ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 10



"பொன் தாலி

பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி போடுவதெதுக்கு

ஆஆஆஆ ஆஆ


உரிமைக்காக ஒத்த

முடிச்சு உரிமைக்காக ஒத்த

முடிச்சு அடியே உறவுக்காக

ரெண்டாம் முடிச்சு ஊருக்காக

மூணாம் முடிச்சு முடிச்சு முடிச்சு

முடிச்சு முடிச்சு


பொன் தாலி

பொண்ணுக்கெதுக்கு எதுக்கு

மூணு முடி போடுவதெதுக்கு"






கல்யாணம் நடந்து முடிந்ததும் தான் மல்லிகாவுக்கும் மணிவண்ணனுக்கும் நிம்மதியாக இருந்தது.

சத்யாவின் நெற்றியில் மகிழன் குங்குமம் வைக்கும் போதெல்லாம் அவன் கை அவள் மீது பட அவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது.

இவ்வளவு நாட்கள் அக்காவின் கணவன் ஆக போகிறவன் என்று நினைத்தவன் இன்று அவள் கணவன் என்னும் போது அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

அவனோ எதை பற்றியும் கவலைப்படாமல் இங்கு அவனை பற்றி பேசியவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துவிட்டேன் என்று எண்ணினாலும் அனைவர் முன்னும் அவமானப்பட்டது அவன் மனதில் ஆறாத வடுவாகி விட்டது.

அருகில் தலை குனிந்து அமர்ந்திருக்கும் சத்யாவை முறைத்து பார்த்தான் இவளின் குடும்பத்தால் தானே அவனுக்கு இவ்ளோ அவமானம் இருக்கு இவளுக்கு என்று நினைத்து அனைவரிடனும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

கணேஷன் மகிழனின் முகத்தை பார்த்து சிரிக்க அவனோ அவரை பார்த்து முகம் திருப்பிக் கொள்ள

கணேஷனின் முகம் களை இழந்தது.

செல்விக்கு தான் மனம் அடித்துக் கொண்டது சத்யா அங்கே நன்றாக வாழ்வாள என்று

அவர் தான் இன்று மகிழனின் கோவத்தை பார்த்து விட்டாரே அதுவும் இல்லாமல் மகிழனுக்கு சத்யாவை பிடிக்காது என்று தெரிந்த விஷயம் ஆகிற்றே.

அப்போது தான் ஆதியின் குடும்பம் வந்து பெண் மாறியாதை பார்த்து திகைத்து போனவர்கள் செல்வியிடம் பிரேஸ்லெடை கொடுத்து விட்டு நன்றி சொல்லி கிளம்பிவிட்டனர்.

பிறகு சாப்பிட போக போட்டோக்ராபர் நிலைமை புரியாமல் இருவரையும் ஊட்டி விட சொல்ல

மகிழன் முறைந்த முறையில் போட்டோக்ராபர் எங்கோ சென்று விட்டான்.

சத்யாவிற்கு அவன் நடவடிக்கைகளை பார்த்து தலைவலி வந்தாலும் அவனின் மனநிலலையை புரிந்துக் கொண்டு அமைதியாக அவனை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டாள்.

மல்லிகாவை தான் கையில் பிடிக்க முடியவில்லை அவர் ஆசைப்பட்ட பெண்ணே அவரின் மருமகளாக வந்து விட சந்தோஷத்தில் துள்ளிகுதித்துக் கொண்டு இருந்தார்

மணிவண்ணன் தான் அவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தார் மகிழன் பார்த்தால் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவான் என்று

மல்லிகாவுக்கும் மகிழனை ரோஷினி அப்படி நிற்க வைத்தது வருத்தம் தான் கோவம் தான் ஆனால் அதனால் தான் சத்யா கிடைத்தாள் என்று நடந்ததை மறக்க நினைத்தார் ஆனால் அவனின் மகனோ அதை மறக்க நினைக்காமல் அதற்காக பழிவாங்க நினைத்தான் இதில் கஷ்டப்படுவது தப்பு எதுவும் செய்யாத சத்யா தான் என்று மறந்தான்.

புது மணமக்களை வீட்டுக்கு அழைத்து சென்று சாம்பரதாயம் எல்லாம் முடிக்க

மாலை நேரம் வந்து அனைவரின் மனதில் உள்ள வெட்ப்பத்தை குறைக்க குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்தது.

அங்கு இருந்த யாரும் ரோஷினியை நினைத்துக் கூட பார்க்க வில்லை மரகதத்தை தவிர

கணேஷனுக்கு ரோஷினியின் மீது கட்டுகடங்காத கோவம் வந்தது

அவளால் தானே மகிழனை பகைத்துக் கொள்ளும் நிலைமைக்கு ஆள் ஆனார்.

இதுவே மகிழனின் இடத்தில் வேறு ஒரு பையன் இருந்து அவரை அவமானப்படுத்தி இருந்தால் திருப்பி அவனுக்கு பதிலடி கொடுத்து இருப்பார் ஆனால் மகிழன் என்பதால் அமைதியாக இருந்தார்.

மகிழனின் தந்தை எஸ்ப்போர்ட் இம்போர்ட்ட கம்பெனி நடத்துவதால் அவரின் வாடிக்கையாளர்கள் கணேஷனுக்கு நட்பாகி புதிதாக தொழில்கள் எல்லாம் தொடங்கி இருந்தார் இப்போது மகிழனை பகைத்துக் கொண்டால் அவரின் தொழில் வீணாக போய்விடும் என்பதால் அவன் பேச்சு அத்தனையும் கேட்டு சத்யாவை திருமணம் செய்து வைத்தார்.

இந்த திருமணத்தில் அவரின் சுயநலம் இருந்தது அது மகிழனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்து.

அனைவரும் பேசிக் கொண்டு இருக்க சத்யா கீழே இருக்கும் அறையில் ரெஸ்ட் எடுக்க செல்ல மகிழன் அவன் அறையில் இருந்தான்.

இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்த மரகதம்" என் பேத்தி எங்க போனானு தெரியல அதை பத்தி இவங்களுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் அந்த விளங்காம போனவளை பொத்தி பொத்தி பாத்துக்கறளுக நாசமா போக "என்று புலம்பிக் கொண்டு இருக்க

இங்கு நடந்த அனைத்துக்கும் காரணமானவளோ அங்கு அவளின் பாய்பிரண்ட் உடன் டேட்டிங்யில் இருந்தாள்.

ரோஷினிக்கு ஆரம்பத்தில் மகிழனில் சொத்தும் அவனின் அழகும் பார்த்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாலும் அவனிடன் அவள் எதிர்ப்பார்த்தது எதுவும் கிடைக்காமல் கோவத்தில் இருந்தாள் இதில் மகிழனின் தாயும் அவளை கண்டுக் கொள்ளாமல் செல்ல அதிகம் வெறியானவள் அவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்க

இதில் மரகதமும் வெளியில் முன் போல் இருக்க கூடாது என்று எச்சரிக்கை

அதில் அவளுக்கு அவளுடைய சுதந்திரமும் வேண்டும் அதே சமயத்தில் அவர்கள் தலை குனிவது போல் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது தான்

அவளின் பாய்பிரண்ட் ரித்விக் அவளை காதலிப்பதாக சொல்ல

அவளுக்குள் திட்டம் உருவாகியது

ரித்விக் நல்ல பணக்காரன் எனவே அவள் சுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை அதே சமயத்தில் அவன் அவளின் சுதந்திரத்தில் தலையிட மாட்டான் எனவே அவனுடன் செல்லவது என்று முடிவெடித்தவள்

அவனை கல்யாண நாள் காலையில் அவளை அழைத்து செல்ல சொல்ல அவனும் அவள் மேல் இருந்த ஆசையால் சரியென்று கூட்டி சென்று விட்டான்.

இப்போது அவளின் ஆசை நிறைவேறிவிட்டது என்று குஷியில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

கடவுள் என்ற ஒருவன் இருப்பது தெரியாமல்.

சத்யா அறையில் அமர்ந்து நடந்ததை நினைத்துக் கொண்டு இருக்க

அங்கே வந்த செல்விக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது யாரோ செய்த தப்பிற்கு இன்று இவளின் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று நினைத்து வருந்தியவர்

யோசித்துக் கொண்டு இருந்தவளின் தோளில் கை வைக்க

நிமிர்ந்து பார்த்த சத்யா அவரை அணைத்துக் கொள்ள அவரும் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

அவளின் தோளை தட்டி "சத்யா உனக்கு பிடிச்சு இருக்கா டா?"என்று கேட்க

அதற்கு அவரை அவள் நிமிர்ந்து பார்க்க

"இப்போ இப்படி கேட்கறது தப்பு தான் டா ஆனா உனக்கு பிடிச்சு இருக்கானு கேட்க ஆள் இல்லையே டா "என்று கண்கலங்கியவர்

"நடந்ததை மாத்த முடியாது டா ஆனா மாப்பிள்ளை மனச உன்னால மாற்ற முடியும் அவருக்கு ஏதோ கோவம் அதுனால இப்படி நடந்துக்கறாரு ஆனா உன் அன்பால அவரு புரிஞ்சு நடந்துப்பாரு டா "என்று நம்பிக்கை தர

அவள் அவரை ஏறிட்டு பார்க்க அவளின் கன்னத்தில் கை வைத்து "என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் ஆகிற கூடாது அதுக்காக மாப்பிள்ளை என்ன செஞ்சாலும் பொறுத்துக்கோனு சொல்லல சின்ன சின்ன விஷயத்துல கூட உன்னால அவர மாற்ற முடியும் டா ஆனா அதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு "என்க

அவரை அணைத்துக் கொண்டவளுக்கு அவர் சொல்வது சரி என்று பட்டாலும் அவளால் அவனை மாற்ற முடியுமா என்ற எண்ணம் தோன்றியது.

அவளின் நெற்றியில் முத்தமிட்டவர் "இனிமேலாவது உன் வாழ்க்கை அழகா மாறட்டும் டா "என்று சொல்லி வெளியில் செல்ல

அவர் சொன்னதை அவள் யோசித்து பார்க்க

அப்போது உள்ளே வந்த மல்லிகாவை பார்த்து எழுந்து நிற்க

அவள் அருகில் வந்தவர் அவள் தோளை தொட்டு அமர வைத்து "என்ன பார்த்து எழுந்து நிக்கற அளவுக்கு நா கொடுமையாவா இருக்கேன் "என்று அவளை கேட்க

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சத்யா முழிக்க

அவளின் கையை பற்றிக் கொண்டவர் "நீ எப்போதும் போல என்கூட பழகு சத்யா புதுசா மாமியார்னு பயப்பட வேண்டாம் என்ன உன் அம்மா மாதிரி நினைச்சுகோ "என்க

அதில் உணர்ச்சி வசப்பட்டவள் கண்கலங்கி அவரை பார்க்க

"அதுக்கு நா உன்ன கொடுமை பண்ணாம இருப்பேன்னு நெனைச்சுக்காத நா பேசியே உன்ன கொடுமை பண்ணுவேன் அப்புறம் என் சமையலை சாப்பிட சொல்லி கொடுமை படுத்துவேன் "என்று குறும்பாக சொல்ல

முதலில் அவர் சொல்வதை கேட்டு திகைத்தவள் பின் அவர் அவளுடன் விளையாடுகிறார் என்று புரிந்தவள் அவரை பார்த்து சிரிக்க

"இது தான் டா வேணும் நீ எப்போவுமே சிரிச்சுகிட்டே இருக்கனும் "என்று பாசமாக அவள் தலையை வருட

அதில் நெகிழ்ச்சி அடைந்தவள் அவர் கையை பிடித்துக் கொள்ள

"எனக்கு உன்னோட நிலை புரியுது டா எதிர்ப்பார்க்காத கல்யாணம் புது வீடு புது மனுசங்க நீ உன்ன தயார் படுத்திக்ககூட நேரம் இல்லை "என்று அவள் நிலையில் இருந்து யோசித்து சொல்ல

அவளுக்கோ இப்படி ஒரு மாமியார் எப்படி கிடைக்கும் அவர் மகனை பற்றி நினைக்காமல் வந்த மருமகளின் நிலையை பற்றி நினைக்கிறாரே என்று எண்ணினாள்.

"அதுக்காக என் பையன் மோசம் இல்ல டா அவனுக்கு இப்போ ரோஷினி இப்படி பண்ணிட்டு போனதுல கோவம் அது குறைய கொஞ்ச நாள் ஆகும் அதுக்கு அப்புறம் கண்டிப்பா உன்னையும் உன் மனசையும் புரிஞ்சுப்பான் டா "என்று அவளுக்கு எடுத்து சொல்ல

அவரை பொய்யாக முறைத்து பார்த்தவள் "சைக்கிள் கேப்ல உங்க பையனுக்கு நல்ல பேர் எடுத்து கொடுக்கறிங்க "என்று விளையாட்டாக சொல்ல

அதில் சிரித்தவர் "வேற வழி என் பையனுக்கு நா தானே மார்க்கெட்டிங் பண்ணனும் " பிசினஸ்மேன் மனைவி என்று நிரூபிக்க

அதில் அவள் வாய் விட்டு சிரிக்க அவளை வாஞ்சையுடன் பார்த்தவர் "எப்போவும் நீ இப்படியே இருக்கனும் டா "என்று அவளை ஆசிர்வதித்து விட்டு அவளுக்கு யோசிக்க நேரம் கொடுத்து விட்டு செல்ல

இவர்கள் சொன்னதையும் மகிழன் இவ்வளவு நாட்கள் அவளிடம் நடந்துக் கொண்டதையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு கை மட்டுமே தட்டினால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டினால் தான் ஓசை வரும்.

இவளிடம் வாழ்க்கையை குறித்து சொன்னவர்கள் மகிழனிடம் இவளை பற்றியும் வாழ்க்கையில் அனுசரித்து போக வேண்டும் என்று அறிவுரை சொல்ல வில்லை.

இதில் கூட பெண்களுக்கு தான் ஆண்களுக்கு இல்லை.



நிமிர்வாள்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 11



மகிழன் அவன் ரூம் பால்கனியில் நின்று இன்று நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அவனாலே இன்னும் நம்ப முடியவில்லை எப்படி அவன் சத்யா திருமணம் செய்ய சொல்லி கேட்டதை அவனுக்கு பிடிக்காத பெண் அவளை பார்த்தாலே அவனுக்கு வெறுப்பு வரும் அப்படி இருக்கும் போது எப்படி அவளை திருமணம் செய்ய சொல்லி அந்த நிமிடம் நடந்தது என்று மண்டையை பியித்துக் கொண்டு இருந்தான்.

அவனால் அவன் சத்யாவை திருமணம் செய்துக் கொண்டதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை அவளை நல்ல விதமாக நினைப்பதற்கு அவன் ஈகோவும் இடம் கொடுக்க வில்லை

இதை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தவன் ரூமில் செய்து இருக்கும் அலங்காரத்தை பார்க்க மறந்தான்.

அதை பாத்திருந்தால் இன்னும் கோவம் கொண்டு இருப்பான்.

சத்யாவிற்கு அலங்காரம் செய்து ஆயிரம் அறிவுரை சொல்லி மகிழனின் அறை முன் விட்டு செல்ல

சத்யாவிற்கு அப்படியே எங்கையாவது சென்று விடலாமா என்று தோன்றியது.

இன்றைய இரவை நினைத்தால் பயமாக இருந்தது இன்னும் மகிழனை அவளின் கணவன் என்று மனம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க அதற்குள் எப்படி இந்த இரவை எதிர்க் கொள்ளவது என்று தோன்றியது.

இது கால காலமாக நடப்பது தானே பெண்ணின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் நடப்பதும் அதற்கு எல்லாரும் சேர்த்து அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமல் வதைப்பதும்.

மெதுவாக கதவை தட்ட போக அது ஏற்கனவே திறந்து தான் இருந்தது.

பயந்துக் கொண்டே கால்களை நிலத்திற்கு வலிக்காத மாதிரி மெதுவாக அடி எடுத்து வைத்து செல்ல

உள்ளே சென்றவள் அங்கு இருந்த அலங்காரத்தை பார்த்ததும் வெட்கம் வருவதற்கு பதில் பயம் தான் வந்தது.

சிங்கத்தின் குகையில் ஒரு சிறு பெண்ணை விட்டு சென்றால் எப்படி இருக்கும்.

நிமிர்ந்து ரூமை அளவிட்டாள்.

கட்டிலில் மலர்கள் தூவி இருக்க அங்கு இருந்த லைட் லாப் ஸ்டாண்டில் விதவிதமான பூக்களை வைத்து அலங்காரித்து வைத்து இருந்தனர்.

சோபா ட்ரெஸ்ஸிங் ரூம் அறை பெரிதாகவே இருந்தது அதை பார்த்தவள்

"ப்பா எங்க வீட்டு நாலு ரூம் சேர்த்தா தான் இவங்க ரூம் வரும் போல இருக்கு எவ்ளோ பெருசா இருக்கு ஒருத்தர் இருக்கறதுக்கு எதுக்கு இவ்ளோ பெருசா கட்டிவைச்சு இருகாங்க "என்று எந்த சூழ்நிலையை மறந்து ரூமை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாள்.

பால்கனியில் நின்றுக் கொண்டு இருந்த மகிழனை கொலுசு சத்தம் அவன் யோசனையை தடை செய்ய யாரது என்று நினைத்துக் கொண்டு வந்த மகிழனின் கண்களில் ரூமை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்த சத்யா தென்ப்பட்டாள்

அவளை பார்த்ததும் இவ்ளோ நேரம் யோசித்தது இன்று நடந்தது எல்லாம் சேர்த்து அவனுக்கு கோவம் வர அதுவும் இல்லாமல் அவள் அறையை பார்த்துக் கொண்டு நின்றது அவனுக்கு வேறு எண்ணத்தை கொடுக்க

"என்ன ரூமே இவ்ளோ பெருசா இருக்கே சொத்து எவ்ளோ இருக்கும்னு கணக்கு போட்டுக்கிட்டு இருக்கியா "என்று அழுத்தமாக கேட்க

ரூமில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு மகிழனின் திடீர் குரல் அவளுக்கு தூக்கிவாறி போட

சட்டென்று சமாளித்துக் கொண்டவள் அவனை பயத்துடன் பார்க்க

இது வரை சத்யா மகிழனை அலட்சியத்துடன் பாத்திருக்கிறாள் கோவமாக பார்த்திருக்கிறாள் ஆனால் இன்று தான் முதல் முறையாக அவனை பயத்துடன் பார்ப்பது.

அவளின் பயந்த பார்வை அவனுக்கு பிடித்து இருந்தது அவனுக்கு பிடிக்காதா பெண் அவனை பயத்துடன் பார்க்க அது அவனுக்கு உற்சாகத்தை தந்தது அதை வெளியில் காட்டிக் கொள்ளாதவன் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு "கேட்டதுக்கு இன்னும் பதில் வரல "என்று குரலை உயர்த்த

அதில் மிரண்டு போனவள் "ரூம்ல யாரும் இல்ல அதுனால சும்மா பார்த்துக் கிட்டு இருந்தேன் "என்று திக்கி திக்கி பேச

"யாரும் இல்லான உன் அக்கா மாதிரி ஓடி போயரலாம்னு நினைச்சியா "என்று அவளை குத்தலுடன் கேட்க

அதை கேட்டு அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது அதை அவனுக்கு காட்ட விரும்பதவள் தலையை குனிந்துக் கொண்டு நிற்க

"நா கேட்ட அதுக்கு பதில் சொல்லணும் "என்று காட்டமாக கேட்க

"அப்படி எல்லாம் நா பண்ண மாட்டேன் "என்று மெதுவாக சொன்னாலும் உறுதியாக சொல்ல

அதை கேட்டு நக்கலுடன் சிரித்து "ஆமா நீ உங்க அக்கா மாதிரி ஓடி போக மாட்ட ஏன்னா அவளாவது ஒருத்தன்கூட தான் சுத்திக் கிட்டு இருந்தா நீ தான் கணக்கில்லாமல் எல்லார் குடையும் சுத்தி இருக்கியே அப்புறம் யாரு கூட போவ "என்று வார்த்தை விஷத்தை தேய்த்து குறி வீச

அது சரியாக சத்யாவின் இதயத்தில் சொருகியது

அவனின் வார்த்தையின் அர்த்தங்கள் வேறு மாதிரி சொல்ல அவ்ளோ அடிப்பட்ட மனதுடன் "நா யார்கிட்டயும் அப்படி பழகுனது இல்ல "என்று கண்ணீரை மறைக்க முடியாமல் பேச

"பார்ர என்கிட்டயே நடிக்கற நா தான் உன்ன பார்த்து இருக்கானே எல்லார் மேலையும் கை போட்டுக்கிட்டு இருக்கறத "என்று அவளை மடக்கி விட்டதாக நினைத்து பேச

"அவங்க எல்லாம் என்னோட பிரண்டஸ் "என்று தலை நிமிர்ந்து சொல்ல

அதை சொல்லும் போதும் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தாலும் அதில் நேர்மை இருந்தது.

அதை பார்க்காத மகிழன் அவளின் கண்களில் கண்ணீரை பார்த்து அவளை அழுக வைத்து விட்டேன் என்று சந்தோசப்பட்டுக் கொண்டான்

அவளுக்கோ அவன் வார்த்தை உயிர் போகிற மாதிரி வலித்தது

இதுநாள் வரை அவன் பேசும் போது எல்லாம் ஸ்டாப் என்ற முறையில் கேட்டுக் கொண்டதால் அவனின் வார்த்தைகள் வலித்தாலும் அதில் இருந்து சீக்கரம் வெளியே வந்து விடுவாள்

ஆனால் இப்போது ஒரு கணவனாக அவன் அவளின் கேரக்டரை பற்றி தப்பாக பேசும் போது உயிர் வரை சென்று தாக்கியது.

அவளோ அவனை வெற்று பார்வை பார்க்க

அந்த பார்வையில் என்ன உணர்ந்துனோ இன்று போதும் என்று நினைத்துக் கொண்டு படுக்க திரும்ப அப்போது தான் அறையில் உள்ள அலங்காரத்தை பார்த்தவன் "சே இந்த அம்மானு அறிவே இல்லை நடந்தது ஒரு கல்யாணம்னு அதுக்கு இது எல்லாம் தான் குறைச்சல் "என்று சொல்ல

அதை கேட்டு அவளின் முகம் சுருங்கியதை பார்த்தவன் இன்னும் அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்து

"இதுவே எனக்கு ரோஷினிக்கு கல்யாணம் நடந்து இருந்தா இப்படியா நா இருந்து இருப்பேன் இந்த நாளை எப்படி எல்லாம் கொண்டாடி தீர்க்கணும்னு நினைச்சு கனவு கண்டு இருப்பேன் எல்லாம் உன்னால நாசமா போச்சு சே என் வாழ்க்கை போயும் போயும் உன்கூட தான் இருக்கணுமா அதுவே ரோஷினி கூட இருந்த எப்படி இருந்துருக்கும் "என்று அவன் மனதில் இல்லாதாதை எல்லாம் இருக்கிறது என்று போல் பொய்யாக பேசி அவளை காயப்படுத்த நினைக்க

அவன் நினைத்தது போல் சரியாக அவன் வார்த்தைகள் அவளை காயப்படுத்தியது "அவன் ரோஷினியை தான் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டான் அப்போ அவள் தான் அவன் மனதில் இருப்பாள் என்று அறிவு சொன்னாலும் அதை அவள் மனம் தான் ஏற்றுக் கொள்ள மறுத்தது இப்போது அவள் அவனின் manaiviyaaga இருக்கும் போது இன்னொரு பெண் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல அதை கேட்டு எந்த பெண் தான் காயப்படாமல் இருப்பாள்.

அவளின் முகம் அவனின் வார்த்தைகளை கேட்டு வலியை காட்ட

அதை திருப்தியுடன் பார்த்தவன் கட்டிலில் இருந்த பூக்களை எல்லாம் உதறி கீழே தள்ளியவன் மெத்தையில் சொகுசாக படுத்துக் கொண்டான்.

அவன் கட்டிலில் படுத்ததை பார்த்தவள் நின்று இருந்த இடத்திலேயே அமர்ந்துக் கொண்டாள்.

அவன் பேசியதிலயே அவளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது அவளுக்கு புரிந்து விட்டது.

மகிழனுக்கு படுத்ததும் தூக்கம் வரவில்லை என்றாலும் சத்யாவை வெறுப்பேற்றுவதற்காக கண் மூடி தூங்குவது போல் நடித்தவன் அவனை அறியாமலே தூங்கி விட்டான்.

சத்யாதான் அமர்ந்து இருந்த படியே மகிழன் கூறியதை நினைத்து பார்த்தவள் "அப்போ அவருக்கு ரோஷினி மேல விருப்பம் போல அவள் அப்படி போனது அவரல தாங்கிக்க முடியல பின்ன இவ்ளோ நாள் அவள் தான் அவருடைய மனைவினு நினைச்சு எவ்ளோ கனவு வைச்சு இருப்பாரு இப்போ அது இல்லனு ஆனதும் கோவம் வரும் தானே அதுவும் அவருக்கு enna சுத்தமா பிடிக்காது நானே அவருடைய மனைவி ஆனது அவருக்கு பிடிக்கல "என்று அவன் பக்கமாக இருந்து யோசித்தவள்

அவன் தானே இவளை கல்யாணம் செய்து தர சொல்லிக் கேட்டான் என்பதை மறந்து விட்டு

"இனி அவர் இருக்க பக்கம் இருக்க கூடாது அவருக்கு என் முகத்தை பார்க்கவே பிடிக்கல அவருக்கு அக்காவ தான் பிடிச்சு இருக்கு "மனதுக்குள் சொல்லிக் கொண்டு

இரவு முழுக்க அதை பற்றியே யோசித்துக் கொண்டி இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.


இவர்களை பற்றி கவலை படாமல் நிலா மகள் அவள் வேலையை முடித்துவிட்டு செல்ல மெல்ல சூரியன் எட்டி பார்த்துக் கொண்டு இருக்க

எப்போதும் போல நேரமாக எழுந்த சத்யாவுக்கு நேற்று நடந்தது நியாபகம் வரவில்லை

அறை வித்யாசமாக இருக்க சுற்றிப் பார்த்தவளின் கண்ணில் உறங்கிக் கொண்டு இருக்கும் மகிழன் பட்டதும் தான் நேற்று இருவருக்கும் திருமணம் ஆனதே நினைவு வந்தது.

திருமணம் என்று எண்ணம் வந்தவுடன் அவள் இதழ்கள் விரக்தி சிரிப்பு ஒன்றை உதிர்த்தது.

மெல்ல எழுந்தவளின் கால்கள் நேற்று இரவு முழுக்க அமர்ந்து இருந்தப்படியே தூங்கியதால் மரத்து போய் இருந்தது.

சிறிது சிறிதாக கால்களை நகற்றி அதற்கு உயிரோட்டம் தந்தவள் குளிக்க செல்லலாம் என்று போகும் போது

தூங்கிக் கொண்டு இருந்த மகிழனின் முகத்தை பார்த்தாள்

"இந்த முகத்தை பார்த்தால் நேற்று பேசியதற்கு இவனுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் நிர்மலாக இருந்தது தூங்கும் போது ஒருவரின் குணங்களை பார்க்கலாம் என்று சொல்வார்கள் இவன் முகத்தை பார்த்தால் குழந்தை போல இருக்க குழந்தை போல் இருக்கும் இவனிடத்தில் தான் அரக்கன் போல வார்த்தைகள் வரும் "என்று நினைத்து பெருமூச்சு விட்டு குளிக்க சென்றாள்.

இவள் குளித்து வரும் வரைக்கும் அவன் முழிக்கவே இல்லை அதுவும் நல்லதற்கு தான் இல்லை என்றால் காலையிலேயே இவனின் வார்த்தைகளை கேட்க வேண்டி இருக்கும் என்று நினைத்து கீழே சென்றாள்.

இவள் சென்ற போது செல்வி மட்டும் எழுந்து இருந்தார்.

அவரும் நேற்று இரவு இங்கு தான் தங்கி இருந்தார் அதிசயமாக கணேஷனும் செல்வி இங்கு தங்குவதற்கு சம்மதம் சொல்லி விட அவருக்கும் மறுக்க வில்லை சத்யாவிற்கு தைரியமாக இருக்கும் என்று எண்ணி இருந்துக் கொண்டார்.

குளித்து வந்த சத்யாவை பார்த்தவர் "ஏன்டா அதுக்குள்ள எழுந்துட்ட "என்று கேள்வி கேட்டு சராசரி தாயாக அவள் முகத்தை ஆராய்ச்சி பண்ண

அதை பார்த்தவள் "எப்போவும் எழுந்திரிக்க நேரம் தான மா "என்று சொல்லி அவரை பார்க்காமல் காபி ஊற்றி குடிக்க

அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாதவர் "நேத்து மாப்பிள்ளை நல்ல படியா நடத்துனார டா "என்று மகளிடம் இதை எப்படி கேட்பது என்று தயங்கி தயங்கி கேட்க

அவரை நேராக பார்த்தவள் "நீ கூட சராசரி அம்மா மாதிரி தான மா "என்று உடைந்த குரலில் கேட்க

அப்போது தான் செல்விக்கு அவரின் மடத்தனம் புரிந்தது மகளின் வாழ்க்கை என்று பார்த்தவர்கள் மகளின் மனதை பார்க்க மறந்தார் அல்லவா.

"அம்மாவ மன்னிச்சிரு டா நா ஏதோ நினைப்புல அப்படி கேட்டுட்டேன் "என்று குற்றஉணர்வுடன் கேட்க

"விடு மா இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் எல்லார் வீட்லயும் நடக்கறது தான "என்று வெறுமையான குரலில் சொல்லி விட்டு

அங்கு வந்த மல்லிகாவுக்கு காபி கலக்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செல்விக்கு தான் ஏதோ மாதிரி இருந்தது விருப்பம் இல்லாத பெண்ணுக்கு திருமணம் செய்து விட்டு இப்படி கேட்டது அவளுக்கு எவ்ளோ கஷ்டமாக இருக்கும் என்று அவருக்கும் தெரிந்தது தானே

அந்த தப்பை அவர் செய்தது தான் அவருக்கே ஒரு மாதிரி இருந்தது.

மல்லிகா அருகில் வரவும் அவரின் முகத்தை மாற்றிக் கொண்டு சிரித்த முகமாக "வாங்க அண்ணி "என்க

"நேரமாவே எழுந்திட்டிங்களா "என்று மல்லிகா கேட்கவும்

"எப்போவும் இந்த நேரத்துக்கு எழுந்து பழக்கம் ஆகிருச்சு அண்ணி "என்று கூறிவிட்டு சத்யாவுக்கு உதவி செய்தார்.

மல்லிகா சத்யா கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு அவளை பார்த்து சிரித்தவர் காபி குடித்து விட்டு "நல்ல போட்டு இருக்க டா " என்று பராட்ட அதற்கு சிரித்துக் கொண்டு

வீட்டில் இருக்கும் எல்லார்க்கும் காபி கொடுத்து விட்டு வந்தாள்.

சிறிது நேரம் ஆக "மகிழன் எழுந்து இருக்கும் நேரம் ஆச்சு டா நீ போய் அவனுக்கு காபி கொடுத்து வா "என்று மல்லிகா சொல்ல

அவரின் வார்த்தையை மறுக்க முடியாதவள் காபியை எடுத்துக் கொண்டு மேலே சென்றவள்

கதவின் முன் நின்று சிங்கத்தை பார்க்கும் பயத்தோடு உள்ளே சென்றாள்…

அவள் உள்ளே வந்த நேரம் அப்போது தான் எழுந்து முகம் துடைத்துக் கொண்டு வந்தான்.

அவனிடம் பேசாமல் அவன் முன் காபி கப்பை நீட்ட

அதை வாங்காமல் அவளையே அவன் பார்க்க குனிந்து இருந்தவள் அவன் கப்பை வாங்கததால் குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்க்க

அவள் பார்ப்பதற்காகவே காத்து இருந்தவன் போல "பரவா இல்லையே உங்க வீட்ல காபி குடுக்க கூட கத்துக் கொடுத்து இருங்காங்க "என்று நக்கலாக கேட்க

அதில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் பார்க்க

"உங்க வீட்ல ஓடி போகவும் பசங்க கூட சுத்தவும் மட்டும் தான் கத்துக் கொடுத்து இருக்காங்கனு நெனச்சேன் "என்று காலையிலேயே வார்த்தைகளால் அவளை கொள்ள

அவளின் வீட்டிரை பற்றி தப்பாக பேசுபவனை முறைக்கவும் முடியாமல் சங்கடத்தில் அவள் இருக்க

அவளின் அமைதியை பார்த்தவன் "நா பேசுறப்போ நீ அமைதியா இருந்து இப்போ தான் பாக்கறேன் "என்று எல்லாளாக அவளை குதறி விட்டு செல்ல

அவளுக்கு தான் ஆயாசமாக இருந்தது வார்த்தைக்கு வார்த்தை அவளை காயப்படுத்துபவன் கூட எப்படி வாழ்க்கை முழுக்க குடும்பம் நடத்துறது என்று எண்ணினாள்.

அவளின் வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்னும் சந்தோஷம் இல்லை திருமணம் முடிந்த பின்னும் சந்தோஷம் இல்லை என்ன வாழ்க்கை இது என்று நினைத்து கீழே சென்றாள்.

அவள் கீழே சென்றதை உறுதி படுத்திக் கொண்டவன் வெளியே வந்து போகும் அவளை பார்த்து "இதுக்கே இப்படினா இனி என்ன பண்ணுவ "என்று சொல்லி சிரித்துக் கொண்டான்.


நிமிர்வாள்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 12


"ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே

அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே

ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே

துன்பமென்ற சிப்பிக்குள் இன்பமென்ற முத்து வரும் துனிந்த பின் பயம் இல்லையே

கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்

காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்"






மகிழன் வார்த்தைகள் சத்யாவை காயப்படுத்த சோர்த்து போன முகத்துடன் கீழே வந்தாள்.

கிட்செனின் இருந்து மேலே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மல்லிகாவுக்கு சத்யாவின் சோர்த்து போன முகத்தை பார்த்தே மகிழன் அவளை திட்டி இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டார்.

என்னதான் மருமகளை கொஞ்சும் மாமியாராக இருந்தாலும் அவரின் மகன் என்று வரும் போது சத்யாவை அனுசரித்து போக சொல்ல தான் தோன்றியதே தவிர மகிழனிடன் இதை பற்றி பேசும் எண்ணம் வரவில்லை.

கீழே வந்த சத்யா எல்லாரும் இவளை பார்ப்பது போல தோன்ற உடனே முகத்தை சிரித்த மாதிரி வைத்துக் கொண்டாள்.

அதை பார்த்த மணிவண்ணன்க்கு அடுத்தரின் சந்தோஷத்துக்காக தன் கஷ்டத்தை மறைக்கும் பெண் எத்தனை பேர் இருக்க முடியும் என்று சத்யாவை பெருமையாக நினைத்துக் கொண்டார்.

சமையல் ரெடி செய்து டேபிள் மேல் வைக்கும் போது சரியாக கணேஷனும் மரகதமும் உள்ளே வந்தனர்.

மரகதத்தின் முகத்தை பார்த்தே தெரிந்தது அவருக்கு வர விரும்பம் இல்லை கணேஷன் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து இருக்கிறார் என்று.

கணேஷனை பார்த்த மல்லிகா "வாங்க அண்ணா "என்க

அப்போது தான் சத்யாவும் கணேஷனை பார்த்தாள்.

"வந்துட்டேன் மா "என்று சிரித்துக் கொண்டே உள்ளே மணிவண்ணம்மா அருகில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க

உள்ளே சென்ற சத்யா காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க கணேஷன் அதை எடுத்துக் கொண்டவர் அவளை பார்க்காமல் இருக்க மரகதம் அவள் தந்த காபியை தொட்டுக் கூட பார்க்கவில்லை.

இவர்களில் விலகல் மல்லிகாவின் பார்வையில் இருந்து தப்பவில்லை இருந்தாலும் அமைதியாக இருந்துக் கொண்டார்.

"செல்வியை கூட்டி போகலாமனு வந்தேன் மா அப்படியே மாப்பிள்ளையை மறுவீட்டுக்கு அழைக்கலாம்னு "என்று கணேஷன் தொடங்க

"அதுக்கு என்ன அண்ணா உங்க மாப்பிள்ளைய நீங்க கூட்டிகிட்டு போங்க "என்றவர்

சத்யாவை பார்த்து "அவன் கீழே வர நேரம் டா சாப்பிட எடுத்து வை டா "என்க

எல்லார் முன்னாடியும் தலையை மட்டும் அசைத்தாள்.

சரியாக அந்த நேரம் படியில் இருந்து மகிழன் இறங்க formal டிரஸில் வந்துக் கொண்டு இருந்தான்.

அவனை பார்த்த மரகதத்துக்கு இவனை போய் வேண்டாம்னு போய்ட்டாளே அறிவுக்கெட்டவ இப்போ பாரு இது எல்லாம் இந்த சனியனுக்கு போயிருச்சு "என்று வயிஎரிந்துக் கொண்டு இருந்தார்.

அவன் வருவதை பார்த்த கணேஷன் எழுந்து நிற்க அதை கண்டுக் கொள்ளாமல் மகிழன் வெளியே செல்ல போக

அவனை தடுத்த மல்லிகா "மகிழா உன் மாமனார் வந்து இருக்காருங்க பாரு "என்க

"பார்த்ததுனால தான் வெளிய போறேன் மா "என்று முகத்தில் அடித்தது போல் பேச

அதை கேட்ட சத்யாவுக்கும் செல்விக்கும் ஏதோ போல் இருந்தது

ஆனால் கணேஷனுக்கு அப்படி எதுவும் இல்லை போல

"காலையிலேயே மாப்பிள்ளை தமாஷா பேசுறாரு "என்க

அவரை வினோத பிறவி போல பார்த்தான்

இதே நேரம் இந்த வார்த்தைகளை வேறு யாரிடம் சொல்லி இருந்தால் கோவமாவது பட்டு இருப்பார்கள் ஆனால் இவரோ அதை கண்டுக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டு இருக்க

அதை பார்த்த மகிழன் மூச்சை இழுந்து வெளியே விட்டவன் "சொல்லுங்க "என்று வாட்சை பார்த்துக் கொண்டே கேட்க

அதில் எனக்கு நேரமாச்சு வந்த விஷயத்தை சீக்கரம் சொல்லுங்க என்று உணர்த்துவது போல இருக்க

சத்யா பல்லை கடித்துக் கொண்டாள்.

"மாப்பிள்ளை மறுவீட்டுக்கு அழைக்கலாம்னு வந்தேன் "என்று கணேஷன் சிரித்துக் கொண்டே சொல்ல

அவரை முறைத்து பார்த்தவன் "இந்த கல்யாணம் என்ன முறைபடியா நடந்து இருக்கு மறுவீடு அழைக்க "என்று நக்கலாக கேட்டவன்.

"என்னால எங்கையும் வர முடியாது வேணும்னா இவளை கூட்டுக்கிட்டு போங்க "என்று சொல்ல

அதை கேட்ட கணேஷன் அவசரமாக "நீங்களே வராத போது இவளை கூட்டுக்கிட்டு போய் என்ன பண்ண "என்க

அதை கேட்ட மகிழன் சத்யா திரும்பி ஒரு கேள்வி பார்வை வீசினான்

அதில் என்ன விட்ட உனக்கு போகறதுக்கு வேற வழி இல்ல என்று அர்த்தம் இருக்க

அதை புரிந்துக் கொண்ட சத்யா தலை குனிந்துக் கொண்டாள் அவளுக்கு கணேஷனின் வார்த்தை அவமானமாக இருந்தது.

அவளை பற்றிக் கண்டுக் கொள்ளாத கணேஷன் செல்வியை அழைத்துக் கொண்டு செல்ல

அதை பார்த்த சத்யாவிற்கு கண்கலங்கியது இனி தனக்கென்று யாரும் இல்லை என்று தனிமை உணர்வு அவளை கொன்றது.

போகின்ற அவர்களையே அவள் பார்த்துக் கொண்டு இருக்க அவள் மீது கை வைத்த மல்லிகா கலங்கிய கண்களை பார்த்து "நாங்க இருக்கோம் டா உள்ள வா "என்று அழைத்து செல்ல

நடக்கும் எதை பற்றியும் கவலைக் கொள்ளாமல் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல மகிழன் சாப்பிட்டுக் கொண்டு இருக்க

அவனை பார்த்த மல்லிகாவுக்கு கோவம் எட்டிப்பார்த்துது.

என்னதான் அவர் சத்யாவை சமாதானம் செய்து இருந்தாலும் கணவன் ஆறுதல் தருவது போல இருக்குமா நினைத்து மகிழனை முறைக்க

அவன் இவர் பார்வையை கண்டுக் கொள்ளாமல் பேக் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல

"மகிழா எங்க போற "என்று அவனை நிறுத்த

"காலேஜ்க்கு தான் போறேன் மா "என்க

அவனின் முன்னால வந்து நின்றவர் "கல்யாணம் நேத்துதான் முடிஞ்சு இருக்கு இப்போ ஏன் பா "என்று கேள்வி எழுப்ப

"எப்போவும் போறது தான மா "என்று பின்னால் இருந்த சத்யாவை பார்த்து "நடந்ததுக்கு பேர் கல்யாணம்னு சொல்லாதீங்க எரிச்சலா இருக்கு "என்று சொல்லிவிட்டு செல்ல

அவனின் வார்த்தைகள் சத்யா குத்திகிழிக்க தலைகுனிந்து நின்றாள்.

"அவன் ஏதோ கோவத்துல அப்படி பேசிட்டு போறான் டா நீ எதுவும் நினைச்சுக்காத "என்று மல்லிகா ஆறுதல் தர

"அத்தை நானும் காலேஜ் போகட்டுமா?"என்க

மகிழன் போன பிறகு இவளை மட்டும் போகவிடாமல் என்ன செய்வது என்று நினைத்து

"சரி டா போயிட்டு வா "என்று அனுமதி தர

அவசர அவசரமாக ரெடி ஆகி கிளம்பினாள்.

பஸ்சில் போகும் போது எல்லாம் எப்படி கல்யாணம் நடந்ததை பற்றி சொல்ல என்று நினைத்துக் கொண்டே வந்தாள்.

காலேஜ் வந்தவள் போதும் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல

இன்று இவள் வருவாள் என்று யாருக்கும் எதிர்ப்பார்க்கவில்லை

ஏன்என்றால் ரோஷினியின் கல்யாணத்தின் போது இவள் ஒரு வாரம் வர முடியாது என்று சொல்லிவிட்டு சென்றவள் கல்யாணம் முடிந்த அடுத்த நாள் வந்து நின்றதை பார்த்து

"என்ன டி வீட்ல இருக்க வேணாம்னு துரத்தி விட்டுட்டாங்களா "என்று நந்தினி அவளை கேலி செய்ய அதற்கு எதுவும் பேசாமல் இருக்க

பிரசன்னா தான் சத்யாவை உற்று பார்த்து ஆராந்துக் கொண்டு இருந்தான்.

சத்யா நெற்றியில் குங்குமம் வைக்க மறந்து இருக்க அவளிடம் அவ்ளவாக வித்யாசம் தெரியாமல் இருந்தது.

நவீன் பிரசன்னாவின் தோளை தட்டி "என்ன டா சத்யாவ புதுசா பாக்குற மாதிரி பார்க்குற "என்க

சத்யாவையே பார்த்துக் கொண்டு "புதுசா தான் தெரியற "என்று அவர்களை குழப்ப

அவனை புரியாமல் பார்த்தவர்கள் "அப்படி என்ன புதுசா தெரியறா "என்று கேட்டுக் கொண்டு அவளின் முகத்தை பார்க்க

அவள் தான் இவர்கள் பேசுவது தெரிந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

"என்ன டா புதுசா தெரியறா எப்போவும் போல தான இருக்க "என்று சரண் சொல்ல

அதை கேட்டு மறுத்த பிரசன்னா "இதுவே பழைய சத்யாவ இருந்திருந்தா இப்போ நா அவளை புதுசா தெரியறனு சொன்னதுக்கு கேலி செஞ்சு இருப்ப இல்லனா சிரிச்சு இருப்ப இந்த ரெண்டுமே பண்ண அமைதியா இருக்க சத்யா புதுசு தான "என்று விளக்கம் சொல்ல

அவன் சொன்ன பிறகு தான் அவளின் அமைதியே புரிந்தது.

அவளையே நால்வரும் கேள்வியாக பார்க்க

நண்பர்களிடம் இருந்து மறைக்க விரும்பதாவள் "எனக்கு கல்யாணம் ஆகிருச்சு "என்க

அதை கேட்ட சரண் "இன்னைக்கு ஏப்ரல் 1 கூட இல்லையே "என்று யோசிக்க

"நிஜமா தான் சொல்றேன் "என்க

அதை சரண் நம்ப மறுத்தான்.

பிரசன்னா அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான்

"எனக்கு கல்யாண சாப்பாடு போடவே இல்லை "என்று நவீன் புலம்ப

அதை கேட்ட நந்தினி அவனை முறைத்து பார்த்தாள்

அவள் முறைக்க இவன் வாயில் கை வைத்து இனி பேச மாட்டேன் என்பது போல சைகை செய்ய

நந்தினி சத்யாவை பார்த்தவள் "என்ன நடந்ததுனு சொல்லு டி பாதி பாதியா சொன்னா எப்படி புரியும் "என்க

"எனக்கு மகிழன் சார் கூட கல்யாணம் ஆகிருச்சு "என்க

அதை கேட்ட சரண் நெஞ்சில் கை வைத்து "என்ன டி சொல்ற பொய் சொல்லாத "என்று அதிர்த்து போய் கேட்ட

சத்யா கழுத்தில் இருந்த தாலியை வெளியில் எடுத்து போட்டாள்.

அதை பார்த்து அவள் சொல்வது உண்மைதான் என்று புரிந்தாலும் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையை இவள் எப்படி என்று கேள்வி எழும்ப

சத்யா நடந்ததை சொல்லி பெருமூச்சு அங்கு இருந்த இருக்கையில் அமர

அவள் அருகே வந்த நந்தினி "பெத்ததுல இருந்த உன்ன அவரு பெண்னே இல்லைனு சொல்லிட்டு கஷ்டம் வரும் போது மட்டும் அவருக்கு நீ பொண்ணா தெரிஞ்சியா "என்று ஆதங்கமாக கேட்க

அதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள்.

பிரசன்னா அவள் அருகில் அமர்ந்து "உனக்கு பிடிச்சு இருக்கா?"என்று கேட்க

அதற்கும் பதில் சொல்லாமல் இருக்க

"இப்படி அமைதியா இருந்தா எப்படி டி ஏதாவது சொல்லு "என்று சரண் கேட்க

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இதுதான் என் வாழ்க்கைனு ஆகிருச்சு அதை ஏற்றுக் கொள்ள முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் "என்று மெதுவாக ஆனால் திருத்தமாக சொல்ல

அதை கேட்டவர்களுக்கு அவளின் வாழ்க்கை இனிமேலாவது நிம்மதியாக சந்தோசமாக இருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டனர்

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை அவள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் நட்பை பலி கொடுக்க வேண்டும் என்று.

அமைதியாக இருந்தவளின் தோளில் கை போட்டு "இப்படி நடந்திருச்சேனு நினைச்சு கவலைப்பட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாத இனிமேல் அதை உனக்கு ஏற்றது போல எப்படி மதிக்கக்கணும்னு யோசி "என்று பிரசன்னா அவளுக்கு நல்வழி தர அவனை நன்றியுடன் பார்த்தாள்.

நவீன் தான் சூழ்நிலையை மாற்ற "அப்போ இன்னைக்கு சத்யாவோட ட்ரீட்தான் "என்று உற்சாகமாக கத்த

அதை கேட்ட நந்தினி அருகில் இருந்தா கால்லை எடுத்து அவன் மீது வீசுவது போல செய்து "இங்க என்ன நடந்துக் கிட்டு இருக்கு நீ என்ன பேசற?"என்று முறைக்க

"என்ன நடந்தா என்ன சாப்பாடு முக்கியம் "என்க

அதை கேட்ட சத்யா சிரித்துவிட்டு "உனக்கு நா வாங்கி தரேன் நவீன் "என்க

அதை கேட்ட நவீன் நந்தினியை பார்த்து பளிப்பு காட்டினான்.

அப்போது தான் நியாபகம் வந்த சரண் "அப்போ உன் அக்கா ரோஷினி என்ன ஆனா?"என்க

"அவளை பற்றி யாரும் பேச வேண்டாம்னு அப்பா பொதுவா சொல்லிட்டாங்க டா ஆனா அவ என்ன செய்யறான்னு தான் எனக்கும் யோசனையா இருக்கு "என்றாள்

என்னதான் ரோஷினிக்கு சத்யாவை பிடிக்கவில்லை என்றாலும் சத்யாவிற்கு ரோஷினியை பிடிக்கும் அல்லவா.

ரோஷினி கோவாவில் உள்ள பீச்சில் சன்கிளாஸ் அணிந்து கடலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளை சுற்றி வித விதமான மனிதர்கள் இருக்க

எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்

இவள் வேடிக்கை பார்ப்பது போல இவளின் உடலையும் பல பேர் வேடிக்கை பார்த்தனர் அது தெரிந்தாலும் அவள் மூடி மறைக்க வில்லை

எல்லாருக்கும் அவளை பார்த்து செல்வதில் ஒரு வித கர்வம் பெருமை தான் வந்தது அவ்ளோ அழகேன்று நினைத்துக் கொண்டு.

அவளின் வாழ்க்கை வெல்செட்டில்ட் என்பது போல் இருந்தது ஆனால் அவளின் பாய்பிரண்ட் அவளை திருமணம் செய்துக் கொள்ள வில்லை இன்னும் கொஞ்சநாள் என்ஜாய் செய்து விட்டு அப்புறம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்க அதுக்கு மேல் அவனை அவள் கட்டாயப்படுத்தவில்லை.

கல்யாணம் செய்துக் கொள்ளாமலே உறவில் இருந்தனர்

அவனின் பாய்பிரண்ட் இவளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க இவளும் அவனை பற்றிக் கண்டுக் கொள்ள வில்லை.

சிலர் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு எல்லை மீறி அவர்களின் வாழ்க்கையை கேடுத்துக் கொள்கிறனர் அது அவர்களுக்கு எல்லாம் போன பின் தான் புரியும்..

இந்த வாழ்க்கை நிரந்திரம் இல்லை தற்காலிகமானது என்று.

இங்கே காலேஜில் பிரசன்னா சத்யாவிற்கு ஆறுதல் சொல்லி அவளுக்கு நல்வழி சொல்லிக் கொண்டு இருக்க

சத்யாவின் கெட்ட நேரம் அப்போது அந்த வழியாக வந்த மகிழன் இருவரையும் பார்த்து விட்டு

"கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட இவ திருந்தலையா வீட்டுக்கு வா உனக்கு இருக்கு "என்று நினைத்துக் கொண்டு அங்கு இருந்து சென்றான்.


நிமிர்வாள்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 13




சத்யா நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தவள் கிளாஸ் பெல் அடிக்கவும் கிளாஸ்க்கு வந்தனர்.

கிளாஸ்குள் வந்த சத்யாவை பார்த்த கிளாஸ் பசங்க அவளின் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து விட்டு

"உனக்கு கல்யாணம் ஆகிருச்சா சத்யா "என்று கோரஸ்ஆக அதிர்ச்சியுடன் கேட்க

அவர்களின் அதிர்ச்சியில் குழப்பமாக பார்த்தவள் "ஆமாம் "என்று தலையாட்ட

எங்களோட ட்ரீம் கேர்ள்க்கு கல்யாணம் ஆகிருச்சே இனி யார சைட் அடிப்போம் என்று பாவமாக கேட்க

அவர்களின் விளையாட்டுதனத்தில் சத்யாவுக்கு சிரிப்பு வர

நந்தினி தான் "ஏன் எங்களை எல்லாம் பார்த்த பொண்ணு மாதிரி தெரியலையா "என்க

அவளை சுற்றி வந்த நவீன் "எந்த அங்கெல்ல பார்த்தாலும் நீ பொண்ணு மாதிரி தெரியமாட்டேங்கறியே "என்று கலாய்க்க

அருகில் இருந்தா நோட்டை எடுத்து அவனை அடிக்க துரத்தினாள்.

இவர்களின் சேட்டைய பார்த்துக் கொண்டு இருந்தா சத்யாவுக்கு அவளின் கவலைகள் மறந்து சிரித்து சிரித்து வாய் வலித்தது.

நிஜம் தானே எவ்ளோ கவலைகள் இருந்தாலும் அதை மறக்க வைத்து சிரிக்கவும் வைக்க நட்புனால மட்டும் தான் முடியும்.

சிரித்து சிரித்து ஓயிந்து போனவளை பார்த்தவர்கள் இவள் இப்படி இருந்தாள் போதும் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் இடத்தில் அமர

சத்யாவை நெருங்கி வந்த ஆர்த்தி "காங்கிரட்ஸ் சத்யா "என்று அணைத்துக் கொள்ள

அவளும் சிரிப்புடம் அணைத்துக் கொண்டாள்.

"கல்யாணம்னு சொல்லவே இல்ல? "என்று கேட்க

"அவசரமா நடந்துருச்சு ஆர்த்தி அதுனால யாருகிட்டயும் சொல்ல முடியல "என்று விளக்கம் தர

"அது சரி உன்ன கல்யாணம் பண்ண மாப்பிள்ளை சார் யாரு பேர் என்ன?"என்க

அதை கேட்ட சத்யாவுக்கு மகிழன் பேர் சொல்லலாமா வேண்டாமா என்று தோன்றியது.

மகிழன் இவள் தான் அவனின் மனைவி என காட்டுவான என்று தெரியாமல் இவளாக மகிழனை கணவன் என்று சொல்ல தயங்கினாள்.

ஆர்த்தி இவளின் பதிலுக்காக இவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க "எங்க சொந்தம் தான் ஆர்த்தி "என்று முடித்துக் கொண்டாள்.

கிளாஸ் எடுக்க ஸ்டாப்ஸ் வந்து விட ஆர்த்தியும் அடுத்த கேள்வி கேட்காமல் சென்று விட்டாள்.

மதியம் மேல் மகிழன் சத்யாவின் கிளாஸ்க்கு வர

அவனை பார்த்தவள் இவ்ளோ நாள் ஆசிரியராக இருந்தவன் இன்று கணவனாக வரவும் அவளுக்கே தெரியாமல் அவளிடம் ஒரு உணர்வு தோன்ற அது அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் செய்தது.

சத்யா அவனை நிமிர்ந்து பார்க்காமல் இருப்பதை பார்த்து மகிழன் "திமிரு "என்று நினைத்துக் கொண்டு

கிளாஸ் எடுத்து முடித்தவன் பொதுவாக கேள்வி கேட்க

அதில் அதிகம் சத்யாவை தான் கேட்டான்.

எப்போதும் அவனின் கிளாஸ் கவனமாக கவனிப்பவள்

இன்று கவனிக்காது இருக்க அதனால் பதில் சொல்லும் போது தடுமாற

அதை பார்த்தவன் "எதுக்கு கிளாஸ்க்கு வரிங்க கவனிக்க முடியாதுனா வீட்டுலயே இருக்க வேண்டியது தான எதுக்கு படிக்கிறேன்னு வந்து எங்க உயிர வாங்கரிங்க "என்று திட்ட

அனைவர் முன் இவன் அவளை திட்ட அவளுக்கு தான் கஷ்டமாக இருந்தது.

மகிழன் திட்டுவதை பார்த்த நந்தினி அவனை உள்ளுக்குள் திட்டுக் கொண்டு இருக்க

அவன் கிளாஸ் முடிந்து சென்றது "மனசுல என்ன நினைச்சுகிட்டு இருகாங்க கொஞ்சம் தப்பா சொன்னதுக்கு என்னமோ இவரு காலேஜையே இழுத்து மூடுன மாதிரி பேசிகிட்டு போறாரு "என்று சத்யாவிடம் அவனை திட்ட

கணவனை திட்டியதும் "நந்து அவரு ஏதோ கோவத்துல இருகாங்க டி அதுனால திட்டுறாங்க இத பெருசா எடுத்துக்கிட்டு நீ அவங்கள பேசாத "என்று சப்போர்ட் செய்ய

"புருஷனுக்கு சப்போர்ட்ஆ உன்ன மாதிரி பொண்ணுங்க தாலி கட்டியது கல்லனாலும் கணவன் னு இருக்கறதால தான் இவங்க எல்லாம் இப்படி பண்றங்க "என்றவள்

பின் சத்யாவின் முகத்தை பார்த்து மகிழனை திட்டுவதை நிறுத்திவிட்டாள்.

அன்றைக்கு காலேஜ் முடிந்ததும் சத்யா மகிழனின் வீட்டை நோக்கி சென்றாள்.

வீட்டுக்கு சென்றவள் அவளை சுத்தப்படுத்திக் கொண்டு மல்லிகாவுக்கு சென்று உதவி செய்ய

"சத்யா நீ இப்போ தான காலேஜ்ல இருந்து வந்துருக்கஆல்ரெடி டையேட்ஆ தான் இருப்ப அதுனால நீ போய் டிவி பாரு "என்க

அவரின் பேச்சை கேட்காதவள் அவருக்கு உதவி செய்ய

அதை பார்த்தவருக்கு மனம் குளிர்ந்து போனது

இதுவே ரோஷினி இவரின் மருமகளாக வந்து இருந்தால் அவள் இவருடன் இப்படி இருந்திருப்பாள என்று எண்ண அவர் மனம் கண்டிப்பாக அவள் இருந்து இருக்க மாட்டாள் என்று அடித்து சொன்னது.

அவளை வாஞ்சையுடன் பார்த்தவர் அவளுக்கு ஸ்னாக்ஸ் எடுத்து தர

அவரை பார்த்து சிரித்தவள் அவருடன் ஷேர் செய்துக் கொண்டாள்.

அந்த நேரம் வந்த மணிவண்ணன் மாமியார் மருமகளின் ஒற்றுமையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்

"என் கண்ணுக்கு கொஞ்சமாவது ஸ்னாக்ஸ் காட்டுவிங்களா இல்லை உங்க பாச மழையில அதை மறந்துருவிங்களா "என்று கேலியாக கேட்க

அதுவரை சமையல் மேடையில் அமர்ந்து மல்லிகாவுடன் பேசிக் கொண்டு இருந்தா சத்யா

மணிவண்ணனின் குரல் கேட்டதும் அவசர அவசரமாக இறங்கி நிற்க

அதை பார்த்தவர்"பார்த்து சத்யா மெதுவா இறங்க வேண்டியது தான இப்படியா வேகமா இறங்குவ "என்று மல்லிகா அவளை கடிந்துக் கொள்ள

"எதுக்கு என்ன பார்த்து இறங்குன டா நா என்ன சிங்கமா இல்ல புலியா பார்த்து பயப்படறதுக்கு?"என்று மணிவண்ணன் கேட்க

அவர் கேட்டதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்க

அதில் சிரித்தவர் "நீ எப்போவும் போல இருக்கலாம் டா என்ன பார்த்தவுடனே இப்போ மாதிரி பண்ண வேண்டாம் எனக்கு நீ பொண்ணு மாதிரி தான் சரியா "என்க

அதை கண்கலங்க கேட்டவள் அவரை பார்த்து தலையசைத்து சிரிக்க

"போதும் போதும் உங்க பாச மழை ஸ்னாக்ஸ் கேட்டீங்க தான இந்தாங்க "என்று மல்லிகா அவரின் முன் நீட்ட

அதை சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டவர் "உங்க அத்தைக்கு பொறாமை டா அவள கொஞ்சமா உங்கிட்ட பேசறேன்னு "என்க

அதை கேட்டவர் "நா எதுக்கு பொறாமை படனும் அதெல்லாம் இல்லை "என்று சொல்லி திரும்பி நின்றவர் "விவரங் கெட்ட மனுஷன் பக்கத்துல மருமகள வைச்சுகிட்டு என்ன பேச்சு பேசறாரு "என்று முனுமுனுத் கொண்டார்

அவர் முனுமுனுப்பதைக் கேட்ட மணிவண்ணன் சிரித்துக் கொண்டே சென்றார்.

இவர்களின் அந்யோனியத்தை பார்த்த சத்யா சத்யாவுக்கு சந்தோசமாகவும் அதே சமையம் நாங்களும் இப்படி இருக்கனும் என்று நினைத்துக் கொண்டாள்.

இவள் மட்டும் நினைத்தால் போதுமா அவனும் நினைக்க வேண்டுமே..

மகிழன் காலேஜ் முடிஞ்சதும் நேராக அவன் அப்பாவின் எஸ்ப்போர்ட் இம்போர்ட் ஆபீஸ்க்கு சென்று இருக்கும் கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து நேரம் போதே தெரியாமல் இருந்தான்.

மேனேஜர் வந்து லேட்டாகி விட்டது என்ற சொன்ன பிறகு தான் ஒன்பது மணி ஆனதே தெரிந்தது.

அவரை போக சொல்லியவன் உடலை நெளித்து நெட்டி முறித்தவன் பின் பேக் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

வீட்டில் மல்லிகாவும் மணிவண்ணனும் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்ள

மகிழனுக்காக ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டே காத்துக் கொண்டு இருந்தாள் சத்யா.

மகிழன் வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தவும்

அவனின் கார் சத்தத்தை கேட்ட சத்யா அவன் சாப்பிடுவதற்கு எடுத்து வைத்தாள்.

உள்ளே வந்தவன் வீட்டில் யாரும் இல்லையோ என்று நினைத்து கண்ணை சுழற்ற

கிட்செனின் இருந்தா சத்யா தென்பட

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் ரூம்க்கு சென்று பிரெஷ்அப் ஆகி வந்தான்.

அவன் கீழே வரவும் சத்யா அனைத்தையும் எடுத்து வைக்கவும் சரியாக இருந்தது.

அவன் தட்டில் சூடாக இட்லி வைக்க அமைதியாக சாப்பிட்டவன் பேருக்கு கூட நீ சாப்பிட்டியா? என்று கேட்காமல் செல்ல

அவனை பற்றி தெரிந்து இருந்தாலும் அவளின் மனம் அவன் வார்த்தைக்காக எதிர்ப்பார்த்தது

அவன் சென்ற பின் சாப்பிடலாம் என்று நினைக்க

அவள் அருகில் வந்தவன் மேல வா என்று சொல்லிவிட்டு செல்ல

சாப்பிட மனம் இல்லாதவள் அவன் சாப்பிடதை ஒதுக்கி வைத்து விட்டு அவன் பின்னால் சென்றாள்.

ரூம்குள் வந்தவளை அவன் அழுத்தமாக பார்க்க

அவன் எதற்காக பார்க்கிறான் என்று புரியாதவள் அவனின் பார்வையயை எதிர்க்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள்.

அதை பார்த்து நக்கலாக சிரித்தவன் "இன்னும் நீ திருந்தலையா?"என்க

அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் அவனை பார்க்க

அவளின் பார்வையை புரிந்தவன் "நல்லவே நடிக்கிற "என்க

அவன் எதற்காக அவளை குற்றம் சொல்கிறான் என்று தெரியாமல்

"நீங்க என்ன சொல்ல வரிங்கனு எனக்கு புரியல "என்க

அவளை கூர்மையாக பார்த்தவன் "கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட நீ பசங்க கூட சுத்துறதை நிறுத்தலையா?"என்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அவங்க என்னோட பிரன்ட்ஸ் "என்று அவன் கண்ணை பார்த்து சொல்ல

"பிரன்ட்ஸ் கூட தான் தோளுலு கை போட்டு பேசுவார்களா "என்று யோசிப்பது போல கேட்க

"நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல "என்று தீர்க்கமாக சொல்ல

"நா என்ன நினைச்சேனு உனக்கு எப்படி தெரியும்?"என்று கேள்வி கேட்க

புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம் புரிந்துக் கொண்டே புரியாதது போல் இருப்பவர்களுக்கு என்ன சொல்வது என்று நினைத்து அமைதியாக இருக்க

"பார்த்தியா உன்னால நா கேட்டதுக்கு பதில் சொல்ல முடியல அப்போ நீ தப்பு பண்ணி இருக்க "என்க

அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

அதைக் கண்டுக் கொள்ளாதவன் "உங்க அக்காகூட பாரவா இல்ல ஒருத்தன் கூட சுத்தி ஒருத்தன் கூடயே ஓடி போயிட்டா ஆனா நீ?"என்று அவளை அருவெறுப்பாக பார்க்க

அவனின் கேள்வியில் செத்து போனவள் "ஏன் எப்போ பார்த்தாலும் என்ன தப்பவே நினைக்கறிங்க "என்று கெஞ்சலாக கேட்க

"தப்பா இருந்தா தப்பா தான் பார்ப்பாங்க நீ அப்படி தான அவங்க கூட சுத்திக்கிட்டு இருக்க "என்று அவளின் நட்பை தப்பாக பேச

இவளின் நட்பை பற்றி பேச அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணம் வர

"அது பார்க்கறவங்க பார்வையில் இருக்கு தப்பான பார்வையில் பார்த்த எல்லாம் தப்பா தான் தெரியும் "என்க

"அப்போ நா தப்பானவன் னு சொல்றியா?"என்று கோவமாக கேட்க

"அது எனக்கு தெரியாது "என்று அழுத்தமாக சொல்ல

அவளை சந்தேகமாக பார்த்தவன்

"நேத்து உன்னை பத்தி பேசினேன் அப்போ எதுவும் பேசாம அமைதியா இருந்த உங்க அப்பாவை பற்றி அக்காவ பத்தி பேசுவேன் அப்போவும் அமைதியா இருந்த ஆனா இப்போ அவனுங்களை பத்தி பேச போது மட்டும் இப்படி சண்டை போட்டுக்கிட்டு வர "என்று கேட்க

"ஏன்னா னா உங்க பொண்டாட்டி என்ன பத்தி பேசறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு என் அக்கா உங்களை காயப்படுத்திட்டு போயிருக்கா அதுனால அவளை திட்டுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு ஆனா என்னோட பிரன்ட்ஸ் பத்தி பேசறதுக்கோ இல்ல ஜட்ஜ் பண்றதுக்கோ உங்களுக்கு உரிமை இல்லை "என்று உறுதியாக சொல்ல

அவளின் உங்க மனைவி என்ற வார்த்தை அவனை ஏதோ செய்ய அதற்கு மேல் அவளிடம் அதை பற்றி பேசாமல் போய் படுத்துக் கொண்டான்.

அவன் அமைதியாக போவதில் ரோஷினியை பற்றி பேசியவுடன் அவளின் நியாபகம் வந்து தான் அமைதியாக செல்கிறான் என்று நினைத்து உள்ளுக்குள் காயப்பட்டு போனாள்.

எந்த மனைவிக்கு தான் அவளுடைய கணவன் மனதில் வேறொரு பெண் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும்.

அன்று இரவும் அவளுக்கு தூங்கா இரவு தான்.

இரவு முழுக்க அவருக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை என்னை பார்த்தாள் ஏன் எரிந்து விழுகிறார் என்று நினைத்துக் கொண்டும் தூங்கும் மகிழனை பார்த்துக் கொண்டும் இருந்தாள்.

அதன் பின் வந்த நாட்களிலும் மகிழன் சத்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்தான்.

முதலில் அவளை திட்டவாவது அவளுடன் பேசுபவன் இப்போது எல்லாம் வீட்டில் அப்படி ஒருத்தி இல்லாதது போலவே நடந்துக் கொண்டான்.

சத்யாவின் உங்க மனைவி என்ற வார்த்தை அவனை தொல்லை செய்ய அவளை பார்ப்பதை தவிர்த்து விட்டான்.

அவனின் திட்டை கூட வாங்கிக் கொள்ள முடிந்த சத்யாவால் அவனுடைய ஒதுக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை இதற்கு அவன் என்னை திட்டிக் கொண்டே இருந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வாள்.

அவனுடைய ஒதுக்கத்திற்கு அவளே ஒரு காரணம் கண்டுப்பிடித்து அதுவாக தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினாள்

அது அன்று இரவில் அவள் ரோஷினியை பற்றி பேசிய பிறகு தான் அவன் அவளை விட்டு ஒதுங்கி போக ஆரம்பித்தான் அதனால் அவளை நினைத்துக் கொண்டு தான் அவன் இவளை அவொய்ட் செய்கிறான் என எண்ணிக் கொண்டு அவளையே வருத்திக் கொண்டாள்.


நிமிர்வாள்…



சாரி நேத்து யூடி போட முடியல.. எனக்குள்ள எப்போவது தான் பொறுப்புகள் எல்லாம் எட்டிப் பார்க்கும் நேத்துனு பார்த்து பொறுப்பு எட்டி பார்த்து வீட்டை கிளீன் பண்ண ஆரம்பிச்சுட்டேன்

எங்க அம்மா எப்போ டா நேரம் கிடைக்கும்னு காத்துக் கிட்டு இருந்துருப்பாங்க போல இருக்கு நா வேலை செய்யறத பார்த்து இருக்குற எல்லா வேலையையும் என் தலையில கட்டிட்டாங்க சோ எனக்கு எழுத நேரம் கிடைக்கல இன்னைக்கு கூட வேலை இருக்கு அதுனால தான் சீக்கரம் டைப் பண்ணிட்டேன் ??
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 14




காலேஜில் சத்யா அமர்ந்து இருக்க அவளை சுற்றி நவீனும் நந்தினியும் அடித்துக் கொண்டு இருந்தார்கள் சரணும் பிரசன்னாவும் அவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டு இருக்க

இது எதுவும் சத்யாவின் கவனத்திற்கு வரவே இல்லை அவள் எண்ணம் எல்லாம் மகிழன் மட்டுமே நிறைந்து இருந்தான்

அவன் ஒவ்வொரு முறையும் அவளை தவிற்கும் போதும் உள்ளுக்குள் தவித்து போனாள்.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து பிரசன்னா அவள் அருகில் அமர

அவன் அமர்ந்தது கூட தெரியாமல் அவள் வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க

"என்ன ஆச்சு சத்யா கொஞ்ச நாளாவே நீ இப்படி தான் ஏதோ பறிகுடுத்த மாதிரி இருக்க ஆனா கேட்ட காரணம் சொல்ல மாட்டேங்கற இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொல்லு "என்று பிடிவாதமாக கேட்க

அவளுக்கே தெரியாத ஒன்றை அவள் எப்படி சொல்வாள்

அவன் இவளை அவொய்ட் செய்தாள் சந்தோஷம் தான் பட வேண்டும் ஆனா இவள் வருத்தம் அல்லவா கொள்கிறாள்

இதை இவர்களிடம் எப்படி சொல்வது அதுவும் இல்லாமல் என்னதான் பிரன்ட்ஸ் என்றாலும் கணவன் மனைவிகுள் நடப்பதை சொல்ல தோன்றவில்லை.

பிரசன்னா அவளையே பார்த்துக் கொண்டு இருக்க அவனின் கவனத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தவள்

"எனக்கு ஒன்னும் இல்ல நல்ல தான் இருக்கேன் உனக்கு என்ன ஆச்சு "என்க

அவளை புரியாமல் பார்த்தவன் "எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன் "என்றவனை

முறைத்து பார்த்தவள் "எப்போவும் நீயே அவொய்ட் பண்ணாலும் உன்ன சுத்தி வரும் ஆர்த்தி இப்போ எல்லாம் உன்ன பார்க்கறது கூட இல்ல அது ஏன்?"என்று கேட்க

அதில் திடுக்கிட்டு பார்த்தவன் "அவள் என்ன பார்க்கலான அதுக்கு நா என்ன பண்றது "என்று சத்யாவின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து சொல்ல

அதிலே அவன் தான் ஏதோ செய்து இருக்கான் என்று புரிந்துக் கொண்டவள்

"இருக்கும் போது எந்த பொருளோட மதிப்பும் நமக்கு தெரியாது அது கைய விட்டு போனதுக்கு அப்புறம் தான் தெரியும் அதே மாதிரி தான் நம்ம கூட இருக்கற உறவும் "என்று வானத்தை வெறித்து சொல்ல

அவள் சொல்ல வருவது புரிந்துக் கொண்டவன் ஆர்த்தியை முதலில் பார்த்தது முதல் நடந்ததை நினைத்து பார்த்தான்

ஆர்த்தியை அவள் காலேஜ் கேட் தாண்டி வரும் போதே பார்த்தவன்

"ப்பா செமயா இருக்க "என்று நினைத்துக் கொண்டவன் எல்லாரையும் போல சைட் அடித்துவிட்டு சென்று விட்டான்

பின்பு அவள் இவன் கிளாஸ்குள் வரும் போது "இவ நம்ம கிளாஸ் தான "என்று நினைத்தவன்

பின் எல்லாரையும் போல தான் அவளுடன் பழகினான்.

ஆனால் ஆர்த்திக்கு இவனை முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது அதை அவள் பார்வையை வைத்தே இவனுக்கு தெரிந்து விட்டது

இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவளை விட்டு விலகி நின்றான்.

நாளாக நாளாக ஆர்த்தி இவனை காதலிப்பது குறையாமல் அதிகம் தான் ஆனது.

முதலில் சத்யாவும் பிரசன்னாவும் பழகுவது பார்த்து அவர்கள் கிளாஸ் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று தவறாக பேச

ஆர்த்தி மட்டுமே இவர்களுக்கு இருந்தா உறவை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு துணையாக இருந்தாள்.

ஆர்த்தி பிரசன்னாவை பார்ப்பது எல்லாருக்கும் தெரிந்து இருவரையும் வைத்து கேலி செய்ய

ஆர்த்தி அதை ரசித்தாள் என்றாள்

பிரசன்னா அதை கண்டுக் கொள்ளால் கடந்து விடுவான்

கடந்த மூன்று வருடங்கள் ஆர்த்தி பிரசன்னாவையே பார்க்க

சத்யாவுக்கே பொறுமை போய் விட்டது எப்போது பிரசன்னா ஆர்த்தியை காதலிப்பான் என்று இருக்க

ஆர்த்தி பொறுமையாக அவனுக்கான நேரத்தை கொடுத்து விட்டு தள்ளி நின்று அவனை ரசித்தாள்.

இப்படியே நாட்கள் நகர சத்யாவின் திருமணம் விஷயம் அறிந்த அன்று தான் ஆர்த்தி பிரசன்னாவிடம் பேச

அவனோ அவள் பேச வந்ததுமே எதற்காக வந்து இருக்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன்

அவள் பேசும் முன் "ஆர்த்தி இனி என்ன பார்க்காத "என்க

இவ்ளோ அவனை புரியாமல் பார்க்க

"நா ஒரு பொண்ண லவ் பண்றேன் அவளும் enna லவ் பண்ற "என்க

அவன் சொன்னதில் அதிர்ந்து போய் பார்த்தவள் "பிரசன்னா நீ பொய் சொல்ற தான "என்று கண்களில் நீருடன் கேட்க

அதில் எரிச்சலடைந்தவன் "நா எதுக்கு பொய் சொல்லணும் "என்று காட்டமாக கேட்க

"அப்போ இவ்ளோ நாள் ஏன் சொல்லல?"என்று கேட்க

இவ்ளோ நாள் நீ என்கிட்ட இன்னைக்கு போல பேச வரல அதுனால நா சொல்லல "என்று கூலாக சொல்ல

அதை கேட்ட அவளுக்கு தான் அப்போ இவனுக்கு என் காதல் ஒன்னுமே இல்லையா என்று நினைத்துக் கொண்டு இருக்க

"நீ என்ன இப்படி பாக்கறது நா லவ் பண்ற பொண்ணுக்கு பிடிக்கல சோ பார்க்காத "என்று அவள் மனதை கொள்ள

"அடுத்தவங்க பொருளை நா பார்க்க மாட்டேன் சாரி எல்லாத்துக்கும் இனி பார்க்க மாட்டேன் உங்க லவர் கிட்ட சொல்லிடுங்க "என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அவள் போவதை பெருமூச்சுடன் பார்த்தவன் பின் அவனும் சென்று விட்டான்

அன்றில் இருந்து பிரசன்னா இருக்கும் பக்கம் ஆர்த்தியின் பார்வை திரும்பவில்லை அது கிளாஸ் முழுக்க தெரிந்தது.

முதலில் அவளை கண்டுக் கொள்ளாமல் இருந்தவன் பின் அவன் மனது வெறுமையாக இருந்தது தினமும் எதையோ எதிர்ப்பார்த்து பின் ஏமாற்றம் அடைந்தது.

இன்று சத்யா ஆர்த்தியை பற்றி பேசவும் கிளாஸ் நடக்கும் போது பிரசன்னாவின் பார்வை அடிக்கடி ஆர்த்தியின் பக்கம் பார்க்க ஆனால் அவளோ அவன் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பமால் நோட்ஸ் எடுத்துக் கொண்டு இருந்தாள் அதை பார்த்த அவன் ஏமாற்றதுடன் திரும்பிக் கொண்டான்.

பிரசன்னா ஆர்த்தியை பார்ப்பதை நவீனும் சரணும் பார்த்து அவர்களுக்கு சிரித்துக் கொண்டனர்.

கிளாஸ் முடிந்து வெளியே செல்ல

பிரன்ட்ஸ் கூட வந்தாலும் பிரசன்னா ஆர்த்தியை ஓரக் கண்ணால் பார்க்க அவ்ளோ சின்சியராக சத்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

பிரசன்னா பார்ப்பதை சரண் நந்தினியிடம் காட்ட

அதை பார்த்தவள் சத்யாவின் கைய சுரண்ட

ஆர்த்தியுடன் பேசிக் கொண்டு இருந்த சத்யா நந்தினி கையை சுரண்டவும் "என்ன டி?"என்க

அவள் காதருகில் மெதுவாக "சுட்டுனு திரும்பி பார்த்துராத மெதுவா பாரு பிரசன்னா ஆர்த்தியையே பார்த்துக் கிட்டு இருக்கான் "என்க

அதை கேட்ட சத்யா ஆர்த்தியை பார்த்து சிரித்து விட்டு மெதுவாக பிரசன்னா இருக்கும் பக்கம் பார்க்க

அங்கே யார் பார்ப்பதையும் கண்டுக் கொள்ளாமல் பிரசன்னா ஆர்த்தியையே பார்க்க அதில் சிரித்து விட்டாள்

சத்யா சிரிப்பதை பார்த்த ஆர்த்து "என்ன?"என்க

ஒன்னும் இல்ல நந்தினி ஒரு ஜோக் சொன்னா "என்று சமாளித்து விட்டு நடந்தாள்.

ஆர்த்தி பிரசன்னாவை பார்க்காமல் இருக்க அப்போது தான் அவனுக்கு புரிந்தது அவனும் மூன்று வருடங்களாக இப்படி தானே ஆர்த்தியின் பார்வையை கண்டுக் கொள்ளாமல் இருந்தான் அப்போது எல்லாம் இவனுக்கு வலிக்கின்ற மாதிரி தானே அவளுக்கும் வலித்திருக்கும் என்று நினைத்து அவளை பார்க்க

அவளோ கேட் தாண்டி சென்று விட்டாள்

அவள் உருவம் கண் விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டு இருக்க

அவன் அருகில் வந்த சரண் "அங்கே என்ன தெரிகிறது?"என்று கேட்க

சரணின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்

அருகில் இருந்தவனை பார்த்து "ஒன்னும் தெரியலையே சும்மா பார்த்தேன் "என்று மளுப்ப

"ஒன்னும் தெரியாததை தான் அரைமணி நேரமா பார்த்துக் கிட்டு இருந்தியா "என்று கேலி செய்ய

அப்போது தான் அருகில் இருந்தா நால்வரின் முகத்தையும் பார்த்தான் அதில் கேலி சிரிப்பு இருக்க அதை வைத்தே இவர்கள் பார்த்து விட்டார்கள் என்று புரிந்துக் கொண்டவன் "அதுவா நம்ம கிளாஸ் பையன் மாதிரி ஒருத்தன் போனான் அது தான் பார்த்துக் கிட்டு இருக்கேன் "என்க

அவன் சொல்வதை கேட்ட நவீன் "கிழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல அப்படி தான "என்க

அவன் தலையில் அடித்தவன் வாய மூடிக்கிட்டு வாடா என்று இழுத்து செல்ல

அதை பார்த்து சிரித்துக் கொண்டு அவர்கள் பின் சென்றனர்.

வீட்டுக்கு வந்தவளை அவசர அவசரமாக டிரஸ் பேக் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தா மல்லிகா "வா சத்யா "என்க

எடுத்து வைத்து இருக்கும் பேகை பார்த்து "எங்க அத்தை இவ்ளோ அவசரமா கிளப்பிறீங்க? "என்று கேட்க

சரியாக எல்லாம் எடுத்து வைத்து இருக்கோமா என்று பார்த்துக் கொண்டே "நாங்க மட்டும் இல்லை எல்லாரும் தான் கிளம்பறோம் "என்க

அவரை யோசனையுடன் பார்த்தவள் "எங்க அத்தை "என்க

அவளை முறைத்து பார்த்தவர் "அடிப்பாவி என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்க போ போய் எல்லாம் எடுத்து வை போகும் போது சொல்றேன் "என்க

"அய்ய ரொம்ப தான் பண்றிங்க "என்று மடி ஏறியவள்

பின் தயங்கிக் கொண்டே "அத்தை என் டிரஸ் மட்டும் எடுத்து வைக்கறதா இல்ல அவருதும் எடுத்து வைக்கட்டுமா?" என கேட்க

அது மேல போய் பாரு தெரியும் என சொல்லிவிட்டு மத்ததை எடுக்க செல்ல

யோசனையுடன் சென்றவளை வரவேற்றது டிரஸ் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தா மகிழன் தான்.

அவனுடைய டிரஸ் எடுத்து வைப்பதை பார்த்தவள் "அவங்களும் வாரங்க "என்று எண்ணி

அவளுடைய டிரஸ் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் போது தான் "எத்தன நாளைக்கு டிரஸ் எடுத்து வைக்கணும்னு அத்தை சொல்லலையே "என்று வாய்விட்டு சொல்லியவள்

அருகில் இருந்த மகிழனிடன் "என்னங்க எத்தன நாளைக்கு எடுத்து வைக்கணும்? "என கேட்க

அவனோ அவள் கேட்பதை காதில் வாங்காமல் இருக்க

அதை பார்த்தவள் "ரொம்ப தான் ஒன்னா பேசியே கொல்றாரு இல்லனா பேசாம கொல்றாரு "என புலம்பி விட்டு மல்லிகாவிடம் செல்ல

அவள் போவதை பார்த்தவன் பின் மொபைல் பார்த்துக் கொண்டு இருக்க

மேலே வந்தவள் ஒரு வாரத்துக்கு தேவையான டிரஸ் எடுத்து வைத்து கொண்டாள்.

பின் நேரம் ஆக அனைவரும் காரில் ஏற மல்லிகாவின் சொந்த ஊரான ஏற்காட் சென்றனர்.

மகிழன் கார் ஓட்ட சத்யா அவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

அடிக்கடி வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கும் மகிழனை பார்த்துக் கொண்டு இருக்க அவனோ பாதையில் மட்டுமே கவனமாக இருந்தான்.

அதை பார்த்த சத்யா "இப்படியே வாழ்க்கை போயிருமோ "என்று நினைத்து பாதையை இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


இப்படி தனி தனியாக செல்பவர்கள் திரும்பி வரும் போது ஒன்றாக வருவார்கள் என்று சத்யாவிடம் சொல்லி சொல்லி இருந்தாள் விரக்தியாக சிரித்திருப்பாள்.



நிமிர்வாள்...
 
Status
Not open for further replies.
Top