ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சென்னை செந்தமிழே - கதை திரி

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
யாரது..?





சுந்தரிக்கு அவர் காட்டிய செட்-அப் வித்தியாசமாகத் தெரிந்தது. பழைய கால கணினி அதன் பக்கத்தில் ஓர் இயந்திரம்.

சுந்தரியின் கை நகத்தை வாங்கி அந்த இயந்திரத்தில் வைத்தவர் அவள் மரபணு அமைப்பை கணினித் திரையில் காட்டினார் அதே போல ஷ்யாம் கை நகத்தை எடுத்து வைத்து அவன் மரபணு அமைப்பையும் காட்டியவர் அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் அதன் கண்,காது, மூக்கு, மூளை எப்படி இருக்கும் என்று காட்ட சுந்தரி அதிசயமாகப் பார்த்தாள். முதல் மூன்று பிள்ளைகளுக்கு அவள் சாயல் ஆதிக்கம் இருக்க அடுத்த நான்கு பிள்ளைகளும் ஷ்யாம் போல இருக்கும். அதிலும் அறிவாற்றல் மிகுந்த குழந்தைகளாக தான் இருப்பார்கள்.

ஏழு பிள்ளைகள் வரை பெற்றுக்கொள்ள ஆசை பிறந்தது அவளுக்கு. முதல் பிள்ளை ஆணாக இருந்தால் அதன் ஜீன் அமைப்பு நிறைய அமர் போல இருக்க, பெண்ணாக இருந்தால் ஷ்யாம் தாய் போல இருந்தது.

ஷ்யாம் மூளை இதை சந்தைப்படுத்த யோசிக்க சுந்தரி அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள அவர்களிடம் இருக்கும் ஆவணங்களை வாங்கி பார்க்கத் தொடங்கினாள்.

அவள் கண்களுக்குக் காணும் மனிதர் அனைவரும் வெவ்வேறு மரபணு அமைப்புகளாகவும் அவர்களின் எண்ணம் செயல் நோய் என்று மொத்தமும் அதன் வடிவில் தெரிந்தது.அந்த நிமிடமே மதுரை வீட்டிற்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அவள் உணர்வு குளத்தில் திக்குமுக்காட ஆதரவாக அனைத்து அவளை விடுதி ஒன்றிற்கு அழைத்து வந்தான் ஷ்யாம்.
“ஷ்யாம் எனக்கு மதுரைக்கு போகணும்”
“போகலாம். இந்த மாநாடு முடிந்ததும் இந்தியா சென்று நடந்ததை கண்டுபிடிக்கலாம்”
“ஷ்யாம் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும்”
அவளுக்கு ஆறுதல் சொல்லும் எண்ணத்திலிருந்தவன் அவள் பேசியதைக் கவனிக்காமல் "இந்தியா சென்று பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்ல "எனக்கு இப்போதே நாம் திருமணம் செய்துகொள்ளத் தோன்றுகிறது"
“சுந்தரி, கூல்”
“இல்லை ஷ்யாம் என்னால் அவர்கள் என்ன நினைத்திருக்க முடியும் என்பதைக் கணிக்க முடிகிறது.என் அம்மா அவளைப் போல என்னைப் போல விழிப்பு நிலையில் இருக்கும் மனிதர்கள் நிறைய உருவாக நினைத்திருக்கிறார். கருணையும் அன்பும் மட்டுமே இவ்வுலகில் நிலையானது அதுவே உண்மை” “அதுவே கடவுள். ஷ்யாம் கேள், எனக்குள் இருந்த தேடல் தொலைந்து விடுமோ என்றெண்ணித் தான் உன்னுடன் எந்த பிணைப்பும் வேண்டாம் என்றேன்.இப்போது புரிகிறது என்னால் உன்னுடனான இந்த பிணைப்பை அகற்ற முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதாள்.”

ஷ்யாம் அவளை அணைத்து அமைதிப்படுத்தினான். சுந்தரிக்கு அந்த இரவு கேள்விகளை கேட்டுக்கொண்டே போனது. இத்தனை நாள் எப்படி அவள் பெற்றோர் பற்றிய தேடல் இல்லாமல் இருந்துவிட்டாள்! குற்ற உணர்ச்சி அவளை அவர்கள் மரணத்தை பற்றி சிந்திக்க வைத்தது வதைத்தது.யாரும் தொடக் கூடாத, யாரையும் தொட விடாத விசயமாக அது இருக்க உண்மை எதிரே உடைபட்டு இருப்பது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் ஷ்யாமை லாஸ் வேகாஸ் அழைத்துச் சென்று திடீர் கல்யாணம் செய்து கொண்டாள். ஏன் செய்கிறாள் என்ற கேள்விக்கும் விடை தெரியவில்லை. ஷ்யாம் அவளின் எந்த முடிவிற்கும் கூட இருப்பேன் என்ற முடிவிலிருந்ததால் அவள் திருமண யோசனைக்கு சம்மதம் சொன்னான்.

முகம் முழுக்க பூரிப்பாக அவன் மோதிரம் அணிய அவள் சிரிக்க அபத்தமான அவள் செய்கையும் அவனுக்குள் சில் மழை பொழிந்தன. அவள் முகத்தில் முன் குனிந்து அவன் முத்தம் கொடுக்கவும் கண்களை விரித்துப் பார்த்தவள் தலையில் உண்மை கொட் என்று கொட்டியது.

அவள் பேந்த விழித்து அவனை பார்க்க எதையும் யோசிக்காமல் அடுத்து வரும் நாட்களை கொண்டாடலாம் என்று அவளை அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் டூர் அழைத்துச் சென்றான்.

சில நேரம் அவளாக எதையோ யோசித்து அழ சில நேரம் அவன் தோள் மீது தலை சாய்த்து ஆறுதல் அடைந்தாள். ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிர்ச்சிகள் புரட்டிப் போடுவது சகஜம் தானே!

புனே திரும்பியவர்கள் ஷ்யாம் சுந்தரி கல்யாண ரிசப்ஷனுக்கு தயாரானார்கள். அவள் அறையில் குதூகலமாக இருந்தவளிடம் பேச வந்தார் சிவாஜி.

“ஆக நீ ஜீனியஸ் பூங்கொடி மகள் அல்லவா”
தலைதூக்கிப் பார்த்தவள் “ஆமாம்”

“சரி இந்த விசயம் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். பூங்கொடி ஒரு டெரரிஸ்ட் கும்பலுக்கு நுண்ணுயிர் ஆயுதம் செய்துகொடுதாள் என்ற வதந்தி உண்டு. பொறு அது வதந்தி இல்லை என்பது தெரியும். அப்படி அவள் செய்துகொடுத்த கும்பலுக்கு காசு கொடுத்து உதவியது அப்போது இருந்த சில நிறுவனங்கள். அது எந்தெந்த நிறுவனம் என்று இந்த பைலில் இருக்கிறது தெரிந்துகொள்”

அவர் சென்றபின் அதை திறந்து பார்த்தவள் ஆச்சரியம் ஆனாள். அதில் குறிப்பிட்டிருந்த நிறுவனங்கள் எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள். எப்படி இப்படி ஒரு காரியத்தில் இத்தனை பேர் மாட்டினர்கள் என்ற குழப்பம் கூடியது.

யோசிக்காமல் மதுரை கிளம்பி சென்றாள். சுந்தரி மதுரை சென்றடைந்து ஷ்யாமிற்கு தெரிவுபடுத்தினாள். சுந்தரியின் மாமா பயந்தாலும் அவள் கேட்டதும் அந்த வீட்டின் சாவியைக் கொடுத்தார்.

சுந்தரி எதிர்பார்த்தது போல அவள் அம்மா அப்பா இருவரின் ஆராய்ச்சி குறிப்புகள், அதன் விவரமான கையேடுகள் என்று எல்லாம் அங்கே இருக்க அதையெல்லாம் எடுத்துப் பார்க்க தொடங்கினாள்.

எல்லா ஆராய்ச்சி குறிப்புகள் போல அவைகள் இருக்க நுண்ணுயிர் அயுததை பற்றிய குறிப்புகள் எதையும் காணவில்லை.

மூன்று நாட்கள் வீட்டை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டாள், கிடைக்கவில்லை . கடைசியாக நுண்ணுயிர் அயுத்ததை அவர்கள் யாரிடம் கொடுத்தார்களோ அவர் கையொப்பமிட்ட காகிதம் கிடைத்தது.

அதை வைத்து அவரை தேடி அவள் கேட்க அவர் அந்த நிறுவனர்கள் தான் நுண்ணுயிர் தயாரிக்க பணம் கொடுத்தவர்கள் என்ற உண்மையை சொன்னார்.

சுந்தரி குழம்பி போனாள். நல்ல காரியம் செய்கிறேன் என்று பணம் கேட்டாலே கொடுக்காத நிறுவனங்கள் இப்படி ஊரையே அழிக்கும் நுண்ணுயிர் ஆராய்ச்சிக்கு பணம் கொடுத்ததா?

குழம்பி தவித்து அமர்ந்திருந்தவள் பக்கம் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்ப்பதற்குள் நீண்ட வாள் அவள் கையை கிழித்தது. ஆபத்தை உணர்ந்தவள் எழுந்து வீட்டின் கதவை நோக்கி ஓட காலில் வெட்டு விழுந்து. ஆனாலும் கதவு பக்கம் போனவள் கதவை திறக்க முடியவில்லை. கூச்சல் போட தொடங்கியவள் வீட்டின் மாடி நோக்கி ஓட துரத்தி கொண்டு வந்தான் வாள் பிடித்திருந்தவன்.

சுந்தரி மாடி கதவைத் திறந்து ஓடவும் மாடியில் ஒருவன் குதித்து ஓடி வந்து அவனுடன் சண்டை போட்டான். காப்பாற்ற வந்தவன் கூரான ஆயுதம் ஒன்றை எடுத்து அந்த கொலையாளி கையில் குத்த அடுத்த சிறிது நேரத்தில் கொலையாளி மயங்கினான். அவனுடன் சேர்ந்து சுந்தரியும் மயங்கினாள்.

இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க அவனை காவல்துறை பிடித்துப் போனது. ஷ்யாம் சுந்தரியை திட்டி தீர்த்தான்.

அவளை காப்பாற்றியவன் “ஹை நான் உங்கள் ஃபேன். உங்களை சாருக்கு கண்டுபிடித்துக் கொடுத்தது நான் தான். உங்கள் அம்மா அந்த டாகுமெண்ட்ஸ் மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு தெரியும். நீங்க சரி ஆகிட்டு வாங்க நான் எடுத்துக் கொடுக்கிறேன்” என்றான்

அவள் சிரித்தபடி கண் அயர்ந்தாள். அந்த வீட்டில் தேடிய போது சில பேப்ரகளில் சின்ன பெண் சுந்தரியின் கிறுக்கல்கள் இருந்து. அது கண்ணுக்குள் வந்து போனது.

ஐயோ இப்படி தனியாக பெண்ணை விட்டு போகிறோமே! இந்த உலகம் ஆபத்து நிறைந்ததாயிற்றே என்று கதறியபடி உடலிலிருந்து சிதறி விழுந்து காற்றில் கலந்துவிட்ட அமர் பூங்கொடி சிரித்தனர் சுந்தரியும் சிரித்தாள்.
 

swwee

Active member
Wonderland writer
அநுபந்தம்

தேறிவந்தவள் அந்த கிறுக்கல்கள் உள்ள காகிதங்களை சேர்த்து வைத்து பார்த்து உண்மை அறிந்தாள் நுண்ணுயிரி ஆயுதம் உயிரை அழிக்காது. அறிவை மேம்படுத்தும், உடல் ஆற்றல் வளர்க்கும், வன்முறை எண்ணங்கள் வளர்வதை குறைக்கும். இதை சொல்லியே அவள் ஆராய்ச்சிக்கு பெரிய நிறுவங்களிடம் முதலீடு வாங்கியிருக்கிறாள்.

நோய் எதிர்ப்பு சக்தியோ, மனிதம் வளரும் சக்தியோ சந்தையில் இருப்பது நல்லதில்லையே! இந்தப்பக்கம் பணம் கொடுத்துவிட்டு அந்த பக்கம் அவளை அழிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

தாய் விட்டு சென்ற ஆராய்ச்சியை தொடங்கும் முடிவோடு தொடர்ந்தாள் சுந்தரி.
 
Status
Not open for further replies.
Top