ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 15



சென்னை ஹைவேய்ஸ் வழியாக கார் சென்றுக் கொண்டு இருக்க

மல்லிகா கேட்டுக் கொண்டதால் மகிழன் ஏசி போடமல் விண்டோஸ் திறந்து விட காற்று மோதி சத்யாவுக்கு ஒருவித சிலிரப்பை தர வேடிக்கை பார்த்து வெளியே ரசித்துக் கொண்டு இருந்தாள் .

பின்னால் அமர்ந்து இருந்த மல்லிகா ஒருவித உணர்ச்சியில் இருந்தார்

மணிவண்ணன் அவரின் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதலாக இருந்தார்.

வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தவன் "என்னமா திடீருனு?"என்று கேள்வி எழுப்ப

சத்யாவுக்கும் அதே கேள்வி மனதுக்குள் இருந்தது.

மகிழன் கேட்டதும் மல்லிவாவுக்கு பழைய நினைவுகள் வர கண்கலங்கியவர் "எங்க அப்பா என்ன கூப்பிட்டு இருகாங்க டா மகிழு "என்க

அதைக் கேட்டவன் ஆச்சரியமாக திரும்பி பார்க்க

அவரும் சிரித்துக் கொண்டே "ஆமாம் "என்க

இவனுக்கு சந்தோசமாக இருந்தது இத்தனை நாள் மல்லிகா சந்தோசமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ள இத்தனை நினைத்து வேதனைப்படுவது மகிழனுக்கு நன்றாகவே தெரியும் இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அருகில் அமர்ந்து இருந்த சத்யாவுக்கு தான் கொரியன் சீரிஸ் பார்ப்பது போல இருந்தது எதை பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் இருந்தாள்.

அவளின் முகத்தை பார்த்து அவளுக்கு ஒன்றும்புரிய வில்லை என்று தெரிந்து மல்லிகா அவர் வாழ்க்கையில் நடந்ததை கூறினார்.

மல்லிகாவின் பிறந்த ஊரு ஏற்கார்ட் தான்.

அவரின் குடும்பத்தில் அவர் தான் மூத்தபிள்ளை இவருக்கு பின் இரண்டு பசங்க

முதல் பெண் என்பதால் இவர் வீட்டில் ரொம்ப செல்லம் கேட்டது எல்லாம் கிடைக்கும் அப்படி தான் இவர் காலேஜ் படிப்பதற்கு சென்னை போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அடம் பிடித்துக் கொண்டு வந்தார்.

வந்த இடத்தில் மணிவண்ணனை பார்த்து பிடித்து விட நாளாக நாளாக இருவருக்கும் நட்பை தாண்டி காதல் வந்தது.

மணிவண்ணன்க்கு அம்மா அப்பா இல்லை தாத்தா பாட்டி மட்டும் தான் கொடைக்கானலில் இருந்தனர்.

படிப்பை முடித்துக் கொண்டு வரும் போது மல்லிகா மணிவண்ணனையும் கூட்டிக் கொண்டு செல்ல

அதை பார்த்த அவரின் அப்பாவிற்கு கோவம் வந்து அவரை மொத்தமாக தண்ணி தெளித்து விட்டார் மனம்உடைந்து போன மல்லிகாவுக்கு மணிவண்ணன் தான் ஆறுதலாக இருந்தார்.

காலம் மாற அவரின் அப்பா மனதும் மாறிவிடும் என்று நினைக்க எதற்கும் மாறவில்லை மகிழன் பிறந்ததை சொல்ல அப்போதும் ஏற்றுக்கொள்ள வில்லை மகிழனின் திருமணத்தை சொல்லும் போதும் கூட வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை.

இனி தனக்கு தாய்வீடே கிடையாது என்று மல்லிகா நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் அவரின் தம்பி சேகர் அழைத்து குடும்பத்தோடு வருமாறு சொல்ல சந்தோஷத்துடன் கிளம்பிவிட்டனர்.

மல்லிகா மகிழ்ச்சியுடன் சொல்ல அதை கேட்ட சத்யாவிற்கு "சே காதலுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருகாங்க ஆனா இந்த காதல் ஜோடிக்கு பிறந்தவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான் "என்று சந்தேகம் எழ

அவனை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவள் பார்ப்பது தெரிந்தாலும் அவளை கண்டுக் கொள்ளாமல் வர அதை பார்த்தவள் "ரொம்ப தான் " என்று நினைத்து வெளியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மகிழன் கார் எடுக்க

மல்லிகாவும் மணிவண்ணனும் தூங்கி விட்டனர்.

மகிழன் ரொம்ப நேரம் கார் ஓட்டுவதை பார்த்து "டையேட் ஆ இருக்க நா கார் ஓட்டட்டுமா "என்று ஆசையாக கேட்க

அவளை திரும்பி பார்த்தவன் "கார் ஓட்ட தெரியுமா?"என்க

இவ்ளோ நாள் பேசாமல் இருந்தான் இப்போது பேசவும் மகிழ்ச்சி ஆனவள் "ம்ம் ஓட்டுவேன் ஆனா உங்க அளவுக்கு சூப்பர்ஆ ஓட்ட தெரியாது சுமாரா ஓட்டுவேன் "என்று அவனுக்கு ஐஸ் வைக்க

அதை கண்டுக் கொள்ளாதவன் காரை ஓரமாக நிறுத்தி இறங்கியவன் அவளை ஓட்ட சொல்ல

அதை கேட்டு உற்சாகமானவள் "நிஜமாவா நா டிரைவ் பண்ணட்டுமா?"என்க

"ம்ம் "என சொல்ல

அதை கேட்டவள் சந்தோசமாக கார் டிரைவ் பண்ண முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் நன்றாகவே டிரைவ் செய்தாள்.

"எப்போ கார் டிரைவ் பண்ண கத்துக்கிட்ட"என்று கேட்க

"பிரசன்னாவும் சரணும் அவங்க கார்ல சொல்லிக் கொடுத்தாங்க "என்று ரோட்டை பார்த்துக் கொண்டே சொல்ல

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் அவளுக்கு வழி சொல்லிக் கொண்டு வந்தான்.

பாதி வழி அவளும் பாதி வழி அவனும் டிரைவ் செய்து வர

எக்கார்ட் வந்ததும் அவளை பார்த்து "நல்லா டிரைவ் பண்ற சென்னைக்கு போனதும் லைசென்ஸ் எடுத்தரலாம் "என்க

அதை கேட்டவள் சந்தோசமாக தலையாட்ட அதன்பின் அவளிடம் பேச வில்லை ஆனால் அவளுக்கு அவன் பேசியதே போதும் என்று கூகிள்மேப் பார்த்து மல்லிகாவின் வீட்டின் அருகே வந்தது.

மகிழன் தூங்கிக் கொண்டு இருந்தா மல்லிகாவையும் மணிவண்ணனையும் எழுப்பி விட

அப்போதும் தான் சுத்தி பார்த்தவர் "ஏற்கார்ட் வந்துட்டோமா மகிழா இவ்ளோ தூரம் நீயே டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தியா என்னை எழுப்பி விட்டு இருக்கலாம்ல நா டிரைவ் பண்ணி இருப்பேன் "என்று மணிவண்ணன் குறைப்பட

அவரை திரும்பி பார்க்காமலே "இவ்ளோ தூரம் நா மட்டுமே டிரைவ் பண்ணிக்கிட்டு வரலபா "என்க

அவனை அவர்கள் குழப்பமாக பார்க்கவும் "சத்யா டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தா பா "என்க

அவளை ஆச்சரியமாக பார்த்த மணிவண்ணன் "உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா டா"என்க

அவளும் சிரித்துக் கொண்டே தலையாட்ட

சத்யாவை பார்த்த மல்லிகா "அப்போ எனக்கு சொல்லிக் குடு "என்க

அவரை பார்த்து மணிவண்ணன் "இவ்ளோ நாள் நா சொல்லிக் குடுக்கும் போது ஓட்டமா உன் மருமகள் சொல்லி தந்தா மட்டும் தான் ஓட்டுவியா?"என்க

அவர் கேட்டதுக்கு பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென முழிக்க

அதை பார்த்த சத்யா சிரித்து விட்டாள்.

"சரி சரி இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம் டேய் மகிழா வீட்டுக்கு போ டா "என்க

அதை கேட்டு சிரித்த மணிவண்ணன் "எப்படி சமாளிக்கறா பார்த்தியா மா "என்று சத்யாவிடம் கேட்க

அவளும் சிரிக்க இதை மல்லிகா கண்டுக் கொள்ளாதவர் போல் தலையை திருப்பிக் கொண்டார்..

அவரை பார்த்த மகிழனுக்கே சிரிப்பு வந்தது அதை காட்டிக் கொள்ளாமல் ரோட்டை பார்க்க

வெகு நாள் கழித்து நிம்மதியாக இருந்தது போல் இருந்தது.

மகிழன் வீட்டுக்குள் செல்ல அவர்களுக்காகவே அந்த நேரத்திலும் மல்லிகாவின் தாயும் அவரின் தம்பிகளும் அவர்களின் மனைவியும் நின்றுக் கொண்டு இருந்தனர்.

அவர்களை பார்த்த மல்லிகா மகிழ்ச்சியுடம் இறங்க மணிவண்ணன் அவரை தொடர்ந்து இறங்கினார்.

மல்லிகாவின் அன்னை சிவகாமி அவரை அணைத்துக் கொள்ள ரொம்ப நாள் கழித்து பார்த்ததினால் சந்தோசமாக இருக்க

இவர்களை பார்த்துக் கொண்டே மகிழனும் சத்யாவும் இறங்கினர்.

மணிவண்ணனை பார்த்து "வாங்க மாப்பிள்ளை "என்று சிவகாமி மரியாதையாக அழைக்க

அவரும் ஏற்றுக் கொண்டது போல் தலையசைய்தார் அவருக்கு என்ன பேசு பேசுவது என்றே தெரியவில்லை.

மல்லிகா அனைவரையும் நலம் விசாரித்தவர் அருகில் நின்றுக் கொண்டு இருந்தா மகிழனை பார்த்து "மா உங்க பேரன் மகிழன் "என்று அறிமுகப் படுத்த

பிறந்ததில் இருந்து இப்போது தான் அவனை பார்ப்பதால் அவனை மேல் இருந்து பார்த்தவர் அவன் கன்னத்தை பிடித்து "அப்படியே ராஜாவாட்டம் இருக்கான் "என்று உணர்ச்சி பொங்க சொல்ல

அவரை பார்த்து சிரித்தான்.

சத்யாவை காட்டி "இது உங்க பேரனோட மனைவி "என்க

அவளை பார்த்தவர் "மஹாலக்ஷ்மி மாதிரியே இருக்க டா "என்க

அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அதை பார்த்தவர்களுக்கு திருப்தி.

மல்லிகா அவரின் முதல் தம்பியின் அருகில் சென்று "இது என்னோட முதல் தம்பி பேரு சேகர் இது என்னோட ரெண்டாவது தம்பி பேரு கண்ணன் "என்று அறிமுக படுத்த மகிழன் எல்லாரையும் பார்த்து சிரித்தான்.

சேகர் அவரின் மனைவி கோதையை அறிமுகப்படுத்த கண்ணன் அவரின் மனைவி ருக்மணியை அறிமுகப்படிய்தினர்.

சிவகாமி தான் "சரி சரி பேசிக் கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது நீங்க போய் ரெஸ்ட் எடுங்க காலையில எல்லார்த்தையும் அறிமுக படுத்தலாம் "என்க

கோதை அவர்களுக்கு ஏற்பாடு செய்து வைத்து இருந்த அறையை காட்டி விட்டு சென்றார்.

மகிழன் ரூம்குள் செல்ல அவன் பின்னால் சத்யாவும் சென்றாள்.

ரூம் நல்லா விசாலமாகவும் அழகாகவும் இருந்தது.

மகிழன் டையேட் ஆக இருப்பதால் அப்படியே சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள

சத்யா முகம் துடைத்துக் கொண்டு வந்தவள் பாய் ஏதாவது இருக்குதா என்று பார்க்க

ஒன்று இல்லாததால் எங்கு படுப்பது என்று தெரியாமல் நின்றுக் கொண்டு இருக்க ஏற்கார்ட் குளிர் அவள் உடம்பை ஊசியாக குத்தியது.

அவள் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்தவன் "எதுக்கு நின்னுகிட்டே இருக்க?"என்று கேட்ட

சுத்தி பார்வை விட்டவள் "இல்ல குளிர் ரொம்ப இருக்கு பாய் வேற இல்ல அது தான் எங்க படுக்கறதுனு யோசிக்கிறேன்ங்க "என்க

அவளை பார்க்காமல் "இங்க கிழ படுத்து தூங்க முடியாது கட்டிலயே படுத்து தூங்கு "என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொள்ள

அவன் சொன்னதை கேட்டவள் ஆச்சரியமாக அவன் முகத்தை பார்த்தவள் பின்

"அடியே அவரே ஏதோ பாவம் பார்த்து சொல்லிட்டாரு இப்போ மட்டும் நீ படுக்காம அவரையே பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் மனசு மாறி கீழயே தூங்க சொல்லிருவாங்க "என்று அவளின் மனம் எச்சரிக்க

கிடைத்த வாய்ப்பை விட மனம் இல்லாமல் வேகமாக சென்று அவனுக்கு அருகில் இடம் விட்டு படுத்துக் கொண்டாள்.

கையை வைத்து முகம் மறைத்து தூங்குபவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் தூங்கிவிட்டாள்.

காலையில் எழுந்தவளுக்கு காரில் வந்ததால் உடம்பெல்லாம் வலிக்க மெதுவாக எழ பார்த்தவளை ஏதோ தடுக்க

நிமிர்ந்து பார்த்தால் மகிழன் தான் அவள் மீது கை போட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்.

அதை பார்த்தவள் அவன் முகத்தை பார்க்க அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்து அவன் கையை மெதுவாக அவன் தூக்கம் கலையதவாறு எடுத்து விட்டவள் அவனை பார்த்து சிரித்துவிட்டு குளிக்க சென்றாள்.

இதை எதையும் தெரியாத மகிழன் குளிர்க்கு இதமாக தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினான்.

ஹீட்டர் போட்டு குளித்து வந்தவள் ரெடி ஆகி கீழே செல்ல

அங்கு ஏற்கனவே மல்லிகா கோதையுடனும் ருக்குமணியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

மல்லிகாவின் முகத்தில் வெகு நாள் கழித்து உறவுகளை சந்தித்த மகிழ்ச்சி தெரிய அதை பார்த்து சிரித்துக் கொண்டு அவர் அருகில் வந்து நிற்க

"அதுக்குள்ள எழுந்துட்டுயா மா "என்று கோதை கேட்கவும்

"ஆமா அத்தை "என்க

மல்லிகா தான் சத்யாவை பார்த்து "அவளை நீ அம்மானு கூப்பிடலாம் டா " என்க

சத்யா கோதையை தயக்கமாக பார்க்க

அவளை பார்த்து சிரித்தவர் "நீ என்ன தரலாமா அப்படியே கூப்பிடலாம் இதுக்கு ஏன் தயக்கப் படற "என்க

"என்னையும் நீ அப்படியே கூப்பிடலாம் "என்று ருக்குமணியும் சொல்ல

அதை பார்த்து சிரித்தவர் "அப்போ ரெண்டு அம்மா இருகாங்க சூப்பர் அப்போ உங்க பொண்ணுக்கு என்ன ஸ்பெஷல் "என்று குறும்பாக கேட்க

அவளை பார்த்து சிரித்த ருக்குமணி "இந்த அம்மாவே உனக்கு ஸ்பெஷல் தான் டா "என்று கேலியாக சொல்ல

அதை கேட்டவள் "சிக்ஸர் அடிச்சிட்டிங்க மா "என்க

இவர்கள் பேசிக் கொள்ளவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர் மல்லிகாவும் கோதையும்.

நேரம் ஆக மணிவண்ணன் கீழே வர அவரை பார்த்து சேகரும் கண்ணனும் "மாமா இங்க வாங்க "என்று அழைக்க

அவர்களுடன் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தவர் சிறிது நேரத்திலயே கிளோஸ் ஆகிவிட்டனர்.

இவர்கள் பேசிக் கொள்ளவதை பார்த்து சத்யா எல்லாருக்கும் காபி கொடுக்க

காபி எடுத்துக் கொண்ட சேகர் "நீ ஏன் மா இதை எல்லாம் செய்யற "என்று கேட்க

"நம்ம வீட்ல நா செய்யகூடாதா பா "என்று உரிமையாக கேட்க

அவளின் உரிமை பேச்சில் "நீ செய்யாம வேற யாரு செய்வா டா "என்று வாஞ்சயுடன் சொல்ல

அதை கேட்டவளுக்கு கண் லேசாக கலங்கியது இப்போ தானே முதல் முறையா அப்பா பாசம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்கிறாள்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க

அங்கே வந்தவள் "என்ன என்னை விட்டுட்டு தனியா பாச படம் எடுக்கறிங்க "என்று கேட்டுக் கொண்டே ஒரு பெண் கண்ணன் அருகில் அமர

அவளை பார்த்து சிரித்தவர்கள் "உன்ன விட்டுட்டு ஏதாவது பண்ண முடியுமா?"என்று கேட்டு

"இது என்னோட ரெண்டாவது பொண்ணு நித்யா "என்று கண்ணன் அறிமுகம் செய்ய

அவளை பார்த்து சத்யா சிரிக்க

அதை பார்த்து "அக்கா செம அழகா இருக்கிங்க சிரிக்கும் போது "என்று சொல்ல

அவளை பார்த்து பொய்யாக முறைத்து "சிரிக்கும் போது மட்டும் தான் அழகா இருக்கேனா?"என்க

அவளை பார்த்து "அய்யா அப்போ அக்காவும் நம்ம செட்டு அப்போ ஜாலிஆ இருக்கும் "என்று சத்யாவின் கையை பிடித்துக் கொண்டவள் "நீங்க எப்படி பார்த்தாலும் அழகா இருக்கிங்க "என்க

"நீயும் தான் அழகா இருக்க "என்றாள்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க சேகரின் முத்த மகன் பிரபு இளைய மகன் கார்த்திக் வந்து விட

அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தனர்.

பிரபுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்க அதற்க்கு தான் மல்லிகாவை அழைத்து இருந்தனர்.

மகிழன் எழுந்தவன் அருகில் சத்யா இல்லாததை பார்த்து கீழே போயிருப்பாள் என்று எண்ணி குளித்து ரெடி ஆகி கீழே செல்ல

சரியாக அந்த நேரம் நித்யாவின் அக்கா சந்தியா கீழே வரும் மகிழனை பார்த்து "மாமா "என்று சத்தம் போட்டு அழைக்க

அவளை யார்என்று தெரியாதவன் மல்லிகாவை பார்க்க "கண்ணன் மாமாவோட பொண்ணு டா "என்று சொன்னதும் அவளை பார்த்து சிரித்தான்.

அவனின் கையை பிடித்துக் கொண்டவள் "செமயா ஹீரோ மாதிரி இருக்கிங்க மாமா "என்க

அவளை பார்த்து சிரித்தவன் நிமிர்ந்து பார்க்க

அங்கே நெஞ்சில் கை வைத்து நிற்கும் சத்யாதான் தெரிந்தாள் அவள் எதற்காக அப்படி நிற்கிறாள் என்று புரியாமல் பார்த்தவன் பின் சந்தியாவின் பக்கம் பார்வையை திருப்பினான்.

நித்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தா" மாமா "என்று சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க

அங்கே சந்தியா மகிழனின் கையை பிடிப்பதை பார்த்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டுவள் "அடியே அது என் ஆளு "என்று மனதுக்குள் சத்தம் போட்டாள்.

சந்தியா மகிழனின் கையை உரிமையுடன் பிடித்து இருப்பதை பார்த்து குழந்தை தன் கை பொம்மையை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது

சத்யாவின் கண்ணில் லேசாக பொறாமை எட்டி பார்த்ததோ!...



நிமிர்வாள்….
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 16


"சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத

வாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா

அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட

பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்

சொல்லுக்கண்ணம்மா

வானைத்தாங்கும் மரங்களெல்லாம்

அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா



அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே"




சந்தியா மகிழனின் கையை பிடித்து பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சத்யா நெஞ்சில் கை வைத்து நிற்க

அவளை இன்னும் கலவரப்படுத்துவது போல் "மாமா யூ லூக்கிங் ஹாண்ட்சம் "என்க

அதை கேட்டவள் ஏதே என்று வாயை பிளக்க

அதை பார்த்த நித்யாவுக்கு சிரிப்பாக வந்தது.

சத்யாவுக்கு சந்தியா மகிழனை பார்த்து ஹாண்ட்சம் சொன்னது எல்லாம் பெரிதாக தெரியவில்லை

மகிழன் அதை எல்லாம் கேட்டு சும்மா இருப்பது தான் அவளுக்கு நெஞ்சு வலி வரும் போல் இருந்தது.

இப்போது சந்தியா சொன்ன வார்த்தையை காலேஜில் யாராவது சொல்லி இருந்தால் லெக்சர் எடுத்தே கொன்று இருப்பான் ஆனால் இப்போது அமைதியாக இருப்பதை பார்த்து சத்யாவின் வாயில் ஈ போயிட்டு வரும் அளவுக்கு திறந்து இருந்தாள்.

மகிழன் தீடிரென்று சந்தியா கையை பிடிக்கவும் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவன் பின் சத்யாவின் முகத்தில் தெரியும் பதட்டம் எல்லாம் அவனுக்கு ஒரு விதஸ்வரசியம் தர அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சந்தியாவை பற்றி எல்லாருக்கும் தெரியும் என்பதால் பெரியவர்கள் சின்னவர்களின் சேட்டையை பார்த்தும் பார்க்காத மாதிரி காட்டிக் கொண்டனர்.

மகிழனுக்கு போதும் இதற்கு மேல் வேண்டாம் என்று எண்ணி சந்தியாவின் கையை நகர்த்த அவனின் முயற்சியை பார்த்து அவள் விட்டவள் திரும்பி சத்யாவை பார்க்க

அவள் இன்னும் அதே பொசிஷனில் தான் நின்றுக் கொண்டு இருந்தாள் அதை பார்த்த சந்தியா "ஹே நான் தான் வின் பண்ணேன் "என்று கூச்சலிட

அதில் நிகழ்வுக்கு வந்த சத்யா என்னடா நடக்குது இங்க என்று பார்க்க

மகிழனும் அப்படி தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நித்யாதான் "போ "என்று சிணுங்கிக் கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த பிரபு "ஏ வாலுங்களா இவங்களையும் விட்டு வைக்கலையா நீங்க?" என்று கேட்டுவிட்டு

மகிழனிடம்"இவங்க ரெண்டு பேரும் இப்படி தான் "என்க

மகிழனுக்கும் சத்யாவுக்கும் ஒன்று புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தனர்.

இவர்கள் முகத்தை பார்த்த சந்தியா "மாம்ஸ் நீங்க வரும் போது பாத்தோமா அது பார்த்து எங்களுக்குள்ள ஒரு டவுட் "என்று நித்யாவை காட்டியவள் "நா உங்க கைய பிடிச்சுகிட்டு இருந்தா சத்யா அக்கா பொஸ்ஸசிவ்ஆ பார்ப்பாங்கனு நா சொன்னேன் அதுக்கு இவ சத்யா அக்கா அப்படி எல்லாம் பார்க்க மாட்டாங்க அக்கா ரொம்ப மாடர்ன் அப்படினு சொன்ன அதுனால நாங்க ரெண்டு பேரும் ஐநூறு ரூபா பெட் கட்டினோம் நா தான் ஜெயிச்சேன் "என்று சந்தியா குதிக்க

அவள் சொன்ன பின் தான் சத்யாவுக்கே ஓவர்ஆ ரியாக்ட் பண்ணிட்டேன் போல இருக்கு என்று நித்யாவை பார்க்க

அவள் இவளை பார்த்து முறைத்து "போங்க அக்கா உங்கனால தான் தோத்துட்டேன் "என்க

அவளை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தவள்

சந்தியாவை பார்க்க "உங்க ரூட்டுக்கு நா வர மாட்டேன் பயப்படதிங்க " என்று மகிழன் முன் சொல்ல

அதை கேட்ட சத்யாவுக்கு தான் போச்சு நல்லா கோர்த்து விட்டுட்டாங்க சும்மாவே ஆடுவாரு இப்போ சலங்கை வேற காட்டிவிட்டுட்டாங்க "என்று புலம்பிக் கொண்டு மகிழனை பார்க்காமல் இருந்தாள்.

இவர்கள் செய்ததை பார்த்த மகிழனுக்கு சிரிப்பாக தான் இருந்தது கோவம் வரவில்லை இதுவே வேற யாராவது இப்படி செய்து இருந்தால் அவர்களை தோரணம் கட்டி தொங்க விட்டு இருப்பான்

ஏனோ இவர்களிடம் கோவம் வர வில்லை சின்ன வயதில் இருந்து உடன் பிறந்தவர்கள் இல்லாமல் தனியாக வளர்த்தவனுக்கு இவர்களின் சேட்டையை பார்த்தால் குட்டி தங்கை போல தோன்ற

சந்தியாவின் முடியை கலைத்து விட்டவன் நித்யாவின் சார்பாக அவளுக்கு ஐநூறு ரூபா கொடுத்து விட்டு பிரபு கார்த்திக் உடன் வெளியே செல்ல

அவன் போவதை வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தால் சத்யா

இவர்கள் செய்த சேட்டைக்கு அவனிடம் இருந்து திட்டு வரும் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு நிச்சயமாக இப்படி ஒரு நடவடிக்கையை எதிர்ப்பார்க்க வில்லை

அவன் போன பின் அவள் அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டு இருக்க

அவள் அருகே வந்த சந்தியா "மாம்ஸ் போய் ரொம்ப நேரம் ஆச்சு "என்று கலாய்க்க

அவளை பொய்யாக முறைத்து பார்த்தவள் பின் சந்தியா காதை பிடித்து மணிப்பு கேட்பது போல் சைகை செய்யவும் சிரித்துவிட்டாள்.

மூவருக்கும் நல்ல புரிதல் கொண்ட நட்பு உருவானது

சந்தியாவையும் நித்யாவையும் பார்த்தவள் "எனக்கு ஒரு டவுட் "என்க

அவளை பார்த்தவர்கள் "என்ன?"என்று கேட்க

"வீட்ல யாராவது ஒருத்தங்க தான் சேட்டை பண்ணுவாங்கனு சொல்லுவாங்க ஆனா எப்படி நீங்க ரெண்டு பேரும் சேட்டை பண்றிங்க "என்று கேட்க

அதை கேட்டவர்கள் அவளை முறைத்து பார்க்க

"சும்மா கேட்டேன் "என்று சமாளித்து வைத்தாள்.

பின் கோதை எல்லாரையும் சாப்பிட அழைக்க ஆண்கள் முதலில் சாப்பிட்டுவிட்டு செல்ல பின் பெண்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

ரொம்ப நேரம் வீட்டிலேயே இருப்பதால் போர் அடித்தது சந்தியாவுக்கு

"பேசாம நாம எல்லாம் ஊர் சுத்தி பார்க்கலாமா?"என்று பிரபுவிடம் கேட்க

அவனோ "போய் அப்பா கிட்ட கேளு "என்று அவளை மாட்டிவிட

அவனை முறைத்து பார்த்தவள் "நீ எல்லாம் ஒரு அண்ணனா? "என்று கேட்க

அவனோ கூலாக "இல்லையே "என்று சொல்லி விட அவனை முறைத்து பார்த்தாள்

இவர்களின் சண்டையை பார்த்த நித்யா " நானே போய் கேட்கறேன் "

என்று சொல்லி விட்டு நகர

இவர்களை பார்த்துக் கொண்டு இருந்தா சத்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது

சின்ன வயதில் இருந்து உடன்பிறப்பு இருந்தும் தனியாக இருந்தவளுக்கு இவர்களின் சண்டை சேட்டை எல்லாம் ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்தது.

பெரியவர்கள் எல்லாம் விஷசத்துக்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க

நித்யா சேகர் முன் நின்றவள் "பெரியப்பா சத்யா அக்கா இப்போ தான் முதல் தடவ நம்ம ஊருக்கு வந்து இருகாங்க அதுனால நாங்க வெளியில சுத்தி பாக்குறோம் "என்க

அவருக்கு அதுவே சரியென்று பட்டது அதனால் பிரபுவையும் கார்த்திக்கையும் உடன் போக சொல்ல

ஆறு பேரும் வண்டியில் ஏறிக் கொண்டனர்.

பிரபு வண்டியை எடுக்க கார்த்திக் அவன் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

சந்தியா நித்யா சத்யாவும் ஏறிக் கொள்ள மகிழனும் சத்யாவின் அருகில் அமர

மூன்று பேர் அமரும் சீட்டில் நான்கு பேர் அமர்ந்தாதால் இடம் பற்றகுறையினால் சத்யாவும் மகிழனும் நெருங்கி அமர வேண்டிய கட்டாயம்.

மகிழன் அவளை இடித்துக் கொண்டி அமர சத்யாவுக்கு வேர்த்துக் கொட்டியது அவனின் முதல் நெருக்கம்.

வளைவுகளில் வண்டியில் போய் கொண்டு இருக்கும் போது கிட்ட தட்ட சத்யா மகிழனின் மடியில் இருப்பது போல் இருக்க

மகிழனுக்கு கொஞ்சம் கம்போர்டபுளாக இல்லாததால் சத்யாவை பார்த்து "எனக்கு அன்கம்போர்டபுள்ஆ இருக்கு அதுனால இப் யூ டோன்ட் மைன்ட் "என்று சொல்லி அவள் இடுப்பில் கை வைத்து சீட்டில் சாய்ந்து அமர

சத்யாவுக்கு தான் ஒரு நிமிடம் மூச்சு விட மறந்தாள் பின் அவசரமாக சந்தியா நித்யாவை திரும்பி பார்க்க அவர்கள் இவர்களை கண்டுக் கொள்ளாமல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர அதில் நிம்மதி அடைந்தவள் மகிழனை பார்க்க

அவன் சகவாசமாக மொபைல் பார்த்துக் கொண்டு வந்தான்.

சத்யாவினால் தான் அமைதியாக இருக்க முடிய வில்லை அவனின் கை இடுப்பில் இருக்க நெளிந்துக் கொண்டே இருந்தாள்

அவளை பார்த்த மகிழன் "இப்போ எதுக்கு நெளிஞ்சுக்கிட்டே இருக்க எனக்கு டிஸ்டர்ப்ஆ இருக்கு "என்று மறுபடியும் மொபைல் பார்க்க

அவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது எப்போடா போக வேண்டிய இடம் வரும் என்று காத்துக் கொண்டு இருந்தாள்.

அவனின் முதல் நெருக்கம் ஆனால் அவளால் அதை அனுபவிக்க முடியவில்லை அவர்களை சுத்தி இத்தனை பேர் இருக்க முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கஷ்டப்பட்டு முகத்தை சீராக வைத்துக் கொண்டாள்

ஆனால் சத்யாவுக்கு தோன்றியது போல மகிழனுக்கு இல்லை போல அவன் அருகில் இருந்தவளை கண்டுக் கொள்ளாமல் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் வர வேண்டிய இடம் வந்து விட மகிழன் கையை எடுத்துக் கொண்ட பின் தான் அவளால் ஒழுங்காக மூச்சு விட முடிந்தது.

இறங்கியவர்களை தொடர்ந்து அவளும் இறங்க

"இது எந்த இடம்?"என்று சந்தியாவிடம் கேட்க

"பகோடா பாயிண்ட் "என்றாள்

சுற்றி மலைகள் இருக்க அதை பார்த்த சத்யாவுக்கு ஒரு வித உற்சாகம் தொற்றிக் கொள்ள அந்த இடத்தை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் "இதோட ஹிஸ்டரி சொல்லு "என்க

சந்தியாவுக்கு ஹிஸ்டரி பற்றி சொல்வதில் அதிக ஆர்வம் இப்போது சத்யா கேட்டுவிட அவளுக்கு தெரிந்ததை பற்றி கூறினாள்.


பகோடா புள்ளி

இயற்கை ஆர்வலர்கள், சாகசம் தேடுபவர்கள், புகைப்படக்காரர்

பகோடா புள்ளியைப் பார்வையிடவும்


ஏற்காட்டின் மலைப்பாங்கான அழகும் இயற்கையான முறையீடும் ஒவ்வொரு பார்வையாளரையும் அதன் சுற்றுப்புற பாறைகள் மற்றும் நகரக் காட்சிகளின் பரந்த காட்சிகளை வழங்கும் அதன் பார்வை புள்ளிகள் மூலம் தொடுகிறது. பகோடா பாயிண்ட் அல்லது பிரமிட் பாயிண்ட் கண்களுக்கு அற்புதமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன கிளிக்குகளை வழங்குகிறது. சேலம் நகரம், காக்கம்பாடி கிராமம் மற்றும் மூழ்கியிருக்கும் பாறைகளின் அழகிய காட்சிகளுக்காக சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை விரும்புகிறார்கள்.



பிரமிட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மற்றும் கோவில் கோபுரங்களை ஒத்த நான்கு கற்களின் மேடுகள் இருப்பதால் இந்த இடத்திற்கு அதன் பெயர் கிடைத்தது. உள்ளூர்வாசிகளால் கட்டப்பட்டதாக அறியப்படும் பகோடா பாயிண்ட், கற்களுக்கு இடையில் ஒரு ராமர் கோயிலைக் கொண்டுள்ளது, இது மலையாளிகளிடையே மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படும் இரண்டு அயனி கற்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயமாகும். உயரமான பாறைகள் மறுக்கமுடியாத வகையில் ஒவ்வொரு பாறை ஏறுபவர்களின் மகிழ்ச்சியாகும்.


பிரமிட் புள்ளி அல்லது பகோடா முனை ஏற்காடு மலைகளின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

இது சில நேரங்களில் ஜென்ட்ஸ் கடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது லேடிஸ் சீட்டை விட சிறந்த பார்வை என்றாலும், அதன் மேல் பயணம் மிகவும் ஆபத்தானது, எனவே இது அரசு பாதுகாக்கப்பட்ட பகுதி


சந்தியா சொன்னதை கேட்டவள் "செமயா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு " என்றாள்.

மகிழனும் சந்தியா சொல்வதை கேட்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நேரம் ஆக கிளம்பலாம் என்று பிரபு சொல்ல

"எல்லாரும் ஒரு செலஃபீ எடுத்துக்கலாம் "என்று நித்யா சொல்ல

சரி என்று பிரபு செலஃபீ எடுக்க மகிழனின் அருகில் நின்று இருந்தா சத்யாவை பார்த்த சந்தியா "மாம்ஸ் அக்கா மேல கைய போட்டுக்கோங்க "என்று சொல்லி விட்டு போட்டோக்கு போஸ் கொடுக்க

எல்லார் முன் அவர்களின் பிரச்சனையை காட்ட விரும்பாத மகிழன் சத்யாவின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க

சத்யா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க பிரபு அப்டியே கிளிக் செய்தான்.

பின் இரவு நேரம் நெருங்க வீட்டுக்கு சென்றனர்.

அந்த நாள் சத்யாவின் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்றானது.

இரவு சாப்பிட்டு அவர் அவர் அறைக்கு சென்று தூங்க

வெளியில் சுற்றி வந்ததால் மகிழன் படுத்தவிடன் தூங்கி விட

சத்யா அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்

எப்போதும் கோவமாகவும் சிடுசிடுப்பாகவும் இருக்கும் மகிழனை தான் அவள் பார்த்து இருக்கிறாள்

ஆனால் இன்று அமைதியாக இயற்க்கையை ரசித்துக் கொண்டும் சந்தியாவின் கேலி பேச்சுக்கு கோவப்படாமல் சிரித்து அவளுக்கு சமமாக பேசும் மகிழனை இன்று தான் பார்க்கிறாள் அதுவும் சத்யாவிடம் எரிந்து விலாமல் திட்டாமல் என்று எண்ணிக் கொண்டு இருந்தவள் காரில் அவன் இவளின் இடையையில் கை வைத்தது நியாபகம் வர அவரை வெட்கத்துடன் பார்த்தவள் "எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு மகிழன் சார் ஆனா எப்படினு தான் எனக்கு தெரியல ஒருவேள மஞ்சகயிறு மேஜிக்ஆ இருக்குமோ "என்று நினைத்தவள்

"எப்டியோ நா உங்கள என் புருஷனா ஏத்துகிட்டேன் அதே மாதிரி நீங்களும் கண்டிப்பா ரோஷினிய மறந்துட்டு என்ன உங்க மனைவியா ஏத்துக்குவிங்க எனக்கு நம்பிக்கை இருக்கு "என்று மெதுவான குரலில் சொல்லியவள் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே தூங்கினாள்.

இவளின் மனதின் மகிழன் வந்த மாதிரி மகிழன் மனதிலும் சத்யா இருப்பாளா….




நிமிர்வாள்….

சாரி எனக்கு ஏற்கார்ட் பத்தி அவ்ளோவா தெரியாது தெரிஞ்ச வரைக்கும் சொல்லி இருக்கேன்
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 17


"நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே"




அடுத்த நாள் காலையில் மகிழன் கண் விழிக்கும் போது பார்த்தது குழந்தை போல் தூங்கிக் கொண்டு இருந்த சத்யாவை தான்.

எப்போதும் நேரமாக எழுபவள் இன்று ஏனோ இன்னும் தூங்கிக் கொண்டு இருக்க மகிழனுக்கு அது வசதியாக இருந்தது.

ஒருவர் தூங்கும் போது அவர்களுடைய உண்மையான குணம் தெரியும் என்பார்கள்

மகிழன் சத்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க திடிரென்று என்ன நினைத்தனோ எழுந்து பாத்ரூம் சென்று விட்டான்.

அவன் அவளை பார்த்தது தெரியாமல் சத்யா நன்றாக குளிருக்கு இதமாக பெட்ஷீடை இழுத்து போத்திக் கொண்டு தூங்கினாள்.

மகிழன் வெளியே வரும் போது சத்யா தூங்கிக் கொண்டு இருக்க "இவ இவ்ளோ நேரம் தூங்க மாட்டளே கிளைமேட் ஒத்துக்களையோ என்று நினைத்து

அவள் அருகில் சென்று நெற்றியை தொட்டு பார்க்க உடம்பு சூடாக இல்லாததால் "பிவர் இல்ல நார்மல்ஆ தான் இருக்க "என்று நினைத்து கையை எடுக்க போக

தூக்கத்தில் அவன் கையை பிடித்து அணைத்துக் கொண்டு தூங்க

அவள் திடிரென்று இப்படி செய்வாள் என்று எதிர்ப்பார்க்காதவன் பேலன்ஸ் தவறி அவள் அருகில் விழுந்தான்.

அவள் முகம் அவனுக்கு மிக அருகில் இருக்க அவனுக்கு அவன் கையை அவளிடம் இருந்து எப்படி பிரிப்பது என்று தெரியாமல் இழுக்க

அதில் இன்னும் நன்றாக அவள் நெஞ்சோடு அவன் கையை வைத்துக் கொள்ள

அவனுக்கு தான் அவளுடைய செயல் அவஸ்தையாக இருந்தது அவனால் கையை அசைக்க முடியவில்லை

எங்கே கையை அசைத்தால் படாத இடத்தில் பட்டு விடுமோ என்று எண்ணி

"சத்யா "என்று அழைக்க முதலில் கண்டுக் கொள்ளாமல் தூங்கியவள் பின் அவன் குரல் மிக அருகில் கேட்கவும் கண் விழித்தாள்.

மகிழனின் முகம் அருகில் தெரிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனின் பார்வை அவளை காந்தம் போல இழுக்க அவன் முகத்தையே எவ்ளோ நேரம் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க

"எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துக் கிட்டு இருக்கலாம்னு இருக்க "என்க

அதில் "வாழ்க்கை முழுசும் "என்று அவளை அறியாமல் சொல்லிவிட

அதில் அவளை பார்த்தால் அவள் இன்னும் அவன் முகத்தை தான் ஏதோ குழந்தை ஐஸ்கிரீம் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு இருக்க

"இப்போ நீ கனவுலகத்துல இருந்து நிஜத்துக்கு வரியா "என்று காட்டமாக கேட்க

அதில் சட்ரென்று நிகழ்காலத்துக்கு வந்தவள் அவனை புரியாமல் பார்க்க

"என் கைய விட்ட நா போவேன் "என்க

அவளோ அவன் சொல்வதை புரியாமல் அவன் பார்க்கும் திசையை பார்த்தவளுக்கு தூக்கிவாரி போட்டது

சட்ரென்று அவன் கையை விட அவனோ இதற்காக காத்துக் கொண்டு இருந்தது போல வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றதை பார்த்தவள் "அடியே லூசு இப்படியா அவங்க கைய புடிச்சு வைப்ப அதும் எந்த இடத்துல "என்று முகத்தை மூடிக் கொண்டவள் "என்ன நினைச்சு இருப்பாங்க "என்று புலம்பிக் கொண்டு இருந்தவள்

"நா எதுக்கு அவர் கைய பிடிச்சேன் "என்று யோசித்து பார்த்தவள் பின் காலையிலயே திட்டாமல் சென்றானே அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கோ என்று நினைத்து குளிக்க சென்றாள்.

அவளுக்கு அவள் அவன் கையை பிடித்து வைத்து இருந்ததை நினைத்தாலே கூச்சமாக இருக்க அதனாலயே அவள் முகம் சிவந்து போனது.

கீழே வந்த சத்யாவை பிடித்துக் கொண்ட சந்தியா அவள் முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவள் "என்ன மேடம் முகம் எல்லாம் சிவந்து போய் ஒரு மாதிரி தேஜஸ்ஆ இருக்கிங்க வாட்ஸ் தி மேட்டர்?"என்று கேட்க

அங்கு காபி குடித்துகி கொண்டு இருந்தா மகிழன் சந்தியா சொன்னதும் சத்யாவின் முகத்தை பார்க்க அது சிவந்து அவளுக்கொரு தனி அழகை கொடுத்தது.

சந்தியா கேட்டதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துகி கொண்டு இருக்க

சந்தியா பேசியதை கேட்ட ருக்குமணி அவள் காதை திருகி போய் வேலைய பாரு டி என்று துரத்திவிட்டு

சத்யாவை பார்த்தவள் "காபி குடுக்கட்டுமா?"என்று கேட்க

அவர் முகத்தை பார்க்க முடியாதவள் தலையை குனிந்துக் கொண்டவள் சரி என்னும் விதமாக தலையாட்ட

அவளின் அவஸ்தையை புரிந்துக் கொண்டுவர் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார்.

சந்தியா கேட்டதும் சத்யா வெட்கப்பட்டதை பார்த்தவர்கள் கணவன் மனைவி உறவு என எதையோ நினைத்துக் கொண்டார்கள்.

இவர்களை பற்றி தெரிந்த மல்லிகா "ரெண்டு பேரும் ஒன்னு சேர்த்துட்டாங்களோ "என்று மகிழ்ச்சியாக மகிழன் முகத்தை பார்க்க

அது எப்போதும் போல இருக்க "இவன் முகத்தை பார்த்து எதையும் கண்டுப்பிடிக்க முடியாது போல இருக்கே "என்று நினைக்க

மல்லிகா குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்து மகிழன் அவரை "என்ன?"என்பது போல பார்க்க

சட்ரென்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

அனைவரும் அவர்களை பார்ப்பது போலவே மகிழனுக்கு தோன்ற "இவங்க வேற என்ன நடந்துச்சுனு தெரியாம ஏதோ நினைச்சுக்கறாங்க இவளும் அவங்களுக்கு ஹின்ட் குடுக்கற மாதிரி வெட்கப்பட்டுகிட்டு நிக்கற "என்று நினைத்தவன்

இதுக்கு மேல முடியாது என்று "சத்யா "என அழைக்க

அவளை தவிர எல்லாரும் அவனை பார்க்க இதை பார்த்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது

"சத்யா மேல என்னோட பவர்பேங்க் எங்க வைச்சேன்னு தெரியல வந்து எடுத்துக்குடு "என்று முன்னால செல்ல

அவனை தொடர்ந்து சென்றாள்.

அவன் முகத்தை பார்க்க கூச்சமாக இருக்க தலையை குனிந்துக் கொண்டே சென்றாள்.

முன்னால் சென்றவன் ரூம்குள் வந்ததும் நிற்க

அவன் நின்றது தெரியாமல் அவன் மீது மோதிக்கொண்டாள்.

அவள் மோதிய உடன் திரும்பி பார்த்தவன் அவள் தலை குனிந்து இருப்பதை பார்த்து "இப்படி நிலத்தையே பார்த்துக் கிட்டு வந்த முன்னாடி என்ன நடக்குது எப்படி பார்ப்ப "என்க

அவளோ அப்போதும் நிமிராமல் இருக்க அதை பார்த்தவன் "இப்போ நீ நிமிர்ந்து பார்க்க போறியா இல்லையா " என்று குரலை உயர்த்தவும்

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க

முகம் சிவந்து கிடக்க

"இன்னைக்கு முகத்துக்கு ஏதாவது போட்டுட்டாள இவ்ளோ ரெட்டிஷ்ஆ இருக்கு "என்று நினைத்தவன்

"இப்போ எதுக்கு நீ எல்லார் முன்னாடியும் இப்படி இருக்க " என கேட்க அவளுக்கோ வாயில் இருந்து வார்த்தைகளே வர வில்லை காத்து தான் வந்தது.

முதலில் அவள் ஏன் இப்படி இருக்காள் என்று புரியாமல் பார்த்தவன் பின் காலையில் நடந்ததை நினைத்து இதுக்காக இப்படி இருக்க என்று அவள் முகம் பார்க்க அவள் இன்னும் அப்படியே இருக்க "இதுக்கே இப்படின்னா இன்னும் நிறைய இருக்கே அப்போ என்ன பண்ணுவ உன் முகத்தை பார்த்தால் ஊருக்கே தெரிஞ்சுரும் போல இருக்கு "என்று சாதாரணமாக அவன் சொல்லி செல்ல

அவளுக்கு அவன் வார்த்தைகள் இன்னும் அவஸ்தை தந்தது.

இதுவரை இப்படி பட்ட பேச்சை கேட்டதாவள் இன்று கேட்க அவளுக்கு ஏதோ மாதிரி இருந்தது கொஞ்சம் அவளை சமாளித்துக் கொண்டு கீழே செல்ல

அவள் வருவதற்காகவே காத்துக் கொண்டு இருந்தா சந்தியாவும் நித்யா ஓட்டு தள்ள அதில் இன்னும் சிவந்து போனாள்.

சத்யாவின் சங்கடமான முகத்தை பார்த்த கோதை "போதும் போதும் அவ கூட பேசுனது இன்னைக்கு எங்கையும் வெளியில போகலையா? "என்று சந்தியாவிடம் இருந்து சத்யாவுக்கு விடுதலை அளித்தார்.

"நல்லவேள நியாபக படுத்தினிங்க "என்றவள்.

பிரபுவை அழைக்க அவனோ வேலை இருப்பதால் வரவில்லை என்று சொல்லி விட கார்த்திக்கை அழைத்துக் கொண்டு சென்றனர்.

நேற்று போல் இல்லாமல் கார்த்திக் அருகில் மகிழன் அமர்ந்துக் கொள்ள சத்யாவுக்கு தான் நேற்று போல் இருந்து இருக்கலாமே என்று எண்ணினாள்.

"இன்னைக்கு எங்க போறோம் கார்த்திக் "என்று மகிழன் கேட்க

"கிளியூர் பால்ஸ் போறோம் மகிழா "என்க

சரி என்றவன் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான்.

பின்னால் இருந்த சத்யா தான் அடிக்கடி முன்னால இருந்த கண்ணாடியை பார்த்து "அவர் என்னை பார்க்கிறார "என்று நோட்டமிட்டுக் கொண்டு இருந்தாள்.

அவன் அவளை பார்க்கதாதில் வருத்தம் கொண்டவள் பின் கொஞ்ச நாள்ல சரி ஆகிரும் என்று மனசை தேத்திக் கொண்டு வந்தாள்.

அங்கு சென்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி வாங்கி விட்டு சென்றார்கள்.


ஏற்காடு ஏரியின் நீர் கிளியூர் பள்ளத்தாக்கிற்கு 300 அடி கீழே விழுகிறது, இதனால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. நீர்வீழ்ச்சியை அடைய பயணிகள் 200-250 படிகள் கீழே நடக்க வேண்டும். அந்த இடத்திற்கு வருகை தரும் வயதானவர்களுக்கு படிக்கட்டுகளுக்கு அருகில் போதுமான இருக்கை மற்றும் ஓய்வு இடங்கள் உள்ளன. குடும்பம் அல்லது குழு பயணத்திற்கு கிளியூர் ஒரு நல்ல தேர்வாகும். குளிர்ந்த காலநிலையுடன் கூடிய சுத்தமான நீர் அதை ஒரு இலாபகரமான பயணமாக ஆக்குகிறது.


மலையேற்றத்தின் கடைசிப் பகுதியை இருபது படிகள் மூலம் மூடலாம், இது பார்வையாளரை நீர்வீழ்ச்சியை அடைய உதவுகிறது.

ஏற்காடு ஏரியிலிருந்து 2.5 கிலோமீட்டர் தூரம் ஓடவோ அல்லது மலையேறவோ முடியும், ஆனால் கடைசி 500 மீட்டர் தூரத்திற்கு வேறு எந்த போக்குவரத்து வசதியும் இல்லாததால் பாதத்தில் தான் செல்ல முடியும்.

சிறிது தொலைவில் அமைந்துள்ள பீர் குகை முருகனின் இயற்கையான உறைவிடம் என்று நம்பப்படுகிறது.

ரோஜா பூங்கா ஏற்காடு



நீர்வீழ்ச்சியை பார்த்த சத்யா ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இது தான் முதல் முறை அவள் நீர்வீழ்ச்சி பார்ப்பது மேலே இருந்து வரும் நீரை பார்த்துக் கொண்டு இருக்க

மகிழன் அவள் பின்னால் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

அங்கு நிறைய பேர் வந்து இருக்க அதில் ஒருவன் சத்யாவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

சத்யா நெற்றியில் குங்குமம் வைக்காததால் அவளுக்கு திருமணம் ஆனது தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது.

சத்யாவை பார்ப்பவனுக்கு அவள் திருமணம் ஆனவள் என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க

முதலில் அவனை கவனிக்காத மகிழன் பின் அவன் சத்யாவையே பார்ப்பது தெரிந்து

சத்யாவை திரும்பி பார்க்க அவ்ளோ அவளை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீரையே பார்த்துக் கொண்டு இருக்க

அவளை முறைத்து பார்த்தவன் "சுற்றி என்ன நடக்காதுனு தெரியாம அப்படி என்ன வேடிக்கை பாக்கற "என்று கோவமாக முனங்கியவன்

அந்த பையனை முறைத்துக் கொண்டே சத்யாவின் கையை பிடித்துக் கொள்ள

இதில் உஷாரான அந்த பையன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தா சத்யா திடிரென்று மகிழன் கையை பிடித்துக் கொள்ளவும் அவனை பார்க்க அவன் பார்வையோ அந்த பையன் இருக்கும் பக்கம் இருக்க

"அப்படி என்ன பாக்கறாங்க "என்று இவளும் பார்க்க

இவள் பார்க்கும் நேரம் அந்த பையன் நகர்த்தது விட்டதால் அவளுக்கு ஒன்றும் தெரியாமல் "அங்க ஒன்னுமே இல்லையே அப்புறம் எதுக்கு அங்கையே பார்த்துக் கிட்டு இருகாங்க "என்று புரியாமல் பார்க்க

அவள் பார்ப்பதை அறிந்து "நெத்தியில குங்குமம் வைக்க மாட்டியா? "என்று கேட்க

அவன் கேட்ட பின் தான் வைக்காமல் வந்தது நியாபகம் வர

"வைக்க மறந்துட்டேங்க "என்க

"இனி மறக்காம வைச்சுக்கோ "என்று சொல்லி அவள் கையை பிடித்துக் கொண்டு செல்ல

இவர்களை பார்த்துக் கொண்டு இருந்த நித்யா "பார்த்தியா சந்தியா மாம்ஸ் எவ்ளோ பொறாமைனு பேசாம நானா மாமா வைச்சு பெட் கட்டி இருக்கலாம் "என்று சந்தியாவிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.

சத்யாவுக்கோ அவன் கையை பிடித்துக் கொண்டு வந்தது கவனத்திற்கே வர வில்லை எங்கே அவள் தான் இயற்க்கையை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாளே…




நிமிர்வாள்…



சின்ன யூடி தான் நீங்க ரெண்டு வேணும்னு கேட்டாதல ஸ்பீட்ஆ இவ்ளோ தான் டைப் பண்ண முடிஞ்சது..
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 18



இரண்டு நாட்கள் சின்னவர்கள் ஊரை சுற்றி பார்க்க

கல்யாண நாள் நெருங்கிக் கொண்டு இருந்ததால் அன்று பெரியவர்களுக்கு உதவியாக இருக்க வீட்டிலேயே இருந்தனர்.

சேகரும் கண்ணனும் தூரத்து உறவினர்களுக்கு போன் செய்து திருமணத்திற்கு அழைக்க அதை பார்த்துக் கொண்டு இருந்த சத்யாவுக்கு இத்தனை உறவுகளா என்று ஆச்சரியமாக இருந்தது

சத்யா அவள் வீட்டில் இருக்கும் போது உறவினர்கள் வந்ததும் இல்லை இவள் யார் வீட்டுக்கும் போனதும் இல்லை

மரகதத்தின் வாய்க்கு பயந்தே அவள் வீட்டுக்கு யாரும் வர மாட்டார்கள்

அதனால் இவர்களை பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது.

அவர்களையே பார்த்துக் கொண்டு இருக்க அப்போது அவளுக்கு நந்தினி வீடியோ கால் செய்ய அப்போது தான் இரண்டு நாட்களாக அவர்களிடம் பேசாதது நியாபம் வந்தது.

கால் அட்டென் செய்ய "ஏன் டி போன ஒரு கால் கூட பண்ண மாட்டியா?" என்று எடுத்தவுடன் கேட்க

"இல்ல டி இங்க நிறைய பேர் இருக்கவும் மறந்துட்டேன் "என்க

அதை கேட்ட நந்தினிக்கு கடுப்பாக இருந்தது.

சின்ன வயதில் இருந்தே சத்யா மீது நந்தினிக்கு பொஸ்ஸசிவ் அதிகம் இவளை விட்டு சத்யா யாருடனும் அதிக நேரம் பேசினால் கோவம் வரும் அப்படி இருக்க இவர்களை மறந்தேன் என்று சத்யா சொல்லவும்

"ஓ எங்கள மறக்குற அளவுக்கு அங்க பழகிட்டியா?"என்று கேட்க

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சத்யா முழிக்க

"ஏ போன் குடு எப்போ பாத்தாலும் அவள வம்பிழுத்துக்கிட்டே இருக்கறது உனக்கு வேலையா போச்சு "என்று சரண் அவளிடம் இருந்து வாங்கி

"எப்படி இருக்க?"என்று கேட்க

"அதெல்லாம் எங்க அக்கா சூப்பர்ஆ இருகாங்க " என்று சந்தியா ஆஜர் ஆக

அவளை யார் என்று தெரியாமல் சத்யாவிடம் கண்ணால் கேட்க

அதை பார்த்த சந்தியா"நா யாருனு என்கிட்டயே கேட்கலாம் "என்க

முன்னபின்ன தெரியாத பெண்ணிடம் சரண் பேச மாட்டான் எனவே சந்தியா கேட்டதுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க

"ஏன் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டிங்களோ?"என கேட்க

அவன் பதில் சொல்ல தெரியாமல் இருக்க

"சும்மா இரு சந்தியா "என்றவள் சரணை பார்த்து "இவ அவரோட மாமா பொண்ணு டா எனக்கு தங்கச்சி முறை "என்க

அவளை பார்த்து சிரித்து வைத்தான்

அதை பார்த்து "ஓ தெரிஞ்ச பொண்ணுனா மட்டும் தான் சிரிப்பிங்களா?"என கேட்க

அந்த நேரம் "யாரு டா அது உன்னையே பேச விடாம பண்றது?"

என்று நவீன் வர

அவனை பார்த்தவள் "நீங்க நவீன் தான "என்க

அவள் கேட்டதை பார்த்து "பார்ரா இந்த நவீன் ஏற்கார்ட்ல தெரியற அளவுக்கு பேமஸ் ஆகிட்டேனா "என்று பெருமையாக கேட்

"சே சே இங்க நிறைய வகை சாப்பாட பார்த்துட்டு அக்கா தான் நீங்க இல்லையேனு வருத்தப்பட்டாங்க "என்க

அதை கேட்ட நந்தினி "அங்கையும் சாப்பாட பார்த்து தான் இவன் நியாபகம் வருதா " என அவனை கேலி செய்ய

"ஏன் சத்யா சாப்பாட்ட பாத்து தான் என் நியாபகம் வந்துச்சா?"என்று சத்யாவிடம் கவலை குரலில் கேட்க

அதை கேட்ட சந்தியா பதறிக் கொண்டு "அய்யோ அண்ணா அக்கா உங்கள பத்தி என்கிட்ட நிறைய சொன்னாங்க நா உங்கள கலாய்க்கரக்காக சும்மா அப்படி சொன்னேன் "எங்கே அவன் கோபப்பட்டு விட்டானோ என வாக்குமூலம் கொடுக்க

அவள் அவசரமாக சொல்லவதை கேட்டு "டேய் பயந்துட்டியா நா அங்க இருக்குற வகை சாப்பாடை எல்லாம் வாங்கிட்டு வர சொல்றதுக்காக அப்படி கேட்டேன் "என சமாதானம் செய்ய

"யாரு என் அக்காயையே பீல் பண்ண வைச்சது? "என்று நித்யா வர

சத்யா நித்யாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தியாவும் நித்யாவும் நேரம் போக அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்க

சிறிது நேரம் கழித்து சந்தியா தான் "சரி நீங்க அக்கா கூட பேசுங்க "என சொல்லி விட்டு நித்யாவை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்

நண்பர்கள் தனியாக பேசட்டும் என்று

அவளின் புரிதலை பார்த்து நால்வருக்கும் அவளை மிகவும் பிடித்து இருந்தது.

"அப்பறம் பிரசன்னா என்ன ஆச்சு?"என்க

அவனோ புரியாமல் "என்ன? என்ன ஆச்சு? "என கேட்க

தலையில் அடித்துக் கொண்ட சத்யா "ஆர்த்தி கிட்ட பேசுனியா?"என கேட்க

அவள் கேட்டவுடன் தான் நினைத்து பார்த்தவன் சிரித்துக் கொண்டி "இல்லை "என்னும் விதமாக தலையாட்ட

அவனை ஒரு மாதிரி பார்த்தவள் "நீ தலையாட்டுற விதமே சரி இல்லையே "என்று சொல்லிவிட்டு

அதன் பின் அதை பற்றி கேட்க வில்லை

அவன் சொல்வது போல் இருந்தால் அவனே சொல்லுவான் என்று நினைத்து வேறு கதைகளை பேசிக் கொண்டு போன் கட் செய்தாள்.

மகிழன் சத்யா அவள் நண்பர்களுடன் பேசுவதை பார்த்துவிட்டு ரூம் க்கு சென்று விட்டான்.

அவனுக்கு ஆபீஸில் இருந்து கால் வந்து இருக்க

எடுத்து பேசியவன் அதற்காக வேலை செய்துக் கொண்டு இருந்தான்..

அங்கு சரண் தான் சந்தியாவை நினைத்துக் கொண்டு இருந்தான்.

அவள் முதலில் இவனுடன் பேசும் போது தெரியாத பெண் என்று அமைதியாக இருக்க பின் நவீன் உடன் பேசும் போது அவனுக்காக வருத்தப்படும் போது இவனுக்கு கஷ்டமாக இருந்தது பின் எல்லாருடனும் சிரித்து பேசும் போது இவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் கடைசியில் நண்பர்கள் பேசுவாதற்காக தனிமையை தரும் போது அவனுக்கு இன்னும் அவளை பிடித்து இருந்து.

அவனை பொறுத்த வரை இது வேறு பிடித்தம் மட்டும் தான்.

அவன் அதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்க

அங்கு சண்டை போட்டுக் கொண்டு இருந்த நந்தினியும் நவீனும் சரணை திரும்பி பார்த்தனர் காரணம் எப்போதும் இவர்கள் சண்டை போடும் போது அவன் தான் வருவான்.

இவர்கள் தினமும் சண்டை போடுவார்கள் என தெரிந்து இவர்களுக்கு பஞ்சாயத்து பண்ணுவான்.

இன்று இவர்கள் சண்டை போடும் போது அவன் வராமல் இருக்க

நந்தினி அவன் தோளில் கை வைத்து "என்ன ஆச்சு டா "என கேட்க

யோசித்துக் கொண்டு இருந்தவன் இவள் குரலில் கலைந்து

இவள் என்ன கேட்கிறாள் என புரியாமல் பார்க்க "இல்ல நாங்க எப்போவும் போல சண்டை போட்டு கிட்டு இருக்கோம் நீ கண்டுக்காம யோசிச்சுக்கிட்டு இருந்தியா அதன் என்ன ஆச்சுனு கேட்டேன் "என விளக்கமாக சொல்ல

அப்போது தான் நண்பர்களை கூட கவனிக்காமல் அவளை பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததை அறிந்தவன் மெல்லிய புன்னகையை சிந்தியவன்

"ஒன்னும் இல்ல டி கேம்பஸ் இன்டெர்வியூ பத்தி நினைச்சு கிட்டு இருந்தேன் "என்க

அவளும் சரியென்று அவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

நவீன் தான் "என்ன அவன் கூட உட்கார்ந்துட்ட என் கூட யாரு சண்டை போடுவா "என சின்ன குழந்தை போல கேட்க

அதை உள்ளுக்குள் ரசித்தவள் வெளியே "எனக்கு வேற வேலை இல்லையா போட "என்க

அவன் இவளை பார்த்து முறைத்து விட்டு கேன்டீன் உள் செல்ல

அதை பார்த்து "சரியான தீனிபண்டாரம் "என திட்டிக் கொண்டாள்.

பிரசன்னா இவர்களை கவனிக்காமல் இவனை கடந்து சென்ற ஆர்த்தியை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவளோ இவன் இருப்பதை கண்டுக் கொள்ளாமல் செல்ல

ரெண்டு நாட்கள் முன் அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையை நினைத்து பார்த்தான்.

அன்று ஆர்த்தி இவனை கண்டுக் கொள்ளாமல் செல்ல அன்று இரவு முழுதும் இவனுக்கு தூக்கம் இல்லை அடுத்த நாள் ஆர்த்தியிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல

அவளும் பிகு பண்ணிகொள்ளாமல் இவனுடன் பேச சென்றாள்.

அவள் அவன் முன் அமைதியாக நிற்க

இவன் தான் முதலில் ஆரம்பித்தான் "சாரி ஆர்த்தி நா உன்ன ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன் "என்க

அவளோ ஒன்னும் சொல்லாமல் நிற்க

"நா எனக்கு ஒரு லவர் இருக்கா னு சொன்னது பொய் "என்று தயங்கி சொல்ல

"எனக்கு தெரியும் "என்று அவள் அசால்ட்டாக சொல்லவும்

"எப்படி?"என்று கேட்க

"உன்ன எனக்கு மூணு வருஷமா தெரியும் நீ அப்படி யாரையாவது லவ் பண்ணி இருந்த என்கிட்ட அதை முதலையே சொல்லி என் மனச மாத்த முயற்சி செஞ்சு இருப்ப இல்லனா உன் பிரன்ட்ஸ் கிட்டயாவது சொல்லி இருப்ப அப்படி எதுவும் பண்ணல "என்க

அவனை எவ்ளோ தூரம் அவள் புரிந்து வைத்து இருக்கிறாள் என்று நினைத்து ஆனந்தம் கொண்டவன்

அவளை பார்க்க

அவளோ அவன் பார்வையை தவிர்த்து

"எதுக்கு என்கிட்ட அப்படி சொன்ன?"என்று கேட்க

அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் முழுத்தவன் பின் சொல்லி தானே ஆக வேண்டும் என்று நினைத்து

"நம்ம கிளாஸ் ஜெகதீஷ் என்கிட்ட வந்து பேசினான் "என்க

அதிலே பாதி அவளுக்கு புரிந்து விட்டது.

ஜெகதீஷ் ஆர்த்தியை ஒரு தலையாக காதலித்து அதை அவளிடம் சொல்ல

உடனே அதை மறுத்தவள் "நா பிரசன்னாவை லவ் பண்றேன் "என்று அவன் மனம் நோகாமல் சொல்லி சென்று விட்டாள்.

ஆனால் அவனோ பிரசன்னாவிடம் சென்று "நீ ஆர்த்தியை லவ் பண்றியா?"என கேட்க

பிரசன்னாவுக்கு அவன் இப்படி திடிரென்று வந்து கேட்கவும் புரியாதவன் பின் ஆர்த்தியிடம் கூட இன்னும் காதலை சொல்லாமல் இவனிடம் சொல்வதா என்று எண்ணி

"இல்லை "என்க

அதை கேட்ட ஜெகதீஷ் "ப்பா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு "என்க

பிரசன்னா அவனை விச்சத்திரமாக பார்க்க

"நா ஆர்த்திய லவ் பண்றேன் அத அவகிட்ட சொன்னேன் பட் உன்ன லவ் பண்றதா சொல்லிட்டா "என்க

இவன் ஆர்த்தியை லவ் பண்ணுவதாக சொல்லும் போதே பிரசன்னாவுக்கு கோவம் வந்தது இருந்தாலும் அமைதியாக அவன் சொல்வதை கேட்க

"நீ ஆர்த்திய அவொய்ட் பண்ணிட்டா கண்டிப்பா அவ என் லவ் ஆ அக்ஸ்ப்ட் பண்ணிப்பா "என்க

அதை கேட்ட பிரசன்னா நா அவொய்ட் பண்ண என்ன மறந்துருவாளா என்று எண்ணி ஜெகதீஷ்யிடம் ஒன்னும் சொல்லாமல் சென்றவன்

அடுத்த நாள் ஆர்த்தியிடம் அவனுக்கு லவர் இருப்பதாக சொன்னான்.

அன்று நடந்ததை ஆர்த்தியிடம் பிரசன்னா சொல்ல

அதை கேட்டவள் "அப்போ உனக்கு என் லவ் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா அவன் சொன்னா நா அப்படி பண்ணுவேனா இந்த மூன்று வருஷம் நீ என்ன கண்டுக்காம தான இருந்த அப்போ நா வேற யாரையாவது லவ் பண்ணிட்டு போயிட்டேனா?"என கேட்க

அப்போது தான் பிரசன்னாவுக்கு அவன் செய்த தவறு புரிந்தது.

எவனோ ஒருவன் சொன்னதுக்காக அவள் லவ்வை அப்படி நினைத்து பார்த்து இருக்க கூடாது

"சாரி ஆர்த்தி ஏதோ அப்போ தெரியாம "என்று சொல்ல வர

அவனை தடுத்தவள் "சாரி கேட்க தேவை இல்ல "என்க

அவளை பார்த்து சிரித்தவன் "சமாதானம் ஆகிடியா "என்க

அவனை முறைத்து பார்த்தவள் "கோவம் இருக்கு பட் அதை உங்கிட்ட என்னால காட்ட முடியல நா ஏதாவது பேசி உன் முகம் சுருங்குனா கூட என்னால பார்க்க முடியாது "என்க

அதை கேட்டவன் அவளை காதலாக பார்க்க

"நா உன்மேல கோவமா தான் இருக்கேன் "என்று அவள் நினைவு படுத்த

அவனோ "நீ தான கோவமா இருக்க நா இல்லையே "என்று சொல்ல

அவனை ஒன்னும் சொல்ல முடியாமல் சென்று விட்டாள்.

அன்றில் இருந்து பிரசன்னா அவளை பார்வையாலே தொடர அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல் திரிந்தாள்..

அன்று நடந்ததை நினைத்து பிரசன்னா சிரித்துக் கொள்ள அவன் அருகில் இருந்த நந்தினி "இப்போ எல்லாம் நீ ரொம்ப சிரிக்குற "என்க

"சிரிக்கிறது தப்பா?"என்று அவன் கேட்க

"சிரிக்கிறது தப்பு இல்ல ஆனா காரணம் இல்லாம பைத்தியம் மாதிரி சிரிக்கிறது தான் தப்பு "என்று அவன் காலை வார

அவன் இவளை அடிக்க துரத்த நந்தினி ஓட்டம் எடுத்தாள்..

அவர்களின் நாள் இப்படி சென்றது.

வீடியோ கால் பேசிவிட்டு வந்த சந்தியா ரூம்குள் சென்று சிரித்துக் கொண்டாள்

சத்யா அவளின் நண்பர்களை பற்றி சொல்லும் போதே அவளுக்கு சரணை மிகவும் பிடித்து இருந்தது ஆனால் காரணம் தான் தெரியவில்லை.

இன்று சத்யா பேசும் போது சரணை பார்ப்பதற்காக தான் அவள் போன் பேசியதே

இவள் பேசும் போது அவன் திரு திருவென முழிததை நினைத்து பார்த்தவள் "சோ கியூட் "என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவன் பார்வை அவளிடம் இருப்பதை உணர்ந்துவளுக்கு அப்படியே பறப்பது போல இருந்தது.

அதை நினைத்து பார்த்தவள் "திருடா"என்று சொல்லி அவனை நினைத்துக் கொண்டு இருந்தாள்….



நிமிர்வாள்...
 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 19




இரவு மகிழன் அவன் அறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருக்க

அவனை பார்த்துக் கொண்டே வந்த சத்யா கட்டிலில் அமர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்த உடன் அவளை திரும்பி பார்த்தவன் மீதும் வேலையை பார்க்க தொடங்கினான்.

காலையில் எழும் போது தூங்கிக் கொண்டு இருக்கும் மகிழன் முகத்தை பார்த்தவளுக்கு ஒரு பாடல் தான் நியாபகம் வந்தது




"காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்

தேடிப்பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி

காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே


எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்

நீயறிந்து நடப்பதை வியப்பேன்

உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்

நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்"



என்ற பாடல் வரிகள் அவளுக்கு நினைவு வந்து அவனை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்..

எவ்ளோ நேரம் அப்படி இருந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

அப்போது கண் விழித்த மகிழனுக்கு தெரிந்தது அவனையே கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டு இருந்த சத்யாவை தான்.

அவள் கண்ணில் தெரிந்த காதலில் ஒரு நிமிடம் உறைந்தவன் பின்

"எவ்ளோ நேரம் என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்க போற உனக்கு என்ன பாக்கணும்னா சொல்லு டைம் ஒதுக்கி தரேன் "என்க

அவன் குரலில் திடுக்கிட்டு முழித்தவள் பின் அவன் முகத்தை பார்க்க முடியாமல் குளியலறைக்குள் சென்று கதவை சாற்றி

அதன்மேல் சாய்ந்து மூச்சை வேகமாக இழுத்து விட்டவள் "நல்ல வேளை அவர் நல்ல மூட்ல இருந்ததால தப்பிச்சேன் இல்லனா என்ன ஆகிருக்கும் "என்று தனக்குள் பேசிக் கொண்டு இருந்தவள் பின் நேரம் ஆவதை உணர்ந்து குளித்து வெளியே வர

மகிழன் ரூம் வெளியில் நின்று போன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தவள் "அவங்க வரதுக்கு முன்னாடி கீழே போயிரனும் இல்லனா அவளோ தான் "என்று எண்ணி வேக வேகமாக ரெடி ஆகி அவன் பார்ப்பதற்குள் கீழே சென்று விட்டாள்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் உள்ளே வந்து பார்த்தவன் அவள் இல்லாததை பார்த்து "கிழ போயிட்டா போல "என்று நினைத்து குளிக்க சென்றான்.

கீழே வந்தவளை சந்தியாவும் நித்யாவும் பிடித்துக் கொள்ள அவர்களுக்கு நேரம் நன்றாகவே சென்றது.

மகிழனும் கார்த்திக் உடன் வெளியில் இருக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டான்..

நாட்கள் சென்று அன்று திருமண நாளும் வந்தது

(ஏற்கார்ட் பக்கம் எப்படி கல்யாணம் பண்ணுவாங்கனு தெரியாது சோ கல்யாணத்துக்கு முன்னாடி நடக்குற சடங்கை எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டேன் அடுத்த தடவை நடக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன் )

அன்று காலையில் முகூர்த்தம் இருப்பதால் நேரமாக எழுந்த சத்யாவுக்கு தூக்க கலக்கம் நீங்கவே இல்லை

நேற்று இரவு முழுவதும் கல்யாண பெண் நிவ்யா உடன் பேசிக் கொண்டு நேரம் போனது தெரியாமல் நடுஇரவில் தான் தூங்கினார்கள்.

எல்லா பெண்களுக்கும் உள்ள தயக்கம் நிவ்யாவுக்கும் இருந்ததால் இரவு முழுதும் தூங்காமல் இருந்தாலும் அவள் முகத்தில் சோர்வு தெரிய வில்லை ஆனால் சத்யா முகத்தில் சோர்வு அப்படியே தெரிந்தது

மகிழன் கூட ஒரு முறை அவளிடம் "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா "என்று சொல்லும் அளவுக்கு சோர்வாக தெரிந்தாள்..

அனைவரும் வற்புறுத்த சிறிது நேரம் படுத்து விட்டு பின் பிரெஷ் ஆகி கீழே சென்றாள்.

சிறிது நேரத்தில் பிரபு நிவ்யாவின் கழுத்தில் மாங்கல்யம் சூட

அதை பார்த்த சத்யாவுக்கு அவர்களின் திருமணம் நியாபகம் வந்தது

இப்படி எந்த சந்தோஷம் இல்லாமல் நடந்த அவர்களின் திருமணத்தை நினைத்தவள் பின் "மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படி இருக்கும் "என்று எண்ணியவள்

பின் "இத மட்டும் அவங்க கிட்ட சொல்லி இருந்தேனா அவ்ளோ தான் "ஒரு தடவை உன்ன கல்யாணம் பண்ணதுக்கே இவ்ளோ கஷ்ட படறேன் மறுபடியுமா னு நினைப்பாங்க "என்று அவன் இப்படி தான் நினைப்பான் என்று தானக்குள் சொல்லிக் கொண்டவள்

அருகில் நின்றுக் கொண்டு இருந்த மகிழனை பார்த்தான்

கல்யாண நாள் அன்று வேஷ்டி கட்டி இருந்தான் பின் இப்போது தான் கட்டி இருக்கிறான்.

அன்று அவனை ரசிக்க முடியாதவள் இன்று அவனை ஆசை தீர ரசிக்க

அவளை ஓரபார்வை பார்த்தவன் "என்ன இப்படி பாக்கற?"என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன்

தேவதை சிற்பமாக நின்றவளை ஒரு நிமிடம் ஆழ்ந்தந்து பார்த்துவிட்டு பின் திரும்பி விட்டான்…

மல்லிகாவுக்கு அவ்ளோ சந்தோசமாக இருந்தது ஒரு கல்யாணத்தில் பிரிந்த அவர்களின் குடும்பம் இன்னொரு கல்யாணத்தில் இணைத்து விட்டது…

(எல்லாரும் நினைக்கலாம் பாதி சீன்ஸ்ல பெரியவங்களை காட்டலைனு எனக்கும் உறவுகள் எல்லாம் புதுசு சோ இப்போ எழுத வரல ஆனா இனி வர கதைக்கு அவங்களுக்கு முக்கியதுவம் கண்டிப்பா கொடுக்கறேன்)


திருமணம் முடிந்து எப்போதும் போல சம்பிராதயம் சடங்கு எல்லாம் நடக்க சத்யா அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நடக்கும் அனைத்தும் அவளுக்கு புதிது முதல் முறை அவள் ஒரு திருமணதிற்கு சென்றாள் என்றால் அது அவளுடைய திருமணம் தான்

அதனால் திருமணத்தில் என்ன நடக்கும் என்று தெரியாதவள் நடக்கும் எல்லாத்தையும் ஒரு வித

ஸ்வரஸ்யதுடன் பார்த்து அதை வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தாள்.

அண்ணன் திருமணம் என்பதால் சந்தியாவும் நித்யாவும் செம பிஸியாக இருந்தனர்.

அன்று இரவே மகிழன் வேலை இருப்பதால் கிளம்புவதாக சொல்ல

எல்லாரும் அவனை இன்னும் கொஞ்ச நாள் இருக்க கட்டாயப்படுத்த அதை மறுத்துவிட்டு கிளப்பியவன் சத்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

சத்யாவை இருக்க சொன்னவர்களிடம் "லாஸ்ட் செமஸ்டர் அவள் அதிக லீவ் எடுக்க கூடாது "என்று காரணம் கேட்டவர்களின் வாயை அடைத்துவிட்டு கிளம்பினான்.

மல்லிகாவும் மணிவண்ணனும் இன்னும் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வருவதாக சொல்ல இவர்கள் மட்டும் சென்னை கிளம்பினார்கள்.

ஏற்கார்ட் வரும் போது இருவர்குள் இருந்த விலகல் திரும்ப சென்னை போகும் போது இல்லை.

அவன் மனதில் கொஞ்ச மாற்றங்கள் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை….

அடுத்த நாள் காலையில் சென்னை வந்த பின் தான் நிம்மதியாக உணர்ந்துதனர்

எவ்ளோ நாடுகள் சென்றாலும் சொந்த இடம் போல் வராது அல்லவா…

அடுத்த நாளில் இருந்து அவர்களுடைய நாட்கள் நகர ஆரம்பித்தது.

இப்போது எல்லாம் சத்யா மகிழனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச அதற்கு அவனும் பதில் சொல்லும் அளவுக்கு அவர்களுடைய உறவு இருந்தது..

இன்னும் சில மாதங்களில் அவளுடைய படிப்பு முடியும் தருவாயில் இருக்க

அடிக்கடி வீட்டில் மகிழனிடம் சந்தேகம் கேட்டுக் கொள்ளவள் படிப்பு சம்மந்தமாக..

இவர்களில் நாட்கள் இப்படி செல்ல

பிரசன்னா ஆர்த்தியை போல் மாறி இருந்தான்

அதாங்க ஆர்த்தி பிரசன்னா கண்டுக்காம இருந்தாலும் பார்த்துகிட்டே இருப்பாளே அந்த மாதிரி பிரசன்னாவும் மாறி இருந்தான்.

நவீன் நந்தினி எப்போவும் போல அடித்துக் கொள்ள சரண் பஞ்சாயத்து செய்வான்.

சந்தியா சத்யாவின் மொபைலில் இருந்து சரணின் நம்பரை அவள் போனின் சேவ் செய்துக் கொண்டாள்.

ஒரு நாள் தைரியம் வந்து அவனுக்கு அழைக்க

புது நம்பரில் இருந்து கால் வருவதை பார்த்தவன் "யாரை இருக்கும்?"என்று நினைத்து கால் அட்டேன் செய்ய

சந்தியாவுக்கு பேச்சே வரவில்லை "ஹலோ யாருங்க பேசறது?"என்று இரண்டாம் முறையாக அவன் கேட்க

அப்போதும் சந்தியா அமைதியாக இருக்க

பொறுமை இழந்தவன் "கால் பண்ண பேசணும்னு கூட தெரியாத?"என்று சொல்லி கட் செய்ய போக

அவசரமாக "நா சந்தியா பேசறேன் "என்க

அவளாக இருப்பாள் என்று நினைக்காதவன் "எந்த சந்தியா?"என்று கேட்க

அதில் "உங்களுக்கு எத்தனை சந்தியாவ தெரியும் "என்று கேட்கவும்

அவள் தான் என்று முடிவு செய்தவன் பின் பேச ஆரம்பிக்க

அவர்களின் பேச்சு முதலில் நட்பை தொட்டு பின் மெல்ல மெல்ல காதலை வந்து அடைந்தது…

இதெல்லாய் சத்யாவுக்கு தெரியாமல் தான் நடந்துக் கொண்டு இருந்தது

சரணுக்கு சத்யாவிடம் இதை பற்றி பேச கொஞ்சம் தயக்கமாக இருக்க கொஞ்ச நாள் கழித்து சொல்லிக்கலாம் என்று நாட்களை கடத்திக் கொண்டு இருந்தான்..

அன்று மங்கலியர் நோம்பு இருக்க

மல்லிகா சத்யாவையும் மகிழனையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வர சொல்ல

மகிழனுக்கு மறுக்க மனம்இல்லாமல் அவளை அழைத்து சென்றான்…

சத்யாவுக்கு தான் ஒரே கொண்டாட்டமாக இருந்தது இதுவரை மகிழனுடன் அவள் கோவிலுக்கு சென்றது இல்லை அதனால் ஒரே சந்தோஷம்…

மீனாட்சி அம்மனை பார்க்க ஆன்லைலில் டிக்கெட் புக் செய்து இருந்தான்

எனவே லைனில் நிற்காமல் நேராக உள்ளே சென்றார்கள்..

அங்கு இருக்கும் சிலைகளை பார்த்த சத்யாவுக்கு முன்னோர்களின் திறமையை பாரட்டாமல் இருக்க முடியவில்லை

இந்த காலத்தில் எல்லா வேலைகளை செய்வதற்கும் மிஷின் வந்து விட்டது ஆனால் அந்த காலத்தில் யானைகளை வைத்தும் குதிரைகளை வைத்தும் எவ்வளவு அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

அங்கு இருக்கும் ஒவ்வொரு சிலைக்கும் உயிர் இருப்பது போல தெரியும்

ரசனை இல்லாதவனுக்கு கூட அங்கு இருக்கும் சிலைகளை பார்த்தால் ரசனை கூடும்…

அன்றைய காலத்து பெண்களில் வாழ்க்கை முறையை சிலையில் சொல்லி இருப்பார்கள்…

உலகிலேயே மிகவும் திறமை கொண்டவன் தமிழன் தானாம் (நா சொல்லலைங்க விஞ்ஞானமே சொல்லுது )

ஆனால் இப்போது எல்லாம் கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டு வருகிறது…


அங்கு இருக்கும் சிலைகளை பார்த்தவள் போட்டோ எடுக்க முடியலையே என்று வருந்தினாள் பின் அம்மனை பார்க்க செல்லும் வழியில் இருவரும் செல்ல

அம்மனை பார்த்தவளுக்கு அவ்ளோ பரவசமாக இருந்தது.

அவ்ளோ அழகு அவளை பார்த்து அம்மன் சிரிப்பது போலவே இருந்தது அவளுக்கு..

கண்ணை மூடி "அம்மா இது நானா ஏற்படுத்திக்கிட்ட வாழ்க்கை இல்லை நீயா குடுத்த வாழ்க்கை இது எப்போவும் எனக்கு நிலச்சு இருக்கனும் அவர் மனசுக்கு என்ன பிடிக்கணும் நாங்க நல்ல படியா வாழனும் "என்று வேண்டியவள் பின் "உலகத்துல இருக்குற எல்லா ஜீவராசியும் நல்லா இருக்கனும் யாருக்கும் பசிங்கற கொடுமை வர கூடாது தண்ணி பற்றா குறை இருக்க கூடாது "என்று வேண்டிக் கொண்டாள்.

மகிழன் எதுவும் வேண்டிக்கொள்ள தோன்றாமல் அம்மனை பார்த்துக் கொண்டு இருந்தான்…

சத்யா வேண்டியதை கேட்ட அம்மன் "நீ கேட்டது கூடிய விரையில் நடக்கும்"என்று ஆசிர்வதித்தாள்.

பெண்கள் முதலில் அம்மனின் மூக்குத்தியை தான் பார்க்க வேண்டும் பின் அம்மனின் மாங்கல்யத்தை பார்த்து வணங்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திருமணம் ஆணவர்கள் தாம்பத்திகளாக வந்து அம்மனை தரிசிக்க வேண்டும் அப்போது தான் நினைத்து நடக்கும் (எனக்கு சில பேர் சொன்னதை உங்களுக்கு சொல்றேன் )


கொரோன காலம் என்பதால் மீனாட்சி தாயை மட்டும் பார்த்துவிட்டு வந்தனர்..

வெளியில் வந்தவர்கள் மதுரைக்கு பெயர் போன ஜிகர்தண்டா சாப்பிட்டுவிட்டு திருப்பரங்குன்றம் முருகனை பார்த்து விட்டு

ஹோட்டல் ரூம் எடுத்து தங்கினர்.

அடுத்த நாள் காலையில் சென்னை கிளம்ப சத்யா எதிர்ப்பார்க்காத நாளும் வந்தது…




நிமிர்வாள்….


சாரி என்னோட மாத்த கதைகள் எல்லாம் நா தினமும் யூடி கொடுத்திருவேன் ஆனால் இந்த கதைக்கு என்னால கொடுக்கவே முடிய மாட்டேங்குது

ஒரு வித சலிப்பு அப்போ அப்போ வந்துருது ஏன்னு தெரிய மாட்டேங்குது இனிமேல் தினமும் கொடுத்திருவேன்….

 
Status
Not open for further replies.
Top