ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வான மழை நீ எனக்கு....- கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 29



"மந்தார பூப்போல

மச்சம் காணும் வேல

என்னத்த நான் சொல்ல

மிச்சம் ஒன்னும் இல்ல


முழு மதியினில்

பனி இரவினில் கனி

பொழுதினில் ஓடாதே


முகம் காட்டு

நீ முழு வெண்பனி

ஓடாதே நீ ஏன்

எல்லையே


இதழோரமாய்

சிறு புன்னகை நீ

காட்டடி என்

முல்லையே"



மகிழனும் சத்யாவும் பேசிக் கொண்டு இருக்க

கணேஷனை பற்றி பேச்செடுத்து பின் சத்யா அமைதியை கடைபிடிக்க

அவளை பார்த்த மகிழன் "இப்போ நம்மளை பத்தி பேசலாமா? "என்று கேட்க

"சரி சொல்லுங்க "என்று சத்யா சொன்னவுடன்

"நமக்குள்ள இவ்ளோ ஸ்பேஸ் இருந்தா சொல்ல மாட்டேன் "என்று இருவருக்கும் இடையில் இருந்த இடைவேளையை காட்டி சொல்ல

அவனின் எண்ணம் புரிந்துக் கொண்டவள் சிரித்துக் கொண்டே அவனை நெருங்கி அமர்ந்து "இப்போ சொல்லுங்க "என்க

அவனும் போன போகுது என்பது போல

"கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உனக்கே எல்லாம் தெரியுமே "என்க

"சரி நம்ம கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்கிட்ட உங்க காதலை சொல்லி இருக்கலாம்ல? "என்று சிணுங்களாக கேட்க

"சொல்லி இருக்கலாம் தான் ஆனா அன்னைக்கு எனக்கு தான் பிளான் படி கல்யாணம் ஆச்சு ஆனா உனக்கு அது எதிர்ப்பாராத கல்யாணம் தான சோ கொஞ்சம் உனக்கு டைம் குடுக்கலாம்னு அப்படி பண்ணேன் "என்க

"அன்னைக்கு நைட் எதுக்கு அப்படி பேசுனீங்க எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துசு தெரியுமா நைட் முழுக்க தூங்கவே இல்லை "என்று குறைப்பட்டு சொல்ல

அதை கேட்டவன் "பின்ன நா உன்ன ஆசையா கல்யாணம் பண்ணி இருக்கேன் நீ என்னமோ நா உன்னை கடத்திட்டு வந்து கொடுமை பண்ற அளவுக்கு உங்க அம்மா பேசும் போது முகத்தை வைச்சு இருந்த அதை பார்த்தவுடனே செம கோபம் " என்று விளக்கம் தர

அதை கேட்டவள் அடப்பாவி இதுக்கா அந்த திட்டுதிட்டுனா என்று அவனின் முதுகில் ரெண்டு போட்டவள்

"அப்புறம் எதுக்கு அடுத்த நாளே காலேஜ்க்கு கிளம்புனிங்க மறுவீட்டுக்கு கூட கூட்டிகிட்டு போகல "என்று கவலையாக சொல்ல

அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் " உன்ன பார்த்துகிட்டு மட்டும் என்னால சும்மா இருக்க முடியல எங்க எனக்கே தெரியாம உன்னை டச் பண்ணிருவனோனு பயந்து தான் காலேஜ் போனேன் அப்புறம் உன்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு போறதுல எனக்கு துளியும் இஷ்டம் இல்ல என் வீட்டுக்கு ராணி நீ அடுத்தவங்க கிட்ட கேவலமா திட்டுவாங்கணுமா? "என்று கேட்க

அவனின் காதலை நினைத்து அவளுக்கு தான் கர்வமாக இருந்து இவன் எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான் என்று

திடிரென்று நியாபகம் வந்தவள் "அன்னைக்கு எதுக்கு என் பிரண்ட்ஸ் கூட பேசுனதுக்கு தப்பா பேசுனிங்க இன்னும் ஏதாவது "என்று சொல்ல வர

கை வைத்து தடுத்தவன்

"நல்லா புரிஞ்சிக்கோ நா உன்ன சந்தேகப்படல அப்படி பட்ட என்மேல நானே சந்தேகப் படற மாதிரி அன்னைக்கு எனக்கு கோவமே என் kuda கல்யாணம் ஆனதை அழுதுக்கொண்டே அவங்ககிட்ட சொன்னது எனக்கு பிடிக்கல அப்கோர்ஸ் அவங்க உன் திக் பிரண்ட்ஸ் உனக்கு விருப்பம் இல்லாம பண்ணுன கல்யாணம் சோ அப்படி ரியாக்ட் பண்ணி இருக்க இது எல்லாம் மூளைக்கு புரிஞ்சுது ஆனா மனசுக்கு புரியல அது எப்படி நீ அழலாம் னு ஒரு கோவம் அத எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுனு தெரியாம அப்படி பேசுனேன் ஆனா நீ நா உங்க மனைவி தான அப்படினு உன் வாயால கேட்கும் போது அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருந்து

அதுக்கு அப்புறம் நல்லா யோசிச்சு பாரு நா உன்ன திட்டி இருக்க மாட்டேன் "என்க

யோசித்து பார்த்தவள் ஆமா அதுக்கு அப்புறம் திட்டல என்று நினைத்து "கல்யாணம் ஆன உடனே இந்த டயலாக் சொல்லி இருந்தா அப்போ இருந்தே திட்டு வாங்கி இருக்க மாட்டேன் போலயே "என்று சலித்துக் கொண்டாள் ….

அவளின் தலையில் செல்லமாக கொட்டி "உனக்கு andha அளவுக்கு அறிவு பத்தல "என்று கிண்டல் செய்தவன் பின்

"ஊருக்கு போன அப்போ சந்தியா என் கையை பிடிக்கும் போது உன் கண்ணுல பொறாமை தெரியும் போது ப்பா நம்ம பொண்டாட்டி நம்மள பார்க்குற அப்படினு இருந்துச்சு அதுக்கு அப்புறம் வந்த நாள் எல்லாமே அழகானது தான் "என்றவன்

அவளை பார்த்து கண்ணடித்தவன் "அதுவும் அன்னைக்கு நைட் செம பீல் "என்க

அதை கேட்டவள் ஆச்சரியமாக "உங்களுக்கு அன்னைக்கு நடந்தது நியாபகம் இருக்க!"என்று கேட்க

"அந்த நாளை மறக்க முடியுமா?" என்றவன்

அன்னைக்கு பார்ட்டிக்கு போன அப்போவே யாரோ என்ன பார்க்குற மாதிரியே இருந்துச்சு பட் நா அதை பெருசா எடுத்துக்கல அப்புறம் நா குடிச்ச ஜூஸ்ல ஏதோ கலந்த மாதிரி ஒரு உணர்வு சோ இதுக்கு மேல அங்க இருக்க கூடாதுனு கிளம்பி வந்துட்டேன் பட் வீட்டுக்கு வந்த என்னால என்னோட பீலிங்ஸ் ஆ கண்ட்ரோல் பண்ணவே முடியல உன் படிப்பு முடியற வரைக்கும் நமக்குள்ள எதுவும் வேணாம்னு முடிவு பண்ணதே நான்தான் ஆனா அன்னைக்கு என்னால முடியல பட் அந்த போதையிலயும் உன்னை தெரிஞ்சு தான் எடுத்துக்கிட்டேன் "என்று கண்ணில் மயக்கத்துடன் சொல்ல

இதை கேட்டவள்" ச்ச இவங்களுக்கு தெரிஞ்சு தான் எல்லாம் நடந்து இருக்கு ஆனா நா தான் எதுவும் இவங்களுக்கு தெரியல அப்டினு குழப்பிகிட்டேன் "என்று தன்னை திட்டிக் கொண்டவள்

"அப்புறம் ஏன் அடுத்த நாள் எதுவும் தெரியாத மாதிரி நடந்துகிட்டிங்க "என்று மனதாங்களுடன் கேட்க

"அது உன் படிப்பு முடியற வரைக்கு உன்ன டச் பண்ண கூடாதுனு இருந்தேன் பட் அப்படி ஆனவுடனே இதுனால நீ உன் படிப்புல கவனம் செல்லுத்தாம போயிருவியோனு நினைச்சு எதுவும் தெரியாத மாதிரி இருந்துட்டேன் பட் நீ எதுக்கு என்ன விட்டு போகுற முடிவு எடுப்பனு தெரிஞ்சிருந்த அப்போவே சொல்லி இருப்பேன் "என்றான் வேதனையுடன்

அவன் வேதனையில் கண் கலங்கியவள் "நா ரொம்ப சந்தோசமா இருந்தேன் அன்னிக்கு உங்ககிட்ட சொல்லணும்னு ஆனா அவங்க வருவாங்கனு எதிர்ப்பார்க்கல அதுவும் ilaama நீங்க ரோஷினியா தான் விரும்பறிங்கனு நினைச்சு பயந்து உங்ககிட்ட அவசர அவசரமா சொன்னேன் ஆனா நீங்க அப்படி பேசுவீங்கனு நினைக்கல "என்று ஆறாக பெருகி வந்த கண்ணீரை துடைக்க

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் "நல்லா யோசிச்சு பாரு அன்னைக்கு நா என்ன சொன்னேன் நீ enkita பேசும் போது அதை கேட்க கூட எனக்கு டைம் இல்ல ஆபீஸ்ல முக்கியமான வேலை நா போயே ஆகணும் அப்படி இருக்கும் போது நீ பேசறது எனக்கு எதுவுமே புரியல அதுனால ஈவினிங் பேசிக்கலாம்னு சொல்லிட்டு தானே போனேன் ஆனா நீ "என்று சொல்லி நிறுத்த

அவன் பேசியதை நினைவு படுத்தியவளுக்கு அவன் ஈவினிங் பேசலாம் என்று சொன்னதே கேட்க வில்லை அதனால் தான் வீட்டில் எல்லாரும் அப்படி பேசும் போது கோவப்பட்டு போயிட்டேன் என்று எண்ணியவள்

எனக்கு அப்போ நீங்க யாரு குழந்தைனு கேட்கும் போது என்ன சந்தேகப்படறீங்கனு நினைச்சுட்டேன் அதுக்கு அப்புறம் நீங்க பேசியது எதுவும் எனக்கு கேட்கல அதுக்கு அப்புறம் அக்காவும் அப்படி சொல்லவும் கோவம் ஏதோ எனக்குனு யாரும் இல்லை அப்படிங்கற உணர்வு இங்க இருந்து போயிரலாம் அம்மா சொல்லும் போது எனக்கு மறுக்கவே தோணல "என்று அன்று நடந்ததை அவனுக்கு விளக்கப்படுத்த

அவளை புரிந்துக் கொண்டவன் அன்று நடந்ததை எல்லாத்தையும் சொன்னவன் கணேஷன் மற்றும் மரகதம் இப்போது இருக்கும் நிலைமையை பற்றி மட்டும் சொல்ல வில்லை

அப்படி சொன்னால் சத்யா avargalukaaga வருதப்படுவாள் avargalukaaga அவள் வருதப்படுவதை கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை….

மகிழன் சொன்னதை கேட்டவள் "ரோஷினி ஏன் இப்படி ஆனா அவ நல்லா thaana இருந்தா "என்று நினைத்தவள்

"இப்போ அவங்க எல்லாம் எங்க இருகாங்க "என்று மகிழனிடம் கேட்க

"தெரியல அன்னைக்கு பார்த்தது தான் அப்புறம் நா பார்க்கல "enga

அவன் சொல்லுவதை நம்பாதவள் அவனையே பார்க்க

அவள் பார்வையில் "இப்போ எதுக்கு அது நம்ம பத்தி பேசு "என்க

சரி என்றவள் "அவனின் தோளில் சாய்ந்து அது தான் எல்லாம் முடிஞ்சிருச்சே அப்புறம் ஏன் இங்க வந்துக்கு அப்புறம் என்னை பார்த்து முறைச்சுகிட்டே இருந்திங்க "என்று கேட்க

அவளை விட்டு நகர்ந்து அமர்ந்தவன் "நா எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா நீ pregnant ஆ இருக்கும் போது நா உன்னை அப்படி தாங்கணும் பாப்பா அசையறத நா உணரணும் உங்க ரெண்டு பேரையும் நா கையில் வைச்சு தாங்கணும்னு அவ்ளோ கனவு கண்டேன் ஆனா எல்லாம் போச்சு அன்னைக்கு அம்முஎன்கிட்ட வராம பயந்து ஒளிஞ்சது இன்னமும் என் கண்ணுல நிக்குது தெரியுமா என் பொண்ணுகூட நா இருக்க வேண்டிய பொக்கிஷ நாட்கள் எல்லாம் போச்சு "என்று வேதனையுடன் சொல்ல

அவன் வேதனை படுவதை பார்த்த சத்யாவுக்கு என்னால் தானே என்ற குற்றஉணர்வு வந்தது

அவளை நிமிர்ந்து பார்த்தவன் "ஒரு கணவனா காதலானா உன்னை என்னால மன்னிக்க முடியும் ஆனா ஒரு தகப்பனா உன்னை மன்னிக்க முடியாது உன் மேல எனக்கு அவ்ளோ கோவம் இருக்கு "என்று சொல்லி அவள் கையை பிடித்துக் கொள்ள

அவன் பேச்சிற்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது….

சத்யாவுக்கு தான் மகிழனை என்ன செய்து சமாதானம் செய்வது அவனின் கோவமும் நியாயம் தானே..

சத்யா மகிழனை திரும்பி பார்க்க

அவன் அவள் மடியில் தலை வைத்து கண் மூடிக் கொள்ள

அவனின் தலையை வருடி விட்டுக் கொண்டு இருந்தவள் அவனின் ஆசையை ஏக்கத்தை நிறைவேன்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்…

தூங்கிக் கொண்டு இருந்த மகிழனின் தலையை தலையணைக்கு மாற்றிவிட்டு

கீழே வர சஷ்டி இவளை தேடாமல் தாத்தா பாட்டியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்…

அவளை பார்த்துக் கொண்டு வந்தவள் "மாமா காபி தரட்டுமா?"என்று கேட்க

சஷ்டியுடன் விளையாடிக் கொண்டு இருந்தவர் இவள் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்து சரி என்க

சமையல் அறைக்கு சென்றாள்…

மல்லிகா சத்யாவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவர் "அவன் சொல்லிட்டான் போல "என்று எண்ணிக் கொண்டார்…

அன்று முழுவதும் அவனை எப்படி சமாதானம் செய்வது என்று யோசிக்க

அவள் யோசிப்பதை பார்த்த மகிழன் "சரியான மக்கா இருப்ப போல அவளே யோசிக்கட்டும் "என்று மகளுடன் நேரத்தை கழித்தான்…

அடுத்த நாள் இவளே நந்தினிக்கு அழைத்து பேசியவள் அவனின் ஏக்கத்தையும் கோவத்தையும் எப்படி போக்குவது என்று ஐடியா கேட்க

அதை கேட்ட நந்தினி தலையில் அடித்துக் கொண்டு "நீ மட்டும் ஏன் டி இப்படி இருக்கற "என்று சலித்துக் கொண்டவள்

"அண்ணாக்கு என்ன ஆசை நீ pregnant ஆ இருக்கும் போது உன்னை அன்பா பார்த்துக்கணும் ஆனா சஷ்டி பிறக்கும் போது அப்படி இல்லை அதுதான "என்று கேட்க

இவளும் "ஆமாம் "என்று சொல்ல

"நீ இன்னொரும் குழந்தையை பெத்துக்கும் போது அண்ணன் ஆசை பட்ட மாதிரி பார்த்துப்பாருல "என்று சொல்ல

அதை கேட்ட சத்யாவுக்கு முதலில் ஒன்றும் புரியாமல் இருந்தவள் பின் மகிழன் இவளிடம் புலம்பி விட்டு பின் கை கோர்த்துக் கொண்டது நினைவு வந்து

"ச்சே பிராடு அப்போவே சைகைல சொல்லி இருக்கு எனக்கு தான் புரியல "என்று திட்டிக் கொண்டவள்

நந்தினியிடம் அசடு வழிந்துக் கொண்டே போன் கட் செய்ய

"சரியான லூசு "என்று திட்டிவிட்டு நந்தினியும் கட் செய்தாள்…

கண்ணாடி முன் நின்றவள் இவ்ளோ மக்காவா இருப்ப சத்யா அவங்க பேசும் போது நீ ஒண்ணுமே தெரியாம இருக்கும் போது என்ன நினைச்சு இருப்பாங்க "என்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கேட்டவள்

"இப்போ நா அவங்க கிட்ட எப்படி சொல்றது "என்று நினைத்து இரவு சமையல் செய்ய போனாள்…

இரவு வீட்டுக்கு வந்த மகிழன் சத்யாவின் முகத்தை திரும்பி திரும்பி பார்க்க

அவளோ அவனை கண்டுக் கொள்ளாமல் செல்ல அதை பார்த்தவன் "இவளுக்கு புரிஞ்சுதா இல்லையானு தெரியலையே சரியா மக்கு சம்பராணி "என்று செல்லமாக திட்டிக் கொண்டான்…

அன்று மகிழனின் பார்வையை வைத்தே மல்லிகா சஷ்டியை அவருடன் படுக்க வைத்துக் கொண்டார் இருவரும் நன்றாக இருந்தால் சரி என்பது போல

ரூமமில் இருந்த மகிழன் சத்யாவுக்காக காத்துக் கொண்டு கொண்டு இருந்தான்…

உள்ளே வந்தவள் அவனை கண்டுக் கொள்ளாமல் டிரஸ் சேன்ஜ் செய்து படுத்துக் கொள்ள

அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்த மகிழனுக்கு சத்யா படுத்துக் கொள்ளவும் சப்பென்று இருந்தது

படுத்து இருந்தவளை பார்த்து "என்ன டி படுத்து தூங்கப் போயிட்ட "என்று பாவமாக கேட்க

அவனின் பாவமான முகத்தை பார்த்து சிரித்தவள் அதை அவனுக்கு காட்டாமல் "வேற என்ன பண்ணனும் "என்று கேட்க

அதை கேட்டவன் "என்ன பண்ணனுமா ஏன் டி நா கோவமா இருக்கேன்னு சமாதானம் செய்வேன்னு பார்த்தேன் "என்று சொல்ல

அதை கேட்டவள் ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டே "நீங்க ரொம்ப கோவமா இருக்க மாதிரி தெரியுது உங்க கோவமும் சரிதான தப்பு என்மேல தான் உங்களை எப்படி சமாதானம் செய்யறதுனு தெரியல அதுனால உங்க கோவம் தன்னால போகட்டும்னு விட்டுட்டேன் "என்று விளையாட்டாக சொல்ல

அதை கேட்டவன் "அடியே கொஞ்சம் கூட என் கோவத்தை எப்படி குறைக்கறதுனு நீ யோசிக்கலயா?"என்று ஆதங்கமாக கேட்க

இதற்கு மேல் அவனிடம் விளையாட வேண்டாம் பாவம் என்று நினைத்தவள்

"அதுக்கு என்னங்க பண்ணா முடியும் வேற குழந்தையா பெத்துக்கறது "என்று கேட்க

அதை கேட்டவன் ஆனந்தமாக அவள் முகத்தை பார்க்க

அவனை பார்க்காமல் மீண்டும் படுத்துக் கொள்ள போக

அவளின் கை பிடித்து தடுத்தவன் "என்ன டி சொல்லிட்டு மறுபடியும் தூங்க போற "என்று முகத்தை சுருக்கி கேட்க

"என்ன சொன்னேன் "என்று தெரியாதவள் போல் கேட்க

இவளுக்கு நிஜமா எதுவும் புரியல என்று நினைத்து "நல்லா படுத்து தூங்கு "என்று கோவமாக சொல்லு விட்டு மறுபுறம் இவளுக்கு முதுகை காட்டி படுத்துக் கொள்ள

அவனை பார்த்து சிரித்தவள் "நீங்க மக்கா இருந்த நா என்ன பண்றது தூங்க தான் செய்வேன் "என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ள

அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தவன் வேகமாக திருப்பி அவளை அணைத்துக் கொண்டு

"புரிஞ்சிதா?"என்று கேட்டு அவளின் கதை மெதுவாக கடிக்க

அதில் நெளிந்துக் கொண்டே "எனக்கு புரிஞ்சிது உங்களுக்கு தான் புரியல "என்று சொல்ல

அவளின் இடையில் வை வைத்தவன் "எவ்ளோ புரிஞ்சிதுனு பார்க்கலாமா?"என்று கேட்டுக் கொண்டே

சின்ன சின்ன முத்தம் தர அதில் அவளின் உடல் சிலிர்த்து போனது

"ரியா "என்று இவனின் குரல் கிறக்காம வர

அதில் சத்யா அவனை திரும்பி பார்க்கவும் "ஓகே வா "என்று கேட்க

அதில் வெட்கப்பட்டுக் கொண்டே "உங்க பொண்டாட்டிக்கு எப்போவும் ஓகே தான் "என்று சம்மதம் சொல்ல

அவளின் இதழில் அவனின் அளவில்லா காதலை காட்டியவன் அவளை ஆள ஆரம்பித்தான்….

இருவரின் நெருக்கத்தை பார்த்து ஜன்னல் வெளியே தெரிந்த நிலா வெட்கப்பட்டுக் கொண்டே மேகத்துள் மறைந்துக் கொண்டது…

இனி சத்யாவின் வாழ்க்கை மகிழனால் அழகாக நகரும்…


ஒருவர் வாழ்வில் கஷ்டங்கள் வந்துக் கொண்டு இருந்தால் அளவிட முடியாத சந்தோஷம் அவர்களை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்..

வாழ்க்கையின் கஷ்டங்களை மட்டும் பார்க்கதீங்க அதுக்கு பின்னாடி இருக்கும் சந்தோசத்தை பாருங்க வாழ்க்கை அழகா மாறும்…




நன்றி…..


Epilogue நாளைக்கு போஸ்ட் பண்றேன்

கதையை படிச்சவங்களுக்கு பிடிச்சு இருந்தா மறக்காம உங்களோட கருத்துக்களை என்கூட பகிர்ந்துக்கோங்க உங்க கருத்துக்களை தான் என்னை இன்னும் எழுத ஊக்கப்படுத்தும்….??
 

aadrika

Well-known member
Wonderland writer
எபிலாக்…..



ஐந்து வருடங்களுக்கு பிறகு….




காலையிலேயே வீடு முழுக்க சத்தம் நிறைந்து இருக்க செல்வி மகிழன் சத்யாவின் இரண்டாவது மகன் ஷரவனை வைத்து இருக்க

சஷ்டி ஸ்கூல்க்கு கிளம்ப ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு இருந்தாள்…

அவளை மல்லிகாவும் மணிவண்ணனும் சமாதானம் செய்து ரெடி ஆக செய்துக் கொண்டு இருந்தனர்…

கீழே வீடே அலோலப்பட்டுக் கொண்டு இருக்க

மேலே இருந்தவர்களோ அதை பற்றி கவலைக் கொள்ளாமல் தனி உலகில் இருந்தனர்..

"மகிழ் விடு போகணும் கிழ உன் பொண்ணு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்க போல "என்று அவனை அணைத்துக் கொண்டு நின்று இருந்தவள் சொல்ல

அவள் முகத்தை நிமிர்த்தியவன் "கொஞ்ச நேரம் டி இப்போ எல்லாம் உன்ன பார்க்க கூட டைம் கிடைக்க மாட்டேங்குது உன் பையன் நா உன் பக்கத்துல வந்தாலே கத்தறான் "என்று சொல்லி அவள் முகத்தில் முத்தமிட

அவனிடம் இருந்து நெளிந்துக் கொண்டே "இப்படி தான் தினமும் சொல்லி அவன் தூங்குனதுக்கு அப்புறம் என்னை கூட்டிக் கிட்டு போயிடற "என்று செல்லமாக சிணுங்கினாள்….

சஷ்டி வயிற்றில் இருக்கும் போது அவளை பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தை

சத்யா இரண்டாம் முறை pregnant ஆனா பின் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்….

ஒவ்வொரு மாதமும் அவளை செக்அப் அழைத்து செல்பவன்

டாக்டரை கேள்வி கேட்டே ஒரு வழி செய்து விடுவான்..

சில சமயம் டாக்டர் சத்யாவை தனியாக அழைத்து "இனி உன் கணவரை கூட கூட்டிகிட்டு வரதம்மா "என்று சொல்லும் அளவிற்கு இருந்தான்…

ஷரவன் வயிற்றில் உதைக்கும் போது எல்லாம் சத்யாவுக்கு சிலிர்க்கிறதோ இல்லையோ கை வைத்து பார்க்கும் இவனுக்கு சிலிர்த்து போகும்..

குழந்தையில் ஒவ்வொரு அசைவையும் இவன் ரசித்துக் கொண்டே இருந்தான்…

சத்யாவுக்கு வலி வரும் போது மகிழனை எண்ணி அவள் காட்டிக் கொள்ளாமல் இருக்க அவள் முகத்தை வைத்தே அவளின் வலியை புரிந்துக் கொண்டவன்

"ஏன் டி வலியை மறைக்குற? நீ இவ்ளோ கஷ்டப்படுவேன்னு தெரிஞ்சு இருந்தா உன்ன இந்த நிலைமைக்கு வர வைச்சு இருக்க மாட்டேன் "என்று கண்ணீர் விட

வலியை பொறுத்துக் கொண்டு அவனின் கண்ணீரை துடைத்து விட்டவள் "அழாத எல்லாம். கொஞ்ச நேரம் தான் அப்புறம் பாப்பா உன் கையில் இருப்ப "என்று அவனுக்கு தைரியம் கொடுக்க

இதை பார்த்துக் கொண்டு இருந்த மல்லிகா "அவளுக்கு இவன் தைரியம் சொல்லணும் ஆனா அவ இவனுக்கு தைரியம் சொல்லிக்கிட்டு இருக்க "என்று தலையில் அடித்துக் கொள்ள

மகிழன் சத்யா மீது வைத்து இருந்த பாசத்தையும் அன்பையும் பார்த்த செல்விக்கு "இவரை விட என் பொண்ணை யாரு நல்லா பார்த்துபாங்க "என்று நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டார்…

மணிவண்ணன் ஒரு ஓரத்தில் நின்று மகிழன் செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தார்…

மல்லிகா மகிழனை பெற்று எடுக்கும் போதே அவரின் வலியை பார்த்து பயந்து தான் ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டார்…

அவரை போலவே இப்போது அவரின் மகன் சொல்லவும் "என் பையன் என்ன மாதிரி "என்று நினைத்துக் கொண்டார்

மகிழன் செய்வதை பார்த்து பொறுமை போன டாக்டர் "மகிழன் நீங்க அவங்க கைய விட்டா தான் நா அவங்களுக்கு டிரீட்மென்ட் பார்க்க முடியும் "என்று புரியும் படி சொல்லவும்

அவளை பயத்துடன் பார்த்துக் கொண்டே கையை விட்டவன் "நா இருக்கேன் பயப்படாத "என்று அவளின் கன்னத்தில் முத்தமிட

சத்யா அவனை பார்த்து சிரிக்க

சத்யாவை உள்ளே அழைத்து சென்றனர்….

குழந்தை பிறக்கும் வரை வெளியில் நடந்துக் கொண்டு இருந்தவன்

குழந்தையின் குரல் கேட்ட பின் தான் சமாதானம் ஆனா

நர்ஸ் குழந்தையை எடுத்து வெளியில் வந்தவர் "காங்கிரஸ் சார் உங்களுக்கு பையன் பிறந்து இருக்கான் "என்க

சிரித்துக் கொண்டே வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டவன் "என்னோட வைப் எப்படி இருக்கா?"என்று கேட்க

"அவங்க நல்லா இருகாங்க சார் மயக்கத்துல இருகாங்க "என்று சொன்ன பின் தான் நிம்மதி அடைந்தவன்

கை நடுங்க மகனை வாங்கிக் கொள்ள

அந்த நிமிடம் உலகத்தையே வாங்கியது போல உணர்ந்தான்…

சஷ்டி தம்பியை பார்க்க ஆசை பட அவளுக்கு காட்டியவன் மல்லிகாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சத்யாவை பார்ப்பதற்காக தான் காத்துக் கொண்டு இருந்தான்…

அவளை பார்த்த நிமிடம் அவன் சொன்னது "இனி இந்த வலியை உனக்கு தர மாட்டேன் "என்று சொல்லி விட்டு….

சஷ்டி சத்யா அவனின் மகன் கைகளை பிடித்து "நா சத்தியம் பண்றேன் நா இருக்குற வரைக்கும் உங்கள பெஸ்ட்ஆ பார்த்துப்பேன் "என்க

சத்யாவுக்கு அந்த நிமிடம் கண்ணீர் தான் வந்தது….

அன்று சொன்னது போல் அவர்களை அவன் பெஸ்ட் ஆக தான் பார்த்துக் கொள்கிறான்…

அதை நினைத்து பார்த்தவள் அவன் கைகளில் நெகிழ தொடங்க

கீழே சஷ்டி அடம் பிடித்துக் கொண்டு இருக்கும் போது "என்ன சத்தம் "என்று கேட்டுக் கொண்டே நவீன் வர அவனை தொடர்ந்து நந்தினி அவளில் ஒரு வயது மகளை தூக்கிக் கொண்டு வந்தாள்…

நவீனுக்கும் நந்தினிக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடியபோகிறது…

பிரசன்னாவும் ஆர்த்தியும் வர

பிரசன்னாவை பார்த்த சஷ்டி "மாமா "என்று அவனிடம் ஆசையா செல்ல

அவளை அவன் மேலே தூக்கி போட்டு பிடிக்கவும் கலகலவென்று சிரிக்க

அதை பார்த்தவர்களுக்கு சந்தோசமாக இருந்தது…

ஆர்த்திக்கும் பிரசன்னாவுக்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது…

அவளின் கோவத்தை போக்க அவள் பின்னாடியே திரிந்தவன் எப்படியோ அவளை சமாதானம் செய்து வீட்டில் பேசிவிட திருமணம் அமோகமாக நடந்தது…

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு மகிழனிடம் இருந்து விலகி சத்யா கீழே சென்று விட

அதை பார்த்தவன் "எல்லாரும் ஏன் டா indha நேரம் கரெக்ட்ஆ வரிங்க "என்று புல்மபிக் கொண்டு கீழே சென்றான்…

கீழே வந்த சத்யா நந்தினியின் மகளை வாங்கி "வா மருமகளே "என்று கொஞ்ச

அவளை பார்த்துக் கொண்டே இறங்கி வந்த மகிழனை பார்த்து "என்ன காலையிலேயே ரொமான்ஸ்ஆ "என்று நவீன் கேலி செய்ய

அவனை முறைத்து பார்த்தவள் "எங்க டா பண்ண விட்டிங்க?"என்று கோவமாக கேட்கவும்

அதை பார்த்து சிரித்தவன் "இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் "என்று சொல்லி நகர்ந்துவிட்டான் பின் மகிழனிடம் யார் அடிவாங்குவது

நந்தினியின் மகளை கொஞ்சிக் கொண்டு இருந்த சத்யா பிரசன்னாவையும் நவீனையும் பார்த்து விட்டு

"சரண் எங்க டா? "என்று கேட்க

அதை கேட்ட நவீன் "இப்போ எல்லாம் அவனை கையிலயே பிடிக்க முடியறது இல்ல புதுமாப்பிள்ளைல "என்று கேலி செய்தான்…..

உண்மை தான் சரணுக்கும் சந்தியாவுக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது…

சரணின் காதல் கதை தெரிந்துக் கொண்ட சத்யாவும் மகிழனும் ஊருக்கு சென்று கண்ணனிடம் பேச

அவரோ அவர் பெண்ணை சரனுக்கு தர மறுத்துவிட்டார் காரணம் அவர் ஏற்கனவே சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்து இருந்தார் சந்தியா படித்துக் கொண்டு இருப்பதால் கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப்போட்டு இருந்தார்…

அவர் மறுக்கவும் சரண் அவரின் வீட்டுக்கு எதிரே குடிவந்து அவரின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இப்போது தான் கல்யாணம் செய்து முடித்தான்…

சரண் அடிக்கடி சந்தியாவிடம் ஒன்றை சொல்வான் "உன்னை கரெக்ட் பண்றது kooda ஈசியா இருந்துச்சு உங்க அப்பா கரெக்ட் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு "என்று நக்கல் செய்வான்

அதற்கு சந்தியா பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பாராமல் அவனை துரத்தி துரத்தி அடிப்பாள்…

சரணும் சந்தியாவும் உள்ளே வர

வீடு கலை கட்டியது….

பிரசன்னா நவீன் இருவரும் கம்பெனி ஆரம்பித்து நடத்த

சரண் அவன் அப்பா தொழிலை பார்த்துக் கொள்கிறான்…

சத்யா காலேஜ் ப்ரோபஸ்ஸோர் ஆக இருக்கிறாள்… அவள் வந்த பின் மகிழன் அவளை ME படிக்க வைத்தான்…

எப்போதும் அவளுக்கு துணியாக நிழலாக அவன் இருக்கிறான்…

நந்தினி வேலைக்கு செல்ல பிடிக்காமல் ஆன்லைனின் அவளின் கை பொருட்டுக்களை விற்று வருகிறாள்…

சந்தியாவுக்கு பெரிபக்ட் ஹவுஸ்வைப் ஆக இருக்க ஆசைப்பட சரண் அவளை கட்டாயப்படுத்தி அவளை மேலே படிக்க வைக்கிறான்…

அவர்களின் நட்பு இப்போது இன்னும் ஆழமாக அழகாக சென்றுக் கொண்டு இருக்கிறது…

இது எப்போதும் இப்படியே இருக்க வேண்டிக் கொள்வோம்…

கணேஷன் இப்போது கொஞ்சம் திருந்தி தப்புக்களை உணர ஆரம்பிக்கிறார்….

மரகதம் வயசானாலும் இன்னும் அவரின் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை… சிலர் அப்படி தான் என்ன நடந்தாலும் தன் பிறவி குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்..



…… நிமிர்ந்தாள்……



 
Status
Not open for further replies.
Top