ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

12 கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
?கதை எண் 12?

?️கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ?️

?அருமையான கதை கடைசி வரைக்கும் டிவிஸ்டை கண்டுபிடிக்க முடியாம பண்ணிட்டாங்க நம்ப ரைட்டர் ?

கௌதம் அஸ்வினி திருமணத்தின் அன்று மணமேடையில் இருந்த தீரன் அஸ்வினியை கடத்திச் செல்கிறான்.. அஸ்வினிக்கு தீரன் யார் எதற்காக தன்னை கடத்தி வந்திருக்கிறான் என்று தெரியாமல் முடிக்கிறாள்.... ஆனால் இந்த இடத்தில் அஸ்வினி சிறிது யோசித்து இருக்கலாம்...
தீரன் அழகு கம்பீரம் ஆளுமை பாசம் அனைத்தும் சூப்பர் .. இவன் வரும் அனைத்து இடமும் சும்மா அதிரடியாக இருக்கும் ???
கௌதம் இவன் என்ன கேரக்டர்னே எனக்கு தெரியல, ரைட்டர் தான் இவனை கடைசிவரை நல்லவன் நல்லவன் சொன்னாங்க, ஆனா இவன் தான் சுமைய அடுத்தவங்க மேல திணிக்கிற பயந்தாங்கோலி ? இவனை எனக்கு பிடிக்கல ? சுயநலவாதி.....
அஸ்வினி கொஞ்சம் தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ணி இருக்கலாம்,பாவம் என்ன நடக்குதுன்னே தெரியாம கடைசிவரை நம்மகூட டிராவல் பண்ற ஒரு ஜீவன் ?
பரமாத்மா நீ என் செல்லம் நீ வேற லெவல் டா, உன்னோட பொறாமை வேற லெவல் ?? அதுவும் கோவிலில் பண்ற லூட்டி செம ?
அல்லி தான் காதலுக்காக போராடுவது செம..
மரகத அம்மாள் அருமையான நபர் கதையின் திருப்பத்திற்கு முக்கியமான காரணம் ?
செல்வி,ரத்தினவேல் இவர்களைப் போல் ஒரு சிலர் மட்டுமே பார்க்க முடியும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் வைத்த ஜீவன்கள்?.

?தேவராஜ் ராதிகா இவங்களை பற்றி சொல்லனும்னா, இவங்க ரெண்டு பேரு எப்படிப்பட்ட ஜென்மம்னு எனக்கு தெரியல, எதுக்காக இவங்க ரெண்டு பேரும் உயிர் வாழ்ந்ததற்கான ஒரு அர்த்தமும் இல்லை கூட பிறந்த பிறப்புக்கு உண்மையா இல்ல, பெற்ற குழந்தைகளுக்கு உண்மையா இல்ல மூடநம்பிக்கையை தூக்கிகிட்டு சுத்துனதுதான் மிச்சம். யாரு என்ன சொன்னாலும் கேட்க கூடாது.நம்ப உணர்வுக்கு மரியாதை கொடுக்கணும்கறதுக்கு இவங்கதான் உதாரணம். ?
??விருஷாலி இந்த அள பத்தி என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல ??

கார்த்திக் தேவகி இவங்கள வெச்சுக் நகர்ந்த இடம் ரொம்ப சுவாரசியமா இருந்தது....
இதுல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் மோகினி அவள் கனவில் வர கேரக்டர நேர்ல பார்க்கிறா, அதனால வர்ற பிரச்சனைகள் நிறைய....
( மோகினிக்கு கடைசியாக ஜோடி சேர மாதிரி காட்டினது செம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ?)

?? மோகினி யோட கதைக்கு இந்த பெயர் தான் 100% பொருந்தும் ? பொருத்தமான கதை தலைப்பு ?

ஆனா நீங்க வெச்ச கடைசி டிவிஸ்ட் நான் எதிர்பார்க்கல ஒரு சின்ன இடத்தில கூட அதை அப்படி இருக்குமோன்னு யோசிக்கவே முடியல.. செம ட்விஸ்ட்? ?????

அருமையான ட்விஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ??
ரொம்ப ரொம்ப நன்றி ❤️❤️❤️❤️ அழகான விமர்சனம்
 

T21

Well-known member
Wonderland writer
கதை எண் 12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ

கெளதம் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தீரன் கடத்தி கொண்டு செல்ல கௌதம் திருமணம் நடந்ததா?? தீரன் கடத்தி செல்ல காரணம் என்ன??
ராதிகா தன்னுடைய உறவையே கொல்ல நினைக்க அதற்கு துணை போகும் இவரின் கணவர் இவர்கள் கொல்ல நினைப்பது யாரை?? எதற்கு??

தீரன் வாவ் என்ன ஒரு ஆளுமை அதிரடி ?? அதுவும் இவனை வேரோடு சாய்க்க ஒரு கூட்டமே இருக்க அதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்கிறான் என்பது அவ்வளவு சுவாரசியம் ? இவனின் பாசமும், நட்பும், இவனின் காதல் செம ?? எப்ப என்ன செய்வான் என்றே யூகிக்க முடியாத அதிரடி ஆட்டக்காரன் ??

பரமாத்மா ??எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவன் தான் ??இவனின் அந்த பொறாமை அவ்வளவு அழகு ☺️☺️ இவனின் நட்பும் காவலும் அவனுக்கு ஒன்று என்றால் வந்து துணை நிற்பதும் அவனை யாரும் நெருங்கினால் மனதுக்குள் புகைவதும் ?? எதையும் செய்ய துணியும் இவனின் வீரமும் துணிவும் நவீன அனுமான் தான் இவன்

ராதிகா இது எல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியல ???அதுவும் இவரின் கணவர் ?‍♀️?‍♀️?‍♀️ நம்பிக்கை இருக்கலாம் இந்த அளவுக்கு தரம் கெட்டு யாரையும் கண் மூடி தனமாக நம்ப கூடாது ??

கௌதம் இவன் என்ன பண்றான் என்று புரியவே நாக்கு தள்ளும் போல இருக்கு என்ன தான் சொன்னாலும் இவன் செய்தது எல்லாமே மிக மிக தவறு சுயநலத்தின் மொத்த உருவம் ஒருவன் எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் ஆனால்??

அஸ்வினி இது ஒரு வளர்ந்து கெட்ட லூசு எதை நம்பணும் யாரை நம்ப கூடாது என்று எதையும் புரிந்து கொள்ளாமல் சொல்ல வருவதையும் கேட்காமல் ??

மரகதம் அம்மா இவர் தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம் செய்தது எல்லாம் சரி தான் ஆனால் ஒரு இடத்தில் அமைதியாக இருந்தது ரொம்ப தவறு ?

அல்லி இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போக முடியாமல் யோசிக்காமல் எல்லாம் செய்து விட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி ?‍♀️?‍♀️

இதற்கு எல்லாம் இடையே கார்த்திக் தேவகி தம்பதியர் என்டேர்டைன்மெண்ட் காதல் ??அதுவும் மோகினிக்கு வரும் கனவும் அதை தொடர்ந்து அவள் செய்யும் ஒரு செயல் எல்லாவற்றையும் மாற்றி புரட்டி போட்டு விடுகிறது அதை சரி செய்வாளா???

விருஷாலி இவர் பற்றிய ரகசியங்கள் ??

ஒவ்வொரு அத்தியாயமும் திக் திக் அடுத்து அடுத்து என்ன நடக்கும் எப்படி எடுத்து செல்வீர்கள் என்று கொஞ்சம் கூட யூகிக்க விடாமல் மண்டை காய வைத்து விட்டீர்கள் ??? எதிர்பாராத பல திருப்பங்கள் சுவாரசியமான எழுத்து நடையில் ??? ட்விஸ்ட் என்பதற்கு சரியான பொருத்தமான கதைகளம் ??

நட்பு, காதல், துரோகம், வஞ்சம், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என்று ஒரு படம் பார்க்கும் உணர்வில் வைத்து முடித்து விட்டீர்கள் ???

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????

லிங்க் ???


ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤️❤️❤️ அருமையான விமர்சனம் ❤️❤️❤️
 
வணக்கம் சகோதரிகளே ..

பொம்மு நாவலின் போட்டிக்கதை

#கொய்யும்கண்கள்மெய்யும்பேசுமோ ..!!

#கதைஎண்12

உயிர்த்த மழலை விழிகள்
சாபமிட்ட வஞ்சின விழிகள்
உயிரான உயிரின் விழிகள்
பாசப்போர்தொடுத்த விழிகள்
நட்பு தோள் சுமந்த விழிகள்
காதல் மொழிபேசும் விழிகள்
காதல் வலி சுமந்த விழிகள்
மன்னிப்பு செயலின் விழிகள்
ஆக இந்த கொய்யும் கண்கள் மெய்யாய்
கதை பேசும் விழிகள்..

கதையின் கருவின் சாரம் உணர்ந்து
தலைப்பாய் பொருந்திய கண்கள் அலாதி அழகு

நவீன ராம ராவண கதையாய் நினைத்து
சிறைபிடித்து..
அதைபடித்து இங்கே யார் ராம ராவண
என்பதில் கடைசியில் வருவதே..
அதற்கான பதில்..அழகு

கௌதம் இவன் நல்லவான கெட்டவனா என போர்தொடுத்து கடைசியில் இவன்.... !!!!??? என கூறியிறுப்பது மிகவும் அழகு. சார்ந்து வாழ் சார்ந்தே சாடி வாழாதே என பொருளின் அர்த்தம் இவனே..
காதல் செய்தும் அதனை கண்டறியா நிலை இவனுக்கு ..

தீரன் யாரிவன் திருமண மேடைக்கு வந்தான் பெண்ணவளை கவர்ந்து சென்று சிறையிட்டான்.. அவள் நிழலோடு நிழலாக உறவாடி கதைபேசினான்.. என்ன தான் இவனின் உள்நோக்கம் என கண்டறியவே முடியாத சுவாரசியங்கள் நிறைய. ஆளுமை வீரன் இவன் ராமனா? இரவணனா? குழம்பிய நிலைகள் ஏறாளம்.
இவனின் காதல் உயிரான வலி நிலை..

நான் மிகவும் ரசித்த நட்பு பாத்திரங்கள் இவர்களே தீரன் பரமாத்மா.
ஆத்மா என்றழைக்கும் இவன் .நண்பனுக்கு ஆத்ம உயிரோட்டம் கொடுக்கும் இடமெல்லாம் நெஞ்சோடு நிறைந்து உள்ளான். இவனின் நட்புக்கு அடைக்கும் தாள் உண்டோ..❤❤❤❤
அப்பப்போ காதலி போல் நண்பனின் அருகிலே நிற்பதும் இவன் எனக்கானவன் என்பதை செயலில் காட்டுவதும் அழகான சினுங்களே..??

பொறாமை ரூபனான இவன் நண்பனை கட்டிப்பிடி வைத்து வைத்தியம் அடிக்கடி செய்து பாச மருந்தை ஊட்டுபவன் .இவனின் பொறாமை நினைத்து எனக்கும் பொறாமை வருகிறது
ஆஞ்சநேய நாயகனை லட்சுமன நாயகனாக மாற்றிய மோகினி தேவிக்கு நன்றிகள் .???

அஸ்வினி நிறமாறாத பூக்களாய்.. சாயம் உணர்ந்து சாரலை தள்ளிவைப்பது அவளின் வலியான செயல்.இதனால் ஏற்படும் வலிகள் இவளுக்கு ஏராளம்.

அல்லி காதல் மட்டுமே நிதர்சனம் என உருகும் மாதவள்.அவளின் காதலின் நம்பிக்கை பொய்க்காதது அவள் காதல் மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தானோ..

இடையிடையே வந்த கதாபாத்திரங்கள். கார்த்திக் தேவகி மோகினி வாவ்.. கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா என சிந்திக்க வைத்தது ஆசிரிய தோழியின் சதிவலையில் இதுவும் ஒன்று. சுவாரசியத்தை கூட்டியதும் கூட..

எல்லா காதாபாத்திரங்களும் அவர்களின் சுயங்களை காட்டி வந்து போனது சுவாரசியமாக இருந்தது.

சில விஷயங்களை நம்பத்தான் வேண்டும் அதையே வாழ்க்கைக்குள் புகுத்தி அதனோடு வாழ கூடாது என கடைசியில் நன்றாக உரைப்பது மிகவும் அருமை.

மிகவும் விறுவிறுப்பான கதையம்சம். அடுத்தது என்ன நடக்கும்? யார் வில்லன் ?யார் நாயகன்? என்ன நடந்திருக்கும்,ஏன் இப்படி,?என பல கேள்விகளை கொண்டு எமை அதனுள்ளே கொண்டு சென்றது மிகவும் அருமை.???

இந்த ட்விஸ்ட் போட்டி கதையின் தலைப்பை உணர்ந்து எழுதிய கதை என்பதில் மிகை இல்லை. எழுத்தின் நேர்த்தி , கதை கொண்டு சென்றவிதம் மிகவும் அருமை அருமை..???

மோகினியின் கனவுக்கு உயிருட்டியது அழகு.❤❤

கொய்யும் கண்கள் எனையும் கொய்து கொண்டது..????

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே.
 

T21

Well-known member
Wonderland writer
வணக்கம் சகோதரிகளே ..

பொம்மு நாவலின் போட்டிக்கதை

#கொய்யும்கண்கள்மெய்யும்பேசுமோ ..!!

#கதைஎண்12

உயிர்த்த மழலை விழிகள்
சாபமிட்ட வஞ்சின விழிகள்
உயிரான உயிரின் விழிகள்
பாசப்போர்தொடுத்த விழிகள்
நட்பு தோள் சுமந்த விழிகள்
காதல் மொழிபேசும் விழிகள்
காதல் வலி சுமந்த விழிகள்
மன்னிப்பு செயலின் விழிகள்
ஆக இந்த கொய்யும் கண்கள் மெய்யாய்
கதை பேசும் விழிகள்..

கதையின் கருவின் சாரம் உணர்ந்து
தலைப்பாய் பொருந்திய கண்கள் அலாதி அழகு

நவீன ராம ராவண கதையாய் நினைத்து
சிறைபிடித்து..
அதைபடித்து இங்கே யார் ராம ராவண
என்பதில் கடைசியில் வருவதே..
அதற்கான பதில்..அழகு

கௌதம் இவன் நல்லவான கெட்டவனா என போர்தொடுத்து கடைசியில் இவன்.... !!!!??? என கூறியிறுப்பது மிகவும் அழகு. சார்ந்து வாழ் சார்ந்தே சாடி வாழாதே என பொருளின் அர்த்தம் இவனே..
காதல் செய்தும் அதனை கண்டறியா நிலை இவனுக்கு ..

தீரன் யாரிவன் திருமண மேடைக்கு வந்தான் பெண்ணவளை கவர்ந்து சென்று சிறையிட்டான்.. அவள் நிழலோடு நிழலாக உறவாடி கதைபேசினான்.. என்ன தான் இவனின் உள்நோக்கம் என கண்டறியவே முடியாத சுவாரசியங்கள் நிறைய. ஆளுமை வீரன் இவன் ராமனா? இரவணனா? குழம்பிய நிலைகள் ஏறாளம்.
இவனின் காதல் உயிரான வலி நிலை..

நான் மிகவும் ரசித்த நட்பு பாத்திரங்கள் இவர்களே தீரன் பரமாத்மா.
ஆத்மா என்றழைக்கும் இவன் .நண்பனுக்கு ஆத்ம உயிரோட்டம் கொடுக்கும் இடமெல்லாம் நெஞ்சோடு நிறைந்து உள்ளான். இவனின் நட்புக்கு அடைக்கும் தாள் உண்டோ..❤❤❤❤
அப்பப்போ காதலி போல் நண்பனின் அருகிலே நிற்பதும் இவன் எனக்கானவன் என்பதை செயலில் காட்டுவதும் அழகான சினுங்களே..??

பொறாமை ரூபனான இவன் நண்பனை கட்டிப்பிடி வைத்து வைத்தியம் அடிக்கடி செய்து பாச மருந்தை ஊட்டுபவன் .இவனின் பொறாமை நினைத்து எனக்கும் பொறாமை வருகிறது
ஆஞ்சநேய நாயகனை லட்சுமன நாயகனாக மாற்றிய மோகினி தேவிக்கு நன்றிகள் .???

அஸ்வினி நிறமாறாத பூக்களாய்.. சாயம் உணர்ந்து சாரலை தள்ளிவைப்பது அவளின் வலியான செயல்.இதனால் ஏற்படும் வலிகள் இவளுக்கு ஏராளம்.

அல்லி காதல் மட்டுமே நிதர்சனம் என உருகும் மாதவள்.அவளின் காதலின் நம்பிக்கை பொய்க்காதது அவள் காதல் மேல் கொண்டுள்ள நம்பிக்கையால் தானோ..

இடையிடையே வந்த கதாபாத்திரங்கள். கார்த்திக் தேவகி மோகினி வாவ்.. கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா என சிந்திக்க வைத்தது ஆசிரிய தோழியின் சதிவலையில் இதுவும் ஒன்று. சுவாரசியத்தை கூட்டியதும் கூட..

எல்லா காதாபாத்திரங்களும் அவர்களின் சுயங்களை காட்டி வந்து போனது சுவாரசியமாக இருந்தது.

சில விஷயங்களை நம்பத்தான் வேண்டும் அதையே வாழ்க்கைக்குள் புகுத்தி அதனோடு வாழ கூடாது என கடைசியில் நன்றாக உரைப்பது மிகவும் அருமை.

மிகவும் விறுவிறுப்பான கதையம்சம். அடுத்தது என்ன நடக்கும்? யார் வில்லன் ?யார் நாயகன்? என்ன நடந்திருக்கும்,ஏன் இப்படி,?என பல கேள்விகளை கொண்டு எமை அதனுள்ளே கொண்டு சென்றது மிகவும் அருமை.???

இந்த ட்விஸ்ட் போட்டி கதையின் தலைப்பை உணர்ந்து எழுதிய கதை என்பதில் மிகை இல்லை. எழுத்தின் நேர்த்தி , கதை கொண்டு சென்றவிதம் மிகவும் அருமை அருமை..???

மோகினியின் கனவுக்கு உயிருட்டியது அழகு.❤❤

கொய்யும் கண்கள் எனையும் கொய்து கொண்டது..????

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே.
ரொம்ப அழகான விமர்சனம் அக்கா ரொம்ப நன்றி ???
 

Shayini Hamsha

Active member
டுவிஸ்ட் T 21
நாவல் போட்டி


கதை இல 12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ!

கதை விமர்சனம்

#shayini_review#


சாதாரண வாசகியாக கதை பற்றிய எனது விமர்சனம்


மண மேடையில் திருமணக் கோலத்தில் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புகளுடனிருக்கும் அஸ்வினி, அவளைத் திருமணம் செய்யத் தயாராகும் கெளதம். திடீரென நுழைந்து மண மேடையில் கெளதமை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி, அஸ்வினியை கவர்ந்து செல்கின்றான் தீரன்.???


யாரிந்த தீரன்? இராமனா? இராவணனா? இவனின் இச் செயலுக்கு உள்நோக்கம் என்ன? ????

தீரன் எதற்கு கெளதம் திருமணம் செய்யப் போகும் பெண்ணைக் கடத்த வேண்டும் ?????

தீரன் , கெளதம் ,அஸ்வினி மூவருக்கும் என்ன சம்மந்தம்? தீரனின் மன வலிகளுக்கு
காரணம்? ????



தீரன், தன்னை சுற்றி எதிரிகளினை வேட்டையாடும் வீரன் . தீரனின் நண்பனாக தீரனின் உயிர் காக்கும் காவலனாக வரும்
ஆத்மா என்னும் பரமன். ???இவனே உண்மையான நட்பிற்கு இலக்கணம் . பரமனை பற்றி நினைத்தாலே பெருமை ஏற்பட்டு மெய் சிலிர்க்கின்றது. ?????

தீரனை அணைத்து தனது உரிமையை வெளிப்படுத்தும் தருணமாகட்டும் , அவனின் பேச்சில் மட்டுமல்லாது செயலில் ஒவ்வொரு நொடியுமே பரமன் தீரனுக்காக மட்டுமே தன்னையே மனமார அர்ப்பணிப்பது தீரனுக்காக வாழ்வது மெய் சிலிர்க்கின்றது..

எவ்வகையான சிறிதும் சுயநலமில்லாத அன்பு . தீரன் மிகவும் அதிர்ஷ்டசாலி ☺?????

தீரன் காதலில் நெஞ்சத்தை உருக்கினாலும் பரமன் அவனின் எல்லையில்லா அன்பிலும் பாசத்திலும் இருவருமே நெஞ்சத்தை கொள்ளையடித்து மனங்கவர்ந்து விட்டனர்.???????

அஸ்வினி இவள் அப்பாவி பேதை , இவளின் அறியாமை பரிதாபத்துக்குரியது. ??????பெண்ணவளைச் சுற்றி பின்னப்பட்ட சதிவலையில் , பேதைப் பெண்ணவள் அவளின் அறியாமையினால் , யார் உண்மையான நிஜமென அறியாது , நிஜத்தை வெறுத்து , கானல் நீரை நிஜமென நம்புவது பரிதாபத்துக்குரியது. இதனால் இவளும் வலிகளுடன் , மனங்கவர்ந்தவனுக்கும் வலிகளை பரிசளிக்கிறாள். அவள் அறியாமை அகலும் போது பெண்ணவளின் நிலை என்னாகுமோ?????

மரகதம் கதையின் ஆரம்பம் இவரே , ஏழையாக இருந்தாலும் மனசாட்சியுள்ள நல்ல குணவதி, உயிர் அச்சுறுத்தலிருந்தும் , தக்க சமயத்தில் புத்தி சாதுரியமாக செயற்படுவது பாரட்டப்பட வேண்டியது. இருந்தாலும் இவர் பேச வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்தது கதையில் எதிர்பார்க்காத தருணம். ?????


அல்லி ; அவளின் மனதைக் கவர்ந்தவனின் காதலில் கட்டுண்டு இருப்பவள், அவளின் குழந்தையாக அபிநவ் . நல்ல குணமுள்ளவளாக இப் பேதை இருந்தாலும் , எந்த பக்கம் சார்ந்து நிற்பதென்று தெரியாமல் முடிவெடுக்க திணறுகிறாள். சுயமரியாதை கேள்வி குறியாகும் இடத்தில் இவள் காதலென்ற பெயரில் தொடர்ந்து ஆதிக்கத்திற்கு அடங்கிப் போவதை என்ன சொல்ல? ????

கெளதம் இவனெல்லாம் எவ்வகையில் சேர்த்தி ? சுயநல உருவின் மறுவடிவம்.. மற்றவர்களை சார்ந்து வாழ கூடாது என்பதற்கு இவனே சிறந்த உதாரணம்..???

ராதிகா இவளின் செயலுக்கு துணை போகும் அவளின் கணவன் தேவராஜ் ,உறவையே கொல்ல துணியும்

இவர்களிருவருமே.. ஆண் பெண் இனத்திற்கே சாபக்கேடு..?????


ராதிகா போன்ற சிலர் செய்யும் வன் கொடுமைகள் சில , நிஜ வாழ்க்கையில் நாம் கேள்வியுற்றாலும் எப்போது எல்லாவற்றிற்கும் விடிவு காலம் வருமோ..? ???


இவர்களுடன் விருஷாலி?

இவர்களுடன் கதையில் பயணிக்கும் துணை மாந்தர்கள் மோகினி, கார்த்திக் மற்றும் தேவகி .????

கார்த்திக்கின் அழகான ஆத்மார்த்த காதல் அவளின் காதல் மனைவி தேவகி இவர்களின் காதலுடன் கெடிய செல்ல செல்ல ஊடல்கள் மிகவும் அழகு..?????

மோகினி , இவளின் கனவில் வரும் தீரன் , இவளின் கனவில் தீரன் வர காரணம்???☺

கதையின் மாந்தர்களான


இவர்கள் அனைவரைச் சுற்றியும்
ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் பலபல முடிச்சுகளுடனும் நம் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக, பயணிக்கும் கதையோட்டத்தில்,
எங்கும் எந்தவித தொய்வுமில்லாமல் இறுதிவரை அழகாக கதையை படிக்கும் வாசகர்களை மனதை கொய்து கொள்ளை கொண்டுள்ளார் கதையின் ஆசிரியர். டுவிஸ்ட் கதை என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளமை மிகவும் பாரட்டப்பட வேண்டிய விடயம்.



கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ!


டுவிஸ்ட் 21 போட்டி நாவல் (இல 12) போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் ஷாயினி

Date :- 27/06/2021

Time :- 9pm
 

Attachments

  • eiJJ2YM91327.jpg
    eiJJ2YM91327.jpg
    504.3 KB · Views: 1
Last edited:
  • Love
Reactions: T21
Top