#Twist21
#No12
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
ஏதோ தோஷம் என்று மறுபடியும் கல்யாணம் செய்ய இருக்கும் நிலையில் மேடையில் இருந்து கடத்தி போறான் தீரன் அஷ்வினியை...
அவன் தன் மனைவி என்க (!?)? அவள் நான் கௌதம் மனைவி என்க அவன் தாய் தான் குழம்பி போறார்? நாமும் தான்!!!
இந்த கௌதமோ அடிபட்டு ஹாஸ்பிடலில் நர்ஸ் அல்லி கூட அவன் நடக்கும் முறை எல்லாம், இவன் நல்லவனா? கெட்டவனா? என்று குழம்ப வைக்கும்... அல்லிக்கு குழைந்தை வேற இருக்கு!!
முதன் முறை முகம் பார்த்து அச்சத்தில் மயக்கமும், மறுமுறை முகம் பார்க்கையில் அதிர்ச்சியில் பயமுமாய் அஸ்வினி??? ஏன்??
கோவிலுக்கு போகும் வழியில் கார் பிரச்சனையால் தீரனின் ஆள் பரமனுடன் வரும் மோகினி அண்ட் கோ, மோகினிக்கு வரும் கனவு??? தீரன் வீட்டுக்கு வராங்க, ஒரு எமர்ஜென்சிக்கு!! இந்த மோகினி வேறு கனவின் தாக்கத்தில் செய்யும் சிறு செயலால் தீரனின் உயிரே ஊசலாடுது???
இதில் யார் சொல்வது உண்மை அஷ்வினியா, தீரனா? கௌதம் யாருக்கு கணவன்? தீரனை காக்க பரமன் வருவானா??
இதையெல்லாம் அடுத்தடுத்து சுவாரஸ்யமா சொல்லி கதையை நகர்த்தி இருக்காங்க..
எனக்கு ரொம்ப பிடித்தது பரமன் அண்ட் தீரன் காம்போ???... பரமாத்மா அவ்வளவு அருமையான மனுஷன்.. தீரனின் லக்கி சார்ம் சொல்லலாம்.. ஒவ்வொருமுறையும் தீரன் காக்கப்படுவது இவனால் தான்?? (எப்போ என்ன படிச்சு தெரிஞ்சுக்கோங்க)
தீரன் அருமையான மகன், அன்பான நண்பன், செம்ம காதலன்??? இவன் பண்ண ஒவ்வொன்றும் ரொம்பவே பிடிச்சது...
அல்லி செஞ்ச தப்புக்கு வேணும் என்று தான் தோணுச்சு... இருந்தும் பல நேரம் பாவமா இருந்துச்சு... கடைசியில் இவள் அண்ட் மரகதம் பண்ணது கொஞ்சம் பிடிக்கலை தான்.. மரகதம் நல்லவர் தான்.. அனைத்தும் அருகில் இருந்து பார்த்தவர் கொஞ்சம் கவனமாய் இருந்து இருக்கணும் என்பது எனது எண்ணம்... அஸ்வி மேல் கைவைத்த போது இவங்க மேல தான் கோபம் வந்துச்சு...
ராதிகா??? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மிருகம்.. இவர் அண்ட் இவர் கணவர் பேராசையால் பண்ணிய தப்புக்கு தான் அத்தனையும் நடந்து இருக்கு.. எதுவுமே அளவாய் இருக்கணும்... அளவு மீறிய இவர்களின் ஜோசிய பக்தி அதால் எவ்வளவு அனர்த்தங்கள்??? அந்த தண்டனை எல்லாம் சின்னது தான்??
ஏமாறுவோர் இருந்தா ஏமாத்த தான் செய்வாங்க... விருஷாலி பண்ணது தப்பா தெரியலை..
கௌதம் என்ன தான் செய்து இருந்தாலும், சொன்னாலும் எனக்கு இவனை பல விடயங்களில் பிடிக்கலை.. கொஞ்சம் சுயநலம் இவனுக்கு... எதையும் ஆராயும் பாங்கும் இவனுக்கு கிடையாது, எதிர்க்கும் துணிவும் கிடையாது... அஸ்வி விசயத்தில் எனக்கு இவனை சுத்தமா பிடிக்கலை... அதுவும் கடைசி செம்ம கோபம் வந்தது???
தீரனின் அம்மா அப்பா??? எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள்.. குகன் கூட, நல்ல நண்பன்...
கதை ரொம்ப நல்லா இருந்தது... நீங்க வச்ச டுவிஸ்ட் க்கு பக்கம் வர வந்தாலும் சரியாக கணிக்க முடியலை.. சூப்பர்...
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????