ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 20


"ஒன்ன விட்ட யாரும்

எனக்கில்ல பாரு பாரு

என்னை கண்டேன்

நானும் உனக்குள்ள


உறவாக நீயும் சேர

உசுருல வீசும் சூரக்காத்து

பல நூறு கோடி ஆண்டு

நிலவுல போடவேணும் கூத்து


அடியே கூட்ட தாண்டி

பறந்து வா வெளியில

வெளியில"


நாட்கள் வேகமாக நகர இன்னும் ஒரு மாதத்தில் சத்யாவுக்கு படிப்பு முடிந்து விடும் நிலையில் இருந்தது ஆனால் அவள் எந்த கேம்பஸ் இன்டெர்வியூம் அட்டென் செய்ய வில்லை

அதனால் அவள் மீது நந்தினிக்கு கோவம் இருந்தாலும் அவள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தவள் பின் அதை பற்றி பேசவில்லை.

இன்னும் ஒரு வாரம் காலேஜ் வந்தால் போதும் அதன்பின் ஸ்டடி ஹாலிடே எக்ஸாம் என்று சென்று விடும்.

அன்று கிளாஸ் இல்லாததால் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருக்க

அப்போது சத்யாவை கிராஸ் செய்த பெண்கள் "ப்பா சார் இந்த ஷர்ட் ல எவ்ளோ ஹண்ட்சம் ஆ இருக்காரு எனக்கு கரெக்ட் ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் "என்க

இன்னொரு பெண்ணோ "நாமளே இப்படி பாக்கறோமே அவருக்கு மனைவினு ஒரு வந்த எப்படி பார்ப்பா "என்க

வேறு ஒருத்தியோ "காலேஜ் பொண்ணுங்க மனசை இப்படி பண்றிங்களே பா "என்று காமெடி ஆக சொல்ல

இதை கேட்டுக் கொண்டு இருந்த சத்யா சிரித்துவிட

அவளை பார்த்த நந்தினி "எதுக்கு சிரிக்கிற இந்த பொண்ணுகளுக்கு அறிவு வேண்டாம் ஸ்டாப்ஸ்ஆ போய் சைட் அடிப்பாங்களா "இன்றி சிடுசிடுக்க

அதை கேட்ட சத்யா "விடு டி சின்ன பொண்ணுங்க அப்படி தான் இருப்பாங்க "என்க

"என்ன சின்ன பொண்ணுங்க "என்று கோவப்பட

அவள் அதற்காக கோவப்படுகிறாள் என்று புரியாதவள் "இந்த வயசுல சைட் அடிக்காம வேற எப்போ டி சைட் அடிப்பாங்க "என்று அவர்களுக்கு சப்போர்ட் செய்ய

அவளை பார்த்த சரண் "அப்போ அவங்க நம்ம மகிழன் சார்ஆ சைட் அடிக்கறதுல உனக்கு எந்த பிரச்னையும் இல்ல அப்படித்தான "என்று நக்கலாக கேட்க

அதுவரை அந்த பெண்கள் யாரையோ சைட் அடிக்கிறார்கள் என்று சப்போர்ட் செய்து கொண்டு இருக்க

அது மகிழன் என்றவுடன் பதறிக் கொண்டு பார்க்க

ஆலீவ் லைட் க்ரீன் வித் வைட் ஷர்ட் அணிந்துக் கொண்டு ஒரு சாரிடம் மகிழன் பேசிக் கொண்டு இருக்க

அங்கு இருந்தவர்கள் பாதி பேர் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இத்தனை பேர் அவனை சைட் அடிப்பதை பார்த்து "அய்யோ என் புருஷன் "என்க

"சின்ன பொண்ணுங்க டி பாவம் சைட் அடிச்சுட்டு போறாங்க "என்று நந்தினி சத்யா சொன்னதை அவளுக்கே திருப்பி சொல்ல

அவளை பார்த்து முறைந்தவள் "போடி "என்று சொல்லிவிட்டு

மகிழனை பார்க்க அவ்ளோ ஆண்மையின் அழகாக ஆளுமையுடன் நிறைந்து இருந்தான்.

அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு பார்வையை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பாமல் இருக்க

அதை பார்த்த நந்தினி தலையில் அடித்துக் கொண்டு "இத்தனை பேர் கூட சேர்ந்துக்கிட்டு புருஷனை சைட் அடிக்கறவ நீ தான் டி "எங்க

எங்கே நந்தினி பேசுவது எல்லாம் அவள் காதலில் விழுந்தது அவள் தான் அவனுடன் கனவுலகத்தில் இருந்தாளே

"இவ்ளோ அழகா இருந்த பார்க்காம எப்படி இருப்பாங்க இனி எப்படி இத்தனை பொண்ணுங்க கிட்ட இருந்து இவரை காப்பாற்றுவேன் "எண்ணிக் கொண்டவள்

பெருமூச்சு விட

அதை பார்த்த நவீன் "அடியே நந்து என்னை கொஞ்சம் பிடி இவ விடுற பெருமூச்சுல நா பறந்துருவேன் போல இருக்கு "என்க

"அடியே திரும்பி தொலை டி வீட்ல போய் சைட் அடிச்சுக்கோ "என்க

"ஆமா அப்படியே வீட்ல என்ன சைட் அடிக்க விட்டுட்டாலும் "என்று புலம்பிக் கொண்டு திரும்ப

"பேசாம காலேஜ்ல சொல்லிரலாம் தான டி உங்க கல்யாணத்தை பத்தி "என்று பிரசன்னா சொல்ல

அதை கேட்டு முகம் வடியவள் "அவங்க சொல்லிக்க விரும்பல போல டா இன்னும் ஒரு மாசம் தானே பார்த்துக்கலாம் "என்று வெளியில் சொன்னாலும் இத்தனை பேர் அவளுடைய கணவனை பார்ப்பது பொறாமையாக தான் இருந்தது.

தூரத்தில் இருந்த மகிழன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

மற்ற பெண்கள் பார்க்கும் போது கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டு இருந்தவன் ஏதர்ச்சயாக திரும்பும்போது அவன் கண்ணில் அவனை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கும் சத்யா பட

"இவ எதுக்கு இப்படி பாக்கறா யாராவது பார்த்துட்டா என்ன ஆகும் "என்று நினைத்தவன்

பின் பக்கத்தில் இருக்கும் சார் உடன் பேச ஆரம்பித்தான்..

ஈவினிங் சத்யா வீட்டுக்கு செல்லும் போது மல்லிக்கவும் மணிவண்ணனும் எங்கையோ வெளியே கிளம்ப

அப்போது பிரெஷ் ஆகி வந்த மகிழன் "மா காலேஜ் பசங்க ஒரு ரெயூனியன் மாதிரி அர்ரேஞ்சு பண்ணி இருகாங்க வந்துக்கு லேட் ஆகும் "என்று எதிரில் வந்த சத்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல

அவளோ அவன் பார்வையில் தலைகுனிந்து சென்றாள்.

"அத்தை "என்றவள் போகும் போது எங்கே போறீங்கனு எப்படி கேட்க முடியும் என்று தயங்க

"மாமாவோட கிளோஸ் பிரண்ட் ஒருத்தங்க எங்களை இன்வைட் பண்ணி இருகாங்க டா கண்டிப்பா போகணும் போயிட்டு நாளைக்கு காலையில வந்துருவோம் நீ மேனேஜ் பண்ணிப்ப தான "என்று கேட்க

"அதெல்லாம் நோ ப்ரோபலம் அத்தை நா இருந்துப்பேன் "என்க

"மகிழன் வர நேரம் ஆகும் டா பத்திரமா இரு "என்று சொல்லிவிட்டு கிளம்ப

அவர்கள் கிளம்பிய பின் ரூம்க்கு சென்று பிரெஷ் ஆகி வந்தவள் காபி குடித்து படிக்க சென்றாள்.

இரவு மகிழன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவாதல் இவளுக்கு மட்டும் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு அவனுக்காக காத்திருக்க

பத்து மணிக்கு மேல் தள்ளட்டத்துடன் உள்ளே வந்தவன் சோபாவில் படுத்து இருக்கும் சத்யாவை பார்த்து அவள் அருகில் சென்றவன்

மண்டியிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க

யாரோ உத்து பார்ப்பது போல இருக்க கண் விழித்த சத்யா மகிழனை பார்த்து அவசரமாக எழ பார்க்க

"ஏன் போற இப்டியே இரு "என்று குழரலாக சொல்ல

அவன் குரலில் இருந்தே அவன் குடித்து இருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டு "குடிச்சு இருக்கிங்களா? "என்று தயக்கமாக கேட்க

"நோ நோ நா ஜூஸ் தான் குடிச்சேன் ஆனா எல்லாரும் நா ட்ரிங்க்ஸ் எடுத்துகிட்டது போல பேசறாங்க "என்று வரத்தையை விட்டு விட்டு பேச

"சரி வாங்க தூங்க போகலாம் "என்று அவன் முன் செல்ல பார்க்க

அவனோ அவளின் சேலையை பிடித்துக் கொண்டு பின்இருந்து அணைத்தவன் "தூங்கணுமா?"என்று கிறக்கமாக கேட்க

அவனின் மூச்சு காற்று அவளின் காதில் பட்டு அவளின் உடலை சூடக்க

அவனிடம் இருந்து விலகியவள் "ஆமா தூங்கணும் "என்று அவளுக்கே கேட்காத குரலில் சொல்ல

அதை சரியான புரிந்துக் கொண்டவன் "ஏன் தூங்கணும் "என்று கேட்டுக் கொண்டு நெருங்கி அவளின் கன்னத்தை தொட

அதில் சிலிர்த்து போனாள்

"உன் கன்னம் ரொம்ப சாப்ட் "என்க

அவளுக்கோ பயமாக இருந்தது அவன் சுயநினைவு இல்லாமல் இருக்க ஏதாவது நடந்துச்சு விடுமோ என்று அச்சம் கொண்டவள் அவரை எப்படியாவது ரூம்ல விடரணும் என்று நினைத்து

"என்னங்க "என்று ஏதோ சொல்ல வர

அவள் வாயில் கை வைத்து வார்த்தையை வர விடாமல் தடுத்தவன்

"இதென்ன மச்சமா "என்று கழுத்தில் தொட்டு காட்ட

அவன் கையை அதற்கு மேல் நகர விடாமல் பிடித்துக் கொண்டவளுக்கு ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது

இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அவனை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு முன் கார்டனில் சென்று நிற்க

அவள் பின் தள்ளாடிக் கொண்டே வந்தவன்.

சத்யாவுக்கு நேரே இருந்த நிலாவை பார்த்து

"இது அழகா இல்ல நீ அழகானு தெரியல "என்று போதையில் சொல்ல

அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது அவளின் கணவன் அவளிடம் நெருங்கி வரும் போது இப்படி தள்ளி செல்வது அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது

ஆனாலும் நாளை காலையில் அவன் நினைவுக்கு வரும் போது என்ன ஆகும் என்று நினைத்தவள்

"பனி அதிகமா இருக்கு உள்ள போங்க சளி பிடிச்சுக்கும் "என்று குரலை சரிபடுத்திக் கொண்டு சொல்ல

"நீயும் வா டி "என்க

அவனின் முதல் உரிமையான அழைப்பை அனுபவிக்க முடியாமல்

"நீங்க போங்க நா அப்புறம் வரேன் "என்று அவனை இங்கு இருந்து போக வைக்கும் முயற்சியில் இருக்க

அவனோ அவளின் அவஸ்தையை புரிந்துக் கொள்ளாமல் "நீ இல்லாம அங்க எனக்கு என்ன வேலை "என்று அவளின் தோளில் முகம் வைத்து சொல்ல

இருவர் முகமும் மிக அருகில் இருக்க

கண்ணை மூடிக் கொண்டு சத்யா அவளை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க

"உன் பேஸ் ஏன் இப்படி சிவந்து ரெட்டிஷ்ஆ இருக்கு "என்று சொல்லி கன்னத்தை தடவ

இதற்கு மேல் முடியாது என்று அவனின் பிடியில் இருந்து வலுகட்டாயமாக நகர்ந்து அங்கு இருந்து செல்ல பார்க்க

"ரியா "என்று அவன் செல்லமாக அழைக்க

அவனின் செல்ல அழைப்பில் அவன் கால்கள் அங்கே நின்று விட்டன

அதற்கு மேல் நகர முடியாமல் அவள் தவிக்க

அவனோ அவள் நின்று விட்டதில் குஷியாகி அவளின் இடிப்பில் கை கொடுத்து அணைத்துக் கொண்டு

"ரியா "என்று கிறக்கமாக அழைக்க

அவளுக்கோ ஒரு நிமிடம் மூளை மரத்து போனது போல் இருந்தது.

அவனின் அழைப்புக்கு எதுவும் சொல்லாமல் நிற்க

அதை சாதமாக பயன் படுத்திக் கொண்டு இடையில் இருந்த சேலைய விளக்க பார்க்க

அவனின் கை மீது கை வைத்து தடுக்க

"உன் மகிழன் தான டி "என்று மெதுவாக அவள் காதில் சொல்ல

உன் மகிழன் என்ற வார்த்தை அவளை வேரோடு சாய்க்க

"ம்ம் "என்க

அவளின் பதிலில் சந்தோசப்பட்டு "உன் மகிழனுக்கு உன்னை தர மாட்டியா "என்று விளங்கமாக கேட்க

அவள் மூளையோ வேண்டாம் என்க அவள் மனமோ உன் கணவன் தானே என்று எடுத்து சொல்ல

கடைசியில் வென்றது மனம் தான்.

அவனின் அருகாமையை அதற்கு மேல் தாங்க முடியாமல் திரும்பி அவனை அணைத்துக் கொள்ள

அதில் வெற்றி சிரிப்பு சிரித்தவன் அவள் காதில் முத்தமிட

உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது சத்யாவுக்கு

அவன் சட்டையை இழுத்து கசக்கி பிடிக்க

அவளின் இடையில் கை வைத்து "ரூம்க்கு போலாமா?"என்று கேட்க

அவளோ மாயஉலகத்தில் இருப்பது போல "ம்ம் "என்க

அவளின் இடையில் கை கொடுத்து தூக்கிக் கொண்டவன்

வீட்டுக்குள் சென்று அவளை கையில் வைத்துக் கொண்டே கதவை அவளை சாற்ற சொல்ல

கீ கொடுத்த பொம்மை போல அவன் சொல்வதை எல்லாம் அவள் செய்ய

சிரித்துக் கொண்டே மாடி ஏறியவன் ரூம்குள் சென்று அவளை கட்டிலில் படுக்க வைக்க

அவர்களின் அறைகுள் நிலா வெளிச்சம் அடிக்க

அந்த வெளிச்சம் சத்யா மீது பட்டு சிலை போல் இருந்தாள் ….

அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஏந்தி அதில் அவனின் முதல் முத்தம் வைக்க

சத்யாவால் அவளின் முதல் முத்தை மறக்க முடியாது என்று போல் இருந்தது.

முகம் முழுக்க முத்திரை பதித்தவன் பின் துடித்துக் கொண்டு இருந்த அவளின் இதழை அவன் உதடு கொண்டு அடைத்தான்…

பின் அவர்களின் நேரம் அவர்களுக்காக நகர

ஒரு கட்டத்தில் அந்த போதையிலும் அவளை பார்த்து "உனக்கு ஓகே வா?"என்று கேட்க

அவனின் முகத்தை பார்த்தவளுக்கு இன்று அவனை பெண்கள் பார்க்கும் போது ஏற்பட்ட பொறாமையும் இவன் என் கணவன் என்ற எண்ணமும் அவனை விலக விடாமல் செய்ய

அவனின் முகத்தை இழுத்து முத்தம் கொடுத்து அவளின் சம்மதத்தை சொல்ல

அதன் பின் நடந்ததற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு..

விடியும் வேளையில் கண் விழித்தாள் சத்யாவுக்கு அவளை அணைத்து தூங்கிக் கொண்டு இருந்த மகிழனை பார்த்து நேற்று நடந்தது நினைவு வந்து முகம் சிவந்தாள்..

அவனின் முகத்தை பற்றி "அழகன் டா நீ " என்று கொஞ்சிக் கொண்டு இருந்தவளுக்கு

கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுக்கு வந்தாள்…

நேற்று அவன் குடித்து இருந்ததால் இதெல்லாம் நடந்தது அவன் சுயநினைவு வந்தால் எண்ண ஆகும் என்ற பயம் அவள் உள்ளத்தில் பரவ

அதுவரை அவளை சுற்றி இருந்த மாயவலை அருந்து விழுந்தது போல் இருந்தது.

"என்ன பண்ணி வைச்சு இருக்கேன் அவர் தான் குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருந்தாங்க ஆனா நா தடுத்து இருக்கலாமே "என்று தலையில் கை வைத்து கொண்டவளுக்கு

"நீ பிளான் பண்ணி தான் இப்படி பண்ணி இருக்க என்று அவன் கேட்டுவிட்டால் அது அவளின் பெண்மைக்கு இழுக்க என்ற பயம் வர

உடனே எழுந்து தன்னை சரி செய்து கொண்டவள் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்…

அவனையும் சரி செய்தவள் நேற்று எதுவும் நடக்காதது போல் அறையை சுத்தம் செய்தவள்

குளித்துவிட்டு கீழே சென்று சமையல் அறைக்கு போக

அவள் மனமோ திக்கு திக்கு என்று அடித்துக் கொண்டது..

ஒரு மனம் நேற்று நடந்தது எதுவும் அவருக்கு தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க இன்னொரு மனமோ நேற்று நடந்தது அவருக்கு நினைவு இருந்தால் போதும் என்று எண்ணியது…

இரு மனங்களுக்கு நடுவே பதைபதைக்கும் இதயத்தை கை வைத்து சீராக்கியவள் சமைத்துக் கொண்டே படியை பார்த்துக் கொண்டு இருந்தாள்….

சிறிது நேரம் கழித்து எழுந்த மகிழனுக்கு தலை வலிக்க தலையில் கை வைத்து நிமிர்ந்துதவன் அவனுடைய ரூமை சுற்றி பார்த்து "நா வீட்டுக்கு எப்படி வந்தேன் "என்று கேட்டுக் கொண்டு தலையை உதறியவன் கொஞ்சம் நீதானாப்படுத்திக் கொண்டு குளித்து கீழே வர

அவன் வரும் சத்தம் கேட்டு அவனை திகிலுடன் திரும்பி பார்க்காமல் நிற்க

சமையல் அறைக்கு வந்தவன் அங்கு இருந்த சத்யாவை பார்த்து "சத்யா தலை வலிக்குது காபி தரியா?"என்று கேட்க

நேற்று அவனின் செல்லமான "ரியா "என்ற அழைப்பு காணாமல் போனதை வேதனையுடன் நினைத்தவள்

"எடுத்துட்டு வாறேங்க "என்று எடுத்து வர

காபி வாங்கியவன் "நேத்து நா எப்படி வீட்டுக்கு வந்தேன் "என்று கேட்க

அவன் கேட்டதிலேயே அவனுக்கு எதுவும் நினைவு இல்லை என்று புரிந்துக் கொண்டவள் வேதனையை அவளுக்குள் விழுங்கிக் கொண்டு

"நைட் பத்துமணிக்கு வந்திங்க "என்க

அதற்கு மேல் எதுவும் கேட்காதவன் "டிபன் வேணாம் ஆபீஸ் போயிட்டு அப்படியே காலேஜ் வந்தறேன் "என்று சொல்லி விட்டு செல்ல

அவன் போவதை பார்த்து வாயை மூடிக் கொண்டு அழுதவள் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என் புருஷன் கூட வாழ்ந்ததை நினைச்சு கூட என்னால சந்தோசப்பட முடியலையே இப்போ நா என்ன பண்ணுவேன் அவர்கிட்ட போய் நா எப்படி சொல்லுவேன் ஒருவேளை நா போய் சொல்லி அவர் என்னை நடந்ததையும் கேவலப்படுத்திட்டா என்னால உயிரோடவே இருக்க முடியாதே "என்று தரையில் அமர்ந்து அழுதவள்

"ஏன் மாமா உங்களுக்கு எதுவும் தெரியலையா "என்று சென்ற அவனிடம் கேள்வி கேட்டவள்

என்னால முடியல மாமா நேத்து உங்க கிட்ட இருந்து அவ்ளோ அன்பை வாங்கிட்டு இப்படி உங்ககிட்ட இருந்து தள்ளி நிற்க முடியல "என்று புலம்பிக் கொண்டு இருந்தவள்…

மல்லிகா வரும் ஆரவரம் கேட்டு தன்னை சரிப்படுத்திக் கொண்டவள் முகம் துடைத்து நிற்க

"சத்யா மா சாப்டியா "என்று கேள்வி கேட்க

கண்ணீர் வராமல் கட்டுப்படுத்தியவள் "சாப்பிட்டேன் அத்தை "என்று பொய் சொல்ல

"காலேஜ் கிளம்பலையா "என்று மல்லிகா கேட்க

"அவ்ளோ தான் அத்தை கிளம்பிட்டேன் " என்று சொல்லி கிளம்பி சென்றாள்…

அன்று முழுவதும் சத்யா நடந்ததை பற்றியும் மகிழனுக்கு அது நினைவு இல்லாததை பற்றியும் வேதனை பட

அவளை பார்த்தவர்கள் "என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க "என்று கேட்க

எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க

ஒரு கட்டத்தில் அவளை தனியாகா விட்டனர்…


அன்று சத்யாவின் முகத்தை பார்த்த மகிழனுக்கும் "என்ன ஆச்சு இவளுக்கு "என்று தோன்ற

வீட்டுக்கு வந்தவளிடம் "ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு உடம்பு சரி இல்லையா "என்று கேட்க

அவனை நிமிர்ந்து பார்க்காமல் "ஒன்னும் இல்லை லேசா தலை வலி "என்று சொல்லி படுத்துக் கொண்டாள்..

அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு தோள் குலுக்கிவிட்டு அவன் செல்ல

அவன் போவதை கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்…

எந்த பெண்ணுக்கும் அவள் நிலைமை வரக் கூடாது என்று எண்ணியவாள் கண் மூடிக் கொண்டாள்…


"காயத்தை நேசித்தேனே

என்ன சொல்ல நானும் இனி

நம் கனவிலும் வசித்தேனே

என்னுடைய உலகம் தனி


கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்

கண்ணைத் துண்டாக்கிக் கொள்ளும்"



அவனிடன் நடந்ததை அன்றே சொல்லி இருக்கலாமோ என்று அவள் நினைத்து வேதனை படும் நாளும் வரும்….



…….நிமிர்வாள்….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 21




அதன் பின் வந்த நாட்களில் எல்லாம் சத்யா மகிழனின் முகத்தைய பாப்பாள் அவனுக்கு நியாபம் வந்து விடாத என்று

ஆனால் அதை அவளாக அவனிடம் சொல்லவும் தயக்கம் ஏதாவது சொல்லிவிடுவானா அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று…

அவள் கவனம் படிப்பில் இல்லை என்று புரிந்துக் கொண்ட மகிழன் அவளை அழைத்து

"என்ன பிரச்சனை ஏன் உன்னோட கவனம் ஸ்டடிஸ்ல இல்ல? "என்று கேட்க

அவளோ அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்க

அவளின் தவிப்பை புரிந்துக் கொண்டவன் போல

"இங்க பாரு நிறைய குழப்பம் பிரச்சனை வர தான் செய்யும் அதுக்காக கவனத்தை அதுல மட்டுமே வைச்சு இருந்த வாழ்க்கை வேஸ்ட்ஆ போயிரும் "என்றவன்

அவள் கண்ணை பார்த்து "எதை பத்தியும் யோசிச்சு உன்ன குழப்பிகாத எது நடந்தாலும் பாத்துக்கலாம் இப்போ எக்ஸாம்ல கான்சென்டிரேட் பண்ணு "என்க

அவன் சொல்வதை புரிந்துக் கொண்டவள்

"நடக்கும் போது பாத்துக்கலாம் எல்லாம் நல்லபடியா நடக்கும் "என்று மனதில் பதிய வைத்துக் கொண்டவள்

எக்ஸாம்க்கு தயாரானாள்…

இந்த இடைப்பட்ட நாட்களில் சத்யா ஏன் இப்படி இருக்கிறாள் என்று தெரியாமல் அவள் நண்பர்கள் அவளுக்காக வருதப்பட

அவர்களிடம் ஒன்னும் இல்ல சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் என்று சமாளித்து வைத்தாள்…

ஒரு மாதம் எப்படி கடந்து என்று கேட்கும் அளவுக்கு வேகமாக செல்ல

எக்ஸாமில் தன்னால் முடிந்த அவளுக்கு நன்றாகவே செய்து இருந்தாள்..

எக்ஸாம் டைமில் இரவு இவள் படிக்கும் போது மகிழன் இவள் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பான்..

எக்ஸாம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்க

அன்று ஏனோ எழும் போதே சத்யாவுக்கு சோர்வு அதிகமாக இருக்க காரணம் தெரியாமல் விழித்தவள் பின் அங்கு இருந்த காலெண்டரை பார்த்தவளின் மனம் நாள் கணக்கு போட

புரிந்துக் கொண்ட விஷயம் அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை கொடுத்தது…

கண்ணாடி முன் நின்றவள் "குட்டி மகிழன் வர போறானா "என்று கேட்டு சிரித்துக் கொண்டாள்…

இதனை அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்

எப்படி சொல்லலாம் என்று யோசித்து

கர்ப்பதை உறுதி படுத்தும் கருவியை வெளியே சென்று வாங்கி வந்து டெஸ்ட் செய்ய

அதுவும் பாசிட்டிவ் என்று தான் கட்டியது…

வரும் போது வாங்கி வந்த ஹார்ட் ஷேப் பலூன்களை ஊதி அலமாரியில் சுற்றி அடுக்கி அதன் நடுவில் உறுதி செய்த கருவியை வைத்து "டு பீ டாட் சூன் "என்று எழுதி வைக்க

எப்படி இருந்தாலும் இதை அவன் திறப்பான் என்று எண்ணி தான் அங்கு வைத்தாள்…

அவ்ளோ சந்தோசமாக அவனிடம் சொல்ல காத்துக் கொண்டு இருந்தவள் அந்த நாளின் தான் வாழ்க்கையே முடியும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை….

சில நாட்கள் முன் கணேஷன் வீட்டின் முன் ரோஷினி நின்றுக் கொண்டு இருந்தாள்..

முதலில் ரோஷினியை பார்த்த செல்விக்கு என்ன செய்வது என்று புரியாமல் நிற்க

அவளோ அவரை கண்டுக் கொள்ளவே இல்லை

செல்வியை தேடி வெளியில் வந்த மரகதம் ரோஷினியை பார்த்துவிட்டு "என் தங்கமே "என்று அணைத்துக் கொள்ள

அவளும் அவரை அணைத்துக் கொண்டு "பாட்டி "என்று இரண்டு சொட்டு கண்ணீரை கஷ்டப்பட்டு கொண்டு வர

தெருவில் இருந்தவர்கள் எல்லாம் இவர்களை பார்க்க

"ஏன் கண்ணு உள்ள வராம வெளியிலேயே நிக்கற "என்க

"உள்ள வர தயக்கமா இருக்கு பாட்டி "என்று பொய் சொல்ல

அதை கேட்ட மரகதம் "உன் வீட்டுக்கு வரதுக்கு உனக்கென்ன தயக்கம் கண்ணு கண்ட கண்ட நாய் எல்லாம் இருக்கும் போது நீ இப்படி தயங்கலாமா "என்று செல்வியை சொல்லிவிட்டு அவளை கை பிடித்து அழைத்து செல்ல

ரோஷினியோ செல்வியை இளக்காரமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அப்போது கடைக்கு செல்ல ரெடி ஆனா கணேஷன் ரோஷினியை பார்த்துவிட்டு "யார கேட்டு உள்ள வந்த? "என்று கோவமாக கத்த

"டேய் வந்த புள்ளைகிட்ட போய் ஏன் டா கத்துற "என்று மரகதம் ரோஷினிக்கு சப்போர்ட்டாக நிற்க

அவரை தடுத்தவள் "விடுங்க பாட்டி அப்பாக்கு என் மேல கோவம் இருக்க தான செய்யும் நீங்க திட்டுங்க பா உங்களுக்கு உரிமை இருக்கு "என்று கண்ணீரோடு சொல்ல

"அப்படி நினைச்சு இருந்தினா அன்னைக்கு கல்யாண மண்டபத்துல அதனை பேருக்கு முன்னால என்ன அசிங்கப்படுத்திட்டு போயிருக்க மாட்ட "என்று கோவம் குறையாமல் கேட்க

"அன்னைக்கு என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாதீங்க பா "என்று நீருடன் கேட்க

அவரோ அவளை பற்றி கேட்க விரும்பாமல் தலை திருப்பிக் கொண்டு நிற்க

செல்விக்கு தான் இனி இவள் என்ன செய்வாளோ இவளால சத்யா வாழ்க்கைக்கு ஏதாவது ஆகியிருமோ என்ற பயத்தில் நின்றுக் கொண்டு இருந்தார்

மரகதம் தான் கணேஷன் முன் வந்து "அவ என்ன சொல்ல வரான்னு கொஞ்சம் கேளு டா " என்று அவளுக்காக பேச

அவள் என்ன தான் அவரை அசிங்கப்படுத்திவிட்டு சென்று இருந்தாலும் அவரின் செல்ல மகள் அல்லவா

அதனால் "சொல்ல சொல்லுங்க "என்க

அதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தவள் வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "நா அந்த மண்டபத்துல இருந்து ஓடி போகல பா என்னை கடத்திட்டாங்க "என்க

அதை கேட்ட மரகதம் "அய்யோ என்ன சொல்ற கண்ணு உன்ன கடத்திட்டு போயிட்டாங்களா அய்யோ மரியாத்த உனக்கு கண் இல்லையா ஒரு பாவமும் செய்யாத என் பேத்திக்கு இப்படியா நடக்கணும் " என்று ஒப்பாரி வைக்க

ரோஷினி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான கணேஷன் "என்ன சொல்ற கண்ணம்மா உன்ன கடத்திட்டு போயிட்டாங்களா யாரு? "என்று அவளின் கையை பிடித்துக் கொண்டு கேட்க

அவள் நடிப்பு ஒர்க்அவுட் ஆனதில் உள்ளுக்குள் வெற்றிசிரிப்பு சிரித்து விட்டு வெளியில்

"ஆமா பா கல்யாணம் அப்போ நா ரெடி ஆகி இருக்கும் போது யாரோ மயக்கமருந்து கொடுத்து என்ன கடத்திட்டாங்க "என்க

அவளை இடைமறைத்தவர் "யாரு அந்த சண்டாலன் சொல்லு அவன் கைய ஓடைச்சு அடுப்புல வைச்சரேன் நாசமா போனவன் விளங்காம போக "என்று அவனுக்கு சாபம் கொடுத்துக் கொண்டு இருக்க

அவரை தடுத்த கணேஷன் "மா கொஞ்ச நேரம் சும்மா இரு நீ சொல்லுமா "என்க

"என் பின்னாடி ஒரு பையன் ரொம்ப நாளா லவ் பண்றேன்னு சுத்திகிட்டு இருந்தான் பா "என்க

அதை கேட்டு கோவம் கொண்ட கணேஷன் "யாரு மா அது என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தேனா அவன் தலையை வெட்டி இருப்பேன் "என்று ஆவேசமாக கூற

அதை கேட்டவள் மனதுக்குள் "அவன்கூட நானும் சுத்திகிட்டு இருந்தேன் அப்புறம் அப்படி சொல்லுவேன் "என்று நினைத்துக் கொண்டவள்

"என்னால உங்களுக்கு கஷ்டம் வேணாம்னு தான் பா சொல்ல "என்று பாவமாக சொல்ல

"பாத்தியா டா என் பேத்திக்கு உன்மேல எவ்ளோ பாசம்னு "என்க

அதை கேட்டவர்க்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது

"நா அவன கண்டுக்கல பா அப்போ தான் நீங்க எனக்கு கல்யாணம் முடிவு செஞ்சீங்க அதை எப்டியோ தெரிஞ்சுகிட்டவன் கல்யாணம் அன்னைக்கு என்ன கடத்தி கொண்டு போய்ட்டான் பா "என்று விசும்பியவள் "கண்ண முழிக்கும் போது எங்க இருக்கேன்னு கூட தெரியல அப்புறம் அவன் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணினான் "என்று கண்ணீர் விட

அதை பார்த்தவர் தன் மகள் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்று நினைத்து இனி கவலை படாதடா அப்பா இருக்கேன் "என்று அணைத்துக் கொண்டார்…

சிறிது நேரம் பேசிவிட்டு ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி விட்டு உள்ளே வந்தவள் "ப்பா எவ்ளோ நேரம் தான் பாவமா இருக்க மாதிரி நடிக்கறது "என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவள் நடந்ததை நினைத்து பார்த்தாள்…

கொஞ்ச நாள் அவள் பாய்பிரண்ட் கெஷிக்வுடன் நன்றாக தான் நாள் போய் கொண்டு இருந்தது..

சிறிது நாட்களில் இவள் மீது இருந்த ஆசை அவனுக்கு போய் விட வேறு பெண்ணை பார்த்துக் கொண்டு இருந்தான்

அதை அறிந்த ரோஷினி அவனை கண்டிக்க

அவனோ "என்ன ரொம்ப தான் பண்ற பொண்டாட்டி மாதிரி நீ ஒன்னும் எனக்கு வைப் இல்ல ஜஸ்ட் ஆசை இருந்துச்சு சேர்த்து வாழ்தோம் அவ்ளோ தான் இஷ்டம் இருந்த இரு இல்லனா போய்கிட்டே இரு "என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு அவன் போக

அவளுக்கு தன் எரிச்சலாகவும் அவமானமாகவும் இருந்தது

ஆனாலும்.அவனை விட்டு போக முடியவில்லை இவனை விட்டு போனால் காசுக்கு என்ன செய்வது

இவள் வேறு சொகுசாக இருந்து பழகிவிட்டாள்

அதனால் அவனை அட்ஜஸ்ட் பண்ணி அங்கு இருக்க

ஒரு நாள் பார்ட்டியில் மகிழனை ரோஷினி பார்க்க

அவளுக்கு இழந்தது மீண்டும் வேண்டும் என்ற எண்ணம் வர

மகிழன் குடிக்கும் ஜூஸில் போதை மாத்திரை கலந்து அவனுடன் இருந்து பின் அதை வைத்தே அவனை பிளாக்மெயில் செய்து அவன் வீட்டுக்குள் சென்று விடலாம் என்று பிளான் செய்து அவன் ஜூஸில் கலந்து விட

அதை குடித்தவன் சிறிது நேரத்திலேயே ஏதோ மாற்றம் தோன்ற இதற்குமேல் இங்கு இருப்பது நல்லதற்கு இல்லை என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு ரோஷினி அவன் அருகில் வருவதற்குள் சென்று விட்டான்.

அவள் பிளான் சொதப்பி போனதில் கோவம் கொண்டவள் பின் மரகதத்தை வைத்து வீட்டுக்குள் சென்று விடலாம் என்று பிளான் செய்து தான் இன்று வீட்டுக்குள் இவ்ளோ நாடகம் போட்டது…

ரோஷினி நடந்ததை நினைத்து பார்க்கும் போது

ரூம் கதவை திறந்துக் கொண்டு மரகதம் உள்ளே வர

"சாப்டியா டா "என்று பாசமாக கேட்க

அவரின் கேள்வியை கண்டுக் கொள்ளாதவள்

"பாட்டி இப்போ அந்த மகிழன் என்ன பண்றான் "என்று கேட்க

"அதை ஏன் கேட்கற நீ மண்டபத்துல இருந்து போனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு நம்ம வீட்ல இரு சனியம் இருந்துச்சே அதை கட்டிக்கிட்டான் நா எவ்ளவோ தடுத்து பார்த்தேன் முடியல "என்று வெறுப்பாக சொல்ல

ரோஷினிகோ "போயும் போயும் அவளுக்காக கிடைக்கணும் "என்று நினைத்தவள் "விடமாட்டேன் "என்று வஞ்சகமாக நினைத்து

"பாட்டி எனக்கு அவன் வேணும் "என்று தீவிரமாக சொல்ல

அதை கேட்ட மரகதம் ஒரு நிமிடம் திகைத்து போனாலும் "வேணாம் கண்ணு "என்க

"எனக்கு அவன் தான் வேணும் "என்று பிடிவாதமாக சொல்ல

எப்போதும் பேத்தியின் ஆசையை நிறைவேத்த வேண்டும் என்று நினைப்பவர்

இந்த முறையும் அவள் ஆசைக்காக எப்படியாவது மகிழனி ரோஷினியிடன் சேர்த்து விட வேண்டும் என்று திட்டம் திட்டினார்…


ரோஷினியிடம் இருந்து மகிழனையும் அவள் வாழ்க்கையையும் காப்பாற்றி கொள்வாளா இல்லை பாட்டி அப்பா அக்காவுக்காக எல்லாத்தையும் விட்டு செல்வாளா….


நிமிர்வாள்….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 22




சத்யா கண்ணாடியின் முன் நின்று பார்த்துக் கொண்டு

"நீ யார மாதிரி இருப்ப அம்மா மாதிரியா இல்ல அப்பா மாதிரியா? "என்று கேட்ட யோசித்தவள் பின் "நீ அப்பா மாதிரியே இரு டா ஆனா பேசாம மட்டும் இருக்காத"என்று

இப்போதே குழந்தையை எதிர்ப்பார்க்க

சரியாக வீட்டில் காலிங்பெல் அடிக்க

வீட்டில் மல்லிகா யாரும் இல்லை இவள் மட்டுக்கு தான் இருந்தாள்…

காலிங்பெல் சத்தம் கேட்டு மகிழனாக தான் இருக்கும் என்று ஆசையாக கதவை திறக்க

அங்கே செல்வி கணேஷனை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை

அவர்களை பார்த்து ஆனந்தஅதிர்ச்சி அடைந்தவள்

"வாங்க மா, வாங்க பா "என்று வரவேற்க

செல்வியின் முகத்தில் அப்பண்டமாக பயம் தெரிந்தது கணேஷன் இவள் முகத்தை பார்த்தே தான் ஆகணுமா என்ற எரிச்சல் தெரிந்தது.

அவர்களை உள்ளே அழைத்த பின் தான் தெரிந்தது மரகதமும் ரோஷினியும் வந்து இருப்பது…

ரோஷினியை பார்த்தவளுக்கு அக்கா எப்போ வந்த நல்லா இருக்காளா என்று எண்ணி

உள்ளே அழைக்க

மரகதமோ "இந்நேரம் என் பேத்திக்கு கல்யாணம் ஆகி இருந்த அவ உள்ள கூப்பிட்டு இருப்ப இப்போ தான் நீ வந்து என்னை கூப்பிடற எல்லாம் தலைஎழுத்து "என்று குறைப்பட்டுக் கொண்டே உள்ளே வர

ரோஷினியோ சத்யாவை மேல் இருந்து கிழ் ஒரு பார்வை பார்த்தவள் பின் "நீ எல்லாம் எனக்கொரு ஆளா "என்பது போல் முகத்தை காட்டினாள்..

இவ்ளோ நேரம் இருந்த சந்தோஷம் மரகதத்தின் பேச்சிலும் ரோஷினியின் பார்வையிலும் காணாமல் சென்றது.

உள்ளே சென்றவள் குடிக்க தண்ணீர் கொடுக்க கணேஷன் இவள் கையில் வாங்கணுமா என்று அமர்ந்து இருக்க

செல்வி எப்படியாவது பிரச்சனை வராமல் இருந்தால் போதும் என்று பயத்தில் தண்ணீர் எடுக்க வில்லை

ரோஷினியோ கண்களால் வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவள் "சே மிஸ் பண்ணிட்டேன் இவனை கல்யாணம் பண்ணி இருந்துருக்கணும் போயும் போயும் கெஷிக் கூட போய்ட்டேன் "என்று நினைத்துக் கொண்டு இருக்க

சத்யா கொடுத்த தண்ணீரை பார்த்தவர் "இந்த நேரம் என் பேத்தி இந்த வீட்டு மருமகளா இருந்து இருக்கனும் "என்று குத்தலாக சொல்ல

சத்யா என்னமோ ரோஷினியின் வாழ்க்கையை தட்டிப்பறித்தது போல் இருந்தது அவரின் பேச்சு…

மரகதம் பேச்சை கேட்டு செல்வி தான் "இவங்க சும்மாவே இருக்க மாட்டாங்களா "என்று கவலை பட

கணேஷன் மரகதம் பேச்சை எதிர்க்க வில்லை அவருக்கும் தோன்றிக் கொண்டு தான் இருந்தது "மகிழனை விட பெஸ்ட் மாப்பிள்ளை ரோஷினிக்கு பார்த்து விட முடியுமா "என்று

அதனாலயே மரகதம் பேச்சை ஆதரிப்பது போல் இருந்தார்.

சத்யாவின் சுண்டிய முகத்தை ரோஷினி இளக்கார பார்வையுடன் ரசித்துக் கொண்டு இருந்தாள்…

சத்யாவுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க

ரோஷினி எழுந்தவள் "வீட்டை சுத்தி பார்க்கட்டுமா? "என்று கேட்க

"இவ கிட்ட என்ன கேள்வி இந்த நேரம் கல்யாணம் ஆகி இருந்த இது உன் வீடு டா நீ போய் சுத்தி பாரு "என்று மரகதம் சத்யாவை முறைத்துக் கொண்டே சொல்ல

மரகதம் சொல்ல சொல்ல சத்யாவுக்கு அவளை அறியாமல் பயம் வந்தது

"அவருக்கும் ரோஷினி அக்காவ தான பிடிக்கும் ரோஷினி அக்காவா பார்த்த இப்போ என்ன பண்ணுவாங்க "என்ற எண்ணத்தில் இருக்க

ரோஷினியோ ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டு இருந்தாள்…

சரியா அந்த நேரம் ஏதோ பைல் எடுப்பாதற்காக மகிழன் வேக வேகமாக வர

அவனை பார்த்த மரகதம் "மாப்பிள்ளை "என்று அழைக்க

அவர் அழைப்பில் தான் மகிழன் வந்து இருப்பதையே பார்த்தாள்…

அவனை பார்த்தவளுக்கு "எங்கே இவன் அவளை பார்த்தவுடன் இவளை கண்டுக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயம் வர

"இவங்க கிட்ட இப்போவே கர்ப்பமா இருக்கறதை சொல்லிரனும் "என்று நினைத்து அவனை நெருங்க

மகிழன் அங்கு அமர்ந்து இருப்பவர்களை பார்க்காமல் நேராக அவர்களின் அறைக்கு செல்ல

கணேஷனுக்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது.

மகிழன் பின்னால் சத்யாவும் செல்ல

அவன் ஏதோ முக்கியமாக தேடிக் கொண்டு இருக்க."என்னங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் "என்க

அவனோ "ஈவினிங் பேசு இப்போ நிறைய வேலை இருக்கு "என்று அவளை பார்க்காமல் தேடிக் கொண்டே சொல்ல

"இல்ல நா சொல்லியே ஆகணும் "என்று பிடிவாதமாக சொல்ல

நிலைமை புரியாமல் இவள் வேற

என்று நினைத்து "சரி சொல்லு "என தன் தேடின பைல் இதுதானே என்று செக் பண்ணிக் கொண்டு இருக்க

அவனை பார்த்தவளுக்கு எப்படியாவது சொல்லிரனும் இல்லனா அவ்ளோ தான்

என்னமோ ரோஷினியை பார்த்தவுடன் மகிழன் அவள் பின்னால் போய்விடுவது போல் நினைத்துக் கொண்டு சொல்லிரனும் என்று

"அது நீங்க நான் இல்ல குழந்தை "என்று திக்கி திக்கி சொல்ல

அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் இருக்க

அவனிற்கு கால் வந்துக் கொண்டே இருக்க அதை கட் பண்ணிக் கொண்டே அவள் திக்குவதை கேட்டவன்"என்ன குழந்தை யார் குழந்தை தெளிவா சொல்லு "என்க

அவளோ அவன் வார்த்தை யார் குழந்தை என்பது மட்டும் காதில் கேட்க

அங்கேயே உறைந்துவிட்டாள்.

ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது ஹோர்மோன் சேன்சஸ் நடக்க

ரோஷினியை பார்த்து விட்ட பயத்தில் இருந்தவளுக்கு

அவனுடைய சாதாரண கேள்வி அவளை சந்தேகப்படும் கேள்வியாக தோன்ற சிலை போல் நின்றுவிட்டாள்..

சீக்கரம் போக வேண்டும் என்று மகிழன் உறைந்து நின்ற சத்யாவை பார்க்காமல் "ஈவினிங் சொல்லு "என்று சொல்லி வெளியே செல்ல

அவன் சொன்னது எங்கே அவள் காதில் விழுந்தது…

"அப்போ நீங்க என்ன நம்பலையா இது உங்க குழந்தையானு நீங்க சந்தேகப்படறீங்களா "என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தவள்

"நம்ம குழந்தைய சந்தேகப்படறிங்களா "என்று சத்தமாக கேட்டுவிட

வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டு இருந்த ரோஷினி மகிழன் வருவதை பார்த்து அவன் பின் செல்ல

அதற்குள் சத்யாவுக்கு ரூம்குள் செல்ல

என்ன நடக்கிறது என்று வெளியே இருந்து கேட்டுக் கொண்டு இருந்தாள் ….

சத்யா சொல்லும் போதே புரிந்துக் கொண்டவள் "இவ ப்ரெக்நன்ட் ஆ இருக்காளா என்று நினைத்தவள்

சத்யா அதை சொல்லும் மகிழனின் கவனம் சத்யாவிடம் இல்லை என்று தெரிந்துக் கொண்டு வேற ஏதாவது கிடைக்குமா என்று இன்னும் வெயிட் செய்ய

மகிழன் வெளி வரும் போது சுவரோடு ஒட்டிக் கொள்ள

ரோஷினி நின்றதை மகிழன் பார்க்காமல் சென்றுவிட

சத்யா வாய்விட்டு புலம்பியதை கேட்டவள் "ஒ இவள் இப்படி நினைச்சுகிட்டாள அதுவும் நல்லது தான் இதை வைச்சு இன்னைக்கே உன்னை இங்க இருந்து போக வைக்கிறேன் "என்று குதுகலித்துக் கொண்டே கீழே செல்ல

இதை பற்றி எதுவும் தெரியாமல் மகிழன் சந்தேகப்பட்டுவிட்டான் என்று எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டு இருக்க

கீழே இருந்து மரகதம் அழைக்க அந்த சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தவள்

"வந்தவங்க கிழ இருகாங்க "என்று அவர்கள் வந்ததை நினைவு படுத்திக் கொண்டு கீழே செல்ல

ரோஷினி சோர்த்து போய் வரும் சத்யாவை நக்கலாகவும் வன்மமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரோஷினியின் அருகில் வந்த மரகதம் "என்ன இப்போவே அவளை வெளியில் போக வைக்கிறேன்னு சொன்ன என்ன அது "என்று கேட்க

அவரை பார்த்து சிரித்தவள் "இப்போ தெரியும் பாரு "என்று

"அப்புறம் சத்யா நீயும் மகிழணும் சந்தோசமா இருக்கிங்களா "என்று கேட்க

செல்வியோ ரோஷினியா அதிர்ச்சியாக பார்த்தார்

"எப்போதும் சத்யா மீது அக்கறை இல்லாமல் இருப்பவள் இன்று இப்படி கேட்கிறாள் என்றால் ஏதோ இருக்கிறது "என்று நினைக்க அவர் நினைத்த மாதிரி தான் நடந்தது

ஏற்கனவே மகிழன் கணேஷனை கண்டுக் கொள்ளாமல் போகவும் இவரை அவமானப்படுத்த தான் அப்படி போகிறான் என்று எண்ணி இதுக்காகவே என் பொண்ணை இந்த வீட்டுக்குள் கொண்டு வரேன் என்று தீர்மானம் செய்ய

சத்யா ரோஷியின் கேள்வியின் என்ன இருக்கிறது என்று தெரியாமல் "ஆம் "என்று தலையாட்ட

"சோ சோ "என்று பாவமாக உச்சுக் கொட்டியவள்

பின் "அப்படி சந்தோசமா இருந்து இருந்தா நீ ஏன் வேற ஒருத்தரோட குழந்தையை சுமக்கற "என்று சத்தமாக கேட்க

அதில் அதிர்த்து விழித்தவள் "என்ன பேசற "என்று அவளையும் மீறி கேட்க

மரகதமோ "என்ன கண்ணு சொல்ற "என்று அதிர்வது போல் கேட்க

"ஆமா பாட்டி நா வீட்ட சுத்தி பார்க்கும் போது இவள் மகிழன் கிட்ட சொல்லும் புது யார் குழந்தைக்கு யார் அப்பானு மகிழன் கோவமா கேட்டாங்க "என்று பொய்யை சேர்த்து சொல்ல

"அய்யோ அய்யோ இதை கேட்டியா கணேஷா இவ நடத்தை சரி இல்ல "என்று தூபம் போட

அவரின் வார்த்தையை கேட்டவளுக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியாமல் பின் புரிய

செல்விக்கு ரோஷினியின் பேச்சு அருவெறுப்பை கொடுக்க கூடவே மரகதம் பேச அவர் மீது எரிச்சல் கொண்டவர் ஏதோ பேச வர

ஏற்கனவே முடிவு செய்த கணேஷன் ரோஷனியே அதற்கு வழி விடுவது போல் பேச

அதை பிடித்துக் கொண்டவர் "ச்சீ இவ்ளோ கேவலமான பொண்ணா "என்று கேட்டு முகம் சுழிக்க

அவர் கேட்ட கேள்வியில் சத்யா இங்கயே உயிர் போய் விட கூடாதா என்று தோன்றியது

"எனக்கு தான் இவள மொதல்லயே தெரியுமே கல்யாணதுக்கு முன்னாடியே அப்படி தெரிஞ்சவ தான கல்யாணத்துக்கு அப்பறமும் திருந்தலையா "என்று வெறுப்பை கொட்ட

அவர்கள் பேச பேச சத்யாவுக்கு நெருப்பின் நின்றது போல் இருந்தது.

"சொல்லு டி இது யார் குழந்தை யாருகூட இருந்த "என்று கொச்சையாக ரோஷினி கேட்ட

அதில் முகம் சுழித்தவளை பார்த்து "என்ன பத்தினி மாதிரி முகம் சுழிக்கற "என்று நக்கலாக கேட்க

அதில் சத்யாவின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக செல்ல

"அப்படி என்ன தான் சுகம் கிடைக்குதோ ஊர் மேயறதுல "என்ற வார்த்தையை விட

இதற்கு மேல் முடியாது என்று ஆத்திரம் வர

ரோஷினியின் அருகில் வந்து பளார் பளார் என்று கன்னத்தில் மாறி மாறி கொடுக்க

சத்யாவிடம் இருந்து இப்படியொரு செயலை எதிர்ப்பார்க்காத மரகதமும் கணேஷனும் திகைத்து போய் நின்று விட

இவளுக்கு இன்னும் நல்லா வேணும் என்று செல்வி நினைக்க

அவள் அடிப்பாள் என்று நினைக்காத ரோஷினி அதிர்ச்சியில் கை வைத்து நிற்க

"என்ன பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு "என்று ஆவேசமாக கேட்க

"என்ன தைரியம் இருந்தா என் பேத்தி மேலயே கை வைச்சு இருப்ப "என்று மரகதம் சத்யாவை அடிக்க வர

அவர் கையை பிடித்து தடுத்தவள் "பெரியவங்கள போயிட்ட இல்லனா இவளுக்கு விழுந்த அடி உனக்கு விழுந்துருக்கும் "என்று பேசியவளிடம் அவருக்கு சுத்தமாக மரியாதை இல்ல

அவரை அப்படியே தள்ளி விட்டவள்

"என்ன கேட்ட யாருகூட இருந்தேன்னா வரவன் போறவன் கிட்ட எல்லாம் போறதுக்கு நா என்ன நீயா "என்று கேட்டு மறுபடியும் அறைய

கோவம் konda கணேஷன் "என்ன உண்மையா சொன்னா என் பொண்ணை அடிப்பியா "என்று கோவமாக வர

"என்ன பெத்தவன போயிட்ட இல்லனா நீ பேசுனா பேச்சுக்கு என்ன பண்ணி இருப்பனு தெரியாது "என்று சொல்லி

"நீ எல்லாம் ஒரு அப்பனா "என்று கேள்வி கேட்க

அதில் அவர் முகம் அவமானப்பட

ஏதோ பேச வந்தவரை கை நீட்டி தடுத்தவள்

"என்ன பிடிக்கலனா எதுக்கு பெத்துக்கிட்ட நீ உன் ஆசைக்காக பெத்துக்கிட்டதுக்கு என்னை எப்படி எல்லாம் பேசி கொடுமை பண்ணி இருக்க ஆனா அப்பா தானனு எல்லாத்தையும் பொறுத்துகிட்டேன் தான இவ ஓடி போனதுக்கு பொண்ணே இல்லனு சொன்ன என்ன உன் மரியாதைய காப்பாத்திகறதுக்காக கல்யாணம் panna சொன்னா அதையும் கேட்டேன் ஆனா இப்போ என் குழந்தைய பத்தி தப்பா பேசுனா உன்ன அப்படியே விட்டுருவேனா கொன்றுவேன் "என்று அக்ரோசமாக கேட்க

அவள் கேட்டதுக்கு அவரிடம் இருந்து பதில் இல்லாமல் அதிர்ச்சி கலந்த அமைதி மட்டுமே கிடைத்தது

அவரிடம் இருந்து அவள் பதிலை எதிர்ப்பார்க்கவும் இல்லை

மரகதத்தின் அருகில் சென்று "உனக்கு வெக்கமா இல்ல என் வீட்ல வந்து உன் பேத்திக்கு உரிமை இருக்கற மாதிரி பேசிக்கிட்டு இருக்க நீ எல்லாம் ஒரு பொம்பளைய "என்று கேட்க

அவருக்கு அவள் மீது கோவம் ஆத்திரம் எல்லாம். வந்தது

இவள் என்னை கை நீட்டி கேட்பதா என்று…

செல்வியின் முன் வந்து "என்ன பொண்ணு டி பெத்து வைச்சு இருக்க "என்று கேட்க

கணேஷனுக்கும் சத்யா அவரை கேட்டதில் கோவம் இருக்க அவளை காயப்படுத்த வேண்டும் என்று

"உண்மைய சொல்லு இவளை நீ எனக்கு தான் பெத்தியா " சத்யாவின் பிறப்பை கேவலமாக கேட்க

அடுத்த நொடி கணேஷனின் கன்னத்தில் அரை விழ அதை எதிர்ப்பார்க்காத கணேஷன் அதிர்ச்சியாக பார்க்க

அவரை அடித்த செல்வி "இதை கேட்க உனக்கு வெட்கமா இல்ல "என்று solla

"என்ன தைரியம் என் புள்ளையவே அடிக்கற "என்று கேட்டுக் கொண்டு வர

அவர் கன்னத்திலும் செல்வி ஒன்று கொடுக்க

செல்வியிடம் இருந்து இதை எதிர்ப்பார்க்காமல் நிற்க

ரோஷினியோ அமைதியாக பாதுங்கிக் கொண்டாள் இப்போது வாயை கொடுப்பது சரி இல்லை என்று அறிவு சொன்னதால்…

செல்வி கணேஷன் முன் நின்று "இவ்ளோ நாள் உன்கூட வாழ்ந்ததை நினைச்சு எனக்கு அருவெறுப்பா இருக்கு என்ன தைரியம் இருந்தா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்டு இருப்ப இந்த கேள்விய உன் அம்மாவ பார்த்து கேட்பியா?"என்று கேட்க

அதற்கு பதில் சொல்ல முடியாமல் நிற்க

சத்யாவின் அருகில் வந்தவர் "வா நாம இங்கு இருந்து போயிரலாம் சாக்கடை கூட இருந்தா நாமலும் சாக்கடை ஆகிருவோம் "என்று

ரோஷினி மகிழன் சத்யாவை பார்த்து கேட்ட கேள்வியை சொல்லும் போதே மகிழனும் இவர்களை மாதிரி தான் என்று முடிவு செய்தவர் இவர்களுக்கு நடுவே தன் பெண் இருக்க வேண்டாம் என்று அழைக்க

சத்யாவுக்கும் மகிழன் அப்படி கேட்டதும் தன்னை சந்தேகப்பட்டதும் நினைவில் வர இனி அவன் கூட வாழனுமா என்று தோன்ற எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்தவள்

ரூம்க்கு சென்று போன் பிரேஸ்லெட் கழட்டி வைத்து மகிழன் வீட்டில் போட்ட அனைத்து நகையும் வைத்தவள்

பிரசன்னா அப்போ அப்போ கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து இருந்தாள் அதை எடுத்துக் கொண்டவள் அவளின் பிரண்ட்ஸ் வாங்கி கொடுத்த உடையை எடுத்துக் கொண்டவள் ஒரு முறை அறையை சுற்றி பார்த்துவிட்டு மூச்சை இழுத்து விட்டவள் கீழே சென்றாள்.

இனி இந்த அறைக்கு வர மாட்டேன் என்பது போல

கீழே வந்த சத்யாவை அழைத்துக் கொண்டு செல்வி நகர

"நீ எங்க போற உனக்கு யாரை தெரியும் "என்று மரகதம் செல்வியை இளகரமாக கேட்க

அவரை முறைத்து பார்த்தவள் "எங்கையோ போறேன் ஆனா உங்கள மாதிரி கேவலமா இருக்க மாட்டோம் " என்று சொல்லி செல்ல

செல்வி போவதை பார்த்த கணேஷனுக்கு வாழ்க்கையில் தோத்துவிட்டது புரிந்தது…

(ரொம்ப கடினமான வார்த்தைகளை யூஸ் பண்ண முடியல சோ அவங்க பேச்சை இப்படியே முடிச்சுக்கறேன் இப்போ இந்த வார்த்தைகளை யூஸ் பண்ணதே சிலருக்கு கஷ்டமா இருந்து இருக்கும் ஆனா எனக்கு வேற வழி இல்ல கதைக்காக இப்படி பட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணிக்கிட்டேன் மன்னிச்சிருங்க )...

சத்யாவும் செல்வியும் போவதை பார்த்த ரோஷினி " ஹப்பா எப்படியோ கிளம்பி போயிட்டா இனி மகிழனை கரெக்ட் பண்ண மட்டும் போதும் " ஒருத்தியின் வாழ்க்கையை கெடுத்த குற்றஉணர்ச்சிக் கூட இல்லாமல் அவள் வாழ்க்கையை அமைக்க பார்த்தாள்..

ஆனால் பாவம் அவளுக்கு மகிழனை பற்றி தெரியவில்லை...


நிமிர்வாள்....
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 23



செல்வியும் சத்யாவும் சென்ற பிறகு அந்த வீட்டில் நின்று என்ன செய்வது என்று மூவரும் கிளம்ப போக

அந்த நேரம் சரியாக மல்லிகா உள்ளே வர

அவரை பார்த்தவர்கள் அங்கேயே நின்று விட

உள்ளே வந்தவர் அங்கு இருந்தவர்களை பார்த்து உடன் இருந்தா ரோஷினியை பார்த்து கண் சுருக்கி யோசித்தவர் பின் "வாங்க இப்போ தான் வந்திங்களா "என்று கேட்க

அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க

"ஆமா அத்தை இப்போ தான் வந்தோம் "என்று ரோஷினி சொல்ல. அவளில் அத்தை என்ற அழைப்பை கேட்க பிடிக்காமல்

கணேஷனிடம் திரும்பி "ஏதாவது சாப்பிட்டீங்களா என்று கேட்டு வீட்டை சுற்றி ஒரு பார்வை பார்த்தவர்

"எங்க சத்யாவை காணோம்? "என்க

கணேஷனுக்கு மரகதத்துக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க

ரோஷினியோ "அவ எங்க போன என்ன அத்தை அவள் எல்லாம் ஒரு வீட்டில் தாங்கவே மாட்டா "என்று சத்யாவை பற்றி தப்பாக பேச

அதை கேட்ட மல்லிகா "என் மருமகளை பத்தி தப்பா பேசறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்ல "என்று கோவமாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மகிழன் அங்கு வந்தான்…

சத்யாவிடம் பேசிவிட்டு மகிழன் ஆபீஸ் சென்ற சிறிது நேரத்திலயே மனது ஒரு மாதிரி இருந்தது

இன்று அவன் ஆபீஸில் ரைடு நடக்க போவதாக சொல்ல அதற்காக எல்லாத்தையும் எடுத்து வைக்கும் அவசரத்தில் வீட்டுக்கு சென்று பைல் எடுத்துக் கொண்டு வந்தவன் சத்யா சொன்னதை காதில் வாங்காமல் சென்றான்.

ரூமில் எல்லா பைலையும் எடுத்து வைத்தவன்

மனம் பாரமாக இருப்பது போல தோன்ற

எதற்கு என்று நினைவு படுத்தி பார்த்தவன் இன்னைக்கு பைல் எடுக்க போகும் போது

அவள் என்னமோ சொல்ல வந்தா என்ன "என்று யோசித்து பார்த்தவன்

"குழந்தைனு ஏதோ சொன்னா "என்று நினைவு படுத்தி பார்த்தவன்

அவள் சொன்னது புரிந்தது முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சத்யாவை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்ற

மேனேஜரிடம் அனைத்தையும் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வேகமாக கிளம்பியவன் உள்ளே வரும் போது மல்லிகாவின் கோவமான குரல் கேட்க

"என்ன அம்மா கோவமா பேசுற மாதிரி இருக்கு அவங்க இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே "என்று எண்ணிக் கொண்டு உள்ளே வந்தான்.

அங்கு நின்றுக் கொண்டு இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன்

ரோஷினியை பார்த்து "இவள் எதுக்காக இங்க வந்து இருக்கா "என்று நினைத்து

"என்ன ஆச்சு மா?"என்று கேட்க

அவனை கோவப்படுத்த விரும்பாத மல்லிகா" ஒன்னும் இல்ல டா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் "என்றார்.

இருந்தாலும் அவரை ஒரு அழுத்தமான பார்வை பார்க்க

அவரோ அவனைக் கண்டுக் கொள்ளாமல் கணேஷனை பார்த்தார்.

மகிழனை பார்த்த கணேஷனுக்கு பயத்தில் முகம் எல்லாம் வேறுத்து விட்டது ஏதோ கோவத்தில் சத்யாவை பேசி அனுப்பிவிட்டவர்க்கு இப்போ தான் மகிழனை பற்றி நியாபகம் வந்தது

இவன் என்ன செய்வானோ என்று நினைக்க

ரோஷினியோ ஆணுக்கு இலக்கணமாக வந்து நின்ற மகிழனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரோஷினி பார்வை பார்த்த மல்லிகா "இவ எல்லாம் ஒரு பொண்ணா?"என்று நினைத்து

"என்ன விஷயமா வந்திங்க?"என்று மரகதத்தை பார்த்து கேட்க

"சும்மா தான் வந்தோம் "என்றார்.

அவரை மகிழனுக்கு சந்தேகமாக இருந்தது இவர்கள் சும்மா வருபவர்கள் இல்லையே என்று நினைத்து பார்வையை சுழற்ற

அங்கே சத்யா இல்லாததை கவனித்தவன் இவங்க வந்தது தெரிஞ்சு இருந்தா அவ இங்க thaana இருந்து இருக்கணும் என்று யோசிக்க

அவனின் யோசிக்கும் முகத்தை பார்த்து பயந்து போன கணேஷன் "அப்போ நாங்க வரோம் "என்று அங்கு இருந்து செல்ல பார்க்க

அவர் குரலில் தெரிந்த நடுகத்தில் நெற்றியை சுருக்கியவன் "ஒரு நிமிஷம் இருங்க "என்று சொல்லி விட்டு

மல்லிகாவிடம் திரும்பி "மா நீங்க போய் சத்யாவை கூட்டிகிட்டு வாங்க "என்று சொல்ல

அதை கேட்ட கணேஷன் கொஞ்சம் konjamaaga தைரியம் இழக்க ஆரம்பித்தார்

ஆனால் கணேஷனை போல மரகதத்துக்கும் ரோஷினிக்கும் பயம் இல்லை இவன் என்ன செய்து விடுவான் என்பது போல தெனாவெட்டாக நின்றுக் கொண்டு இருந்தனர்.

மேலே அவர்களின் அறைக்கு சென்ற மல்லிகா அங்கு சத்யா இல்லாததை பார்த்து குழப்பம் அடைந்தவர் அங்கு இருந்து செல்ல பார்க்க

அப்போது தான் கட்டிலில் சத்யாவின் போன் நகை இருந்ததை பார்த்து "என்ன ஆச்சு இது எல்லாம் சத்யா போட்டு இருந்தா நகை தான "என்று நினைத்து

கீழே வந்தவர் "டேய் மகிழா ரூம்ல சத்யா இல்ல டா ஆனா அவ போட்டு இருந்தா நகை எல்லாம் கட்டில கழட்டி வைச்சு இருக்க "என்று சொல்ல

அதை கேட்டவன் இவர்கள் தான் ஏதோ செய்து இருக்கனும் என்று எண்ணி

"நீங்க எப்போ வந்திங்க " என்று கேட்க

ரோஷினியோ "இப்போ தான் "என்று பயம் இல்லாமல் சொல்ல

அவள் சொன்னதை கேட்டு யோசித்து பார்த்தான் அவன் முன்பு வரும் போது யாரோ இருந்தார்கள் ஆனால் வேலை விஷயத்தை நினைத்துக் கொண்டே யார் என்று பார்க்காமல் சென்று விட்டான்.

மகிழன் வெளியே இருந்தா வாட்ச்மேனை அழைக்க

உள்ளே வந்தவர் "சார் கூப்பிட்டீங்களா? "என்று கேட்க

"சத்யா இப்போ வெளிய போனாங்களா "என்று அவரிடம் கேட்க

"ஆமா சார் நீங்க வருதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் மேமும் அவங்க அம்மாவும் வெளிய போனாங்க மேம் போகும் போது ஒரு பேக் எடுத்துகிட்டு போனாங்க "என்று அவன் கேட்காததுக்கும் பதில் சொல்ல

சத்யா பேக் எடுத்துக் கொண்டு சென்றாள் என்றாதிலயே இவர்கள் தான் காரணம் என்று முடிவுக்கு வந்தவன்

மூவரையும் கை காட்டி "இவங்க எப்போ வந்தாங்க? "என்று கேட்க

"நீங்க மதியம் வரதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க சார் "என்று சொல்லிவிட்டு மகிழனை பார்க்க

அவன் வெளியே போகும் படி சொல்லவும் வெளியே சென்று விட்டான்…

இப்போது மூவரையும் அவன் தீர்க்கமாக பார்த்து "என்ன பண்ணிங்க?"என்று உறும

"இல்ல அது தெரியாம "என்று கணேஷன் பயத்தில் வார்த்தையை திக்கி திக்கி சொல்ல

"அவளை பத்தி எதுக்கு கேக்கறீங்க யாரோ குழந்தையை தான சுமக்கறா "என்று மகரதம் அவர் வாயால் மாட்டிக் கொள்ள

அதை கேட்டவன் ருத்ரமூர்த்தியாக மாறி "என்ன சொன்ன மறுபடியும் சொல்லு என் பொண்டாட்டியை பத்தி பேச உனக்கு என்ன இருக்கு அதுவுக் என் குழந்தையை பத்தி என்கிட்டயே தப்பா பேசறியா "என்று அடிக்க போக

அவன் கையை பற்றி மல்லிகா அவனை தடுக்க "விடுங்க மா இன்னைக்கு இந்த கிழவியை என்ன பண்றேன்னு பாருங்க "என்க

"மகிழா வயசுல மூத்தவங்க டா "என்று மல்லிகா அவனை தடுக்க

"அது மூத்தவங்க மாறி நடந்துக்கறவங்களுக்கு மட்டும் தான் இதுக்கு இல்ல "என்க

"என்ன மரியாதை இல்லாம பேசறீங்க "என்று மரகதம் துள்ள

"உனக்கு எல்லாம் என்ன மரியாதை ஒழுங்கா நடந்ததை சொல்லு இல்லனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது "என்று கர்ஜிக்க

அதுவரை இவனால் என்ன செய்து விட முடியும் என்று நின்றுக் கொண்டு இருந்தா ரோஷினிக்கு "இவனுக்கு இவ்ளோ கோவம் வருமா "என்று லேசாக பயம் வர ஆரம்பித்தது..

மரகதம் பயத்தில் நடந்ததை சொல்ல

அதை கேட்ட மல்லிகா "சே நீங்க எல்லாம் மனிஷங்க தான என் மருமகளை பார்த்து சொல்ல உங்களுக்கு எப்படி தான் வாய் வந்துச்சோ "என்று கத்த

மகிழனோ ஒரு நிமிடம் இவர்கள் பேசியதை கேட்டு சத்யாவின் மனது எவ்ளோ வேதனை பட்டு இருக்கும் என்று நினைத்தவன் "நா ஈவினிங் பேசிக்கலாம்னு சொன்னனே டி அதையும் தாண்டி போயிட்டியே நா நாம குழந்தைய அப்படி நினைப்பேனா "என்று உள்ளுக்குள் அவளிடம் கேள்வி கேட்டவன்

தன் மனைவியை கஷ்டப்படுத்தியவர்களை சும்மா விட போவதில்லை என்று எண்ண

மரகதமோ "அவ போன என்ன என் பேத்தி இருக்க கல்யாணம் பண்ணிகங்க என்று உளுக்குள் பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு சொல்ல

அவரின் வார்த்தையை கேட்டவன் "என்ன இவளை நானா என் ரியா இருந்தா இடத்தில் நிற்கவே இவளுக்கு தகுதி இல்லை "என்க

அவன் இவள் மண்டபத்தை விட்டு சென்றதில் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்று எண்ணி

"இல்லை மாப்பிள்ளை நீங்க தப்பா புரிஞ்சுக்கிடிங்க அன்னைக்கு ரோஷினி ஓடி போகலை இவளை கடத்திட்டு போயிட்டாங்க "என்று கணேஷன் கொஞ்சம் தைரியத்தை வர வைத்து மகிழனிடம் சொன்னார்

அப்போதாவது இவன் இவர்களை விட்டுவிடுவானா என்ற ஆசையில்

கணேஷன் கூறியதை கேட்ட மகிழன் சத்தமாக சிரித்து "இவளை கடத்திட்டு போயிட்டாங்க அப்படினு இவ சொன்னால "என்று நக்கலாக கேட்க

எதற்கு இவன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல் கணேஷனும் மரகதமும் பார்க்க

ரோஷினியோ இவனுக்கு தெரிந்து விட்டாதோ என்ற பயத்தில் இருக்க

"இவளை யாரும் கடத்தல இவள தான போன அதும் இவளோட பாய்பிரண்ட் கூட தாலி காட்டாம ஆறு மாசம் அவன் கூட இருந்து அப்புறம் அவன் பிரண்ட்ஸ் கூட எல்லாம் கம்பெனி கொடுத்து "என்று சொல்லிக் கொண்டு இருக்க

அவன் பேச பேச ரோஷினியின் முகம் பயத்தில் வெளிரி போனது..

அவள் முன் நின்றவன் "நா சொல்லாட்ட நீ எதுக்காக இங்க வந்தன்னு அன்னைக்கு என்ன பார்ட்டியில பார்த்தவ என் ட்ரிங்க்ஸ் ல ஏதோ கலந்ததான அப்புறம் நீ நினைச்சது நடக்காததால இங்க வந்துட்ட அதுவும் என் எதிர் கம்பெனி அசோக் உன்னை அனுப்பிவிட்டதால "என்று அவளை பற்றி அனைத்தும் சொல்ல

இவனுக்கு எப்படி யாரும் தெரியாது தெரிந்தது என்று புரியாமல் திருதிருவென நிற்க

மகிழன் சொன்னதை கேட்ட மல்லிகா "சீ இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா "என்று நினைக்க

கணேஷானோ "மாப்பிள்ளை enna சொல்றிங்க?" என்று கேட்க

அவரை திரும்பி அனல் தெறிக்க முறைத்தவன் "இன்னொரு தடவை என்ன மாப்பிள்ளைனு கூப்பிட்டிட்ட அப்புறம் ஏன் பொறந்தோம்னு வருதப்படுவ "என்று எச்சரிக்க

அதில் வாயை மூடிக் கொண்டார்…

ரோஷினியோ இப்போ என்ன செய்வது என்று புரியாமல் நிற்க

மகிழன் போன் பனி யாரிடமோ பேசி வைத்தவன்

"இங்க இருந்து போயிரு இல்லனா பொண்ணுனு கூட பார்க்க பார்க்க மாட்டேன் "என்க

அவனை ஒன்னும் செய்ய முடியாததில் கோவம் கொண்டு அங்கு இருந்து செல்ல பார்க்க

"ஒரு நிமிஷம் உன்ன இப்படியே போக விட்ட என் பொண்டாட்டிக்கு னா உண்மைய இல்லனு அர்த்தம் என்று சொல்லியவன் ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று விட

அவனின் ஒரு அறைக்கே கீழே விழுந்தவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது

அவள் வீட்டை விட்டு வெளியே செல்லும் அப்போது வேகமாக வந்த ஒரு கார் அவளை உள்ளே தூக்கி போட்டுக் கொண்டு சென்றது…

வீட்டில் இருந்த கணேஷன் அடுத்து என்ன நடக்குமோ என்று இருக்க

"இவ்ளோ நாள் நா உன்ன சும்மா விட்டு இருக்க கூடாது என் ரியாவ எவ்ளோ கஷ்டப்படுத்தி இருப்ப என்று சொன்னவன் "கடன் வாங்கி உன் வீடு மாத்த ப்ரோபெர்ட்டிஸ் எல்லாம் அடகு வைச்சு இருக்க தான" என்று கேட்க

அதை கேட்ட கணேஷன்க்கு இவன் என்ன செய்வான் என்று புரிந்து "வேணாம் தம்பி விட்டுருங்க தெரியாம பண்ணிட்டேன் "என்று கெஞ்ச

அதை கண்டுக் கொள்ளாதவன் அவர் அடகு வைத்தவனிடம் அவர் கொடுத்த மொத்தத்தையும் வாங்கி விட்டான் ஒரு போன் காலில்

இவர் வாங்கிய கடனுக்கு வட்டி காட்டாமல் இருக்க

ஏற்கனவே இவர் கடன் வாங்கும் போது வட்டி ஒரு அளவுக்கு மேல் காட்டாமல் இருந்தால் இவரின் அனைத்து எடுத்துக் கொள்ளபடும் என்ற வாசகத்தை சேர்த்து தான கைஎழுத்து வாங்கப்பட்டது எனவே மகிழனுக்கு இவருடையதை வாங்க அவ்ளோ சிரமமாக இல்லை…

இப்போது கணேஷனிடன் எதுவும் இல்லை தங்க வீடு கூட இல்லாத நிலை தான்…

இப்போது தான் மகிழனை பற்றி மரகதத்துக்கும் தெரிய அவருக்கு அவனை பார்க்க அரக்கனாக தெரிந்தது…

அவர்கள் இருவரையும் வாட்ச்மேன் விட்டு வெளியே போக செய்ய

இப்போது சத்யா எங்கு சென்று இருப்பாள் என்று புரியாமல் இருக்க

மல்லிகா சத்யாவின் நண்பர்களுக்கு போண்ட் செய்து சத்யாவை பற்றி கேட்க

மல்லிகா கேட்டதை பார்த்து சத்யாவுக்கு என்ன ஆனது என்று புரியாமல் நந்தினி சரண் நவீன் பிரசன்னா சிறிது நேரத்திலயே மகிழன் வீட்டுக்கு வந்தனர்..

அங்கு இருந்த மல்லிகாவிடம் "ஆண்ட்டி சத்யா எங்க?"என்று கேட்க அவர் சொல்லமுடியாமல் தவிர்க்க

அதை பார்த்தவர்கள் மகிழன் தான் ஏதோ செய்துவிட்டான் என்று எண்ணி

"சத்யா எங்க அவளை என்ன பண்ணிங்க இந்த ஒரு மாசமாவே அவள் ஒரு மாதிரி தான் இருந்தா சொல்லுங்க சத்யா எங்க "என்று பிரசன்னா கத்த

அவனை மகிழன் வேதனையுடன் பார்க்க

அவன் கண்ணில் தெரிந்த ஒன்றில் அவன் அருகில் வந்த பிரசன்னா அவன் தோளில் கை வைத்து சத்யா வந்துருவ என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு

சத்யாவை தேட தொடங்கினர்.

மல்லிகா மணிவண்ணனிடம் சொல்ல அவரும் சத்யாவை தேடிக் கொண்டு இருந்தார்..

எங்கு தேடியும் சத்யா கிடைக்காததால் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து விட்டு மகிழன் சோர்த்து போய் வீட்டுக்கு வர

அவனை பார்த்த மல்லிகாவுக்கு கண்ணீர் வந்தது இதுவரை அவர் மகனை அவர் இப்படி பார்த்தது இல்லை அல்லவா..

ரூம்குள் சென்றவனுக்கு சத்யாவே எங்கும் தெரிய "ஏன் டி என்ன விட்டு போன?"என்று கேட்டு அவள் கழட்டி வைத்து இருந்தா நகைகளை பார்த்துக் கொண்டு இருந்தான்..

சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அலமாரியை திறக்க

அதில் சத்யா செய்து வைத்து இருந்து அலங்காரத்தை பார்த்தவன்

"என்கிட்ட சொல்றதுக்கு எவ்ளோ ஆசையா இருந்து இருக்கா "என்று

பரிசோதனை செய்த கருவியை எடுத்தவன்

"நீ வந்ததை சந்தோசப்படக் கூட முடியாத நிலைமைல என்ன விட்டுட்டு போயிட்டாளே "என்று கோவம் கொண்டவன்

"என்னை ஏன் நீ புரிஞ்சிக்கல " என்று அவனின் காதல் மனம் சத்யாவிடம் கேள்வி கேட்க

இன்னொரு மனமோ "அவ புரிஞ்சிக்கர மாதிரி நீ நடந்துக்கிட்டயா? "என்று கேள்வி கேட்க

"நா அப்படி நடந்துக்கலனாலும் அவள் என்னை புரிஞ்சு வைச்சு இருக்கனும் "என்று காதல் மனம் அவள் மீது கோவம் கொண்டது…

அவளை நினைத்து அவன் கண்ணில் நீர் வந்தது அவனை இப்படி யாராவது பார்த்து இருந்தால் மகிழனுக்கு அழ தெரியுமா என்ற கேள்வி கேட்டு இருப்பார்கள்

இவனை அழவைத்தவளோ பஸில் அழுதுக் கொண்டே கண்ணீரை துடைத்தவள் "அவருக்கு நீயும் நானும் வேணாம் டா அவருக்கு ரோஷினிய தான பிடிக்கும் இனி அவருக்கு நாம தேவை இல்லை உனக்கு நான் எனக்கு நீ அது மட்டும் போதும் "என்று குழந்தையுடன் பேசிக் கொண்டு இருந்தவள் அவனை விட்டு வெகு தூரம் சென்றாள்..

மகிழன் சத்யாவை கண்டுபிடிப்பனா சத்யா மகிழனை ஏற்றுக் கொள்வாளா…


"விலகாதே அன்பே நீயும்

நீதான் என் நிஜமுமடி

உன்னுடைய நிழலாய் இருந்தும்

தனியாக நிக்குறேன்டி

தலைக்கோதும் உந்தன் மடியில்

நான் சாய வேண்டுமடி

உன்னருகில் வாழ்ந்தால் போதும்

என் சாபம் தீருமடி"




நிமிர்வாள்….




நா லாஜிக் இல்லாம எழுதி இருக்க மாதிரி தெரிஞ்ச சாரி… அப்புறம் இதை படிச்சுட்டு ரொம்ப திட்டாதீங்க மீ பாவம் ?
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 24



இரண்டு வருடங்களுக்கு பிறகு….



மகிழன் அவன் அறையில் நின்று நிலவை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்…

இந்த இரண்டு வருடங்களில் என்ன என்ன மாறி சத்யா அவனுடன் இருந்த அறையில் சிறு கூசி கூட இடம் மாறவில்லை அப்படியே இருந்தது…

சத்யா வீட்டை விட்டு சென்ற பின் அவன் அவளை தேடாத இடம் இல்லை அவளுக்கு தெரிந்தவர்கள் செல்விக்கு தெரிந்தவர்கள் என்று எல்லாரையும் விசாரித்து பார்த்து விட்டான் ஆனால் அவள் எங்கு போயிருப்பாள் என்று தான் மகிழனால் கண்டுபிடிக்க முடியவில்லை…

நிலவை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகத்தில் கண்ணுக்கு கிழ் லேசாக கருவளையம் வந்து தாடி வைத்து இருந்தான்.

எப்போதும் கிளீன் சேவ் பண்ணி இருப்பவன் சத்யா சென்றதில் இருந்து அவனை அவன் ஒழுங்காக பராமரித்துக் கொள்வதே இல்லை

தினமும் காலை அவன் எழும் போது எல்லாம் நினைப்பது ஒன்று தான் இன்றாவது அவள் என்னிடம் வந்து விடுவாள என்று

ஒவ்வொரு முறையும் எதிர்ப்பார்த்து தோற்றுக் கொண்டு இருந்தான்…

மகிழனின் நிலை பார்த்து அவன் வேதனை படுவதை தாங்க முடியாமல் மல்லிகா அவர் மனதுக்குள் அவ்ளோ கஷ்டப்பட ஒரு நாள் மைல்டு அட்டாக் வந்து விட்டது

அதன் பின் மகிழன் தன் சோகத்தை வீட்டில் காட்ட மாட்டான் அவனின் சோகம் அவனோடு என்பது போல இருந்துக் கொள்வான்.

இப்போது அவன் ப்ரோபஸ்சர் வேலையை விட்டு விட்டான் அவனின் அப்பாவின் ஆபீஸ் ஒர்க் எல்லாம் அவன் தான் பார்த்துக் கொள்கிறான் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கொடைக்கானல் சென்று அங்கு இருக்கும் கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு வருவான்..

சத்யாவின் மார்க்சீட் அவளுக்கு எவ்ளோ முக்கியம் அதற்காக கண்டிப்பாக வாங்க வருவாள் என்று பிரின்சிபாலிடம் சத்யா வந்தால் அதை இவனிடம் சொல்லுமாறு சொல்லி இருக்க

ஒரு நாள் சத்யாவோட மார்க்ஷீட் வாங்கப்பட்டுவிட்டது என்று தெரிந்த மகிழன் பிரின்சிபாலலிடம் "சார் நா தான் சொல்லி இருந்தேனே அவள் வந்த என்கிட்ட இன்போர்ம் பண்ண சொல்லி ஏன் சொல்லல "என்று கொஞ்சம் kovamaaga கேட்க

அவரோ அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்க்க அதில் அவன் தான் இறங்கி வந்தான் "சரி எப்போ வந்த யாருக்குடா வந்த ஏதாவது அட்ரஸ் வாங்கி வைச்சீங்களா "என்று ஆர்வமாக கேட்க

"நா சொல்ல மாட்டேன் பா "என்று விட

ஆற்றமையுடன் "ஏன் சார்? "என்க

அவரோ அவனை பார்த்து அமைதியாக இருக்க

அதில் கோவம் கொண்டவன் "என் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கணும்னு எனக்கு தெரியும் "என்று கோவமாக சொல்லிவிட்டு செல்ல

போகும் அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டார் பிரின்சிபால்…

மகிழன் எவ்ளோ தூரம் சத்யாவை தேடினாலும் அவள் மூங்கில்களுக்குள் மேகத்துக்குள் மறைந்துக் கொள்ளும் நிலவாக ஒளிந்துக் கொள்ளகிறாள் ஆனால் அவளுக்கு தெரியவில்லை நிலவின் வெளிச்சத்தை வைத்து அதை கண்டுபிடிப்பது போல் ஒரு நாள் மகிழன் அவன் காதலை வைத்து அவளை கண்டுபிடித்துவிடுவான் என்று….

இந்த இரண்டு வருடங்களில் கணேஷனும் மரகதமும் அவ்ளோ கஷ்டப்பட்டனர் சொகுஸாக வாழ்ந்த உடம்பு வேலை செய்ய அடிபணியாமல் இருக்க உடம்பு எல்லாம் வலித்தது…

கணேஷன் ஒரு கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை செய்ய இரவு முழுவதும் தூங்கிவிடாமல் இருக்க மிக கஷ்டப்பட்டார் ஒரு சில சில இடங்களில் தூங்கிவிட்டு அடுத்தவரிடம் திட்டு வாங்கும் போது அவமானமாக இருக்கும்..

இருக்கும் குடிசை வீட்டில் இருக்கும் வேலைகளை பார்த்துக் கொள்ள மரகதம் உடல் ஒத்துழைக்காமல் இருக்க வீட்டில் கணேஷனுக்கும் மரகதத்துக்கும் அடிக்கடி சண்டை வரும்…

இத்தனை வருடமாக செல்வி அனைத்து வேலைகளையும் செய்து அதை குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தா மரகதத்துக்கு வேலை செய்வது பேரும் பாடாக இருந்தது…

ஆனாலும் அவர் தினமும் இத நிலைமைக்கு கொண்டு வந்த சத்யா செல்வி மகிழன் மூவருக்கும் சாபம் கொடுத்து திட்டிக் கொண்டே இருப்பார்

ஒரு சிலர் அப்படிதான் எவ்ளோ பட்டாலும் அவர்களில் குணம் மாறாது…

அன்று மகிழனிடம் அடிவாங்கி விட்டு ரோஷினி வெளியே வரும் போது அவளை தூக்கி சென்ற வாகனம் ஒரு பங்களா முன் நிறுத்த

அவளை இறக்கியவர்களை பார்த்து "யாரு டா நீங்க எல்லாம் எதுக்கு என்ன இங்க கூட்டிக் கிட்டு வந்து இருக்கிங்க "என்க

அவர்களோ அவள் முன்னால் வந்த பாஸை கை காட்ட

அவள் முன் நின்றுக் கொண்டு இருந்தது அவளின் முன்னால் பாய்பிரண்ட் கெஷிக் அவனை பார்த்தவுடன் அவள் கை கால் எல்லாம் நடுங்கியது காரணம் அவள் அவன் வீட்டில் இருக்கும் போது அவனின் பர்சனல் டாக்குமெண்ட்ஸ் அவன் கோட் செய்து வைத்து இருப்பது என்று அவனிடன் இருந்து திருடி அவனின் ஆப்போசிட் சைடு பக்கம் கொடுத்து அவனின் தொழிலை முடக்கி விட்டு தான் அவனை விட்டு வந்து இருந்தாள்…

அவளின் எண்ணம் அவளை வேண்டாம் என்று வேறு பெண்களுடன் இருப்பவன் சந்தோசமாக இருக்க கூடாது என்று தான் இப்படி செய்து விட்டு வந்து இருந்தாள் ஆனால் அவனிடம் மாட்டுவாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை..

அவனுக்கு தெரிந்து விட்டது என்று அவனிடம் கெஞ்சி இங்கு இருந்து சென்று விடலாம் என்று எண்ணி

அவனிடம் கெஞ்ச அவனோ அவளின் நடிப்பை பற்றி தெரிந்து இத்தனை நாட்கள் அவனுடன் இருந்துக் கொண்டே அவனுக்கு துரோகம் செய்து சம்பாரித்த பணத்தை அவளிடம் இருந்து பிடிங்கிக் கொண்டு

அவளை படுத்தபடுக்கையாக இருக்கும் ஒரு பாட்டிக்கு வேலை செய்ய அனுப்பி விட்டான் அவளுக்கு மாத சம்பளம் கூட இல்லை உடுத்திக் கொள்ள துணி மூன்று வேலை சாப்பாடு இது மட்டும் தான்…

படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டிக்கு இவள் தான் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும்

அடுத்தவரின் வாழ்க்கையை கொன்றுவிட்டு இவள் வாழ நினைத்தால் நடக்குமா தக்க தண்டனை கிடைத்தது…

பணம் ஆடம்பரம் வேண்டும் என்று தெரிந்தவளுக்கு இது தேவை தான்…

பிரசன்னா வேலையில் சேர்த்து விட அவன் வேலை செய்யும் ஆபீஸில் ஆர்த்தியும் சேர்த்து விட அவர்களின் காதல் போய்க் கொண்டு இருந்தது…

இப்போது நந்தினியும் நவீனும் காதலர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் எலியும் பூனையும் எப்போது எப்படி சேர்த்தர்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும்..

சரண் சந்தியா காதல் சுமுகமாக சென்றுக் கொண்டு இருந்தது…

சத்யா காணாமல் சென்ற சிறு நாட்களில் நண்பர்கள் அவளை தேடுவதில் மட்டும் கவனம் வைத்து இருக்க மகிழன் தான் அவர்களிடம் பேசி அவர்களின் வாழ்க்கையை பார்க்க சொன்னான்

அவனின் பேச்சை கேட்டுக் கொண்டவர்கள் சத்யாவை தேடிக் கொண்டும் அவர்களின் வாழ்க்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர்…



இத்தனைக்கு காரணம் ஆனவளோ காலையில் அறக்க பறக்க வேலையை பார்த்துக் கொண்டே அப்போ அப்போ ரூமையும் எட்டிப்பார்த்துக் கொண்டாள்…

சீக்கரம் வேலையை முடிக்க வேண்டும் இல்லை என்றால் வேலையை செய்யவே முடியாது என்று…

இட்லி குக்கரில் மாவை ஊத்தி வைத்துவிட்டு சாம்பார் செய்ய காய்கறி வணக்கி வைக்க சரியா அந்த நேரம் "மா மா "என்ற குரல் கேட்க

வாட்சை பார்த்தவள் "இன்னும் கொஞ்ச நேரம் இருக்கே அதுக்குள்ள எழுந்தாச்சா "என்று நினைத்துவிட்டு உள்ளே செல்ல

கட்டிலில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு வரும் அவளை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தது இரண்டு கோலிகுண்டு கொண்ட கண்கள்….

அதை பார்த்தவள் "அயோ "என்று நினைத்து

"செல்லம்மா " என்று அவள் தூக்க செல்ல

அதுவோ கையையும் காலையும் ஆட்டி அதன் எதிர்ப்பை தெரிவிக்க

"ரெண்டு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு எப்படி கோவம் வருது அப்படியே அவங்க அப்பா மாதிரி இன்னும் பேசவே ஆரம்பிக்கல அதுக்குள்ள இவ்ளோ கோவம் என்று சொல்லிக்கொண்டவள்…

"அம்மா பாவம் தான டா இனி லேட்டா வர மாட்டேன் என் கண்ணுகுட்டி முழிக்கும் போதே அம்மா வந்துருவேன் என்று சமாதானம் செய்ய

சரி பாவம் என்று நினைத்து அவளின் கைகளை கட்டிக் கொள்ள

அந்த பூகொத்தை தூக்கியவள் "என் செல்லம் "என்று சொல்லி முத்தமிட

அதுவும் எச்சிலோடு சத்யாவின் முகத்தில் முத்தமிட்டாள் சத்யா மகிழனின் மகள் ஷிருஷ்டிகா..

வயது ஒரு வயது ஆகிறது..

அப்படியே மகிழனை போல் இருப்பாள் தினமும் பத்து முறையாவது சத்யா சொல்லிவிடுவாள் "அப்படியே அவங்க அப்பாவை போல" என்று

மகளை செல்லம் கொஞ்சிக் கொண்டே முகம் கழுவிவிட்டு

பால் ஆத்திக் கொடுக்க

சமத்தாக குடித்தது..

இவர்களை பார்த்துக் கொண்டே இருந்த செல்வியை பார்த்து

"மா இனி வேலையை நீ செய்மா "என்க

இது எப்போதும் நடப்பது தானே என்று சத்யா விட்ட மீதி வேலைகளை செல்வி பார்க்க தொடங்கினார்…

ஷிருஷ்டிகாவுக்கு காலையில் எழும்போது சத்யாவின் அருகில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள் மாற்ற நேரங்களின் சமத்தாக செல்வியின் கையில் இருந்துக் கொள்வாள்

அதனால் மட்டுமே சத்யாவினால் வேலைக்கு செல்ல முடிந்தது…

காலை மகளை குளிக்க வைத்து அவளும் குளித்து ரெடி ஆக

"செல்லம் அம்மா வேலைக்கு போறேன் "என்க

அதுவும் தலையாட்டி கேட்டுக் கொண்டே செல்வியிடம் சென்றது அப்போது மகளை நினைத்து பெருமைக் கொண்டவள் முத்தமிட்டு கிளம்பினாள்….

அன்று வீட்டை விட்டு வரும் போது எங்கு செல்வது என்று புரியாமல் நின்றவளுக்கு நினைவு வந்தது "ஆதியும் ஜனனியும் தான் "

வீட்டில் இருந்து வரும் போதே அவர்கள் கொடுத்த எண்ணை எடுத்துக் கொண்டு தான் வந்து இருந்தாள்…

அவர்களின் ஊர் பொள்ளாச்சிக்கு சென்று அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணி செல்வியுடன் பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் தான் ஏறினாள்…

அங்கு சென்ற பின் ஆதியும் ஜனனியும் உதவி செய்ய

ஆதி எவ்வளோ முறை மகிழனிடன் பேசி பார்ப்பதாக சொல்ல "உங்களுக்கு நா பாரமா இருந்தா சொல்லுங்க அண்ணா நா வேற எங்கையாவது போயிறேன் "என்று அவன் வாயை அடைத்துவிடுவாள்…

வயிற்றில் குழந்தை அசையும் போது எல்லாம் மகிழனிடம் அதை பகிர்ந்துக் கொள்ள தோன்றும் ஆனால் "அவன் ரோஷினியை திருமணம் செய்து இருப்பான் "என்ற எண்ணம் வந்து அவளை தடுத்து விடும்…

குழந்தை பிறக்கும் போது கூட ஆதி சத்யாவிடம் மகிழனிடம் சொல்லலாம் என்க

அவளோ "அவருக்கு கல்யாணம் ஆகி இருக்கும் அண்ணா அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் "என்று சொல்லிவிட

ஆதிக்கு தான் சத்யா இப்படி இருப்பதை பார்த்து கவலையாக இருக்கும்…

ஆதிக்கு தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக ஆதி எவ்ளோ மறுத்தும் தனி வீட்டில் தான் இருப்போம் என்று பிடிவாதம் செய்ய

ஆதியும் வேறு வழி இல்லாமல் சத்யாவுக்கு எல்லா வசதிகளும் இருப்பது போல் வீடு பார்த்துக் கொடுத்தான்…

சத்யா வேலைக்கு போவாதாக சொல்ல

சத்யாவின் காலேஜ் பிரின்சிபாலிடம் பேசி சத்யாவின் மார்க்ஷீட்டை யாருக்கும் தெரியாமல் வாங்கி கொடுத்தது ஆதி தான்…

அவளை அவனுக்கு தெரிந்த ஸ்கூலில் சேர்த்து விட ஆதிக்கு தெரிந்த பெண் என்பதால் கம்ப்யூட்டர் சயின்ஸ் டீச்சர் ஆக வேலை பார்த்தாள்

குழந்தை பிறந்து ஐந்து மாததுக்கு பின் வேலைக்கு சென்றாள்….

சத்யா மகிழனுக்கும் ரோஷினிக்கு நிச்சயம் திருமணம் ஆகி இருக்கும் அவன் அவளை தானே விரும்பிகிறான் அதனால் அவன் இவர்களை தேட மாட்டான் என்று நினைத்து இருந்தாள்…

தமிழ்நாடு முழுக்க சத்யாவை தேடுன மகிழன் பொள்ளாச்சியில் மட்டும் தேடவில்லை…

சத்யாவுக்கு ஆதியை தெரியும் என்பதே அவனுக்கு தெரியாது அதனால் தான் இவ்ளோ தாமதம்…

சத்யாவை தேடி மகிழன் வருவானா….





நிமிர்வாள்…


நிறைய வேலை இருப்பதால் இன்னைக்கு ஒரு யூடி தான் ?
 
Status
Not open for further replies.
Top