ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் -5


மகிழனும் அவனுடைய பெற்றோரும் ரோஷினியை பார்த்து சென்ற பின் கணேஷன் ஹாலில் அமர்ந்து மகிழனின் குடும்ப பெருமையை பற்றியும் அவனின் சொத்தை பற்றியும் வாய் வலிக்க சொல்லி பெருமை பேசிக் கொண்டு இருக்க மரகதமும் அதை சந்தோசமாக கேட்டுக் கொண்டு இருந்தார்.

அவர்களின் அருகில் அமர்ந்து இருந்த ரோஷினி அவர்கள் பேசுவதை கேட்டு என்ன நினைக்கிறாள் என்று கூட தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
மகிழனுடைய குடும்பம் பாரம்பரியம் ஆனது கொண்டைக்கானலில் அவர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது கோடி கணக்கில் சொத்து இருக்க அதற்கு எல்லாம் மகிழன் மட்டுமே ஒரே வாரிசு என்று இருக்க அவர்களுக்கு பெருமை தாளவில்லை.

செல்விக்கு அவர்கள் பேசுவது கேட்டாலும் கண்டுக் கொள்ளாமல் சமையல் செய்துக் கொண்டு இருந்தார்

பெண்ணின் அம்மா என்ற முறையில் கூட அவரின் விருப்பதையும் கருத்தையும் கணேஷன் கேட்க வில்லை அதை செல்வியும் விரும்பவில்லை.

சத்யாவை யாரும் கண்டுக் கொள்ள வில்லை அது தெரிந்த விஷயம் தானே என்று அவளும் எப்போதும் போல ஒதுங்கி போய் கொண்டாள்.

அவளுக்கு கவலை எல்லாம் மகிழன் இன்னும் அவளை என்ன பாடுபடுத்த போகிறானோ என்று தான் இருந்தாலும் மனதுக்குள் "நாம பார்க்காததா "என்று தேற்றிக் கொண்டாள்.

அடுத்த நாள் எப்போதும் போல தொடங்க காலேஜ் கிளம்பிக் கொண்டு இருந்த சத்யாவிற்கு செல்வி அழைக்கும் சத்தம் கேட்க
"இதோ வரேன் மா " என கீழே செல்ல

"இன்னைக்கு சஷ்டி சாயிந்தரம் நீ காலேஜ்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் அப்படியே கோவிலுக்கு போயிட்டு வந்தரியா "என்க

"சரிமா "என்று சொல்லும் போது அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டுக் கொண்டு இருந்த மரகதம்

"இவ கோவிலுக்கு போன மட்டும் இவளோட ராசி மாறிருமா என்ன தரித்திரம் புடிச்சவ "என்று வசைப்பாட தொடங்க
அதை கண்டுக் கொள்ளாத சத்யா கிளம்பிவிட்டாள்

அவளின் அலட்சியத்தை கண்ட மரகதம் "ஒரு பொண்ண ஒழுங்கா உனக்கு வளர்க்க தெரியுதா பெரியவங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை குடுக்கணும்னு கத்துக் கொடுத்து இருக்கியா எல்லாம் உன்ன மாதிரியே திமிரா வளர்த்து வைச்சு இருக்க நல்லவேளை ரோஷினிய நா வளர்த்தேன் இல்லனா உன்ன மாதிரி அவளையும் உறுப்படாம தான் வளர்த்து இருப்ப "என்று காலையிலயே செல்வியிடம் ஆரம்பிக்க
அவருக்கு தான் தலை வேதனையாய் இருந்தது.

இவரால் தானே எல்லாம் என்று தோன்றினாலும் ஒன்னும் சொல்லாமல் அவர் திட்டுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்க
"இவ்ளோ திட்டுறனே கொஞ்சமாவது சொரணை இருக்க மாடு மேலே மழை பெஞ்ச மாதிரி நிற்கற "என்க

அங்கே வந்த கணேஷன் மரகதம் திட்டுவதை பார்த்து "என்னம்மா "என்க

"வாடா எல்லாம் இவளால தான் ஒரு வேலை உருப்படியா செய்ய தெரியுதா ஒன்னும் தெரியாதவள நம்ம தலையில ஏமாத்தி கட்டிட்டு இவங்க அம்மா போயிட்டாங்க எல்லாம் நம்ம தலையெழுத்து "என்று வெறுப்பாக சொல்ல

அதை கேட்ட செல்விக்கு அழுகை வரும் போல இருந்தது இவ்ளோ வருடங்கள் கழித்து அவரின் வளர்ப்பை பற்றி பேசியது அதுவும் அதை கேட்டு கணேஷன் அமைதியாக இருப்பது செல்விக்கு மனது விட்டு போனது யாருக்காக தான் வாழ்கிறோம் என்று தோன்ற அந்த நொடி சத்யா அவரின் மனதின் வந்து நின்றாள்.

அவளுக்காக மட்டும் தானே அவர் இன்னும் வாழ்வது.

மரகதம் இன்னும் இன்னும் செல்வியை காயப்படுத்த அதற்கு கணேஷனும் அமைதியாக இருக்க அவருக்கு தான் வெறுத்து போனது.

காலேஜ் வந்த சத்யாவிற்காக வாசலிலே காத்துக் கொண்டு இருந்தனர் அவளில் நண்பர்கள்
அவளை பார்த்ததும் அருகில் வந்து "ஏன் டி நேத்து காலேஜ் வரல ஏதாவது பிரச்சனையா "என்று பதட்டத்துடன் நந்தினி கேட்க

அப்போது தான் நேற்று அவள் காலேஜ் வர போவது இல்லை என்று இவர்களிடம் சொல்ல மறந்தது நியாபகம் வந்தது.

"பிரச்சனை இல்ல டி நேத்து ரோஷினி அக்காவ பொண்ணு பார்க்க வந்து இருந்தாங்க அதுனால தான் வரல "என்க

அதை கேட்டு ஆசுவாசம் ஆன நந்தினி "அவ பொண்ணு பார்க்க வந்ததுக்கு நீ ஏன் லீவ் போட்ட "என எரிச்சலாக கேட்டாள்
அவளுக்கு ரோஷினியை சுத்தமாக பிடிக்காது

"அப்பா தான் டி லீவ் போட சொன்னாங்க "என்க

அதை கேட்டு ஆச்சரியம் ஆன சரண் "உங்க அப்பா உங்கிட்ட பேசினார?"

"இல்ல டா யாரையும் எங்கயும் போக கூடாதுனு பொதுவா சொன்னாரு "என்க

"அதானே பார்த்தேன் அவர் உங்கிட்ட பேசிட்டாலும் "என்று நவீன் மனதாங்கலுடன் சொன்னான்.

பிரசன்னாவுக்கு சத்யாவை பார்த்ததும் தான் நேற்று அவன் பயந்தது தேவை இல்லாதது என்று தோன்றியது.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க அப்போது காலேஜ்குள் வந்த மகிழன் கண்ணில் பட்டது சத்யா வாயிலில் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தது தான்.

எப்போதும் இவர்களை பார்த்தால் வெறுப்புடன் முறைத்து விட்டு செல்பவன் இன்று வண்டியை நிறுத்தி விட்டு சத்யாவை அழைத்தான்.

மகிழன் அழைக்கும் சத்தம் சத்யா திரும்பி பார்க்க
அவன் அவளை வருமாறு அழைக்க
நண்பர்களிடம் சொல்லிவிட்டு அவன் அருகில் சென்றாள்.
அவள் போவதை பார்த்த நவீன் "இவரு எதுக்கு டா சத்யாவ கூப்பிடறாரு "என்க

"அது தெரிஞ்ச சொல்ல மாட்டேனா இரு சத்யா வந்ததும் கேட்போம் "என்று சொல்லிய சரண் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் அருகில் வந்த சத்யா "சார் எதுக்கு கூப்பிட்டீங்க?"

"உனக்கு வேற வேலையே இருக்காதா எப்போ பாத்தாலும் இவங்க கூடயே தான் சுத்திகிட்டு இருப்பியா?"என்று அவளின் பின்னால் நின்றுக் கொண்டு இருந்தவர்களை பார்த்துக் கொண்டே கேட்க

"சார் நா எதுவும் தப்பு பண்ணலையே "என்று தயங்கிக் கொண்டே கேட்டால் என்ன தான் இருந்தாலும் அவன் தன் அக்காவின் கணவன் ஆக போகிறவன் என்ற எண்ணத்தில்

"என்ன தப்பு பண்ணலையா அப்போ நீ இப்போ பண்ணிக்கிட்டு இருக்கறதுக்கு பேரு என்ன குடும்ப பொண்ணு இப்படி தான் ஆம்பள பசங்ககூட சுத்திக் கிட்டு இருப்பாங்களா "என்க

அவளோ அவனின் எண்ணத்தில் தீயை வைக்க என்று நினைத்து அமைதியாக அவன் சொல்வதை கேட்க

"மொதல்ல நீ எப்படி வேணும்னாலும் இருக்கலாம் ஆனா இனிமேல் அப்படி இருக்க முடியாது நா உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறவன் நீ என்ன பண்ணாலும் அது என் பேர தான் பதிக்கும் அதுனால அடக்க ஒடக்கமா இரு"என்று
அவளை எச்சரித்துவிட்டு செல்ல
அவளோ போகும் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்

அவள் அருகே வந்தவர்கள் "உன்ன எதுக்கு சார் கூப்பிட்டாரு? "என்று நவீன் கேட்க
அவளோ அவன் சென்ற திசையயே பார்க்க

அவள் முகத்தை பற்றி திருப்பிய நந்தினி "எரும இங்க நாங்க கேட்டுக் கிட்டு இருக்கோம் நீ அவரு போனதையே பார்த்துகிட்டு இருக்க என்னனு சொல்லு டி "என்க

"அவங்க தான் ரோஷினிக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை "என்க
நந்தினி இதை சுத்தமாக எதிர்ப்பார்க்க வில்லை.

சரணோ "உனக்கு மட்டும் எப்படி சத்யா எல்லாம் மாறி மாறி அடிக்குது "என்க

"காட் ரிட்டன் இன் மை ஹெட் "என்று தலையில் சுட்டிக் காட்டி சொல்ல
அவர்களுக்கே அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது.

காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்த சத்யாவிற்கு கணேஷன் அமர்ந்து இருந்த கோலத்தை பார்த்தே அவர் மிக கோபமாக இருக்கிறார் என்று உணர்ந்தவள்
மெதுவாக உள்ளே செல்ல அவளின் முன் வந்து நின்ற கணேஷனை பார்த்து பூரித்து போனாள் இதுவரை கணேஷன் அவள் முகத்தை பார்த்ததுகூட இல்லை இன்று அவள் முன் நிற்கிறார் என்று பிறகு அவர் முகம் கோவத்தில் சிவந்து இருப்பதை புரியாமல் நிமிர்ந்து பார்க்க
"பளார் " என்று கன்னம் சிவக்கும் அளவுக்கு முதல் முறையாக அடிக்க
திகைத்து போய் நின்றாள்…



நிமிர்வாள்….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் -6

"ஆண் அடக்கணும்
பெண் அடங்கணும்
எழுதிவெச்சவன் யாரு
ஆண்களைவிட பெண் பல படி
வீரம் கொண்டவ பாரு

ஊர் பதறட்டும்
ஆள் சிதறட்டும்
வாய் கதறட்டும் அத்துமீறு

கால் நழுவட்டும்
கை தழுவட்டும்
நீ வெறி ஆட்டம் ஆடு ஆடு"



கணேஷன் அறைந்ததும் முதலில் திகைத்தவள் பின் சந்தோசமாக கண்ணீர் விட்டாள் இதுவரை பெத்த பெண் என்று உரிமை இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தவர் இன்று உரிமையாக அடித்து இருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தாள் கணேஷனின் வார்த்தைகளை கேட்கும் வரை

"சே இது பொறந்ததவின் இருந்து எனக்கு நிம்மதியே இல்ல என் உயிர எடுக்கறதுக்கே வந்து இருக்கியா "என்று வார்த்தைகளால் அவளை கொள்ள

"என்னங்க எதுக்கு?"என்று செல்வி பதறி கேட்க வர

அவரை தடுத்தவர் "எல்லாம் உன்னால தான் " என்று அவரையும் திட்ட
காரணம் தெரியாமல் விழித்தனர்.

இவர்களை திட்டிக் கொண்டு இருக்க அங்கு வந்த மரகதமோ "என்ன ஆச்சு டா "என்க

"என்ன ஆகணும் இது பொறந்ததுல இருந்து எல்லாம் ஆகுது "என்க

"என்னடா பண்ணா "என்று வெறுப்புடன் கேட்க

"இன்னைக்கு மாப்பிள்ளைய நா பார்க்க போயிருந்தேன் "என்க

சத்யாவிற்கு புரிந்து போனது மகிழனுக்கு தான் இவளை பிடிக்காதே

"என்ன சொன்னாங்க "என்று மரகதம் ஆர்வமாக கேட்க

"இவளால என் மானமே போகுது மாப்பிள்ளை சொல்லறாரு உங்க சின்ன பொண்ண அடக்க ஒடுக்கமா இருக்க சொல்லுங்க எப்போ பாத்தாலும் பசங்க கூடயே சுத்திகிட்டு இருக்க முன்னாடி அப்படி இருந்த எப்படியோ போகட்டும்னு விட்டுருப்பேன் ஆனா இப்போ அப்படி முடியாது இவ பண்றத பார்த்த என் பேரு கேட்டுரும் அதுனால ஒழுக்காம இருக்க சொல்லுங்கனு சொல்றாரு "என்று சத்யாவின் முகத்தை பார்க்க பிடிக்காமல் வேறு பக்கம் சொல்ல

"என்னடா சொல்ற இவள பத்தி மாப்பிள்ளைக்கு எப்படி தெரியும் "என்க

"இவ படிக்கற காலேஜ்ல தான் மாப்பிள்ளை வேலை பாக்குறாரு "என்க

அதை கேட்ட மரகதம் சத்யாவின் முன் சென்று அவளின் முடியை பிடித்தவர் "உன்னால பொண்ண ஒழுக்கமா இருக்க முடியாத எப்போ பாத்தாலும் சுத்திகிட்டு தான் இருப்பியா "என்க

அவரின் வார்த்தையின் அர்த்தம் அவளை உணர்வற்று போக செய்தது.

செய்யாத தப்பிற்காக அவள் இப்படி அடியும் வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டு இருக்கிறாள் அல்லவா.

கணேஷனிடம் சென்றவர் "இவளால மாப்பிள்ளை எதுக்கும் தப்பா நினைச்சுக்கிட்டாரா "என்று பயத்துடன் கேட்க

"இல்லமா அவரே சொல்லிட்டாரு உங்க சின்ன பொண்ணு பண்றத பார்த்து ரோஷினியும் இப்படி தானு நினைச்சுக்க மாட்டேன் நீங்க அதை நினைச்சு கவலை படாதீங்கனு சொல்லிட்டுதான் போனாரு "என்க
அதை கேட்ட பின் தான் மரகதம்க்கு நிம்மதியாக இருந்தது நடக்க போவது அவரின் செல்ல பேத்தியின் கல்யாணம் ஆயிற்றே.

"நல்லவேளை நம்ம மாப்பிள்ளை நல்லவரா இருக்கறதுனால பெரிய மனசு பண்ணி இவ பண்ணுனத மனசுல வைச்சுக்காம நம்மகிட்ட இப்படி சொல்லி இருக்காரு "என்று மகிழனை நினைத்து பெருமை பட்டுக் கொண்டார்.

இதை கேட்டுக் கொண்டு இருந்த சத்யாவிற்கோ நா எந்த தப்பும் பண்ணல என்று கத்த வேண்டும் போல இருந்தது ஆனால் இவளின் வார்த்தைகளை யார் நம்புவார்.

"இவள இனி காலேஜ்க்கு அனுப்பாத டா இவளால ரோஷினி வாழ்க்கை போயிரும் போல இருக்கு "என்று மரகதம் கோபத்துடன் சொல்ல

அதை கேட்ட சத்யாவிற்கு தூக்கிவாரி போட்டது இது அவளின் வாழ்க்கை அல்லவா

செல்வி கையை பிசைந்துக் கொண்டு நின்றார் என்ன செய்வது என்று தெரியாமல்

இவர்களின் பயம் தேவையற்றது என்பது போல
"இவள காலேஜ் போகாம நிறுத்த முடியாது மா இவளுக்கு வெளியில என் பொண்ணுனு அடையாளம் இருக்கு இப்போ இவ போகலான எல்லாரும் நம்ம குடும்பத்தை பத்திதான் தப்பா பேசுவாங்க வேற வழி இல்ல இவ போய்தான் ஆகணும் "என்க

அப்போது தான் சத்யாவிற்கு மூச்சு விட முடிந்தது

"கடைசியா சொல்றேன் இனி இப்படி ஏதாவது பண்ணி மாப்பிள்ளை என்கிட்ட வந்து சொன்னா அப்புறம் நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது இவளால மட்டும் ரோஷினி வாழ்க்கைக்கு ஏதாவது ஆகட்டும் அப்புறம் இருக்கு "என்று எச்சரித்துவிட்டு
"வாங்க மா வெளியில போகணும் "என்று மரகததை அழைத்து சென்றார்.

செல்வி சத்யாவின் தோளை தொட அவரை அணைத்துக் கொண்டவள் "நா எந்த தப்பும் பண்ணல மா "என்று கதறினாள்.

அவளின் தலையை வருடி விட்டவர் "உன்மேல எந்த தப்பும் இருக்காதுனு எனக்கு தெரியும் டா "என்று அவளை சமாதானம் செய்ய

"எனக்கு மட்டும் ஏன் மா இப்படி "என்று கண்ணீர் வடிக்க

"இவங்க உன்ன பேசியதை எல்லாம் நீ திருப்பி குடுக்கணும் சத்யா அதுக்கு நீ நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போகணும் இப்போ இப்படி பேசுனவங்க அப்போ உன்ன அவங்க பொண்ணுனு சொல்லி பெருமை படனும் "என்று அவளுக்கு தைரியம் கொடுத்தவர்

அவளை ரூம்க்கு போக சொல்ல
உள்ளே சென்றவளுக்கு மகிழன் மேல் கோவமாகவும் ஆற்றமையாகவும் இருந்தது
அவனுக்கு ஏன் அவள் மீது இவ்வளவு வெறுப்பு என்று புரியாமல் முழித்தவள் பின் இனி அவன் இருக்கும் திசை பக்கம் கூட செல்ல கூடாது என்று முடிவு செய்தாள்.

அடுத்த நாள் காலேஜ் சென்றவளின் முகத்தில் உள்ள கைரேகையை பார்த்து" என்ன "என்று கேட்ட நண்பர்களுக்கு ஒன்று இல்லை என்று கூறியவள்
மகிழனின் முகத்தை கூட பார்க்கவில்லை

அவள் முகத்தை பார்த்து அடி வாங்கி இருக்கிறாள் என்று புரிந்த மகிழன் அதை பார்த்து பெரிதாக வருத்தப்படவில்லை

ஆனால் எப்போதும் நேரில் பார்த்தால் ஆசிரியர் என்ற முறையில் வணக்கம் வைப்பவள் இப்போதெல்லாம் அவன் நேரில் வந்தால் கூட நிமிர்ந்து பார்ப்பது இல்லை அவளின் வித்யாசம் புரிந்தாலும் அவன் அவளை கண்டுக் கொள்ள நேரம் இல்லை.

கல்யாணம் இன்னும் சில நாட்களில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்க அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருந்தன.

இந்த இடைப்பட்ட நாட்களில் ரோஷினியும் மகிழனும் ஒரு முறைக் கூட பேசிக் கொண்டது இல்ல அது அவனுக்கு தோணவும் இல்லை.

இவனின் நடவடிக்கை பார்த்து ரோஷினி தான் மரகதமிடம் புலம்பிக் கொண்டு இருப்பாள்.

அவளின் ஆசை எல்லாம் வர போகிறவன் அவளை புகழ வேண்டும் அவளை கையில் வைத்து தாங்க வேண்டும் இவளிடம் பேச காத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று இருக்க
இவளின் ஆசைக்கு அபார்பட்டவனாக மகிழன் இருக்க ரோஷினிக்கு பொறுமை கடந்து போய்க் கொண்டு இருந்தது.

இவளாக மகிழனுக்கு அழைத்து பேச இவள் இகோ இடம் விடாததால் அவர்கள் எப்போதும் போல நாட்களை கடத்திக் கொண்டு சென்றனர்.

ரோஷினியாவது மகிழனை திட்டி அவனை நினைப்பாள் ஆனால் மகிழனுக்கு ரோஷினியின் நியாபகம் சுத்தமாக இல்லை அவனின் கவனம் முழுக்க காலேஜ்லையும் அவனின் அப்பா பார்த்துக் கொண்டு இருக்கும் தொழிலையும் இருந்தது.

அன்று புடவை எடுக்க போகும் நாள்
சத்யாவை யாரும் அழைக்கவே இல்லை
மரகதம் தான் எங்கே சத்யாவை பார்த்தால் மகிழனுக்கு கோவம் வந்து அதை ரோஷினியிடம் காட்டிவிடுவானோ என்ற பயத்தில் அவளை ஒதுக்கினார்

செல்விக்கு சத்யா வராதது கவலை அளித்தாலும் ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது அவளை யாரும் வார்த்தையால் காயப்படுத்தமாட்டார்கள் என்று.

ரோஷினி மரகததின் அறிவுரை படி அவளை பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள்.

அங்கு மகிழன் வீட்டிலோ அவனை திருமண உடை எடுக்க அழைக்க
"நா எதுக்கு மா நீங்க போய் எடுத்துட்டு வாங்க "என்க

அவனின் பேச்சை காதில் கேட்காத மல்லிகா அவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் நேராக உள்ளே செல்ல
செல்வியிடம் வந்த மல்லிகா "சத்யா வரலையா சம்மந்தி "என்று கேட்க

"அவளுக்கு ஏதோ டெஸ்ட் இருக்குனு வரல அண்ணி "என்றார்.

இவர்கள் பேசுவதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த மகிழனுக்கு புரிந்தது சத்யாவிற்கு வர விரும்பம் இல்லை என்று அவனுக்கு தெரியாததா அவளுக்கு டெஸ்ட் இருக்க இல்லையா என்று.

வந்ததில் இருந்து ரோஷினி மகிழனை பார்த்துக் கொண்டு இருக்க அவன் ரோஷினி இருக்கும் பக்கம் கூட பார்வையை திருப்ப வில்லை.

அவனுக்கு திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றவில்லை.

மரகதம் ரோஷினியை மகிழன் அருகில் சென்று நிற்க சொல்ல
அவளும் அவன் அருகில் சென்று நிற்க

அருகில் வந்தவளை மகிழன் திரும்பி பார்த்ததும் அவனை பார்த்து அவள் சிரிக்க
அவனோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல பார்த்து திரும்பிக் கொண்டான்

அதில் ரோஷினியின் ஈகோ அடிவாங்கியது அவன் அவள் மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது அவளுக்கு அவன்மீது கோவத்தை உருவாக்கியது.

மல்லிகாவும் ரோஷினியின் முகத்தை பார்த்து மகிழனை அவளிடம் பேச சொல்ல அவனுக்கோ சுத்தமாக ஆர்வம் இல்லை.

அவனுக்கே அவன் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.

மணிவண்ணனும் கணேஷனும் இவர்களை பார்க்காமல் பேசிக் கொண்டு இருந்தனர்.

ரோஷினி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு புடவை பார்க்க
மரகதம் ரோஷினியின் முகத்தை பார்த்து அவள் கடுப்பில் இருப்பதை உணர்ந்து அவரே மகிழனிடம் சென்று பேச சொல்ல

வேறு வழி இல்லாமல் ரோஷினியின் அருகில் அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டே அவளுக்கு புடவை எடுக்க உதவினான்.

அவள் எடுக்கும் புடவை அவனுக்கு பிடிக்க வில்லை இவன் செலக்ட் செய்யும் புடவை அவளுக்கு பிடிக்கவில்லை.

சிறிது நேரத்திலயே "தப்பாக முடிவு எடுத்து விட்டோமோ "என்று மகிழனுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

சிறு புடவை விஷயத்தில் கூட இவருவரின் கருத்துக்களும் ஒத்துபோகவில்லை இதில் வாழ்க்கை முழுக்க எப்படி இருக்கும் என்று எண்ணினான்.

மகிழனின் செலெக்ஷனை பார்த்து ரோஷினி இவன் பழம் என்று முடிவு செய்து விட்டாள்.

அன்று நாள் இப்படி செல்ல எப்போதுடா போவோம் என்று தோன்றியது மகிழனுக்கு.

இருவீட்டாரும் விடைபெற்றுக்கொள்ள ரோஷினியும் மகிழனும் திரும்பிக் கூட பார்த்துக் கொள்ளாமல் சென்றனர்.


பெரியவர்களுக்கு அது புரியாமல் இல்லை ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

வீட்டுக்கு வந்த மகிழன் இது சரி வருமா என்று யோசிக்க ஆரம்பித்தவன் பின் இனி யோசித்தும் பலன் இல்லை கிட்டதட்ட பாதிவேலை முடிந்து இருக்க இனி இதை பற்றி யோசிக்க கூடாது நடப்பது நடக்கட்டும் என்று எண்ணிக் கொண்டான்.

"என்னங்க இது சரி வருமா "என்று மல்லிகா கணவரிடம் கேட்க

"என்ன மல்லி நீ இப்போ போய் இத பத்தி கேட்கற "என கடிந்துக் கொள்ள

"எனக்கு புரியுதுங்க ஆனா இன்னைக்கு நீங்களே பார்த்திங்கள அவனுக்கும் அந்த பொண்ணும் முகம் குடுத்து பேசிக்க கூட இல்லை "என கவலையாக சொல்ல

அவரின் கைபிடித்துக் கொண்டு
"சரி வராதுனா மகிழன் இந்த நேரத்துக்கு ஏதாவது பண்ணிருப்பான் அவன் அமைதியா இருக்கானா அப்போ அவன் எல்லாம் பாத்துப்பான் நீ கவலை படாத "என்க

அவரும் மகனின் மேல் இருந்த நம்பிக்கையில் அதை பற்றி பேசாமல் சென்றார்.

வீட்டுக்கு சென்ற செல்வி சத்யாவை பார்க்க செல்ல
ரோஷினியோ கோவமாக உள்ளே சென்றாள் அவளை சமாதானம் செய்ய மரகதமும் அவள் பின்னால் சென்றார்.

ரோஷினி கோவமாக கட்டிலில் இருந்த தலையணை பியித்து அதில் இருக்கும் பஞ்சுகளை வெளியே வீசிக் கொண்டு இருக்க
அவளின் அருகில் அமர்த்தவர் "என்ன டா கண்ணு கோவம் "என்க

"நீங்களே பார்த்தீங்க தான பாட்டி அவன் எப்படி நடந்துக்கறானு பெரிய மன்மதன்னு நினைப்பு என்னையே இன்சல்ட் பன்றான் "என்று கோவமாக கத்த

அவளின் கோவம் போகும் வரை அமைதியாக இருந்தவர் "இப்போ அப்படி இருந்த என்ன கல்யாணத்துக்கு அப்புறம் உன் கைக்குள்ள வைச்சுக்கோ அப்போ உன் பின்னாடி நாய் மாதிரி சுத்த விடு "என்று ஐடியா கொடுக்க

அதுவரை கோவத்தில் இருந்தவளின் முகம் அவர் சொன்னதை கேட்ட பின் பிரகாசம் ஆனது

அவனை அவள் காலடியில் வைப்பதை இப்போதே கனவே காண ஆரம்பித்து விட்டாள்.

அங்கே அவன் சரி வருமா என்று யோசிக்க

இங்கே இவள் அவனை அவள் காலடியில் வைக்க யோசிக்க

சத்யாவோ இன்று மகிழன் வராத மகிழ்ச்சியில் நண்பர்களுடன் சந்தோசமாக அரட்டை அடித்து விட்டு களைப்பில் நன்றாக இழுத்து போத்தி தூங்கிக் கொண்டு இருந்தாள்.

இவர்களின் வாழ்க்கையில் விதி என்ன வைத்து இருக்கிறது என்று தெரியாமல்….

நிமிர்வாள்….
 
Last edited:

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 7

"இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே"




காலை கீழே வந்த சத்யாவிடம் செல்வி கல்யாணத்திற்கு அவளுக்கு எடுத்த உடையை காட்ட
பார்த்தவள் "நல்ல இருக்கு மா "என்று சென்று விட்டாள்.

அவளை பார்த்துக் கொண்டு இருந்த செல்விக்கு தான் கஷ்டமாக இருந்தது அவளுக்கு பிடித்த உடையை கூட அவளுக்கு எடுக்க உரிமை இல்லையே என்று.

ஆனால் இந்த கவலை எல்லாம் சத்யாவிற்கு இல்லை உடுத்த துணி இருக்கிறதா அதுவே போதும் என்று நினைத்துக் கொள்வாள்.

காலேஜ் வந்தவள் எப்போதும் போல இருக்க கிளாஸ்க்கு வந்த மகிழனுக்கு தான் ஏதோ போல் இருந்தது.

நேற்று சத்யாவை பார்க்காததும் ரோஷினியின் நடவடிக்கையும் சேர்ந்து அவன் மனதை சோர்வடைய செய்திருந்தது அதனால் அவன் பாடம் எடுக்கும் போது தடுமாற
சத்யா வியப்பாக பார்த்தாள்.

மகிழன் எப்போதும் அவன் படம் எடுக்கும் போது தடுமாறியது கிடையாது இப்போது அப்படி நடக்க மாணவர்கள் அவனையே பார்க்க

அதில் அவனின் தப்பு புரிந்து "நீங்க இதுவரைக்கும் நடத்துனதை கோத்துரு பண்ணுங்க "என்று வெளியே சென்று விட்டான்.

மகிழனுக்கு அவனின் திருமண விஷயத்தில் இருந்து வெளி வரவும் முடியவில்லை

அவன் ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டான் என்று இருக்க அவனால் கல்யாணத்தில் ஒத்து போகவும் முடியவில்லை
புரியாத புதிராக இருந்தான் அவன் மனது என்ன கேட்கிறது என்று அவனால் உணரமுடியவில்லை.

இங்கே இவன் வாழ்க்கையை பற்றி கவலை பட

அங்கு ரோஷினியோ அதை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அவள் பாய்பிரண்ட் உடன் பப்பில் நடனமாடிக் கொண்டு இருந்தாள்.

இரவு வேளையில் அவளால இங்கு வர முடியாதாதால் பகலில் வந்து விடுவாள்.

அவளை சுற்றி காலையில் மதுவுடன் குட்டி குட்டி உடை அணிந்து பெண்களும் ஆண்களும் வித்யாசம் பார்க்காமல் உரசிய படி ஆடி கொண்டு இருந்தனர்.

இவளுடன் நடனமாடிக் கொண்டு இருந்தவனின் கை அவள் மீது எறும்பாக ஊற அவனின் எண்ணத்தை புரிந்துக் கொண்டவள் அவனின் கைக்கு சுதந்திரம் அளித்துக் கொண்டு இருந்தாள் அதில் அவன் இன்னும் குஷி ஆகி எல்லைகளை தாண்ட அவள் அவனை தடுக்கவே இல்லை ஒரு கட்டத்தில் அவன் அவளை ரூம்க்கு அழைக்க

அவனின் அழைப்பை மறுத்தவள் "உனக்கு தொடனும்னு தோணுச்சு நீ தொட்ட எனக்கும் அது பிடிச்சு இருந்துச்சு அதுனால நானும் உன்ன பிரீ யா விட்டேன் ஆனா ரூம்க்கு நோ "என்க

அவனோ அவளை ஆசையாகவும் ஏமாற்றமாகவும் பார்க்க அது தான் அவளுக்கு தேவையாகம் கர்வமாகவும் இருந்தது.

எப்போதும் இவளுக்காக ஏங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மகிழன் யாரை அடக்க ஒடக்கமான அமைதியான பெண் என்று நினைத்தானோ அவள் தான் அவனுக்கு பிடிக்காத அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள்.


ஈவினிங் வீட்டுக்கு கிளம்ப வெளியே வந்த சத்யா மகிழனின் சோர்த்த முகத்தை பார்த்து "என்ன ஆச்சு "என்று நினைத்தவள் பின் என்ன ஆனா எனக்கு என்ன என்று அவனை கடந்து செல்ல
அப்போது அவளின் துப்பட்டா அவனின் மேல் உரசி செல்ல அதுவரை சோர்வுடன் இருத்தவனின் மனது உற்சாகமாக மாற

அதை புரிந்துக் கொண்டவன் அத துப்பட்டா யாருடையது என்று திரும்பி பார்க்க அதற்குள் சத்யா சென்று இருந்தாள்.
யார் அது என்று பார்க்க முடியாதவன் மனதுக்குள் "எனக்கு என்னாச்சு இவ்ளோ நேரம் அமைதி இல்லாம இருந்த மனசு யாரோ ஒரு பொண்ணோட துப்பட்டா பட்டு அமைதி ஆகுது "என்று எண்ணி


"இதை பத்தி நினைக்க வேண்டாம் இப்போ என் மனசு அமைதியா இருக்கு அது போதும் "என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்ல

நேற்று இருந்த மன கவலை இல்லாமல் உற்சாகமாக வீட்டுக்கு வர

அவன் சந்தோசமாக வருவதை பார்த்த மல்லிகா "நா தான் அப்படி நினைச்சுகிட்டேன் போல இருக்கு அவனுக்கு ரோஷினிய பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குறான் போல இருக்கு "என்று நிம்மதியானார்

எப்போதும் போல ரோஷிஞ் லேட்டாக வீட்டுக்கு வர
அவளை தனியே அழைத்து சென்ற மரகதம் "இங்க பாரு கண்ணு இவ்ளோ நாள் நீ இப்படி இருந்துருக்கலாம் ஆனா கல்யாணம் ஆகுற வரைக்கும் வீட்லயே இரு யாராவது உன்ன பார்த்துட்டு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்கனா அவ்ளோ தான் "என்று யாருக்கும் கேட்காத குரலில் எச்சரிக்கை

"என்ன பாட்டி என்ன என் இஷ்டத்துக்கு இருக்க விட மாட்டிங்களா "என்று எரிச்சலாக கேட்க

"எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் கண்ணு புரிஞ்சுக்கோ "என்று சுட்சமம் சொல்லிக் கொடுக்க
அதை புரிந்து கொள்ளாதவள் வேகமாக உள்ளே சென்றாள்.

அவள் போவதை பார்த்த மரகதம் இந்த பொண்ணு எப்போ தான் புத்தியோட புலச்சுக்குமோ என்று புலம்பி விட்டு

அங்கு சென்றுக் கொண்டு இருந்த சத்யாவை அழைத்தவர் "இந்தாடி இங்க வா "என்க

"இப்போ என்ன பண்ண போகுதோ "என்று நினைத்துக் கொண்டே அவர் முன் நிக்க

"என்ன டி பார்வை எல்லாம் பலமா இருக்கு முறைக்கரியா உன் ஆத்தாகாரி சொல்லிக் குடுத்தால "சென்று செல்வியை பேச்சில் இழுக்க

சத்யாவிக்கோ கோவமாக வந்தது "இப்போ இந்த கிழவி எதுக்கு தேவை இல்லாம அம்மாவ வம்புக்கு இழுக்குது "என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவள்

"நா சாதாரணமா தான் பாட்டி பாக்கறேன் "என்க
"கூட கூட பேசற எல்லாம் உன் அம்மா வளர்த்த விதம் அப்படி "எங்க
"கேட்ட பதில் சொல்லணும் தான "என்க

"என்ன எதிர்த்து பேசறியா "என்று குரலை உயர்த்த

சரியாக அந்த நேரம் செல்வி கையில் பாயசத்துடன் வந்தவர் "இந்தாங்க அத்தை "என்று குடுக்க
அதை வாங்கிய மரகதம் அனைத்தையும் மறந்து பாயசத்துடன் போட்டி போட

சத்யாவின் கை பிடித்து அங்கு இருந்து அழைத்து வந்தார் செல்வி
"தேவை இல்லாம வம்பிலுக்குறாங்க மா "என்று குறைப்பட

"அவங்கள பத்தி தான் தெரியுமே "என்று சொல்லி செல்ல
அவளுக்கு தான் கடுப்பாக இருந்தது.

ரூம்க்கு வந்த ரோஷினிக்கோ அவளின் சுதந்திரத்தை தடை விதிக்கும் இந்த திருமணத்தின் மேல் விரும்பம் இல்லாமல் கோவமாக வந்தது அதுவும் அவளை கண்டுகொள்ளாத மகிழன் மேல் வெறுப்பு தான் வந்தது

ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தவள் பின் சிறிது நேரத்தில் எதையோ நினைத்து முடிவு செய்தவள் சிரித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் சத்யா எழும் போதே செல்வி அவள் முன் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருக்க

அவரை பார்த்து பதறி எழுந்தவள் "என்ன ஆச்சு மா இங்க இருக்கிங்க ஏதாவது பிரச்சனையா "என்க

"எதுக்கு இவ்ளோ பதட்டம் பிரச்சனை எல்லாம் இல்ல இன்னைக்கு என்ன நாள் "என்று கேட்க

யோசித்தவள் எதுவும் நியாபகம் வராததால் "தெரியல மா என்ன நாள்?"என்க

அவளின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்தவர் "என் குட்டி தேவதை என்கிட்ட வந்த நாள் "என்று பாசாமாக சொல்ல

அப்போது தான் அவளுக்கும் புரிந்தது இன்று அவளின் பிறந்தநாள் என்று.

அறிந்து சுவரசியம் இல்லாதவள் "அதுவா மா "எங்க

அவளை கண்கலங்க பார்த்தவர் "உன்னோட பிறந்தநாளை கூட கொண்டாட முடியாத மாதிரி நிலமைல உன்ன வைச்சு இருக்கானே டா "என்க
அவரின் வருத்தத்தை கண்டு

"அதுனால என்னமா இப்போ நீங்க முத்தம் குடுத்தீங்களே அதுவே எனக்கு போதும் "என்க

அவளை பார்த்து சிரித்து "உன்ன மாதிரி பொண்ணு கிடைக்க புன்னியம் பண்ணி இருக்கனும் டா "என்க
அவளோ விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

அதை பார்க்காதவர் "சீக்கரம் குளிச்சிட்டு கீழே வா எனக்கு வேலை இருக்கு "என்று கீழே செல்ல

கடவுளை வேண்டிக் கொண்டவள் குளித்து ரெடி ஆகி கீழே வர
அவளின் பிறந்தநாள் யாருக்கும் தெரியாது என்றாலும் மனது எதிர்ப்பார்த்தது.

செல்வி குடுத்தா கேசரியை சாப்பிட்டு எல்லார் முகத்தையும் பார்க்க எதுக்காக இனிப்பு என்று கூட கேட்காமல் கணேஷனும் மரகதமும் சாப்பிட

அதை கண்டு அவள் மனம் வேதனையில் சுருங்கியது
அவளின் முகம் பார்த்து அவளின் வலியை புரிந்துக் கொண்ட செல்வி

"கோவிலுக்கு போயிட்டு போடா நேரம் ஆச்சு "என்க
இவளும் நேராக கோவிலுக்கு சென்றாள்.

அம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் முன் நிற்க
அங்கு கண்மூடி வேண்டிக் கொண்டிருந்த மல்லிகா எதிரில் நின்ற சத்யாவை பார்த்தவர்
"சத்யா "என்க

அழைப்பில் கண் திறந்து மல்லிகாவை பார்த்தவள் புன்னகைக்க


அவரும் அவளை பார்த்து சிரித்தவர் "எப்படி இருக்க டா "என்று வாஞ்சையாக கேட்க
"நல்ல இருக்கேன் "அவரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் திணற

"அத்தை "னு கூப்பிடு டா என்று சொல்ல

அவளும் சிரித்துக் கொண்டே "நல்ல இருக்கேன் அத்தை "என்றவள்

"நீங்க எப்படி இருக்கிங்க வீட்ல மாமா எப்படி இருகாங்க "என்க

"நல்ல இருக்கோம் டா நீ அடிக்கடி இங்க வருவியா?"என கேட்க

அவளோ கொஞ்சம் தயங்கி விட்டு "இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் அத்தை அதுனால தன் காலைல வந்தேன் இல்லனா வெள்ளிக்கிழமை சாயிந்திரம் தான் வருவேன் "என்க

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா உனக்கு குடுக்கறதுக்கு ஒன்னும் இல்லையே டா "என்று யோசிக்க

அவரை தடுத்தவள் "உங்க ஆசிர்வாதம் மட்டும் போதும் அத்தை "என்று அவர் காலில் விழுந்து வணங்க

அதில் அவளை பாசமாக தூக்கிவிட்டவர் அவர் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளுக்கு போட

இதை எதிர்பாராத சத்யா அதை கழட்ட போக அவளின் கை பிடித்து தடுத்தவர்

"நா உனக்கு குடுத்தது டா கழட்டாத "என்க

அவளோ மனசு இல்லாமல் "இது வேண்டாமே அத்தை "என்று இழுக்க

"அத்தை குடுத்தா வாங்கிக்க மாட்டியா "என்று உரிமையாக கேட்க
அவரின் உரிமையில் கண்கலங்கியவள் சம்மதமாக தலையாட்ட

அவள் கன்னத்தை தட்டியவர் காலேஜ்க்கு லேட் ஆகலையா என்று கேட்க

அப்போது தான் நியாபம் வந்தவள் லேட் ஆகிருச்சு அத்தை நா கிளம்பறேன் என்று சொல்லி அம்மனை அவசரமாக வேண்டியவள்

பஸ் போயிருக்க கூடாதே என்று நினைத்துக் கொண்டே விரைந்து சென்றாள்.

அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்த மல்லிகாவுக்கு இவள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்காமல் இருக்க முடிய வில்லை.

வாழ்க்கையில் யார் யாருடன் சேர வேண்டும் என்று விதி முடிவு செய்து இருக்கும் அதை யாராலயும் மாற்றமுடியாது.
நிமிர்வாள்..


இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கறதால ரெண்டு யூடி எழுத முடியல கண்டிப்பா நாளைக்கு ரெண்டு யூடி போஸ்ட் பண்றேன் நன்றி
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 8



காலேஜ் வந்து இறங்கியவளை பார்த்த நந்தினி ஓடி வந்து அணைத்துக் கொண்ட வாழ்த்துக்கள் சொல்ல

சிரித்துக் கொண்டே "தேங்க்ஸ் டி "என்க

அவளோ சத்யாவை முறைத்து பார்த்தாள்

அவர்களுக்குள் தேங்க்ஸ் சாரி சொல்லி கொள்வதில்லை என்பதால்.

"அட தள்ளு நீ அவளை இப்படி பிடிச்சுகிட்டு நின்னா நாங்க எப்போ விஷ் பண்றது "என்று நவீன் தள்ளி விட

"போடா காண்டமிருகம் உனக்கு பொறாமை "என்று பளிப்பு காட்ட

உண்மையிலேயே அவனுக்கு நந்தினி சத்யாவை அணைத்துக் கொண்டு நின்றது பொறாமை தான் ஆனால் நந்தினியிடம் சொல்ல வில்லை

அவள் பேசுவதை கண்டுக் கொள்ளாதவன்

சத்யாவிடம் "happy பிறந்தநாள் "என்று தமிழைலும் இங்கிலிஷ்உம் கலந்து சொல்லி அவளுக்கு சாக்லேட் நிறைந்த பெரிய பாக்ஸ் கொடுத்தான்

அதை பார்த்த நந்தினி "ஏன் டா நீ தான் எப்போவும் சாப்பிடுவ அதே மாதிரி கிப்ட் கூட அப்படிதான் குடுப்பியா "இன்று கிண்டலடிக்க

"போடி "என்று சொல்லிவிட்டு நகர

"ஹாப்பி பர்த்டே டா எப்போவும் சிரிச்சுகிட்டே இரு "என்று அவளுக்கு பென் குடுக்க

அது அவள் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பார்க்கர் பென்

அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு ஏதோ சொல்ல வர

அவள் வாயில் கை வைத்து தடுத்தவன் "தேங்க்ஸ் "சொல்லிராத என்க

சிரித்துவிட்டாள்.

சிரித்துக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்த பிரசன்னா அவள் கை பிடித்து அதில் பிரேஸ்லெட் ஒன்றை மாட்டி விட்டான்

அதை பார்த்தவள் அவனை தடுத்து "என்ன டா இது இது வேணாம் டா "என்க

அவளின் கை பிடித்து தடுத்தவன் "நீ இத வைச்சுக்கோனு பெர்மிஸ்ஸின் கேட்கல வைச்சுகிட்டே ஆகணும்னு ஆர்டர் போடறேன் "என்றவன்

அவன் கையில் ஸ்மார்ட் போன் ஒன்றை கொடுக்க

அதை பார்த்தவள் இது எதுக்கு டா அதுக்கு தான் இத என் கையில் மாட்டிவிட்டு இருக்கியே இதுவே போதும் போன் வேண்டாம் "என்று மறுக்க

"குடுத்தா வாங்கிக்கோ டி எதுவும் கேட்காத "என்க

அவள் மனதில்லாமல் நிற்க அதில் அவளை புரிந்துக் கொண்டவன் "இத பிரேஸ்லெட்ல ஜிபிஎஸ் டிவைஸ் செட் பண்ணி இருக்கேன் டா அந்த டிவைஸ் நா கிரியேட் பண்ணது இத போன் ல லொகேஷன் தெரியும் என்று விளக்க

"எனக்கு எதுக்கு டா இது நா எங்க போக போறே "என்க

"எனக்காக வைச்சுக்கோ எப்போவது யூஸ் ஆகும் "என்க

அவளும் சரி என்று வைத்துக் கொண்டாள்

அன்று முழுதும் மகிழன் அவளை திட்டாமல் இருக்க அதுவே சத்யாவிற்கு போதுமானதாக இருந்தது.

நாட்கள் அப்படியே சென்றது மகிழன் அதற்கு பின் கல்யாணம் குறித்து யோசிக்க விரும்பவில்லை முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்பது போல எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.

கல்யாணநாள் நெருங்கிக் கொண்டு இருப்பதால் ரோஷினியை எங்கும் வெளியில் அனுப்பவில்லை இதனால் சுதந்திரம் இல்லாதது போல் உணர்ந்துவளுக்கு கோவமாக வந்தது அவளின் கோவம் இரு குடும்பத்தையும் எப்படி பதிக்கும் என்று தெரியாமல்.

சத்யா ரோஷினியின் கல்யாண நாளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மரகதம் தான் தன் செல்ல பேத்தியின் கல்யாணம் இப்படி நடக்க வேண்டும் அப்படி நடக்கணும் என்று எல்லாரையும் ஒருவழி செய்துக் கொண்டு இருந்தார்.

கணேஷன் ஊரே மெஞ்சும் படி செய்ய வேண்டும் என்று அனைவரையும் அழைத்தார்.

மாப்பிள்ளையின் பிறந்த ஊரில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மல்லிகா சொன்னதால்

திருமணம் கொடைக்கானலில் முடிவானது.

மகிழனுக்கு அவன் பக்கம் இருந்து அவனுடன் படித்த பிரன்ட்ஸ் எல்லாரையும் அழைத்தான்.

அவர்கள் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது.

கொடைக்கானல் என்பதால் சத்யா யாரையும் அழைக்க வில்லை அவள் அழைத்து இருந்தாலும் ரோஷினியின் திருமணத்திற்கு வந்து இருக்க மாட்டார்கள்.

இது தான் சத்யா முதல் முறை கொடைக்கானல் வருவதால் சுற்றி படர்ந்து இருந்த பனிமூட்டதை கண் இமைக்காமல் பார்த்து ரசித்தாள்.

மலைகளில் இளவரசி சத்யாவின் ரசனை தூண்டி விட்டு அவளை ரசிக்க வைத்தாள்.

செல்வி பயணக் களைப்பில் இதை எல்லாம் பார்க்காமல் தூங்கி வந்தார்.

அவர்களுக்கென்று ஏற்கனவே ரெடி பண்ணி வைத்து இருந்த வீட்டுக்கு அனைவரும் வர

மல்லிகா அனைவரையும் வரவேற்றவர் சத்யாவை அதிகமாக கவனிக்க

இதை பார்த்த மரகதமும் ரோஷினியும் முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தனர்

ஏற்கனவே மகிழன் அவளை கண்டு கொள்ளாமல் இருப்பாதில் கோவமாக இருந்தவள் இப்போது மல்லிகாவும் அவளை கண்டுக் கொள்ளாமல் சத்யாவை கவனிக்க அதில் இன்னும் வெறியாகியது

மல்லிகா வேண்டுமென்று ரோஷினியை ஒதுக்கவில்லை

ஒருமுறைக்கு இருமுறை மல்லிகா ரோஷினியிடன் சென்று பேச அவள் இவரை அலட்சியம் செய்ய ஒதுங்கிக் கொண்டார்.

மல்லிகாவுக்கு ரோஷினியின் செயல் எதுவும் பிடிக்கவில்லை இருந்தாலும் மகிழனுக்கு பிடித்து இருக்கிறது வாழ போகிறவன் அவன் தான் என்று மகனுக்காக ஒதுங்கிக் கொண்டார்.

சத்யாவும் மல்லிகாவும் பேசுவதை பார்த்த மரகதம் "பார்த்தியா டா நீ இங்க இருக்கானு தெரிஞ்சும் உங்கிட்ட பேசாம அந்த விளங்கதாவள் கிட்ட பேசிகிட்டு இருக்க "என்க

"நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன் பாட்டி "என்று முறைத்துக் கொண்டே சொல்ல

"கல்யாணத்துக்கு அப்புறம் நீ இப்படி விடாத "என்க

அதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக அவர்களை பார்வையால் எரித்துக் கொண்டு இருந்தாள்.

இதை கவனிக்காத மல்லிகா கிளைமேட் செட் ஆகிறதா என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

கல்யாணம் நெருங்க நெருங்க மகிழனுக்கு தான் மனசு ஏதோ போல இருந்தது அவனால் இந்த சூழ்நிலையை கையாள முடியவில்லை நாளை திருமணத்தை வைத்துக் கொண்டு இன்று இப்படி நினைப்பது தவறு என்று வந்தவர்களை கவனிக்க சென்றான்.

நேரம் யாருக்கும் காத்திறாமல் ஈவினிங் வர ரிசெப்ஷன் க்கு ரெடி ஆகினர்.

வண்ண வண்ண மலர்களை கொண்டு மேடையை அலங்காரித்து இருக்க

கோல்டன் வித் மெரூன் கலர் ஷேர்வேணி அணிந்து ஆணுக்கே இலக்கணமாக மகிழன் வந்து நிற்க சிறிது நேரத்தில்

ரோஷினியை அலங்காரம் செய்து மேடையில் ஏற்ற

அவளை பார்க்க விரும்பம் இல்லாமல் பார்வையை திருப்பியவன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அங்கே முதல் முதலாக தாவணி அணிந்து சத்யா சுத்திக் கொண்டு இருக்க அவள் மேல் இருந்து அவனால் பார்வையை எடுக்க முடியாமல் தவிதான்.

இன்று தான் முதல் முறை அவளை இந்த உடையில் அவன் பார்ப்பது

அவளுக்கு தாவணி அம்சமாக பொருந்தி இருக்க மண்டபத்தில் இருந்த பாதி பேரின் கண் அவளை தான் பார்த்தது.

அதை பார்த்த மகிழனுக்கு எரிச்சலாக இருந்தது எப்படி இவர்கள் அவளை பார்க்கலாம் என்று

அவன் மனம் போகும் திசையை அறிந்து திகைத்து போனவன் பின் மனதுக்குள் முடிவெடுத்து அவள் இருக்கும் திசையை பார்க்காமல் வந்தவர்களை பார்க்க ஆரம்பித்தான்.

மகிழன் சத்யாவை பார்த்ததை அருகில் இருந்து ரோஷினி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

"இங்க பக்கத்துல நா இருக்கும் போது என்ன பாக்காம அவள பாத்துகிட்டு இருக்கியா நீ பெரிய இவனு நினைச்சு தானே இப்படி பண்ணிக்கிட்டு இருக்க நாளைக்கு இருக்கு உனக்கு அப்போ தெரியும் நா யாருனு "என்று வன்மமாக நினைத்துக் கொண்டு அமைதியாக சிரித்துக் கொண்டு இருந்தாள்.

ரோஷினி மேடையில் ஜோடியுடன் நிற்பதை பார்த்து கணேஷனுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.

வருபவர்களை ரோஷினிக்கு மகிழன் அறிமுகப்படுத்த சிரித்து மட்டும் வைத்தாள்.

அப்போதுதான் ஆதி ஜனனி குடும்பத்தினர் வந்தது அதன் பின் நடந்தது உங்களுக்கே தெரியும்.

ஆதியின் குடும்பம் பரப்பரப்பாக செல்லுவதை பார்த்த சத்யா "கடவுளே ஜனனி அக்கா எந்த ஒரு பாதிப்பும் இல்லாம கிடைக்கணும் "என்று வேண்டிக் கொண்டவள்

இதை பற்றி யாரிடமும் சொல்ல வில்லை

அடுத்தவர்களுக்காக வேண்டுவதை பார்த்த கடவுள் உனக்காகவும் வேண்டி இருக்கலாமே என்று நினைத்துக் கொண்டாரோ..


ரிசெப்ஷன் முடிந்து சாப்பிட்டு விட்டு அறைக்கு செல்ல

ரோஷினியுடன் படுக்க வந்த மரகதத்தை தடுத்தவள் "பாட்டி நீ எதுக்கு என் ரூம்க்கு வர?"

"உனக்கு துணையா இருக்க தான் கண்ணு "என்று உள்ளே வர பார்க்க

அவரை முதுகில் கை வைத்து வெளியே அனுப்பியவள் "எனக்கு தனியா இருந்ததான் பிடிக்கும் பாட்டி அது உனக்கும் தெரியும் தான நா மட்டும் இருந்துக்கறேன் "என்று சொல்லி கதவை சாற்ற

அவளை பற்றி தெரிந்த மரகதமும் அதற்கு மேல் அவளை தொல்லை செய்யாமல் வேறு ரூமில் சென்று படுத்துக் கொண்டார்.

செல்வியும் சத்யாவும் ஒரே அறையில் படுத்துக் கொள்ள

சத்யாவுக்கு தூக்கமே வர வில்லை அவள் நினைவெல்லாம் இன்று ஜனனி காணாமல் போனதில் இருக்க என்ன அச்சோ என்று எண்ணிக் கொண்டு இருந்தாள்.

செல்வி களைப்பின் காணரமாகவும் நாளை முகூர்த்தம் இருப்பதால் சீக்கரம் தூங்கிவிட்டார்.

ரூம்க்கு வந்த மகிழனுக்கு தூக்கம் என்பதே இல்லாமல் அவன் மனம் குழம்பி போயிருந்தது.

இன்று சத்யாவை அவன் மனம் ரசித்து பார்த்ததை அவனாலே நம்ப முடியவில்லை

"நா கல்யாணம் பணிக்க போற பொண்ணு பக்கத்துலயே இருந்து என்னால பார்க்க முடியல ஆனா நா வெறுக்குற அவளை இன்னைக்கு ரசிச்சு பாக்கறேன் அவ மேல இருந்து கண்ண எடுக்க முடியாம கஷ்டப்படறேன் என் மனசு என்ன ஆசைப்படுதுனே எனக்கு தெரியல "என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

பல பேருக்கு பாடம் எடுக்கும் அவனுக்கே ஒருவர் பாடம் எடுக்க வேண்டிய நிலை.

அவளை வெறுப்பதாக எண்ணி அவளை தான் தினமும் நினைத்துக் கொண்டு இருக்கிறான் ஆனால் அவனால் அதை ஏற்றுக் கொள்ள தான் முடியவில்லை.

இரவு முழுவதும் தூங்கமல் புலம்பிக் கொண்டே இருந்தான்.

அடுத்த நாள் முகூர்த்த நேரம் வர எதையும் நினைத்து குழம்பாமல் என் வாழ்க்கையை நா பாத்துக்கறேன் என்று எண்ணி ரெடி ஆனான்.

சத்யாவிற்கு செல்வி புடவை எடுத்து வைக்க அதை பார்த்தவள் "மா இது வேண்டாம் மா நா நேத்து மாதிரி தாவணி போட்டுக்கறேன் "என்க

"நடக்கறது உங்க அக்கா கல்யாணம் டி நீ புடவை தான் கட்டணும் அதுவும் இல்லாம அண்ணி உனக்காக ஆசை ஆசையா பார்த்து வாங்குனாங்க நீ இப்போ கட்டலனா அவங்க பீல் பண்ணுவாங்க டா "என்க

அவளும் வேறு வழி இல்லாமல் புடவை எடுத்துக் கொண்டு சென்றாள்.

வெளியே மண்டபம் பரபரப்பாக நடந்துக் கொண்டு இருந்தது.

முகூர்த்தம் ஆறுமணிக்கு என்பதால் உறவினர்கள் எல்ல வர துடங்க

அய்யர் மாப்பிள்ளையை அழைத்தார்.

பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து வந்தவன் அங்கு இருக்கும் அனைவரையும் வணங்கி விட்டு அமர்ந்து அய்யர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தன்.

கணேஷன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவரை நோக்கி அவசரமாக வந்த மரகதம் "டேய் ரோஷினியா காணோம் டா "என்று பயத்துடன் சொல்ல

அதை கேட்டு அதிர்ச்சியானவர் "அம்மா விளையாடாத "என்க

"எனக்கு என்ன பைத்தியமாக இந்த நேரத்தில் வந்து இப்படி சொல்லி விளையாட "என்று சீரியஸாக சொல்ல

அதை கேட்டவர் "மா நல்லா தேடி பாரு இங்க தான் எங்கையாவது பிரண்ட் கூட பேசிக்கிட்டு இருப்ப "என்று கண்களை நாலா புறமும் தேடி

"மேக்கப் போடுற வரைக்கும் அவகூட தான் இருந்தேன் டா ஜூஸ் கேட்டான்னு எடுக்க போனேன் வந்து பார்த்த அவள காணோம் மண்டபம் முழுக்க தேடிட்டேன் "என்க

அன்னையை பயத்துடன் பார்த்தவர் "மா எங்கம்மா போயிருப்பா "என்று தெளிவில்லாமல் கேட்க

சரியாக அந்த நேரம் பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ என்று அய்யர் குரல் கொடுக்க அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.


நிமிர்வாள்....

நேத்து என்னால யூடி போட முடியல நிறைய பேர் கமெண்ட்ஸ்ல மெசேஜ்ல கேட்டு இருந்திங்க சாரி நேத்து போடாததற்கு எதிர்ப்பார்க்காத ப்ரோக்ராம் ஒன்னு வந்துருச்சு சோ இப்போ தான் அவசர அவசரமா எழுதுனேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஈவினிங் அடுத்த யூடி போடறேன்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 9



கணேஷனும் மரகதமும் அய்யர் பெண்ணை அழைக்க என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றனர்.

மாப்பிள்ளையின் அத்தை மணப்பெண் அறையில் ரோஷினி இல்லாததைக் கொண்டு மல்லிகாவிடன் சென்று கூற

அவரோ அவசரமாக செல்வியிடம் சென்று ரோஷினியை அழைத்து வரும் படி கூற

அவரோ புரியாமல் மரகதம் இருக்கும் பக்கம் பார்த்தார்.

காலையில் செல்வி ரோஷினியின் அருகில் இருக்க விரும்ப ஆனால் மரகதம் விடவில்லை

என்னதான் ரோஷினி செல்வியை மதிக்காமல் பேசாமல் இருந்தாலும் அவரின் பெண் தானே அதுவும் இன்று திருமணம் முடிந்து வேறு வீட்டுக்கு சென்று விடுவாள் அதனால் சிறிது நேரம் அவள் அருகில் இருக்க ஆசைப்பட்டு ரோஷினி இருக்கும் ரூம்க்கு செல்ல

அவரை தடுத்த மரகதம் "நீ எதுக்கு இங்க வர?"என்று கேட்க

"கொஞ்ச நேரம் ரோஷினி பக்கத்தில் இருக்கேன் அத்தை "என்று தயங்கிக் கொண்டே சொல்ல

"அதெல்லாம் நீ இருக்க தேவை இல்லை என் பேத்திக்கு நா மட்டும் போதும் அவகூட இருந்து அவ நல்ல வாழ்க்கை வாழ விடாம இருக்க பார்க்கரியா "என்று எல்லாளாக கேட்க

அதை கேட்ட செல்வி கண்கலங்கி "அவ என்னோட பொண்ணு அத்தை அவ வாழ்க்கை நல்ல இருக்கனும்னு தான் நா நினைப்பேன் "என்று வருத்தமாக சொல்ல

அதைக் கண்டு கொள்ளாதவர் "இவ்ளோ நாள் பொண்ணுனு உனக்கு தெரியலையா அந்த விளங்காம போனவள கொஞ்சிகிட்டு இவ தள்ளி வைச்சியே அப்போ தெரியலையா "என்று ஆபண்டாமாக பொய் சொல்ல

அதை கேட்ட செல்வி மரகதத்தை நிமிர்ந்து பார்த்தார்

அவர் தானே அவளிடம் இருந்து ரோஷினியை பிரித்து அவளை நெருங்க விடாமல் செய்தவர்.

அவரின் பார்வையயை கண்டுக் கொள்ளாத மரகதம் செல்வியை உள்ளே விடாமல் கதவை சற்றினார்.

சற்றிய கதவை பார்த்து கண்கலங்கியவர் இது எதிர்ப்பார்த்தது தானே அப்படியே அவள் நல்ல இருந்தா போதும் என்று நினைத்துக் கொண்டு வேலைலை கவனிக்க சென்றார் அதன் பின் அவர் ரோஷினியை பார்க்கவில்லை

இப்போது மல்லிகா அவரிடம் ரோஷினியா பற்றி கேட்க அவர் மரகதத்தை கை காட்டினார்

அதை தூரத்தில் இருந்து பார்த்த மரகதம் "பார்த்தியாட உன் பொண்டாட்டிய அப்படியே என் பக்கம் கைகாட்டிடா "என்று திட்டியவர்

அவரை நோக்கி வரும் மல்லிகாவை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அதற்குள் அய்யர் மூன்று முறை பெண்ணை அழைக்க பெண் வராததல் அங்கு இருந்தவர்கள் எல்லாம் சலசலக்க ஆரம்பித்தனர்.

சத்யா அங்கு நடக்கும் எதுவும் புரியாமல் செல்வியிடம் சென்று கேட்க அவரோ தெரியாது என்று சொல்லிவிட்டு நடப்பதை பார்த்தார்.

மேடையில் இருந்து மகிழனுக்கு அங்கு ஏதோ நடப்பது புரிய அங்கு இருந்து எழ போனவனை தடுத்த மணிவண்ணன் "நீ இருப்ப பொண்ணு இங்க தான் எங்கையோ இருக்கு நா போய் கேட்டு வரேன் "என்று கீழே இறங்கி சென்றார்.

நடப்பதை அனைத்தையும் மேடையில் இருந்தே மகிழன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

மல்லிகா கணேஷனிடன் வந்தவர் "அண்ணா ரோஷினி எங்க அய்யர் கூப்பிடாரர் "என்க

அவரோ என்ன சொல்வது என்று கையை பிசைந்துக் கொண்டு முழித்தார்

"அண்ணா உங்கள தான் கேட்கறேன் "என்க

வேறு வழி இல்லாமல் "அவ காணோம் "என்று மெதுவாக சொல்ல

அதை கேட்டவர் "என்ன காணோம்னு சொல்றிங்க இங்க எங்கயாவது இருப்ப பாத்திங்களா "என்று அப்படி இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டு கேட்க

"இல்லாம எல்லா இடத்திலயும் தேடிட்டேன் அவள காணோம் "என்று மரகதம் தலை குனிந்துக் கொண்டு சொல்ல

அதில் கோவமான மல்லிகா "என்ன காணோம்னு ஈசியா சொல்றிங்க "என்று குரலை உயர்த்த

அவரிடம் அவசரமாக வந்த மணிவண்ணன் "என்ன மல்லிகா எதுக்கு சத்தம் போடற என்ன ஆச்சு "என்க

"இன்னும் என்ன ஆகணும் இவங்க பொண்ணை காணோமாம் எங்கையோ போயிருச்சாம் "என்று அருகில் இருந்த மகிழனின் அத்தை சத்தமாக சொல்ல

அதை கேட்ட சத்யாவிற்கும் செல்விக்கும் என்ன செய்வது என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றனர்.

அவர் கத்தி சொன்னதில் அவர்களில் உறவினர்கள் எல்லாம் அருகில் வர கணேஷன் தலை குனிந்து அவமானமாக நின்றார்.

அவர் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை அவரின் பெண் இப்படி அவரை நிற்க வைப்பாள் என்று.

ரோஷினி இல்லை என்று கூறியதை கேட்டு மகிழனின் மனம் நிம்மதி அடைந்தாலும் இத்தனை பேர் மத்தியில் அவனை இப்படி அவமான படுத்தி சென்றதில் கோவம் கோவம் கொண்டு ருத்ரமூர்த்தியாக நின்றவன்

கழுத்தில் இருந்த மலையை கழட்டி கீழே இறங்கி மல்லிகாவின் அருகில் சென்று நிற்க

அவனை பார்த்த மல்லிகாவுக்கு அழுகையாக வந்தது அவரின் மகனை இப்படி நிற்க வைத்து விட்டார்களே என்று.

மரகதம் அமைதியாக இருக்க மகிழனின் பெரியம்மா "என்ன பொண்ணு வளர்த்து வைச்சு இருக்கீங்க கல்யாணம் பிடிக்கலனா முதல்லயே சொல்ல வேண்டியது தானே இப்போ எங்க பையன இப்படி நிற்க வாச்சுட்டீங்களே "என்று ஆதங்கப்பட

மணிவண்ணன் மகிழனின் தோளில் கை அவனை ஆறுதல் செய்ய

அருகில் இருந்தவர்கள் "பையனுக்கு என்ன குறையோ இப்படி அந்த பொண்ணு விட்டுட்டு போயிருச்சு "என்று பேசிக் கொள்ள

அதை காதில் கேட்ட மகிழன் ருத்ர அவதாரம் எடுத்தவன் தோளில் இருந்த அவன் அப்பாவின் கையை தட்டி விட்டவன்

கணேஷன் முன் சென்று "எங்க உங்க பொண்ணு "என்று கர்ஜிக்க

அவனுக்கு இவ்ளோ கோவம் வரும் என்று தெரியாத கணேஷன் அவனின் குரலில் தூக்கிவாறி போடவர்

"மாப்பிள்ளை அது வந்து "என்று இழுக்க

அவரை தடுத்தவன் "உங்க பொண்ணு எங்கனு கேட்டேன் "என்று கத்த

அதில் பயந்து போனவர் "அவள காணோம் "என்று மெதுவாக சொல்ல

"காணோம்னா?"என்று மீண்டும் கர்ஜிக்க

அவனின் அருகில் நின்ற மணிவண்ணன் "மகிழா கோவப்படாத பா "என்று அவனை சமாதானம் செய்ய முயல

"எப்படி பா கோவப்படாம இருக்க முடியும் கேட்டீங்கள என்ன பேசுனாங்கனு இவங்க பொண்ணு எவனயோ இழுத்துகிட்டு போனதுக்கு எனக்கு ஏதோ குறை மாதிரி பேசுறாங்க "என்று கோவமாக சொல்ல

அவனின் வலியை புரிந்துக் கொண்டவர் அவனை எப்படி சமாதானம் செய்ய என்று யோசிக்க

மல்லிகாவோ மகிழன் என்ன குறை என்ற கேள்வியில் மனதுடைந்து அழுதார்.

அவர் அழுவதை பார்த்த சத்யாவிற்கு கஷ்டமாக இருக்க அவரின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள்.

கணேஷன் மகிழன் கேட்டதில் தலைகுனிந்து நிற்க

"சொல்லுங்க இப்போ உங்க பொண்ணு வரணும் "என்க

கணேஷன்கோ எங்கு சென்று தேடுவது என்று அதிர்ச்சியாக பார்த்தார்

அவரின் பார்வையை புறம் தலையவன் "எனக்கு தெரியாது என் கல்யாணம் நடந்தே ஆகணும் "என்றவன் "ஒரு பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல நீங்க என்ன பெரிய மனுஷன் வெட்கமா இல்ல"என்று அவரை அசிங்கப்படுத்த

அதை கேட்ட சத்யாவிற்கு அவன் மீது கோவம் வந்தது

அவர்களின் மீது தப்பு தான் அதற்காக இத்தனை பேர் மத்தியில் அவரை அசிங்கப்படுத்துவதா என்று நினைத்தாள் .

இன்னும் இன்னும் மகிழன் கணேஷனை வார்த்தையால் அத்தனை பேர் மத்தியில் காயப்படுத்த

பொறுத்து பார்த்த சத்யா இதற்கு மேல் முடியாது என்று நினைத்து "போதும் நிறுதுங்க என் அக்கா செஞ்சது தப்பு தான் அதுக்காக இவ்ளோ பேர் இருக்கும் போது எங்க அப்பாவை இப்படி பேசறது நல்ல இல்ல "என்று குரல் கொடுக்க

அவளை நோக்கி ஆவேசமாக திரும்பியவன் "அப்போ இத்தனை பேரு மாத்தியில உங்க அக்கா என்ன அசிங்கப் படுத்திட்டு போனாலே அது தப்பு இல்லை ஆனா நா உங்க அப்பாவ அசிங்கப்படுத்தறது தப்பு அப்படித்தான"என்க

அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அவனும் தானே அசிங்கப்பட்டு நிற்கிறான் அதற்கு அவளால் என்ன சொல்ல முடியும்

"பொண்ணு நல்லது பண்ணா மட்டும் என் பொண்ணுனு அத்தனை பேர் முன்னாடியும் பெருமை பட்டு பேரு வாங்க தெரியுதுல அப்போ அதே பொண்ணு அசிங்கப்படுத்திட்டு போனாலும் அத்தனை பேர் முன்னாடியும் அசிங்கப்பட்டு தான் ஆகணும் "என்று கத்த

சத்யா அவனை கெஞ்சலாக பார்வை பார்க்க

அவன் அவள் பார்வையை கண்டுக் கொள்ளாமல்

கணேஷனிடன் திரும்பி "நீங்க என்ன செய்விங்கனு எனக்கு தெரியாது இன்னைக்கு எனக்கு கல்யாணம் நடந்தே ஆகணும் "என்று ஆக்ரோசமாக பேச

"எப்படி மாப்பிள்ளை முடியும் "என்று கஷ்டப்பட்டு கேட்டார்

இவ்ளோ நாட்களாக பெருமையும் மரியாதையுமாக வாழ்த்தவர் இன்று அத்தனை பேர் முன் இப்படி நிற்பதற்கு பதில் செத்து போய் விடலாம் என்று எண்ணினார்.

"ஏன் முடியாது உங்க பெரிய பொண்ணு தான ஓடி போச்சு உங்க சின்ன பொண்ணு இங்க தான இருக்க அவளை கல்யாணம் பண்ணி வைங்க "என்க

அவனிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்காத சத்யா அவனை அதிர்ச்சியாக பார்க்க

அவன் சொன்னதை கேட்ட மரகதத்துக்கு இது பிடிக்க வில்லை அவர் செல்ல பேத்தி வாழ வேண்டிய வாழ்க்கையை இவள் வாழ்வதா என்று எண்ணி

"அதெப்படி முடியும் "என்று இவ்ளோ நேரம் வாயை திறக்காதவர் இப்போது திறக்க

அவரை அனல் தெறிக்க முறைத்து பார்த்தவன் "ஏன் முடியாது "என்க

"என் பேத்தி வாழ வேண்டிய வாழ்க்கை "என்க

"இவளும் உங்க பேத்தி தான "எசுரு கேட்க

அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

மகிழன் சொன்னதை கேட்ட கணேஷனுக்கு அதுவே சரி என்று பட்டது அவரின் மரியாதையை திரும்பி பெற வேற வழி இல்லை என்று அதற்கு ஒதுக்கொள்ள முடிவெடுத்தார்.

மகிழன் சொன்னதை கேட்ட செல்விக்கு திகைப்பாக இருந்தது ரோஷினி செய்ததற்காக சத்யாவை பணயம் வைப்பது அவருக்கு சரியென்று தோன்ற வில்லை

ஆனால் மல்லிகாவிற்கோ இந்த எண்ணம் எப்படி தனக்கு வராமல் போனது என்று நினைத்தார்அவருக்கு சத்யா அவரின் மருமகளாக வருவது அவ்ளோ சந்தோஷம் மணிவண்ணன்க்கு மகிழன் அப்படி கேட்டது பிடிக்கவில்லை என்றாலும் அவனின் வாழ்க்கை என்று வரும் போது அமைதியாக இருந்தார்.

கணேஷனின் முகத்தை வைத்தே அவருக்கு இதில் சம்மதம் என்று உணர்ந்து செல்வி அவசரமாகா அவர் அருகில் சென்று

"ஏங்க வேண்டாம் "என்று சொல்ல வர

அவரை தடுத்தவர் "எனக்கு தெரியும் என்ன செய்யறதுனு நீ பேசாத "என்று எச்சரிக்க

"டேய் நா சொல்றத கொஞ்சம் கேளு "என்று மரகதம் பேச வர

"உன்னால தான் எல்லாமும் நீ அவளுக்கு செல்லம் குடுத்து தான் அவ என்ன இந்த நிலமைல நிக்க வைச்சுட்டு போய்ட்டா பேசாம அமைதியா இரு இல்லனா எங்கையாவது போயிரு "என்று கத்த

இதுவரை கணேஷன் அவரிடம் இப்படி நடந்து கொண்டதில்லை இன்று இப்படி பேசுவாதல் வாயை மூடிக் கொண்டார்

கணேஷன் சத்யாவின் முன் சென்று குரலை சரி செய்துக்கொண்டவர் "இது வரைக்கும் உன்ன பொண்ணா நா நினைச்சதும் இல்ல எதுவுக் கேட்டதும் இல்ல இப்போ கேட்கறேன் செய்வியா?"என்க

அவரை ஏறிட்டு பார்த்தாள்

"நீ மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கணும் அவ தான் என்னை இத்தனை பேர் முன்னாடியும் தலை குனிய வைச்சுட்டா நீயாவது என் மரியாதையை காப்பாத்து "என்று கையெடுத்து கும்பிட்டு கேட்க

அவரின் கையை இறக்கியவள் "என்கிட்ட போய் நீங்க இப்படி கேட்கணுமா என்றவள் மகிழனை நிமிர்ந்து பார்த்து "எனக்கு சம்மதம் கல்யாணம் பண்ணிக்கறேன் "என்றாள்

அவள் சொன்னதும் அவளை பார்த்தவன் பின் பார்வையை திருப்பிக் கொண்டான்.

மல்லிகா அவளின் கையை நன்றி சொல்லும் விதமாக பிடிக்க அவரை பார்த்து சிரித்து வைத்தாள்.

அவளுக்கும் இந்த சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று தெரிய வில்லை.

சத்யா சம்மதம் சொன்னதும் மீண்டும் அய்யர் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க

மகிழனின் கழுத்தில் மறுபடியும் மாலை போட்டு அவனை மணமேடையில் அமர வைத்தனர்.

உறவினர்கள் சலசலத்த படியே அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

சத்யாவை உள்ளே அழைத்து சென்று தலையை மட்டும் அலாரங்காரம் செய்து அவளை மகிழன் அருகில் அமர வைத்தனர்.

நேற்று வரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தவள் இன்று அவன் அருகில் இன்னும் சிறிது நேரத்தில் அவன் மாணவியாக போகிறாள்.

மகிழன் என்ன உணர்வேன்று சொல்ல முடியாமல் இறுகி போய் அமர்ந்திருந்தான்.

மல்லிகா மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்க

செல்வி வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

சத்யா செல்வியை நிமிர்ந்துக் கூட பார்க்க வில்லை எங்கே அவரை பார்த்தால் அழுது விடுவோமோ என்ற பயத்தில் பார்க்காமல் இருந்தார்.

கணேஷன் தலை நிமிர்ந்து இருந்தார்

எந்த பெண்ணை அவரின் வாழ்க்கை மரியாதையை அழிக்க வந்தவர் என்று சொன்னாரோ இன்று அவள் தான் அவரின் மரியாதையை மீட்டுக் கொண்டுதாள்.

மரகதம் நடக்கும் அனைத்தையும் விரும்பம் இல்லாமல் பார்த்தார் அவரின் பேத்தி இருக்க வேண்டிய இடம் என்று நினைத்து சபாமிட்டுக் கொண்டு இருந்தார் மனதுக்குள்

இவரை திருத்தவே முடியாது.

அய்யர் மந்திரம் சொல்லி மாங்கல்யத்தை மகிழன் கையில் தர

அதை வாங்கி ஒரு முறை தலை குனிந்து அமர்ந்திருந்த சத்யாவை பார்த்தவன் பின் அவளின் கழுத்தில் தாலி காட்டினான்.

அவன் கழுத்தில் கட்டும் போதும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டவள் பின் எல்லாரும் பார்ப்பார்கள் என்று அமைதியாக சடங்குகளை செய்தாள்.

இன்னார்க்கு இன்னார் என்று விதி முடிவு செய்து இருக்கும் அதை மனிதனால் மாற்ற முடியாது..



நிமிர்வாள்….



இப்போ தான் முதல் முறையா இப்படி ஒரு கடினமாக சூழல் எழுதறேன் ஏதாவது தப்பு இல்ல மிஸ் பண்ணி இருதேன்னா உங்க வீட்டு பிள்ளையை நினைச்சு மன்னிச்சுருங்க
 
Status
Not open for further replies.
Top