ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

தினமும் தாரிணிக்கு காலை, மாலை என பிஸியோதெரபி மருத்துவரை அழைத்து பயிற்சிகளை செய்ய சொல்லியிருந்தான் அகரன்.

இப்போது சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் தாரிணி.

அவள் அறைக்கு உணவு எடுத்து வந்த கௌரி, “தாரிணிம்மா.. இப்பதான் இங்க வேலை செய்யறவங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்படி அகரன் தம்பி வாழ்க்கை மாறாதான்னு இருந்தோம்.. இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம்னு தெய்வாம்மா சொன்னாங்க.. தம்பிக்கு ஏத்த மாதிரி நீங்களும் தேவதை தான். “ என தாரிணியின் முகத்தை நெட்டி முறித்தார்.

“அக்கா.. நானே நினைச்சு பாக்கல. இந்த வீட்டை விட்டு எப்படா போவோம்னு தான் வந்தேன். ஆனா எப்படி இதே வீட்டில மருமகளா வாழ வேண்டி வந்துச்சுன்னு நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு.”

“அதான் மா.. இவங்களுக்கு இவங்கதான்னு கடவுள் போடற முடிச்சு இது.. எனக்கு அப்பவே தெரியும்.. நீங்க தான் அகரன் தம்பிக்கு மனைவியா வருவீங்கன்னு..”

“அதெப்படி தெரியும்.. இந்த வீட்டை விட்டு போக உங்ககிட்டே கூட காசு கேட்டேனே..”

“அதெல்லாம் தெரியும் மா.. அகரன் தம்பி ஒரு நாள் நைட் நான் அந்த பக்கம் போறப்ப வரைய ஆரம்பிச்சுச்சு.. காலைல நான் காபி கொண்டு போறப்ப வரைஞ்சு முடிச்சு அது மேலேயே படுத்துட்டு இருந்துச்சு.. என்ன தான் வரைஞ்சிருக்குனு பாத்தா எல்லாமே ரெண்டு பேர் கல்யாண கோலத்தில் நிக்கற மாதிரி படங்க. தெய்வாம்மாட்ட சொன்னேன். அவங்களும் வந்து பாத்துட்டு தெய்வம் இதான் நினைக்குதுன்னா அதுவே நடக்கட்டும்னு சொன்னாங்க..
அடுத்த நாள் நீங்க வீட்டுக்கு வந்ததும் தான் அந்த படத்தில் இருக்கறது நீங்கதான்னு தெரிஞ்சது.
அப்பவே தம்பி‌ மனசுல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.
உங்க ரெண்டு பேருக்கும் கடவுள் முடிச்சு போடனும்னு வேண்டிக் கிட்டேன்.
அதுக்கு ஏத்த மாதிரி ஒன்னொன்னா நடக்கவும் இப்ப நீங்க அகரன் தம்பிக்கு மனைவியாக போறீங்க”

“ஓ.. இதெல்லாம் எப்போ.. ஆஃபிஸ் ல கூட ஒன்னு ரெண்டு படங்கள் பாத்தேன்.. “

“நீங்க அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க இல்ல… அப்போதான்.. “

“நிஜமாவே ஆச்சர்யமா இருக்குக்கா.. எப்படி அவர்‌ மனசில நான் போனேன்.. என் மனசில் அவர் வந்தார்னு.. நான் அந்த படங்களை பாக்க முடியுமா”

“தம்பி ரூம்ல மறைச்சு வச்சிருக்கு போல.. எங்கேயும் வெளிய காணோம்..” கௌரி சொல்ல அவருடன் அகரனின் அறைக்கு வந்து வார்ட்ரோப்களை ஆராய ஆரம்பித்தாள்.

“இதோ இருக்கு.. “ என்று எடுத்து பார்த்தவள், “வாவ்.. நாங்க ஃபோட்டோ ஷூட் பண்ணோம் இல்ல.. அதெல்லாமே அப்படியே அப்பவே வரைஞ்சு வச்சுருக்கார் கா. இது நிஜமாவே போன ஜென்ம பந்தம் தான்.‌ “ என்று மார்போடு அவை அனைத்தையும் அணைத்துக் கொண்டாள்.
________


தெய்வா, “தாரிணி.. நீ இன்னிக்கு கம்பெனிக்கு போகலையா? அகரனும் ஒன்னும் சொல்லாம போயிட்டான் போல.. நான் கோவிலுக்கு போய்ட்டு இப்போதான் வரேன்..” என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.

“ஆமா.. ஆண்ட்டி.. இன்னிக்கு அவர்‌ எங்கேயோ வெளிய ஒரு ப்ரசண்டேஷனுக்கு போறாராமா..அதான் என்னை வீட்டிலேயே இருக்க சொல்லிட்டார்..”

“ஓ.. அப்ப நீ நல்லா ரெஸ்ட் எடு.. எனக்கு கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.. உனக்கு புது புடவை எடுக்க இன்னிக்கு புடவைகளை கொண்டு வர சொல்லியிருக்கேன்” என்றார்.

“ஆண்ட்டி நான் ஒன்னு கேட்கவா”

“சொல்லும்மா.. வேற எதாவது வேணுமா?”

“இல்ல ஆண்ட்டி.. அகரன் வரைஞ்சு வச்ச படங்களை அவர் ரூம்ல பாத்தேன். அதெல்லாம் ஏற்கனவே நீங்க பாத்தீங்களா.. அதை பாத்துட்டு தான் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்களா?”

தெய்வா ஒரு நிமிடம் சுதாரித்து, “உனக்கெப்படி தெரியும்.. கௌரி சொன்னாளா.?”

“ஆமா ஆண்ட்டி.. “

“ம்ம் ஆமாம்மா.. அகரன் அவன் கண்டிஷன்ல இருந்து பின்வாங்க மாட்டான்னு நினைச்சிட்டு இருந்தப்ப தான் அவன் வரைஞ்சதை பாத்தேன். எனக்கு ஒன்னும் புரியலை.. ஆனா அகரன் நடவடிக்கையில் மாற்றம் தெரிஞ்சது. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் மொத்தமாவே அவன் மாற ஆரம்பிச்சான். அவனுக்கு உன்னை பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கும் உன்னை முதல் முதல்ல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது.. ஏற்கனவே ஏதோ ஒரு பந்தம் இருக்க மாதிரி..”

“ஆண்ட்டி.. எனக்கும் உங்களை தான் முதல்ல பிடிச்சது. எனக்கு அம்மா கூட இருக்கற கொடுப்பினை இல்ல.. என்னவோ உங்களை பாத்ததும் அம்மாவோட இருக்க மாதிரி தோணுச்சு.. உங்களை பிடிக்க போய் தான் அவரை பிடிச்சிருச்சு போல..” என தெய்வாவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


தெய்வாக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. தாரிணியின் கைகளை பிடித்துக் கொண்டார்.

“ஆண்ட்டி.. அப்புறமா அவர்ட்ட நான் இன்னும் மாமாவை பத்தி சொல்லல. அவரைப் போய் நான் கூட்டிட்டு வரணுமே..“

“ஆமா .. சொன்ன இல்ல.. நான் அகரன்ட்ட பேசறேன் மா. அவரை வரவழைக்க முடியுமான்னு கேட்கிறேன். இல்லனா அண்ணனை போய் கூட்டிட்டு வர சொல்றேன்.”

"அச்சோ.. நான் நேரா போறேன் ஆண்ட்டி.. மாமாவை பாத்து எல்லா விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கிட்டு கூட்டிட்டு வரேன்.. “

“நீ தனியா எப்படி போவ.. கால் நல்லா நடக்க வரட்டும். அகரனும் என்ன சொல்றான்னு கேட்போம்.. “

“கால் நல்லா ஆகட்டும். ஆனா நானே தான் போவேன்.. ப்ளீஸ் என் ஆசையை நிறைவேத்தி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு ஆண்ட்டி “ என்றாள்.

“சரிம்மா... நீ ஆசைப்பட்ட மாதிரி போய்ட்டு வா.. ஆனா அண்ணனை வேணா கூட கூட்டிட்டு போ..”

“சரி ஆண்ட்டி..” என்று மீண்டும் தெய்வாவை அணைத்துக் கொண்டாள்.
____________


கல்யாண வேலைகள் ஒருபுறம், தாரிணி தனியே மெல்ல மெல்ல நடக்க ஆர்ம்பித்தது ஒரு புறம் என்று நாட்கள் சென்றது.

திருமணத்திற்கு நாள் குறித்தார்கள். ஒரு மாதத்தில் திருமணம்.

அகரன், தினம் தினம் தாரிணி மேல் காதலை வளர்த்துக் கொண்டே இருந்தான்‌. அவளை ஒரு இளவரசியை போல் தாங்க துவங்கினான்.

ஆண்டாளும், மதுவும் சமயம் பார்த்து காத்திருந்தார்கள். தாரிணியை வீட்டை விட்டு துரத்துவதற்கு காரணம் தேடிக் கொண்டு இருந்தார்கள்.

திருமண பத்திரிக்கையை அகரன் அவன் நண்பர்களுக்கு அனுப்ப, வைபவ் உடனே அகரனை அழைத்தான்.

“டேய்.. என்னடா ஜெட் ஸ்பீட்ல போற.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ற அளவு வந்திட்ட.. சொல்லவே இல்ல.. “

“இல்லடா.. வைபவ்.. பவதா தான் என்னோட சோல்மேட்.. அது புரிஞ்சதும் எதுக்கு காலத்தை கடத்தனும்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன் டா..”

“என்னடா இவ்வளோ ஷார்ட்டா ஒரு காரணம் சொல்ற”

“ஆமா டா.. என் வாழ்க்கையில் இருந்த எல்லா கேள்விக்கும் அவ பதிலா வந்திருக்கா டா. அவளை எதுக்காகவும் இழக்க விரும்பல டா.”

“அது .. அது ஓகே டா. ஆனா ரொம்ப அவசரப்படறியோன்னு தோணுது. நிதானமா செய்யலாம் இல்ல. “

“இல்லடா.. நிதானமா இருந்தா என் மனசே மாறிடும்னு தோணுது. உனக்கு தான் தெரியுமே.. எனக்கு ஒரு முடிவெடுத்தா அதை உடனே செயல்படுத்தனும்..”

“கரெக்ட் டா.. அவங்க சைட்ல யாரும் இல்ல தான். ஆனா அந்த பொண்ணை பத்தி வேற என்ன தெரியும்.. அவங்க பேக் ரவுண்ட் என்ன? அவங்க சொந்தம்னு யாராச்சும் இருந்தா அவங்கள்ட்ட பேசினியா.. இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படிடா? ஆண்ட்டி கூடவா அதை பத்தி யோசிக்கல”

“என்னடா பவதாவை சந்தேகப்பட சொல்றியா?”

“சந்தேகப்பட சொல்லல. நாளைக்கு எதுவும் பிரச்சினைன்னு வந்து நிக்க கூடாது டா”

“டேய் அவ இங்க வந்து ஏறக்குறைய நாலஞ்சு மாசம் ஆகுது. இதுவரை அவ என்னையும், அம்மாவையும் தான் உயிரா நினைக்கிறா டா.. “

“சரி டா.. ஆனா அவங்க மாமா.. ஒருத்தர் இருக்கார்னு” என்று வைபவ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தெய்வாவின் சத்தம் காதில் கேட்டது. அலறியடித்தபடி ஓடி வந்தான் அகரன். அலைபேசியில் வைபவ் தனியாக பேசிக் கொண்டிருந்தான்.

“அம்மா.. என்ன ஆச்சு.” என்று பதறினான் அகரன். அவன் உள்ளே வந்ததும் தாரிணி கீழே விழுந்திருந்ததை பார்த்தான். அவளருகில் தெய்வா அமர்ந்திருந்தார்.

“அகரா.. அவளா தனியா நடக்கறேன்னு சுவரை பிடிக்காம காலை எடுத்து வச்சிருக்கா.. அப்படியே கீழ விழுந்திட்டு இருக்கா.”

“அறிவிருக்கா உனக்கு. எதுக்கு இப்படி அவசரப்படற. உன்னை தனியா நீயா நடக்காதன்னு சொல்லியிருக்கேன் இல்ல.. “ என கத்தினான்.

“அகரா பொறுமையா இரு. எதுக்கு அவசரப்படற
.” தெய்வா சொல்லியதும் கூட அவனுக்கு கோபம் அடங்கவில்லை. அவளின் கால்களை ஆராய்ந்தான். வேறு எங்கேயாவது அடிப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தான்.

அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளட்டும் என்று தெய்வா அங்கு இருந்து கிளம்பினார்.

“ஏன் இப்படி பண்ற… பவதா… உனக்கு எதாவது ஒன்னுன்னா என்னால் தாங்கிக்க முடியாது.” என்று அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தான்.

“அப்படியென்ன அவசரம். இவ்வளோ கேட்கிறேன் இல்ல..வாயைத்திறந்து பதில் சொல்லு” என்று அவளையே முறைத்தான்.

“இல்ல தனியா நடக்க வருதான்னு பார்த்தேன். அப்போ தானே ஸ்ரீலங்காக்கு சீக்கிரமா போக முடியும்”

“ஸ்ரீலங்காக்கா. அங்க எதுக்கு போகனும். அதுவும் அவ்வளவு அவசரமா?”

“இல்ல அங்க எங்க வீடு.. அங்க கல்யாணத்துக்கு முன்னாடி போய் பார்க்கனும்னு தான்.”

“ஓ அங்க உனக்கு வீடு வேற இருக்கா? உன்னை பத்தி தெரிஞ்சுக்க நிறைய இருக்கும் போலயே..”

“என்ன.. அதான் எல்லாம் சொன்னேனே ஹாஸ்பிட்டல்ல.”

“நீ ஸ்ரீலங்கான்னு சொல்றதே புதுசா இருக்கு..நீ அன்னிக்கு உங்க பக்கத்து வீட்டு சிஸ்டர் பிரதர்னு சொன்னது அங்க இருக்கறவங்களையா?”
வைபவ் தாரிணியை பற்றி விசாரித்து சொல்லும்போது வட இந்தியா என்றது அவனுக்கு ஞாபகம் வர குழப்பமானது.

“இல்ல அவங்க மேகாலயால இருக்காங்க. நான் ஸ்கூலிங் அங்க தான் பண்ணேன்‌.. நான் பொறந்தது ஸ்ரீலங்கால தான்.. அங்க வீட்டை விட்டுட்டு தான் அப்படியே மேகாலயா போனோம்.”

“ இதெல்லாம் அம்மாக்கு தெரியுமா?”

“ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரியும். நான் அங்க இருந்த வீட்டை கல்யாணத்துக்கு முன்னாடி சரியாக்கனும்னு ஆசைப்பட்டேன்.. நாம அங்க நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அதான் நானே போகனும்னு ஆண்ட்டிட்ட கேட்டேன்.. கால் சரியானதும் தான் போகனும்னு சொன்னாங்க.. அங்கிளை வேணா கூட்டிட்டு போக சொன்னாங்க”

“ஓ..இவ்வளோ விஷயம் இருக்கா.. ஆனா எதையும் என்கிட்ட சொல்லனும்னு தோணலை.. ஏன் நான் என்ன போக வேண்டாம்னு சொல்லப் போறேனா?”

“அய்யோ.. உங்ககிட்ட சொல்ல வந்தேன்.. ஆனா யாராச்சும் டிஸ்ட்ராக்ட் பண்ணிருவாங்க.. அது அப்படியே மறந்துரும். அதுக்கான நேரமும் சரியாக கிடைக்கல்ல.. ஆனா இப்ப சொல்லனும்னு தான் நினைச்சேன்”

“மணிக்கணக்கா கிஸ் பண்ணிட்டு இருந்தப்பலாம் டைம் இருக்கு.. இதை சொல்லத்தான் உனக்கு டைம் இல்ல..”
சட்டென அமைதியானாள் தாரிணி.. அவள்‌ முகம் சோர்ந்து மாறியது. தலை குனிந்துக் கொண்டாள்.

“ஹேய்.. பவதா.. என்னை பாரு. கோவமா..” என்று அவளின் தாடையை பிடித்து தூக்கினான்.

கண்களில் அவளுக்கு நீர் கோர்த்தது.

குனிந்து ஒரு விரலால் அந்த கண்ணீரை சுண்டியவன், அவள் கண்களில் இதழ்களை பதித்தான். அவளை எழுப்பி உட்கார வைத்து அவளை நெஞ்சோடு இறுக்கினான். தலையை அமைதியாக தடவி கொடுத்தவன், அவளருகில் அமர்ந்து அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்.

“இங்க பாரு. உன்னை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. உன்னை ஆக்ஸிடெண்ட் பண்ணப்ப அம்மா சொன்னாங்க. உனக்கு யாரும் இல்லைன்னு. நான் நீ எங்கேயோ ஹாஸ்டல்ல வளர்ந்தன்னு நினைச்சேன். அப்பா இல்லாத கஷ்டம் எனக்கு தெரியும். உனக்கு அம்மாவும் இல்லன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு. இப்ப வந்து எனக்கு வீடு இருக்கு.. ஆடு இருக்குனு சொன்னா கோபம் வருமா… வராதா..”

“ஆடுலாம் இல்ல அங்க. வெறும் வீடு தான். அதுவே இடிஞ்சு கிடக்கு”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வாய் மட்டும் இல்லன்னா …”

“இல்லன்னா?”

“ம்ம்ம்… இப்படி முத்தம் தர முடியாது..” என்று முழுதுமாக அவளின் இரு உதடுகளையும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.

அகரனின் இடுப்பை இறுக்கி கொண்டவள், அவன் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“என்ன அப்படி பாக்குற.. நாமளே பத்து நாள்ல அங்க போவோம்.. உன் ஆசையை நான் எப்பவும் நிறைவேத்துவேன்.” என்று அவளின் கன்னத்தை கிள்ளி, பின் இதழ் பதித்து எழுந்தான்.

“நிஜமாவா..”

“ஆமா.. போறோம். ஆனா அவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை அங்க கூப்பிட்டு போறதுக்கு நான் என்ன கேட்டாலும் நீ கொடுக்கனும்..”

“டீல்.. என்ன கேட்டுட போறீங்க.. ஆயிரம் கிஸ்ஸஸ் தானே..”

“ஓ… அவ்ளோ சாதாரணமா போச்சா.. அங்க வா.. இருக்கு உனக்கு” என்று சொல்லி விட்டு அவளை அணைத்து விட்டு சென்றான்.

சிறிது நேரத்தில் தெய்வா அங்கு வர, “ஆண்ட்டி.. அவர் ரொம்ப கோச்சுக்கிட்டார். நான் ஸ்ரீலங்கா போகனும்னு சொன்னதுக்கு. நான் அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னப்ப அவர் இருந்தார் தானே. இப்போ வந்து எதுவும் சொல்லலைன்னு கோவப்படறாரு..”

“அப்படியா.. அவன் அன்னிக்கு அங்க தானே என்கூட இருந்தான். அன்னிக்கு நீ யாருன்னு கண்டுபிடிக்கற டென்ஷன்ல இருந்தான் இல்ல.சரியா கேட்டிருக்க மாட்டான். அவனுக்கு எல்லாமே அவசரந்தான். அது இருக்கட்டும். நான் தான் உன்னை பொறுமையா நடன்னு சொன்னேன் இல்ல.. ஏன் இப்படி பண்ண?”

“ஹையோ.. ஆண்ட்டி.. அது நான் நடந்து பாக்கலாம்னு தான் பண்ணேன். ஊருக்கு போனும். அங்க எங்க வீட்டை சரி பண்ண முடியுமான்னு பாத்துட்டு மாமாவை பாக்கனும். அச்சோ மாமாவை பத்தி வேற இவர்ட்ட சொல்லலையே.. ம்ம்ம்.. வேணா.. சர்ப்பரைஸா அங்க கூட்டிட்டு போய் சொல்றேன். ப்ளீஸ் ஆண்ட்டி..நீங்க அதுக்குள்ள அவர்ட்ட சொல்லிடாதீங்க.ப்ளீஸ் ஆண்ட்டி..”

“ஓகே ஓகே.. நான் சொல்லல. ஆனா அகரன் பத்தி இன்னும் நீ முழுசா புரிஞ்சுக்கல. அவனுக்கு சர்ப்பரைஸ் தரேன்னு நீ எதாவது பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பண்ணு. அவனுக்கு எப்போ எதுக்கு கோவம் வரும்னு தெரியாது. ஒரு ப்ளான் போட்டா அதை கரெக்டா செய்யனும்.. மாத்திட்டே இருக்க முடியாது..”

“சரி ஆண்ட்டி.. நான் யோசிச்சு செய்யறேன் எதையும்..”

“நீ சாப்பிட்டு முதல்ல ரெஸ்ட் எடு.. கால் வலி இருக்கா.. டாக்டர வேணா வர சொல்லவா.?”

“ஆண்ட்டி.. அவ்ளோலாம் இல்ல.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பாத்துக்கறப்ப எனக்கு எப்படி வலி இருக்கும்?”

“ம்ம்.. நல்லா பேசற..”

“அதேதான் ஆண்ட்டி அவரும் சொன்னார்.. வாய் மட்டும் இல்லன்னா… அப்பிடின்னு”

“அப்படியா.. இல்லன்னா.. என்ன சொன்னான்..?”

“அது அது வந்து.. போங்க ஆண்ட்டி..” என்று தலையை குனிந்து கொண்டாள்.

தெய்வாக்கு சிரிப்பு வந்தது.. “சரி சரி ரெஸ்ட் எடு” என்று கிளம்பினார்.

தன் அலைபேசியில் அன்று எடுத்த திருமண கோல புகைப்படத்தை பார்த்தபடியே இருந்தாள் தாரிணி.

“ஆளும்.. அவரும்.. சிடுமூஞ்சி.. சிரிப்பு மூஞ்சி.. பெரிய…”

“ஆணழகன்னு நினைப்பு அதானே” என்று அகரன் உள்ளே வர பதறி திரும்பினாள்.

“என்ன அதானே திட்டிட்டு இருந்த”

“திட்டலையே…. கொஞ்சிட்டு இருந்தேன்..”

“ஓ அதான் எனக்கு தெரிஞ்சிருச்சு. இப்பதான் நேர்ல இருக்கேனே.. என்னையே கொஞ்சிக்க. ஃபோட்டோ பாத்து ஏன் கொஞ்சற”

“ஆசை தான்.. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியும்.. கிளம்புங்க.. நான் தூங்கனும்” என்றாள்..

“வா வா.. சேர்ந்து தூங்கலாம்” என்று அவளின் பக்கம் வர,

“ஆண்ட்டி..” என்று சத்தமாக கத்தியவளை பார்த்து அவள் வாயை கையால் பொத்தினான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16

திருமணத்திற்கான நாட்கள் நெருங்கியிருக்க, தாரிணியும் ஓரளவு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் இலங்கைக்கு போவது பற்றி அவளை தவிர யாருக்கும் விருப்பமே இல்லை. ஆனால் அகரனே அவளை அழைத்துப் போவதாக சொன்னதும் யாரும் எதுவும் சொல்லவிவ்லை.

பாண்டியன் தெய்வாவிடம், “கல்யாணத்தை நெருக்கத்தில வச்சிட்டு இப்ப இரண்டு பேரும் டிராவல் பண்றது சரியில்ல தெய்வாம்மா. வேணும்னா நான் போய் பாத்துட்டு அவங்க மாமாவை அழைச்சிட்டு வரேன்.”

“அவரை அழைச்சிட்டு வரது மட்டுமில்ல. அவளுக்கு அவங்க அம்மா வாழ்ந்த வீட்டை பாக்கனம்னு ஆசை போல. அந்த வீட்டை சரியாக்கனும்னு நினைக்கிறா”

“சரியாக்கி.. அங்க யார் போய் இருக்க போறாங்க. அவங்க மாமாவையே இங்க கூட்டிட்டு வரனும்னு சொல்றா. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா பாத்துக்கலாம்.. நீ முடிவா சொல்லிடு..”

“ம்ம்.. அகரன் போனும்னு முடிவு பண்ணிட்டான் அண்ணா. வேணும்னா அவங்க மாமாவை மட்டும் பாத்து கூட்டிட்டு வர சொல்றேன்.”
“சரிம்மா.. நீ சொல்லு” என்று பாண்டியன் செல்ல அப்போது தான் தெய்வா யோசித்தார்.

‘தாரிணி அவங்க மாமாவை சர்ப்பரைஸா பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னாளே.. இப்ப அகரன்ட்ட என்ன சொல்றது?’ குழப்பமாக இருந்தது.

தாரிணி நிறுவனத்துக்கு கிளம்ப தயாரான சமயம் அகரன் வந்து அவள் அருகில் நின்றான்.

“இப்ப நீ தனியா நடக்க முடியுது இல்ல.. இலங்கைக்கு போக டிக்கெட் போட்டிடவா.. “

“நிஜமாவா.. நடக்கலாம் முடியுது.. அப்பப்ப வலி வருது.. அவ்ளோதான்..எப்ப போக போறோம்..”

“ம்ம். எந்த தகவலும் தெரியாம எப்படி ப்ளான் பண்றதாம். நீ தான் மாய மோகினி ஆச்சே”

“என்ன தகவல்.. வேணும்.. கேளுங்க சொல்றேன். நான் என்ன உங்களை மயக்கி அப்படியே சாப்பிட வந்திருக்கனா? மாய மோகினின்னு சொல்றீங்க?”

“அதான் சொன்னேனே.. வாய் மட்டும் தான் இருக்கு... எங்க இருக்காங்க உன் ஃப்ரெண்ட்ஸ்.. எங்க நாம போகப் போறோம்.. அங்க தங்க இப்ப இடம் இருக்கா? எதாவது சொன்னா தானே.. “

“ஹான்.. அது சரி. நான் பேச வந்தாலே வாயை லிப்லாக் பண்ணிடறது. அப்புறம் கிஸ் பண்ண மட்டும் டைம் இருக்குன்னு கேட்கிறது.. என்னமோ நானே வந்து இவரை பேச விடாம கிஸ் பண்ற மாதிரி தான்..”

“ஓ.. அப்ப உனக்கு தேவைப்படல. நான் தான் வந்து உன்னை கிஸ் பண்றேன்?”

“ஆமா.. நான் கிட்ட வந்தாலே நீங்க தான் அப்படி பண்றீ.” அவள் முடிக்கும் முன் அவள் வாயை மூடியிருந்தான் தன் இதழ்களால்.

“ம்ம். இதான் சொன்னேன்.. யார் இப்ப பேச விடாம பண்றாங்களாம்.” என்று அவன் அவள் உதடுகளை விட்ட பிறகு சொன்னாள்.

“அது அப்படித்தான். சரி சொல்லு.. எங்க போனும். அட்ரஸ் கொடு. அங்க தங்க இடம் எங்க இருக்கு..? ஹோட்டலா.. “

“அது… தங்க இடம்லாம் அங்க இருக்காது.. நாம தான் ரெடி பண்ணனும். வீட்ல போய் நிக்க கூட இடம் இருக்குமான்னு தெரியல.. எனக்கு சின்ன வயசுல பழக்கமான அக்கா அங்க தான் இருக்காங்க. அவங்கள்ட்ட அப்பப்ப பேசுவேன். நானே அங்க போய் எட்டு வருஷத்துக்கு மேல ஆச்சு”

“வாட். எட்டு வருஷத்துக்கு முன்ன போன இடமா? இப்ப அந்த இடம் எப்படி இருக்குன்னு எதாவது தெரியுமா..அங்க வீடுங்கலாம் எந்த நிலைமைல இருக்குன்னாவது தெரியுமா?”

“தெரியாது.. அக்கா சொல்லுவாங்க.. அம்மா இருந்த வீடு நிலைகுலைஞ்சு இருக்குன்னு.. ஃபோட்டோ அனுப்பறேன்னு சொல்வாங்க. ஆனா எனக்கு அதை பாக்க தைரியம் இல்லை.. எப்படியாவது அதை சரி பண்ணனும்னு தான் எனக்கு எப்பவும் தோணும். அதுக்காக தான் வேலை தேடனும்.. நிறைய சம்பாதிக்கனும்னு நினைச்சேன். அம்மா ஞாபகமா அந்த வீடு இருக்கனும்னுதான் ஆசைப்பட்டேன்”

“சரி.. அவங்க நம்பர்‌ தா.. நான் பேசறேன். அங்க பக்கத்தில எங்க ஹோட்டல் இருக்கு என்னன்னு கேட்கிறேன்.”

“நம்பரா.. அது..”

“ஏன் நம்பரும் இல்லையா. சுத்தம்..”

“நம்பர்லாம் இருக்கு.. நீங்க ரெடியாயிட்டு வாங்க. தரேன்..”

“ஏன் இப்ப நேரம் நல்லா இல்லையா..”

“ஹையோ… நான் தரேன். நீங்க போய் ரெடியாகுங்க.”என்று அவனை வாசல் நோக்கி தள்ளி விட்டாள்.

அதற்குள் அவள் இலங்கையில் இருக்கும் அவளின் பக்கத்து வீட்டு அக்காவிற்கு பேசினாள். அவளின் மாமாவை பற்றி அகரனிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி வைத்தாள்.

அகரன் நிறுவனத்திற்கு கிளம்பும் போது தாரிணி, அலைபேசி எண்ணை தந்தாள்.

______

பத்து நாட்களில் யாழ்ப்பாணத்தில் விடுதி, அவர்கள் தாரிணியின் வீட்டிற்கு செல்ல வாகனம், விமான டிக்கெட் என்று அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்து முடித்தான்.

அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது.

அகரனை தவிர மற்றவர்களுக்கு தாரிணி அவள் மாமாவை அழைத்து வர செல்கிறாள் என்று தெரியும். போகவே வேண்டாம் என்று சொல்லியவர்கள் தாரிணிக்கு வேறு யாரும் இல்லை என்பதால் அவள் சார்பாக அவள் மாமாவாவது திருமணத்தில் இருக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
_______
யாழிற்கு புறப்பட்டு அகரன் ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

“பவதா.. ரெஸாட்ல கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு நாம நேரா உங்க ஊருக்கு போறோம். நாளன்னிக்கு நமக்கு ரிட்டர்ன் ஃப்ளைட்.. என்னலாம் அதுக்குள்ள வேலை முடிக்கனுமோ முடிச்சுக்க..”

“ரெண்டே நாள் தானா.. அதுக்குதான் நான் அங்க கேட்டப்ப சொல்லலையா.. அதுக்குள்ள எப்படி எல்லாத்தையும் முடிக்கிறது..”

“ஹலோ… இதுவே என் வேலைகளை ஒதுக்கி வச்சுட்டு வந்திருக்கேன். நீ என்ன வேலைங்களாம் இங்க இருக்குன்னு சொல்லு.. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.”

“ஓ.. ரெண்டு நாள்ல ஒரு வீட்டை சரிபண்ணி கட்டிட முடியுமா? அப்புறம் நான்..”

“கட்ட முடியாது தான். ஆனா கட்டறதுக்கு என்ன பண்றதுன்னு பாக்கலாம் இல்ல. அட்லீஸ்ட் நாம கல்யாணம் முடிஞ்சு வரப்ப ரெடியாகிடும் இல்ல..”

“ம்ம்.. ஆமா.. நாம அங்க தான் நம்ம வாழ்க்கையை தொடங்கனும்.. இப்போ ஒரே ஒரு ரூம் கட்ட கூட அக்காகிட்ட சொல்லிட்டு போகலாம். கல்யாணம் முடிஞ்சதும் இங்க வந்திடலாம். “

“அப்ப ஹனிமூன் இங்க தான்னு சொல்ற”

“இருங்க.இருங்க. இங்க இல்ல.. எங்க வீட்டை கட்டி அங்க தான் நடக்கனும்”

“பவதா..இதே ஊர்ல தான் நாம இப்ப இருக்கோம்.. இதைக் கூட நம்ம ஹனிமூன் ட்ரிப்பா நினைச்சு நம்ம வாழ்க்கையை தொடங்கலாம் இல்ல..”

“ம்ம்.. அதானே எங்கடா ஆரம்பிக்கலன்னு நினைச்சேன்.. நான் சொல்றது கல்யாணம் முடிஞ்சு..”

“அதான் முடிஞ்சுருச்சே.. தாலி கூட போட்டிருக்க.. இப்ப தான் நாம உண்மையாவே ஹனிமூன் வந்துருக்கோம்.. அப்புறம் இன்னொரு முறை தாலி கட்டிட்டு எங்கயாவது மால்தீவ்ஸ்.. இந்தோனேஷியான்னு செகண்ட் ஹனிமூன் போகலாம்..”

“இப்படியே சொன்னா அப்புறமா நான் இந்த தாலிய கழட்டி வச்சிருவேன்.. அப்புறமா முறைப்படி நீங்க தாலி கட்டுங்க.. அப்புறமா பாத்துக்கலாம்.”

“இது என்ன சின்னபுள்ளத்தனமா முதல்ல இருந்து கோட்டை அழி.. திரும்ப போடலாம்னு சொல்ற.. இதுவும் முறைப்படி நடந்த கல்யாணம் தான் மா..”

“அதெல்லாம் ஆண்ட்டி தாத்தா முன்னாடி நடந்தா தான் நான் ஒத்துப்பேன்..நம்மள நம்பி தானே அனுப்பியிருப்பாங்க”

“இப்ப நம்மளை தனியா அனுப்பி வச்சுருக்காங்களே.. அது யாரை நம்பின்னு நினைச்ச.. என்னைதான்..ஏன்னா நான் ட்வெண்டி ஃபோர் காரட் தங்கம்..“

“தங்கமா.. நீங்க தான் திருடனே.. உங்களை நம்பி என்னை அனுப்பி வச்சாங்க பாருங்க.”

“பார்ரா. சரி ஊருக்கு வரப்ப என்ன சொன்ன.. நான் எது கேட்டாலும் தரேன்னு சொன்ன..”

“ஆமா.. கிஸ் தானே.. அதை நான் கொடுக்காமலே நீங்களே தரப்போறீங்க எப்படியும்..அது ஓகே.. மத்ததெல்லாம் நோ..”

“அப்படியா” என்றவன் அவளை தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்து, அவளின் முகத்தில் ஆரம்பித்து கால் வரை இதழ்களால் தடம் பதித்தான்‌.

தாரிணி ஒரு நிலையில் இல்லாமல் துடித்துப் போனாள். மெல்ல அவள் அருகில் வந்து கன்னத்தோடு கன்னம் இழைத்து, அவளின் இடுப்பில் விரல்களால் கோலம் போட்டு.. “பவதா.. இப்ப சொல்லு.. கிஸ் தான கொடுப்பேன்னு சொன்ன.. கொடுத்துட்டேன்.. இனி என்ன கேட்டாலும் தருவியா?” என கேட்க, அவள் பதில் சொல்லும் நிலையில் இருந்தால் தானே..

“சொல்லு… “ என்று அவளின் இதழ்களை வருடி தன் இதழ்களை அதில் பொருத்தினான்.

“பவதா.. உன் ரூல்ஸ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமா..”

“ம்ம்ம்..” முழுமையாக அகரனின் பிடியில் இருந்ததால் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

மெதுவாக அவளை பார்த்தவன், கண்களை மூடி படுத்திருப்பவளின் நெற்றியில் முத்தமிட்டு, “ பவதா.. போதும் எழுந்திரு.. கிளம்பலாம்” என்று எழுந்தான்.

தாரிணிக்கு ஆச்சர்யம்.. கண்களை மெதுவாக திறந்தாள்.

“என்ன சொல்றீங்க” என கேட்டாள்.

“வா போகலாம்.. இப்படியே இருந்தீனா என் கண்ட்ரோல் எல்லை மீறிடும்..வா கிளம்பலாம்..”

“அப்படியா..” என்றவளை, “பாத்தியா.. நான் வேணும்னு சொன்னா மாட்டேன்னு சொல்றது. நான் வேணாம்னு சொன்னா அப்டியான்னு கேட்கறது.. உனக்கு அப்போ வேணும் தானே.. இதோ நான் ரெடி” என்று அவளின் பக்கத்தில் கட்டிலில் விழுந்தான்.

“ஹையோ.. நான் அப்படி சொல்லல.. ஆளை விடுங்க.. “ என்று பக்கம் வந்தவனை தள்ளி விட்டு எழுந்தாள்.

_______

இரண்டு மணி நேர கார் பயணத்தில் அவர்கள் தாரிணி வீடு இருந்த பகுதிக்குள் நுழைந்தனர்.

கடற்கரையோர கிராமம் அது.. செய்திகளிலும், சில திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்த இலங்கையின் ஒரு சிறு பகுதியை நேரில் பார்த்ததுமே அதன் வடிவை சிதைத்திருந்த கோரத்தை, சிதைக்கப்பட்டவர்களின் வலியை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் பொறுத்துக் கொள்ளத்தான் முடியவில்லை. அங்கங்கு சிதிலமடைந்த வீடுகளும், புதர் மண்டியிருந்த வீடுகளுமாக ஒரு புறம். ஒரு புறம் தற்போது வாழும் மனிதர்கள் புழங்கும் பகுதி என இரு வேறு காலங்களை அந்த பகுதி சொல்லியது.

தாரிணியை பார்த்தான். அவளின் கண்களில் தாரையாக நீர் வடிந்தது.

“இப்படித்தான் எங்க வீடும் இருக்கும் இல்ல.. அப்பவே அக்கா சொன்னாங்க. வீடு இடிஞ்சுப் போச்சுன்னு. வீட்டை விட்டு, நாட்டை விட்டு போனவங்க இங்க திரும்பி வரலைன்னா, ஏதோ ஒரு புயல்ல, காத்துல, மழையிலன்னு மொத்தமா போய்டும்.. அதோட அவங்க சின்ன வயசு நினைவுகளும் சிதைஞ்சிடும்..”

“பவதா.. வா இங்க..” என்று அவளை இழுத்து தன் பக்கமாக கட்டிக் கொண்டான்.

“பவதா.. வீடு இருக்கற இடம் உனக்கு ஞாபகம் வருதா..”

“ம்ம்.. பத்து பன்னெண்டு வருஷங்க இங்க தான் இருந்திருக்கேன். ஓரளவு ஞாபகம் வருது.. இந்த பக்கமா தான் போகனும்.” என்று ஒரு பகுதியை நோக்கி கைக்காட்டினாள்.

அகரனும் அந்த வழியில் காரை செலுத்த சொன்னான். அவர்கள் இருந்த தெருவும் வந்தது.

ஆனால் வீட்டை தான் அவளால் அடையாளம் காண முடியவில்லை.

எங்கு நிறுத்த சொல்வது என்று முழித்தாள். அகரன் ஒரு வீட்டை கைகாமித்து அங்கு நிறுத்த சொன்னதும் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

சுற்றிலும் இடம் விட்டு நடுவில் மட்டும் தென்னந்தட்டிகளாலும், பனை தட்டிகளாலும் கட்டப்பட்ட ஒரு சிறிய வீடு.

தற்காலிகமாக ஒரு வீட்டை கட்டியிருந்தார்கள்.

அதன் பின் பக்கத்தில் சுற்று சுவர் வேலை முடிந்து, மேல் தளம் மூடுவதற்கு தயாராக ஒரு வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

“இது யாரோட வீடு..எங்க வந்திருக்கோம்..”

“நீ இறங்கு.. முதல்ல” என்று அவளை கைப்பிடித்து மெல்ல இறக்கினான்.

“தாரிணி… “ என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள்.. அவளின் பக்கத்து வீட்டு குமுதினி அக்கா வந்து நின்றார்.

“அக்கா” எனக் கட்டிக் கொண்டாள்.

“உள்ள வா. இது உன் வீடு தான். தம்பி தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கால் பண்ணார். இங்க இருக்க வீட்டோட நிலையை ஃபோட்டோ எடுத்து அனுப்ப சொன்னார்”

தாரிணி கண்ணீரோடு அகரனை பார்த்தாள். மெல்ல அவளை அணைத்துக் கொண்டவன்..

“உடனே எடுத்துக் கட்டற அளவுக்கு உன் வீடு இருக்கல. சுத்தப்படுத்தவே இரண்டு நாளாச்சுன்னு சொன்னாங்க இவங்க. உங்க வீடு இருந்த இடத்தில் தான் தற்காலிகமா ஒரு சின்ன வீட்டை கட்ட சொன்னேன். பின்னாடி வீடு கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க. அது முடிய எப்படியும் ஒரு மாசமாச்சும் ஆகும். இன்னிக்கு இந்த குட்டி பசுமையான வீட்டில் தான் நாம தங்கப் போறோம்.”

அகரன் சொன்னதும் அவன் மார்பில் சாய்த்துக் கொண்டாள்.

“தாரிணி.. இவர் சொன்னதும் எனக்கு ஒன்னுமே புரியல.. எப்படி அதுக்குள்ள கட்டறதுன்னு. ஆனா உடனே இங்க இருக்க ஒரு காண்டிராக்ட்ரை அவரே பிடிச்சு எல்லா விவரத்தையும் சொன்னார்.
அதான் நீங்க வரதுக்குள்ள இந்த ஓலை வீட்டை கட்டியிருக்கோம். பின்னாடி வீடும் ரெடியாகுது.”

“அக்கா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இங்க எந்த நிலைமைல வீடு இருக்கும்னு யோசிச்சிட்டே இருந்தேன். அதை பாக்கற மனநிலை எனக்கு இல்ல. பயந்திட்டே தான் வந்தேன்..”

“நீ நல்லபடியா உன் வீட்டை பாக்கனும்னு தான் அவசரமா கட்ட சொன்னேன்‌.. இப்ப ஓகே வா” அகரன் கேட்டதும்,
கண்கள் முழுக்க நீர் இருக்க தலையாட்டினாள் தாரிணி.

“தாரிணி.. உன்கிட்ட ஒரு பேக் கொடுக்கனும்.. உங்க மா..” என்று சொல்லும்போதே குமுதினி கையை பிடித்தாள் தாரிணி. அகரன் யோசனையாக திரும்பி அவர்களை பார்த்தான்.

“உங்க பேக் தான். சில பொருட்களை இந்த வீட்டில் இருந்து எடுத்தோம்.. அதை பத்திரமா வச்சிருந்து தான் கொடுக்கிறேன்.” என மாற்றி குமுதினி சொல்ல, சிரித்தபடி அதை வாங்கி கொண்டாள் தாரிணி..

“வா வீட்டுக்கு உள்ளே போலாம். தரை சில்லுன்னு இருக்குன்னு ஒரு கயித்து கட்டில் போட்டிருக்கேன். நீங்க வீட்ல இருங்க. நான் போய் உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்..” என குமுதினி சொல்லிவிட்டு சென்றதும், இருவரும் அந்த ஓலை வீட்டுக்குள் நுழைந்தனர்.

நுழைந்த உடனே அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் தாரிணி.‌

“ஹேய் பவதா. என்ன இது.. “ என்று அவளை அணைத்துக்
கொண்டு கேட்டான்.

“தாங்க யூ.. நீங்க இவ்வளோ பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சுக் கூட பாக்கல. எல்லாத்துக்கும் தாங்க்ஸ்.. “ என்று அவனின் உதட்டை எட்டி அவள் இதழால் முத்தங்களாக நிரப்பினாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் -17

அகரன், வீடு கட்டும் இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தான்.

அந்த நேரத்தில் குமுதினி வீட்டுக்கு வந்த தாரிணி, “அக்கா, அவருக்கு மாமாவை சர்ப்பரைஸா கூட்டிட்டு போய் காமிக்கனும்னு இருக்கேன். ஆனா மாமாவுக்கு தான் இவரோட பேச முடியுமான்னு தெரியல. நீங்க எனக்கு ஆக்ஸிடென்ட் ஆனதெல்லாம் மாமாகிட்ட சொல்லல தான?”

“இல்ல தாரிணி. அவரே பாவம்.. இங்க இந்த வீட்டை எடுத்துக் கட்டனும்னு தான் ஆசையா வந்தார். முன்ன போல துணி வேலைகள் அதிகமா செய்ய முடியாததால தான் டூரிஸ்ட் கைடா போக ஆரம்பிச்சார்.

அப்பதான் திடீர்னு கால் கை விளங்கல. அதோட உன் கவலை தான் அவருக்கு பெரிசா இருந்துச்சு.. இப்போ நீ சந்தோஷமா இருக்கற தையும், அந்த தம்பி பத்தி தெரிஞ்சா நிச்சயம் அவருக்கு ஒரு மாற்றம் வரும்”

“அக்கா.. இப்பவே அவரை பாக்கனும் போல இருக்கு..எப்படிக்கா இருக்கார் அவர்?. நான் அகரன் வீட்டில் இருந்ததால உங்ககிட்ட ரொம்ப பேச முடியல..”

“ம்ம். பரவால்ல தாரிணி‌‌.. காலும், வாயும் தான் இன்னும் சரியாகல.
சிகிச்சைல கை ஓரளவு இயக்கத்துக்கு வருது.. நீ போய் பாரு தாரிணி.. கண்டிப்பா அவர் உடம்புல முன்னேற்றம் வரும்” என்ற குமுதினியை கட்டிக் கொண்டாள்.

“உங்க மாமா பொருளெல்லாம் அந்த பைக்குள்ள தான் இருக்கு. நீ வேணும்னா பாத்துட்டு போறப்ப கொடுத்துட்டு போ.. வீடு பின்னாடி கட்டினதும் நானே கொண்டு போய் அங்க வச்சிடறேன்.” குமுதினி சொல்ல, “ம்ம் சரிக்கா..” என்று அகரனை தேடி வந்தாள்.

மாலை நேர கடல் காற்று அவர்கள் இருவரின் முகத்தின் மேலே பட்டதும் அகரன், “கடற்கரைக்கு போலாமா பவதா..” என்றான்.

“ம்ம் போகலாமே.. நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.‌ “

“ம்ம்..” அகரனின் மனம் கனத்து இருந்தது குரலில் தெரிந்தது..

அவனின் கைகளை தன் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டு கடற்கரை நோக்கி கூட்டி சென்றாள்.

அலைகளில் அவர்கள் பாதம் பதிய நடந்தார்கள். தாரிணி சிறிது தடுமாறினாள். கால் அழுத்தும் போது வலித்தது. அவளை கவனிக்காமல் அவன் எங்கோ பார்த்துக் கொண்டே வர,

“ஆ.. காலு” என்றவாறு அப்படியே நின்றாள்.

அவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன், அருகே வந்து எதுவும் பேசாமல் அவளை தூக்கிக் கொண்டு நடந்தான்.

அவளின் முகம் அவனுக்கு அருகாமையில் இருந்தும் அவனுக்கு எந்த உணர்வும் தோன்றாதது அவளுக்கு ஆச்சரய்மாக இருந்தது.

“ஏன் ஒரு மாதிரி டிஸ்டர்ப் டா இருக்கீங்க..”

“இந்த இடம் என்னமோ சந்தோஷத்தை தரதுக்கு பதில் மனசில் கிடக்கிற துக்கத்தை தான் தட்டி எழுப்புது.. ஏதோ பதைபதைப்பா இருக்கு…”

“ஏன் அப்படி.. நான் உங்ககிட்ட நிறைய சொல்லனும்னு வந்தேன்‌.. ஆனா நீங்க ஏதோ குழப்பிட்டு இருக்கீங்க”

“குழப்பம் இல்ல இது.. என்னவோ ஒரு ஃபீல்.”

அவன் தோளில் சாய்ந்து, ஒரு கையை தோளிலும், மற்றொரு கையை இடுப்பில் கைகோர்த்து, “உங்க மனசுல இருக்கற எல்லாத்தையும் இந்த கடல்ல கொட்டிடுங்க.. அது எல்லாமே காணாம போயிடும்” என்றாள்.

“எப்பவும் அப்படித்தான் செய்வேன். ஆனா என்னமோ இன்னிக்கு எதுவுமே சரியில்லாத மாதிரி இருக்கு”

“சரி வாங்க.. இந்த மணல்ல கொஞ்ச நேரம் உட்காரலாம். கடலை பாத்துட்டே இருந்தா மனசு சரியாகும்”

இருவரும் அருகருகே அமர, அகரன் அலைகளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“நான் சின்ன வயசுல இருக்கறப்ப வெயில் குறைய ஆரம்பிச்சதும், இங்க ஓடி வந்திடுவேன். இருட்டற வரைக்கும் இங்கேயே தான் ஆட்டம்”

“ம்ம்..”

“எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடையாது.. எங்க தமிழ் இங்க இருக்கிறதை போல இல்லாததால நிறைய பேர் என்னை வித்தாயாசமா தான் பார்ப்பாங்க.”

“ம்ம்..”

“அம்மா பேசின மொழி, அம்மா கட்டின புடவைங்க, அம்மாக்கு எதுவும் நகைங்க கிடையாதாம்.. ஒரு கருகமணி போட்டிருப்பாங்களாம். அது பத்திரமா எடுத்து வச்சு சின்ன வயசுல இருந்து பாத்துட்டே இருப்பேன். கல்யாணம் ஆனதும் தான் அதை கழுத்தில் போடனும்னு சொல்லிட்டாங்க.. நீங்க என் கழுத்தில் தாலி கட்டினதும் அதை நான் போட்டுப்பேன்”

“ம்ம்..” என்றான்.

“என்ன இது.. பழையபடி அந்த அகரனா ஆகிட்டீங்க. கொஞ்ச நாள் நல்லாத்தானே இருந்தீங்க.. நான் வேணா உங்களுக்கு… “

என்று வார்த்தைகளை இழுத்து அவனையே பார்த்தாள்.

அவனிடம் எந்த சலனமும் இல்லை.

“இங்க பாருங்க. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. எல்லாமே சரியாகும்..”

அவனின் உள்ளங்கைகளை எடுத்த தன் இதழ்களை அதில் பதித்து கொண்டே கேட்டாள்.

அவளின் தோள் மீது அவன் கைகளை வைத்து அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.

ஒரு சில நிமிடங்களில் அவனுக்கு ஏதோ ஒரு ஆறுதல் கிடைத்தது.

“பவதா.. என்ன ஆனாலும் நீ என்னை விட்டு பிரிய மாட்ட இல்ல..”

“நான் ஏன் பிரிய போறேன்..அதுவும் உங்களை மாதிரி ஒரு ஹேண்ட்ஸம் மேன் தான் என் ஆளுன்னு சொல்லிட்டு அப்படியே கெத்தா இந்த பொண்ணுங்க முன்னாடி நடக்கிறது இருக்கே..அந்த கிக் வாழ்க்கை முழுக்க வேணும்.. ”

“எப்பவும் உனக்கு விளையாட்டு தான் பவதா.”

“ம்ம். அப்படியா சொல்றீங்க.. அப்ப நான் சீரியஸா சொல்றேன். நான் உங்களை ஒரு நாள்ல இருபது மணி நேரம் பிரிய மாட்டேன்..”

“அதென்ன இருபது மணி நேரம்..”

“ஆமா.. கல்யாணம் ஆனா.. உங்களோடவே இருப்பேன். நீங்க கம்பெனிக்கு போனாலும் கூடவே வருவேன். தூங்கறப்பயும் கூடவே இருப்பேன். சோ, எப்படியும் இருபது மணி நேரம் அதுல வந்திடும்.. நீங்க குளிக்க, அப்புறமா கொஞ்ச நேரம் உங்க அம்மா, தாத்தோவோட பேச, உங்களுக்கு தனிப்பட்ட டைம் ஏதாவதுன்னா அந்த ஃபோர் ஹவர்ஸல பாத்துக்கலாம்..”

“ஓ… பாவம் பாத்து அந்த நாலு மணி நேரம் தர.. “

“ஆமா.. ஒரு நிமிஷம் கூட உங்களை பிரிய முடியாது.. ஆனாலும் ப்ராக்டிக்கலா பார்த்தா அது ஒருத்தரை டார்ச்சர் பண்ற மாதிரி.. அவங்கவங்களுக்கு ஒரு ஸ்பேஸ் வேணும் இல்ல..”

“ஓ அப்படி..”

“ஆமா.. ஆனா வாழ்க்கைல நாம பிரியனம்னா அது என் கடைசி மூச்சுல தான்”

“ஏய்.. என்ன லூசுத்தனமா..“

“ப்ச்… சீரியஸா சொல்றேன்.. உங்களை விட்டு எந்த சூழ்நிலைலையும் நான் பிரிய மாட்டேன். ஒரு வேளை நீங்களே பிரிஞ்சாலும், நான் உங்க நினைப்புலயே வாழ்ந்திடுவேன்..இது நம்ம காதல் மேல் சத்தியம்..” என்று அவனின் கன்னங்களில் இதழ்களை அழுத்தினாள்‌.

அகரனும் அவளை அணைத்து அவள் பக்கம் தன் உதடுகளை திருப்பினான்.


“ஏன் பிரியறதை பத்தி நாம‌ பேசனும் பவதா.. “

“அப்ப நீங்க சொல்லுங்க.. எது உங்க மனசை அழுத்துது..”
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18
“நீ எப்படி சின்ன வயசு நினைவுகள்னு சொல்றியோ, அது போல என் சின்ன வயசு நினைவுகள் தான்”

“ம்ம்..”

“நான் பொறந்ததும் கொஞ்ச நாள் கூட என் அம்மா சந்தோஷமா இருந்திருக்க மாட்டாங்க. அவங்க சந்தோஷம்லாம் வெறும் காத்தோட போயிடுச்சு..”

“ம்ம்ம்.. உங்க அப்பாதான் காரணம் இல்ல”

“ம்ம்.. அப்பாவா அந்த ஆள்.. அவன் ஒரு ராட்சசன். எங்க அம்மாவை போய் எப்படி தனியா விட்டுட்டு போக ஒருத்தனால முடியும்.. அதுவும் இன்னொரு பொண்ணோட போயிருக்கான்..”

“நாம செய்யற காரியம் மத்தவங்களுக்கு எவ்ளோ கஷ்டத்தை கொடுக்குதுன்னு யாரும் யோசிக்கவே மாட்டேங்கறாங்க இல்ல..”

“ம்ம்.. அன்னிக்கு ஆரம்பிச்ச அவமானம், கஷ்டம், அசிங்கம்லாம் இன்னிக்கு வரைக்கும் துரத்துது..”

“ம்ம்ம்.. உங்களுக்கு அவரை ஞாபகம் இருக்கா..”

“ எனக்கு அவனை நேர்ல பாத்த ஞாபகம் இல்லை.. ஆனா அவன் ஃபோட்டோவ பாத்துட்டே இருப்பேன். நானும் அம்மாவும் பட்ட கஷ்டங்களுக்கு அவன் தானே காரணம்.. என்னிக்காச்சும் அவன் நேர்ல கிடைச்சா இந்த கையாலே அவனை கழுத்தை நெறிச்சு..”

“போதும்.. அப்படி நீங்க எதாவது செய்ய போய் என் நிலைமை.. இவ்வளோ கோவம் ஏன் உங்களுக்கு” .

“உனக்கு தெரியாது பவதா
. நான் சின்ன பிள்ளையா இருக்கறப்ப தாத்தா அவர் வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு வந்தார். தாத்தாவும், மாமாவும் அவ்ளோ நல்லா எங்களை பாத்துக்கிட்டாங்க.. ஆனா மதுவும், அத்தையும்…எங்களை பார்த்தாலே பிடிக்காது ரெண்டு பேருக்கும்..

அம்மாவை தாத்தா கம்பெனிக்கு போன பிறகு அத்தை அவ்ளோ கொடுமைப் படுத்துவாங்க..”

“ம்ம்.. “

“மது என்னை விட இரண்டு வயசு தான் சின்னவ.. ஆனா அவ பொறக்கறப்பவே பாலோடு சேர்த்து விஷத்தையும் அவளுக்கு ஊட்டி ஊட்டி வளரத்தாங்க. அவளுக்கும் எங்களை அசிங்கப்படுத்திட்டே இருக்கனும்.”

“ம்ம்.. ஏன் உங்க அம்மா வீட்டை விட்டு வெளிய‌ வரலை‌”

“ம்ம் பாசம் தான். தாத்தா மாமா, அம்மா மேல வச்சு பாசம் தான். தகப்பன் இடத்தில் தாத்தாவும், மாமாவும் எனக்கு இருந்தாங்க. அது எனக்கு கடைசி வரைக்கும் கிடைக்கனும்னு அம்மா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டாங்க”

“ம்ம்.. கரெக்ட் தான்”

“ஆனா நான் தான் சின்ன வயசுலேயே அத்தை, மது அராஜகத்துக்கு பலியானேன்.”

“ம்ம்..”என அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

“அத்தை எப்பவும் ஓடிப்போனவன் பையன் இவன்னு தான் சொந்தக்காரங்க, ஃப்ரெண்ட்ஸ் எல்லார்ட்டையும் சொல்வாங்க. அதுலயும் நகை, பணம் எல்லாத்தையும் திருடிட்டு போன வேலைக்காரன் பையன்னு சொல்றப்ப எனக்கு அவ்ளோ அழுகையா வரும். “

“வேலைக்காரனா..அப்ப அவர் உங்க வீட்ல..”

“வீட்ல இல்ல.. தாத்தாவுக்கு உதவியா கம்பெனில வேலைக்கு சேர்ந்தவராம். அவர் வந்த பிறகு தான், நிறைய ஆர்டர்ஸ் கிடைச்ச தாம். நிறைய டிசைன்ஸ் வரையறது, புது சேலை வகைங்க, டிரஸ் தைக்கறதுன்னு மனுஷன் அஞ்சு வருஷத்தில் அத்தனை பெருசா கம்பெனிய உருவாக்கினாராம்.

அதை பாத்துட்டு அவரை வெளிய எங்கேயும் அனுப்ப கூடாதுன்னு அம்மா காலேஜ்ல படிச்சுட்டு இருந்தப்பவே அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களாம்.

அவர் அப்பா இல்லாதவர்.. அம்மா வயசானவங்க, அவர் தங்கையை யாரோ ஒரு சொந்தக்காரங்க கிட்ட தத்து கொடுத்துட்டதா சொல்லியிருக்கார்.

கல்யாணம் ஆன அடுத்த வருஷமே அவர் அம்மா இறந்துட்டதா அவர் மட்டும் ஊருக்கு போய்ட்டு வந்துருக்கார். நான் அப்போ அம்மா வயித்தில் இருந்தேன். அதனால் யாரும் அங்க போகல. அவர் வீட்டை பத்தியும் யாருக்கும் எதுவும் தெரியல.

அதுக்கப்புறம் அனாதை நாடகம் தான் தாத்தாக்கிட்ட போட்டுருக்கார்..”

“ம்ம்.. “

“ரெண்டு மூணு வருஷத்துல தாத்தா நம்பிக்கையை சம்பாதிச்சு எங்க எங்க நகைங்க வச்சுருக்காங்க, பணம் இருக்குனு‌ எல்லாம் பொறுமையா பாத்துட்டு ஒருநாள் எல்லா நகை, பணத்தையும் எடுத்துட்டு கம்பி நீட்டிட்டார்.”

“ம்ம்.. எவ்ளோ பெரிய துரோகம் இல்ல..”

“ம்ம்.. பணம் நகை பெருசு இல்ல.. ஆனா எங்களுக்கு கிடைச்ச அவமானம்.. அசிங்கம்.. அதெல்லாம் தான் ரொம்ப பெருசு..”

“ம்ம்.”

“அம்மா அதுக்கப்புறம் வெளிய எங்கேயும் போக மாட்டாங்க. யார்ட்டயும் பேச‌ மாட்டாங்க.. எல்லாத்துக்கும் அழுகை தான்‌. அத்தை இப்போவே எப்படி பேசுறாங்க.. அப்ப யோசிச்சு பாரு.. உன்னை அசிங்கப்படுத்தறதுல ஆயிரம் மடங்கு அம்மாவை அசிங்கப்படுத்துவாங்க”

“ம்ம்..”

“ஒரு டிரைவர் கூட பேசினா கூட அம்மாவை அவ்ளோ அசிங்கமா போர்ட்ரே பண்ணுவாங்க.‌ தாத்தா தான் அம்மாவை சமாதானப்படுத்தி வீட்ல இருக்க வச்சார். இல்லன்னா அம்மா வெளிய வந்திருப்பாங்க”

“ம்ம்.. அச்சோ ஆண்ட்டி ரொம்ப பாவம் இல்ல..‌அவ்ளோ பொறுமை சாலி.”

“பொறுமைசாலி.. கூடவே ஏமாளியும் கூட..”

“ம்ம்.. ஆனா நீங்க சின்ன பையனா இருந்தப்ப அவங்க வெளிய வந்திருந்தா எங்க போய் இருப்பாங்க. அவங்களுக்கும் பாதுகாப்பு வேணும் இல்ல.”

“ம்ம்.. ஆனா நான் வெளிய படிக்க போனப்ப அவங்க தனியா மாட்டிட்டு இருந்தாங்க அங்க. அப்ப கூட சொன்னேன். ஏதாவது ஹாஸ்டல்ல போய் இருங்கன்னு.. கேட்கல..”

“ம்ம்.. தாத்தா, அங்கிள்னு உங்க அத்தையை எதுவும் கேட்க மாட்டாங்களா? “

“கேட்பாங்க.. ஆனா கேட்டதும் மதுவை தூக்கிட்டு போய் சாகறேன்னு டிராமா போடுவாங்க.. இல்லன்னா போய் கத்தி எடுத்து கையில் அறுத்துப்பேன்னு பயமுறுத்துவாங்க..”

“ஓ.. அப்ப தாத்தா, அங்கிளால என்ன செய்திட முடியும்..”

“ம்ம்.. எவ்ளோ பிரச்சினை வந்தாலும் இதே தான் நடக்கும்.. கடைசி வரைக்கும் நாங்க கஷ்டப்பட்டதுக்கு பலனே இருக்காது.. உனக்கு நான் காலேஜ்க்கு ஏன் வெளிநாட்டுக்கு படிக்க போனேன்னு தெரியுமா?”

“ம்ம்… தாத்தா தானே அனுப்பினார்?”

“இல்ல. நான் ஸ்கூல் படிக்கறப்பலாம் யாராச்சும் வீட்டுக்கு வந்தா, மது ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்தா, என்னை தான் எல்லா வேலைகளுக்கும் கூப்பிடுவாங்க.

மது அவங்க ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி, என்னை இப்படித்தான் கேவலப்படுத்தறதுன்னு இல்லாம பண்ணுவா.. அவ ப்ரெண்ட்ஸூம் ஒரு விளையாட்டு பொம்மை மாதிரி என்னை கிண்டல் பண்ணி, அழ வச்சு.., டீஸ் பண்ணி.. எல்லாமே பண்ணுவாங்க..என்னால் எதிர்த்து பேச முடியாது.‌ அவங்க சொல்றதை எல்லாம் செய்வேன்..”

“நீங்களா.. இப்போ இப்படி டெரர் பீஸா இருக்கீங்க..அப்போ ஏன் கேட்கல”

“ம்ம்ம். ஆமா. நான் எதிர்த்து பேசினா அம்மாவை எதாவது பண்ணிடுவேன்னு சொல்வாங்க. இல்ல அத்தை என்னை அடிப்பாங்க.. ஓரளவு வளர்ற வரைக்கும்..”

“ம்ம்…”

“மது ப்ரெண்ட் நிவேதான்னு ஒரு பொண்ணு.. நான் பன்னென்டாவது படிச்சிட்டு இருந்தேன் அப்ப.. அவ அபப்ப்ப எனக்கு ஆதரவா பேசுவா.. நானும் யாருட்டையும் சொல்ல முடியாததை அவள்ட்ட சொல்லி ஆறுதல் தேடிப் பேன்..”

“ம்ம். அப்போ அந்த பொண்ணு மேல் லவ் வந்திருக்குமே..”

“ம்ம்.. கைண்ட் ஆஃப்.. ஆனா அவ என்கிட்ட பேசறப்ப ரொம்ப நெருக்கமா நடந்துப்பா. எனக்கு பயமா தான் இருக்கும். ஆனா அவளே தினமும் என்கிட்ட ஸ்கூல்ல வந்து பேசுவா.”

“ம்ம்..“

“ஆனா என்னமோ அவள்ட்ட பேசறப்ப எனக்கு எவ்ளோ அவமானப்பட்டனோ அதுக்கெல்லாம் ஒரு மருந்து போடற மாதிரி இருக்கும்.”

“ம்ம்… லவ்வ சொன்னீங்களா.. அப்புறம் கிஸ் அது இதுன்னு..”

“ஏய்.. நான் உன் புருஷன்.. என்கிட்ட இப்படியெல்லாம் கேட்கிற..உனக்கு பொஸஸிவ்வா இல்லையா..”

“அது பாஸ்ட் தானே.. இப்ப நடந்தா தான் எனக்கு பொஸஸிவ்வா இருக்கும். சண்டை போடுவேன்..”

“இப்பயா.. இந்த ஜென்மத்துல உன்னை தவிர யார் மேலயும் லவ்வும் வராது.. கிஸ்ஸூம் வராது..”

“ம்ம்.. சரி மேல சொல்லுங்க”

“ம்ம்.. அவ தான் என் கையை பிடிக்கிறது, கன்னத்தை கடிக்கிறது.. இடுப்பை கிள்ளறதுனு பண்ணுவா..”

“பார்ரா.. கிளுகிளுப்பா இருந்துருக்குமே.. “

“ஹேய்.. சீரியஸா பேசறப்ப கிண்டல் வேறயா.”

“ம்ம்.. உங்க சீரியஸ் மோட் ஐ மாத்தலாம் தான். சரி கண்டினியூ..”

“ஒரு நாள் நைட் அவ வீட்டுக்கு வர சொன்னா. அவளுக்கு பர்த்டே.. அதனால் நான் தான் பர்ஸ்ட் விஷ் பண்ணனும்னு வர சொன்னா. நானும் கொஞ்சம் பூவெல்லாம் எடுத்துட்டு போனேன்.”

“ம்ம்.. அப்புறம்”

“நான் போனப்ப அவங்க வீட்டில் யாருமே இல்ல.. அப்பவே எனக்கு புத்தியில் உரைச்சு திரும்ப வந்திருக்கனும்.”

“ம்ம்.. அது அந்த வயசு.என்ன தான் ஆகுதுன்னு பாத்திடலாம்னு ஒரு தைரியம் வரும்.”

“ம்ம்.. ஆனா உள்ள போனதும் லைட்லாம் ஆஃப் பண்ணியிருந்தது. அவ என்னை கட்டிக்கிட்டு கிஸ் பண்ண ஆரம்பிச்சா.. என்னால் வேணான்னு தள்ள முடியல.. ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும்.. லைட்ஸ்லாம் திடீர்னு ஆன் ஆச்சு. நிவேதா உடம்புல இருந்த டிரஸ்லாம் கிழிஞ்சு இருந்தது. பக்கத்துல இன்னும் ரெண்டு பொண்ணுங்க..”

“இன்னும் ரெண்டு பொண்ணுங்களா?”

“ம்ம்.. யெஸ்.. அவங்களும் மது ப்ரெண்ட்ஸ் தான்.எல்லாமே பெரிய பணக்கார பொண்ணுங்க.. பார்த்தா அவங்களும் டிரஸ்லாம் கிழிச்சு போட்டிருந்தாங்க..”

“அச்சோ.. ஏன் அப்படி..”

“ம்ம். அத்தை அங்க இருந்தாங்க. அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு சோஃபால உட்காந்திட்டு இருந்ததை பாத்தப்ப எனக்கு பயங்கர ஷாக்.. உடனே இந்த மூணு பொண்ணுங்களும் கத்த ஆரம்பிச்சாங்க. மதுவும் கரெக்டா அங்க மாமாவை கூட்டிட்டு வந்தா.”

“புரிஞ்சு போச்சு.. உங்க மேல பழியை போட டிரை பண்ணாங்க.. அதானே..”

“பழி மட்டுமில்ல.. போலீசுக்கு தகவல் சொல்லி அவங்களும் மாமா வரப்ப வந்துட்டாங்க… நான் பன்னென்டாவது.. அவங்களாம் பத்தாவது படிக்கிற பசங்க.. என்னை இப்படி பழி சொல்லி போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிடலாம்னு அவங்க ப்ளான்..”

“ஐயோ.. அப்ப ஆண்ட்டியையும் அவங்க வீட்ட விட்டு துரத்திடலாம்னு யோசிச்சுருப்பாங்க இல்ல..”

“ம்ம்.. அதே தான். தாத்தாகிட்டயும், மாமா கிட்டயும் எனக்கு கெட்ட பேர் வரும்னு எதிர்ப்பார்த்தாங்க.. போலீஸ் மாமா எவ்ளோ சொல்லியும் கேட்கல.. என்னை கூட்டிட்டு போய் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் இந்த வயசுல பொண்ணுங்க பழக்கம் கேட்குதான்னு சொல்லி சொல்லி அடிச்சார். அதுக்குள்ள அந்த மூணு பொண்ணுங்க வீட்ல இருந்தும் ஆளுங்க வந்துட்டாங்க. அட்டெம்ட் ரேப்னு கம்ப்ளைண்ட் எழுதினாங்க.. “

“வாட். அந்த வயசுல அட்டெம்ப்ட் ரேப்பா..”

“ஏன் அந்த வயசு பசங்க பண்ண மாட்டாங்களா.. பண்ணுவாங்கடி. ஆனா நான் பண்ணல. என் விரல் கூட யார் மேலயும் படல..”

“ம்ம்.. அப்புறம் என்னதான் ஆச்சு. அப்ப நீங்க வெளிநாடு போய் படிக்கலையா.. சிறுவர் சீர்திருத்த பள்ளியில படிச்சீங்களா?”

“இல்ல.. தாத்தா ஓடி வந்தார். அந்த நேரத்தில் கமிஷனர், டிஎஸ்பின்னு அவரும் மாமாவும் போய் பாத்து, ஸ்டேஷன் வந்து கெஞ்சி, அந்த பொண்ணுங்களோட பேரண்ட்ஸ் கால்ல விழாத குறையா கெஞ்சினாங்க.. “

“க்ரேட் இல்ல.”

“ம்ம்.. எல்லாமே அம்மாக்காகவும், எனக்காகவும் தான்.. அந்த பொண்ணுங்களோட பேரண்ட்ஸ் பாவம் பாத்து விட்டாலும், மதுவும், அத்தையும் எனக்கு போதை பழக்கம் இருக்கு, நிறைய பொண்ணுங்கள்ட்ட தப்பா நடந்திருக்கேன்னு ஸ்டேஷன்ல என்னை வெளியே போகவே விடல…”

“அய்யோ டா.”

“ம்ம்.. ஆனா மாமா தான் அவர் ஃப்ரெண்ட்ஸ் அரசியல்ல, போலீஸ்ல இருக்கறவங்கன்னு எங்கேயோ போய் கேட்டு என்னை வெளியே எடுத்தார்..”

“ம்ம்.. அங்கிள் மேல உங்களுக்கு இவ்வளோ பாசம் இல்ல..”

“ம்ம். ஆமா..”

“அதான் உங்களுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்கல இல்ல.. “

“ம்ம்.. அதை விட கொடுமை என்னன்னா ஸ்டேஷன்ல அத்தனை பேர் முன்னாடி என்னை டிரஸ்ஸ கழட்ட சொல்லி அடிச்சாங்க. அதை இப்ப நினைக்கிறப்பலாம் எனக்கு நடுங்கும். இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவேன்..”

“ம்ம்.. அந்த வயசுல அது ரொம்ப மனசை பாதிக்கிற விஷயமா தான் இருந்திருக்கும்.”

“ஆமா.. தாத்தா போலீஸ்ல பேசி என்னை வீட்டுக்கு கூப்பிட்டப்ப, போகவே பயமா இருந்துச்சு. அம்மாவை நினைச்சா இன்னும் அழுகையா வந்துச்சு”

“ம்ம்.. ஆண்ட்டி எப்படி எடுத்துப்பாங்கன்னு.. யோசிச்சீங்க”

“ஆனா அம்மாவை போய் பாத்தப்ப, அம்மா என்னை கட்டிட்டு அழ ஆரம்பிச்சாங்க.. அவங்க என்னை நம்பினாங்க”

“அந்த நம்பிக்கை தானே எல்லா உறவிலயும் வேணும். இவங்கள பத்தி எனக்கு தெரியும். தப்பு பண்ணியிருக்க மாட்டாங்கன்னு சொல்ற தைரியம் வேணும்..”

“ம்ம்.. அம்மா என்னை வீட்டை விட்டு கூட்டிட்டு போறேன்னு முதல் முறையா சொன்னாங்க. ஆனா தாத்தா விடல, அடுத்த நாள் ஸ்கூல்ல வேற டிசி கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியல. மாமாதான் வழக்கம்போல ஸ்கூல்ல பேசி எக்ஸாம் மட்டும் எழுத வச்சாங்க.”

“ம்ம். இல்லன்னா உங்க கிராஜூவேஷன் கஷ்டமா போயிருக்கும்”

“ம்ம்.. எஸ். அப்ப என்‌
ப்ரெண்ட்ஸ் ஒரு சிலர் தான் என்னை முழுசா நம்பினாங்க. அதனால் எனக்கு இங்க இருக்க பிடிக்கல.. தூரமா ஹாஸ்டல்ல சேருங்கன்னு கேட்டேன்.”

“ம்ம்..”

“ஆனா தாத்தா என் மனசு முழுசா ஆறணும்னு வெளிநாட்டுக்கு அனுப்பினார். அஞ்சு வருஷம் அங்க படிச்சேன்.. திரும்ப வரப்ப ஒரு வேலையை வாங்கிட்டு அம்மாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு போனும்னு தான் வந்தேன். ஆனா தாத்தா அஞ்சு வருஷம் கம்பெனியை நடத்த சொல்லிட்டார்.. அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் தான் உனக்கு தெரியுமே”

“ம்ம்.. ஆனா இந்த பழைய காயத்தை ஏன் திரும்ப ஞாபகப்படுத்திக்கறீங்க”

“தெரியல.. அப்பப்ப எனக்கு அப்படி ஞாபகம் வரும். அதுவும் நிவேதா வீட்டில் அந்த பொண்ணுங்க என்னை சுத்தி நின்னுட்டு ரேப் பண்ண டிரை பண்ணேன்னு சொன்னதும், அந்த ஸ்டேஷன்ல நின்றதும் ஞாபகம் வந்தா ஸ்ட்ரெஸ் கூடிடும்..”

“மறக்க ஆரம்பிங்க. எல்லாத்தையும் மறந்து நாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்..” என்று தாரிணி சொல்லும்போதே அகரன் முகமெல்லாம் வேர்த்து கைகால் நடுங்கி உடம்பெல்லாம் சில்லென்று ஆனது.. அதனை பார்த்ததும் தாரிணி பயந்து விட்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 19

அகரனின் கன்னம் தட்டி எழுப்பினாள். அவன் கண்கள் சொருக, அவள் தோளின் மீது சாய்ந்தான்.

அனைவரும் இருந்தும் அகரன் கஷ்டப்பட நேர்ந்ததை போல, அவ்வளவு இருந்தும் கடல் நீரால் அகரனின் மயக்கத்தை தீர்க்க முடியவில்லை.

அவனை அப்படியே கடல் கரையில் படுக்க வைத்து விட்டு வீட்டுக்கு நடக்க முடியாமல் நடந்துப் போனாள்.

அலைபேசியை அப்படியே வீட்டில் வைத்து விட்டு வந்தது தன் தப்பு என்று தன்னை நொந்துக் கொண்டவள் அவசரமாக கதவை தட்டி குமுதினியையும் அவரின் கணவரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் கடற்கரைக்கு வந்தாள்.

அப்போதும் மயக்கம் தெளியாத அகரன் கடற்கரை மணலில் படுத்திருந்ததை பார்த்ததும் தாரிணியால் தாங்க முடியவில்லை.

கண்களில் தண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

சிறு குழந்தை போல தேம்பினாள். அவளை சமாதானப்படுத்தி அவள் கையை பிடித்துக் கொண்ட குமுதினி, அவரின் கணவரை விட்டு அகரனை தட்டி எழுப்பி தண்ணீர் கொடுத்து, அவனை தோள் மேல் சாய வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தாரிணிக்கு ஒரு பக்கம் பயம், இன்னொரு பக்கம் அகரனை அப்படி பார்க்க தாங்க இயலாத வலி..

“லேசா மயக்கம் தான் தாரிணி. ஊர் விட்டு ஊர் வந்து இந்த சாப்பாடு, கடல் காத்து ஒத்துக்கல போல.. நீ பயப்படாத. பத்திரமா தம்பியை பாத்துக்க. நான் கொஞ்ச நேரத்தில சாப்பாடு எடுத்திட்டு வரேன்” என்று குமுதினி அவர் வீட்டுக்கு சென்றார்.

அகரன் தலையை பிடித்து விட்டுக் கொண்டு, அவனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் தாரிணி.

சிறிது நேரத்தில் கண் திறந்து பார்த்தவன், “பவதா” என்று அழைத்தான்.

“இப்ப எப்படி இருக்கு.. ஏன் உங்களுக்கு இந்த மாதிரி ஆச்சு. நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?”
என்று படப்படப்புடன் கூறியவளை அருகே இழுத்து அவளை இறுக்கி கட்டிக் கொண்டான்.

அவன் மேல் சாய்ந்திருந்தவள், நிமிர்ந்து அவனின் கன்னம், கண்கள், உதடு என்று கணக்கில்லாமல் முத்தங்களை தந்தவள், “இனி பழைய கதையை எப்பவும் நீங்க பேச வேண்டாம். இனி நாம மட்டும் தான். உங்களுக்கு எதாவது ஒன்னுன்னா என்னால் தாங்க முடியாது” என்று மீண்டும் அவன் மேல் இதழ்களை பதிக்க துவங்கினாள்.

“பவதா.. என்ன இது.. எப்பவும் இப்படியெல்லாம் ஆகாது. அதுக்காக தான் என் மனசை நான் எப்பவும் ஸ்ட்ராங்கா வச்சுப்பேன் . யாரால் கஷ்டப்பட்டேனோ அவங்க முன்னாடி நான் வாழ்ந்துக் காமிக்கனும்னு எப்பவும் மனசுக்குள்ள சொல்லிப்பேன். ஆனா இன்னிக்கு என்னமோ..”

“ம்ம்.‌ கெட்ட கனவை யாராவது திரும்ப திரும்ப ஞாபகம் படுத்திப்பாங்களா?”

“யாரும் ஞாபகம் வச்சுக்க மாட்டாங்க..நானும் இனி ஞாபகப்படுத்திக்கல. அதெல்லாம் அந்த கடல்ல அப்படியே விட்டுட்டேன். இனி நாம, நம்ம லைஃப், நம்ம நினைவுகள் மட்டும் தான்.”

“ம்ம்ம். தலை வலி தாங்க முடியல எனக்கு. திடீர்னு டென்ஷன் ஆனதும். அதோட பயந்து வேக வேகமா மணல்ல நடந்தது இன்னும் கால் வலி அதிகமா ஆயிருச்சு.”

“சாரி பவதா.. என்னால தான.. இவ்வளோ கஷ்டம் உனக்கு.” என்றவனின் வாயை மூடி,

“உங்களுக்காக எது வந்தாலும் நான் தாங்கிப்பேன். உங்களோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு, சந்தோஷமா வாழனும்னா எது வந்தாலும் பரவால்ல..”

“பவதா.. நான் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். உன்கிட்ட மறைக்க ஒன்னும் இல்ல.‌.. என்னை நம்பற இல்ல.. நான் எந்த தப்பும் பண்ணலன்னு..”

“நம்ம காதல் தான் அந்த நம்பிக்கையை எனக்கு கொடுக்குது. உங்க அம்மா, உங்களை எப்படி எந்த கேள்வியும் கேட்காம நம்பினாங்களோ, அதேப்போல நானும் உங்களை முழுசா நம்பறேன்.”

“தாங்க்ஸ் பவதா. இந்த நம்பிக்கையை நான் எப்பவும் காப்பாத்துவேன். இனி எப்பவும் அதைப் பத்தி பேசி இப்படி உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்… ப்ராமிஸ்”

“என் மேல தானே ப்ராமிஸ் ?”

“இல்ல. இன்னும் பத்து மாசத்தில பொறக்கப் போற என் பிள்ளை மேல் சத்தியமா..”

“அதெப்படி பத்து மாசத்துல கரெக்டா பொறக்கும்..”

“இன்னியில இருந்து ஸ்டார்ட் பண்ணா, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கண்டிப்பா கொடுக்கும்..” என்று அவளை பார்த்து கண்ணடித்து, அப்படியே தன்மேல் இழுத்து அவளின் உதடுகளை அவன் இதழ்களால் மூடினான்.

“தாரிணி” என்று குரல் கொடுத்த குமுதினி வீட்டுக்குள் நுழைவதை பார்த்ததும் இருவரும் அவசரமாக விலகினர்.

“தாரிணி.. சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். சீக்கிரமா சாப்பிடுங்க. பாவம் ரெண்டு பேரும் காலைல இருந்து ரெஸ்ட்டு எடுக்கல. மழை வேற வர மாதிரி இருக்கு தாரிணி. இந்த ஓலை வீடு தாங்குமான்னு தெரியல. நீங்க வேணா, நைட் அங்க வந்திடுங்க. அங்க மச்சுல இருக்க ரூம்ல படுத்துக்கலாம்.”

“மழை ரொம்ப வந்தா வரோம் அக்கா.. எனக்கு நாங்க வாழ்ந்த இந்த இடத்தில் இருக்கனும்னு ஆசையா இருக்கு.. “

“சரி.. சரி. ஆனா மழை ரொம்ப வந்தா இங்க தங்க முடியாது. நான் மச்சு ரூம் சாவி கொடுத்திட்டு போறேன். நீ எவ்ளோ நேரம்னாலும் மச்சுக்கு போய்க்கலாம்”

“சரிக்கா” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டை எடுத்து வந்து வைத்தாள்.
இருவரும் கைக்கோர்த்து கதைகள் பேசி சாப்பிடும் போது குமுதினி மீண்டும் சாவியை தந்து விட்டுச் சென்றார்.

காற்று கொஞ்சம் வேகமாக வீச ஆரம்பித்தது. வீட்டின் படலை இறுக்கிக் கட்டி விட்டு வந்தவள், அகரனின் மார்பு மேல் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

அகரன் அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு மெதுவாக ஒரு கையால் அவளின் தலையை அழுத்தி விட ஆரம்பித்தான்.

“பவதா.. தலை ரொம்ப வலிக்குதா” என்று கேட்டவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு மெல்ல, “ம்ம்..கால் தான் ரொம்ப வலிக்குது” என்றாள்.

மெதுவாக அவளை நிமிர்த்தியவன் எழுந்து அமர்ந்து அவளின் காலை எடுத்து தன் மடி மேல் வைத்து மெதுவாக அழுத்திக் கொடுத்தான்.

“வீக்கமா இருக்க மாதிரி இருக்கே பவதா… “ என்று அவளின் சேலையை மெதுவாக தூக்கி அவளின் காலை பார்த்தான். பாதம் வீக்கம் கொடுக்க ஆரம்பித்து இருந்தது.

“இரு.. நம்ம பேக்ல ஸ்ப்ரே இருக்கு. அதை எடுத்துட்டு வந்து ஸ்ப்ரே ப்ணணா வலி குறையும்..”

“பரவால்ல.. விடுங்க. சரியாகிடும். அது மணல்ல எந்த பிடிமானமும் இல்லாம அழுத்தி நடந்தேன் இல்ல. அதான். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..”

“நீ சும்மா இரு. நான் எடுத்துட்டு வரேன்”
என்றவன் வலி நிவாரணியை அவளின் காலில் தடவி விட்டான்.

தாரிணியின் உடல் சிலிர்த்ததை அகரனின் கைகள் உணர்ந்தது.

மெதுவாக அவளின் மஞ்சள் நிற காலில் அகரனின் கைகள் ஊர்ந்தன. அடிப்பட்ட காலினை எடுத்து பாதத்தில் அவன் இதழ்களை பதித்தான்.

“பவதா..” என்று அவன் அழைக்க, பாவை அவளோ கண்களை மூடி அந்த இதழின் மென்மையையும், அது தந்த இதமான வெப்பத்தையும் தாள முடியாமல், “ம்ம்” என்றாள்.

அந்த குரலில் தன்னை இழந்தவன், மெதுவாக அவளின் உடலெங்கும் அவனின் கைகளாலும், உதடுகளாலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தான்.

வெளியே இதமான குளிர் காற்றும், அறைக்குள் இருவரின் அருகாமை தந்த வெப்பமும் இரு துருவங்களாக இருந்தன.

அதே போன்ற இரு துருவங்கள் ஒன்றினை ஒன்று ஈர்க்க ஆரம்பிக்க, மெதுவாக ஒரு காதல் கனவு, அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அழகான நினைவாக மலர ஆரம்பித்தது.

அகரனின் கோபங்கள், சிறு வயது நினைவுகள், மன வலிகள் என்று அனைத்தும் அவளின் ஸ்பரிசத்தில் மெதுவாக கரைந்துப் போக ஆரம்பித்தன.

தாரிணிக்கோ அவள் உடல் வலிகளும், மனச் சோர்வும் அவனின் இதமான அழுத்தங்களாலும், முத்தங்களாலும் காணாமல் போக ஆரம்பித்தன.

ஒருவரையொருவர் விலக்கவில்லை. தடுக்கவும் இல்லை.

காதலின் அடுத்த அத்தியாயம் அவர்கள் எதிர்பாராத ஒரு திருமண நிகழ்வாக இருக்க, அதன் மற்றுமொரு அத்தியாயமாக தாரிணியின் ஆசைப்படி அவளின் வீட்டில் அவர்களின் தாம்பத்திய நிகழ்வு நடந்தது.

இருவரும் ஒருவரிடம் ஒருவர் தேடி, கண்டுபிடித்து, மோகத்தில் திளைத்து களைத்தனர்.

இருந்தும் இருவரால் ஒருவரையொருவர் பிரிய முடியாததால், இருவரின் அணைப்பும் இறுகிப்பிணைந்து இருந்தது.

மழை அவர்களின் சங்கமத்திற்கு ஏற்றவாறு மெதுவாக தூறலாக ஆரம்பித்து, அடைமழையாக பெய்ய ஆரம்பித்தது.

அவர்கள் இருந்த அந்த சிறிய ஓலைக்குடிசையின் வழியே மெதுவாக மழைத்துளிகள் அவர்களின் மீது பட, இருவரும் நிதானத்திற்கு வந்தனர்.

“பவதா.. நல்ல மழை போல. எழுந்திரு.. நாம அவங்க வீட்டுக்கு போகலாம்” என்று அவளை எழுப்பியவன் வெளியே வந்து பார்க்கையில் எதிரில் இருக்கும் எதுவும் தெரியாத அளவிற்கு மழை வலுத்து இருந்தது.

தாரிணியும் வெளியே வந்து அவனுடன் பக்கத்து வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தனர்.

அவளாக அந்த நீரில் காலை அழுத்தி வைக்க முடியாததால், அகரன் அவளை தூக்கிக் கொண்டு குமுதினி வீட்டிற்கு சென்றான். மாடி அறையில் நுழைந்து இருவரும் ஒருவரையொருவர் கண்ணோடு கண் பார்த்தனர்.

மழை அவர்களை மொத்தமாக நனைந்திருந்தது.

மோகமும், காதலும் அவர்களை அந்த நேரத்தில் தனித்து விடாமல் இன்னும் நெருக்கத்தை உண்டு பண்ணியது.

நெருங்கி வந்து தாரணியின் ஈர இடையில் கை வைத்து அவளின் முகத்தில் இருக்கும் ஈரத்தை தன் முகத்தாலும், இதழாலும் துடைக்க ஆரம்பித்தான்.

சிணுங்கி அவனை அணைத்தவள், ஏதோ ஞாபகம் வர, “அச்சோ.. நம்ம‌ பேக், அக்கா கொடுத்த பேக் எல்லாமே அங்க தான் இருக்கு. மொத்தமா நனைஞ்சிடும்”
என்று சொல்ல, அவள் உடலின் மீது ஆராய்ச்சி நடத்த ஆர்ம்பித்தவனோ, அவளின் சொற்களை காதில் வாங்கி நகரவில்லை.

மெல்ல அவனை விலக்கி, “வாங்க போய் எடுத்துட்டு வந்திடலாம். நாம டிரஸ்லாம் நனைஞ்சிடும்.எப்படி‌‌ அப்புறமா மாத்தி போடறதாம்.. ?” என கேட்டாள்.

“போடனுமா. பவதா..”

“ம்ம். அது சரி.. நாம மட்டும் தான் இந்த உலகத்தில இருக்கிறோமா..அப்படியே வா வெளியவும் போறது.. “

“அப்படியா. நாம மட்டும் தான் இந்த உலகத்தில் இருக்கோம்னு நினைச்சேன். வெளியே போனா நாம இப்படி கட்டிக்கிட்டு இருக்க முடியாது இல்ல.. நம்மளை பிரிக்கற எதுவும் வேணாம்.. யாரும் வேணாம். இப்படியே இருக்கலாம்.” என்று அவளை தன் நெஞ்சோடு இழுத்து அணைத்தான்.

அவனின் பிடியில் இருந்து விலக முடியாதவள், “அப்ப ஊருக்கு போக வேணாமா..இப்பிடியே இருந்தா எப்படி போறதாம்” என்றாள்.

“போனுமா. வேணும்னா இன்னும் ஒரு மாசம் கழிச்சு போகலாம். அதுவரைக்கும் இப்படியே.. இறுக்கி..” என்று அவளை அவன் உடலோடு சேர்த்து தூக்கினான்.

“வரப்ப இரண்டு நாள்ல முடிச்சிட்டு போகனும். வேலை இருக்குன்னு சொன்னீங்க..”

“அந்த வேலையை விட இந்த வேலை தான் முக்கியம்.. பாரு.. உன் உதடு கூட பேசாத.. வான்னு கூப்பிடுது” என்று அவளின் உதடுகளை அவன் சொந்தமாக்கினான்.

“ம்ம்.. விடுங்க. வாங்க போய் எடுத்துட்டு வரலாம். அந்த பேக் எனக்கு வேணும்.. “ என்று பிடிவாதமாக அவனை தள்ளி, உடைகளை சரியாக்கி, வெளியில் இழுத்து சென்றாள்.

மழை இன்னும் வலுவாக பெய்ய ஆரம்பித்தது இருந்தது.

“பவதா. இங்கேயே இரு. நான் போய்ட்டு எடுத்துட்டு வரேன்” என்று கீழே இறங்கி மெதுவாக அந்த வீட்டிற்கு சென்றான்.

அவர்களின் ட்ராலிகளையும், குமுதினி கொடுத்த பையையும் எடுத்து வந்தவனை தட்டியின் ஒரு குச்சி மட்டும் அவள் மாமாவின் பை மீது மாட்டி இழுத்தது.

வலுவாக அவன் அந்த பையை இழுக்க, படல் அவன் கையோடு கழண்டு வந்தது. அவன் கையில் இருந்த பையும் பிடி அறுந்து கீழே விழுந்தது.

இரு ட்ராலியையும் வாசலில் வைத்து விட்டு, படலை தூக்கி அந்த பையை எடுத்தவன், பின் மீண்டும் மூன்று பையையும் எடுத்துக் கொண்டு வேகமாக குமுதினி வீட்டை நோக்கி சென்றான்.

மாடியில் ஏறி இரு ட்ராலியையும் உள்ளே வைத்து விட்டு, அவன் தோளில் ஒரு பக்க பிடியை மட்டும் மாட்டியிருந்த பையை எடுக்கவும் அதுவும் அறுந்து அவன் காலிலேயே விழுந்தது.

“ஆ…. அம்மா..” என்று பையை தள்ளி விட்டு தரையில் அமர்ந்தான்.

“என்ன ஆச்சுங்க. கால் மேல விழுந்திடுச்சா” என்று அவன் அருகே அமர்ந்து காலை தடவி கொடுத்து நீவி விட்டாள்.

சிறிது நேரம் வலியில் துடித்தவன் சமாளித்து மெல்ல எழுந்து படியில் மழைச்சாரலில் அமர்ந்திருந்த தாரிணியையும் எழுப்பினான். இருவரும் கதவை அடைத்து உள்ளே வந்தனர்.

“அக்கா காலைல கொடுத்த இந்த பேக்கை நான் இன்னும் திறக்கவே இல்ல. முதல்ல டிரஸ் மாத்திட்டு அதை எடுத்து பார்க்கனும்.” என்று சொல்லிக் கொண்டே அறுந்த பையை அவளை நோக்கி இழுத்தாள்.

“ஹ்ம்ம்.. அதை அப்புறமா பார்க்கலாம். நீ மொதல்ல டிரஸ் மாத்து. மொத்தமா ஈரத்தோட நிக்காத” என்று அவளின் ஈர சேலையை தன் கையில் எடுத்தான்.

“நானே மாத்திப்பேன். நீங்க போய் முதல்ல உங்க டிரஸ்ஸ மாத்துங்க.. நான் அந்த ரூம்ல போய் மாத்தறேன்” என்று அவன் கையை எடுத்து விட்டாள்.

“ஏன் இங்கேயே மாத்து.”

“நான் மாட்டேன்.. நீங்க அங்க போங்க. நான் இங்க இந்த ரூம்க்கு போறேன்.”

“அப்படியா.. ம்ம்..ஊர்ல ஒன்னு சொல்வாங்க” என்றான்.

“என்னது.. என்ன சொல்வாங்க?”

“முழுசா நனைஞ்சப்புறம் முக்காடு எதுக்குன்னு”

“புரியல.. இப்ப எதுக்கு அதை சொல்றீங்க”

“ம்ம். வா அதுக்கு அர்த்தம் சொல்றேன்” என்று மீண்டும் அவளின் உடைகளை தன் கையால் பிடித்து இழுத்தான்.

“ஹையோ. என்னன்னு சொல்லாம” என்றவளின் வாயால் அதற்கு மேல் ஒரு வார்த்தையையும் பேச முடியவில்லை.

இருவரின் ஈர உடைகளும் ஒன்றாய் இருந்ததை போல் அவர்களும் இறுக்கி ஒன்றாய் இணைந்தனர்.

அவனின் அத்தனை வருட ஏக்கமும், அவளின் உடலின் மீது மீண்டும் மீண்டும் மோகம் கொள்ள ஆரம்பித்தது
.

தாரிணிக்கும் புது அனுபவம் தந்த வெட்கத்துடன் அவனை முழுதுமாக ஏற்றுக் கொண்டாள்.

அந்த இரவில் அவர்களின் நெருக்கத்திற்கு சாட்சியாக அந்த பை மட்டுமே அவர்களை பார்த்து இருந்தது.




 
Status
Not open for further replies.
Top