ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம்🌧 24

"ஹேய் , யார்ட்ட என்னடி பேசுற விடுடி" என காவ்யா சமாதானப் படுத்தினாள்.
ஆனால் அவை எதையும் நிஷா காதில் வாங்க வில்லை.....

எக்கி அவன் சட்டையை பிடிக்க போனவள், கையை பிடித்து, "இதோ பாரு எதுவானாலும் தனியா பேசிக்கலாம், இங்கு வேண்டாம் ஆட்கள் பார்க்காங்க.." என அவன் கூற.

"ஸாரி ,அமரன் சார், இவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல, அதுவும் உங்கள பார்த்தா மட்டும் ஏன் இப்படி பிகேவ் பண்றான்னு தெரியல"

" பரவாயில்லை, விடுங்க காவ்யா, இவள கூட்டிட்டு போங்க"

"ஹேய், என்னடி அவன் என்னடான்னா பொறுக்கி மாதிரி பிகேவ் பண்றான், அவன்ட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க"

"நிஷா காம் டவுன் " பல்லை கடித்து கொண்டு ,தன் தாடையை தடவியும் , சுற்றி பார்த்துக்கொண்டு அமரன் கூற.

"டேய் என்ன காம் டவுன், பொறுக்கி மாதிரி பொண்ணு பின்னாடி சுத்துற நீயெல்லாம் ஒரு போலீஸ் "

நிஷா போலீஸை தவறாக கூறிய அடுத்த கணம், பட்டென அவள் கையை பிடித்து அருகில் இருந்த லிப்ட்க்குள் தள்ளி ,தானும் உள் சென்று நேராக பேஸ்மண்ட் பட்டனை அழுத்தினான், நிமிடத்தில் நடந்த நிகழ்வால் காவ்யாவிற்கும், குணாவிற்க்கும் ஒன்றும் புரியாமல் ,அடுத்த லிப்டில் கீழே சென்றனர் .

கீழே சென்றவன், படக்கென நிஷாகையை இழுத்து வெளியே தள்ளினான், அவள் அவன் இழுத்து தள்ளுன வேகத்தில் சுழன்று போய் நின்று கொண்டு இருந்த ஒரு கார் மீது விழுந்தாள், ஆம் அது பேஸ்மண்ட் பார்க்கிங்ஏரியா...

தானும் வெளியே வந்து ஆவேசமாக அவளை நோக்கி சென்றவன், ஓங்கி ஒரு அறை , அதிர்ந்து விட்டாள் நிஷா, ஆம் அமரன் அடித்த இடம் சற்று உள் சென்று நெளிந்து இருந்தது, அமரன் அடித்த காரின் முன் பகுதி.

"ஏய் , என்னடி பிரட்சனை உனக்கு என்ன பிரட்சனைஏன் இப்படி பஜாரி மாதிரி குத்திக்குற ஹான்" என அவள் கழுத்தை பிடிக்க வந்தவன் பின் தன் கையை மடக்கி தன் தொடையில் குத்திகொண்டான் ..

"நானும் போனா போகுது, போனா போகுதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா போற, செவில்ல இரண்டு விட்டா தெரியும் " என கடுமையாக பேசினான்.

இதை குணாவும்,காவியாவும் லிப்ட் அருகிலேயே நின்று பார்த்து கொண்டிருந்தனர்

"சொல்லு என்ன அமைதி யா இருக்க, சொல்லு டி என் பொண்டாட்டி" என கர்ஜித்தான் .

அவன் பொண்டாட்டி எனக்கூறவும் நிஷாவிற்கு தூக்கி வாறி போட்டது,அதே சமயம் கோபம் தலைக்கேறிவிட்டது .

"என்ன , புதுசா இப்போது தான் உறவெல்லாம் தெரியுதா உனக்கு , இது உன் பேருக்கு பின்னாடி ஐபிஎஸ் போடும் போது தெரியல" என அவளும் பதிலுக்கு கர்ஜித்தாள்.

"ஏய் ,அறிவுகெட்டவள நீ என் உயிர், அது என் இலட்சியம், இரண்டுல ஏத விடச்சொன்னாலும் , நான் சாவுறதுக்கு சமம்.உனக்கு ஏன் அது புரிய மாட்டிக்கு" என தன் தலையில் அடித்து கொண்டான்.

நிஷா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். காவ்யாவிற்கு தான் தலையே சுற்றுவது போலிருந்தது .
"சார், என்ன சார் நடக்குது, உங்களுக்கும், நிஷாவிற்க்கும் என்ன சம்பந்தம்"

"அத இதோ, உன் பிரெண்டு இருக்கால்ல அவங்கள கேளுமா, டேய் குணா வாடா போலாம் வாரத்தில ஒரு நாள் கூட நம்ம நிம்மதியா இருக்க கூடாதுன்னு இருக்கு போல " இருவரும் நடையை கட்டினர்.

"அண்ணா , இருந்தாலும் அண்ணி கிட்ட இவ்வளவு கடுமையா நடந்து இருக்க வேண்டாம்,"குணா.

"டேய் தம்பி ஆடுற மாட்ட ஆடி கறக்கனும்,பாடுற மாட்ட பாடி கறக்கனும், உன் அண்ணிட்ட , இப்படி நடந்தாதான் கம்முன்னு இருப்பா , நீ இப்ப பைக்கில ஏறு" என இருவரும் சென்றனர்.

பெண்கள் இருவரும் தங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.தங்கள் அறைக்கு வந்தது தான் தாமதம், காவ்யா தன் பேச்சை தொடங்கினாள்.

"ஏய் ,நில்லுடி அமரன் ஐபிஎஸ் பொண்டாட்டி" என தன் புருவத்தை தூக்கி, கையை குறுக்க கட்டிக்கொண்டு கேட்டாள் காவ்யா.
நிஷா எதுவும் பேசவில்லை

"சொல்லு , நீயே சொல்லிடு, அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்" என காவ்யா கண்களில் கோபத்துடன் கேட்க.

நிஷா வோ ஜன்னல் ஓரம் வெளியே வெறித்தப்படி நின்று கொண்டிருத்தாள்...

"சொல்லுடின்னா" என நிஷாவை பிடித்து திருப்ப,அவள் கண்களிலோ கண்ணீர் மழை.

"ஏய் ஏன் அழுகுற ,அப்போ நீ உண்மையிலேயே அவர் பொண்டாடியா?" என காவ்யா கேட்க, மிகவும் தளர்ந்து மனதுடன்,

"ஆமா, ஆமா நான் அமரனோட பொண்டாட்டி மட்டும் அல்ல அவரோட காதலி இப்போ வரைக்கும் அவர கண்மூடி தனமா காதல் பண்ணப்போய் தான் இப்படி ஏமாந்து போய் நிக்கேன், என தன் கையை வைத்து முகத்தை மூடிக்கொண்டு ஓ வென அழுத தன் தோழியை பார்த்து காவ்யா விற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"ஹேய் , நிஷா அழாதடி சொல்லு டி அப்படி உங்க வாழ்க்கையில என்ன தான் நடந்தது....
தன் கண்ணை துடைத்துக்கொண்டு ஆரம்பித்தாள் தனது வாழ்க்கை கதை யை...

" அமரன் , என்னோட அத்தை பையன் நான் சின்ன வயசா இருக்கும் போது, மாமா ஒரு அக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்கன்னு, அத்தைய அவங்க பையன் அமரனோட எங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாரு எங்க அப்பா, எங்க இரண்டு பேத்துக்கும் ஆகவே ஆகாது, ஒரு நாள் அது நடந்தது, அப்போ நான் காலேஜ் முதல் ஆண்டு படிச்சட்டு இருந்தேன், அமரன் இரண்டாம் ஆண்டு, அப்போ, எங்க அத்தை உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல் இருந்தாங்க, அவங்கள காப்பாத்த முடியதுன்னு டாக்டர் சொல்லவும், அத்தை அப்பாட்ட பேசி எனக்கும் , அமரனுக்கும், மோதிரம் மாத்திக்க வச்சாங்க.
அடுத்த நொடி அத்தை எங்க எல்லாரையும் விட்டு,இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்க.

அதுவரைக்கும் எங்க மனசுல ஒண்ணும் இருந்ததுல, ஆனா இந்த மோதிரம் மாத்துனதுக்கு அப்புறம் , கொஞ்சம் ,கொஞ்சமாக ஒருத்தரை ஒருத்தர்பிடிக்க ஆரம்பித்து ரொம்ப லவ் பண்ணோம் .ஒரு நாள் ஏதோ டிரேயினிங் இருக்கு அது அட்டன் பண்ணா நல்ல ஒரு வேலை கிடைக்கும்ன்னு போனான் , ஆனா ஆனா அவன் போனது போலீஸ் டிரெயினிங்,அவன் என்ன ஏமாத்திட்டான், என் நம்பிக்கையை சாவடிச்சு , என் காதலை கொன்னுட்டான்" என சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஹேய், போலீஸ் வேலையில சேர்ந்தா என்னடி உனக்கு அது எப்படி ஏமாத்துறதாக ஆகும்,என்னடி சொல்லுற" என காவ்யா கேட்க.

"எனக்கு , போலீஸ்னா பிடிக்காது,நான் ரொம்ப வெறுக்கிற வேலை அதான் அது அவனுக்கும் தெரியும் . " காவ்யா.

"ஏன்டி ஏன் ?"

"ஏன்னா, எங்க அப்பா அந்த வேலையாள , ரொம்ப கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு , ஊர விட்டு கடைசி எந்த வேலைக்காக அதெல்லாம் தாங்குனாரோ அந்த வேலையையே விடும் மாதிரி ஆகிட்டு, இங்கு நேர்மையா இருக்கிற போலீஸ்காரர்க்கு
மதிப்பு கிடையாது"

" சரி மத்ததெல்லாம் விடு, அமரன் சார் அ லவ் பண்றியா இல்லையா அத மட்டும் சொல்லு" காவ்யா.

" ஹிம்" என மெலிதாக சிரித்தவள், அவன் இல்லைனா நான் இல்லை, என்ன விட, எங்க அப்பாவ விட அவன் தான் என் உயிர், ஆனா அந்த காக்கி சட்டை அவன் கிட்ட இருக்கிற வரைக்கும், அவன் கூட நான் சேர்ரதுங்கிறது நடக்காத காரியம், இந்த பேச்சை இதோடு விடு " என கூறிவிட்டு காவ்யா குளிக்க பாத்ரூம் சென்று விட்டாள் .

அவள் போவதையே பார்த்த , காவ்யா ஏதோ நினைவு வந்தவளாய் தன் கைபையை தேடினாள்.

தூவானம் தொடரும்.
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானமே🌧 25

மகளிர் விடுதி
நிஷா கூறி முடித்ததை கேட்ட காவ்யா வேகமாக தன் கைபையை தேடினாள் ,கடைசியாக அது டிரெஸிங் டேபிள் டிராவில் இருந்து கண்டெடுத்தவள்.

வேகமாக அதனுள் கைவிட்டு துளாவ, இறுதியில் அவள் தேடியது கிடைத்தது. அமரனின் கார்ட்டு, அன்று அவன் காவ்யா விடம் கொடுத்தது. அதனை எடுத்தவள், தன் மொபைல் போனையும் எடுத்து கொண்டு விடுதி மாடிக்கு அவசரமாக சென்றாள்.

மாடிக்கு வந்தவள், உடனடியாக அதில் உள்ள அமரனின் எண்ணிற்க்கு தொடர்பு கொண்டாள்.

நீங்கள் அழைக்கும் ஏன் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்.

"சார், ஏன் சார் தொடர்பு எல்லைக்கு வெளியே போனிங்க" என தனக்கு தானே புலம்பி கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த எண்ணிற்கு அழைத்தாள்.இம்முறை அழைப்பு சென்றது.

"ஹலோ"

"ஹலோ அமரன் சாரா"

"ஆமா, நான் அமரன் தான் சொல்லுங்க"

"சார் , நான் காவ்யா, நிஷாவோட பிரெண்ட் "

"ஆங்.. சொல்லுங்க மிஸ் காவ்யா, என்ன உங்க பிரென்ட் நான் யார்ன்னு உண்மைய சொன்னாங்களா, இல்லை........?"

" சார் நிஷா உங்க இரண்டு பேர் பத்தின எல்லாத்தையும் சொன்னா சார், அவ உங்கள அவ்வளவு லவ் பண்றா " இதை கேட்டவுடன் எனக்கு தான் தெரியுமே என்பது போல் மறுமுனையில் அமரன் லேசாக இதழ் விரிக்க.

"ஆனா........."ர

" ஆனா , என்ன காவ்யா என் வேலை பிடிக்கலயாமா"

"ஆ......ஆ..ஆமா சார்"

"அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது காவ்யா, அவளுக்காக வேலையை விடமாட்டேன், ( சிறு நேரம் அமைதி காத்து, ) வேலைக்காக ஒரு நாளும் அவளையும் விட மாட்டேன் , காவ்யா பார்ப்போம் ,இந்த விதி பயபுள்ள என்ன பிளான் பண்ணி வச்சுருக்கான்னு" என நக்கலாக சிரிக்க, மறுமுனையில் காவ்யாவும் சிரித்தாள்.

"ஆங், அப்புறம் சார் உங்க கிட்ட ஒண்ணும் கேட்கனும் கேட்கலாமா?

"தாராளமா , கேளுங்க காவ்யா "

" இப்போ நீங்க என் உயிர்த்தோழி யோட, கணவர், அதுனால நான் உங்கள ப்ரோன்னு கூப்பிடலாமா? , உங்களுக்கு பிடிக்கலனா வேண்டாம். "

காவ்யா கேட்டதும்,அமரன் மனதில் இனம்புரியா ஒரு மகிழ்ச்சி பரவியது.

"ஓ தாராளமா ,என்ன கூப்பிடுறதயே தான் கூப்பிடுற அழகா அண்ணன்ன்னு சொல்லுமா? " என அமரன் கூறியவுடன்.

"சரி அண்ணா, கவலைய விடுங்க உங்க பொண்டாடிய உங்க கூட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு ,தங்கச்சி இருக்கேன் பயம் வேண்டாம் அண்ணா "

"சரிம்மா,அந்த பிடிவாதகாரிய கொஞ்சம் பார்த்துக்கமா"
"ம்ம்ம்,ஓ அப்படி ,சரி, சரி நல்லா பார்த்துகிடுறேன்" என்று காவ்யா சிரிக்க, பதிலுக்கு அமரனும் சிரித்தான்.

பின் இருவரும் தத்தம் வேலையை பார்க்க சென்று விட்டனர் .

விக்ரம் வீடு

"டேய், டேய் வர வர அவளோட இம்ச தாங்க முடியல டா , டேய் அன்ட் நைட் என்ன போட்டு பாடா படுத்துறாடா" தேவ் கூற.

"யாருடா"- விக்ரம்

"வேறயாரு, நீ என்ன ஒரு வேதாளத்துகிட்ட அடமானம் வச்சுருக்கியே அவதான்."

"யாரடா சொல்லுற தேவ், புரியுற மாதிரி சொல்லு "

"ம்ம்ம், அந்த ஷீலா லூசு தான், மச்சான் சாப்ட, தூங்க விட மாட்றாடா, சில நேரம் பாத்ரூம் கூட போக விட மாட்றாடா" என தேவ் பாவம் போல் சொல்ல.

"அவ்வளவு லவ் இன்னடா உன் மேல" என விக்ரம் சிரிக்க.

"சின்ன, திருத்தம் மச்சான், லவ் என் மேல இல்லை உன் மேல, ஏன்னா நீ நினைச்சு தான் என்ட பேசிட்டு இருக்கா" என தேவ் கூறவும் அதை கேட்ட விக்ரம் மேகஸின் கொண்டு தன் முகத்தை மூட..

"என்ன மச்சான் முகத்தை மூடிட்டா மட்டும் உண்மை அது இல்லைன்னு ஆகிடுமா, அவ பேசுற பேச்சிக்கு அவ மட்டும் இங்கு இருந்திருந்தான மகன உனக்கு இருந்துருக்கும்டா துர்க்கா பூஜை " என தேவ் தன் உரையை முடித்தான்.

"அது, தெரிஞ்சு தானடா , சதா சிவம் அங்கிளும் ஷீலாவும் மூன்று மாசம் ஆஸ்திரேலியா பிஸ்னஸ் டிரிப்க்கு போனத வைச்சு இந்த டிராமாவ ஆரம்பிச்சேன், அவரு வரதுக்குள்ள எனக்கு தேவையான எல்லா தகவலையும் நான் சேகரித்தே ஆகனும்."என விக்ரம் ஆழமாக கூறினான்.

"மச்சான் , நீ மட்டும் அவர சந்தேகபடுறது தெரிஞ்சா மனுசன் ரொம்ப வருத்தப்பட போறாருடா" தேவ்.

"டேய், இந்த விஷயத்தில நான் அந்த கடவுள கூட நம்ப போறது கிடையாது, எனக்கு நான் தெரிஞ்சுக்க வேண்டிய உண்மை தெரிஞ்சே ஆகனும், என் வாழ்க்கைகான அர்த்தமே அதில தான் இருக்கு"

"சரிடா விக்ரம் அம்மா, அப்பா கால் பண்ணாங்களாடா, பேசுனியா"

"ஆமாடா, அப்பா ஓகே, அம்மா தான் என்ன பிரிந்து ரொம்ப பீல் பண்றாங்கடா மச்சான், இந்தியாக்கு வரவா, வரவான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க, நான் தான் கொஞ்ச நாள் ஆகட்டும்மா, நான் சொல்லுறேன், அப்படின்னு சொல்லிருக்கேன்" என சோகமாக விக்ரம் கூறவும், அவன் கையை
ஆறுதலாக பற்றிக்கொண்டு எல்லாம் சரியாகிடும்டா மச்சான் என தேவ் தன் நண்பணுக்கு தெம்பூட்டினான்.

" தேவ்,ஷீலா மனசு நோகாம பேசுடா மச்சான், புள்ள வருத்தப்பட்டா, அவ அப்பா யோசிக்கபோறாருடா, என் கண்ணையே உன்ட ஒப்படைச்சு இருக்கேன்" என தேவ் தோள் தட்டி விக்ரம் நக்கலாக கூற..

"டேய் வேண்டாம் , அது புள்ளயாட சரியான தொல்லை எல்லாம் என் தலையெழுத்து " என தலையில் அடித்து கொண்டான்.

மகளிர் விடுதி

நிஷா, காவ்யா அறையின் கதவு தட்டப்பட, காவ்யா வோ குளியல் அறைக்குள் இருக்க, நிஷா , வந்து கதைவை திறந்தாள், அங்கு நின்றது மங்களம் அக்கா,

நிஷா "அக்கா என்னக்கா சொல்லுங்க" .

"நிஷா கண்ணு, காவ்யா கண்ண பார்க்க ஒரு விசிட்டர் வந்துருங்காங்க,"

நிஷா "விசிட்டரா யாருக்கா?

மங்களம் " காவ்யா கண்ணோட அண்ணணாம், சீக்கிரம் வரச்சொல்லு கண்ணு"

என மங்களம் அக்கா நகர.அது யார்டா இவளுக்கு எனக்கு தெரியாம புதுசா ஒரு அண்ணன் முளைச்சுருக்கான் அதையும் பார்ப்போம் என நிஷா தன் மனதில் பேசிக்கொண்டே , மாடிப்படியில் இருந்து கீழே இறங்க, அங்கு ஒருவர் கையில் ஒரு பையுடன் வாசல் பக்கம் திரும்பி நிஷாவிற்கு முதுகை காண்பித்தவாறு நின்று கொண்டிருந்தார்.

நிஷா "ஹலோ , எக்ஸ்கூயூஸ்மி, யார் நீங்க, நான் காவ்யா தோழி நிஷா , அவ இப்ப வந்துருவா நீங்க யாரு" என கேட்க அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

நிஷா " ஹலோ மிஸ்டர் யாரு நீங்க எனக்கு தெரிந்து காவிக்கு அண்ணணே கிடையாது, இப்ப நீங்க திரும்ப போறீங்களா இல்லை யா?என நின்றவர் தோள் தொட்டு திருப்பியவள் அதிர்ந்து போனாள்.அங்கு இதழ்களில் புன்னகையும் கண்களில் குறும்புடன் நின்றது அமரன்.

அவனை பார்த்து ஆதிர்ந்த
நிஷா " நீயா , நீ இங்கேயும் வந்துட்டியா, என்ன நிம்மதியா இருக்க விட மாட்டியா " என கொதிநிலைக்கு சென்றாள்.

" ஹேய் மிஸஸ்,நிஷா"
என அமரன் கூற, கோபத்துடன் தன் ஆள்காட்டி விரலை நீட்டி மிஸ், நிஷா இன்னும் மிஸஸ் ஆகல , சோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்" .

"அடி போடி மிர்ச்சி" என நினைத்தவன்

"சரிங்க, மிஸ்.நிஷா மேடம் ,நான் ஒண்ணும் உங்கள பார்க்க வரல, என் தங்கச்சிய பார்க்க வந்தேன்.

"தங்கச்சியா அது யாரு உனக்கு புது, தொங்கச்சி"

" வேற யாரு நான் தான் "
என்ற குரல் கேட்டு திரும்ப அங்கு காவ்யா மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

" சாட்சாத் நானே தாண்டி நிஷா " என காவ்யா சிரித்துக்கொண்டே கூறினாள்.

நிஷா " ஹேய் ,என்னடி என்ன பேசுறீங்க நீ ,இவன் எப்படி உனக்கு அண்ணன் ஆக முடியும் "

காவ்யா " அங் அது வந்து , இவருக்கும் என் பிரெண்ட் ஓருத்திக்கும் நிச்சயம் ஆகிட்டா, நிச்சயம் முடிஞ்சுட்டுன்னா என்ன அர்த்தம், என் பிரெண்ட் இவருக்கு பாதி பொண்டாட்டி ,அப்போ இவரு எனக்கு யாரு அண்ணன் முறை தானடிவரும் அப்படி தான அண்ணா "

என அமரனை பார்த்து கைத்தூக்க அவனும் கள்ளச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டே இருவரும் ஹைபை அடித்தனர்.

நிஷா " சரிஇல்லை டி இது சரிஇல்லை "

காவ்யா " எல்லாம் சரிதான் நீ கொஞ்சம் உங்க மவுத்த ஷட் பண்ணுங்க மேடம், அண்ணா சொல்லுனா என்ன விஷயம்னா"

அமரன் "அதாவது காவி குட்டி , நீ டிரிப் போறில்ல அதான் அண்ணன் உன்ன பார்த்துட்டு அப்படியே இந்த பண்டங்களை உனக்கு குடுத்துட்டு போலாம்னு வந்தேன்"

காவ்யா " ஐ..... பண்டமா அண்ணா, ரொம்ப தேங்ஸ்டா அண்ணா"

அமரன் " மண்டைல ஒண்ணு வச்சனா தெரியும், அண்ணனுக்கு யாராட்டு தேங்க்ஸ் சொல்லுவாங்களா"

காவ்யா " சாரினா சாரினா"

அமரன் " பரவாயில்லை விடுடா தங்கம், அப்புறம் ஊருக்கு போனவுடன் கால் பண்ணணும், ரொம்ப கவனமா இருக்கனும், சரியா பஞ்சு முட்டாய பாத்தவுடன் பறந்துட கூடாது , நான் உனக்கு புடிச்ச எல்லா பண்டமும் வாங்கி இருக்கேன்"
என நிஷா பார்த்து கொண்டே கூற .

காவ்யா " அண்ணா டேய் நான் இங்கே இருக்கேண்டா"

என அமரன் தாடையை பிடித்து திருப்ப, ஈஈஈஈஈஈ..... என பல்லை காட்டி திரும்பியவனிடம்.

"ரொம்ப வழியுதுடா அண்ணா தொடைச்சுக்கோ" என காவ்யா கவுண்டர் அடிக்க.

நிஷா " அடியே ,ரொம்ப ஓவரா போறீங்க இரண்டு பேரும்"

காவ்யா " யாரது நிஷா மேடமா , உங்கள நாங்க அப்பவே ஸ்ஷட் பண்ணிட்டு போகச்சொன்னோம், கொஞ்சம் கூட மேனர்ஸ் ஏ இல்லாமல், அண்ணன் தங்கச்சி பேசுறத ஒட்டு கேட்டுட்டு இருக்க, அட போமா மேல ஆளப்பாரு "
என்று காவ்யா நிஷாவிற்க்கு கவுண்டர் போட , அமரன் ,தன் தலையை வேறு புறம் திருப்பி சிரித்துக்கொண்டான்.

நிஷா"என்னமோ பண்ணி தொலைங்க" என கூறிவிட்டு வேகமாக தனதறைக்கு சென்று விட்டாள் .

அமரன் " சரிம்மா பாத்து பத்திரமா போயிட்டு வாங்க, எங்க தங்குறீங்க அப்படின்னு எல்லா தகவலையும் அண்ணனுக்கு அனுப்பி வைமா, அவ ரொம்ப வீம்பு காரி பாத்துக்கோமா"

காவ்யா " என்ன அண்ணா பொண்டாட்டி மேல அவ்வளவு லவ்வா ம் ம்......"

என்று கண்கள் சிமிட்ட...

அமரன் " இல்லை மா என் தங்கச்சி மேலயும் தான் " என அவள் தலையை தடவி விட்டு, தன் கூல்கிளாஸ்ஸை கண்களில் மாட்டிக்கொண்டு மாஸ்ஸாக புல்லட்டில் செல்பவனை பார்த்த காவ்யாவிற்கு கண்ணு சிறிது வேர்த்து விட்டது...



தூவானம் தொடரும்......
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧26


ஓரியன்ட் இன்போ



ஏறுங்க, ஏறுங்க எல்லாரும் சீக்கிரம் ஏறுங்க என ரமேஷ் அனைவரையும், அவசரப்படுத்தி கொண்டிருந்தான்.


எல்லாரும் வந்தாகி விட்டது, அந்த இருவரையும் தவிர.


"டேய் ரமேஷ் எங்க, நிஷாவையும்,
காவ்யாவையும் காணோம்"


"ஆமா விக்ரம் ஏன் அதுக இன்னும் வரல ,இதோ கால் பண்றேன்"


ரமேஷ் தன் தொலைபேசியை எடுத்து, நிஷா எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.


"ஹலோ "


"ஆங் நிஷா எங்க இருக்கீங்க "


" உன் பொடத்திக்கு பின்னாடி ஓவர் ஓவர்"

பின்னாடியா என திரும்பி பார்க்க அங்கு நிஷாவும், காவ்யாவும் வந்து கொண்டிருந்தனர்.


விக்ரம் "ஹேய் ஏண்டி லேட்"


நிஷா " இதோ இவ தான் விக்ரம், அவ செயின் அ எங்கயோ மறந்து வைச்சுட்டா, அத தேடி எடுக்குறதுக்குள்ள இவ்வளவு நேரம் ஆகிட்டு, பரவாயில்லை வாடி ,ஊருக்கு போயிட்டு வந்து தேடுவோம்னு சொன்னா, இல்லை அது என் உயிரு அது இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு சொல்லுறா, அதான் கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் விக்ரம்.


விக்ரம் " அப்படி உயிரா உள்ளதயே மறக்கிற அளவுக்கு மேடத்துக்கு என்ன நினைப்போ .


என கூறிவிட்டு காவ்யா காதில் என் நினைப்பா என கிசு கிசு த்தான் .

காவ்யா ஒரு சிறிய முறைப்போன்றை சிதறிவிட்டு.பஸ்ஸினுள் ஏறி அமர்ந்து கொண்டாள்.


விக்ரம்மும் அமர , பயணம் தொடங்கியது.


காவ்யா, நிஷா அமர்ந்த சீட்டிற்கு அருகில் உள்ள சீட் தான் ,விக்ரமும், ரமேஷ்ம் அமர்ந்து இருந்தனர்.


பஸ் சென்று கொண்டிருந்தது ,


லேசாக தலையை எட்டி ,காவ்யா என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என பார்த்தான், அவ்ளோ தனது செயினின் பென்டன்ட்டை திறந்து பார்த்து கொண்டிருந்தாள், அதற்கு ஒரு முத்தமும் வைத்தாள், இதை பார்த்த விக்ரம் அப்படி அதுல என்ன தான் இருக்கு, அதை எப்படியாவது பார்த்தாகனுமே என யோசித்துக் படியே பயணத்திலேயே தூங்கி போனான் .


அனைவரும் ஊட்டி வந்தடைந்தாகி விட்டது.


ஒரு மிகப்பெரிய அழகான ஹோட்டலில் இருவருக்கு ஒரு ரூம் என கணக்கிட்டு அனைத்து பணியாளர்களுக்கும், தேவ்விற்கு தனியாக ஒரு ரூம் போடப்பட்டது.
அனைவரும் களைப்பாற்ற தங்களது அறைக்கு சென்றுவிட்டனர்.


காவ்யா, நிஷா தங்கள் அறைக்கு வந்தவுடன், நிஷா அப்படியே பெட் மீது சரிந்து விழுந்தாள்.
காவ்யாவோ தனது தொலைபேசி எடுத்து அண்ணா ரீச்டு சேப்லி என டைப் பண்ணிய குறுஞ்செய்தி மற்றும் தாங்கள் இருக்கும் லோக்கேஷனையும் அனுப்பி விட்டு, அவளும் பெட் மீது சரிந்தாள் பாவம் புள்ளைங்களுக்கு பயணக்கலைப்பு.


மாலை 7 மணி ஆகியது, 7மணி என்று சொல்ல முடியாது இரவு 10 போல் இருந்தது அந்த இடம், அவ்வளவு இருட்டு,ஹோட்டலில் டைனிங் ஹாலில் அனைவரும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.


அதன் பின் கேம்ப் பையர் என சொல்லப்படும் இடத்திற்கு அனைவரும் வந்து அமர்ந்தனர் ,அந்த பனி சூழ்ந்த குளிருக்கு அந்த நெருப்பு முன் அமர்ந்தது அனைவருக்கும் இதமாக இருந்தது.


தேவ் பேச ஆரம்பித்தான்.


" ஓகே கையிஸ் , டுமாரோ எல்லாரும் பொட்டானிக்கள் கார்டன் போறோம் சரியா. ஸிலீப் வேல் ,ஸி யூ டுமாரோ..." என கூறியவுடன் அனைவரும் கலைந்து தத்தம் அறைக்கு சென்றனர்.


இரவு மங்கி மறைந்து, அந்த பனி படர்ந்த பச்சை புல் போர்த்திய மலையில் , சின்னஞ் சிறு பூஞ்சிட்டுகள் சத்தம் மிட குளிர் காற்று தேகம் கூச மெல்ல கதிரவன் தன் கதிர்களை விரித்தான்

"ஏய் , எந்திரிடி இழுத்து மூடி தூங்கரத பாரு,இப்படி நீ தூங்குறதுக்கு நீ சென்னையிலேயே ஹாஸ்டல்லயே தூங்கி இருக்கலாம், எந்திரிடி எல்லாரும் கிளம்பிட்டாங்க" என நிஷா கத்திக் கொண்டே கிளம்பி கொண்டிருந்தாள்.


காவ்யா எழுந்தபாடில்லை, அதனை பார்த்த நிஷா அருகில் உள்ள ஒரு ஜக் தண்ணீரையும் காவ்யா மீது ஊற்ற , காவ்யாவோ கடும் குளிரில் பட பட வென நடுங்கி எழுந்தாள்.


"நாயே , பேயே ஏண்டி இப்படி பண்ண " என நிஷாவை அடித்து விட்டு காவ்யா கிளம்ப சென்றாள்.


ஒருவழியாக அனைவரும் பொட்டானிக்கல் கார்டன் வந்தடைந்தனர்.அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை பார்த்தனர் நிஷாவும், காவ்யா வும்.


அங்கு விக்ரம் வரவும், காவ்யா அவ்விடம் விட்டு வேறு இடம் சென்றாள், விக்ரமை அவள் ஏறெடுத்தும் பார்க்க வில்லை.


"ஹேய் காவ்யா , நில்லு , நிஷா என்னாச்சு அவளுக்கு" என கேட்டுக்கொண்டே விக்ரம் காவ்யா பின் சென்றான்.


நிஷா தனித்து நின்றாள் ,அவள் மனதில் ஏனோ ஒரு இனம் புரியாத ஏக்கம், இந்த நேரம் அமரன் கூட இருந்தா எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தவளின் கண்கள் இரு கை கொண்டு மூடப்பட்டது, திடுக்கென்று பயந்தவள் அந்த கையை பிரித்து யார் என்று பார்க்க.

"ஹாய் செல்லம்" என அமரன் சிரித்தபடி நின்றான்.


ஒரு நிமிடத்தில் தன்னை அறியாமல் தனது சந்தோஷத்தை தனது தேடலை தன் கண்கள் மூலமும் இதழ்கள் மூலமும் தெரிவித்தவள், சட்டென அதை அமரன் அறியாவண்ணம் மாற்றிக்கொண்டாள், ஆனால் ஐபிஎஸ் கண்களோ இவை அனைத்தையும் தன் கண்கள் மூலம் அதனை படம்பிடித்து கொண்டது.


"என்னடா, செல்லம் இந்த மச்சான ரொம்ப மிஸ் பண்றியா ஹீம்...." என அவள் முன் நின்று அவளை பார்த்து கேட்டான் அமரன்.


"உன்ன நினைச்சாதான , மிஸ் பண்றதுக்கு, உன்ன தான் என் வாழ்க்கையில் இருந்தே எடுத்துட்டேனே, ஆமா நான் எங்கே போனாலும் என் நிம்மதிய கேட்டுக்குறதுக்கு அங்க வந்துடுவியா ஹான்".


"என்னடி செல்லம் மச்சான் உன்ன எவ்வளவு ஆசையா பார்க்க வந்தேன் நாலு வார்த்தை ஆசையா பேசாம ,இப்படி தான் பேசுவியா போடி நான் உன்ன எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா"


"ஏன் உங்களுக்கு வேற வேலை எதும் இல்லையா என் பின்னாடி அலையுறதுக்கு தான் ஐபிஎஸ் படிச்சு போலீஸ்ல சேர்ந்தீங்களா போங்க சார் போய் வேலையை பாருங்கள்.."


"என் வேலையிலேயே முதல் வேலை என் பொண்டாட்டி பின்னாடி சுத்துறது தாண்டி என் செல்லம் ".


"உன் கூடலாம் பேசுனது வேஸ்ட் , ஆள விடு சாமி" என கையெடுத்து கும்பிட்டு நடையை கட்டினாள்".


"ஹேய் என் மிர்ச்சி செல்லம் , நில்லுடி நீ போலீஸ் காரன் பொண்டாட்டி தான் அதுக்காக, இவ்வளவு கோபம் ஆகாதுடி என் செல்லம் நில்லுடி" என ஓடி போய் அவளுடனே கூட நடந்தான் அமரன்.


இங்கு.....

ஹேய் , காவி என்ன பிரச்சனை இப்போது எல்லாம் என்கிட்ட பேசமாட்டிக்க, ஏன் பாக்க கூட மாட்டிக்க, ஏன்டி என்ன அவாய்ட் பண்ற " என விக்ரம் காவ்யா விடம் கேட்க.


"எதுக்கு பேசனும், ஏன் பார்க்கனும், நான் பார்த்தாலோ , பேசுனாலோ தான் சார், பெரிய இவர் மாதிரி எனக்கு ஆள் இருக்கு, அது இருக்கு இது இருக்கு அப்படி நினைக்காத, இப்படி நினைக்காதனு பெருசா சீன் போடுவீங்க எனக்கு இது தேவையா, போயா " என நடக்க ஆரம்பித்தாள் காவ்யா .


"ஹேய் நிஷா ,உனக்கு நியாபகம் இருக்கா காலேஜ் டூர் வரும் போது அதோ அந்த மரத்துக்கு அடியில் தான் உனக்கு முதல் முதலா பிரபோஸ் பண்ணேன், நாம் எவ்வளவு பேசி இருப்போம் கல்யாணம் முடிந்து ஹனிமூன்க்கு இங்கு வந்து இதே இடத்தில் மறுபடியும் பிரபோஸ் பண்ணனும்னு, சொல்லுடி"


"என்ன சொல்ல , சொல்லுறீங்க அமரன், நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தான் ஆனா , அதை எல்லாம் குழிதோண்டி புதைத்தது யாரு நீ தானே ஸாரி நீங்க தானே அமரன் ஐபிஎஸ் சார்." என கூறிவிட்டு விருட்டென்று சென்றவள் கையை பிடித்து இழுத்தான் அமரன்.


"கையை விடுங்க அமரன் சார், இதென்ன பப்ளிக் பிலேஸ்ல ஒரு போலீஸ் பண்ற காரியமா ஹான் விடுங்க" என தன் கையை இழுக்க விடாமல் அமரன் கையை பிடிக்க...


நிஷாவை தேடி அங்கு வந்த காவ்யாவும் அவளை தொடர்ந்து வந்த விக்ரமும் அவர்களை சிறிது தொலைவிலேயே கண்டு நிற்க. அதை பார்த்த விக்ரம் எவன்டா அவன் நிஷாட்ட வம்பிலுக்கிறது என தன் கை சட்டையை மடக்கி விட்டு அங்கு செல்ல முயன்ற விக்ரம் கையை பிடித்து தடுத்தாள் , காவ்யா,


"நில்லு விக்ரம் , அது வேற யாரும் இல்லை , அது நிஷா வோட பியான்ஸி, அவரு பேரு அமரன் அவரு சென்னை ஏசிபி கிரைம்பிரான்ச்"


"என்னடி ! இது எப்போ நடந்தது என்ட சொல்லவே இல்லை "


"அது சரி 3 வருஷமா அவ கூட வேலை பார்க்கிறேன் என்கிட்டயே செல்லல எனக்கு இப்போது தான் தெரியும்"காவ்யா


"சரி காவ்யா பின்னே ஏன் இரண்டு பேரும் இப்படி பிகேவ் பண்றாங்க" விக்ரம்.


"அது இரண்டு பேர்க்குள்ள ஒரு பனிப்போர் போகுது, அது அவங்க பிரச்சனை அவங்க தீர்த்துகிடுவாங்க, வா நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" காவ்யா.


"எது காவ்யா நம்ம இரண்டு பேருக்குள்ள நடக்கே அந்த மாதிரியா? " என விக்ரம் நாக்கை உள் சுழற்றி நக்கலாக கேட்க.


"பனிப்போர் , லவ்வர்ஸ் குள்ள நடக்கும், நாம என்ன லவர்ஸ் ஆ , நாம வெறும் பிரெண்ட்ஸ் தானே" என கூறிவிட்டு வேகமாக நடந்தவளை மீண்டும் விடாது துரத்தினான் விக்ரம் அவனே அறியாது...


இங்கு அமரன் போராடி கொண்டிருந்தான், நிஷாவிற்க்கு தன் நிலையை புரிய வைக்க.


இரண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிக்கொண்டே அந்த மரத்திற்கு அருகில் வந்தனர், அதில் அவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் வந்த போது செதுக்கி வைத்த இருவரது பெயரும் அப்படியே இருந்தது.


அதை தடவி பார்த்த நிஷா கண்களில் சிறு கண்ணீர் துளி....


"நிஷா , இந்த பெயர்கள் செதுக்கியபின் என்ன நடந்ததுன்னு நியாபகம் இருக்கா, நம்மளோட முதல் இதழ் முத்தம் இங்க தான் அரங்கேறியது," என கூறிக்கொண்டே மெல்ல நிஷாவை திருப்பினான், அவள் பார்வை பூமியை வெற்று பார்வை பார்த்தது , அவள் அமைதியை பயன்படுத்தியவன் , தன் இரு கைகளால் மெல்ல நிஷாவின் முகத்தை நிமர்த்தினான் , அவள் பார்க்கா வண்ணம் அவள் இதழ்களையே பார்த்தான், தேன் சுமந்த பூவிதழ் மேல், வண்டு தேன் உண்டு, தன் ஏக்கத்தையும் பூவின் கோபத்தையும் ஒரு சேர தீர்த்து வைத்தது.


ஒரு நீண்ட, இதழ் முத்தம் அவர்கள் இருவரையும் அமைதி படுத்தியது.மெல்ல கண்விழித்து அமரன் கண்களை பார்த்தாள் நிஷா.


"ஹேய் நிஷா, எனக்கு ஒரு வாய்ப்பு தா டி " , என தான் ஏன் போலீஸ் ஆனேன் என அனைத்தையும் கூறி முடித்தான்.

நீண்ட மெளனம் அங்கு நிலவியது....


"ஸாரி , அம்மு, உண்மை என்னென்னு தெரிஞ்சுக்காம நான் அவசரப்பட்டுட்டேன் ,இத நீ முதல்லயே சொல்லி இருக்கலாம்ல" நிஷா.


"எங்க மேடம் எங்க சொல்ல, அதுக்கு எங்க வாய்ப்பு கொடுத்த நீ ,நான் டிரெயினிங் முடிச்சு வர்றதுக்குள்ள, எப்படியோ உண்மைய தெரிஞ்சுகிட்டு, மூட்ட முடிச்சு கட்டிகிட்டு சென்னைக்கு வந்துட்ட , எனக்கு ஹரியானால போஸ்டிங் போட்டாங்க டி , உனக்காக கெஞ்சி, கூத்தாடி சென்னை வர்றதுக்குள்ள அப்பப்பா நா பட்ட பாடு இருக்கே முருகா"....


"ஸாரி, செல்லம்" என அமரனை அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்....


இவர்களை கலைக்கும் விதமாக அமரனின் போன் ஒலிக்க.. அதை எடுத்தவன்


"ஹலோ"


"டேய் அண்ணா, போதும்டா பப்ளிக் பப்ளிக், நானும் எவ்வளவு நேரம் தான் தூரத்திலயே நிக்கிறது"


"வாடாமா வா" என சிரித்துக் கொண்டே போனை வைத்தவனிடம் நிஷா கேட்டாள்.


"யார் அம்மு "


"நான் தாண்டி அமரன் பொண்டாட்டி இல்லை, இல்லை, அண்ணன் பொண்டாட்டி, அன்னிக்கு அவ்ளோ பேசுனே ,இப்போ எங்கன்னட்ட சரண்ணடைஞ்சிட்டியா ,அங்க எல்லாரும் கிளம்பிட்டாங்க என்னடா ஆள காணோம்னு தேடி வந்தா, மேடம் இங்க ஒரே ரொமன்ஸ், ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும், சிங்கிள் பாவம் உங்கள சும்மா விடாது " என தன் கைவிரல்களை நெட்டி முறித்தாள் .


"தங்கச்சி , அண்ணன் பாவம் டா" என பாவம் போல முகத்தை வைத்து கொண்டு அமரன் கூறவும்.


" பொழைச்சுபோடா அண்ணா" என கூறிய காவ்யா வை கண்டு இருவரும் சிரித்தனர்.


ஹோட்டல்

மாலை நேரம் மீண்டும் பனி படர்ந்தது அந்த பச்சை புல் போர்த்திய நிலத்தில் .


மீண்டும் கேம் பையர் ரெடி ஆனது , அனைவரும் நெருப்பு குவியலை சுற்றி வட்டமாக அமர்ந்திருந்தனர், பாட்டு நடனம் என அனைவரும் சந்தோஷத்தில் இருந்தனர்..


அப்போது, விக்ரம் காவ்யா வை பார்க்க, அவளோ தன் கழுத்தில் உள்ள அந்த பென்டன்ட் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டுஇருந்தாள்.


"ஹேய் நிஷா"


"என்னடி"


"நான் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்துடுறேன் டி"


"ஹேய், நான் வேணா துணைக்கு வரட்டுமா"


"இல்லடி பக்கத்துல தானே போய்ட்டு வந்துடுறேன்"


"சரி டி , பாத்து போய்ட்டு வா"


அங்கிருந்து காவ்யா கிளம்பி செல்வதை பார்த்தான் விக்ரம்.


ரெஸ்ட்ரூம் போய்ட்டு, திரும்பி கேம்ப் பயர் வந்து கொண்டிருந்தவள் முன் வந்து நின்றான் அவன்.


" நீயா ?" என்று அதிர்ந்து கேட்டது தான் தெரியும் காவியா விற்கு.


இங்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தின் நடுவில் காவ்யா வர நேரமானதை நிஷா உணர வில்லை, ஆனால் அதை விக்ரம் உணர்ந்து அவளை தேடி சென்றான் , போகும் வழியில் விக்ரம் காலில் ஏதோ ஒன்று தட்டு
பட கையில் எடுத்தவன் அது காவ்யாவின் ஒரு கால் காலனி மற்றொன்று சிறிது தள்ளி கிடந்தது.


விக்ரம் ,காவ்யாவிற்கு ஏதோ நடந்து இருக்கிறது என்பதை யூகித்தான்,அதை ஊர்ஜிதப்படுத்தமளவு அவளது பெண்டன்ட்ம்
அறுந்து கிடந்தது,


இப்போது விக்ரம் உடல் பதட்டம் அடைந்தது, வேர்த்து வழிந்தது, காவ்யாவிற்கு ஏதும் தப்பாக நடந்து இருக்க கூடாது என கடவுளை வேண்டிக்கொண்டே, அவளை தேட ஆரம்பித்தான்.


தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானமே 🌧 27

தேடினான், காவ்யா காலனியும், அவள் கழுத்தில் உள்ள பெண்டன்ட் அறுந்து கிடந்த இடத்தில் இருந்து சுற்றியும் தேடினான், எந்த வித சத்தமும் கேட்க வில்லை தடையமும் கிடைக்க வில்லை.

விக்ரம்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, பயத்தில் பதட்டத்தில் அவனுக்கு வேர்த்து ஊத்தியது,

"காவி, எங்கடி இருக்க , ஐயோ இப்ப என்ன செய்வேன் உன்ன எப்படி கண்டுபிடிப்பேன்" என தன்னாலயே புலம்பி தவித்தான்,

"நீயா, நீ எப்படி டா இங்க வந்த விடுடா என்ன அவுத்து விடு" என காவ்யா கதற அவள் முன் நின்றான் வஞ்சகத்தின் மறுஉருவம் ராக்கி.

"ஹேய் , என்னடி விடு விடுங்க, உன்ன விடுறதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன், ஹா ஹா சில்லி கேர்ள் " என சிரித்தான்.

காவ்யா "டேய் , ராக்கி ஏன் என்ன இப்படி சித்ரவாதை பண்ற ,உனக்கு என்ன தான் வேணும்"

"த்தூ, த்தூ....". என்று நாயை கூப்பிடுவது போல் உச்சு கொட்டிட்டு, என்னடி அவ்வளவு பெரிய மூளக்காரி எனக்கு என்ன வேணும்னு இன்னுமா உனக்கு புரியல " என நக்கலாக சிரித்துவிட்டு " நீ வேண்டும் அதும் முழுசா என் பசி ,என் வெறி ,என் வஞ்சம் எல்லாம் தீர்த்துக்க நீ வேண்டும் , நீ தான் வேண்டும் ஹாஹா ஹா" என சிரித்து பின் முறைத்தான்.

"டேய், ப்ளீஸ் டா சொன்னா கேளுடா, என்ன உன் தங்கச்சியா நினைச்சு விட்டுறு ராக்கி ப்ளீஸ் ப்ளீஸ்" என அழ ஆரம்பித்து விட்டாள்.

"அடச்சீ வாயமூடு உன்ன இன்ஞ்ச் இன்ஞ்ச் ஆ அனுபவிக்க தூக்கிட்டு வந்துருக்கேன், இங்க வந்து தங்கச்சி கொட்டாங்குச்சினு பேசிக்கிட்டு இருக்க ஆர் யூ அவுட் ஆப் மைன்ட் காவி டார்லிங்."

"ப்ளீஸ் விடுடா, ஹெல்ப் ஹெல்ப் என கத்த ஆரம்பித்தாள்"

"ஐயயே இதென்னடா ரோதனையா போச்சு, நான் லிப் லாக் பண்ணாட்டாலும் பரவாயில்லை அவ வாய டேப் போட்டு ஒட்டுங்கடா" ராக்கி சொல்லவும் அவன் இரண்டு கையாளில் ஒருத்தன் காவ்யா வாயில் பிளாஸ்திரி ஒட்டினான்.

இங்கு விக்ரம் ஹேட்டலில் பின் பகுதியில், ஜெனரேட்டர் ரூம்மிற்க்கு வந்தான்.

"ம்ம்ம்ம்ம்ம்...." என்ற சத்தத்துடன் வேண்டாம் என்பதை போல் தலை அசைத்தாள்.

அவள் அணிந்திருந்த லாங் கவுனை மெல்ல மேல் தூக்க ஆரம்பித்தான் ராக்கி..

டொங்....

"ஆங் ..... அம்மா...".. என ஒரு சத்தம், ஆம் விக்ரம் ஒரு பெரிய விறகு கட்டையால் ராக்கியை பலமாக தாக்கி இருந்தான், அதில் ராக்கி மயக்கம்முற, அந்த சத்தத்தை கேட்டு மற்ற இரண்டு அடியாள்களும் வர, அவர்கள் இரண்டு பேரையும் இரண்டு உதை இரண்டு பேரும் ஜெனேரேட்டரில் மோதி மயக்கம் அடைந்தனர்.

அவர்கள் மூவரையும் அந்த அறையிலேயே கட்டி போட்டு விட்டு, காவ்யா பக்கம் வந்தான் விக்ரம்.

"காவ்யா , காவ்யா எழுந்திரு எழுந்திரு "என கத்தினான், கதறினான், காவியாவிடம் எந்த மாற்றமும் இல்லை, அவளது நேர்த்தியான உடைகள் அலங்கோலமாக கிழிந்திருந்ததது. அது அவளது போராட்டத்தை விக்ரமுக்கு உயர்த்தியது.

என்ன செய்வது ஏது செய்வது என செய்வதறியாது முழித்தான் , அவனை அறியாமல் அவன் காவ்யா மேல் உள்ள அன்பே விக்ரமின் கண்களில் சாட்சியானது கண்களில் கண்ணீராக.

சட்டென காவ்யாவை தூக்கி கொண்டு ,யாருக்கும் தெரியாமல் லிப்ட் வழியாக அவளது அறைக்கு சென்றான்.

அவளை கட்டிலில் கிடத்தி அருகில் இருந்த நீரை அவளது முகத்தில் தெளிக்க, கண்திறந்தவள் விக்ரம் நீ.... நீ... வந்துட்டியா என்ற கேள்வியோடு மீண்டும் மயக்கமடைந்தாள்.

அவள் அதிகப்படியான அதிர்ச்சியினால் தான் மயக்கம் அடைந்து இருக்கிறாள், சிறிது நேரம் கழித்து தானாகவே சரியாகிவிடுவாள் என அறிந்தபின் தான் சிறிது ஆசுவாசம் அடைந்தான் விக்ரம்.

அப்படியே காவ்யாவிற்கு அருகிலேயே அமர்ந்தவன் ,அப்பொழுது தான் கவனித்தான், காவ்யா வின் உடையை , அது கிழிந்தும் சிறிது கால்பகுதியில் விலகியும் இருந்தது, சிறிது தயக்கத்துடன், பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு அவ்விடம் கொண்டுபோனவனின் கை வெறும் காற்றில் நடனமாடியது , கையில் ஆடை எதுவும் சிக்கவில்லை, ஒரு பெண் அதுவும் அவள் சுயநினைவு இல்லாத சமயத்தில் அவள் ஆடையை எவ்வாறு சரி செய்வது இது முறையாகுமா என யோசித்தவன், ஆபத்திற்க்கு பாவம் இல்லை என அவள் காலை பார்த்து ஆடையை சரிசெய்ய முயன்றவனின் கண்கள் அதை பார்த்து விட ,

கண்கள் விரிந்து, முகம் வேர்த்து கைகளை அதில் இருந்து விலக்கியவன் அப்படி யே கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்து விட்டான்.

அவனால் நம்பமுடியவில்லை மீண்டும் கண்கள் அதையே தேட மறுபடியும் அவ்விடம் பார்வையை செலுத்தியவன் ,இப்போது தனது கைகளால் அதை தடவிப்பார்த்தான்.

அவனது நினைவுகள் பின்னோக்கியது, விக்ரம் ஆசிரமத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு முறை தீபாவளி வந்தது, பெரிய பெரிய மனிதர்கள் சிலர் இந்த மாதிரி பண்டிகை காலங்களில் ஆசிரமங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு உதவி செய்வது வழக்கம், அப்படிபட்ட ஒரு பெரிய அரசியல் வாதி ஒருவரால் அந்த ஆசிரமத்திற்கு ஆடைகளும் பட்டாசுகளும் கிடைத்தது , குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர்.

விக்ரமும் , தீஷாவும் அதே போல் வெடித்து கொண்டிருந்தனர், அப்பொழுது தீஷா அழகான கவுன் ஒன்று அணிந்திருந்தாள் , முட்டி வரைக்குமே இருக்கும் அந்த கவுனில்

அவள் சிறிய பொம்மை போல் அழகாக இருந்தாள்.

விக்ரம், சிறிய வகை வெடிகளை , அங்கு உள்ள கவனிப்பாளர்கள் உதவியுடன் வெடித்து கொண்டிருந்தான், விக்ரம் வெடித்துக்கொண்டிருந்த வெடியில் ஒன்று தீஷாவின் அருகில் சென்று வெடித்து விழ, அதில் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்த தீஷா ,ஏற்கனவே அவள் வெடித்து போட்டிருந்த கம்பி மத்தாப்பு மேல் விழவும் அது அவள் வலது தொடையில் தீ காயத்தை ஏற்படுத்தியது, வலியில் கதறி துடித்தாள் தீஷா அதை கண்ட விக்ரமும் அவ்விடத்திலேயே அழ ஆரம்பித்து விட்டான்,

ஸாரி தீ ....ஸாரி தீ.... என்று , நாளடைவில் காயம் குணமானலும் ,அதனால் விளைந்த தழும்புனாது காலத்திற்கும் நீங்கா, வடுவாகிவிட்டது.

அந்த வடுவை ஆதாரமாய் வைத்து தான், தன் வாழ்க்கையையே
தேடிக்கொண்டிருந்தான் ,விக்ரம்,

கனவு நிஜமானது
காதல் காரிகை
கைசேர்ந்தாள்
காலமும் இனி
காதல் சொல்ல.

ஆம் அதே தழும்பு, என் காதலிக்கான அடையாளம் , ஆனால் அது இருப்பதோ ,காவ்யா வின் கால்களில்,

விக்ரம் கண்களில் இப்போது காதல் கண்ணீர்,

"அப்போ, அப்போ காவ்யா தான் என் தீ வா, என் கண்முன் இருப்பது என் தீ வா, என் தீ கிடைச்சுட்டா " என கூறியவன் மீண்டும் எழுந்து அவள் தழும்பை வருட .
இங்கு பதட்டத்துடன் காவ்யாவை தேடி அலைந்த நிஷாவோ , இறுதியாக அறை சென்று பார்த்து விட்டு அமரனுக்கு தெரிவித்து விஷயத்தை சொல்லலாம் என தங்களது அறைக்கு வந்தவள் கண்ட காட்சி,

காவ்யா விடம் விக்ரம் தவறாக நடப்பது போல் , வேகமாக வந்தவள் விக்ரமை பிடித்து தள்ளிவிட பட்டென்று சோபாவில் இடித்து விழுந்தவுடன் தான் நிகழ்வுக்கு வந்தான் விக்ரம்.

"டேய், என்னடா பண்ற கடைசியில, காவ்யாகிட்ட போய் தப்பா நடக்க எப்படிடா மனசு வந்தது , காவ்யா காவ்யா எந்திரி டி என்னடி ஆச்சு உனக்கு?

டேய் என்னடா பண்ண காவ்யாவ கடைசியில நீயும் , ராக்கி மாதிரி தான்னு நிரூபிச்சிட்டியே," என தன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

ராக்கி மாதிரி என்ற வார்த்தையில் வெகுண்டு எழுந்தவன், "அறிவு கெட்டவளே, அறிவு கெட்டவளே, பெண் புத்தி பின்புத்தின்னு காட்டிட்டியே என்ன நடந்ததுன்னு தெரியாம பேசுன அவ்வளவு தான் " , என நடந்த அனைத்தையும் கூறினான், அந்த தழும்பையும், அந்த பிளாஷ் பேக்கையும் தவிர்த்து.

என்னது ராக்கியா? - நிஷா .

"ஆமா , அவள பழிவாங்க இப்படி பண்ணிருக்கான்"

"இப்ப ராக்கி எங்க இருக்கான்?"

"அங்கதான் கட்டி போட்டு வச்சுருக்கேன்."

சரி அமரன்க்கு தகவல் சொல்லி அங்க போக சொல்லுறேன் என கூறிவிட்டு அமரனுக்கு அனைத்தையும் தெரியப்படுத்தி ,செய்ய வேண்டியதை செய்து விட்டு தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தாள்.

"ச்சே , அவ வேற ஒருத்தனை விரும்புறா என தெரிந்தும், ஏன்தான் இப்படி எல்லாம் நடந்து கிடுறாங்களோ"

தொலைத்த முத்து கிடைத்த மகிழ்ச்சி இருந்தவன் முகம் இப்போது காய்ந்த இலை போல் வாடியது.

"என்னது காவ்யா லவ் பண்றாளா? அது யார் ?" என மனதில் அதிர்ச்சியுடன் கேட்டான் விக்ரம்.

"ஆமா அவ யாரையையோ லவ் பண்றா, அது யாருண்ணு எனக்கு தெரியாது, அநேகமா அவ கழுத்துல இருக்கிற செய்யின்ல லவ்வர் போட்டோ இருக்கும்னு நினைக்கிறேன்"
என கூறிவிட்டு அவள் கழுத்தை தடவிப்பார்தாள் அந்த செயினை காணவில்லை.

" ஐயயோ செயின் காணோமே தெரிஞ்சா எப்படி தாங்குவாளோ அத அவ உயிர்க்கு மேல வச்சு இருந்தாளே தூங்குனா கூட பிடிச்சுகிட்டே தூங்குவாளே " என கூறிவிட்டு அவள் அருகில் அமர்ந்து காவ்யா தலையை தடவினாள் நிஷா.

"என்னது என் தீ லவ் பண்றாளா " என்ற அதிர்ச்சி யுடனே தன் அறைக்கு வந்தான் விக்ரம் , தன் ரூம் சாவி எடுப்பதற்காக பாக்கெட்டிற்குள் கைவிட்டவன் கையில் சாவியுடன், காவ்யாவின் செயினும் வந்தது.

அவளை தேடும் போது கிடைத்த செயினை தன் பாக்கெட்டில் போட்டது இப்போது தான் நினைவு வந்தது.

சட்டென அதை திறந்து பார்த்தான் யாரது எனது தீ இன் காதலன்? .

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 28

எதிர் பாராதது
எதிர் பாராமல்
நடப்பது தான் வாழ்கை
புரிந்து கொள்ள முடியாத
புதிரே காதல் .


டக்டக், என ரூம் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு,கதவை திறந்தாள் நிஷா...

"வாங்க அம்மு, பாருங்க உங்க தங்கச்சிய பாருங்க " என அமரனை உள்ளே அழைத்தாள் .

அங்கு கட்டிலில் வாடிய மலராய் படுத்திருந்தாள் காவ்யா , ஒரே ரத்தம் இல்லாவிடினும், அமரனுக்கு தன் இரத்தம் துடித்தது. தன் உடன்பிறவா தங்கையின் நிலை கண்டு.

"இப்ப எப்படி இருக்கா ?நிஷா காவ்யா எதாட்டு பேசினாளா?".

"இல்ல அம்மு இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா".

"சரி காப்பாத்துனவர எங்க நிஷா"

"யாரு விக்ரம்மா அவன் அவனோட ரூம்க்கு போயிட்டான்."

"தப்பு உன்மேல தான் நிஷா "

"டேய் ,நான் என்னடா தப்பு பண்ணேன்"

" நீ ன் னா நீ இல்லை உன்னை மாதிரி பெண்கள் தான், முதல் தடவை நடக்கும் போதே அவன் மேல ஒரு கம்பளைன்ட் கொடுத்து இருந்தா, இந்தளவிற்கு வந்திருக்காமாட்டான் அந்த பிலடி ------ "என தன் கைகளை
முறுக்கினான்.

"சாரிடா, அமரா அவன் வீடியோ அது இதுன்னு சொல்லி பயமுறுத்த்திட்டான் டா" என நிஷா அமரன் கையை பிடித்து கொண்டு கேட்க.

"விடு நிஷா, பெண்கள் எப்போதும் தைரியமா இருக்கனும், துணிந்து போராடுங்க ,உங்க பாதுகாப்புக்காக நீங்க கொலையே பண்ணாலும் அது தப்பில்லை " என அவளை அணைத்துக்கொண்டான்.

"சரி நிஷா ,விக்ரம் ரூம் நம்பர் சொல்லுறியா, அவரை கொஞ்சம் பார்க்கனும்,"

நிஷா விக்ரம் அறை எண்ணை கூறிவிட்டு மீண்டும் காவ்யாவின் அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.
இங்கு விக்ரம் தன் அறையில், இன்னும் அந்த பெண்டன்டை திறந்து பார்க்க சக்தி அற்றவனாக அதை கையில் வைத்து பார்த்த படி அமர்ந்திருந்தான் .

இங்கு அமரன் விக்ரம் அறையின் கதவை தட்ட , அது திறக்கப்படாமல் இருக்கவே, தானே உள்ளே வரலாமா எனக்கேட்டுக்கொண்டே

கதவை திறந்து கொண்டே உள்ளே சென்றான்.

அமரன் குரல் கேட்டு தலை நிமிர்ந்த விக்ரம் , யேஸ் மிஸ்டர் நீங்க என யோசித்தப்படியே இருக்க...

"ஐயம் அமரன் , நிஷா ஓட பியான்ஸி,அன்ட் ஏசிபி , சென்னை." என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கையை நீட்ட"
"ஓ நீங்க தானா, காவ்யா சொன்னா, லாங்ல இருந்து பார்த்தேன் அதான் சரியா அடையாளம் தெரியல, ஸாரி.
ஐயம், விக்ரம் , ஓரியண்டல் இன்போ எம்பளாயி" என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, இருவரும் கையை குலுக்கி கொண்டனர்.

"ஆங் அமரன் அவங்கள என்ன பண்ணிங்க, அவனுங்க ஆயூசுக்கும் வெளியே வராத படி பண்ணணும், ஆனா அதுல தீ .... ஸாரி காவ்யா பேரு வரவே கூடாது" என்று ஆவேசமாக பேசிய விக்ரமை கண்டு மெல்ல புன்னகை விரித்தான் அமரன்.

" கூல் மிஸ்டர் விக்ரம் , பொதுவா பொண்ணுங்கள சீண்டுணவனை சும்மா விட்டது இல்லை இந்த அமரன் அதுவும் அவங்க என் தங்கச்சிய வே தொட்டு இருக்காங்க விட்டுறுவேனா என்ன? , நீங்கள் ரில்க்ஸ் ஆகுங்க இந்த கேஸ்ல உங்க யாரு பேரும் வெளியே வராதுன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன், சரி நான் கிளம்புறேன். " என அமரன் கிளம்ப போக ,

"ஓகே அமரன் வாய்ப்பு கிடைச்சா இன்னொரு தடவை மீட் பண்ணுவோம்" என விக்ரம் கூற.

"வாய்ப்பு கிடைச்சாவா , இனி நாம அடிக்கடி மீட் பண்ண வேண்டி வரும், விக்ரம் ஏன்னா நம்ம இரண்டு பேர்க்குள்ள ஒரு கணக்கு இருக்கு, இன்னும் தீர்க்கப்படாத " என மர்மமாக சிரித்துக் கொண்டே , சென்று விட்ட அமரனையே குழப்பத்துடன் பார்த்தான் விக்ரம், இப்போது அவன் இருக்கும் மனநிலையில் அவனால் வேற எதையும் யோசிக்க முடியவில்லை...

ஏனெனில் அவன் கேள்விக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.. மீண்டும் கவலையுடன் கையில் வைத்திருந்த அந்த செயினின் பெண்டன்டை பார்த்தான்,

" என் தீ ... என்ன மறந்துட்டு வேற ஒருத்தனை லவ் பண்றாளா?" என மீண்டும் அவன் பேச, "அட முட்டாளே அதுக்கான பதில் தான் உன் கையிலேயே இருக்கே, அத திறந்து பாருடா என் பட்டரு" என அவன் மனசாட்சி அவனை கேலி பேசியது.

ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த பெண்டன்யை திறந்தான் அதில் உள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் அவன் கண்கள் விரிந்து அதில் கண்ணீரும் வந்தது , சந்தோஷத்தில் குதித்தான் கத்தினான், அவனுக்கு தலை கால் புரியவில்லை, வானில் அப்படியே பறந்து மிதந்தான்... ஆம் அந்த பெண்டனில் இருந்த புகைப்படம், விக்ரமும், தீ... யும் சிறுவயதில் எடுத்துக் கொண்டது...

என் தோழி
நான் தேடிய தேவதை
எந்தன் காதிருந்த
காதல்
எனக்காகவும்
காத்திருக்கின்றதே......

என கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில், தன் தாயை கண்ட குழந்தை போல் மாறினான், விக்ரம், இதை ,இதை உடனே அவன் உயிர் நண்பனிடம் பகிர வேண்டும் என அவனை அழைக்க தொலைபேசியை எடுத்தவன், இல்லை இல்லை அவன் அறைக்கே சென்று, சொல்ல அந்த செயினுடன் ,தேவ் அறைக்கு சென்று கதவை தட்டினான்.

அப்போது தான் கேம்ப் பயர் நிகழ்ச்சியில் இருந்து தன் அறைக்கு வந்தவன், தன் இரவு உடையை மாற்றி விட்டு உறங்க தயாராகி கொண்டிருக்கும் போது தான் கதவு தட்டப்படும் ஓசையில் கதவை திறக்க அங்கு நின்ற விக்ரமை பார்த்தவுடன் சட்டென அக்கம் பக்கம் பார்த்து தங்களை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து பின் விக்ரமை உள் இழுத்தான்.

உள்ளே வந்த விக்ரமை பார்த்த தேவ் , என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்க்குள், அவனை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான், விக்ரம், அவனை தூக்கி ரங்கராட்டினம் சுத்த ஆரம்பித்து விட்டான்.

"டேய் , விடுடா தலை சுத்துது மச்சான், என்னடா ஆச்சு டேய் ஐயோ கடவுளே"

என தேவ் கத்த , சிரித்துக்கொண்டே அவனை கீழே இறக்கி விட்டவன் மீண்டும் அவனை கட்டி அணைத்து முத்தமிட்டான் .

"டேய், அநியாயம் புடிச்சவனே சொல்லித்தொலைடா தண்ணி கிண்ணி அடிச்சுட்டியாடா, இந்த குளுருக்கு, உனக்கு அந்த பழக்கம் இல்லையடா அதான் தூக்கிருச்சோ, மச்சான் என்னடா விஷயம் இந்த நேரம் இப்படி பைத்தியகாரத்தனம் பண்ற அளவுக்கு என்னடா நடந்தது." தேவ் பேச பேச எதை எதையோ பார்த்து விக்ரம் சிரித்தானே தவிர தேவ் முகத்தை பார்க்கவில்லை, இப்படியே விட்டா சரிபட்டு வராது என எண்ணி தேவ் விக்ரமை பிடித்து உலுக்கு உலுக்கு என உலுக்கினான், அதில் தேவ் முகத்தை பார்த்த விக்ரம் மீண்டும் முத்தமிட வர.... அவன் கழுத்தை பிடித்த தேவ்...

" ஒழுங்கா, விஷயத்தை சொல்லிடு மவன , இல்லைன்னா நண்பன்னு கூட பார்கமாட்டேன், கழுத்தை நெறித்து கொன்னுடுவேன், சொல்லித் தொலைடா" - தேவ்.

"டேய், மச்சான் தேவ், அது அது வந்து இது , இந்த செயின் ,இந்த செயின பாரேன்" என அந்த செயினை தேவ் கையில் கொடுத்தான் விக்ரம்.

செயின் பெண்டன்ட் ஐ திறந்து பார்த்த தேவ், "டேய், மச்சான் என்னடா இது இரண்டு சின்ன புள்ளைங்க போட்டா இருக்கு, யார்ரா இது, அது சரி இது எப்படி உன்ட வந்தது, எந்த சின்னபுள்ளைட்ட ஆட்டைய போட்ட சொல்லுடா" என தேவ் நக்கலாக கேட்க அவன் பொடதிலேயே ஒரு அடி போட்டான் விக்ரம் .

"மூதேவி, அந்த போட்டால இருக்கிற சின்ன பையன் நான் தான் டா" என சிரித்துக் கொண்டே சொன்னான்.

"மச்சான், இந்த பையன் நீ தான்னா, அப்போ இந்த குட்டி பொண்ணு ,உன்னோட........" என இழுத்தான் தேவ்.

"ஆமாடா, நீ நினைக்கிறது சரிதான், அது என்னோட தீ... செல்லம் தான் டா மண்டயா"

"டேய் இது போதும் டா, இது போதும், இந்த ஒரு போட்டாவ வச்சு உன் தீ.... ய கண்டுபிடிச்சரலாம், சரி இத இவ்வளவு நாள் ஏன்டா என்கிட்ட சொல்லல, உனக்கு அறிவே இல்லை மச்சான், லேட் பண்ணிட்டியே டா" என தேவ் அப்பாவி போல் கூற ,அவனை என்ன செய்தால் தகும் என்பது போல் விக்ரம் பார்த்தான்.....

"டேய் விக்ரம் சொல்லுடா, இது எப்படி கிடைச்சது, " - தேவ்.

"அங், அது வா காவ்யாட்ட இருந்தது, அவட்ட இருந்து சுட்டுட்டேன்" என கூறிவிட்டு கையை கட்டி கொண்டு நின்றான்.

" ஏதேய் காவ்யா ட்டயா, என்டா சொல்லுற", என இரண்டு முழியும் வெளியே விழும் அளவு கேட்டான் தேவ்.

"ஆமாடா, உன் வார்த்தை பழிச்சுட்டு மச்சான், நம்ம காவ்யா தான் என்னோட என்னோட தீ.... செல்லம் டா".என மீண்டும் தேவ்வை கட்டிக்கொண்டான், இம்முறை கண்களில் கண்ணீருடன்.. " அதுமட்டுமல்ல டா அந்த அந்த அடையாளத்தையும் பார்த்துட்டேன் மச்சான்" என வெட்கப்பட்டுக்கொண்டே கூறிய விக்ரமை பார்த்த தேவ்..

"இது எப்படா, நடந்தது, இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி இருந்திட்டு, என்னடா இது ராவா அடிச்சுட்டு நிக்குது ஒரே நாள் இராத்திரில அந்த அளவு போயாச்சா நீயும், காவ்யாவும்" என இடுப்பில்கைவைத்து கேட்க..

"ச்சீ.... ச்சீ...... என்னடா பேசுற வாயில அடி, வாயில அடி... அது வந்து என்ன நடந்ததுனா"....... என்று இது வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான் விக்ரம்.

"இவ்வளவு நடந்து இருக்கா, நான் தான் அப்போவே சொன்னேனே அந்த ராக்கி நாய் மேல ஸ்ட்டிராங்கா கேஸ் போட்டு அப்போவே ஜெயில்ல தள்ளி இருக்கலாம், நீ தான் பாவம், கல்யாணம் முடியாதவன் அது இதுன்னுசொல்லிட்ட, இப்ப பாரு அந்த நாயி எந்த அளவுக்கு வந்துட்டுட்டுன்னு"

"சரி டா விடுடா, அதுவும் நல்லது தான் , அதனாலதானே என் தீ ... இன்னைக்கு எனக்கு கிடைச்சு இருக்கா"....

"அது சரி மச்சான் , அது யாரு புது கேரக்டர் அமரன் ஏசிபி ,அவர எப்படி தெரியும் உனக்கு ,அவரு எப்படி இங்கே வந்தாரு, ஆங்"

"ஐயோ, சொல்ல மறந்துட்டேன் பார்த்தியா, அவரு நம்ம நிஷாவ கல்யாணம் பண்ணிக்க போறவரு, அவளுக்குகாக தான் இங்க வந்துருக்காரு,இப்போ அது நமக்கு உதவியா போச்சு " என விக்ரம் கூறினான்.

"சரிடா மச்சான், நல்லா இருடா, உனக்கு ஒரு நல்லது நடந்தா எனக்கு அது போதும் டா, அப்புறம் என்ன காவ்யா ட்டா உண்மைய சொல்லிட வேண்டியதுதானே, அவளும் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா, ஏற்கனவே உன்ன அவளுக்கு புடிக்கும், இந்த உண்மையும் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவா, என்ன எப்போ சொல்ல போற உன் காதல...." என சிறு புன்னகையுடன் கண்சிமிட்டி தேவ் கேட்க..

"இல்ல மச்சான் ,இப்போ வேண்டாம், அதுக்கான, சூழ்நிலையும் அவளோட மனநிலையும் இப்போ இல்லை, எல்லாம் சரியாகி அவள் பழைய மாதிரி மாரட்டும் மச்சான் " - விக்ரம்.

"அதுவும் சரிதான் , ஆங் எனக்கு இப்போது தான் ஞாபகம் வருது, ஏதோ ஒரு வேலைக்காக, ஸ்டாப்ஸ் புரோபைல்ஸ் செக் பண்ணேன் அப்போ காவ்யா புரோபைல்ல இந்த மாசம் 26தான் அவளுக்கு பிறந்த நாள் வருது, அன்னைக்கே உன் காதல சொல்லிடு
மச்சான் " என தேவ் கூற.

"டேய், தெய்வமே நல்ல ஐடியா டா, அப்பவேசொல்லிடுறேன் என் காதலை என் தீ... கிட்ட" என மகிழ்ச்சியில் திலைத்தான் விக்ரம்.

நாம் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைக்கும், ஆமாங்க இந்த விதி பய வேற பிளான் போட்டு வச்சு இருக்கான் சத்தியமா நம்புங்க........

தூவானம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top