ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
19. துரத்தும் ஆபத்து

காலை வெயில் கண்ணாடி சுவரை தாண்டி அவள் முகத்தில் பட அசைந்து எழுந்து அமர்ந்தாள்.

அந்த வீட்டிற்கு வந்தது, ஷ்யாம் டி-ஷர்ட் நைட் -பேண்ட் அணிந்துகொண்டு ராத்திரி வாந்தி, தலை வலியில் அவஸ்தைப்பட்டது நினைவிற்கு வந்தது. அவளை போலவே அந்த ஹாலில் அவளுக்கு பக்கமே தரையில் சோபா குஷன் தலைக்கு வைத்துத் தூங்கி கொண்டிருந்தான் ஷ்யாம். தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் எடுத்தது. பல் தேய்த்து கிச்சென் ஃப்ரிட்ஜில் ஜூஸ் எடுத்துக் குடித்தாள்.

முந்தைய நாள் பில் செட்டில்மென்ட் நினைவிற்கு வந்தது. குளித்து முடித்து வந்து வாய் பிளந்து தூங்கும் ஷ்யாமை எழுப்பினாள்.

“எழுந்திரு ஷ்யாம். கதவைத் திற நான் போகவேண்டும்”
“என்ன அவசரம் தூங்கு” என்றவன் திரும்பி படுத்துக்கொண்டான்.

ஷ்யாம் கைரேகை வைத்து திறந்தால் மட்டுமே திறக்கக் கூடிய கதவு, லிஃப்டும் பிரைவசி என்ற பெயரில் அதே கைரேகை சமாச்சாரம். சரயுவிடம் பேசலாம் என்றால் அவள் தொலைப்பேசியும் காணவில்லை. ஷ்யாம் ஃபோன் பாக்கெட்டில் இருக்க, அவன் பாக்கெட் தொடப்போனவள் கைகளைப் பிடித்து மேல் சாய்த்துக் கொண்டவன் “என்ன பண்ற?”
அவன் இதயத்துடிப்பு காதடைக்க “சரயுகிட்ட பேசணும், பில் செட்டில் பண்ணனும் நான் போகணும்”
“அதுலாம் எங்கும் போக வேண்டாம்.தூங்கு” என்றவன் அவளை பக்கம் தள்ளிக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

“என்ன செய்யற ஷ்யாம்”
“தூங்குகிறேன்”
“ஷ்யாம் நான் போகணும்”
“பெட் கட்டி சரக்கா அடிக்கிற? தண்டனை வேண்டாமா உனக்கு”
“ஏய் அது விளையாட்டு”
“சரி வா நாமும் விளையாடலாம்”

அவன் அப்படிச் சொல்லவும் துள்ளிக் குதித்து திரும்பி அவனை அடிக்க அவள் கை ஓங்க, ஓங்கிய கையை பிடித்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு எழுந்தான்.
“பொறு. குளித்து முடித்து வரேன்”

சுந்தரிக்கு கோபம் கொஞ்சமும் குறையவில்லை.
“நீ செய்தது பிடிக்கலை”
“நீ செய்ததும் பிடிக்கவில்லை”
“எது?”
“எது?”
“சொல்லி தொலை…”
“ஷாமுக்தி மைக்ரோ தொழில் பைனான்ஸில் கடன் வாங்க சொல்லு அந்த பெண்ணை. அதில் ரெஸ்டாரன்ட் திறக்க சொல்லு”
“அதற்கான ஆவணம் எதுவுமில்லை எங்களிடம் ”
“தயார் செய்து வாங்குங்கள்”
“எதுக்கு?”
எப்போதும் எழும் கேள்வி அவனுக்குள் எழுந்தது. இந்த பெண்ணா ஜீனியஸ். “என்னால் முடிந்த உதவி இது சுந்தரி, மறுக்காமல் விஷயத்தை அவர்களிடம் சொல்லு”
சுந்தரிக்கு எத்தனை எத்தனை கடன் இவனிடம் என்றிருந்தாலும் "சரி வா. மிஸ்டர் இரண்டாம் வாரிசைப் பார்க்கப் போகலாம்”
“உனக்கு ஏன் அவரை பிடிக்கலை”
“பிடிக்கல அவ்வளவு தான்”

ஷ்யாம் காரை செலுத்துவதும் கண்ணாடியில் பார்த்து சந்து பொந்துகளில் காரை விடுவதுமாக இருக்க, சுந்தரி கவனித்து பார்த்தாள் அவர்களை இரண்டு கார்கள் தொடர்கிறது.

“ஷ்யாம் நம்மளை ஃபாலோ பண்றாங்க”
“ஆமா கவனிச்சேன், என்ன செய்யலாம்”
“வேலையை மட்டும் பார்ப்போம்” சுந்தரியின் மூளை ஷ்யாமிற்கு ஆபத்து என்றே கணித்தது.

காரை விட்டு இறங்கியவள் “ இனி ஏதுவென்றாலும் மெசேஜ் செய் அதிகம் சந்திக்கவேண்டாம்” அவள் பேசியதைக் கேட்டவன் சூழலை உணர்ந்திருந்தாலும் அவளுடன் இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான்.

“என்ன ஷ்யாம், நான் தான் நாம சேர்ந்திருப்பது நல்லதில்லை சொன்னேனே”

இந்த முத்தம் வாங்காமல் என்னால் போக முடியாது என்றவன் அழுத்தி முத்தம் கொடுத்து அவள் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

ஷியாம் உயிருக்கு ஆபத்தில்லை.ஷ்யாமை சுற்றி இருக்கும் உயிர்களுக்கு தானே ஆபத்து, அதன் படி பார்த்தால் சுந்தரிக்கு ஆபத்து அதிகம்.ஷ்யாமுடன் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்தில்லை, அவன் நிறுவனத்திற்கு மட்டும் தான்.

திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தவன் “நீ என்னோடு வா” என்று குரலுயர்த்தி அழைத்தான்.

“ஏன் ஷ்யாம்”
“பார்.என்னோடு இருப்பதுதான் உனக்குப் பாதுகாப்பு”
“என்னோடு நீ இருந்தால் உனக்கு ஆபத்து”
“நீ சொன்னது போல முக்தி அல்லாமல் ஷாமுக்தியை கவனித்தால் எனக்கிருக்கும் ஆபத்து குறையும். உன் நிலைமை மாறாதே”

“என்னோடு இருந்தால் நீ, நான் மட்டுமே பிரச்சனையைக் கவனிக்க முடியும் தீர்க முடியும். அதே தனியாக இருந்தாய் என்றால் நீ, இந்த ஊரில் உன் நண்பர்கள், தமிழ்நாட்டில் உன் சொந்தம் என்று எல்லா இடமும் பிரச்சினை பரவும்.

“நீ சின்ன விசயத்தை பெருசாக்குற”
“இல்ல உண்மை நிலைமையை சொல்கிறேன். இன்னொன்றும் இருக்கிறது நீ இப்போது என்னோடு வந்தால் மட்டுமே உன் முரளி மாமா கிடைப்பான். சரயுவிற்கு கடன் கிடைக்கும்”
அவன் மிரட்டல் கொஞ்சமும் அவளை அசைக்கவில்லை . ஆனாலும் அவனுடன் செல்ல சமதிதாள்.
சுந்தரி அவனுக்கு மூன்று கட்டளைகள் சொன்னாள்
அவளை முத்தமிட கூடாது, அவளை அடிமை போல நடத்தக் கூடாது.எந்நேரமும் அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்க கூடாது.

மாட்டேன் என்றவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

புத்திசாலி பெண் ஷ்யாம் பக்கம் இருப்பது அவர்களுக்கு ஆபத்து அல்லவா சிவாஜி பிரகாஷ் முக்தி மும்பை ஹைவேயில் ஷ்யாம் காரை விபத்துக்குள்ளாக்க ஏற்பாடு செய்தார் .

தப்பித்து ஷ்யாம் கெஸ்ட் அவுஸ் போய்ச் சேர்ந்தனர். ஷ்யாம் குழப்பமான முகம் பார்த்தவள் அவள் கணினி திறந்து அவர்கள் நிறுவனத்திற்காக அவள் தயாரித்த மென்பொருள் டிசைன் எடுத்துக் காட்டினாள். அதைப் பற்றி விவரித்து பேசினாள்.

“ம் நல்லாருக்கு” விநயமாக பேசியவன் அமைதியாக இருக்க,
சுந்தரி “என்ன ஷ்யாம்?”

“உனக்கு எந்த ஆபத்தும் வராது. நான் பார்த்துக்கறேன்” என்றவன் எழுந்து சமையலுக்கு ஆள் வரும். பாதுகாப்பிற்கு ஆள் வரும். முக்கியமான விஷயமாக வெளியே போகிறேன் என்று பெருமூச்சு விட்டுப் பேசியவன் கதவைத் திறக்க அவள் கைரேகையையும் பதித்துவிட்டுக் கிளம்பினான்.

சுந்தரியால் ஷ்யாம் மனப்போராட்டங்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஷ்யாம் தனிமையாக உணர்வதை புரிந்துகொள்ள முடிந்தது.அதற்காக அவளுக்கும் வலிக்கிறது என்பதை அவள் ஒத்துக்கொள்ள தயாரில்லை. ஷ்யாமிற்கு அவள் மீது காதல் இருப்பது போல அவளுக்கு அவன் மீது இருக்கிறதா என்கிற கேள்வியை ஆழ் மனதில் நினைக்கக் கூட தயாரில்லை.

காதல் அழகானது ஆனாலும் ஆபத்தானது. தன்னை போல உணர்வுகளை மறைக்கும் பெண் அவனுக்கு வேண்டாம், அவன் காதலை ஏற்று அவனுக்கு நிகராக அன்பை பொழியும் பெண்தான் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். ஷ்யாம் எப்போதோ அவளை அவனுகானவளாக எண்ண தொடங்கிவிட்டான். சுந்தரி விஷயத்தில் எதுவுமே தகர்த்து எரிவது மட்டுமே அவனுக்கு நியாயமாக தெரிகிறது. அது அவள் விலகிப்போகும் முடிவாக இருந்தாலும்...

சுந்தரியை விட்டு அவன் போனது அவன் தந்தை வீடு. எப்போதும் போல அவர் ஆபிஸ் அறையில் ஆவணத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் கண்களில் ஆயிரம் ஒளிக் கீற்று. அமைதியாக அவர் முன்னே சென்று அமர்ந்தவன் பேச தொடங்கினான்.

‘எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது.தமிழ் பெண், அவள் மனதில் என்ன என்பதெல்லாம் தெரியாது. எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. அவளை திருமணம் செய்துகொள்ள ஆசை”

அவர் மனதில் நிம்மதி பரவ முகத்தில் இறுக்கம் மறைந்து ரிலாக்ஸ் ஆவது தெரிந்தது. சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்தைப் பேசினான். “அவள் இனி என்னோடு தங்கப் போகிறாள். அவளுக்கு எந்த விதமான ஆபத்து நேர்ந்தாலும் நீங்களும், உங்கள் முக்தி நிறுவனத்தில் இருக்கும் கறுப்பாடு கூட்டமும் மட்டுமே காரணம்”

அவர் அதிர்ந்து பார்க்கவும் மனதில் உள்ள தைரியம் எல்லாம் கூட்டிப் பேசினான். “நான் ஷாமுக்தியை விரிவாக்கம் செய்கிறேன். உலக சந்தை வரை பிடிக்க நினைக்கிறேன். முக்தியை கவனிக்க முடியுமா தெரியவில்லை” தயங்கி அவன் சொல்லவும்

பதிலுக்கு அவர் “உன் இஷ்டம் போல செய். திருமணம் செய்யும் பொது சொல்” என்று முடித்துக்கொண்டார். மனப்புழுக்கம் தாங்காமல் எழுந்து அறை விட்டு நகர சென்றவரிடம் “அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அப்பா” என்று அழுத்தமாக சொன்னான்.

அவர் “வராதுப்பா” என்று முடித்துக்கொண்டார்.

ஷெண்பாவின் பிள்ளையல்லவா அழுத்தமான எதிர்பார்ப்புகள் மட்டும் தானே இருக்கும். அவர் நன்மை கருதி நடந்துகொண்ட உயர்ந்த உள்ளம் ஆயிற்றே மனைவிக்காகவாவது மகனை காப்பாற்றியே தீருவார்.
 

swwee

Active member
Wonderland writer
20. முயற்சிகள் பலனை தரும்


சுந்தரி ஷ்யாமை தவிர்க்கும் காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டாள். காலை வேளை சீக்கிரம் முழித்துக்கொள்பவள் அவளால் முடிந்த வேலைகளை செய்துவிட்டு அலுவலகம் சென்று விடுவாள். சரயு எப்போதும் போல மதிய சாப்பாட்டை அனுப்பிவிட அலுவலகத்தில் அவளுக்கு கொடுத்த அதி வேகமாக வேலை செய்யும் கணினியில் காயா நிறுவனத்தின் செக்யூரிட்டி மென்பொருள் கூடவே அவள் இத்தனை நாள் கஷ்டப்பட்டு தயார் செய்து வைத்திருந்த மெடிக்கல் மென்பொருள் இரண்டையும் கோட் எழுத தொடங்கிவிட்டாள். அவளுக்கு உதவும் ஆட்களும் துரிதமாக வேலை செய்ய ஜரூராக வங்கி கணக்குகள் பாதுகாப்பு மென்பொருள் தயாராகி கொண்டிருந்தது. மாலை வேளை வீடு திரும்புபவள் அவளால் என்ன சமைக்க முடியுமோ அதை சமைத்து வைத்தாள். ஷ்யாம் அவளை காதலிக்கிறான் என்பதற்கெல்லாம் அவளால் அவள் சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.மேலும் மேலும் கடன்பட்டுக்கொண்டே போவது சித்திரவதை. வேலைக்கு ஆட்கள் வேண்டாம் நானே செய்கிறேன் என்று அவனிடம் சண்டைபோட்டு செய்துகொண்டிருக்கிறாள். பாதுகாப்பான இடம் கொடுக்கிறான் அதற்கான வாடகை தருகிறேன் என்றால் அவளால் தரமுடியாததை கேட்பான் பொல்லாதவன்.

இரவுகளில் அவள் மெடிக்கல் எயிட் மென்பொருள் தயாரிப்பை வேகமாகச் செய்தாள். ஷ்யாம் நிறுவனத்தில் வேலை முடிந்து காயாவில் வேலையை விட்டு எங்கே போய் மறைய வேண்டுமென்றாலும் பணம் அவசியம் அவளுக்கு. அதற்கு இந்த மெடிக்கல் எயிட் மென்பொருளை விற்க வேண்டும் அவள். எண்ணங்கள் ஓட கண்களைச் சுருக்கிக் கொண்டு வேலை பார்ப்பவள் முன் வந்து நின்றான்.

அவனும் சோர்வாகத்தான் தெரிந்தான். சாதுரியமாக அவனிடம் பேசுவதைத் தவிர்க்கும் அவளை எண்ணிச் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. அவன் கையிலிருக்கும் நோட் புத்தகத்தைக் கொடுத்து உதவி வேண்டுமென்றால் கேள் சுந்தரி அதிகமாக வேலைப் பளுவை சுமக்காதே என்று சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.

சுந்தரிக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. இலகுவான, அக்கறையான உரிமையான அந்த பார்வைகளை சந்திக்கவே முடியவில்லை. அவனை சந்தித்த நாள் முதல் இந்த நாள் வரை ஷ்யாம் கோபமாக வெறுப்பாகப் பேசியிருப்பானா என்று யோசித்தால் ஒன்றுமே நினைவில் நிற்கவில்லை. எல்லாமே காதலாக அவள் கண்களைப் பார்க்கும் அவன் முகம் மட்டும் நினைவில் நிற்கிறது.

சுந்தரி ஷ்யாமை நிஜத்தில் தவிர்த்தாலும் நினைவில் இம்மி அளவும் தவிர்க்கவில்லை. அவனை பற்றியே சிந்தித்து சிலை போல் அமர்ந்திருந்தவளை உலுக்கி எழுப்பினான் ஷ்யாம்.

"முரளி அந்தமான் வந்தாயிற்று.இரண்டு நாள் கழித்துப் போகலாம்.சென்னையில் மறுவாழ்வு மையம் பார்க்க சொல்லியிருக்கிறேன்."
"சரி"
முரளி மாமா வந்தாயிற்று. அவள் வீட்டில் புயல் ஓய்ந்துவிட்டது.
மனதில் தொடங்கிவிட்டதே.

புனேவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் போர்ட் ப்ளேயர் சென்றார்கள். ஒல்லியாகக் கருப்பாக அங்கங்கே அடிபட்டு வீசியெறிந்து நாய் போல பார்க்கவே அழுக்காக அவன் இருக்க பார்த்ததும் சுந்தரி கதறிவிட்டாள்.

அழுகை சத்தம் கேட்டு எழுந்தவன் நடுங்கும் குரலில் "சுந்தரி, பாப்பா நல்லாயிருக்கிறயா" கேட்டவன் அவள் கன்னத்தைத் தொட கை நீட்ட ஷ்யாம் அவனை தள்ளிவிட்டான். சுந்தரி அவர் என் மாமா என்று உறுமினாலும் அவளைக் கவனிக்காமல் முரளி பக்கம் அமர்ந்து “சுந்தரி நல்லாயிருக்காங்க. நீங்க சரி ஆகணுமின்னா மறுவாழ்வு மையம் போகணும் . இங்கிருந்தே அங்க போய்விடலாமா. அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள நல்லாயிடுவீங்க”

புரிந்துகொண்ட பாவமுடன் முரளி தலை அசைக்க “சரி இப்போ தூங்குங்க.நாளைக்கு சென்னை கிளம்பலாம்” என்றுவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

சுந்தரி “இப்போதே சென்னை போகலாம்.பாவம் மாமா! என்னால அவரை பார்க்கவே முடியலை”

நாளைக்குத் தான் போக முடியும். உன் அத்தை மாமாவை சென்னையில் மறுவாழ்வு மையத்திற்கு வரச்சொல்.அங்கே அவர்கள் பார்க்கட்டும் என்றவன் காரில் அவளை விஸ்தாரமான ஆடம்பர விடுதிக்கு அழைத்து சென்றான். ஷ்யாம் என்ற ஒருவன் அவள் வாழ்வில் நுழைந்ததிலிருந்து சுந்தரி பழகியதில் பிடிக்காத விஷயம் என்றால் இந்த ஆடம்பரம். அடிப்படை வசதிகள் நிறைவேறுகிறதா போதும் என்று நினைப்பவளுக்கு ஆடம்பரம் பழகுவதில் எத்தனை சங்கடம் என்று புரியுமா என்ன இவனுக்கு?

ஆஜானுபாகுவாக உயர்தர ஆடைகளை அணிந்து பளிச்சென்று நிற்பவன் பக்கத்தில் வெறும் ஜீன்ஸ்,டீ-ஷர்ட் அணிந்துகொண்டு கண்ணாடி போட்டுக் கொண்டு நிற்பது அவளுக்கே வித்தியாசமாகத் தெரிய “உனக்கு அறிவே இல்லை ஷ்யாம்”
“ஏன்”
“சுத்தி பார். ஹனிமூன் வந்திருப்பவர்கள், ரிலாக்ஸ் செய்ய வந்திருப்பவர்கள் இருக்கிற இடத்தில் இப்படி மீட்டிங் போகிற மாதிரி டிரஸ் செய்துட்டு வந்திருக்கே” அவள் பேசி முடிக்கவும் இரண்டு பெண்கள் அவனை வெளிப்படையாக சைட் அடித்துவிட்டுப் போகவும் சுந்தரி “சரி சரி நல்லா இருக்க விடு” என்றுவிட்டு அறை போகும் லிப்ட்டுக்குள் சென்று நின்றுகொண்டாள். அவளுடன் ஏறியவன் லிப்ட் கதவின் பளிச்சென்று தெரியும் அவர்கள் பிம்பத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே உனக்கு நான் மேட்ச் இல்லை என்று சொல்கிறாயா என்று கேட்டான். அதே பிம்பத்தைப் பார்த்தவள் உனக்கு நான் ஈடு இல்லை என்கிறேன் என்று அவள் எண்ணத்தை சொல்லி அமைதி ஆகிவிட்டாள்.

வெறும் பக்கம் பக்கம் நிற்கும் பிம்பத்தையா அவள் பார்த்தாள் கற்பனை குதிரை அவர்கள் இருவரும் கட்டி அனைத்து நின்றால் எப்படி இருக்கும், முத்தம் தர அவன் எப்படிக் குனிவான் அவள் அணைத்து நிற்கும் போது இதயத் துடிப்பு கேட்குமா என்று கடிவாளம் கட்ட முடியாமல் ஓடியதே! அதை சொல்லமுடியாதே!

“ப்ரெஷ்-அப் ஆகு. லைட் ஷோ இருக்கிறது பார்க்கப் போகலாம்” அந்த இரண்டு அறை சூட்டில் அவன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

எதுவும் செய்யாமல் கற்பனை வானில் மிதந்துகொண்டிருந்தவள் அவன் வெளியே வந்து போகலாமா என்று கேட்டபோதுதான் நிஜத்திற்குத் திரும்பினாள். ஐந்து நிமிடங்களில் டீ-ஷர்ட் மட்டுமே மாற்றிக்கொண்டு வந்தவள் லைட் ஷோ நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

ஷ்யாம் அவளிடம் சொல்லாமல்விட்டது என்றால் லைட் ஷோ நடப்பது நீச்சல் குளத்தில். நேரில் பார்த்ததும் அதிர்ந்தாலும் சங்கடமாக உணர்ந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே தளர்ந்தவள் நீச்சல் குளத்தில் இறங்கியிருந்த குட்டிஸுடன் சேர்ந்து பீய்ச்சியடிக்கும் தண்ணீரிலிருந்து தப்பி ஓடுவதும் வண்ண விளக்குகள் ஒளி மாறுவதை ரசிப்பதும் நிறைய விளையாடினாள்.

இயல்பில் சுந்தரியிடம் எதிலும் வெற்றிகொள்ளும் சிந்தனை அதிகம். நிமிடத்தில் அடுத்து என்னவாக இருக்க முடியும் என்று அடிப்படை தர்கம் புரிந்துகொண்டு செயல்படுவாள். அப்படி அடுத்து என்ன இசை வரும் எப்படி தண்ணீர் பீச்சி அடிக்கும் என்று தெரிந்துகொண்டு ஷ்யாமையும் கூடவிளையாடும் குழந்தைகளையும் ஏமாற்றி அவள் அவர்களுக்கு எதிரில் நிற்பதுவும், அக்கா அக்கா என்று அந்த பிள்ளைகள் அவளை துரத்துவதும் இனிமையாக கழிய ஷ்யாம் புத்துணர்ச்சியாக வேறு ஆளாக மாறினான்.

இரவில் அபு அவனை அழைத்து மேலும் காசு கேட்கும் போதும் கொடுக்கிறேன் போ என்றுவிட்டான். சுந்தரி குற்ற உணர்ச்சியில் முகம் சுருங்க ‘விடு பரவாயில்லை, இந்த உற்சாகம் எப்போதும் உன்னுடன் இருக்க எதை வேண்டுமானாலும் செய்வேன்’ என்று அவள் கையை அவன் கைக்குள் வைத்துக்கொண்டு சொல்ல சுந்தரி இதயம் இருமடங்காகத் துடித்தது.

“அவங்க நம்மை ஏமாத்துறாங்க ஷ்யாம்”
“போகட்டும். ஏமாத்துறது தானே வியாபாரம்”
“பச் ஷ்யாம் அந்த காசு வச்சி வேற செய்யலாம்”
“என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? இதுவும் சில குடும்பம் வாழத்தான் பயன்படும்”
“அப்படி சொல்ல முடியாதே”
“எப்படியோ! முரளி கிடைத்தாயிற்று. அதை நினை”

அவள் இதயம் பாரம் கூட அவனை தரதரவென அறைக்கு அழைத்துச் சென்றவள் அவள் பையிலிருந்த நோட் புத்தகத்தைத் தூக்கி போட்டு “பார் இது என் மெடிக்கல் எயிட் ப்ராஜெக்ட். இது சந்தை வந்தால் சர்ஜெரி இன்னமும் எளிமையாக செய்யலாம். நானே தயாரித்தது.இதை எடுத்துக்கொள். தயவுசெய்து”என்று அழுதுகொண்டு அவன் கையில் திணித்தாள்.

“ம்.விசாரித்தேன் சுந்தரி இது என்ன கோட் என்பதெல்லாம்.எத்தனை பெரிய ஜீனியஸ் என் கூட இருக்கே! திடீரென்று மெடிக்கல் நிறுவனம் ஒன்று சந்தை பிடித்தது. அதுவும் முக்தி பைனான்ஸ் செய்து முன்னேறியிருக்கு. தீர விசாரித்தேன்,அது ஒரு காலேஜ் பெண் ப்ராஜெக்ட் என்று விஷயம் தெரிந்தது. எப்படி சுந்தரி இத்தனை ஏமாற்றம் பின்னும் இப்படி நிற்கிறாய்,இந்த பொறுமையை எனக்கும் கற்றுகொடேன்” என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். மனதளவில் அவளுக்காக அவள் வலியை எண்ணி அவனும் அழுகிறான் என வேறு எப்படி காட்டுவதென்றே தெரியவில்லை.

சுந்தரி அவனைத் தவிர்த்து தீவிரமாக உழைத்த காலங்களில் ஷ்யாம் அவளைப் பற்றி இன்னமும் தெரிந்துகொள்ள செலவழித்தான். சுந்தரியை அந்த மெடிக்கல் நிறுவனம் ஏமாற்றியிருப்பதை அவனுக்கு தெளிவுபடுத்தியது அவன் தந்தை. அவள் பெயரில் அதன் காப்புரிமையை மாற்றி கொடுக்க முடியாது, வேண்டுமென்றால் அவர்கள் நிறுவனத்தில் பங்கு கொடுப்பதாக அவர்கள் சொல்ல ஷ்யாம் என்ன செய்வது என்று நிபுணர்களை ஆராயச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான்.

ஷ்யாமை இறுக்கமாகக் கட்டி அணைத்தவள் “போகிறார்கள் ஷ்யாம்.என் ஐடியாவை தானே அவர்களால் திருட முடிந்தது. மக்களுக்குப் பயன்படும் தானே அது போதும்” என்றாள்
உன் பக்க கதையை சொல், இல்லை இப்படியே தான் கட்டிப்பிடித்து நிற்பேன் என்று அவளை அவன் உந்த அவள் கதையைச் சொன்னாள்.

சின்ன வயதிருந்தே மருத்துவம் தெரிந்தவள் மருத்துவத் துறையிலும் ஆட்டோமேஷன் வருவதில் எத்தனை நன்மை என்பதைக் கணித்து வைத்திருந்தாள். அதற்காகவே அந்த கல்லூரியில் கணிப்பொறி பொறியியல் சேர்ந்தாள். முழுக்க உதவித்தொகையில் படித்தவள் இறுதியாண்டு புராஜெக்ட் கூட்டாக மட்டுமே செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இருவருடன் சேர்ந்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்றில் செய்யத் தொடங்கினார்கள்.அங்கே அவள் யோசனை வைத்துத் தயாரித்த மென்பொருள் இப்போது சந்தையில் கிடைக்கிறது. அவள் கோபத்தில் கொந்தளித்தளத்தில் ஒரு பிரயோஜனம் இல்லாமல் போக சுந்தரி இதை விடப் பெரிதாகச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்துகொண்டாள்,அதற்காகவே காயாவில் சேர்ந்தாள். ஆட்டு மந்தைகள் போல மல்டி நேஷனல் கம்பெனி அல்லாமல் தரமான பிரத்தியேக தயாரிப்புகள் கொடுக்கும் காயாவில் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினாள். காயா சம்பளம் குறைவாக இருந்தாலும் அவள் மூளைக்கு வேலை கொடுக்கக் கூடியதாகவும் அதே நேரம் வேலைக்கேற்ற அங்கீகாரம் கொடுக்க அதற்கேற்றாற்போல வேலை செய்ய தொடங்கிவிட்டாள்.

அவளை கைகுள்ளேயே வைத்துக்கொண்டு இருந்தவன் “உனக்கு நான் இருக்கேன் சுந்தரி” மேலும் இறுக்கி

அடுத்த நாள் காலை முரளியை சென்னை அழைத்துச் சென்று மறுவாழ்வு மையத்தில் விடும்போது அவள் நன்றிக்கடனை திருப்பி அடைத்த திருப்தியிலிருந்தாள். அவள் அத்தை பேசும் குத்தல் வார்த்தைகளும் அதன் கூர்மையை இழந்திருந்தது.

குழறலாக என்றாலும் “ம்மா சுந்தரியை தப்பா பேசுனே எனக்கு கோபம் வரும் பார்த்துக்க” என்று முரளி பேச அவள் அத்தனை நாள் கஷ்டங்களும் அதன் பயனை அடைந்தது.

முரளி பெயரை மகேஷ்வரன் என்று மாற்றியிருப்பதாகவும் இனி அவரை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்றும் இவர் முரளியின் தம்பி என்று ஆவணங்கள் தயாரித்திருந்ததை கொடுத்து இனி முரளி அவர்கள் பாடு என்று விட்டு சுந்தரி விடைபெற்றுக்கொள்ளக் கூட இடம் கொடாமல் இழுத்து சென்றுவிட்டான்.

சென்னையிலிருந்து பூனேவிற்கு மாலையில் தான் விமானம்.ஆனாலும் அவளை அழைத்துக்கொண்டு சென்னை கெஸ்ட் அவுஸ் சென்றான்.

அந்த வீட்டை பார்க்கையில் அவனை நோக்கி அவள் எடுத்து வைத்த முதலடி நினைவிற்கு வந்தது. இதோ பக்கம் நிற்கும் கிரேக்கச் சிற்பம் நாளுக்கு நாள் அழகு கூடி கண்களுக்கு வசந்தமாக தெரிகிறான். ஒரே நாள் என்று தொடங்கியது ஒவ்வொரு நாளும் கூடுகிறது. அங்கே ஓய்வு எடுத்துவிட்டு விமான நிலையம் சென்றார்கள். அதோ அந்த வாழமுடியாமல் தவிர்த்த கணத்தை இதோ இப்போது வாழ்கிறான். அமைதியாக போர்டிங் செய்ய நேரம் இருக்கிறது என்று சுந்தரி கையை கோர்த்துக்கொண்டு அங்கே சேரில் அமர்ந்துகொண்டான். போவோர் வருவோர் எல்லாம் அவனை அவன் கண் மூடி சாந்தமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துப் போனார்கள்.

“ஷ்யாம் எழுந்திரு என்ன செய்யுறே எல்லாம் உன்னைத் தான் பார்க்கிறார்கள்”

பத்து வருடத்தில் மாற்றம் இருந்தாலும் அவளை முதன் முதலில் பார்த்த இடத்தின் திசை காட்டி “அங்கே ஒரு காபி மிஷின் இருக்கும், பக்கம் தண்ணீர் விற்கும் கடை இருக்கும். அதன் பக்கத்தில் ஒரு பெஞ்ச் இருக்கும். உன்னை முதன் முதலில் அங்கே தான் பார்த்தேன்.இதோ இதே போல அழுது வீங்கிய கண்களுடன் யாரும் இல்லையே என்று மனம் முழுக்க சோகம் நிரப்பிக்கொண்டு மறைந்து போனாய்” அவன் சொல்லிமுடிக்கும் போது அவனுக்கும் தொண்டை அடைத்தது.

ஆச்சரியத்தில் அவள் கண்கள் சிறிது சிறிதாக சிவந்து, குளம் கட்டி அவனை பார்த்தது. “உனக்கு யாருமில்லை என்று நினைக்காதே. நான் இருக்கிறேன்” என்றவன் அதன் பின் எதுவும் பேசவில்லை.


அந்த மாலை வேளை விமான நிலையத்திலுருந்து வந்த சுந்தரி ஏன் ஏன் இந்த வலி அவளுக்கென்றே உலகில் யாருமே இல்லையா? என்று கேட்டு ஏக்கத்தில் அழுதது நினைவிற்கு வந்தது.
சுந்தரி மனம் முழுக்க அவனிடம் சரணடைந்துவிட்டது.
 

swwee

Active member
Wonderland writer
மெய்மை


நதி போல காலம் செல்ல அதில் மிதக்கும் சருகாகி போனார்கள் இருவரும்.சுந்தரி அவனுக்கு வேண்டுமென்றால் சில விஷயங்களை அவன் எதிர்கொள்ளவேண்டும்.அதர்க்காக தயாராக தொடங்கினான்.

புது நாள் புது காலை ரோஹித் உற்சாகமாக சுந்தரி இடத்திற்கு வந்து கடைநிலை நிதியும் வந்தாயிற்று அவர்கள் மென்பொருள் சந்தைக்கு போகவேண்டியதே பாக்கி என்று கூறி அவள் கைபிடித்து குலுக்கினான். சுந்தரிக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. இரண்டு நாள் இரவு பகல் அவர்கள் டீம் மொத்தமும் சேர்ந்து கடைநிலை டெஸ்டிங் எல்லாம் செய்துமுடித்து அதன் சந்தைப்படுத்தல் முறைக்குத் தயாராகினார்கள். காயாவின் பங்கு, ராகுல் நிறுவனத்தின் பங்கு, மென்பொருள் உருவாக முதலீடு செய்த நிறுவனத்தின் பங்கு என்று அந்த மென்பொருள் விற்பனையில் நிறைய பங்குதாரர்கள் இருக்க சுந்தரிக்கு அவள் டீமிற்கும் தனியாக தயாரிப்பு இன்சென்டிவ்ஸ் என்று அறிவித்தான் ஷ்யாம். அதை கம்பெனியில் வேலை பார்க்கும் மற்றவர்கள் எதிரில் அறிவித்தவன் இனி அவர்கள் நிறுவனத்தில் இதைப்போன்ற ஊக்கத்தொகைகள் உண்டு என்றும் அறிவித்தான்.

“பைய்யா.. நம்மால் முடியுமா?” தயங்கி தயங்கி கேட்க
“போதாது, இது போல நிலையான லாபம் கொடுக்கும் வியாபாரம் இந்த ஆண்டு நடக்க வேண்டும் நமக்கு”
“ஏன் இந்த அறிவிப்பு?”
“நீ கம்பனி நிர்வாகம் பார். முதலீட்டை ஈட்டி தருவது என் பொறுப்பு. இனி வியாபாரம் பிடிக்க என்று தனி டீம் அமைப்போம்”
“ஏன்” இம்முறை அவன் அழுத்தமாகக் கேட்க
“நீ இன்னமும் இப்படியே இருந்தால் ஆஷா கிடைக்கமாட்டாள். புரிந்துகொள்! உன் உழைப்பிற்கு வீரியம் தேவை” பேசிவிட்டு கிளம்பிவிட்டான்

ஆஷா ராகுலுக்கு அழைத்தவள் அழு குரலில் அவள் தந்தை ஷ்யாம் வீட்டில் சென்று பேசிவந்ததாகச் சொல்ல ராகுல் அதிர்ந்தான்.

ஷ்யாமை அவன் தந்தை திரும்பவும் வீட்டிற்கு அழைக்க,சென்றான். அவன் சிறுவயதில் பார்த்தது போல கூட்டத்தை பார்த்தவன் அதிர்ந்தாலும் சுதாரித்தான். அன்னையின் அழுகையை நினைக்காமல் இருக்க முடியவில்லை. சிவாஜி பிரகாஷ் முக்தி ஒரு பக்கம் வீல் சேரில் அமர்ந்திருக்க, கும்பலாக ஏழு எட்டு பேர் சோபாவில் அமர்ந்திருக்க அவர்கள் பின்னால் சிலர் நின்றிருந்தனர்.
பெரியவர் ஒருவர் “நேரடியாக விசயத்திற்கு வருகிறோம், உனக்கு கல்யாணம் ஆக வேண்டும் ஷ்யாம். இப்போது நிலைமைக்கு அது நமக்கு உதவும்”
ஷ்யாம் “சரி”

“எந்த பெண்ணை கட்டிக்கொள்கிறாய். ‘தாகீம்’ குடும்பத்தின் இளைய மகள் இருக்கிறாள், ‘பரத்வாஜ்’ குடும்பத்தின் ஒரே மகள் இருக்கிறாள், உனக்கு தோழியும் கூட, இல்லை என்றால் ‘காஷ்யப்’ குடும்பத்தில் பெண் இருக்கிறாள்.யாரை தேர்ந்தெடுக்கப் போகிறாய் என்பதை சொல்”

“சரி சொல்கிறேன்”

இன்னொருவர் அந்த பதினைந்து நாட்களில் முக்தி சந்தை விலை குறைந்திருப்பதைக் காட்டி அவன் விளம்பரம் எதற்கும் உபயோகப்படவில்லை; பெரியவர்கள் பேச்சை அவன் கேட்பது அவசியம் என்று அறிவுறுத்தினார். பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டிவைத்தான்.

இன்னொரு பெரியவர் தைரியமாகத் தமிழ் பெண் ஒருத்தியுடன் அவன் பழகுவது நல்லதில்லை அவன் உடனே அதை நிறுத்தவேண்டும் என்று கடிந்துகொண்டார்.

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவன் வாசலில் கார் சத்தம் கேட்டதும் பேசத் தொடங்கினான்.

‘இப்போது நான் பேசுகிறேன்.நீங்கெல்லாம் கேட்க வேண்டும்’ என்றவன் உள்ளே நுழைந்துகொண்டிருந்த ராணி சீமாவை கைபிடித்து இழுத்து வந்து அவன் தந்தை பக்கம் சேரில் அமர்த்தினான். ‘ஏதும் பேசாமல் நான் பேசுவதை கவனீங்க ப்ளீஸ்’ என்றவன் பெட்டியோடு உள்ளே நுழைந்த அவன் அஸ்சிஸ்டன்டை பக்கம் நிறுத்திக்கொண்டான்.

நீங்க சொன்ன எந்த விஷயமும் இங்கே நடக்கப் போவதில்லை அறிவித்துவிட்டு, கடிந்துகொண்ட பெரியவரை காஷ்யப் குடும்ப பெண்ணை அவனுக்கு கட்டி வைக்க அவர் பணம் வாங்கிய புகைப்படத்தை அம்பலப்படுத்தினான். கூடவே அவர் மகன் முக்தியில் இதுவரை எவ்வளவு பணம் கையாடல் செய்திருக்கிறான் என்றதையும் ஆதாரத்துடன் காட்டினான். எந்த பெண்ணை கட்டிக்கொள்வாய் என்று கேட்ட பெரியவர் பினாமியாக முக்தி பங்குகளை வாங்கியிருப்பதைக் காட்டினான். அவன் விளம்பரபடுத்தியதை கிண்டல் செய்த சித்தப்பா முக்தி தயாரிப்பு யூனிட்டில் தனியாக தயாரிப்பு ஓட்டுவதை காட்ட மொத்த கும்பலும் அதிர்ந்தது. சீமா எதையுமே பெரிதாக நினைக்காதது போலக் காட்டிக்கொண்டு அமர்ந்திருக்க அவன் தந்தை தலை குனிந்து அமர்ந்திருந்தார் .

கையாடல் செய்த பெரியப்பாவை கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவர் சீமாவின் அக்கௌன்ட்ஸில் இருந்தவர்.அவன் கேள்வி கேட்கக் கேட்க சீமா கவனம் நேர் கொண்டது.
“சொல்லுங்க 98ல் சீமா லாபம் எவ்வளவு”
“4 கோடி பக்கம் தெரியுமா”
“99 இல் எவ்வளவு”
“பத்து கோடி”
“2000த்தில்”
“பன்னிரண்டு கோடி.அதுவெல்லாம் சீமா டெஸ்ட்டைல் மில் பொற்காலம் தெரியுமா?”
“2001ல் எப்படி நஷ்டமடைந்ததது ?”
“அது அப்போது பொருளாதார மந்தநிலை அல்லவா?”
“அப்படியா”
"அதான் அப்பா எடுத்து வங்கி தொடங்கினாரே,அதனால் தான்"
“அப்படியா”
“அதான் கம்பெனியில் தீப்பிடித்து சரக்கு வீண் ஆனதே”
“அப்படியா? சரி 2001 வரை மாத சம்பளக்காரராக இருந்தவர் எப்படி 2002 இல் வீடு, கார் வாங்கினீர்”
“என்னை சந்தேகப்படுகிறாயா ஷ்யாம்?”
“ஆமாம்.நீங்கள் சீமாவில் பணம் திருடியதற்கு சாட்சிகள் இருக்கு”
“ எங்கள் பூர்வீக சொத்தை விற்று தான் வாங்கினேன்”
“சரி மும்பையில் உங்களுக்கு ஒரு செட்டப் இருக்கிறது தானே”
"ஏய் என்ன என் குடி கெடுக்க பார்க்குறியா”

கோபமடைந்தவன் போன் எடுத்து எல்லோருக்கும் வாட்ஸ் அப்பில் அவர் நடிகை ஒருத்தியை கொஞ்சும் காணொளி அனுப்பினான்

எல்லோரும் அதை பார்த்து கிண்டல் செய்வதும், முறைப்பதுமாக இருக்க பயந்தவர் எனக்கெல்லாம் எதுவுமே தெரியாது.அப்போது அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்த எல்லோரும் பணம் திருடினார்கள் நானும் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.கேட்க யாருமில்லை என்று நியாயம் பேசினார்

“சரி மேல சொல்லுங்கள்”

அக்கவுண்ட்ஸ் மேலாளர் ராம்கி என்னைக் கண்டுபிடித்துக் கேட்டார்.அவர் திருடுவதையும் சொல்வேன் என்றேன் முக்தியில் வேலை வாங்கி தருகிறேன் என்றுவிட்டு நான் திருடியதாக என் பெயரில் நிறைய எழுதினார். அந்த மாதிரி நிறைய செய்து அந்த பணத்தை சிவாஜி பிரகாஷ் முக்தியிடம் கொடுத்தார் என்பது நான் கேள்வி பட்டது."
"மேல சொல்லுங்கள்"
"அப்படித் திருடிய பணத்தில் சிவாஜி பைய்யா ராணி சீமா பெயரில் மும்பையில் அடுக்குமாடிக்குடியிருப்பு, அவுரங்காபாத்தில் ஹோட்டல் என்று நிறைய கட்டியிருப்பதாகக் கேள்வி"
"ம்.இப்போது பெரிப்பா நீங்க" என்று வயது முதிர்ந்த பெரியப்பா ஒருவரை அவன் பார்க்க அவர் எழுந்து நின்று "ராஜ் பிரகாஷ் முக்திக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நஷ்ட காலம் தொடங்கியதும், சிவாஜி பைய்யாவிற்கு உடல் நலக் குறைவால் அவரால் பார்க்க முடியவில்லை நீங்கள் பாருங்கள் என்று சொன்னது நான் தான். சீமாவில் இருந்த மேனேஜ்மேண்ட் ஸ்டாப் எல்லாருக்கும் முக்தியில் வேலை கொடுத்தவனும் நான் தான்." என்றவர் அதற்கான ஆதாரத்தை அவர் கையால் சீமாவிடம் கொடுத்தார்.

கடைசியாக பெரிய தாத்தா நீங்கள் என்று அவன் கைகாட்ட அவர் "அப்போது என் வீட்டில் பண நெருக்கடி.சிவாஜி பணம் கொடுத்து உதவினான். கூடவே சீமாவை ராஜ் பிரகாஷ் முக்திக்கு இரண்டாம் மனைவியாக கட்டி வைக்க உதவுங்கள் என்று கேட்டான். எனக்கும் ராஜ் பிரகாஷ் மீது வேறு இன பெண்ணை கட்டிக்கொண்டான் என்ற கோபம் இருக்க என்னாலான உதவியை செய்தேன் அம்மா. நாளுக்கு நாள் சீமா விழுவது புரிந்து என்ன செய்வது என்று நான் தவித்த போது முக்தியில் பெரிய வேலை போட்டுக்கொடுத்து என் மகனையும் முக்தியில் வேலைக்கு சேர்த்தார்கள். முக்தியில் வேலை செய்பவர்களுக்கு என்னவெல்லாம் சலுகை தெரியும் தானே.எனக்கு சொத்து எல்லாம் இல்லை.என் கெட்ட நேரம் இப்படியெல்லாம் செய்தால் தான் பிழைக்க முடியும், பையன்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவைக்க முடியும் என்று நினைத்துவிட்டேன் அம்மா.மன்னித்து விடு" என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

சீமா உடைந்தார். அவரால் அத்தனை பெரிய அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலை போல அமர்ந்திருந்தார்.

ஷ்யாம் வக்கீலை அழைத்து முக்தியின் உரிமை யாருக்கெல்லாம் இருக்கிறது என்று விளக்கம் கேட்க, வழக்குரைஞர் விளக்க தொடங்கினார். முக்தி குடும்பம் அதாவது ஷ்யாம் வாரிசாக இருக்கும் முக்தி குடும்பத்திற்கு மட்டுமே முக்தி ஸ்டீல்ஸ் நிறுவனம் சொந்தம்.அதன் நிர்வாக பங்கு என்று இருப்பதை முக்தி பங்காளி குடும்பம் ஏழு பேருக்கு பங்கு இருக்கிறது. முக்தி விரிவடையும் காலத்தில் புதிதாக கட்டிய தயாரிப்பு யூனிட் இருக்கும் 100 ஏக்கர் நிலம் அதை பதினெட்டு பங்காக பிரித்து கொடுத்திருக்கிறார் ராஜ் பிரகாஷ் முக்தி.அதில் மட்டுமே எல்லோருக்கும் பங்கு உண்டு.ஆக மொத்தம் முடிவெடுக்கக் கூடிய பங்குதாரர்கள் என்று பார்த்தால் முக்தியில் பத்து பேருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மற்ற யாராலும் முக்தியின் எதிர்காலம் முடிவெடுக்க முடியாது என்று உண்மையை உடைத்தார்.

ராஜ் பிரகாஷ் முக்தி தன் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், தன் நிறுவனம், ஊர்,இன மக்கள் என்ற மரியாதையில் அவர் குடும்பத்தை இழந்தார். அவரை போல முட்டாள்தனமாக முடிவெடுப்பவன் இல்லையே ஷ்யாம்.
 

swwee

Active member
Wonderland writer
மாற்றம் ஒன்றே மாறாது




தந்தை ராஜ் பிரகாஷ் முக்தி அவர் தந்தையின் ஊர்,இனம், சொந்தம், மக்கள் என்ற கற்பிதத்தில் வளர்ந்தவர், அவனோ அவர் நம்பிக்கை கொண்டிருந்த கும்பலின் ஆசை, வஞ்சம், துரோகத்தின் அடி,உதையில் வளர்ந்தவன் அல்லவா. அது கொடுத்த தைரியம் இன்றைக்கு அவனுக்கு என்ன வேண்டுமோ அதை தக்க வைத்துக்கொள்ளப் பாடுபட சொல்கிறதே.

எல்லோரும் களைந்து போகவும்.ஷ்யாம் அவன் பெரியப்பாவை பார்த்து “நீங்க இத்தோட நிறுத்தி கொள்வீங்க என்றெல்லாம் நான் நினைக்கவில்லை பெரியப்பா.ஆனாலும் சொல்கிறேன் எனக்கு பிடித்த பெண்ணை தான் திருமணம் செய்துகொள்வேன். முக்தியை உங்களுக்கே விட்டு கொடுக்கிறேன்.நீங்களே அதை நடத்துங்கள். ஆனால் நினைவிருக்கட்டும் அது முக்தி குடும்பத்தின் உழைப்பு. நீங்களும் நானும் வளர்ந்தது அதன் உழைப்பில் தான்”

ராணி சீமாவிடம் “என் அப்பா எந்த வகையிலும் உங்களை கஷ்டப்படுதலை. தயவுசெய்து புரிஞ்சிக்கோங்க”

அப்பாவைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டான்.

சோர்ந்து அலுப்பாக வீட்டிற்கு வந்தவன் அமைதியாக சோபாவில் அமர்ந்துவிட்டான். கிட்சனில் சமையல் செய்துகொண்டிருந்தவள் அவன் சத்தம் எதுவும் காணவில்லையே என்று வெளியே வந்து எட்டிப் பார்க்கும் போது உள்ளங்கையால் கண்களைப் பொத்திக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“ஷ்யாம்”
“ம்”
“நிறைய வேலையா?”
“உன் சாலட் தயாராக இருக்கிறது.சாப்பிடலாம் நீ”
“ம்”
“பிரச்சனையா?”
“ம். காதல் பிரச்சனை”
“நீயே தீர்த்துக்கோ.என்னால் யோசனை எல்லாம் கொடுக்க முடியாது”
“ஏன் சுந்தரி? என்னை பிடிக்கலையா?”

எத்தனை முறை இந்த கேள்வியைக் கேட்டுவிட்டான். இவனையா பிடிக்கவில்லை உயிரின் வேர் வரை இவன் மீது காதல் துளைத்திருக்கிறது தான்,ஆனால் கல்யாணம் செய்துகொள்ள தைரியம் வரவில்லை.

“நான் ஒரு ஐடியா கொடுக்கவா ஷ்யாம்”
முரண்களின் அரசி இவளே. யோசனை சொல்லமாட்டேன் என்றவள் யோசனை சொல்கிறேன் என்கிறாள்.
“ம் கொடு.செய்கிறேன்”
என்னவென்றே கேட்காமல் செய்கிறேன் என்கிறானே. அபத்தமாக இருக்கிறது என்றால் என்ன செய்வாள்? அவள் உள்ளம் திறக்கும் முடிவல்லவா இது. சொல்லு என்று அவன் உந்த “எனக்கும் உன் மேல் காதல் இருக்கிறது, இதோ இப்படி உன்னுடன் சேர்ந்திருக்கப் பிடித்திருக்கிறது.அதனால் உனக்கு நானோ எனக்கு நீயோ சலித்துப்போகும் வரை சேர்ந்திருப்போம்”

சிரித்துவிட்டான். சிறிது நேர அமைதிக்கு பின் சரி என்றவன் எழுந்து அவன் அறைக்கு சென்று உடை மாற்றி வந்து அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான்.

அதன்பின்னான நாட்கள் சுந்தரியை தீவிரமாக காதலிக்க,அதை வெளிப்படுத்துவதில் அவன் காதல்காலம் தொடங்கியது.

ஷ்யாம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் முக்தி சிறிது சிறிதாக சீரானது. இரண்டாம் நிலை பங்குகள் ஷ்யாம் பேருக்கு மாற்றலாயின. ராணி சீமா புதிதாக நிறுவனம் தொடங்க ஆயத்தம் ஆனார்.ஷ்யாமிடம் பார்ட்னெர்ஷிப் கேட்டு பேசினார்.

சுந்தரி காயா சார்பாக இரண்டாம் செயல்திட்டமும் முடித்துக் கொடுத்தாள். ஷ்யாம் உதவியில் அவள் தனிப்பட்ட மெடிக்கல் எயிட் ப்ராஜெக்ட்டிற்கு பயோ-மெடிக்கல் பொறியாளர்களை அணுகி அவர்கள் நிறுவனத்தில் வைத்து ஆராய்ச்சியை தொடங்கினாள்.

முரளியின் உண்மை நிலையை நேரில் பார்த்த வினிதா அவனுடனான நிச்சியத்தை முறித்துவிட்டு வேறொரு திடீர் பணக்காரனை மணந்துகொண்டாள். சுந்தரியிடம் அவள் அத்தை புலம்பித் தள்ளினாள்.அத்தையின் திடீர் கரிசனத்திற்குக் காரணம் புரிந்தது. பேச்சிலேயே திசை திருப்ப முயன்றாள்.அதற்கு அவர் இடம் கொடுக்காமல் பேசிக்கொண்டே போக அந்நேரம் அங்கே ஷ்யாம் வர சுந்தரி "அத்தை அவர் வந்துட்டார், நான் அப்பறம் பேசுறேன்" என்று சட்டென்று துண்டித்தாள். சிரித்துக்கொண்டே அறைக்கு போனவன் என்ன விஷயம் என்று கேட்கவில்லை அவளும் அதன் பின் அதைப் பற்றி பேசவில்லை.

சரயு ரெஸ்டாரெண்ட் திறந்தாள். அவள், அவள் காதலன் ராகேஷ், அவர்கள் செஃப் எல்லாம் சேர்ந்து கொண்டாட திரும்ப அதே நட்சத்திர பப்பிற்கு சென்றனர். சுந்தரியை பார்த்த இரண்டாம் இளவரசர் "இந்த முறை போட்டி வைக்கலாமா" என்று அதே நாடாக சிரிப்போடு கேட்க சுந்தரி "சார், வாட்ச் தொலைச்சிட்டதா உங்க வீட்டில் பேச்சாமே!"
அவர் ஆச்சரியமாக அவள் முகத்தை பார்க்க
"பாருங்க எல்லா மனிதனுக்கும் கஷ்டம் இருக்கும், அதை எதிர்கொள்ளுங்கள்.இப்படி அதை மறந்து மறைத்து சிரிப்பதில் பிரயோஜனம் இல்லை"
"ஏய்! எனக்கென்ன கஷ்டம். நான் யாரென்று தெரியுமா? இதோ இந்த ஏ.கே ஆர்கேட்ஸ் எல்லாம் எங்களது தான் தெரியுமா. மொத்தம் ஏழு நட்சத்திர விடுதிகள் இந்தியா முழுவதும்"
"இந்த கருவளையம் நிறைந்த கண்களோடு, சதைப்பிடிப்பு இல்லாத கழுத்து,இந்த தொப்பை எல்லாமே நீண்ட நாள் மன-அழுத்தம் என்றே சொல்கிறது சார்."
அவள் கேட்கவும் அழுகை தொண்டை அடைக்க "உனக்கு தெரிகிறதா? ஏன் என்னை சுற்றி இருப்போர் யாருக்குமே தெரியவில்லை." பேசியவர் குலுங்கி அழுதுவிட்டார்.
"தெரபிஸ்ட் பாருங்கள் சார். எல்லோராலயும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது"
அவர் "ஷ்யாம் உன்னைத் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஏன் அழுத்தமாகச் சொல்கிறான் என்று புரிகிறது. விட்டுவிடாதே! செல்வம் நிறைந்த வீட்டில் பிறந்த ஆண் பிள்ளைகள் வாங்கிவரும் சாபம் அம்மா அவரவர் இஷ்டப்படி வாழ முடியாத சாபம் அது"

பதிலாக சிரித்தவள் பார்ட்டியின் பாதியிலே வீடு வந்து சேர்ந்தாள்.

ஒளியில்லாத இருட்டு ஹாலில்அமர்ந்துகொண்டு கையில் விஸ்கி கிளாஸை வைத்துக்கொண்டு சுழற்றிய படி அமர்ந்திருந்தான். சுந்தரி பக்கம் இல்லாத பொழுதுகள் அவனை வெறுமை கொன்று தின்கிறது. இந்த பாரம் அவனை விட்டு எப்போது இறங்குமோ? ஆனாலும் அவள் சிரிப்பு, பேச்சு என்று எண்ணி சிரித்துக்கொள்வதும் இந்த தனிமை பொழுதுகளில் தானே. இப்போதெல்லாம் சுந்தரி உடல்நிலை சரியில்லை என்று மயங்கி விழுவதில்லை, அழுவதில்லை, புலம்புவதுமில்லை. எந்நேரமும் சிரித்த முகமாக உற்சாகமாக அவன் காதல் பேச்சுகளுக்கு ஏற்ற எதிர்பேச்சு பேசி அவனை திக்குமுக்காட வைக்கிறாள்.

அவன் போக்கில் அவன் எண்ணம் ஓடிக்கொண்டிருக்க சட்டென்று கதவு திறந்து உள்ளே நுழைந்தாள்.
“ஏய் என்ன சீக்கிரம் வந்துட்ட”
“ஆமா. நீ என்னை தான் கல்யாணம் செய்துப்பேன் என்று ஊர் முழுக்க சொல்லி திரிகியா”
சிரித்தவன் “ஆமாம்”
“பச் ஷ்யாம் எனக்கு அந்த எண்ணம் இல்லை”
“கூல் அதைப் பற்றி பேச்சு வேண்டாம். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் மாநாடு நடக்கிறது. நாம போக போகிறோம். நான் முடிவு செய்துட்டேன்”
“அங்க போய் என்ன செய்ய போகிறோம்”
“உன் ப்ராஜெக்ட் பற்றிப் பேசப் போகிறோம்”
“சரி அதிகமாகக் குடிக்காதே.மூளைக்கு,உடலுக்கு நல்லதில்லை”
“அதை நீ சொல்லாதே” என்றவன் அவள் அந்த இரவில் வாந்தியெடுத்து அவஸ்தைபட்டத்தை கிண்டல் செய்துபேசினான்.
கோபப்பட்டவள் அவன் கையிலிருந்து கிளாஸை வாங்கி சிங்கிள் கொட்டினாள்.
ஷ்யாம் “குடித்திருக்கலாம் தானே. குடித்திருந்தால் அழகான இந்த உதட்டில் முத்தம் கிடைத்திருக்கும்”

பதில் பேசாமல் அவள் அறையினுள் சென்று பூட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றாள், கதவின் மறுபுறம் ஷ்யாம் சாய்ந்து நின்றான். “நமக்குள்ள என்ன அப்படி இருக்கிறது எதை உன்னை தடுக்கிறது சுந்தரி” கேட்டு அங்கேயே அவள் அறை முன்பே படுத்துக்கொண்டான்.
***

சுந்தரி அந்த மாநாட்டில் என்ன பேச போகிறோம் எப்படி பேசப் போகிறோம் என்று நிறைய தயார் செய்து வைத்துக்கொண்டாள். ஷ்யாம் அவளுக்காக அவள் பேச என்று நேரம் கேட்டு வாங்கியிருந்தான். நியூயார்க் சுற்றிப்பார்க்க, சுற்றியிருக்கும் ஊர்களைச் சுற்றிப்பார்க்க என்று பதினைந்து நாள் திட்டம் தீட்டிப் புறப்பட தயார் ஆனார்கள்.

ராகுல் ஆஷா நிச்சயதார்த்தம் நடத்திக்கொடுத்திவிட்டு கிளம்பினான் ஷ்யாம். ஆஷா ஆசையாக பையா கூடிய சீக்கிரம் உனக்கும் திருமணம் நடக்கவேண்டும் என்று அவன் கைபிடித்து உணர்ச்சிவசமாகப் பேச அவள் தலையை கோதி தட்டிக்கொடுத்து விடைபெற்றான் குழப்பவாதி.

சுண்டரியிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டான் என்ன தடுக்கிறது என்று.அவளிடம் பதில் இல்லை. “தெரியலை, வேண்டாம். உனக்கேற்ற பெண் நானில்லை” தயக்கமே இல்லாமல் அவள் பதில் சொல்லும்போது அவனுக்கு மேலும் வலிக்கிறது.அந்த வலியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதோ இப்படி நட்புமில்லாமல் காதலுமில்லாமல் சுத்தி திரிவது அவனுக்கு சம்மதமே.

இருபது மணிநேர விமான பயணத்தில் நியூயார்க் அடைந்தவர்கள் கால நேர மாற்றத்தில் தூங்கியே ஒரு நாள் முழுக்க கழித்தார்கள். ஒரு நாள் நியூயார்க் நகரம் சுற்றித் திரிவதில் கழித்தார்கள்.

சுந்தரி மனம் திறந்து பேசினாள். “முரளி மாமா இல்லாத சோகத்தை மறக்க ஊர் மாற்றம் உதவியாக இருந்தது. இப்படியான ஊர் மாற்றங்கள் நமக்கே நம்மை புதுவிதமாக காட்டும் தெரியுமா.புது சாப்பாடு, புது விதமான மனிதர்கள், அவர்கள் பழக்கம் இதெல்லாம் மனம் மாற்றத்திற்கு உதவும். இப்படி இங்கே வந்திருப்பது எப்படி மாற்றத்தை கொடுக்க போகிறதோ தெரியலை”

“ம் கொடுக்கும்.அதற்குத் தான் ஏற்பாடெல்லாம் ஜரூராக நடக்கிறது. இந்தியா போனதும் உன் கண்டுபிடிப்பிற்கு பேட்டன் வாங்குகிறோம், மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறோம்”
“இத்தனை சீக்கிரமாகவா? முடியுமா என்ன?”
“ஏன் முடியாது? இங்கே இருப்பது ஷ்யாம்.நான் எது நினைத்தாலும் முடியும்”
“ஆமாம் ஷ்யாம் உன்னால் எல்லாமே முடியும்” என்றவள் விசித்திர புன்னகை ஒன்றை மறைத்தாள்.
அடுத்த நாள் காலை மாநாடு செல்ல இருவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். ஷ்யாம் அவர்கள் பாஸ்போர்ட், அடையாள அட்டைகள், அவள் ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்டவற்றைப் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்து கொண்டிருக்க சுந்தரி தயாராகி விட்டு கண்களை மூடி சோபாவில் அமர்ந்துகொண்டாள்.

ஷ்யாம் பெர்சனல் தொலைப்பேசி கிணுகிணுத்தது.எடுத்து பார்த்தவன் அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் பெண் குரல் ஒன்று “ஹலோ, ஷ்யாம் கண்ணா” என்றது, அதிர்ந்தான். மனம் குதுகலிப்பதை வார்த்தையில் விவரிக்க முடியவில்லை.

கண்களை மூடி அமர்ந்திருந்தவள் முகத்தில் புன்னகை சாயல்.

அவன் பதிலுக்கு “நல்லாயிருக்கீங்களா?” கேட்டதற்கு ரொம்ப நலலாயிருக்கிறேன் கண்ணா”
“அம்மா என்னோடு வந்துருங்க, ப்ளீஸ்”
“அப்பாவோடு இருக்கட்டுமா உன்னோடு இருக்கட்டுமா?”
அவர் கேள்வியில் மேலும் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தவனுக்கு பேச முடியவில்லை.

அவன் பேசி முடித்த பின்னும் கண்களை திறக்காமல் உட்கார்ந்திருந்தவளிடம் சென்றான் சிரித்துக்கொண்டே இருக்கும் உதட்டை கவனித்தான். ‘கேடி’ என்றவன் அழகான அந்த முகத்தை கைகளில் ஏந்தினான் கண்களை திறந்தவள் அவன் கண்களை சந்தித்தவள் அதன் ஆழத்தில் மூழ்கி போக அவன் அழுத்தமான முத்தம் அவன் காதலை உணர்த்த அவள் பேராசை கொண்ட மனம் இன்னமும் வேண்டுமென்றது.
“என்ன செய்த?”
“உன் அம்மாவிடம் பேசினேன்.ராணி சீமாவிடம் பேசினேன்”
அவள் பேசி முடிக்க அவன் முத்தம் பேசியது.
‘ஷ்யாம் நாம் இப்போ கிளம்பலை லேட்டாக தான் போவோம்’ அவள் குறைபடுவது போல பேச ஷ்யாம் வேகமாக எல்லாம் எடுத்துக்கொண்டு அவளுடன் கிளம்பினான்.

சுந்தரி தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவள் ப்ராஜெக்ட் அதன் விளக்கத்தைத் தொடங்கினாள். மருத்துவத்துறையில் இருக்கும் சவால்களும் அதை அவள் கண்டுபிடிப்பு எப்படியெல்லாம் எதிர்கொண்டு தீர்க்கும் என்பதை அவள் பேசப் பேச ஆர்வமாக அந்நேரமே நிறையப் பேர் அவளிடம் எதிர்க்கேள்வி கேட்டு விவாதித்தனர்.

அவர்கள் முன்வைத்த கேள்விகளை அவள் எதிர்கொண்டு பேசிய விதத்தில் ஷ்யாம் அயர்ந்தான். அவள் உற்சாகமான பேச்சை பார்த்து அதிசயமாக இருந்தது. இந்த பெண் இத்தனை நாள் அமைதியாக இருப்பது எத்தனை வீண்! அவளுக்கான இடம் கொடுக்கும்போது எத்தனை சந்திக்கிறாள் இவள்! என்ன என்ன சாதனைகள் காத்திருக்கோ!

ஷ்யாம் திகைப்பான பார்வையை சந்தித்தவள் அழகாய் புன்னகைத்தாள். அவன் பக்கம் வந்து அமர்ந்து ஆழ் குரலில் நன்றி என்றாள்,அவன் உயிர் வரை அது தொட்டது. அவள் கைகளை அழுத்திப்பிடித்துக்கொண்டான்.

“நீ கலக்டெர் பூங்கொடி மகள் தானே” ஆங்கிலம் கலந்த தமிழில் ஒருவர் அவளை பார்த்து கேட்க அதிசயமாக பார்த்தாள்.

“டாக்டர் அமர் உன் தந்தை! நான் சொல்வது சரிதானே.சரியாக தான் இருக்கும்.நீ பார்க்க அப்படியே உன் அம்மா செய்து காட்டிய மாடல் போல இருக்கிறாய்”

அவள் ஆமாம் என்று தலையாட்ட உன்னை எங்கெல்லாம் தேடியிருக்கிறேன் தெரியுமா?என்னோடு வருகிறாயா? உனக்கு ஒன்றை காட்ட வேண்டும் என்று பரபரப்பாக கேட்டார்.
“எங்கே வரவேண்டும்?” தயக்கத்துடன் அவள் கேட்க
“என் கூட நீ சிகாக்கோ வரணும்.அங்கே என் ஆராய்ச்சி கூடம் இருக்கிறது”
ஷ்யாம் “இப்போது முடியுமா தெரியலையே”
“இல்ல முடியும். இரவு அங்கே போய் சேர்ந்துவிடலாம் நீ நான் காட்டும் அதிசயத்தைப் பார்த்துவிட்டு முடிவெடு” அவளை பார்த்து சொல்ல
மூவரும் சிகாகோ புறப்பட்டனர்.
 

swwee

Active member
Wonderland writer
பூங்கொடி என்ற காதலி





டாக்டர் அமர் உயிர்களை பற்றிய ஆராய்ச்சியில் கண்டுபிடித்த ஆசாரதான விஷயம் அறிவியல் வல்லுநர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கிய காலம் அது. மருத்துவம் படித்து முடித்து மேற்கொண்டு தன்னை முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் கூறுகளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி மனிதனின் செல்களில் நிகழும் மாற்றமும் அதில் உண்டாகும் வேதியல் கூறுகளையும் கண்டுபிடித்தார்.அப்படியான ரசாயன கலவைகளை கண்டுபிடித்தாள் எப்படியான நோய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க முடியும் என்பதை அவர் விவரித்து எழுதிய ஆராய்ச்சி கட்டுரை உலகம் முழுவதும் உள்ள வாழ்வியல், மருந்தியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பிரசித்தி ஆனது.

அமர் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு தனி சிறப்பிருந்தது.அப்படியான ஆராய்ச்சியாளர் பூர்விகம் மதுரை என்றாலும் ஹார்வார்ட் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்படியான மனிதரை ஓர் பெண் சந்திக்க வந்தாள், அதுவும் தனியாக. எனக்கு உங்களை கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் செய்துப்பீங்களா என்று கேட்டாள். அதிர்ந்தார்! உருவத்தை கவனித்து சின்ன பெண் இப்படியெல்லாம் எல்லாம் பேசாதே என்று அவர் சொல்ல "நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க. நான் ராஜஸ்தானில் மாவட்ட கலெக்டர்" என்றாள் மேலும் அயர்ந்தார்.

பூங்கொடி சித்திரை நட்சத்திரம் அதனால் தான் அறிவாளி, பூங்கோடி வயித்தில இருக்கிறப்ப அவ அம்மா விழுகிற நட்சத்திரத்தை பார்த்துட்டே இருந்தாளாம் அதான் இத்தனை தெய்வீகமா பெண் பிறந்திருக்கிறாள் என்று ஊர் பேச எதையும் கண்டுகொள்ளாமல் பூங்கொடி அவள் அறிவு சொல்வதை கேட்டு நடந்தாள். அவளால் ஒரு செயலின் தாக்கம், வீரியம் அது நடப்பத்ற்கு முன்பே கணிக்க முடிந்தது. முழுக்க முழுக்க அறிவால் என்றாலும் சுற்றம் அவள் தெய்வாம்சம் நிறைந்தவள் என்றது. அது அவளுக்கு பாதுகாப்பு என்றே தோன்ற ஆமா அப்படியே தான் என்று ஏற்றுகொண்டாள்.

மனிதனுக்கு தெய்வ நம்பிக்கை என்ன தரும் என்பதை அவள் அறிவாள். ஒழுக்கம், வாழ்வின் மீது பயம் என்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய நல்ல விஷயங்களை கொடுக்கும்.

மனிதம் என்கிற கருத்தை மறந்து மிருகம் ஆகும் மனிதன் பட்டம்.பதவி அதுகொடுக்கும் ஆதிக்கத்தின் முன் மண்டியிடுகிறான். அதைபுரிந்துகொண்டவள் பரிட்சைகளை எழுதி கலக்டர் ஆனாள். அப்படியானவள் கண்களில் அமர் ஆராய்ச்சி கட்டுரை கிடைக்க அதை படிக்க தொடங்கியவள் தேடல் திசை மாறியது.

மனிதனின் மூளை வளர்ச்சி என்பது சூழலுக்கு ஏற்ப வாழும் கலையில் வளர்ந்தது. அறிவியல் ஆராய்ச்சிகள் மனிதன் விலங்கை விட முட்டாளாக இருந்து படிபடியாக வளர்ந்தவன் என்கிறது. அப்படியான மனிதன் வளர்ச்சி தொய்வடைந்தது எங்கே எப்படியென்றால் சோம்பேறிதனத்தால் மட்டுமே.

குழு மனப்பான்மை வளர்த்த சோம்பேறிதனத்தால் வளர்ந்த அவன் சிந்திக்கும் திறன் ஒரு கட்டுக்குள் மட்டுமே சுருங்கி விடுகிறது. அப்படி சிந்திக்கும் ஆற்றல் பெறுக வேண்டுமென்றால் அவன் மரபணுவில் ஒளிந்திருக்கும் மறைந்து கொண்டிருக்கும் ஆற்றல்கள் தூண்டிவிடபடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டவள் ஆராய்ச்சியாளர் அமர் முன்பு போய் நின்றாள். அவள் ஆராய்ச்சி பற்றி பேசினாள்.

அவள் பேச பேச அதிசயமாக உணர்ந்தவர் அவள் ஆராய்ச்சியை தொடர சொல்லிவிட்டு அவர் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

அப்படி விலகி வந்துவிட்டாலும் மனம் கவர்ந்தவள் பற்றி விசாரிக்க பூங்கொடி திமிர்பிடித்த அறிவாளி பெண் என்று தெரிந்து கொண்டார்.

பூங்கொடி அடுத்த முறை அவரை சந்திக்கும் போது அவள் ஆராய்ச்சிக்கு வடிவம் கொடுத்திருந்தாள். அவர் நகம், முடி, எச்சில் எடுத்து அவளோடதும் எடுத்து அவர்கள் மரபணு கலந்து உதிக்கும் ஜீவன் எப்படியான உயிராக இருக்கும் என்று அப்போதிருந்த கணினி வசதிகளைக் கொண்டு வடிவமைத்து காட்டி எப்படி என்று கேட்டு சிரித்தாள்.

அமர் மேலும் அதிசயமாக அவளைப் பார்க்க அவள் அறிவுக்கு பின்னருக்கும் ஆபத்தையும் பார்த்தார்.

அறிவை கண்டு அதிசயிக்கும் அமரை வீழ்த்த என்று பூங்கொடியின் கண்டு பிடிப்புகள் வளர, வளர அவர்களைச் சுற்றி ஆபத்து நிறைய உருவானது.

இப்படியான ஜீனியஸ் பெண் ஒருத்தி இருக்கிறாள் என்ற செய்தியும், அவள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் எதிர்காலம் கொண்டாடும் வகையில் இருக்க ஆபத்து அவர்கள் நோக்கி வந்தே விட்டது.

அமருடன் சேர்ந்து பூங்கொடி எந்த சூழலும் வாழும் பாக்டீரியா கொண்டு உயிர் அழிக்கும் அயுதம் ஒன்றை தயாரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் வந்தது. இல்லையென்றால் பூங்கொடி உயிருக்கு ஆபத்து என்று மிரட்டலும் வந்தது.

உண்மையை உணர்ந்த அமர் வேலையை விட்டு பூங்கொடியை இந்தியா அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டார். அமர் முஸ்லிம், பூங்கொடி அப்படி வேற்று மத மனிதனைத் திருமணம் செய்தது யாருக்குமே அதிசயமாகத் தெரியவில்லை. பேதம் என்பது உடலுக்கு மட்டுமே ஆன்மாவிற்கு கிடையாது என்று பத்து வயதில் பேசிய பெண் யாரை திருமணம் செய்தால் என்ன! அதை அவர்கள் சொந்தங்கள் ஏற்றுக்கொண்டனர். அப்படி ஏற்காமல் இருப்போர் பற்றியும் பூங்கொடி கவலை கொள்ளவில்லை. அவள் அறிவின் தெரிவு ‘மனிதர்களின் அறிவாற்றல் வேறுபாடு நிறைந்த ஒன்று, சிலர் அதைப் பயன்படுத்துத் தெளிவாகிறார்கள் சிலர் முட்டாளாகவே இருந்து அழிந்து போகிறார்கள்’ என்கிறது.


பூங்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது. எதையும் சாராத பெயராக சுந்தரி என்று பெயர் சூட்டினார்கள்.

அமர் எதைக் கண்டு பயந்து அமெரிக்கா விட்டு வந்தாரோ அது அவர்களைத் துரத்திக்கொண்டு மதுரை வரை வந்து சேர்ந்தது.

அமர் பூங்கொடி கூட்டிக்கொண்டு எங்கே ஒளிந்தாலும் அங்கே அவர்கள் துரத்திக் கொண்டு வந்து மிரட்டத் தொடங்கினார்கள்.

மிரட்டல்கள் தாங்க முடியாமல் அமர் தவிக்க பூங்கொடி அவர் அப்படியான நுண்ணுயிர் ஆயுதத்தைத் தயாரித்த கொடுக்க ஒத்துக் கொண்டார்.

அவர்கள் மதுரை வீட்டில் ஒரு பகுதியை ஆராய்ச்சி கூடமாக மாற்றினார்கள். அமர் குடும்பமே ஒத்துழைத்து அவர்களுக்கு உதவியது. குழந்தை சுந்தரி பூங்கொடி போலவே அறிவாற்றல் நிறைந்திருந்தாள். பூங்கொடி அவள் ஆராய்ச்சிகளை நிறைய விதத்தில் தொடங்கினார். இருட்டில் தோன்றும் விட்டில்பூச்சி போல் அவருக்குள்ளும் நம்பிக்கை ஒளிர்ந்தது.அவரால் முடியாமல் போனால் பெண் அதை சீர் செய்வாள் என.

கோடான கோடி ஜீவ ராசிகள் உலகில் உண்டு அவை அனைத்தும் அதன் வாழ்வை வாழ்கிறது. தண்ணீர் ஊரி குளமாகும் இடத்தில் புள் முளைக்கிறது, அதைச் சாப்பிட மான் வரும் இடத்திற்கு புலி வருகிறதென்றால் அதன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஓடும் சக்தி மானுக்கு உருவாகிறது. இயற்கை அன்னையின் பொழுதுபோக்கு என்பது உருவாக்கி அழிப்பது தானோ !

உலகில் அடுத்தவரைப் பயன்படுத்தி மேம்படும் சுயநலம் நிறைந்த ஜீவன் என்றால் மனிதன் மட்டும் தான். அறிவாற்றல் நிறைந்த பூங்கொடி அடுத்தவர் உயிரை எடுக்கும் ஆயுதம் தயாரிக்க அவர்கள் பயன்படுத்த நினைக்க பூங்கொடி இந்த அழகான பூமி பந்து நலம் பெற இந்த மனிதர்கள் அறிவு உய்ய என்ன முடியுமோ அதைச் செய்ய தொடங்கினாள்.

உயிர் அழிக்கும் நுண்ணுயிர் அல்லாமல் கடல் வாழ் உயிரனங்களின் மேம்பட்ட தன்மை, காட்டுவாழ் உயிரினங்களின் தன்மை என்று ஆராய்ந்து அவைகளின் இரத்தத்தில் வாழும் நுண்ணுயிரிகளை எடுத்து அவைகளின் குணம் வளர என்ன வேண்டுமோ அதை வளர்த்தாள். அதை ஆயுதம் என்றும் அதை உணவில் கலந்து பரப்ப வேண்டுமென்று அறிக்கை கொடுத்தாள். நம்பி அதைப் பரப்பவிட்டுப் பார்த்தவர்கள் ஒன்றும் நடக்காததை கவனித்து ஆராய்ந்து என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் பூங்கொடி அவர்களைச் சட்டத்தில் மாட்டிவிட்டாள்.

இப்படி எத்தனை பேரை எதிர்த்து வாழப் போகிறோமோ என்கிற கவலை அவளை வதைக்கத் தொடங்க அடுத்த கும்பல் அவளை மிரட்ட தொடங்கியது நோய் தடுக்கும் மருந்து கண்டுபிடித்து தரச்சொல்லி.

பூங்கொடி. அந்த ஆராய்ச்சியில் இறங்க அவள் அதை செய்யக் கூடாது என்று ஒரு கும்பல் அவளைத் தடுக்க விபத்தை ஏற்படுத்த அதில் அமரும் பூங்கொடியும் இறந்து போனார்கள்.

பூங்கொடி ஆராய்ச்சி கூடத்தில் தேடினால் அவள் ஆராய்ச்சி செய்த நுண்ணுயிரி பற்றி கிடைக்கும் என்று அந்த வீட்டை முற்றுகை இட்டவர்கள் இரக்கமில்லாமல் அமர் குடும்பத்தைக் கொன்று குவித்தார்கள். பூங்கொடி மகளால் மட்டுமே அவள் ஆராய்ச்சி தொடர முடியுமென்று நம்பியதில் பூங்கொடியின் அண்ணன் அவளை யாருக்கும் தெரியாமல் இத்தனை நாள் வளர்த்து எடுத்து வந்துவிட்டார்.

“அண்ணா என் பொண்ணு அவ புத்தியில் பொழசிக்குவா, நீ அவ உயிரோடு இருக்க மட்டும் உதவி செய்” கேட்ட தங்கைக்கு அவரால் செய்ய முடிந்தது அதுவே. சுந்தரி உயிர் வாழச் சாப்பாடு, படிக்கப் பள்ளிக்கூடம் அதுவும் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்.

தங்கை போல அவள் பெண்ணும் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் அவளைப் பற்றியோ, சுந்தரியின் புத்திசாலித்தனத்தை மெச்சியோ பேசாமல் இருந்து ஊமை ஆகிப் போனார்.
 
Status
Not open for further replies.
Top