ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!- கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 20




நகுலனின் செயலில் திகைத்து, "மச்சான் டேய் ஏன்டா இப்படி?" என்று நிகிலன் பதற, சாவகாசமாக சட்டை கையை மடித்து விட்டவாறு அமர்ந்த நகுலன், "அந்த விக்ரம் பய ரொம்ப தான் பண்றான்டா.. நம்ம பேசறதை ஒட்டு கேட்க சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்.. அதான் கேமராவை உடைச்சேன்.." என்றான் சாதாரணமாக..

கோவத்துடன் இவர்களிடம் வந்த அடியாள் ஒருவன், "யோவ் உனக்கு அறிவுனு ஒன்னு இருக்கா? இல்லையா?"என்று கத்த, நிறுத்து என்பதை போல் கையை தூக்கிய நகுலன், "எப்படி இருந்தாலும் சாக தானே போறோம்.. எதுக்கு சாகறப்ப கூட வருத்தப்பட்டுட்டு.. இப்படி தான் இருப்போம்.." என்றவனை படுபயங்கரமாக முறைத்தான் அந்த அடியாள்..

"ப்ச் இப்படி முறைச்சா எல்லாம் பயந்தற மாட்டோம்.. போ போ போய் உன் பாஸ் கிட்ட சொல்லு.. இன்னும் எத்தனை கேமரா வாங்கி வெச்சாலும் இப்படி தான் உடைப்பேனு.." என்ற நகுலனை என்ன செய்தால் தகுமென்று முறைத்தவாறு சென்றான்..

நொந்து போன நிகிலன், "டேய் ஏன்டா நீ வேற ஏழரையை ஆரம்பிக்கறே?" என்று கேட்க, "அவனுக பண்றது தப்பில்லனா நான் பண்றதும் தப்பில்ல மச்சி.." என்று கூறிய நகுலன் ஆறுதலாக அவன் தோளில் கையை போட்டான்..


********


தன்னையே தேவ் பார்த்திருப்பதை உணர்ந்த மகி புருவம் உயர்த்தி என்னவென்று வினவ, "இந்த கேஸ்ல நிறையா பேரு சம்பந்தப்பட்டு இருக்காங்க தான் அதுல உனக்கு ரொம்ப வேண்டியவங்க ஒருத்தரும் இருக்காங்க.." என்றான் எங்கையோ பார்த்தவாறு..

சாதாரணமாக மகியோ "என் டாடி தானே?" என்று கேட்க, மகியின் கேள்வியில் சட்டென்று நெஞ்சை பிடித்து கொண்ட தேவ், "என்ன மகி இவ்வளவு சாதாரணமா சொல்றே? அன்னைக்கு எனக்கு சின்ன சந்தேகம் தான் அவரு மேல.. இதுல அவரோட பேரும் இருக்கறதை பார்த்து இப்ப வரைக்கும் என்னால நம்ப முடில.." என்றவனின் குரலில் இப்போதும் சிறு அதிர்வு இருந்ததை மகியாலும் உணர முடிந்தது..

"நான் அப்பவே சொன்னனே தேவ்.. அவரு இந்த வழக்குல சம்பந்தப்பட்டு இருக்கறதுல தான் என்னைய இதுல இருந்து விலக சொன்னாருனு.." - மகி

"நான் கூட அந்த ராஜன் மிரட்டுனதுக்கு தான் உன்கிட்ட அப்படி பேசுனாரோனு தப்பா புரிஞ்சுட்டேன்.." - தேவ்

"என் டாடிக்கு வசதியா வாழனும்னு ரொம்ப ஆசை.. ஆனா கஷ்டப்பட்டு உழைச்சாலும் கடைசி காலத்துல தான் பணத்துல புரள முடியும்னு அவரே நினைச்சுட்டாரு.. அதோட விளைவு தான் இப்படி வந்து நிற்குது.." - மகி

"ம்ம்ம்ம்க்கும் அந்த ராஜனுக்கு உன் டாடியே பரவால்ல மகி.." - தேவ்

"எப்படி பார்த்தாலும் ரெண்டு பேரும் பண்ணுற தப்பு ரொம்ப பெரிசுடா.. அதுக்கான தண்டனையை கண்டிப்பா அவங்க அனுபவிக்கனும்.." - மகி

"அவரு உன் டாடி மகி.." - தேவ்

"இருந்துட்டு போகட்டும் தேவ்.. டாடினு வார்த்தையை விட அப்பாங்கற வார்த்தைக்கு தான் உணர்வும் உயிரும் அதிகம்.. என் அப்பா தான் இங்க இருக்காரே.. அவருக்கு ஒன்னுனா தான் என்னால தாங்க முடியாது.." - மகி

"நல்லவேளை நான் கூட நீ அவரு மேல இருக்கற பாசத்துல அவரை விட்டுருவீயோனு நினைச்சுட்டேன்.." என்று கிண்டலடித்த தேவ்வை அநியாயத்துக்கும் முறைத்த மகி, ஏதோ பேச வரும் முன்னே யாரோ பால்கனி கதவை தட்டினர்..

"யாரு அது?" என்று யோசித்தவாறு மகி எழ, "இரு மகி நான் பார்க்கறேன் ஐ கெஸ் அவனா தான் இருப்பான்.." என்றவாறு கதவை திறக்க, தேவ் நினைத்ததை போல் கிருஷ் தான் அங்கு நின்றிருந்தான்..

கதவை திறந்ததும் அவனை தள்ளி கொண்டு உள்ளே வந்த கிருஷ், மகியின் கையில் இருந்த வாட்டர்பாட்டிலை பிடுங்கி தண்ணீர் முழுவதையும் குடித்து முடிக்க, "ஏன்டா வீட்டுக்கு கதவுனு ஒன்னு இருக்கு அது எதுக்குனு உனக்கு தெரியுமா?" என்று கேட்டான் நக்கலாக..

"ஹலோ நான் ஒன்னும் அடுத்தவங்க வீட்டுக்கு இப்படி போகல.. என் ரவுடியோட ருமூக்கு தான் வந்துருக்கேன்.." - கிருஷ்

"வீட்டுல எல்லாரும் இருக்காங்க மிஸ்டர்.." - தேவ்

"இருந்துட்டு போகட்டுமே நண்பா.. நான் இப்பவே என் ரவுடியை கூட்டிட்டு போறேனு சொன்னாலும் என் மாமனாரு, மாமியாரு சரினு சொல்லி என் கூடயே அனுப்பி வெச்சுருவாங்க.." - கிருஷ்

"எதே?" - மகி

"பட் நான் கூட்டிட்டு போக மாட்டேன் ரவுடி.. இந்த கேஸ் முடிஞ்சதுக்கு அப்பறமும் நீ வர மாட்டேனு சொன்னா நானே தூக்கிட்டு போய்ருவேன்.." - கிருஷ்

"ஹலோ மிஸ்டர். நான் கை காட்டற பையனை தான் கல்யாணம் பண்ணிக்குவேனு உங்க ரவுடி வாக்கு குடுத்துருக்காங்க.." - தேவ்

"நான் எப்படா அப்படி சொன்னேன்.." - மகி

"அன்னைக்கு நீயும் நானும் டீலிங் போட்டதை மறந்துட்டிங்களா மகிழினி மேடம்.." - தேவ்

"என்ன டீலிங்?" - கிருஷ்

"நான் கை காட்டற பையனை அவ கல்யாணம் பண்ணிக்குவா.. அதே மாதிரி அவ கை காட்டற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிப்பேனு.." - தேவ்

"த்து இதெல்லாம் ஒரு டீலிங்கா?" - கிருஷ்

"நண்பா டேய்.. இப்படி எல்லாம் காறி துப்புனா அப்பறம் எனக்கு என்ன மரியாதை.." - தேவ்

"அதைய நான் வாபஸ் வாங்கிக்கறேன் தேவ்.. எனக்கு பிடிச்ச மாதிரி தான் மாப்பிள்ளை வேணும்.." - மகி

"சரி சொல்லு பையன் எப்படி இருக்கனும்.." - தேவ்

மோவாயில் கை வைத்து யோசிப்பது போல் மகியோ தன்னவனை ஓரக்கண்ணால் பார்க்க, "சொல்லேன் சொல்லி தான் பாரேன்.." என்ற பாவனையை தன்மீது வீசியபடி அமர்ந்து இருப்பவனை கண்டு சிரிப்பு மேலிட்டது மகிக்கு..

"உருகி உருகி லவ் பண்றேனு பேருல கையை பிடிக்கறது காலை பிடிக்கறதுனு இருக்க கூடாது.." - மகி

"ம்ம்ம்ம்" - தேவ்

"மத்தவங்க கிட்ட எப்படியோ என்கிட்ட ரவுடியா தான் இருக்கனும்.." - மகி

"ம்ம்ம்ம்ம்ம்ம்" - தேவ்

"அவன் ஏதாவது சொல்லி நான் மறுத்தா அவனோட அதிரடில என் தலை தானா சரினு சொல்லனும்.." - மகி

"உன் மண்டை என்ன தலையாட்டு பொம்மையா? தானா ஆடறதுக்கு.." - தேவ்

"ப்ச் நான்தான் பேசிட்டு இருக்கேனல்ல இடைல பேசாதடா.. கடைசி ஒன்னு நான் எது செஞ்சாலும் எனக்கு துணையா இருந்து நம்பிக்கை குடுக்கனும்.." - மகி

"அப்ப நீ கொலை செஞ்சாலுமா??" - தேவ்

"எஸ் எஸ் பிற்காலத்துல கொலை பண்ணலாம்னு எண்ணம் வந்தா கண்டிப்பா உன்னைய தான் முதல்ல கூப்பிடுவேனாக்கும்.." - மகி

"ம்ம்ம்ம்க்கும் அப்படியே செஞ்சுட்டாலும்.. நீ சொன்ன அத்தனை பொருத்தமும் இந்த எருமைகிட்ட தான் இருக்குனு எனக்கும் நல்லாவே தெரியுது லூசு.." - தேவ்

"பையன் ஓக்கே தான்.. போனா போகுதுனு உன் நண்பனுக்கு வாழ்க்கை குடுக்கறேன்.." - மகி

"எதே? இவனுக்கு நீ வாழ்க்கை குடுக்கறீயா? இதெல்லாம் ரொம்ப ஓவர் தான் பிசாசே.." - தேவ்

ஒருபுறமாக தலையை சாய்ந்து அமர்ந்திருந்த கிருஷின் கரங்கள் கன்னத்தை தாங்கி இருக்க, பெண்ணவளின் பேச்சை ரசித்திருந்தவன் "நண்பா இவ்ளோ கஷ்டப்பட்டு மேடம் எனக்கு வாழ்க்கை குடுக்கனும்னு அவசியமில்லடா.. நம்ம கூட படிச்ச ராகினி இன்னும் என்னைய தான் லவ் பண்ணுது.." என்றான் நக்கல் கலந்த குரலில்..

இதில் சூடேறிய மகி, "அப்பறம் எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்தாரு உன் அருமை நண்பன்.. தாராளமா அந்த பொண்ணு கிட்டயே போக சொல்லு.." என்று அவனை பாராமல் தேவ்விடம் எகிறினாள்..

ஆனால் கிருஷோ தன்னவளையே வைத்த கண் வாங்காமல், "அப்ப உன் வாழ்க்கை..." என்று இழுக்க, கடுப்பில் அவன் கேட்டதை நன்றாக காதில் வாங்காத மகி, "அதான் அந்த பொண்ணு இருக்குனு சொன்னீயே.." என்றாள் சிடுசிடுப்புடன்..

இதை கேட்டதும் தண்ணீரை குடிக்காமலே தேவ்விற்கு புரையேற, அடக்கப்பட்ட சிரிப்புடன் கிருஷோ, "அடேய் பொண்ணும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு எப்படா சட்டம் கொண்டு வந்தாங்க.." என்று கேலியில் வினவ, இவனின் கேள்வியில் திருதிருவென விழித்து "என்னது?" என்று கேட்டாள் மகி..

தலையில் அடித்து கொண்டு தேவ் தான், "அவன் உன் வாழ்க்கைனு தான் கேட்டான் அதையை ஒழுங்க காதுல வாங்குனீயா பிசாசே.." என்று பல்லை கடித்ததும் அசட்டு சிரிப்புடன் தலையை குனிந்த மகி, "எனக்கு என் அண்ணன் மாப்பிள்ளை பார்ப்பான்.." என்றாள் மெல்லிய குரலில்..

இருவரையும் ஒருசேர முறைத்த தேவ், "இப்ப இது ரொம்ப முக்கியமா? சாவடிக்காதீங்கடா.. என்ன பேசிட்டு இருந்தோம்னே மறந்துருச்சு.. நீ கமிஷ்னர் பத்தி விசாரிச்சு சொல்றேனு சொன்னீயே அவரை பத்தி தெரிஞ்சுருச்சா?" என்றிட, சட்டென்று இறுகி போக முகத்துடன் "ம்ம்ம்" என்றான் கிருஷ்..

இவ்வளவு நேரம் நன்றாக தானே இருந்தான்.. இப்போது என்னவாயிற்று.. என்பதை போல் இருவரும் கிருஷை பார்க்க, மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்தி கொண்ட கிருஷ், கமிஷ்னர் தனசேகரை பற்றி கூற தொடங்கினான்..

"இவரு வேலைல சேர்ந்தப்ப எவ்வளவு நேர்மையோட இருந்தாரோ இப்ப வரைக்கும் அப்படியே தான் இருக்காரு.. நாலு வருசத்துக்கு முன்னாடி தொடர்ச்சியா குழந்தைக காணாம போறதும், அவங்க பெற்றவர்கள் குழந்தையை காணோம்னு கேஸ் குடுத்துட்டு பின்பு ரெண்டு நாளுலயே அதையை வாபஸ் வாங்கறதுமாவே இருந்துருக்கு.."

"இந்த கேஸ் நிறைய பேரு எடுத்து நடத்தியும் கடைசில காரணமே இல்லாம கேஸ் நிற்காம போறதை பார்த்து அவரே ரகசியமா இதைய பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுருக்காரு.. அந்த கேஸ் பத்தின எல்லா பைலையும் பார்த்ததுல காணாம போன குழந்தைக பத்து வயதிற்கு உட்பட்டவர்களாக தான் இருந்துருக்காங்க.. ஒன்னு ரெண்டு குழந்தைக தான் பதின்மூணு வயசுல இருந்துருக்கு.."

"அவங்க பெற்றோர் கிட்ட விசாரிச்சாலும் சரியான காரணத்தை சொல்லாம ஏதேதோ சொல்லி மழுப்பிருக்காங்க.. சொல்ல போனா இந்த பிரச்சனையை யாருமே கண்டுக்கிட்ட மாதிரியே தெரில.. காணாம போற குழந்தைகளோட எண்ணிக்கை தான் அதிகமா போனதை தவிர அதற்கான காரணம் தான் சுத்தமா புரில.."

"இந்த கேஸ் பத்தி ஆந்திராவுல இருக்கற அவரோட ப்ரெண்டு ஒருத்தர்கிட்ட ரகசியமா விசாரிச்சப்ப தான் இதுக்கு முக்கிய குற்றவாளி தாகூர்னு தெரிஞ்சுருக்கு.. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரனும்னு பல கட்டுப்பாடுகளையும் போட்டுருக்காரு மனுசன்.."

"ஆனா அதுக்கு அப்பறம் தான் ராஜன் மூலமா இவருக்கு பிரச்சனையே ஆரம்பிச்சுருக்கு.. ஆளுங்கட்சில இல்லாம இருந்தாலும் பல பேரு ராஜனோட கைக்குள்ள இருக்கறதுல பிரெஷர் மேல பிரெஷர் குடுத்துருக்காங்க.. ரெண்டு மூணு தடவை அவரோட வீட்டுக்குள்ள அடியாட்களும் புகுந்துருக்காங்க.."

"அவங்க மனைவியும் அவ்ளோ கெஞ்சுனாங்க இதைய விட்டுருங்கனு.. ஆனா அவரு பின்வாங்க விருப்பமில்லாம இருந்ததுல தான் இப்ப குடும்பத்தையே இழந்து தனிமரமா நிற்கறாரு.." என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்..

"எப்படி இறந்தாங்க?" என்று மகி கேட்க, முந்தி கொண்ட தேவ், "நான் தான் விபத்துனு அப்பவே சொன்னேனே.." என்றிட, "கிருஷ் முழுசா சொல்லட்டும் நீ கொஞ்சம் அமைதியா இரு.." என்று அவனை அடக்கியவள், "நீ சொல்லு கிருஷ்.." என்றவளுக்கே குரல் கம்மியது..

"அவரோட மனைவியும் மகளும் கோவிலுக்கு போன கார் மேல லாரி ஏறுனதுல ரெண்டு பேருமே அப்பவே அவுட்.. அதைய விபத்துனு தான் கமிஷ்னரும் நினைச்சுருக்காரு.. பட் அந்த ராஜனே நேருல வந்து அவங்களைய கொன்னது நான்தான் உன்னால என்ன பண்ண முடியும்னு தைரியமா கேட்டுருக்கான்.."

"அவனை அரெஸ்ட் பண்றதுக்கு தகுந்த ஆதாரமும் இல்லாம, இதுக்கு மேல அந்த கேஸை எடுத்து நடந்த தெம்பும் இல்லாம விரக்தில அந்த கேஸையே தலைமுழுகிட்டாரு.. அவருக்கு வேற வழியும் இல்ல.. எதிரி யாருனு தெரிஞ்சா கூட உசாரா இருக்கலாம்.. கண்ணு முன்னாடியே துரோகியை வெச்சுட்டு வயசான காலத்துல அந்த மனுசனும் என்ன தான் பண்ணுவாரு.." என்று கசங்கி தோய்ந்த முகத்துடன் முடித்தான் கிருஷ்..

சிறிது நேரம் மூவரிடமும் எந்த எதிர்வினையும் இல்லை.. "கமிஷ்னருக்கே இந்த நிலைமைனா.. நம்ம நிலைமை..??" என்று தேவ் மனதில் சற்று பயம் எழ, இதற்கு மாறாக மகியின் எண்ணமோ "இந்த பிரச்சனையை யாரோ ஆரம்பிச்சு வெச்சுருக்கலாம் ஆனா முடிவு என் கைல தான் இருக்கும்.." என்று உறுதியான எண்ணம் எழுந்தது..

"மகிமா.." என்று தேவ் அச்சத்தில் இழுக்க, "உனக்கு பயமா இருந்தா பின்வாங்கிரு தேவ்.. நான் பார்த்துக்கறேன்.." என்று மகியும் பட்டென்று கூறிட, இருவருக்கும் இடையில் புகுந்த கிருஷோ, "ரெண்டு பேருமே வேணாம்.. நானே பார்த்துக்கறேன்.." என்றான் முடிவாக..

சற்று கோவத்தில், "ஹலோ இதைய ஆரம்பி்ச்சது நான்தான்.. சோ முடிக்கறதும் நானா தான் இருப்பேன்.." என்று மகி கூறிட, "முதல்ல என்ன பண்றதுனு யோசிப்போம்.. அப்பறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.." என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேவ், "வாடா போலாம்.." என்று கிருஷை அழைத்தான்..

"நான் வந்தது தெரிய வேணாம்டா.. இப்படியே நான் கிளம்பறேன்.." - கிருஷ்

"சரி கிளம்பு.." - தேவ்

"நீ முதல்ல போடா.." - கிருஷ்

"ஹலோ இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகல.. அதையை மனசுல வெச்சுக்கங்க.." - தேவ்

"அது எனக்கும் தெரியும்.. ஒழுங்க நீ போறீயா இல்ல கழுத்தை பிடிச்சு வெளில தள்ளவா.." - கிருஷ்

"உங்ககூட சேர்ந்ததுக்கு அது மட்டும் தான் இன்னும் நடக்கல.. அடேய் இருடா.. நானே போறேன்.." என்று கிருஷை முறைத்தவாறு தேவ் நகர, அவன் சென்றதும் ஒரே எட்டில் மகியை நெருங்கியவன், "எனக்கு தெரியாம ஏதாவது பண்ணனும்னு நினைச்சே.." என்று முழுவதையும் முடிக்காமல் பாதியில் நிறுத்திய தன்னவனை படபடக்கும் மனதுடன் மகி நோக்க, "பேசிட்டு இருக்க மாட்டேன் கன்னம் பழுத்துரும்.." என்றான் அதட்டலுடன்..

தன்னை சமன்படுத்தி கொண்டு "நான் எதுக்கு உன்கிட்ட சொல்லனும்.." என்று அவனை கடுப்பேத்த கேள்வியை மகி எழுப்ப, அவளை கூர்ந்து பார்த்தவன், "எதுக்குனு நான் சொல்லி தான் உனக்கு தெரியனுமா?" என்று புருவத்தை மேலேற்றி இறங்கிய கிருஷ், "எனக்கு தெரியாம எதுவும் நீ பண்ண மாட்டேனு நான் நம்பறேன் ரவுடி.." என்றவனின் வார்த்தையில் அவளின் மீது அத்தனை நம்பிக்கை..

மகியின் கையை தன் இதயத்தின் மீது வைத்து, "என் இதயத்துல நீ இருக்கற வரைக்கும் இந்த துடிப்பு உனக்காக மட்டும் தான் இருக்கும்.. இன்னும் எத்தனை வருசமானாலும் இங்க நீ மட்டும் தான் இருப்பே ரவுடி.." என்றதும் மகியின் மனக்கண்ணில் இதே போல் ஆறு வருடங்களுக்கு முன்பு கூறிய கிருஷ் கண்முன்னே வந்து செல்ல, தானாக புன்னகை அரும்பியது அவளின் இதழில்..

அவனிடம் இருந்து கையை உருவி கொண்ட மகி, "உன் காதலை ஏத்துக்கறதை பத்தி கொஞ்சம் யோசிக்கனும்.. இப்ப நீ கிளம்பறீயா?" என்றவாறு கதவை திறக்க, குறும்பு மின்ன தன்னவளை இழுத்து தன் கைகளில் அள்ளி கொண்டான்..

கிருஷின் திடீர் செயலில் கண்மூடி திறந்த பெண்ணவளும் ஆடவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்து கொண்டு "ரொம்ப படுத்தறடா.." என்று அவனது கன்னத்தை வலிக்கும்படி கி்ள்ளி வைத்தாள்..

அனுமதியின்றி கதவை திறந்து கொண்டு வந்தவரை "இடியட்" என்று திட்ட வாயெடுத்த மகி, வந்தவர் யாரென்று அடையாளம் கண்டு கொண்டதும் அமைதியாக இருக்க, "வணக்கம் மேடம்.." என்று விட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தது ராஜன்.. ராஜனே தான்..





தாகம் தீரும்..

 

T21

Well-known member
Wonderland writer

பகுதி - 21



ராஜன் வணக்கம் என்றதும் கைகுவித்த மகியும், "என்ன சார் அடுத்தவங்க வீட்டுக்குள்ள அத்துமீறி நுழைய மாதிரி பர்மிசன் கேட்காம இப்படி வந்து உக்காந்துருக்கீங்க.. அதுசரி சாருக்கு இந்த விசயம் கை வந்த கலை தானே.." என்று நக்கலுடன் வினவ, தலைக்கேறிய கோவத்தில் பல்லை கடித்து கொண்டு அவளை முறைத்து பார்த்தார் ராஜன்..

அதனை கண்டு கொள்ளாமல், "சொல்லுங்க சார் என்ன விசயமா வந்துருக்கீங்க.. என் உதவி ஏதாவது உங்களுக்கு தேவைப்படுதா?" என்று கேட்க, பின்னால் நின்றிருந்த அடியாளிடம் ராஜன் கையை நீட்ட, அது எதற்கென்று அவன் உணர்ந்ததும் செக்புக்கை எடுத்து அவரின் கை மீது வைத்தான்..

"நீங்களே சொல்லுங்க மேடம்.. உங்களுக்கு எவ்வளவு வேணும்னு.. கூச்சப்படாம தாராளமா எவ்வளவு வேணுனாலும் கேட்கலாம்.. இல்ல பணம் வேணாம் வேற ஏதாவது வேணும்னு நினைச்சாலும்.." என்று முடிக்காமல் நிறுத்தினார் மர்மமாக..

ராஜன் கூறியது எதுவென்று மகிக்கு உரைத்ததும் ஆவேசமாக எழுந்தவள், "யோவ் உன் கேடுகெட்ட வளர்ப்பு மாதிரி என் வளர்ப்பும் கேவலமா இருக்கும்னு நினைச்சு பேசிட்டு இருக்கீயா? உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கே?" என்று சீறினாள்..

"மேடம் நீங்க எப்படி கத்துனாலும் உங்க எனர்ஜி தான் வேஸ்ட்டு ஆகும்.. உங்களால மட்டுமில்ல வேற யாராலயும் என்னைய எதுவும் பண்ண முடியாது.." - ராஜன்

"உங்களுக்கு மேல கடவுள்னு ஒருத்தர் இருக்காங்க சார்.. சட்டம் தன் கடமையை செய்யாம விடலாம் ஆனா கடவுள் கண்டிப்பா தன் கடமையை செய்வாரு.." - மகி

"இப்படி யோசிக்கறதே வேஸ்ட்டுனு நினைக்கற ஆள் நானு.. ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கிட்டு அமைதியா இருக்கற வழியை பாருங்க மேடம்.." - ராஜன்

"இல்லனா...??" - மகி

"தேவையில்லாத பிரச்சனை தான் வரும் பரவால்லயா?" - ராஜன்

"ம்ம்ம்ம் அதையை எதிர்க்க நானும் ரெடியா தான் இருக்கேன்.." - மகி

"சொன்னா கேளுமா.. நீ எவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன்.." - ராஜன்

மெதுவாக சேரை சுழற்றியபடி அவரை ஆழம் பார்த்த மகி, "எது கேட்டாலுமா?" என்றிட, தன் வழிக்கு வந்து விட்டாள் என்று ராஜனும், "ம்ம்ம் என்ன வேணுனாலும் தர்றேன் கேளுமா.." என்றார் சிரிப்புடன்..

"அண்ணே போலீஸ்காரம்மாவும் நம்ம வழிக்கு வந்துருச்சு பாருங்க.." என்று அவரின் அடியாள் மகியை பார்த்து சிரிக்க, பேனாவை கையில் எடுத்த மகி அவனை பார்த்தவாறு, "எனக்கு உங்க பொண்ணு வேணும்.." என்று ஏளன நகையுடன் கேட்டாள்..

இதில் கோவம் துளிர்க்க "ஏய்" என்று கத்தியபடி ராஜன் எழுந்து விட, "சார் சார் உக்காருங்க.. நீங்க தானே என்ன வேணும்னு கேட்டீங்க அதான் எனக்கு உங்க பொண்ணு தான் வேணும்.. உங்க பொண்ணை என்கிட்ட அனுப்பிட்டா நான் இப்பவே அந்த கேஸ்ல இருந்து பின்வாங்கிருவேன்.." என்றாள் அசட்டையாக..

தன் ஐயாவை கோவப்படுத்தியதில் அவரின் பின்னே நின்றிருந்த அடியாள் ஒருவன் முதுகில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மகியை குத்த போக, நொடி நிமிடத்தில் அவனின் கையை பிடித்து அவன் முகத்தில் மகி விட்ட அடியில் தானாக அவனின் தலை டேபிளில் சரிய, கையில் வைத்திருந்த பேனாவின் கூர்முனையை அடியாளின் கண்ணில் இறக்கி இருந்தாள்..

"உங்க வழிக்கு வர நான் என்ன பொம்மையாடா? இனி நீ போற வழியே உனக்கு தெரியாது.." என்று அவனிடம் சீறிய மகியின் பார்வை இப்போது ராஜனை நோக்க, "என்னயா பணம் இருந்து இந்த மாதிரி நூறு ரவுடியை உன் பக்கத்துல வெச்சுக்கிட்டா நீ பெரிய இவன் ஆகிருவீயா?"

"உன் பொண்ணை கேட்டா உனக்கு இவ்வளவு கோவம் வருது அதே அடுத்தவங்க வீட்டு பொண்ணுனா உனக்கு இனிக்குதோ? குழந்தையை தூக்கிட்டு வெறும் பணத்தை குடுத்துட்டா போதுமா? குழந்தையை பறி குடுத்துட்டு தவிக்கற ஒவ்வொரு தாய்மாரோட வலி என்னனு தெரியுமா??. கேவலமான எண்ணத்துல இங்க வந்தீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்.."

"இதுக்கெல்லாம் நீ அனுபவிப்பே கண்டிப்பா அனுபவிப்பே.. என்னைய பகைச்சுட்டு நீ வாழ்ந்துருவீயானு நானும் பார்க்கறேன்.." - ராஜன்

"ம்ம்ம்ம் பாருங்க பாருங்க ஜெயிலுக்குள்ள இருந்துட்டு தாராளமா பாருங்க.." - மகி

"எதே? நான் ஜெயிலுக்கு போறதா? அது உன் கனவுல கூட நடக்காது.." - ராஜன்

"கனவுல நடக்கலனா என்ன நிஜத்துல நடத்தி காட்டறேன் மிஸ்டர். ராஜன் சார்.. உங்க பின்னாடி எவ்வளவு பெரிய ஆளுக இருந்தாலும் எனக்கு கவலையில்ல.." - மகி

"என்னடி என் அண்ணனையே.." என்று மற்றொரு அடியாள் முழுவதும் பேசி முடிக்கும் முன்பே அவனின் வாயிலும் பேனாவை மகி இறக்கியிருக்க, "நான் என் உங்க வீட்டு நாய்க்குட்டியா எப்படி வேணாலும் பேச?? நாய்க்குட்டியா இருந்தாலும் மரியாதையா தான் பேசனும்.." என்று விழி தெறிக்கும் அளவிற்கு அதட்டியவள் அதே வேகத்தில் பேனாவையும் உருவியதில் அடியாளின் ரத்தம் ராஜனின் மேலும் தெறித்தது..

அவன் வலியில் அலற, "ஷ்ஷ்ஷ் சத்தம் வந்துச்சு தொண்டைலயும் இறங்கும்.." என்று வாயில் விரல் வைத்து அமைதி என்பதை போல் கூறியவள், சிவந்த விழிகளுடன் ராஜனை ஏறிட்டு, "இங்க பாருங்க உங்களுக்கும் எனக்கும் தான் பிரச்சனை.. எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா மோதனும்.."

"அதையை விட்டுட்டு பின் முதுகுல குத்தனும்னு நினைச்சீங்க சீவிருவேன்.. என் குடும்பத்து மேல சிறு கீறல் விழுந்தா கூட உங்க குடும்பத்தை போடவும் நான் தயங்க மாட்டேன்.. உங்க ஆட்டத்துல கமிஷ்னர் சார் அடங்கியிருக்கலாம்.. ஆனா இந்த மகிழினி அடங்க மாட்டா.."

"நீ என் குடும்பத்து மேல கை வெக்கற வரைக்கும் நான் என்ன பூ பறிச்சுட்டு இருப்பனா? உனக்கு அவ்ளோ திமிரோ?" - ராஜன்

"ம்ம்ம் திமிரு தான்.. உடம்பு முழுவதும் திமிரை தான் நான் வளர்த்தி வெச்சுருக்கேன்.. என்னைய எப்படி காப்பாத்திக்கனும்னு நல்லாவே தெரியும்.. ஆனா உங்களுக்கு..??" - மகி

"அண்ணே வாங்கண்ணே போலாம்.. இந்த பொம்பளை ரவுடி மாதிரி பேசுது.." என்று மற்றொரு அடியாள் ராஜனை அழைக்க, தலையை சாய்த்து அவனை பார்த்த மகி, "என்ன சார் பொசுக்குனு ரவுடினு சொல்லிட்டிங்க.. அப்ப நீங்க எல்லாம் யாரு?" என்று வினவினாள் நக்கலுடன்..

தன்னை பிடித்திருந்த அடியாளின் கையை உதறி தள்ளிய ராஜன், தீப்பார்வையில் மகியை முறைத்து விட்டு வெளியேற, அவரின் பின்னே செல்ல போன மற்றவர்களை சொடுக்கிட்டு அழைத்தவள், "இவனுகளையும் தூக்கிட்டு போங்க.." என்றாள் அலட்சியமாக..

அவர்கள் சென்றும் ஏனோ மகியின் மனநிலை இன்னும் மாறாமல் அப்படியே இருக்க, அவளின் கோவத்தை தணிக்கவே சிணுங்கியது அலைப்பேசி.. எடுத்து யாரென்று பார்த்த மகி, "இவன் எதுக்கு இப்ப கூப்படறான்.." என்றவாறு போனை எடுத்தாள்..

"ஹலோ மகி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லயே.." - தேவ்

"எனக்கு என்னடா பிரச்சனை.. ஆமா உன் குரல் ஏன் இவ்வளவு பதட்டத்துல இருக்கு.." - மகி

"அங்க ராஜன் சார் வந்தாரா?" - தேவ்

"அது உனக்கு எப்படி தெரியும்.." - மகி

"எப்படியோ தெரியும்.. அதுவா முக்கியம்.. நீ ஏன் லூசு அவருகிட்ட வம்பு இழுத்து வெச்சுருக்கே?" - தேவ்

"அப்பறம் அவங்க பேசறதை கேட்டுட்டு அமைதியா இருக்க சொல்றீயா?" - மகி

"அய்யோ லூசு.. முதல்லயே பிரச்சனைக்கு மேல பிரச்சனை போய்ட்டு இருக்கு.. இதுல இது வேறயா?" - தேவ்

"நானும் அமைதியா இருக்கலாம்னு தான் நினைச்சேன்.. பட் என் பொறுமையை ரொம்ப சோதிச்சுட்டாங்க.." - மகி

"ப்ச் கொஞ்சம் அமைதியா இருந்துருக்கலாம் மகி.." - தேவ்

"விடுடா பார்த்துக்கலாம்.. எதிரியை விட நீங்க என்னைய சுத்தி வெச்சுருக்கற கருப்பு ஆடுக தான் அதிகமா இருக்கும் போல.." - மகி

"நீ அமைதியா இருந்தா நாங்க ஏன் இப்படி பண்ண போறோம்.. இனி கவனமா இருடா.." என்று ஆயிரம் முறை கூறி விட்டு தேவ் போனை வைக்க, "என்னடா இது போலீஸுக்கு வந்த சோதனை.." என்று கதற தான் முடிந்தது மகியால்..

எப்போதும் ராஜனின் அருகில் இருக்கும் ஆள் ஒருவனை தன் கைக்குள் கொண்டு வந்த தேவ், அவருக்கு எதிரான ஆதாரங்களை அவன் மூலம் திரட்டி விட்டு, அதை மகியிடம் கூற வரலாம் என்றிருந்த நேரத்தில் புது எண்ணில் இருந்து தேவ்விற்கு அழைப்பு வந்தது..

"என்ன தம்பி போலீஸ்கார அம்மாகிட்ட போக போறீங்க போல.. அதுக்கு முன்னாடி உன் அப்பா எங்கனு தெரிஞ்சுட்டு அங்க போறதா? வேணாமானு முடிவு பண்ணிக்கங்க.." என்றதுமே போனை கட் செய்து விட, "ஹலோ ஹலோ" என்று தேவ் கத்தியது காற்றில் தான் கலந்தது..

பதட்டத்துடன் தன் தந்தைக்கு அழைக்க, அவரின் அலைப்பேசி ஸ்விட்ச் ஆஃப் என்று வர, அன்னையின் எண்ணிற்கு அழைத்து தந்தை எங்குவென்று கேட்க, "கடைக்கு போறேனு போனாருடா இன்னும் ஆளை காணோம்.." என்றிட, பக்கென்று இருந்தது தேவ்விற்கு..

அவரையும் பதட்டப்படுத்த வேணாம் என்று வேறெதுவும் கேட்காமல் போனை கட் செய்தவுடன் தனக்கு வந்த எண்ணிற்கு அழைக்க, "என்ன தம்பி உன் அப்பா இருக்காரா?" என்று நக்கலுடன் வந்த குரலுக்கு சொந்தக்காரர் ராஜன் தான் என்று தேவ்விற்கு தெளிவாக உரைத்தது..

"போலீஸ்காரன் நீயே இவ்வளவு யோசிக்கறப்ப நான் எதுவும் யோசிக்காம இருந்துருப்பனா?" - ராஜன்

"வேணாம் ராஜன் சார்.. தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டு இருக்கீங்க.. இது நல்லதுக்கு இல்ல.." - தேவ்

"அதைய பத்தி நீங்க கவலைப்பட வேணாம் தம்பி.. உன் அப்பா உனக்கு வேணுமா? வேணாமா?" - ராஜன்

"அவருக்கு ஏதாவது ஆச்சுனா உங்களைய சும்மா விட மாட்டேன்.. ஒழுங்க அவரை விட்டுருங்க.." - தேவ்

"ப்ச் தம்பி அதுக்கு முன்னாடி உன் அப்பன் பரலோகம் போய்ருவாரு பரவால்லயா?" - ராஜன்

பல்லை கடித்து கொண்டு, "என் அப்பா உங்க கிட்ட தான் இருக்காருனு நான் எப்படி நம்பறது?" என்று கேட்க, இதனை கேட்டு நகைத்த ராஜன், "நான் எதுக்கு தம்பி பொய் சொல்ல போறேன்.. ஆதாரம்.. ஆதாரம் இதோ அனுப்பறேன்.." என்றவர் தன் ஆட்களிடம் கூறி தேவ்வின் எண்ணிற்கு வீடியோவை அனுப்ப கூறினார்..

தன் எண்ணிற்கு வந்த வீடியோவை பதைபதைக்கும் மனதுடன் தேவ் ஆன் செய்ய, அதில் விநாயகத்தின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்திருக்க, அவரும் மயக்கத்தில் தான் கிடந்தார்.. இதை பார்த்ததும் தேவ்விற்கு சப்தநாடியும் ஒடுங்கி போனது..

"இப்ப நான் என்ன பண்ணனும்.." என்று குரல் கம்ம கேட்க, "அப்படி வா வழிக்கு.." என்று சிரித்த ராஜன் செய்ய வேண்டியதை கூற, அவர் சொன்ன அனைத்திற்கும் ம்ம்ம் என்ற பதிலை மட்டுமே குடுத்த தேவ்வின் மனதில் தன் தந்தைக்கு எதுவுமாகி விட கூடாது என்ற எண்ணம் மட்டுமே உழன்றது..

ராஜன் இவனுக்கு கடடளையிட்டது வேலையை விட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று விடவேண்டும்.. முக்கியமாக மகியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்பது தான்.. அவனை கண்காணித்தபடி இருந்த ராஜன் நியமித்த ஆள் ஒருவன் அனைத்தும் முடிந்து விட்டது என்று கூறிய பிறகு தான் விநாயகத்தையே விட்டார்..

"ஏன் பாஸ் இவரை போடாம விட்டிங்க?" என்று அவரின் ஆள் ஒருவன் கேட்டதற்கு அவரும், "நானும் போட்டரலாம்னு தான் சொன்னேன்.. ஆனா என் மாப்ளை தான் வேணாம்னு சொல்லிட்டான்.. முதல்ல அந்த மகிழினியை யாருமில்லாம தனியாளா ஆக்கனும்.. அதோட முதல்படி தான் இவன்.." என்றார் வன்மத்துடன்..

விநாயகத்தின் அருகில் அமர்ந்து அவருக்கு ஒத்தடம் குடுத்தவாறு இருந்த தேவ், "அப்பா ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டவனின் குரலும் கம்மி போக, மகனின் மனமறிந்து விநாயகமும் இல்லையென்று தலையசைத்தார்..

புயல் வேகத்தில் உள்ளே வந்த மகி, "தேவ் உனக்கு என்ன லூசா பிடிச்சுருக்கு?" என்று கத்த, அவளை கண்டு கொள்ளாமல் பின்னால் வந்த தன் நண்பனை பார்த்து, "ஜெகா நாங்க எங்க ஊருக்கே போய்ரலாம்னு இருக்கோம்.. முடிஞ்சா நாளைக்கு கிளம்பிருவோம்.. எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம்.."

"அப்ப எனக்கு யாரும் முக்கியமில்லனு சொல்றீயா?" - மகி

"உனக்கு எப்படினு எனக்கு தெரியாது.. என்னால தான் அப்பாக்கு இப்படி ஆனதே.. இவங்களைய விட எனக்கு வேலை முக்கியம் இல்ல மகி.." - தேவ்

"அய்யோ என்னதான் ஆச்சு.. ரெண்டு பேரும் ஏன் இப்படி பேசறீங்க.." - ஜெகன்

"வேலையை விட்டது அவன் பண்ணுன முதல் தப்பு.. அந்த ராஜன் மிரட்டியதும் பயந்துட்டு ஊரை விட்டு ஓட பாக்கறது ரெண்டாவது தப்பு.. எனக்கு யாரு மேலயும் அக்கறை இல்லனு சொல்லாம சொல்றது அதைய விட பெரிய தப்பு.." - மகி

"டேய் என்னடா? பாப்பா சொல்றது உண்மையா?" - ஜெகன்

"ம்ம்ம்ம் உண்மைதான்.. எனக்கு இவங்க உயிரோட விளையாட சுத்தமா விருப்பம் இல்ல.. அதான் ஜெகா.. இது என்னோட தனிப்பட்ட முடிவு தான்.. ராஜன் என்ன பண்ணிருவாருனு சாதாரணமா நினைச்சேன்.. அவன் சொல்றதை முடியாதுனு சொல்லிருந்தா என் அப்பா எங்க கிட்ட கிடைச்சிருக்க மாட்டாருடா.." - தேவ்

மகி பேச வரும் முன்னே எதுவும் பேசாத என்பதை போல் தடுத்த தேவ், "ப்ளீஸ் மகி விட்டுரு.. இதுதான் என் முடிவு.. உனக்கு என்மேல எல்லா உரிமையும் இருக்கு தான்.. அதுக்காக நீ சொல்றதை நான் கேட்கனும்னு அவசியமில்ல.. முடிஞ்சா என்னைய வழி அனுப்பு இல்ல விலகிரு.." என்றவனின் வார்த்தை பெண்ணவளின் இதயத்தை சுள்ளென்று தாக்கியது..

வலுக்கட்டாயமாக புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்து, "ஆல் தெ பெஸ்ட் பார் யுவர் பியூச்சர்.." என்ற மகி விழிநீர் கன்னத்தை தொடும் முன்பே அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்து விட, ஜெகனும் ஓரிரு வார்த்தைகள் தேவ்விடம் பேசி விட்டு அகன்றான்..

கிளம்பும் போது கூட தேவ் மகியிடம் கூற வரவில்லை.. ராஜனின் கண்டிசன்படி மகியிடம் இனி எந்த பேச்சு வார்த்தையும் வைத்து கொள்ள கூடாது என்பதால் முடிந்த வரைக்கும் மகியை விட்டு விலகி சென்று விட்டான்..

கிருஷின் வார்த்தையை செவிமடுத்த ரகுபதி, "நீ சொல்றது எல்லாம் சரிதான்பா.. ஆனா என் மகளை எப்படி தனியா விட்டுட்டு போறது?" என்று கலங்க, "ஆமாபா மகியை தனியா விட எனக்கு சுத்தமா விருப்பமில்ல.." என்று காயத்ரியும் கூறிட, ஜெகன் மட்டும் எதுவும் பேசவில்லை..

"நீயும் உன் பங்குக்கு ஏதாவது சொல்லுடா.." என்று ஜெகனிடம் கிருஷ் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த ஜெகன் திரும்பி தன் தந்தையிடம், "அப்பா கிருஷ் சொல்ற மாதிரியே பண்ணலாம்.." என்றான் எவ்வித சலனமின்றி..

"என்னடா புரிஞ்சு தான் பேசறீயா?" என்று ரகுபதி சீற, தன் பங்கிற்கு காயத்ரியும், "எப்படிடா மகியை விட்டுட்டு இருக்க முடியுமா?" என்று கண்ணீர் சிந்த, ஜெகனோ "நிரந்தரமா அவளை விட்டு நம்ம பிரிய கூடாதுனு தான் கிருஷ் இப்படி சொல்றான்.. நம்ம பாதுகாப்புக்கே இவ்வளவு பண்றவன் மகியை பாதுகாப்பா பார்த்துக்க மாட்டானா?" என்ற கேள்வியில் முடித்தான்..

தன் நண்பனின் கூற்றில் தாவி அவனை அணைத்து கொண்ட கிருஷ், "எனக்கு எல்லாருமே முக்கியம்டா அதான் இப்படி சொல்றேன்.. அந்த ராஜன் நேரா மோதுனா பிரச்சனையில்ல.. ஆனா அவன் பின்முதுகுல தான் எப்பவும் குத்த நினைப்பான்.." என்றான் தழுதழுக்க..

"நீ சொல்றது புரியுது மாப்ளை இருந்தாலும் என் பொண்ணு.." என்று ரகுபதி தயங்க, "மாமா நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. மகியோட பலமும் இந்த குடும்பம் தான் பலகீனமும் நீங்க தான்.. இது அந்த ராஜனுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும்.."

"மகியை கலங்க வெக்க கண்டிப்பா உங்க மூணு பேருத்தை ஏதாவது பண்ணனும்னு யோசிச்சுட்டு இருப்பான்.. ராஜன் கிட்ட மகி வம்பு வெச்சுக்க கூடாதுனு தான் இந்த கேஸை நான் பார்த்துக்கறேனு சொன்னேன்.. ஆனா அந்த லூசு.. அடியாளை அடிச்சது மட்டுமில்ல அவரையே மிரட்டி அனுப்பிருக்கா.. என்னத்த சொல்றது.."

இவ்வளவு நேரம் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த மகி, "அவன் கேவலமா கேட்கறான்.. நான் வாயை மூடிட்டு உக்காந்துருக்கனுமா? அப்படி கேட்ட அவன் வாயையும் திறக்காத மாதிரி பண்ணிருப்பேன்.. போனா போகுதுனு விட்டுட்டேன்.."

அவளை கடுங்கோவத்தில் கிருஷ் முறைத்து பார்க்க, சீறி கொண்டிருந்த மகியின் இதழ்கள் தானாக அடங்கி விட, "மாமா என்னைய நம்பறீங்க தானே?" என்று ரகுபதியிடம் வினவ, இவனின் கேள்வியில் பதறி போன ரகுபதி, "என்ன மாப்ளை பெரிய வார்த்தை எல்லாம் கேட்டுட்டு.." என்றார் சட்டென்று..

"அப்ப கிளம்பி தயாரா இருங்க.. தாரணியையும் கூட்டிட்டு போய்ரலாம்.." என்றிட, அதுவே அனைவருக்கும் சரியெனபட்டது.. அன்றிரவே யாருக்கும் தெரியாமல் நால்வரையும் தன் இடத்திற்கு கிருஷ் அழைத்து சென்றிட, யாருமில்லா வீட்டில் மகி மட்டுமே முன்னால் அமர்ந்திருந்தாள்..

நள்ளிரவில் கதவு படபடவென தட்டப்படும் சத்தத்தில் தான் சிந்தனையை கலைத்து தன்னை சமன்படுத்தி கொண்ட மகி பில்டரை எடுத்து முதுகில் சொருகியவாறு கதவை திறக்க, அவள் நினைத்தது போல் ராஜனின் ஆட்கள் தான் கட்டையுடன் நின்றிருந்தனர்..

"திருந்தவே மாட்டிங்களாடா?" என்று கடுப்புடன் மகி பில்டரை எடுக்க, "நா நா இல்ல.. நா இல்ல.." என்று தலை தெறிக்க ரவுடிகள் ஓட்டம் பிடித்தனர்..

மீண்டும் வந்து அமர்ந்த மகிக்கு வெறுமை சூழ, தேவ்விற்கு அழைக்கலாம் என்று உந்திய மனதை அரும்பாடுபட்டு அடக்கியவள், "நான் இப்ப அவனுக்கு யாரோ தானே?" என்று எண்ணியதும் தானாக அவளின் இதயம் விம்மியது..



 

T21

Well-known member
Wonderland writer
மகியின் எண்ணத்தை கலைக்கவே மீண்டும் அலைப்பேசி சிணுங்க கிருஷ் தான் அழைத்திருந்தான்.. மகி எடுத்ததுமே கதவை திற என்றிட, எதுவும் பேசாமல் மகியும் கதவை திறந்தாள்..

முகத்தை உம்மென்று வைத்தபடி இருந்த மகியை கண்டு கிருஷிற்கு சிரிப்பு தான் வந்தது.. "என்ன மேடம் இன்னும் கோவமா தான் இருக்கீங்க போல?" என்றவாறு அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர வைத்தான்..

தன்னவனின் வார்த்தையை காதில் வாங்காதவள் போல் எங்கையோ பார்த்தபடி மகி இருக்க, அவளின் முகத்தை திருப்பிய கிருஷ், "உன்னோட கோவம் தப்புனு சொல்ல மாட்டேன் ரவுடி.. கோவத்துல மதியை இழந்து பிரச்சனையை வளர விடறதை விட நிதானமா இருந்து பிரச்சனையை முடிக்கறது தான் நல்லது.. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு இருக்க கூடாது.."

"மூளையை கொஞ்சமாவது யூஸ் பண்ணு ரவுடி.. இனி மூக்குக்கு மேல கோவம் வந்துச்சு.." என்று முறைத்தவன் அவளின் மூக்கை பிடித்து ஆட்ட, "அய்யோ வலிக்குது விடுடா.." என்று அவனின் கையை தட்டி விட்ட மகி மூக்கை தேய்த்தாள்..

இப்போது தன் பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட மகிக்கு தெரியவில்லை.. கிருஷிடம் கேட்டால் "என்னைய நம்பலயா ரவுடி.." என்ற வார்த்தையிலே இவளை அடக்கி விடுவான்.. அதற்கு மேலும் அவனை வற்புறுத்தி கேட்க மகிக்கும் விருப்பமில்லாததால் அமைதியாகி விட்டாள்..

ஜெகனுக்கு பெண் மகவு பிறந்து இருக்கிறது என்ற தகவல் மகியை வந்தடைந்ததும் அவளின் சந்தோசம் எல்லையை கடந்து சென்றது.. உடனே கிருஷிடம் கூறி அங்கு அழைத்து செல்ல கூற, அவன் முடியவே முடியாது என்று மறுத்து விட்டான்..

"ப்ளீஸ் கிருஷ்.. நான் அத்தை ஆகிட்டேன்.. குழந்தையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு.." - மகி

"நானும் தான் மாமா ஆகிட்டேன்.. அதுக்கு என்னடி இப்ப?" - கிருஷ்

"ப்ச் எனக்கு குழந்தையை பார்க்கனும்னு இருக்குடா.." - மகி

"இதைய நீ இந்த கேஸை எடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும் ரவுடி.." - கிருஷ்

"அந்த ராஜன் அமைதியா தானே இருக்காங்க.. நீ ஏன்டா இப்படி பெரிசு படுத்திட்டு இருக்கே?" - மகி

"எது? அவரு அமைதியா இருக்காரா? அதையை நீ பார்த்தீயா? தேவ் எதுக்கு இங்கிருந்து கிளம்புனான்.." - கிருஷ்

"அது உன் நண்பன் பிரச்சனை அதைய பத்தி நான் கவலைபட மாட்டேன்.. அவன் கூட பேசறதும் பேசாததும் என் விருப்பம் தான்.." - மகி

"சரி அவனை விட்டு தள்ளு.. உனக்கு அவரு குடுக்கற பிரச்சனை எல்லாம் ஏதேச்சையா தான் நடக்கறதா? எப்ப இந்த கேஸ் முடியுதோ அப்பதான் நீ அவங்களைய பார்க்க முடியும்.." - கிருஷ்

அவனின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சியவாறு, "ப்ளீஸ் ப்ளீஸ்டா.. ஒரே தடவை.. அட்லீஸ்ட் வீடியோ கால் பண்ணியாவது குழந்தையை எனக்கு காட்ட சொல்லு.." என்று மகி கெஞ்ச, ஏனோ அவளின் தவிப்பை காண விரும்பாமல் உடனே ஜெகனுக்கு அழைத்தான்..

முகம் கொள்ள புன்னகையுடன் எடுத்ததுமே "ஹாய் மச்சான்.." என்று ஜெகன் கூற, வெடுக்கென்று கிருஷின் கையில் இருந்த போனை பிடுங்கிய மகி, "நான் இல்லாம ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல.." என்றாள் கடுகடுப்புடன்..

"ஏன்டா பாப்பா இவ்வளவு கோவம்.. நீ அத்தை ஆகிட்டடா தங்கம்.." - ஜெகன்

"தெரியும் தெரியும்.. ஆனா பாப்பாவை பார்க்க உன் நண்பன் விட மாட்டிங்கறான்.. இதெல்லாம் என்னனு கேட்க மாட்டியா?" - மகி

"அவன் கிட்ட மனுசன் பேச முடியாதுடா.. குழந்தையை பார்க்கறப்ப நீயே எங்க கூட இருக்கற மாதிரி இருக்குடா.." என்றவாறு காயத்ரியின் கையில் இருந்த குழந்தையை மகிக்கு காட்டினான்..

பூந்தூவலையினுள் ரோஜா பூவாய் சிணுங்கி கொண்டிருந்த குழந்தையை கண்டதும் அள்ளி அணைத்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மகிக்கும் எழ, கணக்கிலடங்கா முத்தங்களை அலைப்பேசியின் வாயிலாகவே வாரி இறைத்தாள்..

"அய்யோ அண்ணா பாப்பா அப்படியே தாரு மாதிரி இருக்கு.. இப்பவே குழந்தையை தூக்கி கொஞ்சனும் போல இருக்கு அண்ணா.." என்று குழந்தையிடம் இருந்து பார்வையை அகற்றாமல் மகி கூறிட, "பாப்பா" என்று வந்த ரகுபதியின் குரலில் தன்னை மீறி கலங்கி விட்டாள்..

கலங்கிய மகியை சமன்படுத்த மாறி மாறி பேசியவர்கள் குழந்தையையும் காட்ட, தன்னை மீறி அரும்பிய புன்னகையில் சிலபல முத்தங்களை மீண்டும் குழந்தைக்கு கொடுத்து விட்டு போனை வைத்ததும், "அவங்களைய ரொம்ப மிஸ் பண்றேன்டா.." என்று தன்னவனின் தோளில் சாய்ந்தாள்..

"அச்சோ ஒரு பாப்பாவே இன்னொரு பாப்பாவுக்காக அழுகுது.. இப்படி அழுமூஞ்சியா இருக்காத ரவுடி.." என்று அவளின் கண்ணை துடைத்து விட்டவன், "நம்ம பாப்பாவும் பிறந்தா இப்படி தானே இருக்கும்.." என்று கேட்டவனின் வார்த்தையில் ஏக்கங்களே தேங்கி இருந்தது..

இதனை மகி உணர்ந்தாலும் தன்னவனை கலங்க விட விருப்பமின்றி, "பாப்பா வேணாம் தம்பி தான் வேணும்.. அதுவும் உன்னைய மாதிரியே.." என்று தலை சாய்த்து பெண்ணவள் கேட்டதும், குறும்புடன் தன் பக்கம் மகியை இழுத்தவன் "நான் ரெடி தான் ரவுடி.." என்றான் மர்க்கமாய் ஒரு லுக்குடன்..

"ஆசையை பாரு.." என்று அவனை தள்ளி விட்டு எழுந்தவள், "கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் தோணுனா மூளையை தூக்கி வெளில வீசிருவேன்டா பேட் ப்பெல்லோ.." என்று நாக்கை துருத்தி பலிப்பு காட்டி விட்டு அறைக்குள் ஓடினாள்..

மற்ற நேரமாக இருந்தால் மகியை துரத்தி சென்றிருப்பான்.. இப்போது அவன் மனதில் வெறுமையே சூழ்ந்திருக்க, அப்படியே படுத்து கையை தலைக்கு வைத்தபடி சுழலும் மின்விசிறியை வெறித்தான்..

பத்து வயதில் தந்தையை இழந்து, அன்னை இருந்த போதும் தனித்து விடப்பட்டவனை அவனின் மாமா தான் அழைத்து சென்று தந்தை பாசத்தை புகட்டினார்.. எப்போதும் தந்தையின் அரவணைப்பிலயே வளர்ந்த கிருஷும் அவரிடம் நன்றாக ஒட்டி கொண்டான்..

வளர்ந்த பின்பும் கூட அன்னையை தேடி செல்ல விருப்பமில்லாமல் இன்று வரை அவருடன் தான் இருக்கிறான்.. சொல்ல போனால் கிருஷின் உலகமே அவனின் மாமா தான்..

கலங்கிய தன் மனதை கஷ்டப்பட்டு விரட்டி அடித்த கிருஷ், மீண்டும் ஜெகனுக்கு அழைத்து குழந்தையின் நலனை உறுதிப்படுத்தி கொண்டு, அவர்களையும் கவனமாக இருக்க கூறினான்..

எப்போதும் குழந்தைகளை மட்டும் கேட்கும் தாகூர் இந்த முறை கர்ப்பிணி பெண்களையும் கேட்க, மகியினால் இந்த விசயம் வெளியில் சூடு பிடித்திருப்பதை உணர்ந்து சிலகாலம் அமைதியாக இருக்கலாம் என்று கடத்துவதையே விட்டிருந்த ராஜன், பதிலின்றி மௌனம் சாதித்தார்..

இரண்டு மடங்காக பணம் தருகிறேன் என்று தாகூர் ராஜனின் மனதை அசைக்க, பணம் என்றதும் ராஜனின் தலை தானாக சரியென்று ஆடியது.. "இப்ப குழந்தைகளை கடத்துனாலே பிரச்சனை வெடிக்கும்.. இதுல மாசமா இருக்கற பொண்ணுகளுக்கு எங்க போறது?" என்று குழம்பி இருந்த நேரத்தில் தான் சட்டென்று காடுகளில் வாழும் மலைவாசிகள் நியாபகத்திற்கு வந்தனர்..

அவர்களிடம் பேசும் விதத்தில் பேசி கர்ப்பமாக இருந்த பத்து பதினைந்து பெண்களை முதலில் தாகூரிடம் அனுப்பி வைக்க, குழந்தை பிறந்ததும் குழந்தையை எடுத்து கொண்டு மீண்டும் அவர்களை ராஜனிடமே அனுப்பி வைத்து விட்டனர்..

அதன் பின் தான் வெவ்வேறு இடங்களில் வாழும் மலைவாசிகளிடம் தன் பேச்சு திறமையை காட்டி தான் நினைப்பதை ராஜன் நிறைவேத்தி கொள்ள தொடங்க, இவரின் தேனொழுகும் பேச்சில் படிக்காத பாமர மக்களும் அதை உண்மையென்று நம்பி இவர் சொல்லும் அனைத்திற்கும் தலையசைத்தனர்..

அறுபது குழந்தைகளை ஏற்றி சென்ற லாரியை தன் ஆட்களுடன் சுற்றி வளைத்த மகி, மூட்டைகளுக்கு அடியில் மயங்கி கிடந்த குழந்தைகளை காப்பாற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சேர்த்தாள்..

குழந்தைகளுடன் சென்ற ராஜனின் ஆட்கள் மூவரையும் வெளுத்து வாங்கியதில் அவர்கள் கைகாட்டிய மற்றவர்களையும் கைது செய்து அவர்களுக்கு துணையாகவே சிறையில் அடைக்க, மகிழினி அமைதியாக இருப்பதை பார்த்து தன் வழியில் இருந்து விலகி விட்டாள் என்று தப்பு கணக்கு போட்டிருந்த ராஜனுக்கு இது பேரிடியாக இருந்தது..

"டேய் எப்படிடா இது? இவளை சாதாரணமா எடை போட்டது தப்பா போய்ருச்சு.. விடாதடா அவளை.. போட்டு தள்ளு.. இல்ல அவ குடும்பத்தை கண்டுபிடிச்சு போட்டுட்டு தான் இங்க வரனும் இல்ல உங்களைய நான் வெட்டி போட்டுருவேன்.." என்று உச்சஸ்தானியில் வெறி வந்தவர் போன்று அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்தார்..

உடனே தன் மருமகன் விக்ரமுக்கு அழைத்து நடந்ததை கூறி விட்டு, "விட கூடாது மாப்ளை அவளை.. ஏதாவது பண்ணனும்.." என்று ஆத்திரத்தில் கத்தியவரை சாந்தப்படுத்திய விக்ரம், "நாளைக்கு அந்த மகிழினி தனிமரமா நிற்பா மாமா.." என்றான் அழுத்தமாக..

அவனுடன் இருந்த அடியாட்களும் "பாஸ் அந்த பொம்பளை சரியான பஜாரியா இருக்கு.. அது பொண்ணானே சந்தேகமா இருக்கு பாஸ்.." என்றவனை தாடையை தடவியவாறு நெற்றியை சுருக்கி பார்த்த விக்ரம், "அதுக்கு.." என்று சந்தேகத்துடன் அவனிடம் கேட்டதும், தலையை சொறிந்து அசட்டு சிரிப்பு சிரித்தவனின் எண்ணம் எதுவென்று விக்ரமுக்கும் புரிந்தது..

சைகையில் அவனை பக்கத்தில் வருமாறு அழைத்த விக்ரம், பல்லை காட்டி கொண்டு் தன்னருகில் வந்தவனை சப்பென்று ஒரு அறை விட்டு, "நம்ம எண்ணம் எதுவோ அது மட்டும் தான் நியாபகத்துல இருக்கனும்.. அதைய விட்டுட்டு இப்படி யோசிச்சுட்டு இருந்தே யோசிக்கறதுக்கு நீயே இருக்க மாட்டே.." என்றான் மிரட்டலுடன்..

தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை பார்த்த மகிக்கு இது யாராக இருக்கும் என்ற குழப்பம் மூளையில் ஓட, இருந்தும் அழைப்பை ஏற்று, "ஹலோ" என்றதும், "என்ன மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்க போல.. அதுக்கு முன்னாடி உங்க குடும்பம் உங்களைய தேடி வந்துட்டு இருக்கறது தெரியுமா?" என்று நக்கலுடன் வினவியது விக்ரமே..

மேலும் அவனே, "சும்மா சொல்ல கூடாது மேடம் உங்களுக்கு ஒன்னுனு சொன்னதும் அவங்களைய பத்தி யோசிக்காம வெளில வந்துட்டாங்க பாருங்க இனி அவங்களே இருக்க மாட்டாங்கனு தெரில போல.." என்று இச் கொட்டி கூறியவன் மட்டும் நேரில் இருந்திருந்தால் போட்டு தள்ளவும் தயங்கிருக்க மாட்டாள் பெண்ணவள்..

"அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு மவனே அன்னைக்கு தெரு பொறுக்கி ராஜன் கிட்ட சொன்னது தான்.. அவருக்கு ரெண்டு பொண்ணு இருக்காமா? என் குடும்பத்து மேல எவன் கை வெச்சாலும் அவன் குடும்பம் இருந்த தடம் தெரியாம மாத்திருவேன்.." என்று மகி சீற, அந்த புறம் இருந்த விக்ரமோ கலகலவென சிரித்தான்..

"அதுக்கு முன்னாடி உங்க குடும்பத்தை காப்பாத்திக்கங்க மேடம்.." என்று விட்டு அவளின் பிபியை ஏற்றி விட்டு விக்ரம் போனை கட் செய்ததும், அவனருகில் இருந்த ராஜன் விக்ரமின் தோளை தட்டி "சபாஷ் மாப்ளை.." என்றவர், "அடேய் அந்த காருல இருக்கறவங்க அடையாளம் தெரியாத அளவுக்கு சிதையனும்.." என்று தன் ஆட்களிடம் கட்டளையை பிறப்பித்தார்..

என்ன தான் விக்ரமிடம் மகி தைரியமாக பேசியிருந்தாலும் பதட்டத்தில் கைகள் நடுங்க தன் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கிருஷிற்கு அழைத்தாள்.. ரிங் போனதே தவிர அவன் எடுக்காமல் போக, படபடத்த மனதுடன் ஜெகனின் பழைய எண்ணிற்கு அழைத்தான்..

இங்கிருந்து செல்லும் போது அனைவரின் எண்ணையும் கிருஷ் மாத்தி விட்டதால் பழைய எண் அவனிடம் தான் இருக்கும் நட்பாசையில் அந்த எண்ணிற்கு அழைக்க, எடுத்தது கிருஷ் இல்லை ஜெகன் தான்..

மகியை பேச விடாமல் "நாங்க வந்துட்டு தான் இருக்கோம் பாப்பா.. உனக்கு ஒன்னுமில்ல தானே? இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவோம்.." என்று படபடவென்று பேசிய ஜெகனின் வார்தையில் அதிர்ந்த மகி, "அய்யோ அண்ணா எனக்கு எதுவுமில்ல.. உங்களைய யாரு வெளில வர சொன்னது.. இப்ப எங்க இருக்கீங்க?" என்றாள் பதற்றத்துடன்..

மகி பேசிய வார்த்தைகள் ஜெகனின் காதில் விழும் முன்பே எதிர்புறம் வந்த லாரி காரை இடித்து நொறுக்கிய பின்பே அதிலிருந்த ராஜனின் ஆள் தப்பித்து ஓட, பதிலேதும் வராமல் ஏதோ இடித்த சத்தம் மட்டும் வந்ததை உணர்ந்த மகிக்கு உலகமே சுழல்வது போல் இருந்தது..

அதிர்ச்சியில் அலைப்பேசியும் கையில் இருந்த நழுவி நிலத்தை தொட, மகியின் இமைகளோ சுற்றுப்புறத்தை உள்வாங்க மறந்து ஒரே இடத்தில் நிலைகுத்தி நின்றது..

எவ்வளவு நிமிடங்கள் அப்படியே நின்றாள் என்பதை மகி அறியவில்லை.. கான்ஸ்டபிள் ஒருவரின் உலுக்கலில் தான் கருமணிகளுக்கு இயக்கத்தை குடுத்தவள் வெற்று பார்வையில் அவரை பார்க்க, "மேடம் அது வந்து.. உங்க அப்பா.. அம்மா.." என்று திக்கி திணறி முழுவதையும் கூற முயன்றவருக்கு தொண்டை அடைத்து வார்த்தை வர மறுத்தது..

இயந்திர கதியில் அவருடன் வந்த மகிக்கு இது பொய்யாக இருக்க கூடாதா? என்று மனம் அடித்து கொள்ள, நடந்த நிகழ்வு உண்மையென்று தந்தையின் அலைப்பேசியும், தன் முதல் மாத சம்பளத்தில் ஆசை ஆசையாக தாயிற்கு வாங்கி அணிவித்த செயினும் தன் கைகளை வந்தடைந்ததும் திக்பிரம்மையில் அழுகை கூட வர மறுத்தது மகிக்கு..

நால்வரின் முகமும் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து இருப்பதாகவும் இன்னும் சிலமணி நேரங்களில் உடலை எடுத்து செல்லலாம் என்று மருத்துவர் கூறியதை கேட்டதும் இப்போதே பூமி பிளந்து தன்னை உள்வாங்கி கொள்ளதா? என்ற வெறுமை மட்டுமே மகியே சூழ்ந்தது..

அவளுடன் வந்திருந்த கான்ஸ்டபிளுக்கு மகியை பார்க்கவே பாவமாக இருந்தது.. தன் கையில் இருந்த குழந்தையை பார்த்தவாறு, "மேடம்.." என்று தயங்கியபடி அழைக்க, கீ குடுத்த பொம்மை போன்று திரும்பியவளிடம் குழந்தையை நீட்டினார்..

"எப்படி குழந்தையை மறந்தேன்.." என்று தன்னை தானே நொந்து கொண்ட மகி, "குழந்தைக்கு ஒன்னும் இல்ல தானே?" என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் கேட்டவாறு குழந்தையை வாங்கினாள்..

தாய் தந்தை இழந்ததை அறியாமல் கண்மூடி உறக்கத்தை தழுவி இருந்த அண்ணனின் மகளை காண காண இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெளியில் வர, "பாவி பெரிய பாவி நானு.. நீ பிறந்ததுமே உன்னைய அப்பா, அம்மா கிட்ட இருந்து பிரிச்சுட்டேன்.. எனக்கு மன்னிப்பே இல்ல தங்கம்.." என்று மருத்துவமனை என்றும் பாராமல் கதறிய மகி அப்படியே மடிந்து அமர்ந்தாள்..



தாகம் தீரும்..

 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 22




உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால் வீட்டிற்கு கொண்டு செல்வது இயலாத காரியம் என்று கூறிய மருத்துவர் நேராக மின்தகன மையத்திற்கு செல்லவும் ஏற்பாடு செய்திருக்க, அனைத்தையும் முடித்து விட்டு துவண்ட நடையுடன் குழந்தையை கையில் ஏந்தியவாறு வீட்டினுள் நுழைந்தாள் மகி..

வீட்டின் வெறுமை இனி இதுதான் நிரந்தரம் என்று சொல்லாமல் சொல்ல, கதறி அழுக வேண்டும் என்று துடித்த மனதை அரும்பாடு பட்டு அடக்கிய மகி ஆழ்ந்த நித்திரையில் இருந்த குழந்தையை தூக்கம் கலையாதவாறு கீழே கிடத்தினாள்..

அப்படியே மகியும் அமர்ந்து ஹாலில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை வெறித்து பார்த்தாள்.. அது சென்ற வருடம் மகியின் பிறந்த நாளின் போது குடும்பமாக எடுத்து கொண்ட புகைப்படம் தான்..

ஜெகனின் அருகில் நின்றிருந்த மகியின் தலை மீது கையை வைத்து அழகாக பற்கள் தெரியும்படி புன்னகைத்து கொண்டிருந்த தன் அண்ணனை காண காண அழுகை பீறிட்டு மேலோங்கியதில் "அண்ணா நானே உங்களைய கொன்னுட்டேன்.. கொன்னுட்டேன்.. நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்.. என்னையும் தனுவையும் கூப்பிட்டுக்கோ அண்ணா.." என்று தலையில் அடித்து கொண்டு கதறினாள்..

யாருமற்ற அந்த வீட்டில் மகியை தேற்றவும் அணைக்கவும் ஆளில்லாமல் எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டு கூற முடியாமல் கதறி கொண்டிருந்தவளின் தோளை தேவ் தொட்டதும், திரும்பிய மகி கதறலுடன் அவனை அணைத்து கொண்டு "நீ சொன்ன மாதிரி நானே கொன்னுட்டேன்டா நானே இவங்களைய கொன்னுட்டேன்.. தனு பாப்பாவை அனாதை ஆக்கிட்டேன்.. எல்லாம் என் தப்பு தான்.." என்று விடாமல் புலம்பினாள்..

வாய்வழியாக ஆறுதல் கூறி சமாதானப்படுத்த கூடிய இழப்பா இது.. ஒன்று.. இரண்டு இழப்பு இல்லையே.. நான்கு பேரின் இழப்பாகிற்றே! இதில் நான்கு மாத குழந்தையாக தனு வேறு! மகியின் மனநிலை என்னவென்று வார்த்தையால் வடிக்க முடியுமா என்ன??

விநாயகமும் ஈஸ்வரியும் தன் பங்கிற்கு கண்ணீர் வடித்து புலம்ப, தோள் சாய தோழன் கிடைத்ததும் அடக்கி வைத்திருந்த அழுகையுடன் மகியும் விம்ம, தேவ்வின் பார்வையோ உறங்கி கொண்டிருந்த தனுவின் மீது தான் நின்றிருந்தது..

"நீ அப்பவே சொன்னே.. நான்தான் எதையும் யோசிக்காம.. அய்யோ.. என்னைய வளர்த்துன பாவத்துக்கு இப்படி போய்ட்டாங்களே!" என்று முகத்தை மூடி கொண்டு மகி கதற, "லூசு மாதிரி பேசாத.. இப்படி பேசறதை மாமா கேட்டாங்க அவ்வளவு தான்.. ஜெகன் உன்னைய எப்பவாவது பிரிச்சு பார்த்துருக்கானா?" என்று கேட்டான் அதட்டலுடன்..

திடீரென்று விநாயகம் தான் "கிருஷ் எங்கடா? அவன் தானே உன் கூட இருந்தான்.." என்று கேட்க, வெற்று பார்வையில் "தெரில மாமா.." என்றவளின் குரலும் உள்ளே சென்றிருந்தது..

"அவன் வரவே இல்லயாடா?" என்று அதிர்ச்சியில் ஈஸ்வரியும் கேட்க, இல்லையென்று தலையசைத்த மகியும் மனதும் அவளவனை எதிர்பார்த்து தான் ஏங்கி கிடந்தது.. தன்னவனுக்கும் ஏதாவது..? என்று வேறு கோணத்தில் யோசிக்கவே பெண்ணவளின் மனது மறுக்க, "அவனுக்கு எதுவும் ஆகாதுல்ல தேவ்?" என்று கேட்டவளின் குரல் கிட்டத்தட்ட இல்லையென்று சொல்லு என்பதை போல் தவிப்புடனே வந்தது..

"வந்துருவான் மகி.. கண்டிப்பா அவன் உனக்காக வந்துருவான்.. உன்னைய விட்டுட்டு அவன் எங்கையும் போக மாட்டான்.." என்ற தேவ்வுக்கு கிருஷ் எங்கு சென்றிருக்கிறான் என்பது நன்றாகவே தெரியுமே.. தான் சொல்வதை விட அவனே வந்து சொல்லட்டும் என்று ஆறுதல்படுத்தி மகியை அமைதியாக்கினான்..

இவர்கள் இங்கிருப்பதை உணர்ந்து, "தேவ் நீங்க கிளம்புங்க.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்.. என்னைய நான் பார்த்துப்பேன்.." என்று அவர்களை மகி கிளம்ப கூற, "என்ன மகி புரிஞ்சு தான் பேசறீயா?" என்று தேவ் சீறினான்..

"என்னால வேற யாரும் பாதிக்கப்பட கூடாதுனு தான் சொல்றேன்.. தயவு செஞ்சு கிளம்புங்க.." - மகி

"மகிமா அப்ப நாங்க யாரோ தானே உனக்கு?" - ஈஸ்வரி

"ம்ம்ம்ம் அப்படியே வெச்சுக்கலாம் அத்தை.. அப்பதான் நீங்களாவது உயிரோடு இருக்க முடியும்.." - மகி

"இப்படியெல்லாம் பேசாதடா.." - விநாயகம்

"இதுதான் உண்மை மாமா.. இனி தனு மட்டும் எனக்குனு.. கண்டிப்பா அவளை இழக்க மாட்டேன்..நீங்க என்னைய விட்டு பிரிஞ்சது பிரிஞ்சதாகவே இருக்கட்டும்.." - மகி

"சோ.." - தேவ்

"இனி என்னைய பார்க்க வராதீங்க.. உங்க வாழ்க்கையை பாருங்க தேவ்.. விசயம் தெரிஞ்சதும் என்னைய தேடி வந்து அந்நேரத்துல ஆறுதல் சொல்லி அதுல இருந்து வெளில கொண்டு வந்ததே போதும்.." - மகி

அதற்கு மேல் பேச மறுத்து வார்த்தையை உள்வாங்கிய இதழை பிரித்து, "அதுக்கே உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டுருக்கேன்.." என்று கூறியது தான் தாமதம் கண்கள் சிவக்க அவளை பார்த்த தேவ், "கிளம்பறோம்.." என்று பொதுவாக கூறியவன் பெற்றோரை அழைத்து கொண்டு அப்போதே கிளம்பியும் விட்டான்..

அவர்கள் சென்றதும் குழந்தையின் அருகில் அமர்ந்த மகி, இரு கையால் காலை பிடித்தவாறு பொக்கை வாயில் சிரித்திருந்த தனுவை தூக்கி தன் மடியில் வைத்து தட்டி குடுத்தவளுக்கு விரக்தியே மிஞ்சியிருந்தது..

இவ்வளவு நடந்தும் சங்கரனும் மேகலையும் வராமல் இருப்பதை நினைத்து நினைத்தே மகியின் மனது ரணப்பட்டு போயிருக்க, ஆறுதல் தேடி தன்னவனின் மடியை எதிர் பார்த்து காத்திருந்த மகியை இன்னும் இன்னும் ரணப்படுத்தவே கிருஷும் வராமல் போக, அவளின் மனது விரக்தியின் உச்சத்தில் இருந்ததன் விளைவு தான் தேவ்விடம் பேசிய வார்த்தைகள்..

"இனி எனக்குனு இருக்கறது நீ மட்டும் தான் தங்கம்.. உனக்கும் என்னைய பிடிக்காம போய்ருமோனு பயமா இருக்குடா.. இனி யாரையும் நம்ப வேணாம்டா.." என்று மகி பாட்டிற்கு குழந்தையிடம் பேசி கொண்டே செல்ல, அவள் பேசுவது புரியவில்லை என்றாலும் மகியின் முகத்தையே பார்த்திருந்தது குழந்தையும்..

அன்றிரவு மேகலையின் சேலையை போர்த்தி கொண்டு படுத்த மகிக்கு தூக்கம் வருவேனா? என்று அடம்பிடிக்க, சிணுங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கியவாறு நடந்து கொண்டே இருந்தாள்..

விடியற்காலையில் தான் கண்ணயர்ந்த மகி விடிந்ததும் அறியாமல் தூங்கி கொண்டிருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் தான் அழுததில் பாரமாய் கனகனத்து போயிருந்த தலையை பிடித்து கொண்டு மெதுவாக இமைகளை பிரித்தெடுத்தாள்..

குழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு எழுந்து சென்று கதவை திறந்த மகி அப்படியே நிற்க, "ரிதுமா" என்று அவளை அணைத்து கொண்டு அழுதது மேகலையே.. அவரின் பின்னே ரிதியும் சங்கரனும் அமைதியாக நின்றிருக்க, மூவரையும் எவ்வித சலனமின்றி பார்த்த மகியின் விழிகளில் உயிர்ப்பு முற்றிலும் துடைத்தெறிய பட்டிருந்தது..

மேகலையை தன்னிடம் இருந்து விலக்கி தள்ளி நிறுத்தியவள், அவர்களை அழைக்காமல் மகி உள்ளே செல்ல, வேறு வழியில்லாமல் இவர்களும் வீட்டினுள் வந்தனர்..

ஷோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த மகியிடம் சென்று "அக்கா" என்று ரிதி அழைக்க, "ம்ம்ம்" என்ற பதிலை மட்டும் மகி குடுத்தாலொழிய அவர்களின் புறம் திரும்பவே இல்லை..

"நான் தான் அப்பவே சொன்னேன்.. இதுல தேவையில்லாம தலையிடாதேனு.. கேட்டியா? இப்ப பாரு எல்லாத்தையும் இழந்து நிற்கறே? இதுல சம்பந்தமே இல்லாம இவங்களைய கொன்னுருக்காங்க.." என்று சங்கரன் அவளை வறுத்தெடுக்க, அதனை காதில் வாங்கினாலும் எதிர்வினை தர விருப்பமின்றி அமைதியாக இருந்தாள் மகி..

"ஏங்க இப்ப போய் இப்படி பேசறீங்க.." என்று மேகலை தேம்பியபடி சங்கரனிடம் கேட்க, கோவத்துடன் அவரோ, "நான் தான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன் இவ கேட்டாளா? சட்டம் மயிருனு ஏதேதோ பேசிட்டு கிடந்தா.. இப்ப என்ன நடந்துருக்குனு பாரு.. இவளால மட்டும் இல்ல வேற யாருனாலயும் இதையை வேறோட அறுக்க முடியாது.." என்றார் கடுகடுப்புடன்..

அவரை உறுத்து விழித்த மகி "கிளம்புங்க" என்றவாறு வாசலை கை காட்ட, புரியாமல் விழித்த சங்கரனிடம், "நீங்க யாரும் இப்ப வரலனு நான் அழுகல.. உங்க வாழ்க்கையை மட்டும் நீங்க பாருங்க.. என் வாழ்க்கையை நான் பார்த்துக்குவேன்.." என்றதும், அதிர்ந்து போய் மேகலை மகியை பார்க்க, "உன் புருஷனை கூட்டிட்டு கிளம்புங்கனு சொன்னேன்.. காதுல விழுகலயா?" என்று கடுப்படித்தாள்..

"ரிதுமா ஏன்டா இப்படி பேசறே?" என்று அழுகையுடன் மேகலை கேட்டதும், விரக்தியில் இதழை வளைத்த மகி, "என்னைய வேணாம்னு நினைச்ச எந்த உறவும் எனக்கும் வேணாம்.. நான் கடைசி வரைக்கும் ரகுபதியோட மகளாகவே இருக்க தான் ஆசைப்படறேன்.. இப்ப கூட உங்க கணவன் நான் இந்த கேஸ்ல இருந்து விலகனும்னு தான் இப்படி பேசறாரே தவிர கொஞ்சம் கூட பாசத்துல பேசல.."

"இந்த பொய்யான பாசம் எனக்கு தேவையே இல்லை.. இதுக்கு நான் தனியாவே இருந்துப்பேன்.. எனக்கு துணையா என் அண்ணன் அவ மகளை விட்டுட்டு போய்ருக்கான்.. அந்த உறவு மட்டும் எனக்கு போதும்.."

"அக்கா அப்ப நானும் வேணாமா? உண்மையா எனக்கு இந்த விசயம் நேத்து நைட்டு தான் தெரியும்.. அப்ப இருந்து எப்படா உங்களைய பார்ப்போம்னு ஓடி வந்தேன்.. உங்க மேல எனக்கும் பாசமில்லனு நினைக்கறீங்களா? ப்ளீஸ் க்கா என்னைய வேணாம்னு சொல்லிராதீங்க.." என்று ரிதி முகத்தை மூடி கொண்டு அழுதாள்..

வலுக்கட்டாயமாக அவளின் கையை முகத்தில் இருந்து எடுத்த மகி, தன் தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டு "உன்மேல எப்பவும் எனக்கு கோவம் வராதுடா.." என்று அவளின் கன்னத்தை தட்டியவள், "முதல்ல எப்படி இருந்தோமோ அப்படியே இனியும் இருந்துக்கலாம்டா.. அதுதான் எல்லாத்துக்கும் நல்லது.." என்றாள் முடிவாக..

"இதுக்கு மேலயும் இங்க இருக்கனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?" என்று கோவத்துடன் சங்கரன் வெளியில் செல்ல, "ஒரு நிமிசம்.." என்றவாறு அவரை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்த மகி, "இப்பவும் நான் பின்வாங்க மாட்டேன்.. முன் வெச்ச காலை பின் வெக்க கூடாதுனு சொல்லி தான் என் அப்பா என்னைய வளர்த்திருக்காங்க.."

"என் குடும்பத்தை கொன்னதுல உங்களுக்கும் பங்கு இருக்குனு மட்டும் எனக்கு தெரிஞ்சுச்சு அதுதான் உங்களோட கடைசி நாளா இருக்கும்.." என்று தீர்க்கமாக வந்த மகியின் குரலில் சங்கரனிற்கு குப்பென்று வியர்த்து கொட்ட, "ரிதுமா.." என்று மேகலை அலறியே விட்டார்..

அவரை கண்டு கொள்ளாமல், "அந்த ராஜனுக்கு ரெண்டு பொண்ணு இருக்குனு எனக்கும் தெரியும்.. அவங்க பொண்ணுக உயிரோட இருக்க போற நாட்களை எண்ணிக்க சொல்லிருங்க.. கூடிய சீக்கிரம் அவரு கிட்ட நான் சொன்னதை நிறைவேத்துவேனும் மறக்காக சொல்லிருங்க.."

"தனு மேல கை வெக்கனும்னு நினைச்சா கண்டிப்பா நானும் அவங்க பேரன் மேல கை வெக்கவும் தயங்க மாட்டேன்.. இன்னும் எத்தனை பேரை இழந்தாலும் பரவால்ல இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவேன்.. இதுல என் உயிரே போனாலும் சரிதான்.."

"ஆனா அவ்ளோ சீக்கிரத்துல என் தனுவை தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன்.. எந்த மானம் மரியாதைக்காக என்னைய விலக்கி வெச்சிங்களோ அதைய இன்னும் கொஞ்ச நாளைக்கு அனுபவிச்சுக்கங்க.. ஏன்னா அதுவும் உங்களைய விட்டுட்டு போற காலமும் பக்கத்துல தான்.."

கட்டுங்கடங்கா கோவத்தை முகத்தில் தேக்கி கொண்டு சங்கரன் விறுவிறுவென செல்ல, "கிளம்புங்க.." என்று மேகலையிடம் கூறி விட்டு, "கவனமா இரு ரிதிமா.. நான் எதுக்கும் கலங்க மாட்டேன்.." என்று ரிதியை அணைத்து விடுவித்த மகி, இருவரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தாள்..

அவர்கள் செல்லும் வரை தான் மகியின் தைரியம் அனைத்தும்.. "அப்பா பார்த்தீங்களா? நீங்க இல்லனு எப்படி எல்லாம் பேசறாங்கனு.. ஏன்பா என்னைய விட்டு போனீங்க.. எனக்கு நீங்க வேணும்.." என்று வாய்விட்டு புலம்பிய மகியின் கண்ணீர் துளிகள் ஆறாய் கன்னத்தை கடந்து வழிந்தது..

அழுது அழுது ஓய்ந்திருந்த மகி இந்த அழுகையே தன்னை பலவீனமாக்கி விடுமோ என்ற பயத்தில் "இனி அழுக மாட்டேன்.. அழுதா என் அண்ணனுக்கு பிடிக்காது.. அழுக மாட்டேன் அண்ணா.." என்று வைராக்கியத்துடன் வெளியில் வர துடித்த கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்..

சுவற்றில் மாட்டியிருந்த ஒவ்வொரு புகைப்படத்தையும் உடைந்த மனதுடன் வருடியவளின் இதழில் தேங்கியிருந்தது வருத்தமுறுவல் ஒன்றே..

அன்றிரவு விடாமல் அழுத தனுவை சமாதானப்படுத்தி தூங்க வைக்கவே மகிக்கு போதும் போதும் என்றிருக்க, உறங்கும் குழந்தையின் பிஞ்சு விரலை வருடியவாறு, "ஏன்டா தங்கம் இந்த அத்தை கூட இருக்க பிடிக்கலனு அழுகறீயா?" என்று முணுமுணுத்தவாறு இருந்தவளின் முன்பு லேசாக நிழலாடியது..

உருவமே கூறியது அது யாரென்று.. மெதுவாக தலையை திருப்பி தன்னவனை பார்த்த மகியின் இமைசிறகுகள் இமைக்க மறந்து அதிர்ச்சியை உள்வாங்கி கொண்டு உறைந்து போனது..

தோய்ந்து போய் நின்றிருந்த உடலும், உயிர்ப்பில்லாத முகமும், தூக்கத்தை தொலைத்து சிவந்திருந்த விழிகளும், இவையனைத்தையும் கடந்து மகியை பார்க்க முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிர்த்த தவிப்புகளை அப்பாட்டமாக அவனின் முகமே காட்டி குடுத்தது..

அவனின் தோற்றத்தை கண்டு, "கி..ரு..ஷ்.." என்று வார்த்தை வாரமல் மகி தடுமாறி போக, அவளை நிமிர்ந்து பார்க்க திரணியின்றி அமைதியாக அமர்ந்து மகியின் காலை பிடித்தவன், "மன்னிச்சுரு மகி.. நான் பாதுகாப்பா பார்த்துப்பேனு சொல்லி கூட்டிட்டு போய் நானே அவங்களைய கொன்னுட்டேன்.."

"உன்னோட இந்த நிலைமைக்கு காரணம் நான் தான்.. நான் மட்டும் தான்.. நான் பண்ணுன ஒரே தப்பு பழைய நம்பரை அவங்க இருந்த இடத்துல வெச்சிருந்தது தான்.. ரொம்ப தப்பு பண்ணிட்டேன் மகி.. தப்பு பண்ணிட்டேன்.." என்று கண்ணில் வலியுடன் கூறினான்..

"நீநீநீ ஏன் இப்படி இருக்கே? உனக்கு ஒன்னுமில்ல தானே?" என்று ஏகத்துக்கும் எகிறி துடித்த மனதுடன் மகி வினவ, சட்டென்று பார்வையை நிலத்தில் தேக்கி, "மாமா.." என்று சொல்ல வந்தவன் பின்பு ஒன்னுமில்ல என்று தலையை மட்டும் இடவலமாக அசைத்தான்..

"பொய் சொல்லாத கிருஷ்.. மாமாக்கு ஏதாவது..?" என்று அதற்கு மேல் கேட்க முடியாமல் மகி திணறி போக, ஆழ்ந்த பெருமூச்சுடன் "ஒன்னுமில்ல மகிமா.. நீ சாப்பிட்டியா?" என்று பேச்சை கிருஷ் மாற்றி விட, அவளின் முகமே காட்டி குடுத்தது சரியாக உணவு உண்ணாததை..

"இருடா வந்தறேன்.." என்று வேகமாக கிச்சனுக்குள் செல்ல, தன்னவன் சென்ற திசையையே சிறிது நேரம் வெறித்து பார்த்த மகி, குழந்தையின் உறக்கத்தை உறுதி செய்து விட்டு எழுந்து கிருஷிடம் சென்றாள்..

சாதம் இருந்ததால் அதில் தக்காளி சாப்பாட்டை கிருஷ் கிளறி கொண்டிருக்க, அவனின் கரங்கள் தான் வேலை செய்ததே தவிர விழிகள் இரண்டும் சுவற்றை பார்த்தபடியே நின்றது..

அவனின் முதுகில் மகி சாய்ந்ததும் தான் சுயநினைவிற்கு வந்தவன் எதுவும் பேசாமல் அடுப்பை அணைத்து விட்டு, "முதல்ல சாப்பிடு மகிமா.." என்றான் குரல் கம்ம..

"இனி இது தான் நிரந்தம்னு மூளை சொன்னாலும் மனசு ஏத்துக்க மாட்டிங்குது கிருஷ்.. தனுவை பார்க்கறப்ப எல்லாம் குற்றவுணர்ச்சியா இருக்குது.." என்றதுமே அவளின் கண்ணீர் துளிகள் கிருஷின் சட்டையை நனைத்தது..

கலங்கி போக துடித்த மனதை விடாமல் இழுத்து பிடித்து, "ப்ளீஸ் மகிமா.." என்ற கிருஷின் குரலும் கரகரத்து போக, எதுவும் பேசாமல் மகி கண்ணை துடைத்து கொண்டாலும், தன்னவனை விட்டு விலக மனமின்றி அப்படியே இருந்தாள்..

நடந்ததை பற்றி பேசி காயப்பட்டு இருந்த மனதை மீண்டும் ரணமாக்குவதை இருவரும் விரும்பாமல் இனி வாழ்க்கை அழைத்து செல்லும் பாதையிலே பயணிப்போம் என்ற முடிவில் மட்டும் உறுதியாக இருந்தனர்..

அடுத்தடுத்து வந்த நாட்களில் தனுவின் அழுகையுடன் நகர, இப்போது மகிக்கு இருக்கும் கவலை தனு மட்டுமே!! தயக்கத்துடன் "மகிமா" என்ற கிருஷின் குரல் தன்னை தீண்டியதும் "என்ன கிருஷ்" என்று கேட்டாள் மகியும்..

"நான் சொல்றது உனக்கு பிடிக்கலனாலும் பரவால்ல.. ஆனா தனுவை பத்தி யோசிச்சனால சொல்றேன்.. எனக்கு தெரிஞ்ச பாட்டிமா ஒருத்தரு இருக்காங்க.. அவங்க தனுவை கவனமா பார்த்துப்பாங்க.. தனுவும் அந்த இடத்துல ரொம்ப பத்ரமா இருப்பா.."

"அவங்க யாருனு நீயே அவங்களைய பார்த்தீனா தெரியும்.. அது ரொம்ப பாதுகாப்பான இடம் தான் மகிமா.. நீயும் கூட அங்கயே இருந்துக்கலாம்.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.." என்று தயக்கத்துடன் முடித்து தன்னவளின் பதிலுக்காக மகியின் முகத்தையே பார்த்திருந்தான்..

சட்டென்று நிமிர்ந்த மகி அவனின் சட்டையை கொத்தாக பற்றி "ஏன்டா இப்படி மாறுனே? அவங்க இங்க இருந்திருந்து நான் காப்பாத்த முடியாம போய்ருந்தாலும் இப்படி தான் என்னைய விட்டு விலகி போய்ருவீயா? இப்ப எங்களுக்குனு இருக்கறது நீ மட்டும் தான்டா.."

"நீயே இப்படி பண்ணுனா நான் என்ன பண்றது? நீயும் என்னைய விட்டு போய்ட்டா கண்டிப்பா நான் செத்துருவேன் செத்து போய்ருவேன்.. நீ என் கிருஷ் இல்ல.. போ அப்படியே போய்ரு.. நீயும் என்கிட்ட வராதே.." என்று சிலபல அடிகளை குடுத்தவள் அப்படியே அவன் மேல் சரிந்து கதறினாள்..

பெண்ணவளின் அழுகையை கட்டுப்படுத்த முயன்று ஆண்மகன் தோற்று நிற்க, எப்போதும் அவளை சுண்டி இழுக்கும் காந்த குரலில் "ரவுடி.." என்றழைக்க, கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்த மகி, "போ நான் உனக்கு யாரோ தானே.." என்ற இதழை தன்வசப்படுத்தி இருந்தான்..

தன்னவளின் முகம் சிறிது வாடினாலும் ஏன்? எதற்கு? என்ன ஆச்சு? என்று கேள்விகளை தொடுத்து ஜெகனை கதற விடுபவன், தன் முன்னால் கதறிய கதறலில் உள்ளம் நொறுங்கி, தன்னவளின் வலியை தான் வாங்கி விட மாட்டோமா? என்ற நட்பாசையே அவனுள் எழுந்தது..

காமம் இல்லாத ஆடவனின் முதல் இதழ் தீண்டலில் மேலும் மேலும் பெண்மகளின் மனது பலவீனமாகி கண்ணீரை சிந்த, மூடியிருந்த கிருஷின் விழிகளிலும் நீர்துளிகள்!!

"வீடு எங்க இருக்கு?"என்று மகி கேட்க, "அங்க தானே போறோம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுரும்.." என்று கூறிய கிருஷ் அதன்பின் எதுவும் பேசவில்லை.. தன்னவனின் விருப்பப்படியே தனுவை அந்த பாட்டியிடமே பத்ரமாக விட்டு விடலாம் என்று மகியும் சம்மதித்து விட, இப்போது அங்கு தான் தனுவுடன் சென்று கொண்டிருக்கின்றனர்..
 

T21

Well-known member
Wonderland writer
கமிஷ்னர் வீட்டின் முன்பு கிருஷ் காரை நிறுத்த, "இது கமிஷ்னர் சார் வீடாச்சே!" என்று புருவத்தை உயர்த்தி யோசனையில் ஆழ்ந்தவளை, "ரவுடி இறங்கு.." என்று கிருஷின் குரல் மீட்டெடுத்தது..

"இங்க எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கே?" என்று நேரடியாகவே மகி கேட்டு விட, அவனும் "உள்ள வா உனக்கே புரிஞ்சுரும்.." என்றவன் அதற்குமேல் மகி கேட்ட எதற்கும் வாயை திறக்கவே இல்லை..

நன்கு பழக்கப்பட்ட இடம் போல் திடுதிடுவென அவன் பாட்டிற்கு வீட்டினுள் செல்ல, மகிக்கு தான் தலையே சுற்றுவது போல் இருந்தது.. தனுவை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளே வந்தவளுக்கு முன்னால் மாட்டப்பட்டிருந்த புகைப்படமே கிருஷ் யாரென்று உணர்ந்தி விட்டது..

"அப்ப கிருஷ் சொல்ற மாமா கமிஷ்னர் தனசேகர் தான் போல.. இதைய ஏன் என்கிட்ட மறைச்சாங்க.. கண்டிப்பா இது தேவ்வுக்கும் அண்ணாவுக்கும் தெரிஞ்சுருக்குமே.." என்று பலவித யோசனையில் உழன்றவாறு அப்படியே மகி நின்றிருக்க, "கண்ணு.." என்று வந்து எழுபது வயது மூதாட்டியின் குரலில் தான் கவனம் சிதறி அவரை பார்த்தாள்..

"பாட்டி நான் சொன்னது இவங்களைய தான்.." என்று கிருஷ் கூறியதும், திருஷ்டி கழித்து சொடுக்கிட்டவர், "என் ராஜாக்கு ஏத்த பொண்ணு தான்.. அம்புட்டு அழகா இருக்க தாயி.." என்றவர் மீண்டும் ஒருமுறை திருஷ்டி கழித்தார்..

"இரு தாயி குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்.." என்று முந்தானையை சொருகி கொண்டு அவர் சென்றதும், "ஹோ அப்ப உன் மாமா கமிஷ்னர் சாரா?" என்று மகி கேட்க, "ம்ம்ம்ம் ஆமா ரவுடி.. இவருகிட்ட தான் பத்து வயசுல இருந்து இருக்கேன்.. என்னைய தூக்கி வளர்த்துனது கூட இந்த பாட்டி தான்.. கண்டிப்பா தனுவை பத்ரமா பார்த்துப்பாங்க.. அவ்ளோ சீக்கிரம் இங்க யாரும் நுழைய முடியாது.." என்றான் கிருஷும்..

"இதைய ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சே?" - மகி

"என்னோட உறவு யாருனு வெளில சொல்லிக்க அப்ப மட்டுமில்ல இப்பவும் விருப்பமில்ல தான்.." - கிருஷ்

"உன் நண்பனுக்கு எல்லாம் சொல்லலாம் என்கிட்ட சொல்ல தான் உனக்கு விருப்பம் இல்லாம போய்ருச்சுல்ல?" - மகி

"அட லூசே! இதுல என்ன இருக்கு.. அதான் இப்ப தெரிஞ்சுருச்சுல?" - கிருஷ்

"ம்ம்ம்ம்க்கும் நீதான் சொல்லலனு பார்த்தா அவங்க ரெண்டு பேரும் கூட என்னைய ஏமாத்திருக்கங்க.." - மகி

இதனை கேட்டு சிரிப்பை மட்டும் பதிலாக குடுத்த கிருஷ், தனுவை வாங்கி தோளில் போட்டு கொண்டு தட்டி குடுத்தவாறு அப்படியே நடக்க, வீட்டை நன்கு ஆலாசி ஆராய்ந்த மகி, "கமிஷ்னர் சார் எங்கடா?" என்றாள் யோசனையுடன்..

அதற்குள் பாட்டி வந்து விட, தனுவை அவர் கையில் குடுத்தவன், "பாட்டி இனி என் பொண்ணு உங்க பொறுப்பு தான்.. பத்ரமா பார்த்துக்கங்க.." என்று கூற, "இதெல்லாம் சொல்லனுமா என்ன? உன் பொண்ணை ஜாம் ஜாம்னு வளர்த்தி உன் கைல குடுத்தறேன் ராசா.." என்றார் சம்மதமாக..

அதன் பின் மகியை அழைத்து கொண்டு கிருஷ் மாடியில் இருக்கும் ஓரறைக்கு அழைத்து செல்ல, அங்கு சென்றதும் நெஞ்சில் கை வைத்து கொண்ட மகி அதிர்ச்சியில் ஆடவனை பார்த்தாள்..

உடம்பில் பல கட்டுகளுடன் மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார் தனசேகர்.. "மாமா வீட்டுக்கு வந்துட்டு இருந்த சமயத்துல காரை சுத்தி வளைச்சு இப்படி அடிச்சு போட்டுட்டு போய்ருக்காங்க.. தலைல ரொம்ப அடி.. அது மட்டும் இல்லாம ரத்தமும் நிறையா போய்ருச்சு.. அந்த நிலைமைல மாமாக்கு எதுவும் இல்லனு டாக்டர் சொல்ற வரைக்கும் வேற எதையும் யோசிக்க முடில.."

"ரெண்டு நாளைக்கு அப்பறம் தான் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லனு சொன்னதும் தான் உன்னைய தேடி வந்தேன் ரவுடி.. இந்த இடத்துல நான் சுயநலமா இருந்துட்டேன்.. ஐ அக்ரி.." என்றவனின் குரல் மட்டுமே மகியிடம் செல்ல, அவனின் விழிகள் தன் மாமாவையே வெறித்திருந்தது..

தான் ஏதாவது பேசினால் இன்னும் வருந்துவான் என்றெண்ணி பேச்சை மாற்றும் விதமாக, "இப்ப பிரச்சனை இல்ல தானே?" என்று வினவ, "உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல ரவுடி.. ஆனா இன்னும் மூணு நாலு மாசத்துக்கு பெட் ரெஸ்ட் ரொம்ப முக்கியம்னு மட்டும் சொல்லிருக்காங்க.." என்றான் சுருங்கி போன முகத்துடன்..

"பாட்டி தான் மாமாவை பார்த்துப்பாங்க.. தனுவை பார்த்துக்கறதும் ரொம்ப கஷ்டமாச்சே!" - மகி

"மாமாவை பார்த்துக்க வேற ஆளு இருக்காங்க.. பாட்டி பாப்பாவை பார்த்துப்பாங்க இனி.. அதைய பத்தி கவலைப்படாத.." - கிருஷ்

"ம்ம்ம்ம்.." - மகி

"சரி வா கீழ போலாம்.. நீயும் இங்கயே இருந்துக்கறீயா?" - கிருஷ்

"நீநீ??" - மகி

"நான் எப்பவும் இங்கயே இருக்க மாட்டேன்.. சோ தாராளமா நீ இங்கயே இரு.." - கிருஷ்

"வேணாம் கிருஷ்.. நான் நம்ம வீட்டுலயே இருந்துக்கறேன்.. அப்ப அப்ப தனுவை மட்டும் பார்க்க வர்றேன்.. என் கூட தனு இருந்தாலும் ஆபத்து தான்.." - மகி

"ப்ச் இதையவே திருப்பி திருப்பி சொல்லாத ரவுடி.." - கிருஷ்

"இது தான் உண்மையும் கூட.. நான் முடிக்க வேண்டியது நிறையா இருக்கு.. சோ தனியா இருக்கறது தான் பெட்டர்.." - மகி

அவளை சந்தேகமாக கிருஷ் பார்க்க, மகியும் அதனை கண்டு கொள்ளாமல் கீழே சென்று விட்டாள்.. "அய்யோ மறுபடியும் இவ ஏடாகூடமா எதுவும் பண்ணிர கூடாது கடவுளே!!" என்று கையை விரித்து மேலே பார்த்தவாறு கடவுளிடம் மனு ஒன்றையும் போட்டான்..

ராஜனின் இரு மகள்கள் சந்தியாவும் நேத்ராவும் ஷாப்பிங் வந்து விட்டு காரில் ஏற, அங்கு டிரைவருக்கு பதிலாக வேறு ஒரு பெண் அமர்ந்திருப்பதை பார்த்த இருவரும் பயத்தில் "நீநீ யாரு?" என்று கேட்க, "போக போக தெரிஞ்சுரும்.." என்றது மகியே..

பயத்தில் சந்தியா போனை எடுத்து தன் தந்தைக்கு அழைக்க போக, சட்டென்று போனை அவளிடம் இருந்து பிடுங்கிய மகி, "அமைதியா இருந்தா சேதாரம் கம்மியா இருக்கும்.. உங்களைய கடத்த எத்தனை மாசம் உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன் தெரியுமா? நீ என்னடானா சாதாரணமா உன் அப்பனுக்கு கூப்பிட பார்க்கறே?" என்றாள் நக்கலுடன்..

கோவமாக சந்தியா தான் "நீ யாருடி முதல்ல? எதுக்கு எங்களைய கடத்திருக்கே?" என்று கத்த, சாலையில் கவனத்தை பதித்தவாறு மகியோ "ம்ம்ம் அதையும் சொல்லனுமா? அப்பன் செய்யற தப்புல மகள்களுக்கும் பங்கு இருக்குனு தெரியாதா?" என்றவளின் குரலில் கேலியே நிறைந்திருந்தது..

நேத்ரா மட்டும் அமைதியாக இருப்பதை உணர்ந்து, "என்ன மேடம் அமைதியா இருந்து உன் அப்பன் கிட்ட போட்டு குடுத்தரலாம்னு பிளான் பண்றீங்களா?" என்று புருவத்தை மேலேற்றிய மகியை பயத்துடன் பார்த்தவள், "என்னைய நீங்களே கொன்னுருங்க மேடம்.." என்றாள் அழுகையுடனே..

சட்டென்று பிரேக் போட்ட மகி திரும்பி நேத்ராவை ஆழ்ந்து நோக்க, அவள் தான் நிமிரவே இல்லை.. "ச்சை வாயை மூடிட்டு இருடி.. எப்ப பார்த்தாலும் சொன்னதையே சொல்லிட்டு.. உனக்கு வாழ ஆசை இல்லனா தனியா போய் சாவு.. இங்க நானும் இருக்கேன்.." என்று சந்தியா கோபத்தில் கொந்தளித்தாள்..

மகி தன் இடத்தில் காரை நிறுத்தியதும் கர்சீப்பால் முகத்தை மறைத்து இருந்த ஒருவன் கார் கதவை திறக்க, திமிறியபடி இறங்கிய சந்தியாவின் தலையில் பில்டரை அவன் வைத்ததும் அமைதியாக அவள் உள்ளே செல்ல, மகி அழைக்காமலே நேத்ராவும் அவர்களின் பின்னே சென்றாள்..

சேருடன் சேர்த்து கட்டி வைத்திருந்த இருவரிடமும் மகி வர, "இது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சுச்சு உன்னைய கொன்னே போட்டுருவாரு.. ஒழுங்க எங்களைய விட்டுரு.." என்று விடாமல் சந்தியா கத்த,

பொறுத்து பொறுத்து பார்த்த மகி பளாரென்று அவளை அறைந்து, "என்னடி உன் அப்பன் என்ன பெரிய இவனா? அவன் என்னைய கொல்றதுக்கு முன்னாடி நீ பரலோகம் போய்ருவே.. பொண்ணாச்சேனு அமைதியா இருந்தா ரொம்ப தான் துள்ளறே?.." என்றாள் சீற்றலுடன்..

அதே நேரம் மகிக்கு ராஜன் அழைக்க, "பாருடா உடனே உன் அப்பனுக்கு தெரிஞ்சுருச்சு.." என்று கிண்டலுடன் கூறியவள், "ஹலோ சொல்லுங்க ராஜன் சார்.." என்று பவ்யமாக பேசுவது போல் மகி பேச, "ஒழுங்க அவங்களைய விட்டுரு இல்ல அவ்வளவு தான்.." என்று கடுப்புடன் கூறினார்..

"விடலனா..?? என்ன பண்ணுவீங்க சார்.." - மகி

"இங்க பாரு ஒழுங்க அவங்களைய விட்டுரு.. அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.." - ராஜன்

"அதைய தான் நானும் சொல்றேன்.. நீங்க கொன்ன கமிஷ்னர் சார் குடும்பமும் சரி என் குடும்பமும் சரி இதுல சம்பந்தபடவே இல்லயே.. இந்த தப்பை நீங்க செய்யலாம் ஆனா நான் செய்ய கூடாதா?" - மகி

"நீ அவங்களைய விடல உன் அண்ணன் பொண்ணும் மேல போகும் பரவால்லயா?" - ராஜன்

"அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு அருமை மகளும் போய்ருவாங்க சார்.. நான் தான் அப்பவே சொன்னேன்.. பின்முதுகுல குத்துனா கண்டிப்பா நானும் அதையவே திருப்பி பண்ணுவேன்.. என் குடும்பத்தை கொன்னுட்டா அப்படியே நான் மூலைல அடங்கிருவேனு நினைச்சுட்டீங்களா?"

"இப்ப தான் வெறியோட இந்த கேஸ்ல இறங்கிருக்கேன்.. அதுக்கு முதல்படி தான் உங்க ரெண்டு பொண்ணுகளும்.. நெக்ஸ்ட்டு உங்க மாப்ளை.. அப்பறம் உங்க மனைவினு லிஸ்ட்டு எல்லாம் எடுத்து வெச்சாச்சு.."

"அப்பறம் முக்கியமான ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. முருகன் அதான் உங்க வலது கையா இருக்கற முருகன்.. அவனோட வீட்டுக்கு ஒரு ரோஜா மாலையை வாங்கிட்டு சீக்கிரம் போங்க.. இல்ல கடைசியா கூட அவங்க முகத்தை பார்க்க முடியாம போய்ர போகுது.." என்று நக்கலுடன் போனை வைத்தவள் மிரண்டு போய் தன்னையே பார்த்திருந்த சந்தியாவை கண்ணை சுருக்கி என்னவென்று வினவினாள்..

"முருகன் அங்கிளை கொன்னுட்டீயா?" என்று வெடவெடத்து போய் சந்தியா கேட்டிட, "அப்கோர்ஸ் கொன்னு ரெண்டு மணி நேரம் ஆகிருக்கும்.." என்று சாதாரணமாக வந்த மகியின் வார்த்தையில் மிரண்டு போன சந்தியாவுக்கு குப்பென்று வியர்த்து கொட்டியது..

"இப்படியே பயந்துட்டே இருப்பீங்களாமா? நான் போய் என் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துருவேனாமா? தப்பிக்கனும்னு நினைச்சாலும் மறுபடியும் தூக்கிட்டு வர மாட்டேன் போட்டு தள்ளிட்டு போய்ருவேன்.." என்று முன்னெச்சரிக்கையையும் மொழிந்து விட்டு மகி வெளியில் வர, புயலென அங்கு வந்த கிருஷின் கரங்கள் பெண்ணவளின் கன்னத்தில் இடியாக இறங்கியது..

கன்னத்தை தேய்த்தவாறு அதிர்ந்து அவனை மகி பார்க்க, "லூசாடி நீ? இல்ல லூசானு கேட்கறேன்.. அந்த ராஜன் பழி வாங்குனானு நீயும் அதே தப்பை செய்யறே? அப்படி பார்த்தா உனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?" என்று மீண்டும் அடிக்க கை ஓங்க, சற்றும் பயப்படாமல் அவனை ஏறிட்டு பார்த்தது மகியின் விழிகள்..

"வித்தியாசம் இல்லாமலே போகட்டும்.. அதைய பத்தி எனக்கு கவலையில்ல கிருஷ்.. அடுத்தவங்க அனுபவிக்கற வலி என்னனு அவரும் அனுபவிக்கனும்.. இது எல்லாம் அந்த மனுசனுக்கு சின்ன தண்டனை தான்.." - மகி

"வேணாம் ரவுடி இது தப்பு.. அவரு அப்படி பண்றாருனு நம்மளும் அப்படியே பண்றது ரொம்ப பெரிய தப்பு.. அவரு செய்யற பாவம் கண்டிப்பா அவரை கொல்லும்.. இந்த மாதிரி வேலை எல்லாம் நீ செய்யாத.." - கிருஷ்

"என்னால எப்பவும் நல்லவளா இருக்க முடியாது கிருஷ்.. அப்படி இருந்தாலும் கடைசில எனக்கு யாரும் சிலை வெக்க போறது இல்ல.. நீ நினைக்கலாம் என்கிட்ட வேகம் இருக்கற அளவுக்கு விவேகம் இல்லனு.. நான் யாருகிட்ட மோதுனாலும் நேரடியா தான் மோதுவேன்.. ஆனா மத்தவங்க பின் முதுகுல குத்த தானே விரும்பறாங்க.. எல்லாரும் என்னைய மாதிரி இருப்பாங்கனு நினைச்சது தான் நான் பண்ணுன பெரிய தப்பு.." - மகி

"நீ சொல்றது எல்லாம் சரி தான் ரவுடி.. நான் சொல்றேன் அந்த பொண்ணுகளை விட்டுரு.. அந்த சந்தியாவுக்கு ஏழு மாசத்துல ஒரு பையன் இருக்கான்.. அந்த குழந்தை பாவம்.." - கிருஷ்

"இப்படி பார்த்தா தனுவும் பாவம் தானே கிருஷ்.. குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் தெரியுமா?" - மகி

"நான் என்ன சொல்றேன் நீ என்னடி பேசிட்டு இருக்கே? நான் சொல்றதை கேட்பீயா? மாட்டியா? ஒழுங்க அந்த பொண்ணுகளை விட்டுரு.." - கிருஷ்

"முடியாது முடியவே முடியாது.. விடவும் மாட்டேன் கொல்லவும் மாட்டேன்.. கொல்ற அளவுக்கு எல்லாம் என் மனசு கல்நெஞ்சம் இல்ல.." - மகி

நெற்றியை இருவிரல்களால் தேய்த்து பின் கழுத்தை அழுத்தி பிடித்து தன் கடுப்பை மறைக்க, கண்மூடி திறந்த கிருஷ், "உன் வழிக்கே நான் வர்றேன்.. சந்தியாவை விட்டுட்டு நேத்ராவை மட்டும் எத்தனை நாளைக்கு வெச்சுருக்கனும்னு நினைக்கறீயோ வெச்சுரு.. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.." என்றான் பெருமூச்சுடன்..

மகி பேச வரும் முன்னே, அவளின் கையை தன் தலைமேல் வைத்து, "நான் சொல்றதை மீறி நீ எதுவும் செய்ய மாட்டேனு நான் நம்பறேன்.." என்றவன், மகியின் பின்னே நின்றிருந்தவனிடம் "இதுக்கு நீயும் வேற உடந்தை.. பார்த்துக்கறேன்.." என்று கையை முறுக்கினான்..

பின்பு, "இப்பவே சந்தியாவை விட வேணாம்.. கொஞ்ச நேரம் கழிச்சு எங்க கடத்துனீங்களோ அங்கயே விட்டுருங்க.. அண்ட் உடனே இடத்தையும் மாத்திருங்க.." என்ற கிருஷ் இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பதை போல் கிளம்ப, செல்லும் அவனை இதழ் சுழிப்புடன் பார்த்திருந்த மகியின் இதழில் மென்னகை..

அவளின் சிந்தனையை கலைத்து கொண்டு அலைப்பேசி சிணுங்க எடுத்து பார்த்த மகிக்கு எங்கையாவது முட்டி கொள்ளலாம் என்றிருந்தது.. ஏனென்றால் அழைத்தது நகுலன் தான்..

இப்போது ரிதியின் இடத்தில் இருப்பது மகி என்று அறியாமல் நகுலனோ விடாமல் துரத்தி கொண்டிருந்தான்.. ரிதியும் மகியும் மாறியிருப்பது மேகலைக்கு மட்டுமே தெரியும்.. மகி ரிதியானதும் வீட்டில் இருக்க முடியாது என்று விட்டு ரியாவுடன் ஹாஸ்டலுக்கு வந்து விட்டாள்..

இவர்களை பற்றி ரிதி கூறி இருந்ததை வைத்து மற்றவர்களை சமாளித்தவள் நகுலனின் கொஞ்சல் பேச்சுக்களையும் கெஞ்சல் பேச்சுக்களையும் காதில் வாங்குவது தான் பெரிய பாடாக போனது..

ஒரு புறம் ராஜன் போன் செய்து நேத்ராவை விட கூறியபடி இருக்க, மறுபுறம் நகுலனோ விடாமல் அங்கு செல்லலாம் இங்கு செல்லலாம் என்று ரிதியிடம் பேசுவதாக நினைத்து குஷியுடன் இருக்க, மகிக்கு தான் தலையை பிய்த்து கொள்ளலாம் என்றிருந்தது..

இப்போது நகுலனை அமைதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் "உன் மேல் காதலே இல்லை.." என்று மகி கூறி விட, அதன்பின் அவன் செய்த அலப்பறையை கண்டு ஏன்டா அப்படி சொல்லி தொலைஞ்சோம்.. என்று தலையில் கை வெக்க தான் முடிந்தது மகியினால்..

அன்று பிடித்த நகுலனின் புலம்பல் தான் ரிதியை பார்க்கும் வரை தொடர்ந்தது.. இதில் மிகவும் பாதிக்கப்பட்டது என்னவோ நிகிலன் மட்டுமே..

தினமும் இரவில் குடித்து விட்டு புலம்பும் நகுலனின் பேச்சை கேட்டு கேட்டு காதல் என்று யாராவது வந்தாலே காததூரம் ஓடி விடுவேன் என்ற நிலைமைக்கு வந்திருந்தான்..


**********


"மகிமா மகிமா.." என்று வந்த நகுலனின் குரலில் தான் கண்ணை திறந்த மகி, "என்ன நகுலன்' என்று வினவ, "ஒருத்தன் ரொம்ப நேரமா கதவை திறந்து திறந்து உன்னைய பார்த்துட்டு போறான்.. என்னவா இருக்கும்.." என்று ஹஸ்கிகுரலில் அவளிடம் வினவினான்..

நகுலன் கூறியதை போன்று மகியை கண்டதும் உள்ளே வந்த அவன் வாட்டர்பாட்டிலை மகியிடம் நீட்டுவதை போல் நீட்ட, புருவ முடிச்சுடன் அவனை ஏறிட்டு பார்த்த மகியின் விழிகள் சட்டென்று புரிந்ததை போல் மின்னல் வெட்டி மறைந்தது..




தாகம் தீரும்..



 
Last edited:
Status
Not open for further replies.
Top