ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 40

“பாண்டியா” என்ற குரல் முடிவதற்குள் பாண்டியன் மருதன் முன் நின்றிருந்தார்‌.

“இந்த ந்யூஸ்ல காமிச்சது யாரு.. தாரிணி மாதிரி தானே இருக்கு.”

“நா பாக்கலையேப்பா. அவளை இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்களாப்பா?”

“என்னப்பா. என் பேரன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை நான் எப்படி மறந்திடுவேன்னு நினைக்கற”

“தெய்வா தான் அந்த பொண்ணை எல்லாரும் மறந்திடனும்னு சொல்லிருக்கா இல்ல. இப்ப திரும்ப எதுக்கு அந்த பேச்சு.”

“நீ ந்யூஸ்ல காமிச்சது அந்த பொண்ணத்தானான்னு பார்த்து சொல்லு.”

“அப்பா..” தெய்வா அவரின் முன் வந்து நின்றார்.

“வாம்மா. உன் மருமகளை தான் டிவில காமிச்சாங்கன்னு நினைக்கிறேன். நீயே பாத்து அவ தானான்னு சொல்லு.”

“அப்பா.. அகரனை இந்த நிலைமையில் பாத்தும் உங்களுக்கு இதே பேச்சு தானா. படிச்சு படிச்சு சொன்னேன். அவன்ட்ட அந்த பொண்ண பத்தி எதுவும் சொல்லாதீங்க, அவளை பாக்க அனுப்பாதீங்கன்னு. ஆனா அவனை உசுப்பேத்தி அவளை தேடிப் போக வச்சீங்க. இப்ப என் பிள்ளை இப்படி கிடக்கிறான்.”

“அவன் மருந்தே அவ தான் மா. தாரிணிதான்னு தெரிஞ்சா நானே போய் அவளை கூட்டிட்டு வருவேன் என் பேரனுக்காக. அவளை பாத்ததும் எழுந்து நின்னுருவான் பாரு.”

“அவ என்ன டாக்டரா? அவ வந்தா இவனுக்கு சரியாகறதுக்கு. நல்லா இருந்த பிள்ளையை இப்படி நடக்க விடாம படுத்த படுக்கையா இருக்க வச்சிட்டீங்க. இனிமே என் பிள்ளை விஷயத்துல நீங்க எதுவும் முடிவு செய்யாதீங்கபா.”

மருதனிடம் இப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக தெய்வா இப்படி முகத்தில் அடித்தால் போல பேசுகிறார்.

அவருக்கு வலித்தது. ஆனாலும் பேரனின் வாழ்க்கைக்காக பொறுத்துக் கொண்டார்.

தெய்வாவும், பாண்டியனும் அவர் அறையில் இருந்து நகர்ந்ததும், மெதுவாக அகரனின் அறைக்குச் சென்றார்.

“அகரா..” அவர் அழைத்ததும் கண் திறந்து அவரை பார்த்தான் அகரன்.

காயங்களின் வடு அவனது முகத்தில் ஆறி இருந்தது. ஆனால் தழும்பு அப்படியே இருந்தது.

தலையில் அடிப்பட்ட இடம் தையல் போடப்பட்டு ஆறியிருந்தாலும், அந்த இடங்களில் முடி இல்லாமல் இருந்தது.

இடது கையில் மணிக்கட்டு
உடைந்து சரியாவதற்காக கட்டுப் போடப்பட்டு இருந்தது. காலில் தான் அதிகமான காயம் அவனுக்கு.

முட்டி எலும்பு முறிந்து வேறு புதிய எலும்பு மாற்ற அறுவை சிகிச்சை நடந்து இருந்ததால் எழுந்து நடக்க முடியவில்லை.

எவ்வளவுக்கெவ்வளவு கம்பீரமாக இருந்தானோ அந்த அளவு படுத்த படுக்கையில் அவனை பார்க்கும் போது அனைவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.

தெய்வா தான் உடைந்து போய் விட்டார். இந்த நிலைமைக்கு தாரிணியை தேடி அவன் போனது தான் காரணம் என்பதால் இன்னும் கூடுதலாக அவள் மேல் கோபம் இருந்தது.

மருதன் அகரன் குணமானதும் எவ்வளவு செலவழித்தாலும் மீண்டும் பழையபடி அவனை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்.

“உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன். இந்தா, இந்த நியூஸ் பாரு. நிக்கறது தாரிணி தானே. அப்பவே அவ அங்க இருக்கறது கன்பர்ம் பண்ணிட்டு தான் அந்த ஆபிசர்ட்ட கேட்க சொன்னேன். அவர் அவ அஸ்ஸாம்லயே இல்லன்னு சொன்னார் இல்ல. இப்ப பாரு அவங்க பங்ஷன்லயே அவளை காமிக்கறாங்க.
இதை வச்சே அந்த ஆள்ட்ட கேட்க போறேன். நீ சரியாகனும் தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். இனி அவளை கூட்டிட்டு வரது என் பொறுப்பு. நீ கவலைப்படாத.” என்றார்.

“தாத்தா. பவதா தான் இது. இப்பவே என்னை அங்க கூட்டிட்டு போங்க தாத்தா. அவளை நான் பாக்கனும்.”

“இப்போதான் உங்க அம்மா உன் விஷயத்துல என்னை தலையிட வேண்டாம்னு சொல்லிட்டு போறா. போன முறையே நீயே தான் அவளை தேடி போகனும்னு தான் செல்வாவை கொஞ்சம் டிலே பண்ண சொன்னேன். ஆனா நீ போய் ஆக்ஸிடெண்ட் ஆனதும் என்னால் தாங்கிக்கவே முடியல. இந்த முறை நானே அவளை கூட்டிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு.”

“தாத்தா ப்ளீஸ்.அவளை தவிக்க விட்டதுக்கு தான் எனக்கு இந்த தண்டனை. இந்த இரண்டு மாசமும் நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன். தெரியாத ஊரில் அவ எப்டி மேனேஜ் பண்றான்னு தெரியல” என்றான் அகரன்.

“சொன்னா கேட்கணும். இன்னும் டாக்டர் உன்னை நடக்க சொல்லல. இப்ப எப்படி அங்க போவ. நான் பார்த்துக்கறேன்”

அகரன் அவர் காண்பித்த பவதாரிணியின் படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் தலையை தடவிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் மருதன்.

தன் அலைபேசியில் வைபவை அழைத்தான் அகரன்.

“டேய். எப்படிடா இருக்க. இந்த வீக் எண்ட் அங்க வரலாம்னு இருந்தேன். வந்தனா அவ அம்மா வீட்டுக்கு வர‌ சொன்னான்னு தான் அங்க பாக்க போயிருந்தேன்.”

“பரவால்லடா. குழந்தை எப்படி இருக்கா? நீ டுடே ந்யூஸ் சேனல்ல ஒரு டிரைபல் ப்ங்க்ஷன் அஸ்ஸாம்ல நடந்ததை காமிச்சு இருக்காங்க அதை பாரு. தாரிணி அங்க தாண்டா இருக்கா. நீங்க யாரும் அன்னிக்கு நான் சொன்னதை நம்பல இல்ல. எனக்கு தலையில அடிப்பட்டு உளறறேன்னு சொன்னீங்க. இப்ப பாரு அது அவளே தான்.”

“இருடா பார்க்கறேன்” என்று வைபவ் நியூஸ் சேனலில் அந்த செய்தியை பார்த்தான். அது தாரிணி தான்.

“ஆமா டா. அவ தான். அங்க என்ன பண்றாடா? அப்போ அந்த ஆபிசர் அவ அங்க இல்லைன்னு சொன்னது பொய்யா?”

“ஆமா டா. எனக்கு ஒரு உதவி செய்டா. நீ கொஞ்சம் நேரா போய் அவளை பாத்து எல்லா உண்மையும் சொல்லுடா. அவ நான் இப்படி இருக்கறது தெரிஞ்சா கண்டிப்பா நேர்ல வருவா டா”

“நானா டா. என்னை அவளுக்கு தெரியாதே. எப்படி என் கூட நம்பி வருவா.?”

“லூசு மாதிரி பேசாத. அங்க போய் நடந்த விஷயங்களை சொல்லி அவள்ட்ட கால் பண்ணி கொடு. நான் பேசறேன்.”

“சரிடா. நாளைக்கு மார்னிங்கே நான் கிளம்பறேன்.”

“ப்ளீஸ் டா. என் வாழ்க்கை இப்போ உன் கையில் தான் இருக்கு. எனக்காக செய். தாத்தா அவரே போறேன்னு சொல்றார். ஆனா கண்டிப்பா அம்மாவும், மாமாவும் விட மாட்டாங்க. அதான் உன்னை போக சொல்றேன்.”

“டேய்.. உன் வாழ்க்கையை நிச்சயம் நான் சரியாக்குவேன்டா. நீ கவலைப்படாத.” என்று வைபவ் சொல்லி விட்டு அடுத்த நாளே அஸ்ஸாமிற்கு டிக்கெட் புக் செய்தான்.

மருதன் விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, அகரன் சொல்லியது போல் தெய்வாவும், பாண்டியனும் அவரை தடுத்து விட்டார்கள்.

********

ரூப் நகர் வந்து சேர்ந்தான் வைபவ். ரதீஷின் அலுவலகத்தில் அவர் இல்லை.. அந்த அலுவலகத்தில் தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டான். அங்குள்ளவர்கள் தாரிணி இருக்கும் ஊரை சொன்னார்கள்.

அங்கிருந்து நேராக தாரிணியை தேடி வந்தான்.

தாரிணிக்கு அடிப்பட்டு இருந்ததால் அகில் அவளை நிறுவனத்திற்கு வரவிடவில்லை.

சந்திரன் உள்ளே படுத்து இருந்தார். கதவு தட்டப்டும் சத்தம் கேட்டு தாரிணி கதவு திறந்தாள். வைபவை எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனால் அவளால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

“தாரிணி. ஐ’ம் வைபவ். சென்னையில் இருந்து வரேன்” அவன் தமிழில் பேசியதும், சென்னை என்றதும் அவசரம் அவசரமாக கதவை சாத்தி விட்டு வெளியில் வந்தாள்.

“நீங்க எதுக்கு வந்திருக்கீங்க. யார் உங்களுக்கு இந்த அட்ரஸ் தந்தது.?”

“நான் அகரன் ப்ரெண்ட் மா. உங்ககூட பேசணும்.”

“நோ. அவர் சம்பந்தப்பட்டவங்க யாரும் என்கூட பேச வேண்டாம். உங்களுக்கு யார் சொன்னது நான் இங்கிருக்கறதை.”

“உன்னோட டிரைபல் எக்ஸ்போ ஃபோட்டோஸ் தான் நீ இங்க இருக்கிறதை சொன்னது. ப்ளீஸ் கொஞ்சம் நேரம் நான் சொல்றதை கேளு. உனக்கே புரியும் எல்லாம்”
அவன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டாள்.

“ச்ச் கவனமா நான் இருந்துருக்கனும்”

“கவனமா இல்லாம இருந்தது தான் நல்லது தாரிணி. இல்லன்னா நீ இங்க இருக்கிறதை எங்களால் எப்படி தெரிஞ்சுக்க முடியும்.”

“ஓ.. அப்படி தெரிஞ்சும் அவர் மனசு இறங்கவே இல்ல. இப்போ வரைக்கும் அவர் எதுக்காக என்னை தண்டிச்சுட்டு இருக்கார்னு எனக்கு தெரியவே இல்லை. இப்போ உங்களை அனுப்பி என்ன பண்ண சொல்லியிருக்கார்? கல்யாணம் கூட ஆகலையே. டைவர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து கேட்க‌?” அனிச்சையாக அவளின் கைகள் கழுத்தை துணியால் இழுத்து மூடின.

ஆனாலும் அவளின் மஞ்சள் நிற கயிறு லேசாக தெரிந்தது. காயத்தினால் அந்த பக்கம் அவளால் துணியை கொண்டு மூட முடியவில்லை.

“உள்ள போய்‌ பேசலாமா.. “

“எதுக்கு. எதுவா இருந்தாலும் எனக்கு கேட்க விருப்பம் இல்ல. நீங்க கிளம்புங்க”

“அகரன் படுத்த படுக்கையா இருக்கான். அவனுக்கு ஆக்ஸிடென்ட். இப்போவாச்சும் நான் சொல்றதை கேட்க விரும்பறியா”

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“எது.. ஆக்ஸிடென்ட்டா.. எப்போ.‌ இப்போ எப்படி இருக்கார்?” என்று பதறினாள். வைபவிற்கு அவள் மனம் புரிந்தது. அதற்காகதானே இதை சொன்னான்.

“இங்கேயே தான் பேசுணுமா..” என்றான்.

“வீட்ல மாமா இருக்கார். இங்க வேணாம். வாங்க ஆற்றங்கரைக்கு போகலாம்.” என்று அவனை அழைத்துக் கொண்டு ஆற்றிற்கு சென்றாள்.

“சொல்லுங்க… அவருக்கு இப்போ எப்படி இருக்கு. எப்போ ஆக்ஸிடென்ட் ஆச்சு.”

“நீ தான் அதுக்கு காரணம்.”

“நானா.. குழப்பாம ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க.” பதறி தவித்தாள்.

“உன்னை தேடி இங்க வந்து தான்மா அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது. மூச்சு பேச்சு இல்லாம தான் அவனை நாங்க பாத்தோம். அவன் பிழைப்பான்னு நம்பிக்கையே இல்ல எங்களுக்கு”

“இங்க என்னை தேடி வந்தாரா. எப்போ?”

“இரண்டு மாசம் இருக்கும். உன்னை தேடி இங்க வந்தான். நீ கார்ல ஏறப்போறதை பாத்து உன்னை கூப்பிட்டுட்டே ரோட்டை பாக்காம க்ராஸ் பண்ணியிருக்கான். அப்போதான் லாரி அடிச்சிருச்சு.” .

தாரிணிக்கு தலை சுற்றியது. அவளுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.

“அப்போ.. அப்போ அவர் தானா அன்னிக்கு என்னை கூப்பிட்டது. அய்யோ நான் அவரை பாக்காம போய்ட்டேனே. அடிப்பட்டு எவ்ளோ துடிச்சிருப்பார். நான் தான் அவரை துடிக்க விட்டுட்டேன்” தலையில் அடித்துக் கொண்டாள்.

“அழாத தாரிணி. இங்க அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு தான் எங்களுக்கு தகவல் தந்தாங்க. அப்புறமா தான் அவனை சென்னைக்கு கூட்டிட்டு போனோம். தலையில் நல்ல அடி. நாலு தையல் போட்டுருந்தாங்க. கை எலும்பும் கால் எலும்பும் முறிஞ்சு போச்சு. கால்ல ப்ராக்சர்னால புதுசா எலும்பு தான் வச்சிருக்கு. அதான் நடக்க முடியல. ஆளே மாறிப்போயிட்டான். இன்னும் ப்ளாஸ்டிக் சர்ஜரி
பண்ணனும்னு தாத்தா சொல்லிட்டு இருக்கார்.”

“அவர் உயிருக்கு..”

“ம்ம். கஷ்டமான காலகட்டத்தை தாண்டிட்டான். இப்போ பரவால்ல. இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க ஆரம்பிச்சிருவான்.”

“கடவுளே அவருக்கு சீக்கிரம் சரியாகணும். கண்டிப்பா எழுந்து நடந்திடுவார்.”

“உன்ட்ட தகவல் சொல்லி கூட்டிட்டு போக தான் வந்தேன். ஆமா, உன் மாமா எப்படி இருக்கார்? அவரால் எழுந்து நடமாட முடிஞ்சதா?”

“அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?”

“என்னமா.. நாங்கதான் இலங்கை போய் அங்க விசாரிச்சோமே”

“எப்போ நான் அங்க இருந்த வரைக்கும் வரலையே.. அவர் தான் அவ்ளோ கோபமா அந்த வீடியோல பேசினாரே. அப்போ எப்படி அங்க போய் விசாரிச்சார்?”

“எல்லாத்தையும் நான் சொல்றேன்.” என்று அகரன் கோபித்து போனதில் இருந்து இலங்கை போய் உண்மை தெரிந்தது, அவன் அஸ்ஸாம் வந்தது வரை சொல்லி முடித்தான்.

தாரிணிக்கு பயங்கர அதிர்ச்சி. அவள் கனவில் கூட சந்திரனுக்கும், அகரனுக்கும் சம்பந்தம் இருக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை.

“அப்போ.. அவருக்கும் மாமாக்கும்… “

“ம்ம்.. உங்க மாமா பையன் தான் அகரன். அதனால்தானே அந்த ஃபோட்டோ பாத்து உன்னை தப்பா நினைச்சு அவர் மேல் இருக்க கோபத்தை உன் மேல் காமிச்சு இவ்வளோ பெரிய பிரச்சினை ஆச்சு..”

“ஓ.. அப்ப அவர் என்கிட்ட நேரா கேட்க கூட விருப்பப்படல. அவரா நான் தப்பு செஞ்சிருப்பேன், அவரை ஏமாத்த தான் நான் அவரோட பழகினேன்னு என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டார் இல்ல.”

“அது அப்போ மா. எப்போ உண்மை தெரிஞ்சுதோ அவன் உன்னை தேடி ஓடிவந்தான் இல்ல”

“அப்படியா. உண்மையான காதல்னா என்னன்னு அவருக்கு தெரியுமா? ஒருத்தரை ஒருத்தர் நம்பணும். எந்த பிரச்சினை வந்தாலும் கூட இருக்கணும். இந்த கதை எதுவுமே தெரியாம அவர் வருவார்னு நான் எவ்ளோ நம்பினேன். அந்த வீடியோ வரவரைக்கும் அவரை தப்பா நினைக்காம, அவரை தேடி சென்னைக்கு
வரணும்னு இருந்தேன். அந்த நம்பிக்கை என் மேல் இல்லை இல்ல அவருக்கு”

“அவன் கொஞ்சம் அவசரக்காரன் மா. அதுவுமில்லாம உங்க மாமா மேல அவனுக்கு இருந்த கோபம் தான் உனக்கே தெரியும் இல்ல. அதான் அவன் அன்னிக்கு தப்பா நினைச்சு”

“போதும். எப்படி அவருக்கு நான் தங்கையா இருந்தும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரோட பழகினேன்னு அவர் அவ்ளோ அசிங்கமா என்னை நினைச்சு விட்டுட்டு போயிருக்கார்.”

“அதான் உண்மை தெரிஞ்சுடுச்சு இல்ல. நீ அவன் அத்தை பொண்ணுன்னு”

“ஆனா ஒரு நாள்னாலும் அவர் என்னை கேவலமா நினைச்சுது நினைச்சது தானே. அவஙக அம்மாவும் என்னை நம்பல இல்ல. இரண்டு பேருக்குமே என்கிட்ட நேரா கேட்கனும்னு தோணவே இல்ல இல்ல. இப்போ வரைக்கும் எனக்கு அவர் சந்திரன் மாமா பையன்னு தெரியாது. ஆனா அவங்களுக்கு தெரிஞ்சும் அவங்க மாமாவை தேடி வரல. அவர் உடம்பு சரியில்லாம அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மாவால மாமாவை தேடிவர முடியல”

“தாரிணி.. அது அவங்க பிரச்சினை மா. நீ அதையும் உன் வாழ்க்கையும் போட்டு குழப்பிக்காத. அகரன் அன்னிக்கே எல்லாம் தெரிஞ்சு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தான். அதுக்குள்ள தான்.”

“ஓ. எப்படி.. எனக்காகவே வாழ்ந்த எங்க மாமாவை பத்தி யோசிக்காம என் வாழ்க்கையை பத்தி மட்டும் நான் யோசிக்கனுமா? அவர் என்ன தப்பு பண்ணார். அவர் ஏன் வீட்டை விட்டு வந்தார்? இதை தெரிஞ்சுக்கவும் அவங்க யாரும் விரும்பல.
அவர் இப்போ இப்படி இருக்காரே அது தெரிஞ்சும் அவரை பாக்கவும் அவங்களுக்கு தோணல இல்ல‌?”

“அது நீ அங்க வந்து உன் அத்தையை கேளும்மா? இப்போதான் அவங்க உனக்கு மாமியாரும் அத்தையும் ஆகிட்டாங்களே. உரிமையா சண்டை போடு. ஆனா அகரனுக்காக அங்க வா?”

“ஹ்ம்ம்.. இப்பவும் அவர் என்னை மட்டும் தானே கூட்டிட்டு வர சொல்லியிருப்பார். மாமா மேல இருக்க கோபம் அவருக்கு குறையவே இல்ல இல்ல…”

“நீ முதல்ல வாம்மா. அப்புறமா உங்க வீட்ல எல்லார்ட்டையும் பேசி சமாதானப்படுத்தி அவரை பத்தி சொல்லி அப்புறம் வந்து கூட்டிட்டு போகலாம்.”

“ஓ.. அநாதையா அவரை விட்டுட்டு வர சொல்றீங்க?”

“இல்லம்மா. ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்துட்டு போகலாம்.. எனக்கு அவர் மேல் தப்பு இருக்காதுன்னு தான் ஆரம்பத்துல இருந்து தோணுது. ஆனா அகரனும் அவங்க அம்மாவும் அவர் மேல் கோபத்தில இல்ல இருக்காங்க‌? அதான்”

“உண்மைன்னு ஒன்னு இருக்கு.. நீங்க யாருன்னே தெரியாத எங்க மாமாவை நம்பறீங்க. ஆனா அவங்க நம்ப தயாரா இல்ல. அவர் என்னையவே அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டார்னா அவங்களை அப்படி விட்டுட்டு வர ஆளில்ல. அதை நான் நம்பறேன். அதுவுமில்லாம அவரை தனியா விட்டுட்டு நான் வர முடியாது. என்னை பத்தி தெரியாம, என் காதலை மதிக்காம, என்னை அவர் மனைவியா நடத்திட்டும் என் மேல் சந்தேகப்பட்டு என்னை அம்போன்னு விட்டுட்டு போனதுக்கும் அவருக்கு மன்னிப்பே கிடையாது”

“தாரிணி. நீயும் அவனை மாதிரியே இருந்தா உங்க வாழ்க்கை என்ன ஆகறதும்மா? நான் உனக்கு உத்தரவாதம் தரேன். உங்க மாமாவை பத்தி நாம் போய் பேசி நல்ல முடிவை எடுப்போம்”

“என்னால் முடியாது. என் சுய கௌரவம் எனக்கு முக்கியம். அவர் வான்னா வரதுக்கும் போன்னா போறதுக்கும் நான் என்ன அவர் சம்பளம் கொடுக்கற வேலைக்காரியா?”

“எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ அகரன் இருக்கற நிலைமையை பாரும்மா”

“ஓ.. இலங்கைல அப்போதான் நான் நடக்க ஆரம்பிச்சிருந்தேன். எவ்ளோ வலில இருந்தேன். தெரிஞ்சே என்னை விட்டுட்டு போனார். மாமா அப்படி இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மா அவரை வந்து பாக்கல. ஆனா நான் மட்டும் அவரை தேடி ஓடி வரணுமா”

வைபவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“சரிம்மா. அவன்ட்ட ஒரு முறை பேசு‌. அப்புறம் முடிவெடு.”

“பாத்தீங்களா.. ஈமோஷனலா முடிவெடுக்க வைக்க பாக்குறீங்க. என்னால் அவரோட பேச முடியாது‌‌..”

“அப்போ அவன் மேல் உனக்கு பாசம் இருக்கு இல்ல. அதனால் தானே பயப்படற. இன்னும் அவன் சும்மா கட்டின தாலியை வேற போட்டு இருக்க? அப்புறம் எதுக்கு இந்த ஈகோ. உனக்கு அங்க உங்க மாமாவையும் கூட்டிட்டு போனும் இல்ல. நான் கூட்டிட்டு போறேன். அங்க போய் பேசிக்கலாம் வா” என்று கூப்பிட்டான்.

“அண்ணா உங்களுக்கு புரியவே இல்லையா. அவங்க தப்பே செய்யாத எங்களை தண்டிச்சிட்டு இருக்காங்க‌. நான் அவரோட அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சு, நான் அங்கருந்து வந்தப்புறம் தானே அவருக்கு என் மேல் தப்பில்லன்னு புரிஞ்சுது. ஒரு வேளை நான் அங்கேயே இருந்து இருந்தா அவர் செலவு பண்ண காசுல வீட்டை கட்டி நாங்க ஏமாத்தி வாழறோம்னு தானே அவர் எங்களை நினைச்சு இருப்பார். எனக்கு நினைக்க நினைக்க கேவலமா இருக்கு அண்ணா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க நீங்க கிளம்புங்க”

“என்ன தான்மா சொல்ல வர. அது என்னன்னு தெரிஞ்சா அவனை
நான் அதை சரி செய்ய சொல்றேன்”

“அவர் அம்மா எங்க மாமாவை பாக்க வரணும். அவர்ட்ட மன்னிப்பு கேட்கணும். என்னை தப்பா நினைச்சதுக்கும் அவங்க ஃபீல் பண்ணனும். அவரும் அதை உணரனும்”

வைபவிற்கு இது ஆகாத காரியம் என்று தோன்றியது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 41


“தாரிணி.. ப்ளீஸ் இப்போ அவன் கோபத்துல எடுத்த முடிவு மாதிரி நீயும் கோபத்துல எடுக்கற. அவன் உன்னை ரொம்ப மிஸ் பண்றான் மா. அவனுக்காக வா. அப்புறமா மீதி பேசிக்கலாம்”


“அவங்க எங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சது எனக்கு உறுத்துது அண்ணா. அவங்க தப்பை அவங்க உணராத வரை என்னால் வர முடியாது”


“சரி அப்போ வா. உங்க மாமாவை போய் பாக்கலாம். அவர்ட்ட என்ன தான் நடந்ததுன்னு கேட்கலாம். அதை போய் அகரன்ட்ட நான் சொல்றேன். அப்புறமா அவங்களுக்கு உண்மை புரியும் இல்ல.”


“அதுக்கு அவங்க அம்மா மனசார என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படணும். நாம சொன்னா நிச்சயமா அவங்க நம்ப மாட்டாங்க. நான் அங்க வந்து இருக்கறதுக்கு பொய் சொல்றேன்னு நினைப்பாங்க. திரும்ப அவங்க சொத்தை ஏமாத்த வந்தேன்னு தான் நினைப்பாங்க”


“ஹ்ம்ம்‌. சரி நான் அகரன்ட்ட பேசறேன் மா. நீ கொஞ்சம் பொறுமையா யோசி.”


வைபவ் அங்கிருந்து கிளம்பினான். போகும் வழியில் அகரனிடம் பேசினான். அவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாக சொன்னதும் அவனை திட்டி விட்டு நேரில் வந்து பேசுவதாக சொன்னான் வைபவ்.


தாரிணிக்கு நிலை கொள்ளவில்லை. சந்திரனின் மகன் அகரன் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அகரன் பார்ப்பதற்கு அப்படியே அவனின் தாத்தா சாயல்.


சந்திரனின் மேனரிசங்கள் சில சமயம் அவனிடம் வெளிப்பட்டதை அவள் அப்போது சந்திரனோடு அவனை முடிச்சுப் போட்டு பார்க்கவில்லை.


இடது கை பழக்கம், காதை அவ்வப்போது திருகிக் கொண்டே பேசுவது, அமைதியாக ஆனால் அகலமாக சிரிப்பது என்று இப்போது யோசித்தால் நிறைய பொருந்துகிறது.


அவளை தப்பாக நினைத்து அவன் விட்டுப் போனதை தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் அவன் சந்திரனை பற்றி சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அது எப்படி அவ்வளவு நல்லவர் அகரன் சொன்னது போல் துரோகியாக இருக்க முடியும்?.


நேராக சந்திரனை பார்த்தாள். ஆனால் அவளால் நேரிடையாக கேட்க முடியவில்லை. மனமும் உடலும் சோர்ந்து போனது.


அடிவயிறு வேறு வலிப்பது போல் இருந்தது.

‘நேரம் கெட்ட நேரத்தில் இந்த வயிறு வலி வேறு.’

அப்போது தான் யோசித்தாள். கடைசியாக அவளுக்கு எப்போது விலக்கு வந்தது என்று. நடந்த பிரச்சினையில், அங்கே இங்கே அலைந்ததில் அவள் அதை பற்றி கவலைப்படவே இல்லை.


இப்போது நினைக்க பதற்றம் வந்தது. இரண்டு மாதங்களாக அவள் விலக்கானதாக தெரியவில்லை. வியர்த்துக் கொட்டியது.


‘அய்யோ, ஒரு‌வேளை கர்ப்பமாக இருக்கிறோமா?’

பயமும், பதட்டமும் அதிகமானது.


‘கரு தங்கியிருந்தால் முப்பது நாட்களுக்கு மேல் கடந்திருக்குமே’ என்று யோசித்தாள்.


ஆனால், வயிறு வலிக்கிறதே, இத்தனை டென்ஷனில் வராமல் இருந்திருக்குமோ, ஒரு வேளை இப்போது வந்துவிட்டால்…., பொறுத்து பார்ப்போம் என்று அவளுக்கு தோன்றியது.


அதுவுமில்லாமல் அந்த குக்கிராமத்தில் அவள் போய் ப்ரக்னன்சி ஸ்டிரிப் வாங்கி பரிசோதிக்க முடியாது. அதற்கும் அகிலை எதிர்பார்க்க வேண்டும்.


அமைதியாக வயிற்றை பிடித்துக் கொண்டு வந்து படுத்தாள். சந்திரன், “தாரிணி என்னம்மா உடம்பு சரியில்லையா. எங்க போயிருந்த இவ்வளோ நேரமா?” என் கேட்டார்.


“அது மெடிக்கல்ஸ் போகலாம்னு பாத்தேன் மாமா. அகில் இன்னும் வரல. அதான் யாராச்சும் சேனாபதிக்கு போறாங்களான்னு கேட்க போனேன்.”


“நீ இந்த இக்கட்டான நிலைக்கு வர நானும் ஒரு காரணம் மா. இங்க இத்தனோன்டு கிராமத்துல எனக்காக தானே இருக்க. இப்போதான் எனக்கு சரியாக ஆரம்பிச்சிருச்சே, பேசாம சென்னைக்கு போகலாமா தாரிணி.. உன் வாழ்க்கையையும் பாக்கணும் இல்ல…”


“மாமா. ப்ளீஸ் இதை பத்தி அப்புறமா பாத்துக்கலாம். இப்போ என்னால முடியல.” என்று படுத்துக் கொண்டாள்.


சந்திரனுக்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது. எப்படியாவது தாரிணியை அகரனுடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தார்.


ஆனால் தன்னால் தனியாக யார் துணையும் இல்லாமல் இப்போது நேரிடையாக சென்னை கிளம்பி போக முடியாது என்பதை நினைக்கும் போது அவர் மேலேயே அவருக்கு கோபமாக இருந்தது.


*****

“மிஸ்டர் ரதீஷ். நீங்க ஒரு கவர்ன்மென்ட் சர்வண்ட்டா இருந்துட்டு பொய் சொல்லி இருக்கீங்க. இப்போ தாரிணி உங்க ஊர்ல தான் இருக்கான்னு நிரூபணம் ஆகிருச்சு இல்ல. இப்போ என்ன சொல்றீங்க?” மருதன் சற்று கோபமாகவே ரதீஷை தொடர்புக் கொண்டு பேசினார்.


“சார். நீங்க என் சிட்டுவேஷனை புரிஞ்சுக்கோங்க. அந்த பொண்ணு அப்ப இருந்த நிலைமையை பார்த்து தான் நான் உங்களுக்கு உண்மையை சொல்லல. எனக்கு இதில் மறைச்சு என்ன கிடைக்க போகுது.?”


“சரி. இப்போ அந்த பொண்ண நாங்க திரும்ப இங்க அழைச்சுக்க விரும்பறோம். எங்க பையனால இப்போ அங்க கிளம்பி வர முடியாத சூழல். நீங்க தாரிணியையும், அவங்க மாமாவையும் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமா? நாங்க இங்க ரிசீவ் பண்ணிக்கிறோம்.”


“அவளுக்கு இதில் விருப்பம்னா நிச்சயமா நான் செய்யறேன். ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவளுக்கு அங்க வர விருப்பம் இல்ல.”


“அவ சின்ன பொண்ணு. நீங்க மிஸ்டர் சந்திரன்ட்ட பேசுங்க. அவர் சூழ்நிலையை நிச்சயம் புரிஞ்சுப்பார். எனக்கும் அவரோட பேசணும். அவருக்கு இப்போ எப்படி இருக்கு?. பேசக்கூடிய சூழ்நிலையில இல்ல பேசினா புரிஞ்சுக்க கூடிய சூழல்ல இருக்காரா?”


‌ரதீஷூக்கு வாய்வரை வார்த்தை வந்துவிட்டது. அவரால் இப்போது நடமாட முடியும் என்று. ஆனால் அகிலை நினைக்க நினைக்க பாவமாக இருந்தது. தாரிணி அகரனை திருமணம் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அவள் காதலிக்கதானே செய்திருக்கிறாள். இப்போது அவனைப் பார்க்க கூட அவளுக்கு விருப்பமில்லை.


அகிலுக்கு அவளை திருமணம் செய்வதில் ஒன்றும் தப்பில்லை என்று தோன்றியது..


“ரதீஷ். லைன்ல தானே இருக்கீங்க. சிக்னல் கிடைக்குது இல்ல?” மருதன் கேட்டார்.


“இல்ல அவர் இன்னும் சிகிச்சைல தான் இருக்கார். இன்னும் பேச முடியல. ஆனா நான் டிரை பண்றேன்.‌ அவருக்கு சூழலை விளக்கி சொல்றேன். தாரிணி விருப்பம் தான் இதில் முக்கியம். அதனால் நீங்களும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவ மனசு மாறற வரைக்கும்”


“ஆனா என் பேரன் நிலைமையை அவளுக்கு தெரியப்படுத்தினா நிச்சயம் அவளுக்கு மனசு மாறும்”


“அவருக்கு என்ன ஆச்சு. என்ன நிலைமை?” சதீஷ் உண்மையிலேயே கவலைப்பட்டார்.


“தாரிணியை தேடி அங்க வந்தப்ப ஆக்சிடென்ட் ஆனது. இன்னும் அவன் நடக்க ஆரம்பிக்கல.”


“ஓ.. அப்படியா.. இங்க வந்தாரா…”


“ஆமா. அவன் தாரிணி அங்க இருக்கறதா சொன்னப்ப நாங்க நம்பல.

என்னோட ஃப்ரெண்ட் அவரோட லோக்கல் சோர்ஸ் வச்சு கன்பர்ம் பண்ணார். அதனால் தான் உங்கள்ட்ட கேட்டோம். ஆனா நீங்க இல்லைன்னு சொன்னதும் நான் உங்க பொசிஷன் மேல் நம்பிக்கை வச்சு நம்பினேன்.”


“அதான் சொன்னேனே சார். தாரிணி ரிக் வெஸ்ட் பண்ணதால தான்.. நிச்சயமா நான் தாரிணிட்ட அகரனை பத்தி சொல்றேன். நீங்க கவலைப்படாதீங்க.”


ரதீஷ் மலைவாழ் மக்களின் நலனுக்காக வேலை செய்யும் நபர். அவர் இன்னொரு மனிதனாக அகரனுக்காக வருத்தப்பட்டார். ஆனால் சகோதர பாசம் அதனை மீறி சிந்திக்க வைத்தது.


அவனுக்காக அவன் ஆசைப்பட்ட வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கு முன் தாரிணியிடம் உண்மையில் அகரனின் நிலையை சொல்லி அவளின் விருப்பம் தெரிந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.


******


“ஏஞ்சல், ஏன் அடிக்கடி உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுது.? நீங்க வீணா உங்க மனசை போட்டு குழம்பி தான் உடம்பை கெடுத்துக்கறீங்க. இதுல என் கம்பெனியை டாப் பொஸிஷனுக்கு கொண்டு வரணும்னு வேற சொன்னீங்க. இப்போ அதை அம்போன்னு விட்டுட்டு இப்படி அடிக்கடி படுத்துக்கறீங்க.”


“நான் எங்க அப்படி சொன்னேன். அதுவுமில்லாம இப்போ என்னால் நிஜமாவே முடியல்ல. நாளைக்கு நான் கண்டிப்பா வருவேன்.”


“நான் சும்மா சொன்னேன்‌ கோல்டன் ஏஞ்சல். உங்க காயமே இன்னும் ஆறல. அதனால் தான் உடம்பு டையர்டா இருக்கு போல. உங்களுக்கு காலைல டிடி போட டாக்டர் வந்தார் இல்ல. அவர் மெடிசன் எழுதி தந்தாரா. நானும் அதை கேட்க மறந்துட்டேன்.”


“ம்ம். அவரே பெயின் கில்லர் தந்தார். போட்டிருக்கேன்.”


“தாரிணிம்மா. மெடிக்கல்ஸ் போகணும்னு சொன்ன இல்ல. தம்பிக்கூட போகனும்னா போய்ட்டு வா” என்று சந்திரன் சொல்ல,


“என்ன ஏஞ்சல் மெடிக்கல்ஸ் போகணுமா? வாங்க போய்ட்டு வந்திடலாம். நீங்க அப்போவே சொல்லியிருக்கலாம் இல்ல. நேரத்தோட போய் இருக்கலாம்.”


“இல்ல வேணாம். பாத்துக்கலாம்.” தாரிணி பட்டும் படாமல் பேசவே அகிலுக்கு முகம் சுருங்கிப் போனது.


இருந்தும் அவன் தாரிணியிடம் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டே இருந்தான். அவளோ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. ‘ம்ம்’ மட்டும் தான் அவள் வாயில் வந்தது. சந்திரனும் அதை கவனித்தார்.


அதே நேரம் ரதீஷ் அங்கு வந்தார்.


“அண்ணா. என்ன இன்னிக்கு காலைல போய்ட்டு உடனே திரும்பிட்டீங்க. நான் வீக்எண்ட் தான் வருவீங்கன்னு நினைச்சேன்” அகில் ரதீஷை பார்த்து சொல்ல,


“ம்ம். தாரிணிக்கு இப்போ எப்படி இருக்குன்னு பாக்க தான் வந்தேன். அகில் நீ போய் நைட் டின்னருக்கு மைதிலாவ எதாவது செய்ய சொல்லு. அப்படியே வண்டியை எடுத்துட்டு போ” என்றார்.


அகில் அவரை புரியாமல் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் சென்றான்‌.


“சந்திரன். தாரிணிட்ட நான் கொஞ்சம் பேசணும். கொஞ்ச தூரம் நடந்து போய்ட்டு வரோம்.‌” என்று சொல்லி விட்டு தாரிணியை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.


“தாரிணி. இன்னிக்கு அகரனோட தாத்தா எனக்கு பேசினார். நான் சொல்லப்போறதை கேட்டு நீ அதிர்ச்சி ஆகாத”


பக்கத்தில் நடந்து வந்த ரதீஷை திரும்பி பார்த்தாள்.


“அகரனுக்கு ஆக்ஸிடண்ட் ஆகியிருக்காம். அவர் முடியாம இருக்கார் போல”


“தெரியும் சார்.”


“வாட்.. உனக்கு அதை கேட்டதும் போகணும்னு தோணலையா..”


“இல்ல. என்ன தப்பா புரிஞ்சுட்டு அப்படியே தனியா தவிக்க விட்டுட்டு போனார். அப்ப நான் நல்லா நடக்க முடியாம தானே இருந்தேன். வலியோட தானே எங்கே போறதுன்னு தெரியாம நான் இங்க வந்தேன்.”


“ம்ம்.. ஞாபகம் இருக்கு தாரிணி. இங்க வந்தப்புறம் தான் நல்லா நடக்க ஆரம்பிச்ச.. ஆனா அதுக்காக அவர் இப்ப இருக்க நிலைமைல நீ பாக்க விரும்பலையா?”


“இல்ல சார். அவருக்கு நான் யாரு. எனக்கு போக விருப்பம் இல்ல சார். கடவுள் இதே மாதிரி ஒரு ஆக்ஸிடென்ட் மூலமாதான் அவரோட என்னை இணைச்சு வச்சார். இப்போ அவருக்கு நடந்த ஆக்ஸிடென்ட் மூலமாகத்தான் எங்களை பிரிச்சும் வச்சுருக்கார். நான் அப்படியே தனியா இருந்துக்கறேன் சார்.”


“உனக்கு அவரோட நினைப்பு மனசில் இல்லையா தாரிணி”


“இல்ல சார். எப்ப என்னை தப்பா நினைச்சார்னு எனக்கு தெரிஞ்சதோ இனி அவர் வேற. நான் வேற” என்று விரக்தியில் சொன்னாள்.


அதற்கு மேல் அவளை கேட்க விருப்பமில்லை ரதீஷூக்கு.


தாரிணி மனதில் சுத்தமாக அகரனுக்கு இடமில்லை என்று தெரிந்து ஓரளவுக்கு நிம்மதி அவருக்கு. கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் அவள் மனம் மாறும். அகிலை ஏற்றுக்கொள்வாள் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.


******


“அகரா, நான் அந்த ஆபிசர்ட்ட பேசினேன் பா. அவர் தாரிணிட்ட பேசறேன்னு சொல்லியிருக்கார். நீ கவலைப்படாத. அவ கண்டிப்பா இங்க வருவா.”


“வரமாட்டா தாத்தா. நான் வைபவ்வை அங்க அனுப்பினேன். அவ இங்க வர முடியாதுன்னு சொல்லிட்டாளாம். எல்லாம் நான் பண்ண தப்பு. அந்த ஆளுக்காக அவளை தண்டிச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்.”


“இந்த கோபம், அவசர முடிவு இதான் எல்லாத்துக்கும் காரணம் அகரா. அப்படியே உன் அம்மா மாதிரி.”


அவன் பல்லைக்கடித்துக் கொண்டு வெளியில் பார்த்தான்.


“நீ அவளை பார்த்து சமாதானப்படுத்தினா அவ மனசு மாறும்னு நினைக்கிறேன். உன் கால் முதல்ல சரியாகட்டும்”


“அம்மா மனசு மாறி அவர்ட்ட மன்னிப்பு கேட்கணுமாம். அவ சொல்லி அனுப்பியிருக்கா”


“நியாயம் தானே அகரா. அவர் அவளை வளர்த்தவர். அவர்‌மேல் தப்பு இல்லைன்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கும். அதான் முதல்ல அவ மாமா லைஃப்பை சரியாக்க விரும்பறா.”


“நடக்க கூடிய காரியமா இது.. பேசாம என்ன ஆனாலும் நானே கிளம்ப போறேன் தாத்தா.யாரை அனுப்பியும் பிரயோஜனமில்ல”


“இப்ப தனியா போக முடியாதே அகரா. கொஞ்சம் உன் கால் சரியான பிறகு போ. இப்பவும் சொல்றேன். உன் வாழ்க்கைக்கு இன்னொருத்தரை வாதாட வைக்காத. வாய்தா வாங்கிட்டே இருக்க வேண்டியது தான். நீயே போய் அவ கால்ல விழு. தப்பில்ல. மனைவியை மதிக்கறவன் என்னிக்கும் வீணா போனதில்ல”


சரியென்று தலையை ஆட்டினான். அவரும் அவனை தட்டிக் கொடுத்து விட்டு அவரது அறைக்கு சென்றார்.


“பவதா.. மன்னிச்சிடு. நான் உன்னை தண்டிக்கனும்னு நினைச்சிருக்க கூடாது. உன்னை தேடி வருவேன் நான். கண்டிப்பா உனக்கு என் காதலை புரிய வைப்பேன்.”


இலங்கையில் அவளுடன் இருந்த நாட்கள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.


‘எத்தனை அன்பாக, காதலுடன் இருந்தால் என்னை நம்பி அவளை தந்திருப்பாள். எல்லா நம்பிக்கையையும் தகர்த்து எறிந்து விட்டு இப்போது அவளாக வந்து விடுவாள் என்றால் எப்படி?


அவள் வர வேண்டும் என்றால் அம்மா அவர்கள் இருவருடன் பேச வேண்டும். அது எப்படி நடக்கும்?’ கடந்த காலம் முழுதும் அவனுக்கு நினைவில் வந்தது.



இத்தனை வருடங்களில் அவனுக்கு காண்பித்தது எல்லாம் அவனின் அப்பா ஒரு மோசமான பிறவி என்பது தான்.


அது எந்தளவு உண்மை என்று அவன் தெரிந்துக் கொள்ளக்கூட முயற்சி செய்தது இல்லை.


இப்போது வந்து அவனின் அப்பா நல்லவர் என்று ஏற்றுக் கொண்டால் அவனின் அம்மா மீது தவறு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?


அவனின் கேள்விக்கெல்லாம் ஒன்று அவனின் அம்மா இல்லை அப்பா தான் பதில் சொல்ல வேண்டும். அம்மாவின் அத்தனை மன வேதனைகளையும் அவன் சிறு வயதில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.



அடுத்த பக்கம் தெரிய வேண்டும், அதற்கு அவனின் கோபங்களை எல்லாம் விட்டு விட்டு தாரிணிக்காக சந்திரனிடம் பேசலாம் என்று யோசித்தான்.


அவருக்கு இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. வைபவ் அவரை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. என்ன ஆனாலும் பரவாயில்லை தாரிணியை போய் பார்த்து நேரில் அவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்துக் கொள்வது என்று முடிவெடுத்தான்.


இப்போது யாரும் ஒரு துணையோடு தான் அவனால் சிறிது தூரம் கூட நடக்க முடியும். அதற்கு அவனையும் அவனது பிரச்சினைகளையும் புரிந்தவர்கள் என்று பார்த்தால் வைபவ் மற்றும் அவனின் தாத்தா.


மருதனை கூட்டிச் சென்றால் அவரை அவன் தான் பார்த்துக் கொள்ள முடியுமே தவிர அவனை மருதனால் பார்த்துக் கொள்ள முடியாது.


அவனின் தாத்தாவிடமே என்ன செய்வது என்று கேட்டுக் கொள்ள அவரை அலைபேசியில் அழைத்தான்.


விவரங்களை கேட்டதும், ‘சரி.. நானே உன்னுடன் வருகிறேன். துணைக்கு கௌரியை அழைத்து செல்லலாம், அவர் இருவரையும் பார்த்துக் கொள்வார்’ என்றார்.


இருவரும் சேர்ந்து பொருத்தமாக ஒரு பொய்யை எப்படி பாண்டியனிடமும், தெய்வாவிடமும் சொல்வது என்று சிந்தித்தனர்.


அவன் வழக்கமாக பார்க்கும் மருத்துவரிடம் கவுகாத்தியில் யாரும் தெரிந்த மருத்துவர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்துக் கொண்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 42


தாரிணி சோர்ந்தே இருந்தாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு அகிலுடன் நிறுவனத்துக்கு சென்று வந்துக் கொண்டுதான் இருந்தாள்.


“சோகராகம் பாடற கொண்டை வச்ச மஞ்சள் பறவை மாதிரி இருக்கீங்க கோல்டன் ஏஞ்சல். ஏன் உங்க அழகான சிரிப்பை மறைச்சு வச்சிருக்கீங்க”


“சிரிப்பே வராதப்ப எப்படி சிரிக்க முடியும்..?”


“ஓ… சிரிக்க வைக்க நான் முயற்சி செய்யட்டுமா?. கார் ஓட்டிட்டே இருக்கறப்ப என் கைகளை எடுக்க முடியாதேன்னு பாக்கறேன்.”


அவனை திரும்பி முறைத்தாள் தாரிணி.


“ஹலோ.. ஏன் எப்பவும் தப்பாவே நினைக்கறீங்க. சில பல மேஜிக் செஞ்சா நீங்க அதை பார்த்து ரசிச்சு சிரிப்பீங்களேன்னு சொன்னேன்”


“ஓ மேஜிக் வேற தெரியுமா? தெரியாதது ஒன்னும் இல்ல போலயே?”


“ஆமா. நான் சின்ன வயசிலேயே மேஜிக் செய்யக் கத்துக்கிட்டேன். இப்பவே இங்க ஒரு அதிசய மரத்தை காமிக்கறேன். வாங்க” என்று வண்டியை நிறுத்தினான்.


“அதிசய மரமா?”


“ஆமா.. “ என்று அவளை அழைத்துக் கொண்டு ஆற்றின் மேல் கட்டியிருந்த சிறு பாலத்தை கடந்து மரங்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.


“ஏஞ்சல்..இப்ப நான் இந்த மரத்தோட பொந்துக்குள்ள போய் பேசினதும் இந்த மரம் அதை திருப்பி சொல்லும். ஏன் சில சமயம் பாடக்கூட செய்யும்.”


உயர்ந்த மரம். யூகலிபட்ஸ் மரம் போல ஆனால் அடர்ந்து இருந்தது. அதன் அடியில் ஒரு பொந்து ஆள் நுழையும் அளவிற்கு இருந்தது.


“ வாங்க. உள்ளே போய் பேசலாம்” என்று கீழே கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து பொந்துக்குள் தட்டினான்.


“என்ன பண்றீங்க. ஏன் அதை வச்சு தட்டறீங்க”


“ஒன்னுமில்ல கரடி எதாச்சும் இருக்கான்னு பாக்க தான் தட்டினேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே தலையை விட்டு பார்த்தான்.


“வாட். கரடியா.. என்ன அசால்ட்டா சொல்றீங்க”

என்று பயந்து இரண்டு அடிகள் பின்னே வைத்தாள்.


“அட பயப்படாம வாங்க. கரடி இருந்தா ஹாய் ஹலோன்னு சொன்னா அதுவும் ஹாய்னு சொல்லிட்டு போய்டும்.”


“விளையாடாதீங்க. பாத்து உள்ளே போங்க” என்று பயந்துக் கொண்டே அவன் பின் வந்து எட்டிப் பார்த்தாள்.


உண்மையிலேயே ஒரு கரடி வசிக்கலாம் என்ற அளவுக்கு அதில் பொந்து இருந்தது.


“ஏஞ்சல்” என்று அவன் உள்ளே சென்று கத்தினான். வெளியே “ஏஞ்சல் … ஏஞ்சல்..” என்று எதிரொலித்த சத்தம் கேட்டது.


“இதென்ன மலையில் எதிரொலிக்கற மாதிரி இருக்கு.” என்று ஆச்சர்யத்தோடு அவன் அருகில் நின்றாள்.


தோளை உரசிக் கொண்டு அவள் நிற்கும் போது அகிலுக்கு சந்தோஷமாக இருந்தது.


“இருங்க இதென்ன அதிசயம்.. இப்போ பாருங்க..” என்று ஏதோ ஒரு குருவியை போல கூவினான்.


மீண்டும் வெளியே கூவென்று சத்தம்.


பாடல் ஒலியை போலவே தொடர்ந்து வேகமாக பாடியது. ஆச்சர்யத்தோடு அவனையும் குரல் வந்த திசையையும் பார்த்தாள்.


மீண்டும் வேறு விதமாக குரல் எழுப்பினான். எங்கிருந்தோ திடீரென விதவிதமாக குருவிகளின் சத்தம் கேட்டது.


“ நீங்க சத்தம் போட்டதும் அத்தனை குருவிங்க எப்படி வந்துச்சு”


“அதான் மேஜிக்” என்று கண்களை சிமிட்டி, ‘உஷ்’ என்று வாயில் சத்தம் செய்தான்.


“என்ன இப்ப” என்று ரகசியமாக அவனிடம் கேட்டாள்.


“ஒன்னும் இல்ல…ஏதோ சத்தம் கேட்குது. ஷ்ஷ்..”


ஏற்கனவே நரியிடம் கீறல் வாங்கியிருந்த தாரிணிக்கு இப்போது பயம் அதிகமாக இறுக்கமாக அவன் சட்டையை பிடித்துக் கொண்டாள். கண்களையும் இறுக்க மூடிக் கொண்டாள்.


அவனது இதயம் படபடவென அடித்தது.


“ஏஞ்சல்.. ஒன்னுமில்ல.. ஏதோ லங்கூர் தான். வாங்க போகலாம்”


அவனை இறுக்கிப் பிடித்திருந்த தாரிணியை மெதுவாக அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.


வண்டியில் ஏறியதும், “ஏஞ்சல் இப்போ உங்க மூட்லாம் மாறிடுச்சா” என்று கேட்டான்.


“ம்ம்.. சிரிப்பு வரலைன்னு சொன்னா கூட்டிட்டு போய் பயமுறுத்தி கூட்டிட்டு வர்றீங்களா”


“எல்லாத்துக்கும் பயந்தா இப்படி எக்ஸ்பீரியன்ஸ்லாம் எப்படி கிடைக்கும். நான்லாம் நாலு வயசிலேயே தனியா காட்டுக்குள்ள சுத்தின ஆளு..”


“உங்கப்பா பாரஸ்ட் ஆபிசர். அதனால் பயமில்லாம சுத்துவீங்க.”


“அதே மாதிரி இப்போ நீங்க என்னோட பயமில்லாம காட்டுக்குள்ள வரலாம். எப்போலாம் நாம ஃப்ரீயா இருக்கிறோமோ அப்போல்லாம் போய் புதுசா எக்ஸ்ப்ளோர் பண்ணலாம். ”


தாரிணிக்கு பயத்தை தாண்டி அந்த காட்டின் அழகு பிடித்திருந்தது.


இந்த இரண்டு மூன்று மாதங்கள் தான் இப்படி காட்டுக்குள் வெளிச்சம் இருக்கும். மழை அதிகமாக பெய்ய ஆரம்பித்து விட்டால் இருண்டு கிடக்கும்.


குளிரும் அதிகமாகி விடும்.

எனவே பயம், மன அழுத்தம் எல்லாம் போக அவனுடன் காடுகளுக்கு போகலாம் என்று முடிவெடுத்தாள். அவள் யோசித்து முடிப்பதற்குள் வீடு இருந்த தெரு வந்தது.


“ஏஞ்சல்.. உங்களுக்கு வீட்ல புது ப்ரஷஸ், கேன்வாஸ்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதை எடுத்துட்டு வரேன். நீங்க வண்டியிலேயே இருங்க.. “


“இல்ல.. உங்க வீட்டுக்கே போங்க. அன்னிக்கு என் டிரஸ் அங்கேயே விட்டுட்டு வந்தேன் இல்ல.. அதையும் எடுத்துக்கனும்.”


‘அவள் வீட்டுக்கு வரேன்’ என்றதும் அகிலுக்கு புல்லரித்தது. அவள் அருகில் இருந்தால் உலகமே அவன் வசமானது போல் இருக்கும்..


“வாங்க ஏஞ்சல்.. இப்போவே வந்திடுங்க‌..” என்றான்.


“என்னது..”


“இல்ல.. வாங்கன்னு சொன்னேன்.” என்றான்.


அவனது உதட்டோரம் சிரிப்பு பார்த்ததும் தாரிணிக்கு சிறிது வருத்தமாக தான் இருந்தது.


அவளது உடையை நன்றாக துவைத்து அதில் வாசம் வரும்படி செய்து அழகாக தேய்த்து வைத்திருந்தான்.


அவனைப் பார்த்து கொண்டே அதை பிரித்தாள்.


“ஏன் நீங்க போய் இதெல்லாம் செய்றீங்க. நானே தோய்ச்சுப்பேன் இல்ல”


“ஏஞ்சல்க்காக எதுவேணா செய்வேன். இதை செய்ய மாட்டேனா”


அவள் கண்கள் அவனை கவனிக்கவே இல்லை. அந்த துப்பட்டாவில் நிலைத்தது. அழகான காதலர்கள் படம் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு இருந்தது.


“அது அன்னிக்கு நீங்க அந்த நரிக்கு பயந்து கீழ விழுந்தபோது கிழிஞ்சிருச்சு போல. நீங்க அடிக்கடி இந்த ஷாலை போடறதை பார்த்திருக்கேன். ஏதோ ஒரு செண்டிமெண்ட் இருக்கும்னு நினைச்சேன்..அதான் அதை அப்படியே புதுசா பண்ணிட்டேன்”


அது அகரன் அவளுக்காக அவனின் நிறுவனத்தில் தயார் செய்தது.. அவள் எவ்வளவுதான் அவனை வேண்டாம் என்று நினைத்தாலும் அந்த துணியில் இருக்கும் இழை போல அவள் நெஞ்சில் அவன் இருந்தான். அந்த துப்பட்டா அவள் மேல் தழுவும் போது எல்லாம் அகரனின் ஆறத்தழுவல்கள் அவளுக்கு நினைவில் வரும்.


வெளியில் சொல்லாத அந்த காதல் அவன் மேல் உள்ள கோபத்தில் மறைந்துக் கிடக்கிறது. மெல்ல எடுத்து அவள் கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.


“சரி வாங்க‌‌.. வண்டியில் ஏறுங்க..நானே விட்டுடறேன்”


“இங்க இருக்க வீட்டுக்கு நான் தனியா போக மாட்டேனா..”


“சரி அப்போ. அப்படியே நடந்து போகலாம்”


லங்கூர் அவனது பேன்ட்டை திருடிக் கொண்டு போன சம்பவத்தை விவரித்து சொல்லிக் கொண்டே வந்தான் அகில். அதை கேட்டு வயிறு குலுங்க சிரித்தாள் தாரிணி‌.


இருவரையும் தூரத்தில் நின்ற வண்டியில் இருந்த கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தது.


நெருங்கி வர வர தாரிணிக்கு மனதில் நெருடல் ஒன்று தோன்றியது.


“அட நம்ம ஊருக்கு புதுசா கார் வந்திருக்கு. யாரா இருக்கும்” அகில் சொல்லிக் கொண்டே வர, உள்ளுக்குள் தாரிணிக்கு பதட்டமானது.


அவள் நெருங்கும் போது பட்டென்று கார் கதவு திறந்தது.


யாரை எதிர்பார்த்தாளோ அவனே தான் எட்டிப்பார்த்தான்.


அந்த கண்களும், அந்த உதடுகளும் அவள் மறக்க நினைத்தாலும் மறக்க கூடியதா… அதிலும் அவன் முகத்தில் இருந்த தழும்புகளை பார்த்ததும் ஓடிச்சென்று நெஞ்சில் தாங்க துடித்தது அவள் மனம்.


ஆனால் தடுத்தது என்னவோ அவள் கோபம்.


அவனை பார்க்காதது போல தாண்டி சென்றாள்.


“பவதா.. பவதா” என்றான் அகரன்.


அகில் புருவம் உயர்த்தி பார்த்தான் இருவரையும்.


அவன் மனதில் அது அகரன் தான் என்று பட்டது. சிறிது நின்று நடந்தான். அகரனால் வெளியே இறங்க முடியாததால் அவன் அங்கிருந்தே கத்திக் கொண்டு இருந்தான்.


ஓடிச்சென்று தாரிணி முன் நின்றான் அகில்.


“ஏஞ்சல் அவர் உங்களைத்தான் கூப்பிடறார்னு நினைக்கிறேன்.. வாங்க பேசிட்டு போகலாம்..” என்றான்.


“நீங்க அமைதியா வாங்க.. அவர்ட்ட பேசணும்னு அவசியம் இல்ல” என்று நடந்தாள்.


“பவதா.. நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு போ. நீ பதில் சொல்ல வேண்டாம்.”


அமைதியாக நின்றாள். அகரன் உதட்டில் சிரிப்பு வந்தது.


“பவதா… நான் செஞ்சது எல்லாமே ரொம்ப பெரிய தப்பு. அதை ஒத்துக்கறேன். மன்னிப்புன்னு கேட்டு உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். ஒன்னே ஒன்னு தான்.. நான் உன்னை மனசார லவ் பண்றேன்.. அதை நீ உணரப்ப எங்கிட்ட வருவ. அதுவரைக்கும் நீ சொன்ன மாதிரி அம்மாவோட வாழ்க்கையை சரி பண்ண டிரை பண்றேன்.. கூடிய சீக்கிரம் நாம திரும்ப பாப்போம்.. எனக்கு இங்க கவுகாத்தில தான் பிளாஸ்டிக் சர்ஜரி நடக்கப் போகுது. சரியாகற வரைக்கும் இங்க தான் இருப்பேன்.” என்று சத்தமாக சொன்னான்.



பதட்டமாகியது தாரணிக்கு.

இருந்தும் அமைதியாக அவனை திரும்பி பார்த்தாள்.‌


“ஏஞ்சல்.. இவரை உங்களுக்கு தெரியுமா?”


அகரனை ஆழ்ந்து பார்த்தாள்.‌


“இல்ல தெரியாது..” என்று அவள் சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றாள்.


அகில் காருக்குள் அகரனை குனிந்து பார்த்தான்.


“யார்னே தெரியாத ஒருத்தவங்களை இப்படி வழிமறிச்சு பேசாதீங்க மிஸ்டர்.. இனி தாரிணியை தொந்தரவு பண்ணாதீங்க..” என்று சொல்லிவிட்டு அவனும் தாரிணி வீட்டுக்குள் சென்றான்.


முன்பிருந்த அகரன் என்றால் இந்நேரம் அவனது கை அகிலின் கன்னத்தில் பதிந்து இருக்கும். இப்போது அவனை பார்த்து ஒரு சிரிப்பை சிரித்து விட்டு காரை எடுக்க சொல்லி சென்றான்.‌


கார் கிளம்பி செல்லும் சத்தம் கேட்டதும் தாரிணிக்கு உள்ளுக்குள் துடித்தது.


இலங்கை நினைவுகளை வலுக்கட்டாயமாக நினைவில் நிறுத்தினாள்..



‘இதே போலவே தானே அன்று விட்டுச் சென்றான். அன்று இருந்த கோபம் ஏன் அவனை பார்த்ததும் குறைகிறது.. தடக் தடக் என்று மனது அடித்துக் கொள்கிறது. ச்ச.. வெட்கம் கெட்ட மனம். ஒன்றுமே நடக்காதது போல பேசி செல்கிறான்.. அவனை புரிந்துக் கொண்டு செல்ல வேண்டுமா??? மன்னிப்பு வேறு கேட்க மாட்டாராமே..’ உதட்டை சுழித்துக் கொண்டாள்.


“தாரிணி வந்துட்டியா…” என்று சந்திரன் கேட்க, அகரன் அவரை பார்த்திருப்பானா என்ற சந்தேகம் வந்தது.


“ம்ம் வந்துட்டேன் மாமா.. நீங்க காபி எதாவது சாப்பிடுறீங்களா?”


“குடும்மா.. நீயும் போட்டுக்க” என்று சொல்லி விட்டு திரும்பினார்.


அகில் நின்றான்.


“அட வாங்க தம்பி… தாரிணி அகில் தம்பிக்கும் சேர்த்து போடு” என்று அவனிடம் திரும்பினார். அவன் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்நதான்.


“தட் அகரன் வந்தார் அங்கிள். பாவம் அடிப்பட்டு இருக்கு போல.. தாரிணி தான் அவரை பாக்கவே பிடிக்கலன்னு அனுப்பிட்டாங்க”


அகரனை பார்த்தது போல இதுவரை சந்திரன் அவளிடம் சொல்லவில்லை.


காபி கலந்துக் கொண்டே அடிக்கண்ணால் சந்திரனை கவனித்தாள்.


அவரது முகம் பரபரப்படைந்தது.‌


சதை ஆடத்துவங்கிவிட்டது.


‘என்னவென்று அகிலிடம் சொல்வார்.. அவன் என் மகன் என்றா? தாரிணி விரும்பியவன் என்றா’


மனதுக்குள் அவருக்கு ஆயிரம் யோசனைகள். வாசல் வரை வந்தும் அவனை பார்க்க முடியவில்லையே…


அடிப்பட்டு இருக்கிறது என்பது வேறு அவரை வேர் வரைக்கும் அசைத்து பார்த்து விட்டது.


அவன் வந்திருக்கிறான் என்றால், அதுவும் அடிப்பட்டு வந்திருக்கிறான் என்றால் தெய்வா.. ஒருவேளை வந்திருப்பாளோ‌…


ஆயிரம் வருட காதல் கைசேரத்துடிப்பது போல் தவித்தார்.


திருமணம் இருவரை பிரித்தாலும் அடியாழத்தில் இருக்கும் காதல் எப்போதும்

இருவரையும் பிரிப்பதில்லை.


“ஹலோ.. அங்கிள்.. ட்ரீம்க்கு போக வேண்டிய தாரிணியே அமைதியா இருக்காங்க.. நீங்க ஏன் எங்கேயோ பறந்து போற மாதிரி இருக்கீங்க”


“அது ஒன்னுமில்ல தம்பி. அந்தக் தம்பியை பாத்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.. அதான் யோசிச்சேன்.”


“எது.. நல்லா இருந்திருக்குமா?”


“இல்ல தாரிணி வாழ்க்கையை பத்தி இரண்டில் ஒன்று முடிவு கேட்டிருக்கலாம் இல்ல”


‘உலக நடிப்புடா இது’ தாரிணி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.


“மாமா.. அவங்க அம்மாவும் வந்திருக்காங்க போல.. நமக்குதான் அகரனையே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.. எதுக்கு அவங்க ஃபேமிலி எல்லாம்.” சும்மாவே ஒரு தூண்டில் புழுவை வீசினாள்.


சந்திரன் சிக்குவார் என்று தான் நினைத்தாள்.


“ஆ.. ஆமா.. நமக்கு வேண்டாம் தாரிணி”


அகரனோடு தான் சேருகிறோமோ இல்லையோ மாமாவை தெய்வா அத்தையோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று விரும்பினாள்.




“டேய், நான் இப்போ தான் தாரிணியை பார்த்து பேசிட்டு வரேன்” வைபவிற்கு அழைத்து சொன்னான் அகரன்.


“கவுகாத்தி போய்ட்டியா.. யாரோட போன? நான் தான் வரேன்னு சொன்னேன் இல்ல”


“டேய் தாத்தா வந்திருக்கார் டா. அதுவுமில்லாம அம்மா, மாமாவை இரண்டு கம்பெனியையும் பாத்துக்க ஆள் வேணும்னு சொல்லி, அவங்களை விட்டுட்டு துணைக்கு கௌரி அக்காவையும் அவங்க ஹஸ்பண்ட்டையும் கூட்டிட்டு வந்திருக்கோம். அப்படியே இங்க தான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கு..அதை தான் சொல்லி அம்மாட்ட ஏமாத்திட்டு வர வேண்டியதா இருந்தது”


“இந்த வயசுல உங்க தாத்தா ஆட்டம் ஓவர் டா. பெத்த பசங்களை ஏமாத்திட்டு வந்திருக்கார் பாரு.”


“டேய் அவங்களை விட என்னைத்தான் தாத்தாக்கு ரொம்ப பிடிக்கும். அதான் இப்படி..”


“எப்படியோ நல்லா இருந்தா சரி தான். தாரிணி என்னடா சொன்னா?”


“அவ தெரியவே தெரியாத மாதிரி நடந்துக்கிட்டா டா.. நான் இங்க தான் கொஞ்ச நாளைக்கு இருப்பேன், சர்ஜரின்னு சொன்னதும் தடுமாறிட்டா.. அதெப்படி என்னைப் பார்த்தும் அவளால் வெறுக்கற மாதிரி நடிக்க முடியும்? அவ கூட ஒருத்தன் இருந்தான்டா.. அவன் தான் யாருன்னு தெரியல. அப்படியே அறையலாம் மாதிரி இருந்தது.. எழுந்திரிக்க முடியாததால் தப்பிச்சான்.”


“டேய் யப்பா.. கையையும் வாயையும் வச்சிட்டு சும்மா இரு.. அப்படியே உன் புத்தியையும். ஏற்கனவே அந்த பொண்ண சந்தேகப்பட்டு தான் இந்த நிலைமையில் நிக்கற. நான் வந்து அது யார் என்னன்னு விசாரிக்கறேன்.. வீக் எண்ட்ல வரேன் டா. அதுக்குள்ள மலைக்கு போறேன்னு போய் விழுந்து வைக்காத..”


“ச்ச.. ச்ச.. நான் எவனையும் பாத்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை டா. ஏன்னா எனக்கு பவதா மேல் நம்பிக்கை இருக்கு. என்னை தாண்டி எவனையும் நினைச்சுக்கூட பாக்க மாட்டா.. அவன் ஒருவேளை சின்ன வயசு ஃப்ரெண்ட்டா இருக்கலாம் டா.”


“ம்ம். ஆமா. அவ கூட மேகாலயால படிச்சவனா இருக்கலாம் டா.”


“ஆனா அவரை போய் பார்க்கவோ பேசவோ தோணவே இல்லடா.. பவதாக்காக அவ்ளோ நேரம் வாசல்ல தான் வெயிட் பண்ணேன்..”


“அது உன் ஈகோ டா. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அம்மாக்காக போய் பேசிதான் ஆகணும். அதுவுமில்லாம தாரிணி உனக்கு கிடைக்கணும்னா அவர்ட்ட நீ பேசி உன் அப்பா அம்மா வாழ்க்கையை சரி பண்ணா தான் உண்டு.”


“புரியுதுடா.. ஆனா 22 வருஷ கோபத்தை எப்படிடா சட்டுனு விட முடியும்.”


‘அவர் மேல் தப்பே இருந்தாலும் நடக்க முடியாத பேச முடியாத ஒரு வயசான வரை தண்டிச்சு நீ என்னடா பண்ண முடியும். மன்னிச்சா அத்தனை பேரோட லைஃப் நல்லா இருக்கும். அதை யோசி. அவர் தப்பு பண்ணியிருந்தாலுமே இத்தனை நாள் தண்டனையே பெரிசு..”


“அம்மாவை எப்படி சம்மதிக்க வைக்கறது தான்னு தெரியல..”


“ஒவ்வொரு படியா மேல போ.. நான் வரப்ப முதல்ல அவரை போய் பார்ப்போம்.”


“ம்ம் சரிடா.. எனக்கு பவதாவை பார்த்ததே பெரிய சந்தோஷமா இருக்குடா. எங்க அவளை மிஸ் பண்ணிட்டோமோன்னு ஒரு ஃபீல்.. உலகத்தில் எந்த மூலைக்கு அவ போயிருந்தாலும் நான் தேடிப்போய் நின்னுருப்பேன்..”












 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 43

மருதன் எப்படியாவது தாரிணியையும், சந்திரனையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் அவரால் மலை மேல் செல்ல முடியாது, உயரம் செல்ல செல்ல மூச்சுத்திணறல் வந்து விடும் என்பதால் அகரன் அவரை அனுப்ப சம்மதிக்கவில்லை.

“தாத்தா இந்த சர்ஜரி ப்ராஸஸ் ஏதோ ஒரு நாள்ல முடியப் போறதில்ல, இரண்டு மாசமாச்சும் ஆகும். பொறுமையா பாத்துக்கலாம் விடுங்க. பவதா நல்லாத்தான் இருக்கா. வைபவ் வந்ததும் நானும் அவனும் அவரை பாக்கறோம்..”

அவன் மனம் அம்மாவை எப்படி இங்கு வரவைத்து அவருடன் பேச வைப்பது என்று யோசித்தது, அதற்கு முன் இன்னும் பதினைந்து நாட்கள் தான் அறுவை சிகிச்சை இருக்கிறது. எப்படியும் இருபது நாட்களுக்கு வெளியில் செல்ல முடியாது. அதன் பிறகும் எதாவது முகத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இன்னும் சுத்தம். அதற்குள் பவதாவை எப்படி சமாதானப்படுத்துவது?

வேறு வழியே இல்லை. தினமும் அவள் முன் போய் நிற்க வேண்டியது தான்.

அதை செயல்படுத்தினான்.

அடுத்த நாள் தாரிணி வேலை முடிந்து வரும்போது அகில் வீட்டிற்கு அருகிலேயே ஏதோ ஒரு காரணம் சொல்லி இறங்கிக் கொண்டாள். அவள் வீடு வரும் வரை அவள் கண்கள் அவனை தேடியது. மனமோ எதற்கு இந்த வெட்கம் கெட்ட பிழைப்பு என்றது?

‘உண்மையா காதலிச்சு தொலைச்சிட்டேனே..’ அவள் மனதுக்கு பதில் சொன்னாள்.

காரை வீட்டின் எதிரில் நிறுத்தாமல் தூரத்தில் மறைவாக நிறுத்தி விட்டு அவளை பார்த்து இருந்தான் அகரன்.

சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடந்து வந்ததிலேயே தெரிந்தது அவனுக்கு. அவளது கண்கள் யாரைத் தேடும்?

என்றோ வந்த கனவு நினைவுக்கு வந்தது அகரனுக்கு.. ‘பவதா பவதா’ என்று அவள் சேலையை பிடித்துக் கொண்டு தவித்தது.

‘எப்பேற்பட்ட முட்டாள் நான். கையில் கிடைத்த சொர்க்கம் கைநழுவிப் போனதற்கு நானே காரணம்..’

வீட்டிற்கு வந்தும் வாசலிலேயே நின்றாள்.

‘அந்த உயர்ந்த வானரம் பின்னால் வருகிறதா?’ எட்டிப்பார்த்தான். அகில் அங்கு இல்லை.

வண்டியை எடுக்க சொன்னான். நேரே அவள் எதிரில் காரில் வந்தான். தூரத்தில் கார் வரும்போது கவனித்து விட்டாள். இருந்தும் செருப்பில் ஏதோ செய்வது போல் குனிந்து பார்த்தாள்.அதற்குள் வந்து விட்டான் அகரன். ஹார்ன் ஒன்றை கொடுக்க சொன்னான்.

சத்தம் கேட்டு அப்போதுதான் திரும்புவது போல் திரும்பினாள்.

கதவை திறந்து அவளை பார்த்தான். வெகு அருகில் அகரனின் முகம். இரு கண்களும் தவித்தன. தாரிணியின் உதடுகளோ துடித்தன.

“பவதா.. லவ் யூ..” என்று அவளிடம் பூக்களை நீட்டினான். அவள் வாங்கவில்லை. எட்டி அவள் கைகளை பிடித்து அதில் வைத்தான்.‌ உதடுகளை குவித்து காண்பித்தான். அடி வயிறு வரை சில்லென்று ஆனது. அவனின் கைத்தீண்டலில் அவள் உடலும் சில்லிட்டது.

காரை எடுக்க சொல்லி விட்டு சென்றான். அவன் போகும் பாதையில் அவள்‌ கண்கள் நிலைத்து நின்றன. திரும்பி வந்து விட மாட்டானா என்ற ஏக்கம் வெளிப்படையாக அவள் முகத்தில் தெரிந்தது.

ஹார்ன் சத்தம் கேட்டு கதவை திறந்தார் சந்திரன்.

தாரிணி பூக்களை வைத்துக் கொண்டு திருதிருவென முழிப்பதை பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டார். அகரன் வேலை இது என்று. ஒரு நிமிடம் முன்னால் வந்திருந்தால் அவனை பார்த்து இருக்கலாமே என்று தோன்றியது.

தாரிணி எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள். உதட்டை அழுத்தி கடித்து சிரிப்பை மறைத்துக் கொண்டாள். மெல்ல அந்த பூவை தடவினாள். உள்ளே ஒரு காகிதம் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது.

“பவதா.. உன் மனசு எப்படி காயப்பட்டிருக்குன்னு வைபவ் சொன்னான். உன்னை எப்படி துடிக்க துடிக்க விட்டு வந்தேனோ, அதே போலவே துடிக்க துடிக்க என் உடம்பு அடிப்பட்டுச்சு. நரகத்தில் இருந்த மாதிரி இருந்தது கடந்த நாட்கள். உடம்புக்கு மட்டும் நரகம் இல்ல.. மனசுக்கும் தான். என் வாழ்நாள் முழுக்க மன்னிப்பு கேட்டாலும் இதுக்கு போதாதுன்னு தெரியும்‌. இருந்தும் உன்னை என் காதல் மயிலிறகு மாதிரி வருடும். உன் காயத்தை ஆற்றும்னு தோணுது. நீ இல்லாம இந்த உலகத்தில் எதுவும் பெருசு இல்ல.. என் உயிர் கூட. இன்னும் பதினஞ்சு நாள் நான் இங்க உன்னை பாக்க தினமும் வருவேன். அதுக்குள்ள உன் மனசு மாறுச்சுன்னா என்னோட வா. இல்லைன்னா சிகிச்சை முடித்து நான் வர இரண்டு மாசம் கூட ஆகலாம்”

படித்து முடித்ததும் அவள் கண்களின் கண்ணீர் துளிகள் அதன் மேல் பட்டது. மெதுவாக அதிலேயே வைத்து விட்டு போய் உடைமாற்ற சென்றாள்.

சந்திரன் அந்த பூங்கொத்தில் இருந்து அந்த கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்தார்.

அவர் மனமும் கலங்கியது.

“அகரன் மனசு இப்படி இருக்கும்னு நினைச்சு பாக்கல. அவங்கம்மா போல அழுத்தமானவன்னு நினைச்சேன்.

நான் அன்னிக்கு செய்ய நினைச்சதை அவன் இன்னிக்கு செஞ்சே காமிச்சிட்டான். அவன் காதலுக்காக எப்போ இறங்கி வந்தானோ அப்பவே அது ஜெயிக்க ஆரம்பிச்சிருச்சு. மகனே உன் காதலுக்காக நானும் என்ன வேணா செய்வேன்.” என்று நினைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் சனிக்கிழமை. வைபவ் வந்துவிட்டான்.

“நான் வரதுக்குள்ள என்னடா அவசரம். தினமும் இரண்டு மணி நேரம் போக இரண்டு மணி நேரம் வரன்னு எதுக்குடா அலையிற. ஏதாவது ஆச்சுன்னு என்ன பண்ணுவ?”

“டேய்..அவன் காதலுக்கு அவன் போகாம வேற யாருடா போவாங்க.. நீயே கெடுத்து விட்டிருவ போலயே?” அவர் கைத்தடியால் அவன் முதுகில் ஒரே அடி.


“ஷப்பா தாத்தா வலிக்குது. இவன் காதலை நான் கெடுக்கறனா? அதுக்கெல்லாம் வெளிய இருந்து ஆள் வர வேணாம் தாத்தா. இவனே போதும் இவன் காதல்ல மண்ணள்ளி போட்டுக்க.”

“நடந்தது நடந்திருச்சு. இப்போ இந்த நிலைமைலயும் என் பேரன் அவளை பாக்க போறான் இல்ல. தினமும் அந்த பொண்ணு முன்னாடி போய் நின்னா அவ மனசு மாறும். இவனோட இருந்த நாள்லாம் நினைவுக்கு வரும். இருந்த கோபமெல்லாம் போய் காதல் வரும். பெண்கள் மனசு பூ மாதிரி. லேசா தடவிக்கொடுத்தா போதும் டா. மலர்ந்து மணம் வீசுவாங்க. அதிரடி எப்பவும் வேலைக்கு ஆகாது.” அவர் எங்கேயோ பார்த்துக் கொண்டே சொன்னார்.

“என்னவோ இவர் தான் மன்மத லீலையை எழுதின மாதிரி பேசறார் பாருடா. இளம் வயசுல பெரிசு பயங்கர ஜெமினி கணேசனா இருந்திருப்பார் போலடா.. ஊருக்கு போய்ட்டு எதுக்கும் இவரை பத்தி விசாரி. உங்க அம்மா மாமா தவிர்த்து இன்னும் வாரிசுகள் இருக்கும்னு தோணுது டா..” என்று கிசுகிசுத்தான்.

அவனது தோளில் அடித்தான் அகரன்.

“என்னடா அங்க முணுமுணுப்பு. அப்போ நான் காதல் மன்னனா இருந்தனான்னு கேட்கிறியா.? ஆமா. அப்படித்தான் இருந்தேன். பறவைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..” பாடிக்கொண்டே மெதுவாக தரையில் கைத்தடியை தட்டிக் கொண்டு நடந்தார் மருதன்.

“லொள்ளை பாத்தியா.. பலவித பறவைகளை பாத்துட்டு தான் இன்னும் அந்த நினவிலேயே காலத்தை தள்ளறார் போல..வாழ்ந்தா இவரை மாதிரி வாழணும் டா”

“முதல்ல போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வா.‌ நாம கிளம்பலாம். அனேகமா அவளுக்கு இன்னிக்கு லீவா தான் இருக்கும்.‌”

“சரிடா.. போலாம்.”

அகரனும், வைபவும் தாரிணி வீட்டை அடையும் போதே, வீடு திறந்திருந்தது.

சந்திரன் சொல்லிக் கொண்டிருந்தது இருவருக்கும் வெளியவே கேட்டது.

“தாரிணி..எப்ப இந்த அளவுக்கு வந்திருச்சோ, இனியும் உன் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாது. ரதீஷ் சார் வரப்ப அகிலுக்கும், உனக்கும் கல்யாண நாளை நிச்சயம் பண்ணிட வேண்டியது தான். “

“மாமா. இப்போ‌ என்ன கல்யாணத்துக்கு அவசியம்.‌”

“நீ ஏன் பேச மாட்ட. அதான் கர்ப்பமா வேற இருக்கன்னு பாட்டி சொல்லுச்சே. இந்நேரம் ஊர் முழுக்க தெரிஞ்சிருக்கும். எல்லாரும்‌ நாளைக்கு உன்னை தப்பா பேசுவாங்க. அதான் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்.

அதுவுமில்லாம சீக்கிரமா அவங்க வீட்டுக்கு போய் நல்லபடியா வாழு தாரிணி.. இத்தனோன்டு குடிசைல நீ இருக்கனும்னு தலையெழுத்தா?”

அகரனும், வைபவும் அதிர்ச்சி அடைந்தனர்.

“உள்ளப்போறேன்டா, நான்.” வைபவ் கூப்பிட, அகரன் அவன் கைகளை பிடித்து இழுத்தான்.

காரினுள் அமர்ந்ததும், “என்னடா.. போய் இரண்டு விஷயத்தையும் கேட்டிடலாம்.”
வைபவ் கேட்க, அகரன் வண்டியை ஓட்ட சொன்னான்.

“பதட்டமா இருக்கு வைபவ்..”

“எது.. அவ கர்ப்பமா இருக்கறதா?”

“ம்ம்”

“இதுக்கும் அவளை சந்தேகபட்டுடாத. எனக்கென்னவோ இது நீ செஞ்ச குறும்புல விளையப் போற கரும்புன்னு தான் தோணுது.”

உதட்டை குவித்து காற்றை வெளியே ஊதினான்.

“என்ன யோசிக்கறன்னு வெளியே சொல்லித்தொலை. உனக்காக தான் அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கேன். இப்போவும் எதாவது குழப்பம் பண்ணி வச்சிராத”

“இல்லடா. தப்பா நினைக்கல. நம்ப முடியல டா. சந்தோஷமாவும் இருக்கு.. இப்ப அவ கூடவே இருக்கனும்னு தான்‌ தோணுது.”

“அதுக்கு தான் உள்ள போலாம்னு சொன்னா கேட்டியா..”

“அவர் அந்த பையனோட கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாரே. அதான் குழப்பமா இருந்துச்சு டா. அவன்ட்ட முதல்ல பேசினா என்ன?”

“அவன் வீடு தெரியுமா உனக்கு.”

“அதோ அந்த பள்ளத்தில் தெரியுதே அதான்.”

“சரி வா போகலாம்”

அகில் வீட்டுக்கு வந்தனர்.‌ வைபவ் கதவை தட்டினான்.
கதவை திறந்ததும் காரில் இருந்த அகரன் முகத்தை பார்த்து எரிச்சல் ஆனான் அகில்.

“அன்னிக்கு தானே சொன்னேன். விருப்பம் இல்லாதவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு”

“டேய். இவனை கல்யாணம் பண்ணிக்க கேட்ட மாதிரி என்னமோ பேசறான்..” வைபவ் அகரனிடம் சொன்னான்.

“மிஸ்டர். அகில்‌. ஏற்கனவே எனக்கும் பவதாரிணிக்கும் கல்யாணம் நடந்துருச்சு. இப்போ அவ ப்ரக்னண்டா வேற இருக்கா. இப்ப வேணா அவ என்மேல கோவமா இருக்கலாம். ஆனா அதுக்காக அவங்க மாமா..அவளுக்கும் உங்களுக்கும் கல்யாணம் பண்ண நினைக்கிறார்.”

“ஆமா. உங்களுக்கு நடந்தது அந்த ஆட் ஷூட் கல்யாணம் தானே. அதை நான் பெருசாவே எடுத்துக்கல. இப்ப அவளுக்கு ஒரு குழந்தையும் பிறக்கப் போகுது. காட் என்னை என் ஏஞ்சலை ஒரு பேபியோட பிளஸ் பண்றார்னு எடுத்துக்கிட்டேன். அவளை அப்படியே நான் அக்சப்ட் பண்ணிப்பேன். அதான் அவங்க அங்கிள்ட்ட சொன்னேன். எனக்கு என் ஏஞ்சல் எப்படியிருந்தாலும் பிடிக்கும்னு.”

“ஹலோ. அது என் குழந்தை..”

“அதனால் என்ன. எப்போ நீங்க அவளை எங்கேயோ ஒரு இடத்தில் விட்டுட்டு வந்தீங்களோ அப்பவே அவளுக்கும் உங்களுக்கும் எல்லாம் முடிஞ்சது”

“அது எங்களுக்குள்ள இருக்க பிரச்சினை. நீங்க இதுல வராதீங்க..”

“ஏன் வரக்கூடாது. என் ஏஞ்சலை நான் அஞ்சு வருஷமா லவ் பண்றேன்.உங்க காதலை விட என் காதல் பெரிசு. நீங்க குடுத்த மன வலியை என்னால் போக்க முடியும். ஏன்னா என் கூட அவ சந்தோஷமா இருக்கா.”

“அவ மனசுல நான் தான் இருக்கேன்.”

“அது முடிஞ்சு போனது. இப்போ அவ மனசில் நான் தான் இருக்கேன்”

அவனிடம் இதற்கு மேல் பேசி ஒன்னும் ஆகப்போவதில்லை என்று வைபவ் காரில் வந்து ஏறினான்.

“இப்போ என்னடா பண்றது. அவர்ட்ட போய் கேக்கலாமா?”

“அவர் எங்கம்மாக்கு தான் பிரச்சினை தந்தார்னு பார்த்தா என் காதலுக்கும் இல்ல பிரச்சினையா இருக்கார். அதனால் தான் அவரை பாத்து பேசவே பிடிக்கல..”

“அப்போ தாரிணிட்ட பேசு. எனக்கு ஒன்னு தோணுது டா?”

“என்ன.. மொக்க போடாத.”

“நீ அடிக்கடி சொல்வியே. வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு தான் நான் வாழ்க்கை கொடுப்பேன்னு. இப்போ உன்னால் பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு அந்த அகில் வாழ்க்கை தர நினைக்கிறான்.. என்ன கடவுளோட விளையாட்டு..”

“அடிச்சேன்னா.. நீயும் என்னை மாதிரி ஆயிடுவ.”

“அந்த பொண்ணு மாசமா இருக்க ஆரம்பிச்சப்பவே அவளையும் உன் குழந்தையையும் பிரிஞ்சு உன்னால் இருக்க முடியலையே.. உங்கப்பா இருபது வருஷங்களுக்கு மேல உன்னையும் உன் அம்மாவையும் பிரிஞ்சு இருக்காரே அவர் மனசு எவ்வளோ வேதனைப்படும்.?”

அகரனுக்கு கன்னத்தில் யாரோ அறைந்தது போல இருந்தது.

“சரி‌ சரி. ரொம்ப யோசிக்காத. வா தாத்தாக்கிட்ட போகலாம். எனக்கென்னவோ ரொம்ப இழுக்க வேணாம்னு தோணுது. அம்மாவையும் மாமாவையும் கிளம்பி வர சொல்லு.. நேரிடையா எல்லாரையும் வச்சு எல்லாத்தையும் பேசிடலாம்” வைபவ் சொன்னான்.


சந்திரனும் தாரிணி வாயில் இருந்து அகரனை தவிர யாரையும் திருமணம் செய்ய
முடியாது என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் இரண்டு நாட்களாக அவள் எதுவுமே பேசவில்லை. அகில் வந்து அழைத்தும் அன்று அவள் போகவே இல்லை.

படுத்துக் கொண்டு கண்ணீரை தரையில் விட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்தாளே தவிர, வாயே திறக்கவில்லை.

“தாரிணி. உன் மனசில் என்ன இருக்குன்னு சொல்லு.” வெளிப்படையாகவே கேட்டார்.‌

“சரி மாமா. அகிலை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன். உங்க வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?” அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க அகிலை திருமணம் செய் என்று சொன்னால், இவள் அவருக்கு அதிர்ச்சி தந்தாள்.

“என் வாழ்க்கையில் என்ன நடந்தது.? உனக்கு தெரியாதா..?”

“அது நான் பிறந்ததுக்கு அப்புறம்..அதுக்கு முன்னாடி இருந்த உங்க வாழ்க்கையை பத்தி சொல்லுங்க.”

“அதெல்லாம் எதுக்கு”

“தெய்வா அத்தைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” ஆடிப்போனார் சந்திரன்.

“உனக்கு?”

“எல்லாமே தெரியும். சொல்லுங்க. ஏன் அவங்களை பிரிஞ்சீங்க”

“ஹ்ம்ம்.. என் சித்தப்பா வீட்டுக்கு தான் அவளை தத்துக் கொடுத்து இருந்தோம்.
ஆந்திராவில் இருந்து ஒருநாள் உடனே வரசொல்லி கால் பண்ணா. அவ தோழி வீட்ல தான் இருந்தா.

இன்னிக்கு நீ நிக்கற மாதிரி அன்னிக்கு உன் அம்மா இதே போலவே உன்னை சுமந்துட்டு வந்து நின்னா. அவ விஷயம் தெரிஞ்சு வீட்ல வச்சுக்காம அனுப்பிட்டாங்க.

யார் இதுக்கு காரணமானவங்கன்னு கேட்டதுக்கு அவ எதுவுமே சொல்லல. யார் முன்னாடியும் எனக்கு அசிங்கமான பேச்சை கேட்டுட்டு நிக்க விருப்பம் இல்லைன்னு சொன்னா.

என்னை உடனே எங்கயாச்சும் கூட்டிட்டு போங்க இல்லன்னா இப்பவே செத்து போய்டுவேன்னு சொன்னா. எனக்கு எங்க அவளை கூட்டிட்டுப் போகறதுன்னும் தெரியல்ல.

தெய்வாட்ட வந்து விஷயத்தை சொல்லிட்டு போகலாம்னு அவங்க வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போனேன். அப்போதான் தெய்வாவும் வீட்டில் இல்ல, ஏதோ அவசரமா அவங்க அப்பாக்கூட வெளியூர் போயிட்டான்னு சொன்னாங்க.. அங்க தேடிட்டு போக நேரம் இல்ல.

அகரனோட அத்தை வீட்டில் இருந்தாங்க. தெய்வாக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரு லெட்டர்ல எழுதி கொடுத்தேன்.

உன் அம்மாவை கூட்டிட்டு ராமேஸ்வரம் வந்தப்ப தான், உன் அம்மா.. நான் இங்க இருக்க விரும்பலை அண்ணா‌. நான் காதலிச்சவரை எங்க காதலுக்காக கௌரவ கொலை பண்ணிட்டாங்க, அது தெரிஞ்சு தான் சித்தப்பா வீட்ல என்னை அனுப்பிட்டாங்க. இங்க நான் இருந்தா என்னையும் கொலை பண்ணிடுவாங்கன்னு சொன்னா. எனக்கு ஒன்னும் புரியல. இவ்வளோ பெரிய பிரச்சினையா இருக்கும்னு நினைக்கல.

என் நண்பன் ஒருத்தன் இலங்கைக்கு பொருட்கள் கொண்டு போய் வித்துட்டு அங்க இருந்து சிலதை வாங்கிட்டு வருவான். அவனை அங்க பாத்தேன். அவன்தான் இலங்கை போயிட்டா அவ்ளோ தூரம் தேடி வந்து யாரும் ஒன்னும் பண்ண மாட்டாங்கன்னு சொன்னான். யோசிக்க நேரமில்லாம நான் சரின்னு அங்க கூட்டிட்டு போய்ட்டேன். இங்கேயும் தொடர்பு கொள்ள முடியல. அந்த ஆளுங்க ஒருவேளை என்னை தேடி இங்க வந்து அது தெய்வாக்கும், அகரனுக்கும் பிரச்சினை ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு அமைதியா இருந்தேன்.

மனசு தாங்காம நாலு மாசம் கழிச்சு யாருக்கும் தெரியாம
அங்க போனேன். ஆனா தெய்வாவை பாக்க முடியல. அவ என்னை பாக்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா..”

“ஏன் மாமா.. அதான் லெட்டர் எழுதி கொடுத்துட்டு தானே வந்தீங்க”

“அதான் மா என்ன நடந்ததுன்னு தெரியல.. “

“நான் சொல்றேன் சந்திரன்”








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 44

ஒருக்களித்து இருந்த கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் பாண்டியன்.

சந்திரனுக்கும், தாரிணிக்கும் அதிர்ச்சி. வைபவ் மட்டும் அவருடன் நுழைந்தான். இருவரின் கண்களும் அகரனையும், தெய்வாவையும் தேடின.

“சந்திரன் எப்படி இருக்கீங்க”

“வாங்க பாண்டியன். இதோ பாக்கறீங்களே. என் மருமகளால தான் எழுந்து நடமாடறேன்.”

“தெய்வா பாக்க விரும்பலைன்னு உங்கள்ட்ட வேலைக்காரரை விட்டு சொல்ல சொன்னது நான் தான். நீங்க ஊருக்கு போகும் போது என் மனைவிட்ட கொடுத்துட்டு போன லெட்டரை அவ கொடுக்கும் போது, நீங்க இனிமே இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டு போனீங்கன்னு சொன்னா. அவ பேச்சை நம்பாம, நான் தான் லெட்டரை படிச்சேன். அதுல நீங்க வரதுக்கு கொஞ்ச நாள் ஆகும். ரொம்ப முக்கியமான விஷயமா வெளியூர் போறேன்.. உனக்கு அங்க சூழ்நிலையை பாத்துட்டு கால் பண்றேன்னு மொட்டையா தான் எழுதியிருந்தீங்க.

அதுக்கு அடுத்த நாள் உங்களை தேடிட்டு நாலஞ்சு பேர் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க வீட்டு பெண்ணை நீங்க கூட்டிட்டு வந்துட்டதாகவும், அவ கர்பபமா இருந்தான்னு சொல்லி நீங்க எங்கன்னு கேட்டு பிரச்சினை பண்ணாங்க. அவங்களை சமாளிச்சு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு. எங்களுக்கு மனசு கஷ்டமா போச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நம்ம வீட்டு வேலைக்காரங்களும் ஆட்டோல ஒரு பொண்ணு இருந்தான்னு சொல்ல, கோபம் வந்துச்சு. உங்களை தேடி போய் எல்லா இடத்திலேயும் விசாரிச்சோம். நீங்க டிரெயின்ல ஒரு பொண்ணு கூட போனதா தெரிஞ்சது.

ஆனா எப்பவுமே நீங்க உங்க தங்கையை பத்தி வீட்ல சொன்னதே இல்லை. எங்களுக்கும் யோசிக்க தோணல. வீட்ல இருந்து நகைங்க காணாம போயிருக்குன்னு தெய்வா சொல்ல நிஜமாவே நாங்க தப்பா தான் நினைச்சோம்.

இப்போதான் என் பொண்ணு போட்டிருந்த நகையை ஃபோட்டோல பாத்தோம். அது என் மனைவி வேலைதான்னு புரிஞ்சது.

நீங்க போய் நாலு மாசம் தகவல் இல்லைன்னதும் எல்லா தப்பையும் உங்க மேல பொருத்தி பார்த்துட்டோம். என் தங்கையும் மனசு உடைஞ்சு போயிட்டா. அதனால்தான் அவ பாக்க விருமபலன்னு சொல்ல சொன்னேன்.

நீங்க ஆபிஸ்க்கு தேடி வந்தப்ப அப்பாவை பாக்க விடாம செஞ்சது என் தப்பு.

எங்கிருந்தோ வந்த உங்களால தான் மருதன் கார்மெண்ட்ஸ் தலை தூக்கி நிக்குதுன்னு அப்பா ரொம்ப பெருமையா பேசுவார். அதுவுமில்லாம உங்க அளவுக்கு மார்க்கெட்டிங் திறமையோ டிசைனிங் திறமையோ எனக்கு கிடையாது. அதனால் உங்க மேல ஏற்கனவே கோபத்துல இருந்தேன்.

நீங்க போனதும் இனி உங்களை எக்காரணத்தை கொண்டும் திரும்ப கம்பெனிக்குள்ள சேக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன். அப்போ யோசிக்கல. என் தங்கச்சியும் பையனும் நீங்க இல்லாம கஷ்டப்படுவாங்கன்னு.

அதனால் தான் அகரனை என் பையன் போல வளர்த்தேன். என் தங்கை கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாதுன்னு நினைச்சேன். என் மனைவி அப்பப்ப ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்துவா. அப்போ கூட உங்களோட அவளையும் பையனையும் சேர்த்து வைக்கனும்னு தோணல. நீங்க என் தங்கைக்கு துரோகம் பண்ணிட்டீங்கன்னு தான் மனசுல ஓடுச்சு. ‌இப்போ இங்க வந்து கூட சண்டை தான் போட நினைச்சேன். நீங்க பேசியதை கேட்டப்புறம் தான் உண்மை புரிஞ்சுது. அப்பா சொல்ற மாதிரி எதையும் நேர்ல விசாரிச்சு இருக்கனும்.
மன்னிச்சிடுங்க சந்திரன்.

உங்க மனைவி, பிள்ளைங்களை இப்போ நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்.

தெய்வாம்மா.. அகரா..” என்று அழைத்தார். அகரனால் நடந்து வர முடியவில்லை என்று போய் சக்கர நாற்காலியில் தள்ளி வந்தான் வைபவ். .

அவனின் தலை குனிந்து இருந்தது. சந்திரனை பார்க்க முடியவில்லை. தெய்வா கண்ணீர் மல்க நின்றார்.

சந்திரனுக்கு கைகால் எல்லாம் உதறியது.

“தெய்வா..” என்று அவரின் கைகளை பிடித்துக் கொண்டார்.

“அகரா..” அருகில் இருந்த அவனின் தலையை கோதினார். அவன் வாயே திறக்கவில்லை.

தாரிணிக்கு தெய்வாவும், அவளது மாமாவும் சேர்ந்தது சந்தோஷமாக இருந்தது.

அகரனை பார்த்தாள். அவன் எதுவும் பேசாதது அவளுக்கு கோபம். இந்நேரம் மாமாவை பற்றி தப்பாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அவன் கேட்கவில்லை.

‘பெரிய இவன்னு நினைப்பு. இனி எப்படி எங்க பின்னாடி சுத்த போறீங்கன்னு பாருங்க’ என்று மனதுக்குள் நினைத்தாள்.

அனைவரும் அத்தனை வருட கதைகளை பேசி சிரிக்க.. அகரனும் தாரிணியும் மட்டும் எதுவும் பேசவில்லை.

வைபவ் அவனது தோளில் இடித்தான். தாரிணியிடம் பேசு என்று.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.

தெய்வா வந்து தாரிணியிடம் பேசினார். அப்போதும் அவள் பட்டும் படாமல் பேசினாள்.

சந்திரனையும் தாரிணியையும் அவர்கள் கௌகாத்தியில் எடுத்த வீட்டுக்கு அழைத்தனர். ஆனால் தாரிணி அகில் நிறுவனத்திற்கு முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறினாள்.

அங்கு தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. சந்திரனுக்கு தாரிணியை பிரியவும் மனதில்லை. தெய்வாவை பிரியவும் மனதில்லை.

“இங்க தங்கறது முடியாதே. பேசாம எல்லாருமே கௌகாத்தி போகலாம். அங்க இருந்து ஒரு வாரத்துக்கு தாரிணியை தினமும் கூட்டி வந்து விட்டுட்டா போச்சு. இந்த வைபவ் இருக்கானே அவன் பாத்துப்பான்.” என்று பாண்டியன் சொல்ல வைபவ் திடுக்கிட்டு பார்த்தான்.

“டேய் உன் குடும்பத்துல எல்லாருக்கும் என் வேலைல கை வைக்கிறது தான் பொழப்பேவா. உங்க குடும்பம் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாட நான் தான் பணயக்கைதியா.. என்னால் முடியாது.” வைபவ் அகரனிடம் சொன்னான்.

“என் வாழ்க்கையை சரி செய்யறேன்னு சொன்ன இல்ல. அதுக்காக இரு.”

தாரிணி மனமில்லாமல் கிளம்பினாள். ஆனால் அகரனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அகிலிடம் சந்திரன் அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னார். அவனால் தாரிணி அவர்களுடன் போவதில் சம்மதமில்லை.

உடனே ஓடி வந்தான்.

“அங்கிள். அவங்க இந்த நிலைமைல டெய்லி டிராவல் பண்றது நல்லதில்ல. நீங்க வேலை முடியற வரைக்கும் என் வீட்டில் தங்குங்க. “

“என்ன. என்ன நிலைமை. தாரிணி உன் கால் சரியாகலையா இன்னும்.. ?” என்றார் பாண்டியன்.

“அவ மாசமா இருக்கா” சந்திரன் சொன்னதும் தெய்வாக்கு நம்பவே முடியவில்லை. அகரனை பார்த்தார். அவன் தலையாட்டினான்.

 
Status
Not open for further replies.
Top