ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ !!- கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 23





அவன் ஏதோ யாழுவின் காதருகில் கூறி விட்டு வந்த வேலை முடிந்தது என்றெண்ணி வெளியில் சென்று விட, "அக்கா யாரு அது? உங்க கிட்ட என்ன சொன்னாங்க?" என்று ரிதி கேட்டதும் நகுலனும் "மகிமா அந்த பன்னாடை உனக்கு மட்டும் என்ன சொன்னான்.." என்றான் எகிறலுடன்..

"என்னடா உனக்கும் சொல்லலனு தான் கோவமா?" என்று நிகிலன் அவனின் காலை வார, உம்மென்று முறைத்த நகுலன், "ஆமாடா அது என்ன எப்ப பார்த்தாலும் நமக்கு தெரியாம குசுகுசுனு இவங்க மட்டும் பேசிக்கறது? நம்மளும் இங்க தானே இருக்கோம்.." என்றவன், "அப்படி என்ன விசயத்தை சொன்னான்.." என்று மகியிடம் வினவினான்..

சிரிப்பை இதழுக்குள் மறைத்த மகி, "அதுவா.. இப்ப நம்ம எல்லாரையும் கொன்னு புதைக்க போறாங்களாமா? கடைசி ஆசைனு ஏதாவது இருக்கானு கேட்டுட்டு போனான்.." என்றதும் கண்ணாமுழியே வெளியில் வந்து விடுமளவிற்கு பார்த்த நகுலனின் ரியாக்சனில் தன்னை மீறி சிரித்து விட்டாள்..

"பொய் சொல்றீயா? ஹான் என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு மகிமா.." என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு நகுலன் கேட்க, "காமெடி பீஸ் மாதிரி தான் தெரியறீங்க நகுலன்.." என்று மகியும் கூறிட, இதில் வெளியில் நகுலன் முறைத்தாலும், மகியின் சாதாரணமான பேச்சில் மனம் குளிர்ந்து போனது..

ஏனோ மகியை பற்றி கேட்டதில் இருந்து அவனின் மனதில் ஏறியிருந்த பாரம் இன்னும் இறங்காமல் சுமையை மட்டுமே கூட்ட, அதனுள் தன் மனது கட்டுண்டு போகாமல் தடுக்கவே ஏதாவது பேசி கொண்டே இருந்தான்..

"ப்ச் சிஸ்டர்.. என்னனு எங்களுக்கும் சொல்லலாம் தானே? நாங்களும் பாவம்.." - நிகிலன்

"உங்க கிட்ட சொல்லாம என்ன பிரதர்.. தாராளமா சொல்றேன்.." - மகி

"அப்ப எங்க கிட்ட சொல்ல மாட்டிங்க அப்படிதானே அக்கா.." - ரிதி

"அப்படி கேளுடா என் செல்லக்குட்டி.." - நகுலன்

"கேட்டுட்டேன் நகுலன்.. பட் சிரிக்கறாங்களே தவிர பதிலை தர மாட்டிங்கறாங்க.." - ரிதி

"ஒரு வேளை உன் அக்காவுக்கு நம்மளைய பார்த்தா காமெடியா இருக்கோ?" - நகுலன்

இதில் தன்னை முறைத்தவளை கண்டு சமாளிப்பாய் சிரித்து வைத்தவன், "மகிமா நாங்க பாவம்.." என்றதும் முத்துபற்கள் தெரியும்படி புன்னகைத்த மகி, "நம்மளைய தனி தனி ரூம்ல விட போறேனு அவன் மாமன்கிட்ட விக்ரம் பேசிட்டு இருந்தானு தான் சொன்னான்.."

"ஒரு வேளை இதுவும் விக்ரமோட ஆளா இருந்தா..? நம்ம என்ன பண்றோம்னு வேவு பார்க்க கூட அவன் இப்படி சொல்ல சொல்லிருக்கலாமே.." - நகுலன்

"அந்தளவுக்கு எல்லாம் விக்ரம் யோசிக்க மாட்டான்.. இப்ப அவனோட எண்ணம் எல்லாம் அந்த தாகூரை பாதுகாப்பா இங்க கூட்டிட்டு வரனும்னு தான் இருக்கும்.." - மகி

"எப்படி சிஸ்டர் உறுதியா சொல்றீங்க.." - நிகிலன்

"எனக்கே தெரிலயே பிரதர்.. ஆனா இப்ப சொன்னது மட்டும் கண்டிப்பா நடக்கும் பாருங்க.." - மகி

எப்போதும் போன்று பயத்தில், "இத்தனை பேருத்தை சமாளிச்சுட்டு நம்ம உயிரோடு போக முடியுமா?" என்று ரியா கலங்கி போன குரலில் கேட்டிட, அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்து கொண்ட மகி, "கண்டிப்பா முடியும் ரியா.." என்றாள் உறுதியாக..

"இங்க இருக்கறதுல பாதி பேரு என் ஆட்கள் ரியாமா.. இப்ப வந்தது கூட அவன் தான்.. நம்ம இங்க வர்றதுக்கு முன்னாடியே அத்தனை பாதுகாப்பும் பண்ணிட்டு தான் வந்தேன்.. சொல்ல போனா இந்த கடத்தல் கூட நான் எதிர்பார்த்தது தான்.."

"இதுல நகுலன் மட்டுமில்ல நிகிலனும் மாட்டுவானு நான் கெஸ் பண்ணுனேன்.. ஆனா உன்னைய கடத்துனதை தான் நான் உண்மையாவே எதிர்பார்க்கல.."

"அடப்பாவி சிஸ்டர். இதைய என்கிட்ட முதல்லயே சொல்லிருந்தா நாங்க உசாரா இருந்துருப்போமே.." - நிகிலன்

"அப்படி மட்டும் நான் பண்ணிருந்தா என்னோட அத்தனை முயற்சியும் வீணாகிருமே பிரதர்.." - மகி

"ஆமா சிஸ்டர் கடத்துனது தான் கடத்துனாங்க எதுக்கு காட்டுக்குள்ள தூக்கிட்டு வந்து போட்டுருந்தாங்க.." - நிகிலன்

"அது ஒன்னுமில்ல பிரதர்.. ராஜன் சாரோட ரெண்டாவது பொண்ணு இன்னும் என்கிட்ட தான் இருக்கு.. விட சொன்னாரு முடியாதுனு சொன்னேன் அதுக்கு தான் இந்த கடத்தல்.." - மகி

"உன்கிட்டயா? எனக்கு ஒன்னும் புரில மகிமா.." - நகுலன்

"நான் அவரோட ரெண்டு பொண்ணையும் கடத்திட்டேன் நகுலன்.. அதுல பெரிய பொண்ணை மட்டும் தான் விட்டுருக்கேன் அதுவும் கிருஷ் சொல்லி.. இல்லனா என்கிட்ட தான் இருந்துருக்கும்.." - மகி

"அடப்பாவி சிஸ்டர் இதெல்லாம் எப்ப பண்ணுனீங்க.. சொல்லிருந்தா நானும் துணைக்கு வந்து கடத்தல் எப்படினு பழகிருப்பேன்.. ச்சே மிஸ் ஆகிருச்சு.." - நிகிலன்

"நீ போலீஸ்னு அடிக்கடி நியாபகம் படுத்து மகிமா.. எனக்கு சந்தேகமா இருக்கு.." - நகுலன்

"ஏன் நகுலன் போலீஸா இருந்தா எப்பவும் நேர்மையா தான் இருக்கனுமா? அப்படி பார்த்தா இந்த மாதிரி எல்லாம் நாட்டுல நடக்காம இருந்துருக்குமே.. நேரா மோதுனா நானும் நேருக்கு நேரா அவங்க முன்னாடி நிற்பேன்.. இல்ல பின்முதுகுல குத்துனா கண்டிப்பா நானும் அதைய அவங்களுக்கு இரட்டிப்பா தருவேன்.." - மகி

"ஹய்யோ ஹய்யோ இப்ப இதுவா முக்கியம்.. நம்மளைய கடத்திட்டு வந்துருக்காங்கடா.." - நிகிலன்

"அடேய் கடத்திட்டு வந்தும் நம்ம நல்லா தின்னுட்டு தூங்கிட்டு தானே இருக்கோம்.. இதுல பீலிங் வேற பீலிங்.." - நகுலன்

"ம்ம்ம்ம்க்கும் பயத்தை வெளில காட்டிக்க கூடாதுனு கொள்கையோட வாழ்றவன்டா நானு.." - நிகிலன்

"ரியாமா எதுக்கும் பயம் வேணாம்.. பயம் தான் நம்மளோட முதல் எதிரி.. முடியும்னு நம்பிக்கையோட இருடா.. இந்த பிரச்சனை முடிஞ்சதும் நீ ஆசைப்பட்டவனே உன்னைய தேடி வருவான் அதுக்கு நான் கேரண்டி.." - மகி

"ஹலோ சிஸ்டர்.. நான் எதுக்கு இந்த குட்டச்சியை தேடி போக போறேன்.." - நிகிலன்

"ஹலோ பிரதர்.. நான் எப்ப உங்களைய சொன்னேன்.." - மகி

"அடேய் என்னங்கடா ரெண்டு பேரும் இங்கிலீஸ்ல பாசத்தை பொழிஞ்சுட்டு இருக்கீங்க.. ஏன் தமிழ்ல அண்ணன் தங்கைனு சொன்னா குறைஞ்சா போவீங்க.." - நகுலன்

"வேணும்னா நீயே அப்படி கூப்பிடு.." - நிகிலன்

"எதுக்கு என் பேபியும் எனக்கு தங்கச்சி ஆகறதுக்கா?" - நகுலன்

"பாருடா.. இந்த தெளிவு எப்பவும் இருந்தா எங்கையோ போய்ரலாம்.." - மகி

"நான் எங்கையும் போக விரும்பல மகிமா.. என் பேபி கிட்ட தான் போக நினைக்கறேன்.. நந்தி மாதிரி நீங்க தான் குறுக்க நிற்கறீங்க.." - நகுலன்

"அய்யோ" என்று வெக்கத்தில் ரிதி முகத்தை மூடி கொள்ள, "மிஸ்டர். நகுலன் நம்ம ஒன்னும் பிக்னிக் வரல.. கடத்தப்பட்டு வந்துருக்கோம்.. கொஞ்சம் லவ்வுல இருந்து வெளில வாங்க.. உங்க லவ்வுனால அதிகமா பாதிக்கப்பட்டது நான் தான்.." என்று நகிலன் கடுப்புடன் கூறினான்..

"உங்களைய வெச்சுக்கிட்டு..? என்ன நிலைமைல இருக்கோம்னு கொஞ்சம் கூட பயமில்லாம இப்படி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.." - மகி

"எப்ப இவன் கூட சேர்ந்தனோ அப்ப இருந்து நானும் இப்படி மாறி தொலைஞ்சுட்டேன் மகிமா.." - நகுலன்

"டேய் உன்னால தான்டா நானும் இப்படி மாறுனேன்.. நீ பாட்டுக்கு வேற வழில போய்ருந்தா இன்னேரம் எனக்கு இருக்கற அறிவுக்கு அம்பானிக்கு மருமகனா மாறிருப்பேன்.. என் கிரகம் உன்கூட குப்பை கொட்டிட்டு கிடக்கறேன்.." - நிகிலன்

"பாரு மகிமா இவன் வாயை திறந்தாலே பொய் எப்படி கொட்டுதுனு.. இவன் தலைல மூளைனு ஒன்னு இருக்கா இல்லையானு நாங்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா.. இவன் எப்படி சொல்றானு பாரு.." - நகுலன்

"அய்யோ பெருமாளே! என்னால முடில.." - மகி

"அக்கா இது கூட பரவால்ல.. ரெண்டு பேரும் எப்ப பழக்கம்னு கேட்டு பாருங்க.. நம்ம அவ்வளவு தான்.." - ரிதி

"ஏன் இதுல என்னடா இருக்கு.." என்று யோசித்த மகி, புருவம் சுருக்கி "ஆமா ரெண்டு பேருக்கும் எப்ப இருந்து பழக்கம்.. ஸ்கூல் பிரெண்ட்ஸா.. இல்ல காலேஜ் ப்ரெண்ட்ஸா?" என்று கேட்டும் விட்டாள்..

"மகிமா இவனும் நானும் பக்கத்து பக்கத்து வீடு தான்.. எனக்கு போட்டியா என்கூடயே சுத்திட்டு இருப்பான்.. இவனால அம்மாகிட்ட விளக்குமாத்துல அடி வாங்குனது கணக்கு இல்லாம போகும்.." - நகுலன்

"பொய் பொய்.. அய்யோ இவன் பொய் சொல்றான்.. உன்னால தான்டா இப்ப வரைக்கும் நானு அந்த மீசைக்காரர் கிட்ட அடி வாங்கிட்டு இருக்கேன்.. நான் பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்தேன்.. நீ தானே என் பின்னாடி சுத்துனே.." - நிகிலன்

"டேய் நீதான்டா என் அருணாக்கயிரை விடாம புடிச்சு என் பின்னாடி சுத்துனே?" - நகுலன்

"ஆமா பாரு அந்த இத்து போன கயிரை நான் வேற புடுச்சனாக்கும்.. அப்படி பார்த்தா நீயும் தானேடா என் டவுசரை புடிச்சுட்டு சுத்துனே?" - நிகிலன்

இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொள்ள, திருதிருவென விழித்து பார்த்திருந்த மகி ஒரு கட்டத்தில் வாய் விட்டு சிரிக்க தொடங்க, "நான் தான் அப்பவே சொன்னனல்ல அக்கா.. ஒரு தடவை தெரியாதனமா நானும் இப்படி கேட்டு இதுக ரெண்டும் ஆபிஸ்னு மறந்து அங்கயே அடிச்சுக்கிட்டாங்க.." என்று கூறிய ரிதி தலையில் அடித்து கொண்டாள்..

சட்டையை பிடித்து கொண்டு இருவரும் உருண்டதில் சத்தம் கேட்டு வேறொரு ஆள் உள்ளே வந்து, "டேய் என்னடா பண்றீங்க?" என்று இருவரையும் பிரித்து விட்டான்..

மூச்சு வாங்க அவனை சப்பென்று அறைந்த நகுலன், "இப்ப நீ எதுக்குடா இடைல வந்தே?" என்று எகிற, அதே போல் நிகிலனும், "நாங்க ரெண்டு பேரும் அடிச்சுப்போம்.. இல்ல மிதிச்சுப்போம்.. விட்டா கொன்னு கொன்னு கூட விளையாடுவோம்.. உன்னைய பஞ்சாயத்துக்கு கூப்பிட்டோமா?" என்று நாக்கை மடித்து பளாரென்று அவனின் மறுகன்னத்தில் அறைய, அந்த அடியாளின் நிலைமை தான் பாவம்..

இவனை காப்பாற்றவே சற்றுமுன் மகியிடம் பேசி விட்டு சென்றவன் மீண்டும் உள்ளே வந்து இவர்களை அடக்கி விட்டு, அந்த அடியாளை வெளியில் அனுப்பி விட்டான்..

"மேடம் என்ன ஆச்சு?" என்று தயங்கியவாறு அவன் கேட்க, சிரித்த மகி, "இவங்க சும்மா சண்டை போட்டுட்டு இருந்தாங்க.. அதையை உண்மைனு நம்பி இவங்களைய பிரிச்சு விட்டதுல இவங்க கிட்ட வாங்கி கட்டிக்கிட்டான்.." என்றிட, "ஓக்கே மேடம் ஏதாவதுனா கூப்பிடுங்க.." என்று விட்டு செல்ல போனவனை மீண்டும் அழைத்தவள், "ஏதாவது புது இன்பார்மேசன் கிடைச்சுச்சா?" என்று வினவினாள்..

"எஸ் மேடம்.. தாகூர் கூட அவர் பையன் ராபினும் வர்றதா பேசிக்கிட்டாங்க.. பட் அது எந்தளவுக்கு உண்மைனு தெரில மேடம்.."

"ஹோ!! இட்ஸ் ஓக்கே..இதுவும் ஒரு வகைல நல்லது தான்.. அவங்களுக்கு உங்கமேல சின்ன சந்தேகம் கூட வர கூடாது.. அண்ட் தனு சேஃப்டி தானே?"

"தனுக்குட்டியை சுத்தி நம்ம ஆளுக தான் இருக்காங்க மேடம்.. சோ ரொம்ப சேஃப்டி தான்.."

"அஜாக்கிரதையா இருக்க கூடாது.. எப்ப எது வேணாலும் நடக்கலாம்.. இங்க இருக்கற குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சின்ன காயம் கூட ஏற்பட கூடாது.. பார்த்து நடந்துக்கங்க.."

தலையசைத்து விட்டு அவன் நகர, இப்போது நகுலன் அவனை விடாமல், "ஏன் பாஸ் இப்ப மட்டும் மகிமா கிட்ட இப்படி பேசறீங்க.. இதைய அந்த ராஜன் பார்க்க மாட்டாரா?" என்று வினவ, "முதல்ல சிசிடிவி கேமரா இருந்ததுல எதுவும் பேச முடில.. இப்ப அதைய தான் உடைச்சுட்டீங்களே.." என்று விட்டு அகன்றான்..

"பார்த்தீயாடா என் சிப்ஸு ஐயாவோட ஐடியா எத்தனை பேருக்கு யூஸ் ஆகிருக்குனு.." என்று சட்டை காலரை பின்னால் இழுத்து விட்டு கெத்தாக நகுலன் கூறிட, "த்து மேய்க்கறது எருமை இதுல பெருமை வேற.." என்று நிகிலன் அவனை காறி துப்பினான்..

மகி கூறியதை போலவே பெண்கள் மூவரையும் வலுக்கட்டாயமாக வேறு அறைக்கு அழைத்து சென்று விட, ஆண்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்..

"ஏன்டா ரிதியோட அக்கானு ரொம்ப ஐஸ் வெக்கற போல.." - நிகிலன்

"டேய் என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.. மகிமாவை பத்தி தெரிஞ்சும் இப்படி நினைச்சு பேச முடியுமாடா?" - நகுலன்

"ஹிஹிஹி சும்மாடா மச்சி.. அவங்க போனதுல இருந்து ரொம்ப பீலிங்ல இருந்தீயா அதான் உன்னைய நார்மல் ஆக்கலானு.." - நிகிலன்

"அன்னைக்கு மகி இந்த விசயத்தை பத்தி சொன்னப்ப கூட அதையை சாதாரணமா கடந்து வந்து இங்கிருந்து போனா போதும்னு நினைச்சேன் மச்சி.. எப்ப மகியை பத்தி தெரிஞ்சுச்சோ நான் ஏன் இப்படி இருந்தேனு என்னைய நினைச்சு எனக்கே வெக்கமா இருக்குடா.." - நகுலன்

"ப்ச் நமக்கு தான் இதெல்லாம் தெரியாதுல?" - நிகிலன்

"தெரியாது தான்.. ஆனா ஒரு பொண்ணா மகிமா எத்தனை இழப்புகளை இழந்தும் மனசுக்குள்ள அவ்ளோ வருத்தத்தை வெச்சிருந்தாலும் வெளில காட்டிக்காம சாதாரணமா இருக்கா.. ஆனா நானு..??" - நகுலன்

"டேய் இதுல எதுவும் இல்லடா விடு விடு.. கண்டிப்பா மகிழினி சிஸ்டர் தான் இதுல ஜெயிப்பாங்க.." - நிகிலன்

அதை நகுலனும் ஆமோதித்து, "மகிமா ஜெயிப்பாடா.. ஆனா அவளுக்கும் தனுவுக்கும் எதுவுமாக கூடாது.." என்றான் கவலையாக..

மகியுடனே மற்ற இருவரும் இருப்பதால் மகிக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.. ஆண்கள் இருவரும் எங்கிருந்தாலும் சமாளித்து கொள்வார்கள்.. ஆனால் இவர்கள்... அதுவும் ரியாவின் பயத்தை நினைத்து அவளை தனியாக விட்டு விடுவார்களோ என்று மகி பயந்திருந்தாள்.. மூவரையும் ஒரே இடத்தில் விட்டதும் தான் மூச்சே விட முடிந்தது மகியினால்..

இவர்கள் இருக்கும் அறையில் பத்து பதினொரு கர்ப்பிணி பெண்கள் இருக்க, அவர்கள் அனைவருமே சற்று சோர்ந்து போய் காணப்பட்டனர்.. என்னவென்று கேட்கலாம் என்று மகி யோசித்திருந்த நேரத்தில், "அக்கா ஏன் இப்படி சோர்ந்து போய்ருக்கீங்க.." என்று ரிதியே கேட்டு விட, இதில் ஆறெழு பெண்கள் மட்டுமே ரிதியின் மேல் பார்வையை செலுத்த, மற்றவர்கள் கண்ணை கூட திறக்கவில்லை..

"எங்க தலையெழுத்தை என்னனு சொல்றது தாயி.. பத்து மாசம் கஷ்டப்பட்டு உயிர் போற வலில புள்ளயை பெத்தெடுத்தும் புள்ளைக்கு ஒரு வாய் தாய்ப்பால் கூட குடுக்க முடில.. அதைய நினைச்சா பொறக்கறப்பவே இந்த புள்ள உலகத்தை பாக்காம போய்ரனும்னு தோணுது.." என்றார் ஒருவர் விரக்தியுடன்..

"என்ன அக்கா இப்படி பேசறீங்க.. குழந்தை வரம் கிடைக்காம எத்தனை பேரு கோவில் கோவிலா சுத்திட்டு இருக்காங்க தெரியுமா?" என்று சற்று கோவத்துடன் மகி வினவ, "நான் என்ன வேணும்னா அப்படி சொல்றேன்.. என் பக்க நிலைமைல இருந்து சொல்றேன் இதுவரைக்கும் மூணு புள்ள பெத்துருக்கேன் அதுல ஒரு குழந்தைக்கு கூட தாய்ப்பால் குடுக்கற பாக்கியம் கிடைக்கல.. இதுல நாலாவதா ஒன்னு பொறக்க தயாரா நின்னுருக்கு.." என்றவரின் குரலில் வேதனையின் சாயல்களே நிறைந்திருந்தது..

"குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லனா உங்க கணவனை பக்கத்துல விட கூடாது அதுக்குனு குழந்தை செத்துட்டா பரவால்லனு சொல்றது எல்லாம் நல்லா இல்ல.." என்று ரிதியும் வெடுக்கென கூற, "ஏன் தாயி உங்க குழந்தைனு ஒரு புள்ளயை தூக்கிட்டு வந்தாங்களே அதுக்கு நீங்க அம்புட்டு கதறுனீக.. உங்களால உங்க புள்ளயை காப்பாத்த முடியும்.. ஆனா எங்களால முடியுமா?" என்றார் கேள்வியுடன்..

மேலும், "என் புள்ளக எங்க இருக்கு என்ன பண்ணுதுனு ஒன்னுமே தெரியாம தெனமும் துடிச்சுப்புட்டு இருக்கோம்.. எங்களைய அரசாங்கம் தான் கண்டுக்கல.. அதுக்குனு எங்க புள்ளகளை வியாபாரமா மாத்திப்புட்டானுக.. இவனுக சொல்றதை எங்க ஐயாவும் நம்பி தலையசைச்சு இப்ப எங்க புள்ளகளை பறி கொடுத்துட்டு நிற்கறோம்.."

"அதோட வலி செத்தா மட்டும் தான் போகும்.. எங்களையும் வித்துப்புட்டு காசு வாங்கிட்டானுக.. நாளைக்கு யாரோ வந்ததும் அவுக கூட நாங்களும் போவனும்னு சொல்றாக.. இத்தனையும் பாத்துப்புட்டு கடவுளும் அமைதியா இருக்காரு.. இதுக்கு எங்களைய படைக்காமலே இருந்துருக்கலாம்.." என்று கண்ணீர் சிந்தியவரை இவர்கள் பாவமாக பார்த்தனர்..

எவ்வளவு கொடுமையான வாழ்க்கை இது! பிள்ளை பெறும் வலியை விட அதன்பின் பிள்ளையை பறி கொடுக்கும் வலி உயிரோடு கொல்லுமே!! வெறும் பணத்திற்காக இத்தனை பாவங்களை சுமந்து கொண்டிருக்கின்றனர் இவர்கள்!!

அவர்களிடம் பேச போன ரிதியின் கையை அழுத்தி பிடித்த மகி வேணாம் என்று கண்ணை காட்ட, இருந்த இடத்திலே சாய்ந்து அமர்ந்தவள் அவளை மீறியும் துளிர்த்த நீர்துளிகளை துடைத்து எறிந்தாள்..
 

T21

Well-known member
Wonderland writer
அனைவரும் எதிர்பார்த்த அந்நாள் அழகாக விடிந்து தன் வேலையான சூர்யகதிர்களை பூமியில் படர விட தொடங்க, அந்நேரம் அந்த இடமே பரபரப்புடன் இருந்தது..

குறுக்கு வழியில் தான் அவர்களை அழைத்து வர வேண்டும் என்று விக்ரம் கிளம்பி இருந்த போது அவனின் கட்டளைக்கேற்ப வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருந்தனர்..

பத்து வயதில் இருக்கும் குழந்தைகள் வரிசையாக நின்றிருக்க,அவர்களின் முன்னே நின்றிருந்தவன் ஒவ்வொரு குழந்தைகளும் எந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை கணினியில் பார்த்து பார்த்து அந்த இடத்திற்கான அடையாளங்களை எதனை வைத்தோ குழந்தையின் கைகளில் குத்தினான்..

அது வலித்தது போலும் அழுதால் தங்களை அடித்து விடுவார்கள் என்ற பயத்தில் வாயை மூடியபடி குழந்தைகள் அகன்று செல்ல, மறுபுறத்தில் ஆறெழு மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை இருக்கும் குழந்தைகளை புகைப்படம் எடுத்து அதனையும் கணினியில் பதிந்து கொண்டிருந்தான் மற்றொருவன்..

அதனருகிலே கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை என்ற பெயரில் ஆண்கள் அவர்களிடம் அத்துமீறி கொண்டிருந்தனர்..

என்னதான் இவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் தன் கணவன் இன்றி வேறொருவனின் தீண்டலை ஏற்க முடியாமல் புதியதாக வந்திருந்த பெண்மணிகள் கண்ணீர் வடிக்க, பழகி போயிருந்த பெண்களோ அமைதியாக கடந்து சென்றனர்..

இதனை கண்டு கலங்கிய குரலில் "அக்கா இது எல்லாம் ரொம்ப கொடுமைல?" என்று ரிதி கூறிட "ம்ம்ம்" என்ற பதிலை மட்டும் குடுத்த மகி அமைதியாகி போனாள்.. ஆத்திரத்தில் பொறுமையை இழந்து இவ்வளவு நாள் காத்திருந்ததை வீணாக்கும் அளவிற்கு மகி ஒன்றும் முட்டாள் இல்லையே..

முதன் முறையாக ரியாவே மகியிடம் "மேடம் தனு எங்கே?" என்று கேட்க, வாயில் கை வைத்து, "ஷ்ஷ்ஷ் சத்தமா பேசாத ரியாமா.. தனு என் ஆட்கள் கிட்ட தான் ரொம்ப பாதுகாப்பா இருக்கா.. அண்ட் நீ அக்கானே கூப்பிடுடா.." என்றாள் ஆதுரமாக..

வெளியில் கேட்ட கார் சத்தத்தில் அவர்கள் வந்து விட்டார்கள் என்று உணர்ந்த மகிக்கு "எதுவும் தப்பாக நடந்து விட கூடாது" என்ற பயமே சூழ்ந்தது.. மனதை ஒரு நிலைப்படுத்தி ஆழ்ந்து பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்..

விக்ரமுடன் தாகூரும் அவரின் மகன் ராபினும் உள்ளே வர, இதற்கு தான் காத்திருந்தேன் என்பதை போல் ராஜனும் அவர்களை வரவேற்றார்.. இத்தொழிலில் இப்போது தான் ராபின் பங்கேற்று இருக்கிறான் என்பதால் அங்கிருக்கும் அனைவரையும் சந்தேக கண் கொண்டு துளைத்து எடுத்தான்..

மகியின் ஆட்களோ தங்கள் மீது அவனின் சந்தேகப் பார்வை விழுந்து விட கூடாது என்பதற்காகவே கர்மசிரத்தையுடன் தங்களுக்கு குடுத்திருந்த வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டிருந்தனர்..

கண்ணில் மாட்டியிருந்த கூலரை கலட்டிய ராபின், "மிஸ்டர். விக்ரம் அந்த போலீஸை நான் பாக்கலாமா?" என்று ஆங்கிலத்தில் வினவ, "சுயர் ராபின் சார் வாங்க.." என்று அவர்களிடம் அழைத்து சென்றான் விக்ரமும்..

தங்களை நோக்கி வருபவனை கண்டு அலட்சிய பார்வையை மகியின் விழிகள் தத்தெடுத்து கொள்ள, ராபினின் கண்களோ பெண்மகளின் மீது படர்ந்து சென்று, "என்ன ராஜன் சார் இந்த பொண்ணை உங்களால சமாளிக்க முடிலயா? போலீஸா இருந்தா என்ன.. அதுவும் ஒரு பொண்ணு தானே.." என்று பார்வையை அகற்றாமல் கேட்டான்..

"ஏன் ராஜன் ஒரு பொண்ணை அழிக்க துப்பில்ல இதுல எதுக்கு இந்த வேலைக்கு வர்றே?" என்று தாகூரும் ராஜனிடம் கடுகடுக்க, "நான் அப்பவே போட்டு தள்ளிருப்பேன் சார்.. நீங்க பார்க்கனும்னு சொன்னதுல தான் இவ்வளவு நாள் விட்டு வெச்சுருக்கேன்.." என்றார் பவ்யத்துடன்..

"என்னைய எதிர்த்த எவனும் இதுவரைக்கும் உயிரோடு இருந்தது இல்ல.. சீக்கிரம் முடிக்கற வழியை பாருங்க.." - தாகூர்

"இதுகளை இங்கயே கொன்னு புதைச்சுட்டு தான் மறுவேலை பார்க்கனும்னு இருக்கேன் சார்.." - ராஜன்

"ம்ம்ம் விக்ரம் சொன்ன மாதிரி இடத்தை மாத்திரலாம்.. வேற பாதுகாப்பான இடத்தை பார்த்துட்டு சொல்லு.. எவ்ளோ பணம் வேணுனாலும் தர்றேன்.." - தாகூர்

இவர்கள் பேசுவதை தவிர்த்து ராபினின் விழிகள் ரிதியின் மீது அத்துமீறி சென்றதில், அச்சத்தில் புண்ணாகி போன மனதுடன் ரிதியோ மகியின் பின்னே தன்னை மறைத்து கொண்டாள்..

"என்ன ராபின் தம்பி பொண்ணு வேணுமா?" என்று இழித்து கொண்டு ராஜன் கேட்டதும் சுறுசுறுவென ஏறிய சினத்தை அடக்க கையை இறுக்க மூடிய மகி, கொன்று விடும் வெறியில் அவரை முறைத்தாள்..

"நோ நோ எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன்.. அதுக்கு அடுத்தவங்க பர்மிசன் தேவை இல்ல.. இப்ப எனக்கு இண்டர்ஸ்ட் இல்ல ராஜன் சார்.. நம்ம பையனுக யாராவது கேட்டா குடுத்துருங்க சாக தானே போறாளுக.." என்று அசட்டையுடன் கூறினான் ராபின்..

"டாட் நம்ம சீக்கிரம் கிளம்பனும்.. நமக்கு நேரம் இல்லை.. இங்க அப்படி என்ன இருக்குனு தெரில.. இங்க வரனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தீங்க.." - ராபின்

"இங்க எதுவும் இல்ல தான் ராபின்.. ராஜனோட அழைப்பிற்கு மரியாதை குடுத்து தான் இங்க வரனும்னு சொன்னேன்.. என்ன இருந்தாலும் ராஜன் நம்ம ஆளு ஆச்சே!!" - தாகூர்

"ஓக்கே டாட்.. உங்க விஷ் தான்.. மத்த இடத்தை பார்த்துட்டு கிளம்பலாம்.." - ராபின்

"நீ போ ராபின்.. நான் வர்றேன்.. விக்ரம் இவனை கூட்டிட்டு போங்க.." - தாகூர்

இவரின் கூற்றிற்கு செவி மடுத்து ராபினை அழைத்து கொண்டு விக்ரம் நகர, அவர்கள் சென்றதும் மகியின் கழுத்தை நெறித்து பிடித்த தாகூர், "என்னைய நெருங்கனும்னு நினைச்ச எவனும் இது வரைக்கும் உயிரோடு இருந்தது இல்ல.. அதுவும் ஒரு பொண்ணு என்கிட்ட மோதறது எல்லாம் ஆகாத காரியம்.."

"இதுனால தான் உன் குடும்பத்தை இழந்து நிற்கறேனு மறந்துட்ட போல.. நீயும் அவங்களுக்கு துணையா இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிரு.." என்று கர்ஜிக்க, அவரிடம் இருந்து விலகாமல் எதிர்ப்பார்வை பார்த்தவளின் விழிகள் நக்கல் பார்வையுடனே காணப்பட்டது..

பெண்மகளின் பார்வையின் அர்த்தத்தை புரியாமல் மூளையற்ற மூடர்கள் இருவரும் "இவள் அடங்கி விட்டாள்.." என்று தப்புக்கணக்கு போட்டு கொண்டு வெளியேறினர்.. இனி தான் இவளின் ஆட்டமே ஆரம்பமாக போகின்றது என்பதை அவர்கள் அறியவில்லை போலும்..

அங்கிருந்த நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை ஒரு வேனில் ஏற்றி அவர்களுக்கு பாதுகாப்பாக சில பேர் அதில் ஏறி கொள்ள, "டேய் பார்த்து கூட்டிட்டு போகனும் இல்ல தொலைச்சுருவேன் தொலைச்சு.." என்று விக்ரம் கர்ஜனையுடன் கூற, அவர்களும் "நாங்க பார்த்துக்கறோம் பாஸ்.." என்றனர்..

"தாகூர் சார் அந்த வேன் போனதும் கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க கிளம்புங்க.. அதுக்கு பின்னாடியே போன சந்தேகம் வரும்.." என்று கூறிய விக்ரம் அங்கிருந்த அடியாளிடம், "டேய் சாருக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்கடா.." என்று கட்டளையிட்டான்..

இதனை மறுத்த தாகூர், "நோ நோ எனக்கு எதுவும் வேணாம் விக்ரம்.." என்றவர் தன் மகனிடம், "நீ ஏன்டா இப்படி நடந்துட்டு இருக்கே?" என்று கேட்க, "நத்திங் டாட்.. இந்த பிளேஸ் எனக்கு பிடிக்கல.. எப்ப இங்க இருந்து கிளம்புவோம்னு இருக்கு.." என்றான் அஷ்டகோண முகத்துடன்..

யோசனை வந்தவனாக, "ராஜன் சார் இன்னும் எதுக்கு அவங்களைய வெச்சுருக்கீங்க.. சீக்கிரம் போட்டு தள்ளுங்க.. அதைய நானும் பார்த்துட்டு போறேன்.. அப்படியே அந்த போலீஸ்காரியோட லவ்வர்னு சொன்னீங்களே அவனையும் இழுத்துட்டு வந்து வெளில போடுங்க.." என்று மொழிந்தான் ராபின்..

பணிவுடன் ராஜன், "இதோ தம்பி இப்பவே நீங்க சொல்றதை செஞ்சரலாம்.." என்று விட்டு, திரும்பி தன் ஆட்களிடம், "அதான் தம்பி சொல்றாருல இன்னும் என்னடா வேடிக்கை பார்த்துட்டு நிற்கறீங்க போங்க சீக்கிரம் இழுத்துட்டு வந்து கதையை முடிங்க.." என்று உத்தரவை தொடுத்தார்..

முதலில் அமைதியான முகத்துடன் நகுலனும் நிகிலனும் வெளியில் வர, அதன்பின்னே பயத்தில் எகிறி குதித்திருக்கும் இதயம் வெளியில் வந்து விடுமோ என்ற அச்சத்தில் ரியாவும் ரிதியும் வந்தனர்..

அவர்களின் பின்னே நெஞ்சை நிமிர்த்தி கொண்டு தீரக்கமான முகத்துடன் மகி வர, அவளின் பின்னே அடித்து நாராக்கியதில் மயங்கி கிடந்த கிருஷை இருவர் தூக்கி வந்து கீழே போட்டனர்..

மகியின் முகத்தை கண்டு ஏதோ தவறாக நடக்க போகின்றது என்பதை உணர்ந்த ராபின் "டாட் நம்ம கிளம்பலாம்.. சீக்கிரம் வாங்க.." என்று அவசரப்படுத்த, "தம்பி என்ன ஆச்சு.." என்று பதறிய ராஜன், "டேய் அவனை போட்டு தள்ளுங்கடா.." என்று கீழே கிடந்த கிருஷை நோக்கி கையை காட்டினார்..

அவனை தூக்கி வந்தது ராஜனின் ஆட்கள் என்பதால் அவர் சொல்லை தட்டாமல் கடப்பாரையால் அவனை அடிக்க போன சமயம் மயங்கி இருப்பதை போல் நடித்திருந்தவன் சட்டென்று கடப்பாரையை தன் கையால் தடுத்து அதே வேகத்தில் அவனின் வயிற்றிலும் இறக்கி இருந்தான்..

நொடி நிமிடத்தில் நடந்த நிகழ்வினால் அனைவரும் இமைசிறகை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்க, கண்ணை சிமிட்டிய மகி "இன்னும் எதிர்பார்க்கிறேன்.." என்ற சமயம் தனுவின் அழுகுரல் அனைவரின் செவிப்பறையை தீண்டியதில் தான் சுயநினைவிற்கு வந்தனர்..

"அக்கா தனு அழுகறா.." என்று துடித்த ரிதி, குழந்தை எங்குவென்று கருமணிகளை சுழல விட, இங்கு என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் ராஜன் தவிர்த்திருந்த நேரம், தன் தந்தையை இழுத்து கொண்டு வேகமாக அவ்விடத்தை விட்டு ராபின் நகர முற்பட்டான்..

சட்டென்று தாகூரின் இடுப்பில் கடப்பாரையை வைத்த கிருஷ், "இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சே மவனே உன் அப்பனை போட்டு தள்ளிருவேன்.." என்று கண்கள் சிவக்க கூறியவனின் தலையில் ராஜனின் ஆட்கள் துப்பாக்கியை வைத்த சமயம் மகியின் ஆட்களும் அவர்களிடம் எகிற தொடங்கினர்..

வேகமாக நால்வரையும் அங்கிருந்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றுணர்ந்த மகி, "நகுலன் தனு அங்க தான் இருக்கா.. தூக்கிட்டு நீங்க வெளில போங்க.." என்று கத்த, "மகிமா நீ.." என்று தயக்கத்துடன் இழுத்த நகுலனை முறைத்தவள், "தயவு செஞ்சு தனுவை தூக்கிட்டு போங்க.." என்றாள் உச்சக்கட்ட கோவத்தில்..

மகி கூறியதை போன்றே பின்பக்க அறையில் இருந்த தனுவை தூக்கி கொண்டு வந்த நகுலனை ராஜனின் ஆட்கள் நெருங்கும் சமயம் படபடவென அவர்களின் உடம்பில் தோட்டாக்களை இறக்கிய மகி, "சீக்கிரம் வாங்க.." என்று நால்வரையும் அழைத்து கொண்டு வெளியில் ஓடினாள்..

இவர்களின் பின்னே மற்றவர்களை விடாமல் மகியின் ஆட்கள் பிடித்து சமாளித்திருக்க, நடப்பதை பார்த்து கடுங்கோவத்தில் இருந்த ராபின், "யோவ் எல்லாம் உன்னால தான்யா.." என்று ராஜனை எட்டி மிதித்து சட்டை கையை தூக்கி விட்டவன் தன் ஆட்களை அடித்து கொண்டிருந்த மகியின் ஆட்கள் மீது பாய்ந்தான்..

குறிப்பிட்ட தூரம் வெளியில் அவர்களை அழைத்து வந்து விட்ட மகி, "நீங்க நாலு பேரும் ஒன்னா போக வேணாம்.. நிகிலன் பிரதர் நீங்க ரியாவை கூட்டிட்டு ஒருபக்கம் போங்க.. ப்ளீஸ் இப்ப பேசற நேரம் இல்லை.." என்று இடுப்பில் சொருகி இருந்த ஒரு பில்டரை அவனின் கையில் திணித்தாள்..

"எங்களைய தவிர வேறு யாரு கண்ணுலயும் படாம பாதுகாப்பா இருங்க பிரதர்.. ஆபத்து வர்ற நேரத்துல தயங்காம சுட்டுருங்க.." என்ற மகி கூறியதும், "நீங்களும் கேர்புல் சிஸ்டர்.." என்றவன் மேலும் பேசி நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரியாவின் கரங்களை அழுத்தமாக பற்றி கொண்டு தென்பக்கம் ஓடினான்..

தூரத்தில் ஆட்கள் ஓடி வரும் அரவம் கேட்டு மற்ற இருவரையும் புதருக்கு மறைவில் இழுத்து சென்ற மகி, "நீங்களும் கவனமா இருங்க நகுலன்.. எனக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சா தனுவுக்கு எதுவுமாகாம பார்த்துக்கங்க.."

"இப்ப அவங்களோட குறி தனு மேல தான் இருக்கும்.. தனுவை பத்ரமா பார்த்துக்கங்க நகுலன் ப்ளீஸ் .." என்று குழந்தையின் தலையை தடவி விட்டு "நீங்களும் கவனமா இருங்க.." என்று தன் கையில் வைத்திருந்த பில்டரை குடுத்தாள்..

"ரிதிமா எதுக்கும் வெளில வந்தராத.." என்று அவளை அணைத்து விடுவித்த மகி, தனுவின் கழுத்தை சுற்றியிருந்த கர்சீப்பை எடுத்து முகத்தை மறைத்து கட்டினாள்..

அவளின் விழிகள் தனுவை பாசத்துடன் தீண்டி மீள, கலங்கிய கண்களை அவர்களிடம் காட்டி கொள்ளாமல், "தனுவை விட்டராத ரிதிமா.. நான் வரலனாலும்.." என்று அதற்கு மேல் அவளை கூற விடாமல் தடுத்த நகுலன், "கண்டிப்பா நீ வருவ மகிமா.. எனக்கு நம்பிக்கை இருக்கு.." என்றவனை லேசாக அணைத்து விலகிய மகி, கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்தி கொண்டாள்..

இருவரிடமும் கண்ணை காட்டி விட்டு சத்தம் வராதவாறு நகர்ந்து வேறு பக்கம் சென்ற மகி, அங்கு இவர்களை தேடி கொண்டிருந்த ஆட்களின் கண்ணில் படும்படி வேகமாக ஓடினாள்..

இவளை பார்த்ததும் அவள் ஓடும் திசையில் அடியாட்களின் தோட்டாக்கள் கணக்கின்றி பாய தொடங்க, "அய்யோ அக்கா.." என்று கத்த போன ரிதியின் வாயை மூடிய நகுலன், "மகிமா சொன்னது நியாபகம் இல்லையா? அவளுக்கு எதுவும் ஆகாதுடா.. நீ கத்தி தனுவை காட்டி குடுத்தராத.." என்றான் கண்டிப்புடன்..

அப்போதும் தெளியாமல் பயத்தில் கையை பிசைத்திருந்த ரிதியிடம், "நீ இப்ப வெளில போனாலும் மகிமாக்கு தான் ஆபத்துடா.. உன்னைய பார்த்ததும் அவங்க கிட்ட இருந்து எப்படி மகிமா தப்பிப்பா.. அவளோட எண்ணத்துல நீ மட்டும் தான் இருப்பே.." என்று சன்னக்குரலில் நகுலன் கூறிட, அது உண்மை என்பதால் ரிதியும் எதிர்வினை தரவில்லை..

கட்டுங்கடங்கா கோவத்துடன் தாகூரை மிதித்து கொண்டிருந்த கிருஷை பின்னால் இருந்து ராபின் தாக்க செல்ல, அவனை கத்தி தீண்டும் முன்னே எங்கிருந்தோ வந்த தோட்டா ஒன்று ராபினின் கையை பதம் பார்த்தது..




தாகம் தீரும்..

 

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 24(1)



தோட்டா எங்கிருந்து வந்தது என்று பார்க்கும் முன்னே கண்கள் சொருக வலியில் கையை பிடித்து கொண்டு அப்படியே ராபின் சரிய, "எப்பவும் பின்முதுகுல குத்த கூடாது.." என்று முணுமுணுத்தது ராபினை குறி வைத்திருந்த ஆடவனின் இதழ்கள்..

ராஜனின் ஆட்கள் தப்பித்து ஓடியதால் அவர்களை பிடிக்க மகியின் ஆட்களும் செல்ல, காததூரம் ஓடியிருந்த மகி, தன்னை துரத்தி வந்தவர்களை மூச்சுவாங்க பார்த்தாள்..

அவள் நின்றதுமே அவளை நோக்கி சுட்டவர்களின் தோட்டாக்களுக்கு தன் உடம்பில் இடம் குடுக்காமல் லாவாக பல்டி அடித்து மரத்தின் பின்னே ஒளிந்தவள், காலில் சொருகி இருந்த பில்டரை எடுத்து கொண்டு முன்னால் வந்து ரவுடிகளின் கரங்கள் துப்பாக்கியை அழுத்தும் முன்பே மகியின் தோட்டாக்கள் அவர்களை சாய்த்திருந்தது..

தன் கண்ணிற்கு அகப்பட்ட அனைவரையும் வீழ்த்தி விட்டு வேகமாக கிருஷை தேடி செல்ல, இருபதுக்கும் மேற்பட்ட ராஜனின் ஆட்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த பெண்மகள் வந்த திசையிலே மீண்டும் ஓடினாள்..

அவர்களிடம் சிக்காமல் போக்கு காட்டியபடி ஒவ்வொருவராக வீழ்த்திய மகி, மற்றவர்களின் கண்களுக்கு அகப்பட கூடாது என்பதற்காகவே அருகில் இருந்த நீர்வீழ்ச்சி வீழ்ந்திருந்த இடத்திற்கு மறைந்து செல்ல, இதனை ஒருவன் பார்த்து சத்தம் வராதவாறு சைகையிலே மற்றவர்களிடம் அத்திசையை காட்டினான்..

இருவர் மட்டுமே மகிக்கு தெரியாமல் அவளின் பின்னே சென்றவர்கள் அரவம் கேட்டு பெண்ணவள் சுதாரிக்கும் முன்பே அருகிலிருந்த பள்ளத்தில் தள்ளி விட்டனர்.. வேலை முடிந்தது என்று கிளம்பிய நேரத்தில் அங்கு வந்தவனை கண்டு "பாஸ் அந்த போலீஸ்காரியை முடிச்சாச்சு.." என்று குஷியுடன் கூறியவனின் பின்னே தலையை சாய்த்து பார்த்த ஆடவன் "திரும்பி பாருடா என் வெண்ணை.." என்ற ரீதியில் கையை காட்டினான்..

புருவ முடிச்சுடன் திரும்பிய அவ்விருவரின் விழிகளும் திகைப்பை தாங்கி கொள்ள, இடுப்பில் கை வைத்து ஏளன நகையுடன் நின்றிருந்தாள் மகி.. அவர்களின் திடீர் தாக்குதலில் நிலையற்று போனாலும் அருகிலிருந்த கொடியை சட்டென்று பற்றி கொண்டு மேலேறி இருந்தாள் பெண்ணவள்..

"பாஸ் போடுங்க அவளை சீக்கிரம் போட்டு தள்ளுங்க.." என்று ஒருவன் கத்த, "போட்டரலாமே!" என்று தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஒரு சுலற்று சுலற்றி துப்பாக்கியால் கத்தியவனின் தலையை பதம் பார்த்தான்..

இதில் மற்றொருவன் திகைத்து சட்டென்று அங்கிருந்து நகர முற்பட, அவன் கழுத்தை தன் கரங்கள் கொண்டு இறுக்கி பிடித்து "எப்பவும் பின்முதுகுல குத்த கூடாது.. குத்த கூடாதுனு எத்தனை தடவைடா சொல்றது.. ஒரு பொண்ணு கிட்ட நேரா மோத துப்பில்லயாடா பன்னாடை!!" என்று கர்ஜித்தது கிருஷ்.. விக்ரம் கிருஷ்.. மகியின் கிருஷே..

"பாஸ் நீநீநீங்.." என்று அவனின் முழுவார்த்தையை வெளி வர விடாமல் குரல் வளையை நெறித்திருந்த விக்ரம், "நான் யாருனு தெரிஞ்சுக்க அவ்ளோ ஆசையா?? ம்ம்ம் சாக தானே போறே.. கேட்டுட்டு சாகு.. அந்த போலீஸ்காரியோட புருசனே நான்தான்டா என் சிப்ஸு.." என்ற விக்ரம் கையை மடக்கி கழுத்தில் விட்ட ஒரு அடியில் அவனின் தலையை தொங்கி போனது..

அவனை அதே பள்ளத்தில் தூக்கி வீசிய விக்ரம், "இங்க என்ன ஷோ காட்டிட்டு இருக்கேனா? போ போய் மத்ததை பாரு.." என்று விரட்ட, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த மகி தாவி அணைத்து கொண்டாள்..

"மிஸ் யூ கிருஷ்.. கண்ணு முன்னாடி நீ இருந்தும் யாரோ மாதிரி கடந்து போறது ரொம்ப வலிக்குதுடா.." என்று பொங்கிய வேதனையுடன் கூறியவள் பின் நிதானித்து, "தனு நகுலன் கிட்ட இருக்கா.. நிகிலன் பிரதர் வேற பக்கம் ஓடுனாங்க.. அவங்களைய பாரு.." என்று விட்டு விலகிய பாவையின் தளிர் கரத்தை அழுத்தி பிடித்தான்..

அதிலே தன்னை சமன்படுத்தி கொண்ட மகி, விருட்டென அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து மற்றவர்களை தேடி சென்றாள்.. ராஜனின் ஆட்கள் காடு முழுவதும் ஓடியதால் ஆங்காங்கு துப்பாக்கி சத்தம் கேட்டவாறு இருக்க, மகிக்கு தான் எத்திசையில் செல்வது என்று புரியவில்லை..

தாகூரை பிடிப்பது சுலபம் தான்.. அதை போல் ராஜனை விக்ரம் பார்த்து கொள்வான்.. தான் போட்டு தள்ள வேண்டியது ராபினை மட்டும் தான்.. என்று அவனை தேடி செல்ல, எதிர்க்க வந்த ராஜனின் ஆட்களை சிறிதும் இரக்கம் காட்டாமல் சுட்டு தள்ளியவாறு நடந்தாள்..

ராஜனின் வலது கையாக இருந்தவர் முருகன்.. அவரை மகி முடித்து கட்டியதால் அவரின் இடத்திற்கு முருகனின் தம்பி முனீஸ்வரன் வந்திருந்தான்.. முருகனை போன்று இவனும் ராஜனிடம் விசுவாசமாக இருந்து அவரிடம் நற்பெயரை பெற்றதால் ராஜனும் கணக்கின்றி அவனுக்கு செலவு செய்வார்..

இவ்வளவு நாள் ராஜனின் கட்டளைப்படி விக்ரமுடன் இருந்தது இவன் தான்.. தன் ஐயாவை காணாமல் அவர் ஓடிய திசையில் தேடி கொண்டு வந்த முனீஸ்வரன் தூரத்தில் மகியின் ஆளை பார்த்ததும் கண்கள் சிவக்க, கீழே கிடந்த கட்டையை எடுத்து கொண்டு அவனிடம் ஓடினான்..

அவனின் கவனம் அனைத்தும் முன்னால் இருந்ததால் பின்னால் வந்த முனீஸ்வரனை கவனிக்க தவறியிருக்க, கட்டை ஆடவனை தொடும் முன்பே அறுவாள் ஒன்று அதனை தடுத்து நிறுத்தி இருந்தது..

தன்னை தடுத்த விக்ரமை பார்த்து, "சார் விடுங்க இதுல நம்ம தோத்தாலும் அந்த போலீஸ்காரி கடைசி வரைக்கும் தனியாளா தான் காலத்தை ஓட்டனும்.. என்ன தைரியம் இருந்தா நம்மளைய அழிக்க நினைப்பா.." என்று எகிறிய முனீஸ்வரன் விக்ரமை பேச விடாமல் தன் ஆட்களை அடித்து கொண்டிருந்தவனின் கையை பின்னால் மடக்கி பிடித்தான்..

"சார் சீக்கிரம் போடுங்க.. இவனை விட கூடாது.. அப்படி விட்டா நம்ம ஐயாவுக்கு துரோகம் செய்யறாப்புல மாறிரும்.." என்று அவசரப்படுத்த, சற்றும் திமிராமல் அப்படியே நின்றிருந்தவனை கண்டு, "பாவம் உன் ஆளு.. நீ இல்லாம துடிக்க போறதை பார்த்து நாங்க ரசிக்க போறோம்.." என்றான் நக்கலுடன்..

"என்ன சார் அப்படியே நின்னுருக்கீங்க.." என்று மீண்டும் விக்ரமை அவசரப்படுத்த, "இதோ.." என்று ரவுத்திரத்துடன் அறுவாளை தூக்கிய விக்ரம், "உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராதுடா.." என்று காட்டமாக கூறியபடி முனீஸ்வரனின் ஒரு கையை வெட்டினான்..

இதில் அலறி துடித்து கீழே விழுந்தவனிடம் இருந்து விலகி முன்னால் வந்த அவன், "என்ன சார் பொசுக்குனு இப்படி ஆகிருச்சு.. ப்ச் பாவம் தான் நீங்க.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அந்த போலீஸ்காரியோட புருசனே இவன் தான்.." என்றது வேறு யாருமில்லை தேவ் கிருஷ்ணாவே..

அந்த வலியிலும், "அப்ப நீநீ.." என்று தடுமாறியபடி முனீஸ்வரன் வினவ, "ஹஹஹ மகியை விட்டு என்னைய துரத்தனும்னு நீங்க பிளான் பண்ணி.. என் அப்பாவை கடத்தி.. என்னைய ப்ளாக்மெயில் செய்ததுல பயந்துட்டு ஊரை விட்டு ஓடி போனேனு நீங்க நினைச்சுட்டு இருக்கற அந்த போலீஸ்காரன் தான் நானு.." என்றான் கேலியுடன்..

"ஐயாவை ஏமாத்திப்புட்டிக விட மாட்டேன்.." என்று மற்றொரு கையை அசைத்து கூறிய முனீஸ்வரன் எழுந்து ஓட, ஒரே எட்டில் தாவி அவனை பிடித்திருந்த தேவ், "என்னயா உன்னைய ஓட விட்டு நாங்க வேடிக்கை பார்த்துட்டு நிற்போம்னு நினைச்சீயா?" என்று காய, அழுத்தமான நடையுடன் அவரை நெருங்கிய விக்ரமை காணாவே அவனுக்கு பயமாக இருந்தது..

முனீஸ்வரனை விக்ரம் நெருங்கும் சமயத்தில் ராஜனின் ஆட்கள் நான்கைந்து பேர் தேவ்வை தாக்க செல்ல, அவர்களையும் வெட்டி வீழ்த்தியவன் முனீஸ்வரனின் கழுத்தில் அறுவாளை வைத்து, "பின் முதுகுல குத்ததே குத்ததேனு நான் சொல்லிருக்கேனல்ல..? ஆனா திருப்பி திருப்பி அந்த தப்பையே தான் நீ பண்ணிட்டு இருக்கே.."

"உங்க ஐயா தியாகி பாரு அவரை நான் ஏமாத்தே.. அவரு பாவிடா பெரிய பாவி.. பல உயிர்களை காவு வாங்குன பாவிடா.." என்று ஆக்ரோஷமாக விழிகள் சிவக்க கத்தியவன் அறுவாளை மறுகையால் ஓங்கி குத்த போக, பட்டென்று தன் நண்பனின் கையை பிடித்திருந்தான் தேவ்..

"டேய் ஏன்டா இப்படி?" என்று அவன் பதற, "இந்த பன்னாடை தான்டா அங்க இருக்கறப்ப என்மேல சந்தேகமா இருக்கு சந்தேகமா இருக்குனு ராஜனை உசுப்பேத்திட்டு இருந்துச்சு.. அப்பவே போட்டு தள்ளிருப்பேன்.."

"அதனால வேற பிரச்சனை வர கூடாதுனு அமைதியா இருந்தேன்.. அப்பவும் இந்த பரதேசி விடாம ராஜன் கிட்ட போட்டு குடுத்ததுல என் ரவுடிக்கு எதிரா நானே சிலபல வேலையை செஞ்சுட்டேன்.."

"அந்த ஆத்திரம் இன்னும் போகலடா.." என்று இறுகிய முகத்துடன் விக்ரம் கூறிட, மரணபயத்தில் இருந்த முனீஸ்வரன் "வேணாம் வேணாம்" என்று அச்சத்தில் ஒற்றை கையை அசைப்பதை பொருட்படுத்தாமல் அறுவாளை ஓங்கி குத்த, அது அவனின் கழுத்தில் ஆழப்புதைந்து உயிரை காவு வாங்கியது..

"மச்சான் டேய்.. இந்தளவுக்கு வெறி வேணாம்டா.. இவனுக கிட்ட அடி வாங்குன நானே இப்படி ஆடலடா.. நீ என்னடானா இப்படி பண்றே?" என்று தேவ் கதற, "ப்ச் புலம்பறதை விட்டுட்டு போய் அந்த ராஜனை பிடிச்சு வெய்யு அவன் தான் எனக்கு ரொம்ப முக்கியம்.." என்ற விக்ரமை முறைத்தவன், "அவரு உன் மாமனாராக்கும்.." என்றான் இதழோர சிரிப்பில்..

அவனை முறைத்தபடி அகன்ற விக்ரம், நியாபகம் வந்தவனாக திரும்பி "டேய்.. நகுலனையும் நிகிலனையும் பார்த்தா பாதுகாப்பா அனுப்பி விடுடா.. அவங்க கிட்ட தான் தனு இருக்கா.." என்று கத்த, "ம்ம்ம் நான் பார்த்துக்கறேன்.." என்றவாறு அவர்களை தேடி சென்றான் தேவ்..

தன் ஆட்களில் பாதிபேர் சுடப்பட்டு அங்குமிங்கும் கிடப்பதை பார்த்தவாறே குருதி வழிந்த கையை கர்சீப்பால் கட்டியபடி வந்த ராபின் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் வழியெங்கும் கவனமாக பார்வையை பதித்து வந்தான்..

தன் தந்தையை காணாமல் பல இடங்களில் தேடியவன் பின்பு நானாவது இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற முடிவுடன் பொடிநடையாகவே பாதி தூரம் வந்திருந்தான்.. அங்கிருந்து யாரும் தப்ப கூடாது என்பதற்காகவே அனைத்து காரின் சாவிகளை முதலிலே எடுத்து விட்டிருந்தான் விக்ரம்..

இது புரியாமல் ராபினோ இதுவும் மகியின் வேலை தான் என்று அவளை வசைபாடியபடி நடந்து சென்றிருந்த நேரம் எங்கிருந்தோ குழந்தையின் அழுகுரல் கேட்டது.. "இது இது அந்த பேபியா இருக்குமோ?.." என்று தீவிரமாக சிந்தித்த ராபின் "எஸ் அதுவா தான் இருக்கும்.." என்று குரல் வந்த திசையில் சென்றான்..

நகுலனிடம் இருந்த தனு தான் திடீரென்று வீறிட்டு அழுக தொடங்கி இருக்க, இருவரின் சமாதானத்தையும் ஏற்காமல் விடாமல் அழுதது குழந்தை.. அதே சமயம் ராபினை தேடி வந்த மகியின் செவியில் தனுவின் அழுகுரல் கேட்க, "இது தனுவோட குரலாச்சே!" என்று பதறலுடன் அத்திசையை நோக்கி ஓடினாள்..

குழந்தையை சமாதான படுத்துவதில் கவனமாக இருந்த இருவரும் தங்களை நோக்கி வரும் ராபினை கவனிக்க மறந்திருக்க, அவர்களை நெருங்கிய சமயத்தில் தான் யாரோ வருவதை போல் உணர்ந்த நகுலன் அவ்விடத்தை விட்டு நகர முற்பட, அவனின் முன்னே வந்து நின்ற ராபின் புருவ முடிச்சுடன் அவர்களை ஏறிட்டான்..

"பேபியை குடுத்துட்டு நீங்க கிளம்புங்க.." என்று தனுவை தூக்க முயன்ற ராபினின் கையை தட்டி விட்ட நகுலன், "ஒழுங்க இங்கிருந்து போய்ரு.. இல்ல உயிரோடு இருக்க மாட்டே.." என்று எச்சரிக்க, "அதையை நான் தான் முடிவு பண்ணனும் மேன்!" என்றவாறு நகுலனின் கழுத்தை நெறித்தான்..

"விடுடா அவனை விடு.." என்று ரிதி தன்னவனின் கழுத்தில் இருந்து அவனின் கரங்களை எடுக்க முற்பட, அவளால் அதையை அசைக்க கூட முடியவில்லை.. நகுலனின் கண்களும் சொருகி தொடங்கிய நேரத்திலும் தனுவை விடாமல் தன்னோடு இறுக்கி பிடித்திருந்தான்..

இதில் பயந்து போன ரிதி, அடிக்க ஏதாவது கிடைக்குமா? என்று பார்வையை சுழல விட்டவளின் விழிகளில் சிக்கியது கத்தி ஒன்று.. வேகமாக சென்று அதை எடுத்ததும் எங்கிருந்து தான் அத்தனை பலம் அவளுக்கு வந்ததோ.. பயத்தில் சிவந்திருந்த பெண்ணவளின் முகம் இப்போது கோவத்தில் சிவந்திருக்க சீற்றலுடன் ராபினின் கையை கிழித்திருந்தாள்..

அப்போதும் கையை மட்டும் உதறிய ராபின் மற்றொரு கரத்தால் நகுலனை விட்டு விட்டு தனுவை பிடித்து விட, இதில் சப்த நாடியும் ஒடுங்கி போனது ரிதிக்கு.. இருந்தும் பயத்தை வெளி காட்டாமல், "ஒழுங்க கையை எடுத்துரு இல்ல அவ்வளவு தான்.." என்றாள் மிரட்டலுடன்..

"என்ன பண்ணுவே? இல்ல தெரியாம தான் கேட்கறேன் என்ன பண்ண முடியும் உன்னால?" என்று அலட்சியத்துடன் தனுவை இழுக்க முற்பட, நகுலனும் குழந்தையை விட்டு விடாமல் இருக்க அவனுடன் போராட, இருவருக்கும் இடையில் மாட்டி கொண்ட குழந்தை தான் வீறிட்டது..

இப்போது தான் அவனை குத்தினாலும் தனுவை இடையில் இழுத்து விட்டால்..? என்று நினைக்கும் போதே ரிதிக்கு துடிக்கும் இதயம் நின்று விடுவது போல் இருந்தது.. என்ன செய்வது என்று புரியாமல் முழித்திருந்த நேரத்தில் தூரத்தில் வந்த மகியை கண்டதும் தான் போன உயிரே திரும்பி வந்தது..

வந்த வேகத்தில் ராபினை உதைத்து தள்ளிய மகி பத்ரகாளியாக அவனின் முன்பு நிற்க, அந்த சமயத்திலும் அலட்சியத்துடன் எழுந்த ராபின், "பாருடா மேடம் வந்துட்டாங்க.." என்று நக்கலாக கூறியவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனுவை குறி வைத்தான்..

அப்போதும் மகி அசராமல் தெனாவட்டாய் ராபினை நோக்க, "மொத்தமா போட சொன்னோம் ஆனா இது மட்டும் தப்பிச்சுருச்சு.. இப்பவும் இதைய எப்படி விடறது.." என்றான் ஏளன நகையுடன்..

"அதானே உன் அப்பனையும் போட்டு தள்ளியாச்சு.. இங்கிருந்த அத்தனை பேரையும் பாதுகாப்பா கூட்டிட்டு போயாச்சு.. நீ மட்டும் எதுக்கு இருக்கனும்.." என்று யோசிப்பது போல் பாவ்லா காட்டிய மகியின் கூற்றில் உண்மையிலே திகைப்புற்றான் ராபின்..

"ஏய் ஏய் என்ன சொல்றே? உன்னைய.." என்று சீறி கொண்டு வந்தவனின் கைகளை அழுத்தி பிடித்த பெண்மகள், "நகுலன் நீங்க போங்க.." என்று பல்லை கடித்து கூறியதில் விருட்டென ரிதியை இழுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்..

மகியை தள்ளி விட்டு அவனின் பின்னே செல்ல போன ராபினின் கையை பின்னால் மடக்கி கையை இனி அசைக்க முடியாதவாறு தோள்பட்டையில் விடாமல் குத்தினாள்..

துள்ளி கொண்டு கீழே விழுந்தவனை கண்டும் மகியின் கோவம் அடங்காமல் அவனை மிதிக்க போக, சட்டென்று மகியின் காலை மறுகையால் பிடித்தவன் தூக்கி எறிய, இதில் மகியோ மரத்தில் மோதி விழுந்தாள்..

பின்னந்தலை மரத்தில் மோதியதில் தலை வேறு சுள்ளென்று வலி எடுக்க தொடங்க, இமைகளை பிரித்தெடுத்து கையை ஊன்றி மெதுவாக எழுந்து நின்றாள் மகி.. "கமான் கமான்.." என்று நக்கலுடன் அழைத்தபடி நின்றிருந்தான் ராபின்..

அவனின் கட்டுமஸ்தான உடல் இப்போது விறைத்து நிற்க, விடாமல் செய்த உடற்பயிற்சியின் விளைவாக மகி அடித்த கையையும் ராபின் அசைத்திருக்க, தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தி கொண்ட மகி அவனை சிவந்த விழிகளுடன் பார்த்தாள்..

"பாப்பா.. பலம் அது நம்ம உடல்ல இல்ல அது நம்ம மனசுல தான்டா இருக்கு.. முடியும்னு நினைச்சா கண்டிப்பா முடியும்.. முடியாதுனு நினைச்சா நம்மளால எதுவும் பண்ண முடியாதுடா.." என்று எப்போதும் ரகுபதி கூறும் வாக்கியங்கள் மங்கையவளின் காதில் எதிரொலிக்க, மென்மையாக புன்னகைத்து கொண்டாள்..

தன்னவனும் தன்னருகில் இருப்பது போல் மனதினுள் தோன்ற, கருவிழிகளை நான்கு திசையிலும் சுழல விட்டவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் கிருஷும் சற்று தள்ளி நின்றிருந்தான்..

அவனையே ஓரிரு விநாடிகள் பார்த்த மகி, இப்போது பார்வையை மாற்றி தன்னை தாக்க வந்த ராபினின் காலை நகங்கள் பதியும் அளவிற்கு அழுத்தி பிடித்து மறுகரத்தால் வயிற்றில் ஒரு குத்து விட்டாள்..

ராபினும் அவ்வளவு சாதாரணமானவன் இல்லையே.. மகியிடம் ராபின் வாங்கிய அடியை விட, ராபினிடம் மகி வாங்கி அடிகள் தான் அதிகமாக இருக்க, வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அவனுடன் சரிசமமாக நின்றிருந்தாள்..

ஒரு கட்டத்தில் அத்தனை ஆக்ரோஷத்துடன் ராபினை அடி வெளுத்தவள், இதற்கு மேலும் விட கூடாது என்று படபடவென்று அவனது முட்டியில் தோட்டாக்களை பாய்ச்சினாள்..

ராபினின் அலறல் காடு முழுவதும் எதிரொலித்து இருந்த ஓரிண்டு பறவைகளும் வானை நோக்கி பறந்து செல்ல, "த்து வெக்கமா இல்லையாடா உங்களுக்கு எல்லாம்.. உன்னைய பெத்தவளும் பொண்ணு தானே.. பணத்துக்காக குழந்தைகளை இப்படி பண்ணிட்டு இருக்கே.."

"பார்ப்போம் அந்த பணம் உன்னைய காப்பாத்துதானு.." என்று இன்னும் அடங்காமல் திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிந்த சினத்துடன் துப்பாக்கியை உயர்த்த, பட்டென்று அவளின் கையை விக்ரம் பிடித்திருந்தான்..

"வி..வி..க்ரம்.." என்று திக்கி திணறி வலியுடனே அழைத்த ராபின், அவளை விடாதே என்பதை போல் கண்ணை காட்ட, நக்கல் பொதிந்த சிரிப்பை இதழில் தாங்கிய விக்ரம் தன்னவளின் கரங்களில் தவழ்ந்திருந்த துப்பாக்கியை வாங்கி அவனை குறி வைத்து நீட்டினான்..

"உனக்கு இன்னுமா புரியலயா? இவன் உன்னைய இங்க வர வெக்கறதுக்கு தான் அவன் மாமா ராஜன்கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சிருந்தான்.. சொல்லபோனா என்னோட கிருஷே இவன் தான்டா வெண்ணை.. அதே உங்களால கண்டுபிடிக்க முடில.. த்து.."

"உங்களோட அத்தனை இல்லீகல் பிஸ்னஸோட டீடெய்ல்ஸ் சேர்ந்த ஆதாரம் அத்தனையும் ஆந்திரா போலீஸுக்கு போயாச்சு.. இன்னேரம் உன்னோட அத்தனை இடத்துக்கும் சீல் வெச்சுருப்பாங்க மிஸ்டர்.. அண்ட் உன் மனைவி.. அம்மா.. மாமானு எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணிருப்பாங்க.."

"இத்தனையும் பண்ணுனது இவன் தான்.. நான் இல்ல.. கொஞ்சம் கூடவா இவன் மேல உங்களுக்கு சந்தேகம் வரல.. சோ சேடு.." என்று கடையோர கேலி புன்னகையில் முடித்தாள் விக்ரமின் ரவுடி..

இதில் பல்லை கடித்து பேச வந்த ராபினை தடுத்த விக்ரம், "ஒரு உண்மையை ஜெயிக்க வெக்க எத்தனை குறுக்கு வழில போனாலும் தப்பே இல்ல மிஸ்டர்.." என்றான் தோளை குலுக்கியபடி..

"உன்னைய இப்பவே பரலோகம் அனுப்பலாம்னு தான் நினைச்சேன்.. அதனால நீ செஞ்ச எதுவும் இல்லனு ஆகிராது.. இத்தனை பெரிய பாவம் பண்ணிட்டு எப்படி சாதாரணமா உன்னைய அனுப்பி வெக்க முடியும்.. அது தப்பு தானே ரவுடி.." என்று மகியிடம் வினவ, "ம்ம்ம் ஆமா கிருஷ் அது ரொம்ப பெரிய தப்பு.." என்றவள் புருவத்தை மேலேற்றி இறக்கினாள்..

நெற்றியை இரு விரல்களால் தேய்த்து பின்பு நிமிர்ந்த விக்ரம், "நீ உயிரோடு இருக்கனும் ஆனா எதுக்கு இருக்கோம்னு நீ வருத்தப்படனும்.. உன்னோட தேவைக்கு அடுத்தவங்களைய தான் நாடனும்.. அதுவும் வாய்வழியா இல்லாம சைகைல.. அதுவும் சாவு எப்ப வரும்னு நீ ஏங்கி ஏங்கி தவிக்கனும் மிஸ்டர்.." என்றவனை திகிலுடன் பார்த்தான் ராபின்..
 

T21

Well-known member
Wonderland writer
இதழை பிரித்து சத்தமாக சிரித்த விக்ரம், பின்பு நரம்புகள் புடைக்க கீழே கிடந்த அறுவாளை எடுத்தவன் ராபின் சுதாரிக்கும் முன்பே இரு கைகளும் வெட்டியிருந்தான்.. உடம்பில் இருந்து பிரிந்து தனியாக கிடந்த கரங்களை பார்த்து ராபின் கதற, "இப்படி கத்தறதுக்கும் வாய் இருக்க கூடாது.." என்று ஆவேசத்துடன் அவனிடம் நெருங்கிய தன்னவனை இழுத்து பிடிக்க முயன்ற மகி தோற்று போனாள்..

பெண்ணவள் இழுப்பதையும் பொருட்படுத்தாமல் ராபினின் நாக்கையும் வெட்டிய பின்பு தான் விக்ரமின் கோவம் சிறிது மட்டு பட்டது.. "ப்ச் கிருஷ்.." என்று மகி கடுகடுக்க, அவளை சலனமின்றி பார்த்தது விக்ரமின் விழிகள்..

தனக்கு இனி யாருமில்லை
என்றிருந்த நேரத்தில் பாசத்தை கணக்கின்றி குடுத்தவர்களை இழந்து இத்தனை வருடம் எதனையும் வெளி காட்டி கொள்ளாமல் இருந்தவனால் இன்று அவ்வளவு எளிதாக தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை..

ஆடவனின் மனநிலையை இவளும் உணர்ந்து கொண்டதை போல் "இவனை போட்டு தள்ள கூட ஆர்டர் வந்துருக்கு கிருஷ்.. விடு விடு.." என்று கண்சிமிட்டி கூறிய தன்னவளை இறுக்கமாக அணைத்து கொண்டவனின் விழியோரத்தில் நீர்துளிகள் கசிந்தது..

 

T21

Well-known member
Wonderland writer
பகுதி - 24 (2)



முதலிலே காவல் துறைக்கு கூறி விட்டதால் அவசர ஊர்தியின் சத்தம் அந்த காடு முழுவதும் எதிரொலித்தபடி இருந்தது.. இறந்து கிடந்தவர்களையும் உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்தவர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி வண்டியில் ஏற்றினர்..

தேவ் அடித்த அடியில் எந்திரிக்க முடியாமல் கிடந்த தாகூரை ராஜன் தான் காப்பாற்ற வர, அவரோ இத்தனைக்கும் காரணம் இவன் தான் என்றெழுந்த கோவத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்த கத்தியை எடுத்து ராஜனின் காலில் சொருகினார்..

"அம்மா.." என்று ராஜன் அலறி துடித்ததை கண்டு அப்போதும் தாகூருக்கு வெறி அடங்காமல் மீண்டும் அவரின் காலை பதம் பார்க்க கத்தியை கொண்டு போக, சுதாரித்த ராஜன் கத்தியை ஒரு இழுப்பில் அவரிடம் இருந்து பிடுங்கி விட்டார்..

"உன்னைய காப்பாத்தலாம்னு வந்தா என் உயிரை எடுக்க பார்க்கறீயா?" என்று அடங்காத சினத்தில் தாகூரை நார்நாராக கத்தியால் கிழித்து விட்டு அவர் உயிர் பிரிந்ததை கூட அறியாமல் மூர்க்க தனத்துடன் தாக்கியபடி இருந்தார்..

ஒரு கட்டத்தில் தன் மனது அமைதியடைய, அப்படியே கத்தியை போட்டு விட்டு ரத்தம் வழிந்த காலை ஊன்றியபடி அங்கிருந்து அகன்றார்.. "விக்ரமுக்கு என்ன ஆனதோ? அவனை பார்த்து விட்டால் எப்படியாவது தன்னை காப்பாற்றி விடுவான்" என்ற நட்பாசையில் யார் கண்ணிலும் படாமல் மெதுமெதுவாக நடந்தார்..

பாவம் இவர் அறியவில்லை அவன் தான் இவரின் உயிரை எடுக்க இரையை தேடும் புலியாய் அலைந்து கொண்டிருப்பதை!!

ராஜனை தேடி வந்த தேவ் காலை ஊன்றியபடி இவர் நடந்து செல்வதை பார்த்து, அவர் அறியாதவாறு அடிமேல் அடி வைத்து அவரை நெருங்கியவன் அவரின் தோளை தட்டி விட்டு நொடி நிமிடத்தில் முன்னால் வந்து நின்று விட்டான்..

என்னவோ ஏதோவென்று பதறி திரும்பிய ராஜன் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை யாரும் இல்லாததை உணர்ந்ததும் தான் அவராக சீராக மூச்சு விட முடிந்தது.. "அதானே யாரு வருவா?" என்று நினைத்து கொண்டு திரும்பியவருக்கு இதயமே வெளியில் வந்து விடுமளவிற்கு துடித்தது..

தேவ் தான் கைகளை கட்டி கொண்டு அவரையே பார்த்திருக்க, அச்சத்தில் குப்பென்று வியர்த்த வேர்வை துளிகளை துடைக்கும் தைரியமின்றி படபடத்த உடம்புடன் அவனை பார்த்த ராஜனுக்கு உயிர்பயம் வந்து போனது.. அவர் தான் இவனை மகியின் கிருஷ் என்று நினைத்து கொண்டிருக்கிறாரே!!

ஒருமுறை மகியின் மீது தன் ஆட்கள் கை வைத்ததிற்கே நேரில் வராமல் இருக்கும் இடத்தில் இருந்தவாறு அவர்களின் உயிரை பறித்ததை இவர் எப்படி மறப்பார்? தன் வலது கையாக இருந்த முருகனை கொன்று கூட இவனே என்று தான் ராஜன் இன்று வரை நினைத்து இருக்கிறார்.. ஆனால் நிஜத்தில் முருகனை கொன்றது மகி தான்..

"என்ன ராஜன் சார் பயந்து ஓடறீங்களா?" என்று நக்கலுடன் வினவியவனை முறைக்க தான் நினைத்தார்.. ஆனால் பயத்தில் வேர்வை துளிகள் ஊற்றெடுக்க, தொண்டை வரை வந்த வார்த்தைகள் அதற்கு மேல் வராமல் சதி செய்து அவரை இம்சித்தது..

தூரத்தில் விக்ரம் வருவதை இவரின் விழிகள் கண்டு விட்ட பிறகு தான் பயமே முற்றிலும் தொலைந்து போக, இப்போது அவரின் பார்வை நக்கல் தோணியில் வெளி வந்தது.. அதனை தேவ் கண்டு கொண்டாலும் வெளி காட்டி கொள்ள விருப்பம் இல்லாமல், "ராஜன் சார் உங்களைய போட்டு தள்ளுனதே தாகூர் தான் தெரியுமா?" என்றவாறு துப்பாக்கியை சரியாக அவரின் நெற்றியை பார்த்து குறிவைத்து பிடித்தான்..

விக்ரம் அவர்களை நெருங்கியதும், "விடாத மாப்ளை இவனை.. இவ்வளவு நாளு விட்டு வெச்சதே தப்புதான்.." என்று கத்த, முதலிலே விக்ரம் தங்களிடம் வருவதை உணர்ந்திருந்த தேவ், சாவகாசமாக திரும்பினான்..

வந்ததுமே தேவ்வின் கையில் இருந்த துப்பாக்கியை விக்ரம் பிடுங்கி இருக்க, "சீக்கிரம் போடு மாப்ளை" என்று அவர் கத்துவதை காதில் வாங்காதவன் போன்று, "டேய் எருமை சாருக்கு அவ்ளோ சீக்கிரத்துல சாவை குடுக்கறது ரொம்ப தப்புடா.." என்றான் கடுமையான குரலில்..

இதில் பே வென்று ராஜன் முழிக்க, அவரின் பாவனையில் பொங்கிய சிரிப்பை அடக்கிய தேவ், "ஹலோ ராஜன் சார் அந்த போலீஸ்காரியோட புருசனே இவன் தான்.. இதைய கூட கண்டுபிடிக்காம கடத்தல் வேலை பண்ணிட்டு இருக்கீங்க.. இதுல நீங்க ரவுடினு பெருமையா பீத்திக்கறது.." என்றிட, ராஜனின் கண்கள் திகைப்புற்று விக்ரமின் மீது படிந்தது..

"என்ன ராஜன் சார் இப்படி பார்க்கறீங்க?" என்று புருவமுடிச்சுடன் வினவிய விக்ரமை அனல் தெறிக்கும் பார்வையில் பார்த்த ராஜன், "இப்படி ஏமாத்துவேனு நான் நினைக்கலடா.. உன்னைய தூக்கி வளர்த்துனதுக்கு தான் இந்த தண்டனையா?" என்று சலனமின்றி கேட்க, அவர் ஏதோ பெரிய ஜோக் அடித்தை போல் கைதட்டி நகைத்தான் விக்ரம்..

"தூக்கி வளர்த்துனதா? அது எப்போ நடந்துச்சு? என் அப்பாகிட்ட இருந்து அம்மாவை பிரிச்சு உன்கூடயே வெச்சதை சொல்றீங்களா? இல்ல என் அப்பா செத்ததுக்கு அப்பறம் அத்தனை பேரு இருந்தும் காய்ச்சல்ல தனியாளா கிடந்ததை சொல்றீங்களா?"

"இதுவும் இல்லனா என்னைய தனசேகர் மாமா கூட்டிட்டு போறப்ப சனியன் போய் தொலைட்டும்னு அம்மாகிட்ட சொன்னதை சொல்றீங்களா? எதுனு நீங்க நியாபகப்படுத்தி விட்டா நல்லா இருக்கும் ராஜன் சார்.." என்று நக்கலுடன் விக்ரமின் வார்த்தைகள் வந்தாலும் அவன் இருந்தது என்னவோ இறுகி போன முகத்துடன் தான்..

"இதைய எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுருவேன்.. ஆனா என் தேவிகா அத்தையையும் ஷார்மி பாப்பாவையும் கொன்னதை மட்டுமே மன்னிக்கவே மாட்டான்.. உன் தம்பி மக உனக்கும் மக தானே.. அநியாயமா அவளை கொன்னுருக்கே?"

"அப்ப ஆரம்பிச்சுச்சு என்னோட வெறி.. உன்னோட சாவு என் கைல தான் இருக்கனும்னு முடிவு பண்ணுனது அதுக்காக இவ்ளோ நாள் காத்து கிடந்தேன்.. ஆனா அவ்ளோ சீக்கிரத்துல உனக்கு சாவை குடுத்தற மாட்டேன்.." என்று உள்ளுக்குள் கொழுந்து விட்டு எரிய தொடங்கிய கனலுடன் கத்தினான்..

ராஜனுக்கு உயிர்பயம் வந்த போதும் இதனால் தன் மகளின் வாழ்க்கை கேள்வி குறியாகி விடுமோ என்ற அச்சத்தில், "மாப்ளை எனக்கு என்ன தண்டனை வேணுனாலும் குடுங்க நான் மனசார ஏத்துக்கறேன்.. ஆனா நேத்ரா பாவம்.. அவளுக்கு இதைய பத்தி எதுவும் தெரியாது.. நீங்க கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா அவளோட வாழ்க்கையே வீணாகிரும் மாப்ளை.."

"உங்களைய கெஞ்சி கேட்டுக்கறேன் என் பொண்ணை ஏத்துக்கங்க அவ உங்களைய தான் கணவனா நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கா.." என்று வலியையும் பொருட்படுத்தாது கெஞ்சிய ராஜனை பார்த்து நகைத்த இருவரும், "பாருடா சாருக்கு புள்ள பாசம் ஆறா ஓடுது.." என்றான் கேலியுடன்..

"மிஸ்டர் ராஜன் அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. என் மனசுல என் ரவுடி மட்டும் தான் இருக்கா.. இனியும் இருப்பா.. நானும் அவளை நினைச்சுட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.."

"சொல்லபோனா உங்க பொண்ணுக்கு கூட இது தெரியுமே? அவளும் உங்ககிட்ட நடிச்சு தான் இருக்கா.." என்று நிறுத்தியவன், "உங்க மாப்ளை நான் இல்ல இதோ இவன் தான்.." என்று தேவ்வை கைகாட்டினான்..

"அடேய் இவருக்கு மாப்ளை ஆகனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? புள்ள பார்க்கவும் நல்லா இருக்கு.. எது சொன்னாலும் நம்புது.. ஒரு மூணு, நாலு மாசம் வாழ்ந்துட்டு துரத்தி விட்டறது தான்.."

"அப்பறம் அம்மா பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு புள்ள குட்டினு செட்டில் ஆகிரலாம்.." என்று சாதாரணமாக தேவ் கூற, இதனை கேட்டதும் பொங்கி விட்டார் ராஜன்..

"டேய் உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடா.. அவளுக்கு குழந்தை மனசுடா அவளை போய்.. ச்சை நீயெல்லாம் மனுசனே இல்ல.." என்று உச்சக்கட்ட கோவத்தில் கத்த, அசட்டையுடன் காதை தேய்த்த தேவ், "யோவ் உன் புள்ளைக்கு வர்றப்ப மட்டும் வலிக்குதோ? உனக்கே முதல்ல மனசாட்சினு ஒன்னு இல்ல இதுல என்கிட்ட எகிறிட்டு வர்றீயா?" என்றான் சினத்துடன்..

தங்களை நோக்கி யாரோ வரும் அரவம் கேட்டதும், "மச்சி இவரை அப்பறம் பார்த்துக்கலாம்.. என்ன சொல்லனும்னு தெரியும் தானே?" என்று அவசரமாக கூறிய விக்ரம், கத்த போன ராஜனின் வாயை மூடியவாறு இழுத்து கொண்டு மறைவிடத்திற்கு ஓடினான்..

உடனே தேவ்வும் காலை பிடித்து கொண்டு கீழே விழுந்து, முகத்தை சுருக்கி வலியில் முணுங்குவது போல் நடித்திருக்க, இவர்களை தேடி வந்தது போலீஸ் ஆட்கள் தான்.. தேவ்வை அப்படி கண்டதும் "சார் என்ன ஆச்சு?" என்று பதறிபோய் வினவினர்..

"அந்த ராஜன் தான் கத்தில என் காலை கிழிச்சுட்டு தப்பிச்சு எங்கையோ ஓடிட்டான்.. அவரு தான் தாகூரையும் கொலை பண்ணுனதை நம்ம ஆள் ஒருத்தன் பார்த்துருக்கான்.." என்று திக்கி திணறி கூறிய தேவ்வின் முகத்தில் அப்பாட்டமாக நடிப்பு மேலோங்கி இருந்தும் வந்தவர்களால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் போனது..

"அவரை நம்ம ஆளுக தேடி கண்டுபிடிச்சுருவாங்க நீங்க வாங்க சார்.." என்று கைதாங்கலாக அவனை அழைத்து கொண்டு மற்றவர்கள் நகர, புதர்மறைவில் இருந்து தன்னையே பார்த்திருந்த விக்ரமிடம் "சக்சஸ்" என்று கண்ணடித்து ஒற்றை விரல் நீட்டி காட்டியவன் மீண்டும் தன் நடிப்பினை தொடர்ந்தவாறு அவர்களுடன் சென்றான்..

இத்தனையும் பார்த்த ராஜனுக்கு பயப்பந்து உருள தொடங்க, சிறிதும் இரக்கம் கட்டாமல் அவரை இழுத்து கொண்டு தன் இடத்திற்கு விரைந்தான்..

ராபினை தன் ஆட்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பிய நேரம் நிகிலனையும் ரியாவையும் இருவர் அழைத்து வந்தனர்.. ரியாவின் கைகளில் சிறிது ரத்தம் துளிர்த்திருக்க, நிகிலனோ திக்பிரம்மையில் உறைந்திருந்தவன் போன்று அகன்ற விழிகளுடன் நின்றிருந்தான்..

"மேடம் இவங்க உங்க கூட வந்த ஆள்தானே?" என்று அழைத்து வந்தவன் கேட்டதற்கு ஆம் என்று தலையசைப்பை மட்டும் குடுத்த மகி, "ரியாமா என்னடா ஆச்சு?? ரத்தம் வேற வந்துருக்கு?" என்று பதறி துடிக்க, "எதுவும் இல்ல அக்கா.. நாங்க மறைஞ்சிருந்த நேரத்துல ஒருத்தன் குத்த வந்துட்டான் அதுதான்.. பெரிய காயம் எல்லாம் இல்லை.." என்றாள் சாதாரணமாக..

"ப்ச் நான்தான் கவனமா இருக்க சொன்னேன்ல.." என்று உரிமையுடன் இருவரையும் அதட்டியவள், "இவங்களைய சீக்கிரம் கூட்டிட்டு போய் முதலுதவி பண்ணி ரத்தத்தை கட்டுப்படுத்துங்க.." என்று அழைத்து வந்தவர்களுடனே இருவரையும் அனுப்பி விட்டாள்..

அதன்பின் நகுலன் ஓடிய திசையில் அவர்களை தேடி சென்ற மகி, சிறிது தூரத்திலே அவர்கள் ஓரிடத்தில் இருப்பதை கண்டு விட, தன் தமக்கையை பார்த்தும் ஓடி வந்து அணைத்து கொண்ட ரிதி கண்ணீர் வடித்தாள்..

"ஹே ரிதிமா எதுவும் இல்ல.. நீ சொன்ன மாதிரி எல்லாமும் சரியா முடிஞ்சிருச்சு.." என்று அவளின் கன்னத்தை மகி கிள்ள, தனுவை அவளிடம் நீட்டிய நகுலன், "நீ சொன்ன மாதிரி உன் பொண்ணை உன்கிட்டயே பத்ரமா ஒப்படைச்சுட்டேன் மகிமா.." என்றான் புன்னகையுடன்..

"அதே மாதிரி என் தங்கச்சியையும் உங்க கிட்ட பத்ரமா ஒப்படைச்சுட்டேன் நகுலன்.. இனி அவளை பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.." என்று ரிதியின் கரங்களை அவனிடம் குடுத்த மகி தனுவை முத்தமிட்டு கொஞ்சினாள்..

"மகிமா நிகிலன்..?" என்று தயக்கத்துடன் நகுலன் கேட்க, "இப்பதான் என் ஆட்களோட அனுப்பி விட்டேன்.. வாங்க நம்மளும் போவோம்.." என்று விட்டு நகர்ந்தாள்..

இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் நிகிலன் அப்படியே இருக்க, ரியாவின் காயத்திற்கு மருத்துவர் ஒருவர் மருந்திட்டு கட்டு போட்டு கொண்டிருந்த நேரத்தில் தான் மற்றவர்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்..

நிகிலனை பார்த்ததும் "மச்சான்" என்று நகுலன் அணைத்து கொள்ள, அப்போது தான் தன்னிலைக்கு வந்த நிகிலன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டவனின் விழிகள் ரியாவையே தேடியது..

"டேய் என்னடா.. ஏதோ பேயடிச்ச மாதிரி இருக்கே.." என்று தோளை தட்டிய நகுலனை கண்டு கொள்ளாமல் மருத்துவ ஊர்தியில் அமர்ந்திருந்த ரியாவை கண்டதும் ஒரே பாய்ச்சலி்ல் அங்கு ஓடியவன் "குட்டச்சி" என்று அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்..

இவனின் திடீர் செயலில் அனைவரும் விக்கித்து நிற்க, ஆடவனின் அணைப்பில் கண்ணை இறுக்க மூடியிருந்த போதும் ரியாவின் இமைகளில் இருந்து விழிநீர் வழிந்தது..

அவளை விட்டு விலகியவன், "உன்னைய புரிஞ்சுக்காம விட்டது தப்புதான்டி என்னைய நாலு அடி கூட அடிச்சுக்கோ.. இனி எப்பவும் உன்னைய விட்டு விலக மாட்டேன்.. ப்ராமிஸ்.." என்று கலங்கிய குரலில் கூறியவன் மீண்டும் அணைத்து கொண்டான்..

"ஹலோ சார்.. உங்க எமோசனலை கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு அவங்களைய விட்டு விலகி உக்காருங்க.. அவங்க கைல இருந்து மறுபடியும் ரத்தம் வருது பாருங்க.." என்று மருத்துவருக்கே உரிய அதட்டலில் கூறினார் அவர்..

அசட்டு வழிந்து ரியாவை விட்டு கீழே வந்த நிகிலன் தலையை குனிந்து கொள்ள, "பேபிமா இங்க மானஸ்தான் ஒருத்தன் இருந்தான் அவனை பார்த்தீயா?" என்று நக்கலுடன் வினவ, "ப்ச் கம்முனு இருங்க நகுலன்.." என்று அதட்டிய ரிதி, "ரியாவை ஏத்துக்கற மாதிரி அப்படி என்ன நடந்துச்சு நிகிலன்.." என்று குறும்புடன் வினவினாள்..

மீண்டும் அவனின் முகம் கலவரமாகி, "என்னால தான் ரிதி அவளுக்கு காயமாச்சு.. அவன் என்னைய தான் குத்த வந்தான்.. என்னைய தள்ளி விட்டுட்டு அதையை அவ வாங்கிட்டா.. அவளுக்கு ரத்தம் வந்தப்ப கூட உனக்கு ஒன்னுமில்ல தானேனு கேட்டா பாரு சத்தியமா அந்த நிமிசம் நான் உறைஞ்சு போய்ட்டேன்.."

"இவளோட காதலையா மறுத்தோம்னு என் மனசே என்னைய காறி துப்புச்சு.. யாரோ ஒருத்தியை கல்யாணம் பண்ணிதான் தீரனும்.. அதுக்கு ரியாவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. இப்ப காதல் இல்லதான்.. ஆனா போக போக கண்டிப்பா அவமேல காதல் வரும்.." என்றான் உறுதியாக..

"இப்பவாவது உன் மரமண்டைக்கு இது ஏறுச்சே அது வரைக்கும் சந்தோசம் தான்.." என்று நகுலன் அவனின் காலை வார, அதனை கண்டு கொள்ளாமல் நிகிலனின் பார்வையோ ரியாவையே மொய்த்திருந்தது..

தேவ்வை இருவர் கைதாங்கலுடன் அழைத்து வருவதை பார்த்த மகி, பேசி கொண்டிருந்தவரிடம் "ஒன் மினிட்" என்று விட்டு அவர்களை நோக்கி சென்றாள்.. இவளை கண்டதும் "வருதே வருதே புயல் வருதே.." என்று மனதினுள் கதறியவன் வெளியில் பாவமாக முகத்தை வைத்திருந்தான்..

"சாருக்கு என்ன ஆச்சு?" என்று தேவ்விடம் வினவாமல் அவனை அழைத்து வந்தவர்களிடம் கேட்க, "அந்த ராஜன் இவரை குத்திட்டு தப்பிச்சு ஓடிட்டாரு மேடம்.." என்று சீரியஸாக அவர் கூற, "ஹோ அப்படியா?" என்ற வந்த பெண்ணவளின் குரலில் இருந்தது நக்கலே..

"சரி நீங்க போங்க.. சாருகிட்ட பேச வேண்டியது கொஞ்சம் இருக்கு.." என்று அவர்களை அனுப்பி விட்டவள், "சரி சொல்லு ராஜன் எங்கே?" என்று நேரடியாகவே மகி கேட்டிட, "அவரை விட மாட்டேனு முதல்லயே கிருஷ் சொன்னதை மறந்துட்டீங்களா மேடம்.. அவன் கூட்டிட்டு போய்ட்டான்.. இனி தேடப்படற லிஸ்ட்டுல ராஜனும் ஒருத்தரு அவ்வளவுதான்.." என்றான் திட்டவட்டமாக..

"என்னமோ பண்ணி தொலைங்க.." என்று எரிச்சலுடன் மொழிந்த மகி, "உன்னைய மன்னிப்பேனு கனவுல கூட நினைக்காதே.." என்றவள் கோவத்துடன் நகர, அவளின் கையை பிடித்த தேவ், "நான் எதுவும் பண்ணல மகி எல்லாம் கிருஷ் பண்ணுன வேலை தான்..ப்ளீஸ் என் செல்லம்ல.." என்று கெஞ்சினான்..

அவனின் கையை தட்டி விட்டு விட்டு வேலைகளை கவனிக்க மகி சென்று விட, "அடேய் எருமை எல்லாம் உன்னால தான்டா.." என்று கிருஷை கருவி கொண்டு தனக்கிட்ட வேலைகளை முடிக்க சென்றான்..

அங்கிருந்த அனைத்து இடங்களையும் சோதனையிட்டு தேவையான ஆதாரங்களை எடுத்து கொண்ட பின்பு அந்த இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டாள்.. அதன்பின் தங்களுக்கு உறைவிடம் குடுத்த கருப்பனிடமும் அகவனிடமும் கூறி விட்டு தான் கிளம்பினாள்..

எந்த மானம் மரியாதைக்காக சங்கரன் மகியை ஒதுக்கி வைத்தாரோ இன்று அத்தனையும் கப்பலேறி.. இதோ கைவிலங்குடன் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறார்.. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி கடுங்காவல் தண்டனையும், முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது..

தப்பிக்கப்பட்ட ராஜனை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தவும், ராபினை ஆந்திரா காவல் துறை வரும் வரை தகுந்த பாதுகாப்புகளுடன் வைத்திருக்கவும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கவும், காடுகளில் வாழும் மலைவாசிகளுக்கும் அனைத்து தரப்பினர் போல சமஉரிமை வழங்கி நலத்திட்டங்கள் அனைத்தும் அவர்களை சென்றடைய வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது..
 
Status
Not open for further replies.
Top