ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 25



சத்யா வண்டியை எடுத்துக் கொண்டு ஸ்கூல்குள் செல்ல அவளை பார்த்த மாணவர்கள் காலை வணக்கம் சொல்ல

அதற்கு புன்னகைத்துக் கொண்டே அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டவள்

நேராக அவளின் இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…

சத்யா ஐந்தாம் ஆறாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறாள் அது அவளுக்கு அவ்ளோ கஷ்டமாக இல்லாமல் ஜாலியாக தான் இருந்தது…

அன்று நான்கு கிளாஸ்க்கு சென்று பாடம் எடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்துதாள்..

வீட்டுக்கு வந்ததில் இருந்து அம்மாவும் பொண்ணும் ரொம்ப பிஸி ஆகிவிட்டனர்..

ஷிருஷ்டிக்கு ஈவினிங் எப்போதும் பக்கத்தில் இருக்கும் பார்க் செல்ல வேண்டும்..

சத்யா வந்தவுடன் பிரெஷ் ஆகி விட்டு ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு பார்க் செல்ல

எப்போதும் அவர்கள் பார்க் வருவதால் ஷிருஷ்டிக்கென்று தனியா ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டு இருந்தது…

மகிழன் சத்யாவின் மகள் இருவரையும் கொண்டு பிறந்து இருக்க பார்ப்பதற்கே பார்பி டால் போல இருப்பாள்…

பார்க் வந்தவுடன் ஷிருஷ்டியை அவளின் ரசிகர் பட்டாளம் தூக்கி செல்ல

இது எப்போதும் நடப்பது தானே என்று மகள் நன்றாக தெரியும் இடத்தில் அமர்ந்துக் கொண்டாள்…

சத்யாவை தெரிந்தவர்கள் அவளை பார்த்து சிரிக்க பதிலுக்கு இவளும் புன்னகைத்துவிட்டு

மகள் மேல் கவனத்தை வைத்தாள்..

அவளை பார்க்கும் போது எல்லாம் சத்யாவுக்கு மகிழனின் நியாபகம் அதிகமாக வரும்

இப்போதே மகிழனை போலவே சின்ன சின்ன செயல்களை செய்வாள் அவளின் பெண்…

மகிழனை நினைத்தவள் "இப்போ என்ன பண்ணிகிட்டு இருப்பாங்க எங்களை நினைச்சு பார்ப்பங்களா "என்று நினைத்தவள் பின்

"அவங்க ஏன் எங்களை நினைக்க போறாங்க அவங்களுக்கு தான் குடும்பம் இருக்குமே "என்று நினைத்து வேதனை பட்டவள் பின் நேரமாவதை உணர்ந்து ஷிருஷ்டியை தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்துதாள்..

இவர்கள் இருவரும் வருவதற்குள் செல்வி சமையலை முடித்து விட

அவரை முறைத்து பார்த்தவள் "நா வந்து சமையல் பண்ணுவேன்ல அப்புறம் ஏன் மா? "என்க

"இதுல எனக்கு என்ன கஷ்டம் சின்ன வேலை "என்று அவளை சமாளிக்க

"உன்னை திருத்தவே முடியாது "என்று சொல்லி மகளிடம் பார்வையை திருப்ப

அவளோ அங்கு இருந்த பொம்மைகளை எல்லாம் கீழே எடுத்து போட்டு விளையாடிக் கொண்டு இருந்தாள்

அவளின் கன்னத்தில் முத்தமிட்ட சத்யா "சமத்து "என்று கொஞ்ச

அதுவும் பதிலுக்கு அவனை கொஞ்சுயது…

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் ஸ்கூல்க்கு செல்ல வேண்டியது இல்லை என்ற எண்ணத்துடன் மகளின் அருகில் படுத்துக் கொண்டு இருந்தவளுக்கு மனம் ஏதோ போல் இருக்க

"என்ன ஆச்சு இன்னைக்கு ஏதோ போல இருக்கு " என்று எண்ணி

அந்த நினைப்பை ஓரம்கட்டிவிட்டு ஆதியின் வீட்டுக்கு செல்ல ரெடி ஆனாள்…

இது எப்போதும் நடப்பது தான் லீவ் என்றால் ஆதியின் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவன் கண்டிப்பாக சொன்னது

சஷ்டிக்கு ஆதியின் வீட்டுக்கு செல்வது என்றால் அவ்வளவு பிரியம்

அங்கே சென்றால் அத்தனை பேரையும் ஒரு வழி செய்து விடுவாள்…

எழுந்த சஷ்டியை ரெடி செய்து அவளும் ரெடி ஆகி செல்வி வரவில்லை என்று சொல்லியதால் இருவர் மட்டும் ஆதியின் வீட்டுக்கு சென்றனர்…

ஆதியின் வீட்டின் முன் சத்யா வண்டியை நிறுத்தவும் சஷ்டி சத்தம் போடவும் சரியாக இருந்தது …..

சஷ்டியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஜனனி "யாரு என் செல்லம் வந்துட்டாங்களா? "என்று கேட்டுக் கொண்டே வர

அதற்கு கைகால் கட்டி சத்தமிட அவளை தூக்கி கொஞ்சிய ஜனனி

"இப்போ தான் அத்தைய பார்க்க நேரம் வந்துச்சா "என்று கேட்டுவிட்டு

சத்யாவை பார்த்து "உள்ள வா "என்று சொல்லி முன் செல்ல

இருவரையும் பார்த்து சிரித்து விட்டு பின் சென்றாள்..

அதன் பின் வந்த நேரம் எல்லாம் சஷ்டி க்கு உரியது…

ஆதியின் மடியில் அமர்ந்துக் கொண்டு ஜனனியிடம் சண்டை போட்டு மதுவோட சேர்த்து கத்தி கேசவ்வை போட்டு அடித்து என்று ஜாலியாக சென்றது…

சஷ்டியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்யா…

அங்கே மகிழனோ அவர் அப்பா ஆசைப்பட்ட மாதிரி எங்காவது நிலம் வாங்கி அதில் நெல் நட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதை பற்றி விசாரித்தவனுக்கு முதலில் தோன்றியது ஆதி தான்…

மகிழனோடு படித்தவர்களில் ஆதி தான் விவசாயம் செய்வது அது அவனுக்கு பிடித்தது கூட…

உடனே மகிழனுக்கு ஆதியின் ஊரில் நிலம் வாங்கினால் அதை ஆதி விவசாயம் செய்வான் அப்பாவின் ஆசையும் நிறைவேறும் என்று நினைத்து

ஆதியிடம் இதை பற்றி பேச

மகிழன் ஊருக்கு வருவதை பற்றி சொன்னவுடன் ஆதிக்கு தோன்றியது எல்லாம் ஒன்று தான்

மகிழன் சத்யாவை பார்த்துவிட்டால் போது அதன் பின் மகிழனே பார்த்துக் கொள்வான் என்று எண்ணி அவனை இன்று வர சொல்லி இருந்தான் …

மகிழனுக்கும் எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்ற பொள்ளாச்சி கிளம்பி விட்டான்…

ஆதி மகிழனை பற்றி விசாரித்ததில் அவன் இன்னும் சத்யாவை நினைத்து தேடிக் கொண்டு இருப்பது தெரிந்து தான் ஆதி மகிழனை வர சொன்னது

மகிழனை பற்றி ஆதி சத்யாவிடம் சொல்லி இருந்தாலும் அவள் கேட்பாள என்று தெரியாமல் முழித்தவன் பின் புருஷன் பொண்டாட்டி என்னமோ பண்ணிக்கட்டும் என்று எண்ணி வீட்டுக்கே வர சொல்லி இருந்தான் இன்று சத்யா வருவாள் என்று தெரிந்து….

சஷ்டி உடன் நேரம் போனது தெரியாமல் இருக்க அப்போது மகிழன் போன் செய்யவும்

வெளியே சென்றவன் மகிழனுக்கு வீட்டுக்கு வரும் அட்ரஸ் சொல்லி விட்டு உள்ளே வர

ஜனனி அவனை பார்த்து கண்ணலயே "என்ன ஆச்சு? "என்று கேட்க

ஆதியும் அதை புரிந்துக் கொண்டு இமை மூடி திறந்தவன் "நல்லபடியா நடக்கும் "என்று சைகை செய்தான்

அதை பார்த்த சத்யா "என்ன ரொமான்ஸ் ஆ"என்று கிண்டல் செய்ய

அவளை பார்த்து சிரித்துவிட்டு சென்றனர்….

சிறிது நேரத்தில் மகிழன் ஆதியின் வீட்டுக்கு வர
 

aadrika

Well-known member
Wonderland writer
அவன் கார் சத்தம் கேட்டு ஆதியும் ஜனனியும் வெளியில் செல்ல

சத்யாவுக்கோ இனம் புரியாத உணர்வு தோன்ற சமையல் அறைக்கு சென்றாள்…

உள்ளே சென்றவள் தண்ணி குடித்து தன்னை சரி செய்துக் கொண்டவள் "என்ன ஆச்சு எனக்கு ஏதோ மாதிரி இருக்கே "என்று நினைத்துக் கொள்ள

வீட்டுக்கு வந்த மகிழனை ஆதியும் ஜனனியும் வரவேற்று உள்ளே அழைத்து செல்ல

மகிழனை எல்லாரும் நலம் விசாரிக்க அவனும் பதிலுக்கு நலம் விசாரித்தவின் கண்கள்

ஆதிக்கு பின் இருந்துக் கொண்டு அவனை எட்டி எட்டி பார்த்து விட்டு பின் ஒளிந்துக் கொள்ளும் அந்த சின்ன உருவத்தை பார்த்தவனுக்கு ஸ்வரசியமாக இருக்க

அதையே பார்த்துக் கொண்டி இருந்தான்….

அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து சஷ்டி ஜனனி பின் சென்று ஒளிந்துக் கொள்ள

அதை பார்த்த மகிழனுக்கு சிரிப்பும் கூடவே அந்த குழந்தையின் மீது சொல்ல முடியாத உணர்வு வர

ஆதியிடம் "உன் குழந்தை யா?"என்று கேட்க

அதை மறுத்தவன் "என் தங்கச்சி பொண்ணு "என்று சொல்ல

அதை கேட்டுக் கொண்டவன் சரி என்னும் விதமாக தலையசைத்து விட்டு குழந்தையின் மீது கவனத்தை வைத்தான்…

ஆதி ஜனனியிடம் கண் காட்ட அதை புரிந்துக் கொண்டவள் "சத்யா தண்ணி எடுத்துட்டு வா "என்று சத்தமாக அழைக்க

அதை கேட்ட சத்யா "என்ன ஜனனி என்னை எடுத்துட்டு வர சொல்ற எப்போவும் இந்த மாதிரி பண்ண மாட்டாளே "என்று நினைத்து தண்ணி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு செல்ல

ஜனனி சத்யா என்று அழைத்த உடன் சட்ரென்று திரும்பி ஆவலாக பார்த்தவன் பின் "அவ எப்படி இங்க வர முடியும் அவளுக்கு தான் ஆதிய தெரியாதே அவ பெயரை கேட்டவே எல்லாத்தையும் மறந்துருவேன் "என்று நினைத்து அமைதியாக இருந்துக் கொண்டான்…

ஜனனி சத்யா என்று அழைத்தவுடன் மகிழனின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து ஆதி சிரித்துக் கொண்டான்…

சரியாக அந்த நேரம் சத்யா தண்ணி கொண்டு வந்து மகிழன் முன் நீட்ட

அவள் முகத்தை பார்க்காமல் மகிழன் எடுத்துக் கொள்ள

ஹாலிற்குள் வரும் போதே சத்யா யாரின் முகத்தையும் பார்க்காமல் வந்ததால் அவளும் மகிழனை பார்க்க வில்லை…

இவர்கள் இருவரையும் பார்த்த ஜனனி "இப்படியே இருந்தா ரெண்டு பேரும் பார்த்துக்கவே மாட்டாங்க போல இருக்கு "என்று எண்ணி

"அண்ணா இது சத்யா "என்று அறிமுகம் செய்ய

பார்த்தே ஆகவேண்டும் என்று மகிழன் நிமிர்ந்து பார்க்க

சரியாக அந்த நேரம் சத்யாவும் பார்க்க

மகிழனை பார்த்த சத்யாவுக்கு அதிர்ச்சி என்றால்

மகிழனுக்கோ இத்தனை நாள் தேடிய பொக்கிஷம் இன்று கிடைத்துவிட்டது என்று ஆனந்தமாக பார்த்தான்

கண்கள் கூட லேசாக கலங்கியது போல் இருந்தது….

மகிழனை பார்க்காத வரைக்கும் அவன் மேல் இருந்தா கோவம் அவனை பார்த்த பின் சத்யாவுக்கு இல்லாமல் போனது

அவனின் உருவதை பார்த்தவள் "இளைச்சு போயிட்டாங்க சரியா சாப்பிடறது இல்லையா "என்று நினைத்து அவனையே பார்க்க

சத்யாவை பார்த்து மகிழன் ஏதோ சொல்ல வர

சரியாக andha நேரம் ஷிருஷ்டிகா "மா "என்று சொல்லி சத்யாவின் சேலையை பிடித்து இழுக்க

அதுவரை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்த மகிழனின் கண்கள் ஷிருஷ்டியை பார்க்க

அவனுக்கோ என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் நின்றான்…

இவ்வளவு நாட்களாக சத்யாவை தேடிக் கொண்டும் நினைத்துக் கொண்டு இருக்கும் போது சத்தியமாக அவன் குழந்தையை பற்றி நினைக்கவே இல்லை அவன் மனம் சத்யாவை பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டு இருந்தது…

இன்று ஷிருஷ்டியை பார்த்தவன் முகத்தில் தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது…

இதுவரைக்கும் கணவன் என்ற அடிப்படையில் சத்யாவை பார்த்துக் கொண்டு இருந்தவன் தந்தை என்ற இடத்தில் இருந்து சத்யாவை கொலைவெறியுடன் முறைத்து பார்த்தான்…

ஷிருஷ்டியை நோக்கி மகிழன் மண்டி இட்டு கை நீட்ட

அதுவோ அவன் ஏதோ செய்ய வருகிறான் என்று நினைத்து பயந்து அவள் பின் ஒளிந்துக் கொள்ள

அதை பார்த்த மகிழனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை

அவனுக்கும் புரிகிறது தான் அவள் மகளுக்கு அவன் புதியவன் தானே என்று ஆனால் தந்தையின் மனம் மகளின் செயலில் அடித்துக் கொண்டது இத்தனைக்கும் காரணம் சத்யா அவளால் தானே அவன் மகளே அவனை பார்த்து பயந்து போகிறாள் என்று தோன்ற அவளை முறைத்து பார்த்தவன் பின் அவள் முகத்தை பார்க்க பிடிக்காமல் திரும்பிக் கொள்ள

மகிழனின் முகத்தைல் தோன்றிய வருத்தத்தை பார்த்தவள் "தப்பு பண்ணிட்டானோ அவங்க கிட்ட இவளை காட்டிஇருக்கனும் இப்போ எவ்ளோ வருத்தப்படறாங்க "என்று நினைத்தவள் அவன் முகத்தை திரும்பவும் வேதனையாக இருந்தது

மகிழனின் செயலை பார்த்த ஜனனிக்கு அவன் உணர்வுகள் புரிந்து

சஷ்டியின் அருகில் அமர்ந்து "செல்லம் அது உன்னோட அப்பா உன்ன பார்க்க வந்து இருகாங்க போ "என்று சொல்ல

ஜனனியை பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் என்ன நினைத்தாளோ

மகிழன் அருகில் சென்று "பா "என்று சொல்லி அவளை தூக்குமாறு கை நீட்ட

மகளின் "பா "என்ற வார்த்தையை கேட்டவனுக்கு ஏதோ உலகத்தை வென்றது போல இருக்க

வேகமாக திரும்பி அவளை கையில் ஏந்திக் கொள்ள

அந்த நிமிடம் தான் அவன் பிறந்த பலனை அடைந்தது போல் இருந்தது…

அவனையே பார்த்துக் கொண்டு இருந்த மகளின் முகத்தை முதல் முத்தம் கொடுக்க

அவன் உடல் சிலிர்த்து போனது

இவன் முத்தம் கொடுத்தவிடன் கிளுக்கு என்று சிரித்து அதுவும் முத்தம் கொடுக்க

"இது போதும் இந்த வாழ்க்கை முழுக்க "என்று தோன்றியது…


"விந்தை என்று கையில் வந்தாயே என் மனம் குளிர

தந்தை என்று பட்டம் தந்தாயே, நான் தலை நிமிர! தலை நிமிர..


குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா

குறும்பா என் உலகே நீதான் டா குறும்பா என் உயிரே நீதான் டா"


சஷ்டி மகிழனை "பா "என்று அழைத்தது

மகிழன் முகத்தில் வந்த ஆனந்தத்தையும் அவளை முத்தமிடும் போது அவன் முகத்தில் வந்த உணர்வுகளை பார்த்துக் கொண்டு irundha

சத்யாவுக்கு கண் கலங்கியது அவனுக்கு தன் நியாயம் செய்யவில்லை என்று தோன்றியது…

மற்றவர்கள் மகிழனையும் சஷ்டியையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்…

சிறிது நேரத்தில் அப்பாவும் மகளும் நிகழ்உலகத்திற்கு வர

சுற்றி இருந்தவர்களை பார்த்து சிரித்தவன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த சத்யாவை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்…

பின் நியாபகம் வந்தவன் போல ஆதியை பார்த்து" இவங்க இங்க எப்படி வந்தாங்க உன்னை எப்படி தெரியும் "என்று குழப்பமாக கேட்க

ஆதி நடந்ததையும் சத்யா அவன் தங்கை போலவும் என்று சொல்ல

ஆதியை மகிழன் முறைத்து பார்த்து "உனக்கு கூட சொல்ல தோணலை தான அங்க நா எப்படி பைத்தியம் மாதிரி சுத்துனா உங்களுக்கு என்ன அப்படினு இருந்துட்ட தான "என்று வேதனையாக சொல்ல

அதை கேட்ட ஆதி "அப்படி இல்ல டா "என்று சொல்ல வர

அவனை தடுத்தவன் "என்னோட இடத்துல நீ இருந்து உன்னோட இடத்தில இருந்தா நா இப்படி பண்ணி இருந்தா நீ தாங்கி இருப்பியா?"என்று கேள்வி கேட்க

ஆதிக்கு அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போனது மகிழன் இடத்தில் அவன் இருந்து இருந்தால் இந்த நேரம் மகிழனிடம் பேசிக் கொண்டா இருந்து இருப்பான்..

மகிழன் ஆதியை கேள்வி கேட்பதை பார்த்து "அண்ணனை எதுவும் சொல்லாதீங்க நா தான் ரொம்ப pidivadhamaaga சொல்லக் கூடாதுனு சொல்லிட்டேன் அண்ணா நிறைய டைம் உங்ககிட்ட சொல்லிறலாம்னு தான் சொன்னாங்க "என்று சத்யா விளக்கம் குடுக்க

அவளை பார்க்கதவன் "என் நண்பன் கிட்ட நா கேள்வி கேட்கிறேன் அதை தடுக்க யாரும் உரிமை இல்ல அவன் மனைவிக்கு கூட உரிமை இல்லை "என்று சொல்லிவிட்டு ஜனனியின் முகம் பார்க்க

அவளோ சிரித்துக் கொண்டு இருந்தாள் அவளுக்கு தான் தெரியுமே இவளுக்கு கேசவ்வும் சண்டை போடும் போது ஆதி அவர்களுக்கு நடுவில் வந்தால் பிடிக்காது

அப்படி இருக்கும் போது இவர்கள் நடுவில் செல்வாள


மகிழன் சொன்னதை கேட்டு சத்யாவுக்கு கஷ்டமாக இருந்தது

அவனின் பட்டும் படாமல் பேசும் பேச்சில்….

சிறிது நேரத்திற்கு பின் மகிழன் ஆதியின் கை பிடித்து "தேங்க்ஸ் இப்போ நீ என்ன இங்க வர சொல்லலான எனக்கு எதுவுமே தெரிஞ்சு இருக்காது "என்று அவன் தோளில் சாய்ந்து இருக்கும் மகளை வருடிவிட்டான்…

மகிழனை பார்த்து சிரித்தவன் "நீ சந்தோசமாக இருந்தா அது போதும் அதே மாதிரி சத்யாவும் பாவம் "என்று அவளுக்காக பேச

அதற்கு சிரித்து மட்டும் வைத்தான்…

சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தவர்கள் பின் மகிழன் தான் "சரி டா நாங்க கிளம்பறோம் "என்று சொல்ல

அப்போது தான் சத்யாவிற்கு அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்ற எண்ணம் வர

அண்ணா பாப்பாவை குடுக்க சொல்லுங்க அவங்களை மட்டும் போக சொல்லுங்க நாங்க வர மாட்டோம் "என்று எங்கோ பார்த்து சொல்ல

அதை கேட்ட மகிழனுக்கு அளவில்லாமல் கோவம் வந்தது "இனியும் என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறாள "என்று

அவனின் முகத்தை பார்த்தே அவன் கோவமாக இருக்கிறான் என்று தெரிந்த ஜனனி "சத்யா என்ன பேசற?"என்க

"இல்ல ஜனனி அவங்களுக்கு நாங்க வேண்டாம் "என்க

"அதை நா சொல்லணும் எனக்கு என்னோட பொண்ணு வேணும் "என்க

அதை கேட்டவள் அப்போ நா வேணாமா "என்று நினைத்து கலங்கியவள் பின் மனசை தேத்திக் கொண்டு

"வேணாம் அவருக்கு அங்க ஒரு குடும்பம் இருக்கு இப்போ எங்களை கூட்டிட்டு போன தேவை இல்லாமல் சண்டை வரும் "என்க

அவள் சொல்லுவதை கேட்ட மகிழனுக்கு ஒன்னும் புரியவில்லை என்ன குடும்பம் என்று புரியாமல் பார்க்க

ஆதியோ "போச்சு ஏற்கனவே அவன் கோவமா இருக்கான் சத்யா பேசியே இன்னும் கோவப்படுத்துவா போல இருக்கே "என்று நினைத்து

"சத்யா நீ நினைக்கறது போல ஒன்னும் இல்லை "என்று சொல்ல

மகிழனோ "என்ன குடும்பம்?"என்று கேட்க

சொல்லாதே என்று ஜனனியும் ஆதியும் சைகை செய்வதை கவனிக்காமல் "ரோஷினிக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகிருச்சு தானே இப்போ நாங்க வந்த தேவை இல்லாம உங்களுக்குள் சண்டை வரும் "என்று சொல்லிவிட

"போச்சு டா "என்று ஜனனி தலையில் அடித்துக் கொள்ள

ஏற்கனவே அவள் மீது கோவமாக இருந்தவன் இப்போது நா கல்யாணமே பண்ணிட்டேன்னு நினைச்சுட்டாள அவ்ளோ சீப்வாக என்னை பத்தி நினைச்சுகிட்டு இருக்க "என்று ருத்ரமூர்த்தியாக மாற

"என்ன பார்த்த எப்படி தெரிந்து உனக்கு பொண்டாட்டி போனவுடனே அடுத்த பொண்ணை பார்த்து பல்லை காட்டிகிட்டு போறவன் மாதிரி இருக்க நா ராமன் டி என் பொண்டாட்டியை தவிர வேற பொண்ணை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் அப்படி கல்யாணம் பண்ணனும்னா நீ பண்ணிக்கோ "என்று கத்த

இவன் சத்தத்தில் அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருக்கும் சஷ்டி லேசாக அசைய

உடனே "ஒன்னும் இல்ல டா தூங்கு தூங்கு அப்பா சத்தமா பேச மாட்டேன் "என்று சொல்லி தட்டிக் கொடுக்க

இவன் தான் கொஞ்ச நேரம் முன் அப்படி பேசியவனா என்பது போல் பார்த்தனர்..

சத்யாவோ மகிழன் சொன்ன "நா ராமன் டி பொண்டாட்டியை தவிர வேற பொண்ணை பார்க்க மாட்டேன் "என்பதை கேட்டு ஆனந்தம் அடைந்தவள் பின் "நீ வேணும்னா கல்யாணம் பண்ணிக்கோ "என்ற சொல்லை கேட்டு வேதனை அடிந்தவள் என்ன பத்தி என்ன நினைச்சுக் கிட்டு இருகாங்க என்று ஏதோ பேச வர

அவளின் கையை பிடித்து அழைத்து சென்ற ஜனனி "அவள் இங்க வந்த பின் மகிழன் அவளை தேடி கஷ்டப்பட்டதை எல்லாம் சொல்லி "

நீ தான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்ட சத்யா "என்க

மகிழன் அவளுக்காக பைத்தியம் போல் சுத்தியதை கேட்டவள் "நா தான் தப்பு பண்ணிட்டேன் "என்று சொல்லி வேகமாக சென்று மகிழனை பார்க்க

அவனோ அவள் முகத்தை பார்க்க பிடிக்காமல் நின்றுக் கொண்டு இருந்தான்…

அதில் வருத்தப்பட்டவள் "தப்பு என்மேல தான "என்று நினைத்து

ஆதியிடம் "அண்ணா நாங்க அவங்க கூடவே போறோம் வீட்ல இருந்து அம்மாவை கூட்டிகிட்டு போகனும் "என்க

அவனோ அவள் சொலவதை கட்டிலை கேட்டுக் கொண்டு இருந்தாவன் "கார் ல வர சொல்லு டா "என்று சொல்லிவிட்டு எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப

அவன் தோளில் சாய்ந்து இருந்தா சஷ்டியை கொஞ்சி விடைப்பெற

மகிழன் காரில் சென்று அமர்ந்துக் கொண்டான்

ஜனனி சத்யாவின் கை பிடித்து "பார்த்து போயிட்டு வா "என்க

அவளை அணைத்துக் கொண்டவள் ஆதியிடம் சென்று அணைத்துக் கொண்டு "போயிட்டு வரேன் அண்ணா "என்க

அவளின் தலையை வருடி விட்டவன் "உனக்காக எப்போவுமே இந்த அண்ணன் இருப்பேன் டா "என்க

அவனின் பாசத்தில் கண்கலங்கியவள் விடைபெற்று காரில் அமர்ந்துக் கொள்ள

அவர்களின் கார் நகர அதை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது "இனி சத்யாவை மகிழன் பார்த்துக் கொள்வான் "என்று…

சத்யா வழி சொல்ல மகிழன் ரோட்டை பார்த்து ஓட்ட

சத்யா அடிக்கடி மகிழனின் முகத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்…

வீட்டுக்கு முன் காரை நிறுத்த

வண்டி சத்தம் கேட்டு செல்வி "நம்ம வீட்டுக்கு கார் எப்படி வரும் ஒருவேளை ஆதி வந்து இருக்கனோ " என்று வெளியில் வந்து பார்த்தவர் மகிழனை எதிர்ப்பார்க்க வில்லை என்று அவர் முகமே சொன்னது…

மகிழன் செல்வியின் மீதும் கோவமாக இருந்தான் "அவளுக்கு தான் அறிவில்லை இவங்களாவது அவளுக்கு புத்தி மதி சொல்லி இருக்கனும் தான "என்று

செல்வியின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்ற சத்யா நடந்ததை செல்வியிடன் சொல்ல

அவருக்கோ "தப்பே செய்யாத மாப்பிள்ளைக்கு தன் மகள் தண்டனை கொடுத்து விட்டாளே நானாவது இவளை கண்டித்து இருக்கணுமோ "என்று குற்றஉணர்ச்சிக்கு ஆள் ஆனார்…

பின் செல்வி வர வில்லையோ இங்கயே இருந்து கொள்கிறேன் என்று சொன்னவரை சத்யா கட்டாயப்படுத்தி அழைக்க மகிழனோ ஒரு வார்த்தையில் அவரை கூட வருமாறு சொல்ல

மாப்பிள்ளையின் வார்த்தையை மீற முடியாமல் அவர்களுடன் செல்ல

வண்டி சென்னையை நோக்கி சென்றது…

பொள்ளாச்சிக்கு வரும் போது உயிரற்று வந்தவன் திரும்பி போகும் போது அவனின் இரு உயிர்களையும் கூட்டிக் கொண்டு சென்றான்….


ஷிருஷ்டிகாவோட இன்னொரு பேர் தான் சஷ்டி வீட்ல சஷ்டினு தான் கூப்டுவாங்க



நிமிர்வாள்….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 26


" என் சுவாசம் நீதானே

காற்றெங்கும் தேடினேன்

கல்லறை செல்லும் முன்னே

என்னை சேர்வாயே


சகியே சகியே

உன் முத்தத்தின் ஈரம்

இன்னும் காயதே

என்னை வெறுக்கும்

உன் இதயத்தில் ஈரம் இல்லவே இல்லை

ம்ம்..ம்ம்.


தனிமை என்னை எரிக்குதே

உன் நினைவும் வதைக்குதே"





சென்னை வந்துக் கொண்டு இருக்கும் போதும் இடையில் வண்டியை நிறுத்தி சாப்பிட சொல்ல

மகளுக்கு அவன் ஊட்டி விட வேண்டும் என்று ஆசைப்பட

அவன் மகளோ அம்மாவிடம் தான் செல்வேன் என்று அடம்பிடித்து சாப்பிட

அதை பார்த்த மகிழனுக்கு மகளுடன் இருக்க வேண்டிய பொக்கிஷ காலங்கள் போய்விட்டதே என்று வருதப்பட்டவனுக்கு சாப்பிட தோன்றாமல் அப்படியே சாப்பாட்டை வைத்து விட

அவனை கவனித்துக் கொண்டு இருந்தா சத்யாவுக்கு கவலையாக இருந்தது ஆனால் அவனை சாப்பிட சொல்லவும் பயமாக இருந்தது….

அவர்கள் சாப்பிடும் வரை வெயிட் செய்தவன் பின் பில் செட்டில் செய்து விட்டு வண்டியை எடுத்தான்…

மகள் தூக்கம் களைக்காதவாறு வண்டியை ஓட்டி சென்றான்….

விடியகாலையில் வீடு வந்து சேர

மகிழன் சஷ்டியை தூக்கிக் கொண்டான் அவளும் தூக்கத்தில் அவன் மீது நன்றாக சாய்ந்துக் கொள்ள

அவளை அணைத்தவாறே உள்ளே இன்னும். இறங்காமல் அமர்ந்து இருந்த சத்யாவை பார்த்து "கீழே இறங்குற ஐடியா இருக்க "என்று கேட்க

வேகமாக இறங்கினாள்

வீட்டை பார்த்தவளுக்கு கண் கலங்கி பழைய நியாபகம் வந்தது அன்று வீட்டை விட்டு செல்லும் போது "இனி இந்த வீட்டுக்கு வர மாட்டேன் "என்று நினைத்து சென்றது என்ன இன்று இங்கு வந்து நிற்பது என்ன என்று நினைத்து மூச்சை இழுத்துவிட்டாள்…

இவர்கள் வருவதை சிறிது நேரத்திற்கு முன் மகிழன் மணிவண்ணனிடம் சொல்லி இருக்க

அவர் கையில் ஆருத்தி தட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தார்…

அவரை சத்யா தயங்கி நிற்க

அதை புரிந்துக் கொண்டவர் "இது உன்னோட வீடு மா "என்று சொல்ல

அவரை பார்த்து கண் கலங்க

சத்யாவை பார்த்த மகிழன் பின் மணிவண்ணனை பார்த்து "உங்க பேத்திய பார்க்குற எண்ணம் இல்லையா "என்று கேட்க

அவனை பார்த்து சிரித்தவர் மூவருக்கும் ஆருத்தி எடுத்துவிட்டு ஓரமாக நின்றுக் கொண்டு இருந்த செல்வியை பார்த்து "உள்ள வா தங்கச்சி "என்று அழைத்து

தூங்கிக் கொண்டு இருக்கும் சிஷ்டியை பார்த்து "என்கிட்ட கொடு டா "என்க

"தூங்கிக் கிட்டு இருக்க பா "என்று சொல்லி அவரிடம் கொடுக்க

பேத்தியை வாங்கிக் கொண்டவருக்கு சந்தோசம் தாங்க வில்லை

அவரின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த சத்யா "அத்தை எங்க மாமா?"என்று கேட்க

"உள்ள தூங்கிக் கிட்டு இருக்க மா "என்று சொல்லி சிஷ்டியை கொடுத்தவர்

"நீங்க போய் தூங்குங்க "என்று சொல்லி விட்டு

செல்விக்கு அறையை காட்டிவிட்டு மல்லிகாவை பார்க்க சென்றார்…

மகிழன் சஷ்டி உடன் ரூம்க்கு சென்று விட

சத்யாவுக்கு தான் ஏதோ தயக்கமாக இருந்தது

அவள் நின்றுக் கொண்டு இருப்பதை மேல் இருந்து பார்த்தவன் "ரூம்க்கு இன்னைக்குள்ள வந்துருவியா?"என்று நக்கலாக கேட்க

இதற்கு மேல் நிற்க முடியாது என்று தயங்கி தயங்கி ரூம்க்கு வர

மகிழனோ சிஷ்டியை படுக்க வைத்தவன் அவளின் அருகில் படுத்து கண் மூடிக் கொண்டான்…

உள்ளே வந்த சத்யா மகிழன் தூங்குவதை பார்த்து மூச்சை இழுத்து விட்டாள்…

அவள் உள்ளே வரும் போது அவன் ஏதாவது பேசி விடுவானோ என்று பயந்துக் கொண்டு வர அதற்கு அவசியமே இல்லை என்பது போல மகிழன் தூங்கிவிட்டான்…

சத்யா ஒரு முறை அறையை சுத்தி பார்த்தவளுக்கு மீண்டும் சொர்க்கத்திற்கு வந்தது போல் நிம்மதியாக இருக்க

அவன் அருகில் படுத்தவள் சந்தோச மிகுதியில் நித்ராதேவி அவளை அணைத்துக் கொள்ள தூங்கிவிட்டாள்…

அவள் தூங்குவதற்காகவே காத்துக் கொண்டு இருந்தவன் போல் மகிழன் கண் முழித்து தன் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த சத்யாவை பார்த்தவன்…

"நீ இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா உன்னை பார்த்தா போதும்னு இருந்தேன் ஆனா நீ அம்முவ என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட இன்னைக்கு அவள் என்னை பார்த்து பயந்து ஒளியும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா இதுக்காகவே உன்மேல கோவமாக இருக்கேன் "என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டு தூங்கினான்…

ரொம்ப நாள் கழித்து நிம்மதியாக தூங்குகிறான்

காலையின் மகிழன் எழும் போது சஷ்டியும் சத்யாவும் இல்லாமல் iruka

அதை பார்த்தவன் பதறிபோய் "எங்க காணோம் ஒருவேளை நேத்து நடந்தது எல்ல்லாம் கனவா "என்று பயந்துக் கொண்டே ரூமை விட்டு வெளியே வர

கீழே சஷ்டியின் சத்தம் கேட்ட பின் தான் படபடப்பு குறைந்தது முகத்தில் இருந்தா வேர்வையை துடைதை கீழே சென்றான்…

கீழே மல்லிகாவின் அறையில் சஷ்டி விளையாடிக் கொண்டு இருக்க

மல்லிகாவின் முகத்தில் அவ்ளோ சந்தோஷம் அதை பார்த்த மகிழனுக்கு நிம்மதியாக இருந்தது இவ்ளோ நாள் இவனை நினைத்தே அவர் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார் அல்லவா….

மகிழன் வரும் முன் சத்யா மல்லிகாவிடம் சென்று மன்னிப்பு கேட்க

"எனக்கு உன்மேல கோவம் எதுவும் இல்லடா போகும் போது என்னை நினைச்சு பார்க்காம போயிட்டியேனு வருத்தம் தான் "என்று சொல்ல

அவரை கட்டிக் கொண்டாள்…

மகிழன் அவனும் சத்யாவின் நண்பர்கள் இருக்கும் குரூப்பில் "உங்க பிரண்ட் வந்துட்டா எல்லாரும் கிளம்பி வாங்க "என்று மெசேஜ் சென்ட் பண்ணி விட

அதை பார்த்தவர்கள் அப்போதே கிளம்பி விட்டனர்….

சிறிது நேரத்தில் காலிங் பெல் அடிக்க சத்யாதான் சென்று கதவை திறந்தாள்..

அவள் திறந்த அந்த நொடி நந்தினி அவளை போட்டு அடிக்க

"அச்சோ இவனுங்க எப்படி வந்தனுங்க "என்று நினைத்துக் கொண்டு

"அடியே வலிக்குது டி "என்று அடியில் இருந்து தப்பிக்க

சரணும் நவீனும் அவளை சுற்றி வலைக்க வேறு வழி இல்லாமல் செமைதையாக அடி வாங்கினாள்…

மகிழன் சத்யா அடி வாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க

அதை பார்த்தவள் "மனுஷனா இவன் பொண்டாட்டி அடி வாங்கிகிட்டு இருக்கேன் வேடிக்கை பார்த்துக் கிட்டு இருக்கான் "என்று புலம்ப

அவளின் மகள் ஒரு படிமேலே சென்று சத்யா அடி வாங்குவதை பார்த்து கை தட்டி சிரிக்க

அதை பார்த்தவள் "யூ டூ "என்று பார்க்க

சஷ்டியின் சத்தம் கேட்டு நந்தினி நிமிர்ந்து பார்க்க

பிரசன்னாவோ மகிழனை கேள்வியாக பார்க்க "என் பொண்ணு தான் "என்க

அதை கேட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது…

மகிழன் சத்யா pregnant ஆக இருப்பதை சொல்லவில்லை

நந்தினி சத்யாவின் அருகில் வந்து "உனக்கு எங்கள நியாபகமே இல்ல தான எவ்ளோ பெரிய விஷயத்தை மறச்சுட்ட நாங்க தான் உன்னை பிரண்ட் சொல்லி சுத்திக் கிட்டு இருக்கோம் ஆனா உனக்கு அப்படி இல்ல தான "என்று கண் கலங்க

சத்யாவுக்கோ வேதனையாக இருந்தது "இல்ல டி "என்று ஏதோ சொல்ல வர

அவளை கை நீட்டி தடுத்தவள் "பேச வேண்டாம் "என்று சொல்லி விட்டு

சஷ்டியின் அருகில் செல்ல

சரணை நோக்கி வந்தவள் "சாரி டா "என்று கண் கலங்க

"ச்சே இதுக்கு போய் அழுவிய எனக்கு கோவம் இல்ல டி உனக்கு கஷ்டமா இருக்க நேரம் எங்க நியாபகம் உனக்கு வரல அப்படிங்கறது தான் கஷ்டமா இருக்கு "என்க

சத்யாவுக்கு என்ன சொல்வதென்று கூட தெரியவில்லை

சத்யாவை பார்க்க பாவமாக இருக்க நவீன் தான் "நா உன்னை மன்னிச்சறேன் எனக்கு சிக்கன் லாலிபாப் வாங்கி தரியா "என்று கேட்க

அவன் அப்படி கேட்டவுடன் சிரித்துக் கொண்டே கண்ணீரை துடைத்தவள் "கண்டிப்பா "என்க

பிரசன்னா சத்யாவை பார்த்துக் கொண்டே இருக்க "சாரி "என்க

"என்கிட்ட சாரி கேட்க வேண்டிய அவசியம் உனக்கு இல்ல "என்று சொல்லி அவளின் தோள் மீது கை போட்டுக் கொள்ள

இவர்களை பார்த்துக் கொண்டு இருந்த மகிழனுக்கு சந்தோசமாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை

நந்தினி சஷ்டியின் முன் அமர்ந்து "நா நந்தினி "என்று சொல்லி கை நீட்ட

அதற்கு திருப்பி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து பின் தந்தையை பார்க்க

அவளின் செயலை பார்த்த எல்லாருக்கும் அவ்ளோ அழகாக இருந்தது…

மகிழன் அவளின் கன்னத்தில் முத்தமிட

இதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நந்தினிக்கு முத்தமிட

தன் தோழியின் மகள் என்ற நினைவே அவளுக்கு அதிக சந்தோசத்தை கொடுக்க

சஷ்டியை அணைத்துக் கொண்டாள்…

பின் ஒருவர் மாற்றி ஒருவர் சஷ்டியை கையில் வைத்துக் கொண்டே இருக்க

அது அவளுக்கும் பிடித்து போய் விட அன்று முழுவதும் வீட்டில் ஒரே சத்தம் தான்…

ரொம்ப நாள் பிறகு இன்று தான் வீட்டுக்கு உயிர்ப்பு வந்த மாதிரி இருந்தது…

சத்யா மகிழனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்…

இருவரும் கண்ணால் பேசிக் கொள்வதை போல இருக்க சஷ்டி வேகமாக வந்து மகிழன் மடியில் அமர்ந்துக் கொண்டு மகிழனின் முகத்தை அவளை நோக்கி திருப்ப

அதை பார்த்த நவீன் "இப்போவே இப்படி இருக்க இனி உங்கனால ரொமான்ஸ் பண்ண முடியாது "என்று சொல்லி சிரிக்க

அவன் சிரிப்பதை பார்த்து காரணம் தெரியாமல் சஷ்டியும் கை தட்டி சிரிக்க

அந்த வீடே சிரிப்பு சத்தம் நிறைந்து இருந்தது….



நிமிர்வாள்….
 
Last edited:

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 27


புரியாத பாதை ஒன்று
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே


காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்


கண் முன் மெல்ல சிந்தனை என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்


அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே


இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை


காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை


சத்யாவுக்கு அவ்ளோ சந்தோசமாக இருந்தது இந்த சொர்கத்தையா விட்டு போனேன் என்பது போல் நினைத்துக் கொண்டாள்….


இரவு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சாப்பிடும் போது அவ்ளோ திருப்தியாக இருந்தது…


செல்விக்கே லேசாக குற்றஉணர்வு எட்டி பார்த்தது இவர் தானே அவளை அழைத்துக் கொண்டு போனார்


இது தெரிந்ததாலே என்னமோ மகிழன் அவரிடம் அவ்வளவாக பேச இல்லை அதற்க்கென்று அவரை ஒதுக்கி வைக்கவும் இல்லை..


நண்பர்கள் கிளம்ப அவர்களை வாசல் வரை வழியனுப்பி வைத்து விட்டு வந்தவள் மகிழனுக்கு பால் எடுத்துக் கொண்டு செல்ல


அவன் ரூமில் சஷ்டிக்கு கதை சொல்லிக் கொண்டு இருந்தான் அதை பார்த்தவளுக்கு "இவங்களுக்கு இவ்ளோ பொறுமை இருக்கறதே எனக்கு இப்போ தான் தெரியுது " என்று எண்ணி


அவன் முன் பாலை நீட்ட


அதை வாங்கி டேபிள் மீது வைத்தவன் கதை சொல்லிக் கொண்டு இருக்க


அதை கேட்டு சஷ்டிக்கு தூக்கம் வந்ததோ இல்லையோ சத்யாவுக்கு நன்றாக தூக்கம் வந்தது…


இன்று முழுவதும் நண்பர்களுடன் வெகு நாட்கள் கழித்து பேசியதால் சந்தோஷத்தில் படுத்த உடன் தூங்கிவிட்டாள்..


ஆனால் அவனின் மகள் ரெண்டும் மூன்று கதை கேட்டுக் கொண்டு இருக்க


பின் மகிழன் தான் "நாளைக்கு சொல்றேன் இப்போ தூங்கு டா " என்று தட்டிக் கொண்டுக்க


சத்யாவின் புடவையையும் மகிழனின் சட்டையையும் பிடித்துக் கொண்டு தூங்கினாள்..


அதை பார்த்த மகிழனுக்கு மனம் நிறைந்து போனது


பின் மகளை தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனும் தூங்கி போனான்…


காலையில் சத்யா தான் சமையல் செய்துக் கொண்டு இருந்தாள்


மல்லிகா சமையல்அறையில் சேர் போட்டு அமர்ந்து மடியில் சஷ்டியை வைத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தார்..


மணிவண்ணனுக்கு மல்லிகா இப்படி இருப்பதை பார்த்து ஆனந்தமாக இருந்தார்


சத்யா சென்ற பின் அவளையும் மகிழனையும் நினைத்து வேதனை பட்டுதானே உடம்பை கவனித்துக் கொள்ளவில்லை இனி சத்யா பார்த்துக் கொள்வாள் என்று நிம்மதியாக இருந்தார்…


சிறிது நேரத்தில் மகிழன் ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வர


அவன் ரெடி ஆகி இருப்பதை பார்த்து "இன்னைக்கே போகணுமா மகிழா "என்று கேட்ட


வாட்சை சரிப்படுத்திக் கொண்டே "ஆமா பா மேனேஜர் பாத்துப்பாரு தான் இருந்தாலும் நா அங்க இருக்கனும் "என்க


மகன் ஏதோ காரணத்திற்காக தான் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவர்


"நானும் வரவா "என்று கேட்க


"இல்ல பா நீங்க ரெஸ்ட் எடுங்க "என்று சொல்லி விட்டு டைனிங் டேபிளில் அமர


சத்யா அவனுக்கு பரிமாற மகளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்…


கிளம்பும் போது எல்லாரிடமும் சொன்னவன் சத்யாவிடம் சொல்லாமல் கிளம்பி விட


அதை பார்த்தவளுக்கு வேதனையாக இருந்தது கூடவே


"என்ன அவங்களுக்கு பிடிக்கலையா ஒரு வேலை அத்தைக்காக தான் என்னை தேடி இருப்பாங்களோ "என்று நினைக்க


அவளின் குழம்பிய முகத்தை பார்த்த மல்லிகா சஷ்டியை மணிவண்ணனிடம் கொடுக்க


அவர் பேத்தியை தூக்கிக் கொண்டு கார்டன் பக்கம் சென்றார்..


மல்லிகா சத்யாவின் தோளில் கைவைத்து "என்ன டா? "என்று கேட்க


அவரை நிமிர்ந்து பார்த்தவள் "அத்தை நா போன உடன் என்னை தேட சொல்லி அவங்ககிட்ட சொன்னிங்களா உங்களுக்காக தான் என்னை கண்டுபிடிச்சார? "என்று கேட்க


அவள் கேள்வியிலே அவள் குழம்பி போய் இருக்காள் என்று புரிந்துக் கொண்டவர்


செல்வியிடம் "பேசிகிட்டு வரேன் அண்ணி "என்று சத்யாவை அழைத்து செல்ல


அதை பார்த்த செல்வி "சத்யா நன்றாக இருந்தால் போதும் "என்று எண்ணிக் கொண்டார்…


உள்ளே வந்த மல்லிகா சத்யாவிடம் "அவனுக்கு உன்ன பிடிக்காதுனு யாரு சொன்னா "என்று கேட்க


"அவங்க என்னை பார்க்க மாட்டேங்கறாங்க என்கூட பேச மாட்டேங்கறாங்க "என்று சின்ன பிள்ளை போல் சொல்ல


"சத்யா மகிழனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் "என்க


"போங்க அத்தை உன் பையனுக்காக சப்போர்ட் பண்றிங்க "என்று சொல்ல


"உனக்கு தெரியுமா சத்யா மகிழன் தான் உன் வீட்ல பொண்ணு கேட்டு வர சொன்னான் "என்க


அதை கேட்டவள் "அப்போ அவங்களுக்கு ரோஷினிய ரொம்ப பிடிக்குமா "என்று கண் கலங்க


அவளை பார்த்து தலையில் கை வைத்தவர் "என்ன முழுசா பேச விடு சத்யா "என்று சொல்லி


"அவன் ஆசைப்பட்டு தான் கல்யாணம் பணிக்கறேன் சொன்னான் ஆனா அவன் ஒரு நாள் கூட ரோஷினி கூட பேசுனது இல்ல இவ்ளோ ஏன் அவள் முகத்தை ஒழுங்கா பார்த்தது கூட இல்லை "என்க


அதை சத்யா அவரை புரியாமல் பார்க்க "கல்யாண புடவை எடுக்கும் போது மகிழன் தான் உனக்கு எடுத்தான்… உனக்கு எடுத்த புடவை கல்யாண பெண்ணோட புடவையை விட காஸ்டலி அதுவும் இல்லாம உன் புடவையை பார்த்தாலே தெரியும் அது முகூர்த்த பட்டுனு "என்க


அவர் சொன்ன பின் தான் நினைத்து பார்த்தாள் அன்று கல்யாணம் அப்போ செல்வி புடவையயை எடுத்து வைக்கும் போது "என்ன புடவை இப்படி இருக்கு ரொம்ப விலை அதிகமா இருக்கும் போல இருக்குமா"என்று செல்வியிடம் சொல்ல


"ஆமா ஆனா அண்ணி ஆசையா உனக்கு எடுத்து குடுத்து இருகாங்க டா கட்டிக்கோ "என்று சொல்லவும் தான் அந்த புடவையை கட்டிக் கொண்டாள்


ஆனால் அந்த புடவை மகிழன் தான் எடுத்தான் என்று மல்லிகா சொல்லும் போது "ஏன்?"என்று கேட்க


"அதை உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ "என்றவர்


"நீ வீட்டை விட்டு போனதில் இருந்து அவன் எவ்ளோ கஷ்டப்பட்டான்னு கூட இருந்து பார்த்த எஙகளுக்கு தான் தெரியும் டா "என்றவர் கண் கலங்க


அதை பார்த்த சத்யா "அச்சோ அத்தையை வருதப்பட வைச்சுட்டோமே "என்று திட்டிக் கொண்டு


"சாரி அத்தை நீங்க பீல் பண்ணாதீங்க "என்றவள் "உன் பையன் கிட்ட பேசறேன் " என்று அவரை சமாதானம் செய்து விட்டு வெளியில் வந்தவள்


"அவங்க எனக்கு எதுக்கு புடவை எடுக்கணும் அப்போ அவங்களுக்கு என்ன சுத்தமா பிடிக்காதே "என்று யோசித்துக் கொண்டு இருக்க


அப்போது அங்கு வந்த நந்தினி சத்யா யோசித்துக் கொண்டு இருப்பதை பார்த்து


"என்ன டி தனியா உட்கார்ந்து என்ன யோசனை? "என்று அவள் அருகில் அமர


"எனக்கு ஒரே குழப்பமா இருக்கு நந்து "என்று சொல்லி


மல்லிகா சொன்னதை சொல்ல


அதை கேட்டவள் "மகிழன் அண்ணாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் சத்யா நீ காணாம போயிட்டேன் தெரியும் போது நாங்க எல்லாரும் மகிழன் அண்ணாகிட்ட சண்டை போட வந்த அப்போ அவர் கண் எல்லாம் கலங்கி எப்படி இருந்தாரு தெரியுமா? உன்னை எல்லா இடத்திலயும் தேடுனாங்க எங்களை எல்லாம் சமாதானப்படுத்தி வேலை போக சொல்லி அவர் தான் தேடிக் கிட்டு இருந்தாரு "என்று சொன்னவள்


சத்யாவை பார்க்க அவள் அழுதுக் கொண்டு இருந்தாள்


அதை பார்த்தவள் "லூசு எதுக்கு அழுகிற "என்று கடிந்துக் கொள்ள


"நா அவங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் "என்க


அவள் கண்ணீரை துடைதை விட்டவள் "நீ அண்ணா கூட மனசு விட்டு பேசு டி "என்க


சத்யாக்கும் அதுவே சரி என்று பட


ஈவினிங் மகிழன் வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தாள்…


ஆபீஸ் சென்றவனின் என்றும் இல்லா புன்னகை முகத்தை பார்த்து அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்…


அவர்கள் பார்ப்பதை கண்டுக் கொள்ளாதவன் உற்சாகதுடன் வேலை செய்ய ஆரம்பித்தான்…


மாலை நான்கு மணி ஆனவுடன் வீட்டுக்கு கிளம்ப


மேனேஜர்க்கு தான் அவனின் செயல் வியப்பாக இருந்தது எப்போதும் இரவு லேட்டாக வீட்டுக்கு செல்பவன் இன்று எல்லாருக்கும் முன்னாடியே சென்று விட


"சார் இப்போ இருக்கறது தான் நல்லா இருக்கு "என்று நினைத்துவிட்டு முடிக்க வேண்டிய வேலையை பார்க்க சென்றார்..


மாலை சஷ்டி தாத்தா பாட்டியுடன் கண்ணாபூச்சி விளையாடிக் கொண்டு இருக்க


அதை பார்த்தவன் ஒளிந்துக் கொண்டு இருந்தவள் முன் சென்று


"அம்மு அப்பாவும் விளையாட வரட்டுமா? "என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க


அதுவோ ராக்கெட் விடும் ரேஞ்சுக்கு யோசித்து விட்டு போன போகுது என்று "ம்ம் "என்று சொல்ல


அவளின் அழகில் கன்னத்தில் முத்தமிட்டவன் அவளை தூக்கிக் கொண்டு ரூம்குள் ஒளிந்துக் கொள்ள


மல்லிகாவிற்கு பதில் சத்யா தான் ஒளிந்து இருந்தவர்களை கண்டுப்பிடித்துக் கொண்டு இருந்தாள்…


அவள் தான் வருகிறாள் என்று தெரிந்துக் கொண்டவன் "அம்மு இங்க இருந்து கண்டு பிடிச்சுருவாங்க நீ வெளியில போய் ஒளிஞ்சுக்கோ "என்க


அதுவோ அவனை முறைத்து பார்த்தது "இவ்ளோ நேரம் வெளியில தான இருதேன் "என்ற பார்வையுடன்


அதை பார்த்தவன் "அப்படியே என் பொண்ணு என்ன மாதிரியே அறிவாளி "என்று கொஞ்சி விட்டு வெளியில் அவளை விட


அதுவோ எங்க ஒளிவது என்று புரியாமல் பார்க்க


அவளை பார்த்த மல்லிகா "வா டி என் கண்ணு "என்று தூக்கி செல்ல


அதுவோ மகிழனை பார்த்து நாக்கை கட்டியது…


அவளின் விளையாட்டு தனத்தை ரசித்துக் கொண்டு இருந்தவனை சத்யா கொலுசு கவனத்தை மீட்க அவளுக்காக கதவின் பின்னால் ஒளிந்து இருக்க


அது தெரியாத சத்யா "குட்டிமா இங்க தான இருகாங்க "என்று சொல்லிக் கொண்டு உள்ளே வர


சரியாக அந்த நேரம் மகிழன் வெளியில் செல்வது போல பாவலா காட்டிக் கொண்டு வர


அவனை பார்க்காமல் அவன் மீது மோதி பின் அவனை எதிர்ப்பார்க்காதாவள் அவனிடம் இருந்து விலக பார்க்க


மகிழன் சத்யாவின் பின்னால் காலை நீட்ட


பின்னால் சென்றவள் கால் தட்டி கீழே விழ பார்க்க சரியாக மகிழன் அவளின் இடையை பிடித்து அவனை நோக்கி இழுக்கும் போது


வேகமாக வந்தவளின் இதழ் அவன் இதழில் மொத


இதற்காகவே காத்துக் கொண்டு இருந்தவன் போல


அவளின் இதழில் முத்தமிட


அவன் முத்தமிடுவான் என்று நினைக்காதவள் அதிர்த்து போய் அவன் முகத்தை பார்த்தாள்


அவனோ கண்ணை மூடிக் கொண்டு ரசித்து முத்தமிட அதை பார்த்தவளின் கண்களும் மூடிக் கொண்டது….


அவர்களை சுற்றி இருந்ததை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தவர்கள்


மல்லிகா சிஷ்டியின் சத்தம் கேட்ட பின் தான் விலகினர்கள்…


சத்யாவுக்கோ "என்ன செய்வது திட்டுவனோ "என்பது போல பார்க்க


அவனோ "கிழ பார்த்து போ "என்று சொல்லி இதழில் புன்னகையுடன் கடந்து செல்ல


அவனின் புன்னகையை பார்த்தவள் "ஏதோ இருக்கு "என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ரூம்க்கு வர வரைக்கும்


இரவு ரூம்க்கு வந்த மகிழன் சஷ்டியை தூங்க வைத்து நிமிர்ந்து பார்க்க


சத்யாவோ அவன் முன் நின்று "பேசணும் "என்று சொல்ல


அவனும் சுத்தி பார்த்துவிட்டு "பேசு "என்று சொல்லி படுக்க செல்ல


அதை பார்த்தவள் "உங்க கூட பேசணும்னு சொன்னேன் "என்க


அதை கேட்டவன் "அத தெளிவா சொல்லணும் சரி வா "என்று அவன் ரூமில் இருக்கும் பால்கனிக்கு செல்ல


அவன் பின்னால் சென்றவள் அவன் நின்றது தெரியாமல் அவன் மீது இடித்துக் கொள்ள


"பார்த்து வர மாட்டியா? "என்று கேட்டவுடன் "ம்ம் "என்றாள்…


சிறிது நேரம் அமைதியாக இருக்க


"பேசணும்னு சொல்லி அமைதியாவே இருக்க "என்று கேட்க


குரலை சரி செய்துக் கொண்டவள்


"அது என்ன உங்களுக்கு எப்போ தெரியும் "என்று கேட்க


அவனோ கை கட்டி அவளையே பார்த்துக் கொண்டு இருக்க


அதை பார்த்தவள் "அது நீங்க என்ன எப்போ முதல பார்த்திங்க "என்க


இதை கேட்க உனக்கு இவ்ளோ நாளா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு


"பிப்ரவரி 24 2015 "என்க


அதை கேட்டவள் ஆச்சரியமாக "அப்போ நா காலேஜ் சேரவே இல்லையே "என்க


"நா உன்ன காலேஜ்ல பார்த்தேன்னு சொல்லவே இல்லையே "என்க


அவன் சொன்னதை கேட்டவள் கண் வெளியே வந்து விடும் அளவுக்கு முழிக்க


அதை பார்த்தவன் இதழுக்குள் சிரித்துவிட்டு "சரி எனக்கு தூக்கம் வருது தூங்க போறேன் "என்க


அதை கேட்டவள் அவசரமாக அவன் கையை பிடித்து "நீங்க இன்னும் முழுசா சொல்லவே இல்லையே "என்று பாவமாக அவன் முகத்தை பார்க்க


"எனக்கு இப்போ சொல்ல தோணல நாளைக்கு சொல்றேன் "என்று சொல்லி படுத்துக் கொள்ள


அதை பார்த்தாள் "எனக்கு தூக்கம் வராம பண்ணிட்டு இவன் தூங்க போயிட்டான் "என்று திட்டிவிட்டு


"எங்க பார்த்து இருப்பாங்க "என்று யோசித்துக் கொண்டு இருக்க..


"எவ்ளோ யோசிச்சாலும் உனக்கு தெரியாது பேசாம படுத்து தூங்கு நானே நாளைக்கு சொல்றேன் "என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொள்ள


அவனின் கழுதை நெரிப்பது போல் வந்தவள் பின் பாவம் தூங்கட்டும் என்று நினைத்துவிட்டு


அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் தூங்கினாள்….


மகிழனின் காதல் கதை இனி தெரிய வரும்…..




நிமிர்வாள்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 28


"உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை

உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்

அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்

அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்

அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்"





காலையில் எழுந்ததில் இருந்து சத்யா மகிழன் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்க

அவள் எதற்காக சுத்துகிறாள் என்று தெரிந்துக் கொண்டவன் வேண்டும் என்றே அவளை அலைய விட்டான் அவன் பின்னால் ஒரு வித விளையாட்டு புன்னகையோடு…

சத்யாவோ "இந்த மனுஷன் எப்போ தான் சொல்லுவாரு நானும் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கேன் கண்டுக்கவே மாட்டேங்கறாரு ப்பா முடியல "என்று நினைத்துக் கொண்டு இருக்க

அவனோ அவளின் தவிப்பை அதிகம் ஆகுவது போல ஆபிஸ் பேக் எடுக்க

அதை பார்த்த சத்யா "இதை எதுக்கு எடுக்கறிங்க "என்று அவன் கையில் இருந்தா பேக்கை காட்ட

"ஆபீஸ் பேக் எடுத்துக்கிட்டு எங்க போவாங்க ஆபீஸ்க்கு தான் "என்று அவன் கூலாக சொல்ல

அதை கேட்டவள் ஒருவேளை நேத்து அவங்க சொன்னதை மறந்துட்டாங்க இப்போ எப்படி நியாபகப் படுத்தறது என்று எண்ணிக் கொண்டு

"இன்னைக்கு போகலனு சொன்னிங்க "என்று தயக்கமாக சொல்ல

அவள் சொன்னதை கேட்டவன் "அப்படியா சொன்னேன்னா "என்று யோசிப்பது போல செய்ய

இதற்கு மேல் அவனிடம் கேட்க முடியாது என்று நினைத்து முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அவனிடம் இருந்து விலகி செல்ல

அவளின் கையை பிடித்தவன் "நா எப்போ பார்த்தேன்னு சொல்லனுமா?"என்று கேட்க

அவளும் "ஆம் "என்னும் விதமாய் தலையாட்ட

சாப்பிட்டு அம்முவ அம்மாகிட்ட குடுத்துட்டு வா ரூம்ல இருக்கேன் "என்று சொல்லிவிட்டு செல்ல

வேகமாக சாப்பிடவள் சஷ்டியை மல்லிகாவின் கையில் கொடுத்துவிட்டு வர

"எதுக்கு இவ்ளோ வேகமா வர நா எங்க போயிடபோறேன் "என்று மகிழன் கடிந்துக் கொள்ள

கையை கோர்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க

அவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருக்கவும்

"சரி வா உட்காரு "என்க

அவனுக்கு அருகில் அமர்ந்து அவனின் முகத்தை ஆர்வமாக பார்க்க

அதில் சிரித்துக் கொண்டவன்

"பிப்ரவரி 24 2015 அன்னிக்கு வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் உன்ன முதல் தடவ பார்த்தேன் "என்று சொல்லி அந்த நாளை நினைத்து பார்த்தான்…

அன்று மகிழன் அவனுடைய பிரண்ட்காக வெயிட் காரில் செய்துக் கொண்டு இருக்க

அப்போது அங்கு விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள் ஒருவனை மட்டும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாமல் ஏதோ பேச

என்ன பேசிகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள வண்டியை விட்டு கீழே இறங்கினான்...

கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பையன் அந்த சிறுவனை பார்த்து "எங்க கூட உன்ன விளையாட சேர்ந்துக்க மாட்டேன் "என்று சொல்ல

அதை கேட்ட அந்த சிறுவன் பாவமாக "ஏன்?"என்று அழுவது போல கேட்க

இன்னொரு சிறுவனோ "எங்க அம்மா உன்கூட விளையாட கூடாதுனு சொல்லி இருகாங்க நீ வேற ஜாதியாம் அதுனால தான் கருப்பா இருக்கியாம் "என்றான்…

அந்த சிறுவனுக்கு ஜாதியை பற்றி தெரியாமல் இருக்கவே எனவே அவன் அம்மா அவன் கருப்பா இருக்கான் என்ற காரணம் சொல்ல

அதை நினைவு வைத்து அனைவர் முன்னும் சொல்ல

அதை கேட்ட அந்த சிறுவன் அழும் நிலைக்கு சென்று விட

அதை கண்டுக் கொள்ளாதவர்கள் விளையாட சென்று விட

இதை பார்த்துக் கொண்டு இருந்த மகிழனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவம் வந்தது…

கருப்பாக பிறந்ததும் வேறு ஜாதியில் பிறந்து அந்த பையனின் தப்பா ஆனால் அதை மாற்ற சிறுவர்களின் அன்னை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று நினைத்தவன்

"இந்த சின்ன வயசுலயே இவங்க மனசுல இதை பதிக்கற அவங்க அம்மாவை சொல்ல வேண்டும் எண்டது நினைத்து

அழுதுக் கொண்டு இருந்தா சிறுவனை சமாதானம் செய்ய காலை முன் வைக்க

அவனுக்கு முன் அந்த சிறுவனிடம் சென்ற பெண் "என்னாச்சு எதுக்கு அழுகறிங்க "என்று கேட்க

அந்த சிறுவனுக்கு சொல்ல தெரியாமல் "நா ரொம்ப கருப்பா இருக்கேன் அதுனால என்ன விளையாட்டுல சேர்த்துக்கல "என்று அழுதுக் கொண்டே சொல்ல

அதை கேட்டவள் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தா சிறுவர்களை பார்த்தவள் பின்

"இதுக்கு போய் அழலாமா கருப்பா இருக்கறது தப்பு இல்ல ஆனா அதை பார்க்கறவங்க மனசுல கருப்பு இருக்கறது தான் தப்பு "என்க

அந்த பெண் சொல்வது புரியாமல் அந்த சிறுவனோ "நீங்க கூட எவ்ளோ கலர்ஆ இருக்கீங்க "என்று சொல்லி

அந்த பெண்ணின் கையோடு அவன் கையை வைத்து பார்க்க

"இது தான் உன் பிரச்சனையா நானும் உன்ன மாதிரி கருப்பாகிட்டா அழகா இருப்பேன் "என்று சொல்ல

அதை கேட்ட சிறுவன் "எப்படி? அப்போ என்னையும் கலர்ஆ மாத்துவிங்களா "என்று ஆர்வமாக கேட்க

"எனக்கு கலர்ஆ மாத்த பிடிக்காது அதுனால கத்துக்கல aana கருப்பா aaga பிடிக்கும் "என்று சொல்லி சுத்தி பார்த்தவள்

அங்கு இருந்த கறிதூண்டுகளை எடுத்து நிலத்தில் உரசியவள் தன் முகத்தில் பூசிக் கொள்ள

அவள் செய்வதை அங்கு செல்பவர்கள் எல்லாம் விசித்திரமாக பார்க்க

அவள் எதையும் கண்டுக் கொள்ளாமல் கறிபூசி முடித்தவள்

"இப்போ நா உன்ன மாதிரியே அழகா மாறிட்டேனா?"என்று கேட்க

அந்த சிறுவன் அவளை பார்த்து "ஏன் கா?"என்க

"எனக்கு உன்ன மாதிரியே அழகா இருக்கனும்னு ஆசை டா "என்று சொல்ல

அதை கேட்ட அந்த சிறுவன் சந்தோசமாக "நா அழகா இருக்கேனா ஆனா கருப்பா இருக்கனே "என்று கேட்க

"அந்த கருப்பு தான் உனக்கு அழகே… மத்தவங்க சொல்றாங்கனு நீயே உன்னை எப்பையும் தாழ்த்திக்கூடாது நாம யாருனு நாம தான் முடிவு பண்ணனும் "என்று அந்த சிறுவனுக்கு புரியும் படி சொன்னவள்

விளையாடிக் கொண்டு இருந்தவர்களை காட்டி "அவங்க உன்கூட விளையாடலனா என்ன உன் கூட இருக்கவங்க கூட விளையாடு "என்றவள்

"அவங்களை மாதிரி உன்னை நிறைய பேர் சொல்லுவாங்க ஏன்னா நீ அவங்கள விட பெஸ்ட்ஆ இருப்ப அதை பார்த்து பொறாமை படறவங்க உன்னை ஜெயிக்க முடியாதவங்க தான் உன்னை காயப்படுத்தி உன்னை தோல்வியாரு தர பார்ப்பாங்க ஆனா நீ அவங்களை எல்லாம் எதிர் வந்த வாழ்க்கை அவ்ளோ அழகா இருக்கும் "என்று அவனுக்கு வாழ்க்கையை பற்றி அவனுக்கு புரியும் விதத்தில் சொன்னவள்

வாட்சை பார்த்து "அக்காக்கு டைம் ஆகிருச்சு நா கிளம்பறேன் "என்று சொல்ல

அவள் கையை பிடித்த சிறுவனை பார்த்து "என்ன டா?"என்று கேட்க

"இனி யார் என்ன பார்த்து நா கருப்பா இருக்கேன்னு சொன்னாலும் நா ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லுவேன் அழ மாட்டேன் "என்று சிரித்துக் கொண்டே சொல்ல

அவன் கன்னத்தில் முத்தமிட்டவள்

அங்கு விளையாடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து ஒன்றும் சொல்ல வில்லை

"இன்று அவள் அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் அவர்களின் அம்மா சொல்வதை தான் கேட்க போகிறார்கள் "என்று நினைத்து அவர்களை கடந்து சென்றாள்…

இதுவரை நடந்ததையும் அந்த சிறுவனுக்கு அவள் எடுத்து சொல்வதையும் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் போவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்…

அந்த பின் வந்த நாட்களில் எல்லாம் அந்த பெண்ணின் முகம் வந்து அவனை தொல்லை செய்யும் ஆனால் அதன் பின் அந்த பெண்ணை அவனால் பார்க்கவே முடியவில்லை

சத்யாவிடம் மகிழன் இதை சொல்ல

அதை கேட்ட சத்யாவுக்கு ஆச்சரியமாகவும் சந்தோசமாகம் இருந்து ஏன் என்றால் அந்த பெண் இவள் அல்லவா…

சத்யா அவனை பார்க்க

அவளை பார்த்தவன் "அப்போ எவ்ளோ அழகா irundha தெரியுமா பார்த்தவுடனே மனசுக்குள்ள சேர் போட்டு உட்கார்ந்துட்ட "என்க

அவனை பார்த்து லேசாக முறைந்தவள் "எது முகத்துல கரிய பூசிக் கிட்டு இருந்த அப்போ உங்களுக்கு அழகா இருந்தேனா?"என்று கேட்க

"நீ அழகுனு எதை சொல்ற அப்போ நா உன் முகத்தை சரியாவே பார்க்கல ஆனா உன்னோட மனசு அவ்ளோ அழகு ரோட்டுல உன்னை அவ்ளோ பேர் பார்க்கும் போது அந்த பையனுக்காக செஞ்சல அப்போ விழுந்தவன் தான் இன்னும் எழுந்திரிக்கல எழுந்திரிக்கவும் விரும்பல "என்க

அவனை காதலுடன் பார்க்க

அவளை பார்த்தவன் "இப்டியே பார்த்துக்கிட்டு இருந்தா அப்புறம் சொல்ல வேணாமா?"என்று சிரிப்புடன் கேட்க

அவனின் காதலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க "சொல்லுங்க "என்க

அதுக்கு அப்புறம் உன்னை என்னால பார்க்கவே முடியல

அப்போ ஒரு நாள் என் பிரண்ட் ஆஹ் நம்ம காலேஜ் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணா கூட்டிக்கிட்டு வந்தேன் அவன் உள்ள இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணும் போது நா சும்மா சுத்தி பார்த்துக் கிட்டு இருக்கும் போது

அப்படியே காத்து அடிச்சு மரத்துல இருக்குற பூ எல்லாம் கொட்டும் போது மெதுவா நீ நடந்து வந்த

பார்த்தவுடனே நீ தான்னு எனக்கு தெரிஞ்சுருச்சு அப்போ பார்க்கும் போது தேவதையே நடக்குற மாதிரி இருந்துச்சு

நீ என்ன கிராஸ் பண்ணி போகும் போது உன்னோட ஷால் என்மேல ஒரசிகிட்டு போச்சு

அப்போவே முடிவு பண்ணிட்டேன் "என்ன ஆனாலும் இந்த காலேஜ்ல ஒர்க் பண்ணனும்னு"

அடுத்த நாளே காலேஜ் வந்து இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணி செலக்ட் ஆகிட்டேன்

அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா twelth பையன் பாஸ் ஆகும் போது எப்படி இருக்கும் அப்படி இருந்துச்சு

வீட்ல அம்மா அப்பா ஏன் லெக்சர் வேலைக்கு போகுறனு கேட்கும். போது "எனக்கு அதுல தான் பிடிக்கும்னு சொல்லிடு வந்தேன் "என்க

அதை கேட்ட சத்யாவுக்கு "எனக்காக தான் இவங்க காலேஜ்க்கு வந்தாங்களா "என்று எண்ணியவள்

மகிழனை பார்த்து "அப்போ எதுக்கு என்ன காலேஜ் எப்போ பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருந்திங்க "என்று கேட்க

அதை கேட்டவன் "நா அப்போ

காலேஜ் வந்த புதுசு எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியாது அப்போ தான் நீயும் பிரசன்னாவும் லவ் பண்றதா காலேஜ் முழுக்க பேசிக்கிட்டாங்க நீயும் அதுக்கு ஏத்த மாதிரி அவன் தோளுல கை போட்டு சிரிச்சு பேசிக் கிட்டு இருப்ப அதை பார்த்து எனக்கு செம கோவம் என் காதல் சக்ஸஸ் ஆகலனு அப்புறம் என்னோட பஸ்டு இம்ப்ரெஷன் கரெக்ட்ஆ இல்லனு உன்னை பார்க்கும் போது எல்லாம் திட்டிக்கிட்டே தான் இருப்பேன் "என்க

மகிழன் பிரசன்னாவும் இவளும் காதலிப்பாதக நினைத்து விட்டேன் என்று கூற

அதை கேட்டவள் "இல்லைங்க நாங்க "என்று விளக்கம் சொல்ல வர

அவளை பேசவிடாமல் தடுத்தவன் "அது அப்போ தெரியமா நினைச்சுட்டேன் ஆனா அதுக்கு அப்புறம் இப்படி திங்க் பண்ணதை நினைச்சு ரொம்ப பீல் பண்ணி இருக்கேன் "என்க

பின் எதையோ யோசித்தவள் "அப்போ எதுக்கு எப்பயும் என்ன கிளாஸ்ஆ விட்டு வெளியில அனுப்பனிங்க "என்று கோவமாக கேட்க

அதை கேட்டவன் சிரித்துக் கொண்டே "நீயே நினைச்சு பாரு டி நா உன்ன லவ் பண்றேன் உன்ன கண்ணு முன்னாடி வைச்சுகிட்டு என்னால ஒழுங்கா கிளாஸ் எடுக்க முடியுமா? கண்ணு உன்ன மட்டும் தான் பார்க்க சொல்லுச்சு அப்போ எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா உன்ன பார்க்காம இருக்கறதுக்கு அதுனால தான் நா கிளாஸ்குள்ள வந்தவுடனே நீ வெளிய போக சொல்லிருவேன் "என்று சொல்லி

அவனை லேசாக அடித்தவள் "பிராடு "என்று திட்டியவள்

"என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல "என்று பாவமாக கேட்க

"அப்போ நா உங்கிட்ட சொல்லி இருந்தா அப்படியே வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி இருப்பியா என்ன திரும்பி கூட பார்த்து இருக்க மாட்ட "என்க

அவன் சொல்வதும் சரி என்று தான் தோன்றியது சத்யாவுக்கு அப்போது மகிழன் அவன் மனதை சொல்லி இருந்தாள் கண்டிப்பாக மறுத்து இருப்பாள்….

பின் "அப்போ எதுக்கு ரோஷினிய பொண்ணு கேட்டு வந்திங்க "என்று கோவமாக கேட்க லேசாக கண் கூட கலங்கியது அவளுக்கு

அவளின் கணவனை யார் கூடவும். சேர்த்து நினைக்க கூட முடியாமல்…

"உன்ன காலேஜ்ல பார்த்ததுக்கு அப்புறம் உன்னை பத்தியும் உன் வீட்டை பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் உன் நிலைமை பார்க்கும் போது அப்படியே கட்டிபுடிச்சு உனக்கு நா இருக்கேன் உன்ன ராணி மாதிரி பார்த்துப்பேன் சொல்ல நினைப்பேன் ஆனா மாட்டேன் "என்றவன்

அவளின் கன்னத்தில் முத்தமிட்டு "இப்படி பண்ண அவ்ளோ யோசிச்சு இருப்பேன் தெரியுமா?"என்று அவளை தோளில் சாய்த்துக் கொண்டு

உங்க அப்பாவை பத்தி விசாரிச்சு அவரை என் கம்பெனி clinets கூட அறிமுகப்படுத்தி அவரை புது தோளில் ஆரம்பிக்க செஞ்சேன் அப்போ தான் அவருக்கு என்ன பத்தி தெரிய வந்துச்சு அதுக்கு அப்புறம் அம்மாவ உங்க வீட்டுல பொண்ணு கேட்க சொன்னேன்"என்க

அவனை அவள் அடிப்பட்ட பார்வை பார்க்க

அவளின் கன்னத்தில் லேசாக தட்டியவன் "உங்க அப்பாகிட்ட என்னால பொண்ணு ketka முடியல அப்படி கேட்டாலும் உங்க பாட்டியும் உங்க அக்காவும் விட்டு இருப்பாங்களா?"என்று கேட்க

அதை கேட்டவளுக்கு கண்டிப்பாக விட்டு இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது

அது அவளின் முகத்திலேயே தெரிய

"அதுனால தான் அவளை பொண்ணு பார்க்குற மாதிரி வந்தோம்

உங்க அப்பா கிட்ட ஸ்ட்ரிக்ட்ஆ சொன்னேன் உங்க வீட்ல இருக்கவங்க கண்டிப்பா இருக்கனும்னு அப்போ தான் உங்க அப்பா உன்னை காட்டுவங்கனு ஆனா அம்மாக்கு தெரியும் நீதான் பொண்ணு அப்படினு அப்பாவுக்கு உங்க வீட்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் தான் சொன்னோம் "என்க

அவனின் கதை பிடித்தவள் "எல்லாரும் கூட்டு களவாணிங்களா "என்று சொல்ல

சிரித்துக் கொண்டே அவளின் செல்ல அடியை வாங்கிக் கொண்டான்..

சத்யா நினைத்து பார்த்தாள் என்று இல்லாத அதிசயமாக கணேஷன் அன்று அவளை வீட்டில் இருக்க சொன்னதை அதற்கு காரணம் மகிழன் தான் எண்டது தெரிந்தவள் அவனின் மடியில் படுத்துக் கொள்ள

அவளின் தலையை வருடி விட்டவன்

"எனக்கு நல்லாவே தெரியும் என் கேரக்டர் ரோஷினிக்கு பிடிக்காதுனு அவளை நா பார்த்ததும் கூட கிடையாது அதுவே அவளோட ஈகோவ தூண்டிவிடும்னு தெரிஞ்சு தான் அப்படி பண்ணேன் கல்யாண புடவை எடுக்கும் போது நீ வருவனு நினைச்சேன் பட் நீ வரல சொ உனக்கு நானே புடவை எடுத்துட்டேன் "என்றவன்

அவளின் கண்ணை பார்த்து "நம்மளோட கல்யாண புடவை "என்க

மகிழனை நினைத்து சத்யாவுக்கு வியப்பாக இருந்தது ஒருவன் இப்படி தன்னை காதலித்து இருக்கானா என்று…

"அவ கூட ரிசெப்டின்ல ஜோடியா நிற்கும் பபோது எப்படி இருந்துச்சு தெரியுமா அப்படியே நெருப்பு மேல நிற்கற மாதிரி இருந்துச்சு அப்போ தான் திரும்பி பார்த்த பாவாடை தாவணியில எவ்ளோ அழகா இருந்த தெரியுமா மேடையில நின்னுகிட்டு உன்னை பார்த்த எல்லாரும் தப்பா பேசுவாங்கனு அதுக்கு அப்புறம் உன்னை பார்க்கவே இல்ல "என்றவன்

அவளை பார்த்தவன் "உனக்கு ஒன்னு தெரியுமா?"என்று கேட்க

அவனை பார்த்து "என்ன?"என

"ரோஷினி மண்டபத்தை விட்டு போறதுக்கே நா தான் ஹெல்ப் பண்ணேன் "என்க

அதை கேட்டவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க

"எதுக்கு உன் முட்டக் கண்ணை இப்படி விரிக்கற "என்று மூக்கை பிடித்து ஆட்ட

"எப்படிங்க?"என்று இன்னும் அவன் சொன்னதில் இருந்து வெளி வராமல் கேட்க

"நல்லா யோசிச்சு பாரு டி அவ்ளோ பேர் மண்டபத்துல இருகாங்க அவனாள எப்படி வெளிய போக முடியும் "என்று கேட்க

அதை கேட்டவளுக்கு முடியாது தான் என்று தோன்றியது

"அவ போற டைம் அவ போன்ல பேசும்போதே எனக்கு தெரிஞ்சிருச்சு அவ போகும் போது எந்த இடைஞ்சலும் இருக்க கூடாதுனு தான் நா ஆட்களை செட் பண்ணி அவ யாருக்கும் தெரியாம போக வைச்சேன் "என்றான்

"கேடி கேடி நீங்களே எல்லாம் பண்ணிட்டு எப்படி எல்லாம். சத்தம் போட்டீங்க "என்று அடிக்க

அவளின் கையை பிடித்துக் கொண்டுவன் "பின்ன கல்யாண பொண்ணு போயிருச்சுனு வருதப்படாத மாதிரி இருந்தா எல்லாருக்கும் என்மேல சந்தேகம் வந்துரும்ல சோ குடும்பமே கோவமா இருக்க மாதிரி நடிச்சோம் அதுல உன் அப்பாக்கு வேற வழியே இல்ல என்னை பகைச்சுக்கவும் முடியாது அவரோட பிசினஸ் போயிரும் சோ நா கேட்டவுடனே சரினு சொல்லிட்டாங்க "சொல்லி சிரிக்க

அன்று மண்டபத்தில் அவளுடைய அப்பா எப்படி தலை குனிந்து நின்று இருந்தார் என்று நினைத்தவள்

"ஆனாலும் அப்படி பண்ணி இருக்க கூடாது அப்பா பாவம் "என்க

அவளை முறைத்து மடியில் இருந்து அவளை விலகி விட்டவன் "என்ன பாவம் அந்த ஆளுக்கு இன்னும் வேணும் அப்போ இன்னும் கேட்டு இருப்பேன் நீ கெஞ்சலா பார்த்ததுனால தான் விட்டேன்" என்க

அவனை கோவப்படுத்தி விட்டோம். என்று அவனின் தோளில் சாய்ந்து "சாரி "என்க

அதை கேட்டவன் "இனி நம்ம பேசும் போது அந்த ஆளை பத்தி பேசாத கோவமா வருது "என்க

கணேஷனை மகிழன் திட்டுவதை கேட்டு சத்யாவுக்கு வருத்தமாக இருந்தாலும் அதை பற்றி பேசி மகிழனை கோவப்படுத்த வேண்டாம் என்று எண்ணி அமைதியாக இருந்தாள்….


நிமிர்வாள்…..




கொஞ்சம் வேலை இருக்கு சோ மகிழனோட காதல் கதையை நாளைக்கு சொல்றேன்...
எனக்கு தெரிஞ்ச வகைல சொல்லி இருக்கேன் நா சொல்ல வர கருத்து உங்களுக்கு புரிஞ்சிச்சானு படிச்சுட்டு எனக்கு சொல்லிட்டு போங்க
 
Last edited:
Status
Not open for further replies.
Top