ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5:-

அவள் கேட்ட கேள்வியில் திகைத்தான் உதய். நல்லவேளையாக திருமண ஆரவாரத்தில் யார் காதிலும் விழவில்லை.

ஆம் கேட்டே விட்டாள். "நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க சந்துரு" என்று. இத்தனை நாட்களில் என்னை தெரியவில்லையா இவளுக்கு என் காதலும் புரியவில்லையா என்று கலங்கியவன்.

அரை நொடியில் தெளிந்தான். குறும்பு புன்னகையுடன் குங்குமத்தை கையில் தொட்டவன், அவளது தோல் சுற்றி கைபோட்டு தன்னை நோக்கி இழுத்து தனது மார்பில் சாய்த்து உச்சி வகிட்டில் பொட்டிட்டான்.

அதேநேரம் அவளது காதில் "பிகாஸ் ஐ லவ் யூ கண்ணம்மா" என்று கூறி கண்சிமிட்டின் உதயச்சந்திரன்.

அவனது செயலில் லயித்தவள், அவனது மார்பில் இருந்தவரே லேசாக தலையை நிமிர்த்தி கண்கள் கலங்க, இதழ்கள் புன்னகை சிந்த பார்த்தாள் சுந்தரி. இந்த காட்சி அழகாக புகைப்படம் ஆக்கப்பட்டது. பின் ஏனைய சடங்குகள் அரங்கேறியது.

மூன்று முறை அக்னியை வலம் வந்து, உன்னை ஒருபோதும் பிரியேன் என்று அக்னி தேவனின் முன் சத்திய பிரமாணம் ஏற்றார்கள். ஆனால் இந்த சத்திய பிரமாணம் நாளை பொய்யாக போகுமோ.

குடத்திற்குள் மோதிரம் மற்றும் மஞ்சள் கிழங்கை போட்டுவிட்டு அதனை எடுப்பது என்று போட்டி நடந்தது. இருவரும் ஒன்றாக குடத்திற்குள் கைவிட்டவர்கள், சுந்தரியின் கைகளில் மோதிரம் கிடைத்தது. அதை அவள் உதய்க்கு தரவே அதை அவன் அவளிடமே திருப்பித் தந்தான்.

"எடுத்துக்கோங்க சந்துரு" என்று மெலிதாக கூறியபடி மீண்டும் உதய்க்கு அந்த மோதிரத்தை தந்தாள். உதய் ஒரு முறப்புடன் மோதிரத்தை அவளிடமே தந்தான். அவனது முறைப்பில் அவளே மோதிரத்தை எடுத்துக் கொண்டு கையை வெளியில் எடுத்தாள். மோதிரத்தை எடுத்து வெற்றி பெற்ற அவளையே அவனுக்கு அனிவிக்க சொல்ல, உதயின் முகத்தில் வெற்றி களிப்பு. சுந்தரியும் புன்னகையுடன் அனிவித்தாள்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இல்லறம் நல்லறமாக வேண்டி கொண்டார்கள் தம்பதிகள். பின்பு விருந்துண்டு வீடு திரும்பினார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த மணமக்களை ஆரத்தி சுற்றி வரவேற்று பாலும் பழமும் தந்து ஓய்வெடுக்க சொன்னார் கௌரி.

அத்தனையையும் இரு ஜோடி விழிகள் குரூரப் பார்வையுடன் பார்த்துக் கொண்டே தான் இருந்தது. அது மேகலாவும் சாவித்திரியும் தான்.

தன் மகனை விட இவனுக்கு மரியாதை புகழ் எல்லாம் கிடைக்கிறதே என்ற பொறாமை சாவித்திரிக்கு. தனது மகளை உதய்க்கு திருமணம் செய்து வைக்க முடியாத ஏமாற்றம் மேகலாவுக்கு.

அன்றைய இரவிற்காக சுந்தரியை அலங்கரித்தார்கள் உதயின் உறவுக்கார பெண்கள். அண்ணனின் அறையில் விட்டுவிட்டு விலகிச் சென்றாள் ஸ்ரீமதி.

அந்த அறைக்குள் நுழைந்தவள், கையில் இருந்த பால் சொம்பை அந்த அறையின் மூலையில் போட்டிருந்த மேஜையில் வைத்தாள்.

மேஜையின் அருகில் கீழே அவளது உடைமைகள் இருந்தன. நேற்றே வந்துவிட்டது அவளது ஹாஸ்டலில் இருந்து. அவளது உடைமைகளை அத்தனையையும் காலி செய்து கொண்டு வந்து இருந்தான் உதயச்சந்திரன்.

அவளது கைப்பையில் இருந்து அலைபேசி அடித்தது. இந்த நேரத்துல யாரு என்று யோசித்தபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

"இவனா" என்று பற்களை கடித்த அவளின் முகம் கோப சிவப்பு கொண்டது.

அந்த அழைப்பை நிராகரித்தாள் மீண்டும் அழைப்பு வரவே அதையும் துண்டித்தாள் பெண். இறுதியாக அந்த எண்ணில் இருந்து மெசேஜ் வந்தது. அந்த செய்தியை படித்தவள் அந்த அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ" என்று உறுமினாள்.
"ஹாய் குட்டிமா" இன்று அந்த பக்கம் குஷியாக குரல் வந்தது.
"ஹலோ யாருங்க" என்று அதட்டலாக கேட்டாள்.

"குட்டிமா சாரி சாரி சாரி சாரி சாரி சாரிடா" என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தான். "உங்க சாரி ஒன்னும் எனக்கு வேணாம் நீங்க யார் சார் எனக்கு போனை வைங்க சார்" என்று லேசாக சத்தமிட்டாள்.

அவளது அந்த சத்தத்தில் பால்கனியில் இருந்து உள்ளே வந்தான் உதயச்சந்திரன். அதை உணராத அவளோ,

கையில் இருந்த அதிகப்படியான வளையல்கள் கண்ணத்தில் உரசி எரிச்சல் தர, போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

"ஏய் சாரி குட்டிமா" என்று மீண்டும் கூறியவன், "நான் உனக்கு அனுப்புன பார்சல் வந்துருச்சா பிரிச்சு பாத்தியா உனக்கு பிடிச்சிருக்கா" என்ற கேள்விகளை அடுக்கினான்.

அவனது கேள்வியில் தலையில் லேசாக தட்டிக் கொண்டவள், பார்சலை எடுக்க சென்றாள். பார்சலை எடுத்தவள் மீண்டும் கட்டிலில் அமர்ந்து அதைப் பிரிக்க முற்பட்டாள்.

"என்ன மேடம் இப்பதான் கிப்டே பிரிக்கிறீங்களா" என்று கேட்டவனிடன் "ஆமாம் சார்" என்று கூறியவள், அவனுடன் பேசிக் கொண்டே பரிசை பிரித்தாள்.

அவளது சார் என்ற விழிப்பில் அவளது மிதமிஞ்சிய கோபம் அப்பட்டமாக அவனுக்கு தெரிந்தது. "என்ன குட்டிமா சார்னு சொல்ற என் பெயர் சொல்லி கூப்பிட மாட்டியாடா" என்று கெஞ்சினான். மேலும் "என்னால கல்யாணத்துக்கு வர முடியலடா, இம்போர்ட்டனான ப்ராஜெக்ட் நல்லா இங்க லாக் ஆயிட்டேன், இல்லன்னா செலவை பாக்காம பிளைட் ஏறி வந்திருக்க மாட்டானாமா" இன்று கனிவாகவே கேட்டான்.

அவனது கனவில் கண்கலங்க "நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் டா" என்றாள்.

அதற்கு அவனும் "நானும் தான் குட்டிமா" என்று உருகினான்.
"எனக்காக என் பக்கம் நீ ஒருத்தனாவது வந்து இருக்க மாட்டியான்னு நினைச்சேன்"என்று கூறவே, அந்தப் பக்கம் இருந்தவன் முற்றிலும் உடைந்தான் அவளது கூற்றில்.

"ஐ அம் வெரி வெரி வெரி சாரி டா குட்டிமா என்னால போன் கூட பண்ண முடியாத அளவுக்கு வேலை நெருக்கடி டா" என்று கூறியவன் "ரொம்ப தேடுனியா" என்று கேட்டான்.

"ஆமாண்டா அம்மாவும் பக்கத்தில இல்லை நீயாச்சும் இருக்கணும்னு நினைச்சேன், கூட இருக்கணும்னு நினைச்சேன், என்று கரகரத்த குரலில் கூறினாள்.

அவளது அழுகை பொறுக்காமல், அவளை திசை திருப்பவே, "கிப்ட் பத்தி சொல்லவே இல்ல" என்ற பேச்சை மாற்றினான்.

"டேய் வீணா போன நவீன் சூப்பரா இருக்குடா கிஃப்ட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு" என்று பதில் சொன்னாள் சுந்தரி.

"எது பிடிச்சிருக்கு" என்று கேட்க, "நீ அனுப்பின மினியேச்சர் ஐடல் ரோம்ப பிடிச்சிருக்கு டா" என்ற படி, அந்த மினியேச்சர் ஐடலில் இருந்த உதய் உருவத்திற்கு முத்தமிட்டாள்.

இதை தள்ளி இருந்து பார்த்த உதய், முகத்தில் சிறிய வெட்கம் வந்தது.

மீண்டும் "அப்புறம் கிருஷ்ணரும் ராதையும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என்று பாவனையுடன் கூறினாள்.
"என் குட்டிமாக்கு பிடிச்சிருந்தா எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பி".

"அப்புறம் உன்னோட சந்துரு என்ன சொல்றாரு" என்று உதயசந்திரனை பற்றி விசாரித்தான்.
"என் சந்துருக்கு என்ன சூப்பரா இருக்காரு" என்று சொன்னாள் அவள்.

"பாருங்கடா மேடம்க்கு லவ் வந்துருச்சு" என்று கேலி செய்தவன், "என்னடா சந்திரன்கிட்ட எல்லாமே சொல்லிட்டியா, அவர பத்தி நான் எல்லாமே விசாரிச்சுட்டேன்னு மேரேஜ் முன்னாடியே சொன்னேன் தானே" என்று அவளது வாழ்வின் மேல் உள்ள அக்கறையில் கேட்டான் நவீன்.
அவ்வளவுதான் சுந்தரி அவனது அந்த கேள்விக்கு மௌனத்தையே பதில் அளித்தாள்.

அவளது மௌனத்தில் துனுக்குற்றவன் "ஏய் நான் வீடியோ கால்ல வரேன்" என்றபடி காலை கட் செய்தான்.

அவனது வீடியோ கால் என்ற செய்தியில், தள்ளி நின்றிருந்த உதயச்சந்திரன் அழுத்தமாக நடந்து வந்து மேஜை மீது சாய்ந்து கைகளை குறுக்காக கட்டிக்கொண்ட நின்றான்.
அவனது வருகையில் அனிச்சை செயலாய் எழுந்து நின்றாள் சுந்தரி.

அவளை நக்கலாக பார்த்தவன் "கட்டில கொஞ்சம் பாருமா கிப்ட் ராப்பர்ஸ் எல்லாம் இருக்கு பூவெல்லம் வேற கலையுது பாரு கஷ்டப்பட்டு டெக்கரேட் பண்ணிருக்காங்க" என்று கண்களால் ரூமைக் காட்டியபடி கூறினான்.

"என்ன பூ ரூமா டெக்கரேஷனா " என்று அதிர்ந்து விழித்தவள், அப்பொழுதுதான் அந்த அறையை நன்றாக நோட்டம் விட்டாள்.

முதலிரவு காண பரிபூரண அலங்காரத்துடன் ஜொலித்தது அந்த அறை. பேந்த பேந்த விழித்தபடி சுற்றி முற்றி பார்த்தாள். நண்பனின் அழைப்பில் சகலமும் மறந்தாள் பெண்ணவள். கண்ணில் பட்டது கருத்தில் பதிய வில்லை போலும்.

அவளது பார்வையில் அவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. வந்த சிரிப்பை நாக்கின் இடுக்கில் ஒளித்தவன் வெளியில் அழுத்தமாகவே நின்றான்.

அதே சமயம் நவீன் வீடியோ காலில் வந்தான். அவனது வீடியோ காலை எட்டிப் பார்த்த உதயசந்திரனோ 'உலக வரலாற்றிலேயே பர்ஸ்ட் நைட் ரூம்ம வீடியோ கால் போட்டு காமிக்கிறது என் பொண்டாட்டியா தான் இருப்பா' என்று எண்ணிக் கொண்டான்.

அவனை பார்த்த சுந்தரியோ படபடப்புடன் காலை கட் செய்யப் போனாள். ஆனால் அதுவோ துரதிஷ்டவசமாக அவளது கைப்பட்டு கால் அட்டெண்ட் ஆகிவிட்டது.

அந்த பக்கம் வீடியோ காலில் இருந்த நவீனோ பேயறைந்தார் போலானான் அலங்காரங்களை பார்த்து. என்னதான் தோழியாய் இருந்தாலும் ஒரு வரைமுறை உள்ளதல்லவா. இவளோ கையில் அலைபேசியை வைத்தபடி உதயையே பயத்தில் வெறித்தாள்.

"சாரி சுந்தரிமா" என்று உடைந்த குரலில் சொன்ன நவீனை பார்த்தவன். இதற்கு மேல் முடியாது என்று நினைத்த உதயச்சந்திரன், சுந்தரியின் அருகில் வந்து அவளது தோளை சுற்றி கையை போட்டு அனைத்து படி நின்றான்.

திரையில் உதயசந்திரனை பார்த்த நவீனுக்கோ நாக்கு மேலன்னத்தில் ஒட்டி கொண்டது உதடுகளை ஈரப்படுத்தியவாறு "சார்" என்று தயங்கி அழைத்தான்.

சார் என்று அழைத்தவனை அழுத்தமாக பார்த்ததை உதயச்சந்திரன், "பேர் சொல்லியே கூப்பிடுங்க நவீன்" என்றான். அவனது நவீன் என்ற வார்த்தையில் இருந்து அதிர்ந்து தான் போனான்.

"என் வைஃவொட பிரண்டு நீங்க உங்களை தெரிஞ்சுக்காம இருப்பேனா" என்று பக்கவாட்டில் திரும்பி சுந்தரியை பார்த்தபடியே கூறினான். அவனது பார்வை, நீ தான் நவீன பத்தி முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கணும் என்று சொல்லிற்று.

"நல்லா இருக்கிங்களா நவீன்" என்று கேட்டவன், மேலும் அவனது வேலையை பற்றி விசாரித்துவிட்டு அலைபேசியை வைத்தான்.

"அப்புறம் மேடம் நீங்க சொல்லுங்க" என்று சுந்தரியை பார்த்து கேட்டான். அவளோ கையை பிசைந்து படி அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவளது கைகளை பற்றியவன் "இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் ஆமா தானே" என்று கேட்டான்.

அவள் தன் தலையை பலமாக ஆட்டியபடி "ஆமாம்" என்றாள்.
"ஓகே தென் டூ யூ ஹேவ் எனி ஐடியா அபௌட் இட்" என்றான் குறும்புடன். அவனது கேள்வியில் அதிர்ந்தவள் ஒரு அடி பின்னே சென்றாள்.

அவள் நகரவும் அவளது கைகளைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் உதய். தென்றலாய் தன் மார்பில் வந்து விழுந்தவளை மென்மையாக அனைத்து கொண்டான் உதயச்சந்திரன்.

"ஓகே தூங்கலாமா" என்று உதய் கேட்க அதற்கும் விழித்தாள் சுந்தரி. "என்னமா இது எல்லாத்துக்கும் முழிச்சா எப்படி" என்றவன், கட்டிலில் அமர்ந்து மினியேச்சர் ஐடலை எடுத்து பார்த்து, "இதுக்கு மட்டும் தான் முத்தமா எனக்கில்லையா" என்று அவளை மேலும் சோதித்தான் என்றே சொல்ல வேண்டும்.

அதில் பெண்ணவள் விழிகள் கலங்கின, 'பேசின எல்லாத்தையும் கேட்டுருப்பானோ, அதையும் கேட்பானோ' எண்ணியவாறு நின்றிருந்தாள்.

அவளையே கூர்ந்து பார்த்தவன், "உனக்கு எங்க படுக்க வசதியா இருக்கும், பட் கீழ படிக்கிறேன்னு சொல்ல கூடாது " கேட்டான்.

அவள் கட்டிலின் ஒரு பக்கம் கைகாட்டிட, "சரி படுத்துக்கோ" என்று சொல்லி விட்டு, தனது சட்டையை கழட்டலானான்.

அவளது பார்வை உணர்ந்து, "ஷர்டோட படுத்தா கசகசன்னு இருக்கும், நீயும் டிரஸ் சேஞ்ச் பன்னிக்கோ. கண்டிப்பா பேங்கில்ஸ் உறுத்தும்" கூறினான்.

அவளது உடைமையிலிருந்து இலகுவான குர்த்தியும் காட்டன் பேண்டும் எடுத்து குளியலறை சென்று அணிந்து வந்தாள்.
அவள் வரும் போது விளக்கு அணைக்கப்பட்டு கட்டிலருகே இருந்த இரவு விளக்கு எரிந்தது. அவனருகே வந்து மறுபக்கம் படுத்தாள் சுந்தரி.

தன்னருகே படுத்தவளை தன்னை நோக்கி இழுத்து இருவருக்கும் ஒரே போர்த்தி விட்டு அவளை கட்டி கொண்டான்.

அவனது செயலில் மார்பில் படுத்தப்படி ஏறிட்டுப் பார்த்தவளை கண்டு, "என்ன பேபி பார்க்கிற கெட் யூஸ்ட் டூ மீ என்ன பழகிக்கோ என்னோட தொடுதல ஏத்துக்கோ" என்றான்.

அவளுக்கு ஒன்று தோன்றிட நினைத்து பார்த்தவள் சிரித்து கொண்டாள். அவன் "என்ன" என்று கேட்க ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.
இதை கூட சொல்ல தயங்குகிறாளே என்ற கோவம் சட்டென்று தலைதூக்கிட, "நான் கேட்கிறேனில்ல" என்று கண்டிப்பான குரலில் சொன்னான்.

'டக்கு டக்குனு கோவப்பட்டாரு' நினைத்தபடி, சொன்னாள் "நீங்க டெடிபியர் மாதிரி புஸூ புஸூ ன்னு முடியா வச்சுருக்கிகளா கூசுது அதான் உங்கள டெடிபியரா நினைச்சேன் சிரிச்சேன்".

அவளது பதிலில் வாய்விட்டு சிரித்தவன் , "உன்னோட டெடிபியரா கட்டிக்க மாட்டியா" என்று கேட்டபடி அவளது கைகளை தன்னை சுற்றி போட்டுக்கொண்டு உறங்கி போனான்.

உறங்கும் அவனையே பார்த்தபடி தானும் உறங்கி போனாள் சுந்தரி.
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6:-

அலைபேசியின் ரீங்காரத்தில் துயில் கலைந்தான் உதயச்சந்திரன்.

'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடலின் இசை அலாரமாக வைத்திருந்தான்.

எட்டி அதனை எடுத்தவனை இன்னுமே கட்டிக் கொண்டு மார்பில் முகத்தை அழுந்த தேய்த்தாள் சுந்தரி. அதில் அவஸ்தை உற்றவன் "என்னடா உதய் இது உனக்கு வந்த சோதனை" முனகியவனை பார்த்து "சந்துரு தூங்குங்க" தூக்க கலக்கத்தில் மிழற்றினால் பெண்ணவள்.

"பேபி விடிஞ்சிடுச்சு நைட் எதுவும் நடக்காம இவ்வளவு நேரம் தூங்கினா அது நல்லது இல்ல பேபி" என்றான்.

பின்னர் குறும்புடன் "ஃபர்ஸ்ட் நைட் தான் ஒண்ணுமே பண்ணல அட்லீஸ்ட் பஸ்ட் பகலாச்சும் ஏதாவது டிரை பன்னுவோமா" என்ற கிசுகிசுத்தவனை பார்த்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் திரிபுரசுந்தரி.

அவளது செயலை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் "என்னமா அவ்ளோ பயமா அப்படி என்ன பண்ண போறேன்னு நெனச்ச" என்றவன், "இப்படியா" என்றபடி நெற்றியில் முத்தமிட்டான்.

அவனது செயலில் விழிகள் தெறித்து விழ பார்த்தாள் பாவையவள். "இல்ல இப்படியா" என்று கேட்டவன் கண்களில் இதழ் பதித்தான்.

கன்னங்களை வருடியவன் "இதையா நினைச்ச" என்று கூறி, மேலும் "ப்ளீஸ் சுந்தரி" என்று சொல்ல, மூச்சடைக்க பார்த்தாள்.

அடுத்து என்ன என்ற நினைப்பும், அவனது நெருக்கமும், தீண்டுதலும் மூச்சடைத்தது பெண்ணவளுக்கு.

"நான் மூச்சு தரவா" என்றபடி அவளது இதழில் ஆழப் புதைந்து கொண்டான்.
சில நொடிகளில் விலகியவன் "ஹாப்பி மார்னிங் பேபி, இப்படித்தான் டெய்லி மார்னிங் எழும்பனும் ஓகே" என்று அவளது கன்னத்தை கட்டியவன். குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் குளியல் அறைக்குள் சென்ற சில நொடிகளில் ஸ்ரீமதி கதவை தட்டினாள்.

தன்னை சரி செய்தபடி எழுந்து சென்று கதவை திறந்தாள் சுந்தரி.

அண்ணி என்று இயல்பாக கூற வந்தவள் நாக்கை கடித்து விட்டு
"அம்மா குளிச்சிட்டு வர சொன்னாங்க. விளக்கு ஏத்தனுமாம். அப்புறம் குலதெய்வ கோயிலுக்கு போய் இன்னைக்கு பொங்கல் வைக்கணும். காலைல உங்க கையால வீட்டுல பால் பொங்கணும். அண்ணாவையும் வர சொன்னாங்க" என்று தயங்கியவாறு சொல்லி முடித்தாள்.

அவளது தயக்கத்தை பார்த்தபடியே "ஓகே" என்றாள்.
ஸ்ரீமதியின் கண்கள் கலங்கியே விட்டன. விலகி நிற்கும் அவளது செயல் கண்டு. எங்கே தனது பேச்சால் அண்ணனின் வாழக்கையில் பிரச்சினை வந்து விடுமோ என்று.

அவளது கைகளை பற்றி மேலும் பேச எத்தனிக்கும் போது குளியலறையில் இருந்து உதயச்சந்திரன் வரும் சத்தம் கேட்டது. "ஓகே நான் கீழ போறேன் நீங்க வாங்க" என்ற படி பறந்து சென்றுவிட்டாள் ஸ்ரீ.
அவள் செல்லவே உதயை பார்க்காமலே துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

அவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன் தன் ஆடை மாற்றிக் கொண்டு அங்கு உலர்ந்திருந்த பூக்களையும் பிற அலங்காரங்களையும் அகற்றினான்.

குளித்துவிட்டு வந்தவள் அதை துப்புரவு செய்து கொண்டிருந்த உதையை பார்த்தவள், "அச்சோ என்கிட்ட சொல்லிருக்கலாம்ல நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல" என்று கேட்டாள்.

"சோ வாட், நீயேன் சுடிதார்ல இருக்க கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க அம்மா. சாரிதானே கட்டுவ"

"ஆமாம் சாரி கட்டணும். அங்க பாத்ரூமில கட்டினா ஈரம் ஆகிடும் இங்க ரூம்ல கட்டிக்கிறேன்" என்றாள்.

"சரி மா நான் பால்கனியில இருக்கேன் நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கூப்பிடு" என்றபடி பால்கனிக்கு தனது அலைபேசி எடுத்துக் கொண்டு சென்றான்.

சிறிது நேரத்தில் அவள் அழைக்கவே மீண்டும் வந்த உதயச்சந்திரன், அவளுடனே சேர்ந்து வரவேற்பு அறைக்கு சென்றான்.

அவர்கள் இருவரும் கீழே சென்று பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டார்கள்.

கௌரி மருமகளை அடுப்பில் பால் ஏற்றி பொங்க வைக்க சொன்னார். அவர் சொன்னதை அப்படியே கேட்ட சுந்தரி பாலை பொங்க விட்டாள். பால் வழிய அதனை அணைத்துவிட்டு, அந்த பாலில் சர்க்கரை சேர்த்து அனைவருக்கும் கொடுத்தாள் சுந்தரி.

சிறிது நேரத்தில் அங்கு வந்தனர் மேகலா மற்றும் சாவித்திரி, அவர்களது குடும்பமும்.

உதயன் தாத்தா காலத்தில், கேசவனுக்கும் ராமபிரானுக்கும் ஆளுக்கு ஒரு கடையாக பிரித்துக் கொடுத்தார் அவர்களது தந்தை.
மேகலாவிற்கு நகையும் நிலமும் கொடுத்தார்.

கேசவன் அந்த ஒரு கடையை இரு கடையாக மாற்றினார். சாவித்திரியை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு தான் மோகன் பிறந்தான்.

அப்பொழுதெல்லாம் ராமபிரானுக்கு திருமணம் நடந்து கௌரி கருவுற்றிருந்தார். ஆதலால் தான் உதயச்சந்திரன் மற்றும் மோகனுக்கு ஆறு மாத வயது வித்தியாசம்.

உதயச்சந்திரன் பிறந்த பிறகு தான் தொழிலில் இன்னும் முன்னேற்றம் அடைந்தார் ராமபிரான். ஒன்று, மூன்று கடையானது. உதய சந்திரனின் காலத்தில் இப்போது ஐந்து கடையானது. ஐந்துமே முன்பு போல் சிறிய கடைகளாய் இல்லாமல் நன்கு பெரிதாக விஸ்தாரமாக மாற்றி இருந்தான் உதயச்சந்திரன்.

நவரத்தினங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்றவற்றிற்கு தனியாக பிரத்யேகமான தளங்கள் உண்டு. வைர நகைகளுக்கு தரச் சான்று உண்டு அவனது கடைகளில். நகை சீட்டு, வெள்ளியில் பேன்சி நகை, ஒரு கிராம் தங்க நகைகள் என்று நிறைய அறிமுகப் படுத்தப்பட்டது.

நம்பகத் தன்மையும் நேர்மையும் புது உத்திகளைக் கொண்டு நகைகளை வடிவமைப்பதும் இதுவே அவனது வெற்றியின் ரகசியமாகும்.

எதிலும் மேம்போக்கு தன்மை கொண்டவர் தான் கேசவன். அதே குணம்தான் மோகனிடமும் உண்டு. மேலும் அவனுக்கும் தாயைப் போலவே உதய சந்திரனிடம் காழ்ப்புணர்ச்சி உண்டு.

உதயச்சந்திரனுக்கு மோகனின் குணம் தெரிந்தாலும் விட்டுக்கொடுத்தே செல்வான்.

அவனது காழ்ப்புணர்ச்சியால் தனக்கு எதுவும் நேராது என்ற எண்ணமே பெரும்பாலும் அவன் விலகிச் செல்ல காரணம்.

ஆனால் அவனே பிற்காலத்தில் அவர்களது பிரிவுக்கு வித்திடுவான் என்று தெரிந்திருந்தால் உதயச்சந்திரனின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்.

"வாங்க பெரியப்பா" என்று கேசவனை, வரவேற்றான் உதய்.

மேகலாவின் கணவர் அசோகன், வியாபார விஷயமாக டெல்லிக்கு சென்று இருந்தார். மிகவும் அமைதி. நேற்று திருமணத்திற்கு வந்ததோடு சரி அங்கிருந்தபடியே சென்றுவிட்டார்.

நேற்று அவர்களது செயலில் மேகலாவையும் சாவித்திரியையும் வரவேற்றதோடு விலகிக் கொண்டாள் சுந்தரி.

நேற்று நடந்ததை கௌரியிடம் சுந்தரியும் சொல்லவில்லை ஸ்ரீமதியும் சொல்லவில்லை.

கௌரி மேகலாவிடமும் சாவித்திரியிடமும் பெரும்பாலும் விட்டுக் கொடுத்தே போவார் பின் விவாதங்களை தவிர்க்கவே அவ்வாறு செய்வார்.

மகள் மற்றும் மகனையும் தடுக்கவே செய்வார் பிரச்சனை வேண்டாம் என்று.
சொந்தங்களுக்கு இடையே பிரிவும் சண்டை சச்சரவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே கௌரி சற்று விலகி இருக்க சொல்வார்.

அவரும் அப்படியே இருப்பார் ஆனால் வீட்டிற்கு மேகலாவோ சாவித்திரியோ வந்தால் நன்றாகவே கவனித்துக் கொள்வார்.

உதயின் ஆளுமை தெரிந்ததால் அவனிடம் பெரும்பாலும் எதுவும் வைத்துக் கொள்வதில்லை சுந்தரியும் மேகலாவும்.

உதயின் அன்னை கௌரி, மகனிடம் கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பைகளை தந்து வண்டியில் ஏற்ற சொன்னார்.

உதயின் பெரியப்பா மகன் மோகன் வந்து சேரவே, அனைவரும் குலதெய்வ கோயிலுக்கு பயணப்பட்டனர்.

மோகன் உதச்சந்திரனை விட உதய சந்திரனை விட ஆறு மாதங்களே பெரியவன். சென்ற ஆண்டுதான் திருமணமாகி அவனது மனைவி வசந்தி பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்றிருந்தாள்.

அனைவரும் பேசி சிரித்தபடி கோவில் வந்து சேர்ந்தனர்.
கோவிலுக்கு வந்தவர்கள், ஆண்கள் ஒருபுறம் பொங்கல் வைக்க இடத்தை சுத்தப்படுத்தினர்.

பின்பு அங்கிருந்த கல்லை வைத்த அடுப்புக்கூட்டி கொண்டு வந்திருந்த விறகு வைத்து, சுந்தரியை பொங்கல் வைக்க அழைத்தனர். அதில் அதிர்ந்து விழிந்தாள் சுந்தரி.

பின்னே அவளுக்கு தான் சமையலே தெரியாதே. எல்லாமே கேள்வி ஞானம் தான் இதுவரை அடுப்பில் சமைத்ததில்லை பெரிதாக.
சமைக்க வேண்டிய கட்டாயமும் வந்ததில்லை அவளுக்கு.

இத்தனை வருடகாலமாய் அவள் வாழ்ந்த வாழ்விற்கு, கிடைத்த உணவை உண்டே பழகியவள், சமைக்க கற்றுக்கொள்ள தோண்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

வேலை என்று வந்த பின்னரும் ஹாஸ்டலில் கொடுப்பது தான். தனியாக வாழ்வது பாதுகாப்பு இல்லை என்று ஹாஸ்டல் வாழ்க்கை. குடும்பமாக வாழ அன்னை, தந்தை வேண்டுமே அவள் எங்கு செல்ல.

திருமணம் என்று முடிவான பின்பு கூட உதயின் வீட்டிற்கு சென்று கற்றுக் கொள்ளலாம் என்று தானே எண்ணினாள்.

தன்னிலை நொந்தவள் உதயை பார்க்க, அவள் அருகில் வந்தவனை பார்த்து "சமைக்க தெரியாது" என்று கூறினாள்.

உதவ வந்த உதயசந்திரனை ஏதேதோ சொல்லி அப்புறப்படுத்தினர் மேகலா மற்றும் சாவித்திரி.

அவனது கோப குணம் தலைதூக்க கௌரி பார்த்த கெஞ்சல் பார்வையில், சுந்தரியின் கையில் அலைபேசி புளூடூத் கொடுத்து விட்டு சென்றான். சாவித்திரி மற்றும் மேகலாவை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து தான் போனான்.

சுந்தரி புளூடூத் காதில் மாட்டி கொண்டு உதயசந்திரன் சொல்லச்சொல்ல பொங்கல் வைத்து முடித்தாள்.

பொங்கல் வைத்த கையோடு படையலிட்டு வணங்கி அனைவருக்கும் பிரசாதம் தந்தாள் சுந்தரி.

அவள் பொங்கல் வைப்பதற்கு தெரியாமல் சொதப்புவாள், அதில் அவளை மட்டம் தட்டலாம் என்ற எண்ணத்தில் மண்ணை அல்லவா போட்டாள் சுந்தரி.

சுந்தரியின் மேல் மேலும் குரோதம் வளர்த்து கொண்டனர் மேகலாவும் சாவித்திரியும்.

கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள்.

உதயச்சந்திரன் தங்களது கடைக்கு செல்ல,
மதிய உணவுக்கு எளிதாக சாம்பார் சாதமும், தயிர் சாதமும், அப்பளம் மற்றும் ஒரு பொரியல் என்று முடிவானது.

கௌரி சமைக்க ஸ்ரீமதியும் சுந்தரியும் உதவி கொண்டிருந்தனர்.

மேகலாவும் சாவித்திரியும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து வளவளத்துக் கொண்டிருந்தனர்.

சுந்தரி சமையல் அறையில் இருந்து காய்கறிகள் எடுத்து வந்து அமரவே மேகலா,

"ஆமாம் அண்ணி சுந்தரிக்கு பொங்கல் சீர் யார் குடுப்பா. ஏன்னா இன் நேரம் குடும்பத்து பொண்ண கல்யாணம் பண்ணிருந்தா நல்ல நாள் பெரிய நாளுக்கு சீர் செய்வாங்க இங்க ஏது அதுக்கெல்லாம் வழி" என்ற படி தொடங்கி வைத்தார்.

காய்களை நறுக்கிய அவளது கை ஒரு நொடி நின்று மீண்டும் தன் வேலையை தொடர்ந்தது.

சாவித்திரியோ "அத விடு மேகலா ஆடி மாசத்துக்கு அம்மா வீட்டிக்கு போகணுமே அப்போ எங்க போவா ஒருவேளை மறுபடியும் ஹாஸ்டல் போய் இருப்பாளா இல்ல அனாதை ஆஸ்ரமத்துக்கு போவாளா. " கருந்தேளாய் கொட்டினார்.

அதற்கு மேகலா "அண்ணி ஒன்னுமே இல்லாம வந்து உட்கார்ந்துருக்கா பாருங்க, கால் காசு இல்லாமல் கல்யாணம் செஞ்சுகிட்டா, இதுல சமைக்க தெரியாது வீட்டு வேலை செய்ய தெரியாது" என்க

"எதுக்கும் ஒரு யோகம் வேணும் மேகலா அது உன் பிள்ளைக்கு இருக்கா" சாவித்திரி இன்னும் பற்றவைக்க.

பேதையவள் உள்ளுக்குள் நெருங்கி போனாள். உள்ளே இருந்த கௌரிக்கும் கண்டிப்பாக கேட்டிருக்கும் தான். ஆனால் மறுத்து எதுவும் கூறவில்லை என்பதே நெஞ்சை அறுத்தது.

தான் இந்த வீட்டின் பிடிக்காத மருமகளா. தனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை வழ தகுதி இல்லையோ. தானும் பிறர் போல தாயுடன் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம் என்ற என்னம் வெகுவாக தாக்கியது.

வழக்கம்போல அத்தனையும் உள்ளுக்குள் போட்டு மருகி கொண்டாள்.

ஒரு வேளை உதயிடம் சொல்லி இருந்தால் அவன் தீர்த்து வைத்திருப்பானாக்கும்.
தனது மனகிலேசங்களை யாரிடமும் சொல்லாமல் பின்னாளில் இவள் எடுக்க போகும் முடிவில் வெகுவாக பாதிக்கபோவது யாரோ.


ஆயிரமே இருந்தாலும் உதயச்சந்திரன் தன்னை நேசிக்கிறான் என்ற ஒரு பற்றுக்கோலை கொண்டு தான் அந்த வீட்டில் வாழ முடிவெடுத்தாள் பெண். என்றேனும் அந்த பற்றுக்கோலை கைவிட்டால் என்ன நேருமோ.
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 7:-

மேற்கில் ஆதவன் மறையும் வேளையில் உதயச்சந்திரன் வீட்டினில் பிரவேசித்தான்.

அவனை வரவேற்று தண்ணீர் கொடுத்தார் கௌரி.

மதியம் சாவித்திரியும் மேகலாவும் பேசிய பேச்சும் அதன் பின் மருமகளின் பாராமுகமும், அவளது முகத்தில் தோன்றிய சிந்தனையும், கவலையும் கண்டு ரொம்பவும் வருந்தினார் கௌரி. அவர் கண்டிப்பாக மகனிடம் சொல்ல வேண்டும் என்றும் இதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்றும் மகனது வரவை எதிர்நோக்கி இருந்தார்.

தன்னை தயங்கி, தயங்கி பார்த்தபடி அமர்ந்திருந்த அன்னையைப் பார்த்து "என்னம்மா ஏதாவது பேசணுமா" எடுத்துக் கொடுத்தான்.

அப்போதும் அவர் தயங்கவே "அத்தையும் பெரியம்மாவும் என்ன சொன்னாங்க உங்கள" சூடாக வந்து விழுந்தது வார்த்தை.

அதே நேரம் தத்தமது அறைகளில் இருந்து வந்தனர் சுந்தரியும் ஸ்ரீயும்.
உதயை கண்ட சுந்தரி "சந்துரு வந்துட்டீங்களா" என்றபடி அவனிடம் விரைந்தாள்.

சந்தன நிற கேரளா சேரியில் சந்தன சிலையாக நடந்து வந்தவளை மெய் மறந்து பார்த்துக் கொண்டே பார்த்தான் உதயச்சந்திரன்.

சுந்தரியும் அவனுக்கு சளைக்காமல் பார்த்தபடி நின்றாள்.

அவர்களுக்கு தனிமை தர எண்ணி "ஸ்ரீ வா அண்ணனுக்கு டீ போடலாம்" என்று ஸ்ரீயை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றார் கௌரி.

அதிக வேலையாட்கள் வைத்திருப்பதில் உடன்பாடு இல்லை கௌரிக்கு. சமையல் பெரும்பாலும் அவரும் ஸ்ரீயும் பார்த்துக் கொள்வார். சில சமயங்களில் ஒரு மாறுதலுக்காக உதயும் சமைப்பது உண்டு.

ஒரு டிரைவர், தோட்ட வேலைக்கு, வாயில் காவலுக்கு ஒருவர், சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் உதவியாக ஒரு பெண்மணி என்று மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே உண்டு அங்கு வேலையாள் என்று.

தன் அருகில் வந்து அமர்ந்தவளை கைப்பிடித்து "என்ன சுந்தரிமா நல்லா ரெஸ்ட் எடுத்தியா" என்று கேட்டான்.

சுந்தரியோ "இல்ல சந்துரு நான் நவீன் கிட்ட பேசிட்டு இருந்தேன்" என்றாள். அதில் மெலிதாக அதிர்ந்தவன், "வாட் இந்த டைம் ல யா" என்றான்.

பின்னே இங்கு பகலானால் அங்கு இரவு அல்லவா நேர வித்தியாசங்கள் உண்டே.

அதுவும் நேற்று இரவு தான் நவீனிடம் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாள், மீண்டும் இன்று நவீனிடம் பேசியதைப் பற்றி ஒரு பரிதிவிப்புடன் சொல்ல, என்னவாக இருக்கும் என்று யோசிக்கலானான் உதயச்சந்திரன்.

கேட்க கூடாது என்று நினைத்தாலும் கேட்டு விட்டான் "எனிதிங் சீரியஸ்"
"இல்லங்க" சோர்வாகவே வந்தது பதில்.

சற்று முன் உற்சாகமாக வந்தவள், திடீரென அவள் இப்படியாகவும் 'அம்மா வேற பேசனும்னு சொன்னாங்களே என்னவா இருக்கும், சுந்தரிய பத்தியா' சிந்தித்தான்.

கௌரி டீ எடுத்து வரவே, "ஸ்ரீ சுந்தரிய நம்ம வீடு சுத்தி காட்டு மா"

என்றவன் சுந்தரியிடம் "நீ போ சுந்தரி நான் டீ குடிச்சுட்டு வரேன்" என்றபடி நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.

ஸ்ரீயும், சுந்தரியும் செல்லவே, தாயை கைப்பற்றி அமர வைத்து "இப்போ சொல்லுங்க மா அத்தையும் பெரியம்மாவும் சுந்தரி பத்தி என்ன சொன்னாங்க" சரியாக பிரச்சனையின் நூல் பிடித்து கேட்டான் உதய்.

மெல்ல ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார் கௌரி. சுந்தரியின் பாராமுகம் உட்பட.

இப்போதும் அவர்கள் மண்டபத்தில் பேசியது உதயின் கவனத்திற்கு வரவில்லை, கௌரிக்கே தெரியாது என்ற போது எப்படி சொல்வார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவன், ஒரு பெருமூச்சுடன், "அம்மா நீங்க அவளுக்காக எதுவும் பேசுவீங்கன்னு எதிர்பார்த்திருப்பாளா இருக்கும். நான் பார்த்துக்கிறேன் நீங்க வருத்தப்படாதீங்க"

"எப்படிம்மா அவங்களுக்கு இப்படி பேச தைரியம் வந்தது. என்னோட மனைவின்னு தெரிஞ்சும் வார்த்தைய விட்டுருக்காங்கன்னா, இவங்க இன்னும் எதுவும் செய்ய துனிய மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் " கோபத்தில் கண்கள் சிவக்க கேட்டான்.

இன்னும் செய்ய துனிவார்கள் என்று கணித்தவன் அதை தடுப்பானா, இல்லை அவர்களால் தவிப்பானா.

தாயை சமாதானம் செய்து அவரது அறையில் விட்டவன், மாடி ஏறினான் தங்களது அறைக்கு.

உடைமாற்றி வந்தவன் சுந்தரி மாடித்தோட்டத்தில் இருப்பது அறிந்து, அவளை காண சென்றான்.

அந்த மாடி தோட்டத்தில் பூச்செடிகளும் காய்கறி செடிகளும் வளர்த்திருந்தனர்.

முக்கியமாக செம்பருத்தி வகைகளும், ரோஜா வகைகளும், தாமரைக்குளமும் அந்த மாடித்தோட்டத்தின் சிறப்பு.

மேலும் கை வைத்தியத்திற்காக சில மூலிகை செடிகளும் வைத்திருந்தனர். இது உதய சந்திரனின் சிறந்த பொழுதுபோக்காகும்.

வீட்டை சுற்றியும் கூட தோட்டம் அமைத்திருந்தான். தோட்டக்கலையில் ஆர்வம் அவனுக்கு.

விஸ்தாரமான அந்த வீட்டை சுற்றி பார்த்தவள், தான் அந்த வீட்டிற்கு பொருந்தாமல் இருக்கிறோமா என்ற எண்ணம் தோன்றியது. தன்னை என்றுமே கீழாக அவள் நினைப்பதில்லை.

ஆயினும் இன்றைய பேச்சு அப்படி ஒரு தாக்கத்தை அவளிடம் ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

மாடி தோட்டத்திற்கு ஸ்ரீயுடன் வந்தவள், அவளை அனுப்பிவிட்டு தனியாக கைகளை கட்டிக்கொண்டு, தொடுவானத்தை வெறித்தவாறு நின்று இருந்தாள்.

நவீனிடம் இங்கு நடந்ததை சொல்லி ஆறுதல் தேடவே எண்ணியிருந்தாள் சுந்தரி.
ஏதோ தோன்ற பின்பு எதையும் சொல்லாமல் எப்பொழுதும் போல் அவனை வம்பு இழுத்து பேசி விட்டு அலைபேசியை வைத்திருந்தாள்.

நேரத்தை போக்கவே, உதய் சொன்னபடி அங்கிருந்து அலமாரிகளில் தனது உடையையும் ஒரு பக்கத்தில் அடுக்கி வைக்கலானாள்.

வேலை செய்ததன் கசகசப்பு போக்க மீண்டும் குளித்து வரும் போது தான் உதயச்சந்திரன் வந்திருந்தான்.

வேக நடையில் அவளை எட்டியவன், பின்னிருந்து அணைத்துக் கொண்டான். சட்டென்று அவன் தீண்டவே கத்தப்போனவள் "நீங்களா" என்று ஆசுவாசமானாள்.

அவனது கைவளவிலேயே தலையை திருப்பி பார்த்தாள். லீவலஸ் டீஷர்ட் டிராக்பேண்ட் உடன் நின்றிருந்தான்.

"இவ்ளோ கிட்ட பார்த்தா இட்டிஸ் டெம்பிங் மீ" என்று அவளது இதழில் சின்னதாய் முத்தமிட்டவன், "என்ன மேடம் ரொம்ப யோசனைல இருக்கீங்க போல" கேலி செய்தான்.

"ஒன்னும் இல்ல சந்துரு" என்க. அவனோ "முதல்ல இந்த வார்த்தையை பேன் பண்ணனும்"

என்ன என்று புரியாமல் பார்த்தவளை தன்னை நோக்கி திருப்ப, ஏன் என்பது போல் பார்த்தவளிடம் "பின்ன உன் முகத்தை பார்த்துட்டு ஒன்னும் செய்யாம இருக்க முடியல" போலியாக வருந்தினான்.

வெட்கத்தில் சிவந்தவள் "அச்சோ என்ன பேசுறிங்க நான் இது கேட்கல"

"அதுவா என்கிட்ட நீ பேசினதுல நிறைய ஒன்னும் இல்லன்னு தான் சொல்லி இருக்க. ஆனா அந்த ஒன்னும் இல்ல பின்னாடி ஏகப்பட்ட விஷயம் ஒளிஞ்சிருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது" அவளை கூர்மையாக பார்த்தபடி கூறினான் உதயச்சந்திரன்.

அவனது பார்வையில், தலை தாழ்த்தி தரையில் தன் பார்வையை பதித்தவள்,

"நீங்க கேக்கறது எனக்கு புரியுது. உங்கள மாதிரி எனக்கும் நல்ல சைல்ட்ஹுட் லைஃப் கிடைச்சிருந்தா சொல்றதுக்கு ஆயிரம் விஷயம் இருந்திருக்கும் சந்துரு.

பட் என் லைப்ல நத்திங் டு சே. என்னோட இல்லத்து வாழ்க்கை தான் உங்களுக்கே தெரியுமே.
பத்தும் பத்தாத உணவு, எல்லாத்துக்கும் பங்கிட்டு தரும் போது இன்னும் வேணும்னு, சின்ன வயசுல கேட்க கூட கூச்சமா பயமா இருக்கும்.

பழைய டிரஸ் அதுல கிழிசல் இல்லாம இருக்கிறதா பார்த்து பெண் குழந்தைகளுக்கு தருவாங்க மதர்.

நம்ம சைசுக்கு கண்டிப்பா கிடைக்காது, அதை எதிர்பார்க்கிறது முட்டாள் தனமான செயல் பின்னாடி புரிஞ்சுது. உடலை மறைக்க ஒரு துணி அவ்வளவு தான்.

பெரிய பொண்ணு ஆனா விசேஷமா கொண்டாடுவாங்கன்னு வேலைக்கு வந்த அப்புறம் தான் தெரியும் சந்துரு. நம்ம கல்யாணம் தான் நான் பார்த்த முதல் கல்யாணம்.

ஸ்கூல்ல கூட வேலை செய்யுற டீச்சர்ஸ் இன்விடேஷன் வச்சாலும் போகமாட்டேன், போனதில்லை.

பதினொன்று பன்னிரென்டுல நவீன் என்னோட ஃப்ரெண்ட் ஆனான். அவன் தான் அவங்க பாட்டி தாத்தா கிட்ட சொல்லி எனக்கும் சேர்த்து மதிய சாப்பாடு எடுத்துட்டு வருவான். ரொம்ப கூச்சமா இருக்கும் பேசி பேசியே என்ன மாத்தினான்.

எத்தனையோ நாளா என்னோட ஒருவேளை பசி போக்குறது, அவனோட கடமையா நினைச்சு, நட்புக்கு செய்றதா நினைச்சு செய்வான்.

இன்ஃபெக்ட் அவனும் மிடில் கிளாஸ் லைஃப் தான். ஆனாலும் தரனும்ன்னு அந்த மனசு நவீன் கிட்ட இருக்கு. அம்மாவுக்கு நிகர அவன் எனக்கு இருக்கான். என்னோட வாழ்க்கைய தெரிஞ்சு ஒதுக்கி வச்சவங்க ஒரு பக்கம்ன்னா நானே ஒதுங்கி போனது தான் நிறைய.

அன்புக்காக ஏங்கிய எனக்கு அன்பும் அக்கறையும் வாரி வாரி கொடுத்து இருக்கான் நவீன்.

இதுல என்ன விந்தைனா என்ன அம்மாஸ்தானத்தில் வைத்து பார்க்கிறான்.

அவனோட சின்ன வயசுல அவங்க அம்மா அப்பா ஒரு ஆக்சிடென்ட் ரெண்டு பேரும் ஒண்ணா இறந்துட்டாங்க. அதுல இருந்து அவங்க தாத்தா பாட்டி அவனோட பொறுப்பு ஏத்துக்கிட்ட இப்ப வரைக்கும் வளர்த்துட்டு இருக்காங்க.

எனக்கு பெண் தோழிகளே இல்லைன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா என்னன்னு எனக்கு தெரியல. ஒரே நண்பன் நவீன் மட்டும் தான் இருக்கான்."

அவளை பேச விட்டு பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

'நேத்து நவீன் கிட்ட பேசினதுக்கு இப்ப விளக்கம் கொடுக்குறாளோ' தோன்றவே அவளை உஷ்ணம் பார்வையுடன் ஏறிட்டான்.

"என்ன மேடம் சந்தேகப்படுவேன்னு நினைச்சு விளக்கம் குடுக்குறீங்களா உங்க பிரண்ட்ஷிப்க்கு. நான் ஒழுக்கத்தை பெருசா நினைக்கிறவன், நட்ப சந்தேகப்பட மாட்டேன் மேடம்" சற்று கடுமையாகவே கூறினான்.

"கண்டிப்பா அப்படி இல்ல சந்துரு நீங்க சந்தேகமா நினைப்பீங்கன்ற எண்ணம் எனக்கு துளியும் இல்ல" சுந்தரி கூறவே மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தான்.

"என்ன பத்தி சொல்லனும்னா ஆட்டோமேட்டிக்கா அவனையும் பத்தி சொல்லி ஆகணுமே. ரெண்டு பேருமே கம்ப்யூட்டர் சயின்ஸ். எனக்காக அவன் கவர்ன்மென்ட் காலேஜ்க்கு என்கூட வந்தான் படிக்க. ஸ்காலர்ஷிப்ல அப்புறம் ஸ்பான்சர் ஷிப்ல தான் படிச்சேன்.

பார்ட் டைம்ல ஜெராக்ஸ் கடை கம்ப்யூட்டர் சென்டர் இப்படி வொர்க் பண்ணினேன். எம்எஸ்சி பிஎட் முடித்தேன். நவீன் எம் சி ஏ படிச்சான் எனக்கு டீச்சர் ஆகணும். அவனுக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகணும்.

அவன் கேம்பஸ் செலக்ட் ஆகி ஒன் இயர் இங்க ஒர்க் பண்ணிட்டு இருந்தான். இப்ப ஃபாரின் போயிருக்கான். நான் கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி டீச்சரா வந்துட்டேன்.

மாசத்துக்கு ஒரு நாள் இல்லத்துக்கு போவேன்.
என்னால முடிஞ்ச தொகைய அவங்களுக்கு கொடுத்துட்டு வருவேன். தொகையாக கொடுப்பதை விட சாப்பாட்டுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துட்டு வருவேன் சந்துரு. அதுல ஒரு திருப்தி எனக்கு.

ரெண்டு பிள்ளைங்கள படிக்க வைக்கிற பொறுப்பை எடுத்து இருக்கேன் சந்துரு. நான் வேலை செய்ய ஆரம்பிச்சேன் ரெண்டு வருஷம் ஆகுது. பிஹெச்டி பண்ணிட்டு இருக்கேன் 24 வயசு கம்ப்ளீட்."என்றபடி கையை விரித்தவள், மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்பது போல் தலையை அசைத்தாள்.

"இப்ப நான் சொல்லவா உன்ன பத்தி" என்றான்.

'என்ன சொல்லப் போகிறான்' மெல்லிய படபடப்புடன் ஏறிட்டு பார்த்தாள்.

அதில் மென்மையாக சிரித்தவன் "நீ அமைதியான பொண்ணு தான் ஆனா சுயமரியாதையை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு அமைதியான பொண்ணு கிடையாதுன்னு தெரியும்."
என்ன சொல்ல வருகிறான் என்பது போல் பார்த்தாள்.

"அத்தையும் பெரியம்மாவும் என்ன சொன்னாலும் பொறுத்து போகணும்னு அவசியம் இல்ல சுந்தரி. பதிலுக்கு பேசு. ஸ்ரீ கிட்டயும் அம்மா அது தான் சொல்லுவாங்க. அம்மா நமக்காக பேசுவாங்க நாம எதிர்பார்க்கக் கூடாது சுந்தரி.

அம்மா எல்லாரும் வேணும் நெனச்சு அமைதியா போவாங்க. என்ன பேசவிடாமல் தடுப்பது காரணம் நான் கோபப்பட்டு வார்த்தையை விட்டுவிடுவேன் என்றது தான். மத்தபடி நீ பேசினா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க.

சண்டை வர கூடாதுன்னு நினைப்பாங்க அது அம்மாவோட நேச்சர். அம்மா அவங்க கிட்ட இருந்து விலகி இருக்கிறது அவங்க கல்யாணமாகி வந்ததுல இருந்து அப்படித்தான். சிலர் நினைப்பாங்கல்ல தன்னால ஒரு பிரச்சனை வரக்கூடாதுன்னு அந்த கேட்டகிரி தான் அம்மா.

ஆனா நாங்க ஐ மீன், நானும் ஸ்ரீயும் மோகனும் அப்புறம் சௌந்தர்யாவும் கிட்டத்தட்ட ஒன்றாக வளர்ந்தவர்கள் தான். அத்தையும் பெரியம்மாவும் அடுத்தடுத்த தெருவுல பக்கத்து பக்கத்துல இருக்காங்க. அதனால பெரும்பாலும் எல்லாரும் ஒன்னா தான் இருப்போம்." நீண்டதொரு விளக்கம் அளித்தான்.

புரிகிறது என்பது போல் தலையசைத்தவள் "சந்துரு எனக்கு சமையல் கத்துக்கணும்" என்றாள். "அதுக்கு என்ன நானே சொல்லி தரேன்" என்றான் சிரித்துக் கொண்டு.
விழிவிரித்து பார்த்தாள்.

"டைம் கிடைக்கும்போது கிடைக்கும்போது சமைப்பேன் சுந்தரி" இவ்வளவு எதார்த்தமானவனா தன்னவன் வியந்து போனால் சுந்தரி.

உதயசந்திரனுக்கு சுந்தரியின் மீது காதலும் அக்கறையும் இருக்க, சுந்தரிக்கு உதயசந்திரன் மீது பிடித்தமும் அக்கறையும் இருந்தது.

ஆரம்பத்தில் இருந்த அந்த பிடித்தம் சிறிது சிறிதாக அன்பாக மாறியது என்று கூட சொல்லலாம்.

அன்பிற்கும் காதலுக்கும் நூல் அளவே வித்தியாசம். அந்த நூல் அளவு வித்தியாசத்தை எப்பொழுது கடந்து வருவாள் பெண்ணவள்.

ஆனால் அது காதலாக, தனக்கான தேடலாக மாறும் தருணமதை எதிர்நோக்கி ணகாத்திருந்தான் உதயச்சந்திரன்.

இருட்டி விடவே "கீழே போலாம் சுந்தரி" அவளது கைப்பற்றியபடி அழைத்துச் சென்றான்.

நேரம் உணவு நேரத்தை தொட்டிருக்க, உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர். ஒரு வேளையாவது அனைவரும் ஒன்றாக உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தனர் அவர்கள்.

கௌரி சுந்தரியை பார்த்து "உட்காருமா நாமளே பரிமாறிக்கலாம்" என்றார்.

இட்லி சட்னி சாம்பார் இருக்கவே பேசிக்கொண்டே உண்டனர் கௌரி சுந்தரியிடம் பேச்சு கொடுத்து அவளுக்கு பிடித்த உணவுகளை தெரிந்து கொண்டார்.

ஸ்ரீயும் சுந்தரியும் சற்று விலகி இருந்தால் போல் தோன்றியது உதயசந்திரனின் கண்களுக்கு.
அண்ணி என்று குதுக்களித்த பெண் கண்களில் எச்சரிக்கைய உடனே பேசுவதை குறித்துக் கொண்டான்.

இன்னொரு நாள் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணினான்.

குளியலறை சென்று தன் அருகில் வந்து படுத்தவளை, தனது கைகளுக்குள் சுருட்டிக் கொண்டான் உதயசந்திரன்.

"நேத்து தான சொன்னேன் டீச்சரம்மா அதுக்குள்ள மறந்துட்டியா" கண்டிப்புடனே கேட்டவன் "உன் டெடி பியர் வேணாமா" குழைந்தான் குரலில்.

தன்னை ஏறிட்டு பார்த்தவளை "பின்ன தள்ளி படுக்குற" என்றான்.

"இல்ல சந்துரு" என்று தடுமாறிய அவளை, நான் கண்டுகொண்டேன் என்பது போல் பார்த்து "யூ லவ் மீ ஐ நோ தட். ஆனா எனக்கான தேடல் உன் கண்ணுல தெரியும்போது இப்படி சும்மா வெறுமனே கட்டிப்பிடித்து இருப்பேன்னு மட்டும் நினைக்காதே" குறும்புடன் சொல்லியவன் "தூங்கலாமா" என்ற கேள்வி உடன் தூங்கச் சென்றான்.

நேற்று போல் இல்லாமல் இன்று சுந்தரியே முதலில் எழுந்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு கீழே சென்றவள் கௌரியுடன் சேர்ந்து சமையலில் இறங்கினாள்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் வீடு அதிர சுந்தரி என்று கத்தினான் உதய சந்திரன்.

 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 8:-

உதயசந்திரன் கத்தியதில் கையில் இருந்த பாத்திரத்தை தவற விட்டாள் சுந்தரி.

"அத்தை" என்று அதிர்ச்சியாகவும்,
கௌரி இயல்பான குரலில் "இதே தான் வேலை அவனுக்கு. அவனுக்கு வேண்டியத நாம சரியா செய்யலன்னா இப்படித்தான் கத்துவான். சின்னதுல இருந்து இப்படி தான் மா. நீ போ, என்னன்னு போய் பாரு" என்க

"இல்லத்த" என்று தயங்கியவளை "அட போம்மா
பொங்கலுக்கு தாளிச்சு கொட்டணும் அவ்வளவுதான் நான் பாத்துக்கிறேன்" என்று அவர் அவளிடம் டீயையும் கொடுத்து அனுப்பினார் கௌரி.

மாடியில் தங்களது அறைக்குச் சென்றவள் கண்டது இடையில் துண்டுடன் நின்றபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனை.

கண்ணாடியின் முன் நின்று பேசிக்கொண்டே ஈர முடியை கைகளால் கோதிக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.

அவனை அந்த கோலத்தில் பார்த்திராதவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அவள் முன் சொடக்கிட்ட படி என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான். அதில் கலைந்தவள் தலையை தாழ்த்தி ஒன்றுமில்லை என்று தலை அசைத்தவாறு மேசையில் கொண்டு வந்திருந்த டீ கப்களை வைக்கலானாள்.

அவளது முக பாவனைகளை அவதானித்தவன், அவளது கைகளைப் பற்றி தன் அருகே இழுத்து அவளது புடவை முந்தானையை எடுத்து தலையை துவட்டிக் கொண்டிருந்தான். ஒரு கையில் அலைபேசியில் பேசியபடியே தலையை துவட்டினான்.
அவனது செயலில் விக்கித்து நின்றது என்னவோ சுந்தரி தான்.

"என்ன சந்துரு எதுக்காக அவ்ளோ சத்தமா கூப்பிட்டீங்க" திக்கி திணறி கேட்டாள்.

"குட் மார்னிங் சொல்ல மறந்துட்டீங்க மேடம்" என்று கேலியாக கூறியவனை கண்டு அய்ய இதுக்கு தானா என்று சலித்தபடி "குட் மார்னிங் சந்துரு" என்றாள் புன்னகை ததும்பும் குரலில்.

"நீ மக்கு ஸ்டூடண்டா இல்ல ஞாபக மறதி பொண்ணா" என்று சந்தேகமாக கேட்க, புரியாமல் பார்த்தவளை கண்டு "நேத்து எப்படி குட் மார்னிங் சொல்றேன்னு சொல்லி கொடுத்தேன் அத்தனையும் மறந்தாச்சு" முறைத்தான் அவன்.

இத்தனை நாட்களில் அவன் முறைக்கும் போதெல்லாம். அவனது மூக்க நுனி லேசாக துடிக்க கண்டிருக்கிறாள். இன்று அவளது குறும்புத்தனம் மேலிட "குட் மார்னிங் தானே சொல்றேன்" என்றபடி. தத்தையாக அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் அருகில் செல்ல, அவன் சுவாரஸ்யமாக அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

அவனது அருகில் சென்றவள் அவனது மீசையை பற்றி தன்னை நோக்கி இழுத்து மூக்க நுணியை நறுக்கென்று கடித்து வைத்தால் பெண்.

ஆ என்று அலறிய படி மூக்கை தேய்த்தவன், அவளைப் போலியாய் முறைக்கவே, "நீங்க எப்பவுமே முறைக்கும் போதெல்லாம் இப்படித்தான் தோணும்" அருவியாக சிரித்தவள், "டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு சொல்லுங்க சந்துரு" என்றபடி பால்கனிக்கு சென்று மறைந்தாள்.

சில நிமிடங்களில் உடை மாற்றியவன் பால்கனியில், அவள் அமர்ந்திருந்த, இருவர் அமரக்கூடிய அந்த பிறம்பு நாற்காலில் அவளது அருகில் அமர்ந்தான்.

பால்கனியில் சில ரோஜா செடிகளும் மணி பிளான்ட் மற்றும் மயில் மாணிக்க கொடிகளும் படர்ந்திருந்தன.

"கிரேட் எஸ்கேப் போல சுந்தரி" என்றபடி தன் கையில் இருந்தா டீ கப் ஒன்றை அவளிடம் தந்தான்.

சங்கடமாக புன்னகைத்து, அவள் வாங்கிக் கொண்டாள். அவளது தோள் சுற்றி ஒரு கை போட்டுக்கொண்டு தேநீர் பருகலானான்.

அவளும் குடிக்கவே, "எத்தனை நாள் சுந்தரி லீவ் போட்டுருக்க கல்யாணத்துக்கு"

"ஐஞ்சு நாள்ங்க" என்றவளின் பதிலில், சிறிது நேரம் யோசித்தவன், "ஏற்கனவே மூணு நாள் போயிடுச்சு இன்னிக்கு நாளைக்கு மட்டும் தான் லீவு இல்லையா" என்றான்.

ஆம் என்ற ரீதியில் தலையாட்டியவளிடம், "அப்ப சரி சுந்தரி நீ ரெடியாகிக்கோ நாம இங்க இருக்கிற நம்ம கடைக்கு போயிட்டு வந்துருவோம். நாளைக்கு மறுநாள் திங்கட்கிழமை நீ வேலைக்கு போகணும் இல்லையா" மீண்டும் ஒரு கேள்வி.

ஆம் என்று பலமாக தலையாட்டினாள். விளையாட்டாய் அவளது தலையை பிடித்து அழுத்தியவன்,

"நாளைக்கு இல்லாம வர ஞாயிற்றுக்கிழமை நாம இல்லத்துக்கு போயிட்டு வந்துருவோம்"

"சரிங்க" என்றபடி அவனது கப் கப்பையும் பெற்றுக்கொண்டு கீழே செல்லப் போனவளின், கரங்களைப் பற்றியவன்,

"ஏன் சுந்தரி ஹனிமூன் போறது பற்றி ஏதாவது ஐடியா வச்சிருக்கியா. எந்த ஊரு உனக்கு பிடிக்கும் சொல்லு" அவனது கேள்வியில் விழித்தாள்.

"அவுட் ஆப் சிலபஸ்ல கொஸ்டின் கேட்ட மாதிரி ஏம்மா இப்படி முழிக்கிற" கேலி செய்தவன், அவளது கைகளைப் பற்றி தானும் எழும்பி நெற்றியில் முத்தமிட்டவாறு, "எங்க போறதுன்னு யோசிச்சு சொல்லு" அவளது கைகளில் இருந்த கப்களை அவனே வாங்கிக் கொண்டு "நீ ரெடியாகு சுந்தரி நான் கீழ போறேன்".

நவீன் கிட்ட கேட்கலாம் என்று மனதிற்குள் கூறிக் கொண்டவளை அவதானித்தவன் போல் "உங்க பிரண்டு நவீன் கிட்ட கேக்க போறீங்களா மேடம்" அறையின் கதவில் கை வைத்தவாறு திரும்பி நின்று கேட்டான்.

"மைண்ட் வாய்ஸ் நினைச்சு சத்தமா பேசிட்டம்மோ" திரு திருவென விழித்தாள்.

"வேர்ல்ட் மேப்ல கூட சர்ச் பண்ணுமா. ஆனா நவீன் கிட்ட" என்று தயங்கியவன். "ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட். பிகாஸ் இட் ஈஸ் ஆவர் பர்சனல்" சொல்லி சென்று விட்டான்.

அவனுக்கு தாங்கள் போகிற இடம் அவளது விருப்பத்தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும். அது எந்த இடமானாலும் சரி என்ற எண்ணம் தான்.

கீழே சென்றவன், கௌரி மற்றும் ஸ்ரீயுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் சுந்தரியும் தயாராகி வரவே, அனைவரும் அமர்ந்து காலை உணவை உண்டார்கள்.

"ஓகே மா நாங்க வரோம்" விடைபெற்றவன் தங்களது நகை கடைக்கு அழைத்துச் சென்றான்.

அவர்கள் உள்ளே நுழையவே மேனேஜர் ஓடி வந்து வரவேற்றார். கடைக்குள் நுழைந்தவுடன் உதய சந்திரனின் தோரணை முற்றிலுமாக மாறிவிட்டது.

இயல்பிலே கம்பீரமானவனாக இருந்தாலும், கடையில் ஆளுமையுடன் கூடிய கம்பீரத்தை அவனிடம் கண்டாள். வீட்டில் எதார்த்தமாக இயல்பாக இருப்பவன், தொழிலில் கண்டிப்புடன் ஆளுமையாக வளம் வந்தான்.

அனைவரின் வணக்கத்தையும் தலையசைத்து ஏற்றவன், சுந்தரியின் கைப்பிடித்து அழைத்து சென்று தனது அறையில் தனது நாற்காலியில் அமர வைத்தான்.

பதறி எழுந்தவளை முறைத்தான் அவனது முறைப்பில் சங்கத்துடன் அந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவளுக்கு எதிர்ப்புறம் இருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் அவன் அமர்ந்து கொண்டான். பின்பு மேனேஜரை அழைத்து,

"தாலிக்கொடி எல்லாம் கொண்டு வாங்க. இப்ப இருக்க லேட்டஸ்ட் டிசைன்ஸ் டைமண்ட் முகப்பு வெச்சது எல்லாமே எடுத்துட்டு வாங்க" அனுப்பி வைத்தான்.

அங்கிருந்து பெல்லை அடிக்கவே சற்று நேரத்தில் இருவருக்கும் குளிர்பானம் வந்தது. மற்றவர்கள் அவனிடம் காட்டும் பணிவையும் பவ்யத்தையும் கண்டு வியந்தாள் சுந்தரி.

நகைகள் வரவே "டிசைன் செலக்ட் பண்ணு சுந்தரி உனக்குத்தான்" என்றான். "இல்லங்க இதுவே போதும்" என்று கூற வந்தவள், அவனது உஷ்ணம் பறவையில் பார்வையில் வாயை இறுக மூடி கொண்டாள்.

மேனேஜரை ஒற்றை பார்வையில் வெளியே அனுப்பியவன். "மத்தவங்க இருக்கும்போது பார்த்து பேசணும் சுந்தரி. இதுவே எப்படி போதும் சொல்லுவ" கடுகடுத்தான்.

அவளது முகம் சுருங்கிப் போனது. அதில் தன்னை தானே நிந்தித்து கொண்டவன்.
"நாளைக்கு தாலி பிரிச்சு கோர்க்கிற சடங்கு இருக்கு சுந்தரி. 11 பவுன் போடணும் நம்ம கடையில இருக்க எல்லா டிசைன்சும் இங்க இருக்கு பார்த்து உனக்கு பிடிச்சத செலக்ட் பண்ணு" பொறுமையாக எடுத்து சொன்னான்.

11 பவுனா வியந்து தான் போனாள் பென்னவள்.
அவளது அதிகபட்ச நகையே ஒன்றரை சவரன் கழுத்துச் சங்கிலியும், காதில் வெள்ளித்தோடும் கைகளில் கண்ணாடி வளையலும் தான்.
திருமணத்தின் போது தனது அன்னை அனுப்பிய பணத்தில் தனக்கென அவள் வாங்கிக் கொண்ட கொலுசு. இவை தான் அவனது சொத்து என்றும் கூறலாம்.

இவற்றையெல்லாம் எண்ணியவள் தான் அவனுக்கு சற்றும் பொருந்தாதவள் என்று தோன்றியது.

திருமண நிகழ்வுகளுக்காக அணிந்திருந்தது இமிடேஷன் ஜுவல்லரி. மேலும் கௌரி சில நகைகளை கொடுத்திருந்தார். அதையும் முதல் நாள் அவளுக்கு இருந்த மனநிலையில் அவிழ்த்து கொடுத்துவிட்டாள்.

திருமணம் என்றால் வரதட்சணை என்று தெரியும். அதுவும் பெண் வீட்டில் இருந்து தர வேண்டும் என்றும் தெரியும், படித்து இருக்கிறாள். ஆனால் அதை தான் எவ்வாறு அவனுக்கு தருவது என்று தெரியவில்லை. எப்படி ஏற்றுக் கொள்வான் என்றும் தெரியவில்லை.

முதல் நாள் அவனது அத்தையும் பெரியம்மாவும் சொன்ன அந்த சீர்வரிசைகளை அவளே அவளுக்கு எப்படி தந்து கொள்வாள். இந்த எண்ணங்கள் எல்லாம் அலையன ஆர்ப்பரித்து அவளை தாக்கியது.

உதயின் அலைபேசி அடிக்கவே அந்த நகைகளை பார்வை வெறித்து இருந்தவளின் பார்வை அவனைத் தொட்டு மீண்டது.

"நீ பார்த்துட்டு இரு நான் பேசிட்டு வரேன்" என்றபடி அங்கிருந்து அகன்றவன்,
"சொல்லுடா பிரணவ் ஏதாவது முக்கியமான விஷயம் கிடைத்ததா. நீ ஒரு போலீஸ் ஆபிசர் என்றதால உனக்கு ஈசியா இருக்கும்னு நினைச்சேன்" என்றவனிடம் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, "ஓகேடா கொஞ்சம் சீக்கிரம் பார்த்து பண்ணுடா" இறைஞ்சும் குரலில் மெதுவாக சொன்னவன் அவள் வரவை அலைபேசியை வைத்து விட்டான்.

தான் தேர்ந்தெடுத்த தாலி கொடியை அவனது கைகளில் கொடுத்தவள், "ஜென்ஸ் செக்சன்ல ஜுவல்ஸ் பாக்கணும்" "யாருக்கு மேடம்" கேலியாக கேட்டான்.

"உங்களுக்கு தான் சந்துரு" பார்வையை தரை தாழ்த்தினாள். அவளது நாடியை பிடித்து நிமிர்த்தியவன்.
"நேத்து அத்தையும் பெரியம்மாவும் பேசினதுக்காகவா"

அவனது கூற்றில் கண்களை இறுக முடியவள், இல்ல அது மட்டும் காரணமில்லை எனக்கு உங்களுக்கு ஏதாச்சும் வாங்கி கொடுக்கணும்னு தோணுது அதான் கேட்டேன் உண்மையை கூறினாள்.

அவளை கூர்மையாக பார்த்தவன், "பொண்டாட்டி வாங்கி கொடுத்தா வேணான்னு சொல்ல மாட்டேன்". இருவரும் ஆண்கள் பிரிவிற்கு போனார்கள்.

அவனுக்கென்ன நான்கு சவரனில் செயினும், ஒரு சவரனில் மோதிரமும், இரண்டு சவரனில் பிரேஸ்லெட்டும் வாங்கினாள். அத்தனையும் அவளது விருப்பத்தேர்வு தான். அவள் தேர்ந்தெடுக்க அவன் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

கியூபாயிட் பென்டன்ட் வைத்த தங்கச் சங்கிலியும், அவனது பெயர் பொறித்த பிரேஸ்லெட்டும், பொடியாக வைர கற்கள் பதித்த மோதிரத்தையும் அவனுக்காக தேர்ந்தெடுத்தாள்.

பில்லிங் போடும் இடத்தில் தடுமாறினார்கள் ஊழியர்கள். பின்னே முதலாளியின் மனைவி பணம் கொடுத்தால் எப்படி வாங்குவது. சுந்தரி அவனை திரும்பி பார்க்கவே அவன் தலையசைத்தான். அதற்காகவே காத்திருந்தவர்கள் அவளது கார்டை பெற்றுக் கொண்டு இது கையொப்பம் வாங்கி பில் போட்டார்கள்.

தனது தேவை போக அவளது இரண்டு வருட சேமிப்பு அது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தொட்டது.

ஒரு நிமிடம் என்றவன் அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்து, அந்த சங்கிலியை தந்து ஏதோ சொல்லி அனுப்பினான்.

"வா நம்ம ரூம்ல வெயிட் பண்ணலாம்"

அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவன் பின்னே சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து அந்த சங்கிலி அவன் அவனிடம் வந்தது. அதில் சுந்தரி சந்துரு என்று எழுதப்பட்டிருந்தது, இருவரின் பெயர்களுக்கு இடையே ஹாட் சிம்பல் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் எனாமல் கொடுத்திருந்தார்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது அந்த தங்கச் சங்கிலி.

"வாவ் பென்டாஸ்டிக் சந்துரு" வியந்து பாராட்டினாள். "பின்ன என் பொண்டாட்டி செலக்ட் பண்ணுது பென்டாஸ்டிக்கா தான்" இருக்கும் கண்ணடித்துக் கூறினான் உதயசந்திரன்.

இருவரும் மதியம் வெளியில் உணவு உண்டவர்கள், இல்லத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை விருந்திற்காக சொல்லிவிட்டு, அப்படியே மறுநாள் விஷேசத்திற்கு சமையலுக்கு சமையல்காரரிடமும் சொல்லிவிட்டு வந்தார்கள்.

மாலையில் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்ற கௌரி தேநீர் தந்து, மறுநாள் விசேஷத்திற்கு தேவையானவற்றை சொன்னார்.

வீட்டு அளவிலே விசேஷம் வைத்துக் கொள்வது என்று ஏற்பாடு.

உதய சந்திரனின் அத்தை மற்றும் பெரியப்பா வீட்டினருடன் ஒரு சில அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விசேஷத்தை எளிதாக முடித்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தார் கௌரி.

ஆதவன் கிழக்கில் உதிக்க மெல்ல கண்மலர்ந்தான் உதயச்சந்திரன். அவன் முன்னே அன்றலர்ந்த பூவாக தலை பின்னிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து "குட் மார்னிங் பேபி" கிறக்கத்துடன் வந்து விழுந்தது வார்த்தைகள்.

"குட் மார்னிங் சந்துரு" புன்னகைத்தவள் அவனது அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டாள். அவள் தானாக தந்த முதல் முத்தத்தில் கிறங்கியவன் கண்மூடி ரசித்தான்.

"நான் சொல்ற குட் மார்னிங் விட இது கம்மி தான் பட் நாட் பேட்" கேலி செய்தவனை பார்த்து முறைத்தாள் சுந்தரி.

"ஹலோ மேடம் நியாயமா நான் தான் முறைக்கணும். நேத்து கடிச்சு வச்சிட்டீங்க. இன்னைக்கு நெத்தில கிஸ் பண்ணி இருக்கீங்க. ரூல்ஸ மீறீட்டிங்க இது சரியில்ல ஆமா சொல்லிட்டேன்"

"அது என்ன மேடம்" அவள் இத்தனை நாள் சந்தேகத்தை கேட்டாள் "அதுவா உன் மேல சின்னதாக கோவம் வந்தாகூட மேடம்னு சொல்லுவேன் உன்னை திட்டிற கூடாதில்ல அதுதான்" அவளை கை அணைவில் வைத்து படி கூறினான்.

கோபக்காரனான அவன், அவளிடம் கோபத்தை வெளிப்படுத்தவே மேடம் என்று மரியாதை பன்மையுடன் அழைக்கிறான் என்று புரிந்து கொண்டவள்,

பின்னாளில் புரிதல் இல்லாமல் தான் எடுக்க போகும் ஒரு முடிவால் அவனது முழு கோபத்திற்கும் ஆளாக போகிறாள் என்று அறிந்திருந்தால்.


கோபத்தில் கூட வார்த்தையை சிதற விடக்கூடாது என்று தன்னை கவனமாக கையாளும் அவனது இந்த குணம், அவளது முடிவால்,

அவனது கோபத்தை மட்டுமே பின்னாளில் அனுபவிக்கப் போகிறாள் என்று தெரிந்திருந்தால் அவளது நிலை என்னவாகுமோ...
 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9:-

அவளது நெற்றியில் முட்டியவனை பார்த்த "நேரமாச்சு சந்துரு" என்க.

"வெயிட் பண்ணு சுந்தரி. நானும் குளிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்" என்றவன். அவளை விட்டு குளியல் அறைக்கு சென்றான்.

அவன் வருவதற்குள் அவள் திருமண புடவையில் தயாராகி இருந்தாள்.

குளியல் அறையில் இருந்து வந்தவன் அவளை பார்த்து அசந்து நின்று விட்டான்.

திருமணத்தன்று விட இன்று இன்னமும் பேரழகியாக அவனது கண்களுக்குள் தெரிந்தாள் சுந்தரி.

"குளிச்சிட்டீங்களா சந்துரு. உங்களுக்கும் டிரஸ் எடுத்து வச்சிட்டேன். கல்யாண வேஷ்டி சட்டை தான் போடணுமாம் அத்தை காலையில சொன்னாங்க" என்றபடி

அலமாரியிலிருந்து உடைகளை எடுத்து வைத்தவள் "நீங்க துணி மாத்துங்க நான் பால்கனியில இருக்கேன்".

தன்னை கடந்து சென்றவளது கைப்பற்றி சுண்டி இழுத்தான்.
அவனது இந்த திடீர் செயலை எதிர்பாராதவள். அவனது வெற்று தேகத்தில் மோதி நின்றாள்.

அவனை அண்ணாந்து பார்த்தவளின் இதழில் நிலைத்தது அவனது பார்வை. "ஐ காண்ட் ரெசிஸ்ட் எனி மோர்" அவளது காதில் குனிந்து முனுமுனுத்தவன் அவளது இதழ்களில் மூழ்கி முக்குளித்தான்.

இதழ் தந்த தித்திப்பில் திளைத்தவன் கழுத்தடியில் இளைப்பாரினான். "செம வாசம் பேபி நீ" ஆழ்ந்து சுவாசித்து அவளை உயிரில் நிறைத்தான்.

எவ்வளவு நேரம் சென்றதோ "அண்ணா" என்ற ஸ்ரீமதியின் குரலில் கலைந்தனர்.

"ஒரு பைவ் மினிட்ஸ் நாங்க வந்துறோம் ஸ்ரீ" மூடி இருந்த கதவை பார்த்து குரல் கொடுத்தவன். தனது முத்தத்தில் தாளாமல் துவண்டவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான்.

"இப்படியே இருக்க ஆசைதான் பேபி, ஆனா கீழ விசேஷத்துக்கு எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க போகணும்" சின்ன சிரிப்போடு சொன்னான்.

அப்போதுதான் உணர்ந்தாள் தனது கரங்கள் அவனது இடையை சுற்றி வளைத்திருப்பதை.

பட்டென விட்டவளை கைப்பற்றி அழைத்துச் சென்றவன், கட்டிலில் அமர வைத்து விட்டு, உடைமாற்றினான்.
அவனது செயலில் தரையில் பார்வை பதித்தவள் நிமிரவே இல்லை.

'நல்லவேளை ஓடல' நினைத்தவன் உடை மாற்றி, நேற்று வாங்கிய நகைகளை எடுத்து அவளிடம் தந்தான்.
"தாலிக்கொடி அம்மா கிட்ட இருக்கு. இதெல்லாம் நீ தான் எனக்கு போட்டு விடனும்" என்றபடி கையை நீட்டவும்.

பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் அணிவித்தவள். கழுத்துச் சங்கிலி அணிவிக்கவில் சற்று முன் நிகழ்ந்தது நினைவில் வந்தது. காது மடல் சிவக்க நின்று இருந்தவளே பார்த்து சிரித்தபடியே அவளது தலையை வருடிவிட்டான். அவள் அணிவித்த சங்கிலி கழுத்தை தாண்டி மார்பு வரை வந்தது.

"அழகா இருக்கீங்க சந்துரு" மனைவியின் பாராட்டில் உச்சிக்குளிராத கணவன் தான் இருக்க முடியுமோ.

உதயச்சந்திரனும் அவ்வாறே வானத்தில் மிதந்தான் தன்னவளின் ரசனையில். இருவரும் ஒன்றாக கீழே சென்றார்கள்.

கௌரி மகனையும் மருமகளையும் அழைத்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்க வைத்தார். பின்பு சுந்தரியை அழைத்த தனது அறைக்கு சென்று அவளுக்கு சில நகைகளை அணிவித்தார். வேண்டாம் என்று மறுத்தவளை முறைத்துப் பார்த்தார். அம்மாவும் மகனும் முறைச்சே நம்மகிட்ட காரியம் சாதிச்சுக்கிறாங்கடா செல்லமாக சடைத்துக் கொண்டாள்.

அதே நேரம் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த சாவித்திரியையும் மேகலாவையும் வரவேற்ற உதய், சாவித்திரியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஏதோ கேட்க அவரது முகம் வெளிறியது.

"மோகன் கிட்ட நீங்களே பேசுறீங்க. நான் பேசினா அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்" அடிக்க குரலில் சீறினான்.

இவர்களையே புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்த மேகலா சலசலப்பு ஏற்படவே மறுபுறம் திரும்பினார்.

அங்கு மனையில் அமர்ந்து வந்து அமர்ந்தாள் சுந்தரி. அவளது அருகில் சென்று அமர்ந்து கொண்டான் உதயசந்திரன்.

சர்வ அலங்காரத்தில் தோரணையாக வந்த அமர்ந்தவளை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் மேகலா.

மேகலாவின் அருகில் சாவித்திரி வந்து அமர்ந்தவரின் கண்களில் உதயச்சந்திரனின் மீது குரோதம் நிறைந்திருந்தது.

மேகலாவிற்கோ சுந்தரியை காணும் போதெல்லாம் அது தன் மகளின் இடம் என்று மனம் காந்தியது. அவரது கண்கள் சுந்தரியை கண்டு வெறுப்பை உமிழ்ந்தன.

இவள் மட்டும் உதயின் கண்களில் படாமல் போயிருந்தால் தனது மகளே இந்த வீட்டிற்கு மருமகளாக ஆகியிருப்பாள் என்ற எண்ணமே மேலோங்கியது.

ஆனால் அவர் அறியாத ஒன்று, இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் எழுதியதில் உதயசந்திரன் மற்றும் சௌந்தர்யாவின் பெயர்கள் அருகருகே எழுதப்படவில்லை. தனது மகளின் இடத்தில் சுந்தரி இல்லை என்று யார் புரிய வைக்க அவருக்கு.

கௌரி கைகளை பிசைந்தபடி நின்றிருந்தார். யாரை வைத்து நலுங்கு செய்வது என்று தான் அவரது யோசனை.

ஓரகத்தி மற்றும் நாத்தனார் இருவரையும் வைத்து ஆரம்பிக்க மனம் ஒப்பவில்லை அவருக்கு. அவர்களது மனநிலை புரியும் ஆதலால் தாலி பெருக்கும் நிகழ்வுக்கு அவர்களை அழைத்திருந்தாலும் அவர்களைக் கொண்டு ஆரம்பிக்க விரும்பவில்லை.

அப்பொழுது மேகலா "என்ன அண்ணி இந்த சடங்கு எல்லாம் பெண் வீட்டாளுங்க தான் செய்ய வேண்டும் என்று தெரியாதா. ஓ பொண்ணுக்கு வீடுன்னு ஒன்னு இல்லையே அப்புறம் எங்க இதெல்லாம்" எள்ளி நகையாடினார்.

கைகளை உதறியபடி மனையிலிருந்து எழப்போனவனை கைப்பற்றி தடுத்த திரிபுரசுந்தரி. "இதுதான் என்னோட வீடு" அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

பின் கௌரியை பார்த்து "நீங்களே எனக்கு எல்லாமே பண்ணுங்க அத்தை" அழைத்தாள். வர மறுத்தவரை முறைப்பது இப்பொழுது இவளது முறையானது. உதயச்சந்திரனும் தனது அன்னையை அழைக்கவே செய்தான்.

அந்த நேரத்தில் "அண்ணி உங்க போன் அடிக்குது ரொம்ப நேரமா அடிக்குது"என்று ஸ்ரீ சுந்தரியின் அலைபேசியை தந்தாள்.

அதைப் பார்த்தவள் அழைப்பை ஏற்று "என்ன நவீன் எனிதிங் இம்போர்ட்டண்ட்" என்க, அந்த பக்கம் அவன் என்ன சொன்னானோ "அப்படியா" குதுகளித்தவள் "சரிடா நான் பாக்குறேன்" என்றபடி நிமிர்ந்தவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர் நவீனின் தாத்தாவும் பாட்டியும் தோட்டக்காரரின் உதவியுடன்.

அவர்களைக் கண்டு எழப் போனவளை கையமர்த்திய பாட்டி, "உட்காருடா சுந்தரி பொண்ணு" கனிவுடன் கூறினார்.

"கல்யாணத்துக்கு வரல இல்ல பாட்டி" செல்லமாக கோபித்துக் கொண்டவளை பார்த்து "உங்க தாத்தனுக்கு தான் வயசாயிடுச்சு இல்ல கண்ணு ஏதாவது உடம்புக்கு வந்துட்டே இருக்கு" கணவனை பரிகசித்தார் பாட்டி.

"ஆமாம்மா உன் பாட்டிக்கு என்றும் பதினாறு பார்" தாத்தாவும் சளைக்காமல் கிண்டல் அடித்தார். அவர்களது பேச்சில் அங்கு ஒரு சிரிப்பலை எழுந்தது.

பாட்டி கௌரியை பார்த்து "எங்க பேத்திக்கு நாங்க செய்யலாமா?" வினவவே கௌரி அவசரமாக "தாராளமா அம்மா" என்றார்.

அவர்களை யார் என்று தெரியாவிட்டாலும் தனது மருமகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் சொந்தம் என்பதை போதுமானதாக இருந்தது அவருக்கு. திருப்தியுடன் தலை அசைத்தார்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரிக்கும் மேகலாவுக்கும் மிளகாய் அள்ளி பூசியது போல் உடல் எல்லாம் காந்தியது.

உதய் இன்னும் அவர்களை முறைத்துக் கொண்டு இருந்த பார்வையை மட்டும் எடுக்கவில்லை.

தாத்தா தாங்கள் கொண்டு வந்திருந்த பைகளில் இருந்த பொருள்களை தாம்பலத்தில் எடுத்து வைத்தார்.

பூ பழம் இனிப்பு காரம் வெற்றிலை பாக்கு மாலை என்று தட்டுகளில் நிறைத்தார்.

மேலும் தாலியுடன் கோர்க்க உருக்கள் வாங்கி வந்திருந்தனர் தாத்தாவும் பாட்டியும்.

தள்ளாத வயதிலும் தனக்காக வந்தவர்களை பார்த்து கண்கள் கலங்க "நவீன் சொன்னானா" பாட்டி கேட்டாள் சுந்தரி.

"ம்க்கும் அவன் எங்க சொன்னான். உன் கூட்டாளிக்கு அம்புட்டு எல்லாம் அறிவு கிடையாது" தாத்தா வழக்கம்போல் பேரனை வாரினார்.

அதில் புசுபுசுவென கோபமூச்சுகள் எடுக்க "ஆமா அறிவில்லாம தான் என் பேரன் வெள்ளைக்காரன் ஊர்ல பிழைச்சுகிட்டு இருக்கானாக்கும்" நொடித்துக் கொண்டார் பாட்டி.

"ஆமா அப்படியே வேலை செஞ்சுட்டாலும். நீ வேணா பாரேன் ஒரு வெள்ளைக்காரி தான் உனக்கு மருமகளா வரப்போறா" மீண்டும் தாத்தா பேச,

அவரை முறைத்துப் பார்த்த பாட்டி ஸ்ரீமதியின் புறம் திரும்பி, தட்டில் சிறிது பச்சரிசி தந்து "உன் தாத்தனையே பார்த்தது போதும் கண்ணு. இதுல கொஞ்சம் மஞ்சள் கலந்து அச்சதையாக்கி எடுத்து வாம்மா" அனுப்பினார்.

பேச்சு பேச்சாக இருந்தாலும் வேலை அது நடந்து கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டியவாறு

"சுந்தரி பொண்ணு நீ நாளைக்கு வேலைக்கு போயிடுவ அதனால எப்படியும் நாங்க இன்னைக்கு இங்க வராத இருந்தது. நவீன் நேத்து எட்டரைக்கு போன் போட்டு சொன்னான். சரின்னு நானும் உன் தாத்தாவும் கடைக்கு போய் எல்லாமே வாங்கிட்டு வந்துட்டோம் பாப்பா".

எப்பொழுதும் போல் அவர்களது தன்னலமற்ற அன்பில் நெகிழ்ந்து போனாள் திரிபுரசுந்தரி.

மஞ்சள் கிழங்கு தாலியை சுந்தரிக்கு அனிவித்து. மஞ்சள் கயிற்று தாலியை எடுத்துக்கொண்டார்.

பின் அதனை அவிழ்த்து, புதிய மஞ்சள் கயிற்றில், பொன் தாலி கோர்த்து குண்டுகளுடன் லட்சுமி காசும் சேர்த்து குழாய் மற்றும் மாங்காயுடன் பவள மணி கோர்த்தவர் அதனை தாலிக்கொடியுடன் முடிச்சிட்டு உதயச்சந்திரன் கரங்களில் தந்தார்.

உதயச்சந்திரன் சுந்தரிக்கு தாலியை அணிவிக்க அர்ச்சனை தூவி வாழ்த்தினார்கள் அனைவரும்.
பின்பு மாலை மாற்றிக் கொண்டனர் தம்பதியர்கள். அன்று போல் இன்றும் உச்சி வகிட்டில் பொட்டிட்டான் சுந்தரியின் சந்துரு.

தாத்தா பாட்டி இருவரிடம் ஆசீர்வாதம் வாங்கினர் தம்பதிகள். வந்த விருந்தினர்கள் அனைவரும் சாப்பிட்டு சென்றனர்.

தாத்தா பாட்டி இருவருக்கும் அறைக்கு உணவு கொண்டு சென்று கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கவே ஓய்வெடுக்க சொன்னாள் சுந்தரி.
உதயச்சந்திரனும் நவீனின் தாத்தா பாட்டியிடம் நன்றாக பேசினான்.

சாவித்திரி மற்றும் மேகலா இருவரும் சாப்பிடாமலே சென்று விட்டனர்.
அதனை யாரும் கணக்கில் கொள்ளவில்லை. அவ்வளவு கோபம் அவர்கள் மீது இருந்தது உதயசந்திரனுக்கு.

வீட்டினர் அமர்ந்து உணவு உண்டார்கள். அப்பொழுது ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தனர் நடுத்தர வயது தம்பதிகள். அவர்களைப் பார்த்து அதிர்ந்து எழுந்து விட்டாள் சுந்தரி.

இதுதான் நடக்கும் என்று தெரிந்தவன் போல் ஓர விழியில் சுந்தரியை பார்த்துக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.

கைகள் நடுங்கியபடி சாப்பாட்டு மேஜையை அழுந்த பற்றி இருந்தாள். அவளை பார்த்து உள்ளுக்குள் உடைந்து போனான் உதய்.

இருப்பினும் "வாங்க அங்கிள்" வரவேற்றான் உதய். "சாரி உதய் மேரேஜ்க்கு வர முடியல கொஞ்சம் ஹெல்த் இஷ்யூ" சொன்னவர்.

சுந்தரியை பார்த்து "இவங்க தான் உன் வைஃபா" கேட்க "ஆமாம் அங்கிள் பேரு திருபுரசுந்தரி", உதய் சொல்லவும் சுந்தரி வணக்கம் என்றாள் "நல்லா இருக்கியா மா", வாஞ்சையுடன் கேட்டார் வந்தவர்.
"நல்லா இருக்கேன்" ஒருவித அசூசையுடன் கூறினாள்.

அவளது பதிலிலும் முகமாற்றத்திலும் கவலையானார் வந்தவர்.

"எனக்குத் தலை வலிக்குது" முனுமுனுத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றாள் பெண்ணவள்.

மாடிக்கு தங்களது அறைக்கு செல்ல நினைத்தவள், கால் மாற்றி மாடி தோட்டத்திற்கு சென்றாள். அங்க போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவள் இலக்கின்றி வெறித்தாள்.

அவளது சிந்தனை முழுவதும் வந்தவர்களே ஆக்கிரமித்து இருந்தனர்.

'எப்படி இவங்க வந்தாங்க. இவங்க யாருன்னு சந்துருவுக்கு தெரியுமா. அதைவிட முதல்ல நான் யாருன்னு இவங்களுக்கு தெரியுமா. என்னோட முகம் அவங்களுக்கு காட்டி கொடுத்திருக்குமோ. அப்படி காட்டிக் கொடுத்திருந்தா என்ன அவங்க காட்டி கொடுத்து இருக்கணுமே சந்துரு கிட்ட அத்தை கிட்ட எல்லாம்" யோசித்து மெய்யாகவே தலைவலி வந்தது அவளுக்கு.

இவ்வளவு நேரம் இருந்த இனிமை, இதம் தொலைந்தது போல் உணர்ந்தாள் சுந்தரி. பின்பு மெல்ல எழுந்து அந்த இடம் முழுவதிலும் நடைபயின்றாள்.

அப்பொழுது கீழே எட்டிப் பார்க்கவே பக்கவாட்டில் இருந்த தோட்டத்தில் உதயச்சந்திரனிடம் வந்தவர்கள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்தவளுக்கு கால்கள் தரையில் பதியவில்லை.

அவர்கள் தன்னை பற்றி உதயச்சந்திரனிடம் கூறிவிட்டார்கள் என்றே நம்பினாள். உதய சந்திரனுக்கு தெரிந்தால் தன்னை வீட்டை விட்டு அனுப்ப போவது உறுதி என்று எண்ணியவள். தானே அவனை பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் முன்னரே இப்படி ஒரு சூழல் தனக்கு வரும் என்று கனவிலும் நினையாதவள் கண்களில் இருந்து கண்ணீர் கண்ணம் தாண்டி இதழை தொட்டது.


இதழின் கரித்த சுவையில், காலையில் தித்தித்த இதழ் முத்தம் நினைவில் வந்து போனது. தனக்கு குடும்ப வாழ்க்கையே ராசி இல்லையோ எண்ணியவள், அந்த பெஞ்சிலே மீண்டும் சென்று படுத்துக்கொண்டவள் மனமோ அம்மா என்று அரற்றியது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top