ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 14

தன் அன்னையிடம் பேசிவிட்டு, தன் அறை புகுந்த காவ்யா கதவை மூடி அதில் சாய்ந்தவளின் கண்களும் மூடி இருந்தது.,அதில் கண்ணீர் துளிகளும் எட்டிபார்த்தது.
அவ்வளவு எளிதாக வெளியே பேசிவிட்டு வந்தவளை எது தாக்கியது தன் அன்னை சொன்ன வார்த்தையா, ஆம் ஆனால் அது தத்தெடுத்த பெண் என்ற வார்த்தை அல்ல, கல்யாணம் என்ற வார்த்தை, கல்யாணம் , மனதில் ஒருவர் இருக்கும் போது எப்படி வேறு ஒருவரை கல்யாணம் செய்வாள், அதுவே அவள் கண்ணீர்க்கு காரணம், நேராக கண்ணாடி முன் சென்றாள்.

தன்னை தானே நன்றாக உற்று பார்த்தாள்,

"என்ன காவ்யா இப்போ எதுக்கு கண்ணீர் வருது உனக்கு, ஏன் கல்யாணம் வேண்டாம் என்கிற" என அந்த கண்ணாடி பிம்பம் அவளை நோக்கி கேட்டது.

"என்ன தீஷா நீயே இப்படி ,சொல்லுற நான் எப்படி வேற ஒருவர நோ ஐ கான்ட்"

"சரி , காவ்யா வேற ஒருவர் கல்யாணம் பண்ணாம , உன் மனசுல இருக்கிறவர கல்யாணம் பண்ணிக்க போற அப்படி தானே" - மனசாட்சி

" ஆமா, தீஷா என் மனசுல இருக்கிறவர தான் நான் உயிருக்கு மேலா விரும்புகிறேன் , அவர தான் கல்யாணம் பண்ணிப்பேன்"

"ஹா, ஹா ,ஹா" என மனசாட்சியான தீஷா கை கொட்டி சிரிக்க.

"ஏன் இப்படி சிரிக்கிற" என காவ்யா கேட்க,

" பின்ன என்னடி காவ்யா, அவன் பெயர் என்ன" -மனசாட்சி தீஷா.

"அவன் பெயர் விக்ரம் " - காவ்யா.

"சரி அத தவிர ,எங்கே இருக்கான், என்ன பண்றான் , எதாவது தெரியுமா" -மனசாட்சி தீஷா.

இல்லை என்பது போல் காவ்யா தலையாட்ட, அவளின் மனசாட்சியாகிய தீஷாவோ சிரித்துக்கொண்டே மறைந்தாள்.

அமெரிக்காவில்

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு ஹோட்டலில் பார்டி ரெடி பண்ணி இருந்தான் விக்ரம்.

"என்ன விக்ரம் திடீர்னு பார்டி" என ஒரு நண்பன் கேட்க .

"ஸ்போர்ட்ஸ் ல டிராபி வாங்குனதுக்குடா" என மற்றொருவன் சொல்ல.

"இல்லைடா மச்சி இது பிறந்த நாள் டீரிட்" என தேவ் சொல்ல.
அதுக்கு தான் இன்னும் நாள் இருக்கேடா என மற்றொருவன் சொல்ல.

"ஆமாம், ஆனா விக்ரம் அப்போ இங்க இருக்க மாட்டான் நானும் விக்ரமும் இந்தியா போறோம்" தேவ் கூறிமுடிக்கவும் அங்கிருந்த ஆண் நண்பர்கள் அதிர்ச்சி ஆனார்களோ இல்லையோ பெண் நண்பர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.

"வாட் விக்ரம் ",என பெண் தோழிகள் காரணம் கேட்டு நச்சரிக்க ஒருவழியாக அவர்களை சமாளித்து வீடு வந்தனர், விக்ரமும், தேவ் வும்,...
நாட்கள் சென்றது, அவர்கள்

இந்தியா செல்லும் நேரமும் வந்தது. நண்பனுடன் இந்தியா கிளம்பினான் விக்ரம், தன் வருங்காலத்தின் புதிய அத்யாயத்தை சந்திப்பதற்காக.
விதி அவன் வருங்காலத்தில் பல அத்யாயங்களை உருவாக்கி வைத்து இருக்கிறது, பல சவால்கள், பல சந்தோஷம் பல எதிர்பார்ப்பு என பல ,பல விஷயங்கள் விக்ரம் வாழ்வில் நடந்தேர இருக்கிறது.

வருடாவருடம் ஒவ்வொரு முறையும் அவன் இந்தியா வரும் போது அவனுக்கு என்று ஒரு கனவு, ஆசை எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அது ஒரு தடவையும் நடந்தது இல்லை.

இந்ததடவையும் அவன் அதே கனவையும், ஆசையையும் சுமந்து கொண்டு விமானத்தில் பயணித்து கொண்டிருக்கிறான்.

"டேய் மச்சான் என்ன யோசனை அந்த பொண்ண பத்தியா " என தேவ் கேட்க, கண்கள் மூடி தனது இருக்கையில் சாய்ந்திருந்தவன் ஆமாம் என்பது போல் தலையாட்ட .

"என்னடா நீயும் ஒவ்வொரு தடவை வரும் போதும் அந்த பொண்ண தேடுற, ஆனா உன்க்கு அவ பெயர் தீஷா, பேசும்போது திக்குவா இத தவற வேற ஒண்ணு தெரியல, ஆனா இப்போதும் அவ கிடைச்சுடுவான்னு அவள நினைச்சு உருகிட்டு இருக்க, என்ன லவ் ஓ போ " என தன் தலையில் அடித்து கொண்டான்.

அவர்கள் பயணம் இனிதே நிறைவடைந்தது, அனைவரும் ஏர்போர்ட்டில் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு வெளியே வர , அங்கு சதாசிவம் ரெடியாக காத்திருந்தார்.

"அங்கிள் என அவரை கட்டி அணைத்தான் விக்ரம். பின் அவர் வந்த காரை ஒரு நோட்டமிட்டு பின் ஏதோ நிம்மதி அடைந்தவனாய், நிற்க யாரே அவன் கண்ணை அவர்களின் இரு கைகளால் பொத்த, அந்த கைகளை தொட்டு பார்க்காமலே ஷீலா என கூறவும்.

"ஹேய் , வாவ் டா , அப்பா பாத்தீங்களா விக்ரம் என் மேல எவ்வளவு பாசம் வைத்து இருந்தா கரெக்ட் ஆ கண்டுபிடிப்பாரு என சந்தோஷமாக ஷீலா கூறினாள்.

ஷீலா சதா சிவத்தின் ஒரே மகள், விக்ரமை தன் காதலனாக இல்லை இல்லை கணவனாகவே எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவள்.

"ஆமா, இத கண்டுபிடிக்க அமெரிக்கால இருந்து எப்.பி.ஐ யும் இந்தியாவுல இருந்து சி.பி.ஐ யும் வருவாங்க போவியா" என தேவ் ஷீலா வை கிண்டலடிக்க.

"விக்ரம், இந்த டம்மி பீஸ் அ கொஞ்சம் கம்முன்னு இருக்க சொல்லு இல்லை பன் டேமேஜ் ஆகி ஜாம் வெளியே வந்துடும் பார்த்துக்கோ" என தன் கைகளை முறுக்கி காண்பித்து பின் விக்ரம் கைகளை இழுத்துக்கொண்டு காருக்குள் சென்று அமர்ந்தாள்.

கார் நேராக சதாசிவம் வீட்டில் நின்றது. விக்கிரம் இந்தியா வரும் போதெல்லாம்,சதாசிவத்தின் வீட்டில் தான் அவர்கள் தங்கு வார்கள்.

சரி போய் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க, மதியம் சாப்பாட்டில் சந்திப்போம் என கூறிவிட்டு சதாசிவம் நகர...
விக்கிரமின் கையை பிடித்துக்கொண்டே அவனரை சென்றால் ஷீலா..

"அம்மாடி தெய்வமே , ஏன் வேதாளம் மாதிரி
விக்கிரம் தோள்லயே தொங்கிட்டு இருக்க, ரொம்ப நேரம் டிராவல் ரொம்ப டயர்ட் ஆ இருக்கு நாங்க குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கனும், நீ கொஞ்சம் வெளியே போறியா" என தேவ் ஷீலா வை விரட்ட.

"விக்கரம் இந்த தேவாங்கு என்ன சொல்லுறான் பாரு" என மீண்டும் ஷீலா விக்ரம் அருகில் செல்ல.

"இல்லை ஷீலா ஐயம் வெரி டயர்ட், நாம லஞ்ச்க்கு மீட் பண்ணுவோமே" என கூறவும் .

"சரி ஓகே" என மனமில்லாமல் எழுந்து தனதறை சென்றாள் ஷீலா.

தேவ் விக்ரம் அருகில் வந்து அவன் தாடையை பிடித்து இடம்,வலமாக
ஆட்டிவிட்டு " அப்படி இந்த மொகரையில என்ன தான் இருக்கு எல்லா பொண்ணுங்களும் மேல வந்து விழுரராங்க" , என தேவ் கூறிமுடிக்கவும் தலையணை எடுத்து அவனை அடித்து விட்டு, அப்படியே மெத்தை மீது கண்களை மூடி மனதிற்குள் தீஷா என கூறிக்கொண்டான்.

கோயமுத்தூர்

இங்கு சாப்பிட்டு கொண்டிருந்த காவியாவிற்க்கு புரையேறியது, காவி குட்டி தண்ணிய குடி மா , என ரகுராம் தண்ணியை கொடுக்க , "யாரோ உன்ன நினைக்காங்க மா" என அகிலா கூறவும்.

வேற யாரு நினைக்க போறா எல்லாம் நிஷாவாத்தான் இருக்கும் என கூறிமுடிக்கவும், நிஷாவிடம் இருந்து அழைப்பு வந்தது,

உடனடியாக சென்னை கிளம்பி வா வேலை இருக்கிறது என்று.
காவ்யாவும் சென்னை கிளம்ப தயாரானாள்.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானமே 🌧 15

இரு இருதயங்கள் ஒரே எண்ணத்தோடு ,தங்களின் காதலை தேடிக்கொண்டு இருக்கிறது.

விக்ரமிடம் இருக்கும் தீஷா நினைவுகள், நியாபகங்கள் அனைத்தும் , அவளின் திக்குவாய் மற்றும் ஒரு உடல் அடையாளம்,

ஆனால் அந்த உடல் அடையாளத்தை எந்த ஒரு பெண்ணிடமும் வெளிப்படையாக கேட்கவோ பார்க்கவோ முடியாதே , அதனாலேயே அந்த அடையாளத்தை பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தீஷாவிடமோ ஒரு வலுவான ஆதரம் உள்ளது , அந்த ஆதாரம் மட்டும் விக்ரமிடம் இருந்திருந்தால் இந்நேரம் தீஷா வை அடைந்திருப்பான்.

என்ன செய்ய அதான் விதி,
இந்த விதி, இன்னும் இவர்கள் வாழ்க்கையில் அநேக திட்டங்களை வகுத்து வைத்து இருக்கிறதோ.

சதாசிவம் வீடு

"வாப்பா விக்ரம் வா வந்து உட்காரு, தேவ் நீயும் வாடா ,வாங்க சாப்பிடலாம் என டைனிங்டேபிளில் அமர்ந்தபடி சதா சிவம் இருவரையும் சாப்பிட அழைத்தார்".

"விக்ரம் இங்க என் கிட்டே வா " என ஷீலா அழைக்க என்ன செய்வதென்று என்று தெரியாமல் , வேற வழியின்றி அவள் அருகில் அமர்ந்தான்.

"விக்ரம் விடாது கருப்பு " என தன் கண்களை ஷீலா வின் பக்கம் உருட்டி காண்பித்து மெல்ல சிரித்தான்.

"அடேய் , தேவாங்கு விடாது கருப்புன்னா என்னதுடா என ஷீலா கேட்க.

"அம்மாடி ஷீலா அமெரிக்கால இருந்த எங்களுக்கு தெரியுது , இந்தியாவுல அதும் தமிழ் நாட்ல இருக்குற உனக்கு தெரியாதுன்னு சொல்லுறியே இது என்ன மா பெரிய உருட்டால இருக்கு" என தேவ் சொல்லி முடிக்க .

"விக்ரம் இந்த தேவாங்கு என்ன சொல்லுறான்"

"அவன் ஏன்னமோ சொல்லிட்டு போறான் நீ சாப்பிடு ஷீலா"
என அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

சிறிது நேரம் கழித்து, விக்ரமும், தேவ்வும் வெளியே கிளம்பினர்.

"விக்ரம் எங்க பா கிளம்பிட்ட"

"அங்கில் , நானும் ,தேவ்வும் ஆசிரமம் போறோம் வேதா அம்மாவ பார்க்க"

"சரிப்பா இரு நானும் கூட வர்றேன்"

"பரவாயில்லை அங்கில் இதோ தேவ் இருக்கானே அவன் கூட போயிட்டு வர்றேன் "
எனக்கூறிவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்காமல் வேகமாக இருவரும் வெளியேறினர்.

காப்பகத்தில்

மிக ஆசையாக வேதவல்லி அம்மாவை மீட் பண்ண வந்தான் விக்ரம் , வந்தவன் கண்ட காட்சியோ,அவனை சிலை போல் உறைய வைத்து விட்டது.

"அம்மா , என்னாச்சு மா, எழுந்துருங்க மா நான் உங்க விக்ரம் வந்து இருக்கேன்."
ஆம் வேதா அம்மா வயது முதிர்வின் காரணமாக, மிகவும் கவலைக்கிடமான நிலையில் படுத்து இருந்தார்.

"அம்மா , அம்மா ஏன் அம்மாக்கு என்னாச்சு, தயவுசெய்து சொல்லுங்கள், அதான் என்னிடம் ஒரு மாதமாக பேசவில்லையா", என சிறு குழந்தை போல் அழ ஆரம்பித்து விட்டான்.

அவனது அழுகை, அவனது ஸ்பரிசம், வேதவல்லி அம்மா வை மெல்ல கண் திறக்க வைத்தது.

"விக்ரம், வந்துட்டியா பா நீ" , என தன் இரு கைகளையும் வைத்து அவன் கண்ணத்தை தன் கையில் ஏந்தினார்.

"அழாதப்பா அழாத , எல்லாம் இறைவன் செயல் , நான் எப்போதோ அவனிடம் சரண்ணடைந்திருக்க வேண்டும்.

நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று என் வாழ்வை இதுவரை பிடித்து வைத்திருக்கிறது , மலர்கொடி அத எடுத்துட்டு வா"என மலர்கொடியிடம் கூற உடனே மலர்கொடி ஒரு பெரிய பைலை எடுத்து வர, அதை வாங்கியவுடன் விக்ரம் தவிர மற்ற அனைவரையும் வெளியே செல்லுமாறு சொல்லி விட்டார்.

அனைவரும் வெளியே சென்றனர் தேவ் உட்பட , இப்போது அம்மா வேதவல்லியும், விக்ரம் மட்டுமே அந்த அறையில், சிறிது நேரத்திற்கு பின் விக்ரம் அறையின் கதவை திறந்து விட்டு இருகியமுகத்துடன் வெளியே வருவதை கண்டனர்.

"டேய் மச்சான் என்னாச்சு" , எனக் கேட்க அவனோ , சிலை போல் நின்றிருக்க.

அனைவரும் உள்ளே சென்று பார்க்க, வேதவல்லி அம்மாவோ ,இறைவனடி சேர்ந்து இருந்தார்.
ஆசிரமம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்த பட்டது, சதாசிவம் உட்பட, கடைசி ஆசையாக விக்ரம் அனைத்து காரியங்களை செய்தான்.
மறுநாள்,

"விக்ரம் " என சதாசிவம் அழைக்க,

"என்ன அங்கில்"

"நாளை உன்னோட 25 பிறந்த நாள்ப்பா"

" ஹீம்......யஸ் அங்கில்" என மெல்ல தலையாட்ட

"நான் பெரிய பார்ட்டிக்கு பிளான் பண்ணிருக்கேன் , அதுல என்னோட பிஸ்ஸினஸ் சர்கிள்ல உன்ன அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன்" என சதாசிவம் கூற ,

முகத்தில் எந்த வித விருப்பத்தையும் மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்தை காட்டாது"எதுக்கு அங்கில் அதெல்லாம், வேண்டாம் எனக்கு விருப்பமில்லை"என விக்ரம் கூறினான்.

"விக்ரம் ஏதோ நடக்க கூடாதது நடந்து போச்சு அதுக்காக, உன் பிறந்த நாளை நீ ஏன் தள்ளி வைக்கிற "

"அங்கில் இத பத்தி இனி பேசவேண்டாம் , வேதா அம்மா போகும் போது சும்மா போகலை , எனக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் இருக்குன்னு தெரியவைச்சுட்டு போயிருக்காங்க அங்கில் ,உங்களுக்கு தெரியாதது ஒண்ணும் இல்லை சோ ப்ளீஸ் " என அவரிடம் கூறிவிட்டான்.
இதையெல்லாம் தேவ் அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்.

"அதுமட்டுமல்ல , அங்கில், நாளைக்கு நான் என் வீட்டுக்கு போகப்போறேன், நீங்க என்ன தடுக்க மாட்டீங்கன்னு நினைக்கேன்" என கூறிவிட்டு பட பட வென மேலே சென்று விட்டான், அவன் பின்னாடியே தேவும் சென்றுவிட சதாசிவம் அமைதியாக சோபாவில் அமர்ந்து விட்டார்.
மேலே சென்ற விக்ரம் , பால்கனி வழியாக ஏதோ யோசனையில் இருக்க, அங்கு வந்த தேவ் "என்னடா மச்சான் இப்படி இருக்க, நேத்துல இருந்து பார்க்கேன் ஏதோ யோசனையிலே இருக்க, எதுனாலும் என் மேல நம்பிக்கை இருந்தா மனச விட்டு பேசு மச்சான்" என தேவ் அவனை தன் பக்கம் திருப்பி கேட்க.

"டேய் , என்னடா நீ வேற, நீ என் நண்பன்டா, என் முழு நம்பிக்கையும் நீ தான் மச்சான் உன்ட சொல்லாமையா , எனக்கே இதுல நிறைய குழப்பம் இருக்குடா, சரி முதல்ல நாம நம்ம வீட்டுல போயிக்கிட்டு அதுக்கப்புறம் இத பத்தி பேசுவோம்" என விக்ரம் கூறி முடித்தான்.

மறுநாள் விக்ரம் மற்றும் தேவ் சதாசிவத்திடம், கூறிவிட்டு செல்ல, ஷீலா தான் ஒரு போராட்டமேபண்ணி விட்டாள்.

அவளை சமாதானப்படுத்தி விட்டு, இருவரும், கிளம்பி சென்று அவர்கள் நின்ற இடம் விக்ரமின் வீடு,
பச்சைபசேல் என முன்புற தோட்டம் அதன் நடுவே வீட்டிற்க்கு சொல்ல பாதை, அதனை அடுத்து ஒரு பெரிய ஹால், கிட்சன், மாடியில் இரண்டு படுக்கை அறை, வீட்டின் பின் பகுதியில் ஒரு அழகான சிறிய நீச்சல் குளம்.என அந்த வீடு மிக அழகாக பராமரிக்கப்பட்டு சொர்க்கம் போல காட்சி அளித்தது.
அங்கு வாசலில் கால் வைத்து உள்ளே போனது 25 வயது விக்ரம் அல்ல, 8 வயது விக்ரம் ஆம் விக்ரம் கடைசியாக அந்த வீட்டை விட்டு போகும் போது அவனின் வயது 8.அவன் தாய் தந்தையை இழந்து அனாதையாக இருந்ததும் அதே வயதில் தான்.

உள்ளே சென்றவன் முதலில் தோட்டத்தை பார்த்தான், அதில் தன் தாய் தந்தை மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடி கொண்டிருந்தான் அந்த 8 வயது விக்ரம்,

கதவை திறக்க சென்றவன் கண்ணில் மாட்டியது அவன் ஒட்டிய கார்ட்டூன் ஸ்டிக்கர் இத்தனை வருடம் கடந்தும் அது அப்படியே காட்சி அளித்து மீண்டும் அவனை வா என, அவ்வீட்டிற்குள் வரவழைத்தது.

அடுத்து ஹாலில் விக்ரம் தன் தந்தை மடியில் அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டு கெண்டிருக்கிறான்.

டைனிங்டேபிளில் அதே 8 வயது விக்ரம், தன் அன்னை சாப்பாடு ஊட்ட விளையாடி, விளையாடி சாப்பிட்டு கொண்டிருக்கிறான்.

நீச்சல் குளத்தில் தன் தந்தை நீச்சல் கற்றுக்கொடுக்க.ஆனந்தமாக நீச்சல் கற்றுகொண்டிருந்தான் அந்த 8வயது விக்ரம்,

சட்டென திரும்பி பட பட தட தட வென விக்ரம் மாடிக்கு ஓட பின்னாடியே தேவ் ஒன்றும் புரியாமல் ஓடினான்,

வேகமாக ஓடிச்சென்றவன் ஒரு அறையை திறந்து உள்ளே நுழைய அங்கு ஒரு பக்க சுவரின் அருகே மண்டியிட்டு உட்கார்ந்து அதை தடவி பார்த்தான் விக்ரம், அதில் அவன் வரைந்த குடும்ப ஓவியம் அப்படியே இருந்தது.
8 வயது சிறுவன் விக்ரம் வரைய அதைபார்த்த பெற்றோர்கள் இருவரும் அவனை அள்ளி எடுத்து கொஞ்சியது..

தேவ் மெல்ல விக்ரம் தோளை தொட நிகழ்வுக்கு வந்தவன்,மெல்ல எழுந்து தன் படுக்கையின் மேல் பார்த்தான்.

மல்லிகை சிரிப்புடன் தன் அன்னையும், அன்பே உருவான தன் தந்தையும், இவர்கள் இருவருக்கும் இடையில் அதே அழகான சிறுவன் விக்ரம்....

"டேய் விக்ரம் " என குரல் கேட்டு திரும்பியவன் கண்கள் முழுவதும் குளமாக அப்படியே தன் மெத்தையில், ஒரு குழந்தை போல சுருண்டு படுத்துக்கொண்டான் அந்த ஆரடி இளைஞன், தன் நண்பனை கண்ட தேவ்விற்கு என்ன செய்வது எனத்தெரியாமல் திகைத்து நின்றான்.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
அத்யாயம் 💖 16

மகளிர் விடுதி
"வாம்மா காவ்யா, என்னமா இப்போ தான் ஊருக்கு போன அதுக்குள்ள வந்துட்ட, சரி ஊர்ல அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?",என விடுதி வேலைக்கார அம்மா மங்களம் கேட்க

" எல்லாரும் நல்லா இருக்காங்க கா, கொஞ்ச நாள் நிம்மதியா, அம்மா கையில சாப்பிட்டு வரலாம்னு பார்த்தா எங்க விடுறா இந்த நிஷா " என அலுத்துக்கொண்டு கூறிவிட்டு

"அக்கா எங்க அவ இருக்காலா இல்லை எங்கயும் வெளியே போயிட்டாளா" எனக் கேட்க.

" நிஷா மா வா , மேல தான் இருக்காங்க மா , ஆனா இந்த மூனு நாளா லேட் ஆ தான் வந்தாங்க" என மங்களம் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.

வேகமாக தனது பெட்டியை இழுத்த படி மேலே சென்ற காவ்யா ,அறை வாசலில் நின்று கொண்டு, தன் காலால் கதவை எட்டி உதைத்து கொண்டே
"அடியே கதவை திற டி என்னடி பண்ற?
"அடியே"
என்ற சத்தம் கேட்டு, கதவை திறந்தாள் நிஷா

"ஏன்டி இப்படி வந்ததும் வராததுமா கதவை உடைக்க" , என நிஷா சிறிது கடிந்து கொள்ள.

"பிறகு என்னடி லக்கேஜ் ஓட எவ்வளவு நேரம் வெளியே நிக்க ,அப்படி மேடம் என்ன பண்ணிட்டு இருந்த"

" எம்மா , தாயே பாத்ரூம் ல இருந்தேன் " என நிஷா கூறி முடித்து விட்டு காவ்யா பக்கம் திரும்ப காவ்யாவோ கட்டிலை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள்,

" என்னடி பண்ணி வச்சுருக்க ,கட்டிலை" என கட்டிலை பார்த்த படி காவ்யா கேட்க. அப்படி நாம என்னத்த பண்ணிட்டோம் என நிஷா காவ்யா முன் வந்து நிற்க அங்கு கட்டில் முழுவதும் அலுவலக பையில்கள் விரித்து விரித்து வைக்கபட்டு இருந்தது.

" ஓ இதுவா, அத ஏன் டி கேட்க ,நம்ம ஆபிஸ்ஓட ஓனர் வரப்போராராம்"

"இது என்ன புதுசா ஓனர் வர்ரது, அவர் தான் ஆபிஸ்க்கு டெய்லி வராரே" -காவ்யா.

" ஆமால்ல உனக்கு மேட்டர் தெரியாதுல"

" மக்கு பண்டாரம் சொன்னா தான் தெரியும் நிஷா குட்டி "

"அது வந்து காவி, இவ்வளவு நாள் நாம ஓனர்ன்னு நினைச்சது ஓனர் இல்லை

" ஏய் என்னடி சொல்லுற"என காவியா நிஷா வை பார்க்க.

" ஆமா டி காவ்யா அது ஆபிஸ் அ மெயின்டன்ட் பண்ண அக்டிங் ஓனராம், புது ஓனர் இப்போ தான் வெளிநாட்டுல இருந்து வந்து இருக்காராம், "

"சரி டி அதுக்கும், நீ இப்படி கட்டில குப்பை ஆக்குரதுக்கும் என்ன சம்பந்தம், சொல்லு டி பக்கி"

" ஐயோ, காவியா அவர் வரதுனால எல்லா பென்டிங் வொரக் அ முடிச்சு நாளைக்கு சப்மிட் பண்ணணுமாம்"

" சரி , நம்ம ஜீனியஸ் பாலன் சொன்னா முடிச்சிட போறான்"

" அடியே , அவன் எங்க இங்க இருக்கான், அவன் பெங்களூர் போய் 2 நாள் ஆகுது ,அவனுக்கு பிரமொசன் அனட் டிரான்ஸ்பர் " என கன்னதுல கை வைத்து சோகமாக உட்கார்ந்து விட்டாள் .

" தினமும் உள்ள வேலையை தினமும் முடின்னா கேட்டியா, சொல்ல சொல்ல கேட்காம திங்கிறதும், தூங்குறதும் இது இரண்டும் இல்லைனா சின்ன பிள்ளை மாதிரி மொபைல்ல லூடோ விளையாடுறது.இப்போ பாரு " என நிஷாவை காவ்யா திட்ட , பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு நிஷா காவியாவை பார்க்க

" சரி அப்படி மூஞ்சிய வைக்காத, ஹெல்ப் பண்ணித்தொலையுறேன் எல்லாம் என் நேரம் , வா இப்போ போய் மெஸ் ல சாப்பிட்டு வருவோம் வா என நிஷா வை அழைத்து கொண்டு காவ்யா மெஸ் நோக்கி இருவரும் சென்றனர்.

விக்ரம் வீடு

சரி மச்சான் விடு ,எவ்வளவு நேரம் இப்படி கண்ணீர் வடிப்ப, நடந்தது என்னமோ நடந்து இவ்வளவு வருஷம் ஆகிட்டு, இப்போ உன்ன தான் பெத்த பிள்ளைக்கும் மேல் வச்சு பாக்குற பெத்தவங்க இருக்காங்க , இதுவும் உன்ன பெத்தவங்க கடவுளா இருந்து உனக்காக தான் இவங்கள அனுப்பி வைச்சு இருப்பாங்க ,

எந்திரி மச்சான் இனி மேற்கொண்டு நடக்கிறத பார்ப்போம் .
என தேவ், விக்ரம்க்கு ஆறுதல் கூறி அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்தான் .

விக்ரம் சிறிது நேரத்திலேயே பழைய நிகல்விற்க்குவரவும் தேவ் மறுபடியும் பேச ஆரம்பித்தான்.
"சரி மச்சான், அடுத்து என்னடா பண்ணப்போற, வேதா அம்மா அப்படி என்ன தான் சொன்னாங்க,"

"தேவ், என்ன , எங்க அப்பா வோட பிஸ்னஸ் பொறுப்ப முதல்ல எடுத்துக்கனுமா, மத்தது தானா நடக்கும்ன்னு சொன்னாங்க"

" அப்புறம் என்னடா, மச்சான் அத செய்ய வேண்டியது தானே "

"ஆமாடா அத தான் செய்யனும், செஞ்சிருவோம் என மர்ம புன்னகை யை உதிர்த்தான் விக்ரம்"

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 17
"தலைப்பு செய்தி வாசிப்பது உங்கள் அனிதா,

சென்னை மாநகரத்தில், கூடுதல் ஏசிபி யாக திரு,அமரன் ஐபிஎ ஸ் பதிவியேற்ற சில மணி நேரங்களில் கடத்தப்பட்ட 5 வயது சிறுமியை காப்பாற்றி அந்த கடத்தல் கும்பளையும் பிடித்துள்ளார்,

இளம்வயதிலேயே இத்தகைய துணிகரமான செயலை செய்த திரு. அமரன் ஐபிஎஸ் அவர்களை சமூகவளைதளங்களில் இளைஞர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள், அவர் நம் நிருபரிடம் பேட்டியளித்ததை இப்பொழுது காணலாம்"என்று கூறியவுடன்

அந்த பெண் செய்தி வாசிப்பாளர் மறையவும், திரையில் ஆறடி உயரத்தில், உடற்பயிற்சி செய்து தன் உயரத்திற்கேற்ற உடல் வாகுடன் ,தலையில் தொப்பியில் முச்சிங்கம் சீற, அந்த காக்கி உடையில் கம்பீரமாக வந்து காணொளி முன் நின்றான் அமரன் ஐபிஎஸ்.

"வணக்கம் மக்களே, நான் ஒண்ணும் பெருசா சாதிக்கல, சொல்லப்போனா நான் இன்னும் என் வேலையை ஆரம்பிக்கல, கேஸ் பழசோ, புதுசோ, குற்றவாளி ஸ்டேட்டோ, சென்ரல்லோ, தூசு தட்டி எடுத்து வரேன் உங்க கிட்ட ஜாக்கிரதை , செய்ரவன் நிறுத்து, செஞ்சவன் கமிட் ஆகு, செய்ய நினைக்கிறவன்" என நிறுத்தி தன் சிங்கப்பல் தெரிய சிறு கர்வச்சிரிப்பு உதிர்த்து தன் வலது கையால் தனது இடது பக்க மீசையை முறுக்கி விட்டவாரு மீண்டும் தொடர்ந்தான்அமரன்,

"இனி எவனாது ,சட்டத்துக்கு விரோதமா இறங்குன மவன உனக்கு " என தன் உதடுகளை குவித்து தன் ஒரு கை மேல ஒரு கையை துப்பாக்கி போல் வைத்து சுடுவது போல் ஆக்ஷன் செய்துவிட்டு, நன்றி கூறி அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.

இதையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா, அவள் பின்னிருந்து ரீமொட்டால் தொலைகாட்சியை ஆப் செய்தாள் நிஷா,

"அடியே, ஏண்டி இப்போ டீவிய ஆப் பண்ண " என காவ்யா பின்னாடி திரும்பி பார்க்க , அங்கு காளியாக நின்றிருந்தாள் நிஷா

" பின்னே ,ஆபிஸ்க்கு கிளம்பாம உட்கார்ந்து டீவி பார்த்துட்டு இருக்க ,இன்னிக்கு ஆபிஸ்ல என்ன நடக்குமோன்னு என் வகுத்துல புளிய கரைக்கு, நீ என்னடானா உட்கார்ந்து டீவி ல வர போலீஸ்காரன சைட் அடிச்சுட்டு இருக்க " என டீவி ரீமொட்டை காவ்யா மேல் ஏறிந்தாள்.

"நீ , இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற ச்சில் மாபி " என அவள் கன்னத்தை தட்டிவிட்டு ஆபிஸ்ஸிற்க்கு கிளம்பி வந்து தனது ஸ்கூட்டியை எடுத்தாள் காவ்யா, இருவரும் அவர்கள் அலுவலகம் போகும் வழியில் உள்ள சிக்னலில் நின்றனர்.

"சமயம், பார்த்து இதுவேற நம்மள காலை வாரும் " என தன் கையை ஸ்கூட்டி யில் அடித்து விட்டு டென்ஷன் ஓட இருந்த நிஷாவிடம்,

"நிஷா மா ஏதுனாலும் பேஸ் பண்ணிகிடலாம் மச்சி டென்சன் ஆகாத" என கூறிவிட்டு திரும்ப அவர்களுக்கு அருகில் ஒரு போலீஸ் வண்டி நின்றது, வண்டியினுல் அமரன் இருக்க அவனை பார்த்த ஆச்சரியத்தில் ,

"ஹேய், நிஷா டீவில பார்த்ததவிட நேர்ல செம்மயா இருக்கார் டி"
நிஷாவோ திரும்பாமலே

" யாரு"

"அதான் டி அந்த ஏசிபி ,ஆங்... பேரு என்னவோ...... அ.... ல தான் ஆரம்பிக்கும்"காவியா முடிப்பதற்குள் நிஷா முடித்து விட்டாள் " அமரன்" நிஷா கூறி முடிக்கவும்.

காவ்யா " அடியே கள்ளி நீயும் அப்போ சைட் அடிச்சுருக்க"

நிஷா " ஆங் உன் மூஞ்சி டீவில சவுண்ட் காது கிழியுற மாதிரி வச்சு தான கேட்டுட்டு இருந்த, எனக்கு மட்டும் இல்லை பக்கத்து ரூம்ல ம்மகூம்..... மொத்த ஹாஸ்டலுக்கும் கேட்டு இருக்கும்."

காவ்யா " என்னமோ, சொல்லுற இருக்கட்டும், இருக்கட்டும் என திரும்ப தற்செயலாக தன் தொப்பியை சரி செய்தவாறு இவர்கள் பக்கம் திரும்பி ஒரு மென் புன்னகை புரிந்தான்
அமரன்.

அதே சமயம் கிரீன் சிக்னல் விழ இருவரும் பயணித்தனர் வெவ்வேறு திசையில்.
ஸ்கூட்டி அந்த பெரிய அடுக்குமாடி பில்டிங்கை அடைந்தது.

வண்டியில் இருந்து இறங்கி இருவரும் , மறக்காமல் தங்களது ஐடி யை அணிந்தனர், ஏனெனில் அதில் தான் அவர்களுக்கான அக்ஸஸ் கோடு உள்ளது.

இருவரும் லிப்டை அடைந்தனர் , 4 மற்றும் 5 வது தளம் அவர்களின் ஆபிஸ்ஸிற்குரியது, அதற்கு அடுத்ததாக மொட்டை மாடி தான், அங்கு அவர்கள் கம்பெனி சார்பாக நடக்கும், அனைத்து பார்டி மற்றும் கெட்டுகெதரும் அங்கு தான் நடக்கும்.

"ஐயோ , கடவுளே ஏன் எனக்கு இந்த சோதனை ,இத்தனை நாட்கள்ல நான் இப்ப தானா இந்த பென்டிங் எல்லாம் வைக்கனும், ஏதோ கொஞ்சம் பீச் , தியேட்டர், மால்ன்னு சுத்திட்டேன் அதுக்கு இப்படி ஒரு தண்டனையா , இந்த ஒரு தடவை மட்டும் என்னை காப்பாத்தி விட்டுடு, நான் உனக்கு பால் குடம் எடுக்கேன் எப்பா முருகா" என சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருந்த தன் தோழியை பார்த்து காவ்யா வாய் விட்டு சிரித்து விட்டாள்.

" ஏண்டி சிரிக்குற பக்கி"- நிஷா

" இல்லை சும்மா தான் " என காவ்யா தன் சிரிப்பை அடக்கி கொண்டாள்.

இருவரும் அலுவலகத்தினுள் வந்தனர், நிஷா பயந்தபடி, எந்த ஒரு மாற்றம் அலுவலகத்தில் தெரியவில்லை.

"ஹேய், நிஷா ஆபிஸ் எப்போதும் போல தான இருக்கு, நீ விட்ட பில்டப் க்கு நான் என்னமோ எதிர்பார்த்தேன்" , என நிஷா தோள் மீது கை போட்டபடி உள்ளே அவர்களது இருப்பிடத்திற்க்கு சென்றனர்.

"அடியே நிஷா , இங்க பாரு பாலன் கூட வேற ஊருக்கு போல , அவன் பேக் இந்த சீட்ல இருக்கு பாரு என தன் அருகில் உள்ள இருக்கையை காண்பித்தாள்"

" ஆமாம் , பின்ன எதுக்கு அந்த பயபுள்ள அப்படி சொன்னிச்சு" என நிஷா யோசிக்க அங்கு வந்தாள் மான்சி.

நிஷா "ஓய் மான்சி, பாலன் எங்க "

மான்சி " ஹேய் அவன் உன்ட சொல்லலயா,அவன் தான் டிரான்ஸ்பர்ல போய்டானே"

" அப்போ இது யாரு பேக்" என இருவரும்
கோரஸ்ஸாக கேட்க.

"ஓ, அதுவா, அது பாலன் பதில் ரீப்ளேஸ் ஆகிருக்கிறவரோடது"

"என்னது வேற ஆளா " என இதையும் கோரஸ்ஸாக இருவரும் கேட்க.

"ஆமா கேர்ள்ஸ்" என மான்சி சொல்லிவிட்டு கேன்டீன் பக்கம் கையை காட்ட அங்கு வந்தவனை இருவரும் கண்டனர்

நல்லா வளர்த்தி, அலைபாயும் கேசம், நீண்ட முகத்திற்கேற்ப நீள் மூக்கு , கரைபடியாத இதழ்கள் என அம்சமாக வந்து கொண்டிருந்தான் அவன்.

இவர்கள் இருவரை விட மான்ஸி தான் மயங்கி கிடந்தாள்.
அவன் நேராக இவர்களிடம் வந்தவன்,
இல்லை இல்லை அவன் இடத்திற்கு வந்தவன்,

"ஹாய் , ஐயம், விக்ரம் " என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 18

காவ்யாவும் , நிஷாவும், தங்களிடத்திற்க்கு வந்து , அந்த பேக்கிற்க்கு, சொந்தக்காரர் யாரா இருக்கும் என சுற்றுமுற்று பார்த்து கொண்டிருந்த தருணம், சிறிது தொலைவில் தான் அந்த புதியவன் நின்று கொண்டிருந்தான்., ஆறடி உயரம் மாம்பழ நிறம், டிரிம் செய்யப்பட்ட தாடி ,காதில் ஸ்டோன் ஸ்டட் ,அலைபாயும் கேசம் என அப்படியே நடிகர் மாதவன் போல் இருக்க...

" ஹேய், காவி எதோ மொக்க பீஸா இருக்கும்னு பார்த்தா,இவன் என்னடி இவ்ளோ சூப்பரா மாதவன் மாதிரி இருக்கான்" என நிஷா சொல்ல அது தான் உண்மை என்பது போல் பார்த்த காவியும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல்,

"அடியே, நிஷா உன் கண்ண ஒரு நல்ல டாக்டர்கள் தான் காட்டனும் , அவனப்பாரு நல்ல வெண்ண ரொட்டி மாதிரி இருக்கான், என் அளவுக்கு அழகு இல்லாட்டாலும், சுமார் தான் போடி "

"என்ன , காவி குட்டி ஆபிஸிலேயே நீ தான் அழகுன்னு இருந்த, இவன் உனக்கே, டவ்... குடுக்குறான்னு பொறாமை யா" என நிஷா காவ்யா தோள் இடிக்க.

"ஹலோ, அந்த வானத்தில இருந்து மன்மதனே இறங்கி வந்தாலும், இந்த காவியா கூடலாம் போட்டி போட முடியாது, எல்லா பையன்களும் ஒரே மாதிரி தான், ஏன் இவனையே எடுத்துகோயேன் , இப்ப என் முன்னாடி வந்து ஈஈஈஈஈஈனு வழிஞ்சுட்டு இருப்பான் பாறேன், அத பார்த்தா சரியான பால்டப்பா மாதிரி இருக்கு நீ வேற" ... என சொல்லிவிட்டு சிறிது, ரொம்ப இல்லைங்க சிறிதுதான் சிறிது இருமாப்புடன் கூற..

"எம்மா, நான் உன் பிரண்டு தான், இருந்தாலும், இத என்னால சொல்லாமல் இருக்க முடியல , ஆனாலும் உனக்கு இவ்வளவு, இவ்வளவு ஏத்தம் ஆகாதுடியம்மா" என அவள் கண்ணம் இடிக்க .... அவர்களிடம் வந்து நின்றான் அந்த புதியவன்

"ஹாய் ஐயம்,விக்ரம், யுவர் டீம் மெட்" என தன் கையை நீட்ட, காவியாவும், நிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு.

"விக்ரம்ன்னா , என்ன சியான் விக்ரம் ஆ ."... மொக்க காமெடி நிஷா அடிக்க, காவியாவும் அதற்கு சிரித்துக்கொண்டு, இருவரும் கைகளை ஒருசேர அடித்து கொண்டனர்.

தன்னுடைய கைகளை மார்போடு கட்டிக்கொண்டு, தன் ஒற்றை புருவம் தூக்கி பார்த்தவன் , பின் தலையை லேசாக அசைத்து தன் மூக்கை தன்னுடைய ஆள் காட்டி விரலால் உரசிவிட்டு அவர்களை பார்த்து " ஓகோ, அப்படி சரி சரி , ஆனா என் வாழ்கையில இவ்வளவு மொக்க ஜோக்கையும், படு மொக்கையா சொன்னவங்களையும், அதுக்கும் கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சவங்களையும் நான் இப்போதாங்க பார்க்கேன், அடச்சீ நவுலுங்க, ஒரு மரியாதைக்கு ஹாய் சொன்னா, இரண்டும் இருக்குது பாரு மூஞ்சியும், மொகரையுமும்" என தன் சீட்டிற்க்கு முன்னாடி நின்ன இரண்டு பேரையும் தள்ளிவிட்டு, தன் இருக்கையில் அமர்ந்தான்,விக்ரம்.

பெண்கள் என்றால் ஈஈஈஈ என்று இழிப்பான் என நினைத்த இருவரின் முகமும் பேயரைந்தார் போல் ஆனது.

"என்னடி இப்படி பேசிட்டான்"-நிஷா

" ரொம்ப பேசிட்டான்
நாம, செய்யலாம்ன்னு பார்த்தா, நம்மள நல்லா செஞ்சிட்டான் டி நிஷா"

"நாம இல்லை நீ," என நிஷா கூறி முடிக்க.

"இருந்தாலும், கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ , சரி போவோம் என்ன பண்ணிடுவான் ஹா" என காவியா தன் தலையை சிலுப்பினாள்,பின் இருவரும் தங்கள் இருக்கைக்கு வந்தமர்ந்தனர்.

விக்ரம்க்கு வலதுபக்கம் நிஷாவும், இடது பக்கம் காவ்யாவும் இருந்தனர்.

அவர்கள் இருவரையும் இரண்டு பக்கமும், தலையை திருப்பி பார்த்த விக்ரம் "அட ராமா, இப்படி ராகுக்கும் கேதுவுக்கும் இடையில என்ன உட்கார வச்சிட்டியே என அவர்கள் கேட்கும் படி சத்தமா கூறிவிட்டு தன் கணினியை உயிர்ப்பித்தான்.

"அடேய், பெட்ரமேஸ் தலையா எங்களையா ராகு, கேதுன்னு சொல்லுற உனக்கு இருக்குடி
மவன என தன் மணிக்கட்டு கடிகாரத்தை
திருப்பிய படி காவ்யா முறைக்க.
அதை பார்த்த விக்ரமோ "என்ன முறைக்க இரண்டு கண்ணையும் தோண்டிருவேன் என்பதை போல் தன் இரு விரலை அவள் கண்ணுக்கு நேராக காட்டி ஆக்ஷன் செய்தான்.

"அட போடா போண்டா, டீம் லீட் ஏ நான் தான்டா உனக்கு இருக்கு மகனே " என தன் தலையை சிலுப்பி கொண்டு திரும்பி விட்டாள்.

இருவரும் தங்கள் முதல் சந்திப்பிளே ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை என்பதை போல் நடந்து கொண்டார்கள்.
ஆனால் விதி ஒன்று இருக்கிறதே, அந்த விதி இவர்கள் வாழ்க்கையில் பல சித்து விளையாட்டுகளை செய்ய விருக்கிறது என்று.

கமிஷனர் அலுவலகம்

ஏசி என்ற பதவிக்கு குறைவில்லா படி மிக கம்பீரமாக அமரன் தன் இருக்கையில் அமர்ந்தான்.சிறிது நேரம் கண்களை மூடி தன் சீட்டில் சாய்ந்தவன் கண்களில், நீர் திவளைகள் வழிந்தது.

"எக்ஸ் கியூஸ் மீ சார் " என்ற குரல் கேட்டு தன்னை சமன் படுத்தி கொண்டு யாரும் அறியா தன் கண்ணீரை துடைத்தான்.

"எஸ் கம் இன்"

"ஸார் மை நேம் இஸ் குணா எஸ்.ஐ , உங்க அஸிஸ்டென்ட் சார்"

"ஹாய் மிஸ்டர் குணா, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, உட்காருங்க" என மிக மரியாதை ஆக பேசிய அமரனை கண்டு குணா வியந்தான், பொதுவாக உயர் அதிகாரிகள் தங்களது அஸிஸ்டென்ட்ஐ என்ன பாடு படுத்துவார்கள் என அவன் அறிந்ததே.

" ஸீ, மிஸ்டர் குணா, நாம தான் இனி டீம், நமக்குள்ள நிறைய சீக்ரெட் பகிர்ந்துக்கப்படும், நாம சேர்ந்து நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டி வரும், நான் சிங்கில் எனக்கு பிரச்சனை இல்லை நீங்க எப்படி " என அமரன் பேச.

" ஸார், போலீஸ் வேலையில் சேர்ந்தப்பவே என் உயிர் எனக்கு சொந்த மில்லை இந்த நாட்டுக்குன்னு சபதம் எடுத்துட்டேன், அதனால உயிர் பயம் இல்லை, ஒரே ஒரு அம்மா மட்டும் தான், அவங்களும் மிஸ்டர் கதிர்வேல் மேஜர் ஓட மனைவி, அவங்களுக்கு பயம்ன்னா
எண்ணணு தெரியாது, அப்புறம் ஒண்ணு சார், நீங்க என்ன முழுசா நம்பளாம்,நான் உங்களுக்கு இல்லை இல்லை என் காக்கி சட்டைக்கு உண்மையா இருப்பேன்" என குணா கூறி முடிக்கவும்.

"தன் இரு கைகளையும் தட்டி சபாஷ் குணா, இத நான் உங்க கிட்டே எதிர் பார்த்ததுதான், அதான் நிறைய பிரோபைல்ல உங்களை தேர்வு செய்தேன், அப்போ குணா ஆரம்பிப்போமா நம்ம விளையாட்டை"

"சொல்லுக்கு, காத்து இருக்கேன் சார்"

இருவரும் தங்கள் கைகளை குலுக்கிகொண்டனர், இருவர் உதடுகளும் மர்ம புன்னகை உதிர்த்தனர்.....

ஓரியன்ட் இன்போ

ஆம் இதுதான் காவ்யா, நிஷா ,விக்ரம் பணிபுரியும் அலுவலகம்.
அலுவலகத்தில் ஸ்டாப் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு ,அனைவரும் கான்பிரன்ஸ் காலில் குழுமினர், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் அங்கு கூடினர்.
அங்கு, அவர்கள் முன் தோன்றினார் முன்னாள் ஜீஎம்,

" குட் மார்னிங் கைஸ் , உங்க எல்லாருக்கும் ஏற்கனவே மெயில் வந்திருக்கும் நம்ம கம்பெனி எம்டி இன்று வரப்போறார் என்று, அதனால நான் அதிகமா பேச வேண்டாம் என நினைக்கேன்" என அவர் பேசி கொண்டிருந்த நேரம்

"யோவ் , அதான் உனக்கே தெரிதுல பின்ன ஏன்யா பேசி எங்க கழுத்த அறுக்கிற சீக்கிரம் அந்த எம்டி ய கூப்பிடு அவராவது தேறுவாரான்னு பார்ப்போம் ஏன்னா இங்கு அக்கம் பக்கம் இருக்கிறது எல்லாம் ஓட்ட உடைசல் ஆ இருக்கு" என விக்ரமை பார்த்து கொண்டே தலையில் அடிக்க,

அவனோ " ஹேய் மிஸ் நீ யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டியா, அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ , அப்படியே மனசுக்குள்ள பெரிய உலக அழகின்னு நினைப்பு மொகரையப்பாரு,வழிச்சு
எடுத்து ஒரு கிலோ சிமெண்ட் கையில வரும் ,ஆளும் மண்டையும்", என பதிலுக்கு அவனும் அவள் காது பட பேசிவிட்டு தலையில் அடித்து கொண்டான்.

"டேய், நீ ஓவரா பேசுற டா"என தன் போனா வை கொண்டு அவனை குத்த வர அவனோ "நீ தாண்டி பிசாசு ஓவரா போற "

அவள் கையை பிடித்து டேபிளுக்கு அடியில் வைத்து பிடித்து கொண்டான்.

அவளும் எவ்வளவோ போராடியும் தன் கையை அவன் பிடியில் இருந்து விடுவிக்க முடிய வில்லை, யார் கிட்ட விக்ரம்கிட்டயே வா...
என நினைத்து விதிக்கு ஒரே குஷி தான் போங்க.....

அவள் திமிர ,விக்ரம் அதை கண்டு சிரித்துக் கொண்டே தன் பிடியை மேலும் இறுக்க , கதவு திறக்கும் சத்தம் கேட்க ,அனைவரும் எழுந்து நின்றனர்,விக்ரமும் காவியா கையை விடுவித்து எழுந்து நின்றான்.

நிமிர்ந்த நடை கண்ணில் ரேபான் கிளாஸ், கருப்பு கோட்சூட் என ஹாலிவுட் நடிகர் போல் உள் நுழைந்த அந்த எம்டி யை பார்த்து அனைவரும் திகைத்தனர்.

"இவர் என்னடா ஜிம் போன ஜெமினி கணேசன் மாதிரி இருக்கார்: என விக்ரம் காது ஓரம் யாரோ கிசு கிசுக்க ,யார்ரா அவன் என திரும்ப அங்கு தனது 32 பல்லயும் காட்டியபடி ஒருவன் நிற்க..

"ஹாய் ப்ரோ ஐயம் சுரேஷ் " என கூற விக்ரம் முழிக்க,

" ரொம்ப முழிக்காதீங்க ப்ரோ நான் உங்க டீம் தான் , கொஞ்சம் லேட் ஆ வந்துட்டேன் அதான் அந்த பிசாசுங்க மாட்டுனா இரண்டும் என்ன வைச்சு செஞ்சிடும் அதான் இப்போ இன்ட்ரோ ஆகுறேன் "

என சிரித்துக் கொண்டே கை நீட்ட, அதில் தன் கை கோர்த்து கொண்டே விக்ரம் "யார ப்ரோ
சொல்லுறீங்க" என கேட்க

"அதான் ப்ரோ உங்களுக்கு அடுத்து இருக்குறாளுங்களே இரண்டு துஷ்ட தேவதைகள் " என சுரேஷ் காவியாவையும், நிஷாவையும் காட்ட...

விக்ரம் சிரித்துக் கொண்டே "ஏன் ப்ரோ அப்படி"

"ஏன் அப்படியா, பொண்ணுங்களா ப்ரோ அவளுக சரியான காட்டேரீங்க, மோகினிங்க ஏன்னமோ பெரிய உலக அழகீங்கன்னு நினைப்பு ப்ரோ, தீமுரு புடிச்சவளுங்க" என சுரேஷ் திட்ட விக்ரமுக்கோ ஒரே சந்தோஷம்.

"என் ப்ரோ இவ்வளவு கொலை வெறி " என விக்ரம் சிரித்தவாறே கேட்க.

"ஐயோ , ப்ரோ அது உங்களுக்கே போக போக தெரியும்". என கூற
விக்ரம் அந்த இருவரையும் பார்த்து முழித்தான்.

தூவானம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top