ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10



கேமரா மேன் கீழே சென்றதும்.. இவள் சவியை பார்க்கலாம் என்று அவள் அமர்ந்த சோபாவுக்கு சென்றாள்… ஆனால் அவள் அங்கே இருக்கவில்லை… அத்தான் வந்துட்டாங்க போல என்று முனு முனுத்தவாறு சரி கீழ செல்லலாம் என திருப்பினாள்…

அந்நேரம் தேவ் அவள் முன்னே முறைத்தவாரு வந்து நின்னான்…


“யாத்தே”, என்று பின்னால் தள்ளி நிற்க முற்பட…

அவள் நேரத்திற்கு சோபாவும் தடுத்து விழ பார்க்க.. அவன் அவள் முழங்கை பிடித்து “ஏய், பார்த்து” என்று அவளை பிடித்து நிறுத்தினான்…

அவளை அவள் நிதானபடுத்திகொள்ள அவகாசம் கொடுத்தவன்…

அவளும் தன்னை கொஞ்சம் நிதானபடுத்தி அவனை ஏறிட்டு பார்த்தாள்….

அவனோ “சோ, அம்மா உன்கிட்ட பேசிருக்காங்க ரைட்”…

அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை… அவள் கண்கள் முட்டை போல விரிந்து அவனை பார்த்தது…. ஆனால் பதில் சொல்ல அவள் நினைக்கவில்லை…..

அவள் முட்டை கண்களை பார்த்தவன்… “இதோ, பாரு உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்… யோசி.. யோசிச்சு நாங்க கிளம்புறதுக்குள்ள நல்ல முடிவா எடு”… என்று கடு கடுவென கூறினான்….

“நான் ஏற்கனவே யோசிச்சு தான் முடிவு எடுத்தேன்… எடுத்த முடிவு உறுதியானது, அத மாத்துறதா இல்லை… “



அவள் அப்படி சொன்னது… அவனுக்கு கோவத்துல என்ன பண்ணுகிறோம் என யோசிக்காமல் அவளை தோள்களை பிடித்து இழுத்து அவன் இரு கால்களுக்கு இடையே நிறுத்தி “என்னத்த யோசிச்ச!! ம்ம்ம்…” என்று கர்ஜித்தவாறு “என்னை கல்யாணம் பண்ணா என்னடி கிடைக்கும் உனக்கு.. ஹ்ம்ம்… சொல்லு… உங்க பிறவிலாம் உடம்புக்கு தானே அலைவீங்க… அது இல்லனா அடுத்த ஆள தேடி போகிற ஜென்மம் தானே ” என்று கோபமும் இகழ்ச்சியுமாய் கூறினான்…



அவன் சொன்னதை கேட்டதும் அந்த வளர்ந்து கெட்டவணை குனிய வச்சு “நங்கு, நங்குனு நல்லா நாலு கொட்டணும்” போல இருந்தது வசுவுக்கு…. இரு டா, ஒரு பொண்ணு பண்ணதுக்கு எல்லாரையும் குறை சொல்ற, உனக்கு நான் பாடமே நடத்துறேன்…என்று மனதிற்குள் சவால் விட்டுக்கொண்டாள்…

அவன் பிடித்த பிடி வேற இரும்பு பிடியாக மிகவும் வலித்தது.. ஆனால் அதை காட்டாமல் அவனுக்கு பதில் பார்வை பார்த்தாள்…


“சரி, சொல்லு.. என்னத்த பார்த்து என்ன புடிச்சிருக்குனு சொன்ன” என்று இன்னுமும் அவள் தோள்களை விடாமல் கேட்டான்…


ஹையோ, வலிக்குதே…விடேன் டா… பாவி….என்று மனதிற்குள் பேசியவாரு… “எனக்கு உங்கள விட உங்க அம்மாவை ரொம்ப புடிச்சிருக்கு”…

இதை கேட்டதும் அவன் கைகள் கொஞ்சம் தளர்ந்தது… அவன் விழிகள் ஆச்சிரியத்தை பிரதிபலித்தது……

“ஆனா, நீ கட்டிக்க போறது என்னை…” என்று மறுமொழி சொன்னான்…

“பையன பிடிக்கிறது விட, பேமிலி பிடிச்சாலும் கட்டிக்கலாம்னு தோணுச்சு”…

“உன் லாஜிக் சகிக்கல..” என்று அவன் சொன்னாலும்…
ஒரு வகையில் அவன் மனம் குளிர்ந்தது… அவன் தம்பி பொண்டாட்டி அவ்ளோவா அவன் அம்மாவோட ஒட்ட மாட்டாள்…

இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால்… மருமகளை மகளாய் பாவிக்கும் நினைப்பு உள்ளவர் தான் ஜெயந்தி…


ஆனால் அவன் தம்பி பொண்டாட்டி தன்யாவுக்கு, தன் கணவன்.. தன் பிள்ளை.. தனக்கு மட்டும் என ரொம்ப இறங்கி பழகமாட்டாள்…

அந்த குறை ஜெயாவுக்கும் உண்டு… ஏனோ அந்த குறையை இவள் தீர்த்து வைப்பாள் என்று அவன் உள்மனம் கூவியது…

இதோ பாரு… நான் திரும்பவும் நினைவு படுத்துறேன்… “என்ன கல்யாணம் பண்ணா உனக்குதான் ரொம்ப கஷ்டம்…என்கிட்டே எதையும் எதிர்பார்க்க கூடாது” அந்த எதையும் என்பதை அழுத்தமாவே கூறினான்…


அவள் சரி என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டவளின் அலைபேசி அடிக்கவே… எடுத்து பார்த்தாள்… சவி எனவும்… சொல்லு சவி….

“ஹே, என்ன அங்கேயே ரெண்டு பேரும் குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டீங்களா?”


“சவிவி… செருப்பை இங்க இருந்து தூக்கி போட்ட உன் மண்டை மேல வந்து விழும் பாத்துக்கோ”…என்று அவனுக்கு கேட்காதவாரு மிரட்டினால்…

“அம்மாடி, நான் பயந்துட்டேன்” என்று நக்கலடித்துவிட்டு… வசு, அண்ணா பேமிலி எல்லாரும் கிளம்ப ரெடி ஆகிட்டாங்க…உங்கள கூப்டு வர சொன்னாங்க… சரி, நான் தான் நீங்க எந்த நிலைமைல இருப்பீங்களோனு போன் பண்ணேன்.. என்று மறுபடியும் வெறுப்பேத்தினால்….


சவி…. என்று பல்லைக்கடித்தவாரு..மெதுவா கத்தி… வை வரோம்.. என்று போனை ஆப் பண்ணினாள்….

உங்க வீட்ல கிளம்ப போறாங்களாம்… உங்கள கூப்பிடறாங்க… வாங்க போலாம் என முன்னே நடந்தாள்….

அவனும் அவள் பின்னே நடந்தான்…


முன்னே நடக்கும் அவளை பார்த்தான்… அவள் நடக்கும் அன்ன நடை, அவளின் பின்னழகில் பட்டு ஆடும் அந்த நீளமான பின்னால்… அவனை கவர்ந்து இழுத்தது…..


அப்டி கவர்ந்து இழுப்பதும் புடிக்கவில்லை…

உடனே அவன் “ஏய், நில்லு”…

அவள் நின்று திரும்பி பார்த்தாள்..அது என்ன ஏய் என்று நினைத்தாலும்…கேட்க தோணவில்லை…

“நீ பின்னே வா, நான் முதல்ல இறங்கிறேன்..” எனவும்…

அவள் வழிவிட்டு நின்றாள்… என்ன தான் வழி விட்டாலும்.. அது குறுகிய படிக்கட்டு.. இடிக்காம செல்ல முடியாது…


அவன் உரசாமல் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் சென்றான்.. இருந்தாலும் அவள் என்னவென அறியும் முன்பே.. அவள் முன் தேகம் முழுவதும் அவனோடு உரசி கொண்டு விட்டது…



உரசியதும், அவள் கண்களை இருக்கமாய் மூடிவிட்டாள்….. அவனுக்கும் ஷாக் அடித்த உணர்வு… அவள் மென்மைகள் தன் மீது படர்ந்ததால்…
ஆனாலும் அவன் அந்த உணர்வுக்கு மதிப்பும் அளிக்காமலும், அவளையும் பார்க்காமலும் கடந்து சென்று விட்டான்..

இவளும் தன்னை சுத்தரித்து கொண்டு கீழே இறங்கி சென்றாள்…


அங்கே எல்லாரும் தயாராக இருக்க… மரகதம் அவளை பார்த்து பக்கத்தில் வந்து “ராசாத்தி, நாங்க கிளம்புறோம்.. நல்லா சாப்பிட்டு பத்திரமா இரு… சரியா” என்று அவள் நெத்தியில் ஒரு முத்தம் வைத்து கன்னத்தை வருடினார்…

ஜெயாவும் கிட்ட வந்து அவள் கையை பிடித்து, “வசும்மா, நாங்க கிளம்புறோம்… ரெண்டு மூணு தேதி எல்லாரும் சேர்ந்து பார்த்து வச்சிருக்கோம்.. உனக்கு எது தோதுபடும்னு பார்த்து சொல்லு… சரியா… சீக்கிரமா உன்ன வந்து கூட்டிட்டு போறோம்.” என்றவாரு அவளை அணைத்தார்….



அதை பார்த்த தான்யா “ஹ்ம்ம், உங்க அம்மா இப்டி என்ன ஒரு நாளும் பண்ணதில்லையே.. புது மருமகள் பவுசுல அதான்…” என்று பிரசாத்திடம் முறையிட்டாள்….



“ஏய், எங்க அம்மா உன்ட பாசமா வந்தப்போலா எட்ட நின்னது நீதானே..ஏதும் உன்ட கேக்காததுனால நா கவனிக்கலனு கிடையாது புரிஞ்சுதா”…


இவன் இப்டி சொல்லவும், அவள் வாயை மூடிக்கொண்டாள்…..

ஜெயா குடும்பம் எல்லாரும் எல்லாரிடமும் விடை பெற்றார்கள்..

தேவ் எல்லாரிடமும் விடை பெற்றான் தான்.. ஆனால் இவளை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை..

அவன் டிரைவ் பண்ணுவதால், முதலில் போய் வண்டியை எடுத்து அவள் வீட்டுக்கு வாசல் முன்பு நிப்பாட்டினான்…

வசுவும், அவள் குடும்பமும்.. வாசலில் வந்து நின்றார்கள்..
அவன் அவளிடம் வேணும் என்றே தான் போய்ட்டு வரேனு சொல்லவில்லை…
உனக்கும் எனக்கும் என்ன என்று நிலை நிறுத்தவே அவன் அப்படி பண்ணினான்…..

எல்லாரும் ஏறினர், அவன் வண்டியை கிளப்பியதும், அவளை பார்த்தான்.. அவளை பார்த்ததும், அவன் தலை தானாகவே போய்ட்டு வரேன் என்று அசைந்தது… உடனே அவன் வண்டியையும் எடுத்துவிட்டான்…

அவன் தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என சின்ன சுணக்கம் அவளுக்கு இருந்தது… பேய்க்கு வாழ்க்கை பட்டால் முருங்கை மரம் தொங்கி தானே ஆகணும் என்று தன்னை தேற்றி கொண்ட சமயம்… அவன் பண்ணின சின்ன தலை அசைப்பு…

அவள் சுணக்கத்தை முற்றிலும் எடுத்துபோட்டது….!!!


 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் கிளம்பி சென்றார்கள்….

உறவினர்களும் கிளம்பிவிட்டார்கள்….

பந்திகளும் முடிந்து விட்டதால்… கொண்டு வந்த பத்திரத்தத்தை பிரித்து, கழுவி எடுத்து வைத்துக்கொண்டிரிந்தார் சாரா… கூடவே உத்தாசையாக இருந்தார் வளர்மதி….

சவியின் கணவனின் பெயர் “பிரவீன்”…
அவனை பார்த்த வசுவோ “அத்தான், நீங்க ஏன் பூ வைக்குறப்போ வரல… உங்கள நா எதிர்பாத்தேன்..” என்றபடி வந்து அமர்ந்தாள் அவன் எதிர்க்க உள்ள நாற்காலியில்…..

“வந்துரனும்னு தான் நினைச்சேன் வசு, எனக்கு அங்கேயே நேரமாகிட்டு… ஆனாலும் மாப்பிள கிளம்புறதுக்குள்ள வந்துட்டேன்ல…”

“ஹ்ம்ம்,” என்று அவள் மேலும் எதோ கூறுவதற்குள்…

சவி, “ஏய், வசு, எங்கடி போன” என்றாவாரு வந்து “ஓஹ், இங்க தான் இருக்கியா” என பிரவீன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்….

“என்னடி, எதுக்கு என்ன தேடற…!” என்ற வசுவிற்கு…

“சும்மா தான், நான் உன் ஆள பத்தி சேர்த்து வச்சுருக்குற டீடெயில்ஸ் சொல்லத்தான் தேடுனேன்.”

ஹ்ம்க்கும், அது கேக்காதது தான் குறை இப்ப… என்று நினைத்தவாரு… “சொல்லு, என்னலாம் கேட்டு வாங்கியிருக்க”…

“அண்ணா கிட்டார் நல்லா வாசிப்பாங்களாம்… கீ-போர்டு கூட நல்லா பிலே பண்ணுவாங்கலாம்… உன் அத்தை தான் சொன்னாங்க.. இதுக்கு மேலயும் கேட்டு வாங்கியிருப்பேன்.. பட் நீங்களே புரிஞ்சு தெரிஞ்சு கிட்ட மாதிரி வராதுல.. அதுனால ஒன்னோட நிறுத்திகிட்டேன்…” என்று கேலிக் குரலில் அங்கலாய்தாள்….

“நல்லா பிலே பண்ணுவாங்கனு நாங்க கண்ணால பார்த்து, காதால கேட்டதுக்கு அப்புறம் தான் செர்டிபிகேட் கொடுப்போம்”.. என்று கிண்டலாக வசு கூறினாள்….

“நீ கேளுமா காலம் முழுக்க கேளு, கேட்டுட்டு நீயே உன் ஆத்துக்காரருக்கு செர்டிபிகேட் குடுத்துகிட்டே இரு”…. என்று நக்கலாக சொன்னாள்…

“ஹம்ம்க்கும், போடீ.. உங்க ரெண்டு பேருக்கும் எப்படி கல்யாணம் பிக்ஸ் ஆச்சுன்னு உங்க கதையை சொல்லுங்க”… என்று வசு வினாவினால்…

வசுவிற்கு, எப்படி பொருந்தி வந்து கல்யாணம் செஞ்சாங்கனு தெரியாது… அந்த சமயத்தில் அவள் ட்ரைனிங்காக பெங்களூரு போயிருந்தால்.. அதனால் அவளும் கேட்கவில்லை, சவியும் சொல்லவில்லை…

“அத்தான், எப்படி இவள பார்த்து.. இவள கட்டணும்னு சம்மதிச்சீங்க”…. என்று தெரிந்து கொள்ளணும் ஆசையில் கேட்டாள்….

“இவள பார்த்தேன், எந்த விகல்பமும் இல்லாம பேசுனா… நமக்கு கல கலனு லா பேச வராது.. பட் யாராச்சும் அப்டி இருந்தா எனக்கு புடிக்கும்…இவள் அந்த ரகம்…ரொம்ப கல கலனு இருந்தா… அது ரொம்ப புடிச்சு போய்டுச்சு…. நமக்கு செட் ஆகுவானு உடனே ஓகே சொல்லிட்டேன்”…. என்றான் பிரவீன்…

“ஹ்ம்ம், நல்லா இருக்கே…” என்று அவனுக்கு சொன்னவள்… சவியை பார்த்து “நீ எப்படிடி ஓகே சொன்ன”… என்று கேட்டாள்…
“நான் எங்க ஓகேனு முழு மனசோட சொன்னேன்.. எதோ போனா போகுதேனு கல்யாணம் பணிகிட்டேன்”… என்று சலிச்சவாறு சொன்னாள்…
“ஹே, என்னடி அத்தான் முன்னாடியே இப்டி சொல்ற”

“வசு, மேடம்கிட்டயே கேட்டுக்கோ… எனக்கு கேட்டு கேட்டு புளிச்சு போச்சு.. நான் மாடிக்கு போய்ட்டு தூங்க போறேன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்…

“ஹே, சொல்லுடி… என்னனு.. சந்தோசமா தானே இருக்கீங்க? உங்களுக்குள்ள பிரச்சனை ஏதும் இல்லைல”…

“வா, உள்ள போய் பேசலாம்” என்று அவளை இழுத்துட்டு போனாள் சவி..

“எனக்கு ஒரு ஆசை, வர போற பையன் லவ் பியேலியர் ஆஹ் இருக்கனும், அவன நான் என் அன்பால நேசிக்கவைக்கணும்னுலா நினைச்சு வச்சிருந்தேன்… ஆனா இவங்களுக்கு என்னை பார்த்ததும் புடிச்சு என்ன கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லிட்டாங்க… சோ எனக்கு வருத்தம் தான் அதுல…”

“அடிப்பாவி, புடிச்சதுகா சலிச்சு சொல்ற பக்கி, அப்புறம் எப்படி வாழக்கையை நடத்துற” என்று ஆச்சரியமாய் கேட்டாள் வசு..

“ஆரம்பத்துல வருத்தம் தான், பட் போக போக புரிய ஆரம்பிச்சுச்சு….. அதுனால வாழ்க்கை நல்லாவே போகுது…”

“சரி, என்னனு புரிஞ்சுக்கிட்ட?”…

“எல்லாம் நன்மைக்கேனு தான், எல்லாருக்கும் ஏத்த மாதிரி தான் அமையும்னு.. எப்படின்னா, என் மாமியார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.. காலைல 5 மணிக்குலாம் கதவை தட்டிடுவாங்க..இவங்க கதவதட்ற பழக்கம் எங்களுக்கு கல்யாணம் ஆன அடுத்த நாள்ல இருந்தே பண்ண ஆரம்பிச்சாங்க…வேற வழி இல்லாம தான் எழும்புவேன்.. எந்திச்சா வேலை வரிசை கட்டி நிக்கும்.. வீட்ல பண்ணைக்கு ஆள்கள் வருவாங்க… அவங்களுக்கு காபி போடறதுல ஆரம்பிச்சு நைட் இவங்க சாப்பிட வர வரைக்கும் போகும்… நானும் ரொம்ப டையர்ட் ஆகிடுவேன்…ஒரு நாள் பார்த்தாங்க…ஏன் இவள இவ்ளோ நேரமே எழுப்பி விடறீங்கனு கேட்டுட்டு.. சமையல்க்கு ஆள் பார்க்குறேன், எவ்ளோவோ வேலை செய்ய நாம ஆள்கள் வச்சிருக்கோம்… இதுக்கும் நான் வைக்குறேனு சொல்லிட்டாங்க… இப்டி நிறைய விஷயத்துல எனக்காக பேசுனாங்க நான் கேட்கமலே….

அப்போ புரிஞ்சுது, இதே லவ் பியேலியர் பையன கல்யாணம் பன்னிருந்தேனா.. “பாடி பறந்த கிளினு” பாடிட்டு தான் இருந்துருப்பான்…இதுலாம் கவனிச்சுருக்க மாட்டான்.. எனக்கு ஏது பெட்டெர்னு கூட தோணிருக்காது… அப்போ நல்லாவே புரிஞ்சுது… அப்புறம் பிரவீன்ஆஹ் ரொம்ப புடிச்சுருச்சு” என்று அவனை சிலாகித்தால் சவி…

“ஹ்ம்ம், கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு சவி… ஆனா எனக்கு தான் என் வாழ்க்கை எப்படி போகும்னு பயமாவே இருக்குது…” என்று தவிப்போடே கூறினாள்…

“உனக்கு என்ன பேபி பயம், மாமியார் ரொம்ப நல்ல டையிப்…. அதுலாம் சமாளிச்சுடலாம்..இப்போவே அதுலாம் யோசிக்காத…” என்று சொல்லிகொண்டிருந்த நேரம்… சாராவும், வளரும் உள்ளே வந்தனர்…

சாரா, “வசு, சேலையை மாத்திக்கோ… பூ அப்டியே இருக்கட்டும்.. கொஞ்சம் வாடுன அப்புறம் எடுத்துக்கலாம்..சவி, நீயும் மாத்து” என்று சொன்னபடியே அவர்கள் மாற்ற துணியை எடுத்தபடி சொன்னார்…

“இதோ மாத்றோம்மா” என்று சாராவை பார்த்து சொன்னாள்…

“நாங்க அந்த ரூம்ல இருக்கோம்.. நீங்க இந்த ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்றவாரு துணியை எடுத்துக்கொண்டு போனார்…

அவர்கள் சென்றவுடன், “வசு, என் டிரஸ் மாடில இருக்கு.. நா போய்ட்டு மாத்திட்டு வரேன்..நீயும் ரெப்பிரேஷ் ஆகிக்கோ… தூங்கிடாத நா வரதுக்குள்ள”.. என்று கிளம்பினாள்…

வசுவும், தன்னை சுத்தபடுத்தி கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்… இன்னிக்கு எடுத்த போட்டோஸ் எல்லாம் பேமிலி குரூபில் அனுப்பியிருந்தார்கள்… அதை பார்த்துக்கொண்டு இருந்தாள்…

அந்த நேரம் தொடு திரையில், ஜெயா கால்லிங் என்று வரவும்… என்ன இப்போ எடுக்குறாங்க என்று யோசித்தபடி அட்டென்ட் செய்தாள்…

“வசுமா” எடுத்துவொடனே ஹலோ கூட சொல்லாமல் வசும்மா தான் என்று ஜெயா கூப்பிட்டார்…

இந்த வசும்மால தான், நான் பிளாட் ஆகிடுறேன்..என்று தன்னையே திட்டிக்கொண்டு “ஹலோ, ஆண்ட்டி.. ஹோட்டல் போயாச்சா…” என்று வினாவினால்…

“ஆமா, வசுமா… வந்துட்டோம்… பாட்டிமா எல்லாரும் கிளம்பிட்டாங்க… இப்போ தான் நான் ரெப்பிரேஷ் ஆகி உனக்கு கால் எடுக்குறேன்”… என்று சொல்லி… “வசுமா, ரொம்ப நன்றிடா… நீ சம்மதம் சொன்னதுல… என்னைய விட்டா நான் இன்னிக்கே உனக்கு தேவ்வோட கல்யாணம் பண்ணி வச்சு கையோட கூப்பிட்டு வந்துருப்பேன்”….. என்று ரொம்ப சந்தோசமா கூறினார்..

“புரிது ஆண்ட்டி” என்றாள் அவருக்கு…

“வசும்மா, அத்தைனு கூப்பிடுடா… ஆண்ட்டி ரொம்ப தள்ளி நிறுத்துது…”

“ஹ்ம்ம், ஓகே அத்தை” என்று சிறுதும் தயங்காமல் கூறினாள் ஜெயா கேட்டதால்….

“நீ அத்தைனு சொன்னதும், அப்டியே என் காதுல இன்பத்தேன் வந்து பாயுற மாதிரி இருக்கு வசும்மா” என்று மனநிறைவாய் கூறினார்…

ஹ்ம்ம்க்கும், உங்க பையன் பேசுனத கேட்ட எனக்கு ஈயத்தை காய்ச்சி என் காதுல ஊத்துனா மாதிரில இருக்கு.. என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்து கொண்டாள்…

மேலும் ஜெயாவே தொடர்ந்தார்.. “தேவ், உன்னைய கஷ்டப்படுத்தர மாதிரி பேசிருந்தா மன்னிச்சுருடா” என்று சொன்னார்…

“அப்டிலாம் ஏதும் இல்லை அத்தை, நீங்க எப்போ ஊருக்கு கிளம்புறீங்க”…

“நாங்க நாளைக்கு மார்னிங் கிளம்புறோம், நீ எப்போ வசுமா சென்னை போற?”

“நானும் நாளைக்கு தான் கிளம்புறேன் அத்தை, நாளைக்கு ஈவினிங் 8 மணிக்கு பஸ்”…

“சரி வசு, நீ பார்த்து போ, நா அடிக்கடி கால் பண்றேன்… உனக்கு டைம் கிடைக்குறப்போ நீயும் எனக்கு பண்ணு, சரியா வசுமா..”

“சரி அத்தை” என்று இவள் சொன்னவுடன் ஜெயா வைத்துவிட்டார்…

அதே சமயம், ஜெயா பேசுவதை தேவும் கேட்டு விட்டான்… அவன் அப்போது தான் அவனுடைய பி.ஏ விடம் பேசி முடித்தபொழுது, ஜெயா வந்து நின்று “வசுமா” என்று சொன்னதை கேட்டுவிட்டான்…

என்னதான் பேசிக்கிறாங்க என்று நின்று கேட்டுகொண்டிருந்தான்…

ஜெயா பேசி வச்சதும் “என்ன முடிஞ்சுதா? சோ, அவ சம்மதம் சொன்னதுக்கு முழு ரீசன் நீங்க தான் இல்லையா?” என்று கோவமாய் கேட்டான்…

“அப்டி இல்லை தேவ், நான் அவளை சம்மதம் சொல்ல சொன்னாலும்… யோசிச்சுக்கோனும் தான் சொன்னேன், முடிவு என்னவோ அவள் இஷ்டபடி தான் சொன்னா”.. என்று அவரும் அவனுக்கு பதில் குடுத்தார்…

“என்னவோ, கஷ்ட பட போறது அவா தான், சொல்றத சொல்லிட்டேன்” என்று விறு விறு நடந்து அவன் ரூம்க்கு சென்று விட்டான்..

இங்கே வசுவும், சவியும் கல கலத்த படி அந்த நாளை போக்கினர்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

சார சாரயாய் மக்கள் கூட்டமாய் வீட்டிற்கு செல்வதற்காய் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தங்கள் பேருந்தை தேடிக் கொண்டிருந்தனர்…
அந்த கூட்டத்தின் மத்தியின் ஒருத்தியாய் நின்று கொண்டிருந்தாள் வசு..

ஆம், அவள் சென்னை வந்து ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது…

தங்கியிருக்கிறது வேளச்சேரியில், வேலை முடிந்து பி. ஜி க்கு திரும்பி கொண்டிருந்தாள்…
அது ஒரு வெள்ளிக்கிழமை, கூட்டமும் அலைமோதியது… இதோடு ஒரு ஐந்து பேருந்தையாவது ஏறாமல் விட்டிருப்பாள்….

நல்ல வேளை துணைக்கு என்று ஹெட்செட் இருந்தது,

இல்லையென்றால் கஷ்டம் தான் என்று நினைத்து கொண்டாள்…

இந்த கஷ்டம் அடுத்த வாரத்தில் இருந்து இல்லை, வேளச்சேரியில் இருந்து போரூர்க்கு ரெண்டு பஸ் மாறனும்…அதே பெருங்குடினா ஒரே பஸ் தான்..
அடுத்த வாரத்தில் இருந்து புது கம்பெனி பெருங்குடியில்…

இப்போ இருந்த கம்பெனியை விட்டு போகணும்னு சிறிதளவு கூட வருத்தம் இல்லை… தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால்…
பெருசா நட்புனும் ஏற்படுத்திக்கல…
அதுவெல் லாம் காலேஜ்லேயே நின்று போய்டுச்சு..

அதுனால என்னடா வாழ்க்கைனு சலிப்பு தட்டவும் செய்யும்…

வீக் எண்டு ஜாலியா போக்க, ஒரு பெரிய நட்பு வட்டாரம் தேவை பட்டதுதான்… ஆனாலும் தானாவே முன் வந்து பழகவும் விருப்பம் இல்லை…

நான் இப்படித்தான், உங்களுக்கு என்னைய புடிச்சா பேசுங்க.. நீங்களே விருப்பப்பட்டு நட்போடா பழகுனீங்கனா.. நான் அப்போ ஏதுக்குறேன் என்ற கொள்கையுடையவள்…

தானாய் எதையும் நாடி போக கூடாது என்ற எண்ணம்….

இந்த கொள்கையினாலே இப்போ இருந்த ஆபீஸில் பெரிய நட்பு வட்டாரம் இல்லை…

நட்பும் காதலை போலத்தான்.. மனசு தான் முதல்ல கனெக்ட் ஆகும்… அது தான் எத்தனை வருஷம்னாலும் நிலை நிற்கும்…

இப்படி யோசித்துகொண்டிருக்கும்போதே பேருந்தும் வர, கொஞ்சம் மிதமான கூட்டம் என்றதும் ஏறிக் கொண்டாள்.. பஸ் பாஸ் என்பதால் “ஜாலி ஓஹ் ஜிம்கானா” என்ற பாட்டில் லயித்துவிட்டாள் தன்னுடைய ஹெட் போனில்…

மனசுலயும் இப்போதான் அப்பாடா என்கிற உணர்வு… இன்னியோட இந்த இடத்திற்கு டாடா என்று மனம் கூப்பாடு போட்டது….

அவள் நிறுத்தமும் வர, இறங்கி நடக்க ஆரம்பித்தாள் தன் பி. ஜி ஹோமிற்கு….

பி. ஜிக்கு வந்தவுடன் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, உணவறைக்கு சென்று உணவருந்த தொடங்கினாள்…

சப்பாத்தியும், தக்காளி தொக்கும் வைத்திருந்தார்கள்.. இருந்த பசிக்கு அதுல உப்பு அதிகமா, காரம் அதிகமா என்று ஒண்ணுமே தெரியல…

சாப்பிட்டு தன்னுடைய அறைக்கு வரவும், தன்னுடைய ரூமை ஷேர் பண்ணியிருந்த மிருணாழினி இரவு நேர வேலைக்கு தயாராகி கொண்டிருந்தாள்….

ஏதோ இரண்டு பேரும் ஒரே எண்ணமுடையவர் என்பதால் இருவருக்கும் ஒற்று போகிறது…

மிருணா, “என்னடி, இந்த வேலைய தலை முழுகியாச்சா? “ என்று கேட்டாள்…

“ஆமா, மிரு.. இனிமேட்டு அலைச்சல் மிச்சம்”…

“கரெக்ட் தான், இதுக்குதான் வசு, வண்டி ஓட்டவும் கத்துக்கணும்…

அப்போதான் நினச்ச நேரத்துக்கு கிளம்பி போயிட்டே இருக்கலாம்”…

“அடி போடி, நம்ம இளையராஜா பாட்டோட, ஜன்னல் பக்கம் உக்கார்ந்து, சிலு சிலுனு வர காத்தோட பஸ்ல போறது சொர்கம் தெரியுமா”……

“அது சரி என்று கிண்டலாய் கூறிவிட்டு எனக்கு அப்டிலா இல்லைமா… எனக்குலாம் “புழுதி பறக்கும் பாரு” இதுதான் என் கண்ணுக்கு தெரிது…

“போடீங், ரசனை கெட்டவளே!!, சரி இந்த வீக் எண்டு போய் கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் வரியா”…

“நீ வண்டில வர்றதுனா மட்டும் வருவேன்” என்று மிரு கூறினாள்…

“சரி சரி, வரேன்…நாளைக்கு மதியம் போவோம்.. கொஞ்சம் டிரஸ்,அப்புறம் கல்யாணத்துக்கு ஸ்கின் கேர்லாம் வாங்கணும்…”

“ஏண்டீ, கலயாணம்னு உன் மூஞ்சில ஒரு களைய காணும்..”

“ஹே, கலைய ஏன் என்கிட்டே தேடற, அவ கீழ உள்ள ரூம்ல இருக்கா”

“வசு, வேணாம் வெறுப்பேத்தாத.. சரி ஜோக்ஸ் அபார்ட்… உன் முகத்தில ஒரு வெளிச்சம் இல்லடி… மாப்பிளைகிட்டயும் நீ பேசுன மாதிரி தெரிலையே.. உனகக்கு பார்த்த மாப்பிளை பிடிக்கலையா??”…

அப்படினு இல்லை மிரு, மாப்பிள்ளை நல்லாதான்டி இருக்கான்…பட் என்று நடந்ததை விவரித்து அவளிடம் கூறினாள்…

இவளுக்கு சவி எப்படி நெருக்கமோ அதே மாதிரி தான் மிருவும்…

மிருவை இந்த பி. ஜி க்கு வந்ததும் தான் தெரியும்… மிரு ரொம்பவும் எதுலயும் மூக்கை நுழைக்க மாட்டாள்… அதே மாதிரி தான் வசுவும், அது ரெண்டு பேருக்கும் ஒத்துபோய் நல்லாவே பழகி விட்டார்கள்…

“ஹே, என்னடி என்னென்னமோ சொல்ற” என்ற மிருவிற்கு…

“பதறாத, பதறாத… ஐ வில் ஹண்ட்ல் இட்(I will handle it)…”

“ஆனாலும், இப்படியிருக்கிறவங்ககிட்ட எப்படி வாழ போற”..

“இப்போதைக்கு இந்த கேள்விக்கு என்கிட்டே பதில் இல்லை மிரு”

“வாழ்க்கை சாதாரணமானது இல்லை வசும்மா…”

“புரிதுடி, கடவுள் விட்ட வழினு போறேன்”

“சரி, யோசிச்சு பண்ணு, நல்லதே நடக்கும்…எனக்கு டைம் ஆகிட்டு வசு நான் கிளம்புறேன்.. நீ தூங்கு.. நாளைக்கு பாக்கலாம்”… என்று மிரு கிளம்பிவிட்டாள்…

வசுவும் உறங்கிபோனாள்….


அது உயர்ந்த கட்டிடம்…
கட்டிடத்தை பார்த்தாலே தெரியும்… அது ஒரு IT நிறுவனம் என்று…
D.H.T IT சொலுஷன்ஸ் என்ற பெயர் பலகையுடன் அழகாய் வீற்றிருந்தது…

சுமார் 2000 பேர் ஆவது வேலை செய்வார்கள் அந்த நிறுவனத்தில்…

நிறைய பிரிவுகள் உள்அடங்கிய நிறுவனம்…

பாங்கிங், பைனான்சியல், அப்ளிகேஷன் டெவெலப்பிங் இந்த மாதிரி நிறைய பிரிவுகள் கொண்டது…

எதாவது பாங்க் இவர்களை தொடர்பு கொண்டு.. அவர்களுக்கு மொபைல் ஆப் அண்ட் போர்டளிலும் டெவெலப் செய்து தருமாறு ப்ராஜெக்ட் கிடைக்கும்… அதற்கென்று ஆன்போர்டிங் டீம், பிசினஸ் அனாலிஸ்ட் டீம், டெவெலப்மெண்ட் டீம், டெஸ்டிங் டீம், டெம்ப்லாய்மென்ட் டீம் இருக்கும்… இதை தவிர, டேட்டா அனாலிஸ்ட் டீம், ஹஃச் ர் டீம், IT சப்போர்ட் டீம், அட்மின் டீம் இந்த பிரிவுகளும் உண்டு….

இதற்கு எல்லாம் சொந்தக்காரர்கள் தேவ், ஹரிஷ் அண்ட் தருண்…

இவர்களின் கனவு தான் இந்த நிறுவனம்… விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதுக்கேற்ப அவர்களின் வெற்றியும் இன்றியமையாதது….


கடந்த 9 வருடத்தில் பல ப்ராஜெக்ட்ஸ், பல வெற்றிகள்… அந்த வெற்றியின் பலனாய் பெங்களூருலையும் ஒரு பிரென்ச் ஆரம்பித்து நடத்தி கொண்டு இருக்கிறார்கள்… அவர்கள் ஊரான கோவையிலும் இடம் பார்த்து கட்டியும் முடித்தாகிவிட்டது… இன்னும் கொஞ்ச வேலை தான் பாக்கி….. அந்த வேலைகள் எல்லாம் முடிந்ததும்… ஆளுக்கு ஒரு பிரென்ச்ஆஹ் நடத்துவது என்கிற திட்டம்…

வெறும் மேனேஜ்மென்ட் மட்டும் அவர்கள் மூன்று பேரும் பார்க்க மாட்டார்கள்… டாப் 3 ப்ராஜெக்ட்ஸ்சை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொள்ளுவர்… எடுத்துக்கொள்ளும் ப்ராஜெக்ட் முழுவதும் அவர்களின் பொறுப்பு…

இதோ இப்பொழுது கூட ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் பத்தின மீட்டிங் தான் அந்த கான்பிறேன்ஸ் ரூமில் நடந்து கொண்டிருந்தது…

தருணும், ஹரிஷ்ம் ஏற்கனவே அவர்கள் கையில் ஒரு ப்ராஜெக்ட் இருந்ததால்… இப்போ வந்த ப்ராஜெக்ட் தேவ் தான் எடுத்து நடத்த போகிறான்…

எந்த டீம் என்ன என்ன பண்ண வேண்டும்… ரிப்போர்ட்ஸ் எப்படியெல்லாம் வேண்டும்… டைம்லைன் எப்படி இருக்கும் என்று தனக்கே உரித்தான ஆங்கில புலமையில் விவரித்துகொண்டிருந்தான்…

மீட்டிங் முடிந்ததும் அவர்கள் எல்லாரும் கலைந்து சென்றார்கள்…

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

தேவ்க்கு இன்னொரு மீட்டிங், ஹயரிங் மேனேஜர் கூட இருந்தது… இவர் தான் இன்டெர்வியூல செலக்ட் ஆகுனவங்கள எந்த டீம்ல போடலாம் என்று மேனேஜ்மென்ட் கிட்ட கேட்பதற்காக மீட்டிங் வைப்பார்…

இன்னும் 5 நிமிடம் இருந்தது ஆரம்பிக்க… தன்னை ரெப்பிரேஷ் செய்து கொண்டு இன்னொரு மீட்டிங் ரூமில் வந்து அமர்ந்தான்…

ஹயரிங் மேனேஜர் வந்து ப்ரெசென்ட் பண்ண ஆரம்பித்தார்… செலக்ட் ஆன ப்ரொபைல் எல்லாரையும் பவர் பாயிண்ட் ஸ்லைடுஇல் போட்டு அவங்க இன்டெர்வியூ அப்போ எதுல ஸ்ட்ரோங் அதை பத்தி சொல்லி கொண்டிருந்தார்..

பொதுவாய் எந்த ரோல்க்கு இன்டெர்வியூ எடுக்குறாங்களோ அதே ரோல்ல தான் குடுப்பாங்க… அப்டி எடுக்குற ஆள் கொஞ்சம் திறமை வாய்ந்தவர்கள் என்றால் அந்த ரோல்க்குள்ளே தங்களை குறுக்கி கொள்வது உண்டு… இல்லை அவர்களுக்கு அந்த ரோல் அதிகமாய் இருப்பதும் உண்டு.. அதுனால் இவன் ஹயரிங் மேனேஜர் கிட்ட கலந்து கொள்வான்… அப்புறம் யாரை எதில் போடுவது என்று முடிவு சொல்லிவிடுவான்… இது தான் இந்த நிறுவனத்தின் முதல் படி கல்…

அடுத்து இதே மாதிரி ட்ரைனிங் முடித்ததும் ஒரு பில்டர் நடக்கும்… அப்போமும் ட்ரைனிங் மேனேஜரிடம் கலந்து முடிவு எடுப்பான்… இது இரண்டாவது படி கல் அந்த நிறுவனத்தில்….

இந்த மாதிரி இவர்கள் மூவரும் கண்ணும் கருத்துமாய் இருப்பதால் தான் இந்தளவு வளர்ச்சியை கண்டடைந்தது….

இவன் யாரை எங்க டேக் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே வர அவர் உடனே குறித்துக் கொண்டார்…

இப்டி பார்த்துக்கொண்டே வர, வசுவின் ப்ரொபைல் வந்தது…

அதை பார்த்ததும் ஷாக் தான்… ஆனாலும் காட்டிக்காமல்… இவங்க எப்போ இன்டெர்வியூக்கு வந்தாங்கனு எனக்கு சொல்லுங்க…

ஓகே தேவ்… (சார் என்று கூப்பிட கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர்) அந்த டீடெயில்ஸ் என்கிட்ட இல்லை… நா டீம் ல கேக்கிறேன்… கிவ் மீ பைவ் மினிட்ஸ் என்று அவர்கள் நிறுவனத்திற்கு என்று வைத்துத்திருந்த தொடர்பாளர் பயன்பாடுவில் (communicator app like slack etc) தன் டீம்க்கு மெசேஜ் பண்ண ஆரம்பித்தார்…

அதற்குள் இவன் மனமோ “இவளுக்கு அப்போ கல்யாணம் பேச முன்னாடியே என்னை தெரிந்திருக்குமா? ஒரு வேல சொத்துக்காக சம்மதம் சொல்லிருப்பாளோ? அப்டி இருந்தா எப்பாடுபட்டாவது இந்த கல்யாணத்த நிறுத்திடனும்” என்று நினைக்க நினைக்க அவன் முகமே சிவப்பானது…

“தேவ், அவங்கள ரெண்டு மாசம் முன்னாடி தான் இன்டெர்வியூ பன்னிருக்கோம்… அவங்க ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்குற கம்பெனில டூ மன்ந்த் நோட்டீஸ் பீரியட்…அதுனால நாம எப்போ இங்க வர முடியும்னு கேட்டதுக்கு.. அடுத்த வாரம் இங்க சேர்ந்துக்கிறேனு மெயில் பன்னிருக்காங்க…”

எல்லாவற்றையும் கவனமாய் கேட்ட தேவ், அப்போ அவளுக்கு தெரியாது… என்று கொஞ்சமாய் திருப்தி பட்டுக்கொண்டான்….

“இவங்கல இந்த ரெண்டு ப்ராஜெக்ட்ல, எதுல இவங்கள எடுத்துக்கட்டும்” என்று தேவிடம் கேட்டார்…

ஹயரிங் மேனேஜர் காட்டுன இரண்டும் ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட்ஸ் கிடையாது…அதுலயும் இவன் இப்போ நடத்த போறதும் கிடையாது…

சிறிது நேரம் யோசிச்சவன்… “என் ப்ராஜெக்ட்ல டேக் பண்ணிடுங்க”

“தேவ், அது ரிஸ்க்.. ஏன்னா, இவங்க ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்த கம்பெனில இவ்ளோ கிரிடிகல் ப்ராஜெக்ட்ஸ் அவங்க ஹாண்ட்ல் பண்ணது இல்லை.. அதும் இல்லாம நீங்க எடுக்குற ப்ராஜெக்ட்ஸ்ல எஸ்பிரின்ஸ்ட் ஆள்களை தான் வைப்போம்… அப்டியே வேற யாராச்சும் எடுத்தா கூட நிறைய கிரிடிகல் ப்ராஜெக்ட் ஹாண்ட்ல் பண்ணிருக்குறவங்கள தான் எடுப்போம்…சோ, இவங்கள எப்படி?”

“என் ப்ராஜெக்ட் ஆரம்பிக்க இன்னும் ஒன் வீக் இருக்கு… அந்த நேரத்துல ட்ரைனிங் கொடுப்போம்… இவங்க கூடவே இன்னும் ரெண்டு பேர் என் ப்ராஜெக்ட்ல டேக் பண்ணனும்… இந்த வாட்டி கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்”..என்று அழுத்தமாகவே சொன்னான்…

அவன் அப்டி சொன்னதும் இவரோ, எனக்கு ஒண்ணும் இல்லை… சொல்ல வேண்டிய கடமை சொல்லிட்டேன்… இனிமேல் அவங்க பாடு… என்று வசுவையும் மேலும் ரெண்டு பேரையும் தேவ் ப்ராஜெக்ட்ல் டேக் செய்து கொண்டார்….

இப்படியாக அந்த மீட்டிங்ம் நிறைவடைந்தது…

இதற்கு அப்புறம், அவனுக்கு கிளயன்ட் மீட்டிங்ம், ஹரிஷ் அண்ட் தருண் கூட ஒரு கனெக்டும் இருந்தது…

ஹரிஷ், தேவ் அண்ட் தருண் தினமும் ஒரு தடவை என்ன நடந்தது என்று தங்களுக்கு கூறிக்கொண்டு அடுத்த என்ன வேலை என்றும் அந்த காலில் குறிப்பு எடுத்து கொள்வர்…

சில சமயம் ஆபீஸில் இருந்து கனெக்ட் பண்ணுவான்… இல்லை வீட்டுக்கு போயும் கனெக்ட் பண்ணி கொள்வான்…

நிறைய நேரம் இருந்தபடியால் வீட்டிற்கு போய்விடலாம் என்று கிளப்பிவிட்டான்….

வீட்டிற்கு வந்து ஒரு குளியல் போட்டு… காபி தனக்காக போட்டுக்கொண்டு… சோபாவில் அக்கடா என்று அமர்ந்தபடி ஒவ்வொரு சிப் சிப்ஆஹ் உள்ள தள்ளினான்…

மனதில் என்னவெல்லாம் கிளயன்ட்யிடம் பேச வேண்டும் என்று ஓட்டி பார்த்துக்கொண்டான்…..

சில குறிப்பும் எடுத்துக்கொண்டான்…

நேரம் போனதே தெரியாமல் கிளையேண்ட் மீட்டிங் முடிந்தது…

அடுத்து ஹரிஷ், தருண் கூட கால்… அரை மணி நேரம் இருந்தது.. வீட்டில் சமைக்க ஏதும் இல்லை… சரி ஆர்டர் போட்டுக்கலாம் என பார்த்து ஆர்டர் போட்டுக்கொண்டான்….

அதற்குள் ஹரிஷ், தருண் கால் வரவே… அன்னிக்கு நடந்த விபரங்களை பகிர்ந்து கொண்டார்கள்… அடுத்து செய்ய வேண்டியதை குறிப்பு எடுத்து கொண்டார்கள்……

சிறிது நேரம் ஆபீஸ் பத்தின பேச்சு முடிந்ததும்… அவர்களது பார்வை இவன் மேல் திரும்பியது…

ஹரிஷ், “மச்சி, எப்போடா கல்யாணத்துக்கு தேதி பிக்ஸ் பன்னிருக்காங்க வீட்ல?” என்று கேட்டான்…

தேவ், “ப்ச், தெரிலடா” என்று சலித்தவாரு கூறினான்..

தருண், “ஏன்டா சலிச்சுக்குற… நீ சொன்னா தான் நாங்க அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணிக்க முடியும்”

தேவ், “நீங்க ஒண்ணும் பிளான் பண்ண வேணாம்… நான் யாரையும் கூப்பிட போறது இல்லை”…

ஹரிஷ், “ஏன்டா…எங்கள கூட கூப்பிட மாட்டியா?”

தேவ், “என் பிரிண்ட்ஸ், எனக்கு தெரிஞ்சவங்க, கம்பெனி ஸ்டாப்ஸ் யாரையும் கூப்பிட போறதில்ல… nn பார்த்த வரைக்கும் போதும்.. கல்யாணம் முடியட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்” என்று உறுதியாவே கூறினான்…

அவன் கல்யாணம் ஏற்கனவே மனமேடை வரை வந்து நின்றதை இவர்களும் கூட இருந்து பார்த்தவர்கள்… அவன் என் அப்படி கூறுகிறான் என்றும் அவர்களுக்கு புரிந்தது…

ஹரிஷ், “சரி மச்சி, கல்யாணம் முடிஞ்சதும் நமக்குள்ள ஒரு குட்டி கெட் டுகெதர் வைச்சுக்கலாம்” என்று கூறி முடித்து கொண்டான்...

தேவ் சரி என்றும் சொல்லவில்லை வேண்டாம் என்றும் சொல்லவில்லை…..

தருண், “சரி மச்சான், நாம அடுத்த வாரம் பாக்கலாம்”. என்றவாரு கால் துண்டித்துக் கொண்டார்கள்…

மணியை பார்க்க.. ஒன்பது-அரை ஆக ஐந்து நிமிடங்கள் இருந்தது.. இன்னும் ஆர்டர் பண்ண சாப்பாடு வரவும் இல்லை… எங்கே இருக்கிறது என்று ஆப்-பில் பார்க்க.. இன்னும் சாப்பாடு செய்து கொண்டிருப்பதாக காட்டியது… ஃப்ரைடே ஆனா இந்த மக்கள் வீட்ல செய்ய மாட்டாங்க போலயே… இவ்ளோ ரஷ்ஆஹ் இருக்கு ஒரு சோறு சாப்பிட…என்று பசியின் கடுப்பில் அமர்ந்திருந்தான்…

வசுந்தரா நியாபகம் வந்தது... சரி அம்மாவிடம் கேட்கலாம் என்று எண்ணி கால் பண்ணினான்….

அவர் எடுத்தவுடன் “தேவ், எப்படி இருக்க… இப்போவே கால் பண்ணியிருக்க…”

“நான் நல்ல இருக்கேன் மாம்..நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம்.. சொல்லு தேவ்”

“அவா ஏன் நம்ம கம்பெனில சேர்ந்துக்கணும்னு நினைக்கிறா?”

“அவா வா, எவா அவ..” என்று அவனை ஓட்டுகிற மாதிரியே கேட்டார்…

“ம்மா, விளையாடாதீங்க.. உங்க மருமக ஏன் நம்ம கம்பெனில சேர வாரா?” என்று கோவமாய் கேட்டான்…

“டேய், தான்யாவா, அவ பி.எட் ல படிச்சிருக்கா.. அவ எதுக்கு உன் கம்பெனிக்கு வரணும்.. அதும் அவா இங்க ஏற்கனவே ஒரு பள்ளில வேலை பாத்துட்டு தானே இருக்கா” என்று புரியாதவாறே பேசினார்..

“ம்மா, நா உங்க பெரிய மருமக பத்தி பேசுறேன்.. உங்களுக்கு புரியுதுனும் எனக்கு தெரியுது…நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்களுக்கு தெரியாம இருக்காது”

“ஹி ஹி, என்று சிரித்தவாறே, அவ இப்போ பார்த்துட்டு இருக்குறத இந்த வாரம் விட்றத சொன்னா.. ஆனா நம்ம கம்பெனியில் சேர போறான்னு எனக்கு தெரியாது… அவளுக்கு தெரிஞ்சிருந்தா என்கிட்டே சொல்லிருப்பாளே… அதும் இல்லாம மீன் தானாவே வலைல வந்து விழுமா பிரின்ட்” என்று நக்கலாவே சொன்னார்…

“ம்ம்மாஆஆ” என்று பல்லை கடித்தான்… “நீங்க நாங்க பழகணும் அப்டி இப்டினு ஏதாச்சும் ட்ரை பண்றீங்களா?”

“டேய், நீ சொல்லி தான் எனக்கும் தெரியுது…அவளுக்கு இன்னுமே அது கூட தெரிஞ்சுருக்காது.. தேவ், அவ சேர அங்க தான் வாரான்னு வந்ததுக்கு அப்புறம் அவளை போட்டு வாட்டி வதக்கிடாதே..”

“அது அவா நடந்துகிறது பொறுத்து தான் இருக்கு.. சரி சாபிட்டங்களா? அப்பா சாப்டங்களா?”

என்னலாம் அந்த பிள்ளையை பாடு படுத்த போறானோ என்று நினைத்தவாரு..

“சாப்பிட்டோம் டா, நீ சாப்டியா?”

“இதோ சாப்பிட போறேன்ம்மா.. சரி நீங்க தூங்குங்க” என்று போன் அணைத்துவிட்டான்…

“சாப்பாடு வந்ததும், சாப்பிட்டு.. படுத்து விட்டான்”

அந்த வாரம் அப்டியே சென்றது…

என்னவாகும், பொறுத்து இருந்து பார்ப்போம்!!!!!!!



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

அந்தா இந்தாவென இதோ திங்கள்கிழமையும் வந்தது…

“ஹே வசு, என்ன கிளம்பிட்டியா?” என போர்வையிலிருந்து தலையை மட்டும் எட்டி பார்த்தாள்…

“ஆமா, மிரு.. கிளம்பிட்டேன்… என்னனு தெரில கொஞ்சம் மனசு படபடப்பா இருக்கு”..

“முதல் நாள்ல அதான் அப்டி இருக்குமாயிருக்கும்..8 மணி கூட ஆகலயே வசு, ஆபீஸ் பக்கத்துல தானே ஏன் சீக்கிரமா கிளம்பிட்ட?” என்ற மிருவிற்கு….

“லேட்டா போகாம இருக்கனும்… அதுக்கு தான் எவ்ளோ முன்னமே கிளம்பணுமோ கிளம்பிட்டேன்… நீ தூங்கு மிரு..நான் போய்ட்டு வரேன்”.. என்றவளுக்கு..

“ஆல் தே பெஸ்ட் வசு” பார்த்து போய்ட்டு வா என்றாள்..

“தேங்க்ஸ் மிரு” என ரூம்மை சாத்தி விட்டு கீழ இருக்கும் சாப்பாட்டு அறைக்கு சென்றாள்…

நேரம் ரொம்ப முக்கியம்… இது அவள் தாத்தா அவளுக்கு கற்று கொடுத்தது… சீக்கிரமா போறது தப்பிலை ஆனா தாமதமாக மட்டும் போக கூடாது… என்று சிறு வயதிலே இந்த பழக்கத்தை ஊக்குவித்ததால்..… அதை கடையும் பிடித்து வருகிறாள்…

மெஸ்ல இருந்த இட்லியும் சட்னியும் வைத்து சாப்பிட்டுவிட்டு நடையை கட்டினால் பேருந்து நிறுத்தத்திற்கு… மணியை பார்க்க எட்டை கடந்து ஐந்து நிமிடங்கள் என காட்டியது….

பேருந்து நிறுத்தத்திலும் மிதமான கூட்டம் தான்… அவள் நேரத்திற்கு பேருந்தும் வர, ஏறிகொண்டாள்…. உக்கார எல்லாருக்கும் இடம் கிடைத்தது… நாலாவது நிறுத்தத்தில் இறங்க வேண்டும்…

எப்படியும் 20 நிமிடங்கள் எடுக்கும்… கையில் ஹெட் செட் இருக்கவே… பக்தி பாட்டாகவே கேட்டுகொண்டிருந்தாள்… அது என்னவோ காலையில் ஆரம்பிக்கும் போது மட்டும் அப்படித்தான்… பக்தி பரவசத்தில்தான் இருப்பாள்..

ஒரு நாள் சூழ்நிலையால் எப்படி வேணாலும் முடியலாம்… ஆனால் தொடங்குவது நம்ம கையில் தான் இருக்கிறது…

பேருந்து நிறுத்தமும் வந்து விட, இறங்கி நடக்க தொடங்கினாள்...

இவள் புதிதாக சேருவதால் இவளிடம் அடையாள அட்டை கிடையாது.. எனவே அவளது அப்பொஇந்த்மெந்த் (appointment) ஆர்டரை காட்டி.. அன்றைய நாளுக்காக விசிட்டர் பாஸ் வாங்கி கொண்டாள்… எந்த கட்டிடத்துக்கு செல்ல வேணும் என்று அவர்களிடமே விசாரித்து வைத்துக்கிட்டாள்…

D. H. T சொலுஷன்ஸ் இருந்த கட்டிடத்தை போலவே மேலும் 3 கம்பெனி அந்த கேம்பஸ்லில் இருந்தது…

அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள்.. அவளை போலவே போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்..

D. H. T இருக்கும் கட்டிடத்துக்குள் நுழைத்தாள்.. வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் தன்னுடைய விபரத்தை பகிர்ந்தவள்.. அவர்கள் கொடுத்த அக்ஸஸ் பேட்ஜ்யை வாங்கி கொண்டு, அவர்கள் கூறிய 5ஆம் தளத்திற்கு விரைந்தாள்… மணியை பார்க்க 9ஆக 10 நிமிடம் இருப்பதாக காட்டியது..

5ஆம் தளத்திற்கு வந்து அங்க உள்ளவர்களிடம் பேட்ஜ்யை காட்டி யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டாள்…

இவளை போலவே இன்னும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்…

புதிதாக வருபவர்களை வழி நடத்தவென அட்மின் டீம்யில் இருந்து சில வொலன்டீயர் இருந்தார்கள்…

அதில் ஒருத்தி இவளிடம் வந்து “மேம், இன்னிக்கு உங்களுக்கு இன்டக்ஸன் தான் இருக்கு… கான்பிறேன்ஸ் ஹால் நம்பர் “709”க்கு நீங்க போங்க.. நேரா எண்டு வரைக்கும் போய்ட்டு ரைட்ல ஹால் தான்”.. என்று சிரித்த முகமாக உரைத்தாள்….

“தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நடந்தாள்..

நடந்து கொண்டே வேடிக்கை தான் பார்த்தாள்.. எங்கு காணினும் ஒரே மோட்டிவேஷன் கோட்ஸ் தான்… ஒரு கண்ணுக்கு நிறைவாக சீனாரி இப்டிலாம் போட்ருக்கலாம்… இத நடத்துறவன் செம படிப்ஸ் ஆஹ் இருப்பான் போல…. என்று நினைத்து ஒரு வழியாக கான்பிறேன்ஸ் ரூமை அடைந்தாள்….

100 பேர் ஒரே நேரத்துல அமரக்கூடிய பெரிய ஹால்… நேர்த்தியாய் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது…

இவள் கதவை திறந்ததும்.. அங்கஅமர்ந்து இருந்த 15 பேரும் ஒரே நேரத்தில் இவளை தான் திரும்பி பார்த்தார்கள்…

“ஹையோடா” ஏன்டா ஏன் இப்டி பாக்கறீங்க…என்று நொந்தவாரு இரண்டாவது வரிசையில் ஓரமாக அமர்ந்தாள்…

யாரும் யாரோடையும் பேசிக்கவும் இல்லை…. எப்படி போகுமோ, நாம நல்லாவும் பேர்ஃபாம் பண்ணனும் என்று கலவையான உணர்வில் இருந்தாதலோ… யாரிடமும் யாருக்கும் பேச தோணவில்லை…

15 நிமிடம் சென்றதும், ஒரு ட்ரைன்னெர் உள்ளே வந்து… அவரை தானே அறிமுகப்படுத்திக் கொண்டு…. அந்த கம்பெனி பத்தி பேச ஆரம்பித்தார்….

அந்த கம்பெனியின் சட்ட திட்டங்கள்…. இலக்குகள்.. இவரு அதை பத்தி விவரித்து கூறிகொண்டிருந்தார்…

பதினோரு மணி ஆகவே, பதினைந்து நிமிடங்கள் பிரேக் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்துவிட்டு அவர் சென்று விட்டார்… கூடவே பண்ட்ரி(pantry) எங்கே என்றும் கூறினார்…

இப்பொழுது ஹால் நிறைந்து இருந்தது… இவளது இடது பக்கத்தில் இருந்த பெண்ணோ “காவ்யா” என தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு கையை நீட்டினாள்…

நா “வசுந்தரா” என்று பதிலுக்கு கையை பிடித்தாள்….

உங்க பெயர் நல்லா இருக்கு ஏதோ “நீலாம்பரி” என்கிற மாதிரி ஒரு கம்பீரமா இருக்கே… சிலகித்தாள்……

“ஹ்ம்ம்” என உதட்டளவில் சிரிப்போடே நிறுத்திகொண்டாள்….

“வாங்க, பண்ட்ரி போலாம்” என காவ்யா கூப்பிடவும் மறுக்காமல் வசுந்தரா கூட நடந்தாள்…

பண்ட்ரியில் காபி மட்டும் எடுத்துக்கொண்டார்கள்… பண்ட்ரியில் நிற்க முடியாதபடி இருக்கவே, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்….

“நீங்க எங்க இதுக்கு முன்னாடி வேல பார்த்தீங்க? நான் “aaaa” இந்த கம்பெனில தான் ஒர்க் பண்ணேன்… ஹய்க்கே(hike) இல்லை… அதான் வேற தேடுனேன்… இந்த கம்பெனி கிடைச்சுச்சு… நீங்க முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க…உங்களையும் பார்த்தாலே தெரிது அனுபவம் உள்ளவங்கள் மாதிரி….” தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள் காவ்யா…

“ஆமா, அவள் கம்பெனி பெயரை சொல்லி இங்க தான் வேலை பார்த்தேன்… நா இருந்த இடத்துக்கு அது தூரம்… இங்க கிடைச்சதும் வந்துட்டேன்” சிறிய புன்னகையுடனே கூறினாள்…

“ஹ்ம்ம், சரி.. இந்த கம்பெனி கொஞ்சம் சீக்கிரமாவே வளர்ந்த கம்பெனி….. இத நடத்துறவங்க பிரிண்ட்ஸ்… அதும் இல்லாம இந்த மாதிரி புதுசா ஜோயின் பண்றவங்க கலந்துகிற மீட்டிங்ல சி இ ஓ முனு பேருல யாராச்சும் ஒருவர் வருவாங்களாம்..”

“பார்ரா… ஹ்ம்ம்… வந்து என்ன பண்ணுவாங்கலாம்?”

“சும்மா ஒரு விசிட் தான்.. அவங்க கம்பெனி பத்தி செல்ப் டப்பா அடிக்கணும்ல” நக்கலடித்தாள் காவ்யா…

“ ஹா ஹா, ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்?”

“என் அண்ணா ஒருத்தன் இங்க தான் இருந்தான்.. இப்போ பெங்களூரு பிரென்ச்க்கு போய்ட்டான்…அவன்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”…

“ஓஹ், சரி சரி” என காலியான அந்த பேப்பர் கப்பை அங்கே மூடப்பட்டுருந்த குப்பைதொட்டியில் போட்டுவிட்டு..நடந்து கான்பிறேன்ஸ் ரூமிற்கே வந்தார்கள்…

தாங்கள் ஏற்கனவே அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்…

அதே சமயம் ட்ரைன்னெர்ம் வந்து விடவே… செஷன்யை ஆரம்பித்தார்…ஆரம்பிக்க முதல், எப்போனாலும் ஒன் ஒப் த சி. இ. ஓ Mr. தேவ் வரலாம் என்று அறிவுரைத்தபடி…தான் ட்ரைனிங் வேலையை ஆரம்பித்தார்…

கொஞ்சம் கடியா தான் இருந்தது வசுவிற்கு… தூங்கிட மட்டும் கூடாது என நோட்ஸ் எடுக்குறேன் பேர்வழில நோட்பேட்யில் கிறுக்கி கொண்டிருந்தாள்…

திடீரென கதவை திறக்கும் ஓசை…முதலில் கவனித்த ட்ரைன்னெர் “ப்ளீஸ் மீட் Mr. தேவ்” என கூறவும்.. எல்லாரும் எழும்பி நின்றார்கள்.. வசு உட்பட…

“ப்ளீஸ் பி சீடேட், நோ போர்மலிட்டிஸ்” உரைத்தபடி முன்னே வந்து நின்றான்….

“அவனை பார்த்த வசுவிற்கு.. பயங்கிர அதிர்ச்சி..” கண்ணும் முட்டை அளவு விரிந்துவிட்டது….

எல்லாரும் அமர்ந்தும் கூட அவள் அமராமல் நின்று கொண்டிருந்தாள்…

“ஹே, வசு என்னாச்சு.. ஏன் நிக்கிறீங்க… உக்காருங்க” என கையை பிடித்து இழுத்ததும் தான் சுதாரித்து நிதர்சனதுக்கு வந்து அமர்ந்தாள்…

அவள் வெளிப்படுத்திய அப்பட்டமான அதிர்ச்சி அவன் கண்ணில் தப்பாமல் விழுந்தது…
அந்த அதிர்ச்சி அவனுக்கும் வேண்டியதாய் இருந்தது… அவள் கண்ணில் பார்க்க வேண்டும் என்று நினைத்து தான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரமாய் வந்தான்…
அந்த அதிர்ச்சி தான் அவனுக்கு உண்மையை பறைசாற்றும் என்று நினைத்தான்…

அவளுக்கு இந்த கம்பெனி நான் தான் நடத்துகிறேன் என்று தெரியாது என புரிந்தும் கொண்டான்…

“இந்த கம்பெனியை பற்றி சுருக்கமாய் விவரித்தவன்.. நான் யாரெல்லாம் எங்க டேக் பண்ணிருக்கேன்ங்கிற லிஸ்ட் குடுத்துருக்கேன்… பிளஸ் டாப் 3 ப்ராஜெக்ட்ஸ்.. சி. இ. ஓ டைரக்ட் ஆஹ் ஹாண்ட்ல் பண்ணுவோம்… டூ ப்ராஜெக்ட்ஸ் ஆல்ரெடி அதர் டூ சி. இ. ஓஸ் ஆர் ஒர்கிங் ஆன் தோஸ்.. இப்போ ஒரு கிரிடிகல் ப்ராஜெக்ட் இருக்கு, அது நான் தான் ஹாண்ட்ல் பண்ணுவேன்.. சோ இங்க இருந்து முனு பேர் செலக்ட் பண்ணிருக்கேன்…” என நிறுத்தினான்…

அவன் நிறுத்தியதும்.. ஹாலில் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டர்கள்… யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமோ என்று மனதில் நினைத்து கொண்டார்கள்…அதும் சி. இ. ஓ கண்பார்வையில் ப்ராஜெக்ட்.. நல்லா பேர்ஃபார்ம் பண்ணா சீக்கிரமா நல்ல நிலைமைக்கும் போகலாம்.. அந்த விருப்பம் எல்லார் மனதிலையும் இருந்தது…

காவ்யா, “வசு, வசு” என்று அவள் கையை சுரண்டினால்…

“என்ன” ரொம்ப மெதுவா கேட்டாள்…

“நாமலும் இருந்தா நல்லா இருக்கும்ல, அவர் வேற ஹண்ட்ஸம் ஆஹ் இருக்காரு.. சைட் அடிச்சுட்டே வேலை பார்க்கலாம்…கண்ணுக்கு குளிர்ச்சியா!!!” அவனை பார்த்துக்கொண்டே இவளிடம் கூறினாள்…

“ஹ்ம்க்கும், எனக்குலாம் வேணாம்பா… இந்தளவுக்கு டாப் ப்ராஜெக்ட்ஸ்லாம் தல வலி” அவள் காதுக்குள் சொன்னாள்…
அதற்குள் அவன் லிஸ்ட்யை பார்த்துட்டு… நா பேர் சொல்றேன்.. நீங்க உங்க திங்ஸ் எடுத்துட்டு முன்னாடி வாங்க.. என பெயர் சொல்ல ஆரம்பித்தான்…

“காவ்யா” என சொன்னவுடன் காவ்யாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை…. வசு, நீங்களும் வந்தா செம ஹாப்பி ஆஹ் இருக்கும் என்றுரைத்துவிட்டு முன்னே நடந்தாள்…

நெஸ்ட் “விக்ரம்” எனவும் கடைசியில் இருந்து ஒருத்தன் எழுந்து வந்தான்.. என்னைய ஏன்டா செலக்ட் பண்ணிங்க என்ற ரீதியில் நடந்து வந்தான்…

நெஸ்ட் “வசுந்தரா” என முடித்துக்கொண்டான்…

இப்போவும் அவன் உச்சரித்த விதம் சிலிர்க்கதான் வைத்தது… அதை அவள் புறந்தள்ளிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்…

அவள் முன்னாடி வந்து நின்றதும்…

பல கண்கள் பொறாமையுடன் அவர்கள் மூன்று பேரையும் பார்த்தது…!!




 
Status
Not open for further replies.
Top