ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 39

ரூபிணியை எதில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. அவள் சென்ற பின்னர் தான் அங்கு இறுக்கம் தளர்ந்தது. இனி ருதுவின் வாழ்வில் கைலாஷ்ஷின் அத்தியாயம் முடிந்தது போல் அவளுடையதும் முடிவுக்கு வந்தது.

"அவளுக்கு உன்னைப்பற்றி தெரியாதே இமையாள். அவ பேச்சை மனசில் வச்சிக்காதே!"

ரூபிணி சென்றும் இமையாள் கலங்கி போய் நிற்க, அம்பிகா அவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினார்.

"அதெல்லாம் இல்லை அத்தை" என்ற இமையாள், "மாமா பசங்க வெளியில் போனாங்க. கூட்டிட்டு வாங்க" என்று வேங்கடத்திடம் கூறியவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ருதுவை இருக்கையில் அமர்த்தி,

"எப்படி அடிப்பட்டுச்சு?" எனக் கேட்டாள். அவனது கட்டினை ஆராய, அவளது கண்ணீர் அவனது காயத்தில் பட்டு தெறித்தது.

ருது கையை இழுத்திட...

"ம்ப்ச்..." என்றவள், "வலிக்குதாப்பா?" எனக் கேட்டாள்.

"என்னடா இவ்ளோ பெரிய கட்டு. எப்படி ஆச்சு? எப்படி கவனிக்கமா விட்டேன்" என்ற அம்பிகா, ருதுவின் மற்றைய பக்கம் வந்து அமர்ந்தார்.

"என்னம்மா நீங்க பார்க்காததா? அப்பாக்கு இந்த மாதிரி எத்தனை பார்த்திருப்பீங்க" என்ற ருது, "அழாதடி! என்னவோ பண்ணுது" என இமையாளை அதட்டியவனாக எழுந்து கொண்டான்.

"எப்படி ஆச்சுன்னு சொல்ல மாட்டிங்களா?"

"இப்போ உன் முன்னாடி நல்லா தானே நிக்கிறேன்" என்றவன், "பசிக்குதுடி" என்று விட்டு மாடியேறினான்.

"வலியை வெளியில் காட்டிக்கவே மாட்டான் இமையாள். நாம தான் தவிக்கணும்" என்ற அம்பிகா, "அவங்க மூணு பேர் வந்ததும் நான் சாப்பிட வைக்கிறேன். நீ அவனுக்கு கொண்டு போ" என்றார்.

உணவு அடங்கிய தட்டுடன் இமையாள் அறைக்குள் வரும்போது, ருது சட்டையை மாற்றாது தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தான். செய்தி அலைவரிசை ஓடிக் கொண்டிருக்க, இமையாளை கண்டதும் பட்டென்று அணைத்திருந்தான்.

"என்ன நியூஸ் அது..." என்று பாதி கேட்ட அதிர்வில் அவனருகில் வேகமாக வந்தவள், "இது வெட்டு பட்ட காயமா? டிவி ஆன் பண்ணுங்க" என தட்டினை முன்னிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு, ருதுவிடமிருந்த ரிமோட்டினை பறிக்க முயற்சித்தாள். அவன் தர முடியாது என போக்குக்காட்டிட, அவன் மடி மீதே அமர்ந்து ரிமோட்டினை பிடிக்க முயல, இருவரும் அந்த நீள்விருக்கையில் சரிந்தனர். தானாக இருவரின் இதழும் ஒட்டிக்கொண்டது.

ருது மெல்ல கண்களை மூடிட, பட்டென்று ரிமோட்டை பறித்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து எழுந்து நின்றாள்.

திரையில் அந்த மாலை மங்கிய நேரத்தில் ஒருவன் ருதுவை வெட்ட வருவதும், அதனை தடுக்க முயன்ற ருதுவின் உள்ளங்கையில் அரிவாள் ஆழமாக இறங்கிய காட்சியும் தான் ஓடிக் கொண்டிருந்தது.

இமையாளின் கன்னத்தில் சரசரவென நீர் இறங்கிட...

"ம்ப்ச்" என்று நெற்றியை தேய்த்தவன், அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அணைத்துக் கொண்டான்.

"ஒரு பொண்ணை ஈவ்டீஸிங் செய்து கொன்னிருக்கானுங்க. அவனுங்களுக்கு நேத்து தண்டனை கிடைச்சிருச்சு. அவனுங்க கவுன்சிலர் ஒருத்தனோட சொந்தம். அவன் என்னைப்போட..."

இமையாள் அவனது வாயில் கை வைத்து வேண்டாமென்று இடவலமாக தலையசைத்து, அவனது நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.

"இது என் வேலையில் சகஜம் டா. ஒவ்வொரு முறையும் அழுதுட்டே இருப்பியா? அந்த கவுன்சிலரையும் உள்ள போட்டாச்சு. எப்பவும் கவனமாதான் இருப்பேன். இன்னைக்கு, அதைவிடு... இனி உனக்காக, என் பொண்டாட்டியோட நிறைய வருஷம் வாழனுங்கிறதுக்காக இன்னும் கூடுதல் கவனமா இருக்கேன். ஓகே வா!" என்றான்.

இமையாள் அவனது நெஞ்சில் இதழ் ஒற்றி, முகம் காண...

"என்னடா?" என்றான். ஆதுரமாய்.

"ம்ஹூம்..." என்று அவனை இறுக்கி அணைத்தவள்,

"சாப்பிடலாம். நேரா உட்காருங்க" என்று அவனிலிருந்து பிரிந்து அமர்ந்தாள்.

அவளே அவனுக்கு ஊட்டியும் விட்டாள். ஆனால் அவளின் விழி நீர் மட்டும் நிற்கவில்லை.

அவள் இன்றொன்றுக்கும் மருகுகிறாள் என்பது புரிகிறது அவனுக்கு. ஆனால் அவனாக மட்டுமே அந்த மருகளை போக்கிட முடியாதே! அவளின் அழ் மனம் அதனை வெளிப்படுத்திட வேண்டும். அப்போதே அவன் அதற்கு தீர்வு காண முடியும்.

ஊட்டி முடித்து அவள் எழ...

"அழாம போடி..." என்றான்.

"வரும்போது சாப்பிட்டு வா" என்று பால்கனி பக்கம் சென்று நின்றவனுக்கு, ரூபிணியின் திடீர் வருகை, அவள் எண்ணம், இறுதியாக இமையாள் குறித்து பேசியது எதுவும் பிடிக்கவில்லை. அவள் மீதிருந்த கொஞ்ச பாசமும் விட்டுப்போனது.

'இப்படியும் இருப்பார்களா?' நினைத்துக் கொண்டிருக்கையில்,

"அப்பா" என்று ஓடி வந்தான் தேஷ். அவனின் பின்னால் வேங்கடம் மற்றும் ஷிவா.

"எவன் ருது அது?" என்று மகனின் கட்டை பார்த்தவர், "எத்தனை ஸ்டிச்சஸ்?" எனக் கேட்டார்.

"அவன் இப்போ ஜெயிலில். அதை விடுங்க. அம் ஓகே நவ்" என்றவனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு வேங்கடம் சென்றிட, "பெயின் இருக்காண்ணா?" என்று அவனின் அருகில் வந்தாள் ஷிவா.

"வலிக்கல... அப்படியே அல்வா சாப்பிடுற மாதிரி இருக்கு" என்று மற்ற கையால் அவளின் தலையில் கொட்டினான்.

"அப்பா... அத்தை பாவம்" என்ற தேஷ், ருதுவை தூக்க சொல்லி கைகளை தூக்கிட...

"நான் தூக்குறேன்" என்று அப்போது தான் அறைக்குள் வந்த இமையாள், ருது குனிவதற்குள் வேகமாக வந்து தூக்கியிருந்தாள்.

"ஒரு கையில தான் அடி பட்டிருக்கு" என்ற ருது இமையாளை முறைத்தான்.

"போடா" என்று சத்தமின்றி உதடசைத்தவள், தேஷ்ஷுடன் நகர்ந்து உள்ளே சென்றிட...

"என்ன கேக்கணும் ஷிவா?" என்றான் ருது.

"அங்க... அண்ணி வீட்டில்?" என்று ஷிவா கேள்வியாய் நிறுத்திட...

"உன் ஆளுக்கு கல்யாணம் வேண்டாமாம்" என்றான். பால்கனி சுற்று கம்பியில் நன்கு சாய்ந்தவனாக.

"இல்லை... பொய் சொல்றீங்க." அவளின் குரல் தழுதழுத்தது.

"நீதான் அவன்கிட்ட நேரடியா லவ் சொல்லவே இல்லையாமே! சோ, கல்யாணம் இப்போ வேண்டாம் சொல்லிட்டான்..." என்று ருது முடிக்கும் முன் அங்கிருந்து வேகமாக கீழே தனதறைக்கு ஓடிவந்த ஷிவா, அதே வேகத்தோடு அலைப்பேசி எடுத்து இனியனுக்கு அழைத்தும் இருந்தாள்.

"ஐ லவ் யூ... லவ் யூ சோ மச்..." இனியன் ஏற்ற நொடி மூச்சு வாங்கிட படபடவென சொல்லியிருந்தாள்.

"அப்புறம்?" இனியனிடம் விரிந்த புன்னகை. அவளது மூச்சுக்காற்று ஓசையில் அவனது இதயம் தாளம் தப்பியது. இருப்பினும் நிதானமாகக் கேட்டான்.

"ஏன் கல்யாணம் வேணாம் சொன்னீங்க?" என்று சத்தமாகக் கேட்டவள், "பிடிக்கலையா?" என குரல் தழைத்து வினவ...

"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே! அதான் வேணாம் சொன்னேன்" என்றான்.

"புரியல?"

"நீ இன்னும் வளரனும் டி. இல்லைன்னா எனக்கு கஷ்டம்" என்றான்.

"டபுள் மீனிங்கா?"

"ச்ச்... ச்ச... சிங்கிள் மீனிங்ம்மா" என்றவனிடம் அவளின் சிணுங்களில் அட்டகாசமான புன்னகை.

"எதுக்கு சிரிக்கிறீங்க?"

"இப்போ எப்படி மேடம்க்கு தைரியம் வந்துச்சு?" இனியன் கேட்டிட, ருது கூறியவற்றை கூறினாள்.

இனியனின் சிரிப்பு இன்னும் நீண்டது.

"நான் உன் ஸ்டடிஸ் முடிஞ்சு மேரேஜ் வச்சிக்கலாம் தான் சொன்னேன்" என்றான் இனியன்.

"ஏன்?" என அவள் சிறு ஏமாற்றமாய் கேட்டிட... பொறுமையாகவே விளக்கம் கொடுத்தான்.

"மெடிஸின் ஈஸி இல்லை ஷிவா. ஸ்டடிஸ் பர்ஸ்ட். இன்னும் போக போக ஓவர் பிரஷர் ஆகும். ரொம்பவே சீரியஸான கோர்ஸ். இதுல மேரேஜ் பிரஷர் வேண்டாம்" என்றான்.

"அப்போ டூ இயர்ஸ் ஒன்னுமே இல்லையா?" அவன் மீது கொள்ளை காதல் அவளுக்கு. அதற்கு தடை விதித்தால் அவளும் என்ன செய்வாள்.

"லவ் பண்ணுவோம். இப்போ மாதிரியே! டிஸ்டன்ஸ் லவ்" என்றான்.

"முடியாது" என பட்டென்று மறுத்திருந்தாள்.

"நீ பக்கம் வந்தால் என் கண்ட்ரோல் மிஸ் ஆகும் டி. புரிஞ்சிக்கோ ஷிவா" என்ற இனியனின் அந்தகுரலில் என்ன உணர்ந்தாளோ அவளும் சரியென்றிருந்தாள்.

"தட்ஸ் மை கேர்ள்" என்றவன், "லவ் யூ டி" என்று வைத்திருந்தான்.

இனி அவர்களின் காதலின் எல்லை இரண்டு வருடத்திற்கு தடையில்லாது நீளும்.

காதல் வானில் உலா வரும் காதல் கிளிகள் ஆகினர்.

________________________________

ருதுவிற்கு கை குணமாகும் வரை அவனை சிறு பொருளை அசைக்கவும் விடவில்லை இமையாள்.

அவன் அசைந்தால் கூட,

"ஏதும் வேணுமா ருது?" என முன் வந்து நிற்பவளின் அதீத நேசத்தில் நொந்து போனான் என்றும் சொல்லலாம்.

"லவ் டார்ச்சர் பன்ற நீ" என்ற போதும், அவளின் அதீத காதலை துளி துளியாய் ரசிக்கவே செய்தான். கிடைக்காது என தவித்த தருணங்களை அவள் கொட்டி கொடுத்திடும் போது அவனுக்கு வேறென்ன வேண்டுமாம்.

ஆனாலும் இமையாளிடம் சிறு அமைதி. ருது உணர்ந்தே இருந்தான்.

தேஷ்ஷுடன் அப்படியொரு நெருக்கம். பெற்ற அன்னையின் அரவணைப்பையும் மிஞ்சய அன்பை அவனிடத்தில் கொண்டிருந்தாள் இமையாள். ருதுவிற்காக என்றாலும், தேஷ்ஷின் மீதான அவளின் அன்பு அத்தனை தூய்மையானது.

இருவரும் காதலாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.


ஒருநாள் திடீரென தான் ருதுவுக்கு இமையாள் எப்படி தேஷ் தன்னுடைய மகனில்லை என்பதை கண்டுகொண்டு தன்னிடம் கேட்டாள் எனும் கேள்வியே நினைவுக்கு வந்தது... அதனை அவன் கேட்கவும் செய்தான்.

"பர்த் சர்டிபிகேட்" என்று முடித்துக்கொண்டாள்.

அப்போது தான் அவனுக்கு அவள் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும் என்பதே விளங்கியது.

பள்ளியில் கொடுத்திருந்த தேஷ்ஷின் பிறப்புச் சான்றிதழில், அப்பா பெயர் ருத்விக், அம்மா பெயர் இமையாள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் அளிக்கப்படும் தகவலின் அடிப்படையில் அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் சான்றிதழில் உண்மை இல்லாமல் போலி பதிவு செய்திட முடியாதே!

'மண்டைக்குள் தன் பெயர் எப்படி?' இமையாளுக்கு வண்டாய் குடைந்திட, அப்போதுதான் ருது, அன்று தேஷ் பற்றி பேசும்போது, 'என் ரத்த சொந்தம் தான் அவன்' என சொல்லியது அவளின் காதில் எதிரொலித்தது.

'ரத்த சொந்தம் ரைட்... ஆனால்?'அவளின் மூளைக்குள் பளிச்சிடல்... அவனிடமே உண்மையை வாங்கியிருந்தாள்.

_________________________________

விடுமுறை முடிந்து அன்று இமையாளுக்கு மட்டுமல்ல தேஷ்ஷிற்கு முதல் நாள் பள்ளி. அவன் இவ்வுலகில் பறப்பதற்கான முதல் சிறகு முளைக்கும் நாள்.

தேஷ்ஷை கிளப்பி, தானும் அத்தனை வேகமாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் இமையாள்.

இருவருக்கும் ருது தான் மாற்றி மாற்றி உணவினை ஊட்டிக்கொண்டிருந்தான்.

"அம்மாவும், பிள்ளையும் தூங்கும்போதுதான் நல்லா ஆட்டம் போட வேண்டியது. இப்போ பாரு ஒழுங்கா சாப்பிடக்கூடநேரமில்லாம" என்று இருவரையும் கடிந்து கொண்டான்.

பின்னலை முடித்து திரும்பிய இமையாள்,

"அதனால மட்டும் தான் காலையில் நான் எழ லேட்டாச்சா டிசி சார்?" என புருவம் உயர்த்தி கேட்டதில்...

"நைட் பதில் சொல்றேண்டி என் பொண்டாட்டி" என்று கண் சிமிட்டினான் ருது.

"யூ... பையன் முன்னாடி" என்று ருதுவின் புஜத்தில் இமையாள் அடிக்க...

"அம்மா நானும்" என்று தேஷ் ருதுவின் புஜத்தை பற்றி பிடித்து ஊஞ்சல் ஆடினான்.

"அப்பாக்கு கை இப்போதான் சரி ஆகியிருக்கு பேபி" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்ட இமையாள்,

"தேஷ்க்கு 12.30 ஸ்கூல் முடிஞ்சிடும். பிக்கப் பண்ணிக்கோங்க" என்றாள்.

"ஹ்ம்ம்" என்றவன், "எதுவும் இல்லையா?" என்றான்.

"என்னது?" என்றவள், தேஷ்ஷை இறக்கிவிட்டு "தாத்தா, பாட்டிக்கிட்ட விஷ்ஷஸ் வாங்கிக்கோங்க" என்று கீழே அனுப்பினாள்.

"என்ன வேணுமாம் டிசி சாருக்கு" என்று அவனை நெருங்கியவள், அவன் கால் மீது ஏறி நின்று அவனது கழுத்தினை சுற்றி வளைத்து கட்டிக்கொண்டாள்.

"லேஷஸ்..." அவனது சூடேறிய மூச்சுக்காற்று அவளின் முகம் தீண்டிட, அவளது இமை குடைகள் தாமாக மூடி, இதழ்கள் திறந்தன.

ஆழ்ந்த அழுத்தமான இதழ் முத்தம். அவன் முடிவுக்கு கொண்டு வந்தாலும், அவள் விடாது நீட்டித்தாள்.

"லேஷஸ்க்கு என்னவாம்?"

"ஸ்கூல் போகனுமா?"

அவள் கேட்டதில், இருக்கும் நெருக்கத்தில் அவனுள் தீ பிடித்தது.

"எப்படி நின்னுட்டு என்ன கேட்கிற நீ?" என்றவன், "நீ கிளம்பு" என்று தன்னிலிருந்து பிரித்து நிறுத்தினான்.

"என்னை எப்போவும் நம்புவீங்களா ருது?"

அவளின் கேள்வியின் பொருள் அவனுக்கு புரியவில்லை.

"என்னைவிடவே உன்னை அதிகம் நம்புறேன் டா" என்றவன், "சடனா என்ன இந்த கேள்வி?" எனக் கேட்டான்.

"முன்னாடி தேஷ் வைத்து என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை தானே! அதே எண்ணம் இப்பவும் இருக்கா?" என்றாள்.

"எதுக்காக இப்படியொரு கேள்வி லேஷஸ்? இதுக்கு நான் எப்பவோ விளக்கம் கொடுத்துட்டேன். உன்னை தேஷ் விடயத்தில் நீ ஏத்துக்கமாட்டன்னு தவறா நினைத்ததுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனால் இப்போ இது எதுக்கு எனக்கு புரியல" என்றான்.

இமையாள் அவனது ஆராயும் பார்வையை தவிர்த்தவளாக, "லேட்டாகுது கிளம்புறேன்" என்று நகர,

"ஏதும் மறைக்கிறியா லேஷஸ்?" எனக் கேட்டிருந்தான்.

அவளின் கண்ணீர் கன்னம் உருண்டது.

"லேஷஸ்..."அவன் பதறியவனாக அவளை நோக்கி அடி வைத்திட,

"லவ் யூ ருது" என வேகமாக கீழிறங்கியிருந்தாள்.

___________________________________

இமையாள் சொல்லியது போல் தேஷ்ஷை அழைத்து வர பள்ளிக்கு சரியான நேரத்திற்கு ருது வந்துவிட்டான்.

இமையாளக்கு அழைத்திட அவள் எடுக்கவில்லை.

"கிளாசில் இருப்பா(ள்)" என சொல்லிக்கொண்டவன், தேஷ் வந்ததும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

மகனை வீட்டில் விட்டவன், மீண்டும் காவல் நிலையம் சென்றான்.

அன்று முழுக்க வழக்கமாக தன்னவளிடமிருந்து வரும் குறுந்தகவல்கள் ஏதுமின்றி ருது மனதால் அல்லாடினான்.

ருது பணிக்கு சென்றால் கூட அவன் வீட்டிற்கு வருவதற்குள், எதையாவது கேட்டு தகவல் அனுப்பிடுவாள். ஏதுமில்லை என்றாலும், ஒற்றை சிவப்பு நிற இதயமாவது திரையில் எம்பி குதிக்கும். இன்று ஒன்றுமே இல்லை.

முதல் நாள் பள்ளி, பாடம் எடுப்பதில் பிசியாக இருப்பாளென்று இவனாக நினைத்துக்கொண்டு தன்னை சமாதானம் செய்து கொண்டிருக்க, இனியனிடமிருந்து அழைப்பு வந்தது.

"எங்கடா இருக்க? பிஸியா?" இனியனின் குரல் சத்தமாக ஒலித்ததோ? ருதுவிற்கு அப்படித்தான் கேட்டது.

"நானே என் பொண்டாட்டி லவ் யூ சொல்லலன்னு சோகமா இருக்கேன். நீ வேற ஏன்டா கத்தற?" என சுரத்தே இன்றி பேசினான் ருது.

"மேடம் யாருக்கும் தெரியாமல் பெரிய பெரிதாய் முடிவெல்லாம் எடுக்கும்போது, நம்ம நினைப்பெல்லாம் அவங்களுக்கு எப்படி இருக்கும்" என்று தன் முன்னே அமர்ந்திருக்கும் தங்கையை காட்டமாக பார்த்தவாறு பேசிய இனியன், "ஹாஸ்பிடல் வா" என வைத்திட்டான்.

இமையாள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றதும், அவளுக்கு என்னவோ என மிகுந்த பதட்டத்துடன், அதி விரைவில் அங்கு வந்து சேர்ந்திருந்தான் ருது.

"இமயாக்கு என்னாச்சு இனியா?" என்று கேட்டபடி தான் இனியனின் கன்சல்டிங் அறை கதவை திறந்துகொண்டு உள் நுழைந்தான் ருது.

இனியன் கோபமாக இருப்பது, அவன் முகத்திலே அப்பட்டமாகத் தெரிந்தது.

இனியனின் முன் இருக்கையில் தலை குனிந்து அமர்ந்திருந்த இமையாள் சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள்.

"என்னடா... ஏன் அழறாள்? என்னாச்சு அவளுக்கு? நீ ஏதும் திட்டுனியா டா? ஏன்டா?" என்று ருது இமையாளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனாகி, "லேஷஸ்... என்னடாம்மா?" என அவளின் முகம் உயர்த்தி அழுத்தமாக துடைத்து விட்டான்.

"இன்னும் நல்லா மடியில் தூக்கி வச்சு கொஞ்சு." கடுகடுப்பின் உச்சத்தில் கொந்தளித்தான் இனியன்.

"உன் முன்னாடி எப்படிடா?" என்ற ருது, இனியனின் முறைப்பில், "ஓகே... அம் ஜிப். என்னன்னு சொல்லு?" எனக் கேட்டான்.

"அவளையே கேளு" என்ற இனியன், "பர்ஸ்ட் அவளை இங்கிருந்து கூட்டிட்டு கிளம்பு" என்றான்.

"என்னடா ரொம்பதான் பன்ற? எதுக்கு உனக்கு இப்போ இவ்ளோ கோபம்?"

"உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போடா. இருக்கும் கோபத்துக்கு அவளை அடிச்சிடுவனோன்னு பயமா இருக்கு" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மருத்துவர் அபி கதவினை தட்டிவிட்டு இமையளின் மருத்துவ கோப்போடு உள் வந்தாள்.

"க்ரோத் நல்லாவே இருக்கு. 48 டேஸ் ஆகுது இனியா. எல்லா டெஸ்ட்டும் நார்மல். இமயா தான் மனசில் ஏதோ வச்சிக்கிட்டு அழுத்தம் கொடுத்துக்கிறாள். அது அவளுக்கும், பேபிக்கும் நல்லதில்லை. பொறுமையா என்னன்னு கேளு. சும்மா நீயும் கோபப்படுட்டு இருக்காதே!" என்று கோப்பினை இனியனிடம் கொடுத்தவள், அப்போது தான் ருதுவை கவனித்து "காங்கிராட்ஸ் டிசி சார்" என்று வாழ்த்தினாள்.

அவள் இனியனிடம் பேசியதிலே ருது என்னவென்று புரிந்து கொண்டான்.

புன்னகையோடு அபிக்கு நன்றி தெரிவித்தான்.

"எனக்கு ட்யூட்டி முடிஞ்சுது பைய்" என்று அபி கிளம்பிட...

"நல்ல விஷயம் தானே! நீ மாமா ஆகிட்ட. எதுக்குடா தேவையில்லாம கோபப்படுற?" என்றான் ருது.

"ருது... சத்தியமா அடிச்சிடுவேன். அவள் அபார்ஷன் பண்ண சொல்லி வந்து நிக்கிறாள். அபி என் ஃபிரண்ட்'ங்கிறதால் எனக்கு தெரிஞ்சுது. இல்லைன்னா? ரொம்பவே கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். வீட்டுக்குப் போ. நான் அப்பா, அம்மா கூட்டிட்டு வரேன்" என்ற இனியன், "நானும் கிளம்புறேன்" என எழுந்து கொண்டான்.

"லேஷஸ்...?" ருதுவிற்கு தொண்டை அடைத்தது.


"ருது... நான்" என்றவள் மலுக்கென விழுந்த கண்ணீரோடு அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 40 (இறுதி அத்தியாயம்)

இரவு நேரம் பதினொன்று...

வீட்டின் அழைப்பு மணி ஓசையில் கதவு திறந்த இனியன்...

"இன்னும் முன்னவே எதிர்பார்த்தேன்" என்று ருது உள்ளே வர வழிவிட்டு நகர்ந்து நின்றான்.

"ரவுண்ட்ஸ் இருந்துச்சு. இல்லைன்னா நீ எதிர்பார்க்கிறதுக்கு முன்னவே வந்திருப்பேன்" எனக்கூறி சிரித்தான் ருது. இனியனிடமும் ஆழ்ந்த சிரிப்பு.

"ஈவ்வினிங் நாலரைக்கு தான்டா இங்கு வந்தாள்."

"இருக்கட்டும் மச்சான். அஞ்சு மணி நேரமாச்சே!" என்று கண்ணடித்த ருது, "தூங்கியாச்சா?" எனக் கேட்டவாறு அவனுடன் மாடி ஏறினான்.

"ம்ம்ம்... டயர்ட் போல... தேஷ் கூட என் ரூமில் தான் தூங்குறான்" என்றான் இனியன்.

"ம்ம்ம்... நீ தூங்காமல் என்ன பண்ணிட்டு இருந்த?"

"என் ஆளோட கடலை வறுத்துட்டு இருக்கேன்" என்ற இனியனின் பாவனையில், "மச்சான்" என்று கட்டிக்கொண்டான் ருது.

பாதி படிகளில் இருவரும் கட்டிக்கொண்டு நிற்க, அழைப்பு மணி சத்தத்திலே லேசாக அசைந்த சுரேந்தர், தற்போது ருதுவின் குரலில் அறையை விட்டு வெளியில் வந்து இருவரின் நிலையை கண்டு புன்னகைத்தவராக உள்ளே சென்றுவிட்டார்.

"இன்னும் ஒரு வருஷம் எப்படா போகும்ன்னு இருக்குடா! ராட்சசி படுத்துறாள்" என்று அவஸ்தையாக புலம்பினான் இனியன்.

"நோட்டட். ஷிவாகிட்ட சொல்றேன் இரு" என்று ருது ஓட, இனியன் அவனை துரத்தினான்.

அவருக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. இரு குடும்பமும் ஒரு குடும்பமாய், அத்தனை மகிழ்வாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.

அன்று தான் இமையாளுக்கு ஒன்பதாவது மாத சீமந்தம் குடும்பம் மற்றும் குவார்ட்டர்ஸில் முக்கியமான நபர்கள் வைத்து வீட்டிலே அதீத சந்தோஷத்தோடு நடத்தியிருந்தனர்.

அன்று மருத்துவமனையிலிருந்து இமையாளை அழைத்து வந்த ருது அவளை ஒன்றும் கேட்கவில்லை என்பதைவிட அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

அறைக்குள் வந்ததும் இமையாள் சுருண்டு படுத்துவிட்டாள்.

குறுக்கிய அவளின் கால்களை நன்றாக இழுத்துவிட்டவன், அவளின் முகம் காணாது கீழே வந்து, அம்பிகா மற்றும் வேங்கடத்திடம் இமையாள் கர்ப்பம் என்பதை தெரிவித்திட, அத்தனை ஆர்பரிப்பாய் மகிழ்ந்தனர்.

அம்பிகா அப்போதே மாடியேறி வந்து அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து தன்னுடைய மகிழ்வை வெளிப்படுத்திச் சென்றார்.

விடயமறிந்த ஷிவா இமையாளை கட்டிக்கொண்டு துள்ளினாள்.

சிறிது நேரத்தில் இனியனும் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு வந்திருக்க, இரவு உணவு நேரம் இனிமையாக கழிந்தது.

உண்ணும் நேரம் தான் இமையாள் கீழே வந்திருந்தாள்.

இனியன் முறைத்துக்கொண்டே தான் இருந்தான்.

"ம்ப்ச்... அடி வாங்குவ நீ. விடுடா" என்று ருது தட்டிக் கொடுத்தான்.

"ஏன் இந்த முடிவு எடுத்தான்னு கேட்டியா?" இனியன் சுள்ளென்று விழுந்தான்.

"எனக்கே தெரியும். அவளா பேசட்டும்ன்னு வெயிட்டிங்" என்றான் ருது.

"ரொம்ப செல்லம் கொடுக்காத ருது..."

"உன்னைவிடவா?" என்ற ருது, "சில் மச்சான். நான் சரி பண்ணிடுறேன்" என்றான்.

"எனக்கு இன்னும் படபடன்னு இருக்குடா. அபி சொல்லும் போது, ஒரு நிமிஷம் இதயமே நின்னுப்போச்சு" என்ற இனியன், தேஷ்ஷை மடியில் வைத்து ஊட்டிக்கொண்டிருந்த தங்கையை பார்த்து, "என்னவா இருந்தாலும் சரி பண்ணிடு மச்சான். உன்கிட்ட வந்த அப்புறம் தான் அவள் முகத்தில் சிரிப்பையே பார்த்தேன்" என்றவனுக்கு தங்கைபாசத்தில் கண்கள் கலங்கியது.

இனியனை அணைத்து தேற்றிய ருது,

"உன் ஆளு உன்னை முறைக்குது" என்று ஷிவாவை காட்டினான்.

"சத்தியமா முடியலடா மச்சான். லவ் டார்ச்சர் பன்றாள்" என்ற இனியன், "ஆனால் நல்லாயிருக்கு. பிடிச்சிருக்கு" என்று தன்னவளை நோக்கினான்.

அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி வரவிருக்கும் புதுவரவின் மகிழ்வை கொண்டாடி வெளிப்படுத்தினர்.

சிறிது இனியன்,சுரேந்தர், தீபா கிளம்பிவிட்டனர். செல்லும் முன்பு தீபா மகளுக்கு ஆயிரம் அறிவுரைகள் வழங்கியிருந்தார்.

"ம்மா போதும்மா... அத்தை பார்த்துப்பாங்க. உங்க ரைட்டர் கதை போட்டிருப்பாங்க. பேய் சிரிப்பு மூட்டுது, காமெடியா இருக்கு சொன்னீங்களே! நீங்க படிக்கணுமே" என்று இனியன் தான் அவரை இழுத்துக்கொண்டு சென்றிருந்தான்.

ருது வருவதற்கு முன்பு இமையாள் தேஷ்ஷை கூட்டிக்கொண்டு அறைக்கு வந்திருந்தாள்.

"நம்ம வீட்டுக்கு பேபி வரப்போகுதாம்மா?"

தேஷ் அவளின் மேல் கை போட்டு படுத்தவனாகக் கேட்டிட, ம் என்ற ஒலி அவளிடம்.

"எனக்கு கேர்ள் பேபி வாங்கி தாங்கம்மா" என்றான் சந்தோஷ புன்னகையோடு.

"தேஷ்க்கு பாய் பேபி வேண்டாமா?" எனக் கேட்டபடி வந்த ருது, மனைவியின் மற்றைய பக்கம் படுத்தான்.

"எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும். இனியா மாமாக்கு அம்மா. அப்பாவுக்கு அத்தை. அப்போ தேஷ்க்கு பாப்பா தான வரணும்" என்றவனின் ஆராய்ச்சி பதிலில் இமையாளை தாண்டி மகனை தூக்கி தன் மார்பில் போட்டு, அவனின் நெற்றியில் முத்தம் வைத்தான் ருது.

இப்படி வரப்போகும் உறவை வைத்து தேஷ்ஷின் பேச்சு நீண்டு கொண்டே செல்ல, அதையெல்லாம் புன்னகையோடு ருது கேட்டிருக்க, இமையாளுக்கு கண்ணீர் முட்டி நின்றது.

இந்த ஒரு செய்தி... தன் வீட்டாருக்கு எத்தனை சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்பதை நேரில் கண்டவளுக்கு, தான் எடுத்த முடிவு அத்தனை வலி கொடுத்தது தற்போது.

பேசிக்கொண்டே தேஷ் தூங்கிட, மார்பிலிருந்து இறக்கி படுக்க வைத்த ருதுவும் இமையாளின் முதுகை அழுத்தமாக பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

சில நொடிகளில் இமையாள் தன்னை ஒட்டி வருவதை உணர்ந்தபோதும் ருது அசையவில்லை.

கணவனின் கையில் தலை வைத்து நெருங்கி படுத்தவள், அவனது கூரிய மீசையை விரலால் நிமிண்டியவளாக,

"சாரிப்பா" என்றாள். இறங்கிய ஒலியில்.

அடுத்த கணம் ருது தன்னவளை அத்தனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டிருந்தான்.

"சாரிடி... நான் தான் சாரி சொல்லணும். உன்னை... உன்னை அப்போவே நம்பாம போயிட்டனே. தேஷ்க்கு நீ மட்டும் தான் அம்மா" என்றவனின் கண்ணீர் அவளது கன்னத்தில் விழுந்தது.

"ருது" என்று விலகி எழுந்தவள்,

"என்னப்பா?" என்றிட,

"தேஷ்காகத்தானே இந்த முடிவை எடுத்த நீ?" என்ற ருது, "இதுக்கு நான் தானே காரணம். உன்னை தேஷ் விஷயத்தில் நம்பாம இருந்தது தானே காரணம்" என்றான்.

"இல்லை" என்றவள், "என் ருதுக்கு என்மேல எவ்ளோ நம்பிக்கை இருக்குன்னு எனக்குத் தெரியும்" என்று நிறுத்தினாள்.

ருது கேள்வியாய் ஏறிட...

"அன்னைக்கு உங்க அக்கா" என இமையாள் வார்த்தையை முடிக்காது அவனது நெஞ்சில் நெற்றி முட்டி, "நான் அப்படி இருக்கமாட்டேந்தான ருது. ஒருவேளை சின்ன விஷயத்தில் ஏதோவொரு மாற்றம் வந்துட்டாலும் என்னால் தாங்கிக்க முடியாது. அதுக்காகத்தான் மனசை இறுக்கி பிடிச்சுக்கிட்டு செய்ய நினைச்சேன். எப்பவுமே தேஷ் நம்ம பையன். நம்மளோட முதல் பையன்" என்றவளின் இறுதி வார்த்தை ருதுவின் இதழ்களுக்குள் அமிழ்ந்துபோனது.

உள்ளிருக்கும் மகவின் சுவாசத்தைக் கருத்தில் கொண்டே தன்னவளை விடுவித்தான்.

"உன் அளவுக்கு என்னால் லவ் பண்ண முடியாதுடி... திணற வைக்கிற" என்றவனின் அழுகை அவளில் கரைந்து கலந்தது.

கூடலில் அனைத்தும் விலகி மனம் நிர்மலாய் அமைதி கொண்டிருக்க, இருவரும் ஒருவருள் ஒருவர் பாந்தமாய் அடங்கியிருந்தனர்.

இருவருக்குமான மௌன மொழி அவர்களின் காதலை ஆட்சி செய்த நொடிகள் அவை.

அதற்கு பின்னான ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு மட்டுமே உரித்தாக கடந்து இந்நாளை அத்தனை நிறைவாய் உணர வைத்திருந்தது.

அனைவரின் நெஞ்சமும் முழுதாய் அன்பில் மட்டுமே கழிந்து கொண்டிருந்த நாட்கள் அவை. குடும்பத்தில் அத்தனை இனிமை சேர்த்தது.

இனியனுடன் சென்று அவனது அறையில் மகனை எட்டிப்பார்த்த ருது,

"குட் நைட் மச்சான்" என மனைவியிடம் வந்தான்.

ருது உள்ளே நுழைய, படுக்கையில் உறங்காது அமர்ந்திருந்தாள் இமையாள்.

"டிசி சாருக்கு வர இவ்வளவு நேரமா? எவ்ளோ நேர(ம்)ங்க வெயிட் பண்றது?" என்றவள், அவன் அமர்ந்ததும் அவனது மடியில் தலை வைத்து படுத்தாள்.

"லேஷஸ் ருதுவை தேடினீங்களா?"

"நீங்க தேடலையா?" என்றவள், "வருவீங்கன்னு தெரியும். அதான் வெயிட் பண்ணேன்" என்றாள்.

"கால் வீங்கியிருக்காடா?" அவளின் பாதத்தை ஆராய்ந்தான்.

"இல்லப்பா" என்றவள், "கட்டிக்கணும் போலிருக்கு" என்றாள்.

"எனக்கும்" என்ற
ருது அவளின் அணைப்பில் கட்டுண்டவனாக தன்னுடைய சட்டை பையிலிருந்து கண்ணாடி வளையல்களை எடுத்து மனைவிக்கு அணிவித்தான்.

இரு கைகளையும் ஆட்டி, அதிலிருந்து ஒலிக்கும் சங்கீத இசையில் மகிழ்ந்தவள்,

"சூப்பரா இருக்கு ருது. இதை சந்தனம் வைக்கும்போதே போட்டு விட்டிருக்கலாமே" என்றாள்.

"இது" என்றவன் தன் பின்னந்தலையை வருடியவனாக, "நம்ம படுக்கையில் உடையும் உன்னோட வளையல் துண்டுகள். எல்லாம் எடுத்து சேர்த்து வச்சிருந்தேன். இப்போ கடையில் கொடுத்து மெல்ட் அண்ட் மோல்ட் பண்ணிட்டேன்" என்று அவளின் நெற்றி முட்டி தன் வெட்கம் மறைத்தான்.

"ருது" என்றவள் அவனை இறுக்கி அணைத்தாள். ஒற்றை அணைப்பில் அழுத்தமான அவளின் காதல் தடம்.


கதவு தட்டும் ஓசையில் விலகிட,

இனியன் தேஷ் உடன் நின்றிருந்தான்.

"அம்மா வேணுமாம்" என்ற இனியன், "டிஸ்டர்ப் பண்ணிடலையே" என நண்பனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டு, ருதுவின் இதழ் கடித்த புன்னகையில், கண்ணடித்தவனாக திரும்பிச்சென்றான்.

"அம்மா" என்று தேஷ் இமையாளின் மடியில் படுக்க...

"தங்கத்துக்கு தூக்கம் போச்சா?" என்ற இமையாள், அவனின் நெற்றி கேசம் ஒதுக்கி முத்தம் வைத்திட,

"எனக்கு" என்று வந்து அவளின் மற்றொரு பக்க மடியில் தலை வைத்தான் ருது.

இமையாளின் ஒரு கரம் தேஷ்ஷின் கேசத்திலும், மற்றொரு கரம் ருதுவின் கேசத்திலும் வருடியபடி இருக்க, மூவரையும் இணைக்கும் புள்ளியாக அவளின் வயிற்றிலிருக்கும் மகவு.

அத்தருணம் இமையாளின் வயிற்றில் குழந்தை அசைந்து கொடுக்க, ருதுவும், தேஷ்ஷும் துள்ளி குதித்து எழுந்து மண்டியிட்டு அமர்ந்தவர்களாக இமையாளின் வயிற்றில் கை வைத்திட, மூவரின் கண்களும் மின்னியது... மனம் தொட்ட மகிழ்வில்.

அழகோவியமாய்! கவிதையாய்! நிகழும் காட்சி.

_________________________________

ஒன்றரை வருடத்திற்கு பிறகு...

அன்று காலை தான் வெகு விமர்சையாக இனியன், ஷிவன்யா திருமணம் நடைபெற்றிருந்தது.

இரு குடும்பமும் ருதுவின் வீட்டில் கூடியிருந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றம் சென்றிருந்த ருது அப்போதுதான் வீடு வந்தான்.

அவனை கண்டதும் வெங்கட்டின் இரு வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த தேஷ் ஓடி வந்து கட்டிக்கொள்ள, ருதுவின் விழிகள் மனைவியை தேடியது.

"அம்மா குட்டிம்மாவை தூங்க வைக்கிறாங்கப்பா" என்றான். இத்தனை நாட்களில் தந்தையை கண்டு கொண்டிருந்தவனாக.

வெங்கட், ராதிகா மற்றும் கிருஷ்ணன் குடும்பத்தார் மதியம் விருந்தென அங்கு வந்திருக்க, வீடே கொண்டாட்டமாய் நிறைந்திருந்தது.

"என்னடா தனியா உட்கார்ந்திருக்க?" இனியனின் அருகில் வந்தமர்ந்த ருது, இருக்கையில் பின்னால் தளர்வாய் சாய்ந்து கண் மூடினான்.

"டயர்டா தெரியுற. கொஞ்சம் ரெஸ்ட் எடுடா. கேஸ் வேலை, என் கல்யாண வேலைன்னு ரொம்பவே அலைஞ்சிட்ட" என்றான் இனியன்.

"சந்தோஷமா இருக்கு மச்சான்" என்ற ருது இனியனின் தோளில் சாய,

"யாரது என் புருஷன் தோளில் சாயுறது" என்று இனியனுக்கான தேநீரோடு வந்தாள் ஷிவா.

"என் மச்சான். யாரை கேட்கணும்" என்ற ருது, "எனக்கு அப்புறம் தான் உனக்கு" என்றான்.

"வச்சிக்கோங்க... யார் வேண்டாம் சொன்னது" என்ற ஷிவா, இனியனின் இன்னொரு பக்கம் அமர்ந்து, "அப்பப்போ எனக்கும் கொஞ்சம் விட்டு கொடுங்க" என்றாள்.

"நான் என்ன பொம்மையா? அண்ணனும் தங்கச்சியும் கொஞ்ச கொஞ்ச நேரம் வைத்து விளையாட. ஆளை விடுங்க" என்று இனியன் எழுந்து அறைக்குள் செல்ல...

ருது வருவதற்காக காத்திருந்த வெங்கட்டும், கிருஷ்ணனும் தன் குடும்பத்துடன் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

"மண்டபத்திலே கடைசியில் நீ ஆளில்லாம போயிட்ட... போட்டோகிராஃபரை வர சொல்லியிருக்கேன். எல்லாரும் ஒண்ணா ஒரு போட்டோ எடுக்கணும்" என்றார் வேங்கடம். ருதுவிடம்.

"சரிப்பா" என்று அதற்கு தோதாக, ருது கூடத்தில் இருக்கைகளை நகர்த்திக் கொண்டிருக்க இமையாள் அவர்களின் இளவரசி ருதிஷ்டிரா உடன் அங்கு வந்தாள்.

"குட்டிம்மா தூங்கலையா ம்மா" என்ற தேஷ், ஒரு இருக்கையில் அமர்ந்து, "அம்மா என் மடியில் உட்கார வையுங்க" என்றான்.

"சாப்டிங்களா?" ருதிஷ்டிராவை தேஷ்ஷுடம் கொடுத்த இமையாள் ருதுவிடம் விசாரித்தாள்.

"ம்ம்ம்" என்றவன், யாரும் பாராது உதடு குவித்து முத்தத்தை பறக்க விட்டான்.

"ச்சூ" என்றவள், அம்பிகா, தீபா பேசிக்கொண்டிருக்க அவர்களிடம் சென்றாள்.

சில நிமிடங்களில் புகைப்படக் காரரும் வந்துவிட, அனைவரும் தயாராக வந்து நின்றனர். இனியன் மற்றும் ஷிவாவை தவிர்த்து.

"புது ஜோடியை காணோமே!" என்ற ருது, தேஷ்ஷிடமிருந்த மகளை தூக்கிக்கொண்டு, அவனின் காதில் ஏதோ சொல்லி ஷிவாவின் அறைக்கு அனுப்பி வைத்தான்.

"என்ன சொன்னீங்க. அண்ணா பாவம்" என்று இமையாள் ருதுவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"மாமா நைட் தான் தூங்கணுமா! இப்போ நீங்க அத்தைகிட்ட பேசக்கூடாதாம், வாங்க" என்று கத்தி சொல்லியிருந்தான் தேஷ்.

அவனது குரலில் அடித்துபிடித்து வெளியில் வந்த இனியனின் அசட்டு தோற்றத்திலும், அவனின் முதுகை ஒட்டி வந்த ஷிவாவின் திருட்டு விழியிலும் அங்கே பரவி விரிந்தது சந்தோஷ அலை. அனைவரின் சிரிப்பின் வழி.

"உன் வேலை தானா?" ருதுவின் பக்கம் வந்து இனியன் கேட்டிட...

"அஃப்கோர்ஸ் மச்சான்... இப்போ போட்டோமேன் சொல்லாமலே எல்லாரும் சிரிச்சிட்டே போஸ் கொடுப்பாங்க பாரு" என்றான் ருது.

"அதுக்கு நான் தான் கிடைச்சேனாடா?" இனியன் அப்பாவியாகக் கேட்டிட, "எனக்கு நீதான மச்சான் இருக்க" என்ற ருதுவின் பாவனையில் இனியனிடமும் புன்னகை.

அனைவருக்கும் நடு நாயகமாக தேஷ், அவனது மடியில் ருதிஷ்டிரா. ஒரு பக்கம் வேங்கடம், அம்பிகா. மற்றொரு பக்கம் சுரேந்தர், தீபா. இருக்கையில் அமர்ந்திருக்க... அவர்களுக்கு பின்னால் இரண்டு ஜோடிகளும் நின்றிருந்தனர்.

பல இன்னல்களை கடந்து அன்பென்ற ஒன்றில் அடைக்கலமாகிய பாசப்பறவைகள். ஒரே காட்சியில்.

கண்கள் ஒளிரும் புன்னகையோடும், இதயம் நிறைந்த சந்தோஷத்தோடும்.

அதன் பின்னர் நேரம் ருதுவின் கலாட்டவால் விரைந்து ஓடியது.

பெரியவர்கள் தத்தம் அறைக்கு தங்கள் மக்களின் முகத்தில் நிலைத்திருக்கும் சந்தோஷ நிறைவோடு உரங்கச் சென்றிட, இனியனை அறைக்குள் அனுப்பி வைத்து...

"ஆல் தி பெஸ்ட் மச்சான்" என்று அவனிடம் முறைப்பை பெற்றுக்கொண்டு வெளியில் வந்த ருது, அலங்காரம் செய்து கொண்டிருந்த ஷிவாவிடம் வந்தான்.

"நீங்க இன்னும் போகலையா?" கேட்ட இமையாள் ஷிவாவின் தலையில் பூக்களை சூடினாள்.

ருது ஷிவாவையே பார்த்திருக்க...

"நீங்க பேசிட்டு இருங்க. நான் பால் கொண்டு வரேன்" என இமையாள் நகர்ந்தாள்.

"டார்லிங்..."

தங்கையை அணைத்துக்கொண்ட ருது,

"சந்தோஷமா இருக்கணும் டா" என அவளின் உச்சியில் முத்தம் வைத்தான்.

வேறென்ன பேசிட வேண்டுமென இருவருக்குமே தெரியவில்லை. அமைதியாக அண்ணணினில் தஞ்சம் கொண்டிருந்தாள் தங்கை.

"பயமா இருக்காடா?", ருது.

"லைட்டா... பட் அவங்ககிட்ட இல்லை" என்றாள்.

"இனியன்... என்ன சொல்ல. ஹீ இஸ் பியூர் சோல் டா. கண்டிப்பா உன்னை சந்தோஷமா வச்சிப்பான்" என்று உணர்வாய் பேசிய ருது, "அவனை நீ அலறவிடமால் பார்த்துக்கோ" என்று கேலியில் முடித்தான்.

"அண்ணா" என்று இடையில் கை குற்றி முறைத்தவள்,

பால் தம்ளரோடு வந்த இமையாளிடம்,

"அண்ணாவை எப்படி அண்ணி சமாளிக்கிறீங்க" என்றாள்.

இமையாளிடம் இதழ் விரிந்தது.

"பசங்க தனியா தூங்கிட்டு இருக்காங்க. மேல போங்க" என ருதுவை விரட்டியவள், "சூடா இருக்கு ஷிவா. கொஞ்சம் ஆறியதும் குடிங்க" என்று அவளின் கையில் பால் தம்ளரை கொடுத்து, அணைத்து அனுப்பி வைத்தாள்.

என்னதான் நேசிப்பவனாக, அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்தாலும் அன்றைய நாளுக்கான படபடப்பு ஷிவாவிடம் இருக்கத்தான் செய்தது.

ஷிவா மெல்ல அறைக்குள் நுழைய, பின்னிருந்து கதவினை அடைத்து, அவளையும் அணைத்திருந்தான் இனியன்.

"ச்சூ... விடுங்க. கையில் பால் சூடா இருக்கு" என்று ஷிவா விலக முற்பட...

"விடுறதுக்கா கட்டியிருக்கேன்" என்று அவளது காதில் ரகசியம் உரைத்தவன், "அச்சோ..." என்றவளின் சிணுங்களில் தன்னவளை தன்னகத்தே மொத்தமாக கொள்ளையிடத் துவங்கியிருந்தான்.

இமையாள் அறைக்குள் வரும்போது ருது இருள் வானை வெறித்தபிடி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

"படுக்கல" எனக் கேட்டவள், தங்கையை அணையிட்டவாறு படுத்திருந்த தேஷ்ஷின் மீது ருதிஷ்டிராவின் கால் இருக்க... சில கணங்கள் பிள்ளைகளை ரசித்திருந்தவளாக கணவனிடம் சென்றாள்.

ருதுவின் அருகில் சென்ற இமையாள் அவனின் புஜம் கோர்த்து, அவனில் தலை சாய்த்தாள்.

"ஃபீல் கம்ப்ளீட் லேஷஸ்." நெகிழ்வாய் ஒலித்தது ருதுவின் குரல்.

"டிசி சார் சொல்றது புரியலையே!"

"எப்படி புரிய வைக்கணும் காட்டுறேன்" என்று மனைவியை கைகளில் ஏந்தியவன், தன் மார்புல் உரசும் அவளின் முகத்தை ரசித்தவனாக நெற்றி முட்டி...

"லவ் யூ டி பொண்டாட்டி" என கத்தினான். இருளை கிழித்து ஒலித்த ருதுவின் குரல் இமையாளின் இதழ்களுக்குள் அமிழ்ந்தது.

ருத்விக் எப்போதும் இமையாளில் அடக்கம் தான்.

எங்கோ முடிவுர இருந்த ருத்விக்கின் வாழ்வு, அவனது இமையாளின் காதலில் சிறகாய் விரிந்தது.

தூரமே தூரமாய் விலகி நின்றது. ருத்விக், இமையாளின் தெவிட்டா நேசத்தில்.

சுபம்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top