ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 28

InShot_20240819_173047692.jpg


இமையாள் "உங்க மகன்" என்று சொன்னதில் ருதுவிற்கு அவள்மீது கோபம்.

முறைத்துக்கொண்டு நின்றான். அவளும் அவனுக்கு சளைக்காது முறைத்து நின்றாள்.

'பார்க்கிறதை பாரு...' என ருதுவும்,

'அந்த கண்ணை பிடுங்கிடனும்' என இமையாளும் ஒருசேர முணுமுணுத்தனர்.

"ரொம்ப பண்றடி" என்ற ருது, "இன்னைக்கு சொல்றது தான் முதலும், கடைசி... தேஷ்க்கு நான் அப்பான்னா, அம்மா நீதான். பிரிச்சு பேசுறது இதோட நிக்கட்டும்" என்றான் அழுத்தாமாக.

சற்று முன்னர் கூட அவன் மீதா கோபத்தில் உங்க மகன் எனக் கூறியிருந்தாலும் உள்ளுக்குள் அம்மா நான்தானே என்று தானே நினைத்தாள். ஆனால் அதனை வெளிப்படையாய் அவனிடம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.

"ம்க்கும்..." என்று உதட்டை சுளித்தவள், அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள். மெத்தையில் அமர்ந்தவளாக.

ஒரு மாத கைகுழந்தையாக தேஷ்ஷை ருது கைகளில் ஏந்தி பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்த காட்சி முதல், அவனது மூன்றரை வயது வரை ருதுவுடனும் தனித்தும் எடுக்கப்பட்ட பல வகையான புகைப்படங்கள், ஒரு பக்க சுவர் முழுக்க நிறைந்திருந்தது.

ஒவ்வொன்றாக அவள் பார்த்து முடிய, ருது குளியலறை புகுந்து வெளியில் வந்திருந்தான்.

"உங்க ஃவைப் போட்டோவே இல்லையே?" என்றாள். ருதுவை ஏறிட்டு.

தலையை துவட்டியபடி அவளை ஆழ்ந்து நோக்கிய ருது, ஈரத் துண்டினை பால்கனி சென்று அதற்குரிய கம்பியில் விரித்து போட்டவனாக உள் வந்தான்.

இமையாள் அவனது பதிலுக்காக அவனையே பார்த்திருக்க, மெல்ல அவளருகில் வந்தவன் அவளது கரம் பற்றி எழுப்பினான்.

அவனது சிறு தொடுகைக்கே அவளது காதல் மனம் சுருண்டது.

இமையாள் விழிகளை தன் விழிகளால் உள்வாங்கி அவளது சிந்தையை தனக்குள் மூழ்கடித்தவன், அவளை அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் கூட்டிச்சென்று, அவளது பின்புறம் நின்று தோளில் கை வைத்தவனாக நிறுத்தியிருந்தான்.

இருவரின் பிம்பத்தையும் அழகோவியமாய் பிரதிபலித்தது கண்ணாடி.

காதலித்த நாட்களில் கூட இத்தனை பக்கம்... நெருக்கமாய் நின்றதில்லை இருவரும்.

இமை மூடாது ரசித்து அகப்பெட்டகத்தில் சேமித்தாள். இருவரின் நிழல் பிம்பத்தை நிஜத்தில் தேக்கி வைத்தவளாக.

இமையாள் உறைந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.

கோபமாக இருக்கிறேன். உன்னை வெறுக்கிறேன் என்று சொல்பவள் காதலாய் கட்டுண்டு அவனது மார்போடு தன் முதுகு தீண்ட தன்னைப்போல் ஒட்டியிருந்தாள்.

இல்லையென்று சொல்லிக்கொண்டே பார்வையால் அவள் காட்டும் காதலை துளி துளியாய் கண்கள் வழி பருகியவனிடம் அத்தனை ரசிப்பு.

"ஷீ இஸ் மை வைஃப்." அவளின் வெற்றுத் தோளில் தன் நாடி பதித்து, அவளது கன்னத்தோடு தன் கன்னம் உரசியவன், கண்ணாடியில் பார்த்துக்கொண்டே மென்மையாய் சொல்லியிருந்தான்.

நிழல் விட்டு நிஜம் தாவியிருந்தது இமையாளின் கருமணிகள்.

"ருது..." காற்றாய் அவன் முகம் மோதியது அவளின் ஓசை.

"உன் ருது டி" என்று அவளின் நெற்றி முட்டியவன், "இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?" எனக் கேட்டு அவளது கையை எடுத்து தன் மார்பில் அழுத்தமாக வைத்து கண் மூடினான். ருதுவின் முகம் மேல் நோக்கி உயர்ந்திருக்க, அவனத்து கண்ணின் ஓரம் துளி நீர் விழ காத்திருந்தது.

சட்டென்று தன் பெருவிரல் கொண்டு துடைத்தவளின் உள்ளங்கை அவனது கன்னத்தில் தேங்கி நின்றது.

"என்கிட்ட ஏதும் சொல்லணுமா?" எனக் கேட்டவள், ருது பட்டென்று இமை திறந்து அவளை பார்த்ததில்,

"எதாவது மறைக்கிறீங்களா ருது?" என்றாள்.

வேகமாக விலகி நின்றான்.

ருதுவின் உடல் மொழியைத்தான் அவதானித்தாள் அவள்.

"நத்திங்... நத்திங்" என்ற ருது, "தேஷ்ஷை கூட்டிட்டு வரேன்" என்று வேகமாக அவளின் முன்னிருந்த சென்றிருந்தான்.

ருதுவிற்கு இமையாளிடம் அனைத்தையும் கொட்டிட ஒரு நொடி போதும். ஆனால் அதன் பிறகு தேஷ்ஷை அவள் எப்படி எந்த உறவில் பார்ப்பாள் என்கிற தடுமாற்றம் அவனிடம்.

'உண்மையாவே ஏதோ இருக்கு' என நினைத்த இமையாள், 'தன்னைத்தவிர எல்லாரும் அவங்களை ஏத்துகிட்டாங்க. எல்லோரிடமும் நல்லா தான் பழகுறாங்க. நியாயமா இன்னைக்கு நடந்த கல்யாணத்துக்கு கோபப்பட வேண்டிய அப்பாவே, உன் காதலை மட்டும் முன் வைத்து ருதுவை பாருன்னு அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுறார்... அப்போ?' என்று அனைத்தையும் பொறுமையாக யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது... 'ருதுவால் எப்போதும் தன்னுடைய காதலுக்கு துரோகம் செய்திருக்க முடியாது' என.

'இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?' என்று மனைவியாக கண்ணாடியில் தன்னை காட்டியதே அவளுள் மின்னிக் கொண்டிருந்தது.

எதுவோ ஒன்று புரிந்தும் புரியாது அவளை ஆட்டி வைத்திட, தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

தேஷ்ஷை பார்த்த பின்னரும் அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்லியதை பொய்யென்று அவளால் கருத முடியவில்லை.

'இப்போதும் தன்மீது அதே காதலோடு இருப்பவனால் எப்படி இன்னொரு பெண்ணுடனான திருமணத்தை ஏற்று, குழந்தை வரை சென்றிருக்க முடியும்? அதுவும் தனக்கு திருமணம் ஆகிவிட்டதென ருது சொல்லிய சமயமே கன்சீவாக இருப்பதாகவும் சொன்னாங்க. கல்யாணம் நடந்த குறுகிய காலத்தில் என்னை மறந்து குழந்தை வரை சாத்தியமா?' எல்லாம் நினைத்து நினைத்து குழம்பியவளுக்கு இறுதியாக மூளையில் மின்னல் வெட்டியது.

"தேஷ் அவங்களோட மகனே இல்லைன்னா?" தனக்குத்தானே வாய்விட்டேக் கேட்டிருந்தாள்.

"அப்போ அவங்க சொன்னது? இத்தனை நாள் தான் நினைத்திருந்தபடி நடந்துவிட்டதாக சொல்லிய திருமணம் பொய்யாகவே இருந்தால்? இருக்குமோ?" நெற்றியை நீவிக்கொண்டாள். மெல்ல தெளிவு வருவதை உணர்ந்தாள்.

'மனைவி போட்டோ இல்லையா?' என்பது சாதாரண கேள்வி, அதற்கு புகைப்படம் இருந்திருந்தால் இயல்பாய் காட்டியிருக்கலாம். விருப்பமில்லை என்றால், இருக்கு இல்லையென பதில் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து மனைவி என எவ்விடம் வந்தாலும் ருது தன்னை மட்டுமே குறிப்பிடுவது தான் அவளுக்கு அவளது சந்தேகத்தை வலுக்க வைத்தது.

'தன்னை கார்னர் செய்து திருமணம் செய்தது கூட ஏதோ ஒன்றை சொல்ல முடியாமல் தானோ?' சரியாக கணித்திருந்தாள்.

"அண்ணி."

நீண்ட நேரம் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்த இமையாள் ஷிவாவின் குரலில் தான் மீண்டாள்.

"உள்ள வா ஷிவா" என்றாள் இமையாள்.

"உங்ககிட்ட பேசவே இல்லை. அதான் நிறைய பேசி அண்ணியை ஃபிரண்ட் ஆக்கிக்கலாம் வந்தேன்" என்ற ஷிவா, "டார்லிங்கை கண் கலங்காம பார்த்துக்கோங்க" என்றாள்.

ஷிவா என்னவோ விளையாட்டாய் சொல்வது போலிருந்தாலும், அவளின் குரலில் சிறு பிசிறு தட்டியதோ எனத் தோன்றியது இமையாளுக்கு.

இமையாள் யோசிப்பது தெரிய,

"நீங்க உங்க தின்க்ஸ்லாம் இன்னும் அரேஞ் பண்ணலையா?" எனகேட்டபடி இமையாளின் பெட்டிகளை வார்ட்ரோப் பக்கம் தானே நகர்த்தினாள் ஷிவா.

"தேஷ் எங்கே?"

"நீங்களா கூப்பிடனுமாம்? வெளியில் மறைந்து நின்னு எட்டிபார்த்துட்டு இருக்கான் பாருங்க" என்றாள்.

இமையாளை அன்னையாக தன்னுடைய மனைவியாகத்தான் தேஷ் முன் நிறுத்துவேன் என்பதில் ருது உறுதியாக இருந்ததால், பதிவாளர் அலுவலகத்துக்கு மகனை ருது அழைத்து வரவில்லை.

ராதிகாவிடம் விட்டுச் சென்றிருந்தனர்.

தற்போது ராதிகா வீட்டிற்கு சென்று தேஷ்ஷை அழைத்து வந்த ருது ஷிவாவுடன் அனுப்பி வைத்தான்.

மகனிடம் ருது எதுவும் சொல்லவில்லை...

"அம்மா மேல இருக்காங்க" என்று மட்டுமே சொல்லி அனுப்பி வைத்தான்.

ருது அவ்வாறு சொல்லியதுமே தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனது இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்ததில், ருதுவுக்கே மூச்சடைத்தது.

பார்த்திருந்த வேங்கடம், அம்பிகா, ஷிவாவுக்கு தானாக கண்கள் கலங்கிட பெரியவர்கள் இருவரும் எழுந்து சென்றிருந்தனர்.

தேஷ்ஷின் அன்னைக்கான ஏக்கம் அவனது முத்தத்தின் வேகத்தில் தெரிந்தது.

மகனை மார்போடு தழுவியவனாக ருது தரையில் மண்டியிட, ஷிவா அருகில் சென்று அவன் தோள் தொட்டு ஆறுதல் படுத்த முயன்றாள்.

ருதுவும், தேஷ்ஷும் தங்களின் நிலையிலிருந்து வெளி வருவதைப்போல் தெரியவில்லை.

அக்கணத்தை அத்தனை நொடியில் கடந்திட முடியுமா என்ன?

தேஷ்ஷின் முத்தம் முற்று பெறாது நீண்டுகொண்டே சென்றது.

"தேன்க்ஸ் ப்பா..." என்ற குழந்தையின் அரற்றலை ருதுவால் கேட்க முடியாது தன் அணைப்பு கூட்டி கண்களோடு நெஞ்சமும் கலங்கியிருந்தான்.

ருதுவை இப்படி பார்க்க மனம் கனத்திட,

"அண்ணாக்கு கால் பண்ணுங்க" என இனியனுக்கு தகவல் அனுப்பினாள் ஷிவா.

அப்போதுதான் அன்றைய தின மருத்துவ கூட்டம் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்திருந்த இனியன் மதிய உணவிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். (இந்தியா - பிரான்ஸ் நேர வேறுபாடு மூன்றரை மணி நேரம். இந்தியாவின் நேரம் பிரான்ஸை விட முன் உள்ளது.)

ஷிவா தன்னுடைய எண்ணிலிருந்து காலை திருமண காணொளியை இனியனுக்கு அனுப்பியிருக்க... தற்போது தகவல் வந்திருப்பது அவளது எண் எனக் கண்டுகொண்டவனாக, ருதுவிற்கு வேகமாக அழைத்திருந்தான். என்னவோ? ஏதோ? எனும் பதைப்புடன்.

அழைப்பின் ஒலி ருதுவில் கருத்தில் பதியவில்லை.

"அண்ணா... உங்க போன்" என்று அவனை மீட்ட ஷிவா, "நீங்க பேசுங்க" என்று தேஷ்ஷை கூட்டிக்கொண்டு இமையாளை காண வந்திருந்தாள்.

"நீ வை ஷிவா... நான் எடுத்து வச்சிக்கிறேன். அப்போ தான் எனக்கு எடுக்க கம்போர்ட்டா இருக்கும்" என்று ஷிவா தன் உடைகளை அடுக்குவதை அவளுக்கு எதற்கு சிரமம் என மறுத்த இமையாள், "பெரிய மனுஷனை போய் கவனிப்போம் வா" என்று அவளையும் கூட்டிக்கொண்டு அறைக்கு வெளியில் வந்தாள்.

சுவற்றில் ஒட்டியபடி நின்றிருந்தான் தேஷ்.

அவன் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

குழந்தையும் அவளைப்போல் கைகளை கட்டிக்கொண்டு மேல் கண்ணால் அவளை பார்த்தான்.

"கோபமா இருக்கானாம்?" ஷிவா சொல்லிட, முறுவலித்த இமையாள், தேஷ்ஷின் முன் மண்டியிட்டு அவனின் கரங்களை பிடித்து...

"என்ன கோபம் குட்டிக்கு? நேத்து ஸ்கூலில் என்னை பார்த்து க்யூட்டா சிரிச்சீங்களே" என்றாள்.

"சொல்ல மாட்டேன்" என்ற தேஷ் முகத்தை வேறு பக்கம் திருப்பிட...

"நிறைய கோபம் போலவே!" என்றாள் இமையாள்.

"ஆமாம்... ரொம்ப பெரிய கோபம்" என்றான் அந்த பெரிய மனிதன்.

ஷிவாவுக்கு தியாவிடமிருந்து அழைப்பு வர, அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

"அச்சோ... அம்மா தப்பு பண்ணிட்டேனா?" இமையாள் தன்னை அம்மா என்று அடையாளப்படுத்தி வினவிட, அதனை மாடியேறி வந்த ருதுவால் கேட்க முடிந்தது. இதயத்தில் ஏதோ ஒன்று உடைந்திட இருவரின் நிலையையும் உள்வாங்கியவனாக படியிலே நின்றுவிட்டான்.

"குட்டியை பார்க்க அம்மா வரவே இல்லை" என்று தேஷ் உதட்டை பிதுக்கி அழுகத் தயாராக, அவனின் பின்னனந்தலையில் கை வைத்தவளாக அரவணைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

குழந்தையின் அந்த வரிக்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

தான் அவனைப்பற்றி எதுவுமே தெரியாது அம்மா என்று குறிப்பிட்டது, அவன் ருதுவின் மகன் என்பதாலே! ஆனால் அவன் அம்மா என்று குறிப்பிடுவது... அதுவும் உரிமையாய் பார்த்த கணம்... இதற்கான விடையின் தேடுதல் அவளது உள்ளத்தில் தொடங்கிட... அதன் பாதை ருதுவிடமே முடிந்தது.

தனது யோசனையில் இருந்தவள் குழந்தையின் தேம்பலுடன் கூடிய அரற்றலில் அவனில் கவனம் வைத்தாள்.

"நீங்க என்னை பார்க்கவே வரல. எப்போ கேட்டாலும் அப்பா நீங்க தாத்தா வீட்டில் இருக்கீங்கன்னு தான் சொல்லுவாங்க தெரியுமா? அம்மா கேட்கும் போதெல்லாம் உங்க போட்டோ தான் காட்டுவாங்க. நான் இங்க வந்தப்புறம் கூட தேஷ்ஷை பார்க்க லேஷஸ் வரல" என்று திக்கித் திணறி விசும்பிக்கொண்டே தேஷ் சொல்லிட இமையாள் அவன் சொல்லியதை கிரகிக்க முடியாது சமைந்தாள்.

'என்ன சொல்கிறான்?' அவளுக்கு கண்கள் இருட்டியது.

'இவனோட அம்மா இருக்கும்போது என்னை ஏன் அம்மான்னு காட்டணும்?' அவளுள் இருக்கும் கேள்விகள் போதாதென்று புதிதாக பல கேள்விகள் வரிசைகட்டின.

அதுவும் அவன் ருதுவைப்போல் லேஷஸ் சொல்லியதில், தன்னை அவனை சுமந்த அம்மாவாகவே காட்டியிருக்கிறான் என அவள் நெஞ்சம் விம்மியது. குழந்தையின் ஏக்கத்திலும், அவனது குரலில் தென்பட்ட சோகத்திலும் அவள் மனம் கனத்தது.

"தேஷ்ஷை லேஷஸ்க்கு பிடிக்காதா?" அக்கேள்வியில் தேஷ்ஷின் கண்ணீர் அவளின் தோளை நனைத்திருந்தது.

பிஞ்சுவின் ஈரம் அவள் இதயத்தை சுட்டது.

தன் கண்களில் துளிர்த்து கண்ணீரை உள்ளிழுத்தவளாக,

"யார் சொன்னாங்க?" என்று தேஷ்ஷை தன்னிலிருந்து பிரித்து தன் முன் நிறுத்தியவளாக, அவனது கண்ணீரை துடைத்து இரு கைகளையும் கோர்த்து பிடித்தவளாக...

"அம்மாக்கு பேபியை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும்" என்றாள். அடைத்த தொண்டையை சரி செய்தவளாக.

இமையாள் தேஷ்ஷிற்காக சொல்லும் வார்த்தையில், தன் மீது அவள் கொண்டுள்ள நேசத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ருது.

தேஷ்ஷை பற்றி ஒன்றுமே தெரியாது, அவனிடம் அவனின் தாயாகவே இமையாள் தன்னைக் காட்டிக்கொள்வது ருதுவின் மீதான காதலினால் அல்லவா! ருதுவிற்கு அவளின் காதலில் கர்வம் கூடியது.

ருது எதிர்பார்த்ததும் இதைத்தானே!

ஆனால் ஒரே நாளில்... இத்தனை சீக்கிரம் இது நடந்தேறும் என்று ருது நினைக்கவில்லை. தன்மீதான கோபத்தில் சற்று தள்ளி இருப்பாளென்று நினைத்திருந்தான்.

பெண்மைக்கே உரித்தான தாய்மையில் விலகலை காட்டிட முடியுமா என்ன? ஒரு குழந்தை தன்னை அம்மா என்று ஆறுதல் தேடும் போது இயல்பான தாய்மை உணர்வு அவளிடத்தில் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருந்திடப்போகிறது. இது இயற்கையின் வரமாயிற்றே. அதிலும் தன்னவன் அப்பாவாக இருந்திடும்போது அவளை அம்மாவாகக் கட்டிக்கொள்ளத்தானே அவளது காதல் நெஞ்சம் விரும்பும்.

ருதுவிற்கு தன்னுடைய லேஷஸ்ஸின் மீது காதல் இன்னும் இன்னும் கூடியது.

தன்னை ரொம்ப பிடிக்குமென இமையாள் சொல்லியதில் தேஷ் மகிழ்ந்தாலும்,

"அப்புறம் ஏன் நான் பிறந்ததும் விட்டுப்போனிங்க?" என்று கேட்டிட, அக்கேள்வியில் யாவும் அவளுக்கு ஸ்தம்பித்தது.

"பேபி..." என்ற இமையாள், தேஷ்ஷின் முகத்தில் கண்ட வருத்தத்தில்... தன் நிதானத்தை மீட்டு,

"அம்மா விட்டுப்போகலடா குட்டி... அம்மாக்கு உடம்பு சரியில்லையா... அம்மாகிட்டேர்ந்து குட்டிக்கு காய்ச்சல் வச்சிட்டா என்ன பண்றது? அதான் பாட்டி வீட்டில் இருந்தேன். இப்போ சரியாப்போச்சு, குட்டியை பார்க்க ஓடிவந்துட்டேன். இனி தேஷ்ஷை விட்டு லேஷஸ் எங்கையும் போகமாட்டேன்" என்று அவனின் கன்னம் பிடித்து ஆட்டினாள்.

"நிஜமா?"

"ஐ ஸ்வேர் பேபி. அம்மா தேஷ்கிட்ட பொய் சொல்லமாட்டனே!" என்றவளை தேஷ் தாவி அணைத்துக் கொண்டான்.

அன்னையின் ஏக்கம் சிறு குழந்தையை எத்தனை தூரம் வதைத்துள்ளது என்று நினைத்த இமையாளின் கண்ணீர் கன்னம் இறங்கியது.

பார்த்திருந்த ருதுவுக்கு, தான் உண்மையை சொல்லியிருந்தாலும், தேஷ்ஷை அவள் மகனாக மட்டுமே பார்த்திருப்பாள் என்பது அந்நொடி புரிந்தது.

"லவ் யூ டி." காற்றாய் ஒலித்த அவனது குரல் அவளைத் தீண்டியதோ, அவன் நின்ற திசையில் அவளின் பார்வை படிந்தது.

நொடியில் தன் முகத்தை மாற்றிய ருது...

"அம்மாவும், பையனும் என்ன சீக்ரெட் பேசிக்கிறீங்க?" எனக் கேட்டவாறு அருகில் வந்தான்.

"அதை ஏன் உங்களுக்கு சொல்லணும்?" என வெடுக்கெனக் கேட்ட இமையாள்,

"அப்பா தான் அம்மாவை பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டாங்க பேபி. அப்பா பேச்சு கா விடுங்க" என்றாள் தேஷ்ஷிடம்.

"நிஜமாவாப்பா..." என்ற குழந்தை, "இனி பாட்டிக்கு வீட்டுக்கு போனால்... மூணு பேரும் ஒன்னாவே போலாம்ப்பா" என்றதில் ருது மற்றும் இமையாளின் நெஞ்சம் ஒருங்கே துடித்து அடங்கியது.

"அம்மா தேஷ் குட்டியை எங்கப்போனாலும் கூட்டிட்டுப் போயிடுறேன். ஓகேவா" என்றவள், "இந்த அப்பா வேணாம். கடையில் வித்திடலாம். நம்மளை பிரிச்சு வச்சார் தானே!" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைய,

"உன்னை விட்டால் எனக்கும் யாருமில்லை லேஷஸ்... என்னையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போயிடு" என்ற ருதுவின் குரலில் அடுத்த அடி வைத்திட முடியாது தடுமாறி நின்றாள் ருத்விக்கின் இமையாள்.

தூரமும் தூரமாய் தூரம் சென்றிட அவர்களை அன்பின் வழி பக்கம் இணைத்திட நினைத்ததோ!?


Drop urs comments in below the Link

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 29

இனியனின் அழைப்பில் தன்னை இயல்பாய் வைத்து, நண்பனின் குரலுக்கு செவி மடுத்தான் ருது.

"என்னடா கான்பிரன்ஸ் இல்லையா?" எனக் கேட்டவனின் குரல் பேதத்தை இனியனால் உணர்ந்திட முடிந்தது.

"என்னாச்சு ருது?"

நண்பன் மீதான மொத்த அக்கறையையும் ஒரு வார்த்தையில் காட்டியிருந்தான் இனியன்.

"கொஞ்சம் எமோஷனலி லாக்ட்" என்ற ருது, தேஷ்ஷின் நிலையை சொல்ல,

"அதான் தேஷ்க்கு அவன் அம்மா கிடைச்சிட்டாங்களே! அப்புறம் என்னடா உனக்கு கவலை. இமயாவிடம் உண்மையை சொல்லி ஒழுங்கா வாழப்பாரு" என்றான் இனியன்.

"உனக்கு... உனக்கு என்மேல் வருத்தம் ஏதுமில்லையாடா?"

"எதுக்கு?"

"அவளோட அண்ணனா?"

"நீ என் ஃபிரண்ட் டா" என்ற இனியன், "உன்னை விட்டுக்கொடுத்திடுவேன் நினைச்சியா?" எனக் கேட்டு, "என் தங்கச்சி உன்னோட இருந்தால் மட்டும் தான் சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்போது, நான் ஏன் உன்மேல் வருத்தப்படனும்?" என்றான்.

"தேஷ்?"

"அவனுக்கு நான் தாய் மாமா. அவ்வளவு தான்" என்று அழுத்தமாக அந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திட்ட இனியன், "வேறெதுவும் கேட்கணுமா? இந்த நிமிஷத்தோட நீயே எதையும் நினைச்சு உன்னை வருத்திக்கிறதை நிறுத்து. இதைப்பற்றி இனி நமக்குள்ள பேச்சே இல்லை" என்றான்.

இனியன் நேரிலிருந்திருந்தால் தாவி அணைத்திருப்பான் ருது.

"எப்போ வர?"

"வன் வீக்."

"ஹோ..."

"என்னவாம் டிசி சாருக்கு?"

"மிஸ் யூ..." ருதுவின் குரல் கரகரப்பில், இனியனிடம் ஆழ்ந்த மௌனம். சட்டென்று அவனது கண்கள் கண்ணீரை காட்டியிருந்தது.

தொண்டையை செருமியவனாக,

"மிஸ் யூ லாட்" என்று வைத்திருந்தான். அதற்கு மேல் பேசினால் உடைந்து விடுவோமோ என்று அஞ்சினானோ?

இனியன் சொல்லிய தாய் மாமா என்கிற வார்த்தையிலே ருதுவின் அனைத்து கலக்கங்களும் நீங்கியிருந்தது.

தாய் மாமா என்றால் என்ன அர்த்தம்? அத்தனை நெகிழ்வு ருதுவிடம். சுற்றியிருக்கும் அனைவரும் அவனின் சந்தோஷத்துக்காக பார்ப்பதை எண்ணி கம்பீரமான அவனே சடுதியில் நெகிழ்ந்து விடுகிறான்.

இனியனிடம் பேசியதில் கிடைத்த தெளிவோடு மேலேறி வந்த ருது, மனைவி மற்றும் பிள்ளையுடனான உரையாடலில் மொத்தமாய் கரைந்து போனான்.

ருதுவே எதிர்பார்த்திடாத நொடி அது.

அன்னையின் அன்புக்காக ஏங்கிய பிள்ளையை தாய்மையாய் அரவணைத்துக் கொண்டாளே அவனவள். இருவரின் அணைப்பில் தானும் பொருந்திப்போக பெரும் ஏக்கம் கொண்டான்.

அவன் மனம் ஏங்கியது ஈடேறியிருந்தது. அவனது ஏக்கம் அறியாது அவனவளே அவனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்தாள்.

இனி அவளிடம் உண்மையை சொல்ல அவனுக்குத் தயக்கம் ஏதுமில்லை. ஆனால் தற்போது அவளிடம் சொல்லுவதற்கான திடம் தான் அவனிடமில்லை. தன்னை மணந்த முதல்நாளே அவளை கவலைக்குள்ளாக்க வேண்டாமென எண்ணினான்.

தேஷ்ஷை மகனாக ஏற்றுக்கொண்டவள், தன்னை காதலாக மட்டுமே ஏற்க வேண்டுமென பேராசை கொண்டான்.

அவனுக்காக அவனது சிந்தையில் எண்ணத்தையும் தன்னைப்போல் தன்னவள் நிறைவேற்றி வைப்பாள் என்கிற அதீத நம்பிக்கை ருதுவிடம்.

'ரொம்ப காக்க வச்சிடாதடி' என ருது மனதோடு சொல்லிக்கொண்டிருந்த கணம் தான்... இமையாள் தேஷ்ஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைய முற்பட்டாள்.

தன்னைப்போல் அவளுக்கான அவனது உள்ளத்து காதலை வார்த்தையால் காட்டி அவளை உறையச் செய்திருந்தான்.

"உன்னை விட்டால் எனக்கும் யாருமில்லை லேஷஸ்... என்னையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போயிடு" என்ற ருதுவின் குரலில் அடுத்த அடி வைத்திட முடியாது தடுமாறி நின்றாள் ருத்விக்கின் இமையாள்.

ருதுவின் முகத்தில் கொட்டிக்கிடந்த காதலில் கட்டுண்டவள், கரையத் துடித்த மனதை இழுத்துப் பிடித்தவளாக...

"விடுறன்னு யார் சொன்னா?" எனக் கேட்டு, "உங்களை பழிவாங்க நிறைய இருக்கே!" என உள் சென்றிருந்தாள்.

ருதுவின் இதழ்கள் பற்கள் தெரிய நீண்டது.

'இனி எல்லாமே வசந்தம் தான்' என நினைத்தவனாக விசிலடித்துபடி உள்ளே வந்தவனிடம்,

ஷிவா பிரித்து வைத்துச்சென்ற பெட்டிகளைக் காட்டியவள்...

"அடுக்கி வையுங்க" என்றாள்.

"எதே!"

"என்ன சொன்னாலும் இப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்காமல், சொன்னதும் செய்யப் பழகுங்க. நானும் பேபியும் கேம் விளையாடப்போறோம்" என்று அங்கிருந்த தொலைக்காட்சியின் முன் மகனோடு சென்று அமர்ந்தாள்.

"என்னடா இது டிசிக்கு வந்த சோதனை" என முணுமுணுத்தாலும், சந்தோஷமாகவே மனைவி சொல்லியதை செய்யத் துவங்கினான்.

தொலைக்காட்சியை உயிர்ப்பித்து டிஸ்க்கை பொருத்திய இமையாள்,

"பாஸ்வோர்ட் என்ன?" எனக் கேட்க,

"லேஷஸ்" என்றான் தேஷ்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று சத்தமாகவே ருதுவுக்கு கேட்கும்படி முணுமுணுத்தவள் தேஷ்ஷுடன் விளையாட்டில் மூழ்கிப்போனாள்.

தன் வேலை முடித்து இருவரையும் பார்த்தவாறு அமர்ந்த ருது, வெங்கட்டிற்கு அழைத்து காவல் நிலையத்தின் நிலவரம் அறிந்து கொண்டு தன்னவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.

இமையாள் இயல்பாய் தேஷ்ஷுடன் சிரித்து, பேசி, கொஞ்சியென விளையாடுவதை கண்டவனுக்கு பெரும் பாரம் ஒன்று நீங்கி மனமே நிறைந்துவிட்டது.

அவர்களை பார்த்தவாறு சாய்ந்து அமர்ந்திருந்தவன், அரிதாக கிடைத்த நிம்மதியில் தன்னை மறந்து உறங்கியிருந்தான்.

அதுவரை ருதுவின் பார்வையை உணர்ந்தபோதும் திரும்பிடாதவள், மெல்லத் திரும்பி பார்த்தாள்.

'என்ன ரகசியம் ருது உங்க மனசில் இருக்கு?' எனக் கேட்டுக்கொண்டவள், "அப்பா தூங்கியாச்சு. டிஸ்டர்ப் ஆகும். வாங்க நாம கீழப்போய் தாத்தா, பாட்டிக்கூட விளையாடலாம்" என அழைத்துச் சென்றாள்.

அம்பிகா இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.

"வாம்மா" என்ற வேங்கடம்,

"அம்மா வந்ததும் தாத்தாவை மறந்துட்டியே தேஷ்" என்றிட, "தேஷ் தாத்தாவோட நிறைய விளையாடிருக்கேன். அம்மாகூட இப்போ தானே" என்றவன் இமையாளை கட்டிக்கொண்டவனாக மேலும் நெருங்கி நின்றான்.

வேங்கடத்திற்கு மட்டுமல்ல இமையாளுக்கு தேஷ்ஷின் வார்த்தைக்கு பின்னிருந்த ஆழம் அத்தனை வலி கொடுத்தது.

"உனக்காகத்தான் ரெண்டு பேரும் ஏங்கி இருக்காங்க. பார்த்துக்கோம்மா" என்றவர், "ருது உன்னை அவ்வளவு நேசிக்கிறான்" என பரிவாய் அவளின் தலையில் கை வைத்தார்.

"ஒன்னு கேக்கட்டுமா மாமா?" என்றவள், வேங்கடம் "கேளும்மா" என்றதும், "அவங்களுக்கு அக்கா தானே? எப்படி தங்கச்சி?" எனக் கேட்டாள்.

"அவனே சொன்னால் தான் சரி வரும்மா" என்றவர், "அவனை மட்டும் நம்புடா" என்று எழுந்து சென்றார்.

இமையாளுக்கு ஒன்று புரிந்தது ருதுவாக சொல்லாமல் தன்னிடம் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்று.

"என்னம்மா நின்னுட்டே இருக்க?" என்று வந்த அம்பிகா, "இவன் முகத்துல மட்டுமில்லை... ருது முகத்துல கூட இன்னைக்குத்தான் உண்மையான சந்தோஷம் தெரியுது" என்றார்.

மென்மையாக சிரித்த இமையாளுக்கு என்ன பேசிட வேண்டுமென்று தெரியவில்லை. மனதிலிருக்கும் குழப்பங்களுக்கு கேள்விகளைக் கேட்டால் இவரும் சொல்லமாட்டார் என்பதால் மௌனமாக அவர் பேசுவதை கேட்டபடி இருந்தாள்.

"இப்போ சப்பாத்தி செய்திருக்கேன். உனக்கு ஓகேவா இமயா?"

"ம்ம்... அதுவே போதும் அத்தை" என்றவள், "நான் வேலைக்கு போவதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே அத்தை?" எனக் கேட்டாள்.

"உன் விருப்பம் டா. இதில் நான் சொல்ல என்ன இருக்கு?" என்றார்.

"அப்போ நான் ஸ்கூலுக்கு டெய்லி அம்மாவோடவே போயிட்டு வருவேன்" என்று துள்ளி குதித்தான் தேஷ். அவனது புன்னகையை ஆதுரமாக பார்த்து ரசித்த இமையாளை கனிவோடு பார்த்தார் அம்பிகா.

இமையாளின் மனம் அத்தனை எளிதாக யாருக்கும் வந்திடாது. தேஷ்ஷை மகனாக ஏற்றதற்கு ருதுவின் மீதான அவளது காதல் காரணமாக இருந்தாலும், இப்படி எத்தனை பேர் எளிதாக ஏற்றுக்கொள்வர். ருது ஏன் இமையாளை இந்த அளவிற்கு நேசிக்கிறான் என்பது அவருக்கு புரிந்தது.

குதித்துக் கொண்டிருந்த தேஷ்ஷை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்ட இமையாள்...

"குட்டிக்கு சாப்பிட என்ன பிடிக்கும்?" எனக் கேட்டாள்.

"சாக்லேட் தோசை."

"நைட்ல சாப்பிடக் கூடாதே" என்ற இமையாள் தேஷ் உடன் தாயாக ஒன்றிப்போனதை ஒரு தாயாக அம்பிகாவால் உணர முடிந்தது.

"ருது என்னம்மா பன்றான்?"

"தூங்குறாங்க அத்தை." பதில் அம்பிகாவுக்கு வழங்கியிருந்தாலும், அவள் கவனம் தேஷ்ஷிடம் தான் இருந்தது.

"இந்நேரத்தில்" என மணியை பார்த்தவர்,

"நைட்லே சரியா தூங்கமாட்டான். இன்னைக்கு ஆறரை மணிக்கெல்லாம் தூங்கியிருக்கான். அது நீ அவன் பக்கத்தில் வந்துட்டேங்கிற நிம்மதி இமயா" என்றார்.

இமையாளுக்கு ருதுவின் காதல் தெரியும். அவனுக்குத் தன்னை எத்தனை பிடிக்குமென்று தெரியும். ஆனால் அவனது நிறையே தான் தான் என்பது அம்பிகாவின் பேச்சில் தான் தெரிந்தது.

இமையாள் அவரை பார்த்தபடியே இருக்க...

"எல்லாம் ரெடி அம்பிகா. நீ கிளம்பிட்டால் புறப்படலாம்" என்று வந்தார் வேங்கடம்.

"இருபது வருஷத்துக்கு மேல பீகாரில் இருந்ததால் குலதெய்வம் கும்பிடவே இல்லை இமயா. ரெண்டு நாளுக்கு முன்னர் தான் பிளான் போட்டோம். இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் நடக்கும் எதிர்பார்க்கல. கோவிலுக்குன்னு புறப்பட்டது தடங்கல் ஆகக் கூடாதே அதான் கிளம்புறோம்" என்றார்.

அம்பிகா இருபது வருஷம் என்றதில் அவளுக்கு தலையே சுற்றியது.

'அப்படி என்னதான்டா நடந்தது?' மனதில் ருதுவின் தலையிலே நன்கு கொட்டினாள்.

அம்பிகா அவளின் பதிலுக்காக பார்த்திருக்க...

"சரிங்க அத்தை" என்ற இமையாள், "நீங்களும், மாமாவும் மட்டுமா அத்தை?" என வினவினாள்.

"ஆமாம் டா" என்றவர், "ஷிவாவுக்கு எக்ஸாம் இருக்கு. ருது கோவிலுக்குன்னு சொன்னாலே வாய் திறக்கமாட்டான்" என்று நகர்ந்தார். அடுத்த கால் மணி நேரத்தில் இருவரும் புறப்பட்டிருந்தனர்.

"வர ரெண்டு மூணு நாள் ஆகும். பார்த்து ஜாக்கிரதையா இருங்க" என்ற வேங்கடம், தேஷ்ஷை தூக்கி முத்தம் வைத்துவிட்டு வண்டியில் சென்று ஏறி அமர்ந்தார்.

"படிச்சிட்டே இருக்கமால் நேரத்துக்கு சாப்பிடு ஷிவா" என்ற அம்பிகா, "ருது எழுந்ததும் சொல்லிடு இமயா. அசந்து தூங்கிறவனை எழுப்ப வேண்டாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

மூவரும் உள்ளே வர,

"அம்மா பசிக்குது" என்றான் தேஷ்.

இமையாள் தேஷ்ஷை சமையலறை பக்கம் கூட்டிச்செல்ல,

"நான் ஏதும் ஹெல்ப் பண்ணட்டுமா அண்ணி" எனக் கேட்டு முன் வந்தாள் ஷிவன்யா.

படித்துக்கொண்டிருந்த ஷிவன்யா, பெற்றோர் புறப்படுகிறார்கள் என்பதால் வழியனுப்பிட புத்தகத்தோடு வந்திருந்தாள்.

அவளின் கையிலிருந்த புத்தகத்தை பார்த்த இமையாள்...

"நீ படி ஷிவா. நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.

"ஓகேவா உங்களுக்கு" என்ற ஷிவா, "நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்து படிக்கிறேன். நீங்க எதாவதுன்னா கேளுங்க" என்று உணவு மேசை இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

"தேஷ்க்கு சப்பாத்தி பிடிக்காது" என்றான் சிறுவன்.

"அப்போ என்ன வேணும்?" எனக் கேட்டவள், அவன் முன்பு சொல்லியதை வைத்தே, "சாக்லேட் தோசை நாளைக்கு டே டைம் செய்து கொடுக்கிறேன். இப்போ வெஜிடபிள் தோசை ஓகே வா" என்றவாறு மகனை உணவு கூடம் மேடையில் அமர வைத்தாள்.

"குட்டிக்கு என்னென்ன வெஜிடபிள்ஸ் பிடிக்கும்?" எனக் கேட்டு குளிர்சாதனப் பெட்டியை திறந்தாள்.

"கேரட், மஷ்ரூம், காலிஃபிளவர்" என்று தேஷ் தன் விரல்களை ஒவ்வொன்றாய் திறந்தபடி கூற, இமையாள் காய்களை எடுத்து பொடியாக நறுக்க ஆரம்பித்தாள்.

நறுக்கிய கேரட் துண்டு ஒன்றை தேஷ்ஷின் கையில் கொடுத்தவள்,

"குட்டி இதை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள, அம்மா தோசை சுட்டுடுவேனாம்" என்றாள்.

"ம்ம்ம்" என்று வேகமாக தலையாட்டிய தேஷ், "மஷ்ரூம் நான் போடுறேன்" என்றான்.

அடுப்பில் தோசை கல்லினை வைத்தவள், வட்டமாக மாவினை ஊற்றி தேய்த்து, பொடியாக நறுக்கி கலந்து வைத்த காய் கலவை அடங்கிய கிண்ணத்தை தேஷ்ஷின் முன் நீட்டினாள்.

இவர்களின் சம்பாஷனையில் ஷிவாவின் பார்வை இவர்கள் மீதே இருந்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"புக் ஓபன் பண்ணி வச்சிட்டு, என்ன வேடிக்கை பார்க்குற?" எனக் கேட்டபடி உறக்கம் கலைந்து எழுந்து வந்து ஷிவாவின் அருகில் மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்தான் ருது.

வரும்போதே அம்பிகா, வேங்கடம் கிளம்பியதைப்பற்றி அலைப்பேசியில் விசாரித்திருந்தான்.

"அங்க பாருங்க டார்லிங்" என்று சமையலறைக்கும் உணவு மேசைக்கும் ஏதுவாக இருக்கும் கிச்சனின் ஓபன் விண்டோ பக்கம் ருதுவின் தலையை திருப்பியிருந்தாள் ஷிவா.

மேடையில் தேஷ் சம்மணமிட்டு அமர்ந்தபடி, இமையாள் நீட்டிய கிண்ணத்திலிருந்த காய்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தோசையில் தூவிக் கொண்டிருக்க, இமையாள் "இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அக்காட்சி பார்க்கவே கவிதையாய். இருவரின் முகத்திலும் அப்படியொரு உற்சாக புன்னகை. தேஷ்ஷின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது. பார்க்கும் ருதுவுக்கு அந்த நொடி மட்டும் போதுமெனத் தோன்றியது.

"ஹவ் க்யூட்" என்ற ஷிவா, "நீங்க இன்னும் முன்னாடியே அண்ணியை கூப்பிட்டு வந்திருக்கலாம் டார்லிங். தேஷ் முகத்தை விட உங்க முகத்தில் தான் அதிக ஒளி தெரியுது. ரீசன் அண்ணி தானே?" என்றாள்.

"என்னை ஆராயாமல் படி" என்று வலிக்காது அவளின் தலையில் கொட்டியவன்,

சமையலறை உள்ளே சென்று இமையாளின் அருகில் மேடையில் சாய்ந்து நின்றவனாக, "எனக்கும் தோசை கிடைக்குமா?" எனக் கேட்டான்.

"பூசை வேணுன்னா கிடைக்கும்" என்று தோசை கரண்டியால் அவனின் கையில் அடித்தவள்,

"குட்டிக்கு நெய் பிடிக்குமா?" எனக் கேட்டு, அளவாய் ஊற்றி, தோசையை வார்த்து தட்டில் எடுத்து வைத்து தேஷ்ஷின் முன் நீட்டியவளாக, சிறிது பிய்த்து ஊட்டிவிட்டாள்.

சுவைத்த தேஷ் சப்புக்கொட்டி விரலால் சூப்பர் என காண்பித்தான்.

"நாம் உட்கார்ந்து சாப்பிடுவோம்" என்று ருதுவை கண்டுகொள்ளாது நகர,

"எனக்கில்லையா?" எனக் கேட்டிருந்தான் ருது.

"இருக்கே" என்று அம்பிகா பரத்தி மூடி வைத்திருந்த சப்பாத்தி மாவினை காண்பித்தவள், "அத்தை தேய்த்து வச்சிட்டாங்க. நீங்க இப்போ அதை சுட்டு எடுத்துட்டு வாங்க. சாப்பிடணும்" என்றாள்.

"இந்த பழிவாங்கல் எல்லாம் ரொம்ப ஓவர். என் ரேஞ்சுக்கு பழிவாங்குடி" என்றான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள்,

"உங்களுக்கு இதுவே கௌரவம் தான்" என்று தேஷ்ஷிற்கு கதை சொல்லியபடி உணவினை ஊட்ட ஆரம்பித்திருந்தாள். நடுவில் ஷிவாவும் படித்துக்கொண்டே வாய் திறந்து காட்டிட அவளுக்கும் ஊட்டிவிட்டாள்.

தன்னவள் தன் பந்தத்தோடு அழகாய் பொருந்திப்போனதை ரசித்தவாறு மனைவி சொல்லிய வேலையை சிரத்தையாக செய்தான்.

இடையில் தேஷ்க்கு முடித்து, ஷிவாவுக்கு அவன் செய்து வைத்த சப்பாத்தியை எடுக்க வந்த இமையாள்,

"ரவுடிங்களை சுடுறது பெரிசில்லை. சப்பாத்தியை ஒழுங்கா சுடனும். இது வேகல, இது கருகிடுச்சு, இது சுத்தம்" என்று ஒவ்வொன்றாக எடுத்து குறை சொல்லியவளாக சென்றவள்,

"ரொம்பத்தான் பழிவாங்குறடி நீ?" என்று சத்தமாக சிரித்தவனை திரும்பி முறைத்தாள்.

"லவ் யூ டி." அவளின் முறைப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவனாக, சத்தமின்றி உதடசைத்து கண் சிமிட்டினான்.

"ம்க்கும்" என்று உதட்டை சுளித்தவள் முகத்தை வெட்டி திருப்பிக்கொண்டாள்.

"ரொம்பத்தான்... பார்த்து" என்றவன் சாப்பாத்திகளை சுட்டு முடித்து எடுத்துக்கொண்டு அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.

இமையாள் ஷிவாவுக்கும் தேஷ்ஷுக்கும் மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டிருக்க, ருது இமையாளையே அசையாது பார்த்திருந்தான்.

இருவரின் விளையாட்டை கண்டும் காணாது படித்துக்கொண்டிருந்த ஷிவா, உணவு போதுமென எழுந்து, இமையாள் அறியாது ருதுவுக்கு பெருவிரலை காண்பித்து "ஆல் தி பெஸ்ட் டார்லிங்" என்று உதடசைத்துச் சென்றிருந்தாள்.

ருது இதழில் தோன்றிய புன்னகையை நன்கு படர விட்டிருந்தான்.

"என்னவாம் டிசி சாருக்கு?" என்றவள், தேஷ்ஷை அழைத்துச் சென்று வாய் துடைத்துவிட்டு, தானும் உணவு உண்ண தட்டினை எடுத்து வைத்து அமர்ந்தாள்.

"நான் அத்தைகிட்ட போறேன்" என்று தேஷ் ஓட, "மெதுவா போ தேஷ்" என்றாள் இமையாள்.

"லேஷஸ்க்கு கோபமே இல்லைல?"

அவளிடம் பதிலில்லை. எப்படி இல்லையென்று ஒப்புக்கொள்வாள். அவன் மீது காதலிருக்கிறது. கொண்ட காதலால் அவனது உறவுகளை அவளது உறவுகளால் மிக எளிதாக, அத்தனை விரைவில் ஏற்க முடிந்தது. அந்த காதலை காட்டிடக்கூடாதென்பதற்காகவே அவள் வாய் திறக்கவில்லை.

"தேஷ் யாருன்னு இப்போ சொல்லு லேஷஸ்?" என தானே கேட்டான் ருது. அவள் மீதான தன் பார்வையை மாற்றாது.

"நீங்க அப்பான்னா நான் தான் அம்மா" என்றவள், "உங்களுக்காகத்தான் எல்லாம் போதுமா? உங்களை ஏன் இவ்ளோ லவ் பன்றேன் தெரியல. எம் மேல தான் கோபம். நான்கு வருடத்துக்கு முன்பே உங்க மேல் வந்திருக்கணும். ஏன் வரலன்னு என்மேலே கோபம். இப்போ, நேத்து நீங்க கார்னர் செய்து... ம்ப்ச், இப்பவும் வரமாட்டேங்குது. எல்லாம் இந்த காதலால" என்றவள் துடித்து வெளிவரும் கண்ணீரை அவனுக்கு காட்டாது எழுந்து சென்றிருந்தாள்.

சற்று நேரம் முன்பஜ் தான் காதலை காட்டிடத் கூடாதென நினைத்தவள், நொடியில் மொத்த காதலையும் வலியோடு காட்டியிருந்தாள்.

தன்னவளின் இந்நேர அழுகை அவனுக்கு அத்தனை சந்தோஷத்தை அளித்தது. அவனுக்கான அழுகையல்லவா அது. அவளின் காதலுக்கான சான்றல்லவா அந்த கண்ணீர். அவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டுமாம்.

"லவ் யூ லேஷஸ்" என மெல்ல முணுமுணுத்தான்.

அவன் முன் டொங்கென்று தட்டினை வைத்தவள், உணவினை எடுத்து வைத்து, "சாப்பிடுங்க" என்றாள்.

"லேஷஸ் ஊட்டிவிடணுமே?!" என்றான்.

"முடியாது" என பட்டென்று சொல்லியிருந்தாலும், அவளின் கை உணவோடு அவன் முன் நீண்டிருந்தது.

வாய் திறந்து வாங்கியவன் உணவை மென்றபடி,

"நிறைய கஷ்டப்படுத்திட்டேன்ல?" என்றான்.

"ஆமாம்... இப்போ என்ன அதுக்கு?" என அடுத்த வாய் உணவினை வைத்தவள்,
"கஷ்டப்படுவேன் தெரியாமலில்லை. தெரிஞ்சு தானே பண்ணீங்க? அப்புறம் என்ன வருத்தம் போல கேள்வி" என்று மெல்ல முனகினாள். அவனுக்கு கேட்கும்படியே!

சில நிமிடங்களில் அவனை பேசவே விடாது உணவினை ஊட்டி முடித்திருந்தாள்.

இறுதி வாய் உணவை விழுங்கியவன்,

"இப்படியும் பழிவாங்கலாமா?" எனக் கேட்டு புன்னகைக்க...

"இப்படியும் வாங்கலாம்" என்றவள் "பாத்திரமெல்லாம் நீங்க தான் வாஷ் பண்ணணும். ஒழுங்கா எழுந்து வந்து செய்யுங்க" என்று அதட்டியபடி சமையலறைக்குள் செல்ல, ருதுவும் அகத்தில் தோன்றிய மலர்ச்சியோடு அவளின் பின் சென்றான்.

ருது பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்க... இமையாள் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

தனக்காக அவள் எதையும் நொடியில் ஏற்றுக்கொள்வாள் என்பது, அவள் பாந்தமாய் ஒரு நாளிலே அவ்வீட்டில் உரிமையாய் வளைய வருதலில் புரிந்து கொண்டான்.

"விட்டுப்போகனும் நினைச்சது இல்லை. விட்டுப்போனால் நல்லா இருப்பன்னு நினைச்சேன்" என்றான். அன்றைய நாளின் தன் மனதை குறிப்பிட்டான்.


"இதை உங்களோட காதல்ன்னு நான் எடுத்துக்கணுமா?" எனக் கேட்டவள், "விட்டுப்போக நினைச்சிட்டால் நினைப்பதெல்லாம் காரணம் தான்" என்று முதல் முறை அவனுக்கு வலிக்க கொட்டு வைத்தாள். தன் வார்த்தையால்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 30

ஒருத்தரை நாம் விடணும், விலக்கி வைக்கணும் முடிவு பண்ணிட்டால் அல்லது மனதில் நினைத்துவிட்டால் போதும்... கண்ணில் படும், மனதில் உதிக்கும் யாவும் காரணங்களாகி விடும்.

அதைத்தான் மறைமுகமாக இமையாள் சொல்லியிருந்தாள்.

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ருதுவின் கைகள் ஒரு நொடி அப்படியே நின்றது.

இமையாள் சொல்வது பலருக்கு வேண்டுமானால் பொருந்தும். அவனுக்கு?

தன்னை காயப்படுத்த வேண்டுமென்றே சொல்கிறாள் என புரிந்தது. இருப்பினும் அவளது வார்த்தைகள் அவனுக்கு வலி கொடுத்தது.

பாலினை நான்கு தம்ளர்களில் ஊற்றியவள்,

"கழுவி முடிச்சிட்டிங்கன்னா குடிச்சிடுங்க" என்று ஒன்றை அவனுக்காக அங்கேயே வைத்துவிட்டு, அவளுக்கானதை குடித்து முடித்து,

"இதையும் வாஷ் பண்ணிடுங்க" என தான் பருகிய தம்ளரை அவனருகில் வைத்துவிட்டு, தான் சொல்லியதால் அவன் வருந்துவதை பொருட்படுத்தாது சென்றிருந்தாள்.

ஷிவா மற்றும் தேஷ்ஷிற்கு எடுத்துச் சென்றவள் தேஷ்ஷை குடிக்க வைத்து தன்னுடன் அழைத்து வந்தாள்.

அதற்குள் ருது அறைக்கு சென்றிருந்தான்.

அவன் குடித்திருக்கிறானா என்று ஆராய்ந்தவள், தம்ளர் கழுவி வைக்கப்பட்டிருக்க, தேஷ்ஷுடன் மேல் சென்றாள்.

ருது காக்கி உடை அணிந்து கொண்டிருந்தான்.

"ஸ்டேஷன் போறீங்களா?"

"ரவுண்ட்ஸ் போகணும்" என்று அவளின் முகம் பாராது கூறியவன், தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்தான்.

"கீழ நானே லாக் பண்ணிடுறேன்" என்றவன் வேகமாக மறைந்திருந்தான்.

அவனது வாடிய முகம் அவளை வருத்தம் கொள்ள வைத்தது. அவனுக்கு வலிக்குமென தெரிந்தே தான் அவ்வாறு கூறினாள். ஆனால் தற்போது அவனைக்காட்டிலும் அவனை வருத்திவிட்டதற்காக அவள் தான் அதீத வலி பெற்றாள். அவன் முன்பு காட்டிக்கொள்ளாது சமாளித்தவளுக்கு அவனது சோக முகம் மனதை வதைகொள்ள வைத்தது.

தேஷ் அழைத்திடவே சிந்தை திரும்பினாள்.

அதன் பின்னான அவளின் நேரம் தேஷ்ஷுடன் விளையாடி, அவனுக்கு கதை சொல்லி உறங்க வைத்தது என வேகமாக ஓடியது.

தேஷ் ஆழ்ந்த உறக்கத்தில் கூட இமையாளை அத்தனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தான். விடவேமாட்டேன் என்பதைப்போல். அதில் அவள் உருகிப்போனாள். இத்தனை சிறு வயதில் எத்தனை ஏக்கமென.

நல்ல உறக்கத்தில் தானாக அவனது கைகள் தன் மீதிருந்து இறங்கிய பின்னரே, எழுந்து சென்று குளித்து ஆடை மாற்றி வந்தாள்.

வார்ட்ரோப்பில் ருதுவின் ஆடைகளுக்கு நடுவே அவளது உடைகளை அத்தனை நேர்த்தியாக அடுக்கியும் மாட்டியும் வைத்திருந்தான்.

அவனது சட்டையும், அவளது புடவையும் ஒன்றையொன்று ஒட்டி உரசிக்கொண்டிருக்க... அவளின் இதழ் தானாக மலர்ந்தது. மனதிலிருந்த இறுக்கம் மெல்ல தொலைந்திருந்தது.

நேரத்தை பார்க்க பதினொன்றை தாண்டியிருந்தது.

ருது எப்போது வருவானென தெரியவில்லை. அவனை வருத்திவிட்டு வருந்துபவளுக்கு உறக்கம் வருமென்று தோன்றவில்லை.

பிள்ளைக்கு அரணாக இருபக்கமும் தலையனையை வைத்தவள், அறைக்குள்ளே படுக்கை பகுதியை பிரித்தார் போலிருந்த தடுப்பை கடந்து வந்து நீள்விருக்கையில் அமர்ந்தவளாக தொலைக்காட்சியை உயிர்ப்பித்து சத்தத்தை குறைத்து வைத்தாள்.

வெறுமென அவளது கண்கள் திரையை பார்த்திருந்தது. மனமும் கருத்தும் அதில் லயிக்கவில்லை.

ருது அவளுக்கு பெரும் ஏமாற்றம்... அதனுடன் கூடிய பெரும் வலி... பெரும் காயம் கொடுத்திருக்கிறான். அதனையே ஏற்றுத் தாங்கிக்கொண்டு காத்திருந்தவளுக்கு, அவனை சிறிதாய் தான் வருத்தியது தாங்கிக்கொள்ள முடியா வதை செய்தது.

அவனது வலி அவளுக்கு அதீத வலியாய்!

அந்நொடி தன் மனம் ருதுவை எத்தனை ஆழம் நேசிக்கிறதென உணர்ந்து கொண்டாள். அவன் மீதான காதலின் வலிமை தெரியும் அவளுக்கு. அதன் பெரும் ஆழம், அவன் தன்னை எவ்வளவு காயப்படுத்தினாலும் அவனுக்காக வருந்தும் மனதில் புரிந்தது.

மெல்ல அவள் விழிகள் மூடிட, ரோந்து பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான் ருது.

தங்கையின் அறையை ஒரு பார்வை பார்த்து, விளக்கு ஒளிராது இருக்கவே உறங்கிவிட்டாள் என மேலே வந்தான்.

விடி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்க மெத்தையில் தேஷ் மட்டும் இருக்க, பார்வையை சுழற்றினான். தடுப்பைத் தாண்டி மெல்லிய பாடல் சத்தம் கேட்கவே அங்கு சென்றிட, உட்கார்ந்த நிலையிலே உறங்கியிருப்பவளை கண்டவன், அருகில் சென்றான்.

"உனக்கு கோபமே இல்லைன்னு நினைச்சிட்டேன் டி" என்றவன், "உன்னை கட்டிக்கணும் போலிருக்கே! எப்போ மலை இறங்கி வருவ?" எனக் கேட்டபடி மெல்ல அவளை கைகளில் அள்ளிட எண்ணி குனிய, இமையாள் பட்டென்று தன் இமை திறந்திருந்தாள்.

அவனையும் அவனது கைகளையும் பார்த்தவள்,

"அந்த சீனெல்லாம் இங்கில்லை" என்று எழுந்து நின்றாள்.

"ம்க்கும்... அதுக்குத்தான் கொடுத்து வைக்கலையே!" என்றவன், "கொஞ்சம் லேட்டா கண்ணு முழிச்சிருக்கலாம்" என்றுவிட்டு ஆடை மாற்றி வந்தான்.

அவள் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருக்க...

"தூங்கலையா?" எனக் கேட்டான்.

"தூங்கணும். எங்கன்னு பார்த்திட்டு இருக்கேன்" என்றாள்.

"எங்கவா? பெட்டில் தான் படுக்கணும்" என்று சொல்லிய ருது அவளை பார்த்து நிற்க,

"நான் உங்களுக்கு சொன்னேன்" என்றான்.

"இந்த கோச் உங்களுக்கு ஓகேவா?"

அவள் காட்டிய கோச்சின் நீளத்தையும் தனது உயரத்தையும் குனிந்து பார்த்தவன்,

"சீரியல் சீனெல்லாம் இங்கில்லை. தேஷ்க்கு அந்தப்பக்கம் நீ, இந்தப்பக்கம் நான்" என்று சொல்லி வேகமாக சென்று தேஷ்ஷின் ஒரு பக்கம் படுத்திருந்தான்.

இமையாளுக்கு அவனது பேச்சிலும், பாவனையில் சிரிப்பு வந்தாலும் அதனை இதழ்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டு மற்றைய பக்கம் சென்று படுத்தாள்.

இருவரும் விழித்து தான் இருந்தனர்.

ஆழ்ந்த அமைதி.

இமையாள், "தேஷ் நைட்டில் விழிப்பானா?"

ருது, "இல்லை."

அதற்கு மேல் என்ன என்று தெரியவில்லை... மீண்டும் அமைதி.

உருண்டு உருண்டு உறங்க முயற்சித்த ருது, சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

என்ன என்பதைப்போல் இமையாள் திரும்பிட,

"தேஷ்க்கு மட்டுமில்லை எனக்கும் நீ வேணும்" என்றவனின் வார்த்தையில் அவளது இமை இழைகள் புருவம் தொட்டது.

"அல்ரெடி லேஷஸ் லேஷஸில் மூழ்கிப்போயிருக்கேன். இப்போ எதுக்கு இப்படி பாக்குற?" எனக் கேட்டவன் தான் சொன்னதன் பொருளை உணரவே இல்லை.

அமர்ந்திருந்தவன் அவள் பக்கம் எழுந்து வர, மூச்சு அடைக்க உறைந்தாள்.

அவனோ அவளை கண்டு கொள்ளாதவனாக, அவளருகில் படுத்து அவளின் கையை பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

இரண்டு ருதுவிற்கும் நடுவில் அவர்களது சொர்க்கம்.

ருதுவின் செயலில் இமையாளுக்கு சற்று முன்னர் வரை தன் கையை பிடித்துக்கொண்டு உறங்கிய தேஷ் தான் தெரிந்தான்.

அக்கணம் ருதுவும் அவளுக்கு அன்னையின் அரவணைப்பைத் தேடும் சிறுவனாகவேத் தெரிந்தான்.

அப்போதுதான் அவன் சொல்லிய வார்த்தையின் மனப் பொருளை உணர்ந்தாள்.

"மனசு இப்படி லேசா இருந்து பல வருஷம் ஆகுது."

அவனின் வார்த்தையில் அவனது சொல்லப்படாத வலிகளை அவள் உணர்வதாய்.

இமையாளுக்கு அவன் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியவன் என்ற எண்ணமே இல்லை. அவன் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லியது முதல் இந்நொடி அவனது மகனாக தேஷ் தன்னருகே படுத்திருக்கும் நிலையிலும், கண் முன் காண்பது, காதால் கேட்பதென யாவும் பொய்யாகவேத் தெரிகிறது அவளுக்கு.

நடுவில் ருதுவின் மீது வந்த கோபம் கூட, அவனை சீண்டுவதற்கெனவே புரிந்தது.

அவனது அருகில் இயல்பாய் அவளால் அவனுடைய தொடுகையை ஏற்க முடிந்தது. எல்லாம் காதல் என்று புரிந்தாலும், அவனை தான் ஏற்றுக்கொண்டோமா? தனக்கு வலி கொடுத்துச் சென்றவனை ஏற்றுக்கொண்டோமா? எனும் பெரும் கேள்வி அவளுள்.

'எதையும் யோசிக்காதே இமயா!' தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தலையை உதறிட... அந்த அசைவில்,

"என்னாச்சு?" என கண் திறந்தான் ருது.

ருதுவின் பக்கம் முகத்தை நன்றாகத் திருப்பியவள், அவனது கண்களை சந்தித்து,

"சாரி" என்றாள்.

எதற்கென புரிந்தும் அவன் அமைதியாக இருந்தான்.

"வேணுன்னு தெரிஞ்சு தான் சொன்னேன். ஆனால்," என்றவளின் மீது, ஒருக்களித்து படுத்தவனாக கையை போட்டவன்...

"தெரியும். என்னோட லேஷஸ், என்னை வருத்திட்டு வருந்துவா(ள்)ன்னு தெரியும். தூங்கு" என்று கண்களை மூடினான்.

இமையாள், "தூக்கம் வருதா?"

"உனக்கு வரலையா?" எனக் கேட்டான்.

"வரது" என்றவள், "தூங்க முடியல" என்றாள்.

"காரணம் நானா?"

"என்னால் எதையும் நம்ப முடியல" என்ற இமையாள், "உண்மையாவே தேஷ் உங்க பையன் தானா?" எனக் கேட்டாள்.

"அவன் என்னோட ரத்தம்" என்று அழுத்தமாகக் கூறிய ருது, "நீ அவனை உன் மகனா ஏத்துக்கிட்டன்னு என்னால் உணர முடியுது. அப்புறமும் ஏன் இந்த கேள்வியெல்லாம்?" என்றான்.

"இன்னமும் உங்களை நம்ப சொல்லுதே இந்த காதல். என் ருது எனக்கே எனக்கு மட்டும் தான். இன்னொரு பொண்ணுலாம் அவங்க வாழ்க்கையில் வாய்ப்பே இல்லைன்னு உள்ள சொல்லிட்டே இருக்கே! என்ன பண்ணட்டும்? " என்று தன் குழப்பத்தின் முக்கியப்புள்ளியை காரணமானவனிடமே வெளிப்படுத்தியிருந்தாள்.

"உங்களை விட்டுக்கொடுக்க முடியல. அது என்கிட்டவே இருந்தாலும்" என்றாள்.

ருது மௌனமாக அவளது பேச்சில் பொதிந்துள்ள காதலை உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

"என் கண் முன்னாடி தெரிவதையே நம்ப முடியல. என்ன பண்ணட்டும்? உங்களை பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன் போல. உங்களைத் தாண்டி எதையும் நம்பத் தோணல" என்றாள்.

ருதுவிற்கு இக்கணம் எப்படி இருக்கிறதாம்?

அவனின் இமையாவிடம் மொத்தமாக தஞ்சமடைந்திட காட்டாற்றாய் கரைபுரளும் காதலை தனக்குள்ளே அடக்கி வைத்தான்.

"அப்போ லேஷஸ்க்கு ருது மேல் காதல் மட்டும் தான் எப்பவும்... ரைட்?" என்றான்.

................

"அப்போ ஹேட் யூ இல்லை." முன்பு அவள் சொன்னதை வைத்துக் கேட்டான்.

"எனக்குத் தூக்கம் வருது" என்றவள் தேஷ்ஷின் புறம் திரும்பியவளாக கண்களை மூடிக்கொண்டாள்.

"கேடி" என்று முணுமுணுத்த ருது அத்தனை மகிழ்வை உணர்ந்தான் அத்தருணம்.

தன்னவள் தன்மீது எந்நிலையிலும் காதலை மட்டுமே கொண்டிருப்பது அத்தனை நிறைவாய் அவனுள் சுக ராகம் மீட்டியது.

அவனது எண்ணங்கள் யாவும் அவனவளே தன்னைப்போல் நிறைவேற்றியிருந்தாள்.

இன்னும் அவனது பக்கங்கள் மட்டுமே விலக்கப்பட வேண்டும். அவனால் திடமாக சொல்லிட முடியுமா?

'சொல்லியாகனும்' என தனக்கே சொல்லியவன், தன்னவளின் மீது கைப்போட்டவனாக உறங்கிப்போனான்.

______________________________

ருது காவல் நிலையம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

ஷிவா தேர்வு என்பதால் முன்னதாகவே கிளம்பியிருந்தாள்.

இமையாள் தேஷ்ஷினை குளிக்க வைத்து, ஆடை உடுத்திக் கொண்டிருந்தாள்.

ருது, "ஷிவா போயாச்சா?"

"அத்தை எப்பவோ ஜூட். நான் ஆல் தி பெஸ்ட் சொன்னனே" என்று தேஷ் சொல்ல...

"சாப்பிட்டாளா?" எனக் கேட்டான்.

"அத்தைக்கு சாப்பாடு வேண்டாமாம். அம்மா ஜூஸ் கொடுத்தாங்க" என்ற தேஷ், ருதுவின் கையிலிருந்த சீப்பினை பறித்து இமையாளிடம் கொடுத்து தலை வாரிவிடக் கூறினான்.

அந்நேரம் இமையாளின் அலைப்பேசி ஒலித்திட,

"பேபி வாங்க அப்பா கோம்ப் பன்றேன்" என அழைத்தான் ருது.

"இல்லை... தேஷ்க்கு அம்மா தான் எல்லாம் பண்ணனும்" என்று குழந்தை முகம் சுருக்கிட,

இமையாள் மென் முறுவலோடு அவனுக்கு தலை முடியை சரி செய்து, நெற்றியில் முத்தம் வைத்து நிமிர்ந்தாள்.

அதற்குள் அவளது அலைப்பேசி இரண்டு முறை அடித்து ஓய்ந்திருந்தது.

"எனக்கும் கிடைக்குமா?" ருது கண்களில் காதலை தேக்கி கேட்டிட,

"அடி வேணுன்னா கொடுக்கலாம்" என்ற இமையாள், அழைத்தது யாரென்று அலைப்பேசியை எடுக்க பள்ளியிலிருந்து சக ஆசிரியரின் அழைப்பு.

"சொல்லுங்க மேம்?"

.......

"ஓகே ஓகே... நாட் ஆன் இஸ்யூஸ் மேம். நான் வரேன்" என்றவள்,

"ஸ்கூல் போகணும்" என்றாள் ருதுவிடம்.

"சம்மர் ஹாலிடேஸ்ல?"

"நியூ அட்மிஷன்ஸ் வொர்க் இருக்கு" என்ற இமையாள் தனது புடவை ஒன்றை எடுத்து, ருதுவின் கையில் திணித்தவளாக "அயர்ன் பண்ணுங்க" என்றாள்.

"அயர்ன் பண்ணப்போலத்தான் இருக்கு."

"இல்லை கசங்கியிருக்கு. அடுக்கும் போது அவ்ளோ அழகா அடுக்கியிருக்கீங்க" என்றாள் இடையில் கைகளைக் குற்றி.

உள்ளுக்குள் ஜெர்க் ஆனாலும், அவள் சொன்னதை செய்திட ஆயத்தமாகினான்.

"ம்ம்ம்... இப்படித்தான் இருக்கணும்" என்றவள் தேஷ்ஷைக் கூட்டிக்கொண்டு கீழே சென்றிட...

"இருந்தாலும் ரொம்பத்தான் டா ருது நீ அவளுக்கு அடங்கிப்போற" என ருது முணுமுணுத்திட, எதையோ எடுக்க திரும்பி வந்த இமையாள்,

"அடங்கத்தான் வேணும். என்கிட்ட அடங்காம வேற யார்கிட்ட அடங்குவாங்களாம்" என்றவளாய் அவனை பார்த்து உதட்டை சுளித்து வெளியேறியிருந்தாள்.

"பக்கா வைஃப் மெட்டிரியலா மாறி நிக்குறாடா உன் லேஷஸ்" என்று சொல்லிக்கொண்ட ருதுவினுள் ஆயிரமாயிர வண்ணங்கள்.

ருது கீழே வரும்போது, தேஷ்ஷுக்கும் உணவு ஊட்டி தானும் உண்டிருந்தாள் இமையாள்.

ருதுவிற்கு உணவை எடுத்து வைத்தவள், "சாப்பிடுங்க. நானும் கிளம்பி வந்துடுறேன். டிராப் பண்ணிடுங்க" என்றாள்.

அவள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென சொல்லியபோதே கேட்க நினைத்தான். தான் கேட்கிறோமென அவள் வேண்டாமென்றிடுவாளென கேட்காது இருந்தான். இப்போது அவளாக சொல்லிட வேகமாக ஒப்புக்கொண்டான்.

ருது மகனிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருக்க, கிளம்பி வந்த இமையாள்,

"குட்டியை அங்க அம்மாகிட்ட விட்டுட்டு போகலாம்" என்றாள்.

"ராதிகா பார்த்துப்பாங்க" என்று ருது சொல்ல, ராதிகா யார் எனும் விதமாக புருவம் சுருக்கினாள் இமையாள்.

"வெங்கட் வைப். பி.சி. ஷீ இஸ் பிரெக்னேன்ட். சோ, லீவில் இருக்காங்க. நேத்தும் அவங்க தான் பார்த்துகிட்டாங்க" என்றான்.

ருதுவை முறைத்து வைத்தவள்,

"என் பையன் அவனோட தாத்தா வீட்டில் இருப்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை டிசி சார்?" எனக் கேட்டிருந்தாள்.

"ஹேய் நான் அப்படி எதுவும்" என்ற ருதுவை கை காண்பித்து தடுத்தவள்,

"அவங்க கன்சீவ்வா இருக்காங்க. அவங்களையே ஒருத்தங்க பார்த்துக்கணும். தேஷ் ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிட்டே இருப்பான். அவங்களால் இவன் பின்னாடி ஓட முடியுமா?" எனக் கேட்டதோடு, "நேத்து வேற ஆப்ஷன் இல்லை. அவங்ககிட்ட விட்டிங்க. இப்போ அவனுக்குன்னு சொந்தமான வீடே இருக்குல. உங்களுக்கு என்னவாம்?" என்றாள்.

"இமயா... நான்!" உண்மையில் ருதுவுக்கு பதில் சொல்லிடவே வரவில்லை. அவன் உள் வைத்து எதுவும் சொல்லவில்லை. இயல்பாய் சொல்லிவிட்டிருந்தான்.

தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்த தேஷ்ஷை ஒரு பார்வை பார்த்த இமையாள், "ஒவ்வொரு முறையும் நான் தேஷ்ஷை என் பையனா நினைக்கிறேன்னு உங்ககிட்ட காட்டிட்டே உங்களை நம்ப வச்சிக்கிட்டே இருக்க முடியாது ருது" என்றாள்.

இறுதியில் அத்தனை ஆயாசம் அவளது குரலில்.

"ம்ப்ச்..." நெற்றியை தேய்த்துக்கொண்ட ருது, "இனி நானே இல்லைன்னாலும் தேஷ்ஷை நீ..." என நிறுத்தியவன், "என் பொண்டாட்டி விடமாட்டான்னு தெரியும். அதுக்கெல்லாம் எனக்கு விளக்கம் சொல்லனுமில்லை. அவன் அங்கேயே இருந்தாலும் எனக்கு நோ ப்ராப்ளம்" என்றான்.

இமையாள் அவனது பொண்டாட்டி எனும் வார்த்தையில் மின்னலாய் அதிர்வை உள்வாங்கிய போதும், அவனை முறைத்தபடியே இருந்தாள்.

"சும்மா முறைக்காதடி! விரிஞ்சிருக்க அந்த கண்ணுல அழுத்தமா ஒன்னு வைக்கணும் தோணுது" என்றான்.

அவனது பேச்சில் உண்டாகிய குளிரை மறைத்தவளாக,

"எனக்கு டைம் ஆகுது" என ருதுவை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றாள்.

மூவரும் சுரேந்தரின் இல்லம் சென்றிட,

அவர்களை வரவேற்று அமர வைத்த தீபா, "அவங்க இப்போதான் பேங்க் போனாங்க" என்றார்.

நேற்றே சுரேந்தர் வங்கி வழக்கிலிருந்து ருதுவால் முழுவதுமாக மீட்கப்பட்டிருக்க, அவர் வழக்கம்போல் பணிக்கு செல்லலாம் என அரசு உத்தரவு கொடுத்தது.

தீபா முதல்முறை தேஷ்ஷை காண்கிறார். இருப்பினும் அவனை அள்ளித் தூக்கியிருந்தார். அவனை பார்க்கையில் அவருக்கு மனமே கனத்து விட்டிருந்தது. இருந்தபோதும் அவன் முன் தன்னை முயன்று இயல்பாக வைத்துக்கொண்டார்.

"எனக்கு ஸ்கூலில் வேலை முடிஞ்சதும் வந்து கூப்பிட்டுக்கிறேன்ம்மா" என்றவள் அங்கிருந்த அவளது ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டவளாக "கிளம்பலாம்" என ருதுவை பார்க்க, அவனும் சரியென தீபாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

"நானே டிராப் பன்றேன்." வெளியில் வந்ததும் அவள் ஸ்கூட்டியை எடுக்க ருது கூறியிருந்தான்.

"எனக்கு எப்போ வொர்க் முடியும் தெரியல. முடியுற நேரம் உங்களுக்கு வொர்க் இருந்தால்?" என்றவள், அவனுக்கு சிறு தலையசைப்பைக் கொடுத்து புறப்பட்டிருந்தாள். அவளிடம் புன்னகையும் தோன்றி மறைந்ததோ.

'நான் இவ்ளோ கஷ்டப்படுத்தியும் என்னை எப்படிடி சகஜமா ஏத்துக்கிட்ட?'

எல்லாம் காதலென அவனின் மனம் உரக்கக் கத்தியது.

இழந்த யாவும் தன்னவளின் உருவில் தன்னிடம் வந்துவிட்டது என எண்ணிய ருதுவிடம் காட்டவே முடியாத தன் கோபத்தை இன்னும் சில மணி நேரங்களில் காட்டவிருக்கிறாள் இமையாள்.


Drop urs comments in below the Link

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 31

"என்ன மேம் சடனா இன்னைக்கு. இன்னும் டூ டேஸ் அப்புறம் பார்த்துக்கலாம் சொன்னாரே?"

பள்ளியின் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் இமையாள், அவளுடன் அந்த வேலையை சேர்ந்து செய்யப்போகும் நிர்மலா மேடத்திடம் வினவினாள்.

"இந்த இயர் நம்ம ஸ்கூலுக்குன்னு புதுசா பேரன்ட்டிங் ஆப் கிரியேட் பன்றாங்களாம். அது எப்படி ரன் ஆகுதுன்னு நியூ ஸ்டூடன்ட்ஸ் டீடெயில்ஸ் அப்டேட் செய்து செக் பண்ணவாம்" என்றவர், "நீ எல்கேஜி செக் பண்ணிடு இமயா!" என்றவர் அங்கிருந்த மற்றவர்களுக்கும் அவர்களுக்கான வகுப்புகளை சொல்லிட அனைவரும் வேலையில் மூழ்கிப்போயினர்.

புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களின் தகவல்களை சரிபார்த்து கணினியில் பதிய வேண்டும். அதுதான் வேலை.

மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்த இமையாள் நடுவில் இருமுறை தீபாவுக்கு அழைத்து, தேஷ் என்ன செய்கிறான், சாப்பிட்டானா என விசாரித்திருந்தாள்.

அதனை கவனித்த நிர்மலா,

"என்ன இமயா யாரு அந்தக் குட்டி?" எனக் கேட்க, சற்றும் யோசிக்காது "என்னோட சன் தான் மேம். அம்மா வீட்டில் விட்டு வந்திருக்கேன்" என்றாள்.

"உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" அங்கிருந்த அனைவருமே ஒருசேரக் கேட்டிருந்தனர்.

"ம்ம்ம்ம்... பையன் இருக்கும்போது கல்யாணம் ஆகியிருக்காதா?" சாதாரணமாக சொல்லியிருந்தாள்.

"சொல்லவே இல்லையே?" நிர்மலா ஆதங்கமாகக் கேட்டிட,

"இந்த டூ இயர்ஸில் யாரும் என்கிட்ட கல்யாணமாகிடுச்சா கேட்கவே இல்லையே மேம்" என்றவள் அதற்கு மேல் என்னகேட்டாலும் பதில் சொல்வது தடுமாற்றமாகிவிடுமென பார்வையை திரும்பிக்கொண்டாள்.

"நம்ப முடியலையே!" நிர்மலா சந்தேகமாக இழுத்திட...

"சிட்டி புது டிசி ருத்விக் தெரியுமா உங்களுக்கு?" எனக் கேட்டாள் இமையாள்.

"ம்ம்ம்ம்... சிட்டியே அவர் பேரைத்தானே சொல்லிட்டு இருக்கு."

"அவங்க தான் என் ஹஸ்பெண்ட்" எனக்கூறி மற்றொரு அதிர்ச்சையைக் கொடுத்தாள்.

அதன் பின்னர் யாரும் அவளிடம் திருமணத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. ருதுவின் பதவி அனைவரின் வாயினையும் அடைத்திருந்தது.

மதிய உணவு வேளையின் போது...

"லன்ச் உங்க அத்தை செய்திருக்காங்களாம். போய் சாப்பிட்டு. தேஷ் என்ன பன்றான் பார்த்திட்டு வாங்க" என ருதுவுக்கு தகவல் அனுப்பினாள்.

"அலைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்த ருதுவின் இதழ்கள் மந்தகாசமாய் விரிந்தன."

'நீ முறைச்சிக்கிட்டே சுத்தினாலும் உன் லவ் தாண்டி தெரியுது' என மனதோடு சொல்லிய ருது, அலைப்பேசியையே பார்த்திருந்தான்.

"என்னண்ணா சார் முகத்துல புதுசா வேறென்னவோ எக்ஸ்பிரஷன்லாம் வருது."

மல்லிகாவிடம் அன்று நடந்த ஒரு திருட்டு வழக்கினைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வெங்கட், ருதுவின் புன்னகையை கவனித்தவனாக கிருஷ்ணனிடம் கேட்டான்.

"இருங்க கேட்டு சொல்றேன்" என மல்லிகா நகர,

"ஏய் இந்தம்மா... உன் வேலையைப்பாரு நீ. உடனே போட்டுக்கொடுக்க கிளம்பிடுவீங்களே!" என்ற வெங்கட், "என்னாவா இருக்கும்?" என மீண்டும் கிருஷ்ணனிடம் கேட்டிட...

"சார் இவருக்கு உங்ககிட்ட என்னவோ கேட்கணுமாம்?" என்று ருதுவிடம் கோர்த்து விட்டிருந்தார் கிருஷ்ணன்.

"என்ன வெங்கட்?"

"அச்சோ ஒண்ணுமில்லை சார்" என்று வெங்கட் பதறி வேலையில் கவனம் செலுத்திட, இமையாளின் பேச்சினைத் தட்டாதவனாக, "வீடு வரை போய் வருகிறேன். பார்த்துக்கோங்க" என கண்காட்டிவிட்டு சுரேந்தரின் இல்லம் சென்றான் ருது.

அவனை வரவேற்று அமர வைத்தவர்,

"தேஷ்க்கு இப்போ தான் சாப்பாடு ஊட்டி தூங்க வைத்தேன். இமயா ரூமில் தான் தூங்குவேன்னு அடம். நீங்க கை, கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்" என்றார்.

"சரிங்க அத்தை" என்றவன் இரண்டடி வைத்து திரும்பி, "உங்களுக்கு வருத்தம் எதுவுமில்லையே?" எனக் கேட்டிருந்தான்.

ருது எதுகுறித்துக் கேட்கிறான் என்பது தீபாவுக்கு புரிந்தது.

"நல்லது தானே நடந்திருக்கு மாப்பிள்ளை" என மாப்பிள்ளையில் அழுத்தம் கொடுத்தவர், "ஸ்கூல் போனதிலிருந்து ஆறேழு கால் பண்ணிட்டாள். இதுக்கு பிள்ளையை அவளே கூட்டிட்டுப் போயிருக்கலாம்" என்று சமையலறைக்குள் சென்றார்.

ருது தன்னவளின் அன்பில் கரைந்தவனாக இமையாளின் அறைக்குச் செல்ல... நல்ல உறக்கத்தில் இருந்தான் தேஷ்.

சில கணங்கள் தேஷ்ஷை பார்த்தபடி நின்றுவிட்டான் ருது.

தேஷ்ஷின் வருகையால் அவனது வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்.

குனிந்து சிறுவனின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், அறையை ஒவ்வொரு இடமாக பார்வையால் வலம் வந்தான். நேற்று சரியாக எதையும் அவன் கவனித்து பார்த்திருக்கவில்லை.

அவ்வறை முழுவதும் தன்னவளின் வாசம் நிரம்பியிருக்க கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தான்.

'இப்போவே கட்டிக்கணும் தோணுதே!' சிந்தை சென்ற பாதை அறிந்து கண்களை திறந்தவன், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வேகமாக கீழே வந்திருந்தான்.

உணவை முடித்துக்கொண்டு ருது கிளம்பிட, தீபா ருது வந்து சென்றதை மகளுக்கு தெரிவித்திருந்தார்.

காவல் நிலையம் ருது வந்தபோது வெங்கட் இருவரை விசாரித்துக் கொண்டிருந்தான்.

ருது, "என்ன கேஸ் கிருஷ்ணன்?"

"ஈவ்டீஸிங் சார்."

"இவனுங்கலாம் திருந்தவே மாட்டானுங்க போல" என்று ருது தன்னுடைய இருக்கை நோக்கி செல்ல...

"பொண்ணு செத்துப்போச்சு சார்" என்றார் கனகா.

"வாட்?" ருது வேகமாகத் திரும்பியதில் கனகாவே பயந்துவிட்டார்.

"என்ன நடந்தது?"

"செத்துப்போன பொண்ணு பஸ் ஸ்டாப்பில் ஃபிரண்டுக்காக நின்னுட்டு இருந்திருக்கு சார். இவனுங்க கலாட்டா பண்ணியிருக்கானுங்க. அந்தபொண்ணு எதையும் கண்டுக்காமல், ஃபிரண்ட் ஸ்கூட்டியில் வந்ததும் ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்துட்டு, செ*** பி**** இவனுங்களை பார்த்து சொல்லியிருக்கு. கரெக்ட்டா வண்டி மூவ் ஆக, ஷால் பிடிச்சு இழுத்திருக்கான். பின்பக்கமா விழுந்ததில் மண்டையில் நல்ல அடி. ஸ்பாட் அவுட்" என்று விளக்கமாகக் கூறிய வெங்கட், "நீங்க போனதும் தகவல் வந்தது. அங்கிருந்தவங்களே பிடிச்சு வச்சிருந்தாங்க. பாடி ஜிஎச்சில் இருக்கு" என்றான்.

"ஒரு பொண்ணை கொலை பண்ணியிருக்கானுங்க. உட்கார வச்சு கொஞ்சிட்டு இருக்கீங்க" என்ற ருது உட்கார்ந்திருந்த இருக்கையை உதைக்க, சரிந்து கீழே விழுந்தனர் இருவரும்.

வேகமாக எழுந்த ஒருவனுக்கு ருதுவை பார்க்கவே பயமாக இருந்தது. பின்னே நகரத்தையே தன் கைப்பிடியில் வைத்திருந்த கைலாஷையே ஒழித்திருந்தானே. தன் நிலை என்னவாகப்போகுதோ என அஞ்சி நடுங்கினான்.

"சாரி சார்... சும்மா ஃபன்னுக்காக..." மற்றொருவன் முடிக்கும் முன்பு வாயிலே குத்தியிருந்தான்.

"ஈவ்டீஸிங் பன்றது. கொலை பண்றதுலாம் உங்களுக்கு ஃபன்னாடா" என்று கேட்டு கேட்டே இருவரையும் மாற்றி மாற்றி துவைத்து எடுத்து விட்டான்.

"சார் நாங்க யார் தெரியுமா?"

"ஆஹான்..." என்று கையிலிருந்த காப்பினை ஏற்றி முறுக்கிய ருது...

"இவனுங்களை தூக்கி செல்லுக்குள்ள போடுங்க கிருஷ்ணன். யாரு அந்த பருப்புன்னு பார்ப்போம்" என்றான்.

கிருஷ்ணன் இருவரையும் செல்லுக்குள் அடைக்க...

"பின்னாடி வருத்தப்படூவீங்க சார்" என்றான் ஒருவன்.

"அடங்கமாட்டானுங்க போலயே!" என்ற ருது செல்லுக்குள் வைத்து இருவரையும் ஓடவிட்டான். இருவரின் அலறலும் காவல் நிலையத்தை அதிர வைத்தது.

மல்லிகா, "மொத்தமா முடிச்சிடுவார் போல?"

கனகா, "வாங்கட்டும் இவனுங்களுக்கெல்லாம் இப்படித்தான் வேணும்."

"யாருங்க வேணும்?"

அப்போது கண்களில் கனலோடு வேகமாக இமையாள் அங்கு வர மல்லிகா கவனித்துக் கேட்டார்.

"உங்க டிசி இருக்காங்களா?" முயற்சித்தும் இருக்கும் மனநிலையில் இமையாளுக்கு தன்மையாகக் கேட்டிட வரவில்லை.

"யாரும்மா நீ?" என்ற கனகா, "பேங்க் மேனேஜர் பொண்ணு தானே நீ?" எனக் கேட்க,

"உங்க சாருக்கு ஹெட் ஆபீஸ்" என்றாள் கடுப்போட.

அவருக்கு புரியவில்லை.

இவர்கள் பக்கம் திரும்பிய வெங்கட், வேகமாக அருகே வந்து "வாங்க மேடம். சார் பூஜையில் இருக்கார். வெயிட் பண்ணுங்க" என இருக்கையைக் காட்டினான்.

"இல்லை வேண்டாம்" என்றவள், கேட்ட அலறல் சத்தத்தில் எட்டிப்பார்க்க, ருது இருவரை அடிக்கும் காட்சி. அவனது ஆக்ரோஷத்தில் அரண்டு தான் போனாள். தன்னை சமாளித்தவளாக,

"வெளியில் இருக்கேன்" என்று சென்றாள்.

"அந்த பேங்க் கேஸில் அரேஸ்ட் ஆனாரே மேனேஜர் அவரோட பொண்ணு தானே! எதுக்கு நம்ம சாரை கேட்குது. அதான் கேஸ் முடிஞ்சிடுச்சே" என்றார் கனகா.

அன்று சுரேந்தருக்காக இமையாள் காவல் நிலையம் வந்தபோது வெங்கட் அங்கில்லை. அதனால் அவனுக்கு இவ்விஷயம் தெரிந்திருக்கவில்லை.

'ஓ மேனேஜர் சாரோட மாமனாரா? அதான் அன்னைக்கு அவருக்கு அவ்வளவு கரிசனமா?' அன்றைய அவனது கேள்விகளுக்கெல்லாம் இன்று விடை கிடைத்தது.

"இவங்க சாரோட வைஃப்" என்று வெங்கட் சொல்லவும், ருது வெளியில் வரவும் சரியாக இருந்தது.

"அவனுங்க அந்த இடம் விட்டு எதுக்கும் நகரக்கூடாது... எதுக்கும்" என்று அழுத்தமாகக் கூறினான்.

"சார் மேடம் வந்திருக்காங்க?" வெங்கட்.

"மேடமா?"

"ம்ம்ம்... வெளியில் நிக்கிறாங்க" என்றார் மல்லிகா.

"அது யாருடா மேடம்?"

"உங்களுக்கு ஹெட் ஆபீஸாம் சார்." இதனை வெங்கட் சொல்லிட அங்கு நால்வரும் சத்தமின்றி சிரித்தனர்.

"தெளிவா சொல்லுடா?"

"மேடம் அப்படித்தான் சார் சொன்னாங்க" என்று கனகா சொல்லிட,

ருது வெளியில் சென்றான். இமையாள் நின்றிருந்தாள்.

'ஹெட் ஆபீசே' தான் என சிரித்துக்கொண்டவன், வேகமாக அருகில் சென்று...

"இங்கென்ன?" ஏதும் பிரச்சினையோ என பதறினான்.

"வீட்டுக்குப் போவோமா?"

"நேரத்தை பார்த்தவன், ட்யூட்டி டைம்" என்றான்.

"ஹோ" என்றவள், "அப்போ ட்யூட்டி முடிச்சிட்டு வாங்க போகலாம்" என அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.

"எதாவது பிரச்சினையா லேஷஸ்?"

"உங்களை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணனும் தோணுது போதுமா?" இமையாள் சற்று உரக்க சொல்லியிருக்க, ருது வேகமாக உள்ளே எட்டிபார்த்தான். அதுவரை இவர்களை கவனித்துக் கொண்டிருந்த நால்வரும் சடுதியில் வேலை பார்ப்பதைப்போல் பாவனை காட்டிட, அவர்களின் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பை வைத்தே கேட்டுவிட்டனர் என கண்டு கொண்டான்.

ருதுவிற்கும் அவள் சொன்னதில் மென் முறுவல் நிலையாக நிலைத்துவிட்டிருந்தது.

"டூ மினிட்ஸ்" என்ற ருது, உள்ளே வந்து,

"எவன் வந்தாலும் விடக்கூடாது. மல்லிகாக்கா அட்டாப்ஸி ரிப்போர்ட் சீக்கிரம் வேணும் சொல்லுங்க. வெங்கட் அந்த பஸ் ஸ்டாப்பில் ஃபுட்டேஜ் கிடைக்குதா பாருங்க" என்று அந்த வழக்கு சம்மந்தமாக ஆணைகள் பிறப்பித்தவன், வெளியேறியிருந்தான்.

"எப்பவும் போலீஸ் மைண்ட் தான் போல" என்ற வெங்கட்டிடம், "லவ் மேரேஜ்ஜா?" எனக் கேட்டார் கிருஷ்ணன்.

அவரை மேலும் கீழும் பார்த்த வெங்கட்,

"சொல்ல முடியாது. நான் கேட்டு இதுவரை நீங்க எதாவது சொல்லியிருக்கீங்களா?" என்றதோடு, "சொன்ன வேலையை செய்வோம் வாங்க" என்று அவரை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல, இமையாளின் ஸ்கூட்டியில் பின் அமர்ந்தபடி சென்றுகொண்டிருந்தான் ருது.

"நீ ஓகே தானே?"

ருது கேட்டிட இமையாளிடம் பதிலில்லை.

"ஏதும் பேசனுமா லேஷஸ்?"

.........

என்னவாக இருக்குமென அவனுக்கு மண்டை காய்ந்தது.

"ஐ லேஷஸ்..."

வண்டியை சட்டென்று நிறுத்தி கண்ணாடி வழி அவனை பார்த்தவள்,

"மூச்... எதுவும் பேசக்கூடாது" என வாயில் விரல் வைத்து அதட்டினாள்.

இமையாள் வண்டியை இயக்கிட,

"கொஞ்சம் கூட புருஷனுக்கு மரியாதையே இல்லை" என்றான். கள்ளப்புன்னகையுடன்.

அவளிடம் பிரதிபலிப்பு இல்லை. வீடு வந்து சேரும் வரை அமைதி தான்.

கதவினை திறந்து உள் வந்ததும், விறுவிறுவென மாடியேறி தங்கள் அறைக்குள் வந்திருந்தாள். ஒன்றும் புரியாது ருதுவும் அவள் பின்னே வந்திருக்க... சட்டென்று திரும்பி ருதுவை இறுக்கி அணைத்திருந்தாள்.

முதல் அணைப்பு. அதனை ரசிக்கும் நிலை அவனிடம் இல்லை.

இமையாளின் கண்ணில் நீர்.

எட்கி அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். ருதுவின் கண்கள் தானாக மூடிக்கொண்டது.

காவல் நிலையத்தில் அவள் சொல்லும்போதுகூட அவன் நம்பவில்லை. விளையாட்டாகக் கூறுகிறாள் என நினைத்தான்.

'என்னவோ நடந்திருக்கு?' நொடியில் யூகித்தவனாக, "லேஷஸ்" என்று அழைத்திட. அவனது குரல் கரகரப்பில் தோய்ந்து ஒலித்தது.

அதில் சுயம் மீண்டவள், அவனை விலகி மெத்தையில் சென்று அமர்ந்தாள். முகத்தை அழுந்த துடைத்து, கைகளில் தாங்கியவளாக.

எதுவும் புரியாது அவளின் செயலில் பதட்டம் கொண்டவன், அவள் முன் சென்று மண்டியிட்டு, அவளது நாடி தொட்டு முகம் நிமிர்த்தினான்.

கருவிழிகள் பந்தாட அவனது கண்களை ஆழ்ந்து நோக்கியவள்,

"தேஷ் உங்களோட... ம்ப்ச்" என்று நிறுத்தி, "உங்க ரத்தம் ஓகே. நீங்க சொன்ன அழுத்தமே உண்மைன்னு சொல்லுது. பட் உங்களுக்கு பிறந்த பையனில்லை... ரைட்?" எனக் கேட்டாள்.

ருது அதிர்வெல்லாம் கொள்ளவில்லை. அவனுக்குத் தெரியும் தன்னிடம் வந்துவிட்டால் தானாகவே அனைத்தையும் தன்னவள் தெரிந்துகொள்வாள் என்று.

அவள் அவ்வாறு கேட்டதும்,

"நீ இவ்வளவு அறிவாளியா இருக்க வேண்டாம்" என்றான்.

"தேஷ்க்காகத்தான் கல்யாணமாகிடுச்சுங்கிற பொய், ஆகாத கல்யாணத்துக்கு டிவோர்ஸ்ங்கிற பொய் எல்லாமா?" எனக் கேட்டாள்.

"செம ஷார்ப் டி நீ!"

"ம்க்கும்" என்றவள், "நீங்களா ஏதும் சொல்லமாட்டிங்களா?" என்று எழுந்திருந்தாள்.

"நிறைய சொல்லணும்... எப்படின்னு தெரியல" என்றான். தற்போது அவனது குரலே மாறிவிட்டிருந்தது. அவனது பார்வை நிலைக்குத்தி இருந்தது.

அவனின் நொடி நேர மாற்றமும் அவளுள் என்னவோப்போல் இருக்க, அவனை மாற்றும் பொருட்டு அப்பேச்சையே மாற்றினாள்.

"ஓகே நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். முதலில் முகத்தை மாத்துங்க" என்றவள் எழுந்துக்கொள்ள, அவளின் கை பிடித்து தடுத்திருந்தான்.

"சிட்... எனக்கும் உன்கிட்ட எல்லாம் சொல்லணும். இன்னையோட இதை முடிச்சிடலாம்" என்றான்.

"உங்களை கஷ்டப்படுத்தி எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். அது என்னவா இருந்தாலும் தேஷ் நம்ம பையன்" என்றாள் அடர்த்தியாக.

"லேஷஸ்" என்று தன்னவளை தாவி அணைத்திருந்தான்.

எவ்வித உண்மையும் தெரியாது அவளாகவே அவனையும் தேஷ்ஷையும் ஏற்றுக்கொண்டாளே. இதைவிட வேறென்ன வேண்டும். சொல்லிவிட துணிந்துவிட்டான்.

_________________________________________

அப்போது ருதுவுக்கு 26ன் தொடக்கம்.

இமையாளுடனான அழகிய காதல் நாட்கள் அவை.

ருதுவின் தந்தை கைலாஷிற்கு உலகமே அவரது மனைவி துளசியும், ருதுவும், அவனின் அக்கா ரூபிணியும் தான். அப்படித்தான் இருவரும் நினைத்திருந்தனர்.

அவருக்கு பணம் தான் எல்லாம். அதனை தன் குடும்பத்திற்கு தெரியாமல் பார்த்து வந்தார். அவர் பணத்திற்காக அனைத்து தவறான தொழில்களையும் செய்தார்.

ஒருநாள் இரவில் கைலாஷ் யாருடனோ கடத்தல் விடயம் பேசுவதைக் கேட்ட ருது... அவரின் உண்மை முகம் அறிந்து பேசுவதையே நிறுத்திக்கொண்டான்.

உலகத்திலே தன் கணவர் போல வராது என்ற அன்னையின் நம்பிக்கையை உடைக்க விரும்பாதவன் துளசியிடம் எதையும் சொல்லிக்கொள்ளவில்லை. ஏன் கைலாஷிடமே என்ன காரணமென ருது காட்டிக்கொள்ளவில்லை.

ஐபிஎஸ் தேர்வு வகுப்பிற்கு செல்லவும், படிக்கவும் காரணம் சொல்லிக்கொண்டு வகுப்பிருக்கும் இடத்திற்கு அருகிலே விடுதியில் தங்கிக்கொண்டான். நகரத்துக்கு வெளியில் அவர்கள் இல்லம் இருந்தது, ருதுவிற்கு தூரத்தை காரணமாகக் காட்டிட வசதியகிப்போனது. வாரம் ஒருமுறை துளசியை பார்க்க மட்டுமே வீட்டிற்கு சென்று வருவான். அதுவும் கைலாஷ் இல்லாத நேரம் மட்டுமே!

ரூபிணியுடன் ருது அத்தனை நெருக்கமில்லை. ஏனென்று அவனுக்கே தெரியாது. சின்ன வயதில் ஏற்பட்ட சிறுபிள்ளை சண்டையை ரூபிணி மறக்காததே காரணம். நல்ல வசதியான குடும்பத்தில் கட்டிக்கொடுத்திருக்க பிறந்த வீட்டிற்கென்று அடிக்கடி வருவதுமில்லை.

ஐபிஎஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த சமயம் தான் ருதுவுக்கு, இமையாள் மீது காதல்.

இமையாளை தன் மனம் நேசிக்கிறது என்று உறுதியாகத் தெரிந்ததும் எவ்வித தயக்கமுமில்லாமல் அவளிடமும் இனியனிடமும் சொல்லிவிட்டான்.

இருவரிடமும் சம்மதம் கிடைக்க... ருதுவின் கட்டுப்பாடான காதலிலும், ஆர்பரிப்பான நட்பிலும் மகிழ்வாக சென்ற நாட்கள் அவை.

இமையாள் கூட இனியனிடம், "ருது உன்னை தான் லவ் பன்றார் போல" என்று பொய் கோபம் கொள்வதுண்டு.

அப்போதெல்லாம் ருதுவின் பதில், "கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி உன்னை காதலால் மூச்சுமுட்ட வைக்கிறேன் பார்" என்பது தான்.

"இப்போவே மூச்சு முட்டிப் போய் தான் இருக்கோம்" என்று அவள் முணுமுணுப்பதில் அத்தனை மகிழ்வு கொள்வான்.

இந்த மகிழ்ச்சி எல்லாம் ருது தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்கு சென்ற ஒரு வருடம் மட்டும் தான்.

அதன் பின்னான நாட்கள் அத்தனை சாதாரணமாக அவனுக்கு கடந்திடவில்லை.




 
Status
Not open for further replies.
Top