ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனிக்கும் விஷமடி நீ- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 44

“இப்போவே செக் பண்ணி கன்பார்ம் பண்ணிடலாம் அம்மாச்சி” என சந்தோஷத்தோடு பிரக்னன்சி கிட்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சிங்கத்துக்கும் தனக்கும் இருந்த ஊடலில் பீரியட்ஸ் ஆகாததையே மறந்து விட்டாள் ரதி. யூரின் டெஸ்ட் பண்ணியதில் இரண்டு சிவப்பு கோடுகளை பார்த்ததும் அவளுக்கு கைகள் நடுங்கியது ஆனந்தத்தில் இப்போதே சிங்கத்திடம் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தாள்.

பெரியவர்கள் தான் சொல்லும் நல்ல செய்திக்காக வெளியே காத்து கிடப்பார்கள் என வெளியே வந்தவள் "அம்மாச்சி நீங்க கொள்ளு பாட்டி ஆகிட்டீங்க... அத்தை நீங்க பாட்டி ஆகிட்டீங்க" என்றாள் வெட்கப்பட்டு முகத்தை பொத்திக் கொண்டாள்.

“ஆத்தி ஆத்தி இதுக்குதானே நான் தவம் கிடந்தேன்... என் கொள்ளு பேரனையோ பேத்தியையோ பார்க்கத்தானே இந்த கெழட்டு கட்டை இருக்கேன்” என்று பூரிப்புடனும் சந்தோத்துடனும் ரதியை கட்டிக்கொண்டார் நாச்சி.

கோமதியோ சமையல்கட்டுக்கு ஓடிச்சென்று சர்க்கரையை எடுத்துவந்து ரதியின் வாயில் ஊட்டிவிட்டு “சந்தோசமா இருக்குமா” என்று மருமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

“அம்மாச்சி உங்க பேரன்கிட்ட நான் மாசமா இருக்க விசயத்தை நான் தான் முதல் சொல்லுவேன்... நீங்க அவசரப்பட்டு சொல்லிடாதீங்க, அத்தை நீங்களும்தான்” என்று கண்ணை உருட்டி விரல் நீட்டி இருவரையும் செல்லமாக மிரட்டினாள் ரதி.

“நாங்க சொல்லமாட்டோம் தாயி!” என்றனர் இருவரும் கோரசாக.

வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருந்தது. ஆதிபெருமாளோ மீனாட்சியை "கட்சி ஆபிஸ்க்கு நீ வரவேணாம் தங்கச்சி... இந்த முறை நாம ஜெயிக்க மாட்டோம்! நீ அங்க வந்தீனா உன்னை உதாசீனமா பார்ப்பாங்க ஐய்யனாரும் சிங்கமும்... நீ வீட்லயே இரு நான் மாணிக்கத்தை கூட்டிட்டு போறேன். ஐய்யனாரை போட்டுத்தள்ளிட்டு நான் அவன் இடத்துல உட்காரப்போறேன் மீனாட்சி” என பதவி வெறி பிடித்து ஆங்காரம் பிடித்தது போல பேசினார்.

“நானும் வரேன் அண்ணா!! அவனை என் கையால போட்டுத்தள்ளணும்” என்று கண்ணில் கொலை வெறியோடு புறப்பட்டார் மீனாட்சி.

கோதையோ ‘இன்னிக்கு எலக்சன் ரிசல்ட் இந்த கடன்காரி வேற என் புருசன் கூட போறாளே! இவ என்ன பண்ண வேணாலும் தயங்க மாட்டா’ என்று அச்சம் கொண்டவர் ஆதிபெருமாளின் கார் புறப்பட்டதும் பொன்வண்ணனுக்கு போன் போட்டார் அவனோ ஒரு சர்ஜரியில் இருக்க போனை எடுக்கவில்லை. சிங்கத்திற்கு போன் அடித்துவிட்டார். சிங்கமோ ஐய்யனார் பக்கம் கருப்பண்ண சாமி போல பாதுகாப்பாய் கையை கட்டிக்கொண்டு கூட்டத்தில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். போனை எடுத்தவன் போனை ஆன் செய்து பேசாமல் காதில் வைத்திருந்தான்.

“சிங்கப் பையா உன்கிட்ட அவசரமா பேசணும்... நான் பேசறதை காதுக்கொடுத்து மட்டும் கேளு” என்று அவசரமாகவும் பதட்டத்துடனே பேசவும் “டேய் முருகா எதுக்குடா இவ்ளோ பதட்டப்படுற... பொறுத்து பேசு... நான் காது கொடுத்து கேட்குறேன்” என்றான் நிதானமாகத்தான். கோதை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு தெரிந்த விசயமே.

"ரதி அப்பாவும், மீனாட்சியும் ரொம்ப நேரமா கட்சி விசயம் பேசிக்கிட்டு இருந்தாங்க சிங்கம்... அவங்க யாரையோ போட்டுத்தள்ளணும்னு சொல்றாங்கப்பா எனக்கு படபடனு வருது நீதான் நம்ம குடும்பத்து ஆளுங்களை பார்த்துக்கிடணும்... என் மனசுக்குள்ள ஏதோ அசம்பாவிதம் நடந்திடும்னு தோணுதுப்பா” என்றார் அங்கலாய்ப்புடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு.

“டேய் முருகா சிங்கம் எல்லாரையும் பார்த்துப்பான் கவலைப்படாம சோபாவுல உட்கார்ந்து டிவியில சீரியல் பார்க்கச் சொல்லுடா” என்று நக்கல் தொனியுடன் சொல்லி விட்டு சட்டை காலரை தூக்கி விட்டு போனை வைத்துவிட்டான்.

முருகனோ வழக்கம்போல அண்ணன் என்னமோ பேசுறாரு எனக்கு புரியலை என்று குழம்பிக்கொண்டு நின்றான்.

அதற்குள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஐய்யனார் வெற்றி பெற்றார் என்று டிவியில் அறிவிப்பு கொடுத்துவிட்டனர்.

தோற்று போன அவமானத்தில் முகம் கன்றி இருந்த ஆதிபெருமாளோ மாணிக்கத்திற்கு போன் போட்டு “எங்கடா இருக்க?” என்று ஆத்திரத்தில் முழக்கமிட்டார்.

“அ.அது மாமா உள்ளூர் ஆளுங்க ஐய்யனாரை போட்டுதள்ள வரமாட்டேனு சொல்லிபுட்டானுங்க... அசலூர்ல இருந்து ஆளுங்களை பிடித்து அழைச்சிட்டு வர தாமதம் ஆகிடுச்சு... இதோ கூட்டத்தோடு கூட்டமா சிங்கம் ஆளுங்களோட கலந்துட்டானுங்க நம்ம ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஐய்யனாரை போட்டிருவாங்க நீங்கதான் இந்த தொகுதிக்கு கிங்” என்றான் எக்காளச் சிரிப்புடன்.

“வாய்ஜாலம் காட்டாதேடா! என்கிட்ட கத்தையா வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா வேலையை முடி” என்று பல்லைக்கடித்தார் ஆதிபெருமாள்.

“எல்லாம் கச்சிதமா நடக்கும் நான் வரேன்” என்று மாணிக்கமும் கூட்டத்தில் கலந்தான்.

ஐய்யனார் சிங்கத்துடன் சிரித்து பேசுவதை கண்ட மீனாட்சியோ “அண்ணா ஐய்யனாரையும் அவன் பெத்த சிங்கத்தை பார்க்கும்போது வயிறு எரியுது... அவனை என் கையால கொல்லணும்” என்று அவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கப்போனவரின் கையை பிடித்து தடுத்த ஆதிபெருமாளோ “மீனா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா... சிங்கம் இருக்கான் அவன் பக்கத்துல கூட உன்னால போகமுடியாது பொறுத்திரு” என்று கொதித்துக்கொண்டிருந்த மீனாட்சியை அடக்கி வைத்தார் ஆதிபெருமாள்.

மாணிக்கம் கூட்டத்தில் மறைந்து மறைந்து சென்றதை பார்த்துவிட்டான் சிங்கம். நொடிக்கொருமுறை கூட்டத்தை சுற்றி தன் கழுகு பார்வையால் நோட்டமிட்டுக்கொண்டுதானே இருக்கிறான். “வாடா மாணிக்கம் உன் கதையை இன்னிக்கே முடிச்சு வச்சிடறேன்” என்று இதழ் வளைத்து சிரித்தான் சிங்கம்.

கோதைக்கோ இதயதுடிப்பு எகிறியது பூஜையறைக்கு ஓடிச்சென்று கையை கூப்பி “கடவுளே என் அண்ணாவுக்கும் சிங்கப்பயலுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துடக்கூடாது” என்று மனதுருகி கண்ணீருடன் கடவுளை நிந்தனை செய்தார்.

ரதிக்கோ மனதிற்குள் ஏதோ உழன்றுக் கொண்டே இருந்தது... உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவராச்சே அவள்... சிங்கத்துக்கு போன் போட்டாள். கூட்டத்தில் போன் அடித்த சத்தமும் கேட்கவில்லை சிங்கத்துக்கு... நாம கட்சி ஆபிஸ் போயிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள் வெளியே வாசலுக்கு வந்தாள். நாச்சியும் கோமதியும் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர்.

காரை துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் “அண்ணா அவசரமா கட்சி ஆபிஸ் போகணும் காரை எடுங்க” என்று காரில் ஏறிவிட்டாள்.

“பாப்பா நம்ம குடும்பத்து பொண்ணுங்க கட்சி ஆபிஸ்க்கு போறது சிங்கம் தம்பிக்கு பிடிக்காது... ஐய்யனார் அய்யாவும் கோபப்படுவாரு வேணாம்” என்று அழைத்து போக மறுத்துவிட்டார் டிரைவர்.

“அண்ணா ப்ளீஸ் காரை எடுங்க நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்று அவள் கோபமாக கத்திவிட்டாள். வேறுவழியில்லாம் காரை கட்சி ஆபிஸிற்கு விட்டார்.

ரதிக்கோ போகும்வழியெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது என்ற பதட்டத்துடனே இருந்தாள். ரதி எமோஷ்னல் ஆகாத வயித்துல இருக்கும் கருவுக்கு பாதிப்பு வரும் என்று அவளாக அவளை நிதானப்படுத்திக்கொண்டாள்.

கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். ஐய்யனாருக்கு மாலை போட்டு மரியாதை செய்து பூக்களை தூவினார்கள். “டேய் சிங்கம் அண்ணாவுக்கும் மாலையை போடுங்க” என்று கோரசாக சிரிப்பொலியுடன் சிங்கத்திற்கும் மாலையை போட்டுவிட்டனர்.

சிங்கம் பக்கம் நின்றிருந்த கண்ணனோ “மாப்பிள்ளை கூட்டத்துல ஏதோ கருப்பு ஆடு கலந்திருக்கு என்னனு பார்த்து அடிச்சு போடு நான் அப்பாவை கட்சி ஆபிஸ்க்குள்ள அழைச்சிட்டு போறேன்” என்று ஐய்யனாரின் கையை பிடித்தார் கண்ணன்.

ரதியோ கூட்டத்துக்குள் முட்டி மோதி ஐய்யனாரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.

மீனாட்சி ரதி கூட்டத்தில் நுழைவதை கண்டு “அண்ணே நம்ம ரதி கூட்டத்துக்குள்ள போறா... இவ ஏன் இந்த நேரம் அங்க..." அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ என்று பதட்டப்படவில்லை... 'இப்போ போட்டிருக்கும் ப்ளானில் ஐய்யனார் தப்பித்து விட்டால் இவளை வைத்துதானே அடுத்த ப்ளான் போட முடியும்... எல்லாத்தையும் சொதப்பிட்டா இந்த ரதி’ என்று தலையில் கையை வைத்தார்.

ஆதிபெருமாளோ "என்னது ரதி கூட்டத்துக்குள்ள போறாளா?" என்று அங்கலாய்த்தவர் “இருமா இப்பவே மாணிக்கத்துக்கு போன் போட்டு கூட்டத்தை விட்டு வெளியே வரச்சொல்லுறேன்” என்று அவர் மகள் மேல் இருக்கும் பாசத்தில் மாணிக்கத்திற்கு போன் போட்டார் அவரசமாக... அவன் போன் எடுக்கவில்லை.

“இந்த பொண்ணு ஏன் அங்க போகணும்?” என்று சலித்துக்கொண்டவருக்கு மனதே ஏற்கவில்லை காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குச் சென்றார் ஆதிபெருமாள்.

'இந்த அண்ணா என்னை இறங்க வேணாம்னு சொல்லிவிட்டு இப்போ இவர் போறாரே! ம்ம் எப்படியோ போகட்டும்' என்று சுயநலமாக யோசித்த மீனாட்சியோ காருக்குள்ளேயே உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்.

அந்த நேரம் “ஏய்” என்று ஐய்யானாரை ஒருவன் கத்தியால் வெட்டபோக... சிங்கம் பாய்ந்து அவனின் கையை வெட்டிவிட்டான். அவனை மட்டுமல்ல கூட்டத்தில் நுழைந்த கருப்பு ஆடுகளை அடித்து துவம்சம் செய்து அவர்களை நடக்க கூட முடியாமல் செய்துவிட்டான். ஐய்யனாருக்கும் கண்ணனுக்கும் சிறு சிறு காயங்கள் படத்தான் செய்தது.

ஐய்யனார் பக்கம் ஒருத்தரை கூட விடவில்லை சிங்கம் எகிறி வந்தவர்களை அடித்து சாய்த்தான்... ரதியோ ஐய்யனார் பாதுகாப்பாக நின்றதை பார்த்தவள் நிம்மதியாக மூச்சு விட சிங்கத்தின் முதுகில் கத்தியை குத்த போக ஐய்யனாரோ “சிங்கம் பின்னால பாரு” என்று அவர் சத்தம் போட அவனும் முன்னால் இருந்தவனை அடித்து போட்டு பின்னால் திரும்ப “மாமாவை குத்திடாதே” என்று கத்தி கொண்டு மாணிக்கத்தின் ஆளின் கையில் இருந்த கத்தியை பிடித்துக்கொண்டிருந்தாள். கத்தியின் கூர்மை அவளது பிஞ்சுக் கையிலிருந்து ரத்தம் கொட்ட செய்தது. கையில் மட்டும் இல்லை... அவளது கால்கள் வழியாகவும் இரத்தம் கொட்டியது. அவளுக்கே தனக்குள் எனன் நடக்கிறது என்று தெரியவில்லை... சிங்கத்தை காப்பாற்றுவதில் மட்டுமே அவளது கவனம் இருந்தது.

ரதியின் கையில் இரத்தம் வழிந்ததை கண்டு “ரதிஇஇஇ கத்தியை விடுடி” என்று உச்சஸ்தானியிலிருந்து முழக்கமிட்டவனுக்கு இதயம் வெடித்து சிதறியது போல இருந்தது. அவள் கையில் இரத்தம் வழிவது தன் இதயத்தில் இருந்து இரத்தம் கொட்டுவது போல துடித்தான் சிங்கம். ரதியை பிடித்திருந்தவனை கனல் கக்கும் பார்வை பார்த்ததும் அவனுக்குள் கிலி பரவியது. அவன் சிங்கத்தை விட தடிமனாக இருந்தான். ஆனால் சிங்கத்தின் பார்வை சிவனின் நெற்றிக்கண்ணை போல எரிக்கும் நெருப்பு பார்வையில் அவன் பஸ்பமாய் ஆனதை போல உணர்ந்தான் அந்த அடியாள்.

சிங்க வந்த வேகத்தில் ரதியை ஒருகையால் அணைத்துக் கொண்டு அந்த அடியாளின் குறுக்கில் எட்டி உதைத்தான். ஒரு உதையிலேயே துவண்டு போய் விழுந்துவிட்டான்.

“டேய் இவனை கொன்னு வைகை ஆத்துல போடுங்கடா” என்று தன் ஆட்களிடம் சிங்கம் போல கர்ஜித்தவனின் மார்பில் ரதி மயங்கி விழ “ரதிஇஇ” என்று அவளது கன்னத்தை தட்டினான்.

அவளோ “இப்போ என்னை நம்புவியா மாமா” என்றாள் தழுதழுத்த குரலில் கண்ணீருடன் அவளது உதடுகள் அடுத்த வார்த்தை பேச முடியாது தடுமாறியது. தன்னவனின் அன்பிற்குள் வந்துவிட்டோம் என்றும் பாதுகாப்பான் என் மாமன் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடினாள் ரதி. இருவரும் சண்டை என்ற பெயரில் காதல் செடியை வளர்த்து வந்திருக்கின்றனர்.

அவளது கால்களுக்கு கீழ் இரத்தம் வழிந்து அவன் கைகளில் பிசுபிசுப்பாய் பட “அம்மாஆஆ என்னோட உசிரு” என்று வாய் விட்டு கதறிவிட்டான். துடித்துவிட்டான். தன் உயிர்கூடு நெஞ்சை விட்டு பிரிந்தது போல உணர்ந்து தவித்தவன் "அப்பா ரதிக்கு என்னமோ ஆச்சு" என்று அழுதுக் கொண்டே காருக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். ஐய்யனாரும் கண்ணனும் மன கலக்கத்துடன் சிங்கத்துடனே காரில் ஏறினார்கள். மயக்கமுற்று மூச்சு மட்டும் வந்துக் கொண்டிருந்த மனைவியை நெஞ்சில் அணைத்துக்கொண்டு “ரதி கண்ணு முழிச்சு பாருடி” என்று அலறிவிட்டான் சிங்கம்.

ஐய்யனாரோ “கடவுளே என் மருமகளை காப்பாத்து” என்று கண்ணீருடன் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார்.

கோதையோ கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவர் கண்ணை திறக்கவும் விளக்கு அணைந்து போனது. “அச்சோ கடவுளே என்ன இது சோதனை யாருக்கு என்ன ஆச்சோ தெரியலையே என் அண்ணாவும் சிங்கமமும் பத்திரமா இருக்கணும்!” என்று மீண்டும் விளக்கை ஏறியவருக்கு மனது இங்கே இருக்கவில்லை. வெளியே வந்தவர் காரை கட்சி ஆபிஸுக்கு விட சொன்னார் டிரைவரிடம்.

கோதை அண்ணனையும் மருமகனையும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டியவர் தன் மகளையும் காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டி இருந்தால் ரதிக்கும் இந்த பேராபத்து வந்திருக்காது. விதி யாரை விட்டது.

ஆதிபெருமாளை ரதி பக்கம் கூட விடவில்லை ஐய்யனாரின் ஆட்கள். தான் போட்ட சதி வலையில் மகள் சிக்கிவிட்டாளே என்று மனம் குமறி போய் காரில் ஏறினார்.

மீனாட்சி “அச்சோ என் மருமகளை கொலை பண்ண பார்த்திருக்காங்க அண்ணா பாருங்க... இந்த சிங்கம்தான் ரதியை போன் போட்டு வரச்சொல்லியிருப்பான்... என் மருமகளுக்கு எதுவும் ஆகாது வாங்க அண்ணா போகலாம்” என்று சிங்கம் கார் பின்னே சென்றனர்.

பொன்வண்ணனுக்கு விசயம் தெரிந்து ஹாஸ்பிட்டல் வாசலுக்கு ஓடிவந்தான். சிங்கமோ ஹாஸ்பிட்டல் முன்னே காரை நிறுத்தியதும் ரதியை தூக்கிக்கொண்டு ஓடினான். கையிலும் கால் வழியே இரத்தம் வழிவதை கண்ட பொன்வண்ணனுக்கு உயிரே இல்லை. “என்னாச்சு என் தங்கச்சியை என்ன பண்ணின ரவுடி பயலே?” என்று அவன் கதற

“டேய் என் பொண்டாட்டியை காப்பாத்துடா அவளுக்கு கால்வழியே இரத்தம் வருதுடா” என்று வாயில் உமிழ்நீர் வழிய கதறி அழுதான் சிங்கம்.

அடுத்த நொடி பொன்வண்ணன் இரதியை வாங்கிக்கொண்டு எமர்ஜென்சிக்குள் சென்ற நேரம் கௌதமும் கைனகாலஜிஸ்ட் ராஜி டாக்டரும் வந்துவிட்டனர். பொன்வண்ணனுக்கு கைகள் நடுங்கியது. வெளியே நிற்க முடியாமல் எமர்ஜென்சிக்குள் வந்துவிட்ட சிங்கமோ “என்னடா பண்ணுறீங்க இன்னும் என் பொண்டாட்டி கண்ணு முழிக்கல இன்னும் பேசாம படுத்திருக்கா... மூணு டாக்டர் சுத்தி நிற்குறீங்க எதாவது பண்ணி கண்ணு முழிக்க வைங்கடா” என்று அவர்களிடம் சண்டைக்கே சென்றுவிட்டான்.

பொண்வண்ணனோ “போடா வெளியே உன்னை பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வருது. பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்ல அழுது நாடகம் போடுறான்” என வார்த்தைகளில் வதைத்தான் சிங்கம்.

“நீ என்ன வேணாலும் என்னை திட்டுடா என்பொண்டாட்டி எனக்கு வேணும்” என்று கையை கட்டி எமர்ஜன்சிக்குள் நின்றுவிட்டான்.

கௌதமோ “அண்ணே வெளியே இருங்க” என்று அவனை சமாதானம் செய்து அனுப்ப பார்த்தான். சிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை கௌதமால்.

ராஜியோ ரதிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்திருந்தாள். “பொன்வண்ணன் அபார்ட் ஆகியிருக்கு” என்றார் பதட்டத்துடன் சிங்கம் நிலைகுலைந்து விட்டான். அப்படியே தரையில் கையில் அடித்துக்கொண்டான். “என்னால என் குழந்தையை காப்பாத்த முடியாம போச்சே” என்று முகத்தை பொத்தி அழுதான்.

ரதியின் கை காயம் கொஞ்சம் ஆழமாகத்தான் இருந்தது. மருந்திட்டு கட்டு போட்டு விட்டு இன்ஜக்சன் போட்டுவிட்டார்கள். ரதி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள்.

“டேய் கௌதம் ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சுல்ல ரதி ஏன் டா கண்ணு முழிக்காம இருக்கா?” என்று இரதியின் பக்கம் போய் நின்றவனோ “இரதிமா கண்ணு முழிச்சு பாருடி நான் உன்னை நம்பிட்டேன்டி” என்று அழுது துடித்தான்.

பொன்வண்ணனோ “சும்மா அழுது நடிக்குறான் ரவுடி” பல்லைகடித்து துப்பியவனோ “கௌதம் இவரை வெளியே போய் இருக்கச் சொல்லு இப்படி கத்தி கத்தி என் தங்கச்சியை இன்னும் ரணம் ஆக்கி விடுவார்" என்று ஆதங்கத்தில் சத்தம் போட்டான்.

“போடா நான் எங்கயும் போகமாட்டேன் என் பொண்டாட்டி எழுந்து என்னைத் தேடுவா” என்று சம்மணம் இட்டு உட்கார்ந்துக் கொண்டான்.

தூரிகாவோ கதவை திறந்து வந்தவள் வயிற்றை பிடித்துக்கொண்டாள். அவளுக்கு ரதி இருந்த நிலைகண்டு கைகால்கள் நடுங்கியது.

பொன்வண்ணன் தூரிகாவை பிடிப்பதற்குள் “பாப்பா நீ எங்க இங்க வந்த வெளியே போய் இரு” என்று வேகமாய் எழுந்த சிங்கமோ தூரிகாவை வெளியே கொண்டு நிற்க வைத்தவன் அங்கே அடித்து பிடித்து கண்ணில் கண்ணீருடன் வந்த கோதையை பார்த்தவன் தலையை அசைத்து இதழ் பிதுக்கி அழுதான். எல்லாம் போச்சு என்ற விதமாக.

கட்சி ஆபிஸிற்குச் சென்ற கோதைக்கு ரதி கையில் அடிப்பட்டு விட்டது என்று தெரிய பறந்து வந்திருந்தார்.

“டேய் சிங்கப்பையா என் மகளை கவனிக்காம இருந்திட்டியே” என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அடித்துவிட்டார்.

சிங்கமோ கோதை அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு மரம் போல நின்றான். அடுத்த நொடி “என் பொண்டாட்டி பக்கம் இருக்கணும்” என்று மீண்டும் எமர்ஜன்சிக்குள் ஓடிவிட்டான்.

கோமதியும் நாச்சியும் வீரய்யனும் விசயம் தெரிந்து பதைபதைப்புடன் ஓடி வர... அங்கே ஆதிபெருமாளும் மீனாட்சியும் வந்து விட்டனர்.

ஐய்யனாரை குற்றவாளியை போல பார்த்தவர் “என்னை பழிவாங்கினது பத்தாதுனு இப்போ என் மருமகள் உயிரையும் குடிக்க பார்க்குறியா ஐய்யனார்” என்று அவர் முன்னே வந்து எகிறினார் நயவஞ்சகி மீனாட்சி. சிங்கம் அங்கே இல்லையென்று ஆட்டம் போட பார்த்தார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்வண்ணனோ “அத்தையம்மா இது ஹாஸ்பிட்டலா? சந்தைகடையா? எல்லாரும் வெளியே போங்க” என்று சத்தம் போட்டான் உச்சஸ்தானியில்.

ஆதிபெருமாளோ “வண்ணா என் பொண்ணை நான் பார்க்கணும்” என்று கண்ணீர் விட்டார்.

“ரதி நல்லாயிருக்கா... இன்னும ஒரு மணிநேரத்தில கண்ணு முழிச்சிடுவா அப்புறம் பார்க்கலாம்” என்று அவளுக்கு அபார்ட் ஆன விசயத்தை மறைத்து இருந்தான் பொன்வண்ணன்.

ரதியின் அடிப்பட்ட கையை பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவளது அடிவயிற்றிலும் பதிந்தது. அந்த நேரம் “மாமா” என்று முணகினாள் ரதி.

பொன்வண்ணனோ வெளியே நின்றவர்களை சத்தம் போட்டு விட்டு உள்ளே வந்தவன் ரதியின் முணகலை கேட்டு “கொஞ்சம் இந்த பக்கம் வாங்க” என்று சிங்கத்தின் கையை பிடிக்க... அவனோ “போடா” என்று பொன்வண்ணனின் கையை வேகமாக தட்டி விட்டான்.

“மாமா... பாப்பா” என்று முணகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிங்கத்துக்கு இதயத்தில் இரத்தம் கொட்டியது.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 44

“இப்போவே செக் பண்ணி கன்பார்ம் பண்ணிடலாம் அம்மாச்சி” என சந்தோஷத்தோடு பிரக்னன்சி கிட்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சிங்கத்துக்கும் தனக்கும் இருந்த ஊடலில் பீரியட்ஸ் ஆகாததையே மறந்து விட்டாள் ரதி. யூரின் டெஸ்ட் பண்ணியதில் இரண்டு சிவப்பு கோடுகளை பார்த்ததும் அவளுக்கு கைகள் நடுங்கியது ஆனந்தத்தில் இப்போதே சிங்கத்திடம் சொல்லிவிட வேண்டுமென்று துடித்தாள்.

பெரியவர்கள் தான் சொல்லும் நல்ல செய்திக்காக வெளியே காத்து கிடப்பார்கள் என வெளியே வந்தவள் "அம்மாச்சி நீங்க கொள்ளு பாட்டி ஆகிட்டீங்க... அத்தை நீங்க பாட்டி ஆகிட்டீங்க" என வெட்கப்பட்டு முகத்தை பொத்திக் கொண்டாள்.

“ஆத்தி ஆத்தி இதுக்குதானே நான் தவம் கிடந்தேன்... என் கொள்ளு பேரனையோ பேத்தியையோ பார்க்கத்தானே இந்த கெழட்டு கட்டை காத்து இருக்கேன்” என்று பூரிப்புடனும் சந்தோத்துடனும் ரதியை கட்டிக்கொண்டார் நாச்சி.

கோமதியோ சமையல்கட்டுக்கு ஓடிச்சென்று சர்க்கரையை எடுத்துவந்து ரதியின் வாயில் ஊட்டிவிட்டு “சந்தோசமா இருக்குமா” என்று மருமகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

“அம்மாச்சி உங்க பேரன்கிட்ட நான் மாசமா இருக்க விசயத்தை நானா சொல்றதுக்குள்ளாற நீங்க முந்திரிக்கொட்டை போல அவசரப்பட்டு சொல்லிடாதீங்க, அத்தை நீங்களும்தான்” என்று கண்ணை உருட்டி விரல் நீட்டி இருவரையும் செல்லமாக மிரட்டினாள் ரதி.

“நாங்க சொல்லமாட்டோம் தாயி!” என்றனர் இருவரும் கோரசாக.

வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டிருந்தது. ஆதிபெருமாளோ மீனாட்சியை "கட்சி ஆபிஸ்க்கு நீ வரவேணாம் தங்கச்சி... இந்த முறை நாம ஜெயிக்க மாட்டோம்! நீ அங்க வந்தீனா உன்னை உதாசீனமா பார்ப்பாங்க ஐய்யனாரும் சிங்கமும்... நீ வீட்லயே இரு நான் மாணிக்கத்தை கூட்டிட்டு போறேன். ஐய்யனாரை போட்டுத்தள்ளிட்டு நான் அவன் இடத்துல உட்காரப்போறேன் மீனாட்சி” என பதவி வெறி பிடித்து ஆங்காரம் பிடித்தது போல பேசினார்.

“நானும் வரேன் அண்ணா!! அவனை என் கையால போட்டுத்தள்ளணும்” என்று கண்ணில் கொலை வெறியோடு புறப்பட்டார் மீனாட்சி.

கோதையோ ‘இன்னிக்கு எலக்சன் ரிசல்ட் இந்த கடன்காரி வேற என் புருசன் கூட போறாளே! இவ என்ன பண்ண வேணாலும் தயங்க மாட்டா’ என்று அச்சம் கொண்டவர் ஆதிபெருமாளின் கார் புறப்பட்டதும் பொன்வண்ணனுக்கு போன் போட்டார் அவனோ ஒரு சர்ஜரியில் இருக்க போனை எடுக்கவில்லை. சிங்கத்திற்கு போன் அடித்துவிட்டார். சிங்கமோ ஐய்யனார் பக்கம் கருப்பண்ண சாமி போல பாதுகாப்பாய் கையை கட்டிக்கொண்டு கூட்டத்தில் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். போனை எடுத்தவன் போனை ஆன் செய்து பேசாமல் காதில் வைத்திருந்தான்.

“சிங்கப் பையா உன்கிட்ட அவசரமா பேசணும்... நான் பேசறதை காதுக்கொடுத்து மட்டும் கேளு” என்று அவசரமாகவும் பதட்டத்துடனே பேசவும் “டேய் முருகா எதுக்குடா இவ்ளோ பதட்டப்படுற... பொறுத்து பேசு... நான் காது கொடுத்து கேட்குறேன்” என்றான் நிதானமாகத்தான். கோதை என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு தெரிந்த விசயமே.

"ரதி அப்பாவும், மீனாட்சியும் ரொம்ப நேரமா கட்சி விசயம் பேசிக்கிட்டு இருந்தாங்க சிங்கம்... அவங்க யாரையோ போட்டுத்தள்ளணும்னு சொல்றாங்கப்பா எனக்கு படபடனு வருது.. நீதான் நம்ம குடும்பத்து ஆளுங்களை பார்த்துக்கிடணும்... என் மனசுக்குள்ள ஏதோ அசம்பாவிதம் நடந்திடும்னு தோணுதுப்பா” என்றார் அங்கலாய்ப்புடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு.

“டேய் முருகா சிங்கம் எல்லாரையும் பார்த்துப்பான் கவலைப்படாம சோபாவுல உட்கார்ந்து டிவியில சீரியல் பார்க்கச் சொல்லுடா” என்று நக்கல் தொனியுடன் சொல்லி விட்டு சட்டை காலரை தூக்கி விட்டு போனை வைத்துவிட்டான்.

முருகனோ வழக்கம்போல அண்ணன் என்னமோ பேசுறாரு எனக்கு புரியலை என்று குழம்பிக்கொண்டு நின்றான்.

அதற்குள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஐய்யனார் வெற்றி பெற்றார் என்று டிவியில் அறிவிப்பு கொடுத்துவிட்டனர்.

தோற்று போன அவமானத்தில் முகம் கன்றி இருந்த ஆதிபெருமாளோ மாணிக்கத்திற்கு போன் போட்டு “எங்கடா இருக்க?” என்று ஆத்திரத்தில் முழக்கமிட்டார்.

“அ.அது மாமா உள்ளூர் ஆளுங்க ஐய்யனாரை போட்டுதள்ள வரமாட்டேனு சொல்லிபுட்டானுங்க... அசலூர்ல இருந்து ஆளுங்களை பிடித்து அழைச்சிட்டு வர தாமதம் ஆகிடுச்சு... இதோ கூட்டத்தோடு கூட்டமா சிங்கம் ஆளுங்களோட கலந்துட்டானுங்க நம்ம ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஐய்யனாரை போட்டிருவாங்க நீங்கதான் இந்த தொகுதிக்கு கிங்” என்றான் எக்காளச் சிரிப்புடன்.

“வாய்ஜாலம் காட்டாதேடா! என்கிட்ட கத்தையா வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா வேலையை முடி” என்று பல்லைக்கடித்தார் ஆதிபெருமாள்.

“எல்லாம் கச்சிதமா நடக்கும் நான் வரேன்” என்று மாணிக்கமும் கூட்டத்தில் கலந்தான்.

ஐய்யனார் சிங்கத்துடன் சிரித்து பேசுவதை கண்ட மீனாட்சியோ “அண்ணா ஐய்யனாரையும் அவன் பெத்த சிங்கத்தை பார்க்கும்போது வயிறு எரியுது... அவனை என் கையால கொல்லணும்” என்று அவர் கத்தியை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கப்போனவரின் கையை பிடித்து தடுத்த ஆதிபெருமாளோ “மீனா உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா... சிங்கம் இருக்கான் அவன் பக்கத்துல கூட உன்னால போகமுடியாது பொறுத்திரு” என்று கொதித்துக்கொண்டிருந்த மீனாட்சியை அடக்கி வைத்தார் ஆதிபெருமாள்.

மாணிக்கம் கூட்டத்தில் மறைந்து மறைந்து சென்றதை பார்த்துவிட்டான் சிங்கம். நொடிக்கொருமுறை கூட்டத்தை சுற்றி தன் கழுகு பார்வையால் நோட்டமிட்டுக்கொண்டுதானே இருக்கிறான். “வாடா மாணிக்கம் உன் கதையை இன்னிக்கே முடிச்சு வச்சிடறேன்” என்று இதழ் வளைத்து சிரித்தான் சிங்கம்.

கோதைக்கோ இதயதுடிப்பு எகிறியது பூஜையறைக்கு ஓடிச்சென்று கையை கூப்பி “கடவுளே என் அண்ணாவுக்கும் சிங்கப்பயலுக்கும் எந்த ஒரு ஆபத்தும் வந்துடக்கூடாது” என்று மனதுருகி கண்ணீருடன் கடவுளை நிந்தனை செய்தார்.

ரதிக்கோ மனதிற்குள் ஏதோ உழன்றுக் கொண்டே இருந்தது... உயிரை காப்பாற்றுகின்ற மருத்துவராச்சே அவள்... சிங்கத்துக்கு போன் போட்டாள். கூட்டத்தில் போன் அடித்த சத்தமும் கேட்கவில்லை சிங்கத்துக்கு... நாம கட்சி ஆபிஸ் போயிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள் வெளியே வாசலுக்கு வந்தாள். நாச்சியும் கோமதியும் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர்.

காரை துடைத்துக்கொண்டிருந்த டிரைவரிடம் “அண்ணா அவசரமா கட்சி ஆபிஸ் போகணும் காரை எடுங்க” என்று காரில் ஏறிவிட்டாள்.

“பாப்பா நம்ம குடும்பத்து பொண்ணுங்க கட்சி ஆபிஸ்க்கு போறது சிங்கம் தம்பிக்கு பிடிக்காது... ஐய்யனார் அய்யாவும் கோபப்படுவாரு வேணாம்” என்று அழைத்து போக மறுத்துவிட்டார் டிரைவர்.

“அண்ணா ப்ளீஸ் காரை எடுங்க நான் மாமாகிட்ட பேசிக்கிறேன்” என்று அவள் கோபமாக கத்திவிட்டாள். வேறுவழியில்லாம் காரை கட்சி ஆபிஸிற்கு விட்டார்.

ரதிக்கோ போகும்வழியெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாது என்ற பதட்டத்துடனே இருந்தாள். ரதி எமோஷ்னல் ஆகாத வயித்துல இருக்கும் கருவுக்கு பாதிப்பு வரும் என்று அவளாக அவளை நிதானப்படுத்திக் கொண்டாள்.

கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். ஐய்யனாருக்கு மாலை போட்டு மரியாதை செய்து பூக்களை தூவினார்கள். “டேய் சிங்கம் அண்ணாவுக்கும் மாலையை போடுங்க” என்று கோரசாக சிரிப்பொலியுடன் சிங்கத்திற்கும் மாலையை போட்டுவிட்டனர்.

சிங்கம் பக்கம் நின்றிருந்த கண்ணனோ “மாப்பிள்ளை கூட்டத்துல ஏதோ கருப்பு ஆடு கலந்திருக்கு என்னனு பார்த்து அடிச்சு போடு நான் அப்பாவை கட்சி ஆபிஸ்க்குள்ள அழைச்சிட்டு போறேன்” என்று ஐய்யனாரின் கையை பிடித்தார் கண்ணன்.

ரதியோ கூட்டத்துக்குள் முட்டி மோதி ஐய்யனாரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.

மீனாட்சி ரதி கூட்டத்தில் நுழைவதை கண்டு “அண்ணே நம்ம ரதி கூட்டத்துக்குள்ள போறா... இவ ஏன் இந்த நேரம் அங்க... அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமோ” என்று ஆதிப்பெருமாள் முன்னே பதட்டப்பட்டவர் போல நடித்தார் ஆனால் பதட்டப்படவில்லை... 'இப்போ போட்டிருக்கும் ப்ளானில் ஐய்யனார் தப்பித்து விட்டால் இவளை வைத்துதானே அடுத்த ப்ளான் போட முடியும்... எல்லாத்தையும் சொதப்பிட்டா இந்த ரதி’ என்று தலையில் கையை வைத்தார்.

ஆதிபெருமாளோ "என்னது ரதி கூட்டத்துக்குள்ள போறாளா?" என்று அங்கலாய்த்தவர் “இருமா இப்பவே மாணிக்கத்துக்கு போன் போட்டு கூட்டத்தை விட்டு வெளியே வரச்சொல்லுறேன்” என்று அவர் மகள் மேல் இருக்கும் பாசத்தில் மாணிக்கத்திற்கு போன் போட்டார் அவரசமாக... அவன் போன் எடுக்கவில்லை.

“இந்த பொண்ணு ஏன் அங்க போகணும்?” என்று சலித்துக்கொண்டவருக்கு மனதே ஏற்கவில்லை காரை விட்டு இறங்கி கூட்டத்திற்குச் சென்றார் ஆதிபெருமாள்.

'இந்த அண்ணா என்னை இறங்க வேணாம்னு சொல்லிவிட்டு இப்போ இவர் போறாரே! ம்ம் எப்படியோ போகட்டும்' என்று சுயநலமாக யோசித்த மீனாட்சியோ காருக்குள்ளேயே உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்தார்.

அந்த நேரம் “ஏய்” என்று ஐய்யானாரை ஒருவன் கத்தியால் வெட்டபோக... சிங்கம் பாய்ந்து அவனின் கையை வெட்டிவிட்டான். அவனை மட்டுமல்ல கூட்டத்தில் நுழைந்த கருப்பு ஆடுகளை அடித்து துவம்சம் செய்து அவர்களை நடக்க கூட முடியாமல் செய்துவிட்டான். ஐய்யனாருக்கும் கண்ணனுக்கும் சிறு சிறு காயங்கள் படத்தான் செய்தது.

ஐய்யனார் பக்கம் ஒருத்தரை கூட விடவில்லை சிங்கம் எகிறி வந்தவர்களை அடித்து சாய்த்தான்... ஆனால் புத்துக்குள் இருந்து வந்த எறும்புகள் போல மாணிக்கத்தின் ஆட்கள் வந்துகொண்டே இருந்தனர் ரதியோ ஐய்யனார் பாதுகாப்பாக நின்றதை பார்த்தவள் நிம்மதியாக மூச்சு விட சிங்கத்தின் முதுகில் கத்தியை குத்த போக ஐய்யனாரோ “சிங்கம் பின்னால பாரு” என்று அவர் சத்தம் போட அவனும் முன்னால் இருந்தவனை அடித்து போட்டு பின்னால் திரும்ப “மாமாவை குத்திடாதே” என்று கத்தி கொண்டு மாணிக்கத்தின் ஆளின் கையில் இருந்த கத்தியை பிடித்துக்கொண்டிருந்தாள். கத்தியின் கூர்மை அவளது பிஞ்சுக் கையிலிருந்து ரத்தம் கொட்ட செய்தது. கையில் மட்டும் இல்லை... அவளது கால்கள் வழியாகவும் இரத்தம் கொட்டியது. அவளுக்கே தனக்குள் எனன் நடக்கிறது என்று தெரியவில்லை... சிங்கத்தை காப்பாற்றுவதில் மட்டுமே அவளது கவனம் இருந்தது.

ரதியின் கையில் இரத்தம் வழிந்ததை கண்டு “ரதிஇஇஇ கத்தியை விடுடி” என்று உச்சஸ்தானியிலிருந்து முழக்கமிட்டவனுக்கு இதயம் வெடித்து சிதறியது போல இருந்தது. அவள் கையில் இரத்தம் வழிவது தன் இதயத்தில் இருந்து இரத்தம் கொட்டுவது போல துடித்தான் சிங்கம். ரதியை பிடித்திருந்தவனை கனல் கக்கும் பார்வை பார்த்ததும் அவனுக்குள் கிலி பரவியது. அவன் சிங்கத்தை விட தடிமனாக இருந்தான். ஆனால் சிங்கத்தின் பார்வை சிவனின் நெற்றிக்கண்ணை போல எரிக்கும் நெருப்பு பார்வையில் அவன் பஸ்பமாய் ஆனதை போல உணர்ந்தான் அந்த அடியாள்.

சிங்கம் வந்த வேகத்தில் ரதியை ஒருகையால் அணைத்துக் கொண்டு அந்த அடியாளின் குறுக்கில் எட்டி உதைத்தான். ஒரு உதையிலேயே துவண்டு போய் விழுந்துவிட்டான்.

“டேய் இவனை கொன்னு வைகை ஆத்துல போடுங்கடா” என்று தன் ஆட்களிடம் சிங்கம் போல கர்ஜித்தவனின் மார்பில் ரதி மயங்கி விழ “ரதிஇஇ என்னை பாருடி ” என்று அவளது கன்னத்தை தட்டினான்.

அவளோ கண்ணை லேசாக திறந்து “இப்போ என்னை நம்புவியா மாமா” என்றாள் தழுதழுத்த குரலில் கண்ணீருடன் அவளது உதடுகள் அடுத்த வார்த்தை பேச முடியாது தடுமாறியது. தன்னவனின் அன்பிற்குள் வந்துவிட்டோம் என்றும் தன்னை பாதுகாப்பான் என் மாமன் என்ற நம்பிக்கையில் கண்ணை மூடினாள் ரதி. இருவரும் சண்டை என்ற பெயரில் காதல் செடியை வளர்த்து வந்திருக்கின்றனர் அவர்களுக்கு தெரியாமலேயே.

அவளது கால்களுக்கு கீழ் இரத்தம் வழிந்து அவன் கைகளில் பிசுபிசுப்பாய் பட “அம்மாஆஆ என்னோட உசிரு” என்று வாய் விட்டு கதறிவிட்டான். துடித்துவிட்டான். தன் உயிர்கூடு நெஞ்சை விட்டு பிரிந்தது போல உணர்ந்து தவித்தவன் "அப்பா ரதிக்கு என்னமோ ஆச்சு" என்று அழுதுக் கொண்டே காருக்கு தூக்கிக் கொண்டு ஓடினான். ஐய்யனாரும் கண்ணனும் மன கலக்கத்துடன் சிங்கத்துடனே காரில் ஏறினார்கள். மயக்கமுற்று மூச்சு மட்டும் வந்துக் கொண்டிருந்த மனைவியை நெஞ்சில் அணைத்துக்கொண்டு “ரதி கண்ணு முழிச்சு பாருடி” என்று அலறிவிட்டான் சிங்கம்.

ஐய்யனாரோ “கடவுளே என் மருமகளை காப்பாத்து” என்று கண்ணீருடன் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார்.

கோதையோ கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவர் கண்ணை திறக்கவும் விளக்கு அணைந்து போனது. “அச்சோ கடவுளே என்ன இது சோதனை யாருக்கு என்ன ஆச்சோ தெரியலையே என் அண்ணாவும் சிங்கமமும் பத்திரமா இருக்கணும்!” என்று மீண்டும் விளக்கை ஏறியவருக்கு மனது இங்கே இருக்கவில்லை. வெளியே வந்தவர் காரை கட்சி ஆபிஸுக்கு விட சொன்னார் டிரைவரிடம்.

கோதை அண்ணனையும் மருமகனையும் காப்பாற்ற சொல்லி கடவுளை வேண்டியவர் தன் மகளையும் காப்பாற்று என்று கடவுளிடம் வேண்டி இருந்தால் ரதிக்கும் இந்த பேராபத்து வந்திருக்காது. விதி யாரை விட்டது.

ஆதிபெருமாளை ரதி பக்கம் கூட விடவில்லை ஐய்யனாரின் ஆட்கள். தான் போட்ட சதி வலையில் மகள் சிக்கிவிட்டாளே என்று மனம் குமறி போய் காரில் ஏறினார்.

மீனாட்சி “அச்சோ என் மருமகளை கொலை பண்ண பார்த்திருக்காங்க அண்ணா பாருங்க... இந்த சிங்கம்தான் ரதியை போன் போட்டு வரச்சொல்லியிருப்பான்... என் மருமகளுக்கு எதுவும் ஆகாது வாங்க அண்ணா போகலாம்” என்று சிங்கம் கார் பின்னே சென்றனர்.

பொன்வண்ணனுக்கு விசயம் தெரிந்து ஹாஸ்பிட்டல் வாசலுக்கு ஓடிவந்தான். சிங்கமோ ஹாஸ்பிட்டல் முன்னே காரை நிறுத்தியதும் ரதியை தூக்கிக்கொண்டு ஓடினான். கையிலும் கால் வழியே இரத்தம் வழிவதை கண்ட பொன்வண்ணனுக்கு உயிரே இல்லை. “என்னாச்சு என் தங்கச்சியை என்ன பண்ணின ரவுடி பயலே?” என்று அவன் கதற

“டேய் என் பொண்டாட்டியை காப்பாத்துடா அவளுக்கு கால்வழியே இரத்தம் வருதுடா” என்று வாயில் உமிழ்நீர் வழிய கதறி அழுதான் சிங்கம்.

அடுத்த நொடி பொன்வண்ணன் இரதியை வாங்கிக்கொண்டு எமர்ஜென்சிக்குள் சென்ற நேரம் கௌதமும் கைனகாலஜிஸ்ட் ராஜி டாக்டரும் வந்துவிட்டனர். பொன்வண்ணனுக்கு கைகள் நடுங்கியது. வெளியே நிற்க முடியாமல் எமர்ஜென்சிக்குள் வந்துவிட்ட சிங்கமோ “என்னடா பண்ணுறீங்க இன்னும் என் பொண்டாட்டி கண்ணு முழிக்கல இன்னும் பேசாம படுத்திருக்கா... மூணு டாக்டர் சுத்தி நிற்குறீங்க எதாவது பண்ணி கண்ணு முழிக்க வைங்கடா” என்று அவர்களிடம் சண்டைக்கே சென்றுவிட்டான்.

பொண்வண்ணனோ “போடா வெளியே உன்னை பார்த்தாலே எனக்கு ஆத்திரம் வருது. பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்ல அழுது நாடகம் போடுறான்” என வார்த்தைகளில் வதைத்தான் சிங்கம்.

“நீ என்ன வேணாலும் என்னை திட்டுடா என்பொண்டாட்டி எனக்கு வேணும்” என்று கையை கட்டி எமர்ஜன்சிக்குள் நின்றுவிட்டான்.

கௌதமோ “அண்ணே வெளியே இருங்க” என்று அவனை சமாதானம் செய்து அனுப்ப பார்த்தான். சிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை கௌதமால்.

ராஜியோ ரதிக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்திருந்தாள். “பொன்வண்ணன் அபார்ட் ஆகியிருக்கு” என்றார் பதட்டத்துடன்.. சிங்கம் நிலைகுலைந்து விட்டான். அப்படியே தரையில் கையில் அடித்துக்கொண்டான். “என்னால என் குழந்தையை காப்பாத்த முடியாம போச்சே” என்று முகத்தை பொத்தி அழுதான்.

ரதியின் கை காயம் கொஞ்சம் ஆழமாகத்தான் இருந்தது. மருந்திட்டு கட்டு போட்டு விட்டு இன்ஜக்சன் போட்டுவிட்டார்கள். ரதி இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள். ரதியை லேபர் வார்டுக்கு மாத்தி டிரீட்மென்ட் செய்தனர்.

“டேய் கௌதம் ட்ரீட்மெண்ட் முடிஞ்சிருச்சுல்ல ரதி ஏன் டா கண்ணு முழிக்காம இருக்கா?” என்று இரதியின் பக்கம் போய் நின்றவனோ “இரதிமா கண்ணு முழிச்சு பாருடி நான் உன்னை நம்பிட்டேன்டி” என்று அழுது துடித்தான்.

பொன்வண்ணனோ “சும்மா அழுது நடிக்குறான் ரவுடி” பல்லைகடித்து துப்பியவனோ “கௌதம் இவரை வெளியே போய் இருக்கச் சொல்லு இப்படி கத்தி கத்தி என் தங்கச்சியை இன்னும் ரணம் ஆக்கி விடுவான்" என்று ஆதங்கத்தில் சத்தம் போட்டான்.

“போடா நான் எங்கயும் போகமாட்டேன் என் பொண்டாட்டி எழுந்து என்னைத் தேடுவா” என்று சம்மணம் இட்டு உட்கார்ந்துக் கொண்டான்.

தூரிகாவோ கதவை திறந்து வந்தவள் வயிற்றை பிடித்துக்கொண்டாள். அவளுக்கு ரதி இருந்த நிலைகண்டு கைகால்கள் நடுங்கியது.

பொன்வண்ணன் தூரிகாவை பிடிப்பதற்குள் “பாப்பா நீ எங்க இங்க வந்த வெளியே போய் இரு” என்று வேகமாய் எழுந்த சிங்கமோ தூரிகாவை வெளியே கொண்டு நிற்க வைத்தவன் அங்கே அடித்து பிடித்து கண்ணில் கண்ணீருடன் வந்த கோதையை பார்த்தவன் தலையை அசைத்து இதழ் பிதுக்கி அழுதான். எல்லாம் போச்சு என்ற விதமாக.

கட்சி ஆபிஸிற்குச் சென்ற கோதைக்கு ரதி கையில் அடிப்பட்டு விட்டது என்று தெரிய பறந்து வந்திருந்தார்.

“டேய் சிங்கப்பையா என் மகளை கவனிக்காம இருந்திட்டியே” என்று அவன் சட்டையை பிடித்து அவன் கன்னத்தில் அடித்துவிட்டார்.

சிங்கமோ கோதை அடிக்கும் அடிகளை வாங்கிக்கொண்டு மரம் போல நின்றான். அடுத்த நொடி “என் பொண்டாட்டி பக்கம் இருக்கணும்” என்று மீண்டும் எமர்ஜன்சிக்குள் ஓடிவிட்டான்.

கோமதியும் நாச்சியும் வீரய்யனும் விசயம் தெரிந்து பதைபதைப்புடன் ஓடி வர... அங்கே ஆதிபெருமாளும் மீனாட்சியும் வந்து விட்டனர்.

ஐய்யனாரை குற்றவாளியை போல பார்த்தவர் “என்னை பழிவாங்கினது பத்தாதுனு இப்போ என் மருமகள் உயிரையும் குடிக்க பார்க்குறியா ஐய்யனார்” என்று அவர் முன்னே வந்து எகிறினார் நயவஞ்சகி மீனாட்சி. சிங்கம் அங்கே இல்லையென்று ஆட்டம் போட பார்த்தார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த பொன்வண்ணனோ “அத்தையம்மா இது ஹாஸ்பிட்டலா? சந்தைகடையா? எல்லாரும் வெளியே போங்க” என்று சத்தம் போட்டான் உச்சஸ்தானியில்.

ஆதிபெருமாளோ “வண்ணா என் பொண்ணை நான் பார்க்கணும்” என்று கண்ணீர் விட்டார்.

“ரதி நல்லாயிருக்கா... இன்னும் ஒரு மணிநேரத்தில கண்ணு முழிச்சிடுவா அப்புறம் பார்க்கலாம்” என்று அவளுக்கு அபார்ட் ஆன விசயத்தை மறைத்து இருந்தான் பொன்வண்ணன்.

ரதியின் அடிப்பட்ட கையை பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வை அவளது அடிவயிற்றிலும் பதிந்தது. அந்த நேரம் “மாமா” என்று முணகினாள் ரதி.

பொன்வண்ணனோ சத்தம் போட்டு உள்ளே வந்தவன் ரதியின் முணகலை கேட்டு “கொஞ்சம் இந்த பக்கம் வாங்க” என்று எரிச்சலாக பேசி சிங்கத்தின் கையை பிடிக்க... அவனோ “போடா” என்று பொன்வண்ணனின் கையை வேகமாக தட்டி விட்டான்.

“மாமா... பாப்பா” என்று முணகியவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிங்கத்துக்கு இதயத்தில் இரத்தம் கொட்டியது.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 45

“ஆர் யு ஓ.கே ரதி?” என்று அவளது கன்னத்தை கொஞ்சம் வேகமாக தட்டினான் பொன்வண்ணன்.

“டேய்! எதுக்குடா என் பொண்டாட்டி கன்னத்துல அடிக்குற?” என்று பொன்வண்ணனிடம் சண்டைக்கே சென்று விட்டான் சிங்கம்.

“கொஞ்ச நேரம் பேசாம அமைதியா நில்லுங்க. இல்லைனா வெளியே கழுத்தை பிடிச்சு தள்ளிடுவேன்” என்று பல்லைக்கடித்தான் பொன்வண்ணன்.

இதே வெளிஇடமாக இருந்திருந்தால் பொன்வண்ணனின் கன்னம் வீங்கியிருக்கும். இருக்கும் சூழ்நிலையை கண்டு கைமுஷ்டியை முறுக்கியவனோ பேசாம நான் மெக்கானிக்கல் படிக்காம டாக்டர்க்கு படிச்சிருக்கலாம் இவனுங்களை கெஞ்ச வேண்டியிருக்கு என்று பொல்லாக் கோபம் கொண்டான் பொன்வண்ணன்மீது.

ரதியோ கண்களை மெல்ல திறந்ததும் வலதுபுறம் பொன்வண்ணனும் இடது புறம் சிங்கமும் நின்றிருந்தார்கள்.

"ரதி ஆர் யு ஓ.கே?” என்று தோள்பட்டையை தொட்டான் பொன்வண்ணன்.

“ம்ம் ஓ.கே அண்ணா” என்று மெதுவாய் உதடசைத்தாள்.

சிங்கத்தை கலங்கிய கண்களுடன் பார்த்த ரதியோ “பாப்பா” என்று வயிற்றை தடவி கண்களை மூடித்திறந்தவளுக்கு கண்ணீர் ஊற்றாய் பெருகியது.

பொன்வண்ணனோ "எமோஷனல் ஆகாதேடா ரதி... எமோஷனல் ஆனா இந்த நிலையில என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்” என்று அவளது நிலையை அவளுக்கு உணர்த்தினான்.

“நீ ஒ. ஒரு நிமிசம் வெளியே இரு அண்ணா அவர்கிட்ட பேசணும்” என்றாள் திக்கி திணறி வார்த்தைகளில்.

“ஓ.கேடா ஸ்டெயின் பண்ணி பேசாதே ரதி” என்று தங்கையின் தலையை ஆதூரமாய் வருடிவிட்டு “ரொம்ப அவளை அழவைக்க வேண்டாம்” என்று சிங்கத்தின் முகத்தை பார்த்தே அதட்டல் போட்டவன் அங்கே கையை கட்டி நின்றிருந்த கௌதமுடன் தானும் கதவு வரை சென்று விட்டான்.

“என் பொண்டாட்டியை ஒரு தடவை கவனிக்க தவறிட்டேன்... மறுபடியும் தப்பு பண்ண மாட்டேன்” என்று பொன்வண்ணனுக்கு பதிலடி கொடுத்திருந்தான்.

ரதியின் பக்கம் உட்கார்ந்தவனோ ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு “பாப்பா இல்லாம போச்சுனு கவலைப்படாதடி! உன்னால கவலை இல்லாம இருக்க முடியாதுதான்... என்மேல தான் தப்பு இருக்கு... உன் மேல சந்தேகப்பட்டு உன்கூட பேசாம இருந்திருக்கேன்... காலையில என்கிட்ட பேச வந்தில்ல... அப்போ உன்கிட்ட பேசியிருந்தா... என்கிட்ட நீ கன்சீவ் ஆனதை சொல்லியிருப்ப இல்லடி... நம்ம பாப்பாவும் நம்மளை விட்டு போயிருக்காதுல்ல... நானே நம்ம பாப்பா இல்லாம போனதுக்கு காரணம் ஆகிட்டேன் இல்லடி” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

சிங்கத்தை கம்பீரமாக பார்த்தவளுக்கு இப்படி பாச உறவுகளுக்கு அடிமையாகி கிடப்பான் என்று ரதி கனவிலும் நினைக்கவில்லை. அவனது கலைந்த தலையும்... கஞ்சி போட்டு அவனை போல இருக்கும் வெள்ளை சட்டை அவளது உதிரம் பட்டு இரத்தகறையாகி பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த சிங்கத்தை கண்டவளுக்கு அடிவயிற்றில் சுருக்கென்று வலி வந்தது.

தவறு நடக்க போகிறது என்பதை தான் சிங்கத்திடம் சொல்லியிருந்தால் தன் குழந்தை இன்னேரம் தன் வயிற்றில் பத்திரமாய் இருந்திருக்குமே! கட்சியில் ஜெயித்த குடும்பத்திற்கு ஒரு ஜாக்பாட் பரிசு கிடைத்தது போல இருந்திருக்கும்... அத்தனையும் தன்னால் பறிபோனதே... ஐய்யனாரின் உயிருக்கு கேடு வரப்போகிறது என்று எனக்கு தெரிந்தும் சிங்கத்திடம் மறைத்து வைத்திருந்ததுக்கு தண்டனை தன் குழந்தை இல்லாது போனது கடவுள் தன்னை தண்டித்து விட்டாரே என்று மனக்குமறலுடன் படுத்திருந்தவள் ‘இ... இல்லங்க என்னால தான் குழந்தை இல்லாது போச்சு’ என்று அழுதவள் அடிப்பட்ட கையை நெஞ்சில் வைக்க போக “ஆஆ” என்று வலி தாங்காது கதறினாள்.

“ஏய் என்னடி பண்ணுற..? கையை சும்மா அசைக்காதே! கட்டு பிரிஞ்சு இரத்தம் வந்திடப்போகுது... ஆமா! உன்னை யாருடி கட்சி ஆபிஸ் வரச்சொன்னது..? பெரிய வீராங்கனை ஜான்சிராணிபோல கத்தியை பிடிச்சிட்ட... என் முதுகுல குத்தியிருந்தா என் கல்லு உடம்புக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. என்ன வலி இருந்தாலும் நான் தாங்கிருப்பேன்... இப்போ உன் உயிருக்கு ஆபத்து வந்திருந்தா நான் என்னடி பண்ணுவேன்..? என் அத்தைதான் என்னை விட்டு போயிடுச்சு... அவங்க உருவத்துல நீ எனக்கு கிடைச்சட்டனு சந்தோசப்பட்டேன்டி... இப்ப நீயும் என்னை ஏமாத்திட்டு போக பார்த்தியேடி...” அவன் மனதில் வரைந்த காதல் ஓவியத்தை வெளியே திறந்து வெளிச்சம் போட்டு காட்டிவிட்டான் ரதியிடம்.

"ஊரையே காத்து நின்னவன் என் பொண்டாட்டிக்கு ஆபத்துனு வரும்போது காப்பாத்த முடியாத கையறு பட்டு நின்னுட்டேன் என்னை மன்னிச்சிடுடி தேவி” என்று கண்ணீருடன் உதடுகள் துடிக்க அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவளின் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை...

முரட்டுக்காளைக்குள் இப்படியொரு மென்மைதனம் இருக்குமென்று காதல் இன்ப வெள்ளத்தில் மூழ்கினாள்... உடல்நிலை மட்டும் நலமாக இருந்திருந்தால் சிங்கத்தை கட்டி தழுவி முகம் முழுவதும் முத்தமிட்டிருப்பாள். அவளால் இப்போது எழும்ப கூட முடியாத நிலையில் படுத்திருக்கிறாளே! அவனின் அன்பு இப்படித்தான் கிடைக்குமென்றால் இன்னும் பல கத்தியை பிடித்திருப்பாள் இந்த பேதை பெண். பழிவாங்க வந்தவள் அவளின் மாமன் மனதில் மதிமயங்கி கட்டுண்டு கிடக்கிறாள். அவளது கண்களில் வேறு கண்ணீர் வந்துக் கொண்டேயிருக்கிறது...

“என்னடி நான் பேசறதுக்கு எதுவுமே பதில் பேசாம கண்ணீர் மட்டும் விடற... வாய் நல்லாத்தானே இருக்கு... பேசுடி” என்று ஆழமாய் அவளுள் புதைந்து விட்டான் ஆண்மகன்...

அவளோ தன் மன்னவன் கண்ணில் தெரிந்த காதல் கலந்த பாசத்தை மெய்யால் உணர நினைத்தவளோ “மா.மாமா எனக்கு லிப்ஸ்ல ஒரு முத்தம் கொடேன்” என்று பேச முடியாமல் கண்களால் இறைஞ்சினாள்.

“ஏய்! என்ன விளையாடுறியா..? நீ இருக்க நிலமையில நான் முத்தம் கொடுத்தா என்னை விட கேவலமான பிறவி யாரும் இருக்கமாட்டாங்க! உடம்பு தேறி வா திகட்ட திகட்ட முத்தம் கொடுக்குறேன்!” என்று மீசையை முறுக்கினான்.

சிங்கம் பேசியதில் அவளது இதழ்கள் மல்லிகை பூவாய் விரிந்தது. வலிகள் அவளுக்கு தூரம் சென்றதென்னவோ “இப்படி மீசையை முறுக்கறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு... என் கைமட்டும் நல்லாயிருந்துச்சுனா உன் மீசையை திருகி பார்த்திருப்பேன்” என்றாள் காய்ந்த உதடுகளை ஈரம் செய்தபடியே.

சிங்கமோ எங்கே இருக்கிறோம் என்று எதிர்பார்க்கவில்லை... அவன் முகம் நோக்கிய அவளோ கண்களை மூடாமல் அவன் முத்தம் கொடுக்க வருகிறானென்று அவனது கண்களையே பார்த்திருந்தாள். அவனோ அவளது இதழில் தன் இதழ் கொண்டு ஈரம் செய்து அவளது வலிகளை பறந்தோடச் செய்தான்.

மெல்ல அவளது இதழிலிருந்து பிரிந்தவன் “இப்போ உன் உதடு காய்ஞ்சு போகாது” என அவளது நெற்றியில் ஒதுக்கிய முடியை காதுக்கு பின்புறம் ஒதுக்கிவிட்டான்.

“இப்போ போல எப்பவும் நான் கேட்கும் நேரமெல்லாம் முத்தம் கொடுக்கணும்” மெல்லச் சிரித்தாள் ரதி.

“கொடுக்குறேன்டி கோதை அத்தை வெளியே உன்னை பார்க்கணும்னு தவிச்சிட்டிருக்காங்க நான் வெளியே போனதும்தான் வருவாங்க... ரொம்ப பேச வேண்டாம் சரியா” என்று அவன் வெளியேச் சென்றான் அவளது கண்களை பார்த்தவாறே.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சிங்கம்... மாமா உசுருக்கு ஆபத்துக்கற விசயம் எனக்கு தெரியும்... தெரிஞ்சு தான் வந்தேன்னு சொல்லாம மறைச்சிட்டேன்... உன்கிட்ட சொன்னா இந்த பாசமும் காதலும் அரவணைப்பாக எனக்கு கொடுக்க மாட்ட மாமா! உன் காதல் எனக்கு ஜென்மம் முழுக்க வேணும்” என்று கண்ணை மூடினாள். அவன் தூரம் போனதும் அவளுக்கு வயிற்றிலும் கையிலும் வலி வந்தது.

பொன்வண்ணனும் கோதையும் உள்ளே வந்தனர். வெயிலில் போட்ட வெத்தலைக்கொடி போல வாடிக்கிடந்த மகளை பார்த்தவர் "என் பொண்ணுக்கு ரெண்டு கையிலும் இப்படியா காயம் ஆகியிருக்கணும் கடவுளே!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ரதியின் பக்கத்தில் வந்து நின்று கதறினார் கோதை. அவரால் நிற்க கூட முடியவில்லை தடுமாறினார்.

“ம்மா எமோஷ்னல் ஆகாதீங்க இத்தனைக்கும் காரணம் உங்க சிங்கம் மருமகன்தான் எதாவது சொல்லி ரதியை கூட்டத்துக்கு வரச்சொல்லியிருப்பான்... இப்போ நல்லவன் போல அழுது சீன் போடுறான் ராஸ்கல்... ஏன் உங்க அண்ணா ஐய்யனாருக்கும் இதில் பங்கு உண்டோ என்னவோ?" என்று சீற்றத்துடன் பொன்வண்ணன் பல்லைக்கடித்தான்.

ரதியோ ‘அ.அண்ணா நானாதான் கட்சி ஆபிஸ் போனேன்’ என்று சொல்ல வாயெடுப்பதற்குள் பொன்வண்ணன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் கோதை.

“ம்மா” என்று அதிர்ந்து அவன் கன்னத்தை பிடிக்க “இந்த கலவரம் நடக்க காரணமே உன்னோட லண்டன் அத்தையம்மா மீனாட்சி தான் காரணம்” என்றார் கோதை பிசிறு தட்டிய குரலோடு.

“எ.என்ன சொல்றீங்கம்மா உங்க அண்ணனும் உங்க பாச மருமகனும் செய்த தப்பை மறைக்க... அத்தையம்மா மேல பழிபோட்டு அவங்களை குற்றவாளி ஆக்காதீங்க” என்றான் அடங்காத கோபத்தோடு.

“உனக்கு மீனாட்சியை பத்தி என்னப்பா தெரியும்... முழுசா சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு... இதுக்குமேல நான் மறைச்சு வச்சா உண்மைகளையெல்லாம் சொல்ல காலம் துவங்கிடுச்சு” என்று எச்சிலை விழுங்கிக் கொண்டு கோதை பேச ஆரம்பிக்க... பொன்வண்ணனும் ரதியும் புருவம் சுருக்கி என்ன என்று கேட்கும் நேரம் ஆதிபெருமாளும் மீனாட்சியும் அறைக்குள் வந்துவிட்டனர்.

கோதையோ அவர்களை கண்டதுமே பொன்வண்ணனின் கையை இறுக்கிப்பிடித்து நின்றுக் கொண்டார்.

ஆதிபெருமாளோ “அம்மாடி ரதி நீ எதுக்குடா கட்சி ஆபிஸ் வந்த? அப்பா வரக்கூடாதுனு சொல்லியிருந்தேனே! நீ ஏன்டாம்மா அங்கே வந்த?” மகள் அடிப்பட்டு கிடப்பதை காணமுடியாமல் கதறினார் ஆதிபெருமாள்.

மீனாட்சியோ "பார்த்தியா பொன்னா... இந்த ஐய்யனாரும் அவன் மகன் சிங்கமும் நம்ம பொண்ணை இரத்த காயத்தோட படுக்க வச்சிட்டாங்க... வீட்டுக்கு வந்த மருமகனு பார்க்காம கட்சி ஆபிஸ் வரச்சொல்லி அவளை பழிவாங்கியிருக்காங்க... இவங்களை நாம சும்மா விடக்கூடாது... இரத்தத்துக்கு இரத்தம் காவு வாங்கியே தீரணும்” என்று கோபத்தோடு நின்றிருந்த பொன்வண்ணனை எரியும் எண்ணெயில் எண்ணெய்யை ஊத்திவிட்டு தீயை பெரிசு பண்ணி ஊதிவிட்டார்.

ஆதிபெருமாள் ரதியை கட்சி கூட்டத்திற்கு ஏன் வந்த என்று கேட்டதை முதலில் பொன்வண்ணன் சரியாக கவனிக்கவில்லை.

ரதிக்கு மீனாட்சி பேசுவது அபத்தமாகவே தெரிந்தது. அவரை பற்றிய சுயரூபத்தை இப்போது முழுதாக தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

“அ.அத்தை ஐய்யனார் மாமாவோ, என் புருசனோ என்னை கட்சி ஆபிஸ் வரச்சொல்லலை... நானாகத்தான் போனேன்... நீங்க” என்று ஆரம்பித்தவள் பொன்வண்ணனை பார்த்து வாயை மூடிக்கொண்டாள். ஆனால் மீனாட்சியை பற்றி உண்மை கூடிய சீக்கிரம் தெரியப்போகிறது என்று தெரியாமல் அமைதி காத்தாள் ரதி.

“உன்னை மந்திரம் போட்டு மயக்கி வச்சிட்டாங்க போல... அதான் உன்னை இத்தனை வருசமா வளர்த்த என்னையே எதிர்த்து பேசுற” என்று விசும்பினார் மீனாட்சி.

“அத்தையம்மா நீங்க கிளம்புங்க!” என்றாள் ரதி வலி நிறைந்த குரலில்.

“பார்த்தீங்களா அண்ணா! என்னை காதலிச்சு ஏமாத்தின ஐய்யனார் குடும்பத்தோடு ஆலமரமாய் தழைத்து இருக்கான்... ஆனா நான் மட்டும் பட்டமரமா இருக்கேன்... என்னை இந்த நிலையில் பார்த்தும் உங்க பொண்ணு என்னை வெளியே போகச்சொல்லுறா. சின்ன வயசுல இருந்து என் கைக்குள்ள வச்சு வளர்த்ததுக்கு நல்ல பாடம் கொடுத்திட்டா” என்று நீலிக்கண்ணீர் வடித்தவரை கண்ட பொன்வண்ணனோ "அத்தையம்மா அவளுக்கு உடம்பு சரியில்லாம இருக்கு அவ உங்களை அவமதிச்சு பேசுறா... நீங்க கிளம்புங்க நாளைக்கு வாங்க அவ உங்க கிட்ட பேசுவா” என்று அனுசரணையாக பேசி மீனாட்சியின் கை பிடித்து அழைத்து வந்தான்.

ஆதிபெருமாள் மகளையே பார்த்துக்கொண்டிருந்தார்... தான் செய்த வினை தன்னைச்சுட்டு விட்டதேயென்று...

ரதியோ "அப்பா நீங்க மாத்திரை போடணும்ல கிளம்புங்க" என்றிருந்தாள் சற்று கடுப்பான குரலில்.

"ஒருநாள் மாத்திரை போடலைனா உயிர் போகிடாது ம்மா" என்றார் நெஞ்சை நீவிக்கொண்டு.

“ப்பா தயவுசெய்து கிளம்புங்க” என்றதும்தான் "சரிடா அப்பா நாளைக்கு வரேன்" என்று கிளம்பியிருந்தார்.

பொன்வண்ணனின் கையை பிடித்துக்கொண்டு “நீயாவது என்னை வெறுத்திராதே பொன்வண்ணா... உன் தங்கச்சிக்கு நான் இப்போ எதிரி ஆகிட்டேன் போல” என்று முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டார் மீனாட்சி.

“அத்தையம்மா அழாதீங்க!! ரதி ஏதோ உங்களை தவறா புரிஞ்சுக்கிட்டானு நினைக்குறேன்... உடம்பும் சரியில்லாத இருக்கா... நீங்க நாளைக்கு வாங்க அவ உங்க கிட்ட பேசுவா” என்று மீனாட்சியையும் ஆதிபெருமாளையும் காரில் ஏற்றிவிட்டான்.

"யாரை நம்புவது" என்று குழம்பிபோய் தலையை அழுந்தக்கோதிக்கொண்டான் பொன்வண்ணன்.

ஐய்யனார் குடும்பம் அனைவருமே ரதி இருந்த அறைக்குள் சென்றுவிட்டனர்.

நாச்சியையும் கோமதியையும் பார்த்து கண்கள் கலங்கிய ரதியோ “உங்களுக்கு பேரன் பேத்தி இல்லாம பண்ணிட்டேன் நான்” என்று பொங்கி விம்மி அழுதாள்.

சிங்கமோ ரதியின் தலையை வருடிக்கொடுத்து “அழாதடி” என்றான் அடிப்பட்ட குரலில்.

ஐய்யனாரோ “கண்ணு அழுவாதே! இந்த பதவியை வேணாம்னு சொல்லிடறேன்... என்னோட பதவிக்கு ஆசைப்பட்டுத்தானே இந்த கலவரம் நடந்துச்சு... என் மருமகளை இன்னிக்கு எமன்கிட்ட போராடி அழைச்சிட்டு வந்திருக்கோம்... சிங்கம் எனக்கு பதவி வேணாம்னு எழுதிக்கொடுத்திடறேன்... எனக்கு பதவியை விட குடும்பம் தான் முக்கியம்... பதவியில இருந்து செய்ய வேண்டியதை நாம பதவியில இல்லாமலும் செய்யலாம் பா இப்பவே அறிக்கை கொடுத்திடு” என்றார் பெரும்மூச்சு விட்டு.

கோதையோ "பார்த்தியாடா வண்ணா என் அண்ணனை" என்று கண்ணால் சைகை செய்தார்.

அவனோ கண்ணைமூடித்திறந்து நெற்றியை அழுத்திப்பிடித்துக்கொண்டான். மீனாட்சியை அவனால் சந்தேகப்படமுடியவில்லை... யார் மீது தவறு என்று மீண்டும் மீண்டும் குழம்பிக்கொண்டிருந்தான்.

சிங்கமோ "அப்பா நீங்க பதவியை வேணாம்னு சொன்னா நாம தோத்துட்டதா போயிடும்... அவங்களுக்கு கொம்பு சீவி விட்டது போல ஆடுவாங்க... இனிமே தான் இந்த சிங்கம் யாருனு பார்க்கப்போறாங்க... நீங்க பதவியிலதான் இருக்கணும் அப்போதான் அவங்களை இன்னும் வைச்சு செய்ய முடியும்" என்று ஆத்திரத்தில் கை முஷ்டியை இறுக்கினான்.

"பொறுமையாயிரு சிங்கம் உன் கோபம் இப்போ என் பேத்தியை படுக்க வச்சிருக்கு” என்று வீரய்யன் சிங்கத்தை அடக்கினார்.

“அப்பா எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம்... ரதிக்கு ஓய்வு தேவை... இப்ப நின்னு காச்சு மூச்சுனு சத்தம் போட்டா அவளுக்கு தொந்தரவா இருக்கும்... சிங்கமும் கோதையும் மட்டும் ஹாஸ்பிட்டல இருக்கட்டும்... நாம கிளம்பலாம்” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் ஐய்யனார்.

பொன்வண்ணனோ படபடப்பாகவே நின்று இருந்த தூரிகாவை "நீ உங்க அம்மாகூட கிளம்பிபோடா” என்று அவள் கையை பிடித்து அழுத்தம் கொடுத்திருந்தான் பயப்படாதே என்ற விதத்தில்.

தூரிகாவோ ரதியின் பக்கம் சென்று "அண்ணி ரெஸ்ட் எடுங்க! நா.நான் நாளைக்கு வரேன்" என்று தன் பதட்டத்தை ரதியிடம் காட்டாமல் கோமதியுடன் கிளம்பிவிட்டாள்.

முருகன் சிங்கத்துக்கு மாற்று உடை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ரதி இருந்த அறையிலேயே குளித்து விட்டு உடைகளை மாற்றிக்கொண்டான்.

ரதி உறங்குவதற்கு இன்ஜக்சன் போட்டிருந்தான் பொன்வண்ணன். அவளும் உறங்கியிருக்க... பொன்வண்ணனையும் கோதையையும் ஒரு பார்வை பார்த்தவன் ரதியின் கட்டிலுக்கு பக்கம் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்துவிட்டான்.

பொன்வண்ணனோ சிங்கத்தை முறைத்தவன் ‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை’ என்று முணுமுணுத்துக்கொண்டான். கோதை பொன்வண்ணனின் கையை பற்றி “எதுவும் கோபமா பேசிடாதே” என்று சைகை செய்தார்.

கோதைக்கோ உறக்கம் வரவில்லை. ரதி தூக்கத்தில் கையை அசைக்கும் போது அவளது முகம் வலியை காட்டியது... கையை அசைக்காமல் இருக்க அவளது கையை லேசாக பிடித்துக்கொண்டார் கோதை. பொன்வண்ணனுக்கோ காலையில் ரெண்டு சர்ஜரி செய்திருந்தவன் ரதிக்கு அடிப்பட்டது என்று அவனுக்கு அலைச்சலும் சோர்வும் சேர்ந்திருக்க அப்படியே தூங்கி வழிந்தான்.

நாற்காலியிலிருந்தவாறே கண்ணைமூடிப்படுத்திருந்தான்.
கோதைக்குமே உறக்கம் வந்திருக்க அப்படியே உறங்கியிருந்தார்.

சிங்கமோ கோதையின் பக்கம் வந்தவன் அவரை தூக்கி பக்கத்தில் இருந்த சிறு கட்டிலில் படுக்க வைத்துவிட்டு ரதியின் பக்கம் உட்கார்ந்துக் கொண்டான்.

பொன்வண்ணனோ இடையில் விழிப்பு வர சட்டென்று கண்விழித்து பார்த்தான் சிங்கமோ விழித்துதான் இருந்தான். ரதியை பார்த்தபடியே. இவன் என்ன மேக்னு தெரியலைபா... முரட்டு பாசக்காரனா இருக்கான். ஆனாலும் நடிக்குறானோனு இவன் மேல எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு... என்று பெரும்மூச்சு முகம் கழுவி வந்தவன் “நீங்க போய் தூங்குங்க நான் ரதியை பார்த்துக்குறேன்” என்று தன் வீம்பையும் விட்டு சிங்கத்திடம் பேசினான் பொன்வண்ணன்.

“நீ போய் தூங்கு என் பொண்டாட்டியை எனக்கு பார்த்துக்க தெரியும்” என்று வெடுக்கென்று பேசியவனோ முகத்தை திருப்பிக்கொண்டான்.

‘என்னமோ பண்ணுடா’ என்ற பொன்வண்ணனோ ரதியின் பல்ஸ் பார்த்தவன் மீண்டும் வந்து சட்டை பட்டனை திறந்து விட்டு நாற்காலியில் படுத்துவிட்டான்.

கோதையோ விடியற்காலையில் கண்விழித்தவர் ரதியை பார்க்க ரதியின் கைபிடித்தவாறே சிங்கம் கன்னத்தில் கைகொடுத்து அவளையே பார்த்திருந்தான்.

குளியலறைக்குள் சென்று வந்த கோதைக்கு இரவு சாப்பிடாமல் இருக்க மயக்கம் வந்துவிட்டது. "சிங்கம்" என்று மருமகனை அழைத்துக்கொண்டே கீழே விழ போனவரை தாங்கிப்பிடித்துக்கொண்டு “உங்களை யாரும் இங்க தங்க சொன்னது அண்ணன் சொன்னா உடனே கேட்றது போலத்தான்” என்று கோதையை திட்டி அவரை கட்டிலில் படுக்க வைத்தான்.

பொன்வண்ணனும் விழித்ததும் “டேய் உங்கம்மா மயக்கம் போட்டுட்டாங்க அவங்களுக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்... பார்த்துக்க” என்று விறைப்பாக பேசியவன் வெளியேச் செல்லும்போது ரதியை பார்த்துத்தான் சென்றிருந்தான்.

“அப்பாடா” என்று பெரும்மூச்சு விட்ட பொன்வண்ணனோ "அம்மா நீங்க மீனாட்சி அத்தையை பத்தி சொல்லுறேன்னு சொன்னீங்கல்ல இப்போவே சொல்லுங்க உண்மை தெரியாம மண்டையே வெடிச்சுடும் போல" என்றான் தலையை பிடித்துக்கொண்டு

கோதையோ "டென்ஷன் ஆகாதே வண்ணா... கொஞ்சம் மனசை திடப்படுத்தி நான் சொல்லுறதை கேளு" என்று பல வருஷம் முன்னே நடந்த தன் வாழ்க்கையின் ரகசியத்தை மகனிடம் சொல்ல ஆரம்பித்தார் கோதை.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 46

ஐய்யனார் தங்களது அரிசி ஆலை, சர்க்கரை ஆலை, தோட்டம் துரவு என அனைத்து நிர்வாக கணக்குகளையும் ஆதிபெருமாளிடம் ஒப்படைத்ததோடு அல்லாமல் அவரை குடும்பத்தில் ஒருவனாகவும், ஒரு நண்பனாகவும் தான் பாவித்திருந்தான்.

தொழிலாளிகளை வாசலோடு அனுப்பி வைக்கும் ஐய்யனார் ஆதிபெருமாளை மட்டும் சாப்பிடும் இடம் வரை அழைத்துச் செல்வான்.

கோதையும் அன்பரசியும் தான் சாப்பாடு பரிமாறுவார்கள் ஐய்யனாருக்கும், ஆதிபெருமாளுக்கும்... ஆதிபெருமாள் கோதையை பார்த்ததிலிருந்து அவளை விரும்ப ஆரம்பித்திருந்தான். அவனது திருட்டு பார்வையும், தண்ணீர் கொடுக்கும்போது கைகளை உரசி வாங்குவதும் ஆதிபெருமாளை சுத்தமாக பிடிக்காது இருந்தது கோதைக்கு. ஆதிபெருமாளோ ஒருநாள் கோதையிடம் தன் காதலை தெரிவிக்க...

கோதையோ “எங்க அண்ணா சொல்றவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்... இன்னொருமுறை என்கிட்ட காதல் கீதல்னு உளறினா அண்ணாகிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை... உங்க உயரம் என்ன எங்க உயரம் என்ன? எங்க வீட்டு பணத்தை பார்த்து உங்களுக்கு என் மேல காதல் வந்திருக்கு... எங்க அண்ணா சொல்றவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்... உன்னை போல உண்ட வீட்டுக்கு ரண்டகம் பண்ணுற ஆளை போய் கல்யாணம் பண்ணிப்பேனா... இதுதான் கடைசி முறை என்கிட்ட பேசறது வெளியே போங்க” என்று கண்ணை உருட்டி மிரட்டி விரட்டியடித்திருந்தாள்.

முகம் கருத்துப்போய் வெளியே வந்த ஆதிபெருமாளோ 'உன்னை வேற யாருக்கும் பொண்டாட்டியா போக விட மாட்டேன். என்னையே வேண்டாம்னு சொல்லிட்டல்லடி... நான்தான் உனக்கு புருசன்!' என வன்மம் கொண்டு தாடையை தேய்த்து சிரித்துக்கொண்டான்.

ஆதிபெருமாளின் தங்கை மீனாட்சி சென்னையில் டிகிரி முடித்து வந்திருந்தாள். கல்லூரி விடுமுறை விடும்போதெல்லாம் சர்க்கரை ஆலைக்கு ஆதிபெருமாளை பார்க்க வருபவள் ஐய்யனாரை சைட் அடிக்க ஆரம்பித்தாள். சிங்கத்தை பார்த்தது போல அப்போது ஐய்யனாரும் கம்பீரமாக இருப்பார். கட்டை மீசையும், காந்தக்கண்களும், மீனாட்சிக்கு பிடித்துவிட்டது. விரும்ப ஆரம்பித்தாள்.

ஆதிபெருமாளிடம் பேசுவதற்கு மீனாட்சி பயப்படுவாள். ஒவ்வொரு முறையும் அவள் ஐய்யனாரிடம் பேச வரும்போதெல்லாம் ஐய்யனார் அவளிடம் “நல்லாயிருக்கியாமா?” என்று ஒற்றை வார்த்தையுடன் மீசைக்குள் ஒளித்து வைத்து சிரிப்புடன் சென்றுவிடுவான். அவனது சிரிப்பை பார்த்த மீனாட்சி ஐய்யனார் தன்னை காதல் செய்கிறான் என்று தவறாக மனதில் கற்பனை குதிரையை ஓட விட்டிருந்தாள்.

இந்நிலையில்தான் ஐய்யனாருக்கும் கோமதிக்கும் திருமண ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. மீனாட்சி ஐய்யனாரை விரும்புவது ஆதிபெருமாளுக்கு தெரியாது இருந்தது.

ஐய்யனாருக்கும் கோமதிக்கும் நிச்சயம் ஆகி அடுத்த மாதம் திருமணம் என்றிருந்த நிலையில் மீனாட்சி ஊருக்கு வந்திருந்தாள். ஐய்யனாரின் கல்யாணம் விசயம் தெரிந்து அதிர்ந்து விட்டாள். என்னை ஏமாத்திட்டானே ஐய்யனார் என்று கடும்கோபம் கொண்டு தான் ஐய்யனாரை நேரில் சந்தித்து பேசணும் என்று முடிவெடுத்து அரிசி ஆலையில் ஆதிபெருமாள் இல்லாத நேரத்தில் ஐய்யனாரிடம் தன் காதலை தெரிவித்தாள்.

ஐய்யனாரோ “நீ அரையும் குறையுமா ட்ரஸ் போட்டு வரும்போதே எனக்கு சந்தேகம்... ஆதிபெருமாள் தங்கச்சினு சும்மா விட்டேன்... இப்போ வந்து காதல் மாய வார்த்தை பேசுறியா... ஓடிப்போயிடு! உன் அம்மா வயசு பொண்ணு வீட்ல இருக்கானு கொஞ்சம் கூட அறிவு இல்லாம ஒழுக்கம் சரியில்லாம இன்னொருத்தரை தேடி போய்ட்டாங்க! தாயை போல பிள்ளைனு காட்டிட்ட இங்கிருந்து ஓடிப்போயிடு... உன்னை பார்க்கவே எரிச்சலா இருக்கு... முதல்ல பொண்ணா அடக்க ஒடுக்கமா துணி போடு இப்படி பாதி உடம்புகாட்டி அடுத்த கண்களுக்கு விரசம் உண்டாக்க கூடாது... எங்க குடும்பம் பொண்ணுங்களுக்கு மரியாதை தர பாரம்பரிய குடும்பம்... உன்னை போல தறிகெட்ட குடும்பத்து பெண்ணை எங்க வீட்டுக்குள்ள கூட விடமாட்டோம்... வந்த வழியா திரும்பி போயிடு... இப்ப கூட உன் அண்ணன் ஆதிபெருமாளுக்குகாகத்தான் அமைதியா பேசிட்டிருக்கேன்... இல்லனா உன் கன்னம் பழுத்திருக்கும்” என்று கண்கள் சிவக்க கோபத்தோடு வேஷ்டியை மடித்துக்கட்டி காரில் ஏறினான்.

காரின் குறுக்கே வந்து நின்ற மீனாட்சியோ "நீங்க இல்லனா நான் செத்துப்போயிடுவேன். என் சாவுக்கு காரணம் நீங்கதான்னு எழுதி வச்சுட்டு போயிடுவேன்” என்று மிரட்டினாள்.

“போடி உன்னால முடிஞ்சதை பார்த்துக்க!” என அவளை ஏளனச் சிரிப்புடன் கடந்துச் சென்றுவிட்டான் ஐய்யனார்.

ஐய்யனாரை மீனாட்சியால் மறக்க முடியவில்லை. அழுது கரைந்திருந்தாள். கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்னே மீண்டும் ஐய்யனாரை பார்க்க வந்திருந்தவள் சேலையின் மாராப்பை நழுவ விட்டு “இப்போ நமக்குள்ள எல்லாம் நடந்தாகணும் இல்லைனா நான் விஷம் குடிச்சிடுவேன்” என்று மிரட்டினாள் ஐய்யனாரை.

“ஏய் பைத்தியமா நீ... ச்சே இப்படிபட்ட பொண்ணை நான் இப்போதான் பார்க்குறேன் எனக்கு வேற வழி தெரியலை உன்னை அடிக்காம இருக்க முடியாது” என்று பட்டென்று மீனாட்சியின் கையிலிருந்த விசபாட்டிலை பிடுங்கி தூரப்போட்டு விட்டு அவளை ஓங்கி கன்னத்தில் அடித்திருந்தான்.

"இந்த இடத்தை விட்டு ஓடிப்போயிடு நான் திரும்பி வரும்போது இங்க இருக்கக்கூடாது!" என்று விரலை நீட்டி எச்சரித்துச் சென்றான்.

அந்த நேரம் பார்த்து கோமதி ஐய்யனாருக்கு கோவில் பிரசாதம் கொடுக்க வந்திருந்தாள். மீனாட்சியோ ஐய்யனார் எங்கு விட்டுச் சென்றானோ அதே இடத்திலேயே தலைவிரிக்கோலமாய் கண்ணீருடன் சேலையை கூட சரி பண்ணாமல் விரக்திப்பார்வையுடன் உட்கார்ந்திருந்தாள்.

கோமதியோ மீனாட்சியை பார்த்ததும் “ஏய் மீனா இங்க என்ன பண்ணுற? அதுவும் இந்த கோலத்துல இருக்க யார் உன்னை என்ன பண்ணினா...? என் மாமா ஐய்யனார்கிட்ட சொல்லலாம் வா” என்று அவளது கையை பிடிக்க... மீனாட்சியோ தன் குள்ளநரித் தனத்தை காட்டியிருந்தாள்.

“என்னை இப்படி அலங்கோலமா பண்ணியதே ஐய்யனார்தான்... என்னை காதலிக்குறேன்னு சொல்லிட்டு என்னோட இத்தனை நாள் வாழ்ந்துட்டு இப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்குறார் உன் மாமன் உத்தமன் ஐய்யனார்! நான் நியாயம் கேட்க வந்தேன்... இப்பவும் என்னை நாசம் பண்ணிட்டு உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோனு சொல்லிட்டு போறாரு... நாங்க உங்க வீட்ல வேலை செய்யறவங்கனு இளக்காரம்தானே... நீயே சொல்லு என்னோட நிலமைக்கு நியாயம் சொல்லு” என்று கோமதி கையை பிடித்துக்கொண்டு குமுறி குமுறி விசும்பி அழுது நடித்தாள்.

கோமதியோ "இருக்காது என் மாமா தப்பு பண்ண மாட்டாரு...” என்று அவளது கையை உதறி ஒரு அடி தள்ளி நின்றாள்.

“அப்படியா உன் மாமா நடு நெஞ்சுல ஒரு பெரிய மச்சம் இருக்கு... இன்னும் சொல்லணுமா..? அந்தரங்களை சொன்னா நம்புவியா?” என்று நாக்கை சுழட்டினாள்.

“போதும் நிறுத்து” என்று அங்கே நிற்க பிடிக்காமல் வெளியே ஓடிவந்தவள் ஐய்யனாரின் காரில் மீது விழுந்துவிட இருந்தாள். ஐய்யனார் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் வேகமாய் கதவு திறந்து இறங்கி வந்தவர் “கோமு ஏன் இவ்ளோ வேகமா ஓடி வர என்ன தலைபோற அவசரம்..? நான் பிரேக் போட்டு நிறுத்தினதும் இப்போ உனக்கு அடிபடலை... இல்லைனா என்னாகியிருக்கும்” என்று கோமதியின் கையை பிடித்து அங்கேயிருந்த கல்லில் உட்கார வைத்து காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான்.

கோமதியோ தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தவள் "ஏன் மாமா என்னை ஏமாத்தினீங்க... என்னை லவ் பண்ணுறேனு சொல்லிட்டு மீனாட்சி கூட பழக்கமா இருந்தீங்களா... நல்ல வேளை இது எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சு... நம்ம குடும்பத்துல நீங்கதான் முறைதவறி நடந்திருக்கீங்க... வீரய்யன் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... நானே எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லப்போறேன் பாருங்க... எனக்கு நீங்க வேண்டாம்!” என்று உண்மை தெரியாமல் கோபமாய் பேசி எழுந்தவளின் கையை பிடித்து தன்னருகே உட்கார வைத்தவன் “நான் உன்னை தவிர யாரையும் லவ் பண்ணியது கிடையாது இப்படி என் பக்கத்துல நெருக்கமா உட்கார வைச்சதும் கிடையாது... என் கண்ணை பாரு... நான் உன்னை ஏமாத்துவேனா சொல்லுடி” என அழுத்தமான பார்வையுடன் கேட்டான் அவளது நெற்றியில் முட்டி.

கோமதிக்கும் தெரியும் ஐய்யனார் தன்னை உருகி காதலிக்குறானென்று. அப்படியிருந்தும் மீனாட்சி இருந்த கோலம் ஐய்யனாரின் மீது தவறான எண்ணம் வர வைத்தது.

கோமதியோ “உங்களுக்கு நெஞ்சுக்கு நடுவே ஒரு மச்சம் இருக்குங்குற விசயம் மீனாட்சிக்கு எப்படித் தெரியும்?” என்றாள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு ஐய்யனாரை குற்றவாளியாக பார்த்தாள்.

“அறிவு கெட்டவளே... அரிசி ஆலைக்குள்ள மூட்டை சரிஞ்சிடுச்சு ஆளுங்களும் கிளம்பிட்டாங்க... நான்தான் மூட்டைகளை அடுக்கி வைச்சேன் என் சட்டை அழுக்கு ஆனதும் கழட்டி வேற சட்டையை போட்ட நேரம் அவ அண்ணனை பார்க்க என் அறைக்கு வந்துட்டா... அப்போ என்னை சட்டை இல்லாம பார்த்திருப்பானு நினைக்குறேன்" என்றவன் மீனாட்சி அவள் காதலை தன்னிடம் சொல்லிய அனைத்தையும் சொல்லி முடித்து கோமதியின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “என் இதயத்துல நீ மட்டும்தான் சிம்மாசனம் போட்டு இருக்கடி” என்று அவளது கையில் முத்தம் கொடுத்தான்.

“அச்சோ கல்யாணத்துக்கு முன்னால இது தப்புங்க மாமா” என்று எழுந்து விட்டாள்.

“சரி பார்த்துப்போ” என்று கண்ணைச்சிமிட்டி கோமதியை அனுப்பியிருந்தான்.

இருவரின் நெருக்கத்தை மறைந்திருந்து பார்த்து புகைச்சல் கொண்ட மீனாட்சியோ கடைசியாகச் சென்றது ஆதிபெருமாளிடம்தான்.

ஆதிபெருமாளோ “அவங்க உயர்ந்த கோபுரம்டா! நாம குடிசையில இருக்கோம்! உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்குறேன்” என்றிருந்தான் சற்று கறார் குரலில்.

ஐய்யனாருக்கும் கோமதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் அன்யோன்ய தம்பதிகளாய் திகட்ட திகட்ட வாழ்ந்திருந்தனர். அவர்கள் அன்பில் பூத்த அடையாளம் தான் சிங்கம்.

ஐய்யனாருக்கு திருமணம் நடந்து முடிந்தும் அவன் மேல் ஆசையாக இருந்தாள் மீனாட்சி.

அரிசி ஆலைக்கு வந்த மீனாட்சி “என்னை கல்யாணம் பண்ணிக்கோ ஐய்யனார்... உன்னை என்னால மறக்க முடியல... என்னை வச்சிக்கோ” என்று முந்தானையை இறக்கி விட்டு வாய் கூசாமல் சொன்னவளின் கன்னத்தில் அடித்து “நீயெல்லாம் குடும்பத்து பொண்ணே கிடையாது... உன்னையெல்லாம் என் வீட்டுக்குள்ள கூட விடமாட்டோம்” என்று அவளை விரட்டியடித்தவன் ஆதிபெருமாளிடம் "உனக்காகத்தான் பார்க்குறேன் ஆதி" என்றிருந்தான் கடுமையான குரலில்.

ஆதிபெருமாளோ “எனக்காக என் தங்கச்சியை மன்னிச்சிடுங்க” என்று கை கூப்பியிருந்தான்.

“சரி என் கண்ணு முன்னால உன் தங்கச்சி வரக்கூடாது ஆதி” என்று எச்சரிக்கை விடுத்தான் ஐய்யனார்.

ஆதிபெருமாளோ வீட்டுக்குச் சென்றிருந்தவர் அழுதுக் கொண்டிருந்த மீனாட்சியிடம் “உனக்கு கிடைக்காத பொருள் ஐய்யனார்... அவன் மேல ஆசைப்படாதே, உன்னோ ஆசை மேற்படிப்பு படிக்கறதுதானே நீ இங்க இருக்க வேணாம் லண்டன் கிளம்பு... படிப்பு முடிஞ்சதும் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடறேன்... அதுக்குள்ள ஐய்யனாரை உன் மனசிலிருந்து தூக்கி எறிஞ்சிடு” என்றிருந்தான் இறுக்கமான குரலில்.

“அண்ணா நான் ஐய்யானாரை மட்டும்தான் காதலிச்சேன்... அவனை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்... என்னை லண்டன் அனுப்பி வைங்க... ஆனா என்னை ஏமாத்தி அவமானப்படுத்திய ஐய்யனாரை கதி கலங்க வைக்கணும் கண்ணுல ரத்தம் வரவைக்கணும்” என்றிருந்தாள் கண்ணை உருட்டி அதி கோபக் குரலில்.

“ம்ம் கண்டிப்பா நான் ஐய்யனார் குடும்பத்தை அலைக்கழிப்பேன்டா இது சத்தியம்” என்று மீனாட்சிக்கு சத்தியம் செய்து கொடுத்தவன் அடுத்த ஒரு வாரத்தில் மீனாட்சியை லண்டன் அனுப்பியிருந்தான்.

அடுத்த இரண்டு வருடத்தில் ஐய்யனார் அரசியலில் இறங்கினான். ஆதிபெருமாளும் ஐய்யனார் கூடவே துணையாக இருந்தான். கோதைக்கும் கண்ணனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது. ஆதிபெருமாளோ கோதையை திரும்பிக்கூட பார்க்கவில்லை... கோதையும் நிம்மதியாகவே இருந்தாள்.

கல்யாணத்துக்கு முந்தின இரவு அன்பரசி கோதைக்கு மருதாணி வைத்துவிட்டு உறங்கச் சென்றிருந்தாள். விடியும் நேரத்துக்கு முன்னே கல்யாணப்பொண்ணை காணோம் என்று அனைவரும் தேட கோதையின் அறையிலிருந்து சட்டை பட்டனை போட்டுக்கொண்டு கலைந்த தலையுடன் வெளியே வந்தான் ஆதிபெருமாள்.

கோதையோ அறைக்குள் குத்துகாலிட்டு குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். ஐய்யனரோ முற்றத்தில் சொருகி வைத்த கத்தியை கையில் எடுத்து கொண்டு “டேய் ஆதி கூடவே இருந்து கழுத்தறுத்துட்டே இல்ல... நடு வீட்டுல நாயை கொண்டு வந்து வச்சேன் உன் குணம் காட்டிட்ட இல்ல” என்று அந்த இடமே அதிர பேசியவன் அவனது கழுத்தில் அரிவாளை வைக்க "உன் தங்கச்சியும் நானும் விரும்புறோம்... என்னை காதலிக்குறேனு சொன்னா நீ எனக்கு அவளை கட்டி வைக்கமாட்ட அதான் நேத்து நைட்டே எனக்கும் உன் தங்கச்சிக்கும் சாந்தி முகூர்ந்தம் நடந்திருச்சு" என்று அசால்ட்டாய் சொன்னவன் வெறியோடு நின்றிருந்த ஐய்யனாரின் காதில் "என் தங்கச்சியை நீ வேண்டாம்னு துட்சமாய் அடிச்சு விரட்டினல்ல அதுக்கு பழிக்கு பழிதான் டா இது" என ஏளனமாக சிரித்தான்.

நாச்சியோ கோதையின் அறைக்குள் சென்றவர் “பாவி மகளே ஏன் டி இப்படி பண்ணின நம்ம குடும்பத்தை சந்தி சிரிக்க வைச்சிட்டியே... நீ எல்லாம் என் வயித்துல ஏன் பிறந்தடி?” என்று கோதையை அடிக்க ஆரம்பித்தார்.

வீரய்யனோ “நிறுத்து நாச்சி நம்ம பொண்ணுகிட்ட என்ன நடந்ததுனு விசாரிக்காம அடிக்காதே” என்றவர் கோதையின் முன்னே அமர்ந்து “உண்மையை சொல்லு” என்றிருந்தார் கண்டிப்புடன். கோதை வீரய்யனின் செல்ல மகள்.

“ப்பா நான் விரும்பினது உண்மைதான்” என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு வீரய்யனுக்கோ இதயத்துடிப்பு நின்றது போல இருந்தது. கோதையின் கண்களில் ஏதோ கலக்கம் தெரிந்தது. மீண்டும் ஒரு முறை “உண்மையை சொல்லு கோதை” என்று குரலை உயர்த்தினார்.

“ப்பா நா.நான் ஆதிபெருமாளை விரும்பினேன்” என்று முகம் பொத்தி அழுதார்.

ஆனால் அதற்குள் ஐய்யனாரோ ஆதிபெருமாளை ஊருக்கு முன்னே உட்கார வைத்து மொட்டை அடித்து கோமணத்தை கட்டி “இந்த ஊருக்குள்ள உன்னை பார்க்கவே கூடாதுடா பரதேசி நாயே நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள வச்சா என் வீட்டு பொண்ணுங்க அறை வரைக்கும் வருவியா” என்று ஆதிபெருமாளின் கழுத்தை பிடித்து ஊர் எல்லைக்கு வெளியே தள்ளிவிட்டார். பாலகனாக இருந்த சிங்கமோ ஆதிபெருமாள் தன் அத்தையை ஏதோ செய்துவிட்டான் என்று என்ன புரிந்துக் கொண்டானோ ஆதிபெருமாளை சிறு கல்லை எடுத்து அவன் மேல் போட்டு விட்டு ஐய்யனார் பக்கம் வந்து நின்றுக் கொண்டான்.

ஆதிபெருமாளோ பெருத்த அவமானத்துடன் கீழே விழுந்து கிடந்தவன் கையை ஊன்றி எழுந்து நின்று இந்த ஊர் தலைவர்களை பார்த்து “நான் உங்களை எல்லாம் கேட்குறேன் கோதை இப்போ என்னோட வரேன்னு சொன்னா நீங்க அனுப்பி வைப்பீங்களா!” என்றான் திமிராக மார்பில் கையை கட்டிக்கொண்டு.

ஐய்யனாரோ “என் தங்கச்சி உன் கூட வரமாட்டேன்னு தான் சொல்லுவாடா நாயே” என்றார் தங்கை மேல் இருந்த நம்பிக்கையில்.

“அப்படியா நான் இங்கயே நிற்குறேன் நீ போய் உன் தங்கச்சி வர்றேன்னு சொன்னா அழைச்சிட்டு வரணும்... இந்த ஊர் காரர்கள் சாட்சி” என்றான் தெனாவெட்டாக.

“இருடா வரேன்” என்ற ஐய்யனாரோ சிங்கத்தை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் கோதையின் அறைக்குள் சடாரென நுழைந்தான்.

கோதையோ பயந்து எழுந்து “அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க” என்று கேவி அழுததும் அப்படியே உறைந்து நின்றான் ஐய்யனார்.

சிங்கமோ “அத்தை ஆழாதே” என்று கோதையின் மடியில் ஏறி அவளது கண்ணீரை துடைத்து இடுப்போடு அணைத்துக்கொண்டான்.

ஐய்யனாரோ விறுவிறுவென வெளியே வந்தவன் கையை பிசைந்து நின்ற கண்ணனிடம் வந்து நின்றவன் “இப்போவும் என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டுவியா கண்ணா?” என்று கேட்டார் அழுத்தமான குரலில்.

கண்ணனோ “கல்யாணம் பண்ணிப்பேன் மச்சான்” என்றான் உறுதியான குரலில். கண்ணன் கோதையை விரும்பியிருந்தான். அவனுக்கு கோதை சோரம் போனது பெரியவிசயமாக தெரியவில்லை.

“அப்போ வா” கண்ணன் கையை பிடித்துக்கொண்டுச் சென்று கோதையின் முன்னே நின்ற ஐய்யனாரோ “உனக்கு என்ன நடந்திருந்தாலும் கண்ணன் உன் கழுத்துல தாலி கட்டுவான்... இப்போ என்ன சொல்ற... உன்னையே இத்தனை வருசமாய் மனசுக்குள்ள நினைச்சிட்டிருக்கானே! இந்த நல்லவனை கல்யாணம் பண்ணிக்குறியா..? இல்ல நம்ம குடும்பத்துக்கு துரோகம் பண்ணிய அந்த பொறுக்கி நாயை கல்யாணம் பண்ணிக்க எண்ணமா?" என்று அடக்கப்பட்ட கோபத்தை காட்டினான் தங்கையிடம்.

அவளோ “என்னை மன்னிச்சிடு அண்ணா நா.நான் ஆ.ஆதி” என்று அவள் பேசி முடிக்கவில்லை.

நாச்சியோ “நம்ம குடும்ப மானத்தை காத்துல பறக்க விட்ட சிறுக்கி ஒரு நொடி இருக்க கூடாது ஐய்யனாரு" என்று கோதையின் மடியில் உட்கார்ந்திருந்த சிங்கத்தை தூக்கிக்கொண்டார்.

சிங்கமோ “அப்பத்தா அத்தை நம்ம கூட இருக்கட்டும்” என்று அழுது தீர்த்தான்.

சிங்கத்தை கோமதியிடம் கொடுத்த நாச்சியோ கோதையின் முடியை பிடித்து வெளியே இழுத்து வந்தவர் வீட்டு வாசலுக்கு வெளியே விட்டார்.

வீரய்யனோ மகளை கண்கலங்கி பார்த்தவர் “இப்படி பண்ணிட்டியே தாயி!” என்று வாயில் துண்டை வைத்துக்கொண்டு அழுதார்.

கோதையோ நாதியின்றி அனாதை போல நின்றார். அன்பரசியோ “அக்கா ஏன் இப்படி பண்ணின..? அவன் வேண்டாம்னு சொல்லு கண்ணா மாமா உன்னை கல்யாணம் பண்ணிப்பாரு” என்று கோதையை கட்டிக்கொண்டு அழுதாள்.

கோதையோ “நான் அழுக்கு ஆகிட்டேன் அன்பு... கண்ணா மாமா போல உத்தமருக்கு நான் கிடைக்க கூடாது” என்று கண்ணனை பார்த்து "என்னை மன்னிச்சுடுங்க மாமா" என்று கண்களால் மன்னிப்பு கேட்டாள்.

கண்ணனோ “கோதை” என்று பேச வாயெடுக்க “கண்ணா மாப்பிள்ளை நீ பேச வேண்டாம். இநத் குடும்பத்துக்கும் கோதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்ககூடாது... ஒட்டு உறவுனு வந்து நிற்க கூடாது" என்று மனதை கல்லாக்கிக்கொண்டு பேசினார்.

கோதையிடம்தான் வீட்டு பொறுப்பையே ஒப்படைத்திருந்தார் நாச்சி. அன்பரசி வேலைகள் செய்யாமல் பதவிசாக சுற்றி வருவாள்... கோதை பொறுப்பாக வீட்டு நிர்வாகம் செய்வாள்... ஐய்யனார் கோதை மேல் பலத்த நம்பிக்கை வைத்திருந்தான். அந்த நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் சுக்கு நூறாக உடைத்துவிட்டாள் கோதை.

கோதையோ தன் குடும்பத்தையே பார்த்து கையெடுத்து கும்பிட்டு “என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க... நம்ம குடும்பத்துல நான் இருக்க கூடாது” என்று கண்ணீருடன் வீட்டிலிருந்து கனத்த மனதுடன் கண்களில் நீர் ஆறாய் பெருகி வழிந்தோட வெளியேறினாள்.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சிங்கமோ “அத்தை போகாதே அத்தை என்னை விட்டு போகாதே” என்று கோதையின் பின்னால் ஓடினான். வீரய்யனும் நாச்சியும் ஐய்யனாருடன் கோதையின் பின்னால் சென்றார்கள்.

ஆதிபெருமாளோ ஊர் எல்லையில் நின்று தான் வெற்றி பெற்ற இறுமாப்பில் கோதையின் கழுத்தில் தாலி கட்டினான்.

கோதையோ அன்று இரவு நடந்ததை எண்ணி கண்ணீர்விட்டாள். கதவு பூட்டும் சத்தம் கேட்டு கண்விழித்தவளின் வாயில் கையை வைத்து பொத்திய ஆதிபெருமாளோ கோதை திமிற திமிற அவளது இதழில் முத்தம் கொடுத்திருந்தான்.

பெண்ணவளோ அவன் முதுகில் நகக்கீறல் போட்டாள். எருமைமாடு போல அவள் மீது படுத்திருந்தவனை தள்ள முடியவில்லை அவளால். தன் பலம் அனைத்தையும் திரட்டி ஆதிபெருமாளை தட்டிவிட்டிருந்தாள் கோதை.

அவனோ “ஏய் என்னடி திமிரா?” என்று கோதையின் கன்னத்தில் மாறி மாறி அடிக்க அவளோ மயக்கத்திற்குச் சென்று விட்டாள். புலியிடம் சிக்கிய முயல் போல அவனிடம் மாட்டிக்கொண்டாள் கோதை. மயக்கம் நிலையிலும் அவனிடம் தன் எதிர்ப்பை காண்பித்தாள். கோதையை முழுவதும் ஆண்டுவிட்டு எழுந்தான் ஆதிபெருமாள்.

மயக்கத்திலேயே எழுந்து அமர்ந்த கோதையோ “விடிஞ்சா எனக்கு கல்யாணம் ஏன் டா என்னை இப்படி சீரழிச்ச?” என்று கண்ணீருடன் ஆதிபெருமாளின் சட்டையை பிடித்து அழுதாள்.

“உன்னை விரும்பினேன் நீ ஒத்துக்கலை... உன் நொண்ணன்கிட்ட பொண்ணு கேட்டாலும் கொடுக்கமாட்டான்... அதான் உன்னை எடுத்துக்கிட்டேன் இப்ப வாயை மூடிக்கிட்டு என் பின்னால வந்துதானே ஆகணும்” என்றான் ஏளனச் சிரிப்புடன் கோதையின் கன்னத்தை தட்டி.

“சீ கையை எடுடா நாயே” என்று அவனது கையை தட்டிவிட்டு "நீ என்னை நாசம் பண்ணினா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணுமா..? இது ஒரு விபத்தா நினைச்சு எங்க வீட்லயே இருந்திடுவேன்... உன் பின்னால நான் வரமாட்டேன்டா” என்று அவனது முகத்தில் காறி உமிழ்ந்தாள்.

“ஏய் என்ன திமிர் உனக்கு” என்று அவளது கன்னத்தில் அடித்தவன் “இப்ப சொல்றேன் நீ என் பின்னால வரணும்... வரலைனா உன் குடும்பத்தை வேரோட அழச்சிருவேன்... எனக்கு இப்ப அரசியலில் பலம் அதிகம்... உன் அண்ணனுக்கு கெட்ட பெயர் வரவைச்சு அரசியல் வாழ்க்கையிலிருந்து தூக்கிவிடுவேன்... உன் குடும்பத்து ஆளுங்களை கொன்னுடுவேன்... இன்னொரு விசயம் தெரியுமா உன் அண்ணன் ஒழுக்க சீமான் ஐய்யனார் என் தங்கச்சியை காதலிச்சு ஏமாத்திட்டான்... அதான் அவளை லண்டன் அனுப்பியிருக்கேன்... இப்ப நீ என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு மறுத்தினா... என் தங்கச்சியை உன் அண்ணன் ஏமாத்தின உண்மையை ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பேன்" என்று கோதையை மிரட்டியதில் குழம்பி போனாலும் “என் அண்ணா உன் தங்கச்சியை ஏமாத்தி இருக்கமாட்டாரு நீ. நீ பொய் சொல்ற... உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்” அழுத்தமாய் பேசினாள் அவனை முறைத்தபடியே கோதை.

“ம்ஹும் உன் குடும்பத்தை நாளைக்கே போட்டுத்தள்ள ஆள் அனுப்பிடுவேன்... உன் ஆசை சிங்கப்பயலை ஆள் வைச்சு கடத்துவேன்” என்று கோதையின் முடியை பிடித்துக்கொண்டு அவளை அடித்தான்.

கோதைக்கு 19 வயது அந்த வயதில் அவளுக்கும் யோசிக்கும் முதிர்ச்சியும் இல்லை. “என் குடும்பத்தை ஒண்ணும் பண்ணிடாதே! நான் கல்யாணம் பண்ணிக்குறேன்” என்று கையெடுத்து கும்பிட்டவள் முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள்.

ஆதிபெருமாள் தாலி கட்டியதும் “வா போகலாம்” என்று கோதையின் கையை பிடித்தான்.

கோதையோ ஆதிபெருமாளின் கையை விட்டு அழுதுக் கொண்டிருந்த சிங்கத்தை பார்த்தவரோ “வா” என்று கையை விரித்ததும் ஐய்யனாரின் கையை பிடித்துக்கொண்டிருந்தவன் தந்தையை பார்க்க அவரோ “போ” என்று தலையை அசைத்தார். கோதையின் மீது பாசம் கொண்ட சிங்கமோ “அத்தை” என்று ஓடிக் கட்டிக்கொண்டு “அத்தை என்னை விட்டு போகாதே அத்தை” என்று ஓங்காரமிட்டு அழுதான்.

ஆதிபெருமாளோ “ஏய் கோதை வாடி” என்று அகங்காரமாக அழைத்தான்.

"இந்த அத்தை தப்புபண்ணிட்டேன் சிங்கப் பையா” என்று சிங்கத்தின் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து "நான் போயிட்டு வரேன்" என்று சிங்கத்தை விலக்கிவிட்டாள்.

“அத்தை நீ இப்போ போனா நான் உன் கூட பேசவே மாட்டேன் பார்த்துக்கோ” என்று சிறுவயது பாலகனாக பேசினான் கோதையிடம்.

கோதையோ பதில் பேச முடியாமல் தன் குடும்பத்தை பார்த்தவள் கண்ணில் கண்ணீருடன் ஆதிபெருமாளின் கையை பிடித்தாள்.

சிங்கமோ “அத்தை!! அத்தை!!” என்று கோதையின் பின்னால் ஓடிவந்தான்... ஐய்யனார் சிங்கத்தை தூக்கிக்கொண்டு “அத்தை இனி நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்க கண்ணா போகலாம் வா” என்று அழைத்துச் சென்றிருந்தான்.

கோதையோ “சிங்கத்தின் குரலை கேட்க முடியாமல் அழுதுட்டே போனேன்டா வண்ணா... உங்க அத்தையம்மாவும்... உன் அப்பாவும் அரக்கன் அரக்கி மனுஷங்களே இல்ல!” என்று குலுங்கி அழுதவரை நெஞ்சில் சாய்த்துக்கொண்டான் பொன்வண்ணன்.

மீனாட்சி இவ்வளவு கீழ்த்தரமான கெட்ட மனிதராய் இருந்திருப்பார் என்று பொன்வண்ணனால் நம்ப முடியவில்லை. முதல் முறையாக தன்னை வளர்த்த மீனாட்சியின் மேல் வெறுப்பு வந்தது பொன்வண்ணனுக்கு.

“டேய் இந்தா உங்கம்மாவுக்கு காபியை கொடு... அழுது வடிஞ்சு கதை சொல்லி களைப்பாயிருப்பாங்க” என்று காபி டம்ளரை பொன்வண்ணனிடம் நீட்டினான் சிங்கம் கோதையை ஓரப்பார்வையில் பார்த்தபடி.
 
Status
Not open for further replies.
Top