அத்தியாயம் 2
கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், “கோசர்புத்தூர்” என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது
இன்னொரு கூற்றின் படி , “கோவன்” எனும் தலைவன் இருந்ததாகவும், அதன் பெயரிலே உண்டான ஊரே “கோவன்புத்தூர்” என்று வழங்கப்பட்டு பின்னர் கோயமுத்தூர் மருவி இருக்கலாம்.
இப்பெயர் “கோவையம்மா” எனபதிலிருந்து வந்திருக்கலாம் என்று மற்றொரு கோட்பாடு கூறுகிறது.
கோனான் வழிபட்ட தெய்வமான கோயம்மாவிடமிருந்து உருவான இந்த வார்த்தை கோனியம்மாவாகவும் பின்னர் கோவையம்மாவாகவும் மாறியது என்றும் கூறுகிறது…
அந்த நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் தேவ கிருபை.. சுருக்கமாக தேவ் எல்லாருக்கும்..
அப்பா கிருபாகரன், அம்மா ஜெயந்தி.. ஒரு தம்பி பிரசாத் குமார்.. திருமணம் ஆகி ஒரு வயதில் ரோஷினி என்ற பெண் குழந்தை.. இவர்களின் திருமணம் காதல் திருமணம்.. தேவ் கிளம்பிட்டியா பா என்று அவனது கதவை தட்டினார் ஜெயந்தி…
இதோ வரேன் ம்மா என்று குரல் கொடுத்தவாரு தலையை வாரிக் கொண்டிருந்தான்..
அவனது கூர்மையான கண்களும், கற்றையான மீசையும், சீராக இருக்கும் குறுந்தாடியும் அவனுக்கு கம்பீரமே சேர்த்தது…. எப்படியும் 6.2 அடி ஆக இருப்பான்..
ஜெயந்தியின் கவலை ஒன்று தான் தன் தலைச்சான் பிள்ளைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று…
இவனுக்கு பெரிதாகா திருமணத்தில் நாட்டம் இல்லை ஒரு சில காரணங்களால்..
இதோடு 5 வரன் பார்த்தாகி விட்டது.. எதுவும் பொருந்தி வர வில்லை….
அதுவும் ஜெயந்திக்கும் தேவ்கும் எப்பொழுதும் இந்த பெண் பார்க்கும் விஷயத்தில் முட்டிக்கும் ….இந்த முறை டைரக்ட் ஆஹ் பூ வைத்து விடலாம் என்று உறுதியோடு இருக்கிறார்..
ஏனென்றால், பூ வைப்பதற்கு முன்பாக அவர்களது வழக்கத்தில் பொண்ணும் பையனும் ஒரு முறை பார்த்து பேச வைப்பார்கள்.. அப்படி நடந்த கடந்த ஐந்து முறையும் தேவ் என்ன பேசுவான் என்று முழுதாக தெரியாது ஆனால் கண்டிப்பாக அடுத்த நிலைக்கு அந்த வரன் செல்லாது..
தேவ் தான் காரணம் என்று ஜெயந்தி கண்டு பிடித்தார்.. எப்படியெனில் ஒரு முறை குறித்து வைத்த பெண்ணின் தந்தை கன்னாபின்னா என கத்த அப்பொழுது கண்டு கொண்டார்..
இந்த வரனை அப்படி லேசாக விட முடியவில்லை.. அவனிடம் இன்னிக்கு தெளிவாக பேச வேண்டும் என்று உறுதியோடு சோபாவில் இருந்து மாடியில் இருக்கும் அவனது வாசலை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்..
ஒரு வழியாக தேவ் கிளம்பி படியில் இறங்கி கொண்டிருந்தான்..
அவனை பார்க்கும் போது ஜெயந்திக்கு உள்ளம் பூரித்தது என் மகன் என்று..
தட தடக்கும் உள்ளதோடு “தேவ், ஒரு நிமிஷம் “ என்று கூப்பிட்டார்.
“ம்ம்” என அழுத்தமான விழிகளோடு கேட்டான்…
“உன்ட்ட பேசணும் “
அவனது கண்கள் ஒரு முறை சுருங்கி இப்பொழுது கூடுதல் அழுதமாகவே ஏறிட்டன..
“நீ இந்த கல்யாணத்தை நிறுத்தக் கூடாது”
புரியல, என்ன சொல்ல வாரீங்க?
இது வரைக்கும் பார்த்தத நீ தான் நிப்பாட்னனு எனக்கு தெரியும் தேவ்…
“சரி, இருக்கட்டும்… இத நானும் மறுக்கவே இல்லையே… அதே சமயம் நீங்க ஒரு விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்.. நான் வேணும்னு ஏதும் பண்ணல.. உண்மைய மட்டுமே அவங்க எல்லார்கிட்டயும் சொன்னேன் அண்ட் சொல்லுவேன் மாம்..”
எது தேவ் உண்மை? -ஜெயந்தி
“எல்லாம் தெரிஞ்சும் இது உண்மையானு கேக்குறீங்களே ம்மா? “
“யாரோ ஒருத்தி சொல்றத எல்லாம் உண்மையா இருக்கணும்னு இல்லை தேவ்”
“மாம், ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ! ரியல்லி ஐ டோன்ட் வான்ன கெட் மார்ரி “ நீங்க பொண்ணு பார்த்தே ஆகணும் னு சொன்னதால மட்டுமே வரேன் “
நான் பொண்ணு மட்டுமா பாக்க சொல்றேன், கட்டிக்கவும் தான் சொல்லுறேன்…சரி, அதுலாம் போகட்டும்.. இனிமே நீ கல்யாணத்த நிறுத்த எதுவும் செய்ய கூடாது.. இத நான் உங்கிட்ட கெஞ்சி கேக்கறேன் தேவ்….
ஒகே மாம் உங்களுக்காக , பட் கண்டிப்பா நான் அந்த உண்மைய சொல்லுவேன்…அப்போ தி டெஸிஸின் இஸ் இன் ஹேர் ஹாண்ட்.. இவ்ளோ தான் என்னால முடியும்…
ஓஹ், இந்த கல்யாணத்த நடத்தாம நான் ஒய்யமாட்டேன் என மனதுக்குள் நினைத்த படி – சரி தேவ், உன் சைடு ல இருந்து இவ்ளோ தான் அப்டினா.. நா என்னால எவ்ளோ முடிமோ அவ்ளோ போராடி உன் கல்யாணத்த நடத்துவேன்...
பெஸ்ட் விஷேஸ் மாம்.. என்று தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு போனான் ….
ஒருவழியாக கிளம்பி விட்டார்கள் எல்லாரும் தூத்துக்குடியை நோக்கி..பெரும்பாழும் அவர்களின் பிராயாணம் காரில் தான்… அதுவும் முடிந்த அளவு தேவ் தான் ஒட்டுவான்… கார் ஓட்டுவதில், அலாதி விருப்பமும் கூட..
அவர்கள் வந்து சேரவே சாயங்காலம் 6 மணி ஆகி விட்டது, அந்த ஊர்லயே இருக்கும் ஒரு ஹோட்டலிலே ரூம் எடுத்து விட்டார்கள்…. இவர்களது உறவினர்கள் எல்லாரும் மதுரை என்பதால் காலையில் வருவதாக இருந்தது..
ஜெயந்தியின் முகம் கவலையை பிரதீபலித்தது.. அதை கவனித்த கிருபாகரன்…
“ஜெயா, என்னமா என்ன ஆச்சு? “ என்று வினாவினர்..
“ஒண்ணும் இலைங்க..”
“இல்லை, உன் முகமே சொல்லுதே ஏதோ சரி இல்லனு..தேவ் என்ன சொன்னான் “
அவர் ஆச்சரியத்துடன், இதுதாங்க எனக்கு உங்கள்ட புடிச்ச விஷயம்… நா சொல்லறதுக்கு முன்னாடியே கண்டு புடிச்சுடீங்க…
இப்போதைக்கு உன் கவலை முழுதும் தேவ் னு எனக்கு தெரியாதா ஜெயா…
ஹ்ம்ம்… சரியா தான் சொல்லிருக்கீங்க.. அவன் கல்யாணத்தை வெறுக்குறான், இந்த பொண்ணு கிட்டயும் எல்லாத்தையும் சொல்றேன்னு சொல்றான்……
ஜெயா அவன் நிலைமையில் இருந்தும் யோசி… அவன் என்ன நடந்துச்சோ அத சொல்றேன் னு மட்டும் தான் சொல்லிருக்கான்.. அது நல்லதும் கூட, நாளாபின்ன பிரச்சனை வராது பாரு…
சரிங்க, புரிது பட் இவன் முரட்டுதனமா பேசுவான்.. அதுக்கே பொண்ணுங்க வேணாம் னு போய்டுறாங்க.. அதுனால நா ஒரு முடிவுக்கு வந்துட்டேன்…
“சாட்சிக்காரன் காலில் விழு வதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.. “னு
நான் பொண்ணு கிட்ட பேசலாம் னு இருக்கேன்…
சரிவரும்னு நினைக்கிறியா ஜெயா..நீ இப்போ பண்ணபோறது தான், அவனும் பன்னிட்டு இருக்கான்…
பட் ரெண்டுதுக்கும் ஓராயிரம் வித்தியாசம் இருக்கு கிருபா..
முடிவு பண்ணிட்ட, உன்ன தடுக்க முடியாதுனு புரிஞ்சிருச்சு… சரி வா வந்து படு, காலையிலே நேரமே எந்திச்சு கிளம்பனும்..
ஹ்ம்ம் என்றபடி ஒரு திட்டத்தை வகுத்துவிட்டு தூங்கச் சென்றார்…
அடுத்த நாள் காலை, பிரேக் பாஸ்ட்டை ஹோட்டலில் முடித்து தேவ் கிளம்ப சென்றான்..
இவன் பிளாக் பாண்ட் வித் ப்ளூ கலர் ஷர்ட்.. டக் இன் பண்ணிக்கொண்டான்… இடது கையில் ஃபாசில் வாட்ச், வலது கையில் ஒரு பிரேஸ்ளேட்…எப்பொழுதும் கழுத்தையொட்டி இருக்குற தங்கசெயின்… தலையில் ஜெல் வைத்து வாரிக்கொண்டான்…ஒரு மீட்டிங் அட்டன் பண்ண வேண்டியது இருந்தது.. அதுனால மடிகணினியை எடுத்துக்கொண்டு கனெக்ட் செய்ய அமர்ந்துவிட்டான்..
அவன் காலில் இருப்பான் என்று ஜெயந்தி அறிந்தபடியால்…. மணப்பெண் வசுவுக்கு அழைத்து பேசி விடலாம் என்று நினைத்து கால் எடுத்து விட்டார்..
வாசும்மா, உன் பக்கத்துல யாரும் இல்லையே நான் பேசலாம் இல்லையா?
அவளும், சொல்லுங்க யாருக்கும் ஏதும் இல்லையே எல்லாரும் நல்லா தானே இருக்காங்க? என்று கேட்டாள்..
எல்லாரும் நல்லா இருக்கங்க வசு.. நீ எனக்கு மிகப்பெரிய உதவி செய்யணும்…
“நானா? நான் என்ன செய்திட முடியும் என்று நினைத்து... “ என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்..
“என் பையன் உன்ட பேசுவான், அப்போ இந்த கல்யாணம் வேணான்னு சொல்லுவான், அவனை புடிக்கலனு உன்ன சொல்ல சொல்லுவான்” ஆனா நீ அத மறுக்கணும்.. அவனை புடிச்சிருக்குனு சொல்லணும் எனக்காக..
அது எப்படி? புடிக்காம இருக்கிறவங்கள நாம ஏன் போர்ஸ் பண்ணனும்?
“வசு, அவனுக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லை ஆனா எனக்கு உன்ன விட இஷ்டம் இல்லை.. “
ஹையோ!! இதுலாம் ஒரு பையன் சொல்ல வேண்டியதே, எனக்கு மாமியார் சொல்றங்க…”மாமியார் ஆஹ் “ அப்போ முடிவே பண்ணிட்டியா வசு என்று அலறிய மனதை அடக்கி..
“ சரி, ஆனா கல்யாணத்துக்கு அடித்தளமே மனப்பொருத்தம் தான், அப்புறம் கொஞ்சம் விருப்பம், ஈர்ப்பு இதுலாம் சரி சமம் ஆஹ் இருக்கனும்.“ இதுலாம் இல்லாம அந்த திருமணம் கடைசிவரை நிலைக்கும் னு நினைக்கிறீங்களா?
நீ கேக்கறது கரெக்ட் தான், ஆனா எனக்கு உன் மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கு… பழகாத பொண்ணு மேல எப்படி நம்பிக்கை னு கேக்கலாம்… என் நம்பர் உன்கிட்ட இல்லை, பொதுவா தெரியாத நம்பர்ல இருந்த எடுத்தா, யாருனு கேப்பாங்க ஆனா நீ “உங்கள எனக்கு தெரிமா” னு அவ்ளோ அனுசரணையா கேட்டே…யாருனு தெரியாதவங்ககிட்டயே மனசு கஷ்ட படாம பேசணும்னு நினைக்கிற!! அப்போ உன் புருஷன எப்படி நல்லா பார்த்துப்பே… என்னைய நம்பு வசுமா…
இவளுக்கு இத எப்படி எடுத்துட்டு போகவென குழப்பம்..!!
இவள் அமைதியா இருந்ததும்.. ஜெயந்திக்கு பயம் தான்.. இது கடைசி வாய்ப்பாகவே கருதினார்… அதுவும் இல்லாமல் இவர்களின் பொருத்தம் சரியாக இருக்கும் என்று அவரின் மனது அடித்து கூறியது…
சிறிது நேரம் எடுத்து “ நான் என்ன பண்ணனும்னு எதிர் பாக்குறீங்க? “ என்று வினாவினால்…
அவன் என்ன பேசுனாலும் கண்டுக்காத, ஆனா காதுல வாங்கிக.. அப்புறம் சபையிலே வந்து புடிச்சிருக்கு னு சொல்லு அது போதும்!!எனைய நம்பு அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கோவம் வரும், கொஞ்சம் முரடன் தான், அதுக்காக கட்டுனவள கைவிடறவன் கிடையாது….. முதல்ல உன்ன ஏத்துக்க தயங்குவான்…அப்புறம் கண்டிப்பா உன்ன அவன் கைல வச்சு தாங்குவான்…
சரி, கொஞ்சம் யோசிச்சுக்கட்டுமா??? என்று கேட்டாள்..
கண்டிப்பா யோசி, ஆனா நல்ல முடிவா எடு வசும்மா!!
சரி, நா வைக்கட்டுமா என்று கேட்டு வைத்துவிட்டார் ஜெயந்தி…
இவளின் யோசனை முழுக்க என்ன சொல்லுவது என்றுதான்.. வீட்ல சொன்ன, வேணாம் என்று சொல்லிடுவார்கள்…
ஆனாலும் இவளுக்கு ஜெயந்தியை மிகவும் பிடித்துவிட்டது.. வெளிப்படையா பேசுனதாலயா இல்லை வசுமா னு கூப்பிட்டதாலயோ!!
திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் அல்ல இரு குடும்பத்தாரின் இணைவு…
அப்டி யோசிச்சு பாக்கும் போது ஜெயந்தியிடம் ஒரு நல்ல கனெக்ட் கிடைக்கும் என்று அவளுக்கு தோன்றியது..அதற்காவே ரிஸ்க் எடுக்கலாமா என்று அவள் மனதில்பட்டது ….