ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 10

"உன் அப்பா" என்று அவள் சொன்னதும் ஜீவாவின் முகம் மாறியது..

வார்த்தைகளின் வீரியம் உணர்ந்து தான் இவள் பேசுகிறாளா என்ற எண்ணம் ஜீவாவுக்கு வந்து போனது.

"இன்னும் புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியா?" என்று அர்த்தமாக கேட்டபடி தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள் யசோதா.

"யசோ யோசிச்சு பேசு..." சினத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.

"யோசிச்சதால தான் இப்படி பேசுறேன்" அவளது பதில்கள் ஏகத்துக்கு அவனுக்கு கோவத்தை கொடுத்தது... ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்த போராடினான்.

"லுக், என்னை நீ அவாய்ட் பண்ணுறதுக்கான உண்மையான காரணம் எனக்கு வேணும்... பொய்யான காரணம் சொல்லி, அதுவும் இப்படிப்பட்ட ஒரு காரணத்தை சொல்லி உன்னை நீயே அசிங்க படுத்திக்காத... இதை எல்லாம் கேட்டுட்டும் அமைதியா இருக்க எனக்கு பொறுமை இல்லை"

"உன்னை நான் பொறுமையா இருக்க சொல்லலையே, இங்க இருந்து போக தான் சொல்லுறேன், ஓகே நான் சொன்னது எல்லாம் பொய் தான்! அசிங்கம் தான் ஆனால் நீ இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தன்னுவையேன் இதை விட அசிங்கமா ஏதாவது பேசுவேன்... புரியுதா? அதனால் வந்த வழியை பார்த்து கிளம்பு" என்றவள் வாசல் நோக்கி கை காட்டினாள்.

இவள் விஷயத்தில் அவன் பொறுமைசாலி தான் இருந்தும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துவிட்டு இன்னும் எவ்வளவு நேரம் தான் இவளிடம் கெஞ்சுவது?

"கடைசியா என்ன தாண்டி சொல்ல வர? தெளிவா சொல்லு"

"நான் தெளிவா தான் பேசுறேன் உனக்கு புரியலன்னா அதுக்காக நான் ஒன்னும் பண்ண முடியாது"

"அப்போ நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது அப்படி தானே?" அதீத கோவத்தில் கத்தினான், அந்த சத்தம் கேட்டு வைஷ்ணவியும், இந்திராவும் யாசோதாவின் அறைக்கு வெளியே வந்து நின்றனர்.

"ஆமா நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது இனிமேல் ஒன்னுமில்ல" என்றவள் காதலிக்கும் போது அவன் கொடுத்த பொருள்களை எல்லாம் வைத்திருந்த அந்த பெட்டியை எடுத்து அவனை நோக்கி தூக்கி போட்டாள்...

சினம் கொண்டு அதனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்
"என்னை நீ ரொம்ப காயப்படுத்துறடி ஒருநாள் என் நிலமையில நீ இருப்ப, அப்போ உன்னை பத்தி யோசிக்க இதே நிலமையில நான் இருக்க மாட்டேன்... அப்போ உனக்கு என் வலி புரியும்" என்றவனின் கண்கள் மட்டுமல்ல மனமும் கலங்கி போனது...

மேல் நோக்கி பார்வையை செலுத்தி கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன் "கடைசியா ஒரு வாரம் உனக்கு நான் டைம் தரேன் அதுக்குள்ள நீ என்னை தேடி வரல அப்புறம் நீ எவ்ளோ தேடினாலும் நான் உனக்கு கிடைக்க மாட்டேன்" என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அழுத்தமாக பார்த்தபடி அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனை எந்த வித உணர்வுமின்றி பார்த்தபடி நின்றாள் யசோதா... ஜீவா சென்ற பிறகு யசோதாவை காட்டு தனமாக திட்ட ஆரம்பித்தார் இந்திராணி...

"என்ன தான்டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நானும் பார்த்துட்டே இருக்கேன் உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்க? அந்த பையன் மாதிரி ஒருத்தன் உனக்கு கிடைப்பானாடி? எதுக்காக உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுக்கிற"

"என் வாழ்க்கை தானே அது மண்ணா போனாலும் பொண்ணா போனாலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"இப்படி எடுத்தெறிஞ்சு பேசாதடி எரிச்சலா இருக்கு"

"என்கிட்ட இப்படி பேசுனா நான் அப்படி தான் பேசுவேன்..."

"கொஞ்சமாவது ஒழுக்கமா பேசுறியாடி"

"ஆஹான் உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு ஒழுக்கம் இல்லை அதனால தான் என் பேச்சும் அப்படியே இருக்கு"

"தப்பு பண்ணுற யசோதா? ரொம்ப தப்பா இருக்க... உன் அப்பாவை மாதிரியே எதையும் யோசிக்காமல் நடந்துகிற... ஒருநாள் வாழ்க்கையை இழந்துட்டு நிற்க போற! அப்போ அம்மா சொன்னது சரின்னு உனக்கு புரியும்"

"என்ன சாபமா?" இளக்காரமா சிரித்தாள்.

"சாபம் இல்லடி இது என் ஆதங்கம் ஏண்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டிங்குற? நான் உன் அம்மாடி என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா"

"இல்லை" என்று ஒற்றை வார்த்தையில் மேலும் அவரது மனதை உடைத்தாள்.

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியோ "உண்மை என்னன்னு தெரியாமல் வாயுக்கு வந்தபடி எல்லாம் பேசாதீங்க யசோதா... ஒவ்வொரு முறையும் உங்க வார்த்தையால இவங்களை நீங்க கொன்னுட்டு இருக்கீங்க, இதெல்லாம் பெரிய பாவம், இந்த பாவம் உங்களை நிம்மதியா வாழ விடாது" என்றாள் வருத்தத்துடன்..

"என்னடா இது ஆளாளுக்கு சாபம் கொடுக்குறீங்க? சாபம் கொடுக்குற அளவுக்கு நீங்க யாரும் நல்லவங்களும் இல்லை, ஐயோ அது பலிச்சிடுமோ நம்ம வாழ்க்கை பறிபோயிடுமோன்னு பயப்பட எனக்கு நல்ல வாழ்க்கையும் இல்லை... இழக்கிறது இனி என்கிட்ட என்ன இருக்கு ஒண்ணுமே இல்லை... அதுக்காக நான் வருத்தப்படபோறதும் இல்லை... ஹான் அப்புறம் வைஷ்ணவி, உன் இடம் எதுன்னு அன்னைக்கே உனக்கு புரியும் படி நான் எடுத்து சொல்லிட்டேன்... மறுபடியும் மறுபடியும் எதுக்காக என் குடும்ப விஷயத்தில் வந்து நாட்டாமை பண்ணனும்னு நினைக்கிற? ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? இந்த வீட்டுல தான சாப்பிடுற? சாப்பாட்டுல உப்பு எல்லாம் அதிகமாவே தானே இருக்கு? அப்படி இருந்தும் உனக்கு சுரனை வரலன்னா? அதுக்கு என்ன அர்த்தம்?" கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பேசினாள். ஆனால் இம்முறை அதற்கெல்லாம் கவலைப்படும் மனநிலையில் வைஷ்ணவி இல்லை... 'நீ என்ன சொன்னாலும் சரி உண்மை எதுவென உனக்கு உணர்த்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என்பது போல துணிவாக நின்றாள்.

"வைஷு உனக்கு எதுக்குடா இந்த அவமானம்... இவளுக்கு வெறி பிடிச்சிடுச்சு இனி என்ன தான் சொன்னாலும் இவளுக்கு எதுவுமே புரிய போறது இல்லை"

"அடேங்கப்பா என்ன நல்லவர்கள் கூட்டணியா?" ஏகத்தாளமா பேசினாள் யசோ. அதனை கண்டு 'சீ' என்றானது இந்திராவுக்கு...

"இல்லமா நான் சொல்ல தான் போறேன்" என்ற வைஷ்ணவி, யசோதாவின் தந்தையை பற்றியும் எதற்காக இந்திரா இவளை விஸ்வநாதன் உதவியுடன் இங்கு அழைத்து வந்தார் என்பதை பற்றியும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

"இப்போவது உண்மை என்னன்னு உங்களுக்கு புரியுதா? நீங்க நினைக்கிற மாதிரி உங்க அப்பா நல்லவர் இல்லை? இந்த உண்மை உங்களுக்கு தெரிஞ்சா நீங்க வருத்தபடுவீங்கன்னு தான் இவ்ளோ நாளும் இதை உங்களுக்கு தெரியாமல் இந்திரா அம்மா பார்த்துக்கிட்டாங்க... அவங்க உங்க மேல உயிரே வச்சு இருக்காங்க, தயவு செய்து இனிமேலும் அவங்களை காயப்படுத்தாதீங்க" என்றாள் வைஷ்ணவி. இதை அனைத்தையும் கேட்ட பிறகும் கூட யசோதாவின் முகத்தில் சிறு சலனமும் இல்லை...

"அவ்ளோ தானா எல்லாம் சொல்லி முடிஞ்சுதா?" என்றபடி அவர்களை பார்த்தாள்.

அவளது அமைதிக்கான காரணம் புரியாமல் வைஷ்ணவியும், இந்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர்.

உண்மையில் இவளுக்கு என்ன தான் ஆனது ஒருவேளை அவளது தந்தையை பற்றிய உண்மையை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியாகி விட்டாளோ? என்ற யோசனையுடன் "யசோதா" என்று மென்மையாக அழைத்தார் இந்திரா...

அப்போது அவர்கள் இருவரது கரத்தையும் பிடித்து தன் அறைக்கு வெளியே கொண்டு சென்று விட்ட யசோதா 'என் அப்பா நல்ல கணவனா இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு அவர் எப்போதும் நல்ல அப்பா தான்... உனக்கு உன் புருஷன் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு என் அப்பா மேல நம்பிக்கை இருக்கு என்னைக்கும் அவர் என்னை ஏமாத்தமாட்டாரு... சத்தியமா இப்படி ஒரு தப்பை என் அப்பா எனக்கு பண்ணியிருக்க மாட்டாரு... அம்மா மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டல்ல? 'இருக்கு' நீ எப்போவும் யாரையும் சரியா புரிஞ்சுகிட்டது இல்லங்குற நம்பிக்கை இருக்கு... யாரை நம்பணுமோ அவங்களை நம்பாத, யாரை நம்பக் கூடாதோ அவங்களை மட்டும் நம்பு...என் இடத்தில இருந்து யோசிக்க தெரியாத யாருக்கும் என்னை குறை சொல்ல தகுதியே இல்லை" என்றபடி கதவினை பூட்டிக்கொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்த யசோதவின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது...

ஆம் யசோதாவுக்கு அனைத்துமே நினைவில் இருந்தது ஆரம்பத்தில் அந்த காட்சிகள் கனவு போல அவளது சிந்தையில் வந்து போனது நாளடைவில் அந்த காட்சிகள் கனவு அல்ல என்பதை உணர்ந்து கொண்டாள். அவளிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை அவள் தெளிவாக இருக்கும் போதே அவளது தந்தையுடன் கண்டிருக்கிறாள் அல்லவா? பின்னர் எப்படி அந்த நபரின் முகம் அவளுக்கு மறக்கும்... மேலும் அவருடன் இருந்த அந்த இன்னொரு நபர் தான் யசோதாவின் இந்த மன அழுத்தத்துக்கு காரணமானவர்.

*****

அலுவலகத்தினுள் கம்பீரமாக நுழைந்தான் ஆரியன், அவனை கண்டதும் ஊழியர்கள் முகத்தில் இனம்புரியா நிம்மதி நொடியில் தோன்றி மறைந்தது... கருணாவிடம் கூட தெரிவிக்காமல் தான் இப்போது அங்கு வந்திருந்தான்.

நேராக தனது அறைக்குள் நுழைந்தான், அங்கு யாரும் இல்லை அவனது இருக்கை அவனுக்காக காத்திருந்தது... ஆனால் அவன் அந்த இருக்கையில் அமரவில்லை, தொலைபேசியை எடுத்து மேனஜருக்கு அழைத்து "கருணாவை வர சொல்லு" என்று கூறினான்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் ஆரியனது அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்திருந்தான் கருணா...

"என்ன ஆச்சர்யம் திடீர்னு ஆபிஸ்க்கு வந்து இருக்க?" என்று செய்கையில் விசாரித்தான் கருணா...

"ஏன் நான் வரக்கூடாதா? இது என் ஆபிஸ் நான் இப்போ வேணாலும் வரலாம்... போகலாம்" என்றதும் கருணாவது முகம் சத்தமின்றி மாறியது.

"உண்மை தான்" என்பது போல வெளியே சிரித்த முகமாக நின்ற கருணாவை நோக்கி வந்த ஆரியன், அவனது தோளில் கரம் போட்டு "நான் இவ்ளோ நாள் ஆபிஸ் வரலன்னாலும் என் இடத்தை எவ்ளோ க்ளீனா மெயின்டன் பண்ண சொல்லி இருக்க? குட்... இந்த ரூம் இவ்ளோ க்ளீனா இருக்குறத பார்த்ததும் நான் கூட வேற யாரும் இத்தனை நாளா இதை பயன்படுத்துட்டு இருந்ததா நினைச்சேன்.." என்றவன் ஒற்றை புருவம் உயர்த்தை கருணாவை பார்க்க, அவனோ "அப்படி எல்லாம் இல்லை இது உன் இடம் உனக்கான இடம் இதை யாராலும் நிறப்பவும் முடியாது எடுத்துக்கவும் முடியாது" என்பது போல செய்கை செய்தான்.

"ம்ம்ம்... அப்படி எடுத்துக்கணும்னு நெனச்சா அது தான் அவங்களோட கடைசி ஆசையா இருக்கும்" என்று கூறி இதழ் வளைத்து சிரித்தான் ஆரியன். அதனை கண்டு
மிதமாக சிரித்த கருணா, "இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்த பிறகு வந்துருக்கலாமல்ல" என கையசைக்க...

"எவ்ளோ நாள் ரெஸ்ட் எடுக்குறது மொத்தமா இந்த ஆபிஸை இழுத்து மூடுற வரை ரெஸ்ட் எடுக்கவா?" என்று ஆரியன் கேட்டதும் சற்று அதிர்ந்து போனான் கருணா... ஆம் அலுவலகத்தில் ஏகப்பட்ட குளறுபடி... மூழ்கும் நிலையில் இருக்கிறது, என்பதை நம்பிக்கையான ஒருவர் முலம் அறிந்து கொண்டான் ஆரியன்.

"அது உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்" என்று கருணா காரணம் சொல்ல முன்வரவும் "விடு இதுல உன் தப்பு என்ன இருக்கு? அதான் நான் வந்துட்டேன்ல இனி எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்..." என்ற ஆரியன் ஒரு நிமிடம் நிறுத்தி "அப்புறம் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு கம்பெனியை நான் பார்த்துகிறேன், மூணு நாள் மட்டும் தான் அப்புறம் திரும்பி வந்திடுவேன், அதுக்குள்ள என்னோட இந்த டேபிள் சேர் எல்லாத்தையும் புதுசா மாத்திடு எனக்கு என்னமோ இதுல வேற யாரோ உட்கார்ந்த மாதிரி ரொம்ப அன்கம்பர்ட்டபிலா பீல் ஆகுது" என்றபடி அங்கிருந்து சென்றான் ஆரியன்.

அடுத்தநாள் மலர்கனையாளை சந்திக்க சென்றான் ஆரியன், இம்முறை அவன் செல்லும் போது கார் ஒன்று வெகு தூரம் அவனை பின்தொடர்ந்து வந்தது. அதனை ஆரியனும் கவனித்துக் கொண்டான், உடனே வண்டியை வேறு பாதையில் திருப்பியவன், பின் தொடர்ந்த அந்த கார் உண்மையில் தன்னை தான் தொடர்கிறதா என்பதை தெளிவா அறிய இடையில் ஒரு இடத்தில் வாகனத்தை வளைத்து திருப்பி பதுங்கி நின்றான்..

ஆரியன் எங்கும் காணவில்லை என்று பின் தொடர்ந்து வந்த அந்த கார் சட்டென பிரேக் போட்டு அங்கேயே நிற்கவும், ஆரியனது சந்தேகம் ஊர்ஜிதமானது...

"மிஸ் பண்ணிட்டோமோ?" என்று காரில் இருந்தவன் கண்ணாடி வழியே பின்னால் பார்க்க இருசக்கர வாகனத்தில் கரத்தை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் ஆரியன். அவனை அங்கு கண்டதும் உடனே சுதாரித்து கொண்ட காரில் வந்த நபர் வேகமாக காரை உயிர்ப்பித்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அந்த காரில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை... அதனால் அவன் யார் என அறிய எந்த தடையமும் கிடைக்காமல் போனது.

அவர்களை பின் தொடரும் எண்ணம் ஆரியனுக்கு இல்லை... எப்படியும் ஒருநாள் சிக்குவான் அப்போதும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக அந்த ஒத்தயடி பாதையில் வாகனத்தை செலுத்தினான்.

வேதாசலத்தை சந்தித்த ஆரியன் "இந்திரா" என்று அவர் காதில் கூறவும், வேதாசலம் முகம் மாறியது... அவரது மனம் பதரியது, தடுமாறியது. அந்த தடுமாற்றமும், பயமும் ஆரியனுக்கு போதுமானதாக இருந்தது.

***
அடுத்த நாள் தனது டிடெக்டிவ் நண்பனுக்கு அழைப்பு விடுத்த ஆரியன் இந்திராவை கடத்தி வரும் படி கூறினான். வேதாசலம் பற்றி விசாரிக்க...

"கடத்தலா?" என்று அவன் சிறிது யோசிக்க...

"உன்னால முடியலன்னா வேற ஆள் யாரையாவது வச்சு அதை பண்ணி முடி" என்று அழைப்பை துண்டித்தான்.

இந்திராவும் கடந்த இரண்டு நாட்கள் பெரிதாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை... அப்படியே வந்தாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமா இருந்தது. கடத்தல் தொழிலுக்கு புதிதாக வந்த அடியாட்கள் போல எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு ஆட்களை கடத்த சொன்னால் நாட்களை கடத்தினர்.

ஆரியன் வேறு போன் போட்டு விவேக்கை வறுத்தெடுக்க, எவனோ எப்படியோ நாசமா போங்கடா என்று இந்திராவுக்கு பதிலாக வைஷ்ணவியையும் இலவச இணைப்பாக வைஷ்ணவி கணவன் என்று கூறப்பட்ட அந்த மதியையும் கட்டி தூக்கி வந்து ஆரியன் சொன்ன இடத்துக்கு அழைத்து வந்தனர்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 11

வைஷ்ணவிக்கு அழைப்பு விடுத்தான் அவளது கணவன் மதி. இரண்டு வாரங்களுக்கு பிறகு அவனிடமிருந்து இப்படி ஒரு அழைப்பு வருகிறது... தொடு திரையில் அவனது எண்ணை பார்த்ததும் பதட்டமோ, ஆர்ப்பாட்டமோ சிறுது கூட அவளிடம் இல்லை.

விபத்துக்கு பிறகு மயக்கம் தெளிந்து தான் யார்? என்பதை பற்றி அவள், இந்திராவிடம் கேட்கவும், உன் பெயர் வைஷ்ணவி 'இவன் தான் உன் கணவன்' என்று கூறினார்கள், 'அப்படியா?' என்று அப்போது முழித்தவள் இப்போது வரை அப்படியே தான் முழித்துக் கொண்டிருக்கிறாள்.

கணவன் என்று அவன் மீது ஈர்ப்போ, ஆர்வமோ துளியளவும் இல்லை... அது ஏன் என்று இன்றளவும் அவளுக்கு தெரியவில்லை.

அழைப்பை ஏற்றவள் எதுவும் பேசவில்லை..

"ஹாய் வைஷு இப்படி இருக்க?" மதி உற்சாகமான குரலில் பேசினான்.

"ம்ம்ம்" சுரத்தை இல்லாமல் இவளிடமிருந்து பதில் வந்தது

"என்னடா கோவமா? சாரிமா இரண்டு வாரமா ஒரே வேலை அதான் உன்கிட்ட பேச முடியல..."

"ம்ம்ம் பரவாயில்லை"

"அவ்ளோதானா! என்னை நீ எதிர்பார்த்துட்டு இருப்பன்னு நம்பி கால் பண்ணேன் ஆனால் நீ! எனக்கு அதை பத்தி கவலையே இல்லங்குற மாதிரி பேசுற?"

"அப்படி எல்லாம் இல்ல, எப்போ வரீங்க?" தான் யார் என்பதை அவனிடம் கேட்டு தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு... அந்நேரம் அவர்களது வீட்டு காலிங் பெல் அழுத்தபட்டது, அந்த சத்தம் கேட்டு "ஒரு நிமிஷம் இருங்க, யாரோ வந்து இருக்காங்க யாருன்னு பார்த்துட்டு வரேன்" என்றவள் விரைந்து வந்து கதவை திறக்க, வெளியே நின்றுகொண்டிருந்தது வேறு யாருமில்லை மதிவாணன் தான்.

"எப்படி இருக்க?" என்றவனை பார்த்து அப்படியே உறைந்து நின்றாள் வைஷ்ணவி...

"வைஷு, என்ன ஆச்சு? என்ன பார்த்து மயங்கிட்டியா என்ன?"

"அது நீங்க எப்படி? எப்போ!"

"எப்படி வந்தேன்னு சொல்லணுமா? இல்லை ஏன் வந்தேன்னு சொல்லணுமா? சரி உள்ள வா பேசிக்கலாம்" என்றவன் அவளை தாண்டி வீட்டுக்குள் நுழைந்தான். அதனை வெளியே நோட்டமிட்டுக் கொண்டிருந்த கடத்தல்காரர்கள் பார்த்து விவேக்குக்கு தெரிவித்தனர்.

"சார்... புதுசா ஒருத்தன் அவங்க வீட்டுக்கு வந்து இருக்கான்?"

"இவன் யாருடா புது கேரக்டர்?"

"தெரியல சார்"

"சரி கவனமா வாட்ச் பண்ணுங்க" என்று அழைப்பை துண்டித்த விவேக் "சரோ குட்டி மாமாக்கு இன்னொரு தோசை எடுத்துட்டு வா" என்று தன் மனைவியை வேலை ஏவினான்.

"சரோ தோசை எங்க மா" அந்த பக்கம் சத்தமே இல்லை என்றவுடன் தட்டை தூக்கிக் கொண்டு நேராக சமையலறைக்குள் சென்றான்.

அங்கு சரோஜினியோ தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். அதனை கண்டவன் "ஏண்டி ஒரு தோசை கேட்டு எவ்ளோ நேரம் ஆகுது, அதான் இவ்ளோ சுட்டு வச்சு இருக்கியே ஒண்ணு எடுத்து கொண்டு வந்து கொடுத்தா தான் என்ன?"

"ஏன் உங்களுக்கு கை இல்லையா? வந்து எடுத்து போட்டு சாப்பிட்டா குறைஞ்சா போவீங்க?"

"வர வர நீ ஆளே சரி இல்லடி... பார்த்துகிறேன்" என்றவன் தோசையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க "கொஞ்சம் நில்லுங்க" என்றாள் சரோஜினி.

"என்ன?"

"என் சித்தி பொண்ணுக்கு ட்ரெஸ் வாங்கி கொடுத்தீங்களா?"

'ஆஹா இது எப்படி இவளுக்கு தெரியும்' என்று மனதில் யோசித்து கொண்டவன் "இல்லையே" என்று பொய் கூறினான்.

"பொய் சொல்லாதீங்க, என் தங்கச்சி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா" என்றவள் கையில் வைத்திருந்த ஆப்ப கரண்டியை தூக்கி விசிறியடித்தாள்.

"இப்போ எதுக்கு இவ்ளோ கோவப்படுறா? காலேஜுக்கு போட்டுட்டு போக ட்ரெஸ் இல்ல மாமா ஒரு ரெண்டு சுடிதார் வாங்கி கொடுங்கன்னு சொன்னா நானும் பாவமேன்னு சொல்லி வாங்கிக் கொடுத்தேன் இதுல என்ன தப்பு இருக்கு"

"வாங்கி கொடுத்தது தப்பு இல்லை அதை ஏன் நீங்க வாங்கி கொடுத்தீங்கன்னு தான் கேட்குறேன்.. என்கிட்ட பணம் கொடுத்து அவளுக்கு வாங்கி கொடுக்க சொல்லி இருக்கலாமே?"

"யாரு வாங்கி கொடுத்தா என்னடி?"

"வாங்கி கொடுக்க கூடாது, முதலில் அவள் கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?"

"உன் தங்கச்சிக்கு தானேடி வாங்கி கொடுத்தேன், அதுக்கு எதுக்குடி இப்படி லூசு மாதிரி கத்துற?"

"ஆமா நான் லூசு தான் இனி உங்க கண்ணுக்கு நான் அப்படி தான் தெரிவேன்... போச்சு என் வாழ்க்கையே போச்சு, இப்படி சொல் பேச்சு கேட்காத மனுஷனை கல்யாணம் பண்ணிட்டு தினம் தினம் நான் கஷ்டப்படுறேன். ஊருல உலகத்துல எத்தனையோ புருஷனுங்க அவங்க பொண்டாட்டி கண் அசைவுக்கே காலுலில் விழுந்து கிடக்கிறாங்க. ஆனால் எனக்கு அந்த குடுப்பினை இல்லை எல்லாம் என் விதி" என்று உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்... விவேக்கோ தலையில் கைவைத்து கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டான். அதனை கண்டவள் "இப்போ எதுக்கு தலையில் கைவைக்குறீங்க? ஹான் சொல்லுங்க நான் உங்களை அவளோ கொடுமை படுத்துறேனா?" என்று அதற்கும் வம்பு வளர்த்தாள்.

"அம்மா தாயே நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சிடு" கையெடுத்து கும்பிட்டு விட்டான்.. தவறு யார் பக்கம் இருந்தால் என்ன? ஒரு மன்னிப்பு கேட்டு சண்டையை தவிர்த்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவன் விவேக்.

"அது என்ன தப்பு பண்ணி இருந்தா? தப்பு முழுக்க உங்க மேல தான்" என்றதும் அவன் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நின்றான்.

"ஓ அந்த அளவுக்கு ஆகிடுச்சா? என்ன அடிக்க முடியலன்னு உங்களை நீங்களே அடிச்சிக்குறீங்க, அப்படி தானே?"

"ஐயோ அப்படி எல்லாம் இல்லடி?"

"வேற எப்படி? நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்ப கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க"

'ஆமா நான் குட்டையன், இவள் அப்படியே ஐநூறு மீட்டர் அகலம், ஆயிரம் மீட்டர் உயரம் பாரு என்னை குறை சொல்ல வந்துட்டா, என்னமோ இவளோ விட நான் ஒரு இரண்டு இன்ச் உயரம் கம்மி அதுக்கு போயி கல்யாணம் ஆன புதுசில இருந்து இதையே சொல்லி சொல்லி கடுப்பாக்குறாள்' மனதில் திட்டிக் கொண்டான்.. ஆனால் வெளியே ஒன்றும் பேசவில்லை. அந்நேரம் தான் ஆரியனிடமிருந்து அழைப்பு வந்தது.. இரண்டு முறை அழைப்பை ஏற்கவில்லை, மூன்றாவது முறையும் அழைப்பு வந்தது, சரோஜினி ஒரு மாதிரி சந்தேக பார்வை பார்க்க, 'இதுக்கு மேல போனை எடுக்காமல் இருந்தால் டைவர்ஸ் தான்' என்று எண்ணிக் கொண்டு அழைப்பை எடுத்தான்.

"சொல்லு ஆரியா"

"இன்னும் என்னடா புடுங்கிட்டு இருக்க? உங்கிட்ட வேலை சொல்லி எவ்ளோ நாள் ஆச்சு"

'என் கவலை உனக்கு எங்கடா புரிய போகுது' என்று மனதில் நினைத்துக் கொண்டவன் சரோஜினியை பார்த்து அசட்டு தனமா சிரித்தபடி வெளியே வந்தான்.

"என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது நாளைக்கு நான் சொன்ன இடத்தில அந்த லேடி இருக்கணும்... ஏதாவது காரணம் சொன்ன அவ்ளோ தான்" என்ற ஆரியன் அழைப்பை துண்டிக்க... விவேக்கின் பின்னால் வந்து நின்றாள் சரோஜினி.

"யாரு போனில?"

"பிரெண்டுமா வேலை விஷயமா?"

"வேலை விஷயமா இருந்தா வீட்டுக்குள்ள வச்சே பேசலாமே, எதுக்கு போனை தூக்கிட்டு வெளியே வந்தீங்க?"

"அடியே ஒன்னொண்ணுக்கும் காரணம் கண்டு பிடிச்சு கேள்வி கேட்காதடி... உனக்கு பதில் சொல்ல எனக்கு தெம்பில்லை" என்றவனது எண்ணிற்கு மீண்டும் அழைப்பு வந்தது.

"இவனுங்க வேற? என்னடா பிரச்சனை உங்களுக்கு மனுஷனை ஒரு இரண்டு நிமிஷம் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? எப்போ பாரு நை நை நைன்னுட்டே இருக்கீங்க?" என்று சரோஜினியை பார்த்தபடியே போனில் பேசினான்.

"சார் புதுசா ஒருத்தன் அந்த வீட்டுக்குள்ள போனானே?"

"ஆமா இப்போ என்ன அவன் மேல போயிட்டானா?"

"இல்ல சார் அவன் கூட சேர்ந்து அந்த வீட்டுல இருக்க ஒரு பொண்ணும் எங்கேயோ வெளியே கிளம்புறாங்க" என்றனர்.. அந்நேரம் விவேக்கின் வீட்டுக்கு சரோஜினியின் சித்தி பெண் 'மாமா' என்று அழைத்துக் கொண்டு உள்ளே வர, மனைவியையும் மச்சினியையும் மாறி மாறி பார்த்த விவேக் 'இன்னிக்கு நான் கண்பார்ம் கோமா' என்று மனதில் நினைத்துக் கொண்டு "வாய்ப்பு கிடைச்சா தூக்கிடு" என்றான் அடியாட்களிடம்..

"யாரை சார்"

"எவன் கிடைக்கிறானோ அவனை தூக்குங்கடா, நானே இங்க இருப்பனா! போவனான்னு தெரியல இவனுங்க வேற.. எவனோ எப்படியோ நாசமா போங்கடா" என்று மனைவிக்கு தெரியாமல் பேசியவன், அலைபேசியை அணைத்து விட்டு, "வாமா மச்சினி மின்னலு" என்று தன் குடும்ப பிரச்சனையை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

***
இந்திராவின் வீட்டிற்கு வந்த மதிவாணன் "ஆன்ட்டி இல்லையா வைஷு?" என்று கேட்டபடியே அந்த வீட்டை சுற்றியும் தனது பார்வையை சுழல விட்டான். அப்போது சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தார் இந்திரா.

அவரைக் கண்டதும் "ஹாய் ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தான் மதி, முதலில் அவனை அங்கு கண்டதும் சிறிது பதட்டமானவர் பின்னர் நிதானமடைந்து " நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? என்ன திடீரென சொல்லமால் கொள்ளாமல் வந்து இருக்க?"

"விஸ்வநாதன் சார் தான் வர சொன்னார் ஆண்டி... கையோட வைஷுவையும் அழைச்சிட்டு வர சொன்னாரு, இவள் கிட்ட ஏதோ பேசணுமாம்"

"இப்போவா?"

"ஆமா ஆண்டி நான் இவளை அழைச்சிட்டு போறேன்..."

"கொஞ்சம் நேரம் இருப்பா நானும் வரேன்"

"இல்ல ஆண்டி, விஷ்வா சார் எங்களை தனியா தான் வர சொன்னாரு"

"சரிப்பா பார்த்துப் போயிட்டு வாங்க"

"அம்மா நான் எப்படி தனியா?" வைஷ்ணவி தயங்கினாள்.

"என்னை பார்த்து நீ பயப்படவேண்டிய அவசியமே இல்லை வைஷு, உன் ஹஸ்பண்ட் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டான் மதி.

"அப்படி இல்லை" இன்னும் தயங்கினாள்.

"பயப்படாமல் போயிட்டு வாடா ஒன்னும் ஆகாது" என்று இந்திரா சொல்லவும் மதியுடன் கிளம்பி சென்றாள் வைஷ்ணவி.

காரில் சென்ற அவர்களை பின் தொடர்ந்து வந்தனர் கடத்தல் காரர்கள்.. வைஷ்ணவியின் மனமோ நிலையில்லாமல் இருந்தது.. உடனே வழியில் ஒரு கோவிலை பார்த்ததும் வண்டியை நிறுத்தும்படி சொன்னாள்.

மதியும் வண்டியை நிறுத்தினான்...

"நான் சாமி கும்பிட்டு வரேன்.."

"ஓகே இரு நானும் வரேன்" என்ற மதியும் அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான். சங்கடத்துடன் அவனோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் வைஷ்ணவி.

அந்த கோவிலில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை, அவர்களை பின் தொடர்ந்து வந்த கடத்தல் காரர்களுக்கு அது வசதியாகி போனது தக்க நேரம் பார்த்து யார் கண்ணிலும் படாமல் அவர்களை கடத்த முயற்சித்தனர் ஆனால் முடியவில்லை... முயற்சி தோல்வியில் முடிந்தது.

சாமி கும்பிட்டு விட்டு இருவரும் மீண்டும் காரில் ஏறினர்.. ஆனால் கார் டையர் பஞ்சர் ஆகி இருந்தது..
கடத்தல் காரர்கள் செய்த வேலை தான் இது.

"எப்படி பஞ்சர் ஆச்சு" என்று மதி யோசித்துக் கொண்டிருக்கும் போதே... நடமாடும் மெக்கானிக் என்ற போர்டை மாட்டிக்கொண்டு தடிமாடு கணக்காக ஒருவன் அவர்கள் முன் வந்து நின்றான். இதுவும் அவர்களது மாஸ்டர் பிளானில் ஒன்று... "சார் ஏதாவது உதவி வேணுமா?" என்று அவன் வாலண்டியராக வந்து கேட்கவும், மதிக்கு சற்று மனம் நெருடியது.

அவனது உருவத்தை கண்டு யோசித்தவன் "இல்ல பரவாயில்லை... வைஷு நீ காருக்குள்ள உட்காரு" என்று அவளை பாதுகாக்க நினைத்தான்.. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம் என்பதால் சற்று பதற்றமாக இருந்தது.

எங்கு இந்த பிளேனும் கெட்டு விடுமோ என்ற அச்சத்தில் அடியாள் கூட்டத்தில் இருந்த மற்றொருவன் அமைதியாக பின்னால் வந்து மதிவாணன் முகத்தில் மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையை வைத்து அழுத்தினான்.

மதிவாணனுக்கு மூச்சு திணறியது.. அதனை கண்ட வைஷு பயந்துபோய் காரில் இருந்து வெளியே வர இன்னொருவன் வந்து அவளை பிடித்து வாயை மூடி அங்கிருந்து இழுத்து சென்றான். மதிவாணன் இன்னும் மயக்கம் அடைய வில்லை... அவர்களிடம் இருந்து விடுபட போராடினான்.

"என்னடா மயக்கமாக மாட்டிங்குறான்?"

"டீவில எல்லாம் உடனே மயக்கமாகிடுவாங்கல்ல" என்று மதியை பிடித்துக் கொண்டிருந்த இரு அடியாட்களும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த அவர்களது தலைவன் அவர்கள் இருவர் மண்டையில் ஒரு தட்டு தட்டி "மயக்க மருந்து வச்ச உடனே மயக்கமாக இது என்ன சினிமாவா? கூட்டம் சேருறதுகுள்ள இவனை எவன் கண்ணுலையும் படாமல் தூக்கிட்டு வந்து வண்டியில ஏத்துங்கடா என்றபடி வைஷ்ணவியையும், மதியையும் கடத்தி கொண்டு வந்து ஆரியன் சொன்ன இடத்தில் கட்டி போட்டு வைத்தனர்.

"சார் பிளான் சக்ஸஸ்" என்று விவேக்குக்கு அழைப்பு விடுத்து அவர்கள் கூற... "ம்ம்ம்" என்றவன் சாரோஜினியின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.

குடும்பத்திற்குள் வீணாக பிரச்சனை வேண்டாம் என்று நினைக்கும் இவன் ஒரு நல்ல கணவன்.

***

உச்சபட்ச கோவத்தில் தனது வீட்டுக்குள் நுழைந்தான் ஜீவா.. அவனை கவனித்த விஸ்வநாதன் "என்னப்பா தனியா வந்து இருக்க? யசோதா வரலையா, கையோட அவளையும் அழைச்சுட்டு வரேன்னு சொன்ன?" நக்கல் தோணியில் கேட்டார்.

அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் "நீங்க கொடுத்த நாள் கணக்கு இன்னும் முடியல" என்றான்.

"ம்ம்ம் சரி தான் ஆனால் அந்த நாள் கணக்கு முடிஞ்சாலும் அவள் வர மாட்டா.. அதை முதலில் புரிஞ்சுக்க"

"ப்ளீஸ் டேட் என்னை கொஞ்சம் தனியா விடுங்க"

"ஓகே பைன் அப்புறம் நாளைக்கு எல்லாரும் வெளியே போறோம்... நீயும் ரெடியா இரு"

"நான் வரல"

"நீ வந்து தான் ஆகணும்.. மறுவார்த்தை பேச வேண்டாம்" என்றவர் வெளியே சென்றார்.

ஜீவாவுக்கு வாழ்க்கையே இருண்டு போனது... "என்ன வாழ்க்கை இது?" என்று யோசித்தபடியே கண்ணீருடன் மெத்தையில் சரிந்தான்... காதலிக்கும் போது யசோவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனால் அவளது பிரிவை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

***

வைஷ்ணவி மற்றும் மதி இருக்கும் இடத்துக்கு ஆரியனுக்கு முன்பாக விவேக் வந்து சேர்ந்தான். நாற்காலியில் அவர்களது கரங்கள் கட்டப்பட்டு, முகமோ ஒரு வெள்ளை துணி கொண்டு மூடி வைக்க பட்டிருந்தது... அதனை கண்டு பதறிபோனான் விவேக்.

"டேய் முகத்தை எதுக்குடா மூடி வச்சு இருக்கீங்க?"

"இப்படி தானே எல்லா படத்திலும் கடத்தி வச்சு இருப்பாங்க அதான் எப்படி சார் பிரமாதமா இருக்கா?"

"டேய் கிறுக்கணுங்களா முதலில் அவங்க முகத்தில் இருக்க துணியை எடுங்கடா மூச்சு முட்டி செத்துட போராங்க அப்புறம்
ஆரியனுக்கு பதில் சொல்ல முடியாது" என்ற விவேக் முதலில் மதியின் முகத்தை மூடியிருந்த துணியை எடுத்தான். அடுத்து வைஷ்ணவியின் தலையில் இருந்த துணியை எடுத்ததும் அவளை கண்டு அதிர்ந்து போனான். அவள் மயக்கத்தில் இருந்தாள்.

"அடேய் இவளை எதுக்குடா தூக்கிட்டு வந்தீங்க?"

"நீங்க தானே யாரு கிடைச்சாலும் தூக்க சொன்னீங்க,"

"அட பாறங்கள் மண்டையனுங்களா? முடிஞ்சு எல்லாம் முடிச்சு நான் செத்தேன்... இப்போ அவன் வந்து இவள் யாரு என்னன்னு என் கழுத்தை இல்லடா நெறிப்பான் அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுறது" யசோதாவை எதுவும் கடத்தி இருப்பார்கள் என்று எதிர்பார்த்தான் ஆனால் நிகழந்தது வேறு..

"இதுவும் அந்த வீட்டு பொண்ணு தான் சார்" என்று அவர்கள் சொல்லவும், ஆரியன் அந்த இடத்துக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.

"என்ன விவேக்" ஆரியனின் சத்தம் கேட்டதும்... அதிர்ந்து முழித்த விவேக், நாசுக்காக வைஷ்ணவியின் முகத்தை அப்படியே மூடி விட்டு இவன் புறம் திரும்பினான்.

"ஆரி எப்படி இருக்க? சொன்ன டைமுக்கு சரியா வந்துட்ட"

"ம்ம்ம் நான் எப்போவும் சரியா இருப்பேன்... நீ உன் வேலையை சரியா முடிஞ்சிட்டியா?" என்றவன் அங்கிருந்த நாற்காலியில் சாவகாசமாக அமர்ந்தான். அமர்ந்தவன் அங்கு கட்டி போட்டிருந்த மதியை பார்த்தான்.

"யாருடா இவன்?" என்று கேட்டான்.

"அதுவா.. இவன் ஒரு இலவச இணைப்பு ஆரி அவங்களை கடத்தும் போதும் இவனையும் சேர்த்து கடத்த வேண்டிய நிலைமை ஆகிடுச்சு"

"ஓ" என்ற ஆரியன் அங்கு கை, கால் கட்ட பட்டிருந்த வைஷ்ணவியின் மீது பார்வையை திருப்பினான். சிவப்பு நிற புடவையில் கழுத்தில் தாலியுடன் இருந்தவளை விழி சுருக்கி பார்த்தான்.

'வயதான பெண் போல இல்லையே' என்று மேலிருந்து கீழ் பார்வையை நகர்த்தியவன், அவளது காலில் பார்வையை நிலை நிறுத்தினான். அவளது கால்களும் அதில் அணிந்திருந்த மெட்டியும் அவனது சந்தேகத்தை வலு படுத்தியது...

அவனது பார்வை நிலைத்திருக்கும் இடத்தை கவனித்த விவேக் "ஆரியா வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவனை வெளியே அழைத்து செல்ல முயற்சிதான்

"தள்ளு நான் அந்த லேடியை பார்க்கணும்"

"பார்க்கலாமே ஆனால் கொஞ்சம் நேரம் ஆகும் அவங்க மயக்கத்தில இருக்காங்க" மழுப்பினான்... அவனது முழியே ஆரியனுக்கு சந்தேகத்தை கொடுத்தது.

"உன் பார்வையே சரி இல்லையே... வேலையை சரியா தான் முடிஞ்சியா?" என்றபடியே விவேக்கை நகர்த்தி விட்டு வைஷ்ணவி அருகில் வந்தான் ஆரியன்.

"என்ன ஆரி என் மேல நம்பிக்கை இல்லையா?"

"நம்பிக்கை எல்லாம் நிறையாவே இருக்கு" என்று அவனிடம் பேச்சு கொடுத்தபடியே வைஷ்ணவியின் முகத்தில் மூடி இருந்த துணியை எடுத்தான்.

வைஷ்ணவியின் முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஆரியன் ஒருகணம் அசைவில்லாமல் அப்படியே நின்றான்.

"ஆரி" என்று விவேக் அவன் தோள்களை பற்றவும் சுயநினைவுக்கு வந்தவன் விரைந்து வைஷ்ணவியின் கட்டுகளை அவிழ்த்து விட்டான் "பல்லவி" அவனது நா தடுமாறியது... மயங்கி கிடந்தவளின் கன்னத்தை ஒருகையால் தாங்கியவன் "பல்லவி" என்று பதட்டத்துடன் அழைத்தான், அவனது மறுகரமோ அதே பதட்டத்துடன் அவளது மணி வயிற்றில் பதிந்தது "குழந்தை" என்றவன் பரிதவிப்புடன் அவளது முகத்தை பார்க்க, அந்நொடி அவனது ஈர விழிகள் பளபளத்தது.. விழியோரம் ஒரு துளி கண்ணீர் அவளது மடி நனைத்தது.
 

Mythili MP

Well-known member
Wonderland writer




பகுதி 12

"பல்லவி" என்று வைஷ்ணவியின் கன்னத்தை தாங்கியவன் அவளை தட்டி எழுப்ப முயன்றான்.

"இவளை என்னடா பண்ணீங்க? ஏன் இவள் எப்படி இருக்கா?" என்று விவேக் பக்கம் திரும்பினான் ஆரியன். அப்போது அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த மதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிய ஆரம்பித்திருந்தது.

"அது வந்து ஆரியா"

"சுத்தி வளைச்சு பேசி என்னை எரிச்சல் படுத்தாமல் எப்படி என்னன்னு தெளிவா சொல்லு" கடுமையான கோவத்தில் வார்த்தைகள் வெளி வந்தது.

"சாரிடா அந்த லேடியை கடத்த முடியல... அதனால பசங்க அந்த வீட்டுல இருந்த வேற ஒரு பொண்ணை கடத்திட்டானுங்க அது தான் இந்த பொண்ணு" என்றதும் பல்வேறு யோசனையில் ஆரியனின் முகம் மாறியது.

"இவளுக்கும் அந்த வீட்டுல இருக்கவங்களுக்கும் என்ன சம்மந்தம்? ஒருவேளை இது எல்லாமே அந்த வேதாச்சலாம் பிளேனா? அப்போ பல்லவியை அவனுக்கு தெரியுமா? அவன் சொல்லி தான் பல்லவி என் வாழ்க்கைக்குள்ள வந்தாளா?" பல கேள்விகள்.. பல குழப்பங்கள் ஆனால் ஒன்றுக்கும் விடை கிடைக்க வில்லை.

அனைத்தையும் சந்தேகபட ஆரம்பித்தான்... அது தான் அவனது முதல் சறுக்கலாக இருந்தது.

ஆரியன் ஒன்றும் உருகி உருகி காதலித்து பல்லவியை திருமணம் செய்ய வில்லை.. அவனது திருமணமும், அவனது வாழ்க்கையில் பல்லவி வந்த விதமும் முற்றிலும் முரண்பட்ட நிகழ்வு தான்.

மாணிக்கத்தை காண அடிக்கடி ஆரியனின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் பல்லவி. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற இயல்பு கொண்டவள் அல்ல பல்லவி. எப்போதும் எதையாவது செய்து பிறரது கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாள்.

குறும்பாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருப்பாள். அது எளிதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடும். அது போலவே ஆரியனிடத்திலும் நடந்து கொண்டாள். ஆரம்பத்தில் அதனை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாட்கள் போனது அவளது இளமை இவனது மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது!! இது தவறு என்று சிந்தையில் உரைக்கவும் அவளிடத்திலிருந்து விலக ஆரம்பித்தான். அவளது எல்லை மீறிய செயலை கண்டிக்க ஆரம்பித்தான். ஆனால் பல்லவிக்கு அது எல்லாம் பெரிதாக தெரியவில்லை காரணம் அவள் ஆரியன் மீது ஆசை கொண்டிருந்தாள். அவனை அவளுக்கு பிடித்திருந்தது.

நாட்கள் அப்படியே சென்றது ஒருநாள் பல்லவியின் செயல்கள் விஸ்வரூபம் எடுத்தது.

குளித்து உடை மாற்றி விட்டு வெளியே வந்தான் ஆரியன், அப்போது அவனது அனுமதியின்றி அவனது அறைக்குள் அமர்ந்திருந்தாள் பல்லவி.

"ஏய் இங்க என்ன பண்ணுற?" என்று கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்கவும்.. முதலில் பயந்தவள் பின்னர் அமைதியாக அவனை நெருங்கினாள்.

அவள் நெருங்கவும் விலகி சென்றவன், வெளியே செல்ல எண்ணி ஹெங்காரில் மாட்டியிருந்த தனது சட்டையை எடுத்து அணிவித்துக் கொண்டான். மாணிக்கத்தின் மீது கொண்ட மரியாதையால் மட்டுமே பல்லவியின் செயல்களை அவன் பொறுத்துக் கொள்கிறான் என்றால் அது அதிகப்படியானது.. ஏதோ ஒரு மூலையில் பல்லவியின் மீது இவனுக்கும் ஈர்ப்பு இருந்தது..ள் அதனால் மட்டுமே அமைதி காத்தான்.

தன்னை கடந்து சென்றவனின் கரத்தை பிடித்தவள் எதுவும் பேசவில்லை, அமைதியாக அவன் முன்னே வந்து நின்றாள்.

அவனோ அவளை புரியாமல் பார்க்க... "எனக்கு உங்க கிட்ட நிறையா பேசணும்" என்றாள்.

"டைம் இல்லை"

"ப்ளீஸ்"

"சரி என்ன சொல்லுறதா இருந்தாலும் தள்ளி நின்னு சொல்லு" என்றவன் அவளது கரத்தை விலக்கி விட்டு தள்ளி நின்று கொண்டான்.

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?" என்று சட்டென அவள் கேட்கவும் ஒருகணம் ஆரியன் அசைவற்று போனான்.

"வாட்?"

"என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்"

"என்ன விளையாடுறியா? ஆமா யாரு நீ? நான் எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்?"

"எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு.. இதுக்கு மேல எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல"

"எனக்கு உன் நடவடிக்கை எல்லாம் புரியாமல் இல்லை.. ஆனால் எனக்கு உன் மேல அப்படி எந்த இன்டர்ஸ்ட்டும் இல்லை, சோ என்னை தொல்லை பண்ணாமல் முதலில் இடத்தை காலி பண்ணு"

"நான் போக மாட்டேன், பொய் சொல்லாதீங்க, உங்களுக்கும் என்னை பிடிக்கும், எதுக்காக இப்படி பிடிக்காத மாதிரி நடிக்கிறீங்க? ஒருவேளை உங்க அப்பாவை விட்டுட்டு உங்க அம்மா போன மாதிரி நானும் உங்களை கல்யாணம் பண்ணிட்டு விட்டுட்டு போயிடுவேன்னு பயப்படுறீங்களா?" என்று அவள் சொன்ன கணம் ஆரியனுக்கு ரத்தம் அழுத்தம் அதிகமானது.. அவன் எதை மறக்க நினைக்கிறானோ அதையே அவள் குத்தி காட்டியது போல இருந்ததும் கோவம் ஏகத்துக்கும் அதிகரித்தது.

"மாணிக்கம்" என்று ஆரியன் கத்தவும்.. பல்லவிக்கு தூக்கி வாரி போட்டது.

"இப்போ எதுக்கு அவரை கூப்பிடுறீங்க?" அச்சத்தில் பல்லவியின் கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

"மாணிக்கம்" என்று அவன் மீண்டும் உரக்க சத்தமிட்டுக் கொண்டே வெளியே வர, மாணிக்கம் தொடக்கம் வீட்டில் வேலை செய்யும் அனைவரும் ஹாலில் வந்து நின்றனர்.

மாடியேறி வந்த மாணிக்கம் "என்ன தம்பி" என்று பதட்டத்தோடு கேட்கவும்... "இனிமேல் உன் பொண்ணு இங்க வரக் கூடாது.. இவளை நான் இங்கே பார்க்குறது இதுவே கடைசியா இருக்கணும்," என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அந்த நாளுக்கு பிறகு பல்லவி அவனது வீட்டிற்க்கு வருவது இல்லை. நாட்கள் கடந்தன...
ஒருநாள் ஆரியனது வீட்டில் தொழில் நிமித்தமாக பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேலையாளாக மீண்டும் உள்ளே வந்தாள் பல்லவி.

உள்ளே வந்தவளை ஆரியன் கவனித்துக் கொண்டான்... ஆனால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பல்லவியோ தன் சுயம் தொலைத்து அமைதியாக ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டாள்.

நேரம் சென்றது... ஆரியனுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையது. அதனால் பழசாறை அருந்தியபடியே ஒரு ஓரத்தில் நின்ற பல்லவியை கவனித்தான்.
இமைகளில் சிறு அசைவு கூட இல்லை அப்படியே கண் சிமிட்டாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ முதல் முறை அவனது பார்வை பல்லவிக்கு கூச்சத்தை கொடுத்தது. உடனே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டாள். அதன் பிறகே தனது பார்வையை இடம் மாற்றினான் ஆரியன்.

பார்ட்டி முடித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கலைந்து சென்றனர். மெல்ல மெல்ல ஆரியனுக்கு போதை ஏற ஆரம்பித்தது... தலையை உலுங்கி தன்னை சமன் செய்ய பார்த்தான் ஆனால் முடியவில்லை. "பழச்சாறு குடித்தால் போதை ஆகுமா?" என்ற குழப்பத்திலேயே தன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் ஒரு இடத்தில் அவன் தடுமாறவும், அப்போது அவனது கரத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் பல்லவி.

முழு போதையில் தலையை சரித்து அவளை பார்த்த ஆரியன் "இங்க என்ன பண்ணுற? விடு நானே போயிருக்கிறேன்" என்றபடி தனியே நடக்க ஆரம்பிக்க, மீண்டும் தடுமாறினான்... அதன் பிறகு பல்லவியே அவனை அவனது அறைக்கு அழைத்து சென்றாள்.

மெத்தையில் அவன் சரிய அவனோடு சேர்ந்து பல்லவியும் சரிந்தாள்.. வெகு நெருக்கத்தில் பேதையின் முகம்! அவனுக்கு பெரும் போதையை கொடுத்தது. அவனே அறியாமல் அவனது கரம் பெண்ணவளின் கன்னத்தை ஸ்பரிசிக்க ஆரம்பித்தது, கூச்சம் கொண்டு பல்லவி நெளியவும், அவளது இடையோடு கரம் சேர்த்து தன்னோடு இறுக்கிக் கொண்டான். நெருக்கம் அதிகரிக்க மலர்மகளின் நாணங்கள் மேலோங்கியது... நிறை போதையில் பெண்ணவளின் கன்னம் ஸ்பரிசித்தவனின் விரல்கள் கழுத்து வழி கீழிறங்கவும்... அவனது அறைக்கதவுகள் மூடப்பட்டது.

புகை பிடித்தபடி மூடப்பட்ட கதவில் சாய்ந்து நின்ற அந்த இருள் நிறத்துடயவனின் இதழ்கள் மர்மமாக புன்னகைத்துக் கொண்டது.

அடுத்தநாள் போதை தெளிந்து கண்களை திறந்தான் ஆரியன், இமைகள் மீது பாரம் அழுத்தியதை போல உணர்ந்தான். கண்களில் தெளிவான காட்சிகள் இல்லை! கிறக்கமாக இருந்தது. மெல்ல எழுந்து கொள்ள முயற்சிதான் ஆனால் முடியவில்லை.. காரணம் இமை மீது மட்டுமல்ல பாரம் என்பது போல அவனது மார்பில் மதிமயங்கி கிடந்தாள் பல்லவி.

அந்த காட்சியை கண்டதும் ஆரியனுக்கு தூக்கி வாரி போட்டது... படபடத்துக் கொண்டு அவளை விட்டு எழுந்து நின்றவன் பதறினான்... பின்னர் அவன் இருக்கும் கோலம் உணர்ந்து, அருகில் இருந்த பூதூவலை எடுத்து இடையில் கட்டிக்கொண்டவன் "ஏய் எழுந்திரு" என்று பல்லவியை பார்த்து கத்த.. அவன் கொடுத்த சத்தத்தில் கண் விழித்துக் கொண்டவள் போர்வையினால் தன்னை முழுவதுமாக போர்த்திக் கொண்டு, பாவமாக முகத்தை வைத்தபடி அவனைப் பார்த்தாள்.

"நேத்து என்ன ஆச்சு?" என்று கேட்டவனின் மனம் நிலைகொள்ள முடியாமல் தவித்தது.

'தவறு செய்து விட்டோமோ?' என்ற எண்ணம் அவனது மனதை ரணப்படுத்தியது.

"உன்கிட்ட தான் கேட்குறேன் நேத்து நமக்குள்ள ஏதாவது தப்பா" என்று அவன் வார்த்தையை இழுக்க... "ஆமா" என்று தலையாட்டினாள் பல்லவி.

சினம் தலைக்கேறிய ஆரியன், கோவத்தில் அவளது உச்சி முடியை கொத்தாக பற்றி இழுத்தான்... "இதுக்காக தான் நேத்து எனக்கு கூல்ட்ரிங்ஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்தியா?" என்றவன் வரம்புமீறி வார்த்தைகளை விடவும் பல்லவியின் முகம் வாடி போனது.

போதை மருந்து கலந்து கொடுத்து வேண்டுமென்றே தன்னை இவளது தேவைக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்ததால் உண்டான கோவம் இது.

"இல்லை நான் அப்படி எதுவும் பண்ணல தப்பா பேசாதீங்க"

"அப்போ இதுக்கெல்லாம் என்னடி அர்த்தம்? நான் போதையில இருந்தேன்... ஆனால் நீ தெளிவா தானே இருந்த? உனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னா நானா உன் பக்கத்துல வந்தாலும் என்னை தள்ளி விட்டுட்டு நீ போயிருக்கணுல்ல... ஏன் போகல? அப்படியே உன்னால முடியலன்னா கத்தி ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு இருக்கணும்ல... அப்படி ஏன் பண்ணல? கடைசிக்கு அதுவும் இல்லையா கையில் கிடைச்ச எதையாவது வச்சு என்னை அடிச்சியிருந்தன்னா இருந்த போதைக்கு அப்படியே சரிஞ்சிருப்பேன்? ஆனால் நீ அப்படி எதுவுமே பண்ணாமல் கம்பெனி கொடுத்து என்கூட ***து இருக்கண்ணா அதுக்கு என்னடி அர்த்தம்?"

"நான் உங்களை விரும்புறேன்னு அர்த்தம்..."

"வாட்? இதை காதல்னு சொல்லுறியா? கண்டிப்பா இல்லை... என்ன காரணம்னு நான் சொல்லவா? அந்நேரத்துல உனக்கு ஒரு ஆம்பளை தேவைப்பட்டிருக்குன்னு அர்த்தம்... " என்று ஆரியன் சொல்ல.. பல்லவியின் கண்கள் கலங்கி போனது.

அவளது கலங்கிய விழிகளை பார்த்ததும் இன்னும் சினம் கொண்டான் ஆரியன் உடனே "எங்க இந்த மாணிக்கம் என்ன பொண்ணை வளர்த்து வச்சி இருக்கான்... மாணிக்கம்" என்று அவன் கத்த போகவும் அவனது கரத்தை பிடித்து கொண்டவள் "வேண்டாம்" என்பது போல தலையாட்ட, அவளது கரத்தை உதறி தள்ளினான்.

"என் கண்ணு முன்னாடி நிற்காத, இப்போவே வெளியே போயிடு இல்லன்னா இங்க நடக்குறதே வேற..." என்றவன் வாய்க்கு வந்தபடி பல்லவியின் ஒழுக்கத்தை கேள்விக் குறியாக்கி பேசினான்.

"போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க.. நான் போயிடுறேன்..." என்றவள் ஆடையை கூட அணியாமல் போர்வையை போர்த்தியபடியே கதவை திறந்து கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க... "ஏய்" ஆரியனின் குரல், கலங்கிய விழிகளுடன் திரும்பி பார்த்தாள்.

"இப்படியே வெளியே போயி, இவன் என்னை கெடுத்துட்டான்னு டிராமா பண்ண போறியா? ஒழுங்கா ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு போ" என்றவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

நடந்த எதையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை... "யார் தனக்கு போதை வஸ்து கொடுத்தது? எப்படி இதெல்லாம் தனது கட்டுப்பாட்டை மீறி நடந்தது?" என்று அதையே சிந்தித்துக் கொண்டிருந்தான். மொத்தமாக நிம்மதி இழந்து நின்றான்.

ஆரியனின் அறையில் இருந்து வெளியே வந்த பல்லவியை அங்கு வேலை செய்பவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி நின்று வேடிக்கை பார்க்க, அவர்களை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் பல்லவி.

அந்த நாளுக்கு பிறகு ஒரு வாரம் ஆரியன் அவன் வீட்டு பக்கமே வரவில்லை.. பல்லவியும் அவள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நாட்கள் கடந்தன... பல்லவி கர்ப்பமாக இருந்தாள். அந்த உண்மை மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் மனிதன் நிலைகுலைந்து போனார்.

அவளின் நிலையை எண்ணி அவரால் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது. பின்னர் ஆரியனிடம் சண்டையிட்டு வெற்றி பெறும் எண்ணமும், அதற்கான துணிச்சலும் அவரிடத்தில் இல்லை. அவனது குடும்பத்தை அண்டி பிழைத்தவருக்கு வாள் எடுத்து போர் செய்யும் திராணி இல்லை. பாவம் அவரும் என்ன தான் செய்ய முடியும்?

"இப்படியே பிறருக்கு பாரமாக நாமும் எத்தனை காலம் தான் வாழ்வது 'போதும் இந்த வாழ்க்கை' என்று முடிவெடுத்த பல்லவி விஷத்தை குடித்து தன் இழிநிலைக்கு முற்று புள்ளி வைக்க நினைத்தாள். அந்தோ பரிதாபம் அவளது நேரம் கருணாவின் கண்களில் பட்டு விட்டாள். கருணா அவளை அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்ந்தான்.

அதன் பிறகு தான் அவள் கர்ப்பமாக இருக்கும் செய்தி ஆரியன் தொடக்கம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிய வந்தது.

ஏற்கனவே நடந்த அந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த ஆரியனுக்கு மேலும் இது பெரும் குற்ற உணர்வாகி போனது.

மாணிக்கத்துடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் பல்லவியை பலவிதமாக சாடை பேசவும், நொறுங்கி போனது அவளது பெண்மை..

கலங்கி நின்ற மாணிக்கத்தின் முகத்தை ஆரியனால் பார்க்க முடியவில்லை... ஆனால் இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்றும் அவனால் பொறுப்பேற்றுக் கொள்ளவும் முடியவில்லை... மனம் அதற்கு இடமளிக்க வில்லை... மௌனமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மாணிக்கம் எப்போதும் போல ஆரியனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சட்டையை பிடித்து இரண்டு கேள்வி கேட்டிருந்தால் கூட திமிராக நின்று பதில் கூறி இருப்பான் ஆரியன். ஆனால் மாணிக்கமோ அமைதியா கலங்கி நிற்கவும், அவரது இயலாமை இவனது மனதை வெகுவாக பாதித்தது.

தனது அறைக்கு காபி கொண்டு வந்த மாணிக்கத்தை நிறுத்தி பேச ஆரம்பித்தான் ஆரியன். "மாணிக்கம் அது உன் பொண்ணு" என்று அவன் ஏதோ சொல்ல வரவும்... "வேண்டாம் தம்பி எதுவும் சொல்லிடாதீங்க... அது அம்மா இல்லாத பிள்ளை உலக விவரம் தெரியாமலே வளர்ந்திடுச்சு.. தப்பு யாரு மேலன்னு நான் நியாயம் பேச விரும்பல... என்ன இருந்தாலும் அவள் என் பொண்ணு! போனால் போகட்டும்ன்னு அறுத்து போட முடியல... யாரையும் எதிர்த்து கேள்வி கேட்கவும் எனக்கு துப்பில்லை... இப்படி ஒரு வலு இல்லாத அப்பனுக்கு மகளா பிறந்த அவளுக்கு இது எல்லாம் தேவை தான்.. உங்க மேல நிறையா நம்பிக்கை வச்சு இருந்தேன், ஆனால் நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் கனவில கூட நினைச்சு பார்க்கல தம்பி... மன்னிச்சிடுங்க மனசு தாங்கல அது தான் ஏதோ சொல்லிட்டேன்" என்று கண்கள் கலங்கி அங்கிருந்து சென்றார். ஆழ்ந்த பெரு மூச்சு விட்டு அவரை பார்த்தபடி நின்றான் ஆரியன்.

தன் தந்தையின் காலத்தில் இருந்து தனக்காக இருக்கும் ஒரே ஒரு நபர் இவர் தான். இப்போது இவரையும் கலங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவித்து நின்றான்.

மேலும் ஒருவாரம் கடந்தது... தெளிவான முடிவுடன் இப்போது பல்லவியை காண அவளது இல்லம் நோக்கி வந்தான் ஆரியன்.

மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்த பெண்ணவளின் எதிரில் வந்து அமர்ந்தவன் எந்த சத்தமும் கொடுக்க வில்லை.

அமைதியாக அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனது வருகை உணர்ந்து திடீரென கண் திறந்து பார்த்த பல்லவி எதிரில் அவனை கண்டதும் மிரண்டு போனாள்.

"நீங்க"

"உன்னை பார்க்க தான் வந்தேன்"

"எதுக்கு?"

"சும்மா தான்" என்றவன் எழுந்து அவள் அருகில் வரவும்... கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.

நிதானமாக அவள் அருகில் வந்தவன் நடுங்கிய விரல்களுடன் அவளது மணி வயிற்றில் கரம் பதித்தான். அவன் தொடுகையில் அச்சம் கொண்டு நகர நினைத்தாள் பல்லவி. ஆனால் அவனோ "கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

பல்லவியின் முகத்தில் பல விதமான உணர்வுகள் வெளிப்பட்டது.

நாட்கள் செல்ல, நல்ல முறையில் அவர்ங்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

ஆரியன் அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை அவளை தன் மகவுக்கு தாயாக ஏற்றுக் கொள்ள முயற்சித்தான்.

முடிந்த அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டு இயல்பாக அவளிடம் நடந்து கொள்ள ஆரம்பித்தான். இது தான் அவனது குணம் என்று நன்கு உணர்ந்த பல்லவி பெரிதாக அவனிடமிருந்து எதையும் எதிர் பார்க்கவும் இல்லை குழந்தைக்காக என்று அவன் கொடுக்கும் அன்பை நிராகரிக்கவும் இல்லை...

***

குழந்தைக்காக என்று எண்ணியே அன்று பல்லவியை கரம் பிடித்தான் ஆரியன்.. ஆனால் இன்று குழந்தையே இல்லை என்றாகினும் நீ மட்டும் போதும் என்ற எண்ணத்தில் வைஷ்ணவி கண் விழிக்க காத்திருந்தான்.

இவள் ஆரியனின் பல்லவியாக இருந்தால் நிச்சயம் நிம்மதி தான்.. மாறாக உண்மையில் மதியின் வைஷ்ணவியாக இருந்தால்???
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 13

"இவளை நான் அழைச்சிட்டு போறேன்" என்று சட்டென முடிவெடுத்த ஆரியன் வைஷ்ணவியை தன் கரத்தில் ஏந்திக் கொள்ளவும், அவனை தடுக்க முயன்றான் விவேக்.

"ஆரியா ஒரு நிமிஷம், கொஞ்சம் நிதானமா இரு, அந்த பொண்ணு கண்ணு முழிக்கட்டும் எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்"

"எதை பத்தி பேசணும்னு சொல்லுற?"

"அது இல்லடா இந்த பொண்ணு உண்மையா பல்லவி தானான்னு க்ளாரிபை பண்ணிக்கணும்ல"

"என் பல்லவி யாருன்னு எனக்கு தெரியாதா?" கண்கள் சிவக்க கேட்டான்.

"நான் அப்படி சொல்லல ஆரியா, நாளைக்கு எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் உன்னை பொறுமையா இருக்க சொல்லுறேன்"

"என்ன பிரச்சனை வரும்னு சொல்லுற? இங்க பாரு விவேக் எனக்கு இவள் ஏன் அந்த வீட்டுல இருக்கான்னு விவரம் தெரிஞ்சே ஆகணும்... என் இடத்தில் இருந்து யோசிச்சா நான் பண்ணுறது உனக்கு தப்பா தெரியாது"

"உண்மை தான் ஆனால் உன் இடத்தில் இருந்து யோசிக்க நான் ஆரியன் இல்லையே"

"எஸ் அதையே தான் நானும் சொல்லுறேன்... சோ ஸ்டே ஆவே" என்றபடி வைஷ்ணவியை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான் ஆரியன்.

அவன் செல்வதை குறை மயக்கத்தில் பார்த்த மதியோ " ஏய் நில்லு, அவளை விட்டுடு" என்று வார்த்தைகளை உதிர்க்க, அதுவோ அங்கிருந்த யார் செவியையும் சென்றடையாமல் காற்றோடு கரைந்து போனது.

****

மயக்கம் தெளிந்து கண் விழித்த வைஷ்ணவி, அவள் இருந்த இடத்தை கண்டு அச்சமுற்றாள்.

"இது எந்த இடம்? நான் எப்படி இங்க வந்தேன்" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்… ஆளுயரத்துக்கு ஒரு புகைப்படம்! அதில் ஆரியன் அருகில் பல்லவி… அதில் இருந்த தன் உருவத்தை உருத்து விழித்த வைஷ்ணவி "இது.. இது நானா?" கண்களில் புகை சூழ்ந்தது போல ஒரு காட்சி பிம்பம், மெல்ல மெல்ல அந்த காட்சிகள் தெளிவு பெற அவள் கண் முன் வந்து நின்றான் ஆரியன்.

அவனை திடீரென தனக்கு எதிரே கண்டதும் வைஷ்ணவிக்கு தூக்கி வாரி போட்டது, பயத்தில் தனது படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் சுவரோடு ஒட்டி நிற்கவும், எந்த வித சலனமுமின்றி அவளை நெருங்கி இருந்தான் ஆரியன்.

"ரிலாக்ஸ் பல்லவி" என்றவன் அவளது தோள்களை தொட போகவும், அச்சத்தில் சட்டென விலகிக் கொண்டாள்.

"யாரு நீங்க? இந்த போட்டோவில் இருக்கிறது" என்றவளை இதழில் தழும்பிய சிறு புன்னகையுடன் எதிர் நோக்கியவன் "போதும் பல்லவி இதோட இந்த டிராமாவை நிறுத்திக்கோ, என்னால மறுபடியும் முதலில் இருந்து எதையும் ஆரம்பிக்க முடியாது.. அமைதியா சாப்பிட்டு அன்னைக்கு உனக்கு என்ன நடந்ததுன்னு தெளிவாக சொல்லு" என்றவன் கொண்டு வந்த உணவை அங்கிருந்த மேசையில் வைத்தான்.


அவன் கொண்டு வந்து வைத்த உணவையும், அவனையும் மாறி மாறி பார்த்தவள் "எதை பத்தி கேட்குறீங்க? நான் எதை பத்தி உங்க கிட்ட சொல்லனும்? எனக்கு எதுவுமே புரியல.." என்றவளின் பார்வை அச்சத்துடன் அந்த போட்டோவில் பதிந்தது, அவளது பார்வை பதிந்திருந்த இடத்தை கண்ட ஆரியன் "என்ன பார்க்குற? அது நீயும் நானும் தான்" என்றதும் வைஷ்ணவிக்கு உயிர் வரை நடுக்கம் பரவியது.

'என்னன்னமோ சொல்லுறாங்க? என்ன தான் நடக்குது இங்க? இவன் யாரு? போட்டோவை பார்த்தா ரெண்டு பேரும் கணவன் மனைவி மாதிரி தான் இருக்கு? ஆனால் நான் ஏன் அந்த பொண்ணு என்னை மாதிரி இருக்கணும்? அப்போ அந்த மதி யாரு? இந்திரா அம்மா யாரு? விஸ்வநாதன் சார் யாரு எனக்கு எதுவுமே புரியல" என்று தனக்குள்ளே குழம்பிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

"உண்மையை சொல்லுங்க அந்த போட்டோவில் இருக்கிறது யாரு? உங்க மனைவியா?"

"அதுல என்ன சந்தேகம் பார்த்தா தெரியலயா?" என்றவன் அவள் கண் முன்னே கண்ணாடியை எடுத்து நீட்டினான். 'அது என் மனைவி தான் அதுவும் நீ தான்' என்பது போல இருந்தது அவனது செயல்கள்..

கண்ணாடியில் தெரிந்த வைஷ்ணவியின் முகமும், புகைப்படத்தில் இருந்த பல்லவியின் முகமும் ஒரே நேர்கோட்டில் தெரியவும், "இல்லை அது நான் இல்லை என்னை விட்டுடுங்க நான் இங்கேயிருந்து போகணும்" என்றபடி மிரண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சித்தாள். அந்நொடி அவளது கரத்தை வலிமையாக பற்றி நிறுத்தினான் ஆரியன்.


"கையை விடுங்க யாரு நீங்க? இது என்ன இடம் எனக்கு பயமா இருக்கு" என்றவள் அவனது கரத்தை தட்டி விட்டு அங்கிருந்து வெளியே ஓட பார்க்கவும், ஆரியனது இயல்பு மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்தது.


"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்" என்று உரக்க கத்தியவன் ஒரே பிடியில் அவளை பிடித்து கட்டிலில் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் அப்படியே உணர்வற்று சரிந்த வைஷ்ணவியின் முகமெல்லாம் பயத்தில் வியர்த்து வடிந்தது.


"எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுறீங்க? வேற யாரோன்னு நெனச்சு என்கிட்ட இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்? நீங்க தேடுற ஆள் கண்டிப்பா நானா இருக்க முடியாது… எனக்குன்னு ஒரு பேமிலி இருக்கு தயவு செய்து என்னை விட்டுடுங்க" என்று அவள் வழமையாக பேசிக்கொண்டே போக, கோபத்தில் ஆரியனின் முகம் சிவந்தது, முடிந்த அளவு பொறுமையை இழுத்து பிடித்தான்.

"லிசன் பல்லவி இங்க ஏகப்பட்ட பிரச்சனை போயிட்டு இருக்கு, உன் பங்குக்கு நீயும் என்னை கோவபடுத்தி பார்க்காத"

"இல்லை நான் போகணும்" என்று அவள் பயம் நிறைந்த குரலில் கூறவும், ஆழ்ந்த பெரு மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் "நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு, என் குழந்தையை என்கிட்டயே கொடுத்துட்டு நீ தாராளமா இங்க இருந்து போகலாம்… நான் உன்னை தடுக்க மாட்டேன்"


"குழந்தையா? யாரு குழந்தை?" வைஷ்ணவிக்கு எதுவும் புரியவில்லை…


இரண்டு நிமிடம் அமைதியாக அவளது முகத்தை உற்று பார்த்தான். அவளது முகத்தில் என்ன தெரிந்ததோ… அடுத்த கணமே அந்த அறையை தாழிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினான் ஆரியன்.


வெளியே வந்தவனின் சிந்தை முழுக்க ஒரே ஒரு வார்த்தை தான் ஓடிக் கொண்டிருந்தது "ஏதோ தப்பா இருக்கு" என்று சரியாக புரிந்து கொண்டான். உடனே மாணிக்கத்தை அழைத்தான்.

வைஷ்ணவியை வீட்டுக்கு அழைத்து வரும் போது அனைவருமே பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். யாருக்கெல்லாம் தகவல் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் தகவல் கொடுக்கப்பட்டது.

"தம்பி"

"அவளை பார்க்க எப்படி இருக்கு?"

"யாரை தம்பி?" தெரியாததை போலவே கேட்டார்.

"இப்போ நான் வீட்டுக்கு ஒருத்தியை கூப்பிட்டு வந்து இருக்கேன்ல்ல அவளை தான்"

"பல்லவி மாதிரி இருக்கு ஆனால் இது பல்லவி இல்ல தம்பி, என் கையால நான் தானே அவளுக்கு கொள்ளி வச்சேன்… அப்புறம் எப்படி? என் பொண்ணு செத்துட்டா... நாமா நம்பினாலும் நம்பலனாலும் அது தான் உண்மை.. அதை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்" என்று கண்கள் கலங்கி நின்றார் மாணிக்கம். அவரை மேலும் கீழுமாக பார்த்த ஆரியன் "உண்மையா பல்லவி உன் பொண்ணு தானே?" என்று அடுத்த கேள்வி கேட்டான்.


"இது என்ன கேள்வி தம்பி" திகைத்தார்


"கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு"


"என் பொண்ணு தான் தம்பி.."


"ம்ம்ம் நல்லதா போச்சு சரி வா அப்போ உங்க ரெண்டு பேருக்கும் டீஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்திடலாம்"


"அது எதுக்கு தம்பி?"


"சும்மா பொழுது போகல அதுக்கு தான்" என்ற ஆரியனின் கண்கள் வைஷ்ணவி இருந்த அறையில் நிலைத்தது.

*****

இரவு ஏழு மணி ஆனது... இன்னும் வைஷ்ணவியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை போன் செய்தும் பிரயோஜனம் இல்லை என்றவுடன் காத்திருந்து காத்திருந்து பொறுமையை இழந்த இந்திரா, விஸ்வநாதனின் எண்ணிற்கு அழைத்தார்.

"சொல்லு இந்திரா"

"என்ன ஆச்சு விஷ்வா? இன்னுமா பேசிட்டு இருக்கீங்க? வைஷ்ணவி எங்க?"

"வைஷ்ணவி பத்தி என்கிட்ட கேக்குற? அவ உங்க கூட தானே இருக்கா"

"என்ன சொல்றீங்க காலைல நீங்க அவளை வர சொன்னாதாக சொல்லி, மதி வந்து அழைச்சுட்டு போனானே!"

"நான் வைஷ்ணவியை அழைச்சிட்டு வந்து பேச வர சொன்னேனா? என்ன சொல்ற இந்திரா, இப்ப வைஷ்ணவி எங்க?"

"அப்போ நீங்க வர சொல்லலையா?" பதறினார்.

"சத்தியமா இல்லை இந்திரா"

"அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயே நேரம் போயிட்டே இருக்கு ஆனா இன்னும் அவள் வீட்டுக்கு வரல, நீங்க கூப்பிட்டதா சொல்லி தான் மதி வந்து அழைச்சிட்டு போனான்... இப்போ இப்படி சொல்லுறீங்களே எனக்கு பயமா இருக்கு"

"முதல்ல மதி எப்போ அங்க வந்தான்? அவன் வரான்னு எனக்கு தெரியவே தெரியாது... என்கிட்ட சொல்லாம அவன் எதுக்காக இங்க வரணும்? திடீரென வைஷ்ணவியை ஏன் அழைச்சிட்டு போகணும்?"

"நீங்க சொல்றதெல்லாம் பாத்தா எனக்கு பதட்டமா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர முடியுமா?"

"சரி நீ பயப்படாத நான் இப்பவே கிளம்பி வரேன்.. வைஷ்ணவிக்கு ஒண்ணும் ஆகாது" என்றவர் இந்திராவின் இல்லம் நோக்கி பயணித்தார்.

வைஷ்ணவியை எண்ணி இங்கு இந்திராவுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது... 'அய்யய்யோ பிள்ளைய எங்க கூப்பிட்டு போனானோ தெரியலையே ரெண்டு பிள்ளை பெத்தேன் ரெண்டுமே எனக்கு இல்லன்னு ஆன பிறகும் அம்மா அம்மான்னு என் காலையே சுத்தி வந்தாளே அவளை இன்னிக்கு தொலைச்சிட்டு நிற்கிறேனே" என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

***

விவேக்கின் எண்ணிற்கு ஆரியனிடமிருந்து அழைப்பு வந்தது... உடனே அழைப்பை ஏற்றான்.

"பல்லவி கூட ஒருத்தனை தூக்கிட்டு வந்தீங்களே அவன் யாரு? அவங்களை பத்தி ஏதாவது சொன்னானா?"

"அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியல, சரி நீ அதை விடு அவனை பத்தி யோசிக்காத அவன் ஒரு புள்ளை பூச்சி அவனை நான் பார்த்துகிறேன்... அந்த பொண்ணு ஏதாவது சொன்னாளா?"

"இல்லை... எனக்கு ஏதோ நெருடலா இருக்கு, அவன்கிட்ட என்னன்னு விசாரிச்சிட்டு சொல்லு" என்ற ஆரியன் அழைப்பை துண்டித்தான்.

அழைப்பை துண்டித்து விட்டு உள்ளே வந்த விவேக் "டேய் அவனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சான்னு பாரு" என்று மதியை குறிப்பிட்டு சொன்னான். உடனே அடியாட்களில் ஒருவன் பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து சட்டென மதியின் முகத்தில் ஊற்றி இருந்தான். பதறி போனான் விவேக்.

"டேய் எதுக்குடா தண்ணீயை எடுத்து ஊத்தின?"

"என்ன சார் புரியாமல் பேசிட்டு இருக்கீங்க? தண்ணீயை ஊத்தாமல் எப்படி அவனை எழுப்புறது?"

"அதுக்கு? குடிக்கிறதுக்கு வச்சியிருந்த தண்ணீயை எதுக்குடா எடுத்து ஊத்தின? எனக்கு தாகம் எடுத்தா நான் என்னடா பண்ணுறது?"

"அது தான் பீர் இருக்கே சார்"

"அடிங்க உங்களை எல்லாம் வச்சிட்டு" என்று தலையில் அடித்துக் கொண்டவன் "போ போயி எங்கயாவது தண்ணீர் வாங்கிட்டு வா" என்றான்.

"இந்த காட்டுக்குள்ள எங்க போயி சார் நான் தண்ணீயை தேடுறது"

"எங்கயாவது போயி தேடு, ஆனால் என் கண்ணு முன்னாடி நிற்காத ஓடு" என்ற அவனை அவ்விடம் விட்டு அனுப்பி வைத்தான்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த மதி, தன் கை , கால்கள் கட்டியிருப்பதை உணர்ந்து உடலை அசைத்தான்... கரம் இறுக்கமாக கட்டப்பட்டிருக்க வலி எடுக்க ஆரம்பித்தது.

"ப்ளீஸ் சார் கொஞ்சம் கட்டை அவிழ்த்து விடுறீங்களா? ரொம்ப வலிக்குது" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு மதி கூற, விவேக்குக்கு பவமாகி போனது. உடனே கட்டை அவிழ்த்து விட சொன்னான்.

"இப்போ சொல்லு அந்த பொண்ணு யாரு? அவளுக்கும் உனக்கு என்ன சம்மந்தம்" என்றதும் ஒரு நொடி அமைதியான மதி பின்பு "தண்ணீ கிடைக்குமா சார் தாகமா இருக்கு" என்றான்.

"தண்ணீ எல்லாம் இல்லை பீர் இருக்கு குடிக்கிறியா?" என்று அருகில் இருந்த பாட்டிலை குறிப்பிட்டு காட்டி அங்கிருந்தவர்கள் பேசி சிரித்தனர். அப்போது அங்கு கேலியாக சிரித்த அடியாள் ஒருவனின் தலையில் இருந்து நொடியில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. 'இங்க என்ன நடந்தது' என்று யோசிக்கும் முன்னே அங்கு இருந்த நான்கு நபரையும் அடித்து வீழ்த்தி இருந்தான் மதிவாணன்.

விவேக் அவனை கண்டு மிரண்டு முழிக்க... அவனது தலையை பிடித்து அருகில் உள்ள மேசையில் வைத்து ஓங்கி ஒரே அடி! அதிர்ந்து நிலைகுலைந்து சரிந்தான் விவேக்.

'அவள் என் பொண்டாட்டிடா... போ போயி அவன் கிட்ட சொல்லு" என்று ஆங்காரமாக கத்திய மதி, கீழே கிடந்த அடியாள் ஒருவனின் முகத்தில் ஓங்கி மிதித்தான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 14

அடியாட்கள் தொடக்கம் விவேக் வரை அங்கிருந்த அனைவரையும் அடித்து வீழ்த்திய மதிவானன் சிறு சலனமு இன்றி அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

ரத்தம் பார்த்து பழக்கப்பட்டவனுக்கு இது எல்லாம் சாதாரணமாக தானே இருக்கும்!

வெளியே வந்தவன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை கண்டான்... உடனே உள்ளே வந்து மயங்கி கிடந்த அடியாட்கள் ஒவ்வொருவரின் உடையிலும் சோதித்து பார்த்தான் ஒருவழியாக ஒரு காரின் சாவி அவன் கைக்கு கிடைத்தது. அதனை எடுத்துக் கொண்டு வெளியே நின்ற இரு கார்களில் சாவிக்கு பொருந்தியா சரியான மகிழுந்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை தேடி வெளியே சென்ற அடியாள் ஒருவன் அங்கு திரும்பி வந்தான். திரும்பி வந்தவன் அங்கு மயங்கி கிடந்தவர்களை கண்டு அதிர்ச்சியானான், பின்னர் மயங்கி கிடந்த அனைவரின் முகத்திலும் தண்ணீரை தெளித்து அவர்களை எழுப்பினான். ஒருவனை தவிர மற்ற அனைவரும் கண் விழித்துக் கொண்டனர்? தலையை பிடித்துக் கொண்டு கடினப்பட்டு எழுந்து அமர்ந்த விவேக் "எல்லாரும் ஓகே தானே? ஆமா யாருடா அவன்? அவனை எதுக்குடா தூக்கிட்டு வந்தீங்க? பச்சை பிள்ளை மாதிரி முகத்தை வச்சிட்டு என்ன அடி அடிக்கிறான்... கொஞ்சம் அசந்திருந்தேன்னேவையி எனக்கு பாடையே கட்டி இருப்பான்" என்று தலையில் வடிந்த ரத்தத்தை துணி வைத்து அழுத்திக்கொண்டே சோர்வான குரலில் சொன்னான். அந்நேரம் ஆரியனிடம் இருந்து இவனுக்கு அழைப்பு வந்தது.. அழைப்பை ஏற்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

"யாருக்கும் பெரிய அளவுக்கு அடி இல்லையே" என்று ஆரியன் விசாரிக்க... அடியாட்கள் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்த விவேக் "என்னையும் சேர்த்து மூணு பேரோட மண்டை காலி, ஒருத்தன் உயிரோட இருக்கானா இல்லையான்னே தெரியல"

"ஓ சரி எல்லாரையும் ஹாப்பிட்டல் அழைச்சிட்டு போ... நான் அப்புறம் கால் பண்ணுறேன்"

"ஒரு நிமிஷம் தெய்வமே, தயவு செய்து இதுக்கு மேல எந்த சூழ்நிலையிலும் நீங்க எனக்கு போன் பண்ணாதீங்க, நான் அடிவாங்கினதும் போதும், நீங்க அன்பு பாராட்டினதும் போதும்... இனி உங்க சகவாசமே எனக்கு வேண்டாம்.. நான் இப்படியே பொடிநடையா வீட்டுக்கு போய் என் பொண்டாட்டி கையால அடிபட்டு செத்தாலும் சாவேனே தவிர இனிமேல் உங்ககிட்ட வேலை பார்த்து போற வர்ரவன் கையில் அடிபட்டு சாக மாட்டேன்... போங்கடா நீங்களும் உங்க கடத்தலும்... என்னால முடியலடா சாமி ஆளை விடுங்க" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்திருந்தான் ஆரியவினோதன்.

"அது தானே, இவனுங்க புலம்பலை எல்லாம் நம்ம கேட்கணும் ஆனால் நம்ம புலம்பினா மட்டும் போனை கட் பண்ணிட்டு போயிடுவானுங்க" என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்த விவேக்கிடம் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து நீட்டினான் ஒரு அடியாள். அதனை வாங்கி விவேக் குடித்துக் கொண்டிருக்க... "ரொம்ப தேங்க்சு சார்" என்றான் அவன், "எதுக்கு?" என்பது போல விவேக் பார்க்க... "நல்ல வேலை நீங்க என்னை தண்ணீர் வாங்க வெளியே அனுப்பிட்டீங்க இல்லனா நானும் இப்படி தான் மண்டை உடைச்சி உட்கார்ந்து இருக்கணும்" என்று கூறி சிரித்தான்.

"உண்மையாவே நீங்க எல்லாம் ரவுடி தானாடா... இப்படி அடிக்கு பயந்த பசங்களா இருக்கீங்களேடா உங்களை நம்பி அவன் கைகட்டை அவிழ்த்து விட சொன்னே பார்த்தீங்களா எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்... அடி விழாமல் தப்பிச்சிட்டோம்னு சந்தோஷபடாத எனக்கு என்னமோ அவன் திரும்பி வருவான்னு தோணிட்டே இருக்கு, அப்படி மட்டும் வந்தான்னுவையேன் கண்டிப்பா உன்னை அவன் கிட்ட பிடிச்சிட்டு கொடுத்துட்டு தான் நான் சாவேன்" என்று தன் நிலையை எண்ணி நொந்து கொண்டு அவனுக்கு சாபம் கொடுக்க...

"அப்படி மட்டும் அவன் வந்தா, அவன் சாவு என் கையால தான் சார், என்னை இவனுங்களை போல சாதாரணமா எடுத்துக்காதீங்க இந்த துண்டு பீடி துரியனை கண்டா யானையை தெரிச்சு ஓடும்... அது தெரிஞ்சு தான் நான் இருக்கும் போது உங்க மேல கை வைக்காமல் அவன் அமைதியா இருந்து இருக்கான்"

"அப்படி சொல்லு தலை" என்று அடியாட்களும் அவனுக்கு ஒத்து ஊத..

"எப்படிடா இப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பந்தாவா பேசுறீங்க?"

"விடுங்க சார், யானைக்கும் அடி சருக்கும், அதுக்காக எல்லாம் கவலைபட்டா தொழில் நடத்த முடியமா? எழுந்து வாங்க சார் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்"

"அலுமினிய குண்டா எல்லாம் ஆறுதல் சொல்லுற அளவுக்கு என் நிலமை மோசம் ஆகிடுச்சு எல்லாம் என் நேரம்" என்று நொந்து கொண்டபடியே அங்கு மயங்கி கிடந்தவனை காரில் தூக்கி போட்டுக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றனர்.

***

அச்சத்தில் தான் இருந்த அறையின் சுவர்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி, மனம் முழுவதும் தீராத ஒரு கவலை அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

அவள் உண்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் எல்லாம் அப்படியே மேசையில் காய்ந்து கொண்டிருந்தது... சிறிய அளவேணும் அவள் அதனை தொட்டும் பார்க்கவில்லை.

அவள் பக்கத்திலேயே தொலைபேசி இருந்தது ஆனால் ஒருவரின் எண்ணும் நினைவில் இல்லை... காவலர் வரை செல்ல மனம் இல்லை... தான் யார் என்று தெரிந்தாலாவது ஏதாவது சொல்லி உதவி கேட்கலாம் தான் யார் என்று தனக்கே தெரியாத நிலையில் இருக்க என்ன காரணம் சொல்லி யாரிடம் உதவி கேட்பது என்ற விரக்தி நிலையில் அமைதியாக அமர்ந்திருந்தவளின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து இருந்தான் ஆரியன்.

கொஞ்சமும் மரியாதை இல்லாத அவனது செயல்களை மீண்டும் ஒருமுறை வெறுத்தாள் வைஷ்ணவி.

இது அவன் வீடு தான் இல்லையென்றெல்லாம் அவள் சொல்லவில்லை.. இருந்தும் பிறர் இருக்கும் ஒரு இடத்தில் அனுமதி இன்றி உள்ளே நுழைவது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் என்று அவன் சிறிதும் உணரவில்லை... அதுவே அவளுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது.

உள்ளே வந்தவன் "அவன் யாரு? அவனுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?" என்று மதியை பற்றி தான் கேட்டான்.

அவன் யாரைப் பற்றிக் கேட்கிறான் என்பது இப்போதும் வைஷ்ணவிக்கு விளங்கவில்லை...

"நீங்க யாரைப் பத்தி கேக்குறீங்கன்னு எனக்கு எதுவுமே புரியல" சலித்துக் கொண்டாள்... வாழவே பிடிக்கவில்லை... இப்படி ஒரு இழி வாழக்கை வாழ்வதற்கு பதில் யாரேனும் என்னை கொன்று விடுங்களேன் என்பது போன்ற நிலையில் அமர்ந்திருந்தாள்.

"ஓ அவன் யாருன்னு தெரியாம தான் அவன் கூட வண்டியில வந்தியோ? உன்னை அவன் மனைவின்னு வேற சொல்லுறானாம்? அது எப்படி?"

"இங்க பாருங்க... என் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு எனக்கே சுத்தமா தெரியல... ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை... நீங்க சொல்ற ஆள் நானா இருக்கலாம்? இல்ல இல்லாமல் இருக்கலாம் அது எப்படி இருந்தாலும் இப்போ அது எனக்கு நினைவில்லை... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, அதுல என்னுடைய பழைய வாழ்க்கை பத்தின எந்த நினைவுமே எனக்கு இல்லை... அதனால யார் சொல்லுறது! உண்மை யார் சொல்லுறது பொய்யின்னு எனக்கு எதுவுமே புரியல... தயவு செய்து என்னை கொஞ்சம் தனியா விடுங்க... என் இடத்தில் இருந்து யோசிச்சு பாருங்க என் மனநிலை என்னன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க ப்ளீஸ்" என்று கண்களில் கண்ணீருடன் வேண்டிக்கேட்டுக் கொண்ட வைஷ்ணவியை பார்த்ததும் ஆரியனுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமானது... இந்நிலையில் அவளை தொந்தரவு செய்யவும் மனம் இடமளிக்க மறுத்தது.

ஏற்கனவே அவனது வாழ்க்கையில் நான்கு வருடங்களை தூக்கத்தில் கடந்து இருக்கிறான்... எழுந்ததும் தொலைந்த வாழ்க்கையை மீண்டும் வாழ்ந்து விடலாம் என்று அவன் ஆசையோடு எதிர்பார்த்த போது.. 'எது உண்மை' என்ற தேடலிலேயே மீதமுள்ள வாழ்க்கை தொலைந்து விடுமோ என்று பயமே அவனது மனம் முழுவதையும் ஆட்கொண்டது.

குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம் வரை ஆசையோடு அவன் வாழ்க்கையை கழிக்க வில்லை... ஒவ்வொன்றையுமே அவன் பயத்தோடும், அவமானத்தோடும், கடந்து வந்திருக்கிறான்.

பல்லவி அவன் வாழ்க்கையில் வந்த பிறகு தான் வாழ்வதற்கான ஆர்வமே அவனுக்கு வந்தது. ஏதோ ஒரு காரணம் அவனை தினமும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டது... என்று அவள் அவனை விட்டு போனாளோ அன்று அவனது நினைவு போனது... இப்போது அவள் மீண்டும் அவன் கண் முன்னே இருக்கிறாள் ஆனால் வெறும் உருவமாக மட்டுமே...

இவள் உண்மையாக அல்ல... என்று ஒவ்வொரு நொடியும் அவனது மூளை எடுத்துரைக்க, மீண்டும் வாழ வேண்டும் என்ற ஏக்கமே அவனை கொல்லாமல் கொன்றது... யார் செய்த பாவமோ? விடை இல்லாத வினாவாகி போனது ஆரியனின் வாழ்க்கை.
 
Status
Not open for further replies.
Top