ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

எந்த வித சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று வெற்றி சொல்லி விட்டதால், எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.

மதி, அவளுடைய அறையில் உறங்க, வெற்றி மற்றும் கற்பகத்திற்கு வேறு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அங்கே உறங்கினர்.

முதல் நாள் இரவே நடந்த அனைத்தையும் வெற்றி தன் நண்பன் குமரனிடம் பகிர்ந்து கொள்ள,

"வாழ்த்துக்கள் மச்சான்... யாருக்கு யாருனு அந்த கடவுள் முன்கூட்டியே முடிவு பண்ணிருக்காரு.. எங்க சுத்தி எப்படி சுத்தி நடந்து இருக்கு பாரு. நீ ஆசை பட்டது நடந்துடுச்சுல, சந்தோசமா இரு மச்சான் " என்று அவன் சொல்ல,

" ஆசை பட்டது என்னவோ நடந்துருச்சி தான்.. ஆனால் சந்தோஷமான மனநிலை இல்லை " என்று வெற்றி சொல்ல,

"என்னடா மச்சான்.
எதுக்கு இப்படி சொல்ற " என்ற நண்பனின் கேள்விக்கு,

" மதியை பொறுத்த வரைக்கும் ரவியை தான் கணவனா நெனச்சி இருப்பா.. இப்போ திடிர்னு மாப்பிள்ளை மாறுனதும் அவளால ஏத்துக்க முடியல.. அவ மனசு எனக்கு புரியுது.. அவளுக்கான இடைவெளி குடுக்கணும். பாப்போம். " என்ற வெற்றிக்கு,

" சரி டா மச்சான். உன் மனதுக்கு ஏத்த போல எல்லாம் நல்லதாவே நடக்கும் " என்றவனிடம் மேலும் சில விவரங்களை கேட்டும் பகிர்ந்தும் கொண்டான்.

மறுநாள் விடியல் ஆதவன், யார் எப்படி இருந்தால் என்ன, என் கடமையை செவ்வனே செய்ய நான் வந்து விட்டேன் என்று தன் கதிர்களை பரப்பத் தொடங்கி விட்டான்.

மதி, இரவெல்லாம் யோசனையிலேயே இருந்ததால், எப்பொழுது தூங்கினாலோ, காலை கண் விழித்தது என்னவோ ஏழு மணிக்குதான்.

AC அறை என்பதால், வெளியே ஆட்களின் பேச்சு சத்தம் எதுவும் கேட்கவில்லை.

எழுந்தவள், பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், ரூமை ஒட்டியுள்ள பலகணிக்குச் சென்றாள்..

சிறிது நேரம் அங்கு நின்று, நேற்று நடந்தவற்றை மனதில் எண்ணியப்படி நின்றிருந்வளின் கண்ணில் பட்டது என்னவோ, தோட்டத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும் வெற்றிதான்..

எப்பொழுதும் காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, இன்றும் சீக்கிரம் முழிப்பு தட்டி விட்டதால், கீழே இறங்கி வந்தவன் தோட்டத்து பக்கம் சென்று சிறிது நேரம் தியானம் செய்தவன், பிறகு சூரியன் உதயமானதும் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தான்.

அதை தான் மதி பார்த்துக் கொண்டிருந்தாள்..

செய்து முடித்தவன், கழட்டி போட்ட தன் சட்டையை எடுத்து போடும் போது, யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு தோன்றிட சுற்றும் முற்றும் பார்த்தவன், யாருமில்லை என்றதும் தோள்களை குலுக்கி விட்டு, சென்று விட்டான்.

இவள் தான், அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனை பற்றிய எண்ணம் தான் அவளது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது..

எப்படியும் தன் தாய்க்கு சொந்தமாக தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் உரிமையுடன் அவனிடம் சொல்ல மாட்டார்கள்..

தாய் தன் உறவினர்களை பற்றி, தம்மிடம் அதிகமா பேசியது இல்லை. எப்போதாவது தந்தையிடம் பகிர்ந்து கொள்வார் . ஆனால் அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், தங்களுக்கும் அந்த உணர்வு வரவில்லையோ என்னவோ... என்றவாறு பலதரப்பட்ட யோசனையுடன் உள்ளே சென்று, குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள்.

அப்பொழுது தான் வெற்றியும் குளித்து முடித்து வேறு உடைக்கு மாற்றி, நேரே பூஜை அறைக்கு சென்றவன் கடவுளை மனதார வணங்கி விட்டு, ஹாலில் அமர்ந்து இருந்த மூர்த்தியிடம் வந்து,

" மாமா " என்று அழைக்க, அவரோ படித்துக்கொண்டிருந்த செய்தி தாளை மடித்து மேஜையின் மீது வைத்து விட்டு, அவனை பார்த்து

" சொல்லுங்க.. எதுவும் பேசணுமா " என்றார். இத்தனை வருடம் பேசாமல் இருந்ததாளோ என்னவோ சட்டென்று அவனிடம் மாப்பிள்ளை என்று உடனேயே உரிமை பாராட்ட முடியவில்லை..

வெற்றியும் அதனை எல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.

" இன்னைக்கு ஊருக்கு போகணும் " என்றான்..

அவருக்கும் தெரியும்தானே, பெண்ணை கட்டிக்குடுத்தால் அவள் கணவன் வீட்டில் இருப்பது தானே முறை.. அதுவும் மகள் இப்பொழுது வெற்றியை தவிர வேறு ஒருவனை மணம் முடித்து இருந்தால் , அவள் இந்நேரம் கணவன் வீட்டில் தானே இருப்பாள் என்பதை அறியாத முட்டாள் ஒன்றும் இல்லை அவர்.

அதனாலேயே மூர்த்தியும், ஒரு பெருமூச்சுடன் " எப்போ கிளம்பலாம்னு இருக்கீங்க " என்று கேக்க,

" இன்னைக்கு மத்தியானதுக்கு மேல ட்ரெயின் இருக்கு. அதுல கிளம்புனா ராத்திரிக்கு ஊருக்கு போய் சேந்துடலாம். எங்க கல்யாண விஷயம் அங்க யாருக்கும் தெரியாது. இனிதான் போய் சொல்லணும். " என்று சொல்ல, மூர்த்தியோ தன் மனைவியின் முகத்தை பார்க்க,

அவரும் சரி என்பதாய் தலை அசைக்க, அடுத்து தன் மகளை பார்த்தார். அவளும் நடந்தவற்றை எல்லாம் மாடிப்படியில் நின்றவாரு பார்த்துக் கொண்டிருந்தாள்.

தந்தை, தன்னை பார்த்து தன் அபிப்பிராயத்தை கேக்க, அவளும் ஆமோதிப்பதாய் தலை அசைத்தாள்.

மதியும் தனக்கு தேவையான கொஞ்சம் துணி மணிகள் மற்றும் இன்னும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டாள். ஏதும் தேவைபட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே இருந்தாள்.

அந்தா.. இந்தா.. என்று மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டு காரில் அனைவரும் புறப்பட்டனர்.

ஒரு காரில் மூர்த்தி, லட்சுமி, சாந்தவி குடும்பத்தினர்.

இன்னொரு காரில் வெற்றி, மதி மற்றும் கற்பகம்..

வெற்றிக்கு இங்கிருந்து திருச்சி வரை விமானத்தில் சென்று, பின்பு அங்கிருந்து காரில் மணப்பாறை வரை செல்லலாம். ஆனால் விமானப் பயணம் தன் தாயிக்கு ஒத்து கொள்ளாது.. அவர்களை மட்டும் தனியே ட்ரைனில் வர சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை..

அதனால் தான் இந்த ரயில் பயணம். யாராவது காரணம் கேட்டால் சொல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான் . ஆனால் யாரும் எதுவும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு விட்டது நல்லது தான் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டான்...

ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவுடன் வெற்றி தன் லக்கேஜ் எடுத்துக்கொண்டவன், மதியின் லக்கேஜ்'ம் எடுத்துக் கொண்டான்.

"இல்லை பரவாயில்லை.. நான் கொண்டு வரேன்".. என்று அவள் சொன்னதற்க்கு,

"இருக்கட்டும் மதி.. நான் கொண்டு வரேன். இதுல என்ன இருக்கு " என்று சொல்லி முன்னால் கொண்டு சென்றான்.

ட்ரெயின் நிற்கும் பிளாட்பார்ம்க்கு வந்தவர்கள், அவர்கள் ஏறும் கோச்சிற்கு வந்து, உள்ளே தாங்கள் அமர வேண்டிய இடத்திற்கு சென்று தங்களது பெட்டிகளை அடுக்கி வைத்தான்..

வெற்றி, மதியின் திருமணம் முடிந்த கையோடு அப்படியே ஊருக்கு கிளம்பிச் செல்லலாம் என்று தான் நினைத்து வந்தான்.

ஆனால் நடந்தது என்னவோ வேறு. அதனால் தன் நண்பனிடம் கூறி, மறுநாள் தக்கல் பிரிவில் டிக்கெட் புக் செய்யுமாறு கூறினான்.
அதே போல அவனும் செய்துவிட்டு, இவனுக்கு போனில் அனுப்பி வைத்து விட்டான்..

ட்ரெயின் சற்று நேரத்தில் கிளம்பிவிடும் என்பதால், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, தாங்கள் அமர வேண்டிய சீட்டில் வந்து அமர்ந்து கொண்டனர்.

பெர்த் பிரிவு தான் புக் செய்ய சொல்லி இருந்தான்.. அவ்வப்போது இளைப்பாரிக்கலாம் என்று..

கற்பகமும் மதியும் எதிர் எதிர் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொள்ள,

வெற்றி யார் பக்கத்தில் அமருவது என்ற யோசனையுடன் நின்று கொண்டிருந்தான். அதாவது அவனுக்கு மதியின் பக்கத்து சீட் தான் புக் ஆகி இருந்தது. அவளது அருகில் அமர்ந்தால் , என்ன நினைப்பாளோ என்ற யோசனையுடன் இருக்க..

கற்பகம் " நீ உக்காரலையா சாமி " என்று கேக்க..

"ம்ம். உக்காரனும்மா " என்றவன் மதியின் அருகில் சற்று தள்ளி விலகியே அமர்ந்தான் .

அவளும் அதை ஒரக்கண்ணால் கவனித்தவள், ஒன்றும் கண்டு கொள்ளாது, ஜன்னல் புறமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..

ஆனால் வெற்றிக்கு தான் அவளது அருகாமை, மனதிற்கு இதத்தை தந்தது..

தலையில் பூ வைத்து, புடவை உடுத்தி , கை நிறைய வளையல் அணிந்து, எல்லாவற்றிற்கும் மேலாக தான் கட்டிய மஞ்சள் தாலியுடன் அவளை பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள்.

முதன் முதலில் அவளுடைனான பயணம்.. இது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று மனதில் எண்ணிகொண்டான்..


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

முதன் முறையாக அவளுடனான பயணம். இது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்..

வெளியில் வீசிய காற்றினாலும், உடல் சோர்வுனாலும் மதி கண்ணயற, தூக்கத்தில் ஜன்னல் கம்பியில் தலையை இடித்தவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

தன் மனம் கவர்ந்தவள், இப்பொழுது தன் மனைவியாய், அதுவும் தன் தோள் மீது சாய்ந்து.. அருகருகில்.. அவளது ஸ்பரிசம் தன் மீது.. இனம் புரியா உணர்வு.. அந்த நொடியை கண் மூடி அனுபவித்திக் கொண்டிருந்தான்..

சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து கண் விழித்து பார்த்தவள், எதன் மேலயோ சாய்ந்து இருப்பதை உணர்ந்து பார்க்க,

அவன் மேல் சாய்ந்து இருப்பதை அறியவும் பட்டென்று தலையை இழுத்துக் கொள்ள,

அவள் இழுத்துக் கொண்ட வேகத்தில், அவன் கண் திறந்து பார்க்க, அவளோ "சாரி.. அது தெரியாம.. உங்க மேல சாஞ்சிட்டேன் " என்று சொல்ல..

அவனோ " அவளா, என் மேல சாஞ்சிட்டேன்னு நெனச்சி சொல்றா.. நம்ம தான் சாயிச்சு வச்சிக்கிட்டோம் னு தெரிஞ்சா.. என்ன சொல்லுவாளோ.. இப்டியே மெய்ன்டைன் பண்ணுவோம் " என்று தனக்குள் நினைத்துக் கொண்டு,

அவளிடம் " இதுல என்ன இருக்கு.. இதுக்கு போய் எதுக்கு சாரி கேக்குற " எனக் கேட்க..

அவளோ ஒன்றும் சொல்லமால் அமைதி ஆகி விட்டாள்.

இரவு சாப்பிடும் நேரம் நெருங்க " மதி.. என்ன சாப்பிடுற.. " எனக் கேக்க..

"எனக்கு எதுவும் வேண்டாம்.." என்று சொன்னவளை பார்த்துக் கொண்டே இருந்தவனின் பார்வையை உணர்ந்து அவனை பார்க்க..

"எதுக்கு வேண்டாம்னு சொல்ற.. " எனக் கேட்டவனுக்கு,

"அது பசிக்கல.. என்று அவன் முகம் பார்க்காமல் சொல்ல "..

"அப்போ காலம் பூராம் உனக்கு பசிக்காம தான் இருக்குமா " என்று கேட்டவனை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் ..

"என்ன பாக்குற.. இப்போ எதை நெனச்சி வேண்டான்னு சொல்றியோ.. அது தான் நிரந்தரம் இனிமே... கோவமோ... ஆதங்கமோ... இஷ்டமோ.. கஷ்டமோ... எதுவா இருந்தாலும் அதை நம்ம சாப்பாடு மேல காட்டக் கூடாது.. அந்த சாப்பாடுக்காக தான் நம்ம உழைக்கிறோம்.. அதை எப்பவும் நெனவுல வச்சிக்கோ " என்று சொன்னவனை பார்த்துக் கொண்டே இருந்தவள்,

பின்பு ஒரு பெருமூச்சுடன், " சரி.. லைட் புட் வாங்குங்க.. கொஞ்சமா... போதும்" என்று சொல்ல..

அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, ரயில் ஒரு நிறுத்தத்தில் நிற்கும் போது இட்லி வாங்கினான் மூவர்க்கும்..

பின்பு மூவரும் சாப்பிட்டு முடித்து, கற்பகம் சிறிது நேரம் படுக்கலாம் என்று தூங்கி விட,

மதியோ...வெளியே இருட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..

வெற்றிக்கும் புரிந்தது.. அதனால் அவளிடம் அடிக்கடி சென்று பேசிக்கொள்ளவில்லை.. அவளாக உணர்ந்து ஒரு நாள் மனம் மாறுவாள். அதுவரை நாம் பொறுமையாக இருப்போம். என்று எண்ணிக் கொண்டான்..

மதியோ.." காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல, ஏதாவது ஒரு காரணம் இருக்குமா.. இவனை கை பிடிக்க...." என்று யோசித்தாவள், "நடப்பதை ஏற்று கொள்ள தான் வேண்டும் இனி.. ஆனால் அதற்க்கான கால அவகாசம் அவன் குடுப்பானா என்றும் தெரியவில்லை... பார்ப்போம் " என்று அவள் மனதில் வேறு விதமான யோசனை ஓடிக் கொண்டு இருந்தது..

இவர்கள் யோசித்த படி இருக்க, ரயில் திருச்சியை நெருங்கி விட்டது..

தன் தாயை எழுப்பி விட்டவன், இறங்குவதற்கு தயாராக அவர் அவர் உடமைகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து நின்று விட்டனர்.

திருச்சி வந்ததும் இறங்கி கொஞ்சம் தூரம் நடந்து வெளிப்புறதுக்கு வந்தவர்களை எதிர் கொண்டது குமரன் தான்..

" வாடா மச்சான்... வாம்மா தங்கச்சி... வாழ்த்துக்கள்டா மச்சான்" என்று அவனை அணைத்துக் கொண்டு வாழ்த்து தெரித்தவன், அவனிடம் இருந்து பையை வாங்கி கொண்டு முன்னோக்கி நடக்க,

அவளிடம் இருந்து வெற்றி ஒரு பெட்டியை வாங்கிக் கொண்டு, "அவன் என்னோட நண்பன் குமரன் " என்று சொல்ல..

அவளும் "ஓஹோ " என்றதோடு முடித்துக் கொண்டாள்..

திரும்பி வந்த குமரன், காருடன் டிரைவர் செட்டில் அமர்ந்து இருக்க, வெற்றியும் பின்னால் டிக்கியில் உடைமை பெட்டிகளை வைத்து விட்டு முன்னால் ஏறிக் கொண்டான்..

கற்பகமும் மதியும் பின்னர் அமர்ந்து கொண்டனர்..

45 நிமிட நேர பயணத்திற்கு, அவர்களின் வீட்டுக்கு வந்து இறக்கி விட்டு " சரி டா மச்சான்.. நாளைக்கு காலையில் பாக்கலாம். கிளம்புறேன் இப்போ " என்று கூறி விட்டு சென்று விட்டான்..

இவளும் திரும்பி வீட்டை பார்த்தாள்.. இருட்டில் சரியாக தெரியாததால், முன்னேறிச் சென்றாள்.

கற்பகம் வீட்டை திறந்து உள்ளே சென்று லைட்டை ஆன் செய்ய, வெற்றியும் மதியும் உள்ளே செல்லலாம் என்று பார்க்க,

அவரோ " இருயா வெற்றி.. ரெண்டு பேரும் முத முதல்ல வரீங்க... கொஞ்சம் இருங்க " என்று சொல்லி விட்டு, உள்ளே சென்று சிறிது நேரத்தில் கையில் ஆரத்தி தட்டுடன் வந்தார்..

"ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கப்பா.. " என்று சொன்னவர்,
அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்..

உள்ளே சென்று வீட்டைப் பார்த்தவள், அந்த காலத்து மாடலில் வீடு கட்டப் பட்டு இருந்தது.. அது அவளுக்கும் பிடித்து இருந்தது..

இவர்கள் இருவர் மட்டும் தான் வீட்டில் இருக்கிறார்கள் என்று புரிந்தது..

கற்பகம் உள்ளே வந்தவுடன் " அம்மா.. நீங்க தூங்குங்க.. நாங்களும் போய் தூங்குறோம் " என்று சொல்லி விட்டு அவளை அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்..

அங்கு ஒரு கட்டில், அலமாரி, டேபிள் மேஜை, ஒரு ராக்கில் புத்தகங்கள், இன்னும் சில பொருட்கள் என்று இருந்தன..அவ்வளவுதான். கச கச என்று பொருட்களை போட்டு வைக்காமல் சுத்தமாக வைத்து இருந்தான்.

பெட்டியை ஓரமாக வைத்தவன், மதியிடம் " அங்க பாத்ரூம் இருக்கு.. அங்க வாஷ் பண்ணிக்கோ..அப்புறம் அலமாரில துணி வைக்க நாளைக்கு ஒதுக்கி கொடுக்கிறேன்.. இப்போ மேல தூங்கிக்கோ " என்று சொன்னவன்..

பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி, உடை மாற்றி விட்டு வந்தவன், கீழே ஒரு போர்வையை விரித்து தலையணையை போட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்..

அவளும் ஒரு பெருமூச்சுடன், பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடையை மாற்றினாள்.

காலையில் இருந்து புடவையில் இருந்தது வேறு கச கசவென்று இருந்தமையால் இரவு உடைக்கு மாறினாள்.

வந்தவள், லைட்டை அணைத்து விட்டு படுத்து விட்டாள்.

ஜன்னலின் வழியே, வெளி வெளிச்சம் உள்ளே பரவியது..

AC ரூமில் படுத்து பழகியவளுக்கு சட்டென்று தூக்கமும் வரவில்லை..

சிறிது நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள், என்ன நினைத்தாளோ..

திரும்பி வெற்றியின் முதுகையே பார்த்தாள் ..

தூக்க கலக்கத்தில் புரண்டு அவன் நேராக திரும்பி படுக்க.. அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. காற்றில் அவனது கேசம் அலை அலையாய் நெற்றியில் அங்கும் இங்கும் அசைந்தது..

அதை பார்த்ததும், தலையில் கை வைத்து அவனது கேசத்தை கலைத்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், "சே.. என்ன இது இப்படி தோணுது நமக்கு... " என்று தன் மனதை அதட்டிக் கொண்டவள், அவனை பார்த்துக்கொண்டே கண் மூடி தூங்கியும் விட்டாள்..


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

மறுநாள் விடியலில், எப்பொழுதும் போல வெற்றிக்கு சீக்கிரம் முழிப்பு தட்டி விட,

அவன் எழுந்து முதலில் பார்த்தது என்னவோ அவளைத் தான். அவன் புறமாக திரும்பிப் படுத்து இருந்தவளை கண் கொட்டமால் ரசித்தவன்,

அவளின் அருகில் சென்று அவளின் முகத்தில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டு, " தேனு... இப்போ எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா..நீ என்னோட அறையில.. என்னோட கட்டிலில... பாக்க பாக்க அப்படி இருக்குடி... இதே போல ஒரு நாள் நீ என்னோட பக்கத்துல இருப்ப...அந்த காலமும் சீக்கிரம் வரும்" என்று அவளுக்கு கேட்கா வண்ணம் மெதுவாக பேசியவன், அவளின் பிறை நுதலில் பட்டும் படாமலும் அவன் இதழை பதித்தான்.

முதன் முதல் முத்தம் அவனுக்கு..அதை ஆழ்ந்து அனுபவித்தவன், பிறகு குளிக்க சென்று திரும்பி வரும் வரை, அவள் எழும்பவில்லை..

உடை மாற்றி, தன் தாயிடம் சொல்லி விட்டு தோட்டத்திற்கு கிளம்பி விட்டான்..

எட்டு மணி போல எழுந்தவள், சுற்றும் முற்றும் பார்த்து பிறகு தான், இது தன் அறை இல்லை என்ற நினைவிற்கு வந்தவள், அவனை தேடிய போது அவன் படுத்த இடத்தில் வெற்றிடமாக இருக்கவும், சரி எழுந்து சென்று விட்டான் போல என்று நினைத்துக் கொண்டாள்..

அவளும் எழுந்து மாற்று துணியை எடுத்துக் கொண்டு, குளித்து முடித்தவள், புடவையை உள்ளேயே கட்டினால், ஈரமாகிவிடும் என்று உணர்ந்து,

மேல் ஜாக்கெட்டையும், உள் பாவாடையும் அணிந்து கொண்டவள், அதற்கு மேலே புடவையை போர்த்திக் கொண்டு வெளியில் வந்தவள், கட்டிலின் ஓரத்தில் நின்று உடுத்த ஆரம்பித்தாள்..

அவள் கதவை தாளிடவும் இல்லை. அதையே அவள் சுத்தமாக மறந்து விட்டாள்..

புடவையை விரித்து அவள் கட்டிக் கொண்டிருக்கும் போது, பட்டென்று கதவு திறந்து கொண்டு வெற்றி தான் வந்து இருந்தான். வந்தவன் அவளின் கோலத்தைக் கண்டு திகைத்து, அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்..

அவளும் இவன் வந்ததும் உடனே அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்று விட்டாள்..

" அது... அது..தெரியாம வந்துட்டேன் மதி. நீ எதுவும் தப்பா நெனச்சிக்காத.. கதவை தாளப்பால் போட்டு உடையை மாத்து " என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்..

அவன் சென்றதும் திரும்பியவள் சேலையை வைத்து நன்றாக மூடிக் கொண்டு, கதவை தாள்பால் போட்டவள், அதன் மீதே சாய்ந்து நின்று,

" அய்யோ.. மதி.. என்ன பண்ணி வச்சிருக்க.. இது அவரோட ரூம்.. எப்போ வேணும்னாலும் வரலாம். நம்ம தான் அலெர்ட்டா இருக்கணும். இப்போ அவரு பார்த்து இருப்பாரா.. என்னைய...சே..சே... நான் அவரு பாக்குறதுக்குள்ள திரும்பிட்டேன்.. கண்டிப்பா பார்த்து இருக்க மாட்டாரு " என்று தன்னை தானே சமாதான படுத்திக் கொண்டு புடவையை ஒரு வழியாக உடுத்தி முடித்து இருந்தாள்.

பின்பு தலை சீவி, முகத்திற்கு லேசானா ஒப்பனை செய்தவள், கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்தவள், கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்..

வந்தவள் அவனை தான் தேடினாள். அவன் முன் பக்கம் தட்டு படவில்லை. சரியின்று கற்பகத்தை தேட, அவரோ சமையல் கட்டில் இருந்து வெளி வந்தார் கையில் காபி கப்புடன்..

" மதி கண்ணு... இந்தாமா.. இதை குடி.. இப்போதான் வெற்றி சொல்லிட்டு போனான். நீ எந்திரிச்சிட்டன்னு.. வெளியில் வந்தா காப்பி தண்ணி எதுவும் குடுங்கனு சொல்லிட்டு போனான் கண்ணு " என்று சொல்ல..

அவளோ " ஓஹோ " என்றதோடு முடித்துக் கொண்டவள் நடந்து சென்று முன் கட்டில் இருந்த சோபாவில் அமர்ந்து பருக ஆரம்பித்தாள்..

அந்த சுவை வித்தியாசமாக இருக்கவும் ரசித்துக் குடித்தாள் ..

இங்கு வெற்றிக்கோ, என்னவென்று சொல்ல முடியா உணர்வு..

தோட்டத்திற்கு சென்றவன் வேலை முடியவும், சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று கிளம்பி வர,

அவன் வந்ததும் அவளைதான் தேடினான். அவள் கண்ணில் தட்டு படாமல் இருக்கவும் இன்னும் எழும்பவில்லை போல என்று நினைத்து , அறைக்குச் செல்லலாம் என்று அறையின் வாசலுக்கு வந்தவன் கதவில் கை வைக்கும் முன்,

"ஒரு வேளை அவ எழுந்து குளிச்சிட்டு வந்து ட்ரெஸ் மாத்திட்டு இருந்தா என்ன பண்றது... அப்டினா அவ கதவை தாள்பால் போட்டு இருப்பாள்ல ... தள்ளி பார்த்தா தெரிய போகுது..." என்று கதவை லைட்டாக கை வைத்து அழுத்தவும் கதவு உள்ளே சென்றது... அது உள்ளே இருந்த மதிக்கு தெரிய வாய்ப்பு இல்லை..

கதவு உள்ளே சென்றதும், " அவ இன்னும் எந்திரிக்கல போல.. நம்ம சாத்தி வச்சிட்டு போனது போல அப்படியே தான் இருக்கு " என்று நினைத்து நன்றாக திறந்து கொண்டு உள்ளே வந்தவன் தான் மதியை அப்படி பார்த்தது. ஆனால் அவள் பார்த்து திருவதற்கு முன் அவன் திரும்பி விட்டான்.

அவன் திரும்பி நின்ற பிறகு தான் அவள் திரும்பி நின்றாள். அதனால் தான் அவன் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அவனுக்கு தானே தெரியும். அவன் கண்ணில் பட்டது, அவளின் வெண்ணிற இடையும்.. செழிப்பான அங்கங்களும்..

இப்பொழுது அதை நினைத்துக் கொண்டு தான் வீட்டின் பின் பக்கம் இருந்தான்..

" அடியேய் தேனு.. சும்மா இருக்குற என்னை சீண்டி விடுறியேடி... அய்யோ ராட்சசி கொல்றா என்னை... கண்ணை மூடுனாலே அதானே நியாபகம் வருது " என்று தனக்குள்ள புலம்பி கொண்டிருந்தான்..

" வெற்றி.. வெற்றி.." என்று உள்ளிருந்து தாய் அழைக்கவும், " வரேன் மா " என்றவாரு உள்ளே சென்றான்..

" கண்ணு.. நேத்து நைட் லேட் ஆச்சுனால விளக்கு ஏத்த சொல்லல சாமி... இப்போ போய் ரெண்டு பேரும் சேர்ந்து விளக்கு ஏத்தி வச்சி சாமி கும்புட்டு வாங்க " என்று சொல்ல..

அவன் மதியை பார்க்க, அவளும் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

இருவருமாக சேர்ந்து பூஜை அறையில் நுழைந்து விளக்கேற்றி, மனதார கடவுளை தொழுதனர்..

" மதி, கல்யாணம் ஆன பொண்ணு, வகுட்டுல குங்குமம் வைக்காம இருக்க கூடாது கண்ணு.. வெற்றி அவளுக்கு வச்சி விடுப்பா " என்று சொல்ல..

அவனும் குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வைக்கும் போது இருவரும் அவர் அவர் கண்களை பார்த்துக் கொண்டனர்..

பின்னர் வெற்றியிடம் " ஐயா, உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது நம்ம உறவுக் காரங்களுக்கு, ஊர்க்கார பயலுகளுக்கும் வேற தெரியாது.. அப்டியே தெரிஞ்சாலும் நம்மளே சொல்லாம அவுக எனக்கு என்னனு தான் இருப்பாங்க.. நம்ம ஒரு நல்ல நாள் பார்த்து சட்டு புட்டுனு சின்னதா வரவேற்பு போல வச்சிக்கலாம்.. என்னய்யா சொல்ற " என்று கேட்க..

அவனோ " சரிதான் ம்மா.. நல்ல நாளை பாருங்க.. அதுக்கு அப்புறம் நம்ம சொல்றவங்ககிட்ட சொல்லிக்கலாம் " என்று சொல்ல..

"சரிதான்ய்யா.. அப்புறம் புள்ளைக்கு தாலி பிரிச்சி கோக்கணும்.. அதுவும் பார்த்து முடிவு பண்ணிரலாம்.." என்றவருக்கு ,

" வரவேற்பு வைக்கிற அன்னைக்கு காலையில் தாலி பிரிச்சு கோர்த்துட்டு, சாய்ந்திரத்துல வரவேற்பு வச்சிக்கலாம்... அதுக்கு ஏத்த போல மாமா, அத்தை கிட்ட சொல்லிக்கலாம் " என்று சொன்ன வெற்றி,

இப்பொழுது மதியை பார்க்க, அவளும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

" உன்னோட முடிவு என்ன.. நீ எதுவும் சொல்ல நினைக்கிறியா.. உன்ன கேட்கமா எடுத்துட்டோம்னு நினைக்காத.. இது என்னோட அப்புறம் அம்மாவோட விருப்பம் மட்டும் தான். உனக்கு ஏதாவது கருத்து சொல்லனும்னா தாராளமா சொல்லு.. உனக்கு எப்படி வசதியோ, அது படி வச்சிக்கலாம் " என வெற்றி கூற,

" இதுல யோசிக்குறதுக்கு என்ன இருக்கு.. எப்போ இருந்தாலும் எல்லாருக்கும் தெரிய படுத்த தான் வேணும். அது நீங்க சொன்னது போல நல்ல நாள் பார்த்து வச்சிக்கலாம் " என்றாள் மதி..

பின்பு வெற்றி தன் தாயை பார்த்து, " அம்மா, நீங்க ஜோசியரை பார்த்து ரெண்டு மூணு தேதி குறிச்சிட்டு வாங்க.. அதுல மதிக்கு எது தோது படுதோ அந்த தேதில வச்சிக்கலாம். " என்று சொல்லி விட்டு வெளிப்பக்கம் சென்று விட,

இப்பொழுது மதி கற்பகத்தை பார்த்து " அதான். நான் சொல்லிட்டானே.. உங்க வசதிப்படி வச்சிக்கோங்கனு. இனி எதுக்கு என்கிட்ட மறுபடி கேட்க சொல்றாரு.. " என்று கேட்க..

" அவன் எத சொல்றானு உனக்கு புரியலையா " என்று கேட்டவரை பார்த்தவளுக்கு அப்பொழுது தான் ஏதோ ஒன்று புரிந்தது..

வெளியில் யாருடனோ நின்று பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு ஒவ்வொரு நாளும் அவன் வித்தியாசமாக தெரிய ஆரம்பித்தான்..

அவளின் மாதவிடாய் நாளை கணக்கில் வைத்து அல்லவா அவன் கூறுகிறான்.. அதை நினைக்கையில் அவளுக்கு அவனை நினைத்து பெருமிதமாக தான் தோன்றியது..

"கண்ணு, அவனை போய் கூட்டிட்டு வா.. ரெண்டு பேரும் சாப்பிட்டு நம்ம குலசாமி கோவிலுக்கு போய்ட்டு வாங்க.. தாலி பிரிச்சி கோர்க்குற அன்னைக்கு, அம்மா அப்பா எல்லாரும் வரப்போ நம்ம பொங்கல் வச்சிக்கலாம். இப்போ நீங்க மட்டும் போய் சாமி கும்பிட்டு வாங்க " என்று சொல்ல..

அவளும் சரி என்று சொல்லி விட்டு, வெளியில் நின்ற வெற்றியை அழைக்க சென்றாள்..

அவளும் அவனின் அருகில் வந்து விட்டாள். எப்படி அழைப்பது என்ற தடுமாற்றம்... லேசாக குரலை செருமி பார்த்தாள்.. ஹுஹும்.. அவன் போன் பேசும் ஆர்வத்தில் அவனின் காதிற்கு விளவே இல்லை..

" ஹலோ... ஏங்க.. " என்று அழைக்க சுத்தம்...திரும்பவே இல்லை..

"நம்ம என்ன அவ்ளோ மெல்லவா கூப்பிடுறோம். இல்லை அவருக்கு தான் காது சரியா கேக்காதா " என்று யோசனையில் இருந்தவள், பின்னர் தைரியத்தை வரவழைத்து

அவனின் தோளில் லேசாக தட்டி "வெற்றி.." என்று அழைத்தவளை, திரும்பி பார்த்து, அழைப்பில் இருந்த நபரை அணைத்து விட்டு அவளிடம்,

"சொல்லு மதி.." என்றவனுக்கு,

"சாப்பிட கூப்பிடுறாங்க... வாங்க.. அப்புறம் சாப்பிட்டு உங்க குலசாமி கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க " என்று சொன்னவளை பார்த்தவன்,

" ஒரு சின்ன திருத்தம்.. உங்க இல்லை நம்ம.... நீ.. நான்.. னு பிரிச்சி சொன்னால் அங்க எல்லாமே தனி தனியா தான் தெரியும்.. நம்மளோடது, நம்ம உறவுனு.. சொல்லி பாரு.. எதுவும் அடுத்தவங்கதுனு தெரியாது.. நம்மலோடதுனு உரிமை உணர்வு வந்துரும். சரியா " என்று சொல்லிவிட்டு முன்னே செல்ல..

போகும் அவனின் முதுகையே பார்த்தாள்..


தேன் இனிக்கும்....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8

முன்னால் சென்ற வெற்றி, அவள் பின்னால் வராததை உணர்ந்து, திரும்பி பார்க்க, அவள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவன் என்னவென்று கேட்க, அவளும் தலையை அசைத்து ஒன்றும் இல்லை என்று கூறினாள்.

அவன் கண்ணாலையே வா வென்று அழைக்க, அவளும் அவனை நோக்கி சென்றாள்..

இருவருமாக சேர்ந்து சாப்பிட செல்ல, சாப்பாட்டு மேஜையில் சமைத்தவற்றை எல்லாம் பரப்பி வைத்து இருந்தார் கற்பகம்..

இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்..

"நீங்களும் உக்காருங்க.. சேர்ந்து சாப்பிடலாம் " என்ற மதியின் கூற்றுக்கு,

"நீங்க சாப்பிட்டு கிளம்புங்க.. நான் அப்புறம் சாப்பிடுறேன்" என்றார் அவர்..

ஆனால் அவள் பேசியதில் வெற்றி ஒன்றை புரிந்து கொண்டான்..

அவளுக்கு தன் தாயிடம் அத்தை என்று உரிமையுடன் பேச இன்னும் வரவில்லை என்று..

காலம் தானே அனைத்திற்கும் தீர்வு.. ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் மீதி உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு,
அவளை பார்க்க, அவளும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் தான் இருந்தாள்.

பின்னர் அவள் முடித்ததும், எழுந்து கை கழுவ சென்றான். அவளும் பின்னாலேயே சென்று கை கழுவி விட்டு வந்தாள்..

" கண்ணு... கோவிலுக்கு போகும் போது புள்ளைய வெறும் தலையோட கூட்டிட்டி போகாத.. போற வலியில் பூ வாங்கி குடு ராசா " என கற்பகம் கூற,

அவனும் சரி என்று கேட்டுக் கொண்டான்.

வெளியில் சென்று, தனது புல்லட் வண்டியை ஸ்டார்ட் செய்ய, மதியும் ஏறி அமரச் சென்றாள்..

புடவை அணிந்து இருந்ததால், பிடிமானத்திற்கு எதையவாது பிடித்துக் கொண்டு ஏறினால், வசதியாக இருக்கும் என்று உனர்ந்தவள், ஒரு பெருமூச்சுடன் வெற்றியின் தோளில் கை வைத்து ஏற, அவனுக்கோ உள்ளுக்குள் சாரல் மழை..

" உக்காந்துட்டியா " என்று அவன் கேட்க..

" ம்ம்ம் " என்று மட்டும் பதில் கூறினாள்.

இப்பொழுது பிடிமானத்திற்கு சைடு கம்பியை பிடித்துக் கொண்டாள்..

அவன் வண்டியை மெல்லமாகத்தான் ஒட்டினான்..

கிராமம் என்பதால், மேடு பள்ளம் அதிகம் இருக்க வாய்ப்பு அதிகம்... தூக்கி தூக்கி போடும் என்பதால் மெதுவாக தான் செலுத்தினான்..

இருந்தாலும், அவ்வப் பொழுது மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் போது, அவள் மேனி அவனை உரசி உரசி சென்றது..

அவனுக்கு தான் ஐயோ என்றானது...

போகிற வழியில் அவனுக்கு வேண்டியவர்கள், சொந்த பந்தங்கள் எல்லாம் அவனிடம் விசாரித்துக் கொண்டார்கள்..

ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லி பதில் சொல்லி செல்வதற்கு அவனுக்கே கடுப்பாகி விட்டது.. மதிக்கு எப்படி இருக்குமோ என்று நினைத்தவன்,

" மதி.... " என்று அழைத்தவன்,

" ம்ம்ம்... சொல்லுங்க " என்று அவள் கேட்க,

" எல்லாரும், நமக்கு வேண்டியவங்க.. அதான் நம்மள பத்தி விசாரிக்குறாங்க.. இன்னைக்கு புதுசா பாக்குற நாள... நீ எதுவும் நெனச்சிக்காத" என்று சொல்ல,

" அது எல்லாம் ஒன்னும் இல்லை.. நீங்க வண்டியை கொஞ்சம் வேகமா போறீங்களா.. வெயில் இப்படி அடிக்குது. இதுல இவ்ளோ ஸ்லொவ்வா போறீங்க.. இதுல நம்ம நடந்தே வந்து இருக்கலாம் " என்றவளுக்கு,

"அவ்ளோ மெல்லமாவா போறேன் " என்று கேட்டான்..

"ம்ம்ம். ஆமா " என்று பதில் அளித்தாள்..

" அது ஒண்ணுமில்ல.. மேடு பள்ளம்னு நெறய வரும். அதான் ஸ்லொவ்வா போனேன்.. சரி நல்லா பிடிச்சுக்கோ " என்று வண்டியின் வேகத்தை கூட்டினான்..

சிறிது நேரத்தில் கோவிலுக்கும் வந்து சேர்ந்தனர்..

வண்டியை நிறுத்தி விட்டு, கோவிலின் வாசலில் இருந்த பூக்கடைக்கு சென்று, " அக்கா, மூணு முழம் மல்லி குடுங்க. அப்புறம் இன்னொன்னு ரெண்டு முழம் தனியா குடுங்க " என்று கேட்டான்.

" என்னப்பா வெற்றி, சொல்லமா கொள்ளாம, இப்படி கல்யாணம் பண்ணிட்டி வந்துட்டியே... " என்று பூக்காரம்மா கேட்க,

" அது சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு.. இங்க வரவேற்பு மாதிரி வைப்போம்.. அப்போ சொல்றேன் க்கா.. " என்று வெற்றி சொல்ல,

" அப்படியா.. சரிப்பா வெற்றி ... " என்றவர் பேசிக்கொண்டே பூவை அவனிடம் குடுத்தார்..

அவனும், ஒன்றை அவளிடம் குடுத்து, இன்னொன்றை சாமிக்கு வைக்க அவனே வைத்துக் கொண்டான்..

" ஏன்பா, பொண்டாட்டிக்கு உன் கையால வச்சி விடுப்பா..." என்று சொல்ல..

அவனோ அவளைப் பார்த்தான்..

அவளும் கையில் இருந்த பூவை ஒரு முறை பார்த்து விட்டு, மற்றவர்கள் முன்னால் அவனை எதற்கு அவமானபடுத்த வேண்டும் என்று நினைத்து, அவனிடன் நீட்ட,

அவனும் அதை வாங்கிக் கொண்டு, அவளின் தலையில், முகத்தில் தோன்றிய புன்சிரிப்புடன் வைத்து விட்டான்.

அவளுக்கும் ஏதோ ஒன்று ஒரு உணர்வு தாக்க தான் செய்தது..

இருவரும் கோவிலுக்குள் நுழைந்து, அய்யரிடம் பூவைக் கொடுத்து விட்டு,
அரச்சனைக்காக பெயர்களை கூறினான் வெற்றி வேந்தன், வெண்மதி என்று...

அப்பொழுது தான் அவளுக்கே தெரிந்தது அவனின் முழு பெயர் வெற்றி வேந்தன் என்று..

சாமி கும்பிட்டுவிட்டு, பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் சிறிது நேரம் அமர்ந்து விட்டு,

அவளிடம் "கிளம்பலாமா..." என்று கேட்க,

அவளும் சரி என்று கூற, பின்னர் அங்கிருந்து கிளம்பினர்..

வீட்டிற்கு போகும் வழியில் அவர்களை பார்த்த, பாண்டி என்பவன் தன் அல்லக்கை சுப்புவிடம் " ஏன்டா, சுப்பு அந்த வெற்றிப் பைய ஒரு பொண்ண பின்னாடி உக்கார வச்சி கூட்டிட்டு போறானே.. யாரு டா அது குட்டி படு சோக்கா இருக்கு " என்று சொல்ல..

" அது அவரு சம்சாரம் ண்ணே " என்று சொல்ல..

" சம்சாரமா.. இந்த பயலுக்கு எப்போடா கல்யாணம் ஆச்சு " என்று கேட்க,

" இவரு பட்டணத்துக்கு போன இடத்துல, கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்லிக்கிறாங்க.. என்ன கதைனு முழுசா தெரியலைண்ணே " என்றான் சுப்பு என்பவன்..

போகும் அவரகளை வஞ்சத்தோடு பார்த்தான் பாண்டியன்..

இந்த பாண்டியன், அதே ஊருக்காரன் தான்.. இவன் செய்யாத கெட்ட பழக்கங்கள் இல்லை.

ஊருக்குள் நல்லவர்கள் என்று இருந்தால் , நான்கு கழிசடைகள் இருக்காதானே செய்யும். அதில் இவனும் ஒருவன்..

அவன் வெற்றி மேல் வஞ்சம் வளர்ப்பதற்கு காரணம், பாண்டி ஒரு பெண்ணிடன் தவறாக நடந்து கொண்டதால் அதை பார்த்த வெற்றி ஊரார் முன்னிலையில் அவனை அடி பிளந்து விட்டான்.

அன்று முதல் வெற்றியை பழி தீர்க்க வேண்டும் என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றான்.

வீட்டில் அவளை இறக்கி விட்டு, " எனக்கு வேலை இருக்கு.. அப்புறம் வரேன் " என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்..

இவளும் கிராமத்தானுக்கு வயல் வேலையை தவிர வேறு என்ன வேலை இருக்க போகிறது என்று ஒரு பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள்..

அவளும் வீட்டிற்கு வந்து, அறைக்குச் சென்றவள், அவளது துணிகளை எல்லாம் அலமாரியில் எடுத்து ஒதுக்க ஆரம்பித்தாள்..

அதை முடித்து விட்டு, தனது தாயிக்கும் தந்தைக்கும் அழைத்து பேசலாம் என்று எண்ணியவள், அழைப்பு விடுத்தாள் ..

" ஹலோ.. மதி மா.."...

" ஹலோ.. ம்மா... என்ன பண்றீங்க.. அப்பா என்ன பண்றாரு.."

" அப்பா இப்போதான் கிளம்பி போனாரு.. நீ என்ன பண்ற... எப்படி இருக்கு அங்க" என்று கேட்டார்.

மதி, " அவரோட அம்மா, கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க... கோவிலுக்கு போய்ட்டு வந்தோம்... கொஞ்சம் திங்ஸ் அரேன்ஞ் பண்ண வேண்டியதா இருந்துச்சி. அத தான் இவ்ளோ நேரம் பார்த்தேன் " என்று சொல்ல..

" மதி.. என்ன இது.. அவரோட அம்மானு சொல்ற.. உனக்கு அத்தை முறை. அப்படி சொல்லி கூப்டு.. " என்று கண்டிக்க..

" அம்மா.. திடு திப்புனு புதுசா ஒருத்தவங்கள காட்டுனா, எப்படி கூப்பிட முடியும்... "

"புதுசா ஒருத்தவங்களா.. அவங்க யாருனு தெரியுமா உனக்கு " என்று ஆதி முதல் அந்தம் வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்..

" சின்ன வயசா இருந்தனால எதுவும் நியாபகம் இல்லமா போயிருச்சு. விவரம் தெரிஞ்ச பிறகாவது சொல்லி இருக்கலாம்ல மா " என்று சொல்ல,

" அட போடி.. எதாவது பேசுனா, உங்க அப்பன மாதிரி நீயும் காது குடுக்காம போயிருவ.. அதுக்கு அப்புறம் ஆசை வருமா எனக்கு " என்று அவர் நியாயத்துடன் பேச..

அவளும் சரிதான் என்று கூறினாள்..

ஆனால் அவர் வெற்றிக்கு மதி மீதான விருப்பத்தையும், காதலையும் கூறி இருந்தால் பின்னால் பிரச்சனை வராமல் இருந்து இருக்கும்.

ஆனால் விதி யாரை விட்டு வைத்தது.. அதன் வேலையை காட்டி விட்டு தானே செல்லும்..


தேன் இனிக்கும்....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

தன் தாயிடம் பேசி விட்டு வைத்தவள், தனது லேப்டாப் எடுத்து, வந்திருந்த மின் அஞ்சலைப் பார்த்து அதற்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள்..

சிறிது நேரம் அதில் நேரத்தை செலவிட்டவள், நேரத்தைப் பார்க்க, அதுவோ மதியம் வந்து விட்டதை காட்டியது..

எழுந்து வெளியே வந்தவள், கற்பகத்தை தேட அவரோ அப்பொழுது தான் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்..

" என்ன கண்ணு, எதுவும் குடிக்கிறியா.. ஜூஸ் போட்டு கொடுக்கவா " என்று அன்புடன் கேட்க..

அவளுக்கோ இத்தனை வருடம் இதை எல்லாம் இழந்து விட்டோமே என்று உணர்ந்தாள் ..

" இல்லத்தை.. சாப்பிடுற நேரம் ஆகிருச்சுல... ஜூஸ் எதுக்கு.. அப்புறம் சாப்பிட முடியாது " என்று சொல்லி முடிக்க..

" அடி..என் ராசாத்தி.. எத்தனை வருஷம் ஆகி போச்சு.. என்னைய அத்தைனு கூப்ட்டு " என்று அவளது நாடியை பிடித்துக் கொஞ்ச,

அவளுக்கு தான் தர்ம சங்கடமாகி போனது..

" சின்ன வயசுல, அத்தை அத்தைனு பின்னாடியே சுத்தி வருவ.. உங்க அக்கா கூட அவ்ளோவா இங்க வர மாட்டா.. எப்பவும் உன் அம்மா முந்தானைய பிடிச்சிகிட்டு தான் சுத்துவா.. ஆனால் நீ எப்பவும் எங்க கூட தான் இருப்ப... ஹும்ம்ம்ம்... என்ன பண்ண... என்ன என்னமோ நடந்து இப்படி ஆகி போச்சு... இப்போ மறுபடியும் நம்ம ரெண்டு குடும்பமும் உங்க கல்யாணம் நாள, ஒன்னு சேந்து இருக்கு...

இனிமே பழையபடி ஒன்னு போல இருக்கணும்.. ஆனால் பாரு... இதை எல்லாம் பாக்க உங்க மாமா தான் கூட இல்லை " என்று மகிழ்ச்சியில் ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடிக்க,

"இப்பவும் ஒன்னும் இல்லத்தை... மாமா.. நம்ம கூட இல்லனாலும் நம்ம சந்தோசமா இருக்குறதை பார்த்து அவரு ஆத்மா கண்டிப்பா சந்தோச படும்... நீங்க அத நெனச்சி கவலை படாதீங்க " என்று அவரை தேற்ற முயன்று வெற்றியும் கண்டாள்..

" எங்கத்தை.. வெளிய போய்ட்டு வந்த போல இருந்துச்சி.. " என்று கேட்க..

" ஆமா மதி... நமக்கு தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்கார்.. அவருகிட்ட போய் நல்ல நாள் பார்த்துட்டு வந்தேன்.. அவரும் ரெண்டு தேதி குறிச்சி குடுத்து இருக்காரு.. உனக்கு எது தோதோ அதுல வச்சிக்கலாம் கண்ணு " என்று கற்பகம் சொல்ல..

" என்ன என்ன தேதி குடுத்து இருக்காங்க " என்று கேட்க..

" அடுத்த வாரத்துல ஒரு தேதி.. அப்புறம் அதுக்கு அடுத்த வாரம்... " என்றவருக்கு,

"அடுத்த வாரத்துல வச்சிக்கலாம் அத்தை " என்றாள் மதி..

"சரி கண்ணு.. நான் வெற்றிகிட்டயும், உங்க அம்மா, அப்பாகிட்டயும் சொல்லிருறேன் " என்று சொல்லி விட்டு, சமையல் அறைக்குச் சென்று சிறிது தண்ணீர் பருகியவரிடம்,

"நீங்க மட்டுமா போனீங்க " என்று கேட்க..

" வெற்றி கூட்டிட்டு போய், கூட்டிட்டு வந்து விட்டுட்டு போய்ட்டான் " என்று சொன்னார்..

" சாப்பிடுறியா கண்ணு.. மணி ஒன்னு ஆகிருச்சு " என்று கேட்டவருக்கு,

" அவரு எப்போ வருவாரு.." என்று கேட்டாள் ..

"அவன் எத்தனை மணிக்கு வருவான்னு எல்லாம் சரியா சொல்ல முடியாது. சில நேரம் வெரசா வருவான்.. சில நேரம் தாமதமா வருவான். " என்றார்.

"அப்டியா சரிங்கத்தை.. நான் கொஞ்ச நேரம் வெளிய இருக்கேன்... அப்புறம் சாப்பிடுறேன் " என்றவள்..

வீட்டிற்கு முன் வாசல் பக்கம் வெளியே வந்தவள் அங்கு இருந்த வேப்ப மரத்தின் அடியில் போட்டு இருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்தவளுக்கு வெயிலின் தாக்கமே தெரியவில்லை... அந்த அளவுக்கு குழுமையாக இருந்தது..

காற்று வேறு வீச, அத்தனை அருமையாக இருந்தது.. கண்களை மூடி ரசித்தவள், அருகில் இருந்த மா மரத்தை பார்த்தாள்...

மாம்பழ சீசன் என்பதால், நிறைய இருந்தன.. அதில் அதிகமாக காய்களும், கொஞ்சம் பழங்களும் இருந்தன..

சிறு வயதில் இருந்தே அவளுக்கு மாங்காய் என்றால் ஆளாதி பிரியம்..

சொல்லப் போனால் அந்த மரத்தை சிறு வயதில் அவளும் வெற்றியும் சேர்ந்து தான் சிறு கன்றாக நட்டு வைத்தனர். இன்று இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறது..

ஆனால் அவள் அதை மறந்து விட்டாள்... இருந்தாலும் மாங்காய் மற்றும் மாம்பலத்தின் மேல் உள்ள மோகம் அவளுக்கு குறையவில்லை என்பதால் அவளுக்கு அதை கண்டதும் பறித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற,

அதன் அருகில் சென்றுப் பார்த்தாள்..

ஒரு சில காய்கள் கீழே இருக்க, பெரும்பாலும் மேலே தான் இருந்தன..

சரி கீழ் உள்ளது எதுவும் எட்டுகிறதா என்று பார்க்க, எதுவும் இல்லை..

சுற்றும் முற்றும் பார்த்தவள், அருகில் ஒரு ஸ்டூல் இருக்க, அதனை எடுத்து வந்து போட்டவள் அதன் மேல் ஏறி நின்று கையை தூக்க, அதுவும் எட்டவில்லை.

கால்களை நன்றாக எக்கிப் பார்க்க, ஓரளவு எட்டும் வகையில் இருந்தது..

இன்னும் நன்றாக கால்களை எக்கியவள், மாங்காயை தொட்டு விட, அதை இழுத்துப் பிடித்து பறிக்க ஆரம்பிக்க, கீழே வேறு சரியாக நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அவள் பறித்து முடிக்கவும் கீழே விழப் போகவும் சரியாக இருந்தது..

அவள், தான் விழப் போகிறோம் என்பதை அறிந்து கண்ணை மூடிக் கொள்ள,

சிறிது நேரம் ஆகியும் தான் விழுகாமல் எதன் மேலயோ அந்தரத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட,

மெல்ல கண்களை திறந்தவள் முன்பு வெற்றி தான் வசீகரமாய் அவளை பார்த்த படி, அவளை தாங்கிய படி நின்று இருந்தான்..

அவனது ஒரு கை அவள் வெற்றிடையில் இருக்க... மறு கை அவளை அணைத்து இருந்தது..

இருவரின் கண்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன..

முதலில் நிதானத்திற்கு வந்த மதி அவனிடம் இருந்து விலக ஆரம்பிக்க, அவனும் அவள் விலகுவதை உணர்ந்து அவளிடம் இருந்து கைகளை விலக்கினான்..

" தேங்க்ஸ்.. " என்றதோடு முடித்துக் கொண்டு, அவள் முன்னே நகர..

" பறிச்ச மாங்காயை விட்டுட்டு போற " என்று அவன் கேட்க..

அவளும் திரும்ப வந்து அவனிடம் வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டாள்..

என்ன தான், தாய் தங்கள் உறவு முறையை பற்றி விளக்கிய பிறகு, கற்பகத்திடம் லெகுவாக பேச முடிந்த அவளாள், ஏனோ வெற்றியிடம் இயல்பாக பேச முடியவில்லை.. ஏதோ ஒன்று அவளை தடுப்பதை அவளும் உணர்ந்தாள் தான்.. காலப் போக்கில் மாறி விடும் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்..

இன்று காலை அவளை அப்படி கண்டதில் இருந்தே அவனுக்கு உணர்வுகள் பேயாட்டம் போட்டன.. இப்பொழுது சொல்லவும் வேண்டுமா...

அவள் கீழே விழுந்ததில் அவளது சேலை விழக, இப்பொழுது மறுபடியும் அவனது கண்ணுக்கு அவளது அங்கங்களும், அவளது நாபிக் கமலமும் மீண்டும் விருந்தாகின..

கணவன் என்றாலும் அவளது அனுமதி இல்லாமல் பார்ப்பது தவறு என்று உணர்ந்தவன் அவளது முகத்தை பார்க்க, அப்பொழுது தான் அவள் கண்ணை திறந்து பார்த்தாள் என்பதால் அவன் அவளை ரசித்தது, அவள் அறியாமல் போய் விட்டது..

இன்னமும் அவனுக்கு அவளின் இடையை தொட்ட உணர்வு அப்படியே இருக்க.. அந்த கையில் தன் இதழ்களை பதித்தான்..

"கொல்றடி தேனு என்னைய... " என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டவன் முகத்தில் புன்னகை அரும்ப, தலையை கோதிக் கொண்ட வாறே வீட்டினுள் நுழைந்தான்..

அங்கு, அவள் கையில் இருந்த மாங்காயை பற்றி கற்பகம் கேட்க..

" ஆமாத்தை... இங்க மரத்துல தான் பறிச்சேன்... எனக்கு மாங்காய்னா ரொம்ப பிடிக்கும்.. அதான் " என்று சொல்ல..

" அதான் தெரியுமே, உனக்கு மாங்காய் பிடிக்கும் னு... சொல்ல போனால், அந்த மரம் இப்படி வளந்து நிக்கிறதுக்கு நீங்க தான் காரணம் " என்று சொல்ல..

இவர்கள் சாம்பாசனையின் போது வெற்றி வீட்டுக்குள் நுழைந்து இருந்தான் ..அதை அவளும் உணர்ந்தாள்..

" என்ன சொல்றீங்க.. எனக்கு புரியல... " என்று இவள் கேட்க..

"அதை நீயும், வெற்றியும் சேர்ந்து தான் நட்டு வச்சீங்க " என்று சொல்ல..

அப்டியா... என்ற ரீதியில் அவள் திரும்பி பார்க்க..

அவனும் இவளைப் பார்த்து, ஆமாம் என்ற படி தலையை அசைத்தான்..

பின்னர், மூவருமாக சேர்ந்து சாப்பிட அமர்ந்தனர்..

மதியும் கற்பகமும் பேசிக்கொண்டே சாப்பிட, வெற்றி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்..

ஆனால் இப்பொழுது அவனது மனமோ மகிழ்ச்சியில் துள்ளியது..

பின்னே, தன் தாயிடம், நெடு நாட்கள் பழகியது போல இயல்பாக பேசுகிறாளே...

வார்த்தைக்கு வார்த்தை அத்தை அத்தை, என்று அழைப்பதன் மூலம் உரிமை உணர்வல்லவா அதிகம் ஆகும்...

" பரவாயில்லை, நம்ம பொண்டாட்டிகிட்டா நல்ல முன்னேற்றம் தான் " என்று நினைத்துக் கொண்டவனுக்கு தெரியவில்லை.. அவள் அத்தை என்று அழைக்க இவனின் அத்தையல்லவா காரணம்..


தேன் இனிக்கும்....

 
Status
Not open for further replies.
Top