தன் மனைவியை நினைத்து கலங்கி போய் நின்றிருந்த சங்கரனிடம் வந்த மேகலை, "நீங்க ஜெயிலுக்கு போறீங்கனு நான் வருத்தப்பட்டு தப்பான முடிவு எல்லாம் எடுக்க மாட்டேங்க.. உங்களுக்கு தண்டனை கிடைக்கனும்னு தான் நானும் எதிர்ப்பார்த்தேன்.. என் ரெண்டு பொண்ணுகளுக்காக நான் வாழ்வேன்.. உங்க கிட்ட இருந்து விடுதலை கிடைச்சதுக்கு நான் சந்தோசம் தான் படறேனே தவிர வருத்தப்படல.."
"எப்ப நீங்க செஞ்ச வேலை அத்தனையும் தெரிஞ்சுச்சோ அப்பவே உங்களைய வெறுத்துட்டேன்.. மானம் போய்ரும்னு ரிதன்யாவை ஒதுக்கி வெச்சீங்க இப்ப உலகமே உங்களைய காறி துப்பிட்டு இருக்கு.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.. அது சரியா நடந்துருக்கு.." என்றவர் கம்பீரமாக நடந்து செல்ல, சங்கரனோ குனிந்த தலையை நிமிராமல் அப்படியே இருந்தார்..
"என் டாடியை யாரும் தப்பா பேச கூடாதுனு தான் சொல்றேன் டாடி.. அந்த பொண்ணை விட்டுருங்க.." என்று மகி அந்த சிறுவயதில் கெஞ்சியது அவரின் காதில் எதிரொலிக்க, நொறுங்கிய மனதுடன் நடந்தார்..
பெற்ற மகள் கையாலே விலங்கு மாட்டப்பட்டதுமே உடைந்து போனவர் இப்போது மனைவியின் பேச்சை கேட்டு உயிரில்லாத ஜடமாக சிறை சாலைக்கு பயணமானார்..
"ஹப்பாடா மகி இந்த வழக்கை முடிச்சுட்டோம்.." என்று குதூகலத்துடன் குதித்த தேவ் மகியை அணைத்து கொள்ள, "எஸ் தேவ் இப்பதான் எனக்கு பாரமே இறங்குன மாதிரி இருக்கு.." என்றாள் மகியும்..
பேசியபடி வெளியில் வந்த இருவரையும் மீடியாக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வியை எழுப்ப, பொறுமையுடன் அவர்களுக்கு பதிலளித்த மகி கிளம்ப எத்தனிக்க, "மேடம் உங்களுக்கும் தேவ் சாருக்கும் எப்ப கல்யாணம்.." என்று வந்த நிரூபரின் குரலில் மகியின் நடை தடைபெற்று நின்றது..
தேவ் பேச வரும் முன்னே அவனின் கையை பற்றி தடுத்த மகி, "ஹலோ மேடம் உங்க கேள்விக்கு ரொம்ப நன்றி.. ஆண்களோட வெற்றிக்கு பின்னால பெண்கள் இருப்பாங்கனு சொல்றதை கேள்விப்பட்டு இருப்பீங்க தானே?"
"அதே மாதிரி பெண்களோட வெற்றிக்கு பின்னாலயும் ஆண்கள் இருக்காங்க.. என்னோட இந்த வெற்றிக்கு பின்னால இருந்த ஆண்கள்ல தேவ்வும் ஒருத்தன்.. அண்ட் அவன் என் சைல்டுகுட் பிரண்ட்டு மட்டுமில்ல எனக்கு அண்ணன் ஸ்தானத்துல இருக்கறவன்.." என்றாள் புன்னகையுடனே..
அப்போதும் விடாமல், "மேடம் அப்ப உங்க கல்யாணம்?" என்று கேட்க, "நான் மிஸஸ் ஆகி இரண்டு வருசத்துக்கு மேல ஆகிருச்சு.. மறுபடியும் நான் எதுக்கு மேடம் மிஸஸ் ஆகனும்.." என்று எதிர்கேள்வியை தொடுத்தாள் மகி..
இதனை கேட்டதும் மற்றொருவன், "உங்க கணவர் யாரு மேடம்.." என்று கேட்க, "அது என் பர்சனல் மிஸ்டர்.. பப்ளிக்கா மாத்த எனக்கு விருப்பமில்லை.."என்று அதோடு முடித்து விட்டு திரும்பியவள், மீண்டும் அவனிடமே, "ஹலோ சார் நாளைக்கு ஹெட் நியூஸ் என்ன போடறதுனு நான் சொல்லட்டுமா? குழந்தைகள் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் மகிழினி ரகசிய திருமணம் முடித்திருப்பதாக தகவல்.. நல்லா இருக்கா.." என்று கேட்டாள் மாறாத அதே புன்னகையில்..
அவன் வெளிறி போய் மகியை பார்க்க, "நான் ரகசிய மேரேஜ் எல்லாம் பண்ணிக்கல சார்.. பெற்றோர் ஆசிர்வாதத்தோட தான் பண்ணிருக்கேன்.. எந்த செய்தியை மக்கள்கிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி அது உண்மையானு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க இல்ல கிடைச்சதை வெச்சு போடுங்க.."
"அதைய விட்டுட்டு இல்லாததை எல்லாம் போட்டு எங்க மானத்தை வாங்காதீங்க சார்.. நாங்களும் உங்களைய மாதிரி மனுச ஜென்மங்கள் தான்.." என்று விட்டு எப்போதும் போல் தேவ்வுடன் கிளம்பியும் விட்டாள்..
நகுலனும் நிகிலனும் மகியை காண வர, முன்னால் தேவ்வுடன் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த விக்ரமை பார்த்து இருவரின் விழிகளும் அதிர்ச்சியை கடன் வாங்கி கொண்டது..
"டேய் நீ இன்னும் சாகலயா?" என்று விக்ரம் மீது நகுலன் பாய, "அடச்சீ கையை எடுடா.." என்று சாதாரணமாக அவனின் கையை தட்டி விட்ட விக்ரம், "அத்தை அந்த பாயாசத்தை ஊத்துங்க.." என்று சாப்பிடுவதிலே குறியானான்..
இதில் திருதிருவென விழித்த நகுலன், "கிருஷ் என்ன இது? எதுக்கு இவனை விட்டுருக்கீங்க?" என்று தேவ்விடம் வினவ, பொங்கிய சிரிப்பை அடங்கிய தேவ், "நகுலன் சார் போனா போகுதுனு உயிர்பிச்சை குடுத்துருக்கோம்.." என்றான் கிண்டலுடன்..
"இவனுக்கு எல்லாம் அது குடுக்க கூடாது ப்ரோ.." என்று எப்போதும் போன்று விக்ரமின் சட்டையை பற்றி, "அவங்க விட்டாலும் நான் விட மாட்டேன்டா.." என்று நகுலன் வீரவசனம் பேசி கொண்டிருந்த நேரத்தில் கிச்சனில் இருந்து வெளியில் வந்த ரிதி, "நகுலன் என்ன பண்றீங்க.. முதல்ல கையை எடுங்க.." என்று பதறலுடன் கூறினாள்..
"முடியாது பேபி அங்க இருக்கறப்ப நம்மளைய படுத்துன கொடுமை கொஞ்சநஞ்சமா? இவனை எல்லாம் விடவே கூடாது.." என்று நகுலன் எகிற, சிரிப்பை இதழுக்குள் மறைத்திருந்த தேவ் இதற்கு மேல் முடியாது என்றெண்ணி வாய்விட்டு சிரித்தான்..
தலையில் அடித்து கொண்ட ரிதி, "அய்யோ நகுலன் இவங்க தான் கிருஷ் மாமா.." என்று கூறிட, தான் கேட்டது உண்மையா? என்ற ரீதியில் நகுலனோ "பேபி இப்ப நீ என்ன சொன்னே?" என்று மறுபடியும் கேட்க, பல்லை கடித்து கொண்டு "இவரு தான் அக்காவோட கிருஷ்.. நான் சொன்ன கிருஷ் மாமா.." என்றாள் கடுப்புடன்..
அதிர்ச்சியில் நகுலனோ, "மச்சி எனக்கு மயக்கம் வருதுடா என்னைய புடிச்சுக்கோ.." என்றபடி நிகிலன் மேல் சாய, "நான் எப்பவே மயங்கிட்டேன்.." என்று நிகிலனும் சரிந்தான்..
பொறுமையாக உண்டு முடித்த விக்ரம் கைகளை கழுவி விட்டு, "ஹப்பாடா இப்பதான் ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்ல சாப்பாடு சாப்புட்டுருக்கேன்.." என்று ஏப்பம் விட்டவாறு கூறியவன், கீழே கிடந்த இருவரையும் உதைத்து, "உள்ள போய் படுத்து தூங்குங்கடா.." என்றவன் சாதாரணமாக அவர்களை கடந்து சென்றான்..
"அய்யோ சத்தியமா முடில.." என்று தேவ் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க, விக்ரமின் பேச்சில் பே வென்று முழித்திருந்த இருவரும் தேவ்வின் சிரிப்பு சத்தத்தில் தான் தன்னிலைக்கு வந்தனர்..
விடாமல் சிரித்தவனை முறைத்த நகுலன், "ஹலோ பாஸ் எனக்கு ஒன்னுமே புரில கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க.." என்றான் பாவமாக..
"இப்ப உனக்கு என்ன தெரியனும்.." - தேவ்
"ஆமா நீங்க யாரு?.." - நகுலன்
"நான் தேவ்டா.. அவன் தான் கிருஷ்.." - தேவ்
"அப்ப விக்ரம்..?" - நகுலன்
"அதுவும் அவன் தான்.. அவனோட முழுபேரு விக்ரம் கிருஷ்.." - தேவ்
"ம்ம்ம்ம்க்கு சொல்றதை முழுசா சொல்லிருங்க பாஸ்.. ஒவ்வொன்னா கேட்கற அளவுக்கு எங்களுக்கு பொறுமை இல்ல.." - நிகிலன்
"விக்ரமோட அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தான் பட் பிரிஞ்சுட்டாங்க.. விக்ரம் அவங்க அப்பாகிட்டயும் அவன் தம்பி வசந்த் அவங்க அம்மாகிட்டயும் இருந்தான்.. எதிர்பாராவிதமா அவங்க அப்பா இறந்ததும் விக்ரமையும் அவங்க அம்மா அழைச்சுட்டு வந்துட்டாங்க.."
"அது ராஜனுக்கு பிடிக்கல போல.. எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிட்டே இருப்பாரு.. அவங்க அம்மாக்கு ரெண்டும் அண்ணனுக.. முதல்ல ராஜன்.. அடுத்தது தனசேகர்.. ராஜனோட செயல் எதுவும் பிடிக்காம தனசேகர் தனியா போய்ட்டாரு.. ஏன்னா அவரு போலீஸ்.. "
"அவங்க அப்பா வேணும்னு விக்ரம் அழுது அழுது காய்ச்சல்ல விழுந்தப்ப அவருதான் பார்த்துக்கிட்டு தன்னோட கூட்டிட்டும் போய்ட்டாரு.. அப்ப இருந்து அவன் அங்கதான் இருக்கான்.. அவன் அங்க போனதுக்கு அப்பறம் பிறந்தது தான் ஷார்மி.. விக்ரமுக்கு ஷார்மினா உயிரு.."
"இந்த வழக்கை தனசேகர் எடுத்ததும் ராஜனோட மொத்த கோவமும் இவருமேல திரும்பி கூடபிறந்த தம்பினு பார்க்காம குடும்பத்தோட கொல்ல பார்க்க.. இவரு எப்படியோ தப்பிச்சுட்டு மனைவியையும் மகளையும் பறி கொடுத்துட்டாரு.. அந்த கோவம் தான் விக்ரமுக்கு இப்ப வரைக்கும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டு இருக்கு.."
"என் ஷார்மியை கொன்னவரை பழி வாங்காம ஓய மாட்டேனு தான் விக்ரமா அங்க போனான்.. இங்க இருந்த வரைக்கும் அவன் எல்லாருக்கும் கிருஷ் தான்.." - தேவ்
"ஆனா நாங்களும் விக்ரம் படிச்ச காலேஜ்ல தான் படிச்சோம் அப்பவே அவன் இங்கதானே இருந்தான்.." - நிகிலன்
"நாங்க ரெண்டாவது வருசம் படிக்கறப்ப தான் அவங்க இறந்தது.. முதல்லயே அவங்க அம்மா அவனை அங்க வர சொல்லிட்டே இருந்தாங்க.. அதையை சாதகமா பயன்படுத்திட்டு கடைசி வருசத்துக்கு அங்க வந்துட்டான் அப்பதான் ராஜன்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா நெருங்க முடியும்னு.." - தேவ்
"பாஸ் அவருக்கு கல்யாணமாகி குழந்தை இருக்குனு சொன்னாரு அது உண்மையா?" - நகுலன்
"பைத்தியம் தான் அவன்.. மனைவி சொன்னது மகியை தான்.. குழந்தை இருக்குனு சொன்னது கூட தனுவை தான்.." - தேவ்
"ப்ரோ கடைசியா ஒரு சந்தேகம்.." - நிகிலன்
"என்ன நிகிலன்.." - தேவ்
"ராஜன் சாரோட முதல் பொண்ணு கூட விக்ரமுக்கு கல்யாணம்னு என் பிரண்டு ஒருத்தன் சொன்னான்.. அப்ப அது உண்மை இல்லயா?" - நிகிலன்
"அவங்க அம்மா அவனை அங்க கூப்பிட்டதே இதுக்கு தான்.. மறுத்தா சந்தேகம் வரும்னு அவன் சம்மதம் சொல்லிட்டான் இது மகிக்கும் தெரியும்.. இவனோட நல்லகாலமோ என்னவோ அந்த பொண்ணு சந்தனா எனக்கு வசந்த் தான் பிடிச்சுருக்குனு சொல்லிருச்சு.." - தேவ்
"எங்கிருந்தாலும் வாழ்கனு அர்ச்சதை தூவிட்டு விக்ரம் எஸ்கேப் ஆகிட்டான் அது தானே?" - நகுலன்
"அதே தான்.." - தேவ்
"அடேய் இன்னுமாடா பேசி முடிக்கல.." என்றவாறு விக்ரம் அங்கு வர, "அடேய் நல்லவனுக்கு நல்லவனே எதுக்குடா அங்க இருக்கறப்ப அப்படி போட்டு மொத்தி எடுத்தே?" என்று நகுலன் அவன் மீது பாய்ந்தான்..
"அப்படி மட்டும் நான் மொத்தல மொத்தமா மண்ணுக்குள்ள போய்ருப்போம்டா என் சிப்ஸு" - விக்ரம்
"ம்ம்ம்ம்க்கும் என்னமா வில்லன் ரேன்ஜுக்கு பில்டப் பண்ணிருக்கே.." - நகுலன்
"ஹஹஹ ஒவ்வொரு கட்டத்துல நான் உண்மையான வில்லனாவே மாறிட்டேன் நகுலன் அதுதான்.." - விக்ரம்
"ஆனா ஒன்னுடா நீ பழி வாங்கறே பாவக்காய் வாங்கறேனு சொன்னதை எல்லாம் நான் நம்பி தொலைஞ்சுட்டேன்.." - நகுலன்
"நானும் அதைய நம்பி.. செத்தா சொர்க்கத்துக்கு போவோமா இல்ல நரகத்துக்கு போவோமானு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்.." - நிகிலன்
"நான் அப்படி இருந்தும் நீங்க அடங்குனீங்களாடா.. என்னமா குதிகுதினு குதிச்சுட்டு கிடந்தீங்க.." என்று பாராபட்சம் பார்க்காமல் இருவருக்கும் அடியை குடுத்த விக்ரம், "வாயை குறைங்க இல்ல வாய்லயே மிதிப்பேன்.." என்றான் கண்டிப்புடன்..
"ஹே இரு இரு.. அன்னைக்கு ஷாபிங் மாலுல ரிதியை காப்பாத்துனப்பவே அவளுக்கு உன்னைய தெரியுமா?" - நகுலன்
"ஹூம் நான் கூட அது மகினு நினைச்சு தான் வந்தேன்.. கடைசில பார்த்தா அது ரிதி.." - விக்ரம்
"அப்ப ரிதியை உனக்கு முன்னாடியே தெரியுமா?" - நகுலன்
"ஜெகன் சொல்லிருக்கான்.. சோ மகியோட தங்கச்சியா தான் இருக்கனும்னு நினைச்சு அப்படி பேசிட்டு கிளம்புனேன்.." - விக்ரம்
"இத்தனையும் கேட்டு எனக்கு இன்னும் ஹார்ட் அட்டாக் வராம இருக்கறது தான் எனக்கு அதிசியமா இருக்கு.. முடிலடா என்னால.. காலேஜ்ல பார்த்தது இந்த விக்ரமானு இன்னும் சந்தேகமா இருக்கு.." - நிகிலன்
"அடேய் நல்லவனே எங்களைய காணோம்னு யாருமே தேடல.. அப்படி என்னடா பண்ணுனீங்க.." - நகுலன்
"நானும் வீட்டுக்கு போறப்ப என்ன சொல்லி சமாளிக்கறதுனு யோசிச்சுட்டே போனேன் ஆனா யாருமே எதுவும் கேட்கல.." - நிகிலன்
"இவன் தான் முதல்லயே உங்க வீட்டுல பேசிட்டானே! அவங்க முதல்ல பயந்தாலும் நல்ல விசயத்துக்கு தானே இப்படி பண்றீங்கனு சம்மதம் சொல்லிட்டாங்க.. நீங்க எப்பவும் போல குடிச்சுட்டு புலம்ப.. பின்பக்கமா வந்து உங்களைய தூக்கிட்டு வந்துட்டான் அவ்வளவுதான்.." - தேவ்
கொஞ்சம் திருத்தம் தேவ் புலம்புனது இவன் தான்.. நான் இல்ல.. இந்த லூசு தற்கொலை பண்ணிக்க போறேன் அப்படி இப்படினு பேசி என்னையும் மயங்க வெச்சுட்டான் படுபாவி.. இதுகூட சரிதான்.. அந்த குட்டச்சி வீட்டுல எப்படி சம்மதம் சொன்னாங்க.." - நிகிலன்
"சொல்லபோனா ரியாவை கடத்தற பிளானே இல்ல.. பிளான்படி பார்த்த மகியை மட்டும் தான் கடத்த வந்தோம்.. அவளை ஆட்கள் தூக்கறப்ப ரியா கண்ணு முழிச்சுட்டா.. அப்படியே விட்டுட்டு வந்தா பிரச்சனை ஆகிரும்னு அவளையும் தூக்கிட்டாங்க.." - விக்ரம்
"அவங்க வீட்டுல எப்படி விக்ரம் பேசுனீங்க அவங்க அப்பா என்னமா கத்து கத்துனு கத்தறாரு.." - நிகிலன்
"முதல்ல நிலைமையை எடுத்து தான் சொன்னான்.. ஆனா அவரு கேட்கற மாதிரி இல்லை.. அதுனால ரியாவோட அண்ணாவை கிட்நாப் பண்ணிட்டான்.. சோ அந்த ஹிட்லர் கப்சிப் தான்.." - தேவ்
"என் மாமனாருக்கு ஏத்தவன் விக்ரம் தான்.. அவரு வாயை அடைச்சு வெச்ச பெருமை விக்ரமையே சாரும்.." - நிகிலன்
இதற்கு பதில் கூறாமல் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்த விழிகள் ஏதேச்சையாக மாடியை நோக்க, சூட்கேஸுடன் தனுவை தூக்கி கொண்டு கீழறங்கிய மகியை சலனமின்றி பார்த்தது..
மற்றவர்களுக்கும் இது அதிர்ச்சியாக இருக்க, யாரையும் பார்க்காமல் "நான் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கனும்.. என்னைய தேடி யாரும் வராதீங்க.." என்று பொதுவாக கூறிய மகி கிளம்ப எத்தனித்த போது விக்ரமின் வார்த்தைகள் அவளை தடுத்தது..
"ரிதிமா அவங்களைய எங்க வேணாலும் போக சொல்லு அதற்கு முன்னாடி தனுவை குடுத்துட்டு போக சொல்லு.." என்று கடுமையான குரலில் கூறிட, திடுக்கிடலுடன் அவளை ஏறிட்ட மகியின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து, "உனக்கு வேணா யாரும் வேணாம்னு இருக்கலாம்.. ஆனா தனுவுக்கு எல்லாரும் வேணும்.." என்றான் அழுத்தமாக..
"முடியாது என் அண்ணன் பொண்ணை யாருகிட்டயும் குடுக்க முடியாது.. இவ என் பொண்ணு.." என்று ஹிஸ்டீரியா வந்தவள் போல் மகி கத்த, "அப்ப இங்க இருந்து யாரும் கிளம்பவும் முடியாது.. உனக்கு மட்டுமில்ல எங்களுக்கும் தனுமேல பாசம் இருக்கு.." என்ற விக்ரமுக்கும் மனது வலிக்க தான் செய்தது தன்னவளின் நிலைமையை கண்டு..
வழக்கு முடிந்ததில் இருந்து அவளை சுற்றி அத்தனை பேர் இருந்தாலும் மகி விரும்புவது என்னவோ தனிமையை தான்.. குடும்பத்தின் இழப்பை மறக்க ஏதாவது வேலைகளில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டே இருந்தவள், இப்போது முற்றிலும் உடைந்து தான் போனாள்..
மகியின் மனது இப்போது தேடுவது அவளின் குடும்பத்தை மட்டுமே! மற்றவர்களிடம் முதலில் காட்டிய நெருக்கத்தை இப்போது அவளால் தொடர முடியாமல் விலகி நின்றவள் கிளம்பியும் விட்டாள்..
"என் பொண்ணை யாருகிட்டயும் தர மாட்டேன்.. என்னைய தேடி யாரும் வராதீங்க.." என்று கோவத்துடன் கத்தியவளுக்கு கண்ணீரும் சுரக்க, "நாங்க இருக்கறப்ப நீ எங்கடா பாப்பா போகனும்.." என்று வாயிலின் புறம் இருந்து குரலொன்று வந்தது..
இந்த குரலில் பார்வையை திருப்பிய பெண்ணவளுக்கு இது பிரம்மையோ என்ற எண்ணம் கூட எழுந்து இமைகளை சிமிட்டி சிமிட்டி அங்கு நின்றிருந்தவர்களை பார்த்தவள் அவர்கள் மறையவில்லை என்றுணர்ந்த பின்பு, "அண்ணா.." என்று கேவலுடன் ஓடி சென்று ஜெகனை அணைத்து கொண்டாள்..
"என் பாப்பாவை விட்டுட்டு அவ்ளோ சீக்கிரத்துல நாங்க போவோம்னு நினைச்சீயாடா?" என்று சிரிப்புடன் ஜெகன் வினவ, "இவ்ளோ நாள் வராம இருந்தீங்கல அப்படியே போங்க.." என்று கோவத்துடன் அவர்களை விட்டு விலகி நின்றவள் முகத்தை திருப்பி கொண்டாள்..
ஜெகனை கண்டதும் தனுவோ இரு கைகளை நீட்டி தூக்கு என்பதை போல் துள்ள, புன்சிரிப்புடன் தன் மகளை தூக்கியவன், "தனு தங்கம் உன் அத்தை கோவமா இருக்காங்க நீ இப்படி சிரிச்சா கடிச்சு வெச்சற போறாங்க.." என்று தன் மகளிடம் கூறுவது போல் பாசாங்கு செய்து மகியை வாரினான்..
அப்போதும் முகத்தை திருப்பாமல் மகி நின்றிருக்க, அவளின் தோளை தொட்டு தன்புறம் திருப்பிய ரகுபதி, "பாப்பா கோவமாடா? அன்னைக்கு கிருஷ் மட்டும் வரல உண்மையாவே நாங்க உன்னைய விட்டு போய்ருப்போம்டா.." என்றவரை அகன்ற விழிகளுடன் பார்த்த மகி சட்டென்று அவரின் வாயை மூடி, "இப்படியெல்லாம் பேசாதீங்கபா.. நீங்க இல்லனா நானும் இல்ல.." என்றாள் வருந்திய குரலில்..
"உனக்கு ஆக்சிடெண்ட் ஆகிருச்சுனு போன் வந்ததும் எதையும் யோசிக்காம நாங்க கிளம்பிட்டோம்டா.. வாட்ச்மேன் அவ்வளவு சொன்னான் எதையும் காதுல வாங்காம கார் எடுத்துட்டு வந்துட்டோம்.. உடனே அவரு கிருஷ்கிட்ட சொன்னதுல தான் நாங்க இப்ப உயிரோடு இருக்கோம்.." என்று நொடித்து கொண்டு கூறிய தன் தந்தையை புரியாமல் பார்த்த பெண்மகள் தன்னவன் மீது பார்வையை திருப்பினாள்..
"அவங்க மாமாவோட பாதுகாப்புக்கு தான் அவருகூட இவன் போய்ருந்தான்.. வாட்ச்மேன் அண்ணா போன் பண்ணுனதுமே கிளம்பி வந்துட்டான்.. உன்கிட்ட பேசிட்டு இருந்தப்ப தான் லாரி காரை நோக்கி வர்றதே தெரிஞ்சுச்சு.. அதுக்குள்ள அங்க கிருஷ் வந்துட்டான்.. வந்த வேகத்துல பைக்கை லாரிக்கு இடையில விட்டுட்டு மயிர்இழைல அவன் தப்பிச்சு அந்த பக்கம் விழுந்ததும் நான் காரை திருப்பிட்டேன்.."
"அங்க எதுவும் பேசாம யாராவது வர்றதுக்குள்ள எங்களைய வேற காருல கூட்டிட்டு கிளம்பிட்டான்.. நாங்க வந்த கார் அங்கயே தான் இருந்துருக்கு.. இதுக்கிடைல தான் தனசேகர் அப்பாவை ராஜனோட ஆட்கள் அடிக்க வர்றே அவரு கூட யாரும் போகாதனால அவங்க அடிச்ச அடில உயிரு ஊசலாடிட்டு இருந்துருக்கு.."
"மறுபடியும் அவன் அங்க போய்.. அவரை காப்பாத்த இரவுபகல் பாராம ஓடிட்டு இருந்தான்.. இதைய நினைச்சு எங்களுக்கு ரொம்ப குற்றவுணர்வு ஆகிருச்சு மகிமா.. அதான் அமைதியாகிட்டோம்.." என்று முடித்தான் ஜெகன்..
இது அனைத்தையும் மகிக்கு புதியதாயிற்றே! தான் கேட்பது அனைத்தும் நிஜமா? என்று காதுகளை நம்ப முடியாமல் தன்னவனை பார்த்த மகிக்கும் குற்றவுணர்வு தலைதூக்கியது.. தன் குடும்பத்தை காப்பாற்ற தனக்கு இருக்கும் ஒரே துணையான அவனின் மாமாவை தனியாக விட்டு சென்றிருக்கானே?? என்று மனம் ஊமையாக அழுதது..
Last edited: