ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 5

வைஷ்ணவி அப்படி கேட்டதும் அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்று யசோதாவின் வாய் வரை வார்த்தை வந்து விட்டது, இருந்தும் வெளியாள் (வைஷ்ணவி) முன்னிலையில் தன் தாயை தரம் குறைத்து பேச அவளுக்கு மனம் இடம் கொடுக்க வில்லை... அதனால் சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிக் கொண்டாள்.

"உள்ள போங்க யசோதா... இப்போ தான் உங்க அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்து வராங்க... அவங்க இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்க நலம் விசாரிகாட்டியும் பரவாயில்லை ஆனால் இப்படி அவங்களை அலட்சிய படுத்தாதீங்க..."

யசோதாவும் இன்று வரை மருத்துவமனையில் தான் இருந்தாள் என்கிற உண்மை வைஷ்ணவிக்கோ, இந்திராவுக்கோ தெரியாது... உண்மை தெரிந்த ஒருவர் ஜீவாவின் தந்தை, ஆனால் அவரும் அதனை பற்றி அங்கு யாரிடமும் கூறிக்கொள்ளவில்லை...

"யசோ அம்மாவுக்கு ஒன்னுமில்லடா... நீ உள்ள வா நம்ம பேசிக்கலாம்," என்ற இந்திராவை பார்த்து விரக்தியாக சிரித்தவள் அங்கிருந்து செல்வதில் தான் குறியாக இருந்தாள்.

"உன்கிட்ட தான்டா கேட்குறேன் என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இவ்ளோ கோவம்?" என்று கேட்டவர் நிற்க முடியாமல் தடுமாறவும், ஜீவாவின் தந்தை அவரை நன்றாக பிடித்துக் கொண்டார். அவரது செயல் மீண்டும் யசோவின் கோவத்தை அதிகப்படுத்தியது.

உடனே பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே போனவளின் கரத்தை தடுத்து பிடித்திருந்தார் இந்திரா "ஏன்டா இப்படி பண்ணுற? அம்மாவுக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா?" என்று கூறி கண்ணீர் வடித்த இந்திராவின் முகத்தை யசோவால் காண முடியவில்லை... அவளுமே கலங்கி தான் நின்றாள்.

யசோதாவுக்கு அவளது தாய் என்றால் அத்தனை பிரியம். தாயை பிடிக்காத பிள்ளை இருக்குமா? இவர்கள் வாழ்க்கையில் எல்லாம் நன்றாக தான் இருந்தது... ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் யசோவை சுற்றி நடந்த சில சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திராவிடம் இருந்து யசோதாவை பிரித்தது... அவரை வெறுக்க செய்தது, இருந்தும் ஏதோ ஒரு மூலையில் அந்த எல்லையில்லா அன்பு இன்னும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது... அந்த அன்பு தான் இன்றுவரை அவளை விலக விடாமல் இவரிடம் பிடித்து வைத்திருக்கிறது.

"யசோ"

"போதும் இப்போ உங்களுக்கு என்ன? நான் எங்கேயும் போக கூடாது அவ்ளோ தானே... நான் எங்கேயும் போகலை, நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க, நான் இப்படியே பைத்தியம் பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சாகுறேன்" என்று சத்தமாக சொல்லிவிட்டு தன் உடமைகளை தூக்கி வீசியவள் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

தனது மகளின் செயல் கண்டு மேலும் வேதனை அடைந்தார் இந்திரா "நீ எதுவும் கவலைபடாத நான் அவள் கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்கிறேன்" என்று அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து சென்றார் ஜீவாவின் தந்தை.

என்ன நடக்கிறது இங்கு ? யாருக்கு என்ன பிரச்சனை? என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் இடையில் தவித்து நின்றாள் வைஷ்ணவி.

'இங்கிருந்து எங்காவது சென்று விட வேண்டும்' என்ற எண்ணம் யசோதாவின் மனதை அழுத்தினாலும் செல்லும் வலிமையை இழந்திருந்தாள் யசோதா.

என்ன தான் கோவம் இருந்தாலும் தன்னை பெற்றவளாக போய் விட்டாரே என்ன செய்வது? என்று தனது வாழ்கையையும், சந்தோஷத்தையுமே இழக்க துணிந்து விட்டாள்.

"அவர் தவறு செய்திருக்கட்டும், தவறானவராகவே இருக்கட்டும் இருந்தாலும் என்னால் அவரை உதறி தள்ள முடியவில்லை, காரணம் அவர் என் தாய்... இன்று அவர் மாறி இருந்தாலும் என்றோ ஒரு நாள் என்னை மார்பில் தாங்கி இருந்தவரை என்னால் தள்ளி விட்டு விலக முடியவில்லை என்னுடைய வலியையும், துக்கத்தையும் இன்னொரு பெண்ணிற்கு கொடுத்து விடாதே இறைவா, எல்லாரும் என்னை போல மனதோடு போராடிக்கொண்டு ஆயிரம் காரணம் சொல்லி தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் யசோதாவாக இருக்க மாட்டார்கள்" என்று தனது மனவலியை கண்ணீருடன் காகிதத்தில் நிறப்பியவள் அப்படியே கண் அயர்ந்தாள்.

சிறிது நேரத்தில் யசோதாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளது அறைக்கதவை தட்டினார் ஜீவாவின் தந்தை. ஆரம்பத்தில் அவள் திறக்கவில்லை... உடனே 'வேண்டாம் சென்று விடலாம்' என்று அவர் நினைக்கும் போது அவளது அறைக்கதவு திறக்கப்பட்டது.

*****

ஆரியன் எழுந்த தகவல் கேள்விபட்டு மருத்துவரை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் கருணாகரண்.

வந்தவன் மிகுந்த சந்தோசத்துடன் ஆரியனை அணைத்துக் கொள்ளவும், சிறு புன்னகையுடன் அவனது முதுகில் தட்டிக் கொடுத்தான் ஆரியன்.

"எப்படி இருக்க? இப்போ உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே... வலி எதுவும் இருக்கா?" என்று சைகையில் கருணா கேட்கவும் , அதனை புரிந்து கொண்ட ஆரியன் "நல்லா இருக்கேன்" என்று சிறு தலையசைப்புடன் சொன்னான்.

"ஹாய் சார் ஐயம் டாக்டர் அவினாஷ்... நான் தான் உங்களை இவ்ளோ நாளா ட்ரீட் பண்ணிட்டு இருந்தேன்"

"ஓ அதனால தான் நான் நாலு வருஷமா எழுந்துக்கவே இல்லையா?" என்று கேட்டபடியே நாற்காலியில் சாய்ந்தமர்ந்தான் ஆரியன். மருத்துவரோ அவனை ஒரு மாதிரி பார்க்க... "இப்போ எதுக்கு வந்தீங்க மறுபடியும் என்னை ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைச்சிட்டு போக போறீங்களா? அதுக்கு எதுவும் மருந்து கொண்டு வந்து இருக்கீங்களா என்ன?" என்று நக்கல் பேசியவனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிடும் சக்தி அங்கு ஒருவருக்கும் இல்லை.

"லுக், எனக்கு இனி எந்த டாக்டரும் தேவை இல்லை... நீங்க கிளம்பலாம்"

கருணா எவ்வளவோ புரியவைக்க முயற்சி செய்தும் "எனக்கு டாக்டர் வேண்டாம்... நான் பார்த்துகிறேன்... அவருக்கு பணத்தை செட்டில் பண்ணிடு... இரண்டு நாளுக்கு அப்புறம் நான் ஆபிஸ் வரேன்... மத்தது எல்லாம் அங்க வச்சு பேசிக்கலாம்" என்று கட்டளையிட்டபடி அங்கிருந்து சென்ற ஆரியனை கண்ணெடுக்காமல் பார்த்தான் கருணா... அவனது பிடிவாதத்தை பற்றி நன்கு அறிந்த இவனும் மருத்துவரை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டு, தங்களது அலுவலகம் நோக்கி சென்றான்.

இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தது ஆரியனின் உடலும் நன்றாகவே தேரியிருந்தது... அவனது செயலுக்கு அவனது தேகம் ஒத்துழைத்தது... தன்னுடைய உடல் நிலையை பற்றி தன்னை தவிர வேறு யாருக்கு நன்கு தெரிந்து விட போகிறது என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் உண்டு... தனது வலியின் அளவை அடுத்தவனால எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைப்பான்.

அவனை பொறுத்தவரை அவனது உடல் நலமடைந்து விட்டது...

அடுத்தநாள் எழுந்ததும் முதல் வேலையாக ஒருவரது எண்ணிற்கு அழைத்து பேசினான்... அந்த அழைப்பின் விளைவாக மீண்டும் இரண்டு நாட்கள் பலத்த யோசனையுடன் இருந்த ஆரியன் தன் அறையை விட்டு வெளியேவே வரவில்லை... நேரத்துக்கு நேரம் அவனுக்கு பிடித்த உணவுகள் மட்டும் அவனது அறையை தேடி வந்து பரிமாறப்படும்... மாணிக்கத்துக்கு மட்டுமே அவனது அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பிறகு பழைய தோரனையுடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஆரியனை கண்டு வேலையாட்கள் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது...

"தம்பி சாப்பிடலையா?" என்று மாணிக்கவேல் வந்து கேட்க...

"அதுக்கு தான் வெளியே போறேன்" சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டுக் கொண்டே பதில் கூறினான்.

"ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு ஒத்துகாதே தம்பி" அவர் தயங்க,

"அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை?"

"நான் கவலை பட கூடாதா தம்பி?"

"ம்ம்ம், தாராளமா? அப்புறம் உங்க பையன் எப்படி இருக்கான்?" என்று அவன், கேட்டதும் மாணிக்கவேலின் முகமே மாறி விட்டது.

"ஓ உங்களுக்கு பையன் இல்லல்ல ஒரே ஒரு பொண்ணு தானே, அதுவும் அவள் என் பொண்டாட்டி வேற! எப்படி மறந்தேன் இதை எல்லாம்... வர வர ரொம்ப ஞாபக மறதியா இருக்கு மாணிக்கம், நாளைக்கு வல்லாரை கீரை சூப் வச்சு கொடுங்க... அப்போவாது எல்லாம் மறக்காமல் இருக்குமான்னு பார்க்குறேன்..." என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறியிருந்தான். அவன் என்ன அர்த்தத்தில் இப்படி எல்லாம் கேட்டான் என்பதை மாணிக்கவேலால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அவரது முகம் எல்லாம் வியர்த்து வடிந்தது.


****

ஆரியனின் இருசக்கர வாகனம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டு பகுதியில் பயணமானது, சுமார் இருபது கிலோ மீட்டர் தாண்டி மீண்டும் ஒரு குறுகலான காட்டு பகுதியில் வண்டியை திருப்பியவன், கச்சிதமாக வளைவுகளை எதிர்கொண்டு நிதானமாக ஓட்டி சென்றான்.

பாதி தூரத்தில் சிக்னல் தடைபட்டது... மீண்டும் அதே பாதையில் வண்டியை செலுத்தினான்... இடையில் ஆறு ஒன்று குறுக்கே பாய்ந்தது, வண்டியை நிறுத்தினான் அதற்கு மேல் அவ்வழியில் வாகனத்தில் பயணம் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்தவன் உடனே இறங்கிக் கொண்டான்... நான்கு வருடத்துக்கு முன்பு இங்கு வந்தது அதன் பிறகு இப்போது தான் இங்கு வருகிறான். இந்த இடத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் உதவி இல்லாமல் தான் செல்ல வேண்டும்.

பசுமையான காட்டு பகுது, அவன் கால் வைத்த இடத்தில் தொட்டால் சுருங்கி செடிகள்! நுனி விரல் தீண்டியே மயக்கியது.

அருகில் இருந்த ஒரு மர கிளையின் குச்சியை உடைத்துக் கொண்டவன், அதன் உதவியுடன் அந்த ஆற்றை கடந்தான். சரியான பயிற்சி இல்லாமல் அந்த ஆற்றை கடக்க இயலாது... அவனுக்கு பயிற்சி இருந்தது, இருந்தும் சில தடுமாற்றத்துடனும் காயத்துடனும் தான் அக்கரையை வந்தடைந்தான்.

அதன் பிறகு ஒரு சிறு மலையை தாண்ட வேண்டும், குச்சியின் உதவியுடன் அதனையும் கடந்தான். அதன் உச்சியில் நின்றவாறு அவன் எட்டி பார்க்க... அடிவாரத்தில் அழகான ஒரு இல்லம்... அதனை கண்டதும் அவனது முகம் மலர்ந்தது. நூறு அடிக்கு ஒரு வீடு என இன்னும் சில வீடுகள் அங்கு இருந்தன... மலை கிராமம்.

எட்டு வைத்து அந்த வீட்டை அடைந்தவன், கதவினை தட்டவும் அருவாளுடன் ஒரு காரிகை அவனை வரவேற்றாள்...

அவள் மலர்கனையாள் கருமை நிற தேவதை... வீர மங்கை...

அருவாளுடன் அவளை கண்டதும், ஆரியன் சிரித்து விட்டான்... நான்கு வருடத்திற்கு பிறகு அவனை இங்கு காண்கிறாள், அதே புன்னகை அவளால் நம்ப முடியவில்லை! கண்கள் இரண்டும் கலங்கி விட்டது?

"நீங்களா?"

"நானே தான் என்னை கொல்ல போறியா?" என்று அரிவாளை குறிப்பிட்டு அவன் கேட்டதும், சிரித்துக் கொண்டே அதனை கிழே போட்டாள்.

"உங்களை ரொம்ப தேடினேன், ஆனால் நீங்க தான் எந்த சூழ்நிலையிலும் உங்களை தேடி வர கூடாதுன்னு சொல்லி இருக்கீங்கல்ல அதான் நான் அந்த ஊருக்குள்ள வரவே இல்லை..." என்று வருத்தத்துடன் சொன்ன மலர்கனையாளின் கன்னத்தை தட்டி விட்டவன், அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

"அந்த ஆளு இருக்கானா?"

"அவனை பார்க்க தான் வந்தீங்களா?" பெண்ணவளுக்கு முகம் சுருங்கி விட்டது.

"அதுக்காக மட்டும் இல்லை, ஆனால் அதுவும் ஒரு காரணம்" என்று கூறி சிரித்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பார்த்தது போதும், பசிக்குது சாப்பிட ஏதாவது இருக்கா?"

"இருக்கே கிழங்கு, சோறு எல்லாம் இருக்கு" என்றவள் அப்போது தான் அவனது கை, கால்களில் உள்ள காயத்தை கவனித்தாள்.

"என்ன ஆச்சு எப்படி இவ்ளோ காயம் பட்டுச்சு?" என்று கேட்டவள் உடனே உள்ளே சென்று மஞ்சளை அரைத்துக் கொண்டு வந்து அவனுக்கு பூசி விட்டாள்.

பதட்டத்தோடு தன் காயத்துக்கு மருந்திட்டு கொண்டிருக்கும் பேதை பெண்ணின் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். அவன் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் ஒரு சிலரில் இவளும் ஒருவள்.

சாப்பிட்டு முடித்தவன், அந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றான்... அங்கு நாற்காலியில் கை, கால் முடமாகிய ஒருவர் வாயெல்லாம் எச்சில் வடித்துக் கொண்டு, உடலில் சிறு அசைவும் இல்லாமல் இருந்தார். ஆனால் முகத்தில் அசைவு இருந்தது! ஆரியனை கண்டதும் அவரது முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது அதனை கண்டு இதழ் வளைத்து சிரித்தான், "நான் இல்லாத இந்த நாலு வருஷத்தில நீ செத்து போயிருப்பியோன்னு பயந்துட்டே வந்தேன்... ஆனால் இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு, நீ உயிரோட இருக்க இது போதும் எனக்கு..." என்றவனை கண்டு மிரண்டு முழித்தார்.

"ஏன் பயப்படுறீங்க அங்கிள் எவ்ளோ நாளுக்கு அப்புறம் என்னை பார்க்குறீங்க? இது உங்களுக்கு சந்தோஷமா இல்லையா? என்ன அங்கிள் நீங்க போங்க அங்கிள்" என்று பொய்யான வருத்தத்துடன் சொன்னவன் அவரது காதருகே குனிந்து "நான் என்ன பண்ணாலும் அது உங்க நல்லதுக்காகவா தான் அங்கிள் இருக்கும். அதனால் அமைதியா இருக்கணும், எங்க ஆஆ சொல்லுங்க.. தூங்குங்க,தூங்குங்க எப்படி?" என்றவன் அந்த நபரின் தாடையை வலிக்க பற்றி "இப்படி" என்று கூறி ஒரு மருந்தினை அவரது வாயில் ஊற்றினான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 6

அவன் கொடுத்த மருந்தின் வீரியத்தில் சிறிது நேரத்திலேயே அவரது உடல் முழுவதும் உதற ஆரம்பித்தது... அவர் துடிப்பதை கண் கூடாக பார்த்த ஆரியனின் முகம் எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இறுக்கமாக இருந்தது... ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவரது உடல் மீண்டும் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பியது... உடலில் சிறிது கூட பலமில்லாமல் ஆரியனை பார்த்தவாறே அமைதியானார்...
அவரது கண்கள் மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவியது.

"இன்னும் எதுக்காக இவரை பாதுகாக்கணும்னு நினைக்கிறீங்க?" அவனது செயலில் மொத்தமாக குழம்பி நின்றாள் மலர்கனையாள்.

"பாதுகாப்பு இல்லை இது என்னுடைய தேவை... இவன் விஷயத்தில ஏதோ ஒரு இடத்தில் நான் அவசரப்பட்டுட்டேன்... அதான் என் வாழ்க்கையில் முழுசா அந்த நாலு வருஷம் கரைஞ்போறதுக்கு காரணமா இருக்கும்னு எனக்கு தோணுது... இப்போ என் வாழ்க்கையில் நடக்கிற எல்லாம் விஷயத்துக்கும் இவனுக்கும் கண்டிப்பா ஏதோ ஒரு வகையில சம்மந்தம் இருக்குனு என் உள் மனசு சொல்லுது"

"இவர் நிலைமையே இப்படி இருக்கு இவரால என்ன பண்ணி இருக்க முடியும்? வழியே இல்லையே... நீங்க தேவை இல்லாமல் யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்"

"இல்லை மலர், இவன் சம்மந்தப்பட்ட யாரையோ நான் விட்டு வச்சி இருக்கேன். அது யார் என்ன? எப்படின்னு தான் ஒண்ணுமே எனக்கு புரியல, இவன் சாக வேண்டியவன் தான் ஆனால் இப்போதைக்கு இவன் உயிர் எனக்கு முக்கியம்"

"இவன் உயிர் உங்களுக்கு முக்கியம்னு எனக்கு புரியுது"

"என் வாழ்க்கையில் எல்லாமே புதிரா தான் இருந்து இருக்கு... என் குடும்பத்தோட இறப்பு முதல் இப்போ பல்லவி மாயமானது வரை எல்லாமே என் கண்ணு முன்னாடி நடந்த விஷயம் தான்... ஆனால் அது எதுவும் நான் புரிஞ்சிகிட்ட அளவுக்கு உண்மையா இருந்தது இல்லை... பல்லவி விஷயத்திலும் அதான் என் சந்தேகமே... என் கண்ணு முன்னாடி நடக்குற விஷயம் எல்லாம் என் கருத்தை மறைச்சு தான் நடக்குது. என் குடும்ப விசயத்தில நடந்த மாதிரியே பல்லவி விஷயத்திலும் இவன் வழியில் தான் ஏதாவது நடந்து இருக்குமோன்னு எனக்கு தோணுது. நான் பாதிக்கபட்டதுக்கு எல்லாம் இவன் மட்டும் தான் காரணம், கண்டிப்பா இவன் தான் இதுக்கும் காரணமா இருக்கணும்" என்றவனின் பேச்சு மலருக்கு இம்மியளவும் புரியவில்லை... அவளை பொறுத்தவரை கை, கால் விளங்காமல் கிடக்கும் இவனுக்காக யார் இதெல்லாம் செய்திருக்க முடியும் என்ற எண்ணம் தான்.

"அப்படியே இவர் பின்னால யாராவது இருந்தாலும் இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ எப்படி? தீடீர்னு அதுவும் உங்க வாழ்க்கைக்குள்ள ஏன் அவங்க வரணும்?"

"பழிவாங்க நினைக்கிறவன் பதுங்கி தான் இருப்பான்... அதுக்கு நாள் கணக்கு எல்லாம் இல்லை..."

"சரி, இப்போ இவரை என்ன தான் பண்ண போறீங்க? அப்படியே விட்டுட போறீங்களா?..."

"இவன் சாக தான் போறான்.. ஆனால் இப்போ இல்லை... நான் யோசிக்கிறது சரியா இருந்தா! இவனுக்கு வேண்டப்பட்டவன் அப்புறம் என்னை அழிக்கணும்னு நினைக்கிறவன் எல்லாரும் என் கூடவே தான் இருக்கணும்... சில பேர் மேல எனக்கான சந்தேகம் இப்போ ரொம்ப அதிகமாகிடுச்சு... அவங்களை பத்தி முழுசா தெரிஞ்சிக்கிற வரை இவன் உயிரோட தான் இருக்கணும்" என்றவன் மலர்கனையாளை பார்க்க, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை...

"என்னவாக இருந்தாலும் சரி இறுதிவரை உன்னுடன் நான் இருப்பேன்" என்பதை போல அவனை நம்பிக்கையாக பார்த்தாள்.

மாலை பொழுது ஆனது, அங்கிருந்து கிளம்ப தயாரானான் ஆரியன்.

அப்புறம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் "நீ தான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தியா?" என்று ஆரியன் கேட்க... ஆரம்பத்தில் பயத்தில் தடுமாறிய பாவையவளோ உரையாடலின் இறுதியில் "ஆமாம்" என்றாள்.

இவளை தவிர அவனை காப்பாற்ற யார் முன் வருவார் என்ற எண்ணத்தில் தான் இதனை கேட்டான்.

"நீ எதுக்காக ஊருக்குள்ள வந்த?... உன்னை நான் வர கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல"

"கோவபடாதீங்க, உங்களுக்கு கல்யாணம் ஆன பிறகு நீங்க இங்க வரவே இல்லைல்ல, அதான் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்குமோன்னு பார்க்க வந்தேன்... வர வழியில தான் உங்களை பார்த்தேன்... நீங்க அடிபட்டு கிடந்தீங்க... அப்புறம் என் தம்பியை வர சொல்லி உங்களை ஆஸ்பத்திரியில சேர்த்தேன்... அங்க என்ன என்னமோ கேள்வி கேட்டாங்க... எனக்கு எதுவுமே புரியல, என் தம்பி தான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான். அவனை தான் நீங்க நல்லா படிக்க வச்சி இருக்கீங்களே, அதனால சமாளிச்சிட்டான். அப்புறம் நேரம் ஆனதும் என்னை போக சொல்லிட்டான்... வேற வழி இல்லாமல் நானும் கிளம்பி வந்துட்டேன். அப்புறம் தம்பி தான் அங்க இருந்தான். கொஞ்ச நேரத்தில அவனும் என் பின்னாடியே வந்துட்டான்... கேட்டதுக்கு கருணான்னு யாரோ உங்களுக்கு வேண்டபட்டவராமே அவர் வந்து பார்த்துகிட்டதா சொன்னான்... நல்ல வேலை நான் அன்னைக்கு உங்களை தேடி அங்க வந்ததால நல்லதா போச்சு இல்லன்னா என்ன ஆகி இருக்கும்? நினைக்கவே கஷ்டமா இருக்கு" என்று கூறிக் கொண்டே அவள் தலை குனிய, சிறு சிரிப்புடன் அவளது சிரத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் "உனக்கு இன்னுமே நான் நன்றி கடன் பட்டு இருக்கேன்" என்றான்.

"அப்படி சொல்லாதீங்க... என் தம்பி உயிரை எனக்கு காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க... அவனுக்கு படிப்பு கொடுத்து இருக்கீங்க, எங்க உயிர் உள்ளவரை நாங்க தான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கோம்... உங்களுக்காக என் உயிரை கொடுக்க வேண்டியது வந்தாலும் நான் தயங்க மாட்டேன்" என்றவளின் கண்களில் நன்றியுடன் ஒரு துளி கண்ணீர் வடிந்தது.

"எனக்காகவும் கண்ணீர் சிந்துறதுக்கு ஒரு ஆள் இருக்குன்னு நினைக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு" என்றபடி அவளது கண்ணீரை துடைத்து விட்டவன் "சரி நான் போயிட்டு வரேன்... உன் தம்பியை மலை பக்கமா போயி என் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து நான் சொல்லுற இடத்தில விட சொல்லிடு... நான் இங்கே இப்போ பஸ் வரும்ல அதுல போயிக்கிறேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

மலை காடு என்பதால் எப்போதும் பேருந்து வசதி இருக்காது, மாலை ஆறு மணிக்கு மேல் ஒரே ஒரு பேருந்து மட்டும் அவர்கள் வயல் வெளி தாண்டி கடந்து செல்லும், தேவை பட்டால் அதனை வழி மறித்து ஏறிக்கொள்ளலாம்... மற்றபடி அங்கு பேருந்து நிலையம் எல்லாம் இல்லை... வயலை சுற்றிலும் மின்சார வேலி போடப்பட்டிருக்கும் அதில் மின்சாரத்தை தடை செய்து விட்டு அந்த வேலியின் ஒரு பக்க வழியாக பேருந்து வரும் அந்த மண் சாலைக்கு அழைத்து சென்று ஆரியனை பேருந்தில் அனுப்பி வைத்து விட்டு தங்கள் குடியிருப்பு நோக்கி சென்றாள் மலர்கனையாள்.

அடுத்த நாள் ஆரியன் சொன்னது போலவே மலர்கனையாள் தன் தம்பியிடம் சொல்ல, அவன் சென்று ஆரியனின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று ஒரு மெக்கானிக் செட்டில் விட்டான்... ஆரியன் தன் பணியாட்களை அனுப்பி மெக்கானிக் செட்டில் இருந்த வண்டியை எடுத்து வர செய்தான்.

****

தனது அறைக்குள் நுழைந்த ஜீவாவின் தந்தையை அருவருப்பாக பார்த்தபடி நின்றாள் யசோதா..

"என்ன விஷயம்?" மரியாதை இல்லாத தோரணையில் அவளது கேள்விகள் வெளிவந்தது.

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை" என்றவள் கதவை மூட போகவும், கதவை இறுக்கமாக பிடித்துக் கொண்டவர் "ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடு, நான் சொல்லவேண்டியதை சொல்லிடுறேன்"

"என்ன சொல்ல போறீங்க? உங்களால என்ன சொல்ல முடியும்? தப்புக்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் அது சரியாகாது"

"என்ன தப்பு? நான் பேச வந்தது ஜீவாவை பத்தி"

"ஓ என்ன சொல்ல போறீங்க உங்க பையனுக்கு உங்களை பத்தின உண்மை தெரிய வர கூடாது அதனால நான் அவனை விட்டு விலகி போயிடனும் அப்படி தானே? இதை சொல்ல தான் நீங்க இங்க வந்தீங்கன்னா அதுக்கு உங்களுக்கு அவசியமே இல்லை, ஏன்னா எனக்கும் உங்க பையனுக்கும் இந்த நொடியில் இருந்து எந்த சம்மந்தமும் இல்லை, புரிஞ்சுதா? இனி நீங்க ஜோடியா சந்தோஷமா இருங்க... உங்க சந்தோசத்துல நான் தலையிட மாட்டேன்" என்றவளை புரியாமல் பார்த்தபடி நின்றார்.

யசோதா சொன்னது எதுவுமே ஜீவாவின் தந்தைக்கு புரியவில்லை...

"என்ன சொல்லுற நீ? எனக்கு எதுவுமே புரியல... என் பையன் உன்னை உண்மையா நேசிக்கிறான்... நீ ஏதோ ஒரு காரணத்தால அவன் கிட்ட சரியா பேசுறது இல்லன்னு அவன் என்கிட்ட சொன்னான்.. அதான் என்ன பிரச்சனைன்னு கேட்க வந்தேன்... எந்த உறவுக்குள்ளும் பிரச்சனை சகஜம் தான் அதுக்காக அந்த உறவே வேண்டாம்ன்னு சொல்லுறது தப்பு யசோதா"

"ஓ காட், உங்க நடிப்பை கொஞ்சம் நிறுத்துறீங்களா? எனக்கு உங்களை பத்தி எல்லாம் தெரியும்... என்கிட்ட இப்படி வந்து டிராமா பண்ண உங்களுக்கு வெட்கமா இல்லையா? எந்த பொண்ணுக்கும் என் நிலமை வரக்கூடாது... உங்களுக்கும் என் அம்மாவுக்கும் இருக்க ரிலேஷன்சிப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்... சோ ஓவர் ஸ்மார்ட்டா எதுவும் ட்ரை பண்ணாதீங்க, நீங்க தொடர்பில இருக்க ஒருத்தரோட பொண்ணை உங்க பையன் விரும்புறான்! இதுல என்ன இருக்குங்குற மாதிரி எங்களுக்கு வந்து கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியால பேசிட்டு இருக்கீங்க! என்ன கீழ்த்தரமான மனநிலை உங்களோடது... உங்களுக்கும் அந்த லேடிக்கும் வேணும்னா இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி இல்லை... நான் என் அப்பாவோட வளர்ப்பு... அதெல்லாம் ஒழுக்கம்னா என்னன்னு தெரியாத உங்களுக்கு எப்படி புரியும்?" என்ற யசோதாவினை அடிக்க பாய்ந்த ஜீவாவுடைய தந்தையின் கரம்.. இந்திராவின் சொல்லால் அப்படியே காற்றில் நின்றது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சமையலறையில் தண்ணீர் எடுக்க வந்த இந்திரா கேட்டு மறுகிக் கொண்டு தான் இருந்தார்.

தன்னை அடிக்க ஓங்கிய அவரது கரத்தை உறுத்து விழித்த யசோதா திமிராக அவரை எதிர் கொண்டாள்.

"எவ்ளோ தைரியம் இருந்தா தப்பு பண்ணிட்டு, அதை தட்டி கேட்ட என்னையே அடிக்க வருவீங்க? நானும் எதுவும் பேச கூடாது அமைதியா இருக்கணும்னு நினைச்சா, எல்லாரும் ரொம்ப தான் பண்ணுறீங்க" என்ற யசோதா உச்ச பட்ச கோவத்தில் ஜீவாவின் தந்தையை பிடித்து தள்ளினாள், அதில் தடுமாறியவரின் கரத்தை விரைந்து வந்து இந்திரா பிடித்துக் கொள்ளவும்... கை தட்டி சிரித்தாள் யசோதா...

"வாவ்... வாவ்... வாவ்... என்ன ஒரு கண் கொள்ளா காட்சி! இதெல்லாம் எந்த பொண்ணுக்கும் கொடுத்து வைக்காது... வெறி குட்... நல்ல ஜோடி பொருத்தம் அப்படியே இருங்க ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்" என்றவள் பைத்தியம் போல அந்த அறையை சுற்றி தன் அலைபேசியை தேடினாள். அவளது செயல் அங்கு நின்ற வைஷ்ணவி தொடக்கம் அனைவருக்கும் பயத்தை கொடுத்தது.

இப்போது தான் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தாள் வைஷ்ணவி வழக்கம் போல அவளுக்கு இங்கு நடக்கும் அனைத்தும் விந்தையாக இருந்தது.

"என்ன ஆச்சு?" என்று கூட யாரிடமும் கேட்க முடியாத நிலையில் இருந்தாள்.

அலைபேசியை தேடி எடுத்து வந்த யசோதா... "சேர்ந்து நில்லுங்க... சேர்ந்து நில்லுங்க, போட்டோ எடுத்து அழகா பிரேம் பண்ணி மாட்டிடுவோம் இப்போ எதுக்கு தள்ளி நிக்குறீங்க? என்கிட்ட எதுக்கு இவ்ளோ டிராமா பண்ணுறீங்க... எனக்கு எல்லாம் தெரியும்... சோ கூச்சப்பாடதீங்க" என்ற யசோதா, தன் தாயை, ஜீவாவின் தந்தையின் அருகே நிற்க வைக்க... அவளது செயலை கண்ட வைஷ்ணவிக்கு "ச்சே" என்று ஆனது...

"என்ன பண்ணுறீங்க யசோதா?" என்று வைஷ்ணவி சற்று குரலை உயர்த்த... அடுத்த கணமே அவளது குரல் வலையை பிடித்து நெரித்து இருந்தாள் யசோதா.

"அவளை விடு" என்று இந்திராவும், ஜீவாவின் தந்தையும் சொல்ல... ராங்கி போல நின்றாள் யசோதா.

"இந்த வீட்டுல உனக்கு என்னடி வேலை? இது என் குடும்ப விஷயம்... கெஸ்டா வந்தியா, நல்லா திண்ணியா, உன் வீட்டை பார்த்து போனியான்னு இருக்கணும்.. அதை விட்டுட்டு அடுத்தவன் வீட்டு பிரச்சனையில நாட்டாமை பண்ண கூடாது... புரியுதா? புரியுதாடி" என்ற யசோதா, அவளது கழுத்தை வலுவாக அழுத்தி பிடிக்க, உடனே ஜீவாவின் தந்தை விரைந்து வந்து அவளது பிடியில் இருந்த வைஷ்ணவியை பிரித்தார்.

வைஷ்ணவியின் நிலைமையை பார்த்து கோவம் கொண்ட இந்திரா, இம்முறை யசோதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்...

"எதுக்குடி இப்படி பைத்தியம் மாதிரி நடந்துகிற?"

"நான் பைத்தியம் இல்லை நீங்க எல்லாரும் தான் என்னை பைத்தியாமாக்குறீங்க? அவளை அடிச்சா உங்களுக்கு எதுக்கு கோவம் வருது? ஓ அவர் சொல்லி தானே இவளை நீ இந்த வீட்டுல தங்க வச்சி இருக்க? அந்த பாசமா இல்லை, இவள் அவருக்கும் உனக்கும் பிறந்த பொண்ணா? யாருக்கு தெறியும் அதுக்கும் வாய்ப்பிருக்கு" அருவருக்க தக்க முறையில் யசோதா பேசினாள்.

"உன் அப்பனை மாதிரியே இருக்கியேடி" என்ற இந்திரா வேதனையுடன் அவளை பார்த்தார்...

"சந்தோஷபடு இல்லனா என் அப்பா யாருன்னு இந்த உலகம் அப்போவே தேடி இருக்கும்? உன்னோட உண்மையான முகம் அன்னைக்கே எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கும்"

"வலியை தாங்கி உன்னை சுமந்து பெத்ததுக்கு எனக்கு நல்ல பேரு வச்சிட்ட..." என்று சொன்ன இந்திராவின் வலியை யசோதாவால் ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது...

அவள் பிள்ளை அவள் மீது இப்படி ஒரு பழியை சுமத்தும் போது தான் அவளால் இந்த வேதனையை உணர முடியும்...

பெண்ணானவள் தன் ஒழுக்கத்தை எத்தனை பேரிடம் நிரூபிக்க வேண்டி இருக்கிறது...
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 7

யசோதாவின் பேச்சு அங்கிருந்த அனைவரையும் அருவருக்க செய்தது...

சூழ்நிலைக்கு தகுந்தவாறு வார்த்தைகளை எப்படி உபயோக்கிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதிலேயே நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது... பேசிய பின்பு தானே நாம் அனைவரும் யோசிக்கிறோம்... நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்குமான பாடத்தை வாழக்கை நமக்கு கற்று கொடுத்தே தீரும்...

"ஜீவாவின் தந்தை தன்னை பார்த்துக் கொள்ளும் படி இங்கு விட்டுவிட்டு சென்றாரா?" இதுவே வைஷ்ணவிக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது... என்ன நடக்குது என் வாழ்கையில?" என்று குழப்பமான மனநிலையில், தெளிவாக எதையும் யோசிக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் வைஷ்ணவிக்கு அவளது பழைய வாழ்க்கையை பற்றிய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டது! விபத்திலிருந்து தெளிந்து எழுந்து பார்த்தால் அவள் அருகில் இருந்தது இந்திரா மட்டும் தான். 'இப்போது என்ன என்றால் திடீரென ஜீவாவின் தந்தையை அனைவரும் கை காட்டுகின்றனர்' நடக்கும் எதுவும் அவளுக்கு விளங்க வில்லை...

"உன் பொண்ணு ரொம்ப தப்பா இருக்கா இந்திரா... இது அவள் வாழ்க்கைக்கு நல்லது இல்லை... எப்படி ஒரு பொண்ணால இப்படி எல்லாம் யோசிக்க முடியும்? பெத்த தாய் மேலயே இப்படி பழி போட அவளுக்கு எப்படி மனசு வருது?" என்று தன் வருத்தத்தை தெரிவித்தார் ஜீவாவின் தந்தை...

"ஹெலோ மிஸ்டர் போதும் உங்க நடிப்பு... இப்போ என்ன உங்களுக்குள்ள ஒன்னுமில்லை நீங்க ரெண்டு பேரும் வெறும் பிரெண்ட்ஸ்னு சொல்ல போறீங்க அப்படி தானே?" இன்னும் அதே மன எண்ணத்தில் தான் தீர்க்கமாக இருந்தாள் யசோதா...

இதற்கு மேலும் இவளிடத்தில் பேசுவதற்கு எதுவுமில்லை என்று உணர்ந்த ஜீவாவின் தந்தை அவளை சலிப்பாக பார்த்தார்...

மனமுடைந்த இந்திராவோ "ஒரு நாள் இதற்கெல்லாம் நீ வருத்தப்படுவ யசோ, அன்னைக்கு உனக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்க மாட்டேன்..."

"தப்பு பண்ண நீங்களே இப்படி தைரியமா நின்னு பேசும் போது நான் எதுக்காக வருத்தப்படப்போறேன்?... எனக்கு ஆறுதல் சொல்ல நீங்க இல்லனாலும் அதுக்காக நான் வருத்தப்பட போறது இல்லை ", 'நீ இறந்தாலும் சரி அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை' என்பது போல இருந்தது யசோதாவின் பேச்சு..

"நான் செத்தாலும் உனக்கு கவலை இல்லன்னு சொல்லுற அப்படி தானே?" என்று கேட்ட இந்திராவின் கண்கள் நீர் குளமானது... அதற்கு மேலும் யசோதாவால் அங்கு நிற்க முடியவில்லை... நேராக தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

"உன் பொண்ணு ஏன் இப்படி இருக்கா இந்திரா? இவள் இப்படி இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை" என்று ஜீவாவின் தந்தை எரிச்சலாக மொழிந்தார்.

"எதையும் பேசக்கூடிய நிலைமையில நான் இல்லை தயவுசெய்து இங்கேயிருந்து கிளம்புங்க" என்றபடி கையெடுத்து கும்பிட்ட இந்திராவை மனமுடைந்து பார்த்தார் ஜீவாவின் தந்தை...

"மன்னிச்சிடு இந்திரா... ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இப்போவே நான் தெளிவு படுத்திடுறேன்... இனி உன் பொண்ணே மனசு மாறி வந்து என் பையனை கல்யாணம் பண்ணிகனும்னு நெனச்சாலும் அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... இப்படி ஒரு கேரக்டர் உள்ள பொண்ணு என் பையனுக்கு தேவையே இல்லை
சீக்கிரமே என் பையனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்... அப்போ உன் பொண்ணை பத்தின பேச்சோட எந்த சூழ்நிலையிலும் என்கிட்ட வந்திடாத... எனக்கு என் பையனோட வாழ்க்கை தான் முக்கியம்... உன் பொண்ணு மாதிரி ஒரு சந்தேகபிராணியை கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கை வீணாபோறத நீயும் விரும்ப மாட்டேன்னு நினைக்கிறேன்.."

அவர் பேசியதுக்கு இந்திரா பதிலே பேசவில்லை.. உணர்விழந்த உடலோடு அமைதியாக காட்சியளிதார்.

அவரை அந்த நிலையில் பார்த்ததும் ஜீவாவின் தந்தைக்கும் மேற்கொண்டு எதுவும் பேச தோன்றவில்லை.. உடனே அங்கிருந்து சென்றார், சென்றவரை பின்தொடர்ந்து வெளியே வந்தாள் வைஷ்ணவி...

"ஒரு நிமிஷம் நில்லுங்க... இங்க என்ன நடக்குது? யசோதா என்னன்னா நீங்க சொல்லி தான் நான் இங்கே இருக்கேன்னு சொல்லுறாங்க? நான் இந்திரா அம்மாவோட ரிலேடிவ் தானே? அவங்க என்கிட்ட அப்படி தான் சொன்னாங்க.. அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? என்னை பத்தி எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை..." மிகவும் குழம்பி நின்றாள் வைஷ்ணவி.

"இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்குற நிலைமையில இப்போ நான் இல்லைடா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு எல்லாத்தையும் உனக்கு புரிய வைக்கிறேன், டேக் கேர்" என்றவர் மேலும் ஒருவார்த்தை கூட பேச வில்லை... அங்கிருந்து சென்று விட்டார்.

வைஷ்ணவிக்கு பைத்தியமே பிடித்து விடும் போன்று இருந்தது... விடை இல்லாத ஆயிரம் கேள்விகள் அவள் தலையை குடைந்து கொண்டிருக்க... மேலும் இடியாக அவள் தலையில் விழுந்தது அவளது அலைபேசியின் சிணுங்கள்...

அது அவளது கணவனின் அழைப்பு "ஹாய் டியர்.. இன்னிக்கு டே எப்படி போச்சு?" அவனது குரலில் மேலும் இவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது...

"யார் நீங்க?"

"என்ன ஆச்சு வைஷு உனக்கு? நான் மதி.. உன் ஹஸ்பண்ட்"

அதனை கேட்டு ஆழ்ந்த பெருமூச்சு விட்டவள் "விஸ்வநாதன் சார் யாரு?" என்று கேட்டாள், ஒரு கணம் அதிர்ந்தவன் பின்பு "யாரை கேட்குற? நம்ம இந்திரா ஆண்டியோட ப்ரெண்ட் அவரையா கேட்குற?"

"ஆமா அவரே தான்... அவரு யாரு?"

"அவரும் நமக்கு சொந்தம் தான்"

"எந்த முறையில் அவங்க நமக்கு சொந்தம்னு கொஞ்சம் தெளிவா சொல்லுறீங்களா?"

"இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம்... இன்னும் ரெண்டு வாரத்தில நான் அங்க வர போறேன் வந்த பிறகு நேருலயே எல்லாத்தையும் தெளிவா சொல்லுறேன்... இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் உனக்கு அப்புறம் கால் பண்ணுறேன்" என்றவன் அழைப்பை துண்டித்தான்.

ஆரியன் வாழ்க்கை மட்டுமல்ல வைஷ்ணவியின் வாழ்க்கையும் மர்மமாக தான் இருக்கிறது...

***

தனது இடத்திற்கு வந்த ஆரியன், அவனது தாய், தந்தையரின் பழைய புகைப்படங்களை எல்லாம் ஸ்டோர் ரூமில் இருந்து தேடி எடுத்தான்... வெகு நேர தேடலுக்கு பிறகு ஓரங்கள் எல்லாம் சற்று கிழிந்த நிலையில் ஒரு புகைப்படத்தை கண்டெடுத்தான் ஆரியன்.

அதில் ஆரியனுடைய தந்தையும், அவர் அருகில் திருமண கோலத்தில் இருவரும் இருந்தனர்... அதில் ஒருவர் தான் இப்போது மலர்கனையாளால் பாதுகாக்கபடும் அந்த நபர் 'வேதாச்சலம்' அவர் அருகில் இருப்பது அவரது மனைவி...

வேதாசலத்துக்கு திருமணம் ஆகியிருக்கும் விஷயமே இப்போது தான் ஆரியனுக்கு தெரிய வந்திருக்கிறது...

உடனே அந்த புகைப்படத்தை அலைபேசியில் பதிவு செய்து கொண்டவன், அதனை ஒருவனின் எண்ணிற்கு அனுப்பி வைத்தான்...

"இந்த லேடியை பத்தி விசாரிச்சு சொல்லு"

"போட்டோ கிளியரா இல்ல ஆரியா, கொஞ்சம் கஷ்டம்..."

"இப்போ இருக்குற டெக்னாலஜில இதை எல்லாம் ஒரு விஷயம்னு என்கிட்ட சொல்லிட்டு இருக்காத, உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள எப்படியாவது இந்த லேடியை பத்தின எல்லா தகவலும் எனக்கு தெரிஞ்சு ஆகணும்..." என்றவன் அழைப்பை துண்டித்தான்.

****

தனது வீட்டுக்கு வந்த விஸ்வநாதன் முதல் வேலையாக ஜீவாவுக்கு திருமண செய்வதை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தார்...

"பொண்ணு பேரு கங்கா, ரொம்ப நல்ல குடும்பம், நல்ல வசதியான இடம்... அதனால பிசினஸ்கும் உதவியா இருக்கும்... நாளைக்கு அவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறோம்... இதுல எல்லாருக்கும் விருப்பம் தானே?"

"என்னங்க ஜீவா ஒரு பொண்ணை..." வார்த்தையை இழுத்தார் ஜீவாவின் தாய் மீரா...

"தெரியும் ஆனால் அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரியா வராது... நான் போயி பேசி பார்த்தேன், அந்த பொண்ணு சரியில்லை" யசோதாவை பற்றி கூறினார்.

"இல்லங்க, அவனுக்கு விருப்பமில்லாமல் வேற ஒரு பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன் எப்படி சந்தோஷமா இருப்பான்..."

"அவனுக்காக நான் பார்த்திருக்க பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான குணம், இவனை நல்லா பார்த்துப்பா... பேசி பார்த்தா உங்களுக்கும் அந்த பொண்ணை பிடிக்கும்"

"நமக்கு பிடிக்குது, பிடிக்கலங்குறது வேறங்க, ஜீவாவுக்கு பிடிக்கணும், ஏன்னா வாழ போறது அவன் தானே"

"என் பையனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு முடிவெடுக்குற உரிமை எனக்கு இல்லன்னு சொல்லுறியா மீரா"

"அப்படி இல்லங்க உரிமை வேற, விருப்பம் வேற..."

"தேவை இல்லாத வாக்குவாதம் வேண்டாம் மீரா... நம்ம நாளைக்கு போறோம் அவன் கிட்ட சொல்லிடு"

"இது தான் உங்க முடிவுன்னா, அதை நீங்களே ஜீவா கிட்ட சொல்லிடுங்க" என்றபடி கோபமாக அங்கிருந்து சென்றார் ஜீவாவின் தாய் மீரா.

***

அழுதழுது வீங்கிய கண்ணத்துடன் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதா...

சிறு வயது நினைவுகள் அவள் கண் முன் கட்சி படமானது... கண்கள் ரத்தமென சிவந்து போனது...

இங்கு இந்திராவின் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவி, யசோதா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பதை பற்றி அவரிடம் கேட்டறிய முயற்சித்தாள்...

ஒரு காலத்தில் எந்த வித கவலையும் இன்றி சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர் இந்திரா தம்பதியினர்...

யசோதாவுக்கு அப்போது பத்து வயது... அவளுக்கு அவளது தந்தை என்றால் மிகவும் பிடிக்கும்... எந்நேரமும் அவர் மடி மீது தான் இருப்பாள்.

இந்திரா ஒர்க்கிங் உமன்... அவளது கணவன் வேலைக்கு செல்வது இல்லை... சில காரணத்தால் அவரை பணியில் இருந்து நீக்கி இருந்தனர்..

சூதாடும் பழக்கம் இந்திராவின் கணவருக்கு உண்டு... அவர் வேலையை இழந்த ஆரம்பத்தில் இந்திரா அவருடைய செலவுக்கு என்று சிறிது பணத்தை கொடுத்தார்... நாளடைவில் குடும்ப பொறுப்பு அதிகமானது... யசோதாவின் படிப்பு செலவு அது இது என்று வரவுக்கு மீறிய செலவாகி போனது...

அதனால் வெட்டி செலவை எல்லாம் குறைக்க ஆரம்பித்தார் இந்திரா... அதில் அவளது கணவரது தேவைக்கு கொடுக்கப்படும் பணமும் உள்ளடங்கியது...

"பொண்ணோட படிப்பு செலவு இருக்கு... லோன் கட்டணும், நீங்களும் வேலைக்கு போறது இல்லை என் ஒருத்தி சம்பளத்தில குடும்பம் நடத்த கஷ்டமா இருக்கு... அதனால தான் உங்க தேவைக்கு பணம் கொடுக்க முடியல"

"ஓ நீ வேலைக்கு போயி எனக்கு சோறு போடுறேன்னு குத்தி காட்டுறியா"

"அப்படி இல்லங்க"

"அப்படி தாண்டி" என்று கோவத்தில் கத்தியவர் ஒரு கட்டத்தில் இந்திராவை அடித்து விட்டார்... அன்று முதல் ஆரம்பமானது அவர்களது பிரச்சனை...

அடித்து பணத்தை பிடிங்கி கொண்டு சென்று சூதாட ஆரம்பித்தார்...

இந்திராவின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் முழுவதும் அவர் வசம் தான் இருந்தது... அதில் இருக்கும் பணத்தை எடுத்து யசோதாவுக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் வாங்கி கொடுத்தார்...

இந்திரா யசோவிடம் எப்போதும் கண்டிப்புடன் இருப்பார்... கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுக்காமல் எது தேவையோ அதை மட்டும் பார்த்து பார்த்து வாங்கி கொடுப்பார்... ஆனால் அவரது கணவர் அப்படி இல்லை, எல்லாம் ஆடம்பர செலவு தான்.

இதனை பற்றி கணவரிடம் கேட்டு யசோவின் முன்பு சண்டை போட இந்திராவுக்கு விருப்பம் இல்லை...

இந்நிலையில் தான் விஸ்வநாதனை மீண்டும் சந்தித்தார் இந்திரா... இருவரும் கல்லூரி கால நண்பர்கள் அவரிடம் ஆரம்பத்தில் தன் குடும்ப சூழ்நிலையை பற்றி எதையும் அவர் கூறிக் கொள்ளவில்லை... நாளாக நாளாக கணவரின் தொல்லை அதிகமானதும் வேறு வழி இல்லாமல் இவரிடம் சொல்ல வேண்டிய நிலை வந்தது..

விஸ்வநாதனோ இந்திராவின் கணவரை பற்றி போலீசில் புகார் கொடுக்க... காவலர்கள் இந்திராவின் கணவரை பிடித்து விசாரித்து மிரட்டி அனுப்பி வைத்தனர்...

வீட்டுக்கு வந்த இந்திராவின் கணவர் இரண்டு நாள் அமைதியாக இருந்தார்.. மூன்றாவது நாள் யசோதாவிடம் இந்திராவை தவறாக சித்தரித்து கூற ஆரம்பித்தார்... சிறு பிள்ளையிடம் என்ன சொல்ல வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் பேசினார்...

"உன் தாய் தவறானவள் அவளுக்கு பணம் தான் முக்கியம், அதற்காக வேறு ஒருவனுடன் சேர்ந்து கொண்டு என்ன என்ன கூத்து அடிக்கிறாள் தெரியுமா? என்னை சிறையில் தள்ள முயற்சிக்கிறாள்... அடியாட்களை விட்டு என்னை அடித்து கொல்ல பார்க்கிறாள்..." என்று தினமும் அவரே அவரை காயப்படுத்திக் கொண்டு இந்திராவை பற்றிய தன் மகளின் கண்ணோட்டத்தை மாற்ற ஆரம்பித்தார்...

அவர் சொன்னது தான் உண்மை என்று யசோ நம்பும் அளவுக்கு அன்று ஒரு சம்பவம் நடந்தது அது தான் யசோதாவை இந்த அளவுக்கு மாற்றியது...
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 8

அன்று ஒருநாள் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினாள் இந்திரா.. அப்போது மது குவளையுடன் தன்னிலை இழந்து மயங்கி கிடந்தார் அவளது கணவன்.

'என்ன இது புது பழக்கம்!' என்ற எண்ணம் தான் முதலில் இந்திராவின் மனதில் தோன்றியது... அதன் பிறகு அவரை கண்டு கொள்ளும் மனநிலை அவளுக்கு இல்லை... சலிப்பாக அவரை பார்த்து விட்டு கடந்து சென்று விட்டாள்.

அதன் பிறகு வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து வைத்து விட்டு யசோதாவை தேடினாள்.

"யசோ சாப்பாடு ரெடி... இன்னும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டபடி அப்போது தான் அவர்களது அறைக்குள் நுழைந்தாள் இந்திரா..

அப்போது அங்கு அவர் கண்ட காட்சியில் முற்றிலுமாக உடைந்து போனார்... கலைந்திருந்த ஆடைகளின் கீழோரம் முழுவதும் உதிரம் படர்ந்திருக்க... அப்பெண்ணவளோ உணர்வின்றி பாதி மரித்த நிலையில் தரையில் கிடந்தாள்.

"யசோதா" என்று பதறி துடித்தவர் நொடியும் தாமதிக்காமல் தன் மகளை மடியில் தாங்கிக்கொண்டு கதறி அழுதார்.

"என்ன ஆச்சுடா உனக்கு? அம்மாவை பாருடா, யசோ அம்மாவை பாருடா... ஐயோ என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே.. இப்படி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்காளே" என்று கதறி துடித்தவர் அவளை தூக்க முயற்சித்தார், ஆனால் முடியவில்லை... மனதிலும் உடலிலும் அந்த அளவுக்கு வலிமை இல்லை... தனி ஒரு ஆளாக இந்திராவால் யசோதாவை வெளியே அழைத்து வர முடியவில்லை.

தன் மகளுக்கு என்ன நேர்ந்தது என்று தாயுக்கு புரியாமல் இருக்குமா? இந்நேரத்தில உதவிக்கு யாரை அழைப்பது என்றும் புரியவில்லை... பெண்ணவளின் நிலையை கண்டு ஊமையாக கண்ணீர் வடித்தார்.

'இப்படி யாரும் இல்லாத தனி மரமாக ஆகி விட்டேனே... என் பிள்ளையை கூட என்னால் பாதுகாக்க முடியவில்லையே என்ற இயலாமையும், ஆதங்கமும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது.

இயலாமை கோபமாக மாற... கையில் கிடைத்த பொருளை எடுத்துக் கொண்டு ஆக்ரோஷமாக கீழே வந்தவர், வெளியில் குடிபோதையில் கிடந்த தன் கணவரை சரமாரியாக தாக்க ஆரம்பித்தார்... வலியில் முனகிய அவளது கணவனால் எதுவும் பேச முடியவில்லை... அந்த அளவுக்கு போதையில் இருந்தார்.

இங்கு பாதுகாவலனே தன் உடைமையை அழித்தானா? அல்லது அவனது அனுமதி பெற்று எந்த கள்ளனும் இத்தகையை செயலை செய்தானா என்ற கேள்வியும் கோபமுமே அவர் இப்படி நடந்து கொள்ள காரணமாகி போனது.

"என்ன பண்ண? என் பொண்ணை என்னடா பண்ண?"
என்று கேட்டவள் அப்போது தான் தன் கணவனின் அருகில் கிடந்த அவரது அலைபேசியை கையில் எடுத்தாள் இந்திரா.. அதில் கடைசியாக ஒருவரின் குறுஞ்செய்தி பதிவாகி இருந்தது.

"நாளைக்கே பணத்தை வந்து வாங்கிக்கோ" என்று அதில் குறிப்பிட பட்டிருந்தது. அதனை கண்டவர், சந்தேகமாக அந்த எண்ணிற்கு அனுப்பப்பட்ட செய்தியையும் ஒன்றன் பின் ஒன்றாக படிக்க ஆரம்பித்தார்.

அதில் இறுதியில்...

"பதினைந்து வயசுல ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ணு, நீ கேட்ட பணம் உனக்கு கிடைக்கும்" என்று அந்த நபர் அனுப்பி இருக்க... அதற்கு இவளது கணவரின் பதிலாக "இந்திரா வீட்டின் முகவரியும்... நேரமும் குறித்து அனுப்பப்பட்டிருந்தது" அதனை கண்டதும் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்து விட்டார் இந்திரா.

இதுவரை இருந்த சிறு சந்தேகம் இப்போதும் உண்மையாகி போனதும் அவரால் அதனை தாங்க முடியவில்லை...

'கேவலம் பணத்துக்காக பெற்ற பிள்ளையை இப்படி மாற்றானுக்கு விலை பேசி இருக்கிறானே இவன் எல்லாம் நல்ல பிறப்பு தானா?' என்ற கேள்வி தான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பொறுத்து போ! பொறுத்து போ! என்றார்கள்.. எதுவரை பொறுத்து போவது? எல்லை எதுவும் உண்டா இந்த நரக வாழ்க்கைக்கு?

சூதாடினான்... அடித்தான்... ஊதாரியாக அலைந்தான்... தவறான தொழில் செய்தான்... அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இவனோடு தானே இன்னும் வாழ்கிறேன். அதனால் அழிந்தது என் வாழ்க்கை என்றால் இப்போதும் அமைதியாக பொறுத்து போயிருப்பேன்.. என்னோடு சேர்ந்து அழிந்தது என் மகளின் வாழ்வும் அல்லவா? எப்படி இதனை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றபடி வேள்வியாக எழுந்தவர், அருகில் இருந்த நாற்காலியை எடுத்து அவனது தலையில் ஓங்கி அடித்தார்.

"ஹக்" என்ற ஒரே சத்தம் தான் அதன் பிறகு அவரிடம் எந்த சத்தமும் வரவில்லை.

"பாவி நீ எல்லாம் என்ன பிறவிடா? உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இந்த உலகத்தில வாழவே கூடாது.. அப்பா... அப்பான்னு உன் காலயே சுத்தி வந்த அந்த பிள்ளையை இப்படி பண்ணிட்டியே... இப்போவும் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு.. அந்த நம்பிக்கையில சொல்லுறேன் உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா" என்றபடி ஆக்ரோஷமாக அவனை பார்த்தவர்... அவன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் மகளை தேடி வந்தார்.

உதவிக்காக விஸ்வநாதனுக்கு அழைப்பு விடுத்து பார்த்தார் இந்திரா... ஆனால் அவரோ அழைப்பை ஏற்கவில்லை... வேறு வழி இல்லாமல் தன்னோடு பணியாற்றும் ஒரு பெண் ஊழியரை அழைத்தார்... ஆனால் அவர் வருவதற்கு முன்பாக விஸ்வநாதனே அங்கு வந்து சேர்ந்து விட்டார். பின்னர் விஸ்வநாதனின் உதவியுடன் யசோதாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

யசோதாவின் உடலில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் காயமே அவளது நிலையை அங்குள்ளவர்களுக்கு எடுத்து கூறியது... மருத்துவர் கேட்கும் எந்த கேள்விக்கும் இந்திராவிடம் பதில் இல்லை. 'என்ன என்று சொல்வது?' தன் பிள்ளையின் எதிர்காலம் பாதித்து விடுமே என்ற அச்சத்தில் போலீஸ் வரை இந்த பிரச்சனையை எடுத்து செல்ல வேண்டாம் என்று வேண்டி நின்றார்.

போலீஸ் வரை இதனை எடுத்து செல்வது யசோதாவின் வாழ்க்கைக்கு நல்லது அல்ல என்று விஸ்வநாதனும் சொல்ல... மருத்துவரும் சரி என்று அனுமதித்தார்.

விஸ்வநாதனுக்கு அந்த மருத்துவர் மிகவும் வேண்டபட்டவர் என்பதால் அவர் சொன்னது போலவே இவரும் செய்தார்.

***

இரண்டு நாளுக்கு பிறகு யசோதா கண் விழித்து பார்க்கையில் இந்திராவின் கரத்தை பற்றிக் கொண்டிருந்தாள்.

இந்திராவின் அருகில் இருந்தது விஸ்வநாதன்.

"எப்படி இருக்குடா?" என்று அவளிடம் கேட்பதற்கு கூட இந்திராவால் முடியவில்லை, தொண்டை அடைத்தது.

எப்படி பேசுவது? இதனை எப்படி இவளுக்கு புரியவைப்பது? என்று அவருக்கும் விளங்கவில்லை...

ஆனால் கண் விழித்ததும் யசோ கேட்ட ஒரே கேள்வி "அம்மா! அப்பா எங்க?" என்று தான்.

"அப்பா வா?" இந்திராவுக்கு பெரும் கோவம்...

"இன்னும் என்னடி அப்பா?" என்றவரால் அதற்கும் மேலும் அவளிடம் எதையும் சொல்ல முடியவில்லை..

சிறு பிள்ளை அவளுக்கு இது பற்றிய புரிதல் இருக்குமா? இதனை அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது... தகப்பன் அவன் தன் வாழ்க்கையை அழித்தான் என்பதை இந்த பிஞ்சு மனம் எப்படி தாங்கிக் கொள்ளும், என்ற தயக்கமும், வேதனையும் இந்திராவுக்கு அதிகமாக இருந்தது.

"எனக்கு என்ன ஆச்சு மா நம்ம எப்போ வீட்டுக்கு போவோம்" என்று கேட்ட யசோவை மார்போடு அணைத்துக் கொண்டாள் இந்திரா...

யசோதாவுக்கு போதை மருந்து கொடுக்கபட்டிருக்கிறது அதன் பிறகு தான் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்பதை மருத்துவர் இந்திராவிடம் கூறி இருந்தார்.

"இந்த ஊர் நமக்கு வேண்டாம் நம்ம வேற எங்கேயாவது போயிடலாம் யசோ"

"எதுக்கு மா? அப்பா எங்க?"

"உன் அப்பன் செத்துடான்டி காரியம் எல்லாம் பண்ணியாச்சு... அமைதியா என்கூட வா" என்ற இந்திரா, யசோதாவின் மறுப்பையும் மீறி அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு விஸ்வநாதனின் சொந்த ஊருக்கு வந்து விட்டார்.

யசோவை பொறுத்தவரை தனது தாய், தனது தந்தையை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஊரை விட்டு வந்து விட்டார் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது... தன் தந்தை இறந்ததாக சொன்னதை ஆரம்பத்தில் யசோதா நம்ப வில்லை,

யசோதா மனதில் இருந்து அவளது தந்தை என்ற அரக்கன் மறைய வேண்டும் என்பதற்காகவே இந்திரா தன் கணவருக்கு திதி கொடுக்க ஆரம்பித்தார்.. நாளடைவில் யசோதாவும் அதனை நம்ப ஆரம்பித்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அனைவரிடமும் இருந்து தன்னை விலக்கிக் கொண்டாள்... அனைவரிடமும் ஒரு எல்லையோடு பழக ஆரம்பித்தாள்.

வளர்ந்த பிறகு ஒருநாளேனும் தாங்கள் வசித்த அந்த ஊருக்கு செல்ல வேண்டும், என்ற எண்ணம் யசோதாவுக்கு வரவில்லை அது தான் விந்தை... அதனிலும் விந்தை என்னவென்றால் எதையோ ஒன்றை அவள் தேட ஆரம்பித்திருந்தாள்,.. அவளது தேடல் என்ன? அதற்கான
காரணம் என்ன என்பதை அவள் அன்றி யார் அறிவார்? சில நினைவுகள் அவளது கனவுகளை களவாடியது.. அதனை யாரிடமும் கூற விரும்பாமல் தனக்குள்ளேயே புதைத்து கொண்ட அந்த பெண்ணின் துயரை யாராலும் உணர முடியாது... இந்நாள் வரை அவளது தாயாலும் அதனை உணர முடியவில்லை. தன்னில் இருந்து அனைத்தையும் விலக்கி வைத்தவள் தாயையும் அல்லவா விலக்கி வைத்திருக்கிறாள் பிறகு எப்படி உணர முடியும்.

அத்தனை மனிதர்களுக்கும் எத்தனையோ காயங்கள்... ஒவ்வொன்றாக மறைந்து விடும் என்று நினைத்தால், வரிசையாக காயங்களின் வடுக்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது.., நம் உடல் இந்த மண்ணுக்கு இறையாகும் வரை, எந்த காயமும் மறைவதே இல்லை. மறைந்து விட்டது என நாம் நம்புவது எல்லாம் மாயை மட்டுமே...

***

பத்து நாட்களுக்கு பிறகு...

"ஒரு வாரத்தில உன்னை கால் பண்ண சொன்னா பத்து நாளுக்கு அப்புறம் கால் பண்ணுற?" ஏகத்துக்கு கொதித்தான் ஆரியன்.

"சாரி ஆரியா... அவங்களை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு"

"ம்ம்ம் சரி என்ன தெரிஞ்சுது?"

"அவன் பேரு..."

"அவன் பேரு தான் தெரியுமேடா, அந்த லேடி பேரு என்ன?"

"ஒரு ப்ளோவா சொன்னா தான்டா எனக்கு பதில் சொல்ல வரும்"

"ஏற்கனவே கோவத்தில இருக்கேன் மேலும் என்னை வெறியேத்தாத"

"அது...பெருசா எந்த தகவலும் கிடைக்கல... அதான்"

"எதுவும் கிடைக்கலன்னா அப்புறம் எதுக்குடா கால் பண்ண?"

"அந்த லேடியோட பேரும் அட்ரஸ் மட்டும் தான் கிடைச்சுது... ஆனால்"

"என்ன ஆனால்..."

"நீ அங்க போனால் உனக்கே புரியும்"

"சரி முதலில் பேர் என்னன்னு சொல்லு"

"அந்த லேடி பெயர் "இந்திரா" பேங்க்ல ஒர்க் பண்ணிட்டு இருந்து இருக்காங்க... இப்போ வேலையை விட்டுட்டாங்க போல... அப்புறம்"

"அப்புறம் என்ன?"

"ஒன்னும் இல்லை... நான் கலெக்ட் பண்ண டிடைல் எல்லாம் உனக்கு அனுப்பி வைக்கிறேன்" என்றபடி அழைப்பை துண்டித்தவன், அங்கு இந்திரா வீட்டு வாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வைஷ்ணவியை பெரு மூச்சு விட்டு பார்த்தபடி அங்கிருந்து வாகனத்தை எடுத்தான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 9

"அப்பா ப்ளீஸ் கொஞ்சமாவது என் நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க" முடிந்த அளவு தனது நிலையை புரியவைக்க முயற்சித்தான் ஜீவா...

"நான் இவ்ளோ சொல்லியும் உனக்கு புரியலயா ஜீவா? நான் அவருக்கு வாக்கு கொடுத்துட்டேன், உனக்கும் என் ப்ரெண்ட்டோட பொண்ணு கங்காவுக்கும் தான் கல்யாணம் நடக்கும்... கண்டிப்பா நடக்கணும், பொண்ணு எல்லாம் பார்த்து ஓகே பண்ணியாச்சு" தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தார் விஸ்வநாதன்.

"யாரை கேட்டு வாக்கு கொடுத்தீங்க? யாரை கேட்டு பொண்ணு பார்க்க போனீங்க? என் விஷயத்தில் கண்மூடி தனமா நீங்க எடுக்கிற முடிவுக்கெல்லாம் என்னால பலியாக முடியாது"

"ஜீவா அப்பா கிட்ட குரல் உயர்த்தி பேசாத" தாயாக தன் மகனின் செயலுக்கு கண்டித்தார் மீரா.

"அம்மா தயவு செய்து என்னை கண்ட்ரால் பண்ணாதீங்க.. என் விருப்பத்துக்கும் கொஞ்சமாவது மதிப்பு கொடுக்க சொல்லி உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுங்க"

"நீ விரும்புற விஷயம் சரியா இருந்திருந்தா அதுக்கு கண்டிப்பா நான் சம்மதிப்பேன்... ஆனால் உன் காதலுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத ஒரு பொண்ணு இந்த வீட்டு மருமகளாக ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்"

"எதை நீங்க தகுதின்னு சொல்லுறீங்க? எனக்கு புரியல... என்னை கல்யாணம் பண்ணிக்க யசோக்கு என்ன தகுதி வேணும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க?"

"இதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது ஜீவா"

"ஒரு நிமிஷம் அப்பா, அண்ணன் கேக்குறதுல எந்த தப்பும் இல்லையே? காரணம் தானே கேட்குறான், அந்த காரணத்தை சொல்லுங்க... அதே காரணம் தான் எங்களுக்கும் தேவை.. ஏன் யசோ அண்ணியை வேண்டாம்னு சொல்லுறீங்க" என்று ஜீவாவின் தங்கை தன் அண்ணன் பக்கம் நிற்க...

"மீரா இவளை உள்ள போக சொல்லு" கோவத்தை தன் மனைவி மீது காட்டினார் விஸ்வநாதன்.

"அவள் எதுக்குங்க உள்ள போகணும்? இந்த குடும்பத்தில நடக்கற எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்க கூடிய உரிமை அவளுக்கு இருக்கு. அவள் ஒன்னும் தப்பா எதையும் கேட்கலையே, சரியா தானே கேட்குறா? அப்போ ஒரு அப்பாவா அதுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை.. சொல்லுங்க எதுக்கு யசோ வேண்டாம்னு சொல்லுறீங்க? அதுக்கு சரியான ஒரு காரணத்தை சொல்லுங்க... அது நியாயமா இருந்தா நானே நீங்க ஏற்பாடு பண்ணியிருக்க கல்யாணத்துக்கு ஜீவாவை சம்மதிக்க வைக்கிறேன்" என்று மீராவும் ஜீவாவின் பக்கம் நின்றார்.

"எல்லாத்தையும் என்னால விளக்கமா சொல்லிட்டு இருக்க முடியாது.."

"அது தான் ஏன்னு கேட்க்குறோம்" என்ற ஜீவாவுடைய தங்கையின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் விஸ்வநாதன்.

"அப்பா என்ன பண்ணுறீங்க?" என்று குரல் உயர்த்திய ஜீவா, தன் தங்கையை கைவளைவுக்குள் வைத்துக் கொண்டான்.

"நானும் பார்த்துட்டே இருக்கேன் கூட கூட பேசிட்டே இருக்க? இன்னும் ரெண்டு நாளில் உனக்கு எக்ஸாம் இருக்குல்ல? போ முதலில் அதுக்கு போயி படி... அப்புறம் வந்து குடும்ப பிரசன்னைக்கு நாட்டாமை பண்ணலாம்" என்றவர் ஜீவாவிடம் இருந்து அவனது தங்கையை பிரிக்க... அவளோ அழுதபடியே இறுக்கமாக ஜீவாவின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

"அப்பா அவளை விடுங்க.. நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க? இப்போ எதுக்கு இவளை அடிச்சீங்க?"

"அவள் என் பொண்ணு அவளை அடிக்க எனக்கு உரிமை இருக்கு"

"பெத்த பொண்ணை வளர்க்குறதுக்கு தான் உங்களுக்கு உரிமை இருக்கே தவிர இப்படி காட்டுமிராண்டி தனமா அடிக்கிறது இல்லை.. நீங்க பெத்த பொண்ணுக்குறதுக்காக அடிச்சாலும் கொன்னாலும் வலிக்காதா என்ன?"

"எனக்கே புத்தி சொல்லுற அளவுக்கு வளர்ந்துட்டியா நீ? அந்த அளவுக்கு அந்த பொண்ணோட மோகம் உனக்கு கூடி போச்சு" கோவத்தில் வார்த்தைகள் தடம் மாறியது...

"அப்பா தப்பா பேசாதீங்க.. எதை கொண்டு வந்து எது கூட சேர்த்து பேசுறீங்க? தனுவை ஏன் அடிச்சீங்கன்னு தான் கேட்டேன்? அதுக்கு எதுக்கு தேவை இல்லாமல் யசோதவை பத்தி பேசுறீங்க?"

"அந்த பொண்ணால தானே நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?"

"அப்பா, இந்த விஷயத்தில நீங்க என்னை புரிஞ்சிக்கல, அவ்ளோ ஏன் புரிஞ்சிக்க முயற்சி கூட பண்ணல, உங்களால அம்மா இல்லாமல் இருக்க முடியுமா? கண்டிப்பா முடியாது! அது மாதிரி தான்பா எனக்கும்... என்னால யசோ இல்லாமல் இருக்க முடியாது.. அவள் இல்லாமல் வாழவே முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் சாதாரணமா அவள் இடத்தில இன்னொருத்தியை வச்சு வாழுன்னு சொல்லுறீங்க?.. உண்மையாவே என் மனசு உங்களுக்கு புரியலையா அப்பா" ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியானது...

"அவள் இல்லாமல் என்னால முடியாது ப்பா.. அவள் இடத்தில இன்னொருத்தி வேண்டாம் ப்பா.. நடைப்பினமாகிடுவேன்..." முற்றிலும் மனமுடைந்து கூறினான் ஜீவா.

மீண்டும் சில நொடி மௌனம்... ஆழ்ந்த மூச்செடுத்த விஸ்வநாதன் தன் மகனின் தோள் மீது கரத்தை போட்டுக் கொண்டார்.

"யசோதாவை நான் வேண்டாம்னு சொல்ல காரணமே நீ நல்லா இருக்கணும்ங்குறதுக்காக தான்... "

"இல்ல அப்பா" இடைமறித்தான் ஜீவா..

"ஒரு நிமிஷம் நான் பேசி முடிச்சுடுறேன்... இப்போ அப்பா பண்ணுறது உனக்கு தப்பா தான் தெரியும்... ஆனால் கொஞ்சம் காலம் போனதுக்கு அப்புறம் நான் பண்ணது உனக்கு சரின்னு தோணும்..."

"அதுவரைக்கும் நான் உயிரோட இருக்கணுமே அப்பா" என்ற ஜீவாவின் விழியோரம் ஒரு துளி கண்ணீர். பெரு மூச்சு விட்டவர் மீண்டும் தன் இறுக்கத்தை அதிகரித்தார்.

"ஒரு பொண்ணுக்காக எங்களை எல்லாம் தனியா விட்டுட்டு போயிடமாட்டேன்னு எனக்கு தெரியும்... என் பையன் அப்படிபட்டவன் இல்லை"

"அது தெரிஞ்சு தானே உங்க விருப்பத்தை என் மேல திணிக்க பார்க்குறீங்க?"

"கண்டிப்பா அப்படி இல்லை ஜீவா... நீ அந்த பொண்ணை விரும்புறேன்னு சொன்ன போது நான் எந்த மறுப்பும் சொல்லலையே... இப்போ நான் வேண்டாம்னு சொல்லுறேன்னா அந்த விஷயம் உனக்கு சரிவராதுன்னு அர்த்தம்... உனக்கு எது சரி எது தப்புன்னு அப்பாவுக்கு தெரியும்டா" விரக்தியாக சிரித்துக் கொண்டான் ஜீவா.

"நீ சொன்னியே மீரா இல்லாமல் என்னால வாழ முடியாதுன்னு உண்மை தான்... ஆனால் அந்த யசோ உன் அம்மா மீரா மாதிரி கிடையாது, அதை முதலில் நீ புரிஞ்சுக்க"

"உங்களுக்கு என்னப்பா தெரியும் என்னோட யசோவை பத்தி? அவள் கூட பேசி இருக்கீங்களா? அவளை புரிஞ்சிக்கணும்னா அதுக்கு நீங்க என் இடத்துல நிற்கணும்... அது உங்களால முடியாது... உங்க பார்வைக்கு அம்மா எப்படியோ அப்படி தான் எனக்கு யசோதாவும்"

"அது இல்லடா உனக்கு புரியல"

"ஆமா அப்பா எனக்கு புரியல,. உங்க கருத்தை எவ்ளோ தான் பாசமா பேசி என் மேல திணிக்கணும்னு நீங்க நினைச்சாலும் அது எனக்கு புரியாது."

"சரிடா உன் வழிக்கே வரேன்... நீ உன் காதலில் இவ்ளோ பிடிவாதமா இருக்க... நல்ல விஷயம் தான். அதே எண்ணம் யசோதாவுக்கும் இருந்தா நானே இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்."

"அப்பா உண்மையாவா?" அங்கிருந்த அனைவர் முகமும் மலர்ந்தது.

"சத்தியமா... ஆனால் ஒரு கண்டிஷன், யசோதாவே வந்து 'உங்க பையனை எனக்கு பிடிச்சு இருக்கு, நான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு என்கிட்ட சொல்லணும்' அப்படி சொன்னா அடுத்த முகூர்த்தத்திலே உனக்கும் அவளுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அப்படி இல்லன்னா அதே முகூர்த்ததில உனக்கும் நான் பார்த்து வச்ச என் ப்ரெண்டு பொண்ணு கங்காவுக்கும் நிச்சயதார்த்தம்... இதுக்கு உனக்கு சம்மதமா?" என்று கேட்டார். ஜீவாவும் திடமாக சம்மதம் என்று கூறிவிட்டு சந்தோசமாக அங்கிருந்து நகர பார்த்தான்.

"அப்புறம் ஜீவா ஒரு நிமிஷம்... உனக்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம்... அதுக்குள்ள அவளை அழைச்சிட்டு வந்து பேச சொல்லு"

"அவ்ளோ நாள் தேவைப்படாது நாளைக்கே அழைச்சிட்டு வரேன்" தன் காதல் மீது இருந்த நம்பிக்கையில் சொன்னான்.

"குட்..." என்றவர், அருகில் இருந்த தன் மகளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு "சாரிடா அப்பா ஏதோ கோவத்தில அடிச்சிட்டேன்" என்று மன்னிப்பு கேட்டார்.

"எனக்கு உங்க மேல கோவம் தான் இருந்தாலும் நீங்க அண்ணனோட லவ்வுக்கு ஓகே சொன்னதால மன்னிச்சு விட்டுடுறேன்" என்றவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினார்.

"அப்பா இப்போ நானும் ஒரு பையனை லவ் பண்ணா, என்னோட லவ்வுக்கும் நீங்க ஓகே சொல்லுவீங்கல்ல" என்ற மகளை விளையாட்டாக அவர் அடிக்க போக, அவளோ சிரித்தபடியே "சும்மா சொன்னேன் அப்பா" என்றபடி அங்கிருந்து நழுவி சென்றாள்.

அவரது செயலை எல்லாம் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த மீரா "எனக்கு என்னமோ நீங்க ஜீவாவுக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி தெரியல... அவனுக்கு எதையோ புரியவைக்க இப்படி ஒரு வாரம் கெடு கொடுக்குறீங்கன்னு தோணுது" என்றவரை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து செல்லப் பார்த்தார் விஸ்வநாதன்.

"சொல்லுங்க விஷ்வா? அப்படி தானே?"

"இந்த உலகத்தில உன்னை விட வேற யாராலும் என்னை புரிஞ்சிக்க முடியாது மீரா... எனக்கு என் பையனோட பிடிவாதத்தை விட அவனோட வாழ்க்கை முக்கியம்... அது நான் சொல்லுற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் தான் அவனுக்கு கிடைக்கும்" என்றவர் அமைதியாக அங்கிருந்து சென்றார்.

****

பத்து நாட்கள் ஆகி விட்டது... யசோதாவின் வீடே நிசப்தமாக இருந்தது, அனைவரும் வீட்டில் தான் இருக்கின்றனர், ஆனால் யாரும் யாருடனும் அதிகம் பேசிக்கொள்வது இல்லை.

வைஷ்ணவிக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை நினைத்து பெரும் கவலையாகி போனது... தான் யார்? என்று தெரியாமல் இத்தனை நாள் பிறர் சொல்வதை எல்லாம் நம்பி இருக்கிறோமே என்று அவள் மீதே அவளுக்கு கோவம், இருந்தும் என்ன செய்ய முடியும்? கோவத்தில் சண்டையிட்டு எங்கு போய் முட்டிக் கொள்வது? என்று தான் அவளுக்கு தெரியவில்லை, தனக்கென செல்ல ஏதேனும் இடம் இருக்கிறதா? அல்ல செல்லும் வழி தான் தெரியுமா? அவளுக்கு தெரிந்தது எல்லாம் இந்த வீடு அதனை விட்டால் கோவில், அப்படியும் இல்லையா, அருகில் உள்ள ஆசிரமம் அவ்வளவு தான் இப்போதைய அவளது வாழ்க்கை.. இவர்கள் சண்டைக்கு மத்தியில் மிதி படுவதை காட்டிலும் பேசாமல் ஆசிரமம் நோக்கி சென்று விடுவோமா? என்று கூட யோசித்திருக்கிறாள், ஆனால் என்ன செய்ய? மனம் எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது இல்லையே.. நேரத்திற்கு தகுந்தாற்போல அது தனது வழியை மாற்றிக் கொள்ளும், இவளோ செல்லும் வழியை மறந்து வழி மேல் விழிவைத்து காத்திருக்கிறாள் அவளது கணவன் என்ற நபருக்காக...

கடந்த ஒருவாரமா அவனிடம் இருந்து இவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை... ஒரு வாரத்தில் வந்து, அனைத்தையும் சொல்கிறேன் என்றவன் ஆளையே காணோம்... அவன் வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்ற எண்ணத்தில் அமைதியாக காத்திருக்கிறாள்.

விஸ்வநாதனும் அந்த நாளுக்கு பிறகு இந்திராவின் வீட்டுக்கு வருவது இல்லை... இந்திராவிடமும் எதையும் கேட்டு அறிந்து கொள்ள முடியவில்லை... அதனால் யாரை தொடர்பு கொள்வது என்று புரியாமல் காலம் போன போக்கில் எப்போதும் போல அந்த வீட்டில் சமையல் வேலையை பார்த்துக் கொண்டு அப்படியே வாழ ஆரம்பித்தாள் வைஷ்ணவி.

இந்த பத்து நாளில் யசோதாவை தேடி 4 நான்கு முறை வீட்டுக்கு வந்து விட்டான் ஜீவா... ஆனால் யசோதா அவனது முகத்தை கூட பார்ப்பதற்கு வெளியே வரவில்லை... அந்த அறையிலேயே முடங்கி விட்டாள். திறக்காத கதவை எத்தனை முறை தான் தட்டி தட்டி ஓய்வது என்று ஜீவாவும் அலுத்து போனான்.

தன் தந்தையிடம் வீரவசனம் பேசிவிட்டு யசோதாவை எப்படியும் சமாதானம் செய்து அழைத்து செல்லும் நோக்கில் மூன்று நாட்களுக்கு பிறகு இந்திராவின் வீட்டுக்கு வந்தான் ஜீவா.

வாசலில் ஜீவாவை பார்த்ததும் இந்திராவுக்கு 'ஐயோ' என்றானது, "ஏன் தம்பி? உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?" அலுத்துக் கொண்டார்.

"யசோவை பார்க்கணும் ஆண்டி"

"அவள் உள்ள தான் இருக்கா ஆனால் கண்டிப்பா உன்கிட்ட பேச மாட்டா, அவ்ளோ ஏன் வெளியே கூட வர மாட்டா? உனக்கு எதுக்கு இந்த வீண் வேலை?"

"பேசி முடிச்சிட்டீங்கன்னா கொஞ்சம் தள்ளுங்க ஆண்டி, நான் அவள் கிட்ட பேசிக்கிறேன்" என்றவன் அவரை கடந்து உள்ளே சென்றான்... இதனை எல்லாம் கடன் போல பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவி வழக்கம் போல தான் உண்டு தன் வேலை உண்டு என்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள்.

அப்போது தான் ஆரியனுக்கு தகவல் சொன்ன அந்த நபர் வைஷ்ணவியை பார்த்தது.

அந்த வீட்டில் வைஷ்ணவியை பார்த்ததும் ஒருகணம் அதிர்ந்து போனான் அவன்.

அவன் அருகில் இருந்தவனோ "சார் இது உங்க ப்ரெண்டு ஆரியனோட வைப் தானே? அவங்க இறந்து போயிட்டதா தானே எல்லாரும் சொல்லுறாங்க? அப்போ இது யாரு சார்?" என்று கேட்டான்.

"கொஞ்சம் நேரம் சும்மா இருடா அது தெரியாமல் தான் நானே முழிச்சிட்டு இருக்கேன். நான் கூட எனக்கு தான் கண்ணு தெரியலயோன்னு இவ்ளோ நேரம் யோசிச்சேன், நல்ல வேலை உன் கண்ணுக்கும் இவள் பல்லவி மாதிரி தான் தெரியுறா?"

"பல்லவி மாதிரி தானா சார்? அப்போ இது பல்லவி இல்லையா?"

"அடேய் என்னை குழப்பாதடா... தூரத்தில் இருந்து பார்க்குறதால கொஞ்சம் அப்படி தெரியுது போல ஆனால் பல்லவி இவளை விட கலர் கொஞ்சம் கம்மிடா"

"ஏன் சார் இந்த வெள்ளையாகுற ட்ரீட்மெண்ட் எதுவும் பண்ணி இருப்பாங்களோ?"

"அது என்னதாவோ இருக்கட்டும்... வீட்டை கண்டு பிடிச்சு சொல்லியாச்சு... இனி அவன் பாடு... நமக்கு எதுக்கு அடுத்த வீட்டு வம்பு, போலாமா மாமு" என்றபடி இருவரும் அங்கிருந்து சென்றனர்.

வழக்கம் போல ஜீவாவின் பேச்சுக்கு காது கொடுக்க வில்லை யசோதா, அவனும் எப்போதும் போல கதவை பார்த்து புலம்பி விட்டு செல்வான் என்று எதிர் பார்த்தால் இன்று பொறுமை இழந்து கதவை உடைக்க பாய்ந்து விட்டான்... அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்தாள் வைஷ்ணவி.

"தம்பி என்ன பண்ணுறீங்க?" என்று பதறியபடி இந்திரா வந்து நிற்க, யாரையும் பொருட்படுத்தாமல் கதவை மோதி உடைத்தான்.

உள்ளே யசோவோ சுவரை பார்த்துக் கொண்டு காதில் ஹெட் போன் போட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இப்போ தான் புது கதவு மாட்டினாங்க அதுவும் போச்சா" என்று நினைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.

"ப்ளீஸ் நீங்க எல்லாம் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா? நான் அவள் கிட்ட தனியா பேசணும்" என்றவன் வைஷ்ணவியையும், இந்திராவையும் அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
அவர்களும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்றனர்.

"யசோ" என்று உச்ச பட்ச சத்தத்தில் கத்தியவன் அவளது காதில் இருந்த ஹெட் போனை பிடுங்கி வீசினான்... அவளோ கோவத்தில் சீறிக்கொண்டு வர, அடுத்த நொடியே அவளை தன்னை நோக்கி இழுத்தவன் "என்ன தாண்டி உனக்கு பிரச்சனை? எதுக்கு என்னை அவாய்டு பண்ணுற?" என்று கேட்டான்.

எந்த வித சலனமுமின்றி அவனது முகத்தை பார்த்தவள், பொறுமையாக அவனது பிடியில் இருந்து விலகி நின்றாள்.

"ஏதாவது சொல்லுடி, சொன்னா தானே எனக்கு தெரியும்?"

"என்னன்னு சொன்னா என்னை விட்டு போயிடுவியா?" என்று முதல் முறை வாயை திறந்தாள்,.

"சொல்லு... ஆனால் கண்டிப்பா உன்னை விட்டு போக மாட்டேன்"

"இல்லை நீ போயிடுவ"

"கண்டிப்பா மாட்டேன்"

"பொய்"

"சரி விடு உனக்கு அது பொய்யாவே இருக்கட்டும்... என்னன்னு முதலில் சொல்லு"

"எனக்கு உன்னை பிடிக்கலை... வேற ஒருத்தரை பிடிச்சு இருக்கு"

"வாட்?"

"ஆமா... முன்ன மாதிரி உன் மேல எனக்கு இன்டர்ஸ்ட் இல்லை... அந்த இன்டர்ஸ்ட் எல்லாம் இப்போ வேற ஒருத்தர் மேல மாறிடுச்சு"

"யசோ"

"யாருன்னு கேட்க மாட்டியா?" என்றவள் அமைதியாக அங்கிருந்த சன்னல் திரைகளை நீக்கி விட்டு, முழு சூரிய ஒளியையும் தன் மீது வாங்கினாள்.

"அது யாரு?"

"உன் அப்பா" என்று அவள் சொன்னதும் நொடியில் ஜீவாவின் முகம் மாறி போனது..
 
Status
Not open for further replies.
Top