ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20
மதுரையில், ஜெயாவிற்கு பூர்வீக சொத்து இருந்தது… அவரின் தாத்தா வழி சொத்து…ஒரே காம்பௌண்ட்குள் இரு வீடுகள்… ஒன்று சாம்க்கும்… மற்றொன்று மரகததிற்கும் என பெஞ்சமின் எழுதி குடுத்தார்… பின்னர் மரகதம் விருப்பபட்டால்.. ஜெயாவிற்கு கொடுக்கலாம்…என்றும் எழுதி வைத்திருந்தார்…

மரகதம் ஜெயாவிற்கு மாற்றி தரேனு சொன்னார்… ஆனால், கிருபாவும், ஜெயாவும் மறுத்துவிட்டார்கள்… ஆனால், தான் இல்லை என்றால் ஜெயாவிற்கு வரும்படி மாற்றி கொண்டார்…

தான் இருக்கும் வரையிலும் தானே தனுக்குண்டான வேலையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் மரகதம்… பக்கத்து வீடு தான் சாம்… இருந்தாலும் சுகிர்தாவிற்கு ஒரு போதும் தொல்லை குடுத்ததில்லை… தள்ளி இருந்தால் தான் பாசம் சிறக்கும் என்ற எண்ணம்..

அந்த பூர்விக வீட்டில் தான் எல்லாரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள்… தேவ் விற்கும் அங்கேயே தான் முதல் இரவும் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது…

எல்லாரும் மதுரையை அடைந்ததும்… சுற்றார்கள்…வேண்டப்பட்டவர்கள் என எல்லாரும் அவர்களை பார்க்க வர ஆரம்பித்தார்கள்…

அந்த வீடு நான்கு பெட்ரூம் கொண்டது… கீழே இரண்டு.. மேலே இரண்டு…

கீழே மரகதம் ஒரு ரூமிலேயும்… ஜெயா, கிருபா இன்னொரு ரூமிலேயும் இருந்து கொண்டார்கள்…

மேலே பிரசாத்க்கு ஒரு ரூம்… இன்னொரு ரூம்மை தேவிற்கு என ஆயத்தம் பண்ணிகொண்டிருந்தார்கள். பிரசாத்தும்… தான்யாவும்…
கிருபா வெளியே போயிருந்தார்…அந்த ரூமில் தேவ் இருந்தான்… அலைச்சல் மிகுதியாய்…. அவன் உறங்கியும் விட்டிருந்தான்…..

மரகதமும், ஜெயாவும் தான் அடை காத்த கோழி மாதிரி வசுவோடே இருந்தார் உறவினர்கள் வரும் போது..… பின்னர் சிறிது ஓய்வு எடுக்கவென மரகததின் ரூமிற்கு ஜெயா அழைத்து சென்றார்…

“வசு, நீ உன்ன ரெப்பிரேஷ் பண்ணிக்கிறியா? இதோ அந்த பக்கம் தான் பாத் ரூம்..” என கை காட்டினார்…

“சரி அத்தை” அவளுக்கும் கச கசவென வந்தது…

பாத்ரூம் பக்கத்துலயே துணி மாற்றும் தடுப்பும் இருந்ததால்…

சேலையையும் கையொடே எடுத்துச் சென்றாள்… தலைக்கே குளித்துவிட்டு வந்தாள்..

விறு விறு வென சேலையை கட்டிகொண்டாள்…எந்த ஒப்பனையும் இல்லாமல்… அப்பழுக்கற்ற சருமம் மிளிர்ந்தது… தலையை துவட்டி கொண்டே வெளிய வந்தாள்…

இந்த நேரத்தில் தலைக்கு ஊத்துனதுக்கு ஏதும் சொல்லுவார்களோ என்ற சிறு ஐயம் இருந்தது…

ஆனால் அப்டி ஏதும் நடக்கவில்லை.. முதலில் மரகதம் தான் கவனித்தார்…

“அம்மாடி, ஏன் கப் போர்டுல முடிய காய வைக்குற மெஷின் இருக்கு.. அத எடுத்து உலர வச்சுக்கோ.. இல்லனா தடுமம் புடிச்சுக்கும்”

பரவால்லயே.. ஏதும் சொல்லல என நினைத்தபடி.. ஹேர் ட்ரயர் எடுத்தால்…

அவர்களின் புரிதல் அவளின் அலைபுரிதல் மனதிற்கு இதம் சேர்த்தது…

ஜெயாவும், உள்ளே நுழைந்தார்.. வசும்மா, பூ வாங்குனேன்… தலையை கட்டுனதும் வச்சுவிடுறேன்.. அவளிடம் கூறினார்..

“சரி அத்தை”

“உன் முடி ரொம்ப நீளம்ல.. அழகா இருக்கு.. இரு நா உலர்த்தி விடுறேன்…”

“இல்லை இல்லை, நா பண்றேன் அத்தை”

“இருக்கட்டும்… உனக்கு ஏற்கனவே களைப்பா இருக்கும்… நா பண்ணி விடுறேன்” என அவள் கையில் இருந்து எடுத்து அவளுக்கு உலர்த்தி விட ஆரம்பித்தார்..

“வசும்மா.. ஐஸ்வர்யா பத்தி உனக்கு ஏதும் தெரியாதுல.. அவ தான் தேவ் விரும்புன பொண்ணு.. எனக்கு ஒன்னு விட்ட அண்ணன் பொண்ணு…. அவளுக்கும், தேவுக்கும் ஒரே வயது.. அவர்கள் விரும்புகிறோம்னு சொன்னதும்.. மறுபேதும் சொல்லாம.. சரினு கல்யாண பண்ணி வைக்க ஒத்துக்கிட்டோம்…. அப்போதான்.. தேவ் கம்பெனி ஆரம்பிச்ச நேரம்.. என்ன நினைச்சாலோ.. ஏன் மகன் மேல பழியை போட்டுட்டு கல்யாணத்த நிறுத்திட்டா…ஆனா கண்டிப்பா என்னால உறுதியா சொல்ல முடியும் இவன் முழுமையான ஆண் மகன்னு….கண்டிப்பா இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கலாம் மாட்டேன்..நீ என்னைய நம்புறல..” கலகத்துடன் தான் கேட்டார்…

வாய் மொழியால் உறுதி குடுக்க முடியவில்லை.. ஆனாலும் தலையை அசைத்தாள்…

“ராஜாத்தி.. அவன் பார்க்கறதுக்கு கோவக்காரன இருந்தாலும்.. குணத்துல தங்கம்…அவன் மனசுல இடம் புடிக்குறது கஷ்டம் தான்.. ஆனா அவன் மனசுல இடம் புடிச்சுட்டோம்.. அவனை மாதிரி யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது…அவனுக்கு கொஞ்ச அவகாசம் குடு ராஜாத்தி… கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பான்….” என அவள் கன்னத்தை வழித்து முத்தம் வைத்தார்…

“சரி பாட்டி” அவரை கட்டி கொண்டாள்…

“வீட்டுக்கு இப்போமும் யாராச்சும் வந்துட்டு தான் இருகாங்க… அதுனால..நீ உள்ளயே இரு..இப்டி உன்னை பார்த்தாங்கனா கண்ணு படும்” என்றார் மரகதம்..

“ஆமா வசு.. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு இங்க வரேன்…” என்று கூறிவிட்டு சென்றார்கள்…

எல்லாவற்றிற்கும் தயார் படுத்தி கொண்டாள் ஏதோ போருக்கு செல்வது போல…

அவர்கள் சாப்பிட எடுத்துட்டு வந்ததை சாப்பிட்டு முடித்து விட்டாள்..

ஜெயாவே பூ எடுத்து வந்து வைத்துவிட்டார்.. பின்பு கையில் பால் செம்புவும் கொடுத்தர்...அதை வாங்கவே நடுங்கும் நிலை.. அதை கவனித்த ஜெயாவோ… பயப்படாத.. தையிரமா போ.. அவளுக்கு தெம்பு கொடுத்தார்…

தான்யாவும் வந்து விடவே.. அவளிடம் வசுவை தேவ் ரூம்மிற்குள் விட சொன்னார்…

தான்யாவும் , வசுவும் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போதே, “அக்கா, ஆல் தி பெஸ்ட்” சிரித்த முகமா வசுவிடம் கூறினாள்…
ஒரு சிறு புன்னகையுடனே, “நன்றி ரோஷினி” என்று பதில் குடுத்தால்…

ரூம் கிட்ட வரவும், நீங்க போய்டுவீங்க தானே… எனக்கு அத்தான் மேலே கொஞ்சம் பயம்…

சரி என்று வசு தலையை ஆட்டிக்கொண்டாள்…

இங்கோ அவனுக்கோ.. கட்டில் அலங்காரம்.. ரூம் அலங்காரம்…என இருக்கவே கசந்தது…

எத்தனை கனவுகள் இந்த நேரத்திற்கு என.. அத்தனையும் சுக்கலான உணர்வு… ஐஸ்வர்யா உண்மையா இல்லனாலும்… இவன் இருந்தானே……அனைத்தையும் பொய்யாக்கிட்டு போய்ட்டாளே…என்று மலை அளவு வருத்தம்…கோவம்..

அவள் முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு வெறியே இருக்கு… ஆனாலும் அவளை வைத்த மனது.. இன்னொருதரை ஏற்க தயங்கியது… அதற்க்காக அவள் இன்னுமும் அவன் மனதில் இருக்கிறாள் என்பதல்ல… சூடு கண்ட பூனை மாதிரி… மறுபடி ஏமாற முடியாது என்பதில் உறுதியா இருக்கிறான்… நம்பிக்கை வந்தால் தான் இன்னொருத்தரை ஏற்க முடியும் என்கிறது அவனின் மனது… இப்டி நினைத்துக்கொண்டு இருக்கும் போது அவன் ரூம் கதவு தட்ட பட்டது…

இவன் ஒரு ட்ராக் பாண்ட் மற்றும் டீஷர்ட் போட்டிருந்தான்…. கதவை திறந்ததும்… வழி விட்டு நின்றான்…அவள் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டான்….

அவள் அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்… என்ன சொல்லுவானோ என்று…

ஆனால்…அப்டி ஒருத்தி நிற்குறா என்கிற எண்ணமின்றி… அவன் கட்டிலில் உக்கார்ந்தான்…

“ஹ்ம்க்கும்” என்று தொண்டையை செருமினாள்…. அவன் கண்டுக்கிட்டான் இல்லை….

“ஏங்க, பால் நீங்க குடிச்சுட்டு குடுக்குறீங்களா.. கண்டிப்பா குடிக்கணும்னு அத்தை சொல்லிவிட்டாங்க” அவனிடம் நீட்டினாள்…

இவ கூப்பிட்ற அந்த ஏங்க ல எதோ இருக்கு.. மனதில் நினைத்தபடி.. வாங்கி அருந்தினான்…

பின்னே அவளிடம் நீட்டினான்… அவன் அருந்திவிட்டு குடுத்த பாலை அவள் குடிப்பதை பார்க்க அவனுக்கு என்னவோ பிடிக்கவில்லை..
எனவே… படுத்துவிட்டான்… கட்டில் சுவர் ஒட்டி போடப்பட்டிருந்தது… அவன் சுவர் ஒட்டி படுத்துக்கிட்டான்…

அவளுக்கும் அவன் அருந்தி குடுத்ததை குடிக்க புடிக்கவில்லை.. அதுனால் சாம்பிராதாயத்திற்கு என ஒரு மடக்கு குடித்து விட்டு வைத்துவிட்டாள்…

இவளுக்கு எங்கே படுக்க வேண்டும் என்று புரியவில்லை… என்ன ஒண்ணும் சொல்லாம படுத்துட்டான்… சரி, இவ்ளோ பெரிய கட்டில் தானே… அதுல எனக்கு கொஞ்சூண்டு இடம் இல்லையா என்ன…என்று எண்ணிக்கொண்டு… அவன் பக்கத்தில் படுத்து விட்டாள்..

சேலையை மாற்ற வேண்டும் போல இருந்தது… அப்டியே பெப்ரபெனு வந்துருக்கேன்…பாரு.. ஒரு மாத்து துணி கூட எடுத்துட்டு வராம என அவளையே கடிந்து கொண்டாள்…

முடியவில்லை கச கசவென வந்தது.. மராப்பு பிலீட்ஸ் சேப்டி பின் கழட்டி.. ஒத்தையா போட்டு கொண்டாள்.. அப்போமும் முடியவில்லை… புரண்டு புரண்டு படுத்தாள்…

அவனும் கண்ணை மட்டும் மூடி படுத்திருந்தான்.. உறங்க வில்லை… இவள் புரண்டு புரண்டு படுப்பது… அவனுக்கு கடுப்பாக்கியது…
“ஏய், என்ன பிரச்சனை… சும்மா புரண்டுட்டே இருக்க? மனுஷன் தூங்க வேண்டாமா..”

“மாத்த துணி எடுத்துட்டு வரல.. ரொம்ப அச்சலாத்தியா இருக்கு…”

“ம்ப்ச், இதல்லாம் யோசிச்சு வைக்க மாட்டியா…நா அம்மாக்கு கால் பண்ணி உன் டிரஸ் எடுத்துட்டு வர சொல்றேன்!

“ஹையையோ, வேணாம் வேணாம்.. நா இங்கேயே ஏதாச்சும் இருக்கானு பாக்கறேன்”

இங்க என்னத்த பார்க்க போறானு யோசிச்சாலும்… அவளிடம் ஏதும் கேக்கவில்லை…

ஒரே கப்போர்டு தான் இருந்தது… அவள் மொபைல் டார்ச் லைட் உயிர்ப்பித்து.. கப் போர்டுயை திறந்தாள்.. உள்ளே பெண்கள் உடுத்தும் துணி எதுமே இல்லை…

“ஹையோ, ஒண்ணுமே இல்லை.. இவன் அத்தைக்கு கால் பண்றேனு சொன்னப்போவே சரினு சொல்லிருக்கலாம், இப்போ என்ன பண்றது” என திரு திருவென முழித்தாள்..

இவனோ என்ன தான் பண்ண போறா என இவளை பார்த்து திரும்பி படுத்தான்… கண்ணை முழுதாக மூடாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்…அவள் முழியை பார்த்து சிரிப்பு தான் வந்தது…

அவளோ அவன் பார்க்கிறானா என்று பார்த்தாள்… பார்க்கவில்லை என்றதும்… இவன் பெட்டி இருந்தது… ஆபத்துக்கு பாவம் இல்லை, அவன் டிரஸ் ஏதாச்சும் எடுத்து போட்டுக்கலாம்.. காலைல அவன் எழும்ப முன்னாடி மாத்திக்கலாம்.. என எண்ணி.. அவன் பெட்டியில் இருந்து அவன் காட்டன் ஷர்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டாள்…

அவள் டிரஸ் எடுப்பதை பார்த்தான்தான்.. ஒன்றும் கடிந்து பேச தோன்றவில்லை… ஒரு ரம்மியமான மன நிலை தான் அவனுள் எழுந்தது….

அவள் மொபைல் லைட் அணைத்து விட்டு வேக வேகமா சாறியை மட்டும் கழட்டிவிட்டு.. அவன் ஷர்ட்டை போட்டுக்கொண்டாள் பாவாடைக்கு மேலே…

சரி இவளுக்கு கச கசனு வருதுன்னு சொன்னாலே என்று… ஏ சி ஆன் செய்து விட்டு..இவள் துணி மாத்துகிற நேரத்தில்..ஜன்னல் கதவுகளை அடைத்து விடலாம் என்று இறங்கி நடந்தான்…..

இவளும் அதே சமயத்தில் உடை மாற்றிவிட்டு திரும்பி நடக்கவும் இருவரும் முட்டி கொண்டார்கள்…. எதிர் பாராமல் இடித்ததில் இவள் தடு மாறவும்… அவன் அவள் இடுப்பை பிடித்து நிறுத்தினான்….

அவன் கத கதவென இருக்கும் கைகள்… அவள் போட்டிருக்கும் ஷர்ட்டையும் மீறி..தெரிந்தது…

எங்கே ஏதாச்சும் ஷர்ட்க்கு சொல்லிவிடுவானோ என்று பயந்து… அவன் கைகளில் இருந்து உருவி… கட்டிலில் படுத்து கொண்டாள்…

அவள் மென்மையான குழைந்த இடுப்பின் தாக்கம் இன்னும் அவன் கைகளில் இருப்பது போல ஒரு பிரமை…

ஹ்ம்ம் என்ற பெருமூச்சுடன் போய் ஜன்னல் கதவை சாத்தினான்…

பின்.. அவளை தாண்டி வந்து படுத்தும் கொண்டான்… சிறிது நேரம் எடுத்து தான் இருவரும் உறங்கினார்கள்..

காலை 6 மணிக்கே விழிப்பு தட்டியது வசுவிற்கு… ஏ சியை நிறுத்தி விட்டு… ஜன்னல் கதவை திறந்தாள்… பின்… அவள் நேற்று அணிந்து வந்த புடவை மாற்றிக் கொண்டாள்… தளர்வாக கட்டிகொண்டாள்…
பாத் ரூம்.. மேலே ஒன்று தான் இருந்தது.. அதும் கொஞ்சம் தள்ளி தான் வைத்திருந்தார்கள்…

மாற்று துணி வேற இல்லையே.. இப்போ எப்படி இப்டியே வெளியே போறது…. என்ன தான் ஒண்ணுமே நடக்கவில்லை என்றாலும்… கலைந்த ஓவியம் போலவே காட்சி தந்தாள்….

நடந்து நடந்து யோசித்தத்தில்.. கால் வலிக்க ஆரம்பிக்கவே… அவள் படுத்த இடத்தில் போய் அமர்ந்தாள்…

திரும்ப படக்குனு எந்திரிச்சதில் தான் தெரிந்தது… அவள் முந்தானையின் மேலே அவன் படுத்திருப்பது… “ஹையோ, இதுல இது வேறா” கடுப்பாக்கியது…

மெல்லமாக உருவி எடுக்க பார்த்தாள்… கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது…

அவன் போர்வை தான் இழுபடுகிறது என அவனும் அதை பிடித்து இழுக்க பார்த்தான்…அதற்குள் அவளோ… “ஏங்க ஏங்க” பதறி அடித்துக் கூப்பிட்டாள்…

“மப்ச், இவ ஒருத்தி காலையிலேயே ஏங்கனுட்டு…”கருமியவாரு நன்றாக தெளிந்து கொண்டு.. எழுந்து அமர்ந்தான்…

அவன் முந்தானை விட்டதும் சரி பண்ணி கொண்டாள்….

சரி நாமளே களத்துல இறங்கிடுவோம்.. என்று எண்ணி…. கதவை திறக்க போனாள்…

“ஏய், எங்க போற?” அவள் இருந்த நிலைமை அவனை கேட்க வைத்தது…

“ஹ்ம்ம், கீழ தான்”

“அறிவிருக்கா உனக்கு…. இப்டியே எப்படி போவ”

“ஏன் இதுக்கு என்ன…. சாறி தானே உடுத்தி இருக்கேன்.. அதும் இல்லாம குளிக்கனும்.. அதுக்கு வேற மாத்த துணி வேணும்ல..”

காலைலே வேலை வாங்குறா.. “இரு வரேன்” என்று தன்னையும் சரி பார்த்து கொண்டு கீழே இறங்கினான்….

மரகத பாட்டி ரூமிற்கு தான் சென்றான்.. அங்கே தான் ஜெயாவும் இருந்தார்…

“ம்மா, அவ லக்கேஜ் எதுலாம்” ஜெயவிடம் கேட்டான்..

“இதான்டா என ஒரு பாக் காட்டினார்”

“ஹ்ம்ம் சரி மா”..

மரகதம் தான் அவனை முழுமையாக ஆராய்ந்தார்…
அவன் சென்றதும்… “ஜெயா.. என்ன ஒரு அதிசயம்.. உன் பையனே வந்து அவ உடை பெட்டியை வாங்கிட்டு போறான்.. ஒரு வேலை இப்டி இருக்குமோ”

“எப்படி மா…”

“அதான்டி, ஒண்ணும் ஒண்ணும் மூணு”

“எப்படிமா ஒண்ணும் ஒண்ணும் மூணு.. ரெண்டு தானே” ஜெயா

“உனக்கு புரியாது ஜெயா.. பேராண்டி பேத்தி கூட வாழ்க்கையை தொடங்கி இருப்பானோ”

“தேவ் பத்தி தெரியும்.. அதுனால சொல்றேன்…. கொஞ்சம் டைம் எடுத்துப்பான்மா.. அவா சங்கோஜ பட்டுட்டு இவன்ட கேட்ருப்பா…இல்லை இவனே போறேனு சொல்லிருப்பான்.. அவன் லைப்ல பிரைவசி பார்ப்பான்மா….. என்ன தான் வேணான்னு சொன்னாலும்.. அவள் இவனின் சரி பாதினு புரியும்… ஆனா ஏத்துக்க மாட்டான்…. உடனேலா…எல்லாம் நடக்கணும்னு எதிர் பார்க்க கூடாதுமா… ஆனா தேவ் ஒரு நாள் இவளையே சுத்தி வருவான்.. அப்போ எதிர் பாருங்க..”புரிப்புடன் சொன்னார்..

“நீ நல்ல மாமியார் ஜெயா..”

“ஹா ஹா.. உங்க பொண்ணுல மா….”என்று இருவரும் சிரித்து கொண்டார்கள்…

இங்கே தேவ் ரூமில்.. அவன் அவள் பாக் எடுத்து அவளிடம் கொடுத்தான்..

தேங்க்ஸ் என பெற்றுக்கொண்டாள்…

உடுத்த வேண்டிய உடை எடுத்து பாத்ரூம் சென்று பார்த்தாள்…
சாறி கண்டிப்பா மாத்த முடியாது என அறிந்தாள்…

ஹ்ம்ம், சலித்தவாரு மறுபடியும் ரூமிற்குள் வந்தாள்… அவன் இருக்கவில்லை.. ஒரு கால் வந்தது என அட்டென்ட் பண்ண போயிருந்தான்..அதற்குள் அவன் ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டாள்….

சரி, இப்போ போகலாம் என்றெண்ணி.. நடக்க ஆரம்பித்தாள்… சரியாக அவனும் உள்ளே நுழைந்தான்…

அவளை பார்த்தது..”நில்லு, ஏன் ஷர்ட் எப்படி முதல்ல இருந்துச்சோ அப்டியே வேணும்.. துவைச்சு குடுத்துரு” கூர்மையான விழிகளோடு சொன்னான்…

“ஹ்ம்ம்” என அவனை பார்த்து சொன்னாள்…

சொன்னதும் ஓய்வு அறை நோக்கி நடந்தாள்…

“உனக்கு துவைச்சு தரணுமா… முடியாது..போடா.. அப்டியே வைப்பேன்...ரொம்பதான்..” என முனுமுனுதுக் கொண்டாள்…!!!


















 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21

ஒரு வழியாக தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து விட்டாள்….காபி நிறத்திலான புடவையை உடுத்தினாள்… மிக மெல்லிய ஒப்பனை செய்து கொண்டாள்… சென்டர் கிளிப் போட்டு.. கீழே தலர்வாக பின்னலிட்டு ஒரு குட்டி கிளிப்பும் போட்டாள்….

பின் நேத்து உடுத்தின அவளின் உடை, அவனின் உடை ஏதும் துவைக்க வில்லை… கொஞ்சம் காய வைக்கவென இடம் இருந்தது… அங்கேயே உலர மட்டும் போட்டாள்… மேலும் அங்கே ரோஜா பூந்தொட்டிகள் என பார்க்கவே மனதை இதமாகியது…..

அந்த ஓரத்தில் தேவ் நின்று தண்டல் எடுத்து கொண்டிருந்தான்….

அவன் ஜிம் அது இதுனு மெனக்கிடுகிறவன் அல்ல… ஆனாலும் தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்து விடுவான்….. அதுவே அவனை கட்டு கோப்பாக காட்டியது…

“ஹ்ம்ம், நல்லா தான் இருக்கான்” என்று எண்ணிய படி ரூமினுள் வந்துவிட்டாள்…

ரூமில் அலங்கார பூக்கள் எல்லாம் காய்ந்து இருந்தது… பெட்ஷீட்டீல் இருந்ததையும் அள்ளி… கீழே சிதறி இருந்ததயும் பெருக்கி… என ரூம்மை சுத்தபடுத்தினாள்…

அதற்கே ஏழு அறை ஆகியது… சரி கீழே போகலாம் என்று நடக்க ஆரம்பித்தாள்…

ஜெயா அங்கே இருப்பதை பார்த்ததும் “லேட் ஆகிட்டா அத்தை” என்று வினாவினால்…

“அதுலாம் இல்லை வசு, காபி குடிக்கிறியா” என்று அவளுக்கு ஒரு கப்பில் கலந்தார்…

எங்கே ஏதும் தன்னுள் எதாவது மாற்றம் இருக்கானு தேடுவார்களோ என்ற நினைப்பில் தான் வந்தாள்… அவரோ சாதாரணமா உரையாடவும் கொஞ்சம் நிம்மதி ஆனது….

கிட்சேன் பக்கத்தில் தான் டைன்னிங் ரூம்… அதுல அமர்ந்து கொண்டார்கள்…

“வசும்மா.. சாப்பாடு சாம் வீட்ல தான்… அப்புறம் சாரா அண்ணி கால் பண்ணாங்க.. மறுவீட்டுக்கு கூட்டிட்டு போக சவியும் அவள் கணவனும் வருகிறார்கள்னு சொன்னாங்க..உனக்கு ட்ரை பண்ணாங்கலாம்.. உன் போன் ஆப் னு வந்திச்சு போல…”

மறுவீடு என்பது கல்யாணம் ஆகி அடுத்த நாள் பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போகிறது ஆகும்…சில பேர் அங்கே தங்குவார்கள்…சில பேர் அதே நாளில் திரும்பி விடுவார்கள்…

“ஓஹ், ஆமா… போன்க்கு சார்ஜ் போடல..சரி நா அப்புறம் பேசிக்கிறேன்…”

“சரிடா.. சாப்டுட்டு கிளம்புங்க… இன்னொரு விஷயம்… நாம நாளைக்கு வேளாங்கண்ணி போறோம்னு நினைச்சுருக்கோம்… நேத்து உங்கிட்ட சொல்ல முடில…. மாமா டெம்போ புக் பன்னிட்டு வந்துட்டாங்க… இது நாம பண்றது தான் வசுமா… கல்யாணம் முடிச்சதும் அந்த வாரத்துல.. பொண்ணும் மாப்பிளையையும் கூட்டிட்டு போவோம்… தேவ் ஒன் வீக் தான் லீவு எடுத்துருக்கான்.. உனக்கும் அவ்ளோ நாள் தான் லீவு குடுத்துருக்கானும் சொன்னான்… அதான் நாளைக்கே போய்ட்டு வந்துடலாம்னு பார்த்தோம்…”

“சரி அத்தை போகலாம்..”

தேவும் வந்துவிடவே… அவனுக்கும் ஒரு கப் காபி குடுத்தார்…
அவன் ஹாலில் போய் பேப்பர் எடுத்து அமர்ந்து விட்டான்…

பின்னாலே.. ஜெயா சென்று அவன் எதிற்கே அமர்ந்தார்…

“தேவ், வசு வீட்ல இருந்து உன்ன கூப்பிட வராங்க.. போய்ட்டு
வாங்க..”

“சரி மா..” என்று பதில் குடுத்தான்…எதற்கு என்று அவனுக்கு தெரியும் ஆதலால் மறுக்கவில்லை..

வசு, வா வந்து இவன் பக்கத்துல உக்காரு.. என்றதும்.. அவன் ஜெயாவை பார்த்து முறைத்தான்.. போடா நீ முறைச்சாலும் பரவால்ல.. என்று திரும்பவும் கூப்பிட்டார்.. அவளோ தயக்கத்துடன் வந்து அமர்ந்தாள்…

அது இருவர் மட்டுமே அமர கூடிய சோபா… அதுனால் வந்த தயக்கம்.. ஒட்டாமல் உரசாமல் உக்கார முடியாது… இருந்தாலும் வந்து உக்கார்ந்துவிட்டாள்.. ஜெயாவிற்காக…

நீங்க ரெண்டு பேரும் இருங்க… நா சாம் வீட்டுக்கு போய் பார்த்துட்டு கூபிட்றேன்… வந்துடுங்க… வரும் போது பிரசாத், தான்யாவும் வந்தாங்கனா சேர்ந்தே வாங்க…அறிவுரைத்து விட்டு அவர் கிளம்பி விட்டார்…

சிறிது நேரத்தில் மரகதமும் தன்னை சுத்த படுத்திக்கொண்டு வந்தார்… வந்தவர்… வசுந்தரா அவனோடு அமர்ந்திருப்பதை பார்த்ததும்… “ராஜாத்தி,” என அழைத்த படி வந்தார்…

வந்தவர்.. “ரொம்ப அழகா இருக்கமா” என கன்னம் வழித்தார்..

பின் தேவிடம் “ ராசா.. உங்க ரெண்டு பேரையும் இப்டி ஒரு சேர பார்க்க குளிர்ச்சியா இருக்குயா” என அவன் கன்னத்தையும் பிடித்தார்…

இரண்டு பேரும் ஒரு குட்டி புன்னகையே குடுத்தனார்…

“ராஜாத்தி… இரு நா பூவும், ஹேர் பின்னும் எடுத்துட்டு வரேன்” என குளிர்சாதன பெட்டியை நோக்கி சென்றார்..

திரும்ப வந்து அவளிடம் குடுத்து வைக்க சொல்லி… அவர் ரூமினுள் சென்றார்…

இவளும் பூவைப்போம் என.. இரு கைகளை தூக்கி தலையில் வைத்துக் கொண்டிருந்தாள்… அவள் கையை தூக்கினதும் அவள் மேடுகள் முன்னோக்கி வந்ததை கவனித்தான் …

சுளிர் என முறுக்கேரிய உணர்வு… இது வரை யாரையும் கண்ணுக்கு கீழாக பார்த்தது இல்லை…அதில் ஐஸ்வர்யாவுக்கு பெரும் குறை தான்…ஆனால் இவளை பார்த்தான் முதல் முறையாக அவனையும் அறியாமல்.…

வெளியே யாரோ வரும் அரவம் கேட்கவும்… அவனை மீட்டு எடுத்தான்…

“மரகதம், ஏய் மரகதம்” என குரல் குடுத்தபடி வந்தார் வேணி பாட்டி… மரகததின் நீண்ட கால தோழி…

இவர் சத்தம் கேட்டதும் வேகமாக வந்தார் மரகதம்… “வா வேணி… நீ நேத்தே வருவனு நினைச்சேன்..”

“நேத்து கொஞ்சம் தலவலி மரகதம், அதான் வர முடில”

“இப்போ எப்படி இருக்குறவ?”

“இப்போ நல்லா இருக்கேன்… இல்லைனா வருவேனா? “

“சரி சரி, காபி தண்ணி குடுக்கிறியா”

“வேணா மரகதம்… பொண்ண பாக்க தான் வேகமா வந்தேன்”

“சரி சரி, வா வா.. இங்கன உக்காரு.. இதோ இவ தான் ஏன் பேத்தி வசுந்தரா…”

“ஹ்ம்ம், நல்லா வசுந்தரமா தான் இருக்கா…”

“என்ன தாயி எப்படி இருக்க” என வசுவிடம் கேட்டார்..

“நான் நல்லா இருக்கேன் பாட்டி” பதில் குடுத்தாள்…

“ராஜாத்தி… இவ தான் வேணி.. ஏன் கூட படிச்சவ… ஒரு கட்டத்துல குடும்ப சூழ்நிலையால சீக்கிரமா கல்யாணம் பன்னிட்டு போய்ட்டா… அப்புறம் கொஞ்ச வருஷம் முன்னாடி தான் இங்க வந்து இருக்குறா” என வேணி பாட்டியை அறிமுக படுத்தினார்…

“ஓஹ் சரி பாட்டி, நல்லா இருக்கீங்களா?” விசாரித்தாள்..

“நா நல்லா இருக்கேன் தாயி…அப்புறம் ஏன் பேராண்டி உன்ன நல்லா பாத்துகிறனா?”வேணி அவளிடம் கேட்டார்…

இவள் என்ன சொல்லவென முழிக்கையில்… அவரே மேலும் பேசினார்…

“நீ தலைக்கு ஊத்தலயா தாயி… நேத்து தானே முதல் இரவு முடிஞ்சுது… இன்னிக்கு நீ தலைக்குல ஊத்திருக்கனும்… என்ன மரகதம் நீ இதல்லாம் கவனிக்கலயா… இல்லை நேத்து சடங்கே வைக்கலயா”

தேவ்க்கு வேணி பாட்டி கேட்டது புடிக்கவில்லை…ஏதோ அவன் பர்சனல்யை கடை பரப்புவது போல் இருந்தது….

அவனுக்கு கோவமும் வந்தது… எதோ சொல்ல வாய் எடுக்கயில், அவன் பேச விடாமல் அவன் உள்ளங்கையை பிடித்தாள்… “ஏங்க, ப்ளீஸ்” கெஞ்சலான பார்வை பார்த்தாள்…

என்ன நினைத்தானோ… அமைதி ஆகிட்டான்…

ஆனாலும் கை பற்றியதை எடுக்க வில்லை அவள்….

வசுவின் கை, மிகவும் மிருதுவான கை…பொதுவாய் பெண்களுக்கு கொஞ்சம் மிருதுவான கை தான் இருக்கும்.. இவளுக்கு அதை விட ரொம்ப மிருதுவானது.. அவனுக்கு பஞ்சை பிடித்ததை போலவே இருந்தது… அவள் தான் பிடித்தாலே தவிர இவன் பிடிக்கவில்லை... ஆனால் உணர்ந்தான்…. “என்ன சாப்ட்ரா சாமி” என நினைத்தான்… அவள் கையை தன் கைக்குள் பொதிந்து வைக்க தோன்றியது… ஆனாலும் எதோ தடுத்தது…

இவன் கோவத்தை பார்த்த மரகதமோ, “வேணி.. எங்களுக்கு அந்த சாம்பிராதாயம்லா இல்லை..நீ சும்மா இரு” அவரை அடக்கினார்…

“சரி சரி, எதோ சொல்ற கேட்டுக்கிறேன்..” பின்னர் வசுந்தராவை பார்த்து… “புருஷன முதல் முனு மாசத்துக்குள்ள கைக்குள்ள வச்சுக்கனும்..அதாவது முந்தாவனை குள்ள முடுஞ்சுக்கணும்… அதுக்கு தலையணை மந்திரம் தான் ரொம்ப முக்கியம் ஆரம்பத்துல … கல்யாண ஆன புதுசுல ஆம்பளைங்க வேகமா இருப்பாங்க.. அப்போவே கப்புனு புடிச்சுக்கணும்… இல்லனு வை காலத்தை தள்ள கஷ்டமாகும்.. எல்லாத்துக்கும் சண்டை தான் வரும்… புரிதல் தாமதமாகும்…”

அவர் சொல்ல சொல்ல… ஒரு மாதிரி லஜ்ஜயாக இருந்தது… அவளை அறியாமல் அவள் கால்கள் தரையில் அழுத்தமா ஊன்றியது… அந்த அழுத்தம் அவள் தொடையிலும் தெரிந்தது.. அதை தேவ் உணர்ந்தான்… மேலும் அவள் கையோ.. அவன் கையை மிக அழுத்தமா பிடித்துக் கொண்டே… “ஹ்ம்ம்” என தலையை ஆட்டினால்…

“இவ நம்மல வெறி ஏத்தாம விட மாட்டா போலயே” என்று மனதினுள் நினைத்தான்…

அந்த நேரத்தில் லாவண்யாவின் தம்பி இவர்களை சாப்பிட அழைக்க வந்தான்…

மரகதமோ, “ சரி, வரோம்” என அவனை அனுப்பி விட்டார்…

“ராசா, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட போங்க.. நாங்க பிரசாத் வந்ததும் வரோம்” என அவர்களை இங்கே இருந்து கிளப்ப முற்பட்டார்…

இல்லையென்றால்… சமாளிக்க முடியாது… வேணி பேசுற பேச்சுக்கு என்று எண்ணி சொன்னார் தேவிடம்….

அவனும் அவளும் சரி என எழுந்தார்கள்…அப்பொழுதாவது அவள் கையை எடுப்பாள் என்று பார்த்தான்… அவளுக்கு அப்டி ஒரு நினைப்பு இருந்ததாவே தெரியவில்லை… கடிந்து பேசவும் வரவில்லை… அவன் கை விரிந்த நிலையில் தான் இருந்தது… இன்னுமும் அவன் பிடிக்கவில்லை…

ஜெயா அங்கே சாம் வீட்டுக வாச படியில் நிற்பதை பார்த்ததும்…
“மேடம், கொஞ்சம் கைய எடுக்குறீங்களா?” என நக்கலாக கேட்டான்….

அவளுக்கு அப்பவும் புரியவில்லை…என்னத்த சொல்றான் என அவனை ஏறிட்டு பார்த்தாள்…

அவன் கண்களால் கைய காட்டியதும்… பட்டென விட்டாள்…

அவளுக்கு “ஹையோவென” இருந்தது… எப்போ புடிச்சேன் என யோசித்தும் விடை கிடைக்கவில்லை… சரி போ.. ரொம்பத்தான் பன்றான்… என விட்டுவிட்டாள்…

சாம் வீடும் வந்து விடவே… உள்ளே நுழைந்தார்கள்…!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22

சாம் வீட்டுக்குள் நுழைந்ததும்.. பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கென பிரத்தியேக கவனிப்பு நடந்தது…

விருந்தும் தட புடலாக இருந்தது..காலையிலே இட்லி, சட்னி, சிக்கன் குழம்பு.. கேசரி, வடை என நிறைவாக செய்து இருந்தார்.. சுகிர்தா…
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும்… தேவ் வெளியில் அவன் அப்பாவோட அமர்ந்து விட்டான்…

சிறிது நேரத்தில்.. சவியும், பிரவீனும் அவர்கள் வந்த காரை வெளியிலே பார்க் பண்ணி விட்டு உள்ளே வந்தார்கள்…

ஜெயா முதலில் கவனித்து விட்டு சாம் வீட்டிற்கே அழைத்து வந்தார்…
மரகதம், “வா மா.. நல்லா இருக்கியா”

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன்.. பாட்டி” கண்ணுக்கு எட்டாத புன்னகையோடே சொன்னாள்..

“சாப்பிட்ரியா, தங்கம்” அழைத்தார்…

“பாட்டி, வர வழில தான் சாப்பிட்டோம்”

“சரி கண்ணு.. காபி மட்டும் குடி..” என ஜெயாவிடம் கொண்டு வர சொன்னார்…

சவியின் கண்கள் வசுவை தான் தேடின…தேவிடம் பேச கூட தோன்றவில்லை…

வசுந்தராவோ உள்ளே இருந்தாள்……

பிரவீன், தேவோடே ஐக்கியம் ஆகிவிட்டான்…

ஜெயா, சவியை உள்ளே அழைத்து சென்றார்…

“சவி, உள்ளே தான் வசு இருக்கா.. வா மா” என்று உள்ளே கூப்பிட்டு சொன்னார்….

அவள் தலை நடு கூடத்தில் தெரிந்ததும்..

“சவி,” என வேகமாய் வந்தாள்…“இப்போதான் வந்தியா.. வா வா” என அவள் கை பிடித்து அழைத்தாள்…

“ஹ்ம்ம்” என்று அவள் கூர்மையான விழிகளால் ஆராய்ந்தாள்…

அழுத தடமோ… இல்லை சந்தோஷத்தின் சாயலோ.. எதுமே தெரியவில்லை… எப்பொழுதும் போலவே இருந்தது…
ஜெயாவோ.. நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.. நா காபி எடுத்துட்டு வரேன்…என்று சமையல் அறைக்கு சென்றார்..

“அப்புறம், எப்படி இருக்க.. நல்லபடியா முதல் ராத்திரி முடுஞ்சுதா” குதர்க்கமா கேட்டாள்..

கேட்டதும் வசுவோ முறைத்தாள்…

“நடந்திருந்தா மட்டும்.. என்ன ஆக போகுது..” சவி..
“ஹே, ஏன்டி.. நீ அத விட மாட்டியா”

“நீ பேசாத..எனக்கு வர ஆத்திரத்துக்கு, உன் மாமியார பிடிச்சு நல்லா நாலு கேள்வி கேக்க தோணுது..”

“ப்ளீஸ் டி… அமைதியா இரு.. நா இன்னிக்கு எல்லாம் சொல்றேன்… நாம கார்ல போகும் போதே சொல்றேன்.. அது வரைக்கும் அமைதியா இரு”

“முடில வசு..” அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே.. சுகிர்தா காபியோடே வந்தார்…

“நல்லா இருக்கியாமா, காபி எடுத்துக்கோ..”

“நல்லா இருக்கேன்.. தேங்க்ஸ் ஆண்ட்டி” என்று ஒரு கப் எடுத்து கொண்டாள்…

வசுவிற்கோ.. இவளை இங்கிருந்து கிளப்புனா போதும் என்ற நிலை… அவள் குடித்து முடிக்கவும்..

ஜெயாவே ஆரம்பித்தார்… மணி 10 ஆக போகுது… இப்போ கிளம்புனா தான் 12 மணிக்காவது போவீங்க… பிரவீன் தம்பியும் கிளம்ப சொல்றாரு…

“சரி அத்தை, அப்போ கிளம்புறோம்” என எல்லாரிடமும் விடை பெற்று… அவள் ஹாண்ட் பாக் எடுக்க மரகத பாட்டி வீட்டுக்கு நடந்தாள்…

இவள் பாக் எடுத்து வெளியே நடக்க ஆரம்பிக்கும் போது.. தேவ் உள்ளே வந்தான்…

இவள் வெளியே வந்ததும்.. சவி பிடி பிடியென பிடித்துக் கொண்டாள்…

“என்னவாம்டீ உன் வூட்டுக்காரருக்கு… எங்க கார்லலாம் வர மாட்டாரா” சவி

“என்ன ஆச்சு… அப்போ எதுல போறோம்..”

“கார்ல போறோம் தான்.. ஆனா தனி தனியா… உன் ஆத்துக்காரர் அவுக கார்ல தான் வருவாராம்.. இதுக்கு எதுக்கு நாங்க வரணும்.. உன் ஆத்துக்காரருக்கு உன் மாமியார் சப்போர்ட்வேற…”

“அச்சச்சோ… ஹே நீ இங்கேயே நில்லு நா போய் பேசிட்டு வரேன்” என சவி பதிலை கூட எதிர் பாராது தட தடவென மாடி படிகளில் ஓடினாள்..

தேவ் அப்பொழுது தான் அவன் ரூமில் இருந்து வெளியேறி கதவை அடைத்து கொண்டிருந்தான்…

“ஏங்க ஏங்க.. ஒரு நிமிஷம்” மூச்சு வாங்க அவன் முன்னாடி வந்து நின்றாள்…

அவன் என்ன, ஏதும் என்று கேக்காமல்… கூர்மையான விழிகளால் அவளை அளவிட்டான்…

“உங்க கார்லயா போறோம், அத்தான் கார் இல்லையா” வேண்டும் என்று உங்க கார்னு கூறவில்லை… அவள் வீடு அவள் உரிமை என்ற உணர்வு இன்னும் பதியவில்லை என்பதே உண்மை..

ஆனால், அவனுக்கோ.. ஏன் நம்ம கார்னு சொல்ல மாட்டாளோ.. என்கிற கோவம்…

“ஹ்ம்ம்” என அழுத்தமாய் கூறி விறு விறுவென கீழே இறங்கினான்…

இவர்களை வழி அனுப்பவென மரகதம், ஜெயா வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்… கூடவே சவியும் இருந்தாள்..
இவளும் அவன் பின்னே விரைவாக வந்து ஜெயா பக்கத்தில் நின்றாள்…

“அத்தை.. இவங்களும் அவங்க கார் எடுக்குறாங்களாம்..ஒரே கார்ல போகலாம் தானே… மெனக்கெட்டு சவியும்.. அத்தானும் வந்துருக்காங்களே…அவங்களோட போறது தானே சரியா இருக்கும்..”

இவள் சொன்னதும் அவன் இவளை பார்த்து கண்ணில் கோவத்தோட நின்று விட்டான்… மறுபடியும் அவங்க கார்னு தான் சொல்றா…என்கிற கோவம்…

அதை பார்த்தும்விட்டாள்.. நான் அப்டி என்ன தப்பா கேட்டுட்டேன்… நீ கோப பட்டு பார்த்தா.. நா பயப்படணுமா… முடியாது..போடா.. என்று தெனாவெட்டாக பார்த்தாள்…

ஜெயாவிற்கோ, இவள் கேட்பது சரிதான் இருந்தாலும்.. அவன் மறுக்காமல் வருவதே மிக பெரியது… இந்த நிலையில் அவன் இஷ்டத்துக்கு குறுக்கே வந்தா…நீங்களாச்ச்சு உங்க மறுவீடாச்சு… என்று தூக்கி போட்டுட்டு போனாலும் ஆச்சரியபடுவதில்லை…எப்படி சமாளிக்கவென அறியாத நிலை…கூடவே எங்கே இவளை காயப்படுத்திடுவானோ என்கிற பயமும்..

மரகதமோ, “ராஜாத்தி.. நீ கேக்கறது சரிதான்… இருந்தாலும்… இன்னிக்குள்ள நீங்க திரும்பி வரதா யோசிச்சிருக்கீங்க.. அப்போ அவங்களோட போனா… திரும்பி வரப்போ அவங்க தான் கூட்டிட்டு வர மாதிரி இருக்கும்… அது அவங்களுக்கும் அலைச்சல் தானே.. ” நிதர்சனத்தை புரியும்படி விளக்கினார் என்றே சொல்லலாம்…

மரகதம் பேச ஆரம்பித்தவுடன்.. தேவ் காரை எடுக்க ஷெட்க்கு சென்றான்…

மரகத பாட்டி சொன்னதும் தான் இவளுக்கும் உறைத்தது…
சவியோ, “ஹையோ பாட்டி அதுலாம் எங்களுக்கு அலைச்சலாம் இல்லை…இதுல என்ன இருக்கு…ஏன் அக்கா தானே.. அவளுக்காக நாங்க செய்வோம்ல” ஆதங்கத்தோடே கூறினாள்…

“இருக்கட்டும்டா.. ஒரே நாள்ல சோர்வா இருக்கும்…” மரகதம்
இதற்கு மேல் இவர்களுடன் என்ன பேச என அமைதி ஆகிவிட்டாள் சவி…

“ஹ்ம்ம் கரெக்ட் தான் பாட்டி.. நா இத யோசிக்கவே இல்லை..” புன்னகையுடன் கூறினாள்…

சவிக்கு கடுப்பாக இருந்தது…
சரி பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க என்ற வாழ்த்துதலோடு வழி அனுப்பினார்கள் எல்லாரும்..…

தேவும் கார் எடுத்து பிரவீன் கார் பின்னே நிறுத்தினான்…

சவியும், வசுவும் இணைந்து நடந்தார்கள்…

சவி ஏதும் சொல்லாமல்… முன்னே இருந்த தன் கரினுள் ஏறிக் கொண்டாள்…

இவளும் முன்னே ஏறிகொண்டாள்…

“ஏங்க.. நா சவி கூட வரட்டுமா?!” கண்ணை சுருக்கி கெஞ்சுதலோடு கேட்டாள்…

வேற யாராவது இருந்தால் அவள் கெஞ்சி கேட்டதுக்குகாகவே… சரி என்று சொல்லி இருக்க கூடும்…

இவனோ வேறு பட்டவன் அல்லவா.. “அப்போ நீ மட்டும் மறுவீட்டு விருந்து போய்ட்டு வந்திர்றியா?” சிடு சிடுவென கூறினான்…
அவன் சொன்னதை கேட்டதும்.. மறுபடியும் அவள் முகம் சுருங்கியது…

அதை பார்த்தவன், “ம்ப்ச், ஐ அம் நாட் கம்போர்டேபிள் வசுந்தரா”
இவன் இந்த அளவு விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. ஆனால் அவள் முகம் சிறிது சுணக்கம் கண்டாலும்… அதை தகர்த்தெறிய பிராயாச படுகிறான்.. என்பது இன்னுமே அவன் உணரவில்லை…

இப்படியாக.. ஒரு வழியாக வசுவின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்…
தேவிற்கு ராஜ மரியாதை தான்…

அவனை உபசரித்ததும்…. சாராவோ, “மாப்பிள்ளை, உங்களுக்கு அசதியா இருக்கும்.. நீங்க கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க.. வசு” என்று ஆரம்பித்ததும்… அதற்குள் சவியோ, “பிரவீன், நீங்க மாமாவை அழைச்சுட்டு மாடி வீட்டுக்கு போங்க….”

சாராவும் சிரித்தபடி விட்டு விட்டார்…
வசுவிடம் பேச விருப்பம் என்றும் நினைத்து கொண்டார்….

பிரவீன், “ சரி சவி.. நா அவருக்கு ஹெல்ப் பன்னிட்டு அப்டியே கிளம்புறேன்..நா வரதுக்கு சாயங்காலம் ஆகிடும்..மதியம் வெளில சாப்ட்டுக்கிறேன்…… ” என்று தேவ்வை பார்த்து, “வாங்க சகல.. நாம போகலாம்” என்று கிளம்பி விட்டார்கள்…

வசு, சாரா பின்னே சமையல் அறைக்கு சென்றாள்…
“ம்மா, எனக்கு உங்க கையால ஒரு காபி” என்று சாராவிடம் கேட்டாள்…

“ஏய், இப்போ என்னடீ காபி” என்று அவள் முகத்தையே ஆராய்ந்தார்….

சோபயான முகமோ, அதையும் மீறின மலர்ச்சியோ எதுவும் தெரியவில்லை….. எப்பொழுதும் போலவே இருந்தது… எதையும் கண்டும் புடிக்க முடியவில்லை….பெற்ற பெண்ணிடம் சந்தோசமாக இருக்கறியானு கேட்கவும் எதுவோ தடுத்தது… ஒரு மாதிரி சங்கோஜம் என்றும் கூறலாம்…..

அவர் குறு குறுவென பார்ப்பதை பார்த்ததும்… இவளுக்கும் ஹையோவென வந்தது..

“என்னை பார்த்தது போதும்.. காபி குடுங்க”

ஏற்கனவே அவர் போட்டு வைத்திருந்ததை எடுத்து கப்பில் ஊற்றி குடுத்தார்….

அதை எடுத்து பருகவும் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது அவள் மனது….
“அப்புறம், மாப்பிள்ளை என்ன விரும்பி சாப்பிடுவாரு..”

“ம்மா, அதுலாம் தெரியாது… “

“ஏண்டி இதல்லாம் தெரிஞ்சு வச்சுக்க மாட்டியா”

“தெரிஞ்சு நான் என்னமா பண்ண போறேன்”

“என்னடி இப்டி சொல்ற, கணவன் மனதில் இடம் பிடிக்குறது முக்கியம் தான்.. ஆனா அதுக்கும் முன்னால அவன் வயிறு வாடாம பாத்துக்கணும்..அப்படியும் அவன் மனசுல நீங்கா இடம் புடிக்கலாம்”
“ஹ்ம்ம், புடிக்கலாம் புடிக்கலாம்” என்று நக்கல் அடித்தாலும்… அவள் மனதில் ஊன்றதான் செய்தது…

அதற்குள் சவியும் வளரும்… பிரவீனை அனுப்பிவிட்டு வரவே..சமையல் அறை கலை கட்டியது…

ஒரு மணி நேரம் சென்றதும்… சாரா போய் தேவ்வை அழைத்து வர சொன்னர்… இவளும் சரி என்று அழைக்க சென்றாள்…

மேலே ஏறி வந்தாள்… அவனோ மொபைல் மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தான்…

“ஏங்க” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தாள்….

அவன் குரல் வந்த திசையை ஏற்றெடுத்து பார்த்தான்…

“உங்கள சாப்பிட கூப்பிடறாங்க…வாங்க” வசு
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தான்…

சொல்லிவிட்டு, வேகமாக கீழே இறங்கினாள் …
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23


டையனிங் அறையில்… சாப்பாட்டு மேஜையில்… வாழை இல்லை போட பட்டிருந்தது… அவர்கள் வீட்டிலேயே… விளைந்த இலைகள் அவை


தடா புடலாக சாரா செய்திருந்தார்…. சிக்கன் பிரியாணி, சிக்கன் 65,முட்டை, மட்டன் சுக்கா…சிக்கன் குழம்பு…சோறு…ரசம்…இது போதாதுவென பாயசம்வேறு….


இலை போட பட்டுருந்ததை பார்த்தததும்…சாராவிடம் வந்து, “ம்மா, நா உங்க கூட சாப்புடுறேன்..” என செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள்…

“வசு, முதல் முதல் வீட்டுக்கு விருந்துக்குன்னு வந்துருக்க…மாப்பிளை கூட தான் சாப்டணும்”


“ம்மா, காலம் முழுதும் அவரு கூட தானே சாப்பிட போறேன்.. இன்னிக்கு உங்க கூட தான் சாப்பிடுவேன்” அடமாக நின்றாள்…


“இது என்ன கிறுக்குதனமா பண்ணுற…. இப்டி உன்ன கல்யாணம் பண்ணி வச்சு.. மாப்பிளை கூட நீ சாப்பிடற அழக பார்க்கணும்னு எனக்கு ஆசை தெரிமா”


அவர் கண்ணில் உண்மையில் அந்த ஆசை மிளிர்ந்தது… அதை பார்த்ததும்… சரி என்று போய் அமர்ந்து விட்டாள்…


சாரா நடு கூடத்தில் அவன் அமர்ந்திருந்ததை பார்த்து அழைத்து வந்தார்…

வந்ததும் அவரே பரிமாறினார்..


“மாப்பிள்ளை, உங்களுக்கு என்ன புடிக்கும்னு தெரில… என்னால முடிஞ்சத பண்ணிருக்கேன்… திருப்தியா சாப்பிடுங்க” என்றவருக்கு…


“சரி அத்தை” என்று பதில் குடுத்தான்…


அவரும் அவர்களுக்கு கொஞ்சம் தனிமை குடுக்க எண்ணி… “வசும்மா, மாப்பிள்ளைய கவனிச்சுக்கோ…. நீயும் நல்லா சாப்பிடு… ஏதாச்சும் வேணும்னா கூப்பிடு… நா ஹால்ல இருக்கேன்” அவள் “சரிமா” என்றதும் நகர்ந்து விட்டார்…

இவளுக்கும் நல்ல பசி, எனவே அவனை கண்டுகிடாமல் சாப்பிட்டு கொண்டிரிந்தாள்…

அவள் நல்லா சாப்பிடுவதை இன்னிக்கு தான் பார்க்கிறான்… அவன் வீட்டிலும் சரி கல்யாணம் ஆன நாளிலும் சரி.. கொறித்து கொறித்து சாப்பிடுவதைதான் பார்த்திருந்தான்…

“அவ அம்மா சாப்பாட மிஸ் பண்றா போல” என்று நினைத்து கொண்டான்…

அவன் சாரா முதலில் வைத்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டான்… அதை கவனித்த உடனே அவள் அவனுக்கு இன்னும் கொஞ்சம் வைக்கவா என்று கேட்டு… பரிமாறினால்…

“ஹ்ம்ம், இது கூட நல்லா தான் இருக்கு” என்று நினைத்து கொண்டான்… கவனிக்க படுவதும் சுகம் தானே…!!

தயிர் பச்சடி அவனுக்கும் இடது பக்கத்தில் தள்ளி இருந்தது… இவள் அவனுக்கு வலது பக்கத்தில் இருந்தாள்…


அதை எடுப்பதற்கு இவள் எழும்பி நின்று எட்டிதான் எடுக்க வேண்டும்…


அவள் எழுந்து எட்டி எடுக்கும் போது அவள் இடது பக்கம் இடுப்பு முழுவதும், கூடவே குழைந்த தொப்புளும் அவனுக்கு காட்சி ஆனது….


அதை பார்த்ததும் இவனுக்கு என்னவென்று சொல்லமுடியாத உணர்வு… எவன்டா.. இந்த சேலைய கண்டு புடிச்சான் அப்படிங்கிற நிலைமை… சீக்கிரமா அவள் எடுத்துட்டு உக்காந்தா நல்லா இருக்கும் என்று தான் தோன்றியது.. அப்டியே அந்த தொப்புளுக்கு ஒரு முத்தம் வச்சுடுவோமா என்றுவரை நினைப்பு நீண்டது…

அவள் அவன் இலையில் வைத்துவிட்டு அமர்ந்தாள்…

அப்போ தான் அப்பாடா என்கிற உணர்வு…

ஒரு வழியாக சாப்பிட்டு எந்திரித்து விட்டார்கள்…


இவர்கள் இருவரும் நடு கூடத்திற்கு வந்ததும்…. வளர், பாயசத்தை சிறு கோப்பையில் ஊற்றி எடுத்து வந்தார்… அவனிடம் கொடுக்கவேன நீட்டினார்..


ஹையோ, இன்னுமா என்று அவன் விழி பிதுங்கியது…

“இல்லை ஆண்ட்டி, எனக்கு வேணாம்… ரொம்ப ஹேவியா இருக்கு…”

“இது ஒண்ணும் செய்யாது.. கொஞ்சம் குடிங்க… நல்லா இருக்கும்…” என்று திணித்தார்…

அவனும் சரி என்று வாங்கி கொண்டான்…


“ஹப்பா… இதான் மாமியார் வீட்டு விருந்தா… அதுனால தான் ஹரிஷ்ம், தருணும்… வெயிட் கொஞ்சம் போட்ருறாங்களோ அவனுக மாமியார் வீட்டுக்கு போனதும்” என்று நினைத்தவாரு பாயசத்தை உள்ளே தள்ளினான்…


சிறிது நேரத்தில் தூக்கமும் கண்ணை சுழட்டியது… மதியம் தூங்கிற பழக்கமும் இல்லை… ஆனால்… இப்பொழுதோ கண்கள் கெஞ்சியது தூக்கத்திற்கு…

சாரா, வசுவிடம்..” வசு, நீயும் மாப்பிளையும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்று அனுப்பினார்…

வசுவிற்கோ.. இந்த அம்மா ஏன் இப்டி அவன் கூடவே கோர்த்து விடறாங்க…ஏன் கூட இருக்கனும்ணு தோணவே இல்லை.. என்று கவலையாக இருந்தது… இருந்தாலும் அவர் சொல்லை மதித்து… இருவரும்.. மேல் அறைக்கு சென்றார்கள்…

சென்றதும்.. ஏ சி யை உயிர்ப்பித்தாள்… பின்.. நீங்க வேற டிரஸ் எடுத்துட்டு வரலையே… இதோடே படுத்தா… கச கசணு இருக்கும்ல…

“ஹ்ம்ம்” என்று சொல்லியப்படி.. ஷர்ட்இன் பட்டன் ஓவ்வன்றையும் கழட்டினான்…

அதை பார்த்ததும் அவள் கண்கள் முட்டை போல் விரிந்தது….

“ஹையோ, என்ன இவன் கூச்சமில்லாம கழற்றான்..”

அவன் கை பெல்ட்யில் போனதும்…”ஹையோ அம்மா, என்று படக்கென திரும்பினாள்…

அவனுக்கு புன்னகை எழும்பியது… அதை அடக்கி கொண்டான்.. வெறும் பெல்ட் மட்டும் கழட்டி கொண்டான்.…பின், அவன் கப்போர்டுல் ஷர்ட்யை தொங்க போட்டு வந்து… படுத்து விட்டான்…

“திரும்பலாமா.. வேணாமா”… என்று ஒத்தையா ரெட்டையா என பார்த்து கொண்டிருந்தாள்…


கொஞ்சமா திரும்பி ஓர கண்ணால் பார்த்தாள்… பாண்ட் இருந்ததும் தான் நிம்மதி ஆனது…


“ஏங்க”

“ம்ம்ம்”

“ நா வேண்ணா அப்பா கைலி எடுத்துட்டு வரவா.. “

“வேணாம் பழக்கம் இல்லை..”

“அப்போ அருண் ட்ராக் பாண்ட் ஏதாச்சும் எடுத்துட்டு வரவா”

“தேவை இல்லை” பட்டென்று கூறினான்..

“ஹ்ம்ம், ரொம்பதான்” என்று மனதில் வைது கொண்டு இன்னொரு பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டால்….



அவன் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.. இவளுக்கு தூக்கமே வரவில்லை… சவியிடம் பேசிவிட்டால் மட்டுமே திருப்தியா இருக்கும் என்று தோணியது…



வாட்ஸாப்யில் நுழைந்து அவளுக்கு மெசேஜ் பண்ணினாள்…. பண்ணவுடன் உடனே அவளிடம் இருந்து பதில் வந்தது…



அவளை மேலே வர சொன்னாள் வசு…சவியும் சரி என்றுவிடவே… இவள் போய் நடு கூடத்தில் அமர்ந்தாள்…

சவி மேலே வரேன் சொல்லி 20 நிமிடம் கடந்த நிலையில் தான் வந்தாள்…


இரு வசு, நா ரெப்பிரேஷ் பன்னிட்டு வரேன்…என்று இன்னொரு ரூமிற்கு போனாள்… அங்கே இரு படுக்கை அறை கொண்ட மாடி வீடு அல்லவா… அதில் இன்னொரு ரூமை சவி பயன் படுத்திக்கொள்வாள்….

தன்னை சுத்த படுத்தி கொண்டு வெளியே வந்தாள்…

“ஹ்ம்ம் சொல்லு, என்ன நடந்துச்சு…” எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேராகவே கேட்டாள்… அவள் மனமும் இரு நாட்களாக உலைகளமாக கொதிக்கிறது அல்லவா!

நடந்ததை விவரித்து கூறினாள் வசு…

அவள் சொல்லி முடித்ததும் சவிக்கு தோன்றியது ஒன்னு தான் “பரவால்ல மனுஷன் இவள்கிட்ட உண்மைய சொல்லிருக்காரு” நல்லவர் தான் போலவே… வசுவின் மேல் தான் கோவம் மொத்தமும் திரும்பியது…

மதிய நேரம் தூங்கி பழக்கம் இல்லை ஆதலால், நாற்பது நிமிடங்களில் எழுந்து விட்டான்… உள்ளேயும் இருக்க முடியவில்லை என வெளியே வந்தான்…இவர்கள் இப்படியாக பேசி கொண்டிருக்கும் போது தேவும் வெளியே வந்தான்… வந்தவன் நின்று விட்டான் இவனை பற்றி பேச்சு என்றதும்… கேட்குறது தப்பு என்று தெரியும்… ஆனாலும் சவி கேட்ட கேள்விக்கு அவனுக்குமே விடை தெரிய வேண்டியதா இருந்தது…


சவி, “வசு பேபி, எனக்கு இப்போ மாமா மேல கோவமே வரல.. உன் மேல தான் கோவம் வருது.. தெரிஞ்சதும் நீ ஏன் வீட்ல சொல்லல..”


“இத எப்படி வீட்ல சொல்ல?”


“சரி சொல்ல வேணாம்.. அப்போ அவரு சாய்ஸ் குடுத்தார்ல.. அப்போ நீ வேணாம்ணு சொல்லிருக்கலாம்ல”

“சவி, எனக்கு அத்தை பேசுனாங்க.. “

“சிபாரிசு பண்ணியோ, பரிதாபத்துலயோ.. கல்யாணம் பண்ணி காதல் வரும்ணு நினைக்கறியா?

“இல்லை தான்… எப்பிடி இருந்தாலும் கல்யாணம் பண்ணி தான் ஆகணும்… அன்னிக்கி இப்டி இருந்தா கொஞ்சம் சுதந்திரமா இருக்கலாம்ணு தோணுச்சு”


“இது உனக்கே அபத்தமான இல்லை…”



“ப்ளீஸ் சவி, அவருக்கு குழந்த பெத்துகிறதுல ப்ரோப்லேம் இருந்தாலும் பரவால்ல… உலகம் எவ்ளோவோ முன்னேறிட்டு இருக்கு… ஹ்ம்ம்.. இம்போட்டென்ட் இருந்தா கூட செயற்கை முறைல குழந்தை பெத்துக்கலாம்… எனக்கு கல்யாணம் ஆனதும் உடனே எனக்கு என்னை குடுக்க முடியும்ணு தோணல… அதுக்கு இது பரவால்லணு தோணுச்சு.. முதல்ல பார்த்ததும் புடிச்சது உண்மை தான்.. அதுக்காக காதல் இல்லை… உண்மையிலே அத்தையை புடிச்சது... வாழ்க்கை இப்டி பட்டும் படாமலும் இருந்தாலும் சரி தான்… ஒரு வேளை எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் ஆச்சுன்னாலும் சரிதான்”


“ஹ்ம்ம், என்னமோ போ…. வாழ்க்கை விளையாட்டு இல்லை…. சரி பார்ப்போம்.. சந்தோசமா இரு.. அவ்ளோதான்”

இதையெல்லாம் கேட்ட தேவ்க்கு.. ஏன் இந்த பெண்ணிடம் சொல்லாம போனோம்… இவள்ட்ட பேசிருந்தா.. இவளே நிறுத்திருப்பா… ச்ச.. தவற விட்டுட்டோமே என்று வருத்தம் உண்டானது…


ஒரு பெரு மூச்சுடன் உள்ளே சென்றான்… அவர்களும் கீழே சென்றார்கள்…


5 ஆனதும் கீழே இறங்கினான்… ஜோஷுவா அவனிடம் அவன் வேலைய பத்தி விசாரித்து கொண்டிருந்தார்…

வசுவை தேடுனாலும்… பெரிதாக அலட்டி கொள்ள வில்லை…

இவன் வந்ததை கவனித்து… சமையல் அறைக்கு சென்றாள்… காபி குடுக்கலாம் என்பதர்காக…

சாரா, அப்போ தான் கலந்து கொண்டிருந்தார்…

இவள் வந்ததும்.. இவளிடம் எல்லாருக்கும் சேர்த்து குடுத்து விட்டார்…

அவனும் தனக்கு என்று ஒன்னு எடுத்துக் கொண்டான்..

இவளும் எடுத்துகொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்தாள்…

பின், கொஞ்சம் குனிந்து அவள் கிட்டே வந்து…. கிளம்பலாமா..… என்று கேட்டான்…

இப்போவேவா.. என்றதிற்கு… “ஹ்ம்ம்” என்றான்…

“சரி, நீங்களே அப்பாகிட்ட சொல்லுங்க..”

அவளுக்கு ஏதும் சொல்லாமல்… “மாமா, நாங்க அப்டியே கிளம்பட்டுமா” என்று கேட்டான்…

சாராவோ, “நைட் சாப்பிட்டுட்டு போகலாமே மாப்ள” என்பதிற்கு “அத்தை, நாளைக்கு நாகப்பட்டினம் போக பிளான் பன்னிருக்கோம்… சீக்கிரம் வீட்டுக்கு போனா தான் நாளைக்கு நேரமே கிளம்ப முடியும்”

சரி என்று சொல்வதை தவிர வேற வழி இல்லை…

அவளும் கிளம்புறேன் கிளம்புறேன் என்று நேரத்தை கடத்தி ஒரு வழியாக…. 6மணி போல் கிளம்பினார்கள்…

போகும் போது சவியோ, “இனிமே எதுனாலும் எனக்கு கால் பண்ணி சொல்லு… உன்ன பாத்துக்கோ” என்று கட்டி அணைத்து விடை பெற்றார்கள்…

காரில் ஏறுனதும்… அவளோ கொஞ்சம் உர் என அமைதியா இருந்தாள்… எதற்கு என்றும் புரிந்தது… ஹோம் சிக் என புரிந்து கொண்டான்…

பின் என்ன நினைத்தாளோ, “எனக்கு இங்க கடைக்கு போகணும்”

“ஹ்ம்ம், போலாம்”

ஒரு நல்ல கடையின் பெயர் சொல்லி… மக்கரூன் வாங்கணும்.. விக்ரமிற்கும், காவ்யாவிற்கும் என்று சொன்னாள்…

அந்த கடைக்கு சென்றதும்.. அவள் கீழே இறங்கி வாங்க சென்றாள்… அவள் செல்வதையே பார்த்தான்..

அந்த கடையில் கூட்டமும் அதிகம்.. பெண்களை விட ஆண்கள் ஜாஸ்தியா இருந்தார்கள்…

இவன் அதை பார்த்தான்.. பின் காரை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு… கடைக்குள் வந்து அவள் பின்னே அணை கட்டி நின்றான்…


இவளோ… எப்போ யாரு இடிப்பாங்களோ… அதுக்குள்ள வாங்கிடணும் என்று கடுப்புடன் நின்று கொண்டிருந்தாள்…

யாரோ பின்னே ஒட்டி நின்றதும்… அம்மா என திரும்பி பார்த்தாள்… “ஓஹ் நீங்க தானா… பயந்துட்டேன் தேவா”…. அவளை அறியாமல் தான் கூப்பிட்டாள்..

அவன் கண்ணில் மின்னல் தெறித்தது…. தேவ் என்று தான் கூப்பிடுவார்கள்… இவள் தேவா என்று கூப்பிட்டதும் உரிமை உணர்வு தானாகவே எழுந்தது… எத்தனை பாக்ஸ் வேணும் என்று அவளிடம் கேட்டான்… ஆறு என்று சொன்னதும்…

இவன் குரலில் அங்கே வேலை செய்தவன் இசைந்தான்… அவனிடம் தேவ் கூறியதும்… இவள் அந்த பையனிடம் பணமும் சேர்த்து குடுத்தாள்…

அந்த பையன் சிறிது நேரத்தில் இரண்டு கவர் பையில் வைத்துக் குடுத்தான்…

இவள் வாங்கி கொண்டாள்… மறுபடியும் அணை கட்டிய படி வெளியே வந்து விட்டார்கள்…

“சரி கிளம்பலாமா” கேட்டான்…

“இன்னும் கொஞ்சம் பொருள் வேணும்…அங்க போகணும் என்று ஒரு உயர்தர ஹைப்பர் மார்க்கெட் பெயரை சொன்னாள்..”

அவன் முறைத்தான்… சீக்கிரமா உன்ன கிளம்ப சொன்னேன்ல… இன்னும் கொஞ்சம் நேரமே கிளம்பிருந்துருக்கலாம்… அப்போ கடைக்கும் போக நேரம் இருந்திருக்கும்…இன்னும் நாம இங்க இருந்தே கிளம்பல… வசுந்தரா..

“ப்ளீஸ்…ஒரே ஒரு பொருள் தான் வாங்கணும்..” கண்ணை சுருக்கி கெஞ்சினால்… அவனுக்கும் மறுக்க தோணவில்லை…

அவள் சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றான்…

கடையில் அவள் செல்ல இவன் அவள் கூடவே சென்றான்…

“என்ன வேணும்” என்று கேட்டான்…

“அது… அது வந்து” என இழுத்தாள்… அவனை பார்க்க முடியாதபடி ஒரு மாதிரியாக இருந்தது….

“நீங்க இங்கே நில்லுங்க.. நா போய் எடுத்துட்டு வரேன்” என்று நகர்ந்தாள்…

வசுவிற்கு… மாறி மாறி பயணம் செய்வது ஒத்துக்காது… அந்த சமயத்தில் மாத விலக்கு வந்துவிடும்… அதுக்கு முன்னெச்சரிகையாக… அதுக்குவென உபயோகபடுத்தம் பொருட்கள் வாங்க தான் அவனையும். அழைத்து வந்தது… வீட்டில் இருந்து எடுக்க நினைச்சாள் ஆனால் மறந்து விட்டால்…

அவள் என்ன எடுக்கிறாள் என்று பார்த்தான் தான்… புரிந்து கொள்ள முடிந்தது… அவள் வரவும் அமைதியாக நடந்து.. பின்வாங்கி கொண்டு.. கார் பார்க்கிங் வந்து கிளம்பி விட்டார்கள்…

மணியை பார்க்க அது 8என்று காட்டியது… எப்படியும் போக 10:30 ஆகிடும் என்று ஜெயாவிற்கு அழைத்து சாப்பிட்டு வருவதாகவும்… அவர்களை தூங்கவும் சொல்லி விட்டான்…..

காரில் இளையராஜா பாட்டை தவிர வேற எந்த சத்தமும் இல்லை…


இவள் அவன் எப்படி ஓட்டுகிறான் என்றே கவனித்தாள்…. ஒரு மாதிரி லாவகமா ஓட்டுகிறான் என்று புரிந்தது… மேடு பள்ளம் கூட தூக்கி அடிக்காமல்… அழுங்காமல் குழுங்காமல் ஓட்டினான்…


அருப்புக்கோட்டையில், சத்யா ரெஸ்டாரண்ட் பார்த்ததும் நிறுத்தி… சாப்பிட்டு கொண்டார்கள்….

பின் சாப்பிட்டதும் அங்கே இருந்து கிளம்பிவிட்டார்கள்…

உண்ட மயக்கமா, இல்லை இவன் டிரைவ் பண்ற தாலாட்டா என்று தெரியவில்லை… இவளுக்கு தூக்கம் சொக்கியது…
ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டாள்… அவள் தலை மட்டும் தள்ளாடுவதை பார்த்தவன்… வண்டியை ஓரங் கட்டி… அவள் சீட்டை லேசாக சாய்த்து வசதி பண்ணி குடுத்தான்… அவளின் நிர்மலமான முகம் தனி அழகை குடுத்தது…

ஏதோ ஒன்று அவளிடம் ஈர்கிறதுனு அவனுக்கும் புரியாத்தான் செய்கிறது…

பின் அவன் கார் எடுத்தான்.. அவன் நினைத்தற்கேற்ப, ராஜாவின் பாட்டும் இசைத்தது…


“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...ஏதோ....

அது ஏதோ...

அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...

அதை அறியாமல் விடமாட்டேன்

அது வரை உன்னை தொடமாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

ஏதோ......அது ஏதோ.....

அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது...”

தனக்குள் சிரித்தும் கொண்டான்…

வீடு வந்து சேரவே 11 மணி ஆகியது… வீட்டில் எல்லாரும் தூங்கி இருந்தார்கள்…

காருக்குள் இவளுக்கோ அப்டி ஒரு தூக்கம்…

இவன் அவளை கூப்பிட்டு பார்த்தான்.. சிறு அசைவு கூட இல்லை….

சரி அம்மாவை கூப்பிடுவோம் என்று உள்ளே சென்று பார்த்தான்… அவர்கள் ரூம் கதவும் உள பக்கமா தாள்பாழ் போடபட்டு இருந்தது…..

அவளை தூக்கிக்க வேண்டியது தான்… என்று யோசித்து கொண்டே நடந்தான்..

சாரதி பக்கம் வந்து இன்ஜினை அணைத்து பின் இவள் பக்கம் வந்து கதவை திறந்தான்…

அந்த சத்தத்திற்கும் அவள் அசைய வில்லை…

அள்ளிகொள்ளலாம் என்று முதலில்.. அவள் சீட் பெல்ட் ரிலீஸ் பண்ணினான்…

பண்ணவுடன்.. “டோடாங்” என சரிந்தாள்… கீழே விழக்கூடாது என பற்றினான்…

பிடித்தவுடன்.. அவள் தலை அவன் கழுத்தில் வந்து மோதியது…

அவள் சிப்பி இதழ்களோ அவன் முதல் பட்டன் திறந்திருந்த நிலையில்… அவன் நெஞ்சில் வந்து உரசியது…

தீ பற்றி கொண்ட உணர்வு.. ஒரு நிமிடம் என்ன பண்ணுவது என ஜெர்க் ஆகி நின்றே விட்டான்…

தன்னை சற்றே நிலை படுத்தி… அவளை நேராக சாய்த்தான்…

பின், அவள் முதுகு ஊடே ஒரு கையும்.. தொடையுடு ஒரு கையும் குடுத்து… தூக்க போற சமயம்… அவள் படக்கென எழுந்து கொண்டாள்…

ஹையோ, என்ன பண்ண போறீங்க.. என்று துள்ளி… அவன் பின் கழுத்தை இரு கைகளால் கோர்த்து பற்றி இழுத்தாள்…

அவள் இழுத்தவுடன்.. அவன் கழுத்தில் இருந்த மெல்லிய செயின், நூல் பிரிந்திருந்த அவள் மாராப்பில் சிக்கி கொண்டது அவன் முகமோடு சேர்த்து…

அவளுக்கு பதட்டமாகி விட்டது…, “அச்சச்சோ, சிக்கிகிச்சு…எடுங்க…” என்று அவனிடம் கூறினாலும்…

இவள் தான் எடுக்க முற்பட்டாள்…முடியவில்லை…

“என்னால முடில..”

“நா ஏன் வாய் வச்சு தான் கடிச்சு எடுக்கணும் பரவால்லயா” என்று கேட்டான்…

“ஹ்ம்ம்” துணிவே இல்லாமல் கூறினாள்…

இவனும் தன்னால் முயன்ற வரை பற்களால் கடித்து பார்த்தான்…

அவன் உதடு பட பட.. ஏதோ நேராகவே அவன் உதடு அவள் மேல் படுவது போல் உணர்ந்தாள்… அவன் பின் முடியை இறுக்கி நெரித்தாள்… தாங்கோனா சுக வேதனையில்…!!

“ஏங்க”

அவன் ஏதும் கூறவில்லை… அவனுக்குமே.. அவள் மென்மையான அழகில் முகம் புதைக்கும் அளவு உணர்வுகள் கொந்தலித்தது..

“நா வேணா முந்தவனையை மட்டும் எடுக்கட்டா”

“இங்க சிசிடிவி இருக்கு, டேஷ் போர்டுல கத்திரி இருக்கு… அத எடுக்க ட்ரை பண்ணு”

“இவனும் அவளும் ஒன்றாக நகர்ந்தனர்.. கத்திரியும் எதிர்த்தாபுல இருந்ததால்… எடுத்து அவனிடம் கொடுத்தால்….

அவன் வாங்கி அந்த நூலை கட் பண்ணிவிட்டான்… செயின் விடு பட்டதும்.. அவன் உணர்வுகளை பிரதிபலிக்கும் முகத்தை காட்டாமலும், அவளை எதிர் கொள்ள முடியாமல் வேகமாக உள்ளே சென்றான்…


இவளும் சிறிது நிதானபடுத்தி கொண்டு…உள்ளே நுழைந்து… வீட்டின் கதவை சாத்தினால்….!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24

அவன் விறு விறுவென சென்றதும்.. இவள் தன்னை நிதானித்து, வீட்டை பூட்டி விட்டு… அவன் ரூமிற்கு சென்றாள்…

அவனோ… லைட் எல்லாம் அணைத்துவிட்டு தன்னுடைய இடத்தில் போய் படுத்து கொண்டான்… அந்த உணர்வின் கணம் அவனால் தாங்க இயலவில்லை… அவளை பார்க்காமல் இருந்தால் போதும் என்கிற நிலை… தன்னையும் ஆராயவேண்டி தன்னை வேகமாய் சுத்த படுத்திகொண்டு படுத்து விட்டான்…

அவள் ஈர்க்கிறாள் என்ற நிதர்சனம் உறைக்கிறதுதான்.. ஆனால் காதல் இருக்கா என்பதுதான் புரியவில்லை… பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இல்லை….. இது உடல் சார்ந்த தேவையோ என்றாள் அவளைவிட்டு தள்ளி போக வேண்டும்…உடல் பொருள் ஆவி அனைத்தும் அவள் தான் வேண்டும் என்று துடிக்க வேண்டும்.. அப்பொழுது தான் தன்னால் அவளை முழு மனதோடு ஏற்று கொள்ள முடியும் என்றே தோன்றியது… ஆனாலும் அவள்கிட்டே இருக்கும் போது தான் சுயத்தை இழக்கிறோம் என்றும் புரிது.. ஏன் அப்டி என்றும் தெரியவில்லை….

இப்படியாக யோசித்து கொண்டிருக்கும் தருவாயில் தான் அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.. அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்… அவள் நடக்கும் திசை எல்லாம் அவன் கண்கள் அலைந்து திரிந்தது…

உள்ளே லைட் அணைத்து வைத்துக்கொண்டு இருந்ததை பார்த்ததும் இவளுக்கு ஏக கடுப்பு.. குருட்டு பூனை விட்டத்துல பாயுற மாதிரி நான் பாயனுமாமா…. லூசு பய லைடை ஆப் பண்ணி வச்சிருக்கான்… என போன் லைட்டை உயிர்ப்பித்து கொண்டாள்…

அவள் பெட்டியில் இருந்து நயிட்டி எடுத்து அணிந்து கொண்டாள்…
அவள் உடை மாற்றபோவதை பார்த்ததும் திரும்பி படுத்து கொண்டான்…

அவள் உடை மாற்றி அவன் அருகே படுத்து கொண்டாள்… அப்டியே தூங்கி விட்டார்கள்…

மறுநாள் காலையும் ஆனது… அவன் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து கொண்டான்.. ஆறு மணிக்கு கிளம்புவதாக இருந்தது… அவன் எழும்பி குளித்து முடித்து ரூமிற்கு வரும் போதும் வசு தூங்கி கொண்டிருந்தாள்…

அவள் மொபைல் அலாரம் அடித்த மாதிரியும் தெரியவில்லை…
மணி 5 ஆக சிறிது நேரம் மட்டுமே இருந்தமையால் அவளை எழுப்பி விட்டுடலாம் என அவளை கூப்பிட்டு பார்த்தான்…

அவள் எழும்புவதை காணும்… “வசு, ஹே வசு… எழும்பு… நேரம் ஆச்சு”.

“ம்மா, தூக்கமா வருது ப்ளீஸ்மா” தூக்கத்துலயே உளறி கொண்டிருந்தாள்… இன்னுமும் அம்மா வீட்டில் இருப்பதாக நினைப்பு…

அவனும் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தான்… அவள் அசைந்தால் இல்லை…
“வசுந்தரா” என்று அழுத்தமாய் கூப்பிட்டதும்

“அய்யோ அம்மா” என அரக்க பரக்க எழுந்தாள்..

“நீங்க தானா இப்டி கூப்பிட்டது? பயந்துட்டேன்..”

“ஹ்ம்ம், நேரமாகுது.. கிளம்பு”

“எங்கே?” புரியாமல் கேட்டாள்…

“ஹ்ம்ம், ஹனி மூன்க்கு”

“யாத்தே?” அவள் உள்ளம் பதறியது…

“போய்ட்டு சீக்கிரமா கிளம்பு, ஆறு மணிக்கு கிளம்பனும்னு சொன்னாங்க”

அவன் சொன்னாங்க என்று சொன்னதும் தான் அவள் நினைவுக்கு வந்தது.. நாகப்பட்டினம் செல்ல வேண்டும் என…

“ஓஹ், ஆமா நா மறந்தே போய்ட்டேன்… இதோ கிளம்புறேன்” என ஆயத்தபட்டாள்…

அவள் கிளம்பி கீழே இறங்கி வந்ததும்.. புதிதாக ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதை பார்த்தாள்… அவர்கள் யார் என்றும் தெரியவில்லை… புன்னகைக்க வேண்டுமா என்றும் தெரியவில்லை…

இப்டி யோசித்து இருக்கும் போதே ஜெயா அவ்விடம் வந்து விட்டார்….
“என்ன வசுமா யாருனு பாக்கறியா?”

“ஹ்ம்ம்” என்று மெல்லமாக உரைத்தால்…

“உனக்கு அத்தை முறை தான் வசும்மா, இவ தான் சுலோச்சனா.. ஏன் சித்தப்பா பொண்ணு” ஜெயா கூறியதும்..

“வாங்க அத்தை” என கையை கூப்பினாள்…

அதற்கு தலை அசைத்த சுலோச்சனா.. அவள் பக்கத்தில் வந்தார்…
“என்ன மருமகளே, பார்த்தா மாமியார் கொடுமைலாம் இல்லை போலவே… கரெக்ட் ஆஹ் கிளம்ப பத்து நிமிஷம் முன்னாடி வந்து நிக்கிற? நீ தானே மூத்த மருமகள், பொறுப்பா எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா?” அதட்டல் தொனியோடு கேட்டார்

இவள் என்ன கூறுவது என முழித்தாலும் சுதாரித்து.. “நைட் வர கொஞ்சம் லேட்டா ஆகிட்டு.. இனிமேல் இதுவெல்லாம் பழகிக்கிறேன் அத்தை” தன்மையோடு கூறினாள்…

அவள் முகம் சுழிக்காமல் அழகா புன்னகையோடு சொன்ன விதம் வெகுவாக சுலோச்சனாவை ஈர்த்தது…

அவள் கன்னம் வழித்தவர்.. நீ சமத்து தான் போலவே…நா சும்மா தான் பயமுடுத்தி விளையாண்டேன்.. பரவால்ல உங்க அத்தை நல்லா தான் மருமகளை தேர்ந்தெடுத்து இருக்கா…”

சுலோச்சனா, ஜெயாவின் சித்தப்பா பொண்ணு.. அதாவது பெஞ்சமினின் தம்பி பொண்ணு… பெஞ்சமின் கூட பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை…
தங்கை ஏஞ்சலின் மகன் தான் கிருபா… அதாவது ஜெயாவின் கணவர்..

தம்பி மோகன் தாஸ்க்கு இரு பிள்ளைகள்… ராபர்ட் தான் மூத்தவர்… சுலோச்சனா இளையவர்… இவருக்கு இரு மகள்கள்..ராபர்டுக்கு இருவர்… முதலில் பெண்.. அவள் தான் ஐஸ்வர்யா… இரண்டாவது ஆண்.. அவன் பெயர் டார்வின்… ராபர்ட் பணம் பணம் என்று இருப்பவர்… ஐஸ்வர்யா அண்ட் தேவ் கல்யாணம் நின்றதும் ராபர்ட் ஜெயாவிடம் பேசுவதை நிப்பாட்டி கொண்டார்….

ஆனால் சுலோச்சனாவால் அப்டி இருக்க முடியவில்லை….என்னதான் அவர்களுக்கு வயது வித்யாசம் இருந்தாலும்..ஜெயா நெருங்கிய தோழியாக பழகியவர்..…. ராபர்ட் இப்போதும் பேச கூடாது என தடை விதித்தவர் தான்… சிறு வயது பழக்கம் அவரால் அவ்வளவு எளிதாக விட முடியவில்லை… கல்யாணத்துக்கு வர முடியவில்லை என இந்த பயணத்திற்கு வருவேன் என்று வந்துவிட்டார்… சுலோவிற்கு தெரியும் தேவும் வசுந்தரா நிலைமை.. அவர்களை இந்த பயணித்திற்குள் எப்படியாவது இணைத்து வைத்துவிட வேண்டும் என்ற கொள்கையுடன் தான் வந்திருந்தார்… சொல்ல போனா ஐஸ்வர்யா பண்ண தப்பிற்கு பிராயசித்தம் என்றும் வைத்துக்கொள்ளலாம்…
எல்லாரும் கிளம்பி வெளியே வந்தனர்…

15 பேர் அமர கூடிய டெம்போ தான் எடுத்து இருந்தனர்…

ஜெயா குடும்பம் ஆறு, சாம் குடும்பம் நான்கு… வேணி பாட்டி, மரகத பாட்டி, சுலோச்சனா… இவர்கள் போக கிருபா சினேகிதர் குடும்பம் நான்கு… என் பதினேழு பேர் மொத்தமாக இருந்தார்கள்…

கிருபாவின் அந்த சினேகிதர் பெயர் ரிச்சர்ட் அவரது மனைவி ஷீலா… அவர்களின் ஒரே மகனுக்கும் மூன்று மாதம் முன்னாடி தான் திருமணம் முடிந்தது…இவர்கள் நான்கு பேரும் வந்தார்கள்…

டெம்போவில்…இடதுபக்கம் இரு இருக்கைகளும், நடுவில் நடப்பதிற்க்கு பாதை விட்டு..வலது பக்கம் இரு இருக்கைகளும் என்றவாரு இருந்தது.. எப்பொழுதும் இந்த மாதிரி டெம்போவில் கடைசி இருக்கை மட்டும் நடுவில் இடம் விடாமல் முழுவதாக இருக்கும்.. நான்கு ஐந்து பேர் அமரக்கூடியதாக இருக்கும்… ஆனால் இங்கே அப்டி இல்லை.. கடைசி இருக்கை பிரித்து தான் வைத்துக் இருந்தார்கள்…

வேணி பாட்டியும், மரகதமும் முதல் இடத்தில் வலது பக்கம் அமர்ந்து கொண்டார்கள்… பின்னாடி உட்கார்ந்தால் தூக்கி தூக்கி போடும் என்பதால்… அவர்களுக்கு இடது பக்கத்தில் சாமும் சுகிர்தாவும் இருந்தார்கள்…

மரகத பாட்டி பின் இருக்கையில் ஜெயாவும் கிருபாவும்…அவர்களுக்கு இடது பக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் ஷீலா அமர்ந்தார்கள்…

ஜெயவிற்கு பின் பிரசாத் அண்ட் தான்யா இருந்து கொண்டார்கள்… அவர்களுக்கு இடது பக்கத்தில் லாவண்யாவும் அவளது தம்பி ரூபனும் இருந்தார்கள்…

பின்னாடி கடைசி நான்கு இருக்கைகள் மட்டுமே இருந்தது… பிரசாத்திற்கு பின்… நவீன் அவனது மனைவி ஜோவிட்டா இருந்தார்கள்… கூடவே பிரசாத் குழந்தை ரோஷினியும் இருந்தாள்… என்னவோ தெரியவில்லை.. பிள்ளை ஜோவிட்டாவிடம் ஒட்டி கொண்டது…

நவீனும், ஜோவிட்டாவும் பிள்ளையுடன் ஐக்கியம் ஆகிவிட்டார்கள்…
பிரசாத்ற்கும், தான்யாவிற்கும் அந்த சமயம் கொஞ்சம் தனிமை கிடைத்தது போல் இருந்தது…

இன்னும் ஒரு இருக்கை மட்டுமே இருந்த நிலையில்… என்ன பண்ணவென தெரியாமல் வசு நின்று கொண்டிருந்தாள்….
தேவ் முதலில் உள்ளே வந்ததால்… அவன் ஜன்னல் ஓரமாய் அமர்ந்துவிட்டான்…

சுலோ எங்கே அமருவார்.. என்று யோசிக்கும் போது.. சுலோச்சனாவோ லகுவாய்… நீ அவன் மடில உக்காந்துக்கோ.. நா அவன் பக்கத்துல இருந்துகிறேன் என கூறினார்…

அவளுக்கு பக்கென இருந்தது… விழிகள் இரண்டும் முட்டை போல விரிந்தது…

“அத்தை.. நா லாவண்யாவ மடில வச்சுகிறேன்… நீங்க அந்த இடத்துல உக்காந்துகோங்க” தீர்வு கூறினாள்…

காரியம் கெட்டது போ என மனதில் நினைத்தபடி… “அதுலாம் வேணாம்… உன்னால அவளை தாங்க முடியும் அப்டினா… தேவ் அசால்ட்டா உன்னை தாங்குவான்… நீ வா” அவள் கையை பிடித்து அவன் மடியில் கிட்ட தட்ட தள்ளி விட்டார்…

இவளுக்கும் என்ன பண்ணுவதுனு தெரியவில்லை…

அவனோ “சித்தி, நா அம்மாவா இங்க வர சொல்றேன்… நீங்க எப்படியாச்சும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என அழுத்தமாய் கூறினான்…

“டேய், நீ சொல்றது உன் அம்மாட்ட வேணுமானா செல்லுபடி ஆகும்… என்கிட்ட நடக்காது… நீ தான் இவ்ளோ நாளா மொட்டை பயலா சுத்திட்டு இருந்தனா… அவங்களும் அப்டி இருக்கணுமா? எல்லாம் ஜோடி ஜோடியா உக்காந்திருக்காங்க… அத கெடுக்கணுமா… இவ உக்காரதால என்ன குறைஞ்சி போய்ட்ட இப்போ… இதுலாம் திரும்ப வராதுடா மகனே…சும்மா லூசுத்தனமா பேசிகிட்டு இருக்காம இரு.. முதல் முதல் வெளில போறோம்… அதுனால் இப்டியே இருக்கட்டும்” என அவனை அடக்கி விட்டார்…

அவனும் “சித்திதிதி…” என பல்லை கடித்தபடி பொறுத்து கொண்டான்… சரி முதல் பயணத்தில் ஏதும் கலவரம் வேண்டாம் என்று விட்டுவிட்டான்..

வசுவிற்கோ…எப்படி நாலரை மணி நேரத்தை இவன் மடியில் இருந்து தள்ள போறோமோ என்கிற கவலை… அவன் மடியில் சட்டமா அமர முடியவில்லை… அவன் முட்டு மேலே தான் சிறிதுவேணா தள்ளி அமர்ந்து இருந்திருப்பாள்..…

அப்டி அமர்ந்து கையை முன் பக்க இருக்கையில் வைத்து அதில் படுத்து கொண்டாள்… அவன் ஏன் என்றும் கேட்கவில்லை.. தள்ளி நல்லா வசதியா அமரு என்றும் சொல்லவில்லை… கண் மூடி சாய்ந்து கொண்டான்…

இன்றைக்கும் சிஃபான் சேலை பிங்க் நிறத்தில் உடுத்தி இருந்தால்… தலையில் மல்லிகைபோவும் வைத்திருந்தாள்….பாந்தமான அழகு… என்றும் சொல்லலாம்…

இடையில் காலை உணவிற்கு மட்டும் நிறுத்தி கொண்டார்கள்… அவர்கள் வேளாங்கண்ணி வந்து சேர 10:30 ஆனது…
அங்கே இருந்த கோயிலுக்கு தம்பதி சகிதமாக உள்ளே நுழைந்தார்கள்….

ஒரு மணி நேரம் அங்கேயே கழித்துவிட்டு… அங்கே இருந்த கடைகள் என சுற்றி பார்த்தார்கள்…வசுவோ ஜெயா உடனே சுற்றி கொண்டிருந்தாள்… அவள் டெம்போவில் இருந்து தண்ணி எடுக்க போன சமயம் சுலோ ஜெயாவிடம், “ஜெயாக்கா.. உன் மருமகள் புழச்சிக்கிட மாட்டா போலயே… உன்னையே தான் சுத்தி வாரா…”

“நீ வேற, தேவ் கிட்ட நெருங்குறது கஷ்டம்… அவன் ஏதாச்சும் சொல்லிடுவான்… அதுக்கு அவா என்கிட்ட இருக்குறது நல்லது”

“அது சரி.. புருஷன சுத்தி வந்தாவாச்சும் ஏதாச்சும் பிரயோஜனம் இருக்கும்… மாமியாவ சுத்தி வந்தா என்ன பிரயோஜனம்… நீ அவளை அவன் கிட்ட தள்ளி விடு.. முட்டி மோதி பார்த்துகிடட்டும் அவங்களே”..

“அப்படிங்கிற?”

“ஆமாங்கிறேன்.. வா நாம அப்டி அந்த கடைக்குள்ள போயிடுவோம்… பின்னாடி தான் தேவ் வாரான்… அவன் கூட வரட்டும்..” என நகண்டு கொண்டார்கள்… அது ஒரு துணி கடை.. துணி எடுக்குற மாதிரி மறைந்து கொண்டார்கள்…

வசு, அவர்களை விட்டுட்டு சென்ற இடத்தில் வந்து நின்றாள்… என்ன காணும்.. தண்ணி எடுத்துட்டு வர சொல்லி எங்க போனாங்க என சுற்றி முற்றும் பார்த்தாள்… அவள் கண்ணிற்கு தட்டுபடவில்லை…
இவள் மட்டும் தனியாக நிற்பதை பார்த்த தேவ், அவளை நோக்கி வந்தான்…

“என்னாச்சு” தேவ்

அவனை ஏறிட்டு, “ அத்தை ரெண்டு பேரும் தண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க… இப்போ அவங்கள காணும்…”

“ஓஹ், ஏதாச்சும் வாங்க எந்த கடையிலாவது நுழைஞ்சிருப்பாங்க… வருவாங்க.. வா போலாம்”

“சரியென” அவனோடு நடந்தாள்…

இதையெல்லாம் பார்த்த சுலோ ஜெயாவிடம்.. “அக்கா, பார்த்தியா… யாரும் கூட இல்லனா அவன் தான் அவள் கூட வாரான்..… அவன் என்ன சொன்னாலும் பரவால்லனு அவளை அவன் கூடவே இருக்குற மாதிரி பார்த்துக்கோ…அப்போ நீ வேணா பாரேன்.. ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் இல்லாம இருக்க முடியாதுங்குற நிலை வரும்…”

“நீ சொல்றத கேக்க நல்லா தாண்டி இருக்கு..”

“கேட்க மட்டும் இல்லை… நடக்கும்…சரி வா.. போலாம்” என நடந்தார்கள்…

அங்கேயே ஒரு கடையில் சாப்பிட்டு முடிக்க மணி மூன்று ஆகியது… பின் கோடியக்கரை கடற்கரை போலாம் என அங்கிருந்து கிளம்பினார்கள்…

சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு… 6:30 போல மதுரை நோக்கி பயணித்தார்கள்….

அசதியில், இளையவர்கள் தவிர எல்லாரும் தூங்கினார்கள்.. ஒரு மணி நேரம் சென்றுயிருக்கும்…

தேவ் என்ன நினைத்தானோ…, அவள் வயிறோடு கை வைத்து பின்னே இழுத்தான்…
“தள்ளி தான் உக்காரேன்டி… கால் வலிக்காதா” அவள் காதிற்குள் கேட்டான்…

முதன் முதலில் கவனிக்கிறாள்..அந்த ஆளுமையான குரலில் ‘டி’ போட்டு கூப்பிடுவதை…. இதற்கு முன்பு இரு முறை கூப்பிட்டு இருக்கான்.. ஆனால் கவனித்தது இல்லை.. அவளுக்கு ஜிவ்வென்று இருந்தது… என்னவென்று சொல்ல தெரியாத நிலை… ஒரு “டி” நிலை குழைய வைக்குமா… வைக்கிறதே…!!

அப்பப்பா… அவள்.. உடல் விறைத்தது உணர்வின் பிடியில்… அவன் கவனித்தான்… தான் தொட்டத்தால தான் இப்டி இருக்காலோ… என்று நினைத்தான்…

பின், “என்னடி” என்றுதான் கேட்டிருப்பான்… அவள் அவன் மீது சாய்ந்தே விட்டாள்.. அவன் ஷர்ட் காலேரை இழுத்து… பட்டும் படாமலும் அவன் கழுத்தில் ஒரு முத்தம் வைத்தாள்..

அவள் முத்தம் வைத்ததும் அவன் ஆண்மை பொங்கியது.. அது அவளுக்கும் தெரியதான் செய்தது… எப்படி, இவங்க முடியாது என்றுதானே சொன்னார்கள்… அப்புறம் எப்படி என்று யோசித்தாலும்… விட்டுவிட்டாள்…

அவன் ஒரு குழந்தையை எப்படி மடியில் வைப்போமோ அப்டி தான் அவளை வைத்திருந்தான்..அவள் உதடு இன்னுமும் அவன் கழுத்தில் தான் பட்டுக் கொண்டிருந்தது.. அதில் அவன் கைகள் முறுக்கேரியது…. அவள் இதழ்களை கவ்விவிடுவோமோ என்று மிகவும் அஞ்சினான்…தன்னை கட்டு படுத்தி கொண்டு இருந்தான்.. ஒரு முத்தத்திற்கு இவ்ளோ சக்தியா என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை…

சரியாக 8:30 மணிக்கு சாப்பிட வண்டியை ஒரு கடையில் நிப்பாட்டினார்கள்….

அதற்குள் அவர்கள் சுயம் வந்துவிட்டார்கள்..

வசுந்தராவாள் தேவ்வை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை… கன்னம் இரண்டும் அவ்ளோ சிவப்பாக இருந்தது… முகத்தில் ஒளி வட்டமே தெரிந்தது என்று சொல்லலாம்…

சாப்பிடும் போது எதிற்கே தான் அமர்ந்தார்கள்… அவனுக்கு அவளின் முக சிவப்பு அச்சரியமாக இருந்தது…. இந்த காலத்தில் இப்படியா என்று…

இவளுக்கோ, “ச்ச, நாமளே எப்படி முத்தம் கொடுத்தோம்… என்ன நினைச்சுருப்பாங்க.. எப்படி அவங்கள பேஸ் பண்ண” என பலவாறு நினைத்து கொண்டு சாப்பிட்டாள்…

சாப்பிட்டு முடித்து அவர்கள் டெம்போவில் ஏறியதும் கிளம்பியது…
அவள் இப்பொழுதும் அவன் முட்டியில் தான் அமர்ந்தாள்…

அவனுக்கு கோவம் தான் வந்தது… சிறிது நேரம் பார்த்தான்… பின்.. அதே போல, கை வைத்து வயிற்றோடு சேர்த்து இழுத்தான்…..

இவ்ளோ தான் நான் பண்ணுவேன் இதற்கு மேல் நீ தான் பண்ணனும் என்று இருந்து கொண்டான்…

இவளுக்கு, “ஹையோ, என்ன பண்றது” என இருந்தது… பின் என்ன நினைத்தாளோ, இல்லை நா அவங்க மேல சாய மாட்டேன் என வைராக்கியத்தோடு அமர்ந்து கொண்டாள்…

அவனுக்கு அவ்வளவு கோவம் வந்தது… உனக்கே அவ்ளோவா… அப்போ என்னக்கு எவ்ளோ இருக்கும், போடீ என்று விட்டுவிட்டான்…
அவளுக்கு சாய்வதற்கு இஷ்டம் தான் ஆனால் அவன் மனதில் என்ன இருக்கிறது.... அவள் மேல் காதல் இருக்கிறதா என்று தெரியாமல்… அவனிடத்தில் போக விருப்பம் இல்லை…

இவளுக்கும் அவள் மனதில் அவன் நிலை என்ன என்றும் யோசிக்க வேண்டியதாய் இருந்தது… அவனை பிடித்திருக்கிறது… காதல் இன்னும் வரவில்லை என்று அவளால் உறுதியாக கூற முடியும்… இப்டி இருக்கும் பட்சத்தில் வெறும் உடல் சார்ந்த தேவைக்காக அவனோடு இருக்க முடியாது என்றே தோன்றியது….!!!!
 
Status
Not open for further replies.
Top