ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 9
சி பி ஐ அலுவலகம்

ராமசாமி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அதிர்ச்சி மீளாதவராய் நிற்க , புதிதாக வந்த அதிகாரியோ ,ராமசாமியை கூப்பிட்டு சில பைல்களை எடுத்து மேஜை மேலே போட்டார்.

இதோ கார்த்திகேயன் அவர் கேஸ் டிடெய்ல்ஸ் பைலை எங்கள் மேலதிகாரியிடம் கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார்.

தீடிரென்று , அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர , புது அதிகாரி ராமசாமியையும் மற்றும் சில அதிகாரியையும் கூட்டிக்கொண்டு, அந்த இடம் விரைந்தனர்,
அனைவரும் காரில் ஹைவேயில் செல்ல ,ராமுக்கு அதை பார்த்தவுடன் புரிந்து விட்டது, வண்டி நேராக அந்த முள்ளுக்காட்டை கடந்து அதே குடோன், ஆம் நேற்று கார்த்திக்கேயன் கூட்டி வந்த அதே குடோன்,
ராமசாமிக்கு, அந்த குடோன் ஐ பார்த்தவுடன் தலை சுற்றி கீழ விழும் அளவிற்கு அதிர்ச்சி,
ஏனென்றால் அந்த குடோன் முழுவதும் தீக்கு இறையாகி போய் இருந்தது,
அதில் இருந்து ஒரு எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது,
ஆம் அதுதான் அதே தான் இப்போது மெல்ல புரிந்தது , கேஸ்க்கு என்றிருந்த ஒரே சாட்சியும் அழிக்கப்பட்டது.
இப்போது கேஸின் நிலைமை மற்றும் அது குற்றவாளியின் கைக்கு மாறி விட்டது என்பதை புரிந்து கொண்டார், இருந்தும் எதும் வெளி காட்டாமல் அமைதியாக இருந்தார் ராமு.

இப்போது ராமசாமி மனதில் மெல்ல பயம் அப்போ அப்போ கார்த்திக் சார்.............( தன் தலையை மெல்ல குலுக்கி கொண்டு ) ச்சே சே அவர யாராலயும் எதையும் பண்ண முடியாது, என மனதின் ஒரு நேரத்தில் நினைத்தாலும், பின்ன என்ட கூட சொல்லாமல் அவர் எங்கள் போயிருப்பார் என சிறிது குழம்பியும் ,சிறிது வருத்தம் மேலோங்கியும் இருந்தார்.

மாலை நேரம் மெல்ல யாருக்கும் தெரியாமல் ராமு , கார்த்திக்கேயன் வீட்டிற்க்கு வந்தார் , அங்கு ஆட்கள் தங்கி இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது.

ராமுக்கு இப்போது ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்து விட்டது.
இரண்டொரு நாள் சென்றது , அது கொலை இல்லை விபத்து தான் என்று புது ஆபிசர் கேஸ்ஸை முடித்து விட்டார்.

ராமு அனைத்து உண்மையும் தெரிந்தும், ஏதும் சொல்லவில்லை கேஸ்ஸில் தலையிடவும் இல்லை.
ஆனால் கார்த்திக்கேயன் தங்கி இருந்த வீட்டை தினமும் சென்று பார்ப்பதை தவறவில்லை. அவருக்கு ஏதோ ஒன்று சரியாக படவில்லை , இருந்தாலும்
கார்த்திக்கேயன் கூட பழகிய இந்த கொஞ்ச நாள்ளையே அவர் ராமுக்கு ஓர் சகோதரன் போல பழகி அவரின் நம்பிக்கைக்கு
உரிய நண்பனாகவும் ஆகியிருந்தார் ராமு.
ஒருவழியாக எதிரிகள் சதியில், கொலை விபத்தாக மாற்றப்பட்டது.

இப்பொழுது அடுத்த கட்டம் குழந்தை மற்றும் குழந்தைக்கான சொத்தின் கஸ்டடி கேஸ்.

அந்த சொத்திற்கு தானே இவ்வளவும் நடந்து இருக்கிறது.
ரகுராம்க்கு இப்போது அதிகப்படியான நிம்மதி கேஸ் முடிந்து விட்டதே, தான் நினைத்ததை எளிதாக அடைந்து விடலாம் என்று.
கேஸ் கோர்ட்டிற்கு வந்தது, இன்று தீர்ப்பு,
மதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் வந்து விட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்னிருத்தி விட்டார்.

ரகுராம் தரப்பு வழக்கறிஞரும் தனது தரப்பு வாதத்தை வாதிட்டு விட்டார்.

இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை குறிப்பெடுத்து கொண்ட நீதிபதியோ, தீர்ப்பை எழுதி விட்டார்.

நீதிபதி கேஸ் தீர்ப்பை இப்போது வாசிக்க போகிறார்.
இந்த கஸ்டடி வழக்கில்
அரசு வழக்கறிஞர் வாதத்தின் படி, குழந்தை விக்ரம் பெற்றோர் மரணம் சந்தேகிக்கப்பட்டு, அதில் பலர் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு பின் அந்த கேஸ் விபத்து என முடிவடைந்தது இது இந்த வழக்கிற்கு பெரிதாக தேவையில்லை என்றாலும், அதில் விசாரிக்கப்பட்டவரில் ராம் குமாரும் ஒருவர், மேலும் ராம் குமார் குழந்தை விக்ரமின் அம்மா அவர்களின் உடன் பிறவா சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குழந்தை இப்பொழுது இருக்கும் காப்பகம் அரசாங்கத்திற்கு சொந்தமானது,
அதனால் குழந்தை விக்ரமின் கஸ்டடி மற்றும் அவனை சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தையும் காப்பகமே ஏற்று நடத்தும், காப்பகம் அவனை யாருக்கு வேண்டுமானலும் தத்துகொடுக்கலாம் இதில் காப்பகத்தின் முடிவே இறுதி ஆனது .

இதே ராம்குமார்க்கே காப்பகம் விக்ரமை தத்துகொடுப்பதும் காப்பகத்தின் விருப்பம், குழந்தை விக்ரம் இனி காப்பகத்தின் பொறுப்பு,

அவனது சொத்துகளையும் காப்பகமே நிர்வகித்து அவனது 21 வது வயதில் அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த கோர்ட் தீர்ப்பு,அளிக்கிறது.
என நீதிபதி விக்ரமின் பொறுப்பை காப்பகத்திடம் அதாவது வேதவல்லி அம்மாவிடம் கொடுத்து விட்டது.

ரகுராம், மறுநாளே தன் மனைவியுடன் ,காப்பகத்திற்கு விக்ரமை தத்துஎடுக்கும் விசயமாக சென்றுவிட்டார்.

காப்பகம்

"அம்மா உங்களை பார்க்க,
ரகுராமும் அவரது மனைவியும் வந்து இருக்காங்க, வரச்சொல்லவா" என மலர்கொடி கேட்க.

தன் கையை நேத்தியில் வைத்து தேய்த்தபடி, நீண்ட யோசனைக்கு பிறகு

"அவர்களை வரச்சொல்லு" என்றார்.

வேதவல்லி அறையில் இருந்து வெளியே வந்த மலர்கொடி ,அவர்கள் இருவர் அருகில் சென்று, "அம்மா உங்க இரண்டு பேரையும் வரச்சொன்னாங்க" என கூறிவிட்டு நகர்ந்தாள்.

இருவரும் உள்ளே சென்றனர், இம்முறை, ரகுராம் ஒரு குருட்டு நம்பிக்கையில் உள்நுழைந்தார்.

"வாங்க, மிஸ்டர் ரகுராம்"

"அம்மா ,நான் இப்போ எதுக்கு வந்து இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்"

"சொல்லுங்க மிஸ்டர் ரகுராம்"

"அதான் , விக்ரம இப்பவாவது எங்களுக்கு தத்துகொடுப்பீங்களா அம்மா வேதவல்லி" என கையை கூப்பி அழுத்தமாக கூறி முடித்தார் ரகுராம்.

"அது வந்து," என தன் நெற்றியை தனது இடதுகரவிரல்களால் தேய்த்தபடியே "அது நான் கொஞ்சம் யோசிக்கனும் மிஸ்டர் ரகுராம்" .
என வேதவல்லி கூறிமுடிக்கவும்,

மிகவும் கோபமாக தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை பின்னே தள்ளி விடட்டப்படி,

"என்ன , வேதவல்லி சொல்லுறீங்க நானும் எவ்வளவு பொறுமையாக கேட்டுட்டு இருக்கேன் என்ன ஏன் என்னோட பொறுமைய சோதிச்சு பார்க்குறீங்க ஹா" கோபத்தில் கத்தியே விட்டார்.

"இதோ, பாருங்க மிஸ்டர் ரகுராம், என் முன்னாடி இப்படி கத்துர வேலை வச்சுகிடாதீங்க, நான் வெளிப்படையாவே சொல்லுறேனே எனக்கு உங்களுக்கு விக்ரம தத்து கொடுக்க விருப்பமே இல்லை, அவ்வளவு தான் நீங்க இப்போ கிளம்பளாம்" என கைகும்பிட்டு எழுந்து ஜன்னலோரம் சென்று திரும்பி கொண்டார்.

ரகுராமும் ,இப்பதைக்கு இந்த தத்தெடுக்கும் விஷயத்தை தள்ளி போட்டுவிட்டு ,சிறுதுநாள் கழித்து வந்து பார்போம் என முடிவெடுத்து வந்துவிட்டனர், தம்பதியினர்.
பிறகு மலேசியாவில் இருந்து அவருக்கு தனது பிஸ்னெஸ் சம்மந்தமாக அவசர அழைப்பு வரவும் அங்கு சென்று விட்டனர் ரகுராம் தம்பதியினர்.

இங்கு ராமசாமி, அந்த காலியான வீட்டையே பார்த்து கொண்டிருந்தவர், தீடிரென தன் வேலையை விட்டு விட்டு தன் சொந்த ஊருக்கு தன் மனைவி, தன் மகனுடன் சென்றுவிட்டார்.

நாட்கள் மெல்ல நகர்ந்தது, தீஷாவும் தன் ஒருமாத ஸ்பீச் தெரபிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் ஒரு இந்திய வம்சாவழி தம்பதி , இங்கு சதாசிவம் என்பவரின் ஆலோசனை படி காப்பகத்திற்கு ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்தனர்.

சதாசிவம் ஒரு பிஸ்னஸ் புள்ளி, காப்பகத்திற்கு வழக்கமாக நன்கொடை மற்றும் காப்பதற்க்கு தேவையான அனைத்தையும் செய்யக்கூடிய நன்மதிப்பு மிக்கவர்.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 10

காப்பகம்

சதாசிவம் ஒரு நாள் காப்பகதிற்க்கு, அந்த இந்திய வம்சாவளி தம்பதியினரை அழைத்துக்கொண்டு, காப்பகம் வந்திருந்தார்.
அவருக்கு காப்பகத்தில் நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டது.வேதவல்லி அம்மா ,சதாசிவம் மேல் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் காப்பகத்தின் ஒரு முக்கியவிருந்தினராக கருதப்பட்டார் அப்படியே நடத்தவும்பட்டார்.
வேதவல்லி, சதாசிவம் அந்த வெளிநாட்டு தம்பதியினர், அனைவரும் தங்களது அலுவலக அறையில் தத்து எடுப்பது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
வேதவல்லி அம்மாக்கோ மிகுந்த சந்தோஷம், நம்ம காப்பகத்தில் உள்ள ஏதோ ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமையபோகிறது என்று, ஆசையுடன் ,மகிழ்ச்சியுடன் குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு, வேதவல்லி அத்தம்பதியினரை அழைத்துச்சென்றார் குழந்தைகளை காண்பதற்கு..
அனைவரும் அந்த பச்சைபசேல் என இருக்கும் பூங்காவிற்கு சென்றனர்.
" பாருங்கள் , மிஸ்டர்& மிஸ்ஸஸ் இவங்க தான் என்னோட செல்வங்கள் இதுல உங்களுக்கு எந்த குழந்தை பிடித்து இருக்கிறதோ அவங்களை நீங்கள் தத்தெடுத்து கொள்ளலாம் ." என கூறிவிட்டு குழந்தைகள் விளையாடுவதை கண்டு சிரித்துக்கொண்டிருந்தார்.
வந்திருந்த தம்பதிகள், அனைத்து குழந்தைகளையும் பார்த்துவிட்டு, சந்தோஷமாக இருவரும் வேதவல்லியிடம் சென்றனர் .
அங்கு ஓரிடத்தில் வேதவல்லியும், சதாசிவமும் பேசிக்கொண்டிருந்தனர்,
தங்களை நோக்கி வரும் தம்பதியினரை பார்த்து இருவரும் புன்னகைத்து பின்

" என்ன குழந்தைகளை பார்த்தாச்சா" என கேட்க. ஆமாம் என அவர்கள் சொல்ல

"எந்த குழந்தை "

" அதோ , அந்த குழந்தை" என ஒரு மரத்தை பார்த்து கை நீட்டினர்.

சிரித்துக்கொண்டே வேதவல்லி , அவர்கள்
காட்டிய இடத்தை பார்க்க அங்கு விளையாடி கொண்டு இருந்ததோ ,விக்ரம் .
அவனை பார்த்தவுடன், வேதவல்லி முகம் இறுக்கமானது, பின் அத்தம்பதியினரை பார்த்து , அமைதியான குரலில் ,

"அந்த குழந்தையை தவிர வேறு குழந்தையை பார்த்து முடிவு செய்துவிட்டு அலுவலகம் வாருங்கள்" என கூறிவிட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்து தனது அலுவலகம் சென்றார்.

அந்த தம்பதியினரோ, தங்களுக்கு அந்த குழந்தை தான் வேண்டும் என சதாசிவத்திடம் வற்புறுத்த, அவரோ என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தார்.

தன் அறைக்கு வந்த வேதவல்லி, சாளரம் அருகில் போய் நிற்க.

அங்கு அம்மூவரும் வந்தனர்.
"அம்மா , வேதவல்லி " என்ற அழைப்பை கேட்டு அவர் திரும்ப அம்மூவரும் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

"என்ன வேறு குழந்தையை தேர்ந்தெடுத்தாச்சா"

"இல்லை,ம்மா எங்களுக்கு அந்த பையன் தான் வேண்டும் ,அவன் முதல் பார்வையிலேயே எங்கள் உயிரோடு கலந்துவிட்டான் தயவு செய்து எந்த மறுப்பும் சொல்லாமல் குழந்தையை எனக்கு தாருங்கள், நான் என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கிறேன்" என அந்த பெண் வேதவல்லி அம்மாவிடம் சொல்ல.

"இல்லைங்க, அந்த பையன் வேண்டாம், அவன் அவன் மிகவும் பத்திரமாக பார்க்க வேண்டியவன், அவன் என் கண்பார்வையிலேயே இருக்க வேண்டியவன், அவனை கேட்டு என்னை தர்மசங்கட படுத்தாதீங்க" என வருத்தம் கலந்த குரலில் கேட்டார்.

"என்ன வேதா அம்மா, இவங்க தான் இவ்வளவு கேட்காங்க தானே , அந்த பையனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதே அத ஏன் தடுக்கீங்க , நம்பி தத்து கொடுங்க, அமெரிக்காலயும் அவன் பத்திரமா இருப்பான்.
என சதாசிவமும் வர்புறுத்த வேறு வழியின்றி இரண்டு நாள் யோசிக்க நேரம் வேண்டும் என்று கேட்டு அனுப்பி வைத்தார் அவர்களை.
இரண்டு நாளும், வேதவல்லி மிகுந்த யோசனையுடனே ஆழ்ந்து இருந்தார்.

இதற்கு இடையில் , தீஷாக்கும், விக்ரமுக்கும் இடையில், நல்ல ஒரு நட்பு வளர்ந்து இருந்தது.
இரண்டு நாள் முடிந்து மீண்டும் அவர்கள் மூவரும் வந்திருந்தனர்.

வேதவல்லி யை சந்தித்துவிட்டு, அவரின் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தனர்.
வேதவல்லியும், விக்ரமின் சூழ்நிலைக்கு அவன் இங்கு இருப்பதை விட , அமெரிக்கா செல்வது பாதுகாப்பு என உணர்ந்தார்,

"சரி , விக்ரமை உங்களுக்கு தத்து கொடுக்கிறேன், ஆனா அதற்கு சில கன்டீசன் இருக்கு, அதற்கு சம்மதித்தால் மட்டுமே அவன் உங்களுக்கு சொந்தமாவான்" என கூறிமுடித்தார்.

"என்ன , என்ன சொல்லுங்க ,அந்த தங்கத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என ,அந்த தம்பதியினர் கூற

"சரி முதலாவது நிபந்தனை
வாரம் ஒருமுறை விக்ரம் என்னிடம் பேசவேண்டும்.

இரண்டு
அவனது பெயர், இன்ஷியல் மாற்றக்கூடாது.

மூன்று
வருடத்திற்கு ஒருமுறை இந்த காப்பகம் வரவேண்டும்.

நான்கு
அவனது 25 வயதில் இருந்து அவன் இந்த சென்னையில் தான் இருக்க வேண்டும் .
இதற்கு எல்லாம் ஒத்துக்கொண்டால் ,நீங்கள் அவனை தத்தெடுத்து செல்லலாம்.

அவர்கள் அனைத்திற்கும் ஒத்துக்கொண்டு, பத்திரத்தில் கையெலுத்தும் வாங்கி ஆகிவிட்டது, மற்றவை சட்டப்படி எல்லாம் செய்து, விக்ரம் தத்தெடுப்பு நல்லபடியாக முடிந்து, விக்ரம்மை அழைத்து வந்து அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர்,
"விக்ரம் , நீ இவர்களுக்கு மகனாக இவர்களுடன் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறாய் எனக்கூறவும் , அவனும் சரி என்றான். அவனுக்கு சிறு வருத்தம் மட்டுமே அதுவும் அவன் தோழி தீஷா வை விட்டு பிரிவதே.

"அம்மா , நான் இவங்க கூட போறேன்,ஆனா தீ யையும் என் கூட அனுப்புவீங்களா" என வெள்ளந்தியாக கூற.

அவர் சிரித்து விட்டு, அவளுக்கு இங்கே சிகிச்சை இருக்கு அத முடிச்சுட்டு வருவா என சமாதப்படுத்தினார்.

ஒரு வாரத்தில் எல்லா வேலையும் முடிந்து, அவர்களுடன் அமெரிக்கா செல்ல தயாரானான் விக்ரம்,
சிறுபிள்ளை என்பதால் தான் ஊருக்கு செல்வதை தீஷாவிடம் சொல்ல மறந்து விட்டான்.

அன்று காலை புறப்பட தயாரானான், விக்ரம், பின் தீஷா வை பார்த்து அவளிடம் சொல்ல நினைத்தான், தீஷாவை காப்பகம் முழுவதும் தேடினான், தீஷா தெரபி சென்டர்க்கு
சென்றிருப்பதால், அவனால் அவளை கடைசிநேரத்தில் காண இயலாமல், ஏக்கத்துடன்
அமெரிக்கா சென்றான்.
இங்கு தீஷா திரும்பி வந்து, பார்க்க காப்பகத்தில் விக்ரம் இல்லை.

தூவானம் தொடரும்
 
Last edited:

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 11

காப்பகம்

வானில் பறந்து , வெகு தொலைவில் சென்று விட்டான், விக்ரம்.

இங்கு தீஷா சென்டரில் இருந்து தெரபி முடிந்து மீண்டும் காப்பகத்திற்க்கு வந்திருந்தாள், அவளுடன் அந்த தெரபி சென்டரில் இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள்.

"வாங்க, தீ தெரபி எப்படி போகிறது , அவளிடம் எதாவது முன்னேற்றம் தெரிகிறதா" என விசாரித்தார்.

" மேடம், அவளுக்கு இப்போது பேச்சு வந்துவிட்டது , அவள் இப்போது திக்கல் இல்லாமல் பேசுகிறாள், அவள்பெயர் என்ன என்பதை அவளே கூறுகிறாள், பாப்பா உன் பெயர் என்ன இவங்க கிட்ட சொல்லு" என அந்த சென்டர் பெண்மணி கூறவும்.

" அம்மா " என தீஷா கூற வேதவல்லிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, அம்மா என்ற ஒத்த வார்த்தையில் "பாப்பா தீ உனக்கு பேச்சு வந்துட்டுமா ,நீ பேசுற மா " என தீஷாவை கட்டி அனைத்துக்கொண்டார்.

"உன் பெயர் என்னமா " என வேதவல்லி கேட்க

"தீஷா யுவாஞ்சலின்" ,என திக்காமல் சிரித்துக் கொண்டே சொன்னாள் அந்த பூந்தளிர், அதை கேட்ட வேதவல்லி யோ தீஷா என அழைத்துகொண்டே அவளை கட்டி அணைத்து கொண்டார்.

உடனே, அவளை பற்றிய தகவல்களை காவல் ஆய்வாளர் முத்துவேல் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

தீஷா , மிகவும் சந்தோஷமாக தன் நண்பனை பார்த்து ஆசை ஆசையாய் பேசிக்காட்ட சென்றாள், காப்பகத்தில் அனைத்து இடத்திலும் தேடி ஆகிவிட்டது, விக்ரமை எங்கும் காணமுடியவில்லை, மிகவும் சோர்ந்து மீண்டும் வேதவல்லி அம்மாவை தேடி வந்தாள் தீஷா.

"தீஷா கண்ணு , ஏன் மா இப்படி இருக்க, தீஷா குட்டிக்கு என்னாச்சு " என தீஷா வின் தாடையை பிடித்து கேட்க தீஷாவோ....

"அம்மா, நான் எவ்வளவோ தேடிட்டேன் இந்த விக்ரம் எங்க போனான்னு தெரியலமா எங்கயோ ஒழிந்து கிட்டான், அவன கூப்பிடுங்கம்மா நான் அவன்ட என் பேரு சொல்லனும் பேசனும் விளையாடனும், அம்மா அம்மா கூப்பிடுங்கமா " என கண்ணில் நீர் தேங்க தன் மழலை குரலில் கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அந்த குழந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் , வேதவல்லி கவலை கொண்டு ஒரு வழியாக ஏதோ சொல்ல முனைந்தார்....

"அது வந்து தீஷா குட்டி, உன் நண்பன் விக்ரமோட அம்மா, அப்பாவும் வந்து அவனை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க, உன்னையும் சீக்கிரம் அம்மா, அப்பா கூட்டிட்டு போவாங்க சரியா" என வேதவல்லி அம்மா கூற,

உடனே தீஷா தன் தலையை கவிழ்ந்து கொண்டு "இல்லை அம்மா அவங்க வரமாட்டாங்க" என கூறிவிட்டு தன் இடத்திற்கு சென்று விட்டாள்.
நாட்கள் சென்றது, ரகுராம் ஊரில் இருந்து மீண்டும் காப்பகத்திற்கு வந்திருக்கிறார்.அங்கு விக்ரம் தத்துகொடுத்த விவரம் அறிந்து பெரிய கலகம் செய்துவிட்டார்.

பின் ஏதோ ,ஏதோ பேச்சுவார்த்தைகள் வேதவல்லிக்கும், ரகுராம்க்கும் இடையில் நடந்தது, ஏன்ன நடந்ததோ ஏது நடந்ததோ , வேறு ஒரு குழந்தையை தத்தெடுத்து கொண்டு மீண்டும் மலேசியா சென்று விட்டார்.

இதற்கிடையில் ராமசாமியும் தன் சொந்த ஊர் என்று சென்றவர், அங்கும் இல்லை ,அவரும் குடும்பதத்துடன் எங்கு சென்றாரோ தெரியவில்லை.

வாரங்கள் மாதங்கள் ஆனது , மாதங்கள், வருடங்கள் ஆனது வருடங்கள் கற்பூரமாய் கரைந்தது.
வேதவல்லியும் , விக்ரமும் தவறாது பேசிக்கொண்டனர், அவனின் ஒவ்வொரு தடவை பேச்சு முடிவிலும் தீஷா வை பற்றி கேட்காமல் அவனது பேச்சு முடிவடையாது.

இப்படியே 17வருடம் ஓடிவிட்டது,

இன்று....

"ஹேய், ஹோ.... ஹேய் கமான், கமான் பேபி கமான், என இளம் பெண்கள் ஆர்பரிக்க, ஆண்களும் கத்திக் கொண்டு கைதட்ட, அந்த நீளமான நீச்சல் குளத்தில் வேகமாக நீந்தியபடி வந்து தன் எல்லை கோட்டை தொட்டப்படி தன் மந்திரப்புன்னகையுடன், ஒர் இளைஞன் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வந்தான்.

"திஸ் ஸ்விம்மிங்,கான்டஸ்ட் பர்ஸ்ட் பிலேஸ் கோஸ் டூ மிஸ்டர்,.விக்ரம் என கூறவும்.

அனைவரின் கண்களும் விக்ரம் வந்து கொண்டிருந்த திசையில் விழுந்தது.
அங்கோ, ஆறடி உயரத்தில் ஜிம் போன ஜெமினி கணேஷன் மாதிரி வசீகரத்துடன்,அலை அலையாய் பாயும் கேசத்துடன். அளவான டிரிம் செய்யப்பட்ட மீசை, கண்ணத்தில் குழிகள் விழ சிரித்தபடி
தன் பரிசை வாங்க அங்கு வந்துகொண்டிருந்தான் விக்ரம்.

அவன் சாதாரணமாக பார்ப்பதே ,பெண்களுக்கு ஒரு வித மயக்கத்தை அளிக்கும், இன்று நீச்சல் உடையில் அதும் கண்ணக்குழி சிரிப்பில் மயங்கி சொக்கி இருந்தனர்.

ஆண்களே பொறாமை கொள்ளும் அளவில் ,அவனது அழகு மற்றவர்களை சொக்கியது.
பரிசு வாங்கியபின், மேடையில் இறங்கிய விக்ரம் தம் ரசிகர் & ரசிகைகளின் அன்புத்தொலையில் மூழ்கி அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்தான்.
பின்பு அவனது நண்பர் , தேவ் வந்து அவனை இழுத்து கொண்டு டிரஸ்ஸிங் அறையினுள் செல்ல,

அங்கு சென்ற விக்ரம் தன் உடமைகளை மாற்றி விட்டு, இருவரும் அத்தனை ரசிகர் கூட்டத்தையும் தாண்டி வேகமாக இருவரும் தங்கள் காரில் வந்து ஏறியவுடன் அக்கார் வேகமாக ஓரிடம் சென்றடைந்தது.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 12

காவ்யா காவ்யா காவ்யா என கடற்கரை சாலையில் தோழிகள் ஆர்பரிக்க.....

மின்னலைவிட வேகமாக வந்து தனது எல்லை கோட்டை அடைந்தது, அந்த பைக் ....

கருப்பு நிற பேன்ட், அதே கலரில் ஜெர்கின் ,காலில் அதே கலர் பூட்ஸ், தலையில் கெல்மேட், கைகளில் ரேசர் கிளவ்ஸ், என அந்த பைக்கில் இருந்து இறங்கி தனது கெல்மேட்டை கலட்ட , தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த தலைகவசத்தில் இருந்து விடுபட்டது கருநிற கார்கூந்தல்,

தனது தலையை இடபுறமாகவும், வலபுறமாகவும் அசைத்து பின் தன் கைகளால் அதை சரி செய்து விட்டு.

மிடுக்கான நடையுடன் வந்தாள் காவ்யா, பெண்களுக்கே உரித்தான கர்வம், சுயமரியாதை சற்று அதிகம் உடையவள், தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் உடையவள், அவளுக்குள் ஒரு ஆண்மை கலந்த பெண் அவள், தைரியசாலி, புத்திசாலி என எல்லா புகழ்ச்சிக்கும் சொந்தகாரி கோபத்திற்கு எஜமானி..

அனைவருக்கும், பிடிக்க கூடிய ,ஆறுதல் தரக்கூடிய தேவதையும் அவளே,

"என்டா, இப்ப என்ன சொல்லுறீங்க, என்னமோ சொன்னீங்க பொண்ணுங்கன்னு ஹா" என நிஷா அந்த பசங்களிடம் கூற ...

"அக்கா அக்கா விடுங்கக்கா தெரியாம கிண்டல் பண்ணிட்டோம்" என அந்த பசங்க கெஞ்ச, ஹெல்மெட் ஓட வந்த காவாயாவோ அதை கொண்டு அவர்களை அடிக்க போக....

"ஏய், காவ்யா என்னடி பண்ணபோற"

"விடுடி என்ன இன்னிக்கு இவனுகள, இந்த ஹெல்மேட் ஆளயே வாய உடைக்கேன்"

" அடியை, ஏன் ,அவனுங்க ஏதோ தெரியாம கிண்டல் பண்ணிட்டானுக, அதான் நீ பைக்ரேஸ்ல ஜெய்சிட்டியே பின்ன என்னடி"

"ஏய் நீ விடுடி நிஷா, அவனுங்க கிண்டல் பண்ணப்ப கூட ஒண்ணும் தெரியல டி ,அக்கா அக்கா கூப்டானுக பாரு அதான் டி ரொம்ப கடுப்பாகிட்டேன் "

இத கேட்டவுடன் நிஷா காவ்யா வை மேலும், கீழுமாக, கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள், அதற்குள் அந்த பசங்க மறுபடியும் அக்கா அக்கான்னு கெஞ்ச,

"அடிங்க,இவனுகள மறுபடியும் மறுபடியும்" என ஹெல்மெட் ஐ ஓங்க..

"அடேய், போங்கடா, போய் தொலைங்களேன்டா இல்லை னா இவ உங்க மண்டைய உடைச்சாலும் உடைச்சுடுவா" என நிஷா கூறவும், அந்த பசங்க தங்களது பைக்கை எடுத்து கொண்டு சிட்டாய் பறந்து விட்டாங்க.

"ஏய் ஏண்டி இவ்வளவு கோபம் வருது,நீ மலேசியால காலேஜ் படிச்சியா இல்லை அடியாளா வேலை பார்ததியா"என நிஷா கிண்டல் அடிக்க.

"பின்ன என்னடி அக்கா, அக்கா ன்னு கூப்ட்டா கடுப்பாகாதா.....23 வயசு எல்லாம் ஒரு வயசா

என்னமோ 30 வயசு ஆனா மாதிரி லா பேசுறாங்க."

சரிடி விடு , சன்டே மட்டும் தான் ப்ரீ அதுல போய் சண்டைபோட்டு நம்ம மூட் ஸ்பாயில் பண்ணவேண்டாம்.

என இருவரும் கடற்கரை மணலில் நடந்தவாறே பேசிச்சென்றனர்.

ஆம் காவ்யா,மலேசியாவில் படிப்பை முடித்துவிட்டு, தன் தந்தை ரகுராம், தாய் அகிலாவுடன் இந்தியா வந்து செட்டில் ஆகி 3 வருடகாலமாக ஆகிறது.

காவ்யாவும், நிஷாவும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே, ஈவன்ட் மேனேஜிங் என்கிற தொழிலை இருவரும் சொந்தமாக நடந்துகொண்டு வருகின்றனர்



அமெரிக்கா

விக்ரம் , தான் வாங்கிய டிராபியுடன், நேராக ஷீலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், அதை பார்த்த ராஜேஸ் , ஹலோ மை டியர் சன் நீயும் மாத்திற்க்கு ஒரு போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கிட்டுவர , அத வைக்க தான் நம்ம விட்டுல இடம் இல்லை மைசன்... என நக்கல் அடிக்க

"டேட் யூ ஆர் சோ கிரேஸி டேட், மம்மி டேட் டெய்லி தவறாமல் வாக் போறாரு போல , கேர்புல் ம்ம்மி, அங்க எதாவது வெள்ளக்காரிய கரெகட் பண்ணிடப்போறாரு" என கூறிவிட்டு தன் தலையை லேசா தன் தந்தை பக்கம் திருப்பி ஒரு கண் அடித்து விட்டு, பட பட தட தட என மாடிக்கு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

டேய், மைசன் ஏன் இந்த சோசியல் சர்வீஸ், என் சோத்துல என்டா கை வச்சிட்டு போற மைசன் என பேசிக்கொண்டே ஷீலா பக்கம் பார்க்க, அவளோ அங்க முறைத்து கொண்டிருந்தாள், ஐயயோ இவ வேற நம்பாதமாதிரியே பாக்குறாளே

என நினைத்துக்கொண்டு இன்னிக்கு வாக் போனமாதிரி தான் என சோபாவில் உட்கார்ந்தார்

சென்னையில்

நிஷாவும், காவ்யாவும் தங்கள் அறைக்கு வந்திருந்தனர்.ஆம் இருவரும் ரூம் மேட், காவ்யாவின் பெற்றோர்கள் , ரகுராம் மற்றும் அகிலா இருவரும் கோயம்புத்தூர் ல் இருந்தனர்.

அமெரிக்காவில்

குளித்து முடித்து ,உணவை சாப்பிட்ட விக்ரம் , தன் அன்னை ஷீலாவிற்க்கு ஒரு முத்தத்தை பரிசளித்துவிட்டு வெளியே செல்வதற்காக வாசல் நோக்கி செல்லும் போது

"நில் விக்ரம் " என்ற குரலில் "வாட் மம்மி" என கேட்க.

"அடுத்த வாரம், உனக்கு பிறந்த நாள் வருது, நியாபகம் இருக்குள்ள "

"அது எப்படி மம்மி மறக்கும், இத்தனை வருஷம் மறக்குற மாதிரி யா நீங்க கொண்டாடுனீங்க, என ஓடி வந்து தன் அன்னையை கட்டி கொண்டான்."

"உனக்கு வயது 25ஆக போகுது, இனி நீ அமெரிக்கால,இருக்க கூடாது, உனக்கு நியாபகம் இருக்குல நீ இந்தியாவிற்கு போகனும், அதற்கான ஏற்பாடுகளை பாரு "

என ஷீலா கண்களில் கண்ணீர் ததும்ப மனதை கல்லாக்கி கிட்டு கூறி முடித்தார்.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 13

" ஏய் ,எங்கே இவ்வளவு அவசரமா கிளம்புற" என நிஷா கேட்க,
" நான் கோயம்புத்தூர் போரேன் டி , அது வந்து அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் , நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன், நீ கெச் .ஆர் திலீப் ட சொல்லிடு என கூறிவிட்டு, வேகமாக தான் புக் பண்ணி இருந்த கால் டக்ஸியில ஏர்போர்ட்டிற்கு கிளம்பி விட்டாள்.
விமானமும் கிளம்பியது, கோவை போய் இறங்கியதும் வேகமாக தன் தந்தையை பார்க்க கிளம்பினாள்,
தன் வீட்டு வாயிலில் இறங்கியவளுக்கு ஒரே அதிர்ச்சி, ஆம் அவள் தந்தை ரகுராம் அங்கு தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்பா, என ஓடி போய் அனைத்துக்கொண்டவளை கண்டு திகைத்து போய் நின்றார், ரகுராம்.

"ஏன்டா, என்னடா குட்டி என்னாச்சு " என தன் மகள் தலையை வருடி விட்டார்.

"சரி சரி இரண்டு பேரும் பாச மழை பொழிஞ்சது போதும் உள்ளே வாங்க. " என அகிலா அசால்ட் ஆக சொல்லி விட்டு உள்ளே செல்ல, காவ்யாவிற்க்கு தன் அன்னையின் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது ஒருவேளை அம்மா தான் ஏதோ பிளான் பண்றாங்களோ என யோசித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

" என்னமா காவ்யா,ஏன் திடீரென கிளம்பி வந்துருக்க".என ரகுராம் கேட்க .

"அப்பா அம்மா தான் போன்ல உங்களுக்கு உடம்பு முடியலன்னு சொன்னாங்க "

"எனக்கா, ஏன் அப்படி சொன்னா நான்
நல்லா தான இருக்கேன்" என இருவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரம் கையில் காப்பி கப்புடன் அகிலா , "ஆமா நான் அப்படி தான் சொன்னேன், அப்படி சொன்னாதானே உங்கள பாக்குறதுக்காவது உங்க அருமை புத்திரி இங்கு கிளம்பி வருவா" என கூறிக்கொண்டே காப்பியை இருவருக்கும் கொடுத்தார்.
ஏன் என்பது போல் இருவரும் முழிகக்க.

"ஏன்டி , ஏன் புள்ளைட்ட போன் பண்ணி அப்படி சொன்ன அப்படி என்ன தல போற காரியம்" என ரகுராம் கேட்க,

" ஏங்க உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மகள் குழந்தைன்னா, அவளுக்கு கல்யாணம் வயசு வந்துட்டு ,அது உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா" என அகிலா வசைபாடவும் தான் ரகுராம்க்கு தன் மகளுக்கு 23 வயது ஆகிவிட்டது என்பதை உணர்ந்தார்.

"அம்மா எனக்கு தெரியும் நீங்க இந்த மாதிரி ஏதாவது வேலை பார்ப்பீங்கன்னு, இப்போ எனக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என கோபமாக தன் அன்னையை பார்த்து கேட்க,

"ஏன்டி எதிர்த்து பேச மாட்ட ,உன்ன பெத்த தாய் சொல்லி இருந்தா அவங்க பேச்ச கேட்டு
ஒழுங்கா கல்யாணம் முடிச்சுட்டு போய் இருப்ப, நான் வெறும் தத்தெடுத்து வளர்த்தவ தானே " என கண்ணீர் மல்க கூற ...

"அம்மா, என்ன மா சொல்லுறீங்க, ஏன்மா இப்படி பேசுறீங்க, இன்னும் கொஞ்ச நாள் உங்க கூட இருக்கனும்னு தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன் .
அம்மா நான் எங்கயோ பிறந்தேன், மட்டையில அடிச்ச பந்து மாதிரி வீசப்பட்டு ஆசிரமம் வந்தேன், அயிலிருந்து நீங்க என்னை தத்தெடுத்து இந்நாள்வரை நீங்க பெத்த பொண்ணா எந்த குறையும் இல்லாமல் வளர்த்து இருக்கீங்க உங்கள விட்டுட்டு போக கூடாதுன்னு நினைக்கேன். ஒண்ணு மட்டும் மனசுல வச்சுக்கோங்க மா ,எப்படி இருந்தாலும் இந்த ஜென்மத்தில நீங்கள் தான், என்ன பெத்தவங்க, என தன் அன்னையை கட்டி கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் காவியாவாகிய தீஷா யூவாஞ்சலின்."

"அடியே, எவ டி இவ கல்யாணம்,
கல்யாணம்ன்னு, பழச நியாபகப்படுத்தி
புள்ளய அழவச்சிட்டு, இனி கல்யாணத்தப்பத்தி வாய தொரந்த வாயிலே குத்துவேன், என் புள்ள எப்போ அவளுக்கு கல்யாணம் கேட்குறாளோ ,அப்போ முடித்து வைப்போம், நீ அழதாடா என் செல்லம்" என தன் மகள் தலையை வருடிவிட்டார் ராம்குமார்.

"என்னமோ போங்க அப்பாவும், மகளும்" என சலித்து கொண்ட சமையலறை நுழைந்தாள் அகிலா.

"ஓய் அகிலா" என குரல் வரவும் திரும்பி பார்த்தார் அகிலா. கூப்பிட்டது காவ்யா.

" என்னடி என்ன ,வாய் நீளுது ஆங்..." என இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டார் அகிலா.

"எங்க, எஸ்கேப் ஆகுற அகிலா , சும்மா சென்னையில இருந்தவள, ஒரு மொக்க பிளான் போட்டு வரவழைச்சுட்டு, இப்ப எங்க போற ஆங்" என இவளும் தன் அன்னையை போல் கையை இடுப்பில் வைத்துக்கொண்டு கேட்க.

"அடியே இப்ப என்னடிபண்ணணும்னு சொல்லுற"

"ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு கடுப்பாகி இருந்தேன் நல்ல வேளை நீயே கூப்பிட்டுட்ட, எனக்கு நல்லா டேஸ்டா சமைத்து போடு" என சபேசிக்கொண்டே தன் தந்தையை
பார்க்க.அவரும்

"ஏய் பொண்ணு சொல்லுறதசெய்" என கூறவும் அப்பாவும் பொண்ணும் சிரித்துக்கொண்டே ஹைபை அடித்துக்கொண்டனர்.
இதை பார்த்த அகிலாவோ, தன் ஆள்காட்டி விரலை தன் முகத்துக்கு முன்னே நீட்டி இது உனக்கு தேவையா, தேவையா என வடிவேலு போல் செய்வதை பார்த்த இருவரும் மேலும் வாய்விட்டு சிரித்தனர்.

" சரி சொல்லித்தொலைங்க இரண்டு பேரும், எல்லாம் என் நேரம்"என தலையில் அடித்துக்கொண்டார் அகிலா.

"அகிலா டார்லிங் , குறிச்சுக்கோ மட்டன்பிரியாணி, பட்டர் சிக்கன் கிரேவி , பாய்ல்டு எஃ, சிக்கன் விங்கஸ்,லெக்பீஸ் பிரை, பீட்ரூட் ஜாம் ,ஓடு ஓடு எல்லாத்தையும் சீக்கிரம் ரெடி பண்ணிட்டு கூப்பிடு அதுக்குள்ள உன் மகள் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கேன் என சொல்லிட்டு தன் பெட்டியுடன் தனது அறைக்கு சென்றவுடன், கதவை தாழிட்டவள், அதில் சாய்ந்து கண்களை முடியதும் கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தோடியது....

தூவானம் தொடரும்....
 
Status
Not open for further replies.
Top