ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25

வீடு வந்து சேர இரவு 12 மணி ஆகிவிட்டது…

தேவும், வசுவும் பேசி கொள்ளவில்லை… சுலோச்சனா அடுத்த நாள் காலையில் தான் கிளம்புவதாக இருந்தது…..ஜெயா மற்றும் மற்றவர்களும் அடுத்த நாள் கோயம்பத்தூர் கிளம்ப வேண்டும்…

தேவும் வசுவும் கல்யாணம் முடிந்ததில் இருந்து பிராயணபட்டுக் கொண்டேதான் இருந்தார்கள்… திங்கள் அன்று கல்யாணம் முடிந்தது… செவ்வாய் மறுவீடு… புதன் அன்று வேளாங்கண்ணி… வியாழன் இரவு மதுரையிலிருந்து கோவை கிளம்ப வேண்டும்… பின் சனிக்கிழமை, சென்னை திரும்ப வேண்டும் என்றும் வைத்திருந்தார்கள்….

இதோ வியாழக்கிழமை காலையிலே சுலோச்சனா புறப்பட்டு விட்டர்…

அன்றைக்கு இரவு இவர்கள் எல்லாரும் லிங்க் எக்ஸ்பிரஸ் ஒண்ணே முக்காளுக்கு மதுரையில் இருந்து புறப்படும்… அதில் போவதாக இருந்தது…

தேவும், வசுவும் பக்கத்தில் அமர்ந்து இருந்தாலும் பேசிக்கவில்லை…..

இப்படியாக கோவையும் வந்தாகிட்டு… வசுவிற்கு கோவையில் இருந்த ஜெயா வீடு மிகவும் பிடித்திருந்தது… கீழே ஹால், கிட்சேன்.. ஒரு பெட்ரூம் கிருபா ஜெயாவிற்கென…. இன்னொரு ரூம் ஜெயாவும் கிருபாவும் பயன் படுத்த.. ஆபீஸ் ரூம்… கீழே இருந்து மேலே செல்ல உள்ளேயே படிக்கட்டும் இருந்தது… மேலே நான்கு அறைகள்… இரு படுக்கை அறைகள்.. ஒன்று தேவிற்கும்… இன்னொரு ரூம் பிரசாத்க்கும்…மீதம் இரு ரூம்மில் ஒன்றை தேவ் கிட்டார் வாசிப்பதற்கு மற்றும் ஆபீஸ் பயன்பாட்டிற்கும் என வைத்திருந்தான்…. இன்னொரு ரூம் அப்டியே யாருக்கும் பயன் படுத்தாமல் இருந்தது…

“அத்தை, வீடு ரொம்ப நல்லா இருக்கு… சூப்பர் ஆஹ் மைண்டைன் பண்ணிருக்கீங்க ….”

“தேங்க்ஸ் வசு, உன் மாமாவும் ஹெல்ப் பண்ணுவாங்க…”

“ஓஹ், அப்போ ரெண்டு பேரின் கை வண்ணமா… அசத்தலா இருக்கே”

“ஹ்ம்ம்” சிரித்த படியே கூறினார்…

இவளும் சமையலுக்கு உதவியவாரு மடை திறந்த வெள்ளம் போலே பேசி கொண்டே இருந்தாள் ஜெயாவிடம்… என்னவோ அவரிடம் பேச தடை அவளுக்கு இருக்கவில்லை… உண்மை தான் ஒருத்தங்களுக்கு நம்மள புடிக்கும்னு தெரிஞ்சா தயக்கம் எல்லாம் போய்விடும்…அப்டித்தான் அவளுக்குமே….
ஜெயாவிற்கும் மனதிற்குள் நிறைவாக இருந்தது… பெண் பிள்ளை இல்லை என்று ஒரு சமயம் வருத்தபட்டவருக்கு… இரு மருமகள் மகளாய் வந்த உணர்வு…

“வசுமா, நீ போய் குளிச்சுட்டு வரியா? நானும் போய் குளிச்சுட்டு வரேன்… அப்புறமா நாம சேர்ந்து சாப்டுக்கலாம்…”

காலையில் அவர்கள் வெளியே வாங்கி கொண்டார்கள்… கோவை வந்து இறங்க 7 மணி ஆகியது… அதுனால் வரும் போதே காலை உணவை வாங்கி கொண்டார்கள்… மதியம் சமைக்கவென கறி வாங்கி குடுத்தார் கிருபா…

கறி குழம்பு, சிக்கன் 65, ரசம், சோறு.. என சமைத்தார்… சமையல் முழுவதும் ஜெயாவே தான் பண்ணுவார்… மற்ற வேலைக்கென ஒரு பெண் வருவார்…
“சரி அத்தை” என கூறி விட்டு குளிக்க சென்றாள்….

மேலே தேவ் ரூமிற்குளேயே குளியல் அறை இருந்தது… அதற்குள்ளே குளித்து முடித்து வந்தாள்… தேவ் அவன் ஆபீஸ் ரூம்மில் இருந்தான்…

குளித்து முடித்து தேவ்வையும் சாப்பிட அழைத்து வந்தாள்…

ஏதாவது ஒரு பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்…

ரோஷினி பாப்பா தூங்கி விட்டதால்… எல்லாருமே சாப்பிடுகிற மேஜையில் ஆஜர் ஆகிவிட்டனர்… வசு பரி மாற வந்தாள்… அதுலாம் வேணாம் என தடுத்து விட்டார்… நான் எடுத்து வைக்கிறேன்.. நீ சாப்பிட ஆரம்பி, எல்லாருக்கும் எடுத்து வைத்துவிட்டு.. நானும் உக்காருறேன்… என எல்லாருக்கும் எடுத்து வைத்தார்….


சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, தேவ் “அப்பா, நாங்க நாளைக்கு காலையிலே கிளம்பலாம்னு இருக்கோம்..”

அட பாவி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வில்லை… என மனதில் நினைத்து கொண்டாள் வசு… ஒரு விதமான பயம் மனதில் எழவும் செய்தது… எப்படி இவனோடே ஒரே வீட்டில் குடும்பம் நடத்த… ஒரு வாரத்திற்கே நாக்கு தள்ளுது….

“சரி பா, கிளம்புங்க…” என சொன்னது கிருபா…

பிரசாத், “அப்பா அப்டியே நாங்களும் அவங்களோட கிளம்புறோம்..… அண்ணா சேலம் வழியாக தானே போறாங்க…”

மூன்று பேருக்கும் தனியா கார் வைத்து இருந்தார்கள்…
“சரி பா, பார்த்து போய்ட்டு வாங்க…” என்றார் கிருபா…

“சரி அப்பா” என்றான்…

வசுவோ சிறிது யோசித்துவிட்டு… “அத்தை, மாமா… அப்போ நீங்களும் எங்களோட சென்னை வறீங்களா? கொஞ்ச நாளைக்கு எங்களோட இருக்கீங்களா?” என கேட்டாள்…

அவள் கேட்டதே கிருபாவிற்கு சந்தோசம்…

“இல்லைமா.. நாங்க வரோம் ஆனா இப்போ இல்லை.. ஏற்கனவே ஒரு வாரம் இங்க இல்லைனு கொஞ்சம் வேலைகள் இருக்கு… நீங்க போய்ட்டு வாங்க..” தன்மையாக கூறினாள்…
அவருக்கு இவள் கேட்டது மனதிற்கு ஏதோ இதம் சேர்த்தது… தான்யா ஒரு நாளும் இப்டி கேட்டதில்லை… இருவரும் ஒரே மாதிரியாக தான் பார்க்கிறார்.. இருந்தாலும் இப்டி கேட்கவும் ஒரு மனம் வேண்டும் என்று தோன்றியது… கண்டிப்பா இந்த பெண்.. தேவ்வை மாற்றிவிடுவாள் என்றும் மனதில் தோன்றியது…
“ஹ்ம்ம், சரி மாமா” சுணங்கி கொண்டே சொன்னாள்…

ஜெயாவிற்கு புரிந்தது… அவனோட எப்படி இருப்பது என யோசிக்கிறாள் என்று… இருந்தாலும் அவர்களே நீந்தி வரட்டும் என்கிற எண்ணம்…

தேவ்விற்கோ சிறிது வருத்தம்.. ஏன் என் கூட தனியா வர மாட்டாளாமா.. அப்டி என்ன பண்ணிட போறேன்….. என்கிற கோவமும் கூட…. வேகமாக சாப்பிட்டு எழுந்து கொண்டான்…

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு தேவ்” என ஜெயா சொல்வதை கேட்காமல்…

“போதும்மா” என தன்னுடைய தட்டையும் எடுத்து சென்று கழுவி வைத்து விட்டான்…
இது ஜெயா பழக்கிய ஒன்று… சாப்பிட்ட தட்டை அவர்களே கழுவி வைத்து விட வேண்டும் என்கிற எழுத படாத சட்டம்… அதை அவர் இரண்டு பிள்ளைகளும் இன்றும் கடை பிடித்து வருகின்றனர்…

வசும்மா, ஈவினிங் கொஞ்ச பொருட்கள் வாங்கிட்டு வரலாமா?வீட்டுக்கு என்ன வேணும்னு அவன்ட கேட்டுக்கோ…. நாம இங்கே வாங்கிக்கலாம்.. என்று சொல்லி கொண்டிருக்கும் போதே தேவும் வெளியே வரவும்…

“தேவ், ஈவினிங் வெளில போனும் கூட்டிட்டு போறியா” என்று கேட்டார்…

“அவனும் சரி என்று விடவே…” கிருபாவை தவிர எல்லாரும் போகலாம் என்று முடுவு எடுத்து கொண்டார்கள்…

சாப்பிட்டு மேலே வந்தாள்… அவன் சுவர் ஓரமாக படுத்து போன் பார்த்து கொண்டிருந்தான்…
அவன் பக்கத்தில் அமர்ந்து.. கூப்பிடவா வேண்டாமா என்று தயக்கம் இருந்தது… முழுதாக ஒரு நாள் பேசிகொள்ளவில்லையே… பரவால்ல… எனக்கு ஈகோலாம் கிடையாது… நா பேசுவேன்… பேசறதால.. ஒண்ணும் குறைய மாட்டேன் என்று தெளிவாக சிந்தித்து…

“ ஏங்க” என்று கூப்பிட்டாள்…
“இந்தா ஆரம்பிச்சுட்டால, ஏங்க ஒங்கனுட்டு…” என்று எண்ணிவாரு…

“ஹ்ம்ம்” பிடி குடுக்காமல் கேட்டான்…

“சென்னை வீட்டுக்கு ஏதாச்சும் வாங்கணுமா?”

இப்போதும்… நம்ம வீடுனு சொல்ல மாட்டிக்குறா… கடுப்பாக வந்தது…
“தேவையில்லை..” பட்டு கத்திரிப்பது போலே வார்த்தை வந்து விழுந்தது…

“ஓஹ் சரி” என்று படுத்து விட்டாள்…
அவள் படுத்தத்திற்கும் கோவம் வந்தது… ஏன் மேலே ஏதும் கேக்க மாட்டிகுரா… நா இல்லைனு சொன்னா அப்டியே போய்டுறா… ஏன் எதுக்கு கேள்வியே வர அவளிடம் வர மாட்டிக்குது..ஆதங்கமாய் இருந்தது…

அவன் எதிர் பார்க்கிறது எல்லாமே ஒரு கணவன் மனைவியிடம் எப்படி எதிர் பார்ப்பார்களோ அப்படியே…

அப்படியென்றால் இவனும் கணவனாக நடந்து கொள்ளும் பட்சத்தில் எதிர் பார்ப்பது தப்பிலை… நீ யாரோ நான் யாரோ என்று இருந்து கொண்டு எதிர் பார்ப்பது முட்டாள்தனம் என்று அவனுக்கும் புரியவில்லை…

ஈவினிங் வெளியே சென்றார்கள்… என்ன வாங்கனும்னு சொன்னானா என்று ஜெயா கேட்டதற்கு ..

“இல்லை அத்தை… ஏதும் வேணாம்னு சொன்னாங்க.. “

“லூசு பய.. அவன் அப்டிதான் சொல்லுவான்… நா சிலது யோசிச்சுருக்கேன்… வாங்கி தரேன்” என்று பாத்திரங்கள் பார்த்தார்…

“பால் குக்கர், பருப்பு வைக்க ஒரு மத்திமம் சைஸ் குக்கர், எலக்ட்ரிகல் குக்கர், சில கரண்டிகள்…பொறிக்கன் சட்டி…ஒரு சில பாத்திரம், இட்லி குக்கர்,…pestle mortar.. குட்டி குட்டி ஏர் டைட் காண்டான்னெர்…” எதோ தன் பொண்ணு கல்யாணம் முடித்து போகிறதுக்கு சீதனம் குடுத்து அனுப்புவது போல் அடுக்கினார்…

இதையெல்லாம் கவனித்த தான்யா, பிரசாத்திடம் “உங்க அம்மா பார்த்திங்களா… அவங்களுக்கு அவ்ளோ செய்றாங்க.. நமக்கு ஒரு நாளும் இப்டி பண்ணதில்லையே…”

அவளை முறைத்து கொண்டே, “நல்லா யோசிச்சு பாரு, எங்க அம்மா வாங்கி தரவானு கேட்டதுக்கு… நீ என்ன சொன்ன.. எங்க வீட்ல வாங்கி தந்தாங்க அத்தை அதுவே போதும்னு நீ தானே சொன்ன… அப்போ கூட சிலது வாங்கி குடுத்தாங்களேடீ…”

“அதுக்காக, இவ்ளோவா..”

“நீயும் இணக்கமா இருந்திருந்தா… இதுக்கு மேலேயே செஞ்சுருப்பாங்க… இப்போ கூட உனக்கு புடிச்சத எடுன்னு சொல்லிட்டு தானே போயிருக்காங்க…”

“ஹ்ம்ம்க்கும், அங்கே பாருங்க பார்த்து பார்த்து எடுத்து தராங்க…”
“கடைனு பாக்க மாட்டேன்டீ.. ஒழுங்கா என்ன சொன்னாங்களோ அத பண்ணு” என்று ரோஷினியை வாங்கி கொண்டு நகர்ந்து விட்டான்…

இவளும் சில பொருட்கள் எடுத்தாள் தான்….

தேவ் அவன் அம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்… ஜெயா முகங் கொள்ளா புரிப்புடன்…ஒவ்வொன்றாக எடுத்து கொண்டிருந்தார்… இவ்ளோ சந்தோச படுவார் என்று தெரிந்திருந்தால் முன்னமே கல்யாணம் பண்ணிருந்துருக்கலாம் போலவே… என்று எண்ணி கொண்டிருந்தான்…அவன் இன்னொரு மனமோ அப்போ வசு கிடைச்சுருக்க மாட்டா…

அட ஆமா… அவளால தானே அம்மா இவ்ளோ சந்தோசமா இருகாங்க… அப்போ இது சரி தன் என்று அவன் மனமே வக்காலத்து வாங்கியது…

வசுவை பற்றி நினைத்தவுடன் அவளை பார்க்க மனம் உந்தியது… எவ்ளோ தடுத்தும் அவளை பார்த்தான்…

சிவப்பு கலர் அனார்கலி உடுத்தி இருந்தாள்… தனியாக தெரிந்தாள்… கல்யாணகலை அவள் முகத்தில் தெரியவும் செய்தது…


காற்றில் ஆடும் அவள் முடியை ஒதுக்கி விட ஆசை பிறந்தது… அலை பாயும் கண்கள் தனி அழகை குடுத்தது… அந்த உதடுகளை சுண்டி விட தோன்றியது..

அவள் உதடை பார்க்க பார்க்க… இவனுக்கு அவளை சுருட்டி தன்னுள் வைக்க தோன்றியது…

ஐஸ்வர்யாவிடம் தோன்றாத பல உணர்வுகள் கிளர்ந்து எழுந்தது….
இவன் கை தானாகவே தொட்ட முதல் பெண் இவள் தான்…

ஐஸ்வர்யா இவனை அணைத்து பிடித்திருக்கிறாள்… ஆனால் ஒரு நாளும் இவன் கை அவளை அணைக்க உயர்ந்தது இல்லை…

முதல் முறையாக “டி” போட்டு இவன் அழைத்த பெண்ணும் இவள் தான்…

இவன் பத்தாவது படிக்கும் போது, கணக்கு பாடம் கற்க பக்கத்தில் ஒரு வீட்டிற்கு டியூஷன் படிக்க சென்று வருவான்… ஒரு முறை ஜெயா அழைக்க வந்தார்…

அப்பொழுது ஒரு பெண், அவனிடம், “தேவ், நாளைக்கு நான் ஸ்கூல்க்கு வர மாட்டேன்… நோட்ஸ் மட்டும் எடுத்து ஏன் தம்பி கிட்ட குடுத்து விடு” என்று உரைத்தால்…

“சரி டி”என்று சொன்னான்.. அவ்ளோ தன் ஜெயா பிடி பிடிணு பிடித்து விட்டார்…

நீ உன் மனைவியை தவிர யாரையும் “டி” போட்டு கூப்பிட கூடாது… எந்த பொண்ணையும் தொட்டும் பேச கூடாது என அழுத்தமாக கூறினார்… அது அப்டியே அவனுக்கு பதிந்து விட்டது… அதுனால் யாரையும் டி போட்டு அழைத்தது இல்லை…அவன் மனைவியை தவிர…

வசுவிற்கு யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு… திடிர்னு தேவ்வை பார்த்தாள்… அவன் தான் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்…

“ஹையோ… என்ன இப்டி பார்க்கிறாங்க…” என்று நடுக்கங் கொண்டாள்…
ஏன் டா, ஆளை முழுங்குற மாதிரி பார்க்குற… மனதில் நினைத்தாள்… ஒரு பார்வை ஆளை புரட்டி போடுமா… புரட்டுகிறதே…!!!

அப்டியே அவன் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டாள்… அவள் பார்த்து விட்டாள் என்று தெரிந்தும் அவள் மேல் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை…!!!

ஒரே மனது இருவரை நேசிக்க முடியுமா?? முடியாது என்பது தான் நிதர்சனம் அது புரிகிறது தான்…

ஆனால்… ஐஸ்வர்யாவை பிடித்தது… இவளையும் பிடிக்க ஆரம்பிக்குதே.. அப்போ தான் என்ன ஜென்மம்… என்று சுய அலசல் செய்து கொண்டிருந்தான்…

அவன் மனமே புடித்தது.. என்று கூறுகிறது…புடித்தது என்பது முடிந்த காலம்… இறந்த காலம்…. அது முடிவுற்றது….. என்பது…இன்னும் இந்த மடையனுக்கு புரியவில்லை…!!!

இன்னுமும் சிலர் காதலில் தோற்றாலும் அடுத்த படி எடுத்து வைக்காமல் தேங்கி நின்று விடுகின்றனர்…..
இவர்களுக்கு என்று “தேர் ஈஸ் அ லவ் அஃப்ட்டர் லவ் ஃபயிலியர்”(There is a love after love failure)என எத்தனை படங்கள் எடுத்தாலும்… எத்தனை வாக்கியம் வந்தாலும் புரிவதில்லை…!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26

காலையில் 8 மணிக்கு கிளம்புவதாக இருந்தது… எழும்புனதில் இருந்து வயிறு வலிக்க ஆரம்பித்தது…மாதந்திர பிரச்சனை…. மூன்று நாளைக்கு முன்னாடியே வர வேண்டியது… இன்று வந்துவிட்டது… மன அழுத்ததில்….

பிரச்சனை வந்தவுடன் தான் நினைவு வந்தது…. ஊரில் இருந்து வரும் போது நாப்கின் வாங்குனதை எடுக்கவே இல்லை என்று… அங்கே மரகத பாட்டி காரில் தான் மறுவீடு சென்று வந்தார்கள்…
ஹையோ அங்கே இருக்குமே.. இப்போ என்ன செய்வது.. வேற யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க… பல வித யோசனையில் சுழண்டாள்…

பின், பாட்டிக்கு கால் பண்ணியே கேட்டுவிடுவோம் என்று நினைத்தாள்…

தேவும் ரூமில் தான் இருந்தான்…இவள் அலை புரிதலை காணவும் செய்தான்…. அவள் ஏதும் சொல்லாமல் கேட்கவும் விருப்பம் இல்லை… ஆனால் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிரிந்தான்….
எதர்த்தமாக அவள் பின் பக்கம் பார்க்கும் போது தான் கவனித்தான்… அவளின் உதிர போக்கை..

தேவ் அங்கே இருப்பதை பார்த்த அவள்…”ஏங்க.. பாட்டி நம்பர் குடுங்களேன்? கொஞ்சம் பேசணும்”

அவள் கேட்டதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது… நாப்கின் தான் தேடுகிறாள் என்று…

பாட்டி நம்பர் என்று சொல்லி நடந்து கொண்டே கப்போர்டு அருகே சென்று.. ஒரு கவர் பையை எடுத்து அவளிடம் குடுத்தான்… குடுத்து விட்டு வெளியே சென்று விட்டான்…

நம்பர் குறித்து கொண்டாள்… கவர் பெற்று கொண்டு உள்ளே பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள்… உள்ளே நாப்கின் தான் இருந்தது…

இத அவங்களா எடுத்துட்டு வந்தாங்க… அவள் அப்பா கூட இதுவரை எடுத்து குடுத்ததில்லை… எல்லாமே அம்மாவின் மூலமாகவே நடக்கும்… இதமான மெல்லிய உணர்வு தாக்கியது!!!

வேகமாக ஒய்வு அறைக்கு சென்று தன் வேலையை முடித்து கொண்டு வந்தாள்… டிரஸ்சும் மாற்றிக்கொண்டாள்… பேக் பண்ணது எல்லாம் சரியாக இருக்கா என்று சரி பார்த்து கொண்டாள்….

தேவ் உள்ளே வந்து பாக் செய்ததை எல்லாம் கார் பூட்டில் வைத்தான்…

திரும்பவும் உள்ளே நுழைந்தான்.. அவள் கொஞ்சம் சோர்வாக அமர்ந்து இருப்பதை கண்டதும்.. தொண்டையை செருமி.. “இன்னிக்கு ட்ராவெல் பண்ணிடுவியா? இல்லை ரெண்டு நாள் ஆகட்டுமா??”

அவன் கேட்டதே வியப்பு தான் அவளுக்கு… “அதுலாம் பிரச்சனை இல்லை… பண்ணிடுவேன்” என்று சொன்னதும் சரி என்று விட்டுவிட்டான்….

அவளும் கீழே இறங்கி வந்தாள்… ஜெயாவை பார்த்து சிறு புன்னகையுடனே வந்தாள்…

“அத்தை.. உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் நீங்க சென்னை வந்துடனும்”

“சரிம்மா கண்டிப்பா…” அவரும் இன்முகத்துடன் கூறினாள்…
சாப்பிடுவது வெளியே பார்த்துக்கலாம் என்று இருந்தார்கள்… பிரசாத், தான்யா, ரோஷினி பாப்பா வரவே… எல்லாரிடமும் விடை பெற்று கொண்டார்கள்….

வசுவிற்கும் கண்களும் கலங்கி விட்டது… அதை மறைக்கவென.. ஜெயாவை இறுக்கமாக அணைத்து கொண்டாள்…

ஜெயாவிற்கும் அப்டியே… ஆனால் சமாளித்து கொண்டார்…“வசும்மா.. இவ்ளோ இறுக்கமாலாம் நீ என் பையன தான் கட்டி புடிக்கணும்” அவளை லகுவாக்க தான் கிண்டலாக கூறினார்…

அவர் அப்டி கூறியதும் தெளிந்து விட்டாள் “ஹ்ம்ம்க்கும்,உங்க பையன் தானே… நா கட்டி புடிச்சதும்.. இந்தாம்மா புடிச்சுக்கோன்னு நிப்பாங்களாக்கும்… தெறிச்சு ஓடிட மாட்டாங்க??”

ஹா ஹா சிரித்து கொண்டே நீ வேண்ணா பாரேன் ஒரு நாள் வரும்… அப்போ நீயே விலகுனாலும் அவன் உன்னை தூரத்தியே உன் பின்னாடி வருவான்”

“அது நடக்கலாம் நடக்காமாலும் இருக்கலாம்.. ஆனா நீங்க நல்ல மாமியார் அத்தை!!” என்று கூறி அவர் கன்னத்தில் இதழ் பதித்தாள்…
அவர்கள் என்ன பேசி கொண்டிருக்கிறார்கள் என்று தேவ்விற்கும் தெரியவில்லை… கிருபாவிற்கும் புரியவில்லை… ஆனால் இருவருக்கும் அந்த பாச பிணைப்பு பார்க்க பிடித்திருந்தது….

மணி ஆகவே… கிளம்பி விட்டார்கள் ஒரே காரில்…தேவ் தான் ஓட்டுனான்… பக்கத்தில் பிரசாத் அமர்ந்து கொண்டான்… தேவிற்கு பின் வசுவும்… பிரசாதிற்கு பின் தான்யாவும் இருந்தார்கள்… ரோஷினி பிரசாதிடம் தான் இருந்தாள்…

காரில் ஏறினதில் இருந்து.. வசுவின் முகம் கலை இழ்ந்து காணப்பட்டது…

தேவ் கவனித்தான்… நேரம் ஆக ஆக சரி ஆகும் என்று விட்டு விட்டான்…

பிரசாத் தான், “என்ன அண்ணி, அம்மாவ மிஸ் பண்ணுறீங்களா? உங்களுக்கு என்ன ஹெல்ப் எப்போ தேவை பட்டாலும் அம்மாகிட்ட சொல்லுங்க… உடனே வந்துடுவாங்க, பீல் பண்ணாதீங்க அண்ணி” ஏனோ அவனுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது… தன் மனைவி எப்படி தன் அம்மாவிடம் இருக்கனும் என்று நினைத்தானோ.. அப்படியெல்லாம் வசு இருந்தது ஒரு நிறைவு… அதுனால் அவள் வருந்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்து தான் வார்த்தைகளால் தேற்றினான்…

“ஹ்ம்ம் சரி அண்ணா.. அத்தையும் சொன்னாங்க…” என்று கொஞ்சம் நிலை படுத்தி கொள்ள ஆரம்பித்தாள்…சிறிது நேரம் தூங்கினாள் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது… ஒரு இடத்தில் நிறுத்தி காலை சாப்பிட்டு முடித்ததும்… அசந்து தூங்கி விட்டாள்…

சேலம் வந்ததும் தான் கண்ணையே திறந்தாள்… அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு… பிரசாத் குடும்பத்தை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு சென்னை நோக்கி பயணித்தார்கள்…..

சேலத்தில் இருந்து முன்னாடி வந்து அமர்ந்து கொண்டாள்…

சென்னை வந்து சேரவே 6 மணி ஆகியது… வந்ததும் முதல் வேலையாக .. சாராவிற்கு, ஜெயாவிற்கும் தெரிவித்து விட்டாள்….

அவன் இருப்பது அபார்ட்மெண்ட்… மூன்று தளங்களை கொண்டது… இவர்கள் இருப்பது இரண்டாவது தளம்… வீடும் விசாலமானது….. இரு பெட் ரூம்… ஒன்று அவன் ஆபீஸ் பயன்பாட்டிர்க்கென வைத்திருந்தான்… அதில் ஒரு கிட்டாரும் வீற்றிருந்தது…. இன்னொரு ரூம் படுப்பதெற்கு…. மோடுலர் வசதியுடன் ஒரு நேர்த்தியான கிட்சேன்… ஒரு ஹால்… அதன் பக்கத்தில் பேல்கனி என இருந்தது… வீடு அவ்ளோ அழகாக இருந்தது… எங்கும் தூசி பார்க்க முடியவில்லை… ஒரு பையன் இவ்ளோ நேர்த்தியாய் வைத்து இருக்கிறான் என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை…

வந்ததும் தன்னை சிறிது சுத்தபடுத்தி கொண்டு பெட் ரூமில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டாள்… பெட் இருந்தது தான்… ஆனால் அங்கே செல்ல தயக்கம்… அவனுக்கு ஆபீஸ் வேலை இருந்ததால்.. இன்னொரு ரூமினுள் சென்று அடைந்து கொண்டான்…

வசு ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள்…. மணியை பார்க்க நேரம் 8 என்று காட்டியது… பசியும் எடுத்தது…. கிட்சேன் உள்ளே சென்று எதாவது செய்ய இருக்குமா என்று பார்த்தாள்… பாலை தவிர எதுவும் இல்லை…. காபி பவுடர் இருக்கா என்று பார்க்க அது இருந்தது… ஹ்ம்ம், இதுவாச்சும் இருந்ததே என்று இருவருக்கும் சேர்த்தே காபி கலந்தாள்… அவளுக்கு எடுத்து கொண்டு… அவனுக்கு பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக்கொண்டாள்…

ஹால் சோபாவில் அமர்ந்து தொலை காட்சி பெட்டியை உயிற்பித்தாள்…. வார இறுதி நாள் என்பதால் ரியாலிட்டி ஷோவிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது… அவளுக்கு பிடித்ததை போட்டு கொண்டு ஒவ்வொரு மிடராக குடித்தாள்…. கொஞ்சம் தேவலாம் போலே இருந்தது…

பின், ஜெயா கிட்சேன் பொருட்கள் வாங்குனது எல்லாம் அடுக்கி வைத்துவிடலாம் என்று ஆரம்பித்தாள்… என்னவோ தனக்கென ஒரு கிட்சேனு இருக்கவும் ரொம்ப புடிக்க செய்தது… உண்மை தான் பெண்களின் ராஜ்யமே அங்கே தானே… அதுவும் தனக்கே தனக்கு என்று இருந்தால் கூடுதல் இஷ்டம் அல்லவா!!!

அடுக்கி விட்டு மணியை பார்க்க 9 ஆகியது.. தேவும் அதே சமயத்தில் வெளியே வந்தான்…

வந்தவன் அவள் அடுக்கி முடித்து இருப்பதை பார்த்தான்… பின், அவளிடம் “ வீட்டில ஏதும் இருக்காது… நா பக்கத்துல போய் சப்பாத்தி வாங்கிட்டு வரேன்.. எத்தனை வேணும் உனக்கு” என்று வினாவினான்…

“மூன்று” என்று சொன்னதும் வாங்கி வர சென்றான்… பதினைந்து நிமிடம் சென்றதும் வந்து விட்டான்…

இருவரும் ஒன்றாக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்… முடித்ததும் காபி குடிப்பீங்களா என்று அவன் கையில் குடுத்தால்.. அவனும் வாங்கி கொண்டான்… பின், எல்லாத்தையும் ஒதுங்க வைத்து ரூமினுள் வந்தாள்…

அவன் முன்னதாகவே வந்து சுவர் ஓரம் படுத்து விட்டான்… நீண்ட நேரம் சோபாவில் படுப்பது என்பது முடியாது என்பதால் அவன் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டாள்… அவன் எதாவது சொன்னா பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்…

இருவருக்கும் அசதி என்பதால் விரைவாகவே உறங்கி விட்டார்கள்…

அடுத்த நாள் காலை மிக அழகாக புலர்ந்தது….

இவள் எழும்ப 7 மணி ஆகியது… பக்கத்தில் பார்த்தாள் அவன் இல்லை… சரி என்று ஓய்வு அறைக்கு சென்று முகம் கழுவி, காலை கடன்களை முடித்து விட்டு வந்தாள்…

கிட்சேன் உள்ளே அவன் நின்று கொண்டிருந்தான்… அவனை பார்த்ததும்… புன்னகையுடனே “ குட் மார்னிங்” என்று கூறினாள்..
அவன் அவளை பார்த்து வெறும் “ஹ்ம்ம்” என்று சொல்லி திரும்பி நின்று கொண்டான்…

இதுக்கு சொல்லாமலே இருந்துருக்கலாம் என்று எண்ணினாள்.. அவன் எதோ கலக்குக்கிறான் என்று தெரிந்தது…

அவனே அவள் பக்கத்தில் காபி வைத்து விட்டு சென்று விட்டான்… “ஏன் துரை எடுத்துக்கோனு சொல்லி குடுக்க மாட்டாரோ” என்று அங்கலாய்த்தபடி எடுத்து கொண்டாள்…

பால்கணி பக்கம் நேற்று சரியாக பார்க்கவில்லை என்பதால்… அங்கே போனாள்… அங்கே ஒரு குட்டி ஊஞ்சல் இருந்தது… அது அவளை கவர்ந்து இழுத்தது… கொஞ்சம் ஆங்ஆங்கே… குட்டி குட்டி செடி இருந்தது… கீழே செயற்கையான புல் தரையும் இருந்தது… சொல்லப்போனால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது… கூடை ஊஞ்சல் அல்லாது… சாதாரண ஊஞ்சல் மரத்தில் ஆனது இருந்தது… ரசனைகாரன் தான் போலவே என்றும் தோன்றியது… கால்களை லேசாக உந்தி உந்தி ஆடி கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தாள்…


ஹாலின் இடது பக்கம் தான் பால்கனி ஆதலால் அவனும் இவளை பார்த்தான் தான்… ஊஞ்சலை பார்த்ததும் சில நினைவுகள் அவனை ஆக்கிரமித்தது… முயன்று அதை நினைக்காமல் இருக்க அணை கட்டினான்…

அதன் பின் வேகமாக குளியல் அறைக்குள் சென்று விட்டான்…

இவளோ ஹெட்செட் எடுத்து வந்து காதில் மாட்டி கொண்டு பிடித்த பாடல்களை கேட்க ஆரம்பித்தாள்…

சிறிது நேரம் சென்றதும் வந்து நின்றான் அவள் பக்கத்தில்…

அவனை பார்த்ததும் பாட்டை நிறுத்தி என்னவென்று பார்த்தாள்…

“மார்னிங் பிரேக் பாஸ்ட் வாங்கிட்டு வரேன்…என்ன வேணும்?”

“2 இட்லி போதும்”

“ஹ்ம்ம்,சரி” என்று போய் விட்டான்…

அவன் சென்றதும் இவளும் குளித்து முடித்து ஆயத்தமாகி வந்தாள்…

அவனும் காலை உணவு வாங்கி கொண்டு வந்தான்… இருவரும் சேர்ந்து சாப்பிட்டு எழுந்து விட்டார்கள்…

11 மணி போல்…வெளியே கிளம்பும் போது உடுத்தும் உடை அணிந்து வெளியே வந்தான்… நேராக அவளிடம் வந்தான்…அவள் ஹால் சோபாவில் அமர்ந்து இருந்தாள்…

“ உன்கூட கொஞ்சம் பேசணும்” தேவ்..

“ஹ்ம்ம், சொல்லுங்க!!”

“இது இந்த வீட்டுக்கு இன்னொரு சாவி… என்கிட்ட ஒன்னு இருக்கு” என்று அவளிடம் தந்தான்…

பின் அவளை பார்த்து.. “அப்புறம்..உன் கிட்ட ஏற்கனவே சொன்னது தான்.. என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்காத…. இதுக்கு அப்புறம் உன் வேலையே நீயே பார்த்துக்கோ… சாப்டாகட்டும்… இல்லை வெளியே போவதாகட்டும்…. இங்க கிட்சேன் இருக்கு உனக்கு வேணுங்கிரத வாங்கி உனக்கு வேணும்னா நீயே சமைச்சுக்கோ.. எனக்கு எதுவும் செய்யாத… செஞ்சாலும் சாப்பிட மாட்டேன்… ஒரே ஆபீஸ் அப்டினால என்னால கூட்டிட்டு போக முடியாது… அதுலாம் நீயே தான் பார்த்துக்கணும்… முக்கியமா ரெண்ட் ஷேர் பண்ணனும்… இது நான் வாங்குனது தான் ஆனா இ எம் ஐ நா தான் கட்டிட்டு இருக்கேன்… சோ அதுக்கு பதில் ரெண்ட்ஆஹ் எனக்கு குடுத்துரு… எலக்ட்ரிகல் பில் எவ்ளோ வருதோ அதுவும் ஷரிங் தான்… எவ்ளோனு நா மொத்தமா மாசகடைசில உனக்கு வாட்ஸாப்ப் பண்ணுகிறேன்… பண்ணதும் அதே நாள்ல பண்ணிடு…. அப்புறம் நா தேவை படுற நேரம் வெளியே போய்ட்டு வருவேன்.. ஏன் எதுக்குனு லாம் கேட்க கூடாது… நீயும் சொல்லணும்னு அவசியம் இல்லை.. ஆனா லேட்டா வர்றத அவொய்ட் பண்ணிக்கோ.. நாம இருக்குறது OMR ரோடுல உள்ள இடத்துல… அத புரிஞ்சு நடந்துக்கோ… அப்புறம் பிரின்ட்ஸ்னு யாரையும் கூட்டிட்டு வராத… எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்.. தென் ரொம்ப முக்கியமான விஷயம்…நா தான் உன் ஹச்பன்ட்னு யார்ட்டயும் சொல்ல கூடாது… இங்க இருக்கணும்னா இதல்லாம் கடைபிடிச்சு தான் ஆகணும்..இல்லை முடியாது அப்டினா நீ கிளம்பலாம்…சரி எனக்கு வேலை இருக்கு.. நா வரேன்… பூட்டிக்கோ…” என்று வெளியேறி விட்டான்….


அவன் சொன்ன விதம் அவளை காயபடுத்தியது… இவன் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த கூட்டிட்டு வந்தானா இல்லை ரூம் ஷேர் பண்ணி ரெண்ட் வாங்க கூட்டிட்டு வந்தானா…. மட பய….லூசு பய… அறிவு இருக்கா…எப்படி பேசிட்டு போறான்… அவளுக்கு அவ்ளோ கோவமும் வருத்தமும் வந்தது..… போடா… ஒண்ணும் நீ பண்ண தேவை இல்லை.. இவ்ளோ நாள் நீ தான் என்ன பார்த்துகிட்டியா எல்லாம் நானே தான் பண்ணிக்கிட்டேன்… அப்டியே இருந்துப்பேன்… வந்துட்டான் பெரிய இவன் மாதிரி… சரியான கோட்டான்… ஒரு நிலைல நிக்க மாட்டான்… என்று திட்டிய படி இருந்தாள்…

புண் பட்ட மனதை நல்ல சாப்பாடா குடுத்து ஆத்துவோம் என பிரியாணி ஆர்டர் பண்ணி கொண்டாள்… வந்ததும் ஒரு கட்டு கட்டிவிட்டு… படுத்து தூங்கிவிட்டாள்……!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27

திங்கள் கிழமையில் இருந்து வேலைக்கு செல்வதாக இருந்தது... அதினால் நேரமாகவே படுத்து உறங்கி விட்டாள்…. தேவ் எப்போ வந்தான் என்பதும் தெரியாது…

காலையில் எழும்பும் போது தான் பார்த்தாள் பக்கத்தில் அவன் தூங்கி கொண்டிருந்தான்… அவன் தான் எதற்கும் எதிர் பார்க்க கூடாது என்று சொல்லிவிட்டானே… ஆபீஸ்க்கு நேரமாகவே கிளம்ப வேண்டும்… என்ன தான் பஸ் மாறி மாறி செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்… செல்வதற்கும் நேரம் எடுக்கும்.. கூட்டமும் அதிகமாக இருக்கும்…. அதை எண்ணி மிக வேகமாவே கிளம்பினாள்… கூடவே வீட்டிற்கு தேவையான மளிகை சாமான், காய்கறிகள் என்ன வேண்டும் என்றும் குறித்து கொண்டாள்.. வரும் போதே வாங்கி வர வேண்டும் என்கிற எண்ணம்…

ஆபீஸ்க்கு இத்தனை மணிக்கு இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை ஆனால் கண்டிப்பாக 9 மணி நேரம் அவர்கள் இருக்க வேண்டும்… இவள் 9 மணிக்குள் சென்று விடுவாள்.. அதே போல் 6 மணிக்குள் கிளம்பியும் விடுவாள்… ப்ராஜெக்ட் டெபிளாய்மென்ட் அப்போ மட்டுமே அதிக நேரம் இருக்க வேண்டி வரும்.. அப்போ மட்டுமே இருப்பாள்…

ஒரு வாரம் ஆபீஸ் போகவில்லை என்பதால்… யாரும் வருவதற்கு முன்பே போக வேண்டும் என்கிற உந்துதல்… இல்லை என்றால் நிறைய வித்யாசமான பார்வையை சந்திக்க வேண்டி இருக்கும்..
ஒரு வழியாக கிளம்பி விட்டாள் 7:30 மணிக்கு.. தேவ், அப்பொழுது தான் எழுந்து வெளியே வந்தான்… இவள் சீக்கிரமாக கிளம்பி இருப்பதை பார்த்தான்.. பார்த்தும் ஏதும் சொல்லாமல் கிட்சேன்குள் நுழைந்து கொண்டான்…

ஒரு வார்த்தை கேக்குறானா பாரு.. சரியான ஓரங்கோட்டான்…. அவன் யாரோ மாதிரி பாக்குறது மனதை குடைந்தாலும்… கடந்து போக பழக வேண்டும் என்று மனதை திசை திருப்பி வீட்டை விட்டு வெளியே வந்தாள்…

பஸ்யை பிடித்து ஆபீஸ் வந்து சேரவே ஒரு வழியாக ஆகிவிட்டாள்… அவளுடைய இடத்தில் போய் அமர்ந்து கடந்த வாரம் வந்த மெயில் செக் பண்ண ஆரம்பித்தாள்…

அரை மணி நேரம் சென்றதும் காவ்யா வந்தாள்…

“ ஹே, கல்யாண பெண்ணே… வந்துடீங்களா? என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துருக்கீங்க?? கொஞ்சம் ரொமான்ஸ் பன்னிட்டு லேட்டாஆஹ் வருவீங்கனுல நினைச்சேன்.. நீங்க என்னனா ஆளுக்கு முன்னாடி வந்து கடையை திறந்து வச்சிருக்கீங்க?”

“ஹாய் காவ்யா… ஹ்ம்ம் வந்துட்டேன்”
“என்ன வசு, சுரத்தையே இல்லாம சொல்லுறீங்க? கல்யாண பொண்ணு கண்ணுல ஒரு மயக்கம், ஒரு கிறக்கம் இதுலாம் தெரியும்னு சொல்லுவாங்க…உங்க கண்ணுல அப்டி ஏதும் தெரிலயே..”

“ஏன் அப்டியாம்??” வசு

“அது கணவனின் கை வண்ணத்தில் அப்டியாம்”

“அது சரி…” வசு

“ஏதோ சரியில்லை மாதிரி தெரிது வசு”

“இல்லை காவ்யா”

“ இல்லை வசு… கழுவுற தண்ணில நழுவுற மீன் மாதிரி… நழுவுற பதில் தான் தறீங்க… சரி ஓகே…எல்லாம் ஓகே தானே.. ஹாப்பி தானே”

“ ஆமா காவ்யா”

“அப்போ சரி.. இன்னொரு விஷயம் வசு… நீங்க வராத அத்தனை நாளும் தேவும் வரல…. ஏன்னு மேனேஜர்க்கும் தெரில.. எதோ பர்சனல்னு சொன்னாங்க வசு”

திக் என்று இருந்தாலும் “ஓஹ் சரி சரி..” என்று முடித்து கொண்டாள்…
வாங்க ஒரு காபி குடிப்போம்…என்று இழுத்து கொண்டு போனாள்… கூடவே போகிற வழியில் விக்ரமும் சேர்ந்து கொண்டான்..

இன்னும் அவர்களுக்கு என அல்லோகேட் பண்ணிருந்த ப்ராஜெக்ட் முடியவில்லை…

எனவே, காபி குடித்துவிட்டு.. கான்பிறேன்ஸ் ரூமில் போய் இருந்து கொண்டார்கள்…இவள் கழுத்தில் மினு மினுத்த தாலியை பார்த்தார்கள் எல்லாரும்.. ஆனால் ஏதும் கேட்கவில்லை.. அவள் மேனேஜர் மட்டும் விஷ் செய்தார்… அவருக்கு மட்டும் முன்னவே தெரியும்…லீவ்க்காக காரணத்தையும் கூறியிருந்தாள்..
வேலையும் தலைக்கு மேலே இருந்தது… விக்ரம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணதால் விரைவாக.. எதில் இனிமேல் வேலை செய்ய வேண்டும் என்று கற்று கொண்டாள்…

பதினோரு மணி அளவில்.. தேவ் உள்ளே நுழைந்தான்…

அவன் வெளியே இருந்து உள்ளே வரும் முன்னே பார்த்து விட்டாள்.. “ஹ்ம்ம், அவனுக்கு என்ன.. அவன் நிறுவனம்.. யாரு கேள்வி கேக்க போற… நினைச்ச நேரம் வரலாம் போலாம்”ஹ்ம்ம் என உதட்டை சுழித்த நேரம் அவன் பார்த்து விட்டான்..

சுழித்த உதட்டை.. சுண்டி விட தோன்றியது… பின், கடினப்பட்டு அவள் உதட்டில் இருந்து பார்வையை திருப்பினான்…

தேவ் காலையில் 9 மணிக்கே வந்து விட்டான் தான்.. காலை உணவு பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் முடித்து கொள்வான்… சில நேரம் போய் சாப்பிட்டு கொள்வான்.. இல்லை வீட்டிற்கு அனுப்ப சொல்லிடுவான்… மதியம் கேன்டீனில் இருந்து அவன் இருக்கிற இடத்துக்கு வந்து விடும்… இரவு மட்டும் வீட்டில் சமைத்து சாப்பிடுவான்… நிறுவனத்திற்கும் சரியான நேரத்தில் இருப்பான்…

அவன் உள்ளே நுழைந்து எல்லாருக்கும் ஒரு ஹாய் கூறிவிட்டு… ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் மட்டும் வாங்கி கொண்டான்.. பின், இன்னும் சில குறிப்புக்கள் சரி பார்க்க வேண்டி இருந்தது…

அதுனால்அங்கேயே அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான்…

அன்றைய தினம் அப்டியே சென்று சாயங்காலம் 5:30 ஆகியது…

ஒவ்வொருத்தாராக கிளம்ப ஆரம்பித்தார்கள்…. காவ்யாவும் வெளிய செல்ல வேண்டும் என்று கிளம்பி விட்டாள்….

இவளுக்கு கொஞ்சம் வேலை முடிய நேரம் எடுத்தது… விக்ரம், தேவ் மற்றும் இன்னும் ஒரு நான்கு பேர் மட்டும் இருந்தார்கள்… விக்ரம் வேலை முடித்து விட்டான்.. ஆனால் வசு முடிப்பதற்காக அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான்…

அதை கவனித்த வசு, “விக்ரம், நீங்க கிளம்புங்க..எனக்கு எப்படியும் நேரம் எடுக்கும்..”

“இருக்கட்டும் வசு, நீங்க முடிங்க”

“விக்ரம், நாம சேர்ந்து கிளம்புனாலும் யூஸ் இல்லை.. நீங்க அந்த பக்கம் நான் இந்த பக்கம்… அப்பிடியே எதிர் எதிர்.. நீங்க இப்போ கிளம்புனா கொஞ்சமா தான் டிராபிக் இருக்கும்.. கிளம்புங்க விக்ரம்”
“சுர் ஆஹ்?.. நான் உங்களுக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டேன்.. எப்படி போகுது…”

“சுர் விக்ரம்.. நல்லா போகுது” என சிரித்த முகமாகவே கூறினாள்…

அவள் விக்ரமிடம் பேச ஆரம்பித்த முதல் அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான்… இதில்..அது என்ன என்னை தவிர மித்த எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுகிறா என்ற கோவம் வேறு!!!

விக்ரமும், சரி வசு கிளம்புறேன்… நீங்க பார்த்து போங்க.. வீட்டுக்கு போனதும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க… என்றான்..

“சரி விக்ரம்” பதில் மொழிந்தால்…

விக்ரம் சென்றதும் வேலையில் கவனம் வைத்தாள்….

சிரிது நேரம் சென்றிருக்கும்.. அந்த அமைதியை கிழித்து கொண்டு அவன் குரல் கேட்டது… “வசுந்தாரா”…

சிறுது ஜெர்க் ஆகி.. “ஹ்ம்ம்” என விழி உயர்த்தினாள்…

“நீங்க கிளம்புங்க” என கூறினான்.. அந்த ரூமில் இப்போது மொத்தமே நான்கு பேர்தான் இருந்தார்கள்.. தேவ்வையும் சேர்த்து.. இவள் மட்டுமே பெண்.. இவன் எல்லா லீடர்களுக்கும் முக்கியமாக சொல்லுவது… முடிந்த அளவு பெண்கள் 6 மணிக்கு மேல் ஆபீசில் இருக்க வேண்டாம்.. இருந்தால் அனுப்பி விட்டுடுங்கள்… அவர்கள் கேம்பஸ்க்குள் இருக்கும் வரை பாதுகாப்பு உங்கள் பொறுப்பு.. என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறான்… அதுனால் யாரையும் இருக்க விட மாட்டார்கள்…

அவன் கிளம்ப சொன்னதும் “ஹ்ம்ம்,” என சொல்லி கிளம்ப ஆரம்பித்தால்….

அவள் வெறும் “ஹ்ம்ம்” மட்டுமே பதில் கூறியதை கவனித்தான்…கடுப்பு ஆகினாலும்… பின், தோள்களை குலுக்கி விட்டு விட்டான்…
கேம்பஸ் விட்டு வெளியேறி மணி பார்க்க 7 என்று காட்டியது..

“ஹ்ம்ம், என பெரு முச்சு விட்டு.. பஸ் ஏறி அவள் இடம் வந்து… ஒரு நல்லா சூப்பர் மார்க்கெட் தேடி… வேணும் என்கிற பொருள் எடுத்து முடிக்க மணி 9 ஆகியது…

இதற்கு மேல் வீட்டிற்கு போய் சமைத்து சாப்பிட முடியாது என்பதால்… சாப்பாடு கடையை தேடினால்…

இங்கோ, இவனும் அவள் கிளம்பியதும் கிளம்பி விட்டான்… வீட்டிற்கும் நேரமே வந்து விட்டான்.. மெஸ்க்கு சென்று சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தான்… இன்னும் அவள் வந்திருக்கவில்லை… எங்க போனா இவ.. பஸ் லேட்டா.. என்று எண்ணியவாரு சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தான்….

மணி பார்க்க பத்தை கடந்து காட்டியது… கொஞ்சம் பயம் அவனுக்கும் வந்தது… பஸ் கிடைக்க லேட்டா ஆகுனாலும்… ஒரு ரெண்டு மணி நேரம் எடுக்குமா… அப்டி பார்த்தா ஒன்பது மணிக்கு வந்திருக்கணுமே… இன்னம் காணும்… என்ன பண்றது…என்று யோசிக்கும் போது…அவள் கதவை திறந்து வந்து கொண்டிருந்தாள்…

இவனை பார்த்தாலும்.. கவனிக்காதவறு அவனை கடக்கும் போது…
“நில்லு வசுந்தரா..” கணீர் குரல்…

அந்த குரலுக்கு கட்டு பட்டு நின்றாள்…

“ஹ்ம்ம்” என கூறினாள்…

“லேட்டா வரதுனா, என்கிட்ட சொல்லணும் கண்டிப்பா…ஏன் லேட் இன்னிக்கு?”

“கடைக்கு போனேன்.. மளிகை பொருட்கள் வாங்க..”

“அது வாங்கனு இப்போல்லாம் தனியா ஆப் வந்துருச்சு தெரியுமா தெரியாதா?”

“ஹ்ம்ம்..” என தலையை தான் ஆட்டினாள்…

“அப்புறமும் ஏன்? வெறும் ஹ்ம்ம் மட்டும் சொல்லாத.. கடி ஆகுது…”

“நானே பாத்து வாங்கணும்னு நினைச்சேன்”

“ஓஹ்.. இனிமே இப்டி பண்ணாத.. வீக் எண்டுல நேரமே போய்ட்டு வந்துடு.. இல்லையா ஆப்ல போடு…” என கடுவன் பூனை கடு கடுத்தது…

“ஹ்ம்ம் சரி” என்று போய் விட்டாள்…

அவள் வெறும் ஹ்ம்ம் என்றும்.. எதை சொன்னாலும் சரி என்றும் சொன்னதும் பிடிக்கவில்லை… இது அவனை தள்ளி வைக்க நினைப்பது போலவே இருந்தது…

உரிமை பட்டவன் உரிமை குடுத்தால் மட்டுமே பெண் என்பவள் எதையும் பகிர்வாள்… நிறையவும் பேசுவாள் என்பதை யார் அவனுக்கு புரிய வைப்பது…..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 28

எல்லா நாளும் வண்ணமயமாக போகவில்லை என்றாலும்… தெளிந்த நீரோடையாக சென்றது இருவருக்கும்… இருவரும் பேசி கொள்வது மிக குறைவு… வார்த்தைகள் பரிமாற்றம் அவ்ளோவாக இருக்காது… ஆனால் ஒருத்தர் எந்த நேரம் வீட்டில் இருப்பர்.. எத்தனை மணிக்கு கிளம்புவர், என்னவெல்லாம் செய்வர் எல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள் பேசிக்கொள்ளவில்லை என்றாலும்..
இவளுடைய வழக்கமான பழக்க வழக்கம் கூட அவன் கவனித்திருப்பான் தான்… அதை போலவே அவனோடதும் அவளுக்கு அத்து பிடி…

வார இறுதியில்.. அதாவது ஞாயிற்று கிழமையில் இருவரும் சேர்ந்தே சர்ச்க்கு மட்டும் சென்று வருவார்கள்…இது அவள் வருந்தி கேட்டுக்கொண்டதால் மட்டுமே… அவன் அப்பொழுது மட்டும் பைக்கில் அழைத்து செல்வான்… சில நேரம் சர்ச் முடித்து விட்டு வேற வேலைகள் இருந்தால் அவளை பஸ்சில் வர சொல்லிவிட்டு சென்று விடுவான்…

சர்ச்க்குள் அவன் தன்னோடு இருந்தால் மட்டும் போதும் என்கின்ற எண்ணம்… இவளுக்கு…

சிறு வயதில் ஒரு விருப்பமும் உண்டு.. தன்னுடையவனோடு சர்ச்க்கு செல்ல வேண்டும் அதுவும் ஒரு வாரமும் தவறாமல்… அது நிறைவேறுனதில் ஒரு திருப்தி…

இதோ அவர்களுக்கு திருமணம் முடிந்தும் இரு மாதங்கள் ஆனது…அது போக, இவர்கள் ஆரம்பித்த ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது… ஒரு வாரம் அல்லது இரு வாரத்தில் முடிந்து விடும்…

இந்த வாரம் டெப்ளய்மேன்ட்.. அடுத்த வாரம் டாக்குமெண்டஷன்… ஏதாவது டெபிளாய்மென்ட்ல் பிரச்சனை என்றால் மட்டுமே இன்னும் சில நாட்கள் தள்ளும்…

அது ஒரு புதன் கிழமை.. அன்று டெபிளாய்மென்ட் கூட… வழக்கம் போலவே 7:30க்கு கிளம்பிவிட்டாள்… அவன் இன்னும் வெளியே வந்துருக்க வில்லை.. அவன் இப்டி இருந்ததும் இல்லை… அவள் வீட்டை விட்டு கிளம்பும் போதே அவனும் கிளம்பி இருப்பான்…

என்னவா இருக்கும் என யோசித்தபடி ஒரு ஐந்து நிமிடம் ஹால் சோபாவில் அமர்ந்தாள்… சரி தான் போ.. என்றும் கடந்து செல்ல முடியவில்லை… பேசாட்டி உள்ளே போய் பார்ப்போம் என்று போய் பார்த்தாள்.. அவன் இன்னமும் உறங்கி கொண்டிருந்தான்…

இவளோ, “ஏங்க, ஏங்க, எந்திருங்க..என்ன ஆச்சு உடம்பு சரி இல்லையா?” எவ்ளோ கூப்பிட்டு பார்த்தும் அவன் எழும்பவில்லை…
அவனை உலுக்கி எழுப்பும் போது தான் தெரிந்தது… அவன் உடம்பு அனலாய் கொதிக்கிறது என்பது…

“ஏங்க, ஏங்க” எவ்ளோ உசுப்பி விட்டாலும் அவன் முனங்க மட்டுமே செய்தான்…

இது வேலைக்காது என மட மடவென அரிசி கஞ்சி வைக்க ஆரம்பித்தாள்… அந்த அபார்ட்மெண்ட்இல்..ஒரு டாக்டர் இருந்தார்.. அவரின் மனைவியும் டாக்டர் தான்.. ஜெனரல் டாக்டர்… எமெர்ஜென்ஸி என்று சொன்னால் வருவார்கள், அதே சமயத்தில் அங்கே இருந்தால்…

அவர்களை தற்சமயம் என கூப்பிட்டு பார்த்தாள்.. அவர்கள் வருவதாகவும் சொன்னார்கள்.. அவர்கள் வருவதற்கு முன்னே அரிசி கஞ்சி வைத்து முடித்திருந்தால்…

அந்த டாக்டரும் வந்தார்கள்… அவனை சோதித்து பார்த்து… நல்லா கோல்டு இருக்குற மாதிரி இருக்கு.. மூன்று நாள்ல சரி ஆகிடும்… இப்போதைக்கு இன்ஜெக்ஷன் போட்டு விடுறேன்… டப்ளேட்ஸ் எழுதி தரேன்… சூடான ஆகாரம் குடுங்க… சூப், ரசம் சாதம்.. கஞ்சி.. இந்த மாதிரி குடுங்க.. சரி ஆகிடுவாங்க என இன்ஜெக்ஷன் போட்டு விட்டு கிளம்பி விட்டார்…

அவர் சென்றதும்…வேகமாக வந்து கஞ்சியை அவனுக்கு புகட்டினாள்…

அவனுக்கும் பசியும் இருந்தது போலவே… ஒரு செம்பு நிறைய குடித்துருப்பான்... அவன் பின்னாடி தலைகாணி வைத்து சாய்ந்து அமர வைத்தாள்….. அதற்குள் சமைத்து எடுத்து விடலாம் என சமையல் அறைக்கு சென்றாள்.. அவன் சோர்வாக இருப்பது ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தியது…

சூப் வைத்து விடலாம் என்று ஒரு குக்கரில் காய்கறியை வெட்டி போட்டு விட்டு.. பின், சிறிதளவு வெள்ளைபூண்டுவை தட்டி போட்டாள்.. சிறிதளவு சீரகத் தூள்.. சிறிதளவு மஞ்சள் தூள்… பின், முழு மிளகு, உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் போட்டு… தண்ணீர் ஊற்றி வேக வைத்தால்… அதற்குள், அவளுக்கு தெரிந்த சுக்கு காபி செய்ய ஆரம்பித்தாள்… கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் மல்லி, கொஞ்சம் திப்பிலி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து.. அதை கொதிக்கிற தண்ணியில் போட்டு கூடவே பனங்கற்கண்டு சேர்த்து… மீண்டும் கொதிக்க வைத்து சுண்ட வைத்தாள்… அவன் என்ன பண்ணுகிறான் என்று பார்க்க அறைக்குள் சென்றாள்…

அவனோ கொஞ்சம் தெளிந்து இருந்தான்…

இவளே போய் அவனிடம்… “இப்போ பரவலயா?” என்று கேட்டாள்…

“ஹ்ம்ம் என்று கூறி தட்டு தடுமாறி எந்தித்து நின்றான்…

“என்ன ஆச்சு, உக்காருங்க”.

“இல்லை னா குளிக்கணும், கிளம்பனும்”

“ஆபீஸ் போணுமா? லீவ் போடுங்க”

“ஏய் இன்னிக்கு டெபிளாய்மென்ட் டி..”

“அது சரி தான்.. பிவேர் வச்சுட்டு எப்படி.. அப்போ வீட்ல இருந்து வேலையை பாருங்க”

“அது முடியாது வசுந்தரா…”

“ஓஹ் அப்போ குளிக்காம கிளம்புங்க”

லூசா நீ என்கிற மாதிரி பார்த்தான்.. பின் அவளை தாண்டி நடந்தான்..

“னா தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் ல.. குளிக்காதீங்க.. ரொம்ப கோல்டு இருக்கு..”

“ஹே, னா ஹாட் ஷாவர் தான் எடுப்பேன்..” என்று சொன்னப்படி குளியல் அறையை நோக்கி நடந்தான்…

“சரி ரொம்ப நேரம் குளிக்காதீங்க” என்று அவள் சொன்னது கேட்டாலும்.. உள்ளே நுழைந்து தாளிட்டு கொண்டான்…

அதற்குள் குக்கர் விசில் வந்து விடவே அதை அணைத்து வைத்தாள்… சுக்கு காபி வடி கட்டி… பிளாஸ்க்கில் அடைத்து வைத்தாள்… சூப்பை டப்பர் வார் பாட்டில் மாதிரி இருந்ததில் அடைத்தால்…

ஏற்கனவே சாதமும், ரசமும், துவையலும் தான் அவளுக்கு செய்திருந்தால்… அதே அவனுக்கு குடுத்துவிடலாம்…. மீதம் இருந்த கஞ்சியை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து கொண்டாள்… பாத்திரங்கள் எல்லாம் சிங்க்கில் போட்டு விட்டால்… வந்து கழுவிகல்லாம் என்று….

மணியை பார்க்க 9 ஆகியது… அவளுடைய மேனேஜர்க்கு கால் பண்ணி… சிறிது தாமதம் ஆகும்…. என்று ஒரு பெர்மிஸ்ஸின் மட்டும் சொல்லி கொண்டாள்…

இது வரை அவனும் குளித்து வெளியே வர வில்லை..

வேகமாக போய், குளியல் அறை கதவை தட்டினாள்…

“ஏங்க, வெளில வாங்க.. எவ்ளோ நேரம்”

“அவனுக்கு குளித்ததும் ஒரு சோர்வு வந்தது… மெதுவாக வெளியே வந்தான்…

நீங்க உக்காருங்க.. என்று அவனை அழைத்து பெட்யில் அமர வைத்தாள்…

“எந்த டிரஸ் போட போறீங்க”

“இரு நான் வரேன்”

“வேணாம் நானே எடுத்துட்டு வரேன்..”

வேகமாக போய் ஒரு ப்ளூ கலர் சட்டையும்… போர்மல் பிளாக் பாண்ட்ம் எடுத்துட்டு வந்தாள்…

அங்கே ஐயன் பண்ணுகிற டேபிள் இருந்தது. அதை விரித்து அவனுடைய பாண்ட் ஐயன் பண்ண ஆரம்பித்தாள்… அவன் ஒரு நாளும் கசங்கின சட்டையை போட்டு பார்த்ததில்லை… அவ்ளோ நேர்த்தியாக இருக்கும்…

“இரு, னா பண்ணிக்கிறேன்… நீ விடு”

“முடியாது, நீங்க அங்கேயே உக்காருங்க… னா ஐயன் பண்ணி எடுத்துட்டு வரேன்” என அழுத்தமாக கூறினாள்…

அவளுக்கு தவிப்பு… கோல்டு இருந்தாலும் இவ்ளோ சோர்வாக காய்ச்சல் கண்டு இருக்கிறானே என்று.. அவனை இப்டி அவள் பார்த்ததே இல்லை… சீக்கிரமாக குணமாகி விட வேண்டும் என்கிற தவிப்பு, பட படப்பு…

ஐயன் செய்த உடையை அவனிடம் குடுத்து அவள் வெளியேறி விட்டாள்… அவன் தட்டு தடுமாறி எப்டியோ உடையை உடுத்தி கொண்டான்… டக் இன் சரி ஆக பண்ண வில்லை… பட்டனும் பாதிக்கு மேல் போட முடியவில்லை.. அப்டியே பெட்ல் அமர்ந்து விட்டான்… ரொம்ப நேரம் ஆன மாதிரி தெரியவும்… வசுவே உள்ளே நுழைந்தாள்..

“என்ன சோர்வா இருக்கா” கவலையாக கேட்டாள்…

“ஹ்ம்ம்”

“இதுக்கு தான் குளிக்க வேண்டாம்னு சொன்னேன்… கஞ்சி இருக்கு…எடுத்துட்டு வரவா”

“ஹ்ம்ம்”

வேகமாக போய் எடுத்துட்டு வந்தாள்… அவன் கையை நீட்ட… இவள் மறுத்துவிட்டு அவளே அவன் வாய் பக்கத்தில் செம்பை நீட்டினாள்…

அவனோ, “இல்லை நீ குடு நானே குடிச்சுக்குறேன்..” தடுத்து பார்த்தான்…

“வேணாம், நா குடுப்பேன்… உங்களுக்கு தெம்பு இல்லை…” என அவனுக்கு புகட்டினால்…

முதலில் தயங்கினான் தான் பின், மட மடவென குடித்து முடித்து விட்டான்… குடித்த செம்பை வைத்து விட்டு…வந்தாள்…

அவன் உடையை சரியாக போட்டு கொள்ளவில்லை என கவனித்து.. பட்டன் போட்டு விட பக்கத்தில் வந்தாள்…

“தள்ளி போ” வசு.. என அவன் கூறினான்…

அது அவளுக்கு வருத்தம் தான்… ஆனாலும் அவன் சொல்றதை காதில் வாங்கி விட்டு மனதில் எடுத்துக்க கூடாது என்று.. திட படுத்திகொண்டால்…

“தள்ளி போறேன்.. பட்டன் போட்டு நேர் படுத்திட்டு” என்று சொல்லி பட்டன் போட்டாள்…

டக் இன் சரியா இல்லை.. நீங்க அத பன்றீங்களா இல்லை நான் பண்ணவா?

“ஹே இரு இரு நானே பண்ணிக்கிறேன்.. நீ வெளில போ” என்றதும்
வெளியே சென்றாள்… கேப் புக் பண்ணிக்கொண்டால்… பத்து நிமிடம் என காட்டியது…

அவன் லேப்டாப் பாக், இவள் லேப்டாப் பாக்… சாப்பாடு பை என அனைத்தும் ஹால் டேபிளில் வைத்தால்…

பின் அறையினுள் வந்தாள்… அவன் தலை வாரி கொண்டியிருதான்….

“ஏங்க, நா கேப் புக் பண்ணியிருக்கேன்.. அதுல போய்டலாம்…” என சொன்னாள்…

அப்புறம் இதுல என ஒரு குட்டி ஹாண்ட் கர்ச்சீப் எடுத்தால்.. அதற்குள் சிறிது ஓமம் துகள்கள் வைத்து கட்டிருந்தால்…. இத உங்க ஹாண்ட் கர்ச்சீப்ல வச்சுக்கோங்க… அப்போ அப்போ முகர்ந்து பாருங்க… முச்சு விட ஈசிஆஹ் இருக்கும்… என்று அவன் கர்ச்சீப்குள் வைத்து குடுத்தால்…

அதை அவன் மறுக்காமல் வாங்கி கொண்டான்..

“ஏங்க, கேப் வந்துடுச்சு.. போலாமா… ஓகேவா.. இல்லாட்டினா இருக்கீங்களா?”..

அவன் அவளை பார்த்து முறைத்தான்.. பின், போகணும் வசுந்தரா… என சொல்லவும்..

சரி என்று இருவரும் ஹால்க்குள் வந்தார்கள்.. அவள் பாக் அவள் தோளில் மாட்டிக் கொண்டாள்… அவன் பாக் ஒரு கையிலும்… சாப்பாடு பை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டால்…

“கொடு ஒரு பாக்..” என அவன் சொல்லவும்.. சாப்பாடு பாக் மட்டும் அவனிடம் குடுத்தால்…

பின் இருவரும் கேப்ல் ஏறி கொண்டார்கள்…

நிறுவனம் போவதற்கு அரை மணி நேரம் பிடித்தது… அவளே கேப்க்கு தொகையை செலுத்தி விட்டு கேம்பஸ்க்குள் நடக்க ஆரம்பித்தாள்.. அவன் அவனுடைய பாக் வாங்கி கொண்டான்…….

அவன் நிறுவனத்திற்குள் நுழைந்தவுடன்.. அவனை விட்டு தள்ளி நின்று கொண்டாள்… அவனும் ஏதும் சொல்ல வில்லை… இருவரும் ஒரே நேரத்தில் காங்பிறேன்ஸ் ரூம்க்குள் நுழைந்தார்கள்..

எல்லாருக்கும் ஒரு தலையசைப்பை குடுத்து விட்டு முன்னே சென்று அமர்ந்தான்…..

அவன் வந்ததால்.. இவள் லேட்டா வருவதை கவனிக்கவில்லை…

காவ்யா மட்டும் அவளிடம்.. “என்ன ஆச்சு, ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்” என்று கேட்க..

“ஏன் வீட்டுக்காரருக்கு உடம்பு சரி இல்லை” அதான்…

“அச்சோ என்ன ஆச்சு வசு”

“கோல்டு அண்ட் பிவேர் காவ்யா, அதான் கொஞ்சம் கவனிச்சுட்டு வர லேட்டா ஆகிட்டு.. பெர்மிஸ்ஸின் போட்ருந்தேன்…”

“ஹ்ம்ம் சரி.. ஈவினிங் சீக்கிரமா ஒர்க் முடிச்சுட்டு கிளம்பிடுங்க” என்று அவள் சொல்லவும்.. தலையை ஆட்டினால்…

மணியும் 11:30 ஆகியது.. அவனுக்கு சூப் குடுக்க வேண்டும்… எப்படி குடுக்கவென தவிப்பு…

அந்த கம்பெனியில் அனைவருக்கும் தனி ஐடி நேம் உண்டு.. அவர்கள் நிறுவனதிற்கு என்று ஒரு தனி இன்டெர்னல் கோம்முநிகாட்டர்(internal communicator), உண்டு… அதில் தான் தகவல்கள்.. சந்தேகங்கள் எல்லாம் பரிமாறி கொள்வர்..தனி ஐ டி மூலம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்…கிட்டத்தட்ட வாட்ஸ் ஆப் செயலி மாதிரி…

வேற வழி இல்லாம.. அதில் “ஹாய்” என்று அனுப்பினாள்…

சைடுல் நோட்டிபிகேஷன் அவனுக்கு அவள் என்று காட்டவும்… அவளை பார்த்தான்… அவளும் அதே நேரம் அவனை தான் பார்த்தாள்.. அவள் கண்ணில் ஒரு அலை புரிதலை கண்டன்..

அதுனால் “ஹ்ம்ம்” என்று அனுப்பினான்..

“ஹொவ் ஆர் யூ பீலிங்” என்று இவள் கேட்கவும்.

“ஹ்ம்ம் பெட்டெர்”.

“ஐ ஹவ் அ சூப்.. எப்படி குடுக்க”

மறுபடியும்.. அவளை விழி உயர்த்தி பார்த்தான்…

“வேண்டாம்” என்று சொன்னான்…

“முடியாது, குடிச்சே ஆகணும்.. ப்ளீஸ்..”

அவன் ஏதும் பதில் கூறவில்லை…

அவர்கள் காங்பிறேன்சே பக்கத்தில் ஒரு குட்டி செல்ப் சர்வீஸ் பண்ட்ரி இருந்தது… காபி, டீ, கிறீன் டீ.. பிஸ்கட்..அவர்களே எடுத்துக்கலாம்.. மெஷின் இருக்கும்…

இவளே, “ நா பண்ட்ரில வைப்பேன்.. நீங்க வந்து எடுத்துக்கோங்க…”
அப்பொழுதும் அவன் பார்த்து விட்டான் என்று தெரிகிறது… ஆனால் ஏதும் சொல்லவில்லை..

“ப்ளீஸ்ங்க..” என்று மறுபடியும் அனுப்பினால்…

“ஹ்ம்ம்” என்று சொன்னான்

சொன்னதும்.. சூப் பாட்டில் எடுத்து யாரையும் கவராதவாரு பண்ட்ரிகுள் சென்றாள்… அங்கே ஒரு ஓவன் இருந்தது.. அதில் சூடு பண்ணி கொண்டாள்… அதே சமயம் அவன் வரவும்..

அவன் கையில் குடுத்துவிட்டு.. காங்பிறேன்சே ரூமினுள் வந்து அமர்ந்தாள்…

சில நிமிடங்களில் அவள் குடுத்த சூப் பாட்டிலோடு வந்து அமர்ந்தான்.. ஒரு மிடரு குடித்தான்.. தொண்டைக்கு அவ்ளோ இதமாக இருந்தது…

அவளோ அடிக்கடி அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.. அவன் எப்படி இருக்கிறான்.. என்ன பண்ணுகிறான்.. அவன் நலன் மட்டுமே அவள் கருத்தில் இருந்தது..

அவள் இப்டி அக்கறையாய் தவிப்பாய் பார்ப்பது அலப்பரியா சந்தோசத்தை குடுத்தது… அவள் பார்வையில் குளிர் காய்ந்தான்…

இவளுக்கும் புரியவில்லை தான் நொடிக்கு ஒரு முறை அவனை மட்டுமே பார்த்து கொண்டிருக்கோம் என்று… அவளும் இன்னும் அறியவில்லை.. அவள் மனதில் அவன் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான் என்று...

சில தேடல்கள், சில அக்கறைகள் சில தவிப்புகள், சில ருசிகள்.. இவைகள் அறியாதவரை ஒண்ணும் பிரச்சனை இல்லை.. அறிந்து விட்டோம்.. இன்னும் வேணும் இன்னும் அதிகமாய் வேண்டும் என்று மனம் கூப்பாடு போடும்.. அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை அறியாமல் சென்று கொண்டிருந்தார்கள்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 29

மதியம் சாப்பாடு வேளை வந்துவிடவே.. ஒவ்வொருத்தாராக கிளம்பினர்கள்… இவளும் காவ்யாவிடம் மட்டும் சொல்லி கொண்டு மெடிக்கல் ஷாப் நோக்கி நகர்ந்தாள்…

காலையில் அந்த டாக்டர் குடுத்த டேப்லெட் வாங்கவில்லை… மதியமும் போடுவதற்கு இருந்தது…மெடிக்கல் ஷாப் நடக்கிற தூரம் இருந்தமையால் வாங்கிவிட்டு வந்தாள்…

பின், அவள் இடத்திற்கு வந்து பாக்க யாரும் இல்லை…. அவன் ஒருவேலை அவன் கேபின்க்குள் இருப்பானோ என்று அங்கே சென்றாள் கையில் லஞ்ச் பாக்கோடு மற்றும் மாத்திரையோடு…
அவனும் அங்கே தான் இருந்தான்… கதவை தட்டி அனுமதி கேட்டாள்…

அவன் வர சொன்னதும்…உள்ளே வந்தாள்…

வந்தவளை பார்த்த அவன் கண்களில் மின்னல் வெட்டி சென்றது…

அவளையே பார்த்தான்.. அவன் பேச மாட்டான் என்றுணர்ந்து… லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்கேன்…
சாப்பிடுங்க என லஞ்ச் பாக் நீட்டினால்… அவன் வேணாம் என்று மறுக்கவும்…

“சாப்பிட்டு தான் ஆகணும்.. சாப்பிடுங்க…” என்று அவன் பக்கத்தில் வந்து எல்லாவற்றையும் நகட்டி.. சாப்பாடு வைக்க இடம் விட்டால்…

பின், டிபன் பாஸ் ஓபன் செய்து அவன் முன்னால் வைத்தாள். சாப்பிடுங்க என்று ஸ்பூன் குடுத்தாள்..
எனக்கு வேணாம்.. என்று திரும்பவும் மறுத்தான்… காலையில மட்டும் ஊட்டி விட்டா இப்போ என்ன வந்துச்சாம் அவளுக்கு…என்று மறுத்தான்…

அவன் எப்படி வேணாம்னு சொல்லலாம் என்று… ரசம் சாதத்தை பிசைந்து அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்…அவன் மறுக்காமல் வாங்கி கொண்டான்…

இவள் இவ்ளோ நல்லா சமைப்பாலா என்று வியப்பு வேற… அவன் அப்பா ஒரு முறை பேசும் போது கேட்டிருக்கிறான்..ரசம் நல்லா வைத்தாலே.. மித்தது எல்லாம் சமைக்க வந்துடும்…

ரசம், தொவையல் எல்லாமே நன்றாக இருந்தது…

அவள் ஊட்டி விட விட வயிறு நிறைய சாப்பிட்டு விட்டான்.. அவளுக்கு தான் சங்கோஜமான மனநிலை.. அவன் உதடுகளின் வெம்மை, அவன் நாக்கின் ஈரம்.. அவளை திணற வைத்தது… ஆண்களுக்கும் மேன்மையான உதடுகளும் இருக்கும் என்று உணர்ந்த தருணம்.. அவனை எற்றெடுத்தும் பார்க்க முடியவில்லை… எப்போடா ஊட்டி முடிப்போம் என்று தவிக்க வைத்தது… அவன் சாப்பிட்டு முடித்ததும்… கேட்டான் “நீ சாப்டியா”…

கல்யாணம் முடிந்து முதல் முறையாக கேக்குறான்…அவள் கண்கள் கலங்குவது போல் இருந்தது… சமாளித்து “இல்லை.. நா கஃபேல சாப்ட்டுகிறேன்…இந்தாங்க மாத்திரை..” அவன் கையில் வைத்தாள்..

அவன் மறுக்காமல் போட்டு கொண்டான்…

பின், அவனிடம் வந்து பிளாஸ்க் நீட்டி.. இதுல சுக்கு காபி இருக்குங்க… வச்சுக்கோங்க…. 4 மணி கிட்ட குடியிங்க… என அவன் பக்கத்தில் வைத்தாள்… அவள் அக்கறை பிடித்தது…

இதற்கே முக்கால் மணி நேரம் ஆகியது… நா கிளம்புறேன் என்று சென்று விட்டாள்…

அவள் மறுபடியும் கீழே கஃபேக்கு வந்து.. வெறும் ஜூஸ் மட்டும் தனக்கு சொல்லி குடித்து விட்டு மேலே காங்பிறேன்சே ரூமிற்குள் வந்தாள்…

மதியம், சாப்பாடு வேளை முடித்து விட்டு இவளோடையாது தான் ப்ரோடுச்டின்ல டெபிளாய்மென்ட் பண்றதாக டைம் சொல்லிரிந்தார்கள்…

இவள் வர ஐந்து நிமிட தாமதம்… மேனேஜர் சுரேந்தரோ, “வசுந்தரா, உங்க டர்ன்.. ஏற்கனவே சொல்லிருந்தேன்… ஏன் இவ்ளோ லேட்…” என்று எல்லார் முன்னாடியும் கண்டிப்புடன் கேட்டார்….

“இல்லை கொஞ்சம் லேட் ஆகிட்டு..” என்று மெல்லமாக சொன்னாள்…எல்லார் பார்வையும் அவள் மேல் இருந்தது… அவமானமாக இருந்தது… தேவ், அங்கே தான் இருந்தான்… எல்லார் முன்னாடியும் சுரேந்தர் கேட்டது அவனுக்கு என்னவோ தெரில கோவம் வந்தது…

“சுரேந்தர், அதான் வந்துட்டாங்கள.. ஐந்து நிமிடத்தில் ஒண்ணும் ஆக போறது இல்லை… நீங்க வாங்க, அந்த மெட்ரிஸ் என்ன ஆச்சு” என அவரை அரை மணி நேரம் காய்ச்சி எடுத்துவிட்டான்…

அவள் டர்ன் படி அவள் கோடிங் அரை மணி நேரத்தில் எந்த பிரச்சனை இல்லாமலா முடிந்திருக்கணும்… ஆனால் அவளுக்கு முடியும் தருவாயில் எர்ரோர் அடிக்க ஆரம்பித்தது… அவளுக்கு ஏன் அப்டி வருது என கண்டு புடிக்கமுடியவில்லை…

கண்டிப்பாக மேனேஜர் கிட்ட திட்டு வாங்க போறோம்… என ரொம்ப பட படப்பா அமர்ந்திருந்தாள்….
அவளை பார்த்த அவனுக்கு ஏதோ தப்பாக பட்டது.. தன் இடத்தை விட்டு எந்தித்து… அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்…

“என்ன ஆச்சு” என கேட்டான்..

அவன் கேட்டதும் கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்தது…

“எர்ரோர் வருது.. தேவா..”

“எர்ரோர் தானே..சரி பண்ணிடலாம்… ட்ரை பண்ணு..”

“பண்ணிட்டேன்.. முடியல” என்று சொல்லும் போதே பயத்தில் கண்ணில் நீர் கோர்த்தது…

“ஏய், இப்போ மட்டும் உன் கண்ணுல இருந்து தண்ணி கீழ வந்துச்சு அவ்ளோதான் சொல்லிட்டேன்..”

ஹ்ம்ம் என கண்ணை சிமிட்டி உள்ள இழுத்து கொண்டாள்…

“சரி காட்டு, பார்க்குறேன்..”

“ஹ்ம்ம் இதோ என கொஞ்சம் அவனுக்கு முன்னால் நகட்டி காண்பித்தாள்”
அவன் சில நிமிட ஆராய்வுக்கு பின்… கண்டு பிடித்து… அதை சரி பண்ணி… எல்லாம் முடித்து கொடுத்தான்…

எர்ரோர் சரி ஆனதுக்கு அப்புறம் தான் உயிரே வந்தது…

இதற்கப்புறம் அவ்ளோடைய பார்ட் முடிந்து விட்டது…..

இன்னிக்கு என்று பகுத்து வைத்த எல்லா வேலைகளும் அந்த டீம் முடித்துவிட்டார்கள்…
6மணி ஆகுனதும் எல்லாரும் கிளம்பிவிட்டார்கள்… இவனோ சிலதை செக் பண்ணிக்கிட்டு இருந்தான்…

அவன் எப்படி போவான்… என்ன பண்ணனும்.. அவனை விட்டுட்டு போய்டலாமா இப்டி யோசிச்சிட்டே கிளம்பமா இருந்தால்…

அவனுக்கே மெசேஜ் பண்ணிவிடுவோம்…

“ஏங்க, எப்போ கிளம்புவீங்க?”

“இன்னும் 10 நிமிடம்”

“உங்களுக்கு கேப் புக் பண்ணவா?”

“ஏன் நீ என்ன பண்ண போற”

“உங்களுக்கு புக் பன்னிட்டு நா பஸ்ல வரேன்”

இவள் இப்டி சொன்னதுக்கு அவன் பதிலே சொல்லவில்லை…

ஏன் ஒன்னும் சொல்லல என சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தாள்…
“ஏங்க, கிவ் மீ காங்பிர்ம்யேஷன்(confirmation)”

“காலையிலே கொண்டு வந்து விட தெரிஞ்சவங்களுக்கு.. இப்போ கூட்டிட்டு போக தெரிலையமா?”
இவன் இப்படி சொல்லவும் கிளம்ப முடியவில்லை…

“சரி நா புக் பன்னிட்டு.. வந்ததும் சொல்றேன்.. நாம போலாம்”

சொன்னது மாதிரியே கேப் வந்ததும்…இருவரும் சேர்ந்து கிளம்பிவிட்டார்கள்….
வீட்டுக்கு சென்றதும் அவன் தன்னை சுத்த படுத்தி கொண்டு.. கட்டிலில் படுத்து விட்டான்…
இவளும் தன்னை சுத்தபடுத்தி கொண்டு.. இரவுக்கு சமைக்க சென்றாள்… கொஞ்சம் கஞ்சி, மதியம் வைத்த ரசம் இருந்தது…. அது போக பருப்பு துவையல்…செய்து முடித்து வந்து அவனை பார்க்க…அவன் தூங்கி கொண்டிருந்தான்…

அவன் எழுப்பி விட்டு… சாப்பிட அழைத்து வந்தாள்…

இருவரும் சேர்ந்து சாப்பிடுவது இரண்டாவது முறை… ரசம் சாதம் தான்.. இருவருக்கும் மனம் திருப்தியாக இருந்தது….

இவள் சமயல் அறையை ஒதுங்க வைக்க சென்றாள்.. இவன் சிறிது நேரம் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான்…

இவள்.. மிளகு பால் எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்…அவன் வாங்கி கொண்டான்….
நா சோபாவில் படுத்துகிறேன்… நீ ரூம்ல இருந்துக்கோ என்று சொன்னான்…
அதுலாம் வேணாம்.. ரூம்லயே படுங்க…

“ஹே, சொன்ன கேளு.. பிவேர் உனக்கும் தொத்திக்கும்…”

“எனக்கு வராது.. நான் அதுக்கு ஏத்த மாதிரி தான் இருப்பேன்… அப்டியே வந்தாலும் முனு நாள்ல சரி ஆகிடும்…இது ஒண்ணும் தல போற வியாதி கிடையாது..சோ, உள்ளே வந்து படுங்க.. சொல்லிட்டேன்” பட படவென பொறிந்துவிட்டு.. எங்கே மறுத்து விடுவானோ என்று விறு விறு என ரூமிற்குள் சென்றாள்…

சுகமில்லாத அப்போது… உனக்கு நான் இருக்கிறேன்…என்று ஆறுதலாய் பேச வில்லை என்றாலும் கூட.. செய்கை கூட யானை பலத்தை தந்து…. குணமக்கும்… வசுவும் அப்டித்தான் அவனுக்கு இருக்கிறாள்
…..
இந்த பீல் அவனுக்கு பிடித்திருக்கிறது… எவ்ளோ முயன்றும் ஐஸ்வர்யா கூட கம்பர் பண்ணாமல் இருக்க முடியவில்லை…
..
ஒரு முறை இவன் காலேஜ் படிக்கும் போது.. இதே மாதிரி காய்ச்சல் கண்டு படுக்கும் போது…. ஐஸ்வர்யாவோ..,”உனக்கு ஜுரம் சரி ஆனதும் சொல்லு தேவ்.. அப்போ நா பாக்க வரேன்.. எனக்கும் ஓட்டிக்கிச்சுன்னா எனக்கு கஷ்டம்” என அவனை பார்க்க ஒரு வாரம் வரைக்குமே வர வில்லை…..
அவன் எண்ணங்களோ பின் நோக்கி சென்றது!!!!!
 
Status
Not open for further replies.
Top