ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 45


“தாரிணி. அத்தை மேல் இருக்கற கோபத்தில இதை என்கிட்ட சொல்ல கூட இல்ல. எங்க வீட்டு வாரிசு வரதை தெரிஞ்சுக்க கூட எங்களுக்கு உரிமை இல்லையா?”

“அத்தே அப்படி எல்லாம் இல்லை. எனக்கே நேத்து தான் கன்பார்மா தெரிஞ்சது. உங்க பிள்ளை அங்க அப்படியே விட்டுட்டு வந்ததும் எனக்கு எங்க போறதுன்னு தெரியல. இங்க வந்தும் வேலைக்கு போனதால் கவனிக்கல. நேத்து மயக்கம் வந்ததும் பக்கத்து வீட்டு பாட்டிதான் சொன்னாங்க.”

“ஓ அப்ப பர்கனன்சி ஸட்ரிப் வச்சுலாம் பாக்கலையா. உடனே கிளம்பு டாக்டரை பார்க்கலாம்.”

“இல்ல அப்புறமா பாத்துக்கலாம்.” என்றாள்.

“சரி. அண்ணே நீங்க எல்லாம் போய்ட்டு நான் வர சொல்றப்ப வாங்க. அப்பாக்கூட இருந்து பாத்துக்கங்க. நான் என் மருமக கூட இங்கேயே இருக்கேன்.”

அகரன் திருதிருவென முழித்தான். வைபவை பார்த்து ‘எதாவது செய்டா’ என்றான்.

“சரி தாரிணியால தானே டிராவல் பண்ண முடியாது. நாங்க டெய்லி வரோம்.” என்றான் வைபவ்.

“வரப்ப ஒரு ப்ரகனன்சி ஸ்டிரிப் வாங்கிட்டு வாங்க.” என்றார் தெய்வா. அகரனால் கிளம்பவே முடியவில்லை. இருந்தும் அவனை வைபவ் கூட்டிக்கொண்டு போனான்.

தாரிணி அடிக்கண்ணால் அவனை பார்த்தாள்.

தெய்வா, சந்திரன், தாரிணி மூவரும் அகில் வீட்டுக்கு சென்றனர்.

அகிலுக்கு தாரிணி மனதில் அவன் தான் இருக்கிறான் என்று நிரூபிக்க துடித்தது மனம்.

ஒரு வாரம்.. ஒரே வாரம். எப்படி அவள் மனதை தெரிந்துக் கொள்வது.

அடுத்த நாள், தாரிணி கிளம்பும்போது தெய்வா அகிலிடம் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி சொன்னார்.

“தாரிணி நிஜமாவே அகரனோட போகப்போறீங்களா..?”

“எனக்கு என்ன முடிவு எடுக்கனும்னு தெரியல அகில். மாமாவும், அத்தையும் சேரணும்னு நினைச்சேன். அவங்க ஒன்னு சேர்ந்துட்டாங்க. என் வாழ்க்கை என்ன ஆகும்னு தெரியல.”

தனக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் அகில்.

அதற்கு பிறகு அவளை அவன் எதுவும் கேட்கவில்லை.

வரும் போது காட்டுக்கு அருகில் நிறுத்தினான் அகில்.

“வாங்க, கொஞ்ச நேரம் நம்ம குக்கூங்க பாஷையை கேட்கலாம். வயித்துல இருக்கற குழந்தைக்கு நல்லது”

“ம்ம். எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸேஷன் வேணும்” என்று இறங்கினாள்.

மரத்தின் ஓரம் நடந்துச் சென்று குருவிகள் மாலையில் கூடடையும் முன் எழுப்பும் சத்தங்களை கேட்க வைத்தான்.

சிறிது நேரம் அங்கு கடத்தி விட்டு, வரும் போது சிறிய பாலத்தின் மீது நின்று ஆற்றை பார்த்தனர்.

“தும் ஹி ஹோ..” பாடலை பாடினான். தாரிணி அமைதியாக ஓடும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‌

“நீ இல்லாது ஒரு நொடியும் எனதில்லையே.. என் மூச்சினில் உன் பெயரே..” என்ற அர்த்தத்தில் அவன் பாட, லேசாக திரும்பியவள் பின்பக்கமாக சாலையில் அகரனும் வைபவும் நிற்பதை பார்த்தாள்.

பாலத்தின் இரு கைகளையும் பின்பக்கமாக பிடித்து சாய்ந்து,

“ஏனெனில் நீ தானே..
இனி நீ தானே…
என் வாழ்க்கையே இப்போது நீ தானே”
என்று தாரிணி பாட அகிலும், அகரனும் அதிர்ந்தனர்.

“போச்சா.. போச்சா. பாடிட்டா அவன் தான் அவ வாழ்க்கைன்னு. இது தான்டா சொல்வாங்க காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன்…” வைபவ் சொல்ல,

அகரன் ‘வாயை மூடு’ என்று சைகையில் காண்பித்தான்.

“அவ என்னை நினைச்சு கூட பாடிருக்கலாம் இல்ல.”

“கான்பிடன்டா சொல்லல, நினைச்சுக் கூடன்னு தான் சொல்ற..”

தாரிணி கீழே இறங்கினாள். அகில் சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டு வந்தான். எதிரில் அவர்கள் இருவரையும் பார்த்தவன் வேகமாக ஓடி வந்து தாரிணி பின் நடந்தான்.
தாரிணி அவர்களை தெரியாதது போல் கடந்தாள்.

“யார்ரா இவன். இங்கிருக்கவன்லாம் சைனீஸையும், நேபாளியையும் கலந்த மாதிரி குட்டையா இருக்காங்க. இவன் குஜராத்தோ, பஞ்சாபி சிங் மாதிரியோ இவ்வளவு உயரமா இருக்கான்.”

வைபவ் அகரனிடம் தமிழில் சொல்ல,

தாரிணி பின் சென்றவன் பின்பக்கமாகவே ஓடி வந்து,

“ராஜ்புத் நான்” என்று இந்தியில் சொல்லி விட்டு ஓடினான்..

“இவனுக்கு தமிழ் எப்படிடா தெரியும். கரெக்டா வந்து பதில் சொல்றான். தாரிணியை மடக்க அதையும் கத்துக்கிட்டான் போல”

“நீ சுத்தி சுத்தி குஜராத், பஞ்சாப், சைனீஸ் நேபாள்னு சொன்னா அவனுக்கு புரியாதா அவனைத்தான் சொல்றேன்னு..”

அகரனை நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தான் வைபவ்.

காரில் ஏறப்போகும் போது,

“பவதா.. ப்ளீஸ். புரிஞ்சுக்க. நான் வாழ்க்கை முழுக்க உன்கிட்ட சாரி கேட்கிறேன்..என்கிட்ட பேசு.” என்றான் அகரன்.

அவள் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஜீப்பில் சென்று ஏறினாள்.

வீட்டிற்கு வந்தும் அகரன் அவனது அப்பாவை பார்க்க வருவான் என்று எதிர்ப்பார்த்தாள். ஆனால் அவன் வரவில்லை.

சலிப்பாக இருந்தது தாரிணிக்கு.

அவன் கொடுத்த அந்த கடிதத்தை பார்த்து, “உங்களுக்கு இன்னும் புரியல இல்ல. உங்க அப்பாவை உண்மை தெரிஞ்சும் நீங்க மன்னிக்காதப்ப நான் ஏன் உங்களை மன்னிச்சு ஏத்துக்கனும்” என்று சொல்லி விட்டு பைக்குள் வைத்தாள்.

தினமும் அகரன் வருவதும், பூங்கொத்துகள் தருவதும், அவளிடம் விதவிதமாக கெஞ்சுவதுமாக இருந்தான்‌.

அகிலும் அவளிடம் தன் மனதை விதவிதமாக வெளிப்படுத்தினான்.

வைபவிற்கே தாரிணியை நினைத்து பாவமாக இருந்தது.
இரண்டு சூரியனை எப்படி ஒரு தாமரை தாங்கும்..

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டும்.

அகரன் வழக்கம்போல் தாரிணிக்காக காத்து இருந்தான்.

அவள் காரில் இருந்து இறங்கி அவனை கண்டுக் கொள்ளாமல் நடந்தாள். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்தான் அகரன். வைபவ் அவனது கையை பிடித்தான். ஆனால் அவன் கையை தட்டி விட்டு அவள் பின் நடந்தான். அகிலே பதறி விட்டான், அவன் நடந்து போவதை பார்த்து.

‘பவதா..’ என்று அழைத்தான். அப்போதும் வீட்டுக்குள் நடந்தாள். வாசலிலேயே தடுமாறி விழுந்தான் அகரன்.

தாரிணி அதை எதிர்ப்பார்க்கவில்லை. அவனை வீட்டுக்குள் அப்படியே அழைத்து செல்லலாம் என்று தான் நினைத்தாள்.

ஓடிவந்து அவள் அகரனை தூக்கினாள். அவளது முகம் அவனது முகம் அருகில் இருந்தது. அப்படியே அவன் அவள் விழிகளை பார்த்தபடி இருந்தான். தாரிணி சுதாரித்து அவனுக்கு கை கொடுத்தாள்.

மேலே அவளையும், சுவற்றையும் பிடித்துக் கொண்டு எழுந்தான் அகரன்.

“பவதா. உன் மனசுல நான் இருக்கேன் தானே. அப்புறமா ஏன் இன்னும் என்னை அவாய்ட் பண்ற.. உன் பதட்டத்தை பார்த்தேன்”

“இருக்கீங்க தான். ஆனா நான் சொன்னதை முழுசா நீங்க செய்யலையே.”

“என்ன செய்யல. அம்மா வாழ்க்கையை சரி பண்ண சொன்னா செஞ்சேன். உன் பின்னாடியே இந்த காலை வச்சிட்டு அலையறேன்”

“உங்கப்பாவை நீங்க இன்னும் மன்னிக்கலையே. அவரை அப்படி பேசினதுக்கு மன்னிப்பும் கேட்கலையே.”

“அது.. அது ஊருக்கு போய்ட்டு பேசலாம்னு‌.. தயக்கமா இருந்துச்சு.”

“ஓ.. அப்ப நீங்க எல்லாம் ஊருக்கு போய்ட்டு அவர்ட்ட பேசி, மன்னிப்பு கேட்டு அப்புறமா வந்து கூட்டிட்டு போங்க.” என்றபடி உள்ளே நுழைந்தாள். உள்ளே இருந்து இதை கேட்டபடி இருந்தார்கள் தெய்வாவும், சந்திரனும்.

மாடிக்கு சென்று நின்று வானம் பார்த்தாள். பின் பக்கமாக வந்து நின்றான் அகில்.

“ஏஞ்சல்..”

“ம்ம் சொல்லுங்க.. “


“ஏஞ்சல் இந்த குயில் கதை தெரியுமா..”

“என்ன கதை.. நீங்களே சொல்லுங்க”

“அது சந்தோஷமா பாடி அதோட ஜோடிக்குயிலை தேடுமாம். இரண்டும் சந்தோஷமா இருக்குமாம். ஆனா அது முட்டையிடற நேரம் அதோட ஜோடிக்குயில் பறந்து போயிடும்மா. இந்த குயிலுக்கும் எங்க போய் முட்டையிட்டு அடை காக்கன்னு தெரியாதாம். காக்கா கூடுல போய் முட்டையிட்டுட்டு பறந்துடுமாம். காக்காவும் அது தன் முட்டைன்னு அடைக்காத்து, பொரிச்சு, சாப்பாடு ஊட்டி வளர்க்குமாம். ஆனா பெரிசானதும் குயிலுக்கு தான் காக்கை இனம் இல்லைன்னு தெரிஞ்சு பறந்து போய்விடும். இதுல யார் பாவம்னு சொல்லுங்க..”

அமைதியாக இருந்தாள் தாரிணி. அவன் காதலுக்கு அவளிடம் பதில் கேட்கிறான்.

அவளால் என்ன பதில் சொல்ல முடியும். முகத்தில் அடித்தால் போல சொல்லவும் முடியவில்லை. அவனாக நடந்ததை பார்த்து விலகி விடுவான் என்று நினைத்தாள்.

“அகில்‌.. ஒரு வேளை அகரன் என் வாழ்க்கையில் வரலைன்னா உங்களைத்தான் நான் காதலிச்சு இருப்பேனா என்னன்னு தெரியல. ஆனா என் மனசுல அவர். வயித்துல அவர் குழந்தை. என்னால என் மனசை மாத்திக்க முடியல.. எவ்வளவு கோபம் இருந்தாலும்.”

பட்டென்று சொல்லி விட்டாள் தான். அகிலின் முகத்தை பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

ஒரிரு நிமிடம் அமைதியாக இருந்தான்.

“அப்போ அடுத்த ஜென்மத்துல சான்ஸ் இருக்குன்னு சொல்றீங்க இல்ல ஏஞ்சல். உங்களுக்காக இத்தனை வருஷம் காத்திருந்தவனால் ஒரு ஜென்மம் காத்திருக்க முடியாதா..? பாத்துக்கலாம் விடுங்க.‌”

நிமிர்ந்து அவனை ஆச்சரய்மாக பார்த்தாள்.

“அகில்” என்றாள்.

“காதல்னா நாம சந்தோஷமா இருக்கறதில்ல. நம்மளை காதலிச்சவங்களோட சந்தோஷம் தான் முக்கியம். நீங்க எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும். அதான் எனக்கு வேணும். ஒரு ரிக் வெஸ்ட்.”

“என்ன சொல்லுங்க”

“ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தா, அகில்னு பேர் வைக்காதீங்க. நீங்க ரொம்ப டிஸ்டர்ப் ஆவீங்க. இந்த காதல் இளவரசனை அவ்ளோ சீக்கிரம் யாராலயும் மறக்க முடியாது”

தாரிணிக்கு சிரிப்பு வந்தது. கீழே வர திரும்பினாள் வைபவ் நின்றிருந்தான். அவனை பார்த்து விட்டு மெதுவாக இறங்கினாள்.

அகரன் உள்ளே வந்து இருந்தான். அது மட்டுமில்லை. அவன் தந்தையோடு பேசிக் கொண்டு இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு இருந்தனர்.

எதுவும் பேசாமல் வந்து அமர்ந்தாள்.

“தாரிணி. என் பையன் அவங்க அப்பாட்ட மனசார மன்னிப்பு கேட்டுட்டான். அவனுக்கு அவரை தப்பா நினைச்சோமேன்னு ஒரு கில்ட்டி கான்சியஸ்..”

தாரிணி அகரனை பார்த்தாள். கண்களால் அருகில் வா என்றான். மெதுவாக எழுந்து போய் அவன் அருகில் அமர்ந்தாள்.

“அவரை மன்னிக்கற அளவு எந்த குற்றமும் அவர் செய்யல. நான் தான் அவர்ட்ட மன்னிப்பு கேட்டேன்.இப்போ நீ என்னை மன்னிச்சிட்ட இல்ல.”

தலையை ஆட்டினாள். அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

வைபவ் அகிலிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

“நீங்க இந்த காதல்லயே நின்னுடக் கூடாது. உங்க லைஃப்ல மூவ் ஆன் ஆகணும்.”

“ஏன் மூவ் ஆன் ஆகணும்.. இப்படியே இருந்திடறேன்.”

“அதுக்காக கல்யாணம் பண்ணிக்காமயே இருந்திடுவீங்களா.?”

“ஏன் பாஸ். நாம காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம் ஆனா அவளை நாம மறந்திடனுமா என்ன? அந்த பொண்ண காதலிச்சிட்டே இருந்தா தப்பா..?”

“இல்ல தான். ஆனா நீங்க காதலிச்சிட்டே அங்க வந்திடாதீங்க. ஏன்னா என் ப்ரெண்ட் உங்க அளவுக்கு ரொமாண்டிக் பர்சன் இல்ல. அவன் வாழ்க்கைக்கு இன்னும் ஒருமுறை பிரச்சினை வரக்கூடாது. வந்தா எனக்கு தான் அது பிரச்சினை.” என்று சொல்ல அகில் சிரித்தான்.

“நைண்டீஸ் கிட்லாம் காதல் தோத்தா அப்படியே நின்னுடறோம். ஆனா டூகே கிட்ஸ்லாம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு மூவ் ஆன் ஆகிடறாங்க. உங்களுக்கு நயன், த்ரிஷாலாம் தெரியுமா..? “

“எஸ் எஸ்.. ஐ க்னோ.. த்ரிஷா.. தாரா.. வெரி ப்யூட்டிஃபுல்..” என்றான்.

“அதானே இதுல டூகே கிட்ஸ் பீட் பண்றது நம்மதாண்டா.”

“ஆமா.. ஆமா” என்று அகில் சிரித்தான்.

கீழே வந்தார்கள். அகிலை பார்த்து தர்மசங்கடத்துடன் சிரித்தான் அகரன்.

அகில் அவன் தோளை தட்டிக் கொடுத்தான். கண்களால் அகிலிடம் மன்னிப்பு கேட்டாள் தாரிணி.

வைபவ் மாடியில் பேசியதை அகரனிடம் சொன்னான்.

அகரன் ஆச்சர்யமாக அகிலை பார்த்தான்.

“டேய்‌.. உன் வாழ்க்கைல நான் ஒரு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன். கதாநாயகன்னு நினைக்கறவன்லாம் கதாநாயகனும் இல்ல.. வில்லன்னு நினைக்கறவன்லாம் வில்லனும் இல்ல”

“என்ன லந்தா.. யாரை சொல்ற என்னையா?”

“ச்சே ச்ச.. உங்க அப்பாவையும் மாமாவையும் சொன்னேன்” என்றான் வைபவ்.


அடுத்த நாள் அனைவரும் காரில் மலையிலிருந்து அகிலிடம் விடைப்பெற்று இறங்கினார்கள்.

இரண்டு ஜோடிகள் அமர்ந்திருக்க, வைபவ் பின்னாடி அமர்ந்திருந்தான்.

“உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
என்னுயிரே நீதானோ.?”

தாளம் தட்டிக் கொண்டு பாடினான் வைபவ்.


“டேய் “ என்று குரல் கொடுத்தான் அகரன் தாரிணியை அணைத்தபடி.


“என்னப்பா பிடிக்கலையா‌. வேற பாட்டு பாடறேன் இரு..”

“முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி எனக்கு” என்று சத்தமாக பாடினான்.

“டேய்.. என்ன எல்லாரும் இருக்காங்க.. என்ன பாடற மோசமா..”

“அடங்கப்பா‌.. பாட்டு எழுதனவனை விட்டுருங்க. பாடனவங்க, நடிச்சவங்க, இசையமைச்சவங்களை விட்டுடுங்க. நான் பாடினா தான் மோசமா இருக்கும். நானே என் வந்து வை விட்டுட்டு தனியா தவிக்கிறேன். நீங்களாம் ஜோடி ஜோடியாக உட்காந்துட்டு என் அடிவயிற்றை வேற பர்ன் பண்றீங்க”

“ஏன்டா புலம்பற. அப்பா அம்மா லாம் இருக்கறப்ப என்ன பாட்டு.”

“ஓ.. இதெல்லாம் உங்களுக்கு க்ரீன் பேச்சு. ஆனா நீங்களாம் தனியா உங்க ஜோடிக்கிட்ட என்ன பேசுவீங்க.. ரொம்ப அடக்க ஒடுக்கமா பேசுவீங்க.நல்லா இருக்குடா..” என்றான்.

அனைவரும் சிரித்தனர்.

அகரனின் கைவிரல்கள் தாரிணியின் இடுப்பில் அழுத்தியது.


காதல் வானில் இரண்டு இல்லை நான்கு பறவைகள் பறக்க ஆரம்பித்தன.




நன்றி.

இந்த கதை இசையரசர் இளையராஜாவுக்கும், பவதாரிணிக்கும் சமர்ப்பணம்.
 
Status
Not open for further replies.
Top