ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

மறுநாள் விடியல் யாருக்கு எப்படி இருந்ததோ, ஆனால் வெற்றிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருந்தது..

அன்று அவளுடன் திருமணம் நடந்த தருணத்தை விட, இன்று நடக்க போகும் நிகழ்விற்கு ஏனோ மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளியது...

அன்றைய நாள் அவனுக்கும் சரி மதிக்கும் சரி எதிர்பாராத தருணம் அது.. ஆனால் இன்று அப்படி இல்லை.. முழுதாக இல்லை என்றாளும் ஓரளவு மதி அவனைப் பற்றி தெரிந்து வைத்து இருப்பாள்.. அந்த சந்தோசம் தான்..

வீட்டில் ஒவ்வொருவராக தயாராகி வர ஆரம்பித்தனர்...

காலை உணவை முடித்து விட்டு, வீட்டில் இருந்து கோவிலுக்குச் சென்று தாலி பெருக்கு சடங்கை முடித்து விட்டு, மதியம் அங்கேயே உறவினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..

அதை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி...

வெற்றியோ, பட்டு வேஷ்டி மற்றும் மெரூன் நிற சட்டை அணிந்து இருந்தான்..

மதியும் குளித்துவிட்டு, மெரூன் நிற பட்டு புடவை அணிந்து இருந்தாள்.. இவளின் புடவைக்கு மேட்ச் ஆகத் தான் அவன் சட்டை எடுத்தது..

தலையைப் பின்னி , தேவையான அளவு ஒப்பனையிட்டு, சில நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள்..

வந்தவளை ஆளை விழுங்கி விடும் பார்வையால் அல்லவா அவளை கபலிகரம் செய்தான்..

அவள் இவனை பார்க்கும் போது சட்டென பார்வையை மாற்றிக் கொண்டான்..

கற்பகம் அவளுக்கு பூ கொடுக்க, அவளும் அதை தலையில் வைத்துக் கொண்டாள்..

அதை பார்த்துக் கொண்டிருந்த, லட்சுமியோ, " ரொம்ப அழகா இருக்க மதி.. " என்று அவளிடம் கூறினார்..

அவளும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்..

" மாமா எங்கத்தை.. " என்று வெற்றி தன் அதையிடம் கேட்க,

" அவரு கிளம்பிட்டு இருக்காரு பா.. வந்துருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல... " என்றார்..

அனைவரும் காலை உணவை முடித்த பின், சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பலாம் என்று எண்ணி இருந்தனர்..

கற்பகம், " தம்பி ரெண்டு பெரும் பூஜை அறையில் போய் சாமி கும்பிட்டு வாங்க யா.. " என்றார்...

அவர்களும் அறையின் முன் நின்று, தெய்வத்தை மனதார வணங்கி விட்டு, காரில் கிளம்பினர்..

இதற்கு இடையில், மதியின் அக்கா சாந்தவி வரும் வழியில் கார் பழுதடைந்து விட்டதால், வருவதற்கு தாமதம் ஆகும்.. அதனால் நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள். எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்று கூறியதால், இவர்களும் அவர்களுக்காக காத்திருக்காமல் கோவிலுக்கு கிளம்பி விட்டனர்..

கோவிலுக்குச் சென்று, அங்கு பூ பழம் வாங்கிக்கொண்டு, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை முடித்து விட்டு, பிரகாரத்தை சுற்றி விட்டு வர, உறவினர்களும் வந்து சேர்ந்து இருந்தனர்..

ஐயரும் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து தயாராக இருந்தார்..

மதியைப் பார்த்தவன், " மதி..வா.. போய் உக்காரலாம்... " என்று இருவருமாக சேர்ந்து அமர்ந்தனர்..

பொன் தாலியை எடுத்து, ஐயரிடம் கொடுக்க, அவரும் அதை தேங்காயின் மீது வைத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு, பூவைச் சூடி இறைவன் சன்னிதானத்தின் முன் ஒரு முறை காட்டி விட்டு, மற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க லட்சுமியிடம் கொடுத்தார்..

அவரும் அதை பெற்றுக் கொண்டு, வந்த சொந்த பந்தங்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, மீண்டும் ஐயரிடம் கொண்டு வந்து கொடுத்தார்..

அவரும் சில வேத மந்திரகளை உபசரித்தவர், பொன் மாங்கல்யத்தை எடுத்து வெற்றியிடம் கொடுக்க, அவனும் இறைவனை ஒரு முறை வேண்டிக் கொண்டு, மாங்கல்யத்தை அவளது கழுத்தில் அணிவிக்கும் முன் , அவளின் கண்களை பார்த்து தான் விழிகளால் சம்மதமா என்று அவன் கேட்க...

அந்த பார்வையில் கட்டுண்ட இவளும் தன் இமையை மூடி திறந்து சம்மதம் தெரிவித்தாள் ..

ஆடவனும் இதழ்கள் விரிய ஒரு புன்னகையை சிந்தியவன், அவளது கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்...

அதில் மஞ்சள், குங்குமம் வைத்தவன், பின் அவளது நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டான்.. ஏனோ இருவருக்குமே அந்நேரம் உடலில் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது...

என்னதான் உறவினர்களுக்கு வெற்றியை தங்கள் மகளுக்கு மணம் முடித்து கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அதை இங்கே காட்டாமல் இந்த ஜோடி என்றும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மனதார அட்சதை தூவி வாழ்த்தினர்...

பின் இருவரும், கையை கோர்த்துக் கொண்டு, மீண்டும் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்...

இந்த பிடிப்பு இப்பொழுது மட்டும் அல்ல.. வாழ்க்கை முழுவதும் இருக்கும் என்று உணர்த்தும் வகையில் அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.. அந்த அழுத்தத்தை அவளும் உணர்ந்தாள் தான்...

விஷேசம் நல்ல படியாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அனைவருக்கும்..

அங்கேயே, வந்து இருந்த உறவினர்களை கெளரவிக்கும் பொருட்டு, குடும்பத்துடம் அழைத்து, புது துணி மணி வைத்துக் கொடுக்க பட்டது.. அதுவும் வெற்றி மற்றும் மதியின் கையால் வழங்கினர்..

இறுதியாக, மதியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட முறையில், கன்னிகாதானம் செய்ததற்கு, மருமகனின் கடமையாக முறைப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டது...

அதன் பின்னர், கோவிலுக்கு பின் பக்கம் இருக்கும் மண்டபத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது..

அதனால் வந்து இருந்த அனைவரும் தங்கள் வயிறார உண்டு விட்டு, வெற்றியின் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு விடை பெற்றனர்..

அவர்கள் செல்வதற்கு முன், இதே போல, மாலை நிகழ்ச்சிக்கும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொண்டனர் கற்பகம் மற்றும் வெற்றி இருவரும்...

அனைவரும் உண்டு முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினர்..

அங்கு சென்று இறங்கியதும் சிறிது நேரத்தில் சாந்தவி குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்..

அவர்களை அழைத்து உபசரித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தனர்..

மற்றவர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சென்று விட்டனர்...

மாலை போல் எழுந்த அனைவரும், வரவேற்புக்கு தயார் ஆகினர்..

மதிக்கு பியூட்டிசியன் வரவழைக்கப் பட்டு இருந்தது.. அலங்காரம் முடித்து வெற்றி எடுத்த அந்த மயில் வண்ணப் புடவையை உடுத்தியதும், அந்த மயில் போலவே அழகாகவும் அவ்வளவு அம்சமாகவும் இருந்தாள் மதி..

" இந்த சாரீ உனக்கு ரொம்ப அழகா இருக்கு மதி... " என்று சாந்தவியும் தன் பங்கிற்கு வந்து கூறினாள்..

" ம்ம்.. நிஜமாவே நல்லா இருக்கா..
" என்று அவள் உறுதி படுத்திக் கொள்ள கேட்க,

அவளும் ஆமாம் என்றாள்..

மதியோ மனதிற்க்குள்,
" பரவாவில்லை... நல்ல செலேக்சன் taught இருக்கு அவருக்கு... " என்று தன் கணவனை எண்ணி மெச்சிக் கொண்டாள்..

ஒவ்வொருவராக தயாராகி வந்து ஹாலில் காத்து இருந்தனர்..

இறுதியில் மதியும் வெற்றியும் வந்து சேர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

தான் எடுத்துக் கொடுத்த புடவையில் அழகோவியமாக தன் கண் முன்னே நின்றவளைப் பார்த்தவனோ உறைந்து தான் போனான்..

அருகில் நின்று இருந்த சம்பத், (சாந்தவியின் கணவன் ) "சகலை, உங்கள சுத்தி ஆளுங்க இருக்கோம்.. மறந்துராதீங்க....இது எல்லாம் தனியா வச்சிக்கோங்க..." என்று அவனை பார்த்து கிண்டல் செய்தான்..

வெற்றியும் தன் மடத் தனத்தை எண்ணி நொந்து, பின் அவனிடம் ஒரு புன்னகையை சிந்தினான்..

சம்பத் அன்று திருமணத்தன்று பார்த்தது தான் வெற்றியை.. அதன் பிறகு இன்று தான் பார்க்கிறான்.. ஏனோ வெற்றி அவனிடம் நடந்து கொள்ளும் விதம் அவனை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்..

அதனால் தான் என்னவோ, வெற்றியிடம் வெகு இயல்பாக பேசினான் சம்பத்..

இவன் இப்படி என்றால், மதிக்கோ என்னவென்று சொல்ல முடியாத உணர்வு..

இத்தனை நாள் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து இருக்கின்றாள் தான்.. ஆனால் ஏனோ இன்று அவள் கண்களுக்கு தன்னை வசிகரிப்பது போல ஆண்மையின் இலக்கணமாக தன் முன் நிற்பது போல உணர்ந்தாள்..

" சே.. என்ன இது.. இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கே.. " என்று அவளுக்குள் தோன்றும் அவஸ்தையை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தாள்..

வீட்டுப் பெரியவர்களுக்கு இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, " பிள்ளைகளுக்கு யாரு கண்ணும் பட்டுடக் கூடாது... நல்ல படியா அவங்க வாழனும் தெய்வமே... " என்று அந்த இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைத்தனர்..

புதுமண தம்பதியினர் மற்றும் சம்பத், சாந்தவி அவர்களின் மகன் ஒரு காரிலும் மற்ற அனைவரும் மற்றொரு காரிலும் கிளம்பினர்..

சம்பத் தான் காரை ஓட்டிச் சென்றான்.. அருகில் சாந்தவி உடன் மானவ் அமர்ந்து இருந்தனர்..

பின்னால் மதியும் வெற்றியும் மட்டுமே அமர்ந்து கொண்டனர்..

கார், மண்டபத்தை நோக்கி புறப்பட்டது...

மண்டபம் ஒன்றும் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை..

அந்த நகரத்தின் மத்தியிலேயே சற்று பெரிதாக அமைந்து இருந்தது..

மண்டபம் அலங்கார வேலைகள் மற்றும் இதர வேலைகளை எல்லாம் குமரன் மற்றும் மற்ற நண்பர்களிடம் கவனிக்குமாறு சொல்லி இருந்தான் வெற்றி..

இதோ மண்டபதிற்கு வந்தாயிற்று.. மணமக்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, மேடையின் மீது நிற்க வைத்தனர்.

வெற்றிக்கு துணையாக சம்பத்தும், மதிக்கு துணையாக அவளது அக்கா சாந்தவியும் கூட இருந்தனர்..

மானவ் அவன் தாத்தா பாட்டியுடன் இருந்து கொண்டான்..

நண்பர்கள் தங்களுக்கு குடுக்கப்பட்ட வேலையை திறம்பட கவனித்துக் கொண்டனர்..

உறவினர்கள், சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக மேடையேறி பரிசளித்து, மனம் மகிழ வாழ்த்துக்களை கூறி, வயிறு நிறைய உண்டு விட்டு, விழாவை சிறப்பித்துச் சென்றனர்..

வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது...

எல்லோருக்குமே அசதி தான்.. காலையில் இருந்து மாற்றி மாற்றி வேலை என்று..

அதனால் வீட்டிற்கு வந்ததும், கற்பகம் குடும்பமாக அனைவரையும் நிற்க வைத்து, திருஷ்டி கழித்து விட்டு, உள்ளே அனுப்பினார்..

அசதியில் அனைவருமே உறங்கச் சென்று விட்டனர்..

மதிக்கோ, அலங்காரம் அப்டியே இருக்க, அதை கலைத்தால் தான் சற்று இலகுவாக இருக்கும் என்று நினைத்தவள், தன் அக்காவை அழைக்கலாம் என்று நினைத்து அங்கு செல்ல, அவர்களோ உடையை மாற்றி விட்டு தூங்கி விட்ருந்தனர்..

அவளுக்கு ஐயோ என்று ஆகி விட்டது.. சரி தன் கையே தனக்குதவி என்று நினைத்து அறைக்கு வந்து, தலையில் இருந்த பூவினையும் கொண்டை ஊசிகளையும் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல எடுத்துக் கொண்டிருந்தாள்..

அப்பொழுது பார்த்து தலையில் ஒன்று சிக்கிக் கொண்டது.. அவளால் எடுக்க முடியவில்லை... இழுத்து இழுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

அந்த நேரத்தில் வெற்றி குளித்து விட்டு வேறு உடைக்கு மாற்றி வந்தான்..

அவள் செய்கையை பார்த்தவன், " மதி என்ன ஆச்சு... " என்று கேட்க..

அவளோ, " தலையில சிக்கிகிருச்சு... அதான் எடுத்துட்டு இருக்கேன்.. இதை கழட்டுன்னா கொஞ்சம் freeya இருக்கும் தூங்குறதுக்கு.. " என்றுக் கூறினாள்..

" உங்க அக்காவை கூப்பிடலாம் ல.. " என்றதற்கு,

" அவளை தான் கூப்பிட போனேன்.. அவ தூங்கிட்டா... இப்போ என்ன பண்றது.. கடுப்பா இருக்கு... " என்று சற்று எரிச்சலுடன் கூறினாள்..

அவள் அருகில் வந்தவன், " கையை எடு.. " என்று அவளது கையை எடுத்து விட்டவன், மெல்ல மெல்ல அவளுக்கு நோகாதவாரு ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தான்..

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி இருந்த கண்ணாடியின் ஊடாக தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அமர்ந்து இருந்தவாரு... அவனோ நின்றவாக்கில் எடுத்துக் கொண்டிருந்தான்...

எதேர்ச்சியாக முன்னால் பார்த்தவன், கண்ணாடி வழியாக அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து ஒரு கணம் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவனும் நோக்கினான்..

இருவரது பார்வையும் மற்றொருவர் மீது தான் இருந்தது..

அவனது பார்வையில் என்ன கண்டாளோ, சட்டென்று குனிந்து கொண்டாள்.. என்ன பார்வை அது.. உயிரை ஊடுருவி உறிஞ்சி எடுக்கும் பார்வை.. அந்த பார்வையில் இருப்பது என்ன.... ஏதோ ஒரு செய்தி சொல்கின்றதே... ஆனால் என்ன என்று தான் அவளாள் புரிந்து கொள்ள முடியவில்லை..

அவனும் ஒரு மென் புன்னகையை சிந்தி, தலையை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே அனைத்தையும் எடுத்து விட்டு, தலை முடியை விரித்து விட்டான்..

" இப்போ ஓகே வா... " என்று அவளை பார்த்துக் கேட்க..

அவளும் ம்ம் என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்..

" போ.. குளிச்சிட்டு வந்து தூங்கு.. " என்று அவளிடம் சொல்லியவன் நகர்ந்து நிற்கும் முன் அவள் எழுந்து கொண்டதால், அவன் மீது இடித்துக் கொள்ள,

வெற்றியோ பிடிமானம் இன்றி கீழே தடுமாறிய வேளையில் பிடிமானத்திற்கு அவளின் இடுப்பை பிடித்துக் கொள்ள, அவனின் ஸ்பரிசம் பட்டதில் இவள் தடுமாற, இருவருமாக சேர்ந்து அருகில் இருந்த கட்டிலின் மெத்தையில் பொத்தென்று விழுந்தனர்..

விழுந்த வேகத்தில், இருவரது இதழ்களும் ஒன்றுடன் ஒன்று உரசி கலந்து கொண்டன..

அந்த அதிர்ச்சியில் இருவரது விழிகளும் சாசர் போல விரிந்தன..

அதிர்ச்சியில் இருந்து மீண்ட வெற்றியோ, அவளது நெருக்கத்தில் அவன் தான் நிலை தடுமாறிப் போனான்..

அவளது பெண்மையின் வாசனை, அவனது ஆண்மையின் உணர்ச்சிகளை தூண்ட, இடையில் பதிந்த அவனது விரல்கள் கோலம் போட ஆரம்பிக்கும் வேளையில், நிதானம் வந்த மதியோ, சட்டென்று அவனிடம் இருந்து விலகி, " அது.. சாரி.. நான் தான் கவனிக்காம உங்க மேல இடிச்சிட்டேன்.. " என்று அவனைப் பாராமல் சொல்லி விட்டு விறு விறுவென குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்..

" நம்மள கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் போலயே வெற்றி.. " என்று தனக்குள்ளயே புலம்பிக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் அப்படியே உறங்கியும் போய் விட்டான்..


இங்கு இப்படி இருக்க, அங்கு ரவியோ ஜான் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தான்..

யார் அந்த ஜான்.. ரவி அப்படி என்ன ஒப்பந்தம் போட்டிருந்தான்.. இனி வரும் அத்தியாயங்களில்....


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16

ஒரு வாரம் கடந்த நிலையில், மதியின் பெற்றோர் மற்றும் சாந்தவியும் கிளம்பி விட, எப்பொழுதும் போல இவர்களின் இயல்பு வாழ்க்கை சென்று கொண்டிருந்தது..

கற்பகத்துடன் சேர்ந்து மதி பெரும்பாலும் வீட்டில் வேலைகளை முடித்து விட, இவளுக்கு தான் சும்மாவே உக்கார்ந்து இருக்க என்னவோ போல இருந்தது..

வெற்றி மற்றும் மதியின் வாழ்க்கையில், மதி முன்னைவிட சற்று இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள் அவனிடம்..

சென்னையில் இருந்தாளாவது அவள் படித்த படிப்பிற்கு வேலைக்கு செல்லலாம்.. ஆனால் இங்கு என்ன செய்வது.. என்ற யோசனையும் ஏற்பட்டது..

அதை பற்றி, அவள் அன்னையிடமும் தெரிவித்து இருந்தாள்..

அவள் ஏற்கனவே வேலை செய்த இடத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியும் விட்டாள்.. இனிமேல் தொடர முடியாது என்று..

ஆனாலும் அங்கு இருந்து சந்தேகம் கேட்டு மின் அஞ்சல் எதுவும் வந்திருந்தால், அவர்களின் சந்தேகத்தை தீர்த்து பதிலும் அனுப்பி வைப்பாள்..

ஆனால் இப்டியே வெகு காலம் இருக்கவும் முடியாது.. கூடிய சீக்கிரம் இதை பற்றி, வெற்றியிடம் பேச வேண்டும் என்றும் நினைத்து இருந்தாள்..

அத்துடன் மட்டும் அல்லாது, வெற்றி, என்ன வேலை தான் செய்கிறான் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்து இருந்தாள்.. விவசாயம் தான் என்றாலும் அதை அவள் பார்க்க ஆவல் கொண்டாள் என்றே சொல்லலாம்...

அதே சமயத்தில், மூர்த்தியும் அவருடைய தொழிலை அங்கு நடராஜன் மற்றும் ரவியிடம் ஒப்படைத்து விட்டு , இவருடைய பங்கு தொகையை பெற்றுக் கொண்டு, சொந்த ஊரில் மீதிக் காலத்தை கழிக்கலாம் என்றும் நினைத்து இருந்தார்..

இது பற்றி இன்னும் நடராஜனிடம் பேசவில்லை.. நடராஜனிடம் கூறினால் அவர் முடிவு என்னவாக இருக்குமோ... தெரியவில்லை..

அன்று, வெற்றி சாப்பிட்டு முடித்து கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில், அவனிடம், " கிளம்பிடீங்களா.." என்று கேட்க..

அவனும், " ஆமாம் மதி..." என்று சொன்னவன், பின் நிறுத்தி, " எதுவும் வேணுமா.." என்று கேட்டான்..

" நானும் உங்ககூட இன்னைக்கு வரலாம்னு நினைக்கிறேன்... " என்று சொல்லி முடித்து விட்டு, அவன் என்ன சொல்ல போகிறான் என்று அவனது முகத்தையே பார்க்க,

அவனோ, " நிஜமாவே நீ வரியா... " என்று மீண்டும் உறுதி படுத்திக் கொள்ள கேட்க,

அவளும் ஆமாம் என்று தலை ஆட்டினாள்..

அவனுக்கு உள்ளுக்குள் ஆனந்தம் .. அதை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், " ரெடியாகு போகலாம்.. " என்றான்..

அவளும் ரெடியாகி வர, இருவரும் அவனது புல்லட்டில் கிளம்பினர்..

அவளும் பிடிமானத்திற்கு, அவனது தோளில் உரிமையுடன் கையை போட்டுக் கொண்டாள்.. வெற்றியின் முகத்தில் ஒரு மென்மையான புன்னகை..

முதலில், அவன் வயலுக்கு அழைத்துச் சென்று, வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, அவளை இறங்கச் சொல்லியவன், அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் நின்றனர்..

" இது எல்லாம் நம்ம வயல் தான்.. கொஞ்ச நாளைக்கு முன்ன தான் அறுவடை முடிஞ்சி, இப்போ ஆடி மாசம் னால, ஆளுங்க எல்லாம் வர சொல்லி, விதை விதைச்சிட்டு இருக்கோம்.." என்றவன் பின்,

" இங்கேயே இருக்கலாமா.. இல்லை உள்ள போலாமா... " என்று அவன் கேட்க,

" ம்ம்... போய் பாக்கலாம்.. இதுவரைக்கும் இப்படி உள்ள நடந்தது இல்லை.. " என்றாள்..

" அப்போ செருப்பை கழட்டிட்டு வா.. போலாம்.. " என்று இருவரும் செருப்பை கழட்டி விட்டு, வெற்றி முன்னால் நடக்க, இவள் பின் தொடர்ந்து சென்றாள்..

முதல் முறை என்பதால் அவளுக்கு நடப்பதற்கு சற்று கடினமாக இருந்தது..

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, மெல்ல அதன் மீது நடந்தாள்...

பின்னால் திரும்பிப் பார்த்தவன், அவள் நடக்க கஷ்டப் படுவதை பார்த்து, அவனது கையைக் கொடுத்தான்..

அவளும் அவனது கையினை பற்றிக் கொண்டு நடந்தாள். சற்று சிரமம் இல்லாமல் இருந்தது...

அங்கு வேலை செய்வதை பார்த்துக் கொண்டே நடந்தவர்களிடம், " ஏலேய் வெற்றி.. என்ன.. உன்ற பொண்டாட்டியை எப்டியோ கூட்டிட்டு வந்துட்ட இந்த பக்கம்... " என்று ஒரு வயதான மூதாட்டி அவனிடம் வம்பிலுக்க , " அதான் இங்க வந்தா, எனக்கு தான் நீ இருக்கியே.. அதான் என் பொஞ்சாதியை கூட்டிட்டு வரல.. " என்று அவரைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டே சொல்ல..

" போடா கிறுக்குப் பயலே... " என்று அவனை திட்டி விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்..

இவர்கள் இருவருக்கும் அவர் சொன்னதில் சிரிப்பு வர, இருவருமே சிரித்துக் கொண்டனர்..

அங்கிருந்து, அந்த இடத்தை அவளுக்கு சுற்றி காண்பித்து விட்டு, மோட்டார் பம்ப் செட் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, " கால் கழுவிக்கோ மதி... " என்றவன் ஓரமாக நின்று கொண்டான் அவள் வரும் வரை..

அந்த வழியாக சென்ற, பாண்டி, அல்லக்கை சுப்புவிடம் " என்னடா சுப்பு... பட்சி மட்டும் தனியா நிக்குது.. " என்று கேட்க..

" அப்டித்தான் தெரியுது.. ஆனால் வெற்றி அண்ணே கூட வராம இருப்பாங்களா... எங்கயாவது இருக்க போறாங்க.. பார்த்து ண்ணே.. மெல்ல பேசுங்க... " என்று அவனிடம் சொல்ல..

" அதுவும் சரி தான்.. ஆனால் ஊரு முன்னாடி என்னை அவமான படுத்தினதுக்கு அவன் பொண்டாட்டியை வச்சி நம்ம சரியான பாடம் புகட்டணும்... " என்று மதியைப் பார்த்து திட்டம் தீட்டியவன், மதியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை அவளை பார்த்ததில் இருந்தே மனதிற்குள் விதைத்துக் கொண்டான்.. அதற்கான தருணத்தையும் எதிர் பார்த்து காத்து இருந்தான் அந்த பொழுதிலிருந்து...

பின் அங்கிருந்து, அவர்களின் காய்கறி தோட்டத்திற்கு சென்றனர்..

" இது ஆர்கானிக் முறையில் பயிரடப்படுற காய்கறிகள்.. இது எல்லாம் விற்பனைக்கு உள்ளூர், வெளியூர் சந்தைக்கு அனுப்பி வைக்கிறோம்... " என்றவன், பின் " அதோ நிக்கிறான் பாத்தியா... அவன் என் நண்பன்... செல்வம்... " என்று அவனை அழைத்து அறிமுகப் படுத்திவன் " என்னால எல்லா இடத்துலயும் கவனிக்க முடியாதுனு தான், என் நண்பர்களை அங்க அங்க மேற்பார்வையிட வச்சி இருக்கேன்... " என்றான்..

பின் செல்வத்தை அழைத்து, " மச்சான், குடிக்க இளநி வெட்டிக் கொண்டு வர சொல்லு... " என்றான்..

அவனும் ஆட்களிடம் கூற அவர்களும் வெட்டிக் கொடுத்தனர்..

செல்வமும், வெற்றியிடமும் மதியிடமும் நீட்ட, அவளும் வாங்கிக் கொண்டாள்..

" குடி மதி.. நல்லா இருக்கும்.. நம்ம தோட்டத்து இளநி.." என்று சொல்ல..

அவளும் குடித்துப் பார்த்தாள்.. நன்றாக இனிப்பாக இருந்தது..

" ம்ம். நல்லா இனிப்பா இருக்கு.. " என்றாள்..

" இன்னொன்னு குடிக்கிறியா... " என்று அவன் கேட்க..

" இல்லை இல்லை.. இதுவே போதும்.." என்றாள்..

செல்வத்திடம் கூறி விட்டு, அங்கு இருந்து பழத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்..

" இதுவும் அதே போல தான்.. எல்லாமே இயற்கையான முறையில் விளைச்சல் பண்ணி, அதை விற்பனைக்கு அனுப்புறோம்.. வெளி மாநிலத்துக்கும் அனுப்புவோம்.. சில நேரங்களில் வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி பண்ணுவோம்.. " என்றான்..

அவளும் "ஓஹோ.." என்றதோடு அவனிடம் நிறுத்திக் கொண்டாள்..

அவள் நினைத்தது ஒன்று.. ஆனால் இங்கு அவன் செய்வது வேறல்லவா.. மனதுக்குள் அவனை மெச்சிக் கொண்டாள் ..

அங்குதான் குமரன் இருந்தான்..

அவனிடம் சென்றவன், தொழில் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தான்..

மதியை பார்த்த குமரன், " வாம்மா தங்கச்சி.. நல்லா இருக்கியா... " என்று கேட்க..

அவளும், " ம்ம்.. நல்லா இருக்கேன் ண்ணா.. " என்று சொல்லியவள் அங்கே சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்..

பல வகை மரங்கள் இருந்தன... ஒவ்வொன்றயும் பார்த்துக் கொண்டே வந்தவள், மா மரத்தின் அருகில் வந்ததும், அதில் இருந்த மாங்காயை பார்த்தவளுக்கு, நாக்கில் எச்சி ஊற ஆரம்பிக்க, மாங்காயை பறிக்கச் சென்றாள்..

அந்த கிளையை, சற்று கீழே இழுத்து மாங்காயை பறித்து விட்டாள்..

ஆனால் பறித்த பிறகு தான் பார்த்தாள், அந்த கிளையில் நாகம் ஒன்று அவளை பார்த்து சீறிக் கொண்டு இருந்தது..

அவளுக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்து விட்டது..

இப்பொழுது கிளையை விட்டால் அந்த அதிர்வில் நாகம் தன் மேல் விழுந்து விடும்.. என்ன செய்வது என்று யோசித்து ஆடாமல் அசையாமல் நின்று இருந்தாள்..

தலையை மட்டும் மெல்ல திருப்பி, வெற்றி எங்கு இருக்கிறான் என்று பார்க்க, அவன் சற்று தொலைவில் நின்று இருந்தான்.. இங்கு இருந்து சத்தம் போட்டு அவனை அழைக்க வேண்டும்.. அழைத்து தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை என்று எண்ணியவள்,

" வேந்தன்... " என்று அழைக்க..

அவனிடம் எந்த ஒரு எதிர்வினையும் இல்லை..

மறுபடியும் சற்று சத்தமாக " வேந்தன்.. " என்று அழைக்க,

அவனோ வித்தியாசமான அழைப்பு தன் மனைவியிடன் இருந்து வருவதை உணர்ந்தவன்.. அவள் எங்கு இருக்கிறாள் என்று பார்க்க, அவளோ மரக்கிளையை பிடித்துக் கொண்டு, இவனை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்..

" அவ என்ன, மரக்கிளையை பிடிச்சு தொங்கிட்டு இருக்கா... சின்ன பிள்ளையில ஆடாதத இப்போ ஆடுறாளா.." என்றே நினைத்தான்...

அவன் இவளை பார்த்ததும், அவளும் இங்கே வருமாறு தலையயை ஆட்டி அழைக்க, வெற்றியும் அங்கு சென்றான்.. கூடவே குமரனும் சென்றான்..

" என்ன மதி என்ன ஆச்சு.. " என்று கேட்க..

அவளும் கண்ணால் மரக்கிளையை பார்க்குமாறு சைகை செய்ய..

அவனும் பார்த்தவன் சற்று அதிர்ந்து தான் விட்டான்..

விசமுள்ள நாகம் வகையை சார்ந்தது.. இவளை மட்டுமல்ல.. வேறு யாரையும் துன்புறுத்தி விடக் கூடாது என்று நினைத்தவன்,

" மதி.. அப்படியே அசையாம நில்லு " என்றவன் குமரனிடம், " குமரா.. ஒரு பெரிய சாக்குப் பை எடுத்துட்டு வா... " என்று அவனிடம் வேலையை சொல்லியவன்,

அந்த கிளையின் பின் பக்கமாக சென்று, மெதுவாக மிக மெதுவாக அந்த நாகத்தின் அருகே கையை கொண்டு சென்றான்..

மதியோ வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்..

ஆனால் அவன், " உஷ்... " என்று அவளிடம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லியவன்,

மெதுவாக, லாவகமாக அதன் கழுத்துப் பகுதில் இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.. தலையை எந்த பக்கமும் ஆட்ட முடியாதவாறு...

அவன் மெல்ல அதனை பிடித்து தூக்கியவன், மதியிடம் " கிளையை விடு மதி.. " என்றான்..

அவளும் விடவே, கிளை மேலே சென்றது..

குமரனும், சாக்குப் பையை நீட்ட, அதனுள், லாவகமாக நாகத்தை விட்டவன் ஒரு கயிறு எடுத்து, நன்றாக இறுக்கி கட்டி, 'இதை மக்கள் நடமட்டம் இல்லாத காட்டு பகுதியில் கொண்டு போய் விட்டுரு குமரா.. " என்றான்..

அவனும் சரி என்றவாறு , ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றான்..

குமரன் செல்வதை பார்த்து விட்டு, மதியிடம் திரும்பியவன், அவள் முறைப்பதைக் கண்டு திடுக்கிட்டான்..

" என்ன.. எதுக்கு முறைக்கிற... " என்று கேட்டான்..

" உங்களை யாரு பிடிக்க சொன்னது.. கடிச்சி இருந்துச்சுன்னா என்ன பண்றது.. யாரவது பாம்பு பிடிக்கிறவங்க இருந்தா வர சொல்லி இருக்கலாம்ல.. " என்று கோபத்துடன் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்தாள்..

அவளது உரிமையான அக்கறையான பேச்சில் அகம் மகிழ்ந்தவன், " ஆளு வர்ற வரைக்கும், நாம வெயிட் பண்ணுவோம்.. பாம்பு வெயிட் பண்ணாதுல... " என்று சொல்ல..

அவள் மறுபடியும் முறைத்தாள்..

"இப்போ என்ன ஆச்சு.. ஒன்னும் ஆகலல மதி ம்மா ..." என்று அவன் குரலை தணித்துக் கேட்க,

அவளோ, " இனிமே இப்படி ரிஸ்க் ஆன விசயத்துல இறங்க வேண்டாம்.. " என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள் ..

அவனோ, இரு பக்கமும் தலையை ஆட்டிக் கொண்டே சிரித்து கொண்டு அவளின் பின்னால் நடந்தான்..

அவளது அருகில் வந்தவன், " என்ன கோவமா.." என்று கேட்க..

அவள் அமைதியாக இருந்தாள்...

அதிலையே புரிந்து கொண்டான்.. அவள் கோவமாக இருக்கிறாள் என்று..

" உன் புருஷன் வீரத்தை பார்த்து நீ பெருமை பட வேண்டாமா... " என்று அவளை சீண்ட..

அவளோ முகத்தை சுழித்துக் கொண்டு, " ம்ம்க்கும்.. " என்று கழுத்தை ஒரு வெட்டு, வெட்டி விட்டுச் சென்றாள்..

அவளது செய்கையை பார்த்து சத்தமாக சிரித்தான் வெற்றி..

அவளுக்கும் அவன் சிரிக்கும் சத்தம் கேட்க, அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது..

" சரி வீட்டுக்கு கிளம்புவோமா.. இல்லை எப்படி.. " என்று அவளிடம் கேட்க..

" இன்னும் இருக்கா என்ன... " என்று வியப்புடன் கேட்டாள்..

" அரிசி ஆலை இருக்கு.. அதோட அவ்ளோதான்... ஆனால் அது நம்மதுனு சொல்ல முடியாது.. அது நாங்க நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்சது... " என்று சொன்னான்..

" ம்ம் ம்ம்... " என்றவள் " வீட்டுக்கு கிளம்பலாம்.. Tired ஆகிருச்சு.. " என்றாள்..

" சரி வா.. போகலாம்.. " என்றவன் அவளை வண்டியில் அமரச் சொல்லி, வீட்டிற்கு கிளம்பினர்..


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 17

இரண்டு நாட்கள் கடந்து இருக்கும்.. மூர்த்தி அலுவலகத்தில் நடராஜனிடம் பேசிக் கொண்டிருந்த சமயம், " ராஜ்.... ரவி ஏதோ புதுசா ஜான் னுங்கர நபர் கூட அக்ரீமெண்ட் போட்ட மாதிரி தெரியுது... " என்று கேட்க..

" அப்டியா.. என்கிட்ட எதுவும் சொல்லலையே... " என்று சொன்னார்..

" உன்கிட்ட சொல்லலையா... என்ன ராஜ்.. இது.. நான் இல்லை சரி.. உன்கிட்ட கூட கேட்காம அவன் எதுக்கு புதுசா காண்ட்ராக்ட் போட்டான்.. " என்று அவர் சற்று காட்டமாக கேட்டார்..

" உனக்கு தான் தெரியுமே ப்பா.. அன்னைக்கு மண்டபத்துல நடந்த சம்பத்துல இருந்து என்கிட்ட சரியா பேசுறது இல்லை.. பிசினஸ் விஷயமா தான் பேசுவான்.. அதுவும் நான் கேட்குறதுக்கு மட்டும் தான் பதில் வரும். அவனா எதுவும் சொல்றது இல்லை.. " என்றார்..

" என்னமோ போப்பா.. அவன்கிட்ட அதை பத்தி விசாரிச்சிக்கோ.. அந்த ஜான் யாரு என்னனு... " என்றவர்.. பின் நிறுத்தி, " அப்புறம் பா.. நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்... அது என்னனா, இந்த கம்பெனிய உங்ககிட்ட கொடுத்துட்டு நான் பழையபடி ஊரு பக்கமே போகலாம்னு இருக்கேன்... " என்றார்..

"என்னப்பா.. என்ன ஆச்சு.. திடிர்னு எதுக்கு இந்த முடிவு.." என்று நடராஜன் சற்று பதட்டத்துடன் கேட்க..

" ஆமாப்பா.. நானும் யோசிச்சு பார்த்தேன்... ரெண்டு பொண்ணுங்களையும் கட்டி கொடுத்தாச்சு.. ஒரு பொண்ணு வெளிநாட்டுல இருக்கா.. இன்னொரு பொண்ணும் நம்ம ஊரு பக்கம்.. வயசான காலத்துல நம்ம மட்டும் எதுக்கு தனியா இருக்கனும்.. நான் என்ன ஆம்பள பிள்ளையா பெத்து வச்சி இருக்கேன்.. எனக்கு அப்புறம் அதை கவனிக்க.. அப்டியே பெண் பிள்ளைங்க இருந்தாலும், ரெண்டு பெரும் ஆளுக்கு ஒன்னு திசையில இருக்காங்க.. ரெண்டு பேருக்கும் இதுல விருப்பம் இல்லை..

மதி கொஞ்சம் ஆளுமையான பொண்ணா இருந்தாலும், அவளுக்கு அவ விருப்பட்ட துறையை தேர்ந்தெடுத்து அதுல ஒர்க் பண்ணிட்டு இருக்கா ... இந்த பக்கம் தலை வச்சிக்கூட பாக்க மாட்டா ...

அதுவும் இப்போ, ஊருக்கு வேற போய்ட்டு வந்தேன்ல, என்னமோ அங்க போய் செட்டில் ஆகிறனும்னு மனசு சொல்லிட்டே இருக்கு.. என் பொண்டாட்டிக்கும் அதான் ஆசை..
அங்கேயே நம்ம இருந்துட்டு, பேர புள்ளைகளை பார்த்துக்கலாம்னு.. அவதான் அந்த யோசனையா சொன்னா.. எனக்கும் அது சரினு பட்டுச்சு.. நீ என்னப்பா சொல்ற.. " என்று நடராஜ்ஜிடம் கேட்க..

" நான் என்ன சொல்றது.. நீதான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டியே... என்ன.. எனக்கு தான் நீ இல்லமா ஏதோ போல இருக்கும்.. இத்தனை வருஷம் நம்ம ஒன்னா இருந்துட்டு, இப்போ திடிர்னு வந்து நீ போறேன்னு சொல்ற... கஷ்டமா தான் இருக்கு.. என்ன பண்றது.. நான் ரவிகிட்ட பேசிட்டு சொல்றேன் மூர்த்தி..... " என்றவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை அவரிடம் சொல்லி விட்டு தன் பேச்சை முடித்துக் கொண்டவர், நியாபகம் வந்தவராய்,

" எப்படிப்பா இருக்கா மதி.. " என்று கேட்க,

" அவ ரொம்ப நல்லா இருக்கா பா.. தங்கமான பையன் வெற்றி.. " என்று சொல்ல..

" ம்ம். நல்லது பா... நான் கூட திடு திப்புனு வேற ஒரு பையனுக்கு கட்டிக் கொடுக்கிறீங்களேனு யோசிச்சேன்.. என்னதான் உறவுக் கார பையனா இருந்தாலும், யாரு என்னனு தெரியாம எப்படி.. " என்று சொல்ல,

" அவன் வெறும் உறவுக்கார பையன் இல்லை.. என் மனைவி லட்சுமியோட, கூட பிறந்த அண்ணன் பையன் தான் வெற்றி.. எனக்கு அவனை பத்தி தெரியலைனாலும், என் பொண்டாட்டிக்கு அவனை பத்தி நல்லாவே தெரியும்.. அதான் அன்னைக்கு அவ சொன்னதும் நானும் சம்மதிச்சேன்... " என்றார்..

" சரி பா.. என் கண்ணு முன்னாடி வளர்ந்த பொண்ணு மதி.. நல்லா இருக்கனும் " என்று பதில் அளித்தார் நடராஜன்..

****

மதியும் கற்பகமும் அன்றைய வேலைகளை முடித்து விட்டு, கற்பகம் அருகில் தெரிந்தவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்..

அவளும் தன்னுடைய மடிக் கணினியை எடுத்து, வந்து இருந்த மெயில்களை சரிப் பார்த்து அதற்கு பதில் அனுப்பிக் கொண்டு இருந்தாள்..

சில மெயில்களுக்கு நேரடியாக அலைபேசி மூலம் அழைத்து விளக்கிக் கொண்டுந்தாள்..

அந்த சமயம் பார்த்து அவசரம் அவசரமாக கற்பகம் வந்து, அவளிடம் " மதி... அம்மாடி மதி மா.. " என்று அழைத்துக் கொண்டே வந்தார்..

அவரின் சத்தம் கெட்டு, வெளியில் வந்தவள், " என்னத்தை என்ன ஆச்சு.. " என்று கேட்க,

"நம்ம வீட்டுக்கு மூணு வீடு தள்ளி இருக்காள்ள பரிமளம்.. நான் கூட சொல்லி இருக்கேன்ல.. அவ மருமகள் மாசமா இருக்கானு.. " என்று சொல்லி விட்டு அவளை பார்க்க,

மதியும் யோசனை செய்து விட்டு, " ஆமா சொன்ன மாதிரி தான் நியாபகம்.. " என்று கூறியவள் பின் அவரிடம், " சரி அதுக்கு என்ன.. நீங்க ஏன் இவ்ளோ பதட்டமா இருக்குறீங்க.. " என்று கேட்டாள்..

" அந்த புள்ளைக்கு இன்னும் நாள் இருக்கு.. அதுக்குள்ள வலி வந்துருச்சு.. ஆஸ்பத்திருக்கு கூட்டிட்டு போகணும்.. நான் கூட துணைக்கு போய்ட்டு வரேன்.. நீ வெற்றிகிட்ட சொல்லிரு.. அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.. " என்றார் அவர்..

" அப்டியா.. இப்போ எங்க இருக்காங்க.. கிளம்பிட்டாங்களா.. " என்று கேட்டுக் கொண்டப்படி அவள் நடக்க ஆரம்பிக்க, அவரும் அவளை பின் தொடரந்தார்..

" ஆட்டோ வர சொல்லி இருக்கு மா.. வந்ததும் கிளம்பிருவாங்க... " என்றார் கற்பகம்..

" ஓஹோ.. என்றவள் நடந்து கொண்டே அவர்களின் வீட்டை அடைந்தவள், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவசரமாக உள்ளே சென்றாள்..

அந்த பெண்ணோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்..

அவளை சுற்றி ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்..

"எல்லாரும் கொஞ்சம் தள்ளுங்க.. காத்து வரட்டும்.. இப்படி அடைச்சுக்கிட்டா எப்படி...." என்று சற்று தள்ளி நிற்க கூறினாள்..

அவர்களும் ஆளாளுக்கு முனகிக் கொண்டே, தள்ளி நின்றனர்..

அவளது கையை பிடித்து நாடியை பரிசோதனை செய்தவள், பின்பு வயிற்றில் கையை வைத்து குழந்தையின் நிலையை கவனித்தாள் ..

குழந்தை நன்றாக கீழே இறங்கி விட்டது.. மருத்துவமனை செல்வதற்குள் வழியிலேயே குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை ஊர்ஜிதப் படுத்தியவள்,

"நீங்க போறதுக்குள்ள குழந்தை வெளிய வந்துரும்.. நான் சொல்ற படி கேளுங்க.." என்றவள்,

அந்த பெண்ணின் மாமியாரிடம், " எனக்கு கொஞ்சம் சுடுதண்ணி கொண்டு வாங்க.. " என்றவள் தன் அத்தையை பார்த்து, " அத்தை, எங்க ரூம்ல கப்போர்டு பக்கத்துல மெடிக்கல் கிட் வச்சிருப்பேன்.. அதை எடுத்துட்டு வாங்க.. " என்றாள்..

அந்த பெண்ணை பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்..

பின்னர் சுடு தண்ணி மற்றும் மெடிக்கல் கிட் வாங்கிவள், "யாராவது ரெண்டு பேரு கூட வாங்க " என்றதும்,

கற்பகம் யோசனையுடன் சென்று, " மதி மா, என்ன பண்ற நீ.. அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிறப் போகுது.. " என்று கற்பகம் கேள்வி கேட்க,

அந்த பெண்ணின் மாமியாரோ கலக்கமுடன் இருந்தார்..

அங்கு இருந்த பெண்களும், " ஏம்மா.. எதுக்கு தேவை இல்லாத வேலை பாக்குற.. அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நீ பதில் சொல்லுவியா.. " என்று சற்று காட்டமாக பேச ஆரம்பித்தனர்..

பின்பு கற்பகத்தை பார்த்து, " இந்தா கற்பகம் நீயாவது சொல்லு.. நாங்க இங்க இருக்குறவங்களே எதுவும் செய்யாம ஆஸ்பத்திரிக்கு போக சொல்றோம்.. உன் மருமகளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை... நாலு எழுத்து படிச்சி இருந்தா இது எல்லாம் தெரியும்னு நெனப்பா.. ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா, யாரு பதில் சொல்வா... " என்று மாற்றி மாற்றி பேச ஆரம்பித்து விட்டனர்..

அவளோ அதற்கு எல்லாம் அசராமல், ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடி திறந்தவள் அழுத்தமாக பார்த்து, " நான் மகப்பேறு டாக்டர்.. அதுனால, என்னோட வேலையை என்னை பாக்க விடுங்க... " என்று சொல்லிவிட்டு, தன் அத்தையையும் ஒரு முறை பார்த்தவள் உள்ளே சென்று விட்டாள் ..

கற்பகமும் பரிமளமும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு, உள்ளே சென்றனர்..

அந்த பெண்ணிற்கு இது தான் தலை பிரசவம்..

வலியில் கத்தும் சத்தம் வெளியில் நன்றாகவே கேட்டது..

அந்த நேரம் வெற்றி வீட்டுக்கு வரும் சமயம்.., அந்த வீட்டை தாண்டி தான் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்..

அந்த வீட்டை கடக்கும் போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, வண்டியை நிறுத்தியவன், என்னவென்று கேட்க உள்ளே சென்றான்..

நகர பகுதியில் தான் யார் வீட்டில் என்ன நடந்தால் என்ன என்று இருப்பார்கள்..

ஆனால் கிராமங்களில் அப்படி எல்லாம் இல்லை..

அக்கம் பக்கத்தினரிடம் உரிமையாக பேசி பழகுவர்..

அவர்கள் இருக்கும் ஊர், கிராமம் என்றும் சொல்ல முடியாது.. அதே சமயத்தில் நகரம் என்றும் சொல்ல முடியாது..

வெற்றியும் அப்படித்தான், என்னவாயிற்று என்று கேட்பதற்காக செல்ல, அங்கு சில பெண்கள் பதட்டத்துடம் நிற்பதை பார்த்து,

" சித்தி என்ன ஆச்சு.. ஏன் எல்லாரும் இங்க நிக்கிறீங்க..." என்று கேட்க..

" நம்ம பரிமளம் மருமகளுக்கு இடுப்பு வலி வந்துருச்சு.. அதான் நாங்க இங்க நிக்கிறோம்.. " என்றார் அவர்..

வீட்டில் பேசும் போது அவனிடம் கற்பகம் சொல்லி இருந்தார்.. அந்த பெண்ணின் வளைகாப்பிற்கு கூட சென்று இருந்தார்களே.. அதனால் அவனுக்கு தெரியும்..

" அதுக்கு ஏன் இப்படி இங்க நிக்கிறீங்க.. நான் கார் எடுத்துட்டு வரேன்.. கிளம்பலாம் நம்ம ஆஸ்பத்திரிக்கு.. " என்றான் அவன்..

" அதுக்கு எல்லாம் வேலை இல்லை.. உன் பொஞ்சாதி உள்ள போய் இருக்கா.. அவ தான் பிரசவம் பார்த்துட்டு இருக்கா.. " என்றவரை யோசனையாக பார்த்தவன், அப்டியே சுவற்றில் சாய்ந்து கையை கட்டிக் கொண்டு நின்று கொண்டான்...

சிறிது நேரத்தில், " அம்மாஆஆ... " என்று அந்த பெண்ணின் அலறலை தொடர்ந்து, குழந்தையின் அழுகுரல் வீறிட்டு கேட்டது..

குழந்தை நல்ல படியாக பிறந்து விட்டதை உணர்ந்து, வெளியில் இருந்த பெண்கள் மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர்..

பின்னர் கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டதும், முதலில் வெளி வந்தது என்னவோ கற்பகம் தான். பின்னர் பரிமளம், தன் பேரனுடன் வெளி வந்து பிள்ளையை காட்ட, அங்குள்ள பெண்கள் எல்லாம் குழந்தையை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்..

குழந்தையை பெற்று எடுத்த அன்னைக்கு தேவையான முதலுதவி செய்து விட்டு, பின்னரே வெளியில் வந்தாள் மதி...

வெளியில் வந்தவள் முதலில் கண்டது வெற்றியை தான்..

" இங்க என்ன பண்றீங்க.. " என்று சைகையில் அவனிடம் கேட்க,

" அது சத்தம் கேட்டு தான் வந்தேன்.. " என்றவன், பின்பு, தயக்கத்துடன் " நீ என்ன படிச்சி இருக்க.. " என்று கேட்டான்.

அவனுக்கு ஒருவேளை அவள் மகப்பேறு மருத்துவராக இருக்க கூடுமோ.. என்ற சந்தேகம் இருந்தாலும் அதை உறுதி படுத்திக் கொள்ள கேட்டான்..

ஆனால் அவளோ, " ஹாம்.. அதை உங்க அத்தைகிட்டயே கேட்டுக்கோங்க... " என்றவள் முன்னாள் விழுந்த ஜடையை பின்னால் எடுத்து போட்டு, அவனைத் தாண்டி கடந்து சென்றாள்..

பரிமளத்திடம் சென்று," உங்க மருமகள் நல்லா இருகாங்க.. அப்புறம் இதுல அவங்களுக்கு என்னென்ன மருந்து குடுக்கணும்னு எழுதி இருக்கேன்.. ஏதாவது சந்தேகம்னா என்கிட்ட கேளுங்க...

அப்புறம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுங்க.. குழந்தைக்கு நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் தோல் ஊசி போட்டுருங்க.. அப்புறம் நான் ஒரு டாக்டரை சொல்றேன்.. அவங்ககிட்ட போய் குழந்தைக்கு எப்போ எப்போ தடுப்பூசி போடனும்னு விவரம் கேட்டுக்கோங்க.. " என்றவள் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்..

போகும் அவளது முதுகையே வெறித்து பார்த்தான் வெற்றி..


தேன் இனிக்கும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18

வெற்றி, அவனது தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக, குட்டி போட்ட பூனை போல மாற்றி மாற்றி நடந்து கொண்டிருந்தான்..

" ஏலேய்!!! வெற்றி.. எதுக்கு இப்போ அங்குட்டும் இங்குட்டும் நடந்த வண்ணமா இருக்க.. ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட போல ஓவரா தான் டா பண்ற.. நானும் காலையில இருந்து பாக்குறேன்.. புலம்பிகிட்டே கெடக்குறியே " என்று அவன் நண்பன் குமரன் கேட்க...

" பின்ன இல்லையா டா.. அவளை விரும்புன அளவுக்கு அவளை பத்தி தெரிஞ்சிக்காம விட்டுட்டேனா டா.. அதான் வருத்தமா இருக்கு.." என்று ஆதங்கமாக பதில் அளித்தான்..

" அது சரி தான்.. " என்று ஆமோதிதான் குமரன்..

" ஏன் டா.. இதுக்கு உங்க அதைக்கிட்டா அப்போ அப்போ பேசுவல போன் ல.. பேசும் போது கூடவா உனக்கு கேக்கணும்னு தோணல... " என்று நக்கல் அடித்தவாரு கேட்க..

" ம்ம்க்கும்.. பேசும் போது, ரெண்டு வார்த்தை பேசும்.. அதுவும் அழுதுகிட்டே எங்க அத்தை பேசும்.. எனக்கு சமாதானம் பண்ணவே நேரம் போயிரும்... அப்புறம் எங்குட்டு நான் அவளை பத்தி கேட்க... ரெண்டு முறை கேட்டேன்.. அப்போ கூட மதி காலேஜ் போய் இருக்கா.. காலேஜ்ல இருந்து வந்துட்டு அவ படிச்சிட்டு இருக்கானு அழுதுகிட்டே சொல்லுவாங்க.. அவ்ளோதான்.. எனக்கும் கேட்க தோணல.. எங்க அத்தைக்கும் சொல்லத் தோணல... " என்றான்..

" சரி விடு.. அதான் இப்போ தெரிஞ்சிடுச்சே .. அடுத்து என்ன செய்ய போற.. " என்று கேட்டதற்கு..

" நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.. அது அவளுக்கு நான் குடுக்கிற surprise ah இருக்கட்டும்.. " என்றவன், தன் மனதில் நினைத்ததை அவனிடம் கூற, அவனும் "நல்லது மச்சான்.. சந்தோசம்... " என்றான்..

" சரி இது எல்லாம் இருக்கட்டும்.. நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற..." என்று கேட்டான் குமரனைப் பார்த்து..

அவனோ, " என்ன மச்சான், விஷயம் தெரிஞ்சி நீயும் இப்படி என்கிட்ட கேக்குற.. " என்று ஆதங்கமாக வெற்றியைப் பார்த்து கேட்டான்..

அவனோ, " டேய்.. என்ன டா எப்பவோ நடந்த விஷயம் அது.. இப்போ மாறி இருக்கும் டா.. ஒரு தடவை நீ செக் பண்ணி பாரு.. " என்று வெற்றி குமரனிடம் சொல்லி பார்க்க,

அவனோ, " எனக்கு நம்பிக்கை இல்லை டா.. " என்று விரக்தியாக பதில் கூறினான்..

" இங்க பாரு மச்சான், இப்டியே வாழ்க்கை போயிடாது.. நான் நெனச்சி பார்த்தேனா மதி எனக்கு கிடைப்பானு.. அது போல உன் வாழ்க்கைலையும் மாற்றம் வரும்.. அதை மனதுல வச்சிக்கோ... " என்றான்..

அவன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்..

அவனிடம் பேசிவிட்டு, மாலை போல வீட்டிற்கு வந்தவன், மதியை தேட, அவளோ தன் அத்தையுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்..

" ஏன் கண்ணு, அம்புட்டு பெரிய டாக்டர் படிப்பு படிச்சிட்டு வீட்டுல என்கூட வேலை பார்த்துட்டு இருக்க.. புது உசுர இந்த உலகத்துக்கு கொண்டு வர்ற படிப்பை படிச்சிட்டு, இப்படி வீட்டுல இருக்கலாமா.. " என்று ஆதங்கத்துடன் அவர் கேட்க,

" நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அத்தை... எனக்கும் வீட்டுல இருக்க விருப்பம் இல்லை.. நானே அவருகிட்ட இதை பத்தி பேசலாம்னு தான் இருந்தேன்.. " என்றாள்.. அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவாறு வந்த வெற்றியோ,

" மதி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. உள்ள வா.. " என்றாவாறு அவன் உள்ளே அறைக்குள் செல்ல, அவனை பின் தொடர்ந்து அவளும் சென்றாள்..

" என்ன பேசணும்.. சொல்லுங்க.. " என்று அவள் கேட்க,

" இது வரைக்கும் நீ என்ன படிச்சி இருக்கேனு நான் தெரிஞ்சிக்காம விட்டது, எனக்கே ஒரு மாதிரி இருக்கு.. நான் அத்தைகிட்ட பேசி இருக்கேன் தான்.. ஆனால் நீ என்ன படிக்கிற ஏது படிக்கிறனு கேட்டுக்கிட்டது இல்லை.. அத்தையும் சொன்னது இல்லை என்கிட்ட.. " என்று தயக்கமாக அவளிடம் கூறினான்..

" சரி அதை விடுங்க.... அது எனக்கு பெருசா தெரியல.. கல்யாணத்துக்கு அப்புறமும் நம்ம ஒருத்தரை பத்தி ஒருத்தர் பேசி தெரிஞ்சிக்கிட்டதும் இல்லை.. இப்போ தான் நான் கொஞ்சம் உங்ககிட்ட இயல்பா பேசுறேன்.. நானே உங்ககிட்ட இதை பத்தி பேசலாம்னு தான் இருந்தேன்.. அதுக்குள்ள உங்களுக்கே தெரிஞ்சிடுச்சு.. " என்று அவனின் முகத்தை பார்த்தாவாறு சொல்ல,

அவனும், " சரிதான்.. " என்றவன், பின் " அப்போ கண்டிப்பா நீ சென்னைல ஒர்க் பண்ணிட்டு தான் இருந்து இருப்ப.. " என்று அவளை பார்க்க,

அவளும். ஆமாம் என்பதாய் தலை ஆட்டினாள் ..

" இங்க இருக்குற ஹாஸ்பிடல்க்கு அப்ளை பண்ணு மதி.. Job கெடச்சிட்டா நல்லது.." என்று சொல்ல,

"புதுசா ஒரு ஹாஸ்பிடல் ஓபன் பண்ண போறாங்க.. அங்க கேட்டு இருக்காங்க.. அங்க அப்ளை பண்ணிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்.. " என்றாள்..

" ஓஹோ.. நல்லது.. சரி எங்க.. " என்று கேட்க,

" நம்ம ஊருக்கு கொஞ்சம் தள்ளி.. அன்னைக்கு கூட நம்ம ட்ரெஸ் எடுக்க போகும் போது பார்த்தோமே, ஒரு building கான்ஸ்டரக்ஷன்ஸ் ஒர்க் நடத்துட்டு இருந்துச்சுல.. அது தான்.. " என்று அவனிடம் சொல்ல,

அவனும் எந்த இடம் என்று, நியாபகம் படுத்தியவன், " ஓஹோ.. அது தானா.. ரொம்ப நல்லதா போச்சு.." என்றான்..

அவளும் ம்ம் என்று கூறியவள், பின், " அப்ளை பண்ணிட்டு, அவங்க வர சொல்ற அன்னைக்கு நம்ம போகணும்.. " என்றாள்..

" அது பிரச்சனையில்லை.. நீ எப்போனு மட்டும் சொல்லு.. போய்ட்டு வந்துரலாம்.." என்றவன், " சரி நான் குளிச்சிட்டு வரேன்.. ஒரு காபி கிடைக்குமா " என்று அவளைப் பார்த்து, கண்களை சுருக்கிக் கொண்டு கேட்க,

அவளும் சிரித்துக் கொண்டு, " போய் குளிச்சிட்டு வாங்க.. போட்டு வைக்கிறேன்.. " என்று கூறினாள்..

******

மாலை போல் ஆபீஸ்லிருந்து வந்த ரவி, தன் தந்தை சோபாவில் அமர்ந்து இருப்பது தெரிந்தும் கண்டும் காணாமலும் சென்றான்..

அவன்தான் அப்படி என்றால் , பெற்ற மனம் அப்டியே விட்டு விடுமா..

"ரவி..." என்று போகும் அவனை அழைத்தார்..

" சொல்லுங்க ப்பா.." என்று கேட்க,

" இங்க வந்து உக்காரு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. " என்றார்..

அருகில் வந்து அமர்ந்தவன், " என்னப்பா சொல்லுங்க.. " என்று கேட்டான்..

" இன்னைக்கு நானும் மூர்த்தியும் பேசிட்டு இருக்கும் போது, அவன் நீ போட்டு இருக்குற புது பார்ட்னெர்ஷிப் பத்தி என்கிட்ட சொன்னான்.. " என்றவரைப் பார்த்தவன்,

" சரிப்பா.. அதுக்கு இப்போ என்ன..?? என்ன சொல்ல வரீங்க " என்று அலட்சியத்துடன் கேட்டான்..

" இல்லடா.. அந்த விஷயத்தை பத்தி, எங்க யார்கிட்டயும் சொல்லலையே.. அதான் கேட்டேன்.. " என்றவரை ஒரு மாதிரி பார்த்தவன்,

" சொல்றதுக்கு தோணல.. சொல்லல... " என்றான் தோள்களை குலுக்கிக் கொண்டு..

அவரோ ஒரு பெருமூச்சுடன், " சரி விடு.. அது பத்தி சொல்லல.. ஆனால் அந்த ஆளு பத்தி விசாரிச்சியா.. எல்லாம் ஓகே வா.. நம்ம கம்பெனி மூலமா இம்போர்ட் எஸ்ப்போர்ட் பண்றாங்க அவங்க.. நாள பின்ன நமக்கு எதுவும் சிக்கல் வந்துர கூடாது.. அதை பார்த்துக்கோ.. " என்றார்..

" அது எல்லாம் விசாரிச்சிட்டேன்.. அவங்க உணவுப் பொருட்களை தான் ஏற்றுமதி இறக்குமதி பண்ண போறாங்க.. தூத்துக்குடி ல, team cargo service மூலமா பண்றாங்க.. இங்க சென்னைல நம்ம service மூலமா பண்ண போறாங்க.. அவ்ளோதான்.. " என்று தன் தந்தையிடம் விளக்கிக் கூறினான்..

அவரும் கேட்டு விட்டு சரி என்று சொன்னவர், பின் நிறுத்தி,

" அப்புறம் நம்ம மூர்த்தி, அவன் இந்த கம்பெனில பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகுறதா சொல்லி இருக்கான் பா.. " என்று அவர் வருத்தத்துடன் அவனிடம் சொல்ல,

அவனோ யோசனையுடன், " ஏன்.. என்னவாம்." என்று சற்று அலட்சிய தொணியில் கேட்க,

" அவன் சொந்த ஊரு பக்கம் போய் செட்டில் ஆக போறானாம்.. " என்று அவர் சொல்ல,

" ஓஹோ.. " என்றவன், பின், " ரொம்ப சந்தோசம்.. டாக்குமெண்ட் மாத்தி ரெடி பண்ண ஏற்பாடு பண்ணுங்க.. " என்றவனை, அதிர்ச்சியுடன் பார்த்த நடராஜோ,

" என்னபா.. சந்தோசம்னு சொல்ற.. உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பாக்கல ரவி.. " என்று ஆதங்கத்துடன் அவனைப் பார்த்து கூறினார்..

" வேற என்ன சொல்லணும்.. நான் அவரு பொண்ண கட்டி இருந்தாளாவது வருத்தப் படலாம்.. அதுவும் இல்லனு ஆகிப் போச்சு.. இனிமே அவரு நம்ம கூட இருந்தா என்ன.. இல்லனா என்ன.. " என்றவனை வினோதமாக பார்த்தார்..

" உன்னோட நடவடிக்கையே மாறிப் போச்சு... நீயா இப்படி பேசுற.. " என்று கேட்டவரிடம்,

" ஆமா.. நான் தான் பேசுறேன்.. ஆரம்பத்துல ரெண்டு குடும்பத்துக்கும் சுமூகமான உறவு இருந்துச்சி.. இப்போ அது தான் இல்லனு ஆகிருச்சே... இனிமே அவரு நம்ம கூட இருக்குறது சரி வராது... " என்றவன் அவரின் பதிலை எதிர் பார்க்காமல் விறுவிறு வென மாடியேறி அவனது அறைக்குச் சென்று விட்டான்..

போகும் அவனின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் நடராஜ்..



தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 19

மதி, அந்த மருத்துவமனைக்கு விண்ணப்பித்து இருக்க, அங்கிருந்து அவளை வர சொல்லி மின்னஞ்சல் வந்து இருந்தது..

அவளும் அதை பார்த்து விட்டு, வெற்றியிடம் கூற, " என்னைக்கு போகணும் " என்று கேட்டான்..

" நாளைக்கு வர சொல்லி இருக்காங்க.. " என்றவளிடம்,

" ஓ.. அப்டியா.. " என்றவன் ஒரு நிமிடம் யோசிக்க, பின்பு, " சரி போலாம்.. " என்று அவளிடம் சொல்லிவிட்டு, குமரனுக்கு அழைப்பு விடுவித்தான்..

அவனும் அழைப்பை ஏற்று, " என்ன மச்சான்.. " என்றவனிடம்,

" ஹாம்.. குமரா.. நாளைக்கு மதிக்கு ஹாஸ்பிடல்ல இருந்து இன்டெர்வியூ வர சொல்லி இருக்காங்க.. என்னால நாளைக்கு வர முடியாது.. அதுனால நீ நாளைக்கு நம்ம சொன்னபடி ஜான்க்கு அனுப்ப வேண்டிய சரக்கை பத்திரமா அனுப்பிரு... " என்று கூற,

அவனும் " சரி மச்சான்.. நான் பார்த்துகிறேன்.. "என்று பதில் அளித்தான்..

அவனிடம் பேசி விட்டு வந்த வெற்றி, மதியிடம், " சாப்டியா தேனு.. " என்று கேட்க..

" ஹாங்.. என்ன சொன்னீங்க.. " என்று அவள் புரியாமல் கேட்க,

பிறகு தான் தெரிந்தது தான் சொன்ன வார்த்தையை.... தன் மடத் தனத்தை எண்ணி நொந்து கொண்டவன், " சாப்டியா மதி னு கேட்டேன்.." என்று சமாளித்துக் கொண்டு சொல்ல..

" இல்லையே.. எனக்கு வேற பேரு ல கேட்டுச்சி.. ஏதோ தேனு னு சொன்ன போல இருந்துச்சி.. " என்று யோசனையுடன் கூறினாள்..

" பாம்புக் காது.. இது மட்டும் நல்லா கேட்டிரும் இவளுக்கு " என்று முணுமுணுத்தவன், " அப்படி சொல்லவே இல்லையே மதி.. உனக்கு தப்பா விழுந்து இருக்கும்.. " என்று எதை எதையோ கூறி அவளிடம் சமாளித்தான்..

" நானும் அத்தையும் எப்பவோ சாப்பிட்டோம்.. இனி நீங்க தான்.. " என்றவள், அவனுக்கு சாப்பாடு பரிமாற, அவனும் சாப்பிட்டு முடித்து, இருவரும் தூங்க சென்றனர்..

அவனும் பாயை விரித்து, கீழே படுக்க போக,

" வேந்தன்.. " என்று அவள் அழைக்க..

அவனோ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, " நானா.. " என்று கேட்க..

அவளோ ஒரு சிறு முறைப்புடன், " பின்ன.. இங்க உங்களை தவிரை வேற யாரு இருக்கா.. " என்று கேட்டாள்..

" அது.. எல்லாரும் வெற்றின்னு கூப்பிட்டு கேட்டே பழகிருச்சு.. நீ புதுசா வேந்தன்னு கூப்பிடும் போது, வித்தியாசமா இருக்கு.. ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு.. " என்று சிரித்துக் கொண்டே சொன்னான்..

" சரி சரி...இனிமே நான் இப்படித்தான் கூப்பிடுவேன்.. யாருனு முழிக்காதீங்க.. " என்றாள் சிறு முறைப்புடன்..

" ஓகே.. உத்தரவு மஹாராணி.. " என்று அவன் தன் உடம்பை சற்று முன் வளைத்து கூற,

அவளுக்கோ அவன் தோரணையில் சிரிப்பு வந்து விட்டது..

" சரி எதுக்கு கூப்பிட... " என்று அவனும் சிறு புன்னகையுடன் கேட்க,

" நான் இங்குட்டு ஓரமா தான படுக்கிறேன்.. அந்த பக்கம் ஸ்பைஸ் நிறைய இருக்கே.. நீங்க மேலேயே படுத்துக்கலாமே .. " என்று அவள் சொல்ல,

" படுக்கலாம் தான்.. ஆனால் தூக்கத்துல புரண்டு மேல கைய கால போட்டேனா.. அதுக்கு கீழயே படுத்துகிறேன் நான்.. " என்றான் வெற்றி..

" ஓஹோ.. தூக்கத்துல போடுவீங்களா.. இல்ல வேணும்ன்னுக்கே போடுவீங்களா.. " என்று ஒரு மாதிரி அவனைப் பார்த்துக் கொண்டு கேட்க..

அவனோ, " நம்ம தூக்கத்துல போட்டா கூட இவ வேணும்னு போட்டதா சொல்லுவா... வெற்றி எதுக்கு டா வம்பு.. நம்ம கீழயே படுத்துருவோம்.. " என்று மனதிற்குள் நினைத்தவன், அவளிடம்,

" நமக்குள்ள எல்லாம் சரி ஆகட்டும் மதி .. அதுக்கு அப்புறம் நான் மேல படுக்கிறேன்.. அதுவரைக்கும் கீழ தான் சரி. " என்று சொல்லிவிட்டு அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து விட்டான்..

அவளோ, அவனையே பார்த்து இருந்தாள் ..

பின் விளக்கை அணைத்து விட்டு, கட்டிலில் வந்து படுத்தவள், தூக்கம் வரமால் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்..

அவனோ பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில், படுத்ததும் உறங்கி விட்டாள் ..

தூக்கம் வரமால் புரண்டுக் கொண்டிருந்தவள், என்ன நினைத்தாளோ, திரும்பி வெற்றியை பார்க்க.. அவனோ திரும்பி இவளது பக்கம் பார்த்து படுத்து இருந்தான்..

ஒரு கட்டத்தில் அவளது பார்வை ரசனையாக மாற, மெல்ல அவள் முகத்தில் வெட்கப் புன்னகை அரும்பியது..

" கொஞ்ச கொஞ்சமா என் மனசுக்குள்ள வந்துட்டீங்க போல.. " என்று அவனைப் பார்த்து கூறினாள்..

மின் விசிறியின் துணையால் அவனது முன் நெற்றி முடி, காற்றில் பறக்க, அதனையே பார்த்தவள், பின் மெல்ல இறங்கி, அவன் அருகில் அமர்ந்து, காற்றில் அசைந்த முடியை அவளது கைகளால் இதமாக கோதி விட ஆரம்பித்தாள் ..

அவளாக அவனை ரசனையுடன் தொடும் முதல் தொடுதல்..

அவளுக்கோ உடம்பெல்லாம் சிலிர்த்தது..

கோதிக் கொண்டிருந்தவள், நிறுத்தி விட்டு, " அழகு தான்யா நீ.. " என்று அவனது கன்னம் தொட்டு, கொஞ்சிக் கொண்டாள்..

பிறகு நேரம் ஆவதை உணர்ந்து, அவளும் உறங்கச் சென்றாள்...

மறுநாள் எழுந்து காலை கடமைகளை முடித்து விட்டு, கற்பகத்திடம் கூறி விட்டு இருவரும் வெற்றியின் காரில் கிளம்பினர்..

பைக்கை முதலில் எடுத்தவன், பின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை அறிந்து காரை தேர்வு செய்தான்..

20 நிமிட பயணத்திற்கு பிறகு மருத்துவமனையை அடைந்தவர்கள், காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு, இருவரும் உள்ளே சென்றனர்..

வெற்றி காத்திருப்பு அறையில் இருக்க, மதி மட்டும் மருத்துவமனையின் தலைமையாளரை பார்க்கச் சென்றாள்..

அறை மணி நேரம் கடந்து இருக்க, அந்த வழியாக கடந்து சென்ற ஒருவரை பார்த்த வெற்றிக்கு, யோசனையுடன் புருவத்தை சுழித்தான்..

" எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே.. " என்று யோசித்தவனுக்கு சட்டென புலப்படவில்லை..

" எங்க னு நியாபகம் வர மாட்டேங்குது.. எதுக்கும் இவனை ஒரு போட்டோ எடுத்து வைச்சிபோம்.. " என்றவன் தன் அழை பேசியை எடுத்து, அவனை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டான்..

பின் அடுத்த அரை மணி நேரம் கழித்து மதி வந்து சேர்ந்தாள்....

"என்ன ஆச்சு மதி.. என்ன சொன்னாங்க.. " என்று கேட்டான் வெற்றி..

"எல்லாம் ஓகே தாங்க.. நெஸ்ட் வீக் ல இருந்து ஜோயின் பண்ண சொல்லிட்டாங்க.." என்று சொல்ல,

அவனோ.. " சூப்பர்.. வாழ்த்துக்கள் மதி.. " என்று அவளுக்கு கை கொடுக்க..

அவளும் அதை புன்னகையுடன் பற்றிக் கொண்டு கை குலுக்கினாள் ..

பின் இருவருமாக வரும் வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, வீடு வந்து சேர்ந்தனர்..

கற்பகம் அவர்களிடம், " என்னயா.. போன வேலை முடிஞ்சதா.. " என்று கேட்க,

" நல்ல படியா முடிஞ்சது.. அடுத்த வாரத்துல இருந்து வரச் சொல்லி இருக்காங்க.. " என்று கூறினான் வெற்றி தன் அன்னையிடம்..

" அப்டியா ரொம்ப நல்லது ப்பா.. சாப்பிட்டங்களா ரெண்டு பெரும்.. " என்றவரிடம் ,

" நாங்க சாப்டாச்சு.. நீங்க.. " என்று கேட்க...

" நானும் சாப்பிட்டேன் யா.. செத்த நேரம் நான் மரகதம் வீட்டுக்கு போய்ட்டு வரேன்.. நீங்களும் போய் ஓய்வு எடுங்க பா.. " என்று அனுப்பி வைத்தார்..

வெயிலின் தாக்கத்தாலும், அவர்களுக்கும் களைப்பாக இருந்ததால், இருவரும் குளியல் அறைக்கு சென்று தங்களை சுத்த படுத்திவிட்டு, இருவருமே கட்டிலில் படுத்துக் கொண்டனர்..

அசதியில் தூங்கிய இருவருக்கும் தெரியவில்லை, ஒருவர் மற்றோருவர் அணைப்பில் இருப்பது..

மாலை நேரமாக மதி தான் முதலில் கண் விழித்தாள்..

தன் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்தவள் என்னவென்று பார்க்க, வெற்றியோ அவளை நெருங்கி படுத்து தன்னுடன் சேர்த்து அணைத்து படுத்து இருந்தான்..

அவனது கையை பார்த்தவள், திரும்பி அவனைப் பார்க்க, அவனோ இன்னும் ஆழ்ந்த நித்திரையில் தான் இருந்தான்..

ஏனோ அந்த கணப் பொழுதை அவளும் ரசித்தால் என்று தான் சொல்ல வேண்டும்..

அவளது பெண்மையின் உணர்வுகளை தூண்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

அவளுக்குள் ஏதோ ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து, இது சரி வராது என்று நினைத்தவள், மெல்ல அவனது கையை எடுத்து விட்டு, அவனுக்கு முழிப்பு ஏற்படாதவாறு, மெல்ல நகர்ந்து, கட்டிலில் இருந்து கீழே இறங்கிக் கொண்டு, அவனை பார்த்தவள், அவனை கன்னம் வழித்து கொஞ்சி விட்டு,
" அழகுடா.." என்று சொன்னவள், பின் ஒரு மென் சிரிப்புடன் குளியல் அறைக்கு புகுந்து, ஒரு சின்ன குளியலை போட்டு விட்டு, வெளி வந்தவளை, ஒரு சிரிப்புடன் எதிர்கொண்டான் வெற்றி..

அவளும் பதிலுக்கு சிறிது விட்டு, வெளியேற, வெற்றி அவள் போவதை பார்த்து விட்டு, குமரனுக்கு அழைத்து, " குமரா... நான் சொன்ன வேலையை முடிச்சாச்சா... " என்று கேட்க,

" முடுச்சாச்சு வெற்றி.. நானும் செல்வமும் சேந்து முடிச்சிட்டோம்.. ஒரு பிரச்னையும் இல்லை.. " என்று சொல்ல,

வெற்றியும் " சரி டா மச்சான்.. நான் அப்புறம் வரேன் கிளம்பி.. நீ நம்ம பயலுகளை கூட்டிட்டு பழத் தோட்டதுக்கு வந்துரு.. " என்றான்..

குமரனும் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்..

வெற்றியும் ஒரு திருப்பிதியுடன் எழுந்து, அவனது வேலையை தொடர்ந்தான்...


தேன் இனிக்கும்...

 
Status
Not open for further replies.
Top