கதை எண் 12
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ
கெளதம் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தீரன் கடத்தி கொண்டு செல்ல கௌதம் திருமணம் நடந்ததா?? தீரன் கடத்தி செல்ல காரணம் என்ன??
ராதிகா தன்னுடைய உறவையே கொல்ல நினைக்க அதற்கு துணை போகும் இவரின் கணவர் இவர்கள் கொல்ல நினைப்பது யாரை?? எதற்கு??
தீரன் வாவ் என்ன ஒரு ஆளுமை அதிரடி ?? அதுவும் இவனை வேரோடு சாய்க்க ஒரு கூட்டமே இருக்க அதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்கிறான் என்பது அவ்வளவு சுவாரசியம் ? இவனின் பாசமும், நட்பும், இவனின் காதல் செம ?? எப்ப என்ன செய்வான் என்றே யூகிக்க முடியாத அதிரடி ஆட்டக்காரன் ??
பரமாத்மா ??எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவன் தான் ??இவனின் அந்த பொறாமை அவ்வளவு அழகு
இவனின் நட்பும் காவலும் அவனுக்கு ஒன்று என்றால் வந்து துணை நிற்பதும் அவனை யாரும் நெருங்கினால் மனதுக்குள் புகைவதும் ?? எதையும் செய்ய துணியும் இவனின் வீரமும் துணிவும் நவீன அனுமான் தான் இவன்
ராதிகா இது எல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியல ???அதுவும் இவரின் கணவர் ?
?
?
நம்பிக்கை இருக்கலாம் இந்த அளவுக்கு தரம் கெட்டு யாரையும் கண் மூடி தனமாக நம்ப கூடாது ??
கௌதம் இவன் என்ன பண்றான் என்று புரியவே நாக்கு தள்ளும் போல இருக்கு என்ன தான் சொன்னாலும் இவன் செய்தது எல்லாமே மிக மிக தவறு சுயநலத்தின் மொத்த உருவம் ஒருவன் எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் ஆனால்??
அஸ்வினி இது ஒரு வளர்ந்து கெட்ட லூசு எதை நம்பணும் யாரை நம்ப கூடாது என்று எதையும் புரிந்து கொள்ளாமல் சொல்ல வருவதையும் கேட்காமல் ??
மரகதம் அம்மா இவர் தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம் செய்தது எல்லாம் சரி தான் ஆனால் ஒரு இடத்தில் அமைதியாக இருந்தது ரொம்ப தவறு ?
அல்லி இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போக முடியாமல் யோசிக்காமல் எல்லாம் செய்து விட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி ?
?
இதற்கு எல்லாம் இடையே கார்த்திக் தேவகி தம்பதியர் என்டேர்டைன்மெண்ட் காதல் ??அதுவும் மோகினிக்கு வரும் கனவும் அதை தொடர்ந்து அவள் செய்யும் ஒரு செயல் எல்லாவற்றையும் மாற்றி புரட்டி போட்டு விடுகிறது அதை சரி செய்வாளா???
விருஷாலி இவர் பற்றிய ரகசியங்கள் ??
ஒவ்வொரு அத்தியாயமும் திக் திக் அடுத்து அடுத்து என்ன நடக்கும் எப்படி எடுத்து செல்வீர்கள் என்று கொஞ்சம் கூட யூகிக்க விடாமல் மண்டை காய வைத்து விட்டீர்கள் ??? எதிர்பாராத பல திருப்பங்கள் சுவாரசியமான எழுத்து நடையில் ??? ட்விஸ்ட் என்பதற்கு சரியான பொருத்தமான கதைகளம் ??
நட்பு, காதல், துரோகம், வஞ்சம், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என்று ஒரு படம் பார்க்கும் உணர்வில் வைத்து முடித்து விட்டீர்கள் ???
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????
லிங்க் ???
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கதை திரி
pommutamilnovels.com