ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 27:-

அதிகமான தண்டனையா ஏன் என்று தன்னை பார்த்து கேட்டவளை இரக்கத்துடன் பார்த்தவள்,

"நீ ஏன் தப்பிச்சு போயிருக்கலாமில்லை" கேட்பது அபத்தம் என்று தெரிந்தும் கேட்டார் அந்த பெண் காவலாளி.
இந்த முறை சுதாரித்த லட்சுமி அவரை கூர்ந்து பார்த்து "ஏன் அப்படி கேட்கிறீங்க" என்றாள்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவர், "உனக்கு ஒரு மகள் இருக்கிறாள் தானே. நீ விட்டுட்டு வந்துருக்கியே சொந்தகாரங்ககிட்ட அவங்க அவள நல்லா பார்த்துப்பாங்களா. ஒரு பத்து வருஷம் கழிச்சு போனாலும் கண்ணும் கருத்துமா பொம்பள பிள்ளையை பார்த்துப்பாங்களா" என்று மேலும் கேட்டார்.

அவரது கூற்றில் திகைத்து விழித்தாள் லட்சுமி. ' பத்து வருடங்களா ஒரு கொலை குற்றத்திற்கு' மனதிற்குள் நினைத்துக்கொண்டவள் கண்கள் கலங்கின.

"பயப்படாத உன் குழந்தையை நல்லா பார்த்துப்பாங்கன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை. வருடங்கள் சீக்கிரம் ஓடிவிடும்" தைரியமளிக்க முயன்றார் அந்த பெண் காவலாளி.

"நான் ஐந்து இல்லன்னா ஏழு வருஷம் தான் ஆகும்ன்னு நினைச்சேன் நீங்க பத்து வருஷம்ன்னு சொல்லுறீங்க பிளீஸ் விளக்கமா சொல்லுங்களேன்" தன் நிலையை தெரிந்துக்கொள்ள வேண்டி இருந்தது லட்சுமிக்கு.
அப்போது அங்கு ஒரு பெண் உள்ளே நுழைய அந்த இடம் இன்னுமே கலவரமானது.

வக்கீலுடன் அந்த பெண் வந்திருக்க லட்சுமி புரியாமல் தன் அருகில் இருந்த பெண் காவலாளியை பார்த்தாள். இனி இதில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று என்னிய அந்த காவலாளி லட்சுமியை பரிதாபமாக பார்த்துவிட்டு நகர்ந்தார்.

வக்கீலுடன் வந்த அந்த பெண் அங்கு இருந்த இன்ஸ்பெக்டரிடம் ஏதோ பேசிவிட்டு நேரே லட்சுமியை நோக்கி வந்தவள், "இவதான் அவளா" கேட்க வக்கீலும் ஆமென்று தலையசைத்தது தான் தாமதம் ஓங்கி அறைந்தாள் லட்சுமியை.

லட்சுமி என்னவென்று கிரகிக்கும் முன்னரே மீண்டும் அறைந்தாள் அந்த பெண். "ஏன்டி உனக்கு என் புருஷன் கேக்குதா" என்ற கேள்வியோடு.

கண்ணத்தில் கையை பொத்தியபடி பாரிதாபமாக பார்த்தவளின் முகபாவனையை தாளாமல் " நீ கொலை செஞ்சவரோட மனைவி " என்றார் அந்த வக்கில்.
இப்போதும் அவளுக்கு புரியவுல்லை ஏன் தன்னை அடித்தார்கள் என்று. " உங்க கணவர் என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினார். என் கணவரையும் கொலை செஞ்சுட்டாரு. " சின்ன குரலில் சொல்ல,

"நீ கூப்பிடாமல் அவர் வருவாரா நீ தானே அவர அந்த இராத்திரில வர சொன்ன" என்ற அந்த பெண்ணின் கேள்வியில் அதிர்ந்து ஈரடி பின்னே நடந்தவள் சுவரோடு ஒன்றி அருவருப்புடன் பார்த்தாள்.

மீண்டும் லட்சுமியை அடிக்க போக வக்கில் அந்த அரசியல்வாதியின் மனைவியை பிடித்துக் கொண்டார் அடிக்க முடியாதபடி.
கண்களில் பயத்துடன் கண்ணீர் வழிய நின்று பார்த்துக்கொண்டிருந்தளை, ஒரு விரல் காட்டி எச்சரிக்கும் முகமாய் முறைத்து பார்த்துவிட்டு சென்றாள் அந்த பெண்.

வந்தவள் சொல்லிவிட்டு சென்ற சங்கதி லட்சுமிக்கு புரிய நிலத்தில் சரிந்து அமர்ந்தவள் கதறி அழலானாள். அந்த அரசியல்வாதியை சார்ந்தவர்கள் சென்றுவிட இன்ஸ்பெக்டர் அந்த பெண் காவலாளியிடம் கண்காட்டினார். அதனை புரிந்துக்கொண்டு லட்சுமியின் அருகில் சென்று தண்ணீர் குவளையை கைகளில் தினித்து குடிக்க சொன்னாள்.

அக்கா ஏன் இப்படி அவன் தானே தப்பு பண்ணினான் இவங்க என்னை சொல்லுறாங்க. என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உதடு பிதுங்க கேட்டாள் லட்சுமி.

தன்னை அக்கா என்று அழைத்த லட்சுமியின் மீது கருணை சுரந்ததோ என்னவோ அவளது தலையை வருடிவிட்டவள், " என் பேரு சகுந்தலா. நாளைக்கு உன்ன கோர்ட்க்கு கொண்டு போவாங்க. அங்க இதை விட இன்னும் அதிகமா பேசுவாங்க நீ எல்லாத்துக்கும் தயாராக இருக்கனும்" என்று சொல்ல.

" நான்தான் கொலை செஞ்சதை ஒத்துக்கிறேனேக்கா அப்புறம் என்ன" அவளுக்கு சக்திமாக ஒன்றுமே புரியவில்லை.
ஒரு பெருமூச்சு விட்ட சகுந்தலா,

" நீ குற்றத்தை ஒத்துக்கிறதான் ஆனால் அதோட காரணம்" என்று வினவியவள் சில நொடிகள் நிறுத்திவிட்டு, அந்த அரசியல்வாதி அப்படிபட்டவன்தான் அது அவனை பத்தி தெரிந்தவங்களுக்கு தெரியும். ஏன் இப்போ வந்துட்டு போனாளே அவனோ மனைவி அவளுக்கும் தெரியும். ஆனால் பாரு அவனோட பேர் கெட்டு போனால் கட்சியோட பேரும் சேர்ந்து கெடும். இது தேர்தல் நேரம் வேற, அந்த பொம்பள தன்னோட கணவனைவிட்டு குடுக்கமுடியாம இந்த சமுதாயத்துக்கு முன்னாடி நல்லவளா வலம் வரணும். அதான் பழிய உன்மேல போடுறாங்க" அனைத்தையுமே சொல்லிவிட்டாள் அந்த பெண் காவலாளி.

" நாளை நடக்கபோவது இதுதான் நீ இதில் செய்ய என்ன இருக்கிறது என்று யோசி " சகுந்தலா சொல்ல, சொல்ல திக்பிரம்மை பிடித்த மாதிரி அமர்ந்து இருந்தாள் லட்சுமி.
இவர்கள் சொல்லவது புரிந்தும் புரியாத நிலை அவளுக்கு. ஆனாலும் இதுலிருந்து தப்புவது எப்படி என்று யோசித்தாள்.

மேலும் சகுந்தலாவோ, " நீ அவன கொல்லாம தப்பிச்சுருந்தாலும், இந்த கேஸ வேறு மாதிரி திருப்பிருப்பாங்கன்னு எனக்கு தோனலை " என்று சொல்ல

" எனக்கு புரியல அக்கா" லட்சுமி கேட்டாள்.

" என்ன புரியலன்னு சொல்லுற எல்லாமே நாளைக்கு புரியும். தெரியாத விஷயத்தை ரொம்ப யோசிக்காத. உனக்கு யாராச்சும் வக்கில் வச்சுக்கிறியா. " என்று கேட்க

" எனக்கு யாரையும் தெரியாதே அக்கா "

' ஒன்னுமே தெரியலை ஆனால் கொலை செய்ய மட்டும் தெரியும்' சற்று எரிச்சலுடனே நினைத்துக் கொண்டாள்.

'ஏதேனும் நயமாக பேசி அந்த அரசியல்வாதியை அந்த இரவில் துரத்தி விட்டு. இன்று வேறு ஊருக்கேனும் கணவனும் மனைவியும் சென்றிருக்கலாம்' என்று தோன்றியது அந்த பெண் காவலாளிக்கு, பலநேரங்களில் வீரத்தைவிட சமயோஜிதமே கைக்கொடுக்கும் என்று தெரியாது இருந்தாள் லட்சுமி.

" உன் பொண்ணுக்கு வயசு என்ன லட்சுமி "

" ஐந்து முடிந்து ஆறு. நேற்று தான் பிறந்த நாள் கொண்டாடினோம் " என்றவளின் பதிலில் சற்று யோசித்த சகுந்தலா,

" யாரச்சும் உன் பெண்ணுக்கு வயசு என்னன்னு கேட்டா ஐந்து வயசுன்னு சொல்லு" அவளுக்கு எடுத்து கூற, ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் ஏன் என்று கேட்காது வெறுமனே தலையசைத்து வைத்தாள் லட்சுமி.

மூளை மரத்திருக்கும் நேரத்தில் என்ன யோசிக்க, சிந்திக்கும் திறனின்றி வெளித்தவாறு அமர்ந்திருந்தவளை சற்று யோசிக்க அவகாசம் கொடுக்கும் விதமாக அவளது கையில் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள் சகுந்தலா.

சகுந்தலா சொல்லி சென்ற விஷயங்களில் மனம் சிந்திக்க லட்சுமிக்கு அப்போதும் சிலது அவளுக்கு புரியவில்லை என்றாலும், தான் வசமாக மாட்டிக் கொண்டோம் என்று மட்டும் புரிந்தது.

இனி என்ன செய்ய, எந்த விதத்தில் யோசித்தாலும் வழிதான் புலப்படவில்லை.
இப்போது சுந்தரி என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற எண்ணம் வேறு அவளை அலைகழித்தது.

மெல்ல சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். நிதர்சனத்தை விட அந்த இருட்டு பிடித்திருந்தது அவளுக்கு.

அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு மாலை தேநீர் வந்து கொடுத்தாள் சகுந்தலா.

முதலில் வேண்டாமென்று மறுத்தவளை " நீ இப்படியே இருந்தா ஒன்னும் நடக்க போறதில்ல குடிச்சுட்டு யோசி இல்ல தலைவலிக்கும்"அதட்டி குடிக்க வைத்தாள்.

மெல்ல இருள் கவிழ்ந்து இரவு வர, லட்சுமிக்கு பாதுகாப்பாக சகுந்தலா இந்தாள் இரவு பணியில்.

ஒரு செல்லை திறந்து அதில் படுக்க சொல்ல லட்சுமி வெறும் தரையில் கையை தலைக்கு அனைவாக கொடுத்து கண் மூடினாள். மூடிய விழிகளில் இமையோரங்களில் கண்ணீர் கசிந்தது. மகளது நினைவே வாட்டியது. ஒரு நாள் கூட தன் அனைப்பின்றி தூங்காத பிள்ளை இன்று எப்படி தவித்து இருப்பாள்.

நினைக்க நினைக்க தாளவில்லை, இந்த அரவிந்தன் மட்டும் சரியாக இருந்திருந்தால், நாங்கள் நன்றாக வாழ்ந்து இருந்தால், அண்ணன் எங்களை ஏற்று இருந்தால், அரவிந்தன் என்னை காத்திருந்தால், நான் கொலை செய்யாது இருந்தால் இப்படி ஏகப்பட்ட இந்தால்களை மனம் யோசித்து வெதும்பியது.

காலச்சககரம் பின்னோக்கி சுழன்று நம் தவறுகளை சரிசெய்யும் வாய்ப்பை அளித்தாலோ, இல்லையேல் நமது முடிவுகளை மாற்றி அமைக்கும் சூத்திரம் தான் நமக்கு தெரிந்திருந்தால் எப்படியிருக்கும். அந்த நிலையில் தான லட்சுமி இருந்தாள்.

மறுநாள் விடியல் கண்டிப்பாக சுகமானதாக இருக்க போவது இல்லை என்று தெரிந்தும் உடல் உறக்கத்திற்கு கெஞ்ச நித்திராதேவி அவளை ஆட்கொண்டாள்.

மறுநாள் காலை லட்சுமி நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டாள். அங்கு நேற்று வந்த அதே வக்கிலும் அந்த அரசியல்வாதியின் மனைவியும் வந்திருக்க விசாரனை தொடங்கியது.

லட்சுமி தனது தரப்பில் நடந்தது அத்தனையும் சொல்ல, கவனித்துக் கொண்டார் நீதிபதி.
இப்போது அந்த அரசியல்வாதியின் மனைவியோ கண்ணீர்விட்டு தன் கணவனின் மகத்துவத்தை கூறினாள்.

மேலும் லட்சுமி தான் தன் கணவனை வர சொன்னாள் என்றும் தனது கணவனை உறவுக்கு கட்டாயப்படுத்தியது என்றும் அந்த நேரத்தில் துரதிஸ்டவசமாக அவளது கணவன் அரவிந்தன் வந்து விட, பழியை தனது கணவன் மீது சுமத்திவிட்டாள் என்று கூறி அழுதிருக்க, அவளது கூற்றில் அதிர்ந்திருந்த லட்சுமிக்கு அவள் சுமத்திய குற்றத்தில் பதில் பேசமுடியாமல் பயந்து நடுங்கி போய் இருந்தாள்.

எத்தனை இலகுவாக இப்படி பேச முடிகிறது அடுத்தவர்களை பற்றி என்ற ஆச்சர்யம் வேறு தோன்றியது அவளுக்கு.

இப்போது அவள் பேசியதற்கு நேற்று பேசியதெல்லாம் ஒன்றுமில்லை என்றே தோன்றியது லட்சுமிக்கு.

தான் இனி என்ன சொல்வது எப்படி தன்னை நிருபிப்பது என்ற வகையறியாது நின்றிருந்த லட்சுமி,

" நான் நடந்ததெல்லாம் எழுதி குடுத்துருக்கேன் இன்ஸ்பெக்டர்கிட்ட" என்றாள்.

ஒரு வரை நிருபிக்க சாட்சி மட்டுமே அவசியம் நிதிமன்றத்திற்கு என்று புரியாமல் அவள் சொல்லிட அது அவளது குற்றத்திற்கான ஆதாரமாகவே பார்க்கப்பட்டது.
மேலும் அரவிந்தன் மீதும் அந்த அரசியல்வாதியின் மீதும் அவளுடைய கைரேகைகள் இருந்திட அவையும் இவளுக்கு எதிரான சாட்சியாகவே மாறியது.

சட்டென்று ஒன்று தோன்ற கணேசனின் குடும்பத்தினரை பற்றி சொன்னாள் லட்சுமி.
அவர்கள் அப்போதைக்கு அங்கு இல்லாததால் வழக்கு ஒரு வாரம் கழித்து ஒத்திவைக்கப்பட்டது. குற்றம் நிருபணம் ஆகி தீர்ப்பு வரும் வரை லட்சுமி பிணை கைதியாக வைக்கப்பட்டாள்.

இந்த ஒரு வாரம் எப்படி போனதென்று கேட்டால் லட்சுமியிடம் பதிலில்லை சூனியமாகி போன வாழ்வை எண்ணி கலங்குவதை விட மகளை எண்ணியே தவித்தாள்.
காவியங்களில் மட்டுமா ராமரை பிரிந்து தசரதர் வருத்தப்படுவார். அந்த ராமனாவது வளர்ந்து தந்தையை பிரித்து சென்றான். அதுவும் சூழ்ச்சியில்.


இதோ இங்கே லட்சுமியுமே புத்திர சோகத்தில் தத்தளித்தாள். அதுவும் உலகமறியாத சிறுமி பசியென்று வாய்விட்டு சொல்ல தெரியாத குழந்தை அவள். இது விதியின் சதியன்றி வேறு என்ன.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 28 :-

மீண்டும் ஒரு வாரம் கழித்து நீதிமன்ற வளாகத்தில் வந்திறங்கிய லட்சுமி கண்டதெல்லாம் கணேசனும் அவரது மனைவியும் அந்த அரசியல்வாதியின் மனைவியும் அவரது வக்கிலிடம் பேசிக் கொண்டிருந்ததுதான்.

முதலில் அவர்களை புருவம் சுருக்கி பார்த்தவள், பின்னர் தனக்காகவே அப்படி பேசுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.

இவளை கண்டவுடன் இவள் அருகினில் வந்தனர் கணேசன் தம்பதிகள். மகளை கணோம் என்று கண்களால் துலாவினாள் லட்சுமி.

" இவ அம்மா வந்துருக்காங்க அதான் விட்டுட்டு வந்துருக்கோம். அதுவும் இல்லாம இங்க எப்படி கூட்டிட்டு வரது " சற்று சங்கடமாக சொல்ல, லட்சுமி விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

லட்சுமி சட்டென்று நினைவு வந்தவளாக தனக்கென ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கணேசனிடம் சொல்ல, நீர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டது அவளது கோரிக்கை.

நீதிமன்றத்தில் சபை கூட்டப்பட லட்சுமி மீண்டும் கூண்டில் ஏற்றப்பட்டாள்.

கணேசனை விசாரிக்க வர சொல்ல அவரும் வந்து நின்றார். அவரிடம் லட்சுமி அந்த அரசியல்வாதியை பற்றி அவனது நடவடிக்கை பற்றி ஏதேனும் சொன்னாளா என்ற கேள்வி எழுப்பப்பட,

அதற்கு கணேசனோ, " என் தம்பி அரவிந்தன் அல்லும் பகலும் வெளியூர்க்கு போய் உழைக்கிறான், இவளுக்காக தானேங்க ஐயா. ஆனால் இவ இப்படிபட்டவன்னு தெரியாம போச்சே " என்று வருந்தியவர், ஒரு நொடி யோசிப்பது போல பாவனை செய்து

" இல்லிங்க ஐயா. அவனுக்கு தெரிந்திருக்கனும். அதனால் தான் என்கிட்ட சொத்து பத்து பணம் காசெல்லாம் கொடுத்துருப்பான் போல்" தனக்கு தானே சொல்வது போல அவரது கருத்தையும் அங்கு பதிவு செய்தார்.

இவரது கூற்றில் லட்சுமியின் இதயத்தில் நீர் வற்றி போனது போல வலி எடுக்க நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டாள்.
சகுந்தலா அவளுக்காக கண்கலங்கினாள். இது இப்படிதான் வருமென்று அவளுக்கு முன்னமே தெரியும் அதனால் அவளுக்காக வக்கில் இருந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாவிடினும் நியாயமான தண்டனை என்னவோ, அது கிடைத்திருக்கும்.

இல்லையேல் ஒரு பெண் தனது தற்காப்பிற்கான கொலையாக மட்டுமே இதை பார்க்கும்படி செய்திருக்க முடியும். என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் இதில் அவளால் என்ன செய்திட முடியும் ஓரிருமுறை வக்கீலுக்கு ஏற்பாடு செய்துக்கொள் என்று வற்புருத்தி கூற, அதையும் இன்று கணேசனை பார்த்து சொல்கிறேன் என்று கூறவும் சரி அவளது உறவுகள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால் இன்று அத்தனையும் லட்சுமிக்கு எதிராகவே இருந்தது.

இது அத்தனைக்கும் மேலாக கணேசனோ" என் தம்பிய கொன்னது கூட இவளா இருக்குமோன்னு எனக்கு சந்தேகம் வருதுங்க " என்று வழக்கை திசை திருப்பிட
இதனை கேட்ட லட்சுமியோ வீறிட்டு கதறினாள்.

அடுத்ததாக அன்று திருச்சிக்கு துணி எடுத்துக் கொண்டுவரும் போது வந்த அந்த கார் ஓட்டுநர் வந்தார்.

இவர் எதற்கு வருகிறார் என்று லட்சுமி யோசிக்கையிலே அவர் பேச ஆரம்பித்தார் "அன்றைக்கு துணி எடுத்துட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு அண்ணனும் இந்தம்மாவும் சிரிச்சு பேசிக்கிட்டு தான் சந்தோஷமாக வந்தாங்க ஆனால் இவுங்க ஏன் ஐயாவ கொலை பண்ணினாங்கன்னு தெரியல" என்று தனது கூற்றை பதிவிட
அவரது பேச்சில் அரண்டு தான் போனாள் லட்சுமி.

தனக்கு எதிராக அத்தனை சாட்சியங்களும் இருக்க, தான் சொந்தம் என்று நம்பியவர்கள் அவளது முதுகினில் குத்திவிட, வெறும் கூடாக நின்றிருந்தாள்.
உடல்கூறு ஆய்வு அறிக்கையும் சமர்பணம் செய்திருக்க அதையும் கூர்ந்து படித்தார் நீதிபதி.

இறுதியாக "இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும் அரவிந்தனை கூட இவளே சுற்றில் மோதி கொன்று இருக்கலாம் என்றும். அரவிந்தனின் உடலில் உள்ள இவளது கைரேகைகளே அதற்கு சாட்சி என்று சொல்லிவிட "
அரவிந்தனின் உடலில் தனது கைரேகை என்றால் கணவனின் உடலில் மனைவியின் கைரேகை இருப்பது இயல்பானது தானே என்று லட்சுமி நினைத்திருக்க,
நீதிபதியும் அதையே கேட்டார்.

அதற்கு அந்த வக்கிலோ" சாதாரணமான கைரேகை இருப்பது என்பதைவிட இதில் அரவிந்தனின் தலையை இருக்கை கொண்டு பற்றியது போல கைரேகை இருக்கிறது" என்று தனது ஐயப்பாட்டை முன்வைக்க

லட்சுமியோ போர்வையை போர்த்தும் போது அலங்கோலமாக கிடந்தவனை சரிசெய்ய தான் அரவிந்தனின் தலையை பிடித்து தூக்கி வைத்தது நினைவு வர , அதையே அங்கு சொன்னாள்.

அதற்கு அந்த வக்கில் மீண்டும் கணேசனின் வாக்குமூலத்தை எடுத்துக் கூறினார்.

அரவிந்தன் தனது மனைவியை நம்பாமல் தான் சொத்துக்களையும் மகளையும் ஒப்படைத்தான் என்று புதிதாக வேறு ஒரு கோணத்தில் வழக்கை திருப்பபிவிட

இப்படியாக வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்தது. எது நடந்தாலும் அது அத்தனையும் லட்சுமிக்கு எதிரான சாட்சியங்களாகவே அமைந்தது அப்படியே கருத்தப்பட்டது.

கடைசியில் தீர்ப்பு ஒரு வாரம் கழித்து ஒத்திவைக்க பட்டது.

லட்சுமிக்கு நடந்த வாக்கு வாதங்களில் ஒன்று மட்டும் புரிந்தது. தனது மகளை கணேசனின் பொறுப்பில் விட்டது தவறு என்று.

சட்டென்று யோசித்துவிட்டு ஏதேனும் ஒரு அனாதை இல்லத்தில் விட்டுவிடலாம் என்று முடிவெடுத்து அவர்களிடம் சென்றவள் மறுமுறை நீதிமன்றம் வரும்போது தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறினாள். தான் ஏதேனும் இல்லத்தில் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லிவிட,

அதற்கு கணேசனின் மனைவியோ" நானே ஏதாச்சும் அனாதை ஆஸ்ரமத்தில் தான் சேர்க்க நினைத்தேன்" என்று ஏளனமாக கூறினாள்.

கேட்ட லட்சுமி ஒரு நொடி ஆடிவிட்டாள்.

அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் மகளை அழைத்து வரும்படி மட்டும் சொல்லிவிட்டு அவ்விடம் நீங்கி சென்றாள்.

இந்த ஒரு வாரத்தில் லட்சுமி சில ஆதரவற்ற இல்லங்களை பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள் சகுந்தலாவிடம்.

சகுந்தலாவோ." பெண் குற்றவாளிகள் ஆறு வயதுவரை தனது மகளை தன்னுடன் வைத்துக் . நீ உன் பொண்ணுக்கு வயசு ஐந்துன்னு சொல்லு சரியா. இப்போவும் நேர்மைன்னு சொல்லி உன் பொண்ன கஷ்டப்படுத்தாத புரியுதா"

" ஆறு வயசு பொண்ணு அவ ஐந்து வயசுன்னு சொன்னா நம்புவாங்களா " தனது சந்தேகத்தை கேட்க

" எல்லாம் நம்புவாங்க நான் பார்த்துக்கிறேன். நீ நான் சொல்லுறதை மட்டும் கேளு. ஒரு வருஷம் உன் பொண்ணுக் கூட இரு. அப்புறம் உன் அண்ணன் கிட்ட விட்டு வளர்க்க சொல்லு. என்ன தான் கோவம்னாலும் தங்கச்சி க்கு ஒரு கஷ்டமான நேரத்தில வந்து நிப்பாங்க தானே" வழிகாட்ட சரியென்று தலையாட்டினாள் லட்சுமி.

லட்சுமி சகுந்தலாவிடம் தனது தண்டனை காலம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள்.
சகுந்தலாவும் ஒளிவு மறைவு இன்றி தனக்கு தெரிந்ததை சொல்லி அவளை தயார் படுத்தினாள்.

இதோ, இதோ என்று தீர்ப்பு வழங்கும் நாள் வந்தது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் லட்சுமி நின்றிருந்தாள்.

இரட்டை கொலை வழக்கு, அதோடு ஒழுக்க கேடு வேறு சேர்ந்து கொண்டது. இரண்டுமே அவள் செய்தது என்று ஊர்ஜிதம் ஆனது. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது லட்சுமிக்கு.

இதுதான் தண்டனை என்று தெரிந்தும் கண்கள் கலங்கின. தனக்கு எதிராக நடந்த அநீதியை எதிர்த்து விரலையும் அசைக்க முடியாத நிலை.

ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் தண்டனை இருக்கும் அதை எளிதாக கடந்து விடலாம் என்று எண்ணியவள், இந்த தண்டனையை நினைத்து மலைத்து போனாள்.


எப்படி நாட்களை கடக்க போகிறேன். மகள் என்ன ஆவாள் என்று நினைத்து, நினைத்து கண்ணீர் வடித்தாள் லட்சுமி.

மகள் லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட, அவள் கணேசனையும் அவரது மனைவியையும் பார்த்து,

" நீங்க சொத்துக்காக இப்படியெல்லாம் செய்றிங்கன்னு எனக்கு புரியுது. ஆனா பாருங்க இது உங்க தம்பி அந்த அரசியல்வாதிக்கு புரோக்கரா அதுவும் பொம்பளைங்களை ஏற்பாடு பண்ணி குடுக்கிற புரோக்கரா இருந்து சம்பாதிச்சது. இது எனக்கும் வேண்டாம் என் மகளுக்கும் வேண்டாம்ன்னு தான் நான் உங்களுக்கு பிச்சையா குடுத்தேன். ஆனால் பாருங்க நீங்க அரவிந்தனோட அண்ணன்னு நிருபிச்சுட்டிங்க." அவர்களை பார்த்து அருவருப்புடன் கூறி நகர்ந்து சென்றவள்,

ஒரு நொடி மீண்டும் திரும்பிவந்து " இப்போவும் நான் கடவுளை நம்புறேன். நிச்சியமாக இதுக்கான தண்டனை கிடைக்கும் உங்களுக்கு"

தன் மகளை அழைத்துக் கொண்டு திருச்சி பெண்கள் சிறைச்சாலைக்கு சென்றாள் லட்சுமி.
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 29:-

இதோ இன்றோடு லட்சுமி சிறைச்சாலைக்கு வந்த மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

திரிபுரசுந்தரிக்கு ஐந்து வயது தான் ஆகிறது என்று சொல்லி அழைத்து செல்ல முடிவெடுத்தி்ருந்தாலும், லட்சுமிக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. எங்கே மகளின் தோற்றமும் பேச்சும் செயல்களும் அவரது வயதை காட்டிக் கொடுத்து விடுமோ என்ற அச்சம் தான் அது.

ஆனால் மகளது தோற்றமோ அவளை பிரிந்திருந்த நாட்களில் இளைத்திருக்க, பேச்சும் துடிப்பும் வெகுவாக குறைந்து விட்டது சுந்தரிக்கு.

சதா சர்வ காலமும் யோசனையுடனும் கவலையுடனுமே காணப்பட்டாள் சுந்தரி. கண்களில் இருந்த துடிப்பும் துறு துறுப்பும் அலைப்புருதலாய் மாறி இருந்தது.

ஆறு வயது சிறுமி அவளுக்கு அந்த அழுத்தங்கள் மிக மிக அதிகமே. தாயின் சொல்லை கேட்டு தனது பெரியப்பா கணேசனின் வீட்டிற்கு சென்றுவிட்டாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அவளால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை.

லட்சுமி, மகள் வாய் திறந்து பசி என்று சொல்லும்படி, ஏன் அந்த உணர்வு அவளுக்கு தெரியும் படி கூட இதுவரை விட்டதில்லை.

தாயல்லவா மகளின் பசி வாய் மொழியாக தான் தெரிய வேண்டுமா, விழிமொழி போதுமே அப்படி வளர்க்கப்பட்டவள் தான் சுந்தரி.

அங்கு கணேசனின் வீட்டில் இருந்த சில நாட்களில் பசியும், பசிக்கிறது என்று வாய் திறந்து சொன்னால் அது அவமானம் என்றும் கற்றுக் கொண்டாள் குழந்தை.

அன்னையிடம் உணவும் அன்பும் கேட்டு வாங்க வேண்டிய நிலை ஒரு குழந்தைக்கு எப்பொழுதும் இருந்ததில்லை. ஆனால் கணேசனின் வீட்டில் சுந்தரி அந்த நிலையில் தான் இருந்தாள்.

ஒருமுறை பேச்சு வாக்கில் சுந்தரி "அம்மா பாப்பாக்கு பசிக்குதுன்னு அங்க அந்த பெரியம்மா கிட்ட சொன்னேன் மா. அவங்க "சனியனே போடின்னு சொல்லி சோறு சோறுன்னு கேட்டுக்கிட்டு இருக்கிறன்னு பெரியம்மா அடிச்சுட்டாங்க மா" இதழ் பிதுக்கி முகம் சிவக்க கூறிய மகளை வாரி அனைத்து கொண்ட லட்சுமி, லட்சம் முறையாக தன்னை, தனது செயலை சபித்துக் கொண்டாள்.

சிறைக்கு வந்த முதல் ஒரு மாதமும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, அந்த சூழலுக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொள்ள வெகுவாக சிரமப்பட்டாள் லட்சுமி.

பொதுவான குளியல் தொட்டியில் அனைவரும் ஒன்றாக குளிப்பது, அதுவும் ஒன்றாக ஆடை மாற்றும் போது, ஒருவரை ஒருவர் விரசமாக, ஆபாசமாக பேசிக்கொள்வது தழுவி கொள்வது, இப்போது நினைத்தாலுமே அவளுக்கு அருவருப்பை தந்தன.

லட்சுமி உடை களையாமல் அப்படியே நீரை வாரி இறைத்து குளித்துவிட்டு, சில நிமிடங்களில் மற்ற கைதிகள் வரும் முன்னே ஆடை மாற்றி வந்துவிடுவாள்.

அதனைக் கண்டு மற்ற கைதிகள் அவளை சீண்டுவார்கள் தான், ஆயினும் மனதில் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் கல்லாக இறுகிப்போய் நிற்பாள் அவள்.

சிறை கைதிகளுக்கு என இருக்கும் பொதுவான ஆடை தான் லட்சுமிக்கும் வந்த உடனே தரப்பட்டது.

அந்த ஆடையை முதன் முதலில் வாங்கும் போது, தானே தனது கைப்பட தைத்த துணிகளை அழகாக நேர்த்தியாக உடுத்தியது, அவளது அனுமதி இல்லாமல் நினைவில் வந்து போனது.

அதனை ஒரு விரக்தியான புன்னகையில் கடந்தவளால், மகளுக்கு கொடுத்த ஆடையை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவள் எப்படி தன் பெண்ணை வளர்த்திருந்தாள். மாதம் ஒரு புது துணி என்று அதுவும் விதவிதமாய் தானே ஆசையாக‌ வாங்கி தைத்து அணிவித்து அழகு பார்த்ததை நினைத்தவளுக்கு எத்தனை முயன்றும் பெரும் கேவலாக வந்த அழுகையை அடக்க முடியவில்லை.

யாரோ, எவரோ அணிந்த உடையை, தன் மகள் அணிவதா, தானமாக தந்த ஆடையை குறைத்து மதிப்பிட கூடாது தான் என்றாலும் அவளால் அந்த துணியில், பிறர் அணிந்த உடையில் தன் மகளை கண்டு சகிக்கவே இயலவில்லை அவளுக்கு.

விரைவாகவே தன் மகளை தனது அண்ணன் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் தனது அண்ணன் அத்தனையும் பார்த்துக் கொள்வார் என்று நம்பினாள். நம்பியது அத்தனையும் நடந்து விடுமா என்ன.

உணவுக்கு சிறைச்சாலையில் தட்டை கையில் ஏந்தி வாங்கும் போதெல்லாம் அழுகை பீறிடும் லட்சுமிக்கு.

அவளுக்கும் மகளுக்கும் சேர்த்தே தரும் அந்த உணவு பல வேலைகளில் போதவில்லை இருவருக்கும்.

அதிலும் மகள் பூரி, பொங்கல், கேசரி, வடை என்று வாய்க்கு ருசியான உணவை கேட்டபோதெல்லாம் செத்து விடலாம் என்றே தோன்றும்.

இந்த இழிவான வாழ்வு தன்னை நிந்தித்தது மட்டுமின்றி தனது மகளையும் அல்லவா துன்புறுத்துகிறது. எல்லாம் அண்ணன் தன்னை காண வந்துவிட்டால் சரியாகிடும் என்று நினைத்துக் தன்னையே சமாதானம் செய்து கொள்வாள் லட்சுமி.

சில சமயத்தில் சோறும் குழம்பும் ஒன்றாக கலந்து தட்டில் போடும் போடப்படும் அந்த உணவும், நீர்த்துப்போன புளிப்பு மோரும், குமட்டலையும் நெஞ்செரிச்சலையும் தந்தது.
லட்சுமி பெரியவள் அவளுக்கே அந்த நிலை என்றால் சிறிய குழந்தை சுந்தரி எப்படி அதனை உண்பாள்.

முதலில் அந்த உணவை உண்ண அடம்பிடித்த சுந்தரி, பின்னர் பசிப்பிணி தாளாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகள் வந்து ஒத்துக் கொள்ளாமல் போனது இருவருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த உணவு பழக்கத்துக்கு உடல் தன்னை மாற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இது இப்படி இருக்க இரவில் உறக்கம் நல்ல பாய் தலையணை போர்வைகள் எதுவும் கிடையாது. அங்கு வைத்திருக்கும் பாய் தலையணை போர்வைகளில், யார் கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொள்வார்கள். மற்ற கைதிகளுடன் போட்டியிட முடியாமல் கடைசியில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு உறங்குவாது வழக்கம் ஆனது லட்சுமிக்கு.

ஒரு கிழிந்த பாய் மட்டுமே கிடைக்கும் அவளுக்கு அதில் மகளை மட்டும் படுக்க வைத்து தனது கையை அணைவாக தலைக்கு கொடுத்து சேலை முந்தானையை போர்த்தி விட்டு உறங்க வைப்பாள். அங்கு வந்த புதிதில் உடல் வலியை தந்தது இன்று பழகிவிட்டது இருவருக்கும்.

சுந்தரி அங்கு வந்த ஒரு மாதத்திற்கு எல்லாம் வெளியில் செல்ல வேண்டும் என்று அழுத ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள்.

அவ்வப்போது பொறுமையாக ஏதேனும் சொல்லி சமாளித்தாலும் ஒரு கட்டத்தில் லட்சுமியால் அவளை சமாளிக்கவே முடியவில்லை.
தன்னையே அங்கு நிலைப்படுத்திக் கொள்ள இயலாமல் அவள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது சுந்தரியின் அந்த அடமும் பிடிவாதமும், அவளது பொறுமையை முற்றிலுமாய் தகர்த்தெறிந்தது. அதன் விளைவு கோபத்தில் தனது மகளை அடித்து விலாசி விட்டாள்.

அன்னை முதன் முதலில் அடித்ததில் அதிர்ச்சியில் உறைந்து நின்ற குழந்தை பின்னர் வீறிட்டு அழ ஆரம்பித்த சுந்தரி அன்றைய தினம் முழுவதும் ஏங்கி ஏங்கி அழுதாள்.

மேலும் நாள் முழுவதும் உண்ணாமல் தன் தாயை தன்னை தொடவிடாமல் மூளையில் முடங்கியது அந்த சின்னஞ் சிறிய சிட்டு. ஒரு சிறு முகச்சுனக்கம் கூட இது நாள் வரை காட்டிடாத தனது அன்னை இன்று இப்படி அடித்திருப்பது அவளுக்கு பேரதிர்ச்சியே.

தன்னை அருகில் விடாது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் மகளை கண்டு கதறினாள் லட்சுமி. சுந்தரி அழுத அழுகையில் அன்று இரவே காய்ச்சல் வந்தது.

இரு தினங்கள் விடாத ஜுரம் அவளுக்கு. மகளை கைச்சிறைக்குள் வைத்துப் பொத்திக் கொண்டாள் லட்சுமி.
மருத்துவர்கள் வந்து மூன்று நாட்களுக்கு மருந்து தந்தாலும் தாயின் அரவணைப்பும் கதகதப்புமே குழந்தையை பழைய படி தேற்றியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சுந்தரி செய்தது இரண்டு விஷயங்கள். ஒன்று தாயிடம் எதுவும் வேண்டும் என்று கேட்பதில்லை, முக்கியமாக அங்கிருந்து வெளியில் அழைத்துச் செல்ல சொல்வதில்லை.

மற்றொன்று தாயை விட்டு இம்மியும் விலகுவதில்லை அவளது உள்ளுணர்வு மற்றவர்களின் பேச்சு ஏதும் உணர்த்தியதோ எண்ணவோ தாயை விட்டு நகரவே இல்லை சுந்தரி.

இங்கு சிறைச்சாலையில் லட்சுமி போல மகளுடன் வந்த மற்ற பெண்களும் உண்டு அவர்களின் குழந்தைகளோடு திரிபுரசுந்தரி அவ்வப்போது விளையாடினாலும் தாயையே சுற்றிய வருவாள் அவள்.

அங்கு இருந்த சூழ்நிலையை அவளை மிரட்டின. அங்கு இருந்த அனைவரும் பெண்கள் தான் என்றாலும் கள்ளமின்றி சந்தர்ப்பவாசத்தால் தற்காப்புக்காக கொலை செய்த லட்சுமிக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டே.

அந்த வித்தியாசம் தான் சுந்தரியை யாருடனும் நெருங்கி பழக அனுமதிக்கவில்லை. ஏன் லட்சுமியுமே யாரிடமும் பெரிதாக பேசுவது இல்லை. கேட்கும் கேள்விக்கு பதில் அவ்வளவு தான்.

தன்னையே ஒட்டிக்கொண்டு அலைந்த பெண்ணை விளக்கி வைக்க அறிவு நினைத்தாலும் மனதால் முடியவில்லை லட்சுமியால். அவளும் அவளுடைய வேலைகளை செய்த பின் மகளை மடியில் வைத்துக்கொண்டு தொலைதூரத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பாள்.

பிற கைதிகளை சந்திக்க அவர்களது சொந்த பந்தங்கள் வருவதை கண்டு உள்ளுற ஏங்கினாள் லட்சுமி. எல்லாம் தன் அண்ணனின் வரவுக்காக தான்.

கடிதத்தில் அண்ணனுக்கு தனது நிலையை தெளிவாக எடுத்துக் கூறி மன்னிப்பு வேண்டியவள் ஒருமுறை தன்னை வந்து காணுமாறும், மகளை தன்னோடு அழித்துக் அழைத்துக் கொள்ள வேண்டியும் எழுதினாள்.

இதுவே மாதாமாதம் இங்கிருந்து அவளது அண்ணனுக்கு அவளை அனுப்பும் கடிதத்தின் சாராம்சம்.
மாதம் ஒருமுறை என்று கடிதங்களை அனுப்பிக்கொண்டே தான் இருக்கிறாள். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். கடிதம் செல்லாமல் திருப்பி வந்திருந்தால் கூட பரவாயில்லை, பதில் எதுவும் இல்லை. ஏன் லட்சுமிக்கு தனது அண்ணன் கடிதத்தை படித்தாரா என்று கூட தெரியாமல் அல்லாடினாள்.

லட்சுமி இன்னும் ஆறு மாதங்களில் மகளை பிரிய வேண்டும். அண்ணன் வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்ற அவளது நம்பிக்கை ஆட்டம் கண்டது சிறிதாய்.

சுந்தரிக்கு சிறிது சிறிதாக தாங்கள் இருக்கும் சூழல் புரிய ஆரம்பித்தது. தானும் தனது தாயும் சிறைச்சாலையில் இருக்கிறோம் என்று விளங்கியது அந்த ஆறு வயது சிறுமிக்கு.

ஜெயில் என்றால் தப்பு செய்தவர்கள் இருக்கும் இடம் என்று நாளடைவில் தெரியவர, தானும் தனது அன்னையும் என்ன தப்பு செய்தோம் என்று தான் புரியவில்லை அவளுக்கு.
ஒருமுறை லட்சுமியிடம் "அம்மா தப்பு செஞ்சவங்கள தானே ஜெயில்ல போடுவாங்க. நாம என்ன தப்பு செஞ்சோம்மா ஜெயில்ல இருக்கோம்." என்று கேட்டவளை கண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளை பிசைய, அந்த வழியே வந்த மற்ற கைதியோ

"ம்ம் உங்க அம்மா கொலை பண்ணிட்டாங்க அதுவும் உங்க அப்பாவையும் இன்னொருத்தரையும் இரண்டு கொலை. அதனால தான் நீங்க ஜெயில்ல இருக்கீங்க" என்று சொல்லிவிட்டு செல்ல, குழந்தையவள் நம்ப முடியாத பாவனையில் தனது தாயை கண்டது.

குழந்தையிடம் என்ன சொல்வது சொல்லக்கூடாது, எதை எந்த வயதில் எப்படி பக்குவமாக சொல்ல வேண்டும் என்ற அறிவு துளியும் இன்றி உண்மையை உடைத்து சொல்லிவிட்டு சென்றவளை லட்சுமி கோபத்தில் வெறித்தாள்.

சுந்தரி அன்னையை தனது புறம் திருப்பி "அம்மா கொலைன்னா என்ன கத்தியால கில் பண்றது தானே" தனது சிற்றறிவுக்கு எட்டியவாறு வினாவினாள் சுந்தரி.

மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தவள், சில நொடிகள் கண்களை அழுந்த முடி திறந்து, "உன்னோட அம்மாவ நீ நம்புறியா கண்ணம்மா" என்று மகளின் கண்களில் ஊடுருவி பார்த்தபடி கேட்டாள் லட்சுமி.

தாயின் பார்வை என்ன சொன்னதோ, அந்த சிறிய குழந்தைக்கு என்ன புரிந்ததோ, ஆம் என்ற ரீதியில் தலையை ஆட்டினாள்.

அதில் திருப்தியுற்றவள் "அம்மா எந்த தப்பும் பண்ணல டா. அப்படியே அம்மா தப்பு பண்ணி இருந்தாலும் அது நல்ல விஷயத்துக்காக தான் இருக்கும். நீ நம்பனும், எப்பவுமே அம்மாவ நம்பனும் சரியா" என்றவள் மேலும்

"உனக்கு... நீ பெரிய பிள்ளையா வந்ததுக்கு அப்புறம் அம்மா என்ன நடந்துச்சு ஏன் இங்க ஜெயில்ல இருக்கோம் ன்னு எல்லாத்தையும் விவரமா சொல்லுவேன். அதுவரைக்கும் அம்மாவை நம்பனும் சரியா. அம்மாவ பாப்பாக்கு பிடிக்கும் தானே" தயக்கத்துடனே சொல்லியவள்,
எங்கு தன் மகள் தன்னை வெறுத்து விட்டாளோ என்று ஒரு நொடி தோன்ற அந்தக் கேள்வியையும் கேட்டு வைத்தாள். தாயின் பதில் புரிந்ததோ என்னவோ மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு லட்சுமியை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு தனது பிடித்தத்தை வெளிப்படுத்தினாள் சுந்தரி.

மகளின் செயலில் மெய் சிலிர்த்து போய் அமர்ந்து இருந்தாள் லட்சுமி.

மாதங்கள் உருண்டோட இங்கு லட்சுமிக்கோ கிலி பிடித்தது. அவளது கடிதங்கள் ஒன்றுக்கும் பதில் இல்லை. அது அண்ணனை சென்று அடைந்ததா என்ற தகவலும் இல்லை. தனது மகளின் நிலை என்ன இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன.

பின்பு மகளை பிரிய வேண்டும் இன்னுமே மகள் தாயை ஒட்டியப்படியே வலம் வருகிறாள். தனித்து செயல்பட மாட்டேன் என்கிறாள்.

ஒரு பக்கம் அண்ணன் மீது இருந்த நம்பிக்கை மெல்ல தகர்கிறது, மறுபக்கம் மகளை கையாள தெரியாத நிலை லட்சுமிக்கு. எத்தனை முயன்றும் லட்சுமியால் மகளுக்கு தனது அடிப்படை தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள கற்றுக் கொடுக்க முடியவில்லை.
சில நேரம் தானே தனது வேலைகளை செய்து கொள்பவள், பல நேரங்களில் லட்சுமி தான் நாடுவாள் சுந்தரி.

தன்னை பிரிய போகும் மகளை நினைத்து கவலை ஒரு புறம் வாட்டியதென்றால் மகள் இந்த பிரிவை எப்படி எடுத்துக் கொள்வாள்? அவளது உடல்நிலை மனநிலை மற்றும் உடல் நிலை என்னவாகும் என்று எண்ணி மறுகுவாள்.

யாருக்கும் நில்லாமல் நாட்கள் விரைந்துஓட. அது நாள் வரை சகுந்தலா சொன்னதை செய்யாது இருந்தவள் அன்று செய்தாள். ஆம் சகுந்தலாவிற்கு கடிதம் எழுதினாள்.

தன் மகளின் நிலை குறித்து தன் கடிதங்களுக்கு அண்ணன் பதில் போடாதது என அனைத்தையும் எழுதினாள்.

அந்த கடிதம் கிடைத்து மூன்று நாட்களில் எல்லாம் ஒரு பார்வையாளராக, சகோதரியாக லட்சுமியை காண வந்தாள் சகுந்தலா தன்னை காண வந்த சகுந்தலாவிடம் நடந்தது அத்தனையும் கண்ணீர் மல்க கூறினாள் லட்சுமி.

நடந்த அனைத்தையும் கேட்ட சகுந்தலாவிற்கு மனம் இருப்பது கொள்ளவில்லை. லட்சுமியின் அண்ணன் இவ்வாறு செய்வார் என்று தெரியாதே அவளுக்கு.
ஒருவேளை லட்சுமி சொன்னது போல சுந்தரியை ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து இருக்க வேண்டுமோ.

இப்பொழுது அவளது அண்ணன் சுந்தரியை தன்னோட அழைத்துச் செல்ல முடியாது என்றால் அரசு நடத்தும் இல்லத்திற்கு தான் சுந்தரி செல்ல முடியும் வெளியில் விட மாட்டார்கள் பதினெட்டு வயது வரை.

"லட்சுமி உன்னோட அண்ணன் இப்படி செய்வார் என்று நான் நினைக்கல. அவரும் நீயும் தொடர்பில் இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் சந்திச்சு கிட்டு இருக்கீங்கன்னு தான் நான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்படின்னு எனக்கு தெரியாதே" தான் நல்லது செய்ய நினைத்து தவறு செய்து விட்டது போல் கண்கலங்கினாள் சகுந்தலா.

"அச்சோ நீங்க ஏன் அழறீங்க அக்கா. எனக்கு நல்லது செய்யணும் நெனச்சு நீங்க செஞ்சீங்க. ஆனா அது வேற மாதிரி ஆயிடுச்சு விடுங்க" விரக்தியாக சொன்னாள் லட்சுமி.

இனி என்ன செய்ய எப்படி இதனை கையால யோசித்த இருவருக்கும் ஒரு மாதம் மட்டுமே மீதம் இருக்கின்றது என்று புரிந்தது. லட்சுமிக்கு யோசனை ஒன்றும் பிடிப்படவில்லை.

சகுந்தலாவிடம் தன் மகளை பார்த்து கொள் என்று கூற முடியாது. அவளுக்கென்று குடும்பம் இருக்கிறது தனித்து முடிவு எடுக்க முடியாது. மேலும் சகுந்தலாவால் முதலில் இங்கு இருந்து சுந்தரியை அழைத்து செல்லவும் முடியாது எந்த அடிப்படையில் அழைத்து செல்ல சொந்தமா பந்தமா என்ன.

ஆனால் சகுந்தலா சற்று யோசித்தவள், "உன் அண்ணனோட விலாசம் சொல்லு நான் போய் பார்க்கிறேன். உன்னை வந்து பார்க்க சொல்லுறேன்" என்று கூற மறுத்தாள் லட்சுமி.

ஆனால் சகுந்தலாவோ "ஒரு போலீசா நான் போய் பார்க்கிறேன் உன் அண்ணன கட்டாயமா உன்ன வந்து சந்திக்க சொல்றேன். உன்ன வந்து பார்த்ததுக்கு அப்புறம் உன் நிலைமை என்னன்னு புரிஞ்சதுக்கப்புறம் சுந்தரிய கண்டிப்பா ஏத்துக்குவாரு.

அவருக்கு மனசு மாறலாமில்ல" என்று வலியுறுத்தியவள் மேலும் இதுதான் இறுதியாக இருக்கும் ஒரே வழி என்று சொல்லி முகவரியையும் வாங்கி சென்றாள்.

சகுந்தலா வந்து சென்ற ஒரு சில தினங்களில் லட்சுமி என் அண்ணன் சோமசுந்தரம் வந்தார் லட்சுமி சந்திக்க.

அண்ணன் தன்னை காண வந்த செய்தி அறிந்த லட்சுமி, ஏதோ இது நாள் வரை தான் பட்ட துயர் எல்லாம் பனி போல் விலகியது என்று உணர்ந்தாள்.

தனது மகளுக்கு ஒரு புகலிடம் கிடைத்துவிடும் என்றும் இனி மகளைப் பற்றிய கவலை இல்லை என்று நினைத்துக் கொண்டு குதுகளித்தவாறு மகளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

செல்லும் அந்த சிறு தொலைவினில் கூட அண்ணனை பற்றி சுந்தரியிடம் சொல்லிக்கொண்டே சென்றாள்.

சோமசுந்தரத்தை கண்ட லட்சுமிக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கின. அண்ணன் என்று பரவசமாக அழைத்த தங்கையை கை நீட்டி தடுத்தவர்

"நீ எழுதுன கடிதாசிக்கு பதில் போடலனா எனக்கு பிடிக்கல, உன்னை சந்திக்க விருப்பமில்லைன்னு புரிய வேண்டாம் உனக்கு.
ஓயாமல் கடுதாசி போட்டுக்கிட்டே இருக்க. உனக்கு தெரியுமா முதல் இரண்டு கடுதாசி தான் நான் படிச்சேன் அப்புறம் எல்லாத்தையும் கிழிச்சு தான் போட்டேன்."

என்றவர்

"போலீஸ்காரங்களை வேற வீட்டுக்கு அனுப்புற, இல்ல கேக்குறேன் நீ போலீஸ் அனுப்புன நான் மாறிடுவேன்னு நினைக்கிறியா,

என்ன நீலி கண்ணீர் வடித்து அந்த போலீஸ்காரியை உனக்கு ஏத்த மாதிரி பேச வைகிறியா. என்ன பொறுத்த வரைக்கும் நீ எப்பவோ செத்துட்ட. உன்னோட உறவு முடிஞ்சது, முடிஞ்சது தான்.

முன்னாடி நீ ஓடுகாலி இப்ப கொலைகாரி. ரொம்ப நல்லா இருக்கு. அதுவும் கள்ள காதலுக்காக புருஷனை கொன்னுருக்க நீ."
என்று சொல்லிக் கொண்டே சென்றவர் தன்னை வெறித்த தங்கையை கண்டு

"என்ன பார்க்கிற அந்த அரசியல்வாதிங்க அப்படி தான் உன்ன பத்தி செய்தி பரப்பிட்டு இருக்காங்க. எனக்கு உன்ன பார்க்கவே பிடிக்கல உன்னை மாதிரி ஓடுகாலி, கொலைகாரியோட புள்ளைய வளக்கணும் எனக்கு ஒன்னும் விதி இல்ல."
லட்சுமியையும் சுந்தரியையும் அருவருப்பாக பார்த்தவர், அங்கிருந்து சென்றார்.

சற்று திரும்பி, ஸ்தம்பித்து அதே இடத்தில் நின்ற தாயையும் மகளையும் பார்த்து

"நான் வீடு மாத்திட்டேன். உன் தொல்லை தாங்காம தான். காசிக்கு போனாலும் கருமம் தொலையாத கணக்கா இருக்கு நீ பண்றது. இப்படி கடுதாசி போடுற வேலையெல்லாம் இனி வச்சுக்காத" ஒற்றை விரலை காட்டி எச்சரித்தவர் சென்று விட்டார் அவ்விடம் விட்டு.
 
Status
Not open for further replies.
Top