ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 35


மாலையில் தாரிணி ஆற்றங்கரையோரம் நடந்துக் கொண்டிருந்தாள். காலம் வேகமாய் ஓடும், அதில் சில மறந்து போகும். சில மாறிப் போகும்.

ஆனால் ஒரு வாரத்தில் எத்தனை மாற்றங்கள். சென்னை தான் அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்க போகிறது என நினைத்தாள். அங்கிருந்து இலங்கை, அங்கிருந்து மீண்டும் சென்னை, கொல்கத்தா, இம்பால் என்று மாறி மாறி இந்த ஆறைப் போல ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

இனி தன் வாழ்வு யாரையும் எதிர்ப்பார்க்காமல் தனக்காகவும், தன் மாமாவுக்காகவும் தான் இந்த ஆறைப் போல ஓடப்போகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

மெதுவாக அங்கிருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தாள்.

அவளின் உருவம் தண்ணீரில் பிரதிபலிக்க அதை பார்த்திருந்தவளின் அருகில் அகில் வந்து நின்றான்.

“இங்க கூட என்னை தனியா இருக்க விட மாட்டீங்களா?” என்றாள்.

“ச்ச..ச்ச.. நானும் உங்களை மாதிரி இந்த ஆறோட அழகை ரசிக்கத்தான் வந்தேங்க.. பார்த்தா அந்த ஆறை விட அழகா, பேரழகா ஒரு மஞ்சள் தேவதை இங்க இருக்கறதை பார்த்து என் கால்கள் தானா இங்க வந்து நின்னுடுச்சு”

“அச்சோ ப்ளீஸ் நிறுத்துங்க. இந்த பேச்சுக்கு டைம் னு ஒன்னு இல்லையா?”

“சரி விடுங்க. உண்மைக்கு எப்போவும் மரியாதையில்ல”

தாரிணி அவன் பக்கம் திரும்பாமலேயே ஆற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கோல்டன் ஏஞ்சல்.. உங்களை ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே.”

“அது நீங்க கேட்கறதை பொறுத்து”

“நீங்க இதுவரைக்கும் காதல் வயப்படவே இல்லையா?” திரும்பி அவனை முறைத்தாள்.

“ஓ.‌ சாரி கேள்வியை தப்பா கேட்டுட்டேன். உங்க மேல யாரும் காதல் வயப்பட்டாங்களா.. ஏன்னா இப்படி ஒரு ஏஞ்சலை யாரும் லவ் பண்ணாம இருக்கறது தான் ஆச்சர்யம்.”

இப்போது அவள் அவனை முறைக்கவில்லை. தரையையும் ஆற்றையும் மாறி மாறி பார்த்தாள்.

“இந்த அமைதி ஆமாவா.. இல்லையா?எதை சொல்லுது?”

“இல்ல.”

“அப்பாடா..” என்றான்.

“என்ன?”

“இல்லைங்க. நாம ஒரு பாதைல போகலான்னு இருப்போம். எதிர்ல யாராச்சும் மொத்தமா அந்த வழியை அடைச்சிட்டு வந்து நின்னா, என்ன பண்றது‌?”

“சம்பந்தமே இல்லாம பேசறது தான் உங்க வழக்கமா?”

“சம்பந்தம் இருக்கு. உங்களுக்கு புரியல‌..”

“எதிர்ல இருக்கவங்களுக்கு புரியாம எதுக்கு பேசணும்”

“புரியற மாதிரி பேசற நாள் சீக்கிரமே வரும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.”

“ஹ்ம்ம்.. “ என்றவள் மீண்டும் ஆற்றை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் உடை காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. அதை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் தாரிணி. இருந்தும் அவளின் கழுத்தை சுற்றி இருந்த துப்பட்டா மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.

ஒரு நொடி பதறி பறந்த துப்பட்டாவை அவள் எழுந்து பிடிப்பதற்குள் அகில் அதை பிடித்தான். அவளது கைகளில் அவன் அதை தர, அவளுக்கோ தாலியை அவன் பார்த்திருப்பானோ என்ற பயம்.

அகில் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான்.

“கோல்டன் ஏஞ்சல்..அப்படியே இந்த டிரஸ்ல ஒரு மாடல் மாதிரி இருக்கீங்க. டாப் மாடல் மாதிரி அப்படி ஒரு வளைவு நெளிவான உடம்பு உங்களுக்கு. ஆனா நீங்க இந்த துணியால மொத்தமா மூடி மறைச்சு வச்சு ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க.”

“ஹலோ.. என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா? ஒரு பொண்ணுட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா.. ச்சீ”

“ஹேய்.. நான் என்ன அப்படி சொல்லிட்டேன். எத்தனை மாடல்ஸ நம்ம ப்ரொபைல்க்கோ, ஃபோர்ட் போலியோக்கோ நாம புக் பண்றோம். அவங்க உடம்பை நம்ம டிரஸ் டிசைன்ஸ்க்கு கரெக்டா இருக்கான்னு பாக்கற மாதிரி தான் நான் சொன்னேன். எந்த தப்பான அர்த்தமும் இதில் இல்லை. நம்ம டிரைபல் ஃபெஸ்டிவல்க்கு நம்ம கம்பெனி சார்பா அத்தனை டிரஸ்ஸையும் உங்களை வச்சு தான் நான் டிசைன் பண்ணி போஸ்டர்ஸ் ரெடி பண்ண போறேன்.”

“நானா. அதெல்லாம் என்னால் முடியாது. நீங்களா எப்படி சொல்லலாம்.?”

“நீங்க தானே சொன்னீங்க. நான் உதவி கேட்கறப்ப நிச்சயம் பண்ணுவேன்னு. அப்போ நான் கேட்க போற ஃப்ர்ஸ்ட் உதவி இது தான்.”

“அப்ப இன்னும் கேட்டுட்டே இருப்பீங்களா?”

“அஃப்கோர்ஸ். கண்டிப்பா நீங்க அனுமதிச்சா வாழ்க்கை முழுசும் கேட்பேன்.”

“வாழ்க்கை முழுக்க நான் இங்கேயே இருப்பேன்னு நினைக்காதீங்க.”

“நிச்சயமா இருப்பீங்க. நான் சொல்றது நடக்கும்.”

அவனை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பை சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் தாரிணி.
********

மேகாலயாவில் தாரிணி இருந்த வீட்டு முகவரியை வைபவ் வாங்கியிருந்தான்.உடனே அதை டிஎஸ்பியிடம் அனுப்பி வைத்து விட்டு அவருக்கு அழைத்தான் அகரன்.

“அங்கிள். தாரிணியோட வீட்டு அட்ரஸ் உங்களுக்கு அனுப்பியிருக்கேன். நான் வேணா உடனே அங்க கிளம்பி போய்ட்டு வரவா…”

“அகரா. இருங்க.. நான் அவங்க அங்க தான் இருக்காங்களான்னு விசாரிக்க சொல்றேன். கன்ப்ர்ம் ஆச்சுன்னா நீங்க போங்க”

அவர் அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு அதை அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து பதில் கிடைக்கும் வரை அகரன் தவித்துப் போனான்.

ஒவ்வொரு நாளும் போக போக தான் அவனிடம் பதட்டம் அதிகரித்தது.

அதை மருதனும் கவனித்தார். ஆனாலும் அவன் இன்னும் தாரிணியை முழுதாக நம்பவில்லையோ என்று ஒரு சந்தேகம் வர முடிந்தவரை தாரிணி இருக்குமிடத்தை அவனாக தேடிப் போக வேண்டும் என்று தான் விரும்பினார்.

“அகரா. செல்வா எதாவது சொன்னாரா. தாரிணி மேகாலயாவில் தான் இருப்பான்னு எனக்கு என்னமோ தோணுது. அப்படி அவ அங்க இருந்தா உடனே கிளம்பி போய் அவளை கூட்டிட்டு வா.”

“தாத்தா கண்டிப்பா கூட்டிட்டு வந்திடுவேன். ஆனா அவளை கண்டுபிடிச்சதும் அவ மாமாவை பத்தி முழுசா விசாரிக்கணும் தாத்தா. அவரை நேர்ல பாக்க எனக்கு விருப்பமில்ல. சோ, தாரிணிட்ட தான் எல்லாத்தையும் கேட்கணும். அவ மேல தப்பில்லன்னு அம்மாக்கும் மாமாவுக்கும் சொல்லணும்.”

“பொறுமையா இருப்பா. அவ மேல் தப்பில்லன்னு இப்ப புரிஞ்சுது இல்ல. அப்போ அவ மாமா மேல என்ன தப்புன்னு அவர்ட்ட கேட்டா தானே தெரியும்.” சிரிப்புடன் மருதன் சொல்ல,

“என்னால முடியாது தாத்தா. அவரை பாத்தா நான் கண்டிப்பா கோவப்படுவேன்.”

“சரிப்பா. முதல்ல தாரிணியை கண்டுபிடி. அதுக்கு பிறகு மத்ததை பேசிக்கலாம்.”

சரியாக அப்போது அவனின் அலைபேசி ஒலித்தது.

“சொல்லுங்க அங்கிள். தாரிணி அங்க தான் இருக்காளா?” ஆர்வமாக கேட்டான்.

அவனது முகம் மாறியதை மருதன் பார்த்தார். அலைபேசியை வைத்தான்.

“அகரா.. என்ன ஆச்சு. செல்வா என்ன சொன்னார்.?”

“தாத்தா. மேகாலயாக்கு அவ போகவே இல்லையாம். அவ பக்கத்து வீட்ல விசாரிச்சிருக்காங்க. அவளை அவங்களும் காண்டாக்ட் பண்ண டிரை பண்ணியிருக்காங்க. அவங்களுக்கும் அவளை ரீச் பண்ண முடியலையாம்.”

“இம்பால் போனான்னு தானே சொன்ன. அப்ப அங்க போகலைன்னா வேற எங்க போய் இருப்பா.?”

“தாத்தா. ஒன்னும் புரியல. அவ தூரமா போகப் போக தான் உண்மையிலேயே அவ தப்பு பண்ணலைன்னு நிரூபணம் ஆகுது. அவ நிச்சயமா என்னையோ நம்ம வீட்டையோ ஏமாத்த வரல. இந்த பணத்தையெல்லாம் தூர தூக்கி எறிஞ்சமாதிரி என்னையும் எறிஞ்சிட்டு போய்ட்டா”

“நீ இதை புரிஞ்சிக்கிட்டயே அது போதும் எனக்கு. கவலைப்படாத.. நிச்சயம் அவ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடலாம்.”

“தாத்தா. இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம். வேற பிரைவட் டிடெக்டிவ் யாரையாச்சும் நாம பாக்கலாம். அவங்க நிச்சயமா கண்டுபிடிச்சிருவாங்க.”

“ம்ம்.. செல்வாட்டையே பேசு. அவரே யாரையாச்சும் சொல்வார்”

“சரிங்க தாத்தா” என்று சொல்லிவிட்டு உடனே டிஎஸ்பிக்கு அழைத்தான்.

அவரிடம் விஷயத்தை சொல்லியதும்,

“அகரா.. டிடெக்டிவ் ஏற்பாடு பண்றதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா அந்த அளவு போகத் தேவைப்படாது. ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணீங்கனா.. நாங்களே விசாரிச்சு சொல்லிடுவோம். நான் தாத்தா கிட்ட பேசறேன்"என அவர் சொல்ல, சரியென்று அகரன் வைத்தான்.

அடுத்து வைபவை அழைத்தான்.

“டேய்.. இதுவரை ஒன்னும் தெரியல டா. எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லை. தாத்தாவுக்கும், செல்வா அங்கிளுக்கும் டிடெக்டிவ்வ உடனே ஏற்பாடு பண்றதுல விருப்பம் இல்ல. எனக்கும் இன்னொருத்தரை பார்த்து முதல்ல இருந்து எல்லாம் சொல்லி, அவங்க விசாரிச்சு சொல்ற வரைக்கும் காத்திட்டு இருக்க முடியாது.”

“அதுக்கு என்னடா பண்ண போற.”

“நானே கிளம்ப போறேன் டா. எவ்வளவு நாளானாலும் பரவால்ல. நானே நேர்ல போய் விசாரிச்சு அவளை கூட்டிட்டு வரப் போறேன்..”

“டேய் அவசரப்படாத. எந்த ஊர்லன்னு போய் கேப்ப. ஒவ்வொரு ஸ்டேட்டலயும் விசாரிக்க எவ்வளவு நாளாகும்.”

“பரவால்ல. முதல்ல மேகாலயால தேடப்போறேன். அங்க நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கும் னு எனக்கு தோணுது. நான் இப்பவே கிளம்பறண்டா.”

“இருடா. நானும் வரேன். தனியா போய் என்ன பண்ணப்போற”

“நான் கிளம்பிட்டேன் டா. எதாவது உதவி தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்.”

“சரிடா. பத்திரமா போய்ட்டு வா. தாரிணிய பாத்ததும் நிச்சயமா எனக்கு கால் பண்ணனும்.”

*****
“தாரிணிக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்குன்னு அவ சொன்னப்ப நாங்க அவ்ளோ சந்தோஷப்பட்டோம். ஆனா இப்ப அவளை காணோம்னு போலீஸ்ல இருந்து வந்து சொன்னதும் எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியல. அவளுக்கு எங்களை விட்டா யாரு இருக்காங்க‌. அப்படி எங்க போயிருப்பா?” என நிசிலி சொன்னார்.

இலங்கை சென்றதும் அங்கிருந்து அவள் சந்திரனை அழைத்து வந்த விஷயத்தை சொல்லியதும் நிசிலிக்கு கொஞ்சம் அழுகையே வந்தது.

“சந்திரன் மாமா.. அவரும் தாரிணியும் இங்க வரப்ப அவ ஏழாவதோ எட்டாவதோ படிச்சிட்டு இருந்தா. இதோ இந்த வீட்டில் தான் இருந்தாங்க. அவளுக்கு தேவையானதை செய்யறதுக்கு எவ்ளோ வேலைகள் செஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனாலும் பெத்த மகளை விட ரொம்ப பாசமா வளர்த்தார். அதே போல் என்னையும் என் தங்கையையும் கூட பாசமா தான் பாத்துக்கிட்டார். அப்பா இல்லாத எங்க வீட்டில் ஒரு அப்பாவை போல பாசம் காமிச்சவர் அவர்.”

கண்களில் நீர் வடிய நிசிலி கூறியதும் அகரனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.

எப்போதும் அவரை வெறுத்து வெறுத்து, இப்போது அனைவரும் அவரை பற்றி நல்ல விதமாக சொல்லியதும் அவனுக்கு மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் வந்தது.

உண்மையிலேயே தான் வெறுக்கும் அளவு மோசமானவரா என்று தோன்றியது.

ஆனால் அதற்கு முன் அவனுக்கு தாரிணி எங்கு சென்றிருப்பாள் என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.

நிசிலி, தாரிணிக்கு தெரிந்தவர்களில் அங்கு இருப்பவர்களை அழைத்து அகரனுக்கு அறிமுகம் செய்தார்.

யாருக்கும் அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடன் படித்தவர்கள் சிலரும் கூட தாரணியை பார்க்கவில்லை என்று கூறினார்கள்.

வேறு எதாவது தகவல் கிடைக்குமா என்று அத்தனை நேரம் அலைந்தவனுக்கு எதுவுமே சாதகமாக இருக்கவில்லை.

அகரன் அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

கடைசியாக திரும்பி தாரிணியின் வீட்டை பார்த்து விட்டு நடந்தவன் காரில் ஏறப்போகும் நேரம் நிசிலி ஓடிவந்தார்.

“நீங்க எதுக்கும் டிரைபல் வெல்ஃபேர்ல விசாரிங்க. அவங்க நிச்சயமா ஹெல்ப் பண்ணுவாங்க. அவங்களுக்கு கண்டிப்பா நிறைய ஆட்களை தெரியும்” என்று அந்த அலுவலக முகவரியை தந்தார்.

ஷில்லாங்கில் இருக்கும் அலுவலகத்திற்கு அகரன் வந்தான்.

தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது சிலருக்கு அவளை தெரிந்து இருந்தது.

ஆனால் இப்போது அவளை பார்க்கவில்லை என்று தான் சொன்னார்கள்.

அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் மட்டும் ரதீஷின் பெயரை சொன்னார். அவருக்கு இங்கு இருப்பவர்களையும் தெரியும், மற்ற கிராமங்களில் இருக்கும் பழங்குடியினரையும் தெரியும். ஊருக்குள் இருப்பவர்களையும் அவருக்கு தெரியும் என்று சொல்லவே அகரனுக்கு சிறிது நம்பிக்கை வந்தது.

அவரின் அலுவலக எண்ணை வாங்கி அவருக்கு அழைத்தான். அவர்கள் ரதீஷின் அலுவலக முகவரியை தந்தார்கள்.

தாரிணியை தேடி அடுத்த மாநிலத்திற்கு அகரன் வந்தான்.

அஸ்ஸாம்..
மலைப் பகுதிகள், ஆறுகள், தேயிலைத் தோட்டங்கள், காடுகள் என மேகாலயாவைப் போலவே இருந்தது.

வெயிலும், மழையும், குளிரும் ஒரே நேரத்தில் மாறி மாறி இருந்தது.

ரதீஷின் அலுவலகம் ரூப்நகரில் இருந்தது. கவுகாத்தியில் இருந்து அகரன் அங்கு காரில் பயணம் செய்தான்.

அதே நேரம் அகிலும், தாரிணியும் அவர்களின் புதிய வடிவமைப்புகளையும், மல்பெரி சில்க்கின் புதிய ‘ரெடி டூ வியர்’ ஆடை வகைகளையும் ரதீஷிடம் காண்பிப்பதற்காக வந்திருந்தனர்.

ஆனால் ரதீஷ், ஸூவாகுசியில் நடக்க இருக்கும் கண்காட்சிக்கான ஏற்பாட்டிற்கு சென்றிருப்பதாக அலுவலகத்தில் சொன்னார்கள்.

“கோல்டன் ஏஞ்சல், அண்ணா போயிருக்கற இடம் தான் முகா சில்க் உருவாக்கற இடம். அங்க நடக்கப்போற எக்ஸிபிஷன்க்கு தான் பிரிசிடெண்ட் வரப்போறாங்க. முகா சில்க் வீவர்ஸ் உருவாக்கற டிசைன்ஸ் விட நம்ம ட்ரைபல் டிசைன்ஸ் பக்காவா இருக்கனும். நாமளும் அங்க போய் பாத்துட்டு வந்திடலாமா. அப்படியே போற வழில நீங்க ஒரு நல்ல சாப்பாடும் சாப்டூவீங்க.”

“சாப்பிடறதுக்கா வந்தோம் இங்க. வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா போகலாம். நாளைக்கு மாமாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் இல்ல.”

“எப்படியும் அண்ணா வர ஒன் ஹவர் மேல ஆகும். உங்களைப் பாத்து கண்ணைதான் நிறைச்சுப்பேன். வயறு தாங்கணும் இல்ல. அது நிறையறதுக்கு ஒரு வழி சொல்லுங்க..”

“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.சரி வாங்க சாப்பிட போகலாம்.” என்று அவனுடன் கிளம்பினாள்.

அவர்கள் ஜீப்பில் ஏறும் போது, அகரன் அவர்களுக்கு பின்பக்க தெருவில் காரில் இருந்து இறங்கினான்.

அங்கிருந்து எதிர் பக்கத்தில் இருக்கும்

‘டிரைபல் வெல் ஃபேர் அலுவலகம்’ போர்டை பார்த்து விட்டு அங்கு இருந்த ஜீப்பை பார்த்தான். முன்பக்கம் ஒரு பெண் ஏறுவதைப் பார்த்தான்.

நன்றாக பார்க்கும் போது, தாரிணி தான் ஏறிக் கொண்டு இருந்தாள்.

அகரனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. அஸ்ஸாம் வந்து எங்கேயோ தேடி அலையப் போகிறோம் என்று வந்தவனுக்கு, கண் எதிரில், அவன் கூப்பிடும் தூரத்தில் அவள் இருந்தாள்.

‘பவதா’ என்று கத்தினான். அவள் அதற்குள் கதவை சாத்திவிடவே அவனின் குரல் அவளுக்கு கேட்கவில்லை.

“ஏஞ்சல்.. என்ன யோசிக்கறீங்க.. சீட் பெல்ட் போடுங்க. நான்…வேணா “

“அகில்.. யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது.. “ என்று பின்பக்கம் திரும்ப போனாள்.

“இங்க உங்களை யார் கூப்பிட‌ப்போறாங்க..சீட் பெல்ட் போடுங்க..” என்று அவன் வண்டியை கிளப்பினான்.

அகரன் வண்டி கிளம்புவதை பார்த்து சாலையை பார்க்காமலே “ஹேய் பவதா பவதா” என்று கத்திக் கொண்டு சாலையை கடக்க, பக்கவாட்டில் இருந்து வந்த லாரியில் அவன் அடிப்பட்டு தூக்கி எறியப்பட்டான்.

கண்களில் கடைசியாக தாரிணி சென்ற வாகனம் தான் பட்டது.

‘பவதா’ என்று இருளுக்குள் மூழ்கினான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 36

தாரிணியின் முகம் சற்று குழப்பத்துடனே இருந்தது. பதட்டத்துடன் அவள் இருந்தது அகிலுக்கு புரிந்தது.

“கோல்டன் ஏஞ்சல்.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.”

“இல்ல.. என்னை யாரோ கூப்பிட்டாங்க தான். இறங்கி பாத்துட்டு வந்துருக்கலாம்”

“இங்க யாரை தெரியும் உங்களுக்கு. ஏன் குழப்பிக்கறீங்க. ஒருவேளை அண்ணா கூப்பிட்டு இருந்தா இந்நேரம் நமக்கு கால் பண்ணியிருப்பார்.”

“ம்ம்.. ஆமா. என்னை யாருக்கு இங்க தெரியப்போகுது. அதுக்குத்தானே இங்க வந்தேன்.”

“என்ன சொன்னீங்க. யாருக்கு தெரியக்கூடாது?”

“ஒன்னும் இல்ல. யாருக்குமே தெரியாத இடத்துக்கு போகணும்னு தோணுச்சு. அதை சொன்னேன்‌”

“இனிமே நீங்க அப்படி ஒரு இடத்தை தேடவே முடியாது”

“ஏன்”

“ஏன்னா.. இந்த ஏஞ்சல் இருக்கற இடத்தில் தான் இந்த அகில் இருப்பான். அப்ப எப்படி அது யாரும் இல்லாத இடம் ஆகும்?”

“அப்படியா.. ஏன் நான் இருக்கற இடத்தில் தான் நீங்க இருப்பீங்க?. நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு ஃபேமிலி வந்துச்சுன்னா அவங்க கூட தானே இருக்க முடியும்”

“நீங்க தான் அந்த ஃபேமிலியே. ஐ மீன். யார் வந்தாலும் நீங்களும் அந்த ஃபேமிலில ஒருத்தங்க. சோ.இனி நீங்க தனியாள் கிடையாது.”

“இந்த டையலாக்லாம் உங்களுக்குன்னு ஒரு பொண்ணு வந்ததும் சொல்லுங்க.”

“அந்த பொண்ணு வந்ததும் நீங்களே புரிஞ்சுப்பீங்க”

“அப்படியா.. அதை அப்போ பாத்துக்கலாம். இப்ப பக்கத்துல தான் ஹோட்டல்னு சொல்லிட்டு ஊர்ல பாதி தூரம் கூட்டிட்டு வந்துட்டீங்க. சீக்கிரம் பாத்து நிறுத்துங்க.”

“உங்களை பார்த்தா, உங்கள்ட்ட பேசினா இந்த உலகமே எனக்கு மறந்துருது.. அதுக்கு தான் எப்பவும் நீங்க பக்கத்திலேயே இருக்கணும்”

“எதுக்கு உலகத்தை மறந்துட்டு சுத்தவா?”

“இல்ல.. மறந்த உலகத்தை ஞாபகப்படுத்த”

தாரிணிக்கு சிரிப்பு வந்தது.

“அப்பாடா.. குழப்பம்லாம்
போச்சா?”

“ம்ம்..”

“குட் குட்.. இறங்குங்க. இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கணும். என்னமோ மனசுக்குள்ள எல்லாமே ஃப்ரீயான ஒரு ஃபீல்.”

“ஆனா எனக்கு மனசு கனத்துப் போன மாதிரி இருக்கு. ஏதோ பதட்டமா இருக்கு... மாமாவுக்கு கால் பண்ணலாம்னா யாருக்கு பண்றது?”

“அவ்ளோதானே.. ஜஸ்ட் டூ மினிட்ஸ் டைம் கொடுங்க”

சொன்னது போலவே அங்குள்ள யாரோ ஒருவருக்கு அழைத்து அலைபேசியை அரியா பாட்டியிடம் கொடுக்க சொல்லியிருந்தான்.

தாரிணி அவரிடம் பேசி சந்திரனுக்கு எதுவும் பிரச்சினையில்லை என்று தெரிந்துக் கொண்ட பின்தான் நிம்மதியாக உணர்ந்தாள்.

ஏனோ அகரனின் நினைப்பு அவளுக்கு வந்தது.

‘இத்தனை நாட்களில் தன்னை அழைத்துப் பேசவேயில்லை, தன்னை தேடி வரவேயில்லை.’

‘இவ்வளவு தான் காதலா.. இல்லை இது வெறும் காமம் மட்டுமா?’

‘அதற்கு நான் தான் அவருக்கு கிடைத்தேனா?’

எதையெதையோ யோசித்து உணவை அளைந்துக் கொண்டு இருந்தாள்.

“ஆஹா.. எவ்வளவு ருசியா இருக்கு. ஏஞ்சல்.. டேஸ்ட் எப்படியிருக்கு” என்று கேட்டுக் கொண்டே அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

அவள் ஒரு வாய் கூட சாப்பிட்டு இருக்கவில்லை.

“என்ன திரும்பவும் மௌன சாமியார் ஆகிட்டீங்களா?”

“ம்ம்.. ஒன்னுமில்ல.” என்று உணவை எடுத்து வாயில் வைத்தவளின் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது.

“ஆர் யூ ஓகே ஏஞ்சல்..”

“ம்ம்..” அவளிடம் இருந்து உற்சாகம் முழுதுமாக குறைந்துப் போயிருந்தது.

“எனக்கு ரொம்ப கோவமா வருது ஏஞ்சல்.. “

“ம்ம். இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?”

“நீங்க இன்னும் என்னை நம்பவே இல்லை தானே.. என்னை ஒரு ஜோக்கரா தான் நினைக்கிறீங்க. உங்க ஃப்ரெண்ட் ஸோன்ல கூட நான் இல்ல..”

“நான் எங்க அப்படி சொன்னேன்.?”

“நீங்க பண்றது அப்படித்தான் இருக்கு. எப்போ பாரு யோசிச்சுட்டு எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க. என்னை உங்க ஃப்ரெண்ட்டா நினைச்சு இருந்தா என்கிட்ட ஷேர் பண்ணியிருப்பீங்க இல்ல..?”

“அவ்ளோ பெரிய விஷயம் லாம் எதுவும் இல்ல. அப்படி எதாவது இருந்தா நானே சொல்றேன்”

“ம்ம். நான் உங்களை நம்பறேன். இப்போ சிரிச்ச மாதிரியே இருங்க. அதுதான் நல்லா இருக்கு.”

“ம்ம்.. சரி” என்று சொன்னவள் அமைதியாக சாப்பிட்டாள்.

அவர்கள் மீண்டும் ரதீஷின் அலுவலகத்திற்கு வந்தனர்.

அலுவலகமே கொஞ்சம் பரபரப்பாக தான் இருந்தது.

“அண்ணா. என்ன எல்லாரும் எதையோ பரபரப்பா பேசிட்டு இருக்காங்க. எதாவது டெரரிஸ்ட் அட்டாக்கா?”

“இல்ல அகில். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க பக்கத்துல ஒரு ஆக்ஸிடென்ட்டாம். அதான் பேசிட்டு இருக்காங்க.”

“ஓ.. யாராம். லோக்கல் ஆளா? டூரிஸ்ட்டா?”

“டூரிஸ்ட் தான் போல. பாக்க சௌத் இந்தியன் மாதிரி தான் இருந்தாராம்”

“சௌத் இண்டியன்ஸ்னா எனக்கு கொஞ்சம் தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம். அவருக்காக நான் ப்ரே பண்ணிக்கறேன்.” என்றான் அகில்.

“டேய் அடங்கு. சரி பெஸ்டிவல்க்கு ப்ரிப்பேர் பண்ண ஆர்ம்பிச்சிட்டீங்களா?” என்று ரதீஷ் கேட்க, அகிலும் தாரிணியும் அவரிடம் தங்கள் திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

கிளம்பும் போது, “அகில் நீங்க போய்ட்டே இருங்க. இதோ ஒரு நிமிஷத்துல வந்திடறேன்” என்று ரதீஷின் அறைக்குச் சென்றாள்.

“சார்.. ஒரு ரிக்வெஸ்ட். என்னை யாராவது தேடி வந்தாலோ இல்ல கால் பண்ணி எதாவது விசாரிச்சாலோ ப்ளீஸ் நான் இங்க இருக்கேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. இங்க விட்டா எனக்கு போறதுக்கு வேற இடம் கிடையாது. ப்ளீஸ். காரணம் கேட்காம இந்த உதவியை செய்ங்க..” என்று அவள் கைகூப்பி கேட்டதும் ரதீஷின் மனம் இளகியது.

“தாரிணி நீ கவலைப்படாம போ. பாத்துக்கலாம்” என்று அவர் சொன்னதும் மீண்டும் வெளியே வந்தாள்.

“என்ன ரகசியத்தை அண்ணாகிட்ட சொல்லிட்டீங்களா? “ என்று அகில் கேட்டதும் சிறிது அதிர்ந்தாள்.

“என்ன ரகசியம். நான் சும்மா தான் பேசிட்டு வந்தேன்.” என்று தாரிணி சொல்ல,

“மை கோல்டன் ஏஞ்சல்.. உங்களை நான் ரொம்ப க்ளோஸா அப்சர்வ் பண்றேன். நீங்க எப்ப எப்படி நடந்துப்பீங்கன்னு தெரியும். ஆனா என்னை பத்தி எதாவது சொல்றதுனா என்கிட்டயே சொல்லுங்க. அண்ணா கிட்ட போய் சொல்ல வேணாம்..”

“சின்ன குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க. வண்டியை எடுங்க” என்று கிளம்பியவள் அகரன் அடிப்பட்ட இடத்தை திரும்பி பார்த்தாள். உள்ளுக்குள் ஏதோ அடைத்தது.

“மழை அதிகமா வரும் போல ஏஞ்சல்.. வண்டியில் ஏறறீங்களா?”

“ம்ம்.. பாவம் யாரோ அடிப்பட்டுட்டாங்கன்னு ரதீஷ் சார் சொன்னார் இல்ல. அவங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது” என்று வானத்தை பார்த்து வேண்டினாள்.

அகில் கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு நின்று அவளை ரசித்தான்.

“போதும்.. அப்படியே பாத்துட்டு நின்னா மழை அதிகமாயிடும்.. வாங்க போகலாம்..” என்றாள். அகில் சிரித்துக் கொண்டே வந்து ஜீப்பை எடுத்தான்.

*********
மழையில் சேறும் சகதியுமாக இருந்தது அந்த கிராமமே. ஏற்கனவே வாகன வசதிகள் எதுவுமில்லாத ஊர். இரவில் மின்சாரமும் இல்லை.

எப்படியோ ஒரு சின்ன விளக்கை வைத்துக் கொண்டு சமாளித்து விட்டாள் தாரிணி. குளிர் அதிகமாக இருந்ததால் போர்வைகள் அனைத்தையும் சந்திரன் மீது போர்த்தி விட்டு ஒரு சால்வையை போர்த்திக் கொண்டு, பாயில் படுத்து இருந்தாள். குளிர் அவளை பாடாய் படுத்தி விட்டது.

காலையில் சீக்கிரமே எழுந்து விடும் அவள் வெளியே வரவேயில்லை.

அகில் அவனின் வீட்டிலிருந்து தாரிணியின் வீட்டை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அதற்கு மேல் பொறுமை இல்லாததால் அவளின் வீட்டை நோக்கி வந்தான்.

அரியா பாட்டியும் அவனிடம் தாரிணி வீட்டு கதவு திறக்கவேயில்லை என்று சொன்னதும், கதவை தட்டினான்.

தாரிணியால் எழுந்திரிக்கவே முடியாத அளவிற்கு காய்ச்சல் அடித்தது.

மீண்டும் மீண்டும் தட்டியும் யாரும் கதவை திறக்க வில்லை.

அகில் வேகமாக கதவை இடித்து, தள்ளி பார்த்தான். மெதுவாக கதவு திறந்தது.

சந்திரன் தாரிணியை எழுப்ப முடியாமல் கழுத்தை மெதுவாக திருப்பி அகிலை பார்த்தார்.

“அங்கிள். உங்களுக்கு ஒன்னும் இல்லையே. ஏன் தாரிணி இப்படி படுத்து இருக்காங்க.” என்று அவள் அருகில் பதட்டத்துடன் வந்து கூப்பிட்டு பார்த்தான்.

உடலை குறுக்கி படுத்து இருந்தவள் எதுவும் பதில் சொல்லவில்லை.

அவளது நெற்றியில் கைவைத்து பார்த்தான்.

உடல் அனலாக கொதித்தது.

கன்னத்தை தட்டி பார்த்தான். அவள் கண் திறக்கவே இல்லை.

அப்படியே அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டு அவனது வீட்டை நோக்கி சென்றான்.

அவனது கட்டிலில் அவளை படுக்க வைத்து விட்டு, போர்வைகளை போர்த்தி, அவளது கால்களை எடுத்து தன்‌ மடியில் வைத்து சூடு பறக்க தேய்த்து விட்டான். கைகளும் சில்லிட்டு இருந்தது. அதையும் எடுத்து நன்றாக தேய்த்து விட்டான்.

“ஏஞ்சல்.. என்ன இப்படி பயமுறுத்தறீங்க. எழுந்திரிங்க ஏஞ்சல்..” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.

அவளிடம் மெலிதாக ஒரு முனகல் வந்ததே தவிர கண்ணை திறக்கவில்லை.

அலைபேசியை எடுத்து வழக்கமாக எமர்ஜென்சிக்கு அங்கு வரும் மருத்துவருக்கு அழைத்தான்.

மழையில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக அவர் சொன்னார்.

அவனிடம் உள்ள அவசர மருந்துகளின் பெயர்களை சொல்ல சொல்லி அதில் இருந்து சில மருந்துகளை கொடுக்க சொன்னார் மருத்துவர்.

அரியா பாட்டி அதற்குள் அங்கு மழையினால் வரும் காய்ச்சலுக்கு அவர்கள் வழக்கமாக கொடுக்கும் சில மூலிகைகளை போட்டு கொதிக்க வைத்த கஷாயத்தை கொண்டு வந்தார்.

அகில் அதை வாங்கி மெதுவாக தாரிணியை தூக்கி தன் தோளின் மீது சாய்த்து அவளுக்கு அந்த கஷாயத்தை கொடுத்தான்.

“பாட்டி. இவங்களை கொஞ்சம் பாத்துக்கோங்க. நான் போய் அங்கிளை இங்க கூட்டிட்டு வரேன். பாவம் பயந்து போய் இருப்பார்.” என்று சொல்லிவிட்டு தாரிணி யின் வீட்டுக்கு சென்று சந்திரனை தூக்கி வந்தான்.

அவனது வீட்டிலேயே ஒரு அறையில் அவரை படுக்க வைத்து, தாரிணியின் உடல் நிலையை பற்றி சொல்லி பயப்படாமல் இருக்க சொன்னான்.

தாரிணிக்கும், சந்திரனுக்கும் தேவையான காலை உணவை அவனே தயாரித்தான்.

அரியா பாட்டி தான் தாரிணிக்கு அருகிலேயே இருந்து அவளுக்கு தலையில் மருந்துகளை தேய்த்து விடுவதும், உடலை போர்த்தி விடுவதும் என பார்த்துக் கொண்டே இருந்தார்.

அகிலுக்கு தாரிணி கண் விழிக்காததை பார்த்து பயமாக இருந்தது.

மழையில் மருத்துவமனைக்கு கூட்டி செல்ல முடியாது என்பதால் அமைதியாக அரியா பாட்டி சொல்வதை செய்துக் கொண்டிருந்தான்.

அவளுக்காக செய்த அரிசி கஞ்சியை மெதுவாக அவளுக்கு கொடுத்தான். அவனது தோளில் சாய்ந்து கண்களை மூடி இருந்தவளை பார்க்கும் போது வாழ்நாள் முழுதும் அவள் இப்படியே இருக்க மாட்டாளா என்று அகிலுக்கு தோன்றியது.

பெருமூச்சுடன் அவளை மீண்டும் படுக்க வைத்து விட்டு, அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து காய்ச்சல் மெதுவாக குறைய ஆரம்பிக்க லேசாக கண் திறந்து பார்த்தாள் தாரிணி. அப்போது தான் அகிலுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் வீட்டில் இருக்கிறோம் என்று புரிந்து மெல்ல எழுந்திரிக்க பார்த்தாள்.

“ஏஞ்சல்.. அப்படியே படுங்க. ஒன்னும் பிரச்சினை இல்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கனா எல்லாம் சரியாகிடும்.” என்றான்.

அவளால் எழ முயன்றும் முழுதாக முடியவில்லை.

“மாமா. “ என்று கேட்டாள். எதிர் பக்கம் கைகாமித்தான் அகில்.

அவள் படுத்துக் கொண்டு அவரை பார்த்தாள். சந்திரன் அங்கிருந்து பயப்பட வேண்டாம் என்று சைகையில் தெரிவித்தார்.

“ஏஞ்சல். அவரை பத்தி கவலைப்படாதீங்க. சாப்பிட கொடுத்தாச்சு. மருந்துகளை மழை விட்டதும் போய் எடுத்துட்டு வரேன். அதையும் அவருக்கு தேய்ச்சுக்கலாம். இன்னிக்கு நீங்க என் கெஸ்ட். சோ, அமைதியா படுத்து ரெஸ்ட் எடுக்கறது மட்டும் தான் உங்க வேலை.” என்றான்.

கண்களால் நன்றி சொன்னாள் தாரிணி.

அகிலுக்கு தாரிணி அப்போதே அவனுக்கு சொந்தமாக ஆகிவிட்டது போல இருந்தது. அவனது வீட்டில் அவள். அதுவும் அவனுக்கு மிக அருகில் இருப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

இதற்கு மேல் அவளை வீட்டை விட்டு அனுப்பக் கூடாது என்பதில் முடிவாக இருந்தான்.

அவனது உற்சாகத்தை பார்த்து அரியா பாட்டிக்கும் சந்தோஷம். அவனிடம் அவர்கள் பாஷையில் தாரிணியிடம் சீக்கிரம் அவனது மனதில் உள்ளதை சொல்லி திருமணம் செய்துக் கொள்ளும்படி சொன்னார்.

அவரது கன்னத்தை கிள்ளி அவன் முத்தமிட அவருக்கு வெட்கம் வந்தது.

சந்திரன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அகிலையும், தாரிணியையும் இணைத்து நினைத்து பார்த்தார்.

அவருக்கு அவர்கள் இருவரும் பொருத்தமானவர்களாகவே தெரிந்தது.

தாரிணியின் உடல் சரியானதும் அவளிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அதற்கு ஏற்றது போல, அகில் சந்திரனை தன் தந்தையை போல் நினைத்து அவருக்கு உடலை துடைத்து, உடை மாற்றி, கால்களிலும் கைகளிலும் மருந்தை தேய்த்து விடுவது என செய்ததை பார்த்து அவருக்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

மூன்று நாட்களாக பெரும் மழை. யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு புயல் காற்றும் மழையுமாக இருந்தது‌.

தாரிணி அவள் வீட்டிற்கு செல்வதாக சொல்லியும் அகில் ஒத்துக் கொள்ளவில்லை.

வேறு வழியின்றி அவள் அங்கு இருக்க வேண்டியதாக ஆனது.

“ஏஞ்சல், இப்பதானே உடம்பு கொஞ்சம் பரவா இல்லாம இருக்கு. அதுக்குள்ள இந்த டிசைன் லாம் வரைய ஆரம்பிக்கணுமா?”

உடல் முழுதும் போர்த்திக் கொண்டு படுக்கையில் அமர்ந்து வரைந்தவள் தலை நிமிர்த்தி பார்த்தாள்.

“ஏற்கனவே உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டு இருக்கோம். இதுல வேலையும் செய்யலைன்னா எப்படி? ரதீஷ் சார் இன்னும் இரண்டு மாசத்துல எக்ஸ்போ இருக்கறதா சென்னாரே மறந்தாச்சா?”

“ச்ச.. எவ்வளவுக்கெவ்வளவு ரொமான்ஸ்ல பிசியா என்னை வச்சிருக்கனோ, அந்த அளவு கடமையிலும் கண்ணா இருப்பேன். ரதீஷ் அண்ணா சுவால்குசி போனப்ப எடுத்த ஃபோட்டோஸ் பாத்து அதை பீட் பண்ற அளவுக்கு ஆல்ரெடி புதுசா நெய்யறதுக்கு ரெடி பண்ணி வச்சிட்டேன். இனி நீங்க பாத்து அதுல ஆல்டர் பண்ண வேண்டியது தான்.”

“அடப்பாவி..” தமிழில் அவள் சொன்னதும் ஒரு நிமிடம் விழித்தான்.

“ஏஞ்சல் ப்ளீஸ் எதாவது திட்டறதுன்னா இந்தியில் திட்டுங்க. திடீர்னு ஒரு மாதிரி ஏதோ ஒரு மொழில
சொன்னா நான் என்ன பண்ணுவேன்”

“ஹான். அது ஒன்னுமில்ல. நீங்க ஒரு ஜென்டில் மேன்னு சொன்னேன்‌” என்று அவள் சொன்னதும் சந்திரன் சிரித்தார். ஆனால் அந்த சத்தமும் அவளை கூப்பிடுவது போல இருந்தது.

“தாங்க்யூ ஏஞ்சல். சந்திராயன் அங்கிள். இதோ வரேன் இருங்க” என்று அவன் சொன்னதும் இப்போது தாரிணி சிரித்தாள்.

“அவர் பேர் சந்திராயன் இல்ல. சந்திரன். சந்த்ரா..”

“எஸ் எஸ்.. தெரியும். ஆனா சந்திராயன்னாலும் சந்திரன் தானே. அந்த நிலாவை ஆராய்ச்சி பண்ணி பல உண்மைகளை கண்டுபிடிக்கற சந்திராயன் மாதிரி அங்கிளும் உங்களை பத்தி எல்லாமே என்கிட்ட சீக்கரமா சொல்லப் போறார். அதுக்காக அங்கிளை நான் சீக்கிரமா குணப்படுத்த போறேன்.”

அகில் சொல்லியதும் தாரிணி முகம் மாறியது. சந்திரன் முகம் மகிழ்ச்சியில் இருந்தது.

அவருக்கு தாரிணியை பற்றி பெருமையாக பேச நிறைய விஷயங்கள் இருந்தது. அதற்காகவாவது விரைவாக தனக்கு குணமாக வேண்டும் என்று அவரும் விரும்பினார்.

“தாரிணி ஒரு நிமிஷம் இங்க பாருங்க.” என்று அவளையும் சேர்த்து செல்ஃபி எடுத்தான்.

அதை அப்படியே அவன் அம்மாவிற்கு, “தற்போது என் வருங்கால மனைவிக்கு சேவை
செய்து கொண்டிருக்கிறேன்” என்று அனுப்பி வைத்தான்.

அவன் அம்மாவும், “வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா லட்டூ” என்று பதில் அனுப்பி வைத்தார்.

“ஆமாமா. இந்த மழை நிக்கவே கூடாதுன்னு வேண்டிக்கோங்க.. இல்லன்னா ஏஞ்சல் திரும்ப வீட்டுக்கு பறந்து போய்டும்.” என்றான்.




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 37

அஸ்ஸாம் வந்து ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது.

தாரிணி ஏறக்குறைய இந்த ஊராலும், வேலையாலும் தன் கவலைகளை மறந்து விட்டாள்.

முழுமூச்சாக வரப்போகும் பழங்குடியினரின் திருவிழாவில் நடக்க இருக்கும் கண்காட்சிக்கு தயாராகி கொண்டிருந்தாள்.

ஐம்பது குடும்பங்களை கொண்ட சிறிய நெசவாளர்களும், விவசாயிகளும் வசிக்கும் கிராமம் அது.

இப்போது ஏறக்குறைய அவர்கள் அனைவரின் வீட்டிலும் தாரிணி ஒருவளாகி விட்டாள்.

அகிலும், அவர்களும் தாரிணியையும், சந்திரனையும் பார்த்துக் கொண்டதில் அவர் ஏறக்குறைய தட்டுதடுமாறி பேசும் அளவிற்கு வந்துவிட்டார்.

இன்னும் கால்கள் மட்டுமே முழுதாக சரியாகவில்லை. அதற்கும் தினமும் அரியா பாட்டியின் கணவர் மூலிகைகளை புதிதாக பறித்து அரைத்து கால்களில் தடவி வர கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது.

பிரம்மபுத்திராவின் நீரும் அதற்கு காரணம்.

தாரிணிக்கு சந்திரனை பார்க்க பார்க்க மகிழ்ச்சி.
சீக்கிரம் அவர் குணமாகி விடுவார் என்று நம்பிக்கை இப்போது வந்தது.

“மாமா.. பழையபடி நீங்க இந்த எக்ஸ்போ நடக்கறதுக்குள்ள எழுந்து நடக்க போறீங்க பாருங்க. குட் பாயா அதுவரைக்கும் சொல்ற பேச்சை கேட்டு ஆக்டிவா இருக்கணும்.” என்று சொன்னாள்.

“தாரிணி இதுக்கு மேல எனக்கு என்ன இருக்கு? உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாத்துட்டா போதும். அதுவரைக்கும் என் உடம்பு
ஒத்துழைச்சா கூட போதும்.” என்று தடுமாறி பேசினார்.

தாரிணிக்கு திருமணம் என்றதுமே, பதட்டம் வந்தது.

கசப்பான நிகழ்வாக நினைத்து அதை மறக்கவே நினைத்தாள்.

ஆனால் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விஷயம் அகரனை ஞாபகப்படுத்தவே செய்தது.

“மாமா.. இனி எப்பவும் கல்யாணம்னு பேசாதீங்க. அதெல்லாம் செஞ்சா உங்களை யார் பாத்துப் பாங்க. இனி நீங்களும் நானும் மட்டும் தான் இந்த ஜென்மத்துல..”

“ஏஞ்சல், என்ன டிஸ்கஷன்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு. எதை பத்தி பேசறீங்க? உங்க அழகான முகத்தை மாத்தி இவ்வளோ கடுப்பா வேற வச்சிருக்கீங்க?” என்று அகில் வந்தான்.

“அகில்.. இவளை கல்யாணம் பண்ணிக்க சொன்னா மாட்டேன்கிறா” என்று சந்திரன் சொல்ல, நெஞ்சில் கை வைத்து பின்னால் சுவரில் சாய்ந்தான்.

“இதனால மத்தவங்க வாழ்க்கையும் பாதிக்க போகுதுன்னு ஏன் ஏஞ்சல் உங்களுக்கு புரிய மாட்டேங்குது. நீங்களா எப்படி இப்படியொரு முடிவெடுக்கலாம்.”

“என் வாழ்க்கைக்கு நான் தானே முடிவெடுக்கனும்”

“அது பெரியவங்களுக்கு தெரியும். அங்கிள் சொல்றதை கேளுங்க”

“அகில் உங்களுக்கு வேற வேலை எதுவும் இல்லையா?”

“நீங்க இருக்க இடத்தில் தான எனக்கு வேலை.. அதான் இங்க இருக்கேன்”

“ஷப்பா..கிளம்புங்க முதல்ல. இன்னிக்குள்ள அந்த க்ளம்ஸி டிசைன்ஸை சரி பண்ணனும்” என்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வாசல் வந்தாள்.

வண்டியில் ஏறியதும், “சிஸ்டர் ஆகணும்ன்னு எதாவது வேண்டுதலா ஏஞ்சல்”

“யாருக்கு? உங்களுக்கா?”

“போச்சுடா.. நான் அப்படியா கேட்டேன். இந்த நன் மாதிரி எதாவது ஆகணும்ன்னு சின்ன வயசுல, ஸ்கூல் படிக்கறப்ப உறுதிமொழி எடுத்துக்கிட்டீங்களா?”

“இல்லையே ஏன்?”

“பின்ன ஏன் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்றீங்க.”

“எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்க முடியாது.. அதை கேட்கிறது மேனர்ஸூம் இல்ல.”

“ஓகே ஃபைன். பட், எல்லா காரியங்களுக்கும் ஒரு முடிவு உண்டு.”

“ஹான்.. ஐ நோ. அப்படி தெரிய வந்தா அப்போ தெரிஞ்சுக்கோங்க.”

“கண்டிப்பா. அந்த விஷயம் என்னனு தெரிஞ்சா அதை நிச்சயம் என்னால் சரி பண்ண முடியும்”

“நீங்க என்ன கடவுளா?”

“இல்ல.. ஆனா நீங்க நல்லபடியா இருக்கணும்னு நினைக்கிற ஒரு சாதாரண மனுஷன். உங்களை டிஸ்டர்ப் பண்ற விஷயத்தில் இருந்து நீங்க வெளிய வந்தா எனக்கு சந்தோஷம் தானே”

அவனது கண்கள் அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தன.

அதில் ஆயிரம் விஷயங்கள் தெரிந்தன. ஆனால் தாரிணியால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அகரன் அவளை ஒதுக்கி இருந்தாலும் அவள் மனம் முழுதும் அவனே தான் நிறைந்து இருந்தான்.

இன்னொருவரை அவள் வாழ்வில் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு தான் அகில் மனதை புரிந்துக் கொள்ளாதது போல் நடிப்பது?’

இவனை நம்பி அகரனை பற்றி சொன்னால் அது நிச்சயம் சந்திரன் வரை போகும். தேவையில்லாத பிரச்சினையை அது கொண்டு வரும். அகிலை முழுதுமாக அவள் வாழ்க்கையை விட்டு விலக்கி வைக்க வேண்டும். அவனுக்கும் எனக்கும் முதலாளி, தொழிலாளி என்ற உறவு மட்டுமே இருக்க வேண்டும். அவன் மனதில் ஆசைகளை வளர்க்க கூடாது என்றால் ரதீஷ் தான் சரியான ஆள். அவரிடம் பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அடுத்து வந்த நாட்கள் விரைவில் ஓடின.

நடக்க இருக்கும் கண்காட்சியில் அனைவரும் பிசியாக இருப்பதால் ஒருவருக்கொருவர் சாதாரணமாக வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை.

ஜனாதிபதி வருவதால் பாதுகாப்பு கெடுபிடிகள் வேறு அந்த மாதம் முழுதும் அதிகமாக இருந்தது.

யார் அவரை சந்திக்க வேண்டும், அவர்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அவ்வப்போது பாதுகாப்பு படையினர் வந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தனர். கண்காட்சிக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன.

தாரிணியை அன்று புதிதாக வடிவமைத்த உடைகளை அணிந்து வர சொல்லி ஒவ்வொரு புகைப்படமாக எடுத்துக் கொண்டு இருந்தான் அகில்.

அப்படியே அந்த பகுதியில் வசிக்கும் பெண்ணை போல் இருந்தாள் தாரிணி.

“ஏஞ்சல், இந்த டிரஸ்ல நீங்க அஸ்ஸாம் நேடிவ் மாதிரி தான் இருக்கீங்க. ஃபுல் ப்ளோ அப் போஸ்டர்ஸ்க்கும் நான் உங்களை தான் ஃபோட்டோ எடுத்துக்க போறேன்.”

“என்னை பார்த்தா பக்கா சவுத் இண்டியன்னு கண்டுபிடிச்சிருவாங்க. என்னால் இந்த எக்ஸ்போ நல்லா நடக்காம போக கூடாது.”

“யார் சொன்னாங்க. இங்க வந்து இந்த ஃபுல் மிரர்ல பாருங்க” அகில் சொன்னதும்,

தாரிணி அவளை கண்ணாடியில் பார்த்தாள்.

அவளாலே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அஸ்ஸாம் பெண்ணை போல் இருந்தாள்.

‘இது யார் நீரா தைச்சதா? அப்படியே எனக்கு பர்ஃபெக்டா பிட் ஆகுது.. அதான் நீங்க என்ன இங்கத்திய பொண்ணு மாதிரி இருக்கேன்னு சொல்றீங்க.. நீராவை பாத்து ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வரேன்..”

“தாங்க்ஸ் மட்டுமா.. இந்த ஹக்.. கிஸ்னு டிசைன் பண்ணி தச்சவங்களுக்கு தந்தா அவங்க சந்தோஷப்படுவாங்க இல்ல..”

“ம்ம் அதை நீங்க சொல்லி தான் நான் செய்வேன்னு நினைக்கிறீங்களா? அது எங்களுக்குள்ள இருக்கற விஷயம்… நான் எப்படி வேணா பாராட்டுவேன்.”

“கமான் கோல்டன் ஏஞ்சல்..” என்று இருகைகள் விரித்து நின்றான்.

“என்ன? என்ன பண்றீங்க”

“நீங்க ஹக் பண்ணி கிஸ் பண்ணி பாராட்ட வேண்டியது நீராவ இல்லை. என்னைத்தான்.. நான் தான் கஷ்டப்பட்டு இந்த டிரஸ்ஸை ரெடி பண்ணேன்.”

“வாட்.. நிஜமாவா..”

“எஸ்‌‌. நானே தான்”

“ஓ.. தாங்க்ஸ்..” என்று அவள் சொன்னதும் ஏமாற்றத்துடன், ஒரு அசட்டு சிரிப்புடன் கைகளை இறக்கினான்.

“ஒரு நிமிஷம்.. எப்படி இவ்வளவு ஃபிட்டா நீங்க எனக்கு டிரஸ் டிசைன் பண்ணீங்க.”

“அது.. கண் பார்த்தா கை தைக்கும்.”

துப்பட்டாவை நன்றாக இழுத்து கழுத்தை சுற்றி போட்டு உடலை மறைத்து கொண்டு, அவனை முறைத்து விட்டு நகர்ந்தாள்.

“ஏஞ்சல்.. நீங்க இப்போ வேணா இழுத்து கவர் பண்ணிக்கலாம். அன்னிக்கு ஒரு நாள் உங்களை இந்த துப்பட்டா இல்லாம நான் பார்த்ததே போதும். உங்க அளவை கரெக்டா வச்சு தைக்க.. அதுவுமில்லாம இந்த கைகள்ல நான் தொட்டு உங்களை தூக்கியிருக்கேன். இதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா சொல்லி உங்களை வெட்கப்பட வைப்பேன். கன்னங்கள் சிவக்க சிவக்க உங்களை பாக்கனும் எனக்கு..” என்று சொல்லிக் கொண்டான்.

*******

“தாரிணி, இப்ப ஓரளவு என்னால் நிக்க முடியுது. கொஞ்ச தூரம் நடந்தா தான் துவண்டு போகுது கால்..” இரண்டு மாதங்களில் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார் சந்திரன். அவரே அவரது வேலைகளை செய்து கொள்ளும்படி மருத்துவம் மாற்றியிருந்தது.

“ஆமா மாமா கிட்டத்தட்ட ஒரு வருஷமா படுத்தே இருந்தீங்க இல்ல. அதான் கால் தெம்பா இல்ல. அந்த டாக்டர் சாப்பிடறதுக்கு டானிக் எதாவது தரேன்னு சொல்லியிருக்கார். நீங்களும் நல்லா காய்கறின்னு சாப்பிடணும்.”

“நான் நினைச்சே பாக்கல தாரிணி. இந்த அளவு சீக்கிரமா குணமாகும்னு. அந்த அகில் தம்பிக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறது இல்லாம, இங்கேயே டெய்லி மூலிகை மருந்து, மூலிகை நீர் குளியல்னு எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணுச்சு. அதான் இந்த அளவு நான் சீக்கிரமா குணமானேன்.”

“ம்ம் ஆமா மாமா. நல்ல மருத்துவம் தான் காரணம்”

“ம்ம். இன்னும் நல்லா நடக்க ஆரம்பிச்சா உன் கல்யாணத்துக்கு ஓடியாடி வேலை செய்ய முடியும்.”

“ஆரம்பிச்சிட்டீங்களா? முதல்ல உங்க உடம்பு ஃபுல்லா குணமாகட்டும்.”

“ரதீஷ் சார் நாளைக்கு இங்க வந்திடறேன்னு சொல்லியிருக்கார்னு அகில் சொன்னார் மா.”

“ஆமா மாமா. நாலு நாளுல ஃபெஸ்டிவல் ஆரம்பமாகுது இல்ல. அதான்.”

மனதுக்குள் ‘இந்த முறை ரதீஷிடம் தாரிணி, அகில் திருமணம் குறித்து பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார்.

பரபரப்பாக நகர்ந்தன அடுத்து வந்த நாட்கள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 38

ஜனாதிபதி வரும் நாளில் நிறைய புதிய ஆட்கள் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்தார்கள். உள்ளூர் நிறுவனங்கள், ஊடகங்கள் என அந்த சிறிய ஊரே பரபரத்தது.

பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள், அவர்களின் உடைகள், பொருட்கள் என அனைவரின் கவனமும் அதிலேயே இருந்தன.

ரதீஷ் பொறுப்பில் இருந்த பதினாறு ஊரும் மிக சிறப்பாக தங்கள் பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தார்கள்.

தாரிணி, அகிலின் சிறப்பான வடிவமைப்புகள் பலரின் கவனம் ஈர்த்தன.

ஊடகங்கள் தாரிணியை படம்பிடித்தன. ஏறக்குறைய இந்திய ஊடகங்கள் அனைத்திலும் அந்த காட்சிகள் ஒன்று இரண்டு நிமிடங்கள் ஓளிபரப்பாகின.

பம்பரம் சுற்றுவது போல் அனைவரும் அந்த நிகழ்வுகளில் வேலைகளில் ஈடுப்பட்டு இருந்தனர்.

அன்று தான் இறுதி திருவிழா. அன்று தான் ஓரளவு இயல்பாக இருந்தது அனைவருக்கும்.

அன்று இரவு ஆற்றங்கரையில் அவர்களின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

ஒரு ஓரமாக ரதீஷிடம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள் தாரிணி.

“தாரிணி.. இவ்வளவு நல்லா நடக்கும்னு நான் எக்செப்ட் பண்ணவே இல்ல. இப்பதான் எனக்கு மூச்சே வந்தது.”

“இங்க எல்லாரோட உழைப்பும் தான் சார் காரணம்…”

“ம்ம். எஸ் தாரிணி. அப்புறம் இன்னிக்கு எடுத்த போட்டோஸ், வீடியோலாம் இந்தியா முழுக்க டெலிகாஸ்ட் ஆகியிருக்கும். ரெஸ்பான்ஸ் எப்படின்னு இனிமே தான் தெரியும்‌.”

“அச்சோ. நான் கூட அதில் இருந்திருப்பேனா சார்..”

“அஃப்கோர்ஸ். நீ தானே பிரசிடெண்ட்க்கு கிட்ட இருந்து எக்ஸ்பிளெய்ன் பண்ண.. அப்ப உன்னையும் தான் கவர் பண்ணியிருப்பாங்க”

“சார்.. இது இங்க மட்டும் தானே டெலிகாஸ்ட் ஆகும்..”

“நோ.. இந்தியா முழுக்க தான் ஆகியிருக்கும். டாக்குமெண்ட்ரி கூட ஒருத்தர் டிராவல் அண்ட் கல்ச்சர் சேனலுக்கு எடுத்தார்.”

“அய்யோ.. அப்ப நான் இங்க இருக்கறது எல்லாருக்கும் தெரிஞ்சி டுமா”

“நீயேன் இவ்வளவு பயப்படற தாரிணி. அன்னிக்கு நீ அப்படி சொன்னப்பவே நான் கேட்டு இருக்கணும். ஆனா நீ ரொம்ப பயந்து கன்பூயூஸ்டா இருந்த. அதான் கேட்கல.”

“அது .. நான் அப்புறமா சொல்றேன் சார்.. ஆனா என்னை யாரும் தேடி வரலை தானே.”

“யாரும் வரல தாரிணி. ஆனா என்னை பத்தி மேகாலயா டிரைபல் ஆஃபிஸ்ல விசாரிச்சு இருக்காங்க. இங்கேயும் போலீஸ் என்கொயரி ஒன்னு வந்துச்சு. ஆனா நீ இங்க இல்லன்னு தான் நான் இன்பார்ம் பண்ணேன்.”

“ஓ.. அப்படியா சார். என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல..அகில்ட்ட சொன்னீங்களா?”

“நோ.. நான் யார்ட்டயும் சொல்லல. அவன்ட்ட சொன்னா அந்த போலீஸ் யாருன்னு தேடி அங்கேயே போயிடுவான். அது உனக்கு பிரச்சினை ஆகும்னு தான் சொல்லல”

“ம்ம். அவர் நேச்சரே அப்படிதானா சார். இல்ல என்கிட்ட மட்டும் அப்படி உரிமையெடுத்து நடந்துக்கறாரா?”

“ஓ.. அப்ப அவன் எதுவுமே உன்கிட்ட சொல்லலையா?”

“என்ன சொல்லல? இன்பாக்ட் நானே உங்கள்ட்ட அவர்‌ மனசில.”

“மனசில் நீ இருக்கேன்னு கண்டுபிடிச்சிட்ட தானே. ராஸ்கல்.. அவன் ஓவரா உன்கிட்ட பண்றப்பவே நினைச்சேன். நீ அவன் சொல்லாமலே புரிஞ்சுப்பன்னு‌. அப்பா, அம்மா அனேகமா அடுத்த வாரம் உங்க மாமாட்ட வந்து பேசுவாங்க”

“சார்.. என்ன இவ்வளோ சீக்கிரமா நீங்களா முடிவு பண்ணிட்டீங்க. என்கிட்ட கேட்கனும் இல்ல”

“ஆமா தாரிணி. ஆனா அகில் உனக்கு பொருத்தமானவனா இருப்பான். அதுவுமில்லாம அவன் உன்னை இத்தனை வருஷமா லவ் பண்றதால தான் இப்படி நீ வந்ததும் தலை கால் புரியாம ஆயிட்டான். “

“என்னது இத்தனை வருஷமானா? என்ன சொல்றீங்க சார்?”

“ஆமா தாரிணி. அவனா சொல்வான்னு நினைச்சேன். நீ மேகாலயா வந்து ஒரு ரெண்டு மூணு வருஷத்துல உன்னை பார்த்திருக்கான். அப்பவே சாருக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். அப்புறம் நீ திடீர்னு காலேஜ் படிக்க தமிழ்நாடு போயிட்ட. உங்க மாமா இங்க தான் இருப்பார் அவர்ட்ட நீ காலேஜ் முடிச்சதும் பேசலாம்னு நினைச்சேன். ஆனா அவரும் திடீர்னு சொல்லாம கொள்ளாம நீ போனதும் கிளம்பிட்டார். நீங்க ரெண்டு பேரும் திரும்ப வருவீங்கன்னு நான் நம்பவே இல்லை. ஆனா அவன் பிடிவாதமா உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு நின்னான்‌. நீ வருவேன்னு அவன் காதல் மேல் நம்பிக்கை வச்சான். பார்த்தா நீயா கால் பண்ணி வரேன்னு சொன்ன. அப்பதான் இதுக்கு மேலேயும் லேட் பண்ண வேணாம்னு அப்பா அம்மா முடிவு எடுத்தாங்க. உனக்கு கண்டிப்பா அகிலை பிடிக்கும்னு நினைக்கிறேன்.”

“சார்.. அது நான் எப்படி அவரை கல்யாணம் பண்ண முடியும்.?”

“தாரிணி.. வார்த்தைக்கு வார்த்தை நான் செஞ்ச உதவிக்கு திரும்ப என்ன வேணா செய்வேன்னு சொல்லுவ இல்ல. இப்ப என் தம்பிக்காக நான் கேட்கறேன். அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடு. அவன் உன்னை நல்லா பாத்துப்பான்.”

“சார்.. இப்படி நீங்க கேட்டா?”

“அவன் எங்களுக்கு ஒரு அதிர்ஷ்ட பிறவிம்மா. அவன் நான் பிறந்து கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு பிறந்தான். அப்போ நாங்க மேகாலயால தான் இருந்தோம். அப்பா பாரஸ்ட் ஆபிசர். அம்மாக்கு ஒரு புயல் மழைல தான் பிரசவ வலி எடுத்துச்சு. அகில் கொடி சுத்திக்கிட்டு அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்த டிரைபல்ஸ் தான் அம்மாக்கு அந்த மழைல பிரசவம் பார்த்தாங்க. அவன் பிறந்துட்டான்னு கேள்விப்பட்டு நாங்க அங்க வந்தோம். அப்பதான் நிலச்சரிவுல எங்க வீடு இடிஞ்சது. ஒரே நேரத்தில் எங்க எல்லாரையும் அவன் காப்பாத்தினான். சோ அவன் ஆசையை நாங்க நிறைவேத்த ஆசைப்படறோம்.”

“சார் என் சிட்டுவேஷன் உங்களுக்கு புரியல. நான் அகிலுக்கு தகுதியானவ கிடையாது.”

“தாரிணி. உன்னை நாங்க நல்லாவே பாத்துப்போம் மா. மாமாட்ட நான் பேசறேன்” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே கைகளை பிடித்து சந்திரனை மெதுவாக அழைத்து வந்தான் அகில்.

“வாங்க சந்திரன் சார். இப்போதான் தாரிணிட்ட கல்யாணம் விஷயமா பேசிட்டு இருந்தேன். நீங்களும் வந்திட்டீங்க” என்று ரதீஷ் சொன்னார்.

“இப்போதான் தம்பியும் எல்லா கதையும் என்கிட்ட சொல்லுச்சு. மேகாலயாவில் நான் இவரை பாத்து இருக்கேன். அப்பவே எல்லாருக்கும் ரொம்ப உதவி பண்ணுவார். இப்போ எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தார். அவர் இல்லைன்னா நாங்க இல்ல. அதுக்கு என்ன கைம்மாறு பண்ண போறோம்னு யோசிச்சேன். அகில் தம்பி தாரிணியை கல்யாணம் பண்ண விரும்பறதா சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்க குடும்பத்துல தாரிணியை கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்.”

தாரிணி அதிர்ச்சியாக சந்திரனை பார்த்தாள்.

அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை. அங்கிருந்து எழுந்து கிளம்பினாள். வெட்கத்தில் அவள் போவதாக அவர்கள் நினைத்தனர்.

அமைதியாக நடந்து வந்தாள் தாரிணி. விளக்கு வெளிச்சங்கள் முடிந்து சாலை இருட்டாக இருந்தது. அனைவரும் ஆற்றங்கரையில் இருந்ததால் யாரும் வழியில் இல்லை.

திடீரென வழியில் ஏதோ சத்தம் கேட்டது. ஏதோ ஒரு மிருகம் உறுமுவது போல் கேட்கவே பயந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள் தாரிணி. பக்கத்தில் இருந்த செடியில் அவள் துணி மாட்டி கிழிந்தது. வேக வேகமாக துப்பட்டாவை விட்டு விட்டு ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

இருந்தும் ஏதோ ஒன்று அவள் மேல் பாய்ந்தது. பயந்து கத்தி தடுக்கி விழுந்தாள்.

“ஏஞ்சல்..” என்று கத்திக் கொண்டு பின்னால் ஓடி வந்தான் அகில்.

மயங்கி இருந்தவளை தூக்கிக் கொண்டு வேகமாக அவன் வீட்டுக்கு ஓடி வந்தான்.

அவளது உடைகள் கிழிந்திருக்க, கழுத்தில் ரத்தக்காயமாக கீறி இருந்தது.

“ஏஞ்சல் ஏஞ்சல்” என்று கன்னத்தை தட்டினான்.

அவள் கண் திறக்கவில்லை.

ஆழமாக கீறிய காயத்தில் மருந்து போடுவதற்காக அதில் மாட்டியருந்த அவளின் துணியை எடுத்தான்.

மார்பு பிளவு வரை நக்கீறல் கிழித்து இருந்தது.

அவளின் மேல் உடல் அவன் கண்களில் பட்டது.

அவசரமாக முகத்தை திருப்பி கொண்டான்‌. இருந்தும் அவளின் ரத்த காயங்கள் பார்க்க சகிக்காமல் மருந்தை எடுத்து அவளின் கழுத்தில் இருந்து மார்பு வரை தடவினான்.

“ஏஞ்சல் மன்னிச்சிருங்க. நான் அவசரத்துக்கு தான் உங்க உடம்பு மேல மருந்து தடவறேன். வேற எந்த தப்பான நோக்கமும் இல்லை. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தொட வேண்டிய என் கைகள் இப்ப உங்க மேல பட்டிட்டுச்சு. சாரிங்க” என்று அவளை மெதுவாக கட்டிலில் படுக்க வைத்தான்.

அதற்குள் யாரோ தகவல் சொல்லியிருக்க சந்திரன், யாருடனோ வண்டியில் வந்து இறங்கிக் கொண்டே,
“தாரிணி, தாரிணி” என்று பதைத்து ஓடிவந்தார்.

அதற்குள் சட்டென்று அவனின் துண்டை எடுத்து அவளின் நெஞ்சின் மேல் போட்டான்.

“தாரிணி” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்பி பார்த்தார் சந்திரன். மெதுவாக,”மாமா.. பயமா இருக்கு” என்று சொன்னாள்.

“பயப்படாதம்மா. ஏதோ ஓநாயோ நரியோ தான் பாய்ஞ்சிருக்கு. வேற‌ ஒன்னுமில்ல.” என்று அவளை தூக்கி தோள் மேல் சாய்த்து கன்னத்தை தட்டிக் கொடுத்தார்.

அகில் தாரிணியையே பார்த்தான்.

மெதுவாக அவள்
கண் விழித்தாள்.

அவளுக்கு நெஞ்சு, கழுத்து என எரிந்தது. மெதுவாக கை வைத்து கழுத்தை தடவினாள். அவள் கையில் ரத்தம் படிந்தது.

பயந்து போய் சந்திரனை பார்த்தாள்.

“ஒன்னுமில்ல ஏஞ்சல். லேசா தான் காயம். மருந்து போட்டிருக்கு..” என்றான் அகில்.

அவரை பார்த்துக் கொண்டே, அவள் கழுத்தை சுற்றி அவனின் துண்டை இழுத்து மூடினாள்.

இருந்தும் அவள் கழுத்தில் இருந்த தாலி வெளியே துண்டை மீறி தொங்கியது.

ரதீஷ்,”ஒன்னும் பயமில்லையே.. தாரிணி எப்படியிருக்க. டாக்டர் கூப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

அவரின் கண்ணில் பட்டது முதலில் தொங்க தொங்க மின்னிய தாலி தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 39


ரதீஷின் பார்வை தாரணியிடமே நிலைத்து இருக்க, அகில் ஒன்றும் புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

“பயந்துட்டா சார். பெருசா எதுவும் காயம் இல்ல.. தம்பி தான் மருந்து தடவி விட்டிருக்கு. விடிஞ்சதும் டாக்டரை வர சொல்லலாம்” சந்திரன் சொல்ல,

“தாரிணி.” ரதீஷின் குரல் சற்று சத்தமாக ஒலித்தது.

மூவரும் ரதீஷை பார்த்தார்கள்.

“தாரிணி. உனக்கு கல்யாணம் ஆகிருச்சா.”

மூன்று பேரின் பார்வையிலும் இப்போது அதிர்ச்சி இருந்தது. தாரணியின் கண்களில் கூடுதலாக பயம் தெரிந்தது.

“சார்..” சந்திரனும், “அண்ணா” என்று அகிலும் ஒரே சமயத்தில் கூப்பிட்டனர்.

ரதீஷ் எதையும் கவனிக்கவில்லை.

“தாரிணி. உன்னைத்தான் கேட்கறேன். கல்யாணம் ஆகிருச்சா உனக்கு”

அப்போது தான் வெளியில் தொங்கும் தாலியை பார்த்தாள்.

“ம்ம்..”கைகளால் தாலியை பற்றிக் கொண்டு சொன்னாள். கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அதை எதிர்பார்க்காத சந்திரன் அவள் கன்னங்களை தோளில் இருந்து தூக்கி அவளை பார்த்தார். அப்போதுதான் அவரும் அவளின் மூடியிருந்த கையை பார்த்தார். மஞ்சள் கயிறே அது தாலி என்று தெரிவித்தது.

“தாரிணி. கையை எடு.” என்றார் சந்திரன்.

மெதுவாக அவள் கைகளை அதில் இருந்து எடுத்தாள்.

சந்திரனுக்கு அதிர்ச்சியில் பேசவே வரவில்லை.

“அண்ணா. என்ன நடக்குது இங்க. எனக்கு ஒன்னும் புரியலை.”

“உனக்கு ஒன்னும் தெரியாது அகில். கொஞ்சம் சும்மா இரு.” என்றார் ரதீஷ்.

“அண்ணா.. என்ன விஷயம்னு சொல்லுங்க.எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு”

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருக்கு. போதுமா” ரதீஷ் சொன்னதும்,

“வாட்.. சும்மா சொல்லாதீங்க. ஏஞ்சல் விளையாடறீங்களா எதுவும். சும்மா ப்ராங்க் தானே. அண்ணா, எதை வச்சு அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்றீங்க?”

“அவ கழுத்தில் இருக்கறது பேர் தான் தாலி. தமிழ்நாட்டு தாலி. அங்க கல்யாணம் ஆனவங்க போட்டுப்பாங்க.”

அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து கையில் பிடித்து, “இதுவா.. இதை நான் அன்னிக்கு ஏஞ்சல் ஆறு கிட்ட உட்கார்ந்துட்ட இருந்தப்பவே பாத்தேனே. அன்னிக்கு கூட உங்க டிரஸ் பறந்துச்சே ஏஞ்சல். இதை வச்சா கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்றீங்க. அண்ணா… இது ஏதோ கோவில்ல கொடுத்த கயிறா இருக்கும். அதை தான் திருஷ்டிக்காக ஏஞ்சல் போட்டிருக்காங்க.”

அகிலை தாரிணி சற்று சலிப்பாக தான் பார்த்தாள். அந்த நேரத்தில் கூட அவளின் மனசாட்சி,’யார்ரா இவன். சின்ன தம்பிக்கு தம்பியா இருப்பான் போல. இவனுக்கு தாலின்னா என்னன்னு கூட தெரியாதா?’ என்று தான் சொல்லியது.

‘எப்படியோ திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தது. இனி அகிலுக்கும் அவளுக்கும் திருமணம் என்ற பேச்சையே எடுக்க மாட்டார்கள்.’ அந்த நேரத்திலும் சற்று அது நிம்மதியாக இருந்தது.

அவளின் ஒரே பயம் சந்திரன் தான். அவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று யோசித்தாள்.

சந்திரன் அதிர்ச்சியில் அமர்ந்திருப்பதை பார்க்கவே தாரிணிக்கு கஷ்டமாக இருந்தது.

“அகில் கொஞ்சம் வாயை மூடிட்டு இரு. தாரிணி, இந்த விஷயத்தை ஏன் முன்னாடியே சொல்லல. என்ன பிரச்சினை உனக்கு. உன்னை யார் தேடி வந்தாலும் நீ இங்க இருக்கிறதை சொல்லக் கூடாதுன்னு சொன்னது இதுக்கு தானா?”

“சார்.. நான் விளக்கமா சொல்றேன்" என்று அவரிடம் சொல்லி விட்டு,

"மாமா, என்னை மன்னிச்சிருங்க மாமா. ப்ளீஸ், உங்களுக்கு உடம்பு சரியானதும் சொல்லலாம்னு தான் இருந்தேன்.”

“இதுக்கு தானா என் உடம்பு சரியாகணும். என்னால் கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுன்னு தான் நீயா பண்ணிக்கிட்டயா தாரிணி.”

“அய்யோ மாமா. ப்ளீஸ் நான்‌ சொல்றதை கொஞ்சம் கேட்டுட்டு பேசுங்க. இது தாலி தான். ஆனா முறைப்படி கல்யாணம் எதுவும் நடக்கல.”

அதை கேட்டு இன்னும் சந்திரனுக்கு குழப்பம் வந்தது.

“அப்புறம் இதை ஏன் கழுத்தில் போட்டிருக்க?”

“அண்ணா... இவங்க ரெண்டு பேரும் என்ன பேசறாங்கன்னு புரியுதா?”

“தாரிணி. இந்தியில் பேசுங்க. நாங்களும் இங்க இருக்கோம்.” ரதீஷ் சொன்னதும் தாரிணி தலையை ஆட்டினாள்.

“நான் நடந்ததை சொல்றேன். நீங்க எல்லாரும் நினைக்கறப்படி இது முறைப்படி கல்யாணம் ஆனதால் போட்ட தாலி இல்ல.”

“பாத்தீங்களா . நான் சொன்னேன் இல்ல, இது ஏதோ கோவில் போட்ட கயிறு தானே ஏஞ்சல்”

“இல்ல. இது அகரன் போட்டது”

அந்த பெயர் சந்திரனுக்கு இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது. நிமிர்ந்து அவளை பார்த்தார்.

எந்த பெயரை தினமும் மனதில் நினைப்பாரோ அதே பெயரை தாரிணி சொன்னதும் அவர் மனம் தவித்தது.

“ஹூ இஸ் அகோரன். அவர் ஏன் உங்க கழுத்தில் போடனும்.” அகில் குழப்பமாக கேட்டான்.

ஒரு பெருமூச்சுடன் நடந்தது அனைத்தையும் சொன்னாள்.

இலங்கையில் இருந்து அவசரம் அவசரமாக கிளம்பி வந்ததும் இதற்காக தான் என்று சொன்னதும், அகில் சிரித்தான்.

மூவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.

“ஏஞ்சல் இந்த பப்பி லவ்க்கு தான் இவ்ளோ பிரச்சினையா. நான் கூட பயந்துட்டேன். வெறும் ஆட் ஷூட்க்கு போட்டதை தான் இன்னும் கழட்டாம வச்சிருந்து எல்லாரையும் பயமுறுத்திட்டீங்களா?”

“அகில்.. விளையாடறதுக்கு உனக்கு நேரம் காலமே கிடையாதா?” ரதீஷ் கோபப்பட்டார்.

“அண்ணா. இதெல்லாம் ஒரு காதல் கதையா? அந்த மிஸ்டர். பேர் என்ன சொன்னீங்க. அகோரன். ரைட். அவர் சும்மா ஏதோ இன்பாக்சுவேஷன்ல இவங்க கிட்ட ப்ரப்போஸ் பண்ணியிருக்கார். ஏஞ்சலும் அதே இன்பாக்சுவேஷன்ல அதை அக்சப்ட் பண்ணிருக்காங்க. எல்லா லவ்வர்ஸ்க்கும் இடையில் பிரச்சினை வரது சகஜம் தானே. அது மாதிரி வந்து இவங்க இரண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. ஏஞ்சல் அவர் வேண்டவே வேண்டாம்னு தானே இவ்வளோ தூரம் வந்து இருக்காங்க. அப்ப அத பத்தி பேசி என்ன பண்ணப் போறோம். இதுல இனி என்ன ப்ராப்ளம்?.

ஏஞ்சல். பழைசை எல்லாம் மறந்து இந்த கயிறை தூக்கி போடுங்க. உங்க பாஸ்ட் எதையும் நான் கேட்க மாட்டேன். அந்த அகோரனை விட ஆயிரம் மடங்கு உங்களை லவ் பண்ணுவேன். நல்லா பாத்துப்பேன். எந்த காரணத்துக்காகவும் உங்களை பிரிஞ்சு போக மாட்டேன். எல்லாம் ஒரு கெட்ட கனவுன்னு மறந்திடுங்க” அவன்‌ பேச, பேச தாரிணிக்கு மயக்கம் வராத குறைதான்.

“தாரிணி. அகரன் வீடு எங்க இருக்கு? அவங்க வீட்டில் யார் இருக்காங்க?”

சந்திரன் கேட்டதும் அகில் அவரை வித்தியாசமாக பார்த்தான்.

“மருதன் கார்மெண்ட்ஸ், சென்னைல தான் அவங்க கம்பெனி இருக்கு. அவங்க தாத்தா, அம்மா, மாமா, அத்தை கூட தான் அகரன் இருக்கார் மாமா.”

சந்திரன் தாரிணி சொல்ல சொல்ல, பதட்டமாக இருந்தார்.

“ஏஞ்சல் முடிஞ்சு போன கதைக்கு ஏன் அட்ரஸ் கொடுக்கறீங்க. உங்களை ஏதோ ஒரு ஊர்ல தவிக்க விட்டுட்டு போன ஒருத்தன் உங்களை எப்படி உண்மையா லவ் பண்ணியிருக்க முடியும். அவருக்கு ஏதோ உங்களை பிடிக்காம போய் தான் போய் இருக்கார். இவ்வளோ நாள் ஏன் உங்களை தேடி வரலை. அதிலேயே தெரியலையா மொத்தமா அவர் உங்களை வேண்டாம்னு நினைச்சு இருக்கார்னு”

“தாரிணி. அவங்கதான் உன்னை தேடி போலீஸ விசாரிக்க சொன்னாங்களா?” ரதீஷ் கேட்டதும், தலையை ஆட்டினாள்.

“வாட்.. போலீஸா. அண்ணா இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?”

“சொல்லியிருந்தா இங்க விசாரிச்ச போலீஸ்ட்ட யார் விசாரிக்க சொன்னாங்கன்னு கேட்டு நேரா அவங்களை தேடி தமிழ்நாட்டுக்கு போய் இருப்ப.”

“எஸ். சிம்பிள். இந்த பிரச்சினை அப்பவே முடிஞ்சு இருக்கும். இதுக்குதான் எப்ப பார்த்தாலும் உம்முனு உட்காந்துட்டு இருந்தீங்களா ஏஞ்சல். கஷ்டகாலம்.” என்றான் அகில்.

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“மாமா.. எதாவது பேசுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க?” சந்திரனை தாரிணி உலுக்கினாள்.


அவர் வாயை திறக்கவில்லை. யாரோ இதை செய்திருந்தால் முதலில் அவனை தேடிப்போய் சட்டையை பிடித்திருப்பார்.

அந்த பிரச்சினையை முடித்து அகிலுக்கு தாரிணியை திருமணம் செய்து இருப்பார்.

ஆனால் தவறு செய்தது தன் மகன். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.

அவனை குற்றமும் சொல்ல முடியாமல், நல்லவன் என்றும் சொல்ல முடியாமல் அவர் தவித்தார்.

இலங்கை வந்ததும் தான் தான் தாரிணி மாமா என்று தெரிந்து தான் கோபத்தில் விட்டு சென்றிருப்பான் என்று அவருக்கு புரிந்தது. அதை தாரணியிடம் சொல்லாமல் சென்று இருக்கிறான். அவளையும் தப்பாக நினைத்துக் கொண்டு தான் போய் இருப்பான். அவன் போய் வீட்டில் சொன்னதும் அவர்களும் கோபமாக இருந்திருப்பார்கள் என்று அவரால் யூகிக்க முடிந்தது.

காவல்துறையில் சொல்லி விசாரித்து இருக்கிறான் என்றால் அவனால் தாரிணியை இன்னும் மறக்க முடியவில்லை என்று தானே அர்த்தம்.

தெய்வாவை விட்டு பிரிந்து அவர் கஷ்டப்பட்டது அவருக்கு நினைவில் வந்தது. மகனையும் பிரிந்து வாழ்ந்த கொடுமை அவரை வருத்தியது.

ஒவ்வொரு முறையும் தெய்வாவை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போய் தான் விட்டது போல் தன்‌மகனும், தாரிணியும் ஒருவரையொருவர் இழந்து கஷ்டப்படக்கூடாது என்று முடிவெடுத்தார்‌.

“தாரிணி. நீ ரெஸ்ட் எடு. அப்புறமா பேசிக்கலாம்.”
என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றார்.

அகிலும், ரதீஷூம் தாரிணியை விட்டு விட்டு வெளியில் வந்தனர்.

“அண்ணா.. இதை பெருசா ஆக்காதீங்க. எல்லார் லைஃப்லயும் லவ் வரது சகஜம் தான். ஆனா அந்த லவ் சக்ஸஸ் ஆகணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. அது மாதிரி ஏஞ்சல் லைஃப்ல ஒரு லவ் கடந்து போயிருக்கு. இனி அவங்க நிம்மதியா இருக்கிறதை பத்தி மட்டும் யோசிக்கலாம்.”

“டேய். அவ மனசில் இன்னும் என்ன இருக்குன்னு தெரியாம இப்படியே பேசிட்டு இருக்காத. அவ அவ்ளோ சீக்கிரம் அந்த லவ்வ மறப்பான்னு எனக்கு தோணல. அதுக்கு டைம் எடுக்கலாம். என் கவலை அப்பா, அம்மா பத்தி தான்.
அவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல.”

“அம்மா, அப்பாட்ட இதெல்லாம் எதையும் சொல்லாதீங்க. அவங்க எதாவது தேவையில்லாம யோசிப்பாங்க. வேணும்னா ஏஞ்சல் மனசில் இருந்து அந்த அகோரன் போற வரைக்கும் நாம வெயிட் பண்ணலாம்.”

“அவ லைஃப் ஃபுல்லா அவனை மறக்கலைன்னா?”

“கண்டிப்பா இருக்காது. அவங்க வந்தப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவங்க என்னை அக்சப்ட் பண்ணிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

“பாக்கலாம் டா. அவ இன்னும் அந்த தாலியை போட்டுட்டு இருந்தா அப்பா அம்மாக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. அவங்க இங்க வரேன்னு சொன்னதை கொஞ்ச நாள் தள்ளிப் போட சொல்லலாம்னு இருக்கேன். நாங்க உனக்காக தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு நினைச்சோம். ஆனா இப்ப தாரிணி இருக்கறதை பார்த்தா அப்பா அம்மாக்கு தேவையில்லாம டென்ஷன் தான் வரும்.”

“சரி அண்ணா. அப்பா அம்மாட்ட சொல்லுங்க. கொஞ்ச நாள் கழிச்சு இதை பத்தி பேசிக்கலாம்னு. எப்படியிருந்தாலும் ஏஞ்சல் இங்க தானே இருக்க போறாங்க. நான் அவங்களை லவ் பண்ணிட்டே கூட எத்தனை நாள் வேணா இப்படியே காத்திட்டு இருப்பேன்.” வானத்தை பார்த்து கொண்டு அவன் சொன்னதும் ரதீஷிற்கு அகிலை நினைத்து கவலையாக இருந்தது. தாரிணி வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் இருக்கும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது அகிலின் வாழ்க்கையை பாதித்து விடக்கூடாது என்பது தான் இப்போதைய அவரின் கவலை.

“சரிடா பார்ப்போம். நீ போய் படு. நான் கொஞ்சம் மக்களோட பேசிட்டு வரேன். விடியற்காலையிலேயே நான் கிளம்பிருவேன். நீ தாரிணிட்ட சும்மா சும்மா உன் லவ் பத்தி பேசாதே.
அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு.”

“ஷ்யூர் அண்ணா. நான் பாத்துக்கறேன்‌. நீங்க கவலைப்படாதீங்க.”

தாரிணிக்கு குழப்பமாக இருந்தது. சந்திரன் அவள் மேல் கோபப்படுவார் என்று தான் நினைத்தாள்‌.

அவரின் அமைதிக்கு என்ன காரணம் என்று அவளால் யோசிக்க முடியவில்லை. ‘ஒரு வேளை தாலியை பார்த்ததும் இனி அகிலை பற்றி பேச வேண்டாம் என்று நினைத்து இருப்பாரா?’

நல்லவேளை இந்த தாலியை கழட்டாமல் வைத்து இருந்தேன். இல்லையென்றால் இவர்கள் அகிலுடன் எப்படியாவது திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்கள்.’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அந்த மஞ்சள் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அகரனின் ஞாபகம் அதிகமாக வந்தது. அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.

நினைத்தவுடன் அவனது இதழ்களும், கைகளும் அவளின் உடலில் இப்போதும் பட்டுக் கொண்டு இருப்பது போல் தான் இருந்தது.

‘பவதா’ என்ற அவனின் அழைப்புக்கு ஏங்கும் மனதும், இறுக்கிப்பிடிக்கும் அவன் கரங்களின் வலிமையையும், அவளுக்கென்று அவன் வைத்திருக்கும் தனிப்பட்ட சிரிப்பையும், அவளின் இதழ்களில் பதியும் அவனின் இதழ்களும், எல்லாவற்றிற்கும் மேலாக அவளின் மூச்சில் கலக்கும் அவனது வாசனையும் நினைக்க நினைக்க எந்த கோபம் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு அவனின் அணைப்புக்குள் அடங்க வேண்டும் என்று தான் தோன்றியது.

ஆனால் அவளின் பிடிவாதம் இறுதியில் ஜெயித்தது.

அவன்‌ கோபத்துடன் பேசிய பேச்சுக்களும், வெறுப்பான பார்வையும் அந்த காணொளியில் பார்த்தது அவள் கண் முன் வந்து நின்றது.

அவன்‌முன் நன்றாக தான் வாழ்ந்துக் காமிக்க வேண்டும் என்ற வெறி தான் அவனை பற்றி நினைப்பதை தள்ளிப் போட்டது.

“ஏஞ்சல்” என்ற அகிலின் அழைப்பு அவளை அகரனை விட்டுப் பிரித்து கூட்டி வந்தது.

“நீங்க ஏன் யோசிச்சிட்டே இருக்கீங்க? உடனே எல்லாத்தையும் மறக்க முடியாது தான். ஆனா நீங்க நினைச்சா எல்லாத்திலேயும் இருந்து வெளிய வரலாம். டைம் எடுத்துக்கோங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ல என்கேஜ்டா இருங்க. நிச்சயம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்” அகில் பேச பேச தாரிணியின் கண்கள் விரிந்தது.

எப்போதும் அவளை சீண்டிங் கொண்டு, அவளுக்காக உருகுபவன் இன்று ஒரு நல்ல நண்பனைப் போல பேசியதும் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

‘இவன் வேறு வந்து பழையபடி ஃப்ளிர்ட் பண்ணாமல் இருக்கறதே பெரிய ரிலீஃப் தான். கடவுளே, அகில் எப்போதும் இபப்டியே இருக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு சரியென்று தலையை ஆட்டினாள்.

“தட்ஸ் மை கோல்டன் ஏஞ்சல்” என்று அவளுக்கு போர்த்திக் கொள்ள ஒரு கம்ஃபர்ட்டரை கொடுத்து விட்டு வெளியே வந்தான்.

‘ஏஞ்சல்.. நீங்க என்னை விட்டு எங்கேயும் போக மாட்டீங்க. என் வீட்டில் கூட தங்காம வெளிய போறேன்னு போனாலும் எதாவது ஒன்னு நடந்து திரும்ப இங்கே தான் வர்றீங்க. இதுதான் கடவுள் போட்ட முடிச்சு. எனக்காக தான் நீங்க. இந்த ஏஞ்சலை சிறகு ஒடிச்சு பாக்க நான் தட் அகோரன் இல்ல. உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கற அகில். அதை சீக்கிரமா நீங்க புரிஞ்சுப்பீங்க.’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சந்திரனைத் தேடி சென்றான்.

சந்திரனுக்கு அகிலைப் பார்க்க தர்மசங்கடமாக இருந்தது.

எந்த குறையும் சொல்ல முடியாதவன். தாரிணியை மனதார நேசிப்பவன்‌. எல்லாவற்றிற்கும் மேலாக அனைவருக்கும் ஒரு உதவி என்றால் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஓடிச் சென்று உதவுபவன்.

அவனுக்கு தாரிணியை மணம் முடித்து தர வேண்டும் என்பது தான் அவருக்கு விருப்பம். ஆனால் அது இன்று தாரிணி அவள் கதையை சொல்லும் வரை தான்.

இப்போது எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியது பிள்ளை பாசம்.

மனதுக்குள் இரண்டு குரல் கேட்டது‌.

‘அகரன் செய்தது எவ்வளவு பெரிய தவறு.. ஒன்றும் தெரியாத தாரிணியின் மனதில் ஆசையை உருவாக்கி தப்பே செய்யாத அவளை அப்படியே விட்டு விட்டு சென்றது தப்பு. அவனுக்காக தாரிணியை
மீண்டும் அவனுடன் சேர்ந்து வைக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்’

இன்னொரு மனம், ‘என்ன இருந்தாலும், அகரன் என் மகன். என் மேல் இருக்கும் கோபத்தில் தான் தாரிணியை தப்பாக நினைத்து இருப்பான். அவனை விட தாரிணிக்கு வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும். அவளுக்கும் அவனை தான் பிடித்து இருக்கிறது. அதனால் தான் ஒப்புக்கு போட்ட தாலியை இன்னும் கழட்டாமல் வைத்து இருக்கிறாள். அவளுக்காகவாவது அகரனிடம் பேசி அவனை தாரணியுடன் சேர்த்து வைப்பது தான் நியாயம்.’ என்று சொல்லியது.

விரக்தியாக சிரித்தார் அகிலைப் பார்த்து.

“அங்கிள். இந்த அஞ்சாறு வருஷத்துல என் ஏஞ்சலை நினைக்காத நேரம் ரொம்ப குறைவு. அவங்க எப்படியிருந்தாலும் நான் ஏத்துப்பேன். எனக்கு அவங்க வேணும். அவங்க கடந்த காலம் எப்படியிருந்தாலும் பரவால்ல. நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க கஷ்டப்பட்டதெல்லாம் சொன்னீங்க. அப்பா, அம்மா இல்லாத அவங்களை நான் என் வாழ்க்கை முழுசும் ஒரு கணவனா, அப்பாவா, அம்மாவா, நண்பனா இருந்து பாத்துப்பேன். இது நான் உங்களுக்கு செய்யற ப்ராமிஸ்.” அகில் சொன்னதும் சந்திரன் மனதில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

தனக்காகவும், தாரிணிக்காகவும் அவன் செய்த உதவிகள் எல்லாம் நினைவில் வந்து அவரை குற்றவாளி ஆக்கியது.

அகரனை விட அகில் எந்த விதத்தில் குறைந்துப் போய்விட்டான். அவனை விட்டு அகரனுக்காக தான் யோசிப்பது சரியா என்று தவித்தார்.













 
Status
Not open for further replies.
Top