்புக்கு முடியாம இருக்கு... இல்ல உன் மண்டையில நங்குனு கொட்டு வச்சிருப்பேன்” என்று ஊசி போட்ட இடத்தை தேய்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணே இருங்க காபி போட்டுக் கொண்டு வரேன்” என்று எழுந்தவளை 'ஏன் டி என்னை விட்டு போற இவனுக்கு இப்போ காபி ஒரு குறைச்சலா..? நானே என் பொண்டாட்டி மடியில படுத்துக்க ஆசைப்பட்டு கிடக்கேன் நடுவுல சிவ பூஜை கரடி போல வந்துட்டான் ஊசி போடுறேனு' என்று மனதிற்குள் வசைபாடிக்கொண்டிருந்தான் கௌதம்.

கௌதமின் முக பாவனையை கண்டுபிடித்தவன் “நான் கிளம்புறேன் இன்னொருநாள் வந்து சாப்பாடே சாப்பிடுறேன் அலரு” என்றவனோ “கௌதம் மாத்திரை போட்டுட்டு உன் பொண்டாட்டி மடியில படுத்து தூக்கத்தை கன்டினியூ பண்ணு” என்று சிரித்தவனை அடிக்க கையை ஓங்கினான் கௌதம்.

“நான் எஸ்கேப்” என்று பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டான் பொன்வண்ணன்.

அலர்விழியோ கௌதமின் கழுத்தில் கை வைத்துப்பார்த்தாள் முகத்தில் பதைப்பதைப்புடன்தான்.

அவளது கையை பிடித்து நெஞ்சில் வைத்தவன் “இந்த பாசம், அன்பு இத்தனை நாள் எனக்கு கிடைக்காம இருந்துச்சு விழி இப்போ உன் மூலமா எனக்கு கிடைச்சிருக்கு நான் ரொம்ப லக்கி பர்சன்" என்றவனோ விழியின் மடியில் படுத்துக்கொண்டான். அவளும் அவனது சிகை கோதினாள். மனைவியின் மயிலிறகு ஸ்பரிசத்தில் கண்களை மூடிப்படுத்துக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். மாலையும் ஆனது அலர்விழியும் அப்படியே அயர்ந்திருந்தாள்.

அன்பரசி வீட்டுக்கு வந்தவர் மகளின் அறைக்கதவு திறந்திருப்பதை கண்டு மெதுவாய் எட்டிப்பார்த்தவர் மகள் மடியில் மருமகன் படுத்திருப்பதை பார்த்து ‘அச்சோ விவஸ்தை இல்லாம அறைக்குள்ள வந்திட்டோமே’ என்று சங்கடப்பட்டு வெளியே வந்தவர் தாரகை காலேஜிலிருந்த வர நேரம் ஆகியிருக்க அறைக்கதவை வெளியே தாள்போட்டு விட்டுச் சென்றார்.

முதலில் கண்விழித்ததும் கௌதம்தான்... சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான் நான்கை காட்டியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக மனைவியின் மடியில் படுத்திருக்கிறான். பாவம் என் விழி என மனைவியின் மீது பரிதாபம் கொண்டவன் தலைநிமிர்த்தி தன்னவளை பார்த்தான் அவளோ கட்டிலின் ஓரம் சாய்ந்து கண் அயர்ந்திருந்தாள். அவனுக்கும் காய்ச்சல் சரியாகியிருந்தது. மனைவியின் முழு நிலா முகத்தையே காதல் கொண்டவனாய் பார்த்துக்கொண்டேயிருந்தான். அவளது கருவிழி அசைய கண்களை மூடிக்கொண்டான் கள்வனாய்.

கண்விழித்தவளுக்கு 'இன்னும் தூங்குறாரே காலையில குடிச்ச கஞ்சியும் வாமிட் எடுத்துட்டாரு... இப்போ ஹார்லிக்ஸ் சத்துமாவு கஞ்சி ஏதாவது கொடுக்கலாம் எப்படி எழும்பறது?' என்று யோசனையுடனே கௌதமின் கழுத்தை தொட்டுப்பார்த்தாள். காய்ச்சல் குறைந்திருந்தது. அவன் முகத்தை பார்க்க அவன் விழிகள் அசைவது கண்டு திருடா தூங்காமதான் இருக்காரா என்று மூக்கை சுருக்கியவள் “என்னங்க கொஞ்சம் எழும்புறீங்களா நீங்க தூங்காமதான் இருக்கீங்கனு தெரியும்” என்று கணவனின் காதை பிடித்து லேசாய் திருகினாள்.

“ஏய் விழி அத்தான்னு கூப்பிடமாட்டீயா..? காலையில அத்தான் அத்தான் கூப்பிட்டுக்கிட்டே இருந்த என் காதுல தேன் பாய்றது போல இருந்துச்சுடி” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“அ.அது உ.உங்களுக்கு உடம்பு முடியலலை... அது எ...ப்படியோ கூப்பிட்டேன்” என்றவளுக்கு வெட்கச் சிவப்பில் கன்னம் செவ்வரியோடியது.

“உன்னோட வெட்கம் அழாகயிருக்கு... இன்னொரு முறை காய்ச்சல் வந்தா நல்லாயிருக்கும்" என்றான் சலிப்பான குரல் வந்தது அவனிமிடருந்து.

“ஏன் இப்படி பேசுறீங்க?” என்று அவள் படபடத்தாள்.

“ம்ம் இப்படி உன் மடியில படுக்க வாய்ப்பு இனி எப்போ கிடைக்குமோ?” என்று ஏக்கமாக வந்தது அவனது குரல்.

“உ.உங்களை என் மடியில படுக்க வேணாம்னு சொன்னேனா!” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவனுக்கு காய்ச்சல் இருந்த சுவடே தெரியவில்லை. எழுந்து உட்கார்ந்தவன் “நிஜமா எப்பவும் உன் மடியில் படுத்துக்க இடம் கொடுப்பியா?” என்றான் ஏழை குழந்தைக்கு கைநிறைய தீபாவளி பட்டாசு கிடைத்து போல.

“எப்பவும் இடம் உண்டு அத்தான்” என்றவளோ இதழ் கடித்தாள்.

“இந்த வெட்கம் எனக்கு என்ன சொல்லுதுனு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

"நாம வாழ்க்கையோட அடுத்த பகுதிக்கு போகலாம்னு சொல்லுது" என்றாள் மெல்லிய குரலில் தலையை குனிந்துக் கொண்டு.

“என்னை எப்போ இருந்து பிடிச்சது விழி டார்லிங்” அவளது பதிலை அறிய ஆசைப்பட்டான்.

“அ.அது. வ.வந்து நீங்க நான் எங்கவீட்டுக்கு வரணும்னு சொன்னதும் மறுபேச்சு சொல்லாம என்கூட கிளம்பி வந்துட்டீங்க... வேற யாராக இருந்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிக்க மாட்டாங்க... ஆனா நீங்க அப்பா, அம்மா, தாரகை கூட ப்ரண்ட்லியா பேசுறீங்க. ரெண்டு நாள் முன்னாடி நாலுபேரும் வாசல்ல உட்கார்ந்து அரட்டைக்கச்சேரி... என்னை கூட வானு யாரும் கூப்பிடலை... ஆக மொத்தம் எங்க வீட்டுக்கு மூத்த மருமகனா இல்லாம மூத்த மகனா வந்திருக்கீங்க... கல்யாணம் ஆன நாளிலிருந்து ஒருநாள் என்கிட்ட பொண்டாட்டினு உரிமை எடுத்துக்கல... நான் சிங்கம் மாமாவை லவ் பண்ணினேன்னு தெரிஞ்சும் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... இதே மத்தவங்க யாராவது கல்யாணம் பண்ணியிருந்தா... என்னை சிங்கம் மாமாவை லவ் பண்ணினதானேனு ஒவ்வொரு நாளும் என்னை ஏச்சு பேச்சுக்கு ஆளாக்கி கேள்வி கேட்டிருப்பாங்க... அப்பாவுக்கு கையில சின்ன பிராக்சர்னாலும் நீங்க கேர் எடுத்து அப்பாவை பார்த்துக்கிட்ட விதம்... தாரகைக்கு தினமும் எதாவது வாங்கிட்டு வந்து கொடுக்குறீங்க இதை விட எனக்கு என்ன வேணும் அத்தான்... இனிமேலும் நான் உங்களை காக்க வச்சா கடவுள் கூட என்னை மன்னிக்கமாட்டாரு... உங்களை மனசார என் புருசனா ஏத்துக்கிட்டேன் போதுமா!” என்றாள் அவனது கண்களை பார்த்துக்கொண்டே காதல் ததும்பும் விழிகளுடன்.

கௌதமிற்கு அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதை பனிச்சாரலில் நனைய வைத்துக்கொண்டிருந்தது.

“அப்போ எப்ப என்கிட்ட ஐ லவ்யு சொல்லப்போற?” என்றான் புதுக்காதலன் போல கீழ் இதழை மடக்கி கடித்து.

“ம்ம் இன்னேரம் வரை உங்களை லவ் பண்ணுறேன்னு சொல்லாம சொல்லியிருக்கேன்!” என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.

“ஐ.லவ்.யுனு உன் வாயால கேட்கறபோல இருக்காது விழி சொல்லேன்” என்றான் அப்பாவி போல கொஞ்சி கெஞ்சினான் கௌதம்.

கணவனை விட்டு ஒரு அடி தள்ளி நகர்ந்தவள் “ஐ.ஐ... லவ்யு அத்தான்” என்று கட்டிலிலிருந்து புள்ளிமானாய் துள்ளிக்குதித்து ஓடினாள்.

கல்லூரியிருந்து வந்த தாரகையோ அக்கா ரூம் வெளியே லாக் போட்டு இருக்கு என்று லாக் எடுத்து விட்டு கொண்டிருந்தாள்..


"ஏய் தாரு அக்கா ரூம் கதவை திறக்காதே அவ ரெஸ்ட் எடுக்குறா " என்றவாரே சமையல் கட்டுக்கு சென்று விட்டார் அன்பரசி.

தாரகையோ நீங்க என்ன சொல்றதுமா நான் கதவு திறந்து விட்டு தான் போவேன் கதவை திறந்து விட்டு ஓடியிருந்தாள்.

“ஏய் விழி நில்லுடி” என்றவனின் குரல் காற்றில் கலந்து போனது. இருவரின் காதல் மொட்டு விட்டு அரும்பாக மலரத்தொடங்கியது. மகரந்த சேர்க்கைக்கும் நாள் பக்கம் வந்து விட்டது என்று இருவரும் அறியவில்லை.

“பண்ணைவீட்டுக்குச் சென்றதும் உன் கையால மணமணக்க மீன் குழம்பு வச்சு தரணும்” என்றான் அவளது இடுப்பில் கிள்ளி வைத்து.

“ஆ!! சும்மா இரு மாமா! ஆமா மீனுக்கு எங்க போக?” இதழை சுளித்தாள்.

“பக்கத்துல வாய்க்கால் ஓடுது மீன் புடிச்சு தரேன்டி வா” என்று வாய்க்காலுக்குச் சென்றனர்.


“மீன் பிடிக்க தூண்டில் இல்லையே?” என்று இதழ் பிதுக்கியவளின் கழுத்தில் போட்டிருந்த ஷாலை பட்டென்று உருவி எடுத்ததும் “டேய் ஷால் கொடுடா இங்க யாராவது வருவாங்க மாமா” என்று அவன் கையிலிருந்த ஷாலை பறித்தாள் ரதி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 50


சிங்கமோ ரதியின் கையிலிருந்து ஷாலை பிடுங்கியவன் “இந்த நேரம் யாரும் வரமாட்டாங்க... அப்படியே வந்தாலும் நான் இருக்கறதை பார்த்தா தலையை கூட திருப்ப மாட்டாங்கடி... நமக்கு நிறைய வேலை இருக்குடி நேரத்தை வீணடிக்காம மீன் பிடிக்கலாம் வா” என்று அவளது பயத்தை போக்கிய பின் இருவரும் மீனை பிடிக்க ஆரம்பித்தனர்.

குழம்பு வைக்கும் அளவிற்கு மீனை பிடித்து கவரில் போட்டு வைத்து விட்டு “ரதி கிளம்பலாமாடி உனக்கு ரொம்ப நேரம் தண்ணிக்குள்ள நிக்குற ஜலதோசம் பிடிச்சிக்கும்” என்று அவளது கையை பிடித்தான் சிங்கம்.

“லயன் மாம்ஸ் கொஞ்ச நேரம் ஆகட்டும். இந்த தண்ணிய பார்த்ததும் கொஞ்ச நேரம் குளிக்கலாம்னு ஆசையா இருக்கு” என்றவள் தண்ணிக்குள் குதித்து விட்டாள்.

சிங்கமும் தண்ணிக்குள் குதித்து அவளை அலேக்காக தூக்கியவனோ “குளிக்குறேன்ற பேர்ல சாய்ந்தரம் வரைக்கும் தண்ணிக்குள்ளயே இருக்க பிளான் பண்ணுறியாடி... நான் விடமாட்டேன்” என்று அவளை தூக்கிக்கொண்டு கரை ஏறியவன் அவளது முகத்தை பார்த்தான். அவளது பட்டு ரோஜா இதழ்களின் மேல் ஒட்டியிருக்கும் பனித்துளி சூரிய வெளிச்சத்தில் மின்னியது. அவளது இதழை நோக்கி குனிய அவளோ கண்களை மூடிக்கொண்டாள். “கண்ணைத்திறடி ராங்கிக்காரி” என்றான் மோகத்தில்.

அவளோ கண்ணைத் திறக்கமாட்டேன் என தலையை அசைத்தாள். அவளது இமைகளுக்கு முத்தமிட்டான். அவளோ கண்ணைத்திறந்து “யோவ் ஏன்யா இப்படி அலும்பு பண்ணுற என்னை இறக்கி விடு யாராவது வரப்போறாங்க” என்று அவள் சிணுங்கினாள்.

“நான்தான் சொன்னேன்ல இந்த பக்கம் யாரும் வரமாட்டாங்க பயப்படாதேடி” என கண்ணைச் சிமிட்டியவன் அவளது பனிக்கூழ் இதழை கவ்விக்கொண்டான். அவளோ அவனுக்கு முத்தம் கொடுக்க வசதியாக அவனது கழுத்தை கட்டிக்கொண்டாள். இருவரும் சுற்றம் மறந்து லவ்பேர்ட்ஸ் போல முத்தமிட்டுக்கொண்டிருந்தனர். நீண்ட நெடிய முத்தம். அங்கே வயல்வெளிகளில் பறவைகளின் ஒலிச்சத்தத்தில் இருவரும் தங்களது மோனநிலையிலிருந்து வெளியே வந்தனர்.

அவளை அப்படியே பார்த்துக்கொண்டேயிருந்தான் சிங்கம். “ஏன் இப்படி குறுகுறுனு பார்க்குறீங்க லயன்? உங்க காந்த பார்வையில் நான் இரும்பு போல ஒட்டிக்குறேன்” என்று அவனது கழுத்து வளைவில் சாய்ந்துக் கொண்டவளோ “மாமா ஒரு போட்டி நமக்குள்ள வச்சுக்கலாமா?” என்று அவனது மீசையை இழுத்தாள்.

“என்கிட்ட போட்டியா..? சிங்கத்துக்கிட்ட மான்குட்டி போட்டி போட முடியாது டாக்டர் பொண்டாட்டி” என்றான் அவளது நெற்றியில் முத்தமிட்டு.

“அப்படியா பார்க்கலாமா?”

“நீ என்ன போட்டினு சொல்லு ராங்கிக்காரி?”

“பொதுவா ஒரு நபர் 30 முதல் 60 வினாடிகள் தண்ணிக்குள்ள மூச்சைப் பிடிச்சு இருக்க முடியும்... உங்கனால அப்படி தண்ணிக்குள்ள எத்தனை நிமிசம் இருக்க முடியும் லயன்?” என்றாள் புருவம் உயர்த்தி.

“இந்த போட்டியெல்லாம் எதுக்குடி..? மீன் பொரிச்சு சாப்பிட்டு அப்படியே பண்ணை வீட்டு வாசலில கயித்துகட்டில போட்டு நீ மடிச்சுக்கொடுக்குற வெத்தலையை நான் போட்டு மென்னு உனக்கு கொடுத்து நீ சாப்பிட்டு ரெண்டு நாக்கு சிவக்க ரெண்டு பேரும் அப்படியே கட்டில படுத்து மஜா பண்ணினோம்னு இருக்கணும்டி. அதெல்லாம் இல்லாம தண்ணிக்குள்ள விளையாடுற விளையாட்டு எல்லாம் வேணாம்” என்று பிடித்து வைத்த மீனை எடுக்க போக “இந்த போங்கு ஆட்டம் வேணாம் லயன்... வேஷ்டியை மடிச்சு கட்டி சண்டை போடுறது நான் பார்த்திருக்கேன்... என் மாமா வீரம் தண்ணிக்குள்ள எவ்ளோ நேரம்னு பார்க்க ஆசைப்படுறேன் என்னோட திறமையையும் நீங்க பார்க்கணும்ல” என்று அவன் கைகளிலிருந்து மீனாக துள்ளிக்குதித்தாள்.

“ஏய் நானெல்லாம் 3 நிமிசம் தண்ணிக்குள்ள மூச்சு பிடிச்சு இருந்திருக்கேன்... நீ ஆசைப்படும்போது வேணாம்னு சொல்ல மாட்டேன்... ஆனா உன்னால முடியுமாடி இந்த விஷப்பரீட்சை வேணாமேடி” என்று மீசையை திருகியவனிடம் “என்னோட திறமையையும் பாருங்க லயன்” என்றாள் தோளைக்குலுக்கி.

"அப்ப போர் வச்சுக்கலாமேடி லேடீஸ் ஃபர்ஸ்ட்" என்றதும் ரதி தண்ணீருக்குள் குதித்தாள்.

“ரதி ஸ்விம்மிங்ல பட்டைய கிளப்புவா அண்ணா! தண்ணிக்குள்ள 1 நிமிசம் மூச்சடக்கி நிறைய திறமையை ஒளிச்சு வச்சிருக்கா என் ப்ரண்ட்” என்று கௌதம் சொன்னது நினைவில் இருக்கத்தான் ரதியை தண்ணீருக்குள் குதிக்க விட்டான் சிங்கம்.

சிங்கம் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவள் யோகா, உடற்பயிற்சி எதுவும் பண்ணவில்லை. அவளால் 20 நொடிகள் கூட தண்ணீருக்குள் இருக்க முடியவில்லை. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்தவள் “அச்சோ அப்பா என்னால முடியலை இப்போ ப்ராக்டிஸ் டச் விட்டுப்போச்சு...” மூச்சு வாங்க முகத்தில் வழிந்த தண்ணீரை கையில் துடைத்துக்கொண்டே “இப்போ உங்க திறமையை பார்க்க போறேன் குதிங்க லயன்” என்றாள்.

“ஏய் மூச்சு நல்லா இழுத்து விடுடி” என்று அவளது நெஞ்சை நீவிவிட்டான்.

“ஹலோ லயன் நான் நல்லாயிருக்கேன்... நீங்க தண்ணிக்குள்ள குதிங்க” என்றாள்.

“சரி நான் தண்ணிக்குள்ள குதிச்சதும் கவுண்ட் பண்ணுடி” என்று தண்ணீருக்குள் குதித்துவிட்டான்.

அவளும் கவுண்ட் பண்ணிக்கொண்டேயிருந்தாள். ஐந்து நிமிசத்துக்கு மேல் ஆகியது. ரதிக்கு பயம் பிடித்துவிட்டது. அச்சோ விளையாட்டு விபரீதம் ஆகிடுச்சோ என அவளது நெஞ்சுக்குள் திகில் பரவியது.

“ல.லயன் விளையாடதீங்க மேல வாங்க எனக்கு ப.பயமா இருக்கு..." அப்போதும் சிங்கம் தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவில்லை ரதிக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

“மாமா... சிங்கம்..!" என்று பலமுறை கத்தி பார்த்து ஓய்ந்து போய் தண்ணீருக்குள் குதித்து நீருக்குள் மூழ்கிப்பார்த்தாள் தேடினாள் மனம் பதைபதைப்புடன்.

"கருப்பா என் மாமா எனக்கு வேணும்... ப்ளீஸ் என் கண்ணு முன்னாடி நிற்கணும்” என்று கண்ணை மூடி கண்ணைத்திறக்க பெரிய மீனை கையில் பிடித்துக்கொண்டு ரதியின் முன்னே மந்தகாச புன்னகையுடன் நின்றான் சிங்கம்.

அவன் கையிலிருந்த மீனை கரை மேட்டில் போட்டு “யோவ் நான் உன்னை காணோம்னு துடிச்சு போய் தேடுறேன் நீ என்னடானா மீனை பிடிச்சு வந்து நிற்குற உன்னை காணோம்னு பதறிப்போய்ட்டேன் என் உயிர் என்னோட உடம்புல இல்ல தெரியுமா!” என்று உதடுகள் நடுங்கி பேசியவேளா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள்.

அவனோ தன் இதழ்வளைப்பு சிரிப்புடன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன் “இந்த வாய்க்கால் ஆழம் எவ்ளோனு எனக்கு தெரியும்டி... சின்ன வயசுல இருந்து இங்க நீச்சல் அடிச்சு பழக்கம்... உன்கிட்ட கொஞ்ச நேரம் விளையாடலாம்னு இருந்தேன் உன்னோட பயத்தை பார்த்து தான் பாவம் புள்ளன்னு மேலயே வந்தேன்” என்றவனோ அவளது விசும்பல் நிற்காமல் இருக்க அவளது முதுகை ஆசவாசமாய் தடவிக்கொண்டே “என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமாடி... பிடிக்காமதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்ற படியே அவளை கையில் தூக்கிக்கொண்டு கரை ஏறி மேல வந்தான்.

அவளுக்கு இன்னமும் பதட்டம் அடங்கவில்லை. உதடுகள் நடுங்க நடுங்கிய உதடுகளுக்கு முத்தம்கொடுத்து அடக்கினான். சில நிமிடங்கள் கழித்து அவளது கண்களை பார்க்க “எப்ப பிடிச்சதுனு கேட்டா எனக்கு தெரியாது லயன்... ஆனா உன்னை ரொம்ப பிடிக்குது என்ன காரணம்னு தெரியலை... உன்கூட நூறு வருசம் சேர்ந்து வாழணும்... நாலைஞ்சு குழந்தை பெத்துக்கணும்... அவ்ளோ ஆசை எனக்கு இருக்கு டா மாமா” என்று கண்ணைச் சிட்டினாள்.

“நாலைஞ்சு குழந்தை போதுமா!! ஒரு டஜன் குழந்தை வேணாமா?” என்றான் இதழ்வளைப்பு சிரிப்புடன்.

“பெத்துக்க நான் ரெடிதான்” அவன் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்தாள் ரதி.

“அப்போ குழந்தை பெத்துக்குற மிஷன் ஆரம்பிப்போம்டி” என்று அவள் இதழில் முத்தமிட்டு பிடித்து வைத்திருந்த மீனையும் எடுத்துக்கொண்டு பண்ணை வீட்டுக்குச் சென்றான். வீடு வந்தும் ரதியை இறக்கி விடவேயில்லை. மீனை சமையல்கட்டில் வைத்தவன் “குளிச்சிட்டு வந்து ரெண்டு பேரும் சேர்ந்தே சமைக்கலாம்டி” என்று பெட்ரூம்க்குள் தூக்கிச்சென்றவன் குளியலறைக்குள் சென்றுதான் இறக்கி விட்டான் ரதியை.

சிங்கமோ சட்டை பட்டனை திறந்துக் கொண்டே அவளது கண்களை பார்த்தபடியே ஷவரை திறந்து விட்டான்.

தண்ணீர் இருவரின் மேனியிலும் பட்டது. ரதியின் ஈர உடையில் அவளது அங்க வனப்புகள் அவனுக்கு கட்டியம் காட்ட அவனுக்குள் மோக போராட்டம் துவங்கியது. அவளோ இதழ் கடித்து தலையை குனிந்தாள்.

அவனோ சட்டையை கழட்டிவிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டான் காற்று புக முடியாத அளவிற்கு.

அவளும் சிங்கத்தை கட்டிக்கொண்டாள். இருவரின் ஹார்மோன்களும் எக்குதப்பாய் எகிறி துடித்தது. அவளது கன்னத்தை தாங்கி நெற்றி, கண், கன்னம் என்று இறுதியாக இதழில் மூழ்கினான்.

“டெம்ப்ட் ஆகுது டி” என்றவனோ அவளை கைகளில் ஏந்தியவன் குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் கட்டிலில் பூ போல கிடத்தியவன் அவன் போட்டிருந்த ஆடைகளுக்கு விடுப்பு கொடுத்து அவள் கண்களை தாபமாக பார்த்து அவளது பக்கத்தில் படுத்தவன் அவளது கழுத்து வளைவில் மீசையால் கோலம் போட்டபடியே “ஏய் ராங்கிகாரி டாக்டர் இப்போ ஓகே வா நேத்து வேற உன்னை பாடாப்படுத்திட்டேன் உன்னோட ஹெல்த்க்கு ஏதும் இஷ்யூ வந்திடாதே” என்று அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி கேட்டான்.

அவளோ அவனது குறும்பு செயல்களில் கண் சொருகியவளோ “ம்ஹும் நோ ப்ராளம்... யூ ஸ்டார்ட் சிங்கம்” என்றாள் அவனது கன்னத்தில் முத்தம் இட்டு... அவள் தடை இல்லை என்று சொன்னதும் அதற்கு பிறகு சிங்கத்தின் கைகள் சும்மா இருக்குமா என்ன? தங்கு தடையின்றி பெண்ணவளின் பட்டு மேனியில் இதழ்களும் கைகளும் விளையாடிக்கொண்டே இருந்தது.

இறுதியாக பெண்ணவளுக்குள் மூழ்கி முத்தெடுத்து ஆழ்ந்த மூச்சை விட்டவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு “ஏதும் கஷ்டப்படுத்திட்டேனாடி?” என அவளது இதழில் முத்த ஒத்தடம் கொடுத்தான்.

“கட்சி ஆபீஸ் முன்னே கத்திய பிடிச்சு நின்ன சமயம் அதுக்கு காரணமானவங்களை பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்ச சிங்கம் இப்போ என் கிட்ட மட்டும் அடங்கி கிடக்கு... நீ பார்க்கத்தான் முரடன் பழகிப்பார்த்தா உன்னை விட மென்மையானவன் யாரும் இருக்க முடியாது லயன்... கோபம் இருக்க இடத்துல தான் குணம் இருக்கும்னு சொல்லுவாங்க மாமா உன் விசயத்துல நான் கண்கூடா பார்த்துட்டேன். நீ என்னோட உசிரு மாமா” என்றவளோ அவன் இதழில் முத்தமிட்டு அடுத்த கூடலுக்கு அவளாகவே அழைப்பு விடுத்தாள். இதழ்களும் இதழ்களும் மோதிக்கொண்டது. மேனியும் மேனியும் தீண்டிக்கொண்டது. கூடல் முடிந்து தன்னவளை நெஞ்சில் அள்ளிப்போட்டுக்கொண்டு அவளது நீளமான கூந்தலை வருடிக்கொண்டேயிருந்தான். அவளோ "லயன் தூக்கம் வருது ஆனா பசிக்குது" என கண்சொருகிவிட்டாள்.

அவள் தூக்கம் களையாது தன்னிலிருந்து பிரித்து தலையணையில் படுக்க வைத்தவன் குளியலறைக்குள் சென்று குளித்துவந்தவன் ட்ராக் பேண்ட் டீசர்ட்டுக்கு மாறி தன்னவளை பார்த்தான்.

“எப்படி எனக்குள்ள வந்தே ராங்கிக்காரி!” என்று இதழ் வளைப்பு சிரிப்புடன் சமையல்கட்டுக்குச் சென்றவன் மீனை கழுவி சுத்தம் செய்து சமைக்க ஆரம்பித்திருந்தான். சமையல் முடித்தவனோ கட்டிலில் படுத்திருந்த ரதியை தூக்கிக்கொண்டு நடந்தான்.

அந்தரத்தில் பறப்பது போல இருக்க கண்விழித்த ரதி குளியலறைக்குள் இருப்பதை கண்டு “சோ டயர்டு லயன்” என்று சிங்கத்தின் தோளில் சாய்ந்தாள்.

“ஏய் குளிச்சிட்டு வாடி சாப்பிடலாம் வயிறு பசிக்குதுனு சொன்னில்ல” என்று ஷவரை திறந்து விட்டு “சீக்கிரம் வாடி சமைக்கணும்” என்று வெளியே வந்துவிட்டான்.

அவளோ குளித்து முடித்து வந்தவள் புடவையை தேட மெத்தையில் அவளுக்காக புது பட்டுச் சேலை இருந்தது. அதன் பக்கத்தில் கண்டாங்கி சேலை கட்டியிருந்த படமும் இருந்தது. சந்தன முல்லைச் சரமும் கட்டி பந்தாக சுருட்டி வைத்திருந்தது. அவளோ சேலையை எடுத்துப்பார்த்துவிட்டு யூடியூப்பில் கண்டாங்கி சேலை எப்படி கட்டுவது என்று பார்த்து சேலை கட்டி முடித்து சந்தன முல்லையை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மீன் வாசனை ரதியின் மூக்கை துளைத்தது. “அட லயன் சமைச்சு வச்சிட்டாரா சமையல்கட்டுப்பக்கம் ஒருநாள் கூட பார்த்தது இல்லையே!” என்று புடவையின் முந்தானையை விசிறிக்கொண்டே சமையல்கட்டுக்குச் சென்றாள். சமையல்கட்டிலும் சிங்கம் இல்லை. மீன் வாசம் அடிக்குது என்ன ஆளைக்காணோம் "சிங்கம் யோவ் லயன் மாமா எங்க இருக்க?" என்று சத்தம் போட்டுக்கொண்டே வெளியே வாசலுக்கு வந்தாள்.

வாசலில் நிலா வெளிச்சத்தில் டேபிள் போட்டு அதில் சிங்கம் சமைத்ததை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தவன் ரதியை நிமிர்ந்து பார்த்தவன் அப்படியே மெர்சலாகி நின்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
“என்ன மாமோய் கண்டாங்கி சேலையில எப்படியிருக்கேன் உங்க ராங்கிக்காரி?” என்று தலையை சாய்த்து கேட்டாள்.

“என் அத்தை பெத்த மகராசி அழகிதான் டி” என்று பறக்கும் முத்தத்தை கொடுத்து “உனக்காக மாமன் பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருக்கேன் வந்து சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுடி” என்று அவளது கையை பிடித்து வந்து உட்கார வைத்தான்.

“ஆமா உங்களுக்கு சமைக்க வருமா..? அதுவும் மீன் குழம்பு வாசனையே தூக்குது மாம்ஸ்” என்றவளிடம் “எல்லாம் அப்பத்தா சொல்லிக்கொடுத்ததுதான்... எங்க வீட்டுல ஆம்பிள்ளை எல்லாரும் சமைப்போம்... அப்பத்தா எங்களை சமைக்கவிட்டதில்லைடி சாப்பிடு நிறைய வேலை இருக்கு” என்றான் குறும்பாக கண்ணைச்சிமிட்டி.

இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை எடுத்து கழுவி வைத்து வெளியே வந்தனர். சிங்கம் சொன்னது போல பெரிய கயிற்றுக்கட்டில் பக்கத்தில் நாற்காலியில் வெத்தலையும் சுண்ணாம்பும் இருந்தது.

“லயன் மாமோய் இப்படி வெட்ட வெளியில எப்படி ம்ஹும் என்னால முடியாது” என்று சிணுங்கியவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் படுக்க வைத்தான்.

“ஹே பஞ்சு மெத்தையில படுத்தா கூட இப்படி சுகமா இருக்காது சூப்பர் மாமா” என்று சிங்கத்தின் தோளைக்கட்டிக்கொண்டாள்.

வெத்தலையை எடுத்து மடித்து சிங்கத்திடம் கொடுக்க “என்னடி டாக்டர் நீ எத்தனை படம் பார்த்திருப்ப வெத்தலையை மென்னு கொடுடி. ஸ்வீட் பீடா போட்டது போல மஜாவா இருக்கும்” என்றான் கிறக்கமாக.

“சிங்கம் ஒரு மார்க்கமாதான் சுத்துதுப்பா” என்று சிரித்துக்கொண்டவள் வெத்தலையை மென்றது மட்டும்தான் தெரியும் ரதிக்கு சிங்கத்தின் வாய்க்குள் எப்படி சென்றது யோசிக்க வைத்திருந்தான் ரதியின் சிங்கம்.

சிலு சிலு ஊதக் காற்று இருவரின் மேனியிலும் ஊடுவியது. அவளது முந்தானையை எடுத்து போர்த்திக்கொண்டு அவள் தலையில் வைத்திருந்த சந்தன முல்லையை வாசம் பிடித்தான்.

“மாமோய் வெட்ட வெளியில எப்படி? கூச்சமா இருக்கு” என்று சிணுங்கியவளை தன்னுடன் சாய்த்து படுக்க வைத்து “இங்க யாரும் வரமாட்டாங்கடி ராங்கிக்காரி" என்று அவளது காதுமடலில் முத்தமிட்டான். அவளுக்கோ கூச்சம் நெட்டி தள்ளியது. அவளின் அச்சத்தை போக்க எண்ணியவனோ “நான் இருக்கேன்டி என்னை அணைச்சுக்கோ பயம் இருக்காது” என்றவனோ அடுத்த கட்ட வேலையில் இறங்கினான். இருவரும் முத்தமிட்டு முத்தமிட்டு இருவர் ஒருவராக கலந்துக் கொண்ட வேளையில் அந்த பால்நிலா கூட வெட்கத்தில் மேக மூட்டத்திற்குள் ஒளிந்துக் கொண்டது.

அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு போட்டிருந்த ஆடையோடு இருவரும் வீட்டுக்கு கிளம்பியிருந்தனர். சிங்கமும் ரதியும் தினம் தினம் தீபாவளி என்றது போல இருவரும் சந்தோசமாக கூடி கழித்திருந்தனர்.

நாட்கள் ஓடியது. தூரிகா எக்ஸாம் எழுதி முடித்திருந்தாள். வயிறு பெரிதாக ஆரம்பித்தது. “தூரிகாவுக்கு ஏழுமாதம் வளைகாப்பு போடணும் கோதை உங்க அண்ணாகிட்ட சொல்லிவிடு” என்றார் மீனாட்சி.

கோதையோ “எங்கண்ணா சீர் செய்யுறதில் எப்பவும் தவறமாட்டாரு மீனாட்சி” என்றவரோ அவரிடம் மேலும் பேச விரும்பாமல் சென்றுவிட்டார்.

டீ குடித்துக்கொண்டிருந்த ஆதிபெருமாளிடம் “பார்த்தியா உன் பொண்டாட்டிக்கு வாய்கொழுப்பை புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு எல்லாம் என் நேரம்” என மீனாட்சி சலித்துக்கொண்டார்.

“எல்லாம் அந்த சிங்கம் இருக்கற தைரியத்துல இவ இப்படி ஆடுறா பார்த்துக்கலாம் நம்ம ப்ளான் சக்ஸஸ் ஆகட்டும்... அப்புறம் பார்த்துக்குவோம் விடு” என்றார் தலையை ஆட்டிக்கொண்டு.

சிங்கம் வீட்டில் அன்றிரவு அனைவரும் சாப்பிட்டு ஹாலில் உட்கார்ந்திருக்க நாச்சியோ “எய்யா ஐய்யனாரு நம்ம தூரிகாவுக்கு ஏழு மாசம் ஆச்சு வளைகாப்பு போட்டு அழைச்சிட்டு வரணும்” என்று மெல்ல பேச்சு கொடுத்தார்.

சிங்கமோ “அப்பத்தா அந்த துரோகி வீட்டுல வேண்டாம் நம்ம மண்டபத்துல வச்சிக்கலாம்” என்றான் சிறு கோபத்துடன். ரதியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஆதிபெருமாளோ, மீனாட்சியோ போன் செய்தால் கூட எடுப்பதில்லை ரதி.

“சிங்கம் சொன்னது போலவே மண்டபத்துல வளைகாப்பு நடத்திடலாம்... மாப்பிள்ளைகிட்ட ஒருவார்த்தை கேளுங்க அப்பா” என்றிருந்தார் ஐய்யனார்.

வீரய்யன் பொன்வண்ணனுக்கு போன் போட்டார். தூரிகாவின் வீங்கிய கால்களுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

“ஏய் தாத்தா போன் பண்ணுறாரு போனை காதில் வை” என்றதும் அவள் போனை எடுத்து பொன்வண்ணன் காதில் வைத்ததும் “சொல்லுங்க தாத்தா" என்றான்.

"என்னப்பா எப்படியிருக்கீங்க என் பேத்தி என்ன பண்ணுறா?” என்றார் சிரிப்புடன்.

“உங்க பேத்திக்கு கால் வீங்கியிருக்கு ஒத்தடம் கொடுத்திட்டிருக்கேன்” என்றான் பெரும்மூச்சுடன். போனை ஸ்பீக்கரில் போட்டிருக்க அனைவரும் கொல்லென்று சிரித்தனர். பேச்சு சத்தம் கேட்டு கோதையும் பொன்வண்ணன் அறைக்குள் வந்தார்.

வீரய்யனோ “ஏய்யா பேராண்டி தூரிகாவுக்கு வளைகாப்பு போடணும் நம்ம மண்டபத்துல வச்சிடலாமா?” என்றார் தயங்கியபடியே.

“சரிங்க தாத்தா மண்டபத்துலயே வச்சிக்கலாம்” என்றவன் கோதையை பார்த்தான். கோதையோ “எனக்கு சம்மதம்” என்று தலையை ஆட்டினார்.

“நாளன்னைக்கு நல்லநாள் இருக்கு வளைகாப்பு வச்சிடலாம்” என்றதும் “எனக்கு டபுள் ஓ.கே தாத்தா” என்றவன் கோதையிடம் போனை கொடுத்தான்.

“அப்பா நீங்க என்ன முடிவு எடுக்குறீங்களோ எனக்கு சம்மதம்தான்” என்றிருந்தார். அப்போதே சொந்தங்களுக்கு போனில் அழைப்பு சொல்ல துவங்கினர் வீரய்யனும் நாச்சியும். உள்ளுர்க்குள்ளேயே சொந்தங்கள் இருக்க அனைவருக்கும் வசதியாய் போனது.

அடுத்த நாள் காலையில் மண்டபத்தில் ரதி சிட்டாய் பறந்து வேலை செய்துக் கொண்டிருந்தாள். கூட்டத்தில் சிலபேர் இந்த பொண்ணுக்கு குழந்தை கலைஞ்சிருச்சாமே ஆதிபெருமாள் செய்த பாவம் இந்த பொண்ணோட கர்ப்பம் கலைஞ்சுடுச்சு என்று வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருந்தனர்.

அலர்விழியும் கௌதமும் வந்திருந்தனர். அலர்விழிக்கோ தன்னை யாரும் இன்னும் மசக்கை ஆகலையானு கேட்ககூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டாள். ஆனால் கேட்காமல் இருப்பார்களா நம்ம சொந்தம்.

“அன்பரசி என்னடி உன் பொண்ணு நல்லசேதி சொல்லுவானு பார்த்தோம்... இன்னும் விஷேசம் இல்லையா? மாப்பிள்ளை டாக்டர்தானே இப்பவே மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சுடுங்க” என்று பேசியது அலர்விழியின் காதில் விழத்தான் செய்தது.

அலர்விழியின் பக்கத்தில் இருந்த கௌதமோ “இந்த பாட்டிக்கெல்லாம் விவஸ்தையே கிடையாதா..? எப்படி கூட்டத்துக்குள்ள வச்சு கேட்குறாங்க” என்று கோபம் வந்துவிட்டது கௌதமிற்கு.

அலர்விழியோ “கிராமத்துல இப்படித்தான் பேசுவாங்க அத்தான் விடுங்க... எனக்கும் அடுத்த வருசம் வளைகாப்பு நடக்கும்ல அப்போவும் இந்த பாட்டி யாரையாவது குறை சொல்லிட்டுதான் இருப்பாங்க நாம எதையும் காதில் வாங்கக்கூடாது” என்று சிறு படபடப்புடன் கூறியவள் நலங்கு நடக்கும் இடத்திற்கு எழுந்துச் சென்றுவிட்டாள்.

கெளதமோ ‘அடுத்த வருசம் வளைகாப்பு நடக்கும்னு சொல்லிட்டு போறா அப்போ எனக்கு ஹஸ்பண்டா புரோமோஷன் கிடைச்சாச்சு’ என்றான் இதழ்கடையோர புன்னகையில்.

தூரிகாவுக்கும் பொன்வண்ணனுக்கும் நலங்கு வைத்தனர். முதலில் நாச்சிதான் தூரிகாவுக்கு வேப்பம்பூ வளையல் போட்டுவிட்டு கண்ணாடி வளையல்களை அடுக்கி தூரிகாவுக்கும் பொன்வண்ணனுக்கும் சந்தனம் பூசிவிட்டு “தலை நாளுல பேரன்தான் பிறப்பான்டி” என்று பேரனையும் பேத்தியையும் வாழ்த்தினார்.

அடுத்து கோமதி தூரிகாவிற்கு வளையல் போட்டு தயங்கி நின்றிருந்த ரதியை வளையல் போடச் சொல்ல அவளோ தயங்க சிங்கமோ “ரதி வளையல் போடு” என்று அவள் காதோரம் மெதுவாய் கிசுகிசுத்தான்.

ரதியோ சந்தனத்தை எடுத்து தூரிகாவின் கன்னத்தில் தேய்த்து விட்டு பொன்வண்ணன் கன்னத்தில் தேய்த்து விட்டு கண்ணாடி வளையலை கையில் எடுத்த சமயம் “இந்த வளையலை பாப்பாவுக்கு போட்டு விடு” என்று வைரக்கல் பதித்த வளையலை ரதியிடம் கொடுக்க “நான் போட்டு விடறதை விட உங்க தங்கச்சிக்கு உங்க கையால போட்டு விடுங்க” என்றாள் ரதி புன்னகையுடன்.

“ரெண்டு பேரும் சேர்ந்தே போட்டு விடுவோம்” என்று ரதியின் கையில் ஒரு வளையலை கொடுத்தான் சிங்கம்.

பொன்வண்ணனோ “ஹலோ மாம்ஸ் என்ன நலுங்கு வச்சுத்தான் வளையல் போடணும்” என்று கிண்டல் செய்தான்.

கௌதமோ “டேய் என்னடா எங்க அண்ணாகிட்ட லந்து பண்ணுறியா?” என்று சட்டையை மடித்து விட்டு சிங்கம் பக்கத்தில் வந்து நின்றான். குமரனும் சேர்ந்து வந்து நின்றான்.

“அப்பா சாமி நான் உங்க அண்ணாவை ஒண்ணும் சொல்லலைப்பா கூட்டமா சேர்ந்து வராதீங்க உங்கண்ணா சிங்கம் அடிச்சாவே வலி தாங்கமுடியாது நீங்களுக்கும் சேர்ந்தா என்னால முடியாது பா” என்று ஜகா வாங்கிவிட்டான்.

“அண்ணே நான் உன் பக்கம் இருக்கேன் கவலைப்படாதே” என்றாள் ரதி. சிங்கத்தை பார்த்த இதழை சுளித்தபடி. அங்கே கேலியும் கிண்டலுமாய் இருக்க மண்டபத்திற்கு ஆதிபெருமாளும் மீனாட்சியும் வந்தனர்.

நாச்சியோ “சிங்கம் விளையாடினது போதும் பேரனுக்கும் பேத்திக்கும் நலங்கு வச்சு வளையல் போடுப்பா” என்றிருந்தார் அழுத்தமாய்.

சிங்கமும் சந்தனத்தை எடுத்து தங்கையின் கன்னத்தில் மென்மையாய் பூசிவிட்டு “எப்பவும் நீ சந்தோசமாய் சிரிச்சிட்டே இருக்கணும் பாப்பா” என்று பூவையும் தூவி விட்டு பொன்வண்ணன் கன்னத்தில் சந்தனத்தை அழுத்தி வைத்தான் வேண்டுமென்று.

அவனோ மெதுவாய் “மாம்ஸ் உங்க கோபத்தை இப்போ காட்டவேண்டாமே” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“போடா” என்று முணகிய சிங்கமோ தூரிகாவின் கையில் வளையல் போட்டுவிட்டான். ரதி மற்றொரு கையில் வளையல் போட்டு விட்டாள்.

“நானும் வளையல் போடலாமா?” என்ற மீனாட்சியின் குரலில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.

ஐய்யனாரோ மீனாட்சியை அழுத்தமாக பார்த்தார். மீனாட்சியை யாரும் வாவென்று அழைக்கவில்லை... அதுவரை வாய்கொள்ளா புன்னகையுடன் இருந்த நபர்கள் மீனாட்சியை பார்த்ததும் பேசாமல் முகத்தை கடுகடுவென வைத்தனர். தூரிகாவையும் ரதியையும் தவிர்த்து.

“வாங்க சித்தி” என்றிருந்தாள் தூரிகா. பொன்வண்ணன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். கோதையோ இறுக்கமான முகத்துடன் நின்றிருந்தார்.

மீனாட்சியோ “நான் இங்க வந்திருக்கிறது உங்க யாருக்கும் பிடிக்கலைதான்... இப்ப நான் ஏன் வந்திருக்கேனா... நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு தூரிகாவுக்கு வளை அடுக்க வந்திருக்கேன்” என்று கையை கூப்பினார்.

ஐய்யனாரோ பேச ஆரம்பிக்கும் முன் “இங்க யாரும் உங்களை மன்னிக்க தயாராக இல்லை... நீங்க வந்த வழியே போகலாம்” என்றான் உயர்ந்த குரலில் சிங்கம்.

ரதியோ “என்னங்க அத்தையம்மா வளையல் போடணும்னு வந்திருக்காங்க வளையல் போட்டுட்டு போகட்டும்” என்றவளை முறைத்து பார்த்ததில் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.

தூரிகாவோ “சித்தி வளையல் போட்டு விடுங்க” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

சிங்கமோ “பாப்பா” என்று தங்கையை அதட்டபோக... நாச்சியோ “சிங்கம் வளைகாப்பு போட வந்தவங்களை தடுக்க கூடாது போடட்டும் விடு” என்று அடக்கியிருந்தார் சிங்கத்தை.

நலங்கு வைத்துவிட்டு ஐய்யனார் பக்கம் வந்த மீனாட்சியோ “என்னை மன்னிச்சிடுங்க” என்று கையை எடுத்து கும்பிட்டார்.

ஐய்யனாரோ “வழி அந்த பக்கம்” என்று கண்ணைக்காட்டினார்.

செருப்பால் அடித்துவிட்ட மாதிரி இருந்தது மீனாட்சிக்கு.

சிங்கமோ “வந்த வேலை முடிஞ்சதுல கிளம்புங்க காத்து வரட்டும்” என்றான் ஏளனப்புன்னகையுடன்.

ஆதிபெருமாளோ கையை இறுக்கினார். “அண்ணா சும்மா இரு” என்று ஆதிபெருமாளின் கையை பிடித்துக்கொண்டார் மீனாட்சி.

பெருத்த அவமானத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேச் சென்றனர் அண்ணனும் தங்கையும்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 51

தூரிகாவுக்கு சுத்திப்போட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பொன்வண்ணனோ “ம்மா நாமளும் இன்னிக்கு அம்மாச்சி வீட்டுல இருந்துட்டு நாளைக்கு கிளம்புவோமோ..? எனக்கு தூரிகாவை விட்டு வர மனசில்லை" என்றான் தயங்கியபடியே.

கோதையோ “டேய் மானத்தை வாங்காதடா... நம்ம வீட்டில இருந்து புறப்பட்டா ஒரு மணிநேரத்தில அம்மாச்சி வீட்டுக்கு வந்துடலாம்... நாளைக்கு ட்டியூட்டி முடிச்சு வந்து பார்த்துக்கோ இப்ப கிளம்பலாம் வா எல்லாரும் உன்னையே தான் பார்க்குறாங்க” என்றார் அவன் காதில் கிசுகிசுப்பாய்.

தூரிகாவோ கோதையை அணைத்துக்கொண்டு “அத்தை நீங்களும் என்னோட இருந்துக்கோங்க... நீங்க இல்லாம எனக்கு போர் அடிக்கும்” என்று சிணுங்கியவளை முறைத்தான் பொன்வண்ணன்.

‘என்னையை விட்டு பிரிச்சிருக்குறேனு கவலை இவளுக்கு இல்ல போல... என்னை கட்டிப்பிடிச்சு கொஞ்சவே இல்லை’ என்று பொசசிவ் வந்தது பொன்வண்ணனுக்கு. முகத்தை ஒரு முழத்துக்கு தூக்கி வைத்துக்கொண்டான்.

தூரிகாவோ பொன்வண்ணனை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. “அத்தை ஜுவல்ஸ் கழட்டி வச்சிட்டு வந்துடறேன்” என்று அவளது அறைக்குள் போக பொன்வண்ணனோ “ஏய் துகா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன்” என்று அவளது அறைக்குள் ஓடினான். இருவரையும் பார்த்த பெரியவர்களின் சிரிப்பொலி அந்த வீட்டை நிரப்பியது.

“ஏய் என்னை கட்டிபிடிக்காம... எங்க அம்மாவை கட்டிபிடிச்சு நிற்குற... இன்னும் மூணுமாசம் உன்னை பிரிஞ்சு நான் எப்படி இருக்கப்போறேன்னு தெரியலைடி” என்று தூரிகாவின் மூக்கோடு மூக்கை உரசியவன் “உன்னை கட்டிப்பிடிக்க கூட முடியலைடி வயிறு இடிக்குது... ஆனா எப்போ குழந்தை வரும்னு ஆசையாவும் இருக்கு” என்று அவளது கன்னத்தை தாங்கி அவளது இதழில் முத்தம் பதித்தான். அவள் உடல்நிலை கருதி அவளை விட்டு விலகியவன் “நேரத்துக்கு தூங்கிடு... ஜுஸ் குடி... ஈவ்னிங் வாக்கிங் போகணும்... ரதி இருக்கா உன்னை பார்த்துக்க பயப்படாதடி டேக் கேர்” என்று தூரிகாவின் நெற்றியில் முத்தம் கொடுத்து அவள் போட்டிருந்த நகைகளை கழட்ட உதவி செய்து விட்டு வெளியே வந்தான் பொன்வண்ணன்.

பொன்வண்ணன் முகத்தில் இருக்கும் கவலையை அவதானித்த நாச்சியோ “என்ன பேராண்டி என் பேத்தியை எங்களுக்கு பார்த்துக்க தெரியும் நீ கவலைப்படாம கிளம்பு” என்றார் நமட்டு சிரிப்புடன்.

சிங்கமோ “ரொம்பத்தான் சீன் போடுறான் இவன். அந்த வீட்ல பார்த்துக்க இரண்டு ஆள்தான் இருக்கீங்க... இந்த வீட்டு பலபேர் இருக்கோம் என் தங்கச்சியை பார்த்துக்க... சும்மா அலம்பல் பண்ணாம வீட்டுக்கு போகச் சொல்லுங்க அப்பத்தா" என்றான் கன்னத்தில் நாக்கை சுழட்டியபடி.

“ஹலோ மாம்ஸ் என்னை மாதிரி ஒருநாள் நீங்களும் நிற்கணும் என் முன்னாடி மறந்துறாதீங்க” என்றான் சிங்கத்தை போலவே கடவாயில் நாக்கை சுழட்டியபடியே.

“அதுபோல நிலைமை எனக்கு வராது. என் பொண்டாட்டி என்கூடவே தான் இருப்பா” என்றவனோ ரதியை பார்த்து கண் அடித்தான்.

கோதையோ சிங்கத்தையே பார்க்க அவனோ முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான். “இன்னமும் என்னடா என்கூட பேசமாட்டேன்கிற” என்று அவனது கையை பிடித்தார் கோதை.

கோதையின் கையை மெதுவாய் எடுத்துவிட்டவன் கலங்கிய கண்களுடன் தோட்டத்துப்பக்கம் சென்றுவிட்டான்.

நாச்சியோ “சின்ன வயசுல நீ அவனை விட்டு போனதுல ரொம்ப காயப்பட்டு போய்ட்டான்டி. நாங்கெல்லாம் கூட ஒரு சமயம் உன்னை மறந்திருப்போம் ஆனா சிங்கம் உன்னையேதான் நினைச்சு ரொம்ப நாள் அழுதான்... ஐய்யனார், அத்தை இனிமே வரமாட்டாங்கனு சொன்னப்ப எனக்கு அத்தை வேணும் வேணும்னு துள்ளி குதிச்சு ஆர்ப்பாட்டம் செய்துட்டான். இப்பவும் உன் மேல அதே பாசத்தோடதான் இருக்கான்... எப்பவும் முகத்தை விறைப்பா வச்சி சுத்துறவன். உன்னையும் ரதியையும் பார்த்ததுக்கப்புறம் அவனோட முகத்துல சிரிப்பை நான் பார்த்தேன்டி கோதை... ரதியை பிடிக்காம கல்யாணம் பண்ணினான்னு நாமெல்லாம் நினைச்சிட்டிருக்கோம் அவனுக்கு பிடிச்சிருந்தாகாட்டிதான் தாலி கட்டினான். பிடிக்கலைனா யாரு சொன்னாலும் தாலி கட்டியிருக்கமாட்டான் என் பேராண்டி... உன் மேல கொள்ளை பாசம் வச்சிருக்கான் தெரியுமா... உன் கூட பேசாம இருந்திருவானா... இப்ப கூட கண்ணு கலங்கி போறான் பாரு” என்றார் ஆசுவாசத்துடன்.

“சரிங்கம்மா நாங்க கிளம்புறோம் தூரிகாவை பார்த்துக்கோங்க” என்று கிளம்பினார்கள் கோதையும் பொன்வண்ணனும்.

அலர்விழி அன்றிரவு பால் டம்ளருடன் அறைக்குள் வந்தாள்... கௌதமோ மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

“என்னங்க பால்” என்றதும் “எனக்கு பால் வேணாம் விழி நீயே குடிச்சிடு எனக்கு மார்னிங் இயர்லியா ட்டியூட்டிக்கு கிளம்பணும் குட் நைட்” என்று படுத்துவிட்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அலர்விழியோ ‘நாம காலையில மண்டபத்துல அடுத்து எனக்கு வளைகாப்பு போடுவாங்கனு தெளிவாத்தானே இவர்கிட்ட பேசினோம்... இப்ப எப்படி இவர்கிட்ட போய் என்னைய எடுத்துக்கோங்கனு கேட்கறது’ என்று குழம்பி நின்றாள்.

“ஏய் விழி வா வந்து படு ஏன் நிற்குற?” என்று எழுந்தவன் அவளது கையை பிடித்து இழுக்க அவனது மடியில் வந்து விழுந்தாள் பூங்கொத்தாய்.

“சா.சாரி நான் வேணும்னு இழுக்கல” என்றான் கழுத்தை தடவிக்கொண்டு.

“பொண்டாட்டி புருசன் மடியில விழறது தப்பா என்ன?” என்றவளோ இதழ் கடித்துக்கொண்டாள்.

“விழி” என்று அவள் கன்னம் தாங்கி “அப்போ உனக்கு கிஸ் பண்ணவா..? உனக்கு ஒண்ணும் தயக்கம் இல்லையே” என்றான் சிறு படபடப்புடன்.

“இல்லை உங்களை மனசார இப்போ விரும்புறேன் அத்தான்” என்று அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

“விழி நிஜமா என் கண்ணைப்பார்த்து சொல்லுடி” என்றான் ஆசையில். அவனுக்கு என்ன செய்வது என்று தலைகால் புரியவில்லை.

“ஹலோ டாக்டர் என்னோட வெட்கத்தை விட்டு சொல்லுறேன் ஐ லவ் யு என்னை எடுத்துக்கோங்க” என்று இரு கையையும விரித்தாள்.

கௌதமோ அவளது நெற்றியில் முதல் அச்சாரத்தைப் பதித்தான். அவளது நடுங்கும் இதழ்களின் நடுக்கத்தை போக்க அவளது இதழ்களில் ஆழப்புதைந்தான். பெண்ணவளின் ஆடைகளை களைத்தான் அவளோ வெட்கத்தில் அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள். அவனது மேனியும் அவளது மேனியும் ஒன்றாய் சங்கமித்தது. இருவரும் ஒன்றாய் கலந்து சங்கமிக்கும் நேரம் அவளது விழிகளில் நீர் கோர்க்க “விழி” என்று அவளது இதழில் முத்தம் கொடுக்க அவளது வலிகளை போக்கி அவளுடன் கலந்தான். பூவை போல பெண்மையை கொண்டாடினான் ஆண்மகன். கூடல் முடிந்து நெற்றியில் முத்தமிட்டு “பெயின் இருக்காடி ஆயிட்மெண்ட் அப்ளை பண்ணுறியா?” என்று டாக்டராய் அவன் கேட்க “பெயின் இல்ல அத்தான்! நீங்க எனக்கு புருசனா கிடைச்சது நான் செய்த புண்ணியம்தான் எதனால எப்படினு கேட்கக்கூடாது” என்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

கௌதமோ “சிங்கம்” என்று பேச ஆரம்பிக்க அவளோ அவனது இதழில் முத்தம் கொடுத்து அவனை பேச விடாமல் செய்தாள்.

கௌதமின் பெரும்மூச்சும்... விழியின் கொலுசொலி சத்தமும் அந்த அறையை நிரப்பி இருந்தது. இருவரின் வாழ்வில் இனி வசந்தம்தான். வாழ்வில் முதல் காதல் பலருக்கு கிட்டாமல் போனாலும் இரண்டாம் காதல் இனிப்பாய் அமையும் அலர்விழிக்கு கிடைத்த காதல் போல.

தூரிகா தும்மினால் கூட "என்ன பண்ணுது?” என்று ஓடிவந்தான் சிங்கம். அவளை கையில் வைத்து தாங்கினார்கள் ஐய்யனார் குடும்பம்.

தினமும் கோதையும் பொன்வண்ணனனும் மாலையில் வருபவர்கள் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டுதான் கிளம்புவார்கள்.

ஆதிபெருமாளும் மீனாட்சியும் அனாதை போல தனித்து விடப்பட்டனர். அவர்கள் திருந்தி இருந்தால் நிச்சயம் ஐய்யனார் அவர்களை மன்னித்துவிட்டிருப்பார்... அவர்கள் கட்டை காடு போகும் வரை திருந்தாத ஜென்மங்கள் ஆயிற்றே... சந்தோசமாய் கூடுகட்டி வாழும் ஐய்யனார் குடும்பத்தை சீரழிக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர் அண்ணனும் தங்கையும்.

தூரிகாவை செக் பண்ணிவிட்டு வெளியே வந்தவள் தலையை பிடித்துக்கொண்டு கீழே விழப்போனவளை தாங்கிப்பிடித்தான் சிங்கம்.

“ம்மா தண்ணி எடுத்துட்டு வாங்க” என்று சோபாவில் படுக்க வைத்து தண்ணீரை வாங்கி முகத்தில் தெளித்து “ரதி என்னடி ஆச்சு காலையில சாப்பிட்டியா இல்லையா?” என்று அவளை சிறு அதட்டல் போட்டான் சிங்கம்.

நாச்சியோ “தள்ளுடா பேராண்டி” என்றவரோ ரதியின் கையை பிடித்து நாடி பார்த்தவர் “டேய் பேராண்டி எனக்கு கொள்ளு பேத்தி வரப்போறாடா நீ அப்பா ஆகிட்ட... என்ற பேத்தி மசக்கையா இருக்கா குலம் விருத்தி ஆகியிருக்கு” என்றவரை சிங்கம் அணைத்துக்கொண்டு ரதியை பார்த்தான். அவளோ “ம்ம்” என்று கண்ணை மூடித்திறந்தாள்.

தூரிகாவோ வயிற்றை பிடித்துக்கொண்டு எழுந்து ஹாலுக்கு வந்தவள் “கங்கிராட்ஸ் அண்ணி” என்று கைக்கொடுக்க “தேங்க்ஸ்” தூரிகா" என்றாள் மெல்லிய இதழ்விரிப்புடன்.

சிங்கமோ “இப்பவே நாம ஹாஸ்பிட்டல் போகலாம்டி வா” என்று ரதியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் வந்தான்.

ராஜி ரதியை செக் பண்ணி விட்டு “கங்கிராட்ஸ் ரதி ட்வின்ஸ் பேபி” என்றதும் ரதியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. சிங்கத்தின் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டாள்.

“ட்வின்ஸ்னா ரொம்ப கேர்ஃபுலா இருக்கணும்ல. முன்னமே ரதிக்கு அபார்ட் ஆகியிருக்குல” என்றான் சிங்கம் சற்று கலக்கக் குரலுடன்.

“ரதி ஆரோக்கியமா இருக்கா... ரெண்டு குழந்தையை தாங்கக்கூடிய வலு அவ கர்ப்பபைக்கு இருக்கு நோ ப்ராப்ளம் டோன்ட் ஒர்ரி விட்டமின் டேப்லட் தான் எழுதியிருக்கேன்” என்று மாத்திரை சீட்டை கொடுக்க வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் டாக்டர்” என்று இருவரும் வெளியே வந்தனர்.

பொன்வண்ணனும் கௌதமும் இருவருக்காக காத்திருந்தனர். “கங்கிராட்ஸ் அண்ணா” என்று கை கொடுத்து அணைத்துக்கொண்டான் சிங்கத்தை.

பொன்வண்ணனோ “கங்கிராட்ஸ் ரதி கேர்ஃபுலா இருக்கணும் ரதிமா” என்று தங்கையை தோளோடு அணைத்துக்கொண்டான்.

“கங்கிராட்ஸ் அண்ணி” என்றான் கௌதம். “தேங்க்ஸ் கௌதம்” என்று சந்தோசப்பட்டவள் “அண்ணா ட்வின்ஸ் பேபி” என்று வெட்கப்பட்டாள்.

பொன்வண்ணனோ “அப்போ நீ எந்த வேலையும் செய்ய கூடாது... நீ நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துடு... அத்தையால தூரிகாவை மட்டும் தான் கவனிக்க முடியும்” என்றான் சிறு கவலையுடன்.

சிங்கமோ ரதியை தன் பக்கம் இழுத்து "உன் வீட்டுல ரெண்டு கொலைகாரங்க இருக்காங்க... அவங்களை வெளியே அனுப்பிட்டு வேணா என் பொண்டாட்டியை தாராளமா உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்றதும் பொன்வண்ணன் முகம் வாடியது.

“என் பொண்டாட்டியை பார்த்துக்க எங்களுக்கு தெரியும் வா ரதி போகலாம்” என்று ரதியின் கையை பிடித்துக் கூட்டிக்கொண்டு காரில் ஏறிய சிங்கத்திற்கு கோபம் அடங்கவில்லை.

“மாம்ஸ் எதுக்கு இந்த கோபம்? ரிலாக்ஸ்” என்று சிங்கத்தின் தோளை தொட “உன் அண்ணன் எந்த தைரியத்துல உன்னை அவன் வீட்டுக்கு கூப்பிடுறான்... அவன் அத்தையையும் அப்பாவையும் பத்தி தெரிஞ்சும் கூப்பிட்டதும் எனக்கு கோபம் வந்துடுச்சுடி.” என்றான் அடங்காத கோபத்துடன்.

“அண்ணா ஏதோ ஆசையில கேட்டுட்டாரு அதுக்கு போய் அண்ணாகிட்ட கோபமா பேசணுமா..? பாவம் அண்ணா முகம் சுண்டி போச்சு. ஏன்ங்க இப்படி இருக்கீங்க?” என்று ரதி வருத்தப்பட்டாள்.

“நான் இப்படிதான்” என்று ரதியின் கையை தட்டிவிட்டு காரை ஓட்டியவன் வீடு வந்ததும் ரதியை இறங்கச் சொல்லி காரை எடுத்துக்கொண்டுச் சென்றுவிட்டான்.

பொன்வண்ணனோ “நான் என்னடா கேட்டேன் என் தங்கச்சியை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னது தப்பா சிங்கம் குதிக்குறாரு” என்று கெளதமிடம் அங்கலாய்த்தான்.

கௌதமோ “டேய் வண்ணா சிங்கம் அண்ணாவுக்கு ரதிமேல கொள்ளைப்பிரியம்... ரதியை உங்க வீட்ல விட்டா உங்க அப்பாவும் உங்க அத்தையும் ரதியை ஏதாவது செய்துடுவாங்கனு பயம் அவருக்கு... இதுகூட உனக்கு புரியலையா டா” என்றான் வண்ணாவின் தோளை தட்டினான்.

“சிங்கம் சொல்றது கரெக்ட்தான்... எங்கப்பாவையும் அத்தையம்மாவையும் நம்பமுடியாது” என்று பெரும்மூச்சு விட்டான் பொன்வண்ணன்.

ரதியோ “என்ன கோபம் இவருக்கு என்னை இறக்கிவிட்டு அப்படியே கிளம்பியாச்சு வரட்டும் பார்த்துக்குறேன்” என்று கோபத்தோடு கட்டிலில் படுத்திருந்தாள்.

நாச்சியும் கோமதியும் “ரதி கண்ணு குழந்தை நல்லாயிருக்கா?” என்று அவள் பக்கம் வந்து நின்றனர்.

கோபத்தை பெரியவர்களிடம் காட்டாமல் எழுந்து அமர்ந்தவள் “அம்மாச்சி என் வயித்துல ரெட்டைபுள்ள வளருது” என்றவளுக்கு முகத்தில் வெட்கம் வந்துவிட்டது.

நாச்சியோ “ரெட்டிப்பு சந்தோசம்ல எனக்கு... இனி வீட்டுல ஒருவேலை செய்யக்கூடாது. உன்கூட நானிருக்கேன் பார்த்துப்பேன்... கோமதி உப்பும் மிளகாயும் எடுத்துட்டு வா.. ரதிக்கு சுத்திப்போடணும்” என்றவுடன் கோமதியும் உப்பும் மிளகாயும் எடுத்துக்கொண்டு வர நாச்சி ரதிக்கு சுத்திப்போட்டு நெருப்பில் போட்டார் படபடவென்று மிளகாய் வெடிக்க “என் பேத்திக்கு ஊரு முழுக்க கண்ணு இருக்கு எல்லா திருஷ்டியும் ஒழிஞ்சு போகட்டும்” என்றார் சிலாகித்தபடி.

சிங்கமோ வீட்டுக்கு வந்தவன் அறைக்குள் போக ரதியோ சிங்கத்தை பார்த்ததும் முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

“ஏய் இப்ப எதுக்கு முகத்தை ஒன்றரை முழத்துக்கு தூக்கி வச்சிருக்க... உன்னை விட்டு பிரிஞ்சு என்னால இருக்க முடியாது அதான் உன் அண்ணன்கிட்ட சண்டை போட்டேன்... வேணும்னா உன் அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன் போதுமா! என்கிட்ட பேசாம இருக்காதடி” என்று அவள் பக்கம் படுத்து அவளது வெற்று முதுகில் முத்தம் பதித்தான்.

அவளோ “ம்க்கும்” என்று முகத்தை வெட்டினாள்.

“அடியேய் கெஞ்சினா மிஞ்சுற போடி” என்று எழுந்துச் சென்றுவிட்டான்.

மாலையில் கோதை பை நிறைய பழங்களுடன் மகளை பார்க்க வந்துவிட்டார். பொன்வண்ணன் தூரிகாவை பார்த்ததும் “என் பையன் என்னடி சொல்றான்” என்று அவள் பக்கம் வந்து நின்றான்.

“ம்ம் நல்லாயிருக்கான் ஆனா பையனோட அம்மாவுக்குத்தான் கொஞ்சம் பயமா இருக்கு” என்று கண்ணைச்சிமிட்டினாள்.

ரதியை அணைத்துக்கொண்டு “என் நெஞ்சுல பாலை வார்த்தே. சிங்கப்பயலோட குழந்தையை என் மடியில வச்சு கொஞ்சப்போறேன் ரொம்ப சந்தோசம்டி” என்று மகளின் நெற்றியில் முத்தம் பதித்தார் கோதை.

வெளியேச் சென்றிருந்த சிங்கம் வந்தவன் கோதை பேசிய வார்த்தைகளை கேட்டு “அத்தை” என்று அணைத்துக்கொள்ள துடித்த கைகளை அடக்கிக்கொண்டான்.

பொன்வண்ணனோ சிங்கத்தை பார்த்தும் பார்க்காதது போல நின்றான். சிங்கமோ பொன்வண்ணன் பக்கம் சென்று “சாரி” என்றவனோ சட்டையை மடக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

ரதியோ சிங்கத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்காக நீ என்ன வேணாலும் செய்வியா மாமா... யாருக்கும் அடிபணியாத சிங்கம் எனக்காக மன்னிப்பு கேட்குற நான் உன் குடும்பத்துக்கு விஷமா வந்தேன் ஆனா நீ என்னை இனிப்பா மாத்திட்ட லயன் மாம்ஸ்' என்று சிங்கத்தை கொஞ்சிக் கொண்டாள்.

நாச்சிக்கோ நெஞ்சுக்குள் படபடவென அடித்துக்கொண்டது. "சிங்கம்" என்று நெஞ்சை பிடித்ததும் “அப்பத்தா” என்று ஓடிவந்து நாச்சியை தாங்கினான் சிங்கம்.

பொன்வண்ணன் நாச்சிக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கொடுக்க “மாமா அம்மாச்சியை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போயிடலாம்” என்றதும் நாச்சியை கையில் தூக்கிக்கொண்டு ஓடினான் காருக்கு சிங்கம்.

ரதியை தூரிகாவிற்கு துணைக்கு இருக்கவிட்டு குடும்பமே ஹாஸ்பிட்டலில்தான் நின்றனர். நாச்சியை செக் பண்ணிய டாக்டரோ “அடைப்பு இருக்கு ஆன்ஜியோ பண்ணனும் பொன்வண்ணன்” என்றதும் “உடனே பண்ணிடலாம் டாக்டர்” என்றான் நெற்றியை தடவிக்கொண்டே.

நாச்சிக்கு ஆப்ரேசன் முடிந்ததும் அந்த நாள் இரவு ரெஸ்ட் எடுக்கட்டும் என்று யாரும் நாச்சியிடம் பேசவில்லை.

வீரய்யன்தான் நொடிந்து விட்டார். “என் பொண்டாட்டி கூட பேசாம பச்சை தண்ணி கூட குடிக்கமாட்டேன்” என்று விரதம் இருந்தவரை சிங்கம்தான் மிரட்டி பாலை குடிக்க வைத்தான்.

விடியலில் நாச்சி தேடியது வீரய்யனைத்தான்... வீரய்யன் நாச்சி இருந்த அறைக்குள் சென்றதும் “ஏன் டி நாச்சி என்னை விட்டு தனியா போக பார்த்தியே என்னையும் கூட்டிட்டு போயிருடி” என்று குலுங்கி அழுதார் வீரய்யன்.

“யோவ் கிழவா இந்த கிழவி உன்னை விட்டு எங்கயும் போகமாட்டா இதோ உன்னை தினமும் வெத்தலை வாங்கிட்டு வானு டார்ச்சர் பண்ணத்தான் உயிரோட வந்திருக்கேன்” என்று சிரித்தார்.

“இனிமே வெத்தலை பாக்கு கிடையாது” என்று சிங்கம் அங்கே வந்தான்.

“வாய்யா ராசா உன்கிட்ட தான் பேசணும் இப்படி உட்காரு” என்றவர் “எங்களுக்கு சதாபிஷேகம் நடக்கணும்... இந்த கிழவனுக்கும் கிழவிக்கும் உன் பசங்க உலகத்துக்கு வரதுக்குள்ள எங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயந்து வருது. உன்னோட பசங்களை நாங்க ஆசிர்வாதம் பண்ணனும்” என்றார் வருத்தம் இழையோடிய குரலில்.

“அப்பத்தா என் மகனையும் மகளையும் நீதான் வளர்க்கப்போற எதுக்கு சும்மா நான் இல்லாம போயிருவேன்னு வெட்டிப் பேச்சு” என்றான் சற்று கோபக்குரலுடன்.

நாச்சியோ "கண்ணா இந்த அப்பத்தா சொன்னா கேட்பதானே... அப்பத்தா ஆசையை நிறைவேத்துப்பா" என்றார் கெஞ்சலுடன்.

"உங்க உடம்பு தேறிவரட்டும் கண்டிப்பா சதாபிஷேகம் பண்ணிடலாம் இப்போ ரெஸ்ட் எடுங்க" என்றான் பெரும்மூச்சுடன்.

ஒருவாரத்தில் நாச்சியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பொன்வண்ணன் தினமும் மாலையில் நாச்சியை கவனித்துக்கொண்டான். சிங்கமோ இரவு முழுவதும் நாச்சியின் அறையில் இருந்து கவனித்துக் கொண்டான்.

தூரிகாவிற்கு இடுப்பு வலி வந்துவிட்டது. ரதியோ “என்னங்க தூரிகாவுக்கு லேபர் பெயின் வந்துடுச்சு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்" என அவசரப்படுத்தினாள்.

சிங்கமோ தூரிகாவை தூக்கிக்கொண்டு காரில் படுக்க வைத்தவன் “ரதி நீ பாப்பாவ பிடிச்சு உட்காரு ” என்றவன் வலியில் அழுதுக் கொண்டிருக்கும் தூரிகாவை பார்த்தவன் “கொஞ்சம் பொறுத்துக்கோடா சீக்கிரம் ஹாஸ்பிடல் போயிடலாம் அண்ணி இருக்கா தைரியமா இருடா” என்றவனோ காரை கொஞ்சம் வேகத்தில் தான் ஓட்டினான்.

பொன்வண்ணனும் கோதையும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டனர். ராஜியும் ரதியும் தூரிகாவுக்கு பிரசவம் பார்த்தனர். “அம்மா வலிக்குது” என்று லேபர் வார்டையே அலற விட்டாள் தூரிகா.

ராஜியோ “ரதி உன் அண்ணாவை வரச்சொல்லு” என்றதும் பொன்வண்ணன் உள்ளே வந்தவன் “துகா கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுடி" என்று அவளது தலையை நீவிக்கொடுக்க "முடியலை" என்று அவள் கண்ணீர் விட்டாள்.

பொன்வண்ணனோ "ரதி பேபி என்ன பொசிஷன்ல இருக்கு?" என்றான் பதட்டத்துடன்.

“தூரிகா கொஞ்சம் புஷ் பண்ணு பேபி தலை தெரியுது" என்று ரதி சிறு அதட்டல் போட்டாள்.

தூரிகா தன் பலத்தை திரட்டி புஷ் பண்ண பொன்வண்ணனின் மகன் பிறந்து விட்டான்.

“வாவ் பாய் பேபி எனக்கு மருமகன் வந்துட்டான்" என்று முதன் முதலில் குழந்தையை கைகளில் ஏந்தினாள் ரதி.

ராஜியோ “ரதி நீ பொண்ணு பெத்துக்கொடுத்திடு... நீயும் உன் அண்ணாவும் சம்பந்தி ஆகிடுவீங்க” என கிண்டல் செய்தார்.

குழந்தையை சுத்தம் செய்து தூரிகாவிடம் காட்டிய ரதியோ “அப்படியே என்னோட அண்ணா போல இருக்கான் தூரிகா” என்றாள் முகம் முழுக்க புன்னகையுடன்.

பொன்வண்ணனோ “ரதி குழந்தையை தாய்மாமாகிட்ட கொடு” என்றான்.

“உன் புருசன் என் குழந்தையை எப்படி கொஞ்சுறாருனு நான் பார்க்கணும்” என்று சிரித்தான்.

தூரிகாவோ மயக்கதிற்குச் செல்ல அவளை சுத்தப்படுத்தி நார்மல் வார்டுக்கு மாத்தியிருந்தனர்.

ரதி குழந்தையுடன் வெளியே வந்தவள் “எனக்கு மருமகன் பிறந்திருக்கான் பாருங்க” என்று அங்கே நின்ற தன் குடும்பத்திடம் காட்டினாள் மகிழ்ச்சியுடன்.

சிங்கமோ கையை நீட்டி “என்கிட்ட என் மருமகனை கொடு ரதி நான்தான் முதலில் தூக்கணும்” என்று ஆனந்தச்சிரிப்போடு வாங்கிக்கொண்டான் குழந்தையை.

கொஞ்ச நேரத்தில் "குழந்தைக்கு பசியாத்தணும் கொடுங்க... அப்புறம் கொஞ்சலாம்" என்று வாங்கிச்சென்றாள் ரதி.

பொன்வண்ணனோ "தேங்க்ஸ் துகா" என்று மனைவியின் நெற்றியில் முத்தம் கொடுத்தான். ஆதிபெருமாளும் மீனாட்சியும் குழந்தையை பார்க்க வந்தனர். யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. அனைவரும் சந்தோசமாக இருப்பதை கண்டு 'நாள் பார்த்துட்டு இருக்கேன்டா உங்களோட சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க' என்று மனதிற்குள் சீறிக்கொண்டார் மீனாட்சி.

மூன்று நாட்களில் தூரிகாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நாச்சியோ "அப்படியே பொன்வண்ணனை உரிச்சு வச்சிருக்கான்டி உன் மகன்" என்று குழந்தையின் கன்னம் தொட்டு திருஷ்டி எடுத்தார்.

பொன்வண்ணனோ “அம்மாச்சி என்னைதான் நீங்க வளர்க்கல என் மகனை நீங்கதான் வளர்த்துக்கொடுக்கணும்” என்று நாச்சியை செல்லமாய் சீண்டினான்.

“அதுக்கென்ன நல்லா வளர்த்துக்கொடுக்குறேன்” என்றவரிடம் “நீங்க உங்க ஹெல்த் பாருங்க நான் சும்மா விளையாடினேன்” என்றவனோ நாச்சியை செக் பண்ணினான். நாச்சியின் உடம்பு தேறியிருந்தது பொன்வணணன் மகனுக்கு அகரன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவில் அலர்விழி வாந்தி எடுக்க “அப்பாடா எல்லா பேரன்களையும் நான் பார்க்கப்போறேன்” என்று நாச்சி சந்தோசப்பட்டார். இவர்களின் சந்தோசத்தை கலைக்க இருவர் திட்டம் தீட்டுவது யாருக்கும் தெரியவில்லை.

ரதிக்கு ஏழுமாதம் முடியும் முன் வளைகாப்பு நடத்தினார்கள். தூரிகா வளைகாப்பிற்கு வந்தது போலவே மீனாட்சியும் ஆதிபெருமாளும் வந்து மகளை ஆசிர்வாதம் செய்து விட்டுச் சென்றனர்.

மீனாட்சி நாச்சியை கடந்து போகும் போது “நாச்சியம்மா உன் குடும்பத்து ஆட்கள் எண்ணிக்கை குறையப்போகுது” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி பேசி எள்ளல் சிரிப்புடன் சென்றார் மீனாட்சி.
 
Status
Not open for further replies.
Top