ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 20:-

இதோ திரிபுரசுந்தரி உதயசந்திரன் விட்டு பிரிந்து வந்து இன்றுடன் பத்து நாட்கள் ஆகிறது.

இந்த பத்து நாளும் ஒரு மனம் இந்த பிரிவு அவசியம் தானா என்று யோசிப்பதும், மறு மனமோ அவர்கள் பேசியதை கேட்டாய் தானே இந்த இழி நிலையை நீ அனுபவிக்கலாம்.

உன்னை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக உன் கணவனுக்கு எதற்கு இந்த நிலை கேட்டது.

இல்லை என் சந்துரு நான் சொன்னால் புரிந்து கொள் கொள்வார் என்ற மனதிடம், அவர் புரிந்து கொள்வது இருக்கட்டும், இதனால் ஸ்ரீமதிக்கு நல்ல திருமண வாழ்வு எப்படி கிடைக்கும் என்று கேட்டது இன்னொரு மனம்.

ஆமாம் அவளுக்கு நல்ல திருமண வாழ்வு அமைய வேண்டும் அதற்கு நான் விலகி வந்ததுதான் சரி என்று கூறியது அதே மனம்.

இன்னொரு அம்மாவாக ஏன் உன் அம்மாவை விட மேலாக, பசிக்கும் பொழுது அன்னமிட்ட உன்னுடைய கௌரியத்தை கிட்ட கூட சொல்லாம ஏமாத்திட்டு வந்திருக்க என்று இடித்துரைத்த மனதிடம், தான் அங்கு இத்தனை நாளாக இருந்ததே அவர்களை ஏமாற்றித்தானே சொன்னது மற்றும் ஒரு மனம்.

அப்போ உதய் உன்னை நினைச்சிட்டே காலம் தள்ளனும்ன்னு சொல்றியா கேட்ட மனதிடம் பதில் சொல்ல முடியாமல் நெஞ்ச நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டாள்.

இப்படி இரு வேறு மனமாக மாறி தனக்குள்ளே வாதாடி பட்டிமன்றம் நடத்தி சோர்ந்து போனாள் திரிபுரசுந்தரி.

வீட்டை விட்டு வந்தவள் அலைபேசியில் அனைத்து போட்டிருந்தாள்.

ஒரு வாரம் சென்று இருக்க, அலைபேசி ஆன் செய்தவள் கணவன், கணவன் வீட்டினார் அழைப்பை மனம் எதிர்பார்த்து தேட, அந்தோ பரிதாபம் யாரும் அழைக்கவில்லை அவளுக்கு.

ஒரு மூச்சு அழுதவள் மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. பேதையாய் தத்தளித்தால் உணர்வுகளின் பிடியில்.

பள்ளி வாட்ஸ்அப் குரூப்பில் வீடு வாடகைக்கு விடப்படும் என்று இருந்த முகவரியில் பேசி இங்கு வந்து தங்கி கொண்டாள்.
ஒரே காம்பவுண்டில் அருகருகே இரு வீடுகள். வீட்டு உரிமையாளரும் இருக்கவே பாதுகாப்பு பற்றிய பிரச்சனை இல்லை.

அங்கு உதயசந்திரன் இரண்டு நாட்களாக அறையிலேயே சோர்ந்து கிடந்தான். தங்களது அறையில் வியாபித்த, இப்பொழுதும் வியாபித்து கொண்டிருக்கும் தன் நாசியை தீண்டும் அவளது வாசம் அவளது இருப்பைக் கூறியது ஆனால் நிதர்சனமோ அப்படி இல்லையே.

கௌரி எவ்வளவு முயன்றும் இரண்டு நாட்களாக உணவில் கை வைத்தான் இல்லை.
ஏதோ தன்னைத்தானே தண்டிப்பது போல இருந்தது அவனது செயல்.

ஒரு கட்டத்தில் அவனது உண்ணா நோன்பை முடிவுக்கு கொண்டு வர, மகனது அறைக்கு சென்ற கௌரி இறுகிய குரலில் "என்னை மன்னிச்சுடு உதய்" என்க பதறி எழுந்தவன் "அம்மா' என்று அதட்டினான்.

"இல்ல உதய் நான்தான் உன் மனைவிய தவற விட்டுட்டேன். என்ன மன்" மேலும் சொல்ல வந்தவரின் வாயை பொத்தியவன் முகம் இறுகியவனாய் வேண்டாம் என்று தலையசைத்தான்.

"பின்ன ஏன் நீ சாப்பிட வராமல் இருக்க. உன் மனைவியுடன் நீ வாழ, அவளை தேட, வலு வேணாமா உனக்கு, வேணும் தானே" என்று சிறுவனிடம் கேட்பதை போல கேட்டவரிடம்
"நான் குளிச்சிட்டு வரேன் மா நீங்க சாப்பாடு எடுத்து வைங்க" அனுப்பிவிட்டு குளியல் அறை சென்றான்.

அவனது கோபத்தை குளிர் நீராலும் தணிக்க முடியவில்லை. தாய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதே மன கண்ணில் ஓடி இம்சித்தது.
'இது அத்தனைக்கும் காரணம் அவள் தானே கண்டுபிடிக்கிறேன் அவளை. முதல்ல தேடிப் பிடிச்சு பிரிவுன்னா என்னன்னு புரிய வைக்கிறேன். கை பொருளை தொலைச்சா வலி என்னன்னு தெரிய வைக்கிறேன்' சூளுரைத்தான்.

வேறு உடை மாற்றி கீழே வந்தவன் அன்னையின் கையால் உணவு உண்டு தன் நண்பனை காணச் சென்றான்.
அடுத்த மூன்று நாட்களில் திரிபுரசுந்தரி இருக்கும் இடம் தெரிந்து விட்டது உதயசந்திரனுக்கு.

அவளது நடவடிக்கையை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

அவள் இந்த பத்து நாட்களாய் வெளியில் வரவே இல்லை என்பதை தெரிந்து ஒரு மனம் பரிதவித்தது என்றால் மற்றொரு மனமோ இன்னும் இறுகிப்போனது தன்னவளின் பிடிவாதத்தை எண்ணி.

ஸ்ரீமதிக்கும் அண்ணி வீட்டை விட்டு போனது தெரிந்திருந்தாலும் அவளால் கடவுளிடம் வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

சுந்தரியை கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினம் இல்லை உதயசந்திரனுக்கு.
இன்னும் ஒரு பத்து நாளில் பள்ளி திறந்து விடும். அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கி விடும். அரசு ஊழியர் அவள். அதே பள்ளி தான் வேறு வழி இல்லை இப்போதைக்கு அவளுக்கு.

ஆயினும் ஐந்து நாட்களில் கண்டுபிடித்து விட்டான். கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் அவள் குடியிருந்த அந்த வீட்டையும் விலை பேசி விட்டான். தன் மனைவி அடுத்தவரின் வீட்டில் இருக்கக் கூடாது என்று.

இப்போது வீட்டின் உரிமையாளர் அவளே. பழைய உரிமையாளர் வாடகைக்கு இருக்கின்றார் அவளிடம். மூன்று வேலை உணவும் அவர்கள்தான் சுந்தரிக்கு கொண்டு வந்து தருவது.

மத்திய வயது தம்பதிகள் கல்லூரி செல்லும் மகன், மகள் என சிறிய குடும்பம் அது. அவர்களது மகள் தான் சுந்தரிக்கு பேச்சு துணை.

பள்ளி திறக்க இரண்டு தினங்கள்தான் இருந்தன.

மறுநாள் பள்ளிக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் தலை கிறுகிறுக்க அப்படியே மடிந்து அமர்ந்தாள்.

இருந்த மன அழுத்தத்தில் நாள் கணக்கு தெரியவில்லை அவளுக்கு. பள்ளி திறக்கும் நாளை காலண்டரில் பார்த்தவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது நாள் தள்ளி இரண்டு மாத மாதங்கள் மேலாகிறது என்று.

மன அழுத்தத்தின் காரணமாக இத்தனை நாள் இதனை தான் கண்டு கொள்ளவில்லை என்பது புரிந்தது அவளுக்கு. செய்வது அறியாது அமர்ந்தவளது விழிகள் நீரை சொறிந்தது.

உடனடியாக உதயசந்திரனுக்கு அழைத்துச் சொல்ல கைகள் பரபரத்தது. அவனது மார்பில் சாய்ந்து அவன் தந்தை ஆனதை சொல்லி முத்தமிட மனம் பேராவல் கொண்டது. ஆனாலும் தான் எடுத்த முடிவிலிருந்து பிறழாமல் மனதை இறுக கட்டிக் கொண்டாள்.

என்னை போல என் பிள்ளையும் தந்தையுடன் வாழும் பாக்கியத்தை இழந்து விடுமோ. இதற்கு தீர்வு தான் என்ன என்று யோசித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

மறுநாள் விழித்து எழுந்தவளுக்கு முதல் நாள் நடந்தது திரைப்படமாக மனதில் வலம் வர குளித்து உடைமாற்றி மருத்துவரை பார்க்க சென்றாள்.

அங்கு அவளுக்கு அடிப்படை பரிசோதனையை செய்த மருத்துவர், அவர் அவள் கருவுற்று இருப்பதை உறுதிபடுத்தினார்.

மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருந்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தவள் கேப் ஒன்று புக் செய்து வரவழைத்து வீட்டிற்கு பயணப்பட்டாள்.

இது அத்தனையும் நிழல் போல் அவளைத் தொடரும் உதயச்சந்திரனின் பார்வையில் இருந்து தப்பவில்லை. கண்கள் கனிவுற தன்னவளையை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனமோ 'என் குழந்தையை கூட என்கிட்ட இருந்து மறைக்கிறாள்' சாடியது அவளை.

இனி அவளை கவனிச்சிக்கிறேன் முடிவு எடுத்து விட்டான் அவன். பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகிற நிலையில் அன்று விடுமுறை தினம் காணும் யாவிலும் கண்ணாளனின் பிம்பமே தெரிந்தது அவளுக்கு.

பிரிவு அவளுக்கு வலிக்க வலிக்க பாடம் கற்று தந்தது காதலின் ஆழத்தையும் கணவனின் கருணையையும் சேர்த்து தான். ஆயினும் அடமாக இருந்தாள்.

விடியலில் கணவனின் முத்தத்திற்கு ஏங்கினாள். கையணைவில் தேநீர் பருகியவள், இன்று தேநீரை அறவே வெறுத்தால் ஒரு நாள் வேண்டுமென்று உதயசந்திரனின் தேனீர் கோப்பையை எடுத்துப் பருகினாள். அதுவும் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்தபடி.

அதற்கு உதயசந்திரனோ "பேபி இதெல்லாம் நான் தான் செய்யணும். அதுதான் லாஜிக்" சிரித்துக் கொண்டே கூற,
"பிரேக் த ரூல்ஸ் சந்துரு" என்றவளை இடையோடு சேர்த்து அனைத்து காதில் ரகசியமாக காதல் மொழி கூறியவன், "இதிலும் ப்ரேக் த ரூல்ஸ் என்றால் சந்துரு வெரி ஹாப்பி மச்சி" என்று சொல்லி கண்ணாடிக்க அவ்வளவுதான் விழி தெறித்து விழும்படி பார்த்தாள் திரிபுரசுந்தரி.
அவன் சொடுக்கிட்டு 'எப்படி ஓகேவா' என்று புருவம் உயர்த்த அவ்வளவுதான் தெறித்து ஓடி விட்டாள்.

இப்போது அதனை நினைத்துப் பார்த்தவள் மனம் பிசைய, எத்தனை அழகானதொரு வாழ்வை இழந்து விட்டோம் என்று தெரிந்தது சுந்தரிக்கு.

இப்படியே இருப்பது சரி இல்லை என்று உணர்ந்தவள் எழுந்து தயாராகி ஹோமிற்கு சென்றால் வழக்கம் போல சிறுவர் சிறுமியர்களுக்கும் பாடம் எடுத்தவள், இப்போது கூடுதலாக இல்லத்து கணக்கு வழக்குகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் வேலையையும் முன் வந்து ஏற்றிருந்தாள்.

அன்றும் அவ்வாறு செய்து கொண்டிருக்க, அப்பொழுது,
"சார் நீங்க இங்க வந்து இவங்கள பாருங்க இவங்க தான் இங்க இருக்க அக்கவுண்ட்ஸ்லாம் மேனேஜ் பண்ணிக்கிறது" என்றபடி அவனை அழைத்து வந்தால் அங்கு வேலை செய்யும் பெண்.
அங்கு கணினியில் விரல்கள் நர்த்தனமாட சுறுசுறுப்பாக, தீவிரமாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தால் அவள்.

"அக்கா இவங்க இந்த மாசம் டொனேஷன் அமௌன்ட் கொடுக்க வந்திருக்காங்க. அது என்னன்னு பாக்க சொல்லி மதர் உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க"

"நீ போ மலர் நான் பாத்துக்குறேன்" என்றபடி அந்த பெண்ணை அனுப்பி வைத்தாள்.

விழிகளை விலக்காமலே பேசி அவளை அனுப்பி வைத்தாள்.
"வணக்கம் சார், உட்காருங்க" என்றபடி கணினி திரையில் இருந்த கண்களை விலக்கி சற்று நிமிர்ந்தாள் பெண்ணவள்.

அவளது நேர்கோட்டு பார்வையில் அவனது உடல் மட்டும் தெரியவே இன்னும் சற்று நிமிர்ந்து பார்த்தாள். அவனும் கைகளை கட்டிக் கொண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததில் மின்னதிர்வு ஏற்பட்டவளாய் எழுந்து நிற்க, அவனோ அப்போதும் அசையாதவனாய் இன்னுமே அழுத்தமாக நின்றிருந்தான்.

அவனது பார்வை அழுத்தமாக அவளை தீண்டி சென்றது மேலிருந்து கீழ் வரை அவளை அழுத்தமாகவும் ஆராயும் விதமாகவும் பார்த்தான்.

நெற்றி வகிட்டில் குங்குமமும், நெற்றியில் அவளுக்கு பிடித்த விதமாக கோபுர வடிவில் பொட்டும் அந்த பொட்டுக்கு அணைக்கோடுகளாக கீழே குங்குமம் மேலே சந்தனமும் வைத்திருந்தால் பெண்.

அவள் இளம் பச்சை நிற சில்க் காட்டன் புடவை உடுத்தி இருந்தாள்.

அந்த புடவையை பார்த்தவனுக்கு என்னவெல்லாமோ தோன்றியது. தங்களின் முதல் கூடலை நினைவூட்டியது அது.

இங்கு வேலை முடித்துவிட்டு உடன் பணிபுரியும் ஒரு ஆசிரியரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாட அவர்கள் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி வந்திருந்தாள்.

உடல் மெலிந்திருந்தாலும் பொலிவோடு இருந்தாள். பின்னே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புதுப்பொலிவு ஏற்படத்தானே செய்யும்.

சற்று மேடிட்ட வயிறு நான்கு மாத சிசுவை தாங்கி இருப்பதாக கூறியது. அவனது கண்கள் அவளது வயிற்றை நோக்குவது புரிய முந்தானையை எடுத்து சொருகினாள். கண்களில் பயம் தேக்கியபடி வலியோடு அவனை பார்த்தாள்.

அவளது பார்வையில் அவன் கண்கள் கோபத்தில் சிவபெறியது.

அவன் தன்னை கோபமாகவே பார்க்கிறான் என்பதை, அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை தாண்டியும் புரிந்து கொண்டாள் பெண்.

அதில் சற்றே தடுமாறிய தனது கால்களை, தனது முன்னே இருந்த மேஜையை அழுத்த பற்றிய படி நின்று கொண்டாள்.

அவளது செயலில் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் நடந்து வந்தான் ஆயினும் அவளது பார்வை அவனை விட்டு அகலவே இல்லை.

அடர்ந்த சிகையும் முகம் முழுவதும் தாடிமாக கண்களுக்கு கருப்பு கண்ணாடிகள் அணிந்திருந்தான்.

வெண்ணிற முழு முழுக்கை சட்டையை மடித்து விட்டு இருந்தான், அதற்கு பொருத்தமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தான். கால்களில் கண்ணாடியாய் ஷூ பளபளத்தது.

அவனது அந்த தோற்றத்தில் அவளுக்கு ஏதோ தோன்ற அந்த நினைப்பு அவளுக்கு வலியை தந்ததா, இல்லை நிம்மதியை தந்ததா என்பது அவள் மட்டுமே அறிந்த விஷயம்.

தனது பிரிவு அவனுக்கு எந்தவித பாதிப்பும் தரவில்லை என்பதை அவனது தோற்றமே கூறியது. அவளுக்கு அதை நினைத்து ஒரு மனம் வலித்தாலும் அவனது கம்பீர தோற்றத்தை பார்த்து நிம்மதியும் அடைந்தது.
அவளது விழி மொழியை படித்தவன் இன்னுமே இறுகிப் போனான்.

அவளது பிரிவு அவனுக்கு உயிர் வலியை தருகிறது என்றும், இந்த சமுதாயத்திற்காக மட்டுமே இந்த தோற்றம் என்பதையும் அறிவாளா பெண்ணவள்.

உக்காருங்க என்றபடி அவள் முன்னே அமர்ந்தான் அவன்.
அமர்ந்தவள் எதுவும் பேசாமல் அவன் கையில் இருந்து பணம் வாங்கி, ரசீதை அவனிடம் தர அவனது அலைபேசி அடித்தது எடுத்துப் பேசியவன், "இதோ வரேன் ஸ்ரீம்மா" என்றபடி எழுந்து நின்றவன் குனிந்து அவள் காட்டிய இடத்தில் கையெழுத்து போட்டான்.

அப்போது புழுக்கத்திற்காக முன்புறம் எடுத்து விட்டிருந்த பட்டனை தாண்டி அவனது தங்க சங்கிலி முன்னே வந்து விழுந்து பல கதைகளை பேசியது. சுந்தரியின் பார்வை அந்த சங்கிலியை தொட்ட மீள 'ஓ மேடம்க்கு பழசெல்லாம் நினைவுக்கு வருது போல' எள்ளி நகையாடினான் மனதிற்குள்.

அவனது மனமோ 'உனக்கு சேலையை பார்த்து வர மாதிரி தான் அவளுக்கு செயினை பார்த்து வந்திருக்கு' பதிலுக்கு அவனையே வாரியது.
"தேங்க்யூ மேடம்" சொல்லியவன் அவளை ஆழ்ந்து அழுத்தமான ஒரு பார்வை பார்த்தவன், திரும்பியும் பாராமல் சென்றான்.

அவன் பார்வையில் செத்து விட்டாள் பெண். 'உன்னால் எப்படி இதை எனக்கு செய்ய முடிந்தது. இவ்வளவு தானா நீ' குற்றம் சாட்டியது அவளை.

அவன் பின்னே வேகமாக நடந்தவள் காரின் அருகில் ஸ்ரீமதி நிற்பதை பார்த்தாள்.

ஸ்ரீமதி ஒரு அடி சுந்தரியை நோக்கி எடுத்து வைக்க முற்பட உதயச்சந்திரன் வேண்டாம் என்று தலையசைதான்.


சுந்தரிக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது. கண்ணை விட்டு மறையும் அவனை ஓடி பிடித்துக்கொள்ள சொல்லி மனம் கட்டளையிட்டது. கால்கள் துவள அப்படியே படியில் அமர்ந்து கொண்டாள்.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21:- பகுதி 1

அன்று உதயசந்திரனை இல்லத்தில் பார்த்த பிறகு மனம் ஒரு நிலையில் இல்லை சுந்தரிக்கு.

மிகுந்த மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் தந்தது இந்த பிரிவு. உதயசந்திரன் வேண்டும் என மனம் ஆர்ப்பரித்தது மனம்.
அதனை அடக்கும் வழி அறியாது இரவெல்லாம் உறக்கம் தொலைத்து பித்து பிடித்த நிலையில் சுவரையே வெறித்தபடி அமர்ந்து கொண்டு இருப்பாள். அதுவும் அவன் அன்று பார்த்த பார்வை அவளை கண்களை மூடவும் விடவில்லை.

பாதுகாப்பு அற்ற உணர்வு தந்த அதீத பயத்தில் இரவு விளக்கை கூட அனைத்து வைக்க மாட்டாள்.

உதயசந்திரனின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அவன் எதிரில் இருப்பது போன்ற கற்பனையில் பேசுவது என்று அவள் அவளது வசமில்லை.
உணவு ஒரு வேளை மட்டுமே இறங்கியது அதுவும் பக்கத்து வீட்டு பெண் அருகில் இருக்கும் போது தான். மற்ற வேளை உணவை குப்பை தொட்டியில் கொட்டினாள்.

ஒரு வேளை உணவிற்கு கையேந்திய அவள், இன்று எந்த உறுத்தலும் இன்றி கொட்டுகிறாள் என்றால் சுந்தரி இயல்பாக இல்லை. மனம் முழுக்க உதயசந்திரனே வியாபித்து இருந்தான்.

குழந்தை பற்றிய சிந்தனை கூட இரண்டாம் பட்சமானது அவளுக்கு. ஏதோ தான் பெரிய தவறு இழைத்து விட்டது போல மனம் அவளை கொன்று கூறு போட்டது.

ஏன் பிரிந்து வந்தாள், தன் அன்னை, இப்படி எல்லாமே பின்னே சென்றது.
உதயசந்திரன் மட்டுமே பிரதானமாக இருந்தான்.

அதுவும் அன்று இல்லத்தில் உதயசந்திரனை பார்த்த பிறகு அவளது மனநிலை மிகவும் மோசமானது.

நவீன் அழைத்தால் சற்று இயல்பாக பேசுபவள், இப்போது எல்லாம் அதுவும் இல்லை. அவனுக்கும் வேளை பளு அதிகரித்தது. இந்தியா வரவேண்டி, அவசியத்திற்கு மட்டுமே உண்டு உறங்கி இரவு பகலாக வேலையே கதி என்று இருந்தான்.

"திருச்சிக்கு சென்று வந்து உதயசந்திரனிடம் சொல்லி விட்டாயா" என்ற கேள்விக்கு அன்று இருந்த மனநிலையில் பொய் சொல்லிவிட்டாள்.

அவனும் தோழியின் வாழ்வு நேராகி விட்டது என்று எண்ணிக் கொண்டான்.

அருகில் இருப்பவர்களுக்கே அடுத்தவர் மனநிலை புரிவதில்லை கடல்கடந்து இருப்பவனுக்கு எம்மாத்திரம்.

இங்கு உதயச்சந்திரனின் வீட்டில், ஸ்ரீமதி சுந்தரியை பார்த்தது பற்றி கூற, அவ்வளவுதான் கௌரி தன் மருமகளை உடனடியாக அழைத்து வரும்படி மகனிடம் சொன்னார்.

அதற்கு உதயசந்திரன் பதில் சொல்லாமல், உணர்வுகளை தொலைத்த படி அமர்ந்து இருக்க, மகனின் அருகில் சென்றவர், அவன் தலையை கோதியவாறு

"தம்பி முதல்ல சுந்தரியை வீட்டுக்கு கூட்டிட்டு வா. எதுவானாலும் உன் பக்கத்துல வச்சுக்கிட்டு சொல்லு. திட்டனும்னா திட்டு, மனசு விட்டு பேசி பிரச்சனையை சரி பண்ண பாருங்கப்பா. பிரிவு நிரந்தர தீர்வு இல்ல உங்க விஷயத்துல. அதுவும் நம்ம குடும்ப வாரிசு சுமந்துட்டு இருக்கிறவ எங்கேயோ எப்படியோ இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்" கறாராய் சொன்னார் நல்ல குடும்ப தலைவியாக.

ஒரு முடிவுக்கு வந்தவன் தன் நண்பனுக்கு அழைத்து "பிரணவ் சுந்தரியோட அம்மாவை நான் பார்க்கணும் ஏற்பாடு பண்ணு" சொல்லி விட்டு வைத்து விட்டான்.

சுந்தரியின் தாயை பார்த்து விட்டு வந்து அவளை அழைத்துக் கொள்ள முடிவெடுத்து இருந்தான்.

நாட்கள் செல்ல நான்காம் மாத முடிவில் அன்றைய தினம் செக்கப்பிற்கு சென்று இருந்தாள் திரிபுரசுந்தரி.

பரிசோதனையை முடித்தபடி கைகளை கழுவி விட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார் மருத்துவர்.

திரைக்கு அந்த பக்கம் படுத்திருந்த சுந்தரியோ, எழுந்து தனது ஆடைகளை திருத்தியபடி வெளியே வந்தாள்.

"உட்காருமா" எதிரில் இருந்து இருக்கையை காட்டினார்.

"தாங்க்யூ டாக்டர்" என்ற படி அமர்ந்தாள்.

"பிபி ரொம்ப ரைஸ் ஆயிருக்கு இந்த மாதிரி டைம்ல வெயிட் கெயின் ஆகணும் ஆனா உங்களுக்கு வெயிட் லாஸ் ஆகுது சாப்பிடுறீங்களா இல்லையா, ஒழுங்கா தூங்கறீங்களா இல்லையா, கண்ண சுத்தி கருவளையம். இந்த ரெண்டு மாசமா நீங்க மட்டும் தனியா வந்து செக்கப் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க ஹஸ்பண்ட் அப்புறம் உன் ஹஸ்பண்ட் சைடுல இருந்தோ இல்ல உங்க அம்மா அப்பாவையோ யாருமே வரல உங்க கூட" என்று கேட்டார்.

அவரது கேள்வியில் திணறிய சுந்தரியோ, "ஹஸ்பண்ட் வெளியூர் போயிருக்காங்க டாக்டர்." என்று தலையை குனிந்த படி சொன்னாள்.

"போன மாதமும் இதையே தான் சொன்ன" என்று கடிந்து கொண்ட மருத்துவர் மேலும்,

"இந்த மாதிரி நேரத்துல துணைக்கு யாரையாவது கூட்டிட்டு வந்தா நல்லதில்லையா. உங்கள பத்தி நாங்க பேசுறதுக்கு ஹெல்த்த பத்தி டிஸ்கஸ் பண்றதுக்கு இன்னும் வசதியா இருக்குமில்ல" என்று அவர் கேட்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.

மருத்துவர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, புயல் போல் கதவை திறந்து கொண்டு உதயச்சந்திரன் உள்ளே நுழைந்தான்.

அவனது வருகை எதிர்பாராத மருத்துவர் "வா வா சந்திரா எப்படி இருக்க. அம்மா, தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்காங்களா. சாரி சந்திரா உன் மேரேஜ்க்கு வர முடியல மக வீட்டுக்கு போயிட்டேன் கனடாவிற்கு" என்று சமாதானம் கூறியவர்.

"ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. பேஷண்ட் அனுப்பி விடுறேன் நாம பேசலாம். இல்லை எதுவும் எமர்ஜென்சியா" என்று கேட்டார்.

அவரையே பார்த்தவன் சுந்தரியின் அருகில் இருந்த நாற்காலியில் வெகு இயல்பாக அமர்ந்தான்.

சுந்தரி அவனது வருகையில் திடுக்கிட்டு அவனையே இமைக்காமல் பார்த்தாள். இருவரையும் மாறி மாறி பார்த்தவர் "நீ மிஸஸ் உதய்சந்திரனா. உன்னோட வைஃபா சந்திரா" என்று சுந்தரியிடம் ஆரம்பித்து உதயிடம் முடித்தார்.

"உதயச்சந்திரன்னு ஹஸ்பண்ட் பெயர் கொடுத்திருக்காங்க. ஆனா நீ தான் இவங்க ஹஸ்பண்ட்னு தெரியல சாரி" என்றார் மருத்துவர்.

"நோ இஸ்யூஸ் டாக்டர்" என்ற உதயச்சந்திரன் "அப்புறம் பேபி எப்படி இருக்கு டாக்டர்" கேட்டான்.

"பேபிக்கு என்ன அது சூப்பரா இருக்கு ஆனா உன் வொய்ப் தான் ரொம்ப வீக்கா இருக்காங்க. வெயிட் போன மாதத்தை விட இந்த மாசம் குறைஞ்சிருக்கு. போதாததுக்கு பிபி வேற ரைஸ் ஆயிருக்கு இப்படி இருந்தா நார்மல் டெலிவரி எப்படி பண்ண" என்று கடுமையாகவே சாடினார்.

மேலும் அவர் "சரியா தூங்குறது இல்ல போல கண்ண சுத்தி பாருங்க, எவ்ளோ கருவளையம், நல்ல தூக்கமும் சாப்பாடும் ஓய்வும் வேனும் உதய் இந்த மாதிரி நேரத்தில்" கூறவே
சுந்தரி தலையை தாழ்த்திக் கொண்டாள். ஓர விழியில் சுந்தரியை பார்த்தவன் எதுவும் பேசாமல் இறுக்கமாக அமர்ந்து இருந்தான்.

மருத்துவரின் பேச்சு சொல்லாமல் சொன்னது இதுதான் நீ உன் மனைவிய பாத்துக்குற லட்சணமா என்று.

அதில் அவனுக்கு கோபமே மிஞ்சியது 'பண்றது எல்லாம் பண்ணிட்டு அமைதியா தலை குனிஞ்சு உட்கார்ந்து இருக்கா' கடும் கோபம் கொண்டான்.

இருவரையும் பார்த்த மருத்துவர் பெருமூச்சுடன் "ஓகே உதய் சுந்தரியோட ஹெல்த்த நல்லா பாத்துக்கோ. நல்லா தூங்க வை. நல்லா சாப்பிட சொல்லு. நல்லா கவனிச்சுக்கோ உதய். ஹெல்த் டேப்லெட் எழுதி தரேன்" என்றபடி மருந்து சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்பினார்.

மருந்தகத்தில் மருந்துகளை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தனர் உதயச்சந்திரனும் சுந்தரியும்.

இப்போது உதயுடன் செல்வதா இல்லை தனியே செல்வதா என்று மனதுக்குள் பட்டிமன்றமே நடத்தினாள் சுந்தரி.

அவளது என்ன போக்கை புரிந்து கொண்டவன் போல் "இப்ப என்ன மேடம் என் கூட கார்ல வராம இன்னும் அவமானப்படுத்துவீங்களோ" வார்த்தைகள் கத்தியாய் வந்து விழுந்தன.

"உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் இப்படி இருக்கீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க. எது கேட்டாலும் மௌனம். இட்ஸ் கில்லிங் மீ சுந்தரி"
உன் மௌனமும், பிரிவும் என்னை கொல்லாமல் கொல்லுதடி பெண்ணே என்று சொல்லாமல் சொன்னான் உதயச்சந்திரன். அவனது கூற்றில் உயிர்வலி கொண்டு கண்கள் கலங்கினாள் சுந்தரி.

"பரவால்ல மேடம் கார்ல ஏறுங்க, உங்க வீட்டுக்கு கொண்டு போய் இறக்கி விடுவேன். உங்கள மாதிரி பாதியில விட்டுட்டு போக மாட்டேன்" என்று குத்தி காட்டி பேசினான்.

அவன் எய்த அம்பு சரியாக தைத்தது அவளை. கத்தி அழக் கூட திராணியற்று வாயை பொத்திக் கொண்டாள். அவளது செயலில் தலையில் அடித்துக் கொண்டவன் தன்னையே நொந்து கொண்டான்.

அச்சோ இந்த கோபத்தை என்ன செய்யன்னே தெரியல என்று ஆற்றாமையுடன் எண்ணினான்.
அவளிடம் சாரி கேட்க திரும்பியவன், அவள் காரின் முன்புறம் கதவைத் திறந்து ஏறுவது தெரிய, இவனும் ஓட்டுனர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

மௌனத்தில் கழிந்தன நிமிடங்கள். கண்டிப்பாக அவள் எதுவும் பேசப் போவதில்லை என்று புரிய,

"உன்ன ஒழுங்கா பார்த்துக்கலாமில்ல சுந்தரி. குழந்தைக்காக சொல்லல டெய்லி உன்ன கண்ணாடில பாக்குறியா இல்லையா தூக்கம் இல்லாமல் கண்ணை சுத்தி பாரு. கழுத்து எலும்பெல்லாம் தூக்கிக்கிட்டு இருக்கு. ஏம்மா இப்படி இருக்க". அவளவனின் குரல் அழுததோ என்னவோ.

இந்த அன்புக்கு அன்பும் காதலும் தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று விதியை நொந்து கொண்டு அமைந்திருந்தாள்.

"ஒழுங்கா தூங்கினா தான் என்னவாம்"

உனது மார்பின் கதகதப்பில், மூச்சுக்காற்றின் வெப்பத்தில் குளிர் காய்ந்த எனக்கு இரவெல்லாம் தூங்கா இரவாகி போனது என்று எப்படி சொல்ல ஏக்கமாக அவனையே பார்த்தாள்.

அவளது பார்வை அவனுக்கும் புரிந்தது. பின்னே அவனும் அதே துன்பத்தை தானே நித்தமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

இயலாமையில் காரின் ஸ்டியரிங் வீலில் கைகளை குத்திக் கொண்டான்.

சுந்தரியை வீட்டில் விட்டவன்,
"என் குழந்தை கூட என்கிட்ட இருந்து மறைச்சுட்ட இல்ல. இவ்ளோ பெரிய தண்டனை எனக்கு எதுக்கு சுந்தரி. மனைவிக்காக விட்டுக் கொடுக்கலாம் மனைவியை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா என் மனைவி நீ என்ன விட்டுட்டு போயிட்டியில்ல"
கரகரத்த குரல்லி சொல்லி அவளது முகம் பாராமல் சென்று விட்டான்.

மீண்டும் மருத்துவரை சந்திக்க சென்றான் தன் மனைவியின் உடல் நிலையை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய இருந்தது அவனுக்கு.

அவனது வரவை எதிர்பார்த்தவர் போல் "வா உதய்" என்றவர் எதிரில் இருந்த நாற்காலியை காட்ட அமர்ந்தவன் "சொல்லுங்க ஆன்ட்டி "என்றான்.

அந்த மருத்துவர் அவர்கள் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். உதய சந்திரனின் அம்மாவுக்கு அதிக உதிரப்போக்கு வந்து இவரது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இருந்தே பழக்கம் அவர்களுக்கு.

இன்று மனைவி தெரிந்தோ தெரியாமலோ இவரிடம் பார்க்க வந்தது அவனுக்கு அத்தனை நிம்மதியை தந்தது.

"உதய் உன் மனைவிக்கு உடல் சார்ந்த எந்த பிரச்சினையும் இல்லை மனசு அதுதான் அவளை படுத்தி எடுக்குது" நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"சுந்தரிக்கு வாந்தி கூட பெருசா இல்ல ஹெல்த் வொய்ஸ் ஷி ஈஸ் பெர்பெக்ட்"

"மனசு அது உடலையும் கெடுக்குது. ஏதோ ஒரு விஷயம் அவளை ரொம்ப பாதிக்குதுன்னு நினைக்கிறேன் அது என்னன்னு பாரு. ரொம்ப மன அழுத்தமும், அடக்கு முறையும் தான் அவளோட இந்த நிலைமைக்கு காரணம் ஷி ஈஸ் மெண்டலி டிப்ரஸ்ட் அண்ட் சப்ரஸ்ட்".

"அதீத பயம், அதிகமாக குறைவாகவோ சாப்பிடறது, தூக்கமின்மை இல்லனா எந்நேரமும் தூங்குறது, தனிமையே பெரியதும் நாடுகிறது, அதிகப்படியான யோசனை, இப்படி இதோட உச்சகட்ட நிலையா தற்கொலையை தேர்ந்தெடுப்பாங்க சிலர்".

"நடிகர்கள் ஒரு சிலர் பார்த்திருப்போமே உதய் சூசைட் பண்றாங்கல்ல. என்ன குறை அவங்களுக்கு இருக்கும் என்று நாம் யோசித்து இருப்போம் தானே. மனசளவுல ஏற்பட்ட பாதிப்பு தான். அது தான் இந்த ஒரு தீவிர நிலைக்கு அவங்கள தள்ளுது."

"மேலும் தனியா விடாதீங்க. எப்பவும் யாராவது கூட இருங்க. இந்த மாதிரி நேரத்துல ஹார்மோன்ஸ்ல ஏற்படும் மாற்றங்கள் கூட உடல் அளவுலயும் மனசுல அவங்களையும் பல மாற்றங்களை தருது பெண்களுக்கு."

"உன் மனைவிக்கு மனசளவுல அவங்களோட உணர்வுகளை மாற்றத்தை தருது" என்று மருத்துவர் தந்த நீண்டதொரு விளக்கத்தை கேட்டவன் சித்தம் கலங்கி போனான்.

மருத்துவரிடம் விடைபெற்று காருக்கு வந்தவன் அவரது பேச்சில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.

இன்னும் அவளை தனியே விட்டு வைப்பதில் அர்த்தமில்லை. அனர்த்தமான முடிவு ஏதேனும் எடுத்து விட்டால் அவனது வாழ்வின் அஸ்திவாரமே கண்டுவிடும் அல்லவா.

அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு இப்பொழுதே அவளை அழைத்துக்கொள்ள அவளது வீடு நோக்கி பயணப்பட்டான்.

இந்த மாதம் அவளது அம்மாவை பார்க்க கூட திருச்சிக்கு செல்லவில்லை. அவள் தான் உலகம் மறந்து பல நாள் ஆகிறது. ஆனால் உதய் சென்று வந்தான்.

திருச்சியில் சுந்தரியின் தாயை பார்த்து விட்டு மேலும் சில ஏற்பாடுகளை செய்து விட்டே வந்தான்.

அவன் சுந்தரியின் அம்மா லட்சுமியிடம் "உங்க மகள் அம்மா கிட்ட அத்தை. அதான் உங்கள பாக்க வரலை" தன் மனைவியின் சார்பாக அவனே சொன்னான் அந்த நல்ல விஷயத்தை.

அதனைக் கேட்டவர் கண்கள் கலங்கி வான்நோக்கி கையெடுத்து கும்பிட்டு தெய்வத்திற்கு நன்றி சொன்னார்.

"நீங்க எங்களோட வந்து இருக்கனும் அத்தை. இன்னும் ஒரு நாலஞ்சு மாசத்துல அவளுக்கு குழந்தை பிறந்துடும். குழந்தைய பார்த்துக்கிற கடமையும் பொறுப்பு உங்களுக்கும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்" என்று சொல்ல, முதலில் மறுத்தவர் பின்பு சம்மதித்தார்.

"நீங்க எங்களோட வந்து இருக்கலன்னா சுந்தரி எங்களை விட்டுட்டு உங்க கூட வாழ வருவா அதுதான் நடக்கும்" என்ற உறுதியான குரலில் கூற,

அதிர்ந்து பார்த்தவரை கண்டு ஆமோதிப்பாய் தலையசைத்து "கண்டிப்பாக நடக்கும்" என்றவனின் மனமும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லியது.

"நீங்க தான் முடிவு பண்ணனும் அத்தை" என்றவன் கைதேர்ந்த வியாபாரியாக பேசி சம்மதிக்க வைத்தான்.

"உங்க அண்ணன் எங்க தாலி பிரிச்சு கோக்குற விழாவுக்கு வந்தாங்க. சுந்தரி சொல்லி இருப்பாளே அத்தை. உங்கள பாக்கணும்னு சொன்னாரு"
கசந்த முறுவல் தோன்ற

"எனக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்ல தம்பி. இந்த 18 வருஷம் நான் ஒரு பற்றற்ற வாழ்க்கை தான் வாழறேன். என் பொண்ணு மட்டும்தான் ஆதாரம் என் வாழ்க்கைக்கு. அன்றைக்கு நான் கேட்டபோது என் பொண்ண பாத்துக்க ஆள் இல்லை. ஹோம்ல வளர்ந்தா. இப்போ அவளுக்கு தான் நீங்க இருக்கீங்களே தம்பி"

தனக்கு யாரும் வேண்டாம். தன் மகளுக்கும் கணவனான நீ மட்டுமே போதும் என்று அவர் கூறியதை இப்பொழுது நினைத்துக் கொண்டான்.

அவங்களோட அண்ணனை எனக்கு எப்படி தெரியும்ன்றது கூட தெரிஞ்சுக்க விருப்பமில்லை. அந்த அளவுக்கு பிடித்தமின்மை உணர்ந்து கொண்டான் அவன்.
ஆனால் அவன் அறியவில்லை லட்சுமிக்கும் அவனைப் பற்றி தெரியும் என்று.

இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டு காரை ஓட்டி வந்தான்.
திடீரென்று பிடித்துக் கொண்ட மழை, நொடியில் பெரும் மழையாக உருமாறியது.

வேகமாக வண்டியை ஓட்ட முடியாமல் மெதுவாக ஓட்டியவனின் உள்ளுணர்வு அபாய எச்சரிக்கையை தந்தது.

வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டவன் சுந்தரியின் வீட்டை அடையவே 3 மணி நேரம் மேலாக எடுத்துக் கொண்டது. அதற்குள்ளாகவே அவனது மனம் படபடத்தது. தனது வண்டியை நிறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் வாயில் கதவை திறந்தவன் கண்டதெல்லாம் வாசலில், மழையில் கிடந்த சுந்தரியை தான்.

பதறியவனின் உயிர் ஒரு நொடி நின்று துடித்தது. விரைந்து சென்று அவளை கையில் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று கட்டிலில் கிடத்தியவன் கைகள் நடுங்க நாசியில் கை வைத்துப் பார்த்தான் மூச்சு வந்தது இவனுக்கும் போன உயிர் வந்தது.

அவளது நனைந்த ஆடைகளை கலைந்தவன் வேறு ஆடைகளை அணிவித்தான். கொதிக்கும் உடல் சொன்னது அவளின் உடல் நிலையை.

மீண்டும் கைகளில் அள்ளிக் கொண்டவன் தனது காரில் பின் சீட்டில் கிடத்தினான்.
அவள் குழந்தைக்காக பார்க்கும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மருத்துவர் வந்து சுந்தரியை பார்க்கும் வரை அவன் தன் வசம் இல்லை. கடும் காய்ச்சல் கொண்டிருந்தாள்.
இன்னும் சற்று நேரம் விட்டிருந்தால் சுந்தரி நிச்சயம் ஜண்ணி கண்டு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர் சொல்ல ஆறடி ஆண் மகன் சர்வமும் ஒடுங்கிப் போனான்.

'அவளை கண்டுபிடித்த உடனே நான் கூட்டிட்டு வந்து இருக்கணும். தனியா விட்டுட்டு தப்பு பண்ணிட்டேன்.'

சுந்தரிக்கு சிகிச்சை நடக்கும் இந்த இரண்டு தினங்களாக இதையே எண்ணி நொந்து போனான்.

கௌரியோ அவளை கண்டுபிடித்த அன்றிலிருந்து அழைத்து வர சொல்லிக் கொண்டிருக்க. இவன் தான் என்ன விட்டுட்டு போனாள் இல்ல முதல்ல உணரட்டும் முரண்டு பிடித்தான். அவள் சொல்லாமல் தவிக்க விட்டுப் போன ஆதங்கம் கோபமாக ஒரு மாறி இருந்தது.

'தனக்கு அழைத்து பேசுவாள். தன்னை பார்த்ததும் கிட்ட வருவாள். எல்லாத்துக்கும் மேல குழந்தைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கண்டிப்பா என்கிட்ட ஓடி வருவா' என்ற அவனது எண்ணத்தை அவள் தவிடு பொடி ஆக்கியதை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இன்று வருவாள், நாளை தனக்கு அழைப்பாள் என்று எதிர்பார்த்து இறுகிப் போனான் உதயச்சந்திரன். அதன் இறுதி நிலையாக தான் அன்று அவளிடம் அப்படி பேசி வைத்தது.

ஆனால் அதுவே அவளது இந்த நிலைக்கு காரணம் என்று நினைத்து இருக்க மாட்டான்.

மூன்று நாட்களாக கண்விழிப்பதும் மீண்டும் மயக்கமாகுவதும் என இருந்தவள், நான்காம் நாள் முழுதாக கண்விழித்தாள்.
ஐந்தாம் நாள் எழுந்து அமர்ந்தவள், பரிபூரணமாக குணமாக ஒரு வாரமானது.

குழந்தை, அதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக தாயின் கருவறையில் வளர்ந்து வந்தது.

இந்த ஒரு வாரமும் சுந்தரியை ஒரு குழந்தையாக பார்த்துக் கொண்டான்.

அவன் முகம் சுளிக்காமல் செய்யும் அவளது அத்தியாவசிய தேவைகளை ஏற்க தடுமாறியது அவளது மனம்.

"வேண்டாம்" என்று மறுத்தவளை "எனக்கு உடம்பு சரியில்லைன்னா நீ பார்த்துக்க மாட்டியா" சொல்லி வாயை அடைத்தான்.

கௌரி உணவு கொடுப்பதும் ஸ்ரீமதி பாதி நேரம் அண்ணி உடனே இருப்பதும் என்று அவளை சுற்றி அவளது மனிதர்கள் இருக்க, அவளால் அவர்களை நிமிர்ந்தும் பார்க்க இயலவில்லை, இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்களது அன்பையும் அக்கறையையும் அது கனமாக மாறி இதயத்தை அடைத்தது.


மருத்துவமனையில் இருந்த போது ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசியவள், இதோ இப்போது வீடு வந்து ஒரு வாரமாகிறது இன்னும் மௌனியனாள்.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21 (பகுதி 2):-

கௌரி அவளை தனியே விடாமல் சமையலில், கோவிலுக்கு அழைத்து போவது என தன்னுடனே வைத்துக் கொண்டார்.


ஸ்ரீமதி குழந்தைகளுக்கு இதமான பாடல்கள் இசை என தொலைக்காட்சியில் ஓட விட்டு சுந்தரியின் சிந்தனைகளை அவளை விட்டு விலக்கி வைத்தாள்.

ஒரு முடிவுக்கு வந்தவளாக சுந்தரி தன் அத்தையை பார்க்க அவரது அறைக்கு சென்றாள்.

அவளை வரவேற்று தன் அருகில் அமர்த்திக் கொண்டு "சொல்லு சுந்தரிம்மா" என்றார் கௌரி.

"அத்தை நான் வீட்டை விட்டு போனது பத்தி நீங்க என்கிட்ட எதுவும் கேட்கலையே" தயங்கியபடி ஆரம்பிக்க

"என்ன கேட்கணும் சொல்லு" புன்னகையுடன் கேட்டார்.

"என்ன மன்னிச்சிடுங்க அத்தை" கண் கலங்கினாள்.

"சும்மா சும்மா அழக்கூடாது சுந்தரிம்மா. உன்னோட தனிப்பட்ட விஷயத்தை நான் கேட்கல. ஆனா உன் கணவன் நீ போனதுக்கு அப்புறம் ரெண்டு நாள் இரவு பகல்னு இல்லாம ரூம்லயே அடைஞ்சு கிடந்தான்.

உணர்வுகளை தொலைச்சு உள்ளுக்குள்ளே இறுகி போய் எங்களோட கட்டாயத்துக்காக சாப்பிட்டு பேருக்கு வாழறான்.நீ பேசினால் மட்டும்தான் அவன் சரியாகுவான். மனசு விட்டு பேசும்மா சரியா" தலையை வருடினார்.

"அத்த உங்களுக்கு என் மேல கோவம் வரலையா" கேட்டவளை புன்னகை ததும்பும் முகத்துடன் பார்த்து,

"நீயும் ஸ்ரீயும் எனக்கு ஒன்னு தான்" என்ற அவரது வார்த்தைகளில், நீயும் என் மகள் போலவே என்ற அவர் சொல்லாமல் சொன்ன விதத்தில் தாவி அணைத்துக் கொண்டாள்.

"ஹே சுந்தரிம்மா பார்த்துடா குழந்தைக்கு வலிக்க போகுது". அவளது முதுகை தட்டி ஆற்றுப்படுத்தினார்.

தெளிந்த முகத்துடன் அவரிடம் இருந்து விடைபெற்றாள்.

உதயச்சந்திரன் மனைவியிடம் நிறைய பேசவில்லை என்றாலும், அவளது மணி வயிற்றில் இருக்கும் மகவிடம் தொட்டு தடவி பேசி என லயித்து இருந்தான்.

அதில் இன்னும் ஒரு படி கோவம் பெருகியது சுந்தரிக்கு. அப்பாவும் பிள்ளையும் ஒன்னாகிட்டாங்க. மனம் தன் குழந்தையிடம் கூட கணவனை விட்டு கொடுக்க விரும்பவில்லை, இவள் அவனை பிரிந்து போனாள் என்பது விந்தையே.

இன்னும் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த பனிக்கட்டி உடையவில்லை.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருவருக்குமே அந்த பிரிவை பற்றி பேச மனம் விழயவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எங்கே தன்னை மீறி தன் கோப குணம் வெளிப்பட்ட விடுமோ, வார்த்தையை விட்டு விடுவோமோ என உதயச்சந்திரன் அஞ்சினான் என்றால் சுந்தரியோ குற்ற உணர்வில் தத்தளித்தாள்.

சுந்தரியின் உடல்நலம் கருதி கீழே மற்றுமொரு அறையை உதயசந்திரன் ஏற்பாடு செய்திருந்தான். அவளுக்கு பார்த்து பார்த்து கவனித்து கொள்பவன் இரவு உறங்கும் போது விலகியே இருக்க, அவள் இன்னும் ஒடுங்கினாள்.

அவன் தன்னை விலக்கி வைத்திருப்பது போல ஒரு பிரம்மை அவளுக்கு தோன்றியது.

கதைகளில் மந்திரவாதியின் உயிர் கிளியில் இருப்பது போல இவளது உயிர்ப்பு அந்த அறையில்.

அன்றைய தினம் உதயச்சந்திரன் வீட்டிற்கு வந்திருந்தனர் சாவித்திரியும் மேகலாவும்.

சுந்தரி கட்டிலில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருக்க, உள்ளே வந்த மேகலா

"ம்கூம் பாத்திங்களா அண்ணி நாம அவ்வளவு சொல்லியும் சொரணை கெட்டு போய் திரும்ப வந்து உட்கார்ந்து இருக்கிறத"

"அவளை சொல்லி என்னத்துக்கு ஆகுறது. அவ கல்யாணம் பண்ணிக்கிட்ட குடும்பம் அப்படி. நல்லா முடிஞ்சு வச்சிருக்கா புருஷனையும் அவங்க குடும்பத்தையும் வெட்கம் கெட்டவ"

அவர்களின் வசை மொழியில் கூசி நின்றால் சுந்தரி.

"இரு என் மகனுக்கு போன் போடுறேன்" என்றவர் அழைக்க போக

"என் போண தரேன் உங்க மகன் கிட்ட பேசுங்களேன்" என்ற உதயச்சந்திரனின் குரலில் அதிர்ந்து திரும்பினர்.

"உங்க மேல எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஆனா இப்ப ஊர்ஜிதம் ஆயிடுச்சு. நீங்க என்ன சொன்னீங்கன்னு எனக்கு தேவையில்லை. என் மனைவியை பேசினீங்களே உங்களுக்கு வெட்கம் சூடு சொரணை இருந்தா இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது வெளியே போங்க" என்றபடி வாசலை நோக்கி கைகாட்டியவன், அம்மா கத்தி அழைத்தான்.

பதறி ஓடிவந்த கௌரியை பார்த்து "இதோ இவங்களால தான் உங்க மருமகள் வீட்டை விட்டு போனாங்க. இந்த மாதிரி சொந்தம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு" என்று கேள்வியை பாதியில் நிறுத்திவிட்டு அவரை அழுத்தமாக பார்க்க,

அவரோ "எனக்கும் வேண்டாம் உதய் இவங்க மூஞ்சில முழிக்கிறது கூட பாவம்" தன் அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

அத்தனையும் கண்களில் வெறுப்பை சுமந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீமதியை அன்னையின் அறைக்கு அனுப்பி விட்ட உதயச்சந்திரன்,

மனைவியின் கை பற்றி தன்னரைக்க அழைத்துச் சென்றான் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவளை கட்டிலில் விட்டு விட்டு கதவை சாத்தியவன் கைகளை கட்டிக்கொண்டு கூர்மையாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அங்கேயே நின்றபடி.

அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் தொட்டு தடவி கண்களால் நிறைத்தாள் சுந்தரி.

ஜென்ம ஜென்மமாய் பிரிந்து தன் வீடு வந்த உணர்வு அவளுக்கு.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளது செயலை பொறுக்காதவன், குரல் செருமி அவளது கவனத்தை கலைத்தான்.

பயந்து பார்த்தவளை இரு கைகளை விரித்து கண்களால் வாவென அழைக்க "சந்துரு" என பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

"இத்தனை நாளாச்சாடி உனக்கு சந்துருன்னு சொல்ல" சினம் கொண்டவன் தன் கோபத்தை அனைப்பில் காட்டி இறுக்கம் கூட்டினான்.

அவனது இறுகிய அமைப்பில் "சந்துரு பாப்பா" என்று முனக

"ஆமா இப்ப சொல்லு பாப்பான்னு. என் நெஞ்சில் சாஞ்சிகிட்டு சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல பேபி"

குறைபட்டவனிடமிருந்து விலகி தான் பிரிந்த காரணத்தை எண்ணி பயந்தவளை கண்டு,

"என்கிட்ட பயம் வேண்டாம்டா பேபி. ஏன் அன்னிக்கு மழைல விழுந்து கிடந்த" இத்தனை நாளும் மனதில் உறுத்தியதை கேட்டு விட்டான்.

கணவனின் கேள்வியில் முகம் கசங்கியது சுந்தரிக்கு, அவளது நினைவு அன்றைய தினத்திற்கு சென்றது.

தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டி விட்டு உதயச்சந்திரன் சென்றிருக்க, இவளோ சென்ற அவனையே வெறித்து பார்த்திருந்தாள்.

ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவளை இது மேலும் காயப்படுத்த, அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தவள் மழை வெயில் என எதையும் உணர்ந்தாளில்லை. நேரம் செல்ல செல்ல மீண்டும் உதயச்சந்திரன் வந்து பார்க்கும் போது உணர்வற்ற நிலையில் கிடந்தாள் சுந்தரி. அதனை எண்ணிக் கொண்டவள்

"அது அன்றைக்கு நீங்க பேசினது ரொம்ப கஷ்டமா போச்சு சந்துரு. உங்கள கஷ்டப்படுத்தின எனக்கு, நானே தண்டனை குடுக்க மழைல நின்றேன்" என்று சொல்லி விட

சத்தியமாக இப்படி ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவில்லை உதயச்சந்திரன். குழந்தை பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்திருக்கிறாள்.

மருத்துவர் சொன்னது மாதிரி அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் அவளை படுத்தி எடுத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன், குழந்தை பற்றிய நினைப்பு கூட உனக்கு வரவில்லையா என்ற கேள்வியை விழுங்கி கொண்டான். தான் கேட்டு அது இன்னும் அவளுக்கு மன உளைச்சல் தந்து விட்டால் மெய்யாகவே உள்ளூர பயந்துபோய் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

"சாரி கண்ணம்மா உன்னை வருத்தப்பட வைக்க வேண்டும்ன்னு நான் அன்னிக்கு அப்படி பேசல. என்னையே அறியாமல் விட்ட வார்த்தைகள் அதுடா பிளீஸ் மறந்துடு பேபி" அவனது சமாதானத்தில் அவளுக்கு அழுகை வர

"என்ன மன்னிச்சுடுங்க சந்துரு" கதறி அழுதவளை இழுத்து மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டு தலையை வருடி விட்டவனின் கண்களும் கலங்கி போயின.

அழுகையை நிறுத்தாது இருந்தவளை தன்னில் இருந்து பிரித்து எடுத்து, "என்ன சுந்தரிம்மா" இது நொந்து கொண்டவன்

"இனி இப்படி எப்போதும் நடந்துக்க கூடாது சரியா எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லனும். நான் ஏதாவது தப்பு பண்ணாலும் என்னடான்னு சட்டையை பிடிச்சு கேளு பிரிந்து போறது பத்தி எப்போதும் முடிவு எடுக்க கூடாது என் மேல் ஆணை" என்று உறுதி மொழி கேட்டவனை கண்ணீர் விழிகளில் பார்த்தவள்,

பின்பு கௌரி சொன்னதுபோல் எல்லாம் சொல்லிவிடலாம் என்று நினைத்தவள்,

"சந்துரு நான் ஏன் வீட்டை விட்டுப் போனேன்னா" என்று சொல்ல வந்தவளை கைப்பற்றி அழைத்துச் சென்று மீண்டும் கட்டிலில் அமர வைத்து, தானும் அவள் எதிரில் அமர்ந்து அவளது கைகளை தன் கைகளில் பொதிந்து கொண்டு,

"உன்னோட அம்மா ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி வந்ததுக்கு அப்புறம் நம்மளோட இருக்க சம்மதிச்சுட்டாங்க. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே பேபி"

என்றவனை பார்த்து தடதடக்கும் இதயத்தை நெஞ்சில் கை வைத்து அழுத்தினாள்.

எப்படி தெரியும் என்ற கேள்வியை தொக்கி நின்றது அவளது விழிகள்.
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 22:-

உதயசந்திரன் சொன்னதை கிரகித்து கொள்ளவே இரண்டு நிமிடங்கள் எடுத்து கொண்டது திரிபுரசுந்தரிக்கு. அவனை அடிப்பட்ட பார்த்து "உங்களுக்கு எப்படி தெரியும் சந்..." சந்துரு என்று சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி விட,
"எப்போதும் உன்னோட சந்துரு தான் கண்ணம்மா." அவளது தலையை வருடி நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று வைத்தான்.

மீண்டும் கேள்வியாக பார்த்தவளின் கைகளை எடுத்து முத்தமிட்டு தன் தோளோடு சேர்த்து அனைத்து கொண்டவன், பக்கவாட்டில் திரும்பி பார்த்து,

"உன்னை முதன்முதலில் ஹோம்ல பார்த்தேன்னு உனக்கு தெரியும் தானே" ஆமாம் என்று தலையாட்டியவள், இது தான் தெரியுமே என்று பார்த்தாள்.

"அன்றைக்கு முதன்முதலில் பார்த்த அப்போதே உன்னை பாளோ பண்ணி உன் ஹாஸ்டல் வரைக்கும் வந்தேன்.
என்னையே அறியாம உன் குரலை, நீ அன்றைக்கு பாடின பாட்டை ரெக்கார்ட் பண்ணிக்கிட்டேன்."

"அப்புறம் ஒரு நாள் உன்னை சிக்னல்ல பார்த்து, அப்போதும் மீட்டிங் எல்லாம் மறந்துட்டு உன் பின்னாடியே வந்து உன் ஸ்கூல் கண்டுபிடிச்சேன்."

"அப்படியே ஒரு மாசம் உன் நினைப்பிலேயே தரிஞ்சேன். அப்போ ஒரு நாள் பைல் ஒன்னு தேடிட்டு இருக்கும் போது அப்பாவோட பைல் ஒன்னு கீழ விழுந்தது. எடுத்து பார்த்தா உன் அம்மா, உன் மாமா, என் அப்பா மூன்று பேரும் உள்ள போட்டோ."

அவனது கூற்றில் நம்ப முடியாத பாவனையில் ஆச்சரியமாக பார்த்தாள் சுந்தரி.

"ஆமாம் சுந்தரிம்மா உன் மாமா குடும்பமும் என் அப்பா குடும்பமும் ரொம்ப வருஷம் முன்னாடி பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்த நண்பர்கள்.

உன்னோட அம்மா என்னோட அப்பாவையும் அண்ணன்ன்னு தான் கூப்பிட்டுவாங்க. எங்க அப்பாவும் நன்பனோட தங்கச்சி என்னோட தங்கச்சி மாதிரி தான்னு, எல்லாரும் ஒரே குடும்பமா ஒன்னா தான் இருந்தது.

அப்புறம் வீடு மாற்றம் ஆகி எங்க தாத்தா குடும்பம் இங்க வந்துட்டாங்க. ஒரு நாள் இல்லத்தில தான் அப்பா உன்னை பார்த்து விட்டு விசாரிச்சு பார்த்து உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டு, உனக்கு ஸ்பான்சர் பண்ணி படிக்கவச்சாங்க.

உயிரோட இருந்த போது அப்பா இந்த குழந்தைகளுக்கு ஸ்பான்சர் பண்றது தெரியும் சொல்லிருக்காங்க. ஆனால் உன்னை பத்தி அந்த படத்தில பார்த்து தான் தெரிஞ்சது. நீ அப்படியே உன் அம்மாவோட சாயல் 100 சதவீதம். அப்பாவும் உன்னை உங்க அம்மாவச்சு தான் கண்டு பிடிச்சுருப்பாங்க. நான் ரமேஷ் வச்சு உன்னை பத்தின விவரங்களை தெரிஞ்சுகிட்டேன். ஆனால் அதுக்கு முன்னாடியே எனக்கு உன்மேல் விருப்பம் இருந்துச்சு. நீ நம்புற தானே கண்ணம்மா" தவிப்போடு கேட்டான்.

அன்று தாலி கட்டும் போது ஏன் திருமணம் செய்து கொண்டான் என்று கேட்டதற்கு பிகாஸ் ஐ லவ் யூ என்று சொன்னதன் பொருள் இன்று புரிந்து கொண்டாள் சுந்தரி.

நம்மளை பத்தி எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்ணிருக்காங்கன்னா கண்டிப்பாக அன்பும் நேசமும் இல்லாமல் வேற என்னவா இருக்கும் அவளது உள்ளம் எடுத்து உரைத்தது. அவனது அன்பில் கடுகளவும் சந்தேகம் கொண்டால் தான் மனித பிறவி இல்லை என்று எண்ணியவள்,

"எனக்கு குட் மார்னிங் கிஸ் வேணும் சந்துரு" என்க,

அவன் நேசத்தை அங்கீகரிக்கும் விதமாக அவள் முத்தம் கேட்க அவனோ அகம் மகிழ்ந்து போனான். மனைவியின் கண்ணோடு கண் நோக்கி கன்னங்களை கையில் ஏந்தி இதழோடு இதழ் சேர்த்து ஆழ்ந்த முத்தமிட்டால் இத்தனை நாள் பிரிவை அந்த ஒற்றை முத்தத்தில் ஈடுகட்ட நினைத்தானோ என்னவோ இன்னும் ஆழப் புதைந்து போனான் பெண் அவளின் அதரங்களில்.

பெண்ணவளின் கண்களில் கண்ணீர் கோடாய் இறங்கி இதழில் தீண்ட பதறி விலகினான் கணவன்.

"அச்சோ பேபி வலிக்குதா" பரிதவித்துப் போனான் அவளின் கண்ணீரை கண்டு.

'எனக்கு இன்னும் வேணும் சந்துரு. நீங்க என் கூட தான் இருக்கீங்க, என் பக்கத்துல தான் இருக்கீங்கன்னு நான் உணர்ந்துக்கிட்டே இருக்கணும் சந்துரு. ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க" மனைவியை புரிந்தவனாக அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். உதயசந்திரன்.

கேள்வியாக பார்த்தவளை கண்டு "இந்த மாதிரி நேரத்தில அது சரியா தப்பான்னு தெரியலையே பேபி" அவளது முகம் பாராமல், சிவந்துவிட்ட தன் முகத்தை அவளுக்கு காட்டாமல் கழுத்தில் முகம் புதைத்து கரகரத்த குரலில் சொன்னான்.

ஆனால் அவனது கைகளோ தனது பிள்ளையை வருடியது அந்த வருடலில் தான் சுந்தரிக்கும் புரிந்தது.

கணவனின் குரல் மாறுபாட்டை உணர்ந்து கொண்டவள், அவனது உணர்வுகளை தூண்டி விட்டு விட்டோமோ என்று கலங்கிப் போனாள்.

மெல்ல அவனை விட்டு விலகி "பால்கனியில காத்தாட உட்கார்ந்துக்கலாம் சந்துரு" என்க,

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் உள்ளூரப் புழுக்கத்தை உணர்ந்தவனாக, "சரி சுந்தரிம்மா" இருவரும் பால்கனியில் அமர்ந்து கொண்ட சற்று நேரத்திற்கு எல்லாம் ஸ்ரீமதி தேநீரும் சிற்றுண்டியும் எடுத்து வரவே, அவளையும் தங்களோடு சேர்த்து அமர்த்திக் கொண்டனர் கணவனும் மனைவியும்.

மூவருமாக சிரித்து பேசி நேரத்தை கழித்தனர். ஸ்ரீமதி சென்றுவிடவே "சந்துரு நான் உங்க கூட இருக்கிறதால ஸ்ரீமதிக்கு திருமண வாழ்க்கை அமையுறதுல பிரச்சனை வந்துருமே" பதைபதைப்பாய் கூற,

அவளது பேச்சில் இது என்ன புது கதை என்ற விதமாக பார்த்தவனை கண்டு ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவள்,

"இல்ல சந்துரு அன்னிக்கு அம்மாவை பாத்துட்டு உங்ககிட்ட எல்லாமே சொல்லணும்னு நினைச்சுட்டு வந்துட்டு இருந்தப்போ அந்த மோகன், உங்க அத்தை அப்புறம் உங்க பெரியம்மா மூணு பேரும் வழிமறித்து" என்று ஆரம்பித்தவளின் நினைவலைகள் பின்னோக்கி அன்றைய தினம் செல்ல,

அன்று திருச்சி பெண்களின் சிறைச்சாலையில் தன் அன்னையை சந்தித்து வெளியே வந்தவளை, அங்கிருந்த டீக்கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்த மோகன் கண்டான்.

ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவள் எதற்கு இங்கே வந்திருக்கிறாள். இங்கு வர என்ன தேவை இருக்கிறது என்று எண்ணியவன் அவளை பின்தொடர்ந்து சென்றான்.

அவளோ வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்திற்குள் சென்றாள். அலுவலகத்தின் உள்ளே சென்றவளை பின்தொடர முடியாமல் அந்த ஜன்னல் ஓரத்தில் தேங்கி நின்றவன், அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க மட்டுமல்லாமல் படம் பிடிக்கவும் ஆரம்பித்து விட்டான்.

சுந்தரியோ தன் அன்னையின் விடுதலையை பற்றி அவரிடம் கேட்க வேண்டியதை, கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அறியவில்லை தனது ரகசியங்களை ஒருவன் படம் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்றும் ஆதனால் தன் வாழ்வே கேள்விக்குறியாக மாறி போகப்போகிறது என்றும் வக்கீலிடம் பேசிவிட்டு தன் வீட்டிற்கு பயணப்பட்டவள்,

மனமோ தாயின் விடுதலைக்குப் பிறகு என்ன செய்வது உதயசந்திரனிடம் எப்படி கூறுவது என்பதை சுற்றிய வட்டமிட்டது.

மோகனையோ அவனது சின்ன தனமான செயலையோ கண்டு கொள்ள இயலவில்லை அவளால்.

அவளுக்கு மனதில் இருந்த குழப்பத்திலும் சிந்தனையிலும் சுற்றத்தை கவனிக்க தவறினாள்.

பேருந்தில் இருந்து இறங்கியவள் தன் வீட்டிற்கு செல்ல வண்டி எதுவும் அமர்த்திக் கொள்ள மறந்து நடந்தே சென்றாள்.

அவள் பின்னால் மோகனும் வந்தவன், அவள் வழியில் குறுக்கே வண்டியை நிறுத்தினான். சிந்தனை வயப்பட்டவள் சட்டென என தன் முன்னே நிறுத்திய வண்டியை கண்டு திடுக்கிட்டு ஈரடி பின்னடைந்தாள்.

வண்டி நிறுத்தி வந்து தன் அன்னை மற்றும் மேகலாவிற்கு அழைக்க, ஏற்கனவே அவன் சொல்லி இருக்கவே.

அவர்களும் இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்தனர்.
"என்னை ஏன் இப்படி நிறுத்தி வச்சுருக்க வழி விடு" ஒருமையில் தான் பேசினாள்.

அவன் அன்று உதயிடம் நடந்து கொண்ட முறையில் அப்படி பேச தான் வந்தது சுந்தரிக்கு.
அவனை சுற்றி செல்ல முற்பட்டவளை மீண்டும் தடுத்து நிறுத்தியவன், "ஒரு குறும்படம் பாக்குறீங்களா மிசஸ் சுந்தரி உதயசந்திரன்". என்று நக்கலாய் கேட்டவன் தன் அலைபேசியில் பதிவிட்டு இருந்ததை எடுத்து காட்டினான்.

முதலில் ஒன்றும் புரியாதவள் பின் அதிர்ந்து போய் கலவரமாக அவனைப் பார்த்தாள்.
"அப்புறம் ஒரு கிரிமினலோட பொண்ணு நீ, பாரம்பரியமான குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்ட ரைட்" அவனது கேள்வியில் இவளுக்கு நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

"இப்படிப்பட்ட ஒருத்திக்காக தான் என் பொண்ண வேணாம்ன்னு சொல்லிருக்கானா அந்த உதய்". பல்லை கடித்துக் கொண்டார் மேகலா.

உதயச்சந்திரனிடம் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்ள கேட்டபொழுது அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று அவன் மறுத்திருக்க அதன் வெளிப்பாடே இந்த வன்மம்.

"என் மகன அடிச்சு அவமானப் படுத்தினானில்ல, அவனுக்கு இருக்கு" தனது மகனின் உத்தமமான செயலை மறந்து பேசினார் சாவித்திரி.

அதுவரை சிலையென சமைந்திருந்தவள், விழிப்பு தட்டி "உங்க மகன் கட்டின மனைவிக்கு துரோகம் பண்ணினாரு. அதுவும் இல்லாம என் சந்துருவ பேசி அவமானப்படுத்தினார்" தன் கணவனை பேசவே இவள் கோவமாக உரைத்தாள்.

"ஆஹான்" நக்கலாக ஆரம்பித்த மோகன் "என் வாழ்க்கையில் முடிவெடுக்க அவன் யாரடி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போயிட்டான்" நறநற வென பல்லை கடித்தான்.

சுந்தரிக்கு அவன் சொன்னது புரியவில்லை. "என்ன பாக்குற போலீஸ் கிட்ட அடி வாங்க வச்சுட்டான் உன் புருஷன்" சொன்னவன்,

"ஆமா நீ கிரிமினலோட பொண்ணுன்னு தெரியுமா உன் புருஷனுக்கும் அவன் குடும்பத்துக்கும்" கேட்க, தன்னிச்சையாக இல்லை என தலையாட்டினாள் சுந்தரி.

"அப்போ உன்ன பத்தின உண்மை எல்லார்கிட்டயும் சொல்லிட வேண்டியதுதான்" மேகலா சொல்ல,
நன்றாக நிமிர்ந்து பார்த்த சுந்தரி "நானே சொல்லலாம்னு தான் முடிவு எடுத்து இருக்கேன்" மூவரையும் கூர்மையாக பார்த்தபடி சொன்னாள்.

"ம் சொல்லு.கௌரி கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுவா சாவித்திரியின்" நக்கல் பேச்சு இதயத்தை தைத்தது.

"என்ன பாக்குற நீ இருந்தா அந்த ஸ்ரீ பொண்ணுக்கு எப்படி நல்ல இடத்துல கல்யாணம் நடக்கும். இல்ல மருமகளோட அம்மா ஜெயிலுக்கு போனவங்கன்னு சொல்லிக்க தான் மதிப்பா இருக்குமா" என்று பேசிக்கொண்டே போக

'ஸ்ரீ யின் திருமண வாழ்வு இதை யோசிக்க தவறிவிட்டோமே' உள்ளூர கலங்கிப் போனாள் சுந்தரி.

அவர்களை இடையிட்டு
"நீ சொல்லு ஆனா நான் முடிவு பண்ணிட்டேன். என்னை அடித்து அவமானப்படுத்தின அவன ஊர் சிரிக்க வைக்க போறேன்" சொன்னான் மோகன்.

புரியாமல் அவனைப் பார்த்தாள் சுந்தரி. "என்ன புரியலயா மேடம். போஸ்டர் அடிச்சு ஒட்ட போறேன் ஊர் முழுக்க. இதோ வாசகம் கூட ரெடி கேக்குறியா. 'பிரபல நகைக்கடையின் உரிமையாளர் மனைவி ஒரு சிறை கைதியின் மகளா', 'சிறையில் வளர்ந்த பெண் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாள்' எப்படியிருக்கு".
அவளது கண்கள் கலங்கி கண்ணீர் வழிய நின்றாள்.

அவளைப் பார்த்து மூவரும் கைதட்டி சிரித்தனர்.
அவர்களையே வெறித்தவள், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு "நான் என்ன செய்யணும் சொல்லுங்க"

"உதயச்சந்திரனை விட்டு பிரியணும்"

"முடியாது"

"அப்ப போஸ்டர் அடிச்சு ஒட்டிட வேண்டியத தான்"

"வேண்டாம்" கண்ணீர் மல்க கை எடுத்துக் கும்பிட்டாள்.

ஏற்கனவே போஸ்டர் அடிச்சு என் மானம் போய் நிற்கதியா, நிராயுதபாணியா ஒரு முறை நின்னது போதாதா மனதோடு மருகினாள் பெண்.

"இதனால உனக்கு என்ன லாபம்"

"இன்னும் உனக்கு புரியலையா. உன்னை உயிரா நினைக்கிறான்டி உன் புருஷன். நீ இல்லாம போனா அவன் காலம் முழுக்க நடை பிணம்"

தன்னவனின் நேசம் பிறர் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன. அனுதினமும் அனுபவிப்பவளின் அகம் சொல்லுமே அவனின் அதிரூப அன்பை.

இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன சர்க்கரையாய் இனிக்கும் இனியவனின் நினைப்பில்.

அதனைக் கண்ட மோகனோ "நீ வாழுறயோ சாகிறயோ அது உன் பாடு. ஆனா அவனை விட்டு பிரியணும். எக்காரணம் கொண்டு நீ இருக்கும் இடம் தெரியக்கூடாது"

உதடு வளைய ஏளனமாய் பார்த்தவள் "சரி அவளோ தானே" என்றவள் அவன் எதிர்பாராத நேரத்தில் கைபேசியை பறித்து அங்கிருந்த சாக்கடையில் வீசிவிட்டு விறுவேனா நடந்தாள்.

"ஏய்" என அவர்கள் கத்தியது அவளது செவியை சென்று அடைந்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை.

அவள் மனமோ எதற்கும் அஞ்சவில்லை 'ஸ்ரீக்கு முதல்ல நல்ல இடத்துல கல்யாணம் ஆகட்டும். அம்மா ரிலீஸ் ஆகி வரட்டும். அப்புறம் சந்துரு கிட்ட சொல்லுவோம். இவனும் கொஞ்ச நாள் அடங்கட்டும்.

அதுக்கு இந்த பிரிவு அவசியம்."
சிறுபிள்ளைத்தனமாக தானே முடிவெடுத்தாள் உதயசந்திரனிடம் எதுவும் கலந்து ஆலோசிக்காமல்.

பிரிவை அவ்வளவு எளிதாக நினைத்து விட்டால் போலும். அந்நேரத்துக்கு அவளுக்கு அதுவே சரியாகப்பட்டிருந்தது போலவே.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மோகன் வேண்டுமென்றோ கிறுக்குத்தனம் எதுவும் செய்துவிட்டால் அது உதயசந்திரனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் எவ்வளவு பெரிய தலை குனிவு என்று எண்ணியே பயந்து போனாள்.

தன் கணவனிடம் சொன்னால் அத்தனையையும் நொடி நேரத்தில் மாற்றி அமைத்து விடுவான் என்பது தெரியாமல் போனது சுந்தரிக்கு.

அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் பொழுது இந்த மாதிரியான பின் விளைவுகளை பற்றி யோசித்திருக்காமலா இருந்து இருப்பான்.

அனைத்தையும் உதயச்சந்திரனிடம் சொல்லி முடிக்க அவனது முகத்தில் கொலைவெறி தாண்டவ மாடியது.

'அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்' மனதில் சூளுரைத்துக் கொண்டான்.

"ஸ்ரீயோட கல்யாணத்தை பத்தி கவலைப்பட எதுவும் இல்லை சுந்தரி மா. உன்ன பத்தி அம்மாவுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். ஸ்ரீக்கு தெரியாது தெரிஞ்சாலும் அது ஒன்னும் பிரச்சனை இல்ல மனுஷங்களுக்கான மரியாதை தெரியாமல் அவளை நாங்க வளர்க்கலாம் பேபி. ஸ்ரீ இன்னும் மேல படிச்சு முடிச்சுட்டேன் படிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்க நாலு வருஷம் ஆகும் டா. அவளா லவ் பண்ணினாலும் நாமளா பார்த்து கல்யாணம் பண்ணினாலும் குறுகிய மனப்பான்மை உள்ள ஒருத்தரை அவளுக்கும் பிடிக்காது, நாமளும் பார்க்க மாட்டோம். இன்னும் நாலு வருஷம் கழிச்சு நடக்க போறதுக்கு இப்போ எதுக்கு யோசிக்கிற" எடுத்து சொல்லி புரிய வைத்தான் அவளுக்கு.

அவள் இவ்வளவு சொன்னாலும் அவனது மனம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கவே செய்தது. அவனது மனம் முழுவதும் தன்னிடம் அவள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாமே என்று தான் ஆர்ப்பரித்தது. எவ்வளவு சுலபமாக இந்த பிரிவை தேர்ந்தெடுத்து விட்டாள் என்று எண்ணி மருகியது.

அவனது என்ன ஓட்டத்தை புரிந்து கொண்டவள் போல்
"முதல்ல பிரிவுன்னு மோகன் கிட்ட சொல்லிட்டு வந்தாலும், என்னால அந்த முடிவு எடுக்க முடியல சந்துரு. உங்க கிட்ட சொல்லிடதான் நினைச்சேன். ஆனால் திரும்ப திரும்ப போண் பண்ணி எப்போ கிளம்பி போறன்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டேன அந்த மோகன்.

உங்கள பிரிஞ்சு இருந்த பத்து நாள்லயே என்னால அங்க தாக்கு பிடிக்க முடியல. மனசு முழுக்க ரணமா உங்க கிட்ட வந்துடனும். உங்க கிட்ட பேசணும் அப்படின்ற தவிப்பு தான் இருந்துச்சு சந்துரு.

அந்த தவிப்பு அதிகமாகும் போதெல்லாம் அம்மாவையும் ஸ்ரீயையும் நினைச்சு கட்டுப்படுத்திக்கிட்டு அங்கேயே இருந்திடனும் வாழ்ந்திடனும் நினைச்சுப்பேன்" விழி நீர் திரையிட சொன்னாள்.

அதற்கு மேல் அவளை கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணியவன், அவளை தன் மீது சாய்த்து கொண்டு தோளில் தட்டிக் கொடுத்தான்.

இரவு உணவு உண்ட பின்னர் உதயச்சந்திரன் தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சுந்தரி ஸ்ரீமதிடம் பேசி விட்டு மாடி ஏறி விட்டாள்.

மாடி தோட்டத்தில் நின்று தன் வாழ்வின் கடந்த காலங்களை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் யாரும் மற்ற அனாதை இல்லை என்று எப்படி சொல்வது. அன்னையும் தந்தையுமாக ஒரு குடும்பத்தில் ஒரே செல்ல மகளாய் வலம் வந்தாலே ஆறு வயது வரை.

தனது வாழ்வு காலத்தின் கையில் சிக்கி சின்ன பின்னமானதை எப்படி சொல்வது.

மனதோடு பேசிக்கொண்டிருந்த அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் உதயசந்திரன். குழந்தையோடு சேர்த்து மனைவியை அணைத்துக் கொண்டு அந்த ஏகாந்தத்தை ரசித்தான்.

மெல்ல அவன் புறம் திரும்பியவள் "சந்துரு நானும் என்ன பத்தி சொல்லணும்" என்று சொல்ல மீண்டும் ஒரு உணர்வு போராட்டத்திற்கு அவளை தள்ள மனமில்லை உதயசந்திரனுக்கு.

தானே தனது கனத்த காலத்தை பற்றி சொல்லுவது என்றால் மீண்டும் ஒருமுறை அதனை வாழ்ந்து பார்ப்பதற்கு ஒப்பாகுமே.

அப்படி இருக்கையில் இவள் இப்பொழுது இருக்கும் இந்த நிலையில் இவளது இப்போதைய உடல் நிலையில் மீண்டும் ஒருமுறை மன அழுத்தத்திற்கு உட்பட்டால் அவளது நிலை என்னவாகும்,

"ப்ளீஸ் பேபி எதுவும் வேண்டாமே டா" இறைஞ்சுதலாய் சொன்னான் உதயச்சந்திரன்.

முன்பெல்லாம் அவன் அவள் தன்னிடம் அனைத்தையும் கூறி விட மாட்டாளா என்று ஏங்கியவன் இப்போது சொல்ல வேண்டாம் என்று தடுத்தான்.

அவனை புரிந்து கொண்டவளாய் "உங்க பக்கத்துல இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது சந்துரு" சொன்னவள் அவனை அழைத்துக் கொண்டு கல் மேடையில் அமர்ந்தவள் தானும் அருகே அமர்ந்து கொண்டாள்.

"உங்களுக்கு தெரியும் என்றாலும் நானும் என்னோட உணர்வுகளை இதுவரைக்கும் சொன்னதில்ல யார்கிட்டையும். எனக்கு இப்போ நீங்க இருக்கும் போது பகிர்ந்துக்கணும்னு தோணுது சந்துரு" தன்னை வெளிப்படையாக சொல்லி விட

'அவங்க மனசுல இருக்குறது என்னன்னு தெரிஞ்சுக்கோங்க' என்ற மருத்துவரின் கூற்று நினைவு வரவே,

"சொல்லு பேபி" அனுமதித்தான் அவளை.


தானும் தன்னவளை இன்னும் தெரிந்து கொள்ள தயாரானான்.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 23:-

அது ஒரு இரண்டு மாடி கட்டிடம் கொண்ட வீடு. சுற்றிலும் அழகுற தோட்டம் அமைந்திருந்தது. முன்புறம் பூச்செடிகளும் பின்புறம் வீட்டிற்கு தேவையான காய்கறிகளும், பழங்களும், மர வகைகளும் இருந்தன.

அத்தனை பசுமை வாய்ந்த அந்த வீட்டின் சமையலறையில் நின்று பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

அப்போது அங்கு வந்த லட்சுமியின் அண்ணி "உன்னை அடுத்த வாரத்தில் பொண்ணு பார்க்க வர போறாங்களாம். உன் அண்ணன் சொன்னார்." மகிழ்ச்சியாய் சொல்ல

"என்ன அண்ணி சொல்றீங்க" அதிர்ந்து போனாள் லட்சுமி.

"ஆமாம் லட்சுமி நல்ல பையன், வசதியான குடும்பம். உன்ன ஒரு கல்யாணத்துல பார்த்துட்டு பிடிச்சு போய் கேக்குறாங்க. உங்க அண்ணனும் விசாரிச்சுட்டு தான் வர சொல்லி இருக்காங்கம்மா. எங்க கிட்ட வளர்ந்த உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துட்டா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்." பூரிப்பாய் சொன்னார் லட்சுமியின் அண்ணி.

லட்சுமியின் மனமோ 'நாம காதலிக்கிறது தெரிஞ்சா என்ன ஆகும்' நினைத்து கலங்கித் தான் போனது.

அண்ணன் கிட்ட சொல்லணும் மனதோடு சொல்லிக் கொண்டவள் அந்த இடம் விட்டு அகன்றாள்.

தலையை குனிந்து சென்றவளை பார்த்து வெட்கம் என்று நினைத்து சிரித்துக்கொண்டார் லட்சுமியின் அண்ணி.

இரண்டு நாட்கள் கழித்து கோவிலில் தன் காதலன் அரவிந்தனை சந்தித்தாள் லட்சுமி. சாமியை கும்பிட்டவர்கள் பிரகாரத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். தன்னவனின் அழகை கண்களால் கபளீகரம் செய்து கொண்டு இருந்தான் அரவிந்தன்.

தன்னை நேசிக்கிறான், தன்னை பெண்மையை ஆராதிக்கிறான் என்ற பெருமிதம் லட்சுமியின் கண்களில்.

அவனை தொட்டு கலைத்தவள், "என்னங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க வீட்டுல"

அதுவரை இருந்த மோனநிலை கலைந்தது அவளது பேச்சில்.
"பொண்ணு பாக்க தானே லட்சுமி வராங்க. உடனே கல்யாணம் நடக்காதில்ல பார்த்துக்கலாம். அதுக்குள்ளவே எனக்கும் வேலை கிடைச்சுடும்" சமாதானம் செய்து அனுப்பி வைத்தவன் தன் நண்பனை காணச் சென்றான்.

வீட்டிற்கு வந்தவள் தன் போக்கில் வேலைகளை செய்து நாட்களை கழித்தாள்.

லட்சுமி இருபது வயது பெண். கல்லூரி முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது கல்லூரி இறுதி ஆண்டில் முளைத்த காதல் இது வீட்டிற்கு தெரியாமல் ஒரு வருடம் கடந்து விட்டது.

லட்சுமியின் வீட்டிற்கு அருகில் தான் உதய சந்திரனின் தாத்தா வீடும். தாய் தந்தை இல்லாமல் அண்ணன் தங்கையாக வாழும் சோமசுந்தரத்திற்க்கும் லட்சுமிக்கும் இவர்களது குடும்பம் இன்றியமையாதது ஆனது.

அவ்வளவு நட்பும் ஒற்றுமையும் இவர்களிடையே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உதயச்சந்திரனின் தந்தை ராமபிரானுக்கு தனது தங்கையை விட லட்சுமியின் மீது கூடுதலான பாசமும் அன்பும் உண்டு.

இரு வீட்டிற்கும் பிரியமான லட்சுமிக்கு இப்பொழுது திருமணம் என்றால், அதைப் பற்றி கேட்கவும் வேண்டுமா மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை அங்கு.

பெண் பார்த்து திருமணம் என்ன உடனடியாகவா நடந்து விடப்போகிறது என்று மெத்தனமாக இருந்தாள்.

ஆனால் பெண் பார்க்கும்போது நடந்ததோ வேறு. வந்த அனைவருக்கும் காபி பலகாரம் தந்து விட்டு உள்ளறையில் சென்று அமர்ந்தவளின் காதுகளில், அவர்களின் பேச்சு சத்தம் விழுந்தது உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தாள்.

"எங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு பையனுக்கு டெல்லியில் வேலை கிடைச்சிருக்கு. அடுத்த மாசம் வேலையில போய் சேரனும். அதனால 10 நாள்ல ஒரு முகூர்த்தம் வருது அதுல கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நினைக்கிறோம். உங்களுக்கு எப்படி வசதி படுதுன்னு சொல்லுங்க" வெளிப்படையாக வந்தவர்கள் பேசினார்கள்.

அவர்களின் பேச்சில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், அவர்களிடம் அனுமதி பெற்ற லட்சுமியின் அண்ணன் சோமசுந்தரம் தன் மனைவியை தனியே அழைத்துக் கொண்டு உள்ளறைக்கு சென்றார்.

அங்க லட்சுமி அமர்ந்திருக்க, அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு அவர்களைப் போல் பேசலானார்கள்.

இருவரும் கலந்துரையாடியதின் விளைவு வந்தவர்களிடம் சம்மதம் சொன்னார் லட்சுமியின் அண்ணன்.

தாய் தகப்பன் இல்லாமல் தங்கையை தாயுமானவனாக கரை சேர்க்க வேண்டும் என்ற தவிப்பு அவரிடம்.

ஆனால் ஒன்றை கேட்க மறந்துவிட்டார் அது லட்சுமியின் சம்மதம். அனைத்தையும் தன்னிடம் கேட்டு செய்யும் லட்சுமி காதல் வயப்பட்டாள் என்று நினைக்கத் தோன்றவில்லை அவருக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படியே இருந்தாலும் தன்னிடம் எல்லாவற்றையும் சொல்லும் தங்கை காதலையும் சொல்லிவிடுவாள்.

திருமணத்திற்கு கேட்கும் போதும் பெரிதாக அவள் எதுவும் மறுக்கவில்லையே என்றே தோன்றியது சோமசுந்தரனுக்கு.

இரு வீட்டினரும் பேசி முடித்திருக்க திருமண வேலைகள் நடந்தேறியது. புடவை, நகை என ஒரு புறம் வாங்க. மண்டபம் பார்ப்பது பத்திரிகை அடிப்பது என அந்த வேலைகள் ஒரு புறம் நடந்தது.

லட்சுமியால் அவளது காதலனை தொடர்பு கொள்ள முடியவில்லை. வாரம் ஒரு முறை கோவிலில் சந்திப்பது மட்டுமே சாத்தியம் அவளுக்கு.
அன்னாளில் பெரிதாக தொடர் தொடர்பு வசதி இல்லாம இல்லாமல் இருந்தது.

தொலைபேசி இவளது வீட்டில் இருந்தாலும், அன்றைய தினம் வரை அரவிந்தன் லட்சுமிக்கு அழைத்து பேசியது இல்லை. அவனுக்கும் தனியே தொலைபேசி இல்லாதபடியால் இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லை இதுவரை.

ஒரு வரமாக தவித்தவள் அன்று அரவிந்தனை பார்க்க கோவிலுக்கு சென்றாள். அவனிடம் அனைத்தையும் கூறியவள் அழுதுவிட அரவிந்தன் ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

"நாமளா கல்யாணம் பண்ணிக்கலாமா லட்சுமி" அவனது கேள்வியில் வெலுக்கென்று நிமிர்ந்தவள்,

"இல்லங்க நாம அப்படி செஞ்சா அண்ணன் ஒருபோது மன்னிக்க மாட்டாருங்க" தேம்பி அழுதவளை கண்ட எரிச்சலானது அரவிந்தனுக்கு.

அரவிந்தனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவனும் லட்சுமியை போல் தான் தாய் தகப்பன் இல்லாதவன். ஒரு அண்ணன் இருக்கிறான் தான். ஆனால் அவனது அண்ணன் திருமணம் ஆகும் வரை ஓரளவு உதவி செய்து இருந்தாலும், இப்போது எந்த விதத்திலும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இல்லை. தற்போது அவன் தனிக்காட்டு ராஜா தான்.

யாருக்கும் தன்னை பற்றி சொல்ல வேண்டும் என்றோ, இல்லை தன் சார்ந்த முடிவுகளுக்கு பிறரிடம் பதில் கூற வேண்டும் என்றோ அவனுக்கு இல்லை.

அதனால் இந்த திருமண விஷயத்தில் பெண்ணின் நுன்னுணர்வுகள் அவனுக்கு புரியவில்லை. எளிதாக வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டான்.

"எல்லார் வீட்டிலும் அப்படி தான் லட்சுமி யாரு ஓடிப்போய் கல்யாணம் பண்ணினா மெச்சிக்க மாட்டாங்க. உனக்கு சம்மதம் இல்லைன்னா உங்க வீட்ல பாக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கோ" வெளிப்படையாக எரிந்து விழுந்தான்.

அழுது கரைந்தாள் அவள். "லட்சுமி என்ன இது அழுகை. முதல்ல அப்படித்தான் இருப்பாங்க ஒரு குழந்தை பிறந்தால் சரியாயிடும்." பேசிப் பேசியே கரைத்தான் அவளை.
கைக்கு கிடைத்த பேரழகியை விட மனமில்லை அவனுக்கு. கல்லூரியின் அழகிய அவள் தன் காதலி அவளை அவன் நேசித்ததே அவளின் அபார அழகுக்கு தான்.

பாவம் லட்சுமிக்கு புரியவில்லை தெய்வீக காதல் என நம்பினாள்.
யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு போய் திருமணம் செய்து கொள்வதென முடிவெடுத்து, எப்படி எப்போது என திட்டமிட்டு விட்டு தான் அங்கிருந்து கிளம்பினார்கள் காதலர்கள் இருவரும்.

வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை, தான் எடுத்த முடிவில் ஒப்பாமல் இருந்தாள். ஆயினும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில் இருந்தது.

அன்று அவர்களது பக்கத்து வீட்டினரான, உதய சந்திரனின் தாத்தா குடும்பம் நலுங்கு வைக்க வந்தது.

நலுங்கு வைத்து எல்லாம் முடிந்த பிறகு ஓய்வாக அமர்ந்து இருக்க ராமபிரான், உதயின் தந்தை வந்து லட்சுமி அருகில் அமர்ந்து அவளது தலையை வருடி கையில் அந்த கவரை தந்தார்.

எப்பொழுதும் போல அவரது அன்பில் நெகிழ்ந்தவளாய் அதனை பிரித்துப் பார்த்தவள் கண்கள் பணித்தன. ஆம் அதில் இருந்தது சோமசுந்தரம், லட்சுமி, ராமபிரான் மூவரும் இருக்கும் புகைப்படம் தான்.

தங்கள் நினைவாக இருக்க வேண்டி அவர்கள் அந்த புகைப்படத்தை சிறிது நாட்களுக்கு முன்னர் தான் எடுத்துக் கொண்டனர்.

அவளிடமும் ஒரு பிரதியை தந்து வைத்துக்கொள்ள சொன்னவர்

"நல்லா மனசுல வச்சுக்கோ லட்சுமி. முதல்ல பொண்ணு பெத்துக்கணும். என் மகன் உதயக்கு தான் உன் பொண்ணு சரியா சொல்லிட்டேன். "

எப்பொழுதும் அவர் விளையாட்டாக சொல்வது தான் என்றாலும் அன்று சற்று தீவிரமாக சொல்ல. அவரது கூற்றில் குற்ற குறுகுறுப்பு உண்டாக வெடித்து அழுதாள் லட்சுமி.

திருமணம் அது சார்ந்த பயமும் பிரிவும், அதனால் வந்து அழுகை அது என்று நினைத்து அனைவரும் சமாதானம் செய்தனர் அவளை
திருமணத்தன்று அதிகாலையில் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது.

வீட்டில் இருந்து மண்டபம் பக்கத்தில்தான் என்பதால் மணப்பெண் லட்சுமியை வீட்டிலேயே இருந்து கொள்ள சொல்லி விட்டனர்.

காலையில் விடிந்த உடன் வீட்டில் விளக்கேற்றி செல்லலாம் என்று ஏற்பாடு.

மணப்பெண்ணை எழுப்பி குளித்து ஆயத்தமாக சொல்ல லட்சுமி அண்ணி அவள் அறைக்கு சென்றார். ஆனால் அங்கு லட்சுமி காணவில்லை அவள் தான் நள்ளிரவில் தனது காதலனான அரவிந்தனுடன் சென்று விட்டாளே.

மொத்த வீடும் தேடியது லட்சுமியை காணாமல். அந்தோ பரிதாபம் கிடைத்தது என்னவோ அவள் விட்டுப் போன கடிதமே.

அதுவும் அவர்களது தாய் தந்தையின் படத்திற்கு அருகில். அதனை எடுத்து படித்த சோமசுந்தரமோ நடந்ததை நம்ப முடியாமல் வியர்த்து விறுவிறுக்க தளர்ந்து போய் அமர்ந்து விட்டார்.

"சோமு என்னடா ஆச்சு" பதறி அழைத்த நண்பனிடம் கடிதத்தை தர அதை வாங்கி படித்தவரின் மனமோ 'ஏன் இப்படி பண்ணினா. என்கிட்டயாச்சு சொல்லி இருக்கலாமே' ஆற்றாமையும் கோபமாக எண்ணிக்கொண்டது.

விஷயம் காட்டுத்தியாக பரவ சற்று நேரத்தில் மணமகன் வீட்டினர் திமுதிமுவென வந்தார்கள். நடந்ததை அறிந்து கொண்டு லட்சுமியை அவளது அண்ணனை அண்ணியை என ஒருவரையும் விடாமல் அவதூறாக பேசி திட்டினார்கள்.

அது கைகலப்பில் முடிய காவல்துறை வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர். காவல்துறையினர் வரவும் அந்த செய்தி சிறிய ஊரில் எங்கும் பரவியது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வாரம் வெளியில் தலை காட்ட முடியாமல் துக்க வீடு போல் இருந்தது லட்சுமியின் வீடு. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இந்த சமுதாயம் அவர்களை விடவில்லை. ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களின் குத்தல் பேச்சும் ஏளன பார்வையும் சகித்துக் கொள்ள முடியாமல், பிறந்து வளர்ந்த வீட்டை விற்றுவிட்டு, ஊரை விட்டு சென்றனர்.

அவர்கள் சென்ற ஒன்றிரண்டு ஆண்டுகளில் உதயசந்திரனின் குடும்பமும் இடம் மாறியது.

இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன லட்சுமியும் அரவிந்தனும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்து. ஒரு வருடத்தில் எல்லாம் திரிபுரசுந்தரி பிறந்து விட்டாள்.

தனது அண்ணன் சோமசுந்தரத்தின் நினைவாக திரிபுரசுந்தரி என்று பெயர் வைத்திருந்தாள் லட்சுமி.

அரவிந்தன் இந்த இரண்டு வருடங்களாக கிடைத்த வேலைகளை செய்து கொண்டிருக்க ஓரளவு அவர்களது வாழ்க்கை ஓடியது.

எப்போதும் போல அன்றும் கோவிலுக்கு சென்றிருந்த லட்சுமி, மகளை மடியில் வைத்துக் கொண்டு பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள்.

அவளின் மனமெல்லாம் அண்ணன் குடும்பத்தினர் பற்றிய நினைவே ஆக்கிரமித்து இருந்தது திருமணம் ஆகி வந்த சிறிது நாட்களில் எல்லாம் அண்ணனின் குடும்பம் வேறு ஊருக்கு சென்றது தெரிய வந்தது.

திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் எல்லாம் அண்ணனை காண அவள் முன்பு இருந்த அந்த ஊருக்கு சென்றனர். அப்போதுதான் அவளுக்கு விஷயம் தெரிந்தது.

தன் செயலால் அண்ணன் அவமானப்பட்டதும், குருட்டாம்போக்கில் தனது காதல் ஒன்றே மதி என்ற அவளது அந்த முடிவில் அவர்கள் ஊரை காலி செய்ததும், லட்சுமியால் அவளது செயலை மன்னிக்கவே முடியவில்லை.
தனது அண்ணனை தேடும் படலத்தில் இறங்கினாள்.

லட்சுமிக்கு தன் அண்ணனை சந்தித்தாலும், உதயச்சந்திரனின் தந்தையை சந்திக்க தைரியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தன் அண்ணனை விட ஒரு படி மேலாக அவரிடம் அனைத்தையும் கூறுபவள் இதை சொல்லாமல் இருந்தது மாபெரும் தவறாக தெரிந்தது விட்டாள். அவர்களது ஊருக்கு பக்கத்து ஊரில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பித்து இருந்தனர்.

அதனால் உதயச்சந்திரனின் குடும்பத்தை பார்ப்பது எளிதாக இருந்தாலும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை எதிர்கொள்வது.

அதனாலேயே அவர்களது வீட்டிற்கு செல்ல அவ்வளவு சீக்கிரம் மனம் வரவில்லை. குற்ற குறுகுறுப்பிலே இரண்டு வருடங்களை கழித்து விட்டாள்.

நாட்கள் தன் போக்கில் செல்ல, இதோ இன்று சுந்தரிக்கு இரண்டாவது பிறந்தநாள்.
ஓரளவு வசதி வாய்ப்பு வந்து இருந்தது.

அரவிந்தன் அந்த ஏரியாவின் பிரபல அரசியல் பிரமுகர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கடந்து விட்டது.

அக்கம் பக்கத்தினரை அழைத்து கேக் வெட்டி இரவு உணவு என சற்று விமர்சையாக தான் கொண்டாடினார்கள்.

எவ்வளவுதான் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் உள்ளூற அமிழ்ந்து கிடந்த அண்ணனின் நினைவு அவ்வப்போது மேல் எழும்பதான் செய்தது. அதன் விளைவாக அறிந்தவர் தெரிந்தவர்களிடம் எல்லாம் அண்ணனைப் பற்றிய விசாரிப்பும் தேடுதலும் நடந்து கொண்டிருந்தது.

அரவிந்தன் வேலை நிமித்தமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீடு வருவது என்றானது. பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால் பொழுது போகாமல் தையல் வேலை செய்தாள் லட்சுமி.

இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு அவ்வப்போது யாரேனும் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள் அரவிந்தனை பார்க்கும் பொருட்டு.

அரவிந்தனிடம் அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டால் சரியாக சொல்வதில்லை. எப்பொழுதும் ஒரு மழுப்பலான பதிலே வரும்.
கணவனின் இந்த வேலையும், வெளியூர் செல்வதும், அவனை பார்க்க வீட்டிற்கு ஆட்கள் வருவதும், என கிஞ்சிதமும் பிடிக்கவில்லை அவளுக்கு.

அரவிந்தனிடம் ஒருமுறை ஜாடையாக சொல்லிப் பார்க்க கடுமையாக பேசிவிட்டான். அதன் பின்னர் அவனது இந்த விஷயத்தில் மட்டும் அவள் தலையிடுவதில்லை.

திரிபுரசுந்தரிக்கு மூன்று வயது முடிந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அருகில் உள்ள நர்சரி பள்ளியில் சேர்த்து இருந்தாள் லட்சுமி.

மனைவி மகளை கவனித்துக் கொள்வதில் எல்லாம் எந்த குறையும் வைப்பதில்லை அரவிந்தன். தனது தொழில் பற்றிய விவரம் மட்டுமே தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

இப்படியாக நாட்கள் செல்ல, அன்று தெரிந்தவர் ஒருவர் லட்சுமியை காண வந்திருக்க, அவரை வரவேற்று அமர வைத்து உபசரித்தாள்.

"உன் அண்ணனோட விலாசம் கிடைச்சிருச்சும்மா. என் மகன் கிட்ட சொல்லி விசாரிக்க சொன்னேன். அவன் தான் கண்டுபிடிச்சான்." என்றபடி அந்த விலாசம் எழுதி இருந்த பேப்பரை தந்து விட்டு சென்றார்.

கடவுளுக்கு நன்றி சொல்லி அதனை பத்திரப்படுத்தியவள், ஒரு வாரம் கடந்த நிலையில் மகளை தூக்கிக் கொண்டு தன் அண்ணனை காண சென்றாள். அரவிந்தன் வர முடியாது என்று சொல்லிவிட்டான்.

அங்கு அண்ணன் வீட்டில் காலடி எடுத்து வைத்தவளை உள்ளே அனுமதிக்கவில்லை. எவ்வளவு கெஞ்சியே போதும் வெளியே எட்டிக் கூட பார்க்கவில்லை. கதறி அழுதும் பயனில்லை அங்கு அவளுக்கு.

அந்த வீட்டில் மட்டுமில்லாமல் அந்த வீட்டு மனிதர்களின் மனதிலும் இடமில்லை என்று புரிந்து கொண்டு அழுதபடி கண்களைத் துடைத்து கொண்டு மீண்டும் தன் வீட்டிற்கு வந்தாள்.

வீட்டிற்கு வந்த லட்சுமிக்கு மனம் இருப்பிக் கொள்ளவில்லை எப்படியாவது தன் மகளுக்கு காது குத்தும் விழாவிற்கு அழைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டுதான் சென்றாள். ஆனால் அவளால் அது முடியவில்லை.

காலம் கடந்தாலும் அவள் விட்டு சென்ற காயம் ஆறவில்லை போலும். அண்ணன் வீட்டில் நடந்ததை சொல்ல, "விடு லட்சுமி உங்க வீட்டிலயும் நம்மளை ஏத்துக்கல. என் பக்கம் எங்க அண்ணன் எங்க இருக்கான்னு தெரியல. நானும் நாலு பேத்தி கிட்ட சொல்லி வச்சிருக்கேன். எனக்கும் எங்க அண்ணனை பார்க்கணும் போல இருக்கு. நாலு வருஷமாவது ஆகியிருக்கும்" என்றவன்

"நாம ஆக வேண்டியதை பாப்போம். காது குத்துறதை சிறப்பா செஞ்சிடலாம். நான் வேலை செய்றேனில்ல ஒரு அண்ணன் கிட்ட" என்றவனை இடையிட்டு

"அந்த அரசியல்வாதியா" அசூசையான முகபாவனை வந்து போனது லட்சுமி முகத்தில். அதனை கண்டுக்காமல்

"ஆமா லட்சுமி அவரோட தலைமையில் தான் என் மகளுக்கு காது குத்து வைக்க முடிவு செஞ்சிருக்கேன்."
மறுத்து பேச வந்தவளை கை நீட்டி தடுத்தவன்

"உன் சைடும் நம்மள எழுத்துக்கலை. ஏன் சைடும் ஆள் இல்லை. நமக்குன்னு யாராச்சும் வேணுமில்ல. அதுவும் இல்லாம எல்லா விஷயத்துலயும் நான் உன் பேச்சு தான் கேட்டேன். அதனால இதுல என் பேச்சை நீ கேட்டு தான் ஆகணும்" கட்டளையாக வந்தது குரல்.

மனதே இல்லாமல் 'சரி ஒரு நாள் தானே சகிச்சுக்கலாம்' என்றெண்ணி தலையை ஆட்டி வைத்தாள் லட்சுமி.

ஆறு மாதங்கள் கழித்து காது குத்தும் நிகழ்வு வைக்க முடிவானது. அதுவும் இந்த அரசியல் பிரமுகரின் வசதிக்கேற்றார் போல் அமைக்கப்பட்டது தான்.

இப்பொழுது எல்லாம் அரவிந்தனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அதை சரியாக கணிக்க முடியாமல் திண்ணாடினாள். எங்கே அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று ஐயம் எழுந்தது லட்சுமிக்கு.

அதற்கு காரணமும் இருக்கவே செய்தது தினமும் அவனுக்கு அவள் வேண்டும். வேலை விஷயமாக வெளியூர் சென்றால் எப்படித்தான் இல்லாமல் இருக்கிறான் என்று வியந்து ஒரு முறை கேட்க.

அவனும் அதற்கு "வேற ஏற்பாடு இருக்குடி" கண்ணடித்துக் கூறினான். வேற ஏற்பாடு என்ற சொல்லின் அர்த்தம் புரி கையில் அவள் ஜீவன் என்று தத்தளிக்க போகிறாள் என்று அந்நேரம் அவளுக்கு தெரியவில்லை.
 
Status
Not open for further replies.
Top