ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

இதோ மாப்பிளை வீட்டில் எல்லாரும் வந்து விட்டார்கள்…

வாசல்கே போய் சாரா வீட்டினர் போய் வரவேற்றனர்…

சவி, போய் பார்த்துட்டு உடனே வசுவிடம் வந்து விட்டாள் அவள் தனியா இருப்பாளே என்று..…

“யேய் கள்ளி, மாப்பிளை கிட்ட பேசாத மாதிரி சொன்ன, இப்போ என்னடானா ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்ருக்கிங்க?”

“ஓஹ்” என்று சுரத்தையே இல்லாமல் சொன்னாள்..

“என்னடி ஓஹ், ஆனாலும் மாப்பிளை சும்மா செமையா இருக்காரு…எந்த ஹீரோவோடவும் ஒப்பிட முடியாத அழகு…..ஆனா எனக்கு ஒரு டவுட்”

“கேட்டு தொலை” என்ற வசுவிற்கு…..

“மாப்பிளை உன்னை விட ஒரு அடி உசத்தி, உன்ன கிஸ் அடிக்கணும்னா எப்படி அடிப்பாரு” என்று சவி கேட்க…



“நீ ஒரு விவஸ்த்தை கெட்டவ சவி” என்று கோவமாக வசு சொன்னால்…


“ஒரு ஜெனரல் க்நொவ்லேஜ்அஹ் டெவெலப் பண்ண விட மாட்டியே.. சரி விடு.. ஆஹ் இன்னொரு விஷயம் உன் மாமியார் ரொம்ப சாந்தமா தெரிறாங்க..”

“நிஜமாவாடி சொல்ற” என்று பர பரத்தாள்….

“ஹே இரு… நீ என்ன மாமியார்க்கு எக்சைட் ஆகுற.. சரி இல்லையே”…

ஒரு நிமிடம் இவள் ஜெர்க் ஆனாலும் சுதாரித்து கொண்டாள்…

“ஆமா, பின்ன மாமியார் கொடும வந்துர கூடாதுல.. அதான் ஒரு சந்தோசம் நீ சொன்னதுல” என்றதற்கு..

நம்பாத பார்வையை சவி பார்த்தாள்…

அவள் பார்வையை தாங்கிய வசுவின் மனதிற்குள்.. இவளிடம் சொல்லிடலாமா என்கின்ற எண்ணம் தான்…

இன்னொரு மனமோ வேணாம்.. இவ ஒரு ஓட்டை வாய் அதும் இல்லாம அம்மா கிட்ட வேற கிளோஸ்.. தெரியமா கூட உளறி வச்சுடுவா… இப்போ சொல்ல வேணாம் என்று ஒரு நிலையான முடிவை அவள் மனது எடுத்தது…


இதே சமயம், நடு கூடத்துல பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தேநீர் பரிமாறப்பட்டது…

ஜோஷுவாவே ஆரம்பித்தார்..“என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொன்னிங்கன்னா, அப்படியே செஞ்சுடலாம்”…

ஜெயந்தி உடனே “அண்ணா, நாங்க எதுமே எதிர்பாக்கல, பொண்ண மட்டும் குடுங்க அது போதும்.. எங்களுகக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு”..என்றார்…



இந்த பதிலே ஜோஷுவாக்கு போதுமானதாய் இருந்தது..

உண்மைதான் ஒவ்வொரு பெண்ணை பெற்றவர்களும் எதிர்பார்கின்ற பதில் அல்லவா!!!

வரதட்சணை வாங்குவது என்பது ஒரு வகையில் கூலி வாங்கி பாத்துக்குறதுக்கு சமம் தானே???

“ஜோஷுவாவும், நாங்க அவளுக்குனு கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கோம், அத கண்டிப்பா போட்டுடுவோம்…”

“அது உங்கள் இஷ்டம் தான் அண்ணா.. உங்க பொண்ணுக்கு நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறங்களோ அத தாராளமா பண்ணுங்க, நாங்க தடுக்க மாட்டோம்.. ஆனா எங்களுக்கோ என் பையனுக்கோ தனியா ஏதும் செய்ய வேணாம் அண்ணா.. அதும் இல்லாம கல்யாணத்துக்கு ஆகுற செலவையும் நாம பிரிச்சுக்கலாம்”

“இல்லை, அது சரி வராதுங்களே.. பொண்ணு வீட்ல தான் கல்யாணம் செய்யணும் அது செலவும் பொண்ணு வீடு தானே” என்ற ஜோஷுவாவிற்கு

கிருபாவோ “ஜெயா, சொல்றது சரி தான் சம்மந்தி.. நாம ஆகுற செலவ பாதியா பிரிச்சுக்கலாம், நம்ம பிள்ளைகள் கல்யாணம்… நாம சேர்ந்து சிறப்பா பண்ணலாம்னு நினைக்கிறோம், அது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் தானே”.

கிருபா சொன்னது மறுக்க முடியாத காரணத்தால் சரி என்று ஒத்துக்கொண்டார் ஜோஷுவா…

வைஷாலிக்கு பொறுக்க முடியவில்லை, தன் பையனுக்கு முடிக்க வேண்டிய பெண் என்று மனதில் பொறுமி கொண்டே இருந்தார்….

அதுனால், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் உங்க ஊர் பக்கமா பார்க்காம இவ்ளோ தூரம் ஏன்??

நீங்க உங்க ஊர் பக்கமா பார்த்துருந்தா, நான் என் அண்ணன் மனச மாத்திரிப்பேன்னுங்குற எண்ணம் தான் வைஷாலிக்கு…



“எங்க ஊரு மதுரைதாங்க, ஒரு கல்யாணத்துல நாங்க வசுவ பார்த்தோம்… பார்த்ததும் அவளை தவற விட தோணல…அப்புறம் விசாருச்சோம் யாரு என்னனு…எல்லாம் பொருந்தி வந்ததும், பொண்ணு கேட்டுட்டோம்…”

ஓஹ்..சரி..பையன் என்ன பண்றாப்பிள? என்று மறுபடியும் தூண்டில் போட்டார் வைஷாலி…

எதாவது சின்ன துருப்பு கிடைச்சாலும் கலைச்சு விட்ரலாங்குற எண்ணத்தை தவிர வேற எந்த காரணமும் இல்லை..

இந்த முறை கிருபா தான் பதில் குடுத்தார்… “அவன் IT நிறுவனத்தை அவனே நிறுவி நடத்துகிறான்… ஒரு எட்டு வருடமா…”

ஒஹ் ஹோ….என்றதோடு வைஷாலி நிறுத்திகொண்டார்..வேற என்ன செய்வது என்றும் அவருக்கு தெரியவில்லை…

சருக்கியாச்சு, இன்னும் ஜான் போனா என்ன முழம் போனா என்னங்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டார்…

மரகதம் தான், பொண்ண கூட்டிட்டு வறீங்களா? பூ வைக்க ஆரம்பிச்சுரலாம் என்றார்….

ஜோஷுவா சாரா கிட்ட சமிக்கை காட்ட, சாரவும் பெட்ரூம் வாசலில் இருந்து சவி யை பார்த்து, வசுவை கூட்டிட்டு வா சவிமா என்று உரைத்தபடி கூடதுக்குள் சென்றார்…

வசுவும் சபையின் நடுவே வந்து வணக்கம் என்று கை கூப்பினால்…

மரகதம் “ஜெயா, மாமியார் தான் முதல்ல பொண்ணுக்கு பூ சூடனும்.. அதுனால நீ முதல்ல போய்ட்டு வச்சுவிடு” என்று கூறினார்…

வாங்கும் போதே பதினைந்து முழத்தை ஒரு ஒரு முழமாக பிரித்து தான் வாங்கி இருந்தார்கள்.. அப்போ தான் பூ சூட லகுவாக இருக்கும் என்று…

இங்கோ வசுவிற்கு அப்பாடா என்கிற பீல்… எங்கே தனியா பேச அனுப்பிடுவாங்களோ என்கிற பயம் தான்…. இப்போ பூ வைக்கணும்னு சொன்னதும் மாப்பிளையிடம் பேச தேவையில்லை என்று அவள் இதயம் ஆசுவாசப்பட்டது…

ஜெயந்தி பூ எடுத்த சமயம், ஒரு கணீர் குரல் “ஒரு நிமிஷம், நா பொண்ணு கிட்ட தனியா பேசணும்” சந்தேகமே தேவையில்லை அது தேவ்வின் குரல்தான்…

அந்த குரலில் இருக்கும் கம்பீரம் அவளை காந்தமாக இழுத்தது…ஈர்த்தது…ஆனாலு ம் உள்ளே ஒரு பயப்பந்தும் உருண்டது…

தேவ் அப்படி கேட்டதும்… ஊசி கீழ விழுந்துருந்தாலும் சத்தம் கேட்ருக்கும்…அப்டி ஒரு சைலன்ஸ்….!!!!!!





















 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

தேவ் பேசணும்னு சொன்னதும் நெருடல் தான் சபையில் இருந்தவங்களுக்கு…

எல்லாம் புடித்து தானே வந்தார்கள்… ஏதும் தப்பாகிடுமோ என்கிற கலக்கம் தோன்றாமல் இல்லை….

அந்த கலக்கம் சாராவின் முகத்திலயும், ஜோஷுவா முகத்திலேயும் அப்பட்டமாக தெரிய, மரகதம் தான் நிலைமையை கையில் எடுத்தார்.. “தம்பி, தப்பா ஒண்ணும் நினைக்க வேணாம்.. ஒருவாட்டி பொண்ணு கிட்ட நேர்ல சம்மதம் வாங்கிரலாம்னு அவன் நினைக்கிறான் போல… பேசிக்கிட்டுமே… பயப்பட்ற மாதிரி ஏதும் ஆகாது” என்று தைரியம் கொடுத்ததும் தான் அவர்கள் முகம் தெளிந்தது…

அதே சமயம்,தேவ் மரகதத்தை பார்த்த தோரணையோ .. "இவ்ளோ ஈடு கொடுக்கிறீங்க, ஹ்ம்ம் பார்ப்போம்.. அடுத்த பத்தாவது நிமிசத்துல என்ன தான் பண்ணப்போறீங்கனு…நா என் விஷயத்தை சொல்லி ஒரு பொண்ணு கூட நின்னது இல்லை… எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான, இவள் மட்டும் விதிவிலக்கா என்ன?" என்றது அவன் பார்வை..

ஏன்னென்றால், அவன் என்ன தான் கல்யாணத்த நிறுத்த சொல்லி, பார்க்கும் பொண்ணுகளிடம் சொன்னாலும்… இவனது நிலைமையை சொன்னதும் அவர்களின் முகம் அதிருப்தியை காட்டிட்டும்.. அப்படிபட்டவர்களுக்கு அவன் குடுக்கிற சாய்ஸ் தான் நீங்களே வேணாம்னு சொல்லிடுங்க என்பது…

இங்கே வசுவிற்கோ நிலை கொள்ள முடியவில்லை…. ஜெயந்தியை பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாதது.. இன்னும் சொல்ல போனா மரகத பாட்டி தன் பெற்றோர்கள் முகம் அறிந்து தைரியம் கொடுத்ததும் கூடுதலாக அந்த குடும்பத்தை புடிக்கவும் செய்தது…

ஆனால் குடும்பத்தை பிடித்தற்க்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கணுமா என்று மனதில் எழாமல் இல்லை.. “ஹையோ, வாழ்க்கை ஆரம்பிக்குற முதல் படியே மண்டைய பிச்சுக்க வைக்குதே ஆண்டவா” என்று முனுமுனுத்தாள்….

அவள் முனுமுனுத்ததை பார்த்த சவியோ.. “என்னடி புலம்புரியா வசு?”
இல்லை என சலிப்பாக தலையை ஆட்டினாள்…

சவி “என்னடி பேசணுமாம் உன் ஆளுக்கு? உன் ஆளு ஸ்மார்ட் ஆஹ் இருக்காரு, தைரியமா இத்தன பேர் மத்தில தெறிக்க விடறாரு போ… ஏன்டி ஒரு வேளை உனக்கு முத்தா குடுக்க கூப்பிட்றாரோ”

சவிவீ…. என்று வசு பல்லை கடித்தாள்.…

“சரி சரி, நீ நடைய கட்டு ஆத்தா…போய் பேசிட்டு வா, வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு எனக்கு சொல்லனும்”.. என்று சவி கண்ணடித்தாள்..

வசு முறைத்ததையும் கண்டுக்காமல் மேலும், வசு நீ வரும் போது உன் ஆளு பத்தின எல்லா விபரத்தையும் கேட்டு வைக்கிறேன்.. சரியா? அதோ அந்த பாட்டிமா நல்ல மாதிரி தெரிறாங்க.. நான் போய்ட்டு பேசிட்டு இருக்கேன்..நீ வர்ர வர போர் அடிக்காம இருக்கும்ல” என்று வசுவை வெறுப்பேத்திவிட்டே சென்றாள் சவி…

அந்த நேரத்தில், சாரா வசுவிடம் “வசுமா, மாப்பிளைக்கு தோட்டத்தை சுத்தி காட்டிட்டு அப்டியே பேசிட்டும் வாங்க, போ மா” என்று இவர் கூறுவதை கவனித்த தேவ் எழுந்து அவள் பக்கத்தில் வந்து நின்றான்…

அவன் வந்து நின்றதும் அவனக்கே உரிய பிரத்தியேக வாசனையும் ஹுகோ பாஸ் பேர்பியும் சேர்ந்து அவள் நுரையீரலை அடைத்தது…

ஹையோ, என்ன வாசனைடா சாமி… இப்டி கட்டி இழுக்குதே…என்று அவள் மனம் நினைப்பதை தவிர்க்க முடியவில்லை…

இருந்தாலும் தனக்கு தானே தைரியம் கூறி தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள்…

வசு, எப்போதுமே தன் உணர்வுகளை அவ்வளவு எளிதில் யாரிடமும் காட்டிட மாட்டாள்..
அழுவது கூட தனியாக தான் இருக்கும்…

சிறு வயதில் இருந்து அப்டியே வளர்ந்து விட்டதால்… அவளது சிறு வயதில் அவள் தம்பி அழுதால் அவள் பாட்டி “ஆம்பள பையன் அழ கூடாது” என்று சொல்லித்தான் அவனை தேற்றுவார்…

அப்போவே அவளுக்கு தோன்றும் அது என்ன ஆம்பள பையன்னா அழ கூடாது…

உணர்வு என்பது எல்லாருக்கும் பொது தானே, அதுல என்ன வேறுபாடு வேண்டியிருக்கு??

அந்த வேறுபாடு பிடித்ததும் இல்லை..

பொம்பள பிள்ளையும் அழ கூடாது என்று தன்னை தானே தேற்றியும் கொள்வாள்…

சாரா தோட்டத்திற்கு போக சொன்னதிற்கு ஏற்ப “வாங்க”, என்று திரும்பி பார்த்து கூப்பிட்டாள்..

அவள் திரும்பி பார்க்கும் போது அவன் தோள்தான் அவளுக்கு தெரிந்தது… என்ன வளந்து கெட்டவனா இருப்பான் போல…என்று நினைத்தபடியே அழைத்து சென்றாள்…

இங்கோ சவியோ, பாட்டிமா ஏதாச்சும் குடிக்கிறீங்களா? ஆண்ட்டி உங்களுக்கும் எதாவது வேண்டுமா என்று கேட்டப்படி சோபாவில் அமர்ந்தாள்… அது ஐந்து பேர் அமரக் கூடிய சோபா தான்…

“இல்லை ராசாத்தி, இப்போ வேணாம்.. அவங்க பேசிட்டு வந்துகிடட்டும்.. அப்புறமா எங்களுக்கு தண்ணி கொடு மா..”

“சரி பாட்டி, ரொம்ப வேண்டிட்டு இருக்கீங்களா.. பயப்படாதீங்க பாட்டி.. வசுலாம் வேணான்னு சொல்ல மாட்டான்னு தோணுது” என்று சவி சொன்னவுடன்..

“அம்மாடி, எப்படிரா அவ்ளோ திடம்மா சொல்ற” என்று பரபரப்பாக வினாவினார் ஜெயந்தி…

வசுவிடம் தோன்றிய அதே பரபரப்பு ஜெயந்தியிடமும் தோன்ற , எதோ சரி இல்லை என்று சவி உள் மனது கூறியது.. சரி கண்டு புடிப்போம் என்று முடிவு எடுத்துவிட்டு…

“இல்லை ஆண்ட்டி, அவளுக்கு உங்கள புடிக்குதுன்னு நினைக்கிறேன்… உங்கள பத்தி பேசுனா எக்சைட் ஆகுனா, அத வச்சு சொல்றேன்.. அதும் இல்லாம தேவ் அண்ணாவையும் புடிச்சிருக்கு…. அவங்கள பாக்கும் போது ஒரு எதிர்பார்ப்போட தான் பாக்குறா.. இதுலாம் என்னோட ஸ்ட்ரோங் கெஸ்ஸிங் ஆண்ட்டி…”

இவள் சொன்னதை கேட்டதும் சந்தோசம் தான் ஜெயந்திக்கு.. பட் பொண்ணா அவ எக்ஸ்பெக்ட் பண்றது சரி தான்..
இவன் எப்போ அவளை ஏத்துப்பான் என்கிற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது…

“சரி மா” என்ற ஜெயந்திக்கு…

“ஆண்ட்டி உங்க பையன பத்தி எதாவது ஒன்னு இண்டெர்ஸ்ட்ட்டிங் ஆஹ் சொல்லுங்க, சொன்னீங்கன்னா நா அப்டியே வசுக்கு பாஸ் பண்ணிடுவேன்…”

“ஹ்ம்ம்… தேவ் நல்லா கிட்டார் வாசிப்பான்.. கீ போர்டும் நல்லா பிலே பண்ணுவான்.. சர்ச்ல, ஆர்கானிஸ்ட் ஆகவும் பண்ணுவான் எப்பயாவது” (கீ போர்டு பிலே பண்றத ஆர்கானிஸ்ட் னும் சொல்லுவார்கள்)

“வாவ், ஆண்ட்டி.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவளுக்கு கிட்டார்லாம் வாசிச்சு காமிச்சா பிளாட் ஆகிடுவா… அவளுக்கு ரொம்ப புடிக்கும்… உங்க பையன் பெர்பெக்ட் மேட்ச் போலயே…..”

என்னவோ இவள் பேசுவதை கேட்டு, இவர்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்தது…

சில நேரம் அப்டித்தான் நமக்கு பேச முடியாத சமயத்துல கலகலனு யாராச்சும் பேசுனா… அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வார்த்தையால குடுக்க முடியாதத ஆறுதல சும்மா பேசுற அவங்க பேச்சு குடுத்துடும்…


இவளுக்கு போர் அடிக்காம இருந்துச்சோ இல்லையோ… ஆனால் பாட்டிக்கும் ஜெயந்திக்கும் மனசு லேசு ஆனது…

ராசாத்தி, உன்ன பத்தி நீ சொல்லவே இல்லையே என்ற மரகதத்திற்கு…

“என் பெயர் சௌந்தர்யா..நா வசுக்கு தங்கச்சி முறை,சித்தி பொண்ணு.. எனக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு, மதுரைல இருக்கேன்.. ஏன் வீட்டுக்காரர் IT ல வேல பார்த்தாங்க… ஏன் மாமனார் தவறுனதும், அவங்க மில்லை எடுத்து நடத்துறாங்க..”

ஜெயந்தியோ “உன் வீட்டுக்காரர் வரலையா மா? “ என்ற கேள்விக்கோ…

“ என்னைக் கொண்டு வந்து விட்டுட்டு ஒரு வேலை விஷயமா இங்க பக்கத்துல வரைக்கும் போயிருக்காங்க… முடிஞ்சதும் வந்துடுவாங்க..”

அதற்குள் அவள் அம்மா கூப்பிட எழுந்து போனாள்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

தோட்டத்தில் தேவ்வை அழைத்து கொண்டு போனாள்…

மாமரம் அடியில் நிழல் இருந்ததும்.. “அங்க போலாமா, அங்க தான் நிழல் இருக்கு” என்று அவனிடம் தயங்கியே கேட்டாள்…

“ம்ம்”, என்று அவன் கூறியதும்… அவள் முன்னாள் நடந்தாள்….

அவள் நடக்கும் போது அவளது பின்னல் சாட்டை மாதிரி அசைவதை கவனித்தான்…
அவள் முடியோ அவள் பின்னழகையும் தாண்டி நின்றது…அவன் பார்த்த பெண்களில் இவள் ஒருத்திக்கு மட்டுமே இவ்ளோ நீளத்தை பார்க்கிறான்..

அவள் நடையில் ஒரு நளினத்தையும் கண்டவன்..இவள் என்ன நடக்கும் போது அவ இடுப்பும் சேர்ந்து அசையுது தாளத்திற்கு ஏற்ப என்பது போல் .…

என்னை கவர ட்ரை பண்றாலோ…என்று அவன் நினைக்காமல் இல்லை…

அவர்கள் மாமரத்தின் அடியில் வந்து நின்றார்கள்…

ஒருத்தர் ஒருத்தர் முகம் பார்க்கும் படியாக நேருக்கு நேர் நின்று கொண்டார்கள்….

அவனே ஆரம்பிக்கட்டும் என்று இவள் அவனை பார்க்காமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்…

இவன் கடந்து வந்த பெண்கள் எல்லாரும், பேசணும்னு தனியா இருக்கும் போது.. இவனை முழுங்குற மாதிரி தான் பார்த்து வைப்பார்கள்…

இவள் மட்டுமே அவனை பார்க்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்…

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இவனோ அவளைதான் அளவு எடுத்தான்…

இவன் கண்களுக்கு அழகாவே தெரிந்தாள்…ஏன் அம்மாக்கு இவ்ளோ உறுதியா பிடித்தது என்று அவனுக்கு புரிந்தது…

இவள் கண்ணில் தவிப்பு, தயக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு நேர்மை அவனுக்கு தெரியவே செய்தது…

பலதரப்பட்ட மக்களிடம் பழகுகின்றவன் அல்லவா அதுனால் யார் எப்படி என்று அவன் கண்களாலே எடை போட்டுவிடுவான்….

அவள் சேலை உடுத்தியிருக்குறதிலேயும் நேர்த்தி தான்.. ஒரு சிறு இடம் கூட தெரியாதவாறு கட்டியிருந்தாள்…. நகம் கூட சீராக சதுரமா வெட்டப் பட்டு மைல்டு பிங்க் நிறத்தில் நெயில் போலீஷ் போட்டிருந்தால்…..


ஆரமும் கனகச்சிதமாக அவளது நெஞ்சத்தில் அமர்ந்திருந்தது…. இன்னும் கொஞ்சம் மேலே அவன் பார்வை ஏறியது… செர்ரி பழத்தை வெட்டி ஒட்டிக் கிட்டளோ என்று சந்தேகப்படும்படியாக , லைட் ரெட் நிறத்தில் இருந்தது…

கூர்மையான மூக்கு, அவள் கண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாலும்.. அங்கும் இங்கும் கரு விழிகள் ஓடிகொண்டிருந்தது… தண்ணீர் தடாகத்தில் மீன் நீந்துவது போலவே!!!

இவளுக்கு வேடிக்கை பார்த்தாலும் அவன் இவளைத்தான் கூர்ந்து நோக்குகிறான் என்று புரிந்தது…. உள்ளங்கயில் வேர்க்க ஆரம்பித்தது…

“அடப்பாவி, கல்யாணத்த நிறுத்த சொல்ல வந்தவன் மாதிரியா பாக்குறான்… விட்டா முழிங்கிடுவான் போலயே.. டேய், பேச ஆரம்பிடா..” என்று மனதிற்குள் கதறினாள்……

“ஹம்ம்க்கூம்” என்று தொண்டையை செருமினான்...

அவள் திரும்பினால் இல்லை…

அவன் கடுப்பாக, “உன் பேர் என்ன” என்று கேட்டான்.. முதல் முறையா பார்க்குற பொண்ணோட பேர கேட்கிறான்…ஹ்ம்ம் அவன் ஹிச்டோரில பொறிக்க பட வேண்டிய விடயம்!!!...

“வசுந்தரா” என்று சொன்னாள்.. இப்போதும் அவன் முகம் பார்க்கவில்லை என்றாலும்.. அதற்காக தலைகுனிந்தோ, நாணி கோணியோ சொல்லவில்லை…..

“ஒஹ், அவ்ளோதானா?” என்று அவன் சொன்ன விதம் கடுப்பு தான் அவளுக்கு.…

“அதனால், வசுந்தர ஜோஷுவா என்று அவன் கண்ணை பார்த்து சொன்னாள்”… அவன் துழைக்கும் பார்வை அவளையே தொலைக்க செய்தாலும்…

அவள் வசுந்தர ஜோஷுவா னு சொன்னது ஏன் என்றே தெரியாமல் அவனுக்கு கோபத்தையும் குடுத்தது…

“ஹ்ம்ம்”, என்று உறுமியவாறு…

“சரி, நா பேச வந்த விஷயத்தை சொல்றேன்… எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை…” என்று தெளிவாக உச்சரித்தான்..

“ஓஹ்” என்று அவள் கூறிய கனம் அவளின் குவிந்த உதடுகளை பார்த்தான்…

அந்த கீழ் உதட்டை பிடித்து விடலாமா என்று கூட தோன்றியது….
மேலும் அவளோ, “நீங்க உங்க வீட்லயே சொல்லி இங்க வராம இருந்துருக்கலாமே…”

தேவ், “அந்த நிலையில் நான் இப்போ இல்லை.. சரி அத விடு.. எனக்கு பாஸ்ட்ல ஒரு லவ் இருந்துச்சு அது கல்யாணத்துல முடில…”

வசு, “நீங்களே சொல்லிட்டீங்க பாஸ்ட்னு, அப்புறமும் ஏன்?”

தேவ்வோ, “இதோ பாரு, எனக்கு விருப்பம் இல்லை கல்யாணம் பண்றதுக்குலாம்… என்னைய கட்டிக்கிட்டா உனக்கு தான் கஷ்டம்… நா பொண்ணுங்கள நம்புறதயே விட்டுட்டேன்… நான் நேசிச்ச பொண்ணு தான் நா வேணாம் னு போய்ட்டா நா இம்போட்டென்ட்னு (கூகுள் பண்ணிக்கோங்க என்னால் இதற்கு எஸ்பிளானேஷன் செய்ய முடியவில்லை) சொல்லி”…

இதை சொன்னதும் அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியை கவனித்தான்…

அவளுக்கோ “இப்டி ஒன்னை அவள் எதிர்பார்க்கவில்லை… எதாவது காதல் தோல்வி ஆஹ் இருக்கும்னு என்று தான் நினைத்தாள்..”

அவனோ “நா போய்ட்டு சம்மதம் தான் சொல்லுவேன்…ஆனா நீ யோசிச்சு முடிவு பண்ணிக்கோ… தி பால் ஈஸ் இன் யுவர் கோர்ட்” என்று முடித்து விட்டு அவன் உள்ளே சென்றான்…

தன் அம்மாவிடம் கல்யாணத்த நிறுத்த சொல்ல மாட்டேன் பட் உண்மைய சொல்லுவேன்னு வாக்கு கொடுத்ததாலேயே இவளிடம் நீ நிறுத்தி தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த முடியவில்லை…


அவன் உள்ளே சென்று சம்மதம் என்று கூறிவிட்டான்..

அவன் அப்படித்தான் சொல்லுவான் என்பது ஜெயந்திக்கும் தெரியும்…

சாராவிற்கோ சந்தோசம் தான் அவன் சம்மதம் சொன்னது..

அதே சந்தோசத்தோடு, “சவிமா அவளை கூட்டிட்டுவா பூ வைக்க ஆரம்பிசுரலாம்” என்று கூறவும்..

இவனோ, “ஆண்ட்டி இருங்க, அவளோட சம்மதத்தையும் கேட்டுட்டு அப்புறம் பூ வைக்க ஆரம்பியுங்கள்”என்று கூறினான்…

சரி என்பதாய் குழப்பத்தில் தலையை ஆட்டினார்…சவியை போய் கூட்டிட்டு வரவும் சொன்னார்…

சவி, அவள் எங்கே என்று தேடி அவள் இருக்கும் இடம் வந்தாள்.… வசுவின் பார்வையோ இலக்கின்றி வெறித்து கொண்டிருந்தது…

“யேய், வசு.. என்னடீ பேஸ்தடிச்சவ மாதிரி நிக்குற… அங்க தேவ் அண்ணா, உன்ன புடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க… இப்போ நீ தான் போய்ட்டு சம்மதம் சொல்லணும்…வா போலாம்”

வசு, “சவி, கல்யாணம்னு வந்தா குழந்தை தான் முக்கியம்ல”

“என்னாச்சு உனக்கு? இப்போவே இந்த விஷயத்தை நினைச்சு பயப்படற?”

“இல்லை நீ சொல்லு சவி” என்றதிற்கு

“வசு பேபி, இந்த சமுதாயம் அப்படித்தான் சொல்லுது… கல்யாணம் ஆன அடுத்த மாசத்துல இருந்து கேட்க ஆரம்பிக்கும்… விஷேசம் இருக்கானு… குழந்தை வர்ற வர!!இந்த கேள்வி விடாம துரத்தும்!…குழந்தை வந்தா, அந்த குழந்தை தாய் பால் எடுத்துக்குதானு கேட்க ஆரம்பிச்சு, அதுக்கு குழந்தைனு ஒன்னு வர வரைக்கும் கேட்டுட்டே தான் இருக்கும் …. இது ஒரு வட்டம் மாதிரி தான்…

ஆனா அந்த சமுதாயத்துக்கு ஒன்னு தெரில பாத்தியா? வாழ்க்கை துணை என்பது கடைசி வரைக்கும் வர துணை.. அது கணவன் மட்டும் தான்… அம்மா அப்பாவும் வர முடியாது… ஏன் பெற்று எடுத்த எந்த பிள்ளைகளாலும் வர முடியாது…. அப்படி பட்ட வாழ்க்கைல குழந்தையை மட்டுமே முன்னிறுத்தி பேசுவது முட்டாள்தனம்……..
மணவாழ்க்கைல குழந்தை என்பது ஒரு அங்கம்… குழந்தை தான் வாழ்க்கை, குழந்தையை வச்சு தான் திருமண வாழ்க்கை முழுமை அடையும்னு சொல்றது இன்னும் புரிந்துக்கொள்ளாமையை காட்டுது….. இது என்னோட கருத்து, இந்த சமுதாயமும் புரிஞ்சுக்கிட்டா நல்லது..”

சவி, சொல்ல சொல்ல வசு முகம் தெளிவடைந்தது…

வசு அமைதியா இருப்பதை பார்த்து சவி, “சரி என்ன ஆச்சுனு சொல்லு, எதுக்கு இப்டி கேட்ட”

வசுவோ “ஒண்ணும் இல்லை, சின்னதா ஒரு கலக்கம்.. பட் நொவ் ஐ அம் ஒகே..”

ஹ்ம்ம், சரி நீ ஒகே நா எனக்கு ஒகே தான்.. வா போலாம்.. என்ற சவிக்கு…

சவி என்று கையை பிடித்து இழுத்தாள் வசு … என்ன என்று சவி திரும்ப… வசு கட்டி அணைத்தால்…

“என்ன வசுபேபி புதுசு புதுசா பண்ற”

“ஒண்ணும் இல்லை தோணுச்சு…” என்றாள் வசு…

“உன் ஆளு கத்து கொடுத்தாரா? “

“நீ முதல்ல வாயை குறை” என்றாள் பொய் கோபத்துடன்….

சரி வா போலாம் எல்லாரும் காத்துட்டு இருக்காங்க.. என்றபடி நடந்தார்கள்…

சவி பேச பேச வசுவிற்கு இருந்த நெருடல், கலக்கம் எல்லாம் கலைந்து போய்விட்டது…. சில சமயம் அப்படித்தான் “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானமாம்”…..


வசு என்ன சொல்லுவாள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்!!!!!





















 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8

தேவ்க்கு அவளது அதிர்ச்சி முகம் பார்த்து கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டாள் என்றே எண்ணினான்…

இவன் தன் நிலைமையை மற்றவர்களிடம் சொல்லும் போது அவர்களிடம் தோன்றிய வெறுப்போ, அதிருப்தியோ, பிடித்தமின்மையோ இவளிடம் தோன்றவில்லை என்பதும் வியப்பு தான் அவனுக்கு…

மரகதமும், ஜெயந்தியும் அவள் வருவதை எதிர் நோக்கி பதைபதைப்போடு அமர்ந்திருந்தனர்….

அவ்ளோவு ஏன், சாரா கூட ஒரு விதமான பதட்டத்தில் தான் இருந்தார்… ஏற்கனவே வசு சம்மதம் சொன்னதால் தான் இவ்ளோ தூரம் வந்தோம்… திரும்பவும் எதற்கு மாப்பிளை அவகிட்ட கேட்க சொல்லுகிறார்… என்ன நடக்க போகுதோ.. என்று…

இங்கோ வசுவும், சவியும் கதையடித்துக் கொண்டே கூடத்துக்குள் வந்து நின்றார்கள்.…

சாம் குடும்பமும் ரொம்ப எதிர்பார்போடு தான் அமர்த்திருந்தனர்…. தன் மருகன் இப்டியே தனி மரமா தனிச்சு நின்றுடுவானோனு கவலை… எப்படியாவது அவள் சம்மதம் கூற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவளை நோக்கினார்கள்….

மரகதம் தான் முதலில் ஆரம்பித்தார் “அம்மாடி, உனக்கு என் பேரனை புடிச்சிருக்கா? அவன கல்யாணம் கட்டிக்க சம்மதமா ராசாத்தி” என்று அவளிடம் கேட்டார்…

ஒரு நிமிடம் தேவ்வை அமைதியாக பார்த்தவள் “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம்” என்று சொல்லவும் ஜெயந்தி தொடங்கி சாம் குடும்பம் முதற்கொண்டு எல்லார் நெஞ்சிலயும் பாலை வார்த்தாள்….

தேவோ, அவள் சம்மதம் சொல்லியதும் அனல் தெறிக்கும் விழிகளோடு நோக்கினான்…

அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் அவனை அவளால் பார்க்க முடியவில்லை…. பார்த்தாள் பஸ்பம் ஆகிவிடுவாளே!!!

ஜெயந்திக்கும், மரகதத்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை…….

கிருபாவோ, “அப்புறம் என்ன, ஜெயா நீ மருமகளுக்கு பூ வைக்க ஆரம்பி” என்று சொல்லவும்…

ஜெயா ஒரு சரம் பூவை எடுத்து வந்தார், தன் மகனின் பொண்டாட்டி ஆக போகிறவள் என்று பூரிப்பு ஒரு பக்கம், சந்தோசம் ஒரு பக்கம் என முகங்கொள்ளா சிரிப்புடன் இவளை தானே திருப்பி பூ சூடினார்………

சூடி முடித்ததும், ஜெயா பக்கத்திலே நின்று கொண்டார்…
ஒரு பக்கம் சாரா, இன்னொரு பக்கம் ஜெயாவென…நின்று கொண்டார்கள்…

மரகத பாட்டியும் வந்து பூ வைத்து உச்சி முகர்ந்தார்….. ஒரு நிம்மதி மனசுக்குள்….. சின்னவன் வாரிசை பார்த்தாச்சு.. பெரியவன் வரிசையும் பார்த்தால் போதும் கண்ணை முடிடலாம் என்று நினைத்தபடியே அமர்ந்தார்…..

அடுத்து சாம் மனைவி சுகிர்தாவும், பிரசாத் மனைவி தான்யாவும் வந்து பூ வைத்தார்கள்….

ஒரு கேமராமேனை மட்டும் அழைத்து இருந்தார்கள்… அவர் இதை எல்லாத்தையும் பதிவு எடுத்துகொண்டிருந்தார்…

ஜெயந்தி, வசுவின் கையை விடவே இல்லை…. அவளுக்கு தலையில் பூவை சரி பண்ணிவிடறதும்….. ஹேர் பின் சரியாக நிற்காமல் இருந்தால் அதை சரி பண்ணிவிடறதும் என தான் பெற்ற மகளை போலவே நினைத்து பார்த்துக்கொண்டார்…..

மதிய சாப்பாடு வெளியே ஆர்டர் கொடுத்திருந்தமையல் அதுவும் அப்போது தான் வந்து இறங்கியது…

அதற்கு பாத்திரம் எடுக்கவென சராவும், வளர்மதியும் போய்விட்டார்கள்…

வசுவுக்கு ஜெயா கூடவே நின்றது ஆறுதலா இருந்தது…
கேமராகாரர் தான் ஜெயாவிடம் வந்து, “மேடம், மாப்பிளையும் பொண்ணையும் வச்சு கொஞ்ச ஸ்டில்ஸ் எடுத்துக்கலாம், அப்போ தான் கல்யாணத்துக்கு அப்போ கட் அவுட் வச்சாங்கன்னா இந்த ஸ்டில்ஸ்யையே வச்சுக்கலாம்…. அவங்கள சேர்ந்து நிக்க சொல்ரீங்களா?” என்று கேட்டார்..

ஜெயாவோ, “சரி தம்பி, இருங்க நிக்க வைக்கிறேன்”

ஜெயா என்னதான் நிக்க வைக்குறேனு சொன்னாலும் தேவ் நிற்பானானு தெரியவில்லை…

பரவால்ல கேட்டு, நிக்க வச்சுருணும் என்று உறுதியுடன் “தேவ்” என்று கூப்பிட்டார்…

அவன் “என்ன” என்ற ரீதியில் ஏறிட்டான் ஜெயாவை…

“பொண்ணும் மாப்பிளையும் சேர்த்து நிக்க வச்சு கொஞ்ச போட்டோ எடுக்கணும் தேவ், வந்து அவ பக்கத்துல நில்லு..” என்றார்…

“ம்மா, இப்போ இதுலா ரொம்ப முக்கியமா, அதுலாம் ஒண்ணும் வேணாம்… அவளை மட்டும் எடுக்க சொல்லுங்க…” என்றான்…

“டேய், அவளை மட்டும் எடுக்க என்ன மஞ்சள் நீராட்டு விழாவா நடத்துறாங்க? உனக்கு பார்த்த பொண்ணு பக்கத்துல நீ தான் தேவ் நிக்கணும்”..

அதற்குள் மரகதமும் “நில்லுயா எனக்கும் உன்னை ஜோடியா பாக்கணும்னு ஆசையா இருக்குதுயா”…. எனவும்..

எல்லாரும் இருக்குற சபையில் அவன் ஏதும் சொல்லமுடியவில்லை..

அதுனால் ஜெயாவை முறைத்து கொண்டே அவள் பக்கத்தில் நிற்க நடந்தான்……

சில குடும்பத்தில், பூ வைக்கும் வைபோகத்திலும் மாப்பிள்ளை பொண்ணை சேர்ந்தும் நிக்க வைப்பர், போட்டோவும் எடுப்பார்கள்…

வசு பக்கத்தில் நின்ற சவியோ நமட்டு சிரிப்புடன்…. “நீ நடத்து பேபி, உன் காட்டுல மழை தான் போ..” என்று முனுமுனுத்தபடி நகர்ந்து போய் சோபாவில் உக்கார்ந்து கொண்டாள்…

தேவ்வும் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்…

வசுவின் நிலை தான் பரிதாபத்துக்குறியது…..

இரண்டு பேரும் ஒட்டி நின்றதால்…. இரண்டு பேர் தோள்களும் உரசி கொண்டது… அவனுக்கு எப்டியோ இவளுக்கு தான் நிலை கொள்ள முடியவில்லை… இவர் தோள் என்ன பாறையை வைத்த மாதிரி இருக்கு.. என்று எண்ணிக் கொண்டாள்….

அதுவும் இல்லாமல் இருவர் உள்ளங்கைகள் பின் பக்கமும் உரசி கொண்டது....

அவனுக்கு தோள்களோடு தோளும், கைகளோடும் கைகளும் உரசி கொண்டு இருப்பது ஒரு ஒவ்வாமையை கொடுத்தது…

கையை அவன் பின்னால் எடுப்பதும், பின்பு வலித்ததும் முன்னால் எடுப்பதும் என்பதுமாய் இருந்தான்…

இந்த நேரத்தில் தள்ளி நிற்பதும் சரி இல்லை என்றதால்… பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டான்…..

அதை கவனித்த வசுவோ… கொஞ்சம் முன்னால் நகர்ந்து இடிக்காதவாறு நின்று கொண்டாள்….கொஞ்சம் இடைவெளி விட்டு நின்றாலும், பார்ப்பதற்கு ஒட்டி நின்றது போலவே தெரிந்தது……

ஆனால், ஜெயாவோ அவர்களையே கவனித்து இருந்தபடியால்..புரிந்தும் கொண்டார் வசுவின் செயலை..

அவர் செய்த தேர்வு சோடை போகவில்லை… கண்டிப்பா இவள் என் மகன் மனசு அறிஞ்சு நடந்துப்பாள் என்று இன்னுமே அவளை பிடிக்கதான் செய்தது…

இவர்கள் இருவரும் சேர்ந்து நிற்பதை பார்த்த லாவண்யா, அருண் எல்லாரும் அவர்களை படம் பிடிக்க வந்து விட்டார்கள்…

சவியும் தன்னுடைய அலைபேசியில் பதிவு செய்து கொண்டாள்…..

அப்பொழுது தான் ஒரு பந்தி முடிந்தது, சாப்பிட்டு முடித்த உறவினர்களும் உள்ளே வந்து இவர்கள் இருவரும் சேர்ந்து நிற்பதை கவனித்தவர்கள்… இருவருக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீர்வாதித்து… அப்டியே போட்டோக்கும் நின்று கொண்டனர்….

இப்டியாக நேரம் சென்றுவிட, பொண்ணும் மாப்பிளையும் சாப்பிட சவியை அழைத்துக் கொண்டு போக சொன்னார் சாரா…

சவியும் “தேவ்வையும், வசுவையும் அழைத்து கொண்டு போனாள்”…

இருவரையும் அமர வைத்து, தானும் வசுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்…

வசு, “சவி, அத்தான் இன்னும் வரலையா”

“இல்லை வசு, வரல இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்னு சொன்னாங்க”..

“ஹ்ம்ம்”, என்றபடி அவள் இலையில் வைத்த மைசுர்பாவை ஒரு கடி கடித்தாள்….

அங்கு வந்த கேமராக்காரர், “சிஸ்டர், கொஞ்சம் சார்க்கு ஊட்டி விடுங்க அதையும் படம் புடிச்சுக்கலாம்” என்றார்…
இப்போ தேவோ டைரக்ட்ஆஹ் அந்த கேமராகாரரை முறைத்தான்…

இதற்குலாம் நா அசரமாட்டேன் கொடுத்த காசுக்கு வேலை பார்த்தேதீருவேன் என்றவாறு நின்று கொண்டார்….

வசுவோ, அவளுக்கு எதிர்க்க இருந்த ஜெயாவை பார்த்தால்… அவரோ கண்ணை மூடி திறந்து… பண்ணுவதற்கு தைரியம் கொடுத்தார்…

எல்லார் முன்னாடியும் ஊட்டுனா தட்டி விடமாட்டான் என்ற ஒரு குருட்டு நம்பிக்கை ஜெயாக்கு….

வசுவும், தயங்கிய படி மைசுர்பாவை எடுத்து ஊட்டினாள்….

அவனும் வேற வழி இல்லாமல் வாங்கி கொண்டான்…

அதை மிக அழகாக படம் பிடித்துக்கொண்டார்..

இப்போது மறுபடியும் கேமராகாரர் “சார், இப்போ நீங்க ஊட்டி விடுங்க” என்றார்…

அவனும் சரி போய் தொலையட்டும் என்று முறைத்துக்கொண்டே “மைசுர்பாவை, அவள் வாயில் வைத்தான்…”

வைக்கும் போது தான் தெரிந்தது, தேன் போன்ற அவள் உதட்டில் அவன் விரல்கள் பட்டுகொண்டு இருப்பதை…

ஒரு நிமிடம் அவன் தேகம் சிலிர்த்து அடங்கியது…

ஆனால் அதை உணர மறுத்தான்… அதை உணர்ந்தால் அது தேவ் இல்லையே!!!!

இந்த அறிய நிகழ்வை பல அலைபேசிகள் உள் வாங்கிக்கொண்டது……

இப்படியாக சாப்பிட்டும் முடித்து விட்டார்கள்…
















































 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

இவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் மறுபடியும் அவர்கள் முன் கேமரா மேன் வந்து நின்றார்….

அவரை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே “இப்போ என்ன, சொல்லுங்க” என்று கேட்டான்…

அவன் அழுத்தமான விழிகளை பார்த்து ஜெயாவும் பக்கத்தில் வந்து விட்டார்…

“இது வரைக்கும் எடுத்தது உங்க மெமோரிஸ்க்கு இனிமே எடுக்க போறதுதான் கட் அவுட் வைக்குறதுக்கு” என்று அவனை பார்த்து சொன்னார்…

“ம்பச்” என்று சலித்துக்கொண்டு அதலாம் வேணாம் என்று சொல்லுவதற்கு முன்பே…

வசு உள்ளே புகுந்து “ஏதே இன்னும் எடுக்கணுமா, என்று அலறி..அண்ணா, வேணாம் எடுத்த வரை போதும்” என்று கூறினால்…

இவள் வேணாம் என்று சொன்னதுதான் தாமதம்..

“போலாம்” என்று சொன்னான்..

கேமரா மேன் “சார், போட்டோ எடுக்க தான போலாம்னு சொல்ரீங்க” என்று உறுதி படுத்த மறுபடியும் கேட்டார்…

“ஆமா”, என்று வசுவை முறைத்த படி கூறினான்…

அவள் வேண்டாம் என்று கூறியதும் அவனுக்கு வேணும்னு தோணியது…

நான் அவ்ளோ சொல்லியும் சம்மதம் தானே சொன்ன..

அதுனால் அவள் என்ன சொன்னாலும் எதிர்ப்பதமாய் சொல்லணும் என்று போட்டோக்கு சரி என்று சொல்லிவிட்டான்…

அவன் சொன்னதும் அவள் விழிகள் விரிந்து அவனை பார்த்தது…

அவள் அறிந்தும் கொண்டாள் ஏன் அவன் அப்படி சொல்லுகிறான் என்று.. அதுனால் எதையும் முகத்தில் காட்டாது நின்று கொண்டாள்… உனக்காக தான் நான் எடுக்க வேணான்னு சொன்னேன்… உனக்கே சரி என்றால் எனக்கு என்ன வந்துச்சு என்று அவனை நக்கலாக பார்த்தாள்…

அவள் ஏன் நக்கலா பார்க்குறாள் என்று புரியாத பார்வையை பார்த்தான் …..

ஜெயாவும் சாராவிடம் போய் போட்டோ எடுப்பதை பற்றி சொல்லவும்…

சாராவோ, “ஜெயா அண்ணி அவங்கள மச்சுவீட்க்கு(மாடி வீடு) போய்ட்டு எடுக்க சொல்லுங்க… அங்க யாரும் வர மாட்டாங்க… துணைக்கு சவியை கூப்பிட்டுக்க சொல்லுங்க” என்றார்…

மாடி வீடு, கீழ் வீடு எப்டியோ அப்டியே கட்டியிருந்தார்கள்… வாடகைக்கும் விட அவர்களுக்கு தோணவில்லை…

யாரும் வந்தா தங்க வசதிபடும் என்று…

ஜெயாவும் சரி என்று… சவியிடம் சொல்லவும்… அவள் அவர்களை அழைத்து கொண்டு போனாள்….

மாடி வீடு ரொம்ப புளங்காததால்.. அப்டியே புதுசாவே இருந்தது… அதுவும் இரு வரங்களுக்கு ஒரு முறை வந்து சாராவும் துடைத்து, ஒட்டடை அடித்து விடுவார்… அதுனால் தூசியும் படியாமல் இருந்தது…

இந்த மேல் மாடி கட்டி இரண்டு வருடங்கள் ஆகிறதால்…

இன்டெரிர்ஸ் எல்லாமே இப்போ உள்ள காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து இருந்தார்கள்…

போட்டோ எடுக்கவும் சில பக்ரௌண்ட் நல்லாவே இருந்தது…

இரு பெட்ரூம், ஒரு ஹால், ஒரு கிட்சேன்… முன்னாடியும் பின்னாடியும் கொஞ்சம் இடம் விட்டு கட்டியிருந்தார்கள்…

சவியோ, “யேய் வசு நான் அந்த சோபால உக்காரருறேன்… தூக்கம் வேற கண்ண கட்டுது… என் வீட்டுகாரர் வந்தா மட்டும் போய் சாப்பிட வச்சுட்டு வருவேன்…நீங்க பிக்ஸ் எடுங்க” என்று சொல்லிவிட்டு போய் உக்கார்ந்து விட்டாள்…

இவனோ யாருக்கு வந்த விருந்தோ என அங்க இருந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்…

கேமரா மேன் தான், ஒரு பெட் ரூம் மிக அமைப்பாய் இருந்ததை பார்த்து…..

“சார், அங்க நல்லா இருக்கு போவோம் வாங்க” என்று அழைத்தார்…

இவனும் அவர் பின் சென்றான்… சென்ற பின் தான் கவனித்தான்.. அவள் வரவில்லை என…

“வசுந்தரா” என்று அவளை கூப்பிட்டான்… அவன் அழைக்கும் போது “ந்தரா” என்ற உச்சரிப்பு வித்தியாசமா அழகாய் தெரிந்தது…

உடனே இவள் “இதோ வாறேங்க” என்று எழுந்து அவன் இருக்கும் ரூமை நோக்கி சென்றாள்…

அவள் வந்ததும்.. கேமரா மேன் அவளிடம்.. “சிஸ்டர், நீங்க சார பார்த்து நின்னுக்கோங்க.. அப்புறம் உங்க ரைட் ஹாண்ட் அவர் லெப்ட் தோள் மேல வச்சுக்கோங்க… உங்க லெப்ட் ஹாண்ட் அவரோட ரைட் ஹாண்ட் முழங்கையில வச்சுக்கோங்க… அப்புறம் அவர கொஞ்சம் சிரிப்போட பாருங்க” என்று அவளிடம் கூறிவிட்டு…

அவனிடம் “சார், நீங்க சிஸ்டர் ஆஹ் அணைக்குற மாதிரி புடிச்சுக்கோங்க” என்று கூறினார்…

அவளும் கேமரா மேன் சொன்னதிற்கினங்க, அவன் தோளை புடிக்கவும்…

அவனுக்கு ஏன் தான் சம்மதம் சொன்னோம் என்று நினைக்கும்படி ஆகிற்று…

தன் நிலைமையை நொந்தவாறு பட்டும் படாமலும் அணைவாக பிடித்தான்… அவள் இடுப்பை மறைத்த சேலை சிறிது இறங்கி இருந்ததால் அவன் கை அவள் பட்டுப் போன்ற மிருதுவான இடுப்பை பற்றியது……

இவ்ளோ குழைவான இடுப்பா! என்று நினைத்தபடி இன்னும் அழுத்தி பிடித்து அவளை நோக்கினான்..….

அவளோ அவன் தொடுதலை தாங்காது “ம்ம்”, என்றவாரு அவன் தோளை பதிலுக்கு அழுந்த பிடித்தாள்…

அவள் விழியோ அவனை பார்க்க முடியாது அங்கும் இங்கும் அலைந்தது…..
அதை கண்ட அவனுக்கு அது ஒரு சுவாரசயத்தைதான் தோற்றுவித்தது…

இது கூட நல்லா இருக்கே என்று கேமராக்காரர் பதிவு எடுத்துக்கொண்டார்…

அவர் எடுத்ததை பார்த்த தேவ், “ப்ரோ, இதே போஸ் ஆஹ் நாங்க அப்படியே மாத்தி திரும்பி நிக்கிறோம் எடுங்க” என்று சொல்லி… அவர் சம்மதத்தையும் கேட்காமல்.. அவனோட சேர்த்து அவளையும் திருப்பி நிக்க வைத்தான்…

ஏனென்றால், கேமரா மேன் சொன்னபடி நின்றால் அவளது இடுப்பும், சேரியின் இடது பக்கம் அனைத்தும் தெரியும் என்பதால் அவ்வாறு சொன்னான்..

இவன் சரியான லூசா இருப்பானோ, மூளை கலங்கிடுச்சா, ஏன் இப்டி பண்றாங்க என்றவாறு அவனை பார்த்தாள்…

பின்பு, ஏதோ ஒன்னு சீக்கிரம் எடுத்து முடிஞ்சா சரி என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில்….. அவன் கை இறங்கிஇருக்கும் அவள் சேலையை இழுத்து விட்டு சேலை மேல் கை வைத்துக்கொண்டான்….

அப்போ தான் புரிந்தது.. எதற்கு திரும்பி நிற்க சொன்னான் என… “பரவாலயே துரைக்கு நல்ல விஷயங்களும் பண்ண தெரியுது” என்று மெச்சிக்கொண்டாள்…

அவனுக்கு உணர்வுகள் தலை தூக்கவில்லை, அதுவும் இல்லாமல் யார்ராய் இருந்தாலும் நான் இப்டி தான் பண்ணிருப்பேன் என்ற ரீதியில் நின்றும் கொண்டான்…

இவளுக்கு அவனது கதகதவென இருக்கும் கைகள் அவளது குளிர்ந்த இடுப்பில் படும் போது பட படத்து போனாள்….
கால்கள் இரண்டும் நடுங்க ஆரம்பித்துவிட்டது…

எங்கே கீழ விழுந்து விடுவோமோ என்று பயந்து அவன் தோளை இருக்கமாய் பிடித்துக்கொண்டாள்…..

ஒரு வழியாக ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்து முடித்து விட்டார்கள்… கேமரா மேன் கிளம்புறேனு சொல்லி கீழ சென்றார்..

























 
Last edited:
Status
Not open for further replies.
Top