ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 15 :-

போர்ட் பிளேரில் உள்ள செல்லுலர் ஜெயிலுக்கு அன்று சுற்றுலாவாக சென்று இருந்தனர்.

அவர்களை அழைத்து வந்திருந்த அந்த கைடு, சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்குள்ள அந்த செல்லுலர் சிறையில் அடைத்து வைத்திருந்ததும், அந்த காலத்தில் அவர்களுக்கு வழங்கிய தண்டனைகளையும் எடுத்து கூறவே, சுந்தரி தன் நிலையிலே இல்லை.

தன் மனைவி இந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வாளோ, அவளது மனம் படும்பாடு என்னவாக இருக்குமோ என மனதில் ஒருவித கலக்கத்துடனே இருந்தான் உதயச்சந்திரன்.

ஒரு கட்டத்தில் ஆழிப்பேரலையாக தாக்கிய உணர்வுகளின் சங்கமத்தில் தத்தளிக்க முடியாமல் தலை சரிந்து மயங்கி விழுந்தாள் திரிபுரசுந்தரி.

மனைவியை கையில் ஏந்தி கொண்டவன் அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றான்.

மருத்துவர் முதலுதவி செய்து சுந்தரிக்கு மயக்கத்தை தெளித்தாலும், விட்டத்தை வெறித்த படி சித்தம் கலங்கியவளாய் அமர்ந்திருந்த தன்னவளைக் கண்டு உடைந்து போனான் உதயச்சந்திரன்.

அன்று இரவிற்கெல்லாம் நல்ல காய்ச்சலை கண்டிருந்தால் சுந்தரி. சேயாய் அவளை அரவணைத்து கொண்டான் உதய்.

பயத்தினால் வந்த காய்ச்சல் அது. இரவெல்லாம் காய்ச்சலில் உளறிய அவளின் வார்த்தைகளை கேட்டு சிதைந்து போனான் கணவனவன்.
அவளை தேற்றும் வழி தெரியாது விழி பிதுங்கி நின்றான்.

மறுநாள் காலையில் காய்ச்சல் மற்றும் குணமாகி சோர்ந்து தெரிந்தாள் சுந்தரி.

அன்று எங்கும் செல்லாமல் தங்களது குடிலுள்ளே அமர்ந்து கதை பேசி, சீட்டு விளையாடி, காலார நடந்து, உண்டு என பொழுதை கழித்தனர் இருவரும்.

அதற்கு அடுத்த நாள் இரவு அவர்கள் இந்தியா திரும்பும் தினம் ஆகும். வெளியில் மழை வரவை அன்றும் எங்கும் சுற்றாமல் குடிலின் உள்ளே இருந்தனர்.

எப்பொழுதும் ஒருவர் உடைமாற்றும் பொழுது மற்றவர் பால்கனியில் நிற்பது அவர்களது செயலாகும்.

அங்கு அவர்களது வீட்டில் கடைப்பிடித்த அதே செயலை இங்கும் கடைப்பிடித்தனர்.

ஆனால் இன்றோ குளித்துவிட்டு வந்தவள் உடை மாற்ற முடியாமல் தடுமாறி நிற்க.

"பேபி இன்றைக்கும் வெளியில போக சொல்லுவியா மழை பெய்து" வேண்டுமென்றே பாவமாக உரைக்க

அவனை புரிந்து கொள்ளாதவளோ "சரி இங்கேயே இருங்க ஆனா என் பக்கம் திரும்ப கூடாது" சின்ன குரலில் உரைத்தவள் அவனுக்கு முதுகு காட்டி உடைமாற்ற

விளையாட்டை ஆரம்பித்த உதயச்சந்திரன் தான் திண்டாடி திணறிப் போனான்.

பின்னே அவன் முன்னே இருந்த அந்த கண்ணாடி தான் அவனது மனையாளின் மொத்த அழகையும் படம் போட்டு காட்டியதே.

அதை கவனிக்காதவளாய் அவள் உடைமாற்ற. முதலில் உதயசந்திரனும் அதனை கவனிக்கவில்லை.

பிறகு கவனித்தவன் கண்களை விலக்கிக் கொள்ளவில்லை, இல்லைல்லை விளக்கிக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மையாகும்.

அணிந்திருந்த ஆடையை திருத்திக் கொண்டு நிமிர்ந்தவள் அப்பொழுது தான் அந்த கண்ணாடியை கண்டாள்.

"சந்துரு" அதிர்ச்சியில் கூவியபடி திரும்பிப் பார்த்தாள்.

தொண்டைக் குழியில் ஏற இறங்க தன்னைப் பார்த்தவனை கண்டு புரிந்து போனது அவளுக்கு.

செங்கொழுந்தாய் சிவந்த மேனியை எப்படி மறைக்க தெரியாமல் திண்டாடினாள்.

அவனோ தான் கண்ட காட்சிகளிலிருந்து மீள முடியாமல் அதிலேயே உழன்று கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அங்கு புழுக்கம் தாங்காமல் வெளியில் கதவை திறந்து வந்து மழையில் கைகட்டி நின்று கொண்டான்.

இவ்வளோ ஜன்னலில் அவனையே பார்த்தபடி நின்றாள்.

சற்று நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன் உள்ளே வந்து தானும் தயாராகினான். மௌனமே ஆட்சி செய்தது அங்கு.

தன்னை இயல்பாக மாற்றிக் கொண்டாலும் முதன்முதலில் ஒரு பெண்ணை அதுவும் தன் மனைவியை அந்நிலையில் பார்த்தவன் தாபத்தில் தத்தளித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.தன்னை காத்து கொள்ள மௌனத்தை கையில் எடுத்தான்.

இருவரும் இந்தியாவிற்கு விமானம் ஏறினர்.

ஒரு வாரம் அவனுடனேயே ஒட்டிக்கொண்டு இழைந்தவளை வீடு வந்ததும், அவன் கடையில் பிரச்சனை என்று சுந்தரியை விட்டுவிட்டு சென்று இன்றுடன் ஐந்து நாட்களாகிறது.

அந்தமானில் இருந்து வந்த பின் மறுநாள் அவனது மதுரை கிளையில் உள்ள கடையில் வைர நகை திருட்டு போனது பற்றி தகவல் வந்தது.

உடனடி நடவடிக்கையாக கிளம்பிச் சென்றவன் தான் இன்னும் வரவில்லை. அவனது வரவை எதிர் நோக்கி பசலை நோய் கண்ட தலைவியாக ஏங்கி போய் இருக்கிறாள் சுந்தரி.

அன்று ஒரு நான்கைந்து மணி நேர பிரிவிற்கே அவனது சட்டையை அணிந்து கொண்டவள். அவன் இல்லாத இந்த தனிமையை அறவே வெறுத்தாள்.

கண்ணீர் விட்டு அழவில்லை என்றாலும் எதையோ பறிகொடுத்தவளாக நித்தம் தன்னவனின் காதல் பார்வைக்கு ஏங்கினாள். முகம் உரசும் அவனது மார்பு முடியின் தீண்டல் இல்லாமல் நித்திரா தேவியும் அவளை தீண்டவில்லை.

முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் இரண்டாம் நாள் வழக்கமான காலை முத்தமும் கை வளைவில் தேநீர் பருகுவதும் இல்லாமல் முகத்தில் ஒரு எரிச்சல் பாவம் குடி கொண்டது.

மூன்றாம் நாள் பேச்சு குறைந்து போனது. ஸ்ரீமதி கௌரி என்று யார் பேசினாலும் "ம்" என்ற பதில் மட்டுமே வந்தது.

பள்ளியில் உடல்நிலை சரியில்லை என்று ஆசிரியர் அறையிலேயே அமர்ந்து கொண்டாள்.

இதோ இன்று நான்காம் நாள் அறையில் தானே சிறைப்பட்டாள். உணவை வெறுத்து கட்டிலில் அவனது தலையணையில், அவனது சட்டையை கட்டிக் கொண்டு படுத்திருந்தாள்.

அலைபேசி அழைப்பு எல்லாம் போதவில்லை அவளுக்கு. அவனது அருகாமை மட்டுமே வேண்டுமென்று அடம்பிடித்தது பேதை மனம்.

தனிமையை பழகியவள், விரும்பியவள் இன்று காணும் யாவிலும் கண்ணாளனின் பிம்பம் தேடியே சோர்ந்து போனாள்.

எதில் நிற்பவனை கை தீண்டினால் மறையும் மாயக்காரன் ஆனான். அதிலே பெண்ணவள் ஊடல் கொண்டாள்.

இவளையே கவனித்துக் கொண்டிருந்த கௌரி 'இது சரிப்பட்டு வராது' என்று நினைத்து மறுநாள் அவளை ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அலமாரியை திறந்தவள் கண்ணில் பட்டது அந்தமான் போகும் முன் உதயச்சந்திரன் வாங்கி கொடுத்த துணிகள். அதிலிருந்து கிளிப் பச்சை நிறத்தில் சேலையும் பட்டு ரோஜா வனத்தில் ரவிக்கையும் எடுத்து உடுத்தி தயாரானாள் லேசாக ஒப்பனை செய்து கொண்டாள்.

அவளுக்கு அது ஒரு சின்ன மாற்றம் தந்தது. சொந்தங்களிடையே உதயசந்திரனுக்கும் அவனது குடும்பத்திற்கும் இருந்த மதிப்பும் மரியாதையும் செல்வாக்கையும் கண்டு வியந்தாள். தானும் அந்த குடும்பத்தில் ஒருத்தி என்று பெருமிதப்பட்டாள்.

இதனை கண்ட மேகலாவிற்கும் சாவித்திரிக்கும் வயிறு காந்தியது. காதுகளில் புகை வராத குறைதான்.

திருமண நிகழ்ச்சி முடித்து வீட்டிற்கு வந்தவளது இதம் தொலைந்து போனது மீண்டும் சோர்ந்து போனாள்.

'ம்கூம் இனி முடியாது' நினைத்த கௌரி ஸ்ரீமதியை அவளுடன் அனுப்பி விட்டு தன் மகனுக்கு அழைத்துச் சொன்னவர் உடனடியாக வரும்படி கட்டளையிட்டார்.
தன்னிடம் நன்றாக தானே அலைபேசியில் பேசுகிறாள்.

நினைத்துக் கொண்டவன் வீடியோ கால் செய்யாதது புரிந்தது. தான் வீடியோ கால் போட்டாலும் எடுக்கவில்லை.

மேலும் அவள் அவனுக்கு இந்த ஐந்து நாட்களாக அழைக்கவில்லை என்பதையும் குறித்துக்கொண்டு, அன்னையிடம் வருவதாக சொல்லியவன் சுந்தரியிடம் சொல்ல வேண்டாம் என்றிருந்தான்.

உடனடியாக அடுத்த விமானம் பிடித்து கிளம்பி இருந்தான் உதயச்சந்திரன். இங்கு ஸ்ரீமதியோ சுந்தரியிடம் படாத பாடுபட்டால் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னே அவள் என்ன பேசினாலும் பிடித்து வைத்த பிள்ளையார் போல இருக்கும் அண்ணியை பார்த்து செய்வதறியாது நின்றாள்.
மேலும் நேரம் சென்றது.

திருமணத்திற்கு அணிந்திருந்த உடையையும் மாற்றாமல் நாற்காலியில் அமர்ந்த உதயின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கௌரி ஸ்ரீ மதியை கீழே அழைத்துக்கொள்ள விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.

உள்ளே நுழைந்த உதயச்சந்திரன் பார்க்கும் பொழுது சுவரில் இருந்த புகைப்படம் அவளது கையில் இருந்தது. அதில் அவனது இதழை வருடிக் கொண்டிருந்தாள்.

உற்று கவனித்தவனின் விழிகள் செம்மையுற்றது மோகத்தினால்.

இருவரது இந்த நிலையும் சற்று முன்"சுந்தரிம்மா பேபி" குரல் கேட்கவே பாய்ந்தோடி சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

"சந்துரு" முகத்தை கையில் ஏந்தி முத்த மழை பொழிந்தாள்.

இதழ்களை சுட்டி காட்டியவன் "இது மட்டும் என்ன பண்ணுச்சு பேபி" கேட்க ஒரு நொடி தயங்கியவள் பின் அவனது இதழை சிறை எடுத்தாள்.

அவளது இதழ் முத்தத்தில் மயங்கியவன் ஒரு கட்டத்தில் அவளது செயலை தனது செயலாக்கினான்.

மூச்சிற்கு ஏங்கிய அவளை விடுவித்து "குளிச்சிட்டு வரேன் பேபி" என்க

அவள் பார்த்த பார்வையில் பக்கென்று சிரித்தவன் "இத்தனை நாள் நான் வெயிட் பண்ணேனில்ல, ஒரு 15 மினிட்ஸ் மேடம் வெயிட் பண்ணலாமே"

தலையை சரித்து புருவம் உயர்த்தி கேட்ட பாவணையில் முகத்தை மூடியவள் "போங்க சந்துரு" சிணுங்கினாள்.

ஒருமுறை இறுகி அனைத்து விடுவித்தவன் "என் கபோர்டுல சென்டெட் கேண்டில்ஸ் இருக்கு. பிரிட்ஜ்ல பூ இருக்கும் டெகரேட் பண்ணி வை வரேன்"

"நான் குளிக்க வேண்டாமா?" எங்கோ பார்த்தபடி கேட்டவளை பார்த்து வாய்விட்டு சிரித்து

"மொத்தமா அப்புறம் குளிச்சுக்கலாம் பேபி" கண்ணடித்து கூறினான்.

முகம் சிவந்தாள் நங்கை. அவனது அலமாரியில் இருந்து வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி குளிர்சாதன பெட்டியிள் இருந்த பூக்களை எடுத்து மஞ்சத்தை அலங்கரிக்கலானாள்.

குளித்து வந்தவன் கண்டது விளக்குகள் அனைந்த அறையில் ஆங்காங்கே எரியும் மெழுகுவர்த்தியும் நறுமணம் கமழும் அறையும் தான்.

கட்டிலில் தூவி இருந்த ரோஜா பூக்களை கண்டவன் 'நாட் பேட்' மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

பால்கனியில் மனைவியை கண்டவன்,

பின்னிருந்து அணைத்துக் கொண்டு "பேபி உனக்கு ஓகேவா எதுவும் தயக்கமா இருந்தா சொல்லிடனும்" சொல்லியவன் ஒரு நொடி நிறுத்தி
"பிடிக்கலன்னாலும் சொல்லனும் டா" குரல் வெறுமையாக வந்தது.

சட்டென்று திரும்பியவள் அவனது கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.

கணவனின் காதினுள் "எனக்கு எப்போதும் எந்த தயக்கமும் இருந்தது இல்ல சந்துரு" மொழிந்தவள்

'என்ன பத்தி முழுசா நீங்க தெரிஞ்ச அப்புறம் உங்க நிலைப்பாடு என்னவா இருக்கும்னு ஒரு எண்ணம் எனக்கு உண்டு. ஆனா இப்போ உங்களை விலக்கி வச்சு தவிக்க வைக்க மனசு இல்ல சந்துரு. எதுவானாலும் வாழ்ந்து பார்க்கலாம்னு தோணுது' மனதோடு உரையாடியவள் குறும்பாக

"ஏன் சந்துரு உங்களுக்கு தயக்கமா இருக்கா. இருந்தா சொல்லுங்க நான் போய் தூங்குறேன். தலையை சாய்த்து கண்ணடித்து அவனைப் போலவே கேட்க

"அடிப்பாவி உன்ன" சொல்லி அவன் கைகளில் அள்ளிக் கொண்டான்.

"ஐயோ சந்துரு கீழ விட்டுறாதீங்க" அவனது மார்பை தடவினால் பிடிமானம் இல்லாமல்.

"கட்டிக்கோ பேபி" ரகசிய குரலில் சொல்ல கழுத்தில் கரங்களை கோர்த்துக் கொண்டாள்.

மெல்ல நடந்து கட்டிலில் அவளை விட்டவன் அவள் புறம் சரிந்து படுத்தான். அவன் இறக்கி விட்டதில் கலைந்த ஆடைகளை சரி செய்ய.

அவளது கைப்பற்றி தடுத்து இல்லை என்று தலையசைத்தான்.

நாணம் மேலிட அவனது நெஞ்சத்தையே மஞ்சம் ஆக்கினாள்.

தன் கை சேர்ந்த பெண்மையை கொண்டாடி அவளை திண்டாட வைத்தான்.

இத்தனை வேகம் காட்டும் தன்னவனின் இத்தனை நாள் பொறுமை அவளை வியப்புறவே செய்தது.

நாணத்தில் சிவக்கும் பெண்ணின் முகம் ஓர் அழகென்றால் மோகத்தில் சிவக்கும் ஆணின் முகம் அது பேரழகன்றோ.

உதயச்சந்திரன் பேரழகனாக தெரிந்தான் மான் விழியாளுக்கு.

விழித்திறந்து அவளது ஸ்பரிசத்தை ரசித்தவனின், கண்களை கரங்களில் மூடியவள் "என்னமோ பண்ணுது சந்துரு" மோகம் தாளாமல் முனகினாள்.

அவனது முகத்தில் வந்து போன உணர்வுகள் அத்தனையும் பிரமிக்க வைத்தது அவளை.

ஒரு பெண் மீது ஆணின் தேடல் இத்தகையதா நினைக்க வைத்தான் அவளை.

அவனது விரல் தீண்டலை விட விழி தீண்டலே அவளது உயிர் தீண்டியது.

சொச்சமாய் இருந்த மிச்ச ஆடைகளையும் கொய்தவன் தானே ஆடையாக மாறி இன்னும் அவளுக்கு நெருக்கம் கூட்டினான்.

அவன் அவளுக்கு நெருக்கமாக மாறிய வேளை, பெண்ணவளது நயணங்களில் நாணமே மிச்சம் இருந்தது.

அவன் தந்த அதீத நெருக்கத்தில் உண்டான வலியில் கசிந்த விழிகளில் இதழ்களால் தீண்டி "சாரி பேபி" மன்னிக்க வேண்டினான்.

மஞ்சத்தில் மன்னிப்பு கேட்ட அவனது மாண்பு அவளை மயக்கவே செய்தது.

தன்னை மொத்தமாக அவளிடம் இழந்தவன் அவளை தன்மீது போட்டுக் கொண்டான்.

"பேபி இனிமேல் கண்ணாடி வளையல் போடாத பேபி" என்றவனை கேள்வியாக பார்த்தாள்.

"உன் நகைக்கீறல் ஓகே. பட் கண்ணாடி வளையல் காயம்" கண் சிமிட்டி குறும்பு கண்ணனாக புருவம் உயர்த்தி கேட்டான்.

சற்று முன் நடந்த நிகழ்வில் தனது செயலை சொன்னவனை பார்க்க முடியாமல் அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டாள்.

"தேங்க்ஸ் பேபி தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்" அவனது மார்பில் தாடையை பதித்து அவனை பார்த்தவள்,

"என்ன சந்துரு சாரி தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க" முறைத்தபடி கேட்டாள்.

"கட்டில்ல கண்டிப்பா கேக்கணும் பேபி. ஆல்சோ பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சுக்கணும்".

"இதெல்லாமா கேட்பாங்க" செல்லமாக சினுங்கி கொண்டாள்.

"எனக்கு தெரிஞ்சுக்கனும்" சொல்லியவன் அவளது வாய்மொழியாக அவளது பிடித்ததை தெரிந்து கொண்டே அவளை விட்டான்.

அதில் மோகம் கூத்தாட மீண்டும் ஒரு முறை ஸ்ருங்கார சங்கீதம் அரங்கேறியது.

தன் மீது கிடந்தவனை தள்ளி படுக்க வைத்து அவனைத் தாண்டி எம்பி பார்த்தவளை என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க

"இல்ல சந்துரு கட்டில் உடஞ்சி இருக்கும்னு நினைச்சேன். பட் உடையில" வாயில் கை பொத்தி அவள் சிரிக்க.

"போ பேபி யூ ஆர் டூ பேட்"
வெட்கத்தில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

சுக அயற்சி இருவரையும் ஆட்கொள்ள கண்ணயர்ந்தனர்.

காலையில் கண் விழித்த உதயச்சந்திரன் கண்டதெல்லாம் தன் மார்பில் கிடந்த மனையாளின் வென் பஞ்சு பதமே.

சற்றே தலையை எக்கி பார்க்க அங்கு மனைவியோ கணவனின் காலை கட்டிக்கொண்டு உறங்கினான்.

அது சற்று முன்னர் நடந்ததை சொல்ல ஆடவன் அவனுக்கே அத்தனை வெட்கம் தந்தது.

மெல்ல மனைவிக்கு நோகாமல் தனது பாதங்களை விலக்கி கொண்டவன், அவளுக்கு நன்றாக போர்த்தி விட்டு குளியலறை சென்று தன்னை சுத்த படுத்திக் கொண்டான்.

அவன் மீண்டும் குளியலறையில் இருந்து வந்தபோது சுந்தரி விழித்திருந்தாள்.

தன்னை ஏறிட்டுப் பார்க்க கூச்சப்படும் மனைவியை நெருங்கி இடையோடு கட்டிக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டு "ஹீட்டர் போட்டு வச்சுருக்கேன் குளிச்சிட்டு வா பேபி"

முதல் நாள் இரவு அவன் சொன்ன 'மொத்தமா குளிச்சுக்கலாம் பேபி' நினைவு வர கண்ணங்கள் சிவப்பேற அவனை பார்த்தாள்.

பேபி அழைத்தவன் குரலிலும் பார்வையிலும் பேதத்தை உணர்ந்தவள் ஓடி குளியலறை சென்று மறைந்தாள்.

அவளது செயலில் சத்தமிட்டு சிரித்துக் கட்டிலில் கிடந்த பூக்களை அகற்றி விட்டு மெத்தை விரிப்புகளை மாற்றினான்.

அவளும் வரவே அவளை நாற்காலியில் அமர்த்தி தலையை துவட்டி விட்டான்.
தன்னை இயல்பாக இருக்க செய்ய அவன் எடுக்கும் முயற்சிகளை புரிந்து கொண்டாள்.

இத்தனை நாட்கள் அருகருகே இருந்தாலும், கண்ணுக்கு தெரியாது இருந்த அந்த மயிரிழை இடைவெளி இன்று தகர்ந்தது போல உணர்ந்தாள்.

ஒற்றை கூடலில் மனதில் இருந்த வெறுமையை, சஞ்சலத்தை, பாதுகாப்பற்ற உணர்வை போக்க முடியுமா இதோ தன்னவன் நிகழ்த்தி காட்டினான்.


கூடல் உடல் சார்ந்து இல்லாமல் மனம் சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமே.
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16:-

தங்களது வாழ்வை தொடங்கிய கணவனும் மனைவியும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பொருட்டு கோவிலுக்கு சென்றனர்.

கற்பக விநாயகரை தரிசித்து விட்டு குளக்கரையில் அமர்ந்து கொண்டனர்.

சுந்தரியையே கன்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் உதயசந்திரன்.

"என்ன சந்துரு"

"நீ ரொம்ப அழகா இருக்க சுந்தரிம்மா" சொன்னவனை கண்டு சிரித்தவள்,

"பாருங்களேன் உங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கு" அவள் வம்பிழுக்கவே

"ஏய் வாலு எப்போதும் விட நீ ஸ்பெஷலா பிரைட்டா தெரியுற பேபி" சொன்னவன் அவளது கரங்களை தனது கைகளில் பொத்திக்கொண்டு வருடினான்.

"சந்துரு , தேங்க்ஸ், தேங்க்ஸ் ஃபார் கமிங் இன் மை லைஃப்" மனமார சொன்னாள்.

முறைத்தான் அவன்

"இல்ல சந்துரு ஐ பில் கம்ப்ளீட் நவ். உள்ளுக்குள்ள எப்பவும் இருக்கும் ஒரு வெறுமை போச்சு. எனக்குன்னு ஒரு குடும்பம் கல்யாணம் இத பத்தி எல்லாம் நான் நினைச்சு பார்த்தது கூட கிடையாது.
நினைச்சு பார்க்கவும் விரும்புனதில்ல ஒரு பயம் வெறுமை எப்பொழுதுமே இருந்துட்டே இருந்தது. நான் பொருந்திப் போக மாட்டேன்னு ஒரு எண்ணமும் கூட உண்டு எனக்கு. ஆனா இப்போ உங்க கூட திகட்ட திகட்ட ஒரு வாழ்க்கை வாழனும்னு ஆசைப்படறேன் சந்துரு" நெகிழ்ந்து போனவளாய் சொல்ல,

ஒருமுறை சுற்றம் பார்த்தவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்து, நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கி,

"கண்டிப்பா அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வோம் கண்ணம்மா". பற்றியிருந்த மனைவியின் கையில் தனது கை வைத்து கிட்டத்தட்ட சத்தியமாய் உறுதிமொழி கூறினான்.

மீண்டும் ஒருமுறை பிரகாரத்தை வலம் வந்தவர்கள் தங்களது காலனியை அணிய.
அப்பொழுது "சுந்தரி தானே நீ" என்று குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுந்தரி.

தன் எதிரே நின்றவளை கண்டு ஒரு நொடி அதிர்ந்து நடுங்கியவளாய், உதயசந்திரனை பரிதவிப்பாய் பார்க்க.

அவனோ அவள் அருகில் நெருங்கி கைகளை பற்றிக் கொண்டான் அவளை உணர்ந்தவனாக.

"நல்லா இருக்கியா சுந்தரி" என்றவளை வெறித்தபடி பார்த்தவள் ஒன்றும் சொன்னாலில்லை.

"பேபி உன் கிட்ட தான் கேக்குறாங்க பாரு" அவளது காதில் குனிந்து சின்ன குரலில் சொன்னவனை கண்டு கண்கள் அலை பாய்ந்தது சுந்தரிக்கு.

ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன், "ஹாய் சிஸ்டர் நான் உதயசந்திரன் சுந்தரி ஓட கணவன்" தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள

"ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க. சுந்தரி ஏன் நீ கல்யாணத்துக்கு சொல்லவே இல்ல. நவீன் எப்படி இருக்கான்"
உதயிடம் ஆரம்பித்து சுந்தரியிடம் முடித்தாள் அந்தப் பெண்.

சுந்தரியோ இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கணவனின் கைப்பற்றி இழுத்துச் சென்றாள்.

காரின் அருகினில் சென்றவள் உதயசந்திரனின் கையை விட்டுவிட்டு முன்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

மற்றைய பக்கம் வந்து கதவை திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்ட உதயசந்திரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆராய்ச்சியாய்.

அப்பொழுதுதான் கவனித்தான். கைப்பையைப் பற்றி இருந்த அவளது கைகளில் உண்டான நடுக்கத்தை.

'இவ்வளவு நடுங்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு' யோசித்தபடி அங்கிருந்த தண்ணீரை கொடுத்து அவளைப் பருகச் செய்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள், "ஏன் சந்துரு இந்த சமுதாயத்தில் ஒரு பொண்ணுக்கு மரியாதைன்றது கல்யாணம் குடும்பம் இதெல்லாம் வச்சுதானா சந்துரு. தனி ஒரு மனுஷிக்கு இங்க மரியாதை இல்லல்ல அவ எவ்ளோ நல்லவளா இருந்தாலும்"

"பிறந்த இடமும், வளர்ந்த இடமும் தானே ஒரு பொண்ணுக்கு மதிப்பு மரியாதையும் சேர்க்கிறது. இப்ப என்கிட்ட பேசினாளே அந்த பொண்ணு முன்னாடி என்கிட்ட எப்படி நடந்துக்கிட்டா தெரியுமா" கேள்வி கேட்டவள், ஒரு நொடி நிறுத்தி,

"இப்போ கல்யாணம் ஆயிட்டதனால என்கிட்ட நல்ல விதமா பேசறா போல. அப்போ சுந்தரி என்ற தனி மனுஷிக்கு இங்க எதுவுமே இல்லல்ல சந்துரு" வலி கலந்த ஒரு புன்னகை அவளது அதரங்களில் வந்தது.

"இந்த சமுதாயத்தை திருத்துறது ரொம்ப கஷ்டம் சுந்தரி. மாற்றம் என்பது நம்மகிட்ட இருந்து ஆரம்பிக்கணும். இதுதான் நான் எப்பொழுதுமே நம்புவேன்." என்றவன்,

"சரி மத்தவங்கள விடு. சந்துரு, இந்த சுந்தரியோட சந்துருவ பத்தி சொல்லு" அவளை இயல்பாக்கவே அப்படி ஒரு கேள்வியைக் கேட்டான்.

"இந்த சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொருத்தங்களும் தாங்களாகவே திருந்தினால் தான் உண்டு. யாரையும் திருத்துவது நம்ம வேலை இல்லை. ஆனால் தனி மனிதனுக்கு அவனோட பண்புக்கு மரியாதை கொடுக்கலாம், கொடுக்கணும் அவ்வளவுதான்".

"அப்புறம் சுந்தரியோட சந்துரு பத்தி சொல்லணும்னா எல்லா சுந்தரிகளுக்கும் என் சந்துரு மாதிரி ஒருத்தர் கிடைக்க மாட்டாங்க" அவனது கைகளைப் பற்றி கண்களுக்குள் ஊடுருவி சொன்னாள்.

அவளது பார்வையின் கூர்மை தாளாமல் "ஹே நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்" என்றான்.

"இல்ல சந்துரு நான் ஆத்மார்த்தமா சொல்ற வார்த்தைகள் இது. எல்லா சுந்தரிகளுக்கும் சந்துரு மாதிரி ஒருத்தர் அவ்வளவு ஈஸியாக கிடைச்சிட மாட்டாங்க". சொன்னவளை தன் தோள் மேல் சாய்த்து கொண்டான்.

காதலாய் இணைந்த நாட்கள் அழகாக சென்றது தம்பதிகளுக்கு.

எந்நேரமும் பின்னிப்பிணைந்து இருந்தார்களா என்றால் இல்லை. ஆனால் மனதில் முன் இருந்த எந்த தயக்கமும் இல்லாமல் பேச பழகிக் கொண்டாள் சுந்தரி.

வீட்டில் இருக்கும் நேரம் தனது அத்தை மற்றும் நாத்தனார் உடன் நேரத்தை செலவிட்டாள்.

ஒரு பக்கம் பொங்கல் கொண்டாட, ஊருக்கு செல்ல ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

இன்னும் நான்கு தினங்களே பொங்கலுக்கு என்றிருந்த வேளையில்.

அன்று விடுமுறை தினம். காலையில் தங்களது அறையில் இருந்து வந்த உதயச்சந்திரன் கண்டது மோகனின் மாமனார் சேகரனையே.

சேகரை பார்த்த உதய்க்கு புரிந்து போனது விஷயம் பெரிதாகி விட்டது என்று.

"வாங்க மாமா எப்ப வந்தீங்க" அவரை வரவேற்றவன் எதிரில் இருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

"இப்பதான் வந்தேன் உதய் ஒரு பத்து நிமிஷமாகுது" என்றவர் மேலும்

"உங்க அண்ணன் மோகன் பண்ண காரியத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு" என்று வினவ,

ஒரு நொடி கண்மூடி திறந்தவன் ஆம் என்று தலையசைத்தான்.

அதே நேரம் அவர்களுக்கு தேநீர் எடுத்துக் கொண்டு வந்தாள் சுந்தரி. அவள் தந்த தேநீரை வாங்கியவர் "நல்லா இருக்கியாம்மா" நலம் விசாரித்தார். "நல்லா இருக்கேன் பெரியப்பா" என்றால் உறவு முறை சொல்லி.

உதயச்சந்திரனுக்கும் தேநீர் கொடுக்க தன் மனைவியை பார்த்து கண்ணடித்து விட்டு அதை எடுத்துக் கொண்டான்.

தேநீர் பருகி விட்டு தனது அலைபேசியை எடுத்து மோகன் மற்றும் அவன் குடும்பத்தினருக்கு அழைத்து அங்கு உடனடியாக வர சொன்னான்.

விஷயம் பெரிதென சமையல் அறையில் மருமகளுடன் இருந்த கௌரிக்கு புரிந்தது.

நல்ல வேளை தோழி திருமணம் என்று ஸ்ரீமதி நேற்று மாலையை சென்று விட்டாள் பெருமூச்சு விட்டுக் கொண்டார் மீண்டும் இன்று மாலை தான் வருவாள் என்று.

பின்னே வந்த மனிதர் எதுவும் பேசாமல் இறுகிப்போய் அமர்ந்திருக்கிறார் அதுவும் இல்லாமல் காலை வேளையிலேயே வந்துவிட ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டார் கௌரி.

சாவித்திரி குடும்பத்தினரும் வந்து விட்டார்கள். அவசரம் உடனே வர வேண்டும் என்று மட்டும் சொல்லி அழைத்து இருக்க.

என்னமோ ஏதோ என வந்திருந்தனர்.

"சம்மந்தி வாங்க" என்று அழைத்த மோகனின் தந்தை மனதில் தனது வீட்டிற்கு வராமல் உதயச்சந்திரன் வீட்டிற்கு நேரே வந்திருக்க காரணம் தெரியாமல் யோசித்தார்.

தன்னை வரவேற்றவரை பார்த்து தலையசைத்தார் சேகரன். அவரது நடவடிக்கையை அவதானித்தபடி அவர் அருகில் அமர்ந்து கொண்டார் கேசவன்.

மோகனுக்கும் சாவித்திரிக்கும் உள்ளுக்குள் உதறினாலும் வெளியில் ஜம்பமாகவே காட்டிக்கொண்டார்.

"என்ன மோகன் இதெல்லாம் நான் உன்கிட்ட பேசணும்ன்னு வர சொன்னேன் உன் அம்மா கிட்ட. ஆனா வரவே இல்ல. அது பரவாயில்ல. ஆனா நீ உன் தப்பை திருத்திக்கணும் தானே" நேரடியாக அவன் இப்படி விஷயத்திற்கு வருவான் என்று எதிர்பாராத மோகன் தன் மாமனாரை பார்த்தான்.

அவர் உதயசந்திரன் பார்த்து "உங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சேன் இல்லனா முன்னாடியே நான் வந்து உங்க கிட்ட பேசி இருப்பேன்" என்றவர்

மேலும் "நான் மோகன் கிட்ட ஏற்கனவே பேசினேன். கல்யாணம் ஆயிடுச்சு ஒரு பொண்ணு கூட தப்பான உறவு வைத்துக் கொள்வது சரியா சொல்லுங்க"

தன் மகனா இப்படி மனைவியை விட்டு பிற பெண்ணை நாடுகிறானா? அதிர்ச்சியில் ஒன்றும் பேச தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தார் மோகனின் தந்தை கேசவன்.

"எனக்கு அவரோட பொண்ணு வேண்டாம். எனக்கு அவளை பிடிக்கல. நான் என்னோட லவ்வர் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று அனைவரின் தலையிலும் இடியை இறக்கினான்.

சாவித்திரி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை தப்பு செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்பான், ஏதாவது சொல்லி சமாளிப்பான் என்று எதிர்பார்த்தார்.

மோகனின் பேச்சில் நிலை குலைந்தார் அவனின் தந்தை.

இவ்வளவு அதிரடியாக, மோசமாக அவன் பேசுவான் என்று யாரும் எண்ணி இருக்கவில்லை அங்கு.

'ஏன் இவனுக்கு புத்தி இப்படி போகிறது' என்று நினைக்கத் தோன்றியது எல்லாருக்கும்.

ஆனால் சேகர் கவலையுடன் ஏறிட்டார் உதயசந்திரனை.

அவன் தானே முன் நின்று பெண் கேட்டு அந்த திருமணத்தை நடத்தியது.

"நீ பேசுறது ரொம்ப தப்பு மோகன். முதல்ல மாமா கிட்ட மன்னிப்பு கேட்டு. ஒழுங்காக வாழ பாரு" கோபத்தை கட்டுப்படுத்திய படி வார்த்தைகளை கடித்து துப்பினான்.

"பாத்தீங்களா எப்படி பேசுறான்னு" நொந்து போனார் தன் மகளின் வாழ்வை எண்ணி.

"உனக்கும் அண்ணிக்கும் என்ன பிரச்சனை சொல்ல மோகன்.
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ஆனால் இப்படி நீ விட்டேத்தியா பேசுறது ரொம்ப தப்பு" என்றான் பொறுமையை இழுத்து பிடித்தவனாய்.

"நீ என்ன பெரிய இவனா. என்னை கேட்க நீ யாரு" உதயை பார்த்து தனது மொத்த வஞ்சத்தையும் சேர்த்து ஊதாசினமாக கேட்டான்.

"நீ மட்டும் உனக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். அது மாதிரி தான் இதுவும்" என்றான் ஏட்டிக்கு போட்டியாக.

அவனது பேச்சில் அருவருப்பாய் பார்த்தான் உதயச்சந்திரன். "நான் கல்யாணம் பண்ணதும் நீ இப்ப பேசுறது ஒண்ணா.

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு பேசணும்ன்றதுக்காக விதண்டாவாதமா ஏதாவது பேசாத. அண்ட் என்னோட கல்யாணத்தை விமர்சிக்க இங்க யாருக்கும் தகுதி இல்லை"

என்ன இப்படி பேசறான் என்று கௌரவம் சுந்தரியும் நினைக்க.
சாவித்திரியோ சபாஷ்டா மகனே என்று எண்ணினார்.

அவருக்கு உதயச்சந்திரனை கேள்வி கேட்ட தன் மகனே பெரிதாக தெரிந்தான்.

ஆனால் சேகரனோ மருமகனது பேச்சை தாங்காமல் "உனக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தது உதய் சொன்னதால தான்" என்று சொல்லிவிட

மோகனுக்கு இத்தனை பேர் முன்னிலையில் தன்னை கேள்வி கேட்கும் உதயச்சந்திரன் அறவே வெறுத்தான்.

அவனை எப்படியேனும் அவமானப்படுத்தி விட வேண்டும் என்று எண்ணியவன் நாவில் சனி குடியிருந்திருப்பாரோ என்னவோ "அப்ப அவனையே உங்க பொண்ண வச்சுக்க சொல்லுங்க எல்லாருக்கும் வாழ்க்கை தர வள்ளல் அவர்தான்" வார்த்தையை விட

அவ்வளவுதான் உதயச்சந்திரன் கொடுத்த அறையில் மோகன் ஒரு நிமிடம் தள்ளாடி பின்னரே சமநிலையாய் நின்றான்.

ஒற்றை விரல் நீட்டி பத்திரம் காட்டியவன் முகமோ உக்கிரமாய் இருந்தது.

"ஒழுக்கமா வாழ்ந்த வாழு இல்ல சாவு. மாமா நீங்க ஆதாரத்தோட போலீஸ் கிட்ட போங்க.

அப்பதான் இவன் எல்லாம் திருந்துவான்" மோகனைப் பார்த்தபடி சேகரனிடம் இடம் கூறினான்.

பின்னர் கேசவன் புறம் திரும்பி "உங்களுக்காக தான் பார்த்தேன் பெரியப்பா. ஆனாலும் முடியல இவன் ரொம்ப பேசிட்டான்" என்றான் இயலாமையுடன்.

அவர் ஒன்றும் பேசாமல் அனைவரும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றார்.

சாவித்திரியும் மோகனையும் வெறுப்பாக பார்த்தான் உதயச்சந்திரன். சாவித்திரியும் மோகனும் சென்று விடவே.

சேகரனிடம் சிறிது ஆறுதலாய் பேசி அனுப்பி வைத்தான்.

பொத்தென்று சோபாவில் அமர்ந்து கொண்டவன் முன் தண்ணீரை நீட்டினாள் சுந்தரி.

நீரை வாங்கி பருகியவன் சுற்றி பார்க்க கௌரி அறைக்குள் சென்று விட்டது புரிய, தண்ணீர் சோம்பை வைத்து விட்டு அவளது கைப்பற்றி இழுத்து இடையோடு கட்டிக் கொண்டு வயிற்றில் மீசையால் குறு குறுப்பூட்டினான்.

"சந்துரு ப்ளீஸ்" கால்களை தரையில் பதிக்க முடியாமல் தத்தளிக்கவே, "ஒழுங்கா நில்லு பேபி" அதட்டியவன் மேலும் அவஸ்தையுற செய்தான்.

"கோவம் போச்சு பேபி" எழுந்தவன் ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தான்.

மேலும் நான்கு தினங்கள் செல்ல

அந்த அதிகாலை வேளையில் குளிர்தனை பொருட்படுத்தாமல் வாசலில் புள்ளி வைத்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் அருகினில் நிழல் ஆட நிமிர்ந்து பார்த்தாள்.


நிலவு தரையிறங்கி தன் அருகில் நிற்பது போல் ஒரு பிரம்மை திரிபுரசுந்தரிக்கு.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17:-

தன்னருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தவள் வியந்துதான் போனாள். இத்தனை அழகாய் ஒரு பெண்ணா என்று.

ஆச்சரியமாக பார்த்தபடி நின்றவள் முகத்தின் முன்னே சொடக்கு போட்டவள் "நீ தான் உதய் மாமா பொண்டாட்டியா" திமிரா கேட்க.

ஒரு நொடியில் தன்னை சுதாரித்துக் கொண்டவள் "ஆமாம் நான் சுந்தரி உதயச்சந்திரன் நீங்க சௌந்தர்யா தானே",

"அச்சோ கண்டுபிடிச்சிட்டீங்களே கொஞ்சம் விளையாடலாம்னு நினைச்சேன்" உதட்டை சுழித்தாள் சௌந்தர்யா.

"வாங்க இப்பதான் வரீங்களா உள்ள போங்க. மிச்ச கோலத்தையும் போட்டுட்டு வரேன்"

"ஆமா நேரா இங்க தான் வரேன்" சொன்னவள் உள்ளே செல்ல.
மீதி கோலத்தை முடித்து வந்தவள் சௌந்தர்யாவுக்கு தேனீர் தயாரித்தாள்.

அங்கு வந்த உதய் "குட்மார்னிங் டீச்சரம்மா" என்றவன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசனை பிடித்தான் பின் இருந்து அனைத்த படி.

"பேஷ் பேஷ் நல்லா இருக்கு ஏர்லி மார்னிங் ரொமான்ஸ்" கைதட்டிய சத்தம் கேட்ட கணவனும் மனைவியும் சடுதியில் பிரிந்தனர்.

சௌந்தர்யாவை பார்த்த உதய், "ஏய் லூசு எப்ப வந்த நீ" கொட்டினான் அவள் தலையில்.
இந்தாங்க என்றபடி இருவருக்கும் தேநீர் தரவே உணவு மேஜையில் அமர்ந்து கொண்டனர்.

அதோடு ஸ்ரீமதியும் கௌரியும் எழுந்து வந்துவிடவே அவர்களுக்கும் தேநீர் தந்து, தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

சௌந்தர்யாவின் படிப்பை பற்றி விசாரித்தான் உதயச்சந்திரன். ஸ்ரீமதியம் கௌரியும் அவளது நலத்தை விசாரித்தனர்.

மேகலாவிற்கு அழைத்த ஸ்ரீமதி சௌந்தர்யா அங்கு வந்து விட்டதாக சொன்னாள்.

பேசிக்கொண்டே காலை உணவு உண்ணும் வேளையில் மேகலா அங்கு வந்தார்.

மேகலாவும் வந்துவிடும் விட காலை உணவை முடித்துக் கொண்டு பொங்கலுக்கு தேவையானவற்றை வாங்க ஷாப்பிங் சென்றனர்.

மதிய உணவை வெளியில் முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

யாரும் மோகனைப் பற்றி பேசவில்லை என்பதைவிட பேச அனுமதிக்கவில்லை உதயச்சந்திரன் என்பதே சரியானது.

தன்னை இழிவாக பேசிய அவனை பற்று நினைப்பது கூட அசிங்கம் என்று எண்ணி இருந்தான் உதயசந்திரன்.

சுந்தரியும் கணவனிடம் இது பற்றி எதுவும் பேசவில்லை சௌந்தர்யாவை உதயிக்கு திருமணம் செய்ய நினைத்ததை பற்றி மேகலா பேசியபோது கூட, உங்களுக்கு சௌந்தர்யாவை பிடிக்குமா, எதுவும் அபிப்பிராயம் இருந்ததா என்று கேட்க நினைத்தது கூட இல்லை.

அதைப் பற்றியே கேட்காதவள் மோகனை பற்றியா கேட்க போகிறாள்.

வீட்டிற்கு வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.

உதயசந்திரனுடன் ஷாப்பிங் சென்றது சுந்தரிக்கு புதிய அனுபவத்தை தந்தது.

ஒரு ஒரு துணியையும் தரம் பார்த்து, வகை பார்த்து, விலை பார்த்து, நிறம் பார்த்து என நேர்த்தியான அவனது தேர்வு அவளை வியப்பில் ஆழ்த்தியது.

எப்போதும் துணி எடுக்க போனால் ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு வருபவள்.

யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றம் நோட்டம் விட்டு தன் மீது துணியை வைத்து பார்த்து விட்டு மனதிற்கு நன்றாக தோன்றும் ஒன்றை எடுத்துக் கொள்வாள்.

ஓய்வாக தங்களது அறையில் இருக்கும் போது இது பற்றி அவனிடம் கேட்க,

மனைவியை கை வளைவில் வைத்துக் கொண்டு "என் பொண்டாட்டிக்கு டிரஸ் எடுக்கன்னும்னு நான் கத்துக்கிட்டேன் பேபி" சொன்னவனை பார்த்து முறைத்து வைக்க, அவனோ சிரித்து விட்டு

"அது அம்மா ஸ்ரீ சௌந்தர்யா டிரஸ் எடுக்கும் போது டிரைவரா போவேன் அப்போ அப்படியே கத்துக்கிட்டது டா."

"அதுதானே பார்த்தேன்"

"ஆனால் பேபி உனக்கு டிரஸ் செலக்ட் பண்ண மட்டுமில்ல போட்டு விடவும் தெரியும் டா, அன்னைக்கு ஹனிமூன்ல ஜஸ்ட் மிஸ் பேபி"

ஆளை விழுங்கும் அவனது பார்வையில் பெண்ணின் நாணப் பூக்கள் மடல் விரிக்க,

அவளது ஆடைகளை கலைத்து, அவனே ஆடையாக மாறி, மீண்டும் ஆடையை அணிவித்து தான் ஓய்ந்தான்.

தேநீர் அருந்தி விட்ட தங்களது கார்களில் சொந்த ஊர் நோக்கிய பயணப்பட்டார்கள்.

ஊருக்கு வந்து இறங்கியவர்கள் அந்த வீட்டின் அலங்காரங்களை பார்த்து வியந்தனர்.

ஏற்கனவே ஆள் வைத்த தங்களது பூர்வீக வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தனர் உதயச்சந்திரன் குடும்பத்தினர்.

வரும் வழியிலேயே இரவு உணவு தயாரித்து வைத்திருக்கும் படி சொல்லி இருக்க, அதுவும் தயார் நிலையில் இருந்தது.

உண்டு முடித்து மறுநாள் சூரிய பொங்கல் வைக்க தேவையான ஆயத்த வேலைகளை செய்தனர்.

மறுநாள் பொங்கல் தினம் நன்றாக விடிந்தது.

அதிகாலையில் எழுந்து நீராடி புது துணி உடுத்தி முற்றத்தில் நீர் தெளித்து வண்ண கோலம் போட்டனர் சுந்தரி, ஸ்ரீ மற்றும் சௌந்தர்யா.

அப்போது சௌந்தர்யா சும்மா இராமல் "நேத்து காலைல சூப்பர் சீன் பார்த்தேன் ஸ்ரீ. வாவ் வாட் எ ரொமான்ஸ் லைவ்வா பார்க்கிறது செம்ம ஃபீல் போ" என்றபடி சுந்தரியை பார்க்க
சுந்தரியோ அதிர்ந்து சௌந்தர்யாவை பார்த்தாள்.

ஆனால் சௌந்தர்யாவோ இன்னும் குறும்பாக "உங்க வீட்டில தானே நடக்கிறது நீ பார்த்தது இல்ல அதுவும் கிட்சன்ல" என்க

ஸ்ரீ இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு, "அண்ணி இந்த புள்ளைக்கு வேற வேலையே இல்லை. நீங்க இவளை கண்டுக்காதிங்க" என்றாள்.

அப்போது தான் ஸ்ரீமதியின் பேச்சை நன்றாக கவனித்த சௌந்தர்யா "ஏய் எண்ண ஏன் நீ அண்ணி சொல்லல்ல"

சௌந்தர்யாவின் பேச்சில் இப்போது அதிர்ந்து விழிப்பது மதி யின் முறையானது.

சுந்தரி ஸ்ரீமதியை பார்த்தவள் நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

ஸ்ரீமதி தன் அண்ணியை பார்க்க சிரிப்பை மறைத்து கொண்டு அவளோ கேள்வியாக பார்த்தாள்.

'போச்சு கோர்த்து விட்டுட்டா எரும' மனதிற்குள்ளே சௌந்தர்யாவை தாளித்தாள்.

"ஏய் நான் கேட்கிறேன் நீ பதிலே சொல்ல மாட்டேங்குற" என்றவளை நக்கலாய் பார்த்து

"முதல்ல நீ அண்ணனை கொண்டு வா அப்புறம் நான் உன்னை அண்ணின்னு சொல்றேன்"

அவளது கூற்றில் "ம்கூம் நான் லவ் சொல்லி ரெண்டு வருஷம் ஆகுது அந்த பரதேசி ஏத்துக்கவே இல்ல இதுல எங்க இருந்து அண்ணனை கூட்டிட்டு வர்றது" அவளது முனகல் இரு பெண்களுக்கும் தெளிவாக கேட்டது.

"என்ன சௌந்தர்யா லவ்வா" சுந்தரி கேட்டாள்.

"நான் லவ் சொல்லிட்டேன் அவன் பதில் சொல்ல மாட்டேங்குறான். சீ அதுதான் பிரச்சனையே"

அவள் சொல்லிய பாவனையில் சுந்தரியும் ஸ்ரீமதியும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

அவர்களது சிரிப்பில் கோபமாக முறைத்தாள் சௌந்தர்யா.

அதில் இன்னும் எண்ணை வளர்ப்பது போல் ஸ்ரீமதி
"நல்ல வேலை பா நான் யாரையும் காதலிக்கல. ஆனாலும் சௌந்தர்யா மைதா மாவு மாதிரி இருக்கிறதால உன்னை பேயோன்னு நினைச்சு அந்த அண்ணன் பயந்து போய்ருப்பாங்க டீ" கிண்டலாக மொழிந்தாள்.

இதற்கு மேல் முடியாது என்று நினைத்த சௌந்தர்யா ஸ்ரீமதியின் பேச்சில் அவளை அடிக்க துரத்தினாள்.

ஓடிய இருவரும் உதயசந்திரனை சுற்றி வளைக்க. அதனைப் பார்த்த மேகலா சுந்தரியின் காது படவே

"மொற புள்ளைங்க அப்படித்தான் தொட்டு கிட்டு விளையாடுவாங்க" அவளை புண்படுத்த கூறினார்.

ஆனால் சுந்தரியோ சிரித்துக் கொண்டே "எனக்கெனவோ ரெண்டு தங்கச்சிங்க அவர சுத்தி விளையாடுற மாதிரி தான் தெரியுது" சொல்லிவிட்டு சென்றாள்.

சுந்தரியின் பேச்சில் மேகலா பல்லை கடித்தார்.

சுந்தரிக்கு புரியவே செய்தது ஸ்ரீமதியும் சௌந்தர்யாவும் இவரும் ஒருவர் கணவரை மற்றவர் அண்ணன் என்று அழைப்பது என்றும் அதே முறையில் அண்ணி என்று இருவரும் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டு இருந்தனர் என்பது.

அதுவும் சௌந்தர்யா காதலிக்கும் ஆளை ஸ்ரீமதி அண்ணன் என்று ஏற்று அவளை அண்ணி என்று வம்பிழுத்திருக்கிறாள் அதை மேகலா தவறாக புரிந்து திரித்து தன்னிடம் கூறியுள்ளார் என்றும் புரிந்தது.

மோகன் குடும்பத்தினர் வந்து இறங்கினர் அங்கு.

அவர்களைப் பார்த்த உதயச்சந்திரன் விரைந்து சென்று தனது பெரியப்பாவை கைபிடித்து அழைத்து வந்தான்.

அவன் எள்ளளவும் மோகனை கண்டு கொள்ளவில்லை. நீ யாரோ எவரோ என்பது போல் இருந்தது உதய சந்திரனின் நடவடிக்கை சாவித்திரி மற்றும் மோகனிடம்.

ஆனால் மோகன் உதய சந்திரனையே முறைத்தபடி இருந்தான் அவனது மனதில் பழி உணர்வு சுடர் விட்டு எறிந்தது.

ஆம் மோகனின் மாமனார் சேகரன், மோகனைப் பற்றி அவருக்கு தெரிந்த காவல்துறை நண்பர் ஒருவரிடம் சொல்லி அவனை இரு நாட்கள் சிறையில் வைத்து நன்கு கவனிக்கும்படி கூறினார்.

அவரால் மோகன் தன் மகளுக்கு இழைத்த அநீதியை மன்னிக்க முடியவில்லை. ஆகையால் தனது நண்பரின் உதவியை நாடி இவ்வாறு செய்தார். அதில் ஒன்றும் பிழை இல்லையே.

மோகனுடன் பழகிய அந்த பெண்ணை அழைத்து விசாரிக்கையில் மோகனுக்கு திருமணமானது தெரியாது என்று கை விரித்தாள்.

அது உண்மையும் கூட. மோகன் அவ்வாறு தான் கூறிய பழகி இருந்தான் அந்த பெண்ணிடம்.

அதில் மிதமிஞ்சிய கோபத்திற்கு ஆளானார் மோகனின் மாமனார். அதன் விளைவு தான் அந்த காவல் துறை அதிகாரியிடம் மோகனை கவனிக்கும்படி கூறியது.

அந்தப் பெண்ணோ மோகனை அசிங்கமாக திட்டி விட்டு காரி உமிழ்ந்து விட்டு சென்றாள்.

போலீஸின் அடிக்கு பயந்து மனைவியுடன் சேர்ந்து வாழ சம்மதித்திருந்தான் மோகன்.

இது அத்தனைக்கும் காரணம் உதயச்சந்திரன் என்றே நினைத்திருந்தான் மோகன்.

ஆனால் உதயச்சந்திரன் அன்று பயமுறுத்தவை போலீஸ்கிட்ட ஆதாரத்தை காமிங்க என்று சொன்னான்.

உதயச்சந்திரனைப் பொறுத்தவரையில் இனி மோகன் என்ற ஒருவன் உயிருடன் இல்லை என்றே நினைத்து ஒதுங்கிக் கொண்டான்.

அதுவே அவனுக்கு தண்டனை என்று நினைத்தான். மேலும் தன் பெரியப்பாவின் குனத்திற்காக அவனை விட்டு வைத்தான்.

இப்படி தன் சுபாவத்தையும் மீறி ஒதுங்கி போக நினைக்கும் உதயசந்திரனே ஒரு நாள் மோகனை நைய புடைக்க போகிறான் என்று நினைத்திருக்க மாட்டான்.

வீட்டு வாசலில் அடுப்பு கூட்டி மண்பானையில் பொங்கல் வைக்க அதுவோ கிழக்கில் மங்களகரமாக பொங்கியது.

அப்போது அங்கு வந்து ஒரு டெம்போ வண்டினு நிற்க, அதிலிருந்து இறங்கியவர் உதயச்சந்திரனிடம் ஒரு சீட்டை காண்பித்து "இந்த அட்ரஸ் இதுதானுங்களே" கேட்க
அவன் குழப்பத்தில் புருவத்தை சுருக்கி ஆமாம் என்றான்.

பின்னே பித்தளை வெண்கல சாமான்களுடன் அரிசி மூட்டை கரும்பு கட்டு சகிதம் அந்த வண்டி நிற்க குழப்பத்தானே செய்யும் அவர்களை.

உதயச்சந்திரன் அலைபேசி அடிக்க அதனை எடுத்து பார்த்தவன் நவீன் அழைத்திருக்கவும். ஏதோ புரிவது போல் இருந்தது.

சுந்தரியிடம் போணை கொடுக்க, அவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க
"ஹலோ சந்திரன் நான் நவீன் பேசுறேன். சுந்தரிக்கு பொங்கல் சீரு என் சார்பா வந்திருக்கு." என்றவனின் நட்பை நினைத்து பூரித்து போனாள் திரிபுரசுந்தரி.

வந்திறங்கிய பொருட்களை பார்த்து வாய் பிளந்தனர் அங்கிருந்த ஊர் மக்கள்.

சுந்தரிக்கு எங்கே உதயசந்திரன் தான் தான் இந்த சீர்வரிசைகளை அனுப்பி வைக்க சொன்னதாக நினைத்து விட கூடாதே என்று கலக்கமாக இருந்தது.

ஆனால் உதயசந்திரனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. ஏனெனில் ஒன்று சுந்தரி பற்றி தெரிந்து இருந்தது அவனுக்கு. மற்றொன்று நவீனின் தாத்தா பாட்டி அன்று ஊருக்கு போகும் முன்பு சொல்லி விட்டு சென்றிருந்தனர்.

வேலையாட்கள் சாமான்களை இறக்கி வைத்தனர். சுந்தரி நவீனிடம் பேசிவிட்டு வைத்திருந்தாள்.

பயிர் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரிய கடவுளை வணங்கினார்கள்.

அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.

மறுநாள் மாட்டு பொங்கல் மாலையில் இதே போல் வீட்டு வாசலில் வைத்து கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்வார்கள்.

உதயசந்திரனுக்கு ஊரில் நில புலன்களும் கால்நடைகளும் உண்டு. அதன் பொருட்டே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ஊருக்கு வருவது.

கிராமங்களில் மாட்டு பொங்கல் தான் விஷேஷமாக கொண்டாடுவது உண்டு.

மாடுகளை குளிப்பாட்டி பொட்டிட்டு கொம்புகளில் வர்ணம் பூசி கொண்டாடுவார்கள்.

மேலும் அந்த போகத்தில் தங்களது வயலில் விளைந்த தானியத்தையும் படைத்து வணங்குவார்கள்.

பட்டி பொங்க, பால் பொங்க, உழவு சிறக்க, ஊர் வாழ, பொங்கலோ பொங்கல் என்று பாடி குலவையிட்டு குலதெய்வம் வழிபாடு நடக்கும்.

மாட்டு பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளூர் தினத்தில் ஊரில் உள்ள சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விளையாட்டு போட்டி நடத்த படும்.

இளைஞர்களுக்கு உரி அடிப்பது சருக்கு மரம் சைக்கிள் பந்தயம் கபடி கோலப் போட்டிகளும், சிறுவர்களுக்கு ஓட்ட பந்தயம் உயரம் தாண்டுதல் திருக்குறள் ஒப்பித்தல் மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் கலை கட்டும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் உண்டு.

பண்பாடு கலாச்சாரம் என்பதை தாண்டி ஒற்றுமை ஒன்றே பண்டிகைகளின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

பொங்கல் முடிந்து ஊர் வந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர் உதயசந்திரன் குடும்பத்தினர்.

உதயசந்திரன் மடிக்கணினியில்வேலை செய்து கொண்டிருக்க அவனது அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தால் பிரணவ் காலிங் என்று இருந்தது.

உதயச்சந்திரன் சுந்தரியை ஏறிட்டுப் பார்த்தான் அவள் தீவிரமாக விடைத்தாள்களை திருத்திக் கொண்டு இருந்தால் பன்னிரண்டாம் வகுப்பிற்கு அவ்வப்போது வைக்கும் தேர்வு விடைத்தாள்கள்.

அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றவன் அழைப்பை ஏற்று காதில் வைக்க
"உதய் டேய் மச்சான் நீ கேட்ட விஷயம் கைக்கு வந்துருச்சுடா" என்றவன் அன்றொரு நாள் உதயச்சந்திரன் கேட்டதை இன்று செய்து முடித்து விட்டிருந்தான்.

உதயச்சந்திரனோ "டேய் மச்சான் நிஜமா தான் சொல்லுறியா. ரொம்ப ரொம்ப சந்தோசம் டா. வெரி வெரி ஹாப்பி டா" உண்மையிலே மகிழ்ந்தான்.

மேலும் பிரணவ் "சிஸ்டர்க்கு இந்த விஷயம் தெரியுமாடா" கேட்க

"உன் சிஸ்டர் தானே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சிருந்தா மேடம் ஓட ரியாக்‌ஷன் வேற மாதிரி இருந்து இருக்கும்"

"இன்னமும் சிஸ்டர் உன்கிட்ட எதுவும் சொல்லலையா டா"
பிரணவின் கேள்விக்கு "அவ சொல்லனும்னு நான் இப்பலாம் எதிர்பார்க்கிறது இல்லடா" என்றவனது மனமோ தேனிலவு செல்லும் முன் அன்று சுந்தரி அழுத அழுகையை நினைத்துக் கொண்டது.

மேலும் "இனி அவ எதும் சொல்லவும் வேண்டாம் டா. இப்படியே ஒரு சந்தோஷமான வாழ்க்கை கடைசி வரைக்கும் வாழ்ந்த அதுவே போதும். அவளுக்கு தேவையானது எல்லாமே நான் செய்வேன் டா"

அதனைக் கேட்ட பிரணவ்க்கு இந்த காதல் என்னவெல்லாம் செய்ய வைக்குது நினைத்துக் கொண்டான். தானும் காதல் வயப்பட்டு என்னவெல்லாம் செய்து இருக்கிறோம் தன்னவளுக்காக நினைத்துக் கொண்டவன் அது மனம் மகிழ்ந்தது.

அலைபேசியை வைத்து விட்டு உள்ளே வந்தவனை இறுக கட்டிக் கொண்ட சுந்தரி "தூக்கம் வருது சந்துரு" என்றாள்.

"தூங்க வேண்டியது தானே பேபி" புன்முறுவலாய் சொல்ல

"நீங்க இல்லாம தூக்கம் வரல இந்த புசு புசு முடி இல்லாம தூக்கம் வரல" அவனது மார்பில் இருந்த முடிகளை காட்டி சொன்னாள்.

அவளது சேட்டையில் வாய்விட்டு சிரித்தவன், "கொஞ்சம் வேலை இருக்கு மடியில் படுத்துக்கிறியா வா" அவளை மடியில் படுக்க வைத்துக் கொள்ள அவளோ அவன் புறம் திரும்பி வயிற்றில் கடித்து வைத்தாள்.

"டீச்சரமா அமைதியா தூங்க மாட்டியா" போலியாய் கண்டித்தான்.

"பொண்டாட்டிக்கு தூக்கம் வரலைன்னா புருஷன் என்ன செய்யணுமோ அதை செய்யணும். அதை விட்டுட்டு வேலை செஞ்சா எப்படி"

சத்தமாக முணுமுணுத்து விட்டு அவனை விட்டு விலகி படுக்க சென்றாள்.

"ஏய் வாலு என்ன டெம்ட் பண்ணிட்டு இப்போ ஓடுறியா" அவளது காலை பற்றி இழுக்க சலங்கை வைத்த அந்த கொலுசு ஸ்ருதி சேர்த்தது கட்டில் ராகத்திற்கு.

தினம் தினம் புதிது புதிதாய் ஈர்த்த தன் மனைவியை கொண்டாடி தீர்த்தான் உதயச்சந்திரன்.

ஒரு வாரம் சென்ற நிலையில் "திருச்சிக்கு போகனும் சந்துரு" என்றபடி கணவன் முன் நின்றாள் சுந்தரி.

ஏன் என்ற அவனது கேள்விக்கு "சமயபுரம் கோவிலில் வேண்டுதல்" என்றாள்.

பாவம் பெண்ணவள் அன்று ஸ்ரீரங்கம் செல்லும் போது அந்த ஊர் பற்றி தெரியாது என்றவள் இன்று அதே மாவட்டத்திற்கு போவதற்கு கணவனிடம் கேட்கிறோம் என்பதையே மறந்துவிட்டாள் போலும்.

அதுசரி முதல் முறையாக திருட்டுத்தனம் செய்யும் போது அத்தனை நேர்த்தியாக செய்ய முடியாது என்பது பாவம் பேதைக்கு தெரியவில்லை.

அவளை கூர்ந்து பார்த்து "வேண்டுதல்ன்னா குடும்பத்தோட தானே பேபி போவாங்க. நீ ஏன் தனியாக போற எல்லோரும் சேர்ந்து போவோம் பேபி." என்றவனை பார்த்து கலவரமானாள்.

பின்னர் "இல்லை சந்துரு கல்யாணத்துக்கு முன்னாடியே வேண்டிக்கிட்டது தனியாக தான் போகனும்"

ஏதேதோ சொன்னவளை பார்த்து ஆழ்ந்து நோக்க தலை குனிந்து நின்றாள் சுந்தரி.

உதயசந்திரன் மனமோ 'ஏன்டி என்கிட்ட உன்மைய சொன்னா தான் என்னவாம். இன்னும் எத்தனை நாள் இப்படி பொய் சொல்லிட்டு திருச்சி போவ' நினைத்து கலங்கியது.

தன்னுடனான அவளது திருமணம் அவளை பொய் சொல்ல தூண்டி விட்டதே என்று.
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 18:-

அன்று சொன்ன பொய்யின் பலனாக மேற்கொண்டு எந்த விளக்கமும் தேவைப்படாமல் திருச்சிக்கு அனுப்பப்பட்டாள் சுந்தரி.

கௌரி ஒருமுறை தான் துணை வர கேட்டு பின் மருமகளை முகம் பார்த்து "பத்திரமா போயிட்டு வாம்மா" தலைவருடி அனுப்பி வைத்தார்.

இதோ இன்றோடு திருச்சி சென்று வந்து நான்கு நாட்கள் ஆகிறது. ஆயினும் தெளிவில்லாமல் தெரிகிறாள் சுந்தரி.

கௌரி அவளை முழுதாக சமையலில் ஈடுபடுத்தி திசை திருப்பினார் என்றால் உதயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியில் அழைத்துச் சென்றான்.

அன்றைய தினம் சுந்தரி துணிகளை மடித்துக் கொண்டு இருந்தாலும் அவளது சிந்தனை இங்கு இல்லை என்று உணர்ந்தவன்,

அவளது கைப்பிடித்து கட்டிலில் தன்னருகே அமர வைத்து "என்னாச்சு நாலஞ்சு நாளா நீ நீயாவே இல்ல சுந்தரிமா" கூந்தல் ஒதுக்கி கண்ணம் வருடினான்.

"ஒன்னும் இல்ல சந்துரு" முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

"கிட்டத்தட்ட ஒன் வீக் ஆச்சு தெரியுமா?" அவன் அப்பாவியாக முகத்தை வைக்க.

புரியாமல் பார்த்தவளை கண்டு உள்ளுக்குள் நகைத்தவன், "அது இந்த கால் என் நெஞ்ச தொட்டு"
மனைவியின் கால்களை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு சொன்னான்.

"ஐயோ சந்துரு கால விடுங்க" கூச்சத்தில் இழுக்க.

"ஏன் டீச்சரம்மா காலை பிடித்து விடுறது என்ன குத்தமா.
ஆனால் இந்த கால வச்சு நீ என்னை...."

இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ ஆனால் மனைவி இழல் அவனது இதழ்களை சிறை செய்ததில் மௌனியானான்.

"பேபி" என்றவனின் கைகள் அவனது தேடலை தொடங்க, அதில் அத்தனை நிதானம், மிகுந்த பொறுமையை கையாண்டான்.

சிலிர்த்து சிவந்து போன பெண், தன்னை விட்டு விடும்படி கெஞ்சலானாள்.

பேராசை கொண்ட ஆணின் ஒவ்வொரு தீண்டலும் பெண்ணுக்குள் தீ வார்த்தது.

தன்னிலை இழந்த பெண் தாளாமல் கொடியாய் துவள.

அவளை மடியில் தாங்கிக் கொண்டான். "அம்மாடியோ" தத்தளித்தால் தங்க தாரகை.

குங்குமம் பூசியவளாக உருமாறினாள் மன்னவனின் மயில் பீலி தீண்டலில்.

புதையலாய் கொள்ளை கொள்ளாமல், சாரல் மழையாய் மொத்தமாய் தீண்டி தீண்டி தித்தித்தான்.

ஒரு கட்டத்தில் கணவனின் முகத்தை கையில் ஏந்தி விழி மொழி சொல்லி அவனை அசரடித்தாள்.

மகராணி அவளின் உத்தரவை சிரமேற்றி நிகழ்த்தி அவளையே வீழ்த்தினான் கள்வனவன்.

"பேபி ஆர் யூ ஹேப்பி"
கணவனின் கேள்வியில் அவனை இறுக கட்டிக் கொண்டாள். தன் மனநிலையை மாற்றும் மந்திரக்கோல் அவனே என்று உணர்ந்தாள்.

நாட்கள் வேகமாக செல்ல கிட்டத்தட்ட உதயசந்திரன் சுந்தரியின் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலை.
அன்று வீட்டின் வரவேற்பு அறையில் கௌரி சுந்தரி ஸ்ரீமதி மூவரும் தொலைக்காட்சியில் திரைப்படம் ஒன்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதலில் சாதாரணமாக தான் படத்தை பார்க்க ஆரம்பித்தாள். பின்னர் படத்தில் அந்த பாடல் ஒளிபரப்பாகவே நடுங்கினாள் சுந்தரி. சித்தம் கலங்கி போன பெண்ணின் அக கண்ணில் ஆயிரம் பிம்பங்கள் வந்து போக தொலைக்காட்சியை வெறித்தவளின் கண்களில் அந்த பாடலுக்கு காட்சியாகத் தானே அங்கு இருப்பது போன்ற பிரம்மை எழ, வெறி கொண்டு பெண்ணாக டீப்பாயில் இருந்த சில்வர் வாட்டர் பாட்டிலை தூக்கி வீச தொலைக்காட்சி சிதறுயது.
நொடியில் அத்தனையும் நிகழ்ந்துவிட, தன் செயலை முதலில் புரியாதவள், பின்பு பயத்தில் முகம் வெளிறி கௌரியை நோக்கினாள்.

அவருக்கும் மருமகளின் செயல் பேரதிர்ச்சி தந்தது தான் ஆயினும் பயந்த குழந்தையாக தன்னை நோக்கும் பெண்ணை மேலும் அச்சுறுத்தாமல் "ஒன்னும் இல்ல சுந்தரிம்மா" என்றபடி அருகில் செல்ல, அவரையே வெறித்திருந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

மீண்டும் கண் விழி கையில் உதயச்சந்திரன் அவள் அருகில் இருந்தான்.

எழ முற்பட்டவளை தூக்கி அமர்ந்தி "கண்ணம்மா ஒன்னும் இல்லடா. யூ ஆர் ஆல்ரைட். " சொல்லி அவனை அவளை ஆற்றுப்படுத்தினான்.

அப்பொழுது கௌரி உணவை எடுத்து வரவே தனது செயலில் கூனி குறுகினாள்.

அவள் மனமோ இதற்கு என்ன விளக்கம் சொல்ல என்று யோசித்தது.

ஆனால் அதற்காக அவசியம் இல்லாத படி அவர் உணவை கொடுத்துவிட்டு, அவளது உடல் நிலையை விசாரித்து சென்றார்.
தன் வாய் அருகே உணவை ஊட்ட வந்தவனை பார்த்து

"இல்ல நானே சாப்பிட்டுக்கிறேன்" என்று சொல்ல உதயச்சந்திரன் முறைத்துப் பார்த்தான். அதில் அவளது வாய் தானாக திறந்து கொண்டது.

எதுவும் பேசாமல் கேட்காமல் உணவை ஊட்டவே நிர்மலமான மனதுடன் சாப்பிட்டாள்.

சாப்பிட்ட தட்டை கழுவி வர உதய் கீழே செல்ல சுந்தரியும் அவனுடன் சென்றாள்.

அப்பொழுதுதான் கவனித்தாள் நேரம் இரவானது என்று.

இவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தோமா வியந்து போனவள் மனம் கலவரமானது.

வரவேற்பறையை கடக்கையில் சுந்தரியின் பார்வை தொலைக்காட்சி இருந்த இடத்தை பார்க்க. அங்கு புதிதாய் ஒரு தொலைக்காட்சி வீற்றிருந்தது.

அவர்களது வசதிக்கு அது ஒரு பொருட்டே இல்லை தான். ஆனாலும் சுந்தரிக்கு அது குற்ற உணர்வு கொடுத்தது. யாரையும் பார்க்காமல் மீண்டும் அறைக்கே சென்றாள்.

உதயச்சந்திரன் கீழே உணவு உண்டு அறைக்கு வந்து, அவளுக்கு தேவையான மாத்திரையை எடுத்து தர கேள்வியாய் பார்த்தாள்.

"ஜஸ்ட் மயக்கம் ஆயிட்ட பேபி. டாக்டர் ஹெல்த் டேப்லெட் தான் கொடுத்தாங்கம்மா".

என்றவனின் மனம் மதியம் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தது.

சுந்தரி மயக்கமுறவே உதயசந்திரனுக்கு ஸ்ரீமதி அழைத்து சொன்னாள். அடுத்த சில நிமிடங்களில் வந்தவன், பேச்சு மூச்சற்று கிடந்த மனைவியை பதற்றமாக கையில் ஏந்தி கொண்டான்.

கௌரி "சுந்தரியை நீ ரூமுக்கு தூக்கிட்டு போப்பா. நான் டாக்டருக்கு சொல்லிட்டேன் வந்துருவாரு" சொல்லிக் கொண்டிருக்க அவர்களது மருத்துவரும் உள்ளே வந்தார்.

அறையில் சுந்தரியை கிடத்தியவன் முகத்தில் பதற்றமும் கவலையும் சரிவிகிதமாக இருந்தது.

சுந்தரியை பரிசோதித்த மருத்துவர் அதிக மன அழுத்தத்தில் உண்டான மயக்கம் தானாக கண்விழிப்பாள் என்று சொல்லி ஊசி போட்டுவிட்டு மாத்திரையும் கொடுத்து சென்றார்.

உதயச்சந்திரன் தாயையும் தங்கையையும் அனுப்பிவிட்டு அப்படியே அமர்ந்து கொண்டான்.

தாயிடம் என்ன ஏதென்று விசாரித்து தெரிந்து கொண்ட அவனின் மனமோ "இவ எல்லாத்தையும் மறந்துட்டு வாழறது சாத்தியம் இல்லையோ. ஒரு படம் பாட்டுக்கே இப்படின்னா"

தன்னவளின் துயரத்தை எவ்வாறு கலைவது என்று தெரியாமல் கண்கலங்கினான்.

இதோ இப்போது சுந்தரி கண்விழிக்கும் போது தான் அசைந்தான் என்று சொல்ல வேண்டும்.

அவளுக்கு உணவு கொடுத்துவிட்டு காலையில் சாப்பிட்டவன் இதோ இரவு இப்பொழுதுதான் மீண்டும் உணவில் கை வைத்தான்.

தன்முன் கை நீட்டியவளை புரியாமல் பார்க்க "டிவியை உடைத்ததற்கு காசு எடுத்துக்கோங்க சந்துரு. "கார்டை நீட்டினாள்.

அப்படி ஒரு கோபம் வந்தது அவனுக்கு. கையை சுவற்றில் ஓங்கி குத்தியவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல்

"என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மேடம். நீங்க திரும்பி கண் முழிக்கிற வரைக்கும் மனுஷன் உயிர பிடிச்சு வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தால் கணக்கு பார்த்து காசு நீட்டுங்களோ." மித மிஞ்சிய கோபம் அவனுக்கு.

தனக்கு சொந்தமான பொருள் தானே தன் வீடு இது என்று நினைப்பில்லாமல் காசை நீட்டுகிறாளே கத்தி விட்டான் உதயசந்திரன்.

அவனது கோபத்தில் பயந்து ஒரு அடி பின்னே சென்றவளை இழுத்து அணைத்தவன் மாத்திரை கொடுத்து தலையை வருடி உறங்க வைத்தான்.

நல்லிரவு நேரத்தில் கட்டிலை தடவியவள் கணவனை காணாமல் எழுந்து தேடினாள்.

பால்கனியில் காணவில்லை கீழே இருப்பாரோ அரையின் வாயிலில் இருந்து எட்டிப் பார்க்க வரவேற்பறையில் ஆள் அரவமே இல்லை.

ஒரு எண்ணம் தோன்றவே மாடியில் தோட்டத்திற்கு சென்றாள்.

அங்கு பெஞ்சில் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான் உதயச்சந்திரன்.

அவன் அருகில் செல்ல "சாரி சுந்தரிம்மா கோவமா பேசிட்டேன்." முகம் பாராமல் எங்கோ பார்த்தபடி கூற.

அவனை இடையோடு கட்டிக் கொண்டாள் "இல்ல சந்துரு நான் தான் சாரி குற்ற உணர்வு தாங்காம காசு கொடுக்க வந்தேன்."

இருவரும் மாறி மாறி சாரி சொல்ல .

"தூங்கலையா சந்துரு"

"தூக்கம் வரல பேபி" சோர்வாக சொன்னவன் அருகில் அமர்ந்து மடியில் தாங்கிக் கொண்டாள்.

தலைவருடி அவனை உறங்க வைத்தாள். சிறிது நேரம் சிந்தனை வயப்பட்டவள் தானும் கண்ணயர்ந்தாள்.

குளிர் தாங்காமல் கண்விழித்தவன் எழுந்து சுந்தரியை பார்க்க பெஞ்சில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அசந்து தூங்கியவள் அவன் அவளை தூக்கிக் கொண்ட போதும் விழிக்கவில்லை.
அறையில் வந்து கட்டிலில் கிடத்தியவன் தானும் அவளைக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனான்.

அந்த வரவேற்பறை பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

டீப்பாயில் கேக் வைக்கப்பட்டிருந்தது.

தொலைக்காட்சியில் சுந்தரி சந்துரு திருமண வீடியோ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அத்தனையும் ஸ்ரீமதி தான் செய்து இருந்தாள் தன் அண்ணன் அண்ணிக்காக.

ஆம் இன்றுடன் அவர்களுக்கு திருமணம் ஆகி 100 வது நாள்.
அதனைக் கொண்டாடவே இந்த ஏற்பாடு செய்திருந்தாள்.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் புது துணி வாங்கி கொடுத்து உடுத்தி வர அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் அவர்களும் வரவே கேக் வெட்டினர் தம்பதிகள்.

ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.

கௌரியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் தம்பதிகள்.

குடும்பமாக வெளியில் உண்டு கடற்கரையில் விளையாடி விட்டு வீடு திரும்பினர்.

பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்கியது. அன்று பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வு நாள்.

மாணவர்கள் அவளை சந்தித்து விடை பெற. சில மாணவர்கள் பள்ளியின் இறுதி நாளை எண்ணி பிரிவில் மனம் கலங்கினர்.

அவர்களை தேற்றி வாழ்த்தி அனுப்பினாள் சுந்தரி.
அனைவரும் சென்று விடவே தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பள்ளியை விட்டு.

அப்பொழுது அவளது தொலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்க்க ஏதோ தெரியாத எண்.

அடித்து ஓய்ந்த அந்த தொலைபேசி மீண்டும் அழைத்தது அதே எண்ணில் இருந்து.

அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"ஹலோ சுந்தரி நான் கணேசன் பேசுறேன்மா"

"கணேசனா யார். எனக்கு யாரையும் தெரியாது அந்த பேர்ல.

"உன்னோட பெரியப்பாம்மா"
"அப்பாவே இல்ல. இதுல பெரியப்பா எங்க இருந்து வந்தார். "சூடாகவே கேட்டாள் சுந்தரி.

"மன்னித்துவிடும்மா. சொத்துக்காக உன்னையும் உங்க அம்மாவையும்" மீதி வாக்கியத்தை முடிக்க முடியாமல் குலுங்கி அழுதார்.

எரிச்சலாகியவள் "எனக்கு வேலை இருக்கு நான் போன வைக்கிறேன் என்க."

"அம்மாடி எல்லாம் சொத்தும் உன் பேருக்கே எழுதிட்டேன்மா."

"எனக்கு எதுவும் வேண்டாம் நான் நிம்மதியா இருக்கேன் என்ன விட்டுடுங்க" வெறுப்புடன் உமிழ்ந்தாள் வார்த்தைகளை.

"ஆனால் எனக்கு நிம்மதி இல்ல தாயே மோச்சம் குடுமா. என் பொண்டாட்டிய லாரியில் அடிப்பட்டு செத்துப் போயிட்டா. நாலு வருஷம் ஆகுது எனக்கும் ரத்தத்தில் புற்றுநோய். இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கேம்மா."

"திரும்பவும் சொல்றேன் எனக்கு எதுவும் வேண்டாம். நான் நல்லபடியா வாழ்கிறேன். என்னை விட்ருங்க இதை நான் வாங்கினால் எங்க அம்மா என்னை மன்னிக்க மாட்டாங்க.
என் மனசாட்சியே என்னை கொன்றுவிடும். நான் வாழறதுக்கே அர்த்தம் இல்லாம போயிடும் சொன்னவள்" மேலும் எதுவும் பேசாமல் வைத்துவிட்டால் அலைபேசியை.

அவ்வளவு எரிச்சல், கோபம், ஆற்றாமை, வலி,வேதனை. கேவலம் பணத்திற்காக, சொத்திற்காக அதுவும் அது எந்த மாதிரி சம்பாதித்தது. ஆனால் தன் அன்னையின் தற்போதைய நிலை நினைத்து பார்த்து மருகினாள்.

காலம் கடந்து ஞானம் வந்து என்ன பிரயோஜனம் ஒன்றும் இல்லை, விரக்தியாக எண்ணிக் கொண்டாள்.

உதயச்சந்திரன் அவளை அழைத்துச் செல்ல எதிர்பட்டு வரவே தன் முகத்தை சீராக்கினாள்.

ஆயினும் அவனுக்கு தெரியாது போகுமா தன்னவளை.
காரில் வந்து அமர்ந்தவரிடம் என்னவென்று கேட்டான்.

முதலில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவள், அவனது தொடர் வற்புறுத்தலில் "சந்துரு நம்ம பேர்ல சொத்து எழுதி வச்சிருக்காங்க, ஆனாலும் நமக்கு அது வேண்டாம், அப்படின்னா என்ன செய்ய"

முதலில் புரியாது இருந்தவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்க
"உனக்கு வேண்டாம்னா ஆதரவு இல்லாதவங்களுக்கு அதை கொடு பேபி" என்று வழிவகை செய்தான்.

அவனது பதில் அவள் மூளைக்குள் விளக்கெரிய செய்ய சரி என்றாள். என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது அவளுக்கு.

 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 19:-

மே மாதம் பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்தால் சுந்தரி.

ஸ்ரீமதி தன் கல்லூரி இளநிலை கல்வியை முடித்து மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வதாக திட்டம். அதற்கான தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

சுந்தரியின் நாட்கள் கௌரியுடன் சமையல், ஸ்ரீமதியுடன் அவ்வப்போது வெளியில் ஊர் சுற்றி வருவது என்றும், மாடித்தோட்டத்தில் கணவனின் கையணைவில் கை பேசுவதும் என பொழுது கழிந்தது.

பேச்சுவாக்கில் ஸ்ரீமதியின் பிறந்தநாளை தெரிந்து கொண்டு அன்று அவளுக்கு பிடித்த சமையலை செய்து அசத்தினாள் சுந்தரி.

மேகலாவும் சாவித்திரியுமே அவளது கை வண்ணத்தில் வியந்து தான் போனார்கள்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் போது வைர மோதிரம் ஒன்றை சுந்தரி பரிசளிக்க, மேகலாவோ

"வெல்ல பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்ற மாதிரி, அவங்க கடையில இருந்து எடுத்து அவளுக்கே கொடுக்கிற" குத்தல் பேச்சு பேச

"அது எங்க கடை தான். ஆனாலும் நான் காசு கொடுத்து தான் வாங்கினேன். சந்துருவுக்கு வாங்கும் போது கூட அப்படிதான்" என்றாள் எங்க கடை என்ற சொல்லில் அழுத்தம் கூட்டி.

மேகலா இத்தனை நாளில் அப்பொழுதுதான் நன்றாக கவனித்தார் உதயசந்திரன் அணிந்து இருந்ததை.

என்னதான் நகைக் கடை உரிமையாளன் என்றாலும் அவன் நகை அணிவதில்லை. கேட்டால் பிடிக்காது என்று விடுவான்.

ஆனால் மனைவி வாங்கித் தந்ததை இத்தனை மாதங்களாக அணிந்திருக்கிறான்.

சாதாரணமாக ஒன்று அவனை செய்ய வைக்க முடியாது. சுந்தரியிடம் மட்டுமே வளைந்து கொடுக்கிறான் என்று புரிந்தது அவருக்கு.

தனது மகளது இடம் இது என்ற எண்ணம் எழுவதை இப்பொழுதும் தடுக்க இயலவில்லை அவரால்.

நாட்கள் செல்ல அன்றைய தினம் நவீன் அழைத்திருந்தான்.

"ஹே வீணா போன நவீனு எப்படிடா இருக்க"

"நல்லா இருக்கேன் சுந்தரி பாப்பா" தோழியின் குதுகலம் அவனையும் தொற்றிக் கொண்டது.

"நீ எப்படிடா இருக்க சந்திரன் நல்லா இருக்காரா"

"சூப்பரா இருக்கோம் டா நீ எப்ப வருவ இந்தியாவுக்கு" நண்பனை காணும் ஆவல் அவளது குரலில் தழும்பி வழிந்தது.

"இன்னும் ஆறு மாசத்துல வந்துருவேன். எனக்கு இங்கே இருக்க பிடிக்கல. தாத்தா பாட்டி கூட இருந்து பாத்துக்கணும்மா. இங்க இன்னும் ஒரு கோர்ஸ் பண்ணிட்டேன். அங்கு வந்து சாப்ட்வேர் கம்பெனி வைக்க ஆசை. இடம் தேடணும் ஒரு ரெண்டு வருஷத்துல கண்டிப்பா ஜெயிச்சிடுவேன் டா சுந்தரிம்மா"

நண்பனின் தன்னம்பிக்கை அவளுக்கு புத்துணர்வு தந்தது. அதே நேரம் ஒரு யோசனை தோன்றியது அவளுக்கு.

"நவீன் இடம் நான் தாரேன்" என்றவள், அன்று கணேசன் தனக்கு அழைத்ததை கூறி அன்று பேசி அத்தனையும் கூறினாள்.

உதயச்சந்திரன் கூறிய தீர்வு உட்பட.
"சுந்தரி பாப்பா அப்ப சந்திரன் கிட்ட இன்னும் சொல்லலையா. சீக்கிரம் சொல்லுடா"

அவனுக்கு மற்றதை விட தோழியின் வாழ்வே கருத்தில் பட்டது.

"கண்டிப்பாக சொல்லப்போறேன் டா. இந்த தடவை திருச்சிக்கு போயிட்டு வந்துட்டு." என்றவள் மேலும்

"போன தடவை பொய் சொன்னதே குற்ற உணர்ச்சியா இருக்குடா. என்கிட்ட எதுவும் எதிர்பார்க்காம அன்பா இருக்குற குடும்பத்துகிட்ட நான் நேர்மையா இருக்கணுமில்ல. அதான் இந்த முறை திருச்சிக்கு போயிட்டு வந்து மொத்தத்தையும் சொல்லிடுவேன் இனி சந்துரு எடுக்குற முடிவுதான்" என்றவள் அறியவில்லை இம்முறை திருச்சிக்கு சென்று விட்டு வந்த பிறகு அத்தனையும் அனர்த்தமாக போகிறது என்று.

"சொல்லிடு சுந்தரிம்மா எது வந்தாலும் பாத்துக்கலாம். திருச்சிக்கு எப்ப போற"

"அடுத்த வாரம் டா" என்றவளது பதிலில்

"அம்மா எப்ப வருவாங்க டா" தெரிந்தது தான் அதனால் தயங்கியே வந்தது கேள்வி.

"அதான் ரெண்டு வருஷம் இருக்கில்ல டா. முன்ன விட அம்மா நல்லா இருக்காங்க டா. இந்த கல்யாணம் அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்து இருக்கு. " என்றாள் தன் தாயின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை மனதில் நிறுத்தி.

"சந்துருவ ரொம்ப கேட்டாங்க போன்ல தான் காட்டினேன். நேர்ல கூட்டிட்டு போக முடியாதுல. அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வர வாய்ப்பில்லை இல்லடா. ரொம்ப அசிங்கமா நினைப்பாராடா. "
என்ற அவளது குரல் தழுதழுக்க.

"ஹே அம்மா வரும்போது குட்டி சந்துரு இல்ல குட்டி சந்திரன் வந்துருவாங்க தானே" பேச்சை மாற்றினான்.

அதேநேரம் அவனுக்கு தோழியின் மகிழ்ச்சியான வாழ்வு பற்றி தெரிய வேண்டி இருந்தது.

"ஆமாம் டா" புன்முறுவலாய் சொல்ல

"அப்புறம் சுந்தரி, தாத்தா சொன்ன மாதிரி ஒரு வெள்ளைக்கார பொண்ணு என்கிட்ட லவ் சொன்னா தெரியுமா" அவன் சொல்லவே விழுந்து விழுந்து சிரித்தாள் சுந்தரி.

"கடைசில எனக்கு வெள்ளைக்கார அண்ணி தான் வர போறாங்களாடா." கேலி செய்தாள் தோழனை.

"எல்லாம் மைதா மாவு மூஞ்சிங்க சுந்தரி யாரையும் பிடிக்கல" சலிப்பாய் வந்தது அவனுக்கு.

அவனது மைதா மாவு என்று சொல்லில் சுந்தரியின் மனம் சௌந்தர்யாவை நினைத்துக் கொண்டது.

"டேய் நவீனு இவரோட அத்தை பொண்ணு சும்மா மெழுகு சிலை டால் மாதிரி செம அழகுடா. நானே ஒரு நிமிஷம் அசந்துட்டேன்டா." என்றவள் மேலும்

"பாரேன் டா. இவர் அந்த பொண்ண ஏறெடுத்தும் பார்க்கல" என்க

அங்கு நவீனனின் மனகண்ணில் ஓராண்டுக்கு முன் தன்னிடம் காதலை சொன்ன மெழுகு டால் தோன்ற 'சேச்ச என்ன இது' தலையை உலுக்கி கொண்டான்.

"மனசு தான் சுந்தரிம்மா வாழ்க்கைக்கு தேவை. அழகோ வேற எதுவோ இல்லடா" சொன்னவன் மேலும் சிறிது நேரம் பேசி வைத்து விட்டான்.

பால்கனியில் நின்று பேசியவளின் பேச்சை, அறையினுள் கதவு நிலையில் கை கட்டி கேட்டு கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.

'சந்திரன் கிட்ட சொல்லலையா டா' என்று நவீன் கேட்டபோதே வந்து விட்டான்.

அவனுக்கு சுந்தரியின் பயம் புரிந்து தான் இருந்தது. இது அவசியம் இல்லாதது என்று சொல்ல நினைத்தவன், சுந்தரியின் விருப்பப்படி அவளே சொல்ல வரும் பொழுது செல்லலாம். இப்பொழுது எதுவும் சொல்ல வேண்டாம், திருச்சிக்கு போய்விட்டு வரட்டும் என்று ஒத்திப் போட்டான்.

ஆனால் அப்பொழுது அனைத்தையும் சொல்லி தன்னவளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை அவனுக்கு.

இதற்காக பின்னர் வருத்தப்பட போகிறோம் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை உதயசந்திரன்.

"சுந்தரிம்மா" உதய் அழைக்கவும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.

"நான் இன்னும் ரெண்டு நாள்ல மதுரை கிளைக்கு பார்வையிட செல்ல வேண்டும்" என்று சொல்ல,

"அப்போ நான் திருச்சிக்கு போயிட்டு வரட்டுமா" தன்னை மீறி கேட்டு விட்டாள்.

அவன் இல்லாத போது சென்று விட்டு, அவன் திரும்பி வரும்போது தானும் திரும்பி விடலாம் என்று எண்ணி.

தன்னை விட்டு விலகி எங்கோ பார்த்தபடி கேட்டவளை இழுத்து தானே கட்டிக் கொண்டு "சரி பேபி பத்திரமா போயிட்டு வா" கேள்வியின்றி அனுமதி தந்தான்.

அன்று முடிவெடுத்தது போல், அடுத்த இரண்டு தினங்களில் உதயச்சந்திரனும் திரிபுரசுந்தரியும் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றனர்.

சென்றமுறை திருச்சி சென்று வந்தது போல், இம்முறையும் சென்று வந்தவளது முகம் பேய் அறைந்தது போல் இருந்தது.
எப்படி வீடு வந்து சேர்ந்தால் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

வீட்டிற்கு வந்தவள் இரண்டு நாட்கள் அரையிலேயே பழியாக கிடந்தாள். பெயருக்கு உணவு என்று கொறித்தாள் கௌரியின் வற்புறுத்தலால்.

கௌரிக்கு மருமகளின் வேதனை புரிந்து இருந்தது. உதய் சொல்லிவிட்டு தான் சென்று இருந்தான். கொஞ்சம் மன அழுத்தத்தில் இருப்பாள் தனியே விட வேண்டாம் என்று.

உதயச்சந்திரன் சேலத்தில் புதிய கிளை திறப்பது பற்றி முன்பே முடிவு எடுத்து இருந்தான்.

அதற்கு இடம் தெரிவு செய்வது பற்றி அழைத்திருக்க மதுரையில் இருந்து அப்படியே அங்கு சென்று விட்டான்.

ஆதலால் நினைத்தது போல் அவனால் சுந்தரி வரும்பொழுது வீடு திரும்ப இயலவில்லை.

இரண்டு நாள் புரியாது தன் சோகத்தில் தத்தளித்தவள், மூன்றாம் நாள் ஒரு முடிவுடன் உதயசந்திரனிடம் இருந்து விடுபட்டாள்.

வெளிநாட்டு மேற்படிப்பிற்காக தேர்வு எழுதுவதற்கான பயிற்சி வகுப்பிற்கு ஸ்ரீமதி சென்று இருக்க,

இவள் கௌரியிடம் நவீனின் தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்று விட்டாள்.

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று நவீன் சொன்னதை பயன்படுத்திக் கொண்டு, நாலைந்து நாட்கள் தங்கி வர வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விட்டாள்.

கௌரியால் ஸ்ரீமதியை தனியே விட்டு போக முடியாததால் உடன் வருகிறேன் என்று சொல்லவில்லை.

அத்துடன் அறையிலேயே இருக்கும் மருமகளுக்கு இது மாறுதலாக இருக்கும் என்று எண்ணி அனுப்பி வைத்தார்.

மேலும் இரண்டு நாட்களில் சேலத்தில் இருந்து உற்சாகமாக வீடு திரும்பினான் உதயச்சந்திரன்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது வீட்டை பிரிந்து இப்படியெல்லாம் அவன் இருந்ததில்லை தான். ஆனாலும் இம்முறை தாமதமாக வந்தவன் ஒரு நற்செய்தியையும் கொண்டு வந்திருந்தான்.

சேலத்தில் கடை திறப்பதற்கு இடம் பார்த்து பேசி விட்டு மகிழ்ச்சியான மனநிலையிலேயே வந்தான்.

பாவம் அவன் அறியவில்லை இன்னும் சில நிமிடங்களில் அத்தனையும் தவிடு பொடியாக போவது.

அவனது கண்கள் மனைவியை தேடி அலைபாய, கௌரியோ "நவீனோட பாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னு போயிருக்கால்ல உனக்கு தான் தெரியுமே உதய். நாளைக்கு வருவான்னு நினைக்கிறேன். எனக்கு கூட போன் பண்ணவே இல்லடா. ரொம்ப வேலையா இருப்பா போல" தன் போக்கில் சொன்னவர் மகனுக்கு தேநீர் எடுத்து வர சமையலறைக்கு சென்றார்.

உதயசந்திரனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஏதோ அபாய அறிவிப்பு போல மனம் எச்சரிக்க தனது புதிய அலைபேசியை ஆன் செய்து வைத்தான்.

ஆம் புது அலைபேசி தான். பழைய அலைபேசி எதிர்பாராத விதமாக உடைந்துவிட. உடனடியாக வாங்க முடியாமல் அடுத்த நாள் தான் வாங்கினான்.

புது அலைபேசி எட்டு மணி நேரம் தொடர்ந்து அறையில் சார்ஜ் போட்டுவிட்டு, தன் வேலையை பார்க்க சென்றவன், யாருக்கும் அழைத்து எதுவும் பேசவில்லை வேலைப்பளுவால்.

பின்னர் சுந்தரிடம் எப்படி பேச வேண்டும் என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு அலைபேசி பற்றிய நினைப்பு சிறிதும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

விமானத்திலும் அலைபேசி எடுக்கவில்லை. இதோ இப்பொழுதுதான் அதனை ஆன் செய்கிறான். தன் பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு மாடியில் தன்னது அறைக்கு சென்றான்.

பெரிதாக சுந்தரியும் உதய சந்திரனும் அலைபேசியில் பேசிக் கொள்வதில்லை தான்.

ஆனால் என்ன செய்கிறார்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை வாட்ஸ் அப்பில் செய்தியாக அனுப்பி விடுவது அவர்களது வழக்கம்.

அதே வழக்கமாய் தான் வீட்டை விட்டு சென்று விட்டதையும் செய்தியாக அனுப்பி விட்டாள் திரிபுரசுந்தரி.

அவனால் கிஞ்சிதமும் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன, ஏது என்று நேருக்கு நேர் பேசாது, அவள் எடுத்த இந்த முடிவு அவனுக்கு ஆத்திரத்தை தந்தது.

மிகுந்த ஆற்றாமையும் வெறுப்பும் அவ்வளவுதானா நீ என்ற எண்ணத்தையும் சேர்த்தே கொடுத்தது சுந்தரியின் பிரிவு அவனுக்கு.

மனதில் மூண்ட கோபம் தாளாமல் அத்தனையும் போட்டு உடைத்தான் உதயசந்திரன்.
மாடியில் மகனது அறையில் பொருள்கள் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்கவே பதறிய கௌரி, தன் வயதயையும் மறந்து ஓடினார்.

அத்தனை பொருள்களும் விழுந்து நொறுங்கி இருந்தது.
புத்தகங்கள், அழகு பொருள்கள், பூ ஜாடி, போட்டோ பிரேம்கள் என்று அத்தனையும் விழுந்திருந்தது.

என்ன ஆச்சு இவனுக்கு பதறியபடி மகனை நோக்கி செல்ல அம்மா என்று கதறி அவரை அணைத்துக் கொண்டான்.

"ஒன்னும் இல்ல உதய் என்ன ஆச்சு" மகனது முதுகை வருடியவாறு கேட்டார்.

"சுந்தரி என்ன விட்டு போயிட்டா மா" முகம் கசங்க வேதனையுடன் துடித்தான்.

"என்னடா உதய் சொல்ற, நீ எதுவும் கோவத்துல கத்தினியா வார்த்தையை விட்டியா" என்று மகனிடமே விசாரணை நடத்தினார்.

அவரது கேள்வியில் விரக்தியில் பார்த்தவன், "அவ மேல ஆதங்கமும் வருத்தமா இருக்குமா கோவம் கொஞ்சம் கூட இல்லை இது எல்லாத்தையும் தாண்டி ரொம்ப காதல் இருக்கும்மா." ஆற்றாமையுடன் கூறினான்.

ஆனால் அவனது பார்வையோ இவ்வளவுதான் உங்களுக்கு என்னை தெரியுமா அம்மா கேள்வி கேட்டது.

அவனது பார்வையில் சஞ்சல பட்டவர். அவனை நடத்திச் சென்று கட்டிலில் அமர வைத்து தானும் அமர்ந்து மடியில் தலை சாய்த்து படுக்க வைத்தார்.

தலையை வருடி கொடுக்கவே.
"ஏன் உதய் சுந்தரி போயிட்டா உங்களுக்குள்ள சண்டை இல்லனா அப்ப என்ன. திரும்பி வந்துருவாதானேப்பா" குரல் கமறியது கௌரிக்கு.

அத்தை, அத்தை என்று வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் தன்னுடனே இருந்து, தன் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்கும் மருமகளை காணவில்லை என்றதும் கண்கள் கலங்கி விட்டது.

தாயின் பேச்சில் தான் அவரை வருத்தி விட்டோமோ என்ற நினைவில் வெட்கியவன்,

"இல்லம்மா அவ எங்கேயும் போக மாட்டா. கண்டிப்பா நம்ம கிட்ட வந்துருவா." முகத்தை அழுந்த துடைத்தவாறு அதே அழுத்தத்துடன் கூறினான்.

"ஆனா ஏன்பா" இன்னுமே புரியவில்லையா அவருக்கு.

"வேற என்னமா உங்க மருமகளுக்கு அவங்களோட கடந்த கால வாழ்க்கை நெருஞ்சி முள்ளா குத்துது.

அதை என்கிட்ட சொல்லி ஆறுதல் தேடிக்க சுயமரியாதை தடுக்குது" விரக்தியுடன் கூறினான் உதயச்சந்திரன்.

"ஆனா உனக்கு தான் எல்லாமே தெரியுமே உதய்".

"வாய் வார்த்தையா எனக்கு தெரியும்மா. ஆனா அவளோட உணர்வுகள் அது இன்னும் தெரியலையே" கைகளை விரித்தான்.

மகனது வார்த்தைகளில் 'இவர்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்' என்ற எண்ணமே தோன்றியது அதை சொல்லி மேலும் வருத்தப்படாத வைக்கவும் மனமில்லை.

"எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுறலாம் உதய். சிக்கிரம் நம்ம கிட்ட வந்துருவா டா" அவனை ஆற்று படுத்த முயன்றார்.

"என் மேல கடைசி வரைக்கும் நம்பிக்கை வரல இல்லம்மா அவளுக்கு. கோவக்காரன் தான் ஆனா அவ கிட்ட கோவப்பட கூட தெரியலயேம்மா எனக்கு" தனது சுயத்தை அவளிடம் இழந்து இருக்கிறான் மகன் என்று புரிந்தது கௌரிக்கு.

ஆனால் இதை தன் மருமகள் உணரவில்லையே வேதனையே மிஞ்சியது அவருக்கு.

இப்பொழுது தானும் கவலையில் தோய்ந்தால், மகனை சரி படுத்த முடியாது என்று நினைத்தவர்.

"அந்த ரமேஷ கூப்பிடு மருமக எங்க போயிருக்கான்னு கண்டுபிடிக்க சொல்லு.
மருமகளுக்கு பிரண்ட்ஸ் யாராவது இருக்காங்களான்னு பாரு. அவங்கள தெரியும்ன்னா போன் பண்ணி கேளு. அவளோட இல்லத்துக்கு போய் பாரு. ஹாஸ்டலுக்கு ஏதும் போயிருப்பாளோ" என்னவெல்லாம் வழிகள் இருக்குமோ அத்தனையையும் எடுத்துக் கொடுத்தார் மகனுக்கு.

அவரது பேச்சில் தெளிந்தவன் நன்றாக அமர்ந்து நலுங்கிய ஆடையை சரி செய்தபடி "ரமேஷ் வச்சு கண்டுபிடிக்கிறன் மா."

'இவள அப்படியே விட்டுவேன்னு நினைச்சாளோ. இனி இந்த உதயச்சந்திரன் கண் அசைவில் இருந்து தப்பிக்க மாட்டா. என்ன லேசா நினைச்சுட்டா இல்ல அவ' மனதுக்குள் ஆத்திரப்பட்டான்.

"ஏன் தம்பி சுந்தரி ஏன் ஹாஸ்டல் போயிருக்க கூடாது. ஒருக்கா ஹாஸ்டலுக்கு தான் போய் பாரேன். அங்க இருந்தா கூட்டிட்டு வந்துடுயா."
இறைஞ்சும் குரலில் சொன்னார்.

"இல்லமா அவ ஹாஸ்டல் போக மாட்டா அதுக்கு வாய்ப்பே இல்லை" ஏன் என்பது போல் பார்த்தவரிடம்.

"பிரக்னண்டா இருக்காம்மா" எங்கோ பார்த்தபடி கூறிவிட்டான். "என்ன உதய் சொல்ற." அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டார் கௌரி.

"ஆமாம்மா எப்படியும் ஐம்பது நாளாச்சம் ஆகி இருக்கும்" கூறியவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது.

"டேய் தம்பி பிள்ளை எங்கேயாவது கஷ்டப்பட போறாடா" கண்கள் கலங்கினார்.

"ஏண்டா என்கிட்ட சொல்லல" தன்னிடம் மறைத்து வைத்த ஆதங்கம் வெளிப்பட்டது அவரிடம்.

"அவ என்கிட்டயும் சொல்லலம்மா ஒருவேளை அவளுக்கே தெரியாம கூட இருக்கலாம்."

உனக்கு எப்படி தெரியும் என்று பார்வையால் கேட்டவரிடம் எப்படி சொல்வது தங்களது அந்தரங்கத்தை, அது தந்த சங்கடத்தில் லேசாக சிவந்தான் உதயச்சந்திரன்.

அனுதினமும் அரங்கேறிய தங்களது கூடலும், அந்த மூன்று நாட்களில் மனைவியின் வயிற்று வலியும், உடல் வலியும் கண்டு வருந்துபவனுக்கு, அவள் வீட்டில் இருக்கும் போது அவளை கவனித்து கொள்ளபவனுக்கு, இந்த மாதம் அப்படி ஒரு தருணம் இன்னும் வரவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன் நினைத்தது மனதில் வந்து போனது.


மகனைப் கூர்ந்து கவனித்தவர் மனதில் 'இருவரும் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் பிறகு ஏன் இந்த பிரிவு' என்ற கேள்வியே முளைத்தது.
 
Status
Not open for further replies.
Top