ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 32

InShot_20240823_140616045.jpg


கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்த பின்னர் ருது தனது தந்தையென அவரின் பெயர் சொல்வதைக்கூட நிறுத்தியிருந்தான்.

இமையாள் இனியனிடம் கூட, அக்கா இருக்கிறாள் என சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இமையாளே ஒரு நாள் அவனது பெற்றோரின் பெயர் கேட்டிட, துளசியின் பெயர் மட்டும் சொல்லியவன், கைலாஷினை மொத்தமாக தவிர்த்தான்.

ஆனால் இனியனிடம், "பெயர் சொல்ற அளவுக்கு எனக்கு அவர் முக்கியமில்லை" என்றிருந்தான்.

நண்பனாக இருந்தால் அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நட்பில் திளைக்க இருவருக்குமான புரிதல் போதும். ஒருவரைப்பற்றி மற்றவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உறவுக்கான இடைவெளியை கொடுப்பதே அவ்வுறவின் நீட்டிப்புக்கு காரணமாக அமையும்.

'இடைவெளி அனைத்திலும் அழகு தான்.'

எழுதும் வரிகளில், பேசும் வார்த்தைகளில், நிகழும் சூழலில், துன்பமோ இன்பமோ சிறு இடைவெளி கொடுத்திடும் போது அதன் கனம் நிச்சயம் குறையும். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சிறு இடைவெளி அன்பை ஆழப்படுத்தும்.

இனியனுக்கு அத்தகைய புரிந்துணர்வு ருதுவிடம்.

'ருதுவிற்கு குடும்பத்தில் ஏதோ கசப்பு' என புரிந்து அதைப்பற்றி பேசியதே கிடையாது.

அந்த புரிதலால் தான் பெரும் இடைவெளிக்கு பின்னரும் இருவரும் இயல்பாய் தங்களின் நட்பை தடையின்றி காட்டியிருந்தனர்.

ருது தேர்வில் வெற்றி பெற, பயிற்சிக்கென புறப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்ததே இல்லை. அதற்கு காரணம் கைலாஷ் மேலும் மேலும் செய்த தவறுகள் தான்.

அந்நேரத்தில் தான் கைலாஷ் குவாரி ஒன்றை தொடங்கியிருந்தார். குவாரி என்கிற பெயரில் அனைத்து கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், கடத்தல், எல்லாம் அங்கு வைத்து தான் செய்தார்.

கைலாஷ்ஷை மொத்தமாக ஒதுக்கி வைத்திட்டாலும், அவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ருது கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

அவரின் செயல்கள் யாவும் மேலும் மேலும் அவனை தூரம் செல்லவே வைத்தது.

பயிற்சியில் இருந்தபோது ஒருமுறை மட்டுமே வந்து இமையாளையும் இனியனையும் பார்த்துச் சென்றான். துளசியை பார்ப்பதற்காகக் கூட அவன் இல்லம் செல்லவில்லை. பயிற்சியில் விடுமுறையே கிடையாது என்று சொல்லிவிட்டான்.

கைலாஷிற்கு சிறு சிறு சறுக்கல் ஏற்படத் துவங்கியது.

இந்நிலையில் தான், ருதுவிற்கு பயிற்சி முடிய ஆறு மாதங்கள் இருந்த சமயம், துளசி வற்புறுத்தி ருதுவை வீட்டிற்கு வரவழைத்தார்.

அப்போது கைலாஷிற்கு ஐம்பத்தி ஏழு வயது. துளசிக்கு நாற்பத்தி எட்டு.

அன்று ரூபிணியும் வந்திருந்தது தான் ருதுவிற்கு ஆச்சரியம். ருது வீட்டிற்குள் நுழையும் போதே ரூபிணியின் சத்தம் வெளி வாயில் வரை ஒலித்தது.

"உங்களுக்கு வெட்கமா இல்லை... இந்த வயதில்... ச்சீய்" என்று அருவருப்பாக முகத்தை சுளித்து அன்னை என்றும் பாராது திட்டிக் கொண்டிருந்தாள்.

அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் கைலாஷ்.

"இந்தா உங்க சீமந்தபுத்திரன் வந்தாச்சு... அவன்கிட்ட சொல்லுங்க. தலையில் தூக்கிவச்சு ஆடுவான்" என்றாள்.

"அக்கா என்ன? இப்போ எதுக்கு அம்மாவை திட்டுற?" பொறுமையாகத்தான் வினவினான்.

"நான் திட்டுறது தான் உனக்கு தெரியுதா? நீ வீட்டுல மகன்னு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? ஆளில்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச கதையில்ல இங்க நடந்திருக்கு" என்று அவள் சொல்ல அப்போதும் கைலாஷ் நிமிரவில்லை.

"ஆம்பளை அப்படித்தான் இருப்பாங்க. உனக்கு எங்கப்போச்சு புத்தி?" துளசியை பார்த்து ரூபிணி கேட்டிட, என்னவென்று புரியாது, "அக்கா" என்று கத்தினான் ருது.

"சும்மா கத்தாதடா! வெளியில் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்?" என்று ருதுவிடம் கோபத்தைக் காட்டியவள், "கல்யாணம் பண்ணியிருந்தால் இவனுக்கே குழந்தை இருந்திருக்கும். இந்த வயதில் இதெல்லாம் தேவையா. வெளியில் எப்படி சொல்லுவீங்க? பேரன், பேத்தி எடுக்குற வயசுல புள்ளை பெத்துக்கப் போறேன்னு. உடம்பு கூசலையா?" என்றாள். தாயென்றும் பாராது.

ருதுவிற்கு விடயம் புரிந்து அதிர்வு. தன் அன்னையை அதே அதிர்வுடன் ஏறிட்டான். அவனால் எதிர்பாராத இதனை கேட்டதும் ஏற்க முடியவில்லை. ஒரு மாதிரிதான் உணர்ந்தான். ஆனால் அன்னையின் கண்ணீர் அவனுள் என்ன நிகழ்த்தியதோ...

"இதுக்கா கத்திட்டு இருக்க?" என்று சாதாரணம் போல ரூபிணியிடம் கேட்டான்.

"எது சாதாரணம்?" என்று எகிறிக் கொண்டு வந்த ரூபிணி... "கல்யாணமாகி அஞ்சாறு வருஷம் ஆகியும். நான் இன்னும் உண்டாகல. ஆஸ்பத்திரி, கோவிலுன்னு நடையா நடந்துட்டு இருக்கேன். என் மாமியார் இதை சொல்லியே தினமும் ஜாடையா பூக்காத, காய்க்காத மரம்ன்னு என்னை குத்தி பேசுறாங்க. இப்போ நான் போய் இதை சொன்னால்... என்ன நினைப்பாங்க. பரிகாசமா சிரிக்க மாட்டாங்க. அவங்க மட்டுமா... ஊரே சிரிக்கும். பொண்ணு வாயும் வாயுறுமா இருக்க வேண்டிய நேரத்தில், அம்மா உண்டாகியிருக்கா... இந்த வயதில் கட்டுப்பாடு வேண்டாமான்னு ஊரே உமிழும்" என்றாள்.

துளசி அமைதியாக கண்ணீர் உகுத்தபடி கூனிக்குறுகி நின்றிருந்தார்.

"இப்போ இதெல்லாம் சாதாரணம். சும்மா அதிகம் பேசாத" என்ற ருது, துளசியின் அருகில் சென்று அவரின் கண்ணைத் துடைத்து, "எழுபது வயதில் எல்லாம் குழந்தை பெத்துக்குறாங்க. சமாளிக்கலாம். விடுங்கம்மா" என்றான்.

"இந்த கண்றா** சமாளிக்கப் போறியா நீ? எனக்கு இந்த மானங்கெட்ட செய்தியை கேட்டதும் பதறிப்போச்சு. செத்துப்போலாம் போல இருக்கு. இந்த அசிங்கத்தை தூக்கி சுமக்கப் போறீங்களா? அதுக்கப்பபுறம் என்னை மறந்துடுங்க" என்றாள்.

"அக்கா கொஞ்சம் சும்மா இருக்கியா? குழந்தையே இல்லாதவங்க காத்திருந்து, பதினைஞ்சு, இருபது வருஷம் கழித்தெல்லாம் குழந்தை பெற்றிருக்காங்க தானே? இப்போ என்ன அம்மாவுக்கு இன்னும் ஐந்தாறு வருஷம் லேட்டா பிறக்கப்போகுது அவ்வளவு தானே! இதுக்கு என்னவோ உயிரே போற மாதிரி குதிக்கிற?" என்றான்.

ருதுவிற்கு இவ்வளவு பேச வருமென்றே ரூபிணிக்கு மட்டுமல்ல கைலாஷுக்குமே அன்று தான் தெரியும்.

"எனக்கு குழந்தை இல்லாதது கவலையில்லை உனக்கு, அக்கறையில்லை... உன் அம்மா இந்த வயசில் பெத்துக்கப்போற குழந்தை மேல அதுக்குள்ள அக்கறையா? வெளியில் சொல்லிப்பாரு, இது சாதாரணம் சொல்ற உனக்கு அப்போ தெரியும். நக்கலடிச்சு, கிண்டல் செய்தே உன் அம்மாவை ஓட விடுவாங்க. மூஞ்சிக்கே நேராவே துப்புவாங்க" என்றாள்.

"பரவாயில்லை. உன்னை மாதிரியும் சிலர் இருக்கத்தானே செய்வாங்க" என்றவனின் வார்த்தையில் அதீத கோபம் கொண்ட ரூபிணி,

"பேசாமல் அதை கலைச்சிட்டு வேலையை பாருங்க" என்றாள்.

"ஏய்!"

அதுவரை அமைதியாக இருந்த கைலாஷ் கனல் பொங்க கத்தினார். அவரின் தோற்றத்தில் ரூபிணி அரண்டு நிற்க, ருது அவரை அசராது பார்த்தான்.

"எனக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம்... யாரென்ன சொன்னாலும், அவள் குழந்தையை பெத்தெடுப்பாள்" என்றார் கைலாஷ்.

ருது தான் ஏற்றுக்கொள்ள மாட்டானென்று கைலாஷ் நினைத்திருந்தார். ஆனால் அவனே ஏற்றுக்கொள்ள அவருக்கு வசதியாகிப்போனது.

ருது அன்னைக்காக மட்டுமே பார்க்கிறான் என்பது அவருக்கு தெரியவில்லை.

"இந்த அசிங்கத்தை ஊரறிய சொல்லப்போறீங்களா? உங்க பிஸ்னெஸ் வட்டாரத்தில் சொல்லிப் பாருங்க அப்போ தெரியும்" என்றாள் ரூபிணி. நக்கலாக.

"சொன்னால் தானே!" கைலாஷ்ஷிடம் பெரும் திட்டம்.

"இது நான் இரண்டு மூன்று வருடங்களாக எதிர்பார்த்தது தான்" என்ற அவரின் வார்த்தையில் ருது அதிர்ந்தான்.

அவனின் அதிர்வு தன்னை பிடித்திருக்கும் மகனின் கையில் உணர்ந்த துளசி...

"என்னை மன்னிச்சிடு ருது கண்ணா" என்றார், அவனின் தோளில் சாய்ந்து.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தற்செயலாக எதிர்பாராது நடந்துவிட்டதென அவன் நினைத்திருக்க... இதற்காகக் காத்திருந்ததாக கைலாஷ் சொல்லியதையும், துளசி ஆமோதித்ததையும் ருதுவாலே ஜீரணிக்க முடியவில்லை.

'தெரிந்தே செய்தார்களா? ஏன்? இந்த வயதில் இது எத்தனை பிரச்சினையை உண்டாக்கும்?' அவனது கேள்விகளை வாய் திறந்து கேட்டிட முடியாது நின்றிருந்தான்.

"இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை?" இம்முறை ரூபிணி கைலாஷிடமே நேரடியாகக் கேட்டிருந்தாள்.

"பொண்ணு குழந்தைக்கு தவமிருக்கும் போது... அம்மாவும் குழந்தைக்காக அலைஞ்சான்னு தெரிந்தால் கா* துப்* மாட்டாங்க" என்றாள்.

"எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த குழந்தை எனக்கு வேணும். அவ்வளவு தான்" என்றவர், "வெளியில் ஈஸியா சொல்ல முடியாது தான். என்கிட்ட வேலை செய்றவனே பரிகாசம் செய்வான். அதனால் சொல்லப்போவதில்லை" என்றவர், "நீ கர்ப்பமா இருக்கன்னு உன் வீட்டில் சொல்லு" என்றார். ரூபிணியிடம்.

நொடியில் அவரின் திட்டத்தை ருது யூகித்துவிட்டான். அவனிடம் வளைந்த விரக்தி சிரிப்பு.

"எதுக்கு?" கேட்ட ரூபிணியிடம்,

"துளசியை வீட்டிலே மறைத்து வைத்து பார்த்துக்கலாம். துளசிக்கு குழந்தை பிறக்கும் அன்று உனக்கும் வலி வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து, உன் குழந்தைன்னு சொல்லிக்கலாம்" என்றார்.

"அருவருப்பா இருக்கு." சட்டென்று சொல்லியிருந்தாள்.

"இந்த அசிங்கத்தை காலம் முழுக்க நான் தூக்கி சுமக்கணுமா?" என்றவள், "இந்த நினைப்பை இதோட நிறுத்திக்கோங்க. இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. கொஞ்சம் விட்டால் என் தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்க போல. உங்களை அப்பா அம்மா சொல்லவே அசிங்கமா இருக்கு" என்றவள் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

கைலாஷ் மகளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாமென இருந்தார். பிள்ளை இல்லை, நிச்சயம் ஒப்புக்கொள்வாள் என பல திட்டங்கள் போட்டிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவருக்கு சூழல் சுமுகமாக இருந்திட வேண்டும். அதற்காக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்...

"உனக்கு உடனே கல்யாணம்" என்றார் ருது.

"பண்ணிக்க முடியாது." பட்டென்று சொல்லியிருந்தான்.

"வெளிய சொல்ல இப்போதான் கூச்சமா தெரியுதா உங்களுக்கு?" என கைலாஷ்ஷின் முகம் பார்த்து நேராகக் கேட்ட ருது, "உங்ககிட்ட ஏதோ பெரிய திட்டம் ஒன்னு இருக்கு. அதுக்கு என் அம்மாவையும், குழந்தையையும் பகடக்காயா உருட்டுறீங்க தெரியுது. ஆனால் ஏன்? எதுக்குன்னு? புரியல" என தன் நாடியை நீவினான்.

கைலாஷ்ஷின் பார்வையில் திருட்டுத்தனம். ருது கண்டு கொண்டான்.

"சொல்லுங்க எதுக்கு இப்போ இந்த குழந்தை?" ருது கூர் பார்வையோடு வினவ,

"இன்னும் போலீஸே ஆகல... அதுக்குள்ள போலீஸ் புத்தியா?" என்ற கைலாஷ், "எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. எல்லாம் உனக்காகத்தான்" என்று சென்றுவிட்டார்.

"எனக்காகவா?" ருது புரியாது இருக்கையில் அமர,

"கண்ணா" என்று அழுகையோடு துளசி அவனருகில் அமர்ந்திட...

"என்னம்மா நடக்குது?" என்றவன், "இதை நான் தப்புன்னு சொல்லல. நானோ, அக்காவோ பிறக்காமல் இருந்திருந்தால்... வயதாகியும் குழந்தைகக்காக காத்திருந்து பெற்றெடுக்கிறீங்க நினைக்கலாம். ஆனால் ஊர் என்ன பேசும், பார்க்குறவங்க பார்வை எப்படியிருக்கும் எல்லாம் தெரிந்தும் எதுக்குமா இப்போ குழந்தை? என்ன அவசியம்?" எனக் கேட்டான்.

"நீ இந்த குழந்தையை ஏத்துக்கலையா கண்ணா?"

"ம்ப்ச்... நான் ஏத்துக்கிறது விடயமில்லைம்மா" என்றவன், "என்ன அவசியம் கேட்கிறேன். இந்த வயதில் எத்தனை ரிஸ்க் இருக்கும்" என்றான்.

"அப்போ உன் அப்பா இந்த வயதில் சின்னப்பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வந்திருந்தால் சரியா இருந்திருக்குமா?" என கண்ணீரோடு துளசி கேட்டதில்... ருது "அம்மா" என அதீத அதிர்வை உள்வாங்கியிருந்தான்.

"அவரை ரொம்ப நம்பிட்டேன் கண்ணா" என்றவர், "உன்கிட்ட இதையெல்லாம் சொல்லக்கூடாது தான். இருந்தாலும் எனக்குன்னு சொல்லி அழ நீதானே இருக்க" எனக்கூறி, முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.

"இவரு பணப்பேய் ருது. நமக்கெல்லாம் தெரியாமல் எவ்ளோ விஷயம் மறைத்திருக்கிறார்" என்றார்.


"பணத்தாசை எல்லோருக்கும் தான் இருக்கும். இதிலென்ன இருக்கு?" சாதாரணம் போல் கேட்டாலும், அவனுள் ஒரு கசப்பு.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"பணத்துக்காக ஆட்களை கடத்தி மிரட்டுறாரு கண்ணா" என்றார்.

தனக்கு தெரியும் என்பதையே ருது காட்டிக்கொள்ளவில்லை.

"போலி சாமியாருங்க கூட எல்லாம் தொடர்பு" என்றவர், "அதுல ஒருத்தன் சொல்லியிருக்கான்... உனக்கு இன்னொரு ஆண் வாரிசு பிறந்தால் உன் உயரம் எங்கோ போயிடும்ன்னு. அதுக்குத்தான் எனக்கு இந்த நிலை" என்றார்.

"இது ஆண் குழந்தையா இல்லைன்னா என்ன பண்ணுவாராம்?" அத்தனை கடுப்பு ருதுவின் பேச்சில்.

"கண்டிப்பா ஆணாத்தான் இருக்கும்ன்னு ஜோசியம் சொன்னானாம்."

"ஹோ... நீங்களும் இதையெல்லாம் நம்புறீங்களா?"

"இதுல நம்புறேன் நம்பாதது அடுத்த விஷயம் கண்ணா" என்ற துளசி, "உன் அப்பா சொல்லும்போது" என்ற அவரின் பேச்சை தடுத்தவன்,

"அந்த ஆளை வார்த்தைக்கு வார்த்தை அப்பான்னு சொல்லாதீங்க எரியுது" என்றான்.

சரியென்றவர் நடந்ததைக் கூறினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு... அதாவது ருது கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்து கொண்ட தருணம்,

"எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும்" என்று எவ்வித பூச்சுமின்றி கைலாஷ் சொல்லிட... அவர் விளையாடுகிறார் என நினைத்த துளசி, "ஒன்னு போதுமா இல்லை ரெண்டு மூணு பெத்துக்கோவோமா?" எனக் கேட்டிட... "நான் சீரியஸா சொல்றேன் துளசி. எனக்கு இன்னொரு குழந்தை அதுவும் ஆண் குழந்தை வேணும்" என்றார்.

"இந்த வயசுக்கு மேல... அதுவும் ருதுவுக்கு கல்யாணம் பண்ணப்போற வயசுல" என துளசி சிரிக்கவே செய்தார்.

"என்ன இந்த வயசுக்கு மேல" என்ற கைலாஷ், "உன்னால் முடியாதுன்னா சொல்லு... நான் சின்ன வயசுப்பொண்ணா பார்த்து ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்றவரின் பேச்சில் துளசியின் அத்தனை வருட குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியானது.

"அந்த ஆளு அப்படி சொன்னதும் நீங்களும் சம்மதிச்சிட்டிங்க" என்ற ருது, "இந்த வயதில் பிரெக்னென்சி எவ்வளவு சிக்கலா இருக்கும். மேனேஜ் பண்ண முடியுமா? உங்க ஹெல்த் கண்டிஷன் அலோவ் பண்ணுமா?" என தாயின் மீதான அக்கறையில் மட்டுமே பேசினான்.

துளசிக்கு கணவனை இன்னொரு பெண்ணுடன் அனுமதிக்க முடியாது. கணவனின் உண்மை முகம் தெரிந்தும் ஏனோ அவரால் விட முடியவில்லை. இதுதான் காதலில் பைத்தியம் என்பதுபோல்.

"ஹாஸ்பிடல் போனீங்களா?"

"அங்கெல்லாம் போனால் தெரிஞ்சிடும்ன்னு, அந்த காலத்துலலாம் எந்த ஹாஸ்பிடல் போனாங்கன்னு, அவர் போக வேண்டாம் சொல்லிட்டார்" என்றார். வயதின் காரணமோ என்னவோ, அவரின் உடல் இந்த கர்ப்பத்தால் பல மாற்றங்களை வெளிப்படையாகவேக் காட்டியது. அதனை ருது தற்போதுதான் கவனித்தான்.

"இது உயிர் சம்மந்தப்பட்டது ம்மா. உங்க உயிரும் இதில் அடங்கியிருக்கு. வாங்க ஹாஸ்பிடல் போகலாம்" என்று ருது அழைக்க... அதிலே அவன் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டான் என துளசி மகிழவே செய்தார்.

"வேணாம் கண்ணா... அக்கம்பக்கத்தில் தெரிந்தால், மன வேதனை" என்றார்.

"அதுக்கு இது மறைக்கும் விஷயமும் இல்லையேம்மா" என்ற ருதுவிடம் ஆயாசம்.

"உன் அக்காவே எப்படி நடந்துகிட்டாள்... என்னென்ன பேசினாள், இதையெல்லாம் ஊர் பேசினால் என்னால் தாங்கிக்க முடியாது கண்ணா" என்றார்.

"உடம்பு சரியில்லைன்னு எதாவது காரணம் சொல்லிக்கலாம்மா. கிளம்புங்க" என்றவனிடம், "இது மறைக்கக்கூடியதா கண்ணா" என தன் வயிற்றை பார்த்தார்.

"அப்போ உங்க உடம்பை செக் பண்ண வேண்டாமா? இந்த வயதில் குழந்தையை தாங்கிக்கொள்ள முடியுமா தெரிஞ்சிக்க வேண்டாமா?" என கோபமாக வினவினான்.

"தாங்கிக்கொள்ள முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டா?" என்றபடி அங்கே வந்தார் கைலாஷ்.

"எனக்கு என் அம்மா முக்கியம்" என்றான்.

"எனக்கு அந்த குழந்தை பிறக்கிறது முக்கியம்" என்றார் கைலாஷ்.

"என் அம்மா பலியா உங்க பேராசைக்கு?"

ருதுவின் கேள்வியை கைலாஷ் பொருட்படுத்தவே இல்லை.

"நாளைக்கு உனக்கு கல்யாணம். பொண்ணு பார்த்திட்டேன். இந்த குழந்தை உன்னோட குழந்தையா தான் பிறக்கும். நம்ம வீட்டில் வேலை செய்யும் வள்ளியோட பொண்ணு மகா கூடதான் கல்யாணம். நாம சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவாங்க" என்றார்.

ருதுவிற்கு மொத்தமாக வெறுத்துவிட்டது.

கைலாஷ் வள்ளியை மிரட்டிதான் சம்மதிக்க வைத்தார். அதனை தெரிந்துகொண்ட ருது, அவரை இரவோடு இரவாக வேறு மாநிலத்தில் இருக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு அனுப்பி வைத்திட்டான்.

விடயம் தெரிந்து கைலாஷ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

"நீ இன்னைக்கே பயிற்சிக்கு போய்டுவ. உன் அம்மா என்க்கூடதான் இருந்தாகணும்..., ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியே அதையும் மறந்திடு. உன்னை நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். திடீர்னு என்கிட்ட பேசுவதை நீ நிறுத்தினால் என்ன காரணம்ன்னு நான் யோசித்திடமாட்டேனா என்ன? உன் அம்மாவுக்கு தெரியாததும் என்னைப்பற்றி உனக்குத் தெரியும். நீ காதலிக்கிற பொண்ணையே உனக்கு கல்யாணம் செய்து வைத்து, அப்பவும் இந்த குழந்தை உன்னோடதுன்னு உலகத்துக்கு சொல்ல முடியும். ஆனால் அதுக்கு அந்தபொண்ணோட குடும்பம் ஒத்துக்கணுமே! அதற்கு வாய்ப்பே இல்லை... ஒழுங்கா நல்ல முடிவா எடு" என்று அவனது வாழ்வில் முக்கியமான இரு பெண்களை வைத்து மிரட்டினார் கைலாஷ்.

ருது அவரின் மிரட்டலுக்கெல்லாம் பயப்படவில்லை... தற்போது அவனது சூழல் அப்படி.

ருதுவிற்கு போலீஸ் வேலை அத்தனை முக்கியம். அதற்காக அவன் போட்ட உழைப்பு அதிகம். அதன் பலனாய் தற்போது பயிற்சி காலத்தில் இருக்கிறான். இன்னும் ஐந்து மாதங்களில் காக்கி உடை அணிந்திடுவான். விட்டுக்கொடுக்க முடியாது. அன்னையை தானும் கூட்டிச்செல்ல முடியாது.

பலவற்றை யோசித்தவனுக்கு அப்போதைக்கு ஒப்புக்கொள்ளும் வழியைத் தவிர வேறில்லை.

"இதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவசியமில்லையே" என்ற ருது, எப்படியும் உண்மை வெளியில் தெரியத்தானே போகுது, எதற்கு முடியாதென சொல்லி வீணாக அவருடன் பிரச்சினை செய்து அம்மாவுக்கு சிக்கலை உண்டாக்க வேண்டுமென நினைத்த ருது...

"குழந்தை பிறந்த நொடி முதல் என்னுடைய மகன் அவன். அப்படியே அடையாளப்படுத்திக்கோங்க. அதுக்காக கல்யாணம் இப்போவே செய்துக்க முடியாது" என்றான்.

"எப்படியோ என் எண்ணம் நடந்தால் சரி" என்ற கைலாஷ், "நீ லவ் பண்ற பொண்ணு மேலயும் ஒரு கண்ணு வச்சிருக்கேன்" என்றார்.

தான் இன்னும் ஐந்து மாதத்திற்கு இங்கிருக்க முடியாது, கைலாஷ் சொல்வதை செய்யக்கூடிய நபர் தான். ஆதலால் பயிற்சிக்கு சென்றவன், இமையாளுடன் தொடர்பில்லாமலே இருந்தான்.

ருது அன்னைக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி இங்கிருந்து சென்றிருந்த நாள் முதல் அவருக்கு அழைக்கிறான்... அவருடன் பேசிடவே முடியவில்லை. பயிற்சியின் இறுதி. அவனால் வெளியில் வர முடியாத நிலை. அன்னைக்கு என்னவென ஒவ்வொரு நொடியும் அவன் பயத்துடன் வாழ்ந்த நாட்கள்.

அவர் ஒருநாள் அழைத்து தன்னைக் கூட்டிக்கொண்டு செல்லும்படி அழுது கரைய... அன்றே ருது எமெர்ஜென்சி என பொய் சொல்லி விடுப்பெடுத்து அன்னையை காண வந்திருந்தான்.

துளசி வீட்டில் இல்லை.

"அம்மா எங்கே?" கைலாஷிடம் கேட்டிட அவரோ வீட்டிற்கு பின் பகுதியில் இருக்கும் சிறிய அறையை கை காண்பித்தார்.

கைலாஷிற்கு இந்த வயதில் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என சொல்லிட அசிங்கம். அதே சமயம் பணத்தின் செழுமைக்காக குழந்தையும் அவசியம். இதுநாள் வரை குவாரியில் மறைத்து செய்த யாவற்றையும் வீட்டில் வைத்தே செய்திட, தன்னுடைய ஆட்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்ல, துளசியின் நிலை பிறர் அறியாதிருக்க அவரை கிட்டத்தட்ட ஒரு அறையில் மொத்தமாக சிறை வைத்திருந்தார்.

ருது துளசியை சென்று பார்க்க... நீண்ட சங்கிலியால் கட்டிப்போட்டு வைக்கப்பட்டிருந்தார்.

அவரின் உடலின் வயிறு மட்டுமே பெரிதாக தெரிந்தது. குழந்தையின் வளர்ச்சியால். அவன் வந்து சென்று மூன்று மாதங்கள் தான் ஆகிறது... எப்படி இந்தளவிற்கு உருக்குலைந்து போனார் என்று அவனுக்கு அத்தனை அதிர்ச்சி. எலும்பாகியிருந்தார்.

"ம்ம்மா..." பார்த்ததும் அவனது கண்களில் நீர் சுரந்திருந்தது.

தாவி அணைத்துக் கொண்டான்.

"கொடுமையா இருக்கு ருது. அவர் சொல்லியும் கேட்காமல் ஒருமுறை வெளியில் வந்துட்டேன்னு சங்கிலியால் கட்டிப்போட்டு அடைச்சு வச்சிருக்கார்" என்று கண்ணீர் உகுத்த துளசி, "குழந்தை இருப்பதால் அடிக்கடி உடலில் என்னென்னவோ நடக்குது ருது கண்ணா. இந்த வயதில் இப்படித்தான் இருக்குமா தெரியல? என்னால முடியல கண்ணா. அங்கங்கே வலி எடுக்குது. வாந்தி இன்னமும் நிற்கல. அப்பப்போ நெஞ்சு அடைக்குது. அப்படியே உயிர் போயிடக்கூடாதா தோணுது. இங்கவே அடைந்திருப்பது பைத்தியம் பிடிப்பது போலிருக்கு..." என்றவர் அவனின் கைகளிலே மயங்கி சரிந்தார்.

அறையின் வெளியில் நின்று இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கைலாஷ் உள்ளே சென்று,

"முகத்தில் தண்ணி அடி முழிச்சிடுவாள்" என்றார்.

"ஏய்..." என அவரின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் ருது.

"உன் பணத்தாசைக்கு இன்னும் என்னடா செய்யலாம் இருக்க நீ? நான் இப்போவே என் அம்மாவை கூட்டிட்டுப்போறேன்" என்றான்.

"எனக்கு அந்த குழந்தை வேணும். வெளியில் வந்ததும் கூட்டிட்டுபோகலாம்" என்றார் அசராது.

"மனுஷனா நீ?"

"மனுஷனா இருப்பதால் தான் இளம் பெண்ணை கல்யாணம் செய்துக்கிறேன் சொன்னேன். உன் அம்மா தான் நானே பெத்துக்கொடுக்கிறேன் சொன்னாள். இப்போ அவஸ்தை படுறாள். இதுக்கு நான் பொறுப்பல்ல" என்று கொஞ்சமும் குற்றவுணர்வு இன்றி பேசினார்.

"உன்னை நம்பி இன்னமும் என் அம்மாவை விட முடியாது" என்ற ருது, துளசியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான்.

"இப்படித்தான் அடிக்கடி மயக்கம் வருது கண்ணா" என்றவர் மகனிடம் சேயாக ஆறுதல் தேடினார்.

கர்ப்பகால ஹார்மோன் வேறு அவரை அதீத மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்க... மகனிடம் பைத்தியம் போல என்னென்னவோ அரற்றிக் கொண்டிருந்தார்.

"என்னை விட்டு போயிடாத கண்ணா..."

"இப்போவே கிளம்பலாம்மா" என்ற ருதுவை தடுத்த கைலாஷ், "உன் ஆளு உயிரோட இருக்க வேண்டாமா?" எனக் கேட்டவர், கல்லூரியின் பெயரை சொல்லி "அங்க தானே படிக்குது. என் கட்டுப்பாட்டில் தான் அந்தப்பொண்ணுக்கே தெரியாமல் வச்சிருக்கேன்" என்றார்.

"டேய்... உன்னை" என்ற ருதுவால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை.

"ஒழுங்கா மிச்சம் இருக்கும் ரெண்டு மாத பயிற்சியை முடி. இவளுக்கும் குழந்தை பிறந்திடும். அப்புறம் கூட்டிட்டு எங்க வேணாலும் போ. நானும் அந்தப்பொண்ணை ஒன்னும் செய்திட மாட்டேன்" என்று ருதுவுக்கே செக் வைத்து அனுப்பி வைத்தார்.

மனம் முழுக்க வலி, வேதனை. ஆனாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கைலாஷ்ஷை கொல்லும் வெறி. அதற்கு அவனுக்கு காக்கி அவசியம். எதற்கோ விருப்பம் கொண்டு காக்கியை தேர்ந்தெடுத்தான். ஆனால் அந்த காக்கிதான் கைலாஷ்ஷை அழிக்கும் ஆயுதமென புரிந்துகொண்ட ருது மனமே இன்றி... அன்னையை விட்டுச்சென்றான்.

செல்லும் முன் அவனை விட மாட்டேனென துளசி அழுத அழுகை இன்றும் அவனது உயிரை உருக்கும்.

"கொஞ்சநாள் ம்மா... எனக்காக பொறுத்துக்கோங்க. இந்த பாம்பை நசுக்க இப்போ வேணா ஒன்னுமில்லாமல் இருக்கலாம்" என்ற ருது, "உன் அழிவு என் கையில் தான்" என கைலாஷ்ஷை மிரட்டியே சென்றான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தன்னால் தன்னவளுக்கு ஏதும் ஆகிடக்கூடாது, கைலாஷ்ஷை இமையாளின் வழியிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காகவே செல்வதற்கு முன்பு அவளை சந்தித்து இல்லாததை எல்லாம் சொல்லி, அவளை குற்றுயிராக்கி விட்டுச்சென்றான்.

அதனை அறிந்த கைலாஷ், இமையாளுக்கு தான் போட்டிருந்த ஷேடோவை நீக்கியிருந்தார். அப்போதுதான் ருதுவிற்கு பாதி பாரம் இறங்கியது.

மனைவி மீது கொஞ்சமே கொஞ்சம் கரிசனம் வந்ததோ... அல்லது ருது தனக்கு அடங்கித்தான் இருக்கின்றான் என நம்பியதாலோ, அன்றையலிருந்து ருதுவுடன் ஓரிரு நிமிடங்கள் துளசியை பேச அனுமதித்தார். அப்போதெல்லாம் துளசி மனதால் உடலால் தான் கொள்ளும் வலியை சொல்லி கதறிட மகனாக ருதுவின் ஜீவன் துடித்து அடங்கும்.

கைலாஷ்க்கு எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. திடீரென குவாரியில் விபத்து. பதினோரு பேர் பலி. இன்ஷூரன்ஸ் பணத்திற்காக கைலாஷ் வேண்டுமென்றே உருவாக்கிய விபத்தென காவல்துறை கண்டறிய, சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு தான் அவருக்கு அரசியல் தலைவர்களுக்கு அடியாட்கள் சப்ளை செய்யும் பேட்டை ரவுடியுடன் நட்பு கிடைத்தது அவன் மூலம் ஒன்றரை மாதத்தில் வெளியில் வந்த கைலாஷ், தன்னுடைய சாமியாரைத்தான் முதலில் சென்று பார்த்தார்.

"இன்னொரு ஆண் வாரிசு வந்தால் ஏறுமுகம் தான் சொன்னீங்க... இப்போ பாருங்க இருந்தும் இல்லாமல் போயிடும் போல" என்று கோபம் காட்டினார்.

"உன் பொண்டாட்டிக்கு வலி வந்த பின்னர் சொல்லு" என்ற சாமியாரை புரியாது பார்த்த கைலாஷ் வீட்டிற்கு செல்ல... அவர் அடைத்து வைத்து அறையில் துளசி குற்றுயிராகத்தான் கிடந்தார். அவ்வறையிலே துளசி நினைத்த நேரம் சமைத்து உண்பதற்காக அறையில் அடைத்த அன்றே எல்லாம் ஏற்பாடு செய்திருக்க... கைலாஷ் இல்லாத நிலையிலும் துளசி உணவுக்கு பாதிகமில்லாமல் இருந்தார். அவரால் தான் நன்கு சமைத்து உண்ண முடியவில்லை. உடல் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தேவைக்கு உண்டு அரை உயிராகத்தான் இருந்தார்.

இரு வாரங்களில் பயிற்சி முடிந்து வேலைக்கான ஆர்டருடன் ருது வந்துவிட்டான்.

ஆர்டரை கையில் வாங்கிய அன்று...

'அம்மாவை பார்த்து, அவரை கூட்டிக்கொண்டு இமையாளிடம் செல்ல வேண்டும். உண்மையை சொல்லி அவளையும் கூட்டிக்கொண்டு எங்காவது சென்றிட வேண்டும்' என்று நினைத்தபடி தான் வீடு வந்து சேர்ந்தான்.

ருது வீட்டிற்கு வர, துளசிக்கும் வலி எடுத்தது. அவரின் வயதின் காரணமோ என்னவோ... ருது பிறக்கும்போது அனுபவித்த வலியைக் காட்டிலும் பல மடங்கு வலியை உணர்ந்தார்.

துளசி வலியில் தரையில் உருண்டு கொண்டிருக்க... கைலாஷ் பதட்டமில்லாது யாருக்கோ அலைப்பேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.

"அம்மா" என ஓடிவந்த ருது, அவரின் அருகில் செல்ல துளசியின் காலுக்கு கீழே தண்ணீரும் ரத்தமுமாக ஈரம்.

பார்த்தும் மயக்கம் வரும்போலானது அவனுக்கு. முயன்று தன்னை நிலைப்படுத்தி நின்றவன், அன்னையின் அருகில் குத்திட்டு அமர்ந்து அவரை தன் மடி தாங்கினான்.

"கண்ணா வலிக்குதுப்பா... முடியல..." என்ற அவரின் கண்ணீரில் ருதுவுக்கு நெஞ்சை அடைத்தது.

"இதோ போலாம்மா" என்ற ருது முற்றிலும் நிலை குலைந்திருந்தான்.

எந்தவொரு மகனும் அன்னையை காண முடியாத நிலையல்லவா அது.

"ஆம்புலன்ஸ் வருதா இல்லையா?"

கைலாஷ் ஆம்புலன்சுக்கு தான் அழைக்கிறார் என நினைத்துக் கேட்டான். துளசியை தன் கையில் தூக்கியவனாக.

அந்நேரம் கைலாஷ்ஷின் சாமியார் உள்ளே வர...

ருது துளசியை தூக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.

"சரியான நேரத்துக்கு தான் வலி வந்திருக்கு. இன்னும் அரை மணி நேர கழித்து குழந்தை பிறந்தால் உனக்கு உயர்வு தான். வாழ்வில் சறுக்கலே கிடையாது. உச்சிக்கு போய் தான் நிற்பாய்" என்று சாமியார் சொல்ல...

"ச்சீய்..." கைலாஷ்ஷை ருது அற்பமாய் பார்த்தான். அவனுக்கு அவர்களுடன் மல்லுகட்ட நேரமும் இல்லை... தெம்பும் இல்லை. அன்னையையும் வயிற்றிலிருக்கும் குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனிடம் உள்ளது.

துளசியை தூக்கியிருந்த ருது, வெளியில் செல்ல அடி வைத்திட...

"சாமி சொன்னது கேட்கலையா ருது" என்ற கைலாஷ், ருதுவின் அடுத்த அடியில் அவனது தலையிலே மகனென்றும் பாராது கட்டையால் அடித்திருந்தார். அவர் அடித்ததில் மயங்கி கீழே விழுந்த ருதுவின் கையிலிருந்து அவன் விழும் முன்பே கீழே உருண்டிருந்தார் துளசி. அதில் இன்னும் வலி அதிகரிக்க வீறுகொண்டு கத்தியவரின் கதறளில் அவ்வீடே கிடுகிடுத்தது.

முதல் முறை கைலாஷ் துளசியின் கத்தலில் அரண்டு நின்றார்.

"என்ன பாக்குற? உன் பையன் எழுந்தால் காரியம் கெட்டுது" என்று சாமியார் கைலாஷ்ஷை தொட்டு உலுக்கிட, இருவரும் சேர்ந்து ருதுவை தூக்கி இருக்கையில் கட்டிப்போட்டனர்.

அடுத்து குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வந்திடக் கூடாதென துளசியின் இரு கால்களையும் உயர்த்தி பிடித்தனர்.

"தலை தெரியுது கைலாஷ். உன் பொண்டாட்டி வயிறை மேல்நோக்கி தள்ளு" என்ற சாமியாரை நோக்கி உணர்வற்ற பார்வை பார்த்த கைலாஷ்... "குழந்தை பிறந்தால் பிறக்கட்டும் என்ன நேரமா இருந்தால் என்ன? துளசிக்கு ஏதும் ஆகிடப்போகுது" என்று மனைவியின் விடாத கத்தலிலும், தன் பாதத்தில் உணர்ந்த தன்னவளின் குருதி ஈரத்திலும்... கல்லுக்குள் ஈரம் போல கைலாஷ் சற்றே மனதால் அசைந்தார்.

விடாத துளசியின் அழுகை ஒலியில் மெல்ல கண் திறந்த ருது...

கண்ட காட்சியில் அம்மாவென அவ்விடம் கிடுகிடுக்க கத்தியவன், அடுத்த வார்த்தையற்று உறைந்தான்.

ருதுவின் மனதோடு குரலும் அடைத்தது.

அவனால் எதுவும் செய்திட முடியாது கைகள் கட்டப்பட்டிருக்க...

"அம்மா" என்று சத்தமின்று அரற்றியவனின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது.

மகன் பார்க்கக்கூடிய காட்சியா அது.

காணும் காட்சியில் அவனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தது.

இயற்கையின் நிகழ்வை தடுக்கப்பார்த்தால் ஏற்படும் சேதம் அனைத்தையும் சிதைத்திடுமே!

துளசியின் கத்தலில், ருது கட்டுக்களை களைய முயல...

"தலை முழுசா வந்திடுச்சு கைலாஷ். இன்னும் ரெண்டு நிமிஷம்" என்ற சாமியார், "முந்தி தள்ளு. முழுசா வெளி வந்து தரையை தொடுற நேரம் எல்லாம் உனக்கு ஜெயம் தான்" என்று சொல்ல... அந்நொடி ஒலித்து அடங்கிய துளசியின் குரலில் கைலாஷ்ஷின் சப்தமும் ஒடுங்கியிருந்தது.

என்னயிருந்தாலும் அவர் மனைவியின் மீது காதல் கொண்டல்லவா வாழ்ந்தார். நடுவில் பணம் எனும் அரக்கன் அன்பு, காதல், பாசம் அனைத்தையும் அவரிடமிருந்து அழித்திருக்க, ஒரு உயிர் ஜனனம் பெற்றது.

கட்டுக்களை விடுவித்து துளசியின் அருகில் வந்த ருது... சாமியாரை பிடித்து தள்ளினான்.

தரையில் அன்னையின் செங்குருதியில் நனைந்து கிடந்த தன் தம்பியை அள்ளி அணைத்து அன்னையின் அருகில் அமர்ந்தான். துளசியால் அசைந்திடவே முடியவில்லை.

ஒரு பக்கம் குழந்தை வீறென்று அலற, மறுபக்கம் ருது அம்மா என்று சிறுவனாக அனத்தியபடி அழுது கொண்டிருந்தான்.

துளசி கண்களை மூடியிருக்க...

"அம்மா, பாரும்மா... என்னை பாரும்மா" என்ற ருதுவின் அழுகை அவரின் செவி நுழைய கடினப்பட்டு இமைகள் திறந்தவர்,

"கண்ணா..." என காற்றாய் ஒலித்தார்.

அவருக்கு அவரின் இறுதி நொடிகள் கண்முன் தெரிந்தது.

ருதுவை குனிந்திட சொல்லி சைகை செய்தவர், அவனின் காதில் "ருத்தேஷ்" என்றிட... "அம்மா" என்று கதறி துடித்தவனாக, குழந்தையை அவரின் மார்போடு அழுத்தினான்.

"பார்த்துக்க கண்ணா..." என்றவரின் குரல் திணறளில் பதறிப்போன ருது, "உனக்கு ஒன்னும் ஆகாதும்மா... ஹாஸ்பிடல் போகலாம்" என்று ருது எழ,

"குழந்தையை கொடுத்திட்டுப் போடா" என்றார் சாமியார்.

தாய், மகன் பாசப்போராட்டத்தை பார்த்திருந்த கைலாஷ்ஷின் உயிர் தேஷ் ஜனித்த நொடி, தன்னுடன் காதலாய் வாழ்ந்த மனைவி கண்ணுக்கு முன்னே உயிருக்கு போராடும் நொடி, துடித்து அடங்கியதில் தான் செய்த பெரும் தவறின் வீரியம் புரிந்து, கைமீறி சென்ற காலத்தின் கோலத்தில் தன் தலையில் அடித்துக்கொண்டு துளசியின் உடல் முன் மண்டியிட்டார்.

ருதுவிடமிருந்து சாமியார் குழந்தையை பறிக்க முயற்சித்து ருதுவிடம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க,

"கைலாஷ், இவனை பிடி. பிறந்த ரத்த சூட்டோட குழந்தையை குவாரியில் வைத்து பலி கொடுத்திட்டால் உனக்கு எல்லாம் ஜெயம் தான்" என்று அவர் சொல்ல, கைலாஷ் ஆடிப்போனார்.

"அய்யோ என் குழந்தை..." துளசியின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக காற்றாகிக் கொண்டிருந்தது.

சாமியார் சொல்லியதில் சிந்தை தொலைந்து, அடுத்து என்ன என யோசிப்பது மறந்து தன் தம்பியை நெஞ்சில் அணைத்து பிடித்தவனாக சுவரோடு ஒண்டினான் ருது.

"காப்பாத்து... கண்ணா, தம்பி" என்ற துளசி, நகர முடியாது கையை நீட்டிட... அவரின் அருகில் வந்த ருது,

"நாம போயிடலாம்மா" என குழந்தையை கையில் வைத்தபடி துளசியையும் தூக்கிட முயல, அவனை பின்னிருந்து தாக்க முற்பட்ட சாமியாரை கைலாஷ் கட்டையால் அடித்திருந்தார்.

"நான் பிழைக்கமாட்டேன் கண்ணா... சாவு முன்ன தெரியுது" என்றவரின் மூச்சு விட்டு விட்டு பெரும் சிரமமாக வெளிவந்தது.

"உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு?", சாமியார்.

"இவ்ளோ நாள் நீ சொன்னதெல்லாம் கேட்ட எனக்கு பைத்தியம் தான்" என்ற கைலாஷ், "உன்னால் தான் எல்லாம்" என்று வலியோடு பேச அதனை கேட்கவோ, அவரை நம்பும் நிலையிலோ ருது இல்லை.

"பிறந்த குழந்தையை பலி கொடுக்கணும் சொல்றீயே... உன்னை நம்பி என் குடும்பத்தை இழந்துட்டனே!"

"உனக்காக நினைச்சியா... இதெல்லாம் எனக்காக. குழந்தை பலி சக்தி வாய்ந்தது. அதை செய்தால் நான்தான் கடவுள். அதுக்கு உன்னோட பணத்தாசை, முட்டாள் தனத்தை பயன்படுத்திக் கொண்டேன்" என்ற சாமியார், ருதுவின் கையிலிருந்த குழந்தையை பறிக்க போக, கட்டையால் சாமியாரின் பின் மண்டையில் அடித்த கைலாஷ், மீண்டும் மீண்டும் அடிக்க மண்டை உடைந்து சாமியார் அங்கேயே இறந்தான்.

அதெல்லாம் ருதுவின் கண்ணிலும் கருத்திலும் பதியவே இல்லை.

இறந்துபோன சாமியாரின் உடலை வெறித்து பார்த்து கைலாஷ், ருதுவின் அருகில் வந்து அவனது தோளில் கை வைத்திட,

"ஏய்" என்று அருகில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டினை எடுத்து அவரின் கழுத்தில் வைத்திருந்தான் ருது.

"கண்ணா...", கைலாஷ்.

"ச்சீய் என்னை அப்படி சொல்லாதே! உன் பணத்தாசை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்குப் பார்... என் அம்மாடா... அம்மா" என்று உரக்கக் கத்தினான்.

"உன்னை கொன்னால் தான் என் ஆத்திரம் அடங்கும்" என்று ருது கண்ணாடித் துண்டை அழுத்த,

"கண்ணா வேணாம்..." துளசி அவனது காலை பிடித்து இழுத்தவராக தடுத்திருந்தார்.

"அம்மா இவனை..."

"அவனை கொன்று உன் கையை கரையாக்கிக்காதே. இது என் மேல் சத்தியம். அவன் வாழ்நாள் முழுக்க நிம்மதியே இல்லாமல் குற்றவுணர்வோடு வாழ்ந்து சாகணும். அவனை கொன்னு பாவத்தை தேடிக்காதே! எனக்கு சத்தியம் பண்ணு" என்றவரின் குரல் ஒலி குறைந்து கொண்டே வந்தது.

"தேஷ்... பத்திரம் கண்ணா. அவன் உன் மகன்" என்றவரின் கை மீது ருதுவின் கை பதிய, துளசியின் ஆன்மா காற்றில் கலந்தது.

"அம்மா..." வெடித்து கதறித் துடித்த ருதுவின் ஓலமும், தேஷ்ஷின் அழுகையும் அவ்விடத்தை அதிர நிறைத்தது.

கைலாஷ் உறைந்து தரையில் சரிந்திருந்தார்.

தேஷ்ஷின் அழுகையில் அவனை பார்ப்பதுதான் முக்கிய கடமையென தன்னுடைய வலி, அழுகை எல்லாவற்றையும் மனதோடு புதைத்து திடமாய் எழுந்து நின்றான்.

ருது உயிரற்ற உடலாய் அன்னையை அவ்வீட்டின் தோட்டத்தில் புதைத்தவன், கைலாஷ்ஷை வீட்டு கேட்டிற்கு வெளியே இழுத்து வந்து போட்டவன்,

"இது என் அம்மா வாழ்ந்த கோவில். இதிலிருக்கும் தகுதி கூட உனக்கில்லை" என அடைத்து பூட்டியவன்,

தன் மார்போடு தன் தம்பியாகிய மகவை அணைத்து பிடித்து சாலையில் நடக்கத் துவங்கினான்.

கைலாஷ்ஷிற்கு நன்கு தெரியும் தசன் செய்த பெரும் பாவச் செயல்களுக்கு பல குற்றங்களுக்கு, தான் செய்து கொண்டிருந்த இருள் வாழ்வை விட்டால், தன்னுடன் இருப்பவர்களே தன்னை போட்டுவிடுவார்கள் என்று, அதனால் அவர் சிறையில் சந்தித்த பேட்டை ரவுடியுடன் தன் வாழ்வைத் தொடர்ந்தார். அவனின் மூலம் கைலாஷ் தொட்டது பெரும் உயரம் தான். ஆனால் அவரின் நிம்மதி, சந்தோஷம் யாவற்றையும் இழந்திருந்தார்.

அவர் தன் மகனை தேடாத இடமில்லை.

ருதுவிற்கு கைலாஷ்ஷை நம்ப முடியவில்லை. அவர் கண்ணில் பட்டால், தேஷ்ஷுக்கு ஆபத்து நேர்ந்திடுமோ என அவருக்கு தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்து கொண்டான். அதற்கு அவனது பதவியும், இருக்கும் இடத்தின் தூரமும் உதவியது.

இங்கிருந்து ருது செல்லும் முன் இமையாளை பார்த்து பேசிடத்தான் முதலில் நினைத்தான்.

ஆனால் அவளை அந்நிலையில் அன்று விட்டு வந்த குற்றவுணர்விலும், தான் சொல்வதையெல்லாம் நம்புவார்களா, தேஷ்ஷை ஏற்றுக்கொள்வார்களா? என்கிற குழப்பத்திலும், தன் கையிலிருக்கும் தேஷ்ஷின் நலன் குறித்த பயத்திலும், தனக்கு வேலை போட்டிருக்கும் பீகாருக்கு சென்றிருந்தான்.

அங்குதான் வேங்கடம் குடும்பம் அறிமுகமானது. அம்பிகாவிடம் துளசியின் அன்பு கிடைக்க அவருடன் ஒட்டிக்கொண்டான்.

ஒருநாள் நினைவுகளின் கனம் தாங்காது வெடித்து கத்தியவனின் கதறலில் அம்பிகா அன்னையாய் மடி தாங்கிட அவரிடம் அனைத்தும் சொல்லியிருந்தான்.

அன்று முதல் அம்பிகா அவனை தன் பிள்ளையாகவே பாவிக்க... அவர்கள் குடும்பத்தின் அங்கமாயிருந்தான் ருத்விக்.

ருது சொல்லி அனைத்தையும் முடிக்கும் வரையிலும் இமையாளின் கண்களை விட்டு தன் விழிகளை விலக்கவில்லை.

இமையாளின் கண்ணிலிருந்து வற்றிடவே மாட்டேன் எனும் வகையில் கண்ணீர் வழிந்தது.

_46a1824c-cfc7-4eb3-86f9-4cb64723a020.jpeg


Drop urs comments in below the Link

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 33

இமையாளின் இமைகள் ஈரத்தில் மூழ்கியது. கண்ணீர் நிற்காது கன்னம் வழிந்தது. அவளால் கேட்ட நிகழ்வுகளிலிருந்து மீள முடியவில்லை.

பாதம் தரையில் இருக்க மெத்தையில் அமர்ந்திருந்தவள் முன் தரையில் அமர்ந்திருந்த ருதுவின் தலை அவளது மடியில் புதைந்திருந்தது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது... சொல்லில் அடக்கிட முடியாத தாக்கம் இமையாளிடம்.

அவளின் கை ஒன்று தன் மடியில் தலை வைத்து அழுகையில் குலுங்கிக் கொண்டிருக்கும் ருதுவின் முதுகை தட்டிக் கொடுத்திட, மற்றொரு கை அவனது முடிகளுக்குள் நுழைந்து வருடியது.

இமையாளுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்லிட முடியுமென்றே தெரியவில்லை. சொல்லும் வார்த்தைகள் யாவும் அவனைத் தேற்றிடத்தான் செய்யுமா?

அவளின் நெஞ்சம் நிலைகொள்ள முடியாது படபடத்தது. எத்தனை பெரும் இன்னலிலிருந்து மீண்டு வந்திருக்கிறான். நினைக்கவே அவளின் உடல் நடுக்கம் கண்டது.

இமையாளின் மௌனம் ருதுவிற்கு, அவள் தான் சொல்லியதை ஏற்கவில்லையோ எனும் அச்சத்தைக் கொடுக்க...

"உனக்கு இது அழுத்தமில்லாமல், அத்தனை பெரும் வலியாக இல்லாமல் இருக்கலாம்... ஏன்னா நான் சொல்லி நீ கேட்டிருக்க. வெறும் வார்த்தையால் சொல்லுறது அதனோடு தாக்கத்தை கம்மி பண்ணிடும். ஆனால் நான் அந்த சூழலை அனுபவித்தவன்..." அதற்கு மேல் வேறெப்படி சொல்வதென்று தெரியாது, "உனக்கு புரியுதா லேஷஸ்?" எனக் கேட்டிருந்தான்.

இமையாளின் கன்னம் தாண்டி கொட்டிய ஒற்றைத் துளி ருதுவின் உச்சியில் பட்டுத் தெறித்தது.

ருதுவின் தலையை பிடித்து முகம் உயர்த்தியவள் அவனது நெற்றியில் தன் இதழை அழுத்தமாக ஒற்றி எடுத்தாள்.

ருதுவின் தேகம் மட்டுமல்ல அவனது நிகழ் ஒரு கணம் அனைத்தும் மறந்து உறைந்து சீரானது.

"லேஷஸ்..."

"லவ் யூ ருது" என்ற இமையாள், "நீங்க பக்கமிருந்த போது விரும்பினதைவிட, விட்டுப்போன பின்பு தான் இன்னும் ஆழமா உங்களை நேசித்தேன். என்ன காரணம் தெரியலன்னாலும் இன்னும் கூடுதலாதான் என் இதயம் உங்களை விரும்பியது. நீங்களே சொல்லியிருந்தாலும், எனக்குள்ள இது உண்மையில்லைன்னு சொல்லிட்டே இருந்தது. இருந்தாலும் ஒரு வலி... எப்பவும்... அந்த வலி உங்க வலிக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு தெரியுது. ஆனால் உங்ககிட்ட என்ன பேசணும் இந்த நொடி வார்த்தையே தெரியல ருது" என மீண்டும் அவனின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.

"கேட்கும் போது தாக்கம் வேணுன்னா கம்மியா இருக்கலாம். ஆனால் வலி ஒண்ணு தானே!" என்றவள், "நடந்து முடிந்தது வருத்தம் தான். நிச்சயம் மறக்க முடியாது. ஆனாலும் எனக்கு என்ன பண்ணி உங்களை ஆறுதல் படுத்தணும் தெரியலையே ருது" என அவனின் நெற்றி முட்டி இமைகளை அழுத்தமாக மூடிட, அவளின் விழி நீர் அவனது வெண்படலம் தீண்டி வழிந்தது.

தனக்காக தன் வலி உணர்ந்து தன்னவள் அழுகிறாள். அதுவே அவனது பெரும் பாரத்தை கொஞ்சம் குறைத்திருந்தது.

ருதுவிற்கு நடந்த நிகழ்வை எப்போது நினைத்தாலும் கனம் கூடித்தான் போகும். வலி பல மடங்கு உயர்ந்து அவனை வதைத்திடும்.

ஆனால், இந்நொடி தன்னவளிடம் அனைத்தும் சொல்லிய பின்னர், மனம் லேசானது போல் உணர்ந்தான். தன் வலியை அவள் சுமக்கும் இந்த மணித்துளி, அவனது சுமை இறங்கிய உணர்வு அவனுள்.

ருதுவின் தலை கோதும் அவளது விரல்களின் வருடலில் அவன் இதயம் இதம் கொண்டது. தட்டிக் கொடுக்கும் அவளது சிறு பரிவில் அவன் தன் வதை தன்னிலிருந்து விலகும் மாயம் கண்டான்.

மொத்தத்தில் அவளருகில், அவன் தன் துக்கம் தொலைத்தான். வருத்தம் மறந்தான். வலி துறந்தான். வதை நீர்த்தான்.

எப்படி ஆறுதல் அளிப்பதென்றே தெரியவில்லை என்றவள், ஒற்றை நெற்றி முத்தத்தில் மொத்த ஆறுதலையும் அளித்திருந்தாள்.

அவனது இதயமாக அவள் இருந்திட... அவனருகில் அவளது வாசம் போதுமே... அவன் அவனாக மீண்டுவிட. மீட்டுவிட்டாள். எதுவுமே செய்யாது தன்னவனின் வலியை போக்கியிருந்தாள்.

அவனது நெற்றியிலிருந்து தன் நெற்றி விலக்கியவள், மிக அருகில் தன் மூச்சுக் காற்றோடு கலக்கும் அவனது மூச்சுக்காற்றை தன்னகத்தே நிரப்பியபடி, அவனது கழுத்தோடுக் கட்டிக்கொண்டாள்.

அவனது முகத்தை தன் மார்பில் அழுந்த புதைத்துக் கொண்டாள்.

"நடந்து முடிந்த எதற்கும் என்னால் ஆறுதல் சொல்லிட முடியாது ருது. சொன்னால் அதெல்லாம் வெறும் வார்த்தையா மட்டும் தான் இருக்கும். அந்த வெற்று வார்த்தைகள் ஏதும் இல்லாமல், இனி வரும் ஒவ்வொரு நொடியும் நீங்க அனுபவித்த வலியில்லாமல் உங்களை என்னால் பார்த்துக்க முடியும். என்னோட காதலால் உங்க ஆழ் மனசில் தேங்கிருக்கும் ரணத்துக்கு என்னால் மருந்திட முடியும். என் ருதுவை என்னால் சந்தோஷமா வைத்துக்கொள்ள முடியும்" என்றாள். அவள் சொல்லியதில் அவன் உணர்ந்ததெல்லாம் அப்பட்டமான காதல்.

ருதுவின் கைகள் தன்னைப்போல் உயர்ந்து இமையாளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது.

இமையாள் ஆறுதல் என்கிற பெயரில் ஏதும் சொல்லியிருந்தால் கூட இத்தனை நிம்மதி அவனுள் விரவியிருக்காது. அவனை அவனது வலியோடு அணைத்து, அதனை தன் காதலை கொண்டு சரி செய்திடுவேன் என்ற °அவளின் கண்ணீரில் தொக்கி நின்றது அவனுக்கான அவளின் சொல்லாத ஆறுதல்கள்.°

"ருது..." அவளுக்கு அதைத்தவிர வேறொன்றும் வரவில்லை.

சேயாக சுமை இறக்கி வைத்தவனை தாயாக நெஞ்சம் சுமந்திட்டாள்.

அறை முழுக்க இருளாகியிருந்தது. அவனது வெளிச்சமாக அவனுள் அவள் நிறைந்திருந்தாள்.

சன்னல் வழி ஊடுருவிய நிலவின் ஒளியில், வெளிச்சம்... அவ்வறையில் மட்டுமல்ல அவர்களது வாழ்விலும்.

இருவருமே ஒருவரின் அணைப்பில் மற்றவர் கட்டுண்டு இருந்தனர். அதில் நேசம் மட்டுமே விரவிக் கிடந்தது.

"என்னை மன்னிச்சிட்டியா லேஷஸ்?"

அவனது கேள்வியில் பட்டென்று விலகியிருந்தாள்.

மென் வெளிச்சத்தில் அவனின் எதிர்பார்ப்பு நிறைந்த விழிகள் மட்டுமே அவளின் கண்களுக்கு புலப்பட்டது.

"உங்க மேல தவறுன்னு ஒன்னு இருந்தா தானே மன்னிக்கனும்" என்றாள் அவனின் கன்னங்களை தன் உள்ளங்கைகளில் நிரப்பியவளாக.

"உன்னை நான் ஏமாத்திட்டன்னு நீ எப்பவுமே நினைத்தது இல்லையா லேஷஸ்?"

"அப்படி நினைத்திருந்தால் அப்பவே என் காதல் தோத்துப் போயிருக்கும்" என்றவளை இம்முறை ருது தன் அணைப்பில் கொண்டு வந்திருந்தான். அவள் அவனது மடியோடு ஒன்றிருந்தாள்.

"இதெல்லாம் தெரியாமலே நான் உங்களை ஏத்துக்கணும் நினைச்சு தான் அப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணீங்களா ருது?"

"நீ அறிவாளின்னு அப்பப்போ ப்ரூவ் பண்றடி" என்று அவளின் கன்னம் கடித்திருந்தான்.

"ஷ்ஷ்..." என்று வலியில் சத்தமிட்டவள்,

"டிசி சார் நார்மலாகியாச்சுப்போல?" என்றாள்.

"நீ பக்கத்தில் இருக்கிறதாலன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடிலாம் நடந்ததை நினைத்தால் எல்லாம் மறந்திடும். அதிலிருந்து வெளிவரவே வெகு நேரமாகும். இரவில் தூங்காமலெல்லாம் இருந்திருக்கேன். ஆனால் இப்போ, நீ என் கையில் இருப்பதே அத்தனை ஆறுதலா இருக்கு. மறக்கலன்னாலும் இந்த நொடி அந்த தாக்கம் எதுவும் மனசில் இல்லை. எனக்கு ஒரு வலின்னா அதுக்கு மருந்தா நீ இருக்கன்னு ஒரு எண்ணம். லேசா இருக்க மாதிரி இருக்கு" என்று அவளின் கன்னத்தில் கடித்த இடத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

"இன்னும் இதைப்பற்றி வேறெதுவும் சொல்லணுமா?"

ருதுவின் தலை இல்லையென அசைந்தது.

"அப்போ இனி இதைப்பற்றி எப்பவுமே நீங்க பேசவேக் கூடாது. பேசாமலிருந்தாலே நினைவிலிருந்து காணாமல் போயிடும்" என்றவள், "இது போகாது தெரியும்" என்று இழுத்திட...

"நான் பேச மாட்டேன். நினைக்காமல் இருக்கவும் ட்ரை பன்றேன். ஓகேவா?" என அவளின் கன்னம் பிடித்து ஆட்டினான்.

"நான் லாஸ்ட்டா ஒன்னு கேட்டுக்கவா?" தயக்கமாகக் கேட்டிருந்தாள். அவனை பேசக்கூடாதென சொல்லிவிட்டு தானே திரும்ப அதைப்பற்றி பேசுவதா என்ற தயக்கம்.

"என்ன கேட்கணும்?"

"அதெல்லம் உங்களுக்காகன்னு அவர்(கைலாஷ்) சொன்னதா சொன்னீங்க... அதனால் கேட்கிறேன். உங்களை எதுக்காக காரணப்படுத்தினார்?" என்றாள்.

"செய்யுற தப்புக்கு நமக்குன்னு ஒரு காரணம் வேணுமே" என்றவனின் உடலிலும், குரலிலும் சட்டென்று ஒரு இறுக்கம் வந்திருந்தது.

இமையாளுக்கு ஏன் கேட்டோமென்று இருந்தது. மனதால் தன்னையே நொந்தாள்.

கொஞ்சம் தெளிந்தவனை மீண்டும் அதனுள் இழுத்துவிட்டோமோ என சட்டென்று அவளின் விழிகள் கலங்கியது.

"அந்த ஆளு பாவம் பண்ணி சேர்த்த சொத்தெல்லாம் நான் நல்லாயிருக்கவாம்" என்றவனிடம் அப்படியொரு கோபம்.

ருதுவினுள் கைலாஷ்ஷை தன்னால் கொலை செய்திட முடியவில்லையே என மனதில் புதைந்திருக்கும் கோபம், அவளின் கேள்வியில் வெளிப்பட்டுவிட்டது. அன்னையின் இறுதி வார்த்தைக்காக அவனது பழிவெறி கைலாஷ்ஷிற்கு தண்டனை வாங்கிக்கொடுத்ததோடு முற்றுப்பெற்ற கோபம் அது.

இருளில் வரி வடிவமாக அவனது உருவம் தெரிந்தாலும், தன் கையை பிடித்திருக்கும் பிடியில் அவனது கோபமும், இறுக்கமும் அவளுக்கு விளங்கியது.

"சாரி... சாரிப்பா... சாரி ருது. பேசக்கூடாது, நினைக்கக்கூடாதுன்னு நானே சொல்லிட்டு... ம்ப்ச்... சாரி ருது" என்றவளின் அழுகை தோய்ந்த தன்னவளின் குரலில் தன்னை மீட்டிருந்த ருது, அவளின் கரகரப்பை தன்னுள் வாங்கியிருந்தான்.

அவளின் அழுகை அவனது தொண்டைக்குள் அடங்கியது.

ருது இப்படி சட்டென்று இதழ் முத்தம் அளிப்பானென்று நினையாதவள் முதலில் அதிர்ந்து, பின்னர் தெளிந்து, விழிகள் மூடி கிறங்கினாள்.

அவனது கோபமும் வலியும் அவளது இதழ் குளுமையில், நெஞ்சம் நனைத்து கரைவதை உணர்ந்தவனுக்கு மீண்டிட மனமின்றி உதட்டில் ஆழப் புதைந்தான்.

கிறங்கியவள் தானும் பதில் முத்தம் கொடுத்திட... அவனுள் இளமை பிரவாகம். அவனது கைகள் அவளது முதுகில் அழுத்தம் கொடுத்திட அவளுள் சிலிர்ப்பு. அவளது கரங்கள் தானாக அவனது சிகைக்குள் புகுந்து நெறித்தது.

களையப்பட்ட வருத்தங்கள், நீங்கியிருந்த தூரங்கள், விலகியிருந்த வலிகள், இணைந்திருக்கும் இதழ்கள், தழுவியிருக்கும் கரங்கள், சேர்ந்திருக்கும் மனங்கள், இருவருக்கும் காதலின் அடுத்த நிலையில் பொங்கி ஆர்பரித்திட, தடைகளை தகர்த்திட நினைத்துவிட்டனர்.

ருதுவின் கரம் தன்னவளை உணர்ந்திட தவித்திட... மெல்ல கீழிறங்கி அவளின் வெற்றிடையில் அழுத்தமாக பதிந்தது. அவனின் வெம்மை அவளுள் குளிர்ச்சியாய் இறங்கிட, அவளது அதரம் விரிந்து முத்தம் முடிவுக்கு வந்தது.

அவன் மீதே சரிந்து குலைந்தாள்.

தன் நெஞ்சம் முட்டி உணர்வுகளை தட்டுபவளின் செவியில் இதழ் தீண்டியவன்...

"இதுக்குமேல கண்ட்ரோல் பண்ண முடியும் தோணலடி" என்றான்.

விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அவனை.

இருளின் பளபளப்பில் காதலோடு தாபமும் போட்டிப்போட்டது அவனது விழிகளில்.

"வேண்டாமா?" கரகரப்பில் தோய்ந்து வெளிவந்த அவனது அந்தக்குரலில், அவளது விழிகள் மயக்கத்தைக் காட்டிட, அவளது தலை மென்மையாய் அசைந்தது. சரியெனும் விதமாக.

தன்னை முத்தமிட்ட நொடி, அவன் தனது கோபம் மறந்து இறுக்கம் தளர்ந்ததை உணர்ந்தவள், அவனையே தனக்குள் மறக்கடிக்க சம்மதித்துவிட்டாள்.

அவன்மீது கோபமிருந்த தருணங்களிலே கொள்ளை காதலை கொண்டிருந்தவள், இப்போதா காதலை காட்டிட மறுத்திடுவாள்?

தானாக முன்வந்து அவனது இதழ் தீண்டினாள். பூவில் தேன் சுரந்திடும் தேனாக மாறியவன், தன்னவளை கைகளில் அள்ளி மஞ்சத்தில் சரித்து அவளை ஒட்டி தானும் சரிந்திருந்தான்.

முதல் தயக்கம் சூழ சட்டென்று அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பியிருந்தாள்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவளின் வெற்று முதுகை தீண்டிட தேகம் உணர்ந்த அனலில், வேகமாக அவன் புறம் திரும்பி அவனது மார்பிலே தன் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.

அவனது கைகள் அவளின் இடை வருட, அவளின் உடல் கூசி சிலிர்த்தது. அவளின் நெளிவு அவனது தேகம் உரசி தீப்பிடிக்க, இருவரும் ஒரே நேரத்தில் அணைப்புக்குள் கட்டுண்டனர்.

ருதுவின் விரல் அவளின் முதுகில் கோலமிட்டபடி ஆடையின் முடிச்சினை அவிழ்த்து விடுதலை அளித்திட, அவளது கைகள் அவனது காக்கி உடையின் பொத்தான்களை நீக்கியிருந்தது.

யாவும் துறந்து மறந்த நிலையில் ஒருவர் மற்றவரின் ஆலுங்கினையில் மூழ்கிட, விரல்கள் பயணித்த இடமெல்லாம் இதழ் ஊர்ந்து சிலிர்க்க வைத்து, துடிக்க வைத்து தன்னுள் அடங்க வைத்தான். உணர்வின் கொந்தளிப்பில் அவளின் விரல்கள் அவனது மேனியில் நகம் கொண்டு ஓவியம் வரைய, அவனது பற்கள் அவளில் மாயத்தை நிகழ்த்தியது.

"ருது" என்றவளின் மயக்கும் குரல் அவனது வேகத்தைக் கூட்டிட, அலையலையாய் தன்னை வாரிச்சுருட்டும் அவளின் காதல் கடலில் தன்னை மூழ்கடிக்கத் துணிந்தவன், அவளின் விழி பார்த்து மென்மையாய் காதல் அம்புகளை எய்திட... வலியின் துடிப்பில் இறுக்கி அணைத்தவளின் அழுத்தத்தில் இதழ்களால் இதமளித்து தன்னை மொத்தமாய் ஒப்பிவித்து விலகியவன், விலகாது தன் கை வளைவில் வைத்து அவளது இமை கற்றை மூடிய விழிகளில் அழுந்த முத்தம் பதித்து அணைத்துக் கொண்டான்.

அவனது மனதின் காயம் ஆற்றிட மருந்தாகியவள்... அவனில் தன் தடத்தை அழுத்தமாக பதித்திருந்தாள்.

சற்று முன்னர் இருந்த சூழலின் தாக்கம் கொஞ்சமும் அவனிடத்தில் இல்லை. மொத்தமாக அவளுள் மூழ்கியிருந்தான். அவளருகில் அவனாக மட்டுமே இருந்தான். அவனின் நினைவுகள் யாவும் இந்நொடி அவனவள் மட்டுமே நிறைந்திருந்தாள்.

கண்களை மூடி தன் அணைப்பைக் கூட்டியவன்,

"ஆர் யூ ஓகே?" எனக் கேட்டான்.

ருதுவின் மார்பில் முத்தம் வைத்து பதில் அளித்தாள்.

"இட்ஸ் ஹெவன்" என்ற ருது, "டிட் யூ ஃபீல் மீ?" என்றான்.

"ச்சூ" என்று அவனது மார்பிலே கடித்தவள், "இதெல்லாம் கேட்பீங்களா?" என சிணுங்கினாள்.

"என்னை மொத்தமா கொள்ளையடிச்சிட்டடி" என்று மீண்டும் அவளுள் மூழ்கி எழுந்தான்.

ஆர்பரிப்பாய் அரங்கேறிய ஆலாபனையில் மென்மையாய் இறுதி முத்தம் வைத்து அணைப்புக்குள் கட்டுண்டு இருந்தவர்கள், தங்களின் நேசத்தை மனதால் கடத்தியபடி மௌன மொழியில் ஆழ்ந்திருந்தனர்.

"என்னடி இவ்வளவு அழகா இருக்க?" அமைதியை உடைத்து ருது கேட்டு முடிக்கும் முன் அவனின் வாயிலே பட்டென்று அடிபோட்டவள் அவனிடமிருந்து பிரிந்து எழுந்தமர்ந்தாள்.

"வாரி சுருட்டிக்கிட்டடி... மொத்தமா!"

"ஆமாம்... ஆமாம்... யாரு சுருட்டிக்கிட்டாங்கன்னு நல்லாவே தெரியும்" என்றவள்,

"என்னை சொல்லிட்டு நீங்க தான் கொள்ளையடிக்கிறீங்க" என்றாள்.

"எதை கொள்ளையடிச்சேனாம்?" எனக் கேட்டு ருது சத்தமாக சிரித்திட, அவனது வாயில் கை வைத்து மூடினாள்.

"எல்லாமே தப்பு தப்பா பன்றது?" என்று தன் வாயிலிருந்த அவளின் கையினை பிரித்து எடுத்து இழுத்தவனாக, அவளின் இதழ் பற்றி விடுத்தான்.

இமையாள் பதிலின்றி இருக்க...

"என்னவாம்?" எனக் கேட்டு, அவளின் கன்னத்தில் விரலால் ஊர்ந்தான்.

"லவ் பண்ணும்போது நீங்க ஐ லவ் யூன்னு கூட சொன்னதில்லை. என் பக்கம் வரவே அவ்வளவு யோசிப்பீங்க. கை பிடிக்க... சுத்தம். ஆனால் இப்போ" என்று அவள் நிறுத்திட...

"இப்போ?" என்று இழுத்து விஷமமாகப் புன்னகைத்தவனின் முகம் காண வெட்கம் கொண்டவளாக

"என் ட்ரெஸ்" என அவனது முதுகுக்கு அடியில் சுருண்டிருந்த புடவையை உருவிக்கொண்டு குளியலறை புகுந்திருந்தாள்.

செவி நிறைத்த அவனது சிரிப்பு அவளுள் பெரும் ஆசுவாசமாய்.

சிரித்த சிரிப்பு கண்ணில் நீரை வரவழைத்திட, அவன் நெஞ்சம் அமைதி கொண்டிருந்தது. வெகு நாட்களுக்குப் பின்பாக.

தொலைந்து... தூரம் சென்ற ஒட்டு மொத்த மகிழ்வையும் அவனுக்கு மீட்டுக் கொடுத்திருந்தாள் அவனது லேஷஸ்.

"லவ் யூ டி." தானாக அவனது அதரம் விரிந்து சொல்லியது.

"சரியா கேட்கலை" என்றபடி குளியலறையிலிருந்து வெளி வந்தவள் மின்விளக்கினை போட, ருது தன் கைகளை விரித்து அவளை அழைத்திருந்தான்.

"குளிச்சிட்டேன் ருது" என்றபோதும் அவனது அணைப்பில் பாந்தமாய் வந்து பொருந்தினாள்.

இமையாளின் உச்சியில் முத்தம் வைத்து, "தேன்க்ஸ் டி" என்றான்.

"எதுக்கு?" அவள் புரியாது வினவ,

"எல்லாத்துக்கும்... எல்லாத்துக்குமே!" என்றான்.

"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் லேஷஸ்" என்று அவன் உளமார ஆழ்ந்து சொல்ல, அவளோ "அய்யய்யோ" என்று அவனிலிருந்து விலகினாள்.

"என்னாச்சு?" ருது பதட்டமாக வினவிட,

ருதுவின் தோளில் விரலினால் வருடியவள், "என்னோட டீத் மார்க்" என்றாள்.

"உனக்கும் தான் இருக்கும்" என்று எழுந்து நின்றான்.

"எனக்கு எப்படி என்னோடது?" என்று யோசித்தவள் அவனின் பார்வை மாற்றத்தில் புரிந்துகொண்டவளாக,

"தள்ளியே நில்லுங்க" என அவனின் நெஞ்சில் கை வைத்து நிறுத்தினாள்.

"இனி அதுக்கு வாய்ப்பேயில்லை" என்றவன், மெல்ல முன்னேற, அவனுக்கு பின்னால் மேசையிலிருந்த கடிகாரத்தில் மணியை பார்த்தவள் பின்னால் அடி வைத்து தள்ளிச்சென்றாள்.

"சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. டைம் எயிட் தர்ட்டி. போய் தேஷ் கூட்டிட்டு வந்திடுங்க" என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

செல்லும் அவளின் முதுகைத் தீண்டியது ருதுவின் காதல் சுமந்த ஆத்மார்த்தமான பார்வை.

'உன்னால் மட்டும் தாண்டி, நான் நானா இருக்க வைக்க முடியும்' என மனதோடு சொல்லிக்கொண்டவனின் அகம் முழுக்க அவனது லேஷஸ் மட்டுமே!

விண்ணை முட்டும் மகிழ்வில் அவன். காரணம் அவனவளின் நேசம்.

அவளுக்காகவேணும் அவனது இன்னல்களை நினைக்கமால் இருந்திடுவான். மறக்க முடியாததை மறுத்திட முடியும். இனி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன்னவளுக்கு உரிமை பட்டது என்ற நிலையில் தன் வருத்தம் அவளையும் வதைக்கும் என... நினைவில் நீங்காததை மொத்தமாய் ஒதுக்கி வைத்திட்டான். அவனது லேஷஸ்க்காக.

'தூரங்கள் நேசத்தை ஆழமாக்குகிறது.
நெருக்கங்கள் நேசத்தை அழகாக்குகிறது.'

தூரமே தூரமாய் இருந்தபோது இருவரின் நெஞ்சம் நெருக்கத்திலும் நெருக்கமாய்.


7872f31dc87cf96d4a9e43c2d56158e2.jpg
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 34

இமையாள் கீழிறங்கி வர, ஷிவன்யா சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள்.

இமையாள், "எக்ஸாம் எப்படி பண்ண ஷிவா?"

பின்னால் திரும்பி பார்த்த ஷிவா, வேகமாக இமையாளின் அருகில் வந்து, "ம்ம்ம் குட் அண்ணி" என்றதோடு "உங்களுக்கும் அண்ணாக்கும் ஏதும் பிரச்சினையா அண்ணி?" என பதட்டத்தோடு வினவினாள்.

"இல்லையே" என்ற இமையாளிடம், "பர்ஸ்ட் நீங்க கோபமா வந்தீங்க, உங்க பின்னாலே டார்லிங் வேகமா உங்களை கூப்பிட்டுட்டே வந்தாங்க. அப்போ நான் ஹாலில் தான் டிவி பார்த்திட்டு இருந்தேன். ரொம்ப நேரமா ரெண்டு பேரையும் காணோம். அதான் ஏதும் பிரச்சினையோன்னு கேட்டேன் அண்ணி" என விளக்கம் அளித்தாள்.

அவளை கவனிக்காது சென்ற தன்னை மானசீகமாகத் தலையில் தட்டிக்கொண்ட இமையாள்,

"சும்மா டிசி சாரை பின்னால் அலைய விடலான்னு" என்று ஒற்றை கண்ணடிக்க...

"நீங்க நடத்துங்க" என்று சிரித்த ஷிவா, "தேஷ் எங்கே?" எனக் கேட்டாள்.

"அம்மாகிட்ட இருக்கான். அவங்க கூட்டிட்டு வர போறாங்க" என்று பதில் சொல்லிய இமையாள், "என்ன பன்ற, குக் பண்ணத் தெரியுமா?" என்று அவள் என்ன நறுக்கிக் கொண்டிருக்கிறாள் என பார்த்தாள்.

"சுடு தண்ணிக்கூட வைக்கத் தெரியாது. நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணேன். கோபமா வேற போனீங்க, எப்படி வந்து கூப்பிட. ஆர்டர் போடலாம் நினைச்சேன்... அப்புறம் பழம் சாப்பிட்டுக்கலான்னு விட்டேன். ஆப்பிள் தான் கட் பன்றேன். சாப்பிடுறீங்களா?" என்று ஒரு துண்டை இமையாளிடம் நீட்டினாள்.

"நீ இதை சாப்பிட்டுட்டே இரு. டென் மினிட்ஸ் நான் ரெடி பண்ணிடுறேன்" என்ற இமையாள், இடியாப்பத்திற்கு தயார் செய்யத் துவங்கினாள்.

"வாவ்... இடியாப்பம்மா? சூப்பர்!" என்ற ஷிவா, "உங்க அவங்களுக்கு ரொம்ப பிடிக்குமே!" என்று இமையளின் தோளில் சீண்டலாக இடித்தாள்.

"எங்க அவங்களுக்காகத்தான் செய்யுறேன்" என்று இமையாளும் ஷிவாவைப் போலவே அவளின் தோளில் இடித்திட...

"ம்க்கும்" என்ற செருமளில் ஒருசேர திரும்பி பார்த்தனர்.

ருது தான் நின்றிருந்தான்.

முதல் கூடலுக்கு பின் அவனின் முகம் காண சிறு படபடப்பு. இதயத்தில் வெட்கப் பூக்கள். அதனை லாவகமாக அவள் மறைக்க முயன்றாலும், அவளின் சிறு அசைவையும் உள்வாங்குபவனுக்கு அவளின் கண்ணின் மாற்றம் தெரியாதா என்ன?

கண்டு கொண்டவனுள் விஷமப் புன்னகை. இதழ் கடித்து மறைத்தான்.

"நீங்க இன்னும் கிளம்பல?", இமையாள்.

"ம்ம்ம்" என்ற ருது சென்றிட,

"டார்லிங்" என்று அவனை நிறுத்தினாள் ஷிவா.

ருது என்னவென்று கேட்டிட,

"நீங்க அண்ணிகிட்ட ஏதும் பேச வந்து நான் நடுவுல நந்தி மாதிரி நின்னதால சொல்லாம திரும்பிப் போகலையே?" என்றாள். கேலி நிறைந்த சிரிப்போடு.

"சிலதை எப்படி டா ஓப்பனா சொல்றது?" என்று ருதுவும் சிரித்திட,

"டார்...லிங்... யூ" என்று ஷிவா சிணுங்கிட, இமையாளிடமும் சத்தமான சிரிப்பு.

"இவ்வளவு நாளா இந்த சிரிப்பை எங்க வச்சிருந்தீங்களாம்?" ஷிவா ருதுவின் சிரிப்பில் நிறைவு கொண்டவளாக வினவினாள்.

"என் பொண்டாட்டிகிட்ட" என்று கண் சிமிட்டிய ருது, இமையாளை பார்த்து தலையசைத்தவனாக வெளியேறினான்.

ஷிவா ஓடிவந்து இமையாளை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.

"தேன்க் யூ சோ மச் அண்ணி" என்று அழுத்தமாக இமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்த ஷிவா, "கிட்டத்தட்ட ஃபோர் இயர்ஸ். ஒருநாள் கூட அண்ணா முகத்தில் இவ்வளவு சந்தோஷத்தை நான் பார்த்தது இல்லை" என்று கண்கள் கலங்கினாள்.

இமையாளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ருதுவின் மீதான ஷிவாவின் எதிர்பார்ப்பில்லா அன்பு தான் அவளுக்கு அக்கணம் தெரிந்தது.

ஷிவாவின் கன்னத்தில் ஆதுரமாய் தட்டிய இமையாள்,

"இனி சிரிச்சிட்டே இருப்பாங்க" என்றாள்.

"லவ் யூ அண்ணி" என்று ஷிவா சொல்லிட, இமையாளிடம் ஏற்கும் விதமானப் புன்னகை.

________________________________

ருது சுரேந்தரின் இல்லம் வந்தபோது வீட்டின் முன்னிருக்கும் தோட்டத்தில் தீபா அமர்ந்திருக்க, புல் தரையில் சுரேந்தர் முட்டிபோட்டு, அவர் மீது தேஷ் அமர்ந்து அம்பாரி விளையாடிக் கொண்டிருந்தனர்.

"ஆனை... ஆனை... ஆனை. ஆனை மேல அம்பாரி" என்று சொல்லியபடி சுரேந்தர் செல்ல, "வேகமா போங்க" என்று கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தான், அவர் மீது அமர்ந்திருந்த தேஷ்.

தேஷ்ஷின் முகத்தில் இதுவரை கண்டிடாத சிரிப்பு. அதீதமாய். ருதுவிற்குள் இதமாய்.

கேட் திறக்கும் சத்தத்தில் திரும்பிய தீபா,

"வாங்க மாப்பிள்ளை" என்று அழைத்திட,

"வாங்க... வாங்க" என்ற சுரேந்தரும், "இந்த ரவுண்ட் முடிச்சிட்டு வந்திடுறோம். உட்காருங்க" என்று இருக்கையை காண்பித்தார்.

"ஹாய் ப்பா" என்ற தேஷ், "அம்மா எங்க?" என்றபடி அவனுக்கு கை அசைத்து சுரேந்தரின் அசைவுக்கு அசைந்தாடினான்.

"உள்ள வாங்க மாப்பிள்ளை" என்று தீபா அழைக்க,

"இருக்கட்டும் அத்தை. தேஷ் கூட்டிட்டுப் போகலாம் வந்தேன். இமயாவும், ஷிவாவும் தனியா இருக்காங்க" என்று அங்கிருந்த இருக்கையிலே அமர்ந்தான்.

"குட்டி ரொம்ப சமத்து" என்றவர், "இப்போ தான் பால் சாதம் ஊட்டினேன். அவங்க தாத்தா வந்ததிலிருந்து ஒரே ஆட்டம் தான்" எனக்கூறி சிரித்தார்.

அவரின் பேச்சில் ருதுவுக்கு நெஞ்சம் நிறைந்தது. தேஷ்ஷை ஏற்கும் உறவுகள், காரணம் அவனவள். தேஷ்ஷின் பிறப்பு எப்படி பார்க்கப்படுமோ என்று அவன் பயந்த பயமெல்லாம் அவனது லேஷஸால் ஒன்றுமே இல்லையென ஆகியிருந்தது.

"காலையில் கூப்பிட்டு போகலாமே" என்றபடி தேஷ்ஷையும் தூக்கிக்கொண்டு வந்தார் சுரேந்தர்.

"இமயா தான் கூட்டிட்டு வர சொன்னாள் மாமா" என்ற ருதுவிடம் தாவிய தேஷ்...

"தாத்தா எனக்கு நிறைய டாய்ஸ் வாங்கிட்டு வந்தார் ப்பா. என்னோட ஜாலியா விளையாடினாங்க. டெய்லி வரலாம் ப்பா" என்றதோடு, "இனியா மாமாகிட்ட வீடியோ கால் பேசினேன். அவங்களும் டாய்ஸ் வாங்கிட்டு வரேன் சொன்னாங்க" என அன்றைய கதைகள் அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிட சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான் ருது.

"சம்மந்தி எப்போ வறாங்க மாப்பிள்ளை?", சுரேந்தர்.

"நாளைக்கு ஈவ்வினிங் வந்திடுவாங்க மாமா" என பதில் சொல்லிய ருது, "ஏதும் சொல்லணுமா மாமா?" எனக் கேட்டான்.

"மறுவீட்டுக்கு அழைக்கணுமே மாப்பிள்ளை" என்றார் சுரேந்தர்.

"நாளை மறுநாள் வறோம் மாமா. உங்களுக்கு ஓகேவா?" என்றான்.

"இனியனும் நாளை மறுநாள் வந்திடுவான். முறையா வந்து அழைக்கிறோம்" என்றார் அவர்.

"ஃபார்மாலிட்டிஸ்லாம் எதுக்கு மாமா?" என்று அவன் கேட்கும்போது, அவர்களின் பேச்சு துவங்கியபோதே உள்ளே சென்றிருந்த தீபா, தேஷ்ஷின் பொம்மைகள் எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்து வந்தவராக தேஷ்ஷிடம் கொடுத்தார்.

"பாட்டி அம்மா ஃபோட்டோ?" தேஷ் கேட்டிட,

"அதையும் வச்சிருக்கேன் குட்டி" என்று குழந்தைக்கு பதில் சொல்லிய தீபா, "எங்க ரூமிலிருந்து இமையாவோட சின்ன வயசு ஃபோட்டோ பார்த்திட்டு, எனக்கு வேணும். போகும்போது கொடுங்கன்னு மதியமே சொல்லியிருந்தான்" என்றார் ருதுவிடம்.

"சரிங்கத்தை" என்ற ருது, "கிளம்புறேன். ரவுண்ட்ஸ் போகணும்" என்று எழுந்து கொண்டான்.

"நாளைக்கு வரேன் பாட்டி. தாத்தா விளையாடுவோம்" என்று இருவருக்கும் முத்தம் கொடுத்து ருதுவுடன் தேஷ் கிளம்பிட,

பெரியவர்கள் இருவரின் முகத்திலும் ஆழ்ந்த புன்னகை.

வீடு வரும்வரை தேஷ் சலசலத்துக்கொண்டே வந்தான்.

தேஷ் இந்தளவிற்கு உற்சாகமாகப் பேசியதே இல்லை. அம்மா என்ற வெற்றிடம் அவனையும் வெற்றாக்கியிருக்க, இன்று அவ்விடம் இமையாளால் நிறப்பட்டிருக்க, அவனது இதயமும் அன்னையின் அவரால் உயிர்ப்பு பெற்றிருந்தது.

அதனை அவனது பேச்சிலும், துள்ளலிலும் ருதுவால் உணர முடிந்தது.

வீட்டிற்கு வந்ததும், ருது வண்டியை சரியாக நிறுத்துவதற்குள் துள்ளி குதித்து இறங்கிய தேஷ்...

"அம்மா" என்ற கூவலோடு உள்ளே ஓடிட, கூடத்திலே இவர்களின் வரவை எதிர்பார்த்திருந்த இமையாள் முன்வந்து கைகளை விரித்திட, அவளின் இடையே கட்டிக்கொண்டு அணைப்பில் அடக்கினான் தேஷ்.

பின்னால் வந்த ருதுவிற்கு அக்காட்சி கவிதையாய் மனதில் பதிந்தது.

"பேபி சாப்பிட்டாச்சா? பாட்டி என்ன கொடுத்தாங்க" என்றவாறு தேஷ்ஷை தூக்கிய இமையாள், அவனின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

"ம்க்கும்..." ருது தன்னிருப்பைக் காட்டிட,

"என்ன?" என்றாள். ஒன்றும் அறியாதவளாக.

"ஒண்ணுமில்லையே" என்ற ருது, "தேஷ் தூங்கட்டும். வட்டியோடு வாங்கிக்கிறேன்" என்றான் அவளின் அருகில் வந்து காதில் கிசுகிசுப்பாய்.

"ச்சூ" என்று கண்களால் மிரட்டியவள், தேஷ் இருப்பதை சுட்டி, "சாப்பிட வாங்க" என்றாள்.

"பசியில்லை லேஷஸ். ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வரேன்" என்று கையிலிருந்த பையினை டீபாய் மீதி வைத்தான்.

"என்ன பேக்?", இமையாள்.

"பேபியோட டாய்ஸ்" என்ற தேஷ், இமையாளை இறக்கிவிட சொல்லி அவளிலிருந்து கீழ் இறங்கினான்.

"ப்பா வாப்பா..." என்று ருதுவின் கையினை பிடித்து ஒரு கையால் இழுத்தவனாக மற்றொரு கையில் பையினை பிடித்து இழுத்தான்.

"எங்கடா" என்ற ருது மகனின் இழுப்பிற்கு சென்றான்.

"தேஷ் குட்டி அம்மா இல்லையா?" இமையாள் கேட்டிட, "அம்மாக்கு சர்ப்ரைஸ். தேஷ் கூப்பிடும்போது வாங்க" என்று ருதுவை கூட்டிக்கொண்டு மேலே அவர்களது அறைக்குச் சென்றான்.

பைக்குள்ளிருந்து இமையாளின் புகைப்படத்தை எடுத்தவன், ஒரு பக்க சுவர் முழுக்க நிரம்பியிருந்த தேஷ்ஷின் சிறு சிறு புகைப்படங்களுக்கு மத்தியில், காவல் உடையில் ருதுவின் புகைப்படமும், தேஷ்ஷின் இரண்டு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இருக்க, அதற்கு நடுவில் இமையாளின் படத்தினை மாட்டக் கூறினான்.

அது இமையாள் பள்ளியின் இறுதியில் சீருடையில் எடுக்கப்பட்டிருந்தது.

ருது மென்மையாய் படத்திலிருக்கும் தன்னவளின் நிழலுருவை வருடியவனாக, தேஷ் சொல்லியபடி சுவற்றில் மாட்டினான்.

"ஓகே வா பேபி?"

தேஷ் பதில் சொல்லாது அறைக்கு வெளியில் நின்று இமையாளை கத்தி அழைத்தான்.

இமையாள் வந்ததும் சுவற்றைக் காண்பித்தவன்,

"இப்போ தான் நல்லாயிருக்குல ப்பா?" என ருதுவிடம் கேட்டு, "அப்பா, தேஷ், அம்மா" என்று விரலால் ஒவ்வொன்றாக சுட்டி காண்பித்தான்.

"சூப்பர் டா தங்கம்" என்று இமையாளும், "நல்லாயிருக்கு" என ருதுவும் ஒன்றாக அவன் உயரத்துக்கு முட்டு போட்டு, ஒருசேர தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தனர்.

அக்காட்சியை விவரிக்க வார்த்தைகளும் வேண்டுமோ?

கவிதைக்கு கவிதை புனைந்திடவோ?

"நான் அத்தையை கூட்டிட்டு வந்து காட்டுறேன்" என்று சடுதியில் தேஷ் விலகி ஓடிட, ருது, இமையாள் நெற்றி முட்டி உறைந்தனர்.

நிலை மாறாது இமையாளின் கன்னத்தை இரு கரங்களாலும் தாங்கிய ருது...

"தேன்க்ஸ் டி... தேன்க்ஸ் அ லாட்" என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்து எழுந்தான். அவனது கண்கள் கலங்கியதோ?

"ம்ம்ம்... பொண்டாட்டிக்கு தேன்க்ஸ்லாம் சொல்றீங்க. இன்னும் நான் யாரோ தானோ?" என்று அவள் இழுக்க, அவளின் உதட்டை இரு விரலால் அழுத்தி பிடித்து இழுத்தவன், அதில் தன் உதடு உரசியும் உரசாது நெருங்கி, "இப்போலாம் ரொம்ப அதிகம் பேசுது இந்த வாய்" என்று தன் விரலில் அழுத்தம் கொடுக்க, அவன் பேசியதில் அவனது அதரம் அவளது மென்னிதழோடு உறவாடியது.

இதற்கு அவன் இதழில் முத்தமே கொடுத்திருக்கலாமெனத் தோன்றியது அவளுக்கு.

இமையாளின் இமைகள் படபடக்க, அவளின் இடையோடு கையிட்டு தன்னில் அழுந்த இழுத்தவன்,

"லேஷஸ் ருதுவோட வரம் டி" என்று அவளின் விழிகளில் முத்தம் வைத்து நகர்ந்தான். தேஷ்ஷின் சத்தத்தில்.

ருதுவின் வார்த்தைகளில் சட்டென்று நெஞ்சம் நெகிழ பனித்துவிட்ட கண்களை இமை தட்டி சரி செய்தாள்.

தேஷ்ஷும் ஷிவாவும் உள்ளே வர,

"ஸ்டேஷன் வரை போயிட்டு வரேன்" என தன்னவளை பார்வையால் தழுவிச் சென்றான்.

_________________________________________

ருது காவல் நிலையம் வரும்போது நேரம் பத்தை கடந்திருந்தது.

"என்ன சார் இந்நேரம்?" இரவு பணியிலிருந்த கிருஷ்ணன் கேட்டிட, "ரவுண்ட்ஸ் போகணுமே! அப்படியே இங்க எட்டிபார்த்தேன்" என இருக்கையில் சென்று அமர்ந்த ருது,

"வெங்கட் எங்கே?" எனக் கேட்டான்.

"இப்போ தான் சார் ட்யூட்டி முடிந்து கிளம்பினார்" என்றார் அவர்.

"ம்ம்ம்..." என்ற ருது, "அவனுங்களுக்கு சாப்பாடு கொடுத்திங்களாண்ணா?" எனக் கேட்டான்.

"அதெல்லாம் பிரியாணியும், வகை வகையா கறியும் சாப்பிட்டானுங்க சார்" என்றார் அவர்.

"வாட்... யார் அதெல்லாம் வாங்கிக்கொடுத்தா?" ருதுவிடம் சீற்றம்.

"ஒரு பொண்ணை ஃபன்னுங்கிற பேர்ல ஈவ்டீஸிங் செய்து கொன்னிருக்கானுங்க, அவனுங்களுக்கு ஸ்டேஷனில் விருந்து வச்சிங்களோ?" என்று கோபமாகக் கேட்டு செல்லினை நோக்கிச் சென்றான் ருது.

"அது வந்து சார்" என்று கிருஷ்ணன் தடுமாற,

"யார் அந்த பருப்பு?" என நின்று வினவினான்.

"இந்த ஏரியா கவுன்சிலர் சார்."

"எனக்கு அப்போவே கால் பண்ண வேண்டியது தானே?"

"அது... வெங்கட் சார் தான் வேண்டாம் சொல்லிட்டார் சார்."

வெங்கட் எதற்காக சொல்லியிருப்பனென புரிந்தது.

"அந்த கவுன்சிலர் இவனுங்களுக்கு என்ன வேணும்?"

"ஒருத்தன் அண்ணன் பையன், இன்னொருத்தன் தங்கச்சி பையனாம் சார்."

"ம்ம்ம்ம்" என்ற ருது, "லாயர் கூட்டி வந்தானா?" எனக் கேட்டான்.

"இன்னைக்கு ஜாமின் எடுக்க முடியல, காலையில வறோம் சொன்னாங்க சார்."

"நல்லா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றீங்க கிருஷ்ணன்" என்ற ருது, "அவனுங்க காலையில் இங்க வரதுக்கு முன்ன, நீங்க இவனுங்களை கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்கணும்" என்றதோடு, "எப்படி வெளியில் வரானுங்கன்னு பார்க்கிறேன்" என செல்லுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த இருவரையும், அடித்து கதற விட்ட பின்னரே வெளியில் வந்தான்.

"ஒரு பொண்ணை கொன்னிருக்க குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல் என்னவோ கல்யாணமாகி மறுவீட்டுக்கு வந்த மாதிரி சொகுசான தூங்கிட்டு இருக்கானுங்க. நீங்களும் வேடிக்கை பார்க்கிறீங்க" என்று அங்கிருந்த அனைவரையும் கடித்துக்கொண்ட ருது, "இவனுங்க நைட் முழுக்க தூங்கவே கூடாது" என்றான்.

"கனகா அக்கா எங்கே?"

"அவங்களுக்கு டே ட்யூட்டி சார்", கிருஷ்ணன்.

"ஹ்ம்ம்... அட்டாப்ஸி ரிப்போர்ட்?"

"நாளைக்கு மதியத்துக்கு மேல தான் கிடைக்கும் சொன்னாங்க சார்" என்ற கிருஷ்ணனை தீயாய் முறைத்த ருது,

"எதுக்கு அவனுங்க ஈஸியா ஜாமின் வாங்கிடவா?" எனக்கேட்டு, "யார் அந்த டாக்டர்?" என்றான்.

"ம்ம்ம்... வீடெங்கே?"

கிருஷ்ணன் சொல்லிய அடுத்த நொடி அவரையும் கூட்டிக்கொண்டு அந்த மருத்துவரின் இல்லம் சென்றான்.

"இன்னும் ஒரு மணி நேரத்தில் ரிப்போர்ட் வரணும்... இல்லைன்னு, விக்டிம்க்கு எதிரா, அக்யூஸ்ட்டுக்கு துணை போறாருன்னு கம்ப்லைன்ட் ரிஜிஸ்டர் செய்து அரேஸ்ட் பண்ணுவோம் சொல்லுங்க" என்று ருது சொல்லியதை, அப்படியே மருத்துவரிடம் கிருஷ்ணன் சொல்ல...

ருதுவை பற்றி அறிந்திருந்த மருத்துவரும் அந்நேரத்தில் அடித்து பிடித்து மருத்துவமனை ஓடி வந்திருந்தார்.

அடுத்து ருது சென்ற இடம் அரசு மருத்துவமனை.

ருது அங்கு வருவதற்கு முன்பே மருத்துவர் கையில் இறந்துபோன பெண்ணின் உடற்கூறு ஆய்வு அறிக்கையுடன் நின்றிருந்தார்.

"சாரி சார் இந்த கேஸ் நீங்க டீல் பன்றிங்க தெரியாது. கவுன்சிலர் மிரட்டவும் கொஞ்சம் பயந்துட்டேன்" என்றார் மருத்துவர்.

"அப்போ ஏற்கனவே முடிச்சு வச்சு கொடுக்காம இருந்திருக்கீங்க... ரைட்?" என்ற ருது, "பாடியை பேரண்ட்ஸ் இடம் கொடுத்திட்டுங்களா?" எனக் கேட்டவாறு, அறிக்கையை படித்து பார்த்தான்.

"இதோ இப்போவே கொடுக்க சொல்லிடுறேன் சார்" என்று மருத்துவர் அதற்குரிய நபரிடம் தகவல் கொடுக்க, வேலை சடுதியில் முடிந்தது.

"அந்த பொண்ணோட ஷாலை பின் பக்கமிருந்து இழுத்திருக்கானுங்க, கண்டிப்பா கழுத்தில் அழுத்தம் கொடுத்திருக்கும். அந்த பாயிண்ட் ரிப்போர்டில் வரலையே டாக்டர்" என்று ருது பார்வையை சுருக்கிட...

"இப்போ இப்போ சரி செய்திடுறேன் சார்" என்று ருதுவின் பார்வைக்கே நடுங்கினார் மருத்துவர்.

"உண்மையான ரிப்போர்ட்?" அழுத்தமாக கையை நீட்டினான்.

மருத்துவர் பயத்தோடு உண்மையான அறிக்கையைக் கொடுத்திட...

"வெல்... நாளை கோர்ட்டிலிருந்து உங்களோட சஸ்பென்ஷ்னல் ஆர்டர் வரும். ரெடியா இருங்க" என்ற ருது, "இது நீங்க ஈவ்வினிங் அந்த கவுன்சிலர் வீட்டுக்கு போனதுக்கான வீடியோ" என தன் அலைப்பேசியில் காணொளியை ஓட்டிக் காட்டினான்.

"சார்..." மருத்துவர் அரண்டு விட்டார்.

"செய்யும் வேலைக்கு உண்மையா இருக்க முடியலன்னா அந்த வேலையில் எதுக்கு இருக்கணும் டாக்டர்?" என்றவன், அவர் கெஞ்சலை பொருட்படுத்தாது அங்கிருந்து நடக்கத் தொடங்கினான்.

பெண்ணின் பெற்றோர் ருதுவிற்காக வாயிலில் காத்திருக்க, அவர்களருகில் சென்றான்.

"ரொம்ப நன்றி சார்." இருவரின் அழுகையோடு வெளிவந்த குரலில் நெஞ்சம் அடைத்த உணர்வை சடுதியில் மீட்டுக்கொண்டான்.

"கிருஷ்ணன்..." ருது கண்காட்டிட, அவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டிய காகிதங்களில் கிருஷ்ணன் கையெழுத்து வாங்கிட, இரவு நேர ரோந்துப் பணியை முடித்துக்கொண்டு இல்லம் வந்து சேர்ந்தான் ருது.

அவனுக்காக உறங்காது இமையாள் விழித்திருந்தாள். கையில் புத்தகத்தோடு, உறங்கிக்கொண்டிருக்கும் தேஷ்ஷை பார்க்கும் வகையில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தாள்.

"தூங்கலையா நீ?" எனக் கேட்டபடி அவளருகில் வந்த ருது, அவளை எழ விடாது, அவளது மடியில் தலை வைத்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

ருதுவின் கரங்கள் இரண்டும் அவளை இடையோடு சுற்றி வளைத்திருந்தது.

"என்னாச்சுப்பா?" கேட்ட இமையாளின் கரம் ருதுவின் நெற்றியில் விழுந்திருந்த முன்னுச்சி கேசத்தை ஒதுக்கிக் கொண்டிருந்தது.

"ம்ப்ச்... வொர்க் மைண்டட்" என்றவன், "உன் பக்கம் வந்தாலே எல்லாம் மறந்து லேசாகிடுது" என்றான்.

"எதுக்கு அடி போடுறீங்க தெரியுது. குளிச்சிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்று எழ முயற்சித்தவளை விடாது, தனக்கு அடியில் சரித்திருந்தான். அவள் உணரும் முன்பே!

"அச்சோ ருது என்ன பண்றீங்க? தேஷ் தூங்கிட்டு இருக்கான்."

தடுப்பைத் தாண்டி பார்வையை ஓட்டி மகனை பார்த்த ருது, "எழ மாட்டான்" என்றவனாக அவளின் இதழில் மூழ்கினான்.
 
Status
Not open for further replies.
Top