ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25

அடுத்தடுத்து வந்த நாட்களில் வெற்றியின் ஐவர் குழு, அவர்கள் வேளையில் முழு மூச்சாக இறங்கி விட்டனர்..

மதியை, மருத்துவமனைக்கு கொண்டு போய் விடும் போதும் கூட்டிக்கொண்டு வரும் போதும் மட்டுமே அவனை பார்க்க சந்தர்ப்பம் அமைகிறது..

மற்ற நேரத்தில் அவன் எப்பொழுது வீட்டிற்கு வருகிறான், போகிறான் என்று ஒன்றும் அவளுக்கு தெரிவதில்லை..

இரவு அவன் வரும் வரை காத்திருக்க நினைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவளாள் முழித்திருக்க முடியாமல் அப்படியே உறங்கி விடுகின்றாள்....

வெற்றி வந்த பிறகு தான், அவளை சரியாக படுக்க வைத்து, அவனும் அவள் அருகினில் நெருங்கி படுத்துக் கொள்வான்..

வண்டியில் செல்லும் போதும் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொள்வான்..

இப்டியே தான் அடுத்தடுத்து வந்த நாட்களும் சென்றது..

இதற்கிடையில், மதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை இரண்டு தினங்களுக்கு முன் கொடுக்கச் சென்று இருந்தாள்..

ஆனால் மருத்துவமனையின் டீன், வரவில்லை என்ற காரணத்தால் இன்று மீண்டும் சந்திக்க சென்று இருந்தாள்..

அறையின் கதவில்,
Dr. மாணிக்கவேல் என்ற பொன்னிற பலகையில் அவர் பெயர் மின்னிக் கொண்டிருந்தது..

ஐம்பது வயது மதிக்கதக்க அவர், மருத்தவ தொழிலை ஒரு சேவையாக செய்து கொண்டு வருகின்றார்.. மனைவியை இழந்த அவருக்கு மகன் மட்டுமே துணை..

அவரது மகன் Dr. ஹரி பிரசாத்.. இதய நிபுணராகவும், பொது நல மருத்துவராகவும் இருக்கிறான் அதே மருத்துவமனையில்..

" மே ஐ கம் இன் சார்.. " என்று அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காத்திருக்க,

அவரும், " எஸ்.. கம் இன்.. " என்று அனுமதி அளித்த பிறகு உள் நுழைந்தாள்...

" வாங்க... மிசஸ். மதி..!! ப்ளீஸ் சிட் டவுன்.. " என்று அவளுக்கு இருக்கையில் அமரச் சொல்ல,

அவளும் அதை ஏற்றுக் கொண்டு, " தேங்க் யூ சார்.. " என்று கூறி விட்டு அமர்ந்தாள்..

"சொல்லுங்க மிஸஸ். மதி..!! என்ன விஷயம்.. முக்கியமான விஷயம் இல்லனா, என்னைத் தேடி நேரடியாக வர மாட்டீங்க.. " என்று அவர் அவளைப் பார்த்துக் கூற,

அவளும், " ஆமா.. சார்.. முக்கியமான விஷயம் தான்.. ஆனால் அதை எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு.. ஏன் னா, இந்த ஹாஸ்பிடல் ல நான் சேந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது.. அதுக்குள்ள நான் இந்த விஷயத்தை சொன்னால், நீங்கள் அதை எப்படி எடுத்துப்பீங்களோனு தான் தெரியல.. " என்று சற்று தயக்கத்துடன் அவள் பேசிக் கொண்டிருக்க,

அவள் சொல்வதை கேட்டவரின் முகம் யோசனையுடன் மேலும் சொல்லுங்கள் என்ற அர்த்தத்துடன் அவள் மேல் படிய, அவளும் அவரின் பார்வையயை புரிந்து கொண்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்..

" சார்.. இது என்னோட ராஜினாமா லெட்டர்.. " என்று கடிதத்தை நீட்ட, அவரும்,

" என்ன ஆச்சு.. ஏன் அதுக்குள்ள ரிசைன் பண்றீங்க.. " என்று கேட்டவருக்கு,

" சார்.. நாங்க சொந்தமா கிளினிக் ஸ்டார்ட் பண்ண போறோம்.. என் ஹஸ்பண்ட் எனக்காக ஏற்பாடு பண்ணி இருக்காரு.. இப்போ இங்க இருந்து, லெட்டர் குடுத்த 1 மாசம் கம்ப்ல்சரி ஒர்க் பண்ணனும்.. அதுக்குள்ள அங்க எல்லாம் arrange ஆகிரும்.. அதுனால தான் நான் இப்பவே கொடுக்கிறேன்.. " என்று அனைத்தையும் ஒரு வழியாக கூறி முடித்தாள்..

அவரும் அனைத்தையும் கேட்டு விட்டு, பின், " என்ன டாக்டர்.. இப்படி சொல்றீங்க.. உங்களை போல நல்ல திறமை வாய்ந்த டாக்டர், இந்த மகப்பேறு பிரிவுல, சல்லடை போட்டு தான் தேடணும்.. வந்து கொஞ்ச நாள்லையே, கைராசியான டாக்டர்னு பேரு எடுத்துட்டிங்க.. இனி இன்னொரு டாக்டரை தேடணும்.. " என்று சிரித்துக் கொண்டே சொல்ல..

அவளும் என்ன சொல்வதென்று தெரியாமல், சிறு புன்னகையை மட்டும் சிந்தினால்..

" ஓகே.. டாக்டர் மதி.. நீங்க இன்னும் ஒன் மன்த் ஒர்க் பண்ணிட்டு உங்க ஜாப் ல இருந்து ரீலீவ் ஆகிக்கலாம்.. All the best for your future... " என்று அவளிடம் கை குலுக்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார்..

வெளியில் வந்த மதிக்கு, எப்படி டா இதை சாமாளிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..

இப்பொழுது இந்த விஷயம் வெகு சுலபமாக அமைந்ததில், ஒரு பெரிய பாரம் இறங்கியது போல ஆசுவாசத்துடன் அவள் அறைக்குச் சென்றாள்..

மாலை, வெற்றி அழைத்து செல்லும் போது, அவனிடன் விஷயத்தைக் கூறினாள்.. அவனும் " நல்லாதா போச்சு மதி.. நீ அங்க ஆரம்பிக்கிறதுக்கு என்ன என்ன தேவைப்படும் னு சொல்லிட்டா, நம்ம அதுக்குள்ள வாங்கி எல்லாத்தையும் செட் பண்ணிரலாம்.. " என்று சொல்ல,

அவளும் " ம்ம். வீட்டுக்கு போய்ட்டு சொல்றேன்.. " என்று கூறினாள்..

" ஏன் இப்போ எல்லாம் வீட்டுக்கு ரொம்ப லேட்டாவே வர்றீங்க.. " என்று அவன் தாமதமாக வருவதற்கு காரணம் கேட்க,

" ரொம்ப முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மதி.. அதை ரொம்ப ரொம்ப கவனமா செயல் படுத்தனும்.. அதுனால தான் வர்ற தாமதம் ஆகுது.. " என்று விளக்கம் அளித்தான்..

அப்படியே பேசிக் கொண்டே வர, வீடும் வந்து விட்டது..

அவளை இறக்கி விட்டு செல்லும் தருவாயில், " வேந்தன்!!" என்று அழைத்தவளை என்னவென்று திரும்பிப் பார்த்தவனின் கைகளை பிடித்துக் கொண்டு,

" எனக்கு உங்கள வர வர ரொம்ப மிஸ் பண்ற போல தோணுது.. சீக்கிரம் இந்த வேலையை எல்லாம் முடிங்க.. " என்று குரல் தழுதழுக்க கூறியவளை பார்க்க, அவனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது...

ஒரு பெருமூச்சுடன் "ம்ம்.."என்று மட்டுமே கூறினான்..

பின்னர் அவனும் சென்று விட, அவளும் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்..

அதே சமயம், இங்கு ரவியின் வீட்டிலோ, கவி அவன் வீட்டை விட்டு சென்று இருந்தாள் அவன் தம்பியுடன்..

ஏற்கனவே அவள் தங்கி இருந்த அந்த சிறிய வீட்டிற்கே மீண்டும் அக்காவும் தம்பியும் சென்று விட்டனர்..

அன்று இரவு, அவன் இதழில் அழுந்த முத்தம் இட்டு, தன் அறைக்குச் சென்றவள், வெகு நேரம் தூங்காமல் எதை எதையோ யோசித்து, இதுவே சரி என நினைத்து, மறுநாள் காலையில், தன் தம்பியிடம் சில விஷயங்களை மட்டும் கூறி, அவனையும் கூட்டிக்கொண்டு தான் இருந்த பழைய வீட்டிற்கு செல்லலாம் என்று இருவரின் உடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர்..

ஆனால் அவனுக்கு தெரியாதா.. வந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.

தன் தமக்கையும் மாமனும் எப்படி இருக்கிறார்கள் என்று..

அதனால் அவன் அவளிடம் எதிர் கேள்வி கேட்கமல் அவளுடன் சென்றான்..

ஆனால் மனதில் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டான்..

தன் அக்காவை தான் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..

இருவரும் இரு வேறு மன நிலையில் வெளியில் வர, எதிரே நடராஜன் அவர்களை பார்த்து யோசனையுடன், " ரெண்டு பேரும் எங்க கிளம்பிடீங்க.. இந்த காலங்காத்தால.. " என்று கேட்டதற்கு,

இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றனர்..

" நான் கேக்குறேன்.. யாருமே பதில் சொல்லமா இருந்தா என்ன மா அர்த்தம் " என்று இப்பொழுது தன் மருமகளை பார்த்து கேள்வி எழுப்ப,

அவளோ தயக்கத்துடன், " மாமா.. நாங்க இந்த வீட்டை விட்டு கிளம்புறோம்.. " என்று அவரைப் பார்த்து சொல்ல,

அவரோ அதிர்ச்சியில், " என்னமா இப்படி சொல்ற.. என்ன ஆச்சு.. எதுக்கு இந்த முடிவு.. " என்றார்..

" என்ன பண்ண சொல்லறீங்க.. எனக்கு வேற வழி தெரியல. என்னை பிடிக்காம அவரு தினம் தினம் குடிச்சு குடிச்சு செத்துருவாரு போல.. அவர் கூட வாழ தான் ஆசை பட்டேன்.. ஆனால் என்னால அவரு அவரையே அழிச்சிக்கிறாரு.. அதை என்னால பார்த்துட்டு சகிச்சிட்டு இருக்க முடியல.. அவரு கூட வாழ முடியலனாலும், அவரை தூரத்தில் இருந்து பார்த்தாவது சந்தோச பட்டுகிறேன்.. " என்று அவரிடம் கூறி முடித்தாள்.

" அவசர பட்டு முடிவு எடுக்க வேண்டாம் மா.. நான் வேணும்னா திரும்ப பேசிப் பாக்குறேன்.. அவன்கிட்ட.. " என்றார்..

" என்ன பேசுவீங்க.. நான் தான் தினமும் பாக்குறேனே... உங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறாரு.. என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சதுல உங்க மேலயும் அவருக்கு ரொம்ப கோவம்.. நான் இல்லனா எல்லாமே சரி ஆகிரும்.. " என்றவள், பின்

" அவரு இது வரைக்கும் எங்க கல்யாணத்தை முறைப் படி பதிவு பண்ணல.. அதுனால அவருக்கு பிடிச்ச மாதிரி அவர் வாழக்கையை அமைச்சுகிட்டும். நான் அதுக்கு எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன்.. " என்று கூறியவள், விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள்.

பின் ஏதோ யோசனை வந்தவளாக, மீண்டும் அவரிடம் வந்து, " ஏதாவது ரொம்ப முக்கியமான விடயம் னா எனக்கு தகவல் சொல்லுங்க.. " என்று தன் அலை பேசி எண்ணை அவரிடம் கொடுத்து விட்டு, தன் தம்பியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்..

இதோ அவள் சென்று இரண்டு நாட்கள் ஆகி விட்டன..

இரு நாட்களும் அவன் நினைப்பிலே வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தவள், இப்டியே இருந்தாள் சரி வராது என்று நினைத்து, இதற்கு முன்னாடி வேலை செய்த அதே இடத்தில் மீண்டும் வேலை தேடிச் செல்ல, அவர்கள் வேலை இல்லை என்று சொல்லி விட்டனர்..

பின்னர், ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வேலை கிடைக்க, அங்கு அன்றே வேலைக்கு சேர்ந்து விட்டாள்..

அவள் சென்ற விஷயமே ரவிக்கு தெரியாது..

அவனாக அவளை தேடினாள், அவளை பற்றிக் கூறலாம் என்று நினைத்து இருந்தார் நடராஜன்.. ஆனால் அவனோ, அவன் இஷ்டம் போல திரிய அவளைப் பற்றி துளி கூட அவன் நினைத்துப் பார்க்கவில்லை..

" அந்த பொண்ணு போனது சரிதான்.. " என்று உள்ளுக்குள்ளயே நடராஜன் நினைத்துக் கொண்டார்..

வழக்கம் போல, அன்றும் அவன் இரவு குடித்து விட்டு வர, தட்டு தடுமாறி அவன் அறையை வந்து அடைந்து கட்டிலில் படுக்காமல், கீழே விழுந்தவன் அப்படியே படுத்து விட்டான்..

மறுநாள் தலை விண் விண் என்று வலிக்க, அவன் கீழே படுத்து இருப்பதை பார்த்து, சற்று யோசனையுடன் எழுந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்தான்..

அவன் எப்பொழுதும் எழும் போது, அவன் அறையில் எலுமிச்சை பழம் ஜூஸ் இருக்கும்.. இருக்கிறதா என்று பார்க்க, அதுவும் இல்லை..

உடை எல்லாம் அணிந்து தயார் ஆகி ஆபீஸ்க்கு செல்ல கிளம்பி கீழே வந்தவன், சாப்பிடுவதற்கு அமர, வேலைக்கார பெண்மணி வந்து பரிமாறினார்..

சாப்பிட்டு பார்த்தவனுக்கு உணவின் சுவையும் வேறு போல இருக்க, யோசனையுடனே சாப்பிட்டு முடித்து கிளம்பி சென்று விட்டான்..

கம்பெனிக்கு சென்றவன், வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க, இந்த யோசனையில் இருந்து வெளி வந்து, வேலையில் கவனத்தை திசை திருப்பினான்..

மாலை நேரம் நெருங்க, ரவி, அவனது கிளைன்ட் இருவருடன் தொழில் சம்மந்தமாக பேச, ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வர சொல்லி இருந்தான்..

மூவரும் அங்கே சந்தித்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்..

பின்னர் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு , வெயிட்ரை அழைத்து ஆர்டர் செய்ய,

சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த டேபிலுக்கு கொண்டு வந்தது என்னவோ கவி தான்..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அதிர்ந்து விட்டனர்..

அவளோ அந்த அதிர்வுடனே அங்கிருந்து நகன்றாள்..

அவளையே யோசனையுடன் பார்த்து இருந்தவனை கலைத்தது என்னவோ, அவனின் நண்பர்கள் தான்..

அவர்களின் அழைப்பில் நிதானத்திற்கு வந்தவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை கவியையே சுற்றிக் கொண்டு வந்தது..

பின்னர் பேசிவிட்டு, அவர் அவர் கிளம்ப இவனும் காரில் கிளம்பி விட்டான்..

ஏதேதோ எண்ண அலைகள்.. " அவ ஏன் இங்க வேலை பாக்குறா.. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே.. அப்பாவும் இதை பத்தி சொல்லல.. ரெண்டு நாளா, அவளை வீட்டுல கூட பாக்க முடியலையே.. எப்பவும் என் கண்ணு முன்னாடி வந்து நிப்பா.. எனக்கு என்ன வேணும், வேண்டாம்னு பார்த்து பார்த்து பண்ணுவா.. இப்போ என்ன டா னா, இங்க இருக்கா.. அதுவும் நான் நைட் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வந்தா கூட என்னை ரூம்க்கு பத்திரமா கூட்டிட்டு போவா.. ஆனால் அப்பவும் அவ வரலையே.. " என்று ஒவ்வொன்றாய் அவன் நியாபக படுத்திப் பார்க்க, அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்தும் புரியாமலும் இருந்தது...

" ஒரு வேலை... இப்படி இருக்குமோ.. " என்று அதனை ஆழமாக யோசித்தவன், சாலையில் கவனம் செலுத்த மறந்து விட்டான்..

குறுக்கே மாடு ஒன்று வந்ததை அவன் கவனிக்காமல் செல்ல, அருகில் நெருங்கியதும் கவனித்து வண்டியை திருப்ப முயல, பின்னால் வந்த வண்டி மீது மோதி, விபத்து ஏற்பட்டு, படுகாயங்களுடன் அவன் மயங்கிய நிலைக்குச் சென்றான்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவனை சேர்த்து அவனுக்கு முதலுதவி கொடுக்கப் பட்டது..

தகவல் நடராஜனுக்கு தெரிவிக்கப் பட, அவருக்கோ பதட்டத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை..

இப்பொழுது பதட்டம் அடைந்தால், ஒன்றும் வேலைக்கு ஆகாது என்று நினைத்து டிரைவர் மூலம் காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்..

அங்கு சென்றதும், அவரிடம் சில ஃபார்ம்களில் கையெழுத்து வாங்கினர்..

உயிர்க்கு ஆபத்து இல்லை என்றாலும், காயங்கள் அதிகம் அவனுக்கு..

அதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு அவனை அழைத்துச் சென்றனர்..

திடீரென யோசனை வந்தவராக, " இதை மருமககிட்ட சொல்லாம எப்படி இருக்கிறது.. " என்று நினைத்தவர்,
உடனே அவளுக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்..

மாமனாரிடம் இருந்து, நடுநிசி நேரத்தில் அழைப்பு வந்ததும், என்னவோ ஏதோ என்ற பயத்தில், அழைப்பை ஏற்றாள்..

" ஹலோ.. " என்றதும், அந்த பக்கம் அவர், " ஹலோ கவி மா.. " என்று அவர் அழைத்ததின் விதமே உள்ளுக்குள் ஏதோ பயப்பந்து உருள ஆரம்பித்தது..

" என்ன மாமா.. என்ன ஆச்சு.. உங்க குரலே ஒரு மாதிரி இருக்கே.. எனக்கு பயமா இருக்கு.. " என்று பதட்டத்துடன் கூற,

இப்பொழுது நானும் பயந்து அவளையும் பயமுறுத்த முடியாது.. அவளே பாவம்.. என்று நினைத்து,

" அம்மாடி, பயப்படாத.. நான் சொல்ற ஹாஸ்பிடல் க்கு வரியா மா.. " என்று சொல்ல,

அவளோ, " யாருக்கு என்ன மாமா ஆச்சு.. நீங்க எதுனாலும் சொல்லுங்க.. அப்போ தான் நான் வருவேன்.. " என்று அவள் அழுகையுடன் கூற,

அவரும், " ரவி க்கு ஒரு சின்ன ஆச்சிடேன்ட் மா.. நான் இப்போ ஹாஸ்பிடல் ல இருக்கேன்.. நீயும் கிளம்பி வா மா.. " என்றார் அவர்..

" என்ன மாமா சொல்லறீங்க.. எப்போ ஆச்சு... ஒன்னும் பெருசா எதுவும் இல்லையே.. " என்று அவள் கண்ணீருடன் கேட்க,

" அது எல்லாம் இல்லை மா.. நீ வா.. " என்று அவளிடம் மருத்துவமனையின் பெயரைக் கூறி விட்டு, அலைபேசியை அணைத்தார்..

அவளும் தன் தம்பியை எழுப்பி விட்டு, தகவலைக் கூறியவள், அவனை துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தாள் ..

மருத்துவமனைக்கு வந்ததும் எங்கே என்று விசாரித்து செல்ல, ஆபரேஷன் தியேட்டர்க்கு வெளியில் நடராஜன் நிற்பதை பார்த்ததும், அவருக்கு அருகில் சென்று, என்னவென்று விசாரிக்க, அவரும் நடந்ததை கூறினார்..

" உயிருக்கு ஆபத்து இல்லை ம்மா.. காயம் மட்டும் தான்.. கவலைப் படாதே " என்று ஆறுதல் வார்த்தை கூறினார்..

சரி என்றாலும், உள்ளுக்குள் ஏதோ பிசைந்த உணர்வு..

அவளைப் பார்த்து சென்ற பிறகு தான் அவனுக்கு நேர்ந்தது.. என்ன ஆகி இருக்கும் என்று நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஏதோ வெடிப்பது போல இருந்தது..

அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவர்கள் வெளியே வந்து, " கொஞ்ச நேரத்துல ICU க்கு ஷிபிட் பண்ணிருவோம்.. நீங்க போய் பார்த்துக்கோங்க.. " என்று சொல்லி விட்டு சென்று விட்டார்..

ICU வார்ட்க்கு மாற்றிய பிறகு, செவிலியர் வந்து சொல்லி விட்டு செல்ல, முதலில் நடராஜன் சென்று பார்த்து விட்டு வந்தார்..

பின்னர், கவி உள்ளே சென்றாள்.. அவனோ நெற்றி, கன்னம், கை, கால் மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் கட்டு போடப் பட்டு இருந்ததை கவலையுடன் பார்த்தாள்.. அவளுக்கு கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..

அதை துடைத்துக் கொண்டு அவன் அருகினில் நெருங்கியவள், அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, " நீங்க சந்தோசமா இருக்கனும்னு தான் நான் போனேன்.. இப்போ இப்படி பாக்க வேண்டியதா இருக்கு.. " என்று அழுது கொண்டே கூறினாள்.. அவளது கண்ணீர் அவன் கைகளிலும் விழுந்தது..

அவனோ மயக்கத்தில் இருந்தான்.. ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் அவன் ஆழ் மனதை சென்று அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்..

சிறிது நேரம் இருந்து விட்டு, அவள் வெளியில் சென்று விட்டாள்..

மறுநாள் காலையில், மயக்கம் தெளிந்ததும் செவிலியர் வந்து கூற, மூவருமாக உள்ளே சென்றனர்..

கண்களை மூடி இருந்தவன், மெல்ல கண் திறக்க, உடல் எல்லாம் அவ்வளவு வலி.. அவன் பார்த்தது என்னவோ முதலில் அவனது மனைவியை தான்.. அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

கண்கள் கலங்கி கண்ணீர் வெளியில் வர, அதை அவன் பார்த்து விடாமல் இருக்க, துடைத்து விட்டாள்.. ஆனால் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களுக்கு தப்பாமல் போகுமா..

நடராஜன் தான் மகனிடம் பேசினார்.. ஆறுதல் வார்த்தைக் கூறினார்.. ஆனால் அது எல்லாம் அவன் மூளையை எட்ட வில்லை. கவி எதுவும் பேசாமல் அமைதியாக மட்டுமே நின்றாள்..

நடராஜன் பேசிவிட்டு, அவனிடம் சொல்லி விட்டு வெளியில் வர, கதிரும் " வர்றோம் மாமா.. " என்றான்..

இவனை நாம் கண்டு கொண்டது கூட இல்லை.. இவன் உரிமையுடன் உறவு பாராட்டுகிறானே என்று நினைத்தான்..

கவியும் சிறு தலை அசைப்புடன், அவனிடம் சொல்லிவிட்டு கிளம்ப, அவளின் முதுகையே வெறித்து பார்த்தான் அவள் மறையும் வரை..
சென்றதும், கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான்.

*************

மறுநாள் மருத்துவமனையில், மதி, அவளிடம் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, Dr. ஹரி பிரசாத் இடம் இருந்து அழைப்பு வந்தது..

அழைப்பை ஏற்று பேச தொடங்கியவளிடம் , அவனது அறைக்கு வர சொல்லி கூறி இருந்தான்..

இவளும் சிறிது நேரம் காத்து இருக்கும் படி சொல்லி விட்டு, அவனது அறையை நோக்கிச் சென்றாள்..

" எக்ஸ்கியூஸ் மீ சார்.. " என்று கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தவளை ,

" வாங்க டாக்டர்.. சிட்.. " என்று அவளை இருக்கையில் உக்காரும்படி கூற,

அவளும் உட்கார்ந்து விட்டு, " என்ன விஷயம் சார்.. வர சொல்லி இருந்தீங்க.. " என்று கேட்டாள்..

" ஆமா.. அப்பா சொன்னாரு.. நீங்க இங்க இருந்து ரிலீவ் ஆக போறதா.. ஆனால் அதுக்கு முன்னாடி, நீங்க ஒரு மெடிக்கல் கான்பெரென்ஸ் அட்டென்ட் பண்ணனும்.. " என்று கணினியில் எதையோ பார்த்துக் கொண்டு அவளிடம் சொல்ல,

" என்ன சார்.. நான் எப்படி.. " என்று அவள் தயங்கியவாரு கேட்க,

" இதுக்கு வேற ஆப்சன் இல்லை.. சோ நீங்க தான் போயாகனும்.. ஏன் னா, இது உங்க துறை சம்மந்தப்பட்டது தான் .. அதுனால நாங்க உங்களை தான் செலக்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை.. " என்றான் அவன்..

அவளும் இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, அவனிடம் " சரி சார்.. நான் போறேன்.. " என்றவள், " சார், எங்க.. எப்போ.." என்று கேட்டவளுக்கு,

" கான்பெரென்ஸ் பெங்களூர் ல, நெஸ்ட் வீக் வெட்னெஸ்டே நடக்குது.. " என்றான்..

அவளுக்கு இது ஒன்றும் புதிது இல்லை.. இது போன்ற பல கான்பெரென்ஸ் அவள் சென்று வந்து இருக்கின்றாள்..

" ஓகே சார்.. " என்றவளிடம்,

" உங்க கூட அப்பா வர்றது கஷ்டம்.. மாக்ஸிமாம் நான் தான் வருவேன்.. " என்றான் அவன்..

" ஓகே பைன் சார்.. " என்று சிறு புன்னகையுடன் சொல்லி விட்டு, வெளியில் வந்தாள்..

மாலையில் அழைத்துச் செல்ல, வெற்றி வர முடியாத காரணத்தால் நண்பன் குமரனை அனுப்பி வைத்தான்..

அவனும் வெற்றியின் காரை எடுத்துக் கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு வரும் வழியில், " என்ன ண்ணா, வர வர எல்லாருமே ரொம்ப பிஸியா இருக்கீங்க போல.. யாரையுமே பார்க்க முடியுறது இல்லை.. " என்று கேட்டதற்கு,

" ஆமா மா.. ஒரு வேலை விஷயம்.. அதான்.. வெற்றி உன்கிட்ட சொல்லி இருப்பானே மா.. என்ன ஏதுனு.. " என்று அவன் கேட்டதற்கு,

" முழுசா சொல்லல.. அரையும் குறையுமா சொன்னாரு.. " என்று ஒரு பெருமூச்சுடன் சொல்ல,

" அவசியம் வரும் போது அவனே சொல்லுவான் மா.. " என்று அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தான் குமரன்..

சிறிது நேரம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, வீசுகின்ற இதமான காற்றை ரசித்துக் கொண்டு வந்தாள்..

வீடு வரவும், அவளை இறக்கி விட்டவன், அவளிடம் " சரி.. நான் கிளம்புறேன் மா.. " என்று அவளிடம் சொல்லி விட்டு கிளம்பும் போது,

" அண்ணா.. ஒரு நிமிஷம்.. " என்று அழைத்தவளை பார்த்தவனிடத்தில்,

" இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லறீங்களா.. அவருகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... " என்றாள்..

" சரி மா நான் சொல்றேன்.. " என்றவன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்..

அவனும் சென்று விஷயத்தை வெற்றியிடன் கூற, " சரி டா நான் பார்த்துகிறேன்.. " என்று முடித்துக் கொண்டான்..

இரவு எப்பொழுதும் செல்லும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வீட்டிற்கு வந்து விட்டான்.

அப்பொழுது தான், கற்பகம், லட்சுமி மற்றும் மூர்த்தியிடம் பேசி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்..

இவனை பார்த்தவுடன், " இன்னைக்காவது வீட்டுக்கு நேரத்துக்கு வரணும்னு தோணி இருக்கே.. வீட்டுல உனக்காக உன் பொஞ்சாதி இருக்கா.. அதை நியாபகம் வச்சிக்கோ வெற்றி... இப்படி எல்லாம் இருக்காத... " என்று சற்று கண்டிப்புடன் அவனிடம் கூறினார்..

"சரி ம்மா நான் பார்த்துகிறேன்.. " என்றவன் அறைக்குச் சென்று குளித்து விட்டு உடையை மாற்றி வர வரலாம் என்று சென்றான்...

அறைக்குள் நுழைய , அறையில் மதி இருப்பது போல் தெரியவில்லை..

" என்ன, நம்மளை வர சொல்லிட்டு, அவளை ஆள காணோம்.. " என்று குளியல் அறைக் கதவை திறப்பதற்கு கையை வைக்க போகும் சமயத்தில், கதவு உள் பக்கமாக இருந்து திறந்தது.. அங்கு ஏற்கனவே மதி குளித்து முடித்து, பூத் துவாலையை மட்டும் உடலில் கட்டிக் கொண்டு வெளியில் வந்தாள்..

இந்த நேரத்தில் அவன் வர மாட்டான் என்று நினைத்து, துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, வெளியில் வந்து உடையை உடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து வெளியில் வர, வெளியில் அவன் நிற்பதை கண்டவளுக்கும் அதிர்ச்சி..

அவனுக்கும் இவளை இந்த கோலத்தில் கண்டவனுக்கும் அதிர்ச்சி..

மேல் இருந்து கீழ் வரை அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன், எச்சில் விழுங்கிக் கொண்டே " மதி.. " என்று கிறக்கமாக அழைத்தான்..

அவளுக்கும், அவன் ஆளை விழுங்கும் பார்வையை சந்திக்க இயலாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள்..

சட்டென, நிதானத்திற்கு வந்தவன், " நான் குளிச்சிட்டு வரேன்.. நீ ட்ரெஸ் மாத்து.. " என்று சொல்லி விட்டு அவளை கடந்து குளியல் அறைக்குள் நுழையப் பார்க்க,

சட்டென அவன் கையை பிடித்தவள், அவனை பார்க்க, அவனும் கேள்வியாக அவளைப் பார்த்தான்..

" இப்படி என்னை பார்த்தும் கூட உங்களுக்கு ஒன்னும் தோணலையா.. எதுக்காக உங்க உணர்ச்சிகளை கட்டு படுத்திகிட்டு, என்னை விலக்கி வைக்கிறீங்க... " என்று அவள் கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி, குரல் தழுதழுத்தது..

" இதை பத்தி பேசத்தான் சீக்கிரம் வர சொன்னியா.. " என்று கேட்டவனை,
அடி பட்ட பார்வை பார்த்தவள், அவனது கையை விட்டு விட்டாள்..

அவனும், அவளையும் கையையும் மாறி மாறிப் பார்த்தவன், குளியல் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டான்..

அவளும் வெளியில் வந்து, இரவு உடையை அணிந்தவள், அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் ஒன்று மட்டும் அவள் உணர்ந்தாள்.. தானாக அவள் அவனிடன் நெருங்கியும், அவன் விலகிச் சென்றது அவள் தன்மானம் அடி வாங்கியதாக உணர்ந்தாள்..

உள்ளே சென்ற வெற்றிக்கு, மென்மேலும் அவளை கஷ்டப் பட வைக்கிறோமோ என்று அவனுக்கு குற்ற உணர்வு அதிகரித்ததே தவிர குறையவில்லை..

இது பற்றி அவளிடம் பேச வேண்டும்.. தான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்பதை அவளிடம் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..

குளித்து உடை மாற்றி விட்டு வந்தவன், அவள் அமர்ந்து இருந்ததை பார்த்ததும், " சாப்டியா.. " என்று கேட்டான்..

அவளும் "ம்ம்ம்.." என்று மற்றும் கூறினாள் அவனை பார்க்காமல்..

" நான் இன்னும் சாப்பிடல... எனக்கு எடுத்து வை மதி.. " என்றான்..

அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக முன்னாள் நடக்க, அவனும் பின் தொடர்ந்து சென்றான்..

அவன் ஒரு இருக்கையில் அமர, அவளும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, அவனுக்கு எடுத்து வைத்தாள்..

அவனோ அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் பார்ப்பது தெரிந்தாலும் அவள் அவனை கண்டு கொள்ளவில்லை..

சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவ போக, அவள் அவன் உணவு உண்ட தட்டை கழுவி வைத்து விட்டு, வெளியில் வந்து அறையை நோக்கிச் செல்ல முயல, " மதி... " என்று அழைத்தான்..

சென்றவள் அப்டியே நிற்க, " வெளிய வா.. கொஞ்ச நேரம் நடந்துட்டே பேசலாம்.. " என்றான்..

அவளும் வெளியில் அவனுடன் சென்று, சிறிது நேரம் காலார நடந்தனர்..

அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..

என்னமோ வெற்றிக்கு அவள் முகத்தை பார்க்கவே ஏதோ போல இருந்தது.. தயக்கம், தடுமாற்றம் எல்லாம்..

சிறிது நேரம் நடந்தவள், அங்கு போட பட்டிருந்த பென்ஞ்சில் அமர்ந்து கொண்டாள்..

அவனும் அவள் அருகினில் வந்து அமர்ந்து, அவளது முகத்தை பார்க்காமல் முன்னால் பார்த்துக் கொண்டு, " என்ன விஷயம்.. எதை பத்தி பேசணும்.. " எனக் கேட்டான்..

அவளும் அவளுடைய மௌனத்தை கலைத்து,

" நெஸ்ட் வீக் புதன் கிழமை, பெங்களூர் ல ஒரு மெடிக்கல் கான்பெரென்ஸ் இருக்கு.. அதை அட்டென்ட் பண்ண என்னை தான் போக சொல்லி இருக்காங்க... நானும் சரினு சொல்லிட்டு வந்துட்டேன்.. இதை பத்தி சொல்ல தான் உங்களை சீக்கிரம் வர சொன்னேன்.. " என்றாள்..

அவன் "ஓ !! அப்டியா.. சரி போய்ட்டு வா மதி.. " என்று கூறியவன்,
பின்னர், " நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மதி.. " என்றான்..

" என்ன " என்று அவள் திரும்பி அவனைப் பார்த்து கேட்க,

" நான் சொன்னேன்ல.. இப்போ ஒரு கேஸ் போய்ட்டு இருக்குனு.. " என்று கேட்க,

அவளும் ஆமாம் என்பதாய் தலை அசைத்தாள்..

" அதுக்கு நானும் பெங்களூர் போகணும்.. அதே புதன் கிழமை தான்.. " என்றான்..

" ஓஹோ... " என்று அவள் சொல்லிக் கொண்டாள்..

ஆனால், "அதே நாள்.. அதே இடம்.. " என்று அவள் மனதின் உள்ளேயே நினைத்துக் கொண்டாள் .

அவளிடம் இருந்து வேறு மாதிரியான எதிர் வினையை எதிர் பார்த்தானோ என்னவோ, இந்த பதிலைக் கேட்டதும், சிறிது ஏமாற்றம் அடைந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..

"அப்புறம் இன்னொரு விஷயம்..." என்று ஆரம்பித்தவன்,

" நம்ம குமரனுக்கு, கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு ஆக்சிடேன்ட் ஆச்சி. அதுல டாக்டர் அவனுக்கு குழந்தை பிறக்குறதுக்கு வாய்ப்பு இல்லனு சொல்லிட்டாங்க.. ஆனால் முறையான உணவு, உடற்பயிற்சி, இருந்தால், காலப்போக்கில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இந்த நிலை மாற 50 சதவீதம் வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க.. " என்று அவளிடம் சொல்ல,

அவளும் மேற்கொண்டு சொல் என்பது போல அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்..

" ஆனால் அவன் இப்போ கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்... அவன் அதை பதியே நெனச்சுக்கிட்டு கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்... அவனை உயிர்க்கு உயிரா விரும்புற அவன் முறைப் பொண்ணு இருக்கா.. என்னால அவளுக்கு எந்த வித கஷ்டமும் வந்துர கூடாதுனு நினைக்கிறான்.. அவன் ரொம்ப நல்லவன் மதி.. அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.. " என்று முழுதாக அவளிடம் சொல்லி முடிக்க,

அவளும் அனைத்தையும் கேட்டு விட்டு, " அவருக்கு நேரம் இருக்கும் போது என்னை ஹாஸ்பிடல் வந்து பாக்க சொல்லுங்க.. நான் செக் பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.. " என்று சொல்லிவிட்டு, அவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள் ..

செல்பவளின் முதுகையே வெறித்துப் பார்த்தவன், அந்த பென்ஞ்சில் பின்னால் தலை சாய்த்து வானத்தில் உலா வரும் அந்த மதியைப் பார்த்தான்.

சிறிது நேரம் கழித்து, முன் பக்க கதவை சாற்றி விட்டு, விளக்கு எல்லாம் அணைத்து விட்டு, அறைக்குச் செல்ல, அங்கு இரவு விளக்கை மட்டும் ஒளிர விட்டு அவள் படுத்து இருந்தாள்..

இன்னும் உறங்கி இருக்க மாட்டாள் என்று அறிந்தவன், மறு பக்கம் கட்டிலில் படுத்து மேலே விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்..

அருகினில் பக்கவாட்டாக, திரும்பி பார்க்க, அவள் அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்...

அவளையே பார்த்து இருந்தவன், என்ன நினைத்தானோ, அவளிடம் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டு படுக்க முயல, அவளோ அவன் கையை தட்டி விட்டாள்..

அவள் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.. இதில் நான் செய்வதற்கு கோபப் படாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் என்று நினைத்தவன்,

" மதி மா.. " என்று அவளுக்கு காதின் அருகில், மெல்லிய குரலில் அழைக்க, அவள் என்னவென்று கூட திரும்பி பார்க்கவில்லை..

"ப்ச்... கோவமாடி.." என்று அவன் கேட்டதற்கு, மௌனமாகவே இருந்தாள்..

அவளை அவன் பக்கம் திருப்பி அவளது முகம் பார்க்க, அவளும் இப்பொழுது அவனை தான் பார்த்தாள்..

ஆனால் கண்கள் கலங்கி, சிவந்து இருந்தது..

" தேனு.. இப்போ எதுக்குடி அலற.. " என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டபடி கேட்க,

" உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு தெரியும்.. நான் உங்க டைரில இருக்குற எல்லாத்தையும் படிச்சிட்டேன்.. உங்க மனசு முழுக்க நான் தான் இருக்கேனு தெரியும்.. ஆனால் நானா நெருங்கி வந்தும் ஏன் என்னை அவொய்ட் பண்றீங்க.. அதான் எனக்கு புரிய மாட்டேங்குது.." என்று சாதாரணமாக ஆரம்பித்து அழுகையுடன் முடித்தாள்.. அவன் மார்பினில் சாய்ந்து விம்மி வெடித்து அழுதாள்.. இத்தனை நாள் அவள் மனதில் இருந்த பாரங்களை எல்லாம் அவனிடத்தில் அழுது கொட்டிக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் அவனது மார்பை நனைத்தது..

மார்பினில் சாய்ந்து இருந்தவாரே, " நீங்க ஏதோ என்கிட்ட மறைக்கிறீங்க.. அது மட்டும் எனக்கு புரியுது... " என்றாள்..

அவனது கண்களும் கலங்கி, இரு சொட்டு கண்ணீர் விழுந்தது..

அவள் அவன் முகத்தைப் பார்த்து, அவளது கைகளை கிண்ணங்களாக குவித்து, அவனது கன்னத்தில் வைத்தவள், " எதா இருந்தாலும் சொல்லுங்க பார்த்துக்கலாம்.. " என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டு கூற,

அவனும் அவள் விழிகளை ஆழமாக பார்த்தவன், கண்டது என்னவோ, அவனுக்கான நேசம், காதல், தவிப்பு, ஏக்கம் அனைத்தையும்..

என்ன நினைத்தானோ, அவளது இதழில் ஆழமாக இதழ் பதித்து அவளது இதழை அவனது இதழ்களுக்குள் மொத்தமாக உள்வாங்கிக் கொண்டான்..

அவனின் முதல் முத்தம்...
ஆழ்ந்த முத்தம்...
நெகிழ்வான முத்தம்...
நெடிய முத்தம்....

அவனது தேனின், இதழ் தேனை திகட்ட திகட்ட சுவைக்கும் வெற்றயின் மனப் போக்கு மதிக்கு தெரிந்தால் வெற்றியின் நிலைமை என்னவாகுமோ....


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27

இரண்டு நாட்கள் கடந்த நிலையில், மதி மருத்துவமனைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்..

வெற்றி அறைக்குள் நுழைந்த போதும், அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை..

கோவம் ஆத்திரம் எல்லாம் இன்னும் அடங்கவில்லை..

எப்படி சொல்லலாம் அவன்... என்று அன்று இரவில் இருந்து இன்று வரை அவள் கோபமாக தான் இருந்து வருகிறாள்..

அன்று இரவு, அவளுக்கு ஆழமான அழுத்தமான முத்தம் வைத்தவன், அவளில் இருந்து விலகி மெல்ல அவளது முகத்தை பார்க்க, அவளோ அவன் முத்தம் இட்ட மயக்கத்தில் இருந்தாள்..

மெல்ல அவள் நெற்றியிலும் முத்தம் வைத்தவன், " தேனு... " என்று அழைக்க..

அவள் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்..

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் ஏதோ என்னிடம் சொல்வதற்கு தடு மாறுகிறான் என்று மட்டும் புரிந்தது அவளுக்கு...

அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, நான் இருக்கிறேன் என்று வார்த்தையால் சொல்லாமல் அவனுக்கு உணர்வு பூர்வமாக உணர்த்தினாள்...

" நான் கேஸ் விஷயமா பெங்களூர் போறேன் ல.. அது ரொம்ப ரிஸ்க் ஆன ஆபரேஷன்.. கரணம் தப்பினால் மரணம்.. அந்த மாதிரி தான் அது .. " என்று சொல்லிவிட்டு நிறுத்த,

அவளும், "சரி.. அதுனால.. " என்று கேட்டாள்..

" முடிஞ்ச அளவுக்கு நான் ரொம்ப கவனமாக தான் இருப்பேன்.. ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆச்சு னா... " என்று சொன்னவன், அவளை பார்க்காமல், நேராக படுத்து மேலே விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான்..

" ஏன் இப்படி அபசகுனமா பேசுறீங்க.." என்று சற்று பதட்டத்துடன் கேட்க,

" உண்மையை தான் மா சொல்றேன்.. ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆச்சு னா, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்.. " என்று சொல்லி முடிக்க,

அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஒரு அறை.. அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டு, அதிர்ச்சியில் திரும்பிப் பார்க்க, அவளோ கோவத்தில் அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

"மதி.. " என்று அவனது குரல் சுருதி குறைந்து ஒலிக்க,

" என்னை பார்த்தா எப்படி தெரியுது.. வேற கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க.. உனக்கு என் கூட வாழனும் னு ஆசை இல்லையா... இருந்தால் இப்படி எல்லாம் பேச மாட்டியே... என் கூட வாழனும் அப்படின்ற நெனைப்போட, போற காரியத்தை வெற்றிகரமா முடிச்சிட்டு வரணும்னு நினைக்காம இப்படி பேசுற..

இங்க பாரு, வாழ்ந்தாலும் உன்கூட தான்... செத்தாலும் உன் கூட தான்.. இனிமே இப்படி சொல்லிட்டு திரி.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. உனக்கு முன்னாடி நான் போய் சேந்துருவேன்.. " என்று கோவமாக ஆரம்பித்து ஆதங்கமாக முடித்தாள்..

இப்படி ஒரு பரிமாணத்தை அவளிடம் அவன் எதிர் பார்க்கவில்லை..
அவள் அழுவாள் என்று நினைத்து இருக்க, அவள் ஆங்காரமாய் காளி அவதாரம் அல்லவா எடுத்து இருக்கின்றாள் .. இனி இந்த பேச்சை பேசுவது வீண் என்றும், அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக தெரிந்த பின்னர் இனி இப்படிப்பட்ட எண்ணத்தை தன் மனதில் நினைத்து இருப்பது முட்டாள் தனம் என்றும் நினைத்துக் கொண்டான்..

ஆனால் அவள் அடித்தது அவனுக்கு வலித்தாலும் அவன் மேல் உள்ள நேசத்தை மட்டுமே பார்த்தான்.. தன்னை எந்த அளவு விரும்புகிறாள் என்றும் புரிந்து கொண்டான்..

அவள் அவனிடம் பேசி விட்டு, திரும்பி படுத்துக் கொள்ள, அவனோ அவளை பார்த்து, தன் முத்துப் பற்கள் தெரிய சத்தம் இல்லாமல் சிரித்தவன், " லவ் யூ டி பொண்டாட்டி.. " என்று கூறினான்..

அன்றிலிருந்து இன்று வரை, அவள் அதற்கு பிறகு அவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவன் பேச முயற்சி செய்தாலும், அவள் முறைத்து பார்க்கும் பார்வையில் அவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் தந்தி அடிக்க ஆரம்பித்து விடுகின்றன..

இதோ இப்பொழுதும் பேச ஆரம்பிக்கும் முன், அவள் பார்த்த பார்வையில் கப் சிப்.

ஹாஸ்பிடல்க்கு அழைத்துச் செல்ல வந்தவன், அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, இருவருமாக கிளம்பினர்..

நடுவில் பயணத்தில், மருந்துக்கு கூட பேச்சும் இல்லை...ஒன்லி மௌனம் மட்டுமே..

செல்லும் வழியில் பூக்கடை இருக்க, வண்டியை நிப்பாட்டி, அவளுக்கு பூ வாங்கி வந்தான்...

அவள் அவனிடம் இருந்து வாங்குவதற்கு கையை நீட்ட, அவனோ அவளையே பார்த்து இருந்தானே தவிர, அவளிடம் கொடுக்க வில்லை..

சற்று நேரத்தில் புரிந்து கொண்டாள் அவனின் எண்ணத்தை..

அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே, திரும்பி நின்றாள்..

" இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. " என்று அவளின் முனகல் அவனுக்கு கேக்காமல் இல்லை..

மென்மையாக சிரித்துக் கொண்டே, அவளுக்கு பூவை வைத்து விட்டான்..

மீண்டும் இருவரும் வண்டியில் ஏறி பயணம் செய்தனர்..

ஹாஸ்பிடல் வாயிலில் அவளை இறக்கி விட்டு, " மதி.. " என்று அழைக்க..

அவள் திரும்பி முறைத்துப் பார்க்க, அவனோ, " சும்மா சும்மா முறைக்காதடி... பேச வர்றது கூட மறந்து போயிருது.. " என்று சொல்லியவன்,

பின் " இன்னைக்கு குமரன் வருவான்.. பார்த்துக்கோ.. " என்று சொல்ல,

அவளும், " பழைய ரிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டு வர சொல்லுங்க.. " என்று போற போக்கில் சொல்லிவிட்டு போனாள்.

" அடியேய்.. நின்னு பேசுனா தான் என்ன.. " என்று அவன் கேட்டது அவள் காதில் விழுந்தாலும், நிற்காமல் உள்ளே சென்றாள்..

அவளுடைய கோவமும் அவனுக்கு புதிதாக இருந்தது..

கணவன் மனைவிக்குள், ஊடலும் கூடலும் இருந்தால் தானே வாழ்க்கையில் சுவாரசியங்கள் இருக்கும்..

அவளைப் பார்த்து சிரித்து விட்டு தலையை கோதிக் கொண்டவன், வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று இருந்தான்..

அவன் சென்று சிறிது நேரத்தில், குமரன் வந்தடைந்தான்..

" வாங்க ண்ணா.. " என்று கூறியவள்,
ஒரு செவிலியை அழைத்து, " அவருக்கு ஸ்பெர்ம் சாம்பிள் கலெக்ட் பண்ண டெஸ்ட் டுயுப் கொடுங்க.. " என்றாள்.

செவிலியரும் குமரனிடம் கொண்டு வந்து கொடுக்க, " அண்ணா.. இதுல சாம்பிள் கலெக்ட் பண்ணி கொடுங்க.. அப்புறம் ஈவினிங் நீங்க திரும்ப வர்ற மாதிரி இருக்கும்.. அப்போதான் ரிசல்ட் கிடைக்கும்.. " என்றாள்..

அவனும் " சரி மா.. " என்றான்..

அவன் உடனே எல்லாம் இங்கே வருவதற்கு சம்மதிக்கவில்லை.. அவனை நண்பர்கள் நால்வரும் மிகவும் கட்டாயப் படுத்தி அனுப்பி வைத்து இருந்தனர்...

அதனால் தான் அவர்களுக்காக ஒரு முறை செய்து பார்த்து விடலாம் என்று வந்து இருந்தான் குமரன்..

******-

ICU வில் இருந்து ரவியை நார்மல் வார்டு க்கு மாற்றி இருந்தனர்..

கவி தான் அவன் கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்..

அவனுக்கு சரியான நேரத்தில் மருந்து கொடுப்பதில் இருந்து, அவன் வலியில் முணங்கும் போது, செவிலியரிடம் கூறி மருத்துவரை வர வழைப்பதும், அவனுக்கு உணவு ஊட்டி விடுவதும், அவன் இயற்கை உபாதைகளை முகம் சுளிக்காமல் செய்வது ஆகட்டும்... அத்தனையும் அவள் அவனுக்காக பார்த்து பார்த்து செய்தாள் ..

அவன் சில நேரம், உணவு கொடுக்கும் போது, ஒவ்வாமையால் வாந்தியும் எடுத்து விடுவான்..

ஆனால் அவள் சிறிதும் அதை பார்த்து முகம் சுளிக்காமல், அருவருப்பு இல்லாமல் அதை சுத்தம் செய்து விடுவாள்..

நாம் நேசித்தவருக்கு, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..

" காதல் ஒன்றும் சுத்தம் கித்தம்
பார்ப்பதில்லையே..
எச்சில் கூட புனிதமாகுமே.." என்ற பாடலின் வரிகள் சரியாக பொருந்தும்..

ரவி ஒன்றும் பெரிதாக பேசவில்லை அவளிடம்.. ஆனால் அவள் அவனுக்காக செய்யும் பணிவிடைகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்..

இதில் நடராஜன் மட்டும் ரவியிடம் பேசிக் கொள்வார்..
அவனும் அவர் கேட்பதற்கு மட்டும் பத்தி கூறுவான் ..

கவியிம் தம்பி, கதிரும் தமக்கையின் கூடவே இருந்து அவளுக்கு உதவி புரிந்தான்..

அன்று அப்டித்தான்.. கவி, கதிருக்கு ஏதோ வாங்க வேண்டும் என்று அவனுடன் அவள் கடை வீதிக்கு சென்று இருந்தாள் ..

ரவியின் தந்தை மட்டுமே அவனுடன் இருந்தார்.. இப்பொழுது தன்னுள் தோன்றிய சந்தேகத்தை தந்தையிடம் கேட்பதற்கு சரியான நேரம் என்று நினைத்து, " ப்பா.. எனக்கு ஆக்சிடேன்ட் ஆன ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம வீட்டுல என்ன நடந்துச்சு.. ஏன் கவி என் கண்ணுல படவே இல்லை.. எனக்கு விபத்து நடந்த அன்னைக்கு நான் அவளை ஒரு ரெஸ்டாரெண்ட் ல பார்த்தேன்.. அங்க அவ வேலை செஞ்சிட்டு இருந்தா.. அவ ஏன் அங்க போகணும்.. " என்று கேள்விகளை கேட்க,

அவரோ ஒரு பேருமூச்சுடன்.. நடந்ததை ஒன்று விடாமல் கூறினார்..

" அந்த பொண்ணுகிட்ட எவ்ளோவோ சொல்லி பார்த்தேன்.. கேக்கல.. உன் சந்தோஷத்துக்கு அவ வீட்டை விட்டு போய்ட்டா.. பாவம்.. அங்க போன பிறகு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா.. அதான் அவ வேலைக்கு போய் இருக்கா போல..." என்று கண்ணீருடன் கூற, பின்

" எனக்கே அந்த பொண்ண நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.. உனக்கு ஏன் டா அந்த பொண்ணோட அருமை புரியல.. " என்று ஆதங்கத்துடன் ஆரம்பித்து கோபத்துடன் முடித்தார்..

அதனைக் கேட்டு மெதுவாக கண்கள் மூடியவனுக்கோ, திருமணமான நாளில் இருந்து இன்றும் வரைக்கும் அவளின் ஒவ்வொரு செயலையும் அசை போட்டு பார்த்தான்.. அதில் எல்லாவற்றிலும் அவனின் மீதான நேசம் மட்டுமே இருந்தது...

அப்படியே அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன...

அவளை முதன் முதலில் சந்தித்தது.. அவள் மறுத்தும் விடாமல் அவளை பின் தொடர்ந்து, அவளை காதலிக்க வைத்து, இருவருமாக சேர்ந்து இருந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து பார்த்தான்..

அவன் மீது கொண்ட நம்பிக்கையில் அவனிடம் அவளையே கொடுத்தவள், இப்பொழுது அவன் மகிழ்ச்சிக்காக அவனையே விட்டுச் சென்று இருக்கின்றாள்...

அவளுடன் கூடிக் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தவன், அவளிடம் வாக்குறுதி கொடுத்ததையும் நினைத்துப் பார்த்தான்..

அவளின் நேசத்திற்கு சிறிதும் தகுதி இல்லாதவன் நான்..

நான் வேறு ஒரு பெண்ணை மணக்கும் தருவாயில் இருந்தும் கூட, அவளிடம் என் மேல கொண்ட நேசத்தின் அளவு குறையவில்லையே..

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்க, அவன் கண்களில் இருந்து கண்ணீர் பக்க வாட்டில் வழிந்து ஓடியது..

ரவி கண்ணை மூடியதும், அவன் உறங்கி விட்டான் என்று கருதி அவன் தந்தை வெளியில் சென்று நின்று கொண்டார்..

ஆனால் இவனோ தனது பாவத்தை அவன் கண்ணீரில் கழுவிக் கொண்டிருந்தான்...


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 28

மாலை போல மருத்துவமனைக்கு வந்த குமரனிடம், சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மதி..

பின்னர் அழைத்து, " வாங்க ண்ணா.. உக்காருங்க... " என்றவள்,

"நீங்க இதுக்கு முன்னாடி, அதாவது உங்களுக்கு அடி பட்டு இருக்கும் போது, எந்த ஹாஸ்பிடல்ல பார்த்தீங்க.. " என்றாள்..

அவனும் யோசித்தவாரே, " அது அந்த ரிப்போர்ட் ல இருக்குமே மா... " என்றான்..

அவளும் அதை எடுத்து எங்கு என்று பார்த்துவிட்டு, அவனிடம் அதை பற்றி விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்..

"இப்போ உங்க ஸ்பெர்ம் டெஸ்ட் பண்ணி பார்த்ததுல, எல்லாமே பெர்ஃப்க்டா இருக்கு.. அதுல ஒரு சதவீதம் கூட குறையல.. " என்று சொல்லி விட்டு நிறுத்த,

அவனுக்கோ மகிழ்ச்சியில் அவன் இதழ்கள் விரிந்தன...

" இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.. " என்றதும், குமரன் யோசனையாக அவளைப் பார்க்க ஆரம்பித்தான்..

" இல்லை, நீங்க இதுக்கு முன்னாடி உங்களுக்கு விபத்து நடந்து, அதுல உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை.. ஒரு வேலை உங்களோட உடல் ஆரோக்கியம், உணவு முறை பொறுத்து அதுல மாற்றம் நிகழலாம் னு சொன்னதா வெற்றி என்கிட்ட சொன்னாரு.. " என்றவள் சொல்லிவிட்டு அவனைப் பார்க்க,

அவனும் எல்லாம் சரிதான் என்பதை போல தலை அசைத்தான்..

"அந்த மாதிரி னா, இவ்ளோ பெர்ஃப்க்டா நூறு சதவீதம் இருக்காது.. ஒரு 50-60 சதவீதம் தான் மாற்றம் இருக்கும்." என்றவள், பின்

" இதுல ஏதோ தப்பு இருக்குற போல இருக்கு.. ஒன்னு அந்த டாக்டர் போலியா.. இல்லை இதுக்கு பின்ன வேற யாரும் இருக்காங்கலானு நீங்க பாருங்க... " என்று சொல்லிவிட்டு அவனிடம் பழைய ரிப்போர்ட் அடங்கிய கோப்பையும், இப்பொழுது இவள் தயார் செய்த புது கோப்பையும் அவனிடம் கொடுத்தாள்..

" சரிம்மா நான் கிளம்புறேன்.. " என்று சொல்ல, அவளும் " சரி ண்ணா.. " என்று எழுந்து அவனை வழி அனுப்பி வைத்தாள்..

குமரன் அங்கிருந்து கிளம்பி, நேராக அவன் கோவிலுக்கு சென்று, உண்மையை உணர வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினான்..

மாலை நேரம், மதியின் டூயூட்டி முடிந்து, அவள் கிளம்ப போகும் நேரத்தில், Dr. ஹரி அவளது அறைக்கு வந்தான்..

" வாங்க சார்.. நீங்க கூப்ட்டு இருந்தா நான் வந்து இருப்பேனே.. இவ்ளோ தூரம் நீங்க வரணுமா.. " என்றவள்,

பின் அவனை அமர சொல்ல, அவனும் அமர்ந்தவன், " நாளைக்கு ஈவினிங் கிளம்பனும்.. அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.. " என்றான்..

" சார்.. என் ஹஸ்பண்ட்'ம் ஒரு வேலை விஷயமா பெங்களூர் போறாரு.. நான் அவரு கூடவே வரேன் சார்.. நீங்க எங்க கான்பெரன்ஸ்னு சொன்னா, டைம்க்கு நான் கிளம்பி அங்க வந்துருவேன் சார்.. " என்றவளுக்கு,

" ஓ..அப்டியா.. சரி நீங்க நாளைக்கு கிளம்பி வாங்க.. நான் உங்களுக்கு எங்கனு மெசேஜ் போட்டு விடுறேன்.. ஷார்ப்பா 9 மணிக்கு நீங்க அங்க இருக்கனும்.. " என்று சொல்லி விட்டு சென்றான்..

அவளும் அங்கிருந்து கிளம்பி வெளியே வர, வெற்றியும் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான்..

வந்ததும் கிளம்பியவர்கள், சிறிது நேரம் அமைதியாய் இருக்க, வெற்றி அந்த அமைதியை களைத்தான்..

"குமரன் விஷயம் சொன்னான்.. அது என்னனு விசாரிச்சு பாக்கணும்.. ஆனால் இது மூலமா அவன் அதிகமான மனக் கஷடம் தான் அனுபவுச்சி இருக்கான்.. அதை பத்தி என்ன ஏதுனு விசாரிக்கணும்.. " என்று தன் பாட்டில் பேசிக் கொண்டே போனான்..

அவள் காதினில் விழுந்தாலும், பதில் எதுவும் கூறாமல் வந்தாள்..

அவனும் ஒரு பெருமூச்சுடன் வண்டியை செலுத்தினான்..

நேராக, இங்கே அவளது தாயின் வீட்டிற்கு வந்து இறக்கி விட்டான்..

அவனை ஏன் என்று பார்க்க, " அம்மா இங்க தான் இருக்காங்க.. நீயும் கொஞ்ச நேரம் இருந்துட்டு பேசிட்டு ரெண்டு பேருமா வாங்க.. " என்று சொல்ல,

" எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு.. நான் நம்ம வீட்டுக்கு போகலாம் னு இருந்தேன்.. " என்று சொல்ல,

அவனும், " சரி இரு வரேன்.. " என்று சொல்லி விட்டு, தன் அன்னையிடம் சென்று, வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு வந்தான்..

பின் இருவருமாக சேர்ந்து வீட்டிற்கு வந்தனர்..

அவன் வருவதைப் பார்த்தவள், " எப்பவும் அப்படியே கிளம்பிடுவீங்களே.. " என்று கேட்டாள்..

" வந்தா ஏன் வர்ற னு கேக்க வேண்டியது.. வரலனா ஏன் வரலைனு கேக்க வேண்டியது.. இந்த பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியல.. " என்றான்..

அவளோ அவனை முறைத்து பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள்..

அறைக்கு சென்று தன்னை சுத்த படுத்துக் கொண்டு வந்தவள் கட்டிலில் அமர்ந்தாள் ..

அவனும் கட்டிலில் தான் அமர்ந்து இருந்தான்..

" இன்னைக்கு எங்க ஹாஸ்பிடல் டீன் பையன், என்கிட்ட வந்து நாளைக்கு பெங்களூர் போறதை பத்தி டிஸ்கஸ் பண்ணாரு.. " என்றாள் அவனை பார்த்து..

அவன் அலை பேசியை பார்த்து இருந்த வாரே, " சரி என்ன சொன்ன நீ அதுக்கு.. " என்றான்..

" நான் என்ன சொல்ல.. என் புருசனும் அங்க தான் ஒரு வேலையா போறாரு.. நான் அவருகூட வரேன்னு சொல்லிட்டேன்.. " என்றாள்..

" ப்ச்.." என்றவன், பின்பு நெற்றியையை நீவி விட்டவன், " நான் உன்னைய என்கூட கூட்டிட்டு போறேன்னு சொல்லவே இல்லையே.. " என்றான்..

அவளுக்கு ஏதோ போல ஆகி விட்டது.. அவன் அப்படி கூறியதும் அவள் முகமே சுருங்கி விட்டது..

" நீங்களும் அங்க தானே போறீங்க.. அதுனால உங்க கூட சேர்ந்து போகலாம் னு இருந்தேன்.. " என்றாள் சுரத்தே இல்லாத குரலில்...

" மதி!! இங்க பாரு.. நான் போற வேலை வேற.. உன்னை என்கூட கூட்டிட்டு போக முடியாது.. புரிஞ்சிக்கோ மதி மா.. " என்றான் சற்று மெல்லிய குரலில்..

" நாம் ஒன்று நினைத்து இருக்க.. அவன் ஒன்று நினைத்து இருக்கின்றான்.. இதற்கு மேல் வேறு என்ன அவனிடம் பேசுவது... என்று நினைத்தவள், அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்..

அவள் வாடிய முகத்தைக் கண்டு , அவனுக்கும் ஏதோ போல தான் இருந்தது.. இருந்தாலும் அவனுடைய சூழ் நிலை அது..

Dr.. ஹரி யிடம், கணவருடன் சேர்ந்து வருவதாக கூறி விட்டாள்.. இனி நான் மீண்டும் உங்களுடனே வருகிறேன் என்று கூறினாள் என்ன நினைப்பார்.. அதனால் நாம் மட்டும் தனியாக செல்லலாம் என்று நினைத்தாள்..

பெங்களூரு அவளுக்கு புதிதல்ல.. பல முறை சென்று இருக்கின்றாள் ..

இருப்பினும் வெற்றியுடன் செல்ல ஆசை பட்டாள் .. அந்த ஆசை நிராசை ஆகும் என்று அவள் என்ன கனவா கண்டாள் ..

ஒரு பெருமூச்சுடன் நடப்பதை ஏற்றுக் கொண்டாள்.. அவ்வளவு தான்..

மறுநாள்,வெற்றியின் ஐவர் குழு எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து இருந்தனர்.. அதே சமயம் எல்லாவற்றிற்கும் தயார் நிலையிலும் இருந்தனர்..

மதி அன்று மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்து இருந்தாள்..

ஏனோ காலை விடியலில் இருந்தே அவளுக்கு மனம் மிகவும் சோர்வாக இருந்ததாலும், அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினாலும் அவள் விடுப்பு எடுத்து இருந்தாள்..

வெற்றி கேட்டதற்கு, " எனக்கு ஏதோ போல இருக்கு.. போகல.. " என்று முடித்துக் கொண்டாள்.. அவளுடைய பொழிவின்றி காணப்பட்ட முகமும் அவனுக்கு ஏதோ உணர்த்துவதாய் இருந்தது.. இருப்பினும் அவன் எதுவும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை..

தோட்டத்தில் நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்த சமயம், குமரனிடம் வெற்றி கேட்டான்.. " மச்சான்.. எதுவும் விசாரிச்சியா.. அந்த டாக்டர் பத்தி.. " என்றான்..

" அந்த டாக்டர் எல்லாம் போலி டாக்டர் இல்லை.. அவன் முறைப்படி படிச்சி பட்டம் வாங்குனவன் தான்.. அவனை இப்படி யாரோ சொல்ல சொல்லிருக்கணும்.. அதான் இப்படி தப்பான ரிப்போர்ட் கொடுத்து இருக்கான்.. " என்றான் குமரன்..

" உனக்கு யாரு டா எதிரி.. அதுவும் இப்படி ஒரு ரிப்போர்ட் கொடுக்க.. நீ கல்யாணமே பண்ணக்கூடாது னு நினைக்கிற அந்த புண்ணியவான் யாருனு தெரியல.. " என்று செல்வம் சொல்ல..

" தெரியல டா.. முதல்ல நாளைக்கு நம்ம போய்ட்டு நல்ல படியா முடிச்சிட்டு வருவோம்.. அதுக்கு அப்புறம் இதை பார்த்துக்கலாம்.. " என்றான் குமரன்.

" அதுவும் சரிதான்.. இனி என்ன தமிழ் கூட கெட்டி மேளம் தான்.. மாப்பிளை சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட்டுருவாப்புல.. " என்று அவனை கேலி கிண்டல் பேசி ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தனர்..

அவனும் சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டு பின் " ஆனால் உங்களுக்கு தான் மச்சான் நான் நன்றி சொல்லணும்.. என்னை மட்டும் கட்டாயப் படுத்தி அனுப்பி வைக்காம இருந்தா, இப்போ இந்த உண்மை தெரிஞ்சி இருக்காது.. நானும் இப்படி மனம் விட்டு சிரிச்சு உங்ககிட்ட பேசிட்டு இருக்க முடியாது.. " என்றான் நெகிழ்வுடன்..

நண்பர்களும் அவனை அணைத்துக் கொண்டனர்..

மாலை நேரம் மதி மட்டும் கிளம்பி வெளியில் வந்தாள்.. அங்கிருந்து அவள் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் செல்வதாக ஏற்பாடு..

வெற்றி வீட்டில் இல்லை.. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தவள் அவன் வரவில்லை என்றதும், அவள் வாடிய முகத்துடன் கற்பகத்திடம் மட்டும் சொல்லிக் கொண்டு, கார் வர சொல்லி கிளம்பி இருந்தாள்....

அவளும் விமான நிலையம் அடைந்து, வைட்டிங் ஹால்லில் அமர்ந்து இருந்தாள்..

அவளது பயணத்திற்கான அறிவிப்பு வெளியானதும் போர்டிங் பாஸ் என்ட்ரிக்கு செல்ல ஆரம்பித்தாள்..

வரிசையில் நின்று செக் செய்து கொண்டு உள்ளே நுழையும் சமயம் தன்னை யாரோ தோள் பட்டையில் இடிக்கவும், அவள் யார் என்று பின்னால் திரும்பிப் பார்க்க, வெற்றி தான் குறும்புடன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான்..

அவனைப் பார்த்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது போல இருந்தது..

கலங்கிய விழிகளுடன் அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள்..

அவனும் அவளை அணைத்துக் கொண்டு மெல்ல முதுகை நீவி விட்டான்..

சிறிது நேரம் அவனை அணைத்தபடி இருந்தவள், பின்னர், இடம் பொருள் அறிந்து அவனிடம் இருந்து விலகினாள்... அவனை முறைத்து விட்டு முன்னால் நடக்க அவனோ " உடனே மலையேறிடுவா... " என்று அவளை பின் தொடர்ந்து ஓடினான்..

விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர் இருவரும்..

அவள் ஜன்னல் ஒர இருக்கையில் அமர, பக்கத்து சீட்டில் வேறு ஒரு நபர் அமர வேண்டியது..

அவரிடம் பேசி, வெற்றி மதி அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்..

" மதிக் குட்டி.. பாருடி என்னை.. எப்போ பாரு மூஞ்சை தூக்கி வச்சிட்டே இருக்க.. " என்று அவளிடம் சமாதானமாக பேச முயல,

அவள் கையை பிடித்துக் கொண்டவன், " என் அம்முக்குட்டி இல்லை.. என் செல்லம் இல்லை.. என் பட்டு இல்லை.. என் தேனு இல்லை.. கோவம் வேண்டாம் மதிமா.. மூணு நாளா பேசல என்கூட.. இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்து பிடிச்சிட்டு இருக்க போற.. " என்று கேட்டதற்கு,

" நீங்க சொன்னதுக்கு நான் கோவ படமா இருந்தால் தான் தப்பு.. கோவ பட்டது சரிதான் என்னை பொறுத்த வரைக்கும்.. " என்றாள் ..

" சரி என் தப்பு தான்.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தாண்டி நான் சொன்னேன்.. " என்றதற்கு,

" நான் கேட்டேனா உங்ககிட்ட.. எதையாவது நீங்களா நெனச்சுக்கிட்டு பண்ணால் அதுக்கு நான் பொறுப்பு ஆக முடியாது.. " என்றாள்..

" சரி நேத்து நான் கூப்பிட்டப்போ வர முடியாதுனு சொல்லிட்டு இப்போ மட்டும் வந்து இருக்கீங்க.. " மதி கேட்டதற்கு,

" அதுவா, என் பொண்டாட்டிய பாக்க பாவமா இருந்துச்சு.. அதான் அவனுங்க கூட போகாம உன் மாமன் உன்கூட வந்துட்டேன்ல.." என்றான்..

"அவங்க எல்லாம் ஏற்கனவே போயாச்சா." எனக் கேட்க,

" அவங்க மத்தியானமே கிளம்பிட்டாங்க.. நான் தான் இருக்குற வேலையை முடிச்சி வச்சிட்டு, உன்கூட வந்துட்டேன்.. " என்றான்..

அவளும் அவன் கை வளைவுக்குள் தன் கையை உள்ளே நுழைத்து பிடித்துக் கொண்டு, அவன் கை மேலேயே சாய்ந்து படுத்துக் கொண்டாள்..

விமானமும் பெங்களூரை நோக்கி பயணித்தது..

அந்த பயணம் அவர்களுக்கு எந்த மாதிரி அனுபவத்தை தர காத்து இருக்கிறதோ.. காலம் தான் அதனை முடிவு செய்யும்...

அதே சமயம், ரவியோ பெங்களூரு பயணத்திருக்கு செல்ல முடியாததை எண்ணி வருத்தம் கொண்டான்..

தன் தந்தையிடம் அதை பற்றி சொல்லி வருத்தப் பட்டான்..

ஆனால் அவனுக்கு புரியவில்லை.. கடவுள் அவனுக்கு இந்த விபத்தின் மூலம் அவனுக்கு நல்லதை தான் செய்து உள்ளார் என்று..

அவனுக்கும் அது புரிய வேண்டிய சமயத்தில் கண்டிப்பாக அதை உணர்த்துவார்..


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 29

விமானம் பெங்களூரை அடைந்ததும், இருவரும் இறங்கி வெளியில் நடந்து வர, மதியிடம், " நீ எங்க போகணும் மதி.. " என்று கேட்டான்..

அவள் ஒரு ஹோட்டல்லின் பெயரை சொல்லி, " அங்க தான் கான்பெரன்ஸ் நடக்குது.. அதுக்கு கீழ் தளத்துல எங்களுக்கு தங்குறதுக்கு ரூம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க " என்றாள்..

அவனும் சரி என்றவாரு, காரில் இருவருமாக சேர்ந்து சென்றனர்..

அவளை அங்கே இறக்கி விட்டவன், " மதி!! நாங்க வேற ஹோட்டல்ல தங்கி இருக்கோம்.. உனக்கு நாளைக்கு முடிச்சிட்டு நீ ஹோட்டல் ரூம் ல தங்கி இரு.. நடுவுல எனக்கு கால் பண்ணாத.. நானே உனக்கு முடிச்சிட்டு கூப்பிடுறேன்... " என்றவன்
அவளை ஒரு முறை இறுக்கி அனைத்துவிட்டு, நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு விலகினான்..

அவளும் அதை ஏற்றுக் கொண்டவள், " நான் உங்களுக்காக காத்து இருப்பேன்.. எனக்காக நீங்க நல்ல படியா திரும்பி வரணும்.. " என்று அவனுடம் சொல்லி விட்டு, அவளுடைய பையை எடுத்துக் கொண்டு, இறங்கி உள்ளே சென்றாள்..

அவளுக்கு ஒதுக்க பட்ட அறைக்கு வந்தவள், அறையை போன்றே அவளது மனமும் வெறுமையாக இருந்தது..

குளித்து உடை மாற்றி வந்தவள், எதுவும் சாப்பிட தோன்றததால், அப்படியே உறங்கி விட்டாள்..

வெற்றி அவன் நண்பர்கள் தங்கி இருந்த ஹோட்டல்க்குச் சென்றவன், குளித்து உடை மாற்றி விட்டு, நண்பர்களுடன் உரையாட தொடங்கி விட்டான்..

இருந்தாலும் அவனுக்கு உள்ளுக்குள் ஒரு வித நெருடலாகவே இருந்தது.. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தான்..

அவர்களுக்கு, ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக துப்பாக்கிய எடுத்துக் கொண்டனர்..

கண்டு பிடிக்க முடியாத வகையில் மிகவும் சிறிய அளவில் கேமராக்களை எடுத்து அதனை ஒவ்வொருவரும் அவர்கள் நாளை அணிய போகும் பொருட்களில் பொறுத்திக் கொண்டனர்..

ஏதாவது ஆபத்து நேர்ந்தால் , உடனடியாக அதனை காவல் துறைக்கு அறிவித்து விரைந்து வரும் படி அவர்களுக்கு அலாரம் மூலம், வெற்றியின் கை கடிகாரதில் இருந்து ஒரு பட்டன் மூலம் அமைக்க பட்டு இருந்தது..

அது போக அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், காவல்துறையிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை மருந்து பொருள் சாம்பிள் க்கு கேட்டு வைத்துக் கொண்டனர் இவர்கள் ஐவரும்..

ஆம்.. இவர்கள் நாளை பிடிக்க போவது, போதை மருந்து கடத்தும் கூட்டத்தை தான்..

அந்த கூட்டத்திற்கு தலைவன் போல தான் ஜான்.. அவன் சொல் படி ஒவ்வொரு பார்ட்டிக்கும், இவ்வளவு என்று அனுப்பி வைத்து அவன் மூலமாக சில்லரை வியாபாரிகளுக்கு சென்று அதற்கு பிறகு பொது மக்களுக்கு செண்டு சேருகிறது..

ஆனால் என்ன தான் கிளையை வெட்டி விட்டாலும், மரத்தின் வேர் இருக்கும் பட்சத்தில் கிளை மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டே தான் இருக்கும்..

மரத்தின் வேரை அழித்தால் மட்டுமே முற்றிலுமாக அதனை நீக்க முடியும்..

அதனை உடனடியாக நீக்க முயற்சித்தால் நம் மீது சாய்ந்து நம்மையே அழித்து விடும்..

ஆற அமர அதற்கான சரியான நேரம் பார்த்து, அதை வெட்டி சாய்த்தால் மட்டுமே சாத்தியம்..

அப்டித்தான் பல நாளாக முயற்சி செய்து, அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆள் போல் நடித்து இன்று அவர்கள் அமைக்கும் கூட்டத்தில் பங்கு பெரும் அளவுக்கு வந்து விட்டனர்..

அவர்கள் இது வரை ஜான் என்பவனை சந்தித்தது இல்லை.. அலைபேசியில் பேசியது உண்டு.. மற்ற படி அவர்கள் நாளை தான் அனைவரையும் சந்திக்க இருக்கின்றனர்..

நாளைக்கு என்ன என்ன செய்ய வேண்டும்.. அதை எப்படி செயல் படுத்த வேண்டும் என்று தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டனர்..

எல்லாம் முடித்து விட்டு, அனைவரும் சற்று நேரம் கண் அயரலாம் என்று நினைத்து உறங்கினர்..

வெற்றியும் கண்ணை மூடி படுத்து இருந்தானே ஒழிய, அவனுக்கு பொட்டு தூக்கம் வரவில்லை..

ஏனோ அவன் மனம் முழுக்க ஒரு வித பதட்டமாகவும் படபடப்புடனும் இருந்தது..

அது ஏன் என்றும் புரியவில்லை அவனுக்கு..

யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் நிகழாதவாறு, கடவுளிடம் முறையிட்டுக் கொண்டான்..

மறுநாள் விடியல் யாருக்கு என்ன என்ன வைத்து இருக்கிறதோ..

*******

யார் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.. நான் என் கடமையை செவ்வேனே செய்வேன் என்று கிளம்பி விட்டான் ஆதவன்..

வெற்றியும் மதியும் அவர் அவர் இருக்கும் இடத்தில் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர்..

வெற்றியும் அவனது நண்பர்களும் ஒன்று விடாமல் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டனர்..

மதியும் கிளம்பி, அவள் இருக்கும் அறைக்கே சாப்பாடு கொண்டுவர சொல்லி சாப்பிட்டு மேல் தளத்தில் இருக்கும் கான்பெரன்ஸ் ஹால்லிற்கு சென்றாள்..

ஒன்பது மணி நெருங்கும் சமயம் என்பதால், ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தனர்..

அவள் ஒரு இடத்தில் அமர்ந்து, அவள் Dr. ஹரி க்கு அழைத்துப் பார்த்தாள்.. அழைப்பும் உடனேயே ஏற்க பட்டது..

" சொல்லுங்க Mrs. மதி.. நீங்க வந்தாச்சா.. அங்க.. " என்று அவன் கேட்டதற்கு,

இவளும், " ஆமா சார்.. நான் அங்க தான் இருக்கேன்.. " என்றாள்..

" ஓகே.. நான் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.. " என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்..

மதிக்கு வெற்றி நியாபகமாக இருக்க, "அலைபேசியில் அவனும் அவளும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னால் யாரோ அழைக்கவும் திரும்பி பார்க்க, ஹரி நின்று இருந்தான்..

" வாங்க சார்.. " என்று சொல்லி விட்டு அவனுக்கு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்..

அவனும், " சிட்.. சிட்.. நோ ப்ரோப்லேம்.. " என்றவன், அவளுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான்..

சிறிது நேரத்தில், நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது...

மதியும் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்து, தேவையானதை குறிப்பும் எடுத்துக் கொண்டாள்..

சிறிது நேரத்தில் ஹரி க்கு அழைப்பு வர, அவன் பேசுவதற்கு வெளியில் சென்றான்.. பின்னர் மதியிடம் ஏதோ சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்பினான்..

இங்கோ வெற்றியின் ஐவர் குழு மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றனர்..

அவ்வளவு பாதுகாப்பு ஏற்படுத்த பட்டு இருந்தது அந்த கட்டிடத்தைச் சுற்றி..

அது ஜான் க்கு சொந்தமான கட்டிடம் என்பதால், இது போன்று நடக்கும் பொழுது இதனை பயன்படுத்திக் கொள்வர்..

ஒவ்வொருவரும் உள்ளே நுழையும் போதே, பலத்த சோதனைக்கு பிறகே அனுப்ப பட்டனர்..

நாம் எடுத்துச் செல்லம் வெப்பன்ஸ் தம்மை கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும்.. என்று தூரத்தில் இருந்தே அதை புரிந்து கொண்டனர் ஐவர் குழு..

இப்பொழுது நேரம் தாமதிக்க முடியாது.. ஏதாவது உடனே செய்து ஆக வேண்டும்.. என்று நினைத்தவர்களின் கண்ணில் பட்டது அந்த சிறிய டெம்போ..

அவர்கள் கோட் சூட் என்று அணிந்து வந்து இருந்ததால், காலில் மாட்டப்பட்டிருந்த சாக்ஸ்ஸில் இருந்த துப்பாக்கியை எடுத்தவர்கள், அதை கோட் பாக்கெட்டில் வைத்து விட்டு, அந்த கோட் அனைத்தையும் ஒரு பெரிய கவரில் பொட்டு, அதை சுருட்டி அந்த டெம்போ வில் போட்டி விட்டு, கூல்லாக நடந்து சோதனை நடக்கும் இடத்திற்கு சென்றனர்..

அந்த டெம்போ, உள்ளே அவர்களை கடந்து கட்டிடத்தின் பின் பக்கம் சென்றது..

ஆம் இவர்களுக்காக, ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு விருந்துக்காக பொருட்கள் ஏற்றப்பட்டு உள்ளே சென்றது..

இவர்களை சோதனை செய்யும் போது, குமரன் முதல் ஆளாக நின்றான்..

அவனை சோதனை செய்த பின்னர், உள்ளே சென்று இவர்களை திரும்பி பார்க்க,

இவர்களும் அவனை பார்த்து தலை அசைத்தனர்..

அவனும் புரிந்து கொண்டு தலை அசைத்து, உள்ளே செல்ல அங்கிருந்த பாடிகார்டு அவனை ஒரு இடத்தில் அமரச் சொல்ல, அவனும் சுற்றி பார்த்து விட்டு வருகிறேன்.. என்பது போல சுற்றி பார்த்தான்.

ஆனால் அவனை கண்ணும் கருத்துமாக கண்காணித்தனர்..

அவனால் அவ்வளவு சுலபமாக எங்கும் செல்ல முடியவில்லை..

பின்னர், பாத் ரூம் எங்கு என்று விசாரித்தவன், அங்கு சென்றான்.. அங்கிருந்து ஏதாவது வழி கிடைக்குமா என்று.

பாத் ரூம்மிற்கு சென்றவன் அங்கிருந்து, வெற்றிக்கு அழைப்பு விடுக்க, அவனோ அவர்களிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, தனியாக சென்று பேச ஆரம்பித்தான்..

" என்ன டா குமரா.. உள்ள இருந்து போன் அடிக்கிற.. " என்றான் வெற்றி..

" டேய்.. இங்க ஒருத்தன் மைதா மாவு கலர் ல ஒருத்தன் இருக்கான் டா.. எங்கயும் போக விட மாட்டேன்றான்.. கண் கொத்தி பாம்பா என்னையே பார்த்துட்டு இருக்கான்.. என்னால எங்கயும் நகர முடியல.. " என்றான்..

" இப்போ எங்க இருந்து பேசுற.. " என்று வெற்றி கேட்டதற்கு,

" நான் பாத் ரூம் ல இருந்து பேசுறேன் டா... " என்றான்.

" அங்க ஏதாவது ஜன்னல் இருக்கானு பாரு டா.. அது மூலமா வெளிய போக முடியுமான்னு பாரு.. " என்று சொன்னான்..

அவனும் அங்கிருந்த ஜன்னலை எட்டிப் பார்க்க, அவர்களின் நல்ல நேரமோ என்னவோ, அதற்கு தள்ளி சிறிது தூரத்தில் தான் நின்று இருந்தது..

ஜன்னலில் இருந்த ஒவ்வொரு கண்ணாடி தூண்டுகளையும் மெல்ல மெல்லமாக வெளியே எடுத்தான்..

இப்பொழுது அதன் வழியாக வெளியே வர வேண்டும்..

அவன் உடம்பை விட சற்று சிறிய பாதை தான்.. இருந்தாலும் இதை விட்டால் வேறு வழி இல்லை என்று உணர்ந்தவன், அவனுக்கு IPS ட்ரைனிங் பொழுது, இந்த மாதிரி பாதைகளில் எப்படி உடம்பை குறுக்கி வளைத்து செல்ல கெண்டும் என்று கற்றதை இதில் பயன் படுத்தினான்..

வெளியே குதித்தவன், யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தவன், வேகமாக ஓடிச் சென்று அந்த கவரை எடுத்து மீண்டும் பாத்ரூம் க்குள் போட்டவன், அவனும் எகிறி குதித்து உள்ளே வந்தான்..

அதில் இருந்து அவனுடைய கோட் டை எடுத்தவன், போட்டுக் கொண்டு வெளியில் எட்டிப் பார்க்க, வெற்றி பாத்ரூம் நோக்கி வந்து கொண்டிருந்தான்..

அவன் உள்ளே வந்தவுடன் அவனிடம் பையை கொடுத்து விட்டு இவன் வெளியில் சென்று விட்டான்..

இப்படியே மாறி மாறி நண்பர்கள் வந்து எல்லாரும் அணிந்து கொண்டு அவர் அவர் இடத்தில் அமர்ந்து கொண்டனர்..

துப்பாக்கியையும் கோட் டில் இருந்து வேறு இடத்தில் மாற்றிக் கொண்டனர்..

இதில் என்ன வென்றால், அந்த மைதா மாவுகாரன் அழைப்பு வந்ததென்று வெளியில் சென்று விட்டான்.

அதனால் இவர்களின் பரிணாமம் அவனுக்கு தெரியவில்லை..

அடுத்தடுத்த நபர்கள் வந்து கொண்டே இருக்க, ஒவ்வொரு ஆளையும் தன்னுடைய கூலிங் கிளாஸ் ல் பொருத்தப்பட்ட, மிகச் சிறிய கேமரா மூலம் ரெகார்ட் செய்து கொண்டிருந்தான் வெற்றி...

அடுத்து மைக்கேல் என்பவன் வர, அவனை யோசனையுடன் பார்த்தான் வெற்றி..

அருகில் இருந்த குமரனிடம், " ஏன் டா குமரா... இவனோட தோற்றத்தை பார்த்தா, ஏதோ போலியா இருக்குற போல தோணுதா டா எனக்கு.. " என்று அவன் காதை கடிக்க,

அவனோ, " எனக்கும் அப்டித்தான் தோணுது மச்சான்.." என்று கூறினான்.

சரி இருக்கட்டும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் இவனை என்று நினைத்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்..

மைக்கேல் முதலில் பேச ஆரம்பித்தான்.. எல்லாரையும் யார் யார் என்று அறிமுகப்படுத்தி வைத்தான்..

சிறிது நேரத்திற்கு பிறகு, " இப்போ நம்ம ஹெட் , இந்த போதை மருந்து உலகத்திற்கு தாதா.. தலைவன்....
இப்பொழுது உங்கள் முன்னே வர போகுறார்.. வெல்கம், Mr. ஜான்.. சார்.. " என்று அழைக்க,

எங்கிருந்து வருகிறான் என்று சுற்றும் முற்றும் பார்க்க, எதிரே இருந்த சுவர் போன்ற கதவு திறக்கவும், பலத்த கரகோசத்துடன்,அதில் இருந்து வெளியே வந்தான் ஜான்.


தேன் இனிக்கும்.....

 
Status
Not open for further replies.
Top