ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 35

ருது எழும்போது இமையாள் பக்கத்தில் இல்லை. கீழே தேஷ் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது.

முதுகில் என்னவோ உறுத்த என்னவென்று எழுந்து நின்று படுக்கையை ஆராய்ந்தான்.

இமையாளின் கண்ணாடி வளையல் உடைந்து துண்டாகக் கிடந்தது.

அவனுள் இரவின் இனிமை தேனாய் இனித்தது. உடன் மந்தகாசமாய் இதழோரம் குட்டி புன்னகையும்.

உடைந்த வளையல் துண்டுகளை கையில் எடுத்தவன், படுக்கைக்கு அருகிலிருக்கும் சிறு மேசை இழுவையை திறந்து பத்திரபடுத்தினான்.

'எனக்கே டயர்டா இருக்கு. இவள் எப்படி சீக்கிரம் எழுந்தாள்?' என குறும்பாய் நினைத்தவன் குளியலறை புகுந்து வெளியில் வந்தான்.

இன்று மைதானத்தில் ஓட முடியாது. அந்தளவிற்கு அவனுக்கு நேரமில்லை. மாடிக்குச் சென்றவன், புஷ்ஷப் எடுக்கத் துவங்கினான்.

அப்போது தேஷ்ஷும், ஷிவாவும் ஓடி வரும் சத்தம் கேட்டது.

"குட்மார்னிங் ப்பா..." என்ற தேஷ் ஓடிவந்து ருதுவின் முதுகில் படுத்துக்கொண்டான்.

"குட்மார்னிங் டார்லிங்" என்ற ஷிவா, "இன்னைக்கு கிரவுண்டில் கொசு விரட்டலையா?" என கிண்டல் செய்தாள்.

"டைம் இல்லை" என்றவன், "தேஷ்ஷை பின்னால் கையிட்டு வளைத்து சுழன்றவனாக மல்லாக்க திரும்பி படுத்தான்.

"என்ன காலையிலே ரெண்டு பேரும் மாடிக்கு?" என்றவன், தேஷ்ஷின் கன்னத்தைப் பிடித்தி இழுத்துக்கொண்டிருந்தான்.

"செடிங்களுக்கு தண்ணி விட..." என்ற ஷிவா மாடியின் ஒரு பக்கம் முழுக்க செடிகள் வைப்பதற்கெனவே மண் நிரப்பி நீண்டு கட்டப்பட்டிருந்த மற்றும் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த பல வகை பூ, கீரை மற்றும் மருத்துவ செடிகளிடம் நகர்ந்தாள்.

"அம்மா எனக்கு நட்ஸ் ஜூஸ் கொடுத்தாங்கப்பா. செம டேஸ்ட்" என்ற தேஷ், "அத்தைக்கு காபி நோ சொல்லிட்டாங்க" என்றான்.

"ஏனாம்?"

"ஏபிசி ஜூஸ் கொடுத்தாங்க டார்லிங்." அவள் முகம் சுருக்கி சொல்லியதில் ருதுவிடம் சத்தமான சிரிப்பு.

"போங்க உங்களுக்கும் இருக்கு" என்றிட,

"அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்க. அப்பா ஸ்டேஷன் போகணும்" என்று தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்த ருது, நேராக கீழே வந்து சமயலறைக்குள் நுழைந்தான்.

சுவற்றில் சாய்ந்து நின்றவன், தன்னவளின் பின் உருவத்தை வஞ்சனை இல்லாது ரசித்தான்.

முந்தானை சொருகிய இடை பளிங்காய் மின்னிட, பொங்கும் உணர்வை பின்னந்தலை வருடி சமன் செய்தான்.

"குளிக்காம கிச்சன்க்குள்ள வந்தாச்சு" என்று திரும்பிய இமையாள், பின்பக்கம் மேடையில் சாய்ந்தவளாக, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, என்ன என்பதைப்போல் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினாள்.

"சுண்டி இழுக்கறடி பொண்டாட்டி" என்றவன், அவள் உணரும் புன்பு கையை பிடித்து இழுத்தவனாக தனக்குள் சுருட்டியிருந்தான்.

"ம்ப்ச்... விடுங்க. என்ன ருது இது" என்று இமையாள் சிணுங்கிட,

"எழுந்ததும் உன்னைத் தேடினேன்" என்றான்.

"எதுக்காம்?"

"இதுக்குத்தான்" என்றவன் நொடியில் அவளைத் திருப்பி இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.

அவனது கரம் அவளின் கன்னத்திலிருந்து அவளது வெற்றிடைக்கு இறங்கியிருக்க, பெண்ணவள் விழித்துக்கொண்டாள்.

விடுக்க முடியாது அவனிலிருந்து தன்னிதழை விடுத்துக் கொண்டவள், மூச்சு வாங்கியவளாக, "கிச்சனில் வைத்து என்ன பண்றீங்க?" என அவனின் தோளில் அடித்தாள்.

"இதுதான் கிச்சன் ரொமான்ஸ். டீச்சருக்கு தெரியாதா?" எனக் கேட்டவன், "முழுசா சொல்லிக்கொடுக்க விடாமல் பாதியில் விட்டால் எப்படி கத்துக்கிறது. மக்கு டீச்சர்" என்று அவன் குறும்பாய் சீண்டினான்.

"உங்க சீண்டலுக்கு இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது" என்றவள், ஒரு குவளையை எடுத்து அவனது கையில் திணித்து, "குடிச்சிட்டு கிளம்பி வாங்க. எனக்கு வேலையிருக்கு" என அடிப்பின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

"எங்கையாவது புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்க" என அலுத்தவன், கையிலிருந்த குவளையில் இருப்பது என்னவென்று தெரியாமலே ஒரே மூச்சில் காலி செய்து டொக்கென்று வைத்தான்.

அதன் சத்தத்தில் திரும்பியவள்,

"நெல்லிக்காய் ஜூஸ் அவ்ளோ நல்லாயிருந்துச்சா?" எனக் கேட்டாள்.

"அதென்னவோ?" என்று கடுப்பாய் மொழிந்தவன், "எங்கையாவது ரொமான்ஸ் பீலிங் இருக்காடி உனக்கு?" என அவளின் இருபக்க தோளையும் பிடித்து தன் பக்கம் திருப்பி, "நேத்து தான் அதெல்லாம் நடந்துச்சு. அந்த எபெக்ட் கொஞ்சமாவது உன் முகத்தில் தெரியுதா? சின்னதா வெட்கம்... என்னை பார்த்ததும் குட்டியா ஸ்மைல். முகம் பார்க்க தடுமாற்றம். இப்படி எதாவது இருக்கா?" என்றான்.

"ஏன் இருக்கணும்?" பட்டென்று கேட்டிருந்தாள்.

"நிஜமா ஒண்ணுமே தோணலையா லேஷஸ்!"

"என் ருது நீங்க. அப்புறம் எதுக்கு வெட்கப்படணும்? எப்போவாயிருந்தாலும் இது நமக்குள்ள நடக்க வேண்டியது தானே! நீங்க பக்கம் வந்தால் கட்டிக்கத் தோணும்" என சொல்லியபடி அவனை கட்டிக்கொண்டாள்.

"இவ்ளோ நெருக்கமா இருந்தா கிஸ் பண்ணனும் தோணும்..." என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள், "வேறேன்னென்னவோ எல்லாம் தோணும்... தோணுது தான். நீங்க என் புருஷன். உங்ககிட்ட இதெல்லாம் இயல்பு தானே! அதுக்காக பார்க்கும் நேரமெல்லாம் வெட்கப்பட்டுட்டே இருக்க முடியுமா?" என்றாள். அவன் விழிகளை ஊடுருவி.

"லவ் யூ டி" என்று அழுத்தமாக அணைத்துக் கொண்டான்.

'உன்னிடம் என் இயல்போடு இருக்கிறேன்' என்று அவள் சொல்வது போதுமே! அவனின் காதல் வென்ற உணர்வு.

"இப்படியே இருக்க ஆசை தான். ஆனா பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தேஷ்ஷும் ஷிவாவும் வந்திடுவாங்க" என்ற இமையாளை ருது விடவே இல்லை.

"ஸ்டேஷ போகும் ஐடியா டிசி சாருக்கு இல்லையா?"

அப்போதும் அவன் அசைத்தான் இல்லை.

"உங்களுக்குள்ள இப்படியொரு காதல் மன்னனை நான் இமேஜின் கூட பண்ணதில்லை" என்று சிரித்தவளின் இதழ் நோக்கி ருது முகம் தாழ்த்த...

"சார்... அண்ணா சார்" என்ற வெங்கட்டின் குரல் வீட்டு வாயில் தொடர்ந்து அவன் உள்ளே வந்து அழைப்பது கேட்டது.

"இம்சை" என்று முனகியபடி, இமையாளின் உதட்டில் அவசரமாக தன் உதட்டை வைத்து விலகி கூடத்திற்கு வந்தவன், வெங்கட்டை பார்த்து...

"என்னடா?" என்றான்.

"கோபமா இருக்கீங்களா?"

ருது கேட்ட தோரணையில் வெங்கட் இரண்டடி பின் வைத்திருந்தான்.

ருதுவின் பின்னால் சிரிப்பினை மறைத்தபடி வந்த இமையாள்,

"வாங்க" என்றிட, "இப்போ வராதா போறதா தெரியல மேம்" என்றான் வெங்கட், ருதுவை பார்த்து.

"வந்த விஷியத்தை சொல்லுடா?"

"கோர்ட்டுக்கு போகணும். சீக்கிரம் வர சொன்னீங்களே" என்று தடுமாறிய வெங்கட், "நீங்க வந்தால் தான் அந்த கவுன்சிலரை கண்ட்ரோல் பண்ண முடியும்" என்றான்.

"கால் பண்ண வேண்டியது தானேடா, நந்தி..."

"ஹான்..." ருது சொல்லிய நந்தியில் தான் வெங்கட்டிற்கு தவறான நேரத்தில் வந்துவிட்டோம் என்பது புரிந்தது. தோன்றிய அசட்டினை காட்டாது மறைத்தான்.

"கால் பண்ணேன் அண்ணா. நாலு தடவை. நீங்க அட்டெண்ட் பண்ணல" என்றான் குறையாக.

"சரி வெயிட் பண்ணு வரேன்" என்று வெங்கட்டுக்கு இருக்கையை காண்பித்த ருது,

இமையாள் புறம் திரும்பி,

"நைட் வச்சிக்கிறேன் உன்னை" என்று உதடசைத்து மேலேறிச் சென்றான்.

இமையாள் வெங்கட்டிற்கு தேநீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி பருகியவன், "ரெண்டு நாளா பார்க்கும் ருது சார் வேற மேம். நீங்க பிரிஞ்சிருக்கீங்க அண்ணா சொல்லும் போது பீல் பண்ணேன். இப்போ சந்தோஷமா இருக்கு மேம்" என்றான்.

'அடேய்... இவங்கிட்ட ஒரு கதையா?' என கணவனை நினைத்து உள்ளுக்குள் சிரித்த இமையாள், வெங்கட்டை பார்த்து புன்னகைத்தவளாக, "மேம்லாம் வேண்டாம் நேம் சொல்லியே சொல்லுங்க. அவரை அண்ணா தானே சொல்றீங்க?" என்றாள்.

"எப்போவாவது தான்..."

"எப்பவும் கூப்பிடலாம்" என காக்கியில் கிளம்பி வந்திட்டான் ருது.

"வாடா போகலாம்" என ருது அடி வைத்திட...

"டிசி சார் சாப்பிட்டு போகலாம்" என்றாள். கட்டளையாக.

"ம்ப்ச்... அவன் வெயிட் பன்றான் இமயா!"

"ஃபைவ் மினிட்ஸில் ஒன்னும் ஆகாது" என்றவள், "நீங்க வெயிட் பண்ணுவீங்க தானே?" என்றாள். வெங்கட்டிடம்.

வெங்கட் எல்லா பக்கமும் தலையை உருட்டினான்.

"அவனை நீ மிரட்டுற. எப்படி முழிக்கிறான் பாரு" என்று சொல்லிய ருது, மனைவியின் பேச்சினை மீறாது உணவை முடித்துக்கொண்டே கிளம்பினான்.

வாயில் வரை வெங்கட்டுடன் நடந்தவன் திரும்பி வந்து, வெங்கட் பார்ப்பதையும் பொருட்படுத்தாது, தான் செல்வதை பார்த்து நின்ற இமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்து...

"பை'டி பொண்டாட்டி" என்று, அதிர்ந்து நின்ற வெங்கட்டை இழுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.

____________________________________

அன்று மதியம் போல் இனியன் வீடு திரும்பியிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் குளித்து ஆயத்தமானவன் தங்கையை காண புறப்பட்டு விட்டான்.

"சாயங்காலம் போலாமே இனியா? அப்பாவும் வந்திடுவார். மறுவீட்டுக்கு முறையா அழைச்சிட்டு வரலாம்" என்றார் தீபா.

"இன்னைக்கு நீங்க கதை படிக்கலையா?" எனக் கேட்டான்.

"அதென்னன்னு சொல்ல... அந்த ரைட்டரு செத்தவனை வச்சு காமெடி பண்ணுது. பேய் வச்சுலாம் மேஜிக் காட்டுது. சுவாரஸ்யமா இருக்குடா. என்ன இன்னைக்கு எபி இல்லை. அதான் வருத்தம்" என்றார்.

"அதானே பார்த்தேன்" என்ற இனியன், "எனக்கு இமயாவை பார்க்கணும்மா. நானே முறையா மறுவீடு வாங்கன்னு சொல்லிக்கிறேன்" என கிளம்பிவிட்டான்.

ஷிவா கல்லூரி சென்றிருக்க, இமையாள், வீட்டிற்கு முன்னிருந்த மரத்தில் தேஷ் விளையாடுவதற்காக கட்டியிருந்த ஊஞ்சலில் சிறுவனை அமர வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

இனியனை முதலில் கண்ட தேஷ்... தாவி இறங்கியவனாக,

"மாமா" என்று ஓடிட, யாரென்று பார்த்த இமையாள் இனியனை முறைத்தாள்.

"என்னவாம் என் தங்கச்சி என்னை ரொம்ப பாசமா பாக்குறீங்க?" என்று கேட்டபடி, தேஷ்ஷை தூக்கி முத்தம் கொடுத்த இனியன் கேட்டினைத் தாண்டி உள்ளே வந்தான்.

"எப்போ வந்தீங்க?" எனக் கேட்ட இமையாள், உள்ளே அழைத்துச் சென்றாள்.

"வன் ஹவர் ஆகுது. வீட்டுக்கு போயிட்டு உடனே வறேன்" என்றான்.

"தேஷ் அங்கிளுக்கு தண்ணி கொண்டு வாங்க" என்று மகனை அனுப்பியவள்,

"தேஷ் உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டாள்.

இனியன் தடுமாறிட...

"சொல்லுங்க இனியாண்ணா. அப்போ ஃபிரண்டுன்னு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப நாளாகுது... ரைட்?" என்றாள்.

"அது வந்துடா இமயா..." என இழுத்த இனியன், "மறைக்கூடாதுன்னு இல்லைடா. தேஷ்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் வந்தான். நேரில் பார்த்துட்டு அவாய்ட் பண்ண முடியல. நம்ம ருது டா. எப்படி விட சொல்ற? அவனோட பாஸ்ட் தெரிஞ்சு அவனை உனாக்காகன்னு கூட யோசிச்சு விலக்க முடியல" என்றான்.

"புரியுது" என்றவள், "சொல்லியிருக்கலாமே!" என்றாள்.

"நான் ருதுவுடன் சேர்ந்ததை சொன்னால் உன்கிட்ட அவனோட பாஸ்ட் சொல்ல வேண்டியது இருக்கும். அவனா சொல்றது தானே சரியா இருக்கும். அதான் சொல்லலை" என்றான். இனியனின் நிலை அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அவனும் யாருக்கென்று பார்ப்பான். நிதர்சனத்தின் பக்கம் நின்று கொண்டான்.

"அப்போ கல்யாணம்..."

"நிஜமா ருது இப்படி ஒரு சூழலை பயன்படுதிப்பான் தெரியாதுடா" என்றான்.

"ம்ம்ம்ம்..." என்ற இமையாளிடம், "இன்னும் உனக்கு கோபம் போகலையாடா?" எனக் கேட்டான்.

"கோபமெல்லாம் இல்லை இனியாண்ணா. என்னால் என் ருதுவை புரிஞ்சிக்க முடியுது. அவங்களோட வலி தெரிந்த பிறகு கோபத்தை சுமந்திட்டு இருப்பது வேஸ்ட்" என்றவள், "சின்ன வருத்தமிருக்கு" என்றாள்.

"என்னடாம்மா?" அத்தனை பரிவு இனியனிடம். அவளின் வருத்தத்தால் அவர்களின் வாழ்வு சிக்கலாகிவிடுமோ என்ற சிறு அச்சம்.

"என் மேல் ருதுவுக்கு ஏன் நம்பிக்கையில்லாமல் போச்சு இனியாண்ணா?" அந்த கேள்வியில் இமையாள் மொத்தமாக உடைந்திருந்தாள். கண்ணீர் கன்னம் வழிய, தேஷ்ஷின் வரவில் நொடியில் சீரானாள்.

"மாமா ஜூஸ்" என்று கொடுத்தான்.

"நீங்களே கொண்டு வந்துட்டிங்களா. வெரி குட்" என்ற இனியன், கையில் வாங்கிக்கொண்டான்.

"மாமா டாய்ஸ் வாங்கி வந்திருக்கேன். நீங்க பிடிச்சிருக்கா பாருங்க" என்று இனியன் சிறு பையினை தேஷ்ஷின் கையில் கொடுக்க, அவன் பொம்மைகளை ஆராய்ந்தவாறு ஓரமாக அமர்ந்துவிட்டான்.

தேஷ் பொம்மைகளில் ஆழுந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட இனியன்,

"அப்போ அவனோட சூழல் அப்படி இமயா? அவன் இப்பவும் நம்புறது உன்னை மட்டும் தான். உன் காதலை மட்டும் தான்" என்றான்.

"தேஷ்ஷை நானா ஏத்துக்கணும் நினைச்சவருக்கு... அவர் உண்மையை சொல்லியிருந்தாலும் அப்போவே ஏத்துயிருப்பேன் ஏன் நம்பிக்கை இல்லாமல் போச்சு. இதை அவங்கக்கிட்ட கேட்கவும் தோணலை. அதிலிருந்து மீளல தெரியும். ஆனால் திரும்ப நான் இதை கேட்டு அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல. உள்ளவே வச்சிருக்க ஒரே அழுத்தமா இருந்தது. அதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க உடனே உங்க ஃபிரண்ட்கிட்ட சொல்லணும் அவசியமில்லை. இப்போவே இதை மறந்திடுங்க. எனக்கு ருதுவோட காதல் மட்டும் போதும்" என்றாள்.

'என்ன காதல் இது' என இனியனுக்கு மலைப்பாக இருந்தது.

தன்னவனின் வருத்தத்திற்காக தனது வருத்தத்தை மறைத்துக்கொள்கிறாள் என்றால் அவன் மீது அவளுக்கு எத்தனை பெரும் காதல் இருந்திட வேண்டும்.

"நானும் அவளை இப்படி லவ் பண்ணுவேணா இமயா?" தன்னைப்போல் கேட்டிருந்தான்.

"முதலில் பொண்ணை காட்டுங்க" என்றிருந்தாள் இமையா.

சரியாக அந்நேரம் "அண்ணி" என அழைத்துக்கொண்டு உள் வந்த ஷிவா சற்றும் இனியனை எதிர்பார்க்கவில்லை.

"வாங்க டாக்டர்." முகம் ஒளிர சொல்லியிருந்தாள். அவனும் அவளது மகிழ்வை உள்வாங்கியவனாக தலையசைத்தான்.

"டாக்டரா?" இமையாள் ஷிவாவின் விளிப்பை சுட்டினாள்.

"முன்னவே தெரியுமா?", இமையாள்.

"சேம் ஹாஸ்பிடல் அண்ட் காலேஜ்" என்றான் இனியன்.

"ஓகே... ஓகே..." என்ற இமையாள், "எக்ஸாம்ஸ் இன்னையோட ஓவரா ஷிவா?" என்றவளாக எழுந்து கிச்சன் சென்றாள்.

"எல்லாம் முடிஞ்சுது அண்ணி" என்ற ஷிவா, இனியனுடன் பேசும் ஆசையில் அவனது கான்பிரன்ஸ் பற்றி கேள்வி கேட்டவாறு அவன் முன்னே அமர்ந்துவிட்டாள்.

இமையாள் வரும்போது அவளது கையில் பலகாரங்கள் இருந்தன. அடுத்து மூவரும் ஏதேதோ பேசி சிரித்தபடி இருக்க நேரம் விரைந்து ஓடியது.

சொந்த கிராமம் சென்ற வேங்கடமும், அம்பிகாவும் திரும்பி வந்தனர்.

வந்தவர்கள், இன்னும் சொல்லிக்கொள்ளாத இனியன், ஷிவன்யாவின் காதலுக்கு ஆப்பினை ரெடிமேடாகக் கையோடு கொண்டு வந்திருந்தனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 36

வேங்கடம் மற்றும் தீபா ஊரிலிருந்து வந்த நேரம் இனியனும் அங்கு தான் இருந்தான்.

"வாங்க அத்தை, மாமா. கோவில் பூஜை நல்லபடியா முடிஞ்சுதா?" என வரவேற்று விசாரித்த இமையாள் இருவரும் பருக நீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

"கோவில் பூஜைக்குன்னு போனோம். நல்ல விஷயம் தானா அமைஞ்சு வந்திருக்கு" என்ற அம்பிகா, "வாப்பா. நல்லாயிருக்கீங்களா?" என இனியனை விசாரித்தார்.

இனியன் சிறு சிரிப்பில் தலையசைத்திட,

"தேஷ் குட்டி எங்கே?" எனக் கேட்டார் வேங்கடம்.

"ஒரே ஆட்டம். தூங்கிட்டான் மாமா. ஷிவா ரூமில் தான் படுக்க வச்சிருக்கேன்" என்ற இமையாள், இரவு உணவினை எடுத்து மேசையில் அடுக்கினாள்.

"ரெபிரஷ் பண்ணிட்டு வறோம்மா" என்று பெரியவர்கள் நகர்ந்திட, இமையாளும் சமையலறைக்குள் வேலையாக சென்று மறைந்தாள்.

இனியனும், ஷிவாவும் கூடத்தில் தனித்து விடப்பட்டனர்.

ஷிவா கல்லூரி முடித்து வந்தது முதல் தன்னுடைய அறைக்கு கூட செல்லாது அங்கேயே தான் இருக்கிறாள். அவளுக்கு ஏனோ இனியனை விடுத்து சிறு நொடியும் நகர்ந்திட முடியவில்லை.

இனியன், அழைப்பு வந்திருக்க... அதனை ஏற்று பேசிக்கொண்டிருந்தான். ஷிவாவின் பார்வை முழுக்க வஞ்சனையேயின்றி அவனை உள்வாங்கியது.

கண்டும் காணாது ரசித்திட்டான் இனியன்.

இனியன் பேசி முடித்திட...

"டாக்டர்" என்று மெல்லொலியில் விளித்த ஷிவா, அவன் நிமிர்ந்து பார்த்ததும், "உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்!" என்றாள். சிறு தடுமாற்றமாய்.

"ஹ்ம்ம்... சொல்லலாமே! கேட்போம்!" என்றான். அவளின் தயக்கமும் தடுமாற்றமுமே என்ன சொல்லப்போகிறாள் என்பதை காட்டிக்கொடுத்திட, அவனிடம் உல்லாசம்.

"அது..." என்று ஷிவா ஆரம்பிக்குமுன்,

"வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்திருந்தாள் இமையாள்.

"ருது வந்திடட்டும் இமயா!", இனியன்.

"அவங்க வர லேட்டாகும் இனியாண்ணா!"

"இட்ஸ் ஓகே. வரட்டும். மறுவீட்டுக்கு இன்வைட் பண்ணனும். அவன் வர வரை வெயிட் பன்றேன்" என்ற இனியன், "நீங்க சாப்பிடுங்க" என்றான். ஷிவாவிடம்.

"வா ஷிவா! எக்ஸாம் எல்லாம் முடிச்சிட்டு நல்லா தூங்கணும் சொன்ன. ஆனால் வந்ததிலிருந்து ட்ரெஸ் கூட மாத்தாம எங்களோட அரட்டை அடிச்சிட்டு இருக்க" என்று இமையாள் சொல்லிய பிறகே தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என புரிந்து நெற்றியில் தட்டிக்கொண்டவளாக,

"டூ மினிட்ஸ் அண்ணி வந்துடுறேன்" என தனது அறைக்குச் சென்று சில நிமிடங்களில் வெளிவந்தாள்.

இனியன் தவிர்த்து மற்ற மூவரும் உண்டு முடிக்க ருது வீடு வந்தான்.

"மச்சான்." ருதுவின் அழைப்பில் அப்படியொரு உற்சாகக் கூவல்.

"ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் யுவர் பிரஸன்ட்ஸ் ஹியர்" என்று அருகில் வந்த ருதுவை, இனியன் அணைத்திட வர, அவனின் மார்பில் கை வைத்து தடுத்தவனாக...

"என் ஃபிரண்டா வந்தியா? இல்லை உங்க தங்கச்சிக்கு அண்ணனா வந்தீங்களா?" எனக் கேட்டு சீண்டினான்.

"அவங்க எப்பவும் உங்க ஃபிரண்ட் தான். தங்கச்சிலாம் ரெண்டாம்பட்சம் தான்."

இனியனுக்கு முன் இமையாள் பதில் சொல்லியிருந்தாள். அவர்கள் இருவரும் முன்பே இணைந்திருந்ததை மனதில் வைத்து. அவளின் முகத்தில் சிறிதும் பொறாமை இன்றி புன்னகையே நிரம்பியிருந்தது.

ருதுவிடம் அட்டகாசமானப் புன்னகை.

முன் எப்போதும் இப்படியொரு ஆர்பரிப்பான ருதுவை மூத்த தம்பதியினர் கண்டதில்லை. இருவரின் நெஞ்சமும் நிறைந்துபோனது.

"அப்புறம் மச்சான். பிளைட் தரையிறங்கியதும் தங்கச்சியை பார்க்க ஓடி வாந்தாச்சுப்போல?" என்று இனியனை தோளோடு அணைத்து விடுத்த ருது, "என்ன கம்பிளையண்ட் கொடுத்தாலும் எல்லாம் டிஸ்மிஸ் தான்" என்றான். இமையாளை பார்த்து கண்ணடித்தவனாக.

"அடேய் அடங்குடா" என்ற இனியன், "அம்மா நாளைக்கு வீட்டுக்கு வர சொன்னாங்கடா. அதை சொல்லத்தான் வெயிட் பண்ணேன். மாமா, அத்தை எல்லாரும் வரணும்" என்று அவனின் பார்வை இறுதியாக அவனவளில் நிலைத்தது.

"அப்போ என்னை பார்க்க வரலையா?" என்று பொய்யாகக் கோபித்துக்கொண்ட இந்த ருது புதிதாய் தெரிந்தான்.

"மனசே நிறைஞ்சுப்போச்சுங்க." அம்பிகா, வேங்கடத்திடம் சொல்ல... அவரும் நெகிழ்ந்திருந்தார்.

"சரிடா பேசிட்டே நிக்காம யூனிபார்ம் மாத்திட்டு வா. நீ வரட்டும்ன்னு தம்பி எவ்வளவோ சொல்லியும் சாப்பிடல" என்றார் வேங்கடம்.

"ஜஸ்ட் ஃப்யூ செக்" என்று தாவி படியேறி சென்ற ருது, அடுத்த நொடி "இமயா" என அழைத்திருந்தான்.

"என்னங்க?" இமையாள் அவனின் அழைப்பிற்கான நோக்கமறிந்து கீழே இருந்தபடியே கேட்டிட... ருதுவிடம் பதிலில்லை.

"போய் என்னன்னு கேளும்மா" என்றார் அம்பிகா.

"இதெல்லாம் எடுத்து வைக்கணும் அத்தை" என்று இமையாள் சாப்பிட்ட பாத்திரங்களைக் காட்டிட, "நான் எடுத்து வைக்கிறேன் அண்ணி" என்றாள் ஷிவா.

இமையாள் வேறு வழியின்றி மேலே அவர்களது அறைக்குச் செல்ல, வாயிலில் நின்றபடியே... "ருது" என்று அவள் அழைத்து இழுக்க, கதவின் பின்னிருந்து உள்ளே இழுத்திருந்தான்.

இழுத்த வேகத்தில் அவளின் முதுகு தன் மார்பில் படிய தனக்குள் சிறை வைத்தவன், காலால் உதைத்து கதவினை சாற்றி அதன் மீதே சாய்ந்து நின்றான்.

"அச்சோ ருது என்ன பண்றீங்க? எல்லாரும் இருக்காங்க. அண்ணா வேற" என்றாள். அவனின் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தவளாக.

சற்றும் அசைக்க முடியவில்லை.

"ப்பா... என்னா பிடி. உடும்பு மாதிரி" என்று அவனது கையிலே அடி வைத்தாள்.

"கூப்பிட்டதும் வரணும்டி பொண்டாட்டி" என்றவன் குனிந்து அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

"ம்ப்ச்... விடுங்க. கீழ போகனும்."

"கிஸ் பண்ணிட்டு போ" என்றவனை அப்பட்டமாக முறைத்தாள்.

"இப்படி பாக்காதடி. அப்படியே சுருட்டிக்கிற" என்று அவளின் இமை விரிந்த விழிகளில் முத்தம் பதித்தான்.

"இப்போ இது நேரமா?"

"வேறெப்போ பொண்டாட்டி" என்றவன், "என்னை என்ன பண்ணி வச்சிருக்க லேஷஸ்" என அவளின் நெற்றி முட்டினான்.

"என்ன பண்ணாங்களாம்?" இப்போது அவளிடம் மந்தகாசம்.

"என்ன பண்ணல நீ?" என்று அவளின் கன்னத்தில் பற்கள் படாது கடித்தவன், "அக்யூஸ்ட்டை கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு இருக்கேன்... உன் நியாபகம். மேஜிஸ்ட்ரேட் ஜட்ஜ்மெண்ட் வாசிக்கிறார் மைண்ட்ல நீ நிக்குற. அவஸ்தைடி உன்னோட" என்றதோடு, "மொத்தமா சுருட்டி வச்சிக்கிட்ட" என்றான்.

"ம்க்கும்... சுருண்டுட்டாலும்..."

"இல்லைங்கிறியா நீ?"

"நம்பிட்டேன்."

"நம்பனுமே! என்ன பண்ணலாம்" என்றவன், அவளின் வெற்றிடையில் விரலால் கோலமிட்டவாறு, அவளின் காதில் இரவின் ரகசியம் பேசிட...

"அச்சோவ்" என அவனை அணைத்துக்கொண்டவளாக அவனின் மார்பில் முகம் மூடினாள்.

"பாருடா... வெட்கமெல்லாம் வருதே என்னோட லேஷஸ்க்கு" என்றவன், "உன்னை இப்படி கட்டிக்கணும்... எப்போடா வந்து உன்னை பார்ப்போன்னு உள்ள ஒரே இம்சைடி நீ" என்றான்.

"பாருடா டிசி சார் பொண்டாட்டியை தேடலாம் செய்றார்." அவனின் மார்பில் அழுத்தமாகக் கடித்து வைத்தாள்.

அப்போதுதான் கவனித்தாள், காக்கிச் சட்டையின் பொத்தானை கழட்டியபடி அவளை அழைத்திருப்பான் போலும். இன்னும் முழுதாய் கழட்டிடாது சட்டை திறந்திருந்தது.

"எவ்ளோ தேடுறேன்னு தூங்குறதுக்கு முன்ன காட்டுறேன்" என்றவன், அவள் விலக முற்பட மேலும் தன்னில் அழுத்தினான்.

"ம்ப்ச்... யூனிஃபார்மில் என்ன வேலை பாக்குறீங்க நீங்க?" என்றாள். கடிதலாக.

"அப்போ வேணங்கிறியா?"

"ஆமாம்..." சொல்லிய பின்பே அவன் கேட்டதன் பொருள் விளங்கிட, "உங்களை" என்று வேகமாக நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டவள், "அண்ணா உங்களுக்காகத்தான் வெயிட் பன்றாங்க. சீக்கிரம் வாங்க" என்று அவனது பிடியில் மீண்டும் சிக்காது நழுவி வெளியில் வந்தாள்.

"டைம் ஆச்சே தூங்கப்போகலையா நீங்க?" குளித்து ஆடைமாற்றி வந்த ருது வேங்கடம் மற்றும் அம்பிகாவிடம் கேட்டவாறு, "வாடா சாப்பிடலாம்" என நண்பனை அழைத்துக்கொண்டு உணவு மேசை பக்கம் சென்றான்.

"உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் ருது" என்று வேங்கடமும் உணவு மேசையின் ஒரு இருக்கையில் சென்று அமர, அம்பிகா இமையாள் பக்கம் வந்து நின்றார்.

"நீயும் உட்கார இமையாள். நான் வைக்கிறேன்" என்ற அம்பிகா, உணவினை வைக்க, "நானும்" என்று வந்த ஷிவா, இனியனுக்கு எடுத்து வைத்தாள்.

ஷிவாவின் ஆர்வத்தை கண்டு ருது உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

இனியன் சாப்பிட சாப்பிட, ஷிவா வைத்துக்கொண்டே இருக்க...

"அட போதுங்க. சாப்பிட வச்சே படுக்க வச்சிடுவீங்க போல" என்ற இனியனின் சிரிப்பு நிறைந்த முகம் வேங்கடம் சொல்லியதில் சட்டென்று மாறியது.

"எதிர்பார்க்கவே இல்லை ருது. இவளோட அண்ணனே வந்து பேசினாங்க" என்று மனைவியை காட்டி சொல்லிய வேங்கடம், "அவங்க பையனுக்கு பொண்ணு பார்க்குறாங்க போல. ஷிவாவை கேட்கிறாங்க" என்றார்.

இனியனின் கை வாயருகே சட்டென்று நின்றது.

"எனக்கு இப்போ கல்யாணம் பண்ணலாம் விருப்பமில்லை." இனியனை பார்த்துக்கொண்டே ஷிவா பட்டென்று மொழிந்திருந்தாள்.

திருமணம் என்றதும் ஏற்பட்ட பயத்தில் சொல்கிறாள் என அதனை பெற்றோர் ஏற்கவில்லை.

வேங்கடம், அம்பிகா குடும்பத்தை எதிர்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களின் திருமணம் முடிந்த போது, அம்பிகாவின் அண்ணன் ஆடிய ஆட்டம் விவரிக்க முடியாதது. வேங்கடத்தை வெட்டுவதற்கு அரிவாள் தூக்கிக்கொண்டு வந்தவர். மேலும் பிரச்சினை, உறவுக்குள் சண்டை எதற்கு என்பதற்காகவே இத்தனை வருடம் சொந்த கிராமம் செல்லாது வெளி மாநிலத்திலே இருந்து கொண்டனர்.

வேங்கடத்திற்கு குடும்பம் இல்லை. இத்தனை வருடத்தில் கொஞ்சமாவது மாறியிருப்பார்கள்... அம்பிகாவாவது அவளது குடும்பத்தை பார்க்கட்டுமென நினைத்தே குல தெய்வ வழிப்பாட்டினை காரணம்காட்டி வேங்கடம் மனைவியை அங்கு அழைத்துச் சென்றார்.

இவர்கள் வந்திருப்பது தெரிந்து அம்பிகாவின் அண்ணன் நேரடியாகவே பார்க்க வந்துவிட்டார். முன்பிருந்த கோபம் துளியும் அவரிடமில்லை. அவரும் தங்கையை பல வருடங்கள் கழித்து பார்த்திட, கோபம் மறந்து பாசத்தைக் காட்டிட, இவர்களும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டனர்.

பல கதைகள் பேசிட, எத்தனை பிள்ளைகள் என்ற பேச்சின் போது, "ஒரு பையன், ஒரு பொண்ணு" என்று ருதுவையும் சேர்த்து தான் சொல்லியிருந்தனர்.

பெற்றெடுக்காவிட்டாலும் மனதால் நினைத்துவிட்ட உறவை மாற்றிட முடியாதே!

"பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நாலு வயசில் பையன் இருக்கான்" என்று வேங்கடம் சொல்லிட,

"இப்போதான் ஆறு மாசமா இவனுக்கு பொண்ணு பாக்குறோம். எதுவும் அமைய மாட்டேங்குது" என்று அம்பிகாவின் அண்ணன் மூர்த்தி தன் மகனை காண்பித்து வருத்தமாக சொல்லிட...

"என் பொண்ணு இருக்காண்ணே!" என்று அண்ணன் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்வில் அம்பிகா கூறிவிட்டார்.

"நானும் நீ சொன்னதும் கேட்கலாம் நினைச்சேன்" என்று மூர்த்தியும் சொல்ல, அவர்களின் சந்தோஷத்திற்கு நடுவில் தானென்ன சொல்வதென வேங்கடமும் சம்மதம் தெரிவித்தார்.

"அடுத்த வாரம் வரன்னு சொல்லியிருக்காங்க ருது." அம்பிகா அத்தனை சந்தோஷமாகக் கூறினார்.

அதிர்வில் ஒருவரையொருவர் பார்த்திருந்த இனியன் மற்றும் ஷிவாவை ஒருங்கே பார்த்த ருது, தன் தட்டில் உணவு வைக்க முயன்ற இமையாளை தடுத்து...

"வேணுன்னா கேட்டிருப்பனே இமயா" என்றவனாக கை கழுவ எழுந்திட்டான்.

ருது சொல்லிச்சென்ற பொருள் இருவருக்கும் விளங்கவே செய்தது.

"என்னடா ஒண்ணுமே சொல்லல?" திரும்பி வந்த ருதுவிடம் வேங்கடம் கேட்டிட...

"லவ் மேரேஜ் பண்ண உங்களுக்கே ஷிவாவோட விருப்பத்தைக் கேட்கணும் தோணலையே! நான் என்ன சொல்றது?" எனக் கேட்டிருந்தான்.

"டேய்..."

"கேட்கலை தானே நீங்க? அவளோட கல்யாணம். அவகிட்ட கேட்காமல் முடிவு சொல்வீங்களா நீங்க?"

வேங்கடம் மற்றும் அம்பிகா பதில் சொல்லிட முடியாது கேள்வி கேட்டிருந்தான்.

"இப்போகூட அவள் வேண்டாம் சொன்னதை நீங்க கண்டுக்கவே இல்லையே?" என்றான். குறையாக.

"ஏதோ பயத்தில் சொல்லியிருப்பாள்", அம்பிகா.

"அதெல்லாம் இல்லை. என் மச்சான் மாப்பிள்ளைன்னு சொல்லிப் பாருங்க... உடனே மண்டையை சரின்னு ஆட்டுவாள்" என்று பேச்சுவாக்கில் ருது ஷிவாவின் காதலை போட்டுடைக்க, ஷிவாவை தவிர்த்து அனைவரும் அவனை அதிர்வாய் எறிட்டனர்.

மெல்ல ருதுவின் பக்கம் சரிந்த இமையாள்...

"ஷிவா இனியாண்ணாவை லவ் பன்றாளா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்..."

"அச்சோ... அண்ணா வேற பொண்ணை லவ் பன்றார்" என்றாள் இமையாள். கூடிய அதிர்வில்.

"அவன் சொன்னானா?"

"ஆமாங்க... அவங்க ஜூனியர்" என்று இழுத்த இமையாள் ஏதோ புரிவதாய், "ஆமாவா?" என்றிட ருது இமை மூடி திறந்தான்.

"என்ன ஷிவா இது?" அம்பிகா கோபமாகக் கேட்டிட,

"அத்தை ப்ளீஸ்" என்ற இனியன், "எனக்கு ஷிவாவை பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னை பிடிக்கும் தெரியும். ஸ்டடிஸ் முடியட்டும் வெயிட் பண்ணேன். இப்படியொரு சிட்டுவேஷன் எதிர்பார்க்கல. மிஸ் பண்ணக்கூடாது நினைக்கிறேன். ஆனால் உங்க விருப்பத்தோடு தான் அவள் எனக்கு வேணும்" என்றிட, ருதுவிடம் விசில் சத்தம்.

"அடங்கமாட்டிங்களா நீங்க?" இமையாள் ருதுவின் தொடையில் தட்டிட, "ஷிவா இப்போ நீதான் சொல்லணும்" என்றான் ருது.

"எப்போ எப்படின்னு தெரியலப்பா. அவங்க தான் எனக்குன்னு மனசுல ஆசையை வளத்துக்கிட்டேன். விட முடியாதுப்பா" என்றாள் ஷிவா. ருது பார்வையால் கொடுத்த தைரியத்தில்.

வேங்கடம் மற்றும் அம்பிகாவிடம் அமைதி.

இனியனின் அலைப்பேசி ஒலித்தது.

"இதோ வரே(ன்)ம்மா. இப்போ கிளம்பிடுவேன்" என்று தாமதமாகிவிட்டதென அழைத்த தீபாவிற்கு பதில் சொல்லி வைத்திட்ட இனியன்,

"நான் கிளம்புறேன் மாமா. நாளைக்கு வீட்டுக்கு கட்டாயம் வந்திடணும்" என்றவன், "இது வேற அது வேற. உங்க விருப்பம் தான். போயிட்டுவறேன்" என தங்கையிடம் தலையசைத்தவன், ஷிவாவிடம் பார்வையால் விடைபெற்றான்.

வெளி கேட் வரை இனியனுடன் வந்த ருது...

"அப்புறம் மச்சான். லவ்வெல்லாம் பண்றீங்க... ட்ரீட் கிடையாதா?" எனக் கேட்டு வம்பு செய்தான்.

"இப்படியாடா போட்டு உடைப்ப. நான் அப்பாவை வைத்து பேசியிருப்பேன். இப்போ இவங்க என்னை என்ன நினைச்சாங்களோ போ!" என்ற இனியன் ருதுவின் முதுகிலே குத்தினான்.

"உன் சுருங்கிப்போன மூஞ்சியை எம்புட்டு நேரம் பாக்குறது. எப்படியும் சொல்லித்தானே ஆகணும்" என்று கண்சிமிட்டிய ருதுவை அணைத்து விடுத்த இனியன் கிளம்பிய பின்னர், ருது உள்ளே வரும் வரை மாற்றமில்லாது இருந்தனர்.

ஷிவா, இமையாள் இருவரையும் பார்வையால் தத்தம் அறைக்கு செல்லுமாறு அனுப்பியவன், தாய், தந்தை முன்பு வந்து அமர்ந்தான்.

"என்ன ஓடுது?" எனக் கேட்டான். அவர்களின் அமைதியில்.

"வெல், நானே கேட்கிறேன். என் தங்கச்சியை என் பொண்டாட்டியோட அண்ணனுக்கு கட்டி கொடுக்க சம்மதமா?" என்றவன், "என் மச்சானுக்கு நான் கியாரண்டி" என்றான்.

அவர்களுக்கும் இனியனை நன்கு தெரியுமே. மறுக்க ஒன்றுமிருந்திருக்காது. வெட்டிச்சென்ற உறவு இணையாமல் இருந்திருந்தால்.

"இருபது வருஷமாச்சு கண்ணா. இப்போ தான் சேரணும் இருந்திருக்கு. ஷிவாவால திரும்ப பிரிவு வருமோன்னு தோணுது" என்றார் அம்பிகா. பெற்ற வீட்டின் உறவை மீண்டும் இழந்திடக் கூடாது என்கிற தவிப்பு அம்பிகாவிடம்.

"வேற?"

"என்னடா? அங்கப்போன எங்களை அவங்க முறைச்சிட்டே இருந்திருந்தாலும் பரவாயில்லை. சம்மந்தம் வரை பேசிட்டு இப்போ எப்படிடா?" என்றார் வேங்கடம்.

"ஓகே வெல். வேலிட் பாயிண்ட்" என்ற ருது, "அம்மா வீட்டுல உங்க லவ் அக்செப்ட் பண்ணாதப்போ, அம்மா உங்க வாழ்க்கையில இல்லைன்னு ஒரு நொடி நினைச்சிருப்பீங்க தானே? அந்த வலி தெரியும்ல உங்களுக்கு?" என்றவன், 'அதே வலியை உங்கபொண்ணுக்கும் தரப்போறீங்களா?' எனக் கேட்காமலே புரிய வைத்திருந்தான்.

"உறவுங்கிறது எதிர்பார்ப்போடு வரக்கூடாது. அவங்களா எல்லாம் மறந்து வந்து பேசுனதா சொன்னீங்களே! அப்போ ஷிவாவோட விருப்பத்தையும் சொல்லுங்க... புரிஞ்சிப்பாங்க. நீங்க அவங்க வேணும் நினைக்கிற மாதிரி அவங்களும் நினைத்தால் கண்டிப்பா அக்செப்ட் பண்ணிப்பாங்க" என்றவன், "உங்க பொண்ணுக்கு உங்களவு தைரியம் கிடையாதும்மா" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.

செல்லும் ருதுவை இருவரும் குழம்பிய மனநிலையில் பார்த்திருந்தனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 37

InShot_20240901_192058947.jpg


நன்கு புலர்ந்த பின் அதிகாலை...

இமையாள் மாடியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

சத்தமில்லாது வந்த ருது, அவளின் முதுகை தீண்டியும் தீண்டிடாத நெருக்கத்தில் சென்று நிற்க...

"வந்துட்டிங்களா?" எனக் கேட்டு திரும்பிய இமையாள், "உங்களுக்குதான் வெயிட் பண்ணேன்" என்றாள்.

"என்ன அதிசயம் லேஷஸ் ருதுவை தேடியிருக்காங்க" என்று அவளை மேலும் ருது நெருங்கிட, அவனது மார்பில் ஒரு விரல் வைத்து நிறுத்தியிருந்தாள்.

"ச்சூ... மொட்டை மாடியில் இருக்கோம்" என்று இமையாள் பார்வையை சுழற்றிக் காட்டிட,

"அதுக்கென்ன... நீ என் பொண்டாட்டிடி, என்னவோ கள்**கா**'யை பிடிச்சு இழுக்குற மாதிரி சொல்ற" என்றவனின் வாய் மீதே அடித்தவள், "வாய்... வாய்" என்றவள், "வாங்க" என செடிகளுக்கு மற்றைய பக்கமிருந்த துணி துவைக்கும் கல்லின் அருகில் அழைத்துச் சென்றாள்.

அங்கு வாலி நிறைய துணிகள் ஊறிக் கொண்டிருந்தது.

"ஹேய்... இவ்வளவு துணி இப்போ வாஷ் பண்ணப்போறியா என்ன?" எனக் கேட்ட ருது, "அல்ரெடி இனியா கால் பண்ணிட்டான். எப்போ கிளம்புறீங்கன்னு கேட்டு. அதுக்குதான் உன்னைத்தேடி வந்தேன்" என்றான்.

"வொர்க் அவுட் முடிச்சிட்டிங்களா?"

"இனிதான்."

"அதுக்கு தான் இது" என்று துணிகளை காண்பித்த இமையாள், "துவைச்சு காய வச்சிட்டு வாங்க. வொர்க் அவுட்டே தேவைப்படாது" என்றாள்.

அவள் சொல்ல சொல்ல ருதுவின் முகம் காட்டிய பாவனையில் பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.

"ஆர் யூ சீரியஸ்?" என்ற ருது, "வாஷிங் மெஷினில் போடலாமே!" என்றான்.

"எல்லாம் என்னோட சாரீஸ். மெஷின் வாஷ் ஒத்து வராது" என்று அவள் முடிக்கும் முன்பு, ஊறிக்கொண்டிருந்த புடவை ஒன்றை கையில் எடுத்து தேய்க்க ஆரம்பித்திருந்தான் ருத்விக்.

"ச்சோ... ச்சுவீட்" என்று காற்றில் அவனது கன்னம் கிள்ளியவள், அருகில் சென்று அவனது முதுகில் கை வைத்து குனிந்தவளாக, மறு கையால் அவனது கன்னத்தை பிடித்து திருப்பி அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

"லேஷஸ்" என்றவனின் கண்கள் அகல விரிந்தது. அவளாகக் கொடுக்கிறாள். தேகம் எல்லாம் சில்லென்று தீ மூண்டது.

மீண்டும் அவள் முத்தம் கொடுத்திட...

"டெம்ப்ட் பண்ணாதடி" என்றவன் அவளை இடையோடு தூக்கி அருகிலிருந்த துணி வைக்கும் மேடையில் அமர வைத்தான்.

"டெம்ப்ட் ஆகலையா?"

"எங்க வச்சு கேட்கிற நீ?" என்றவன் அவளின் கன்னத்தை கொத்தாக பிடித்து எடுத்து தன் உதட்டில் கையை ஒற்றிக்கொண்டான்.

"சார்..."

திடிரென ஒலித்த குரலில் ருது சுற்றிலும் திரும்பி யாரென்று பார்க்க, அவர்களது வீட்டுக்கு பின்னாலிருக்கும் மாடியிலிருந்து குரல் வந்தது.

கிருஷ்ணன் தான் நின்றிருந்தார்.

"நல்லவேளை வெங்கட் கண்ணுல படல" என்று ஈ என்று சிரித்தபடி ருது சொல்லிட, இமையாளிடம் சத்தமான சிரிப்பு.

"என்ன சார் நீங்க?" என்று கிருஷ்ணன் அவனது கையிலிருந்த புடவையை பார்த்து கேட்டிட,

"ஊருக்கே கேஷூவா இருந்தாலும் பொண்டாட்டிக்கு..."

"புரியுது சார்."

ருது முடிக்கும் முன் அவர் சொல்லியிருந்தார்.

"நீங்க பண்ணது இல்லையா கிருஷ்ணன்?"

"கீழ கூப்பிடுறாங்க சார். நான் போயிட்டேன்" என்று கிருஷ்ணன் வேகமாக நகர்ந்ததில்,

"அவருக்கு நிறைய அனுபவம் போல" என்று சிரித்த ருதுவின் முகத்தையே இமைக்காது ரசித்து பார்த்தாள் இமையாள்.

"என்னவாம் என் பொண்டாட்டிக்கு?" என்றவனின் கைகள் துணியை துவைத்துக் கொண்டிருந்தது.

"என் புருஷன். நான் பார்ப்பேன்" என்று பக்கம் வந்தவள், "இப்படி கிஸ் பண்ணவும் செய்வேன்" என்று அழுத்தமாக இதழொற்றினாள்.

"ரூமுக்கு போயிடலாமா?" ருது சுற்றுபுறத்தைக் காட்டி ஹஸ்கி குரலில் கேட்டிட, "முதலில் வேலையை பாருங்க" என்றாள்.

"ம்க்கும்... அதானே! என் பொண்டாட்டிக்கு ரொமான்ஸ் வந்துட்டாலும்" என்று முனகி வேலையில் கவனமானான்.

"நீங்க அலசி கொடுங்க நான் கொடியில் போடுறேன்" என்றவளை நோக்கி சோப்பின் நுரையை ஊதினான். அது அவளின் கன்னத்தில் சென்று ஒட்டியது.

அவள் அதனை எடுத்து காற்றில் ஊதிட அலை அலையாய் மிதந்தது. அவர்களின் சந்தோஷமும் விண்ணை முட்டுமளவு, காதலில் நேச விதையாய் விருச்சம் கொண்டதும்.

"டார்லிங்..." என அப்போது வந்த ஷிவா, "டிசி சாரா இது?" எனக் கேட்டாள்.

"நானே தான்" என்ற ருது, "குவார்ட்டர்ஸில் வேற யாரும் பார்க்கணுமான்னு மைக் வச்சு கேளு" என்றான்.

"ம்ப்ச்... நான் இதை கேட்கலண்ணா" என்று அவன் துணி துவைப்பதை சொல்லியவள், "இதை சொன்னேன்" என தன் அலைப்பேசியை ஆட்டி காண்பித்தாள்.

"போட்டோ எடுத்தியா?"

"ம்ம்ம்... உங்களுக்குள்ள இப்படியொரு காதல் மன்னனை நினைத்து பார்த்ததே இல்லை. எப்பவும் விறைப்பா பார்த்தே பழகிப்போச்சு. இன்னுக்கு தான் கண்ணுக்கு குளிர்ச்சியா" என்று ஷிவா சொல்ல,

"ஹேய் நீ அப்படி என்ன எடுத்த?" என்று அவளின் கையிலிருந்த அலைபேசியை எட்டி பறித்தான்.

இருவரும் சோப்பு நுரை வைத்து விளையாடிய காட்சி திரையில் அழகோவியமாய்.

ருதுவின் இதழ் நீண்டு விரிந்தது.

"டேய் ருது..." வேங்கடத்தின் குரல்.

"இப்போ என்ன? பொண்டாட்டிக்கு துணி துவைச்சு கொடுக்கக்கூடாதா?" என்று நிமிர்ந்தவன், வேங்கடத்துடன், சுரேந்தரும் நின்றிருக்க...

"வாங்க மாமா" என்றான். எவ்வித அசட்டு பாவனையும் அவனிடமில்லை. என் மனைவிக்கு நான் செய்கிறேன். யார் பார்த்தால் என்ன என்று இயல்பு பொருந்திய தன்மை அவனிடம்.

"அச்சோ ருது எழுந்திரிங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று இமையாள் அவனை எழுப்பிட முயல,

"லேஷஸ்" என்ற அவனின் அந்த குரலில் அவள் யாரையும் பார்த்திட முடியாது கணவனின் பின்னால் ஒளிந்தாள்.

"இனியன் போன் பண்ணப்பவே அரை மணியில் கிளம்பிடுவோம் சொன்னீங்களாம். ரெண்டு மணி நேரமாச்சு. போன் பண்ணோம். எடுக்கல. சரி நேரில் வந்தே கூட்டிட்டு போயிடலான்னு வந்துட்டேன்" என்று சுரேந்தர் விளக்கம் கொடுத்தார்.

மகள் ருதுவை நேசித்திருந்தாலும், அவர்கள் திருமணம் நடந்த முறையால், மகள் வாழ்வு எப்படி செல்லுமோ என்று மனதின் ஓரம் சிறு அச்சத்தோடு இருந்த சுரேந்தருக்கு கண்ட காட்சியில் நெஞ்சம் நிறைந்து போனது. தேவையில்லாது உள்ளுக்குள்ளிருந்த பயமும் விலகியிருந்தது.

"சரிங்க மாமா" என்ற ருது, "கீழ கூட்டிட்டு போங்கப்பா. வந்திடுறோம்" என்றான் வேங்கடத்திடம்.

சுரேந்தர் இமையாளின் சிவந்த முகத்தில் நிறைந்திருந்த புன்னகையை பார்த்தவாறு படிகளில் இறங்கிட,

"பக்கா ஹஸ்பெண்ட் மெட்டிரியலா மாறிட்டடா" என்று மகனை கேலி செய்த வேங்கடம்,

"அடிங்க..." என்று ருது எழுந்ததில் வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்.

"உனக்கு தனியா சொல்லணுமா?"

இன்னமும் தங்களை பார்த்தபடி நின்றிருந்த ஷிவாவை, அலசிய துணிகளை கொடிகளில் போட்டவனாக ருது கேட்டிட,

"அண்ணி வீட்டுக்கு நானுமாண்ணா?" எனக் கேட்டிருந்தாள் ஷிவா.

"ஏன் வரலையா நீ?", ருது.

"அப்பா, அம்மா எதுவும் சொல்லலையே?"

"அவங்க என்ன சொல்றது. நான் சொன்னா போதாதா? அத்தை, மாமாகிட்ட பேசிட்டு நாள் குறிச்சிட்டே வந்திடலாம். ஓடு... கிளம்பு" என விரட்டினான்.

"தேன்க் யூ டார்லிங்" என துள்ளலோடு ஷிவா ஓடிட,

"போட்டோ சென்ட் பண்ணிடு ஷிவா" என்றான் ருது.

"அல்ரெடி பண்ணிட்டேன்" என்றவள் பார்வையிலிருந்து மறைந்திருந்தாள்.

"லவ் யூ ருது."

திருமணம் ஆகிய கணம் முதல் என் மனைவி என எவ்வித ஈகோவும் பாராது, அவன் நடந்து கொள்வதில் இமையாளுக்கு அவன் மீது நாளுக்கு நாள் காதல் ஊற்று கூடியது.

"சரியா கேட்கல லேஷஸ். பக்கம் வந்து சொல்லு" என்றான்.

"உங்களுக்கு கேட்டுச்சு."

"திரும்ப சொல்லக்கூடாதா?" என்றவன், "மேடம்க்கு இன்னைக்கு தான் பழைய காதலை காட்டவே மனசு வந்திருக்கு. அதிலென்ன உனக்கு வஞ்சனை. நல்லாவே காட்டலாமே" என்று, தனக்கும், தான் உலர்த்தும் புடவைக்கும் எதிரில் நின்றவளை பிடித்து இழுத்தான்.

இருவருக்கும் இடையில் ஈரம் படர்ந்த புடவை.

சுற்றி வளைத்து இடையோடு அணைத்தவன், உதட்டில் இதழ் பதித்து சடுதியில் விலகியிருந்தான்.

"யூ..." என்று இமையாள் தன் முகம் சுற்றிய புடவையை விலக்க, அவளின் கன்னம் தாங்கி நெற்றி முட்டியவன்,

"சாரி அண்ட் தேன்க்ஸ் லேஷஸ்" என்றிருந்தான். குரலில் தழுதழுப்பு. அவனது விழிகள் கலங்கியிருந்தது.

"ருது." அவளது வாய் மீது தன்னுடைய நான்கு விரல்களை அழுத்தமாக வைத்து எதுவும் பேசாதே எனும் விதமாக தலையசைத்தவன்...

"என்னோட நீ... இந்த சந்தோஷம், மனசு முழுக்க" என்று தன்னுடைய நெஞ்சத்தை அழுத்தி நீவியவன், "மூச்சு முட்டுதுடி. ரீசன் நீதான். என் பக்கம் நிறைய தப்பு இருக்கு. உனக்கு எந்த இடத்திலும் நான் நியாயம் செய்யவே இல்லை. உனக்கு என் மேல இருந்த நம்பிக்கையை உன் மேல தேஷ் விஷயத்தில் நான் வைக்க தவறிட்டேன். அந்த தவறால நான் உன்னை இழக்க இருந்தேன். எவ்ளோ பெரிய முட்டாள் தனம்" என்றவன், "என்னோட சின்ன சின்ன சந்தோஷமும் நீ தான்டி" என்றான்.

"ருது..."

"என்னை ஏன் டி இவ்ளோ லவ் பன்ற?" எனக் கேட்டவன், "சாரிடி எல்லாத்துக்கும்... அண்ட் தேன்க்ஸ் எதையுமே எதிர்பார்க்காம என்னை எனக்காகவே ஏத்துகிட்டதுக்கு. எல்லாம் தெரிஞ்சும் என் தப்பை பத்தி எதையுமே இந்த நொடி வரை கேட்காம இருப்பதுக்கு" என்றான்.

"டிசி சாருக்கு கண்ணுலாம் வேர்க்குது" என்று அவனின் மனதை மாற்றும் வகையில் பேச்சை ஆரம்பித்தவள், ருதுவின் விழிகளை துடைத்து, "நான் இவ்ளோ லவ் பண்றன்னா... என் ருது என்னை எவ்ளோ லவ் பண்ணியிருக்கணும், இப்பவும் பண்ணனும்" என்றாள் அவனின் கன்னத்தில் தனது உள்ளங்கை வைத்து.

"போடி..." என்று கட்டிக்கொண்டவன், "நமக்காக எல்லாரும் வெயிட்டிங்" என்று கீழ் வந்தனர்.

இருவரும் கிளம்பித் தயாராகி கூடத்திற்கு வர,

"என்ன டார்லிங் ரொமான்ஸ் பலமோ?" என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டாள் ஷிவா.

"அடங்கமாட்டியா நீ?" என்று அவளின் தலையில் கொட்டியவன், "கிளம்பலாமா?" என அம்பிகாவிடம் கேட்டான்.

"ஷிவா வேண்டாம்" என்று எழுந்த அம்பிகா, "நாம மட்டும் போய் வருவோம்" என்றார்.

"இப்போ என்ன உங்களுக்கு?" ருது சற்று உரக்கக் கேட்டிட, "என்னங்க!" என்று அவனது கையினை பிடித்திருந்தாள் இமையாள்.

"என்னடா சவுண்ட். கல்யாணம் பேசும்போது பொண்ணையும் கூட்டிட்டு போவாங்களா?" என அம்பிகாவும் சத்தமாகக் கேட்டார்.

"என்ன சொல்றீங்க?", ருது.

"மட்டன்ல மல்லி இல்லைன்னு சொல்றாங்க" என்ற அம்பிகா, "எங்களுக்கு சம்மதம். நைட்டே உன் அப்பா, இமையாள் அப்பாகிட்ட பேசிட்டார். இப்போ கலந்து பேசி கல்யாணத்துக்கு தேதி குறிப்போம்" என்றார் அம்பிகா. மகனை முறைத்துக் கொண்டே.

"அம்மா..." ஷிவா ஓடிவந்து அன்னையைக் கட்டிக்கொள்ள...

"சொல்லவே இல்லை" என அவரின் கன்னத்தில் இடித்தான் ருது.

"அதான் இப்போ சொல்லியாச்சே! கிளம்பலாமே! அங்க செய்து வச்சதெல்லாம உயிரோட எழுந்து வந்திடப்போகுது" என்றார் வேங்கடம்.

"உங்க அண்ணா?" வண்டியில் செல்லும்போது ருது கேட்டிட,

"அவரும் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டார் ருது. என் தங்கையோட உறவு கிடைச்சதே போதும் சொல்லிட்டார்" என்றார் அம்பிகா. மன நிறைவோடு.

"வாவ்... நைஸ்."

சுரேந்தர் வீடு வந்ததும், அன்றைய பொழுது அத்தனை சந்தோஷமாக கழிந்தது.

தேஷ் அனைவரையும் அவ்வளவு கலகலப்பாக வைத்திருந்தான்.

அவனை கொண்டு தான் ருதுவின் வாழ்வு இயங்கியது. தற்போது அவனவள் இயக்கிக் கொண்டிருக்கிறாள்.

கிளம்பும் நேரம் தான் திருமணப் பேச்சினை துவங்கினர்.

"அடுத்த மாதம் நிச்சயம் வச்சுக்கிட்டு, அடுத்து வர முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சிக்கலாம்" என வேங்கடம் சொல்லிட, "எங்களுக்கும் சம்மந்தம் சம்மந்தி" என்றார் சுரேந்தர்.

தீபாவும், அம்பிகாவும் மிக நெருக்கமாகியிருந்தனர்.

"அப்போ தேதி பார்க்கலாம்" என அம்பிகா சொல்ல...

"குறுக்க பேசறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்" என்று இடையிட்டான் இனியன்.

"என்னடா... கல்யாணத்தை நாளைக்கே வைக்கணுமா?" எனக் கேட்டு கிண்டல் செய்தான் ருது.

"நீங்க சும்மாவே இருக்கமாட்டிங்களா?" என்ற இமையாள், "அண்ணா ஏதோ சொல்ல நினைக்கிறாங்க" என்றாள்.

"என்னப்பா?" என்று சுரேந்தர் கேட்டிட,

"ஷிவா படிப்பு முடியட்டும். மேரேஜ் அப்போ வச்சிக்கலாம்" என்றான். எவ்வித பூசலுமின்றி, நேரடியாக.

"ஷிவா இவனை கொல்லப்போறாள்" என்று இமையாளிடம் முணுமுணுத்தான் ருது.

"ஏன் மாப்பிள்ளை?" என்ற அம்பிகா, "பொண்ணுக்கு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சால் சூட்டோடு முடிக்கணும் சொல்லுவாங்க. ரெண்டு குடும்பத்துக்கும் சம்மதம். ஏன் தடையா தள்ளி வைக்கணும்?" எனக் கேட்டார்.

"அச்சோ அத்தை நான் தடையா சொல்லல... படிக்கிறாள். மேரேஜ் பிரஷர் இல்லாமல் ஃப்ரியா படிக்கட்டுமே! அவள் படிப்புக்காகத்தான் காதலை கூட சொல்லாமல் இருந்தேன். யாருமே பண்ணிக்கலையா கேட்கலாம் நீங்க? எனக்கு ஏனோ ஒப்பல. அதுவும் இப்போ தானே அவளுக்கு ட்வென்டி. படிப்பு முடிய ட்வென்டி டூ முடியும். டூ இயர்ஸ் தானே!" என்றான்.

"மச்சான் பாயிண்ட் வேலிட்."

அனைவரும் ருதுவின் முகத்தை தான் பார்த்தனர்.

ஏற்கனவே இனியன் இதுகுறித்து ருதுவிடம் பேசியிருந்தான். ருது இதனை சொல்வதைவிட, இனியன் சொல்வதே சரியாக இருக்குமென "நீயே சொல்லு" என்றிருந்தான். இப்போது சொல்லியும் விட்டான்.

"உங்களுக்கு அண்ணா இதைத்தான் பேசப்போறாங்கன்னு முன்னவே தெரியுமா?" எனக் கேட்டாள் இமையாள், ருதுவிடம்.

"ஹ்ம்ம்... லன்ச் முடிச்சதும் சொன்னான்."

"அப்போ தெரிஞ்சிகிட்ட கிண்டல் பண்ணியிருக்கீங்க?"

"ஜஸ்ட் ஃபன்." ருது கண் சிமிட்டிட, அவனின் இடையிலே கை முட்டியால் இடித்திருந்தாள் இமையாள்.

"என்ன ஆளாளுக்கு சைலண்ட்டா இருக்கீங்க" என்ற ருது, "இனியனோட கருத்து தான் எனக்கும். அதுவரை அவங்க லவ் பண்ணிக்கட்டும், நானும் தேஷ் குட்டிக்கு தம்பி, பாப்பா ரெடி பண்ணிடுறேன்" என ருது இமையாளை பார்க்க, அவளோ அனைவரின் புன்னகையில் அவனை முறைத்து வைத்தாள்.

"சரி என் பொண்டாட்டி வெட்கப்படுறாள். அதை அப்புறம் பேசுவோம்" என்றவன், "இப்போ தான் பரபரப்பு அடங்கி லைஃப் ஸ்மூத் ஆகியிருக்கு. ஷிவா ஸ்டடிஸ் முடிக்கட்டும், டூ இயர்ஸ் அப்புறம், ஃபிரியா ஜாலியா மேரேஜ் பண்ணுவோம்" என்றான்.

"வைய் சைலண்ட்... பதில் சொல்லுங்கப்பா?"

"அடங்குடா நீ" என்று அவனின் தோளில் கைப்போட்ட இனியன், "எல்லாருக்கும் ஓகே தானே?" என்றான்.

"பெரியவங்களை விட இந்தகாலத்து பசங்க எல்லாத்திலும் தெளிவா முடிவெடுக்குறிங்க. இதில் நாங்க சொல்ல என்ன இருக்கு. அவள் படிப்பு முடிய, நிதானமாவே செய்வோம்" என பெரியவர்களும் இனியனின் கூற்றை ஒப்புக்கொண்டனர்.

அகம் கூடிய மகிழ்வோடு அங்கிருந்து கிளம்பினர்.

கிளம்புவதற்கு முன்பு வழியனுப்ப வாயில்வரை உடன் வந்த இனியனிடம், "ஷிவா அடிச்சலும் வாங்கிக்கோ மச்சான்" என்றிருந்தான் ருது. அவனது முகத்தில் விரிந்திருந்த புன்னகையை ஆதுரமாக ரசித்து பார்த்தான் இனியன்.

"சைட் அடிச்சது போதும்டா" என்று இனியன், வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் அமர,

"என்னண்ணா அப்படி பாக்குற?" என்று இனியனின் தோளில் கையில் வைத்தாள் இமையாள்.

"அவன் முகத்துல இந்த சிரிப்பு எப்பவும் இருக்கணும் இமயா. நிறைய அனுபவிச்சிட்டான். பார்த்துக்கோடா" என்று தங்கைக்கு விடை கொடுத்தான்.

ருது பாதி வழி வந்து கொண்டிருக்கும்போதே, காவல் நிலையத்திலிருந்து அழைப்பு என, அப்படியே சென்றுவிட்டான்.

இமையாள், பெரியவர்கள் மற்றும் தேஷ்ஷுடன் வீடு வந்த போது, கூடத்தில் அமர்ந்திருந்த பெண்ணை யாரென்று ஷிவாவை யோசனையாக பார்த்து நின்றனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 38

வந்திருக்கும் பெண் யாரென்று வேங்கடம், அம்பிகாவிற்கும் தெரியவில்லை.

ஷிவா இருக்கும்போது கூடத்து வரை வந்து அமர்ந்திருக்கிறாள் என்றால், ஷிவாவின் தோழியோ என நினைத்து அவளை ஏறிட்டாலும், வயது வித்தியாசம் அப்படியில்லை எனக் காட்டியது.

"நீங்க?" இமையாள் தான் அனைவரின் யோசனையையும் கவனித்து, பெரியவர்களுக்கும் வந்திருக்கும் பெண் யாரென்று தெரிந்திருக்கவில்லையென, தானே கேட்டிருந்தாள்.

"அண்ணாவை பார்க்கணும் சொன்னாங்க அண்ணி. எதாவது பிராப்ளம் அப்படின்னா ஸ்டேஷன் போங்க, அண்ணா வீட்டில் இல்லை சொல்லிட்டேன். பெர்சனல், வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன்னு சொன்னாங்க" என்று ஷிவா விளக்கம் கொடுத்தாள்.

வந்த பெண்ணின் பார்வை தேஷ்ஷின் மீது தான் இருந்தது. அவள் வேறு யாரையும் பார்க்கவில்லை. தேஷ் இமையாளின் தோளிலே உறங்கியிருந்தான்.

அப்பெண்ணின் பார்வை தேஷ் மீதே இருக்க, இமையாளுக்கு மனதில் நெருடல்.

"உன் ரூமில் படுக்க வை ஷிவா. நீயும் அவனோடவே இரு" என்று தேஷ்ஷை ஷிவாவிடம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

"யாரும்மா நீங்க? எதாவது சொன்னால் தான் எங்களுக்குத் தெரியும்?" என்ற வேங்கடம், அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தார்.

"நான் ருதுவோட அக்கா ரூபிணி."

அவள் சொல்லியதும், 'கடந்த காலத்தில் அப்படி பேசிச் சென்றவள், இன்று எதற்கு தம்பி என்று உறவுமுறை சொல்லிக்கொண்டு வந்திருக்கிறாள்?' என ஒரு நொடி அவளை சுளிப்பாக நினைத்தனர் தான். அடுத்த கணமே ருதுவின் உடன் பிறந்தவள் என்ற கண்ணோட்டத்தில் இன்முகமாகவே வரவேற்றனர்.

"உங்களை முன்னபின்ன பார்த்தது இல்லையே அதான் அடையாளம் தெரியல அண்ணி" என்று இமையாள் தான் சூழலை சகஜமாக்கியிருந்தாள்.

இமையாளுக்கு ரூபிணி தேஷ்ஷை ஏன் குறுகுறுவென பார்த்தாள் என்று தற்போது விளங்கியது.

"ஷிவா ஏதும் சாப்பிட கொடுத்தாளாம்மா?", அம்பிகா.

"இருக்கட்டுங்க. பரவாயில்லை! ருது எப்போ வருவான்?"

"இப்போ தான் ஸ்டேஷன் போனான். எப்போ வருவான் தெரியலையே!" என்றார் வேங்கடம்.

"ஹோ," என்ற ரூபிணியின் பார்வை இமையாளின் மீது அழுத்தமாக நிலைத்தது.

"ருதுவோட மனைவி."

"கல்யாணம் ஆகிடுச்சா?"

அம்பிகா சொல்லிட, ரூபிணி சற்று அதிர்வாகத்தான் கேட்டிருந்தாள்.

கைலாஷ்ஷின் வழக்கில் ருது பிரபலமாகியிருக்க, எங்கு சென்றானென்றே தெரியாத ருதுவின் நினைவு வந்தது அப்போதுதான். தம்பி என்கிற பாசமா என்றால்? அவள் மட்டுமே அறிந்தது.

ரூபிணிக்கு சிறைச்சாலை சென்று தந்தையை பார்க்கும் எண்ணமில்லை. சென்று பார்ப்பதால் தனக்கு பிரச்சினை வருமோ என்று சுயநலமாகத்தான் அப்போதும் எண்ணினாள்.

அவளுக்கு உறவே வேண்டாமென தான் பேசிச்சென்ற பின்னர் தன் குடும்பத்தில் என்ன நடந்ததென்றெல்லாம் தெரியாது.

துளசி இறந்துவிட்டார் என்பதே, ஓராண்டுக்கு பின்னர், கைலாஷ்ஷை பணத்திற்க்காக நேரில் சந்தித்த போதுதான் தெரியும்.

அப்போதும் கைலாஷ் மகளின் தேவைக்காக பணம் கொடுத்து அனுப்பினாரே தவிர, முந்தைய நிகழ்வு பற்றி எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அவளும் கேட்டுக்கொள்ளவில்லை. ருது எங்கிருக்கிறான் என்று கூட கேட்கவில்லை அவள்.

அப்படிப்பட்டவள் இன்று ருதுவை தேடி வந்திருக்கும் காரணம் தெரிந்தால் அவனின் முடிவு என்னவாக இருக்குமோ?

"எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுறீங்க? கல்யாணம் ஆகிருக்கக்கூடாது நினைச்சீங்களா?" இமையாளின் கூர் கேள்வியில் ரூபிணியிடம் தடுமாற்றம்.

"அப்ப... அப்படிலாம் இல்லை. எனக்குத் தெரியாதே! சோ, சர்ப்ரைஸ்" என்றாள்.

அம்பிகாவும், இமையாளும் ஒருவரையொருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.

ரூபிணி, ருது காவலர்கள் குடியிருப்பில் தான் தங்கியிருக்கிறான் என்பது அறிந்து, அவனது வீடு எதென விசாரித்து இங்கு வர, கதவினை திறந்ததோ ஷிவா.

அப்பெண் யாரென்று தெரியாவிட்டாலும், "ருது?" என்று ரூபிணி கேள்வியாக இழுத்திட... ஷிவா அண்ணா என, குறித்து பேசியதில்... ருதுவிற்கு தெரிந்தவர்களோ என்று தான் வீட்டிற்குள் வந்திருந்தாள்.

ஆனால் வீட்டில் மாட்டியிருந்த புகைப்படங்களும், தற்போது கண் முன்னே நிற்பவர்களும் வேறு கதையை உணர்த்திட வாய்விட்டே கேட்டாள்.

"இவங்க உன்னோட அப்பா, அம்மாவா?", ரூபிணி.

"என் புருஷனோட அப்பா, அம்மா அண்ணி. நீங்க ஏன் ஒரு படபடப்பிலே இருக்கீங்க. ரிலாக்ஸ்டா இருங்க. அவரோட அக்கா நீங்க. இதுவும் உங்க வீடு தான். ஃபீல் ஃபிரி" என்ற இமையாளின் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், ரூபிணுக்கு தலை சுற்றியது.

கண்களை மூடி திறந்த ரூபிணி, 'அவன் வாழ்க்கையில் என்ன வேணா நடந்திருக்கட்டும். வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பிட்டே இரு ரூபி' என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

"அவங்களை இப்போவே பார்க்கணுமா நீங்க?" கேட்ட இமையாளை விலுக்கென நிமிர்ந்து பார்த்த ரூபிணி, "ம்" என மட்டும் கூறினாள்.

"அப்போ நீங்க வெயிட் பண்ணுங்க. இங்கவேன்னாலும் ஓகே தான்" என்ற இமையாள் அம்பிகாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

வேங்கடமும் அவளிடம் தான் என்ன பேச இருக்கிறதென அறைக்குள் புகுந்து கொண்டார்.

"என்னவா இருக்கும் இமையாள்?"

"தெரியலையே அத்தை. ஆனால் என்னவோ பெருசா வரும்ன்னு தோணுது" என்ற இமையாள், "அவங்க பார்வையே உண்மையா தெரியல அத்தை" என்றாள்.

"இப்போ தான் ருது முகத்துல சந்தோஷமே தெரியுது. அதுக்குள்ள அதை கலைக்க இந்த விதி வேலை பார்க்குதே" எனக்கூறி வருத்தப்பட்ட அம்பிகாவை தேற்றி அறைக்கு அனுப்பி வைத்த இமையாள், ரூபிணிக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

ரூபிணி தயங்கிட,

"எடுத்துக்கோங்க" என்ற இமையாள் அவளின் கையிலே கொடுத்தாள்.

"கொஞ்சம் அர்ஜெண்ட். ருது எப்போ வருவான்னு..."

"நான் கால் பண்ணி பார்க்கிறேன். நீங்க குடிங்க" என்று தனது அலைபேசியுடன் தள்ளிச்சென்ற இமையாள் ருதுவிற்கு அழைத்தாள்.

வெங்கட் தான் அழைப்பை ஏற்றிருந்தான்.

"அவங்க எங்கண்ணா?"

"சார்... அண்ணாவுக்கு," என்று வெங்கட் தடுமாறும் போதே, "டேய்... மூச்" என்று ருதுவின் குரல் கேட்டது. வெங்கட்டை சொல்லவிடாது தடுக்கிறான் என்பது புரிந்தது.

"அவங்களுக்கு என்ன?"

அதற்குள் வெங்கட்டிடமிருந்து அலைபேசியை வாங்கியிருந்தான் ருது.

"ஹேய் லேஷஸ் எனக்கென்ன? வீட்டுக்குதான் கிளம்பிட்டேன். கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்" என்று அவளை பேசவே விடாது வைத்திட்டான்.

"யூ... உன்னை யாருடா அட்டெண்ட் பண்ண சொன்னது? இப்போவே எனக்கு என்னவோன்னு கெஸ் பண்ணிட்டாள். வீட்டுக்கு நான் போறவரை தவிச்சிட்டு இருப்பாள். கிளம்பு. வண்டியை கொஞ்சம் வேகமா ஓட்டு" என்று சொல்லிக்கொண்டே அந்த மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்தான் ருது.

வீடு வந்ததும்,

"நீ ஸ்டேஷன் போக வேண்டாம். வீட்டுக்கு போ" என வெங்கட்டை அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவனின் கால்கள் உள்ளே கேட்ட குரல்களில் வாயில் நிலைப்படியிலே நின்றுவிட்டது.

ஷிவா குளியலறையில் இருந்திட, தூங்கி எழுந்த தேஷ், கண்களை கசக்கிக்கொண்டே "அம்மா" என அழைத்தபடி வெளியில் வர, இமையாள் சமையலறையில் வேலையாக இருந்தாள்.

மகனின் குரல் கேட்டு இமையாள் அங்கு வருவதற்குள், ரூபிணி அவனைத் தூக்கி மடியில் வைத்திருந்தாள்.

இமையாளுக்கு தேஷ்ஷை ரூபிணியிடம் விடக்கூடாது என்றில்லை. தெரியாத பெண்ணின் பார்வை புரியாது உள்ளே அனுப்பியிருந்தாள். என்ன இருந்தாலும் தேஷ்ஷுக்கு ரூபிணி ரத்த உறவாயிற்றே!

தேஷ்ஷின் குரலில் அம்பிகா, வேங்கடம் கூட வெளியில் வந்திருந்தனர்.

ரூபிணி தேஷ்ஷை வைத்திருக்க, எதுவும் சொல்லாது இமையாள் கிச்சன் செல்ல திரும்பிட,

"நீங்க யாரு?" என்று தேஷ் ரூபிணியிடம் கேட்டான்.

ரூபிணி, "அக்..." என்று வார்த்தையை முழுமையாக முடிக்கும் முன்னர், "அத்தை... தேஷ் குட்டிக்கு அவங்க அத்தை" என்றிருந்தாள் இமையாள்.

அத்தருணம் தான் ருது வந்திருந்தான்.

ரூபிணியை பார்த்த ருது மகிழவே செய்தான். தமைக்கையல்லவா? எளிதில் பாசம் விட்டுப்போகாதே. மறந்து ஒதுக்க அவனொன்றும் ரூபிணி இல்லையே! தமக்கையை கண்ட நெகிழ்வில் அவன் உறைந்து நின்ற கணம் தான் தேஷ்ஷின் கேள்வியும், இமையாளின் பதிலும் கேட்க நேரிட்டது.

இமையாளின் பதிலில் ருது என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனாலே விவரிக்க முடியாது.

முற்றும் முழுதாய் தங்களின் பிள்ளையாகவே அவள் தேஷ்ஷை நினைக்கிறாள் என்பதற்கு இதைவிட வேறு விளக்கங்கள் வேண்டுமா என்ன?

ஓடிச்சென்று, தன்னுடைய லேஷஸை கட்டிக்கொள்ள மனம் துடித்தாலும் அவனது கால்கள் அசைய மறுத்தன. மொத்தமாய் உணர்வின் பிடியில் அவன். அவை யாவும் மொத்தமாக வடிந்தது ரூபிணி அடுத்து பேசியதில்.

"எதுக்கு மாத்தி சொல்ற நீ?" ரூபிணியிடம் கோபம். தன் பேச்சை தடுத்து இமையாள் மாற்றி சொல்வதில் வந்த கோபம். இயல்பு குணம் என்றும் அத்தனை எளிதில் மாறிவிடுமா என்ன? அதுவும் அவள் ஒருமையில் பேசியதை இமையாளின் மனம் குறிக்கவே செய்தது.

மேலும் ரூபிணி ஏதோ பேசிட வாய் திறக்க... கைக்காட்டி தடுத்த இமையாள், கிச்சன் சென்று அடுப்பினை நிறுத்திவிட்டு வந்து ஷிவாவை அழைத்தாள்.

"குட்டி எழுந்தாச்சா... அத்தை கவனிக்கலையே" என்றபடி வந்த ஷிவா, இமையாளின் முகத்திலிருக்கும் அழுத்தம் கண்டு, "என்னாச்சு அண்ணி?" எனக்கேட்டு புரியாது அம்பிகாவை ஏறிட்டாள்.

"பேபி அம்மாகிட்ட வாங்க" என்று இமையாள் அழைத்ததும், தேஷ் ரூபிணியின் மடியிலிருந்து மின்னலாய் வந்திருந்தான் இமையாளிடம்.

"நியூ கேம் விளையாடனும் கேட்டிங்களே! அம்மா வாங்கி வச்சிருக்கேன். அத்தையை கூட்டிட்டுப்போய் விளையாடுங்க" என்று மேலே தங்கள் அறையை காண்பித்தாள்.

"நான் கூப்பிடும்போது வந்தால் போதும்" என்றாள். ஷிவாவும் சரியென தலையை அசைத்தவளாக ருதுவின் அறைக்கு குழந்தையை கூட்டிச்சென்று விட்டாள்.

ஷிவா கதவினை அடைக்கும் வரை பார்த்திருந்த இமையாள், "இப்போ சொல்லுங்க?" என்றாள் ரூபிணியிடம்.

"என்ன சொல்லணும். ருது வரட்டும்... நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்" என்றாள் ரூபிணி. அவளின் முகத்தில் அத்தனை காட்டம். இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தது அவள் தானா என நினைக்கும் வகையில் இருந்தது அவளது பேச்சு தொனியும், தோற்றமும்.

"அவர் என் புருஷன். என்னத்தாண்டி தான் அவர்கிட்ட நீங்க பேசணும்" என்றாள் இமையாள்.

அம்பிகாவின் புருவம் உயர்ந்தது.

"அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன் அம்பிகா", வேங்கடம்.

"பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகணுங்க" என்ற அம்பிகா, "உங்க புள்ளையே வெளிய நின்னு வேடிக்கைத்தான் பார்க்கிறான். நாமும் பார்ப்போம்" என்றார்.

"வந்துட்டானா?" என்று வெளியில் எட்டிப்பார்த்த வேங்கடம், "அவன் பொண்டாட்டியை சைட் அடிக்கிறான்" என்று நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார்.

"உனக்கு முன்னவே அவன் என் தம்பி."

"அப்படியா?" என்ற இமையாள், "எனக்கிது தெரியாதே" என்றாள் கேலியாக.

"ம்ப்ச்... உன்கிட்ட எனக்கென்ன பேச்சு?" என்ற இமையாள், "அவன் எப்போ வேணா வரட்டும். எனக்கு என் தம்பி வேணும்" என்றாள் ரூபிணி. அவளின் பார்வை தேஷ் சென்ற அறையை உயர்ந்து பார்த்து விலகியது.

"அவங்க வர நேரம் தான். வந்துட்டு இருக்கன்னு சொன்னாங்க" என்றாள் இமையாள். அவளுக்கு ரூபிணி வேறெதற்கோ அடிபோடுகிறாள் என்பது தற்போது விளங்கியது.

"நான் என் தம்பின்னு சொன்னது ருதுவை இல்லை" என்ற ரூபிணி, "அந்த சின்னப்பையனை" என்றாள்.

"இப்போ நீங்க தான் உறவுமுறையை மாத்துறீங்க" என்ற இமையாள், "அவன் என் பையன். அப்படின்னா எனக்கும் ருதுவுக்கும் பிறந்த பையன். உங்க தம்பி ருதுவுக்கு அவன் மகன் அப்படின்னா, உங்களுக்கு அத்தை முறை தானே! அவன் எப்படி தம்பி ஆவான்?" என இமையாள் கேட்டதில், 'இவள் சொல்வது உண்மையாக இருக்குமோ?' என ரூபிணியே நினைக்கத் துவங்கியிருந்தாள்.

"இல்லை நீ பொய் சொல்ற?"

"உங்களுக்கு என்ன தோணுதோ அப்படியே வச்சிக்கோங்க. அதுக்காக என் பையனை உங்களுக்காக உறவு மாத்தி சொல்ல முடியாது" என்ற இமையாளிடம் அதீத நிதானம், அதே சமயம் அழுத்தம்.

அடுத்து என்ன பேசுவதென்று தெரியாது ரூபிணி நிற்க...

"உங்க தம்பி ருது இப்போ வந்திடுவார். அவர்கிட்டவே கேட்டுக்கோங்க" என்று சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

ருது சிறு சிரிப்போடு உள் வந்திருந்தான்.

"வாக்கா!" ருதுவின் முகம் இயல்பாய் வரவேற்றிட, தன்னை கண்டதும் அவனது முகத்தில் வரும் அதிர்வை எதிர்பார்த்து ஏமாந்துப்போனாள் ரூபிணி.

ருதுவின் குரல் கேட்டபோதும் இமையாள் உள்ளவே இருந்தாள். ரூபிணி தன்னிடம் பேசியதை அவனிடம் பேசினால், அவன் என்ன பேசுவானென்று தெரியும். அதனால் அமைதியாக சமைக்கும் வேலையை செய்தாள்.

"இமையாள் தனியா சமைக்குது. நீயும் போ அம்பிகா. இனி ருது பேசிப்பான்" என்ற வேங்கடம், அம்பிகா சமயலறைக்குள் சென்றதும் தானும் தேஷ்ஷை நோக்கி மேலே சென்றுவிட்டார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"எப்போ வந்த? எப்படி இருக்க?" ருது உண்மையான அக்கறையில் தான் அவள் நலன் அறிந்திட வினவினான்.

"ம்க்கும்... ரொம்ப அக்கறை இருக்க மாதிரி காட்டிக்காதே! அப்படியிருந்தால் இங்க வந்ததும் என்னை பார்க்க வந்திருப்ப?" என ரூபிணி முகத்தை வெட்டினாள்.

"நான் வரது உனக்கு பிடிக்காதே!" ருது பட்டென்று சொல்லியிருக்க, ரூபிணியின் முகம் கருத்தது.

"சரி வெட்டிப்பேச்சு வேண்டாம். நான் வந்ததை சொல்றேன்" என்ற ரூபிணி, இமையாளிடம் தயங்கியதை போலெல்லாம் ருதுவிடம் தயக்கம் காட்டவில்லை.

தான் என்ன சொன்னாலும் ருது கேட்டுக்கொள்வான் என்ற எண்ணமோ?

"என்ன சொல்லு?" என்று கேட்ட ருது, ஒரு பேச்சுக்கு கூட நீ எப்படி இருக்கன்னு அவள் கேட்காததை எண்ணி தனக்குள் விரக்தியாக சிரித்துக் கொண்டான்.

"இந்தபொண்ணு எதுக்கோ பெருசா அடி போடுது இமையாள்" என்றார் அம்பிகா. ருது, ரூபிணியின் பேச்சினை கவனித்து.

"அவங்க தேஷ்ஷை கேட்டு வந்திருக்காங்க அத்தை." இமையாள் தேஷ்ஷிற்க்காக வேக வைத்த காயினை மசித்துக்கொண்டே சாதரணமாக சொல்லிட, அம்பிகா தான் அதிர்ந்துபோனார்.

இமையாள் சொல்லியதை உண்மையென காட்டியிருந்தாள் ரூபிணி.

"எனக்கு..." என்று ஆரம்பித்த ரூபிணி, "அம்மாவுக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி பிறந்த பையன் பேரென்ன?" எனக் கேட்டாள்.

"அம்மாவுக்கு நீயும், நானும் மட்டும் தானே க்கா?"

ருது அவளை தன் கேள்வியில் அசரடித்தான்.

"பையன் பிறந்ததா அப்பா சொன்னாரே? அம்மாவும் இறந்து..."

அவளை கைக்காட்டி தடுத்த ருது,

"என் அம்மா உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. அவ்வளவு தான். இப்போ நீ வந்த காரணத்தை மட்டும் சொல்லு?" அதுவரை இல்லாத இறுக்கம், ருதுவிடத்தில் சட்டென்று ஏற்பட்டிருந்தது.

"அப்போ இங்கிருக்க அந்த சின்னப்பையன் யாருடா?"

"என் மகன். என் பொண்டாட்டி தெளிவாத்தானே சொன்னாள்?" என்றான்.

"அப்போ உன் பொண்டாட்டி பேசியதை கேட்டும், நீ வேடிக்கை பார்த்திட்டு நின்னுயா?"

"அவள் சரியா பேசும்போது, நான் அமைதியா தானே இருக்கணும்."

"இங்க பாரு ருது... அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க. ஊருக்கு முன்னாடி அது அசிங்கமாச்சே! எங்களுக்குன்னு வாரிசு இருக்கணுமே! அதான் அந்த பையனை நானே வளர்க்கலான்னு வாங்கிட்டு போக வந்தேன்" என்றாள். எவ்வித அன்பின் உணர்வுமின்றி, தன் நலன் ஒன்றை மட்டுமே எண்ணி ரூபிணி கேட்டிட...

"கெட் அவுட்..." என்று சிம்மமென கர்ஜித்த ருதுவின் கை வாயிலை நோக்கி நீண்டிருந்தது.

ரூபிணி அரண்டு விட்டாள்.

அனைவருமே என்னவோ என்று பதட்டத்தோடு அங்கு வந்துவிட்டனர்.

"என்னடா வெளியில் போக சொல்றியா?"

"ஆமாம்... போ." ருதுவை கை இன்னமும் நீண்டு இருந்தது. அப்போதுதான் அவனது கையில் கட்டினை கவனித்த இமையாள்,

"எப்படி ஆச்சு ருது?" எனக் கேட்டுக்கொண்டு அவனருகில் வர, அவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

"இதை அப்புறம் பார்ப்போம்" என்று இமையாளின் கண்களை துடைத்தவன், "முதலில் இவங்களை அனுப்பிடுவோம்" என்றான்.

இமையாள் சரியென தலை அசைத்தாலும், அவளின் கண்ணில் நீர் பொங்கியது.

"ப்ளீஸ்... கிளம்பு நீ!", ருது ரூபிணியை பார்த்துக் கூறினான்.

"எனக்கும் உரிமை இருக்கு. அப்பா அப்போ என் பையன்னு சொல்லத்தானே இருந்தார்" என்றாள் ரூபிணி.

அவர்கள் பேச்சு தேஷ் குறித்து என்று புரிந்ததுமே ஷிவா தேஷ்ஷை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றாள்.

"அப்பா..." ருதுவின் கையில் கட்டை கண்டு குழந்தை பயந்து அழுதபடி செல்ல...

"அத்தையோட விளையாடிட்டு வாங்க. அப்பாக்கு ஒண்ணுமில்லை" என முயன்று சிரித்தான் ருது.

"ருது...", இமையாள்.

"இருடா... இதை முடிச்சிடுறேன்" என்று ரூபிணியின் பக்கம் திரும்பிய ருது,

"அவன் எங்க மகன். அதை நீ நம்பனும் அவசியம் எங்களுக்கில்லை" என்றான்.

"நான் கோர்ட்டுக்கு போவேன்", ரூபிணி.

"தாராளமா" என்ற ருது, "எனக்கும் என் மனைவிக்கும் பிறந்த மகனை பொய் சொல்லி அபகரிக்க முயற்சிக்கிறாங்கன்னு உன்னை நானே தூக்கி உள்ள வைப்பேன்" என்றான்.

ருது சிறையில் வைப்பேன் என்றதும் ரூபிணி நடுங்கிவிட்டாள்.

"இனி நீ எப்பவுமே இந்த நினைப்போடு இங்க வந்திடக்கூடாது" என்ற ருது, "இல்லை... நீ வரவே வராத. எங்க அம்மாவுக்கு நான் ஒருத்தன் மட்டும் தான் பிள்ளை" என்றான்.

"ஏன்டா ருது இப்டியெல்லாம் பேசற. அவன் உன் மகனாவே இருக்கட்டும். எங்களுக்கு குழந்தைக்கு வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனால் உனக்கு இன்னொரு குழந்தை பிறக்குமே! இவனை எனக்கு கொடுத்திடேன்" என்று வராத கண்ணீரோடு, மனதில் இல்லாத மன்றாடலோடு கேட்டாள்.

"அப்பட்டமா நடிக்காத" என்ற ருதுவிற்கு முன் வந்த இமையாள், "உங்களுக்கு பிள்ளை வேணுன்னா... அப்பா அம்மா இல்லாத எத்தனையோ பிள்ளைங்க இருக்காங்க. அவங்களில் யாரையும் தத்தெடுக்கலாமே! ஒரு குழந்தைக்கு அப்பா, அம்மா கிடைக்குமே! அப்பா, அம்மா உயிரோடு இருக்கும் என் மகனை ஏன் கேட்கிறீங்க?" என்றாள். அத்தனை கோபமாக.

"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா ருது. நான் உன் அக்காடா!" வராத கண்ணீரை புடவையில் துடைத்துக்கொண்டாள்.

"சுயநலத்தோட மொத்த உருவமாதான் என் கண்ணுக்கு தெரியுற. அம்மா இல்லைங்கிறதை கூட சாதாரண செய்திபோல சொன்ன உன்னை என் அக்கவா இந்த செக் நினைக்கத் தோணல. தயவு செய்து போயிடு. அன்னைக்கு நீ பேசியதெல்லாம் சொல்லிக்காட்ட எனக்கு ஒரு நொடி போதும்... ஆனால் தேவையில்லை. எப்படி உன்னால் இப்படி வந்து கேட்க முடியுது" என்ற ருது, "உன்னை நான் பார்க்கிறது இதுதான் கடைசியா இருக்கணும். உன் அப்பாவை மொத்தமா அழிச்ச எனக்கு உன்னை தூக்கி உள்ள வைக்கிறது அவ்வளவு பெரிய விஷயமில்லை" என்றான்.

ருது சொன்னதை செய்துவிடுவானோ என்று மனதில் ஏற்கனவே துவங்கியிருந்த பயம், ருது அதையே மீண்டும் சொல்லிடவும், 'இங்கு வேலைக்காகாது போல. குழந்தை இல்லைன்னா அந்த மனுஷனைத்தானே ஊர் பேசும். பேசிக்கட்டும். எனக்கு என்ன வந்துச்சு? இவன்கிட்டேர்ந்து தப்பிச்சால் போதும்' என மனதில் பல கணக்குகள் போட்ட ரூபிணி

"இன்னைக்கு இவள் பாசத்துல கரையலாம்... நாளைக்கு அவளுக்குன்னு உன் வயித்தில் ஒரு குழந்தை வரும். அப்போ தெரியும் அவனுக்கு இவள் உண்மையாவே அம்மாவா, இல்லையான்னு" என்று இமையாளின் மனதை வலிக்க வார்த்தைகளைக் கொட்டிய ரூபிணி... "அப்போ நினைப்ப அக்கா கேட்டப்போ குழந்தையை கொடுத்திருக்கலான்னு. நீ வருந்துவ. நான் வரேன்" என்று முகத்தை வெட்டிச் சென்றாள்.

"எப்பவுமே வந்திடாத!" ருதுவின் அழுத்தமான குரல் செல்லும் ரூபிணியின் முதுகை துளைத்தது.
 
Status
Not open for further replies.
Top