ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20

இரு வாரம் கடந்து இருந்த நிலையில், மதிக்கு அந்த மருத்துவமனையில் இருந்து வர சொல்லி இருக்க, இவளும் போய் வர ஆரம்பித்து இருந்தாள்..

காலையில், வெற்றி கொண்டு போய் விட்டு வர, வேலை முடிந்து ஒன்று வெற்றியால் முடிந்தால் அவன் அழைத்து வருவான் அல்லது மதியே கிளம்பி வந்து விடுவாள்..

மதிக்கு தனியாக பைக் ஒன்று வாங்கி தருகிறேன் என்று வெற்றி சொன்ன போதும் அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்..

ஏனோ அவளுக்கு வெற்றியின் கூட செல்வதற்கு விருப்பமோ என்னவோ, தினமும் அவனுடன் பயணம் செய்வதில் அவளுக்கு அளாதி விருப்பம்..

அவளுக்கே அப்படி என்றால் அவனுக்கு சொல்லவா வேண்டும்..

இப்படியே அவர்களின் நாட்களும் கழிந்தன...

அன்று அப்டித்தான்.. வெற்றி காலையில் மதியை மருத்துவமனையில் விட்டவன், மாலையில் அவளுக்கு அவசரமாக ஒரு பிரசவ கேஸ் பார்க்க வேண்டி இருப்பதால், வெற்றியிடம் வருவதற்கு தாமதம் ஆகும் நீங்கள் வரவேண்டாம் என்று கூறி விட்டாள்..

அவனுக்கும் அன்று முக்கியான வேலை ஒன்று இருந்ததால், அவனும் அதை பார்ப்பதற்கு சென்று விட்டான்..

மதியும் அந்த டெலிவரி வழக்கை முடித்து விட்டு, குழந்தை மற்றும் தாயிக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு, செவிலியரிடம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு சென்று விட்டாள் ..

இரவு 9 மணி கடந்து விட்டதால், தனியாக செல்ல வேண்டாம் என்று வெற்றிக்கு அழைத்துப் பார்த்தாள்..

அவனுக்கோ பிஸி பிஸி என்றே வெகு நேரமாக வந்ததால், ஆட்டோ பிடித்து செல்லலாம்.. பிறகு அழைத்தால் விஷயத்தைக் கூறலாம் என்று நினைத்து இருந்தாள்..

ஆனால் அந்தோ பாவம்.. அவளது அலைபேசியில் சார்ஜ் மிக மிக குறைவாக இருந்ததை அவள் கவனிக்கவில்லை..

ஆனால் அங்கு வெற்றியோ, மதி இன்னும் வராதாதை தன் தாயின் மூலம் தெரிந்து கொண்டவன், மதிக்கு தொடர்பு விடுக்க, அவளது அலை பேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது..

மீண்டும் மீண்டும் தொடர்பு விடுக்க, ஒரு கட்டத்தில் அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்று சொல்லியது..

இவனும் சரி, நேரில் சென்றே பார்க்கலாம் என்று மதியை அழைத்து வர கிளம்பி விட்டான்..

செல்லும் வழியில் எதிரில் வரும் ஆட்டோவில் மதி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டே வந்தான்..

ஆனால் அவளுக்கு அங்கு ஆட்டோ கிடைக்காமல் அல்லவா நின்று இருந்தாள்..

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஆட்டோவை, அங்கு வேலை பார்த்த செக்யூரிட்டி நிப்பாட்டி, மதியை ஏற்றி விட்டார்...

அவளும் அவருக்கு நன்றி சொல்ல, அந்த செக்யூரிட்டி ஆட்டோக்காரரிடம், " தம்பி, மேடம் டாக்டர்.. பத்திரமா இறக்கி விட்டுரனும் சொல்ற இடத்துல.. " என்று சொல்லி அனுப்பினார்..

சிறிது தூரம் சென்றதும், அலைபேசியை எடுத்து பார்க்க, அதுவோ அணைந்து இருந்தது..

"சே.. சுவிட்ச் ஆப் ஆகிடுச்சே .... இப்போ அவரு கூப்டாளும் பேச முடியாது.. நம்மளும் பேச முடியாதே.. " என்று யோசித்தவள், பிறகு " சரி வீட்டுக்கு போய் பார்த்துகிருவோம்.. " என்று நினைத்தாள் ..

ஆனால் வெற்றி வருவது ஒரு வழி.. இவர்கள் செல்வது ஒரு வழி என்பதால், வெற்றி இவர்களை காண்பதற்காண சாத்தியம் இல்லை..

வெற்றி, மருத்துவமனைக்கு வந்தவன், அங்கு இருந்த செக்யூரிட்டி இடம் கேட்க, அவரோ " அவங்க கிளம்பிட்டாங்களே சார் .. நான் தான் ஆட்டோ பிடிச்சு ஏத்தி விட்டேன்.. " என்று சொல்ல,

இவனோ, " ஓ.. அப்டியா.. கிளம்பி எவ்ளோ நேரம் ஆகும் ண்ணா.. " என்று கேட்டான்..

இவன் அண்ணா என்று அழைத்ததில் அவர் தம்பி என்று இயல்பாக பேச ஆரம்பித்தார்..

" அவங்க கிளம்பி கால் மணி நேரம் ஆகும் தம்பி.. " என்று கூறினார்..

" அப்டியா.. ஆனால் நான் வரும் போது எதிரில் பாக்கவே இல்லையே.. " என்று சொல்ல,

அவரோ, " தம்பி, அந்த ஆட்டோக்காரன் இந்த பக்கமா ஒரு ரோடு போகுது பாருங்க.. இங்குட்டு தான் போனான்.. இப்படியும் போகலாம்.. நீங்க இந்த பாக்கமா போய் பாருங்க .. " என்று சொல்ல,

" சரிங்க ண்ணா.. நான் பார்த்துகிறேன்.. " என்று அவர் கூறிய வழியில் சென்றான்..

ஆட்டோ முக்கால் வாசி தூரம் வந்ததும் ஏதோ கோளாறு காரணமாக, நின்று விட அதற்கு மேல் ஆட்டோ செல்லவில்லை..

அவனும் எவ்வளோவோ முயற்சி செய்து பார்க்க, ஹுஹும்.. நகரவே இல்லை..

" மேடம்.. ஏதோ ப்ரோப்லேம் ஆகிருச்சு மேடம்.. இதுக்கு மேல ஆட்டோ போக மாட்டேங்குது.. இன்னும் கொஞ்ச தூரம் தான் நீங்க யாரையாவது வர சொல்லி போங்க மேடம்.. " என்று சொல்ல,

அவளோ, " என்னண்ணா
இப்படி பண்றீங்க.. " என்று அவரிடம் சொல்லி விட்டு, ஆட்டோ பயணதிற்காண பணத்தை கொடுத்து விட்டு, இறங்கிப் பார்த்தாள்..

இன்னும் சிறிது தூரம் சென்றாள் வீடு வந்து விடும். அழைப்பும் விடுக்க முடியாது.. சரி நடந்து சென்று விடலாம் என்று நினைத்து நடக்கத் தொடங்கி விட்டாள்..

தெருவில் ஆள் அரவம் யாரும் இல்லை.. நாய்கள் தான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன..

அவளுக்கு நாய்கள் என்றாளே பயம்.. பயந்து நின்று விட்டாள், நம்மை துரத்த ஆரம்பித்து விடும் என்று கருதி, மெல்ல நடந்து கொண்டிருந்தாள் ..

அவள் நடந்து செல்வதை தூரத்தில் ஒரு உருவம் பார்த்துக் கொண்டே இருந்தது..

ஒரு கட்டத்தில் அவளை பின் தொடரவும் ஆரம்பித்தது..

பின்னால் வந்த உருவம், வேகத்தை கூட்டி அவளை நெருங்க ஆரம்பிக்க, தனக்கு பின்னால் யாரோ வருகிறார்கள் என்று காலடிச் சத்தத்தின் மூலமாக உணர்ந்தவள், யாரது என்று திரும்பிப் பார்க்க, பின்னால் வந்தது, வேறு யாருமல்ல பாண்டியே தான்..

அவள் தனியாக செல்வதை பார்த்த பாண்டிக்கு, வெற்றியின் மேல் உள்ள வஞ்சத்தை இவளை வைத்து தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், அவளை பின் தொடர்ந்து வந்து விட்டான்..

அவனை பார்த்ததும் அவளுக்கு யார் என்று தெரியவில்லை.. இந்த ஊர் காரராக இருந்தாலும் தெரியாத ஆளிடம் பேச அவளுக்கு விருப்பம் இல்லை..

அதுவும் அவனிடம் இருந்து மதுவின் வாடை வேறு வந்ததால், நிலைமை சரி இல்லை என்று உணர்ந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..

ஆனால் அவனோ விடுவானா என்ன இந்த சந்தர்ப்பத்தை..

கண்கொத்தி பாம்பாக அவளை பார்த்தான் அல்லவா...

அவளின் நடையில் வேகத்தை பார்த்தவன் அவனும் வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்..

அவளை நெருங்கி, அவளது வாயை ஒரு கையால் பொத்தியவன், மறு
கையால் அவளது இடுப்பை பிடித்து தூக்கி, அருகில் இருந்த சந்து வழியாக அடுத்த தெருவிற்கு சென்று அவனது தோப்பு வீட்டு பக்கம் அவளை கொண்டு சென்றான்.

அவள் திமிரிக் கொண்டிருந்தாள்.. இருந்தாலும் அவளை அடக்கிக் கொண்டே தோப்பு வீட்டை நெருங்கி அவளை வீட்டுக்குள் கொண்டு வந்து கதவிற்கு தாள்ப்பால் போட முயலும் போது, மதி தப்பிக்க முயற்ச்சி செய்தாள்..

ஆனால் அவனிடம் இருந்து விலக அவளுக்கு சற்று சிரமம்ஆக தான் இருந்தது..

அதே சமயத்தில், வெற்றியும் அதே வழியாக வந்து ஆட்டோ நிற்பதை கண்டதும், அவனிடம் என்னவென்று விசாரிக்க, அவனோ " கொஞ்ச நேரம் முன்ன தான் சார் மேடம் இறங்கி போனாங்க.. " என்று கூறினான்..

" அப்டியா சரி பா.. " என்று தன் அன்னைக்கு அழைத்து விசாரிக்க, அவரோ "இன்னும் வரலையே சாமி.." என்று சொன்னார்..

" இன்னேரம் போய் இருக்கனுமே... " என்று யோசித்தவன், அவளை தேடி பார்க்க, அப்பொழுது அவன் காலுக்கு ஏதோ ஒன்று தட்டுப் பட்டது..

அதை பார்த்தவனுக்கு கைப் பை போல தெரிந்தது...

எடுத்துப் பார்த்தவனுக்கு அது மதியுடையது என்று ஊர்ஜித படுத்திக் கொண்டான்..

ஏதோ விபரீதமாக நடந்து உள்ளது என்று அவன் மூளை சொல்ல, இவனும் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தான்..

அப்பொழுதே, அவனுடைய நண்பர்களுக்கு அழைத்து விசயத்தை கூற, அவர்களின் வீடுகளும் அருகருகில் இருக்க, அனைவரும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டனர்..

அவர்களிடம் விஷயத்தை சொல்ல, அவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட சென்றனர்..

வெற்றியும் ஒரு பக்கம் தேடச் சென்றான்..

மனதில் ஏதேதோ எண்ண அலைகள்..

"மதிக்கு ஒன்னும் ஆகிற கூடாது " என்று நினைத்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான்..

சட்டென்று அவனுக்கு மூலையில் மின்னல் வெட்டியது போல ஒரு யோசனை..

" ஏன் மதியை அந்த பாண்டி பையன் தூக்கிட்டு போயிருக்க கூடாது.. இந்த நேரத்துல அவன் தான் தண்ணிய அடிச்சிட்டு கெடப்பான்.. அவனுக்கு ரொம்ப நாளா என் மேல பகை.. அவன் பண்ணிருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு.. அவன் மட்டும் பண்ணி இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு..." என்று சரியாக சிந்தித்தவன், அவனது தோப்பு வீட்டை நோக்கி ஓடினான்..

அவனது வீட்டிற்கு அருகில் எந்த வீடும் இல்லாமல் தனிமையாக இருக்கும்.. அதனால் அவனுக்கு மதியை அங்கு வைத்து இருப்பதில் மிகவும் சௌகரியமாக போனது..

அவன் வீட்டை நெருங்கியதும், கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது..

வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தான்.. பலத்த அமைதி.. இவன் நடக்கும் போது கேட்கும் சருகுகளின் சத்தம் தான் கேட்டது..

மீண்டும் முன் பக்கமாக வந்து, கதவிற்கு மேல் தன் காதை வைத்து கூர்மையாக கேக்க, உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம்..

கேட்டது தான் தாமதம்.. வேஷ்டியை மடித்துக் கொண்டு, கதவை ஓங்கி ஒரு மிதி..

கதவு படாரெண்டு திறந்து கொண்டது..

உள்ளே, பாண்டி மதியின் வாயை இறுக்கமாக மூடி, சத்தம் எழுப்பாதவாறு அவளை பிடித்துக் கொண்டு இருந்தான்..

எப்படியும் வெற்றி அவனது மனைவியை தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை பாண்டி..

அவன் வருவதற்குள் அவனது மனைவியை தான் அடைய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டு இருந்தான்..

அவள் இவனிடம் திமிறிக் கொண்டு, அவனிடம் இருந்து விடு பட வேண்டும் என்று நினைத்து போராடிக் கொண்டிருந்தவள், ஜன்னல் வழியாக தூரத்தில் வெற்றி வருவதை பார்த்து விட்டாள் மதி..

தன்னை தேடி, விரைவில் தன் கணவன் வருவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை..

அவனைக் கண்டதும் அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையை வைத்து, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பாண்டிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது..

அவன் மட்டும் கண்டு கொண்டால் , அவ்வளவுதான் இனி இந்த ஊரிலே இருக்க விட மாட்டான், என்று எண்ணியவன், உடனே விளக்கை எல்லாம் அணைத்து விட்டு, ஜன்னல் கதவு எல்லாவற்றையும் சாத்தியவன், அவளின் கையை பின்னால் வைத்து இறுக்கமாக கட்டி விட்டு, வாயையும் இறுக்க பொத்திக் கொண்டான்..

வெற்றி வந்து ஒரு சத்தமும் கேக்கவில்லை என்றால் , சென்று விடுவான் என்று முட்டாள்தனமாக நினைத்து இருக்க, வெற்றியோ அதை பொய்யாக்கி இதோ தன்னுடைய மதியை மீட்கப் போகிறான்..

வெற்றியைக் கண்டதும் அவனுக்கு பயம் சூழ ஆரம்பித்து விட்டது..

பாண்டி, மதியை, இழுத்து பிடித்து வைத்து இருப்பதைக் கண்டதும், அவனை கொன்று போடும் ஆத்திரம் வர, அவன் அருகில் சென்றவன்,

" யாரு மேல கைய வைக்கிற.... பொறுக்கி நாயே.. " என்றவன் மதியை தன் பக்கம் இழுத்து, ஓங்கி பளாரென்று ஒரு அறை.. அடித்த அவனுக்கே கை வழித்து விட்டது..

கையை உதறிக் கொண்டவன் மீண்டும் அவன் அருகில் வந்து, " என் பொண்டாட்டி மேல கைய வைக்க உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்.. ஹான்.. " என்று பேசிக் கொண்டே ஓங்கி ஒரு மிதி..

அவ்வளவு தான் அவன் சுருண்டே விட்டான்..

இருந்தாளும் அவனை அப்படியே விட மனம் இல்லை.. அடி வெளுத்து வாங்கி விட்டான்..

" இனிமே உன் பார்வை கூட அவ மேல படக்கூடாது.. " என்றவன் மதியைப் பார்க்க, அவளும் கலங்கிய கண்களோடு அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவனும் ஒரு கை நீட்டி அருகில் வா என்று தலை அசைத்து அழைக்க, அவளும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்..

அவனும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

எங்கே அவளை மீண்டும் தூக்கிச் சென்று விடுவாரோ என்ற பயத்தில் காற்று கூட புகாதவாரு அவளை இறுக்கி அணைத்து, முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்..

அவள் சென்று அணைத்தாள் தான்... ஆனால் இந்த அசுர வேகத்தை அவள் அவனிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..

திக்கு முக்காடி போனாள் அவன் தந்த முத்த மழையில்..

அவள் விழி விரித்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனும் அவளைப் பார்த்து, " ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா.. உன்ன காணோம்னு தெரிஞ்சதும்.. உசுரே போய்டுச்சு டி.. " என்றவன் அவளது பிறை நெற்றியில் அவள் சம்மதத்துடன் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்தான்..

அவளுக்கு தான் அவனது செய்கைகள் அனைத்தும் வியப்பாக இருந்தன ..

இந்த கொஞ்ச நாளில் என் மீது இவ்வளவு காதலா என்று..

" என்னடி.. பார்த்துட்டே இருக்க.. என்ன யோசனை.. " என்றவன் அவளைப் பார்க்க,

அவளோ, ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டியவள், அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..

அவனும் அவளை தோளோடு சேர்த்து அணைத்து வெளியில் வந்தவன், அவனின் நண்பர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி, வீட்டுக்கு புறப்பட்டு போகுமாறு கூறினான்,

இவனும் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அழைத்து வந்து இருவருமாக வீட்டிற்கு கிளம்பினர்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21

வீட்டிற்கு இருவரும் வந்து சேர, அவளை இறங்கச் சொல்லி விட்டு, வண்டியை நிப்பாட்டியவன்,

" வீட்டுல அம்மாகிட்ட இதை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் மதி.. அம்மா பயந்துருவாங்க.. " என்று சொல்ல,

அவளும் சரி என்பதாய் தலை அசைத்தாள்..

இருவரும் உள்ளே செல்ல, தூங்காமல் இவர்களுக்காக காத்து இருந்த கற்பகமோ, " என்ன கண்ணு.. இம்புட்டு நேரம் ஆகிருச்சு... பாக்க ரொம்ப கலைச்சி போய் இருக்கியே.. எதுவும் சாப்பிட்டியா மா.. " என்று அக்கறையோடு விசாரிக்க,

அவளோ, " நான் அங்க ஹாஸ்பிடல் கேன்டீன் ல சாப்பிட்டேன் த்தை.. " என்று சொன்னால்..

" சரி மதி மா.. போய் தூங்கு.. நான் கதவை சாத்திக்கிறேன்.. " என்று கூறினார் கற்பகம்..

இவர்களின் சம்பாசனைகளை கேட்டுக் கொண்டே, வெற்றி அறைக்கு சென்று விட்டான்..

அறைக்கு வந்த மதி, குளித்து விட்டு, வேறு உடைக்கு மாற்றிக் கொண்டு வந்தாள்..

வெற்றி கீழே படுத்து இருப்பதை கண்டதும், ஒரு பெருமூச்சுடன் மேலே படுத்தாள் ..

விளக்கை அணைத்து விட்டு, அவள் வந்து படுக்க, அவளுக்கு உறக்கம் வரவே இல்லை..

கண்ணை மூடினாலே , அவன் தன்னை தூக்கிச் சென்ற நியாபகம் தான் கண் முன்னே வந்து அவளை பாடாய் படுத்தியது..

பொறுத்து பொறுத்து பார்த்தவள் இது சரி வராது என்று நினைத்து கீழே இறங்கி, வெற்றியின் அருகில் படுத்தவள், அவன் மார்போடு தலை வைத்து, அவன் மேல் கையை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள்..

இத்தனை நாள் இருந்த தயக்கம் இன்று போக காரணம், அவனின் கண்ணில் அவள் மேல் உள்ள காதலை கண்டதால் தான்..

தன் மேல் ஏதோ தட்டு படவும், முழித்த வெற்றி, தன் அருகில் தன் மனைவி தன் மார்பில் சாய்ந்து உறங்குவதை கண்டவனுக்கு உதட்டில் ஒரு புன்னகை..

அவன் அசையவும், அவளும் அவனை பார்க்க, " அது தனியா படுத்தா தூக்கம் வரல.. கண்ணை மூடுனாலே ஏதேதோ நியாபகம் வருது.. அதான் உங்க பக்கத்துல.. " என்று மெல்லமாக ராகம் போட,

அவளை குறும்புடன் பார்த்து இருந்தவன், என்ன நினைத்தானோ, அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..

அவள் தான் விக்கித்துப் போனாள்.. அவனையே விழி விரித்து பார்த்திட, அவளது அதிர்ச்சியை கண்டு இப்பொழுது வாய் விட்டு சத்தமாக சிரித்தான்..

அவனது சிரிப்பை பார்த்தவுடன் அவளுக்கு புரிந்து விட்டது. அவன் தன்னை வைத்து விளையாடுகிறான் என்று..

" என்ன.. விளையாடுறீங்களா.. " என்று அவனது தோளில் உரிமையாக அடித்தவள், பின்பு அவனது மார்பில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்..

அவனும் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்..

அவனது மனமோ ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் திளைத்தது..

பின் மெல்ல தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள், " இனிமே நீங்க கீழ தூங்க வேண்டாம்.. சேந்தே ரெண்டு பேரும் மேலேயே தூங்கிக்கலாம்.. " என்று சொல்ல..

அவனோ, " அப்போ டெய்லியும் இப்படி உன்னை கட்டிப் பிடிச்சிட்டு தூங்குவனே.. ஓகே வா.. " என்று குறும்புடன் அவளைப் பார்த்து கேட்க..

" இப்போ என்ன, உங்கள விட்டு விலகியா இருக்கேன்.. இல்லல.. அப்புறம் என்ன.. " என்று அவனை பார்த்து பதில் கூறினாள்..

" ம்ம்ம். சரி தான்.. ஆனால் அதுக்கும் மேல நடந்தா.. " என்று அவளின் விழிகளை பார்த்து கேட்க,

அவளும் அவனையே ஆழ்ந்து பார்த்தவள், " சம்மதம் தான்.. " என்று அவன் விழியோடு தன் விழிகளை கலக்க விட்டபடி கூறினாள்..

அவனும் அவளின் பிறை நெற்றியில், ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்தவன், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, " தூங்கு.. காலைல பேசிக்கலாம்.. " என்று சொல்ல,

அவளும் அவனை பார்த்து புன்னகை ஒன்றை சிந்தி, அவனோடு ஒன்றி எந்த வித எண்ணமும் இல்லாமல் படுத்துக் கொண்டாள்..

ஆனால் வெற்றிக்கு தான் உள்ளுக்குள் ஒரே கொண்டாட்டமாக இருந்தது..

இவ்வளவு சீக்கிரத்தில் மதி மனதில் தான் இடம் பெறுவோம் என நினைக்க வில்லை..

அவளும் தன்னை நேசிக்க ஆரம்பித்து விட்டாள் என்று நினைக்கும் போதே அவனுக்கு மேனி எல்லாம் சிலிர்த்து விட்டது..

எத்தனை வருடக் காதல்.. இப்பொழுதே அவளை அள்ளி அணைத்து ஆசை தீர, ஏக்கம் தீர அவளை அரவணைத்து கொண்டாடி தீர்க்க வேண்டும் என்ற ஆசையை அடக்கி வைத்து அல்லவா இருக்கின்றான்..

அவனுக்கு முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.. அது எல்லாம் முடித்து விட்டு, மதியிடமும் சில உண்மைகளையும் கூற வேண்டி உள்ளது..

அவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுது, எந்த வித ஒளிவு மறைவுமின்றி அவர்களின் வாழ்க்கை தொடங்க வேண்டும் என்று நினைக்கின்றான்.. அதுவரைக்கும் இதோ இந்த அணைப்பு, அவளுடன் ஆன இந்த நெருக்கம் மட்டுமே போதும் என முடிவெடுத்துக் கொண்டான்..

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள்.. அது போல, அந்த பாண்டி என் மதியிடம் தவறு செய்ய போய், என் காதலை அவளிடம் வெளிப்படுத்த முடிந்தது...

இதை எல்லாம் சிந்தித்து விட்டு, அவளை பார்த்தவன், அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்பதை அறிந்தவன் அவளிடம், " தேனு... நீ நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க மறைமுகமா சம்மதம் சொல்லிட்ட.. ஆனால் எனக்குன்னு சில வேலைகள் இருக்கு. அதை முடிச்சிட்டு உன்கூட வாழ்க்கையயை ஆரம்பிக்கணும்னு இருக்கேன்.. அதுவரைக்கும் நீ வெயிட் பண்ணு தேனு.. சாரி டி என் பொண்டாட்டி.. " என்று அவளிடம் பேசியவன், சிறிது நேரத்தில் கண் அயர்ந்து விட்டான் மனம் முழுக்க நிம்மதியுடன்..

பாண்டி, வெற்றி அடித்த அடியில் அப்பொழுதே மயங்கி விட்டான்.. காலை வரை அப்படியே இருந்தவன், காலையில் லேசாக மயக்கம் தெளிந்து, முனகிக் கொண்டிருந்தான்..

அவனை காணவில்லை என்று தேடிக் கொண்டு வந்த அவனது அல்லக்கை சுப்பு, ஏதோ முனகல் சத்தம் கேட்கவும், என்னவென்று பார்க்க, இவன் அடி பட்டு ஓயிந்து போய் இருந்தான்..

" அய்யோ அண்ணே.. என்ன ஆச்சு.. இப்படி அடி பட்டு இருக்கு.." என்று அவனை எழுப்ப பார்க்க, அவனால் கண்ணை திறக்க கூட முடியவில்லை..

உடனே சுப்பு எழுந்து, தெரிந்த நபர்களை அழைத்து வந்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

அங்கு அவனை அனுமதித்து, அவனுக்கு சிகிச்சை அளித்தனர்..

அடுத்த நாளில் இருந்து வெற்றி மற்றும் மதியின் வாழ்க்கை மிகவும் இயல்பானதாக அமைந்தது..

சின்ன சின்ன சீண்டல்கள், கேலி கிண்டல் பேச்சுக்கள் எல்லாம் இருந்தன..

இரவில் தூங்கும் போதும் ஒருவர் அணைப்பில் இன்னொருவர் என்று தான் உறங்கினர்..

அதே சமயத்தில் ரவி மற்றும் கவியின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை..

அவன் தினமும் குடித்து விட்டு வருவதும், இவள் அதனை நினைத்து வருந்துவதுமாக தான் சென்றது.. ஆனால் என்ன, இவன் வேறு எந்த பெண்ணையும் நாடிச் செல்லவில்லை.. அது வரைக்கும் திருப்தி கொண்டாள் கவி..

இவர்களின் கம்பெனி மூலமாக ஜான், ஏற்றுமதி இறக்குமதி செய்ய ஆரம்பித்து இருந்தான்..

மூர்த்தியும் கம்பெனி பொறுப்பில் இருந்து விலகுவதால், அவர்களின் கம்பெனி சம்மந்தப்பட்ட எந்த விஷயங்களிலும் அவர் தலையிடுவதும் இல்லை..

அவர் இந்த விஷயத்தை மனைவி லட்சுமியிடமும், வெற்றியிடமும் கூறி இருந்தார்..

வெற்றியும் தாராளமாக வாருங்கள் என்று சொல்லி விட்டான்..

லட்சுமிக்கோ, அளவில்லாத மகிழ்ச்சி.. மீண்டும் தன் சொந்த மண்ணிற்கு செல்கிறோம் என்று..

இப்படியாக அனைவரின் வாழ்க்கையும் சென்று கொண்டிருக்க, ஒரு விடுமுறை அன்று, மதி தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் தனியாக தான் வைத்து இருந்தாள் இத்தனை நாளும்.. வெற்றியிடம் இயல்பான பிறகு அவளது துணி மணிகளை எடுத்து, இருவரது துணி மணிகளையும் ஒன்றாக ஒரே அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்..

அவனது பொருட்களை எல்லாம் எடுத்து பின்பு நேர்த்தியாக அடுக்கி வைத்தாள் அனைத்தையும்..

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு பழைய டைரி ஒன்று அவள் கண்ணில் பட்டது..

" என்னடா இது.. ஏதோ பழைய டைரி மாதிரி இருக்கு.. ஆனால் அதை ஏன் அவரு இப்படி மறைச்சி வச்சி இருக்கனும்.. " என்று யோசித்துக் கொண்டிருந்தாள்..

இதை படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள், வெற்றி அவனது அலமாரியில் வைத்து இருந்ததால் அவனுடையதாக இருக்கும் என்று எண்ணியவள் அதை திறந்து பார்க்க, அதில் முதல் பக்கத்தில் வெற்றி அவனது சிறு வயது போட்டோவை ஒட்டி வைத்து இருந்தான்..

அதை ரசனையுடன் பார்த்தவள், அடுத்த பக்கத்தை திருப்ப,

ஒரு ஓவியம் வரையப் பட்டு இருந்தது.. ஒரு சிறுவனுடைய கை ஒரு குழந்தையின் கையை பிடித்தவாறு அதில் வரைந்து இருந்தது..

அது ஓவியமாக இருந்ததால் யார் என்று அவளுக்கு புலப்படவில்லை.. இருந்தாலும் அந்த ஓவியத்தை பார்த்து,

" அழகா இருக்கு.. " என்று சொல்லிக்கொண்டாள் ..

அடுத்த பக்கத்தை திருப்ப,

"என்று முதன் முதலில் உன் கையை பிடித்தேனோ, காலம் முழுவதும் உன் கையை பிடிக்க வேண்டும் என்று ஆசை எனக்குள் உதயமாகி விட்டது.. அது நிறைவேறுமா..

இப்படிக்கு,
வெற்றி.." என்று எழுதி இருந்தது..

வெற்றியின் பெயரை பார்த்ததும் புருவம் சுருக்கி, அடுத்த பக்கத்தை திருப்பினாள் ..

" அறியாத வயதில் என்னை விட்டு விலகிப் போனாலும், அறிந்த வயதில் என்னுள்ளேயே வந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டாயடி..

வெற்றி.. "

இப்படியான பல பக்கங்களில் அவன் எழுதி இருக்க, அவளோ உணர்வு துடைத்த முகத்துடன் படித்துக் கொண்டிருந்தாள் ..

கவிதைகளை படித்து முடித்தவள், அடுத்த பக்கத்திற்கு திருப்ப, அது தான் கடைசி பக்கமாக இருந்தது.. அதற்கு பிறகு எதுவும் எழுதப் படவில்லை... அதிலோ,

" உன் மேல நான் கடல் அளவு நேசம் வச்சி இருந்தாலும், அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாத இடத்துல இருக்கேன்.. என்னோட ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் அது எல்லாம் நிறைவேறாதுனு தெரிஞ்சி போச்சு..
என் கண்ணு முன்னாடியே நீ இன்னொருத்தன் மனைவி ஆக போற.. ஆனால் உன் மேல நான் வச்சி இருந்த இந்த நேசம் என்னைக்கும் மாறாது.. என்னைக்கு இந்த மனசுல நீ வந்தியோ, அன்னைக்கே நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டேன்.. இனி காலம் முழுக்க உன்னை மட்டும் நெனச்சிட்டு நான் வாழ்ந்துருவேன்..
ஐ லவ் யூ டி...
ஐ லவ் யூ மதி...
ஐ லவ் யூ தேனு...

இந்த தேனு ன்ற வார்த்தையை நீயும் நானும் தனிமையில இருக்கும் போது உன்னை ஆசையா கூப்பிடனும்னு எவ்ளோ கனவு கண்டு இருப்பேன்டி.. ஆனால் எல்லாமே போச்சு... " என்றதோடு அந்த டைரியை முடித்து இருந்தான்..

கடைசி வரியை எழுதும் போது கண்ணீர் வடித்து இருப்பான் போல, கண்ணீரின் காய்ந்த தடம் இருந்தது..

இதுவரை அவள் வேறு ஏதோ பெண் என்று தான் நினைத்து இருந்தாள்.. ஆனால் மதி என்று தன் பெயரை பார்த்ததும், அது தான் தான் என்று உறுதி செய்து கொண்டாள்..

என்ன மாதிரியான உணர்வில் இருக்கின்றாள் என்று அவளுக்கே புரியவில்லை..

அவனது காதல் இன்று நேற்று வந்தது அல்ல என்று மட்டும் புரிந்து கொண்டாள்..

அவன் வக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்தாள்..

"இந்த அளவுக்கு தன்னை விரும்பி இருக்கின்றானா.." என்று நினைக்க நினைக்க அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது..

அவனுடன் தான் சேர வேண்டும் என்று அந்த கடவுள் முடிவெடுத்து விட்டார்... இல்லையேல் இந்த திருமணம் சரியான நேரத்தில் நின்று இருக்குமா.. அன்னையின் மூலமாக அவர் எனக்கு தாலி கட்டி இருப்பாரா..

அவனுடைய காதல், என்னை அவனுடன் சேர்த்து விட்டது.. என்று சொன்னால் அது மிகையாகாது...

இதை பற்றி அவனுடன் பேச வேண்டும் என்று எண்ணி, கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு அவனின் வருகைக்காக காத்து இருந்தாள்..


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22

மதி, வெற்றிக்காக காத்து இருக்க, அன்று பார்த்து அவன் வரவே இல்லை வீட்டிற்கு..

காலையில் கிளம்பிச் சென்றவன், மதியம் கூட, அலைபேசியின் மூலம் அழைத்து வரவில்லை என்று கூறி விட்டான்..

மதி, எதிர் பார்ப்போடு காத்து இருக்க, அவளுக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது..

மாலை வாக்கில் அவனுக்கு அழைத்து பேசலாம் என்று நினைத்தவள், அவனுக்கு அழைக்க, அதுவோ அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்று வந்தது..

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.. வீட்டிற்கு வரவும் இல்லை.. அலைபேசிக்கு அழைத்தால் அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்றே வருகிறதே.. என்று யோசித்தவள் கற்பகத்திடம் சென்று விசாரித்தாள்...

" அத்தை.. அவரு இன்னும் வரலையே.. போன் பண்ணாளும் போக மாட்டேன்குது.. " என்று வருத்தமாக அவரிடம் கூற,

அவரும், " அப்டியாம்மா... என்கிட்ட ராவுக்கு தான் வருவேன்னு சொன்னான்.. ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும் கண்ணு.. நீ எதுவும் வருத்தப்படாத.." என்று அவளுக்கு ஆறுதலாக பேச,

அவளும் சரி என்று கூறியவள், பின் " அத்தை... பக்கத்துல கோவிலுக்கு போய்ட்டு வரேன்.. " என்று சொல்லி விட்டு பொடி நடையாக நடந்து சென்றாள்..

அந்த ஊரில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிளுக்கு தான் சென்றாள்..

அங்கு தெய்வ கடாட்சத்துடன் குடி கொண்டிருக்கும் அந்த அம்மனை சிறிது நேரம் பார்த்தவள், பின் கையை கூப்பி, " அம்மா.. தாயே, என் புருஷன் என்னை இத்தனை வருஷமா மனசுல நெனச்சிட்டு இருந்ததுக்கு பரிசா, அவர் கூட என்னை சேர்த்து வச்சிட்ட.. நானும் அவரும் நல்ல படியா வாழ்க்கையயை ஆரம்பிச்சு காலம் முழுக்க வாழனும்.. ஆனால் இன்னைக்கு எந்த அளவுக்கு என் மனசு சந்தோச பட்டதோ, அதே அளவுக்கு பதட்டமாவும் இருக்கு.. நல்ல படியா வீட்டுக்கு வந்து சேரனும்.. ம்மா.. " என்று வேண்டியவள், பின் பிரகாரத்தை சுற்றி வர ஆரம்பித்தாள்..

சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தவள், சிறிது நேரத்திற்கு பின் கிளம்பி வீட்டிற்கு வந்தும் சேர்ந்து விட்டாள்..

அவள் வரும் போது இருட்டி விட்டது.. வீட்டிற்கு வந்து மீண்டும் வெற்றிக்கு அழைத்து பார்க்க, அப்பொழுதும் அதே அணைத்து வைக்க பட்டுள்ளது என்றே கூறியது..

சரி வரும் போது வரட்டும் என்று நினைத்தவள், சிறிது நேரம் கட்டிலில் இளைப்பாறலாம் என்ன நினைத்து சாய்ந்து அமர்ந்தாள்..

அமர்ந்தவலுக்கு மீண்டும் அந்த டைரியை படிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற, மீண்டும் வாசித்து பார்த்தாள்..

இப்பொழுது, அது தனக்காக எழுதபட்டது என்ற எண்ணத்தில் படித்தவளுக்கு உள்ளுக்குள் இன்பம் ஊற்று எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அதை முழுவதும் வாசித்து முடித்தவள், மீண்டும் அலமாரியில் பத்திரமாக வைக்கலாம் என்று எண்ணி திறந்தவள் அதை வைப்பதற்கு இடத்தை தேட, பெரும்பாலும் துணி மணிகளே இருந்ததால் அதை ஒதுக்கி வைத்து விட்டு, வைக்க போகும் முன் அது தவறி கீழே விழுந்து விட்டது..

கீழே குனிந்து எடுத்தவளின் கண்ணில் ஏதோ தென்படவும், என்னவென்று பார்க்க அது சரியாக தெரிய வில்லை..

கொஞ்சம் அலமாரியை நகட்டி விட்டு பார்க்க, அங்கே ஒரு தோளில் மாட்டி கொள்ளும் பை ஒன்று இருந்தது..

எடுத்து பார்க்க அதில் லேப்டாப்..
"ஏன் லேப்டாப்பை இங்க வச்சி இருக்காரு.. மறைவா.. " என்று யோசித்தவளுக்கு ஏன் என்று தான் புரியவில்லை..

மருத்துவருக்கே உரிய ஆராயும் எண்ணத்தோடு அதை திறந்து பார்க்க, அதில் கடவுச் சொல் கேட்டது..

முதலில் அவளது பெயரை போட, அது தவறு என்று காட்டியது..

இரண்டாவது வெற்றி மதி என்று சேர்த்து போட, அதுவோ, இரண்டு எண்கள் மட்டும் மிஸ்ஸிங் என்று சொல்ல, அவளோ சற்றே ஆழ்ந்து யோசித்தாள் ..

இன்னும் ஒரு முறை முயற்சி செய்யலாம்.. தவறாக பதிவு செய்தால், அது லாக் ஆகி விடும்.. அதை திறப்பதற்கு ஏகப்பட்ட முயற்சிகள் எடுக்க வேண்டும்..

எழுத்துக்கள் சரி.. ஆக அது கூட இரண்டு எண்கள் மட்டும் போட வேண்டும்.. என்று யோசித்தவளுக்கு மின்னல் போல பளிச்சென ஒன்று தோன்றியது..

மூன்றாவதாக, "வெற்றி மதி 14 " என்று போட, அதுவோ accepted என்று கூறி ஓபன் ஆகி விட்டது..

அது இரண்டு இலக்க எண், அவர்களின் திருமண தேதி தான்.. அதை போட்டுப் பார்க்க அதுவோ சரி என்று கூறி விட்டது..

இது போன்ற அமைப்புகள் எல்லாம் மடிக்கணினியில் ரகசியமாக கோப்புகள் எதுவும் வைத்து இருந்தாள் வைப்பர்..

இவர் ஏன் இது போல அமைப்பு வைத்து உள்ளார் என்று அவளுக்கு சந்தேகம் வந்தது..

அதாவது உரியவரை தவிர, மற்றோரு நபர் அதை திறக்க முயற்சி செய்தால் மூன்று முறை கடவுச் சொல்லை சரியாக குறிப்பிட அனுமதி அளிக்கும்..

மூன்று முறையும் தவறாக பதிவிட்டால், அது லாக் ஆகி விடும்.. திறப்பதற்கு முடியாது உரியவரை தவிர..

உரியவர்கள் செக்யூரிட்டி code என்று வைத்து இருப்பார்.. அதில் சென்று அதற்கு பதில் அளித்து விட்டு, மீண்டும் கடவுச் சொல்லை சரியாக குறிப்பிட்டால், உள்ளே சென்று பார்க்கலாம்.. அப்டித்தான் இவனும் வைத்து இருந்தான்..

அதனுடைய முகப்பு பக்கத்தில், மதி சிறு வயதில் இருக்கும் புகைப்படம் தான்..

அழகாக சிரித்த முகமாக இரண்டு குடுமி போட்டு, பாடடு பாவாடை அணிந்த வண்ணம் இருந்தாள்..

" இதுலயும் நான் தானா.. " என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டாள்..

அதில் உள்ளே சென்று திறந்து பார்க்க, ஏகப்பட்ட கோப்புகள் இருந்தன..

" என்ன இவ்ளோ files இருக்கு.. சரி ஏதாவது ஒன்னை திறந்து பாப்போம்.. " என்று திறந்து பார்க்க,

ஒருவருடைய புகைப்படத்துடன் அவரை பற்றிய விவரங்கள் வந்தது..

அதை படித்தவுடன் அவளுக்கு மூச்சைடைத்து விட்டது..

அதே போல ஒவொன்றாக திறந்து பார்க்க, எல்லாரும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவறாக இருந்தனர்..

அப்படியே வாயில் கையை வைத்து பொத்தி, சத்தம் வர்றாமல் அழுது கொண்டிருந்தாள்..

இவர்களுக்கும் வெற்றிக்கும் என்ன சம்மந்தம்..

இதை எதுவும் அறியாத வெற்றியோ, நண்பர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்..

அவர்கள் எதிர் பார்த்து காத்து இருந்த அந்த தருணம் வர இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை நடத்திக் கொண்டிருந்தனர்..

ஆம், அன்று அலைபேசியில் பேசியது போல, ஜான் இந்தியாவிர்க்கு வரும் தேதியை சொன்னதோடு அல்லாமல், சந்திபதற்க்கான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்து இருந்தான்..

வெற்றி கூட்டணியுடன், அவன் யார் யாரிடம் பிசினஸ் மேற்கொண்டுள்ளானோ, எல்லாருடன் சேர்ந்து தொழில் சம்மந்தமாக ஏற்பாடு செய்து இருந்தான்..

அது கண்டிப்பாக தமிழ் நாட்டில் இல்லை.. வெளி மாநிலத்தில் தான்.. அதனால் வெற்றியின் இந்த ஐவர் கூட்டணி, அதற்கு தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்...

எல்லாம் பேசி முடித்து அலைபேசியை எடுத்துப் பார்க்க, அது அதனுடைய உயிரை எப்பொழுதோ விட்டு இருந்தது..

" சே.. போன் சுவிட்ச் ஆப் ஆகி இருக்கு.. மதி வேற கூப்பிட்டான்னு தெரியலையே.. மணி வேற ரொம்ப நேரம் ஆச்சு.. " என்று தனக்குள் புலம்பியவன்,

நண்பர்களிடம், " மச்சான்.. மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்.. ரொம்ப நேரம் ஆகிடுச்சு... காலைல இருந்து என் பொண்டாட்டிகிட்டயும் பேசல.. அவ எப்டியும் கோவத்தோட தான் இருப்பா.. போய் தான் பேசணும்.. போன் ல வேற charge இல்லை.. " என்றவன், " சரி டா நான் கிளம்புறேன்.. நீங்களும் வேகமா வீட்டுக்கு போங்க... " என்று சொல்லி விட்டு, வேகமாக வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்..

அவன் சென்றதும், நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்..

அங்கே மதியோ, மடிக் கணினியை ஓரமாக வைத்து விட்டு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்..

அவளின் மனதில் ஏதேதோ எண்ணங்கள்..

காலையில் அனுபவித்த மகிழ்ச்சியை முற்று முழுதாக கூட அனுபவிக்க கூட முடியவில்லை.. என்ன என்னவோ போட்டு அழுத்தியது.. வரட்டும் பேசிக் கொள்ளலாம் என்று அவனுக்காக காத்து இருந்தாள்..

கற்பகம் இரவு உணவு உண்பதற்கு அழைத்ததற்கு கூட பசிக்கவில்லை என்று கூறி விட்டாள்..

வண்டியை நிப்பாட்டி ஸ்டாண்ட் போட்டு விட்டு, வெளியில் இருந்த பைப்பில் கை காலை கழுவிக் கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தவன், முதலில் தன் அன்னையின் அறைக்குள் எட்டிப் பார்க்க அவர் தூங்கி விட்டிருந்தார்..

பின்பு அவனது அறைக்குள் வர, விளக்கு அணைத்து வைக்க பட்டு இருட்டாக இருந்தது..

" என்ன இது night lamp கூட போடல..
ஒரு வேலை தூங்கிட்டாளோ.. " என்று இரவு விளக்கை மட்டும் போட்டு விட, அவள் சாய்ந்து அமர்ந்து இருந்தது தெரிந்தது..

" உக்காந்த போலவே தூங்கிட்டா போலவே.. " என்று அவளது அருகில் சென்று பார்க்க, அருகில் மடிக்கணினி இருப்பது போல தெரிந்தது..

" ஓஹோ.. லேப்டாப் ல எதுவும் ஒர்க் பார்த்துட்டு இருந்து இருப்பா போலயே.. " என்று அதனை எடுக்க போக பார்க்க, அது தன்னுடையது போல தெரிந்தது..

இருந்தாலும் உறுதி படுத்திக் கொள்ள, மின் விளக்கை போட்டவன், நன்றாக பார்க்க, அது அவனுடையது என்று உறுதி படுத்திக் கொண்டான்..

இப்பொழுது மதி சாய்ந்து அமர்ந்து இருந்தவள், நேராக நிமிர்ந்து அவனை அழுத்தமாக பார்க்க, அந்த பார்வையோ, " என்ன இது.. எதை என்னிடம் மறைக்கிறாய்.. " என்று கேட்பது போல இருந்தது..

அவள் எதுவும் பேசவில்லை.. அமைதியாக அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள்..

"அது உள்ள திறந்து பார்த்தியா" என்று கேட்க,

அவளோ அதற்கு ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்..

ஒரு பெரு மூச்சுடன் அவளின் அருகினில் வந்தவன், கட்டிலில் அமர்ந்து அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டவன், அவளை பார்த்து, " என்னை தப்பா நினைக்கிறியா மதி.. " என்று அவளின் கண்களை பார்த்துக் கேட்க,

" அதை நீங்களே தெளிவு படுத்திட்டா நல்லதுனு நான் நினைக்கிறேன்.. " என்று சொல்ல,

அவனும் ஆழ்ந்த ஒரு மூச்சுடன், " நீ நினைக்கிற மாதிரி இது தப்பான தொழில் சம்மந்தம் பட்டது தான்.. ஆனால் அவங்க கூட சேந்து தொழில் பண்றது இல்லை என்னோட வேலை.. அவங்களை கண்டு பிடிக்கிறது.. " என்று சொல்ல,

அவளோ அவனை புருவ முடிச்சுடன் யோசனையாக பார்த்தாள்..

" ஆமா.. நான் ஒரு secret intelligent ஆஃபீஸர்.. நான் மட்டும் இல்லை. நாங்க friends 5 பேரும்.. வெளிய நாங்க இந்த வயல், தோட்டம்னு இந்த தொழில் பண்ணாலும், உள்ளுக்குள்ள ரகசியமா எங்களோட வேலையை பாப்போம்.. " என்று அவன் சொல்லி முடிக்க,

அவளோ அதிரிச்சியில் அவனை என்று பார்த்த படி இருக்க,

" மதி.. மதி.. " என்று இரு முறை அழைத்த பின்னரே சுயத்திற்கு வந்தவள்,

" ஹாம்.. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. " என்று கூறினாள்..

" ஏண்டி.. உன் புருஷனை பார்த்தா பெரிய ஆஃபீஸர் போல தெரியலையா.. " என்று கேட்க,

" அப்போ தெரியல.. இப்போ தெரியுது தான். ஆனாலும் கொஞ்சம் சந்தேகம் தான்.. " என்று விழிகளை உருட்டி முழித்தவண்ணம் சொல்ல, அவனுக்கோ சிரிப்பு வந்து விட்டது அவளது செய்கையில்..

" என்ன சந்தேகம் உனக்கு.." என்று கேட்க,

" இல்லை.. இப்படி திடிர்னு சொன்னா, எப்படி நம்புறதாம்.. ஏதாவது அதுக்கு ஆதாரமா... " என்று தயங்கியப்படி கேட்க,

அவனோ, அவளை செல்லமாக முறைத்து விட்டு, பின் அவளது தோளில் கையை போட்டு அலமாரிக்கு முன் அழைத்துச் சென்றான்..

அங்கு அதில் ரகசிய லாக்கர் போல ஒன்று இருந்தது.. அது சாதாரணமாக பார்த்தால் தெரியாது..

உற்று கவனித்தால் மட்டுமே தெரியும் அங்கு இருப்பது.. அதான் சிறிய துளையில் சாவியை நுழைத்து திறந்துவிட்டு, பின் இழுக்க அதில் உள்ளே பைல்கள் இருந்தன..

எடுத்து பார்க்க, எல்லாமே அவன் படித்து முடித்த டிகிரி certificate இருந்தது..

அவன் id கார்டு எடுத்து அவளிடம் நீட்ட, அவளோ அதை பார்த்து விட்டு, அவனிடம், " எனக்கு நிஜமாவே இது இலக்கம் கற்பனை போல தோணுது.. " என்று சொல்ல,

அவனோ அவள் கையில் லேசாக கிள்ளி விட்டு, " வலிக்குதா.. அப்போ நிஜம் தான்.. கற்பனை இல்லை.. ஓகே " என்று கூறினான்..

அதற்கு பிறகு அவளும் புன்னகையுடன் சரி என்றாள்..

இப்பொழுது தான் அவளுக்கு மனம் முழுக்க நிம்மதி.. அப்பப்பா.. சிறிது நேரத்திற்குள் இந்த மூளை என்னனென்ன சிந்தித்து விட்டது..

இருவரும் படுக்க செல்ல, " மதி.." என்று அழைத்தவன், அவளை என்னவென்று அவனைப் பார்க்க,

" இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது.. உன்னையும் என்னையும் தவிர.. சரியா.. " என்று அந்த சரியில் சற்று அழுத்தம் கூட்டிச் சொல்ல,

அவளும் சரி என்று கேட்டுக் கொண்டாள்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23

நாட்கள் அதன் போக்கில் நகர, மதிக்கும் வெற்றிக்கும் இடையில் நெருக்கம் கூடிக் கொண்டே தான் சென்றது..

அவ்வப்போது நெற்றியில் முத்தம் இட்டுக் கொள்வதும், லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தனர் இருவரும்..

அதற்கு மேல் சென்றால் , எங்கே தன்னை மீறி எதுவும் நடந்து விடுமோ என்ற எண்ணம் தான் அவனுக்கு..

அப்படியே நடந்தாலும் மதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்பது வேறு விஷயம்.

இப்பொழுது அவன் ஈடு பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது..

அதில் சிறு தவறு ஏற்பட்டால் கூட, அவன் உயிருக்கே ஆபத்தாக முடியும்.. அப்படி ஒரு வேலை நடந்தால், மதி தன்னை மறந்து விட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவன் அவளிடம் எல்லை மீறவில்லை..

அப்படி இல்லை என்றால், என்று அவளின் மனதில் தான் இருப்பது தெரிந்ததோ அன்றே அவளை தன் மனைவி ஆக்கி இருப்பான் அல்லவா..
அவன் காலம் தாழ்த்த இது தான் முக்கிய காரணம்..

*********

மூர்த்தியும் நடராஜன் கம்பெனியில் இருந்து முழுவதுமாக விலகி கொண்டார்.. அதற்கான பத்திரங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு கை எழுத்தும் இடப்பட்டு விட்டது..

அதே சமயம், ரவிக்கும் ஜான், தொழில் முறை சந்திப்பில், அவனுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டது..

இதில் என்னவென்றால், பங்கேர்பவர்கள் அனைவரும் அவனிடம் தங்களுடைய சரக்கை கை மாத்தி கொள்கின்ற ஆட்கள்..

ஆனால் ரவிக்கு அப்படி அல்ல..இவனுடைய கம்பெனி மூலமாக பண்டமாற்று செய்து கொள்கின்றனர்.. அதற்கு தான் அவனை அழைத்து இருந்தான் ஜான்..

இவனும் பங்கேர்ப்பதற்கு தயாராக இருந்தான்..

*********

மூர்த்தியும் லட்சுமியும், வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்..

வீடு இருக்கட்டும் அதை விற்க வேண்டாம்.. அவ்வப்பொழுது அதை ஆள் வைத்து சுத்தம் செய்து கொள்ளலாம் என்று வெற்றி கூறி இருந்தான்..

அது போலவே மூர்த்தியும் வீட்டை விற்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை.. என்னதான் இருந்தாலும் சொந்த உழைப்பில் கட்டியது.. அவருக்கும் மனசு இல்லைதான்.. வெற்றி சொன்னது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. உழைப்பின் அருமை அவனுக்கும் தெரியும் தானே.

அங்கு ஏற்கனவே வெற்றி அவர்களின் வீட்டில் தங்க சொன்னதற்கு, " இல்லை அது சரியா வராது மாப்பிள்ளை.. எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் னு சும்மாவா சொல்லுவாங்க.. அது போக என் பொண்ணுக்கு பிறந்து வீடுனு ஒன்னு இருக்கட்டுமே.. " என்று சொல்ல, அவனும் சரி என்று அவர்களுக்கு தனியாக கட்டிய புது வீட்டை ஒன்றை ஊரிலயே பார்த்து இருந்தான்..

அவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்னே அங்கு வெற்றியின் வீட்டில் வந்து தங்கி கொண்டனர்..

நல்ல நாள் பார்த்து புது வீட்டிற்கு பால் காய்ப்பு செய்து குடி புகுந்தனர் லட்சுமியும் மூர்த்தியும்..

இந்த விஷயத்தில் மதிக்கு நிறையவே மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்..

மதி அப்பாவின் செல்ல பிள்ளையாக வளர்ந்தவள்.. இங்கு வந்ததில் இருந்து தனது தந்தையின் அணைப்பையும் தாயின் அன்பையும் இழந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆனால் அவள் ஒரு போதும் அதை வெளிக் காட்டிக் கொண்டதில்லை..

இப்பொழுது இருவரும் இங்கே வந்து விட்டதில் அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.. வெற்றியும் அதை உணர்ந்தான் தான்..

வெற்றியும் அவனுடைய வேலைகளை ஒரு பக்கம் கவனித்தாலும், மதியை மருத்துவ மனைக்கு கொண்டு போய் விடுவதில் இருந்து, திரும்ப அழைத்துக் கொண்டு வருவது வெற்றியின் முதல் வேலையாக எடுத்துக் கொண்டான்..

ஒரு முறை பட்டது போதாதா... இனியும் ஏதாவது அசம்பாவீதம் நடக்க அவன் தயாராக இல்லை..

அதனாலேயே அவனுடைய முழு வட்டத்துக்குள் மதியை வைத்துக் கொண்டான்..

இப்டியே சென்று கொண்டிருக்க, மதியின் பிறந்த நாளும் வந்தது..

முதல் நாள் இரவு எப்பொழுதும் போல இருவரும் உறங்கி விட, இரவு 11. 30 மணிக்கு எல்லாம் வெற்றி அவளை தொந்தரவு செய்யாமல் மெதுவாக எழுந்து வந்து வரவேற்பு கூடத்தை அலங்கரிக்க ஆரம்பித்து இருந்தான்..

வெற்றி முதலிலேயே சொல்லி விட்டான் அவனது அத்தை மற்றும் மாமனிடம்.. அவர்களும் சரியாக அந்த நேரத்திற்கு வந்து விட்டனர்.. கற்பகமும் எழுந்து வந்து விட்டார்..

இரவு 12 மணியை நெருங்க இருக்கும் போது, மதியை மெல்ல எழுப்பி பார்த்தான்.. அவள் வேலை செய்த களைப்பில், நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்..

திரும்பவும் மெல்ல எழுப்ப, அவளை கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து, " என்னங்க தூங்க விடாம இப்படி எழுப்பி விடுறீங்க.. எனக்கு தூக்கமா வருது.. " என்று மறுபடியும் உறங்க போக,

" மதி.. இங்க பாரு... அத்தையும் மாமாவும் வந்து இருக்காங்க.. உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.. " என்று தூக்கத்தில் இருந்தவளை எழுப்ப படாத பாடு பட, அவளோ,

" என்னங்க சொல்லறீங்க.. இந்த நேரம் ஏன் வந்து இருக்காங்க.. " என்று கேட்டுக்கொண்டே அறையில் இருந்து வெளியே கூடத்திற்கு வந்தவள் அசந்து விட்டாள்..

கூடம் முழுவதும் அலங்கரிக்கப் பட்டு இருக்க, அதை பார்த்து வியந்து நின்று விட்டாள்..

மணி சரியாக பண்ணிரெண்டு அடிக்கவும், அனைவரும் அவளுக்கு பிறந்த நாள் பாட்டு பாடி, வாழ்த்தைக் கூற, அவளோ இன்னும் நம்ப முடியாமல் அப்படியே நின்றாள்..

கற்பகமோ, " வா மா மதி.. வந்து கேக் வெட்டு.. எங்க இந்த வெற்றிப் பையன்.. " என்று அவளிடம் கேட்டு விட்டு பின்னால் திரும்பி எட்டிப் பார்க்க,

அவனோ கையில் ஏதோ பரிசுப் பொருளுடன் வந்தான்..

அவள் அவனையே இமைக்காமல் பார்க்க, அவனோ ஒற்றை கண்ணை சிமிட்டி, யாருக்கும் தெரியாத வண்ணம் இதழ் குவித்து ஊத, அவளோ அவன் செய்கையில் செவ்வானமாய் சிவந்து விட்டாள்..

பின்னர், சுற்றம் உணர்ந்து, மேசையின் மீது வைக்கப்பட்ட கேக்கை அருகில் இருந்த கத்தியால் வெட்டியவள், முதலில் யாருக்கு குடுப்பதென்று தடுமாறியதை கவனித்த வெற்றியோ, " மதி.. அத்தை மாமாக்கு முதல்ல கொடு.. " என்று அவனே அவளது தடுமாற்றத்தை நீக்கி வைத்தான்..

முதலில் தாய் தந்தைக்கு கொடுத்து அவர்களிடம் வாழ்த்தையும் பெற்று, காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டாள்..

அதே போல அடுத்து கற்பகத்திற்குக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்..

இறுதியாக, வெற்றிக்கு கேக்கை வெட்டி ஊட்டி விட, அவனோ கொஞ்சம் சாப்பிட்டு மீதம் அவளுக்கு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தைக் கூறினான்..

பின்னர், ஆளாளுக்கு ஒவ்வொறு பரிசை கொடுத்தனர்..

அவளோ வருடா வருடம் தன் தாய் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டாலும் இன்று ஏனோ வெற்றியின் பரிசுக்காகவே காத்து இருந்தாள்..

அவனும் அவளிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்து பிரிக்க ஆரம்பித்தாள்..

அழகிய வேலைபாடு கொண்ட கற்கள் பதித்த, ஆலிவ் பச்சை நிறத்தில் எடுத்து இருந்தான்.. அழகாக இருந்தது அந்த புடவை..

"ரொம்ப நல்லா இருக்கு வேந்தன்.. " என்று கூறினாள் அவனிடம்..

அது போக, ஒரு சிறிய நகை பெட்டியில் இருந்து அழகான மோதிரம் ஒன்றை எடுத்து, அவள் மோதிரவிரலை பிடித்து அவளது விரலில் மோதிரம் அணிவித்தான்..

சுற்றியுள்ள அனைவரும் கை தட்டி ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்..

அதன் பின்னர் நேரம் ஆவதை உணர்ந்து, அனைவரும் உறங்க சென்று விட, கடைசியாக மதியும் வெற்றியும் மட்டுமே இருந்தனர்..

ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்..

பின்பு சுத்தம் செய்து விட்டு, அறைக்கு சென்றனர் இருவருமாக சேர்ந்து..

ஆடையில் கேக் பட்டு இருந்ததால், அதனை மாற்றி விட்டு, வேற உடுத்திக் கொள்ளலாம் என்று எண்ணி குளியல் அறைக்குச் சென்றவளுக்கு ஏனோ குளித்து விட்டு செல்லலாம் என்று தோன்ற, குளிக்க ஆரம்பித்து விட்டாள்..

" என்ன போய் ரொம்ப நேரம் ஆச்சி.. இவ என்ன பண்றா உள்ள போய்.. " என்று யோசித்தவன், " மதி.." என்று சத்தம் போட,

" ஹாம்.. இருங்க வரேன்.. " என்று குளித்து முடித்து உடை மாற்றி வெளியில் வந்தாள்..

வெளியில் வந்தவளை கண்டு, இவன் தான் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்..

பின்னே, குளித்து விட்டு கண்ணாடி போன்ற மிருதுவான சேலையை உடுத்திக் கொண்டள்ளவா வந்தாள்..

அவளை பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டே, " மதி.. ஏன் இந்த நேரத்துல குளிச்சிட்டு சேலை உடுத்திட்டு வந்து இருக்க.. " என்று அவளை பார்த்து வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்துக் கொண்டு கேட்க,

அவளோ அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு," எல்லாம் ஒரு காரணமாதான் " என்றாள்..

அவனோ, அவளின் பார்வையை வைத்தே , " இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கா போலயே... வெற்றி.. கஷ்டம் டா இன்னைக்கு.. " என்று தனக்கு தானே உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே, அவளைப் பார்த்து " அப்டியா மதி..!! சரி மதி.. நேரம் ஆச்சு.. நான் தூங்குறேன்.. " என்று அவளிடம் சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து விட்டான்..

அவளோ விளக்கை அணைத்து விட்டு, அவன் அருகில் வந்து நெருங்கி படுத்துக் கொண்டு, " வேந்தன்... " என்று மிக மெல்லிய குரலில் அவனது காதருகில் வந்து அவனை அழைக்க,

அவனுக்கோ மேனி எல்லாம் சிலிர்த்து விட்டது..

" ஐயோஓஓ.. படுத்துறாளே.. உன் கண்ட்ரோல் எல்லாம் மிஸ் ஆக போகுது வெற்றி.. " என்று அவன் உள்ளக்குள் புலம்பிக் கொண்டிருக்க,

ஆனால் அவனோ அவன் எடுத்த முடிவில் இருந்து மாறாமல் அவன் உடம்புக்குள் பேயாட்டம் போட்ட உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு இருந்தான்..

அவளோ மென் மேலும் அவனை நெருங்கி, அவளது மென்மை அவனது முதுகினில் அழுத்தமாக பதிய, அவனோ நிலை குழைந்து போனான் இந்த செய்கையில்..

அவனை அவள் பக்கம் திருப்பி, அவனது முகத்தை பார்க்க, இப்பொழுது அவனும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனது இரு கன்னங்களிலும் கை வைத்து அவன் முகத்திற்கு மிக நெருக்கமாக அவளது முகத்தை வைத்து மூக்கோடு மூக்கு உரச, அவனோ அவளது செயலில் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகமாக, தானாக அவன் இமைகளை மூடிக் கொண்டான்..

அவளோ அதோடு நிறுத்தாமல், அவனது இதழில் அழுத்தமாக அவளது இதழை பதிக்க, அவனோ கண்களை விரித்து அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்..

அவளோ மோக கடலில் தள்ளாட, இவனோ அவள் ஆரம்பித்த வேலையை இவன் எடுத்துக் கொண்டான்..

இருவரும் அவர் அவர் இதழ் தேனை பருக, வெற்றியோ அவளது பெண்மையின் வாசனையில் கிறங்கி தான் போனான்..

மதியோ, அவனது வெற்று முதுகில் கையை கொண்டு சென்று அவளோடு சேர்த்து அணைக்க, திடிரென்று அவனுக்கு ஏதோ தோன்ற கண்ணை திறந்தவன் என்ன நினைத்தானோ, அவளை அவனிடம் இருந்து விலக்கி விட்டு, எழுந்து குளியல் அறைக்குச் சென்று விட்டான்..

அவளுக்கோ அவனது செய்கையில் கண்கள் கலங்கி விட்டன...

அவனும் நெருங்க மாட்டான்.. நானாக நெருங்கினாலும் இப்படி விலக்கினால் என்ன செய்வது..

உண்மையிலேயே அவர் என்னை நேசித்தாரா.. நேசித்தால் ஏன் தன்னை விலக்க வேண்டும் என்று எண்ணி மதி கலங்கிக் கொண்டிருந்தாள்..

அவனோ குளியல் அறைக்கு சென்று ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்று, தன் உடல் சூட்டை தணித்தவன், " என்னை மன்னிச்சிரு மதி.. நான் எடுத்து இருக்குற இந்த கேஸ் விசயத்துல கொஞ்சம் மிஸ் ஆச்சுன்னா கூட நான் உயிரோட இருப்பேனானு தெரியாது... ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆச்சுன்னாக் கூட... " என்று நினைக்கும் போதே அவனுக்கு தொண்டைக் குழி வலித்தது... எச்சிலைக் கூட்டி விழுங்கி கொண்டு, " நீ இன்னொரு வாழ்க்கையை வாழனும்.. அதுக்கு தான் நான் உன்னை நெருங்காம இருக்கேன்.. என்னை மன்னிச்சிரு தேனு.. " என்று அவன் மனதினில் எண்ணி வருந்தியவன் கண்ணிலும் கண்ணீர் வழிய, அதுவோ தண்ணீரோடு தண்ணீராய் கரைந்து போனது..


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24

மறுநாள் காலையில் மருத்துவ மனைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள் மதி..

அவன் முதல் தினம் அவளுக்கு பரிசாக குடுத்த அந்த புடவையை தான் அவள் உடுத்தி இருந்தாள்..

வெளியில் சென்று இருந்த வெற்றியும் அறைக்குள் நுழைய, அவள் உடுத்தி இருந்த புடவையை கண்டதும் ஒரு கணம் நின்று ரசித்து பார்த்தவன்,

" மதி... " என்று அழைக்க, அவன் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் என்னவென்று பார்க்க ,

" இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க." என்று கூற,

ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டாள்..

அவனுக்கு தெரியும்... அவள் எதற்காக கோவப் படுகிறாள் என்று.. அவனும் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகன்றான்..

அவள் சாப்பிட்டு முடித்து அவனுக்காக காத்து இருக்க, அவனும் சாப்பிட்டு முடித்து விட்டு இருவரும் கிளம்பினர்..

முதலில் வண்டியை கோவிலுக்கு விட்டவன், " இறங்கு.. கோவிலுக்கு போய்ட்டு போகலாம்.. " என்று கூறினான்..

அவளும் இறங்கி உள்ளே செல்ல, வெற்றியோ கடவுளுக்கும் அவளுக்குமாக சேர்த்து பூ வாங்கி வந்தான்..

அவள் கையில் பூவைக் கொடுத்து, " இதை சாமிக்கு கொடுத்துரு.. " என்றவன், அவன் கையில் இருந்த பூவை பார்த்து விட்டு அவளை திரும்ப சொன்னான்..

அவளும் அவனையே பார்த்த படி எதுவும் பேசாமல் இருந்தாள்..

" ப்ச்.. " என்றவன், அவனே அவளை திருப்பி விட்டு, அவளது கூந்தலில் அவன் வாங்கி வந்த மல்லிகை மலரை சூடினான்..

பின் இருவரும் சேர்ந்து தெய்வத்தை வணங்கி விட்டு, கோவிலில் இருந்து வெளியில் வந்து கிளம்பினர்..

அவன் வேறு பாதை வழியாக செல்லவும், அதை கவனித்தவள், " ஏன் வேற பக்கம் போறீங்க.. நான் ஹாஸ்பிடல் போகணும்.. டைம் ஆச்சு எனக்கு.. " என்றாள்

ஆனால் அவனோ அவள் பேசுவதை காதிலே வாங்காமல் வண்டியை செலுத்தினான்..

வண்டியை ஒரு இடத்தில் நிறுத்தியவன், அவளை இறங்க சொல்லி விட்டு, அவன் முன்னே செல்ல, அவளோ அவனை பின் தொடர்ந்து சென்றாள்..

ஒரு இடத்தில் நிற்கவும், அவனை பார்த்து விட்டு, சுற்றி பார்க்க, அங்கு அவளது அம்மா அப்பா, அத்தை கற்பகம், வெற்றியின் நண்பர்கள் என்று இருந்தனர்..

அவளுக்காக தான் காத்துக் கொண்டு இருந்தனர் போலும்.. அவள் வந்தவுடன் வெற்றியின் நண்பர்கள் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தைக் கூறினர்..

அவளும் ஏற்றுக் கொண்டு புன் சிரிப்புடன் நன்றி கூறினாள்..

பின்னர் அந்த இடத்தைப் பார்க்க, வெளியில் " மதி கிளினிக் " என்று பெயர் பலகை வைத்து இருந்தது..

யோசனையுடன், " என்ன இது.. " என்று அவனைப் பார்த்து கேட்க,

அவனும், சிரித்துக் கொண்டே, " இனிமே இது உன்னோட சொந்த கிளினிக்.. அங்க ஹாஸ்பிடலுக்கு போகணும் னு அவசியம் இல்லை.
இந்த building வேலை முடியிற வரைக்கும் நான் எதுவும் சொல்லல.. இன்னைக்கு உனக்கு ஒரு surprise கிப்ட்டா கொடுக்கணும் னு இருந்தேன்.. " என்றான்..

" இவரை புரிஞ்சிக்கவே முடியல.. " என்று மனதினில் நினைத்தவள், அவனிடம் ம்ம் என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்..

பின்னர், அவளது கையில் கத்தரிக் கோலை கொடுத்து ரிப்பனை வெட்ட சொல்ல, அவளோ தயங்கியவாரு, " இல்லை.. பெரியவங்க இருக்கும் போது நான் பண்றது சரி இல்லை.. நான் நல்லா இருக்கனும்னு நினைக்கிற உள்ளங்கள்.. இவங்க.. அதுனால அவங்க மூணு பேரும் சேர்ந்து கட் பண்ணட்டும்.. " என்று தனது அம்மா, அப்பா மற்றும் அத்தையை காண்பிக்க,

வெற்றியோ, " இதுனால தாண்டி உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது.. அப்போ இருந்து இப்போ வரைக்கும் நீ மாறல.. லவ் யூ டி பொண்டாட்டி.. " என்று மனதினில் நினைத்தவாரு,

அவரகள் மூவரையும் அழைத்து அவரிடம் கொடுக்க, மூவருமாக சேர்ந்து ரிப்பனை வெட்டி உள்ளே சென்று விளக்கு ஏற்றி வைத்து சாமியை கும்பிட்டு விட்டு, பின் அங்கு போடப் பட்டு இருந்த மருத்துவர் அமரும் இருக்கையில் அவளை அமர வைத்து அழகு பார்த்தார்கள் அனைவரும்..

மதிக்கு சொல்லவே தேவை இல்லை.. வெற்றி மேல் மென்மேலும் காதல் கூடிக் கொண்டு தான் சென்றதே தவிர, ஒரு சதவீதம் கூட குறையவில்லை.. அவனையே ரசனையுடன் பார்த்து இருந்தாள்..

அவன் அவளைப் பார்த்து திரும்பவும், உடனே சாமாளித்துக் கொண்டு, பின்னர் வெற்றியிடம், " அங்க இருந்து உடனே விலக முடியாதுங்க.. " என்று சொல்ல,

அவனும், " நீ உன்னோட ராஜினாமா கடிதத்தை கொடுத்துடு மதி.. அப்போதான் அவங்க சொல்ற period ல நம்ம இருந்துட்டு விலகிக்கலாம்.. அதோட நம்ம இங்க ஆரம்பிகிறதுக்கு என்ன என்ன மெட்டிரியல்ஸ் எல்லாம் வேணுமோ அது எல்லாம் வாங்கி செட் பண்ணனும். சோ அதுக்கும் டைம் ஆகும்.. " என்றான்.

அவளுக்கும் அதுவே சரி எனப் பட்டது..

" சரி நான் இன்னைக்கே கொடுத்துருறேன்.. " என்றவள்,

மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, வெற்றியும் மதியும் கிளம்பினர்..

செல்லும் வழியில் இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே..

அந்த அமைதியை மதி தான் கலைத்தாள்..

" எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்றீங்க.. ஆனால் என்னை மட்டும் அவாய்ட் பண்றீங்க.. ஏன் வேந்தன்.. " என்று அவனிடம் பின்னால் இருந்த படி கேட்க,

அவனோ அவள் கேட்பது காதில் விழுந்தாலும், பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்..

" இப்டியே எத்தனை நாளைக்கு இருக்குறீங்கனு பாக்குறேன்... " என்று சொல்லிவிட்டு, அமைதியாகி விட,

அவனோ ஒரு பெருமூச்சுடன், அவளை இறக்கி விட்டு வண்டியை கிளம்பிக் கொண்டு சென்று விட்டான்..

சென்றவனின் முதுகையே வெறித்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.. வெளியில் வரத் துடிக்கும் கண்ணீரை உள்ளுக்குள்ளயே அடக்கி விட்டு, மருத்துவமனையின் உள்ளே சென்றாள்.

அவளை விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தவன், எதையோ தேடி எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்..

வெற்றியும் மதியும் கிளம்பிய பிறகு, நண்பர்கள் நால்வரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்..

தனது அன்னையை, மாமா மற்றும் அத்தை உடன் காரில் வரச் சொல்லி விட்டான்..

அவன் தோட்டத்திற்கு வந்து சேர, அவனது நண்பர்களும் வந்து விட்டனர்..

அந்த சமயம் பார்த்து ஜான் னின் உதவியாளரிடம் இருந்து அழைப்பு வந்தது..

வெற்றி மற்றும் நண்பர்கள் ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் வெற்றி..

" ஹாய்.. மைக்கேல்.. எப்படி இருக்கீங்க.. Any thing important.. " என்று வெற்றி கேட்டான்..

மைக்கேல் என்பவனுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அவனும் தமிழிலேயே பதில் அளித்தான்..

" எஸ்..வெற்றி.. மீட்டிங் எங்க எப்போ னு முடிவு பண்ணியாச்சு.... " என்று சொல்ல,

அதைக் கேட்ட வெற்றியோ, " ரொம்ப நல்ல நியூஸ் சொல்லி இருக்கீங்க.. சரி என்னைக்கு, எங்க அரேஞ்ச் பண்ணிருக்கீங்க.. "

" மீட்டிங் பெங்களூர் ல, நெஸ்ட் வீக் வெட்னெஸ்டே .... எங்க venue னு உங்களுக்கு மெசேஜ் போட்டு விடுறோம்.. " என்று மைக்கேல் என்பவன் சொல்ல,

வெற்றியோ, " fine.. அப்போ நம்ம மீட்டிங் ல சந்திக்கலாம்... " என்று சொல்லி விட்டு அழைப்பை அணைத்தான்.

இப்பொழுது நண்பர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, தலையை அசைத்துக் கொண்டு, அடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார்த்தனர்..

மாலை நேரம் நெருங்க, வெற்றி மீண்டும் மதியை அழைத்து வந்து வீட்டில் விட்டவன், அவளை அழைத்து,

" மதி, வர்றதுக்கு லேட் ஆகும்.. நீ வெயிட் பண்ண வேண்டாம்.. தூங்கிரு.. " என்று சொல்ல,

அவளும் சரி என்றவாரு தலையை மட்டும் அசைத்தாள்.. வேறு எதுவும் பேசவில்லை..

திரும்பி உள்ளே நடக்க ஆரம்பித்து விட்டாள்..

அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவன், ஒரு பெரு மூச்சுடன் சென்று விட்டான்..

வெற்றியின் ஐவர் குழு, அவர்களது மேல் இடத்தில் இதனைப் பற்றி தெரிவித்து இருந்தனர்..

அவர்களும் இவர்களிடம், இத்தனை நாள் இதற்காக காத்து இருந்த தருணம்.. இதை விட்டு விட்டால் , மறுபடியும் இதற்கான சந்தர்ப்பம் திரும்ப கிடைக்கும் என்று சொல்ல முடியாது.. சிறு தவறு நேர்ந்தால் கூட, ஜான் உங்கள் ஐவரையும் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான்.. அதனால் நீங்கள் மிக மிக கவனமாக செயல்படும் படி அறிவுறுத்தினர்..

இவர்களும் கேட்டுக் கொண்டனர்.. அதன் படி ஒவ்வொரு படியையும் மிகவும் கவனமாக ஆரம்பத்தில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்..

மேலதிகாரியிடம் பேசி முடித்து விட்டு, போனை வைத்தான் வெற்றி..

அப்பொழுது சரியாக குமரனுக்கு அழைப்பு வர, எடுத்து பார்த்தவன் "ப்ச்.." என்று சலிப்போடு போனை கீழே வைத்து விட்டான்..

" என்ன டா இப்படி சலிச்சிக்கிற.. யாரு போன் ல.. " என்று கேட்டதற்கு,

" வேற யாரா இருக்கும்.. தமிழா தான் இருக்கும்.. " என்று செல்வம் சொல்ல,

" ஏன் டா.. எடுத்து என்னனு கேக்க வேண்டியது தான... " என்று வெற்றி கேட்டதற்கு,

" என்ன சொல்லிட போறா.. எப்போ மாமா என்னை கல்யாணம் பண்ண போறனு அதே பல்லவியை தான் பாட போறா.. " என்று சலிப்புடன் சொன்னான்..

" அந்த புள்ளையும் உன்னை எவ்ளோ விரும்புதுனு தெரியும்.. அதை ஏன் டா இப்படி நீ புரிஞ்சிக்க மாட்டேன்ற.. " என்றான் வெற்றி..

" எனக்கு அவளை பிடிக்காதுனு நெனச்சியா.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்.. அதுனால தான் அவளை ஒதுக்கிறேன்.. என்னை கல்யாணம் பண்ணிட்டு அவ கஷ்டப் பட வேண்டாம்.. காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்றும்.. " என்று அவன் கூறும் போதே கண்கள் கலங்கி குரல் தழுதழுத்து விட்டது..

" டேய்.. குமரா.. நீ இன்னும் அதையே நெனச்சிட்டு இருக்க.. அது நடந்து ரொம்ப வருஷம் ஆச்சு.. எல்லாமே மாறி இருக்க வாய்ப்பு இருக்கு டா.." என்றான் வெற்றி..

" ஒரு வேலை இல்லனா, கஷ்டம் அவளுக்கு தான்.. மாற்றம் இருக்கோ இல்லையோ, நான் கல்யாணமே பண்ணிக்கல.. அப்படியே என்னை விட்டா போதும்.. " என்றான்..

இவனிடம் என்ன பேசினாலும் வேலைக்கு ஆகாது.. இதைப் பற்றி மதியிடம் பேச வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான்..

தமிழரசி, குமரனின் மாமன் மகள்.. அவன் மேல் உயிரையே வைத்து இருக்கின்றாள்.. இவன் தான் சில காரணகளுக்காக அவளை விட்டு ஒதுங்கிச் செல்கின்றான்..

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வீட்டுக்கு கிளம்பினர்..

வெற்றியும் வீட்டிற்கு வந்து சேர, மதி இன்னும் தூங்காமல், வீட்டின் முன் இருக்கும் காலி இடத்தில், நிலவின் வெளிச்சத்தில் காலார நடத்து கொண்டிருந்தாள்..

" என்ன இவ, இன்னும் தூங்காம இருக்கா.. " என்று யோசித்தபடி வந்தவன், அவளிடம் " மதி மா.." என்று அழைத்த படி வந்தான்..

அவளுக்கு வெற்றி வந்தது தெரியும்.. இருந்தாலும் அவள் எதுவும் கண்டு கொள்ள வில்லை..

அவன் இப்பொழுது அழைக்கவும், என்னவென்று திரும்பி பார்க்க, " இன்னும் தூங்கலையா.. " என்று கேட்க, அவளோ, " தூக்கம் வரல.. " என்று சொன்னாள்..

அவளை ஒரு நிமிடம் பார்த்தவன், பின் கை கால் கழுவி விட்டு, " மதி.. உள்ள வா... போதும் நீ நடந்தது.. " என்று அழைக்க,

" இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்.. " என்று சொன்னாள்..

" மதி.. உள்ள வா னு சொன்னேன்... " என்று சற்று அழுத்தமாக, கண்டிப்பாக நீ உள்ளே வர வேண்டும் என்ற விதத்தில் கூறினான்..

அவளும் ஒரு கணம் கண்ணை மூடி திறந்து, உள்ளே சென்றாள்..

வெற்றியும் கதவை சாற்றி விட்டு, அறைக்குள் சென்று உடையை மாற்றியவன், அவளை எதிர்பாராமல் அவனே சென்று சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தான்..

இவளுக்கோ கோவம் கோவமாக வந்தது..

" சாப்பிடறதுக்கு எடுத்து வைக்க கூப்டா என்ன.. அவருக்கு நான் தேவையே இல்லை போல எதுக்குமே.. " என்று முன் தினம் அவன் விலகிச் சென்றதை மனதில் வைத்து பேசினாள்..

பின்னர், அவன் மேல் உள்ள கோவத்தில் குழல் விளக்கை அணைத்து விட்டு, இரவு விளக்கை போட்டவள், வந்து படுத்துக் கொண்டாள்..

சாப்பிட்டு முடித்து விட்டு வந்த வெற்றி அவள் படுத்து இருப்பதை பார்த்தவன், அவள் அருகில் சென்று அவள் தலையயை மெல்லமாக வருடி விட்டவன், அவளது இதழலில் பட்டும் படாமல் அவனது இதழை ஒற்றி எடுத்தான் அவள் தூக்கம் கலையாதவாரு..

பின்னர் அவன் இடத்திற்கு சென்று அவன் படுத்ததும் உறங்கி விட்டான்..

அவள் உறங்கி விட்டாள் என்று நினைத்து, அவன் அவளுக்கு முத்தம் இட, அவளோ கண்களை மட்டுமே மூடி இருந்தாளே தவிர உறங்கவில்லை..

அவன் ஸ்பரிஷம் அவள் மீது பட்டதும், அவள் கண்களை திறக்காமல் அவன் என்ன செய்கின்றான் என்று கவனிக்க ஆரம்பித்தாள்...

அவன் முத்தம் இடுவான் என்று இவள் எதிர் பார்க்கவில்லை.. தானாக நெருங்கும் போது, அவன் விலகி செல்கிறான்... இப்பொழுது அவனாகவே வந்து எனக்கு முத்தம் இட்டுச் செல்கிறான் அதுவும் எனக்கு தெரியாமல்...

இப்பொழுது அவன் உறங்கி விட்டதை உறுதிப் படுத்தியவள், அவனை பார்த்து திரும்பிப் படுத்து " எதையோ உள்ளுக்குள்ள போட்டு அழுத்திட்டு இருக்கீங்க.. அதுனால தான் நீங்கள் என்னை விட்டு விலகுறீங்க.. என்னனு தெரியல.. ஆனால் எனக்கு நீங்க வேணும் வேந்தன்.. " என்று அவனைப் பார்த்து கண்கள் கலங்க கூறியவள், அவன் மார்போடு சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள்...

அவனும் தூக்கத்தில் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
*******

அன்றும் வழக்கம் போல, ரவி இரவில் குடித்து விட்டு, தள்ளாடிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..

அவனுக்காக காத்து இருந்த, கவியோ, அவன் நடையில் இன்றும் தடுமாற்றம் இருப்பதை உணர்ந்து, ஒரு பெருமூச்சுடன் அவனுக்கு அருகில் சென்றாள்..

அவனை தாங்கிப் பிடித்துக் கொள்ள சென்றவளை, தள்ளி விட்டவன்,
" ஹே..!! போடி.. எல்லாரும் சேந்து என்னை அசிங்க படுத்துட்டிங்களே.. எனக்கு அதை நினைக்க நினைக்க எவ்ளோ அவமானமா இருக்கு.. " என்று அன்றைக்கு திருமணத்தன்று நடந்த விஷயத்தை பற்றி பேச, அவளுக்கோ அவன் இன்னும் அந்த நிகழ்வில் இருந்து இன்னும் வரவில்லை என்று தோன்றியது..

அவனுக்கு அன்று நடந்த சம்பவத்தின் மூலம் மிகவும் அவமானமாக தன்னை நினைத்துக் கொள்கின்றான் என்றும், மனதளவில் கூனி குறுகி போய் இருக்கிறான் என்றும் உணர்ந்தாள்..

இதற்கு என்ன தான் தீர்வு என்றும் புரியவில்லை அவளுக்கு..

தினம் தினம் இப்படி குடித்துக் குடித்து உடலை கெடுத்து கொள்கிறானே.. என்று மனதளவில் மிகவும் வருந்தினாள் ..

அன்றும் நேசித்தாள் .. இன்றும் நேசிக்கின்றாள் .. இனியும் நேசிப்பாள் ..

இதற்கு ஒரே தீர்வு, அவனை விட்டு சென்றால் ஆவது, அவன் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பான் என்றால் அது தான் ஒரே வழி என்று முடிவு எடுத்தவள், அவனை கை தாங்களாக பிடித்துக் கொண்டு அறையில் விட்டு , அவனை நன்றாக படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தாள்..

போகும் முன் அவனை ஒரு தரம் திரும்பிப் பார்த்து, மீண்டும் வந்து, அவன் இதழலில் அழுந்த முத்தமிட்டுச் சென்றாள்..


தேன் இனிக்கும்.....
 
Status
Not open for further replies.
Top