ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூது செல்லாயோ தூவானமே கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 4

"ராமசாமி , ராமசாமி " கார்திக்கேயனின் குரல் அலுவலகம் அதிரும் அளவு ஒலித்தது.

"என்னயா இந்த மனுசன் காலையிலேயே இவ்வளவு கோபத்துல சூடா வந்துருக்காரு " ராமசாமி தனது தொப்பியை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, மெல்ல கார்த்திக்கேயன் அறையை திறந்து எட்டிப்பார்க்க, குகையில் பசியுடன் இருக்கும் சிங்கம்போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு தன் கையை சுவற்றில் குத்தி தனது கோபத்தை வெளிபடுத்தி கொண்டிருந்தார் சுவரிடம்,
கார்த்திகேயன்,இதை பார்த்த ராமசாமி , என்ன இவரு இப்படி இருக்காரு இன்னிக்கு என்ன சொல்ல போறாரோ முருகா என நினைத்துக்கொண்டு மெல்ல கதைவை திறந்து "சார் உள்ளே வரலாமா" என கேட்டுவிட்டு உள்ளே நூழைந்தார்.

" சார் , நீங்க கேட்ட எல்லா தகவல்களும் உங்க டேபிளில் வச்சு இருக்கேனே சார்", என ராமசாமி மெதுவாக டேபிளில் இருந்த கோப்புகளை கார்த்திகேயன் பக்கம் மெல்ல தள்ளி வைத்தார்.
அதை பார்த்த கார்த்திகேயன் வேகமாக வந்து ராமசாமியை உலுக்க மனுசன் ஒரு நிமிடம் சொர்க்கத்தையே எட்டி பார்த்துட்டு வந்துட்டார், அப்படி ஒரு பிடி, அப்படி ஒரு உலுக்கு.

" சார் நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா சார்" என மனுசன் பூனை போல் மெதுவாக கேட்க.

"இத எப்படி மறந்தேன் ராமசாமி, எப்படி மறந்தேன்" என மீண்டும் தன் கைகளை மடக்கி தன் தொடையில் குத்திக்கொண்டே கேட்டார்.

"ஐயயோ இவர் எத மறந்தார்னு தெரியலயே, நேத்து கேட்ட தகவல சேகரிக்கவே நாக்கு தள்ளிட்டு , இன்னிக்கு எந்த குண்ட தூக்கி போட போறாரோ" என தனக்குள்ளே பேசினாலும் முகத்தை என்னமோ விரைப்பாக தான் வைத்திருந்தார் ராமசாமி, வெளியில். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "சார், ஏதோ சொல்ல வந்தீங்க சார்" என கேட்க.

"ராமு, குமரன் தம்பதி கார் பிரேக் ஃபெயிலியர் தானே, கடைசியா அவங்க எங்கிருந்து கிளம்புனாங்க, வீட்டில் இருந்தா, இல்லை வேறு ஏதாவது இடமா" என கேட்க.

" சார் , ஏதோ மால் இல் இருந்து கிளம்பி இருக்காங்க " என்றார் ராமசாமி.

" ஆங், அப்போ அந்த மால்ல சிசிடிவி இருக்கும்ல அதை கைப்பத்தி, அத பார்த்தா ஏதாவது துப்பு கிடைக்கும் ராமு" என கார்த்திக்கேயன் பட பட என தனது பிஸ்டல் எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வேகமாக ராமசாமியை இழுத்துக்கொண்டு கிளம்பினார் அந்த மால்லுக்கு.
இதை இரண்டு கண்கள் பார்த்து விட்டு உடனடியாக யாருக்கோ கால் செய்தது.
இங்கு ராம்குமார் படபடப்புடன் இருப்பதை பார்த்த அகிலா "ஏங்க போன்ல யாருங்க? ஏன் இவ்வளவு பட படப்பா இருக்கீங்க " என கேட்க.
" ஏய் , பிஸினஸ் பார்க்கிறவனுக்கு ஆயிரம் போன் கால் வரும், போகும் அதெல்லாம் பக்கத்தில இருந்து கேட்டுக்கிட்டே இருப்பியா, போடி" என அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.

"ஏங்க, இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு கோபமா பேசுரீங்க , ஏதாவது விக்ரம் பத்தி தகவல் இருக்குமான்னு ஒரு ஆதங்கத்தில கேட்டேன், ஆமா இப்போ எங்க இவ்வளவு அவசரமா போறீங்க , சாப்பிட கூட இல்லையே" என அகிலா கேட்க .

"ஒரு முக்கியமான வேலையா போறன், எப்ப முடியும்னு தெரியல என்ன எதிர்பார்க்காத நான் வர்றேன் " என கூறிவிட்டு வேகமாக சென்று விட்டார்.
தனது கணவனின் நடவடிக்கையில் வித்யாசம் உணர்ந்த அகிலா , அவை அனைத்தும், விக்ரமை மீட்டு எடுக்கும் முயற்சி என நினைத்து விட்டுவிட்டார்.
------------------------------------------
இங்கு மருத்துவமனையில் தீஷா யூவாஞ்சலின்,மருத்துவ அறிக்கை எல்லாம் தயார் செய்யப்பட்டு விட்டது, அவளுக்கு எந்த வகையான மருத்துவம் தேவை, அது எங்கே கிடைக்கும் என அனைத்தும் மருத்துவமனை தயார் செய்து காவல் அதிகாரிகளிடம், திஷாவையும்‌ அவளோட அறிக்கைகளையும் ஒப்படைக்க தயாராக இருந்தனர்.
காவல் அதிகாரியும் வந்தாகி விட்டது.

" டாக்டர் ,எல்லாம் தயாராக இருக்கா" என காவலர் முத்துவேல் கேட்க.

"எல்லாம் தயார் சார், இதுல அது சம்பந்தமான எல்லாம் இருக்கு" என கோப்புகளைக் கையில் கொடுத்தார்.
"சரி , டாக்டர் , நான் கமிஷ்னர்ட பேசிட்டு ,குழந்தைய எப்போது கூட்டிட்டு போறோம்னு சொல்லுறேன்"என முத்துவேல் கோப்புகளுடன் விடை பெற்றார்.
------------------------------------------
மாலுக்கு வந்த கார்த்திகேயனும், ராமசாமியும் வேகமாக கண்ட்ரோல் ரூம் ஆபிஸிர்க்கு, சென்றனர், கார்த்திகேயன் தன் ஐடி யை காண்பித்து, அதற்கு சம்பந்தமான புட்டேஜ்யை ஒரு பென்டிரைவில் பதிந்து வாங்கிக் கொண்டு வேகமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கிளம்பினர்.
இதனையும், இரண்டு பேர் பார்த்துவிட்டு மீண்டும் அந்த நபர்க்கு தொலைபேசியில் அழைத்து

"சார், எங்கள மன்னிச்சுடுங்க சார் நாங்க வர்றத்துக்கு முன்னாடியே அந்த சிபிஐ ஆபிசர் வந்து புட்டேஜ் அ வாங்கிட்டு போய்ட்டாரு சார்" நீங்க எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க சார்" என கூறிவிட்டு அந்த மர்ம நபர்கள் உடனடியாக அவ்விடம் விட்டு மறைந்து விட்டனர்.

"ஏங்க , என்ன நேரம் ஆகும்னு சொன்னிங்க. இப்படி உடனே வந்துட்டீங்க" என அகிலா கேட்க, எதுவும் கூறாமல் தன் அறை கதவை சாத்திக் கொண்டார் ரகுராம்........

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 5
முத்துவேல், அனைத்து அறிக்கைகள் அடங்கிய கோப்புகளை எடுத்துக்கொண்டு தன் மேலதிகாரியை பார்க்க வந்திருந்தார்.
"உள்ளே வரலாமா சார்"- முத்துவேல்
மேலதிகாரியை பார்த்து ஒரு சல்யூட் ஒன்றை வைத்தார் முத்துவேல்.
"உட்காருங்கள் முத்துவேல்" மேலதிகாரி கூற
பின்பு தீஷா யூவாஞ்சலின் பத்தின அனைத்து தகவல்களையும் அவரிடம் பகிர்ந்தார்.
அனைத்து தகவல்களையும் கேட்டுவிட்டு சிறிது நேரம் யோசித்தவர்," சரி முத்துவேல் டாக்டர் சொன்ன மாதிரி அந்த குழந்தையை அந்த ஸ்பெஷல் தெரபி எடுத்துக்க அனுப்புவோம், நீங்க போய் அதுக்கான வேலையை பாருங்கள் " என்று முத்துவேலிடம் கூற அவர் மெல்ல தயங்கிய படி நின்றார் அதே இடத்தில்.
"என்ன முத்துவேல் , ஏதும் கேட்கனுமா? இல்லையென்றால் ஏதும் சொல்லனுமா?கமான் " என மேலதிகாரி கூறவே.
" சார் ,அந்த அவ்ளோ பெரிய துயர சம்பவத்தில எத்தனையோ பேரு பாதிக்கப்பட்டுருப்பாங்க ஆனா இந்த குழந்தை மட்டும் இவ்வளவு அக்கறை எடுத்து கவனம் செலுத்துறோமே ஏன் சார்" என ஒரு வழியாக தனது கேள்வியை கேட்டு முடித்தார் .
"அது மிஸ்டர் முத்துவேல் இது கலெக்டர் ஓட ஆர்டர்" நீங்க போய் அடுத்த கட்ட செயலை பாருங்க"என மேலதிகாரி சொல்லவும்.
" சரி, சார் நான் இப்போ கிளம்புறேன் " என முத்துவேல் அவரின் அடுத்த செயலை செய்ய சென்று விட்டார்.
------------------------------------------
சிபிஐஅ அலுவலகம்
கார்த்திகேயன் , தன் கையில் உள்ள அந்த பென்டிரைவை ராமுவிடம் கொடுத்து , அலுவலகத்தில் அவரது விசாரணை கோப்பில் வைத்துவிட சொல்லிவிட்டு, மேலும் அந்த கேஸ் தொடர்பான விசாரணைக்காக வேறு சில இடங்களுக்கு சென்று விட்டார்.
இதனை, மறுபடியும் அதே ஜோடி கண்கள், நோட்டம் விட்டது.
சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல்லும் போய் சேர்ந்தாகி விட்டது.
அகிலா தன் கணவன் சாத்திய அறையை
இப்போதும் தட்டி கொண்டே இருந்தாள், ஒருவழியாக கதவு திறந்தாகிவிட்டது, ராம்குமார் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி தெரிய, அகிலா தான் தன் கணவனின் நடவடிக்கைகளில் குழம்பி போய் இருந்தார்.
"ஏங்க என்னங்க ஆச்சு ? இப்போது எல்லாம் உங்க நடவடிக்கை எதுவும் சரியில்லை ,என்கிட்ட எதுவும் சொல்லவும் மாட்டிக்கீங்க, " என புலம்பி கொண்டே சமையலறை சென்றார்.
இப்போதும் ராம்குமாரிடம் ஒரு மர்ம புன்னகை மட்டுமே உதிர்ந்தது.
-----------------------------------------
மருத்துவமனையில்.......
மருத்துவரின் ஆலோசனை படி தீஷா யூவாஞ்சலின் ஸ்பீச் தெரபி சென்டர்க்கு மாற்றம் செய்ய கிளம்பினர்.
இங்கு ஆசிரமத்தில் , விக்ரம் வேதவல்லி யின் அன்பு பிள்ளையாக மாறி இருந்தான் , அவனது நிகழ்காலத்தில் அவனை சுற்றி நடக்கும் சூழ்சிகள் தெரியாமல், பாவம் அந்த சிறுபிள்ளை மகிழ்ச்சியாக இருந்தது.
அவன் விசயத்தில் வேதவல்லி அம்மாவும் மிக கவனமாக யாரையும் அவனிடம் நெருங்க விடவில்லை.
கார்த்திக் கேயன் ,அவன் சந்தேக லிஸ்டில் உள்ள அனைவரையும் பிடித்து விசாரித்து கொண்டிருந்தார்.
தொலைபேசி மணி அடிக்க, " ஹலோ, யார் பேசுறீங்க ," என அகிலா கேட்க.
மறுமுனையில் " இது ராம்குமார் வீடு தானே"
"ஆமாம் நான் அவரு மனைவி தான் சொல்லுங்க"- அகிலா
" குமரன் தம்பதி கேஸ் விசயமா அவர்கிட்ட கொஞ்சம் விசாரிக்கனும் , அவர கொஞ்சம் காவல்நிலையம் வரை வரச்சொல்லுங்க" என கூறிவிட்டு போன் கட் ஆகி விட்டது.
"என்னங்க , உங்கிட்ட உங்க தங்கச்சி கேஸ் விஷயமா விசாரிக்கனுமா, உடனே காவல்நிலையம் வரச்சொல்லுறாங்க,எதுக்கு உங்கள விசாரிக்கனும் , அப்போ அவங்க உங்க மேல சந்தேகப்படுறாங்களா, போலீஸ் ஏன் உங்கள போய் சந்தேகப்படனும், நீங்க அவ அண்ணன் தானே" என மனைவிக்குரிய பதட்டத்தில் ராம் குமாரிடம் பேச.
" அட ,எவடி இவ எதுக்கெடுத்தாலும் நொய் நொய்ன்னு பேசிக்கிட்டு, போலீஸ்னா யாரா இருந்தாலும் விசாரிக்க தான் செய்வாங்க, நீ கவலைப்படாத இத எப்படி எதிர்கொள்ளனும்னு எனக்கு தெரியும். " என ராம் குமார் காவல்நிலையம் புறப்பட்டார்.
------------------------------------------
ஸ்பீச்தெரபி சென்டர் சென்னை
காவல் அதிகாரி முத்துவேல் மற்றும் குழந்தை தீஷா யூவாஞ்சலின் , ஸ்பீச் தெரபி சென்டரில் தீஷாவிற்கான மருத்துவ அறிக்கையை சமர்பித்து விட்டு வரவேற்பரையில் காத்து இருந்தனர்.
"ஆங், சார் உங்கள மட்டும் டாக்டர் மேடம் வரச்சொன்னாங்க" என பெண் ஒருவர் சொல்லவும் " அப்போ குழந்தை " என முத்துவேல் கேட்க.
"சார் இங்கே விளையாட்டு அறை இருக்கு நான் பாத்துக்கிடுறேன் நீங்க போயிட்டு வாங்க" என அந்த பெண் தீஷா வை அழைத்து கொண்டு சென்றார்.
அந்த பிஞ்சு கால்கள் மெதுவாக நடந்தது, கண்கள் சுற்றும் முற்றும் மறுபடியும் பார்த்து விடமாட்டோமா என ஏங்கியது.
அந்த அறையை சுற்றி பார்த்தால், அது அவளது வகுப்பறை போலவே இருந்தது..
அவளது கண்முன்...........
அன்று முதல் நாள் பள்ளி முடியும் நேரம், சில குழந்தைகள் பெற்றோருடன் சென்றனர், சில குழந்தைகள் பெற்றோர்களை காணாமல் அழுது கொண்டிருந்தனர் ,தீஷாவோ கண்ணில் நீர் தேங்கி நிற்க பெற்றோர்களுடன் செல்லும் தன் சக மாணவர்களை பார்த்து கொண்டே அமைதியாக நாற்காலியில் அமர்ந்து இருந்தார் அப்போது ....
கண்ணாடி சாளரம் வழியாக தன் தந்தையை பார்த்தவுடன் ..
தன் இருக்கையில் இருந்து எழுந்து
"என் பேக்கு... ,என் பேக்கு.... என் பேக்க கொடுங்க என் அப்பா வந்துவிட்டாங்க " என முதலில் அப்பாவை நோக்கி ஓடாமல் தன் பள்ளி பேக்கை எடுத்து கொண்டு பின் அழுது கொண்டே தன் தந்தையிடம் ஓடினாள் .
அந்த நிகழ்ச்சி அவள் அப்பாவை மட்டும் இல்லை அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பள்ளி பேக்குடன் ஓடி வரும் தன் மகளை அவர் வாரி அனைத்து முத்தமிட்டதை நினைத்து கண்களில் கண்ணீருடன் தீஷா
அமர்ந்திருந்தாள் இப்போதும் நாற்காலியில்....

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 6
ஸ்பீச்தெரபி சென்டர்

டாக்டரும் , காவல் அதிகாரி முத்துவேலும் தீஷா யூவாஞ்சலின் ஸ்பீச் தெரபி பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
"மிஸ்டர் முத்துவேல், இந்த குழந்தை மருத்துவ அறிக்கை படி பார்க்கும் போது.
தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவினால் தான் ஸ்டமரிங் எனப்படும் பேச்சு தடைபடுதல் அதாவது திக்குவாய் என சொல்லக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது" என மருத்துவர் சொல்ல
"இது , சரியாக வாய்ப்பு இருக்கிறதா டாக்டர் " முத்துவேல் விவரம் கேட்க.
"கண்டிப்பாக, பிறவியிலேயே இந்த கோளாறு இருந்தா கூட அதை சரி செய்து விடலாம், இது இடையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் வந்தது இதை மிக எளிதாக சரி செய்து விடலாம். தினமும் இங்கு வந்து ஒரு மணிநேரம் பயிற்சி எடுத்தால் போதும்" என மருத்துவர் விளக்கம் கொடுத்தார்.
" அப்போ சரி டாக்டர் , தினமும் இந்த குழந்தை இனி இங்கு , யார் கூட வரும் என்பதை நான் மாலை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்" என கூறிவிட்டு
தீஷா வை தேடி வெளியே வந்தவர் , அவள் இருக்கும் இடம் கேள்வி பட்டு அங்கு செல்ல அந்த மாம்பிஞ்சு வாடிப்போய் இருந்தது.
அந்த குழந்தையின் பெயர் கூட தெரியாது யாவருக்கும்,
"பாப்பா, வா போகலாம், அங்கில் இதே மாதிரி ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கிறேன்." என கூறவும்
அந்த மாம்பிஞ்சு காற்றில் ஆடும் இலை போல தலை அசைத்தது.
------------------------------------------
காப்பகம்
வண்டி நேராக குழந்தைகள் காப்பகம் வந்தது.
தீஷா இறங்க அவள் கண்கள், அந்த பரந்து விரிந்த காப்பகத்தை ஒரு சுற்று பார்த்தது,
சில தூரத்தில் அவளை போன்ற சிறு சிறு பூக்கள் விளையாடுவதை கண்ட தீஷா ஏதோ ஒரு புதுவிதமான உணர்வும் நிம்மதியும் கொண்டது.
காவல் அதிகாரி முத்துவேல் மற்றும் அந்த குழந்தை தீஷா வும் நேராக காப்பக அலுவலகம் நூழைந்தனர்.
இருவரும் உள்ளோ செல்ல அவர்களை புன்னகையுடன் வரவேற்றார் வேதவல்லி,
ஆம் அது வேதவல்லியின் பொறுப்பில் இருக்கும் காப்பகம் தான்,
அவர்க்கு ஏற்கனவே அனைத்து தகவல்களையும் பகிரப்பட்டதால் , இந்த ஸ்பீச் தெரபி வகுப்பை மட்டும் கூறிவிட்டு , அவளை காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு, காவலர் முத்துவேல் அந்த குழந்தையின் தலையை தடவி பாப்பா நீ இங்கு தான் இருக்க போற இவங்க உன்ன நல்லா பார்த்து பாங்க அங்கிள் வாய்ப்பு கிடைக்கும்போது உன்னை வந்து பார்க்கேன் என கூறிவிட்டு சிறிது வருத்ததுடன் கிளம்பி சென்றார்.
இருக்காதா, கிட்டதட்ட அந்த குழந்தை யை இந்நாள் வரை பொறுப்பாக பார்த்தவர்.
அந்த குழந்தை யின் அமைதி, அதன் ஒளி இழந்த கண் அனைத்தையும் பார்த்த வேதவல்லி , அவளை மற்ற குழந்தைகளுடன் அறிமுகம் செய்து வைக்க கூட்டி சென்றார்.
தோட்டத்தில் அனைத்து குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
" ஏய் செல்லக்குட்டிகளா இங்க வாங்க, யார் வந்துருக்கா பாருங்க ,உங்க கூட விளையாட இன்னொரு புது தோழி வந்து இருக்கா , வாங்க வாங்க" என அனைத்து குழந்தைகளையும் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
அனைத்து குழந்தைகளும் அவளிடம், பேச ,பாவம் அந்த குழந்தை தான் , தன் இயலாமையை நினைத்து தவித்து நின்றது.
"சரி நீ விளையாடு அம்மா இதோ போயிட்டு வர்றேன்" என வேதவல்லி தனது வேலையாக உள்ளே சென்று விட்டார்.
தீஷா தான் யாருடனும் விளையாடாமல் , தனியாக தோட்டத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தது.
அப்போது எங்கிருந்தோ வந்த பந்து அவள் மேல் விழ திடுக்கிட்டு எழுந்த குழந்தை கீழே கிடந்த பந்தை எடுத்து சுற்றும் முற்றும் பார்க்க, அவள் முன் தன் இடது கையை நீட்டி, பந்தை கேட்டு விக்ரம் நின்றான்.
தீஷா பந்தை மெதுவாக , விக்ரம் கையில் வைத்து விட்டு, திரும்பி நடக்க ஆரம்பிக்கும் போது.
"ஓய், நில்லு" என கூறிக்கொண்டே அவள் முன் சென்று நின்றான்.
"நீ இங்க புதுசா வந்துருக்கியா" - விக்ரம்
ஆமாம் என்பது போல் தீஷா தலை ஆட்ட
"ஏன் நீ பேசமாட்டியா, உனக்கு பேச்சு வராதா" என பாவம் போல் கேட்டான்.
தன் இரு பிஞ்சு கைகளையும் ஆட்டினாள் தீஷா இல்லை என்பது போல்.
"அப்போ பேசு " என விக்ரம் கூற தீஷா அவனையே முழித்து பார்த்தாள்.
" சரி ,என் பேரு விக்ரம் , நானும் உன்ன மாதிரி தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் வந்தேன், இப்போ நீ சொல்லு உன் பேர" என மிகவும் துடுக்குடன் கேட்டான்.
அவனது பேச்சில் ஆசைபட்டு தீஷாவும் அவனிடம் பேச மறுபடியும் முயற்சி செய்தாள் , கையை நெஞ்சை நோக்கி காட்டி வாயை மேல் இழுத்து,கண்ணை மூடி தீ...... தீ...... தீ..... என தன் பெயரை கூற முயல அதற்கு மேல் வார்த்தை வராது முழித்தாள்.
விக்ரம் சிறுவன் தான் ஆனால் ரொம்ப விவரமானவன் ,பெரியவன் போல் யோசிக்க கூடியவன், அதனால் அவள் கஷ்டம் படுவதை தாங்காமல் "சரி சரி உன் பேரு தீ யா ரொம்ப நல்ல பேரு , என புன்னகைத்தான்.
அவன் புன்னகையிலே , அவள் அழுத்தம் குறைந்து தளர்வாக சாந்தமாக உணர்ந்தாள்.
முதல் முறையாக சிரிக்கவும் செய்தாள்...
இதனை தூரத்தில் இருந்து வேதவல்லி பார்த்து கொண்டிருந்தார் ......

தூவானம் தொடரும்
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம்🌧 7

சிபிஐ அலுவலகம்

கார்த்திக்கேயன் வழக்கம் போல தன் அலுவலகம் வந்து ரகுராமை விசாரித்து அவரை அனுப்பி விட்டு அடுத்த கட்ட விசாரணை ஆரம்பிப்பதற்காக, ராமசாமி யை கூப்பிட்டு அவரிடம் அந்த பென்டிரைவை எடுக்க சொன்னார், ராமசாமியும் அந்த பென்டிரைவை வைத்த பைல் எடுக்க அலமாரி யை திறந்து பைலை பார்த்தார் அந்த பென்டிரைவை காணவில்லை.
சார்...... என்ற சத்துடன் ,பதட்டத்துடன் கார்த்திக் முன் வந்து பைலை கொடுத்து விவரத்தை சொன்னார்.

"சார் சார், அந்த அந்த சிசி டிவி புட்டேஜ் இருந்த பென்டிரைவை காணோம் சார்" ராமசாமி.

"யோவ் என்யா சொல்லுற பென்டிரைவை எங்க வைச்ச ஆங் என பல்லை கடித்துக்கொண்டு ராமு கையில் இருந்த பைலை பிடிங்கி எறிந்தார் வாசல் நோக்கி .
சார் இங்கு சார் வச்சேன் - ராமு
இங்க வச்சா கை கால் முளைத்து நடந்து போகுமா என சுவரை திரும்பி கோபத்துடன் கத்தி கொண்டிருந்தார்...

ராமுவிற்கு, கார்த்திக் ன் கோபத்தை பார்த்து எப்படி என்ன சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்.

"யோவ் ராமு வாயா" என ராமுவை அழைத்து கொண்டு வேகமாக தனது காரை எடுத்து கொண்டு இருவரும் சென்றனர்.

இந்த தகவலும் போய் சேரவேண்டியவங்களுக்கு சரியாக போய் சேர்ந்தது.
கார் வேகமாக ஹைவேயில் செல்ல, ராமுக்கு ஒன்றும் புரியவில்லை, சார் எங்கப்போறோம்...

யோவ் வாய மூடிடு, இல்லை இப்படியே எங்கேயாவது தள்ளிவிட்டுடுவேன் , என முறைப்புடன் சொல்லி விட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.

இது எதுக்கு டா வம்பு என்று ராமுவும் எலி பொறியில் மாட்டின எலி மாதிரி முழித்து கொண்டிருந்தார் .

வண்டி நேராக ஹைவேயை தாண்டி , நிறைய முள் செடிகள் வழியாக சென்றது அங்கு ஒரு பழைய குடோன்யை வந்தடைந்தது.
அது ரோட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அது இருந்தது, சாதாரணமாக யாருக்கும் அங்கு குடோன் இருப்பது தெரியவாய்ப்பில்லை அது பயன் படுத்தாமல் விட்ட ஒரு குடோன்,

அதை பார்த்தவுடன் ராமுக்கு ஒன்றும் புரியவில்லை .
திகைப்புடன் பார்த்த ராமுவை , காரில் இருந்து இறங்கிய கார்த்திக் சிரித்துகொண்டே அவர் தோளில் கை போட்டு உள்ளே அழைத்து சென்றார்.

கார்த்திக் முகத்தையே பார்த்தபடி, அவர் இழுப்புக்கு உள்ளே சென்றார் ராமு .

"என்ன ராமு என்னயே பார்த்துட்டு இருக்க நான் என்ன உன் லவ்வரா" என சிரித்துகொண்டே அவர் தாடையை பிடித்து திருப்பி அவர் எதிரே பார்க்க வைத்தான் கார்த்திக்.

"ராமு டார்லிங் அங்கே பார்" -கார்த்திக்

"சார் என்ன சார் இது புது விதமான வெளவால் மாதிரி இருக்கு, இப்படி ஒரு கேவலமான வெளவால் பார்ததே இல்லை" என திகைப்புடன் கேட்க .

"ஆஹா ராமு உனக்கும் காமெடி நல்லாவே வருது பா" என ராமு கன்னத்தில் கை வைத்து இடித்து சொல்ல.

"ஐயோ சார், காமெடி யா நான் நிசமாதான் கேட்கேன் ,இது எந்த உயிரினம் இப்படி தொங்குது". என ராமு மீண்டும் திகைப்புடன் கேட்க.
அங்கு ஒருவனை கண்முன் தெரியாமல் அடித்து துவைத்து, அந்தரத்தில் தொங்க விட்டுருந்தார் கார்த்திக்.

இருவரும் அங்கு தொங்கி கொண்டிருப்பவனிடம் சென்றனர்.

"சார் யார் சார் இவன்" - ராமசாமி

"இவனா அது நம்ம கெஸ்ட்" -கார்த்திக்

"சார் அது" என ராமசாமி முழிக்க..

"ராமு உங்களுக்கு ஒண்ணு தெரியுமாயா நம்ம கேஸ் முடிஞ்சு போச்சு யா முடிஞ்சு போச்சு" ...... என தன் இரு கைகளையும் கவுண்டமனி போல் ஆட்டி காட்டினார் புன்னகையுடன் கார்த்திக்.

"சார் உங்ககிட்ட பிஸ்டல் இருக்கா சார்"

"இருக்குயா ஏன்யா" ,

"அத அப்படியே என் நெத்தியில வச்சு என்ன ஒரே போடா போட்டுருங்க சார்" என ராமு கேட்கவும்,

"ஏன்யா என்னயா ஆச்சு" என கார்த்திக் ராமு தோள்மீது கையை போட்டு சிரித்தபடி கேட்க
"பின்ன என்ன சார், எவனயோ ஒருத்தன அடையாளம் கூட தெரியாமல் மூஞ்சிய பேத்து உரிச்ச கோழி மாதிரி தொங்க விட்டுருக்கீங்க, யாரு இது அப்படின்னு கேட்டா தலையும் புரியாம ,வாலும் புரியாமல் பேசுறீங்க" என ராமசாமி அலுத்து கொண்டே சொன்னார்.

"அதுவாயா, அது இவன்தான் அந்த பிரேக்வயரை கட்பண்ணி அந்த விபத்துக்கு காரணமான கல்பிரட்" என கூறும் போதே கார்த்திக் ன் கண்கள் அனலாய் இருந்தது.

"சார் எப்படி சார் எப்படி , இவன கண்டு பிடிச்சீங்க" என கண்முழி வெளியே வர ராமசாமி கேட்க.

"சிம்பிள் அந்த சிசிடிவி புட்டேஜ் பென்டிரைவாலதான்" என தோளை உயர்த்தி , உதடை பிதுக்கி சொன்னவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் ராமசாமி.

"சார் அது....அது.. தான் காணாமபோயிட்டே சார்" என ராமு கேட்க.

கையை தட்டிக்கொண்டே சிரித்தார் கார்த்திக்.

"ஐயோ இந்த மனுசன் வேற பெரிய அலெக்ஸ் பாண்டியன் மாதிரி சிரிப்பார்.." என மனதில் நினைத்துக்கொண்டே "சார் நான் காலைல வேற சாப்பிடல இப்போ நீங்க பண்றத பாத்தா சுகர் எகிரி நான் போய் சேர்ந்தாலும் சேர்ந்துருவேன் , சொல்லுங்க சார் சொல்லுங்க...."

"அது வந்து ராமு காணாம போன பென்டிரைவ்ல ஒண்ணுமே இல்லை ராமு ஒண்ணும் இல்லை அது டம்மி .." என கூறவும் மேலும் திகைப்பில் "சார் !,

"ஆமா ராமு, நம்ம ஆபிஸ்ல எதோ ஒரு கருப்பு ஆடு இருக்குன்னு எனக்கு சந்தேகமாக இருந்துச்சு, இந்த பென்டிரைவ் வாங்கிட்டு நம்ம மால்ல அந்த ஆபிஸ்ல இருந்து வெளியே வரும்போது இரண்டு பேரு என்ன பார்த்து ஒழிஞ்சாங்க, அத நான் பார்கலன்னு அந்த லூசுங்க நினைச்சுதுங்க, ஆனா நான் பார்த்துட்டேனே , அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் அதுல தான் அந்த குற்றவாளி இருக்கான்னு , அதான் அவனுங்கள திசை திருப்ப அந்த டம்மி பென்டிரைவை உன்கிட்ட கொடுத்தேன்..."

"சார் அப்புறம்......"

"அப்புறம் என்ன ,அங்கிருந்து கிளம்பினேன்ல நேரா என் பிரெண்ட் வீட்டுக்கு போய் அலசி ஆராய்ந்து பார்த்ததுல இந்த புள்ளயாண்டான் தான் எல்லா வேலைகளும் செஞ்சுருக்கார், அதான் இவருக்கு இந்த கவனிப்பு, இரத்ததுடன் சேர்ந்து உண்மையையும் கக்கிட்டான் , கதை முடிந்தது" என இரண்டு கையையும் தூசிதட்டுவது போல் தட்டி பேசி முடித்தார் கார்த்திகேயன். .

"சார் , பலே சார் பலே என்னமா ஸ்கெட்ச் போட்டு இவன தூக்கி, குற்றவாளிய கண்டுபிடித்து இருக்கீங்க ,உங்க கூட வேலை பார்க்கிறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சார்.."

"சரி சரி ரொம்ப பொங்காதீங்க ராமு........"
"நாளைக்கே அரஸ்ட் வாரண்ட் ரெடி பண்றேன், அவனை தூக்குறேன்.
சரி வாங்க இப்போ, ஒரு சாம்பிள் காட்டுவோம் , வாங்க ராமூ" என குடோனை பூட்டி விட்டு, வேகமாக அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.......
 

Naga Novels

Active member
Wonderland writer
தூவானம் 🌧 8

காப்பகம்


அனைத்து குழந்தைகளும் சாப்பிடும் இடத்தில் ஒன்றாக அமர்ந்து, உணவை உண்ண தொடங்கினர், வேதா அம்மா அனைத்து குழந்தைகளும் வந்து விட்டனரா என பார்த்தார், ஆம் அவளே தான் அவள் தான் வரவில்லை தீஷா . வேதா அம்மா தன் உதவியாளரை அழைத்து தீஷாவை அழைத்து வரச்சொன்னார்.அதற்குள் விக்ரம் முந்திக்கொண்டு.
"அம்மா நான் போய் கூப்பிட்டு வரேன் தீ யை "

வேதவல்லி அம்மா இடுப்பில் கை வைத்துக்கொண்டு.

"ஆங் அது யாரு விக்ரம் தீ " என ஆச்சரியமாக கேட்டார்.
விக்ரமோ நெத்தியில் அடித்துக்கொண்டு

"அம்மா அதான் அந்த புது கேர்ள் , நான் அவ கூட பிரெண்ட் ஆகிட்டேன், தெரியுமா" என தன் சட்டை காலரை தூக்கி விட்டபடி உள்ளே ஓடி போனான் தீஷாவை அழைக்க.

"தீ.... ஓய் ... தீ எங்கே இருக்க " என தீஷாவை தேடினான்.

அங்கு தீஷா அந்த பங்க் பெட் எனப்படும் அடுக்கு கட்டிலில் கீழே வரிசையில் படுத்து கிடந்தாள்.

"ஓய் தீஷா, என்ன இங்கு வந்து படுத்து கிடக்க, வா சாப்ட போலாம் வா என தீஷா கையை பிடித்து இழுக்க"

வேண்டாம் என்பது போல் தன் இரு கைகளையும் ஆட்டி , வாய் பேசாமல் கூற,
விக்ரம் அந்த சிறுவன் சிறு முறைப்புடன்,

"ஓய் நீ நல்லா பேசுவ , சில நேரம் தான் திக்குவன்னு அம்மா சொன்னாங்க, நீ என்னடானா பேச்சு வராதமாதிரி கைய ஆட்டிட்டு இருக்க."

இதை கேட்டு தீஷா அமைதியாக இருந்தாள்

" சரி, தீ வா தீ எனக்கு பசிக்குது, நான் வேற அம்மாட்ட நீ பிரெண்ட்னு சொன்னேன், அவங்ககிட்ட மட்டும் இல்லை எல்லார்ட்டையும்,தெரியுமா , நீ என்னடானா ரொம்ப பிகு பண்ற, நீ வா எனக்கு வைக்கிற வடையும் நான் உனக்கே தாரேன் ப்ளீஸ் நீ என் பிரெண்ட் தானே" என பாவமாக மூஞ்சை வச்சுக்கொண்டு கேட்ட்டான்.

தீஷாவுக்கும் அவனது நட்பு ஆறுதலாக ,இருக்க சரி என்பது போல தலை ஆட்டி விட்டு விக்ரம் கூட சாப்பிடும் அறைக்கு சென்றாள்.

விக்ரம் தீஷாவுடன் வருவதை பார்த்த வேதா அம்மா, இனி திஷா விக்ரம் பொறுப்பு என முடிவு செய்து விட்டார்.

"அம்மா பாத்திங்களா தீ , வந்துட்டா,நான் சொன்னேன்ல அவ இப்போ என் பிரெண்ட் நா கூப்பிட்டா வந்துடுவான்னு எப்படி" என தன் காலரை தூக்கி விட்டான்.

"சரி போங்க இரண்டு பேரும் உட்கார்ந்து சாப்பிடுங்க" என வேதா அம்மா இருவரையும் பந்தியில் உட்கார சொன்னார்.இரு குழந்தைகளும் மற்ற குழந்தை களுடன் இணைந்து சாப்பிட அமர்ந்தனர்.

மொத்த காப்பக குழந்தைகளும் ஒரு சேர சாப்பிடுவதற்க்கு முன் கடவுளை வணங்கி ஒரு பாட்டு பாடி விட்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
அப்போது விக்ரம் தன் தட்டில் உள்ள விடையை எடுத்து, தீஷா வின் தட்டில் வைத்து விட்டு

"நீ நான் கூப்பிட்டவுடன் வந்துட்டில்ல இந்தா வடை நான் சொன்ன மாதிரி வடையை கொடுத்திட்டேன் , சரியா " என தன் தட்டில் உள்ள அந்த மிளகு போட்டு செய்த பொங்கலை சாப்பிட ஆரம்பித்தான்,

உடனே தன் தட்டில் விக்ரம் வைத்த வடையை தீஷா திரும்பி அவன் தட்டிலேயே வைத்தாள்.
இதை பார்த்த விக்ரம் சிரித்துக் கொண்டே

"ஓ, உனக்கு வேண்டாமா ரொம்ப ஹேப்பி, எங்க வடைய சாப்பிட்டுருவியோன்னு நினைத்தேன் நல்லவேளை நீ கொடுத்துட்ட என அந்த வடையை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு மீண்டும் பொங்கலை சாப்பிட ஆரம்பித்தான்" .

இப்படி யே குழந்தைகள் இருவரும் நண்பர்களாகினர், தீஷாவும் இப்போது கொஞ்சம் சகஜமானாள்.

சிபி ஐ அலுவலகம்

"என்ன இன்னிக்கு இவ்வளவு நேரம் ஆகியும் இந்த மனுஷன காணோம், நேத்து வால்டர் வெற்றிவேல் மாதிரி அவ்வளவு பேசினாரு,காலையிலயே அரஸ் வாரண்ட் வாங்க போறேன் , அக்கியூஸ்ட தூக்க போறேன்னு சொன்னார்" என ராமசாமி தனக்குள்ளே முனு முனுத்துக் கொண்டே கார்த்திகேயனுக்காக கார்த்திருந்தார்.

ஆனால் அவரைத் தாண்டி இன்னோரு புது மனிதன் அந்த அலுவலகத்தில் நுழைந்தார், அலுவலகத்தில் நுழைந்தது மட்டும் அல்லாமல், அந்த புது மனிதர் நேராக

கார்த்திக்கேயன்இருக்கையில் போய் அமர்ந்தார்.

ராமசாமிக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, அதிர்ச்சியில் குழப்பத்தில் சிலைபோல் நின்றார்.
வந்த அந்த புது மனிதர் தொலைபேசியின் மூலம் அலுவலகத்தில் உள்ள அனைவரையும், தனது அறைக்கு வரச்சொன்னார்.
குழப்பம் தீர்த்து கொள்வற்க்காக, அனைவரும் அந்த புது ஆபிசர் அறைக்கு அவசர அவசரமாக அனுமதி கேட்டு விட்டு உள்நுழைந்தனர். அனைவரும் வந்ததை உறுதிபடுத்தி விட்டு அந்த புது ஆபிசர் பேச தொடங்கினார்

"என் பெயர் ராஜதுரை, இனி இந்த அலுவலகத்திற்கு நான் தான் பொறுப்பு, அந்த கேஸ் யையும் நான் தான் எடுத்து நடத்த போறேன்" என கூறவும் அனைவரும் திகைத்து விட்டனர்.
அப்போது ராமசாமி பேச ஆரம்பித்தார்.

"சார் அப்போ எங்க கார்த்திக் சார்"

"அவரா ... அவர் இந்த கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லை, என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என எங்க தலைமையகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு, வீட காலி பண்ணிட்டு இரவோட இரவா வேற ஏதோ ஊர்க்கு போய்ட்டாரு".... என வந்திருந்த புது ஆபிஸர் சொல்லி முடித்தார்.

இதை கண்ட, கேட்ட ராமசாமி அதிர்ச்சி விலகாமல் அங்கிருந்தார்......

தூவானம் தொடரும்
 
Status
Not open for further replies.
Top