ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 29
கண்கள் பார்த்துக்கொள்ளவில்லை
கைகள் கோர்த்து கொள்ளவில்லை
காதல் மொழி பேசவில்லை
ஆனால் காதல் செடி
வளர்ந்து நின்றதே
இரு நெஞ்சத்தில்
காதல் ஒரு அபூர்வம்
💙💙💙💙💙💙💙💙


நாட்கள் நகர்ந்தது, ஊட்டியில் இருந்து வந்ததில் தொடர்ந்து , விக்ரம், காவ்யாவின் நட்பு மேலும் ஆழமானது,எப்படி இல்லாமல் போகும், ஒரு வருட, இருவருட காதலா அது .

ஆனால் அந்த உண்மை என்னவோ இன்றும் விக்ரம் மட்டும் அறிந்ததே பாவம் பேதை அவள் அறியவில்லை அவள் அவன் மேல் கொண்டது வெறும் நட்பு மட்டுமே, அந்த ஒரு சின்ன ஈர்ப்பும் விக்ரம் என்ற பெயருக்காக மட்டுமே.

ஊரில் இருந்து வந்த புதிதில் காவ்யா யாருடனும் பேசவில்லை, ஏன் அலுவலகம் கூட வரவில்லை காரணம், அவள் காதல் அவள் கழுத்தில் இல்லை, இத்தனை வருடமாக அவள் யாருக்கும் தெரியாமல் பாதுகாத்த பொக்கிஷம் இன்று அவளிடம் இல்லை,
அதுமட்டுமல்லாமல், அங்கு நடந்த சம்பவம், ராக்கி இருமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றது.

நினைத்து கொண்டாள் அன்று அவள் விக்ரமை, அவன் வரமாட்டான் என அறிந்தும் , வந்தது என்னவோ விக்ரம் பெயரில் இருக்கும் அவனது தோழன் விக்ரம் ,யாரெனும் காப்பாற்ற வரமாட்டார்களா எனமனது அலறித்துடித்த நேரத்தில் அவளை காத்தான் அவள் நண்பன் விக்ரம்.,

அந்தத்தருணம் விக்ரம் அவள் மனதில் ஆழமாக அங்குரம் போட்டு நிலைத்துவிட்டான்.

தன் குழந்தை காதல் ஒருபுறம், தன் கண்முன் நிற்கும் நட்பு காதலாக மாற துடிக்கும் மனது ஒரு புறம் என இருதலைக்கொல்லி எறும்பாய் அவள் துடித்து போனாள்.

இவள் இப்படி இருக்க,
அவனோ ,நாட்களை எரித்துக்கொண்டிருந்தான், எத்தனையோ வருடங்கள் கழித்து கண்பார்த்த காதல் ,கை கோர்க்க முடியவில்லையே, வருடங்களை மிக எளிதாக கடந்தவனாள் இந்த நாட்களை கடக்க மிகவும் திண்டாடுகிறான், அது சரி கண்முன்னே தன் பாலிய காதல் இருந்தும் ,அதனை வெளிபடுத்த முடியாத நிலையிலே உள்ளான், எல்லாம் அவள் சந்தோஷத்திற்காக, தன் காதலை அவளிடம் அவள் பிறந்த தினத்தில் அவளிடம் பரிசாக கூற எண்ணியே இந்த காத்திருப்பு.
மெல்ல மெல்ல தன் மனதளவில் தேரியவளோ, மீண்டும் அலுவலகம் வர ,தன் நண்பர்கள், தன் குழுவுடன் உற்சாகமாக வேலை செய்ய என நாட்கள் சென்றது.
இன்று காவ்யா அலுவலகம் நுழைகிறாள், நிஷா இல்லாமல் தனியாக, எதோ வேலையாக தன் காதலன் அமரன் அழைக்க தட்டி கழிக்க முடியாமல் சென்று விட்டாள்,

அலுவலகம் நுழைந்தவள் கண்டது வெறும் இருட்டுதான்,பகலாக இருந்தாலும் அந்த பில்டிங்கில் அலுவலகம் ஆள் அரவமின்றி சற்று கருமையாகவே இருந்தது.

ஏனென்று யோசிப்பதற்க்குள், டப் டப் என்ற சத்தம் கேட்டிட பயந்தவளோ கண்களை தன் கைகளை கொண்டு இருக்க மூடிக்கொண்டாள்.
வெளிச்சம் பரவ, வண்ண விளக்குகள் மின்ன, அலுவலகம் முழுதும் அலங்காரமே, ஹேப்பி பர்த்டே டூ யூ என் அனைவரும் இணைந்து பாட ,அப்பொழுது தான் உள்ளே வந்த நிஷாவும் சிலையாகிப்போனால் காவ்யாவை பார்த்து.

இன்னும் நடந்ததை சுய உணர்வுக்கு கொண்டு வரவில்லை காவ்யா, அந்த அழகிய நீல வண்ண கேக் பின்னாடி, பூங்கொத்துடன் காத்து கொண்டிருந்தான், விக்ரம் அழகிய புன்னகையை முகத்தில் ஏந்தி ஹேப்பி பர்த்டே காவ்யா என அவன் கூறிய அடுத்த நிமிடம்,சட்டென நிலை உணர்ந்து பாய்ந்து ஓடிவந்தவள் புயலென அவன் கையில் உள்ள பூங்கொத்தை பீய்த்து எரிந்தது மட்டும் அல்லாமல் இடியென கத்திக்கொண்டே , பைத்தியம் பிடித்தவள் போல அந்த அழகிய கேக் யை அலங்கோலமாக்கினாள் நோ. என்ற கத்தலோடு.

ஒரு கணம் அங்கு நடந்ததை கண்டு காவ்யாவா இப்படி என்பது போல் அதிர்ச்சியடைந்தனர் அங்கு கூடி இருந்த அனைவரும்.

விக்ரம் முன் வந்து காவ்யா தோள்களை பிடித்து குலுக்கி கேட்டான் "என்னாச்சு காவ்யா, ஏன் இப்படி பண்ற"
"நீ............ ஏ..........ன்.......இப்.......படி பண்....... என கண்ணை மூடிக்கொண்டு, வாயை இழுத்துக்கொண்டு திக்கி திக்கி பேசினாள்.

பட்டாசு வெடித்தார் போல் பட் பட் என பேசும் காவ்யா விற்கு இப்படி திக்குவாயா என அனைவருக்கும் மேலும் அதிர்ச்சி.

அனைத்தையும் நிர்மூலமாக்கிவிட்டு ஓடினாள் அலுவலகத்தின் மேல் மொட்டை மாடிக்கு...

"என்ன நிஷா என்னாச்சு ஏன் இவ இப்படி பண்றா" - விக்ரம்.
அது தெரியாது விக்ரம் ஆனா நானும் அவ சேர்ந்த புதுசுல ஹாஸ்டல் அ சர்பிரைஸ் பர்த்டே பார்ட்டி ரெடி பண்ணப்ப இதே மாதிரி தான் நடந்துகிட்டா , காரணம் சொல்லல ஆனா இந்த மாதிரி இன்னொரு தடவை செஞ்சிறாதன்னு கேட்டா அப்போவும் அவ திக்குனா, அவள் உணர்ச்சி வசப்பட்டாலோ, அதிர்ச்சி ஆனாலோ அவ திக்குறா விக்ரம், விடு ஒரு அரைமணிநேரத்தில் சரியாகிடும்.
எனகூறவும் அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனால் காதலிப்பவன் எப்படி விட்டு செல்வான், காவ்யாவை தேடி சென்றான்.

அலுவலக வளாகத்தின் டெரஸ் எனப்படும், மொட்டை மாடியில் நின்றாள், சத்தம் வரவில்லை, ஆனால் உடல் குலுங்கியது, அதிலிருந்து அவள் அழுகிறாள் என புரிந்து கொண்டான்,மாயவன் அவன்.

"காவ்யா " - விக்ரம்

"த......ய......வு... செ..ஞ்சி போ..... ங்க , நான் நான் யா.. யா .யாரையும் பார்க்க விரும்பவில்லை" -காவ்யா .

"காவ்யா கொஞ்சம் என்ன சொல்லவறேன்னு கேளு "

"வேண்டாம் " என பைத்தியம் பிடித்தார் போல் கத்திக்கொண்டே அங்கிருந்த செடிகளை தொட்டியுடன் தள்ளி விட்டாள் மங்கை அவள்.

எவ்வளவு பேசி பார்த்தும் அவள் எதையும் காதல் வாங்க வில்லை , திரும்பி பார்க்கவும் இல்லை ,ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது..
விக்ரம் இன் பேச்சுகள் அனைத்தும், காற்றில் கரைந்த கற்பூரமாய் மாறியதே தவிர ,காவ்யா மனதில் எந்த மாற்றமும் இல்லை...
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், கூப்பிட்டான் காவியாவை...

"தீ ......"

தீ என்ற வார்த்தையை தன் செவியில் வாங்கியவள் , சட்டென அழுகை நின்று, கண்கள் விரிந்தது காவ்யா விற்கு..

மீண்டும் விக்ரம் அழைத்தான்

"தீ.... என்ன பாக்க மாட்டியா"

கண்களை மூடியவள் செவியில் மீண்டும் அதே குரல் ..... இருப்பினும் உறைந்தவள், உறைந்தவள் தான் திரும்ப வில்லை...

"தீ ... நான் விக்ரம் " என கூறவும் அப்படி யே சிலைபோல் திரும்பினாள்.

"உன் விக்ரம் தீ ...... உன்னோட விக்ரம் "

"நீ ...... நீ ..... என மீண்டும் அதே திக்கல் வார்த்தைகள் ... தன் ஆள்காட்டி விரலை விக்ரம் நோக்கி உயர்த்தி கேட்டாள் காவ்யா.

சட்டென தன் பாக்கெட்டில் இருந்து அந்த செயினில் உள்ள பெண்டன்ட்யை திறந்து காமித்து ,

"உன் விக்ரம், இந்த படத்தில் உன் கூட நிற்கும் உன் நண்பன், இப்போது உனக்காக காத்திருக்கும் உன் காதலன் விக்ரம், தீ..... இப்ப கூட என்கிட்ட வரமாட்டியா" என தன் இரு கைகளையும் விரித்து இத்தனை காலம் பிரிந்த ஏக்கப்பார்வையுடன் பார்த்த விக்ரமை நோக்கி ஓடிவந்து கட்டிக்கொண்டாள் காவ்யா...

"விக்ரம் என் விக்ரம் நீயா டா, வந்துட்டியா டா எனக்காக வந்துட்டியாடா ஏன் இவ்வளவு நாள் என்னை காக்க வைச்ச நாயே பேயே" என அவனை தன் இருகைகளாலும் மாறி மாறி அடித்தவள் கைகள் இரண்டையும் பிடித்தான் விக்ரம்.

ஒரு சேர கைகள் இரண்டையும் பிடித்தவன், அவளையே பார்க்க, அவளும் அவன் கண்களையே பார்தாள் பல வருட ஏக்கம் தீர அவனை பார்வையாலே பருகி தன் தாகம் தீர்த்திட எண்ணினாள் .

அவனோ , பிடித்திருந்த அவன் கைகளில் மெதுவாக தன் இதழ்களை ஒத்தி எடுத்து பின் ஒருகாலை மடக்கி, ஒரு காலை நிமிர்த்தி , அவள் வலது காலை தன் தொடையின் மேல் வைத்து அதில் அவளுக்காக வாங்கிய மெட்டியை இரு கால் விரல்களிலும் அணிவித்தான் விக்ரம்.

"தீ..... என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா, ப்ளீஸ்" என அவள் மெட்டியிட்ட பாதங்களில் தன் இதழால் முத்த பரிசளித்தான்.

என்ன பதில் சொல்வாள், மங்கையவள், அன்றயநாள் அப்படி, அதனால் மொட்டாய் இதழ் மூடி இருந்தாள்.

"என் காதலை நான் இப்படி சொல்லுவேனு, நான் நினைச்சுகூட பார்க்கல தீ ... ஏன் இப்படி பண்ண என்னாச்சு, இந்த நல்ல நாள் ல " என அவன் சொல்லி முடிக்கவில்லை அவன் வாயை பொத்தினாள் .

"நல்ல நாள் இல்லை விக்ரம் , நான்.... நான்... அனாதையான நாள் , உங்களோட தீ ....

....இந்த தீஷா யூவாஞ்சலின் அனாதையான நாள் என கதறி கொண்டே அவன் மேல் சாய்ந்தாள்"
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 30

காலம் என்பது
காயம் ஆற்றும்
அருமருந்து
அந்த காலத்துடன்
காதலும்
இணைந்தால்
மருந்துடன் கலந்த
தேன் போல் அல்லவா.....
💙💙💙💙💙💙💙💙💙💙

பிறந்தநாள் .....
ஒரு புதிய ஜீவன் இந்த உலகத்தில் உதயமாகும் நாளை குறிக்கும், அச்ஜீவன் ஆனாது பலபேருக்கு மகிழ்வையும், சில இடங்களில் சில பேருக்கு அது தவிர்விக்கமுடியாத சூழ்நிலையாகிவிடுகிறது.
இங்கும் அப்படிதான், சந்தோஷமாக கொண்டாட வேண்டிய இந்த இனிய நாள் தீஷாவாகிய காவ்யாவிற்கு மறக்கமுடியாத ஒரு கருப்புநாளாக அமைந்தது தான் விதியின் விளையாட்டு ..

தன் மார்பில் புதைந்து கண்ணீர் சிந்தும் தன் காதலியை தலை நிமிர்த்தி, அவள் கண்களை பார்த்து கேட்டான் விக்ரம்

"தீ.. என்னடி சொல்லுற என்னாச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுற"
தலைநிமிர்ந்து தன் விக்ரமை பார்த்தவள் சிறிது விம்மலுடன் பேச ஆரம்பித்தாள்.

" டிசம்பர் 26 , என் பிறந்த நாள் இன்னிக்கு தான் அம்மா அப்பா, என்ன ஆசையா வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்து கார்ல ஏறும் போது, எல்லாரும் ஓடி வந்தாங்க என்னனு யோசிக்கிறதுக்குள்ள தண்ணீ ரொம்ப பெருசா வந்து அப்படியே எங்க மேல விழுந்துட்டு அது மட்டும் தான் எனக்கு தெரியும் விக்ரம், அப்புறம் நான் கண்ணுமுழிக்கும் போது ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் ,அம்மா, அப்பா இரண்டு பேத்தையும் காணோம், ,அவங்கள பத்தி கேட்க முடியல எனக்கு பேச்சும் வரல,

அப்பா ....... அப்பா ( அழுது கொண்டே) எனக்கு ஒரு கிப்ட் இருக்கு சொன்னாங்க, அம்மா என் கூட விளையாட தம்பி பாப்பா வரப்போறான் சொன்னாங்க ஆனா.... ......... அவங்களே என்ன விட்டுட்டு போய்ட்டாங்க விக்ரம்.....

( அவள் பார்த்தால் விக்ரம் இதயமும் கனத்து கண்ணீர் துளிர்த்தது அவன் கண்களில், சிறு குழந்தை போல் , புறங்கையால் கண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள் )

அதுக்கு அப்புறம் தான், டீரிட்மென்ட்காக சென்னை வந்து ,ஆசிரமம் வந்து உன்ன பார்த்தேன், நீ தான் என் கூட முதல்ல பேசுன என் மேல பாசமா இருந்த , ஆனா என்னால தான் உன் கூட பேச முடியல ,எனக்கு பேச்சு வந்தப்போ முதல்ல உன்ட பேச வந்தா, நீ .....
... நீ என்ட சொல்லாம எங்கயோ ஊருக்கு போயிட்ட, அப்புறம் வேதவல்லி அம்மா என்னையும் வேற ஓருத்தவங்களுக்கு தத்து கொடுத்துட்டாங்க" என தன் மனதில் உள்ள பாரத்தை கொட்டி தீர்த்தாள் காவ்யா.

அனைத்தையும் கேட்டவன் , தன் சோகத்தை மறைத்து, மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவனாய் காவ்யாவை தன் முன் நிறுத்தி அவள் தாடையை பிடித்து,

"இனி என் தீ கவலைபடகூடாது, அதான் உன் விக்ரம் வந்துட்டேன்ல ம்ம்... என சிரித்துக் கண்ணடித்தான்"

"ம்ம்ம்....எல்லா சரி அது என்னடா தீ .. தீ ...ன்னு கூப்பிடுற பயர் மாதிரி என் பேரு தீஷா யூவாஞ்சலின் இல்லைனா காவ்யான்னே கூப்பிடு அதவிட்டுட்டு தீ .. தீ ..ன்னு போடா"

"ஹலோ மேடம் நீங்க என்ட்ட பேசுன ஒரு வார்த்தை இது மட்டும் தான் அப்படி தான கூப்பிடுவேன்க " என அவள் தலையில் தட்ட.

"டேய் பக்கி, தலையில அடிக்காதடா, வளரமாட்டேன்" என தன் தலையை தடவிக்கொண்டாள்.

"ஆமா ,அப்படியே அமிதாப்பச்சன் மாதிரி வளந்துற கிளந்துற போற போடி கட்டச்சி"

"டேய் கட்டச்சின்னு கூப்டாதடா காட்டேரி "

"கட்டச்சி, கட்டச்சி" என மீண்டும் மீண்டும் விக்ரம் கூப்பிட்டு கொண்டே கீழே செல்ல லீப்ட்டுக்குள் நுழைய , காவ்யாவும் பின் தொடர அதன் பின் லிப்ட்குள் நடந்தது மீண்டும் ஒரு இதழ் விருந்து.

காவ்யா மீண்டும் ஆபிஸ் செல்லாமல் கீழே கிரவுண்ட் ப்ளோர்ரில் இருந்து நிஷாவிற்கு கால் செய்து அப்படியே ஹாஸ்டல்க்கு சென்றுவிட்டனர்.

வாழ்க்கையில் ஏற்படும் சோகம்
சோகமாகவே இருந்திடாது
அது இன்பமாகவும் மாறும்.


இன்று தன் அறைக்கு செல்லாமல், ரமேஷ்க்கு போன் செய்து சொல்லி விட்டு, நேராக தேவ்வை பார்க்க சென்று விட்டான்.

"டேய் மச்சான் , சொல்லிட்டன்டா, சொல்லிட்டன்டா என் காதலே...... என் தீ ...ச்சே என் செல்லக்குட்டி தீஷா எனக்கு கிடச்சிட்டாடா" என அவனை தூக்கி சுத்தி ,அப்படியே சோபாவில் இருவரும் விழுந்தனர்.

"அப்புறம் , டேய் டிரீட் எங்கடா?"

"டேய் மச்சான் நாளைக்கு ஒரு விஷயம் பண்ணணும் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து டிரீட் தாரேண்டா மச்சான் " என அவன் கன்னத்தில் முத்தமிட்டு தேவ் அறைக்கு உறங்க சென்று விட்டான் விக்ரம் .

"டேய் என்னடா பண்ணப்போற, டேய் சொல்லுடா, சொல்லித்தொலைடா"

" டேய் மச்சான் , அது சப்ரைஸ், நாளைக்கு உனக்கே தெரியும் டா " என அறையில் இருந்து குரல் கொடுத்தான் விக்ரம்.

"ஆஹா இப்ப என்ன பிளான் போட்டு வச்சுருக்கான்னு தெரியலயே, அட ஆண்டவா இவன் கூட சேரவச்சு , என்ன படுத்திறீயேபா, நாளைக்கு என்ன கிறுக்குதனம் பண்ண காத்திருக்கானோ தெரியலையே" என கடவுளை வேண்டிக் கொண்டான் தேவ்.

தூவானம் தொடரும்.
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 31

உதிக்கும் ஒவ்வொரு கதிரவனும்
ஒவ்வொரு விதமாக உதிக்கின்றான்
சிலருக்கு புதிராக,
சிலருக்கு சவாலாக
மற்றும் சிலருக்கு
அந்நாளே பரிசாக அமைகிறது.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

அழகிய காலைபொழுது, குளிர் தென்றல் வீச, மரத்தின் ஒவ்வொரு இலைகளும் ஓன்றொடு ஒன்று உரசி சரசம் செய்தது, சின்னச்சிறு சிட்டுகளின் சினுங்கல்கள், குரல் கொடுத்து விடியலை வரவேற்கும் குயில்கள்,
இவை அனைத்தையும் விடுதி சாளரம் அருகில் இருந்து அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா, கையில் தேநீர் கோப்பையுடன்... ,ஏனோ தெரியவில்லை இன்று அவள் எழுந்தது மிகச் சீக்கிரம் தான்.

அதுமட்டுமல்ல இன்று ஏதோ ஒரு நிம்மதியான விடியலை அவள் வரவேற்றாள் , உடம்பில் ஒரு புது உற்சாகமும், மனதில் அளப்பறியாத ஊத்வேகமும் அவளுக்குள் தோன்றியதை அவள் உணராமல் இல்லை. அதற்கு யார் காரணம் என்பதும் அவளுக்கு தெரியாமல் இல்லை, இருந்தும் இன்று நல்லதோ, கெட்டதோ ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என அவள் உள் மனது அறிவுறுத்தியது , சரி
இன்று ஏது நடந்தாளும் அதை வரவேற்க அவள் தயாராக இருக்கும் மன நிலைக்கு வந்து விட்டாள்.

ஏனோ இன்று அவள் அணிந்திருந்த ஆடையும் அவள் மாற்றத்தை பறை சாற்றியது.

"ஹேய் என்னடி புதுசா புடவை எல்லாம் கட்டி இருக்க." நிஷா.

"சும்மா ஒரு சேஞ்சா இருக்கட்டும்ன்னு தான்" காவ்யா .

"ஆனாலும் இந்த சேஞ்ச் இன்னிக்கு எத்தனை பேத்தை மூச்சடைக்க வைக்கப்போதோ தெரியலையே என் செல்லக்குட்டி அவ்ளோ அழகா இருக்கே இன்னிக்கு " என நிஷா தன் கைவிரல்களை வைத்து காவ்யாவின் முகத்தில் நெட்டி முறித்து விட்டு குளியல் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவள் செல்லவும் ,தங்கள் அறையில் உள்ள ஆளுயர கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை மேல் இருந்து கீழே வரை பார்த்து ரசித்து கொண்டிருந்தவள் கண்கள் தீடிரென விரிய அவளுக்கு பின்னாடி நின்றிருந்தான்
விக்ரம், கண்ணாடியில் அவளை பார்த்தபடியே பின்னாடி இருந்து அவளது இடையோடு அணைக்கவும் கண்களை மூடியவள்
கண்களை மீண்டும் திறக்க வைத்தது அவளது தொலைபேசியின் அழைப்பு.

தொலைபேசி மணி அடிக்க அந்த சதத்தில் கண்களை திறந்தவள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து பின்னாடி திரும்பி தேட அங்கு விக்ரம் இல்லை, ச்சே என்ன இது என தன்னை சமன் செய்து கொண்டு தன் தொலைபேசியின் அழைப்பை உயிர்பித்தாள்.

"ஹலோ "

"ஹாய் தீ.... குட்டி"

"டேய் தீ.... யா?"

"சரிடி தீஷா செல்லம், காலையிலே என் டார்லிங் ஏன் சூடா இருக்கு"

"அங் எல்லாம் உன்னாலதான்"

"என்ன என்னாலயா நான் என்னடி பண்னேன்"

"ஒண்ணும் இல்லை சாமி ஒண்ணும் இல்லை , இப்போ எதுக்கு போன் பண்ண அத முதல்ல சொல்லு "

"அது வந்து தீஷா குட்டி, நீ கொஞ்சம் அந்த பார்க் வரைக்கும் வாயேன்"

"இப்ப எதுக்குடா பார்க் வர சொல்லுற? ,அதான் கொஞ்ச நேரத்துல ஆபிஸில பார்க்கபோறோமே"

"அடியே, இவளே வான்னா வா ஆராய்ச்சி பண்ணாதே , அப்புறம் நிஷாட்ட சொல்லிட்டியா எல்லாத்தையும்"

"இல்லடா சொல்லல "

"ரொம்ப நல்லதா போச்சு இப்போதைக்கு அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம், சரியா"

"ஏன்டா ஏன் ?"

"நீ பார்க் க்கு வா சொல்லுறேன், எவ்வளவு கேள்விடி கேட்ப "

"சரி சரி அலுதுக்காத வர்றேன் " என தொலைபேசியை கட் செய்து விட்டு நிஷாவிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டு ஆட்டோவில் கிளம்பினாள் அந்த பார்க்கிற்க்கு .
பார்க்கில் தனியாக அங்கும் இங்கும் நடையோ நடை என நடந்து கொண்டிருந்தான்,விக்ரம்.

"விக்ரம் " என்ற குரல் கேட்டு திரும்பியவன், அங்கு நின்றிருந்த காவ்யாவை பார்த்து சிலையாகி போனான், காவ்யா அருகில் வந்து விக்ரம் , விக்ரம் என தோளை தொட்டு உலுக்கிய பின்னரே நிகழ்வுக்கு வந்தான் விக்ரம்.

"ஹேய், என்னடி இது புடவையில இப்படி இருக்குற ப்பா... சான்சே இல்லடி அவ்ளோ.,.." என அசையாமல் கூற .

"எப்படி இருக்கேன் நல்லா இல்லையா"

"அடியே அப்படியே கல்யாண பொண்ணு மாதிரி இருக்க"

" ஆமாடா எனக்கு இன்னிக்கு கல்யாணம் அதான் வர்றீயா" என காவ்யா நக்கலாக கூற
சட்டென பொறை ஏறி போனது விக்ரம்க்கு.

"என்னடா மாப்பிள்ளை யாருன்னு பார்க்கியா, மாப்பிள்ளை நம்ம கம்பெனி சிஈஓ தான், நேத்து தான் மெயில் அனுப்புனாரு அதான்" என சொல்லி விட்டு கல கல வென சிரித்தாள் காவ்யா.

"ஆமா நம்ம சிஈஓ தான் உன்ன கல்யாணம் பண்ணப்போறாரு தீஷா "

"டேய் என்னடா நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னா , நீ அத லெந்த்தியா கொண்டு போற,முதல்ல நம்ம சிஈஓ யாருன்னு உனக்கு தெரியுமா போடா "

"தெரியும் "

காவ்யா சிரித்துக் கொண்டே " அப்படியா யாரு அது"

"நான் தான்"

"டேய் விட்டா இந்த நாட்டோட பிரைம்மினிஸ்டரே நான் தான்னு சொல்லுவ நீ கேடி"

"பிரைம்மினிஸ்டர் நான் இல்லை தீஷா, ஆனா இந்த கம்பெனியோட சிஈஓ நான் தான், ஓரியண்ட் இன்போ என்னுடையது தான் " என விக்ரம் சொல்லி முடித்து திரும்பி பார்த்தான் இப்போது சிலையானது காவ்யா தான்.

"நீ என்ன என்ன சொல்லுற ஹா, வி.....வி...விளையாடாத விக்ரம் " என காவ்யா கேட்கவும். தான் யார் என்பதையும் ,தான் எதற்க்காக இப்படி ஸ்டாப் போன்று நடித்தான்,

தேவ் விக்ரம்க்கு யார் என அனைத்தும் கூறி முடித்தான் விக்ரம்.

அனைத்தும் கேட்ட காவ்யா, தொப்பென்று அருகில் உள்ள கல் திண்டில் அமர்ந்தாள். அவள் அருகில் சென்று கீழே தரையில் அமர்ந்தான் விக்ரம்.

"தீஷா, எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு, அதற்கான நேரம் வரும் போது உனக்கே அது புரியும் , என் மேல உனக்கு நம்பிக்கை இருந்தா இப்போ அமைதியா என் கூட வா"
மெல்ல அவன் கண்களை ஏறெடுத்து பார்த்தவள்,

"என் ஒட்டுமொத்த வாழ்க்கையின் நம்பிக்கையே நீ தான் விக்ரம்" என அவன் இருகரங்களையும் இருத்தி பிடித்து கொண்டாள்.

இருவரும் காரில் சென்றனர், நீண்ட அமைதி அந்த பயணத்தில், இறங்க வேண்டிய இடம் வந்தது, காரை பார்க்செய்து விட்டு இருவரும் இறங்கினர். அந்த இடத்தின் பெயர் பலகையை பார்தவள் சற்று குழப்பத்துடனே விக்ரமை நோக்கினாள்.

"என்ன விக்ரம் இது, இங்க எதுக்கு வந்து இருக்கிறோம், இது ரிஜிஸ்டர் ஆபீஸ் தானே இங்க யாருக்காவது கல்யாணமா சாட்சி கையெலுத்து போட வந்தோமா"

"அதான் நீயே சொன்னல்ல தீஷா,நம்ம கம்பெனியோட சிஈஓ உன்ன கல்யாணம் பண்ணப்போறாருன்னு " என கூறிவிட்டு லேசாக பட்டும் படாமல் கண்ணடிக்க.

"ஹேய் என்ன சொல்லுற , கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம், விக்ரம் ஒண்ணு புரிஞ்சுக்கோ, நாம இரண்டு பேரும் விதி வசத்தால பெத்தவங்கள இழந்து ஒரு காலத்தில அனாதை ஆகி இருக்கலாம், ஆனா நாம இப்போ அனாதை இல்லை நம்ம இரண்டு பேருக்கும் வளர்த்தவங்க இருக்காங்க, அவங்க நம்மள உயிரா நினைக்காங்க, அது மட்டுமல்ல அவங்க நம்ம விருப்பத்துக்கும் குறுக்க வரமாட்டாங்க அப்படி இருந்தும் நாம ஏன் இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணணும் இது சரிஇல்லை இது வேண்டாம் விக்ரம் " என விக்ரம் கையை பிடித்து கொண்டு கெஞ்சுவதுபோல் கேட்டாள் காவ்யா.

" நீ சொல்லுறது எல்லாம் சரிதான் தீஷா ஆனா நான் இருக்குற சூழ்நிலை சரிகிடையாது, என்ன சுத்தி ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சி இருக்கு, என்ன சுத்தி இருக்குறவங்க யாரை நம்புறதுன்னு எனக்கே தெரியல, இந்த ஒரு சூழ்ச்சி புயல்ல உன்ன நான் மறுபடியும் இழக்க விரும்பல ப்ளீஸ் நான் நம்ப நல்லதுக்கு தான் சொல்லுறேன், அப்போ நீ என்ன நம்பலயா" என விக்ரம் கூறி முழுதாய் முடிக்கவில்லை அவன் இதழ்களை தனது கை கொண்டு மூடினாள் காவ்யா.

"சரி விக்ரம் உனக்கு சரின்னு பட்டா,நான் உனக்கு ஒத்துழைக்கிறேன்" என காவ்யா கூறிமுடிக்கவும், அங்கு தேவ் வரவும் சரியாக இருந்து.

"டேய், மாப்பிள என்னடா இங்கயே இருக்குறீங்க, அங்க ரிஜிஸ்டர் ஆபிஸர் கத்திக்கிட்டு இருக்காரு, வாம்மா தங்கச்சி சீக்கிரம் வாமா,

என் மாப்பிள்ளை உனக்காக இத்தனை வருஷம் வெயிட் பண்ணிட்டான் இனியும் வேண்டாமா தாங்க மாட்டான்" என தேவ் தன் நண்பனின் நிலையை காவ்யா விற்கு வெளிபடுத்தினான்.

"வாங்க அண்ணா போவோம், வா விக்ரம்" என அவன் கையை பிடித்து கொண்டு சென்றாள் .

இருவரும் கையெழுத்திட்டனர், பின் மாலையும் மாற்றிக்கொண்டனர், மாங்கல்யம் இருந்தா கட்டுங்க என கூறவும், விக்ரம் தன் பாக்கெட்டில் இருந்து அழகான இரு மோதிரத்தை எடுத்து அவள் கையில் ஒன்றை கொடுத்தான். அதை பார்த்த தேவ்.

"டேய் மாப்ள, தாலி எங்கடா ,மோதிரத்தை கொடுக்க"

"தேவ் மாங்கல்யம் ஒரு பெண்ணுக்கு ரொம்ப பொக்கிஷமான ,ஆத்மார்த்தமான ஒண்ணு அது மிகப் பெரிய கெளரவம் , அத என் தீஷாக்கு ஊர கூட்டி மேளதாளத்தோட அவளுக்கு நான் கொடுக்கனும், அதும் எங்க இரண்டு பேர் பேரண்டஸ் முன்னாடி அவங்க ஆசிர்வாதத்தோட, இப்போ மோதிரம் மாத்திக்கிறோம் , சட்டப்படி தீஷா என் மனைவி ஆகிட்டா அது போதும் எனக்கு, சமயம் வரும் போது ஊர கூட்டி திருவிழா மாதிரி கல்யாணம் பண்ணிக்குவோம் என்ன தீஷா சரியா" என ஒற்றை பருவம் உயர்த்தி
தீஷாவை கேட்டான் விக்ரம். சரி என்பது போல் புன்னகை சிந்தினாள் காவ்யா .

"சரி டா மாப்பிள கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது நான் அப்படியே ஆபீஸ் போய் மேற்கொண்டு ஆகுற வேலையை பார்க்கேன், நீ தங்கச்சி கூட கொஞ்சம் டைம் ஸ்பென் பண்ணிட்டு வா" என தேவ் கிளம்பி சென்று விட்டான்.

இருவரும் காரிற்க்கு வந்து அமர்ந்தனர்.

" ஆமா டி இன்னிக்கு பார்த்து கரெக்டா எப்படி புடவை கட்டுன டி நீ "

" அதுவா, ரொம்ப வருஷம் கழித்து என் லவ்வர் கிடைச்ச சந்தோஷத்தில அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா இங்கு வந்து பார்த்தா அவன் எனக்கே பெரிய சர்பிரைஸ் ஆ கொடுத்துட்டான் " என சிரித்தாள் காவ்யா.

"அடியே!.. சரி சரி மிஸஸ் விக்ரம் . எங்க போலாம் முதல்முதலா" என விக்ரம் கேட்க.

"கோவிலுக்கு போலாம் விக்ரம் " என கெஞ்சுதலாக கேட்ட காவ்யாவை பார்த்து

"இப்போ ஏன் இப்படி கெஞ்சுற மாதிரி கேட்க, ஆர்டர் போடுடி என் பொண்டாட்டி இப்போ நீங்க மிஸஸ் விக்ரம், இல்லை இல்லை இந்த விக்ரம் கே படா பாஸ்" என சொல்லி விட்டு கண்சிமிட்டி சிரித்த விக்ரமை கண்கொட்டாமள் பார்த்து ரசித்தாள் காவ்யா .

கோவிலுக்கு சென்றுவிட்டு ,இருவரும் அலுவலகம் வந்தனர்,தனித்தனியாக, விக்ரம் நேராக தேவ் அறைக்கு சென்றுவிட்டான், காவ்யா, தனது இருப்பிடத்திற்க்கு வந்து நிஷா பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

"என்ன மேடம் இவ்வளவு லேட்" என கேட்டுக்கொண்டே காவியாவை பார்த்தவள் அதிர்ச்சியில்" என்னடி இது " என அவள் நெற்றியை சுட்டி காட்ட அப்பொழுது தான் காவ்யாவிற்கு நினைவு வந்தது கோவிலில் விக்ரம் ஆசை ஆசையாக அவளது உச்சி வகுட்டில் குங்குமம் வைத்தது.
ஐய்யயோ மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டமே டா என நினைத்தவள்,

" அதுவாடி அது கோவிலுக்கு போனேன்ல அங்கு குங்குமம் கொடுத்தாங்க அத நெத்தில வைக்கும் போது பக்கத்துல உள்ளவங்க இடிச்சதுனால மேல போயிட்டு போல " என வேகமாக அதை அழிக்க சென்றவள் கையை தடுத்த நிஷா

" விடு விடு வெள்ளிக்கிழமை அதுவுமா வச்ச குங்குமத்தை அழிக்காத விடு , நீ எதுக்கு வேண்டி வச்சியோ அது நல்லபடியா நடக்கட்டும், உன் லவ்வர் உன்ன தேடி வரட்டும்" என கூறிவிட்டு கணிணி நோக்கி திரும்பி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

"ஸாரி டி நிஷா நீ என்மேல எவ்வளவு பாசம் வச்சுருக்க, ஆனா நான் உன்ட என் கல்யாணத்தையே மறைக்கேன் டி , ஸாரி நேரம் வரவும் எல்லா உண்மையையும் உனக்கு சொல்லுறேன் டி" என மனதிற்குள் தன் தோழியிடம் மன்னிப்பு வேண்டினாள் காவ்யா .

நேரம் சென்றது அனைவரும் தங்களது வேலையில் மூழ்கினர் , விக்ரம் இன்னும் தேவ் அறையிலேயே இருந்தான்.


"ஹலோ மேடம், உங்க எம்டிய பாக்கலாமா "
குரல் வந்த திசையை கூட ஏறெடுத்து பார்க்காமல் கணிணியில் மூழ்கியவாறே

"போங்க போய் முன்னாடி ரிசப்சன்ல கேளுங்க" என கையை மட்டும் ரிசப்சனை நோக்கி காட்டினாள் நிஷா.

நீட்டிய கையை வந்தவர் பிடிக்கவே ,அதிர்ச்சியில் எவன்டா அவன் என நிமிர்தவளுக்கு மிஞ்சியது ஆச்சர்யமே

"டேய் மச்சான் நீ எங்கடா இங்க ,அதும் மப்டியில் வந்துருக்க" என நிஷா பதற்றமடைய
(ஆம் வந்திருப்பது அமரனே தான்)

"அடியே அபிஷியலாதான் வந்துருக்கேன் உன் எம்டி ய பார்க்க, "

" அப்படியா வளர்ந்து கெட்டவனே ...அதோ அந்த ரூம் தான் போ" என கை காட்ட

"இருடி எம்டிய பார்த்து வந்து உன்ன வச்சுக்கிறேன்"என கூறிவிட்டு சென்றான் அமரன்.

"மே .. ஐ கம் இன்"
என்ற குரலில் இருவரும் திரும்பி பார்க்க தேவ் "யேஸ் " என்றான் .

"ஐயம் ,அமரன் ஏசிபி, இதோ விக்ரம்க்கு தெரியுமே" என விக்ரமை பார்த்து புன்னகைக்க..

" தேவ், ஐ நோ கிம்" என கூறினான் விக்ரம்,

"நான் இந்த கம்பெனி ஓனர்ட்ட பேசனுமே" -அமரன்

"ஓகே சார் நீங்க பேசுங்கள் அம் ஐ லிவ் சார்" என விக்ரம் கூற .

"என்ன விக்ரம் கிளம்புறீங்க நான் தான் சொன்னல்ல கம்பெனி ஓனர்ட்ட பேசனும்னு, நீங்க கிளம்புனா நான் யார்ட்ட பேசுவேன் ஹீம்" என அமரன் சிரித்தபடி கூற இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்...

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 32

புதிர்கள் என்றும்
புதிராய் இருப்பதில்லை
கேள்விக்கு என்றும்
பதில் கிடைத்திடும்
புதிரும் ஓர் நாள்
புரிந்திடும்
அதுவே வாழ்க்கை
💙💙💙💙💙💙💙💙💙


ஓரியன்ட் இன்போ
அமரன் சொன்னதை கேட்ட இருவரும் விழி பிதுங்கி நின்றனர். தொடர்ந்து அமரன் பேச ஆரம்பித்தான்.

"என்ன மிஸ்டர் விக்ரம் அப்படி திகைச்சு நிக்குறீங்க, உங்களையும் தான் தேவ்" என மிகவும் சாதாரணமாகவும் அதே சமயம் நக்கல் கலந்த தோணியில் கேட்டான் அமரன்.

"அது , அது அப்படி உங்களுக்கு தெரியும்?" என தேவ் கேட்க.

அமரன்- " என்ன தேவ் சின்னப்பிள்ளைத்தனமா கேட்கிறீங்க, நான் ஒரு போலீஸ்காரன் என்னப்பார்த்து இப்படி ஒரு கேள்வி உங்களால தான் கேட்க முடியும், நீங்க ரொம்ப புத்திசாலி பாஸ்".

விக்ரம்- "அவன் முட்டாளா புத்திசாலிங்கிற ஆராய்ச்சி இங்க தேவை இல்லாத ஒரு விஷயம், மிஸ்டர் அமரன், உங்களுக்கு எப்படி எங்கள பத்தி தெரியும், அதுமட்டுமல்ல எங்கள பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்ன? அது தான் எங்க கேள்வி அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க அமரன்.

அமரன்- " வெல், இது மட்டுமா , நீங்க ஒரு பிரைவட் டிடக்டிவ் வைச்சு உங்க அங்கிள் சதாசிவத்தை உங்க ஆபிஸை பத்தி விசாரிக்க சொன்னது வரை ஆல் டிடைல் ஐ நோ விக்ரம், இதுல என்ன ஒரு பியூட்டினா, நீங்க வைச்ச உங்க ஆள் உங்களையே
வேவு பாக்குறதுதான் ஹா ஹா ஹா "
என கைத்தட்டி சிரித்தான் அமரன்.

தேவ்-: என்ன அமரன் என்ன சொல்லுரீங்க.

அமரன் - "அங் காக்கா வடை தூக்கிட்டு போன கதைய சொல்லுறேன் அட போயா, மங்குனி மாதிரி கேட்டுகிட்டு, தமிழ்ல தானே சொல்லுறேன், நீங்க வச்ச ஆளு உங்க அங்கில் கிட்ட டீல் பேசிட்டு அவர பத்தின தப்பான தகவல்ல உங்ககிட்ட கொடுத்துட்டு, உங்கள பத்தின மிகச்சரியான விஷயத்தை உங்க தொங்கில் கிட்ட விசுவாசமா சொல்லுறானு சொல்லுறேன்"

தேவ் - விக்ரம் மச்சான் அப்போ இன்னிக்கு நாம பண்ணதும் அவருக்கு தெரிஞ்சு இருக்குமா?

அமரன்- ஏது அந்த விக்ரம் ரிஜீஸ்டர் மேரேஜ் ஆ பங்கு " என கால் மேல் கால் போட்டுகன்னத்தில் கை வைத்து ஒண்ணும் தெரியாத பிள்ளைப்போல் கேட்டான்.

மீண்டும் தேவ் மற்றும் விக்ரம் முழிக்க

அமரன் - ரொம்ப முழிக்க வேண்டாம் பிரதர்ஸ் இன்னிக்கு நடந்த விக்ரம் கல்யாண மேட்டர் உங்க அங்கிள்க்கு தெரியாது டோன்ட் வோரி சில் மாப்ளைஸ்.

விக்ரம்- அமரன் நீங்க சொல்றது உண்மையா? அப்படி உண்மையா இருந்தா அதெப்படி உங்களுக்கு தெரியும்.

அமரன்- வா மச்சி இப்பதான் கரெக்டான பாயின்ட்க்கு வந்திருக்க.அதெப்படி எனக்கு தெரியும்னா அவன் தான் என் கஷ்டடல இருக்கானே ,பயபுள்ள பின்ன எப்படி போட்டு கொடுப்பான்.

தேவ் - ஐயா மகாராசா ஏன் இப்படி பிசிலி வெடியா போடுறீங்க ஓரேடியா ஆட்டோம் பாம் அ போடுயா ராசா.

அதை கேட்டு அமரன் வாய்விட்டு சிரிக்க, விக்ரம் மேலும் குழப்பம் அடைந்தான்.

லேட்ஸ் ஸ்டாப் தி பஸில் கேம் அமரன், ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க, என்னை பின் தொடர்ந்த ஆளை நீங்க உங்க கஷ்டடி ஏன் வைச்சு இருக்கீங்க? , என் பின்னாடி வந்தவங்கள உங்களுக்கு தெரிஞ்சுருக்குனா
அவங்களுக்கு முன்னாடியே நீங்க என்ன வாட்ச் பண்ணிருக்கீங்க அம் மை கரெக்ட், இப்போ சொல்லுங்க நீங்க ஏன் என்ன வாட்ச் பண்றீங்க, உங்களுக்கு இதனால என்ன யூஸ், சொல்லுங்க அமரன்.

விக்ரம் முழுவதும்
பேசிமுடிக்கும்வரை அமைதி காத்த அமரன் , இரண்டு கைகளையும் தட்டிக்கொண்டே எழுந்தான்..

அமரன் - வாரேவா பரவாயில்லையே விக்ரம் நீங்க கொஞ்சம் ஷார்ப் தான், நேரா பாயின்ட்க்கே வந்துட்டீங்க. செம்ம போங்க பாஸ் , ஐயம் இம்பரஸ்ட் ..

விக்ரம் - அமரன்..........
( என சலிப்பாக தன் வார்த்தையை இழுத்தான் விக்ரம்)

அமரன் - கூல் கூல், மச்சி , உன் கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும் ஆனா அது இப்போ கிடையாது ,நேரம் வரும் போது தானா தெரியும் , ஆனா ஒண்ணு விக்ரம் உனக்கும் எனக்கும் ஒரு முடிச்சு இருக்கு, கொஞ்சம் தேவ் தவிர சுத்தி இருக்கிறவங்ககிட்ட கவனமா இரு , இதோ என் கார்ட்டு எந்த உதவினாலும் என்ன கூப்பிடு ஓகே . பாய் விக்ரம், பாய் தேவ்...
என கூறிவிட்டு அறை வாசல் வரை சென்ற அமரன் ஏதோ நினைவு வந்தவனாய் மீண்டும் இருவர் அருகில் வந்து

அமரன் - ஆங் உங்க சதாசிவம் அங்கிள் அடுத்த வாரம் சென்னை வரல, நாளைக்கு வராரு , சோ என்ட் யூவர் ஆபீஸ் ஸ்டாப் டிராமா ஓகே.
என கூறிவிட்டு தன் கூலர்ஸை ஸ்டைல்ஆக கண்களில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தான் அமரன்.

தேவ் - டேய் மச்சான் என்னடா நடக்குது யாரு இவன், இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம், ஆனா நமக்கு உதவி பன்றான்னு மட்டும் நல்லா புரியுது,

விக்ரம்- ஆமாடா எனக்கும் அப்படி தான் இருக்கு, ஆனா அவனுக்கும், எனக்கும் ஒரு முடிச்சு இருக்குன்னு சொன்னானே , அதான் எனக்கு சரியா புரியல.

தேவ் - அது ஒண்ணும் இல்ல மச்சி, அவன் ஆளும், உன் ஆளும் பிரென்ட்ல அத தான் பங்கு அப்படி சொல்லிட்டு போறான் போல.
என தேவ் நாடியில் கைவைத்து கூற .....அவனையே முறைத்து பார்த்த விக்ரம்..

விக்ரம் - இப்போ நீ ஏன்டா அவன மாதிரி, மச்சி, பாஸ் ,பங்குன்னு பேசுற...

தேவ் - டேய் மாப்ள இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்ததுல என் மூளை அவனுக்கு பிரென்ட் ஆகிட்டு போல.

விக்ரம் - மூடிகிட்டு மதியானம் ஸ்டாப் மீட்க்கு ஏற்பாடு பண்ணு இன்னிக்கே இந்த வேஷத்தை கலச்சிருவோம்...

தேவ் - சரி மச்சான்..
தேவ் ,விக்ரம் இருவரும் தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்தனர், இங்கு தேவ் அறையில் இருந்து வெளியே வந்த அமரன் நேராக தனது காதலை நிஷாவின் அருகில் சென்றான்.

அமரன் - ஹலோ மேடம் , என்ன பிஸியா?

நிஷா - யாரது நம்ம அமரன் சாரா, என்ன சார் உங்க முதல் பொண்டாட்டி எப்படி என்கிட்ட
பேச விட்டா?

அமரன் - ஹேய் ஏன் செல்லக்குட்டி இப்படி பேசுது.

நிஷா - இவ்வளவு மரியாதையா பேசுறனேனு நினைச்சு சந்தோஷபடுங்க மிஸ்டர் அமரன்.

அமரன் - சரிடி சரிடி வா ஜில்லுன்னு ஒரு ஜீஸ் குடிப்போம், வா கேண்டீன் போவோம் சீக்கிரம், உனக்கு மதியம் மீட்டிங் இருக்கும்.

நிஷா - டேய் போலீஸ் மச்சான், எனக்கு மீட்டிங்ன்னு எனக்கே இன்னும் தெரியல, அதுக்குள்ள உனக்கு எப்படி டா !

அமரன் - அதான் அமரன் வாடி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருப்பா போலீஸ்காரன் பொண்டாட்டினு மணிக்கொரு தடவை நிரூபிக்கடி என் மிர்ச்சி
என இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்ச்சிக் கொண்டும், கொஞ்சி கொண்டும் கேண்டீன்க்கு சென்றனர்.
அனைவரும் கான்பிரன்ஸ் ஹாலில் கூட ஸ்டாப் மீட் ஆரம்பம் ஆனது.

அங்கு அவர்களின் சிஇஓ அறிமுகப்படுத்தப்பட்டது , அது விக்ரம் என அறிந்து அதிர்ச்சி ஆனந்தமும் ஒரு சேர அடைந்தனர் அனைவரும். நிஷாவுக்கும், ரமேஷ்க்கும் தான் கொஞ்சம் அதிர்ச்சி ஓவர் டோஸ் ஆனது. அவர்களுடன் சேர்ந்து காவ்யாவும் அதிர்ச்சி ஆனதுபோல் நடித்து விட்டாள் தன் காதல் கணவனுக்காக.

ஹாஸ்டல்

விக்ரம்- ஹலோ என்னடி பண்ற?

காவ்யா- ஹீம் இப்போதான் ஹாஸ்டல் வந்தோம், டிரெஸ்சேஞ் பண்ணப்போறேன் டா .

விக்ரம்- தீ ....ஷா .....

"ஏன்டா இப்படி இழுக்குற என் பேரை"

"உன்ன இழுக்கமுடியலையே அதான் டி"

" சரிதான் , ஏன்னாச்சு என் விக்கி மாக்கு"

"ஏன்டி , இப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி சீன் போடுற"

"நிஜமா தெரியல டா, என்னடா,என்ன வேணும் "

"எனக்கு ,என்னன்னமோ வேணும் நீ குடுப்பியா"

"டேய், டேய், உன் டோனே சரியில்லை நீ போன கட் பண்ணு முதல்ல"

"ஹேய் ஏன்னடி உனக்காக எத்தனை வருஷம் காத்திருந்து உன்ன கல்யாணம் பண்ணிருக்கேன் எனக்கு ஒன்னு கேட்க உரிமையில்லையா போடி "
என விக்ரம் போனை கட்செய்ய, உடனே அவனுக்கு காவ்யாவிடம் இருந்து வீடியோ கால் வந்தது.

சிரிப்புடன் அதை அட்டன் செய்தவன். அவள் பார்த்தவுடன் மீண்டும் தன் முகத்தை பாவம் போல் வைத்து கொண்டான்.

"டேய் டேய், அப்படி மூஞ்ச வைக்காதடா " என காவ்யா கெஞ்ச,

"அப்போ ஒரு டெய்ரிமில்க் கொடு "

"டேய் இன்னேரம் டெய்ரிமில்க்கு எங்க போவேன், நானே நிஷாக்கு தெரியாம ,பாத்ரூம்ல இருந்து பேசுறேன் டா, புரிஞ்சுக்கோடா"

"அடி, லூசு, நான் கேட்டது"

"நீ கேட்டது"

"அது வந்து "

"டேய் , சொல்லித்தொலைடா"

"ஒரு கிஸ்ஸி கொடு டி என் டியூப்லைட்"

"ச்சீ.. இத தான் டெய்ரிமில்க்னு சொன்னியா, போடா, குட் நைட் , நான் போன வைக்கிறேன்"

"அடியே , இன்னிக்கு என்ன இரவு தெரியுமா"

"அட ராமா உனக்கு என்னமோ ஆச்சு, போய் படு , குட் நைட்"

"அடியே அடியே , போன கட் பண்ணிட்டாளே, சரி மவள ஒரு நாள் மாட்டுவ அன்னிக்கு வைச்சு செய்றன்டி உன்னய, டேய் விக்ரம் கல்யாணம் முடிஞ்சும் நீ கட்ட பிரம்மச்சாரி தான் போ"
என அலுத்துக்கொண்டே ,கனவில் தீஷாவை காதலிக்க ,ரொமன்ஸ் பண்ணவே சீக்கிரம் உறங்கிப்போனான்.

நாட்கள் கடந்தது, இரு ஜோடிகளின் காதலும் அளப்பரியாது சென்றது.
நாளை என்ன நடக்கும் கவலை இல்லை இன்று மூச்சு முட்ட காதலிப்போம் அதுவே இரு ஜோடிகளின் தாரக மந்திரம்..

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 33

சூழ்நிலை
இந்த சூழ்நிலை தான்
ஒரு மனிதனின்
வாழ்க்கையின் முக்கிய பங்கு
அந்த சூழ்நிலையும் சிலநேரம்
சூழ்ச்சிக்கு உட்படும்.
💙💙💙💙💙💙💙💙💙💙💙

ஊரில் இருந்து வந்ததில் இருந்து சதாசிவத்திற்க்கு ஏதோ தவறாகவே பட்டது, ஏங்கே, தன் கணக்கு பொய்த்திடுமோ என்று, ஆம் தன் மகள் ஷீலாவிற்கும், விக்ரம்க்கும் கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகம் அவருக்கு வந்து விட்டது,

தனது கனவு கலைந்து தன் மகள் வாழ்க்கை என்னவாகும் என அச்சத்திற்க்கு வந்துவிட்டார்.

இற்கிடையில், அமரன் தன் காதலோடு சேர்த்து , தன் கடமையையும் செய்யத்தவறவில்லை.

விக்ரம், காவ்யா காதலும், அவர்களின் மறைமுக கல்யாண வாழ்க்கையும் இப்போது வரை நிஷாவிற்க்கும் ,ஊர் உலகத்தில் மற்றவர்க்கும் தெரியாமல் மறைத்து வந்தனர் .

விக்ரம் ,காவ்யா இருவரும் தனிமையில் சந்திக்கும் நேரத்தில் எல்லாம் தன் காதலை காவ்யாவிற்கு மூச்சு முட்டும் வரை கொடுத்தான் விக்ரம், எந்த சூழ்நிலையிலும், அவள் பெண்மைக்கோ, தன் வளர்ப்பிற்க்கும் பாதகம் இல்லாமல் நடந்து கொண்டான் , இருவரும் தங்களது வளர்த்தவகள் முன்பும் ஊர் அறிய தம்பதிகள் ஆகும் வரை தங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர், பல வருட காதல் காத்திருப்பிற்க்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்.

அமரன் ரகசியமாக ரீ ஓபன் பண்ண குமரன்- லெட்சுமி தம்பதியின் விபத்து வழக்கில் 80% வழக்கை சாட்சியோடு முடித்து விட்டான்.மீதி குற்றவாளியை நெருங்கவேண்டியதே பாக்கி.

ஷீலா இன்றும் நேரில் விக்ரமை பார்க்கிறாள், பேசுகிறாள் ஆனால் அதைவிட தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தான் மிக அதிகமாக பேசுகிறாள், காதலிக்கிறாள்.....

பல முடிச்சுகள், பல உண்மைகள், பல ஏமாற்றங்கள், அழியா காதல் அனைத்தும் இனி அறிந்து கொள்ளப்போகும் நேரம் இது............

சதாசிவம் வீடு

சதாசிவம் - வாப்பா, விக்ரம் ரொம்ப நாள் ஆச்சு நீ வீட்டுக்கு வந்து, தேவ் நீயும் வா.

விக்ரம் " அங்கில் பயங்கர வேலை அதான் அசைய முடியல அப்படி தானே தேவ்."

தேவ் "ஆமா ஆமா அங்கிள், எங்க ஷீலாவ காணோம்?".

தேவ் ஷீலாவை கேட்கவும், விக்ரமிற்க்கு பொறை ஏறியது .

விக்ரம் "அவளை ஏண்டா கேட்குற"

தேவ் " இல்லை மச்சான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல அதான்".

விக்ரம் " ரொம்ப முக்கியம், மூடிட்டு இரு "

சதாசிவம் " ஷீலா கொஞ்சம் வெளியே போயிருக்கா,வந்துருவா விக்ரம். "

(யோவ் அங்கில் கேட்டது அவன் ,நீ என்னடா என்கிட்ட சொல்லுற, யோவ் நான் கல்யாணம் முடிஞ்சவன்டா, என விக்ரம் மனதிற்குள் நினைக்க.)

சதாசிவம் "என்ன விக்ரம் பலமா எதையோ யோசிச்சுட்டு இருக்க"

விக்ரம் "ஒண்ணும் இல்லை அங்கிள் ஒண்ணும் இல்லை "

சதாசிவம் " சரி , சரி அப்போ உன் அம்மா, அப்பா எப்போ வர்றாங்கப்பா?"

விக்ரம் "எதுக்கு அங்கிள் அம்மா அப்பா இங்க வரனும்!" .

சதாசிவம் " என்ன விக்ரம் இப்படி கேட்குற? உனக்கும் ஷீலாக்கும் கல்யாணம் முடிச்சு வைக்கத்தான், போன்லயோ பேசிட்டு அப்படியே குடும்பம் நடத்தலாம்னு நினைக்கீங்க போல"
என சதா சிவம் சிரிக்க... விக்ரம் க்கு தான் தூக்கி வாராப்போட்டது,

விக்ரம், தேவ் வை பார்க்க, தேவ் விக்ரமை பார்த்தான் ,மச்சான் வசமா மாட்னோம் போ என வாய்க்குள்ளே புலம்பினான் தேவ்.
விக்ரம் " அங்கிள் அதுக்கு என்ன அவசரம் , கொஞ்ச நாள் போகட்டுமே"
சதாசிவம் " என்ன விக்ரம், இதுவே லேட் , சரிவிடு நீ வெட்கப்படுற , நான் என் நண்பன்ட்டயே பேசிக்கிடுறேன்.

விக்ரம், தேவ் இருவரும் கிளம்ப எண்ணினர்

விக்ரம் " சரி அங்கிள் ,கொஞ்சம் வேலை இருக்கு நாங்க கிளம்புறோம்"
என்று இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தவர்கள் அப்படியே சிலையாகினர்.

ஷீலா " ஹேய் விக்ரம் டாலு எப்ப வந்த, காலைல கூட பேசுனமே போன்ல, நீ வரப்போறத சொல்லவே இல்லை ஓகோ...... சர்பிரைஸா"
என விக்ரமை பார்த்தவுடன் ஓடி வந்து தன் இரு கைகளையும் அவன் மீது மாலையாகப்போட்டு கொண்டு கேட்டாள் ஷீலா.

எல்லாம் உன் வேலைதானா விக்ரம் தேவ் வை முறைத்துவிட்டு, ஷீலா கையை மெல்ல உருவி அவளை நகர்த்தி நிற்க வைத்து விட்டு பின் பேச ஆரம்பித்தான் விக்ரம்

விக்ரம் " சும்மா தான் ஷீலா உன்ன பாக்கலாம்னு தான் வந்தேன் பட் அதுக்குள்ள ஒரு வேலை வந்துட்டு , நான் அப்புறம் பார்க்கிறேன்" என இருவரும் வந்து தங்கள் காரில் ஏறினர்.

ஷீலா " அப்பா விக்ரம் அமெரிக்கால வளர்ந்தவனா யாரும் நம்பவே மாட்டாங்க. போன்ல அப்படி பேசுறான் , நேர்ல பார்த்தவுடன் வெட்கம் வந்துருது"
என தன் தந்தையிடம் கூறிவிட்டு சிரிப்புடனே தனதறைக்கு சென்றாள்.

எனக்கும் அதான் மா சந்தேகமா இருக்கு என தன் மனதில் நினைத்தார் சதாசிவம்.

ஹாஸ்டல்
அன்று ஞாயிறு விடுமுறை என்பதால், காவ்யா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள், நிஷா எழுந்து வாஷ் ரூம் போய்விட்டு வெளியே வரும் போது காவ்யாவின் கைப்பேசி அடித்து கொண்டிருந்தது.

"போன் அடிக்குது அது கூட தெரியாம இவ என்ன இப்படி தூங்குறா" என போனை எடுத்து அதில் வந்த பெயரை பார்த்தாள் அதில் மை லைப் என்றிருந்தது மை லைப்பா என யோசனை யோடு போனை எடுத்து காதில் வைக்கவும், அது கட் ஆகவும் சரியாக இருந்தது. பின் அதை தொடர்ந்து ஒரு மெசேஜ் வரவும் அதை ஓபன் பண்ணி பார்க்கலாம் என்று அதனை தொட அது உடனே பாஸ்வேர்டு கேட்டது,

நிஷாவிற்க்கும் தான் காவ்யா வின் பாஸ்வர்ட் தெரியவும்அதனை
அழுத்த அது தவறானது சரியானதை போடவும் என வந்தது.
இத்தனை நாள் இல்லாமல் இது என்ன எனக்கு தெரியாம பாஸ்வேர்டு மாத்தி இருக்கா , என யோசித்தவள் காவ்யா வின் அருகில் வர அவள் கையில் புதிதாக மோதிரம், பொதுவாக காவ்யா கம்மல் பிரேஸ்லெட் செயின் என எந்த ஆர்னமென்ட்ஸ்ம் உறங்கும் போது அணியமாட்டாள் அது நிஷாவிற்க்கு நன்றாக தெரியும், ஆனால் இப்போது ஒரு மோதிரம் மட்டும் விரலில் அப்படி யே இருக்கு, நாம காவ்யாவ சரியா கவனிக்கலயா, இல்லை அவ என்ட எதாவது மறைக்காளா என்ற யோசனை யோடு போனை இருந்த இடத்திலே வைத்துவிட்டு ஏதும் தெரியாதவள் போல் காவ்யா அருகில் படுத்து கொண்டாள் .

மீண்டும் போன் அடிக்க இந்த முறை காவ்யா விழித்து போனை பார்க்க அது விக்ரம் என தெரிந்ததும், மெல்ல எக்கி நிஷாவை பார்க்க அவள் உறங்கி கொண்டிருந்தாள். மெல்ல எழுந்து தனது கைப்பேசியுடன் பாத்ரூம் சென்று கதவை மூடிவிட்டாள்.

அவள் சென்றவுடன், சட்டென கண்விழித்த நிஷா, மெல்ல வாஷ் ரூம் கதவில் காதை வைத்து கேட்டது இதைத்தான்
" என்ன விக்கி காலையிலேயே போன் பண்ணிருக்க, நல்ல வேலை நிஷா தூங்குறா அவ மட்டும் முழிச்சு இருந்தான்னா அவ்வளவு தான், என்ன சொல்லு, என்னது வெளியே வா என்ன இது புதுசா வழக்கமா சந்திக்கிற இடத்திலே மீட் பண்ணலாம்மே, யாராவது பார்த்துட்டா அவ்வளவு தான், ஏது நீ பிக்கப் பண்ணவர்றீயா, ஹேய் நிஷா பார்த்தா என்ன கொண்ணுடுவா, சரி சரி ரொம்ப கெஞ்சாத வந்து தொலையுறேன் ,அந்த முக்குல நில்லு, ஓகே ஓகே என்னது டெய்ரிமில்கா மவன அந்த நினப்போட வந்துறாத ,எல்லாம் ஊர்ரரிய லைசன்ஸ் வந்ததுக்குப்புறம் தான் , சரி போன வை நான் வாஷ்ரூம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு நிஷா எந்திச்சுடுவா, ம்ம்ம் லவ்யூ, லவ்யூ புருஷா"
என போனை கட் செய்து விட்டு கதவை திறந்து வெளியே வந்தாள்

காவ்யா , அதற்கு முன் டக்கென்று நிஷா படுக்கையில உட்கார்ந்து இருந்தாள், நிஷாவை பார்த்ததும் சின்ன பயம் ஒட்டிக்கொண்டது காவ்யாவிற்கு.

காவ்யா " நீ எப்படி எந்திச்ச"

நிஷா " அது இருக்கட்டும் நீ இவ்வளவு நேரம் பாத்ரூம்ல என்ன பண்ண".

காவ்யா " லூசா நீ பாத்ரும்ல என்ன பண்ணுவாங்களோ அத தான் பண்ணேன்".

"சரி உன் போன எங்கே காவ்யா "

"அத ஏன்டி நீ தேடுற"

"என் போன்ல ஜார்ஜ் இல்லை அமரன்ட்ட பேசனும் அதான்"

இதோ என அவள் கையை நீட்ட
போனை வாங்கி ஓபன் செய்தவள்

"பாஸ்வேர்டு மாத்திட்ட போல "

"ஆமாடி ஆமாடி, ஸாரி உன்ட சொல்ல மறந்துட்டேன்"

"பரவாயில்லை இப்போ சொல்லு"

"அது வந்து குடு டி நானே ஓபன் பண்ணி தர்றேன்"

"ஏன் நான் ஓபன் பண்ணா ஆகாதா சொல்லு"

காவ்யா மாட்டிக்கொண்ட திருடன் போல்முழிக்க, இன்னிக்கு என்ன நடக்கப்போகுதோ என தன் பாஸ்வேர்டு சொல்ல அதை போட்டு ஓபன் செய்தவள் நேராக வாட்ஸ்அப்பிற்க்கு சென்றாள்.

"ஹேய், போன் பண்ணப்போறேன்னு தானே சொன்ன இப்போ என்னடி வாட்ஸ்அப் போற " என காவ்யா பதற.

"நீ ஏன் இப்படி பதற வாட்ஸ்அப்குள்ள தானே போறேன் எங்கயும் குண்டு வைக்க போகலையே"

இரண்டும் ஒண்ணு தாண்டி என மனதில் நினைத்துக் கொண்ட காவ்யாவிற்கு உடம்பெல்லாம் வேர்த்து ஊத்தியது.

நேராக மை லைப் கான்டெக்ட் எடுத்து, அதை வாசித்தாள் அதில் " சீக்கிரம் கிளம்பு வந்து கொண்டே இருக்கிறேன், லவ்யூ டார்லிங்" என இருந்தது.

"என்ன இது, யாரு இந்த மைலைப்"
காவ்யா விற்கு வேர்த்து ஊத்த பயத்தில் நின்று கொண்டிருந்தாள்.

"பாத்ரூம்ல மறைஞ்சு மறைஞ்சு போன் பேசுற என்ன இது ஹா சொல்லு காவ்யா யாரு?" என நிஷா கத்த

அது அது.......

"ஏது, அதென்ன காவி எல்லா நகையும் அவுத்து வச்சுட்ட கைல மட்டும் மோதிரம், ஓ..... அத அவுக்க மறந்துட்டியா"

"ஆ.... ஆமா ..... "என திக்க ஆரம்பித்து விட்டாள் காவ்யா .

"என்ன திக்குற இப்ப எதுக்கு டென்சன் ஆகுற , அப்போ என்ட எதையோ மறச்சிட்டு இருக்கியா" என நிஷா காவ்யா அருகில் வந்து கேட்க.

"அது.....அ.... அதுவந்து"

"சொல்லு"

"அது என் கணவன், இது எங்க கல்யாண மோதிரம்" என காவ்யா கூற அப்படியே அதிர்ந்து விட்டாள் நிஷா.

"என்னடி சொல்லுற யாரது"

"விக்ரம் "

"நீ என்ன சொல்லுற நம்ம விக்ரமா"

"ஆமா"

"நம்ப முடியலடி அப்போ உன் இத்தனை வருஷ லவ் என்னாச்சு, ஏதோ போட்டா பாத்து அழுதுட்டு இருப்பியே அது , ஓகோ சரி சரி, நல்ல பணக்காரன் வந்த பிறகு இந்த லவ்வாவது கிவ்வாவது நீ புத்திசாலி தாண்டி" என இலக்காரமாக நிஷா சொன்ன அடுத்த நிமிடம் டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள அனைத்து பொருட்களும் உடைந்தது
" ஸ்டாப்பிட்" என்ற குரலோடு.

நிஷா அதிர்ச்சியில் உறைய
"நிறுத்து நிஷா , நிறுத்து என் லவ் அ பணத்துக்காக மாறுற லவ்ன்னு எப்படி உன்னால சொல்லமுடியுது, உன் காவ்யாவ அவ்வளவு மோசமா நினைச்சுட்டியா ஹா
சொல்லு, இந்த விக்ரம் என் விக்ரம் நிஷா இவ்வளவு வருஷம் நான் தேடிய என் லவ் என் உயிர் டி நான் பண்ண ஒரே தூரோகம் உனக்கு தெரியாம மறைச்சது தான் , உன்கிட்ட என் லவ் எனக்கு கிடைத்த அப்போதே சொல்லி இருக்கனும், தப்புதான் ,அட்லீஸ்ட் கல்யாணம் நடந்தப்பயாவது சொல்லி இருக்கனும், ஆனா அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடி, ப்ளீஸ் புரிஞ்சுக்கோ , அது தெரியாம என்ன இப்படி கீழ்த்தரமா நினைச்சுட்டியே நிஷா"
என்று கதறி அழுத தன் தோழியை கட்டி அணைத்தாள் நிஷா

"ஸாரி காவி மா , ஸாரி ,உன் மேல உள்ள பாசத்துல நீ மறச்சிட்டியே என்ற கோபத்துல பேசிட்டேன், ஸாரி.

"என தோழிகள் இருவரும் சமாதானம் ஆக ,அப்போது காவ்யாவிற்க்கு மீண்டும் மை லவ் விடம் இருந்து போன் வர எடுத்து பேசு என கண் ஜாடை காட்டினாள் நிஷா .

"ஆங் சொல்லு விக்ரம் "

"கிளம்பிட்டியா"

"ஒரு 15 நிமிஷத்துல கிளம்பிறுவேன் விக்ரம் "

"நிஷாட்ட என்ன சொல்லி சமாளிக்க போற"

"ஏதாவது சொல்லிட்டு வர்றேன் விக்ரம் போன வை"
என போனை கட் செய்தவள் தன்தோழியை பார்த்து நாக்கை கடிக்க..

"இந்த மாதிரி எவ்வளவு பொய் சொல்லிருப்ப என்கிட்ட, வரட்டும் அவன் இன்னிக்கு, மவன செத்தான் என்கிட்ட"

காவ்யா கிளம்பி ரெடியா அந்த முக்கு இடத்தில் இருக்க , விக்ரம் கார் வந்து அவள் அருகில் நின்றது.

விக்ரம் " ஹேய் தீ.... சீக்கிரம் ஏறுடி யாராவது பார்த்துட போறாங்க"

"யார் பார்ப்பாங்க மிஸ்டர் விக்ரம் " என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் மிரட்ச்சி ஆனது.

"செல்லுங்க விக்ரம், யார் பார்ப்பாங்க யாருக்கு தெரியாம போகப்போறீங்க " என நிஷா கேட்டுக்கொண்டே காவ்யா பின்னாடி இருந்து வெளியே வந்தாள்..

"நீ ..... நீ ... நிஷா "

"நா ... நா நிஷாவே தான்"

"உனக்கெப்படி தெரியும் " என வார்த்தையை முழுங்க்கொண்டு காவ்யாவை பார்த்தான் விக்ரம்.

"அவள ஏன் பார்க்க, அவ சொல்ல, நீ வண்டில ஏறுடி" என இருவரும் காருக்குள் ஏறினர்.

"நிஷா"

"என்ன நிஷா, உன்கொப்பமவனே எவ்வளவு பெரிய காரியம் பண்ணி இருக்க, என் பிரெண்ட் அ என் கிட்டயே பொய் சொல்ல வச்சுட்டில்ல, டேய் தேவ்க்கு விசயம் தெரியும் தானே, பின்ன ஏண்டா என்கிட்ட மறைக்க சொன்ன, துரோகி"

"அது அது வந்து ஸாரி டி நிஷா "

"உன்ன என்னத்த சொல்ல, இந்தா உன் கூட இருக்கிறவளுக்காவது தெரிஞ்சு இருக்கனும் விடுங்க உண்மையான நட்புக்கு கடைசில துரோகம் தான் மிஞ்சும் "

நிஷா வருத்தப்பட விக்ரம், காவ்யா இருவரும் சேர்ந்து மன்னிப்பு கேட்டு அவளை சமாதானம் செய்தனர்.நிஷாவும் அவர்களை மன்னித்து சந்தோஷமாகவும், அதே சமயம் பாதுகாப்பாக சென்று வருமாறு கூறிவிட்டு, காரில் இருந்து இறங்கினாள்.

"நிஷா"என விக்ரம் அழைக்க.

"என்னடா ,துரோகி"

"உண்மைய மறைச்ச நண்பனுக்கே இந்த நிலமைனா பாவம் அவர விட்டுருடி"

"எவர"

"அமரனை"

"அமரன் இதுல எப்படி வந்தான்"

"ஹேய் அமரன் சொல்லலயா, நான் தேவ் அமரன் எல்லாம் நல்ல பிரென்ட்ஸ், எங்களுக்கு கல்யாணம் நடந்தது அமரனுக்கு தெரியுமே , சரி ஏதோ பிஸில மறந்து இருப்பான் பாவம் விட்டுருடி" என போற போக்கில் ஒரு நல்லது பண்ணி விட்டு காரை கிளப்பினான்.

"ஏண்டா அண்ணாவ மாட்டி விட்ட"

"போடி அவன் என்ன எங்கயும் போக விடாம டார்ச்சர் பண்றான்டி அதான் இன்னிக்கு என்ன பத்தி யோசிக்க மாட்டான் மாப்புள, நாம ஜாலியா என்ஜாய் பண்ணலாம் டுடே விக்ரம் எஸ்கேப் "என சென்று விட்டனர்.

"அந்த பயபுள்ளக்கும் தெரியுமா" இருக்கு இன்னிக்கு அவனுக்கு என நிஷா நினைக்கவும், அமரன் நிஷாக்கு போன் பண்ணவும் ,கசாப்புக்கு தானாக சிக்கும் ஆடு போல் ஆனது அமரன் நிலமை..
(செத்தான், சேகரு..........)

தூவானம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top