#கொய்யும்_கண்கள்_மெய்யும்_பேசுமோ
கெளதம் அவன் மனைவி அஸ்வினி ரெண்டு பேருக்கும் தோஷ பரிகாரம் பண்ண ஏற்கனவே கட்டின தாலிய கழடிட்டு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க கெளதம் அம்மா ராதிகா. ஆனா கடைசி நேரத்துல அங்க வர தீரன் கெளதம சுட்டுட்டு அஸ்வினிய தூக்கிட்டு போய் தாலி கட்டிடுறான்.கெளதம் சாகுற மாதிரி வந்த கனவ பாத்து பயந்து விருஷாலிய போய் பாக்கும் போது, கெளதம் தாலி கட்டுன நேரம் சரி இல்லை அதான் அப்படி கனவு வந்து இருக்கு. மறுபடியும் மறுதாலி கட்டினா சரி ஆகும் சொல்ராங்க. எல்லா ஏற்பாடும் பண்ணும் போது, கனவுல வந்தது நிஜத்துல நடக்குது.அஸ்வினி தீரனால கடத்தபடுறா.
இதே நேரம் மோஹினி அவ அக்கா மாமா கூட கோவில்க்கு வரவளுக்கு இதெல்லாம் கனவா வருது.ஒரு அக்சிடேன்டால தீரன் பிரண்ட் பரமன மீட் பண்றவங்க அஸ்வினிய அடைச்சு வச்சி இருக்குற இடத்துக்கே வராங்க. அங்க மோஹினி விளையாட்டு தனமா பண்ற ஒரு காரியம் தீரன் உயிர் போகுற அளவுக்கு கொண்டு போயிடுது.
நடந்த விஷயத்தை ஏத்துக்க முடியாம அஸ்வினி தீரன வெறுக்குறா இன்னொருத்தர் மனைவிய கூட்டிட்டு வந்து அவன் மனைவினு அவன் அவளை நெருங்கும் போதெல்லாம் இவ மூளை ஒன்னு சொல்லுது மனசு ஒன்னு சொல்லுது. ஒன்னும் புரியாம இருட்டுல இருக்குற அவன் முகத்தை வெளிச்சத்துல பாத்தா அவ நிலைமை.???தீரன் ஏன் அவன் முகத்தை மறைக்கிறான்??
ஹாஸ்பிடல்ல இருக்குற கெளதம் அங்க இருக்குற நர்ஸ் அல்லி கிட்ட அதிகமா உரிமை எடுத்துகிறான். அவன் மனைவி அஸ்வினிக்கு அவனை பத்தி தெரிய வந்தா என்ன ஆகும்??அல்லிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற நிலைமைல இவன் ஏன் இப்படி பன்றான்??
தீரன் ஏன் இப்படி பன்றான்?? அடுத்தவன் மனைவிய கடத்திட்டு வந்த இவன் ராவணனா?? இல்லை அவ காதலை அடைய அவளை கடத்தின ராமனா??கெளதம் தீரன் இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை??யாரோட கண்கள் இங்க உண்மை பேசுச்சு??
நெறய ட்விஸ்ட் கிளைமாக்ஸ் வர ட்விஸ்ட் தான். ஸ்டோரி முழுக்க செமயா இருந்துச்சு. உங்க எழுத்து நடை சூப்பர் எங்கையும் தொய்வு இல்லாம படிக்க தூண்டுச்சு.உண்மையா இங்க அஸ்வினி தான் பாவம்.
ஜாதி கொலை, ஜாதகம், மூட நம்பிக்கை இதால ஆகுற விளைவு படிக்கும் போதே ஹப்பா,என்ன ஜென்மங்கள் ராதிகா தேவராஜ் லாம் அவங்களுக்கு இந்த தண்டனைலாம் பத்தாது.
வாழ்த்துக்கள் ? ரைட்டர்.