ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧19

ஓரியன்ட் இன்போ

அந்த புது எம் டி வந்து விட்டார் , அப்படியே அமெரிக்கா வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முகம் நீல நிற கோர்ட்,ஷீட்டுடன் வந்து நின்றார் அனைவர் முன்னும் , அனைவரும் அமைதி ஆகினர்,

"குட் மார்னிங் மைடியர்ஸ், டேக் யுவர் சீட்" , ஐயம் தேவ் ,என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

"ஆஹா , நிஷா ஆளு சூப்பர்ல" என காவியா கூற ,அதை காதில் வாங்கிய விக்ரமோ தலையில் அடித்து கொண்டான், கழுதைகள், திருந்தவே, திருந்ததாது போல் சை என...

"என்ன ப்ரோ,எக்ஸைட் ஆகுறாளுகளா" ரமேஷ்

"ஆமா, ரமேஷ்"

"ப்ரோ, இப்படி தான் முதல்ல எக்ஸைட்மென்ட் ஆவாலுக, அப்புறம் கழுவி கழுவி ஊத்துவாலுக , கேடிபக்கர்ஸ்" என்றான் ரமேஷ்.

"ப்ரோ, அப்படியே சந்தாணம் மாதிரியே பேசுறீங்க ப்ரோ " என விக்ரம் சிரிக்க.

" என்ன ப்ரோ செய்ய , நானும் சிவகார்த்திகேயன் மாதிரி தான் வந்தேன், இவளுக எங்க இருக்க விடுறாளுக" என தன் தலையில் அடித்து கொண்டான் ரமேஷ்.

" எப்படி ப்ரோ இப்படி புட்டு, புட்டு வைக்கிறீங்க, " விக்ரம்

" அட நாங்க ஒண்ணா தான் வேலைக்கு சேர்ந்தோம்" ரமேஷ்

"ஓகோ, அப்போ செம்ம அடி,ஸ்ட்ராங் பவுண்டேசன்ன்னு சொல்லுங்க"
-விக்ரம்

"அதே, அதே "என ரமேஷ் கூற ,

அங்கு அனைவரது அறிமுக படலமும் நடந்தேறியது.

" வெல் ,கைஸ், இவ்வளவு நாள் எப்படி வேலை பார்த்தீங்களோ அதை விட அதிகமாக இன்னும் நம்ம கம்பெனி மேல கவனம் செலுத்துங்க, நான் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் சீ.....யூ......" என தேவ் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அனைவரும் மீட்டாங் ஹாலை விட்டு கடந்து செல்ல, அவன் காவ்யா மீது இடித்து விட்டான்

" அறிவில்லை உனக்கு, கண்ணு தெரியுதா, இல்லையா ,எரும மாடு மாதிரி மேல வந்து இடிக்க " என ஆவேசமாக திட்டி விட்டு சென்று விட்டாள் காவ்யா.

"போடி , போ எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவு ஆடு ஒரு நாள் என்னக்கு சந்தர்ப்பம் வரும் அன்னிக்கு இருக்குடி உனக்கு " என அவன் தனது டையை அட்ஜஸ்ட் செய்து விட்டு கிளம்பி விட்டான்.

"ஏன் ,ப்ரோ இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா இவ யாருக்கு தான் மரியாதை கொடுப்பா, எல்லார்கிட்டயும் வம்பிலுக்கா, பாவம் அவரு" என விக்ரம் கூற

"எவரு, ப்ரோ " ரமேஷ்

" அதோ அவரு தான்" என விக்ரம் கதவோரம் கை காட்ட ..

"ஓ... அவனா, அவன் பேரு ராக்கி அவனுக்கு இது தேவை தான் ப்ரோ" ரமேஷ்

"ஏன் ப்ரோ, என்னாச்சு "

"அது ஒரு பழைய கதை, இப்போது தான வந்து இருக்கீங்க ,அப்பறமா சொல்லுறேன் ,இப்போ வாங்க நம்ம சீட்க்கு போய் வேலை பார்ப்போம், இல்லைனா
அந்த காட்டேரீஸ் நம்மள கொன்னுடும்" என ரமேஷ், விக்ரமை அழைத்து கொண்டு தங்களது இருப்பிடத்திற்க்கு சென்று விட்டான்.

அனைவரும் தங்களது வேலையை தொடர்ந்தனர், அப்போது எம்டி யின் பி ஏ வந்து, "விக்ரம் உங்கள சார் கூப்பிடுறாரு
கம் சூன்" என கூறிவிட்டு சென்று விட்டார்.

அவர் சென்றதும் மற்ற மூவரும், விக்ரமை திரும்பி பார்க்க

"இதோ, என்னனு கேட்டு வந்துடுறேன்" என விக்ரம் எஸ் ஆகி எம்டி ரூம்க்கு சென்று விட்டான்,

" சார் மே ஐ கமின் "

"எஸ் , கமின் , வாங்க மிஸ்டர் விக்ரம்,டேக் யூவர் சீட் , என அவன் எழுந்து தனது இருக்கையை காமிக்க" மச்சான் கலக்கிட்டடா என விக்ரம் தன் நண்பனை கட்டி அணைத்துக்கொண்டான்.

ஆமாம் அந்த புது எம்டி வேற யாரும் இல்லை நம்ம விக்ரம் ஓட நண்பன் தேவ் தான் இது விக்ரம் திட்டம் அவனின் எதிரிகளை கண்டுபிடிப்பதற்காக இந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது.

அனைவரும் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பி விட்டனர், ஆனால், காவியாவும் நிஷாவும்,படத்திற்கு போய் விட்டு, ஹோட்டலில் சாப்பிட்டு வர மணி பதினொன்று என காட்டியது.

அங்கு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அமரனும், குணாவும்,

"அங்க பாருங்க சார் மணி இவ்வளவு ஆகுது, இரண்டு பொண்ணுக மட்டும் வண்டில வருதுங்க" என குணா கூற.

" அப்படியே, மடக்கி இங்கு கூட்டிட்டு வாங்க குணா" என அமரன் கூற.

குணா அவர்கள் வந்த வண்டியை நிப்பாட்டி, அப்படியே வண்டியோடு அமரனிடம் கூட்டிச்சென்றார் .

"லைசன்ஸ் எடுங்க ,என குணா கேட்க.

"சார் வீட்ல இருக்கு" என காவியா சொல்ல.

"என்னது வீட்லயா , என்னமா காதுல பூ சுத்துறாங்க பாருங்க சார்.

"அது அது சார், வண்டில வச்சுட்டு அழைஞ்சா தொலைஞ்சிடும் , அதான் பத்திரமா வீட்டில் வச்சு இருக்கோம்" என மறுபடியும் காவியா கூற , நிஷா பதில் ஏதும் பேசாமல் வண்டியை பார்த்து கொண்டே அமைதியாக இருந்தாள்.

"ஏன் வண்டி ஓட்டிடு வந்தவங்க எதுவும், பேச மாட்டாங்களோ", என அமரன் தனக்கான மிடுக்குடன் கேட்க , வேறு வழியின்றி நிஷா அமரனை பார்க்க
வேண்டியதாகிட்டு ,காக்கி பேண்ட், வெள்ளை டீ சர்ட்டில், ஒருகாலை தொங்கபோட்டு , ஒரு காலை அவனது காரில் தூக்கி வைத்து,கையில் சில பேப்பர்ஸ் வைத்து கொண்டு அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அமரன்.

" என்ன பேசனும் , சார் என்ன பேசனும்" என கோபமாக அவனிடம் பேச ,

"ஹேய் ஏன்டி அமைதி யா பேசு " என நிஷா வை காவியா தடுக்க.

"விடுங்க மிஸ்... ஆங் உங்க பேரு என்ன ?"-அமரன்

" காவ்யா சார்"

"ஆங் , காவ்யா, இவ்வளவு லேட் ஆ இப்படி தனியா இரண்டு பேரும் வர்ரீங்களே, இது பாதுகாப்பு இல்லைன்னு உங்களுக்கு தெரியாத, தினமும் எவ்வளவு நீயூஸ் பார்க்குறீங்க"-அமரன்

"அதுக்கு தான் போலீஸ் நீங்க இருக்கீங்க, உங்க வேலை அதான எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க" என வெடுக்கென பேசிவிட்டு திரும்பி விட்டாள் நிஷா.

" இதோ பாருங்க நிஷா, இந்த நாட்டில எத்தனையோ கோடி பெண்கள் இருக்காங்க எல்லார் பின்னாடியும் ஒவ்வொரு போலீஸ் அனுப்பி பாதுகாப்பு கொடுக்க முடியாது, உங்களுக்கான பாதுகாப்பு நீங்க முதல்ல உறுதி பண்ணிக்கிடனும் , அதையும் தாண்டி சில முக்கிய காரணங்களுக்காக நீங்கள் இரவு வரும்போது உங்களுக்கு பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம். அதுக்காக நீங்க நைட் ஷோ பாத்துட்டு வந்தா எப்படி மேடம்" என நிஷா அருகில் வந்து குனிந்து அவள் முகத்தை பார்த்து சொன்னான் அமரன்.

காவ்யா அப்படியே திரு திரு வென முழிக்க.
"ஆங் குணா , இவங்க கூட போய் இவங்க இடத்தில சேவ் ஆ விட்டுட்டு வாங்க."- அமரன்.

"ஒண்ணும் , தேவையில்லை, "- நிஷா.

" ஏய் சும்மா இருடி இவ வேற , இல்லை சார், ஹாஸ்டல் இங்கு பக்கம் தான் போயிடுவோம்" - காவ்யா.

" ஓ... அப்போ குணா இவங்க நம்பர் வாங்கிட்டு விட்டுடு, என் நம்பரையும் அவங்க கிட்ட கொடுத்திடு , எதுனாலும் எனக்கு நீங்க கால் பண்ணலாம் மிஸ் காவ்யா , இன்னொரு விஷயம் நான் நம்பர் மாத்திட்டேன், கேட்குதா

" இந்த முறை அமரன் பேசியது நிஷாவை பார்த்து .

மீண்டும் காவ்யா என்னடா நடக்குது இங்க என முழிக்க, நிஷா அமரனை முறைக்க இருவரும் அவ்விடத்தை விட்டு கிளம்பினர்....

தூவானம் தொடரும்.
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 20

"ஏய் , ஏண்டி அப்படி பேசுன , உனக்கு வர வர வாய் ரொம்ப தான் நீளுது ,ஒரு போலீஸ் ஆபிசர்ன்னு மரியாதை இல்லாமல் "- காவ்யா

"வாயமுடிட்டு வா காவ்யா, ஏற்கனவே கடுப்புல இருக்கேன், நீ வேற அத அதிகப்படுத்தாத"- நிஷா.

" ஹேய் ,என்ன கடுப்பேத்துறாங்க உன்ன, சரி அவர உனக்கு முன்னாடியே தெரியுமா"- காவ்யா.

" எனக்கு யாரையும் தெரியாது"- நிஷா.

" இல்ல, அவரு என் பேர கேட்டு தெரிஞ்சுகிட்டாரு, உன் பேரு யாரும் சொல்லாமலே கரெக்டா சொன்னாரே அதான், உண்மைய சொல்லு அவர உனக்கு தெரியுமா ஹான்" - காவ்யா.

"ஸ்டாப்பிட் நிஷா, இப்ப நீ வாய் முடிட்டு வரல , நான் வண்டிய விட்டு இறங்கி நடந்து போய்டே இருப்பேன்"என மிகுந்த ஆக்ரோஷத்துடன் கூறிய தன் தோழியை பார்த்த காவ்யாவிற்க்கு தோழி நிஷாவின் கோபம் ,அவள் நடவடிக்கை அனைத்தும் புதிதாக தோன்றியது.மெல்ல நடந்தவற்றை தெரிந்து கொள்ளலாம் என தன் மொபைலில் உள்ள அமரன் நம்பரை ஒரு முறை பார்த்து கொண்டாள்.

நேரங்கள் நிமிடங்களாக கரைந்து, கதிரவன் தன் இன் முகத்தை இவ்வுலகிற்க்கு காண்பித்தான்.

ஓரியண்ட் இன்போ

வழக்கம் போல எம்டி தேவ் வந்து, தன் அறைக்குள் புகுந்தாகி விட்டது.
அனைவரும் தங்களது வேலையை ஆரம்பித்தனர்.

" ப்ரோ, இங்க கொஞ்சம் வாங்களேன், " ரமேஷ்.

"என்ன ரமேஷ்" விக்ரம்.

" ப்ரோ, இந்த இரட்டைகிளவிகள் என்ன இன்னிக்கு ரொம்ப சைலன்ட் "ரமேஷ் இருவரையும் பார்த்து கூற .

" அதான் ரமேஷ், எனக்கும் புரியல,இரண்டு பக்கம் காது ஜவ்வும் இனானேரத்துக்கு கிழிஞ்சி தொங்கி இருக்கும், ஆனா இன்னிக்கு இரண்டும் ஒரு வார்த்தை கூட பேசல என்னான்னு தெரியல"- விக்ரம்.

"ப்ரோ........ என ரமேஷ் ஆரம்பிக்க இடைநிறுத்தினான் விக்ரம்" இங்க பாரு விக்ரம்னே கூப்பிடு " என விக்ரம் ரமேஷிடம் கூற ...

" விக்ரம், அவளுக அமைதியாக இருக்கிறது இன்னும் டேஞ்சர் பாத்துகோங்க"..என ரமேஷ் எச்சரித்து விட்டு தன் கையில் உள்ள பைலை காவ்யாவிடம் கொண்டு சென்றான்,

அதை பார்த்த காவ்யா, தூக்கி அவன் டேபிளில் எறிந்தாள் "எத்தனை வருஷமா என் கூட வேலை பார்க்க,இன்னும் ஒரு கோடிங் பண்ணத்தெரில வேஸ்டு வேஸ்டு" என ரமேஷ்யை திட்ட,

விக்ரம்க்கோ தன் நண்பனை ஏசவும் கோபம் கோபமாக வந்தது.
அடுத்ததாக விக்ரம் தன் டாக்கியுமென்டை காமிக்க , அதை பார்தவள் "ஏற்கனவே ஒரு வேஸ்ட் காணதுன்னு இப்ப இது வேற" என விக்ரம் டாக்குமென்டையும் அவன் இடத்தில் கடாசினால், அதை கண்ட விக்ரமோ கோபத்துடன் அவளிடம் நெருங்க அதற்குள், நிஷா வோ " என் மேல இருக்கிற கோபத்தை அவங்க மேல ஏன் காட்டுற " என கேட்க ,
"யார் மேல கோப பட நான் யாரு, எனக்கு என்ன உரிமை இருக்கு , என தன்னிடத்தில் இருந்து எழுந்து கீழே கேண்டீன்க்கு சென்றாள்.

"சாரி,ரமேஷ் சாரி விக்ரம், அவளுக்கு என் மேல தான் கோபம், அத உங்கமேல காமிச்சுட்டா, என நேற்று இருவருக்கும்
சண்டை என்று மட்டும் கூறி இருவரையும் சமாதானம் செய்தாள்.

நிலமையை புரிந்து கொண்ட, விக்ரம், ரமேஷ்டன் கேண்டீன்க்கு செல்ல லிப்ட் அருகில் வந்து லிப்டை ஓபன் செய்ய.

அங்கு கண்ட காட்சியில் இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

அங்கு, ராக்கி யாரோ ஒரு பெண்ணை மறைத்து லிப்ட்டுக்குள் முத்தம் கொடுப்பது போல் திரும்பி நின்று கொண்டிருந்தான்.

லிப்ட் ஓபன் ஆகவும் அந்த பெண் கையை விடுத்து திரும்பிட அங்கு நின்றதோ காவ்யா,

ரமேஷ் ராக்கியை பார்க்க,விக்ரமோ இப்படி ஒரு பெண்ணா என காவ்யாவை பார்க்க, ராக்கியோ,

"ஹேய் கவி ,ச்சில் இப்ப ஏன் இப்படி நிக்கிற, இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே" என ராக்கி தன் உதடுகளை தடவ,

காவ்யாவோ "யூ பிலடி ச்சீ " என விறு விறு வென்று ஆபிஸில் இருந்து வெளியே சென்று விட்டாள்.

ராக்கியும் சென்று விட ,விக்ரமோ , "டேய் ரமேஷ் என்னடா நடக்கு இந்த ஆபிஸில், அனைக்கு மீட்ல எண்ணமோ அவன் இடிச்சதுக்கே காச்சு மூச்சூன்னு கத்துனா,
இன்னிக்கு லிப்ட்ல ச்சை என்ன பொண்ணுடா ,நான் கூட கேசுவலா தான் கிண்டல் பண்றா பேசுறான்னு நினைச்சா இவ என்னடா இந்த மாதிரி ஒரு கேரக்டர்",என விக்ரம் தன்னிலை மறந்து ஏன் தன்னையே மறந்து பேசிக்கொண்டே போக ,ரமேஷ் சட்டென லிப்ட்யை குத்தி ,

"போதும் விக்ரம் இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தை கவி பத்தி பேசுனீங்க" என தன் வார்த்தையை நிறுத்தி தலையை வேறுபுறம் திருப்பி கொண்டான்.

"ரமேஷ் நான் பார்த்தத தான சொன்னேன்"

"என்ன பார்த்தீங்க விக்ரம் ஹான் என்ன பார்த்தீங்க , என்ன தெரியும் உங்களுக்கு காவ்யாவ பத்தியும் அந்த பிலடி ராக்கிய பத்தியும் " என வார்த்தைகளை பொறிந்து தள்ளினான்.

"ரமேஷ் என்ன சொல்ல வர்ரீங்க நீங்க"-விக்ரம்.

அன்று நடந்ததை கூற ஆரம்பித்தான்.

"நான் , ராக்கி,காவ்யா, நிஷா தான் ஒரே டீம்,ராக்கி ரொம்ப பிர்லியன்ட், ரொம்ப டெக்னீக்கா ப்ரோஜெக்ட் அ கன்டீல் பண்ணுவான், எங்க டீம் எடுத்த எல்லா ப்ரோஜெக்ட்ம் சக்ஸஸ், அப்போது தான் ஒரு கெட்டுகெதர்ல, லேடீஸ் இருந்ததனால எல்லாமே சாப்ட் டிரீங் தான் சர்வ் பண்ணாங்க, அதுல எப்படியோ, காவ்யா டிரீங்ல ஹாட் டிரீங் கலந்து கொடுத்து, ரெஸ்ட் ரூம் சைட்ல அவள கூட்டிட்டு போய் மிஸ்பிகேவ் பண்ண பார்த்தவன் தான் இந்த ராக்கி,

கடவுள் புண்ணியத்தால நிஷா அங்க போக , காவ்யாவை ராக்கிட்ட இருந்து காப்பாத்திட்டா, நிஷா ராக்கிய மிரட்டுனப்ப ,வெளியே சொல்லு போ அட சொல்லுடி எனக்கென்ன இந்த வேலை இல்லைனா வேற வேலை , ஆனா உன் பிரெண்ட் காவ்யா நியூஸ் தான் நாளைக்கு இந்த ஆபிஸ்ல டிரெண்ட் , இங்க மட்டும் இல்லை எங்க போனாலும் இந்த பேரு அவ கூடயே போகும் பரவாயில்லையா என கூற ,

காவ்யா வோ போதையில சுய நினைவு இல்லாமல் இருந்ததுனால நிஷா வேற வழியில்லாமல் அவன சும்மா விட்டுருக்கா, இது எனக்கே ரொம்ப லேட்டா தான் தெரியும், அப்போது தான் டீம் மாத்தி , ராக்கி வேற டீம் நாங்க வேற டீம் ஆ மாறுனோம்" என்று கூறும் போதே ரமேஷ் கண்கள் கலங்கியது.

" விக்ரம், இப்படி எதுவும் தெரியாம , ஒரு பொண்ண பத்தி தப்பா பேசாதீங்க அதுவும் நம்ம காவ்யா பத்தி , இத அவங்க கிட்ட தெரிஞ்சமாதிரி காட்டிக்காதீங்க ப்ளீஸ்" என கூறிவிட்டு தன் இடம் நகர்ந்தான்.

"சாரி, காவ்யா " என தன் மனதில் நினைத்து கொண்டு,அதோடு கொலை வெறியோடு தனது பார்வையையும் ராக்கியின் மேல் செலுத்தினான் .

நேராக தன் இடத்திற்கு வந்தவன்,

நிஷாவிடம் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை எனக்கேட்டு அறிந்தான், " விடுங்க விக்ரம் இது ஒண்ணும் புதுசு இல்லை அவள எப்படி சமாதானப்படுத்துறதுன்னு எனக்கு தெரியும் நீங்க கவலை படாதீங்க. " என நிஷா கூறிமுடிக்கவும்

ஆபீஸ் டையம் முடிந்து அனைவரும் தத்தம் வீடுகளுக்கு சென்றனர்.

ஏற்கனவே காவ்யா சென்றதால், நிஷா மட்டும் தனியாக தங்களது ஹாஸ்டல்க்கு சென்றாள், வண்டியில் செல்லும்போதும் அதே நினைப்பில் சென்றதால் எதிரே வந்த காரை பார்க்க தவறிய நிஷா, அதன் மீதே மோத நல்ல வேளையாக அந்த கார் முதலில் பிரேக் பிடிக்கப்பட்டது. அதனால் சிறு வண்டி இடிப்பு மட்டும் நிகழ்ந்தது அங்கு.

அதில் இருந்து இறங்கியதோ அமரன் ஆம் அமரன் ஐபிஎஸ்.
"ஹலோ, மேடம் என்ன தேடி தேடி வந்து இடிக்கிறதுதான் உங்க வேலை போல " என அமரன் குறுநகையுடன் கேட்க.

"யாரு நான் உன்ன தேடி வந்தேன், நான் தான் சொல்லிட்டேன்ல உன்ன பாக்கவே புடிக்கலன்னு,இரண்டு வருஷம் உன் தொல்லை இல்லாம இருந்தேன், இந்தா தேடி வந்து மறுபடியும் ஆரம்பிச்சுட்டல்ல.என நிஷா சிலுப்பி கொண்டாள்.

" ஹேய் , ஏண்டி என்ன இவ்வளவு காயப்படுத்துற, அப்படி நான் பண்ணக்கூடாததயா பண்ணேன்" - விக்ரம்.

"உனக்கு விளக்கம் கேட்க்கனும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் இல்லை , வழிய விடுறீயா , பின்ன ஏசி ய பத்தியே கமிஷனர்ட்ட கம்பளைன்ட் பண்ண வேண்டி இருக்கும் " என தன் வண்டியை எடுத்து சிட்டாய் பறந்து விட்டாள் அவ்விடம் விட்டு.

போறவளையே பார்த்தவன் " போடி போ மிர்ச்சி, எவ்வளவு தூரம்தான்னு நானும் பார்க்கேன்" என்றவன் தனது வேலையை ஆரம்பிக்க சென்றான்.
அமரனின் வேலை இனி தான் ஆரம்பம் ஆகப்போகிறது, போட்டு விட்டான் திட்டத்தை..........

தூவானம் தொடரும்.
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 21

கமிஷனர் அலுவலகம்

ஆரம்பித்து விட்டான் அமரன் தனது வேலைகளை , தன்னுடைய புதிய கேஸ்களுடன் சேர்த்து, ஒரு பழைய கேஸ்ஸையும் அதுவும் கோர்ட்டில் தீர்ப்பு எழுத்தப்பட கேஸ் அது, அதையும் தூசி
தட்டி துப்பு துலக்க ஆரம்பித்தான் ,

அதில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்,கண்காணிக்கப்ட வேண்டியவர்கள்,
கவனிக்கப்பட வேண்டியவர்கள் என ஒரு லிஸ்ட் ரெடி பண்ணான் முதல்கட்ட விசாரணை மறைமுகமாக குணாவை வைத்து தொடங்கி விட்டான்.

ஓரியன்ட் இன்போ

நாட்கள் நகர்ந்தது, அந்த லிப்ட் சம்பவத்திற்க்கு பிறகு, காவ்யா பெரிதாக விக்ரமிடம் வம்புவளக்கவில்லை, ஏன் சரியாக பேசுவது கூட கிடையாது, அவன் கண்ணில் அன்று பார்த்த ஒரு பார்வை,அதை இன்னும் காவ்யாவால் மறக்கமுடியவில்லை,அதனால் காவ்யா விக்ரமை பெரிதும் தவிர்த்தாள் ,

ஒரே குழுவாய் இருப்பதால் அதுவும் டீம் லீட் என்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவனிடம் பேசினாலும் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள்.

விக்ரமும் அவள் நிலை உணர்ந்து, அவன் உண்டு அவன் வேலை உண்டு என்றிருந்தான்.

இதற்கிடையில் ரமஷ்ன் குரங்கு சேட்டைகள், குறையாமல் இருக்க,அதுவே காவ்யா அவ்வப்போது தோன்றி மறையும் சந்தோஷத்திற்க்கு காரணமாகி இருந்தது.

இங்கு இவர்கள் டீம், இப்படி இருக்க, இவர்களிடம் வந்த ப்ரொஜெக்ட் மட்டும், காவ்யா தலைமையில் அனைத்தும் சக்ஸஸ் என்ற நிலைமையில் இருந்தது.

அங்கு ராக்கியின் நிலமை தான் யாரும் நினைக்கா வகையில் தலைகிழா இருந்தது, அவன் செய்த ப்ரொஜ்ஜெக்ட் அனைத்தும் தோல்வி, தேவ்விடம் என்னெரமும் திட்டு என ஒரு கட்டத்தில் அவன் பெயர் ரெட் லிஸ்டில் வர அவனது வேலையும் பறிபோனது.

கேண்டீனில், காவ்யா ,நிஷா ஒருபுறமும், விக்ரம், ரமேஷ் ஒருபுறமும் அமர்ந்து தேநீர் மட்டும் பப்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்தனர்,
அப்போது அங்கு வந்த ராக்கி காவ்யா கையை தட்டி விட அவள் கையில் உள்ள சூடான காப்பி அவள் மீதே கொட்ட சூட்டினால் துடித்து போனால்,காவ்யா.

ஒரு நிமிடம் அங்கு என்ன நடந்தது என்று உணர்வதற்குள், மீண்டும் காவ்யாவை தன் பக்கம் திருப்பி அவளை அடிக்கப்போக , அந்த கையை தடுத்தான் விக்ரம்.

" டேய் ,விடுடா என் கைய,இவ்வளவு நாள் இவளுக்கு என்ட மோத தைரியம் வரல, ஆனா இப்போ மோதிட்டா அதுவும், எப்படின்னு
இப்போது தான் புரியுது , எல்லாம் புதுசா வந்தவன் நீ கொடுத்த தைரியம் தானா" என ராக்கி கோபத்தில் விக்ரம் கையில் இருந்த தன் கையை உதறிவிட்டு ஆவேசமாக பேசினான்.

"ஏய் , என்ன உளர்ற இப்போ என்ன நடந்ததுன்னு நீ இப்போ காவ்யாவ அடிக்க போற உனக்கு எவ்வளவு தைரியம் " - நிஷா.

" டேய் ராக்கி, நீ பண்ண காரியத்துக்கு உன்ன அன்னிக்கே தூக்கி போட்டு மிதிச்சு இருந்து இருக்கனும், சரி பொம்பளபுள்ள விஷயம்ன்னு
அமைதியா இருந்தா நீ என்ன வேணா செய்யலாம்னு அர்த்தம் இல்லடா, உன் மேல உள்ள வெறி அப்படியே தான் இருக்கு " என தன் கையை முறுக்கி கொண்டு ரமேஷ் பேச.

" டேய், என்னங்கடா செய்றதெல்லாம் நல்லா செஞ்சிட்டு இப்போ நல்லவங்க மாதிரி சீன் போடுறீங்க." ராக்கி.

"டேய் , அடங்குடா நான் நல்லவங்களா இல்லாட்டிலும், உன்ன மாதிரி கேடுகெட்டவன் கிடையாது ,மூடிட்டு போ " ரமேஷ்.

இவை அனைத்தையும் மிக அமைதியாக அதே சமயம் மிக அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான் விக்ரம் .

" ஹேய் ராக்கி இப்போ எதுக்கு வந்த அத சொல்லு" நிஷா.

"அடடே ,என் வேலையை காலி பண்ணிட்டு என்னமா அக்ட் வுடுறீங்க அக்ட்" -ராக்கி

"ஹாஹாஹா... போச்சா மகனே போச்சா, சாவுடா கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுன நீ, போய்த்தொலடா, இனியாவது எங்க காவ்யா உன் மூஞ்சிய பார்க்காமா நிம்மதியா இருப்பா" ரமேஷ் கூற .

" அடியே, உன்ன விடமாட்டேன் டி அமுக்களி மாதிரி இருந்துட்டு என்ன பழிவாங்கிட்டல்ல, உனக்கு இருக்கு டி ,உனக்கு இருக்கு" என ராக்கி மிரட்ட.

"டேய், டப்ஸா கண்ணா அவளுக்கு இங்க வேலை இருக்கு உனக்கு தான் இல்லை போ போ இடத்த காலி பண்ணு காத்து வரட்டும் " என ரமேஷ் பேச.

கண்ணில் கோப்பத்துடனும், நெஞ்சில் வன்மத்துடனும் மீண்டும் ஒரு முறை காவ்யா வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான் .

இவை அனைத்தையும் கையை கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான் விக்ரம்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது, வாரங்கள், ஓடியது, காவ்யா டீம்மிடம் ஒரு பெரிய ப்ரொஜெக்ட் வர அதனையும் அவர்கள் வெற்றிகரமாக முடிக்க, அதற்கான சக்ஸஸ் பார்ட்டி ஒன்று நடந்தது,
அனைவரும் மகிழ்ச்சி யோடு இருக்க, காவ்யா மட்டும் நகர்ந்து விக்ரம் அருகில் சென்று, "விக்ரம் ரொம்ப தேங்க்ஸ்"

"எனக்கு எதுக்கு தேங்க்ஸ்"

"இது, உங்க திறமைக்கு கிடைத்த வெற்றி அதுக்கு எனக்கு ஏன் தேங்க்ஸ், காவ்யா "

" நான் இதுக்கு சொல்லல ,ராக்கி விஷயத்திற்கு "

".......... விக்ரம் முழிக்க.

" ரொம்ப ஸ்மாட் ஆ இருக்கோம்னு நினைப்பா, எனக்கு நேத்தே எல்லா விஷயமும் தெரியும் விக்ரம் "

" வெல்........" என தன் மூக்கை உரசியபடியே , விக்ரம் சிரிக்க...

" நீங்க தான் எம்டிட்ட பேசி , அவன வேலையை விட்டு தூக்க ஏற்பாடு பண்ணீங்கன்னு"

" பின்ன எத வேணாலும் ,மன்னிக்கலாம், எவன வேணாலும் கூட வச்சிக்கிடலாம் , ஆனா லேடீஸ்ட்ட தப்பா பிகேவ் பண்ணா என் ஆபிஸில் " என கூற வந்து தன் நாக்கை கடித்து பின் "நம்ம ஆபிஸில இல்லை எங்கேயும் வச்சிக்கவே கூடாது , உங்கள பத்தி தெரியவும் அதை எம்டி கூட சேர் பண்ணேன், அவரு தரமா செஞ்சிட்டாரு, அவ்ளோதான் " என கூலாக கூறிய விக்ரமை பார்க்க காவ்யா விற்கு பிரம்மிப்பாக இருந்தது.

"தன்னடக்கம் , என சிரித்துக்கொண்டே தன் கையை அவன் முன் நீட்ட "
என்னங்க என்பது போல் விக்ரம் முழிக்க.

"நாம இனி பிரென்ட்ஸ்....." - காவ்யா.

"யாரது நம்ம காவ்யா மேடமா இது" என விக்ரம் கிண்டல் அடிக்க.

"ஹேய் , என காவ்யா சிரிக்க .....

"ஒன்லி, பிரென்ட்ஸ் மட்டும் தானே " என விக்ரம் கூற .

அடிங்க என்பது போல் தன் புருவம் உயர்த்தி பார்த்தால் காவ்யா
"ஏம்மா, அப்படி பார்க்க, ஏன்னா எனக்கு ஏற்கனவே ஆள் இருக்குமா அதான் ஒரு முன்னெச்சரிக்கையா கேட்டேன்"- விக்ரம்

" ஹலோ பங்கு இது உங்களுக்கே ஓவரா தெரியல மனசுக்குள்ள என்ன பெரிய மன்மத குஞ்சுன்னு நினைப்பா, எனக்கும் ஆல்ரடி ஆள் இருக்கு, சோ நாம நண்பர்கள் மட்டும் தான்" என காவ்யா கூற .

" அப்போ, ஓகே வீ ஆர் பிரெண்ட்ஸ்" என இருவரும் கை குலுக்கி கொண்டர், இதை பார்த்த நிஷாவும் ரமேஷ்ம் என்னடா நடக்குது அங்கு வா பார்ப்போம்.

"என்னங்கடா நடக்குது, இரண்டு எரிமலை மீது யாருடா ஈரத்துணிய போட்டது என நிஷா கலாய்க்க ,

அடிபோடி என விக்ரம் பதிலுக்கு கலாய்க்க அந்த நாள் அவ்வாறாக சந்தோஷமாக கழிந்தது.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 22

காலை பொழுது, மிகவும் அழகாக புலர்ந்தது, இன்றைய நாள் யார் யாருக்கு என்ன நடக்கும் என்பதை அந்த விதி மட்டுமே அறியும்.....ஆனால் கண்டிப்பாக ஒவ்வொருக்கும் ஒருவிதமான ஆச்சரியம் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி அதான் விதி....ஹா ஹா .....
தனது சுழல் நாற்காலியில் , அமர்ந்து சிறு பிள்ளை போல் சுத்தி கொண்டே தனது இடது கையை தலைக்கு அடியில் கொடுத்து,தனது வலது கையின் ஆள்காட்டி விரலை தன் தாடையை தடவியபடி கமிஷனர் ஆபிஸில் அவனது ரூம் மேல் சுவரை பார்த்தபடி ,தனது உதட்டில் சிறு புன்னகையை சிந்தி கொண்டிருந்தான் அமரன், எல்லாம் அவனவளை நினைத்துதான் தலைவர் கனா கண்டு கொண்டிருக்கிறார்..

"சார்,சார்,சார்ரூஊஊஊஊஊஊ.........உள்ளே வரலாமா" என்ன இவரு இப்படி இருக்காரு!, சரி நாமளே உள்ளே போவோம், ஆனா ஏன்டா கேட்காம வந்தன்னு கேட்டார் னா!, கேட்டா சமாளிச்சுகிடலாம் குணா, என தனக்கு தானே பேசிக்கொண்டு குணா அமரன் அறைக்குள் நுழைந்தான்.

குணா ,அமரன் அருகில் சென்று , "சார்..... ஐயா .... தெய்வமே கொஞ்சம் பூலோகத்திற்க்கு வாரீங்களா,குணா பாவம் சாமி" என அப்பாவியாக கேட்க

அப்போதும் அமரன் மோட்டை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தானே தவிர பக்கத்தில் ஒரு ஜீவன் இருப்பதை அவன் உணரவே இல்லை, இதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அமரன் சுற்றி கொண்டிருந்த அவனது சுழல் நாற்காலியை பிடித்து நிப்பாட்டிவிட்டு,

"சார்" என அவனை பிடித்து குலுக்க, டக்கென்று நிகழ்வுக்கு வந்தவன் படக்கென தன் தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பின் எதிரில் நின்ற குணாவை பார்த்து

"வா குணா எப்படா வந்த சர்பரைசா வந்து பக்கத்தில நிக்க , போடா கிறுக்கு பயல சின்ன புள்ளதனமா விளையாண்டு கிட்டு, போ போய் சீட்ல உட்காரு" என சிரித்துக் கொண்டே தனக்கு எதிரிலே உள்ள இருக்கையில் குணாவை அமரச்சொன்னான் அமரன்.

"எதேய் கிறுக்கு பயலா, அதும் இல்லாமல் சின்ன பிள்ளைத்தனமா வா, ஏன் சார் சொல்லமாட்டிங்க" என தன் தலையில் அடித்து கொண்டு சலித்து கொண்டான்.

" சரிடா, சரிடா அண்ணன் தானடா விடுடா தம்பி, அப்புறம் என்ன எப்படி இருக்க, வீட்ல எல்லாரும் சுகம் தானே" என பேசும் அமரனை கண்டு குணா புரியாமல் தன் பின்னால் யாரேனும் உள்ளனரா என தேடினான்.
அவன் தேடுவது பார்த்த அமரன் " யாரடா தம்பி தேடுற, "

"இல்லை இங்க அமரன் ஐபிஎஸ் ,அமரன் ஐபிஎஸ் ன்னு ஒரு ஸ்டிரிக்ட் ஆபிஸர் இருந்தாரே அவர தேடுறேன்" என குணா கலாய்க...
"டேய், தம்பி" என அமரன் நட்பாக முறைக்க....

" பின்ன ,என்னனா அவ்வளவு முக்கியமான ஆளை என்ன விசாரிக்க வைச்சுட்டு அத பத்தி என்கிட்ட ஒண்ணும் கேட்காமல் இருக்கீங்க ஹா " என குணா பேசி முடித்தான்.

"அது, ஒண்ணும் இல்லடா, தம்பி எல்லாம் உன் அண்ணி தான்" என அமரன் கூற

"என்ன னா , எனக்கு தெரியாம அண்ணிய மீட் பண்ணி அடி உதை ஏதும் வாங்கிட்டீங்களா" என கூறி குணா சிரிக்க.

" டேய் ஐயம் ஏசி டா" என அமரன் கூற ..

"அண்ணா, சிங்கம் காட்டுக்கே ராஜா, பலசாலினாலும் , காளியாத்தாவின் காலுக்டியில தான் அதோட பொலப்பு அண்ணா" என கூறிவிட்டு சிரிக்க.

"ஹா, ஹா எம்மாம் பெரிய சோக்" என ஈ.... என பல்லை மட்டும் காமித்தான் அமரன், " சரி சொல்லு நான் விசாரிக்க சொன்ன மேட்டர் என்னாச்சு "

" அதுவான்னா, விசாரிச்சேன்×××××××" என தான் விசாரிச்சதை கூற ஆரம்பித்தான் குணா....

பின் இருவரும் தீவிரமாக தங்கள் கேஸ்ஸைபற்றி விவாதிக்க தொடங்கினர்....

ஓரியண்ட் இன்போ

நிஷா, விக்ரம், ரமேஷ் என அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க...

அங்கு வந்தாள் காவியா ஹேய்" டூட்ஸ் லிஸன்ட் கியர்" என காவ்யா கூற.

"ஆங், ஆங், கியர் கியர் பண்ணியாச்சு மேட்டர சொல்லுமா முதல்ல ஆனா ஊனா ஒரு டைரிய தூக்கிட்டு வந்துடுவா" என விக்ரம் கூற அதை அப்படியே ஆமாஞ் சாமி போட்டான் ரமேஷ்.

"டேய் , விக்கி" என தன் கையில் உள்ள டைரியால் விக்ரம் தலையிலும், ரமேஷ் தலைமையிலும் ஒரு போடு போட்டாள் காவ்யா.

"ஹேய் அட கொரங்குங்களா, கம்னு இருங்கடா, நீ சொல்லுடி" என கூறினாள் நிஷா.

"அல்மோஸ்ட், நம்ம ப்ரொஜெக்ட் , முடியுற ஸ்டேஜ்க்கு வந்துட்டு, இனி வெறும் பட்டி, டிங்கரிங் வொர்க் தான் அத நிஷாவே பார்த்துடுவா...... அதனாலே..." என காவ்யா பேச..

"அதனால" என மூவரும் கோரஸ்ஸாக கேட்க..

"அதனால" என காவ்யா வும் இழுவையாக கூற

" அட , சொல்லுமா என் இக்கன்னா வச்சு பேசுறே ,சொல்லவந்தத சொல்லித் தொலையும் என ரமேஷ் ஆவேசப்பட

"அதனால"

"மறுபடியுமா" இது விக்ரம்.

" நான் ராக்கி மேனேஜ் பண்ணிட்டு இருந்த டீம்க்கு போறேன்" என காவ்யா இழுவையாக கூறிமுடிக்க.

"என்னாது எங்கள விட்டு போகப்போறீயா" என ரமேஷ்ம் ,விக்ரமும் கேட்க.

" டேய் , பீல் பண்ணாதீங்க டா , 15 டேஸ் மட்டும் தாண்டா"

"அட , போமா ,நாங்க எங்க பீல் பண்ணோம், தொல்லை ஒழிஞ்சுது நினைத்து கொஞ்சம் சந்தோஷபட்டோம் என்னடா" என விக்ரம் ,ரமேஷ்யை பார்த்து கேட்க ,

"ஆமா ஆமா" என ரமேஷ் ம் ஆமோதித்து இருவரும் ஹைபை அடித்து கொண்டனர்.

" அட ,பக்கிக்கலா" என தனது கையில் உள்ள டையிரியால் மறுபடியும் இருவரையும்
மொத்து மொத்து என மொத்தினாள்.

"ச்சேய், இவனுங்க வேற , சும்மா இருங்கடா அயோக்கிய ராஸ்கல்களா ,என நிஷா இருவரையும் அமைதி படுத்திவிட்டு.

" சொல்லு டி, இப்போ எதுக்கு அங்க போற நீ " - நிஷா

"அதுவந்து , ராக்கி விட்டுட்டு போன ஒரு ப்ராஜெக்ட் அ முடிச்சு குடுக்கனுமா, நம்ம எம் டி ஓட ஆர்டர் அதான் " என காவ்யா சோகமா கூறி முடித்தாள் .

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, தேவ் பி ஏ வந்து ,விக்ரம்யை அழைக்க , விக்ரம் வேகமாக எழுந்து தேவ் ரூமிற்கு சென்றான்.

"வாங்க மிஸ்டர் விக்ரம் , டேக் யுவர் சீட்" என தேவ் கூறிமுடிக்கவும் , கதைவை சாத்தி விட்டு வேகமாக வந்த விக்ரம், தேவ் டேபிளில் இருந்த பைலை எடுத்து மொத்து, மொத்து என்று தேவை வெளுத்து வாங்கினான்.

"டேய் , கொலகார, என்ன ஏன்டா அடிக்குற, உன்ன நம்பி உன் கூட பூம்பூம் மாடு மாதிரி வந்ததுக்கு என்ன கொலை பண்ணப்பாக்குறியா விடுடா" என தேவ் அலற..

அவனை விட்டவன் , அவனுக்கு எதிரில் உள்ள சீட்டில் அமர்ந்து, அவனுக்காக அவன் மேஜையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.

"அடப்பாவி, சண்டாலா என்ன சாத்து சாத்துன்னு சாத்திட்டு நீ இப்போ தண்ணீர் குடிக்கிறீயா குடி நல்லா குடி" என தன் முதுகை தடவி கொண்டே சலித்து கொண்டான்.

"இப்போ , ரிலக்ஸ் ஆகிட்டியா, இப்போ சொல்லு, எதுக்கு எனக்கு இந்த இடி ,மின்னல் எல்லாம் ஹான்....... " என கேட்க.

" டேய் , ஏன்டா காவ்யாவ ராக்கி டீம்க்கு மாத்துன" - விக்ரம்.

"தெய்வமே, டீம்லாம் ஓரேடியா மாத்தல , ஜஸ்ட் அந்த எம் கே வி, ப்ராஜெக்ட் முடிக்க தான் அனுப்புனேன் - தேவ்.

"அதான் ஏன்டா, உனக்கு இந்த ஆபிஸில வேற ஆளா கிடைக்கல " - விக்ரம்

" ஏய் நிப்பாட்டு, ரொம்ப பண்ணாத, இப்போ அவள மாத்துன என்ன , என்னமோ உன் லவ்ர உன்ட இருந்து பிரித்த மாதிரி பேசுற போவியா என் சிப்ஸ்....என தேவ் பேச ..

"டேய்" என விக்ரம் மிரட்ட..

"பின்ன என்னடா அவளால தான் அத முடிக்க முடியும் அதான், டேய் நீ இங்க ஸ்டாப் ஆ நடிக்க, ஆனா நீ உண்மையில் ஸ்டாப் இல்லை முதலாளி, இந்த கம்பெனி ஓனர், அத முதல்ல நியாபகம் வச்சுக " - தேவ்.

"கம்பெனி நலனும், வளர்ச்சியையும் பார்க்கனும்" என தேவ் கூறி முடிக்க.
விக்ரம் தன் நகத்தை கடித்து கொண்டே தேவ்வை முறைத்தான்.

" முறைக்காதடா மச்சான், 15 நாள் தான அவ திறமைக்கு அத அவ சீக்கிரமே முடிச்சுடுவா , சரி மச்சான் ஒய் யூ பீல் இப்படி, ம்ம்ம்..... ஏதும் சம்திங் சம்திங் காவியா மேல " - தேவ்.

" அடேய் "என விக்ரம் தன் கையில் உள்ள விரல்களை மடக்க.

"ம்ம்" என தேவ் கண்முழி மேலே போய் கீழ் வந்தது.

"சொல்லு டா மச்சான் "

"டேய், ஒரு தவங்கள மிஸ் பண்ண கூடாது நினைக்கிறதுக்கு அவங்க நம்ம லவ்ரா இருக்கனும்னு அர்த்தம் இல்லை, நல்லா ப்ரெண்டா கூட இருக்கலாம், அது மட்டுமல்ல காவ்யா ஒரு குட் ஹாட் பர்சன் , அதான் வேற ஒண்ணும் இல்லை " '- விக்ரம்.

" வேற ஒண்ணும் இல்லை மச்சான்" என தேவ் சிரிக்க.

"டேய், உனக்கு தெரியும் , என் மனசுல யார் இருக்கா, இப்ப நான் யார் தேடிட்டு இருக்கேன்னு, ஏன் லவ்ர், மனைவினா அது அவ மட்டும் "- விக்ரம்.

"சரிடா, ஆனா அவ தான் எங்க இருக்கான்னே தெரியலயே"

" இந்த பேச்ச விடு தேவ்"

" சரி மச்சான் , உன்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்"- தேவ்.


தூவானம் தொடரும்.
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 23

ஓரியன்ட் இன்போ


நிமிடமும், நேரமும், நாட்களும் யாருக்காகவும், நிற்பதில்லை , காத்திருப்பதும் இல்லை.

ஆம் 10 நாட்கள் கடந்த நிலையில் , விக்ரமும், காவ்யாவும் சரியாக பேசிக்கொள்வதில்லை, ஏன் பார்த்து கொள்ள கூட முடியாத அளவிற்கு, வேலையில் மும்முரமாகி, அதை முடித்தும் விட்டாள், ஆம் காவ்யா வேலை என்று வந்துவிட்டாள் வேற எதற்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

ஏன் உடன் தங்கி இருக்கும்
நிஷாவிடம் கூட நேரம் ஒதுக்க அவளால் முடியவில்லை,

அனைத்து வேலையும் முடிந்தாகி விட்டது , ப்ரொஜெக்ட் சப்மிஸன், அப்ரூவ் என எல்லாம் முடிந்து ப்ரொஜெக்ட் வெற்றி அடைந்து விட்டது, அதை தெரிவிக்க தான் இன்று அனைவரையும் கான்பிரன்ஸ் காலில் கூட சொல்லி இருக்கிறார் தேவ்.

காவ்யா கண்கள் 10 நாட்கள்
கழித்து யாரையோ தேடியது, தேடிய முகத்தை தவிர அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

சட்டென காவ்யாவின் கண்களை ஒரு கை மூடியது, யார் என்ன என்று ஒரு கேள்வியும் கேட்காது பட்டன "விக்ரம் " என்றாள் , ஆனால் அங்கு நின்றது நிஷா.

" ஹேய்" என மார்க்கமாக சிரித்துக் கொண்டே அருகில் அமர்ந்தாள் நிஷா, "என்னடி, யாரையோ பயங்கரமா தேடுற போல " என நிஷா கேலி பேச.

"அதென்ன யாரையோ ,உங்க எல்லாரையும் தான் தேடுனேன் நிஷா"

"இல்லயேடி காவ்யா, நீ விக்ரம் பேர தான சொன்ன."

" அதுசரி , வருசயா எல்லார் பேரையும் சொல்லி இருப்பேன்,
அதுக்குள்ள நீ என் முன்னாடி வந்துட்ட".

"சரி சரி காவி,ஏதோ சமாளிக்கிற நானும் நம்புறேன்"

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே , ரமேஷ் , விக்ரம் உள்ளே வந்தனர் இருவரும்,இரு பெண்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தனர்.

காவ்யா மெல்ல, விக்ரமை பார்க்க விக்ரமோ, காவ்யாவை கண்டு கொள்ளவில்லை,காவ்யாவிற்கு ஏன் தன் மனம் இவ்வளவு தவிக்கிறது, அவனது பார்வைக்காக , என அவளுக்கே புரியவில்லை.

தேவ் வந்ததாகி விட்டது..

"ஹலோ, டியர்ஸ், இதுவரை நம்ம கம்பெனி அட்டன் பண்ண ப்ராஜெக்ட் எல்லாம் சக்ஸஸ், இது எல்லாம் உங்களோட ஹார்ட்டு வொர்க் " என தேவ் கூறி முடிக்கவும் அங்கு கரவொலி நிரம்பியது. மேலும் தேவ் தொடர்ந்தான்..

"இப்பதைக்கு, வேற எந்த முக்கியமான ப்ரொஜெக்ட் கையில் இல்லை, அதனால நான் உங்க எல்லாருக்கும் ஒரு பிரேக் மற்றும் ஒரு சர்ப்பரைஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்.

அது என்னனா நாம எல்லாரும் ஊட்டி டூர் போக போறோம்" என தேவ் அறிவிக்கவும் ஓ ... வென சத்தம் ஏற்படுத்தி அனைவரும் மகிழ்ந்தனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்து செல்ல , கடைசியில் காவ்யாவும் ,விக்ரமை பார்த்துக்கொண்டே எழுந்தாள், அவ்வறையில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

எழுந்து கதவு அருகில் சென்றவளை "காவ்யா " என்ற குரல் நிறுத்தியது .

அப்படியே நின்றாள் திரும்பவில்லை, விக்ரம் அருகில் வந்து காவ்யா என அவளை திருப்ப.

திரும்பியவள் கண்களில் நீர் திவலைகள் ,

"ஏய் என்னாச்சு காவி , ஏன் கண்கலங்கிற"

"ஆங் அது வந்து கண்ணு வேர்க்குது" என கேவலமாக சமாளித்தவளை , புன் சிரிப்புடன் பார்த்தான் விக்ரம்.

"அப்பறம், விக்ரம் இந்த 10 நாளும் என் தொல்லை இல்லாமல் ஜாலியா இருந்த போல ஹான்" என காவ்யா கேட்க.

"ஆமா , ஆமா செம்ம ஜாலி " என சிரித்தான் விக்ரம்.

"சோ, நீ என்ன மிஸ் பண்ணல அப்படி தானே"

"எதுக்கு மிஸ்ஸிங், நீ இந்த ஆபிஸில் தானே இருந்த,"

"சரி விடு, நீ யாரு என்ன மிஸ் பண்ண, வெறும் டைம் பாஸ் நட்பு தானே அப்படி நினைத்து விட்டுருப்ப".

"அம்மாடியோவ், எப்படி காவி, இவ்வளவு கரெக்டா கண்டுபுடிச்சுட்ட, சரி என்னைப் பொருத்த வரை நீ எனக்கு டைம் பாஸ் நட்பு தான், ஆனா நீ என்ன மிஸ் பண்ண போல"

"யாரு நானு, போயா போ, நான் யாரையும் மிஸ் பண்ணல, அதும் சத்யமா உன்ன " என சொல்லி ஒரு பொய்யான ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

" அதான, அதயே மெயின்டன் பண்ணு,கற்பனை எதுவும் வளர்த்துக்காத, ஏன்னா எனக்கு ஆள் இருக்குமா " எனக் கூறி அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறும் வரை , புன்னகை புரிந்து தெனாவட்டாக நின்றவள், அவன் தலை மறையவும், கண்களில் கண்ணீர் அவள் அனுமதி இன்றி வெளியே வந்தது. மீண்டும் தன்னை சமன் படுத்திக்கொண்டு காவ்யாவும் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


அவள் போகவும், கதவின் மறைவில் நின்று பார்த்து கொண்டிருந்த ஒரு நபரின் தோளில் தேவ் கைவக்க யாரோ எவரோ என்று பதர, அவரை தன் அறைக்கு வரும்மாறு சொல்லி விட்டு, தொடர்ந்தார் தேவ்.

"வாங்க சார், வாங்க ,ஏன் இப்படி இந்த கண்ணாமூச்சி ன்னு நான் தெரிஞ்சிகிடலாமா"-தேவ்

"என்னடா, என்ன உளர்ர ஹான்" விக்ரம்

" நடிக்காதடா நான் தான் பார்தேன், கேட்டேனே, நீ உள்ளக்க அவட்ட பேசுனதையும் , வெளியே கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னு பார்த்ததையும், என்டயே டிராமா பண்ற பார்த்தாயா விக்ரம் "

"இல்லை டா, அவ ஏதாவது கற்பனை பண்ணிகிட்டு தடுமாற கூடாதுன்னு தான் நான் அப்படி நடந்து கிட்டேன், தேவையில்லாமல் அவ மனசுல ஒரு எண்ணம் வந்துடக்கூடாதுல அதான்" - விக்ரம்.

" பார்றா, என் நண்பனுக்கு எவ்வளவு நல்ல மனசு, பொது சேவை எல்லாம் பண்றாரு, சரி டா வெண்ணெய் அவ தடு மாறுறானா, இந்த 10 நாள் நீ பண்ணதுக்கு பேரு என்னடா" - தேவ்.

" ஹேய், என்ன டா உளர்ற எந்த 10 நாள் , அப்படி என்ன பண்ணேன்"- விக்ரம்.

"டேய், டேய் என்ன பேச வைக்காத, அது உனக்கு தான் கஷ்டம் "- தேவ்.

விக்ரம் , தேவ்வை பார்த்து கள்ளத்தனமாக முழிக்க,

" என்னடா முழிக்க, எனக்கு எதும் தெரியாதுன்னு நினைச்சியா, ஹா, டெய்லி வெளியே அவ வரும் போது மறைந்து நின்று பார்த்தது, கேண்டினில் ஒளிந்து ஒளிந்து பார்த்தது, அது மட்டும் அல்ல சாமி , சி சி டிவி பாஸ்வர்ட்டு உன் மொபைல்ல போட்டு, அவ கேபின் புட்டேஜ் மட்டும் டெய்லி காலையில் இருந்து ஈவினிங் அவ கிளம்புற வரை பார்த்தது ,இதெல்லாம் எனக்கு தெரியாது, இல்லை தெரியாமல் போயிடும்னு நினைச்சியா" - தேவ்.

" தேவ் , நீ ஓவரா கற்பனை பண்ற , அதெல்லாம் எதார்த்தமா ஒரு நட்பா நடந்தது, அது மட்டுமல்ல என் மனசுல என் தீ மட்டும் தான் இருக்கா" என விக்ரம் கோபமாக கூறிவிட்டு சுவரை பார்த்து திரும்பி கொள்ள.

"டேய் , பைத்தியகாரா, பைத்தியகாரா, யாரு டா அந்த தீ , ஒரு பேரு கூட முழுதா தெரியாது, ஒரு போட்டா கிடையாது, எந்த நம்பிக்கையில அவள நீ தேடுற, டேய் கிறுக்கா மொதல்ல அவ இந்த உலகத்துல தான் இருக்காலான்னு உனக்கு தெரியுமா,அவ செத்து போயிருந்தானா என்னடா பண்ணுவ " என தேவ் கூற..

" டேய்" என கத்தலுடன் கோபம் தலைக்கேர, பாய்ந்து வந்து தேவ் சட்டையை கொத்தாக பிடித்தான், விக்ரம்.

"என்ன, கோபம் வருதா, நீ என்ன கொன்னாலும் சரி, நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு, டேய் காவ்யா நல்ல பொண்ணா இருக்கா, ஏதையோ நினைத்து கையில இருக்கிற பொக்கிஷத்தை தவற விட்டுடாதடா,சரி ஒருவேளை நீ தேடுற பொண்ணு காவ்யாவா இருந்ததுனா ,தத்தெடுத்தவங்க பெயர் மாத்தி இருந்தாங்கன்னா அப்படி யோசிடா , எனக்கு நீ சந்தோஷமா நல்லா இருக்கனும்டா அதான் வேண்டும், புரிஞ்சுக்கோ" என தேவ் கூறிவிட்டு வெளியேறினான்.

வெளியேறியவனுக்கு, ஷீலா விடம் இருந்து அழைப்பு வர,இவ வேற இம்ச என நினைத்து பேசிக்கொண்டே சென்றான்.

இங்கு விக்ரம் யோசனையில் உட்கார, அங்கு காவ்யா தன் கழுத்தில் கிடந்த செயினில் உள்ள டாலரை பார்த்து, அழுது கொண்டே பேச ஆரம்பித்தாள், டேய் விக்ரம் நீ எங்கே டா இருக்க, ஏன் மனசு தேவையில்லாமல் தடுமாறுது , இப்ப என் கூட இருக்கிற விக்ரம் மேல, அவனுக்கு ஏன் விக்ரம்ன்னு பேர் இருக்கனும், அதனால அந்த விக்ரம்ங்குற பேர்னால, அது நீயா இருக்க மாட்டியா என ஒரு நப்பாசை வருது விக்ரம் நான் உன்ன எப்படி கண்டுபிடிப்பேன்", என புலம்பிய படியே உறங்கியும் போனாள் காவ்யா.

கேலக்ஸி மால்

"ஹேய், நிஷா சீக்கிரம் வாடி , அந்த ஷாப்க்கு போலாம்"

" இருடி காவ்யா வர்றேன் "

நிஷா , காவ்யா இருவரும், ஊட்டி செல்வதற்காக ஷாப்பிங் வந்தனர். ஏற்கனவே கையில் ஷாப்பிங் செய்த பேக்குகள் இருக்க மறுகையில் ஐஸ்கிரீமை .ரூசித்தவாறு தோழிகள் இருவரும் நடக்க, படக்கென யார் மீதோ நிஷா எதிர் பாராமல் இடிக்க, கையில் உள்ள ஐஸ்கிரீம் மற்றும் பேக்குகள் அனைத்தும் கீழே விழுந்து பொருட்கள் சிதறியது.

"ஸாரி , ஸாரி" , என சொல்லி கொண்டே நிமிர்தவள் கண்கள்,நெருப்பு குளமாக மாறியது.

"யூ , ராஸ்கல் நீயா, அறிவில்ல இப்படி கண்ணு முண்ணு தெரியாம இடிக்க, ஆமா என்னடா பொறுக்கியா? பொறுக்கி மாதிரி என் பின்னாடியே சுத்துற" நிஷா கூற.

"ஹேய் , யார்ட்ட என்னடி பேசுற விடுடி" என காவ்யா சமாதானப் படுத்தினாள்.

ஆனால் அவை எதையும் நிஷா காதில் வாங்க வில்லை.....
 
Status
Not open for further replies.
Top